ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வைகர்ணம் | திருப்பாற் கடலின் வடபாகத்திலுள்ள திருமாலின் ஆலயம் (பார~சந்) |
வைகர்த்தனன் | கர்ணனுக்கு ஒரு பெயர், |
வைகர்த்தர் | ஒரு சூரியர்; இவர் ஒருமுகம், இரண்டு அஸ்தம் இரண்டு கைகளிலும் பொற்றாமரைப் புஷ்பமும், ஆயுதமும் கொண்டு ஸ்வர்ண பூஷணமும் மஞ்சள் நிறமான பட்டுடையுந்தரித்தவ ராயிருப்பர். |
வைகாநஸம் | 1. பாஞ்சராத்திர ஆகமத்தின் பகுப்பு. 2. விகனஸருஷி; விஷ்ணுமூர்த்தியின் மனதிற்பிறந்தவர். இந்த வைகானஸ ஸுத்ரம் வேதங்கள் நான்கு பிரிவாகப் பிரிவுபடு முன் சூத்ரமானவை. இந்த விகனஸர் செய்த சூத்திரத்தை யனுட்டிப்போர் வைகானஸர். இந்த ருஷியின் சீடர்கள் நால்வரான மரீசி, அத்ரி, பிருகு, காச்யபர். இந்த நால்வருஞ்சேர்ந்து நான்கு லக்ஷங் கிரந்தங்கள் செய்தனர். இவை களுக்கும் வைகானஸம் என்று பெயர். இந்த விகனஸசூத்ரம் பதினொரு பிரச்னமும், மந்திரம் எட்டுப் பிரச்னமுமாம். இவையன்றி காஹிதம், முப்பத்திரண்டு பிரச்னமும் இயற்றினர். விகனஸரின் சாகை யஜுஸ். இந்த சூத்ரம் பதினொரு பிரச்னத்தில் கிருஹ்ய பாகங்கள் பகுவாயும் விசதமாகவும், தெய்வீகபாகம் சுருக்கமாகவும் கூறியிருக்கின்றது, இவற்றை யுபதேசிக்கப்பெற்ற இருடிகள் நால்வரும் அவற்றை முதனூலாகக் கொண்டு தெய்வீகபாகங்களை விசதமாகவும் கிருஹ்யபாகத்தைச் சுருக்கியும் அநேக கிரந்தங்களைச் செய்திருக் கின்றனர். அக்கிரந்தங்கள் ஒவ்வொன்றிலும் கர்ஷணாதி பிரதிஷ்டை உற்சவம் பிராயச்சித்தாதி யீறாகக் கூறியிருக்கின்றனர். அந்நான்கு ருஷிகள் காலத்திற் கொத்தபடியாய்ப் பல கிரந்தங்கள் செய்தனர். மேற்கூறியவற்றுள் கிருஹ்யமாவது; சரீரசம்பந்தமான விஷயம், தெய்வீகமாவது; ஆலயநிர்மாணாதி பிரதிஷ்டாபிராயச்சித்தாந்தம் கூறு வது, ஷவைகாஸனருக்குக் கருக்கொண்ட எட்டாமாதத்தில் செய்யும் விஷ்ணுபவியென்னும் கிருத்யம் பிரதானம். (விஷ்ணுபவியென்பது கருவிலேயே மந்திரோபதேசஞ்செய்வது) ஆதலாலிவர்களுக்குச் சமாச்ரயணங் கிடையாது. இவற்றுள் வைகானஸம் முதனூல்; மற்ற சீடர் செய்தவை வழி நூலாயிருக்கலாம். |
வைகாநஸர் | 1. விகனஸருஷிக்கு ஒரு பெயர். இவரால் வைகானஸம் செய்யப் பட்டது. 2. வைகானஸாகமம் அநுஷ்டிப்பவர். 3. பிரமன் சபையில் உள்ள இருடிகள், 4. வானப்பிரஸ் தாச்சிரமத்துப் பகுப்பினர். தானே விளையுந்தானியத்தால் சீவிப்பவர், 5. மாலுதான ருஷியின் தந்தை; எக்ய சருமனைக் காண்க. 6. வைகானஸருஷி கூறிய ஆகமத்தை அநுசரிப்பவர்கள். இவர்கள் அர்ச்சசர்கள். இவர்கள் வடநாட்டில் ஆசாரியர்களாகவும் இருக்கிறார்கள். |
வைகாயசம் | பலியின் விமானம், நினைத்த இடம் செல்லத்தக்கது. |
வைகாரஞ்சசர்ப்பம் | இது மூவிதபேதமுள்ள சர்ப்பம். இந்தச் சர்ப்பங்கள்நூற்றுக்குமேல் கார்த்திரை மாதத்தில் முட்டையிடும். இவற்றிற் சில காற்றினாலும் வெயில் மழையால் கெடும். இவற்றிற்கு மேல்வாயில் (7) கோரைப்பற்களும் கீழ்வாயில் (7) கோரைப்பற்களு முண்டாம். இவை பிரம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர சாதி என நான்கு வகைப்படும். இவ்வகையில், கருகாகம்: இதுவே கிருஷ்ணசர்ப்பம், சிறுநாகம்: இது தருப்பை அகலமுள்ள படத்தையும் பருத்த ஈர்க்கையொத்த உடலையும் பெற்றுத் தாழம்பூவில் வசிப்பது, இதைப் பூநாகம் புல்நாகம் என்பர். |
வைகாரம் | கிரிவிரசத்துக்கு அரணாய் உள்ளமலை, |
வைகாலிகம் | பெண்பிள்ளை ரோகத்தாலாக யீறும் வேறு காரணத்தாலாயினும் மூப்புக்கொள்ளுவது. இவளுக்கு மாதவிடாய் தோட மில்லை (பரா. மி.) |
வைகுண்ட சதுர்த்தசி விரதம் | இது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்துச் சதுர்த்தசியில் அநுஷ்டிப்பது. இந்நாளில் கிருதயுகத்தில் வாரணாசியில் மணிகர்ணிகையிலிருந்த (ஆயிரம்) தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு மூர்த்தி சிவபூசை செய்து அருச்சிக்கையில் சிவபிரான் ஒரு மலரை மறைக்க விஷ்ணு மூர்த்தி தமக்குத் தாமரைக் கண்ணனென்ற பெயரிருத்தல் கருதித் தம் கண்ணைப் பெயர்த்து அருச்சிக்கச் சிவமூர்த்தி சக்கரம் பிரசாதித்த நாள். இதில் விரத மநுட்டிப்போர் சகல சித்தியும் பெறுவர். (சரத்குமார சங்கிதை). |
