ஃ | அ 351 |
ஆ 81 |
இ 107 |
ஈ 5 |
உ 84 |
ஊ 10 |
எ 9 |
ஏ 17 |
ஐ 9 |
ஒ 8 |
ஓ 7 |
ஔ 1 |
க் 15 |
க 163 |
கா 88 |
கி 58 |
கீ 5 |
கு 101 |
கூ 8 |
கெ | கே 19 |
கை 4 |
கொ 10 |
கோ 37 |
கௌ 21 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 216 |
சா 78 |
சி 114 |
சீ 5 |
சு 142 |
சூ 23 |
செ 12 |
சே 38 |
சை 12 |
சொ 4 |
சோ 40 |
சௌ 16 |
ஞ் | ஞ | ஞா 5 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி 1 |
டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் | த 69 |
தா 32 |
தி 494 |
தீ 10 |
து 45 |
தூ 7 |
தெ 5 |
தே 40 |
தை 4 |
தொ 7 |
தோ 3 |
தௌ 2 |
ந் | ந 61 |
நா 23 |
நி 25 |
நீ 16 |
நு | நூ 1 |
நெ 11 |
நே 3 |
நை 4 |
நொ 1 |
நோ 1 |
நௌ | ப் | ப 132 |
பா 80 |
பி 129 |
பீ 7 |
பு 62 |
பூ 17 |
பெ 23 |
பே 7 |
பை 3 |
பொ 11 |
போ 10 |
பௌ 8 |
ம் | ம 163 |
மா 76 |
மி 17 |
மீ 6 |
மு 30 |
மூ 9 |
மெ 3 |
மே 11 |
மை 5 |
மொ | மோ 6 |
மௌ 5 |
ய் | ய 21 |
யா 16 |
யி | யீ | யு 7 |
யூ 1 |
யெ | யே | யை | யொ | யோ 6 |
யௌ 2 |
ர் | ர 25 |
ரா 23 |
ரி 2 |
ரீ | ரு 18 |
ரூ 3 |
ரெ | ரே 4 |
ரை 3 |
ரொ | ரோ 9 |
ரௌ 3 |
ல் | ல 12 |
லா 3 |
லி 1 |
லீ 1 |
லு | லூ | லெ | லே | லை 1 |
லொ | லோ 7 |
லௌ | வ் | வ 90 |
வா 29 |
வி 128 |
வீ 19 |
வு | வூ | வெ 13 |
வே 36 |
வை 19 |
வொ | வோ | வௌ | ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
அ | விஷ்ணு, பிரணவத்து முதல் அக்ஷரம், அகாரம் விஷ்ணு, உகாரம் மகேசுவரன், மகாரம் பிரம்மா |
அகசன் | கேது |
அகசன் | சுமந்துமகன் |
அகஜாதை | பார்வதி, மலைமகள் |
அகண்டானந்த முனி | லக்ஷூம் ஸ்தோத்திரம் முதலியன செய்த சமஸ்கிருதகவி |
அகத்தி | அகஸ்தியன் |
அகத்தியசங்கிதை | இஃது அகஸ்தியரால் வடமொழியிலே செய்யப்பட்டவொரு நூல் |
அகத்தியன், அகஸ்தியன் | இவர் மகா விருஷிகளுளொருவர். மித்திரனும் வருணனும் சமுத்திர தீரத்திற்சஞ்சரித்த போது, அங்கே ஊர்வசி வர, அவளைக் கண்டு மோகதீதராகித் தமது இந்திரியங் களைக் குடத்தில்விட, அகஸ்தியரும் வசிஷ்டரு முற்பாவமாயினர். அது காரணமாக அகஸ்தியர் கும்பமுனி கும்பசம்பவர் முதலிய நாமங்களைப் பெறுவர். ஆரியர் விந்தமலைக்குத் தெற்கே செல்லாகாதென்ற கட்டுப்பாட்டைக் கடந்து முதன்முதல் தக்ஷணம் வந்து அந்நாட்டியல்புகளைத் திருத்தி செம்மை செய்தவர் இம்மகா முனிவரே. பர்வத ராஜபுத்திரி கல்யாணத்துக்குத் தேவர்களும் இருஷிகணங்களுஞ்சென்று திரண் டபோது, மேருத்தாழ்ந்து தெற்குயர்ந்தது. அதுகண்ட தேவரெல்லாரும், அகஸ்தியரை நோக்கி, நீரே தென்றிசையிற் சென்று அங்கிருந்து சமஞ்செய்தல் வேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய அவருடன்படுதலும், அவரோடு அரசிளங் குமரருஞ் சிலர் புறப்பட்டார்கள். அவர் தென்றிசை நோக்கிச் செல்லும் போது, கங்கையிடஞ் சென்று காவிரியை வாங்கிக்கொண்டு, ஜமதக்கினிமுனிவரிடஞ் சென்று அவர் மகன் திரணதூமாக்கினியைத் தமக்கு சீடராகத்தரும்படி கேட்டார். அவர் இசைந்து கொடுப்பத் திரணதூமாக்கினியைத் பெற்றுக்கொண்டு, புலத்தியனாரிடஞ்சென்று அவர் தங்கையாகிய லோபாமுத்திரையைத் தமக்கு மணமுடித்துத் தருமாறு வேண்டி, அக்கன்னிகையையும் பெற்றுக்கொண்டு விந்தமலையடைந்தார். அங்கே அம்மலை அவர்க்கும் பரிவாரத்தினர்க்கும் வழிவிடாது தடுப்பு, அதனை தரைமட்டமாக அழுத்திவிட்டு இப்பாற் சென்றனர். அப்போது இல்வலன் வாதாபியென்னும் அசுர சகோதரரிருவர், முனிவரைக் கண்டு மகிழ்ந்து, இல்வலன் பிராமணனாகவும் மற்றவன் ஆடாகவும் வடிவெடுத்து நின்றார்கள். முனிவர் சமீபி த்தலும், இல்வலன் சென்றுவணங்கி, அவரை விருந்துக்கமைத்து, ஆடாகி நின்ற தம்பி வாதாபியைக் கொன்று யாக கருமஞ்செய்து விருந்திட்டான். அவர் விருந்தருந்தி எழுந்தவுடனே இல்வலன் வழக்கம் போல வாதாபியை கூவியழைத் தான். வாதாபியும் அகஸ்தியர் வயிற்றை ப் போழ்ந்துகொண்டு வெளியேவர வெத்த னித்தான். அஃதுணர்ந்து அகஸ்தியர் வாதாபேஜீர்ணோபவ என்று தமது வயிற்றைத்தடவி அவனை சீரணம்பண்ணி மற்றவனையுஞ் சாம்பராகச் சபித்தது விட்டார். இவ்வாறே அநேக முனிவரைக் கொன்று வந்த இல்வலனும் வாதாபியும் ஈற்றில் அகஸ்தியரால் மாண்டார்கள். அப்பால் அகஸ்தியர் சையகிரி சென்று, அங்குநின்றும் பல முகமாகப்பெருகி வீணேகழிந்த நதியை கங்கைநீராற் சுத்தி செய்து, தம்மோடுடன் வந்த அரசிளங்குமாரரைத் துணைக்கொண்டு அதனை ஒருமுகமாகத் திருப்பி, நாடுவழியே பாயுமாறு விடுத்து, அதற்குக் காவிரியெனப் பெயரீந்து, அப்பாற்சென்று வேங்கடத்திற் றங்கிக் குமரவேளருளைப் பெற்றுக்கொண்டு பொதியமலையை யடைந்து, அதனைத் தமக்கு ஆச்சிரமமாக்கி அங்கிருப்பாராயினர். தெற்கே அதுகாறும் நாடாகாது கிடந்த காடுகளையெல்லாம் நாடாக்கித் தம்மோடு வந்த அரசிளங்குமரர்களுக்கு அந்நாடுகளைக் கொடுத்து அவர்களுக்கெல்லாங் குருபீடமாயிருந்தார். அப்போது இலங்கையிலிருந்து இராக்ஷகர் அந்நாட்டிற்சென்று துன்பஞ்செய்ய எத்தனித்தார்கள். அது கண்ட அகஸ்தியர் இராவணனைச் சங்கீதத்தாற் சிநேகித்து அவனால் இராக்ஷசரை ஆண்டு செல்லாமற்றடுத்தனர் அகஸ்தியரோடு வந்த அரசிளங்குமரரே சேர சோழ பாண்டிய மண்டலங்களை அமைத்தவர்கள். அதற்கு முன்னே இந்தநாட்டில் அரசு செய்தவர்கள் குறு நிலமன்னர்கள். உத்தரத்தின்று வந்த இவ்வேந்தர்களே தென்னாட்டைத்திருத்திப் பலவகையானும் விருத்திசெய்தார்கள். என்பது நன்றாக நிச்சயிக்கப்படும். அவ்வுண்மை சுராதிராசன் முதலாகவரு சோழனுமுனாட் சோழமண்டலமமைத்த பிறகு என்று வரும் கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்துச் செய்யுட்களாலினிது பெறப்படும். அப்பால், அவர் தாம் புகுந்த நாட்டுக்குரிய பாஷையாகிய தமிழையும் செம்மைசெய்யக் கருதி அப்பாஷையில் அதற்கு முன்னரில்லாத சாஸ்திரங்கள் சில வியற்றுமாறு தொடங்கி முதலிலே தமிழுக்கு மிக்கவிரிவுடையதாகிய ஓரிலக்கண நூலைச்செய்து அதற்கு அகத்தியம் எனப் பெயரிட்டனர். அதன்பின்னர்ச் சோதிடம், தருமநூல், வைத்தியநூல், முதலியன செய்தார். இவைகளை யெல்லாங் குமரியாற்றுக் கருகேயிருந்த தென்மதுரையிலுருந்து அரசுசெய்த காய்சினவழுதியினது அவைக்கண்ணே யரங்கேற்றினர். இவைகளைக் கேட்டு மகிழ்ந்த காய்சினவழுதி இறையனாரைமுன்னிட்டு அகஸ்தியரை குருபீடமாகவைத்துச் சங்கம் அமைத்து தமிழ் ஆராய்வித்தான். இதுவே தலைச்சங்கமாக நெடுங்காலம் நிலைபெற்று வரும்போது அதற்கிடமாயிருந்த தென்மதுரை கடல்கொள்ளப்பட்டு டழிந்தது. இது மாத்திரமன்று, குமரியாற்றின் றெற்கே நாற்பத்தொன்பது நாடுகள் கடலாற் கொள்ளப்பட்டன. இப்பெரும்பிரளயம் வந்தகாலத்தை ஆராயுமிடத்து அது துவாரகலியுக சந்தியாதல் வேண்டும். யுகசந்தியாவது யுக முடிவுக்கு ஐயாயிரமாறாயிரம் வருஷமுண் டென்னுமளவிலுள்ள காலம். ஓவ்வோர் யுகசந்தியிலும் பிரளயமொன்றுண்டாகு மென்பது புராணசம்மதம். ஆகவே தென்மதுரை அழிந்தகாலம் இற்றைக்குப் பன்னீராயிரம் வருஷகளுக்கு முன்னராதல் வேண்டும். இற்றைக்கு 11481 வருஷங்களுக்கு முன்னர் ஒரு பிரளயம்வந்தது போயதென்றும், அப்பிரளயத்தால் இப்பூமுகத்திலே சமுத்திரதீரஞ் சார்ந்த நாடுகளெல்லாம் சிதைந்தும் திரிந்தும் பூர்வ ரூபம் பேதித்து தற்காலத்துள்ள ரூபம் பெற்றனவென்றும்,போசிடோனிஸ் முதலிய தீவுகள் சமுத்திரவாய்ப்பட் டழிந்ததும் அப்பிரளயத்தாலேயாமென்றும், அத்திலாந்தி சரித்திர மெழுதிய எல்லியட் என்னும் பண்டிதர் கூறியதும் இதற்கோராதாரமாம். அதுநிற்க. அகஸ்தியர் காலகேயர்பொருட்டுச் சமுத்திர நீரையெல்லாம் ஆசமனஞ் செய்து வற்றுவித்தாரென்றும், நகுஷன் தேவேந்திரபதம் பெற்றகாலத்தில் அகஸ்தியர் அவன் சிவிகையைத்தாங்கிச் செல்ல, அவன் அவரைநோக்கிச், சர்ப்பசர்ப்ப என்று கூற, அவர் கோபமுற்று அவனை மலைப்பாம்பாகிப் பூமியில் விழுமாறு சபித்தனரென்றும், இராமர் இலங்காபுரிக்கு சென்றவழியில் அவருடை ஆச்சிரமத்திற்றங்கி அவர் அருள் பெற்றுப்போயினரென்றும் இன்னோரன்ன பலகதைகளுள. அகஸ்தியர் தமிழிலே செய்த நூல்களெல்லாம் அழிந்தொழிந்து போயின. அவர் பெயராலே தற்காலத்து வழங்கும் வைத்தியநூல்கள் முற்றும் புரட்டு நூல்களாம். அகஸ்தியர் மாணாக்கராவார் திரணதூமாக்கினியென்னும் மியற்பெயரையுடைய தொல்காப்பியர், அதங்கோட்டாசான், தூராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைபாடினியன், நற்றத்தன், வாமனன் எனப்பன்னிருவர். தொல்காப்பியர் செய்த தொல்காப்பியம் அகஸ்தியன் வழி நூல். அகஸ்தியர் பெயரால் ஒரு நகத்திரமுமுளது. அஃது ஆகாயத்திலே தோன்றிற் சமுத்திரம் அலையொடுங்கும் |
அகத்தியபண்டிதன் | வடமொழியிலே பாலபாரதமென்னும் நூல் செய்தவர் |
அகத்தியப்பிராதா | அகத்தியன் சகோதரன் |
அகத்தியம், அகஸ்தியம் | அகஸ்தியர் செய்த முத்தத்தமிழிலக்கண நூல். சில சூத்திரங்களன்றி ஏனையவெல்லாம் இறந்தொழிந்தன |
அகத்தீசுவரர் | திரு அகத்தியான் பள்ளியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியின் பெயர் |
அகநானூறு | உக்கிரப் பெருவழு யென்னும் பாண்டியன் தொகுப்பித்த அகப்பெருணூல். பெருந்தேவனார் முதலியோர் பாடியது |
அகனிஷ்டன் | புத்தன் |
அகன் | அஷ்டவசுக்களு ளொருவன். இவன்மகன் சோதி |
அகம்பன் | சுமாலிமகன் ஞானஸ்தானத்திலே கரதூஷணாதிரை ராமர் கொன்ற பொழுது அச்செய்தியை ராவணனுக்குச் சொன்னவன் பின்னர் இலங்கையை ராமர் வளைந்தபோது மேலைக்கோட்டைவாயிலிலே நின்று எதிர்த்து அநுமாராற் கொல்லப்பட்டவன் |
