அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
யக்கர்

தேவ சாதியரில் ஒரு வகுப்பினர். யாழ்வாசிப்போர்.

யக்யசீலன்

சிவஸ்கந்தன் குமாரன். இவன் குமாரன் விசயன்.

யக்ஷகன்

இந்திரன் தூதன்.

யக்ஷணி

1. இயக்கர் பெண்கள் இருதுககளில் பணம் பெறப் பூமியில் சஞ்சரிப்போர். 2. கட்கம், கேடகம் முதலிய ஆயுதங்களை யுடையவளாய் விகாரவுருவுடன் கபாலம், சிரகோசம் கொண்டிருப்பவள்.

யக்ஷர்

காசிபருக்குச் சுரசையிடம் பிறந்த குமாரர்.

யசசுதி

ருஷப தீர்த்தங்கரருக்குத் தேவி.

யசமானர்

ஆன்மாவை அதிட்டித்திருக்கும் சிவமூர்த்தம். இவரது சத்தி சர்வபூததமனி.

யசஸ்

இவர் கலியுகமுடிவில் கற்கியைக் குமாரராகப் பெறப்போகும் பிராமணர்.

யசுர்வேதம்

இரண்டாவது வேதம். இது (109) சாகைகளுடையது. இதற்குள்ள உபநிஷதங்கள், கடவல்லி, தைத்ரீயம், பிரமம், கைவல்லியம், சுவேதாச்வதரம், கர்ப்பம், நாராயணம், அமிர்தவிந்து, அமிர்தநாதம், காலாக்னி ருத்ரம், க்ஷுரிகை, சர்வசாரம், சுகரகஸ்யம், தேசோவிந்து, தியானவிந்து, பிரமவித்யை, யோசதத்வம், தக்ஷிணா மூர்த்தி, ஸ்தந்தம், சாரீரசம், யோகசிகை, ஏகாக்ஷரம், அட்சியம், அவதூ தம், கரம், உருத்திர விருதயம், யோக குண்டலினி, பஞ்சப்பிரமம், பிராணாக்னி கோத்திரம், வராகம், கலிசந்தரணம், சரஸ்வதி, ஈசாவாஸ்யம், பிருகதாரண்யம், சாபாலம், அம்சம், பரம அம்சம், சுபாலம், மந்திரிகை, நிராலம்பம், திரிசிகை, மண்டலம், அத்துவய தாரகம், பைங்கலம், பிட்சு, துரியாதீதம், அத்தியாத்துமம், தாராசாரம், யாஞ்ஞவல்க்கியம், காட்யாயனி, முத்திகம் என்பன.

யசோதரன்

ஔதய தேயத்தில் இராசமாபுரமென்ற பட்டணத்தில் மாரிதத்தன் என்னும் அரசன் ஒருவன் இருந்தனன். அவன் வசந்த காலத்துச் சோலைக்கண் செல்ல நகரமாக்கள் இக்காலத்துத் தேவி பூசை செய்ய வேண்டும், அல்லாவிடின் நமக்குத் தீதுவரும் என்றனர். அதைக் கேட்ட அரசன், தேவி சந்நிதி சென்று எமது துன்பநீக்குக என்று வேண்டிப் பலியின் பொருட்டு மயில், கோழி, பன்றி, ஆடு எருமை முதலியன விரட்டையாகக் கொண்டு வருக வென்று சொல்லிப்பின் சண்டகருமனை நோக்கி, மக்களிரட்டை கொண்டுவரக் கட்டளை யிட்டனன். இதைக் கேட்ட சண்டகருமன் மக்களிரட்டைகளைத் தேட நகரத்துள் சென்றனன். அந்த இடத்தில் சுதத்தாசாரி யென்போர் மாத வத்தோர் சூழவிருக்கையில் அபயருசி, அபயமதி யென்பாரும், அச்சுதத்தனை வணங்க. அவர் இவ்விருவரையும் நோக்கி ‘நீங்கள் பசியால் வருந்தினீர்; நும்பசி தீர்ந்து வருக’ என்றனர். அவ்வாறு பிக்ஷக் களாய் வருவோரைச் சண்டகருமன் கண்டு, கொண்டுபோக, தங்கை யாகிய அபயமதி கலங்க, அபயருசி யாக்கைநிலை யின்மை, ஊழ்வலி, தாங்கள் சுதத்தரிடம் கேட்ட பழம்பிறப்பு முதலிய வுணர்த்தி, யவளது துன்பத்தை நீக்கி ஞானமுணர்த்த, இருவரும் மனத்திடங்கொண்டு நின்றனர். இவ்வாறு நின்றவர்களைச் சண்டகருமன் காளிகோயிற்கு முன்விட, மாரிதத்தன் இவர்களைக் காளிக்குப் பலியூட்ட வாள்கைக் கொள்ள, இவ்விருவரும் மனநிலை சற்றும் தளராதவராய் நிற்கக்கண்ட அரசனும் மற்றவரும் இவர்களை நோக்கி இவ்வரசனீடு வாழ்க என வாழ்த்தக்கூறினர். இதனைக் கேட்ட அவ்விருவரும் புன்முறுவல் செய்து, “மறந்தும் பிறவுயிர் கொல்லாது அறங்கொள் சிந்தையனா யுயிர் களிடத் தன்புபாரித்துப் பிறவி நீக்கும் அறமேற்கொண்டு புகழுடன் உலகத்தை யாண்டு நீடு வாழ்க” என்றனர். இவ்வாறு கூறி நகைத்து நின்றவர்களை அரசன் கண்டு துன்பம் வரவும் அஞ்சாது நகைத்ததற்குக் காரணம் கூறுக என, இருவரும் வருவதுவரின் அஞ்சுதலிற் பயனின்று, நாங்கள் முற்பிறப்பில் செய்த பாவத்தா லிவ்வாறு பல பிறவிகொண் டோம்; இப்போது மன்னன் வாழ்க எனின் எப்பிறவியுறுமோ என்று அஞ்சினோ மென, அரசன் கேட்டு, ‘உமது முற்பிறவி கூறுக’ என்று வாளைத் தரையிலிட்டுக் கேட்க, அம்மாரி தத்தனை நோக்கிக் கூறுவாராயினர். அவந்தி நாட்டின் கண்ணுள்ள உஞ்சயனிபுரத்தில் அசோகன் என்னும் அரசன் சந்திரமதி யென்பாளை மணந்து வாழ்ந் திருக்கையில் அவனுக்கு யசோதான் என்னும் ஒரு புத்திரன் பிறந்தனன். அவ்யசோதான் பருவமடைந்து அமுத மதியை மணந்து யசோமதி என்னும் ஒரு குமாரனைப் பெற்றனன். இவ்வாறிருக்கையில் ஒருநாள் அசோகன் தனக்கு நரைவந்தது கண்டு இளைமை முதலிய நிலையாமை யுணர்ந்து யசோதானுக்கு ராஜ்யமளித்துத் தவமேற்கொண்டனன். அரசடைந்த யசோதான் பெரும்போகத்தில் மூழ்கி ஒருநாள் தன் மனைவி யுடன் துயிலுகையில், மனைவி யானைக் கூடத்திலிருந்து வந்த ஒரு வீணையொலி கேட்டு அவ்வீணை வாசித்தவன் மீது ஆசைகொண்டு விடிந்ததும் அவன் மீது மனங்கொண்டிருத் தலைக் கண்டதோழி வாட்டத்தாலுணர்ந்து கேட்க, அரசி தன்னெண்ணங்கூற, தோழி கேட்டு நற்புத்தி கூறவுங் கேளாதவளாய்த் தூது அனுப்ப, குணவதியாகிய தோழி யவணிலைகண்டு வந்து அரசியை நோக்கி நீ ஆசைகொண்டோன் அங்கப் பழுதுள்ள அட்ட கோணன், மகா விகாரமுள்ளவன், அவனை நீ காணின் விகாரமுறுவாய் என்று எண்ணி உன்னினைவை அவனுக்குக் கூறாது வந்தே’ னென்னக் கேட்ட அமுதமதி, “எவ்வகையாயினுமாக, என்மனம் அவனிடஞ் சென்றது; அதனை முடியென்று சொல்லித் தனியிடம் வருவித்து அவனோடு கள்ளப்புணர்ச்சி செய்து வருநாட் களில், இவள் அரசனிடம் பண்டு போலிலாமையைக் குறிப்பாலறிந்த அரசன், ஒருநாள் பொய்யுறக்கங் கொண்டு அவள் சோரனிடம் போகையில் இவளுணராவண்ணம் பின்சென்று காண்போமென்று காந்திருக்கையில், அமுதமதி வரக்கண்ட அட்டபங்கன், அவள் வேளை தாழ்த்து வந்தது பற்றிக் கூந்தலைப்பற்றி யீர்த்து மோதியலைக்கச் சிறிது வருந்தி, மீண்டும் அவள் வேண்டக் களித்தது கண்டு, அரசன், வாளை யெடுத்து நோக்கி மீண்டும் இவ்வாள் வீரர்களை வெட்டத் தகுந்த வாள், இது ஒரு பெண்ணிடத்தும், பெண் தன்மையுள்ளவ னிடத்துமோ பய னுறுவதென்று உறையிலிட்டு, அவளுக்கு முன் அணையில் வந்து படுத்துறங்கி யெழுந்து பழமைபோல் கொலுவிருக்க, தேவியும் அருகில் வந்து இருந்தனள், அரசன் ஒருநாள் விளையாட்டாகத் தன் கையி லிருந்த நீலமலரால் அவள் மேல் வீச, அரசி சோர்ந்து மண் மீது வீழ்ந்து அருகிருந்தோர் சீதோபசாரஞ் செய்ய எழுந்தனள். இதனைக்கண்ட அரசனிவளுயிர் மலரினால் ஏகலுற்றதென்று அசதியாடி மனத்தில் அரசைத் துறக்க எண்ணங் கொண்டு தாயை வணங்கித் தான் கண்ட தீய கனாநிலை தெரிவிக்க, தாய் காளிக்குப் பலியிடப் பணிக்க, அவ்வாறே ஐப்பசி மதியத்தில் அட்டமி வெள்ளிக்கிழமையில் உயிர்க்கொலைக் குடம்படாது மாவால் கோழியொன்று செய்து காளிக்குப் பலியிட, அது அரசன் முன் கூவிக்கொண்டு விழ, அரசன் வாளை நெகிழ்த்து வருந்திச் சினதீக்ஷை பெற்றுத் துறவடையுஞ் செய்தியைத் தாய்க்கு அறிவிக்க, இதை யுணர்ந்த அரசன் மனைவி தானும் துறவு பூண்பதாய் மாயஞ் செய்து அரசனுக்கும் அரசன் தாய்க்கும் விருந்திட்டு விஷம் வைத்துக் கொலைபுரிந்து, தன் மகனுக்கு மகுடஞ் சூட்டினாள். இவ்விளைவுகட் கெல்லாம் பூர்வகர்மம் காரணமென்று அபயருசி மாரிதத்தனுக் கறிவித்து அந்த யசோதரனும் அவன் தாய் சந்திரமதியும் பல பிறவியடைந்த விதத்தைக் கூறத் தொடங்கினன். முதலில் யசோதான் விந்தமலையில் ஒருமயிலின் வயிற்றில் முட்டையாயிருக்கையில் ஒரு வேடனால் மயில் கொல்லப்பட, அதின் வயிற்றிலிருந்த முட்டையைக் கோழியிடம் வைத்துக் குஞ்சாக்கி மனைவியிட மளித்தனன். தாயாகிய சந்திரமதி அந்நகரின் சேரியில் நாயாயினள். மயிலும் நாயும் வளர்ந்தபின் அரச னுக்கு அளிக்கப்பட்டு வருகையில் யசோதானாகிய மயில், தன் மனைவி யட்டபங்கனுடன் முயங்குதல் கண்டு அச்சாரன் கண்ணைக் குத்தி யொழித்தது. அதனால் அமுதமதி முனிந்து கல்லால் மயிலை யெறிய நாய்ப்பிறப்பு உற்ற தாய், மயிலைக் கௌவ அமுதமதி யதனை நாய் பெய் பலகையால் வீச அதுவும் இறந்தது. இரண்டாவது மன்னன் முள்ளம்பன்றியாகச் சந்திரமதி நாகமாயினள். மூன்றாவது மன்னன் மீனாய், சந்திரமதி முதலையாய்ப் பின் ஆடாயினள். அரசன் அந்த ஆட்டின் வயிற்றில் ஆண்குட்டியாய்ப் பிறந்து தாயைப் புணரக்கண்ட ஒருவனால் கொல்லப்பட்டுத் தாய்வயிற்றில் தாதுவாய் இருக்கையில் வேட்டைக்குச் சென்ற அரசனால் தாய் கொல்லப்பட அவ்வாட்டின் வயிற்றிலிருந்த குட்டியைப் புலையன் அரசன் கட்டளைப்படி கொண்டு சென்று வளர்த்து வந்தனன். ஒரு நாள் அரசன் வேட்டைக்குச் சென்றெறிந்த மிருகங்களில் எருமையைக் காளிக்குப் பலியிட, அந்தணர் இவ்வூன் ஆதபத்தினுலந்ததா தலால் சிரார்த்தஞ் செய்தலாகாதேன்று விலக்கித் தகரின் தசை நன்றென, அரசன், நான் புலையனிடம் வளர்க்க விட்ட ஆட்டின் கடாவைத் தருக என அவ்வாறே கொண்டுவர, ஆடு அரசன் முதலியவளை நோக்கித் தன் பழம்பிறப்புணர்ந்து இவன் என் மகன், இவை யென் பொருள், இது என் பட்டணம் என்று பலவாறாகச் சிந்தித்தொழிந்து அரசன் மாளிகையில் மீண்டும் ஆடாகப் பிறந்தது. சந்திரமதி ஒருமையாய் வணிகர்க்குப் பொதி சுமந்து சென்று உஞ்சயினி யாற்றிடை யிருக்கையில் அரசன் குதிரைவர, அதனுடன் போர் புரிந்து குதிரையைக் கொல்ல, அறிந்த அரசன், அதனைக் கொலை செய்விக்கக் கண்ட அமுதமதி அதன் தசைதின்று ஆற்றாது இவ்விடமிருக்கும் ஆட்டின் தசை தின்னின் அவா அடங்குமென, அவ்வாறே தாதியர் பிடித்து வர, ஆடு தன் வினையினை யெண்ணிக் கொலை செய்யப் பட்டுப் பின் அந்நகரத்துத் தாயும் குமாரனும் பறைச் சேரியில் சேவலாயினர். இச்சேவல்களைக் கண்ட அரசன் சண்டகருமனை யவற்றை வளர்க்கச் செய்தனன், ஒருநாள் யசோமதி தன் மனைவியுடன் உய்யானஞ் சென்று அகப்பர முனிவரைக் கண்டு அவர் கூறிய அறங்கேட்கையில் அவர் உன் தந்தையும் பாட்டியும் கோழியுருக் கொண்டு கூண்டிலிருப்பவர் எனக் கூறக் கேட்டு வருந்துகையில், கூட்டிலிருந்து கோழிகள் கேட்டு முனிவர் கூறிய வறமுணர்ந்து கூவுகை யில், அரசனால் எய்யப்பட்ட கணைபட்டு வீழ்ந்து யசோமதிக்கும் புட்பா வலிக்கும் இரட்டைப் பிள்ளைகளாகப்பிறந்து சுதத்த முனிவரிடம் அறங்கேட்டுத் துறவடைந்து முத்திபெற்றனரென, அபயமதி அபயருசி கூறக் கேட்ட மாரிதத்தன் துறவடைந்து மாதவ நோற்றுத் துறவி யாயினான்.