வைகுண்டம் | இந்த உலகத்தின் பெருமைகளைத் தேவராலும் கூறமுடியாது. ஆயினும் அர்ச்சராதியிற் கூறியுள்ளவற்றைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன். அஹஸையும் சுக்லபக்ஷாபிமானியையும் உத்தராயணாபி மானியையும், சம்வச்சராபிமானியையும், வாயுவையும், சூர்ய மண்டலத்தையும், நக்ஷத்திர மண்டலத்தையும், சந்திர மண்டலத் தையும், அமாதவ லோகத்தையும், வருணலோகத்தையும், இந்திர லோகத்தையும் சத்திய லோகத்தையுங் கடந்து அண்டத்தினையும் பெரும்பாலான மூலப் பிரகிருதியையும் தாண்டிச் சென்றால் தில்லை விருக்ஷமும் அமிர்தவாகினியான விரசையுமிருக்கும். அவ்விடம் அநேகமாயிரம் ஆதித்தியர் உதித்தாற்போல் அதிக தேஜஸ்ஸுடன் சதுர்புஜனாய், சங்கசக்ரதரனாய் அமானவன் எழுந்தருளியிருப்பன். அப்பால் நிந்திய சித்தராலே நெருங்கி இவ்வளவென்று அளவிடப்படாத திவ்யதேசமிருக்கும், அவ்விடம் திவ்ய வாத்யங்களுண்டாயிருக்கும், பின்னும் நித்ய முக்தர்களுடைய ஆநந்தகளமிருக்கும். பின் திவ்ய மாலை, திவ்யாஞ்சனம், திவ்ய சூர்ணம், திவ்யவஸ்திரம், திவ்யாபாணத்துடன் கூடிய திவ்யாப்ஸாஸ்ஸுக்களும் நித்யசூரிகளு மிருப்பர். இவற்றைக் கடந்து அப்புறஞ் சென்றால் அநேகங் கொடிகளாலும், பல வண்ணத் தையும், வாசனையையும் உடைய அப்ராக்ருத புஷ்பங்கள் நிரம்பி, நிழல் தெரியாதபடி நெருங்கித் தேன்வெள்ளம் கொண்டோடுகின்ற கற்பகச் சோலைகளாலும், பல விதமான பூக்களாலும், ரத்னங்களாலுஞ் சமைந்த லீலா மண்டபங்களாலும், கிரீடாசைலங்களாலும், செவிக்கினிய வார்த்தைகளைக் கொஞ்சிப் பேசும் சுகசாரிகாமயூர கோகிலங்களாலும், மாணிக்கம், பவளம், முத்து முதலியவற்றாலுஞ் சமைந்த படிகளைப் பெற்று நித்தமுக்தர் மனம்போல் தெளிந்த அமிர்த ரஸங்களால் நிறைந்து தாமரை செங்கழுநீர் முதலிய அப்ராக்ருத பூக்களால் நிறைந்த தடங்களாலும் பலவித பூம்படுக்கைகளாலும் பூவின் தேன்களில் படிந்து பாடுகின்ற திவ்ய வண்டுகளாலும், அடைந்தவரை மயலேற்றும் அநேக கோடி உத்யானங்களாலும் பலா தனங்களால் சமைந்த மேடைகளை யுடைத்தாய் அநேகமாயிரம் இரத்தினத் தூண்களால் அலங்கார மடைந்து உபய வீபூதியிலுள்ளாரும் ஒரு மூலையில் அடங்கும்படியிட முடைத்தாய் தாமரை செங்கழுநீர் சந்தனம் முதலியவற்றை யனைந்து வருகிற மந்த மாருதத்தைப் பெற்று நிரதிசயாநந்தமயமான திருமாமணி மண்டப மொன்றிருக்கும், அம்மண்டபத்தில் தாந்தரந் திரு முடிகளிலே திவ்யாயுதங்களைத் தரித்துக் கொண்டு கூப்பின கைகளும் தாங்களுமா யிருக்கிற அஸ்த்ர சஸ்த்ராக்கியரான திவ்ய புருஷரும் சங்கல்பத்தால் சகல உலகத்தையும் முத்தொழிற் படச்செய்யும் சேனை முதலியாராதி யான திவ்யபுருஷரு மெழுந்தருளியிருப்பர். அவர்களின் நடுவில், உபய வீபூதியையும் தொழிலாக வகுப்புண்டு சர்வாச்சர்ய மயமான கோப்பு டைய சீரிய சிங்காசனத்தில் பன்னிரண்டிதழாய் அதில் திவ்ய கர்ணி கையில் புஷ்ப சஞ்சய விசித்ரமான திவ்யயோக பர்யங்கமாய் அநேக கோடி சந்திரர்களை யுருக்கி வார்த்தாற் போல் குளிர்ந்த புகரைப்பெற்ற திருமேனியுடையனாய்க் கல்யாண குணங்களுக்கு முடிவில்லாமையால் சர்வவித கைங்கர்யத்திலும் அதிக்ருதனான அநந்தன் என்னும் திருநாம முடையனாய்ப் பகவத் அனுபவத்திற்குப் போக்குவீடாகப் பல தலை களையுடைய ஆதிசேஷனாகிற திருவணையில், இயற்கைமணமுள்ள கூந்தலையும் வடிக்கோலவா ணெடுங் கண்களையும், யௌவனத் தையும், ஸௌகுமாரர்யத்தையும், பெருமையையு முடையளாய்ச் சர்வாத்மாக்களுக்கும் என்று மொக்கச்சார்வாய் ஒசிந்த ஒண்மலராளான பெரிய பிராட்டியார் வலப்பக்கம் எழுந்தருளியிருக்க, அவளிலும் மிகுந்த க்ஷமாயாதி குணங்களையும் பேரழகையுமுடையராய் அவளுக்கு நிழல்போல்வாரான மற்ற இரண்டு நாய்ச்சிமார் இடப்பக்கம் சேவித்திருக்க, இவர்களுக்கு நடுவில் மூன்று மின்கொடிகளோடு கூடித் தாமரை பூத்ததொரு காளமேகம் வெள்ளி மலையை மூடிக்கொண்டிருப் பது போல் திருமுக மண்டலத்தின் ஒளிவிளங்கவும், தன் கிரணங்களால் பல கிரணங்களையும் முட்டாக்கிடுகிற திருமுடியையும் கண்டார் கண்ணும் நெஞ்சு மிருளும்படியிருண்டு சுழன்று அஷ்டமி சந்திரனில் அமிர்த தாரை விழுந்தது போல் திரு நெற்றியில் சாத்தின திருநாமத்தை மறைக்கும் பூந்தண்டுழாய் காறும் நீலப்பனி யிருக்குழலும், சயந்தார் நச்சுந் திருநெற்றியினையும் தன் கைச்சார்ங்கம் போல் விளங்கும் அழ கிய திருப்புருவங்களையும் குளிர்ந்து செவ்விபெற்றுக் கரியவாய்ப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட திருநயநங்களையும், கோலநீள் கொடி மூக்கையும், திவ்ய கபோலங்களையும், பூரண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தது போல், திருமுகத்தின் ஒளியைப் பிரவஹிக்கிற புன் சிரிப்பையும் அழகிய திரு வதரங்களையும் சிரக்கம்பனம் பண்ணுகையால் அசைந்து திகந்தல்களில் முட்டி தேஜஸ் அலையெறிந்து லாவண்யசாகாதிகளில் எறித்துள்ளுகிற மின்னுமா மணி மகா குண்டலங்களையும், காந்தி, சைத்ய, மார்த்தவ, சௌரப்யாதி குணங்களாலே சகலகலா பூர்ணமாய்ச் சர்வாக்வாத