அகம்யாதி | சம்யாதிமகன். இவன் பாரி காரத்தவீரியார்ச்சுனன் தங்கையாகிய பானுமதி |
அகலியை | முற்கலன் மகள். கௌதமர் மனைவி. இவளுடைய அழகைக்கண்ட தேவேந்திரன் வைகறைக்காலத்துக்கு முன்னர்க் கௌதமாச்சிரமத்திற்குச் சென்று சேவல்ரூபங் கொண்டு நின்று கூவ, அகலியைபொழுது புலர்ந்ததென்றெண்ணிக் கங்கைக்குச் செல்ல, இந்திரன் கௌதமரூபங்கொண்டு அவளை வஞ்சித்துக் கூடிப்போயினான். அஃதுணர்ந்த கௌதமர் அவளைக்கற்பாறையாகவும் இந்திரனைக் கேசாதிபாதம் பெண்குறிகளுடையவனாகவுஞ் சபித்தார். அதுகாரணமாக இவள் நெடுங்காலம் கற்பாறையாகிக்கிடந்து ராமர் திருவடி தீண்டியபோது முன்னுருக்கொண்டவள். இக்கதையை சிறிது விகற்ப்பித்து கூறுப |
அகஸ்தி | அகஸ்தியன் |
அகஸ்தியசங்கிதை | இஃது அகஸ்தியரால் வடமொழியிலே செய்யப்பட்டவொரு நூல் |
அகஸ்தியபண்டிதன் | வடமொழியிலே பாலபாரதமென்னும் நூல் செய்தவர் |
அகஸ்தியப்பிராதா | அகத்தியன் சகோதரன் |
அகாசுரன், அகன் | பகாசுரன் தம்பி, இவன் மலைப்பாம்பு வடிவந் தாங்கிக் கிருஷ்ணனை விழுங்கக் கிருஷ்ணன் அப்பாம்பின் கண்டத்தளவுஞ் சென்று பேருருக்கொண்டு அதன் கண்டத்தைக்கிழிக்க, அது காரணமாக விறந்தவன் |
அகிலாண்டேசுவரி | திருவானைக்காவிலே கோயில் கொண்டிருக்குந் தேவியார் பெயர் |
அகிலேசர் | திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அகிலேசுவரி | திருவாரூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அகிஷேத்திரம் | உத்தர பாஞ்சாலத்து ராஜதானி |
அகீநகு | தேவானீகன் மகன், குருவினது தந்தை |
அகோபிலம் | தொண்டை நாட்டிற்கு வடமேற்றிசையிலுள்ள வைஷ்ணவ மடம் |
அகோரசிவாசாரியார் | ஒரு பத்ததி செய்தவர். இவர் மிருகேந்திராகமத்துக்கும் ஓர் உரை செய்தவர். பதினெண் பத்ததிகளுள்ளுமிவருடைய பத்ததியும் வாமதேவ சிவாசாரியர் செய்த பத்ததியுமே அதிகமாக வழங்குவன. பத்ததியாவது சைவக்கிரியாக்கிரமங்களை யெடுத்து விளக்கும் நூல், இவருடைய சமாதி சிதம்பரத்திலிருத்தலால் ஜன்மஸ்தானமும் அதுவேயென்பர் |
அக்கன் | இராவணன் புத்திரன் அநூமாராற் கொல்லப்பட்டவன் |
அக்கபாதன் | நியாய சாஸ்திரஞ் செய்தவன் |
அக்கமாலை | அருந்ததி |
அக்காரக்கனிநச்சுமனார் | இவர் கடைச் சங்ககாலத்திலே உக்கிரப் பெருவழுதி சபையிலே விளங்கிய புலவருளொருவர் |
அக்கி, அங்கி | அக்கினி, அஷ்ட திக்குபாலகருளொருவன். அக்கினி தேவன் |
அக்கிசூலி | குமாரசுவாமி |
அக்கிஜன்மன் | பிரமா, அக்கிரம் முதல், ஜன்மன் பிறந்தவன் |
அக்கினிகர்ப்பை | பூமிதேவி |
அக்கினிகுமாரன் | குமார தெய்வம் |
அக்கினிகோத்திரபட்டர் | ஆந்தரதேசத்திலே விளங்கிய ஒரு சமஸ்கிருதபண்டிதர் |
அக்கினிக்கண்ணன் | சிவன் |
அக்கினிசயனம் | இஃதோர் யாககருமம், யாக கருத்தர அடைய வேண்டிய பயனைத் தபன் என்னும் அக்கியினது புத்திரர் பதினெழுவரும் அபகரித்துக்கோடலின் பரிகாரமாகச் செய்யப்படுவது |
அக்கினிசுவோத்தர் | இவர்கள் ஒருபாற் பிதிர்கள் |
அக்கினிஜன் | குமார தெய்வம் |
அக்கினிஜன்மன் | குமார தெய்வம் |
அக்கினிதியோதன் | கிருஷ்ணனிடம் விவாகம் பேசிப்போன ருக்குமிணி தூதனாகிய ஓரந்தணன் |
அக்கினிதேசியன் | துரோணாசாரியாருக்குத் தனுர் வேதங் கற்ப்பித்த குரு |
அக்கினிதேவன், அக்கினி | பிரமாவினது புத்திரனென்பர் ஒரு சாரர். முற்றொரு சாரர் கசியனது புத்திரனென்பர். இவனுக்கு கால் மூன்று, நா ஏழு, முகம் இரண்டு, வாகனம் ஆட்டுக்கடா, பாரி சுவாகதேவி, புத்திரர் பாவகன், பவமானன், சுசி என மூவர். இராஜதானி தேஜோவதி. அர்ச்சுனனுக்குக் காண்டீவம் கொடுத்தவன் இவ்வக்கினி தேவனே. அக்கினி திரோதாக்கினி, பாஞ்சாக்கினி என இருபாற்படும். திரேதாக்கினி ஆகவனீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்றுமாம், அவை முறையே கிழக்குத் தெற்கு மேற்குத் திசைகளிலே வேதியில் வளர்க்கப்படுவன. பஞ்சாக்கினி முன்னைய மூன்றனோடு சவ்வியம், அபசவ்வியம் என ஐந்துமாம். இவையிரண்டும் வேதியில் ஈசானதிக்கில் வளர்க்கப்படுவன. அக்கினியானது பூதங்களுள்ளே நடுநிலையுடையது. அஃதரூபமும் ரூபமுமுடையது. மகாவிருடிகள் இவ்வக்கினியினது அநந்த சக்திகளைக் கண்டு, அதனை விண்ணுலகத்திலே சூரிய சந்திராதியரிடத்திலே சோதியாகவும், மேகத்திடையிலே மின்னலாகவும், பூமியிலே தீயாகவும், சமுத்திரத்திலே வடவையாகவும், சீவகோடிகளுடைய வுதரத்திலே ஜாடராக்கினியாகவுமிருந்து சகலலோகங்களையுமொரு சிறு கணப் பொழுதிலே தரிசித்து மீளுகின்றதூதென வேதத்திலே துதிப்பர். இவ்வக்கினி மண்டலத்திலேயுள்ளார் அக்கினி தேவர்கள் எனப்படுவார்கள். அவர்கள் அநலர் என்னும் பெயருடையராய் நாற்பத்தொன்பதின்மராவர். அவருட்டலைமைபெற்றவன் அபிமானாக்கினியெனப்படுவான். அவன் மைந்தரே பாவகன் பவமானக் சுசி என்னும் மூவரும். அம்மூவருக்கும் நாற்பத்தைந்து புத்திரருளர் |
அக்கினிபுராணம் | ஆக்கினேய புராணம் அது வியாசர் செய்தது |
அக்கினிபுவன் | குமாரதெய்வம் |
அக்கினிமணி | சூரியகாந்திக்கல் |
அக்கினிமித்திரன் | புஷ்பமித்திரன் மகன். சிருங்கிகளொருவன் |
அக்கினிமுகன் | இவன் சூரபன்மனுக்குப் பதுமகோமளையிடத்து பிறந்த புதல்வரு ளொருவன் |
அக்கினிவர்ச்சனன் | சூதசீஷன். இவன் மகாபௌராணிகன் |
அக்கினிவர்ணன் | சுதர்சனன் மகன். இவன் இராமன் பரம்பரையில் இருபத்தாறாவது வழித்தோன்றல். இவன் சிற்றின்பத்தின் மூழ்கினவனாயிராச்சிய முறையறியாது அரசு புரிந்தவன். இவனுக்குப்பின் இவன் மனைவி இராச்சியத்தை செவ்வே நடத்தினாள் |
அக்கினிவேசன் | துரோணாசாரியாருக்குத் தனுர் வேதங் கற்ப்பித்த குரு |
அக்கினிவேசன் | இக்ஷூவாகுவினது தம்பியாகிய அரிஷியன் வமிசத்துத் தேவதத்தன் மகன். இவன் ஞானியாகிய ஜாதகர்ணமகாவிருஷியெனப் பெயர் பூண்டான். இவன் வமிசத்துப் பிராமணகுலம். அக்கினிவேசியாயனம் எனப்படும் |
அக்கினிஷ்டோமன் | சட்சுர்மனுவினது மகன் |
அக்கினிஷ்டோமம் | வசந்தகாலத்தில் ஐந்து தினங்களிலே செய்து முடிக்கற்பாலதாகிய ஒரு யாகம் |
அக்குரூரன் | சுவபற்குனன் மூத்த மகன். விருஷ்ணிவமிசத்துச் சாத்தகியுமிவனும் சிறியபிதாப் பெரியபிதாப் பிள்ளைகள் |
அக்குரோதன் | அயுதாயுமகன் |
அக்ஷன் | இராவணன் மகன். அநுமானாற் கொல்லப்பட்டவன் |
அக்ஷபாதன் | நியாய சாஸ்திரஞ் செய்த கௌதமன் |
அக்ஷயபாத்திரம் | சூரிய னிடத்திலே தருமன்பெற்ற வற்றாத பாத்திரம். எத்துணை ஆயிரவர் வரினும் அவர்கெல்லா மன்னமளிப்பது |
அக்ஷயலிங்கேசுவரர் | திருக் கீழ்வேளூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அக்ஷித்திரயம் | மீனாக்ஷி, காமக்ஷி, விசாலாட்சி |
அங்கசன் | மன்மதன் |
அங்கதன் | வாலிமகன், இவன் தாய் தாரை, இவ்வங்கதனை ராமர் தமது சேனாபதிகளுனொருவனாக்கி அவனை இராவணனிடந் தூதுபோக்க, அவன் பேசிய தூதானது அதி சாதுரியமும் வாக்கு விலாசமும் அதி மாதுரியமும் மிகு வசீகரமுடையது, இக்ஷவாகுவமிசம், இராமருடைய தம்பி இலக்ஷுமணனுடைய புத்திரன் இவனே அங்கதபுரத்தை நிருமித்தவன் |
அங்கதபுரம் | இமயமலைக்குச் சமீபத்திலேயுள்ள ஒரு பட்டணம். இலக்ஷுமணன் குமாரனாகிய அங்கதனால் நிருபிக்கப்பட்டது |
அங்கதேசம் | கங்கையும் சரயுவுஞ் சங்கமிக்கின்றதேசம். இது சிவபிரான் மன்மதனை எரித்து அங்கம் போக்கியவிடத்தைத் தன்னகத்தேயுடை மையால் அங்கதேசமெனப் பெயர் பெற்றது |
அங்கனை | உத்தரதிசைக்குக் காவல் பூண்ட பெண்யானை |
அங்கன் | உன்முகன் சேஷ்ட புத்திரன். இவன் பார் சுநீதி. இவன் புத்திரன் வேனன். யயாதியினது நான்காம் புத்திரனாகிய அணுவமிசத்துப் பலி புத்திரன் |
அங்கர் | அங்கநாட்டிலுள்ளோர் |
அங்காதிபன் | அங்கதேசத்து அரசன் |
அங்காரகன் | ஏகாதசவுருத்திரரு ளொருவன். செவ்வாய் நவக்கிரகங்களுள் ஒன்றாகிய இச்செவ்வாய் சிவந்த மேனியுடைமையின் செவ்வாயெனவும், அந்நிறம் பேதித்துத் தோன்றுமாயின் பூமியிலே நோய், கொடிய யுத்தம் முதலிய வுற்பாதகளுண்டாதற் காரணமா மெனவும், பூமகனெவுஞ் சொல்லப்படும் |
அங்காரவர்ணன் | சோமசிரவ தீரத்திலே அர்ச்சுனனோடு யுத்தஞ் செய்து அவன் விடுத்த அக்கினி பாணத்தற்றகிக்கப்பட்டு வேற்றுருக்கொண்டு சித்திரரதன் என்னும் பெயரோடு அந்தரத்திற் பறந்து போன ஒரு கந்தருவன். இவன் சொற்படியே பாண்டவர்கள் தௌமிய முனிவரைத் தமக்குப் புரோகிதராகக் கொண்டார்கள் இவன் பாரி கும்பீனசை |
அங்கி | அக்கினிதேவர் |
அங்கிரசன், அங்கிரன் | பிரமமானச புத்திரரு ளொருவனாகிய இவனுக்கு பிரகஸ்பதி, உதத்தியன் என இருவர் புத்திரரும் யோகசித்தியெனவொரு புத்திரியும் பிறந்தார். யோகசித்தி பிரபாவசுவை மணந்து விசுவகர்மாவைப் பெற்றவள். முன்னொரு காலம் தேவர்கள் தாங் கொடுத்த அலிகளை அக்கினி தேவன் வகிக்காது கோபித்தேக, அவர்க்குப்பிரதியாக அங்கிரசனை வைத்துத் தமது கருமத்தை முற்றுவித்தார்கள். அக்கினி திரும்பிவர, அங்கிரசன் அவரை பிதமாக்கினியாக வைத்துத்தான் சாரூபம் பெற்று அவர்க்கும் பிரதமபுத்திரனாயினான் இவ்வாறாகிய அங்கிரசன் சிவையை மணந்து, பிரகசோதி, பிரககீர்த்தி, பிரகமுகன், பிரகமதி, பிரகபாணன், பிரகஸ்பதி, பிரகபிரமா, என எழுவர் புத்திரரைப் பெற்றான். பின்னரும் சினீ, வாலி, குகு, அர்ச்சிஷ்மதி, மகாமதி என ஐவர் புத்திரிகளைப் பெற்றான் இவரொல்லோரும் அக்கினி ரூபமேயுடையர்,. உன்முகன் புத்திரன், அங்கன் தம்பி, பாரி ஸ்மிருதி |
அசங்கன் | அக்குரூரன் தம்பிகளுள் ஒருவன் |
அசனை | பலியினது பாரி: வாணாசுரன் தாய் |
