அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
வீசல்

1. இது கீரியினத்தில் உருவம் திரிந்தது. இது குறுகிய காலும், கீரியைவிட இரட்டிப்பான உடல் நீளமும் உள்ளது. இது ஆசியா, ஐரோப்பாவின் வடபாகம், அமெரிக்கா முதலிய தேசங்களி லிருக்கிறது. தேகத்தில் குறுகியடர்ந்த மயிருண்டு. முதுகு சிவந்த பழுப்பு நிறம். இது கீரியைப் போன்ற முகமும் குறுகிய வாலுமுள்ளது. மரப்பொந்துகளில் வசித்து இரவில் இரை தேடுகிறது. மாம்ச பக்ஷணி. இவ்வினத்தில் மற்றொரு வகை அமெரிக்காவிலுண்டு, அதை வீடுகளில் வளர்த்து முயல்வேட்டை யாடுகிறார்கள். 2. இது கீரியைப் போன்ற பிராணி. இது ஐரோப்பாவின் வடபாகம் அமெரிக்கா முதலிய இடங்களிலுண்டு. இது கீரியினும் உடல் நீண்டு குட்டைவால் பெற்று, வாய்ப் பக்கத்தில் கருப்பான புள்ளிகள் பெற்றிருக்கிறது. மாம்ச பக்ஷ்ணி. மரப்பொந்து களில் வசிக்கும். இவ்வீனத்தில் டுபியா என்பதொன்றுண்டு,

வீடுமன்

பீஷ்மருக்கு ஒரு பெயர்.

வீடூர்முதலியார்

இவர் தொண்டைநாட்டு வேளாளர்; கொடையாளி. இவரது ஈகையைக் காண ஒரு புலவன் இவரிடம் வந்து முதலியாரின் மனைவியாரைக் கொடுக்கும் படி கேட்டனன், முதலியார் அவ்வகை கொடுத்தனர். இதனால் புலவன் களித்து முதலியாரை நோக்கி நான் தாய்முறை கொண்டு கேட்டனன். மீண்டும் அங்கீகரிக்க வேண்டுமென, வேண்டுகோட்படி இசைந்து புலவர்க்கு வேண்டியன கொடுத்தவர்.

வீட்டுக்குரிய சாமான்கள்

செப்புப் பாத்திரங்கள்; அண்டா, தவலை, சரிவு, குண்டான், செப்புப்பானை, சொம்பு, தூபகலசம், விளக்கு, வடி தட்டு, செப்புச்சட்டி முதலியன. மரச்சாமான்கள் மணை, கட்டில், விசிப்பலசை, மத்து, அகப்பை, தட்டு, இரும்புச் சாமான்கள்; கரண்டி, உச்சிக் கரண்டி, சல்லிக்கரண்டி, மட்பாண்டம்; பானை, சால், சட்டி, மிடா முதலியன. தட்டுமுட்டு உரல், அம்மி, உலக்கை, அகல், மெத்தை, தலையணை முதலியனவாம்.

வீட்மகன்

இருகமணிக்குத் தந்தை; விதர்ப்பநாட்டரசன். இவனைப் பீஷ்மகன் என்பர்,

வீணாதக்ஷிணாமூர்த்தம்

நாரதர் முதலிய மகருஷிகள் வேண்டியபடி இசையின் இலக்கண முதலியன அறிவித்த சிவபிரான் திருவுரு.

வீணாபதி

காந்தருவதத்தையின் தோழி.

வீணை

தப்திநதிக்குப் பெயர்.

வீதகவ்யன்

ஒரு இருடி. இவன் யோகத்தால் தன் தேசத்தைவிட்டுச் சஞ்சரித்துப் பிங்கலனார் பூமியிற் புதையுண்ட தேகத்தைப் பெற்றுச் சமாதியிருந்தவன். (ஞான வாசிட்டம்.)

வீதவவ்யன்

ஒரு அரசன். இவனுக்கு (100) குமாரர். இவர்கள் காசிராசன் குமாரரைக் கொன்றதால் காசியரசன் பாரத்துவாரை யடைந்து அவரால் யஞ்ஞ குமாரன் என்னும் புத்திரனைப் பெற்றான். அப்புத்திரன் நூற்றுவரையும் கொன்று இவர்களின் தந்தையைக் கொல்லச் செல்லுகையில் வீதவவ்யன் பிருருவினிடம் அடைக்கலம் புக அவனைப் பிராமணனாக்கி வைத்துக்கொண்டனர். இவன் அன்று முதல் பிராமணனாக விருந்து யாகத்தில் அநேகம் புத்திரர்களைப் பெற்றான். இவன் குலத்தவர் வேதியரானர்.

வீதி

அக்னி விசேடம்.

வீதிகோத்ரன்

1. இந்திரசேநன் குமாரன். 2. திருஷ்டகேது குமாரன். 3. தாளசங்கன் குமாரன்.

வீபற்சு

அருச்சுனனுக்கு ஒருபெயர். பகைவர் வெறுக்கப் போர் செய்பவன் என்பது பொருள்.

வீமசேநன்

1. காசிபருக்கு மநு என்பவளிடம் பிறந்த குமாரன். 2. பாண்டு புத்திரன். பீமசோனைக் காண்க.

வீமதேவன்

1. சிவன் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத்திரருள் ஒருவன்.

வீமத்தேர்மன்ன பாண்டியன்

சத்துருஞ்சய பாண்டியனுக்குக் குமாரன், இவன் குமாரன் வீமபராக்கிரமன்.

வீமநாதபண்டிதர்

1. தொண்டைமண்டலம் புழற்கோட்டத்தில் இலம்பூரிலே யிருந்து கல்விகற்று வல்லவராய்ச் சிவ தீக்ஷை பெற்றுக் கடம்பவன புராணம் பாடிய புலவர் திலகர். 2. இவர் தருமபுரவாதினத் தவர். கவி வல்லவர். உத்தரகோசமங்கைப் புராணம் பாடியவர்.

வீமன்

1. வீமசேநனுக்கு ஒரு பெயர், 2. குண்டினபுரத்தரசன்; தமன முனிவர் அனுக்ரகத்தால் தமயந்தியைப் பெற்றவன், நனனுக்கு மாமன். பிராமணனை அனுப்பித் தமயந்தியிருக்கும் இடமறிந்து வரச் செய்து அவளுக்கு மறு சுயம்வரமென வெளியிட்டு இருதுபர்ணனை வருவித்து அவனிடமிருந்த நளனைக்கண்டு மகளிடம் சேர்ப்பித்தவன். இவன் தேவி சாருகாசனி, இவன் புத்திரப்பேறு இல்லாமல் விச்வாமித்திரர் ஆச்சிரமஞ் சென்று அவர் உப்தேசத்தால் உருக்குமாங்கனைப் பெற்றவன், 3. சண்முக சேநாபதி.

வீமபராக்கிரம பாண்டியன்

வீமத்தேர் மன்ன பாண்டியனுக்குக் குமாரன். இவன் குமாரன் பிரதாபமார்த்தாண்டன்

வீமபாசர்

சம்பான் சேநாபதிகள்,

வீமரதன்

ஒரு பாண்டியன்.