யசோதாகாவ்யம்

சங்கமருவிய சிறு காவியங்களில் ஒன்று. இது ஐந்து சருக்கங்களடங்கிய (320) செய்யுள்களைக் கொண்டது. இயற்றியவர் சைநமுனிவர்களில் ஒருவர்.

யசோதை

1. இவள் இதற்கு முன் வசுமதி, அல்லது தரா என்று பேருடையவள். கண்ணனை வளர்த்த தாய். ஒருநாள் கண்ணனை மடியில் வைத்துக்கொண்டு பாலூட்டுகையில், கண்ணன் கொட்டாவி விட, கண்ணன் வாயில் சகல அண்டங்களையுந் தன்னையும் கண்டு மயங்கினவள். அவ்வகை மற்றொருநாள் கண்ணன் மண்ணுண்ண வாய் திறக்கக் கூறி, அவ்வாயில் அவ்வகை கண்டு மயங்கினவள். இவள் சண்ணனை உரலில் கட்ட எண்ணிப் பல தாம்புகள் கொண்டு கட்டி அவை போதாதிருக்க வருந்தி நின்றவள். 2. அஸ்திகன் தேவி, 3. மரீச மானசகன்னி. பிதுருக்களைக் காண்க.

யசோவதி

1. ஈசான மூர்த்தியின் பட்டணம். 2. இரப்பிய அரசனது மந்திரியின் குமாரி. ஏகாவலியுடன் தாமரைத் தடாகத்தில் நீர் விளையாடவந்து காலகேது என்னும் அரக்கனால் பிடிபட்டுத் தன் சரிதையும் ஏகாவலி ஹைஹயனை மணக்க இருப்பதும் ஹைஹய னுக்குக் கூறினவள். பின் ஹைஹயன் நீ அந்தப் பாதாளம் விட்டு இவ் விடம் வந்ததெவ்வாறெனத் தேவி மந்திரத்தால் எனக்கு வழியொன்று தோன்றிற்று; அதனாலிங்குவந்து தேவி சொற்படி உன்னைக் கண்டே’ னென்று கூறி அவனை அழைத்துப் பாதாளஞ்சென்று காலகேதுவை வெல்வித்தவள். (தே~பா.)

யஞ்ஞகுமாரன்

காசிராஜனுக்கு யாகத்திற் பிறந்தவன். இவன் சரிதையைப்பற்றி வீதவவ்யனைக் காண்க.

யஞ்ஞகோபன்

மால்யவந்தன் குமாரனாகிய அரக்கன்.

யஞ்ஞக்கன்

விஷ்ணுவாற் கொல்லப்பட்ட அரக்கன்.

யஞ்ஞதத்தன்

தசரதன் வேட்டைமேற் சென்று இருளில் யானையென எண்ணிக் கொன்ற அந்தகராகிய தாய் தந்தையரின் குமாரன்.

யஞ்ஞமூர்த்தி

1. விஷ்ணுவின் அம்சம். ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடத்துப் பிறந்த குமாரர். இவர் தங்கையாகிய தக்ஷணையை மணம் புணர்ந்தவர். 2. ஒரு ஏகதண்ட சந்யாசி உடையவரிடத்தில் (17) நாள் வாதிட்டு (18) ஆம் நாள் தோற்றுப் பஞ்சசமஸ்காரம் பெற்று அருளாளப்பெருமாள் எம்பெருமானார் எனப் பின் பெயர்பெற்றவர்.

யஞ்ஞம்

தேவப்பிரீதியாய் இஷ்டசித்தியின் பொருட்டுச் செய்யப்படும் யாகம், இது நித்யமாய்ச் செய்யப்படுவதும் விசேஷமாய்ச் செய்யப் படுவதும் என இருவிதப்படும். அவற்றுள் நித்தியமாய்ச் செய்யப் படுவது தேவயஞ்ஞம், பிதுர்யஞ்ஞம், பூதயஞ்ஞம், பிரமயஞ்ஞம், மானுஷயஞ்ஞம் எனப்படும். விசேஷமாய்ச் செய்யப்படுவது யாகம், அதனை யாகத்திற் கூறினோம். தேவயக்ஞம் என்பது சூர்யாக்னி முதலிய தேவர்களைப் பூசிப்பது. பிதுர்யக்ஞம் என்பது பிதுர்க்களைப் பூசிப்பது, பூதயக்ஞம் பூதங்களுக்குப் பலி போடுதல், பிரமயக்ஞ மென்பது வேத மோதுகை. மாநுஷயக்ஞம் அதிதிகளைப் பூசித்தல்.

யஞ்ஞவராகமூர்த்தி

வராகமூர்த்திக்கு ஒரு பெயர்.

யஞ்ஞவர்க்கர்

ஒரு மகருஷி. இரணிய நாபனிடத்து யோக முபதேசிக்கப் பெற்றவர்.

யஞ்ஞவற்கலமுனி

தருமருக்கு அசுவமேதத்தில் யாகஞ் செய்வித்தவர். தேவி மயித்திரி.

யஞ்ஞவிருக்ஷங்களாவன

அரசு, அத்தி, இரளி, ஆஷரடி, கருங்காலி, ஆல், வன்னி, வில்வம், மா, விளா, அசனம், காட்டு வாழை. இவற்றால் சுருக்கு சுருவம் முதலிய யஞ்ஞசாதனங்கள் செய்யப்படும்,

யதி

1. நகுஷன் குமாரன். இவன் ஞானியாயினன். 2. பிரமன் புத்திரருளொருவன். இவனைப் பிரமன் தவத்தில் பிரயத்தனஞ் செய்வித்தும், சர்வ கர்மத்திலும் சம்மதனாகவுஞ் செய்வித்ததால் இப்பெயர் பெற்ரனன்.

யதிராஜமகாநசிகர்

கிடாம்பி யாச்சானுக்கு ஒரு திருநாமம்.

யதிராஜர்

1. இளையாழ்வார் துரியாச்சிரமம் வகிக்கையில் பெருமா ளவருக்கிட்ட பெயர். 2. உடையவர்க்கு ஒரு பெயர்,

யதீந்திரசரணன்

கூரத்தாழ்வானுக்கொரு பெயர்.

யதீந்திரப்பிரணவர்

மணவாள மாமுநிகளுக் கொருபெயர்.

யது

1. ஒரு இராஜ வம்சம். 2. ஒரு அரசன். தத்தாத்திரேயரால் ஞான உபதேசம் பெற்றவன். 3. யயாதியின் ஜயேஷ்ட புத்திரன். இவன் குமாரர் சகஸ்திரஜித், குரோஷ்ட், நளன், ரிபு என்பவர்.

யதுகிரி

திருநாராயணபுரத்துக்குப் பழைய பெயர்.

யதுதானன்

கர்ணன்.

யந்தனுக்கியன்

ஓர் அரசன்.

யந்திரங்கள்

இது பெருங்காரியங்களை எளிதில் முடிக்க அறிவு வல்லவர்களால் செய்யப்படும் கருவிகள். அச்சுயந்திரம், புத்தகம் மடிக்கும் யந்திரம், புத்தகம் தைக்கும் யந்திரம், நீராவி யந்திரம், அரிசி குத்தும் யந்திரம், கப்பலோட்டும் யந்திரம், இரும்படிக்கும் யந்திரம், இரும்பு காய்ச்சும் யந்திரம், ஆகாயக்கப்பல் யந்திரம் எனப் பலவாம்.

யந்திரம்

மந்திரத்தில் தேவதைகள் வயப்படும் வகை அவ்வக்கர்மங் களுக்குரிய சக்கரங்களில் அந்தத் தேவதா மந்திரங்களை யடக்கிச் செபித்து ஆவாகன, ஸ்தாபன, சந்நிதான, சந்திரோதன, ஔத்துவாசனங் களுடன் பஞ்சசுத்தி செய்து எந்தக் கன்மத்துக்கு எந்தச் சக்காம், எந்த மந்திரம், எந்தத் தந்திரம், எந்த பீஜம், என்பவைகளை ஆசாரியன் மூலமாயறிந்து பூஜிக்கின் அந்தத் தெய்வங்கள் முன்னின்று வேண்டிய பலன்களைத் தரும். அந்தச் சக்கரங்களாவன சிதம்பர சக்கரம், வாலை, திரிபுரை, புவனை சக்கரங்கள், வயிரவ சக்கரம், விநாயக, வீரபத்ர, கந்த, காளி, துர்கி சக்கரங்கள், சூர்ய, சந்திர, நவக்கிரக சக்கரங்கள், கால சக்கரம், சர்வதோபத்ர சக்கரம், விஷ்ணு சக்கரம், நரசிம்ம சக்கரம், இராம சக்கரம், அனும சக்கரம், லக்ஷ்மி சக்கரம், கோட சக்சரம், காத சக்கரம், நர சக்கரம், ஜயசக்கரம், ஸேவா சக்கரம், நக்ஷத்ர சக்கரம், சநி சக்கரம், லிங்க யந்திரம், ஹம்ஸ யந்திரம், வியாஹ்ருதி யந்திரம், துரீய காயத்ரி யந்திரம் முதலியன,

யமகண்டன்

வியாழன் குமாரன்,

யமகண்டம்

1, (16) அடி நீள அகலமுள்ள குழி ஒன்று வெட்டி அக் குழியின் நான்கு மூலைகளினும் இருப்புக் கம்பங்கள் நாட்டி அதின்மேல் (4) இருப்புச் சட்டங்கள் பரப்பி நடுவினும் சட்டமிட்டு நடுச்சட்டத்தில் உறிகட்டிக் குழியில் புளியந் தணலிட்டு இருப்புக் கொப்பரையில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணி நிரப்பி, அவை கொதித்திருக்கையில் யானையைப் பாகருடன் நான்கு மூலையில் நிறுத்திப் பின்புறத்தில் வளையத்திற் சங்கிலிகோத்து எட்டுக்கத்திகளை யிடுப்பில் நாலும், கழுத்தில் நாலுங் கட்டிக்கொண்டு வளையத்திற் பொருத்திச் சங்கிலிகளை யானைத் துதிக்கையிற் கொடுத்து வைத்துக் கொப்பரைக்கு நடுவாகத் தொங்கு முறியில் புலவனிருந்து பல வித்வான்கள் கொடுத்த சமுசையைப் பாடுவது. அவ்வகை பாடானாயின் யானையைத் தூண்ட, யானை சல்கிலிகளை யிழுக்கப் புலவனுடலறுப் புண்டு கொதிக்கும் தீயில் விழுந்திறப்பன்: இதுவே யமகண்டம். 2. குளிகாதிதோஷம் காண்க.

