அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வெகுகந்தன்

சுத்யவன் குமாரன்.

வெகுகவன்

சுத்யவன் குமாரன்.

வெகுச்சுருதம்

சிற்ப நூலில் ஒன்று,

வெகுபன்

சத்தியுபுத்திரன். இவன் புத்திரன் செய்யாதி.

வெகுரதன்

புரஞ்சயன் குமாரன்.

வெகுரூபன்

1. புதனுக்குச் சுரபியிடம் உதித்த குமாரன், எகாத சருத்திரரில் ஒருவன், 2. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமாரன்.

வெகுலாசுவன்

சுவேதன்; கண்ணபிரானை விருந்துக்கு அழைத்த காலயில் இவனும் அவரை அழைத்தனன், கண்ணன் இருவர் மனதும் வருந்தாமல் ஒரேகாலத்தில் தம் வீட்டிலும், சுவேதன் வீட்டிலும் விருந்துண்ணக்கண்டு களித்தவன், சுவேதனுச்குச் சுருததேவன் எனவும் பெயர்.

வெக்காளிப்புலி

கள்ளர் சாதியில் ஒரு வகை

வெங்கண்ணன்

கடைச்சங்கமருவிய புலவன். (அகநானூறு.)

வெங்காயம்

1. இது ஒருவகைப் புல்லை ஒத்த செடி; இது மத்ய ஆச்யாவிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கொண்டுபோகப் பட்டது. இதன் கிழங்கு இதன் இலையாகிய தாளினடியில் பெருக்கிறது. இது காரமும் நெடியுமுள்ளது. உடம்பைப் போஷிக்கும் வன்மையுடையது. விஷக்காற்றுக்களைப் போக்கும் குணமுடையது. இதன் பல சிறந்த குணங்களைக்கண்டே இந்தியர் தங்கள் நாட்டில் இதனைப் பயிர் செய்யத் தொடங்கினர். 2. சம்பாரப்பயிரில் ஒன்று, இது இந்தியாவில் பயிரிடப்படுகிறது. ஒருவித நெடியும் காரமுமுள்ள கிழங்கு. இது ஆறு மாதத்திய பயிர். இது, பல நிறமாகவும், பெரிதும், சிறிதுமாக இருப்பது. இதன் தாள்களையும், பூக்களையும் கறிசமைத்துண்பர். இதன் விரையால் நாற்றுப் பயிரிட்டு நடுவார்கள்.

வெங்குரு

சீர்காழிக்கு ஓர் பெயர். தேவ குரு தான் தேவர்க்குக் குருவெனச் செருக்குக்கொண்டது நீங்கிப் பூசித்த தலம்.

வெஞ்சன்

ஒரு அசுரன்; சிவபூசைசெய்து முத்தி பெற்றவன்,

வெட்சி

வெற்றியினையுடைய அமசன் ஏவவும் ஏவலின்றியும் போய் மாறுபாட்டினையுடைய வேற்றுப் புலத்துப் பசுநிரையைக் கைக் கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு வெ.)

வெட்சியரவம்

பொருந்தாதார் முனையிடத்துப் போதலை விரும்பியதைக் கூறும் துறை,

வெட்டியான்

1, இவன் கிராமவேலை செய்யுந் தோட்டிப்பனையன். இவன் கிராமத்தைச் சுற்றிப்பார்த்து தீமை நேரிடாமல் காப்பவன், இவன் கிராம விஷயங்களை தமுக்கால் கிராமத்தாருக்கு அறிவிப்பன். இவன் கிராமத்தில் சாம்பிணங்களைத் தகனஞ் செய்பவனுமாவன். மழையில்லாக் காலத்துக் கொடும்பாவிகட்டி யிழுப்பவனும் இவனே. இவன் இராஜதானி உத்தியோகத்தனானால் கிராமவசூல்பணம் எவ்வ ளவாயினும் ஜில்லா பொக்கிஷத்தில் சேர்ப்பவன், (தர்ஸ்டன்.) 2. சண்டாளனுக்கு நிஷாதசாதி ஸ்திரீயிடம் பிறந்தவன். சுடுகாடுகாப்பது தொழில்.

வெட்டிவேர் விசிறி

வெட்டிவேரினாற் செய்த விசிறி பைத்தியதோஷம், தேக எரிவு, தாகம், இவைகளை நீக்கும்; மனோற்சாகத்தை உண்டாக்கும்.

வெட்டுக்கிளி

வண்டினத்தது; சாகபக்ஷணி; இவை கூட்டம் கூட்டமாய்ப் பறந்து சென்று வயல்களை நாசஞ்செய்யும். இவற்றிற்குக் கால் வாள் போலிருக்கும். அவற்றால் பின் கால்களைக் கொண்டு தட்டி யோசையிடும். இவை பல நிறமுடையன.

வெண்கண்ணனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~நா.)

வெண்கலம்

செம்பு 80 பாகமும், வெள்ளீயம் 15 பாகமும், பித்தளை 5 பாகமும் சேர்ந்தால் வெண்கலமாகிறது. இது வெண்மை கலந்த மஞ்சணிறமுடையது, ஓசையுடையது. இதனால் மணிகள் போஜன பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. களிம்பேறாதது. இதை அடித்து உருக்கள் செய்ய முடியாது.

வெண்கலிப்பா

கலித்தளை விரவி யீற்றடி முச்சீரான் முடிவது.

