அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மகசுவரன்

(சூ.) அகமருஷணன் குமரன்.

மகட்பாற்காஞ்சி

அழகிய ஆபரணத்தினையுடையாளை எனக்குத் தருகவென்று சொல்லும் அரசனோடு மாறுபட்டு நின்றது. (பு. வெ.)

மகட்பாலிகல்

மயில் போன்ற மேன்மையினையுடைய மகளை வேண்டிய மூட்டுவாயாற் சிறந்த வீரக்கழலினை யுடையான் முறைமை யைச் சொல்வியது. (பு. வெ.)

மகண்மறுத்து மொழிதல்

வெய்தான பகையை யுடையவன் மகளை வேண்ட அழகிய குறும்பினுள்ளோர் மறுத்துச் சொல்லியது. (பு. வெ)

மகதநாடு

1. சோழநாட்டிற்கும் தொண்டைநாட்டிற்கு மிடையிலுள்ள நாடு, இது தமிழர் வடக்கில் மகதநாட்டிலிருந்து குடியேறின நாடாகிய தமிழ் நாட்டிற்கிட்ட பெயர். 2. தருசகனுடைய நாடு, மிக்க சிறப் புடையது. இதன் இராசதானி இராசகிரிய நகர். இந்நாட்டுப் பிறந்த இரத்தின வேலைக்காரர்கள் மிக்க புகழை யுடையவர்கள். (பெ. கதை.)

மகதந்திரம்

சிற்ப நூல்களில் ஒன்று

மகதம்

1. இது தட்சணமகதம் உத்தர மகதமென இரண்டு வகைப்படும். வங்க தேசத்தருகில் உள்ள நாடு. இது சராசந்தன் வம்சத்தவர் ஆண்டது, பேகாருக்குத் தெற்கு. (மணிமேகலை.) 2. ஒரு தேசம். இதில் ஐந்து பர்வதங்கள் உண்டு, வைகாரம், வராகம், விருஷபம், விருஷிகிரி, அல்லது விருஷபகூடம், சைத்தியக சுவேதி. (பா. பீஷ்)

மகதி

நாரதர் வீணை,

மகதை

மகததேயம் (சூளா.)

மகத்தசைவிவரம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், இதற்குச் சூரிய தசை வருஷம், 4. ரோக, அஸ்தம், திருவோ இதற்குச் சந்திர தசை, வருஷம், 7, மிருக சித்தி, அவிட்டம் இதற்கு குஜதசை, வருஷம். 7. திருவா, சுவா, சதை, இதற்கு ராகு தசை வரு 18. புனர், விசா, பூரட் இதற்குக் குரு தசை வரு 14. பூசம், அனு, உத்திரட், இதற்குச் சனி தசை வரு 14 ஆயிலி, கேட்டை, ரேவதி இதற்குப் புத்தசை வருஷம் 17. அசு, மகம், மூலம் இதற்குக் சேது தசை 7. பரணி, பூரம், பூராடம், இதற்கு சுக்கிர தசை வரு 20.

மகத்தியன்

ஒரு இருடி.

மகரகேது

பிரதுய்மனனுக்கு ஒரு பெயர் (பாவ.)

மகரக்கண்ணன்

கரன் புத்திரன், வாயு வருணர்களிடம் வரம் பெற்றவன். இராம மூர்த்தியுடன் யுத்தஞ் செய்து மாயமாய் மறைந்து ஆகாயத்தில் உருமாறி யுத்தஞ் செய்து இராமபாணத்தால் இறந்தவன். இவனுக்கு மகராஷன் எனப் பெயர்,

மகரசங்கிரமபலன்

உத்திரத்ரயம், புனர்பூசம், மூலம், திருவோணம், இந்நாட்களின் மகர சங்கிரமமாயின் தானிய விலை யேறும், பாணி பூரத்ரயம் ஆயிலியம் கேட்டை இந்நாட்களாயின் தான்யவிலை குறையும். ஒழிந்த நாட்கள் சமமாம். (விதானமாலை.)

மகளிரான் மலருமரம்

(10) மகிழமரம் சுவைக்க, எழிலைம்பாலைமரம் நட்புற, பாதிரிமரம் நிந்திக்க, முல்லை நகைக்க, புன்னை ஆட, குசா அணைக்க, அசோகு உதைக்க, குருக்கத்தி பாட, மரா பார்க்க, சண்பகம் நிழல்படத் தளிர்த்துப் பூப்பனவாம்.

மகவோட்டம்

மாசி மா பௌர்ணிமியில் சந்திரனும் மகநக்ஷத்திரமும் உச்சமாகும் போது சந்திரனுக்குத் தெற்கில் ஒரு நக்ஷத்திரம் தள்ளில் காற்பங்கு நாசம், இரண்டு தள்ளில் அரைப்பங்கு நாசம், மூன்று தள்ளில் முக்காற்பங்கு நாசம், சந்திரனுக்கு வடக்குத் தள்ளில் மிகவுஞ் சௌக்யம். “காணுமாசிக்கலை மதியைக் கருதுமக மீனான் கதனில், பேணுந்தென் பான் மீன் சேரிற் பெரிதாமஃகந்தானென்ப, பூணிலிரண்டு முக்காலாம் பொருந்து மூன்றிற் பாதியதாம், சேணில் வடபால் மீன்சேரிற் செகத்தி லன்னஞ் சிறிதாமே”.

மகா சங்கிராந்தி

தயிர்க்குடத்தில் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியை யசோதையுடன் சுவர்ண பிரதிமை செய்வித்துத் தாபித்துப் பூஜை செய்து பிராமண போஜனஞ் செய்வித்துப் பிரதிமாதானஞ் செய்வது.

மகாகண்டம்

ஒரு புத்த நூல்,

மகாகர்ணி

அம்புவீசன் மந்திரி (பா. ஆ.)

மகாகாயன்

திருக்கைலையின் தென்வாயிற் காப்போன்.

மகாகாலன்

1. சிவமூர்த்திக்கு ஒருபெயர் 2. பாணாசூரனுக்கு ஒரு பெயர். (பா. ஆ.)

மகாகாளன்

ஏகாதசருத்ரருள் ஒருவன், தேவி ரசாளை.

மகாகாளம்

1, ஒரு தீர்த்தம், 2. சிவத்தலத்துள் ஒன்று.

மகாகாளர்

அரிகரப் புத்திரருக்குச் சேநாபதி, (வீரமாகாளர்) இவர் இந்திராணி தனித்திருக்கையில் அரிகரப்புத்திரர் கட்டளையால் காவல் பூண்டிருந்து அசமுகி இந்திராணியை வலிதில் தூக்கிச் சென்ற காலத்து அவள் கரத்தினையும் துன்முசியின் கரத்தினையும் வாளால் வெட்டி யெறிந்தவர். வீரபத்திரர்க்குக் காளி தேவியிடம் பிறந்தவர். 2. கருநிறம், முக்கண், இடது கையிற் கபாலம், வலதுகையிற் சூலம், பாம்பின் பூணூல், அணிந்த சிவாவசரத்தொன்று, 3. சிவகணத்தலைவர், சறுப்புநிறம், முக்கண், வலதுகரத்தில் சூலம், இடது கரத்தில் கபாலம் பெற்றவர்.

மகாகாளேச்வரம்

தூஷணனைக் காண்க.

மகாகிருதி

(சூ.) விதுர்த்தன் குமரன்.

மகாகுண்டன்

திருதராஷ்டிரன் குமரன்.

மகாகுப்தன்

வேதகிரியில் துவாபரயுகத்தில் கழுகு உருக்கொண்டு சிவபூசை செய்தவன்.

மகாகைலாசம்

இதன் பெருமையினை ஆயிரம் வாயினையுடைய ஆதிசேடனாலும் வேத சாஸ்திரங்களாலும் கூறி முடியாது. ஆயினும், சிவதர்மத்தின்படி சிறிது கூறுவாம். இந்தப் பூலோகத்தின் மேல் புவ லோகம் பதினைந்து நூறாயிரம் யோசனை விஸ்தாரம், அதில் பத்து வாயுக்கள் சஞ்சரிக்கும். வாயுமண்டலம், அப்பால் மேகமண்டலம், அதன் மீது ஆதித்தமண்டலம், அதன்மீது சந்திரமண்டலம், அப்பால் நக்ஷத்திர மண்டலம், அதன்மேல் புதனுலகு, அதன்மீது சுக்கிரனுலகு, அதன்மீது செவ்வாயுலகு, அதன்மீது வியாழனுலகு, அதன் மீது சனியுலகு, அதன் மீது இருடிபதம், அப்பால் துருவபதம், அதன்மேல் சுவர்க்கலோகம், அதன் மேல் மகலோகம், அதன்மேல் சநலோகம், அதன் மேல் தவ லோகம், அதன் மேல் ஸத்தியலோகம், அதன்மீது வைகுண்டம், அதன் மீது சிவலோகம், ஒப்பில்லாதவனும் மேருவை வில்லாகவுடையவனும் ஆகிய சிவமூர்த்தி எழுந்தருளிய சிவலோகத்தில் சூர்யப்பிரகாசம் போன்ற பலதேர்கள் ஒருபாவிலும், அழகிய அரம்பையர்கள் பாடும் இயலிசைகள் ஒருபாலிலும், தம்பட்ட முதலான வாச்சியத்தொவி ஒருபாவிலும், மணமருவிய மலர்களையுடைய மரத்தினொழுக் கொருபாலிலும், வேதங்களை யோதும் விரதியர் நிறைந்த வளத்தை யுடைய வனங்களொருபாலினும், மலையையொத்து விளங்கிய மதில்கள் பலபாவிலும் விளங்கும். புலித்தோலுடுத்த வரையினன் எழுர் தருளிய சிவலோகத்தில் உன்னதமான ஆயிரக்கால் மண்டபம் ஒருபாலினும், நீண்ட கொடிகனில் கட்டி விளங்கிய மணியோசை யொருபாலினும், விலையில்லாத நவமணிகுயிற்றிய திண்ணைகள் ஒருபாலினும், விருப்பினை யுடையவர்கள் விரும்புவனவாகிய நவமணிகள் நிறைந்த சங்கநிதி பதுமநிதி ஒருபாலினும், அலை மலிந்த புனலையுடைய நதி யணிகள் ஒரு பாலினும், வண்டுகள் முழங்கும் நீலோற்பலம் விரிந்த தடாகங்க ளொருபாலினும், பொன்முடி சூடிய தேவர்கள் கூடுமிடங்கள் ஒருபாலினும் தாளவொத்தின்படி நடனஞ் செய்யும் பெருமையை யுடையவனாய்த் தேவர்கள் தேவனாகிய சிவமூர்த்தி எழுந்தருளித் தனக்குத்தானே ஒப்பாகிய சிவலோகத்தின் கண் மணந்தங்கிய நாண் மலரா லலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும், தீப்பொரி போன்ற மாணிக்கங்களா லலங்கரிக்கப்பட்ட மாளிகைக ளொருபாலிலும், சிற்ப நூல் விதிப்படி சமைத்த சந்திரனைப் போன்ற மாளிகைகள் ஒரு பாலினும், ஒளியையுடைய மரகதப் பச்சையால் அலங்கரிக்கப்பட்ட மாளிகைகள் ஒருபாலினும், சூரியப் பிரகாசம் போன்ற காவலையுடைய மாளிகைகள் ஒருபாலினும், மாற்றுயர்ந்த பொன் மயமான பெரிய மாளிகைகள் ஒருபாலினும் விளங்கும். ஒருபால் சிங்கம்போலவும் புலி போலவும் முகத்தினையும் பல முகங்களையு முடையாரும், ஒருபால் பலகைகளையு முடையாரும், பல கால்களையு முடையாரும் காவலாக இருப்பர். இம்முகத்தையும் கரங்கால்களையும் அந்தத்திவ்யதேகிகள் பொருந்தியிருப்பது திருப்பணிவிடையில் சலியாநிலைப் பொருட்டாம். அந்தச் சிவ லோகத்தின் கண் பக்தி வைராக்கியத்தின் உறுதியுடையார், சிவனருளிய திருப்பணி யிடத்துக் கருத்துடையார், மல நோய் சற்று மில்லார், ஒருகுற்றமு மில்லாதவர், எல்லாருஞ் சேர விரும்பும் மேன்மை யுடையார், நற்குண மமைந்த திருவுருவ முடையார், பெரிய சடைமுடி யுடையார் திருநீறணிந்த திருமேனியை யுடையார். சதுர்ப்புஜங்களை யுடையார், முக்கண்களை யுடையார், புலியுடையுடையார், மழுவேல் களையுடையார், கணங்களாய் நிறைந்து நிற்பர். பின்னும் அந்த உலகத் தில் சிவ கணங்கள் திருமகளைக் காட்டிலும் அழகினை யுடையார், ஏவல்செய்ய வாழ்ந்து இருப்பர். ஒருபால் காதில் ஒளிவிடாது விளங்கும் குண்டலத்தை யணிந்த சிவமூர்த்தியின் திருவடிகளைக் கருதும் அறிவே அநுபூதியாய் மற்றப் போகங்களை யெண்ணாதவர், மோகங்களை நீக்குவோர், வேதப்பயன் யாதென்பார்க்கு விடையீவோர் பொருந்தி வாழ்வார். எப்போதும் அவன் திருவடியில் சித்தத்தை வைத்தோரும், பலவண்ணமாய்த் திருமேனியைக் கொண்டாரும், சூரியனைப்போல் ஒளிவிடுந் தேக காந்தியோரும் ஒருபால் அமர்ந்திருப்பர். இத்தன்மை யான சிவலோகத்தில் ஞானமே திருமேனியாக உடையானுக்கு இடம் மேறும் வேதியனுக்கு யாவராலும் வியக்கப்பட்ட வுயரமும், பரிசுத்த ஒளியினையுடைய பளிங்குமயமும் பெற்ற வெள்ளிய நவமணிகளாலும் பொன்னினாலும் தோரணமாதியான எல்லா வங்கங்களும் தாமே யமைந்த திருக்கோயில் விளங்கும். அதனழகு சொல்லுமளவன்று. அத் திருக்கோயிலின் கீழைக் கோபுரவாயிலில் பாசுபதரும், சைவரும், காபாலரும், மாவிரதியரும், தவத்தினரும், சாரூபம் பெற்றுத் திருப்பணி செய்யா நிற்பர். தென்திசைக் கோபுரவாயிலில் சரஸ்வதியுடன் கூடிய பிரமதேவரும் முனி சிரேஷ்டரான அங்கிராவும், கபிலராதியான சித்தர்களும், சநகர் சநந்தராதியான ராஜருஷிகளும், சத்த இருடிகளும் பணிசெய்தமருவர். மேற்றிசை வாயிவில் பிராமியாதியான சத்த மாதாக்களும், பத்திரை பார்ப்பதி யாதியான அஷ்ட கன்னியரும், எப்பொருள் களையுஞ் சிருஷ்டிக்க வல்ல சண்டப்பிரசண்ட வயிரவராகிய மேலோரும் பணி செய்தமருவர். வடதிசை வாயிலில் திருமாலும், பதினொரு கோடி உருத்திரரும், பன்னிரண்டு கோடி ஆதித்தரும், அஷ்ட வசுக்களும், தெய்வ மகளிரும், காந்தருவ இயக்கரும், சித்தரும், வித்யாதரர்களும், குய்யகரும், சேடரும், எல்லாம் விட்ட பெரியாரும் அமர்ந்து திருப்பணி செய்து இருப்பர். இப்பண்பினையுடையோர் வணங்கித் துதிக்கும்படி ஆயிர வயிரத்தூண்கள் விளங்கும் மாணிக்க மண்டபத்து நடுவில் அழகிய சிங்கங்கள் தாங்கும் அரியாசனத்தில் ஆயிரம் இதழ்களையுடைய, தெய்வத்தாமரை மலரின்மீது முத்தனாகியும் ஒப்பற்ற முதல்வனாகியும் கெடாதவனாகியும் உலகமே திருமேனியானவனாகியும் விளங்கும் சிவமூர்த்தி காருண்யத்தால் அடியவரைப் பக்குவப் படுத்தித் திருவடிக்கு அடிமையாக்கும் கருணையே திருமேனியாகக் கொண்ட வேதநாயகியுடன் கட்பொறிக்கு விடயமாகிய வுருவமனைத் தினையுங் காட்டுங் கதிரவன் ஒருங்கு ஒருகோடி கலந்து உதித்தது போலும், திருமேனியையும் தெய்வகங்கையும் ஆகாய விளக்காகிய சந்திரனும் கலந்த திருச்சடாமுடியில் வேதப்பண்களை இறைவன் களிக்கப் பாடும் தெய்வ வண்டுகள் மொய்க்கும் வாடாத கொன்றை மாலையினையும், கருணையே திருவுருவெனத் தெரிவிக்கும் சோமசூரிய நாட்டங்களையும் நாம் என அகங்காரங் கொண்டாரை அடக்கி யாள் வோமென அடையாளம்பட வைத்த அழகிய நெற்றிக் கண்களையும், தாமும் பசுவும் பாசமும் அழியா நிலைமையுடைய வெனத் தெரிவிக்கும் திரிபுண்டரங் களையும், கருடனுக் கஞ்சி அடைந்த ஆதிசேடனுக்கு அபயந் தந்தாண்டு அவனைக் குண்டலமாகக் கொண்டு அவன் துதிக்கும் வேதவொலி கேட்டுக்களிக்கும் திருச்செவிகளையும், தம்மை யடைந் தவர் துன்பம் பொருது அடைக்கலந் தந்து ஆலாலம் புசித்து அழகிய நீலக்கறை கொண்டு விஷ்ணுவின் சங்கைக் குடியோட்டிய திருக்கழுத் தினையும், அடியவராகிய வாடிய பயிர்களை அருளென்னும் மாரியால் வளர்க்கும் மெல்லிய புன்சிரிப்பையும், இவ்வளவென்று அளவிடப் படாது, வேதத்தையே புரி நூலாகக் கொண்ட அழகிய மலைபோன்ற திருப்புஜங்களையும், மானும் மழுவும், அடியவர்களின் பிறவிப்பிணி நீங்க அமைத்த அபயமும் வரதமும் அமைந்த திருக்கரங்களையும், இயற்கையாய் இவ்வளவினவென மதிப்பிடக்கூடாத நவரத்தங்க ளிழைக்கப் பெற்ற ஆரங்களையும், சர்வ சம்மார காலத்து முடிந்த பிரம விஷ்ணுக்களின் முழு வெலும்புகளைக் குவளை மாலையெனக் கண்டார் ஐயுறவணிந்த திருமார்பினையும், சிவனடியார் திருவுள்ளத்தைக் கொள்ளைகொள்ள்ளும் திருவுதர பந்தனத்தையும், அழகே சுழித்தது போலிருக்கிற திருவுந்தியையும், புலித்தோலையணிந்த துடிபோலும் இடையையும், ஆகாசம் போன்ற திருவரையையும், வாழைமரத்தை யொத்த திருத்தொடைகளையும், தாமரை நாளம்போல் கண்டகிதங் களான திருக்கணைக் கால்களையும், சங்காதாங்ககல் பரத்வாஜார விந்தாங்குச வஜ்ரலாஞ்சனமாய் அடியவர்களுக்குப்பிரம் மாநந்தத்தை விளைவிக்கும் மெல்லிய திருவடிகளையும், இராவணனது பெருமிதத் தைப் போக்கியாண்ட அலையினொழுங் கொத்த திருவிரல்களையும், பலகோடி சந்திரர்களுக்கு அவ்விரலொழுங்கே பிறப்பிட மென்னும்படி விளங்கும் திருநகங்களையும், தரிசித்தபோதே எல்லாத் துன்பங்களும் குடிவிட்டோட விருண்டு குளிர்ந்த மனத்தையும், வேதநாயதியாகிய பிராட்டியாரின் வடிக்கோல வாணெடுங் கண்களையும், கொள்ளை கொள்ளும் அழகிய திருக்கோலத்தையும், அழகென்னும் பொருளும், எல்லா மங்களங்களும் பிறப்பிடமாகிய உலக நாயகியார் வாமபாகத்தில் எழுந்தருளுதலையும் உடையராய்ச், சரிகையும் பிரம்பும் ஏந்தி நந்திமா தேவர், தேவர் கூட்டங்களை விலக்கவும், வாணன் குடமுழா வாசிக்க வும், பானுகம்பன் முதலியோர் சங்கத்தொனி முழக்கவும், தும்புரு நாரதர் இன்னிசை வீணை வாசிக்கவும், தெய்வ கன்னியர் நடிக்கவும், விநாயக மூர்த்தியும் குமாரக் கடவுளும் வீரபத்திரரும் ஏவுஞ் சிறு தொழில்களைக் கேட்டு நிற்கவும், பிரமனும் விஷ்ணுமூர்த்தியும் வாய் பொத்தி நிற்கவும், இந்திரன் முதலிய திக்குப் பாலகர் காவவிற் குறைகள் சொல்லவும், பூதகணங்களும் சிவகணங்களும் தேவர், சித்தர், அசுரர், சாரணர், விஞ்சையர், கின்னரர், மாதவர், இயக்கர், உரகர், கருடர், பாதாள வாசிகள் சுத்த யோகிகள் முதலியோர் நின்று துதிக்கவும், திருவோலக்கங் கொண்டு அவரவர்களுக்குத் தக்கபடி அருள் சுரந்து எழுந்தருளி யிருக்கும் திருவுலகமாம்.

மகாகௌரி

ஒரு நதி. (பா. பீஷ்.)

மகாசங்கன்

பாதாள வாசியாகிய நாகன்.

மகாசண்டன்

யமபடன்

மகாசதாசிவன்

இவர் இருபத்தைந்து திருமுகத்தோடு கூடிச் சதாசிவருக்கு மேற்பட்டுப் பாசிவாபேஷையுள்ள சிவமூர்த்தி, இவர், நிவர்த்தி, பிரதிஷ்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதை முதலிய அபர விந்து கலைகளானும், இந்திகை, தீபிகை, சோசிகை, மோசிகை, ஊர்த்வ காமினி, முதலிய அபரகாதகலைகளாலும், சூக்மை, அதிருக்மை, மிருதை, அமிருதை, வியாபினி யென்னும் பரவிந்து கலைகளானும், வியாபின், வியோமரூபை, அகந்தை, அநாதை, அநாசிருதையெனும் பரநாதகலா ரூபத்தாலும் வியாபிக்கப்பட்டிருப்பர்.

மகாசத்தர்

பசுவின் வயிற்றிற் பிறந்த ருஷி. பரிச்சித்துப் பாம்புகடித் திறக்கச் சாபம் அளித்தவர்.

மகாசமுத்திரங்களின் பகுதிகள்

வளைகுடாக்கள், விரிகுடாககள், கடற்கால்கள், ஜலசந்திகள் முதலியன. வளைகுடா என் பது பூமிக்குள் சென்று இரண்டு பூபாகம்களைக் கரையாக்கொண்ட நீர்ப்பகுதி, விரிகுடா என்பது விரிந்து பூமிக்குள் சென்ற நீர்ப்பகுதி இதுவே கடல், கடற்கால் என்பது கடல் பூமிக்குள் சென்றிருப்பது. ஜல சந்தி என்பது இரண்டு நீர்ப்பாகங்கள் இரண்டு பூமிகளால் நெருக்குண்டு சந்திக்கும் இடங்கள்.

மகாசமுத்திரங்கள்

1. 5. பஸிபிக் மகா சமுத்திரம், இது, உத்தர தக்ஷிண அமெரிகா கண்டங்களின் மேற்கரைகளிலிருந்து ஆசிய, ஆஸ்திரேலி யாக்களின் கீழ்க்கரையளவும் விசாலித்திருக்கிறது. அத்லாந்திக் மகாசமுத்ரம், இது, உத்தர தக்ஷிண அமெரிகாக்களின் கீழ்க்கரைகளி னின்று, ஐரோப்பா ஆப்ரிகா கண்டங்களின் மேல்கரை வரையிலும் அகன்றிருக்கிறது. இந்து மகாசமுத்ரம், ஆசியாவின் தென்பாகத்திலும், ஆப்ரிகாவின் கிழக்கிலும், அமெரிகாவின் மேல்பாகம் வரையிலும் அகன்றிருக்கிறது. உத்தரமகா சமுத்ரம், வட துருவத்தையும், தக்ஷிண மகாசமுத்ரம் தென் துருவத்தையுஞ் சூழ்ந்திருக்கிறது. (பூகோளம்.) 2. பஸிபிக் மகாசமுத்திரம், அத்லாண்டிக் மகாசமுத்திரம், இந்து மகா சமுத்திரம், (ஆர்க்டிக்) உத்தரமகா சமுத்திரம், தக்ஷிண மகா சமுத்திரம், (அண்டார்டிக்)

மகாசாத்தா

அரிகாப்புத்திரரைக் காண்க.

மகாசாலன்

ஜாமேசயன் குமரன். இவன் குமரன் மகாமனசு.

மகாசித்தன்

இவன் கைலாயத்தின் கிழக்கின் கணுள்ள ஸ்ரீதுவாரத்தின் காவலாளி

மகாசிரன்

(1) ஒரு அசுரன், (2) ஒரு ரிஷி. (பா. சபா.)

மகாசிவராத்ரி விரதம்

மாசி மாதக்கடையில் அமாவாசைவருக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியில் அநுட்டிக்கும் விரதம். இது மகாப் பிரளய முடிவில் சிவமூர்த்தியைப் பரமேச்வரி நான்கு சாமத்திலும் பூசித்துப் பேறு பெற்றது போல உலகரும் இந்நாளில் பூசிக்க வரம் பெற்ற நாள். இச்சிவராத்திரி மாக சிவராத்திரி என்றும், யோக சிவராத்ரி என்றும், நித்யசிவராத்திரி என்றும், பக்ஷ சிவராத்திரி என்றும், மாதசிவராத்திரி எனவும் ஐவகைப் படும். இவற்றுன் மாக சிவராத்ரி; மாசி மாதத்துக் கிருஷ்ணபக சதுர்த்தசியில் வருவது. இதனை வருஷ சிவராத்ரி யெனவும் கூறுவர். யோக சிவராத்ரியாவது; சோமவாரத்தில் உதய காலமுதல் அறுபது நாழிகையும் அமாவாசை யிருப்பதும், அவ்வாரத் திரவு சூரியன் அத்தமனமுதல் இராமுழுதும் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி யிருப்பதுமாம். இதனை வாரசிவராத்திரி யெனவும் கூறுவர். நித்திய சிவராத்திரியாவது வருஷத்தி லுண்டாம் பன்னிரண்டு மாதங்களி லுண்டாகும் கிருஷ்ணபக்ஷ சுக்ல பக்ஷங்களில் சதுர்த்தசி வருவது, பக்ஷசிவராத்திரியாவது தைமாதத்திய கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் (12) நாட்கள் வரையில் நாடோறும் ஒரு வேளையுண்டு (12) ஆம் நாளாகிய சதுர்த்தசியில் விரதமிருப்பது. மாதசிவ சாந்திரியாவது; மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசியும், பங்குனி சுக்ல திருதியையும், சித்திரை கிருஷ்ண அஷ்டமியும் வைகாசி சுக்ல அஷ்டமியும், ஆனி சுக்ல சதுர்த்தசியும், ஆடி கிருஷ்ண பஞ்சமியும், ஆவணி சுக்லாஷ்டமியும், புரட்டாசி சுக்ல திரயோதசியும், ஐப்பசி சுக்ல தவாதசியும், கார்த்திகை சுக்ல சப்தமியும், கிருஷ்ணாஷ்டமியும், மார்கழி சுக்ல திருதியையுமாம். இதில் உத்தமோத்தமமாவது. சூர்யாஸ்தமனம் வரையில் திரயோதசி யிருந்து நீங்க இரவு முழுதும் மறுநாட் பகல் முழுதும் சதுர்த்தசி யிருப்பது. உத்தம சிவராத்திரியாவது; சூரியாஸ் தமனத்திற்குப் பின்னும் இரவில் முன்பத்து நாழிகை சதுர்த்தசி வியாபித்திருப்பது. மத்திம சிவ பாத்திரியாவது; உதயமுதல் மறுநாளுதயம் வரை அதாவது பகலிரவு (60) நாழிகைவரும் சதுர்த்தசியும், சூரியன் அஸ்தமிக்குமுன் வரும் சதுர்த்தசியுமாம், அதமசிவ ராத்திரியாவது; இரவிலிருபது நாழிகை லிருந்த சதுர்த்தசியை அமாவாசை தொடர்வதாம். இதில் சிவபூசை முதலியன செய்யின் தீமையுண்டாம். இதின் விரத முதலிய வற்றைக் காமிகாதி ஆகமத்திற் சாண்க, இவ்விதம் அதுஷ்டித்தவர் அச்வ மேத பலம் பெறுவர். இதில் வேடன் அபுத்தி பூர்வமாக விரதமிருந்து அவனும் மான்களும் முத்தியடைந்தனர். இதில் சுகுமாரன் என்னும் வேதியன் பெரும் கொடுமை செய்து சிவதர்சனஞ்செய்து முத்திபெற்றனன்.

மகாசுவேதை

புண்டரீகனை மணந்தவள்.

மகாச்சுவாலை

விபாசாரிகள் அடையும் ஒரு நரகம்,

மகாதபதி

காம்பிலி நாட்டரசன், இவன் தேவி சுமதி, இவன் தன் தேவியுடன் களித்திருக்கையில் துருவாசர் வர அவரைக் கவனியா திருந்ததால் அபஸ்மாரியாகச் சாபம் பெற்றவன்.

மகாதேவன்

சந்திரனை அதிட்டித் திருக்கும் சிவமூர்த்தம். இவருக்குப் பலவிகரணர் எனவும் பெயர். இவாது சத்தி பலவிகரணி.

மகாநதி

A river in Orissa.

மகாநந்தபாராயணன்

சசிவர்ணனைக் காண்க. இவனுக்கு மகரந்த பாராயணன் எனவும் பெயர்.

மகாநந்தி

மகததேசாதிபராகிய சைசுநாகரில் இறுதியான அரசன். இவனுக்கு மகாபத்மன் எனவும் பெயர். இவனுக்குப் பின் நந்தன் அரசனாயினான்.

மகாநாபன்

அசுரன், இரண்யாக்ஷன் புத்ரன்.

மகாந்தகை

சத்திபீடங்களில் ஒன்று. இது மகேந்திரத்துள்ளது.

மகானுபாவமதம்

இம்மதஸ்தாபகன் கிருஷ்ணபட் என்பவன் சாலி வாகனசகம் ஏறக்குறைய 1001 இல், ராக்ஷசபவனத்திற்குக் கிழக்கி லிருக்கும் சேம்பை என்னும் கிராமத்தில் பிறந்தவன், இவன் ஓர் வேதா ளத்தை உபாசித்து ஒரு மகுடம் பெற்று இருந்தனன். அந்த மகுடம் தலையிலுள்ள வரையில் இவன் கிருஷ்ணமூர்த்தியைப் போல் காணப் பட்டனன். ஆதலால் இவனை உலகத்தார் கிருஷ்ணமூர்த்தியின் அபரா அவதாரமென்று எண்ணியிருந்தார்கள். இம்மதாசாரம் இவர்கள் கிருஷ்ணபட் என்கிற கிருஷ்ணமூர்த்தியையும் தத்தாத்திரேயரையும் பூசித்து வருவார்கள். இம்மதத்தவர் கறுப்புடை தரித்துக் கொள்வர். சந்நியாசிகள் ஷெளரம் செய்து கொள்ளுவார்கள். கிரகஸ்தர் ஷௌரம் செய்து கொள்ளக்கூடாது. மத ஸந்நியாசிகளுக்கு மகனந்து என்று பெயர். (சகலார்த்த சாகரம்).

மகான்

1. பூதனுக்குச் சுரபியிடத்து உதித்த குமரன், 2. ஏகாதசருத்ரருள் ஒருவன். தேவி உமை.

மகாபதுமன்

1, நந்தனைக் காண்க. 2. அஷ்டமாநாகங்களில் ஒன்று. குபேரதிசைக் காவலாளி.

மகாபதுமபுரம்

கோமதி தீரத்திலுள்ள பட்டணம். (பா. சா.)

மகாபத்மம்

பூமியில் தென்பாகத்தைத் தாங்கி நிற்கும் திக்கு யானைகளி லொன்று. (இரா~பால.)

மகாபயன்

தருமன் குமரன்.

மகாபலன்

1, சுமாலி குமரனாகிய அரக்கன், 2. அதிபலன் குமரர்; இருஷபதீர்த்தங்கருக்கு இரண்டாம் பிறவி. 3. சிவகிங்கரன்,

மகாபலலிங்கம்

கோகாணத்தில் உள்ள சிவலிங்கம்.

மகாபலி

ஒரு அசான். பலியைக் காண்க.

மகாபாகு

1, திருதராட்டிரன் குமரன். 2. இரண்யாக்ஷன் குமரன்,

மகாபாகை

சந்திபீடங்களில் ஒன்று.

மகாபாசன்

இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன்.

மகாபாதகங்களாவன

பிரமஹத்தி, கள்குடித்தல், களவு, குருபத்தினி கமனம், பொய், குருதிரஸ்காரம், வேதநிந்தை, மித்திரவதை, நிஷித்த பக்ஷணம், தன்னைத் துதித்தல், வேதாத்யனம் விடுதல், ரஜஸ்வலை யானவள் முகத்தைச் சும்பித்தல், ஒருவன் வைத்த நிக்ஷேபத்தைத் திருடல், தன் தாரத்தை விட்டு மற்றவரிடம் கமனம் என்பவை.

மகாபாரதம்

சோமராய மகாராஜன் கேட்டுக்கொள்ள சாரங்க முனிவரியற்றிய வடமொழிபாதசாத்திரம்

மகாபாரதம்

இது வடமொழியில் வியாச முனிவராற் கூறப்பட்ட பாண்டு புத்திரர் முதலியோர் கதை. இதைத் தமிழில் பெருந்தேவனார், வில்லிபுத்தூரார், நல்லாப் பிள்ளை முதலியவர் மொழிபெயர்த்தனர்.

மகாபாரிசுவன்

இராவணன் மந்திரிகளில் ஒருவன். பதினாறு கோடி சேனைக்குத் தலைவன். இந்திரசித்திற்குத் துணையாக வந்து இராம பாணத்தால் பிளவுண்டிறந்தான். இராவணன் குமரன் என்பர் சிலர்.

மகாபாஷ்யபட்டர்

ஆளவந்தாருக்குச் சாஸ்திராப்யாசமூல்யமாய் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்.

மகாபிக்ஷன்

ஒரு அரசன்.

மகாபிரகன்

கீர்த்திராதன் தந்தை.

மகாபிஷக்

சந்தனுவுக்கு ஒரு பெயர். இவன் ஆயிரம் அச்வமேதம், நூறு இராஜசூயமியற்றி இந்திரபதம் பெற்று வாழு நாட்களில் ஒருநாள் பிரமன் சபைக்கு வந்த கங்கையை மோகித்துப் பூமியில் சர்தனுவாகப் பிறந்தவன்.

மகாபெளமன்

க்ஷத்திரியன், சந்திரவம்சம், பூருவாசத்தவனான அரிகன் புத்திரன். தாய் ஆங்கி, மனைவி, சுயஞ்ஞை, புத்திரன் அயுதானன். (பா. ஆதி).

மகாபோஜன்

சாத்துவதன் குமரன், மகாதர்மி. போஜவம்சத்தலேவன்.

மகாப்பிரகன்

மிதிலாதிபதி, இவன் குமரன் கீர்த்திராதன்.

மகாப்ரஸ்தானகமனம்

இது, அரித்வாரம், கங்கோத்தரி, வதரிகாச்சிரம வழியாக இமயமலையை யேறிக்கடந்து சென்று சுவர்க்கமடைய வேண்டிய இடத்தில் தேகத்தை ஒழிப்பது. (பார~மா.)

மகாமகம்

இது மாசிமாதத்தில் குரு சிங்க ராசியிற் சேரும் புண்ணிய தினம். இது பன்னிரண்டு வருடத்திற் கொருமுறை கும்பகோனத்திற் கொண்டாடப் படுகிறது.

மகாமதி

ஆங்கீரசபுத்திரி, (பா. வன,)

மகாமநு

மகாகாலன் குமரன். இவன் புத்திரர் உசீநரன், திதிக்ஷன்.

மகாமல்லன்

பல்லவ அரசர்களில் ஒருவன். இவனுக்கு மகாவலி யெனவும் ஒரு பெயர். இவன் காஞ்சியாண்டு பிறகு தன் பெயரால் மகாபலிபுரம் கண்டான். இது ஆறாம் நூற்றாண்டு, (ஸ்வெல்~ஆன்டி குயிடி.)

மகாமாயன்

அதலலோகாதிபதி.

மகாமாயை

ஹிரீம் என்கிற அக்ஷரத்தையும், பிரணவத்தையும் உருவமாக உடையவள். பகவானிடத்தினின்றும் அவதரித்தவள். பிரமாதிதேவர்களால் துதிக்கப்பட்டவள், சராசரங்களுக்கு முதற்காரண மானவள், இவளுடைய தேஜசால் உலகத்தை விளக்குபவள். நித்ய கர்மங்களில் காலையில் பால்ய ரூபியாய்ப் பிரமனையும் மத்தியானத்தில் யௌவன ரூபியாய் ருத்திரமூர்த்தியையும், சாயங்காலத்தில் வார்த்திக ரூபியாய் விஷ்ணுவையும் அடைப்வள். (கல்கி புராணம்)

மகாமாரி

இவள் கறுப்பு நிறத்துடன் மூன்று சிரங்களுடன் கூடினவள், இவளது முதற்சிரம் கிழக்கில் பகைவர் நடுக்கத்தக்க கோர உருவுடன் இருக்கும். மற்றொருசிரம் தெற்கில் கோரப்பற்களுடன் கூடிப் பிடுங்கித் தின்னும் ஆவலுடன் இருக்கும். மேற்கிலுள்ள சிரம் சாந்த குணத்துடன் இருக்கும். இதுவே வேண்டியவர் விரும்பிச் செய்யும் பூசைமுதலிய ஏற்றுப் பலன் தருவது. இம்முகங்களுள் முதலிற் கூறிய முகம் தாமத மாகிய கருநிறமும், நடுவிற் கூறிய முகம் ரசோகுணமாகிய செந்நிறமும், கடையிற் கூறிய வெண்ணிறமாகிய முகம் சத்துவகுணமும் உடைய தாம். இவளுக்குச் சதுர்ப்புஜம், ஒரு கரத்தில் வில், மற்றொன்றில் கத்தி, மற்றொன்றில் கட்வாங்கம், மற்றொன்றில் சூலம் பெற்றிருப்பள். (ஆக்னேய புராணம்.)

மகாரசன்

கேகய தேசாதிபதி. குமரி பத்திரை.

மகாரதன்

1. காமரதன் குமரன். இவன் குமரன் விண்டுவன், 2. பிரசை குமரன்.

மகாரதர்

1. கிருதவர்மன், அநாதிருஷ்டி சமீகன், சமிதிஞ்சயன், கங்கன் சங்கன், குந்தி, பிரசேனசித்தெனும் அந்தகபோஜன் குமாரும், அவனும் சாருதேஷ்ணன், சக்ரதேவன், சாத்தகி, பலராமன், கண்ணன் சாம்பன் முதலியவர். (2) யுயஸ்சு எனப்பட்ட காணன், துச்சாசனன், துஸ்ஸஹன் துர்மருஷணன், விகர்ணன் சித்ரநேசன், விவிம்சதி, ஜயன், ஸத்திய விரதன், புருமித்திரன், துரியோதனன், இவர்கள் பாரதரில் மஹாரதராவர்.

மகாரத்னங்கள்

முத்து, பொன், வைடூர்யம், பத்மராகம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் (காருத்மதம்), பச்சை, பவளம், (விஷ்ணு தர்மோத்ரம்.)

மகாராஜிகர்

இருநூற்றொரு பதின்மராகிய கணதேவ பேதம்.

மகாராட்டிரம்

கூர்ச்சர்த்திற்குத் தென்னாடு.

மகாரெளரவம்

ஒரு இராஜநாகம். தீமயமானது. ஒன்பது யோசனை விசாலமுள்ளது, தீயபிராணிகளால் இதில் பாபிகள் துன்புறுவர்.

மகாரோமன்

(சூ.) கீர்த்திராதன் குமரன்.

மகாலட்சுமி

1. ஒரு காலத்தில் மகிஷன் கொடுமைகளைத் தேவராதியர் மும்மர்த்திகளிடம் கூறத் திரிமூர்த்திகளுக்குக் கோபமுண்டாயிற்று. அக்கோபத்தீயினால் உண்டான தேஜோரூபமே மகிஷா சுரமர்த்தனி யாகிய மகாலஷ்மி. (தேவி~பா.) 2. திருமகளுக்கு ஒரு பெயர்.

மகாலய அமாவாசை

புரட்டாசி மாதத்திய அபரபட்சத்தில் கன்யா ராசியில் சூரியன் பிரவேசிப்பது மகாலயமெனப்படும். அமாவாசைக்கு முன் பதினைந்து நாள் பிதுர் சிரார்த்தத்திற்குரிய நாள்களாம். இதில் பிரதமை, தனசம்பத்தும்,த்விதியைப் பிரஜாலாபமும்,த்விதியை வளர்ச்சி லாபமும், சதுர்த்தி, சத்துருநாசனமும், பஞ்சமி சம்பத்தும், ஷஷ்டி புகழும், ஸப்தமி கணாதிபத்யமும், அஷ்டமி, சிறந்த புத்தியும், நவமி ஸ்திரீசம்பத்தும், தசமி, இஷ்டசித்தியும், ஏகாதசி, வேத சித்தியும், தவாதசி, பிரஜாவிருத்தி, மேதை, பசு, புஷ்டி, சுவாதந்திரியம், தீர்க் காயுளும், உண்டு. சதுர்த்தசி, யந்திரங்களால் இறப்பார்க்குச் செயின் நலம். இந்தப் பக்ஷமுழுதும் சிராத்தஞ் செயின் வருஷமுழுதும் செய்த சிராத்த பலனுண்டு. இக்காலத்தில் யமபுரத்திலிருந்து பிதுர்க்கள் பூமியில் வந்து வசிப்பாராகையால் யமபுரம் சூன்யமென்று சொல்லப்பட்டிருக் கிறது. இதில் பாணியிலும் அஷ்டமியிலும் கஜச்சாயையென்று கூறப் படும் திரயோதசியிலும் சிரார்த்தஞ் செயின் கயாசிரார்த்த பலனுண்டு, அமாவாசை, பரணி,த்வாதசி, இவைகளில் திதிநக்ஷத்திரவாரதோஷம் வேண்டா.

மகாளவனம்

இஃது உஞ்சை நகரின் புறத்தேயுள்ள ஒரு காடு, இதில் ஒரு துர்க்கை கோயிலுண்டு. அது யூகிக்கும் அவனுடைய நண்பர்களும் தனியேயிருந்து ஆலோசனை செய்தற்குரிய இடமாக இருந்தது. (பெ. கதை.)

மகாவர்மன்

நந்தன்.

மகாவாகு

இரண்யாக்ஷன் புத்திரன்

மகாவாதரோகம்

(24) வகை, பாதஹரிஷவாதம், கண்டகவாதம், களாயகஞ்சவாதம், சம்பூகசீரிஷவாதம், கிருத்திரசி வாதம், ஊருஸ்தம்ப வாதம், அபதந்திரக வாதம், பக்ஷகாதவாதம், தண்டகவாதம், ஆக்ஷே பகவாதம், பாஹ்யாயாமவாதம், அந்தராயாமவாதம், விஸ்வபித்வாதம், அவபாகுக வாதம், அர்த்திதவாதம், சர்வாங்கவாதம், அநுசிரம்சவாதம், சிக்வாஸ்தம்ப வாதம், விரணாயாமவாதம், சிரக்கிரகவாதம், கஞ்ச வாதம், கல்லிவாதம், பங்குவாதம், பாததாகவாதம் என்பன.

மகாவாருணி விரதம்

இது சித்திரை கிருஷ்ணபக்ஷத்ரயோதசியில் அநுஷ்டிப்பது. இது சரிவாரமும் சதய நக்ஷத்திரமும் கூடின் மகாமக வாருணியென்று கூறப்படும். இது திரிகோடி பலந்தருவதாம்.

மகாவிந்தன்

துரியோதனன் தம்பி.

மகாவிரதி

சைவத்தில் ஒருவித பேதவாதி. இவன் எல்லா விதத்தினும் ஒப்பானாயினும் இவன் சிவமூர்த்தி எலும்பு மாலை முதலிய தரித்த மூர்த்தியாய் அருள்வர் என்பன். பின்னும் இவன் பதி, கிரியா சத்தியின்றி ஞான சத்தியால் ஆத்மாக்களைப் பெத்தாவத்தை படச்செய்யும் என்றும், பசு, மும்மலத்திலும், பந்தப்பட்டுச் சிவனது ஞானசத்தியால் சநத எதுவா மென்றும், பாசம், பசுவிற்குப் பந்தமாய் ஞானசத்தியால் சத்தியொடுங்கு மெனவும், ஆத்மா தீஷையால் மும்மலங்கெடச் சிவபூஜா துரந்தரனாய்ச் சிவஞான மடைந்து சிவலோகத்தில் ஞானமாத்திர மாயிருப்பன் எனவும் கூறுவன், (தத்துவ.)

மகாவீரன்

1. பிரிய விரதனுக்குப் பெரிகிஷ்மதியிடம் உதித்த குமரன். இவன் ஊர்த்தரேதஸ், 2. சைக்குருக்களுள் ஒருவன்.

மகாவீரஸ்வாமி

இவர் வட இந்தியாவில் குண்டலபுர அரசன் சித்தார்த் தனுக்கும் அவன் மனைவி பிரியகாரணிக்கும் பிறந்தவர். இவர் தமது அரசியலை வெறுத்துத் துறவு பூண்டு யாகம், மாமிசபக்ஷணம், பலி விடல், மறக்காரியம், அகிம்சை பரமதர்மம் என்று போதித்து தமது (72) ஆம் ஆண்டில் வடக்கே பாவாபுரி என்னுமிடத்தில் கார்த்திகை சுத்த கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நிர்வாண மடைந்தனர். அந்தச் சமயத்தில் யாவருங்காண ஒரு பெருஞ்சோதி உண்டாயிற்று. அன்று முதல் அவரது சோதி காரணமாக ஒளிகொண்ட தீபவரிசைகள் ஏற்றித் தீபாவளி கொண்டாடினர். இதுவே தீபாவளி பண்டிகை. (அருகமதம்.)

மகாவீர்யன்

1. பிருகுதாதன் குமரன். 2. புமன்யன் குமரன். 3. குரோத கீர்த்தி குமரன். 4. மன்யு குமரன்,

மகாஹயன்

சத்ருசித் குமரன்.

மகிமா

1. பகனுக்குச் சித்தியிடம் உதித்த குமரன். 2. ஒரு சித்தி, சித்திகளைக் காண்க.

மகிஷநந்தன்

ஸநாஜித் குமரன். இவன் பெயரால் ஒரு பட்டண முண்டாயிற்று.

