ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
யாககேது | இராவணனது (20) கோடி வீரருக்குத் தலைவன், இலக்கு மணரால் கொல்லப்பட்டவன். |
யாகங்கள் | இவை பிரமம், தெய்வம், பூதம், பிதுர், மானுஷம் என்பன; இவற்றுள், வேதம் ஓதல் பிரமயாகம். ஓமம் வளர்த்தல் தெய்வயாகம். பலியீதல் பூதயாகம். தர்ப்பணம் செய்தல் பிதுர்யாகம். இரப்போர்க் களித்தல் மனுஷயாகம், இவை வேதங்களிலும் புராணங்களிலும் கூறிய அக்னி சார்யங்களாம். இவற்றின் குண்ட மண்டல மந்திராதி கிரியைகள் ஆங்காங்கு வழக்கங்குறைந்து சிதைந்தும் பிறழ்ந்தும் கிடத்தலின் அவைகளின் கிரியைகளையும் குண்ட மண்டல வேதிகைளையும் எழு தாது பெயர் மாத்திரம் எழுதுகிறேன். (1) அக்னிஷ்டோமம், (2) அத்தியக்னிஷ் டோமம், (3) உக்தீயம், (4) சோடசீ, (5) வாசபேயம், (6) அதிராதரம், (7) அப்தோரியாமம், (8) அக்னியாதேயம், (9) அக்னி ஹோத்ரம், (10) தரிசபூர்ண மாசம், (11) சாதுர்மாஸ்யம், (12) நிரூட டசுபந்தம், (13) ஆக்கிரயணம், (14) சௌத்திராமணி, (15) அஷ்டகை, (16) பார்வணம், (17) சிராத்தம், (18) சிராவணி, (19) அக்ரசாயணி, (20) சைத்திரீ, (21) ஆச்வயுசீ, (22) விசுவசித, (23) ஆதானம், (24) நாசிகேத சயனம், (25) காடகசயனம், (26) ஆருண கேது கசயனம், (27) கருடசயனம், (28) பௌண்டரீகம், (29) சத்திசயாகம், (30) சாவித்ர சயனம். |
யாகசத்துரு | இராவணன் மந்திரியரில் ஒருவன், |
யாகசேநன் | சிகண்டிக்குத் தந்தை, பாஞ்சாலராசன் பாரதமுதற்போரில் கலிங்க ராஜனுடன் போர்புரிந்தவன். |
யாகவிருக்ஷங்கள் | 8,10,12 விதம். அவை வில்வம், ஆல், வன்னி, கருங்காலி, மா, நறுமுருக்கை, அத்தி, பலாசம், சந்தனம், வேங்கை, அரசு, வாகை (சைவ~பூஷ,) |
யாக்கைக் குற்றம் | (18) பசி, தாகம், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறககம், கரை, நோய், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு. |
யாக்ஞவராகமூர்த்தி | விஷ்ணுமூர்த்தியின் அவதாரவிசேஷம். இவர் பூமியைக் கோட்டினிற்னாங்கி யக்ஞமே திருமேனியாகக் கொண்டவர். |
யாக்ஞவல்கியம் | 1. ஒரு தர்மசாஸ்திரம். இதற்கு விக்ஞானேசவா யோகியால் செய்யப்பட்ட மிதாக்ஷரம் என்னும் விருத்தியுண்டு, 2. உப நிஷத்துக்களில் ஒன்று. |
யாக்ஞவல்கியர் | வைசம்பாயனர் மாணாக்கர். இவர் தேவி மயித்தி ரேயி. இவரது மற்றொரு தேவி காத்தியாயனி. இவர் துறவு பூண வேண்டித் தமது இருப்பை மனைவியர்க்குப் பாகித்துக் கொடுக்கையில் மைத்திரேயி சாவில்லாத பொருள் வேண்டுமென அவள் பொருட்டு ஞான முபதேசித்தவர். இவர் ஆசிரியருக்குற்ற பிரமகத்தியை அவர் மாணாக்கருமேற்க மாணாக்கர் அதனை யவர்கள் பெறார், அதனை நானே