வெண்கஷ்டரோகம்

இது விகாரமான வெளுப்பையுண்டாக்கும் ரோகம். இது வாதவெண்குஷ்டம், பித்தவெண்குஷ்டம், சிலேஷ்ம வெண்குஷ்டம் எனப்பல. இவை மகிஷபல்லாதகி கிருத முதலியவற்றால் வசமாம். (ஜீவ)

வெண்காட்டுநங்கை

சிறுத்தொண்டர் தேவி. மகாபதிவிரதை.

வெண்குன்று

முருகவேள் மலை. (சிலப்பதி)

வெண்கொற்றன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவாது இயற் பெயர் கொற்றன். இப்பெயர் கொண்ட வேறு சிலர் இருத்தலின் வேற்றுமை நோக்கி வெண்கொற்றன் எனப்பட்டனர் போலும், (குறு~86)

வெண்சாமரை

1, வெள்ளைச் சாமரத்தினால் வியர்வை, ஆயாசம், மயக்கம், மூர்ச்சையால் வாராநின்ற ஞாபகமறதி, நாவறட்சி, உஷ்ணம் ஆகிய இவை போம். லட்சுமிவிலாசமும் புணர்ச்சியிலிச்சையும் உண் டாக்கும் என்ப. 2. கவரிமானின் மயிரால் செய்யப்பட்டு காற்றை அசைக்கும் கருவி.

வெண்டாளி

இடைச்சங்கமருவிய தமிழ் நூல்.

வெண்டாழிசை

மூன்றடியாய் முதலிரண்டடியு நாற்சீராயும், ஈற்றடி யொன்றும் வெண்பாவைப்போல முச்சீராயும், முடிந்து வேற்றுத்தளை விரவிவருவனவும், சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவனவுமாம். (யாப்பு~இ.)

வெண்டுறை

(3) அடிமுதல் (7), அடியீறாகப் பின்னின்ற சில அடிகளிற் சில சீர் குறைந்து வரும். இவற்றுளெல்லா அடியும் ஒரோசையாய் வருதலன்றியும், முன்பின் சில அடிகள் ஒரோசையாயும், பின் சில அடிகள் மற்றோரோசையாயும் வருதலுமுண்டு.

வெண்டோட்செழியன்

இடைச்சங்க மிருத்திய பாண்டியன்.

வெண்ணத்தைப்பாம்பு

பருத்தசெக்கு பனை, தூண்போல் பருத்து வாலும் தலையும் ஒரே மொத்தமாய் வரிகளைப் பெற்று ஆடு, மாடு, கோழி முதலியவற்றை விழுங்குவது. இதனை மலைப்பாம்பு தாசிரிப்பாம் பென்பர்.

வெண்ணி

தஞ்சாவூர்ச் சில்லாவைச் சேர்ந்த ஓர் ஊர், கரிகாற் பெருவளத்தான், சேரமான் பெருஞ்சேரலாதனை வென்றவூர், இதற்கு வெண்ணிக்கூற்றம் எனவும் பெயர். இது பொழுது கோவில் வெண்ணி என்று வழங்குகிறது.

வெண்ணிக்குயத்தியார்

சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிப் பரிசுபெற்ற புலவர். (புறநா.)

வெண்ணெய்க் கூத்தஜீயர்

வீரவல்லி கிருஷ்ணமாச்சாரியாருக்கு ஒரு பெயர், தேசிகரை யாச்ரயித்தவர்.