வீமரதி

பீமாந்திக்கு ஒரு பெயர்,

வீமவாகு

திருதராட்டிரன் புத்ரன், நாலாநாள் யுத்தத்தில் வீமனால் இறந்தவன்.

வீமாசுரன்

1. இவன் தேவர்க்குத் தீமை புரிய, சிவமூர்த்தி பிரசன்ன திருகாமத்துடன் இவன் முன்தோன்றி இவனைச் சங்கரித்தனர். 2. இவன் சலாசுரன், சிலாசுரன் என்பவர்களுடன் கூடி அவ்விருவரையும் இரண்டு சிலம்புகளாக்கி விநாயகருக்கு முன் வைத்துப் பணிந்தனன். விநாயகர் அச்சிலம்புகள் இரண்டினையும் திருவடியில் அணிந்து வீமாசுரன் மீது எறிந்து அவ்விரன் அசரருடன் இவனையுங் கொன்றனர்.

வீரஆதித்தன்

சூரஆதித்தன் தந்தை.

வீரகன்

1, நந்திமகாதேவர் சிலாதரருக்குப் புத்திரராதற்கு முன் அழைக்கப் பெற்ற பெயர். இவர் கைலையைவிட்டு இறைவிநீங்கிக் கௌரியாகத் தவமியற்றச் சென்ற போது இறைவனிடத்து ஆடி யென்னும் அசுரனைவிட்டதால் பூமியில் சிலாதபுத்திரராகப் பன்னிரண்டு வருடமிருக்கச் சாபமடைந்து, புத்திரப்பேறு வேண்டித் தவஞ் செய்து கொண்டிருந்த சிலாதமுனிவருக்குச் சிவாஞ்ஞைப்படி படைச்சாலில் மாணிக்கப் பெட்டியில் நான்கு கரங்களும் சடைமுடியுமாக அவதரித்தனர். இதனைக் கண்ட முனிவர் சிவாஞ்ஞைப்படி அதனை மூடித்திறந்து காண ஒரு இளங்குழவியாயினர். தனக்குப் பதினாறு வயதென்று தாய் தந்தையால் கேள்வியுற்றுத் தவஞ் செய்து சிவ பெருமானால் அழியா நித்திய தேகம் பெற்றுச் சிவபெருமான் திருமுடி யில் திருக்கரம் வைத்துத் தீக்ஷைபுரிய அவரது சாரூப்யம் அடைந்து திருநந்திதேவர் என்னும் அபிஷேகப் பெயரடைந்து சுயசை என்னும் கன்னிகையை மணஞ்செய்விக்கக் கொண்டு சிவாலயங்களில் அதிகாரியாக இருத்தப்பெற்றவர். (சிவமகா புராணம்.) 2. பார்வதிதேவியாரின் துவாரபாலகன்; அடிதானவன் என்பவனைக் கட்டளையின்றிச் சந்தானத்தில் விட்டபடியால் கல்லாகச் சாபமடைந் தவன.

வீரகவிராஜ பண்டிதர்

திருச்செங்கோட்ப் புராணம் பாடிய புலவர்.

வீரகவிராயர்

இவர் ஆசுகவிபாடும் ஒரு தமிழ்ப்புலவர். ஊர் நல்லூர், அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் விருத்தத்தால் பாடியவர். இவர் சாவிவாகன சகம் (1446) இல் திருப்புல்லாணித் திருமால் எழுந்தரு ளியிருக்கும் தர்ப்பசயனத்தில் சக்கிர தீர்த்தக்கரையிலுள்ள மண்டபத்தில் அரங்கேற்றினவர். (அரிச்சந்திர புராணம்.)

வீரகோளரி

நவவீரரில் ஒருவன். முதல் நாள் பானுகோபனுடன் எதிர்த்து நாராயணாஸ்திரத்தால் மூர்ச்சித்தவன்.

வீரக்கல்

போரில் இறந்த வீரர் பொருட்டு அவரது வீரத்தைச் சிறப்பித்து நாட்டுங் கல்.

வீரக்கழல்

அரசர் தாம் முன்பு செய்த வீரச்செயல்களை அதனிடம் எழுதிய கழல். இதனை ‘ஒண்பொறிகழற்கால்” என்பதால் அறிக.

வீரசகன்

சுதர்சநன் என்னும் அரசன் குமாரன். இவனே மித்ரசகன்,

வீரசங்கரர்

சிவன் திருவுரு அல்லாததைப் பரிசியாத வீரசைவர். இவர் புத்தன் ஒருவனைப் பரிசித்ததாகக் கனாக்கண்டு விழித்துத் தீமூட்டி அதில் விழுந்து சிவபத மடைந்தவர்,

வீரசம்பன்

கி. பி. 1314 இல் வீரசோழன் குமாரனாகிய வீரசம்பன் என்ற அரசன் அரசாண்டு வந்தான். மத்தியகாலச் சோழரில் கடைசியாக ஆண்ட மூன்றாம் இராஜராஜன் வலிகுன்றிய காலத்திலே அவனது தண்டத்தலைவர்கள் பலர் சுயாதீனமடைந்தனர். அவர்களுள் சம்புவரா யர்களும் ஒருவர். இவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். அவர்களுள் இவனும் ஒருவன்.

வீரசம்பு

1. விஜயநகரத்து அரசன்; தக்ஷிணயாத்திரையாக வந்து திருவண்ணாமலையில் இரண்டாமதிவின் திருப்பணி முடித்துச் சென்றவன். 2. வந்தியகுல முதல்வன் என்பர். இவன் ஒரு யாகஞ்செய்ய அதில் வந்நியர் தோன்றினர் என்ப.

வீரசிகாமணிப் பல்லவராயன்

பட்டரையாச்ரயித்த அரசன். இவன் பல்லவர் குலத்தவன்.

வீரசிங்கன்

இலங்கையில் இருந்த அசுர சேநாபதி, இவனை வீரவாகு தேவர் இலங்கைக்குப் போகையில் போருக்கு முதற்பலியிட்டனர். இவன் இலங்கை நகரத்திற்குக் காவலாளி.

வீரசிங்காதன புராணம்

ஒட்டக்கூத்தர் பிச்சைக்கு வந்த சங்கமர் ஒருவரைக் கொன்ற தோடத்திற்காக சிலர் அவரைக் கொலை செய்ய வந்த காலத்து இவரைத் திருக்குடந்தை வீரசிங்காதன மடத்தார் ஆதரித்தமையின் அந்நன்றி மறவாது இப்புராணம் இயற்றினர் என்பர்.

வீரசித்து

பிரபூ என்பவன் குமாரன்

வீரசுந்தரப்பிரமராயன்

ஆழ்வான் சீடருள் ஒருவன்.

