அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வேகதரிசி

திருதராட்டிரன் புத்திரன்.

வேகரதன்

1. அமிர்தபுரத்து இராசகுமாரன், 2. விஜயகூடத்து அரசன். (குளா)

வேகவதி

1. தென்மதுரையிற்பாயும் நதி. 2. காஞ்சியிலும் இப் பெயர் கொண்ட நதி ஒன்று உண்டு, 3. யோகவதியைக் காண்க.

வேகவந்தன்

ஒரு பாரதவீரன்.

வேகவான்

1. பெந்தமான் குமாரன் சூர்யவம்சத்தவன். 2. தநுபுத்திர னாகிய ஒரு அசுரன். (பா ஆதி)

வேங்கடநாதாசாரியர்

வேதாந்ததேசிகருக்குப் பிள்ளைத்திருநாமம்.

வேங்கடம்

தமிழ்நாட்டிற்கு வடக்கின் கண் எல்லையாகவுள்ள மலை. இது குமாரக்கடவுளை யுவகம் வழிபட்டுச் சித்தியடைந்த மலை யென்றும், நிலங்கடந்த நெடுமுடியண் னலை போக்கி உலகத் தவஞ்செய்து வீடு பெற்ற மலையென்றுங் கூறவர். திருவேங்கடங் காண்க.

வேங்கைமார்பன்

உக்கிரப் பெருவழுதியால் வெல்லப்பட்டவன். இவன் கானப் பேரெயிலின் தலைவன் இவன் காலத்துப் புலவர் ஐயூர் மூலங்கிழார். (புறநா.)

வேசாலி

தருசகனுடைய பசையாசருள் ஒருவன். (பெ கதை.)

வேடன்

வைசியன். அரசகன்னிகையைப் புணரப் பிறந்தவன். வேடன் ஒருவன் தம்மரசன் தனது மனைவியைப் புணரவரத் திருப்பெருந்துறையி லடைக்கலம் புகுந்து இறைவன் வாள் கொடுக்கத் தன் பகை வென்றான் என்பது திருப்பெருந்துறைப் புராணம். இறைவன் இவ்வடிவாய் எழுந் தருளி மகாபாதகந் தீர்த்தனர். அருச்சுநன் பொருட்டு இவ்வுருத்தாங்கினர். இச்சாதியில் வள்ளிநாய்ச்சியார் திரு அவதரித்தனள். குகன் இச்சாதி யென்பர்.

வேடர்

இவர் முற்காலத்தாசருக்கு வேட்டைத் தொழிலில் உதவி புரிந்தவர்கள். இவர்கள் தங்களை வால்மீகி ருஷியின் வம்சத்தவர் எனவும் கூறுவர். இவர்கள் இந்தியாவின் பழைய குடிகளாக எண்ணப் பட்டவர்கள். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்கள், இவர்களைப்போல் வடநாட்டில் பேடர் என்று ஒரு வகுப்பாரும் உண்டு. இவர்களுக்குத் தொழில் வேட்டையாடல். சில இடங்களில் இப்பெயர் இருளருக்கும் வழங்குகிறது. இவர்கள் தங்களைக் கண்ணப்ப நாயனார் வம்சம் என்பர். வேடருக்குப் பட்டம் நாய்க்கன். (தர்ஸ்டன்.)

வேடலப்பை

முதலியாண்டான் வம்சத்தவர். மணவாள மாமுனிகளி டத்து வாதிடவந்த கிருஷ்ணாநந்தனை மீளும்படி செய்தவர். இவர் பிறப்பிடம் வேடல்,

வேட்கைமுந்துறுதல்

கையிடத்தே விளங்கும் வேலினையுடையவன் செலுத்த வேட்கையைச் செறிந்த தொடியாற் சிறந்த தோளினையுடை யாள் தலைவன் முன்னே சொல்லிய துறை. (பு. வெ. பெருந்திணை.)

வேட்டக்கண்ணன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் கண்ணன். இவர் தம் பாடலில் குறும்பூழ் காயமாக எனக் கூறுதலில் இவர் வேட்டமாடும் தொழிவனராக இருத்தல் கூடும். (குறு 389)

வேட்டந்தை சிட்டன் மகருஷிகோத்ரன்

திருவேங்கடத்தானருளால் கண்ணிழந்த ஒருவனுக்குக் கண்கொடுத்த வைசியன்.

வேட்டந்தைமகாருஷிகோதரன்

ஒரு புலவனுக்கு யானைக்கன்றும் வளநாடும் அரச னிடம் வாங்கித்தந்து பாடல்பெற்ற வைசியன்.

வேட்டூர் சிங்கராசாரியார்

மணவாளமா முனிகளின் திருவடி சம்பந்தி.

வேட்டைச்சிவங்கி

இது வேட்டையாடுவதில் மிகத்திறமையுள்ளது. ஆதலாலிதற்கு இப்பெயருண்டாயிற்று. இது உருவத்தில் சிறுத்தை யொத்தது. இதற்குக் கழுத்தில் மயிரடர்ந்து தாடி போலிருக்கும். இதற்கு பூனை, புலி இவற்றிற்குள்ள நகங்களைப்போல் நீட்டவும் சுருக்கவுமுள்ள நகங்கள் கிடையா. இவைகளை வேட்டை நாய்களுக்குப் பதிலாகப் பழக்கினால் பழகி வேட்டைமேற் செல்லும். இதன் தேகத்திலும் புள்ளிகளுண்டு.

வேட்டையாடுதலால்

கெட்டவன் பாண்டு.

வேணன்

வைதேகனுக்கு அம்பட்டக் கன்னிகையிடம் பிறந்தவன். தாளம் முதலிய வாத்யம் வாசிப்பது தொழில். (மநு.)

வேணாடு

திருவாங்கூர் பக்கத்திலுள்ளது.

வேணாட்டடிகள்

இவர் திருவாங்கூர் எனப்படும் வேணாட்டிருந்து சிவமூர்த்தியைப் பாடி முத்தியடைந்தவராக இருக்கலாம்.

வேணு

1. ஒரு இந்திரன். இவன் ஒரு காலத்துக் கசமுகனால் செபிக்கப் பட்டான். 2. சூர்யகுலத்தரசன், கொடுங்கோல் செலுத்திக் குட்டமுதலிய நோய்கொண்டு புண்ய தீர்த்த ஸ்நானத்தால் நலம் அடைந்வன்.

வேணுஹயன்

சத்ருசித் குமாரன்.

வேண்டலணி

குற்றத்தால் குணமுண்டாதலைக்கண்டு அக்குற்றத்தைப் பிரார்த்தித்தலாம். இதனை அறுக்வியாலங்கார மென்பர் வடநூலார். (குவல.)

வேண்மாள்

செங்குட்டுவன் மனைவி. இவள் கண்ணகியைப் பிரதிஷ்டித்துப் பூசிக்க வேண்டுமென்று தன் கணவனை வேண்டிக் கொண்டவள்,

வேதகர்ப்பை

துர்க்கை.

வேதகிரி முதலியார்

இவர் தொண்டை மண்டலத்துப் பொன் விளைந்த களத்தூரினர். இராமாநுச கவிராயரிடம் வாசித்தவர். இலக்கிய இலக் கணங்களை நன்கு கற்றவர் பல தமிழ் நூல்களைப் பரிசோதித்தும் உரையியற்றியும் அச்சிடுவித்தவர்.

வேதசதாவிந்து

சாமந்தநகரில் இருந்த வேதியன். தான் வறுமையால் வைத்திருந்த எருதை விற்கப்போயினான், எருது விலைப்படாது போக அதனைக் கோயிற்றொழுவிற்கட்டினன், அதனால் கோயில் ஏவலர் சிலைகட்டியிழுத்தனர். அதனால் நற்கதியடைந்தவன்.

வேதசன்மா

1. ஒருவேதியன். முனிவரை வருத்தியதால் அரக்கவுரு வடைந்தவன். 2. தருமஞ்ஞனைக்காண்க,

வேதசருமன்

(வேதசன்மா) ஒருவேதியர். சிவபக்திமான். இவர் திருநெல்வேலியில் தமது சத்தியளவு நெல்கொண்டு மூங்கில் வந நாதருக்கு நிவேதித்துச் சிவனடியவர்களுக்கு அன்னம் படைத்து வருவர். ஒரு நாள் நெல் இல்லாது போக ஊர் தோறுஞ் சென்று பிக்ஷை செய்து அகப்பட்ட நெற்கொண்டு அதனைச் சந்நிதிக்குமுன் உலர விட்டு ஸ்நானத்திற்குச் சென்று அவ்விடத்தில் சிவமூர்த்தியையெண்ணி மகாதேவா! மழையிலாமையால் அடியவர் பூசைக்கும் வரீர் பூசைக்கும் முட்டுப்பாடு வருமெனத் தோன்றுகின்றதே; ஆதலால் உலகஞ் செழிக்க மழைபொழிய வேண்டுமெனச் சங்கற்பித்து ஸ்நானஞ்செய்தனர். இவர் ஸ்நானஞ்செய்து வெளியில் வருமுன் பெருமழை வருஷித்து வெள்ளங் கொண்டது. வேதியர் சிவபூசை முடித்துக் கரையேறிச் சிவ நிவேதனத் தின் பொருட்டுச் சந்நிதியில் உலாவிட்ட நெல் எவ்வாறாயிற்றோ வேறு நெல்கிடையாதேயென வருந்தி மழை வெள்ளங்கடந்து சந்நிதானத்தில் வந்து பார்த்தனர். உலரவிட்ட நெல் மாத்திரம் நனையாது வெயிலில் சாய்ந்திருக்கவும், அவ்விடத்தைச் சுற்றி வெள்ளம் வேலிபோலிருக்கவும் கண்டுகளித்து இவ்வற்புதத்தை அரசனுக்கு அறிவித்தனர். அரசனும் மற்றவரும் வந்து பார்த்து நெல்லுக்கு வேலியிட்டபடியால் நெல்வேலி நாதர் எனத் திருநாமம் இட்டுச் சென்றனர். வேதியர் நெல்லினைச் சிவநிவேதானஞ் செய்து களித்தனர்.

வேதசிரசுமுனிவர்

1. காசியில் வீரேசலிங்கம் பூசித்து இஷ்டசித்தி பெற்றவர். 2. ஐந்தாமன்வந்தரத்து இருடி. 3. கிரிசாசுவனுக்குத் துணையிடம் உதித்த குமாரன்,

வேதசிரன்

1. பிராமண குமாரன். உசேநஸ் தந்தை. 2. ஒரு ரிஷி; இரிபு என்னும் விஷ்ணுவின் அம்சாவதாரமூர்த்திக்குத் தந்தை, பாரி துஷிதை.

வேதசுருதர்

மூன்றாமன்வந்தரத்துத் தேவர்கள்,

வேததரிசன்

ஒரு இருடி, பத்தியன் மாணாக்கன்.

வேதநாதன்

ஒருவேதியன், பொருளைத் திருடிக் குரங்கானவன்,

வேதநிதி

ஒரு தூர்த்தவேதியன். இவன் தந்தைக்கு அரசன் கொடுத்த மோதிரத்தைத் தாயறியாமல் திருடிச்சென்று வேசிக்குக் கொடுத்தனன். அதனைப்பெற்ற வேசி யதனை யணிந்து தன் முன் நடிக்கக் கண்ட அரசன், அதனை யவளிடமிருந்து வாங்கித் தான் முன் கொடுத்த மோதிரத்தைப்பார்த்து மீண்டும் கொடுத்துவிடுகிறேன் கொண்டுவருக வென, வேதியர் தன் மனைவியிடம் கொடுத்ததை வினவ, மனைவி அதைக் காணது கணவனிடங்கூற, அரசனிடம் வேதியர் காணாது போயினதை யறிவித்தனர். பின் அரசன் வேதியர்க்கு நடந்ததைக் கூறினன். வேதியர் தன் மகனை ஊரைவிட்டகற்ற, அவன் வேசையிடம் சென்று அவளானும் துரப்புண்டு பசியாற்றது அன்று சிவராத்திரி யாதலால் கோயிற்குச் செல்வோர் நிவேதனத்துடன் போதல்கண்டு, ஆண்டு களவாடிப் புசிக்க வெண்ணித் தன் வேட்டியிற் சிறிது கிழித்து வர்த்தி செய்து தைலத்திற்றோய்த்து இருளைப்போக்கி யங்கிருந்த நிவேதனத்திற் சிறிது திருடிச் கொண்டு திரும்புகையில், துயின்ற காவற்காரரை யறியாது மிதித்தோடி அவராற் கள்வனென்று கொல்லப் பட்டு இறந்து சிவநிசியில் விளக்கொளி செய்த புண்ணியத்தால் களிங்கதேச மன்னவனாய் அநேக சிவதர்யங்கள் செய்தவன். (சிவமகாபுராணம்.)