ஏற்றுக் கொள்கிறேனென, ஆசிரியர் கோபித்து அவர்களை அவமதித்ததனால் கொண்ட வேதத்தைவிட்டு நீங்கென, அவர் வேதத்தைச் கக்கிவிட்டுப்போக, அதனை வேததெய்வம், கக்கியவேதத் தைத் தித்திரிப்பஷியுருக் கொண்டு உண்டது. ஆகையால் அது தைத்திரியம் எனப்பட்டது. பின் யாக்ஞவல்கியர் குதிரை வடிவுகொண்டு சூரியனிடத்ததனைக் கற்றுக் கண்ணுவர் மத்தியந்தனர் முதலியோர்க்குக் கூறினர். இவர் தருமபுத்திர எது இராஜசூயத்திலிருந்தவர். |
யாசன் | ஒரு முனிவன். துருபதனுக்குப் புத்திரகாமேட்டி செய்வித்தவன், |
யாசன்பகாள் | தேவபூசை செய்வோர். |
யாஜோபயாசர் | துருபதனுக்கு ஒரு பெண்ணையும் ஒரு புத்திரனையும் பெற யஞ்ஞஞ் செய்வித்தவர் |
யாதனாசரீரம் | யம்புரத்தில் உயிர்கள் துன்பமனுபவிக்கப் பெறும் தேகம். |
யாதன் | சதிகோதரன் குமாரன்; புட்கரத் தீவை யாண்டவன். |
யாதவ மதம் | இது யாதவப்பிரகாசனால் நியமிக்கப்பட்டது. இவன் பிரமமேசித் அசித் ஈச்வானாகப் பரிணமித்திருக்கிற தென்பன். பேத ஞானமே சம்சாரமென்பன். இச்சம்சாரத்தா லுண்டாம் பேத ஞானம், சத்கர்மத்தால் கெட்டு உண்டாம் அபேத ஞானத்தால் பிரமமாவன் என்பன். |
யாதவநிகண்டு | ஒரு சமஸ்கிருத நிகண்டு, |
யாதவப்பிரகாசர் | பூர்வம் மதுராந்தகத்து ஏரிக் கரையிலுள்ள ஒரு புற்றில் உடும்பாயிருந்து பாகவதருண்ட சேடத்தைக் கிரகித்தமையால் மறுபிறப்பில் யாதவப்பிரகாச னென்னும் வேதியனாய்ப் பிறந்து சகல சாஸ்திரத்திலும் வல்லமை பெற்று இளையாழ்வாருக்கு ஆசிரியனாய் அவரிடமுள்ள சாத்திரப்பயிற்சியால் பொறாமை கொண்டு தீர்த்தயாத் திரையில் கொல்ல எண்ணி யழைத்துச்சென்று வஞ்சித்து மீண்டும் அவரைக் காஞ்சியிற்கண்டு ஆழ்வாரது வரவைக்கேட்டு மருவி அரச குமாரனைப் பிடித்திருந்த பிரம்மரக்ஷசைப் போக்க வலியற்றுத் தன் முன் பிறப்புப் பிரம்ம ரக்ஷஸாலுணர்ந்து இளையாழ்வாரால் அதை யோட்டு வித்துத் தாயின் சொற்படி இளையாழ்வாரிடம் பஞ்சசமஸ்காரம் பெற்றுக் கோவிந்தஜீயரெனப் பெயர்பெற்றவர். |
யாதவமகாராஜா | தொண்டை நாட்டில் நாராயணபுரத்தை அரசாண்ட சிவபத்தி மான், இவன் அரசாளுகையில் ஒருநாள் சிவமூர்த்தி விடசங்கம வுருக்கொண்டு தெருவில் வந்தனர். இவ்வரசனுக்குப் பரிகவன்திருத்தும் பெண் இவரது விடசங்கமவடிவுகண்டு தன் வீட்டிற்கழைத்துச் சென்று உணவுமுதலியன அளித்துவைத் திருக்கையில், அரசனுக்குரிய மணியை மறந்தனள். அரசன் தன் பூசைமுடித்துப் பரிகலம் திருத்துவாளைக் காணாது கோபித்து எவலாளரையேவிப் பிடித்துவரக் கட்டளை விட்டனன். அவ்வகை அவளை ஏவலாளர் பிடித்துவர அரசன் அப் பெண்ணின் கூந்தலைக் களையக் கட்டளையிட்டனன், அப்பெண் கூந்தலையிழந்து வீடுசென்று நடந்தவைகளை விடசங்கமரிடங் கூறச் சங்கமர் தமதுகரத்தால் அவள் சிரத்தைத் தடவினர். அவளுக்குப் பழமை போல் கூந்தல் வளர்ந்தது. இவள் வளர்ந்த கூந்தலுடன் அரசன் முன் போக, அரசன் செய்தியறிந்து சங்கமரைப்பணிந்து அவர் கட்டளைப்படி திருக்காளத்தி திருப்பணிசெய்தவன், |