வீரசுவர்க்கம்

இது வாயு மண்டலத்திற்கு மேல் மேகமண்டலத்தில் வைத்துதி யாதாரமான மேகாசாய பட்டணத்தில் தேவேந்திரன் ஆஞ்ஞையால் வீரதேவதைகள் இருக்கும் இடம், பூமியில் யுத்தத்தில் இறந்தோர் தேவகன்னியருடன் மகாசகம் அனுபவிக்கும் பதம்.

வீரசேநன்

1. நிஷததேசத்து மகாசேநன் குமாரன், இவன் கிருதயுகத் தொடக்கத்தில் இனிச்சக்ரவர்த்தியாகப் போகிறவன். இவன் பன்னிரண்டு வருடம் சிவபூசை செய்து சிவானுக்ரகம் பெற்று மரத்தால் ஒருமீன் செய்து அதனை யீயத்தால் அலங்கரித்து அதற்கு மாயாசக்தி யுண்டாக்கித் தாருசையின் வனமடைந்து அநேகமாக்ஷதர்களை யதஞ்செய்தவன். (சிவமகாபுராணம்.) 2. வாலி நாட்டரசன்; இவன் ஷயரோகத்தால் வருந்தும் புத்திரனைக் கௌதம முனிவர் சொற்படி வேதாரண்ய தீர்த்தத்தில் மூழ்குவித்து ஆரோக்கியம் பெறச்செய்தவன். 3. நிடதகாட்டாசனாகிய நளனுக்குத் தந்தை. 4. விதர்ப்பநாட்டு அரசன், காசி சென்று தீர்த்தமாடிக் காமகலையிடம் காசிமான்மியங்கேட்டு முத்தியடைந்தவன். இவன் குமாரன் பிரசேகன். (காசிரகசியம்)