வெண்ணெய்நல்லூர் சடையப்பமுதலியார்

இவர் சைவவேளாளர் மரபில் பிறந்தவர், சோழனிடத்து மந்திரியாக விருந்தவர். இவரையொரு நாள் சோழன் தனது கொலுவிற்கு அழைத்தனன். இவர் அசந்தர்ப் பத்தால் போகாதிருந்தனர். இவர் செல்வச் செருக்கால் வாராதிருந்தனர் என்று எண்ணிச் சோழன் இவரது செல்வத்தை யெல்லாம் கொள்ளை கொண்டனன். இவ்வகை பொருள் பறிகொடுத்திருக்கையில் சீன வர்த் தகனொருவன் இழையாயிரம் பொன் கொண்ட பட்டு ஒன்று கொண்டு அரசனிடம் அணுக, அரசன் தன்னிடம் விலைக்குத் தக்க பொருள் இலாமையால் முதலியாரிடம் அனுப்பினன், இப்பட்டினை முதலியார் வாங்கித் தரித்துக்கொண்டு அரசன் சமுகம் சென்றனர். அரசன் தான் அழைத்தகாலத்தில் வாராந்தற்குக் காரணமென்ன என்று வினாவ, முதலியார் உடுத்திருந்த விலையுயர்ந்த பட்டினைக் கிழித்துத் தொடையிற் சிலந்தியெனக் காட்டி அரசனால் மதிப்படைந்தவர், முதலியாரிடம் பகைபாராட்டிய சோழன் முதலியார் வறுமைக்காலத்தில் இவரிடத்தில் பலவித்துவான்களை யேவினன். முதலியார் வந்த புலவர்களை எதிர்கொண்டு அவர்களுக்குத் தம்மனைவியார் மாங்கல் யத்தை விற்றுப் போஜன முதலிய செய்வித்துப் பரிசளிக்க இல்லா மையால் வீட்டின் புறத்தில் இருந்த பாம்பின் புற்றில் கையிட்டனர். அதில் இருந்த நாகம் மகாகொடைச் கையெனக் கண்டு இரத்தின மளித்தது; இதனைப் புலவர்க்குத் தந்தனர். இதைக் கேள்வியுற்ற அரசன் மீண்டும் புற்றில் கைவிடக்கூற அவ்வகையிட்டுச் சிவாத்தினம் பெற்றவர். கம்பர் குமாரராகிய அம்பிகாபதி திருமணத்தில் முதலியார் ஒரு புறத்தில் வேற்றார்போல் இருந்தனர். கம்பர்மனைவியார் கம்பரை நோக்கி எங்களண்னவை இவ்விடம் இருத்தலாமோ என்றனர். கம்பர் விடையாக முதலியாரை நான் வைக்கத் தகுந்த இடத்தில் வைக்கப் போகிறேன் என்றுகூறி இராமாயணத் தில் புகழ்ந்து பாடப்பெற்றவர். இவர் தாம் வறுமையடைந்த காலத்து வந்தபுலவர்க்குக் கழனியில் விதைத்த நெல்லைப் பதப்படுத்தி உணவளித்தனர். இவர் சகோதரர் கண்ணப்பமுதலியார். இவர்க்குச் சரராமமுதலியார் எனவும் இவரைப் புதிவைச்சடையன் எனவும் கூறுப. இவர் மூவேந்தர்க்கும் அவரின் பரிசனங்களுக்கும் பரிசளித்துத் திரிகாத்தப்பெயர் பெற்றவர். இவர் பலநாள் பவர்க்குப் பாலுஞ்சோறு மளித்தனர் எனவும், சிக்கனமாண்ட பரராசசிங்கப் பெருமாள் எனும் அரசன் ஈழநாடு பஞ்சமுற்றபோது இவரைப் பாட இவர் ஆயிரங்கப்பவில் நெல் நிறைத்துக் கொடுபோய்க் கொடுத்தி அவன்நாட்டைக் காத்தனர் எனவுங் கூறுப. இவர் சங்கர முதலியார் புதல்வர் எனவுங் இச்சங்கர முதலியாருக்கு ஒட்டக்கூத்தர் உதவித் தொழில் புரிந்தவர் எனவக் கூறுப. ”புறம் தாதாரு புதுவைச் சடையன், இருந்த வியலூர் தெற்கு மேற்கு பரிந்தபொன்ளி, யாற்று நீரால்விளையுமப்பாற்கிழக்காசி, மாற்ற தீரால்விளையுமாம். ‘யாமாற்புகழவியற்கம் பநாடனிராமரொடும், பாமாலை சூட்டுக்குல முடையானைப்பாடிய புரக்கக், கோமாறனிட்ட பொற்சிகசாதனம் பெற்றகொற்ற இனைத், தேமாலை யச்சந்தவிர்ப்பான்வெண் ணெயத் திரிசாத்தனையே. ” தண்ணார் கமலச் சதிமுகத் தோனையுந் தப்புவதோ, பண்ணா மணித்தலைக்கட் செலியானது பாரிலுள்ளே, கண்ணாகவாழும் வெண்ணெய்த் திரிகாத்தன் கலைத்தமிழ்கேட், டெண்ணம் முடியசைத்தா துலசேழு மிறக்குமன்றே. ” இரவு நண்பகலாதிலென் பகலிருளாரு விர வாகிலென், இரவி யெண்டிசை மாறிலென் கட லேழுமேறிலென் வற்றிலென், மாபுதங்கிய முறைமைபேணிய மன்னர், போகிலே னாகிலென் வளமையின்புறு சோழமண்டல வாழ்க்கைகாரண மாகவே, கருது செம்பொனி னமடலத்திலோர் கடவு கனின்று நடிக்குபே, காவிரித் திருாதி யிலேயொரு கருணைமாமுகி றுயிலுமே, தருவுயர்ந்திடு புதுவையம்பதி தங்குமன் னிய சேகான் சங்கரன் றரு சடையனென் றொரு தருமதேவதை வாழவே ” என்பன போன்ற பாடல் பெற்றவர். ஏரெழுபதி கம்பர் அரங்கேற்றிய காலத்து இவருடனிருந்து சேதிராய ரென்னும் ஓர் வேளாளப பிரபு கேட்டனர் என்ப. இவர் செல்வவள மிக்கவர் என்பதற்கு ஒரு நாள் வணிகன் ஒருவன் கடல்படு முத்துக் களைக் கொணர்ந்து அரசன் முன்வைத்து இவை அரசர்க்கே யுரிய தென்று புகழா நிற்க, அக்கடல்படு முத்தினும் கழனிபடு முத்தமே ஒளியினும் உயர்வினும் மதிக்கத் தக்கதென்று அவாதி கழனிக்கணிருந்த சில கரும்புகளை அரசன் சமூகத்தில் கொணர்ந்து அவற்றின் முத்துக் களை வியக்கும்படி எடுத்துக்காட்டினர். பின்னொரு நாள் சோழனுக் கென்று வணிகனொருவன் பல மணப்பொருள் கூடிய சாந்தம் கொணர, அதனைச் சோழன் கொளற்குப் பொருளிலாது அவனைத் திருப்ப, அவன் முதவியாரைக் காண இவர் அதனைக்கொண்டு இச்செல்வத்திற்குக் காரணம் கழனியேயென எண்ணி அதனைக் கழனிக்கண் கலக்கி அவ் வணிசனுக்கு வேண்டியன அளித்தனுப்பினர். மற்றொருநாள் புலவர் பலர் இவரைக் காணவருகையில் இவர் ஆங்குச் சிதரண்டு கிடந்த நெற்களைப் பொறுக்குதல் கண்டு நெல்லைப்பொறுக்குபவர் நமக்கென்ன கொடுக்கப்போகிறார் என்று எண்ணியிருக்கையில், இவர்களது எண்ணத்தைக் குறிப்பாலுணர்ந்த முதலியார், அவர்களை எதிர்கொண்டு உபசரித்து இலையில் பொன்னமுது பொற்கறி படைக்கப் புலவர்கள் மயங்கக்கண்டு அவற்றைக் குப்பையில் எறியக் கட்டளையிட்டு, அவர்க்கு வேறு அன்னமிட்டு உண்பித்தனர். புலவர்கள் உண்டு வாய்பூசப் புறத்தில் வந்து பொற்குவியல் குப்பையிற்கண்டு ஒருவருக் கொருவர் வாதிடக்கண்டு எச்சிற்குப்பைக்கு என் வாதாடுகிறீர்களென்று அவர்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்தனுப்பினர். இதனைப் ‘பொன்னால முதும் பொரிக்கறியுந்தான் கொணர்ந்து, நன்னா வவர்க்களித்த நாணயக்கை என்பதா லறிக. இச்செல்வமிகுதியால் சோழனுக்கு மிகுந்தபொறாமை யிவர்பா லுண்டாயிற்று, இவர் தம்பி இணையார மார்பன் என்பர். சாராமமுதவியாரும் இவர்க்கு ஒரு சகோத ரர். கம்பர் பாண்டியற்குச் சடையன்வாழ் வெண்ணெய் நல்லூரைப் புகழ்ந்து கூறிய போது அதனைக் காணவந்த பாண்டியன் பொருட்டு அதனைப்பலபட அலங்கரித்தவர்.