கரமாய் மறுக்கழற்றின சந்திர மண்டலத்தையும் அப்போதலர்ந்த செந்தாமரைப் பூவையும் தோற்பிக்கக்கடவதாய்க் கிட்டினாரை மய லேற்றி மயக்கும் மாயமந்திரமான கோளிழை வரண்முகத்தையுஞ் சங்கையொத்த திருக்கழுத்தையும், திருத்தோள்களையும், கோல மாமணியாகமும், முத்துத்தாமமும் ஸ்ரீகௌஸ்துபர் தொடக்கமான குருமா மணிப்பூண் குலாவித் திகழுகிற அழகிய திருமார்பையும் வெண்புரிநூலையும், திருவுதர பந்தனத்தையும், நெஞ்சையும் கண் ணையும் சுழியாறுபடுத்துகிற திருவுந்தியையும் சங்கத்தையும், சக்கரத்தையும், சூர்ய சந்திரராகக் கருதி அலருவதுங் குவிவதுமா மிருக்கிற நாபிக் கொடியையும், துரி சேரிடையையும் ஆகாசம் போன்ற அரையிலுடுத்த பீதக வாடையையும், ரம்பா ஸ்தம்பாதி கம்பீரமான திருத்தொடைகளையும் தாமரைநாளம் போலே கண்டகிதங்களான திருக்கணைக்கால்களையும் நாய்ச்சிமாருங் கூடக் கூசித் தொட வேண்டும் படி அத்யந்த மிருதுக்களால் நிரதிசய போக்யங்களான துயரறு சுடரடிகளையும், திரையொழுக்குப் போலிருக்கிற திரு விரல்களையும் அதில் அநேக சந்திரர் உதித்தது போன்ற திருநகங் களையும் கரிய கோலத்திருவுருவையும் நித்ய சூரிகளைக் கொள்ளை யூட்டிக் கொண்டு விடாக்கொண்டார் முகத்தில் நீர்மடை திறந்து விட்டது போல் சகல சிரமங்களும் மாறும்படி குளிர்ந்து தெளிந்து நித்யமுத்தரைக் கடாஷிக்கும் காம்பீர்ய மாதுர்யாத்ய நவதிவ்யகுணகண பூஷிதங்களாய் அதிமனோகர திவ்யபாவகர்ப்பங்களாய்ப் பூ அலர்ந்தாப் போலிருக்கிற திருமுகத்தை யெங்குமொக்கச் செவிபெறுத்து வினவானலீலா லாபங் களாலே சூரிகளுடைய இருதயங்களை யுகப்பியாவின்று கொண்டு எழுலகுந் தனிக்கோல்செல்லத் திருவடிகள் இருவருஞ் சேவித்து நிற்கக் குழுமித் தேவர்குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கும் பரமபதமாம். |
வைகுண்டர் | சப்பிரருக்குக் குண்டையிடத்து உதித்த குமாரர். விஷ்ணு வின் அம்சம், இலஷ்மியைச் சந்தோஷிப்பிக்க ஒரு உலகம் சிருட்டித்தார். இது வைகுண்டம் எனப்பட்டது. |
வைகை | பாண்டி நாட்டில் மதுரை நகரத்தில் உள்ள நதி, குண்டோ தரனுக்குத் தாகந்தணிக்கச் சிவாஞ்ஞையால் வந்தது. மாணிக்கவாசக சுவாமிகளுக்காகச் சிவாஞ்ஞையால் வெள்ளங் கொண்டது. அக்காலத்திலே அரசன் ஆணைப்படி அணையிட வந்தியென்பவள் பொருட்டுச் சிவமூர்த்தி கூலியாளாய்ச் சென்று மணல் எடுக்கப் பெற்ற பாக்கியம் பெற்றது. |
வைசம்பாயனன் | சண்டாள கன்னிகை சூத்திரக மன்னவனிடம் கொணர்ந்த களி; மகாசுவேதைமீது காதல் கொண்ட புண்டரிகன் வைசம்பாயனனாகப் பிறந்து சாபத்தாற் கிளியாயினன். |
வைசம்பாயனர் | விசும்பருஷியின் குமாரர். வியாசருஷியின் மாணாக்கர். ஜனமே ஜயனுக்கு வியாசர் உபதேசத்தால் பாரதம் அருளிச்செய்தவர். யசர்வேதி. இவர் மாணாக்கர் யாஞ்ஞவற்கர் முதலிய நால்வர். வற்கரைக் கோபித்தவர். இவரை ஒருமுறை பிரமகத்தி பற்றியது. மாணாக்கர்கள் அதனையேற்று இவரை அதினின்று நீக்கினர் |
வைசவ்வை | ஒரு அந்தரங்க சிவபக்தியுள்ள வீரசைவத் தவப்பெண், இவள் கணவன் சைநன். இவள் கணவன் சொற்படி பல பண்ணி காரங்கள் அறுசுவைப் பதார்த்தங்கள் அன்னமுதலியவை சைத சந்நியாசிகளுக்கு விருந்திடச் சமைக்கையில், இவை சிவநேசர்க்குப் படைப்பின் புண்ணியமாமே என்று நினைத்து வருந்தினன். தெய்வச் செயலால் கணவனும் சந்நியாசிகளை அழைக்க நீங்கினன். இவள் கருத்துணர்ந்த சிவமூர்த்தி ஒரு சங்கமராய் அவ்விடம் எழுந்தருளினர். வைசவ்வை எதிர் கொண்டழைத்துத் தான் சமைத்த அன்ன முதலிய வற்றை அளித்தனன். அத்தருணத்தில் கணவன் சைநசந்நியாசிகளுடன் வந்து சங்கமரைக்கண்டு மனம் பொறாது மனைவியைப் புடைத்தனன். அத்தருணத்தில் சிவமூர்த்தி மறைந்தனர். அவளை அடித்த அடி ஒன்றேனும் அவள் மீது பட்டிலது. அவ்வடிகள் முழுதும் சைந சந்நியாசி கள் மீது பட அவர்கள் வருந்தி இவை வைசவ்வையை அடித்ததால் நேரிட்ட தீங்கென்றனர். புருஷன் இவள் எனக்கு ஆகாளென்று விலக்க வைசவ்வை சைநவிக்கிரகத்திடம் சென்று சிவமூர்த்தியாக அதனை எண்ணி வணங்கினள். அது சிவலிங்கமாயிற்று. வைசவ்வை களிப்படைந்தனள், |
வைசாக சுக்லத்வாதசிவிரதம் | வைகாசிமாத சுக்லபக்ஷத்வாதசியில் விரதமிருப்பது. இதில் விஷ்ணுவைப் பூசிக்கின் எல்லா நலமும் அடைவர். |
வைசாலின் | விசாலன் குமாரி. அவீஷித்தைக் காண்க. |