வேதநீயம்

(2) ஸாத வேதநீயம், அஸாத வேதநீயம் (சி. ப)

வேதனம்

(கூலி) காரியமானம், காலமானம், காரியகாலமான மென (3) வகை, இச்சுமையை இந்த இடத்தில் வைத்தாலிவ்வளவு கூலியென்பது காரியமானம். வருஷ, மாத, நாள்களில் பெறும் வேதனம் காலமானம். இத்தனை காலத்துள் இந்த வேலை செய்து முடித்தாலிவ்வளவு கூலியெனல் காரியகாலமானம்.

வேதன்

விஷ்ணு சருமன் குமாரன். இவன் தந்தை பொருட்டுத் திருவேங்கடத்தில் தீப கைங்கர்யஞ் செய்து தந்தையை நரகத்திலிருந்து மீட்டவன்.

வேதப்பிரியன்

அவந்திநகரத்திலிருந்த வேதியன், சிவபூஜா துரந்தரன். இவன் குமாரர் மேதன், சுவிரதன், தருமவாதி.

வேதமித்திரன்

1 மாண்டுகேயர் மாணக்கர். சௌபரிக்குக் குரு. 2. சீமந்தினியைக்காண்சு.

வேதம்

1. இது பரதகண்டத்து ஆஸ்திகர்களால் கொண்டாடப்படும் நூல் இது இருக்கு, எஜஸ், சாமம், அதர்வணம் என்று நான்கு பிரிவையுடையது. இது ஞானகாண்ட, கர்மகாண்ட வகையால் ஈச்வரனையும், அவனை உபாசிக்கும் யஞ்ஞாதிகளையும் கூறும். இதற்கு இராவணன் சந்தம் முதலியன வகுத்தான் இது சிகை, வியாகரணம், நிருத்தம், சந்தஸ், சோதிஷம், கல்பம் என ஆறு அங்கங் களையுடையது. இதனைச் சோமுகம் என்னும் அசுரன் திருடிச் செல்லப் பின் விஷ்ணுமூர்த்தி அன்ன உருவமாய்ப் பிரமனுக்கு உபதேசித்தனர். இஃது ஒருமுறை முனிவர் உருவாய்க் கண்ணனைநோக்கி யார் வணங்கத் தக்கவர் என்றது. கண்ணன் சிவமூர்த்தியென அவ்வகைவணங்கியது, (கூர்மபுராணம்.) இஃது ஒரு கற்பத்தில் பிரமனது நான்குமுகத்தினும் பிறந்ததென்பர் இதன் முடிவு உபநிஷத்துக்கள். மீமாம்சா சாஸ்திரிகள் வேதம் சிருட்டிக்கப்பட்டன அல்ல அநாதி என்பர். நியாயவே தாந்தியர் ஈசவாவாக்கியம் என்பர். கடவுள் வேதங்களைப் பிரமனுக்கு உபதேசிக்க, பிரமன் அதனை இருடிகளுக்கும் அவ்விருடிகர் அதனைத் தம் சீடருக்கும் உபதேசித்தனர் என்பர். இதை அசுரன் திருடிச்செல்ல அதனை மீட்டு ஒழிந்தவைகளை யாக்கச் செய்தனர் என்பர். அதனால் வேதங்களில் சிலபாகம் ரூஷிகளால் செய்யப்பட்டன. இதனை வியாசர் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நால்வகைப்படுத்தினர். இவ்வகை வேதத்தில் முதலாவதாகியது இருக்குவேதம் : இது மந்திரங்கள் அல்லது தோத்திரங்கள் அடங்கப் பெற்றது. இருக்கு என்னும் பதத்திற்குத் துதித்தல் என்பது பொருள். இஃது எட்டுப்பாகங்களாக வகுக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பாகமும் அநேக அத்யாயங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. பின்னொரு விதம் பத்து மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலமும் நூறு அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு அனுவாகங்களிலும் ஆயிரம் சூக்தங்கள் அடங்கியிருக்கின்றன. இவ் வேதத்தை ஓதலில் பதம், கிரமம், ஜடை, கனம் முதலியவை கொண்டு ஓதல்வேண்டும். இந்த இருக்குவேத அத்தியாயங்களில் பல இருடிகளின் சரித்திரங்களும், அவர்கள் ஓதியகீதங்களும், அந்தந்த ருஷிகளின் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பல ரிஷிகளே யன்றி ராஜவம்சத்தினரும் வேதகிரந்தகர்த்தராக இருக்கிறார்கள். இதில் முதற்காண்டத்தில் சுவநயகையைப் பற்றியும், எட்டாவது காண்டத்தில் அசங்கன் உருமாறிய கதையும், பத்தாவது காண்டத்தில் சிந்து தீவபன் சரிதையும், எழாவது அத்யாயத்தில் பல கதைகளும் அடங்கி இருக் கின்றன. எட்டாவது அத்தியாயத்தில் நபானேதிக்ஷி தன் கதை கூறப்பட்டிருக்கிறது. வேதத்தைச் சுருக்கி நோக்குமிடத்துப் பல தேவர்களின் நிதி, பல தேவா, ருஷிகள், அசுரர்களின் பெயர்கள், பல பொருள்களின் பெயர்கள், திரிமூர்த்திகளின் நாமாவளிகள் அடங்கி இருக்கின்றன. இவை முடிவாய் ஒரே கடவுளைக் குறிப்பிப்பதாகவும் இருக்கின்றன. வேதநிகண்டு அடங்கி இருக்கிறது. அக்கினிக்கு ஏகார்த்தமுள்ள பலபெயர்கள் அடங்கி இருக்கின்றன. அவ்வாறே வாயு, சூரியன் முதலானவர்க்கும் கூறப்பட்டிருக்கின்றன. எவர் எந்த வாக்கி யத்தைச் சொன்னாரோ அவரே ரிஷி. எவரை நோக்கிச் சொல்லப் பட்டதோ அவரே தேவதை, ஏற்பட்ட கடவுளர் அக்கினி, வாயு, சூரியன் ஆக மூவராக எண்ணப்படுகிறது. ஓம் எனும் பதம் பிரமத்தைக் குறித்தலைக் கூறப்பட்டிருக்கிறது. ஒரே தெய்வமாகக் கூறப்பட்ட தெய்வம் சூரியன் என்று குறிக்கப்படுகிறது. சமயாசாரங்களைக் குறித்தும், வாநப்பிரஸ்தன் சந்நியாசிகளின் சடங்குகளைப் பற்றியும், இந்திரன், அக்கினி, சூரியன், சந்திரன், வாயு, அப்பு, அசரீரிகள், பரமா ணுக்கள், பிருதிவி இவைகளைப் பற்றிய பிரார்த்தனைகளும் அடங்கி யிருக்கின்றன. பல யாகங்களிலும், சோமபானத்திலும், ஓதப்படும் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. பதினைந்தாவது அத்யாயத்தில் குத்சன், திருசன், ஆப்தியர் கதைகள் கூறப்பட்டிருக்கின்றன. இருபத்து மூன்றாவது அத்தியாயத்தில் அகஸ்தியர், இந்திரன், மருத்துக்கள் இவர்களுக்கு நடந்த சல்லாபங்கள் அடங்கியிருக்கின்றன. இருபத்து நான்காவது அத்தியாயத்தில் அஸ்வதிதேவர், அக்கினி, ஆதித்தனைச் குறித்து அகஸ்தியரால் சொல்லப்பட்ட கீதங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் ஒரு கீதம் விஷம் இறங்கும் வகை அகஸ்தியரால் கூறப்பட்டிருக் கிறது. காயத்திரியைப்பற்றி ஓர் அத்தியாயம் கூறப்பட்டிருக்கிறது. இது சூரியனை நோக்கியதாம். கிருகதேவதாஸ்தோத்திரம் ஏழாவது காண்டம் மூன்றாவது அத்யாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. வசிட்டர் கதை இதில் கூறப்பட்டிருக்கிறது நூறு வருஷம் பாக்கியத்துடன் இருக்கவேண்டி ருத்திரனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை இதில் அடங்கி இருக்கிறது. மழை வேண்டிச் சூரியனைப் பிரார்த்திக்கும் பிரார்த்தனையும், மேகத்தை நோக்கித் தவளைகள் கூவவேண்டியதைப் பற்றியும் வசிட்ட கீதங்கள் கூறப்பட்டிருக்கின்றன. பத்தாவது காண்டம் ஆறாவது அத்தியாயத்தில் சத்துருநாசத்திற்காகக் கூறப்பட்ட கீதம் அடங்கி இருக்கிறது. ஏழாவது அத்தியாயத்தில் சாவித்திரி, சகனா, தக்ஷணா, யமுனா முதலியோர் கதை கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் அம்பரீஷன் புத்திரி யாகிய வாக்காள் தன்னைத்தானே புகழ்ந்த சரிதம் கூறப்பட்டிருக்கிறது. பத்தாவது அத்தியாயத்தில் இரவை நோக்கியும், பதினொராவது அத்தி யாயத்தில் உலக சிருட்டியை கோக்கியும், அகமருஷன கீதம் சொல்லப் பட்டு இருக்கிறது. பின்னால் ஆத்திரேயப் பிராம்மணம் கூறப்பட்டு இருக்கிறது. ஏழாவது காண்டம் யாகாதிகளைக்குறித்தும் எட்டாவது அத்தியாயம் அரசபட்டாபிஷேகத்தைக் குறித்த பொருள்களைப்பற்றியும், எட்டாம் காண்டம் இரண்டாவது அத்தியாயத்தில் பட்டாபிஷேகச் சிறப்பையும், முப்பத்தேழாவது அத்தியாயம் சத்தியகாமனால் சொல்லப் பட்ட நியாயவிஷயங்களையும், உத்தாலகர் பட்டாபிஷேகச் சடங்கு கூறும் விதத்தையும், முப்பத்தெட்டாவது அத்தியாயம் இந்திரனது பாவனாபட்டாபிஷேகத்தைப் பற்றியும், துரு, பரீதித்து முதலியோர்க்குச் செய்த பட்டாபிவேகச் சடங்கைப்பற்றியும், பசுக்கள் தானம் கொடுத் ததைப்பற்றியும், அங்கனம் ஆசிரியர் பொருட்டு வெள்ளைக்குதிரைகள் தானம் செய்ததைப்பற்றியும், அத்திரிபுத்திரன் செய்த ஸ்திரீகளின் தானங்களைப்பற்றியும், பரதன் செய்த யானையின் தானங்களைப்பற்றி யும், பரதனுக்குச் செய்த யாகத்தில் ஆயிரம் பிராமணர் தாம் எடுத்துக் கொண்ட நூறு கோடி பசுக்களைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. ஐதரேயப் பிராமணத்தின் நாலாவது அத்தியாயத்தில் புரோகிதனை நியமிப்பதினாலும், ஒரு புரோகிதனை உபசரிப்பதனாலும், உண்டாம் பலனைப்பற்றியும், நியமனத்தைப்பற்றியும், தொழிலைப் பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது. ஏழாவது காண்டம் முடிவில் பல அரசர்களின் பெயர்களும், அவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மானுஷ்டானங்களும், சத்துரு நாசங்களைப்பற்றியும் கூறப்பட்டு இருக்கிறது. இருக்கு வேதத்தின் மற்றொருபாகம் ஐதரேய ஆரண்யகம் என்று பெயர். இதில் இரண்டாவது அதிதீர்க்கமானது. மூன்றாவதோடு சேர்ந்து பாவரிக் பிராம்மணம் அல்லது ஆத்திரேயபிராம்மண உபநிஷத்து என்னும் பெயர் உள்ளதாகிறது. இதில் உலகசிருட்டி கூறப்பட்டிருக்கிறது. மனித உற் பத்தியைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. பின் ஆன்ம விசாரணையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதில் மற்றொருபாகம் கௌக்ஷீதகீ பிராம்மண உபநிஷதம் என்னப்படும். வேதாந்தசாத்திரம் அதில் ஒன்று. பிரதத்தனுக்கு உபதேசம் செய்தது. மற்றொன்று அஜாதசத்துருவின் உபதேசம் கூறப்பட்டு இருக்கிறது. பின்னும் பலவிஷயங்கள் அடங்கி இருக்கின்றன. யஜுர்வேதம் : வாஜஸநேயி அல்லது ஸ்வேத யஜுர்வேதங்களில் சூக்ஷமம் உள்ளது. அதில் பிரதான பாகம் மந்திரங்களும், அதைச்சேர்ந்த சந்நிதத்தில் நாற்பது அத்தியாயங்களும் அடங்கியிருக்கின்றன. அவை வேற்றுமைப்பட்ட நந்த கந்திகளாசப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்திகமும், தோத்திரங்களாக இருக்கின்றன இதில் உள்ள அநுவாகங்களின் தொகை (286); வாக்கியங்களின் தொகை (9187) ஆகவும் காணப்படுகிறது. அத்யயனங்கள் பல்வேறு வகைப்பட்ட நூற்றுப்பதினேழு கந்திகள் அடங்கினவையாகக் காணப்படுகின்றன. யஜுர்வேதமாயினும் இருக்குவேததோத்திரங்களைப் போல இருக் கின்றன. யஜுர் வேதம் அப்பெயரின் பொருள்படி நைவேத்யங்கள், வேள்விகள் செய்யும் முறை கூறப்பட்டதாக இருக்கிறது. முதலும் இரண்டுமாகிய அத்தியாயங்களில் அமாவாச்யை, பூர்ணிமைகளில் செய்யப்படும் வேள்வியில் கூறப்படும் தோத்திரங்களும், கடையில் ஆறு பிரகாணங்களில் பிதுர் கர்மங்களைப் பற்றியும், மூன்றாவது அத்தி யாயம், நித்தியாக்கினி நிவேதனத்தைப் பற்றியும், அடுத்த ஐந்து அத்தியாயங்கள் அக்கினிஸ்தோமத்தையும் அதில் செய்யும் சோம பானத்தையும், மற்ற இரண்டு அத்தியாயங்கள் வாஜபேயம், இராஜ சூயம், இவைகளைக் குறித்த சடங்குகளையும், பதினொன்று முதல் பதினெட்டு வரையிலும் உள்ள எட்டு அத்தியாயங்கள் ஓமாக்கினி வேதத்தையும், பத்தொன்பது முதல் இருபத்தொன்றாவது அத்தியாயங் கள்வரை சௌத்திராமணி யாசமும் கூறப்பட்டிருக்கிறது. இருபத்திரண்டு முதல் இருபத்தைந்துவரையில் அசுவமேதத்தில் உபயோகிக்கும் பிரார்த்தனைகள் அடங்கியிருக்கின்றன. அடுத்த இரண்டு அத்தியாயங் கள் பலவிஷயங்களைக் குறித்தவைகளாக இருக்கின்றன பின்னிரண்டு அத்தியாயங்களில் புருவமேதமும் நாராயணபலியை ஒத்த சடங்கும் கூறப்பட்டிருக்கிறது. முப்பதும், முப்பத்தொன்றும் இவைகளே அடங்கி இருக்கின்றன. அடுத்த மூன்று அத்தியாயங்கள் சருவமேதம் கூறப்படும். அடுத்த அத்தியாயம் பித்ருமேதம் கூறும். கடையில் ஐந்து ததயக்ஷ னைக் குறித்ததாகவும், அவற்றில் நான்கு, யக்யம், தவம், நியமம் முதலிய சமயக் கிரியைகளைக் குறித்தனவாகவும் இருக்கின்றன. கடைசி அத்தியாயம், ஞானபோதகமாயிருக்கிறது. தோத்திர பாகத்தில் பிரஜாபதி, பரமேஷ்டி, நாராயணன் என்கிற தெய்வ புருஷர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கினி மூலகாரணமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியனும், வாயுவும், சந்திரனும் அவ்வாறாகக் கூறப்படுகின்றனர். காலங்கள் சோதி