அசமஞ்சசன் | சகரனுக்குச்சுகேசியிடத் திற் பிறந்த புத்திரன். இவன் துஷ்ட குணத்தை நோக்கி இவனைச் சகரன் தன்னிராச்சியத்திற்கு வெளியே தள்ளி விட்டான். இவன்மகன் அம்சுமந்தன் |
அசி | காசிக்கருகேயுள்ள ஒரு நதி |
அசிக்கிளி | தக்கன் இரண்டாம்பாரி. இவள் அறுபது புத்திரிகளைப் பெற்றவள். ஒரு நதி |
அசிதை | அப்சர ஸ்திரீகளுளொருத்தி |
அசிபத்திரம் | இஃது ஆயிரயோசனை வட்டமாயுள்ள ஒரு நகரம். மிகக் கொடிய சூரிய கிரணம் போன்றவும், அக்கினிக்குண்டம் போன்றவும், வாளாயுதம்போன்றவுமாகிய இலைகளையுடைய மரங்களையுடையது. அங்குள்ள மிருகங்களாலும் பக்ஷிகளாலுந் துன்பப்பட்டோடும் பாபிகனை இம்மரங்கள் ஊறு செய்து வருத்து மியல்புடையன. ஆகவே இந் நரகம் கொடிய பாவிகளுக் கேயுரியது |
அசுமகன் | கல்மாஷ பாதன் மகன். இவன் தாய் பிரசவவேதனையால் வருந்த வசிஷ்டர் பிரசூதிபாஷாணம் என்னும் கல்லால், அவள் வயிற்றைத் தடவுதலும் இவன் பிறந்தானாகலின், அசுமகன் எனப்பெயர் பெற்றான்,, அசுமம் ~ கல், இவன் மகன் மாலகன், மாலகன் நாறீகவசனெனவும் படுவன். விதேகதேசராசாவாகிய ஜனகன் தன் பந்துக்களையிழந்து துக்கத்தால் உலக வாழ்வை வெறுத்துக் காட்டுக்கேக எத்தனித்த போது, பிரபஞ்சவியல்பை யுணர்த்தி ஞானோ உபதேசஞ் செய்து அவனை ராஜாங்கத்தைக் கை விடாமற்றடுத்த ஒரு பிராமணோத்தமன் |
அசுரர் | தேவசத்துருக்கள், அமிர்தங் கொள்ளாதவர்கள், இவர்கள் வைத்தியர், தானவர் என இரு வம்சத்தார், இரணியாசன், இரணியகசிபன், பலி, வாணாசுரன் முதலியோர் தைத்தியர், சம்பரன், தாரகன், விப்பிரசித்தி, ஈமுகி, அந்தகன், முதிலியோர் தானவர் |
அசுரேந்திரன் | தாரகாசுரன் மகன். வீரவாகுதேவராற்கொல்லப்பட்டவன் |
அசுவசேனன் | தக்ஷகன் மகன். இவனைக் காண்டவதகனத்திலே சாகாமல் தேவேந்திரன் காத்தான். பின்னர் இவன் நாகாஸ்திரமாகிச் கன்னனிடமிருந்து, கன்னன் ஏவியபோது அர்ச்சுனன் கிரீடத்தைச் சேதித்துச் சென்றவன் |
அசுவதீர்த்தம் | கங்கையிலே காலாநதி வந்து கூடுகின்றவிடத்திலுள்ள தீர்த்தம். காகி தன் புத்திரி சத்தியவதியைக் கொள்ள வந்த இருசிகனை ஆயிரங் குதிரை கேட்க, அவ்வசுவங்களை இருசிகன் இவ்விடத்திலே பெற்றமையால் இப்பெயர் பெற்றது |
அசுவத்தாமன் | துரோணன் கிருபிலிடத்துப் பெற்ற புத்திரன். இவன் சிரஞ்சீவி, பாரதயுத்தத்திலே அசுவத்தாம னென்னும் யானையொன்றிறக்க, அதனை வாய்ப்பாகக் கொண்டு பாண்டவர்கள் அசுவத்தாமன் இறந்தான் என்று துரோணன் காதில் வீழுமாறு சொல்ல, அஃதுண்மையெனக் கொண்டு துரோணன் மூர்ச்சையாகி வீழ்ந்து திட்டத்துயுமனாற் கொல்லப்பட்டான். அதனைப் பின்னர் உணர்ந்த அசுவத்தாமன் துரோபதை பெற்ற பிள்ளைகளையெல்லாம் கொன்று பழிவாங்கி வந்து பரீக்ஷித்துவையும் சர்ப்பத்தில் அழிக்க முயன்றான். அதனைக் கிருஷ்ணன் தடுத்துப் பரீக்ஷித்துவைக் காத்தனர் |
அசுவபதி | மந்திரதேசத்தை யாண்ட வோரரசன். இவன் சந்தானவிச்சையால் பதினெண்ணாண்டு சாவித்திரியை நோக்கித் தவங்கிடந்து அவனருளால் சாவித்தி ரியைப் புத்திரியாகப் பெற்றவன். கைகேயி தந்தையாகிய கேகயதேச ராஜன், இவன் மகன் யுதாசித்து |
அசுவமேதம் | ஒரு யாகம். அவ்வியாகத்தைச் செய்ய விரும்புபவன் ஒரு சிறந்த ஒரு குதிரையை அலங்கரித்து அதன் நெற்றியிலே அவ்வியாக வரலாறு வரையப்பட்ட ஒரு பட்டங்கட்டி அதற்குக் காப்பாக ஒரு சேனையையும் புறத்தே செல்லச் செய்து அதனைத் திக்குகள் தோறுமனுப்புவன். அதனைச் சத்துருக்கள் பற்றிக் கட்டுங்காலையில் அவர் களைவென்று அதனைமீட்டு அச்சத்துருக்கள் கொடுக்குந் திறைகளோடு தனது திரவிமுஞ் செலவிட்டுச் செய்யப்படுவதாகிய யாகம் அசுவமேதமெனப்படும். இங்ஙனநூறு அசுவமேதஞ் செய்தவன் இந்திரபதம் பெறுவன் |
அசுவினி | நக்ஷத்திரமிருபத்தேழி லொன்று |
அசுவினிதேவர் | சூரியன் பாரியாகிய வடவாருபமபெற்ற சௌஞ்ஞாதேவியினது நாசியிற் பிறந்தோர். இவர் இருவரும் அதிரூபர். இவர்கள் ஒரிடத்துவசிக்காதுல கெங்குஞ் சஞ்சரித்து ஒளஷதம், சாஸ்திரம் என்னுமிரு பிரயோகமுஞ் செய்து அற்புதவைத்தியம் புரிபவர்கள். இவர்கள் திரூபியாகிய சுகன்னிகை என்பவளையும் அவளுக்கு விதிவழிவாய்த்த குருபமுந் தீரநோயுமுடையவனாகிய சியவனனையுங் கண்டு, அவனை நோக்கி, இவனை யேன்மணந்தனை என, நுங்குற்றமாராய்த லென்னையென்றாள். அதுகேட்ட தேவமருத்துவர் நம்குற்றம் யாதென்றனர். அவள் எனது நாயகன் குற்றகளைத் தீர்பிரேல் சொல்லுவேனென்ன, அதற்குடன்பட்டுச் சியவனனை இளங்குமரானாக்கி இனிக் கூறுகவென்றார். அதனைக் கண்டசுகன்னிகை, இன்று நம்மவங் கைகூடிற்றென்று மகிழ்ந்து அவர்களைநோக்கி, ஐயன்மீர் நீர் தேவமருத்துவராகவும் உம்மை அத்தேவர்கள் யாகங்களில் வைத்துக் கொண்டாடா தொழிவதுயாது பற்றியோ வென்றாள். அது கேட்டு வெள்கிய அசுவினிதேவர் அவனை வியந்து வாழ்த்திப் போயினர். அச்சுவினிதேவரிடம் சியவனன் தான் பெற்ற நன்றியை மறவானாகித் தனது மாமனாகிய சரயாதியை ஒரு யாகஞ்செய்யவும் அதிலே தேவர்களோடு அசுவினிதேவர்களுக்கும் அவிகொடுக்கவும் வேண்டினான். அவ்வாறே அவன் அவிகொடுக்க இந்திரன் சினந்து தனது சக்கிராயுத்தை எடுத்தான். அசுவினி தேவரால் அவனுக்கு கையிலே சோர்வாதமுண்டாக, இந்திரன் இதனைத்தீர்ப்பிரேல் எம்மோடு சமானாக்கு வேமென்றிரப்ப, அவர்கள் அந்நோயை நீக்கி அன்று முதல் தேவர்களோடு சமநிலை பெற்றார்கள் |
அசோகன் | தசரதன் மந்திரிகளி ளொருவன். புத்தன். ஓரரசன். இவன் பௌத்தசமயத்தைப் பெரிதுமபிவிர்த்தி செய்தவன். செங்கோன்மையிலுஞ் சிறந்தவனாய் விளங்கியவன். இவன் 2192 வருஷங்களுக்கு முன் மகததேசத்திலரசு புரிந்தவன் |
அசோகவர்த்தனன் | சந்திரகுப்பதன் பௌத்திரன். இவன் மகததேச ராசா |
அச்சுததீக்ஷிதா | இவர் தம் பெயரால் அத்துவைதவேதாந்தா சாஸ்திரமொன்று செய்து சமஸ்கிருத பண்டிதர் |
அச்சுதன் | சிவன். விஷ்ணு |
அச்சுதரகுநாதன் | சமஸ்கிருதத்திலே ராமாயண சாரசங்கிரகஞ் செய்தவர் |
அச்சுமகன் | அசுமகன் காண்க |
அச்சோதம் | ஒரு வாலி, இஃது அச்சோதையென்னும் நதிக்கு உற்பத்திஸ்தானம். குபேரனுடைய சயித்திர ரதமென்னும் நந்தவனம் இவ்வாவிக்கரைக்கண்ணது |
அச்சோதை | ஒரு புண்ணியநதி. அச்சோதை முந்திய ஜன்மத்திலே மரீசி புத்திரராகிய பிதிர்கணங்களுக்கு மானச கன்னிகையாக பிறந்து, அப்பிதிர்களாலே நிருபிக்கப்பட்ட அச்சோதமென்னும் சரோவரதீரத்தில் ஆயிரந்தேவவருஷந் தபசு செய்து அவர்களை மகிழ்விக்க, அவர்கள் திவ்வியங்கார பூஷிதர்களாய்ப் பிரத்தியக்ஷமானார்கள். அவள் அப்பிதிர்களுள்ளே தனக்குத் தந்தைமுறையுடைய மாவசன் என்பவனைத் தனக்குக் கணவனாகுமாறு வேண்டினாள். அது கேட்ட பிதிர்கள் சினந்து அவளை நோக்கி உன் தபசு குலைகவென்று சபிக்க, அவள் யோகப் பிரஷ்டையாகிச் சுவர்க்கத்திலிருந்து கீழ்நோக்கி வீழ்ந்து பூமியிற்படியாது அந்தரத்திலே நின்றாள். அங்கே நின்றபடியே அவள் மீண்டும் பிதிர்களை நோக்கித்தவஞ்செய்ய அன்று அமாவாசை ஆதலால் அத்தினத்திலே பிதிர்களை நோக்கிச் செய்யப்படும் அற்ப தபசுகளையும் அப்பிதிர்கள் அக்ஷயமாகப் பாவித்து த் திருப்தியடைவதியல்பாதலின், அவள் தபசுக்கு மகிழ்ந்து, நீ தேவர் செய்யும் கரும பலத்தையெல்லாம் அனுபவித்து இருபத்தெட்டாவது துவாபர யுகத்திலே மீன் வயிற்றிலே பிறந்து சத்தியவதியெனப் பெயர் பூண்டு விளங்கிப் பராசரரால் வியாசரைப்பெற்று, அப்பால் சந்தனுவுக்குப் பாரியாகி, விசித்திர வீரியன் சித்திராங்கதன் என்போரையீன்று, ஈற்றில் அச்சோதையென்னும் புண்ணிய நதியாகக் கடவையொன்று வரமளித்து மறைந்தார்கள் |
அஜகன் | புரூரவன் வமிசத்தானாகிய ஜன்னுவினது பௌத்திரன் |
அஜகரன் | இரகசியமான பிரமஞானத்தைப் பிரகலாதனுக்கு பதேசித்த மகா விருஷி. இவர் ஆச்சிரமம் சையகிரிச்சாரலின் கண்ணது |
அஜகவம் | சிவன் வில்லு |
அஜன் | இ. ரகுபுத்திரன். இவன் மகன் தசரதன். விதர்ப்பராஜபுத்திரியாகிய இந்துமதியினது சுயம்பரத்துக்குபோன அஜன் வழியிலெதிர்பட்ட ஒருயானை மீது பாணந்தொடுக்க, அவ்வி யானை தனது பூர்வரூபமாகிய கந்தருவனாகி, இருடி சாபத்தால் யானையுருப்பெற்றமை கூறித் தனக்கு அதனால் விமோசனமுண்டாயது பற்றி அவனுக்குத் தானுணர்ந்திருந்த அஸ்திரவித்தையின் நுண்மைகளை யுபதேசித்து அந்தரஞ்செல்ல, அஜன் அவ்வித்தியாசாமர்த்தியத்தால் சுயம்வரத்துக்கு வந்திருந்த அரசரையெல்லாம் புறங்கண்டு இந்துமதியையும் மணம்புரிந்தான். காளிதாசகவி அஜனுடைய பிரதாபத்தை யெல்லாம் மிகச்சிறப்பாக வெடுத்துக் கூறுவர். திருதன் மகன். பிரமன். சிவன். விஷ்ணு. மன்மதன் |
அஜமீடன் | அஸ்புத்திரன். இவன் புத்திரர் பிருகதிஷன். நீலன், ரிக்ஷன் என மூவர். பார்கதிஷ, பாஞ்சால, கௌரவ வமிசங்கள் இவனாலுண்டாயின |
அஜமுகி | சூரபன்மன்றங்கை. காசிபன் ஆட்டுருக்கொண்டு மறியுருக்கொண்டு நின்ற மாயையைக் கூடிப்பெற்ற புத்திரி. சூரபன்மனகுலத்துக்கு நாசாகாரணமாகப் பிறந்தவள் இவளே |
அஜாதசத்துரு | தருமராஜா. விதிசாரன் புத்திரன் இவன் கலி இரண்டா யிரத்தைஞ் நூற்று நாற்பத்தொன்பதிலே மகத தேசத்துக்கு அரசனாக முடி தரித்தவன். இவன் வமிசத்திலே சிசுநாகன் முதலிய அரசர் பிறந்தார்கள். இக்கால வரையறை டக்டர்பூலர் நிச்சயித்தது |
அஜாமிளன் | கன்னியாகுப்ச புரத்திலிருந்த மகாபாதகனாகிய ஒரு பிராமணன். இவன் மனைவி ஒரு சூத்திரப் பெண். இவன் அந்தியகாலத்திலே தன்மகன் நாராயணனைக் கூவியழைத்துக்கொண்டு தேகவியோகமாயினன். அந்நாராயநாம விசேடத்தால் காலதூதர் அவனை விடுத்துப்போக அவன் மீளவும் உயிர்பெற்று மிக்கபக்தி யுடையனாயினான் |
அஜிகர்த்தன் | சுனசேபன் தந்தை. இவன் சில வேதகீதங்களுக்கு கர்த்தன் |
அஜிதன் | பிரமா. விஷ்ணு. சிவன் |
அஞ்சகன் | குனிபுத்திரன் |