வைசியதருமம் | இவன் உபநயனம் முதலிய சமஸ்காரம் செய்து கொண்டு பசுவைக் காப்பதிலும் பயிர் முதலிய ஜீவனவிர்த்தியிலும் முயலவேண்டும். பசுக்களைக் காத்தல்வேண்டும். முத்து நவமணி உலோகம் வஸ்திரம் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியம் உப்பு முதலிய இரசத்திரவியம் இவற்றிற்குப் பலதேசங்களில் உள்ள விலைகளையும் சரக்குகளின் சாராசாரங்களையும் அறிய வேண்டியது. எல்லா விதைகளையும் அது விதைக்குங் காலத்தையும் நிலத்தின் குண தோஷங் களையும் படி தராசு இவைகளில் உள்ள தந்திர உபாயங்களையும் அறியவேண்டியது. ஒரே சரக்கின் ஏற்றத்தாழ்வு, சரக்கை இவ்வளவு காலம் வைத்திருந்தால் இவ்வளவு விலை ஏறும் குறையும் என்னும் முற்றாய்ச்சியையும் இந்தத்தேசத்தில் புல் தண்ணீர் இருப்பதால் பசுக்கள் விருத்தி அடையும் என்பதையும் அறியவேண்டியது. பயிர்வேலை செய்வோருக்கும் மாடுமேய்ப்போருக்கும் தேசகாலம் இவற்றிற்குத் தக்கபடி சம்பளம் கொடுக்கவேண்டியது. பலதேச பாஷைகளை அறியவேண்டியது. தருமமாக வியாபாரஞ்செய்து பொருளை விருத்தி செய்ய முயலவேண்டியது. அன்னதானஞ் செய்யவேண்டியது. (மநு.) |
வைசியர் | 1. மூன்றாம் வருணத்தவர், 2. (3) தனவைசியர், பூவைசியர், கோவைசியர், என்பார் முறையே வணிகர், உழவர் இடையர் எனப்படுவர். இவர்க்கு முறையே பொருளீட்டல், பயிர்செய்தல், ஆன்காத்தல் தொழில், 3. இவர் பிரதமஸ்தானாதி (36) ஸ்தானபரியந் தமான எண்களையறிந்து 1. (ஏக) ரூபம், பூமியாதி சமிஜ்ஞை 2 வது திவந்துவதுவிதம், 2. (துவய) விதிய, யுக்ம, யுகள், யுக, உபய, பாகு, பாத, பசு, நயனாதி, சமிஞ்ஞை, 3. (திரய) திருதிய, ஹர, நயன, அக்கினி, புராதி, சமிஞ்ஞை, 4. (சதுர்த்தி) வேத, வர்ண, ஆச்சிரமாதி, சமிஞ்ஞை, 5, (பஞ்ச) ஹர, வக்தா, கஷாய, விருத, இந்திரிய, விஷய, பாண, பாண்டவ, பூதாதி, சமிஞ்ஞை, 6. (ஷடு) பாவ, ராஜாங்க, இருது, ரஸ, ஸ்கந்த முக, வேதாங்க, வர்ணகர்ம, தர்சனதி, சமிஞ்ஞை,7. (சத்த) முனி, கிரி, தானாங்க, ராசாங்க, துரக, தாது, சாபாகெ, ஸ்வா, சாகராதி, சமிஞ்ஞை, 8. (அஷ்ட) வசு, திக்கு, கஜ, மத, விகார, காமாதி, சமிஞ்ஞை 9, (நவ) திரவிய நிதி, கிரக, பத்தாதிசமிஞ்ஞை. 10 (தச) பிந்து, சூனிய, நாஸ்தி, அவதார, ககனாதி, சமிஞ்ஞை, இவை முதலான சமிஞ்ஞை களையும் அறிந்து எண்ணல், எடுத்தால், முகத்தல், நீட்டலாதி அளவைகள் அறிந்து, சுவர்ணத்தின் மாற்று, பிரவாளத்தின் கழஞ்சு, மணியின் சவ்வு, ரத்தினத்தின் சூத்திரபரீஷை. வச்சிரத்தின் மஞ்சாடி, பச்சையின்ரதி முதலிய அறிந்து, திரயம், வட்டம், வட்டி முதலிய அறிந்து பொருள் செய்து, திருஷி, கௌபாலிகம், யசனம், அத்யயனம், தானமுடன் சூர்யாதி, பத்தி முதலிய கர்மயுக்தரானவர்கள் வைசியராம். வக்குவமகருஷியைக் காண்க. இவர்களுக்குத் தசாங்கம். கிட்கிந்தமலை, பம்பையாறு, கருடக்கொடி, காந்தண்மலர், பைந்நாகமுரசம், கலிமாருதப் புரவி, கமல கண்டிகைத்தேர், உபலாயபுரி பட்டணம், வைகுந்தவள நாடு, ஜயவாரணம் முதலியனவாம். 4. மநுவால் கூறப்பட்ட மூன்றாவது ஜாதியார் வைசியர். உண்மையான வைசியர் காணப்படவில்லை. சில வர்த்தகசெட்டிமார்களும், கோமட்டிகளும் தங்களை வைசியர் என்பர். வேளாளரிற் சிலர் பூவைசிய ரென்றும், இடையரிற் சிலர் கோவைசியர்களென்றும் கூறுவர். நாட்டுக் கோட்டை செட்டிகளும் தங்களைப் பூவைசியர் என்பர். தமிழ் வணிகர் தங்களை வைசியர் என்பர், ஆதலால் இவர்களில் யாவர் உண்மையான வைசியர் என்று துணிந்து கூறமுடியவில்லை. (தர்ஸ்டன்.) |
வைசுவதேவம் | 1. வேதியர் நித்தியமாகச் செய்யும்அக்கினிகார்யமாகிய ஒருவித யாகம். இதில் பலிகொள்ளுந் தேவதைகளாவர். அக்னி, சந்திரன், அக்கினி ஷோமர்கள், விசுவே தேவர்கள், தன்வந்திரி, குரு, அநுமதி, பிரசாபதி, ஆகாசம், பூமி, தவிஷ்டகிருது என்போர். 2. எந்த யாகத்தில் எந்தத் தேவர் பூசிக்கப்படுகின்றனரோ அந்த யாகமாம். (பார மா.) |
வைசேடிகன்மதம் | கச்வரூபனாய் நித்தியனான சிவன் ஒருவன் உண்டெனவும், ஆன்மா, அநேகன், சடனாய் குணகுணிபோல் அவத்தையடைந்து பல பிறப்பிடைப் பட்டுக் கருடதியானத்தால் விஷவேகந் தணிவது போலச் சிவபாவனையால் முத்தியடைவன் என்பன். இம்மதம், விக்ரம சகம் (1014) பத்திற்கு முன் அந்தரஜீக மென்னும் நகரத்தை அரசாண்ட பலச்ரீ எனும் அரசன் போஷணத் திலிருந்த கணபுக் என்றும், கணாதனென்றும் பெயருள்ளவனால் தாபிக்கப்பட்டது. விசேஷமென்று ஒரு பொருள் இவன் கூறினதினால் இம்மதத்திற்கு வைசேஷிகமென்று பெயருண்டாயிற்று. இதனைக் கணாதமதமெனவுங் கூறுவர். இம்மதம் உலகம் பரமாணு காரிய மெனவும், கர்ம நிஷேதத்திற்குப் பரமேச்வர சாக்ஷாத்காரம் தவிர வேறு உபாயம் இல்லையெனவும், ஆத்மா தேகேந்திரியாதிகளுக்கு அந்நியன் எனவும், இம்மதத்தில் பிரத்தியக்ஷம், அநுமானம் இரண்டே பிரமாணம் என்றும் கூறும். (தத்துவ) |
வைச்சிரவணன் | விச்சிரவாகு குமாரன். (குபேரன்) இவன் (3000) வருஷம் தவஞ்செய்து இயக்கர்க்கு அரசனாகித் தந்தையால் இலங்கையைப் பெற்றான். |