யமசந்திரன்

(சூ) விசாலன் குமாரன்.

யமதக்னி

சமதக்னி முனிவரைக் காண்க.

யமதூதர்

ஔதும்பான், சண்டாமிருகன், சம்பரன், சார்த்தூலன் என்பவர்கள்,

யமன்

1. விவசசுவானுக்கு (சூரியன்) (சமுக்கை) சாயா தேவியிடம் பிறந்த குமரன். இவன் இறைவனாணையால் உயிர்களை அவர்கள் செய்த புண்ணிய பாபங்களுக்கீடாகக் காலமுடிவில் சுவர்க்க நரகங்களிற் செலுத்துங் காலக்கடவுள். இவனது பட்டணம் சைய்மனி; வாகனம் எருமைக்கடா; ஆயுதங்கள் தண்டம், பாசம், குடாரம், சுரிகை; தேவி சாமளை அல்லது கன்னி; தூதர் ஔதும்பரன், சண்டா மிருகன், சம்பரன், சார்த்தூவன். 2. மார்க்கண்டன் பொருட்டுச் சிவமூர்த்தியால் சிக்ஷிக்கப் பட்டவன். 3. சிவேதன் பொருட்டும் அவ்வகை தண்டனை யடைந் தவன். 4. பிரமன் சொற்படி இராவணன் திக்குவிஜயத்தில் கால தண்ட மவன்மேல் விடாதிருந்தவன். 5. சுவாகாவையும அலாசுரனையும் காண்க. 6. தன்னிடம் கருணையிலாத சாயாதேவியை யுதைத்துக் காலில் புழுச்சொரியச் சாபமடைந்து தந்தைபா லறிவித்து ஒழித்தவன், 7. விருத்தை யென்னும் உசத்தியர் பெண் பொருட்டுத் தவமியற்றிய குச்சக ரிடத்து வந்து அவளுயிரைத் தந்து மீண்டவன். 8. அக்னிமுகனுடன் யுத்தஞ் செய்திறந்த வீரன் பொருட்டு வீரவாகு எழுதிவிட்ட திருமுகத்தின் கட்டளைப்படி கொண்டுவந்து விட்டு மீண்டவன் 9. தன் உடன்பிறந்தா ளாகிய யமுனையிடங் காதல் கொண்டு அவளைப் புணரச் செல்கையில் அவளால் நியாயவாயிலாகத் தடையுண்டடங்கியவன். (இருக்குவேதம்.) மாண்டு முனிவர் சாபத்தால் சூத்திரனாய்க் கோகர்ணத்தில் சிவபூசை செய்து நிர்மல மடைந்தவன். (சிவானை.) 10. இவன் ஆயுள் முடிந்த ஜீவர்களின் உயிரைக் கவரும் விதம் யாண்டுக் கால தூதர் மூவரை யேவுகிறவன்.

யமபுரம்

தென் திசைக்கும் நிருதிதிசைக்கும் நடுவில் யமபுரி வச்சிர மயமாயும், தேவாசுரர் முதலியோரால் சிதைக்கத் தக்கதாயும், இரா நின்றது. அப்பட்டணத்து நாப்பண் சதுரமாய் நூறு யோசனை விஸ் தீரணம் உள்ளதாயும், இருபத்தைந்து யோசனை உயரம் உள்ளதாயும், அநேக சாளரங்கள் உள்ளதாயும், கொடிகளாலும் முத்துக் கோவைக ளாலும், தோரணங்களாலும், அலங்கரிக்கப் பட்டதாயும், ஸ்வர்ண மயமாயும், தர்ம ராஜனுடைய அரண்மனை இருக்கின்றது. அந்த அரண்மனையுள் பத்து யோசனை அகல நீளம் உள்ளதாயும், அநேக ஆயிரம் வைரத்தூண்கள் உள்ளதாயும், மந்தமாருதம் வீசுவதாயும், எப்போதும் ஆடல் பாடல்களால் நிரம்பியதாயும், ஒரு திவ்யமண்டபம் இருக்கும். அம்மண்டபத்தில் தூதர்கள் கரம் குவித்து ஓர்புறம் நிற்கவும், ரோகங்கள் எல்லாம் கோரரூபத்தோடு அவ்வாறே ஒரு புடை நிற்கவும், கண்டவர் அஞ்சும்படியான ரூபத்தோடும், உவப்போடும் யமன் வீற்றிருக்கின்றனன். அவன் வீற்றிருக்கும் அம்மண்டபத்தின் பக்கலில் இருபத்தைந்து யோசனை அகல நீளமும், பத்து யோசனை உயரமும் உள்ளதாய்ப் பலவித அலங்காரம் உள்ளதாய்ச் சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது. அம்மனையில் சித்திரகுப்தன் இருந்து ஜீவர்களின் பாப புண்ணியங்களைச் சிறிதும் விடாமல் எழுதுகிறான். அவன் எழுதுவதில் சிறிதும் பிசகு உண்டாகாது. அச்சித்திரகுப்தனு டைய அரண்மனைக்குக் கீழ்ப்புறத்தில் சுரத்திற்கும், தென்பக்கத்தில் சூலையோடு வைசூரிக்கும், மேற்பக்கத்தில் காலபாசத்தோடு அஜீர்ணத்திற்கும், அருசிக்கும், வடபக்கத்தில் வயிற்று வலிக்கும், வடகிழக்கில் தலைவலிக்கும், தென்கிழக்கில் மயக்கத்திற்கும், தென் மேற்கில் அதிசாரத்திற்கும், வடமேற்கில் சன்னிக்கும், இடங்கள் இருக்கின்றன. இந்த ரோசங்கள் எல்லாம் யமனுடைய கட்டளையை எதிர்பார்த்துக்கொண்டு அந்த அரண்மனையில் வசிக்கின்றன.

யமம்

தரும் நூல்களுள் ஒன்று. யமனால் கூறப்பட்டது.

யமளை

காசிராஜன் பெண், சராசந்தன் தேவி,

யமாதித்தன்

யமன் காசியில் சூரியப்பிரதிட்டை செய்து பூசித்ததால் அச்சூரியனுக்கு வந்த பெயர்.

யமி

யமுனையைக் காண்க.

யமுனை

சூரியனுக்குச் சுவாகா தேவியிடம் பிறந்தகுமாரி, யமியெனவும் பெயர். யமன் தங்கை. இவள் ஒரு தீர்த்தமாயினள். இவ ளுக்கு மற்றொரு பெயர் காளிந்தி. இவளுக்கு ஆமை வாகனம். ஒரு கரத்தில் கருநெய்தலும் மற்றக் கரத்தில் பூர்ண கும்பமும் இருக்கும்.

யமுனைத் துறைவர்

1. யமுனைத் துறையிலுள்ள கோவர்த்தன புரத்துப் பெருமாள். 2 ஈசுவர முநிகள் குமாரர். நாதமுங்களுக்குப் பவுத்திரர். ஆளவந்தாருக்கு ஒரு பெயர்.

யயாதி

1. (சந்.) நகுஷன் குமாரர்களில் ஒருவன். தாய் பிரியம்வதை; தெய்வயானையைக் கிணற்றினின்று தூக்கிச் சுக்கிரன் சொற்படி அவளை மணந்தவன். இவன் விடபன்மன் மகளாகிய சன்மிஷ்டையைக் கூடி மூன்று புத்திரர்களைப் பெற்றவன். தேவயானியிடத்து அன்பிலாமை யறிந்த சுக்கிரனால் மூப்படையச் சாபம் பெற்றவன். தெய்வயானியின் குமாரரிருவரை யுந்தன் மூப்பைப் பெற்றுக்கொண்டு அவர்கள் இளைமையைத் தரக்கேட்டு அவர்கள் மறுக்கக் கண்டு அவர்களைக் கிராதராகச் சபித்தவன். சன்மிஷ்டையின் மூத்த குமார னாகிய பூருவிற்கு மூப்புக் கொடுத்தவன். சன்மிட்டையின் மற்ற இரண்டு குமாரரையும் மீன் விற்பவனாகவுங் கள் விற்பவனாகவுஞ் சபித்தவன். பிரமனிடத்து எந்தவுலகமுங் காண விமானம் பெற்று இந்திரலோகஞ் சென்று தன்னைப் புகழ்ந்ததால் சுவர்க்கத்திலிருந்து பூமிக்குத் தள்ளப் பட்டு வழியில் அஷ்டகனைக்கண்டு நான் யயாதி, புண்யந்தேய்தலினால் மேலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டேன் என்று அந்தரத்திருந்து அஷ்டானிடம் புண்ய பாபவரலாறு கேட்டவன். தேவயானிக்கு ஆட்டின் கதைகூறி இல்லமறுத்தவன்; இவன் இராசதானி காண்டவப்பிரத்தம் 2. ஒரு அரசன். இவன் குமாரி (சுகன்னி சௌநகர் கண்ணைக் குத்தினவள்.) இவனுக்குச் சையாதி யெனவும் பெயர் இவன் குமாரி முநிவர்கண்ணைக் குத்திய தால் சேனைகளுக்குக் கண்ணீங்க அரசன் தன் குமாரியை முனிவருக்கு மணஞ்செய்வித்து அதை நீக்கிக்கொண் டவன். யாதவர்க்குச் சிங்காதன மில்லாமற் போகச் சபித்தவன்.

யவக்கிரீதன்

இவன் ஒரு ருஷி. பராவசு யாகஞ்செய்விக்க நீங்கிய காலத்து அவனது மனைவியைப் புணர்ந்ததறிந்து பராவசின் தந்தை யாகிய ரைப்பியருஷி, மருகியைத் துண்டித்து ஓமஞ்செய்து ஒரு அரக்கி யைப் பிறப்பித்து யவக்கிரீவனைக் கொல்வித்தனன். இதனையறிந்த யவக்கிரீவன் தந்தை, புதல்வனைக் கொன்றவன் ரைப்பியனென அறிந்து, ‘நீ புத்திரனால் உயிரிழக்க’ எனச் சபித்தனன். இதுநிற்க ஒருநாள் தீர்த்தக்கரைக்கு மான்சோலைப் போர்த்துச்சென்ற ரைப்பிய முனிவனைப் பராவசு மானென்று தன் தந்தையை யறியாது கொன் றதைத் தன் தம்பியாகிய பரத்வாசருக்குக் கூறப் பரத்வாசர், ‘உன்னா லாகாது; உனக்கு வந்த பிரமகத்தியை நான் தவஞ்செய்து நீக்குகிறே னென்று தவஞ்செய்து பிரமகத்தியை நீக்கி வீட்டிற்கு வருகையில், பராவசு தந்தையைக் கொன்று பிரமஹத்தி செய்தவன்; வீட்டில் வரக்கூடாது என்று துரத்த, பரத்வாசர் தேவர்களிடம் முறையிட்டிருக்க, தேவர்கள் ரைப்பிய முனிவரும் பரத்வாச முனிவரும் உயிர்பெற அருள் செய்தனர். (சிவபுராணம்)

யவதத்தன்

ஸ்ரீதத்தன் பிதா.

யவனம்

மிலேச்ச தேசம். (அரேபியா.)

யவனர்

1, அரேபியா நாட்டு மிலேச்சர். 2. யயாதியின் மகனான தூர்வசுமரபினர். ஒழுக்கங்குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர். 3 தமிழ் நாட்டில் முன் காலத்தில் தங்கி வியாபாரஞ் செய்து வந்த மேற்றிசை வியாபாரிகளாகிய கிரேக்கரைக் குறிக்கும். இப்பதம் அவர்கள் பாஷையில் ஐயோனிஸ் என்பது. இவர்கள் முசிரி, வேய்கரை முதலிய துறைமுகங்களில் சாராயம், பித்தளை, ஈயம், கண்ணாடி முதலியவற்றை விற்று மிளகு, வெற்றிலை, தந்தம், முதலியன வாங்கிச் செல்வர். இவர்களைத் தமிழ் நாட்டரசர் தங்களுக்குப் போர் வீரராகவு மமைத்துக் கொண்டனர். இவர்கள் நாட்டு நாணயங்களும் தமிழ் நாட்டில் வழங்கிவந்தன. 4. இவர்கள் தமிழகத்திற்றங்கிய மேற்றிசை வியாபாரிகள். இவர்கள் கிரேக்கர், உரோமசாதியினர்.

யவீநரன்

1. (பூரு.) திவிமீடன் குமாரன். 2. முத்கலன் தம்பி.

யவுகந்திரன்

1. யுகந்திரன் இரண்டாம் பிறவியில் பெற்ற பெயர். 2. ஒரு வித்யை.

யாககேது

இராவணனது (20) கோடி வீரருக்குத் தலைவன், இலக்கு மணரால் கொல்லப்பட்டவன்.