அஞ்சனபருவன் | கடோற்கசன் புத்திரன். இவன் பாரத யுத்தத்தில் அசுவத்தாமனாற் கொல்லப்பட்டவன் |
அஞ்சனம் | மேற்றிசைக்காவல் பூண்ட ஆண்யானை |
அஞ்சனாஷிஅம்மை | திருக்கற்குடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அஞ்சனை | ஓரம்சரப்பெண். இவள் ஒரு சாபத்தாற் குஞ்சரன் என்னும் வாநரனுக்குப் புத்திரியாகப் பிறந்து இச்சித்த ரூபங்களை யெடுக்கும் வண்மையுடையவளாய் ஒருநாள் மனுஷரூபமுள்ள ஓரிளம்பெண்ணாகி வாயுபகவானைக் கூடி அநுமானைப் புத்திரனாகப்பெற்றவள். அதன் பின்னர்கேசரியென்னும் வாநரனை மணம் புரிந்து அவனுக்கு மனைவியாயினவள் |
அஞ்சலநாயகி | திருமயிலாடுதுறையிலே கோயில்கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அஞ்சுலன் | சணாக்கியன் |
அஞ்சைக்களத்தப்பர் | திரு அஞ்சைக் களத்திலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அடிதானவன் | அந்தகன் மகன். இவன் சுயரூபத்தோடிருக்குங்காறும் சாகாமலும் வேற்றுருக்கொள்ளும்போது சத்துருக்களா லிறக்கவும் வரம்பெற்றவன். ஒருநாள் பார் வதிதேவியருடைய ரூபமெடுத்துச் சிவனை வஞ்சிக்க எத்தனித்தபோது அவராற் கொல்லப்பட்டவன் |
அடியார்க்குநல்லார் | சிலப்பதிகாரவுரை யாசிரியர். இவர் நச்சினார்க்கினியர்க்கு முந்தியவர் |
அட்டாங்க விருதயம் | இது நூற்றியிருபது அத்தியாயங்களால் ஆயுள்வேதம் முழுவதும் கிரமமாகக் கூறும் நூல். வடமொழியிலே வாக்படரால் செய்யப்பட்டது |
அணிகொண்டகோதை | திருமுல்லைவாயிலிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அணியியல் | மதுரை தமிழ்ச்சங்ககாலத்திலே இருந்து பின்னரிறந்துபோன ஒரு அலங்கார நூல் |
அணு | யயாதி புத்திரருளொருவன் |
அணுகன் | விப்பிராஜன் மகன் இவன் சகுனி புத்திரி கீர்த்திமதியை மணம் புரிந்தவன் |
அண்ணாமலை | அருணாசலம் |
அதங்கோட்டாசான் | அகத்தியர் மாணாக்கருளொருவராய்த் தொல்காப்பியர் செய்த தொல்காப்பியத்தை அரங்கேற்றக் கேட்டவராகிய காரணிகர் |
அதசிரசு | பரிதானம் வாங்குவோர்புகும் நரகம் |
அதர்மன் | வருணனுக்கு ஜேஷ்டா தேவிவயிற்றிற் பிறந்த புத்திரன். இவன் மனைவி நிருபுத்திரியாகிய இம்சை. இவன் தங்கை சுரநிந்தை, பயன், மகாபயன், மிருத்தியு என்போர் இவன் புத்திரர் |
அதர்வணாசாரியன் | பாரதத்தை தெலுங்கில் மொழி பெயர்த்தபண்டிதன் |
அதர்வேதம், அதர்வணவேதம் | நான்காம் வேதம் இவ்வேதம் சத்துரு நாசத்திற்காக அநேக மந்திரங்களை யுடையதாயினும் மற்றைய வேதங்களை போலவேவைதிக கிரியாநூட்டானங்களுக்கு வேண்டற்பலானவாகிய தோத்திரங்களையும், அநேக சூக்தங்களையுமுடையது. இதிற் கூறப்படும் சத்துருநாசமந்திரங்கள் ஆபத்து நிவர்த்திக்காக ஓதப்படுவன, வேதங்காண்க |
அதலம் | கீழுலகங்களுளொன்று. அது வெள்ளிமயமானது. அதில் வசிப்போர் நாகர் |
அதிகன், அதிகமான் | இவன் தனக்கு கிடை த்த அமிர்தத்தையும் கருநெல்லிக் கனியையும் தானுண்டு உடம்பு பெறாது ஒளவைக்கு கொடுத்த பெருவள்ளல். ஒளவைசகோதரன். இவனே தான் பிறந்தவுடன் தன்னைவிட்டுப்போக வருந்திக்கலங்கி நின்ற தாயை நோக்கி, கருப்பைக்குண்முட்டைக்குங் கல்லினுட் டேரைக்கும் என்ற கவி சொல்லி யாற்றினவன் |
அதிகாயன் | ஜராஸ ராவணனுடைய மகன். இவன் பிரமாவினிடம் அவத்தியகவசம் பெற்றவன். இலட்சுமணனால் பிராமாஸ்திரம் விட்டுக்கொல்லப்பட்டவன், அவத்திய கவசம் ~ வதம்பெறக் கவசம் |
அதிசாந்திரன் | சந்திரன் |
அதிசுந்தரமின்னாள் | திரு அச்சிறு பாக்கத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அதிசூரன் | ஏனாதி நாயனாரைக் கொன்ற பாதகன். சிங்கமாசுரன் மகன் |
அதிதி | குசன் மகன் ராமன் பௌத்திரன் |
அதிதி | தக்ஷன் தாய், திதி இல்லது அதிதி: பகலிரவற்றகாலம். என்பது பொருள்,. தக்ஷன் மகள். இவள் கசியபன் பாரி. இவள் புத்திரர் ஆதித்தியர். இந்திரன் முதலியவர்களும் இவளுடைய புத்திரரெனக் கூறப்படுவர் |
அதிபத்தநாயனார் | நாகபட்டணத்திலே பரதவர் குலத்திலே அவதரித்துச் சிவபக்தியிற் சிறந்தவராக விளங்கியவிவர். தமக்குத்தினந்தோறும் அகப்படுகின்ற முதல் மீனை விற்று அப்பொருளைச் சிவ தொண்டுக்கே விட்டு வருபவர். சில தினங்களாக ஒரு மீன் அகப்பட, நியமப்படி அவற்றை சிவதொண்டுக்காக்கிப் பட்டியினால் வருந்திவழியும் தமது பக்தியை நிலைநிறுத்த, அஃதுணர்ந்தருளிய சிவபெருமான் அருள்புரிந்து துன்பங்களையெல்லாம் நீக்கப்பெற்றவர் |
அதிரதன் | சத்தியகர்மன் மகன். இவன் கங்கைக்கரையில் வந்தடைந்த குந்திசிசுவாகிய கர்ணனை எடுத்து வளர்த்தவன். இவன் மனைவி விராதை |
அதிருசியந்தி | அருந்ததி. சக்தியினது மனைவி |
அதிவீரராமபாண்டியன் | பாண்டியர் வழியிற்றோன்றிய வோரரசன். இவன் தமிழில் நைடதமுதலிய அநேக நூல்களியற்றியவன். வரதுங்க பாண்டியன் தம்பி. இவன் விளங்பியகாலம் சாலிவாகனசகம் எழுநூற்றுமுப்தெட்டு எனச் சில கற்சாசனங்களால் நிச்சயிக்கப்படும் |
அதிஷ்டானபுரம் | சேதி தேசத்து ராஜதானி |
அதீனன் | சஹதேவன் புத்திரன் |
அதுலகீர்த்தி | அதுலவிக்கிரமனுக்குப் பின் மதுரைக்கரசனான பாண்டியன் |
அதுலவிக்கிரமன் | இவன் சமரகோலாகல பாண்டியனுக்குப்பின் மதுரையிலரசு செய்திருந்த பாண்டியன் |
அதூர்த்தரஜசு | குசநாபன் மகன் |
அதோக்ஷஜன் | விஷ்ணு |
அத்தியக்ஷரம் | ஓங்காரம், பிரணவம் |
அத்தியான்மராமாயணம் | விசுவாமித்திரராற் செய்யப்பட்ட வோருபதேசநூல் |
அத்தியான்மர் | அண்ட பிண்டம் இரண்டிலும் வியாபகமாவுள்ள வாயுக்கள். பதின் மூன்ம்மிப்பெயர் பெறும் |
அத்திரி | பிரமாவினுடையமானச புத்திரருளொருவன். மனைவி அநசூயை. இவன் தனது தபோபலத்தால் சோமதுர்வாசதத் தாத்திரெயர்களைப் பெற்றவன். இவ்வத்திரி பிரஜாபதிகளுனொருவன். சந்திரன் இவ்வத்திரியினது கண்களினின்றுந் தோற்றியதென்று இரகுவம்சம் முதலிய நூல்கள் கூறும். இராமரைத் தண்டகாரணியத்தில் இவ்விருஷி கண்டபொழுது அவரைத் தமது ஆச்சிரமத்திற்கழைத்து உபசரித்தாரென்று இராமயணங் கூறும். இவர் சப்த இருஷிகளுளொருவர் |
அத்திரிகை | ஓரப்சரப்பெண் |
அத்துவைதம் | இது பிரமமல்லது வேறில்லையென்பதே தனக்குச் சிந்தாந்தமாகக் கொண்ட வேதாந்த மதம். பிரமம், அவித்தை என இருபதார்த்தங்கள் இம்மதத்தாற் பிரதிபாதிக்கப்படும். அவற்றுள் பிரமம் சத்தியம், ஞானநந்தாத்மகம், நிர்விகாரம், நிரவயம், நித்தியம், நிர்த்தோஷம், விபு என்னும் ஏழு லக்ஷணமுடையது. அவித்தை, அபாரமார்த்திகம், சதசத்துவிலக்ஷணங்களுடையது. பஞ்ச பூதங்கள் அவித்தையினது காரியங்கள். அவற்றுணின்றும் திரிகுணக்கலவையாகிச் சந்துவகுணத்தின் கூறாகிய ஞானேந்திரியும் ஐந்தும் அந்தக்கரணம் நான்கு முண்டாகின்றன. ரசசால் கன்மேந்திரியங் கள் ஐந்தும் பிராணன் ஐந்தும் உண்டாகின்றன. இவையெல்லாம் சூக்குமதேக காரணம். தமோகுணத்தின் கூறாகிய அபஞ்சீகிருத பூதங்களினாலே பஞ்சீகிருத பூதங்கயுண்டாம். இவையே ஸ்தூலதேகமாம் பிரபஞ்சநாசம் பிரளயமெனப்படும். மோக்ஷசாதனமாவன நித்தியா நித்திய வஸ்துவிவேகம் விஷயபலவைராக்கியம் முமூட்சுத்துவம் என்பன இவற்றாற் பிரமந் தவிர வேறில்லையெனக் கண்டல் மோக்ஷம் |
அத்துவைதாநந்தன் | வேதாந்த நூலுக்கு வியாக்கியனஞ் செய்தவர். சதாகந்தரிக்கும் குரு |
அநசூயை | அத்திரிபாரி ஸ்ரீராமன் வனவாசத்துக்கண் தண்டகாரணியத்தில் அத்தரி ஆச்சிரமத்துக்கு சென்றிருந்த போது இவ்வநசூயை சீதைக்குப் பெண்களுக்குரிய ஓழுக்கங்களெல்லாம் உபதேசித்து உனக்குச் சுமங்கலியலோபமில் லாதிருக்கக் கடவதென் றாசீர்வதித்து அநேக வஸ்திராபரணங்களுங் கொடுத்தவன். சகுந்தலை தோழி |
அநந்தநேமி | புத்தர் காலத்திலே உச்சயினியிலே அரசு புரிந்திருந்த பிரத் தியோதன் தந்தை |
அநந்தன் | ஆதிசேஷன். விஷ்ணு. சிவன். கிருஷ்ணன். பலதேவன். வாசுகி. பிரமம். ஆகாயம். புத்தருடைய பிரதம சீஷருளொருவன். இவனே கௌசாம்பியிலரசு செய்திருந்த உதயணன் மனைவியர் ஐந்நூற்றுவருக்கும் பௌத்தமததோபதேசஞ் செய்தவன் |
அநந்தவிஜயம் | தருமபுத்திரன் சங்கு |
அநந்தவிரதம் | இது புரட்டாசிமாசத்துச் சுக்கிலபக்ஷத்துச் சதுர்த்தசியில் அநுட்டிக் கப்படுவதாகிய அநந்தபத்மநாபன் விரதம். இது பாண்டவர்கள் வனவாசஞ்செய்த போது கிருஷ்ணனாற் கூறப்பட்டது. அது மகத்தான ஐசுவரியங்களைக் கொடுக்க வல்லது |
அநந்தை | பார்வதி. பூமி |
அநந்நியஜன் | ஒரு சோழன். இவனே சேக்கிழாரைக்கொண்டு பெரியபுராணஞ் செய்வித்தவன். இவனுடைய அரசின் செம்மையும் கீர்த்தியையும் நோக்கி அக்காலத்துப் புலவரொருவர் சொல்லிய வெண்பாவருமாறு: அன்னை போலெவ் வுயிருந்தாங்கு மனபாயா ~ நின்னை யாரொப்பார் நிலவேந்தரன்னதே ~ வாரிபுடைசூழ்ந்த வையகத் திற்கில்லையாற் சூரியனே போலுஞ் சுடர் |
அநமித்திரன் | உதாசித்து புத்திரன். இவன் புத்திரர் நிக்கினன், சினி, பிருசினி என மூவர் |
அநரணியன் | அநேநசன், இ,. திரசதசியன் புத்திரனாகிய வசுதன். இவன் இராவணனாலிறந்த போது எனது வமிசத்தில் வந்து பிறக்கப்போகின்ற ஸ்ரீராமனால் நீயுங் கொல்லப்படுவாயென அவனுக்கு சாபங்கூறி இறந்தவன். இவன் மகன் அரியசுவன் |
அநர்க்கராகவீயம் | முராரியாற் செய்யப்பட்ட ஒரு சமஸ்கிருத நாடகம் |
அநலன் | மாலிமகன். விபூஷணனது அநுசரன். அக்கினி. குசன் வமிசத்து நிஷதன் மகன் |
அநலப்பிரியா | சுவாகாதேவி |
அநலர் | தேவதாபேதம். இவர் நாற்பத்தொன்பதின்மர். இவர்க்குத்தலைவன் அபிமானன். அவன் புத்திரர் பாவகன், பவமானன், சுசி என மூவர். இவர்கள் புத்திரர் நாற்பத்தைவர். அக்கினிகாண்க |
அநலை | மாலியவானுக்குச் சுந்தரி வயிற்றிற் பிறந்த புத்திரி |
