ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
வாகடர் | வாக்பட்டரைக் காண்க, இவர் செய்த நூல் வாகடம், |
வாகினி | ஒரு தீர்த்தம் |
வாகீசசுவாமிமடம் | இது திருஞானசம் பந்தமூர்த்தி நாயனார் சைனர்களை வெல்லுதற்கு மதுரைக்கு எழுந்தருளியபொழுது தங்கிய இடம். இது ஞானாமிர்த நூலாசிரியருடைய பரம்பரையார் மடமோவென்று நினைத்தற்கு இடமுண்டு. |
வாகீசன் | 1 ஓர் இருடி சிவபூசாதுரந்தரன். 2. ரத்தவர்ணம், முக்கண், அபயவாதம், பாசம், சூலங்கள் கூடிய (4) கரங்கள் உடையவராய்த் தியானிக்கத்தக்க சிவன் திருவுரு. 3. அப்பர்சுவாமிகளுக்கு ஒருபெயர். |
வாகீச்வரி | யௌவன வயதுள்ளவளாய், ருதுமதியாய், நல்ல முகமுள்ள வளாய், தாமரையொத்த நேத்திரங்கள் உள்ளவளாய் வஸ்திரம், மாலை, பூஷணங்கள் உள்ளவளாயிருக்கும் பார்வதியார் திருவுரு. |
வாகுகன் | 1. சிவகணத்தவரில் ஒருவன். 2. இருதுபர்ணனிடம் நளன் இருந்த காலத்து வைத்துக்கொண்ட பெயர். |
வாகுதை | சரஸ்வதி நதி அருகில் உள்ள ஒருநதி, சங்கலிகிதர் என்னும் ருஷிகளில் லிகிதன், சங்கன் அனுமதியின்றி அவனது ஆச்சிரமத்து இருந்த பழத்தைப் புசித்தனன். தமயனாகிய சங்கன் இது களவு என்றனன். அதனால் லிகிதன் தனது கையை வெட்டி யெறிந்து இந்நதியில் மூழ்கி இழந்த கைகளைப் பெற்றான். ஆகையால் இந்நதிக்கு இப்பெயர் உண்டாயிற்று. (வாகு, புஜம், தா~கொடுத்தலர்) |
வாகுலீகன் | பாரதவீரருள் ஒருவன். விமனால் 14 ஆம் நாள் இறந்தவன். |
வாகுவலி | ஒரு அரசன். கச்சன் மருமகன். பிரசாபதி இவன் வழியில் தோன் றியவன். (சூளா.) |
வாகை | பச்சிலை விரவித்தொடுத்த வாகைப் பூவை புனைந்து மாறுபாட்டை மேற்கொண்டு அலையும் கடல்போன்ற சேனையினையுடைய வேந்தைக் கொன்று ஆரவாரித்ததைக் கூறும் புறத்துறை. (பு. வெ) |
வாகையரவம் | வெள்ளிமலையினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்தகச்சினையும் அழகிதாக அணிந்தமை கூறும் புறத்துறை (பு. வெ.) |
வாக்காள் | அம்பரீஷன் புத்திரி; இவளை இருக்குவேதம் புகழ்ந்திருக்கிறது. |
வாக்கி | அறம், பொருள், இன்பம், வீடெனு நான்கினையும் விரித்துக் கூறவல்ல ஆசிரியன் |
வாக்கியர் | சாகல்லியர் மாணாக்கர். |
வாக்குகள் | 1. சூக்குமை, பைசாந்தி, மத்திமை, வைகரி என நான்காம். இவற்றுள் சூக்குமை யெனும் வாக்கு நாபியை இடமாகக்கொண்டு நாதமாகிய அறிவு தானே வடிவாகவரும், பைசந்திக்குத் தானம் உந்தியும் வடிவு பிராணவாயுவுமாம். இது அக்கர சுவரூபம் தோன்றாதபடி நினைவு மாத்திரமாய் நிற்கும். மத்திமை; இது நெஞ்சையும் கண்டத்தையு மிடமாகக் கொண்டு அக்ஷரசுவரூபத்தை ஒழுங்குபட நிறுத்திச் செவிக்குக் கேளாமல் உள்ளறிவு மயமாய் நிற்கும் வைகரிக்கிடம் நாக்கினடியாம், இது செவிப் புலனாம்படி வசனிக்கும். இவையன்றிப் பஞ்சமையென்னும் அதிசூக்குமை யென்றொரு வாக்குமுணம், அது பிரணவ சொரூபமாயிருக்கும். 2 (5). வைகரி: அக்கரங்கள் வெளிப்பட்டுத் தோன்றுவது. மத்திமை கண்டத் தில் சவிகற்பமாயுணரத்தக்க ஓசை. பைசந்தி; இனைவுமாத்திரமாய் நிற்பது. சூழமை நாதமாத்திரமாய் நிற்பது. பஞ்சமை; மேற்கூறிய வாக்குகள் தோன்றற்குக் காரணமாய் நிற்பது. |
வாக்குத் தேவி | சரஸ்வதி, |
வாக்துஷ்டு | கௌசிகனைக் காண்க. |
வாக்பட்டர் | ஒரு வைத்திய நூலாசிரியர். வட நாட்டிலிருந்தவர். இவர்க்கு வாகட பாகடர் எனவும் இவர் செய்த நூலுக்கு வாகடமெனவும் பெயர், |
வாங்கலன் | (சூ) சுத்தோதன் குமாரன். |
வாங்கூலகசபதி | ஒரு அரசன். இவன் பெண் கௌரவாம்பாள் |
வாசத்நேயம் | யசுர்வேத சாகை, யஞ்ஞவல்கிய ருஷியின் பொருட்டு அச்வரூபியான சூரியனால் பிடரிமயிரினின்றும் விடுபட்டது. |
வாசநன் | விசாகபூபன் குமாரன். இவன் குமாரன் நந்திவர்த்தனன். |
வாசந்தவை | இராஜமாதேவி முதலாயினோர்க்கு வருத்தம் உண்டான காலத்து நீதி கூறித் தேறிய முதியவள். (மணி.) |
வாசந்தௌவை | ஒரு முதியவள். இவள் இராஜமாதேவி முதலியவர்க்கு மனத்துன்பம் உண்டான காலத்தில் பலநீதி கூறித் தேற்றியவள். |
வாசனை | மான்மதம், சவ்வாது, மணமலர்களில் இறக்கிய தைலங்களும், தீநீர்களும், சந்தனம், அத்தர் முதலியனவுமாம். |
வாசனை வகை | சாம்பிராணி, கர்ப்பூரம் பச்சைகர்ப்பூரம் (இதன் வகை) ஈசல், ஈமன், பூதச்சிதயன்; புனுகுசட்டம், கஸ்தூரி, (இதன்வகை) சரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை; ஜவ்வாது, குங்குமப்பூ, கோரோசனை, சந்தணம், பச்சிலை, கிச்சிலிக்கிழங்கு, முதலியவை. (ப. தா.) |
வாசனைப்பொருள்கள் | சாம்பிராணி, கருப்பூரம், பச்சைகர்ப்பூரம், புனுகு சட்டம், கஸ்தூரி, சவ்வாது, குங்குமப்பூ, சந்தனம், பச்சிலை, கிச்சிலிக் கிழங்கு, கஸ்தூரிமஞ்சன், அகிற்கட்டை, தேவதாருக்கட்டை, அத்தர், பனிநீர், சிலவாசனைப் பொருள்களிலிறக்கும் தைலவகைகள் முதலியன மருக் கொழுந்து, மரு, பலவகைப் பூக்களிலிறக்கிய எண்ணெய்கள். |
வாசமயிலை | வளைவணன் மனைவி, பீலி வளையின் தாய். (மணிமேகலை) |
வாசம் | 1. (5). இலவங்கம், ஏலம், கருப்பூரம், ஜாதிக்காய், தக்கோலம், பின்னும் ‘தக்கோலம் தீம்புகை தகைசா லிலவங்கம் கர்ப்பூரம் சாதி யோடைந்து’ என்பர். 2. அம்பரேச்சம், கத்தூரி, சவ்வாது, சாந்து, குங்குமம், பனிநீர், புனுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், விசுவாசி, நிரியாசம், தைலம் முதலியன. |
வாசற்படிவைக்கும் லக்ஷணம் | ஒரு வீட்டிற்கு நான்கு பக்கங்களிலும் வசாற்படி வைத்திருந்தால் விசுவதோமுக மெனப்படும். அதன் பலன் விருத்தி. கீழண்டை வாசற்படியில்லாமல் மற்ற மூன்று பக்கங்களிலிருந்தால் வியாக்ர பாதம் எனப்படும். பசுக்களுக்குப் பாதை; திருடர் பயம் உண்டு. தெற்கு முகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கமிருக்கின் பாக்கியப் பிரதம், மேற்கு முகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கமிருந்தால் ஸ்ரீ நிலயம் எனப்படும். இதன் பலன் நல்ல வாழ்வுண்டாம். வடக்குமுகமாக வாசற்படியின்றி மற்ற மூன்று பக்கங்களிலிருந்தால் சூரியநிலையம் எனப்படும். இதன் பலன் இராஜ பயம். வெகுமுகத்தில் சுவரில்லாமலிருந்து கோணமத்தியில் சுவரிருந்தால் அது புண்டரிக மெனப்படும். பலன் மத்திமம். |
வாசவதத்தை | 1. இவள் உதையணனுடைய தேவியர் நால்வருள் முதல்வி. பிரச்சோதனனுடைய பட்டத்தேவியர் பதினாராயிரவருள் முதல்வியாகிய பதுமகாரிகையின் புதல்வி, இந்திரனருளால் உதித்தவளாதலால் இவள் இப்பெயர் பெற்றாள்; இவளுடைய செவிலித்தாய் சாங்கியத்தாய்: அழகிலும், குணத்திலும் சிறந்தவள், பெண்பாலார்க்குரிய கலைகளில் மிகப் பயிற்சி யுள்ளவள். அவற்றுள் இசையையும், யாழையும் உதயணன்பாற் கற்றுத் தேர்ந்தவள்; மாலை தொடுத்தல் முதலிய கைத்தொழிலிற் சிறந்தவள்; சிற்பவேலையில் இவளுக்கு மிக்க பயிற்சியுண்டு; தந்தை முதலியவர்பால் மிக்க அன்புள்ளவள்; மற்ற மகளிற் பலருள்ளும் பிரச்சோதனனுக்கு இவள் பால் அன்பு அதிகம்; தன்பாலுள்ள காதலால் உதயணன் இராசகாரியத்தை மறந்துவிட்டானென்று பிறர் சொல்லத் தெரிந்தமையால், இவள் தான் இறந்து போய் விட்டதாகப் பெயர் பண்ணிச் சிலகாலம், செவிலித்தாய் முதலியவர்களோடு வேற்றுருவங்கொண்டு மறைந்திருந்தனள்; அவளுடைய ஆக்கத்தைக் கருதி இவளடைந்த துன்பங்கள் பல; உதயணனுக்கு இவள் பால் அன்பு அதிகம்; பதுமாபதியைக் கண்டபொழுது இவள் பிழைத்து வந்து விட்டனளென்றே யெண்ணி அவன் அவளை அடையவிரும்பினான். “வன்றைக் கஞ்சினவளிமுகந்தெடுத்துழிக், கண்னுறக் சண்டே தன்னமர் காதன், மானேர் நோக்கின் வாசவதத்தை தானே விவளெனத் தான்றெரிந்து” இவளது பிரிவாற்றாமையால் அவன் உயிர் துறக்கவும் நினைத்தனன். இவளுடைய அணிகலங்களுள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துத் தனித் தனியேவிளித்து விளித்து அவன் வருந்திக் கூறிய பகுதிகளும் யாருடைய மனத்தையும் உருகச்செய்யும்; கனவில் இவளைக் கண்டு அவன் அரற்றுவது முண்டு; இவளைப்பற்றிய செய்தியை யாரேனும் பேசும் பொழுது அவனுக்குத் துன்பந் தீரும். இவளுக்குத் தோழியர் பலரிருப்பினும் காஞ்சன மாலையிடத்தே தான் மிகுந்த அன்புடையாள், மிக்கதூய்மை யுடையளா யிருந்தது பற்றியே சோதவனென்னும் முனிவான் இவளுடைய கருப்பத் திற்றங்கி நரவாணதத்தனாகப் பிறந்து வித்தியாதர சக்கர வர்த்தியாக ஆயின னென்பர். இவளுடைய மற்றக் குணவிசேடங்கள் விரிவஞ்சி விடுக்கப் பெற்றன. (பெ. கதை.) 2. உஜ்ஜினியை அரசாண்ட. சண்ட மகேசன் குமாரி. வச்சதேசத்து அரசனாகிய உதயணனால் கவரப்பட்டவள், |
வாசவன் | 1. ஒரு மல்லன், விராடராசனிடம் இருந்த பலாயனன் என்னும் வீமனால் கொலையுண்டவன். 2. இந்திரனுக்கு ஒருபெயர். |