யாதவர் | இவர்கள் யது வம்சத்தில் பிறந்தவர்கள், இந்த வம்சத்தில் பல அரசர்கள் பிரபலம் பெற்றிருந்தனர். அவர்களில் யதுவின் முதற் குமாரனாகிய சகஸ்திரசித்தி யிடமிருந்து. கய வம்ச முண்டாயிற்று. இவர்களுக்கு மாகிஷ்மதி பட்டணம். யதுவின் இரண்டாவது புத்திரன் குரோஷ்டு. இவன் வம்சத்திற் பிரபலமாயிருந்த வரசன் விதர்ப்பன், சியாமகன், சசிபிந்து. யதுவின் இரண்டாங் குமாரனது வம்சத்தவ னாகிய சாத்வதனிட மிருந்து போஜ வம்சமும், அந்தக வம்சமும், விருஷ்ணி வம்சமும் உண்டாயின, அந்தகவம் சத்தவன் கிருஷ்ணன். சாத்தகி விருஷ்ணி வம்சத்தவன். இவர்கள் இன்னும் விருஷ்ணிகர், போஜர், அந்தகர், தாசார்ஹர், சாத்வதர், மாதவர், அற்புதர், மாதுரர், மிதற்சனர், சூரசேனர், ததரர், குந்தியர் எனப் பல விதப்படுவர். இவர்கள் ஓணானாயிருந்த நிருகமகாராஜனைக் கண்டு தூக்க முடியாது கண்ணனுக்கு அறிவித்துச் சாப நீக்குவித்தவர். இவர்கள் ஒரு நாள் பிண்டராக க்ஷேத்திரத்தை யடைந்து அவ்விடமிருந்த இருடிகளை ஏமாற்றச் சாம்பனைக் கருப்பிணி போல் வேஷமிட்டு அந்த இருடிகளை இவள் வயிற்றிலிருப்பது ஆணோ பெண்ணோவென்று பரிகசிக்க, இருஷிகள் உணர்ந்து, இவள் வயிற்றிலிருப்பது ஆணுமன்று, பெண்ணுமன்று, உங்கள் குலத்தைக் கருவறுப்பதாகிய ஓர் இருப்புலக்கை யென்றனர். அவ்வகைச் சாபம் பெற்று மீண்ட பின், சாம்பன் வயிற்றில் இருப்பு லக்கையொன்று பிறந்தது. அதனைக் கண்ணனுக்கறிவிக்கக் கண்ணன் அதனை யராவிக் கடலில் விடுக வென்றனன். அவ்வகை செய்ய அவ்வராவுத்லுக்கு அகப்படாமல் ஒரு துண்டு கடலில் விழுந்தது. அவ்வரப் பொடிகள் கடற்கரையில் சம்பங்கோரைகளாக முளைத்தன. முன் அராவலுக்கு அகப்படாது கடலிடைப்பட்ட இருப்புத்துண்டை மீனொன்று விழுங்கியது. அம்மீன் வேடனொருவனிடம் அகப்பட்டது. அதை அவன் சேதிக்கையில் வயிற்றி லிருப்புத் துண்டைக் கண்டு அதனை அம்பினுனியில் இட்டு வைத்தனன். இத்துண்டு கண்ணனுக்கு, இறுதி விளைத்தது. இவ்வகைத் தாங்கள் இருப்புலக்கையை யராவி விட்டோம் என்று களிப்புடனிருக்கையில் ஒரு கால் கடற்கரைக்கு விளையாடச் சென்று தம்மில் ஒருவர்க்கொருவர் கலகம் விளைத்து ஆயுதம்கள் முறிந்து வேறு ஆயுதங்களில்லா மையால் அருகிருந்த சம்பங் கோரைகளைப் பிடுங்கி அடித்துக்கொண்டு மாண்டனர். |