அநாகுலன் | இடைச் சங்கத்தார் காலத்திருந்த ஒரு பாண்டியன். சாரகுமாரன் தந்தை. இவன் தேரேறி விண்ணிடைச் செல்லும்போது திலோகத்தமையைக் கூடிச் சாராகுமாரனைப் பெற்றவன் |
அநாயு | அநுகை. கசியபன் மனைவியாகிய தக்ஷன் மகள் |
அநிருத்தன் | கற்பாரம்பத்திலே நாராயணன் பிரமாவைச்சிருட்டிக்க வெடுத்த அவதாரம். பிரத்தியுமனனுக்கு உருக்குமினியினது புத்திரி வயிற்றிற் பிறந்த புத்திரன். கிருஷ்ணன் தௌகித்திரன். இவன்வாணாசுரன் மகளாகி உஷையாற் கவரப்பட்டவனாய் அவள் தோழி சித்திர லேகை சகாயத்தால் கடினமாகிய காவலைத்தாண்டி உஷையுடைய பள்ளியறையிற் போய்ச்சேர்ந்து இரகசியமாக அவளைக் கூடியபோது, வணாசுரர் அஃதுணர்ந்து அவனை யுத்தத்திற்கொல்ல எத்தனிதாற்றாது ஈற்றிலே தனது மாயாசா லத்தால் அவனை மயக்க, அஃதறிந்த கிருஷ்ணன் அவவாணாசுரனைப் போரிலே தோற்றோடச் செய்து அநிருத்தனைக் காத்து உஷையையும் அவனுக்கு மனைவியாக்கினார் |
அநிலன் | அஷ்டவசுக்களுள் ஒருவன். வாயு. அவன் பாரி சைவை. புத்திரர் புரோஜவன், விஜானகதி என இருவர். மாலிமகன். இவன் விபீஷணன் தோழன். அநலன் தம்பி |
அநீதன் | வசுதேவன் தம்பி |
அநு | குருவசன்மகன். கணு போதலோமன் மகன் |
அநுகீதை | தேவாந்தகிரந்தங்களுளொன்று. அது பாரதத்தில் அசுவமேதபருவத்திற் சொல்லப்பட்டுள்ளது |
அநுகை | அநாயு |
அநுதாபன் | தநு புத்திரன் |
அநுபதேவன் | தேவகன் மகன். அக்குரூரன் இரண்டாம் புத்திரன் |
அநுபமை | தென்மேற்றிசைப் பெண் யாணை |
அநுமதி | பிரமாவினது பாரிகளொருத்தி |
அநுமதீயம் | பாவ ராக தாளமென்னும் மூன்றின் லஷணங்களையுங்குறித்து அநுமனார் செய்த பரத சாஸ்திரம் |
அநுமன், அநுமந்தன் | வாயு அநுக்கிரகத்தால் அஞ்சனை வயிற்றிற் பிறந்த ஒருவாநரவீரர். மிக்க ஆற்றலும் வலியுமுடையவர். இவரைத் தேவ அமிச மென்ப. கல்வியறிவாலுஞ் சிறந்தவர். இவர் வாலியினது அக்கிரமங்களைச் சகிக்கலாற்றாதவராகித் தற்செயலாக ராமரையடைந்து அவரால் வாலியைக் கொல்லுவித்து அவன் தம்பிக்கு முடி சூட்டிய பின்னர், ராமருக்கு அடிமை பூண்டு அவருக்குத் தூதராகிச் சீதையைத்தேடி இலங்கைக்கு கடலைத்தாவிப் பாய்ந்துசென்று, அங்கே சீதையைக்கண்டு மீண்டு ராமரை அடைந்து, அவரைக் கொண்டு சென்று சேதுபந்தனஞ்செய்து. அவ்வழியே அவரையும் சேனையும் நடத்திப்போய், அவர் ராவணனை வதைத்துச் சீதையைச் சிறைமீட்டு வருங்காறும் அவருக்கு சகாயஞ் செய்து பின்னரும் ராம பக்தராயிருந்தவர் |
அநுஹலாதன் | இரணியசூசிபன் மகன் |
அநுஹிராதன் | குரோதத்தால் நஷ்ட மடைந்த ஓரரசன் |
அநூரு | காசியப்பிரசாபதிக்கு விநாதையிடத்துப் பிறந்த புத்திரன். கருடன் இவன் தம்பி. இருவரும் அண்டசம். விநதை தனது சக்களத்தி கத்துருவைக்கு முதலிலே புத்திரன் பிறந்து விட்டானென்னும் அசூயையினாலே தன்னுடைய அண்டம் பரிபக்குவமடைய நாளாயிற்றேயென்று சினந்து அவ்வண்டத்தை யுடைத்துவிட, அதுகாரணமாக அநூரு தொடைமுதலிய கீழங்கங்களில்லாமற் பிறந்தான். தன் தங்கவீனத்துக்குக் காரணமாயிருந்தவள் தாயெனவுணர்ந்து அநூரு அவலைக் கத்துருவைக்கு அடிமையாகவென்று சபித்து விட்டுச் சூரியனிடஞ் சென்று அவனுக்குச் சாரயியாயினான். இவன் அருணன் என்றும் பெயர்பெறுவான். இவன் பாரி சியேனி. மக்கள் சமபாதி, சடாயு |
அநேசு, அநேசன் | ஆயுபுத்திரன். இவன் நகுஷன் தமையன். இவன் மகன் சுதத்தன். ககுத்தன் மகன் இவன் அநரணியன் சுயோதனன் என்றும் பெயர்களும் பெறுவான் |
அந்தகன் | யமன் |
அந்தசிலம் | விந்தியபர்வத்திலுள்ள ஒரு நதி |
அந்தன் | திருகியனுடைய பௌத்திரபுத்திரன். விப்பிரசித்தி மகன் |
அந்தரம் | ஆந்தரதேசம். தெலுங்குதேசம் |
அந்தரிக்ஷன் | முராசுரனுடையமகன். இவன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன் |
அந்தர்த்தானன் | விசயாசுவன். புருது சக்கரவர்த்தி மகன். இவனுக்கு பாரிகள் இருவர். முதற்பாரி சிகண்டி என்பவள். வசிஷ்டன் சாபத்தாற் பூமியிலே பிறந்து பாவகன், பாவமானன் சுசி என்னும் மூன்று அக்கினிகளையும் பெற்றாள். இவர்கள் தம்பாலியத்தில் இறந்தார்கள். இரண்டாம் பாரியான நபஸ்வதியிடம் அவிர்தானன் பிறந்தான் |
அந்திசாரன் | மதிசாரன். அந்தகன். சாத்துவதன் மக்களுள் ஒருவன். இவனுக்கு பாசமானன், குங்குரன், சுசி, கம்பளபரிகிஷன் என நால்வர். தனுமகன் |
அந்திமான் | கொடையிற் சிறந்தது வள்ளற்பெயர் கொண்ட எழுவருளொருவன் |
அனந்தகுணபாண்டியன் | குலோத்துங்க பாண்டியன் புதல்வருளொருவன். இவன் காலத்திலேயே நாகமெய்ததும் மாயப்பசு வதைசெய்ததுமாகிய திருவிளையாடல்கள் நடந்தன |
அனந்தசுகபாண்டியன் | அனந்தகுண பாண்டியனுக்குப் பின்னரசுசெய்த ஒரு பாண்டியன் |
அனந்ததேசுரர் | ஈசுரதத்துவத்திலிருக்கும் அஷ்டவித்தியெசுரருக் குள்ளே தலைமை பெற்றவர். இவர் மாயாதத்துவ புவனங்களை யுண்டாக்கு மதிகாரமூர்த்தி |
அனந்தவிதகுண பாண்டியன் | குலபூஷண பாண்டியனுக்கு முன் அரசு செய்தவன் |
அனாசிரிதம், அநாசிரிதம் | இருநூற்று முப்பத்தைந்து புவனங்களுளொன்று |
அனு | யயாதிபுத்திரருளொருவன் |
அன்னம் | ஹம்சமென்னும் வடமொழி அன்னமெனத் தமிழிலே மருவிற்று. பாலையும் நீரையுங் கலந்துவைக்கிற் பாலைப் பிரித்துண்ணு மியல்பினதாகிய தொரு தெய்வபக்ஷி. பிரமாவுக்கு வாகனமிதுவே. இதன் நடை மகச்சிறந்தாதலிற் பெண்களுடையநடைக்கு உவமையாகப் புலவராலெடுத்தாளப்படும் |
அபயகுலசேகரசோழன் | இச்சோழன் நம்பியாண்டார் நம்பி நிவேதித்த பழம் முதலியவற்றைப் பொல்லாப்பிள்ளையார் என்னுஞ் சிலா விக்கிரகம் உண்மையாகத் துதிக்கை நீட்டி யேற்று திருவமுது செய்யக் கண்டவன் |
அபயன் | தருமன் புத்திரருள் ஒருவன். ஒரு சோழன். இவன் கலிங்கநாட்டிற் படைநடத்திப் பெரும்போர் புரிந்தந் நாட்டைத் தன்னடிப்படுத்தி மீண்டவன் |
அபாணை | பார்வதி தேவியார் சிவபெரு மானை நோக்கித் தவஞ்செய்து கொண்டிருந்த காலமெல்லாம் தாம் இலையிற் பூசிப்பதில்லையென்று நியமஞ் செய்தமையால் இப்பெயர்பெற்றார், பர்ணம் ~ இலை |
அபிசாரர் | காசுமீரத்துக்குச் சமீபத்திலுள்ள ஒரு நாட்டில் வசிப்பவராகிய கிருஷிகர்கள் |
அபிசித்து | தவித்தியோதன். ஒரு நக்ஷத்திரம் |
அபிதான ரத்தினமாலை | இஃதொரு சமஸ்கிருத வைத்திய நூல் |
அபிதானசிந்தாமணி | ஏம சந்திரன செய்த சைன சித்தாந்த நிகண்டு |
அபிநவகுப்தன் | சங்கராசாரியாரலே வாதத்திலே வெல்லப்பட்ட ஒரு சமஸ்கிருத பண்டிதன் |
அபிமன்னியன் | அர்ச்சுனனுக்கு சுபத்திரையிடத்திற் பிறந்த புத்திரன். இவனைச்சந்திர அமிசமாகப் பிறந்தோனென்பர். விராடன் மகள். உத்தரையை மணம் புரிந்தவன். இவன் பாரதயுத்தத்திற் பதின்மூன்றாநாள் பதும வியூகத்தையழித்து உட்புகுந்து அசகாயனாய்த் தனித்து நின்று கொடியயுத்தஞ் செய்து ஈற்றில் உயிர் துறந்தவன். இவனிறந்தபோது இவன் புத்திரனாகிய பரீஷித்து உத்தரை கருப்பத்திலிருந்தான். பதும வியூகமாகவது சேனைகளைச் சிலந்திவலையினது ஆகாராமாக அணிவகுத்து நிறுத்தி அதற்குள்ளே சத்துரு சேனைகளை அகப்படத்தி யுத்தஞ்செய்யும் மோருபாயம். காசுமீரதேசத்திலே ஆயிரத்தெண்ணுற்றைம்பது வருஷங்களுக்கு முன்னே அரசு செய்த அரசன் |
அபிராமி | இன்றைக்கு நானூற்றறுபது வருஷங்களுக்கு முன்னே மதுரையிலரசு செய்த வீரபாண்டியராஜன் காமக் கிழத்தி. இவளுடைய புத்திரன் சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயன். இவனுஞ் சிறிதுகாலமாரசு செய்தவன். சப்த மாதர்களுளொருத்தி. பார்வதி |
அபிராமிப்பட்டர் | இவ்வந்தனர் நூற்றறுபது வருஷங்களுக்கு முன்பே திருக்கடவூரில் பிறந்து தமிழும் சமஸ்கிருதமும் நன்கு கற்றுத் தமிழ்ப்புலமை நிரம்பியவராய்த் தேவி பூசையே அதிசிரத்தையோடு செய்பவராயொழுகு நாளிலே தஞ்சைமகாகரஞ் சென்றரசனைக் கண்டு அவன் பாற்றமது. கல்விச் சாதுரியத்தைக் காட்டி அங்கே சிலநாள் வசித்தார். ஒருநாள் அரசன் அவரை நோக்கி இற்றைத் திதியென்னவென்று வினவ, அவர் அற்றை நாள் அமாவாசை யாகவும் மறவிப்பற்றிப் பூரணை நாளென்றார். அரசன் சிலேஷார்த்தமாக, இதுமதிகெட்டதினம் என்று கூற பட்டர் அவன் குறிப்பையுணர்ந்து, தாம் கூறியதை தாபிக்கவெண்ணி, பூரணைதான் என்று வலியுறுத்துரைத்துச் சூரியாஸ்தமயன வேளையில் வந்து காட்டுவேனென்று விடைபெற்று பூசைக்கு சென்றார் அரசனும் அஸ்தமயன காலம் எப்போது வருமென ஆவலோடு காத்திருந்தான். பட்டர் குறித்த நேரத்திலே அரசன் சமுகஞ் செல்ல இருவரும் உப்பரிகை மேற் சென்று கீழ்த்திசை நோக்கியிருந்தார்கள். இச்சமாசாரத்தை கேள்வியுற்ற நகரத்துச் சனங்கள் எல்லோரும் அவ்விடத்திற் சென்று கூடினார்கள். மாலைக்காலமும் வந்தடுத்தது. பட்டர் சர்வாண்டங்களையு மீன்று காக்கின்ற உலகமாதா தம்மையும் காப்பாளென்னும் பேருறுதிளுடையவராய் அரசனை நோக்கி, ராஜகெம்பிரா! என் வாக்கு என் வாக்காயிற் பொய்க்கும், என் வாக்கெல்லாம் தேவிவாக்கே யாதலின் மெய்வாக்கேயாம். காட்டுவேன் காண்பாயாவென்று கூறி, அபிராமியம்மையார் மீது அன்புமயமாகி ஓரந்தாதி பாடத்தொடங்கி பத்துக்கவி சொல்ல, பூரணை கலையோடு கூடிய தண்ணிய சந்திரன் கீழ்த்தி சையிலேயுதித்து யாவருங்கண்டு கண்களிகூர மேலெழுந்தது. பட்டர் தாமெடுத்த அந்தாதியை அவ்வளவிலே நிறுத்தாமலும் மனம் பேதுறாமலும் உளங்கனிந்து நூறுபாவாற் பாடிமுடித்தனர். அதுகண்ட அரசன் அதியமும் ஆநந்தமும் பேரச்சமு முடையவனாகி அவரை வீழ்ந்து நமஸ்கரித்துத் தாமிராசாசனத்தோடு சில மானியங்கள் கொடுத்தான். இன்றும் அவர் பரம்பரையில் வந்துளோர் அச்சாசனமும் மானியமு முடையராய்த் திருக்கடவூரில் வசிக்கிறார்கள், இற்றைக்கு பத்து வருஷத்துக்குமுன் யாம் திருவிடைக்கழிக்குச் சென்றபோது அச்சாசனத்தை கண்ணாரக் கண்டோம், பட்டர் முறுகிய அன்போடு பூசித்து வந்த உலகமாதாவாகிய உமாதேவியார் சிலம்பே சந்திரனாகி அரசன் முதலியோர்க்குத் தரிசனங்கொடுத்துச் சிறிது நேரத்தில் மறைந்தருளிற்றென்றார் |