வாசவி | 1. பராசர்தேவி; வியாசருக்குத் தாய். 2. உபரிசரவசுவின் புத்திரியாகிய சத்தியவதிக்கு ஒரு பெயர். |
வாசவேயன் | வாசவியின் புத்திரன். |
வாசஸ்பதிமிச்ரமதம் | இம்மதமேற்படுத்தியவர் வாசஸ்பதியிச்ரர். இம்மதத் தவர் ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் அஞ்ஞானங் கற்பிப்பர். எவ்வாறெனின் ஜீவன் அஞ்ஞானி, அவன் பிரமத்தை விஷயிக்கிறான். ஆதலால் பிரமமும் அஞ்ஞானத்திற்கு விஷயமாகிறது என்பர். இந்த அஞ்ஞானம் ஒன்றல்ல, அநேக ஜீவன்கள் தோறும் வெவ்வேறு வகைப்பட்டிருக்குமென்பர். ஆத லால் அநேக ஜீவர்களால் கற்பிக்கப்படும். ஈச்வரரும் அநேகராவர். இவ்வாறே பிரமாண்டங்களும் அருந்தம் என்பர். எந்தச் சீவனுக்கு ஞானோதயம் உண்டாகின்றதோ அக்காலத்து அஞ்ஞானம் நீங்கும். ஈஸ்வரன் பிரமாண்டம் இவைகளுக்கும் அவ்வாறே நிவர்த்தியாம் என்பர். |
வாசு | ஒரு ருஷி. இவர் தன்னை மயக்கவந்த கிருதாசி என்னும் தெய்வகணி கையை நீச உருவாகச் சபித்துப் பின்னர் அநுக்கிரகித்தவர். |
வாசுகி | 1. கதரு தாயன்; ஆதிசேஷறுக்குச் சகோதரன்; அஷ்டமா நாகங்கல் ஒருவன். பெண் உலூபி; அருச்சுனன் தேவிகளில் ஒருத்தி. தேவாசார் அமுதம் கடையத் தாம்பு ஆனவன். அருச்சுநன் பப்ரவாகனால் மூர்ச்சித்த காலத்து நாகரத்தினத்தினால் உயிர்பெறும் பொருட்டு உலூபிக்குக் கொடுத்து அனுப்பினவன். அருச்சுகனுக்கு வசுக்களால் வந்த சாபத்தைத் தடுத்தவன், இவன் தன் குமரிகளாகிய சுப்பிரமை, மாவினி, பதுமினி, மண்டனை என்பவர்களைப் புண்ணியபுஞ்சன் புத்திரர்களுக்கு மணஞ்செய்தி கொடுத்தனன். 2. திருவள்ளுவர் தேவியார், மார்க்க சகாயன் என்பான் குமாரி. இந்த அம்மயாரை நாயனார் மனைவியர் ஆக்கிக்ககொள்ளும் முன், தாம் மணலைக் கொடுத்துச் சமைக்கச் சொல்ல அவ்வனக சமைத்துக் கொடுத்தவள். இவள் கிணற்றில் நீர் எடுக்கையில் நாயனார் இந்த அம்மையாரை அழைக்க அப்பாத்திரத்தை கிணற்று இடையில் விட்டுவர அது அவ்வகையே நின்றது என்பர். பகலில் நூற்கும் நூல் நாழி கீழ்விழ “விளக்கேற்றி வருக’ என்று நாயனார் கூற அவ்வகை எற்றித் தந்தவள். பழைய அன்னம் சுடுகிறது என்ன விசிறி கொண்டு ஆற்றியவள். தம் கணவருக்கு அன்னம் பரிமாறு முன் பாத்திரத்தில் நீரும் ஊசியும் வைக்கும் சந்தேகத்தை மரண காலத்தில் நாயனாரிடம் அறிந்து கொண்டு புண்ணிய உலகு அடைந்தவன் மகா பதிவிரதை, இவள் ஒருமுறை பிக்ஷைக்கு வந்த கொங்கணரைச் கர்வபங்கப்படுத்தின காகவும் கூறுவர். |
வாசுதேவனார் | யாப்பருங்கல விருத்தியுரையுள் கூறப்பட்ட தொல்லா சிரியரில் ஒருவர். |
வாசுதேவன் | 1. வசுதேவன். 2. வசுதேவர் குமாரர் ஆகிய கிருஷ்ண 3. செருக்கால் நமபெயர் கொண்டு திருப்பணன் இருக்கிறான் என்று அவனிடம் போரிட்டு இறந்த கரூச தேசாதிபதி. 4. கண்றணுவனைக் காணக் இவன் குமாரன் பூமித்திரன், 5. விஷ்னு விரதமிருந்த புண்ணியத்தால் மறுபிறவி பிரகலாதனாகப் பிறந்த வேதியன். இவன் காமுகனாயிருந்தவன். |
வாசுதேவமுதலியார் | ஓராட்டிக் குப்பம் செட்டி பாளையம் என்ற ஊரினர், திருமுருகன் பூண்டிப் புராணம் பாடியவர். |
வாசுபூச்சியர் | சைநதீர்த்தங்கரரில் ஒருவர். இவர் சம்பாபுரத்தில் இஷ்வாகு வம்சத்து வசுபூஜ்யர் என்பவருக்கு ஜயவதியிடம் பங்குனிமாதம் கிருஷ்ணபக சதுர்த்தி, விசாகக்கூத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (70) வில், செந்நிறம், (72) லக்ஷ வருஷம் ஆயுர்யம். இவர்க்குப் பத்மதர்மர் முதலாகிய கணதார் அறுபத்தறுவர். இவர் காலத்து இராசாக்கள் அசலபல தேவர், திலிபிரஷ்ட வாசுதேவர், காரகன், பிரதி வாசுதேவன். |
வாச்சன் | சாகல்யன் சீடன் |
வாச்சாயனார் | மதன நூல் ஆசரியர். |
வாச்சியம் | கங்கை, யமுனையின் இடையிலுள்ள கானபுர நகரத்திற்கு தென்புறமானதும் கௌசாம்பிக்கு வடக்கில் உள்ளதுமான தேசம் A country situatel to the west of Allahabad. It was the kingdom of Udayana; its capital was Kausambi. |
வாச்சையர் | வசவர் மடத்திலிருந்த சிவனடியவர். இவர் அரசன் ஆணைக்கு அஞ்சி சௌராட்ட சோமநாதனைத் தரிசனம் செய்யாது வருந்தச் சிவவர்த்தி ஒர் சிவகணத்தவராய் வந்து இன்று இரவு சிவமூர்த்தி அடைவர் எனக்கூறிச் செல்ல, அவ்வகையே சிவபெருமான்வாச் சிவராத்திரியில் தரிசனம் செய்து அன்று அளந்த நெற்கொட்டாரத்தையே கொட்டாரச் சோமேசம் எனச் சிவத்தலம் ஆக்கியவர், |
வாஜசரவன் | நச்சிகேதசனைக் காண்க. |
வாடாப்பிரமந்தன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் பெயர் விளங்கவில்லை. (குறு 331.) |
வாடைப்பாசறை | வெய்ய வலியினையுடையானது பரந்த வேல்வீரர் நடுக்கமுற வந்திரங்கி வருத்தம்பண்ணும் வாடைக்காற்றின் மிகுதியைச் சொல்லிய துறை, (பு. வெ.) |
வாட்டாற்று எழனியாதன் | மாங்குடி கிழாரால் பூரடப்பெற்றவன். இவன் சிறந்த கொடையாளி. (புற. நா.) |
வாட்போக்கி | ஆரியதேசத்து மன்னனைச் சிவபிரான் நீரால் மயக்க அவன் வாளால் வீசினன். அந்த வாளைப் போக்கி அவனுக்குக் காட்சி தந்து அநுக்ரகித்ததால் இப்பெயர் பெற்றது. (வீரசிங்~புவி) |
வாணதிவாகரன் | இராஜராஜ தேவன் பொன்பரப்பினான் அல்லது மகதைப்பெருமாள் என்பவனுடைய பட்டப் பெயர். இவன் வாண அரசனாக இருத்தல் கூடும். (திருவண்ணா சாசனம்.) |
வாணமுதலியார் | ஏகம்பவாணன் தந்தையார். ஏகனிடம் தம்பொருள் முதலியவைகளை ஒப்புவித்துக் குமாரனைக் காக்கச்சொல்லி இறந்தவர். |
வாணர் | இவர்கள் மாபலிச்சக்ரவர்த்தியின் மரபில் வாணசுரன் வழி வந்தவர்கள். |
வாணவம்சத்தவர் | இவர்கள் கி. பி. 5 வது நூற்றாண்டில் வடுகவழி மேற்குப் பாகத்தை ஆண்டு வந்தவர்கள். இவர்கள் வாணாசுரன் வம்சத்தவரென்பர். இவர்கள் முதலில் பல்லவர்களிடம் சிற்றாசர்களாக விருந்து பிறகு சோழ வரசர்களுக்குட் பட்டனர். முதலாம் பாரந்தகன் வாணரைக் கீழ்ப்படுத் தினான் அக்காலத்து இவர்கள் ஆண்ட நாடு பெரும்பாணப்பாடி எனப் பேர் பெற்றிருந்தது |
வாணாசுரன் | பாணாசுரனைக் காண்க. |
வாணாட்கோள் | கூடிச்சேராதார் தம் அரணினைக் கோடலை நினைந்து வெற்றிகொள்ளும் வாளைப் புறவீடு விட்ட துறை (பு. வெ.) |
வாணி | விச்வரூபகற்பத்தில் சிவமூர்த்தியைத் தியானித்து இருந்த பிரம தேவனிடம் பிறந்தவள். விஷ்ணு ஆதியரைச் சிருட்டித்தவள். (இலிங்கபுராணம்). சரஸ்வதியைக் காண்க.) |
வாணிகவாகை | பொல்லாத வினையினின்றும் நீளக்கழிந்தவனுடைய ஆறு செய்தியும் உயர்த்திச் சொல்லிய துறை. (பு. வெ.) |
வாணியன் | 1 சூத்திரன் வைசியப் பெண்ணைப் புணரப் பிறந்தவன். (அருணகிரிப்புராணம்.) 2. கருவிகள்; செக்கு, செக்குலக்கை, மாடுகள், கெட்டப்பாறை, அளவுகருவிகள், |
வாணியர் | இவர்கள் எள், நிலக்கடலை முதலியன செக்கிலிட்டாடி எண்ணெ யெடுத்துச் சீவிப்போர். இவர்கள் தங்களை வைசியர் என்பர். இவர்கள் இடக்கையவர், மதுரை திருநெல்வேலிப் பக்கங்களில் கோவிலுக்குள் போகக்கூடாது. இவர்கள் பூனூல் தரிப்பர். இவர்கள் சோதி நகரத்தார் என்று தங்களைப் புகழ்வர். இவர்கள் வீட்டில் வண்ணான் சாப்பிடான். இவர்களில் ஒற்றைச் செக்கான், இரட்டைச்செக்கான் என இரண்டுவகை உண்டு. இவர்கள் தங்களுக்குச் செட்டியென்பது பட்டமாகக் கொள்வர். வக்குவ மகருஷி யாகத்தில் இவர்கள் பூணூல் தரித்தனராம். இன்னும் இவர்கள் காமாக்ஷியம்மை, விசாலாக்ஷியம்மை, அச்சுத்தாலி, தொப்பைத்தாலி என நால்வகைப் படுவர். இதில் பிள்ளை என்று ஒரு பிரிவும் உண்டு, |
வாணிலை | பகைவர்மேல் எடுத்து விடுதலை விரும்பி வெற்றியினை யுடையவாளைப் புற வீடுவிட்டதுறை (பு. வெ.) |
வாண்மங்கலம் | பகைவராற் கலக்குதற்கரிய கடல்போலும் சேனை யினையும் வலிய யானையினையு முடையான் வாளைப் புகழ்ந்த துறை, (பு. வெ. பாடாண்.) |
வாண்மண்ணு நிலை | உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்த நீராலே மஞ்சன மாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லிய துறை, (பு வெ.) |
வாதக்கோன் | இவனிடம் ஒளவையார் சென்றபோது நாளை வருக என்று கூறியவன். அதனால் ஒளவை இவனை இகழ்ந்து “வாதக்கோ னாளை யென்றான்” என்று கவிபாடினள். |
வாதசோணிதரோகம் | தேகமிளைத்தலால், உறுப்புகளில் தினவு, மிறு மிறுப்பு, குத்தல், அதிரல், கனத்தல், திமிர் இக்குணங்களுடனிருப்பது. இது வாதம், உத்தான வாதம், கம்பீரவாதம் எனவும் வாதாதிக்கவாதம், பித்தா திக்கவாதம், சிலேஷ்மா திக்கவாதம் தொந்தவா தாதிக்கவாதம், திரி தோஷவா தாதிக்க சோணிதம் எனவும் பல வகைப்படும். இவற்றைச் சிற்றாமணக்கெண்ணெய், விழுதியிலைக் குடிநீர், தசமூலரஸாயனம், கர்ப்பூரசிலாசத்து பஸ்மம் முதலியனவற்றால் வசமாக்கலாம். (ஜீவ) |