வீசுகிறவன் இடத்தில் பிறந்தன. பின் அருவலக்ஷணம் கூறப்படுகிறது. இந்த வேதத்தின் நாற்பதாவது அத்தியாயம் ஈஷாஹியம் என்னும் உபநிஷத்தாக இருக்கிறது. அந்த உபநிஷத் செய்தவன் ததியக்கன் ஆக இருக்கிறான். மத்தியந்தன சாகத்திற்குச் சம்பந்தமாகிய இந்த வேதத்தின் இரண்டாவது பாகம் சதபதிய பிராம்மணமென்று பெயர் பெறும், அது முழுதும் பிரபாதகம் என்னும் அத்தியாயங்களாகச் செய்யப்பட்டிருக்கிறது. சந்திகங்கள் எனும் சிறு பிரிவுகளும் அடங்கியிருக்கின்றன, முதலாவது இரண்டாவது காண்டங்களில் பௌர்ணமி அமாவாசிகளில் செய்யப்படும் சடங்கு களையும், ஒமாக்கினி முதலிய சடங்குகளையும், சோமபானம் சித்தம் செய்யவேண்டிய விதத்தையும் அதைக் குறித்த ஜயாதிஸ்தோமம் முதலிய சடங்குகளையும், ஐந்தாவது காண்டம் இராஜசூயத்தையும், அடுத்த நாலுகாண்டங்கள் அக்கினிப்பிரதிஷ்டையையும் கூறும் பத்தா வது காண்டம் அக்கினிரகஸ்யம் எனப்பட்டு இச்சடங்குகளினால் ஆம் பயன் கூறும், இரண்டாம்பாகத்தைச் சேர்ந்த மூன்று காண்டங்கள் சௌத்ராமணி யாகத்தையும், அசுவமேதத்தையும் கூறும், பதினாறாவது காண்டம் விரயத்து ஆரண்யகம் என்னப்படும். இதில் அசுவமேத புருஷ மேத லக்ஷணம் கூறப்பட்டிருக்கிறது. சதபதப் பிராம்மணத்தின் பதினாலாவது காண்டத்தில் சொல்லப்பட்ட பிரகதாபண்யம் வாஜஸ நேயி அல்லது சுவேத யஜுலின் முடிவாக இருக்கிறது. இதை விரய தாரண்யகம் என்று வழங்குவர். இதன் பிரசங்கி யாஞ்ஞவற்கியர்; பின் உலக அழிவையும், விராட்சுவரூபத்தையும், மனுஷோற்பத்தியையும், பிராணிகளின் பிறப்பையும் கூறியிருக்கிறது. பின் பாலகி, கார்க்கயன், கார்க்கேயன் முதலியோர் கதை கூறப்பட்டு இருக்கிறது, இக்கதையில் ஆத்மா, அராத்ம லக்ஷணம் கூறப்படுகிறது. பின் யாஞ்ஞவற்கிய மைத்திரேயி சம்வாத பரமாத்ம லக்ஷணம் கூறப்படுகிறது. அப்பால் அதர்வணன், ஆக்கீரசன் முதலியோர்க்கு உபதேசித்த மந்திரங்கள் கூறப்படுகின்றன. பின் அஸ்வதி தேவர்க்குத் ததியக்கனால் கூறப்பட்ட பிரசங்கம் கூறப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தில் யாஞ்ஞவற்கிய ஜனக சம்வாதம் வாதம் அடங்கியிருக்கிறது. பின் கானவ சாகச் சம்பந்தப்பட்ட அநுரூபபத்திரத்தோடு வாஜஸகேயி என்னும் அட்டவணை சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பால் கிருஷ்ணயஜுஸ் அல்லது தைத்திரிய மந்திரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இது ஏழு காண்டங்களாகப் பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஐந்து முதல் எட்டு வரையில் அத்யயனம், பிரக்ஷணம், அல்லது பிரபாதங்கள் அடங்கியிருக்கின்றன. ஒருகாண்டத்தில் இராஜசூயம் என்னும் யாகம் கூறப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது முழுக்காண்டங்களும் பிரசா பதியாலும், சோமனாலும், அக்கினியாலும், பலதேவர்களாலும் கூறப்பட்டவைகளாகக் காணப்படுகின்றன. கடைசி காண்டத்தில் வராக அவதார கதைக்குப் பூர்வமான புராணம் கூறப்படுகிறது. இதிலிருந்து கற்பமென்னும் கணித காலம் குறிப்பிக்கப்படும். பின் உலகோற்பத்தி கூறப்படுகிறது. ஒரு பிரகாணத்தில் யாகாதிரியனுக்கு ஆயிரம்பசு கொடுக்கும்படி கூறியிருக்கிறது. இதில் தைத்திரியம், நாராயணம், மகாநாராயணம் என்னும் மூன்று உபகிஷத்துக்கள் பிரிவுபடும். பின் வாருண பிருகு சம்வாத பிரம இக்ஷணம் கூறப்படுகிறது. அதை அறிந்த வன் பெறும் பேறு கூறப்படுகிறது, இஃது இரு வருண உபநிஷத் எனப்படும். பின் சர்வதேவ வணக்கம் கூறப்படுகிறது. யஜுர் வேத சாகையில் மைத்திராயணி உபநிடதம் கூறப்படுகிறது பின் காதாக உபரிஷத் கூறப்பட்டிருக்கிறது. பின் சவேதாச்வதாரால் ஒரு உபநிஷத் கூறப்படுகிறது. அதற்கு அவர் பெயரே பெயராய் வழங்கும். இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து சுருக்கி எழுதியது. சாமவேதம் : இஃது ஒரு விசேஷமகிமை பெற்றது. இதன் சொல்விலக்க ணப்படி இதற்குப் பாபரிவாரணமாகிய பலத்தைத் தருவது என்பது பொருள். சாமவேதத்தின் பிரதான பாகம் ஆர்ச்சிகம் என்னப்படும். ஆர்ச்சிகத்தின் இரண்டு பிரிவுகளில் இருந்து காணப்பட்டபடி அவைகள் அரை அத்தியாயங்களாகவும், தசதீ என்னும் பிரகாணங்களாகவும் உட்பிரிவு செய்யப்பட்ட ஆறு பிரபாதங்களாக ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பிரபாதீகத்திலும், பத்துத் தசதீக்களும், ஒவ்வொன்றில் சரியாகப் பத்து வாக்கியங்களும் அடங்கியிருக்கின்றன. பிரார்த்தனைகளின் அதே திரட்டு அதே வரிசைக் கிரமப்பிரகாரம் கீதமாகச் சித்தப்படுத்தப்பட்டுக் கிராமசேயகானம் என்கிற பெயரினால் பதினேழு அத்தியாயங்களாகப் பாகிக்கப்பட்டு இருக்கிறது. இதை அர்ச்சிக்கரணம் எனவும் கூறுவர். சாம வேதத்தின் மற்றொருபாகம் ஆரண்யகணம் எனப்படும். இதில் ஒருபாகம் உயிர் அளபெடைகளும் ஈருயிர்ப்புணர்ச்சிகளை இரண்டு அல்லது பல அசைகள் ஆக்குவதும், ஒசையை ஒழுங்கு செய்வதற்கு இலக்கங்களை ஏற்படுத்தும் இலக்க ணங்களும் அடங்கி இருக்கின்றன. ஆர்ஷய பிராம்மணம் என்கிற பெயரினால் சாமவேதத்தின் இரண்டு பாகங்களுக்கும் அட்டவணை இருக்கிறது. தோத்திரங்களைக் கீதமாகப் பாடும் விதமும், அதைக் காதுக்குக் கேளாவிதம் ஓதும்படியும், பின் ஆர்ச்சிக கானம் என்னும் பெயரினால் அதே விதமாய் ஒதும்படியும் கூறும். அனிருகத்கானம் என்றே விகற்பசரண விதி விலக்கு ஓதல்களும் கூறப்பட்டிருக்கின்றன. ஊககானம் என்கிற வேறொருகானமும் கூறப்பட்டு இருக்கிறது. இதில் நான்கு கிரந்தங்கள் விரிவாய் இருக்கின்றன. ஒன்று சாரதிவிநிஷம், மற்றொன்று அத்பூதபிராம்மணம், மூன்றாவது பஞ்சலி நிஷம். தாத்தியம் என்னும் மற்றொன்று சாயனாசாரியரால் வியாக்யானம் செய்யப் பட்டிருக்கிறது. பஞ்சீகம் என்னும் இரண்டாவது காண்டம், அக்கினிஸ் தோமம் என்னும் சமயாசார சடங்கைக்கூறி இருக்கிறது. சாந்தோக்யம் இதில் இருந்து எடுத்தெழுதப்பட்டதாம். இது ஞானபோதனா விஷயம் கூறும். பின் சுவேதகேது, உத்தாலகர் இவர்களின் சம்வாதம் கூறப்படுகி றது. அப்பால் பிராச்சீனசாலன், சத்யஜாயன், இந்திரத்யுமன், ஜனன், ஊதிலன் முதலியோர் கூடிப் பிரமவிசாரணை செய்தமை கூறப்பட்டிருக் கிறது. அப்பால் உத்தாலக அசுவபதி ஞான விசாரண சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது, சாமவேதத்தின் மற்றொரு உபநிடதம் தலவகார சாகைக்குச் சம்பந்தமானதாய் இருக்கிறது. கேன உபநிடதம் என்று சொல்லப்படுவது இதில் சம்பந்தப்பட்டது. பின்னும் பலவகை விஷயங்கள் இந்த வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. இது வேதப்பொருள் விளக்கத்தில் இருந்து எழுதப்பட்டது. அதர்வணவேதம் : அதர்வணத்திற்குச் சேர்ந்த சன்னிதம் அல்லது தோத் திரம், இருபது காண்டங்களாக இருக்கிறது, அஃது அநுவாகங்கள், சூக்தங்கள் ரிக்குகளாக உட்பிரிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரபாதங் களாகப் பிரிக்கப்படும் விதமும் காட்டப்பட்டிருக்கிறது. வாக்கியங்கள் ஆறாயிரத்துப் பதினைந்தாகவும், நூற்றுக்கு மேற்பட்ட அனுவாகங் களாகவும், எழுநூற்றறுபதுக்கு மேற்பட்ட சூக்தங்களாகவும், ஏறக் குறைய நாற்பது பிரபாதங்களாகவும் இருக்கின்றன. அதர்வண வேதத்தின் நடையைக்காட்ட ஒரு வாக்கியம் குறிக்கப்பட்டு இருக்கிறது ‘ஆதிபுருஷனைப்பற்றி ஆயிரம் அஸ்தம் உடையவன்’ என்று கூறப்பட்டிருக்கிறது. பத்தொன்பதாவது காண்டத்தை அடுத்த சூத்தத்தில் கிருத்திகை முதல் இருபத்தேழு நக்ஷத்திரங்கள் அவற்றின் கிரமத்தில் கூறப்பட்டு இருக்கின்றன. அஃது ஆசிலேஷமாசத்தின் கடையில் அல்லது மாகமாசத்தின் ஆரம்பத்தில் அயனத்தைக் குறிக்கின்றது. பத்தொன்பதாவது காண்டத்தின் நாலாவது அநுவாகத்தில் ஒரு மந்திரோச்சாடனம் கூறப்பட்டு இருக்கிறது. அது யதார்த்தமாகப் பயங் கரம் உற்றதாய் இருக்கிறது. முக்கியமாய் (28) (29) (30) இப்பக்ஷமுள்ள சூக்தங்களாக இருக்கின்றன. அது சபித்தல்களுக்கு மாதிரியைக் காட்டப் போது மானதாய் இருக்கிறது. ‘ஓ குசைப்புல்லே, ஒ இரத்தினமே, என்னுடன் பகைக்கும் எல்லோரையும் நாசம் செய்க’ என மந்திரம் ஒன்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வேதம் சத்துரு நாசத்தின் மந்திரக்களைப் பற்றிக் கூறப்பட்டு இருக்கிறது. ஆயினும் அதை அப்படி யூகிக்கவொண்ணாது. ஏனெனில் ஆபத்து நிவர்த்தியின் பொருட்டாம். கோபதப் பிராம்மணம் இவ்வேதத்தின் இரண்டாவது பாகத்துக்குச் சம்பந்தமாகக் காணப்படுகிறது. இஃது ஐந்து பிரதாபங்களைக் கொண்டிருக்கிறது. இதன் முதலாவது அத்தியாயத்தில் பிரபஞ்சத்திற்குக் காரணம் பிரமமென்று கூறப்பட்டு இருக்கிறது. நாலாவது பிரகரணத்தில் அதர்வணர் ஒருபிரஜாபதியாக யோசிக்கப் படுகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் முதற்புருஷன் சம்வற்சரத்தோடு உண்டானவனாக எண்ணப்படுகிறான். ஐந்தாவது பிரகரணத்தில் மத அளவையும் கூறப்படுகிறது. அப்பால் ஐம்பத்திரண்டு உபநிஷத்துக்கள் கூறப் பட்டிருக்கின்றன. அப்பால் ஆறும் பின் எட்டும் வேதாந்தவிஷயத்தை நிரூபிக்கின்றன. (52) உபநிடதங்களில் முதல் பதினைந்து சௌக்கியங் களில் இருந்து சொல்லப்பட்டனவாகக் காணப்படுகின் றன, பின் பிரமன் அதர்வணனுக்கும். அதர்வணன் அங்கீரனுக்கும், அங்கீரன் சத்திய வகனுக்கும் கூறிய பிரம்மஞான உபதேசம் கூறப்பட்டிருக்கிறது. பின் அங்கீரச சௌநக சம்வாதம் கூறப்படுகிறது. பின் ஞான சாஸ்திரப் பெருமை கூறப்படுகிறது. அதன்பின் குகேசன், சத்தியபாமன், கர்க்கன், சௌரயானி, கௌசல்யன், கார்தியாயனன், வாய்தாபி இவர்கள் பிப்பிலாதனை நோக்கித் தேகத்துடன் தேகிக்குள்ள சம்பந்தத்தைப் பற்றியும், ஆத்மாவுடன் அக்தக்கரணங்களின் சம்பந்தத்தைப் பற்றியும், வினாவிய சம்வாதம் கூறப்பட்டிருக்கிறது. அப்பால் ஒன்பது உபநிடதங்கள் முக்கிய மல்லாமையால் எவரும் வியாக்கியானம் செய்திலர். மந்யூகம் நான்குபாகங்களாக இருக்கின்றது. இதில் மகாமுக்கியமான விஷயம் அடங்கி இருக்கிறது. பதினாறு முதல் இருபத்தெட்டு வரையிலும் உள்ள உபநிடதங்கள் வியாக்கியானம் செய்யப்படவில்லை. இருபத்தொன்பது முதல் முப்பத்துகான்கு வரையிலும் உள்ள உபநிடதங்கன் நிருசிங்க தாபதியம் ஆகின்றன. இவற்றில் முதற்கண்ணது பூர்வ தாபநியம் ஆகின்றது. கடைசி உபநிடதம் உத்தமதாபதியம் ஆகின்றது. அடுத்த இரண்டு அத்தியாயங் கள் வாஜசரவசனை அவன் குமாரன் நச்சிகேதன் தன்னை யாருக்குப் பலிகொடுக்கப்போகிறீர் என்று கேட்ட பிரசனைகள் அடங்கி இருக்கின்றன. கேன உபநிஷத் அதர்வணத்தின் முப்பத்தேழாவது உபநிடதமாக இருக்கிறது. முப்பத்தொன்பதாவது முதல் நாற்பதாவது வரையிலுள்ள இரண்டு உபடேதங்கள் நாராயணத்தின் முதலாவது இரண்டாவது பாகங்கிளாக இருக்கின்றன. அடுத்த மூன்று உபநிடதங் களுக்கு வியாக்கியானம் இல்லை. அருந்தவல்லி, பிருகுவல்லி எனும் இரண்டு உபநிடதங்கள் தைத்திரீயம், வாருணி என்ற பெயர்களால் விளங்கப்பட்ட கிருஷ்ணயஜுஸின் அரண்யகத்திலிருந்து எழுதப் பட்டனவாய் நாற்பத்தைந்து நாற்பத்தினாலைத் தொடர்ந்தவைகளாகக் காணப்படுகின்றன. மற்ற ஏழு உபநிடதங்களும் வியாக்கியானம் செய்யப்படவில்லை, 2. (4) இருக்கு, எசுர், சாமம், அதர்வணம். உபவேதம், (4) ஆயுள் வேதம்; அருத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்.