மகிஷன்

1. தேவருடன் யுத்தஞ் செய்த தைத்தியாது தோல்வியைப் பொறாத திதி தவம்புரிந்து போர்சுவ முனிவரால் மகிட ரூபமாகிய இவனைப் பெற்றுத் தவத்திற்கனுப்பி வரம் பெறச்செய்து தேவர்மீது ஏவினள். இவன் மகா பலசாலி. இவனைச் சத்தி காளியை யேவி வெல்வித்தனள். இவன், காளிக்குப் பயந்து தடாகத்தில் ஒளிக்கக் காளி தான் ஏறியிருந்த சிங்கத்தைத் தடாகத்தில் ஏவச் சிங்கம் நீரைப்பருகக் காளி இவனைக் கொன்றனள், இவன் எருமை வயிற்றிற் பிறந்தவ னென்றும் புராணம் கூறும். இவன் குமரன் கயாசுரன். (காசி காண்டம்.) 2. அநுகிலாதன் இரண்டாம் புத்திரன். தாய் சூசமி. 3. புலிமுகனைக் காண்க.

மகிஷாசுரன்

இவன் ரம்பனென்னும் அசுரபுத்ரன். இந்த ரம்பன் அக்கினியிடம் வரம் பெற்று ஒருநாள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக் கையில் எருமையைக் கண்டு புணர அந்த எருமையிடம் கருவுண்டா யிற்று. இந்த ரம்பன் வேறு எருமைக் கிடா அதனிடம் சேராவகைக் காத்திருக்கையில் ஓர் கிடா அதனருகு வர ரம்பன் அதனைத் துரத்தி அதனால் குத்துண்டிறம்தான். பிறகு ரம்பன் தேகத்தைச் சிதையிலிடு கையில் எருமையும் சிதையில் விழத் தொடங்குகையில் பலர் தடுக்கவும் தடை படாது தீயில் வீழ்ந்தது. அப்பொழுது அதன் கருப்பத்திலிருந்து இரத்த பீஜனாகிய மகிஷன் தோன்றினான். இவன் பட்டணமடைந்து சக்ஷூரன், மகாவீரன், மகோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதாக்கன், பிடாவாக்யன், பாஷ்கலன், திரிநேத்ரன் காலன், பந்தகன், என்பவர்களைச் சேனைத்தலைவராக்கிக் கொண்டு, அவர்களைத் தனித்தனி தேவியிடம் யுத்தத்திற்கனுப்பி அவர்கள் இறக்கக் கண்டு தான் யுத்த சந்தத்தனாய்த் தன் உண்மையுருவை விட்டு மன் மதனை யொத்த அழகு வாய்ந்தவனாய்வந்து பிறகு சிங்க வுருவங் கொண்டு சத்தியேறியிருந்த சிங்கத்தையடிக்க அது இவனை அடிக்கப் பின் யானையுருக்கொண்டு தேவியுடன் போரிடத் தேவியின் வாகனமும் யானை வடிவங்கொண்டு போரிட இவன் சர்ப வடிவங்கொண்டு போரிடத் தேவி இவனை வானினால் வெட்ட அசுரன் மகிக்ஷ வுருக்கொண்டு போரிடுகையில் தேவிசண்டிகை யுருக்கொண்டு துரத்திச் சக்கரத்தை அவன் மீதெறிந்து மாய்க்க இறந்தவன். (தே~பா)

மகிஷ்மதி

ஆங்கீரசபுத்திரி. (பா. வன.)

மகீபண்டிதன்

சிவ குருவின் மாமன், இவன் குமரி சூர்யாம்பாள்.

மகீஸார க்ஷேத்திரம்

திருமழிசை யாழ்வார் அவதாரத்தலம்.

மகுகர்னன்

மகத தேசத்தாசனாகிய விநிக்தனை ஏமாற்றி இராச் சியத்தை அபகரித்தவன்.

மகுடவேந்தன்

பப்பா தேசாதிபதியின் குமரன்.

மகுடாசுரன்

தேவர்களை வருத்திச் சிவபிரானால் இறந்தவன்.

மகுடேச்வரி பீடம்

சத்தி பீடங்களில் ஒன்று,

மகேசன்

இவர், வாயுபூதத்தை யுதிட்டித்து சுத்த வித்தையெனும் உபா தானத்திலே யிருந்து மாயை முதல் பிருதிவியீரான தத்வங்களைத் தமதாக்னையால் நடத்தித்சுத்த வித்தை, மகேசுரம், சதாசிவம் எனும் (3.) தத்வங்களிலும் சமமாக ஊர்த்வ வியாப்தியாக வியாபித் திருப்பவர். கன்மசாதாக்ய ரென்னுஞ் சதாசிவர் பஞ்சகிருத்யத்தைத் திருவுளத்த மைத்து அநுக்ரகிக்கும் அவதாரமாப். (சதா).

மகேச்வரர்

இவர் வெண்ணிற முடையவராய் அரவப்பூணூல் அணிந்து திருக்கரத்தில் கத்தி, சூலம், பாணம், ஜபமாலை, அபயம், வரதம், கமண் டலம், பதுமம் கொண்டு சிம்மசர்மமும் கஜசர்மமும், தரித்திருப்பர்.

மகேச்வரி

சத்த மாதர்களில் ஒருத்தி. சடாமகுடத்துடன் கூடியவளாய்ச் சந்திர சடாதாரியாய்க் கபாலம், சூலம், கட்கம், வரத முதலிய உடையவளாய் இடபவாகனத்தில் இருப்பள்.

மகேந்திரன்

கௌசிகனுக்கு மருமகன்.

மகேந்திரபுரி

சூரபன்மன் இராஜதானி. விச்வகருமனால் நிருமிக்கப் பட்டது. சூரனுக்குப்பின் கடல் கொள்ளப்பட்டது.

மகேந்திரம்

அஷ்டகுல பர்வதங்களில் ஒன்று. இது உக்கல முதல் ஓரிஸ்ஸா வரையில் வியாபித்திருப்ப தென்பர். இதன் மீது அநுமன் ஏறி இலங்கைக்குப் பாய்ன்தான் என்பர். இது கஞ்சம் ஜில்லாவிலுள்ள தென்பர்.

மகேந்து

அசோகன் கட்டளையேற்றுப் புத்த சமயத்தைப் பரவச்செய்ய தேசயாத்திரை செய்தவள்.

மகோசஸ்

அங்கதேசத்தை யடுத்த மலை நாட்டரசன்.

மகோதன்

காலபுத்திராம்கமான பாரத வீரன்.

மகோதயன்

1. விச்வாமித்ரனால் வசிட்டர் பொருட்டு யாகத்திற்குப் போகாமல் கிராதனாகச் சபிக்கப்பட்டவன். 2. இவன் விச்வாமித்திரன் திரிசங்குக்கு யாகஞ்செய்வித்ததை சிந்தித்ததால் விச்வாமித்திரன் இவனைக் கிராதனாகச் சபிக்கச் சாபமேற்றவன். (இரா~பால.)

மகோதயம்

1. விச்வாமித்திரன் பட்டணம், மகத நாட்டிலுள்ளது. இது கன்யா குப்சமெனவும் பெயர் பெறும். 2. பப்புருவாகன் அரசாண்ட பட்டணம், 3. தை, மாசி, மாதங்களில் அமாவாசையும், திருவோண நக்ஷத்திரம் கூடிய நாள், இது ஞாயிற்றுக்கிழமையில் வரின் நன்று.

மகோதரன்

1. துரியோதனன் தம்பியரில் ஒருவன். 2. இராவணன் குமரன். 3. இராவணன் சிறிய தாய் குமரன். 4. இராவணனுக்கு முதல் மந்திரி, பிசாசங்கள் கட்டப்பட்ட பத்துக்கோடி தேர்ப்படை யுடையவன். மகாமாயாவி; மருத்துவனை மாயாசங்கனாக எவினவன், இராவண னுக்குச் சீதையை விடாதிருக்கப் புத்திகூறினவன், இலக்குமணரிடம் தோற்று ஓடினவன், இந்திரஜித்து வந்ததைக்கண்டு தைரியமாய் இந்திரனைப் போல் உருக்கொண்டு வெள்ளையானை யேறிக்கொண்டு இலக்குமணருடன் யுத்தத்திற்கு வந்தவன். இந்திரஜித்தின் மரணங் கேட்ட இராவணன் சானகியை வெட்டச் செல்லுகையில் தடுத்தவன், 5. ஒரு நாகன்.

மகோதரர்

1. ஒரு இருடி. 2. இவர் ராமர் ஜநஸ்தானத்தின் வழியாகத் தீர்த்தயாத்திரை செய்கையில் ராமரால் கொல்லப்பட்ட ஒரு அரக்கனது தலை இவரது கணுக்கால் எலும்பைப் பிடித்துக்கொண்டு விடவில்லை. இவர் சரஸ்வதி நதியைச்சேர்ந்த ஒளசனஸ் தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்ய அதுவிட்டுப் பாதாளத்திலமிழ்ந்தது. ஆதலால் அத்தீர்த்தம் கபால மோசனம் எனப்பட்டது.

மகோற்கடர்

வினாயகர் திருமூர்த்தத்தில் ஒன்று, காசிபர் பத்தினியாகிய அதிதி தவஞ் செய்கையில் விநாயகர் குழந்தை யுருக்கொண்டு எதிரில் தோன்றக் காசிபர் இவர்க்கு மகோற்கடர் என்று திருநாமம் இட்டு வளர்த்தனர். இவ்வகை வளர்த்து வருகையில் தேவாந்தக நசாந்தகர் கேட்டுப் பல அரசர்கள் அகார் முதலியவரை அனுப்ப அவர்களை வென்று மூன்றாவது வயதில் சித்திரன் என்னும் காந்தருவன் முதலை யுருக்கொண்டு தடாகத்தில் விளையாடச் சென்ற தன்னை விழுங்க அம்முதலையை வெளியிலிட்டு அம்முதலை யுருவின் சாபத்தைப் போக்கி ஆகா, ஊகூ எனும் காந்தருவர்கள் பூசித்த பஞ்ச மூர்த்தத்தை மறைத்து அவருக்குத் தம் வாயிடம் அம்மூர்த் தங்களைத் தரிசிப்பித்துப் பிங்களன். முதலிய அசுரரை வென்று இந்திரன் ஏவிய வாயு, அக்கினி, இவர்களது செருக்கையடக்கிப் பிதாவின் சொற்படி காசி ராசனுக்குப் புரோகிதராய்ச் சென்று வழியில் ஆயுதம் பெறச் சூரியனை யெண்ணித் தவஞ்செய்து கொண்டிருந்த தூமாக்ஷனைக் கொன்று அவன் புத்திரராகிய ஜநகன், மனு, என்பவர் எதிர்க்கப் பெருமூச்சால் அவர்களைக் கொன்று அவர்களை நராந்தகன் கொலுவில் விழச்செய்து, சிந்துரன், விகண்டன் என்பவரைத் தழுவிக் கொன்று, பின்னும் நராந்தகன் ஏவிய அசுரர் பலரைக் கொன்று கடைசியில் நராந்தகன் தானே யுத்தத்திற்கு வர அவனைத் தமது திருக்கரத்தில் இருந்த கொம்பினால் சிரத்தில் மோதிக் கொன்று காசிபருக்குத் தரிசனம் தந்து ஆநந்த பவன மென்னும் தமது உலகு அடைந்தவர்,

மக்கட்டாயம்

தமிழ்நாட்டரசர்களது பட்டவுரிமையில் மூத்தோனுரிமை பெறவரும் பண்டைய வழக்கம்.

மக்குவாசி

திருதராட்டிரன் குமரன்.

மங்கணகர்

1. இவர் ஒரு பிரமச்சரிய மநுட்டித்த ருஷி. இவர் சரஸ்வதி நதியில் நிர்வாணமாய் ஸ்நானஞ் செய்துகொண்டிருந்த ஒருத்தியைக் கண்டு வீர்யஸ்கலிதம் செய்தார். அவ்வீர்யத்தைக் குடத்திற் பிடித்தார். அது ஏழு பாகமாகப் பிரிந்தது. அதில் மருத்கணங்களைச் சேர்ந்த வாயுவேகன், வாயுபலன், வாயுஹா, வாயுமண்டலன், வாயுஜ்வாலன், வாயுரேதன், வாயுசக்கன் எனும் ஏழு குஷிகள் பிறந்தனர். இவர் தர்ப்பையால் கையில் காயப்பட்டு அதில் சிறந்த சாகரசம் பெருகியது. அதைக்கண்டு களிப்பினால் கூத்தாடினர். அதைப் பொறாத தேவர்கள் வேண்டச் சிவபெருமான் அவர்முன் சித்தராகத்தோன்றிக் களிப்பின் காரணங் கேட்க இருடியுண்மைகூற சிவபெருமான் விரல் நுனியில் தம் கட்டைவிரலை யடித்தார். அதில் நின்றும் பஸ்மம் வெளிவந்தது. முனிவர் அடங்கிக் கடவுளைத் துதித்தனர். பின் சிவபெருமான் முனிவர் வேண்டுகோளால் சப்தசாரமெனும் அந்த க்ஷேத்திரத்தில் அமர்ந்தரு ளினர். இதுபலராமர் தீர்த்த யாத்திரையில் தங்கிய இடம் (பார சல்லி). 2. ஒருரிஷி. இவர் புத்திரர் எழுவர். வாயுவேகன், வாயுபலன், வாயுகா, வாயுமண்டலன், வாயுஜ்வாவன், வாயுரேதஸ், வாயுசக்கரன் கசிய பரிஷியின் மானச புத்திரன் (வாமன புராணம்).

மங்கணசித்தர்

ஒரு சித்தர். இவர் புட்கரக்ஷேத்திரத்தில், வேதியர் குலத்திலே பிறந்து யோகம்பயின்று ஆயிரம் வருடம் தவம் செய்து வந்தனர். இவர் தமது யோகம் நீங்கி ஒரு நாள் சிவபூசைக்கு மலர் எடுக்கச் செல்லுகையில் காலிலும் கையிலும் முட்கள் கிழித்து உதிரம் பெருகிற்று. அவ்வுதிரம் புலால் நாற்றம் ஒழிந்து பரிமளம் மிகுந்து வீசுதலைச் சித்தர் கண்டு தேகத்தில் வடியும் இரத்தம் பரிமளம் வீசுதல் தவத்தின் பெருமை என்று களிப்புடன் ஆனந்தக் கூத்தாடுகையில் இவர் கால் தூமப்பர் எனும் முனிவர்மீது பட அவ்விருடி இவரை மானாகச் சபித்தனர். சித்தர் முனிவரைக் கேட்க முனிவர் இவ்வாறு (100) வருடம் சென்றபின் சிவபூசையில் இச்சாபம் நீங்குகஎன அவ்வாறு சிவபூசையில் தீர்வு பெற்றவர். 2. ஒரு சித்து புருஷர். இவர், சத்த சாசுவ தீரத்தில் சிவபூசை செய்து சிவ மூர்த்தியால் அஷ்டசித்தியும் அடைந்தவர். திரு வாரூரில் ஆநந்தேச்சுரலிங்க பூசை செய்தனர் என்பர்.

மங்கன்

ஒருவேதியன். பணத்தாசையால் பணத்தைப் பூமியில் புதைத்து வைத்துச் சாங்காலத்தில் தருமஞ் செய்து நல்வழியடைந்தவன்.

மங்கல பத்திரம்

க்ஷேமபத்திரம் எனவும் பெயர். திருமங்கலம், எனுஞ்சொற்களுடன் தலைவனையும் பணியாளனையும் அவன் தொழிலையும், அடிமையின் வணக்கத்தையும், தலைவனது வாழ்த்தையும், குறிப்பிட்டு தலைவனும் அடிமையும் எழுதிக்கொள்வது.

மங்கலகேசன்

ஷண்முக சேநாவீரன்.

மங்கலசூத்ரம்

இது திருமணத்தில் கொண்டோன் தெய்வம் வாழ்த்தித் தன் தேக சம்ரக்ஷணார்த்தம் தன் சந்ததி விருத்தியின் பொருட்டும் கொண்ட மனைவியின் கழுத்தில் தேவருஷிகள் புரோகிதர் முதலியோர் சாக்ஷியாகக் கட்டும் அடையாளமாம். இந்த்குத் தாலியென்று முற்கால, தற்கால வழக்கம். இத்தாலியைச் செல்வமுள்ளோர் பொன் முதலிய வற்றாலும் மற்றவற்றாலும் செய்து அணிவர். செல்வமில்லா ஏழைகள் மரத்தாலும் ஓலையாலும் செய்து அணிவர். இதனைத் தாலபத்திர மென்னும் ஓலையால் பலர் அணிதல்பற்றியே இதற்குத் தாலியென்று சாரணப் பெயருண்டாயிற்று. மரத்தாலியும் உண்டு போலும், இது வடநாட்டில் தற்காலம் சில கீழ்ச்சாதியாரிடத்து நடை பெறுகிறது. இத்தாலியை வடுகரும் தாளி சூத்ரம் என்றும், பொட்டென்றும் வழங்கி வருகின்றனர். இதன் உரு தேசங்கள் தோறும் ஜாதிகள் தோறும் வேறு படுகிறது. இத்தாலி பலவற்றால் செய்யப்படும் என்பதை “ஸ்வர்ணே னாஜதேனை வாதாம் ரேண தா ருஜைரபி அதவா தாலபத்ரேவா பௌஞ்ச சதுரஸ்ரகம்” எனும் ஸ்ரீஉத்தரகாரண வாக்யத்தால் அறிக, இதனைப் பதினாறிழைகள் கொண்ட சூத்திரத்தில் கோக்க வேண்டும் என்பது ஆகமம்,

மங்கலச் சொல்

(22) சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், மலை, புகழ், மதி, நீர், ஆரணம், சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி, அமிர்தம், இவையும் இவற்றின் பரியாயங்களுமாம்

மங்கலத்திருநாள்

புத்தன் அவதாரதினத்தில் புத்தரால் கொண்டாடப் பட்ட திரு நாள். இது வைசாக சுத்த பூர்ணிமையில் நிகழ்வது. (மணிமேகலை.)

மங்கலநிலை

கங்குவிடத்து மிக்க உறக்கத்தை நீங்கினோன் முன்னே மங்கலத்தைச் சொன்னமிகுதியைச் சொல்லியது. (பு வெ~பாடாண்). 2. நின்று நிலைத்த முறைமையினை யுடைய மங்கலத்தை முறைமை யாலே மேலினனென்று சொல்லுதலும் முன்பு சொன்ன துறையேயாம் (பு. வெ. பாடாண்).

மங்கலன்

செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பெயர்,

மங்கலமடந்தை

ஒரு பெண்தெய்வம், மலைநாட்டார் இத்தெய்வத்தை வணங்குவர். (சிலப்பதிகாரம்).

மங்கலம்

(8) சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தொட்டி, முரசு, விளக்கு, கொடி, இணைக்கயல்.

மங்கலவதி

அரிச்சந்திரன் தங்கை, திலீபன் தேவி,

மங்கலாதேவி

ஒரு பெண் தேவதை, வடநாட்டாரால் கொண்டாடப்படுபவள்.

மங்கலை

உசத்தியன் தேவி.

மங்கள கௌரி விரதம்

இது ஆவணியா செவ்வாய்க்கிழமையில் அநுட்டிப்பது. இது கன்னிகையராயின் தாய் வீட்டில் அநுட்டித்துப் பின் மாமியார் வீட்டில் அநுட்டிக்கவேண்டும். இதில் கௌரிபூஜை விசேஷம். இதை அநுட்டித்தவர் எல்லா மங்களங்களையும் அடைவர்,

மங்களக்ரஹவிரதம்

இது மங்களவாரத்தில் செந்நிற புஷ்பம் சந்தனாதிகளால் செவ்வாய் சக்கிரத்தில் செவ்வாய் இரகத்தைப் பூஜிக்கின் கடன் முதலியன தீர்ந்து புத்ராதி சம்பத்தை அடைவர்.

மங்களசண்டிகை

1. மக்கள் சப்தம் சுபத்திலும், சண்டிகை சப்தம் தக்ஷசப்தத் திலும் வர்த்திக்கும் ஆதலாலிவளுக்கு இப்பெயர் வந்தது. பின்னும் மங்கல மென்பது பூமி புத்ரனிடத்தும் வர்த்திக்கும். எவள் பூபுத்ரனால் பூசிக்கப் பட்டவளோ அவள் மங்களசண்டிகை. பின்னுமங்களன் சூர்யவம்சத்து அரசன். அவனால் பூசிக்கப்பட்டவள். இவள் துர்க்காதேவியின் மூர்த்தி பேதம். இவள் கச்யபமுனிவரால் மானஸமாகப் பூசிக்கப்பட்டவளாதலால் மானஸை யென்றும், திரிலோகத்தவர்களால் பூசிக்கப் பெற்றவளும், சிவனுக்குத் தேவியு மாதலின் சிவை யெனவும் படுவள். ஜனமேஜயன் யாகத்தில் நாகங்களைக் காத்தவளாதலின் நாகேச்வரி யெனப்படுவள். விஷத்தை ஹரிப்பவளாதலால் விஷஹரி. நாராயணனது பூர்வ அம்சமாதலின் நாராயணியெனப் படுவள். ஹரனால் சித்தயோகங்களை யடைந்தவளாதலின் சித்தயோகினியெனப் படுவள். 2. பிரகிருதி தேவியின் முகத்தில் தோன்றிய சத்தி. இவள் சிருஷ்டி காலத்தில் மங்களசுவரூபிணியாயும் சங்காரகாலத்தில் கோபரூபிணியாயும் உள்ளவளாதலால் இப்பெயர் பெற்றனள். இவள் புத்திரபாக்யம் வேண்டியவர் களால் மங்களவாரம் தோறும் பூசிக்கப்படுபவள். இவள் மங்களன் எனும் மநுவம்சத்தரசனால் பூசிக்கப்பட்டு சர்வ சித்தியைத் தந்தமையாலும், அங்காரக னால் பூசிக்கப்பட்டமையாலுமிப் பெயரடைந்தனள். இவள் துர்க்காதேவி யினம்சம். (தேவி~பா).

மங்களன்

வங்க தேசத்திருந்த ஒரு இடையன், இவனுக்கு (5000) தேவியர், இவர்களிடத்து இருஷிகள் கோபிகைகளாய்ப் பிறந்தனர்.

மங்களபீடம்

சத்தி பீடங்களுள் ஒன்று.

மங்களர்

புத்தர் அவதாரங்களில் ஒருவர்.

மங்களாசரணை

3 வாழ்த்து,வணக்கம்,செயப்படுபொருள்.இதுவேதற்சிறப்புப்பாயிரம்.

மங்களை

பார்வதியின் தோழியரில்ஒருத்தி.

மங்கி

1. பண ஆசையுள்ள ஒரு வேதியன். 2. ஒரு பிராமணர் இரண்டு கன்று களை வளர்க்க அவற்றை ஒட்டகம் தூக்கிச் செல்ல விரக்தியடைந்து முத்தியடைந்தவர். (பர~சாந்).

மங்கிணி

கௌஷீதக புத்திரனாகிய ருஷி. இவன் புத்திரப் பேறு வேண்டிச் சப்ததாராதீர்த்தக்கரையில் ஒரு தீர்த்தங் கண்டு அவ்விடம் தபஞ்செய்துஇஷ்டசித்திபெற்றவன்.(பதுமபுராணம்).

மங்கையர்க்கரசியார்

சோழராசன் பெண், நின்றசீர் நெடுமாற நாயனார்க்குத் திருத்தேவியார். இவர் சைந சமயத்தினின்று நீங்கி உய்யத், திருஞானசம்பந்த சுவாமிகளைத் தமது பதியாகிய மதுரைக்கு எழுந்தருளச் செய்துசுரத்தின் கொடுமையால் தமது நாயகர் வருந்தியது கண்டு திருஞானசம்பந்த சுவாமிகளைப் பாண்டியனை அடிமை கொண்டு சுரநீக்க வேண்டியவர். (திரு விளையாடல்.)

மசிஷநாடு

மைசூர். இதுவே எருமை நாடு,

மசூரிகைரோகம்

இதுவே அம்மை. இது முதலில் சுரத்துடன் சிறுகடலை அளவு தேகமுழுதும் முத்துக்களைப் போல் கொப்புளங்களையுண்டாக்கும். இதனால் வாயுவால், சரீரநோய், அரோசகம், ரோமச்சிலிர்ப்பு, தலைநோய், கண்ணோய், மூக்கடைப்பு, இக்குணங்களைத் தரும். இது கடலையினளவை யும் உருவத்தையும் பெறுதலால் விசர்ப்பி எனப்பட்டது. இதனை வசூரி யென்பர். இது கொப்புள வேறுபாட்டால் பெரியம்மை, சின்னம்மை, பனையேறி, தட்டையம்மை, பயறி, ராமக்கம் என வழங்குவர். (ஜீவ.) இதனை சௌமிய விரேசனங்களாலும், வல்லாரை, செருப்படை, கருப்பூரவல்லி, நிலவேம்பு முதலிய சுரஸகஷாயங்களாலும், தயிர், வெங்காயம், இளநீர், நெற்பொரி, பேயன் பழம், பனங்கற்கண்டு முதலிய தின்பண்டங்களாலும் வசப்படுத்த வேண்டும்.

மச்சகந்தி

இவள் பூர்வம் பரீஷித்துக்கள் என்னும் பித்ருக்களுக்கு மானஸ புத்ரி, அச்சோத மெனும் தடாகத்திருந்து உண்டானதால் இவளுக்கு அச்சோதை யென்று முன்பெயர். பரத அரசன் வளர்த்த பெண். இவள் ஓடக்கரையில் இருக்கையில் பராசர் கண்டு இவளுக்குச் சுகந்தமளித்துப் புணர்ந்தனர். அதனால் இவளிடம் வியாசர் பிறந்தனர். இவள் இரண்டாவது, சந்தனுவுக்குத் தேவியாயினள். இவள் யோக சக்தியிழந்து தலைகீழாக விழுகையில் பிதுர்க்களை நோக்கி முறையிட அவர்கள் பயப்படாதே என அவ்விடமிருந்து அவர்கள் கட்டளையால் மீன் வயிற்றுப் பிறந்தனள். இவளுக்குச் சத்தியவதி யெனவும், காளியெனவும் பெயர். அத்திரிகையைக் காண்க. (பாரதம்.) தந்தை உபரிசரவசு. மீன் வயிற்றிற் பிறந்த சகோதரன் மச்யன். இவளுக்குச் சத்யவதி யோசனைகந்தியெனப் பெயருண்டாயிற்று. அச்சோதையைக் காண்க.

மச்சசம்மாரமூர்த்தி

(மச்சாரி) மச்சவுருக் கொண்ட விஷ்ணுமூர்த்தி தமது வெற்றியால் பெருமிதமடைய அதனையடக்கத் தேவர் வேண்டு கோளால் சிவமூர்த்தி இவ்வருக்கொண்டு ஒரு திருக்கரத்தில் திருமணி, ஒரு திருக்கரத்தில் வாள் கொண்டு கடற்கரை சென்று மணியினை யாட்டினர். அதனால் கடல் மீன்கள் ஓசையின் மயங்கி இவரை அடைய அதில் பெருமிதங்கொண்ட விஷ்ணுமூர்த்தியின் கண்ணினை வாளால் பேர்த்துத் தமது திருக்கரத்தில் மோதிரமாக அணிந்தனர். இதுவுமன்றிச் சிவமூர்த்தி கொக்குப்போல் முகமுடையவராய் விஷ்ணுமூர்த்தியைத் தமது வாயில் கௌவிக் கர்வம் அழியச் செய்தனர். (சிவ பராக்ரமம்.)

மச்சபுராணம்

இது (14000) கிரந்தமுள்ளது. இது மச்சாவதாரத் தோற்றம், விஷ்ணு சலப்பிரளயத்தில் மனுவைக் காத்தமை, பிரமசிருட்டி, திரிபுரவதம், தாரகாசாயுத்தம், பார்வதியார் திருமணம், கந்தர் தோற்றம் முதலியவை யுணர்த்தும்.

மச்சமனிதன்

இது, மீன்வகையில் திருந்திய வுரு, இது மன்னாத்தி திமிங்கிலத்திலிருந்து திருந்திய வுருவமென எண்ணுகின்றனர். இதன் ஆணைமெர்மென் எனவும் பெண்ணை மர்மெய்ட் என்பர் ஆணுக்குக் கழுத்திற்குமேற்பாகம் மனிதவுரு. பெண்ணிற்கு, இடுப்பிற்கு மேற்பட்ட பாகம் மனிதவுரு மற்றவை மீனுரு. இது பூனை போல கத்துமாம். மீன் முதலியவற்றைத்தின்று ஜீவிக்கும். பெண்ணுக்குத் தலையில் மயிரும் மார்பில் பால்தரும் உறுப்பும் உண்டு. இது அழுகையில் கண்களில் தண்ணர் ஒழுகுமாம்.

மச்சமுனி

இவர் போகர் மாணாக்கருள் ஒருவராகிய சித்தர். இவர் செய்த நூல்கள், திராவகம் (800) வைத்தியம் (800) இவரைக் குலாலபுராணம் செம்படவர் என்று கூறும்

மச்சம்

ஒருதேசம். கூர்ச்சரத்திற் கருகிலுள்ளது.

மச்சயந்திரம்

ஒரு உயரமான கால் ஒன்று நாட்டி அதின் மீது பொன் மீன் ஒன்று இருத்தி அதனடியில் ஒரு சக்கரத்தை அந்தப் பொன்மீனுக்கு இடுக்கண் வராமல் சுழலச் செய்து ஒரு வில்லையும் அம்பையும் வைத்து எவன் அச்சக்கரத்தைச் சுழல்கையில் நிறுத்திவில்லில் அம்பைப்பூட்டி ஒரே பாணத்தால் அதில் உள்ள மச்சத்தை அறுக்கிறானோ அவனுக்குப் பரிசு தருவது. இவ்வகை யந்திரத்தை அருச்சுநன் அறுத்துத் திரௌ பதிக்கு மாலை சூட்டினன்.

மச்சியம்

ஒரு தேசம். Matsya Dess, The Country around Jeypur inclu ding A’war. Formerly Virata, West of Surusana Desa.

மச்சியராசன்

உபரிசரவஸுவின் குமரன். மீனாயிருந்த அப்சரஸு வயிற்றிற் பிறந்தவன். இவனுக்கு மச்சியன் எனவும் பெயர்,

மச்சியாவதாரமூர்த்தி

ஒரு கற்பத்தில் ஒரு மித்திகப் பிரளயம் உண்டா யிற்று. அக்காலையில் பிரமன் உறங்கினன். உறக்கம் அறிந்த அயக் கிரீவன் என்னும் அசுரன் வேதங்களைத் திருடிக்கொண்டு கடலில் ஒளித்தனன். இந்த ஏழாமன் வந்தரத்தில் விவசுவானுடைய புத்திரனும், சிரார்த்த தேவன் என்னும் பெயருள்ள சத்தியவிரதன் எனும் இராஜருஷி, கிருதமாலா நதிக்கு ஸ்நானத்தின் பொருட்டுச் சென்று தர்ப்பணாதிகள் முடிக்கையில் சிறுமீன் ஒன்று அரசனை நோக்கி அரசனே நான் சல சந்துக்களால் துன்பமடைகின்றேன், என்னை வேறு ஒரு நல்ல இடம் சேர்க்க என்றது. அரசன் அம்மீனைத் தன் கமண்டலத்துள் விட்டனன். அம்மீன் கமண்டல முழுதும் தன் உடலை வளர்த்து அரசனை வேறிடம் கேட்க, அரசன் வேறொரு பெருங் கொப்பரையில் விட்டனன். அங்கும் அவ்வகைசெய்ய அரசன் ஒருமடுவில் விட்டனன். அம்மீன் ஒரு பெரு மீனாய் அரசனை நோக்க, அரசன் அதனை நாராயணன் என்று அறிந்து துதித்துக் கடலில் விட்டனன். அம்மீன் அரசனை நோக்கி அரசனே உன்னைக் காக்கும்வண்ணம் இவ்விடம் அடைந்தேன். இன்றைக்கு ஏழாம் நாள் ஒரு பிரளயம் உண்டாகப் போகிறது. அக்காலத்து ஒரு ஓடம் நம் ஆக்னையால் உன்னையடையும், அதில் நீ சத்த இருடிகளுடனும், ஓஷதிகளுடனும், ஏறி மச்சவுருவமடைந்து உங்களுக்குக் காணப்படும் என் கொம்பில் அப்படகைக் கட்டுக. உன்னைப் பிரமன் உறக்கத்தி னின்று நீங்கும் வரையில் காக்கிறேன் என்று மறைந்தது. அவ்வகை அரசன் செய்தனன். மச்சமூர்த்தி அரசனைக் காத்துப் பிரமனது உறக்கத் தில் வேதங்களைத் திருடியொளித்த அயக்கிரீவனைச் சங்கரித்து வேதங்களைப் பிரமனுக்கு உதவினர். இந்த அசுரனுக்குச் சோமுகாசுரன் எனவும் பெயர் கூறுவர். இந்த அரசனே வைவச்சு தமனு, இந்த அவதாரத்தில் மநு, பூதேவி ஒஷதிகளை இரக்ஷித்தார். (பாகவதம்)

மச்சிலன்

உபரிசரவசுவின் குமரன். தாய் கிரிகை.

மச்சேந்திரநாதர்

1. சிவமூர்த்தி கடற்கரையில் பார்வதியார்க்குத் தாரக மந்திரம் உபதேசிக்கையில் அவளுக்கு நித்திரை உண்டாக அம்மந்தி ரத்தை மீன் வயிற்றிலிருந்த பிள்ளை கேட்டுப் புருஷ உருவாகி வெளி வந்தது. இதைக்கண்ட சிவ மூர்த்தி மச்சேந்திரனென்று பெயர் கொடுத் தனர். இவர் கோரக்கருடன்கூடி ஓர் அக்கிராரத்தில் வந்து ஒரு பார்ப்பினி வீட்டில் பிச்சைகேட்க அவள் ஒருவடை கொண்டு கொடுக்க வடையைக் கோரக்கர் மச்சேந்திரருக்குக் கொடுத்தனர். அதையுண்ட மச்சேந்திரநாதர் அதன் உருசியை எண்ணி மறுநாளும் வேண்டுமென அவ்வாறே கோரக்கர் அப்பார்ப்பினியிடம் போய்ப் பிச்சை கேட்க அவள் தானியங்கொண்டு வந்து இடக் கோரக்கர் அதை மறுத்து வடை வேண்டுமென்றனர். பார்ப்பினி இல்லையென்று மறுக்கப் பிடிவாத மாய்க் கோரக்கர் வடையே வேண்டுமெனப் பார்ப்பினி உம்கண்ணைக் குருகேட்டால் கொடுப்பீரோ அதுபோல் இல்லாதது கேட்கின் எவ்வகைத் தரல்கூடும் அங்ஙனம் தருவீரேல் வடை தரலாகுமென் றனள். உடனே கோரக்கர் தமது கண்ணைப் பெயர்த்து அவர்க்குக் கொடுப்பதை உனக்குக் கொடுக்கிறேன் என்று கொடுக்கப் பார்ப்பினி பயந்து நெய்யில் வடைசெய்து கொடுக்கக் கொணர்ந்து குருவின் முன் வைத்தனர். மச்சேந்திரர் இவரைநோக்கி உன்னொரு கண் எவ்வாறு நீங்கியதெனச் கோரக்கர் வரலாறு கூறக்கேட்டு இவரது மனோ உறு திக்கு உண்மகிழ்ந்து கண்ணளித்து இவரைமகிழாதிருந்தனர். பின்பு மச்சேந்திர நாதர் மலையாளமடையப் பிரேமளா என்பவள் மச்சேந் திரரைத் தன் வசப்படுத்தி, அவரிடமின்ப மனுபவித்திருக்கு நாளில் அவளுக்கு மீனநாதன் என்று ஒரு புதல்வன் பிறந்தனன். மச்சேந்திரர் அவளுடனின் புற்றிருக்கையில் என்னைக் கோரக்கன் அழைத்துச்செல்ல வருவான் என்னக்கேட்டு வருத்தமுடையவளாய் மந்திரிகளை நோக்கி நம் நாட்டுக்குள் துறவிகள் யாரும் அணுகவொட்டாமல் தலைதுமிக்க வெனக் கூறினள். அவ்வாறு காத்து வரும் நாள்களுள் ஒருநாள் கோரக்கர் ஆசிரியரை அழைத்துவரச்சென்று மலையாளம் வந்து ஒரு வீட்டில் பிச்சை கேட்க அவ்வீட்டிற் குரியவள் இவாது அழகைக்கண்டு இரக்க முடையவளாய் அந்நகரத்தின் செய்தி கூறினள். இதனால் கோரக்கர் அஞ்சி ஒரு மரநிழலில் சமயம் பார்த்திருக்கையில் கூத்தாடிகள் அவ்விடம் வந்து துயரத்துடனிருத்தல் கண்டு அவர்களை என் வருந்து கிறீரென நாங்கள் இந்நகரத்தரசரிடம் பரிசுபெறலாமென்று வந்தோம். மத்தள முழக்குவோன் நோய் கொண்டனன். என் செய்வோமெனக் கோரக்கர் நான் மத்தளிகனா கிறேன் நீவிர் வருகவென்று அவருடன் சென்று மத்தளங் கொட்டுகையில் மத்தளத்தொனியால் கோரக்கனென்று அறிந்த மச்சேந்திரர் தமது நாயகிக்குக் கூற அவள் வருந்தியிருக்கும் காலத்தில் கோரக்கர் மச்சேந்திரரை அழைத்தனர். மச்சேந்திரர் நாயகியையும் குமரனையும் நீங்க மனமில்லாமல் ஒருநாள் தன்னாயகியுடன் படுத்துறங்குகையில் குழந்தை அணையில் மலோபாதைசெய்ய மச்சேந்திரர் கோரக்கரை அழைத்துக் குழந்தையை நீரில் அலம்பிவா என்றனர். கோரக்கர் குழந்தையை யெடுத்துப்போய் ஆற்றிவலம்பிக் கல் மீதுமோதி வெயிலிலுலாவைத்தனர். பின் மச்சேந்திரர் மீனநாதன் எங்கென்று வினவ நீரில் துவைத்து வெயிலில் உலற வைத்தேன் என்று உரைத்தலும் மச்சேந்திரரும் தேவியும் வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொண்டு அழுதனர். மச்சேந்திரர் கோரக்கரை நோக்கி மீனநாதனை அழைத்துவா என்னலும் இவர் கல்லின்மேல் துவைத்ததனால் சிதறிய துகளெல்லாம் நூற்றெட்டு மீனநாதனாய் எதிர்வந்து நின்றன. இவர்களைக் கண்ட தாய் என் வயிற்றில் பிறந்த மீனநாதன் எவன் என்ன நூற்றெட்டும் ஒன்று சேர்ந்து ஒருகுடந்தையாக அதனையீந்தனர். பின் கோரக்கர் மச்சேந்திரரை யழைக்க மச்சேந்திரர் இவனுடன் செல்லா திருக்கின் இன்னும் என்ன விபரீதம் விளைப்பானோ வென்று மனைவி யிடத்து விடைகொண்டு புறப்படுகையில் மனைவி வழியில் செலவிற்கு என் செய்வார் எனக் கோரக்கரறியாது ஒரு பொற்பாளத்தினை ஜோளியி லிட்டு அனுப்பினாள். இருவரும் வழிச் செல்லுகையில் ஒரு குளத்தருகிற் சென்று மச்சேந்திரர் இவ்விடத்துக் கள்ளர் உளரோ வெனக்கேட்டு ஜோளியை அவ்விடம் வைத்து அகலக் கோரக்கர். அவ்வகைக் கேட்ட தற்குக் காரணமென்ன வன்று ஜோளியைப் பார்க்க அதிலிருந்த பொற் பாளத்தைக் குளத்திலெறிந்து விட்டு அதினெடைக்குத் தக்க கற்களை நிறைத்து வைத்தனர். பின் சிறிது தூரஞ்சென்று மச்சேந்திரர் இவ் வழியில் கள்ளருளரோ வென்னக் கோரக்கர் அப்பயமுமக்கு ஏன் என்ற னர். மச்சேந்திரர் ஜோளியைப் பார்க்கக் கற்களாயிருக்கக்கண்டு கோரக்கா நீ நல்ல சீடனல்லை மகனைக் கொலை புரிந்தாய், பொன்னைக் கொள்ளை கொண்டாய் என்னை விட்டுப் பிரிகவென்னச் சீடர் அவ்வழியிலிருந்த மலையின் பேரில் ஏறிச் சிறுநீர்விட அம்மலை யெல்லாம் தங்கமாகக் குருவை நோக்கி உமது பொருளை எடுத்துக் கொள்க என மச்சேந்திரர் மாயை தீர்ந்து சீடனைப் புகழ்ந்தனர். 2. இவர் ஒரு சித்தர். இவர் சஞ்சாரியாய்த் திரிந்து வருகையில் ஒருத்தி பிக்ஷையிட்டு இவரைப் புத்திரப் பேறு வேண்டினள். சித்தர் அவள் மீது கருணை செய்து வீபூதிபிரசாதித்து இதனை உட்கொள் என்றனர். வீபூதி கொண்டவள் அண்டை வீட்டுக்காரியிடம் நடந்தவைகளைக் கூற அவள் இத்தவசி மாயவேஷக்காரன் ஒருக்கால் உன்னை மயக்கித் தன்வழி கொள்ள அவ்வாறு செய்தல் கூடுமெனப் பயமுறுத்தி அதனை அடுப்பி லிடச் செய்தனள், அவ்வகை அடுப்பிலிட்டு மறந்து போய் இவளிருக் கையில் சிலகாலம் பொறுத்து மீண்டும் அவ்வழி சித்தர்வந்து அவ் வீபூதி பெற்றவள் வீடு சென்று நான் உன் பிள்ளையைப் பார்க்கவேண்டும் அழைக்க என்றனர். வீபூதிபெற்றாள் அண்டை வீட்டுக்காரி சொல்லால் தான் செய்தவை யனைத்தும் ஒளியாது கூறினள். சித்தர் ஆயின் அவ்வடுப்புச்சாம்பல் எங்குளதென அதனை வாரி வழக்கமாகக் கொட்டும் வீட்டின் புறக்கடையிலுள்ள குப்பையைக் காட்டினள். சித்தர் அவ்விடம் சென்று கோரக்காவென, ஏன் என்னும் ஒரு ஓசையுண் டாயிற்று. பலரும் கண்டு வியக்கச் சித்தர் குப்பையை யகற்றக்கூற அதில் சித்தர் தாம் திருநீறு கொடுத்த காலமுதல் பிள்ளையைக் கண்டகாலம் வரையுள்ள ஆண்டுகள் நிரம்பப்பெற்ற சிறுவனை அப்பெண்ணுக்குக் கொடுத்தனர். இவரைக் கோரக்கர் என்பர். (கர்ணபரம்பரை.)

மஞ்சள்

1. இது மற்ற வாசனைத் திரவியங்களுடன் விசேஷமாகத் தேவிக்கு அபிஷேகப்பொருள் ஆக எடுத்துக் கூறியிருத்தலின் இதனை மங்கலம் பெறச் சுமங்கலிகள் இறைவியினருளால் தம் கணவர் தீர்க்க, யுள் பெற்றிருக்க அணிவர். ஸ்ரீகாரணாகமத்தில் “ஹரித்ராசூர்ணஸம் யுக்தம்ஸநபனம் சோட சாத் மகம்” எனும் சுலோகத்தில் கூறியிருக்கிறது. 2. சாம்பாரப் பொருள்களில் ஒன்று. இது ஒருவித புல்வகை சேர்ந்த செடியின் கிழங்கு. நிழலில் பயிராவது. இதனைப் பதப்படுத்தும் வகையில் பலபெயர் தருவர். பசுமஞ்சள், கப்புமஞ்சள், விரல்மஞ்சள், கறிமஞ்சள், இதில் மணமுள்ள ஒருவகை கஸ்தூரி மஞ்சள், மருந்தாக உபயோகிக்கும் மரமஞ்சளும் உண்டு.

மஞ்சுகோசர்

வச்சிரசூசி செய்த அசுவகோசருக்குக் குரு.

மஞ்சுகோஷை

ஒரு காந்தருவஸ்திரி.

மஞ்சுனை

ஒரு நதி.

மஞ்சுளன்

ஒரு அரசன். இவன் தேவி காந்திமதி, இவ்விருவரும் தவஞ்செய்கையில் இவ்விருவருக்கும் சந்திரவதி (அல்லது) குமுதை பெண்ணாய்ப் பிறந்து சந்திர சூடனை மணந்தனள். (பூவாளூர்ப் புராணம்),

மஞ்சையர்

இவர் வீரசைவ அடியவர். சிவமூர்த்தி அல்லாத வேறு தேவர்களைத் தொழுமவரை மூக்கையரியும் துணிவுடையார். இவருடன் வைணவர் வாதிட்டுத் தோற்றுப் பிரத்தியக்ஷப் பிரமாணம் வேண்டு மென விஷ்ணுவை யழைத்துக் காசி விசுவேசரைத் தொழச்செய்தவர் மஞ்சிதேவர் எனவும் பெயர்.

மடக்கு

சொல்லணியில் ஒன்று, எழுத்துக்களது தொகுதி, பிறவெழுத் தானுஞ் சொல்லானும், இடையிடாதும், இடையிட்டும், வந்து பெயர்த்தும் வேறு பொருளை விளைவிப்பது. அம்மடக்கு ஆதிமடக்கு, இடை மடக்கு, கடைமடக்கு, ஆதியோடிடைமடக்கு, ஆதியொடு கடைமடக்கு, இடையோடு கடைமடக்கு, முழுதுமடக்கு என ஏழுவகைப்படும். பின்னும், இயமாவியமகம், இரண்டடிப் பாடகமடக்கு, அந்தாதி மடக்கு, ஒரெழுத்து மடக்கு பிறவுமுள. இவற்றினிலக்கணங்களைத் தண்டிய லங்காரங் காண்க. (தண்டி)

மடங்குதநவிற்சியணி

ஒருவரொரு பொருளை யறிவுறுத்தற்கு மற்றொருவர் சிலேஷையினாலாதல் எடுத்தல், படுத்தல் முதலிய இசைவிகாரத்தினாதல் மற்றொருபொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் வக்ரோக்தியலங் காரம் என்பர்.

மடமவண்ணக்கன் பெரிசாத்தன்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர்.