வாதம் | ரூபம்: இது வெப்பம், இலேசு, குளிர்ச்சி, சுறசுறப்பு, அணுதவம் முதலியனவாகக் காணப்படும். ஸ்தானம்; நாபியின் கீழ் இடுப்பு, தொடை, எலும்பு, சருமம். குணம்; சப்ததாதுக்கள், மலமூத்திராதிகள் முதலியவற்றைப் பெற்ற தேகத்தை மனோற்சாகப்படுத்தி உச்வாசநிசவாச பதினாலு வேகங்களைச் செய்து போஷிப்பது, தொழில்; உலாவல், செறிவு, முடக்கல், மீட்டல், விழித்தல் முதலியன. கோபம்; அறுவகை யுருசிகளை அதிகமாக அருந்தல், அகாலபோஜனம், அற்ப போஜனம், யோகாப்யாசம், நித்திரை பங்கம், துக்கம் முதலிய காலங்களில் வாதம் கோபிக்கும். விருத்தி; இது அதிகரிக்கின் இளைத்தல், நடுக்கல், ஒய்ச்சல், வயிறுப்பிசம், துர்ப்பலம் முதலியன வுண்டாம். சீரணம்; இது குறைந்தால் இளைத்தல், ஈனத்வனி, மறதி முதலிய தர்க்குணங்களுண்டாம். |
வாதராயணன் | வெதிரிகாச்சிரமத்தில் தவத்தில் அமர்ந்ததால் வியாசருக்கு வந்தபெயர், |
வாதரூபை | பீஜாஹரிணியின் குமாரி. வீர்யக்கவிதம் உண்டுபண்ணும் தேவதை. (மார்க்கண்டேயம்.) |
வாதரோகம் | பஞ்சபூதங்களிலொன்றுகிய வாத பித்த கபங்கள் அதிகப் படுதற்கும் பல தோஷங்களளுக்கும் காரணமுமான வாயு; தேகரஷணத்தின் பொருட்டு தச வாயுக்களாகப் பிரியினும் அது, ரஸாதிவஸ்து பேதங்களாலும் தகாதபொருள்களை உண்ணலாலும், தீநடக்கைகளாலும் ரோகமாகத் திரும்பி (10) வித வாதரோகங்களைத் தரும். பாதாஷோபகவாதம், யாதாலக வாதம், பாதஹரிஷவாதம், அபிகாதவாதம், புச்சாவர்த்தவாதம், சீதகண்டு வாதம், சுப்தி வாதம், பரதகண்டகவாதம், களாயகஞ்ச வாதம், சம்பூகசீரிஷ வாதம், பாதோபகாத வாதம், கிருத்திரசிவாதம், சோணிதவாதம், ஊருஸ் தம்பவாதம், சகனாவர்த்தவாதம், துனிவாதம், பிரதிதுனிவாதம், மூடவாதம், ஆத்மானவாதம், பிரத்யாமானவாதம், அபந்திரிகவாதம், மனோவிருத்திவா தம், ஆந்திரபித்தவாதம், அபதானகவாதம், நாளாவர்த்த வாதம், மூத்திரசா வாதம், மேட்ரக்ஷயவாதம், இருதாவிருதவாதம், சுரோணி சூலைவாதம், நாபிசாருவாதம், அஷ்டிலாவாதம், பிரத்தியஷ்டிலாவாதம், ஸ்தனருக்கு வாதம், பக்ஷகாதவாதம், உதாவர்த்தவாதம், தண்டகவாதம், தனுஸ்தம்ப வாதம், ஆக்ஷேபகவாதம், பாகியாயாமவாதம், அந்தாரயாமவாதம், சந்நியாசவாதம், அபிநியாசவாதம், ஆட்டியவாதம், விஸ்வபித்வாதம், சுவாலிதவாதம், அவபாகுகவாதம், அநாயசசவாதம், அவுஷ்மாபகவாதம், ஊர்த்துவாம்மிச்சாவாதம், ஆயாசாவர்த்த வாதம், அர்த்திதவாதம், அனுஸ் தம்பவாதம், உக்கிராக்ரகவாதம், விஸ்மாரியகவாதம், களாவர்த்தவாதம், பிரமோன்மந்த வாதம், இதிதாபகவாதம், ஆசியாக்ஷேப வாதம், தொனிவிச் சின்னவாதம், திருக்குப்பிராந்திவாதம்; தவனோபகாதவாதம், திருக்குஸ் தம்பவாதம், விவுர்தாசியவாதம், சம்வருதாசியவாதம், புருவாடோபசவாதம், பாதிரியவாதம், கர்ணசூலைரோகம், அவபேதகவாதம், ஊர்த்துவமுகவாதம், அதோமுகவாதம், ஆசியக்குவாதவாதம், சிதிலாவர்த்தவாதம், சர்வாங்க வாதம், சிரச்சால்லியவாதம், கரராபேகவாதம், அங்கசலன வாதம், அந்தி யேத்துகவாதம், தொனிகத்சவாதம், கம்பீரவாதம், பரிஸ்போடவாதம், மூத்திரஉதிரவாதம், வச்சிரரூபகவாதம், அசுவவாதம், பேய்வாதம். இவற்றை வாதரோக நிவாரணிகளால் வசமாக்கலாம், (ஜீவ,) |
வாதாபி | 1. தாருகாசுரன் தங்கையாகிய அசமுதி தூர்வாசரைக் கூடிப்பெற்ற குமாரன். இவன் சகோதரன் வில்வலன் இவன் தான் ஆடாக வில்வலன் வந்த விருந்தினர்க்குச் சமைத்திட அவர்கள் உண்ட பின் வில்வலன் மிருத சஞ்சீவினி மந்திசத்தால் வாதாபியை அழைக்க உண்டவர் வயிற்றைப் பீறிக் கொண்டு வெளிவருவான். இவ்வகை செய்வதைத் தேவர் அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் விருந்தாக வந்து உண்டு அவன் சகோதரனை அழைக்கையில் வயிற்றில் மாறுதல்கண்டு வயிற்றைத் தொட்டுத் தடவி வெளிவராது இறக்கச் செய்ய இறந்தவன். இவனை விப்ரசித்தியின் குமாரன் என்பர், 2. கிலாதனுக்குத் தமனியிடம் உதித்த குமாரன், 3. சாளுக்கியரது முக்கிய பட்டணம், இதனை கி. பி. 640 இல் நரசிம்மவர்மன் சுட்டெரித்தான் |
வாதாரணி | ஆத்மாவினிடம் நிறைந்து வசிக்கும் வாயுமூர்த்தி. (வாயுபுராணம்.) |
வாதி | 1. எதுவும், எடுத்துக் காட்டும் நாட்டி அளவை செய்து தன்கோணிறீ இ பிறன்கோன் மறுப்பவன். (யாப் வி.) 2. காரணமும், மேற்கோளும் எடுத்துக் காட்டிப் பிறன்கோள் மறுத்துத் தன்மத நிறுத்திப் பாடுவோன். (வீரசோ.) |
வாதிஹம்சாம்புதர் | அப்புள்ளாருக்கு அம்மாள் இட்ட திருநாமம், |
வாதூலதேசிகன் | முதலியாண்டானுக்குப் பெயர், |
வாத்து | 1. இது நிலத்திலும், நீரிலும் வாழும் பறவையாயினும் நீரில் வாழவே பிரியப்படும். இது தோலடிப் பாதங்களுள்ளது. மூக்கு அகன்று சிறு பற்கள் போற் பொருக்குகளைப் பெற்றிருக்கும். பூமியில் நடக்கையிலுடலை யசைத்தசைத்துச் செல்லும். இது ஒரு சிறுபடகுபோல் குவிந்தகன்ற தேகத்தையுடையது. வாத்து சிறியது. கழுத்து நீளம். நீரிலுள்ள பூச்சி புழுக்களைத் தின்னும். இதனிறகில் தைலப்பசை யுள்ளதால் இறகுகள் நனைவதில்லை. இது தன் முட்டைகளைப் பொரிக்க அறியாது. கோழிகளே இதன் முட்டைகளைப் பொரிப்பன. இதில் குள்ள வாத்து பெரிய வாத்து என இருவகை உண்டு 2. இது குறுகிய கால்களும் படகுபோலுருவமும் உடைய நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. இவ்வினத்தில் நூற்றுக்கணக்கான வேறுபாடுடையவை உண்டு. அன்னம் பெரியவாத்து முதலியவும் இவ்வினத்தனவாம். சற்று உருவம் பெரிதாகவும் உண்டு, |
வாத்துக்கள் | இவை சமசீதள மண்டல பிராணிகள். இவை இடபேதத்தால் உருத்திரிந்து பலவகைப்படும். இவ்வினத்தில் பெரியவாத்து குள்ளவாத்து அன்னம் என (3) வகையுண்டு, இவை நீர்ப்பறவையின மாதலால் தோலடிப்பாதங்களுண்டு. மூக்குத்தட்டை; இது, படகைப் போல் அகன்றும் குவிந்துமுள்ள உடல் பெற்றது. இதன் சிறகுகள் தண்ணீரில் நனையாதபடி இது தன் முதுகின் புறத்திலுள்ள பசையை மூக்கிற்பெற்று இறகுகளை அடிக்கடி கோதும். இது நீர்நிலைகரிலுள்ள பூச்சி புழுக்களைத் தின்னும், இதன் முட்டைகளை உணவாகக் கொள்கின்றனர். குள்ளவாத்து வட துருவ மண்டலத்தையடுத்த இடங்களில் கூட்டமாக இருக்கின்றன. இவை (6) அங்குல முதல் (15) அங்குலம் வரையில் உயர்ந்திருக்கின்றன. இவ்வினத்தில் குறுகிய மூக்குள்ளவையும் நீண்ட மூக்குள்ளவையும் உண்டு. இவ்வினத்தில் மிகச்சிறியவைகளை டீல் என்பர். இவை உருவத்திலும் நிறத்திலும் அழகுள்ளவை. இப்பறவையின் மற்றொரு வகுப்பிற்குப் பலநிறமுடைய உச்சிக்கொண்டை உண்டு, மூக்கு நீல நிறம்; இதன் வால் நீளம்; இவை பறந்தும் செல்லும், தோலடிப்பாதம். இவற்றில் மற்றொரு இனம் ஆபிரிகாவின் மேல்கரை பக்கத்திலுண்டு. அவற்றினுரு பெரிது. மற்றொரு வகை பறவைகளை எதிர்க்கும் வன்மை கொண்டமை. இவை பூச்சி புழுக்களைத் தின்னும், விஜியன்; இது குள்ளவாத்தினத்தில் ஒருவகை, இது சாகபக்ஷணி. துருவமண்டிலவாசி, இதன் தலையும் மூக்கும் கரியசெந்நிறம்; வயிறு வெள்ளை; இதன் சிறகுகளைத் தலையணை முதலியவற்றிற்கு ஐரோப்பியர் உபயோகிப்பர். இதில் மற்றொருவகை சைநாவின் வடபாகத்தி லிருக்கிறது. அதற்கு மண்டாரின் என்று பெயர். இப்பறவையின் இறக்கையின் சிறகின் பக்கத்தில் இரண்டு சிறகுகள் மேலோங்கி நீண்டிருக் கின்றன. இவற்றைக் கண்ணாடிச் சிறகென்பர். இதன் மூக்கு பவழத்தை யொத்துச் சிவந்திருக்கிறது. இதன் மூக்கின் முனை வெண்மை. இதில் மற்றொரு வகை ஆசியாவின் வடபாகத்திலுண்டு. அவற்றை ஒயில்டு டக் என்பர். இது செந்நிறமுடையது. இறகுகளில் கரிய கோடுகளுண்டு, மூக்கு நீளம்; கால் கற்பவளம் போல் சிவந்தவை. இதற்குக் கண்ணில் ஒருவகை ஜவ்வுண்டு. அச்சவ்வு கண்னை மூடிக்கொண்டிருந்தாலும் பார்வை தெரி கிறது. இவ்வினத்தில் மற்றொருவகை எயிடர் டக். இது ஐரோப்பாவின் வடபாக நீர்நிலைகளிலிருப்பது. இவற்றின் மார்பில் இறகுடன் கூடிய தோலுண்டு, இது உஷ்ணத்தைக் காக்கும் உடையொத்தது. |
வாத்ய விசேஷங்கள் | இடக்கை, முழவு, படகம், கடிப்பு, ஒருகட்பறை, பேரிகை, சிறுபறை, திமிலை, தண்ணுமை, குடப்பறை, ஒருகட்பகு வாய்ப்பறை, காடிப் பறை, குறிஞ்சிப்பறை, பாவப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, உவகைப்பறை, உடுக்கை, நாகசுரம், துருத்தி, முகவீணை, புஜங்கம், புல்லாங்குழல், டமாரம், டங்கா, நாகெஜம், கந்தர் வம், இராஜவாத்யம், தவளச்சங்கு, பூரி, நபுரி, துத்தாரி, பாங்கா, எக்காளம், கௌரிகாளம், திருச்சின்னம், கானாதக்கை, டவுண்டை மல்வரி, சல்லரி, தம்புரு, வீணை, பிடில், சித்தார்கிணாரம் சாரங்கி, |
வாநமாமலையாண்டான் | ஆளவந்தார் திருவடி சம்பந்தி. |
வாநாசேநாபதியர் | இவர்கள் இராமர்க்குப் படைத்துணையாகச் சுக்கிரீ வனால் வருவிக்கப்பட்டவர்கள், சுசேடணன், சதவலி, கேசரி, இடும்பன், பனசன், நீலன், ததிமுகன், கயன், சாம்பன், துன்முகன், துமிந்தன், மயிந்தன், மற்கசகோமுகன், குமுதன், இடபன், தீர்க்கபாகன், விந்தன், அதுமன், நளன், கும்பன், சங்கன், அக்ஷ யன், கவரக்ஷன், விருபாக்ஷன், விந்தன் முதலியோராவர், |