அபிராமியம்மை, அபிராமித்தாய், அபிராமவல்லி | திருக்கடவூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அபிஷேகபாண்டியன் | உக்கிரபாண்டியன்மகன். உக்கிரபாண்டியன் புலிவாய்ப்பட்டிறக்க, அவனுடைய காமக்கிழத்தி புத்திரன் ஆபரணமண்டபத்துட்புகுந்து பட்டத்துக்குரிய முடியை கவர்ந்து சென்றான். தேடியபோது அஃதில்லா திருப்பக்கண்டு, கவன்று, நவரத்தினங்களுக்கு என்ன செய்வோமென்று மந்திரிகள் திகைத்தார்கள். அப்பொழுது சிவபிரான் மாணிக்கப் பொதியோடு ஒருவணிகனாகி அவர்பாற் சென்று மாணிக்கம் விற்றுத் திருவிளையாடல் காட்டிப்போயினார். இப்பாண்டியன் காலத்திலேயே கல்லானை கரும்பருந்திய அற்புதத் திருவிளையாடல் நிகழ்ந்ததுமாம் |
அப்சரசுகள் | ஒருதேவகணம்: மேனகை, அரம்பை, கிருதாசி, திலோத்தமை முதலான தேவகன்னியர். இவ்வப்பரசுகள் பாற்கடலில் பிறந்தவர்களென்றுஞ் கசியபன் புத்திரிகள் என்ரும் சொல்லப்படுவார்கள். இவர்களைக் கந்தருவப் பெண்களென்றுங் கூறுப. இவர்கள் பதினான்கு வகைப்படுவர் |
அப்ஜன் | சந்திரன். தன்வந்திரி, ஜலத்திற் பிறந்தவன் என்பது பொருள் |
அப்பர் | திருநாவுக்கரசு நாயனார் |
அப்பிரககற்பம் | சிவபிரானருளிய ஒரு வைத்திய நூல். அஃது அப்பிரகவிஷய மேயெடுத்து விரிப்பது |
அப்பிரதிரதன் | மதிசாரனது மூன்றாம் புத்திரன். கண்ணுவன் தந்தை |
அப்பிரதிஷ்டம் | இஃது ஒரு நரகம். அந்த நரகத்தில் கொடியபாவிகள் ஆங் குள்ள எண்ணில்லாத யந்திரங்களிலிட்டு அரைக்கப்படுவார்கள் |
அப்பிரமை | கீழ்த்திசை பெண்யானை |
அப்பூதியடிகள் | இந்நாயனார் திருநாவுக்கரசுநாயனாரது மகிமைகளை கேள்வியுற்று அவரைக்கண்டு ஆராதிக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டிருக்கு நாளில் ஒருநாள், திருநாவுக்கரசரங்கேவர அவரை உபசரித்து, அவர்கன்னம்படைக்கும் பொருட்டு ஒரிலைக்கலங் கொண்டுவரப் போன தம் மைந்தன் வாழைமரத்தடியிலிருந்த நாகங் கடித்து இறக்கவும், அதனை பெரிதாகக்கொள்ளாது அப்பிரேதத்தை மறைத்து வைத்துவிட்டு திருநாவுக் கரசரக்கு திருவமுது செய்வித்தலிலே கருத்துடைய ராயிருந்தார். திருநாவுக் கரசரஃதுணர்ந்து அப்பிள்ளைக்கு விடந்தீர்த்து நாயனார் பக்தியை மெச்சி திருவமுது செய்து போயினார். அப்பூதியடிகள் திங்கலூரிலே பிராமண குலத்திலுத்தித்தவர் |
அப்பையதீஷிதர் | இவர் காஞ்சிபுரத்துக்குச் சமீபத்திலுள்ள அடையகுலம் என்னும் அக்கிரகாரத்திற் பிறந்த அந்தணர். வடமொழியில் மகாசதுரர். இவராற் செய்யப்பட்ட நூல்கள் ஏறக்குறைய முந்நூறு. அவை சிவகர்ணார் மிதம் முதலியன. தர்க்கம், வியாகரணம், வேதம், புராணம் முதலியவற்றில் மகாநிபுணர். சிவபரத்து வஞ்சாதித்தாருள் இவர் தலைத்தர வல்லுநர். இவர் கலியுகம் 4700 அளவில் விளக்கியவர் |
அமரசிங்கன் | விக்கிரமார்க்கன் காலத்திலே விளங்கிய ஒரு சைன வித்துவான். இவனே அமரஞ் செய்தவன் |
அமராவதி | தேவேந்திரன் இராஜதானி |
அமரிஷன் | சுசநதிமகன் |
அமர்நீதிநாயனார் | பழையாறை என்னுமூரிலே வணிகர்குலத்திலே யுதித்த சிவபத்தர். இவருடைய பக்தியை சோதிக்குமாறு ஒருநாள், சிவபெருமான் ஒரு முனிவரைப் போலச் சென்று ஒரு கௌபீனத்தை அவரிடத்தில் அடைக்கலமாக வைத்துவிட்டுப்போய் மீண்டுவந்து கௌபீனத்தைக் கேட்டார். அது தெய்வச் செயலாற் காணாமற்போய்விட அமர்நீதி நாயனார் திகைத்து நின்றுண்மையைச் சொல்லி அதற்கீடாகப் புதிரென்று தருவேனென்ன, முனிவர் தம்மிடத்திருந்த மற்றொரு இணைக்கௌபீனத்தை ஒரு தராசிலிட்டு அந்நிறை கொண்டது கொடுகவென்றார். அமர்நீதியார் தம்மிடத்திருந்த வஸ்திர வகையெல்லாமிட்டும் தட்டுச் சமப்பாடதது கண்டு மனைமக்களை யேற்றித் தாமுமேறி சமப்படுத்தி கடைத்தேறினார் |
அமவசு | புரூரவன் மகனாகிய விஜயன் |
அமாவாசியை | பிதிர்தினம். அச்சோதை காண்க |
அமிசு | சாத்துவதன் தந்தை |
அமிதாசுவன் | பரிகிணாசுவன் |
அமிர்தகவிராயர் | இற்றைக்கு இருநூற்றிருபது வருஷங்களுக்கு முன் இராகுநாத சேதுபதியை ஒருதுறைக்கோவை யென்னும் நூலினாற் பாடினவர் |
அமிர்தசாகரம் | பிரதாபசிங்கன் செய்த வைத்தியநூல். இதில் நோயும் சிகிற்சையும் விரிவாகக்கூறப்படும் |
அமிர்தத்துவஜன் | காண்டிக்கியன் தந்தை |
அமிர்தநாயகி | திருப்பாதாளீச்சரத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அமிர்தமதனம் | இதன் பொருள் அமிர்தம்கடைதல். தேவர்களும், அசுரர்களும் கூடி அமிர்தங்கொள்ளக் கிருதயுகத்திலே மந்தரத்தை மத்தாகவும் வாசுகியை தாம்பாகவும் கொண்டு திருப்பாற்கடல் கடைந்தனர். விஷம், லக்ஷுமி, சந்திரன், தந்வந்திரி, உச்சைசிரவம், கவுஸ்தூம், பாரிஜாதம், ஜராவதம், கற்பகதரு, காமதேனு, அமிர்தம் இவை திருப்பாற்கடல் கடைந்த போதுதெழுந்தன. திருப்பாற்கடலென்றது மூலப்பிரகிருதி ஆகாயரூபமாகிக்கிடந்து பின்னர் தடித்து வாயுரூபமாகிக் கிடந்தது. பின்னர்த் தடித்த வைசுவரநரமென்னும் அக்கினி ரூபமாகக்கிடந்த பரிணாரூப் பிரமாண்டத்தை கண்ணுக்கு விடயமாகிய தோற்றப் பிரபஞ்சமெல்லா முண்டாயது இவ்வமிர்தமதனைத்தினாலேயாம். இவ்வுலகங் காரியப்பட்ட முறையையே அமிர்தமதனமெனப் பௌராணிகர்கள் குறிப்புரையாற் கூறிப்போயினார்கள். கிருகயுகமென்பதன் பொருள் பிரமாண்டம் சிருட்டிக்காரியப்பட்ட யுகமென்பது. மந்தரமென்றது ஆகாய மத்தியிலே கிடந்து தான் சுழலும் போது தன்சந்நிதிபட்ட சர்வாண்டங்களையுமுடன் சுழலச் செய்வதாகிய ஒரு சக்தியை. அது கலங்கா நிலைமைத்தாதலின் மலையெனப்பட்டது. வாசுகியென்றது அண்டங்களை யெல்லாந்தத்த நிலையினிறுத்துவதாகிய ஒரு சக்தியை. இவ்விரண்டு சக்திகளும் ஒன்று தன்மாட்டுக்கவர்வதும் மற்றது தனது நிலையையே நாடுவதுமாயொன்றற் கொன்று தம்முண்மாறுகொண்டன. தேவாசுரர்களெனக் கூறப்பட்டன வீண்டு முறையே இரசோகுணப்பிரவிருத்தி தமோகுணப் பிரவிருத்திகள். மேலே கூறப்பட்ட இரு சக்திகளையும் இவ்விருவகைப் பிரவிருத்திகளும் எழுப்பியாட்டிய செய்தியே கடைதலெனப்பட்டது. கடைதலாலுண்டாகிய கொடிய வுஷ்ணமே விஷமெனப்பட்டது. லக்ஷ்மி என்றது இளமை, அழகு முதலியவற்றை தருமாற்றலை. உச்சை சிரவம் ஜராவதமென்பன. முறையே குதிரை வடிவும் யானை வடிவுமுடையவனாய் நக்ஷத்திர மண்டலத்துக் குகப்பாலுளவாகிய இரு தாராகாகணம். கவுஸ்துபமென்றது சூரியனை. சூரியனுக்கு அண்டயோனியென்றும், சந்திரனுக்கு அப்ஜன் என்றும் பெயருண்டாயது. இத்திருப்பாற் கடலிடைப்பிறந்தமை பற்றியேயாம். இவற்றால் இவ்வமிர்தமதன விஷம் சிருட்டிகருமத்தைக் குறித்ததேயாமென நிச்சயிக்கப் படும் |
அமிர்தமுகிழாம்பிகை | திருத்துருத்தியிற் கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அமிர்தாம்சன் | சந்திரன், சந்திரதேகம் அமிர்தசொரூபமாதலினாலே தேவர்கள் அபரபக்ஷத்திலே தினமொரு கலையாகப் பதினாறு கலைகளையு முண்கின்றார்கள் |
அமுதகடநாதர் | திருக்கோடிக் குழகரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அமுதகடேசர் | திருக்கடவூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அமுதகலைநாதர் | திருக்கலைய நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அமுதசாகரர் | யாப்பருங்கலக் காரிகை செய்தவர். இவர் சைனர் |
அமுதவல்லியம்மை | திருப்பனங்காட்டூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருக்கலய நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அமோகவர்ஷன் | கலி நாலாயிரமளவில் தொண்டைமண்டலத்திலரசு புரிந்த வோரரசன். இவன் காலத்தில் அருகமதம் அபிவிருத்தி பெற்றது |
அம்சுமந்தன், அஞ்சுமான் | அசமஞ்சசன் புத்திரன். இவன் புத்திரன் திலீபன். சூரியன் |
அம்சுமாலி, அஞ்சுமாலி | சூரியன் |
அம்சுலன் | சாணக்கியன் |
அம்பர் | திவாகரநிகண்டு செய்வித்த சேந்தன் என்னும் சிற்றரசன். ஓரூர் |
அம்பர்கிழான் | ஒரு வேளாளப் பிரவு |
அம்பஷ்டதேசம் | உசீநரனுடைய மகன் சுவிதரன் என்பவன் நிருபித்த ராச்சியம் |
அம்பாத்திரயம் | ஞானம்பா, பிரமராம்பா, மூகாம்பா என மூவர் |
அம்பாலிகை, அம்பிகை | காசிராஜன் புத்திரிகள். அம்பையினது தங்கையர். விசித்திரவீரியன் பாரிகள். இவ்விருவருள் அம்பிகைமூத்தவள். விசித்திரவீரியன் இறந்த பின்னர் தேவரநியாயம்பற்றி இவள் சத்தியவதியினது அனுமதி கொண்டு வியாசரைக்கூடித் திருதராஷ்டிரன் பாண்டு என்பவர்ளைப் பெற்றாள் |
அம்பாஷீன் | மாந்தாதா புத்திரன் மகன் யாவனாசிவன். இரண்டாம் நாபாகன் மகன். நபகன் பௌத்திரன். இவன் சுத்த அரிபத்தன். இவவ்வம்பரீஷன் துவாதசிவிரதத்தை அநுஷ்டித்து வருநாளில் ஒருநாள் துர்வாசர் அவனிடஞ் சென்று இற்றை போஜனம் உன்னிடத்திலென்று சொல்லி யமுனாநதிக்கு ஸ்நானஞ் செய்யப் போயினார். போனவர் சற்றே வரத்தாமசமானது கண்டு அம்பரீஷன் விரத முகூர்த்தந்தப்பப் போகின்றதேயென்று ஆசமனத்தை முடித்தான். அச்சமயம் துர்வாசரும் வந்ததார். அம்பரீஷன் தம்மை மதிக்காதது போனனெனக் கொண்டு கோபித்துத் தமது சடையிலொன்றை யெடுத்து அம்பரீசனை பஸ்மமாக்குகவென் றெறிந்தார். அது கண்ட விஷ்ணு தமது சக்கரத்தை அச்சடையை எரிக்க விடுத்தார். அதைக்கண்ட துர்வாசர் ஓட அவரையும் துடத்திக்கொண்டு அச்சக்கரம் பின்னே சென்றது. அவர் பிரமதேவர்களிடம் போயொளிக்க அவர்கள் அம்பரீஷன்றான் இதைத் தடுக்கவல்லானென்ன, அம்பரீஷனிடம் சென்றார். அம்பரீஷன் சக்கரத்தை தோத்திரித்து அவரைக்காத்தான். இவ்வம்பரீஷனுக்கு விரூபன், கேதுமந்தன், சம்பன் என மூவர் புத்திரர் |
