அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
ரதசப்தமி விரதம்

இது மாசி மாதம் சுக்கிலபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது. இதில் அஜணோதயமாகிய; தினத்தில் திதித்வயமாகி ஷஷ்டி சப்தமி யோகமாகிய பத்மயோகத்தில் பொன், வெள்ளி, தாம்ர பாத்திரமாகிய பாண்டத்தில் நெய் விளக்கிட்டுச் சிரத்தில் தாங்கிக் கொண்டு சூரியனை மனத்தில் தியானித்து மந்திரஞ் செபித்துத் தீபத்தைச் சலத்தில் விட்டு (7) எருக்கிலை அல்லது (7) இலந்தை இலைகளைத் தலையிற்கொண்டு கல்கை முதலியன சுமந்துவரும் புண்ய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து விரதமிருப்பது, பொன் முதலியவற்றால் ரதஞ்செய்து அதில் சூரியனையும் சாரதியையும் பிரதிஷ்டித்துப் பூசித்துத் தானாதிகள் செய்து விரதமிருப்பது. இவ்வாறு செய்யின் ஒரு பிறவியில் செய்த பாவம் நீங்குமெனச் கர்க்கர் கூறுகின்றனர்,

ரம்பா விரதம்

இது ஆனிமாதம் சுக்கில திருதியையில் அநுஷ்டிப்பது.

ராகுகாலம்

வாரங்காண்க.

ராசிகளிற் கிரகநிலை

சூரியன், சுக்கிரன், புதன் 1.ம், செவ்வாய் மாதம் 1 1/2. யும், குரு வருடம் 1.ம், சநி வருடம் 1/2. யும், இராகுகேது வருடம் 1 1/2, சந்திரன் நாள் 1 ¼ ம் ஆக நிற்கும்.

ராசிகள்

இவற்றின் மாதம், உருவம், அங்கம், திக்குகள், சாதி, நிறம், பகல், இராவிழிப்பு, சரம், ஸ்திரம் உபயம், ஆண், பெண், கால உதயம் முதலியன கீழே குறிக்கப்படுகின்றன. (மேஷம்) சித்திரை, வெள்ளாடு, தலை, கிழக்கு, க்ஷத்திரியன், வெள்ளாழன், சிவப்பு, இராவிழிப்பு, சரம், ஆண், நாற்கால், காலுதயம். (இடபம்) வைகாசி, எருது, முகம், கிழக்கு, சூத்திரன், இடையன், வெள்ளை, இராவிழிப்பு, ஸ்திரம், பெண், நாற்காலி, காலுரயம். (மீதுனம்) ஆனி, ஆண், பெண், கழுத்து, கிழக்கு,வைசியன், சக்கிலியன், கறுப்பு, இராவிழிப்பு, உபயம், ஆண், இருகால், தலை உதயம், சுஷ்கம். (கடகம்) ஆடி, நண்டு, தோள், தெற்கு, பிராமணன், கன்னான், வெள்ளை, இராவிழிப்பு, சரம், பெண், பலகால், காலுதயம், (சிங்கம்) ஆவணி, சிங்கம், மார்பு, தெற்கு, க்ஷத்திரியன், பிராமணன், சிவப்பு, பகல்விழிப்பு, ஸ்திரம், ஆண், நாற்கால், தலையுதயம், சுஷ்கம். (கன்னி) புரட்டாசி, பெண், இருகால், தலையு தயம், சுஷ்கம். (துலாம்) ஐப்பசி, தராசு, முதுகு, மேற்கு, வைசியன், செட்டி, வெள்ளை, பகல் விழிப்பு, சரம், ஆண், இருகால், தலை உதயம். (விருச்சிகம்) கார்த்திகை, தேள், பீஜம், மேற்கு, பிராமணன், வேடன், பச்சை, பகல் விழிப்பு, ஸ்திரம், பெண், பலகால்; தலை உதயம். (தனுசு) மார்கழி, வில், தொடை, மேற்கு, க்ஷத்திரியன், தட்டான், சிவப்பு இராவிழிப்பு, உபயம், ஆண், நாற்கால், காலுதயம். (மகரம்) தை, முதலை, முழங்கால், வடக்கு, சூத்திரன், வண்ணான், கறுப்பு, இரா விழிப்பு, சரம், பெண், பாக்கும் ராசி, காலுதயம். (கும்பம்) மாசி, குடம், கணுக்கால், வடக்கு, வைசியன், குயவன், பச்சை, பகல் விழிப்பு, ஸ்திரம், ஆண், இருகால், தலைஉதயம், (மீனம்) பங்குனி, மீன், பாதம், வடக்கு, பிராமணன், பறையன், பச்சை, பகல் விழிப்பு, உபயம், பெண், பறக்கும் ராசி, உடலு தயம். இந்த இராசிகளில் தலையுதய இராசிகள் பகவ்வலி உடையனவாம். காலுதய ராசி இராவலி உடையனவாம், மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு, ஆக நான்குக்கும் முதலில் (1/2) நாழிசை தியாச்சியமும், மிதுனம், சிங்கம், துலாம், கும்பம், ஆக நாலுக்கும் நடுவில் (2) நாழிகை தியாச் சியமும், கர்க்கடகம், விருச்சிகம், மகரம், மீனம், ஆக நாலுக்கும் கடையில் (1/2) நாழிகை தியாச்சியமுமாம்.