வாந்திரோகம் | இது உதானவாயு வாதபித்த சிலேஷ்மங்களை மேல்நோக்கப் பண்ணுவதால் உண்டாவது. இது வாய் நீர் ஊறல், அரோசகம், துக்கம், வாயில் உப்புக்கரித்தல் இக்குணங்களைப் பெற்று வரும். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷவாந்தி, திருஷ்டான்ன வாந்தி என ஐந்துவகை, இதனைச் சந்திரோகம் எனவும், வமனரோகம் எனவும் கூறுவர். இவையன்றிக் கிருமி வாந்தியு மொன்றுண்டு. ஏலக்காய்த்தோல் விலாமிச்சை வேர்க் கஷாயம், இஞ்சி ரஸாயனம், குங்மப்பூ இவைகளால் குணமாம். |
வானப்பிரத்தன் | இவன் கிருகஸ்தா சிரமத்தை விட்டு இந்திரிய நிக்கிரகனாய்த் தபோவனத்தில் வசிக்க வேண்டியவன். திருகஸ்தன் தன் தேகத்தில் நரையையும், தன் பிள்ளைக்குப் பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்போது இந்த ஆசிரமம் அடையவேண்டியது, ஊரிலுள்ள சகல ஆதாரங்களையும் நீத்து மனைவிக்குத் தன்னுடன்வர எண்ணமிருக்கின் அவளுடனும், இன்றேல் அவளைப் புத்திரனிடத்து நீக்கியும், அக்னிஹோத்ர பாத்ரங்களை எடுத்துக்கொண்டும் ஜிதேந்திரியனாய் வனம் செல்ல வேண்டியது. சாலியன்னம், பல காய் கிழங்கு, பழம், இவற்றால் பஞ்சமகா எஞ்ஞங்களைச் செய்யவேண்டும். மான்றோலாவது மரவுரியாவது தரிக்க வேண்டியது. சடை, மீசை, தாடி, நகம் இவற்றை வளர்க்க வேண்டியது. இருசந்திகளிலும் ஸ்நானஞ் செய்யவேண்டியது. எதை உண்கிறானோ அதனால் பலி முதலியவும் தன்னாச்சிரமத்திற்கு வந்தவர்களையும் உபசரிக்க வேண்டியது. எப்போதும் வேதம் இது தலினும் குளிர், கானல், சுகம், சிக்கன் களைப் பொறுத்தலிலும், வல்லவனயும் இருத்தல் வேண்டும். அக்னிஹோ தரம், தரிசனம், பௌர்நமாசம் இவைகளை மறவாமலும், நக்ஷத்ரயாகம், ஆக்ராயணம், சாதுர்மாச்யம், உத்தராயனம், தக்ஷிணாயனம், இவற்றில் தர்ப்பணங்களை உதிர் நெல் பொறுக்கிச் செய்பவனாயும் இருத்தல் வேண்டும். காட்டிலுண்டான அரிசியினால் தேவர்களுக்கு ஹவி கொடுக்க வேண்டியது. உவர் மண்ணைக் காய்ச்சித் தனக்கு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது. பூமி, ஜலம் இவற்றில் உண்டான புஷ்பம், கிழங்கு, காய், பழம் இவற்றைப்புசிக்கலாகாது. பழத்தேனே அன்றி ஈத்தேனையும், மாமிசம், காளான் அழிஞ்சிற் பழம் முதலியவற்றையும் புசிக்கக்கூடாது. தனக்கு உபயோகமான பொருள்களை ஒருவருடம் ஆறு மாதத்திற்காவது சம்பாதித்துக்கொள்ள வேண்டியது. அதிசமாகப் புசிக்கக்கூடாது. ஒரு வேளையே புசிக்கவேண்டியது சாந்திராயண முதலிய விரதங்களை அநுட்டிக்க வேண்டியது. இளைப்பாக வந்தால் சுத்தபூமியிற் படுத்துப் புரளலாம. கிரீஷ்ம காலத்தில் பஞ்சாக்கினி மத்தியிலும், மழைக்காலத்தில் மழையில் இருந்து கொண்டும், பனிக்காலத்தில் ஈரவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டும், தவஞ்செய்தல் வேண்டும். |
வானமாதேவியாண்டான் | நாதமுங்களை ஆச்ரவித்த ஸ்ரீவைஷ்ணவர். |
வானமாமலை ஜீயர் | அழகிய வாதரான இராமானுஜஜீயர் என்பவர். முதலில் மணவாள மாமுகேளால் ஏற்படுத்தப்பட்டவர். |
வானம்பாடி | இது சிட்டினப் பறவை இனம். இது சுருசுருப்பும் புத்தி கூர்மையுமுள்ளது. இவை தனியாயும் கூட்டமாயும் ஆகாயத்தில் (30) அடிகளுக்குமேல் பறந்து பாடும். இவை வயல்களிலும் வெளிகளிலும் பாடுவது இனிமை தரும். இதன் முதுகு கறுப்பு, வயிறு வெண்மை |
வானவன் | ஆமூர் எனும் ஊர்க்குரியவன். இவனை ஆமூர் கவுதமன் சாதேவனார் சிறப்பித்துப் பாடினர். (அகம் 156.) |
வானவர் | 1. சீனதேசத்தவர்க்கு ஒரு பெயர். இவர்கள் தங்களை எல்லாச் சாதியிலும் தாங்கள் உயர்ந்தவர் என்பர். 2, சேரர் தங்களை வானவர் என்பர். வானவரம்பன் சேரலாதன் முதலிய பேர்களிற் காண்க. |
வானவிற்தறி | ஆனி, ஆடி, ஆவணி இந்த மாதங்களில் கிழக்கே இந்திரவில் லுண்டானால் பஞ்சமுண்டாகும். “ஆனியுடனாடி யாவணியித் திங்களிலே, கூனியே வானவிற் குணதிசையில் மானே கேள், மேவின் மழையறுமே விண்ணா டருக்குமே, பூவின் விழவறுந்து போம். “ |
வானவில் | (இந்திரதனுசு) சூரியனுக்கு எதிர்ப் பாகத்திலுள்ள நீர்த்தி வலைகளுடன் சேர்ந்தமேகத்தில் சூரிய கிரணம் படுமாயின் அது வட்ட வடிவினதாகப் பல நிறத்துடன் சூரியனுக்கெதிரில் காணப்படும். சில வேளைகளில் அவ்வானவில் ஒன்றன் மேல் ஒன்றாய் இரண்டு மூன்றும் காணப்படுவதுண்டு. சில வேளைகளில் சூரியனுக்கு எதிரிலுள்ள பொருள்கள் ஆகாயத்தில் பிரதிபலிப்பதும் உண்டு. |
வான்மீகி | இவர் பிறப்பால் வேதியர். ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்து வருகையில் ஒருநாள் ஒரு முநிவரை வழிமறித்துப் பறிக்க மறிக்கையில் அவர் இவரிடம் கருணை கூர்ந்து நீர்செய்யும் பாபத் தொழில், உமது வருவாயால் சீவிக்கும் உமது இல்லோர்க்கும் உண்டோ எனக்கேட்டு வருகவென ஏவ, அவ்வாறு சென்று கேட்கையில் அவர்கள் மறுக்கக் கேட்டுக் கூறி மயங்கிநிற்கையில் முநிவர் கருணை கூர்ந்து எதிரில் இருந்த மராமரத்தின் பெயரினைக் கூறச் சொல்லிப் போயினர். கள்வர் அவ்வாறு இருந்து நெடுநாள் செபிக்க மேல் ஒரு புற்று மூடியது. சிலநாள் பொறுத்துப் புற்றில் இருந்து வெளிப்படுகையில் வேடன் ஒருவன் கிரவுஞ்சப் பக்ஷிகளைக் கொல்லவர அதைக்கண்டு சினந்து அவனைச் சபிக்கத் தொடங்க, அச்சாபமே தம் வாயில் சலோகரூபமாக வெளிப்பட்டு இராமகாதை ஆயிற்று. இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி. இவர் புராண வால்மீகி, பாலவான்மிகி எனவும், விருத்த வான்மீகி யெனவும் இருவர் இருந்ததாகக் கூறுவர். |
வான்மீகியார் | முதற்சங்கத்துப் புலவருடன் இருந்த புலவர் திலகருள் ஒருவர். இவர் செய்த நூலைத் தலையாய ஒத்து என்பர் நச்சினார்க்கினியர். (புற. நா.) |
வாமசாரன் | பாடுவான் மகன். இவன் காமாதுரனாய்த் தனக்கு இருந்த செல்வங்களை எல்லாம் வேசிக்குக்கொடுத்து மீண்டும் கொடுக்கக் கிடையாமல் ஒரு செட்டியின் வீட்டில் களவுசெய்து அவ்விடம் இருந்த ஆபரணப்பெட்டியைத் தாசியிடம் கொடுத்தனன். தாசி அவ்வணிகளில் ஒன்றைக் கடைவைத்திருந்த செட்டியிடம் மதிப்பிடக் கொடுத்தனன், தன் நகை என்று அறிந்த செட்டி இதை அரசனுக்குத் தெரிவிக்க அரசன் விசாரித்து வாமசாரனிடம் இருந்த அணிகளை வாங்கிச் செட்டியிடம் கொடுப்பித்தனன். செட்டி பின்னும் பேராசையால் ஒரு கடகம் இல்லை என்று அரசனிடம் கூறினன். அரசன் இதனால் வாமசாமனைச் சிறையில் இட்டு வருத்தினன். இதனைக் கண்ட வாமசாரன்தந்தை மனம் பொறாது சிவமூர்த்தியிடம் மைந்தனுடைய குறைகூறி மகனுக்கு நேர்ந்ததை நீக்க வேண்டினன், சிவமூர்த்தி பாடுவானுக்குக் கடகம் ஒன்று கொடுத்தனர். அதைப் பாடுவான் அரசனிடம்தர அரசன் வணிகனிடம் தந்தனன். வணிகன் அக்கடகத்தின் சிறப்பைக்கண்டு களிப்புடன் பெட்டியில் இட்டு மறுநாள் பெட்டியைத் திறந்து பார்க்க அந்தக் கடகமும் அதனுடன் இருந்த அணிகளும் பாம்புகளாக இருக்கக்கண்டு அரசனிடம் கூறினன். அரசன் பாடுவானை அழைத்து அக்கடகம் ஏதெனனப் பாடுவான் அது வந்த வரலாறு கூற அரசன் வியந்து களிக்க வணிகன் பொருள் இழந்தனன், |
வாமசிரமுனிவர் | இவர் நாகலோகத்திருந்த கட்கத்தைப் பெறவெண்ணி யாகஞ்செய்து நாகங்களைச் சுஷ்கிக்கச் செய்ய நாகங்கள் வருந்திக் கட்கத்தைத் தந்தன. பின் அவ்விடமிருந்த வேசையொருத்தி நிர்வாணமா யிருத்தல் கண்டு அவளைக் கூடுகையில் நாகங்கள் கட்கத்தைக் கொண்டு போயின. (சிவமகாபுராணம்.) |
வாமதேவகல்பம் | சிவபெருமானுடைய வாமபாகத்தில் வாமதேவர் தோன்றிய கற்பம், |
வாமதேவன் | 1, ஷத்திரியன் இராஜகுய யாகத்தில் அர்ச்சுனனால் வெல்லப்பட்டவன். 2 ஒரு ரிஷி மாணாக்கன். ஆத்ரேயன் இவனுடைய குதிரையை அபகரித்தார். (பா, வா.) |
வாமதேவமூர்த்தி | செந்நிறமும். சுரபிமாலையும், உயர்ந்த மூக்கும், கரத்தில் கத்திகேடயமும் சிவந்தபாசையுமுடையவர். |
வாமதேவருஷி | பூர்வத்தில் ஓர் வேதியன், இவன் முத்தி விருப்புள்ள வனாய்த் தவஞ்செய்து புண்ணியம் கூட்டுவிக்காமல் மறு பிறவி புழுவாய்க் கேதாரத்தில் ஒருமரத்திலிருக்கையில் இறைவன் இறைவிக்கு உண்மைஞான முபதேசிக்கையில் தன்னை மறந்து எதிரில் விழக்கண்ட சிவமூர்த்தி நீ பூமியில் வாமத்தேவருஷியாய்ச் சில நாளிருந்து பலர்க்கும் தத்வமுப் தேசித்துப் பின்னர் கைலையடைக என்றபடி சிலகாலமிருந்து முத்தி பெற்றவர். |