வெண்ணெய்மலை

கொங்கு நாட்டில் உள்ள குமாரக்கடவுள் மலை.

வெண்பா

ஒரு சாராசிரியர், ஈற்றடியொழிந்து எனையடியெழுத்தொத்து வருவனவற்றை கட்டளை வெண்பா என்றும், ஒவ்வாது வருவன வற்றைக் கலம்பகவெண்பா என்றும், ஈற்றடியெழுத்தும், எனையடி யெழுத்தும் ஒத்துவருவனவற்றைச் சமனடைவெண்பா என்றும், ஈற்றடி யெழுத்தினோடு எனையடியெழுத்துச் சில வொத்தும் ஒவ்வாதும் வருவனவற்றைச் சமவியல் வெண்பா என்றும், ஈற்றடியெழுத்துமிக்கு ஏனையடியெழுத்துக் குறைந்து தம்முளொத்து வருவனவற்றை மயூசவியல் வெண்பா வெனவும் வழங்குவர். (யாப்பு. வி.)

வெண்பாப்பாட்டியல்

இதனை இயற்றியவர் வச்சணந்தி. இதில் செய்யுளுக்கு வேண்டிய பொருத்தங்கள் பத்தும் தெள்ளிதின் விளங்கக் காணலாகும்.

வெண்பாவிலக்கணம்

ஈற்றடி முச்சீராய் மற்ற அடிகள் நாற்சீசாய் காய்ச்சீரும் அதவற்சீரும், வெண்சீர்வெண்டளையும், இயற்சீர் வெண்டளையும் பெற்று மற்ற சீருந்தளையும் பெறாது காசு, பிறப்பு, நாள், மலர், எனும் வாய்பாட்டால் முடிவது. அவ்வெண்பா, குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைவெண்பா, சிந்தியல் வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வகைப்படும். (யாப்பு இல.)

வெண்பூகன்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரியற்பெயர் பூகன். (குறு 83.)

வெண்பூதி

இவர் கடைச்சங்க காலத்திருந்த பெண் கவிபோலும். இவர் வெண்ணீசனி தோற்றத்தாலிப்பெயர் பெற்றனர் போலும், (குறு 67,167.)

வெண்மணிப்பூதியார்

இவர் கடைச்சங்க காலத்தவர். பொன்மணியார் எனக் குறுந்தொகையில் ஒரு பெண்பாலார் கூறப்பட்டனர். அவ்வாறி வரும் பெண்பாலாராக இருக்கலாம். (குறு. 269)

வெண்வட்டியார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.)

வெதிரிகவனம்

இதுவே பதிரிகாச்சிரமம். இது இமயமலைக்கு அருகிலுள்ள இலந்தைவனம். இதில் பல இருடிகள் வசித்துப் புராணதிகள் கேட்டனர். வியாசரும் இவ்விடம் இருந்தனர். இப்போது விஷ்ணு மூர்த்தியின் ஆலயம் இருக்கிறதாம்.

வெந்தயம்

சம்பாரப்பொருள்களில் ஒன்று. தைலசத்துடன் சிறுகசப் புள்ள ருசியுள்ளது. இந்தியாவில் பயிரிடப்படும் பொருள், இதனிலைகளையும் சமைத்துண்பர். அதனை வெந்தயக்கீரை யென்பர்.

வெந்துண்டன்

திருதராட்டிரன் குமாரன்.

வெந்துவிதன்

ஒரு வாநரவீரன்; பலராமர் ஆயர்பாடியில் இருக்கையில் அவரிடம் யுத்தத்திற்குச் சென்று மாய்ந்தவன்.