வேதராசி

ஒரு வேதியன் தான் காலம் அடைந்து யமபுரத்தின் வழிச் செல்லுகையில் பாபிகள் துன்புறுதலைக்கண்டு அவர்க்குத் தான் செய்த காவிரிஸ்நான பலத்தில் சிறிது உதவிச் சுவர்க்கம் அடைந்தவன், தேவி சந்திரசாந்தை.

வேதருஷபன்

பானுவென்னும் தக்ஷகுமாரியின் புத்திரன். தந்தை தருமன்.

வேதவதி

1, வேதமோதிக்கொண்டு இருந்த குசத்துவசர் வாக்கில் பிறந்தவள். இவள் மகாலக்ஷ்மியின் அவதாரம். குசத்து வசரைத் தம்பன் என்னும் ஒரு அரக்கன் கொலை செய்ததால் தவமேற்கொண்டு தவஞ் செய்கையில் திக்குவிசயத்தின் பொருட்டு வந்த இராவணன் கண்டு மோகித்துக் குழலைப்பற்றினன். இவள் கோபித்து தொட்டவுடலை வைத்திருப்பதில்லை யெனத் தீமூட்டி இனிவரும் பிறப்பில் உன்னையும் உன குலத்தாரையும் சாம்பராக்குவேன் என்று சபித்துத் நீயிற்குளித் தனள், அவ்வகை இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் குழந்தையுருவாகி யிருக்கையில் இராவணன் எடுத்து அரண்மனை சென்று சோதிடரை நோக்கி இக்குழந்தையைப் பற்றிக் கேட்டனன். சோதிடர், இவள், இங்கு இருக்கின் இலங்கை அழியும் என்றனர். அதனால் குழந்தையைப் பெட்டியிலடக்கிக் கடலில் விட்டனன், அப்பெட்டி கடலில் மிதந்து மிதிலை சென்று புதைந்து யாகஞ்செய்ய நிலத்தையுழுத சநகனிடம் அகப்பட்டது. அக்குழந்தையை யெடுத்து வளர்த்துச் சீதையெனப் பெயரிட்டு இராமருக்கு மணஞ் செய்வித்தான். 2. குசத்துவசன் தேவியாகிய மாலாவதியின் குமாரி, இவள் பிறந்த காலத்து வேதவொலி செய்து கொண்டு சூதிகா கிருகத் திருந்து வெளிப்பட்டன ளாதலால் இவளுக்கு வேதவதி யென்று பெயருண்டா யிற்று. இவள் இலகாமியம்சம். இவள் தவத்திருக்கையில் இராவணனால் பரிசிக்கப் பட்டுத் தேகத்தைவிட்டுச் சீதையாய்ப் பின் அக்னியிற்சென்று அக்னிதேவன் சொற்படி மூன்று லக்ஷ திவ்யவருஷம் தவஞ்செய்து சுவர்க்கலஷ்மியாயினள். இவள் பின்னர் யஞ்ஞகுண்டத்திலுதித்துப் பாண்டவர்க்குத் தேவியாய்த் திரௌபதியாயினள். இவள் முதல்யுகத்தில் வேதவதி, இரண்டாவதுயுகத்தில் சீதை, மூன்றாவது யுகத்தில் திரௌபதி யானமையால் இவளுக்குத் திரிஹாயணி யென்று ஒரு பெயர். (பிரம்மகைவர்த்தம்.)

வேதவன்மன்

சிங்கவருமனைக் காண்க.

வேதவல்லி

இவள் பிரமன் பாதத்தில் உதித்தவள், தக்கன் தேவி. தக்கயாகத்தில் காளியால் தலையறுப்புண்டனன்.