வீரசைவம்

இம்மதத்தவர் சைவ உட்சமயத்தவர். இவர்கள் வீரம் என்னும் ஆகமத்திற்கூறியவாறு ஒழுகுபவர். ஆதலால் வீரசைவர் எனப்படுவர். இம்மதவிஸ்தாரத்தைச் சித்தாந்த சிகாமணி முதலிய வீர சைவ நூல்களிற் காண்கப்ரதம மஹா சிருஷ்டியாரம்பத்தில் ஸ்ரீ பரமேச்வானது, ஈசானதி பஞ்சமுகோத்பவராய்ச் சுத்த சைவர் முதலிய சமஸ்தசைவரிலு முயர்ந்தவாராய், இதர சைவரைப்போல விசேஷக் கிரியையினால் அற்பபலனைப் பெறாது அற்பக் கிரியையினால் அனந்தபலனைப் பெறுபவராய் ஆக்ஞாதீட்சை முதலிய இருபத்தொரு தீகாபாராய், அறுபத்துநான்கு வித ஆசாரயுக்தாய், ஸ்நாகம், போஜனம், நித்திரை, மலமூத்திரவிசர்ஜனா காலங்களில் அசசி பாவனையின்றிச் சதாலிங்காங்க சம்பத்தராய், லிங்கபோகோப போகராய், தன்னிஷ்ட லிங்கத்தில், ஆவாகன விசர்ச்சனக் கிரியைகளைச் செய்யாதவராய், தரிகால லிங்கார்ச்சனா சக்தராய், லிங்கலோபம் பூஜாலோப முதலியன நேர்ந்தால் பரான தியாகமல்லது வேறு பிராயச்சித்த மில்லாதவராய்க் குரு, விங்க, ஜங்கமப்ரசாத, பாதோதக, பஸ்ம ருத்ராக்ஷ தாரண சிவா சம, சிவஷேத்ர, சிவாசாரநிந்தைகளைப் பொருதவராய்த் தமது இஷ்ட லிங்கக் தவிர, வேறு தேவர்களையும், ஸ்ரீபாத தீர்த்தந்தவிர கங்கை முதலிய வேறு எவ்வித தீர்த்தங்களையுங் கனவிலும் விரும்பாதவராய், தேகத்தில் சிவலிங்கதாரண மில்லாத பவிகளுடன், ஏகாசன, சயந, யாக, சம்பாக்க, சக போஜனங்களில்லாதவராய், அமிர்தம், அஸ்திர வாக்கியம், வஞ்சனை, பந்திபேதம், உதாசினம் நிர்த்தயை யென்னும் ஆறுவித அந்தரங்கபவிகள்ல் லாதவராய்ச் சிவமஹேச்வரர்களைக் கண்டால், எழுதல் எதிர் கொள்ளல், கூடித்திரிதல், இதவசனஞ் சொல்லல், ஆசனத்திருத்தல், அன்னமிடல், பானஞ்சமர்ப்பித்த வென்னும் முத்தி சோபான சத்தக்கிரமயுக்தராய், ஜாதி, ஜான,ப்ரேத, உச்சிஷ்ட, ருது வென்னும் பஞ்சகதகங்களையும் விட்டவராய், லிங்கா சார முதலிய பஞ்சாசாரநிஷ்டராய், தாசத்வம், வீரதாசத்வம், பிரத்தி யத்வம், வீரப்ரத்தியத்வம், சமயாசாரத்வம், சர்வசாஸ் திரத்வமென்னும் ஆறுவித சர்ச்சனயுக்தராய், தேசகால கற்பிதாதி லௌகிகாசாரங்களை மீறிய சுதந்தாசிலராய், சிவாத்மருக்குப் பேதப்பிராந்தி நினையாதவராய் உப நிஷத்தவாக்ய ஜநித வித்தையில் பொருந்து பவாராய், ஜகத்பூஜ் யராய் உள்ளவரே வீரசைவராவார். இவர்களுள் வீரசாமான்யர், வீரவி சேஷகர், வீரநிராபாரியார் என முத்திறத்தினர் உளர். இம்மதம், ஷடும் தல மறிந்து அவ்வழியின்று சிவனை வழிபட்டோன் முத்தியடைவன் என்னும், ஷடுத்தலமாவன: பத்தத்தலம் 15, மகேசத்தலம் 9. பிரசாதித் தலம் 7. பிராண லிங்கத்தலம் 5. சரணத்தலம் 4. ஐக்கியத்தலம் 4 ஆம். பந்தத்தலம் 15 ஆவன: பிண்டத்தலம், பிண்டஞானத் தலம், சமுசார நீக்கத்தலம், குருகாருண் யத்தலம். இலிங்கதாரணத்தலம், விபூதி தாரணத்தலம், உருத்திராக்கதாரணத்த லம், பஞ்சாக்காத்தலம், பத்தத்தலம், உபயத்தலம், திரிவிதசம்பத்தித்தலம், சதுவிதாசாரத்தலம், உபாதிதானத்தலம், நிருபாதி தானத்தலம், சகசதானத்தலம் என்பன. மகேசத்தலம்: 9. அவை; மகேசுசத்தவம், இலிங்கரிஷ்டைத்தலம், பூர்வாச்சிரம நிரசனத்தவம், அத்துவிதநிரசனத் தலம், ஆவாகனகிரசனத் தலம், அட்டமாத்தி நிரசனத்தலம், சர்வகதநிரசனத்தலம், சிவசகன்மயத் தலம், பத்ததேதிகதேவத் தலம். பிரசாதித்தலம் 7. அவை: பிரசாதித் தலம், குருமான்மியத்தலம், இலிங்கமான்மியத்தலம், சங்கமமான்மியத் தலம், பத்த மான்மியத்தலம், சரணமான்மியத் தலம், பிரசாதமான்மியத் தலம், பிராணலிங்கத்தலம் 5. அவை: பிராணலிங்கத்தலம், பிராண லிங்கார்ச்சனைத்தலம், சிவயோக சமாதித்தலம், இலிங்கநிசத்தலம், அங்கலிங்கத்தவம். சரணத்தலம் 4. அவை: சரணத்தலம், தாமசநிரசனத் தலம், ஞானநிர்த்தேசத்தலம், சீலசம்பர தனைத்தலம், ஐக்கியத்தலம் 4. ஐக்கியத்தலம், சர்வாசாரசம் பத்தித்தலம், ஏகபாசனத்தலம், சகபோசனத் தலம். ஆக இந்த (44) தலங்களும் கடந்த அநுபவி, பாலிங்க ஷடுத்தல மறிதல் வேண்டும். அவை விரியில் (57) ஆம், அவை: இலிங்கத் தலத்தில் தீக்ஷாதருத்தலம், சிக்ஷாகுருத்தலம், ஞான குருத்தலம், கிரியாவில் கத்தலம், பாவலிங்கத்தலம், ஞானலிங்கத்தலம், சுயத்தலம் சரத்தலம், பாத்தலம். மகேசுரத் தலத்தில் கிரியாகமத்தலம், பாவாகமத் தலம், ஞானாகமத்தலம், சகாயத்தலம், அகாயத்தலம், பாகாயத்தலம், தருமாசாரத்தலம், பாவாசாரத்தலம், ஞானாசாரத்தலம். பிரசாதித் தலத்தில் காயாநுக்கிரகத் தலம், இந்திரியானுக்கிரகத் தலம், பிராணா னுக்கிரகத்தலம், பிரசாதகாயாற்பிதத்தலம், பிரசாதிகாணாற்பிதத் தலம், பிரசாதிபாவாற்பிதத்தலம், பிரசாதிரீடத்தலம், பிரசாதிசிசுருகைத்தலம், சேவியத்தலம் இவற்றை யறிதல் வேண்டும். பின் பிராணலிங்கத் தலத்தில் சீவா தமத்தலத்தைச் சுருக்கிக் கூறுகிறேன். சீவாத்மத்தல மாவது படிகம் செம்பரத்தம்வுடன் சேர்ந்து சிவப்பானது போல் உட லோடுழலுகிற சீவாத்மாவைப் பிரித்துச் சீவனெனவறிதல், பிராணலில் கியந்தராத் மத்தலமாவத் பக்ஷவேறு கூடுவேறு போன, உயிர்வேறு உடல் வேறாய்ச் சிவன் சிவபானை கூடல், பிராணலிங்கிபரமாத் மத்தலமாவது அந்தராத்மா, காண முதலியவற்றிற் கூடாமல் அறிவு ருவாய்ப் பிரதிருதி புருஷரூபமான பலஜெசுத்துருவாய் நிற்கும் பரமாத்மாவைக்கூடல், பிராணலிங்க நிர்த்தேதாகமத்தலம் பரமாத்துமா வான சரணன் தேகதருமங்களுடன் சேராமலிருத்தல், பிராணலிங்க நிற்பாவாகமத்தலம் பரம் நான் என்பதும் அப்பாவனையு மில்லாம லிருத்தல். பிராணலிங்கி நாட்டாகமத்தலமாவது ஞாதுரு ஞானஞேயம், முற்றும் லயமாய்ப் பேதங்கெட்டிருத்தல். ஆதிப்பிர சாதித் தலமாவது சிவப்பிரசங்க பிரசாதமாகிய சச்சிதானந்தத்தையடைந்து சாநங்கல். பிராணலிங்கியந்தியப் பிரசாதிலிங்கத்தலமாவது, எல்லாப் பொருள்களு மடங்குமிடமாய்ப் பரமாநந்தமயமாதல், சேவியப்பிரசாதித் தலமாவது குருசேவை யாலுண்டான பிரசாதஞ்சத்தியமெனச்சிற் பாசுகங் கண்டிருத் தல், சரணத்தலத்தில் தீக்ஷாபாதோதகத் தலமாவது ஆசானுடன் சீடன் ஆகந்தத்தில் அமிக்கியமாகச் சிறந்த தீக்ஷையால் தீர்ந்து பெரிய ஞானமாம். சிக்ஷாபாதோதகத்தலமாவது குருசீட மயமான சிக்ஷையால் சிவஞான அமிர்தம்பருகியிருத்தல். சரணஞானபாதோதகத் தலமாவது ஞானத்தை யளிக்கின்ற ஞானகுருவளித்த ஞானபாதோதகங் கொண்டு அகமகிழ்தல். கிரியாநிஷ்பத்தித் தலமாவது பரிபூரணப்பொருளான யோகி, சித்திகளை விரும்பாதிருத்தல். பாவநிஷ்பத்தித்தலமாவது தன்னைவிட்ட கலாத சிவனிடத்தில் பாவனை செய்தல். ஞானநிஷ்பத்தித் தலமாவது சொப்பனப்பொருள் சாக்கிரத்தி லில்லாதது போல நானென தற்றுச் சிவமே தானாகி ஞானஞேயத் தழுந்தல். பிண்டாகாசத் தலமாவது கடாகாசமும் வாரியிலா காசமும் மகாகாசமானது போல அறிவான இலிங்கம் சிவனுக்குக் கோயிலான தேகத்தில் பரிபூரணமாகப் பிரகாசித்தல். விந்தாகாசத்தவமாவது, பூதந்தோறும் வாயுவிருப்பினு நிறைவாமாறுபோல் பூரணமாயிருத்தல், மசதாகாசத்தலமாவது அண்டபிண்டத்திலிருக்கும் ஆகாசம் வேராகா திருப்பதுபோல் பரமான்மா வேறல்லனாய் உடலுயிருமாயிருப்பதை யறிதல். அதாவது கரணங்கூடாத வுணர்வில் சரணன் லயித்துத் தானில்லாமற் போதல், பாகப்பிரகா சத்தலமாவது அலைதிரை குமிழின்யின் கடலிற் றோன்றுவது போல் உணர்வில் லோகாதிலோகங்களும் கரணமந் தோன்றக்கா ணல், ஞானப்பிரகாசத்தலமாவது உலக உபாதிகளிறந்து சொல்லப் போகாத உணர்வாயுள்ள சிவஞானம். இனி ஐக்கியத்தில் சுவிதிர்த பிரகாசத்தலமாவது ஆதியந்த முக்கிய லகணமிறந்ததாய்ப் போதமான சிவப்பிரசன்ன பிரசாதத்தால் சிதாநந்த பரிணாமத்தையடைந்து பூதாதிகளிற் பேதமகன்று நிற்றல். சிட்டோதனத்தலமாவது பொறிகளாலுணரப்படும் புலன்கள் கடலிலுள்ள வடவை போல் ஞானியிடத்து அடங்கிநிற்க ஞானியவற்றிற் பொருந்தாமல் மாயையை நீங்கியிருத்தல், சராசாலயத் தலமாவது செகத்துருவமாயிருக்கும் மாயையைத் தன்னிடங் கிரகித்துச் சிவன் முனேயாய் நிற்றல், பாண்டத்தலமாவது பாநரதுள்ள விமரிசமாகிய பாண்டத்தில் விரிந்த தத்துவங்கள் யாவையும் அடங்க வைத்துத் தன்னையே கண்டிருத்தல், பாசனத்தலமாவது அண்டங்களெல்லாம் முத்தொழிற்படுதற் கேதுவாகிய விமரிச்சத்தி எதன்கணிருக்குமோ அந்த வறிவே ஞானமாகக் கண்டிருத்தல், அங்காலேபத்தலமாவது காலந்திக்கிவையாதிகளால் கண்டித மின்றி யிருக்குங்கோலம் சச்சிதானந்தமாம். இவ்வகைச் சீலங்கொண்டிருத் தல். சுபாரஞ்சத்தலம் உணர்வுமயமான சிவன் இலயமாய்த் தானே தானாகி நோனென் றறியாமல் முன்னே வேந்தனும், பின்னே பெத்தனும், ஞானியும், சுஞ்ஞானியும், அல்லவாய் பரமசூன்ய மாயிருத்தல். பாவாபாவத்தலமாவது உவமையற்ற சிவத்திற்கலந்து ஒன்றாய்ச் சிவோகஞ்சிந்தை நிட்பா வமில்லாமல் நிற்குணப்பிரமமாய் நிற்றல், ஞானசூனியத் தலமாவது நீர் நீரிலும், நெருப்பு நெருப்பிலும், சேர்ந்தது போல, சித்தான அங்கமும் பூரண நிற்குண சூனியலிங்கத்தில் லயித்து ஏகமாய்ச் சர்வமும் சூன்யமாய் நிற்பது. இதுவே மோக்ஷம். (தத்துவநிஜாநுபோகசா.)