வெந்நீர் ஊற்றுக்கள்

இவை பூமியிலுள்ள தீயால் உஷ்ணமடைந்து சுரந்தும், மேனோக்கிப் பாறைகளின் வழியாகவும் வரும் ஊற்றுகளாம். இவை பெரும்பாலும் எரிமலையடுத்த பிரதேசங்களில் உண்டாகின்றன அவைகளிற் சில ஐரோப்பாகண்டத்தை அடுத்த ஐஸ்லண்ட் தீவிலுள்ள எக்ளா எரிமலை நாட்டில் உண்டு. இவ் ஊற்றுக்கள், ஒன்றின் அகலம் (15) அடிகள், நீளம் (56) அடிகளாம். இதில் கொதி நீர் (200) அடிமேல் எழும்புகிறதாம். வட அமெரிக்காவின் ஐக்யமாகாணத்து வயமிங் ஜில்லாவில் பல வெந்நீரூற்றுக்கள் இருக்கின்றன. இவையும் மேனோக்கிக் கிளம்பித் தம்பம்போனின்று பாய்கின்றன. அதில் மற்றொன்று மணிகள் தவறாது இரைந்து கிளம்புகிறதாம். அதனால் நேரம் தெரிந்து கொள்கின்றனராம். ஆஸ்திரேலியா வின் தென் கீழ்த்திசையிலுள்ள நியூசீலாண்டிலுள்ள ரோடேருவா எனும் தீவிலுள்ள வகாரிவாரிவா எனுமிடம் வைரோவா, கரீரு எனும் (2) வெந்நீரூற்றுக்கள் சிறந்தவை. பொகுதி எனும் மற்றொன்றும் உண்டு. இந்தியாவில் இமயமலையைச்சார்ந்த அளசுநந்தையெனும் நதியின் உபாதியாகிய விஷ்ணு கங்காநதியின் வடகரையில் பத்ரிநாதர் கோவிலுக் கருகில் தபோகுண்டம் எனும் ஒரு நீர்ஊற்று (30) அடி அகலமுள்ளதாக இருக்கிறது. அதனிடஞ் சுரக்கும் வெந்நீர் கந்தக நாற்ற முள்ளதாக இருக்கிறது.

வென் வேற்கிள்ளி

ஒரு சோழன். (மணி மேகலை)

வென்றிப்பெருந்திணை

கீழ்வருபவற்றின் பொருள் வெளிப்படை: 1. கொடுப்போ பேத்திக்கொடா அர்ப் பழித்தல், 2. வாணிகவென்றி, 2. மல்வென்றி. 4, உழவன் வென்றி, 5 ஏறுகொள்வென்றி, 6. கோழி வென்றி, 7. தசர்வென்றி, 8. யானை வென்றி, 9. பூழ்வென்றி, 10. சிவல் வென்றி, 11. கிளிவென்றி, 12. பூவை வென்றி, 13. குதிரைவென்றி, 14. தேர்வென்றி, 15. யாழ்வென்றி, 16. சூது வென்றி, 17. ஆடல்வென்றி, 18. பாடல் வென்றி, 19. பிடிவென்றி.

வென்றிமாலைக்கவிராயர்

இவரூர் பாண்டி நாட்டுத் திருச்செந்தூர், வேதியர், சைவர், திருச்செந்தூர் புராணஞ்செய்தவர்,

வெபமாரன்

பிரியவிரதன் பேரன்; மேதாதியின் குமாரன்.

வெருகிடதர்

மானிடர்க்குப் பிதுர்க்கள்.

வெருவருநிலை

பகையைத் தடுக்கும் பூசலிடத்து அகன்ற மார்பகத்தை வில்லுமிழ்ந்த அம்புபிளப்ப நிலத்தைத் தீண்டாதபடி சிறந்த பெரிய மேம் பாட்டினை யுடையான் தனது நிலமையைச் சொல்லிய புறத்துறை. (பு~வெ.)

வெறியாட்டு

அழகிய ஆபரணத்தையுடையார் நினைத்த தொழில்முடிய முருக பூசை பண்ணுமவனோடு வள்ளிக்கத்தை ஆடியது. மணநாறு மாலையுடையாள் தலைவனது அருளைக் கருதி அவ்விடத்து நிலைமை யைத் தாயறியா தட்டி வேங்கைமரத்தாற் பொலிந்த மலையையுடைய முருகற்கு வெறிக்கூத்தாடியது. (பு. வெ. பெருந்திணை)

வெற்றி

(8) பகைநிரைகவர்தல், கவர்ந்ததை மீட்டல், பகைமேற் செல்லல், வரும்பகை முன் எதிர்ஊன்றல், தன்னரண் காத்தல், பகையாண் வளைத்தல், பொருதல், போர்வெல்லல், இவற்றிற்கு மாலை யாவன: வெட்சி, கரந்தை வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.

வெற்றி பத்திரம்

வாதி பிரதிவாதிகளின் தீர்மானமெழுதியது,

வெற்றிலை

1. வெற்றிலை தின்னும்போது சுண்ணந் தடவிய பின், காம்பு, நுனி, நீண்டநரம்பு, பின்புறத்தோல் இவைகளை நீக்கித் தின்ன வேண்டியது. 2. இந்தியாவில் பலரால் உபயோகித்து வரும் காரமுள்ள மெல்லிலை. இதனை முதலில் கொணர்ந்தவன் நாககன்னிகை மணந்த சோழன். இது, இளங்கால், முதுகால், கம்மாறு, கௌளிபத்ரம், வெள்ளை வெற்றிலை முதலாகப் பலவகைப்படும். 3. இந்துக்களால் வாய்க்கு ஆரோக்யம் பிறக்க உண்டபின் மெல்லும் காரமுள்ள இலை. இது, கொடிவகைகளின் பயிர். இக்கொடியை மேடான இடத்தில் வளர்ந்த அகத்திக்காவினடியில் கொடிபதித்து கிடங்கிலுள்ள நீரை நீத்தியா லிறைத்து கொடிகள் வளர, காலில் கட்டி உயர ஏற்றி வளர்ப்பர். இது 3, 4 வருஷம் பலன் தரும். இதில் மாசிக்கால், இளங்கால், முதுகால் எனப் பலவகை. வெற்றிலையில் கம்மாறு வெற்றிலை வெள்ளை வெற்றிலை சல்லிவெற்றிலை இளங்கால் வெற்றிலே முதுகால்வெற்றிலை ரவேசிவெற்றிலை எனப் பலவுண்டு.