வேதவிரதன்

சாரதையைக் காண்க.

வேதாங்கங்கள்

(6) இவை: சிக்ஷை, வியாகரணம், சந்தம், நிருக்தம், சோதிஷம், கல்பம் என்பன. இவற்றுள் சிக்ஷை என்பது, பாணினியால் இயற்றப்பட்டது இதனுள் வேதசப்தங்களுக்கு அக்ஷசத்தானம், உதாத் தானு தாத்த ஸ்வரித ஞானங்கள் கூறப்படுவது. வியாகாணம் இதற்குப் பாணினி கர்த்தா. காத்யாயனரும், பதஞ்சலியும் வியாக்யானம் செய் திருக்கின்றனர். இதில் வேதசப்தங்களின் பிரகிருதி பிரத்யக்ஞானம் விசதமாகக் கூறியிருக்கிறது. சந்தம் இதற்குப் பிங்கல முனிவர் கர்த்தர்; இதில் வேதத்திற் கூறப்பட்ட காயத்ரி முதலியவற்றின் சந்தங்களின் ஞானம் போதிக்கப்படும். நீருகீதம் இதற்கு யாஸ் கமகருஷி கர்த்தர். இதில் வேதமந்திரங்களின் பயனைத் தெளிவாக்கும்வகை அப்பிரசித்த பதங்களின் அர்த்தங்கள் போதிக்கப்படும். பின்னும் வேத சப்தநிகண்டும் இதில் உண்டு. சாகபூர்ணி நிருக்தமும் உண்டு. இது பதகாண்டம், அர்த்த காண்டம் என இரண்டு வகையாக இருக்கிறது. சோதீஷம் இதற்கு ஆதித் யாதியர் கர்த்தாக்கள். இதில் வைதிக கர்மங்களின் தொடக்கத்திற்குக் கால ஞானத்தையும், அதன் பலத்தையும் கூறப்படும். கல்பம்; இதற்கு ஆச்வலாயனர், காத்யாயனர், ஆபஸ்தம்பர், போதாயனர், வைகா னஸர், தராஷ்யாயனர். பாரத்வாஜர், சத்யாஷாடர், ஹிரண்யகேசி முதலியவர்கள் கர்த்தாக்கள். இது யஞ்ஞகர்மங்களை அநுட்டிக்கும் விதத்தைப் போதிக்கும்.

வேதாத்யயனம் செய்யலாகாதநாட்கள்

அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி, அரசர்க்காபத்துக்காலம், பூகம்பம், இடிமுழக்கம் அசுபகாலம் என்பவையாம். (ஆசாரக்கோவை)

வேதாந்த சூத்திரம்

இது வியாசரால் இயற்றப்பட்ட மீமாம்சை. இது நான்கு அத்தியாயங்களும் நூற்று ஐம்பத்தாறு அதிகரணங்களும் ஐந்நூற்றைம்பத்தைந்து சூத்திரங்களும் பெற்றது. இது புறச்சமய நிரா சாணம், ஞானசாதனம், வீடு பேறு முதலாயின கூறும். இதற்கு நீலகண்டர், சங்கரர், மாத்வர், இராமானுஜா அவரவர் மதச்சார்பாக பாஷயம் செய்திருக்கின்றனர்.

வேதாந்தசுப்பிரமணிய பிள்ளை

இவர் திருப்பூவணத்திலிருந்த கவிவல்லவர், மயூரகிரிப் புராணம் பாடியவர்.

வேதாந்தசூடாமணி

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மொழி பெயர்த்த ஏகாத்மவாத நூல். இது வேதாந்த சூளாமணி என்றும் பெயர் பெறும்.

வேதாந்ததேசிகர்

வேங்கடேச கண்டாம்சரான இவர், கலி (4370)க்கு மேல் சுகலளும் புரட்டாசிய ஞாயிற்றுக்கிழமை திருவோண நக்ஷத்திரம் சுக்ல ஏகாதசியில் நீ காஞ்சயில் அநந்தசூரிகளுக்குத் தோதாரம்மன் திருவயிற்றில் பன்னிரண்டு வருஷம் இருந்து அவதரித்தவர். (இவரைப் புதன்கிழமையில் அவதரித்தவர் என்றும் சிலர் கூறுவர்.) இவர் திருவேங்கட முடையான் எனப் பிள்ளைத் திருநாமம் பெற்று அப்புள்ளா ரிடம் பல நூல்களையும் கற்று வல்லவராய்த் திருமங்கையார் என்கிற கன்னிகையை மணந்து பல திருப்பதிகளைச் சேவித்துத் திருவபிந்திர புரஞ் சென்று பெரிய திருவடிகளைக் காண விருப்புள்ளவராய் ஒளஷதாத்ரி சிகரத்தில் உள்ள ஆல மரத்தடியில் கருட மந்திரத் தியானித் திருந்து பெரிய திருவடியைத் தரிசித்தவர்: அவரால் அயக்கிரீவ மந்திரம் உபதேசிக்கப் பெற்று அயக்கிரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சகம் முதலிய கிரந்தஞ்செய்தனர். இவர் சரளமாகக் கவிசொல்லும் திறமைகண்டார் இவர்க்குக் கவிதார்க்கீக சிங்கமெனப் பெயரிட்டு அழைத்தனர். வித்யாரண்யர் அரசன் பெண்ணைப் பிடித்திருந்த பேயை யோட்டக் கேட்டுக்கொள்ள மறுத்தவர். ஒரு மாயா சந்நியாசி இவரை வெல்ல வேண்டிக் குளத்துத் தண்ணீரைக் குடித்து இவர்க்கு வயிற்றில் உபாதியுண்டாக்கினன். அதனை இவர் வயிற்றின் உபாதியால் அறிந்து அருகிருந்த தம்பத்தைக் கீறினர். அம் மாயாசன்நியாசி உண்ட நீரெல்லாம் அத்தம்பத்தின் வழி ஒழுகியது. மீண்டும் வித்யாரண்யர் வேண்ட இராஜ கன்னிகையைப் பிடித்திருந்த பேயைப் போக்கி வித்யாரண்யர் அரசனிடம் பொருள் பெற்றுத் தருகிறேன் நீர் வந்து காணுமென அனுப்பிய திருமுகத்திற்கு நாம் அரசனைப் பொருளாக எண்ணோமென மறுமொழி யிரண்டுமுறை எழுதிவிட்டவர், இம்மறு மொழியால் வித்யாரண்யர் இவரது வைராக்கிய முடைமைக்கு மகிழ்ந்து இவர் திருவடிகளில் ஈடு பெற்றனர். இவர் பராசபட்டர் சொற்படி மாயாவாதிகளை வென்று பெருமாளால் வேதாந்த தேசிகத் திருநாமமும், பிராட்டியாரால் வர்வதர்திர ஸவதந்திரர் என்ற திருநாமமும் பெற்றவர். இவர் ஸ்வப்பனத்தில் உடையவரது திருவடி தீகை பெற்று அஷோபய மும், வித்யாரண்யா இவர்களுக் குண்டான வாதத்தை “அஸினாதத்வம் ஸினா’ என்பதனால் நியாயமெழுதி வித்யாரண்யரைப் பங்கப் படுத்தினர். இதனால் வித்யாரண்யர் பொறாமை கொண்டு இவர் அருளிச் செய்த சத்தூஷணி சாந்தத்திற்குத் தோஷங்கூறிச் சகாரத்தின் மீது குத்தியனுப்பினர். அதனால் இவர், (சகாரகமர்த்தனம்) என்னும் கிரந்தஞ்செய்து மற்றொரு குத்திட்டு வென்றனர். கிருஷ்ணமிச்ரர் செய்த பிரபோத சந்திரோதயத்திற்கு மாறாய்ச் சங்கற்ப சூர்யோதயஞ்செய்து தீர்த்தங் கொடுப்பதிலும் அவரை வென்றவர். இவர், டிண்டிபனை அம்சசந்தேச முதலிய நூல் செய்து வென்று, பாம்பாட்டி விட்ட நாகத்தைக் கருடபஞ்சசத்தால் கிரகித்து அதை அவன் வேண்டக் கொடுத்தனர் இவர் எண்ணெயிட்டுக் கொள்ளுஞ் சமயத்தில் அப்பாம்பாட்டி குளத்து நீரையுண்டு உபாதியுண்டாக்கினன். அப் பாம்பாட்டியை முன் தம்பத்து இருந்து நீர் வடியச் செய்தது போற் செய்து அவனை வென்றவர். இவர் திருமலை சென்று பெருமாளைச் சேவித்து மீள்தையில் ஒரு நாள் உபவாசம் இருக்க நேரிட இவர் தமது உபாசனாமூர்த்தியாகிய அயக்கிரீவருக்குத் தீர்த்தமாராதித்துத் தாம் ஒரு செட்டி வீட்டுத் திண்ணையில் கண்ணுறங்கினர். அயக்கிரீவர் செட்டி வீட்டில் குதிரையுருவுடன் அவ்விடமிருந்த கடலைமூட்டை முதலிய வற்றைத் தின்றனர். அச்செட்டி தேசிகரை வேண்டி அவர் சொற்படி பால் கொண்டுவந்து கொடுத்துப் பெருமாளுக்கு அமுது செய்வித்தனன். அதனால் குதிரையின் தொந்தரை நீங்கியது. கெர்த்தன் ஒருவன் கிணறு கட்ட இவரை வலிந்தழைத்தனன், இவர் இசைந்து கிணறு கட்டி அவரை வென்றனர். இவ்வகையிருக்கையில் அழகிய மணவாள நயினார் என்பவர் இவர்க்குப் பல தீமை செய்தனர். அவற்றை இவர் பொறுத்த னர். அநந்தசூரிகள் திரு அத்யயனத்திற்குத் தேவபித்ரு, விஷ்ணு ஸ்தானத்திற்கு நியமிக்கப் பட்டவர்களைச் சிலர் தடுக்க அதற்குக் கலங்காமல் தமது உபாசனாமூர்த்திகள் மூவரையும் அந்த இடங்களில் எழுந்தருளச் செய்து அத்யயனம் பூர்த்தி செய்து எதிரிகளைக் கலக்கஞ் செய்தனர். அர்ச்சகர், கொதசியில் தீர்த்தத்துடன் பொங்கல் பிரசாதத் தைக் கொடுக்க நிக்கித்துப் பெருமாள் நியமனத்தால் அவர்களைச் சிக்ஷை செய்வித்தனர். மாற்றார் அமுதுபடியுடன் பொற்காசு கலந்து பிக்ஷையிட அதனை விலக்கியவர் அழகிய மணவாள நயினார் நம் மிருவரில் யாவர் விடிவதற்குமுன் ஆயிரம் கவி செய்கின்றாரோஅவர்களுக்கே கவிதார்க்கீக சிரமமென்னும் பெயர் தகுமென்று அழைக்க உடன்பட்டுப் பெருமாளைத் துதிக்கத் தொடங்கினர். அழகிய மணவாள நயினார் பதகமல சஹஸ்திரம்பாட ஆரம்பித்து முடிக்காது சோர்ந்தனர். இவரோ, பாதுகாசஹஸ்திரம் என்னும் திரந்தம் ஆரம்பித்து முடித்து அவரை வென்றனர். பின் சர் வக்கிய சிங்கப்பநாய்க்கனுக்கு அநுக்கிரதித்து வாதனென்னுங் குமாரனைப்பெற்று, கந்தாடை லக்ஷ்மணாசாரியரின் மாணாக்கர் செய்த உபத்திரவத்தால் அவ்வூர் விட்டுச் சத்யமங்கலத்தில் வசித்தனர். பின் கந்தாடை லக்ஷ்மணாசாரியர் வேண்டிக்கொள்ள அவர்க்கு அருள் புரிந்து ஸ்ரீபாத தீர்த்தம் பிரசாதித்து அவருக்குப் புத்திரோற்பத்தியும் அநுக் கிரகித்துச் சுதரிசன பட்டர் கொடுத்த சுதப்பிரகாக்யையும் அவர் குமாரரையும் பெற்று இராஜ கலகமாகையால் கிரந்தத்திற்குக் குறைவு வராதபடி அதை மணலிற் புதைத்து வைத்துப் பொழுதேற வெடுத்து முதலிகளுடனும் குமாரருடனும் சத்திய மங்கலம் அடைந்து கலக மடங்கியபின் திருவரங்கமடைந்து பெரிய பெருமாளைச் சேவித்துத் திருச்சித்திர கூடத்தில் பெருமாளைக் கோபலராயனால் பிரதிட்டை செய் வித்துச் சிலரால் ஏவப்பட்ட பிரமசாரி யொருவன் வந்து கலியாணத் திற்குப் பொருள் வேண்டுமென அவனைப் பிராட்டி சந்நிதியில் அழைத்துச் சென்று பொருள் கொடுப்பித்து, திரு அத்யயனோற்சவத் தைத் தடைசெய்த குமதிகளை நிராகரித்து அவர்கள் மந்திரத்தால் வாய்கட்ட அதைத் தாமே போக்கிக் கொண்டு அவர்களை வென்று பிரமதந்திர சுதந்தாஜீயரால் புற மதத்தாரை வெல்வித்துத் தம்மைப் போல் விக்கிரகஞ் செய்யத் தூண்டிய சிற்பியொருவன் பொருட்டு அவ்வாறு விக்கிரகஞ் செய்து காட்டி வென்று சில நாளிருந்து நயினாராசாரியர் மடியில் திருமுடியும் பிரமரந்திர சதந்திரஜீயர் மடியில் திருவடியுமாகத் திருநாட்டிற் கெழுந்தருளினர். இவர் (100) வருஷம் இருந்தனர். இவர் செய்த கிரந்தங்கள் வடமொழியில் ஹயக்ரீவஸ் தோத்ரம் முதலிய 65, தமிழில் அமிர்தாஞ்சனி முதலிய 24. (குரு பரம்)