வாமதேவர் | 1. சதாசிவமூர்த்தியின் திருமுகத்து ஒன்று. (சிவபேதம்). முப்பதாவது கற்பமாகிய இரத்த கற்பத்தில் பிரமன் சிவமூர்த்தியை நினைப்ப, இவர் அழல் உருக்கொண்டு மான்மழுச் சதுர்ப்புஜராய்த் தரிசனம் தந்து, அருள் புரிந்து நால்வர் இருடிகளைத் தம்மால் தோற்றுவித்து அளித்தனர். நான்காவது காண்டத்தில் அடங்கிய கீதங்களைச் செய்தவர். விரஜர், விபாதர், விசோகர், விச்வபாவினர் என நால்வர். (கலிங்க~புராணம்.) 2. ஒரு முனிவர். சிவபூசையால் சிரஞ்சீவிதத்வம் அடைந்தவர். தாய் வயிற்றில் இருந்து வெளிப்படாது ஞானம் பெற்றவர். இவர் அணிந்து இருந்த விபூதியை இவரை விழுங்க வந்த அரக்கன் பூச்சுண்டு தேவன் ஆயினான். (பிரமோத்தர காண்டம்.) 3. ஏகாதச ருத்திரருள் ஒருவன், தேவி சதை. 4. ஒரு மகருஷி, சலன் என்னும் சூரிய குலத்து அரசனுக்கு உதவி புரிந்தவர். சலனைக் காண்க. நலன் குமாரன் துன்முகன் இறக்கவும்கலன் கைதம்பிக்கவும் செய்தவர், 5. ஒரு அரசன், இரண்யரோமன் அல்லது இரண்யரேதசு குமாரன், குசத் தீவிற்கு உரியவன், 6. வசிட்டருடன் இருந்த தசரதன் புரோகிதன். 7. ஒரு இருடி. துச்சயனைக் காண்க. பசியினால் கஷ்டப்பட்டு நாயின் மாமிசம் உண்டார் என்பர். (மநு.) |
வாமதேவி | ருசன் பாரியை. |
வாமநம் | 1. ஒருநதி. 2. ஒரு புராணம், 3. தென் திசைக்கண் உள்ள யானை. |
வாமநர் | காசியபருக்கு அதிதியிடம் புரட்டாசிமாதம் சுக்லபக்ஷம் சிரவணத் துவாதசியில் அமிசித் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். அதனால் இத்துவாதசி விஜயத் துவாதசி எனப்பட்டது. இது விஷ்ணு மூர்த்தியின் ஐந்தாவது அவதாரம். இவர் அவதரித்த காலத்தில் சூரியன் சாவித்திரியை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரமசூத்திரத்தை உபதேசித்தார். காச்யபர் முஞ்சியைக் கொடுத்தார். பூமி கிருஷ்ணாசனங் கொடுத்தது. சந்திரன் தண்டம் கொடுத்தான். அதிதி கௌபீனங்கொடுத்தான். பிரமன் கமண்டலம் கொடுத்தான், குபேரன் பாத்திரங்கொடுத்தான். பார்வதி பிக்ஷை கொடுத்தாள். இவர் பார்த்து வாசரிடம் வேதம் உணர்ந்தவர். இவர் மாவலியின் செருக்கடக்க அவனிடம் குறுகிய உருவாய்ச்சென்று மூவடிமண் வேண்டினர். அந்தக் காலத்திலே அசுரகுருவாகிய வெள்ளி மாவலிக்கு உறுதிகூறித் தடுக்கவும் மாவலி கேளாது தானஞ்செய்யத் துணிந்து தாரை வார்க்கையில் சுக்கிரன் சிறுரூபியாய் நின்று கண்டியினின்றும் தாரைவிழாது தடுத்தது கண்டு, வாமநர் தர்ப்பை எடுத்து நீர்த்தாரை வரும்வழியைக் குத்திச் சுக்கிரன் கண்ணைக் கெடுத்தனர். பின் திரிவிக்கிரமராய் மூவுலகத்தை ஈரடியால் அளந்து ஓர் அடிக்கு இடம் இலாது மாவலி சிரத்தின்மேல் வைத்துப் பாதாளத்தில் அழுத்தி, அவனை அங்கே சகலபோகங்களையும் அனுபவிக்கச் செய்தனர். (பாகவதம்.) 2. அகத்தியர் மாணாக்கர் பன்னிருவ ருள் ஒருவர். 3, சத்ரு தனயனான நாகன், |
வாமநாசாரியர் | 1. ஒரு சைந நூல் ஆசிரியர்; மேருமந்திர புராணம், நீலகேசித்தெருட்டு செய்தவர். 2. அகத்தியர். இவரைச் சைநர் இவ்வாறு கூறுவர், |
வாமநாச்சிரமம் | இது விஷ்ணு தவம் புரிந்த சித்தாச்சிரமம், |
வாமநாதபுரம் | பூர்வம் சைநர் வசித்துக் கொண்டு இருந்த மயிலை. தொண்டை நாட்டில் உள்ள,. இப்போது மயிலாப்பூர் என்று வழங்கி வருகிறது. இதில் நேமிநாத தீர்த்தங்கரர் இருந்தார் என்று சைநர் கூறுவர். அவரை மயிலைநாத சென்றுங் கூறுவர், |
வாமன ஜயந்த வாதம் | இது புரட்டாசிய சுக்லபக்ஷத்வாதசியில் திருவோண நக்ஷத்திரத்துடன் கூடிய நாள். இந்நாளில் தேவர் பொருட்டுப் பலியையடங்கத் திரிவிக்ரம அவதாரங் கொண்ட வாமன மூர்த்தியைப் பூஜித்து விரதமிருப்பது. |
வாமனன் | ஒருபாம்பு, கருடபுத்திரன் |
வாமனமுனி | இவர் தமிழிலுள்ள மேருமந்தர புராணமென்னும் சைந நூலினாசிரியர். இவர் காஞ்சிபுரத்தையடுத்த திருப்பருத்திக் குன்றமென்னும் இடத்தவர். இவர்க்கு மல்லிஷேண முனியெனவும் பெயருண்டு, இவர் வடமொழி தென்மொழி இரண்டினும் வல்லவர். இவர் வடமொழியில் பஞ் சாஸ்திகாயம், பிரவகனசாரம், சமயசாரம், ஸ்யாத்வா தமஞ்சரி என்னும் நூல்களுக்கு உரை யெழுதியிருக்கிறார். நீலகேசித்தெருட்டென்னும் தமிழ் நூலும் எழுதியிருக்கின்றார். இப்பெயர் கொண்டவர் மற்றும் சிலருளர். அகத்தியரிட மிலக்கணங்கற்ற வாமனமுநிவர் மற்றொருவர், வடமொழி அலங்கார சாத்திரமியற்றிய மற்றொருவரும், திருக்குறளாசிரியரான ஏளாசாரியர் அல்லது ஸ்ரீகுந்த குந்தா சாரியராகிய வாமனாசாரியரும் வேறாவர். இவர் காலம் 1387~88 ஆக இருக்க வேண்டும். (மேரு மந்திர~புராணம்) |
வாமன் | 1. ஒரு மதத்தவன். இவனுக்குச் சிவமூர்த்தி அக்கினியும் உபவீதமும் தரித்த மூர்த்தியாய் அருளுவர் என்பன், 2. பூதனுக்குச் சுரபியிடம் உதித்த குமாரன். ஏகாதசருத்திரருள் ஒருவன். |
வாமமதம் | சைவ சமயத்தின் உட்சமயத்துள் ஒன்று. இது சத்திக்குப் பாத்துவம். கூறும். இம்மதத்தவர் சிற்சத்தி தம் அம்சத்தால் பராசத்தி முதலிய ஐந்து சத்திகளைச் சிருட்டிக்க, அச்சத்திகள் பிரமன் முதலானஆன்மாக்களைச் சிருட்டிப்பர் என்பர். வாலை, திரிபுரை, சிவை முதலிய தேவியரைச் சக்கரத்தில் தாபித்துத் தேவியின் மூல மந்திரம் செபித்து அனைத்தையும் தேவியின் சுவரூபமாகக் கண்டு ஆனந்தம் அடைவதே மோக்ஷம் எனவும் கூறும், (தத்துவநிஜா.) |
வாமர் | பிருதிவியாகிய மண்ணுக்கு அதிட்டானதேவர். இவருக்குச் சர்வர் எனவும் பெயர். |
வாமை | 1, பிருதிவி (மண்.) தத்துவ ரூபையான சத்தி, பிரதிவீச்வரர் வாமர் அல்லது சர்வர். 2. ஒருநதி, |
வாயற்பதிவடுகள் | இவர் ஒரு பிரபு. தொண்டைநாட்டு வாயற்பதியி லிருந்தவர். இவர் சகோதரர் மானமடைந்திருக்கையில் இவரை ஒரு புலவன் யாசிக்க இவர் அந்தப் பிணத்தை மூடிவைத்து விட்டுப் புலவனுக்களித்தவர். தன்னுடன் கூடப் பிறந்துயிராகிய தம்பியையும், அந்நிலை மாண்டது தோன்றாமல் மூடிவைத் தன்னமிட்டான், மன்னவர் போற்றிய வாழ் செங்கலங்கை வடுகனுக்குக், கன்னனுஞ் சோமனு மோநிக ராயினிக் காண்பதுவே’. இதனை “நேயத்துடன்” எனும் தொண்டை மண்டல சதசத்தாலுமறிக. (தமி நா ச.) |
வாயினிலை | அரசனுடைய நெடியவாயிலைக் கிட்டிய என் வரவினை மறைவின்றிச் சொல்லென வாயில் காவலனுக்குச் சொல்லிய துறை. (பு. வெ.) |
வாயிலான்றேவன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் தேவனாக இருக்கலாம். ஊர் வாயில் என்பது. (குறு~153, 108.) |
வாயிலார்நாயனார் | தொண்டை நாட்டுத் திருமயிலைப்பதியில் அவதரித்து, இல்லறத்து இருந்து, சிவமூர்த்திக்கு மனத்தில் திருக்கோயில் முதலிய சமைத்துத் திருமஞ்சன தூபதீப நிவேதனம் செய்து, போரானந்தம் அடைந்து சிவபதம் அடைந்த சிவனடியவர். அறுபத்து மூவரில் ஒருவர். (பெரியபுராணம்.) |
வாயிலிளங்கண்ணன் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது இயற்பெயர் இளங்கண்ணன். ஊர் வாயில் என்பது, (குறு 349.) |
வாயில் | (5) கண், காது, மூக்கு, வாய், குதம், அல்லது குய்யட். |
வாயில்கள் | 1. தலைவன் காமக்கிழத்தியர் காரணமாகப் பிரிந்தகாலத்துத் தலைவிக்கு உண்டாம் ஊடலைத் தீர்க்கும் வாயில்களாவன; பாணன், பாடினி, கூத்தர், இளையோர், கண்டோர், பாங்கன், பாகன், பாங்கி, செவிலி, அறிஞர், காமக்கிழத்தி, காதற்புதல்வன், விருந்து, ஆற்றாமை என்பனவாம். (அகம்) 2. தோழி, செவிலித்தாய் பார்ப்பான், பாங்கன் பாணன், பாடினி இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் எனப் பலராவார். |
வாயில்காப்போன் | ஆயுதப் பயிற்சியில் திறம், உடல்வன்மை, மடியின்மை வணக்கம், வருவோரைத் தகுதிநோக்கி அழைத்தல் முதலிய குணங்களு டையவன். (சுக்~நீ) |