மடலூர்தல்

ஒன்றன்றியே பலவற்றையும் சொல்லி மன்றின் நடுவே மடன்மாவை செலுத்தியது. (பு. வெ. பெருந்திணை)

மடல் பாடியமாதங்கீரனார்

இது பாடலால் விசேடித்து வந்த பெயர், இவர் கூறிய பாடல்களில் மடலேறுதலைப் பற்றிக்கூறா நிற்பர். (மடலேறித் தெருவில் வந்து அவமானப் படுவதினும் காமநோயாலி றந்து போகேமோ) என்று இவர் கூறியது மிக்க நயமுடையதா யிருக்கும். (நற். 377.) இவர் குறுந்தொகையிற் கூறியதும் பெரும்பாலும், இதுவே கருத்துடையதாகும். குறிஞ்சித்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 377ம் பாடலொன்றும், குறுந்தொகையிலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மடவாலமாச்சையர்

இவர் சிவனடியவரின் ஆடைகளை வெளுத்து அவற்றையுலரும்படி விரித்து யாரும் வராமற்காத்து அடியவர்க்குத் தரும் நியமம் பூண்டவர். இவர் ஒருமுறை இவ்வாறு ஆடையை உலாவிட்டுக் காத்திருக்கையில், அசுத்தன் ஒருவன் அவ்வழி வரக்கண்டு அவனைக் கொலைசெய்தனர். இதனை அறிந்த அரசன் யானைப்பாகரை ஏவி அவரை அழைத்துவரக் கட்டளை தர இவர் யானைப் பாகரையும், யானையையும் கொலை செய்து அரசன் பணிய இருந்தனர். இவர் வசவ ரிடம் ஒருநாள் இருக்சையில் வசவ தேவர் சிவனடியார் தம்மை யொன்றும் கேட்டு வாங்கிக் கொள்ள வில்லையென்று விசனப் படுகை யில் இவர் அவர் முன்பாகத் தாம் வெளுக்க வாங்கிய சிவனடியவரின் ஆடையில் ஒன்றை நீரில் தோய்த்து உதறினர். அதிலிருந்து தெறித்த நீர்த்துளி அனைத்தும் விலையுயர்ந்த நவமணி களாயிருந்தன. இதனைக் கண்ட வசவர் அடியவர் பெருமை அளவிடுதற்கு அரியது என வியந்தனர். இவர் வசவரை க்ஷமை வேண்டினர்.

மடைத்தலைவன்

சுத்தா சுத்தபொருள்களின் பக்குவம், அறுசுவைகளின் கலப்பு வேறுபாடு, உணவப்பொருள்களின் குண வேறுபாடு முதலிய அறிந்தவன். (சுக்~நீ)

மடைப்பள்ளிச் சாம்பல்

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் கூன் பாண்டியனுக்கு வெப்பு தீர்த்தது. அது தொடங்கி இதுவே இத்தலத்தில் விபூதிப்பிரஸாதமாகக் கொடுக்கப்படும். (திரு)

மட்டிப்பால்

இது சிங்களம், மலையாளம் முதலிய இடங்களில் பயிராகும் ஒருவகை மரத்தின் பால், இது மணமுள்ளது.

மணக்கால் நம்பி

உய்யக்கொண்டாருக்குப் பின் வந்த வைஷ்ண வாசாரியர் இவர் குமுதாம்சராய்க் கலி (3632)க்குமேல் விரோதிகிருது வருஷம் மாசி திங்கட்கிழமை கோயிலுக்கடுத்த மணக்கால் எனும் கிராமத்தில் அவதரித்தவர். இவருக்கு ஸ்ரீஇராமமிஸ்ரர், என்று ஒரு பெயர். உய்யக்கொண்டார் வழிவிட்ட பெண்களுக்கு வழியில் சேறாயிருந்தது பற்றி அப்பெண்களை முதுகில் ஏறித் தாண்டச் செய்தவர். யாமுநர்க்கு உய்யக்கொண்டார் சொற்படி தூதுளங்கீரை பரிமாறி ஒருநாள் நிறுத்தி (அவர் வரலாற்றிந்து இவருடன் வார்த்தையாட) அவருக்கு ரகஸ்யங்களை உபதேசித்து அவருக்குத் துரியாச்ரமம் கொடுத்து உய்யக்கொண்டாரின் சாமகைங்கர்யங்களைச் செய்து முடித்துச் சிலநாளிருந்து திருநாட்டுக் கெழுந்தருளினவர். இவர் திருவடிகளை ஆச்சயித்தவர்கள், ஸ்ரீஆளவந்தார், திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துக் காசநம்பி, பிள்ளையரசநம்பி, சொட்டை நம்பி, சிறுபுள்ளூருடையார், பிள்ளைத் திருமாலிருஞ் சோலைதாசர், வங்கிபுரத்தாய்ச்சி,

மணக்குடையார்

திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒருவர். இவர் ஊர் முதலிய விளங்கவில்லை.

மணப்பாக்கத்து நம்பி

பிள்ளை லோகாசாரியர் திருவடி சம்பந்தி, தேவப் பெருமாள் கட்டளைப்படி கோயில் சென்று பிள்ளை லோகாசாரியார் தம் சீடருக்கு உபதேசிக்கையில் மறைவிலிருந்து கேட்டு அவருக்குச் சீடரானவர்.

மணமங்கலம்

பகையைக் சொல்லும் புயத்தினையும் எறியும் வேலினை யுமுடைய வேந்தன் அரிவையரோடு புணர்ந்த நன்மையைச் சொல்லியது. (பு. வெ பாடாண்.)

மணமுள்ள இலைகள்

மருக்கொழுந்து, மரு, புதியன் மூலி (புதீனா) ஓமவள்ளி, கற்பூரவள்ளி, துளசி, திருநீற்றுப்பச்சை, பச்சிலைச்செடி, சாமந்திப்பச்சை, முதலிய அளவிறந்தன. இவற்றினின்று தைலமிறக்கி வாசனை எண்ணெய்கள் செய்வதுண்டு. இவ்வாறே இலாவண்டர் என் னும் ஒரு பூண்டினின்று திராவகம் வடித்து மணப்பொருளாக உபயோ கிக்கின்றனர் இவ்வாறே கோலோன எனும் பட்டணத்தில் இடிக்கோலோன் என்னும் ஒரு திரவம் உண்டாக்கி மணப்பொருளாகவும் மருந்தாகவும் உபயோகிக்கின்றனர்.

மணமுள்ள மரங்கள் செடிகள்

சந்தனம், அகில், ஜாதிக்காய் இல வங்கம், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, தேவதாரு, இருவாட்சி, கொன்றை, மரமஞ்சள், மருதோன்றி.

மணமுள்ளவேர்கள்

இவை பெரும்பாலும் மிதவுஷ்ணமான தேசங்களில் உண்டாகின்றன, வெட்டிவேர்: இது விழல்போலும் புல்லினத்தைச் சேர்ந்த புல்லின் வேர், இது மணலில் நன்றாக வேர்பாய்ந்து மணமுள்ள தாயிருக்கும். குருவேர்: இது, ஒரு வகைச் செடியின் வேர். இது மணலில் அதிமீளமாய் வேர்விடுகிற இதன் வேர் அதிமணமுள்ளது. பச்சிலைவேர், கிச்சிலி வேர், கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சந்தன வேர், அகில்வேர் முதலிய.

மணம்

இது எண்வகைப்படும், அவை பிராம்மம், தெய்வம், ஆருஷம், பிரசாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராக்ஷசம், பைசாசம் எனப்படும். இதில் பிராம்மமாவது. வேதம் ஓதினவனாகவும், நல்லொழுக்கம் உள்ளவனாகவும் இருக்கின்ற பிரமசாரியைத் தாகைவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் அலங்கரித்து, கன்னிகையையும் அவ்வாறு நூதன வஸ்திர பூஷண அலங்காரம் செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது. தெய்வமாவது: சோதிட்டோமம் ஆதி யக்யத்தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது. ஆருஷமாவது: தான் செய்யவேண்டிய யாகாதி, கர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ருஷபம், ஒரு பசு, அல்லது இரண்டு ருஷபம், இரண்டு பசு இவைகளை வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது. பிரஜாபத்ய மென்பது: ஒரு பிரம சாரியை அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும்போது நீங்கள் இருவருமாய்த் தருமங்களைச் செய்யுங்கள் என்று கொடுப்பது, பெண்ணின் தந்தைக்குக் கேட்கும் பணத்தைக் கொடுத்துப் பெண் ணுக்குப் பூஷணங்களைப் போட்டுப் பெண்ணை வாங்கி விவாகம் செய்து கொள்வது. காந்தருவமாவது: ஸ்திரி யும் புருஷனும் ஒருவர்க்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல். இராக்ஷஸ மாவது: ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக்களை அடித்தும், கொன்றும், வலிமை யால் கொண்டு போதல். பைசாசமாவது: ஒரு கன்னிகை தூங்கும் போதும், குடியினால் வெறித்திருக்கும்போதும், பித்துக் கொண்டவளாய் இருக்கும் போதும், அவளுடன் புணர்வதாம். இவ்வகை மணத்தில் நான்கு வருணஸ்திரிகளில் க்ஷத்திரிய ஸ்திரி தனக்கு மேலான வருணத் தானைக் கல்யாணம் செய்துகொள்ளும்போது அவன் பிடித்துக் கொண்டிருக்கும் தண்டத்தையும், வைசிய மாது அவ்வாறு கல்யாணம் செய்து கொள்ளும்போது அவன் பிடித்துக்கொண்டிருக்கும் சாட்டைக் கயிற்றையும், சூத்ரஸ்திரி அவனது வஸ்திர துணியையும் பிடித்துக் கொண்டு விவாகஞ் செய்துகொள்ள வேண்டியதென மநுகூறுகிறார். மேற்கூறியவற்றுள் பிரசாபத்திய மணமே சிறந்ததாய், இப்பாத கண்டத்துள் யாவராலுங் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை நடப்பிக்கு முறையினைச் சிறிது சுருக்கிக் கூறுகிறேன். பிள்ளைக்குரிய வரும் பெண் வீட்டுக்காரரும் தாங்கள் உத்தேசித்த பெண்ணைக் கருதிப் பொருத்தம் முதலியவும் சகுனங்களும் பார்த்துப் பெண் வீடுநோக்கிச் சுபதினத்தில் குங்குமம், மஞ்சள், பழம் தேங்காய், தாம்பூலம், புஷ்பம், பந்துக்களுடன் சென்று பெண் வீட்டாரிடம் பெண்ணைத் தரப்பேசி முடிந்தபின் விவாகபத்திரிகை யெழுதி இன்ன கோத்திரத்தானுக்கு இன்ன கோத்திரத்தான் பெண்ணைக் கல்யாணஞ் செய்விக்கச் சம்மதித் தோமென்று கூறி முதல் சாக்ஷி புரோகிதராகையால் அவரைக்கொண்டு மும்முறை சொல்லுவித்துச் சபைத் தாம்பூலம் நடத்திப்பிள்ளை வீட்டார் கொடுத்த மங்கல அணி சேலை புஷ்பம் முதலியவற்றைப் பெண்ணுக் கணிவித்து வாழ்த்தி உண்டு பிள்ளை வீட்டார் முகூர்த்த நாளிட்டு அந்தாளுக்கு முன் நல்ல தினத்தில் பந்தற்கால் பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் நாட்டிப் பந்துக்களுடன் வேடிக்கையாய் நலங்கு முதலிய சுபகாரியங்கள் நடத்தி வருவர். கலியாணதினத்தில் பந்தரில் களிமண் செம்மண் வேதிகை போட்டுக் கோலமிட்டு நடுவில் ஒமாக்னிக்கு இடம் விட்டு அந்த ஓம இடத்திற்கு மேற்கில் மணப்பீடம் அலங்கரிக்க வேண்டும். பின் மணக்கோலங்கொண்டிருக்கும் மணப்பிள்ளையை மாங்கல்யப்பெண்கள் வீட்டிலிட்டிருக்கும் மணப் பொங்கலைக் கிராம தேவதை பிதுர் தேவதைகளுக்கு நிவேதனஞ் செய்வித்து நமஸ்கரிக்கச் செய்விக்க வேண்டியது. இக்கல்யாணப் பிள்ளையின் தந்தை அம்மான் முதலியோர் வைதிக கிருத்யமுள்ளவராய்ப் புரோகிதரைக்கொண்டு கல்யாண மண்டபத்தில் கிழக்கில் இந்திரனைப் பூசித்து அநேகங் கிளைக ளுள்ள கிளைவிளக்கில் ஆயிரங்கண்ணனை ஆவாகிக்கவேண்டியது. தென்கிழக்கில் அக்னிதேவப் பிரீதியாய்க் குடவிளக்கேற்றி அதில் அக்கினியை ஆவாகித்தல் வேண்டும். தெற்கில் யமப் பிரீதியாய்ப் புரோகிதரிடம் அவரை ஆவாகிப்பித்துப் பூசித்தல் வேண்டும். தென் மேற்கில் நிருதி தேவப்பிரீதியாய்த் தாசி அல்லது தோழியை மணப் பெண்ணுக்கு உபசாரஞ் செய்ய நிறுத்தல் வேண்டும் வட மேற்கில் வாயுப்பிரீதியாய் மாப்பிள்ளைத் தோழனிடம் விசிறி கொடுத்து உபச ரிக்கச் செய்தல் வேண்டும். வடக்கில் குபேரப்பிரீதியாய் அதிதேவதை ரூபமாகப் பணப்பை வைத்திருப்பவரை நிறுத்த வேண்டியது. வட கிழக்கில் ஈசானமூர்த்தியைத் தாபித்து அம்மியையும் குழவியையும் பூசித்து உபசரித்தல் வேண்டும். பின் நவக்திரசப் பிரீதியாகப் பச்சை யரிசிபரப்பி நவதான்ய முளைப்பாலிசை வைத்து ஒன்பது வீடு கீறி நவக்கிரக ஸ்தாபனஞ் செய்து பூசிக்க வேண்டியது. அதன் பின் ஏழு கரசத்திற்கு நூல் சுற்றி மாவிலை தருப்பை தேங்காய் வைத்துச் சப்த ருஷிகளை ஆவாகித்துப் பூசிக்கவும். பின் மாங்கல்யப் பெண்கள் பரிசுத்த இடத்தினின்று கொண்டு வந்த ஜலத்தை வாய்மூடிய கரகத்தில் விட்டுக் கங்கை முதலிய புண்ய தீர்த்தங்களை ஆவாகனஞ் செய்து பூசித்தல் வேண்டும், பின் அரசாணிக்கால், திருமூர்த்தி சுவரூபம், அரசு, பிரமா, ஆல், விஷ்ணு கல்யாண முருக்கு ருத்ர சுவரூபம். இவைகளில் திரிமூர்த்தி களை ஆவாகித்துப் பூசித்துப் பன்னிரண்டங்குலம் பள்ளத்தோண்டி மூன்று மாங்கல்யஸ்திரீகளைச் சரஸ்வதி, லக்ஷமி, பார்வதியாராகப் பாவித்து அவர்களால் நாட்டுவித்துத் தூபதீப நிவேதனஞ் செய்வித்து அப்பெண்களைக் கொண்டுபோய்த் தேவாலயத்தில் மூட்டி வைத்தி ருக்கும் நெருப்பைப் புகையாமல் எடுத்து வாத்யகோஷ சகிதமாகவந்து ஓமகுண்டத்திலிட்டு அக்னிமந்திரஞ்சொல்லி ஒமாக்னி விருத்திசெய்தல் வேண்டும். இச்சுபகாரியங்களை விவாக லக்னத்திற்கு ஐந்துநாழிகைக்கு முன் தொடங்கி முடித்து வைக்க வேண்டியது. பின் தோழன் மணமகனை அழைத்து வந்து மணவறையைப் பிரதிக்ஷிணஞ் செய்வித்து உட்காருவிக்கப் புரோகிதர் விநாயகபூசை முதலிய முடித்து உபநயனாதிகளைச் செய்விக்க வேண்டியது. இவையெல்லாம் தோழனா லறிந்த மணமகன் சமுசாரம் ஆன்மவிசாரத்திற்குத் தடையென்றெண்ணி உடனே பரதேசம் போகத் துணிவன். இதனையறிந்த மாமன் மாமியார் முதலியோர் தடுத்து அழைத்து வந்து அவனை மணவறையிலிருத்தி வெள்ளி மெட்டைக் காலில் இடுவர். இதை முடிந்தபின்பு பௌரோகிதர் இனி ஆரம்பிக்கும் திருமணம் விக்னமின்றி முடிவதற்காக மணப்பிள்ளைக்குக் கங்கணந்தரித்தல் வேண்டும். அவ்வகை பெண்ணிற்குந் தரிப்பித்தல் வேண்டும். பின் வேதியர் கூறைவஸ்திரத்தை ஆசீர்வதித்து மணமக னுக்கும் மணப்பெண்ணுக்கும் உடுத்துக் கொள்ளக் கொடுக்க வேண்டியது. விவாக லக்ன சமீபத்தில் வேதியர் தாலியைப் பூசித்து எல்லாரும் ஆசீர்வதிக்க முக்காலியின்மீது தாம்பாளத்தில் இருத்த வேண்டியது. பின் மாமன் மாமியார் இருவரும் மணமகனுக்கு முன்னும் சகலசனங்களுக்கு முன்னும் இன்ன கோத்ர சூத்ரமுள்ள இன்னவனுக்கு இன்ன கோத்ர சூத்ரமுள்ள நாங்கள் எங்கள் கன்னிகையைக் கொடுத்தோ மென்ன மணமகன் பெற்றுக் கொண்டதாகக் கூறித் தான் மணப் பெண்ணுக்கு முன்னிட்டிருக்கும் முக்காலியின் மீது தாம்பாளத்திருந்த மாங்கல்யத்தை யெடுத்துத் தான் முக்காலி மீதிருந்து தங்கை தமக்கை யார் மங்கல தீபங்காட்ட மங்கலவாத்திய முழங்கப் பந்துமித்ரர் வாழ்த்தப் புரோகிதர்கூறிய “நான் என்னுடைய தேகாக்ஷணார்த்தமும் சந்ததி விருத்தியின் பொருட்டும் உன்னை மணக்கிறேன்” என்னும் பொரு ளுள்ள மந்திரத்தைக்கூறி மங்கல நாண் தரித்து நாணைத் திரிமூர்த்தி மந்திரத்தால் மூன்று முடியிடல் வேண்டும். பின் வேதியர்கள் ஓமம் செய்ய அந்த ஓமத்தைப் பூசித்து அரசாணிக்காலை வலஞ்செய்து அம்மி மிதித்து ஓமாக்னியிற் பொரி சொரிந்து பூர்ணாகுதி செய்து மாலை முதலிய மாற்றி மீண்டும் அட்ட மங்கலங்களுடன் மணவறையில் தாபித்திருக்கும் தேவதைகளை வலஞ்செய்து அம்மியின் வரலாற்றை மணப்பெண்ணுக் குக்கூறி வலம் வந்து நல்ல சுப முகூர்த்தங் கழிவதற்கு முன் தமக்கென நியமித்த இடத்தை அடைதல் வேண்டும். இவ்வகை எத்தனை நாள் விருப்பமோ அத்தனை நாள் ஓமாதி களை முடித்துக் கங்கண விசர்ஜனஞ் செய்தபின் அந்த மணவறையில் தாபித்த தேவதை களை யதாஸ்தானம் எழுந்தருளச் செய்து சாந்தி ஓமம் செய்வித்து அரசாணிக் காலை அசைத்துவிடல் வேண்டும். இந்த மணச்சடங்குகள் அவ்வவர் மதக்கொள்கைக்கும் தேசத்திற்கு மேற்றபடியு மிருக்கும்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார்

இவர் சென்னையிலிருந்த வேளாண்பிரபு. இராமாயண கீர்த்தனை பாடிய அருணாசல கவிக்கு உபகரித்தவர்.

மணலூரம்

(மணிபுரம்) பாண்டிய நாட்டிலுள்ள பட்டணம், அரசன் சித்திரவாகனன். தீர்த்தயாத்திரையின் பொருட்டு சென்ற அர்ச்சுனன், பப்புருவாகனனுடன் யுத்தம் செய்தான். (பா. ஆதி.)

மணலூர்

பாண்டியர்களின் பழைய இராசதானி; மணற்புரமெனவும் வழங்கும்; மதுரைக்குக் கிழக்கேயுள்ளது; பாரதசம்பு முதலியவற்றிற் கூறப்பெற்றதும் இதுவே. (திருவிளை.)

மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தனார்

செல்வத்தாசிரியரிடம் பொருளதிகாரங் கேட்ட தமிழ்ப்புலவருள் ஒருவர்.

மணலூர்பதி

1. பாண்டி நாட்டில் ஒருபட்டினம், இதற்கு மணலூர்புரம் எனவும் பெயர் சித்திரவாகன் பட்டணம் 2. சோணாட்டுச் சிற்றூர்,

மணலூர்பதிபெண்

அருச்சுநன் தேவி, குமரன் பப்புருவாகன்.

மணவாளதாசர்

பிள்ளைப் பெருமாளையங்காருக்கு ஒரு பெயர். பிள்ளைப்பெருமாளையங்கார் காண்க.

மணவாளநாராயணன்

ஓமலூர் வேங்கை பூபன் குமரன்.

மணவாளமாமுநிகள்

இவர் கலி (4472) இல் சாதாரண ஐப்பசி மீ சுக்லபக்ஷ சதுர்த்தசி வியாழக்கிழமை மூல நக்ஷத்திரத்தில் பாண்டி நாட்டில் சிக்கில் கிடாரமென்னுங் கிராமத்தில் திருமான்மனத்த அண்ணர் என்பவருக்குத்திருக் குமாரராய் அவதரித்து அழகிய மணவாளர் என்கிற பிள்ளைத் திருநாமம் அடைந்து திருவாய்மொழிப் பிள்ளையிடம் சமாச் ரயணம் பெற்று அரசகாரியகாரராய் இருந்து அரசன் திரவியங்களை அறவழியில் செலவிட்டனர். அரசன் பொருள்களைக் கேட்கையில் பயந்து சந்யாசித்துக் கொண்டு மணவாள மாமுநிகள் அழகிய மணவாள ஜீயரென்கிற பெயர்பெற்று ஆசாரியர் சொற்படி மடங்கள் கட்டி முப்பத் தாறாயிரப் படியைப் பிரவர்ப்பித்து வந்தனர். இவர் திருமேனியில் சோகை கண்டு தபிக்க உடையவரும் தேசிகரும், சுவப்பனத்தில் எழுந்தருளி நீர் பாகவத சம்பிரதாய பேதஞ் செய்வித்ததால் இவ்வகை நோய்கண்டது. இனி நீர் கிடாம்பி நயினாரை ஆச்ரயிக்கி இந்நோய் நீங்குமென மறைய இவர் விழித்து அவ்வகை புரிந்து பெரியஜீயர் தூப புற்குலமுடையார் தாசர், யதீந்திர பிரவணர் என நயினாரால் பெயர டைந்து திருஅரங்கத்தில் (73) திருநக்ஷத்திரம் எழுந்ருளியிருந்து முப்பத் தாறாயிரப் பெருக்கெனப் பெயரடைந்து திருவரங்கரைச் சேவித்து வருகையில் ஒருநாள் ஆசௌசத்தால் திருக்கோயிலில் தரிசனம் தடை யாக அது காரணமாக ஆச்ரம ஸ்வீகாரம் சடகோப ஜீயர் சந்நதியில் செய்துகொண்டு தாமும் சடகோப ஜீயரென்றும், பெரியஜீயரென்றும் பெயரடைந்து கிருஷ்ணா நந்தனை வேடலப்பையால் வென்று இருந்த னரென வடகலையார் கூறுப. இவர் உடையவர் விஷயத்தில் அன்புள்ளவராய் யதிராஜவிம்சதி செய்தபடியால் இவர்க்கு யதீந்திரப்பிரணவர் என்று பெயர். இவருக்குத் திருமாலை தந்த பெருமாள் முப்பத்தாறாயிரப் பெருக்கு என்று பெயரிட்டனர். இவர் பிரமதந்திர ஜீயரிடமும், அழகிய மணவாள நயினாரிடமும் முறையே பாஷ்யமும் ரஹஸ்யங்களையும் கேட்டனர். பாண்டிதேசத்தான் ஒருவனுக்கு அருள் செய்து சடகோபதாசன் என்று பெயரிட்டுக் கந்தாடை முதலிய கோத்ரவகை யேற்படுத்தினவர். இவரைப் பெருமாள் உத்தமநம்பிக்குத் திருவனந்தாழ்வானாகக் காட்டினார். இவர் பெருமாள் திருமுன்னர் ஈடு 39,000 முடிக்கையில் கந்தாடை அண்ணன், வானமாமலை ஜீயர், பரவஸ்து பட்டர், பிரான் ஜீயரும் தம்முட்கலந்து தனியன் கூறவிருக்கையில் ஒரு சிறுபிள்ளை இவர்கள் செய்திருந்த சுலோக மாகிய “ஸ்ரீசைவே சதயா” என்கிறதைக்கூறி மறைந்தது. எறும்பியில் அப்பாவுக்கு அழகியமண வாளதாசரென்று பெயரிட்டுத் திருவேங்கடம்வந்து இளங்கேள்வியெம் பெருமானார் ஜீயரை நியமித்துத் திருவரங்கம் வந்து அழகிய வரதரான இராமாநுஜஜியரைப் பெருமாள் காரியத்தைச் சீர்திருத்த வானமாமலைக்கு அனுப்பினார். அது முதலவர்க்கு வானமாமலை ஜீயர் என்று பெயருண்டாயிற்று. தமக்கு ஆண்டாள் பிரசாதம் ஸ்ரீவில்லிபுத் தூரிலிருந்து கொண்டு வந்து தந்த கோவிந்தராசப்பருக்குப் பட்டர் பிரான் தாசர் என்று பெயர் தந்தவர். மதுரை மஹாபலிவாணனுக்கு உபதே சித்து முத்தரசு எனும் கிராமம் பெற்று அதற்கு அழகிய மணவாள புரம் என்று பெயரிட்டவர். இவர்க்கு வரவாமுனி யெனவும் பெயர். இவர் திருநகரியி லிருந்தபோது இவர் இருந்த மடத்தைச் சிலர் கொளுத்தி விட அதினின்று பாம்புருக் கொண்டு வெளிவந்தனர். இவர் ஒரு நாள் யோகத்திருந்தபோது சடகோபக் கொற்றி இவரை ஆதிசேஷ உருவத்துடன் காண இவர் அவ்வுருவத்தை யாருக்கும் தெரிவிக்காதிருக்கக் கட்டளையிட்டுத் திருப்புல் லாணிக்குப் போய்வரு மார்க்கத்தில் தமக்கு நிழல் செய்த புளியமரத்திற்குப் பரமபதமளித்துச் சில நாளிருந்து பரமபதத்தில் ஆர்த்தி பிறந்து ஆர்த்திப் பிரபந்தம் செய்து தம் முதலிகளாகிய பிள்ளான், நஞ்ஜீயர்வேண்டுகோளின்படி தம்மிடமிருந்த சொம்பைக் கொடுத்து அர்ச்சாவிக்ரகம் பிரசாதித்துத் திரு நாட்டிற் கெழுந்தருளினர். இவரை ஆச்ரையித்த முதலிகள் அழகிய வரதர் கோன் முதலியாரண்ணர், பிரதிவாதி பயங்கரம் அண்ணன், எறும்பி அப்பா, உத்தமநம்பி, அப்பிள்ளை, அப்பிள்ளான் தோழப்பர் முதலியவர். இவர் குமாரர் இராமாநுச சீயர். இது தென்கலை, வடகலை சாம்பிரதாய நூல்களில் இருந்து கலந்தொழுதப் பட்டது.

மணி

1. (9) நவமணியைக் காண்கி, 2. இது நாதப் பிரம சுவருபக் தெரி விப்பது. இது நல்ல ஓசையுடைய தாயிருத்தல் வேண்டும். இதன் நாதம் எவ்வளவு தூரம் கேட்கப்படுகிறதோ அவ்வளவில் உள்ளவர் பாவத் தினின்று நீங்குகின்றனர். பூத பிசாசங்களும் நாதவொலியால் நீங்கும். (சுப்பிரபேதம்) 3. வெண்கலத்தால் கால முதலிய அறிவிக்கச் செய்யப் பட்டு நாவுடன்கூடிய குவிந்தவுரு. இது, பெருமணி, சிறுமணி, கைம் மணி, எறிமணி, ஆராய்ச்சி மணி முதலிய 4. ஒரு ரிஷி. (பா. சுபா.)

மணிகர்ணிகை

காசியில் கங்கையின் தீர்த கட்டம். சிவமூர்த்தி தமது வாமபாகத்தில் விஷ்ணு மூர்த்தியைப் படைத்துத் திருஉருக்காக்க விஷ்ணு மூர்த்தி தமது கரத்திலிருந்த சக்கரத்தால் தடாகமொன்று உண்டாக்கி அவ்விடந் தவஞ்செய்து வந்தனர். இவர் செய்த தவத்திற்குக் காளிப்படைந்த சிவமூர்த்தி தரிசனம் தந்து சிரத்தினை யசைக்கச் செவியில் இருந்த மணியொன்று இந்தத் தடாகத்தில் விழுந்தது, அதனால் இத்தீர்த்தத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று.

மணிகாரன்

வைசியப் பெண்ணை வேறு வைசியன் கரவிற்கூடப் பிறந்தனன்.

மணிகூடம்

இந்திரனது விளையாட்டுச் செய்குன்று, இதை ஓர்கால் நரகாசுரன் கவர்ந்தனன். இதில் இவன் மனைவி கசேரு சிறைவைக்கப் பட்டனள்.

மணிக்கிரீவன்

குபேரபுத்திரனாகிய இயக்கன், இவன் மதுவுண்ட மயக்கத்தால் ஸ்திரீகளுடன் சலக்கிரீடை செய்துகொண்டிருக்கும் சமயத்தில் நாரதர் வர அவரைக்கண்டு மரியாதை செய்யாததால் மருத மரமாகச் சபிக்கப்பட்டு நந்தகோபன் வீட்டில் மரமாகிக் கண்ணனால் சாபம் நீங்கப்பெற்றவன்.

மணிசூடன்

சந்திரவதியைக் காண்க.

மணிதரன்

ஒரு யக்ஷன். தேவாரண்யவாசி,

மணித்வீபம்

1. புவனேச்வரியாகிய தேவி வீற்றிருக்கும் பதம். இது, எல்லா வுலகங்களுக்குமேலாக எல்லா அலங்காரமும் பெற்று எட்டுத் திக்குகளிலும் திக்குப்பாலகர் தத்தம் கணங்களுடன் தங்கள் காரியங் களைச் செய்துவர, வருஷ தேவதைகள், ருது தேவதைகள் தங்கள் காரியங்களைச் செய்துவர பல அண்டநாயகிகளாகிய, பிங்களாக்ஷி, விசாலாக்ஷி, சமர்த்தி, விர்த்தி, சிறத்தா, சுவாகா, சுவாதா, அபிக்யா, மாயா, சம்ஞா, வசுந்தரா, திரிலோகதாதரி, சாவித்ரி, காயத்ரி, திரித சேச்வரி, அரூபா, பகுரூபா, ஸ்கந்தமாதா, அச்சுதபிரியா, விமலா, அருணி, ஆருணி, பிருகிருதி, விக்ருதியருஷ்டி, ஸ்திதி, சம்ஹ்ருதி, சந்தியா, மாதா, சதி, ஹம்சி, மர்த்திகா, வசரிகா, வரா, தேவமாதா, பகவதி, தேவகீ, கமலாசனா,த்ரிமுகி, சப்தமுகீ, சுராசுரவிமர்த்தனீ, லம்போஷ்டி, ஊர்த்தவகேசி, பகுசீ, ருஷா, விருகோதரீ, பதரேகா, சசிரேகா, ககனவேகா, பவனவேகா, மதனாதுரா, அனங்கமதனா, அனங்கமேகலா, அனங்ககுசுமா, விச்வரூபா, சுராதிகா, க்ஷயங்கரி, அக்ஷோப்யா, சத்யவாதினீ, பகுரூபா, சுசிவருதா, உதரவாசிசீ, என்பவர்களும், பாவநாசஞ் செய்யும், வித்யாஹரீ, புஷ்டி, பிரஞ்ஞா, சிரிவாலி, குரு, ருத்ரா, வீர்யா, பிரபா, ஆனந்தா, போஷணி புத்திதா, சுபா, காளராத்ரி, மஹாராதர், பத்திரகாளி, கபர்த்தினி, விகிர்தீ, தண்டி, முண்டினி, இந்துகண்டா, சிகண்டி, நிசும்ப, சும்பதநீ, மஹிஷாசுர மர்த்தனி, இந்திராணி, ருத்ராணி, சங்கரார்த்தசரீரிணி, நாரி, நாராயணி, திரிசூலினி, பாலம், அம்பிகா, ஹ்லாதிநீ முதலியவர்களும், பிராஹ்மீ, மாஹேச்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹீ, இந்திராணி, சாமுண்டி என்கிற சப்தமாதர்களும், கராளீ, விகராளீஉமா, சரஸ்வதீ, துர்க்கா, உஷா, லஸ்மீ, சுருதி, ஸ்மிருதி,த்ருதி, சிரத்தா, மேதா, மதி, காந்தி, ஆர்யா, என்னும் (16) சத்திகளும், அநங்ககுசுமாதுரா, அநங்கமதனா, அநங்கம் தனதுரா, புவனபாலா, ககன வேகா, பாசாங்குசவரா, பீதிதார, அருண விக்ரஹா, எனும் (8) மந்திரிணிகளும் புடைசூழ்ந்து குறிப்பறிந்து ஏவல் செய்ய பலவகை அலங்காரங்கள் நிறைந்த பொன் மயமான பிராகாரங்களின் மத்தியில் தம்மையொத்த ஹ்ருல்லேகா, ககனா, ரக்தா, காரளிகா, மஹோச்சூஷ்மா முதலிய பஞ்சசத்திகள் சேவிக்க மந்திரங்கள், மஹாவித்தைகள், வேதங்கள் துதிக்க சிந்தாமணி கிருகத்தில் இரத்ன கசித சிங்காதனத்தில் புவனேச்வரி எழுந்தருளியிருப்பள். (தேவி~பா). 2. பாற்கடலில் உள்ள ஒரு தீவு.

மணிநாகன்

இவன் ஆதிசேஷன் புத்ரன். சிவ பூசையால் கருடபயம் நீங்கினன். (பிரம~புராணம்).

மணிநாகம்

ஒரு தீர்த்தம்.

மணிபத்திரன்

ஒரு காந்தருவன். சிந்து முநிவர் சாபத்தால் மீனாயிருந்து மருதப்பிரான் திருவடியால் உதையுண்டு சாபம் நீங்கினன்.

மணிபல்லவம்

காவிரிப்பூம் பட்டினத்திற்குத் தெற்கில் (30) யோசனையில் உள்ள ஒரு தீவு. இதைத் தரிசித்தோர் இதில் உள்ள புத்த பீடிகையாலும் பொய்கையாலும் தமது பழம்பிறப்பு அறிவர். (மணிமே)

மணிபுரம்

பப்புருவாகன் இராஜதானி, கலிங்க தேசத்தில் உள்ளது.

மணிபுஷ்பம்

சகதேவன் சங்கம்.

மணிப்பிரவாளம்

வடமொழிவிரவி வருவது.

மணிமதி

வாதாபி வில்வலன் வசித்த நகரம்.

மணிமந்தன்

இவன் குபேரனுக்குக் காவலன். இவன் ஒருமுறை குபேரனுடன் ஆகாய மார்க்கமாய்ப் போகையில் உமிய அது அகத்தியர் மீது விழுந்தது, அதனால் அகத்தியர் மனிதனால் இறக்க இவனைச் சபித்தனர். இச்சாபத்தால் இவன் அளகைக்குப் புஷ்பர் கொண்டுவரச் சென்ற பாண்டு புத்திரனாகிய வீமனைத் தடுத்து அவனால் இறந்தனன்,

மணிமான்

1. அரண்ய தேசத்தரசன். வீமனுடன் யுத்தஞ் செய்தவன். 2. சிவகிங்கரன். தக்ஷயாகத்தில் பிருகு ருஷியைச் சிக்ஷித்தவன். 3. துரவபதி சுயம்வரத்திற்கு வந்த ஒரு அரசன். (பா. ஆதி).

மணிமாலன்

அளகையில் படைத்தலைவன். பாரிசாதத்திற்கு வந்த வீமனுடன் சண்டைதொடுத்துப் பாசுபதத்தால் மாய்ந்தவன். மணிமந்தனுக்கு வேறாய் இருக்கலாம்.

மணிமேகலா தெய்வம்

இந்திரனால் மனிதரை வருத்தும் அரக்கரைத் தடுக்க நிருமித்த தெய்வம், கோவலன் தன், குலத்தோன் ஒருவனை இத்தெய்வம் கடலிற் காத்த நன்றி பற்றி இத்தெய்வத்தின் பெயரைத் தன் புதல்விக்கு இட்டனன். இத் தெய்வம் மணிமேகலையை உவவனத்திருந்து மணிபல்லவங் கொண்டு சென்று அவளது பழம் பிறப்புணர்த்தி மூன்று மந்திரங்களை உபதேசித்து அவளது முன்னைய நாயகனையுமறிவித்தது. (மணிமேகலை)

மணிமேகலை

1. மாதவியின் மகள் மணிமேகலையின் துறவு முதலிய வற்றைக் கூறும் நூல். இது சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்டது. (மணிமேகலை) 2. மாதவியின் குமரி, தந்தை கோவலன். காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரன் விழாநடை பெற்றது. அவ்விழாவிற்கு மாதவியும் மணிமேகலையும் வந்திலர், அதனையறிந்த சித்திராபதி வயந்த மாலையை யழைத்து மாதவிபாற்சென்று வராததற்குக் காரணம் கேட்டுவாவென்ன அவள் சென்று அவளை வினவ, மணிமேகலை தவவழியிற் செல்லுதலின் நானும் அறவணவடிகளை வணங்கித் தவவழியிற் புகுந்தேன் என்றனள். இது நிற்க மணிமேகலை மலர்பறிக்கச் சுதமதியுடன் உய்யானமடைந்தனள். இதனை எட்டி குமரனால் கேள்வியுற்ற உதய குமாரன் அவளைத் தன் வசமாக்க வேண்டி அவ்வனமடைந்தான். இவனடைந்த செய்தியறிந்த சுதமதி மணிமேகலையைப் பளிக்கறையிற் புகுத்தித் தான் தனியே நின்று உதய குமாரனுக்கு உடம்பினிழிவைத் தெரிவிக்கையில் உதய குமாரன் மணிமே கலையைப் பளிக்கறையிற்கண்டான். கண்டு சுதமதியை அவளெத்திறத்தினள் எனச் சதமதி மணிமேகலைத் தவவொழுக்கத்தினள் அவளை நீ அணுகற் பாலையல்லையெனக் கேட்டு அவளைச் சித்திராபதியால் அணைவேன் எனும் எண்ணத்தால் சோலை விட்டு நீங்கினான். பின் மணிமேகலை பளிக்கறை விட்டு வெளிவந்து என்மனம் அவன் பின்னே சென்றது. காரணம் உணரேன் என்று சுதமதியிடம் கூறினள். இவ்வகைக்கூறக்கேட்ட சுதமதி சித்திரை செய் தலும் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிச் சென்று மணிப் பல்லவத்தீவிற் கொண்டு போய்ச் சேர்த்தது. பின் மணிமேகலை துயிலு ணர்ந்து புது இடமாக இருத்தலையும் தன் தோழியைக் காணாததினாலும் வருந்தித் தன் தந்தையை நினைந்து வருந்துகையில் புத்தபீடிகை தோன்றியது. அப்புத்தபீடிகையால் பழம் பிறப்புணர்ந்து மணிமேகலா தெய்வத்தால் முற்பிறப்பில் தனக்கு நாயகன் இராகுலன் அவனே உதய குமாரனாயிப் பிறப்பில் உன்னை விரும்பினானென்று கூறி அவளுக்கு வேற்றுருவைக் கொடுப்பதும் ஆகாயவழி சஞ்சரிப்பதும் பசியை நீக்குகிறது மாகிய மந்திரங்களை உபதேசித்துச் சென்றது. அப்பால் மணிமேகலை தீவதில கையைக் கண்டு அவள் சொல்லால் கோமுகியெனும் பொய்கையை வலங் கொண்டு அக்ஷயபாத்திரம் பெற்று ஆகாயகமன மந்திரத்தால் அவ்விடம் விட்டு நீங்கி மாதவி சுதம்திகளையடைந்து அவர்களின் முற்பிறப்புணர்த்தி அறவணவடிகளை வணங்கச் சென்றனள். பின் மணிமேகலை அறவண வடிகளால் ஆபுத்திரன் செய்தியறிந்து பாத்திரங்கொண்டு பிச்சைக்குப் புறப்பட்டு ஆதிரையின் வீடடைந்து முதலில் பிச்சைகொண்டு காயசண்டிகை யின் பசி தீர்த்து உலக அறவியையடைந்து பணிந்து அங்குள்ளோர்பலர்க்கும் உணவளித்து உதயகுமாரன்வர அவன் பொருட்டுக் காயசண்டிகையினுருக் கொண்டுவந்து சிறைக்கோட்டஞ் சென்று யாவருக்கு முணவளித்தனள். இதனை அரசனறிந்து அப்பாத்திரத்தின் மகிமைகேட்டு அவளைத் தான் செய்ய வேண்டிய தென்ன வென்ன அவள் இச்சிறுக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்குகவென்ன அரசன் அவ்வாறு செய்விக்கக் காயசண்டிகையின் கணவனாகிய காஞ்சனன் எனும் வித்யாதரன் காயசண்டிகையைத் தேடி வருவோன் காயசண்டிகையின் வேடங்கொண்ட மணிமேகலையைக் கண்டு பழைய நட்பினைப் பாராட்டும் பல வினியமொழிகளைக் கூற மணிமேகலை அவற்றை மதியாது உதய குமாரனுக்கு இளமை, யாக்கை நிலையாமை, அறிவுறுத்துகையில் காஞ்சகன் இவள் உதயகுமாரனைக் காமுற்று நம்மை அவமதித்தனள் என்று ஒளித்திருந்து மணிமேகலையின் உண்மை அறிய நள்ளி ரவில் வந்த உதய குமாரனை வெட்டிக் கந்திற்பாவை யிவள் உன் மனைவி யல்லள் மணிமேகலை கொண்ட வேற்றுரு வென்னக்கேட்டுத் தன்னகரடைந் தனன். இதனை முனிவராலறிந்த அரசன் தன் குமரனுக்குத் தகனக்கிரியைகள் நடப்பித்து மணிமேகலையைச் சிறையிட்டனன். இதனையறிந்த இராஜமா தேவி இவளைச் சிறை நீக்கி வஞ்சித்து வருத்த எண்ணி அரண்மனைக்கு வருவித்து இவளைப் பிச்சியாக்க எண்ணிப் பலவிஷ மருந்துகளை யுண்பிக்க இவள் சலியாதிருக்கக்கண்டு ஒரு இளைஞனை இவளிடம் அனுப்பி மணி மேகலை தன்னை விரும்பினள் என்று கூறும்படி சொல்ல அவன் செல்லு கையில் இராஜமாதேவியின் வஞ்சனையால் வந்தவனென்றறிந்து ஆணுருக் கொண்டனள். இதை இளைஞன் கண்டு ஓடிப் போயினன். பின் மணி மேகலையை வாயிலில்லாத அறையில் அடைப்ப இவள் பசியிலா மந்திரமறிந்த பலத்தால் குற்றமில்லாதிருந்தாள். இதனை யறிந்த இராஜமா தேவி குற்றம் பொறுக்கவேண்ட அவளுக்கு உதய குமாரனது முற்பிறப்புணர்த்தி அவளுக்கும் தருமோபதேசம் செய்தனள். மணிமேகலை இராஜமாதேவியிட மிருத்தலை ஒழிந்து அறவணவடிகளால் அவ்விடம் நீங்கிப் புண்ணியராசன் சோலையை யடைந்து ஆபுத்திரனுக்கு மணிப்பல்லவம் தரிசிப்பித்து அவன் தன் பழைய என்பைக் கடற்கறையிற் கண்டு வருந்த அவனைத் தேற்றி வஞ்சிநகர் சென்று கண்ணகியைத் தெரிசித்து அவளது முன் னைய வரலாறு அறிந்து முனிவன் வேடங் கொண்டு பலசமயக் கொள்கை களை யறிந்து காஞ்சிநகர் சென்று பலவறங்களைச் செய்து அறவணவடிகளை வணங்கி அவர் கூறிய தருமோபதேசம் பெற்றுக் காஞ்சி நகரத்திலேயே நோற்றுக்கொண்டு இருந்தாள்.

மணிவண்ணன்

நீலமணி நிறமுள்ள திருமால், (சிலப்பதிகாரம்)

மண்

1 இது, கந்த தன்மாத்திரையிற் றோன்றியது. இது, சத்த, பரிச, ரஸ, ரூப, கந்தமெனும் ஐந்து குணமுடையது. இது உரத்துத்தரித்தல் எனும் தொழிலைப் பெற்றது. இதிலடங்கிய திடபதார்த்தங்களை (14) வகை யென்பர் நூதன ஆராய்ச்சியர். அவை, ஆக்சிஜன், எனும் பிராணவாயு, ஹைட்ரஜன் எனும் ஜலவாயு, உப்பிலுள்ளக்ளோரின் எனும் வாயுவும், நைட்ரோஜன் எனும் வெடியுப்பு வாயுவும், ஸல்பர் எனும் கந்தகமும், பாஸ்பரஸ் எனும் பிரகாசிதமும், பொடாவியம் எனும் ஜலசம்பந்தப் பொருளும், மக்னிஸியம் என்பதும், சோடியம் எனும் உப்பின் மூலப்பொருளும், மண்ணினம்சமான கார்பன் எனும் கரியும், கால்ஷியம் எனும் சுண்ணாம்பின் மூலப்பொருளும், இரும்பும், மணலின் மூலப் பொருளாகிய சிலிகன் என்பதும், மாங்கனீஷ் எனும் ஒருவகை லோகசத்தும் ஆம். இவை அடங்கிய பொருளே மண் என்ப தாம். 2. இது, பல அணுக்கள் சேர்ந்த பூதப்பொருள். இது, உருவம், நிறம், மணம்; உரிசை, குணம் முதலியவற்றால் பலவகை வேறுபாட்டையடை கிறது. இதில் பாஷாணம், ஸம், கந்தகம் முதலிய வீரியப் பொருள்களும், இந்துப்பு, கல்லுப்பு, கரியுப்பு, முதலிய உப்புக்களும், வெங்காரம், படிகாரம் முதலிய ஒருவகை திரவியங்களும், நிலக்கரி, சுண்ணாம்பு, பிச்சுக்கட்டி முதலியவைகளும், பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், தகரம், அலுமீனி யம், முதலிய லோகங்களும், கருங்கல், வெண்கல், சலவைக்கல், மாக்கல், நார்க்கல், சந்தனக்கல், பலகைக்கல், சூர்யகாந்தக்கல், இரத்தினங்கள், வைரம் முதலிய கற்களும், தோன்றுகின்றன. இதில் ரேடியம் எனும் உயர்ந்த பொருளையும் எடுக்கின்றனர். இவையன்றிச் சிலதேசத்தவர்கள், மண்ணை ஆகாரமாகவும் கொள்கின்றனர். தென்னிந்தியாவிற் சில ஏழைகள் பொறுக்கு எனும் மண்ணையும், மலையாள வயநாட்டில் பிட்டுமண் எனும் மண்ணையும், ஜெயபூரிலுள்ள பிக்கானீர்மார்வாரி ஏழைகள், ஒருவித கல்லின் மாவையும், ஜப்பான் தேசத்து ஐநாஸ் சாதியர் டீஸ்டானே பள்ளத்தாக்கின் மண்ணையும், ஸ்வீடன் தேசத்தவரும் பின்லண்ட் தேசத்தவரும் ரொட்டி மண் என்கிற மண்ணையும், உண்கின்றனர். தென் அமெரிக்கா பிரேசில் நாட்டவரும், வடசமுத்திர தீவினரும், ஆபிரிக்கா கண்டத்து நீக்ரோவியரிற் சிலரும் மண்ணை ஆகாரமாகக் கொள்கின்றனர்.