வேதாந்தி

பட்டரிடத்து வாதிட்டுத் தோற்று நம் ஜீயரெனப் பிறகு பட்டம் அடைந்த வேதியர்.

வேதாந்தியாழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவ ராகிய வைஷ்ண வாசாரியர். (குரு பரம்பரை).

வேதாலபட்டர்

விக்ரமார்க்கன் சபையிலிருந்த வடமொழிப் புலவன்

வேதாளிகர்

வைதாளியாடுவோர்.

வேதிகை

1. தரும புத்திரன் மனைவியரில் ஒருத்தி. மாளவதேசத்து அரசன் புத்திரி. குமாரன் சாதேயன், 2, இது யாகாதி காரியங்களில் கும்ப ஸ்தாபனம் செய்யும் இடம். எல்லா வேதிகைகளும் உயரத்தில் ஏழங்குலமாய் இருக்கவேண்டும். எட்டு முதல் பன்னிரண்டு அங்குலம் வரை இருக்கலாம் என்றும் ஓர் பக்ஷமும் உண்டு. இவ்வேதிகைகளில் தீக்ஷைக்கு நாற்கோண வேதிகை. தடாகாதி பிரதிஷ்டைகளில் தாமரைபோல் செய்யப்பட்ட பத்மினி வேதிகை. இராஜயாபிஷேகத்தில் நான்கு பக்கங்களிலும் பத்ராகாரமான ஸர்வதோ பத்ரம் என்னும் வேதிசை. விவாகத்தில் இருபது கோணமுள்ளச்ரீதரா என்னும் வேதிகை. (சி. சா).

வேதைச்சக்கரம்

கீழ்மேல் ஐந்தும், தெற்கு வடக்கில் ஐந்துமாக ரேகைகளைக் கீறி, கோணங்களினுமுள்ள இரண்டிரண்டு ரேகைகள் கீற இருபத்தெட்டுக் கயிறும், இதில் வடகிழக்கிலே கோணமான கயிற் றிற்குத் தெற்கில் செவ்விதான ரேகையின் கீழ்த் தலையிலே, உரோக ணியை வைத்துப் பிரதக்ஷிணமாக எண்ணுவது. எண்ணுமிடத்து, உத்திராடம், அபிசித்தி, திருவோணம் என்று எண்ணுவது சக்கரமாம். இந்தச் சக்கரத்து நிறுத்தின நாளில் இரேகையின் தலையிலே, எதேனும் தலையில் ஒரு கோள் நின்றதாகில் அந்தாள் சுபகாரியங்களுக்காகாது. சுபக்கோன் நின்றதாதில் செய்தகாரியம் நசியும். பாபக்கோள் நின்ற தாகில் செய்தகாரியமும், கர்த்தாவும் நசிவர். இது விவாகத்திற்குப் பார்ப்பது. (விதானமாலை)

வேத்தருமர்

பலிலவமுனிவர் குமரார். இவர் மாணாக்கர் தீபகர். இவர் தம் மாணாக்கரை நோக்கித் தமக்கு இருபத்தொரு வருஷம் ஏவல் செய்யக் கேட்டனர். மாணாக்கராகிய தீபகர் தாம் இறக்கும் வரை அவ்வகை செய்ய உடன்பட்டனர். ஆசிரியர் குட்ட நோயடைந்து தமது மாணாக்கரை நோக்கித் தம்மைக் காசிக்குக் கொண்டுபோகக் கட்டளை யிட்டனர். மாணாக்கர் ஆசிரியரைக் காசிக்குத் தூக்கிச்சென்று வசித்திருக்கையில், ஆசிரியர் பல கொடுமைகள் செய்யச் சலிக்காது இருந்தனர். சிவமூர்த்தி குருபணிவிடைக்குக் களித்துத் தீபகர் முன் தரிசனந் தந்து வேண்டியன கேளெனப், பணிவிடை யுறுதியாகப் பெற்றுக் காசி வாசத்தால் ஆசிரியர் சுகமடையக் களித்தனர். தீபகர் செய்கைகண்ட ஆசிரியர், மாணாக்கரை யணைத்து உண்மை உபதேசித் தனர், (காசிரகசியம்)

வேத்தியின்மலிபு

தோளால் வலியமற மன்னனை வாளால் வலிய வீரர்மேம்பாட்டினைச் சொல்லியது (பு வெ.)

வேத்திரக்யம்

எகசக்ர வனத்தில் உள்ள ஒரு நகரம். இதில் சிலநாள் பாண்டவர் இருந்தனர்.

வேத்திரன்

சகாதேவனுக்கு விசையையிடம் பிறந்தவன்.

வேத்திரவதி

ஒருநதி. விதிசாதிக்குச் சமீபத்திலுள்ள பாரியாத்திரகிரியில் உற்பத்தியாதி யமுனையோடு கலப்பது, Vetravati is a river called Batma in the kingdom of Bhopal in Malwa.

வேத்ராசுரன்

சிந்தித் வீபன் தவஞ்செய்கையில் வருணன் தேவியாகிய வேத்ரவதி அவ்விடம் வர, சிந்துத் வீபன் அவளைப் புணர இவன் பிறந்தனன். இவன் தபோ பலத்தால் தேவர்களை வருத்த இவனது பட்டணமாகிப் பிராச்சோதிடபுரம் சென்று துர்க்கை கொன்றனள், (வராக~புவி.)

வேநன்

அங்கனுக்குச் சுநிதையிடம் உதித்த குமாரன். இவனது தீய ஒழுக்கத்தால் தந்தை தூரதேச மடைந்தனன். இவன் இருடிகள் சாபத்தால் இறந்தனன். இவனிறந்த பிறகு அரசன் இல்லாது இராச்சி யம் அலைந்ததால் இருடிகள் இவனது தொடைகளை யோமத்திட்டுக் கடைந்தனர். அதில் நிஷாதன் பிறந்தனன். இந்த நிஷாதனை நாட்டை விட்டுக் காட்டில் ஓட்டினர். இவன் குமாரர் நிஷாதர் என்னும் வேடாயினர். பின் இவன் கரத்தை ஓமத்திட்டுக் கடைய அதில் விஷ்ணுவின் அவதாரமாய்ப் பிருது சக்கிரவர்த்தி பிறந்தனன். பிருதுவைக் குமானாகப் பெற்றதால் பிராமண சாபத்தினின்று நீக்கினவன். இவன் சாபத்தால் நஷ்டமடைந்த அரசன், “இவன் காலத்து ஒருவன் பத்தினியை யொருவன் புணரலாமென்று விதி யுண்டாயிற்று. ” (மநு.) (பிரம புரா).

வேநம்பி

கண்ணுவரால் மனிதராகச் சபிக்கப்பட்ட உபேந்திரர். இவர் வேடராய்ப் பிறந்து வள்ளி நாய்ச்சியாரை வளர்த்தனர்.

வேன்ளியம்பலத் தம்பிரான்

வெள்ளி பார்க்க. துறைமங்கலம் சிவப்பிரகாசர் இவரது சீடர்.

வேப்பமாலை

முடிசூட்டுத் திருவிழாவில் தடாதகைப் பிராட்டியார்க்குப் பாண்டிய பரம்பரைக்குரிய இம்மாலையை அளித்தல் மரபு. சித்திரைத் திருவிழாவில் (8) ஆம் திருநாள் இக்காட்சிக்குரிய தினம் (திரு விளை)

வேப்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

இவர் அடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர், இவரியற பெயர் கண்ணன் கூத்தன. இவரூர் வேப்பற்றூர். (குறு 362)

வேப்பிலை

மகா மாரிக்குரிய பத்ரம் இதனை பூதப்பிரேத பிசாசங்கள் விலகும் பொருட்டு மந்திரப் பிரயோகங்கள் செய்யுமிடத்தும், மகா மாரியின் கலசாதிகள் ஸதாபிக்குமிடத்தும், மஹாமாரியை யெணணிச் சத்ருநாசத்தின் பொருட்டுச் செய்யும் ஓமத்து விறகாகவும் ஆகமங் களிலும், ஆக்னேய புராணம் மகாமாரி வித்தையிலும், கூறப்பட்டிருக் கிறது. ரமாபில்வா சிவாநிம் பாதுவவிஸ்யாத் சரஸ்வதி என்பதால் இது விசேஷம். முத்துமாரியைக் காண்க

வேமனார்

ஒரு தெலுங்குச் கவி. இவர் விஜய நகரத்தருகிருந்தவர். இவர் தமது செல்வத்தைக் கூத்திக் களித்துத் தம்முடன் பிறந்தானுக்கு ஆற்றில் விதைத்த தும்மட்டிக் காய்களின் உள்ளீடுகளைப் பொன்னாக்கித் தந்து துறவுபூண்டு நல்லொழுக்கம் பெற்றவர்.

வேம்பத்தூர் சங்கத்தவர்

இவ்வூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு வட கிழக்கில் வைகை நதிக்கு வடக்கேயுள்ளது. இதற்கு நிம்பை யெனவும், குலசேகரச் சதுர்வேதிமங்கல மெனவும் பெயர். குலசேகர பாண்டியன் என்போன் சாகேத புரியினின்றும் வருவித்த (2008) வேதியர்க்கு இவ்வூர் முதலிய பல அசரங்களைத் தானஞ்செய்து அவ்வூரிலிருந்த புலவர்களை நிலைக்கச் செய்தமையின் அவ்வகரத்தி லிருந்த புலவர்கள் அனைவரும் ஒருசேரச் சங்கப் புலவர்கள் ஆயினர். இவ்வகுப்புப் புலவர்களைச் சேர்ந்து நூலியற்றினோராவார். பாடுதுறை யியற்றிய தத்துவராயர், ஈசான முனிவர், வீரைக்கவிராச பண்டிதர், ஆளந்தான் மாதவபட்டர், ஸ்ரீபட்டர், அம்பிகாபதி, திருநெல்வேலிப் பெருமாளையர், செவ்வைச் சூடுவார், சவிகுஞ்சாமையர், முத்துவேங்கட சுப்பையர் முதலியோர். இவர்கள் பல சமயத்தினராக விருக்கலாம்.

வேம்பற்றூர்குமானார்

ஒரு புராதன தமிழ்க் கவி. கடைச்சங்க மருவியவர். (புற~நா.)

வேம்பு

பகைவர் பூசலிடத்து வெல்லும் போரையுடைய பாண்டியன் வண்டு நிறைந்த மகுடத்தின் மீதே புனையும் மலரினைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. பொதுவியற்.)