வைச்வாநரன் | 1. ஒரு அக்கினி. இவன் தன் தந்தைக்கு, நாரதர் (12) வயதில் உன் பிள்ளை இடிவிழுந்து இறப்பன் எனக் கூறக் கேட்டுச் சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றச் சிவபிரான் இந்திரனைப்போல் தரிசனந் தந்து என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, இவன் உன்னிடம் ஒருவரமும் வேண்டேன் என, இந்திரன் வாள் கொண்டோச்ச எடுக்கையில் வைச்சு வாநரன் அஞ்சக் கண்டு, சிவமூர்த்தி தரிசனம் தந்து முதுகைத் தடவி ஒரு உலகம் சிருட்டித்து அக்னியாக நியமித்தனர். (காசிகண்டம்) காசியில் விச்வாநரன் என்னும் ரிஷிக்குக் குமாரனாய்ப் பிறந்தமையால் இப்பெயர் பெற்ற அக்கினி, இவனை ஆங்கீரச வம்சத்து அக்கினியெனவும் கூறுவர். 2. தநு என்னும் அசுரன் புத்திரன். இவனுக்கு அயசிரை, உபதானவி, காலகை, புலோமை என்னும் நான்கு குமாரிகள் உண்டு, இக்குமரியரில் காலகையையும் புலோமையையும், கச்யபனும், உபதானவியை இரண்யாக்ஷனும், அயசிரயைக் கத்ருவும் மணந்தனர். |
வைஜயந்தன் | விதேகத்துள்ள கந்தமாலினி நாட்டு வீதசோக நகரத் தரசன். இவன் தேவி சர்வஸ்ரீ. இவனுக்கு சஞ்சயந்தன் சயந்தன் என்று இரண்டு குமாரர் உண்டு. வைசயந்தன் சஞ்சயனுக்குத் திருமணஞ் செய்தபிறகு சஞ்சயந்தன் வைசயந்தன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவ்வாறு வைசயந்தன் அரசாண்டு வருகையில் அரசன் சுவாயம்பு நாமதீர்த்தங்காரிடம் மோக்ஷமார்க்கோபதேசம் பெற்று அரசாட்சியைப் புத்திரர் மறுக்க பெளத்திரனிடம் கொடுத்து புத்திரர்களுடன் தீக்ஷை பெற்று ஸயோகிஜினராயினர். (மேருமந்தரம்) |
வைஜயந்தம் | 1. வருணனால் இலக்ஷ்மி தேவிக்குக் கொடுக்கப்பட்ட பூமாலை. 2. இதனை இந்திரன் உபரிசரவசுவிற்குக் கொடுத்தனன். இது விடாத தாமரைகளை யுடையதும், விஜயத்தைத் தருவதுமாம். இது யுத்தங்களில் ஆயுதங்களால் காயமடையாமற் காப்பாற்றும், பாக்யத்தைக் கொடுப்பதுமாம். 3. திருப்பாற் கடலிலுள்ள ஒரு மலை. பிரமாவிற்கிருக்கை. (பரா சாந்.) |
வைடூர்யம் | 1. நருமதை தப்திக்கு இடையில் இருக்கும் மலை. 2. ஒரு நாடு. 3. நவமணிகளில் ஒன்று, |
வைடூர்யர் | வைடூர்ய நாடாண்ட அரசர். |
வைணவபுராணம் | விஷ்ணு புராணம் காண்க, |
வைணவமதம் | விசிட்டாத்வைதம் காண்க. |
வைதரணி விரதம் | இது மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப் பது. இது பீஷ்மர் சாசயனத்தி விருந்த நாள். இதில் பசுவின் வாலைப் பிடித்துக் கொண்டு தர்ப்பணாதிகள் செய்து கோபூசைசெய்து விரத மிருப்பது, |
வைதரீமியசமை | வைதர்மியத்தாலே ஏதுவை தூஷிக்கும் உத்தரம். (வேற்றியல்பு.) |
வைதருப்பநெறி | இது செய்யுளினெறியுளொன்று. இது செறிவு, தெளிவு, சமனிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, கார்தம், வலி, சமாதி என்ற பத்துக் குணங்களுமுயிராகப் புலப்படுவது. (தண்டி.) |
வைதர்பி | சகாராஜன் மனைவியாகிய கேசினி, இவர்களுக்கு அறுபத்து ஆறாயிரம் பிள்ளைகள். |
வைதர்ப்பன் | ஒரு அரசன், இவன் தேவி சந்திரிகை. இவர்கள் கிருதமாலை யென்னும் வனத்திலிருந்து அவிநாசித்தலம் வந்து பல திருப்பணிகள் செய்வித்துப் புத்திரப்பேறு பெற்றனர். |
வைதர்ப்பி | விதர்ப்பராசன் பெண்; இவள் முன் பிறப்பில் புரஞ்சயன். இவள் மலையத்துவசனை மணந்து அவன் தவத்தில் இறக்க விசன மடைந்து இருக்கையில் அவிக்யாதரரால் முன் பிறப்புணர்த்த உணர்ந்து ஞானமடைந்தவள். |
வைதாணி | 1. களிங்க தேசத்திலுள்ள ஒரு நதி. இதில் இருடிகள் யாகஞ்செய்து பசுபதிக்குப் பசுபாகந் தந்தனர். Betrani is a river Near Cattack in the province of Orissa 2. பிதுர்க்களுக்குச் சுதையிடம் பிறந்த குமரி. 3. யமபுர வழியில் உள்ள நதி, (100) யோசனை அகலமுள்ளது. நீர் இன்றி, சீ, இரத்தங்களால் நிறைந்துள்ளது. உலகத்தில் கோதானஞ் செய்தவனை இவ்விடம் ஒரு பசு வந்து தாங்கிச் சென்று அக்கரையில் விடும். |
வைதானர் | சாதுகாரணர் மாணாக்கர். |
வைதிசம் | ஒரு பட்டணம், சத்துருக்கன் குமாரனாகிய சத்துருகாதி ஆண்டது. |
வைதிருதி | 1. பதினொரா மன்வந்தரத்து இந்திரன், 2. தர்மசேது வென்னும் விஷ்ணு அம்சத்தின் தாய், |
வைதிருதிகள் | விதிர்த்தியினுடைய குமாரர், |
வைதீகசாத்திரம் ஆறு | மீமாம்சை, நியாயம், வைசேஷிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம் என்பன. |
வைதேகன் | 1, (சூ) நிமியைக் காண்க. 2. அரசப் பெண்ணினை வணிகன் கூடப் பிறந்த குமாரன். அந்தப்புரக் காவற்றொழில், (மநு.) |
வைதேகி | 1. சதாகேன் தேவி. குமாரன் அச்சமேதன் 2 விதேகம் மிதிலை. இந்நாடாண்டோன் குமாரி, சீதாபிராட்டிக்கும் பெயர். |