மண்டனமிசிரர்

பிரமனவதாரம். பட்ட பாதாசாரியர் மாணாக்கர். சங்காபாஷ்யத்திற்கு விவரணஞ் செய்தவர். இவர்க்குச் சுரேச்வராசாரியர் விஸ்வரூபர் எனவும் பெயர்.

மண்டபன்

கூசுமாண்ட முனிவர் புதல்வன். இவன் பஞ்சமகா பாதகங்கள் இயற்றியதால் தந்தை இவனை அகற்ற இவன் காசியில் பஞ்சக்குரோசப் பிரதக்ஷணஞ் செய்வாருடன் கூடிப் பிரதக்ஷணஞ்செய்து பாபம் நீங்கிச் சுத்தனாய்ச் சுதேவர்களால் சுத்தனென்று கூறப்பட்டுத் தந்தையைச் சேர்ந்து களித்திருந்தவன்,

மண்டபமுடைய மகருஷி கோத்ரன்

வைசியகுலத் தலைவன். முடக்கு மாணிக்கங் கொடுத்துக் கீர்த்தி பெற்றவன்.

மண்டல புருடர்

தொண்டைமண்டலத்துக் குன்றையூரில் சைநசமயத்து உதித் தவர். இவர் திவாகரம், பிங்கலந்தை முதலிய நிகண்டுகளைச் சுருக்கி விருத்தப்பாவாக ஆசாரியராகிய குணபத்திரர் கட்டளையால் செய்தவர். இவர் இருந்தது பெரு மண்டூர் எனும் வீரையூர் என்றுக் கூறுவர். இவர் காலம் விஜய நகராண்ட கிருஷ்ண தேவராயன் காலம் என்பர். சூடாமணி உள்ளமுடையான் என்னும் சோதிட நூல் செய்தவரும் இவரென்பர்.

மண்டலம்

1. (7) வாயு மண்டலம், வருண மண்டலம், சந்திர மண்டலம், சூரிய மண்டலம், நக்ஷதா மண்டலம், அக்னி மண்டலம், திரிசங்கு மண்டலம். (3) சூரிய சந்திர அக்னி மண்டலங்கள், 2. இவை யாகாதிகாரியங்களில் போடு வனவாம். லதாவிங்கமண்டலம், நவநாப மண்டலம், அனந்தவிஜயமண்டலம், பத்ம திரமண்டலம், தராகாரமண்டலம், கௌரி லதாகாரலிங்கமண்டலம், சுபத்திரமண்டலம், உமாகாந்தமண்டலம், ஸ்வஸ்திகமண்டலம், டங்கம் என்னும் அர்த்தசந்திரமண்டலம்.

மண்டலம் ஐந்து

பூமண்டலம், ஜலமண்டலம், அக்னிமண்டலம், வாயுமண்டம், ஆகாசமண்டலம் இவற்றிற்கு முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசத்திஸ்தானங்களாம். (திருமந்).

மண்டலிகராஜன்

இந்துஸ்தானத்தி லிருந்த அரசன், இவன் தேவி சுலக்ஷணி பாகவத பக்தியும் திருமாலிடத்தன்புக் கொண்டு ஒழுகிவரு நாட்களுள் நாயகன் பகவத்பக்தி யிலாதது கண்டு வருந்தி அவரிடங் கூறுகையில் அரசன் நானலையும் புவனுடையேன் அப்பக்தி எனக்குறாதென விருந்தனர். ஒருநாள் நித்திரையில் ராமநாமங்கூற மனைவியார் மிகு களிப்புடன் அன்று பாக வதர்க்கு அன்னமிட்டு விழவு செய்தனர். இதைக்கண்ட அரசன் என்னென இன்று துயிலிடை தங்கள் வாயில் ராமநாமம் வந்த நலத்தால் இது இயற்றினே னென அரசன் இராமன் என் வாயிடைப் புக்கனனோவென வெண்ணி உயிர் நீங்க மனைவியாரும் கணவனுடன் சென்று பரமபதமடைந்தனர்.

மண்டலிசர்ப்பம்

இது உடல் முழுதும் மண்டலமான புள்ளிகளைப் பெற்று மந்த நடை பெற்றிருக்கும்.

மண்டியூர்

குதிரைகளின் புழுதிமண்டிய இடமாம். (திரு.)

மண்டிலம்

வில்வித்தை காண்க,

மண்டுக மகருஷி

1, பாண்டிநாட்டு வில்லிபுத்தூரில் திருமால் அருள் பெற்றவர். 2. நின்மலரைக் காண்க.

மண்டுககன்னிகை

சுசோபனன் என்று பெயருள்ள மண்டூகராஜனது புத்திரி, நாயகன் இட்சவாகுவம்சத்தவனாகிய பரீட்சித்து என்னும் பெயருடையவர். புத்திரர்கள் சலன் தலன், பலன். (பா. வன.)

மண்டுகராஜன்

ஆயு என்னும் பெயருடையவன். இவனது புத்திரி சுசோபனை. (பா. வன.)

மண்டோதரி

மயன் குமரி, இராவணன் தேவி. இந்திரசித்தின் தாய். இராவணன் இறந்த துக்கத்தால் அவன் உடலின் மேல் உயிர்விட்டவள், இவளுக்கு மந்தோதரி யெனவும் பெயர்,

மண்ணுடையார்

ஒருவகைக் குலாலர். வச்சிராசுரனைக் கொன்றவர் என்பர். தாய் கருணிதேவி,

மண்ணுமங்கலம்

1. பணியாதாராணாகிய கன்னியுடன் வதுவை பொருந்திய மிகுதியைச் சொல்லியது. (பு வெ.) 2. எண்ணுதற்கரிய மிக்க புகழினை அரசன் பொருந்தி மஞ்சனம் பண்ணும் மங்கலத்தினது மிகுதியைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

மண்ணுளிப்பாம்பு

தம்பாக்கு, வெள்ளி, ரத்தநிறங்களைப் பெற்று நீண்ட பயற் றங்காயளவிருக்கும். இதனைச் சிதுபாம் பென்பர்.

மண்முகன்

தவளமலையில் இருந்து தவஞ்செய்த ஒரு முனிவன். இவனிடம் இருந்த பசுவின் வயிற்றில் புண்ணியராசன் பிறந்தான். (மணிமேகலை)

மதங்கன்

1. ஒரு பார்ப்பினியிடம் சண்டாளனுக்குப் பிறந்தவன். இவன் பிராமணத்துவத்தை விரும்பி அநேகநாள் தபஞ் செய்து அதை அடையாமை யால் இந்திரனால் சண்டதேவன் எனப்பட்டுக் கிராமத்தாரால் பூசிக்க வரம் பெற்றவன். 2. மதங்ககுலத்திற் பிறந்தவன். இவன் தவத்தால் சத்தியைப் பெண்ணாகப் பெற்று மாதங்கியெனப் பெயரிட்டு வளர்த்தவன். 3. துந்துபிக்கு ஒரு பெயர். 4. பிரமரிஷி. (பா. அநு.)

மதங்கபுரம்

சயமுகாசுரன் பட்டணம்,

மதங்கருஷி

துந்துபி உடலைத் தூக்கித் தன் மலையில் எறிந்த வாலியை அம்மலையை மிதிக்கின் தலைவெடிக்கச் சாபமளித்தவர். பிரியம்பதன் என்கிற காந்தருவனை யானையாகச் சபித்தவர். சூரியனிடமிருந்து இந்திரத்த நுப்பெற்றுப் பரசுராமனுக்குக் கொடுத்தவர்.

மதங்காச்சிரமம்

இராமலக்ஷமணர் கவந்தனைக் கொன்ற பிறகு தங்கிய இடம்,

மதசந்தன்

பிரகஸ்பதி சந்ததியானாகிய ஒரு இருடி.

மதநன்

1. கட்டியங்காரனுக்கு மைத்துநன். 2. துர்த்தமனைக் காண்க.

மதநாசுரன்

தேவாசுரயுத்தத்தில் விஷ்ணு மூர்த்தியால் கொல்லப்பட்ட அசுரன்,

மதநிகை

சூடாலையைக் காண்க.

மதனசிகாமணி

பரத்தையர் மாலையியற்றிய புலவன். இவன் பரத்தை யருடன் கூடிக் கண்ட சுகத்தை வெறுத்து இந்நூல் செய்தனன் போலும்,

மதனத்துவாதசி

சித்திரை மாசம் சுக்கிலப்பகம் துவாதசியில் ஒரு மட்பாத்திரத்தில் பழம், கரும்பு, கற்கண்டாதிகளை நிரப்பி, பலவித நிவேதனங்கள் செய்து, பின்பு, வேறொரு கற்பாத்திரத்தில் வெல்லம் நிரைத்து, மட்பாத்திரத்தின் மேலிட்டு, அதிலுள்ள வெல்லத்தின் நடுவில் வாழையிலைபரப்பி, மதன விக்ரகத்தை சதிசகிமாய் வைத்துப் பூசித்தல் வேண்டும். அதுவன்றி, மதனகேசவர்களைப் பலவிதமாகச் செய்வித்து, அக்கேசவிக்ரகத்தை மன்மதனாமத்தால் பூசிக்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்பார் துவாதசியில் ஆகாரமின்றி இருந்து திரயோதசியில் அரிபூசை செய்ய வேண்டும். இவ்வகை 13 சுக்ல துவாதசி விரதஞ் செய்து கடைசி துவாதசியில் இருததேனு தானஞ்செய்து தன் பத்தினி யோடு கூடிய பிராமணனுக்கு மன்மத பதுமையையும், வெள்ளைப் பசுவையும் தானஞ்செய்து, வெள்ளை எள், பசு நெய், பாவன்னம் இவற்றால் மதனப்ரீதியாய் ஓமஞ்செய்து, பிராமண போஜனஞ் செய் விக்க வேண்டியது. இப்படிச் செய்வித்தவன் விஷ்ணுபத மடைவன்.

மதனன்

கட்டியங்காரனுக்கு மைத்துனன்.

மதனமஞ்சிகை

இவள் கலிங்கசேனை என்பவளுடைய புதல்வி. நரவாண தத்தனுடைய மனைவி. மிக்க அழகுடையவள். மானசவேகனென்னும் வித்தியாதானால் விரும்பி எடுத்துச் செல்லப்பட்டுத் தன் கணவனால் மீட்கப்பெற்றவள். (பெருங்கதை)

மதனாபிராமன்

பாஞ்சாலாதிபதி

மதன்

1. சிவகிங்கரரில் ஒருவன். 2. மன்மதனுக்கு ஒரு பெயர். 3. சவனரால் நிருமிக்கப்பட்ட இந்திர கத்தரு. சவனரைக் காண்க. (பா~அநு.)

மதம்

1. பலர்கொண்ட கொள்கை. நமது பரதகண்டத்தில் பல மதங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் பலவற்றைச் சுருக்கிக் கூறினேன். கூறா துள்ள சில மதங்களின் பெயர்களைக் கூறுகின்றேன். சூரியவாதி, சந்திரவாதி, நவக்கிரகவாதி, பஞ்சகோசவாதி, ஊழ்வாதி, காலவாதி, மந்திரவாதி, யந்திரவாதி, அவவிதவாதி எனப் பலமதத்தவர் இருந்ததாகத் தெரிகிறது. இம்மதத்தவர் சூரிய சந்திராதிகளையே தெய்வமாகக் கொண்டவர். தற்காலம் இல்லை இம்மதங்களின் பந்தமோக்ஷங்களை விரிவஞ்சி விடுத்தனன். 2. (7) உடன்படல், மறுத்தல், பிறர் தம்மதமேற்கொண்டு களைதல், தாஅனாட் டித்தனது நிறுப்பு, இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு, பிறர் நூற்குற்றங் சாட்டல், பிறிதொடுபடான்றன் மதங்கொளல் ஆம்.

மதயந்தி

கல்மாஷபாதன் தேவி இவள் கணவன் கட்டளையால் வசிட்டரைப் புணர்ந்து ஏழு வருஷம் கருவுற்று அஸ்தமகனைப் பெற்றாள்.

மதரோகம்

மதத்தை யுண்டாக்குவது, இது ஈனத்வனி, பிதற்றல், தகா நடக்கை, கலகப்பிரியம் முதலிய குணங்களை யுடையது. இது வாத, பித்த, சிலேத்ம, சந்நிபாத, ரத்த, மித்யப்ரன, விஷமென்னும் பேதத்தால் எழுவி தமாம். இது விரேசனம், கார்ப்பாசச்சூரண முதலியவற்றால் வசமாம். (ஜீவ.)

மதலகருசம்

இந்திரன் பழிபோக்கிய கங்கைக்கு அருகில் உள்ள இடம்,

மதலேகை

காதம்பரியின் தோழி.

மதாத்யயரோகம்

இது சுக்கிலத்தை க்ஷீணம் செய்வதால் உண்டாவது. இது சோர்வு, மலம் நழுவல், விடாத்தாகம், சுரம், அரோசகம், மார்பு, சிரம், தோள், விலாக்களில் நோய், நடுக்கல், கண்புகைச்சல், வீக்கம், சித்தபிரமை இவைகளைப் பூர்வரூபமாகக் கொண்டுவரும். இது வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷத்தால் நான்காம். இது மகாபில்வாதிலேஹ்யம், தாது விர்த்தி லேஹ்யம், தங்கபஸ்மம் முதலியவற்றால் வசமாம்.

மதாநுஞ்ஞை

வாதி தன் மதத்திற்கு வருந் தூஷணம் பரிகரிக்காமல், பிறமதத்திற்கு இட்டத்தைத் தூஷணமாகச் சொல்லுதல். (சிவ சித்)

மதாலஸை

விசுவாவசுவென்னும் காந்தருவன் பெண். பாதாளகேது என்னும் அரக்கனால் பிடிபட்டுக் குவலயாசுவனால் விடுபட்டு அவனை மணந்து தாலகேது எனும் அரக்கனது வஞ்சமொழியால் கணவன் இறந்தானென்று உயிர் விட்டு அசுவதானால் உயிர்பெற்று இரண்டாமுறை குவலயாசுவனைச் சேர்ந்து விக்கிராந்தன் சுபாகு, சத்துருமர்த்தனன், அலர்க்கன் முதலிய குமாரைப்பெற்று முதல் மூவருக்கும் ஞானம் போதித்துத் துறவிகளாக்க அரசன் மனைவியை நோக்கிச் சந்ததி விர்த்தியாகவேண்டி நீயே பெயரிட்டு அரசநீதி போதிக்க என வேண்ட நான்காவது குமரனுக்கு அலர்க்கன் எனப் பெயரிட்டு அரசாளச் செய்தவள். இவளது மற்ற சரிதங்களை இருதத்துவசனைக் காண்க. (மார்க்கண்டேயம்.)

மதி

1. சந்திரன், 2. தருமன் என்னும் மநுவின் தேவி, 3. சமகிலாதன் தேவி. இவளைக் கதி யென்றுக் கூறுவர்.

மதிசாரன்

புருவம்சத்து அந்திசாரனுக்கு ஒரு பெயர்.

மதிச்சயம்

ஓரூர்; குதிரைகளை விலை மதித்த இடமாம். (திரு.)

மதிதயன்

சந்திரமதியின் தந்தை,

மதிதரன்

தனபதிக்கு மந்திரி,

மதிதாரன்

ஒரு க்ஷத்திரியன், சந்திரவம்சம், அதுதிருஷ்டன் புத்திரர்கள், அவன் புத்திரர்கள் தம்சு, மகான், அதிரதன், திருகு. (பா. ஆதி.)

மதிமான்

சந்திரநகாத்தாசன். இவன் தன் குமரர்களாகிய துற்குணன், துராசாரன் என்பவர் தீமை செய்ய நாட்டை விட்டு துரத்தியவன்,

மதியநத்தை

ஒரு காந்தர்வ ஸ்திரீ, அகத்தியர் சாபத்தால் விசாலையாகப் பிறந்தவள், அவீக்ஷத்தைக் காண்க,

மதிராட்சன்

விராடன் தம்பி,

மதிராஸ்வன்

சூரியவம்சத்தாசன். புத்திரன், துயுதிமான்,

மதிரை

1. வசுதேவன் பாரிகளுள் ஒருத்தி. 2. காதம்பரியின் தாய்,

மதிவாணன்

சங்கமருவிய ஒரு பாண்டியன், தமிழில் மதிவாணர் நாடகத் தமிழ் நூல் செய்தவன்.

மதிவாணர் நாடகத் தமிழ்நூல்

இது மதிவாணனால் செய்யப்பட்ட நாடகத் தமிழ் நூல், நூல் காணப்படவில்லை. இது வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தினிலக்கணஞ் சொன்ன நூல், சங்க மருவியது.

மதிவான்

(சந்.) சுரிசகன் குமரன்.

மது

1. ஒரு கற்பத்தில் விஷ்ணு மூர்த்தியின் காதினின்றுந் தோன்றியவன். இவனுடன் பிறந்தவன் கைடவன். இவர்கள் இருவரும் விஷ்ணு மூர்த்தியின் மூச்சிற் பிறந்தவர் என்றுங் கூறுவர். இவர்கள் விட்ணு சிட்ணுக்களால் கொலை செய்யப்பட்டனர் என்ப. கைடவனைக் காண்க, இவன் மறுஜன்மத் தில் கும்பகர்ணனாயினான். இவன் கைடவனுடன்கூடி விஷ்ணு மூர்த்தியிடம் யுத்தத்திற்குச் சென்றனன். விஷ்ணுமூர்த்தி இவர்களுடன் அநேகநாள் யுத்தஞ் செய்யவும், தோலாமைகண்டு அசுரர் இருவரும் விஷ்ணுவைப் புகழ்ந்து உமக்கு என்ன வரம் வேண்டுமென்ன, விஷ்ணு என்னால் நீங்கள் இறக்கவாம் வேண்டுமென்ன அவ்விதம் வரம் தந்து விஷ்ணுமூர்த்தியின் நீண்ட தொடையில் ஏறினர். இவர்களை விஷ்ணுமூர்த்தி கதையால் கொன்றனர். இவர்கள் மேதைபட்டதால் பூமி மேதினி யென்னப்பட்டது. (தேவி~பா.) 2. பிந்துமானுக்குச் சாகாவிடம் உதித்த குமரன்; தேவி சத்தியை; குமரன் பவநன். 3. கிருஷ்ணன் குமரன். 4. கார்த்தவீர்யார்ச்சுநன்குமரன். இவன் குமரன் விருஷ்ணி. 5. ஸ்ரீராமமூர்த்தியின் குமாரனாகிய குசன் வம்சத்தரசன். இவன் மீண்டும் யுகமுடிவில் சூர்யவம்சத்தினை யுண்டாக்க மதுமக்தம் என்னும் கிராமத்தில் தவஞ் செய்து கொண்டிருப்பவன் என்றும் கூறுவர். 6. அஸ்வதிதேவர் சோமபானஞ் செய்வதைத் தடைசெய்யும் இந்திரனைச் செயிக்கச் சியவனறால் சிருட்டிக்கப்பட்ட ஆரக்கன். 7. தேவகத்ரன் குமரன்; இவன் குமரன் புருவசன். 8. ஒரு பூதத்தலைவன். அசமுகனுடன், போர்புரிந்து அவன் எவிய நாறாயணாஸ்தி ரத்திற்கு நிராயுதனாய் நின்று அதனால் அவனைக் கொன்றவன், 9. கும்பினசியை இராவணன் இல்லாத காலத்து மணம் புணர்ந்தவன். இவனது மற்ற சரிதையைக் கும்பினசியைக் காண்க. இவன் தாய் லோலை, இவன் நற்குண நற்செய்கையுள்ளான். தவஞ்செய்து சிவ மூர்த்தியிடம் சூலம் பெற்றவன். இவன் குமரன் லவணன்.

மதுகாம்பிரவனம்

கோசம்பி நகரத்தின் புறத்ததாகிய ஒரு பூஞ்சோலை, (பெ. கதை)

மதுகுடவாயிற் கீரத்தனார்

ஒரு பழைய தமிழ்க்கவி, கடைச்சங்க மருவியவர்,

மதுகைடபர்

திருமாலின் நாபிகமலத்தில் இரண்டு நீர்த்துளிகள் இருந்தன. அவற்றைத் திருமால் நோக்க அவை இரண்டு அசுரர்களாயின. அவ்விருவரும் தாமரை நாளத்தின் வழியோடி வேதத்தைக் கவர்ந்தனர். பின் இவர்கள் ஹயக்ரீவரால் கொல்லப்பட்டனர். (பார. சாந்.)

மதுகைடவர்

மதுவையும் கைடவனையும் காண்க.

மதுசந்தன்

அகமருஷனுக்குத் தந்தை,

மதுசூதனன்

1. சுலபனைக் காண்க. 2. மதுவை கொன்ற விஷ்ணுவின் அம்சம்.

மதுச்சந்தசுக்கள்

விச்வாமித்திரருடைய நூறு புத்திரருள் முதல் ஐம்பதின்மர். தந்தையால் மிலேச்சராகச் சாபமேற்றவர்.

மதுச்சந்தனன்

விச்வாமித்திரர் குமரருக்குள் நடுவானவன். சுனச்சேபனைக் காக்கத் தொடங்கிய விச்வாமித்திரரை இவன் தன் குமரர் இருக்க அயலார்க்கு உபசரித்தல் நலமன்று எனத் தடுத்ததால் இவர்கள் வேடராய் நாயூனருந்தச் சபிக்கப்பட்டனர்.

மதுமதி

சுருமா என்பவனால் ஆளப்பட்ட பட்டணம்.

மதுமந்தம்

தண்டகன் பட்டணம்,

மதுமான்

சசபதருக்கு, ஹேலயிடம் பிறந்தருஷி. இவரைத் தாய் பர்வதக்குகையில் விட்டுச் செல்லக் குழந்தை வாயில் மதுதாரை விழுந்து வளர்ந்தனர். இதனால் இவருக்கு மதுமான் என்று பெயருண்டாயிற்று, (திருவல்லிக்கேணி புராணம்.)

மதுரகவியாழ்வார்

குமுதாம்சரான இவர் துவாபரயுகத்தில் ” 8. லக்ஷத்துக்கு மேல் (63879) வதான ஈசுவரவருஷம் சித்திரைமாசம் சுக்ல சதுர்த்தசி வெள்ளிக் கிழமை சித்திரை நக்ஷத்திரத்தில் திருக்கோரூரில் ஒரு புரச்சூட வைஷ்ணவ பிராமணருக்குக் குமாரராய் அவதரித்துத் திவ்ய தேசயாத்திரை செய்து திரு அயோத்தியில் இருக்கையில் ஒரு இரவு திருக்கோளூரெம் பெருமானை அத்திசை நோக்கிச் சேலிக்கையில் ஒரு மகா தேஜஸைக்கண்டு அத்தேஜஸின் வழி சென்று நம்மாழ்வாரைத் தரிசித்துச் சித்தின் வயிற்றிற் சிறு குட்டி பிறந்தால் எத்தைத்தின்றெங்கே கிடக்குமென” ஆழ்வார் “அத்தைத்தின்றங்கே கிடக்குமென மறு மொழியருளக் கேட்டுத் தண்டனிட்டுத் தத்துவார்த்தல்களை பிரசாதித்து அருளவென, அத்தருணத்தில் பெருமாள் நம்மாழ்வாருக்குச் சேவை சாதிக்கத் தரிசித்து ஆநந்தமடைந்து நான்கு வேதசாரமாகிய திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி முதலியவற்றை ஆழ்வார் திரு வாய்மலா அவற்றைத் தாமே எழுதித்தாமும் கண்ணினுண் சிறுத்தாம்பு அருளிச் செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்கெழுந்தருள ஆழ்வாரை அர்ச்சாரூப மாகப் பிரதிட்டை செய்து (50) வருடம் ஆராதித்து நான்கு பிரபந்தங்களையும் பிர வர்ப்பித்துத் திருக்கோளூரில் திருநாட்டிற் செழுந்தருளினவர். (குரு பரம்பரை.)

மதுரகவிராயர்

இவர் தொண்டை நாட்டு அமரம்பேட்டிற் பிறந்தவர். திருக்கச்சூர் நொண்டி நாடகம் பாடியவர். இவர் பல தனிப்பாடல்கள் பிரம்பூர் ஆநந்தரங்கன் மீதும் காளத்தி முதலியார் மீதும் பாடிப் பரிசு பெற்றனர். (தனிப்பாடற்றிரட்டு).

மதுரதாயம்

நெய், பால், தேன். (காத்யாயனர்)

மதுரவகை

1. இது, மதுரந் தரும் தாவரப் பொருள்களிடம் உண்டாம் பொருள்கள். அவை செங்கரும்பு, வெண்கரும்பு, பனை, ஈந்து முதலிய பொருள்களின் சாறுகளையும், கள்ளுகளையும் காய்ச்சுதலா லுண்டாவது. 2. கரும்பு இரதம், பலகரும்பின் வெல்லங்கள், தேன், தேன்பாகு, வெல்லப் பாகு, தெங்கின் வெல்லம், தெங்கு, பனை, ஈந்து கரும்பாலாதிய கற்கண்டுகள் முதலிய

மதுராதேவி

வஸுதேவர் தேவியரில் ஒருத்தி.

மதுராந்தகன்

இவன் சோழவம்சத்தரசன். சில நாடுகளை அரசு புரிந்து வந்தான்.

மதுராபதி

தென் மதுரையின் அதிதேவதை, இத்தெய்வத்தால் கண்ணகி, கோவலன் முற்பிறப்புணர்ந்தனள். (மணிமேகலை).

மதுரை

இது தென்மதுரை யென்றும் வடமதுரை யென்றும் இரண்டு பட்டணங்கள். இவ்விரண்டும் புண்ணியத் தலங்களே. ஒன்று சிவமூர்த்திக்கும் மற்றது கண்ணபிரான் தமது வெற்றியைத் தெரிவித்ததுமாம். அவற்றுள் தென் மதுரையை முதலிற் கூறுகிறேன். ”சந்தனப் பொதியச்செந் தமிழ் முனியும், சௌந்தர பாண்டியனெனுந் தமிழ் மாறனும், சங்கப் புலவருந் தழைத்தினி தோங்கிய, மங்கலப் பாண்டி வளநாடென்பி” என்பதால் இது தமிழ்நாடெ வற்றினுஞ் சிறந்தது. இதில் சிவமூர்த்தி மலயத்துவச பாண்டியன் பொருட்டு அவ்விடம் திருவவதரித்திருந்த தடாதகைப் பிராட்டியாரை மணக்கச் சோம சுந்தர பாண்டியராய் எழுந்தருளிப் பிராட்டியைத் திருமணங்கொண்டு, உக்கிர குமார பாண்டியனைப் பெற்றுப் பல திருவிளையாடல் கண்டருளினர். இது, முதல், இடை, கடைச்சங்கங்கள் இருந்து தமிழ் வளர்த்த பெருமையுள்ளது. அகத்தியருக்கு இருக்கையான பொதிகை மலையைத் தனக்கு இருப்பிடமாகப் பெற்றது. எழுகடலும் வந்து பாண்டியனை வணங்கப்பெற்றது. இதன்பெருமை களை ஆலாச்ய மான்மியம், திருவிளையாடற் புராண முதலியவற்றுட் காண்க. இதில் கண்ணகை கோயில், கோவலன் உயிர்நீத்த இடமிருக்கிறது. மற்றது வடமதுரை, இது யமுனை நதிக்கரையில் உள்ளது. இது மதுரமுள்ள பொருள்கள் நிறைந்துள்ளதால், சத்துருக்கனரால் இப்பெயர் பெற்றது. மதுவால் ஆளப்பட்டது. பின் கம்சன் அரசாட்சியாயிற்று. இது கண்ணபிரான் தமது பராக்கிரமத்தைக்காட்ட நின்ற பெருமையுடை யது. கண்ணன் பிறப்பிடம். சத்துருக்னரால் உண்டாக்கப்பட்டது. 2. Mattra The Capital of Surasena Dass. 3. சந்திர குலத்தாசர் நகரம் (சூளா.)

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

1. இவர் வணிகர். ஒரு தமிழ்க்கவி (புறம்). 2. அறுவை வாணிகன்: வஸ்திரவியாபாரி, இவர் வைசியர் புலி முழங்குவதை இடி முழக்கமாமென்று கொண்டு குறவர் திணையைக் குவிப்பரென நயம்பட கூறியுள்ளார். பெரும்பாலும் குறிஞ்சி முல்லைகளையும் சிறுபான்மை பாலையையுஞ் சிறப்பித்துப் பாடியுள்ளார். புறாவோடு விளை யாட்டயரும் மைந்தரை நோக்கிக் காதலி வருந்துமென்று தலைவன் கூற்றாக, இவர் கூறுவது பாராட்டத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையிலொன்றும், அகத்தில் ஆறும், புறத்திலொன்றும் திருவள்ளுவ மாலையிலொன்றுமாகப் பத்துப்பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

1. இவர் பழைய தமிழ்க்கவி; சிறுகுடிகிழான் பண்ணனைப் பாடியவர். மன்ளனார் என்றும் கூறுவர். (புற~நா) (அக நா) 2. இவர் சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடிய வராதலால், அவனைப் பாடிய சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவள வன், கோவூர்கீழார் இவர்களோடு ஒரு காலத்திருந்தவராவார். ஒரோவிடத்துச் சோலன் கொல்லி மலையையும் பாடியுள்ளார். இவர் குறிஞ்சியையும், பாலையையும், பெரும்பாலும் முல்லையையும், புனைந்து பாடினவர். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் இரண்டும் அகத்தில் ஐந்தும், புறத்திலொன்றுமாகப் பத்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன்

கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர், இவர் ஊர்மதுரை போலும், குறு 144.

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

ஒரு தமிழ்க்கவி. கடைச்சங்கமருவிய மதுரை பிளங்கௌசிகர் என்றும் ஒருவர் இருந்தார். (புற~நா)

மதுரை ஈழத்துபூதன் தேவனார்

1. இவர், ஈழ நாட்டினின்று மதுரையில் வந்து தங்கிய பூதனது மகன். தேவனெனப்படுவார். ஈழம்; இலங்கை. ஏடேழுதுவோர் பிழையினால் இவர் பெயர் மதுரை ஏறத்துப் பூதன் தேவனெனவும் ஈழத்துப் பூதன் தேவனெனவும் காணப்படும். வாடை வீசுங் குளிர்காலத்தே தலைவியைப் பிரிவோர் மடமையுடையரென்று இவர்கூறு வது நன்கறிதற்பாலது. இவர் பாலையையுங், குறிஞ்சியையும், பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் மூன்றுமாக எழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (அக~நா)

மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

இவர் கடைச்சங்கமருவிய புலவரில் ஒருவர். இவரது இயற்பெயர் சேந்தன் பூதன். இவர் இலக்கணத்தில் வல்லவர் போலுமாதலின் இப்பெயர் பெற்றனர். குறு 60, 226

மதுரை ஒலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயந்தனார்

ஒரு பழைய தமிழ்க்கவி. (புற, நா)

மதுரை கடையத்தார்மகன் வெண்ணாகன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது இயற்பெயர் வெண்ணாகன், ஊர்மதுரை, தந்தை கடையத்தார் என்பவர் போலும், குறு 223.

மதுரை கோலம் புல்லன்

கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர், இயற் பெயர் கோலம் புல்லன். ஊர் மதுரை, (குறு 373)

மதுரை சீத்தலைச் சாத்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் மதுரையென்று கூறப்படுதலால் சீத்தலைச் சாத்தரின் வேறாக இருக்கலாமோ அன்றி அவர் மதுரையிலிருந்ததால் இவ்வாறு கூறப்பட்டதோ தெரியவில்லை, (குறு 154.) சீத்தலைச் சாத்தனாரைக் காண்க.

மதுரை பாலாசிரியன் சேதங்கூத்தன்

கடைசங்கமருவிய புலவன்.

மதுரை மருதங்கிழார் மகனிளம்போத்தன்

கடைச்சங்கமருவிய புலவர் ஊர் மதுரை, தந்தை மருதங்கிழார். இவரியற் பெயர் இளம்போத்தன், வேளாளர். குறு. 332.

மதுரை மருதங்கிழார் மகன் பெருங்கண்ணனார்

1. கடைச்சங்கமருவிய தமிழ்ப் புலவர். அகநானூறு பாடியவருள் ஒருவர். (அக~நா) 2. இவர் மேற்கூறிய சோகுத்தனாரின் சகோதரர், நெய்தல், குறிஞ்சி, முல்லைகளை நற்சுவை பயக்குமாறு பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 388ம் பாடலொன்றும், அகத்தில் மூன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மதுரை மருதனிளநாகனார்

1. எழுதுவோர் மிகையால் இவர் பெயர் மதுரைப் பூதனிளநாக னெனவும், மருதனிளநாக னெனவும் காணப்படும். இவர் சிவபெருமான் திரிபுரமெரித்ததை விதந்து கூறியுள்ளார், திருச்செந்தூர் முருகக் கடவுளைப் பாராட்டிக் கூறியுள்ளார். பாண்டியன் இலவந்திப் பள்ளியிலே துஞ்சிய நன்மாறனைச் செவியறிவுறப்பாடி இடித்து நெறி நிறுத்தினவர் இவரே. (புறம் 55). இவர் கூறிய மக்கட்பாற்காஞ்சி வெகு நயமுடையதா யிருக்கும் (புறம் 349). தும்பைத் திணையில் தாணை நிலை கூறியது. பாராட் டற்பாலது (புறம் 276), நல்லந்துவனார் பரிபாடலில் திருப்பரங்குன்றைப் பாடியதனைப் பாராட்டி “தன்பரங்குன்றம் அந்துவன் பாடிய சந்துகெழு நடுவரை” எனக் கூறியுள்ளார் (அகம் 59) தொழுனையாற்றுள் வாசுதேவன் குருந்து முறித்ததனைச் சிறப்பித்துள்ளார் (அகம் 59) சேரமான் சேனாபதி பட்டனைப் புகழ்ந்துள்ளார். (அகம் 77). நடுகற் சிறப்புக் கூறியுள்ளார் (அகம் 139) விடியற்காலத்தில் எருமை மேய்க்கச்செல்லுஞ் சிறுவர் அம்மாடுகளின் மீதேறிச்செல்வதனைக் கூறுகின்ற தனோடு வேளிரது வீரநகரையும் அருகிலுள்ள கடலையும் விதந்து கூறுகின்றார். (அகம் 209). திருவழுந்தூர்த் திதியனுக்குரிய செல்லூரில் பரசுராமமுனி வேள்வி செய்தது கூறுவதுடன் தழும்பனது ஊணூரும் சாயவனமும் (திருச்சாய்க்காடு) இவராற் கூறப்பட்டுள் என (அகம் 220). வழுதியின் வெற்றியைப் பாராட்டிக் கூறியுள்ளார். (அகம்312). இடையர் தலைவன் கழுவுளென்பானையும் அவனது காழூரையும் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 265). உள்ளிவிழா வென்னுந் திருவிழா நடப்பதும் அக்காலத்துக் கொங்கர் மணிகளை அரையிற்கட்டி யாடுவதும் இவராற் கூறப்பட்டுள்ளன. அகம் 368. ”தேர் சேணிக்கி” என்னும் இவர் பாட்டின் (அகம் 380) கருத்து “நீ கண்டனையெனின்” என்ற திருக்கோவை யில் (84) வந்துளது. பாண்டியன் நெடுஞ்செழியனது கூடனகரை ஏனையாசர் முற்றுகை செய்ததும் அவன் வெற்றியும் கூறியுள்ளார். (நற் 39) ஒரு கொங்கையறுத்த திருமாவுண்ணி என்பாள் கதையைச் சுருக்கிக் கூறுகிறார். அது கண்ணகியின் கதை போலுமென்று கருதற்கிடராகிறது; செவ்வையாக விளங்கவில்லை (நற் 219) இவைகளன்றி இவர் ஒவ்வொரு நிலங்களினும் கூறும் கற்பனைகளும் உள்ளுறைகளும் வெளிப்படையுவமங்களும் படிப்போர் மனத்தைக் கவர்வனவாகும். இவர் ஐந்நிலங்களினும், பல காலுஞ்சென்று பழகி அவற்றினியல்பை நன்கறிந்து சிறிதும் மாறுபாடின்றித் திணைக்கேற்ற பொருள்களை புலப்படுத்திப் பாடுந்தன்மையராக விளங்கினவர். இறையனார் களவியலுக்கு இவருமோருரை யெழுதினரென்று அந்நூலுரையால் விளங்கும். இவர் பாடியனவாக நற்றிணையில்பன்னிரண்டு பாடல்களும் குறுந் தொகையில் நாலும் அகத்தில் இருபத்து மூன்றும் புறத்தில் மூன்றுமாக நாற்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. பாண்டிய னிலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியவர். இவருக்கு மருதனிள நாகனார் எனவும் பெயர். (புற நா) (அக நா)

மதுரை, இளம்பால் ஆசிரியன் சேந்தன் கூத்தனார்

1. இளம்பால் ஓரூர். ஆசிரியன் எனப்படுதலால் இவர் அந்தண மரபினராவர். சேந்தன் என்பது தந்தை பெயர்போலும், உத்தன் இயர்பெயர். இவர் குறிஞ்சியில் பயின்றவர் போலும், குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். களவிலே இரவுக்குறிக்குத் தலைவன் வந்து போதலை நன்சுவை பயப்பப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்திணையில் ஒன்றும், அகத்தில் இரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. கடைச்சங்க மருவிய புலவர். (அகம்.)

மதுரை, ஓலைக்கடையத்தார் நல் வெள்ளையார்

இவறது பெயரினால் இவர் பெண் பாலரென் றூகிக்கப்படுகின்றது. நிறையடு காமம் சிறையடுகடும் புனலோடொத்த தென்றிவர் கூறியது வியக்கத்தக்கது. இவர் இமயமலை யையும், கங்கையாற்றையும் கூறியுள்ளார். மருதம், நெய்தல் இரண்டினையும் நயந்தோன்றப் பாடியுள்ளார். இவர் பாடியபாட்டு இரண்டு. (நற். 250,366.)

மதுரை,ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

ஆலம்பேரி சாத்தனாரைக் காண்க.

மதுரைக் கணக்காயனார்

நக்கீரர் தந்தை. (புற நா)

மதுரைக் கணக்காயனார் மகனூர் நக்கீரனார்

இவர் கீரவிகோற்றனார்க்குத் தந்தை. ஆலவா யெம்பெருமானடிகள் அருளிய அகப்பொருளுக்கு உரை கண்டோர், பத்துப் பாட்டுள் திருமுருகாற்றுப் படையும், நெடுநல்வாடையும் அருளிச்செய்தவர். இவராற் பாடப்பெற்றோன் பாண்டியனிலவர் திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன். இவரது மற்ற சரிதங்களை நக்கீரரைக் காண்க. (புற நா).

மதுரைக் கண்டாகத்தன்

மதுரைக் கண்டாதத்தன் எனப் பிரதிபேதம். இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். ஊர் மதுரை. (குறு 317)

மதுரைக் கண்ணனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களிலொருவர். இவரதியற் பெயர் கண்ணனார். ஊர்மதுரை. (குறு 107.)

மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார்

ஒரு பழைய தமிழ்க்கவி. (புற~நா).

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

இவர் சுடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரியற்பெயர் பூதத்தனார். இவர் கவுணியர் குடியினராகிய வேதியராக இருக்கலாம். (அகம் 74.)

மதுரைக் காருலவியங் கூத்தனார்

இவரைப்பற்றி யாதும் தெரிந்திலது. பாலயில் நெறியினது எதங்கூறியது பாராட்டத்தக்கது. பாலையையே புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது. நற் 325ம் பாட்டு,

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்

இவர் வணிகர். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடியவர், மணிமேகலை நூலாசிரியர். (புற, நா)

மதுரைக்கண்ணத்தனார்

1. இவர் கண்ணத்தனாரெனவும் வழங்கப்படுவர். குறிஞ்சி, நெய்தல், வளங்களை, நன்றாக ஆராய்ந்து பாடியுள்ளார். அந்தி மாலையில் மேலைக் கடல் சங்கரநாராயண அவதாரத்திற் தோற்றம் போன்ற தென்று கூறியது வியக்கத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் 351ம் பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக் கின்றன. 2. கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்.

மதுரைக்காஞ்சி

1. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய னெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடிய தமிழ் நூல்; அகவற்பா. (782) அடிகள் கொண்டது. இது நிலையாமையை அறிவுறுத்தியது. 2, இந்நூல் பத்துப் பாட்டுள் தருவது பாட்டு; மாங்குடி மருதனாராற் பாடப் பெற்றது. தலையா லங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வீரம், அவன் முன்னோர் பெருமை, அவனது காடு, கால்களின் களம் முதிலியவற்றை நன்கு புலப்படுத்தும்,

மதுரைக்காஞ்சிப்புலவன்

கடைச்சங்கமருவிய தமிழ்ப்புலவன். (அக~நா).

மதுரைக்காடாத்தனர்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர்.

மதுரைக்காமக் கண்ணி நப்பாலத்தனர்

கடைச்சங்கமருவிய தமிழ்ப்புலவர். (அகநானூறு) பாடிய புலவருள் ஒருவர்.

மதுரைக்கூத்தனர்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (அக. 334)

மதுரைக்கொல்லன் வெண்ணாகனார்

திருதண்கால் பொற்கொல்லன் வெண்ணாகனா சென்பவர் இவராயிருக்கலாமென்று ஊகிக்கப்படுகின்றது. ஆயினும் மதுரை யென்றமையின் வேறாகக் குறிக்கப்பட்டனர். இவர் குறிஞ்சியையும், பாலையையும், புனைந்து பாடியுள்ளார். இவர் தமது பாடலில் பொற்செய் காசனெக்கூறிய அருந்தொடர் மொழியாற் பொற்கொல்லனெனத் தெரியப்படுவர். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்திலொன்றுமாக, இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மதுரைக்கௌணியர் முத்தணார்

கடைச் சங்கமருவிய புலவர்.

மதுரைச் செங்கண்ணனார்

கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவர்.

மதுரைச்சுள்ளம் போதனார்

இவர் சுள்ளம்போது என்னுமூரிலிருந்து மதுரையை யடைந்து வைகயவா; இஃது பார்பற்றி வந்த பெயர், நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். மீன் கொழுப்பாலாக்கிய நெய்யால் விளக் கெரிக்கும் வழக்கம் முற்காலத்து முளதென்று இவர் பாடலாலறியலாகும். இவர் பாடியது (நற் 215.ம் பாட்டு.)

மதுரைத் ததகங்கண்ணனார்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (அக நா)

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிழார்

கடைச்சங்கமருவிய புலவர் (திருவள்ளுவமாலை)

மதுரைத் தமிழ்க்கூத்தனாகன் றேவன்

கடைச்சங்கமருவிய புலவன். (அக நா)

மதுரைத் தமிழ்க்கூத்தனார்

ஒரு பழைய தமிழ்க்கவி, (புறநா)

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். (அக நா)

மதுரைத் தமிழ்நாயனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை)

மதுரைத் தற்கூத்தன்க வேன்மள்ளனார்

கடைச்சங்கமருவிய புலவர்.

மதுரைநக்கீரர்

ஒரு பழைய தமிழ்க்கவி. இவராற் பாடப்பட்டோன் சோழநாட்டுப் பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் (புற நா)

மதுரைநல்வெள்ளி

இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த புலமையர். இவர் ஊர் மதுரை, இவர் மகளிராக இருக்கலாம்.

மதுரைப் பாலாசிரியன் நம்பாவன்

கடைச்சங்கமருவிய புலவன்

மதுரைப் பெருங்கொல்லனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் இவர் கொல்லர் என்பதால் கம்மியர் வகுப்பினராகலாம். இவர் ஊர்மதுரை. (குறு 11)

மதுரைப் பெருமருதனார்

1. கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவ மாலை) 2. இவர் பாலையை பாடியுள்ளார். இவர் பாடியது நற் 241ம் பாட்டு,

மதுரைப் பெருமருதிள நாகனார்

இவர் பெருமருதனுக்குப் புதல்வனார் போலும், திணையை நோக்கிக் காலம் நடுவித்துக் கதிரீன்று விளைவாயாக வென்று அதற்குரிய காரணத்துடன் தோழிகூற்றாக இவர் கூறுவது ஆராய்ந்து மகிழவேண்டிய தொன்றாகும், இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப்பாடியுள்ளார். இவர் பாடியது நற் 251ம் பாட்டு,

மதுரைப் பேராலவாயார்

1. பூதபாண்டியன் காலத்திருந்த புலவர். இவர் பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்தல் கண்டு வியந்து பாடியவர். (புறநா) 2. பேராலவாய்ரைக் காண்க.

மதுரைப் பொன்கொல்லன் வெண்ணாகனார்

கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவர்.

மதுரைப், பூவண்டனாகன் வேட்டனார்

பூவண்டல் ஒரூர். இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது, (நற். 317ம் பாட்டு,)

மதுரைப்படைமங்கைமன்னியார்

ஒரு பழையத் தமிழ்ப்புலவர், (புற நா)

மதுரைப்பண்ட வாணிகனிளந்தேவன்

கடைசங்கமருவிய புலவன். (அக நா)

மதுரைப்பள்ளி மருதங்கீழார் மகனூர் சோகுத்தனார்

இவர் மருதங்கீழார் மகனார் சோகுத்தனாரெனவும், மதுரை மருதங்கீழார் மகனார் சோகுத்தனா ரெனவுங் கூறப்படுவர். இவர் சகோதரர்கள் இளம்போத்தனர், பெருங்கண்ண னாரென இருவர், தொகை நூல்களில் காணப்படுகிறார்கள். இச்சோகுத்தனார் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இடைச்சுரத்து தலைமகன், தலைமகளது உரு வெளித்தோற்றங் கண்டு மருளுவதாக இவர் கூறியது சிறப்புடையதாகும். இவர் (நற்) பாடிய பாட்டு இரண்டு,

மதுரைப்பாலாசிரியனற்றுமனார்

கடைச்சங்கமருவிய புலவன் (அக நா)

மதுரைப்பாலாசிரியனார்

கடைச்சங்கத்திவருள் ஒருபுலவர் (திருவள்ளுவ மாலை)

மதுரைப்புலவங்கண்ணனார்

கடைச்சங்கமருவிய புலவர். (அக நா)

மதுரைப்பூதனிளநாகனார்

ஒரு பழைய தமிழ்க்கவி. (புற நா)

மதுரைப்பொத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக நா)

மதுரைமா தெய்வம்

இது ஒரு பெண் தெய்வம், இத் தெய்வத்தால்தான் கண்ணகி கோவலனுடைய முற்பிறப்பின் வரலாறு முதலியவற்றைத் தெரிந்து கொண்டாள். (சிலப்பதிகாரம்).

மதுரையறுவை வாணிகனிளவேட்டனார்

கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர்.

மதுரையாசிரியனல்லந்துவனார்

கடைச்சங்கமருவிய புலவர். (அக. நா.)

மதுரையாசிரியர் மாறனர்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர்.

மதுரையாண்டான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவராகிய ஆசாரியர். (குருபரம்பரை.)

மதுரையீழத்துப் பூதன்தேவன்

கடைச் சங்கமருவிய புலவர். அகநானூறில் ஒன்று பாடியவர்.