வீரசோளவ்வை

ஒரு வீரசைவி. இவள் உருசியாய்ப் பிட்டுச்செய்து அருந்தினள். அது உருசியாயிருந்ததினால் தன் குமாரியிடம் அதைத் தந்து சிவமூர்த்திக்கு நிவேதிக்கக் கட்டளையிட்டனள். அவ்வகைக் குமாரி செய்யச் சிவமூர்த்தி வாங்கி உண்டனர். (வசவபுராணம்)

வீரசோழன்

சிவலிங்க சோழன் குமாரன். இவன் ஏமவல்லி யென்னும் மனைவியுடன் கூடி (87) வருஷம் அரசாண்டு பல சிவதிருப்பணிகள் செய்வித்துச் சமுத்திரத்தில் முகத்துவாரம், பாலம், தன்பெயரால் நதி முதலிய உண்டாக்கித் தன் குமாரன் கரிகாலனுக்குப் பட்டமளித்து முத்தி பெற்றவன்.

வீரசோழியம்

வடமொழியிலக்கணத்தைத் தமிழில் முதன் முதலாகக் கூறிய இலக்கண நூல்; இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி முதலியவற்றைச் சுருக்கி கூறுவது. இது பொன்பற்றியூர்ப் புத்த மித்திர னால் இயற்றப்பட்டது. சைவர் இதனைக் கற்பனை யென்பர். இந்நூல் அக்காலத்தாண்ட வீரசோழன் என்ற பட்டர் தரித்த விரராஜேந்திரன் (1060~1069) பெயராற் செய்யப்பட்டதாலிப் பெயர் பெற்றது.

வீரணன்

ஒரு பிரசாபதி,

வீரதாசன்

வீரபாகுவிற்குத் தாசனாய் இருந்த அரிச்சந்திரன் பெயர்.

வீரதாமன்

குரோதகீர்த்தியின் குமாரன்.

வீரதீரன்

நவவீரரில் ஒருவன்.

வீரதுய்மன்

1. ராஜரிஷி. பூரித்துய்மனனுக்குத் தந்தை. இவன் தநு என்னும் பெயருள்ள பிராமணனுடன் சம்வாதம் செய்தவன், (பா. சா) 2; பூரித்துய்மன் தந்தை. இவன் தன் குமாரனைத் தேடிக்கொண்டு தனுஷியிடம் சென்று ஆசையினளவு வினாவியர். பின் புத்திரனைக் கண்டவன். (பார சார்.)

வீரநகரம்

தேவிகாசதி தீரத்தில் புலஸ்திய பிரமதவஞ் செய்த இடம்,

வீரநாராயணச்சோழன்

இவன் பராந்தகச்சோழன் (907~947) என்னப்படுவோன். இவன் பாணவம்சத்தை வரறுத்து அவர்கள் நாட்டைக் கங்கவம்சத்தைச் சார்ந்த அத்திமல்லனுக்குக் கொடுத்தவன். இவன் சிதம்பரம் கனகசபை பொன் மேய்ந்தவன்.

வீரன்

1. திரிமதி என்பான் குமாரன். 2. காசிபருக்கு ஆயு என்பவனிடம் பிறந்தவன். 3. சண்முகசேநாவீரன். 4. இவன் ஒரு தமிழ்ப்புலவன். வல்லத்துக் கச்சியப்ப முதலியார் பல்லக்குச்சவாரி செய்து வந்தபோது முதலியாரைத் தன் செருப்புக்காலால் உதைத்தவன். இவ்வகை செய்த புலவற்கு முதலியார் பரிசு முதலிய அளிக்கப் பெற்றவன். 5. குபன் குமாரன்; இவன் தேவி நந்தினி; குமாரன், விவிமசன். 6. மதுரை வீரனுக்கு ஒரு பெயர். 7. பரதுவாஜன் என்னும் பெயருள்ள அக்கினியின் புத்திரன்.

வீரபத்தினி

கண்ணகி, நெடுஞ்செழியனை வழக்கில் வென்று மதுரையைக் கற்பால் எரித்தவள், (சிலப்பதிகாரம்).

வீரபத்திர முதலியார்

இவர் தொண்டை நாட்டில் கண்ணூரில் இருந்த வேளாளர், இவர் யாசகரை வலிய அழைத்துத் தமது தோட்டத்தில் இருந்த கரும்பைத் தின்னச்செய்து கூலியுங் கொடுத்தவர். “உத் தமகங்காநதி மரபின்'” என்னுஞ் செய்யுள் இவர்மீது பாடப்பட்டது.

வீரபத்திர விரதம்

இது செவ்வாய்க்கிழமை தோறும் வீரபத்திரக்கடவளை யெண்ணிச் செய்யும் விரதமாம்.