அம்பிகாபதி | சிவன். தமிழ்ப்புலமையிற் சிறந்தோனாகிய கம்பன் புத்திரன். இவன் சிங்காரரசம் பாடுவதில் மகா நிபுணன் |
அம்பிகை | பார்வதி |
அம்பிகையம்மை | திரு ஆப்பனூரிலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர் |
அம்பை | பார்வதி. காசிராஜன் மகள். இவள் கன்னியாயிருக்கும் போது தந்தை சுயம்வரம்வைத்து அவளைச் சாளுவராஜனுக்குக்கொடுக்க, வீட்டுமன் பலபந்தமாக இவளையும் இவளுடைய தங்கையராகிய அம்பிகை அம்பாலிகை என்பவரையும் யுத்தத்திற் சத்துருக்களை ஒட்டிக்கைப்பற்றிக் கொண்டு போய்த் தன்னுடைய தம்பியாகிய விசித்திரவீரியனுக்கு விவாகஞ் செய்ய எத்தனித்தபோது, அம்பை என்பவள் முன்னே தந்தையால் சாளுவனுக் குத்தத்தம் பண்ணப்பட்ட வளாதலால் அவளை மீண்டு விவாகத்திற்கு கொடுப்பது கூடாதுதென்று சாஸ்திரிகள் கூறித் தடுக்க. அப்படியே வீஷ்மன் சாளுவனிடம் அவளையனுப்ப, சாளுவன் அவளை விவாகஞ்செய்யேன் என்றுதள்ள அவள் உடனே உயிர் துறந்து துருகதன் மகளாகச் சிகண்டியென்னும் பெயரேடு பிறந்து வீஷ்மரை பாரதயுத்தத்திற் கொன்றவள் |
அயன் | அஜன் |
அயவந்தீசர் | திருச் சாத்தமங்கையிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர் |
அயிந்தவர் | ஐந்தவர் |
அயிராபதேசர் | திரு எதிர்கொள்பாடியிலே கோயில் கொண்டிருக்குஞ் சுவாமியர் பெயர் |
அயிரை | ஒரு நதி |
அயுசித்து | சகஸ்திர சித்துவினுடைய தம்பி |
அயுதாயு | ரதிகன் மகன். சிந்துத்துவீபன் மகன். இருதுபர்ணன் தந்தை. பங்காரசன் எனவும் பெயர் பெறுவான் |
அயோத்தியா, அயோத்தி | சூரியவமிசத்து ராசர்களுக்குக் கோசல தேசத்தின் கணுள்ள ராஜதானி. சரயுநதி தீரத்திலுள்ளது. இந்நகரத்தரன் மிகவுயர்ந்த மதிலையுடையது. இவ்மதில்மீது குத்தல், வெட் டல், எறிதல், எய்தல் என்னும் நான்கு ஊறுபாடுஞ் செய்யவல்ல பிரதிமைகள் அமைக்கப்பட்டிருந்தமையால் பகைவர் போய் வளைதற்கரியது. இது சப்த புரிகளுளொன்று |
அயோனிசை | சீதாதேவி. ஜனகன் புத்திர காமேஷ் யாகஞ்செய்து பொற் கொழுகொண் டவ் வியாக நிலத்தை யுழுதபோது பூமியின் றெழுந்தவளாதலின் இப்பெயர் பெற்றாள், யோனியிற் பிறவாதவளென்பது பதப்பொருள் |
அயோமுகன் | தநுபுத்திரருளொருவன் |
அயோமுகி | தண்ட காரணியத்திருந்த ஓரரக்கி இலக்குமணனால் மூக்கு, முலை, காதுகள் கொய்யப்பெற்றவள் |
அரங்கம் | ஸ்ரீரங்கம். இது திருவரங்கம் எனவும் வழங்கப்படும் |
அரசகேசரி | ஈழமண்டலத்திலே சாலி வாகன சகம் ஆயிரத்துநானூற்ற்pன் மேல் அரசுபுரிந்த பரராசசேகரன் மருகன். இவ்வரசகேசரியே இரகு வமிசத்தைத் தமிழிலே 2500 விருத்தப்பாவினாற் பொருணயம், சொன்னயம், கற்பனாலங்கார முதலிய நூல் வனப்புக்கள் அமையப் பாடித் திருவரூரிற் சென்று அரங்கேற்றியவன் |
அரசிற்கரைப்புத்தூர் | காவிரியின் தென்கரையிலுள்ள ஒரு சிவஸ்தலம் |
அரசிற்கிழார் | அரசிலென்னுமூரிலே வேளாளர்குலத்திலே அவதரித்துத் தமிழ்ப் புலவராய்க் கடைச்சங்கத்தில் விளங்கியவர் |
அரசிலிநாதர் | திரு அரசிலியிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியர் பெயர் |
அரசை | சுக்கிரன் புத்திரி, தண்டகாரணியம் காண்க |
அரட்டன் | பெருமனைக் கிழத்தியையும் கண்ணகி தாயையும் புத்திரிகளாகப் பெற்ற சேரநாட்டு வணிகன் |
அரதத்தாசாரியர் | ஹரதத்தாசாரியர் காண்க |
அரபத்தநாவலன் | திருப்பெருந்துறையிலே வேளாளர் குலத்திலே விளங்கிய ஒரு தமிழ்ப் புலவன். இவனே தமிழிலே முந்நூற்றுத்தொண்ணூறு செய்யுளாற் பாரதசாஸ்திர லக்ஷணஞ் செய்தவன் |
அரம்பை | ரம்பை காண்க |
அரிசத்திரம் | பாரதயுத்தத்திலே குருசேனை தங்கியிருந்த ஸ்தானம் |
அரிச்சந்திரன் | ஹரிச்சந்திரன் காண்க |
அரிமர்த்தனபாண்டியன் | குலேசபாண்டியன் மகன். இவனே குதிரைவாங்க மாணிக்கவாசகரைப் போக்கி நரிபரியாகக் கண்டவன் |
அரியசுவன் | திருஷ்டகேது புத்திரன் |
அரிவாட்டாயநாயனார் | திருக்கண மங்கலத்திலே, வேளாளர் மரபபிலுதித்த சிவபக்தர். இவர் கடவுளுடைய நைவேத்தியத்துக்காக கோயிலுக்குக் கொண்டு போன வெண்மையான அரிசி வழியிலே இருந்த ஒரு கமரிலே கைதவறி விழுந்து சிந்திப்போக, இனியாது செய்வேன் என் பொருட்டுப் பூசைக்காலமுந் தவறுவதாயிற்றே என்று சொல்லிக் கொண்டு தமதூட்டியை அரிந் துயிர்போகத் தொடங்கினார். தொடங்கலும் பரமகருணாநிதியாகிய சிவ பிராணது திருக்கரம் அக்கமரினினறெழுந்து தடுத்து அவரை ஆட்கொண்டருளியது |
அரிஷடன் | தநு புத்திரன். இடப ரூபமெடுத்துப் போய்க் கிருஷ்ணனோடு போர் மூட்டிய போது கிருஷ்ணனாற் கொல்லப்பட்ட ஓரரசன். மித்திரனுக்கு ரேவதியிடத்திற் பிறந்த மூத்தமகன் |
அரிஷ்டநேமி | இவரொரு பிரஜாபதி. சகரசக்கரவர்த்திக்கு ஞானோபதேசஞ் செய்தவர். குருஜித்து |
அருகன் | இக்கடவுள், அச்சமயத்திற் கூறியபடி, ஒன்றை ஆக்கலும் அழித்தலும் செய்யாதவர்: ஆதிஅந்தமில்லாதவர்: உயிர்கள் மீது மாறாக்கிருபையும் அருளுமுடையவர். அநந்தஞானம், அநந்தசக்தி அநந்தானந்தம் முதலிய குணங்களையுடையவர். மூன்று தர்மசக்கிரத்தையுடையவர். நான்கு திருமுகங்களை உடையவராய் அசோக மரநிழலிருப்பவர். கன்மரகிதர். தம்மைப்போலவே வேதமும் உலகமும், காலமும், உயிர்களும், தன்மமும் நித்தியப்பொருள்களென்று வெளியிட்டவர். அருகனை முதற்கடவுளாகவுடைய சமயம் அருகசமயமெனப்படும். இச்சமயம் கடைச்சங்கமிருந்த காலத்துக்குப் பின்னர்ப் பெருகிச் சிலகாலத்திலே அருகியது. அச்சமயிகள் ஆரியதேசத்திலமிகச் சிலரே இப்போதுளர் |
அருக்கன் | இருக்ஷன். சூரியன். இந்திரன் |
அருச்சுனன் | அர்ச்சுனன் காண்க |
அருணன் | முராசுரன் மகன் கிருஷ்ணனாற் கொல்லப்பட்டவன். சூரியன் |
அருணாசலம் | பஞ்சலிங்க ஸ்தலங்கங்களு ளொன்று. தொண்டை நாட்டிலுள்ளது |
அருணாசுவன் | பரிகிணாசுவன் இரண்டாம் புத்திரன் |
அருணாஸ்பதம் | வருண நதிதீரத்தின் கணுள்ள ஒரு நகரம் |
அருணி | வசு புத்திரன். பிரம மானச புத்திரருளொருவன் |
அருண்மொழித்தேவர் | சேக்கிழார் |
அருநந்திசிவாசாரியார் | திருத்துறையூரிற் பிறந்து சகலாகமபண்டித ரென்னும் காரண பெயருடன் விளங்கிய ஆதிசைவர். இவர் வைசசித்தாந்த உபதேசஞ் செய்த சந்தானாசாரியருள் ஒருவர் மெய்கண்டதேவரது மணாக்கர். சிவஞானசித்தியென்னு நூலியற்றியவர் |
அருந்ததி | அரஞ்சோதி, கர்த்தமன் மகள். வசிஷ்டன் மனைவி. மகா பதிவிர தையாகையால் விவாகத்தில் நக்ஷத்திர ரூபமாயிருக்கும் அருந்ததியை சுட்டிக் காட்டி இவ்வருந்ததி போலிருப்பாயாக வென்று நாயகிக்கு நாயகன் காட்டுதல் உலகவியலாயிற்று. துருவநக்ஷத்திரத்திற்குச் சமீபத்திலே சப்த இருஷி நக்ஷத்திர கணமிருக்கின்றது: இந்தச் சப்த இருஷி கணம் 2,700 வருஷங்களில் ஒருவட்டஞ் செய்யும்,. இவ்வேழுக்குக நடுவில் வசிஷ்ட நக்ஷத்திரமுள்ளது. அதனை அடுத்துள்ளது அருந்ததி |
அருந்தவநாயகி | திருப்பழுவூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அருந்தோளம்மை | திருத்தெளிச்சேரியிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அருமருந்துநாயகி | திருந்து தேவந்குடியிற் கோயில்கொண்டிருக்கும் தேவியார்பெயர் |
அருள்நாயகியம்மை | திரு அறையணி நல்லூரிலே கோயில்கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அரைத்துறைநாதர் | திருநெல்வாயிலரத் துறையின் கண்ணே கோயில் கொண்டிரு க்கும் சுவாமியர் பெயர் |
அர்ச்சி | புருது சக்கரவர்தி தேவி |
அர்ச்சிகபர்வதம் | வைடூரிய பர்வதம் |
அர்ச்சிதாதிமார்க்கம் | இது சகுணப்பிர மோபாசகர்கள் பிரமலோகஞ் செல்லும் நெறி. சூரியசந்திர வித்தியுல்லோகங்கள். வழியாகச் செல்லும்நெறி |
அர்ச்சுனன் | பாண்டு மகரராஜவுக்குக் குந்திதேவியிடத்திலே தெய்வேந்திரப் பிரசாதத்தாற் பிறந்த புத்திரன். பாண்டவர்களுள் மத்தியமன். வில்வித்தையிலே தனக்கு இணையில்லாதவன். இவன் பாரதயுத்தத்தில் ஒரே தினத்தில் ஏழு அக்குரோணி சேனாவீரரையுங் கன்னனையுஞ் சங்கரித்தவன். நரன் என்னுந்தேவ இருஷி பாரத யுத்தத்தின் பொருட்டு அர்ச்சுனனாக அவதரித்தானென்று சொல்லுவர். இவனுக்கு வில் காண்டீபம். சங்கு தேவதத்தம். இவனுக்கு பற்குனன், பார்த்தன், கிரிடி, சுவேதவாகனன், வீபற்சு, விஜயன், கிருஷ்ணன், சவ்வியாசாசி, தனஞ்சயன் என்பன நாமந்தரம். இவனுக்கு பாரியப் திரௌபதி, உலூபி, சித்திராங்கதை, சுபத்திரை என நால்வர். அர்ச்சுனன் துரோணாசாரியாரிடத்து வில்வித்தை பயிலும் போது, துரோணன் மகன் அஸ்வத்தாமன் அவன் சாமர்த்தியங்கண்டு பொறாமையுற்றுத் தனது பரிசாரகனை நோக்கி, அர்ச்சுனனுக்கு ஒரு காலத்திலும் விளக்கின்றி அன்னம்படையா திரு என்றான். ஒரு நாட் போசனம் பண்ணும் போது தீபம் அவிந்து போக, அதைப் பெருட்படுத்தாது வழக்கம்போலப் புசிக் கும்போது வழக்கமான கருமங்களைக் கைகள் இருளிலும் செய்யுமெனக் கண்டு, வில்வித்தையும் இருளிற் பயின்று வருதல் வேண்டுமென்று நினைத்து அன்று முதல் இருளிலும் பயின்று வந்தான். துருபதனைப் போரில் வென்று சிறைசெய்து கொண்டு போய்த்து ரோணாச்சாரியாருக்குக் குரு தக்ஷணையாகக் கொடுத்தவனும், பாண்டுவாலும் வெல்லப்படாத யவனராஜனை வென்றவனும், பாரத யுத்தத்திலே பெரும் பெயர் படைத்தவனும் இவனே. வில்லாளரெல்லேரையும் திகைத்து நானும்படி செய்த மீன யந்திரத்தை ஓரம்பால் வீழ்த்தி திரௌபதையை மணம்புரிந்து வில்லுக்கு விஜயனென்னும் பெயரை நாட்டினோனுமிவ்வீரனே. இவன் பாசுபதாஸ்திரம் பெறும் பொருட்டு மகத்தானதவஞ் செய்யும் போது அவன் தவத்தைக் குலைக்கப் பன்றியுருக்கொண்டு மூகதானவன் சென்றமையுணர்ந்து சிவபெருமான் ஒரு வேடனாகி அப்பன்றியை தொடர்ந்து செல்லுதலும், பன்றி விரைந்தோடி அர்ச்சுனனைச் சாடவெத்தனித்தது. அச்சமயம் அர்ச்சுனனை அது சாடாவகை தடுக்குமாறு சிவபொருமான் ஒருகணை ஏவினார். அர்ச்சுனனும் ஒரு கணைவிடுத்தான். இரு கணையாலும் பன்றியிறந்தது. அர்ச்சுனனோடு சிவன் விளையாட்டாக நான் கொன்றேனென்ன, அவன் தான் கொன்றதென்ன இருவரும் சிறிதுபோது மற்போராட அர்ச்சுனன் அவரை வில்லாலடித்தான். அவர் அவனை ஆகாயத்திலெறிந்தார். அவன் விழுமுன் தமது சுயரூபத்தைக் காட்டி அவனையுங் கையிலேந்தினார். அதுகண்ட அர்ச்சுனன் அவரைத் தோத்திரஞ் செய்து பாசுபதம் பெற்றான். அருச்சுனன் துரோணாச்சாரியியாரிடத்திலே வில்லித்தை மாத்திரமன்று அர்த்த சாஸ்திரம், தத்துவசாஸ்திரம் முதலியனவுங் கிரமாகக் கற்று நன்னெறிகொண்டவன். தீமையனுரையைத் தலைமேற் குடியொழுகியவன். இவன் பொருட்டே பகவற்கீதை அநுக்கிரகிக்கப்பட்டதாம் |