யாத்திரைக்கு நாட்கள் | (வாரங்கள்) திங்கள், புதன், வியாழம் வெள்ளி, (திதிகள்) துவிதியை, திரிதியை; பஞ்சமி, ஸப்தமி. தசமி, திரயோதசி, (நட்சத்திரங்கள்) அஸ்வனி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், அநுஷம், சிராவணம், அவிட்டம், ரேவதி இவை உத்தமம். ரோகிணி, உத்திரம், உத்திரட்டாதி இவைமத்திமம். கரணங்களில் பத்திரவாகரணம் கூடாது. லக்கினங்கள் விருஷபம், மிதுனம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, மகாம், மீனம் இவை சுபம். யாத்திரைக்கு முக்கியமாய் யோகினி வாரசூலை பார்க்கவேண்டும். மேல்விவரித்த எல்லா விஷயங்களையும் சரியாய்ப்பார்க்கும் பக்ஷத்தில் முகூர்த்தக்கள் கிடைப்பன அரிதாய்விடும். ஆதலால் அவைகளின் பலாபலன்களையும் அனுசரிக்கவேண்டும் எல்லாச் சுபங்களுக்கும் மாசத்தியாஜ்யம் அல்லது கரிநாள், தாராபலன், சந்தா பலன் பார்க்க வேண்டும். காலற்ற நாள், உடலற்ற நாள். தலையற்ற நாள். “காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற், கோலக்குய மடவார் தம்மைக் கூடின் மலடாவார், மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம், ஞாலத்தவர் வழிபோகினு நவமெய்திடா சவமே கார்த்திகை, உத்திரம், உத்திராடம். மிருகசிரம். சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதியான. இவ்வொன்பது நாளும் புணர்ச்சிக்கும், மனை முகர்த்தத்திற்கும், யாத்திரைக்கும் ஆகாவாம். |
யானிமுகன் | சூரபதுமன் கட்டளையால் இலங்கையாண்ட அரசன். |
யானைக்கட்சேய் மாந்தாஞ் சோலிரும்பொறை | ஒரு சேரன். குறுங்கோழியூர்க் கிழாராற் பாடப்பெற்றவன். இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் கட்டுண்டவன். புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழாரால் ஐங்குறு நூறு தொகுப்பித் தோன். (ஐங்குறு.) 2. ஒரு சேர அரசன். இவன் அரசனும் புலவனும், வள்ளலுமாக இருந்தவன், ஐங்குறு நூறு தொகுப்பித்தோன் என்பர். இவன் இளஞ்சேரலிரும்பொறைக்கு உறவினன். |
யானைத்தீ | தணியாப்பசியை விளைக்கும் ஒரு நோய், இதனால் காயசண்டிகை மிகத் துன்புற்றுப் பின் மணிமேகலையிட்ட உணவால் பசியொழிந்தனள், (மணிமேகலை) |
யாப்பருங்கலக்காரிகை | அமுதசாகரரியயற்றிய செய்யுளிலக்கணம். இது கட்டளைக்கலித்துறையானயது. |
யாப்பருங்கலம் | இது குணசாகரர் இயற்றியது. இது நூற்பாவகவல் எனப்படுஞ் சூத்திரயாப்பில் அமைந்து யாப்பிலக்கணத்தை விளக்கமுற வுணர்த்துவது. யாப்பருங்கலக் காரிகைக்கு முதனூலாயுள்ளது. |
யாப்யாயனி | சிவசூரியனுக்கு வடக்கிலமருஞ் சத்தி. |
யாமளேந்திரர் | இசைத் தமிழ் நூலாகிய இந்திரகாளிய நூலாசிரியர். |
யாமளை | உமை. |
யாமாள் | யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் பிறந்த (12) குமாரர். இவர்கள் மகா பலசாலிகள், |