வீரபத்திரர்

1. தக்கன், சிவமூர்த்தி தன்னை மாமன் என்று மதியாது இருந்ததைப் பற்றிச் செருக்கடைந்து சிவமூர்த்தியை இது ஓர்வேள்வி செய்யத் தொடங்கினன். அவ்வேள்வியை நாரதரால் அறிந்த தாக்ஷா யணி சிவமூர்த்தியிடம் விடைபெற்று வேள்விச்சாலையை அடைந்தனள். தக்ஷன் தாக்ஷாயணியை அன்புடன் வருவிக்காததால் கோபித்து வேள்வி சுடலையாகச் சபித்துச் சிவமூர்த்தியை யடைந்தனள் இவள் மன வேறுபாட்டைக்கண்ட சிவ மூர்த்தி தமது திருச்சடையில் ஒன்றைப் பூமியில் மோதினர். அதினின்றும் வீரபத்திரர் அவதரித்தனர். இவர் இறைவன் கட்டளைபெற்றுத் தம்முடன் தோன்றிய பூதகணங்களுடனும் தாக்ஷாயணி அனுப்பிய காளியுடனும் சென்று தக்கனது வேள்வியை அழித்தனர். இவ்வேள்வியில் இந்திரன் குயிலாய்ப் பறந்தோடினன். அக்னி நா அறுப்புண்டான். பூஷா என்னும் சூரியன் பல்லிழந்தான். சந்திரன் வீரபத்திரர் காலால் தேய்ப்புண்டனன். தக்கன் தலையறுப் புண்டனன். இதுநிற்க, காளி யொருபுறத்து இருந்து சரஸ்வதி, லக்ஷ்மி, இந்திராணி முதலியவர்களை உறுப்பழித்தனள். இதனால் யஞ்ஞ புருஷன் பயந்து மான் உருக்கொண்டு ஓட, ஒரு பூதம் மானின் தலையைத் திருகியது. இவ்வகை வெற்றிபெற்று வீரபத்திரரென்னுந் திருநாமம் அடைந்து வீரமாகாளியுடன் அமர்ந்த சிவமூர்த்தியின் அம்சம். இவர் அசகரன், பஞ்சமேட்டிரன், அக்னி முகன், சற்பாசுரன், வியாக்ரன், வீரமார்த் தாண்டன் முதலியவரைக் கொன்றவர், தக்கன் யாகத்தில் இவரது கோபந்தணிய விஷ்ணு அசரீரியின் சொற்படி பினாகத்தின் நாணியை அறுத்தனர் என்ப. 2. ஒரு தமிழ்க் கவிஞன், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகத்தைத் தமிழில் செய்யுளாக இயற்றியவன். 3. ஒரு அரசன். சற்பாத்திரதானத்தால் புண்யலோக மடைந்தவன். (பிரகன்னார தீர புரா.)

வீரபாகு

அரிச்சந்திரனை யடிமை கொண்ட தோட்டி, காலனம்சம்,

வீரபாண்டியன்

1. மதுரைநகர் ஆண்ட பாண்டியரிலொருவன். குடிகளின் வேண்டுகோளின்படி வேட்டைக்குச் சென்று அறியாது காலமுநிவரின் கையைத் துணித்துச் கயநோய் கொண்டவன், 2. உக்கிரகுமார பாண்டியனுக்குக் குமாரன். இவன் காலத்திலே சிவமூர்த்தி இருடிகள் வேண்டுகோட்படி வேதத்திற்குப் பொருள் அருளிச்செய்தனர். இவன் வேட்டைக்குச் சென்று புலியால் இறந்தான். 3. இவன் பாண்டி நாட்டை யாண்ட புத்தராசா, இவன் சைானாகி மாறினதால் புத்தர் துரப்புண்டனர். 4. இவன் பாண்டிநாட்டரசருள் ஒரு வன். தந்தையிறக்க அவனது எலும்புகளை வில்வாரண்யத்தில் விருத்தப் பிரயாகையில் தோய்க்க அவை பொற்றாமரைகளாக இருக்கக்கண்டு களித்துச் சிவதருமஞ்செய் தவன். (வில்வாரண்யபுராணம்.) 5. ஒரு பாண்டியன். இவனுக்கு அபிராமன் எனவும் பெயர். இவன் சேரருடன் வல்லமெனும் ஊரில் யுத்தம் புரிந்தவன், பற்றலர் மண்கொள்ளும் பணிந்தார்க்கா களிக்கும், கொற்றமுயர்க்குமறங் கூறுமே விற்றுவசம் வில்லவனை வென்னுகொண்ட வீரமாறன் செழியன், வல்லமெறிந்தா னேந்துவாள். தென்காசிசாசனம். இவன் காலம் கி. பி 1588.

வீரபானு

வீரமாயேந்திரத்தின் கீழைக் கோபுரவாயிற் காவலாளி.

வீரபார்க்கவ பாண்டியன்

மதுரையையாண்ட (31) வது பாண்டியன்.

வீரபுரந்தரன்

நவவீரரில் ஒருவன், அக்னி முகன் யுத்தத்தில் சோமுகனைக் கொன்றவன்.

வீரபோகவசந்தராயர்

விஷ்ணுகாச்மீரதேசத்து சயசிங்கு மகாராஜா விற்கு இப்பெயருடைய பிள்ளையாகவும், சிவன் சிதம்பர தீக்ஷிதராக வும், பிரமன் சாமயோகி ஐயராகவும் பிறந்து தர்மத்தை நிறுத்தினவர்கள். Triennial Catalogue of Manuscripts issued by the Oriental manuscripts library, Madras.

வீரமாகாளர்

மகாகாளரைக் காண்க,

வீரமாமகேந்திரன்

நவவீரரில் ஒருவன்.

வீரமாமகேந்திரம்

சூரபன்மன் பட்டணம்.

வீரமாமயேச்சுரன்

நவவீரரில் ஒருவன்.

வீரமாமுனி

இவர் ஒரு ஐரோப்பிய உரோமன் கதோலிக்மதக்குரு. இவர் 1680 வருடம் நவம்பர் மாதம் பிறந்து கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் பெயருற்று இர்தியாவிற்குக் குருவாய் வந்து தமிழ் கற்று மத போதகஞ்செய்து தமிழில் தேம்பாவணி, வேதியரொழுக்கம் பாடியவர். இவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை எதிர்த்துச் சைவ தூஷணமாக வார்த்தை கூறச் சுவாமிகள் இவரை வென்று சைவ தூஷண நிக்ரக மெனும் நூல் செய்து மறுத்துப்பின் ஏசுமதசங்கற்ப நிராகரணமென ஒரு நூல் செய்து நிராகரித்தனர். இதனாலிவர் வெட்கி நீங்கினர். இவரைக் கிறிஸ்தவர் வீரமாமுனி அல்லது தைரியநாதர் என அழைப்பர். இவர் செய்த வேறு நூல்கள், சதுர அகராதி, தொன்னூல், அன்னையழுங்க லந்தாதி, அடைக்கலநாயகிக் கலம்பகம் முதலியன. இவர் திருநெல்வேலிக்கடுத்த மணப்பாடு எனும் பட்டணத்தில் தேகவியோகமாயினர். இவரை தத்வ போதக சுவாமி, தைரியநாத சுவாமி எனவும் கூறுவர்.