வெற்றிலைத்தோட்டக்கார் செயல்

தூக்குவாய், கிடங்கு, சங்கு, மாசிக்கால், இளங்கால், முதுகால், (தூக்குவாய் வேவியில் நுழையும் வழி) (கங்கு நீர் ஓடாது காக்கும் கரை) சேர்வை கட்டுதல், கொடிகட்டுதல், இருப்புரகத்தால் வெற்றிலைகிள்ளல்.

வெற்றிவேற் செழியன்

1. பாண்டிரட்டரசன். கோவலன் காலத்துப் பாண்டிநாட்டை யாண்டவன். இவன் கண்ணகிக்கு ஆயிரம் பொற் கொல்லரைப் பலியிட்டுத் தன்காட்டில் இருந்த துன்பத்தைப் போக்கிக் கொண்டவன். இவனுக்கு இளஞ்செழியன் எனவும் பெயர். (சிலப்பதிகாரம்.) 2. இவன் கொற்கையாளி, இவன் சேரன் செங்குட்டுந்வன் காலத்திருந்த பாண்டிநாட்டரசர்களி லொருவன். அரசு கட்டிலிற்றுஞ்சிய நெடுஞ்செழியனுக்குப் பின் பட்ட மடைந்தவன். இவன் நன்மாறன் என வேறு பெயர் பூண்டான். இவன் மகன் நெடுஞ்செழியன், இவன் பிற்காலத்துச் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் எனப்பட்டான்.

வெலமர்

இவர் தெலுங்க நாட்டு உழவர் வகை, இந்தத் தெலுங்கரில் யார் வெலமரென்று தீர்மானிக்க முடியவில்லை யென்பர் Mr. H, A. ஸ்டூவர்ட். சிலர் தாங்கள் பலிஜரின் வகுப்பென்பர். பலிஜர் இவர் களைக் கூனசாசலர் என்பர். இவர்கள் கம்மரின் வகை யென்பர். இவர்களிற் சிலர் தமிழ்நாட்டி லுண்டு.

வெளிபாடிய காமக்கண்ணியார்

இவர் பெண்பாலார்; காமக்கண்ணி (காமாக்ஷி) யாரென்றும் இயற்பெயருடையவர். களவின் கண்ணே தலைவன் பிரிதலானே தலைவி வருந்தி வேறுபடலும் அதனையறியாத அன்னை கட்டினுங் கிழங்கினும், குறிபார்த்து இவள் முருகனால் அணங்கப்பட்டா ளென்று குறியாலறிந்து வேலனை (பூசாரியை) யழைத்து அம்முருகனுக்குப் பூசை செய்து கள்ளை நிவேதித்து யாட்டைப் பலி கொடுத்து தன் மகளுக்குற்ற தீது நீங்கும்படி வேண்டிக்கொள்வது வெறியெனப்படும். இதனை விரிவாக அகத்தில் பாடியதனால் இவர் வெறிபாடிய காமக்கண்ணியா ரெனப்பட்டார். அகம் 22. புறப்பொரு ளிற் செருவிடை வீழ்தற்றுறையும், குதிரை மறமும் பாடியுள்ளார். புறம் 271, 302 இவர் நற்றிணையில் பாடிய பாட்டிலும் (268) வெறியயர் வெங்களத்து வேலனை வினவுகமென்றது வெறிபாடிய பகுதியேயாம். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டும், புறத்தில் இரண்டுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2 ஒரு புராதன தமிழ்க்கவிஞர்; கடைச் சங்கமருவியவர். (அகநானூறு.) (புற. நா.)

வெளிப்படை நவிற்சியணி

சிலேஷையான் மறைத்த பொருளைப் புலவன் வெளிப்படுத்தலாம். இது (விவர்த்தோக்தியலங்காரம்) (குவல.)

வெளிமான்

ஒரு சிற்றரசன். பெருஞ்சித்திரனாரால் பாடல் பெற்றவன். இனவெளிமான் தமயன், இவனைப் பெருஞ்சித்திரனாள் அடைய, அவர்க்குப் பொருள் தரக் கூறி அவன் யுயிர்விட அதில் பாதியே இளவெளிமான் தர, புலவர் பெற மறுத்து நீங்கினர். (புற~நா.)

வெளிவிருத்தம்

(3) அடியினானும், நான்கடியினானும் முற்றுப்பெற்று அடிதோறும் இறுதியில் ஒரு சொல்லையே தனிச் சொல்லாகக்கொண்டு வருவது. (யாப்பு~இ.)

வெள்ளாடியனார்

இவர் சடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் வினைமுற்றி நீங்கிய தலைவனை யெம்மை நினைத்திரோவெனத் தலைவி வினவியதாக பாலை பாடியவர். (அக 26)

வெள்ளாறு

சுவேதமுநிகர் சிவபூசை செய்ததால் பெருகிய நீர் பிரவகித்து நதி ஆயிற்று. இதற்கு வடமொழியில் சுவேதநதி என்று பெயர். (விருத்தாசலபுராணம்.)