மதுரையெழுத்தாளன்

இவர் மதுரையெழுத்தாளன் சேந்தன் பூதனென்று குறுந்தொகையிற் கூறப்பட்டவராக இருக்கலாம். (அகம் 84.)

மதுரையெழுத்தாளன் குறுங்குடி மருதனார்

கடைச்சங்கமருவிய தமிழ்ப்புலவர்.

மதுரையெழுத்தாளன் சேந்தன் பூதனர்

கடைச்சங்கமருவிய தமிழ்ப்புலவருள் ஒருவர். அகநானூரில் ஒரு அகவல் கூறியவர். (அக நா)

மதுரையோலைக் கடைக்கண்ணம் புதந்தாராயத்தனார்

புறநானூறு பாடினோருள் ஒருவர்.

மதுரைவீரன்

இவன் காசிராஜன் புத்திரன். இவன் பிறந்தகாலத்தில் மாலையுடன் பிறந்ததால் சோதிடர் சொற்படி அரசன் இவனைக் காட்டலிட்டனன், இவனையொரு சக்கிலியெடுத்து வளர்க்க வளர்ந்து நாகராசனால் பலசித்திகள் பெற்றுப் பொம்மணநாய்க்கன் மகள் பொம்மியை மணந்து விசயரங்கனிடம் சேவகத்திற்கமர்ந்து திரு மலைநாயக்கன் பட்டணத்திற் களவுபிடிக்க வந்து கள்ளரை வரறுத்து வெள்ளச்சியை மணந்து செல்லுகையில் அரசனால் கைகால் வாங்கப்பட்டு மனைவியர் தீக்குளித்திறக்கத்தான் மீனாட்ஷி சந்நதியில் உயிர் போக்கிக்கொண்டு தெய்வமாக அமர்ந்தவன். இவன் வீரனாகையால் வீரர்க்குக் கவ்காட்டுவதுபோல் இவனையும் கல்லில் பதித்திருக்கின்றனர். இவனை இந்நாட்டு இழிசநர் தெய்வமாக எண்ணி வணங்குகின்றனர்.

மதுலிங்கன்

ஒரு சிவகணத்தலைவன்,

மதுவநம்

1, ஒரு நந்தவனம், இரிசமூக பர்வதத்தருகில் உள்ளது. இதனை ஒரு முறை சீதையைத் தேடச்சென்ற வாநர வீரர் சீதையைக்கண்ட களிப்பால் இதி லிருந்த கள்ளையுண்டு களித்தனர். சுக்கிரீவன் உத்தியானம். 2. துருவதன் தவஞ்செய்த காடு, இது யமுனைக்கரையில் உள்ளது.

மதுவேளாசன்

ஒரு செந்தமிழ்க்கவி.

மதுவையர்

வசவர் காலத்திருந்த சங்கமர்.

மதுஷ்யந்தர்

விச்வாமித்ரரின் குமரர். இவர்களை விச்வாமித்ரன் அம்பரீஷன் யாகத்தில் சநச்சேபனுக்குப் பதிலாக யாகப்பசுவாக இருக்கக் கட்டளையிட இவர்கள் மறுத்ததால் இவர்களை நாய் மாம்சம் தின்று ஆயிரம் வருஷங்கள் வேடராகத் திரியச் சாபமேற்றவர்கள். (இரா. பால)

மத்தகன்

சண்முக சேநா வீரன்.

மத்தன்

1. சண்முகசேநாவீரன். 2. மால்யவந்தன் குமரன். 3. இராவண சேகாபதி. நீலனால் கொல்லப்பட்டவன்.

மத்தி

கழாஅர் எனும் ஊரிலிருந்த வீரன். இவன் தன்னுடன் எதிர்த்த எழினி என்பவனது பல்லினையெறிந்து அதனைத் தன் வாயிலின் கதவிற்கட்டிய மணியிலழுத்து வித்தான் என்பர்.

மத்திமதேயம்

தடமித்தன் தேயம். விபாசைக்குக் கிழக்கும் பிரயாகைக்கு மேற்கும், இமயத்திற்குத் தெற்கும், விந்தியத் திற்கு வடக்குமுள்ளதேசம். இதில் வசிப்போர் மாத்யமிகர் எனப்படுவர்.

மத்திமம்

ஒரு தேசம். (சிலப்பதி),

மத்திமேச்சுரன்

காசியில் எழுந்தருளிய சிவமூர்த்தம். இங்கு விஷ்ணுவிற்கும் வியாசர் முதலியவர்க்கும் பிரத்தியக்ஷம்.

மத்தியதேசம்

விராடன் நாடு, இமயமலைக்கு நடுவாயும், சரஸ்வதி நதி மறைந்த விஜனதேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இடம்,

மத்தியந்தனம்

பிரடாவிடத்துப் புக்ஷிபாரனுக்குப் பிறந்தகுமரன்.

மத்தியந்தனர்

வியாக்கிர பரதருக்குத் தந்தை.

மத்தியன்

காலபுத்திராம்சமாகிய பாரத வீரன்.

மத்திரசேநன்

வசுதேவருக்குத் தேவகியிடம் உதித்த குமரன்.

மத்திரதேசாதிபதி

மத்திரையின் தந்தை,

மத்திரன்

சிபியின் குமரன்.

மத்திரம்

சிபியின் குமரனாகிய மத்திரனால் நிருமிக்கப்பட்ட தேசம். இமயச் சாரலின்கணுள்ளது.

மத்திரர்

ஒருவகை மிலேச்ச சாதியார்.

மத்திராசுவன்

விராடன் தப்பி.

மத்திரை

1. மத்திரதேசாதிபதியின் குமரி சல்லியன் சகோதரி. இவள் புத்தி அம்சம். பாண்டுவைமணந்து குந்தியின் உபதேசத்தால் நகுலசகாதேவரைப் பெற்றவள். 2. வசுதேவர் பாரிகளில் ஒருத்தி, 3. ஒரு தேசம். A Country in the Punjab between the Ravi and the Chenab. Its Capital was Sakala.

மத்து

திரவப் பொருளுடன் சேர்ந்த கனப்பொருளை மத்திக்க உருட்சியான பந்து போல் மரத்தால் செய்யப்பட்டுக் காம்பியைந்த கருவி.

மத்துவாசாரி

மார்த்தவ மதத் தாபகர். இவர் பாசகக்ஷேத்திரத்துப் பிறந்தவர், ஆனந்த தீர்த்தரைக் காண்க,

மத்யாலவத்தை

இது, சாக்ரதுரீயாதீதம். சாக்கிரத்திற்துரியம், சாக்கிரத்திற் சுழுத்தி சாக்கிரத்திற் சுவப்பனம், சாக்கிரத்திற் சாக்கிரம் என (5) வகை, சாக்கிரத்தில்தீதம்; ஒருவன் ஒரு வஸ்துவை ஓரிடத்தில் வைத்து அறியாமனின்ற நிலை. சாக்கிர துரியம்; சிறிது பிராணவாயு வியங்கிமூர்ச்சை தெளிந்த நிலை. சாக்கிரத்திற் சாகரம்; அந்தப் பொருள் எங்சேவைத்தோம் என்று விசாரிக்க வந்த நிலை. சாக்கிரசழுத்தி; அந்தப் பொருள் வைத்த இடம் நினை வெழத்தோன்றுவது. சாக்கிரத்திற் சுவப்பனம்; அந்தப் பொருள் புலப்பட அறிய வந்த இடம். (சித்தா)

மநஸ்வநி

1 பிரசாபதிக்கு மனைவி. குமரன் சோமன், 2. மிருகண்டன்தேவி.

மநுக்கள்

1. கடவுளின் கட்டளைப்படி சிருட்டி ஆதியில் பூமியைக்காக்க அவரால் நியமிக்கப்பட்டவர். இம்மநுக்களில், சுவாயம்புமநு பிரமபுத்திரன். இவன் நருமதா நதி தீரத்தில் பலயாகாதி கிருத்யங்கள் செய்து முத்தி பெற்றவன். இரண்டாம் மநு; சுவாரோசிஷமநு இவன் அக்னியின் குமாரன் இவன் தர்மாத்மா, மூன்றாமநு உத்தமன்; பிரியவிரதன் குமரன். நான்காமநு; தாமசன் பிரியவிரதன் குமரன். ஐந்தாமது; ரைவதன். ஆறாமநு; சாக்ஷ ஷமது. எழாமநு; கிராத்த தேவன் அல்லது வைவச்சுவதன், சூர்யபுத்ரன். எட்டாமநு; சாவர்ணிமறு சூர்யபுத்ரன். ஒன்பதாமநு; தக்ஷசாவர்ணிமநு. பத்தாமநு; பிரம்மசாவர்ணிமது. பதினோராமநு; தர்மசாவர்ணிமநு. பன்னிரண்டாமநு; ருத்ரசாவர்ணிமது. பதின்மூன்றாவதுமநு; தேவசா வர்ணிமது, அல்லது ரௌச்சியன். பதினான்காமநு; சந்திரசாவர்ணிமது, அல்லது பௌச்சியன். 2. காசிபர் பாரி. தக்ஷன்பெண், குமரர் வீமசேனன், உக்ரசேநன் முதலிய (16) கந்தருவர். 3. பிரமன் குணத்தில் உதித்தவர். 4. கிரிசாசுவனுக்குத் தக்ஷணையிடம் உதித்த குமரன். 5. இக்ஷவாகு வம்சத்திற் பிறந்து கலியந்தத்தில் அரசாள இருப்பவன். 6. மயன் குமரன். 7. அரியச்சுவன் குமரன், மிதிலாதிபதி 8. ஏகாதசருத்ரருள் ஒருவன், மேற்கூறிய மநுக்களில் ஒருவனுக்குத் திருஷ்டா, கருஷா, நேடிஸ்தான், நாபாகரிஷ்டன், பிரிச்சத்திரன் என ஐந்து குமாரரிருந்தனர். திருஷ்டாவினிட முதித்த குமரர் வேதமோதி வேதியராயினர். கருஷாவின் குமரர் கருஷாக்கள் அரசராயினர். நேடிஸ்தான் குமரர் வைசியராயினர். நாபாகரிஷ்டன் குமரர் வேதியராயினர்.

மநுமுறைகண்ட சோழன்

இவனே அநபாயச்சோழன்.

மநுர்த்தேவன்

பிரமன் புத்திரரில் ஒருவன்.

மநுஸ்மிருதி

1 மநுவால் கூறப்பட்ட தர்மசாத்திரம்,

மந்தகர்ணன்

தண்டகாரண்யத்தில் பஞ்சாபசரஸ் எனும் தீர்த்தமுண்டு பண்ணினவன்.

மந்தகர்ணி

ஒரு ருஷி. இவர்கோர தபஞ் செய்கையில் தேவர் பயந்து இவர் தவத்தினைக் கெடுக்க ஐந்து காந்தருவப் பெண்களை யனுப்பினர். அவர்களைக் கண்டு தவங்குலைந்து கிரீடித்திருந்தவர்.

மந்தகேது

ஒரு காந்தருவன், இவன் குமரன் சண்டபமுனிவர் ஆச்சிரமத்திற் சென்று அவருக்குக் கோபம் வரச் செய்ததால் பெருச்சாளியாகச் சபிக்கப்பட்டு இராமமூர்த்தி தட்டிய கோலடிபட்டு உயிர் நீங்கிச் சாபம் நீங்கினவன்.

மந்தன்

1. வசிட்டமானஸ புத்திரன். பித்ருக்களைக் காண்க. 2. குந்திபோஜன் குமரன்.

மந்தபாலமுனிவர்

காண்டவ வனவாசியாகிய முனிவர். இவர் பிதுர்க்கட னாற்றாமையால் தேவர்களால் அறிவிக்கப்பட்டுச் சாரங்கனென்னும் பக்ஷி உருக்கொண்டு சரையை யென்னும் பக்ஷியைப் புணர்ந்து சாரங்கர் எனும் பக்ஷிகளையும், ஜரிதாரி, துரோணர் முதலியவரையும் பெற்றவர்.

மந்தரம்

ஆருணியரசனுடைய பட்டத்து யானை, களகிரியைப் போல்வது. (பெ. கதை.)

மந்தரவரசன்

வெள்ளி மலையிலுள்ள வித்தியாதர அரசருள் ஒருவன் இவன். தன்னுடைய அரசாட்சியை மகனிடத்தே ஒப்பித்து விட்டு வீடுபெற விரும்பி மனைவியோடும் மகள் விரிசிகையோடும் வனத்தில் வந்து தவஞ்செய்து கொண்டிருக்கையில் உதயணனால் இளமையில் மாலை சூட்டப்பெற்ற தன் மகளுக்குப் பருவம் வந்த பொழுது அவளை அவனுக்கு மணஞ்செய் வித்து விட்டு மனைவியைத் துறந்து தவம் செய்தற்கு வேறிடஞ் சென்றனன். (பெ. கதை.)

மந்தரேசுவரர்

மலபக்குவரான சுத்த புவநவாசிகள்,

மந்தரை

1. கைகேயியின் தோழி. இவளுக்குக் கூனியெனவும் பெயர். இவளை இராமமூர்த்தி இளமையில் உண்டையால் கூனின் மேலடித்து விளையாடினதால் இவள் வைரம் வைத்திருந்து இராமமூர்த்திக்குப் பட்டம் அளிக்காமல் தடைசெய்வித்தவள். 2. விரோசனன் எனும் அசுரனுடைய பெண். இவள் தேவர் முதலியவர்களை நாசஞ்செய்ய எண்ணங்கொள்ள இந்திரன் இவளைக் கொன்றனன். (இரா~பால.)

மந்தவாகினி

சத்திமந்தத்தில் உற்பத்தியாகும் நதி.

மந்தாகினி

1. தேவ கங்கை, 2. சித்திரகூடத்திற்கருகில் உள்ள நதி.

மந்தாரகன்

ஒரு சூத்திர ருஷி. கந்தமூர்த்தியாலருள் பெற்றவன்.

மந்தாரசப்தமி விரதம்

மாக சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமிவரை (13) மாதம் சூரியனைப் பூசிப்பது.

மந்தாரதாமன்

இரத்தினாவலியைக் காண்க.

மந்தாரன்

1. ஒரு காந்தருவன். 2, விடாவரிக்குத் தந்தை.

மந்தாரமுநிவர்

தௌமியர் குமரன். சௌநகர் மாணாக்கர். இவர் தேவி சமி, இவர் தம் தேவியுடன் கூடி ஆச்சிரமம் செல்கையில் வழியில் விநாயக சாரூபம் பெற்றிருந்த புருசுண்டி முனிவரைக் கண்டு நகைத்தனர், புருசுண்டி இவ்விரு வரையும் சினந்து மந்தார விருக்ஷமும், வன்னி விருக்ஷமும் ஆகவெனச் சபித்தனர். பின் மந்தார முனிவர் வேண்ட புருசசுண்டி உங்களிடம் விநாயக மூர்த்தி எழுந்தருளுவர். அக்காலத்துச் சாபத் தீர்வடைந்து விநாயகர் அருளுக்குப் பாத்திரர் ஆவீரென்று சென்றனர். மந்தாரமுனிவரும், சமியும் இவ்வாறு ஆனதைச் சமியின் தந்தையாகிய ஒளரவர் அறிந்து தவஞ்செய்து விநாயகரை வேண்ட விநாயகமூர்த்தி இம்மரநிழலில் எழுந்தருளிச் சாபத்தீர்வருளினர்.

மந்திரத்துருமன்

ஆறாம் மன்வந்தாத்துத் தேவன்.

மந்திரநாயகர்

இவர் நந்திகேசாருக்கு மாணாக்கர். இவர்க்கு உக்ரஜ்யோதி, சத்யோஜோதி, நீலகண்டர் என (3) மாணாக்கர்,

மந்திரம்

1. மேருவிற்குத் தரணியிடம் உதித்த குமரன், திருப்பாற்கடல் கடையத் தேவர் மத்தாகக்கொண்ட அஷ்டகுலா சலங்களில் ஒன்று, 2. மந்திர மென்பது மனனஞ் செய்தவனைக் காப்பது. மந்திரங்களை முறைப்படி தீக்ஷைபெற்று நியமத்துடன் செபிக்கின் எல்லாச் சித்திகளுமுண்டாம். செபிக்கப்படு மந்திர தேவதைகள் பிரத்தியக்ஷப்பட்டுச் சகல சித்தியும் பிரசாதிப்பர். இதனால் வசீகரணம் முதலாகிய சித்திகளுண்டாம். பரகாயப் பிரவேசமுண்டாம். சாபாநுக்கிரக சாமர்த்திய முண்டாம். இம்மந்திர மேழு கோடியாக விரிவுறும். அவற்றுட் பிரணவம், பீஜம், கீலகம், ருஷி முதலிய தனித்தனி வேறாம். அம்மந்திரங்கள் பலவகை. அவற்றுள் மகா மந்திரங்களை மந்திரமுணர்ந்த ஆசிரியர்பாற் கேட்டறிக. அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் ஏகாக்ஷரி, பஞ்சாக்ஷரி, ஷடாக்ஷரி, அஷ்டாக்ஷரி, மாலா மந்திரம், சிந்தாமணி மந்திரம், சூடா மந்திரம், திரிபுரசுந்தரி மந்திரம், அந்தபூர்ணேச்வரி மந்திரம், ஸ்தூல பஞ்சாக்ஷரி மந்திரம், க்ஷேத்ரபாலக மந்திரம், மிருத்துஞ்சய மந்திரம், பிரசாத காயத்திரி மந்திரம், பஞ்சாஸ்திர மந்திரம், பஞ்சபிரம்ம மந்திரம், தக்ஷிணாமூர்த்தி மந்திரம், நீலகண்ட மந்திரம், சாப மந்திரம், வீரபத்ர, கணேச, விசாக, வித்யேச்வர, பிரம்ம, விஷ்ணு, சூர்யராதியான மந்திரங்களாம். பின்னும் துர்க்கை, சாரதை, லக்ஷ்மி, கௌரி யாதியர் மந்திரங்களும் நம: ஸ்வக, பவுஷட், வௌஷட், ஆதிபல்லவங்களும் முறைப்படி செபிக்கின் தாமுத்தேசித்த பொருள் சித்திப்பதுடன், சிரத்தையுடன் ஜெபிக்கின் உத்தேசித்த தேவதையும் பிரத்தியக்ஷமாம். இதன் விரிவுகளெல் லாம் மந்திர நிகண்டு, ருத்ர கற்பம், விச்வாமித்ராதி கற்பங்கள் முதலிய மந்திரசாஸ்திரங்களா லறிக. ருஷி மந்திரஹீனமான அனுஷ்டானம் ஆயுளைக் கெடுக்கும், சந்தவீனமான மந்திரம் வியாதியைத் தரும், தேவதாவீனமான மந்திரம் மரணத்தைத் தரும், தேவதா ரூபத்யானமில்லாத மந்திரம் பசுக்களையும் செல்வத்தையு நாசமாக்கும், ஆயுதம் வஸ்திரம் முதலியவின்றித் தியானிக்கும் அநுஷ்டானம் புத்ர மித்ரநாசஞ் செய்யும். ஆதலால் இவற்றைக் குருமுகமாயறிந்து பக்தி சிரத்தையுடன் அநுஷ்டிக்கின் இஷ்ட சித்தியுண்டாம், 3. சித்தம், சாத்யம், சவசித்தம், ரிபு (அறி) என நான்கு வகைப்படும். இவற்றுள் சித்தம் ஜபத்தாலிஷட பலத்தைத் தருவது, சாத்யம். ஜபதர்ப் பணங்களா லிஷ்டத்தைத் தருவது, ஸ்வசித்தம் பாட மாத்திரத்தா விஷ்டத்தை தருவது, ரிபு (அறி) சத்ரு நாசஞ்செய்வது.

மந்திரவாதிமதம்

இது மந்திரங்களை ஜெபித்தலால் எல்லாத் தேவர்களும் அதன் வசப்பட்டு ஜெபிப்பவர்களுக்குப் பயனைத் தருதலாலும் பரகாய பிரவேசம், ஜலதம்பனம், பரலோக சஞ்சாரம், நினைத்த உருக்கொள்ளல், சபா அநுகிரக சக்தி முதலியவற்றை யுண்டாக்கலால் மந்திரமே கடவுள் எனக் கூறும் மதம். இதன் முத்தி மந்திரத்தை ஜெபித்து தெய்வத்தன்மை அடைவது.

மந்திரி

நீதி நூலாராய்ந்து அதன் வழி ஒழுகுபவன். (சுக்~நீ.)

மந்திரிணி

மணித்வீபத்தில் சக்ராலயத்தின் தெற்குக்கோபுர பரிவார தேவிகளில் ஒருத்தி. (சிவ~ரஹ.)

மந்திரித்தொழில்

அரசர்க்கு அமைதி புரிபவர். பரம்பரையாக அரசர்க்கு அமைச்சு பூண்ட மரபினராயும், நீதி சாஸ்திரம் வேதாந்தம், தநூர்வித்தை கற்றவராயும் பலமுள்ளவர்களாயும், நற்குலத்தில் பிறந்தவராயும் இருத்தல் வேண்டும். அம்மந்திரியர், நால்வகைச் சேனை, பொக்கிஷம், பட்டணம், தேசம் இவைகளைப்பற்றியும், பசு, தானியம், இவைகளைக் காத்தலைக் குறித்தும், சம்பாதித்த பொருளை நல்ல விஷயத்தில் உபயோகித்தற் பொருட்டும், ஆலோசித்தல் வேண்டும். இம்மந்திரியர் அரசனுக்குச் சதுர்வித உபாயத்தையும் கற்பித்தல் வேண்டும். எக்காலத்தும் அரசரை விலகாது இருத்தலும், அரசர் விரும்பினவற்றைத் தாம் விரும்பாமையும், தக்க அரசர் அருகு இருக்கில் அவர்காணும்படி வேறொருவர் காதில் சொல்லுதலையும், ஒருவன் முகநோக்கிச் சிரித்தலும், அரசன் பிறனோடு இரகசியம் பேசுமிடத்து அதனைத் தான் கேளாமலும், அவனை அப்பொருளை வலிந்து கேளாமையும், அவனே கூறிற் கேட்டலும், அரசனுக்கு நன்மை தருவனவான விஷயங்களை அவன் கேளாவிடினும் இடித்துக் கூறுந்தன்மையும், அரசர் இனையர் என்று இகழாமையும், அரசனால் மதிக்கப்பட்டோம் என்று கொள்ளாத காரியத்தைச் செய்யாமையும், உடையவர் அமைச்சுத் தொழிற்கு உரியவராம்.

மந்திரோச்சாரணம்

(3) விதம்: வாசிகம், உபாம்சு. மானதம், நன்றாகப் பிறர் கேட்க உச்சரிப்பது வாசிகம், உதடு சற்று அசையும்படி உச்சரித்தல் உபாம்சு, மந்திரப் பொருளை மனத்தில் நினைத்தல் மானதம், (ஹரீகஸ்மிருதி).

மந்தேகர்

ஒருவித அரக்கர். இவர்கள் பிரமனை யெண்ணித் தவம் புரிந்து சூரியன் இரதத்தைத் தடை செய்யும் வலிமைபெற்று நாடோறும் தடைசெய்வர். இவர்களை இருடிகள் நாடோறும் கொடுக்கும் அர்க்கியத்தில் காயத்திரியெனும் அம்பால் கொலை செய்வர். இவர்கள் அவ்வகையிறந்து மீண்டும் வரத்தின் பலத்தால் உயிர்பெற்று நிற்பர்

மந்தை

காசிபர் பெண்; அநேக செந்துக்களைப் பெற்றவள்.

மந்தோதரி

1. மண்டோதரியைக் காண்க. 2. சிம்மளதேசத்தரசன் சந்திர சேகன், இவன் மனைவி குணவதி. இவ்விருவருக்கும் பிறந்த குமரி. இவள் தான் மணஞ்செய்து கொள்வதில்லை யென்று வைராக்யம்டைந்திருந்து தன் தங்கையாகிய இந்துமதிக்குத் தந்தை சுயம்வரம் நாட்ட அந்தக் காலத்தில் வந்திருந்த சாருதோஷ்ணனைக் கண்டு மணந்து அவன் பரஸ்திரிகமன முள்ளவனாகக் கண்டு அவனுடனிருத்தலை வெறுத்து இருந்தவள், (தே~பா.)

மந்யு

அக்கினியின் பெயர்.

மனகதி

இராவண தூதரில் ஒருவன்.

மனசவி

க்ஷமாவர்த்தன் தம்பி, தேவலன் இரண்டால் குமரனாகிய இருடி,

மனசுயு

(சந்) பிரவீரன் குமரன். இவன் குமரன் சாரு.

மனமுல்லை

தெளிந்த வாளினையுடைய மன்னன் விரும்பியது கொடுப்பவும் அதனைக் கொள்ளாத வீரனது கனற்சியைச் சொல்லியது. (பு வெ.)

மனம்

மநத்வசாமான்ய முடையது. அனுபரிமாணம், ஆத்மசையோகி, உள் இந்திரியம், இன்பமுதலிய சாக்ஷாத்காரத்திற்குக் கராணம், நித்தம், சங்கியை முதலிய ஐந்து குணமுடையது பரத்வம், அபரதவம், வேகமுடையது

மனவாசகம் கடந்தார்

இவர் திருவதிகையில் இருந்தவர். மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர். இவர் அருளிச்செய்த நூல் உண்மைவிளக்கம், இவர் காலம் சாலிவாகனசகம் (1177.)

மனுதேவன்

(சூ.) சுப்பிரதிகன் குமரன்.

மனுஷன்

ஆத்மா மானிடவடிவு கொண்டு தன்னைச் சுற்றிலும் பார்த்தான். அந்த ஆதிவஸ்து தன்னைத் தவிர மற்றொன்றையும் காணவில்லை. அவன் முதலில் நானே நான் என்று சொன்னான். ஆதலால் அவனுடையபெயர் நான் என்பதாக இருந்தது, அவன் பயமுற்றான் ஆதலாற்ரான் மனிதன் தனித் திருக்கையில் பயப்படுகிறான். ஆனால் தான் தன்னை விட வேறொன்றும் இல்லாததினால் நான் பயப்படவேண்டியது என்ன என்று ஆலோசித்தான். இவ்விதமாக அவனுடைய பயம் அவனை விட்டுப் போய் விட்டது. பயமானது மற்ருறொவனுக்காதலால் அவன் எதற்காகப் பயப்பட வேண்டும். அவன் ஆனந்தப்படவில்லை. ஆகையால் மனிதன் தனித்திருக்கும் போழ்து ஆனந் தப்படுகிறது இல்லை. மற்றொருவர் இருக்க வேண்டுமென்று கோரினான். உடனே அவன் ஒரு ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் ஒருவர்க் கொருவர் தழுவிக் கொண்டு இருக்கும்படியான அவ்விதமாய் விட்டான். தன்னிலிருந்தே தானே இரண்டாகுப் படி இதைச் செய்தான். இவ்விதமாக ஒரு புருஷனும் ஒரு மனைவியுமாக ஆனான். ஆகையால் இது அவ்விதமாகப் பிரிந்த சரீரமாக இருந்தது. அது தன்னிலே தானே அபூரணமான பாதி சரீர மாக இருந்தது. அவன் அவளைச் சேர்ந்தான். அதனால் மனுடர் உற்பத்தி ஆயினர். அவள் அவனிடத்தில் இருந்து என்னை உண்டாக்கி இருக்க முறையற்ற விதமாக அவன் என்னை எப்படிச் சேருவான், நான் இப்போது மாறு வேஷம் கொள்வேனென்று அனுமானத்தோடு ஆலோசித்து அவள் ஒரு பசு ஆனாள் அவன் ஒரு இடபகமாகி அவளைப் புணர்ந்தான், கன்றுகள் பிறந்தன. அவள் ஒரு பெட்டைக் குதிரை ஆனாள். அவன் ஒரு ஆண் குதிரை ஆனான், அவள் ஒரு பெட்டைச் கழுதையும் வெள்ளாடும், செம்மறியாடும் ஆனாள். அவன் ஒரு ஆண் கழுதையும் வெள்ளாடும் செம்மறியாட்டுக் கடா வுமாகிப் புணர்ந்தான். இதனால் சகத்துற்பத்தி ஆயிற்று. இது யசுர் வேதத்தில் சொல்லிய முறை. இவ்வேதக் கருத்தே புராணங்களில் முதல்மனு அவன் புத்திரியாகிய சதரூபையுடன் சேர்ந்து பலபுத்திரர்களைப் பெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது.
மனையிலக்கணம் மனையைத் தச்சுமுழத்தாலளந்து குழியாக்கி அந்தக் குழியை யெட்டிற் பெருக்கி 12ல் கழித்த மிச்சம் ஆதாயம். 9ல் பெருக்கி (10ல்) கழித்த மிச்சம் செலவு 4. இல், பெருக்கி 400ல், கழித்தமிச்சம் வயது. 7. 8ல் பெருக்கி 27ல் கழித்த மிச்சம் நக்ஷத்திரம், 3ல், பெருக்கி 8ல் கழித்த மிச்சம் யோனி, 8ல் பெருக்கி 7ல் கழித்தமிச்சம் வாரம், 9ல் பெருக்கி 4ல் கழித்த மிச்சம் ஜாதி, 4ல் பெருக்கி, 9ல் கழித்தமிச்சம் திதி, இதில் (15)க்குட்பட்டால் வளர்பிறையாகவும், (15)க்குமேல் தேய்பிறையாகவும் கொள்க. 4ல் பெருக்கி 5.ல் கழித்தமிச்சம் சூத்திர மாகக்கொள்ளவும். இவற்றுக்கு யோனி. 1க்கு கருடன், 2க்கு பூனை, 3க்கு சிங்கம், 4.க்கு நாய், 5க்கு பாம்பு, 6க்கு எலி, 7க்கு யானை, 8க்கு முசல், எனக்கொள்க. இவற்றுள் பூனை, எலி, முசல் ஆகா, அம்சம் 1க்குச் சோரம், 2க்கு புத்தி, 3க்கு சத்தி, 4.க்கு தான்யம் 5க்கு ராஜ்யம் 6க்கு லீபம், 7க்கு வருத்தம், 8க்கு ரோகம், 9க்கு சுபம். 10,6,7,8 ஆகா. சூத்திரம் 1க்கு பாலன், 2க்கு குமாரன், 3க்கு ராஜன், 4க்கு கிழவன், 5க்கு மரணம், இவற்றுள் 4,5 ஆகா. வீட்டின் அகலத்தை வலத்தில் ஐந்து பங்கு தள்ளி நின்ற பங்கில் தெரு வாசற்படி வைக்கவும், வலத்தில் 2 பங்கும், இடத்தில் 3 பங்கும் தள்ளி நின்ற பங்கு 4 உள்முற்றமாக்க நன்று வேதியர்க்குத் தெற்கு வடக்கு நீளமாகிய சந்திர பத்தியாகவும், மற்றவர்க்குக் கிழக்கு மேற்கு நீளமாகிய சூரியபத்தியாகவும் முற்ற மிருக்கவேண்டும். வீடு முதலிய கட்டமனை கோலச்செல்லுகையில் தோஷமில்லாத நாள்கொண்டு செல்லுகையில் சகுனமுதலிய பார்த்துத் தான் வீடுகட்ட கொண்ட இடம் தாழ்வற்றதாய் உயர்ந்த இடமாய்ப் பூமிலக்ஷணங் கூறியபடி வருணத்தார்க் கேற்றதாயிருத்தல் வேண்டும். தென் சார்பாய் வடக்கு நோக்கியவாசல் வேதியர்க்காம். மேற்சார்பாய்க் கீழ்நோக்கிய வாசல் மனை அரசர்க்காம். வடசார்பாய்க் கிழக்குப்பார்த்த வாசல்மனை வைசியர்க்காம். கீழ்ச்சார்பாய் மேற்குப் பார்த்த வாசல் மனை சூத்திரருக் காம். தானிருக்கு மனைக்குத் தெற்கு மேற்கில் தன்னின் மூத்தார் தாய் தந்தையர் குருகளுக்கு மனையிருத்தல் நலம். தானிருக்கும் மனைக்குத் தெற்குக் குப்பை கொட்டவும், தென்மேற்கு மூலையில் வைக்கோற் போர்க்கட்டவும், மேற்கில் எருமைத்தொழுவழிடவும், வடமேற்கில் தானியதொம்பையமைக்கவும், வடக்கில் பசுத்தொழுவங் கட்டவும், வடகிழக்கில், அடுக்களை வீடுகட்டவும், கிழக்கில் ஆட்டுக் கொட்டில் கட்டவும், தென்கிழக்கில் பொக்கிஷ வீடியற்றவும், பின்னையும், கிழக்குத் திக்கில் குளிக்கும் இடமும், அக்னி மூலையில் சமைக்குமிடமும், தெற்கில் சயனஸ்தலமும், நிருதிலையில் சாஸ்திர முதலிய வைக்குமிடமும், மேற்கில் போஜனஞ் செய்யும் இடமும், வாயு மூலையில் பசுத்தொழுவமும், வடக்கில் தன தான்யவீடும், ஈசான்யத்தில் பூசை வீடுகட்டவும் தன தான்ய முண்டாம்.
மனைகோல ஆகா நாள் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி, நன்றாம் ஒழிந்தவை மற்ற நல்ல மங்கல நாட்கள் திதியோக காரணங்கள் அறிந்து வாஸ்து புருஷன் எழுந்திருக்கு நாளறிந்து மனைகோல வேண்டும். வீட்டுக்கு லக்ன கேந்திர கிரகபலன், பிரகஸ்பதியிருக்கும் லக்னத்தில் ஸ்தம்பபிரதிஷ்டை செய்து புதனிருக்கிற லக்னத்தில் தூலமேத்திச் சுக்ரனிருக்கிற லக்னத்தில் ஒடு மூடினால் அந்த வீட்டிற்கு அக்னி, சோர, ராஜபயங்களில்லை. 5ல், 4ல் சந்திரனிருக்கச் சுக்ரவாரத்தில் வீடு கட்டினால் சம்பத்துண்டாம், வீதிவாசற்கால் வைக்குமிடம் : கிழக்கு மேற்குவீதியாயின் ஒன்பதில் மூன்று பங்கு கிழக்கில் தள்ளியும், தெற்கு வடக்கு வீதியாயின் தெற்கில் மூன்று பங்கு தள்ளியும் வாசற்கால் வைக்கவும். கதவு நிலைநிறுத்தல் : சித்திரை வடக்கு வாயில் ஐப்பசி தெற்குவாயில் ஆடி கிழக்குவாயில் தை மேற்குவாயில் வீட்டுக்கு, அறைகள், கூடங்கள், வாசல்கள் முதலானவை வைத்துக் கட்டுவதற்கு அகல நீளம் அடியளவு 6 அடி நன்மையுண்டு; 7. தரித்திரம் 8. ஷேமம், 9. பீடை, 10. பால் பாக்கியம், 11. நன்மை, 12. புத்திரஹானி, 13. வியாதி, 14. சஞ்சலம், 15. துன்பம், 16. செல்வவிருத்தி, 17. எதிரிகள் அஞ்சிகிற்பர், 18. மனை பாழாம், 19. தரித்திரம், 20. இன்பந்தரும், 21. நன்மையுண்டு, 22. தைரியவிருத்தி, 23, தீமைவிளையும், 24. மத்திமம், 25. மனையாள் மரணம், 26. சம்பத்துண்டு, 27. மிகுந்த செல்வம், 28, தெய்வகடாட்சம், 29. பால் பாக்கியம், 30. லட்சுமிவாசம், 31. துன்பமேயில்லை, 32, பொருள் சேரும், 33 நன்மையுண்டு, 34, கூடுவிட்டோட்டும், 35. லஷ்மிகடாக்ஷம், 36 வீரலக்ஷ்மி கடாக்ஷம், 44. கண்போம். கட்டியிருக்கும் வீடுகளில் குடித்தனம் போகவேண்டுமானால் மேற்கூறிய அடிகணக்கின் சுபாசபம் தெரிந்து குடிபுகுதல் நலம், கிருகவாயில் பொருத்தம் : சனனராசி ரிஷபம், மிதுனம், கடகம், கிழக்கு, வடக்கு, சிங்கம், கன்னி, துலாம், கிழக்கு, தெற்கு, விருச்சிகம், தனுசு, மகரம், தெற்கு, மேற்கு. கும்பம், மீனம், மேஷம், மேற்கு, வடக்கு. திருகாரம்ப இராசிப் பொருத்தம் : யஜமான் ராசிக்கு 3, 10, 11, வீடு உத்தமம், 2, 4, 5, 7, 9, வீடு மத்திமம், 1, 6, 8, 12, வீடு அதமம் வீட்டுக்கு வாயில் வகுத்தல் : மனையின் நீளத்தை 9 பாகமாக்கி வலது பாகத்தில் 5. பாகமும் இடது பாகத்தில் 3 பாகமும் கழித்து மற்றொரு பாகம் வாயிலாக வகுக்க உத்தமம். கிருகப்பிரவேசம் : ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களும்; ஞாயிறு, செவ்வாய், வியாழமும் அஸ்வனி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, மூன்றுத்திரங்கள், அனுஷம், திருவோணந் தவிர மற்ற நட்சத்திரங்களும், விருச்சிகம், கும்பமும் இருத்தை ஆகாவாம். அஷ்டம சுத்தமுள்ள லக்கின முத்தமம். வீடுகட்டவுதவா மரங்கள் : அத்தி, ஆல், இத்தி, அரசு, இலவு, புரசு, குச்சம், இலந்தை, பீலி, மகிழ், விளா, காற்றடி பட்டமாம், ஆலயத்தி லிருக்குமரம், மயானத்திலிருக்குமரம் இவை ஆகா. மனையில் வைக்கத்தகாத மரங்களுக்குக் கிருகத்தில் வைக்கத்தகாத மரம் காண்க. கதவினிலை : மூடின கதவைத் திறந்து நிலையில் நிற்கவைக்கத்தானே நிற்கில் நலம். நிற்காது. தானே வந்து சாத்திக் கொள்ளினும், அதிக இரைச்சலிடினும் உயிர்ச் சேதமுண்டாவதன்றி மனையும் பாழாம். கதவைச் சாத்தினால் சிக்கிச் செக்கோசை போல் இரைச்சலிட்டு நடக்குமாகில் புத்திரபாக்யமில்லை. மனையாள் மரணமாவான். மனக்கவவை யுண்டாம். கதவைச் சாத்தில் கரும்பாலைபோல் சத்தமிடில் புத்திர நாசமும் பெண்பழியு முண்டாம். கன்னியரே வாசற்கதவு சிக்கிச் செக்கோசை, மன்னிடிற் புத்திரனுமத்திமமா முன்னமே, கன்னியரைப் போக்குங் கவலை மிகப்படுத்தும் அன்னமே சொன்னேனறி”

மனுஷர் எழவர்

சநகர், சநந்தர், சநாதர், சநத் குமாரர், கபிலர், பஞ்சசிகர், ருஷபர்

மனையில் கடைக்கால் சகுனம்

மனைகோல தடைக்காலெடுக்கையில் நீர் ஊற்றிப் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூசித்துப் புஷ்பத்தை நீரிலிட வலமாகில் சம்பத்துண்டாம், இடமாகில் பகைமை; வண்டு, புழு, காணில் துன்பமாம், கல்காணில் செல்வமாம்; செங்கல், நிதி, அரணை, நண்டு, பல்லி, தேரை, சிலந்தி, முதலிய பூச்சிகள் காணில் நலம்; ஆமை, பாம்பு, தேள், உடும்பு, பூரம் காணில் மனை பாழாம்; சங்குக்குயோகமாம், வேர்கள் காணின் பொருட்சேதம். (கைலாசநாத சதகம்)

மனோகரை

ஒரு தேவமாது. புத்திரர்கள் சிசிரன், பிராணன், ரமணன்.

மனோசயன்

இவன் உச்சயனி புரத்தாசன், பாரி சுமுத்திராதேவி, குமாரன் சந்தி பாகாதன். இவன் கொடுங்கோல் அரசு செலுத்தித் தன்மசெயனால் செயிக்கப்பட்டு ஆரண்யம் அடைந்து பராசமுனிவர் வந்து கூறியபடி நாககிரியில் ஸ்நானஞ் செய்து இராம மந்திரஞ் செபித்து இராமர் தந்த அஸ்திரசஸ்திரங்களைப் பெற்றுப் பகைவரைச் செயித்து நாட்டைக் கைக்கொண்டவன்.

மனோசவன்

1, பிரியவிரதன் பேரன். மேதாதியின் குமரன். 2. விக்ர மாட்டியின் குமரன். இவன் வேதியர் செல்வங் கவர்ந்தபடியால் பகை யரசனால் வெல்லப்பட்டு நாடிழந்து அன்னமிலாது வருந்திப் பராச முநிவர் சொல்லால் மங்கலதீர்த்த ஸ்நானஞ் செய்து மீண்டும் அரசு பெற்றவன்.

மனோஞ்ஞை

சுச்சிரவன் எனும் காந்தருவன் பெண். இவள் மித்திரன் எனும் வேதியனிடம் மயல் கொண்டு அவனை வலிதிற் புணர வேதியன் இவளைப் பேயாகச் சபித்தனன். இவள் பேயாய்த் திரிந்து அசித முனிவரால் பேயுரு நீங்கிக் காவிரியாடிப் புனிதமடைந்தனள், (காவிரித்தல புராணம்.)

மனோதத்திரிதிகை விரதம்

சித்திரை மாதத்துச் சுக்கல பக்ஷத் திரிதி கையில் சோமகணேச மூர்த்தியை எண்ணி நோற்கும் விரதம். இவ்விரதங்களை இலக்ஷமி, சரஸ்வதி, அநசூயை, இந்திராணி, நோற்றுத் தம் புருஷரை அடைந்தனர்.

மனோன்மணி

1. இவன் ஆன்மாக்களின் மலங்களை நீக்கிச் சிவானந் தத்தைத் தரும் சிவசத்தி. உன் மனாசத்தி யென்பர். பரசிவத்திடம் நீங்காதிருப்பள் இவள் சூர்ய காந்தி, முக்கண், ஒரு கையில் சாமாம், வாதம், அபயம், ஒரு கை தாங்குகை, சந்திர சடாமகுடம், பால் நிறம் உடையவள். 2. ஒரு பார்ப்பினி, கங்கையாடச் சென்று கணவனை யிழந்து விசய நாராயண புரமடைந்து சிவபூசை செய்து அத்தலச் சிவகங்கை தீர்த்தத்துள் கணவனைப் பெற்றவள்,

மனோபவன்

1. மன்மதன். 2. சண்முக சேனாவீரன்.

மனோமயை

சௌபரிமுனிவர் தேவி.

மனோரத சங்கிராந்தி

ஒரு கும்பத்தில் வெல்லம் நிறைத்துப் பூஜித்து வேதியர்க்கு விருந்தளித்து அளிப்பது. இதில் சூர்யபூஜை செய்யவேண்டும்.

மனோரதன்

விண்டுரதன் குமரன். இவன் குமரன் வீடுரதன்,

மனோரமாதேவி

சுகநாசனது மனைவி வைசம்பாயனனது தாய்.

மனோரமை

1. இவள் உத்தியான வனத்தில் இருடிகள் காண உலாவித் தவத்திற்கு இடையூறு விளைத்தமையால் அரக்கனாகிய தந்தையால் பிடிபட்டுச் சவரோசியால் விடுபட்டு அவனை மணந்தவள். இந்தீவரா க்ஷனைக் காண்க, 2. மேனைக்கு ஒரு பெயர். 3. இந்தீவராக்ஷன் பெண். 4. ஒரு அப்ஸரசு. சரஸ்வதி நதியின் கிளைநதி.

மனோவதி

பிரமன் பட்டணம்.

மனோவனம்

சடியரசன் நந்தவனம்,

மன்னனார்

வீரநாராயண புரத்துப் பெருமாள்

மன்னமார்த்தண்டன்

ஒரு அரசன். இவன் சிவனடியவர்க்கு வேண்டிய பொருள் அளித்து வருங்காலையில் பஞ்சம் வர அதனால் சிவமூர்த்தியை வேண்டிப் பொற்கிழி பெற்றுப் பஞ்சம் போக்கியவன்.

மன்னவன் தொழில்

ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல், முற்கூறிய மூன்றும் பொதுவும் பிற்கூறிய இரண்டும் சிறப்புமாம். வேள்வி, இராஜ சூயமும், துரங்கவேள்வியுமாம். ஆவும், கனகமும், அன்னமும், மனையும், தண்ணடையும், கன்னியரும் பூமியுங்கொடுத்தல் அவர்க்குரிய ஈதலாம். நாற்படையானும் கொடையானும் அநத்தின் வழாமற்காத்தல் அவர்க்குரிய காத்தலாம். தன்னாற் காக்கப்படும் உயிர்களுக்கு ஏதம் செய்யும் மக்களை யாயினும் விலங்குகளை யேனும் பகைவரையேனும், அறஞ் செய்யா அரசையேனும், விதிவழி தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இவ்வாறு செய்தல் அரசர்க்கு அறம் பொருளின்பம் பயக்கும். பின்னரும் களவு செய்தோர் கையினின்று பொருள் கோடலும், ஆறிலொன்று கோடலும், சுங்கம் கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப் பொருள் நும்மிடத்து நான் கொள்வல் எனக்கூறிக் கொண்டு கோடலும், மறம் பொருளாகப் பகைவர் நாடு கோடலும், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்முயங் கோடலும், பொருளில் வழி வாணிகஞ் செய்துகோடலும், அறத்திற்றிரிந் தாரைத் தண்டத்திற்கு மாறுபொருள் கோடலும் பிறவுமாம்.

மன்னாதசுவாமி

இவர் பர்வதராச புத்திரியாகிய பச்சை மலை யம்மனை மணக்க அருசவுருவுடன் எழுந்தருளிய சிவாவசரம் இவரை மன்னார் சுவாமி என்பர்.

மன்னைக்காஞ்சி

அகன்ற பூமியினுள்ளார் மயங்கவீர சுவர்க்கத்தே சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது, (பு. வெ.)