வீரமார்த்தாண்டசோழன்

இவன் தேவி சேரராசாவின் குமரியாகிய மாணிக்கவல்லி. இவன், புரோகிதராகிய தேவசன்மரால் கொங்கணே சார் சரித்திரங்கேட்டு (66) வருஷம் அரசாண்டு தன் குமரன் கீர்த்தி வர்த்தன சோழனுக்கு முடிசூட்டிச் சுவர்க்க மடைந்தனன்.

வீரமார்த்தாண்டதேவன்

இவன் செங்குந்தர்மரபில் வந்த தமிழ்ப் புலவன், பஞ்சதந்திரக் கதையினை விருத்தப்பாவால் இயற்றியவன்.

வீரமார்த்தாண்டன்

1. நவவீரரில் ஒருவன். 2. பிரமதேவன் வரத்தால் தேவர்களை வருத்தி வீரபத்திரரால் இறந்த அசுரன்,

வீரமுட்டிகள்

இவர்கள் வீரசைவரில் ஒரு வகையார். தேவாங்கர், கோமட்டிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தொழில் கூத்தாடுதல். இவர்கள் வசவண்ணர் காலத்து மடத்தைக் காவல் செய்திருந்தவர்கள். இவர்கள் சிவாலயங்களில் உற்சவகாலத்தில் உற்சவமூர்த்திக் கருகில் சிவகணத்தவரின் வேடம் பூண்டு உற்சவ மூர்த்தியுடன் வருவோர். முன் சொன்ன வீரமுஷ்டிகளுக்கு வீடுகள் இல்லை, தரையில் படுக்கை; துடப்பம் உபயோகிக்கார்; அவர்களுக்கென்று அடுப்புக்கட்டார். இவர்கள் நாடோடிகள். (தர்ஸ்.)

வீரம்

இது நாடகவிகற்பத்துள் ஒன்று. இது, அங்கமிரண்டு முதலா வாறிரண்டு மெய்தப் பெற்றுச் சந்தியைந்த முடைத்தாய் வாரங்காண்டம் பெற்றும் பெருதும், தலைமகனொருவனாவது. (வீரசோ.)

வீரராக்கதன்

நவவீரரில் ஒருவன். பானு கோபனுடன் யுத்தஞ்செய்து முதனாள் யுத்தத்தில் மூர்ச்சித்தவன்.

வீரராஜேந்திரன்

இவன் இராஜமஹேந்திரனுக்குப்பின் பட்டமடைந்த சோழமன்னன். வீரசோழியத்தில் எல்லாவுலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராஜேந்திரன், என்று புகழப்பட்டவன் இவனே. கி. பி. 1060~1069ல் அரசாண்டவன். இவனும் சாளுக்கியருடன் யுத்தஞ் செய்து ஆகவமல்லன் குமாரன் விக்ரமாதித்தனைத் துரத்தி இவன் மகன் இருகையின் மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்துத் திரும்பினான். இவன் இரண்டாமுறை சாளுக்கியருடன் போரிட்டு ஆகவமல்லன் பாசறையை நாசப்படுத்தி அவனது வராகக்கொடியையும் அவன் மனைவியரையும் பிடித்தனன். இவன் பொத்தப்பி நாட்டரசனையும், கோளத்தரசனையும், தாராதேசத்து சநநாதன் முதலியரையும் வென்றான், பாண்டிநாடு இவனாற் கொள்ளப்பட்டது. இவனை ஆகவுமல்லன் போர்க்கழைத்து வராமலிருக்க இவன் அவனாட்டைத் தீக்கிரையாக்கிக் கரடிக்கல் எனுமிடத்தில் ஒரு ஜயஸ்தம்பம் நாட்டினான். பின் தகவ மல்லன் குமாரன் சரணடைய அவனுக்கு இரட்டப்பாடியைக் கொடுத்துக் குந்தன ராஜ்ய இளவரசும் தந்தான். இவன் தன் குமாரி யையும் மணம்புரிவித்தான். இவன் வேங்கை நாட்டைக் கைக்கொனக் கருதிப் போரிட்டுக் கலிங்கமும், சக்கரக் கோட்டமும் பற்றி அவைகளை முதற்குலோத்துக்கன் சிற்றப்பனாகிய விஜயாதித்தனை ஆளச் செய்தான்.

வீரராந்தகன்

நவவீரரில் ஒருவன்,

வீரவல்லிப்பிள்ளை

பிரமதந்திர சுவதந் திரஜீயர்; திருவடி சம்பந்தி.

வீரவாகு

1. விசுவசேநனைக் காண்க. 2. சேதிநாட்டரசன்; சபாகுவின் தந்தை. இவன் வீட்டில் தமயந்தி வளர்ந்தாள்.