யாகங்கள்

இவை பிரமம், தெய்வம், பூதம், பிதுர், மானுஷம் என்பன; இவற்றுள், வேதம் ஓதல் பிரமயாகம். ஓமம் வளர்த்தல் தெய்வயாகம். பலியீதல் பூதயாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர்யாகம். இரப்போர்க் களித்தல் மனுஷயாகம், இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி சார்யங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைளையும் எழு தாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன். (1) அக்னிஷ்டோமம், (2) அத்தியக்னிஷ் டோமம், (3) உக்தீயம், (4) சோடசீ, (5) வாசபேயம், (6) அதிராதரம், (7) அப்தோரியாமம், (8) அக்னியாதேயம், (9) அக்னி ஹோத்ரம், (10) தரிசபூர்ண மாசம், (11) சாதுர்மாஸ்யம், (12) நிரூட டசுபந்தம், (13) ஆக்கிரயணம், (14) சௌத்திராமணி, (15) அஷ்டகை, (16) பார்வணம், (17) சிராத்தம், (18) சிராவணி, (19) அக்ரசாயணி, (20) சைத்திரீ, (21) ஆச்வயுசீ, (22) விசுவசித, (23) ஆதானம், (24) நாசிகேத சயனம், (25) காடகசயனம், (26) ஆருண கேது கசயனம், (27) கருடசயனம், (28) பௌண்டரீகம், (29) சத்திசயாகம், (30) சாவித்ர சயனம்.

யாகசத்துரு

இராவணன் மந்திரியரில் ஒருவன்,

யாகசேநன்

சிகண்டிக்குத் தந்தை, பாஞ்சாலராசன் பாரதமுதற்போரில் கலிங்க ராஜனுடன் போர்புரிந்தவன்.

யாகவிருக்ஷங்கள்

8,10,12 விதம். அவை வில்வம், ஆல், வன்னி, கருங்காலி, மா, நறுமுருக்கை, அத்தி, பலாசம், சந்தனம், வேங்கை, அரசு, வாகை (சைவ~பூஷ,)

யாக்கைக் குற்றம்

(18) பசி, தாகம், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறககம், கரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு.

யாக்ஞவராகமூர்த்தி

விஷ்ணுமூர்த்தியின் அவதாரவிசேஷம். இவர் பூமியைக் கோட்டினிற்னாங்கி யக்ஞமே திருமேனியாகக் கொண்டவர்.

யாக்ஞவல்கியம்

1. ஒரு தர்மசாஸ்திரம். இதற்கு விக்ஞானேசவா யோகியால் செய்யப்பட்ட மிதாக்ஷரம் என்னும் விருத்தியுண்டு, 2. உப நிஷத்துக்களில் ஒன்று.

யாக்ஞவல்கியர்

வைசம்பாயனர் மாணாக்கர். இவர் தேவி மயித்தி ரேயி. இவரது மற்றொரு தேவி காத்தியாயனி. இவர் துறவு பூண வேண்டித் தமது இருப்பை மனைவியர்க்குப் பாகித்துக் கொடுக்கையில் மைத்திரேயி சாவில்லாத பொருள் வேண்டுமென அவள் பொருட்டு ஞான முபதேசித்தவர். இவர் ஆசிரியருக்குற்ற பிரமகத்தியை அவர் மாணாக்கருமேற்க மாணாக்கர் அதனை யவர்கள் பெறார், அதனை நானே ஏற்றுக் கொள்கிறேனென, ஆசிரியர் கோபித்து அவர்களை அவமதித்ததனால் கொண்ட வேதத்தைவிட்டு நீங்கென, அவர் வேதத்தைச் கக்கிவிட்டுப்போக, அதனை வேததெய்வம், கக்கியவேதத் தைத் தித்திரிப்பஷியுருக் கொண்டு உண்டது. ஆகையால் அது தைத்திரியம் எனப்பட்டது. பின் யாக்ஞவல்கியர் குதிரை வடிவுகொண்டு சூரியனிடத்ததனைக் கற்றுக் கண்ணுவர் மத்தியந்தனர் முதலியோர்க்குக் கூறினர். இவர் தருமபுத்திர எது இராஜசூயத்திலிருந்தவர்.

யாசன்

ஒரு முனிவன். துருபதனுக்குப் புத்திரகாமேட்டி செய்வித்தவன்,

யாசன்பகாள்

தேவபூசை செய்வோர்.

யாஜோபயாசர்

துருபதனுக்கு ஒரு பெண்ணையும் ஒரு புத்திரனையும் பெற யஞ்ஞஞ் செய்வித்தவர்

யாதனாசரீரம்

யம்புரத்தில் உயிர்கள் துன்பமனுபவிக்கப் பெறும் தேகம்.

யாதன்

சதிகோதரன் குமாரன்; புட்கரத் தீவை யாண்டவன்.

யாதவ மதம்

இது யாதவப்பிரகாசனால் நியமிக்கப்பட்டது. இவன் பிரமமேசித் அசித் ஈச்வானாகப் பரிணமித்திருக்கிற தென்பன். பேத ஞானமே சம்சாரமென்பன். இச்சம்சாரத்தா லுண்டாம் பேத ஞானம், சத்கர்மத்தால் கெட்டு உண்டாம் அபேத ஞானத்தால் பிரமமாவன் என்பன்.

யாதவநிகண்டு

ஒரு சமஸ்கிருத நிகண்டு,

யாதவப்பிரகாசர்

பூர்வம் மதுராந்தகத்து ஏரிக் கரையிலுள்ள ஒரு புற்றில் உடும்பாயிருந்து பாகவதருண்ட சேடத்தைக் கிரகித்தமையால் மறுபிறப்பில் யாதவப்பிரகாச னென்னும் வேதியனாய்ப் பிறந்து சகல சாஸ்திரத்திலும் வல்லமை பெற்று இளையாழ்வாருக்கு ஆசிரியனாய் அவரிடமுள்ள சாத்திரப்பயிற்சியால் பொறாமை கொண்டு தீர்த்தயாத் திரையில் கொல்ல எண்ணி யழைத்துச்சென்று வஞ்சித்து மீண்டும் அவரைக் காஞ்சியிற்கண்டு ஆழ்வாரது வரவைக்கேட்டு மருவி அரச குமாரனைப் பிடித்திருந்த பிரம்மரக்ஷசைப் போக்க வலியற்றுத் தன் முன் பிறப்புப் பிரம்ம ரக்ஷஸாலுணர்ந்து இளையாழ்வாரால் அதை யோட்டு வித்துத் தாயின் சொற்படி இளையாழ்வாரிடம் பஞ்சசமஸ்காரம் பெற்றுக் கோவிந்தஜீயரெனப் பெயர்பெற்றவர்.

யாதவமகாராஜா

தொண்டை நாட்டில் நாராயணபுரத்தை அரசாண்ட சிவபத்தி மான், இவன் அரசாளுகையில் ஒருநாள் சிவமூர்த்தி விடசங்கம வுருக்கொண்டு தெருவில் வந்தனர். இவ்வரசனுக்குப் பரிகவன்திருத்தும் பெண் இவரது விடசங்கமவடிவுகண்டு தன் வீட்டிற்கழைத்துச் சென்று உணவுமுதலியன அளித்துவைத் திருக்கையில், அரசனுக்குரிய மணியை மறந்தனள். அரசன் தன் பூசைமுடித்துப் பரிகலம் திருத்துவாளைக் காணாது கோபித்து எவலாளரையேவிப் பிடித்துவரக் கட்டளை விட்டனன். அவ்வகை அவளை ஏவலாளர் பிடித்துவர அரசன் அப் பெண்ணின் கூந்தலைக் களையக் கட்டளையிட்டனன், அப்பெண் கூந்தலையிழந்து வீடுசென்று நடந்தவைகளை விடசங்கமரிடங் கூறச் சங்கமர் தமதுகரத்தால் அவள் சிரத்தைத் தடவினர். அவளுக்குப் பழமை போல் கூந்தல் வளர்ந்தது. இவள் வளர்ந்த கூந்தலுடன் அரசன் முன் போக, அரசன் செய்தியறிந்து சங்கமரைப்பணிந்து அவர் கட்டளைப்படி திருக்காளத்தி திருப்பணிசெய்தவன்,

யாதவர்

இவர்கள் யது வம்சத்தில் பிறந்தவர்கள், இந்த வம்சத்தில் பல அரசர்கள் பிரபலம் பெற்றிருந்தனர். அவர்களில் யதுவின் முதற் குமாரனாகிய சகஸ்திரசித்தி யிடமிருந்து. கய வம்ச முண்டாயிற்று. இவர்களுக்கு மாகிஷ்மதி பட்டணம். யதுவின் இரண்டாவது புத்திரன் குரோஷ்டு. இவன் வம்சத்திற் பிரபலமாயிருந்த வரசன் விதர்ப்பன், சியாமகன், சசிபிந்து. யதுவின் இரண்டாங் குமாரனது வம்சத்தவ னாகிய சாத்வதனிட மிருந்து போஜ வம்சமும், அந்தக வம்சமும், விருஷ்ணி வம்சமும் உண்டாயின, அந்தகவம் சத்தவன் கிருஷ்ணன். சாத்தகி விருஷ்ணி வம்சத்தவன். இவர்கள் இன்னும் விருஷ்ணிகர், போஜர், அந்தகர், தாசார்ஹர், சாத்வதர், மாதவர், அற்புதர், மாதுரர், மிதற்சனர், சூரசேனர், ததரர், குந்தியர் எனப் பல விதப்படுவர். இவர்கள் ஓணானாயிருந்த நிருகமகாராஜனைக் கண்டு தூக்க முடியாது கண்ணனுக்கு அறிவித்துச் சாப நீக்குவித்தவர். இவர்கள் ஒரு நாள் பிண்டராக க்ஷேத்திரத்தை யடைந்து அவ்விடமிருந்த இருடிகளை ஏமாற்றச் சாம்பனைக் கருப்பிணி போல் வேஷமிட்டு அந்த இருடிகளை இவள் வயிற்றிலிருப்பது ஆணோ பெண்ணோவென்று பரிகசிக்க, இருஷிகள் உணர்ந்து, இவள் வயிற்றிலிருப்பது ஆணுமன்று, பெண்ணுமன்று, உங்கள் குலத்தைக் கருவறுப்பதாகிய ஓர் இருப்புலக்கை யென்றனர். அவ்வகைச் சாபம் பெற்று மீண்ட பின், சாம்பன் வயிற்றில் இருப்பு லக்கையொன்று பிறந்தது. அதனைக் கண்ணனுக்கறிவிக்கக் கண்ணன் அதனை யராவிக் கடலில் விடுக வென்றனன். அவ்வகை செய்ய அவ்வராவுத்லுக்கு அகப்படாமல் ஒரு துண்டு கடலில் விழுந்தது. அவ்வரப் பொடிகள் கடற்கரையில் சம்பங்கோரைகளாக முளைத்தன. முன் அராவலுக்கு அகப்படாது கடலிடைப்பட்ட இருப்புத்துண்டை மீனொன்று விழுங்கியது. அம்மீன் வேடனொருவனிடம் அகப்பட்டது. அதை அவன் சேதிக்கையில் வயிற்றி லிருப்புத் துண்டைக் கண்டு அதனை அம்பினுனியில் இட்டு வைத்தனன். இத்துண்டு கண்ணனுக்கு, இறுதி விளைத்தது. இவ்வகைத் தாங்கள் இருப்புலக்கையை யராவி விட்டோம் என்று களிப்புடனிருக்கையில் ஒரு கால் கடற்கரைக்கு விளையாடச் சென்று தம்மில் ஒருவர்க்கொருவர் கலகம் விளைத்து ஆயுதம்கள் முறிந்து வேறு ஆயுதங்களில்லா மையால் அருகிருந்த சம்பங் கோரைகளைப் பிடுங்கி அடித்துக்கொண்டு மாண்டனர்.

யாத்திரைக்கு நாட்கள்

(வாரங்கள்) திங்கள், புதன், வியாழம் வெள்ளி, (திதிகள்) துவிதியை, திரிதியை; பஞ்சமி, ஸப்தமி. தசமி, திரயோதசி, (நட்சத்திரங்கள்) அஸ்வனி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், அநுஷம், சிராவணம், அவிட்டம், ரேவதி இவை உத்தமம். ரோகிணி, உத்திரம், உத்திரட்டாதி இவைமத்திமம். கரணங்களில் பத்திரவாகரணம் கூடாது. லக்கினங்கள் விருஷபம், மிதுனம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, மகாம், மீனம் இவை சுபம். யாத்திரைக்கு முக்கியமாய் யோகினி வாரசூலை பார்க்கவேண்டும். மேல்விவரித்த எல்லா விஷயங்களையும் சரியாய்ப்பார்க்கும் பக்ஷத்தில் முகூர்த்தக்கள் கிடைப்பன அரிதாய்விடும். ஆதலால் அவைகளின் பலாபலன்களையும் அனுசரிக்கவேண்டும் எல்லாச் சுபங்களுக்கும் மாசத்தியாஜ்யம் அல்லது கரிநாள், தாராபலன், சந்தா பலன் பார்க்க வேண்டும். காலற்ற நாள், உடலற்ற நாள். தலையற்ற நாள். “காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற், கோலக்குய மடவார் தம்மைக் கூடின் மலடாவார், மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம், ஞாலத்தவர் வழிபோகினு நவமெய்திடா சவமே கார்த்திகை, உத்திரம், உத்திராடம். மிருகசிரம். சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதியான. இவ்வொன்பது நாளும் புணர்ச்சிக்கும், மனை முகர்த்தத்திற்கும், யாத்திரைக்கும் ஆகாவாம்.