மன்மதன்

1. விஷ்ணுமூர்த்தியின் மனதில் பிறந்தவன் 2. இவன் ஆன்மாக்களுக்குக் காமத்தை விளைத்துப் பிரசாவிருத்தி செய்விப்பவன். இவன் தேவி ரதி. இவனுக்குக் கரும்புவில் வண்டு நாண், அரவிந்தம், அசோகம், மாம் பூ, முல்லை, நீலம், பாணங்கள். மச்சம் கொடி, இலஞ்சி, மாலை, சோலை, படை வீடு, மங்கையர்சேனைகள், கவரி தென்னம் பாளை, மல்லிகை காளாஞ்சி தாழைமடல் வாள், கிளி குதிரை, தென்றல் தேர், இருள் யானை, கடல் முரசம், குயில் எக்காளம், சந்திரன் குடை, இவன் இவற்றைக் கொண்டு உலகத்தவரைத் தனக்குள் அடக்கியிருக் கையில் பிரமாதி தேவர்கள் குமாரக்கடவுள் உற்பத்தியின் பொருட்டுச் சிவபிரான் மீது படையேவ ஏவினர். இவன் பயந்து தேவரின் சாபத்திற்கு அஞ்சி உமது சாபத்தால் கெடுதலினும் சிவகோபத்திற் குள்ளாயின் மீட்சியுண்டாமென எண்ணிச் சிவமூர்த்தி யோகத் திருக்கையில் சென்று தனது அம்பினைத் தூண்டினன். சிவ மூர்த்தி கண்விழித்துப் பார்க்கவும் இவன் சாம்பராயினன். இதனையறிந்த இரதி, சிவமூர்த்தியைப் பணிந்து புருஷ பிக்ஷை கேட்கச் சிவமூர்த்தி கருணை கூர்ந்து இரதியை நோக்கி இவன் உனக்கு மாத்திரம் உருவத்துடனும் மற்ற தேவராதியர்க்கு அருவமாயிருக்க என அனுக்கிரகித்தனர். அதனால் இவனுக்கு அநங்கன் எனப்பெயர். 3. இவன் கிருஷ்ணாவதா ரத்தில் பிரத்தியும்கனாகப் பிறந்தனன். பிரத்தியும்நனைக் காண்க. இவன் தம்பி சாமன். 4. இவன் மன்மதனாகப் பிறக்கு முன் பிறப்பில் ஒரு அரசன் தன் மனைவியுடன் வேட்டைக்குச் சென்று ஆண்டு ஒரு இருடி வளர்த்த மானைக் கொன்று அவரால் சாம்பராகச் சாபம் பெற்றவன். (பூவாளூர் புராணம்) அசித்தனைக் காண்க, 5. நெற்றி விழியாலி றத்தற்குக் காரணம் பிரமனைக் காண்க. 6. கட்டியங்காரனுக்கு மைத்துனனாகிய மதனன் தம்பி.

மன்மதன் விழா

இதனுடைய காலவரையறை ஏழுதினம், பெரிய நகரங்களில் நடை பெறுவதுண்டு. உத்தமனான தலைமகனை மணஞ் செய்துகொள்ள எண்ணிய கன்னியர்கள் இவ்விழா நாட்களில் தத்தமக்கியன்ற தானங்களையும், தருமங்களையும், செய்வார்கள். மன்மதனுடைய ஆலயத்தில் சென்று அவர்கள் வழிபடுவதுமுண்டு. இராசகிரிய நகரத்தில் இவ்விழா நடந்தபொழுது வழிபாடு செய்தற்குக் காமன் தோட்டத்தை யடைந்த பதுமாபதி அங்கே உதயணனைக் கண்டு விருப்புறுவானாயினன், (பெ. கதை)

மன்மதன்கணை

(5) வனசம், சூதம், அசோகு, முல்லை, நீலம் இவை முறையே உன்மத்தம், மதனம், சம்போகம், சந்தாபம், வசீகரணம், எனவும் பெயர் பெறும். இவற்றின் அவத்தைகளாவன: சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம். அவை: சுப்பிரயோகம் சொல்லும் நினைவும், விப்பிரயோகம் வெய்துயிர்த் திரங்கல், சோகம் வெதுப்பும் துய்ப்பன தெவிட்டலும், மோகம் அழுங்கலும், மொழிபல பிதற்றலும், மரணம் அயர்ப்பும் மரணமும் தருவன.

மன்மதபாணச் செயல்

உனமாதம், ரோதனம், சம்மோஹனம், சோஷணம், மாரணம்.

மன்யு

ஏகாதசருத்ரருள் ஒருவன். தேவி புத்தி, 2. வீரவிரதனுக்குப் பொசையிடம் உதித்த குமரன். தேவி சத்தியை. குமரன் பவநன். 3. வித்தன் குமரன், பரகஷதான். 4. தேவர்கள் சௌண்ட புருஷ பிராப் தியின் பொருட்டுச் சிவபிரானை வேண்ட இவர் மன்யு என்பவனைத் தந்து அசுரவதை செய்வித்தனர். (பிரம புரா)

மன்றுளாடியபிள்ளை

இவர் ஓர் தமிழ்க் கவிஞர். குடும்பத்தைச் சிறுவிலை காலத்துக் காத்தமையின் அக்கவிஞர் இவரை நோக்கி “ஏகாதசியுஞ் சிவராத்திரியு மென்னில்லை விட்டுப், போகாதிருக்கின்ற நாளினிலே யென் புதல்வர்வற்ற, லாகா மற்றங்கை யென் பாகாமல் யானுமகத்தவளுஞ், சாகா மற்காக்க வல்லான் மன்றுளாடுந் தயா நிதியே. ” என்று புகழ்ந்தனர்.

மன்றைத் திருவிருந்தான்

இவன் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே இருந்த மன்றச்ச நல்லூராண்ட சிற்றரசன். இது, இப்போது மணச்சலூர் எனப்படுகிறது.

மன்வந்தரம்

திவ்யவருடம் ஐயாயிரத்திரு நூற்று நாற்பத்திரண்டும், பத்துமாதம், எட்டுநாள், நான்குசாமம், இரண்டு முகூர்த்தம், காலே யரைக்காலே காணியரைக்காணி நாழிகை, இவ்வளவுகாலம் கொண்ட எழுபத்தொரு சதுர்யுகம்கொண்ட இந்தக் கால அளவு ஒருமனு அரசாள் வான். மற்ற மனுக்களின் சரிதங்களை அவர்கள் பெயரிற் காண்க. சுவரோசிஷ மன்வந்தரத்தில் விபஸ்சித்து. என்னும் தேவபதியும் உத்தம மன்வந்தாத்தில் சுசாந்தன் எனும் அமரபதியும், தாமச மன்வந்தரத்தில் சிபியென்னும் இந்திரனும் ரைவத மன்வந்தரத்தில் வாசவனும், சாக்ஷ சமன்வந்தரத் தில் மனோசவசன் என்னும் தேவபதியும் வைவச்சுத மன்வந்தரத்தில் புரந்தான் எனும் பிருந்தாரகேந்திரனும், சூர்யாதி தேவர்களையும் வசிட்டாதி இருடிகளையும் நடத்துவர் என்பர். (பாகவதம்) முதல் மன்வந்தரம் சுவாயம்பு மனு; புத்ரர் பிரிய விரதன், உத்தானபாதன் குடிகள்; யமாள் என்கிற தேவர்கள். இருடிகள் மரீசி, அத்திரி, ஆங்கீரசர், கிருது, புலத்தியர், வசிட்டர். அரியின் அவதாரம் யஞ்ஞமூர்த்தி, அல்லது சசிகேசன், இவர் ஆகுதியிடத்துப் பிறந்தவர். இவரே இந்திரனாக இருந்தனர். இரண்டாவது மன்வந்தாம்; சுவாரோ சிஷமனு இவன் அக்னிபுத்ரன் எனவும், சப்தராசசி குமரன் எனவும் கூறுவர். புத்ரர்; சயித்திரதன், கிம்புருடன், ஹரிக்னன், சுக்குதி, சோதிர்யன், மூர்த்திரயன், ஸ்மயன். குடிகன்; துஷிதாள், பராவதர், இருடிகள்; அக்னீத்ரர், அக்கினிவாகர், மேதாதி, வசு, சோதிஷ்மான், துதிமான், அவ்யர், சுவநர், சுபுரு, மூர்ச்சமி, தம்பன், பிராணன், தாந்தன், பிரிடிதன், திமிரன். அரியின் அவதாரம்; ரிபு. அல்லது துடிதன். இந்திரன்; ரோசான் (விவசித்). மூன்றாமன் வந்தரம்; உத்தம மனு இவன் பிரிய விரத புத்ரன். குடிகள்; வேதசருதர், பத்திரர், சுதாமர், சத்தியர், சிவர், பிரமார்த்தனர், வசவர்த்தி. இருடிகள்; சுதபன், சவான், மகன், சுக்ரன், பிரமதன் அரியினவதாரம்; சத்திய சேனையிடம் உதித்த சத்தியநேசர். இந்திரன்; சத்யசித் அல்லது (சுசாந்தி.) நான்காமன் வந்தரம்; மனு தாமசமனு; இவன் உத்தமனுக்குப் பிராதா. இவன் அகத்தியரால் யானையாகச் சபிக்கப்பட்டான். புதார்; துதி, போதன், சௌதபசியன், தபசுவன், தாபன், தபோவதி, கல்மாஷன், தன்வி, தந்விகுலன். குடிகள்; வைத்ருதர், சத்தியர், சுரர், மருவியர், சுதையர், சோமபர், இருடிகள்; சோத்திர தாதா, பிருது, காவியன், சயித்திரன், இதன், தனிகன், பீவான். அரியினவதாரம்; ஸ்ரீஅரி. இந்திரன் திரிசிகன். (சவி.) ஐந்தாமன்வந்தரம்; மனு ரைவ தமனு; இவன் தாமச னென்னும் மனுவின் சகோதரன். இவன் குமரி, ரேவதி, பலராமர் தேவி. குடிகள்; பூதாயர், அமிர்தர், உபாகநிரதர், வைகுந்தர், சமேதர், சம்பூதர். இருடிகள்; இரண்யரோமா, வேதசிரசு, ஊர்த்தபாகு, தேவார்த்தி, தேவவாகு, சுதாமன், பர்ச்சனி. அரியினவதாரம்; சம்பூதர், இவர் சம்பூதி வயிற்றுதித்தவர் இந்திரன்; விபு அல்லது சுகன், ஆறாமன்வந்தரம்; மனு சாஷலமனு, இவன் சஷவின் புத்ரன், இவனுக்கு விஷ்ணுபுத்திரராகப் பிறந்து கடல் கடைந்தனர். குடிகள் ஆப்பியாள், ஆர்த்தியர் பிரபாசர், பவியர், பிரதானர், மானுபாவர், பிரசூதர், விலேக்கியர், ரிபுக்கள், லேகர், இருடிகள்;அவிஷ்மான், விரகன், துட்டிதர், சுமேதர், விரிசன், நவிட்மான், உத்தமன், மதுவத்ரி, சயிட்ணு, கிருகு, நகர், விசுவர், சுதர்மா, விரசசு, அசகிஷ்ணு, ஆங்கீரஸ புத்திரராகிய நதவலேயர், அரியினவதாரம்; அதிதர் அல்லது வைகுண்டர், விகுண்டையினிடத் துதித்தவர். இந்திரன்; மந்தரத்துருமன் அல்லது மனோசவன், ஏழாம்மன்வந்தரம்; மனு வைவச்சுத மனு, இவன் விவசவான் குமரன்; இவனுக்குச் சிரார்த்த தேவன் எனவும் பெயர். குடிகள்; ஆதித்யர், வசுக்கள், விசுவதேலர், உருத்திரர், மருத்துவர், மகாராஜிகர், சாத்யர். இருடிகள்;காச்யபர், அத்ரி, வசிட்டர், விச்வாமிதசர், கெளதமர், ஜமதக்னி, பாரத்வாசர், அரியினவதாரம்; வாமனர், அதிதிபிடம் உதித்தவர். இந்திரன்; புரந்தரன். எட்டாமன் வந்தாம்; மனு சூர்யசாவர்ணி மனு, இவர் புத்ரர் நிர்மோகன், விரசன். குடிகள்; சுதபர், விசர், அமிர்த பிரபர், முக்யர், சாத்யர். இருடிகள்; வியாசர் பரசிராமர், அசுவத்தாமா, கிருபாச்சாரி, இருசயசிருங்கர், கீர்த்திமான், சாவலன், கார்க்கியர் பிருது, அக்னி, ஜன்மியர், தாதா, கபீனகர், கபீவான், அரியினவதாரம்; சர்வபூமன். இந்திரன்; மாபலி. ஒன்பதாமன்வந்தரம்; மனுரைப்பியன், (தக்ஷசாவர்ணிமனு) இவன் குமரர் திருத்திகேது தீப்தகேது, அவ்யயன், அவ்யகதன், சத்யதர்சி, நிருச்சவன், அரண்யன், பிரகாசன், நிருத்துரோகன், சத்தியவாக்கு, பிருதி. குடிகள்; பார், மரிசி, கெற்கர், சமதர். இருடிகள் துதிமான், சவனன், அவ்யயன், வசு, மேதா திதி, சோதிஷ்மான், சத்தியன். அரியினவதாரம்;இருஷபன், இந்திரன் சுரதன் அல்லது அற்புதன். பத்தாமன் வந்தரம்; மனு பிரமசாவர்ணி, (இவன் உப பசுலோகன் குமரன்) இவன் குமரர் பூரி, சஷேணன். குடிகள் சுத்திராமர், விபுத்திசர், சுகர், விருத்தர். இருடிகள் அவிஷ்மான், சுகிர்தி, சத்தி, ஆபோமூர்த்தி, நாபாகன், பிரதி, மோசன், சத்யதேது, ஹவி, மத்பிரபு. அரியினவதாரம்; விஷபவச்சேனர், இந்திரன்; சம்பு அல்லது சாந்தி. பதினோராமன் வந்தரம்; மனு தர் மசாவர்ணி, குடிகள்; விகங்கமர், காமாள், நிர்வாணருசிகள். இருடிகள்; சுருதர், நிச்சார், அக்னிதேஜஸ், வபுஷ்டுமான், விஷ்ணி, ஆருணி, அவிட்மான, அருகன். அரியினவதாரம்; தர்மகேது, இந்திரன். வைதிருதி அல்லது விருடன். பன்னிரண்டாமன் வந்தரம்; மனு ருத்ரசாவர்ணி, அல்லது பத்திரசா வர்ணி, இவர் புத்ரர், தேவவசு, தேவதேவன் குடிகள் அரிதர், உரோகிதர், தமோனிசர், சுகன்மர், சுராபர். இருடிகள் தபோமூர்த்தி, தபதி, ஆக்னியித்ரர், சதபன், திதி, தபோத்திருதி, தபதானன். அரியினவதாரம்; சுதர்மர். இந்திரன் ருதுமான். பதின்மூன்றா மன்வந்தரம்; மனு தேவசாவர்ணிமனு; அல்லது உரோச்சியமனு. இவன் ருசிப்பிரசாபதியின் குமரன், இவன் குமரர், சித்ரசேனன், விசித்திரன், குடிகள் சுகர்மர், சுந்திரமர், சுத்திரர், சுதர்மர், சௌஞ்ஞர். இருடிகள் நிர்மோகன், தத்வதர்சி, பிரம்கம்பன், திருச்சுகன், திதிமான், அவ்வேயன், சுரதன், விஷ்ணுவினவதாரம்; யோகேச்வார். இந்திரன் திவஸ்பதி. பதினான்கா மன்வந்தரம்; மனு இந்திர சாவர்ணி, அல்லது (பௌமியன்) இவன் புத்ரர் சம்பீரன், சுவாது. குடிகள் பவித்திரர், சாக்ஷசர், கனிட்டர், பிராசிரவர், விருத்தர். இருடிகள் அக்னிபாகு, சுசி, சுக்கிரன், மாகதன், சீர்த்தி, ஆக்னீதரன், உத்தன், அசிதன், விஷ்ணுவினம்சம் பிருகத்பானு, இந்திரன் சசி,

மமகாரன்

மாயையின் தந்தை. தேவி மோகினி, இவர்கள் சரிதையை மாயுயைக் காண்க.

மமதை

பவ்வியர் அல்லது உதத்தியர் பாரி; இவளை வியாழன் புணருகையில் வயிற்றிலிருந்த தீர்க்கதமன் எனுஞ் சிசு இந்நடக்கையை அறிந்து வியாழனை வெறுக்க, வியாழன் அச்சிசுவை நோக்கி என் விருப் பைக் கெடுத்தமையால் உனக்கு இரண்டு கண்களும் கெடுக எனச் சபித்தனன். இவளிடம் பரத்துவாசர் பிறந்தனர்.

மயக்கவணி

அஃதாவது, ஒப்புமையினாலே ஒரு பொருளை மற்றொரு பொருளாக வறிதலாம். இதனை வடநூலார் பிராந்திமதலங்கார மென்பர். பிராந்தியாவது அது வாகாததை யதுவென வறிதல்,

மயக்குச்சர்ப்பம்

இது கண்ணில் விஷமுடையது. இதன் பார்வைபடின் மயக்கமும் சுழற்சியுமுண்டாம்.

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் எனும் ஆறுறுப்பும், மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் பலவாறு மயங்கி வருவது.

மயன்

திதிபுத்திரன். அசுரத்தச்சன். இவன் குமரர் மாயாவி, துந்துபி, குமரி, இராவணன் தேவியாகிய மந்தோதரி. காண்டவவனத்தை அருச்சுநன் எரிக்கை யில் அருச்சுநனை அபயமடைந்து உயிர் தப்பினவன். இவனை விச்வகர்மன் குமரனென்றுங் கூறுவர். இவனுக்கு மற்றொரு குமரன் மநு. ஒரு காலத்து இந்திரன் இவனது உயிரைப் போக்கினன், விச்சிரவா குமரன் எனவுங் கூறுவர். அசுரர்க்குத் திரிபுரமும் அமுதக்கிணறும் நிருமித்துக்கொடுத்து இறந்த அசாரை அதிலிட்டுப் பிழைப்பிக்க இவற்றை யறிந்த விஷ்ணு பிரமனைக் கன்றாக்கித் தாம் பசுவாய்ச் சென்ற அக்கிணற்றை நக்கிவிடக்கண்டு திகைத்த வன். தருமபுத்திரருக்குச் சபை நிருமித்துக் கொடுத்தவன்.

மயம்

சிற்பநூல்

மயானம்

பிரமன் முதலில் பூதசிருட்டிகளைச் செய்ய அப்பூதங்கள் பிராணிகளைப் பயமுறுத்தி வருத்தத் தொடங்கின. பிரமன் சிவமூர்த்தியை வேண்ட சிவமூர்த்தி அவற்றை அடக்கிப் பரிசுத்தமாய் சநங்கள் சஞ்சரிக்காத இடமாதலால் அங்குத் தங்கினர். பார அநு. (207 அத்).

மயிடன்

1. சூரபன்மன் மந்திரி. 2. அதிகாயனுக்குத் தூதன். இலக்கு மணரிடத்துச் சென்று அதிகாயன் யுத்தத்திற்கு வரவைக் கூறினவன்,

மயித்திரி

யஞ்சவல்கியர் தேவி. சீமந்தினிக்குச் சோமவாரவிரதம் நோற்பித்தவள்.

மயித்திரேயி

யஞ்ஞவற்கியருக்குத் தேவி.

மயிந்தன்

ஒரு வாநரத்தலைவன், சுக்கிரீவ சேநாவீரன். வச்சிரமுட்டியைக் கொன்றவன், இவனை இராமமூர்த்தி விபீஷணரிடம் அனுப்பினர்.

மயிர்ப்பாலம்

யோகக் காட்சியில் புருவத்திற்கும் நாசிக்கும் இடையிற் காணப் படும் காட்சி,

மயிலாநந்தர்

திருவள்ளுவரின் மாணாக்கருள் ஒருவர்.

மயிலார்

இது, தைமாதத்தில் மதரசங்கிராந்திகழித்த ஏழு அல்லது பதினைந்தாநாட்களில் கன்னிகையர் அழகும், கல்வியும், செல்வமும், ஆயுளுமுள்ள நல்ல கணவன் குமாரக் கடவுளைப்போல் பெறவேண்டிக் கந்தமூர்த்தியை யெண்ணிச் செய்யும் விரதம் என்பர். அன்றி மயிலுருக் கொண்டு அம்மை சிவமூர்த்தியையடைய அநுட்டிந்த நோன்பென்பர். இவ்விரதம் அநுட்டிப்போர் நல்ல புருஷனையும் சம்பத்தினையும் அடைவர்.

மயிலைநாதர்

1. நன்னூற்கு உரையியற்றியதற்கு உரையறி நன்னூல் எனும் பெயர் இட்ட சைந நூலாசிரியர், 2. நன்னூற்குச் சீயகங்கன் எனும் அரசன் காலத்திலோ அவனுக்குப் பிற்பட்டார் காலத்திலோ உரைகண்ட சைந ஆசிரியர், மயிலைநாதர் திருமயிலையில் சைந ஆலயத்திலிருந்த நேமிநாத தீர்த்தங்கர் பெயர்.

மயிலைப்பூம்பாவைக் குழந்தைமுதலியார்

இவர் புலவர்களை யாதரித்துக் கவிபெற்ற கொடையாளர். இவர் தந்தையார் வேலப்பமுதலியார். இவர்மீது காளிமுத்து எனுந் தாசி “பொன்னார் மருமத்தன் பூம்பாவை வேலப்ப பூபனருள், மன்னா குழந்தைக் குருநாத கீத வரோதயனே, பன்னாண் மலற்குழற் பின்னா ளெந்நாளும் பரிந்தணைய, நன்னாளிந் நாள் வரச் சொன்னான் மின்னாள் மணநாளென்னவே” எனப் பல கவி பாடியிருக் கின்றனள்.

மயிலைமான்

வாமநாதபுரம் நேமிநாத தீர்த்தங்கர் சொற்படி கடல் கொண்ட போது அதற்கு மேற்கில் தன்பேரால் மயிலையென்னும் பட்டணங்கட்டிய சைந அரசன். இதுவே மயிலாப்பூர்,

மயில்

1 இது அழகான பக்ஷி. இது, உஷ்ணமான நாடுகளின் காடுகளில் உண்டு. இது பசுமை, மஞ்சள், நீலம், பொன்னிறங் கலந்த சிறகுகளை யுடையது. இதன் தலை சிறியது உச்சியில் கொண்டையுண்டு, இதன் அலகு கோழியின் அலகுபோலிருக்கும், கழுத்து நீண்டும், இரெக்கைகள் குறுகியு மிருக்கும். இதற்கு நான்கு விரல்கள் பெற்ற நீண்ட கால்கள் உண்டு. வால் பல கண்கள் போன்ற புள்ளிகளைப் பெற்று மிக நீண்டிருக்கும். இது குளிர்ந்த மேகத்தைக் கண்டும் தன் பேட்டைக் கண்டு களித்த காலத்தும் சிறகை வட்டமாக விரித்துக் களிப்புடன் ஆடுதலைப் பார்க்க அழகாக இருக்கும். பெண் பறவைக்கு நீண்ட வாலும் கொண்டையுமில்லை, இது புழு பூச்சிகளைத் தின்னும், பாம்பையும் கொத்திக் கொல்லும். இவ்வினத்தில் வெள்ளை மயிலும் உண்டு, 2. இந்து தேசத்து நடிக்கும் பறவை, இது, உயர்ந்த கோழி போன்ற வுருவுடையது. கழுத்து நீளம், ஆணுக்கு உச்சியில் கொண்டை. தோகை மிக நீண்டு பசுமை கலந்த பொன்னிறமாய்க் கடைசியில் கண்கள் பெற்றிருக்கும். இதன் முதுகு வெண்மை, கருமை, செம்மை கலந்தது. இது, சாக மாம்ச பக்ஷணி. இதன் பேடுகளுக்குத் தோகைகளில்லை. இது இரு சந்திகளிலும் தோகை விரித்தாடும், இது பாம்புகளைக் கொல்லும். 3. விருக்ஷசேனன் கொடி. குமாரக் கடவுள் வாகனம். (பா. நு.)

மயில்ராவணன்

(இக்கதை நாரதர் கௌதமருக்குக் கூறியதாக எழுதியிருக்கிற தாயினும் இராமாயணத்திற் கூருததனால் சதகண்ட இராவணன் கதைபோல் கற்பனாதையே) இக்கதை, இராவணன் தன் சேனையிழந்து விசனப் படுகையில் பிரகஸ்தன் மயில் இராவணன் செய்தி கூற, இராவணன் அவனைவிளித்துத் தன் துன்பங்கூறி இராமலக்குவரைத் தூக்கிச்செல்லக் கேட்க, மயில் இராவணன் இசைந்து அவர்களைத் தூக்கிச்சென்று காளிக்குப் பலியிடுவதாக வாக்களித்தனன். இந்த ரகஸ்யத்தைத் திரிசடை கேட்டு வாயு மூலமாய் விபீஷணருக் கறிவிக்க, அதை விபீஷணர் இராமர் சமுகத்து விண்ணப்பித்தனர். இதனைக் கேட்ட சுக்ரீவன் மயில் இராவணன் சரிதம் கூறுக என விபீஷணர் கூறுவதாக இருக்கிறது. மயில் இராவணன் தாயாதி வர்க்கத்தில் இராவணனுக்குச் சகோதரன், இவன் பாதாள லங்காதிபதி. இவன் இராவணன் வேண்ட இராமலக்குமணரைக் காளிதேவிக்குப் பலி தருவதாய் வாக்களித்துச் சென்றனன். இதனை அநுமானறிந்து தமது வாலினால் ஒரு கோட்டை நிருமித்து அதற்குத் தமது வாயே வாயிலாக வைத்து இராம லக்குமணரையுஞ் சேனைகளையும் காத்து வந்தனர். இவ்வாறிருக்கையில் மயிலிராவணன் சதூரன் முதலிய தன் மந்திரியருடன் இலங்கை நோக்கிப் புறப்பட்டனன். இச்செய்தியறிந்த அவன் தேவியாகிய வர்ணமாலிகை அவனை வெகுவாகத் தடுத்தனள். அவ்வாறு தடுக்கவும் கேளாது சென்று மேலைக் கடற்கரையடைந்து தன் மந்திரிகளை நோக்கி இராமலக்குமணரைக் கொண்டு வருவீர்களோ வென, அவர்களில் ஒருவனாகிய சதுரன் அவ்வாறு செய்வேனென்று புறப்பட்டு இலங்கை சென்று வாற்கோட்டைக்குள் நுழைய வலியற்றுத் திரும்பினன், இரண்டாவது மந்திரியாகிய சாத்தியன் புறப்பட்டுச் சென்று பக்ஷியுருக்கொண்டு பறந்து வாயிற்காணாது பூமியைக்கல்லிவாற் கோட்டைக்குள் நுழைய வால் அசைதல்கண்ட அநுமான் வாலை யிறுக்கக் கழுத்து முகம் முதலிய நசுங்கி யுடல்தேய்ந்து திரும்பினன், பின் மயில் இராவணன் இலங்கை சென்று நிலையறிந்து விபீஷணர் போலுருக்கொண்டு அநுமன் வாய்வழி புகுந்து பெட்டியிலிருந்த இராமலஷ்மணர்களை யெடுத்துக் கொண்டு செவிவழி திரும்பிப் பாதாளலங்கை சென்று பெட்டியைக் காவலில் இட்டனன். பின் அசரீரி மயில் இராவணனுக்கு ஆபத்தைத் தெரிவித்தது. இப்பால் விபீஷணர் உள்ளிருந்து வெளிவர அநுமான் கண்டு நீர் இப்போது தான் வெளிவந்தீரே மீண்டும் என்னையறியாது எவ்வாறு சென்றீர் என, விபீஷணர் திடுகிட்டு மோசம்போனோம் என்று கூறக்கேட்டு அநுமான் விபீஷணரிடம் பாதாள லங்கைக்கு வழிகேட்டுணர்ந்து, நடுக்கடலில் படர்ந்த தாமரை நாளத்தில் புகையுருக்கொண்டு உட்புகுந்து அக்னிக் கோட்டையைக் கண்டு அதனருகிற் செல்கையில் கண்டோர் இக்குரங்கைப் பிடிப்போம் என்று முயல, அவ்வரக்கர்களைக் கொல்கையில் மச்சவல்லபன் கேட்டுச் சண்டை செய்ய, அநுமன் அம்மச்சவல்லபனுடன் போரிட்டு இளைத்துப் பின்னிட்டு அவனை நோக்கி உன் வரலாறு என் எனக் கேட்க, மச்சவல்லபன் போரில் ஒப்பாரிகேட்ப தென் என அநுமான் கூறுவான். நான் இதுவரையில் உன்னைப் போல் வீரனைக் கண்டதின்று. இவ்வகை வீரன் இவ்வரக்கனிடம் சேவகஞ்செய்யவந்தே னென்பதால் வினவுகின்றேன் என, மச்சவல்லபன் கூறுவான். என் தந்தை அநுமான், அவ்வனுமான் இராமகாரியமாகக் கடல் தாவுகையில் சாயாக்கிராகியாகிய லச்சையால் கிரகிக்கப்பட்டு வாய்வழி புகுந்து வயிற்றைக்கிழித்து வெளிவருகையில் உண்டான வியர்வை கடலில்விழ அதனைத் திமியெனும் மீன் விழுங்கிக் கருக்கொண்டு என்னைப் பெற்றது. நான் பாட்டனாராகிய வாயுவால் சகல வரங்களையு மடைந்தேன். இது என்வாலாறு என்றனன். இதைக்கேட்ட அநுமான், அவ்வநுமான் நான் எனச், குமரன் பணிந்தனன். வந்த செய்தியை அரமன் அறிவிக்க மச்ச வல்லபன் கூறுவான், நான் தனித்துக் கடற்கரைக்கணிருக்கையில் என் வன்மையறிந்த மயில்ராவணன் என்னை வேண்டிக் கோட்டையைக் காக்கக் கேட்ட வரப்படி நான் கோட்டையைச் காக்கிறேன், நான் உம்மை விடுதல் தகுதியன்றாயினும் என்னுயிர் நிலை யென்மார்பாம். ஆதலால் அதில் ஒரு குத்துகுத்தின் நான் மூர்ச்சிப்பேன், பின் கோட்டைக்குள் செல்க என அவ்வாறு செய்து கோட்டைக்குள் சென்று முறையே கல், பித்தளை, செம்பு, வெண்கலம், பொன், பவளம், முத்துக்கோட்டைகளுக்குக் காவலாயிருந்த இராக்கதர்களை வென்று பொழுதுபோக ஒரு பூங்காவிலிருக்கையில் மயிலிராவணன் தன் மனைவியுடன் கூடிக்குலாவிப் பாதியிரவி லெழுந்து தன் உடன் பிறந்தாளாகிய தூரதண்டியின் குமரன் தனக்குப்பின் பட்டமடைவான் என்று அசரீரியால் சொல்லக்கேட்டு அவளையும் அவள் குமரனையும் சிறையிட்டிருந்தவன், தூரதண்டியை யழைத்துச் காளி பூசைக்குச் சலம் கொண்டுவரக் கூற அவள் தன்னையுங் குமானையுங் கொல்ல வெண்ணு கிறானென்று துன்புற, மயில் இராவணன் விடியுமுன் இராமலக்குமணரைக் கொல்லவென அவள் ஐயோ! நான் செய்த பாபம் போதாதோ சொல்லேன் என்று மறுக்க இவன் வாள் கொண்டு ஓச்சச்செல்ல உடன்பட்டு அதுமானிருக் கும் நந்தவனத்திற்குள் விசனத்துடன் இராமலக்ஷ்மணர்களுக்கு நேர்ந்த விபத்தை நோக்தித் துன்புறுகையில் இவற்றை ஆண்டு மரத்தின் மீது இருந்த அநுமான் கேட்டு அசரீரிபோல் ஏன் துன்புறுகிறாய் என்று வினாவிக் கீழிறங்கி அவளுக்குத் தான் அநுமான் என்று பெரிய உருவெடுத்துக் காட்டித் திடப்படுத்திக் கால்விலங்கு நீக்கி, அவன் வரலாறு கேட்டுத் தன் புருஷன் கால தத்தனை இவன் கொன்றதும் மகனாகிய நீலமேகனைச் சிறையிட்டதும் அறிந்து கொண்டு அநுமான் கூறுகின்றார், அம்மா என்னைக் கோட்டை வாயிற்குள் கொண்டு விடு, பின் நான் உன்னைக் காத்துக்கொள்ளுகிறேன் என்று அந்நீர்க் குடத்திவிட்ட மாங்கொத்தினுள் சிறுவடிவமாக இருந்தனர். தூரதண்டியும் தங்கக்கோட்டை வாயில் கடக்க, அக்குப் பகைவர் வரவைத் தெரிவிக்கும் துலாயந்திரம் சாய்ந்ததறிந்து அரக்கர் தூரதண்டியைச் சோதிக்க, அநுமான் தம்முருக்கொண்டு அவர்களைச் சாடிக் கடகனையும் அவன் மனைவியையும் வாலா விழுத்து அவன் வேண்டவிட்டு விட்சிமுகனைக் கொன்று, நீலமேகன் காட்டிய காளி கோயிலுட்புகுந்து, இராமலக்ஷ்மணர் இருந்த பெட்டியை யெடுத்து, கிருதமாலாபர்வதத்தில் பத்திரப்படுத்திப் பூமி தேவியைக் காவலிட்டுத் திரும்பி மயில் இராவணன் சேனைகளையும் மந்திரிகளையும் நிர்மூலமாக்கி, மயிலிராவணனுடன் போரிட்டு அவனைப் பலமுறை கைவேறு கால்வேருக எறிந்து கொன்றும் அவன் உயிர்பெற்று வரக்கண்டு தூரதண்டியால் அவனுயிர்நிலை யுணர்ந்து போரிடுகையில் மயிலிராவணன் ஓடி மறைந்து, ரணயாகஞ்செய்து ஒரு பூதத்தையனுப்ப, அப்பூதம்வந்து அநுமனுடன் போரிட அநுமன் சலித்துத் தருமதேவதையின் சொல்லால் அவன் யாகசாலையை யழிக்க அவன். மாயையால் வெள்ளி மலையாகவும், யானையாகவும் மாயஞ்செய்து கடைசியில் நேராக யுத்தஞ் செய்கையில் மரணமடையாதது கண்ட அநுமான் இவனது மார்பில் ஒரு காலை யூன்றிக்கொண்டு விந்திய பர்வதக் குகையில் ஐந்தறைகளிலிருந்த இவனுயிர் நிலைகளாகிய ஐந்து வண்டுகளையும் பிடிக்க அக்குகையின் வாயிலை ஒருகரத்தால் அழுத்திக்கொண்டு ஐந்து வண்டுகளையும் ஒரு கரத்தால் பிடித்து நசுக்கி மயில் இராவணனைக் கொன்று நீலமேகனுக்குப் பட்டமளித்து மயிலிராவணன் குமரியை மணம்புணர்த்தி இராம லக்குமண ருடன் இலங்கையடைந்தனர்.

மயில்வாகனப்புலவர்

இவர் யாழ்ப்பாணத்து மாதகல் எனும் ஊரினர். சைவ சமயி, தமிழிலக்கிய இலக்கணங்கற்றவர். புலியூர் யமக அந்தாதி செய்தவர். இவர் நூறு வருடங்களுக்குமுன் இருந்தவர் என்பர்,

மயில்விசிறி

மயிலிறகினாற் செய்த விசிறிக்கு விஷம், சந்நிபாதம், வயிற்று வலி, தலைச்சுழலல், பித்தகோபம், விக்கல், வியர்வை, வாதகோபம் இவை நீங்கும். அறிவு விளங்கும்.

மயிஷ்மான்

ஸோஹஞ்சியின் குமரன் இவன் குமரன் பத்திரசேனன்,

மயூரகண்டன்

அச்சுவக்கிரீவன் தந்தை.

மயூரன்

சூரபதுமன் மந்திரி,

மயூராதித்தன்

ஒரு சூரியன், சிவமூர்த்திக்குக் கண்ணாய் விளங்குவோன்.

மயூரேசர்

விநாயகமூர்த்திக்கு ஒருபெயர். இவர் சிந்து என்பவனைக் கொல்ல ஒரு வேள்வியில் மயிலைச் சிருட்டித்து அதன் மீது எழுந்தருளிச் சென்றதால் இப்பெயர் உண்டாயிற்று. இவர்க்குத் திரிமூர்த்திகளின் முகம். சடைமுடி, ஏழுவிழி, ஆறுகரம், தவளநிறம்.

மயேச்சுரன்

ஒரு அரசன். இவன் பிரகஸ்பதியைப்பணிய அவர் உன்சிரம் தேவர் முதலியவர்களால் ஆராதிக்கக் கடவதென வரம் பெற்றவன். இவன் ஒரு முறை காட்டின்வழிச் செல்லுகையில் எதிர்வந்த நாரதரை அறியாது சென்றதால் நாரதர் கோபித்து யானையாகவெனச் சபித்தனர். அவ்வகை இவ்வரசன் மறுசநநத்தில் யானையுருக்கொண்ட கயமுகாசானாய்ப் பார்வதி பிராட்டியார் எழுந்தருளியிருந்த மண்டபத்தைக் கொம்பால் குத்தித் தள்ளப் பார்வதி பிராட்டியின் வார்த்தையால் சிவமூர்த்தி சூலத்தால் கழுத்தறுப்புண்டு சிவாய நமவென்று விழுந்து சாரூபமடைந்தவன், இவனது அறுந்த சிரம், சிந்துரனால் சிரம் இலாது அவதரித்த கணேச மூர்த்திக்குச் சிரமாயிற்று,

மயேச்சுரர்

இவர் ஒரு தமிழாசிரியர். யாப்பிலக்கணஞ் செய்தவர். இவர் யாப்பருங் கலவுரையாசிரியராகிய அமுதசாகரருக்கு முற்பட்டவராயிருக் கலாம்.

மயேந்திரம்

ஒருமலை, அநுமனிலங்கைக்குப் பாயவும், சம்பாதி இறகு தீய்ந்து விழவும் இடமானது,

மரக்கரடி

(The Sloth) இது, (2) அடி நீளம், வாயில் பற்களில்லை. விரல்கள் நீண்டு வளைந்து அழுத்தமுள்ளவை. இது மரங்களில் எளிதாய் ஏறுகிறது. தழைகளைத் தின்று ஜீவிக்கிறது. இது மரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தழைகளை மேய்கிறது. அவ்வாறே தூங்குகிறது, இதன் கால்களில் வளைந்த இரண்டு மூன்று விரல்களுண்டு, அவை மரத்தைப் பற்ற உதவுகிறது. மயிர்கள் மேனோக்கியே யிருக்கின்றன. இது வருஷத்தில் ஒரே குட்டி போடுகிறது. இது தன் குட்டியை மார்பிலணைந்து செல்லும்.

மரக்கலம்

இது கடலில் யாத்திரை செய்வதற்கு மரத்தால் பெருமீனின் உருப் போல் செய்யப்பட்ட மிதவை, இதனாயுதம், துடுப்புபாய், பாய்மரம், கயிறு முதலிய. தெப்பம், தோணி, படகு, கட்டுமரம்.

மரக்காயர்

இவர்கள் தமிழ் பேசும் மகம்மதியர், ஸங்கர ஜாதியார். இவர்கள் வர்த்தகர், இவர்கள் லப்பைகளின் வேறுபட்டவர்கள். இந்தப் பெயர் அரபி பாஷையில் மரகாட் என்றால் படகு. இவர்கள் படகோட்டிகள். இவர்கள் குற்றவாளிகளாக அரேபியாவிலிருந்து துரத்தப்பட்டபோது தமிழறியாத இவர்களை நீங்களாரெனக் கேட்டதற்குத் தங்கள் படகைக் காட்டி மரகாப் என்றனர். அதனாலிவர்கள் மாக்காயர் எனப் பட்டனர். அல்லது மரகாப் எனும் ஊரினின்று துரத்தப் பட்டவர் (தர்ஸ்டன்.)

மரக்கால்

இது அவுணர் வஞ்சத்தால் வெல்லுதல்கருதித் தேன் பாம்பு முதலிய வருதல் கண்ட காளி அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தாலாகிய கால் கொண்டு ஆடிய கூத்து.

மரங்களின் பட்டைகள்

மரங்களைக் காக்கப் புறணியா யிருக்கின்றன. இவை பல மரங்களின் பட்டைகள் பல குணமும் உருசியும் பெற்றிருக்கின்றன. சில மணந்தருவன, சில துர்நாற்றந்தருவன. சில மயக்கந் தருவன சில நார் போல்வன, சில சடை போல்வன, சில வழுவழுப்புள்ளன.

மரங்கொத்திக்குருவி

இதற்குத் தலையில் ஒரு அழகிய செந்நிறமான கொண்டை யுண்டு. இதன் தலைப்பக்கத்தில் செகப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய மூன்று நிறங்கள் வரிவரியாய் அழகாயிருக்கின்றன. இது மரங்களில் பறவாது; மனிதன் மரம் ஏறுவதுபோல் நின்றபடி ஏறவல்லது. இது மரங்களை நீண்டு உரத்த அலகினால் தொலைத்து அவற்றிலுள்ள பூச்சி புழுக்களை அருந்தும், இதன் ஒலி அடுக்கடுக்காய் உரத்திருக்கும். இவ்வினத்தில் பலவேறு வகைப்பட்டவை உண்டு

மரசவுழிஞை

பொன்னாலே செய்த உழிஞைமலைந்து ஆடு வெட்டியிடும் பலியை நுகரும் திண்ணிதாக வாபாற்கட்டின முரசின் நிலைமையைச் சொல்லிய துறை, (பு. வெ. உழி)

மரசுமூன்று

வீரமுரசு, நியாயமுரசு, தியாக முரச இதனை “இமிழ்குரல் முாசமூன் றுடனாளும் தமிழ் கெழுகூடல்” என்பதா லறிக. இதனுள் முந்திய வீரமுரசினையே நீராட்டிக் கடலேற்றி ஒலிநெடும்பீலியும் ஒண்பொறி மணித்தாரும் பொலங் குழையுழிஞையும் பொலியச்சூட்டிக் குருதிப் பலியீந்து பூசித்தல் பண்டையவழக்கு. இதனை “மாசற விசித்த வார்புறுவள் பின், மைபடு மருங்குல் பொலிய மஞ்னஞ, யொலிநெடும் பீலி யொண் பொறி மணித்தார், பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக், குருதி வேட்கை யுருகெழு முரச, மண்ணிலா ராவளவை” என்னும் புறப்பாட்டடிகளா னறிக. (புறம் 50) இம்முரசம் போர்த்த தோலினையும் வீரம் பற்றியே கொள்வர் என்பதனை “புனை மருப பழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்றகனை குர ஒருமுச் சீற்றக்கதழ்விடை யரிவை போர்த்த, துனே குசன் மாசத்தானை” என வருஞ் சிந்தாமணியானறிக.

மரணக்குறிகள்

1, பேச்சில்லாமை, மாறிப்பேசல், மதிமயக்கம், ஞாபகத்தவறு, பொய்க்காட்சி, அஸ்திரபுத்தி, அளவிற்கு மிஞ்சின திடாதிக்கம்,மனோகற்பனை யான வெறிப்பாட்டு, மதோன்மத்தம், ஸ்மரணையில்லாமை,நினைவுசஞ்சலம், விறைப்பு, திமிர்ப்பு, இயல்புக்கு விரோதமான பரிச அறிவு, ஸ்பரிச அறிலிலாமை, உரிசை வில்லாமை, இயல்பிற்கு விரோதமான நாற்றம், பார்வை கெடுதி, பார்வையீனம், கேள்வி கெடுதி, இயல்பிற்கு விரோதமான நாடிநடை, குரல்கனப்பு, வாய்குழறல், நித்திரையின்மை, முதலிய, 2. பேச்சற்றுப்போதல், பேதமாய்ப்பேசுதல், மயக்கம், ஞாபகத்தவறு, பொய்க் காட்சி, ஸ்திரமில்லாத புத்தி, மட்டுமிஞ்சின திடாரிக்கம், மதோன்மத்தம், ஸ்மரணையில்லாமை, நினைவுசஞ்சலித்தல், உலைவுஎண்ணம், மட்டுக்கு மிஞ்சின ஆண்மை, மனோசுலனம், விறைப்பு திமிர்ப்பு, இயல்புக்கு விரோதமான பரிசவறிவு, பரிசவறிவு இல்லாமை, சுபாவத்துக்கு விரோதமான வாசனை, வாசனை கெடுதி, பார்வை கெடுதி, பார்வையில்லாமை, பார்வை யீனம், கிட்டப்பார்வை, கேள்விகெடுதி, கேளாமை, தப்பான கேள்வி, சுபாவத்துக்கு விரோதமாய் தசைநரம்பு இயக்கம், குரற்கனப்பு, தப்பான உச்சரிப்பு, நித்திரையில்லாமை, சுபாவத்திற்கு விரோதமான நித்திரை.