வீரவாகுதேவர்

உமையம்மையின் திருவடிச்சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறின. அவற்றைப் பிராட்டியார் திருக்கண் சாத்தியருள, அவை ஒன்பது பெண்களாயின. அவ்வொன்பதின்மரையும் சிவ மூர்த்தி நோக்க, அவ்வொன்பதின்மரும் கருத்தாங்கினர். அதனால் உமை கோபிக்க, நெடுரான் கருவுயிர்க்காது. இருந்து பின் உமையைப் பூசித்து வேவீரரைப் பெற்றனர். அவர்களில் முதலிற் பிறந்தவர் வீரவாகுதேவர். இவர் நந்திமாதேவர் அம்சம். இந்த நவவீரரும் சிவாஞ்ஞையால் குமாரக்கடவுளுக்குத் துணைவராகச் குமாரக்கடவுள் சந்நிதியில் எழுந்தருளியிருந்தனர். (1) இவர் ஒருகாலத்து நாரதர் வேள்வியிற் பிறந்த ஆட்டினைக் கந்தமூர்த்தியின் ஏவலால் பிடித்து வந்தவர். (2) தாருகனுடன் யுத்தஞ்செய்து இரவுஞ்சத்தில் மறைந்த அவனைத் தொடர்ந்து அம் மலையிற் சென்று அவன் மாயையால் மூர்ச்சித்து உள் கிடந்து குமாரக்கடவுள் ஏவிய வேலாயுதத்தால் பர்வதம்பிளவு பட வெளி வந்தவர். (3) குமாரக்கடவுளின் கட்டளை தாங்கி வீரமாயேந்திரத்திற்குத் தூதாகச் சென்ற கந்தமாதன பர்வதத்தின் மீதேறிக் கடலில் இருக்கும் இலங்கையைக் கண்டு தாவி அதில் சென்று வீரசிங்கனுடன் போரிட்டுக் கொன்று இலங்கை நகரத்தின் நடுச்சிகாத்தைக் கடலில் தள்ளி அந்நகரத்து இளவாசாகிய அதிவீரனைக் கொன்று அவ்விடம் நீங்கி அந்தரவழியாகத் தாவுகையில் எதிர்த்த கசமுகனைக் கொன்று அணுவுருக்கொண்டு மயேந்திசஞ்சென்று சயந்தனுக்கு உறுதி கூறிச் சூரன் சபை புகுந்து அவன் முன் வேறு சிங்காதனத்து இருந்து தேவர் சிறை விடக் கூறினவர். (4) சூரன் மறுப்ப, மீள்கையில் எதிர்த்த சதமுகனை வதைத்துப் பின்பு காவலரை வதைத்து வச்சிரவாகுவுடன் எதிர்த்து அவனைக் கொலை புரிந்து, யாளி முகனை வதைத்து முதல்நாள் பானுகோபனுடன் யுத்தஞ்செய்து அவனைப் பின்னடையச் செய்து, இரண்டாம் நாள் சூரபன்மனுக்கு ஆற்றாது நீங்கிக் குமாரக் கடவுள், அவனைப் பின்னடைவித்ததால் சளிப்படைந்து, மூன்றாம் நாள் பானுகோபனுடன், யுத்தஞ்செய்து அவனால் கட்டுண்டு கடலிற்கிடந்து குமாரக்கடவுள் வேலாயுதத்தால் மீண்டு, இரணியனுடன் யுத்தம்புரிந்து அவனைப் பின்னடையச்செய்து அக்னி முகனுடன் யுத்தம் புரிகையில் அவனுக்கு உதவிவந்த பத்திரகாளியின் வலியடக்கி அவன் மார்பில் அறைந்து அக்னி முகனைக் கொன்றனர். பின் அக்னிமுகனால் இறந்த தம்பியார் எழுவரையும் யமனுக்கு ஒலையிட்டு அவர்கள் உயிரை வருவித்தவர். நாலா நாள் தரும் கோபன் ஏறியிருந்த புண்டரீக மென்னும் யானையைச் சுழற்றி ஆகாயத்தில் எறிந்து அவனையுங் கொன்று, ஐந்தாம் நாள் பானுகோபனுடன் யுத்தஞ்செய்து அவன் கரத்தை வெட்டி அவனையு மாய்த்து ஆறாம் நாள் சிங்கமுசனுடன் யுத்தம் புரிந்து அவன் மாயாபாசத்தால் கட்டுண்டு உதயகிரியில் இருந்து குமாரக்கடவுள் ஏவியபாணத்தால் மீண்டு ஏழாம் நாள் சூரபன்மனுடன் யுத்தஞ்செய்து மூர்ச்சித்துக் குமாரக்கடவுளின் கருணையால் அவரை யடைந்தவர். (கந்தபுராணம்)

வீரவாகுபாண்டியன்

சகந்நாதபாண்டியனுக்குக் குமாரன்.

வீரவாசி

திருதராட்டிரன் குமாரன்.

வீரவிரதன்

மது என்பவனுக்குச் சுமனசியிடத்து உதித்தகுமாரன். தேவி பொசை, குமாரர் மன்னியு, பிரமன்னியு.

வீராக்கியகண்ணியன்

அண்டங்களை வருத்திச் சிவமூர்த்தியால் விழுங்கப்பட்ட அசுரன்.

வீராசுரன்

சத்தியால் கொல்லப்பட்ட அசுரன்.

வீராட்டகாசன்

சிவமூர்த்தி பேதம்.

வீராதிபன்

மகேந்திரபுரியின் வாயிற்காவலன்.

வீராள்

நாலாமன்வந்தரத்துத் தேவசாதியர்.

வீரிணி

தட்சப்பிரஜாபதியின் பாரியை, பிரம்மாவின் பாதாங்குஷ்டத் தில் பிறந்தவள். இவளுக்கு அசிக்கினியென்பதுவேறு பெயர். இவன் (60) பெண்களைப் பெற் முள். (பா~ஆதி.)

வீரியன்

இவன் கலிங்கநாட்டு வேதியன். ஒழுக்கம் குறைந்து மாமிசம் விற்றுச் சாந்தருணத்தில் சிவஸ்மாணையால் முத்தி பெற்றவன்.

வீரேசலிங்கம்

இது காசியிற் பிரதிட்டிக்கப்பட்ட சிவப்பிரதிட்டை, இதனருகில் பிரகடை, விகடையென்னும் தெய்வப் பிரதிட்டையுண்டு. இந்த வீரேசலிங்கத்தினை வசுபூர்ணன், அரம்பை, வேதசிரசு முனிவர், சங்கசூடன், கின்னரமாது, சயத்திரகன், வசுதத்தன் முதலியோர் பூசித்து இஷ்டசித்திபெற்றனர். (காசி~ம்.)

வீரை

1, துச்சயன் மனைவி; மது மயக்கத்தால் யானையின் முன் சென்று உயிர்விட்டவள், தாரை, இலக்குமி என்பவர்களின் சகோதரி. மறுபிறவியில் சுதமதியாகப் பிறந்தவள். (மணிமேகலை) 2. சத்தியால் வக்ராசுரன் முதலியோரைக் கொல்லச் சிருட்டிக்கப்பட்ட துர்க்கை,

வீரைக்கவிராஜபண்டிதர்

இவர் சௌந்தர்யலகரி தமிழிற் பாடிய புலவர்.

வீரைவெளியனார்

ஒரு தமிழ்ப்புலவர், இவர் பாடியது புறம் (320). (புறநா.)

வீரைவெளியன்தித்தனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவரியற் பெயர் தித்தர். இவர் ஊர் வீரைவெளியாக இருக்கலாம். (அகம் 188.)

வீர்யசந்திரன்

பலாசுவனுக்குக் குமாரன்.

வீர்யவற்சலை

பராசுவமுனிவரின் தேவி.

வீர்யஹாரி

சவயம்ஹாரியின் குமாரன். அநாசாரனிடம் சேர்ந்து பலத்தைப் போக்குபவன்.

வீறுகோளணி

அஃதாவது, செல்வமிகுதியையேனும், புகழத்தக்க ஒரு சரித்திரத்தை புகழ்பொருளுக் கங்கமாகவேனுஞ் சொல்லுதலாம். இதனை வடநூலார் உதாத்தாலங்காரம் என்பர்.

வீற்றினிதிருந்த பெருமங்கலம்

காலன் குடியிருந்த கொலைத் தொழிலையுடைய வேலோன் செம்மாந்திருந்த வெற்றியைச் சிறப்பித்துக்கூறும் புறத்துறை. (பு. வெ. பாடாண்.)

வீழிணி

நாடக உறுப்பின் விகற்பம், இது, கூத்தன் தலைமகனாய்த் தன் மடைந்தைக்கு விடாக்கண்டவாறு மன்னகரங் கண்டவாறும் சொல்லு தலாய் அங்கமொன்றாய் ஐவகைச் சந்தியுள்ளும் கடைச்சந்தியனையு மாறு சொல்லுவது. (வீரசோ.)

வீஷ்டபதா

விரசன் தேவீ,