வேய்

பகைவர் தம்முனையிடத்து ஒலிக்கு மணியினையுடைய நிரையிடத்து ஒன்றினைத் தெரிந்த கூறபாட்டினைச் சொல்லிய துறை. (பு. வெ)

வேர்க்கடலை

நிலக்கடலை, கடலைக்காய், மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை இவை வேர்க்கடலைக்கு வழங்கும் பெயர்கள். குறுமணல் தரையிலும் செம்மண் தரையிலும் பயிராவது. நிலத்தை இரு முறையுழுது அந்தப் படைச்சாலிலாவது நன்றாய்க் காய்ந்த கொட்டையை ஓரடிக்கு ஒன்றாக ஈரத்தரையில் நடுவார்கள். நட்ட பின் காலத்தில் நீர்ப்பாய்ச்ச கொடியோடும், ஒடுங்கொடிகளில் கணுக்களில் மண்ணிட்டால் அங்கும் வேரோடி காய்கள் விடும். இதன் இலைகள் சிறியவை. நீலங்கலந்த பசுமை காய்களின் நிறம் மண்ணினினத்திற்குத் தக்கபடியிருக்கும். பயிர் விளைவு முற்றின் இலையும் கொடியும் பழுத்து விடும். அப்போது பூமியைச் செதுக்கி விட்டு உழுதால் கொட்டைகள் கிளம்பி விடும். அவற்றைப் பொறுக்கிக் கடலையை யுடைத்தும் பிரிப்பர், இக்கடலையில் எண்ணெயெடுப்பர் இவ்வெண்ணெயில் பணி யாரம் செய்வர்; விளக்கு எரிப்பர். சோப் செய்வர். கழனிகளுக்கு எருவாக்குவர். ஆடுமாடுகளுக்கு உணவாக்குவர். கடலையை வறுத்துத் தின்பர்.

வேறாநிலை

ஓரிடப்டெயர். இந்திரனை விட்டுப் பழிநீங்கி வேறாய் நின்ற இடம் (திருவிளை~இந்திரன்.)

வேறுமண்டலம்

ரௌஞ்ச தீபத்திலுள்ள வருஷம்.

வேற்றுப்படைவரவு

போர்மிகும் வேலான் சூழ்தல் விட்டுப்போக இட்ட மாலை மார்பினையுடைய வேற்றுவேந்தன் வரவினைக் கூறும் புறத்துறை, (பு. வெ.)

வேற்றுப்பொருள் வைப்பணி

இது பொதுப்பொருளாற் சிறப்புப் பொருளையும், சிறப்புப்பொருளாற் பொதுப்பொருளையுஞ் சாதித்தலாம். அது முழுவதுஞ் சேறல், ஒருவழிச்சேறல், முரணித்தோன்றல், சிலேடையின் முடித்தல், கூடாவியற்கை, கூடுமியற்கை, இருமை யியற்கை, விபரீதம் என எட்டு வகை இதனை அர்த்தாந்திர நியாயாலங்காரம் என்பர் வட நூலார். (தண்டி)

வேற்றுமை

பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. அது எட்டு வகைப்படும். அவற்றில் தமக்கென உருபுள்ளவை ஆறு வேற்றுமைகள். முதல் வேற்றுமை எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபுகள் இல்லை. முதல் வேற்றுமை, பெயரின் இயல்பே. இரண்டாம் வேற்றுமையினுருபு, ஐ; பொருள் ஆக்கல், அழித்தல், அடைதல், ரீத்தல், ஒத்தல், உடைமை முதலியனவாம், மூன்றாம் வேற்றுமையினுருபு, ஆல், ஆன், ஒடு, ஒரு முதலியன; பொருள்கள், கருவி கருத்தா உடனிகழ்ச்சி. நான்காம் வேற்றுமையினுருபு. குவ்வாகும்; பொருள், கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அது வாதல், பொருட்டு, முறை, ஐந்தாம் வேற்றுமையினுருபு இல், இன் முதலியனவாம். பொருள், நீங்கள், ஒப்பு, எல்லை, ஏது முதலியனவாம். ஆறாம்வேற்றுமையினுருபு, அது, ஆது, ஆ முதலிய; பொருள் பண்பு, உறுப்பு, ஒன்றன் கூட்டம், பலவிநீட்டம் ஆகிய தற்கிழமைப் பொருளும், பொருளிடம் காலம் எனும் பிறிதின் கிழமைப் பொருளுமாம். ஏழாம் வேற்றுமையினுருபு இல், கண் முதலியன; பொருள் பொருள் முதலிய ஆறும் தற்கிழமை பிறிதின் கிழமையாகிய இரண்டிற்குமிடனாதலாம். எட்டாம் வேற்றுமை பெயரின் விகாரமாம். (நன்.)

வேற்றுமைப்புணர்ச்சி

சொற்கள் புணருகையில் வேற்றுமையுருபுகள் விரிந்தும் தொக்கும் புணர்வன. (நன்)

வேற்றுமையணி

1 அஃதாவது உபமானோபமேயங்களில் யாதேனு மொன்றை விசேடமுடைத்தாகச் சொல்லுதலாம். இதனை வடநூலார் வியதிரேகாலங்கார மென்பர். 2. சொல்லாலும் குறிப்பாலும், ஒப்புடை யிருபொருளை ஒருபொருளாவைத்து அவற்றைத் தம்முள் வேற்றுமைப் படக் கூறுவதாம். இது ஒருபொருள் வேற்றுமைச்சமம், இருபொருள் வேற்றுமைச் சமம், குணவேற்றுமை, பொருள், சாதி, தொழில், விலக்கு, சிலேடை முதலியவாக வேறுபடும். இதனை (வியதிரே காலங்கார் மென்பர் வடநூலார். (தண்டி)

வேலப்பதேசிகர்

திருவாவடுதுறை யாதீனத்துப் பண்டார சந்நிதிகளில் ஒருவர். சிறந்த தமிழ்ப் புலவர். இவர் பறியலூர்ப் புராணம் பாடினர்.

வேலாயுதம்

இது பார்வதிப்பிராட்டியாரால் குமாரக் கடவுளுக்குக் கொடுக்கப்பட்டது. பானுகோபனால் முதனாளினும், மூன்றா நாளினும் வீரவாகு தேவர் முதலியவர்க்கு நேர்ந்த துன்பத்தைக் குமாரக் கடவுளின் கட்டளைப்படி நீக்கியது. கிரவுஞ்ச கிரீயைப் பிளந்தது. அடியவர்க்கு வேண்டிய காலத்து முன்னின்று துன்பம் போக்குவதுமாகிய குமாராஸ்திரம்,

வேலி

இவள் ஒரு பெண்பிள்ளை. குலோத்துங்க சோழன் காலத்தவள். இவள் வீட்டின் சுவரை ஒரு வேதாளம் நாடோறும் இடிக்கக் கட்டிக் கொண்டு வருவாள். இவ்வகையிருக்கையில் கம்பர் அவ்வழி வந்து தாம் கூலிபெறும் வரையில் வேதாளத்தைச் சுவரை இடிக்காதிருக்க வேண்டிச் சுவரைக் கட்டி அவள் தந்த குறுணி நெல் பெற்றனர் என ஒரு கதை வழங்கும்,

வேலூர்

ஒய்மாநாட்டு தல்லியக்கோடனைக் காண்க. இது உப்பு வேலூர் என வழங்கும். திண்டிவனத்துக்கு வடக்கிலுள்ளது.

வேலூர்கிழான்

தொண்டை நாட்டுக் கும்மும்பட்டுக் கிராமத்து இருந்து ஷாமகாலத்துப் பல வித்துவான்களை ஆதரித்த வேளாளன்.

வேலை

மேருவிற்குத் தாணியிடத்து உதித்த குமரி. சமுத்திரராசன் தேவி. இவள் குமரி சரவணி.

வேலையசுவாமிகள்

குமாரசுவாமி தேசிகரின் குமரர். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குச் சகோதரர். இவர் தருமபுரம் வெள்ளியம் பலத் தம்பிரானிடத்து இலக்கண முதலிய நூல்கள் கற்றுச் சகோதரரை நீங்காதவராய் இருந்து தம் இரண்டு சகோதரர்களுக்கும் பின் ஐக்கிய மாயினர் இவர் செய்த நூல்கள் கைத்தல மாலை, வீரசிங்காதன புராணம், குகை நமச்சிவாய லீலை, பரிசா தலீலை, மயிலத்திரட்டை மணி மாலை, மயிலத்துவா.

வேல்வெட்டி நம்பியார்

பாஞ்சாரத்ரசாஸ்திர நிஷ்ணாதராகிய ஸ்ரீவைஷ்ணவர். (திருவாய்மொழி)

வேளாஞ்செட்டிகள்

இவர்கள் வேளாளரில் ஒரு வகுப்பு, இவர்கள் தாங்கள் வேளாளரில் உயர்ந்தவரென்று தங்களைக் கூறுவர். தாங்கள் துலையில் அரசனைத் துலாப்பரதானத்தில் நிறுப்பவர் என்பர். பட்டணத்தார் எனும் சிவனடியவரை இக்குலத்தவர் என்பர்.

வேளாண்மாந்தரியல்பு

(10) ஆணை வழி நிற்றல், அறிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துடைமை, சுற்றந் தழுவல், ஓவாமுயற்சி, மன்னிரை தருதல், ஒற்றுமை கோடல், விருந்து புரந்தருதல், திருந்திய வொழுக்கம்,

வேளாண்வாகை

முற்பட்ட அந்தணர், அரசர், வணிகசென்று மூவரும் கெஞ்சு விரும்ப மெய்மையால் அவரவர் ஏவல் வழியே சென்றதைக் கூறுந் துறை (பு. வெ.)

வேளாளரின் பத்துவகைத்தொழில்

ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காமுயற்சி, அரசரிறைதருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கத்திருத்தல், விருந்து புறந்தருதல்,