வாயு | 1. காசிபர் குமாரருள் ஒருவன். பலநாள் தவஞ்செய்து வாயு பதம் பெற்றவன். வடமேற்றிசைக்கு இறை. தேவி அஞ்சனை, வாகனம் மான்; பட்டணம் கந்தவதி; ஆயுதம் துவசம்; கிருஷ்ண மூர்த்தியின் ஏவலால் இந்திரனிடத்து இருந்து சுதர்மையைப் பெற்று உக்கிரசேகனுக்குக் கொடுத்தவன். தேவர் வேண்டுகோளால் குமாரக்கடவுள் இரதத்திற்குச் சாரதியாய் இருந்தவன். அநுமானுக்கு யாரைக்காண்கிறையோ அவரிடத்தில் உனக்கு அதிக அன்பு மேலிடுகையில் அவர்களுக்கு அடிமைசெய் எனக் கட்டளையிட்டவன். அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணருக்கு முன் நின்று பிரமாத்திரப் பிரயோகஞ் செய்ய ஏவினவன். குசநாபனுடைய நூறு பெண் களும் தன்னை மணஞ்செய்ய மறுத்ததால் அவர்களுடைய முதுகை ஒடித்துச் சென்றவன். அநுமனை இந்திரன் வச்சிரத்தால் மோதிய காலத்துக் கோபித்து எல்லா உயிர்களிடத்தும் உள்ள தன் இயக்கத்தைக் கடலிற் சேர்த்தவன், சிவாக்கினையால் சிவமூர்த்தியின் நெற்றி விழியில் தோன்றிய ஆறு தீப்பொறிகளைத் தாங்கிச் சென்று கங்கையில் வைத்தவன், இந்திரனுக்குப் பயந்த மைநாக பர்வதத்தைக் கடலிற் சேர்த்தவன். ஆதிசேடனுக்கு மாறு கொண்டு மேருவின் சிகரத்தைப் பேர்த்து எறிந்தவன். (ஆதிசேடனைப் பார்க்க.) 2 (10) பிராணன் இருதயத்திலும், அபானன் குதத்திலும், சமானன் சுழுத்திலும், உதானன் நாபியிலும், வியானன் தேகத்திலும், நாகன் நீட்டல் முடக்கல் செய்தலினும், கூர்மன் உரோமபுளகாங்கிதத்திலும், கிருகரன் முகத்தினின்று தும்மல் சினம் வெம்மை விளைத்தவினும், தேவதத்தன் ஓட்டம் இளைப்பு வியர்த்தல் செய்தலினும், தனஞ்சயன் உயிர்நீதகினும் போகாது உடலினைப் பற்றியுமிருக்கும், உயிர் நீங்கிய பொழுது உடலினைக் கிழித்தகலும், மதங்கமுனிவர் சாபத்தால் பலமற்றுப் பின் திரியம்பக கேத்திரத்தில் சிவபூசைசெய்து குற்றம் நீங்கின. (சிவரஹ.) 3 இது, பரிச தன்மாத்திரையினின்று தோன்றியது. சத்தம், பரிசமெனும் இரண்டு குணங்களையுடைத்தாய்ச் சலித்துத் திரட்டலெனுந் தொழிலை யுடையதாய்த் தேகங்களில் பிராணன் அபானன் முதலாகப் பத்துவகைப் பட்டியங்கி யெழுதல் இருத்தல் முதலிய தொழிற்பாட்டிற் கேதுவாய் எல்லாவுயிர்களுக்கும் உபகாரமாயிருப்பது, வாயுவில் (209 1/2) பங்கு ஆக்ஸிஜன் எனும் பிராணவாயுவும், (790) பங்கு நைட்ரோஜன் எனும் உப்புவாயுவும், (1/2) பங்கு கார்பானிகாவிட் என்னும் கரியமலவாயுவும் கலந்திருக்கிறதென்பது தற்கால ஆராய்ச்சி, 4. ரூபமின்றிப் பரிசமுடையது. தவக் இந்திரியம் பிரமாணம். இது பரிசம், சங்கியை, பரிமாணம், பிரதகத்வம், அபரத்வம், வேகம் முதலிய ஒன்பது குணங்கள் உடையது. |
வாயுக்களின் சேட்டையாலுண்டாங்கெடுதி | பிராணவாயு கெடின்: பஞ்சேந்திரிய உபத்திரவம், பீனசம், தாகம், இருமல், இரைப்பு முதலியன உண்டாம், உதான வாயு கெடின்: தாழ்வாய்க் கட்டையில் ரோகம், பிரமை, வாந்தி, அரோசகம், பீனசம், களரோகம் உண்டாம். வியானவாயு கெடின்: புருஷத்வம், உற்சாகம், பலம், கெடும். பித்தசுரம், வீக்கம், குத்தல், மந்தாக்னி, குஷ்டம், உண்டாம். சமான வாயுகெடின்: சூலை, குன்மம், கிரகிணி, பக்குவாசய ஸ்தான சோகங்களு முண்டாம். அபானவாயு: உஷ்ண அன்னம், அதிநடை, அசைவற்றிருத்தல், வேகமாகத் திரிதல், இவற்றால் உண்டாகும். அதனால் அதிமூத்ரம், சுக்கிலமேகம், மூலரோகம், குதப்பிரம்ச ரோகம் முதலியன உண்டாம். (ஜீவ.) |
வாயுசம்மிதை | இது குலசேகர வரகுண ராமபாண்டியர் இயற்றிய சைவபுராணம், வடமொழிப் புராணத்தின் மொழிபெயர்ப்பு. இது பூர்வகாண்டம் உத்தரகாண்டம் என்ற இரு பிரிவோடு அறுபத்தொரு அத்தியாயங்கள் கொண்ட 1334 திருவிருத்தங்களையுடையது. |
வாயுமண்டலம் | இது அண்டத்தின் உட்புறம் முழுதும் வியாபகமானது. இது வானத்தின் மீது உயர உயா ஐம்பது அறுபதுமைல் போகப்போகக் குறைந்து விடுகிறது. இது உயிர்களுக்கு ஆதாரமானது. இந்த வாயு இல்லாவிடில் ஒரு உயிரும் சீவித்திராது. இதில் பிராணவாயு கலந்திருக்கிறது. இவ்வாயுவில் அங்காரக்ஷாரம் கலந்திருப்பதால் மாஞ்செடிகளை வளரச்செய்கிறது. இதனால் சத்தம் கொண்டுபோகப்படுகிறது. |
வாயுறைவாழ்த்து | பின்னே பலிக்கும் எங்கள் வார்த்தையென்று சொல்லி மேம்பட்ட சொல்லைச் சிறப்பித்துக் கூறுந் துறை. (பு. வெ. பாடாண்.) |
வாயுவாங்கி | இது பாத்திரத்தின் உள்ளிருக்கும் காற்றை வெளியிவிழுக்கும் ஒரு வகை இயந்திரம். |
வாயுவின் மார்க்கங்கள் ஏழு | சாத்யர் என்கிற தேவர்களுக்குப் புத்திரன் சமானன். அவன் புத்திரன் உதானன். அவன் புத்திரன் வியானன். அவன் புத்திரன் அபானன். அவன் புத்திரன் பிராணன். ஆவஹன்; இதற்குப் பிராணன் என்று பெயர். இது பிராணிகளைப் பிழைக்கச் செய்வதால் இப்பெயர் பெற்றது. பிரவாஹன் இது ஜலத்தை வருஷிக்கும் மேகங்களுக்கு அனுகூலமாயிருப்பது. உத்வஹன்; மேகங்களைக் கொண்டுபோய் மழை பெய்விப்பது, சம்வஹன்; இது ரஸங்களை வற்றச் செய்து ஆபத்திற்குக் காரணமானது. விவஹன்; இது தேவலோகத்திலுள்ள ஜலத்தைத் தாங் குவது. பரிவஹன்; இது சூரிய சந்திரனை ஒரேவழியில் நிறுத்துவது. பராவஹா; இது ஒருவராலும் அதிக்கிரமிக்க முடியாதது. (பார~சாங்.) |
வாயுவேகன் | 1, சண்முக சேநாவீரன், 2. பிரசாபதியின் சேனாவீரன். 3. இராவணன் தூதன், 4. பிரசாபதி சேனாவீரரில் ஒருவன் (சூளா.) |
வாயுவேகை | 1. சடியரசன் தேவி, 2. மரூசியின் சகோதரி; காந்திமதியின் தோழி. |
வாய் | இது, முகத்திலுள்ள பேசும் உறுப்பு, இது, நாம் உட்கொள்ளும் ஆகாரத்தைச் செவிக்கு அடியிலும், கீழ்த்தாடையிலும், நாவிற்கடியிலுள்ள சவ்விற்குப் பக்கத்திலுமுள்ள பல உமிழ்நீர்க் கோளங்களினீர்களால் நனைத்துப் பற்களால் அரைத்து உட்செலுத்துகிறது. |
வாய்தாப்பி | இவன் பிருகு வம்சத்தவனான இருடி. |
வாய்பூசலாகாத இடங்கள் | ஒரு பாத்திரத்தினால் தண்ணீர் மொண்டே வாய் அலம்பவேண்டும். தண்ணீரில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் வாயலம்பல் கூடாது. (ஆசாரக்கோவை.) |
வாய்ப்பியனார் | யாப்பருங் கலவிருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியருள் ஒருவர் வாய்ப்பியராக இருத்தல் கூடும். |
வாய்ப்பியர் | அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர். |
வார சூனியம் | ஞாயிற்றுக்கிழமையில் அநுஷம், கேட்டை, மகம், விசாகம், பாணி, மிருகசீரமும், திங்களில் பூராடம், அநுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகமும், செவ்வாயில் அவிட்டம், சதயம், திருவோணம், கேட்டை, திருவாதிரையும், புதனில் மூலம், திருவோணம், கார்த்திகையும், அவிட்டம், அச்சுவனி, பரணியும், வியாழனில் மிருகசிரம், பூராடம், இரேவதி, புனர்பூசம் பூசமும், வெள்ளியில் விசாகம், ரோகணி, அவிட்டம், மிருகசிரம், அஸ்தம், அநுஷமும், சனிக்கிழமையில் அஸ்தம், பூசம், புனர்பூசம், உத்திரம், இரோவதியும் வருவனவாம். |
வாரஇராகுகாலங்களாவன | ஞாயிறு (26 1/2), திங்கள் (3 3/4), செவ்வாய் (22 1/2), புதன் (15), வியாழம் (18 3/4), வெள்ளி (11 1/4), சனி (7 1/2) நாழிகைக்கு மேல் இராகு காலங்களாம். |
வாரகுளிகன் | ஞாயிறு (11 1/4), திங்கள் (7 1/2), செவ்வாய் (3 3/4), புதன் (26 1/4), வியாழன் (22 1/2), வெள்ளி (18 3/4), சனி (15). |
வாரங்களில் ஆண் பெண் அலி | செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆண்; வெள்ளி, திங்கள், இராகு, கேது பெண்; சரி, புதன் அலியாம். (விதானமாலை.) |
வாரங்கள் | இவன் தருமசேநனுக்கும் குணமதிக்கும் குமாரன், இவன் அரசு கிடையாதபடி இவனது மாற்றாந்தாயும் அவள் குமாரனும் வஞ்சகத்தால் கொலை செய்ய முயல அருகபரமேசர் ஆஞ்ஞையால் தேவ புருடர் வந்து வாரங்கனைக் காப்பாற்றி அரசுதந்து போயினர். (சைந கதை) |
வாரசூலநாழிகை | திங்களும் சனியும் கிழக்கே (8) நாழிகையும், வியாழம் தெற்கே (20) நாழிகையும், ஞாயிறு வெள்ளி மேற்கே (12) நாழிகையும், செவ்வாய் புதன் வடக்கே (12) (14) நாழிகையும் நிற்கும். |
வாரசூலம் | திங்கள் சனி கிழக்கு, செவ்வாய் புதன் வடக்கு, வெள்ளி ஞாயிறு மேற்கு, வியாழன் தெற்கு. சூலபரிகாரம், சூலத்தில் வடக்கே செல்ல வேண்டின், பால், கிழக்கே தயிர், தெற்கு தயிலம், மேற்கு வெல்லம், இவைகளை உண்டேனும் கொண்டேனும் செல்க. |
வாரணவசி | உக்கிரகுலத்தாசன் நகரம், (சூளா.) |
வாரணவாசி | 1. உக்கிரகுலத்து அரசன் நகரம். 2. அச்சணந்தி ஆசிரியன் நகரம். 3. ஆடவியென்னும் அரசனது நகரம். காசியுமாம் (பெ~கதை.) |
வாரணாசி | காசிக்கு ஒருபெயர். வாணா, அசி என்ற இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள பிரதேசமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது. காசியை அடைந்தவாது பாபத்தைத் தடுத்தலால் வரணை என்றும், அந்நீரில் படிந்தோர் பாபத்தை அறுத்தலால் அசி என்றும் பெயர் உள்ள இரண்டு நதிகள் தெற்கு வடக்காய்ச்சூழ்ந்து இருத்தலால் இப்பெயர் பெற்றது. (காசிகாண்டம்.) |
வாரணாவதம் | 1. துரியோதனன் அரக்கு மாளிகை கட்டுவித்துப் பாண்டவர்களை வஞ்சித்த பட்டணம், பிரயாகை. 2. அஸ்தினபுரத்துக்குச் சமிபத்திலுள்ள பட்டணம், பாண்டவர்கள் தங்கியிருந்த இடம். Barmana, 19 miles north west of Meerut, where an attempt was made by Duryodbada to burn the Pandavas. |
வாரதிருஷ்டி | ஞாயிற்றுக்கிழமை முதல் சென்றவாரத்தைக் கூட்டிய தொகையை அசுவநி முதலாக எண்ணிப்போகவிட்டு, நின்றதொகையில் (6) நாள் ஒருகண் என்றும், (12) நாள் இருகண்ணென்றும், (4) நான் குருடென்று மறிவது. (விதானமாலை.) |
வாரத்தியாஜ்யம் | ஞாயிறு (32) நாழிகைக்குமேலும், திங்களுக்கும் புதனுக்கும் (42)க்கு மேலும், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் (31)க்கு மேலும் வெள்ளிக்கு (21)க்கு மேலும் சனிக்கு (41)க்கு மேலும் (3 3/4) நாழிகை தியாஜ்யம், |