வைத்தமாநிதியார் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்பரை). |
வைத்தியநாத தேசிகர் | இவரூர் சோழ நாட்டிலே சப்தவிடங்க கேத்திரங்களில் ஒன்றாகிய திருவாரூர். அபிஷேகஸ்தர் குலம், காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி. வன்மீகநாத தேசிகரின் மைந்தர், படிக்காசுப் புலவர், சதாசிவதேசிகர், ஒப்பிலாமணி தேசிகர், திரு வேங்கடநாதர் முதலியோரின் ஆசிரியர். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கச்சான்றோர் இலக்கியங்களையும் நன்கு கற்றவர். எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்ற ஐந்திலக்கணங் களையும் அமைத்துச் சூத்திரமும் உரையுமாக இலக்கண விளக்கம் என்னும் சிறந்த இலக்கண நூல் இயற்றியவர். இது குட்டித் தொல் காப்பியம் எனப் பெயர் பெற்று சென்ற ஓரைம்பதாண்டுக்கு முன்வரையிற் பெரும் புலவர்களாலும் படிக்கப்பட்டதொரு நூல், இதனையன்றி நல்லூர்ப்புராணம், வாட்போக்கிப் புராணம் முதலிய புராணங்களும், பாசவதைப்பரனி, திருவாரூர்ப்பன் மணிமாலை, மயிலம் பிள்ளைத் தமிழ் போன்ற பல சிறு நூல்களும் இயற்றியவர். அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்றோரால் புகழ்ந்து பாடப்பட்டவர். ஐம்பதின்மர் சங்கத்தாராகி விடாரோ, நாற்பத்தொன் பதின்மரென்றே யுரைப்பாரோ இம்பர் புகழ், வன்மீக நாதனருள் வைத்தியநாதன் புடவி, தன்மீதர் நாட்சரித்தக் கால். என்று கவி வீரராகவ முதலியாரால் புகழ்ந்து பாடப்பட்டவர். பொம்மயபாளையம் சிவஞான பாலையசித்தர்மீது பாசவதைப் பரணி பாடிச் சன்மானம் பெற்றவர். ‘காவா யெனச்சிறு தெய்வந்தனைத்தினங் கைதொழுது, நாவாய் தழும்பப் புகழ்ந் தென் பயன்கதி காடின் மும்மைத், தேவா யத் தேவிற்குங் கோவாய்மணிப் பொற்சிங் காதனஞ்சேர், பூவாய்மதிக் கண்ணியாரூர்ப் பிரான் பதம் போற்றுமினே. ‘ என்பது திருவாரூர்ப் பன்மணிமாலை, |
வைத்தியநாதமுனிவர் | 1. இவர் யாழ்ப்பாணத்துள்ள அளவெட்டியெனும் இடத்தவர். வேளாண்சைவர். வடநூல் தமிழ் நூல்களில் வல்லவர். தமிழில் வியாக்ரபாத புராணம் பாடியவர். 2. புலியூர்ப் புராணம் பாடியவர். |
வைத்தியம் | பழவினையானும் காரணங்கவானும் மக்கட்கு வாதபித்த சிலேத்ம காரியங்களாகிய பிணிகள் உண்டாம். அவற்றுள், பழவினை யான் வருவன அவ்வினையின் முடிவின் கண்ணன்றியேனையவற்றால் தீரா. மற்ற வாதபித்த முதலிய முத்திறத்தாலும் அவற்றின் தொந்தத் தாலும் வருவன மருந்தாற் றீரவேண்டுதலினாலும், மானைக்காட்டி மானைப் பிடிப்பார் போன்று உடம்பை யுறுதியாகக் கொண்டே யவ்வுட லூறுங் காலத்து அவ்வுடலில் எள்ளிலெண்ணெய் போல் மறைந்துறுங் கள்வனைக் கண்டு உறுதியடைய வேண்டுதலின் வைத்தியமாகிய ஆயுர்வேதம் உடலை நீட்டிக்கப் பெற வேண்டுநர்க்கு இன்றியமையாத தாம். அவ்வாயுர்வேதம் மருத்துவ னிலக்கணம், மருந்தினிலக்கணம், நோயினிலக்கணம், நோய்கொண்டோ னிலக்கணம், ஆக நான்கு இலக்கணத்தினைப் பொதுவகையாக வுடையதாம். அவற்றுள், மருத் துவனிலக்கணமாவது; குலன் அருள் தெய்வங்கொள்கை, மேன்மை, கலைபயில் தெளிவு, கட்டுரைவன்மை, நிலம், மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சி, யுடையானாய், வாதபித்த சிலேத்மாதிகளின் நடை களைப் பெற்ற நாடிகளின் பேதத்தையும், அவற்றின் தொந்த பேதங் களையும், மரண நாடி பேதங்களையுமறிந்து அவற்றில் வல்ல ஆசாரியனுடன் பழகினவனாய் ஒஷதிகள், சுத்தி ரஸகந்த பாஷா ணாதிகளின் குணங்களை யறிந்தவனாய், விஷப்பிரதி விஷ மறிந்த வனாய், மருந்து செய்காலம், மருந்தின் வயது, தீயினள்வு, புடவகை, எருவினளவு, விறகின் குணபேதம், பத்திய, அபத்திய வகை, பொருள்களின் சீரண காலம், நாடி பார்க்குங் காலம் அறிந்தவனாய்த் தன்னை விரும்பிக் கொண்டே நோய் கொண்டானை யடைந்து கை, கண், பல், நா, மலம், நீர், தேகம், முகம், ஆகிய அஷ்ட தானங்களின் குறியறிந்து அவன் கொண்ட நோயின் சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதி வேறுபாடும், நோய் தொடக்கம், நடு, ஈறு என்னும் பருவ வேறு பாடும் அறிந்தவனாய், நோயை அதன் குறிகளால் இன்னவகைத்தென் றும், அது வந்த காரணத்தையும், அதனை மருந்து, உதிரங்களைதல், அறுத்தல், சுடுதல் முதலியவற்றால் பரிகரிக்கும் காரணம் அறிந்தவனாய் இருப்பவனாம். இனி மருந்தினிலக்கணமாவது; பரசிவத்தினைவிட்டு நீங்காத பராசத்தி மாயையை ஷோபிக்க உண்டான பிரகிருதியிடம் தோன்றிய பஞ்சபூதங்களும் ஒன்றினிடம் ஒன்றாகத் தோன்றிய பிருதிவியில் உண்டான நெல் முதலிய வற்றால் அன்னமுண்டாகி அவ்வன்னத்தா லுயிர்த்திருக்கும் உயிர்களுக்கு