அர்ச்சுனி | வாணாசுரன் மகள். வாகுதையென்னும் நதி |
அர்த்தநாரிசுவரி | சிவபெருமானது திருமேனியிற் பாதிபெண்ணுருவாகக் கொண்டதேவி. முன்னொரு காலத்திலே பிருங்கி யென்னுங்கணநாதர் உமாதேவியாரை வணங்காது சிவனுக்கு மாத்திரம் வணக்கம் புரிந்தபோது உமாதேவியார் கோபங்கொண்டு அப்பிருங்கி தேகத்துவலிமை யெல்லாவற்றையும் போக்க, பிருங்கி நிற்கமாட்டதவராகிச் சார்ந்து கீழே விழுந்தார். அதுகண்ட சிவன் அவருக்கு தமது தண்டாயுதத்தைக் கொடுத்து அவரையெழுப்பி அநுக்கிரகித்தனர். அது காரணமாக உமாதேவியார் கேதார க்ஷேத்திரஞ் சென்று அங்கே தவங்கிடந்து அர்த்தநாரீசுவரியாயினார். திருக்கொடி மாடச் செங்குன்றூரிலே கோயில்கொண்டிருக்குந் தேவியர் பெயர், இத்திருமேனி சக்தியுஞ் சிவமும் அபேதமென்பது விளக்குவது |
அர்த்தநாரீசுவரன் | பாதித்திருமேனி உமாதேவியாருக்கொண்ட சிவபொருமான். மேலேகாண்க. திருக்கொடிமாடச் செங்குன்றூரிலே கோயில்கொண்டிருக்கும் சுவாமியர் பெயர் |
அர்த்தாவசு | ரைப்பியன் புத்திரன் |
அர்ப்புதபர்வதம் | இஃது அநர்த்த தேசங்களுக்குச் சமீபத்திலுள்ள ஒரு மலை இதன் கணுள்ள ஜனங்கள் அர்ப்புதபர்வ தரெனப்படுவார்கள் |
அறிவனார் | பஞ்சமரபென்னுநூல் செய்தவொரு தொல்லாசிரியர் |
அறையணிநல்லூர் | நடு நாட்டிலே பெண்ணைநதி தீரத்திலேயுள்ள ஒரு சிவ ஸ்தலம் |
அறையணிநாதர் | திரு அறையணி நல்லூரிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அலகந்தை | கங்கா நதிக்கிளைகளு ளொன்று |
அலங்காரநாயகியம்மை | திரு அரதைப் பெரும்பாழியிலே கோயில்கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அலம்பசன் | பகாசுரன் தம்பி. கடோற்கசனாற் கொல்லப்பட்டவன். பகாசுரன் மகன். இவனுங் கடோற்கசனால் மாய்ந்தவன் |
அலம்பசை | இக்ஷவாகுவமிசத்தனான திருணவிந்துபாரி. விசாலனுக்கு தாய்அலர்க்கன் |
அல்லியங்கோததையம்மை | திருப்புள்ளமங்கையிலே கோயில் கொண்டிருக்குந் தேவியர் பெயர் |
அளகாபுரி | குபேரன் ராஜதானி. இது கைலாசத்துக்கணித்தாக வுள்ளது. இங்கே வசிப்போர் யக்ஷரும் கின்னரரும். நவநிதிகளை தன்னகத்தேயுடைமையால் மிக்க சிறப்பினையுடையது. புலவர்கள் ஒரு நகரைச் சிறப்பித்துக் கூறப்புகு மிடத்து இமனையே உவமையாகவெடுத்துக் கூறுவர் |
அளர்க்கண் | அலர்கண் |
அழகம்மை | திருமழபாடியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர். திருக்களரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியர் பெயர் |
அழகர்மலை | இது பாண்டிநாட்டின் கண்ணதாகிய ஒரு விஷ்ணு ஸ்தலம் |
அழகாம்பிகை | திருநறையூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர். திருநறையூர்ச் சித்தீச்சரத்தி லே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அழகாலமர்ந்தநாயகி | திருமாந்துறையிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அழகியநாயகி | திருவெண்ணியிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அழகியநாயகியம்மை | திரு ஆமாத்தூரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியார் பெயர் |
அழகுசடைமுடிநாதர் | திருங்குரங்காடு துறையிற் கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அழும்பில் | சேர நாட்டிலுள்ளதொரு சிற்றூர் |
அழும்பில்வேள் | இவன் அழும்பிலின் கண்ணே அரசுவீற்றிருந்த குறுநில மன்னன் |
அவக்கிரீதன் | பரத்துவாசன் மகன். இவன் குருமுகமாகக் கல்லாமல் தபோபலத்தால் வேதங்களை யெல்லாமோதிக் கர்வமுடையனாயினான். அதுகண்டு ரைப்பிய முனிவர் கோபங்கொள்ள அக்கோபாக்கினியில் ஓரிராக்ஷசன் தோன்றி இவனைக் கர்வபங்கஞ் செய்து கொன்றான். அப்பொழுது ரைப்பிய புத்திரன் அர்த்தாவாசன் இரங்கித்தேவர்களைப் பிரார்த்திக்க அவர்களால் உயிர்பெற்றவன் |
அவநந்தி | உச்சியினி காண்க |
அவிகாரவாதசைவன் | கொடியவெயிலே நடந்தோரால் அடையப்படுகின்ற மரநிழல் போலப் பதிவிகாரமின்றி நிற்ப, ஆன்மாவானது தானே பக்குவமடைந்தபோது ஞானக்கண்பெற்றுப் பதியைச் சேருமென்பவன். அகர்புறச்சமயிகளுளொருவன் |
அவியாசியப்பர் | கொங்குநாட்டிலே கோயில் கொண்டிருக்கும் சுவாமி பெயர் |
அவீக்ஷித்து | கரந்தமன் புத்திரன். இவன் ஜனன காலத்தில் இலக்கினத்தை தீக்கிரகங்கள் யாராமையால் அவீக்ஷித்து என்னும் பெயர் பெற்றான். இவன் மகன் மருத்து சக்கரவர்த்தி, வீக்ஷிண்யம் ~ பார்வை |
அவுசீநரசிபி | யயாதி தௌகித்திரரு ளொருவன் |
அஷ்டகணநாதர் | நந்தி, மகாகாளார், பிருங்கி, கணபதி, இடபம், கந்தர், பார்வதி, சண்டர் என வெண்மர். இவர்கள் சிவகணங்களுக்கு அதிபர்கள் |
அஷ்டகன் | விசுவாமித்திரர் புத்திரருள் ஒருவன் |
அஷ்டகாதியர் | அஷ்டகன், பிரதத்தன், வசுவன், அவுசீகரசிபி என நால்வர். இவர்கள் யயாதிமகள் புத்திரர். யயாதியால் அநேகநீதிகள் உபதேசிக்கப் பெற்றவர்கள் |
அஷ்டதிக்கஜம் | ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் எனக் கிழக்காதிமுறையே எட்டு யானைகள். இவற்றின் பெண்யானைகள், அப்பிரம், கபிலை, பிங்கலை, அநுபமை, தாமிரபருணி, சுப்பிரதந்தி, அங்கனை, அஞ்சனவதி என எட்டு. இவற்றுள் ஆண் யானைகள் முறையே அவ்வத்திக்கு பாலகருக்கும் பெண்யானைகள் அவர்கள் தேவியருக்கும் முறையே வாகனங்களாம் அஷ்டதிக்கு |
அஷ்டமூர்த்தி | பிரமாவானவர் சிருஷ்டியை அபிவிருத்தி செய்யுமுபாய மறியாது மயங்கிச் சிவபிரானைத்துதித்துச் சிந்தை செய்தபோது சிவபிரான் அப்பிரமாவினது புருவமத்தியிலே எட்டு மூர்த்திகளாக அவதரித்து அருள் புரிந்தனர். அம்மூர்த்திகளாவார். பவன், சர்வன், ஈசானன், பசுபதி, வீமன், உக்கிரன், மகாதேவன், உருத்திரன் எனவெண்மர். இவர்க்கு வடிவம் முறையே ஜலம், பூமி, வாயு, அக்கினி, ஆகாயம், சுகர்மன், சோமன், சூரியனென எட்டுமாம். இவர்க்குச் சக்தி, உஷை, சுகேசி, சிவை, சுவாகா, திசை, தீக்ஷை, ரோகிணி, சுவர்ச்சலை என முறையே யெண்மர். எண்வடிவங் கொண்டோனெனச் சிவனும் அஷ்டமூர்த்தியெனப்படுவர் |
அஷ்டவக்கிரன் | ஏகபாதனுக்குச் சுஜாதையிடத்துப் பிறந்தபுத்திரன். இவன் கருப்பத்திலிருக்கும் போது, எப்போதும் சீஷரோடு வேதாத்தியயனஞ் செய்து வருகின்ற தந்தையினது அத்தியாயங்களையெல்லாம் சீஷர் நித்திரையால் மாறாக ஓதக்கேட்டு அதனை தந்தைக்குக் கருப்பத்திலிருந்த படியேயிரு ந்து செல்ல, தந்தை அது பெறாமல் அச்சிசுவை அஷ்டவக் கிரங்களையுடைய தேகத்தோடு பிறக்கக்கடவாயென்று சபித்தான். இவன் தேககாந்தியுடையவனாகியும் அங்ஹீனனாயிருப்பக்கண்ட அரம்பை முதலிய தேவகன்னியர் அவனைப் பழித்தார்கள். அதனால் அஷ்டவக்கிரன் அக்கன்னியரைப் பார்த்து நீங்கள் கள்வர் கையில் வருந்துவீர்களாக வென்றான். அதுகாரணமாக, கிருஷ்ணன் நிரியாண மடைந்த பின்னர் அர்ச்சுனன் பின்னாற் சென்ற கோபிகாஸ்த்திரிகளாகிய அவ்வரம்பை முதலியவர்கள் கள்வர்கைப்பட்டார்கள் |
அஷ்டவசுக்கள் | பாரதத்திலுள்ளபடி பிரஜாபதியினது பிள்ளைகள் தரன், துருவன், சோமன், அபன், அநிலன், அக்கினி, பிரத்தி, யூஷன், பிரபாசன் என எண்மர், ஏனையபுரானப்பிரகாரம், இவர்கள் தக்ஷப்பிரஜாபதி மக்களிலே பதின் மரான தருமன் பாரிகளிலிலே ஒருத்தியிடத்தில் வசுவனுக்குப்ப பிறந்த புத்திரர் எண்மர். இவர்கள் ஒரு சமயம் வசிஷ்டருடைய ஓமப்பசுவை அபகரித்துச் சென்றமையால் அவராற் சபிக்கப்பட்டு மனுஷலோகத்திலே சந்தனுவுக்கு பாரியாகிய கங்காதேவியிடத்திற் பிறந்தார்கள். அவர்களுள் அபன் மிக்க அபராதி. இவன் மற்ற எழுவரது சதுர்த்தாம் சங்கனைப்பெற்று வீஷ்மனாகப்பிறந்து அதி பராக்கிரமசாலியாகவும் தருமனாகவும் விளங்கினான் |
அஷ்டவித்தியேசுரர் | அனந்தர், சூக்குமா சிவோத்மர், ஏகநேந்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டா, சிகண்டி என எண்மர் |
அஸ்தி | ஜரசாந்தன் மகள், கம்சன் முதன் மனைவி |
அஸ்திகன் | ஜரற்காரனுக்கு வாசுவாகிய சர்ப்பராஜன் தங்கை. ஜரற்காரியிடத்திற் பிறந்த முனிவன். ஜனமேஜன் சர்ப்பயாகஞ் செய்த போது தக்ஷகன் முதலிய நாகர்களை இம்முனிவன் ரக்ஷித்தவன். தக்ஷகன் அவ்யாகாதிபன் தனது மந்திர பலத்தால் தக்ஷகனோடு இந்திரனையும் இழுத்தான் |
அஸ்திரஹிருதயம் | சகல சத்துருநாசமும் கீர்த்தியும் செய்யும் ஒருவித்தை. இது சிவன் சுவாயம்புவுக்கும், அவன் சித்திராயுதன் என்னும் கந்தருவனுக்கும், அவன் தன் மகள் மக, தௌகித்திரி, ளாகிய மனோரமைக்கும், அவள் சுவரோ சிக்கும் கொடுத்தது. இது சுவரோசிசமனு சம்பவத்திலே சொல்லப்பட்டது |