மரணம்

ஆன்மாக்கள் தமக்கென நியமித்த காலமுடிவில் தேகநீக்கமடைவது, உயிர் நீங்கிய உடலை மரணமடைந்த பிரேதத்திற் குரியவனாகிய கர்மஞ் செய்வோன், க்ஷௌகர்மஞ் செய்துகொண்டு விஷ்ணுவாலய சிவாலாயாதி களில் பிரசாத தீர்த்தங் கொண்டு பிரேதத்தை அபிஷேகாதிகளால் அலங் காரஞ்செய்து சருசட்டியில் தர்ப்பை, அரிசி, எள், அத்திக்கொத்து இட்டு தீ வளர்த்தி, அக்னிசட்டியில் வைத்துக்கொண்டு வீட்டில் செய்யவேண்டிய நிறைநாழி சூர்ணோற்சவம் முதலிய முடித்து முறத்தில் பொரி வெற்றிலை முதலிய இட்டுப் பூத பலியாக இறைத்துக் கொண்டு பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு அக்னிதிசை அல்லது நிருதிதிசையடைந்து ஸ்மசானங் குறுகிப் பிரேதத்தைச் சற்றுப் பின்பார்க்க நிறுத்திப்பின் சிகையில் பிரேதத்தைத் தெற்குத் தலையாக வந்து முழச்சீலை கிழித்துச் சுடுகாட்டுக் காவலாளிக் குக்கொடுத்துச் சிதைக்கருகில் மூன்றிடத்தில் தீவளர்த்தல் வேண்டும், பின் பங்காளிகள் பாதி சிகை விரித்தும் பாதி முடித்துக் கொண்டும் “அபானசோ’ எனும் மந்திரத்தால் மூன்று பிரதக்ஷிணம், மூன்று அப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். பிறகு கர்த்தா உட்கார்ந்து மூன்று இடத்தில் மூன்று பிண்டம் இட்டுச் சருசட்டியைப் பின்னால் உடைத்துவிட வேண்டியது. இதுவே குடமுடைத்தல். பின் அக்னியைச் சிதையில் பிரதிஷ்டைசெய்து தீயை வைக்கவேண்டியது. சிலர் பிரேதத்தின் மார்பில் அக்னியைப் பிரதிஷ்டித்து ஓமம் செய்வர். இது பிரேத்தகனம். இதுவே கொள்ளிவைத்தல். சஞ்சயனம்: மறுநாள் சர்த்தா வீட்டிலிருந்து ஐந்து அடை, ஐந்து உருண்டை, எள், பயறு, பால், நெருப்பு, முதலிய கொண்டு ஸ்மசானஞ் சென்று, பாலைச் சிதையின் மேல் புரோக்ஷித்தல் வேண்டும். பின் சிதையிலிருந்து அக்னியெடுத்து ஓமஞ்செய்து பிறகு எலும்புகளைப் பொறுக்க வேண்டியது. இவ்வாறு பொறுக்கிய எலும்புகளைக் கர்த்தா கண்களை மூடிக்கொண்டு கையில் வழுதலைக் கொடியைக் கட்டிக்கொண்டு பின்புறமாய் எலும்புகளைப் பாராமல் முன் கபாலம், வாய், மார்பு, கை, கால், இவற்றின் எலும்புகள் ஒவ்வொன்றை யெடுத்துச் சப்தமில்லாமல் சட்டியில் வைத்து ஒரு வன்னி மரத்தடியைச் சார்ந்து நால்வரிடத்தில் தர்ப்பைகொடுத்துச் சஞ்சயன மந்திரம் செபித்து ஸ்மசான பூதங்களுக்கு முன் கொண்டு சென்றவைகளைப் பலியிட்டுக் கர்த்தாவாயினும் ஞாதிகளாயினும் எலும்புகளைப் புண்ய தீர்த்தங்களில் விடவேண்டும். இவ்வகை செய்யப்பட்டபின் தேக நீங்கிய ஆத்மா செல்லும் விதமும் அதன் பொருட்டுச் செய்யுங் கிரியைகளுங் கூறப்படுகிறது. மற்றவை அபரக்கிரியையிற் காண்க. (சிராத்தகாண்டம்). மனிதர் ஒவ்வொருவரும் தமது கர்மத்தின் முடிவில் மரணத்தை அடை கின்றனர். இறந்தவன் தான் செய்த தீமையால் வரும் பிரேத ஜன்மத்தை நிவர்த்திக்க வேண்டியவனுக்கு விருஷோர்சர்க்கம் செய்தல் வேண்டும். அதனை அவன் உயிர்த்திருக்கும் போதே செய்யினும் ஆம். அன்றி மரித்தபின்னும் செய்யல் ஆகும். அவ்விருஷோற்சர்க்கமாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணிமையிலாயினும், உத்தராயணத்தில் சுக்கிலபக்ஷத்தி லாயினும், கிருஷ்ணபக்ஷத்திலாயினும், துவாதசியி லாயினும், மற்றெந்த நல்ல தினத்திலாயினும், நல்லொழுக்கம் உள்ள வேதியரை வருவித்துத்தான் சுத்த னாய் இடபக்கன்றை மஞ்சனம் ஆட்டி அதற்கும் சோடச உபசாரம் செய்து நான்கு ஆண் கன்றுகளுடன் அதனையும் அக்கினியை வலம் வரச்செய்து வடக்கு நோக்கி இருந்து அந்த ஆண்கன்றை நோக்கித் தர்ம சுவரூபமே நீ ஆதியில் பிரமனால் படைக்கப்பட்டனை என்று துதித்துச் செய் வோன் தன்னைப்பற்றியேனும், பிறனைப்பற்றியேனும், அதன் வால் நுனியில் ஜலத்தை விடுத்து அந்நீரைக் கரத்தால் ஏந்திச் சிரசில் புரோக்ஷித்துக் கொண்டு ஆண்கன்றுகளோடு அதனை விடல் வேண்டும். இது இறந்தவனைப் பற்றிச் செய்யப்படு மேல் ஏகோதிஷ்ட சிரார்த்தம் செய்யல் வேண்டும், மரித்த பதினொன்றாம் நாளிலேனும், பன்னிரண்டாம் நாளிலேனும், ஷோடச சிரார்த்தம் சபிண்டீகரணத்திற்கு முன் செய்தல் வேண்டும். பின் பததானம் செய்தல் வேண்டும். பின் வைதரணி நதியைக் கடத்தற்குக் கரும்பினால் ஓடஞ் செய்து அதனைப் பட்டால் சுற்றி நெய் நிரப்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுன்வைத்துத் தேவதாராதனை செய்து வேதியர்க்குக் கொடுத்தல் வேண்டும். பின் எள், இரும்பு, பொன், சப்த தானியம், பருத்தி, உப்பு முதலியவும் தானஞ் செய்ய வேண்டும். திலதானமும், சைய்யாதானமும், செய்தல் வேண்டும். இறந்தவுடன் ஜீவன் யமபுரி சென்று மீண்டு வருதலால் உடனே இறந்த உடலைத் தகனாதிகள் செய்யாமல் சிறிது பொழுது கழிந்த பின்னரே செய்தல் வேண்டும். மனிதலோகத்திற்கும், யமபுரத்திற்கும், இடையில் (86000) காதவழி உளது. இறந்த ஜீவனைக் காலபடர் காலன் முன் கொண்டு போய்விடக் காலன் இவனை மீண்டும் அவ்விடம் கொண்டு போகக் கட்டளையிட்டுப் பன்னிரண்டாம் நாள் கழிந்தபின் கொண்டு வரச் செய்வன். அக்கட்டளை ஏற்ற படர்கள் நொடிக்கு முன் ஜீவனைக் கொணர்ந்து விடுவர். மீண்டும் தன் தேகத்தில் புகுதற்கு இலாமையால் இறந்த உடலுக்குப் பத்து முழத்துக்கு மேல் நின்று தீப்பற்றி எரியும் தேகத்தைக் கண்டு அழுது அத்தேகம் வெந்தொழிந்தபின் புத்திரன் முதலியோர் போடும் பிண்டத்தால் உண்டாம் பிண்டதேகம் கொண்டு போவார். வருவோரைப் பார்த்துக்கொண்டு வீட்டின் வாயிலில் சிற்பான். மரித்த ஜீவன் (3) நாள் நீரிலும் (3) நாள் அக்கினியிலும் (3) நாள் ஆகாயத்திலும், ஒரு நாள் கிருகத்திலும் வசிப்பன். பின் பதினொன்று பன்னிரண்டாம் நாட்களில் கொடுக்கப் படுவனவற்றை உண்டு பதின் மூன்றாம் நாள் யமபடர்களால் பாசத்தால் இழுக்கப் பட்டு வீட்டைப் பார்த்துக் கதறிய வண்ணம் காலபடருடன் நாள் ஒன்றுக்கு (247) காதவழி இரவிலும் பாலிலும் செல்வன். அவன் செல்லும் வழியில் வாளிலேகள் நெருங்கிய சூசிபத்திரவனம் ஒன்றுளது. அதில் அவஸ்தை அடைந்து செல்ல வேண்டும். அது கடந்ததும் புசி தாகத்தால் வருந்தும் ஜீவன் வைவசுவத பட்டணம் சென்று சேர்வன் பாபிகள் அநேகர் அங்கிருந்து பசி தாகத்தால் வருந்துவர், ஆண்டுச் சீவன் பசி தாகத்தால் வருந்தித் தான் உலோபினதை எண்ணித் துக்கிப்பன், பின்யமபடர் புடைத்து இழுக்கச் சிறிது பொழுது தங்கி இறந்த (28) நாளில் புத்திரனால் செய்யப்படும் ஊனமாசிக சிரார்த்த பிண்டத்தை உண்டு முப்பதாம் நாள் யாமியம் என்ற நகரம் சேருவன். இந்நகரத்தில் பிரேத் கூட்டங்கள் இருக்கின்றன. அப்பட்டணத்தில் புண்ணியபத்திரை என்கிற நதியும், ஒரு ஆலமரமும் இருக்கின்றன. சிறிது சிரம பரிகாரத்தின் பொருட்டு அவ்விடம் தங்கி இரண்டாம் மாசிக சிரார்த்த பிண்டத்தை உண்டு இராப் பகலாய் நடந்து திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை உண்டு சங்கமன் காலதூஷகன் என்பவர்களால் காக்கப்படும் சௌரி என்கிற நகரம் அடைந்து ஆண்டு மூன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு அப்புறம் சென்று இடைவிடாது நடந்து காந்தருவ நகரம் சேர்ந்து நான்காம் மாசிகபிண்டத்தை உண்டு அப்பால் நடந்து குளிரால் வருந்திக் குரூரன் என்பவனால் காக்கப்படும் குரூரபுரம் என்கிற பட்டணத்தை அடைந்து ஐந்தாம் மாசிக பிண்டத்தை உண்டு அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்னும் புரிக்கண் சென்று ஆறாம் மாசிக பிண்டம் அயின்று நடக்கையில் தான் வாழ்ந்ததைப் பற்றிப் பேசுவன். யமபடர் புடைத்து இழுப்பர். இவ்வாறு செல்லுகையில் எதிரில் ஓடக்காரர் வந்து வைதரணி கோதானம் நின்னைக்குறித்துச் செய்யப்பட்டதாயின் நீர் இன்றிச் சீ இரத்தங்களாலும் துர்க்கந்தத்தாலும் நிரம்பி நூறு யோசனை அகலமுள்ள இவ்வை தரணி நதியைக் கடக்க உதவி செய்வோம். அல்லாவிடின் இதில் அழுத்துவோம் என்பர். இத்தானம் செய்தோனாயின் அந்ததியினை இனிது கடந்து நமனுக்கு இளையவனாகிய விசித்திரனால் காக்கப்படும் விசித்திரம் என்கிற பட்டணத்தை அடைந்து ஊனஷரண் மாசிக பிண் உத்தை உண்டு சென்று ஏழாம்மாசிக பிண்டத்தை உன்கையில் நீ பிறருக்கு உதவாமையால் எங்களுக்குக் கொடு எனத்தானுண்ணும் உணவைப் பிரேத கூட்டங்கள் பிடுங்கிக்கொள்ளப் பறிகொடுத்து அவற்றின் கையினின்று சிந்திய பிண்ட சேஷத்தை உண்டு வழிகடந்து செல்வன். இது வரையில் யமபுரியின் பாதி வழியாகும். இதனால் இறந்தவனுக்குப் புத்திரன் முதலியோர் அவன் பொருட்டு அன்னதானம் முதலிய செய்தல் வேண்டும். பின் ஜீவன் யமபடருடன் பக்வாபதம் எனும்பட்டணம் அடைந்து எட்டாம் மாசிக பிண்டத்தை உண்டு அதினின்று நடந்து துக்கதம் எனும் நகரணிந்து ஒன்பதாம் மாசிக பிண்டத்தை உண்டு அதினின்று நீங்கி நாநாக்கிரந்தம் எனும் பட்டணம் அடைந்து பத்தாமாசிக பிண்டத்தை உண்பன். இப்பட்டணத்தில் விருஷோற் சர்க்கம் செய்யாத சீவர் பிரேத ஜன்மத்துடன் கதறிக் கொண்டு இருப்பர். இவர்களைக் கண்டு அச்சீவன் கதறிக் கொண்டு அப்பால் நடந்து சுதப்தம் எனும் புரியைச் சார்ந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு அவ்விடம் நீங்கிச் சீதாப்பிரம் என்னும் நகர் அணைந்து குளிரால் வருந்திப் பன்னிரண்டாம் மாசிக பிண்டத்தை உண்டு வைவச்சுத பட்டணம் சேரும்முன்னரே ஊனாப்திக பிண்டத்தை உண்டு வைவச்சுதி பட்டினமாகிய யம்புரம் சேர்தற்கு முன் பிண்ட சரீரத்தைத் தவிர்ந்து அங்குஷ்டபரிமாணமாய் ஒரு வன்னிமரத்தில் சிறிது காலம் இருந்து பின் சருமத்தாலாகிய சரீரம்பெற்று யமபுரம் சார்வன், அச்சீவன் புண்ணியம் செய்தவனாயின் சூரியமண்டல மார்க்கமாய்ப் பிரமலோகம் சேர்வன்.

மரத்தின் காய்வகை

வாழைக்காய், பலாக்காய், மாங்காய், அத்திக்காய், முருங்கைக்காய், நெல்லிக்காய், அருநெல்லி, புளியங்காய், மரியங்காய், கடுக்காய், எலுமிச்சங்காய், பலவகை நாரத்தங்காய், பனங்காய், தேங்காய்; செடியின் காய்வகை, கத்திரிக்காய், வெண்டைக்காய், கண்டங்கத்திரி, கறிமுள்ளி, கொத்தவரை, நறுமணத்தக்காளி, கொட்டை அவரை, பீன்ஸ்காய், மணத்தக்காளி, சுண்டைக்காய், விதுகங்காய், பாவட்டங்காய், பலவகை மிளகாய்,களாக்காய், பலவகைப் பூசிணிக்காய், முலாக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், கக்கரிக்காய், மொச்சைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பலவகை பாகற்காய், தூதுளங்காய், வழுதலங்காய், பயற்றங்காய், சுக்கங்காய், முதலிய. மாதுளை, கொய்யா, ஊமத்தை, விளா முதலிய

மரநாய்

இது பூனையினத்தைச் சேர்ந்தது என்னலாம். இது பூனையைப் போல் மரம் ஏறவல்லது. உருவத்தில் சிறு நாயைப்போலிருக்கும். இது மரம் ஏறவல்லதாதலால் இதை மரநாய் என்பர். இதன்வால் சுருண்டிருக்கும். இது பகலில் மரப்பொந்துகளில் புகுந்திருந்து இரவிலிரை தேடப் புறப்படும். இரவில் எலி, அணில், சிறு பறவைகளைப் பிடித்துத் தின்னும். ஒன்றுங் கிடைக்காவிட்டால் மரங்களிலேறிக் கள்ளைக் குடிக்கும். சிலவேளை கள்ளின் மயக்கத்தால் மரத்திலிருந்து கீழ்வீழ்வதுமுண்டு.

மரநாய்போன்ற மிருகம் ராட்டில்

இது தென் ஆபிராகாவின் பாலைவன வாசி உடல் (3) அடி நீளம், உயரம் பத்தங்குலம். இது தேனீக்களைத் தின்கிறது. இவ்வினத்தில் பயின் மார்டின் என்று ஒருவகை உண்டு. இது சைபீரியவாசி.

மரபாலன்

கங்கை குலத்திற் பிறந்த ஒரு வேளாளன். இவன் பாதாளஞ் சென்று மீளுகையில் விச்வகன்மன் பொறாமை கொண்டு போரிட்டுத் தோற்றனன். இவனை வேளாளன் பிடித்துப் பூமியில் விட்டனன். இதனைக் கண்ட அரிஹர பிரம்மாக்கள் வேளாளனை வாழ்த்திச் சில பரிசுகளை அளித் தனர். பிரமன் அரியாசனம் தந்தான். அட்ட லக்ஷ்மிகளும் அட்ட சம்பத்தைத் தந்தனர். முருகக் கடவுள் குவளை மாலையை அளித்தனர். மற்றதேவர் மயில், குயில், மீனம், சிங்க முதலிய கொடிகளை யளித்தனர். இந்திரனும், குபேரனும் தமது புத்திரியரை யளித்தனர். அதுமுதல் இவன் தன் மரபை விளக்கியதைப் பற்றி இவனுக்குத் திரிமூர்த்திகளும் மரபாலன் எனப் பெயரிட்டனர்.

மரபு

1. (2) தந்தை மரபு, தாய் மாபு. 2. யாதொரு பொருளை யாதொரு சொல் லால் யாதொரு நெறியால் அறிவுடையார் சொன்னார்களோ அப்படி சொல்லுதல். (நன்)

மரப்புழ

இப்புழுவிற்கு வண்டுகளுக் கிருப்பதுபோல் ஆறு கால்களுண்டு. முன் வாயில் முன் நீண்ட கூரிய பற்களுண்டு. இப்பற்களால் மரங்களைத் தொளைத்துண்கின்றன. இவ்வினத்திற் சில வண்டுகளாக மாறிப் பறந்து மரங்களைத் தொளைக்கின்றன. சிரோசிபாலஸ் : இது லண்டன் பட்டணத்தை அடுத்த கிராமங்களிலுள்ளது. இது பார்வைக்கு விநோத உருவுள்ளது. 2 அங்குல நீளம், இதன் தலையில் படிகம் போன்ற கொண்டையுண்டு, கால்கள் 120 உடல் கண்ணாடிபோல் ஒளியுடன் கூடியும், நீலங்கலந்த பசுமையாயும் வால் சிவந்துமிருக்கிறது. இது நீரிலும் நிலத்திலும் வாழும். தண்ணீரில் மல்லாந்து நீந்தும். கம்பளிப் பூச்சிகள் : இவை ஒருவகைப் புழுக்கள், இவற்றின் தேகத்தில் ஒரு வகையான மயிர்கள் அடர்ந்திருக்கின்றன. அம்மயிர்கள் தேகத்தின் மீது படின் ஒரு வகையான அரிப்புத் தடிப்புண்டாம். சில வேளைகளில் புண்ணாகியும் விடும். இவை ஆயிரக்கணக்கான முட்டைகளிடும். அவற்றிலிருந் துண்டாம் புழுக்கள் தோட்டங்களை நாசமாக்கும். துணிப்புழ : ஈரப்பசையுள்ள கம்பளிகள், சால்வைகளில் வால் நீண்ட புழுக்களுண்டாய் முட்டையிட்டுப் புழுக்களாகின்றன, அப்புழுக்கள் தம்மைக் காத்துக் கொள்ளக் கம்பளிகளை வாயிலுள்ள பற்களால் கத்திரித்துக் கூடுகட்டுகின்றன. அரக்குப்புழு : இது ஒரு சிறிய புழு, இதற்கு ஆறு கால்களும், இரண்டு பரிச உறுப்புகளும், கண்களுமுண்டு. இவை செந்நிறமுள்ளவை. இவை துவர்ச்சத்துள்ள மரத்தின் சத்தை உறுஞ்சுகின்றன, பெண் புழுக்களின் வயிற்றில், பிறந்த 2 மாதத்தில் சிவந்த திரவப்பொருளுண்டாம். அதுவே அரக்குச் சாயத்திற்கு ஆதாரம். பின்பு அவை கொம்புகளில் ஒருவித பசையால் கூடுகட்டுகின்றன, அக் கூடுகளில் இப்புழுக்கள் ஒருமாதகாலம் தூங்குகின்றன. பிறகு பட்டாம்பூச்சி யுருக்கொண்டு பறந்து செல்கின்றன. இப்பூச்சிகள் கூட் டைவிட்டுச் செல்வதற்குமுன் கூட்டை வெந்நீரிலிட்டு அரக்கைச் சுத்தஞ்செய்து சாயத்தையும் கொள்வர். இச்சாயம் பட்டுநூற்கு உதவி, சாயப்பூச்சி : இது அமெரிக்கா கண்ட தேசங்களில் கள்ளிச்செடிபோன்ற செடிகளில் கூடுகட்டி வசிக்கும். இது செந்நிறமாய் வண்டுபோல ஆறு கால்களைப் பெற்று முகத்திலிரண்டு பரிச உறுப்புடனிருக்கும். இப்பூச்சுகளை உலர்த்தி இடித்துத் தண்ணீரில் கரைத்துச் சாயம் உற்பத்தி செய்கின்றனர். இந்திரகோபப்பூச்சி : இது இந்தியாவில் செம்மண் களர்நிலங்களில் உள்ளது. வண்டுபோல் ஆறு கால்களைப் பெற்றுப் பட்டுப்போல் நிறங்கொண்டது. இது மழைக்காலங்களிலுற்பத்தியாகி 3 வாரமிருந்து அழிகிறதாம். இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது, இதன் வேறு வகை உற்பத்தி இப்பூச்சியைச் சுத்தமாகக் காயவைத்து மக்காமல் பத்திரப்படுத்தி வேண்டும் போது அதை இடித்துத் தூளாக்கி ஈர வைக்கோலின்மீது தூவி அவ்வைக்கோலை மடித்து ஈர இடத்தில் 12 மணி நேரம் வைத்திருந்தால், தூவின துகள்கள் பூச்சிகள் ஆகின்றன. ஆதலினிதனை உயிர்த்தெழும் பூச்சி என்பர். பட்டாம்பூச்சி : (வண்ணாத்திப் பூச்சி) இது, கம்பிளிப்பூச்சிகளில் திருந்தியவுருவுள்ளது. இதன் இரக்கைகள் பட்டுப்போலிருத்தலாலிதற்கு அப்பெயர் வந்தது. இவை, இலைகளில் சிறு முட்டைகளிடுகின்றன. இவை கூட்டினின்று வெளிவந்தபோது புழுவினுருவடைந்து இலைகளை ஆகாரமாகக் கொள்கின்றன. பின்னிவற்றிற்கு அழகான இரக்கைகள் தோன்றிப் பறந்து சென்று புட்பங்களிலுள்ள தேனையுண்டு சீவிக்கின்றன. இப்பூச்சிகளில் பல வேறுபாடுகளுள்ளன. அவை (8000)த்திற்கு அதிகம் என்பர். வெட்டுக்கிளிகள் : இவை, பசும் புற் நரைகளில் குளிர்ந்த இடங்களில் வசிக்கின்றன இவை புழுவினத்தில் திருந்திய இரக்கை கொண்டவை. புற்களிலுள்ளவை பசுமை, மற்றவை பல நிறங்கொண்டவை. இவை தம்முட்டைகளைப் பூமியிலிட்டு மணலால் மறைக்கின்றன. இவை இலைகளைத் தின்று ஜீவிக்கின்றன. சில வெட்டுக்கிளி கள் ஆயிரக்கணக்காய் வெகுதூரம் பறந்து சென்று பயிர்களே, நாசஞ்செய்கின்றன. சில காலத்திற்குமுன் சில சாதியர் வெட்டுக்கிளிகளை ஆகாரமாக் கொண்டிருந்தனராம். இவ்வினத்தில் ஈட்டித்தலை வெட்டுக்கிளிகளுண்டு இவற்றிற்குக் கொண்டைகள் மிருகங்களின் கொம்புகள் போலவும், சில வற்றிறகு ஆயுதங்கள் போலவுமிருக்கின் றன. இவைகளுக்குக் கண் வாய்கள் மற்ற வெட்டுக்கிளிகளைப்போலில்லாமல் கால்களுக்குக் கீழ்ப்புறமாக இருக்கின்றன. இவை பச்சோந்தியைப் போல் நிறமாறுபாடடை கின்றன. கொசுக்கள் :இவை, அழுக்கு நீரில் தோன்றும் புழுவினத்தில் திருந்தியவை, இவ்வினத்தில் (400)க்கு மேற்பட்ட வகைகள் உண்டு. இவ்வினத்தில் பெண் கொசுக் களே இரத்தபானி, இவை புழுவுருமாறிய பின் நான்கு கால்களும், ஊசிபோல் உதிரம் உறுஞ்சும் துதிக்கையும் சிறகும் பெறுகின்றன. ஒரு கொசு ஆயுட்காலத்தில் (400) முட்டைகளிடுகின்றன. ஈகீகள் : இவைகளும் புழுக்களின் வேறுபட்டுச் சிறகு பெற்றவை. இவ்வினத்தில் வீட்டு ஈ, காட்டீ, குருட்டீ, தேனீ, கதண் டீ, நாயீ, எனப்பலவகை. வீட்டீ ஒரே மூச்சாக (760), கஜம் பறக்கும் என்பர். இதனுடல் (3) பகுதிகளாகப் பிரிவுள்ளது, சிலவற்றிற்குக் கண்கள் பெரியவை. சில ஈக்கள் கொசுக்கள் பெற்றிருக்கும் ஊசி போன்ற உறுப்பால் இரத்தம் உறுஞ்சும். சில ஈக்கள் நாறிய பொருள்களில் புழுக்களை ஈனும், இவை மலம், மூத்ரம், அழுகிய பொருள்கள் மீது உட்கார்தலால் அவற்றிலுள்ள புழுக்கள் இவற்றின் கால்களில் ஒட்ட இவை அன்னபானாதிகளில் தங்குவதால் மனிதர்களுக்குப் பல வியாதிகளுண்டாகின்றன. தேன் ஈக்கள் : இவை வசதியான மரங்களில் தம்மிடத்துண்டான ஒருவகை மெழுகைக்கொண்டு முதலில் தேனைச்சே கரித்துவைக்கக் கூடு செய்து பிறகு முட்டைகளிட இடஞ் செய்கின்றன. இத்தேன் நீர், சர்க்கரை, பூவின்சத்து, சாயப்பொருள், நிரஸ்வஸ்து சேர்ந்தவையென்று ஆராய்ந்தோர் கூறுகின்றனர். மின்மினிப்பூச்சிகள் : இவை ஈக்களினினத்தைச் சேர்ந்தவை. இவை மின்னலைப்போல விட்டுவிட்டு ஒளி கொடுத்துப் பறப்பவை. இவற்றிற் சிலவற்றிற்கு உடலின் பின்னும், சிலவற்றிற்கு மார்பிலும், சிலவற்றிற்குக் காலிலும் ஒளியுண்டாகின்றது. இவ்வாறு ஒளியுண்டாவதற்கு அவற்றின் உடம்பில் பாஸ்பரஸ் எனும் ஒரு வகை பாஷாணசத்துள்ளதென்பர். ‘இவை பலவகை ஒளிகளை உண்டாக்குகின்றன. இவ்வகையில் தென் அமெரிகாவிலுள்ள ஒருசாதி விளக்கின் ஒளிபோலவே ஒளி தருகின்றதாம். அவற்றைப் பிரயாணிகள் பிடித்து இரவில் கால்களில் ஒட்டவைத்துக்கொண்டு நடப்பர் என்பர். பேன்கள் : இவை, அழுக்கிலும், வியர்வையிலும் உண்டாவன. இவ்வினத்தில் தலைப்பேன், சீலைப்பேன், மாட்டுப்பேன், செடிப்பேன் முதலிய உண்டு. இவைகளுக்கு ஆறு கால்கள், உணவு உதிரம் உறுஞ்சல் இவைகளும் ஒட்டுவியாதியை உண்டு செய்வன. இவ்வினத்தில் செடிப்பேன், அசுவுணி, மாப்பூச்சி, பட்டைப் பேன் முதலியவுண்டு. செடிப்பேன் தலைப் பேன் போலுருப் பெற்றதாய்ச் செடியின் சத்தையுறுஞ்சுவது. அசுவுணி (அசரை) அவரை முதலிய செடிகளில் கூட்டமாக இருந்து செடியின் சத்தையுறுஞ்சும், மரப்பூச்சி செடிகளில் வெண்ணிறப் புள்ளியிட்டதுபோல் தொட்டால் ஒட்டும் மாப்போலிருந்து செடிகளின் சத்தை ஈர்ப்பது. பட்டைப்பேன் மரப்பட்டைகளினிடத்தில் தங்கி மாச்சத்தை ஈர்ப்பது. எரிபூச்சி இது அவரை முதலிய கொடிகளில் தங்கிச் சத்தை உறுஞ்சுவது. செதில் பூச்சிகள் : இவை மரப்பட்டைச் செதிள்களிலிருந்து மரச்சத்தையுண்பன. இவை கம்பு எனும் தானியத்தைப் போல் உருவமுடையது. மோட்டுப்பூச்சி : இது ஆறு கால்களை யும் இரத்தமுறுஞ்சும் ஒரு துதிக்கையுமுடைய்து. அழுக்கில் பிறப்பவை. இவை தொத்து வியாதியுண்டாக்குவன. தெள்ளுப்பூச்சிகள் : இவை மோட்டுப் பூச்சியினத்தில் வேறுபட்டவை இவை, மாடு, நாய், பூனை முதலியவற்றிலும் வீடுகளின் மூலை முடுக்குகளிலும் வசித்து இரத்தம் உண்பன. இவை அதிவேகமாய்த் துள்ளி மறைதலால் இவை துள்ளுப் பூச்சியாம் பெயர் பெற்றிருக்கலாம். மெழதபூச்சிகள் : இவை மோட்டுப் பூச்சியினத்தைச் சேர்ந்தவை. இவை இளமையில் ஒருவகை மெழுகை மரத்தில் கக்குகின்றன. இவற்றைச் சீனர் பல வேலைகளுக்கு உபயோகிக்கின்றனர். சீன விளக்குப் பட்டாம் பூச்சிகள் : சைனா தேசத்தில் ஒருவகை பட்டாம்பூச்சி களுக்கு நீண்ட மூக்குகள் இஷ்டப்படி நீட்டவும் குறுக்கவுமுண்டு. இம்மூக்கின் ஒளியால் இரவில் இரை தேடுகின்றன. இவற்றைப்போல் தென் அமெரிகா பிரசில் நகரத்தும் சில நீண்ட கழுத்துகளும் சிலுவைபோல் நீண்டகொம்பும் கொம்பின் குறுக்கில் சிறு பந்து போன்ற உறுப்பும் இஷ்டப்படி நீட்டக் குறுக்கப் பெற்றும் ஒளி பெற்றும் இருப்பன என்ப. தும்பிகள் : இவற்றின் உருவம் கொசுக்களை ஒத்தது, கண்கள் பெரியவை. இரக்கைகள் அபிரகத் தகடுபோலுள்ளன. இவையும் புழுவகையில் திருந்தியவை. இவை கொசு, புழுக்களையும் தேனையும் ஆகாரமாக்குகின்றன. இதனைத் தட்டாரப்பூச்சி யெனவுங் கூறுவர். கரப்பான் பூச்சி : இது, செந்நிறமாய் இருளடைந்த வீடுகளிலும், பெட்டிகளிலுமிருந்து அசுத்த காற்றை யுண்டாக்கி மனிதர் உறங்குகையில் கடிப்பது. பாச்சை : இது, ஒரு சிறு பூச்சி வீடுகளிலுள்ள பெட்டி பலகணி முதலியவற்றிலிருந்து மனிதர் உறங்குகையில் கடிப்பது. பிள்ளைப்பூச்சி : இது அழுக்குள்ள நீர் தங்குமிடங்களிலுண்டாகிச் சிறு புழுக்களைத் தின்று ஜீவிப்பது. சுவர்க்கோழி : இது, ஒருவகைப் பூச்சி, இது பாசைப்போன்று பெரிதாயிருக்கும். இது தன் காலின் பின்புறத்துள்ள வால் போன்ற உறுப்பைத் தட்டுதலால் ஒரு வகை ஓசை செய்கிறது. எறும்புகள் : இவை முட்டையினின் றும் பிறப்பனவற்றைச் சேர்ந்தவை. இவ்வினத்தில் பலவகை உண்டென்பர். அவை சிற்றெறும்பு, கட்டையெறும்பு, சிவப்பெறும்பு, கறுப்பெறும்பு, தேன் எறும்பு பயிர் செய்யும் எறும்பு, வெள்ளை எறும்பு, முசட் டெறும்பு, நாயெறும்பு, தச்சுவேலை யெறும்பு, சம்மட்டி எறும்பு, கொத்து வேலை எறும்பு, பறக்கும் எறும்பு. சிற்றெறும்பு. இவற்றின் உடல் (3) வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தலை, உடல், வயிறு, இவை முதிரின் இரக்கைகளும் கொள்ளுகின்றன. வாயில் பரிசவுறுப்புக்களிரண்டுள; கால்கள் ஆறு, இவை பிராணிகளை வாயினாற் கடித்து வயிற்றினிறுதியிலுள்ள கொடுக்கினால் விஷமூட்டுகின்றன. இவற்றினும் பலவகைத் தொழில் செய்வன உண்டு, கட்டை யெறும்பு : கட்டைகளிலும், மரங்களிலுமுள்ளவை, இவை சில் விஷமுள்ளவை. சிவப் பெறும்பு : செந்நிறமுள்ளவை; இவையு மெறும்பின் வகையின கறுப்பெறும்பு : கருநிறமுள்ளவை; இவை கடித்தால் கடினமாகக் கடியில் உதிரமும் உண்டாம். தேன் எறும்பு : இதை அமெரிக்கா முதலிய நாடுகளிலுள்ளவை இவை கட்டெறும்பின் வடிவுள்ளவை; இவை தேன்களைச் சேகரித்துத் தமக்கு அடிப்புறத்துள்ள பைபோன்ற உறுப்பில் சேர்த்துண்கின்றன; அந்நாட்டார் அவற்றின் தேனைக் தங்கள் விருந்து காலங்களில் உபயோகப்படுத்துகின்றனர். பயிர் செய்யுபம் எறும்புகள் : அமெரிக்காவின் மற்றொரு பக்கத்தில் ஒருவிதமான எறும்புகளிருக்கின்றன; அவை கூட்டமாகச் சென்று இலைகளைப் பறித்துக்கொண்டு வந்து தம் வளைகளில் வசதியான இடத்தில் சேகரிக்கின்றன; அவை காளான்களாக முளைக்க அவைகளைச் சில ஜாதி எறும்புகள் ஆகாரமாகக் கொள்கின்றன; சில தாம் இருக்கும் இடத்தைப் புழுதியாக்கி எருவிட்டு ஒருவிதமான தானியத்தை விதைத்துப் பயிரான பின் தமக்குள்ள களஞ்சியங்களில் சேர்த்து வைத்து உண்கின்றன. கூடிவாழ் எறும்புகள் : சில எறும்புகள் கூட்டமாய்க் கூடி வெள்ளங்களுக்கஞ்சி மேட்டுப்பாங்கில் புற்றுகளைக் கட்டி வாழ்கின்றன. வெள்ளம் புற்றுகளை மூடின் அவை யொன்றையொன்று பந்து போற் கட்டிக்கொண்டு மிதந்து சென்று மேடான இடங்களிலேனும் மரங்களிலேனும் ஏறிச் கூடி வாழ்கின்றன. சில எறும்புகள் தானியங்களைத் தங்கள் கூடுகளில் தக்க இடங்களில் சேகரித்து வைத்து ஊறவைத் துண்கின்றன. சில எறும்புகள் சேகரித்த தானியங்களை மாவாக்கி அவற்றை மாத்திரைபோல் திரட்டி உலரவைத்துச் சேர்த்து வேண்டிய போது உண்கின்றன. இவற்றைப் பிஸ்கோத் சுடும் எறும்பென்பர். வெள்ளை எறும்பு : வெண்ணிறமாயுள்ள எறும்பு. முசுட்டெறும்பு : இவை மரஞ்செடிகளின் குளிர்ந்த இடங்களில் கூடுகட்டி வாழ்கின்றன, சிலற்றிற்குச் கால்கள் நீளம், இவ்வெறும்புகள் முட்டையிட்டே வாழ்கின்றன. இம்முட்டைகள் தோன்றும்போது சிறியனவாய் வெளிவந்த பின் வளருகின்றன. இவற்றில் சில எறும்புகளுக்குப் பேய்க்கால் எறும்புகள் என்று பெயர். அவை கருமையாய் உருவத்தில் சிறிதாய்க் கால்கள் சற்று நீண்டிருப்புன. எறும்புகள் பெரும்பாலும் வளை தோண்டி வாழ்வன. சில எறும்புகள் மரத்தில் கூடுகட்டி வாழ்வன. சில மரப்பட்டைகளை மென்று கூழாக்கித் தேனடைபோன்ற கூடுகளைக் கட்டுவன. அவை காற்றிற்கும் மழைக்கும் விழா, ஆஸ்திரேலியாவிலுள்ள சில எறும்புகள் பெரிய புற்றுக்களைத் தெற்கு வடக்காகக் கட்டுகின்றனவாம். அவற்றிற்கு அந்நாட்டார் காந்த எறும்பென்று பெயரிட்டிருக்கின்றனர். குளவி : இது, எறும்பினத்தில் திருந்திய பெரிய உருவும் இரக்கையும் உடையது. இது புழுக்கள் முதலியவற்றை ஆகா ரமாக்கிக்கொள்வது. இவற்றிற் சில மண்ணாலும் சில அரக்கையொத்த பொருள்களானும் கூடுகள் கட்டி முட்டையிட்டு அவற்றிற்காதாரமாகப் புழுக்களைக் கொன்று கூட்டில் புகுத்தி மூடுகின்றன. அதன் குஞ்சுகள் பருவமடைந்த பின் கூட்டை விட்டு வெளியாகின்றன. இவ்வினத்தில் கருங் குளவிகள் உண்டு, கறையான், செல், சிதல் : இவை எறும்பின் வகைகளில் திருந்தியவை. இவை நிறத்தால் வெண்மை, இவை ஒன்றுசேர்ந்து வாழ்தலால் பெரிய புற்றுக்களைக் கட்டுகின்றன. இவை தாம் பெற்ற பொருள்களை அரித்துத் தின்கின்றன. இவற்றிற்கு வயது வந்த போது அவை இரக்கை பெற்றுப் பறந்து பல இடங்களை அடைகின்றன. இவ்வீசல்களுக்குப் பிறப்பிடமாய்ப் பெருஞ் செல் ஒன்று புற்றின் அடிப்பாகத்திலிருக்கின்றது. அது, ஒரு நாளில் (80) ஆயிரம் முட்டையிடுமென்பர். அந்துப்பூச்சி. இது சிறு பட்டாம்பூச்சி போன்ற உருவமுள்ளது. இது நெல், அரிசி முதலிய உருப்படியிருக்க உள்ளிருக்கும் சத்தை அரிப்பது, வண்டுகள் : பெரும்பாலும் வண்டுகள்க்கு (6) கால்களும் உள்ளும் புறம்புமாக நான்கு இரக்கைகள் இருக்கின்றன. மேலிரக்கை ஒடுபோல் மெல்லிய உள் இரக்கைக்குக் காப்பாக இருக்கின்றது. இவ்வினத்தில் பல லக்ஷ கணக்கானவை உண்டென்பர். அவற்றுள் சில உளுவண்டு, மரவண்டு, உருட்டுவண்டு, பொன்வண்டு, முதலிய, வண்டினத்தின் கண்களுக்கு இமைகளில்லை. அவற்றிற்குக் கண்கள் சல்லடைக் கண்களை யொத்தன. பற்கள் வாள் போன்றவை. உளுவண்டு : இவ்வண்டின் மூக்கில் ஊசிபோன்ற உறுப்பொன்றுண்டு. அதனால் இது தானிய முதலியவற்றைத் தொளைத் துண்கிறது, பொன்வண்டு : வண்டை யொத்துத் தலை மாத்திரம் பளபளப்புள்ள ஒளியுள்ளதாய் இலைகளைத் தின்பது. மரவண்டு : மரங்களுக்குள்ளாய் மரங்களைத் துருவிப் பலவழியாக்கி நாசஞ் செய்வது. உருளைக்கிழங்கின் வண்டு : இது உருளைக்கிழங்கின் செடிகளை நாசமாக்குவது. மாம்பழ வண்டு : இது, மாம்பழத்தினுள் உள்ள வித்தை இடமாக்கொண்டரித்துத் தின்பது. உருட்டுவண்டு : இது, பூமியில் வளை தோண்டி ஆகாரத்தின் பொருட்டுச் சாணி, மல முதலியவற்றை உருட்டிக்கொண்டு சேர்ப்பது, தேன்தும்பி : இது மேல்நாட்டுக் காடுகளிலுள்ள வண்டு. இதற்கு நீண்ட தும்பியுண்டு. அதனால் பறக்கையில் பூக்களில் உள்ள தேனைக் கிரகிக்கிறது. மருந்து வண்டு : இது ஐரோபாவின் தென்பாகத்திலிருக்கிறது. இவ்வண்டுகளில் ஒருவகைத் தைலமிறக்கி மருந்தாக உபயோகிக்கின் றனர், நாகப்பூச்சி : (பூநாகம்) இது பூமியில் வளைதோண்டிக்கொண்டு மண்ணைத்தின்று மண்ணையே எச்சமிட்டு வாழ்வது. இவ் வினத்தில் மேற்கிந்திய தீவு முதலியவற்றில் ஒருவகை உண்டு, அவை பாம்பின் தோலையொத்த தோலும், பல்லியின் தலை போன்ற தலையும் பெற்றவை, இவை 2 அடிகளுக்கு மேலும் தக்க கனமும் பெற்றவை. மற்றொருவகை உடலில் பாம்பிற்குள்ளது போல் கட்டுகள் உண்டு, மற்றொரு வகைக்குப் பாம்பின் நாக்கையொத்த நாக்கும் உண்டு, சில விஷமுள்ளனவாக யிருக்கின்றன. மரவட்டை : இந்தச் சாதியில் பலவகை பேதமும் நிறமும் உண்டு. இதன் உடல் பல வளையங்கள் பெற்றவை, தேக முழுதும் பல கால்களுண்டு, இதற்குப் பயம் நேருகையில் அது தன்னைப் பந்து போல் சுருட்டிக்கொள்கின்றன. பூரான் : இது தட்டையான உருக்கொண்டு பல கால்களையும், பின்பக்கம் கூரிய கொடுக்கையும் முகத்தில் பரிசவுறுப்பையுங் கொண்டது. இது தன் கொடுக்கால் கொட்டும். இவ்வினத்தில் சிறு பூரான் என்பது பூரானைப்போல் நீண்டு மெலிதாயிருக்கும். இது செவிகளில் நுழையும் என்பர். இதனுடலில் ஒருவித ஒளிப்பசை இராவில் தோற்றும். செய்யான் : இது பூரான் இனத்தில் பெரிது. இதன் உடலில் கறுப்பும், மஞ் சளுமாகிய பட்டைகளுண்டு. இது பாம்பினும் கொடிய விஷமுள்ளது. இது மரங்கள் புதருகளடர்ந்த இடங்களில் வாழ்வது, ஜலமண்டலி : இது பூரானினத்தைச் சேர்ந்தது. இதனுடம்பில் பல வளையங்களும் பல கால்களுமுண்டு, முகத்தில் இரண்டு பரிசக் கொம்புகளும், பின்புறத்தில் இரண்டு நீண்ட விஷமுள்ள கொடுக்குகளும் இருக்கின்றன. இது மனிதரைக் கொட்டினால் வியர்த்து இறப்பர். இதுவே சீதமண்டலி. இதில் ரத்தமண்டலியும் உண்டு. இராமபாணம் : இது ஒருவகைப் பூச்சி. இது தலையில் ஊசிபோல் உறுப்புப் பெற்று தலைபருத்தும், உடல் சிறு சிதல்போல் சிறுத்துமுள்ளது. இது அம்பு போல் தொடங்கிய இடத்திருந்து நேராப் புத்தகங்களின் ஏட்டைத் தொளைப்பது. தேள் : இது நண்டைப்போல் கைகளையும் கால்களையும் பெற்றது. இதற்கு உடம்பில் பல வளையங்களுண்டு. இதற்குச் சிலந்திபோல் கண்களுண்டு. கட்டமைந்த கொடுக்கின் முனையில் முள்ளொன்றுண்டு, அதனால் மனிதரைத் துன்புறுத்துகிரது. இவ்வினத்தில் செந்தேள், கருந்தேள், நச்சுத்தேள் நண்டுதெறுக்கால் என்பன உண்டு செந்தேள் முதலியவும் விஷமுள்ளனவே. நச்சுத்தேன். உருவத்தில் சிறிதாய்ப் பனை, புளி முதலிய மரங்களில் வசிப்பது. இது மகா விஷமுள்ளது. நண்டு தெறுக்கால் இது உருவத்தில் பெரிய தேளினத்தது. இது ஒரு அடி நீளத்திலுமிருக்கிறதாம் இது மகா விஷபிராணி. மரணத்தையு முண்டாக்கும். இவைகளில் உச்சிலிங்கத்தேள் வாதத்தேள், பித்தத் தேள், சிலேஷ்மத்தேன் என நால்வகை, சிலந்திப்பூச்சி இவை பூச்சிகளைப் பிடித்துத் தின்பன ஆதலால் அதற்கு வேண்டிய உறுப்புக்களைப் பெற்றிருக்கின் றன, இவை நிலத்திலும், நீரிலும் பூக்களிலும், மரங்களிலும், வீடுகளிலும் வாழ்கின்றன. இவற்றிற்கு (8) கண்களுமுண்டு, அக்கண்களை அவை வேண்டியபடி சுழற்றுகின்றன. இப்பூச்சிகளுக்கு முன் காலின் முனையில் விஷமுண்டு, கால்களில் கூர்மையான நகமும் உண்டு. இது, தன் வயிற்றின் பக்கங்களிலுண்டாம் ஒருவகைப் பசையால் வலை நெய்து பதுங்கியிருந்து கொசுகு முதலிய பூச்சிகள் அதில் வந்து சிக்குகையில் திடீரெனப் பாய்ந்து கொடுக்கால் விஷமூட்டிக் கொன்று தின்னும். பூச்சிலந்தி : பூவிலுள்ள தேனை யுண்ணவரும் பூச்சிகள் மீது பாய்ந்து கொன்று தின்பது. குழிச்சிலந்தி பூமியில் வட்டமான குழி தோண்டிப் பதுங்கியிருந்து அதில் வரும் பூச்சிகளைப் பிடித்தருந்தும் இவ்வினத்துப்பூச்சிகள் முட்டைகளை ஒருவகை பட்டுப்போல் வட்டப்பொருளில் வைத்துக்காக்கிறது. நீர்ச்சிலந்தி : நீரில் கூடுகட்டி அந்நீரைத் தனக்குத் துன்பமிலாது அதில் வரும் பூச்சிகளையும் பிடித்தருந்தும். பெருஞ்சிலந்தி அவை ஆபிரிகா முதலிய தேசங்களில் (40) அடி அகலமாய் உறுதியான வலைகளைப் பின்னிப் பக்ஷிகள், குரங்குகளையும் எதிர்க்கத்தக்க வலிபெற்றிருக்கின்றன. பல்லி : இது, நீண்ட உடலையும், குறுகிய நான்கு கால்களையும், வாலையும், குவிந்தவாயினையும் உடையது இது முதலையினத்திற் சிறியது. இவ்வினத்தில் பலவகை உண்டு. வீட்டுப்பல்லி, மரப்பல்லி, கண்ணாடிப்பல்லி, ஒந்திப்பல்லி, வேலிப்பல்லி, ஒட்டுப்பல்லி, பறக்கும்பல்வி, இவை மழமழப்பானதும், கண்ணாடித் தோலையும், புள்ளித் தோலையும், வரித்தோலையும், சொறித்தோலையும் பெற்றிருப்பவை, கால்களில் மழமழப்பான இடங்களையும் பற்றத்தக்க நகங்களைப் பெற்றவை. வீட்டுப்பல்லி இதனைச் சுவர்ப்பல்வி என்பர். இவை, வீட்டுச்சுவர்களிலிருந்து ஈ, கொசு முதலியவற்றைப் பிடித்துத் தின்பன. மரப்பல்லி மரங்களிலிருந்து பூச்சிப்புழுக்களை உணவாக் கொள்பவை. இவை சுவர்ப்பல்லியினும் சற்றுப் பெரிய உருவுடையவை கண்ணாடிப்பல்லி பளபளப்பாய்த் தேகத்தினுள்ளுறுப்புகளும் தெரியு நிலைமையான கண்ணாடி போன்ற தோலுள்ளவை ஒந்திப்பல்லி இதன் உடல் மஞ்சளை யொத்திருக்கும் இது தன் தேகத்தைப் பலவித நிறங்களாக மாற்றும் வன்மையுள்ளது. வேலிப்பல்லி வேலிகளிலிருந்து சீவிப்பவை. இவை தம்விரோதிகளை ஏமாற்றும் சக்தி பெற்றவை. ஒட்டுப்பல்லி இதன் கால்கள் சுவரில் ஒட்டும் வகை பந்து போலிருக்கும். அதிவேகமாய்ச் சுவரில் ஓடும். பறக்கும் பல்லி இது மேற்குக் கரையோரங்களிலுள்ளவை. இதற்கு முன் கால்களுக்குக் கீழ்பக்கங்களில் பறக்கத்தக்க தோல் தாங்கல் உண்டு. அதன் உதவியாலிது அதிதூரம் தாவிச் செல்லுகிறது. பெரும் பல்லிகள் (Morite) : அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா முதலிய நாடுகளில் உள்ளவை. இவை (4) முதல் (8) அடி நீளமும் அதற்குத் தக்க உடற்கனமுள்ளவையுமாம். இவை உடலில் வரிகளையும் புள்ளிகளையும் பெற்றவை. சில பல்லிகள் விஷப்பற்களுள்ளவை, அவற்றை இகுனா என்பர். இதனா தன் வாலால் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். அமெரிக்காவைச் சார்ந்த அரிசோனா நாட்டில் (காலாஸ்மானெட்டர்) ஒருவகைப் பல்லி நீர்க்கரை யோரங்களில் வசிக்கிறது. அதற்கு மற்றப் பல்லிகளுக்கு இருப்பவை போல் கை கால்களிராமல் சற்று நீண்டு பருத்தவை. இவை பூச்சி, தவளை முதலிய பிராணிகளை ஆகாரமாகக் கொள்ளு பவை. இவை தேன் கூடுகளிலுள்ள தேனீக்களை வாலால் பலமுறை ஒட்டித் தேன் உண்ணும். இவ்வினப் பல்லி சயாம் தேசத்திலும் வளை தோண்டிக்கொண்டு வசிக்கும், அவைகளும் தவளை, நண்டு, ஆமை முதலியவற்றை ஆகாரமாக்கொள்ளுகின்றனர். அறணை : இது பல்லியினத்தில் ஒரு வகை. இதன் தேகம் மழமழப்பாய் வரிகள்கொண்டிருக்கும். இதன் நாக்குப் பாம்பின் நாக்கை ஒத்தது. இச்சாதியில் 1 1/2 அடி நீண்டவையுமுண்டு. பூச்சிகள் உணவு. எலிகள் : எலிகளின் இனத்தை எகர வருக்கத்தில் கூறினேனாயினும், பின்னை யும் அவ்வினத்திற் சிலவற்றின் வேறுபாடுகளைக் கூறுகிறேன். இவற்றுள் நீரெலி, காரெலி, வெள்ளெலி, முள்ளெலி, தாண்டும் சுண்டெலி, தூங்கெலி, வீங்கெலி, இரைப்பெலி எலிகள் ஒருமுறைக்கு (8) குட்டிகள் போடுகின்றன, காலமுமிடமும் வாய்க்கின் வருடத்தில் (800) குட்டிகள் ஈனும் என்பர். இவை கடிக்கின் விஷத்தால் துன்பமுண்டாம். வீங்கெலி : கடிக்கின் உடல் வீங்கித் துன்பமாம். இரைப் பெலி : கடிக்கின் இரைப்பினால் சுவாச போகமுண்டாம். வெள்ளெலி : கழனிகளின் வரப்புகளிலிருந்து தான்ய நாசஞ் செய்வன. குண்டெலி : இவை ஆபிரிக்காக் கண்டவாசிகள் இவற்றிற்கு வால்கள் இல்லை; சில வால் குறுகியவை. நீரெலி : இது வளை தோண்டுவிதம் அரண்களை ஒக்கும். தண்ணீர்க்குள் அதிகநேரம் மூழ்கியிருக்கும். முள்ளெலி : இது பெருச்சாளிபோல் பருத்து மயிர் அடர்ந்து சிறு முட்களைப் பெற்றிருக்கும், இது தோட்டங்களை நாசஞ் செய்வது, இதனை அகழெலி என்பர். தாண்டும் சுண்டெலி : இதற்குப் பின் கால்கள் நீளம், இதன் வால் குச்சு போல் திரண்டது. இது முயலைப்போல் தாண்டித் தாண்டிச் செல்லும், எலி மிருகம் : ஆஸ்திரேலியா, ஆண்டிஸ்மலை நாடு முதலியவற்றிலுள்ளது. (2) அடி நீளம், (11) அடி உயரம். இதன் காலும் கையும் நாய், ஆடு முதலியவற்றிற்குள்ளன போல் நீண்டவை. இது சாக பக்ஷணி.