யானிமுகன்

சூரபதுமன் கட்டளையால் இலங்கையாண்ட அரசன்.

யானைக்கட்சேய் மாந்தாஞ் சோலிரும்பொறை

ஒரு சேரன். குறுங்கோழியூர்க் கிழாராற் பாடப்பெற்றவன். இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டவன். புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழாரால் ஐங்குறு நூறு தொகுப்பித் தோன். (ஐங்குறு.) 2. ஒரு சேர அரசன். இவன் அரசனும் புலவனும், வள்ளலுமாக இருந்தவன், ஐங்குறு நூறு தொகுப்பித்தோன் என்பர். இவன் இளஞ்சேரலிரும்பொறைக்கு உறவினன்.

யானைத்தீ

தணியாப்பசியை விளைக்கும் ஒரு நோய், இதனால் காயசண்டிகை மிகத் துன்புற்றுப் பின் மணிமேகலையிட்ட உணவால் பசியொழிந்தனள், (மணிமேகலை)

யாப்பருங்கலக்காரிகை

அமுதசாகரரியயற்றிய செய்யுளிலக்கணம். இது கட்டளைக்கலித்துறையானயது.

யாப்பருங்கலம்

இது குணசாகரர் இயற்றியது. இது நூற்பாவகவல் எனப்படுஞ் சூத்திரயாப்பில் அமைந்து யாப்பிலக்கணத்தை விளக்கமுற வுணர்த்துவது. யாப்பருங்கலக் காரிகைக்கு முதனூலாயுள்ளது.

யாப்யாயனி

சிவசூரியனுக்கு வடக்கிலமருஞ் சத்தி.

யாமளேந்திரர்

இசைத் தமிழ் நூலாகிய இந்திரகாளிய நூலாசிரியர்.

யாமளை

உமை.

யாமாள்

யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் பிறந்த (12) குமாரர். இவர்கள் மகா பலசாலிகள்,

யாமினி

காசிபன் தேவி. தக்ஷன் குமாரி. சலபதங்களைப் பெற்றவள்.

யாமியம்

யமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டணம். இதில் புண்ணியபத் திரையென்னும் நதியும், ஒரு ஆலமரமும் இருக்கின்றன. இது பிரேதக் கூட்டங்கள் தங்கியிருக்கு மிடமுமாம். இங்கு ஆன்மா இறந்த முப்பதாநாள் தங்கிச் சிரமபரிகாரம் செய்துபோவன். இரண்டா மாசிக பிண்டத்தை ஆன்மா ஈண்டுப் புசிப்பன்.

யாமுனர்

யமுனைத்துறைவருக்கு நாதமுனிகள் கட்டளையால் மணக்கால்நம்பி யிட்ட பெயர்.

யாயாவரர்

பிதுர்க்கள். இவர்கள் ஜாத்காரு ருஷி வம்ச பிதுர்க்கள். ஜரத்காரு ருஷி இங்குமங்கும் அலைந்து திரிகையில் ஒரு பள்ளத்தில் கீழ் மேலாகத் தொங்கிக் கொண்டிருந்த இருடிகளை நோக்கி நீங்கள் யார் என, நாங்கள் ஜாக்காரு ருஷியின் பிதுர்க்கள், அவ்வம்சத்தில் ஜரத்காரன் மணங்கொள்ளாததினால் வம்சத்திற்கு நாதரில்லாததினால் இவ்வாறு இருக்கிறோம் எனக் கேட்டு, ஜாத்காரு தன் பெயருள்ள வனை. மணப்பதென்னும் விரதப்படி வாஸுகியின் சகோதரியாகிய ஜாத்காருவை மணந்து ஆஸ்திகரைப்பெறக் களிப்படைந்தவர்கள்.

யார்க்கென்னும் ஏரி

(13) வருஷம் தண்ணீர் வற்றியிருக்கும். அதில் ஜனங்கள் பயிர்செய்து வருவர். பதின்மூன்றாம் வருஷத் தொடக்கத்தில் நீர் சுரக்கத்தொடங்கி நீர் நிறைந்து ஒரு வருஷத்தில் வற்றிப்போகிறது.

யாளிதத்தன்

இவன் ஒளவைக்குத் தந்தை. இவனைப் பகவனெனவும் கூறுவதுண்டு, இதனை “யாளிகூவற்றூண்டு” எனும் ஞானாமிர்தச் செய்யுளான் அறிக.

யாழி

தக்ஷன் குமாரி. தருமப்பிரசாபதியின் தேவி.

யாழ்

இது நான்குவகைப்படும். அவை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன. இவற்றில் பேரியாழிற்கு நரம்பு இருபத்தொன்று; மகர யாழிற்குப் பதினேழு; சகோடயாழிற்குப் பதினொன்று; செங்கோட்டியாழிற்கு ஏழாம். இவ் யாழின் உறுப்புக் களாவன: கோடு, ஆணி, பத்தர், மாடகம், தந்திரி முதலியன. யாழிற்குத் தெய்வம் மாதங்கி என்பர். யாழின் தொழில்களாவன பண்ணல், பரி வட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, சையூழ், குறும் போக்கு. இவற்றில் பண்ணலாவது, பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல், பரிவட்டணை என்பது அவ்வீக்கின நரம்பை அகவிரலாலும், புறவிரலாலும் கரணஞ்செய்து தடவிப் பார்த்தல், ஆராய்தல் என்பது ஆரோகண அவரோகணவகையால் இசையைத்தெறித்தல். தைவரல் என்பது சுருதி ஏற்றுதல். செலவு என்பது ஆளத்தியிலே நிரம்பப் பாடல், (ஆளத்தியைக் காண்க). விளையாட்டு என்பது பாட நினைத்த வண்ணத்தில் சந்தத்தை விடுத்தல். கையூழ் என்பது வண்ணத்தில் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடல். குறும் போக்கு குடகச்செலவும், துள்ளற்செலவும் பாடுதல், பின்னும் வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல் முதலியனவும் உள, வார்தலாவது; சுட்டு விரலால் தொழில் செய்தல், வடித்தலாவது; சுட்டு விரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல், உந்தலாவது; நரம்புகளைத் தெறித்து வலிவிற் பட்டதும், மெலிலிற் பட்டதும், நிரல்பட்டதும் அறிதல், உறழ்தலாவது; ஒன்றிடையிட்டும், இரண்டிடையிட்டும், நரம்பு களைத் தெறித்தல். உருட்டலாவது; இடக்கைச் சுட்டுவிரல் உருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் உருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி உருட்டலும், இரு பெருவிரலும் இயைந்து உடன் உருட்டலு மெனப் பல. யாழினது இருக்கை ஒன்பது வகைப்படும். அவை பதுமுகம், உற்கடிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், சுயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏக பாதம் என்பன இதன நாடக நூலார் ஐம் பதென விரிப்பா. யாழின் குற்றங்களாவன செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம், என்பன. இவற்றுள் செம்பகையாவது இசைத்தல்; ஆர்ப்பு ஒங்க இசைத்தல்; அதிர்வு நரம்பைச் சிதற உந்தல்; கூடம் தன் பகையாகிய ஆறு நரம்பின் இசையிற் குன்றித் தன்னோசை மழுங்கல், இவ்யாழிற்குக் குற்றம் எதினால் உண்டாம் எனின் மரக்குற்றத்தால் பிறக்கும். அம்மரம் நீரிலே நிற்றல், அழுகுதல், வேதல், நிலமயக்குப் பாரிலே நிற்றல், இடிவீழ்தல், நோய், மரப்பால் படல முதலியவாம். முன் சொல்லிய குரல் முதல் ஏழினும் தாரம் முதலிய பண்கள் தோன்றும். தாரத்தில் உழை தோன்றும். உழையுள் குரல் தோன்றும். குரலில் இளி தோன்றும். இளியுள் துத்தம் தோன்றும். துத்தத்துள் விளரி தோன்றும், விளரியுள் கைக்கிளை தோன்றும், பின்னும் இணை, இளை, பனக, நட்பு என்று சொல்லப்பட்ட நான்கினுள் இணை; இரண்டு நரம்பு; கிளை; ஐந்து நரம்பு; பகை; ஆறாம், மூன்றும். யாழ் வாசிக்கும் முறையாவது “நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி, யல்வியம் பங்கயத் தவனினிது படைத்த, தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ், மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த், திருகையின் வாங்கி விடவயின் நிறீஇ, மருவிய அவிநயம் மாட்டுதல் கடனே. ” என்பதனால் அறிக.

யாழ்முரி

திருஞானசம்பந்தசுவாமிகளை திருநீலகண்ட யாழ்ப்பாணர் கேட்டுக் கொள்ளப் பாடியருளிய திருப்பதிகம்.

யாவலி

இராமமூர்த்தியைச் சிவபூசை செய்ய ஏவிய இருடி. (வேதாரண்ய~புரா.)

யுகந்தரன்

சதானீகனுக்கு மந்திரி.

யுகந்தரம்

நெடுங்காலஞ் சீவித்த ஆமை,

யுகபரிமாணம்

பிரமனுக்கு ஸ்வமானத்தால் (100) வருஷமாயுள். எவ்வகையென்னில் நிமிஷம் (15) கொண்டது காஷ்டை, காஷ்டை (30) கொண்டது கலை, கலை (30) கொண்டது முகூர்த்தம், முகூர்த்தம் (30) கொண்டது அகோராத்திரம், அகோராத்திரம் (15) கொண்டது பக்ஷம், பக்ஷம் (2) கொண்டது மாதம், மாதம் (6) கொண்டது அயனம், அயனம் (2) கொண்டது வருஷம். இது மனுஷ மாதக்கணக்கு. இனித் தேவமான மாவது இந்த மனுஷவருஷம் ஒன்று தேவர்களுக்கு ஒரு அகோராத்ரம். (நாள்) இவ்வகை பக்ஷம் மாத அயனாதி கண்டு கொள்க. இவ்வகையில் உத்தராயனம் பகல், தக்ஷணா யனம் இரவு. இவ்வகைத் தேவவருஷம் (12000) ஆயின் கிருத, திரேதா, துவாபா, கலியென்னுஞ் சதுர்யுகங் களாம். அவற்றில் கிருதயுகத்திற்கு (4000), திரேதாயுகத்திற்கு வருஷம் (3000), துவாபாயுகத்திற்கு வருஷம் (2000), கலி யுகத்திற்கு வருஷம் (1000). இவை திவ்ய யுகமாம். இந்தத் திவ்யயுகம் (1000) முறை திரும்பில் பிரமனுக்கு ஒரு பகலாம். இதில் (14) மன்வந்தரம்போம். பின்னும் (309720000) இவ்வளவு மானுஷ வருஷமாயின் ஒரு மன்வந்தரம். இந்தப்பகல் எவ்வளவோ அவ்வளவு சென்றால் ஒரு இரவு. இப்படிப்பட்ட அகோராத்ரம் (390) கொண்டது பிரமனுக்கு ஒரு வருஷம், இவ்வருஷம் (100) கொண்டது பிரமனாயுள். இதில் பூர்வபாகம் (50) வருஷம் பூர்வபரார்த்தம் பாத்மகற்ப மெனப்படும். பிற்பாகம் (50) வருஷம் துவிதியபரார்த்தம் வராக கற்பம் எனப்படும். இதில் இப்போது நடப்பது வராககற்பம். இவ்வகைப் பிரமனுக்கு இராத் திரியானால் ஒரு பிரளயம், இனி மனித அளவை யுகமாவது முன் சொல்லிய கணக்குப்படி வருஷங்களாம். இதில் கிருத யுகத்திற்கு வருஷம் (17) இலக்ஷத்து (38000), திரேதா யுகத்திற்கு வருஷம் (1299000) துவாபாயுகத்திற்ரு வருஷம் (864000), கலி யுகத்திற்கு வருஷம் (433000). அதில் தற்காலம் நடப்பது ஐயாயிரத்துச் சில்வரை. ஆக சதுர்யுகத்திற்கு வருஷம் (4320000). இது மகாயுகமெனப் படும். இந்த மகாயுகம் (18) சென்றால் ஒரு மனுவிற்கு இராச்சியம். இந்த மனுராச்சியம் (74) சென்றால் இந்திரனுக்கு ராஜ்யம். இவ்வதை இந்திர னுக்கு ராஜ்யம் (270) சென்றால் பிரம்னுக்கு ஒரு நாள். இந்நாள் (30) சென்றால் ஒரு மாதம், இம்மாதம் (12) சென்றால் ஒரு வருஷம், இவ் வருஷம் (100) சென்றால் பிரமாவுக்கு ஆயுள் முடிவு. இங்ஙனம் (360) சென்றால் ஆதிபிரமனுக்குப் பிரளய காலம். இப்பிரளயம் (100) சென்றால் விஷ்ணுவிற்கொரு கற்பம். இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமசமகருஷிக்கு உடம்பில் ஒரு மயிர் உதிரும். இந்த ரோமச மகருஷிக்குப் பத்துக் கோடி சென்றால் மீனச மகருஷியின் உடம்பினின்று ஒரு செதிள் உதிரும். இவ்வகை மீனசமகா ருஷியின் ஆயுள் ஒரு கோடி சென்றால் பரத்வாச மகருஷிக்கு ஒரு நிமிஷம், இவ்வகை பரத்வாசமக ருஷிக்கு ஆயுள் (30) கோடி சென்றால் மகாசத்தி கூந்தலவிழ்த்து முடிப்பள். இவ்வகை (780) சத்திகள் கூந்தலவிழ்த்து முடிக்கின் சர்வேசனரு கிருக்குஞ் சத்திக்கு ஒரு நிமிஷமாம். (கணக்கதிகாரம்.)