ஓஷதிகள் நோயைப் போக்க இறைவனால் சிருட்டிக்கப்பட்டன. அவ்வோஷதிகள் நான்கு வகைப்படும். அவை: விருக்ஷவகை, செடிவகை, கொடிவகை, புல்வகை என்பன. அந்நான்கு வகைப் பதார்த்தங்களிலிருக்கிற வேர், பட்டை, கட்டை, ரசம், இலை, புட்பம், பழம், வித்து இவற்றாலும், ரஸகந்த பாஷாணாதிகளாலும், மாத்திரை, கட்டு, சூரணம், எண்ணெய், லேகியம், ரஸம், தைலம், செந்தூரம், பானம், தீநீர், வடகம், பஸ்மம், மெழுகு, விரோசனம் முதலிய செய்முறை தவறாமல் செய்வதாம். நோயினிலக் கணமாவது; கெர்ப்பக்கோளின் குணம், பாலவியாதி, பாலக்ரகதோஷம், சிரரோகங்கள், பலவித சுரம், பலவகைச் சன்னி, பலவகை மூலம், பலவகை அதிசாரம், கிராணி, வாத ரோகங்கள், பித்தரோகங்கள், சிலேத்ம ரோகங்கள், பிரமியம், மேகரோகங்கள், கிரந்தி, சூலை, குட்டம், உதரரோகங்கள் முதலியவற்றின் குணமறிந்து துணிதல். நோய்கொண்டோனிலக்கணமாவது; பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய் நிலையுணர்த்தல், வன்மை, மருத்துத் துன்பம் பொறுத்தல் முதலியனவாம். அவற்றுள் பொருளுடைமையா வது, தான் வயித்தியர்க்கு அவர் உவப்பின் வகை பொருள் தருதற்கும் தனக்கு நோய்க் காலத்து வேண்டிய செய்து கொளற்கும் வேண்டிய பொருள் தன்னிடத்தில் இருத்தலாம். மருத்துவன் வழி நிற்றலாவது. மருத்துவன் கூறிய அநுபானம் பத்தியம் முதலிய குறைவின்றி யிருந்து நோய் தீர்த்துக்கொள்ளல். நோய் நிலையுணர்தலாவது; நோய் வந்தவுடன் வைத்தியரிடத்தில் தன்னைத் தெரிவித்துத் தனக்குற்ற தேக நிலையைச் சற்றும் ஒளியாமல் அவர் மனத்துடன் கலந்து தெரி வித்தல், மருத்துத் துன்பம் பொறுத்தலாவது; பத்தியத்தானும், நோயானும், அனுபானத்தானும், இலங்கனத்தானும், மருந்தின் வேகத்தாலுண்டாம் துன்பத்தானும், தான் முன்னுண்டு பழகிய பொருள் களிலுள்ள பேராசை நீக்கத்தானும் உண்டாம் துன்பங்களைப் பொறுத்தல். இவ்வகை ஒழுகினோன், நோய் நீங்கப் பெற்று முன்னிழந்த பழைய சுகத்தைப் பெற்று இன்புற்று வாழ்வன். இவ்வகை ரோக நீங்கியவன் சுகசரீரியாய் மாதத்திரண்டு முறை நியமித்த காலங்களில் தமக்கு இளையாராயுள்ள மாதரைப் புல்லி, மறுவற்ற விரோசனம் வருஷத்து இரண்டுமுறை கொண்டு, வாரத்திரண்டு முறை சநி புதன் களில் தைலந் தலைக்கிட்டு வெந்நீரிலாடி, உண்ணுங்கால் புளித்த தயிர், காய்ச்சுப் பால், நீர்மோர், உருக்கு நெய், வெந்நீர், சாதத்தில் அரை வயிறு உண்டு கால்வயிறு வெந்நீர் அன்னமுண்டபின் உட்கொண்டு, ஜீரணமாகாப் பொருள்களை விலக்கி, மெல்லெனத்தின் பொருள்களை மென்று தின்று, வாய் கைகால் அலம்பிச் சற்று உலாவிப், பகலாயின் நித்திரை செய்யாது காரியங்களைக் கவனித்து இரவாயின் காலத்தி லுறங்கி உஷக்காலத்தில் எழுந்திருக்க வேண்டும். இதுவே வைத்தியமாம். |
வைத்தியலிங்கம் பிள்ளை | இவரூர் யாழ்ப் பாணத்துள்ள வல்லிபட்டித் துறை, சமயம் சைவம். காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. சிவசம்புப் புலவர் மாணவர். சிந்தாமணி நிகண்டு முதவியனவும், கந்தரலங்கார முதலிய உரை நூல்களும், சைவமகத்துவபாநு முதலிய கண்டன நூல்களும் இயற்றினவர். சீர்செறி செஞ்சடைக்கட்டிகழ்மதிப் பிளவு தாங்கும், ஏர்செறி கரிமுகன்ற னினைமல ரடியை யேத்தி, நேர்செறி இளைஞரோர் சொற் கொருபொரு ணேரா யோரப், பார் செறி நிகண்டு சிந்தா மணியெனப் பகர்வ னொன்றே என்பது சிந்தாமணி நிகண்டு காப்புச்செய்யுள், |
வைத்ருதிவியதிபாத பாபாம்சக தோஷாபவாதம் | ஆதித்யன் உச்சத்தும், ஆட்சியினும் நிற்க பூர்வபக்ஷத்துச் சந்திரன் பலவாராய்ச் சுபாம்சத்து நின்ற பொழுது வைதிருதி வியதிபாத தோஷமில்லை, பாபாம்ச கேதனனாய் நின்ற சந்திரனுக்கு அவ்வம்சாதிபதி 3,6,11 இவ்விடங்களில் நிற்கில் அந்நாளில் பாபாம்சக தோஷமில்லையாம். (விதானமாலை.) |
வைந்நியன் | வேநன் வாமபாகத்திற் பிறந்தவன். |
வைனதத்தன் | கொக்கோகரை மதன நூல் செய்ய எவினவன், |
வைனதேயர் | வசிஷ்டருக்குச் சூத்திர ஜாதிப் பெண்ணிடம் பிறந்தவர். (பார். அநுசாம்.) |
வைபாடிகன் | இவன் புத்த ஏகதேசி, இவன் மஞ்சளுஞ் சுண்ணாம்புஞ் சேர்ந்த காலத்து உண்டாஞ் செவ்வண்ணம் போல் இந்திரியக் கூட்டத்தில் பிரபஞ்சந் தோன்றுமெனவும், தீபத்தின் நெய்கெட ஒளிகெடுவதுபோல் இந்திரியங்கள் பங்கமடைய எல்லாம் சூனியம் ஆம் என்பன். |
வைப்பிராசை | மேருவிற்கு மேற்கில் உள்ள வனம். |
வைப்புச்சரக்குகள் | (15) 1. இந்துப்பு வைப்பு, 2. பொட்டிலுப்புவைப்பு, 3. வெங்காரவைப்பு, 4. துரிசுவைப்பு, 5. எவாட்சாரவைப்பு, 6. நவாசார வைப்பு, 7. சத்திச்சாரவைப்பு, 8. ஏகாம்பச்சார வைப்பு, 9. கெந்தியுப்பு வைப்பு, 10. திலாலவணவைப்பு, 11, கெந்திலவணவைப்பு, 12. காய்ச் சுல வணவைப்பு, 13, பிடால வணவைப்பு, 14, சிந்துலவணவைப்பு, 15. காசிலவணவைப்பு. |