வாரநயம் | வாரங்களில் வெள்ளி, வியாழன், புதன், திங்கள் நன்று. ஞாயிறு, செவ்வாய், சனி தீது; இவற்றின் பலம் பகற்குண்டு, இரவிலில்லை, இராசிகளில் சனி, செவ்வாய் ஆட்சியான மகர கும்ப மேடவிருச்சிகம் இவற்றின் உதயங்கள் சுப காரியங்களுக்காகா. (விதானமாலை). |
வாரபகற்குளிகன் | ஞாயிறு (26 1/4) திங்கள் (22 1/2), செவ்வாய் (18 3/4), புதன் (15), வியாழம் (11 1/2), வெள்ளி (7 1/2), சனி (3 3/4). |
வாரம் | 1. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி என ஏழாம். 2. தாளத்து ஒருமாத்திரையும் இரண்டு மாத்திரையும் உள்ள செய்யுள். |
வாரயோகபலம் | சுபவாரத்தில் சித்த யோகமாதல், அமிர்தயோகமாதல், வர யோகமாதல் வரில் எல்லாத் தோஷங்களையும் கெடுத்து எல்லா நன்மை களையும் தரும். (விதானமாலை.) |
வாரவிசேஷம் | ஞாயிறு உத்தியோகஞ்செய்ய, திங்கள் விதைவிதைக்க, செவ்வாய் போர்செய்ய, புதன் வித்யாரம்பஞ்செய்ய, வியாழம் விவாகஞ் செய்ய, வெள்ளி மயிர்கழிக்க, சனி தவஞ்செய்ய உத்தமம். |
வாரவிரதம் | ஞாயிற்றுக்கிழமை விரதம்; இந்நாளில் விரதங் கொள்ள விசயகன்மமுடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன்மேல் தாம்ர பீடத்தில், சூர்யமண்டலம் ரதம் சந்தனத்தால் எழுதி அதினிடையில் சூர்யயந்திரம் எழுதி அதின் பக்கவில் கணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அருணனைப் பூஜித்துப் பின் அறுகோண யந்திரம் சூர்யஷ்டாஷரம் எழுதிக் கலசா வாஹனஞ் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து சூர்யபூஜை கிரமப்படி செய்வது. இதை அநுட்டிப் போர் எல்லா நலமும் அடைவர். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தராயணத்தில் சூரியன் மகரராசி யிலிருக்கையில் சுக்லபக்ஷத்தில் சப்தமியில் வருவது நிரசனுக்கவார விரதம் எனப்பெயர். இதில் விதிப்படி விருதமிருந்தவர் ரஜஸ்துலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்குவர். இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபனதினத்து ஒருவன் வீட்டில் புசிக்கத் தீர்த்தங்கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன். |
வாரஹோரையின் பலன் | நாளொன்றுக்கு 24 ஹோரையாம். அவை மணியெனப்படும். அந்த ஓராதிபர் எழுவர். அவர் கீழ்க்கண்ட முறைப்படி அன்று வாராதிபன் முதலாக வருவர். உதயமணி 6 முதல் 7 வரை ஓரோசை யாகும். இப்படி எழுவரும் 3 வட்டஞ் சென்று 4 ஆம் வட்டத்தில் 3 ஆம் ஹோராதிபன் முடிவாக வரும் ஹோரைகளிருபத்து நான்குமாம். |
வாராகம் | மகம் தேசத்திலுள்ள ஒரு பர்வதம். |
வாராதிபர் ஓராதிபர் பலன் | ஞாயிறு; அருக்கன், மரித்தல். வெள்ளி; புகர், மங்களம். புதன்; புந்தி, புத்திரரால் மகிழ்தல். திங்கள்; இந்து சந்தோஷித்தல். சனி; மந்தன், சிறை, சிலுகு, வியாழன்; அந்தணன், பாக்கியம், செவ் சேய், யுத்தம், இவற்றில் ஞாயிறு, செவ்வாய், சனி. ஹோரைகள் ஆகா. |
வாராமைக்கழிதல் | உயர்ந்த மூங்கிலன்ன தோளினான் சொகின விகற்பத்தால் வடித்த வேலினையுடைய தலைகன் வாராதொழிய அதற்கு அழிந்தைக் கூறுந்துறை. (பு. வெ. பெருந்தி) |
வாராவதி | 1 சிறு கடலையும் ஆறுகளையும் கடக்கும் பாலம், இது முதல் முதல் மரக்கிளைகளாலும் பலகைகளாலும் செய்யப்பட்டுப் பிறகு விருத்தியானதாம். தற்காலம் கதவுபோல் வாராவதிகள் எடுக்க அமைக்க இருக்கின்றன. 2. இது ஆறு அகழி முதலியவற்றைத் தாண்டிச் செல்வதற்குச் செய்யப்பட்ட கட்டடம். இது மரத்தினாலும், கல்லினாலும் செய்யப்படுவது. |
வாரிதாரன் | சந்திரகுப்தன் குமாரன். இவன் குமாரன் அசோகவர்த்தனன். |
வாருணம் | உபபுராணத்துள் ஒன்று. |
வாருணி | 1, வருணன் குமாரி. பலராமர் பாரிகளில் ஒருத்தி. 2. பாற்கடற் பிறந்தவள். கள்ளுக்குத் தேவதை; இவளை அசுரர் கொண்டனர். 3. வருணன் பாரியை. இவளுக்குக் கௌரி என்றும் ஒரு பெயர் உண்டு. (பா. சபா,) |
வார்ட்சி | தசபிரேசதசர் பாரியை. இவளுக்கு மாரிட்சை என்றும் ஒரு பெயர் உண்டு. (பா. ஆதி.) |
வார்த்தஷேமி | திரிகர்த்தராஜனுக்கு ஒரு பெயர். (பா. ஆதி.) |
வார்த்தீகநீகன் | திக்ஷிணாமூர்த்தி என்போனுக்குப் பிதா. (சிலப்பதிகாரம்). |
வார்ஷநேயன் | விருஷ்ணி வம்சத்தில் பிறந்த கிருஷ்ணனுக்கு ஒரு பெயர். நளனுக்குச் சாரதி. (பா. வன.) |
வாற்கலி | 1. ஒரு அசுரன். தேவரை இடுக்கண்படுத்தத் தேவர்வேண்டுதலால் விஷ்ணு மூர்த்தி இவனைக் கொன்றனர். 2. இந்திரனுடன் போரிட்டு மாய்ந்த அசுரன் (வீரசிங்~பு.) |
வாற்கோதுமை | ஒருதானியம். இதனை ஊறவைத்துச் சாராயம் காய்ச்சுகின் றனர். சிலர் ஆகாரமாகவும் கொள்வர். இதனை சவுக்காரக் கட்டிகளை இறுகச்செய்யவும் ஆடுமாடுகளுக்கு ஆகாரமாகவும் உபயோகிக்கின்றனர். இது ஐரோபாவின் வட பாகத்தினும், மத்ய ஆசியாவிலும், வட அமெரிகா விலும் விளைகிறது. இது கோதுமையினும் உறுதி. |
வாலகில்லியர் | 1. பிரமன் மானஸபுத்ரனாகிய கிருது என்பவனுக்குப் பிறந்தவர். தாய் கிரியை. இவர்கள் அறுபதினாயிரவர் அங்குஷ்ட அளவினதாகிய தேகத்தைப் பெற்றவர். மகா தவசிரேட்டர். இவர்கள் நாள்தோறும் சூரியாதத்தைப் பிரதக்ஷிணஞ் செய்து கொண்டிருப்பர். இந்திர னைக் கருடனால் அவமானப்படும்படி சாபம் இட்டவர், கருடனால் இவர்கள் இருந்த மரக்கிளையோடு அசையாது தூக்கப்பெற்று இமயமலையில் விடப்பெற்றவர். இவர்கள் பிரமன் உரோமங்களில் பிறந்தவர் என்று கூறுவர். இவர்கள் இந்திரனிடம் மாறு கொண்டு வேறு இந்திரனைப் படைத்தனர். பிரமனைக் காண்க. 2. வானப்பிரஸ்த ஆச்சிரமத்தைச் சேர்ந் தவர், புது தானியம் கண்டவுடன் பழையதை விடுப்பர். 3. சிவார்ச்சனையால் ஸோமகர்த்தாவாய் ஒருவராலுஞ் செயிக்கமுடியாத கருடனைச் செயித்தவர். (சிவமகா. புரா.) |
வாலகேசன் | சிவகணத்தவரில் ஒருவன். |
வாலகோகிலன் | விஜய நகரத்தரசராகிய கிருஷ்ண தேவராயர் காலத்திருந்த ஒரு தமிழ்க்கவி. தத்வப்பிரகரசரைக் காண்க. |
வாலம்பேரிசாத்தனார் | மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனா ரெனவும், ஆலம்பேரி சாத்தனாரெனவுமிவர் கூறப்படுவர். ஆலம்பேரி சாத்தனாரைக் காண்க. |
வாலலிங்கையர் | சிக்கமாதையர் குமாரர். |
வாலவிருத்தை | யோகஞ்செய்து கொண்டிருந்த ஒருத்தி, கருடனைக் காண்க. |
வாலாமிர்தன் | ஒரு அரசன், சுசீந்திரம் ஆண்டவன். |
வாலி | இந்திரன் குமாரன். இருகதாசசு அல்லது இருகூவிரசனை இவர்கள் பிறப்பைப் பற்றிக் காண்க. இவன் தம்பி சுக்கிரீவன், இவன் தேவாசுரர் அமுதங்கடைகையில் தேவர் வேண்ட மந்தரமலையைக் கடைந்தவன். இவன் எதிரில் இருந்து யுத்தஞ்செய்யும் ஒவ்வொருவனுடைய பாதி வலி இவனை அடையும்படி இந்திரன் இவனுக்கு வரம் தந்து ஒரு பொன் மாலையைச் சூட்டினான். நாள்தோறும் எண்டிசைக் கடலிலும் தீர்த்தம் ஆடிச் சிவபூசைசெய்து வருவோன். இவன் ஒருநாள் கடல் ஆடச் சென்றிருக்கையில் திக்கு விஜயத்திற்கு வந்த இராவணன் இவன் பட்டணத்திற் சென்று இவனைக் காணாது இவன் சென்றிருக்கும் கடல் அடைந்து அவ்விடம் சிவ பூசை செய்து கொண்டு இருக்கும் இவனைப் பிடிக்க, எதிரில் செல்லாது மெல்லெனச் சென்றனன் இராவணன் வருதலை அரவத்தால் அறிந்த இவன் அவன் சமீபித்தல் அறிந்து, இராவணனைப் பிடித்துக் கக்கத்தில் இடுக்கி இருக்கியகையுடன் மற்றக் கடல்களிலும் ஸ்நானஞ்செய்து சிவபூசை முடித்துத் தன் நகர்வந்து விடுக்க, இராவணன் அஞ்சி இவனுடன் நட்புக் கொண்டனன். இவனுடன் மாயாவி என்னும் ஒரு அசுரன் யுத்தஞ்செய்து ஆற்றாமல் பிலத்துள் நுழைய, இவனும் தன் தம்பி உயப் பிலத்துவார வாயிலில் காவல் வைத்து அசுரனைப் பின்தொடர்ந்தனன். பின்தொடர்ந்த வாலி (28) மாதம் வரையில் அவ்விடம் யுத்தஞ்செய்து அசுரனைக் கொன்றனன். தமயன் சொற்படி துவார வாயிலில் காத்திருந்த தம்பி நெடுநாள் ஆனமையால் தமயனை அசுரன் கொன்றான் என எண்ணிப் பிலவாயிலை அடைத்து அரசாண்டு இருந்தனன். இதற்கு முன் துந்துமி என்னும் அரக்கன் யுத்தத்திற்கு வர அவனைக்கொன்று அவன் உடலைப் பந்து அடித்ததால் அது மதங்கர் மலையில் விழுந்தது. அதனால் மதங்கர் கோபித்து இம்மலையை மிதிக்கில் தலைவெடிக்க எனச் சாபம் பெற்றவன். சுக்கிரீவன் தான் இறந்ததாக எண்ணி அரசாண்டதால் கோபித்து அடித்துத் துரத்த, அவன் அஞ்சி இரிசிகபர்வதம் அடைய, அப்பர்வதத்தில் சாபத்திக்கு அஞ்சி நின்றவன், சுக்கிரீவன் இராமரைத் துணைகொண்டு துணைவலியால் யுத்தத்திற்கு அழைத்தகைக் கேட்டு மனைவியான தாரை தடுக்கவும் கேளாமற் சென்று யுத்தஞ்செய்து இராமர் எய்த பானத்தைப் பிடித்து அதில் இராமமூர்த்தியின் பெயர் கண்டு நிந்தித்துப் பின் அறிவுதோன்றித் துதித்துத் தன் தம்பியைக் காக்கவேண்டிக் கொண்டு உயிர் நீத்தவன். |
வாலிநீதி | பிரசவித்த பின் உண்டாம் முதல் ருதுகாலத்தில் புருஷனைச் சேர்ந்து கருப்பத்தை யடைந்த ஸ்திரீ. (ஜீவ.) |