யுகம்

இது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நால் வகைப்படும். இந்த யுகத்தில் முதல் யுகத்தின் இலக்ஷணமும், கடை யுகத்தின் இலக்ஷணமும் கூறப்படுகிறது. இடை நின்ற மற்ற இரண்டு யுக இலக்ஷணங்களையு மறிந்து கொள்க. இந்த முதல் யுகத்தில் தருமம் பசுவின் உருவமாக நான்கு பாதத்தால் நடக்கும். இந்தமுதல்யுகத்தில் வாழ்வார்க்கு வயது இலக்ஷம் வருஷம், இந்த ஆயுள் அடைந்தோர் இடையில் எந்தக் காரணத்தாலும் மரணமடையார். தாய்தந்தையர் மகவினையிழக்கார். மாதர் கணவனை யிழக்குந் துயரறியார். அவர்களுக்குப் பாலப் பருவம் பதினாயிரவருஷமாம். காளைப் பருவம் ஆயிரத்து முப்பத்திரண்டுவருஷம். விருத்தப்பருவம் மற்ற வருஷங் களாகும். மற்றவர்கள் தாய்தந்தையாது சொற்களைக் கடவார். பிள்ளைகள் தமக்கு மூத்தோரது சொற்களைப் பழிக்கார். பெண்கள் கற்பி னால் அருந்ததியை வெல்வார். வருணம் நான்கேயன்றி வேறில்லை. அந்த யுகத்தின் மாந்தருக்கு உயரமைந்து பனையளவாம். மிருகம், பறவை முதலியன் பகையின்றி வாழும். முள்மரங்கள் கிடையா. அவ்யுகவாசிகள் பிறர் பொருள் விரும்பார். பெரியோர் சொற்களைக் கடவார். மற்றவருக்குத் துன்பஞ்செய்யார். உறுதி கடவார். மற்றவரை இகழார். செய்தவுபகா நத்தை மறவரர். கொலை களவு செய்யார். கோள் கூரார். நோயினால் துன்புறார். வறுமையடையார். நடுநிலை கோடார். நெறிதவறார். வஞ்சமனங்கொள்ளார். மன்மதனை யொத்த வடிவுள்ளவ ராயும் விஷ்ணுவை யொத்த செல்வமுள்ளவராயும் மேகத்தை வென்ற கொடையாளிகளாயும் அகத்திய முனிவரையொத்த கல்வி மான்களாயும் குற்றமில்லாத குணவான்களாயும் குறைவில்லாத வன்மையையுடையோ ராயும் தவத்தினராயும் பொறுமையில்லா தவராயும் தெய்வபக்தி யுள்ள வராயுமிருப்பர். வேதியர் வேதவேள்வி செய்தல் தவறார். அரசர்கள் கோல்கோடாது அரசு செய்வார். வணிகர் மநுநீதிப்படி பொருளைத்தேடி நல்வழியிற் பயன்படுத்தி வாழ்வார். சூத்திரர் வேதியருக்குச் செய்கடன் பூண்டு பூமியை யுழுது பயிரிட்டு அதிதிகளையோம்பி யறம் புரிந்து வாழ்வர். பூமியோ முயற்சியின்றிப் பலவளங்களையுந் தரும். பசுக்களோ தெய்வப் பசுக்களைப்போல வளந்தரும், மாதந்தோறும் மும்மாரி தவறாது பெய்து வரும், விருக்ஷங்களும் பருவங்கள் மாறிய காலத்தும் வளந்தரும். இனிக் கடையான கலியுகத்தின் வளமாவது மற்ற விரண்டு யுகத்தின் இலக்ஷணங்கள் முக்கால் அரையாகக் கொள்க. இதில் தருமதேவதை யொருகாலூன்றி நடக்கும். இதன் எல்லை நான்கு லக்ஷத்து முப்பத்தீராயிரமாகும். இதில் மனிதர்களுக்கு ஆயுள் நூறுவரு ஷம், வடிவம் எட்டுச்சாண். அவர்கள் கோபத்தினரும் கருணையில்லா தவரும் நல்லறிவில்லா தவரும் உறுப்பு முழுது நிறையுமு னிறப்பவரும், கருவிலிறப்பவரும், தோற்றக்காலத் திறப்பவரும், தோன்றிய பின் இறப்பவரும், பூமியில் சிலகான் வாழ்ந்திறப்பவரும், பாலரா பிறப்ப வரும், நடைபயில் காலத்திறப்பவரும், வாலப்பருவத் திறப்பவரும், காளைப்பருவத் திறப்பவரும், வளைந்த கோல்கொண்ட பருவத்து மாய்பவரும், கருத்து அறிவுமுதலிய கெட்டு மாய்பவரும் ஆவர். இக்கலியுகத்தில் யானைகள் நூறு வருஷமும், குதிரை முப்பத்திரண்டு வருஷமும், ஒட்டகம் பதினாறு வருஷமும், நாய் பன்னிரண்டு வருஷமும், மற்ற நாற்கால் விலங்குக ளனைத்தும் இருபத்தைந்து வருஷமும் வாழும். பின்னு விவ்விலங்கு முதலிய பிராணிகள் தமக்குச் சொன்ன காலவளவே யன்றி இடையினு மிறக்கும். கழுகுகளுங் காக்கை முதலியவைகளும் பலநாள் சீவிக்கும். இக்கலியுகத்தவர் ஆசாரியனை யும் மூத்தவரையும் வணங்கார். அவர்கள் சொற்கேளார். பெண்கள் கணவரைப் பூசியார், ஆசாரியனையுங் கடவுளையும் வணங்கார். திருமங்கேளார். அதரும நூல விரும்பிக்கேட்பர். அயலானை விரும்புவர். தவம் விரும்பார். நல்லொழுக்க வழிநில்லார். ஒழுக்க மல்லாத ஒழுக்கத்தில் ஒழுகுவர். பொய்யேயன்றி மெய்யைக் கனவினு நினையார். கொலைக் கஞ்சார், பிறர் பொருளை விரும்பித் தீமை செய்து வாழ்வார். கற்புள்ள மங்கையரின் கற்பைக் குலைப்பார். வஞ்சனை புரிவரே யன்றி நற்கதி தருங்காரியங்களைச் செய்யார். பொய், கொலை, களவு, பொறாமை, கள், மதம், காமம் இவைகளைப்பெற்று நல்ல காரியங்களை விடுப்பர். ஒருவர் செய்த நன்றியை மறப்பர், இறைவனை யெண்ணி யிருப்போரைப் பழித்து வாழ்வர். சுற்றத்தவர், தாய், தந்தை, தமயன்மனைவி, மைந்தர், ஆசாரியன், அதிதியர் பசித்திருக்க உண்பர், விருந்தினரை எதிர்கொண்டழையார். விரதாதிகளைச் செய்யார் தென் புலத்தார் கடன் விடுப்பர், நற்குலமடந்தையை விடுத்துத் தாழ்குல மடந்தையைக் கூடுவர். இளம்பெண்கள் மணப் பருவமடையுமுன் காமவேட்கையுறுவர். பன்னிரண்டு வருஷத்தில் பெண்கள் குழந்தை களைப் பெறுவர், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலியன இன்றிப் பெண்கள் புருஷர் முன்னிற்பர். தாய் தந்தையர் புத்திரரைப் போற்றார். புத்திரருந் தாய் தந்தையரைப் போற்றார். தமயன் தம்பியரைப் போற்றான், தம்பியும் தமயனைப் போற்றான். தலைவன் அடிமையைப் போற்றான் அடிமை தலைவனை மதியான். ஆசாரியன் மாணாக்கனைப் போற்றான். மாணாகன் ஆசாரியனைப் பூசிக்கான். புருவரைப் பூவையர் போற்றார். வேதியர் வேதமோதார்; கடவுட்பூசை புரியார். அக்கினிகாரி யஞ் செய்யார். இயம நியமாதிகள் செய்யார். மந்திரஞ் செபியார். கொடிய காரியம்களை மேற்கொண்டு விரதாதிகளை விடுப்பர். கிருத யுகத்தில் ரிஷிகள் தபோபலத்தால் ஒரு அகோராத்திரத்தில் வேதம் களைச் சாங்கமாய் அத்தியயனஞ்செய்து கொண்டு இருந்தனர். வேதங் கள் அநாதி சித்தம் என்று பிரமனால் சொல்லப்பட் டது. அக்காலத்தில் பிராமணனுக்கு ஜப எக்யம், க்ஷத்திரியனுக்கு ஆரம்ப யெக்யம், வைசியனுக்கு அவிரெக்யர், சூத்திரனுக் குப் பரிசாரகயெக்யம் விதிக்கப்பட்டது. அக்காலத்தில் பிரபுக்கள் பிரஜைகளுக்கு அனுகூல மாய்த் தர்மங்களை நடத்திக் கொண்டு இருந்தனர். அந்த யுகத்தில் ஆயுள், உருவம், பலம், புத்தி, ஆரோக்கியம், தருமசிந்தை இவை சர்வசாதாரணம், திரேதாயுகத்தில் இந்திரன் மந்திரங்களினால் அச்வ மேதம் ஆரம்பித்தான், அந்த எக்யத்திற்குச் சில ரிஷிகள் ருத்விக்குகளாக இருந்தனர். இந்திரன் பசுக்கள் உபகாரமாக யாகஞ்செய்ய அதனால் ரிஷிகள் மந்திரயெக்யமாக யாகஞ் செய்யலாம்; பிராணவதை கூடாது என மறுத்தமையால் விவாதம் உண்டாயிற்று. பின்னும் இந்திரன் ரிஷிகளைப் பார்த்து எக்யம் ஸ்தாவர ஜங்கமங்களில் எதனால் செய்ய வேண்டுமென்ன, ரிஷிகள் அவனுக்கு உத்தரவு சொல்லாமல் கசரன் என் னும் வசவை மத்தியஸ்தமாக எண்ணிக் கேட்க அந்தவசு பசுக்கள் கந்த மூலபலாதிகளில் செய்யவேண்டும் என, ரிஷிகள் கோபித்து வசுவைப் பூமியில் தள்ள அவன் பாதானத்தில் வீழ்ந்து மீண்டும் எழுந்து வந்தனன். ஆகையால் தருமங்கள் அநேக மார்க்கமாய் நடக்கும், ரிஷிகள் ஹிமசை யோடு கூடிய யாகத்தைச் சம்மதிக்காமல் போயினர். எக்யம் மந்திரங் களினாலும், தபஸ் மனத்தினாலும் ஸ்தாபிக்கக்கூடும். துவாபரயுகத்தில் லோபம், சேவகாவிர்த்தி, வாணிபம், யுத்தம், தத்வநிச்சயம், வர்ண சங்கரம், ரஜஸ் தமோகுண வியாப்தி, அதர்மம், வருணாச்ரம தர்மங் களுக்கு விபரீதம், வேதங்களினிடத்து அவிஸ்வாசம், சவல்ப ஆயுள், இவ்வித அதர்மங்கள் பாவினவே யன்றி ஒன்றாயிருந்த வேதம் நான்கு விதமாய் ரீஷிகளால் பிரிக்கப்பட்டது. அதர்மம் விருத்தியாயிற்று. இந்த யுகக்கடையில் கலியுக தர்மம் ஆரம்பித்தது. கலியுக தர்மம், ஹிம்சை, சௌர்யம், நிறுத்தம், மாயாதிகள் முதலியன விருத்தியாய், நபங்கள் க்ஷணித்துத் தர்மசொருபம் அழியும் சொற்கள் சித்தியாகா. மனிதர்கள் எந்தக் காலத்திலும் மோகத்தில் அழுந்துவர். பசி, தாகம், மழையின்மை, தேசவிப்ரீதம், எக்காலத்திலும் உண்டாம். சாஸ்திரப்பிரமாணம் லோபிக்கும், மனிதர் கருவிலும், சிலர் பால்ய யௌவன கௌமார பருவத்திலும் அல்ப தேஜஸ் உள்ளவர்களாய் இறப்பர். அனர்த்தம், அதர்மம், கோபம், விரதலோபம் இவற்றால் பாபம் அடைவர். பிராமணர் வேதாத்தியயனம் எக்யாதிகளை விட்டுச் சூத்திரர்களால் மந்தி ரயோனி சம்பந்திகளாய் இருப்பர். பாஷண்டிகள் விருத்தியாவர். சிலர் காஷாய வஸ்திரம் தரித்துக் காபாலிகளாய்த் தர்ம தூஷகர் ஆவர். பிராமணர் வயிற்றின் பொருட்டு வேதவிக்கிரய ஜபதப ஓமாதிகளைச் செய்வர். சூத்திரர் வேதாத்தியயனம் செய்ய விரும்புவதே அல்லாமல் தர்மநிரூப ணஞ்செய்ய ஆரம்பிப்பர். சூத்திரர்வீட்டில் பிறந்த கூத்திரியர் அச்வமேதாதி யாகங்களைச் செய்வர். இவ்வகை கலியுக சந்தி வரையில் நடக்கும். பிறகு பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணங்கள் கெட்டுக் கலப்புறும், சூத்திரர் மிலேச்சர் முதலான அரசர்களை ஜெயிக்க பிருகு குலத்தில் பிரமதி என்னும் புருஷன் பிறந்து இப்பூமண்டலத்தில் (30) வருஷம் சஞ்சரித்து அநேக துஷ்டராஜாக்களைக் கெடுத்து, கங்கை, யமுனை முதலிய மத்தியப்பிர தேசத்தில் தங்குவன், பின் ஜனங்கள் அர சர் இன்மையால் அந்யோந்ய கலகத்தால் இறப்பர்,