யாமினி | காசிபன் தேவி. தக்ஷன் குமாரி. சலபதங்களைப் பெற்றவள். |
யாமியம் | யமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டணம். இதில் புண்ணியபத் திரையென்னும் நதியும், ஒரு ஆலமரமும் இருக்கின்றன. இது பிரேதக் கூட்டங்கள் தங்கியிருக்கு மிடமுமாம். இங்கு ஆன்மா இறந்த முப்பதாநாள் தங்கிச் சிரமபரிகாரம் செய்துபோவன். இரண்டா மாசிக பிண்டத்தை ஆன்மா ஈண்டுப் புசிப்பன். |
யாமுனர் | யமுனைத்துறைவருக்கு நாதமுனிகள் கட்டளையால் மணக்கால்நம்பி யிட்ட பெயர். |
யாயாவரர் | பிதுர்க்கள். இவர்கள் ஜாத்காரு ருஷி வம்ச பிதுர்க்கள். ஜரத்காரு ருஷி இங்குமங்கும் அலைந்து திரிகையில் ஒரு பள்ளத்தில் கீழ் மேலாகத் தொங்கிக் கொண்டிருந்த இருடிகளை நோக்கி நீங்கள் யார் என, நாங்கள் ஜாக்காரு ருஷியின் பிதுர்க்கள், அவ்வம்சத்தில் ஜரத்காரன் மணங்கொள்ளாததினால் வம்சத்திற்கு நாதரில்லாததினால் இவ்வாறு இருக்கிறோம் எனக் கேட்டு, ஜாத்காரு தன் பெயருள்ள வனை. மணப்பதென்னும் விரதப்படி வாஸுகியின் சகோதரியாகிய ஜாத்காருவை மணந்து ஆஸ்திகரைப்பெறக் களிப்படைந்தவர்கள். |
யார்க்கென்னும் ஏரி | (13) வருஷம் தண்ணீர் வற்றியிருக்கும். அதில் ஜனங்கள் பயிர்செய்து வருவர். பதின்மூன்றாம் வருஷத் தொடக்கத்தில் நீர் சுரக்கத்தொடங்கி நீர் நிறைந்து ஒரு வருஷத்தில் வற்றிப்போகிறது. |
யாளிதத்தன் | இவன் ஒளவைக்குத் தந்தை. இவனைப் பகவனெனவும் கூறுவதுண்டு, இதனை “யாளிகூவற்றூண்டு” எனும் ஞானாமிர்தச் செய்யுளான் அறிக. |
யாழி | தக்ஷன் குமாரி. தருமப்பிரசாபதியின் தேவி. |
யாழ் | இது நான்குவகைப்படும். அவை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன. இவற்றில் பேரியாழிற்கு நரம்பு இருபத்தொன்று; மகர யாழிற்குப் பதினேழு; சகோடயாழிற்குப் பதினொன்று; செங்கோட்டியாழிற்கு ஏழாம். இவ் யாழின் உறுப்புக் களாவன: கோடு, ஆணி, பத்தர், மாடகம், தந்திரி முதலியன. யாழிற்குத் தெய்வம் மாதங்கி என்பர். யாழின் தொழில்களாவன பண்ணல், பரி வட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, சையூழ், குறும் போக்கு. இவற்றில் பண்ணலாவது, பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல், பரிவட்டணை என்பது அவ்வீக்கின நரம்பை அகவிரலாலும், புறவிரலாலும் கரணஞ்செய்து தடவிப் பார்த்தல், ஆராய்தல் என்பது ஆரோகண அவரோகணவகையால் இசையைத்தெறித்தல். தைவரல் என்பது சுருதி ஏற்றுதல். செலவு என்பது ஆளத்தியிலே நிரம்பப் பாடல், (ஆளத்தியைக் காண்க). விளையாட்டு என்பது பாட நினைத்த வண்ணத்தில் சந்தத்தை விடுத்தல். கையூழ் என்பது