வெள்ளி

1 தருமபுரவாதீனத்தைச் சேர்ந்த தமிழ்ப்புலவர். இவர் மகாகவி. தமதென நூல் செய்யாது தாம் பாடிய செய்யுட்கள் பல வற்றைப் பல ஆன்றோர் கவிகளில் சேர்த்துத் தம் கவித்திறமறிவித்தவர். 2. சுக்ரன். 3. ஒரு காலத்துத் தேவர் வேண்டுகோலால் சிவபெருமான் வீர்யத்தைப் பூமியில் விட்டனர். அதை அக்னி தாங்க அது வெள்ளிமலை ஆயிற்று. அதை அக்னி கங்கையில்விட கங்கை சரவனத்தில் விட்டனள், கங்கையினின்று வெளியான சில வீர்யம் பொன் ஆயிற்று. அக்கங்கையி னின்று சிதறின மற்ற அழுக்கு ஈயம் தகர முதலவாயின. (இரா பலா.) 4. இது வெண்ணிறமும் பளபளப்பும் பெற்றதாதலால் வெள்ளியெனப் பட்டது. இது பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் உலோகவகையுள் ஒன்று, உறுதியும் கனமும் உருகத்தக்கதுமாம். இது, பூமியில் கட்டிகளாகவும், பொடிகளாகவும், கந்தகம், ஈயம் முதலிய பொருள்க ளுடன் கலந்துமிருக்கும். இதைத் தூளாக்கி யுலையிலிட்டு கலப்பு நீக்கச் சுத்தமாம். இவ்வாறு கலப்பு நீங்கிய வெள்ளி சொக்கவெள்ளியாம். இது, பொன்னுக்கிரண்டாவது. சொக்கவெள்ளியுடன் செம்பு சேர்த்திருக்கின் மட்ட வெள்ளியாம். இதனால் பாத்திரங்கள், ஆபரணங்கள், நாணயங்கள், வஸ்திரங்களில் சேர்க்க சரிகைசன் செய்யப்படுகின்றன இதில் துரு, களிம்பு, முதலிய உண்டாகா.

வெள்ளிடைமன்றம்

1. காவிரிப்பூம் பட்டினத்துள்ள மன்றம் (சிலப்பதிகாரம்.) 2. மதுரைக்கண் சிவமூர்த்தி நடித்த நடனசபை. 3. காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐந்து மன்றத்துள் ஒன்று. இது திருடர்களை வெளிப்படுத்துவது. (சிலப்பதிகாரம்.)

வெள்ளிநிலை

இடரொழிய மழையைத் தருமெனச்சொல்லி உயர்ந்த வெள்ளியினது நிலமையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

வெள்ளிமலை

1, சிவமூர்த்தி எழுந்தருளியிருக்கும் திருக்கைலைக்கு ஒரு பெயர். 2. கழலுவேகன்மலை.

வெள்ளியந்தின்னனார்

இவர் நெய்தல் வளத்தைப் புனைந்து பாடியவர். கடலின் இருமீனைப் பிடித்து உணக்குந்திறங் கூறுவது ஆராயத்தக்கது. இவர் பாடியது நற்றிணையில் 101ம் பாட்டு,

வெள்ளியம் பெருமலை

வித்தியாதார்களுடைய மலை, (சிலப்பதிகாரம்).

வெள்ளியம்பலத்தெரு

இது, தெற்குச் சித்திர வீதியிலுள்ள வெள்ளியம் பலத்தின் பக்கத்தேயுள்ளது. (திருவிளை.)

வெள்ளியம்பலம்

இது மதுரையில் சொக்கர்சந்நிதிக்குக் கீழ்ப்பாகத்தில் இருக்கிறது. இதன் வரலாற்று விதம் மதுரையில் சோம சுந்தர பாண்டியன் திருமணங்காணவந்த முனிவர் கூட்டங்களில் பதஞ்சலி வியாக்கிரபாதர் இருவரும் திருமண முடிந்தவுடனே எழுந்து ‘நாங்கள் சிதம்பரத்தில் நடன தரிசனங் காணாது உணவருந்தோ’ மாகையால் அவ்விடம் போக விடைதருதல் வேண்டும் என வேண்டினர். சிவமூர்த்தி இவ்விருவருக்கும் மதுரையின் பெருமைகளைக்கூறி, இவ்விருவர் பொருட்டு மற்றவரும் தரிசிக்க அவ்விடம் இரசிதசபை யென்னும் வெள்ளியம்பலத்தில் நடன தரிசனம் தந்தருளினர்.