வேளாளர்

1. சிவமூர்த்தியின் சடாடவியில் எழுந்தருளியிருக்கும் கங்காதேவிக்குச் சிவானுக்கிரகத்தால் வேளாளர் பிரந்தனர். அப்பிள்ளை களுக்கு விஷ்ணுவின் பாத கங்கையிற் பிறந்த பெண்களைத் தேவர்கள் விவாகஞ் செய்வித்தனர். இவர்கள் வேளாளர் எனப் பெயரடைந்து நாற்பத்தெண்ணாயிரம் இருடிகளை வணங்க அந்த இருடிகள் அவரவர்கள் பெயரைத் தாங்கள் கோத்திர முதலாக அனுட்டிச்சுக் கட்டளையிட்டனர். பின் போதாயனரை வணங்க அவர் தாம் இயற்றிய சூத்திரத்தை அநுட்டிக்கக் கட்டளையிட்டனர். இவர்கள் அதனால் கோத்திர சூத்திரம் உடையவர்களாய்ச் சிவமூர்த்தி அநுக்கிரகித்த எரு தையும் இயமன் சடாவையும், இந்திரன் காமதேனுவின் குலத்தையும் கொடுக்கப் பெற்றுப் பூமி திருத்தி வேளாண்மை செய்து சகல சீவர்களையுங் காத்துவந்தனர். இவர்கள் சிவமுகோத்பவராகிய மகருஷி களின் சந்ததியாராகிய சிவாசாரியர்களை ஆசாரியர்களாகக் கொண்டு சிவ தீகை பெற்றுவந்தனர். இவர்கள் மன்னர்க்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது. ஊரன், கிழவன், சேக்கிழார், புரிசைத் கிழார், குளப்பாக்கிழார் என்பதா லறிக. இவர்க்குப் பின்னும் இளங்கோக்கள், மன்னர் பின்னர், இப்பர், எட்டியர், காராளர், வேளாளர், பூவைசியர் எனப் பல பெயர் வழங்குவதால் அறிக இவர்களுக் குரிய தசாங்கம்; பெயர் வேளாளர், மகம் மேருமலை, கங்கையாறு, (79) நாடு, (999) நகர், ஐராவதம், உச்சைச்சிரவம் வாகனம், செங்குவளை மாலை, மேழி, குயில், சிங்க முதலிய கொடி, கலப்பை ஆயுதம், முரசக்கொடை, இவ்வேளாளர், உழுவித்துண் போரும், உழுதுண்டோரும் என இரு வகையார். அவர்களுள் உழுவித்துண்போர், மண்டிலமாக்களும் தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும், அழுந்தூரும், நாவரும், ஆலஞ்சேரியும், பெருஞ் சிக்கலும், வல்லமும், கிழாரு முதலிய பதியிற்றோன்றி வேளெனவும், அரசெனவும், உரிமை எய்தினோரும், பாண்டி நாட்டுக் காவதிப்பட்ட மெய்தினோரும், குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோரு மாய் முடியடை வேந்தர்க்கு மகட்கொடைக் குரிய வேளாளராம். வேளாளர்க்கு உரிய கருவி நாஞ்சில் சகட முதலியன இவர்க்குச் சிறந்த தொழில் உழுதல், உழுவித்திண் போர்க்கு வேந்தர் சரும முடித்தல், உழு துண்போர்க்கு வாணிகமும் உரித்தாம். இவ்வேளாளர் ஓர் காலத்து மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டுப் பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் எனவும், நாககன்னி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி யென்னும் வெற்றிலைக் கொடியினை அவன் தரக் கொண்டு பூமியில் விருத்தி செய்ததால் கொடிக்கால் வேளாளர் எனவும், துளுவ நாட்டிருந்து தொண்டை நாட்டில் சோழ னால் கொண்டு வரப்பட்டோ ராதவின் துருவர் எனவும் கூறப்படுவர். 2. இவர்கள் தமிழ்நாட்டில் உழுது பயிரிடும் ஒருவகுப்பார். இவர்கள் ஒவ்வொரு தமிழ் நாட்டிலும் நன்கு மதிக்கப்பட்டவர்கள். வேளாளன் எனுஞ் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளது என்பர் சிலர், அதாவது உழுது பயிரிடுவோர். முற்காலத்தில் உழவுதொழிலறியாது உலகம் பூதேவியை நோக்கி வருந்துகையில் பூமகள் இரக்கமுற்றுத் தான் உழுபடையாகிய கலப்பையுடன் ஒரு குமாரனைத் தந்தனள். அவன் முதல் உழவன். இந்த உழவன் பிறக்கையில் ஒரு ஆபத்து. அதாவது, சிவபெருமானும் பார்வதியாரும் கைலையில் சந்தவனத்திருக்கையில் விச்வ கர்மனாகிய தெய்வத்தச்சன் அவ்விடஞ் சென்றனன். இதனால் சினங்கொண்ட சிவ பெருமான் விச்வகருமனை நோக்கி ‘நீ உத்தரவின்றி வந்தமையால் உனக்கு பூலோகத்தில் கங்காதிரத்தில் ஒரு சத்ரு உண்டா குக’ என்றனர். இதைக்கேட்ட விச்வகருமன் எதிர்நோக்கியிருக்கையில் ஒருகாள் பூமியில் ஒரு பில்ளைநோக்க அதிலிருந்து கிரீடத்துடன் மாலையணிந்து கலப்பை தாங்கி ஒரு புருஷன் வெளிவரக்கண்டு தன் கையிலிருந்த வாளால் வீசினன்; அது மகுடத்தில் பட்டு மகுடம் நீக்கியது. உழவன் வெளிவந்தனன். விச்வகர்மன் உழவனைப் பிடித்துக்கொண்டனன். உடனே திரிமூர்த்திகளும் திக்குப் பாலகமும் தோன்றி உழவனை விடுவித்துச் சமாதானப் படுத்தினர், அச்சமாதான மாவது, பஞ்சாளத்தாராகிய தட்டார், தச்சர், கருமார். கல் தச்சர், கன்னார் ஆகிய விச்வகர்மபுத்திரர் புத்திரனுக்கு அடிமையாக இருக்கவேண்டியது என்பதாம். உழவனுக்குப் பூமியில் பிறந்ததால் பூபாலன் என்றும், கங்கைக் கரையில் பிறந்தமையால் காங்கேயன் என் றும், கலப்பையுடன் பிறந்ததால் உழுபடையோன் என்றும் பெயரிட்டனர். இவன் கிரீடமிழந்தமையால் இவனரசனாகான், இவன் சந்ததியார் உழவு செய்யல் வேண்டும். இந்தச் சாதியில் ஒருவன் அர சனுக்கு முடிசூடல் வேண்டும். இவனுக்கு யஞ்ஞோபவீதம் உண்டு. இவனுக்கு இந்திரனும், குபேரனும் தங்கள் குமாரியை மணஞ் செய் வித்தனர். சிவபிரான் ஒரு வெள்ளெருதும், யமன் ஒரு வெள்ளை யெரு மையும் கொடுத்து உழச்செய்தனர். தேவர்கள் மறைந்தனர். வேளாள னுக்கு இந்திர புத்திரியிடம் ஐம்பத்து நான்கு புத்திரரும், குபேர புத்திரியிடம் ஐம்பத்திரண்டு புத்திரரும் பிறந்தனர். குபேரபுத்திரனாகிய நளகூபரண் (160) பெண்களை அக்குமாரருக்கு மணஞ் செய்வித்தனன். இக்குமாரர்களில் முப்பத்தைவர் பூபாலர், மற்ற முப்பத்தைவர் வேளாஞ் செட்டிகளாய் வர்த்தசஞ்செய்வர். பின் முப்பத்தைவர் பசுபாலிக்கவென் றனர் இவ்வாறு இவர்கள் சந்ததியர் விருத்தியாயினர். வேளாளர் எந்தவகையிலும் தாழ்ந்த தொழில்கள் செய்பவரல்லர் துலாபார தானத்தில் அரசர்களை நிறுக்கும் தொழில் இவர்களுடையது. கம்பரும் இராமன் சிரசில் வேளாளர் முடிசூட்டு வித்ததாகக் கூறியுள்ளார். தமிழ் நூல்களில் அறிவாளராகிய முனிவர்க்கு இரண்டாவதாக உழவரைக் கூறியிருந்தது. இவர்களிற் பெரும்பான்மை யோர் நாடுடையார். இவர் களுக்கு மேகத்தையாள்வோர் எனும் பொருளில் காரளர் எனப் பெயர் வந்தது. தமிழகத்தரசருக்கு மசட்டருமுரிமையுடையார். ஆகையால் தமிழ்நாட்டு மூவேந்தரும் வேளாளர். இவர்களில் எழைகளா யுள்ளோர் வீழ்குடி உழவர் எனப்படுவர். இந்த வேளாளர் இப்போதும் பெரிய ஜமீன்தாரர்கள். வடநாடு சென்று குடியேறின வேளாளர் வெலமர் எனப்படுவர். கெலால் வம்சத்தாபகர், இவர்களையே பிளினி, போட்லோ மியால் என்பர். (11) வது நூற்றாண்டில் கூறப்பட்ட கங்கைக்கணவாயில் வசித்த கங்கைவீடரும் வேளாளரே. ஒரிஸ்ஸாவைப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட கங்கவம்சத்தவரும் வேளாளரே. வேளாளர் பிராமணர்களிடம் தவிர மற்றைச் சாதிகளுடன் கலந்து புசிப்பார். வேளாளர் நற்றமிழ் பேசுவோர். இவர்களில் பெரும் பாலார் தமிழ்நூல் வல்லவர்கள் இவர்கள் தேச வேறுபாட்டால் திளுவர் என்னும், கொண்டை கட்டிகள் என்றும், கொடிச்காலர்கான கீழ்நாட்டார், பாண்டி வேளாளர், காரைக் காட்டார், நாங்குடியார், அரும் பூரார், சிறு குடியார், கோட்டைவேளாளர், நீறு பூசிகள், செந்தலை, படைத்தலை, வெள்ளிக்கை, பவளக்கட்டி, தொல்ளைக்காது, ஆற்றங்கரை என்று பலவகைப்படுவர். ஒருகாலத்தில் செட்டிகளுக்கும் வேளாளருக்கும் வைசியர் யார் என்று கலகம் உண்டாக இவர்கள் இருவரும் அரசனையணுகினர். அரசன் இதனை வழக்குத் தீர்க்க முடியாமல் இருவருக்கும் ஐயாயிரம் வராகன்கள் கொடுத்து ஐந்து வருஷம் பொறுத்துக் கொண்டுவருக என்றனன். இதில் வேளாளர் தாம் கொண்டு போன ஐந்தில் ஒருபங்கு பணத்தை உழவுத் தொழிலில் செலவு செய்தனர். செட்டிகள் தாம் கொண்டு போன பணத்தை வர்த்தகஞ் செய்தனர். அரசன் இருவரையும் ஐந்து வருடம் கழித்து வருவித்தனன். வேளாளர் கரும்புமுறிக்க அது முதிர்ந்து முத்துக்களைத் தந்தன. செட்டிகள் வர்த்தகத்தில் சிறுலாபமே பெற்றனர். இதைக் கண்ட அரசன் களிப்படைந்து வேளாளரே வைசியரென்று தீர்மானித்தனன். (பு. வெ.)

வேளாவிக் கோ மாளிகை

வஞ்சிநகரத்துச் செங்குட்டுவன் காலத்திருந்த வசந்த மாளிகை இதனை வேண்மாடம் என்பர். இது அந்நிய அரசர் தங்குதற்கும் பயன் பட்டது போலும்.

வேளாவிக்கோ

தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறையின் தாயாகிய பதுமன் றேவிக்குத் தந்தை

வேளாவிக்கோமான் பதுமன்

இவன் பொதினிமலைக்குரிய ஆவியர் குலத்தவன் இவன் பெயரால் வஞ்சியின் புறத்தில் ஒரு மாளிகை கட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. பொதினி பழனிக்குப் பழைய பெயர்.

வேளிர்

1. தமிழ்நாட்டுப் பழைய குடிகள். இவர்கள் தம்தொழில் வேற்றுமையால் பல பெயருற்றனர் எனவும் கூறும். இவர்களே வேளாளர். இவர்கள் உழுவித்துண்போர் உழுதுண்போர் என இருவகையர். தமிழ்நாட்டில் இவர்கள், வேள் ஆவி, வேல் ஆய், வேள் எவ்வி, வேள் பாரி, வேள்பேகன் எனும் பெயர்களால் அழைக்கப் பட்டனர் 2. இவர்களில் வள்ளல்களெனப் பெயரடைந்த கொடையாளர் கடையெழுவள்ளல்களில் பெரும்பாலர் வேளாளர். தென் நாட்டில் தமிழை வளர்த்தவர்கள், இவற்றைப்புறானூறு, மதுரைக்காஞ்சி முதலிய வற்றாலறியலாம், தமிழ்நாடாண்ட மூவேந்தர்களுக்கும் படைத் துணையாயிருந்த சிற்றரச ரென்னலாம். இவர்கள் அகத்தியர் தமிழ்நாடடையாத முன்பே தமிழ் நாட்டிலிருந்தவர்கள், இவர்கள் அகத்தியருடன் தமிழ்நா டடைந்தோர் என்பது சிலர் கொள்கை. இவர்களுக்குக் கிழார் என்பது உரிமையுடையார் எனும் பொருட்டு. இவ் வேளிரெனும் பட்டம் இன்னும் தென்னாட்டில் தேர்க்காட்டூர் வேளாளர்க்கு வழங்கிவருகிறது. மற்றவை வேளாளரைக் காண்க.

வேள் எவ்வி

ஒரு வேளாளனாகிய வள்ளல் வெள்ளெருக்கிலையார் என்னும் தழிழ்ப் புலவராற் பாடல் பெற்றவன். தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியனால் வெல்லப்பட்டவன்; வேள் பாரியை இவன் குலத்தான் என்பர். (புறநா.)

வேள்பாரி

வேளாளன் என்பர். கடையெழுவள்ளல்களில் ஒருவன். பாரியைக் காண்க. (புற நா.)

வேள்வி

(5) கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி.

வேள்விதத்தன்

காம்பிலிநாட்டு வேதியன். குபேரனைக் காண்க.

வேள்விநிலை

முடிவில்லாத கீர்த்தியையுடையான் தேவர்களும் மனமகிழ யாகம் பண்ணின தலைமையைச் சொல்லும் புறத் துறை. (பு. வெ. பாடாண்.)

வேஷன்

குரோதகீர்த்தி என்பவனின் குமாரன்.