ருதுகாலபலன்

விடியல்; மங்கிலியவதி. பகல்; யாத்திரை, பிற்பகல்; சோரத்வம். மத்தியானம்; சம்பத்துடையள். சாயங்காலம்; புத்திரவிருத்தி, அஸ்தமனம்; வேசை, இராத்திரி; நீடிய வாழ்வு. நடுராத்திரி; விதவை.

ருதுசாந்திபலன்

ஸ்திரி புருஷர்களுடைய ஜன்ம நக்ஷத்ரங்களுக்கு 7 வது தாசுர நக்ஷத்ரங்களும், 8 வது ராசியில் சந்திரனிருக்கும் நட்சத்சங்களும் திதிகளில் சஷ்டி, அஷ்டமி, ஏகா, சதுர்த்தசி, பூரணை, அமாவாசையும், நட்சத்ரங்களில் அசு, பா, கிரு, ஆயி, மக, பூர, கேட், ரேவதியும் யோகங்களில் விதீபாதம், வைதிருதியும் லக்கினங்களில் விருஷபம், கடகம், கன்னி, விருச், மகரம் மீனமும் இவைகள் அல்லாத காலங்கள் சுபம். ஆருடத்திற்குப்பலன். கிழக்கு; வெள்ளைப் புடவை, சோரம் போவாள். (பிள்ளை 7). தென்கிழக்கு கறுப்புப்புடவை, (பிள்ளை) தெற்கு; நீலப் புடவை (மலடி). தென்மேற்கு வெள்ளைப்புடவை, சோகி, (பிள்ளை 4). மேற்கு அழுக்குப்புடவை, நல்லது, (பிள்ளை 6). வடமேற்கு மஞ்சள் கலந்த சிகப்புப் புடவை, சக்களத்தியுடையவள், (பிள்ளை 2). வடக்கு துவரை வன்னப்புடவை, செல்வமுண்டு. வடகிழக்கு நல்ல புடவை, தரித்ரம், (பிள்ளை 10) ‘உத்ராட மாதியாக வாறுமாறு முத்தமம், பித்தனார் பிறந்தநாட்கள் பின்னை யாறு மத்திமம், அஸ்தமோடு சித்திரை அகன்ற வாழ்வு குன்றிடும், மற்சோறு நாள் கடம்மின் மங்கைநூ விழப்பளே.

ருதுதிதிபலன்

பிரதமை; சோரம், துவிதியை; அழகுடையள், திரிதியை; இன்பமுடையள், சதுர்த்தி; சத்துருவுண்டு, பஞ்சமி; புத்ரரண்டு, சஷ்டி; ஆசாரமுடையன், சப்தமி; புத்திரருண்டு. அஷ்டமி; பெற்றிழப்பள். நவமி; துக்கி, தசமி; தர்மிஷ்டி, ஏகாதசி; பலமுடையவள். துவாதசி; கோபமுடையவள், திரயோதசி; கற்புடையவள். சதுர்த்தசி; சோர முடைவள், பௌர்ணமி; இடருடையவள். அமாவாசை; தரித்ரி,