வெள்ளிவீதியார்

1. இவர் பெண்பாலார். மதுரையில் வெள்ளியம்பலத் தெருவிவிருந்ததனால் இப்பெயர் பெற்றார்போலும். இயற்பெயர் புலப்படவில்லை. இவர் எக்காரணத்தாலோ தமது கணவனை விட்டுப் பிரிந்து தனித்துவைகியவர். காமமேலீட்டினால் தமது மாமைக்கவினைப் பசலையுண்டு அழிக்கக் கடவதென்று சினந்து கூறுவாராயினார். சினந்து கூறியும் அன்றே பிற்பட்டுத் தனியே யிருத்தலாற்றது காம மேலீட்டினால் பலவாறு புலம்பி ‘என் காமம் பெரிதா யிராநின்றது; இதனைக் களைபவராகிய காத வரும் நீத்தகன் றன்’ ரெனவும் ‘திங்கள் முதலாயவை வருத்தவந்தன’ வெனவும் கூறி வருந்துவாராயினார். நாரை விடு தூது பாடி புலம்பியுள்ளார். மற்றும் ஆசை தாங்காது இரவினிலையுந், தன்னிலையுங் கூறி வருந்தினார். இனித் தேடிச் சென்றால் அகப்படாரோ இவ்வாறு தேடினாலென்னென்று கூறி வருந்தினார். அங்ஙனமே புறப்பட்டுச் சிறிது தூரம் நோக்கிச்சென்று ஆற்சாராய்ப்பாடி வருந்துவாராயினார். அக்காலத்து இவர்பால் நட்புடைய சிலர் வந்து தேற்றத் தேறி நும்மாற் சிறிது தணிந்தோம்; இக் காமநோய் பொருத்தற் கொவ்வாது கண்டீர்’ என்று கூறினர். இந்நோய் சிறிது குறைந்து நாண்மீதூர்ந்துளது; நோதலை எடுப்பின் நாணம் சைநில்லாது கிழியுமென அவர் கேட்பக்கூறியுள்ளார். மாலைக் காலத்து புலம்பியழுதுள்ளார். என் காதலர் சாநெறியே சென்றகன்றனரே; அவர் பெரிதாயிராகின்றது ஆதிமந்திபோல வரும் ஆவேனோ வென்று புலம்புவராயினர். கனவிடைக் காதலனைக்கண்டு நனவாகக்கொண்டு அவனைக் கூட்டுவித்தாலன்றி யான் உயிர் வாழலேனென் றிரங்கினார். மற்றொருகாலந் தோழியை நோக்கி நும்மூர் சபை இத்தன்மையா யிருத்தலானே பிறர்தோரை ஆங்கு புணர்ப்பிக்க வல்ல மூதறி வாள ருளரோ வென்று வினாவினார். உளரேல் தமது காதலனைக்கூட்டுவிக்க வேண்டு மென்பது கருத்து. அப்பால் தமது கணவனைச் சென்று கண்டு வருந்தி நும்மைப் பெற்றே மில்லையாயின் எம்முயிர் விடுவதாக வென்று நொந்து கூறுவாராயினார். இவ்வாறு இவர் கேள்வனைப் பிரிந்து வருந்தி ஆங்குச் சென்றாலும் அவனைக் காண்பேமென்று புறப்பட்டுப் போனதனை “வெள்ளி வீதியைப்போல நன்றுஞ் செல வயர்ந்திசிறல் யானே” என ஔவையார் எடுத்துக் கூறியதனாலும் அறிக. இவ்வெள்ளி வீதியார் கூறிய பாடலனைத் தினையுந் துறைப்பாற்படுத்தி எட்டுத்தொகைக்கட் பின்னுளோர் சேர்த்தார்க ளென்றறிக. இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (70,335,348) பாடல்களும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் இரண்டும், திரு வள்ளுவமாலையில் ஒன்றுமாகப் பதினாலு பாடல்கள் கிடைத்திருக்கின் றன. 2. கடைச்சங்கப்புலவருள் அருந்தமிழறிந்த அங்கனை சங்க மருவியவர். இவர் ஔவைக்கு முற்பட்டவர். ” இவர் கன்று முண்ணாது” எனும் செய்யுளில் இவர் தம் தலைவனைப் பிரிவு ஆற்றாது அவனுட னுறை வேட்கமிகுந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவும் கடந்து சென்றனர் என்பதை “ஓங்குமலைச்சிலம் பின்” எனும் அகப்பாட்டில் ஒளவையார் கூறியிருப்பதாலறிக. இதனானிவர் ஒளவை யார்க்கு முற்பட்டவராக இருத்தல் வேண்டும். இவ்வெள்ளிவீதியார் பாடல்கள் பெரும்பாலும் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடப்பட்டனவாம். இவர் திதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப் புறத்து அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னையினை வேரோடு தடிந்த கதையினையும், காதலற் கெடுத்த ஆதிமந்தி கதையினையும், கடலோட்டிய வெல்கெழுகுட்டுவன் கதையி ஊனயும் கூறியுள்ளார். (திருவள்ளுவமாலை.) (அக. நா.)

வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் மிக்க வெண்ணீறணிந்த காரணத்தால் இப்பெயாடைந்திருக்கலாம். இவர் தந்தையார் வெள்ளூர்கிழார். ஊர் வெள்ளூர். (குறு 246.)

வெள்ளூர்க்காப்பியன்

ஒரு தமிழ்ப்புலவன்.

வெள்ளெருக்கிலையார்

வேள் எவ்வியைப்பாடிய தமிழ்ப்புலவர். புற நா

வெள்ளேசுவரர்

வணிகமல்லையரைக்காண்க.

வெள்ளைக் கண்ணத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.)

வெள்ளைக்குடிநாகனார்

1. இவர் சோழ நாட்டில் வெள்ளைக்குடியின் கணிருந்த நாகனெனப்படுவர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் காலத்தினர். அக்காலத்து இவருக்குள்ள நிலங்களுக்கு வரி செலுத்த முடியாதவராய்த் தம்மீது நிலுவை நின்றதற்கஞ்சி அரசனைச் (செவியறி அறுஉ) என்னும் விடியத்தை அகவலில் அமைத்துப் பாடி அவனது அவைக்களத்துச்சென்று அதனைப் படித்துப் பொருள் கூறித் தாம் செலுத்தவேண்டிய வரியைத் தள்ளிவிடும்படி செய்து கொண்டார். புறம் 35, இவர் பாடலிவே சந்திரனை நோக்கித் தலைவி முறிந்து கூறுவது வியப்புடைய தாகும். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், புறத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. இவர் ஒரு தமிழ்ப் புலவர், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிப் பழஞ்செய்கடன் வீடு கொண்டவர், (புற. நா.)

வெள்ளைச்சி

மதுரைவீரனைக் காண்க

வெள்ளைப்பூண்டு

இது சம்பாரப் பொருள்களிலொன்று;நெடியுள்ளதும் காரமுள்ளது மானது. இது உருவத்தில் வெள்ளையாய்ப் பலபிரிவுள்ள தாக இருக்கும். இப்பிரிவுள்ள பாகத்தை நட்டு இதனைப் பயிரிடுவர். இது தைலசத்துள்ள பொருள்