யுதாசித்

1. கேகயதேசாதிபதி. கைகேசியின் சகோதரன். 2. விருஷ்ணியின் இரண்டாங் குமாரன். இவன் குமாரர் சரி, அநமித்திரன். 3. சுமந்திரன் குமாரன். 4. கோசல நாட்டுச் சித்ருஜித்தின் தாய் வழிப் பாட்டன், சுதரிசனனைக் காண்க. 5. தசாதபுதாரனாகிய பரதனுக்கு அம் மான்; கிரிவிரச மாண்டவன்,

யுதாயுதாயு

சுதச்சிரவசுவின் குமாரன், இவன் குமரான் நிர்மித்திரன்,

யுதிஷ்டிரன்

தருமராஜனுக்கு ஒரு பெயர்.

யுத்ததருமம்

யுத்தத்தில் புறங்கொடாது போர்செய்வோர் சவர்க்கத்தை அடைவர். ஓராயுதத்தை மற்றோர் ஆயுதமாகக்காட்டியும், கர்ணிகா பாணங்கள், நுனியில் விஷந்தடவிய பாணங்கள், நெருப்பில் காய்ச்சிய பாணங்கள் இவைகளைப் பிரயோகிக்காமலும் இரதத்தைவிட்டுப் பூமி யில் இறங்கினவன், பேடி, அஞ்சலி செய்தவன், தலைமயிரை அவிழ்த்துக் கொண்டிருப்பவன், குந்திக்கொண்டிருப்பவன். அபய மென்று சொன்னவன், தூங்குகிறவன், சந்தோஷமில்லாதவன், வஸ்திரமில்லாதவன், ஆயுதயில்லா தவன், எதிர்க்காதவன், சண்டை யைப் பார்ப்பவன், மற்றொருவனோடு சண்டை போடுபவன், ஆயுதம் ஒடிந்தவன், பிள்ளை முதலியோர் இறந்து விசனப்படுபவன், நன்றாக அடிபட்டவன், பயந்தவன், புறங்கொடுத்தோடுகிறவன், இவ்வகைக் குணமுடையவர்களைக் கொல்லக்கூடாது.

யுத்தியணி

அஃதாவது தனது மர்மத்தை மறைத்தற்பொருட்டுச் செய்கையாற் பிறரை வஞ்சித்தலாம்.

யுபசுலோகர்

திரிவக்கிரையிடம் கிருஷ்ணனுக்குப் பிறந்த குமாரர். நாரதருக்கு மாணாக்கராயிருந்து ஞானிகள் ஆயினர்.

யுயுச்சு

திருதராட்டிரனுக்குத் தாசியிடம் பிறந்தவன். இவன் தருமர் இராசசூயத்தில் மடைப்பள்ளியி லிருந்தவன். இவன் ராக்ஷஸாம்ச முடையவன்

யுயுதானன்

1. சத்தியகன் குமாரன், இவன் குமாரன் செயன். 2. யாதவ வாசன் சாத்தகி.

யுவந்திரன்

குணி குமரன்.

யுவனாசுவன்

1. (சூ.) சந்திரன் குமாரன். இந்து குமாரன் என்பர். 2. (சூ.) சோசித் குமாரன். இவன் தனக்குப் புத்திரரிலாததால் விரக்தி யடைந்து தன் (100) மனைவியருடன் வனமடைய அங்கு இருடிகள் இந்திரவேள்வி செய்தனர். அதில் புத்திரோற்பத்தியினிமித்தம் வைத்திருந்த ஜலத்தைப் பாதியிரவில் அரசன் தாகத்தால் வருந்த அதனைப் பருகினன், அதனால் சிலகாலம் பொறுத்து யுவனாசுவன் வலதுபாகத்தைப் பீறிக்கொண்டு குமாரனாகப் பிறந்தனன். இருடிக எதுக்கிரகத்தால் அரசன் இறக்கவில்லை, பிறந்த குமாரன் பாலுக்கழ இந்திரன் தனது கட்டைவிரலைக் கொடுத்தனன். அதனை அக்குழந்தை சுவைத்துப் பசியாறினன். இக்குமாரனே பின் மாந்தாதா என்னும் அரசனானான். யுவனாசுவன் சிலநாள் தவமியற்றி இஷ்டசித்தி யடைந்தனன்.

யூகாதித்தன்

சூரியன் சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றினன். சிவப்பிர சாதத்தினால் பலகதிர்களைப் பெற்றுப் பிரகாசிக்கையில் தேவர்கள் சூரிய உஷ்ணம் பொறாது சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவமூர்த்தி சூரியன் முதுகைத் தடவினர்; அதனால் வெப்பங்குறைந்து பூகாதித்தனெனப் பெயர்பெற்றுப் பிரகாசித்துச் சிவமூர்த்திக்குக் கண்ணாகும் வரம் பெற்றனன்,

யூகி

யௌகந்தராயணனென்னும் பெயர் பெற்ற அந்தணன். (மணிமேகலை)

யூகிமுனி

தேரையர் மாணாக்கருள் ஒருவர், இவர் தமது வைத்தியத் திறமையை அகத்தியரிடம் காட்டிச் செல்வாக்குப் பெறவெண்ணி அகத்தியராச்சிரமஞ் சென்றனர். அவ்விடமிருந்த காக்கை யொன் றினுக்குத் தாம் முடித்துவைத்திருந்த ஒளஷதமாகிய வீரசுண்ணத்தை உண்பித்து அக்கருங் காக்கையினை வெள்ளை வடிவாக்கினர். இதனைக் கண்ட அகத்தியர் களித்து இவரை மதியூகியெனப் பெயரிட்டழைத்தனர். அன்று முதல் யூகிமுனியெனப் பெயருண்டாயிற்று. இவர் வைத்திய சிந்தாமணி முதலிய பல நூலியற்றியவர்.

யூக்லிப்டஸ்தைலம்

இது ஆஸ்திரேலியாவிலுள்ள ஒருவகை மரத்திலிருந்து காய்ச்சப்படுகிறது. இந்தியாவில் நீலகிரிப் பிரதேசத்தில் இம்மரங்கள் பயிராக்கப்பட்டு அவற்றிலிருந்தும் காய்ச்சப்படுகிறது.

யூதமதம்

யூததேசத்தவர் கொண்டாடும்மதம். இவர்கள் பாஷை ஹீப்ரு. இவர்கள் முதலில் லூ, பெல், செட், என்னுந் தேவ விக்ரகங்களை வழிபட்டனர். இவர்கள் தேவன் ஒருவனுளன் என்றும், மோசே சிரேஷ்டகுரு என்றும், இறந்தவர் மீண்டும் உயிர்த்தெழுவர் என்றும், பாவமன்னிப்புண்டு என்றும் கூறுவர். இவர்கள் தற்காலம் பலவீனம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள், நூல் மிசினா, ஜமராஸ், தால்மத் முதலியனவாம்.

யூபாஷன்

இராவணசேநாதிபதி. அநுமனால் மாண்டவன். அரக்கன் மயிந்தனால் கொல்லப்பட்டவன்.

யோக வுற்பவம்

அசுவதி முதல் ஆதித்தனின்ற நாளளவு மெண்ணிச் சந்திரனின்ற நாளையுங் கூட்டி இதிலொன்று கழித்தால் நின்ற தொகை நித்யயோகமாம். பரிகத்தில் பின்னரை சுபகன்மங்களுக்காம்.

யோகசித்தி

ஆங்கீரஸர் பெண். பிரகஸ்பதியின் சகோதரி. பிரபாசன் மனைவி. குமாரன் விச்வகருமன்.

யோகதக்ஷணாமூர்த்தம்

மசுருஷிகள் யோக லக்ஷண மறியவேண்டிச் சிவமூர்த்தியை வேண்டிய காலத்து ஆசார்ய மூர்த்தமாய் எழுந்தருளி அவர்களுக்கு யோகத்தை யருளிச்செய்த சிவமூர்த்தம்.

யோகன்

யமனுக்குக் கிரியையிட முதித்த குமாரன்.