வாலுகாயந்திரம் | வாயகன்ற பாத்திரத்திடையில் மருந்தமைத்த குப்பியை யிட்டு மணல் நிரப்பி அடியில் தீயிட்டெரிப்ப தற்கான பொறி. |
வாலுகார்ணவம் | இமயத்திற்கு வடக்கிலுள்ள ஒரு மணல்வெளி. பாண்ட வர்கள் துறவடைந்து செல்கையில் இதைக் கண்டனர். (பார~மஹப்பிர.) |
வால்நக்ஷத்திரம் | இதனைத் தூமகேது என்பர். இது 75, 76 வருஷங்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது. இது தலையில் நக்ஷத்திர உருவத்துடன் பின்னால் நீண்டு அகன்று வெண்ணிறம் பெற்ற வாலைப்பெற்றிருக்கிறது. இந்த நக்ஷத்திரங்களில் பலவகை வெவ்வேறு வடிவினவாய் நீண்டும், குறுகியும், வளைந்தும், பிரிந்தும் இருக்கிறன என்பர். இவை ஆகாயத்தில் கூட்டங்களாக இருக்கின்றன. அவற்றுள் (270) வால் நக்ஷத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. மற்றொன்று வால் குறுகிய தூமகேது; இது (3 1/2) வருஷத்திற் கொருமுறை சூரியனைச் சுற்றுகிறதாம். மற்றொன்று (6 1/2) வருஷத் திற்கொருமுறை சூரியனைச் சுற்றி வருகிறதாம். பலவாலி நக்ஷத்திரம் : இது பல வால்களைப் பெற்ற நக்ஷத்திரம். மற்றொரு தூமகேது (2000) வருஷ அளவிற் சூரியனைச் சுற்றி வருகிறது. சில வால் நக்ஷத்திரங்கள் பகலிலும் பிரகாசத்தைத் தரும் ஒளியுள்ளன என்பர். இவ்வகை நக்ஷத்திரத்தின் வால் உச்சிவானத்திருந்து அடிவானம் வரையில் நீண்டிருந்ததாகக் கூறுவர். |
வால்மீகி | 1. வேத விரோதமான வாதம் செய்து மஹருஷிகளாலும் திரேதாகனி யாலும் நீ பிரம்மகத்தி செய்தவனாவாய் எனச் சபிக்கப்பட்டவர். அச்சாபம் சிவபிரான நீக்கப்பட்டுப் பனிதனாயினவர். (பார~அநுசா.) 2. வான்மீகியைக் காண்க. |
வால்ரஸ் | இதனைச் சீனத்துக் குதிரை என்பர். வட துருவ சமுத்திரவாசி. இது 10, 15 அடிகள் நீளமுள்ளது. தேகம் தடித்துக் கொழுத்திருக்கிறது, சாம்பல் நிறம்; தோல் அழுத்தமானது. கழுத்து குறுகித் தலைபருத்துக் கண்கள் சிறுத்திருக்கிறது. இதற்கு முகத்தில் மீசை பருத்து வலுத்து நீண்ட இரண்டு கொம்புகளிருக்கின்றன. அது (2) அடி நீளமுள்ளது. இது கடலி னடியிலிருந்து மேல்பாகத்திற்கு வருகையில் பற்களால் பனிப்பாறைகளைத் தொளைத்துக்சொண்டு மேலெழும். |
வாள் செலவு | வெல்லுதற்கரிய போரையுடைய வஞ்சியான் போர்க்கு அழைத்தபின்பு பொருபடையிடத்து வான் போனதைக் கூறுந்துறை. (பு. வெ) |
வாழை | இஃது இந்தியாவில் எக்காலமும் பயன் தரும் மரம். இதன் பழம் அதியினிமையானது. இதன் ஒவ்வொரு உறுப்பும் பயன் படுவது. இதில் ரஸ்தாளி, சருவாழை, கொட்டை வாழை, செவ்வாழை, பூவாழை, பேயன் வாழை, மொந்தன் வாழை, கர்ப்பூரவாழை, யானை வாழை எனப் பல வகையுண்டு. விசிறிவாழை யென்பது வேறொருவகை. |
வாழைமரம் | இது இந்து தேசத்து மரம். அதிகப் பயனுள்ளது. இதற்கு வித்தில்வை. ஒரு கன்று நட்டால் அது பலநாட்கள் வாழ்ந்திருக்கும்; ஆதலால் அதற்கு வாழை யென்று பெயர். இது வழுவழுப்பான கோழறையுடையது. இது பட்டைகள் ஒன்றின் மேலொன்றாய் அடுக்காயிருக்கும்; பட்டைக்குள் தண்டிருக்கும். இலைகள் அகன்று காம்புடனீண்டு காம்பு பெற்றிருக்கும். வைத்த (6,7) மாதங்களில் கண்ணாடி இலைவிட்டுப் பூவிட்டுக் குலை தள்ளும், பூ அடி பருத்து முனை குவிந்து செந்நிறமாயிருக்கும். உள்ளில் மகரந்தங்கள் இருக்கும். குலையில் சீப்பிற்கு (20) காய்கள் இருக்கும். பழமானால் ருசியாயிருக்கும். இவ்வினத்தில், செவ்வாழை, பச்சைவாழை, வெள்வாழை, ரஸ்தாளி, மொந்தன் வாழை, அடுக்கு வாழை, மலை வாழை, கருவாழை, பேயன் வாழை, நவரைவாழை யெனப் பலவகையுண்டு, இது முக்கனிகளில் முதலாவது, காயைக் கறி சமைப்பார்கள், முக்கியமாய் மொந் தன் கறிசமைக்க உதவும். தண்டும் பூவும் கறிக்குதவும், நாரினால் கயிறு வஸ்திரம் செய்வர். |
வாழ்த்தணி | இன்ன தன்மை யுடையார்க்கு இன்னது நிகழ்க என்று கவி தான் கருதிய தனை விரித்துக்கூறும் அணி. |
வாழ்த்து | மெய் வாழ்த்து, இருபுறவாழ்த்து என இருவகை. இது உண்மையாக வாழ்த்தலும், மனம் வேறுபட்டு வாழ்த்தலுமாம். |
வாஸ்து | 1. வசுக்களில் ஒருவன்; தருமத்திற்கு வசு இடத்து உதித்தவன். பாரி ஆங்கீரசி. 2. அந்தகாசா யுத்தத்தில் கோபித்த சிவமூர்த்தியின் வியர்வை பூமியில் சிந்தியது. அதில் இருந்து மூவுலகங்களையும் விழுங்கத்தக்க ஒரு பூதம் உண்டாய் சிவாஞ்ஞையால் அந்தகாசுரன் உதிரத்தை உண்டு, மிகுந்த தபஞ்செய்து வரம்பெற்று உலகத்தை வருத்திவந்தது. இதனால் தேவர் ஸ்ரீ கண்ட ருத்திரரிடம் முறையிட்டனர். அம்மூர்த்தி அதிபலன் என்னும் ருத்திரனையும் மாயாபாசங்களையும் சிருட்டித்து அனுப்ப அதிபலர் பாசங் களால் அவ்வாஸ்துவைக் கட்டிப் பூமியில் மல்லாக்கத் தள்ளித் தேவர்களை அப்பூதத்தின் மேல் வசிக்கச் செய்தனர். தேவர் வசித்தலால் பூதத்திற்கு வாஸ்து என்று பெயர் உண்டாயிற்று. இவன் பின் சுக்கிரனால் உண் டானான் என்றும், இந்திரன் மலைகளின் சிறகுகளை அளக்க அப்பாரம் பொறுக்காமல் பூமி நாகங்களுடன் எழுந்திருக்கச் சர்ப்பங்களின் விஷத்தி லிருந்து மீண்டும் தோன்றினான் என்றும் யுகபதத்தால் பல பேதமாகப் புராணங்கள் கூறுகின்றன. இவன் ஈசானத்தில் மத்தகம், நிருதியில் பாதம், மார்பில் அஞ்சலி, கீழே முகம் கொண்டு கோப வடிவுடன் இருப்பன் என்பர். இவன் புரட்டாசி முதல் மூன்று மாதம் கிழக்கேதலே உள்ளானாகவும், மார்கழி முதல் மூன்று மாதம் மேற்கே தலை உள்ளவனாகவும், படுத்துக் கொண்டும், பூசாகாலத்தில் ஊர்த்துவமுகனாகவும், மற்றக் காலத்தில் அதோமுகனாகவும் இருப்பன் என்பர். வாஸ்து முதல்வராவார் பிரமன், மரீசி, சவி தரு, சாவித்திரன், விவச்வான், இந்திரன், இந்திரஜயன், மித்திரன், ருத்திரன், ருத்நிரதாசன், பருதிவித்திரன், ஆபன், ஆபவத்ஸன், ஈசன், பாச்சந்நியன், ஜயன், மகவான், சூரியன், ஸத்யன், பரம்சகன், அந்த ரிக்ஷன், அக்கினி, பூஷா, வித்தன்,க்ரஹா தயக்ஷன், யமன், கந்தர்வன்,ப்ருங்கராசன், மிருகன், பித்ரு, தௌவரான், சுக்கிரீவன். புஷ்பதந்தன், வருணன், அஸுரன், சோஷன், ரோகன், வாயுநரகன், முக்யன், பல்லன், சோமன், சௌம்யன், அதிதி திதி, சாகி, சவிரி, பூதனை, பாபாராடி, ஸ்கந்தர் அர்யமா, ஜம்பகன், பலிபிஞ்சன் என்பவராம், (சி. சா.) |
வாஸ்து தேவதை | (32) ஈசானர், பர்ஜன்யர், ஜயாதர், மகேந்திரர், ஆதித்யர், சத்தியகர், பிரம்சர், அந்தரிக்ஷர், அக்னி, பூஷ்ணர், விதாத்ரு, கிரகக்ஷதர், யமர், காந்தர்வர், பிருங்கராஜர், மிருகராஜர், நிருதர், துவௌவாரிகர், சுக்கிரீவர், புஷ்பதந்தர், வருணர், அசுரர், சேஷர், ரோசர், வாயு, நாகர், முக்யர், பல்லாடகர், சோமர், ருஷி, அதிதி, திதி |
வாஸ்து புருஷன் நித்திரை விடுதல் | சித்திரை 102 5 நாழிக்கு, வைகாசி 212 2 நாழிக்கு, ஆடி 112 2நாழிக்கு, ஆவணி 62 10 நாழிக்கு, ஐப்பசி 112 2 நாழிக்கு, கார்த்திகை 82, 10 நாழிக்கு, தை 122, 22 நாழிக்கு, மாசி 2228 நாழிக்கு, பங்குனி 222, 8 நாழிக்குமாம். ஆனி, பாட்டாசி, மார்கழி இந்த மாதங்களில் வாஸ்து புருஷன் நித்திரை விடுவதில்லை, |
வாஸ்துதேவதைகள் | பிரமன், அரியமா, விவஸ்வர், மித்ரர், பிரதிலீதரர், பர்ஜன்யர், ஜயந்தர், மஹேந்திரர், ஆதித்யர், சத்யகர், பிரம்சர், அந்தரிக்ஷர், அக்னி, வித்தர், கிரகக்ஷ தர், யமன், கந்தர்வர், பிருங்கராஜர், மிருகர், நிருதி, தௌவாரிகர், சுக்ரீவர், புஷ்பதந்தர், வருணர், அசுரர், சேஷர், ரோகர், வாயு, நாகர், முக்யர், பல்லாடர், சோமர், கஜர், அதிதி, திதி, ஈசானர், சூர் உயர், சூர்யபுத்ரர், இந்திரன், இந்திரபுத்ரன், ருத்ரர், ருத்ரபுத்ரர், ஆபர், ஆபவத்சர், குலதேவதைகளாகும் சாகி, விதாரிகை, பூதனை, பாபராக்ஷவலி முதலியோர். (ஸ்ரீகாமிகம்.) |
வாஸ்துபுருஷன் நீத்திரை செய்யுந் திசைகளுக்கு மாதங்கள் | சித்திரை வைகாசி கிழக்கு, ஆவணி ஐப்பசி கார்த்திகை தை வடக்கு, ஆனி ஆடி புரட்டாசி மார்கழி மாசி தெற்கு, பங்குனி மேற்கு. “ஆடு விடைகிழக்கா மாவணிதேளைப்பசிதை, கூடு வடக்காங் குளிர்மிதுனம் நீடுசிலை, பெண்கும்பந் தெற்காகும் பேசரிய மேற்கா மீன், வண்வாஸ்து சென்னி வைக்குமால்,” சித்திரை வைகாசி பங்குனி மாதங்களில் கிழக்கு மேற்கு வீதியிலும், ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாதங்களில் தெற்கு வடக்கு வீதியிலும் குடிபுக மனைகோல உத்தமம். ஆனி ஆடி புரட்டாசி மார்கழி மாசி மாதங்கள் குடிபுக மனைகோல ஆகாவென்று சில நூல்களிற் சொல்லப் படுகின்றன. (ஆடுவிடை மீனமதி யாங்கிழக்கு மேற்காகும், தேடுசிங்கம் தேள்பரிமான் தென்வடக்காம் நீடுதெரு, வீடெடுக்க விற்புகுத வேண்டி னோர் மேலோர்கள், நாட தனிலுள்ள வர்க்கு நன்கு. “ |