ருதுநக்ஷத்ரபலன்

அசு; விதவை. பரணி; புத்ரவதி. கார்த்திகை; மலடி. ரோகணி; நன்மையுடையவள். மிரு;புருஷனுக் கினியவள். ஆதிரை; புருஷவெறுப்புடையவள், புனர்பூசம்; சுகமுடையள், பூசம்;சீருடையன், ஆயில்யம்; வயிறழிவு. மகம்; பர்த்தாவுக்கு நல்லள். பூரம்; மலடி. உத்திரம்; பிரயோசனவதி. அஸ்தம்; நல்லவள். சித்திரை; அறிவுள்ளவள். சுவாதி; குடும்பி, விசாகம்; அமங்கலி. அனுஷம்; ரோகி, கேட்டை; நீசஸ்திரீ, மூலம்; பாலுடையவள், பூராடம்; அடிமை கெடும்: உத்திராடம்; தர்மிஷ்டி, திருவோணம்; பாக்கியவதி. அவிட்டம்; பொருளுடையவள். சதயம்; பொருளழிவு. பூரட்டாதி;மலடி, உத்ரட்டாதி; தரித்ரி. ரேவதி; ரோகி.

ருதுமாதபலன்

சித்திரை; புருஷனுக்காகாது. வைகாசி; சுகத்துடன் வாழ்வாள். ஆனி; புத்திரருடையவள். ஆடி; புருஷன் மேல் ஆசையுள்ளவள். ஆவணி; பெருவாழ்வுஞ் சிறப்புமுடையவன். புரட்டாசி; பதிவிரதை யாயிருப்பாள். ஐப்பசி; புத்திரருண்டு; விதவையாவாள். கார்த்திகை; தூஷணி, கோபமுடையவள், மார்கழி; நல்ல புத்திரரைப்பெற்று வாழ்வாள். தை; புண்ணியமும் பாக்கியமும் பெருமையுமுடையவள். மாசி; சுகத்தைப் பெறுவாள். பங்குனி; ஆயுள் விருத்தி. (புத்திராதியாயிருப்பாள்.)

ருதுலக்கின பலன்

மேஷம் விருச்சிகம்; பரஸ்திரி. ரிஷபம் தனுசு மிதுனம் விபசாரி, கர்க்கடகம் ஒழுக்கமில்லாதவள். சிங்கம் சன்னி; செறியுடையவள். துலாம் தரித்ரி. மகரம்; கற்புடையவள். கும்பம்; பொருளுடையவள்., மீனம்; தீதுடையவள்.

ருதுவாரபலன்

ஞாயிறு; வியாதி, புத்ரநாசம். திங்கள்; பதிவிரதை, செவ்வாய்; விதவை. புதன்; புத்ரவதி. வியாழம்; போகவதி. வெள்ளி; மிக்கபோகவதி. சனி; வியாதி, பீடை.

ருஷிபஞ்சமி விரதம்

இது புரட்டாசி மாதத்தில் சுக்லபக்ஷத்தில் மத்யானத்தில் பஞ்சமி திதியிருக்கையில் அநுஷ்டிப்பது. இதில் ருஷிபஞ்சமி விரதத்தின் பொருட்டுப் பஞ்சகவ்ய, யமுனை பூசைகள் முடித்துக் கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிட்டர், அகஸ்தியர், அருந்ததி முதலியவர்களையும், சகல ஷிகளையும் பூசித்து உத்யாபனஞ் செய்வது. இது ரஜஸ்வலையானவள்போஜன பாத்திரங்களைத் தீண்டுவதாலும், புருஷன் ரஜஸ்வலை யானவளுடன் பேசுவதாலும், தீண்டுவதாலும், உண்டான பாபம் நீங்க அநுஷ்டிப்பது. இதனை வைதர்ப்ப தேசத்தவனான உதங்க காம வேதியன் மருமகள் அநுஷ்டித்தனள், பின்னும் சுமித்திரன் மனைவி ஐது பீடையுடன் பாண்ட ஸ்பர்சனஞ் செய்து பெண்ணாயாகி இவ்விரதத் தால் சாபம் நீங்கினள்,

ரூபசங்கிராந்தி

இது சங்கிராந்தி காலத்தில் பொன் பாத்திரத்தில் பொன்னிட்டு நெய்வார்த்து வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூர்யபூஜை செய்யவேண்டியது.

ரோகண சந்திரசேகர விரதம்

சோமவாரமாயினும், மிருகசீரிஷ நக்ஷத்திர மாயினும் வந்த பூர்ணிமையில் சிவ மூர்த்தியை விதிப்படி பூசித்து, விதிப்படி தானாதிகளைத்தரின் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.