வண்ணத்தில் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடல். குறும் போக்கு குடகச்செலவும், துள்ளற்செலவும் பாடுதல், பின்னும் வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல் முதலியனவும் உள, வார்தலாவது; சுட்டு விரலால் தொழில் செய்தல், வடித்தலாவது; சுட்டு விரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல், உந்தலாவது; நரம்புகளைத் தெறித்து வலிவிற் பட்டதும், மெலிலிற் பட்டதும், நிரல்பட்டதும் அறிதல், உறழ்தலாவது; ஒன்றிடையிட்டும், இரண்டிடையிட்டும், நரம்பு களைத் தெறித்தல். உருட்டலாவது; இடக்கைச் சுட்டுவிரல் உருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் உருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி உருட்டலும், இரு பெருவிரலும் இயைந்து உடன் உருட்டலு மெனப் பல. யாழினது இருக்கை ஒன்பது வகைப்படும். அவை பதுமுகம், உற்கடிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், சுயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏக பாதம் என்பன இதன நாடக நூலார் ஐம் பதென விரிப்பா. யாழின் குற்றங்களாவன செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம், என்பன. இவற்றுள் செம்பகையாவது இசைத்தல்; ஆர்ப்பு ஒங்க இசைத்தல்; அதிர்வு நரம்பைச் சிதற உந்தல்; கூடம் தன் பகையாகிய ஆறு நரம்பின் இசையிற் குன்றித் தன்னோசை மழுங்கல், இவ்யாழிற்குக் குற்றம் எதினால் உண்டாம் எனின் மரக்குற்றத்தால் பிறக்கும். அம்மரம் நீரிலே நிற்றல், அழுகுதல், வேதல், நிலமயக்குப் பாரிலே நிற்றல், இடிவீழ்தல், நோய், மரப்பால் படல முதலியவாம். முன் சொல்லிய குரல் முதல் ஏழினும் தாரம் முதலிய பண்கள் தோன்றும். தாரத்தில் உழை தோன்றும். உழையுள் குரல் தோன்றும். குரலில் இளி தோன்றும். இளியுள் துத்தம் தோன்றும். துத்தத்துள் விளரி தோன்றும், விளரியுள் கைக்கிளை தோன்றும், பின்னும் இணை, இளை, பனக, நட்பு என்று சொல்லப்பட்ட நான்கினுள் இணை; இரண்டு நரம்பு; கிளை; ஐந்து நரம்பு; பகை; ஆறாம், மூன்றும். யாழ் வாசிக்கும் முறையாவது “நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி, யல்வியம் பங்கயத் தவனினிது படைத்த, தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ், மெய்பெற வணங்கி மேலொடு கீழ்புணர்த், திருகையின் வாங்கி விடவயின் நிறீஇ, மருவிய அவிநயம் மாட்டுதல் கடனே. ” என்பதனால் அறிக. |
யாழ்முரி | திருஞானசம்பந்தசுவாமிகளை திருநீலகண்ட யாழ்ப்பாணர் கேட்டுக் கொள்ளப் பாடியருளிய திருப்பதிகம். |
யாவலி | இராமமூர்த்தியைச் சிவபூசை செய்ய ஏவிய இருடி. (வேதாரண்ய~புரா.) |