வைப்புப் பாஷாணங்கள் | அமரசிலைக்கந்தகம், அயத்தொட்டிப் பாஷாணம், இந்திர பாஷாணம், இரசிதம், இரத்த பாஷாணம், இலவண பாஷாணம், எருமை நாத்தொட்டிப் பாஷாணம், கருமுகில் பாஷாணம், காக பாஷாணம், குங்குமப் பாஷாணம், கோடாசொரி, கோழித்தலைக் கந்தகம், செப்பத் தொட்டிப் பாஷாணம், சோரம், தீமுறுகல் பாஷாணம், துருசு, நாக பாஷாணம், ஈயபித்தளை, பஞ்சபக்ஷி பாஷாணம், பவழப் புற்று, பூரம், பொற்றொட்டி, மிருதார்சிங்கி, வாணகந்தகம், வைப் பரிதாரம் முதலிய. |
வையாக்கிரம் | உதயணன் யூகிக்கு கொடுத்த தேர். (பெ. கதை) |
வையாபிகர் | அகத்தியர் மாணாக்கருள் ஒருவர். |
வையாவிக்கோபெரும்பேகன் | இவன் நல்லூரில் ஆவியர்குடியிற் பிறந்தவன். கடையெழுவள்ளல்களில் ஒருவன், மலை நாட்டுத் தலைவன். தன்பத்தினியாகிய கண்ணகியைத் துறந்ததால் கபிலரால் இரந்து பாடப் பட்டவன், மயிலுக்குப் போர்வை கொடுத்தவன். இவன் பாணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் முதலியோரால் புகழ்ந்து பாடப் பெற்றான். (புற~நா.) |
வையை | வைகையைக் காண்க, |
வைரவ விரதம் | மங்கலவார விரதம்; தைமாதத்து முதல் செவ்வாய்க் கிழமை முதல் பிரதி செவ்வாய்க்கிழமை யிலும் அநுட்டிக்கும் விரதம், |
வைரவன் | பைாவனைக்காண்க. காளியைக் காண்க. |
வைரவம் | ஒரு மதம். இம்மதத்தவர்க்குச் சைவசமயக் கொள்கைகள் பலவும் ஒப்பு. இம்மதத்திற்குச் சிவமூர்த்தி தமருகம் தரித்தமூர்த்தியாய் அருள் செய்வர். (தத்துவ.) |
வைரவர் | மார்த்தாண்ட பைரவர், ஆனந்த பைரவர், பிரமோதபைரவர் எனப் பலராவர். இவர்கள் மணித்வீப சக்ராலய காவலர். (சிவா.) |
வைரவாணிப மகருஷிகோத்ரன் | வைசிய முதல்வரில் ஒருவன் வளையா பதி காராள வாணியனென்று பெயர் கொடுத்துக் கோத்திரத்தில் (500) கோத்திரம் பங்கிட்டுக் கொடுக்கக் கீர்த்திபெற்றவன். |
வைரவி | ஒரு பண்டாரசாதி வகுப்பார். இவர்கள் கோவில்களில் பூசாரி வேலை செய்பவர்கள். இவர்கள் மேளக்காரர் வகையில் சேர்ந்தவர்கள். இவர்கள் மதுரையில் உள்ளவர்கள். இவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டிமாரிடம் உத்யோகம் செய்வர். (தர்ஸ்டன்.) |
வைராக்யசதகம் | (வைராக்ய தீபம்) பேறையூர் சாந்தலிங்க சுவாமிகள் இயற்றிய ஞான நூல். சாந்தலிங்க சுவாமிகளைக் காண்க. |
வைராசன் | ஆறாமன் வந்தரத்து விஷ்ணு மூர்த்தியைக் குமாரனாகப் பெற்றவன். |
வைராசர் | பித்ருக்களைக்காண்க. |
வைரிமுகத்தின் அங்கங்கள் பதின்மூன்று | (விமர்சமெனினுமாம்) இவை நாடக விகற்பங்கள். அபவாதம், சம்பேடம், வித்திரவம், திரவம், சத்தி, துதி, பிரசங்கம், சலனம், விவசாயம், நிரோதனம், பிரரோசனம், விசலனம், ஆதானம் என்பனவாம், விமரிசமாவது தோடு விரித்துக் கதிர் போந்தாற்போலவும், மேயதுவளைத்தாற் போலவும், நாடகப் பொருள் நன்குவிளிக்கப் பயன்படுவது. (வீரசோ.) |
வைவசு | யமன். |
வைவச்சுதபட்டணம் | ஆன்மா யமபுரத்திற்குப் போகும் வழியில் உள்ள பட்டணம், இதில் ஜலம் கிடையாது. இரத்த மழைபெய்து கொண்டிருக் கும். இதில் பாபஞ்செய்தோர் இருந்து ஒலமிடுவர். இது உயர்ந்த மாளிகைகள் நெருங்கிக் கோரரூபமுள்ள அநேக பிராணிகள் நெருங்கி யுள்ளது. |
வைவச்சுதமநு | 7. வது மநு. விவச்வான் குமாரன். இவன் குமாரன் இக்ஷ்வாகு. மச்சாவதாரமூர்த்தியைக் காண்க. தாய் சமுக்யாதேவி. இவன் காலத்து நான்கு வருணங்கள் உண்டாயின, இவனை மச்சாவ தாரமூர்த்தி சாக்ஷஸமன்வந்தரத்தில் காத்தார், சிரார்த்ததேவனைக் காண்க. இவன் பத்துக்குமாரரைப் பெற்றனன். அவர்களில் புரந்தரன் இந்திரன் ஆனான். இரண்டாவது குமாரன் ஆதித்தன் ஆயினான். ஏழுகுமாரர் சப்தருஷிகள் ஆயினர். இந்த ருஷிகளில் காசிபருக்கு விஷ்ணு மூர்த்தி அதிதியிடம் வாமனராக அவதரித்தனர் என்ப. இந்த மநுவின் ஒன்பதாவது குமாரனுக்கு நபாகன் பிறந்தனன். |
வைஷ்ணவம் | விஷ்ணுவைத் தியானிப் போர் கொண்ட மதம். விசிட்டாத்துவிதத்தைக்காண்க. |
வைஷ்ணவி | 1. ஒரு மாயாதேவி. இவள் கருடவாகனத்தில் எழுந்தருன் ளினவளாய் சங்கு, சக்கரம், கதை, வாதம், உடையவளாய் இருப்பள். 2. மத்தியான்ன காலத்தில் தியானிக்கப்படும் சந்தியாதேவதை. யௌவன முள்ளவளாய் வெண்ணிறத்தவளாய் வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு, சக்கரம் இடக்கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய்க் கருடவாகனத்தில் பதுமாசனத்தளா யிருப்பவளாய் மகாலஷ்மி உருவமாய்த் தியானிக்கப்படுபவள், பார்வதிதேவி. |