யோகம்

1. இது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எண் விதப்படும். இவற்றுள் இயமம் கொலை, களவு செய்யாமை, மெய்கூறல், கள்ளுண் ணாமை, பிறர்பொருளிச்சியாமை, இந்தி ரியமடக்கல் முதலியன. நியமம் தத்துவ நூலாராய்தல், தவம், தூய்மை, தெய்வ வழிபாடு, மனமுவப்பு முதலியன. ஆதனம் சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முத்தம், மயூராம், சுகம் எனப் பலவாம். அவற்றுள் சுவத்திகம் தொடைக்கும் முழங்காற்கு நடுவே இரண்டுள்ளங்காலையுஞ் செலுத்தி இறுமாந்திருத்தல். கோமுகம் சகனப்பக்கத்தில் இரு காற்பாட்டையு மாறவைத்து அவ்விரு காற் பெருவிரலையுங் கைப்பிடித்திருத்தல், பதுமம் இருதொடைமேலு மிரண்டுள்ளங் காலையு மாறித் தோன்ற வைத்தல், வீரம் வலது தொடையில் இடது காற்பாட்டைச் சேர்த்து இறுமாந்திருத்தல், கேசரி பீஜத்தின்கீழ் சீவனியிடத்துப் பரட்டைவைத்து இடமுழங்கையை முழந்தாளில் வைத்து. அங்குலி விரித்து நாசி முனையைப் பார்த்துக்கொண்டிருத்தல், பத்திரம் பீசத்தின் கீழ்ச் சிவனியிடத்து இருகாற்பரட்டையும் வைத்து அவ்விருபதத்தையும் இருகையா லிறுகப்பிடித்து அசையாதிருத்தல், முத்தம் இடக்காற் பாட்டாற் சீவனியை யழுத்தி வலக்காற்பாடு அப்பாட்டிற்குக் கீழழுந்த விருத்தல், மயூரம் முழங்கையிரண்டு முந்திப் புறத்திலழுந்தப் புவியிற் கையூன்றிக் கானீட்டித் தலைநிமிர்ந்திருத்தல். சுகம் சுகமுந்திடமும் எவ்வாறிருக்கின் எய்துமோ அவ்வாறிருத்தல். 1. பிராணாயாமம் – பிராண வாயுவை இரேசக, பூரக, கும்பகஞ் செய்தல். பிரத்தியாகாரம் உபாதியை நீக்கி உண்ணேக்கல், தாரணை ஆதாரத்தானங்களாகிய மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னு மாறாதாரங்களில் ஆதார தேவதைகளைக் குருமுகமாக வறிந்து மனதையும் வாயுவையும் அங்கங்கே நிறுத்தி அவ்விடத்துள் ஆதாரதேவதைகளைத் தரிசித்து ஆசந்தமுறுவது. தியாகம் ஜம்புல னடக்கி யோகஞ்செய்தல். சமாதி கானங்களிறந்து மனோலயமான சாக்கிராத்தத்தில் தன்னிலையைக் கண்டின்புறுதல். இதன் விரிவை விரிந்த நூல்களாகிய சிவயோகசாரம், சிவயோகமஞ்சரி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, மெய்ம் மொழி, சகலாகம சிந்தாமணி, சிவதரு மோத்திரம், திருமந்திரம் முதலிய நூல்களிற் காண்க. 2. இது நன்னடையுள்ள ஒருவன் விர்தசீலனாய் யோகாதிகள் அநுஷ்டானத்திற் கூறியபடி நியமாதியம் வுணவுகளைக்கொண்டு ஆறாதாரங்களாகிய மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசத்தி, ஆஞ்ஞை இவை முதலிய ஆதாரங்களின் தக்க பேதங்களையும் தேவதைகளையுமறிந்து அங்கங்கேரின்று தியானஞ்செய்து அந்தத் தானங்களின் சகுண தேவதைகளையும் பிரகாசங்களையும் கண்டுணர்தல். இது ஆதாரயோகம். இவற்றை யநுட்டித்தவர் அவ்வப்பத முத்தியைப் பெறுவர். சுஷமுனா யோகமாவது இயமங்யமாதிகளைக் கண்டு நிற்றல், மேற்கூறிய ஆறாதாரங்களில் அப்பியாசஞ் செய்தால் பரஞ்சோதிச் சொரூபமான சோடசகலையின் பேரொளி கண்டு அதிலழுந்தி ஆனந்தபானாய் மோகமடைவன். இவையன்றி அமிர்தயோகம், ஆனந்த யோகம், பன்னகயோகம், வச்சிரயோகம், ஞான யோகம், சித்தயோகம், பரயோசமென உண்டு, இன்னும் அணிமாதி யஷ்டமா சித்தி யோகமாவது; மூலாதாரத்துருவின் சுழுமுனைத் துவாரத்திலே மனத்தை வைத்து விடாமல் ஒருவருஷம் நோக்கில் பொன்னிறமா யணுவைப் போலுருக் கொள்வர். இது அணிமாசித்தி. அணுவை மேருப்போ லாக்கும் உன்மை, மகிமாசித் நியமுடனேயுண்டாம். இனி இந்த அக்கினியை மேருத்தொளை வழியாக வாயுவாலே குண்டலி மட்டாக எழுப்பி அதிலேற்றி இரண்டு வருஷம் நோக்கில் நீர் நுரைகள் போலத் தேக மெத்தெனவுண்டாம். இது லகிமாசித்தி. இந்தக் குண்டலி மட்டாக வந்த அக்கினியை நாபித்தானத்திலு மிருதயத்திலுமேற்றி மேருத்தொளை வழியாக வாயுவாலே மூவாண்டு நோக்கில் ஆகாயமளவாக வோங்கி வளரலாம். அணுவிலுஞ்சிறியராக விருக்கலாம் இது கரிமாசித்தி, இனி இருதயமாதியாகிய முன்சொன்ன அனில வாயுவால் மேருத்தொளை யிலேற்றிக் கண்டத்தளவாக எழுப்பி ஐயாண்டு நோக்கின் முற்காலத் துள்ள தெல்லாம் அறிவான்; இது பிராப்திசித்தி. இனிக் கழுத்து முதற் கண்மட்டாக மேருத்தொளைவழி அக்கினியை யேற்றி ஆறாண்டு நோக்கின் மண்ணி லெத்தனை கால மறைந்திருந்தாலு மிருக்கலாம்; பிறப்பும் அறும். இது பிராகாமியசித்தி. அனலை வாயுவாலே ஆக்கி, மேருத்தொளை வழி சிரசிலேற்றி ஏழாண்டு நோக்கில் எல்லாருக்கும் துன்பங்களைப் போக்கி எல்லாச் சீவனிலும் ஏகமாய்க் கலந்துவிற்பான். இது ஈசத்துவசித்தி நாதத்துவாரப் பிரகாசமானால் தேகசித்தியும் அஷ்டமாசித்தியும் வரும். இது மந்திரயோகம், இலயயோகமாவது ஆதார தேவதைகளைத் தியானஞ்செய்து ஏகசித்த னாயிருக்கையில் சதுர்த்தச நாதமுத லநேக நாதங்களுண்டாம். அதனைக்கேட்டு நிருத்த தரிசனங்கண்டு மனோலயமாவது. இனிச் சிரசிலிருக்கிற அனலை வாயுவாலே வாங்கி நாசாக்ரத்திலே யெட்டாண்டு நோக்கின் வேண்டிய அண்டங்களைச் சிருட்டிப்பான். இது வசித்துவசித்தி, 3, (27) விட்கம்பம், பிரீதி ஆயுஷ், மான், சௌபாக்கியம், சோபனம், அதி கண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிடணம், வச்சிரம், சித்தி, விதீபாதம், வரியான், பரீகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிரமம், ஐந்திரம், வைதி, ருதி. இவை முறையே கம்பம், பிரியம், வாழ்நாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, ரூலம், கண்டம், ஆகம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரமா, இந்திரன், பேய், இவற்றுள் கம்பம், கண்டம், அதி கண்டம், சூலம், வியாசாதம், வச்சிரம், விதீபாதம், பரீகம், வைதிருதி என்னும் ஒன்பதும் அன்றி மற்றவை நல்லன. இவற்றுள்ளும் கம்பத்தின் மூன்றும், குலத்தில் ஐந்தும், கண்டத்திலும் அதிகண்டத்திலும் ஆறும். வியாகாதத்தில் ஒன்பது நாழிகையும் கழித்துநின்ற நாழிகையும் ஆம்.

யோகவதி

ஞானசு தரிசனன் தேவி. இவள் கணவன் அதிதி பூசை செய்யும்படி சொன்னசொல் தவறாமல் விருந்தாய்வந்த வேதியனாகிய யமனுடனிசைந்திருக்கப் புருஷன் கண்டு களித்தவன். இதையறிந்த யமன் அவனைப் புகழ்ந்து இருவருக்கும் யமவாதனைமிலாது நற்பத மீந்து யோகவதியை நீ உன் புருஷனுக்குப் பெண்ணுருவுடனிருந்து உலகோர் பாபத்தை நீக்க வேகவதியாயிருக்கவென வரம்பெற்ற கற்பரசி. இவளைப் புணர்ந்ததாக இலிங்கபுராணங் கூறவில்லை. உடன்பட்டதே சாலும் எனக் கூறியுள்ளது.

யோகவொழுக்கம்

(8) இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மன வொடுக்கம், தாரணை, தியானம், சமாதி என்பன.

யோகா

நவசத்திகளில் ஒருத்தி,

யோகாங்கன்

சுப்பிரதீபனைக் காண்க,

யோகாசனம் (20)

(1), பத்மம், (2) ஸ்வஸ்திகம், (3) கோமுகம், (4) விசதம், (5) சூசிதம், (6) ஏகபாதம், (7) குக்குடம், (8) வீரம், (9) பத்ராயனம், (10) கூர்மம், (11) விமலம், (12) தண்டம், (13) பிண்டம், (14) கோகர்ணம், (15) சிம்மாசனம், (16) விருத்தம், (17) கடிகம், (18) கசாஸ்யம், (19) கசகர்ணிகம், (20) சுகாசனம், என்பனவாம். இவற்றின் கிரியை முதலியவற்றைப் பெருநூல்களிற் காண்க.

யோகாசாரம்

ஒருமதம். சௌத்திராந்திகனிற் சிறிது வேறுபட்ட பௌத்தம். அறிவு அரூபம் என்றும் பிரபஞ்சம் பொய் என்றும் கூறும். போதம் சலத்தின் வெள்ளம் போலவும், மருந்து எண்ணெயிலூறிப் பலிப்பது போலவும் பலிக்கும் என்பர். இது பௌத்தமத வேறுபாடு, (தத்துவநிஜாநு).

யோகிதாசன்

திருவரங்கத்திருந்த ஒரு குட்டநோயாளி. இவன் முதலாழ்வார்கள் அருளால் குட்டரீங்கி அரசகுமாரத்திகளை மணந்து இன்பமுற்றவன்.

யோகினி

ஒரு பெண்தேவதை, இவள் நிர்வாணி; விரிந்த கேசமும், தேசமுழுதும் வெண்ணீற்றுப் பூச்சும், மங்கலாபரண மின்றிச் சங்காபரணமும், கையில் வெறித்த கபாலமும், தீரா அமங்கலான சிவந்த வர்ணமும், உடையவள். இவளுக்கு முன்னும், இடப்புறமும் ஆகாது. பின்னும் வலப்புறமும் நன்றாம். ஆகாயம், பூமி மத்திமம்,

யோகினிகள்

ஒருவித மயக்குஞ்சத்திகள். இவர்கள் (64) கோடியர். இவர்களைச் சிவ மூர்த்தி சங்கரித்தனர். அவர்களுட் சிலர் காளியிட மேவல் செய்திருக்கின்றனர். அவர்கள் (64) வர் திவ்யயோகி, மகா யோகி, சித்தயோகி, கணேஸ்வரி, பிரேதா சிபிகினி, காளராத்திரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்த்துவவே தாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்து வகேசி, விரூபாக்ஷி, சுஷ்காங்கி, நரபோஜனி, ராக்ஷசி, கோசாக்தா, விஸ்வரூபி, பயங்கரி, வீரகௌமாரி, கீசண்டி, வராகி, முண்ட தாரிணி, பிராமரி, ருத்ரவேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி, துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேதவாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் போஷ்டி; மாலினி, மந்திரயோகினி, காலாக்னி, கிராமணி, சக்ரி, கங்காளி, புவனேச்வரி, பட்காரி, வீரபத்ரேசி, தும்ராக்ஷி, கலகப்பிரியை, கண்டகி, நாடகி, மாரி, எமதுதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எக்ஷி, ரோமஜங்கி, பிரஹாரிணி, சகஸ்ராக்ஷி, காமவோலா, காகதமிஷ்டிரி, அதோமுகி, தூர்சடி, விகடி, கோரி, கபாலி, விஷலங்கினி.

யோகினியறிதல்

சுக்லபக்ஷம் பிரதமை முதல் இஷ்டதின திதிவரையில் எண்ணிவந்த தொகையைப் பத்தால் வகுத்த மிச்சம் (1)க்கு கிழக்கு, (2)க்கு வடக்கு, (3)க்கு தென் தெற்கு, (4)க்கு தென்மேற்கு, (5)க்கு தெற்கு, (6)க்கு மேற்கு, (7)க்கு வடமேற்கு, (8)க்கு வடகிழக்கு, (9)க்கு ஆகாசம், (10)க்கு பூமி. வழக்கு, சூது, யுத்தம், யாத்திரை, இவற்றிற்கு யோகினி பார்க்க வேண்டியது பிரதானம்.

யோகினியறிதல்

சுக்கிலபக்ஷம் பிரதமை, ஏகாதசி, கிருஷ்ணபகம் சஷ்டி கிழக்கு. சுக்கிலபக்ஷம் திருதிகை, திரயோதசி, கிருஷ்ணபக்ஷம் அஷ்டமி; ஆக்கினேயம், சுக்கிலபக்ஷம் பஞ்சமி, பௌர்ணமி, கிருஷ்ணபக்ஷம் தெசமி; தெற்கு. சுக்கில பக்ஷம்; சதுர்த்தி, சதுர்த்தசி, கிருஷ்ண பக்ஷம் நவமி; நிருதி. சுக்கிலபட்சம் சஷ்டி. கிருஷ்ணபக்ஷம் பிரதமை, ஏகாதசி; மேற்கு, சுக்கிலபக்ஷம் சப்தமி, கிருஷ்ணபக்ஷம் துதியை, துவாதசி; வாயு. சுக்கிலபக்ஷம் துதியை, துவாதசி, கிருஷ்ண பக்ஷம் சப்தமி; வடக்கு. சுக்கிலபக்ஷம். அஷ்டமி, கிருஷ்ணபக்ஷம் திரிதியை, திரயோதசி; ஈசான்யம், சுக்கிலபக்ஷம் நவமி கிருஷ்ணபக்ஷம் சதுர்த்தி, சதுர்த்தசி; ஆகாயம். சுக்கிலபக்ஷம் தசமி, கிருஷ்ண பக்ஷம் பஞ்சமி, அமாவாசை; பாதாளம். இந்த யோகினியைப் பின்புறத்தில் வைத்துப் பிரயாணஞ் செய்ய நன்று.

யோகேச்வரர்

தேவவோத்திரனுக்குப் பிரஹதியிடமுதித்த விஷ்ணுவினம்சம்.

யோகேச்வரிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று,

யோசனைகந்தி

மச்சகந்தியைக் காண்க. சத்தியவதிக்கு ஒரு பெயர்.

யோனி

14, விலங்கு, பறவை, பசு, பாம்பு, தாவரம், மானிடம், பைசாசம், இராக்கதம், இயக்கம், காந்தருவம், ஐந்திரம், சௌமியம், பிரசாபத்யம், பிரமம் முதலியன.

யௌநன்

பிரயவுந்தன் வம்சத்துத் தீமந்தன் குமாரன்.

யௌவநாசுவன்

அம்பரீஷன் குமாரன்,