மரவகை

1. ஆலமரம்: இதனை வருத்தாது வளரவிட்டால் நெடுந்தூரம் தழைத்து வேரூன்றிப் பல நூற்றாண்டுகள் அழியாதிருக்கும். அரசமரம்: இந்தியாவில் மரங்களுக்கரசர் யெண்ணப்பட்டு வருவது. இந்தியர்களின் கல்யாணங்களிலும், தேவ பூசைகளிலும் யாகாதி காரியங்களிலும் உபயோகிப்பது. இதனடியில் புத்தர் ஞான மடைந்தனர். வேம்பு: இது சிறந்த மரம். இதனை மாரிநோய் கொண்டார் கொண்டாடுகின்றனர். இதனிலைகள் அம்மைக் கொப்புள முதலியவற்றை ஆற்றுகிறது. வன்னி: இது உறுதியுள்ள மரம், இதனை வந்தியைக் காண்க, நெல்லி: இதனடியில் திருமாலிருந்ததால் விசேடமென்பர், 2. பாலுள்ளவை: தில்லைமரம்; இதன் பால் விஷமுள்ளது, மட்டிப்பால்: மண முள்ளது. அரசு, அத்தி, ஆல் இவற்றின் பால் நார்த்தன்மை யுள்ளதாய்க் குருவி முதலிய பிடிக்க உபயோகிக்கின்றனர். தண்ணீர் வடியுமரம் சருக்கரைப்பால் வடியுமரம், பால் வடியுமரம், இரப்பர் உண்டாமரம், கற்பூரத்தைலமரம், தும்மல்மரம், விஷக்காற்றடிக்கு மரம், மழைமரம், சோதி மரம், படுத்தெழுமரம், துதிக்கையால் தண்ணீர் குடிக்குமரம், அழுது கொண்டிருக்கு மரம், தூங்குமூஞ்சி மரம், முதலிய பல வினோத மரங்களுண்டு. அவற்றிற் சிலவற்றைத் தனித்தனி காண்க. அத்தி, பூவிலாது காய்ப்பது, தந்தவிதைப்பனை, தாளிப்பனை, கூந்தற்பனை, ஜவ்வரிசிப்பனை, திருவோட்டுப்பனை, மற்றும் பல பெரிய விருக்ஷங்கள் அமெரிகா கண்டத்தில் 300 அடிகள் உயர்ந்ததும், ஆஸ்திரியாவில் (450) அடிகள் உயர்ந்ததும், மத்ய அமெரிகாவில் 154 அடி சுற்றளவாய் 3000 வருஷ ஆயுள் கொண்டனவாயும் சில மரங்கள் இருக்கின்றனவாம். மத்ய அமெரிகாவில் இலை கிளைகள் இல்லாமலே ஒருவகை மரம் உண்டு, 3. இவ்வகைகளில், சந்தனமரம், அதிக மணமுள்ளதும் விலையேறப் பெற்றதுமாம். அகில் இதற்கிரண்டாவ தானது, தேவதாரும் மணமுள்ளதேயாம். மற்றவைகளில் மணமின்றி உறுதியானவை செம்மரம், நூக்கமரம், கருங்காலி, தேக்கு, கடுக்காய் மரம், ஆச்சாமரம், மற்றவை உறுதியற்றவை. ஆல், பாவியமரம், சிங்கோனா மரம், இம்மரம் நீலகிரிப் பிரதேசத்தில் பயிராக்கப்படுகிறது. இம்மரப்பட்டையால் குயினா என்னும் சுரமருந்து ஆயத்தப்படுத்தப் படுகிறது. தென்னை, பனை, கள் வெல்லம் தருகின்றன. வேலமரப் பட்டையில் சாராயம் வடிக்கின்றனர். நுணாபோன்ற மரங்களின் பட்டைகளால் சாயம் போடுகின்றனர் கார்க்மரம்; இதின் பட்டைகளால் புட்டிகளுக்கு அடைப்பான், மிதப்புக் கருவிகள் செய்யப்படுகின்றன. 4. சந்தனமரம், தேவதாருமரம், சாள தேவதாருமரம், அகில்மரம், அக்ருமரம், சரக்கொன்றைமரம், சிறுகொன்றைமரம், நரிக் கொன்றை மரம், மைக்கொன்றை மரம், மருதமரம், வேங்கைமரம், வன்னி மரம், புரசமரம், இருவாட்சி மரம், காட்டாத்தி மரம், பெருங்குமிழ மரம், மாவி விங்கமரம், அழிஞ்சல் மரம், கடலழுஞ்சி மரம், கொய்யா, கிச்சிலி, சீதாமரம், பூதமரம், வாகைமரம், கருவாகை மரம், புளி, காஞ்சி, வன்னி, இலவமரம், முள்ளிலவ மரம், விளாமரம், நெல்லிமரம், கருநெல்லி மரம், அருநெல்லி மரம், அருளமரம், வேப்பமரம், மலைவேப்ப மரம், சருக்கரை வேப்பமரம், வெட்பாலை மரம், மாதுளை மரம், உசிலமரம், (சீக்கிரான்) தீம்பாலை மரம், மலைப்பாலை மரம், குடசப்பாலை மரம், குளப்பாலை மரம், நன்முருக்கு, காட்டு முருக்கு, புனன் முருக்கு, முள் முருக்கமரம், (கல்யாண முருக்கு) உழலாந்தி மரம், வெள்வேல் மரம், மூங்கில்மரம், பாதிரிமரம், மகிழமரம், கோங்கு மரம், சண்பகமரம், பசுமுன்னை மரம், கல்லால், புன்னை மரம், சுரபுன்னை மரம், நாரத்தை மரம், மாமரம், வாழைமரம், குங்குமமரம், தாழைமரம், கிளியால் மரம், அக்காரமரம், பனைமரம், தென்னைமரம், தாளிப்பனை, ஈச்சமரம், பாக்குமரம், கூந்தற்பனை, பலாமரம், ஈரப்பலாமரம், ஆலமரம், புன்கமரம், அசோகமரம், அரசமரம், புளிய மரம், தேக்குமரம், நாவல்மரம், அத்தி மரம், காட்டிலந்தை மரம், இலந்தைமரம், தேற்றுமரம், வில்வமரம், கருங்காலிமரம், முந்திரிமரம், புன் முருக்கு, நுணாமரம், குருந்தமரம், குன்றிமரம், கடம்பு மரம், குடைவேல், விடத்தேரை மரம், அடப்ப மரம், கடுமரம், தான்றிமரம், இத்திமரம். இருப்பை மரம், மரிமாங்காய் மரம், உழாமரம், ஆச்சாமரம், அகத்திமரம், நறுவிலி மரம், செருந்தி முதலியன.

மரவட்டை

இது எலும்பில்லாப் பிராணிகளில் ஊரும் வர்க்கத்தைச் சேர்ந்த பிராணி. இதிற் சிறியவுருவுள்ளதும் சற்று பெரிதும் உண்டு. இது செந்நிறத்த தாய் இரண்டங்குல நீண்டு சென்னிறமான பல சிறுகால்களையுடையது. வீட்டுக்களின் கூரைகளில் வசிப்பது, இதில் பெரிது காட்டு மரவட்டை யென்பர். இது, தோட்டம், காடு முதலிய இடங்களில் வசிப்பது.

மரவணக்கம்

அசுவத்த விரதம் காண்க. சிலர் ஆலிலும் அரசிலும் சுத்ர தேவதைகள் வருத்தாமல் மாத்தடியில் பூசிப்பது.

மரவுரி

ஒருவகை மரத்தின் மேற்றோல். இது உரித்தால் ஆடைபோல நிற்பதும் தோய்த்துச் சுத்தப்படுத்தக் கூடியதாத வால் இடிசளிதனை ஆடையாகத் தரித்தனர்.

மராடம்

பரதகண்டத்தின் மேல் நாடு.

மராட்டியர்

இவர்கள் எல்லா ஜில்லாக்ககளிலும் காணப்பட்ட மராட்டிய பாஷை பேசும் ஜனங்கள். இவர்களில் பிராமணரும் பிராமணரல்லாத ஜாதியரும் உண்டு, சிலர் மாயாவாதக் கொள்கை மேற்கொண்டவரும் சிலர் வைஷ்ணவருமாக இருக்கின்றனர். இவர்கள் போர்ச் சேவகராகவும் படையைப் பின்பற்றியவராகவும் வந்து தமிழ் நாட்டில் குடியேறினவர். இவர்கள் கோவைநாட்டி லிருந்தவர்கள். இவர்கள் தலைவன் சிருங்கேரி மடத்தலைவன், இவர்களரசன் சிவாஜி. (தர்ஸ்டன்.)

மராமரம்

இது கிட்கிந்தைக் கருகிலிருந்த ஏழு ஆச்சாமரங்கள். இவற்றை இராமமூர்த்தி ஒருபாணத்தால் பிளந்தனர்.

மரீசி

1, சம்பிராட்டிற்கு உத்கலையிடம் உதித்த குமரன், தேவி பிந்துமதி. குமரன் பிந்துமான், 2. வேதத்தில் தேஜோ பேதத்தைத் தெரிவிப்பது. மரீசி, அத்தேஜசால் பிறந்ததால் இப்பெயர் பெற்றனன். 3. (9) ஆம் மன்வந்தரத்துத் தேவர்.

மரீசி பிரசாபதி

பிரமன் மனத்தில் பிறந்த குமரர். தேவி கலை, குமரர் காசிபர், குமரி பூர்ணிமா, இவர்சுவாயம்பு மன்வந்தரத்தில் உண்பு என்கிற மனைவி யிடத்து ஆறு புத்திரர்களைப் பெற்றனர். இவ்வறுவரும் பிரமன் சரஸ்வதியைச் சிருட்டித்துத் தானே மணஞ்செய்து கொண்டதைப்பற்றிச் சிரித்தனர். அதனால் பிரமதேவனால் அசுரராகச் சபிக்கப்பட்டு இரண்யகசிபு புத்திரராய் பிரகலாத னுக்குத் தம்பியாரயப் பிறந்து ஐச்வர்யமடையப் பிரமனையெண்ணித் தவஞ் செய்கையில் அசுரர்களால் பாதாளத்தழுத்தப் பட்டு ஆறு மன்வந்தரம் பாதாளத்தழுந்திருந்து ஏழாவது மன்வந்தாத்துக் கிருஷ்ணமாயையால் கிரகிக்கப்பட்டுத் தேவகி கற்பத்தில் பிறந்தனர். இவர்கள் கஞ்சனால் கொல்லப்பட்டுப் பாதாளத்திலிருந்து தேவகி கண்ணனை வேண்டக் கண்ணனால் பாதாளத்திலிருந்து வந்து தாயாகியதேவகியிடம் செல்லத் தேவகி பாலூட்டத் தேவசன்மம் பெற்று விடை கொண்டனர். இவர் ஒருமுறை சயதுங்கனைச் சபித்தனர். இவர் தேவி தேவவல்லி யென்பவளிடம் சத்தி வல்லபையாகப் பிறந்தனள்.

மரீசிபர்

பிரமன் சபையில் உள்ள தேவர்.

மரு

(சூ.) அரியசுவன் குமரன். இவன் காலாபமென்னுங் கிராமத்தில் தவஞ்செய்துகொண்டிருக்கையில் கல்கியைத் தரிசித்தான்.

மருக்காந்தாரம்

ஒரு தீவு. இதில் இருந்த நூறு கோடி அசுரர்களை இராம மூர்த்தி வருணன் மீதுவிட எடுத்த அத்திரத்தைப் பிரயோகித்து மாய்த்தனர்.

மருங்கிழான் பெருங்கண்ணனார் நக்கீரனார்

கடைச்சங்கமருவிய புலவர்.

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

பெருங்கண்ணரென மற்றொருவர் இருத்தலின் இவர் மருங்கூர் பெருங்கண்ணரெனப் படுகிறார். இவர் வேளாண்குடியினர். கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (அக 80)

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனர்

மருங்கூர்ப் பட்டினம், என்பது பாண்டி நாட்டிலுள்ள தோரூர், திருகாடானைத் தாலுக்காவில் மருங்கூரென்ப தொன்று கானப்படுகிறது. சேந்தனது புதல்வன் குமானெனப்படுவார். முல்லைத் திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது (நற் 289ம் பாட்டு,)

மருங்கூர்ப்பாகை சாத்தன் பூதனார்

1. கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவரியற்பெயர் சாத்தன் பூதனாராக இருக்மகலாம். ஊர் மருங்கர்ப்பாகை போலும். (அக 328.)

மருசி

சடியரசனாற் பிரசாபதியினிடம் அனுப்பப்பட்ட தூதன். (சூளா.)

மருட்பா

முன்னர்ச் சிலவெண்பா அடிகளும் பின்னர்ச் சில அகவலடிகளும் கூடி வருவது. (யாப்பு இலக்கணம்.)

மருணீக்கியார்

திருநாவுக்கரசுகளுக்குத் தந்தையாரிட்ட முதற்பெயர்,

மருதநிலம்

நல்ல நீர்வளத்தால் எல்லா போகங்களையும் போக்கும். இது வசிக்க யோக்யமானது.

மருதனிளநாகனார்

கடைங்கமருவிய புலவருள் ஒருவர். இவராற் பாடப் பட்டவர், பாண்டியன் கூடாகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, நாஞ்சில் வள்ளுவன். மதுரை மருதனிள நாசனாரைக் காண்க, (புற நா).

மருதப்பிரான்

சிவசருமர் வறுமை நீங்கக் குழந்தையுருக் கொண்டு வில்வ விருக்ஷத்தடியில் இருந்த சிவாம்சம். இவரைச் சிவசருமரும் வறுமை நீங்க எடுத்து வளர்க்கையில் சிவாஞ்ஞைப்படி பட்டணத்துச் செட்டியாரிடம் கொண்டு சென்று இக்குழந்தையின் நிறையளவு பொன் கேட்டனர். அந்தப்படி சம்மதித்துத் துலையில் இட்டனர். மருதப் பிரானைச் சிவசருமரும் அவர் தேவியரும் நிறையிலிடப் பட்டணத்துச் செட்டிகள் தமது பொக்கிஷத்திலிருந்த திரவியத்தைவைக்க மருதப்பர் நிறை அதிகப்பட்டுப் பொருணிறை மேலெழுந்தது. இதனைக்கண்ட தாய் தந்தையர் வேண்டிய அளவு இருக்க வேண்ட அவ்வகையிருந்து தாய் தந்தையருக்குப் பொருள் தருவித்துப் பட்டணத்தடிகள் வளர்க்க வளர்ந்து தமது நண்பருடன் படகேறிச் செல்லுகையில் தம்மில் ஒருவனை மீன்விழுங்க அம்மீனை யுதைத்து அதன் சாபம் போக்கினர். அம்மீன் மணி, பத்திரன் எனும் காந்தருவ உருக்கொண்டு துதிக்கக் கருணை செய்து அக்குமரனைமீட்டு, ஒருவன் பட்டணத்துச் செட்டியா ரிடம் மதிப்பிடக் கொடுத்த முத்தில் குற்றமுள்ளதென்று அதை உடைத்துக் காட்டி (10,000) வராகன் உரியவனுக்குக் கொடுப்பித்து வர்த்தகத்தின் பொருட்டுத் தீபாந்தரத்திற்குக் கப்பல் ஏறிச்சென்று உடன் வந்தார் பொருள் இழக்க அவர்களுக்குத் தாம் சம்பாதித்த தவிடு, உமி வறட்டிகளைக் கொடுத்துச் சீட்டெழுதி வாங்கி வீடுவரத் தந்தையார் குமரன் சித்தபிரமை கொண்டான் எனக்காவலுடன் வீட்டில் அடைத்து வைக்க அதினின்று நீங்கிக் “காதற்ற வூசியும்” எனுஞ் சீட்டெழுதிவைத்த பெட்டியைத் தாயிடம் அளித்துத் திருவுருக்கரந்தவர்.

மருதம்

ஊரடுத்தநிலம், அதன் கருப்பொருள்கள். தெய்வம்; இந்திரன், உயர்ந்தோர் ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, மருதம் பாடிய தாழ்ந்தோர்; உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர், புள்; வண்டானம், அன்றில், நாரை, அன்னம், போதா, கம்புள், குருகு, தாரா. விலங்கு; எருமை, நீர் நாய், ஊர்; பேரூர், மூதூர், நீர்; ஆறு, கிணறு, குளம், பூ; தாமரை, கழுநீர், குவளை, காஞ்சி, வஞ்சி, மரம்; மருது, உணவு; செந்நெலரிசி, வெண் ணெலரிசி, பறை;கிணை முழவு, யாழ் மருதயாழ், பண் மருதம், தொழில்; விழாக்கொளல், வயற்களைக்கட்டல், அரிதல், கடாவிடல், குளம் குடைதல், புனலாடல், முதலிய. (அகம்.)

மருதம் பாடிய நெடுங்கோ

கடைச்சங்க மருவிய புலவர்.

மருதம்பாடிய இளங்கடுங்கோ

1, இவர் சேரர் மரபினர், பாலைபாடிய பெருங்கடுங்கோவின் தம்பியென்று ஊதிக்கப்படுகின்றனர். இவர் பெயர் பாடலால் விசேடித்து வந்தது. மருதத்திணையையே சிறப்பித்துப் பாடியதால் இவ்வடை மொழிபெற்றனர். அகுதை யென்பாளின் தந்தை. சோழரது பருவூரைச் சிறப்பித்து ஆங்குச் சேரபாண்டியர் வந்து போர் புரிந்து தோற்ற கதையை விளக்கிக் கூறுகின்றார். இவர் பாடலில் பாத்தையிற் பிரிந்துவந்த தலைமகனை வாயின் மறுப்பது பாராட்டற் பாலது, இவர் மருதத்திணை யையே பலபடியாலும், சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத் திருக்கின்றன. 2. கடைச் சங்கமருவிய புலவர் (அக~நா)

மருதவாணிப மகருஷிகோத்ரன்

இவன் வைசியகுல முதல்வன். திருக்காஞ்சியில் தன்பெண் அன்புபிரியாளம்மையை மருதப்பருக்குத் திருமணஞ் செய்வித்தவன்,

மருதி

காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஒரு பார்ப்பினி. (மணிமேகலை.)

மருதுபாண்டியன்

சிவகங்கையை ஆண்டவன் இவனது வள்ளல் தன்மையையும் ஏகபத்தினிவிரதத்தையும் புகழ்ந்து ஒரு கவிஞர் கூறியது “தேனுந் தாமன் மருதேந்திர ராஜன் தியாகம்கண்டு, வாலும்பர் தாமும் புலவரென்றார் வடிவேற்குகனென், போனும் புலவனென்சன் புதன் தானும் புலவ னென்றான், நானும் கவியென்று சக்கிரன் முனுவின்றனனே. ” “பரனாரியல்புண ரும்பண் பன்றன்ளின்பம், பாஞரியரறி யாப்பண்பன் றிரனா, ரணிமருது பாண்டில் விழவன்றுதைத் தோன் யாரும் பணி மருது பாண்டிய பூபன். “

மருதூர் நம்பி

எழுபத்தினாலு சிம்மாசனதிபதிகளில் ஒருவர் (குருபரம்பரை.)

மருதேசம்

குருக்ஷேத்ரத்தை யடைந்த தேசம், பாரதப்போரில் போர்வீரர் தங்கிய இடம்.

மருதேவி

நாபிமகாராஜன் தேவி,

மருத்தன்

1. ஒரு அரசன் இவன் சம்ராட், 2. (சூ) அவிக்ஷித்துக் குமரன். இவனுக்குச் சம்வர்த்தனன் எனும் ருஷி, அநேக பஞ்சங்களைச் செய்வித்தனர். இதனால் இந்திரன் முதலியவர் திருப்தியடைந்தனர். குமரன் நரிஷ்யந்தன், 3. கரந்தமன் குமரன், இவன் குமரன் புத்ரன், இவன் பௌரவ வம்சத்தனான துஷ்யந்தனைச் சிலகாலம் புத்திரனாகக் கொண்டவன், 4. இந்திரஜித்தின் யுத்தத்தில் மடிந்த இராக்கத பிணங்களைக் கடலில் எறிய இராவணனால் ஏவப்பட்ட இராவண தூதன் அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணரால் கொலை செய்யப் பட்டான். 5. தேவரை வருத்திச் சிவமூர்த்தியாற் கொல்லப்பட்டவன்,

மருத்தர்

சம்வர்த்தனன் மாணாக்கர். இளன் பொருட்டு அச்வமேதம் இயற்றியவர்.

மருத்து

1. (சூ.) சிக்கிரன் குமரன், இவன் கலாபமென்னும் கிராமத்தில் இருந்து கொண்டு யோகசித்தியுடையனாய் இன்னுமிருக்கின்றான். இவனே அழிந்துபோன சூர்யவம்சத்தை இக்கலியின் முடிவில் உண்டாக்கப் போகிறவன். (பாகவதம்) 2. சுயசையின் தந்தை

மருத்துக்கள்

1. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, கீழ், மேல், பல்யோனியுயிர், 2. (சூ.) ஆவிதீட்சன் குமரன். (அவீக்ஷித்து) இவன் ஆங்கீரள குமரராகிய வியாழனை யாகப்புரோகிதராய் வேண்ட அவர் மறுத்தமையால் நாரதர் சொற்படி தான் பிணத்தைச் சுமந்து சென்று கங்கைக்கரையில் பித்தர் போலிருந்த சம்வர்த்தனரைக் கண்டு யாகத்திற்கு வேண்டியழைத்து அவருடன் முஞ்சுவந்த பர்வதஞ்சென்று பொற்பாளங்கள் கொண்டு யாகஞ்செய்கையில் அக்னி, காந்தருவன் இவர்களைக் கொண்டு இந்திரன் வியாழனால் யாகஞ் செய்விக்கச் சொல்விக்க இவன் மறுத்தது கண்ட இந்திரன் வச்சிரமேவ அது சம்வர்த்தனர் கிருபையால் தம்பிக்க அரசன், தேவர் களிக்க யாகத்தை முடித்து வந்தருஷிகளுக்கு வெகுதிரவியம் கொடுத்தனன். அந்த இருடிகள் தாங்கள் பெற்ற செல்வங்களைப் பூமியிற் புதைத்துச் சென்றனர். (இதை வியாசர் சொல்லால் தருமபுத்திரன் எடுத்து யாகஞ்செய்தனன்.) இவன் தாய் விசாலை, இவன் தன்குடிகளைக் காத்துத் திரிலோகசஞ் சாரியாய் இருக்கையில் ஒரு முநிவர் இவனிடம் வந்து இவன் தந்தையைப் பெற்ற தாய் சொன்ன வார்த்தையாகச் சிலசொற்களைக் கூறினர். அது உலகாள்வோன் துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யவேண்டும் “அவ்வகை செய்யாமல் ஸ்திரீபேராகத்தைப் பொருளாகக் கொண்டு காலங்கழிக்கின்றமையால் பாதாளத்திருந்து நாகங்கள் வந்து எட்டு முனிப்புதல்வர்களைக் கடித்துத் தடாகங்களை விஷமாக்கிப் பாதாளஞ் சென்றன் என்றனர். இதனைக் கேட்ட அரசன் அதிககோபங் கொண்டு பார்க்கவர் ஆச்சிரமஞ்சென்று பாம்புகளைக் கொல்லும் மந்திரத்தை அம்பில் அபிமந்திரிப்பித்து அவ்வம்புகளைப் பாதாளத்து நாகர்மேல் ஏவினன். அவ்வம்புகள் பாதாளஞ்சென்று பல நாகங்களைக் கொல்ல நாயகனை இழந்த பலமாக கன்னியர் மருத்தின் தாயாகிய விசாலையிடம் வந்து முறையிட்டுத் தங்களுக்குக் கொடுத்த வரத்தை நினைப்யூட்டினர். இதனை விசாலை கணவனாகிய அலீத்திற்குக் கூற அவீக்ஷித்து ஆலோசித்துத் தன்மகனுக்குப் பாம்புகளைக் கொல்லாதிருக்க நீதி கூறினன். இதனைக் கேளாமையால் அவீக்ஷித்துக் குமரனுடன் யுத்தத்திற்குச் சந்தத்தனா யினன். அச்சமயத்தில் இருடிகளும் அவீக்ஷித்தின் தாயும் தோன்றி என் யுத்த சந்தத்தராகிறீர் என்று அவரைத் தணிவித்து அச்சர்ப்பங்களால் முனிச் சிறுவர்களை உயிர்ப்பிக்கத் தந்தையைப் பணிந்து அரசாண்டு பிரபாவதி, சௌவீரை, கைகேயி, சௌரந்திரி, முதலியவரை மணந்து நரிஷ்யந்தன் முதலிய (48) குமரர்களைப் பெற்றுப் புண்ணியவுல கடைந்தான். 3. இவர்கள் காசிபர்க்குத் திதியிடம் உதித்த குமரர். நாற்பத்தொன்பதின்மர். தைத்தியரை இந்திரன் கொன்ற வைரத்தால் தாயாகிய திதி இந்திரனைக் கொல்லும் வலியுள்ள ஒரு புத்திரனை வேண்டிக் காசிபனிடம் பெற்றுக் கருத்தாங்கினள். இதனை அறிந்த இந்திரன் இவளுக்கு ஏவலாளனாய்ச் சென்று ஒருநாள் திதி உறங்குகையில் வாயு உருவாய் அவள் உடவிற் புகுந்து அவள் உணரா வண்ணம் வயிற்றிலிருந்த பிண்டத்தை வச்சிரத்தால் ஏழு கூறாக்கினன். அக்குழந்தைகள் வயிற்றில் அழக்கேட்ட திதி ‘மாருத மாருத” என்றனள். அதுகாரணமாக மருத்துக்கள் எனப் பெயர்பெற்றவர். அக்கூறுகள் ஒவ்வொன்றும் ஏழு குமரர்களாகி நாற்பத்தொன்பதின் மராய் இந்திரனுக்கு நண்பர் ஆயினர். இவர்களுக்கு இந்திரன் காற்றின் உருவாய் சஞ்சரிக்கவும் தீர்க்காயுள் அடையவும் வரம் தந்தனன். இவர்கள் ஒருமுறை இந்திரன் தமக்கு அவிர்ப்பாகம் கொடாத தினால் அவன் மீது பூதத்தை ஏவினர். (பாகவதம்.)

மருத்துதி

1 தக்ஷன் பெண்; தருமன் தேவி, குமரன் மருத்துவான். 2. முற்கருஷியின் குமரி, மிருகண்டு முநிவரின் தேவி,

மருத்துவனல்லச்சுதனார்

இவர் இசைத் தமிழிலும் மருத்து நூலிலும் வல்லபுலவர் போலும், பரிபாடலிலுள்ள, 6, 8,9,10,15,19 பாடல்களுக்கு இசை வகுத்தவர். (பரி~பாடல்.)

மருத்துவன்

1. (பரிகாரி) இவன் பிராமணனுக்கும் வைசிய கன்னிகைக்கும் பிறந்தவன், 2, ஒரு அரசன். இவன் வேள்வி தீக்ஷை செய்து கொண்டு யாகசாலையில் இருக்கையில் திக்கு விஜயத்தின் பொருட்டு எழுந்த இராவணன் இவனிடம் யுத்தத்திற்கு வர அரசன் கோபித்து யுத்த சந்தத்தனாயினன், இதனைக்கண்ட முநிவர் அரசனை நோக்கி நீ யாக தீக்ஷை பெற்றிருக்கிறாய் யுத்தத்திற்குச் செல்லலாகாது தோற்றேன் தோற்றேனென்று கூறிவிடுக என அவ்வகைத் தோற்றே னென்று கூறினவன். இவன் யாசத்திற்கு வந்திருந்த தேவர் இராவண னைக்கண்டு பல்வருக்கொண்டு மறைந்தனர். 3. ஒரு மாயாவி, அரக்கன். மகோதரன் ஏவலால் மாயாஜனக வுருக்கொண்டு சீதைக்கு முன் வந்து உள்ளங்கலங்கச் செய்தவன். 4. காரணங்களாலும், குறிகளாலும், மருந்துகளாலும் நோய்களின் உண்மை துணிந்து தீர்க்கத்தக்கன தீர்க்கத் தகாதன அறியுந்திறம் வாய்ந்தவன். (சுக் நீ).

மருத்துவன் தாமோதானார்

இவர் கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர்.

மருத்துவர்

1. சூர்யலுக்குச் சஞ்ஞா தேவியிடம் உதித்த புத்ரர். 2. இவர்கள் நோய் கொண்டார்க்கு ஆயுள் மருந்து தந்து நோய் நீக்கும் வைத்தியர். இவர்களில் பெண் மருத்துவத்தி.

மருத்துவான்

தருமருக்கு மருத்துதியிடம் உதித்த குமரன்.

மருந்தின் வகை

சுக்கு, மிளகு, வெள்ளை மிளகு, வால்மிளகு, திப்பிலி, திப்பிலி மூலம், திரிகடுகு, கடுக்காய், அரோகினிக் கடுக்காய், பிரதிவிக் கடுக்காய், அமிர்தக்க கடுக்காய், சிவந்தகடுக்காய், திரிவிருத்திக் கடுக்காய், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய், நெல்லி முள்ளி, தான்றிக்காய், பேரீச்சங்காய், கண்டுபரங்கி அரத்தை, சிற்றரத்தை, வசம்பு, வட்டத்திருப்பி, கோஷ்டம், அதிமதுரம், அதிவிடயம், அக்கரகாரம், கடுகுரோகிணி, பீதரோகிணி, கிரந்திதகாம், செவ்வள்ளிக்கொடி, செவ்வியம், சடாமாஞ்சில், விலாமிச்சை, பறங்கிப்பட்டை, மயிலாலக்கடி, வெள்ளி லோத்திரம், லவங்கப்பட்டை, சன்ன லவங்கப்பட்டை, லவங்கப்பத்திரி, லவங்கப்பூ, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, தாளிசப்பத்திரி, கற்கடகசிங்கி, நாகப்பூ, சிறுநாகப்பூ, கண்டில் வெண்ணெய், கூகை, நீறு, நாகணத்தி, (நகம்) மாசிக்காய், வலம்புரிக்காய், வாய்விளங்கம், தக்கோலம், விழலரிசி, கார்போக அரிசி, வால் உழுவை அரிசி, வெட்பாலை அரிசி, காசினிவிதை, துளசிவிதை புத்திர ஜீவிவிதை, சமுத்திரசோழிவிதை, கசகசா, பெரிய ஏலம், சிற்றேலம், மலை ஏலம், காட்டேலம், சீரகம், பெருஞ்சீரகம், (சோம்பு) கருஞ்சீரகம், காட்டுசீரகம், பிளப்புசீரகம், கொத்தமல்லி, செங்கடுகு, வெண்கடுகு, சிறுகடுகு, நாய்க்கடுகு, வெந்தயம், ஓமம், குராசானி ஓமம், சதகுப்பை, பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, அபினி, கரியபோளம், கஞ்சா, ரத்த போளம், வாலேந்திரபோனம், வெளிச்சப் பிசின், பச்சைநாவி, வெள்ளைநாவி, கருநாவி, சூத்திரநாவி, நிலா ஆவாரை, சிவதை வேர், வெண் சிவதை, கருஞ்சிவதை, நேர்வாளம், நீரடிமுத்து, செங்கொட்டை, (சேராங் கொட்டை) தேங்காய், எள்ளு, வேம்பு, இலுப்பை இவைகளின் பிண்ணாக்கு முதலிய, மடல்துத்தம், மயில்துத்தம், அன்னபேதி, மாங்கிசபேதி, ஆம்பர், தந்திரிகம், குங்கிலியம், வென்ளைக் குங்கிலியம், குக்கில், அரக்கு, அபாகம் கல்நார், சகஸ்திரவேதி, கல்பதம், சிலாசத்து, சிலாரசம், நண்டுக்கல், காவிக்கல்,கடல்நுரை, சுக்கான்கல், நான்கு வகை நிமிளை, கலைமான் கொம்பு, சங்கு, சிப்பி பலகறை (பதா.)

மருந்துகளின் பேதவதை

மாத்திரைகள் கட்டுகள், பஸ்மங்கள், செந்தாரங்கள், சுண்ணம், பதங்கள், எண்ணெய்கள், சஷாயங்கள், சூரணங்கள், லேக்யங்கள், ரஸங்கள், சுரசங்கள், நெய்கள், வடகங்கள், நீர்கள், வேபங்கள், அஞ்சனங்கள், தைல வகைகள், மெழுக்குகள், குழம்பு, பொடி ஒத்தணம், சூடிடல், ஆவி, புகை பிடித்தல், பற்று, விரோசனம், வமணம், திரி, அட்டை விடல், சஸ்திரப்ர யோகம், தீநீர், களிம்பு, சீலை, குடிநீர், திராவகம், பூப்புடத்தைலம், மை, ஆக்ராணம்.

மருபூமிகள்

சிந்து தேசத்துள்ள நதிகள்,

மருளசங்கரதேவர்

வசவர் காலத்திருந்த வீரசைவர்.

மருவூர்ப் பட்டினம்

காவிரிப்பூம்பட்டினத்துப் புறநகர், (சிலப்பதிகாரம்),

மரைவதன்

பிரியவிரதனுக்கு இரண்டாவது பாரியிடம் பிறந்த குமரன்.

மர்க்க சோமுகன்

வாநரவீரன், சுக்ரீவன் படைத்தலைவன்.

மறக்களவழி

முழவுபோலத் திரண்ட புயத்தினையுடையானை உழும் வேளா ளனாக மிகுத்துச் சொல்லியது. (பு~வெ.)

மறக்காஞ்சி

1. ஒப்பனையாற் பொலிந்த மறத்தொழிலையுடைய வீரன் பகைவருடைய மாறுபாட்டுக்குப் பொறானாகிப் பகைவர் வேல்பட்ட தன் மார்பிற் புண்ணைப் பிளந்து மரிப்பினும் முற்பட்ட துறையேயாம், (பு~வெ.) 2. பச்சிலையாலே பொலிவுபெற்ற மாலையாற் சிறந்த வலியினையு டைய மன்னன் பகைவர் மாறுபாடு நீங்க மறத்தொழிலைச் செலுத்தியது. (பு~வெ.)

மறவர்

இவர்கள் மதுரை திருநெல்வேலி ஜில்லாக்களின் கரை யோரமாகிய கன்னியாகுமரி முதல் இராமநாதபுரம் வரையில் வியாபித்திருப்பவர்கள். இவர்கள் இராமனுக்குத் துணைபுரிந்த பிறகு இராமன் உங்களை மறவன் என்பதால் மறவர் எனவும், போரிடும் கொடுந்தொழிலாகிய மறத்தை மேற் கொண்டவராதலால் மறவரெனவும், அகலிகையிடம் கள்ளப் புணர்ச்சி செய்கையில் இந்திரனுக்குப் பிறந்த மூன்று குமரரும் கௌதமர் வருகைகண்டு முதலில் ஒருவன் கதவின் மறைவில் ஒளிந்தான் அவன் கள்ளன் எனப்பட்டான், இரண்டாமவன் மரமேறி மறைந்தான் அவன் மரவன் எனப்பட்டனன், மற்றவன் வெளிப்பட நின்றான் அவன் அகமுடையான் எனப்பட்டனன். இவர்கள் திருமலை நாய்க்கனுக்குத் துணை புரிந்தவர்கள்.

மறுமை

இது இருவகைத்து. ஒன்று அப்யுதயம், மற்றொன்று நிச்சிரேயசம். அப்யுதயம் என்பது சுவர்க்க முதலிய சுகவடிவாகிய செல்வம், நிச்சிரேசயம் என்பது வீடுபேறு. (பரா மா.)

மறைஞான சம்பந்தநாயனார்

இவர் வெள்ளாற்றின் பாங்கர் பெண்ணாகட மென்னும் திருக்கடந்தையில் வைதிக சைவமறையோர் குலத்துப் பிறந்து கல்விவல்லராய் அருணந்தி சிவாசாரியரிடம் சிவ தீக்ஷை பெற்றுச் சிவதரும மென்னும் ஆகமத்தின் உத்தர பாகத்தைத் தமது மாணாக்கர் கேட்கத் தமிழில் மொழிபெயர்த்துத் திருக்களாஞ்சேரியிற் பிரம்புரேசர் சந்நதியிலிருந்து கொண்டு பிக்ஷை நடாத்தி வருகையில் ஒருநாள் ஓர் அந்தணர் வீட்டுப் புறத்தில் பிக்ஷைக்கு நிற்கையில் உமாபதி சிவம் சிவிகையூர்ந்து மங்கல வாத்தியத்துடன் செல்லக்கண்டு பகற்குருடன் செல்கின்றான் என அதைக் கேட்ட உமாபதி சிவம் சிவிகையினின்றிழிந்து திருவடிபணிந்து அவருண்ட மிச்சினுகர்ந்து நிழல்போலிருக்க மறைஞானசம்பந்தர் அவரது தீவிர பக்குவ மறிந்து அவருக்கு ஞானதீக்ஷை செய்து சில நாளிருந்து திருக்களாஞ்சேரியில் முத்தியடைந்தனர்.

மறையாமையணி

அஃதாவது, பொதுக்குணத்தில் ஒற்றுமையுடைய இரண்டு பொருள்களுக்கு ஒருகாரணத்தால் வேற்றுமை தோன்றுதலாம். இதனை வடநூலார் உன் மீவிதாலங்காரம் என்பர். (குவல)

மறைவணி

அஃதாவது, பொதுக்குணத்தினால் பொருளுக்கு வேற்றுமை தோன்றாமையாம் இதனை வடநூலார் மீலிராலங்காரயென்பர். (குவல)

மறைாஞன சம்பந்தர்

1. சீர்காழித் திருஞானசம்பந்த மூர்த்திகளின் திருவடியார். வள்ளல்கள் அறுபத்து நால்வருள் ஒருவராகிய ஆளவந்தவள்ளல் சந்தானத்தைச் சேர்ந்தவர். பிராமணர், இவர் பதி பசு பாசப்பனுவல் சிவஞான சித்தியார் சிவதர்மோதரம் முதலியவற்றிற்கு உரையும் பரமத திமிரபாநு, சைவசமயநெறி சோமவார கற்பம், பிரதோஷ கற்பம், உருத்ராக்ஷ விசிட்டம், திருக்கோயிற்குற்றம் என்னும் நூலும் இயற்றியிருக்கின்றனர். இவர் மறைஞான தேசிகர் சைவ வேளாளர் சிதம்பரத்திருந்தவர். தமிழில் அருணகிரி புராணம் இயற்றியவர்.

மற்கலிதேவன்

ஆசீவக மத தேவன்.

மற்றதற்காக்கலணி

ஒரு காரியத்தினுலகறி காரணத்தை யொருவனதற்குப் பகையாகிய காரியத்திற்குக் காரணமாக்குதல். (வியாகாதாலங்காரம்) (குவல.)

மற்றுடைப்பாசி

சினச் சேனையினையுடைய சினமன்னர் வீரசுவர்க்கத் திடத்துப்போன போக்கைச் சொல்லியது. (பு~வெ)

மற்றுமுதிர்வு

மதிற்குள் உள்ளோனுடைய முழங்கும் முரசு காலையிலொலிப்ப புறத்திருந்தவனது வெய்ய கோபத்தின் மிகுதியைச் சொல்லிய துறை. (பு. வெ. உழிஞை)

மலசலமோசனஞ் செய்யுமிடங்கள்

பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் செய்தலாகாது.

மலஜம்

கரூசதேசத்தின் அருகிலுள்ள தேசம், Malada, The western portion of the district of Sbababad,

மலடு

பெண்மலடு, ஆண்மலடு என இரு வகை. இது, ரஜப்ரதான தோஷத்தாலும், ஜன்மாந்தர பாவக்ருத்யங்களாலும், ஸ்திரீ மலடியாவள். அவ்வாறே சுக்லக தங்களாகும் வாதாதிகளாலும், புருஷன் மலடாவன். புருஷனுடைய வீர்யம் இனிப்பாயும், நீரில் மிதப்பதாயும், சிறுநீர் துரைத்தும் இருப்பின் புருஷன் மலடல்லன். மேற்கூறிய இலக்ஷணத்திற்கு மாறாயின் புருஷன் மலடாவன், இந்த மலடு ஆதிமலடு, காக்கை மலடு, வாழைமலடு, கருப்பமலடு என நான்குவகைப்படும். இவற்றுள் ஆதிமலடு வயிறு மூன்று மடிப்புள்ளதாயும், இடுப்பு பருத்து, உடம்பு தூலித்தவள், காக்கை மலடு முதலில் இரண்டு பிள்ளைகள் பெற்று பிறகு பிள்ளை பெறாதாள், வாழைமலடு ஒரு பிள்ளை பெற்று மீண்டும் பெறாதாள், கருப்பமலடு; பிரதிகர்ப்பத்திலும் சாவுப்பிள்ளை பெறுபவள்.

மலட்டுரோகம்

சுக்கில சோனிதங்களில் வாதாதிகளால் உண்டாகின்ற தோஷங்களினாலும், ஜன்மாந்தா பாவத்தினாலும் உண்டாவது. அது ஆண்மலடு, பெண்மலடு என இருவகை. பெண்மலட்டில் ஆதிமலடு, காகமலடு, கருப்பமலடு என நான்கு பிரிவுகளுண்டு.

மலதம்

1. இந்திரனது பிரமகதி தோஷமாகிய மலத்தைப் போக்கிய புண்ய தீர்த்தமுள்ள இடம். இது மலத்தைப் போக்கியதால் மலதம் எனப்பட்டது. (இரா பா.) 2. சாயூந்திக்கு அப்பாலுள்ள நாடு, பூர்வம் இந்திரனைப் பிடித்த மலமாகிய பிரமஹத்தி நீங்கின இடமாதலின் இப்பெயரடைந்தது. (வான்மீகி. ரா.) 3. ஒரு நாடு,

மலதம் கருசம்

இந்திரனுடைய மலகரூசங்கள் நீங்கின இரண்டு தேசங்கள். மிதிலைக்குச் செல்லும் வழியிலுள்ளவை. (இரா)

மலமாதம்

இரண்டு அமாவாசை வரும் மாதம்.

மலம்

(3) ஆணவம், காமியம், மாயை.

மலம்பீச்சும் பிராணி

இது வட அமெரிக்கா ஆண்டிஸ் மலை பிரதேசத்தது இதன் தேகத்தில் நீண்டு அடர்ந்த மயிருண்டு; உருவத்தில் கீரிபோன்றது பற்கள் நாய்க்கிருப்பது போலிருக்கிறது. இதை விரோதிகள் எதிர்த்தால் ஒருவகை மஞ்சளான நீரை ஆசனத்தின் வழியாகப் பீச்சுகிறது. அந்நீர் (18) அடி பாய்கிறது. அதன் நாற்றம் எவ்வகையிலும் நீங்குவதில்லை,

மலயத்துவசபாண்டியன்

1. காசிராசன் குமரன். இவன் குமரன் பிரதீப்பாண் டியன். இவன் தேவி வைதற்பி. இவனது மற்றொரு குமரன் இத்மவாகன், பாரத யுத்தத்தில் பாண்டவர்க்கு உதவி புரிந்து அச்வத்தாமனால் இறந்தவன். 2. மணவூரை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியன் குமரன். இவன் பதினாயிரம் பெண்களை மணந்தும் புத்திரன் இல்லாமை யால் சூர்யகுலத்தரச னாகிய சூரசேநன் புத்திரியாகிய காஞ்சன மாலையை மணந்து அரசாண்டு (99) அச்வமேத யாகஞ்செய்து பின்னும் ஒரு யாகஞ் செய்ய இருக்கையில் இந்திரன் இவன் மற்றொரு யாகஞ்செய்கையில் தன் பத மாறுமென்று எண்ணி இவனிடம் வந்து புத்திர காமேஷ்டி செய்க என ஏவினன். அதனால் அரசன் புத்திர காமேஷ்டி யாகஞ் செய்ய அதில் பார்வதி பிராட்டியார் மூன்று முலைகளோடு அவதரித்தனள். அரசன் புத்திரப்பேறு வேண்டி யாகஞ்செய்ய மும்முலையோடு பெண் பிறந்ததே எனக் கவலுகையில் அசரீரி அரசனை நோக்கி அரசனே இந்தப் பெண்ணிற்கு நாயகன் வரும்பொழுது ஒருமுலை மறையுமெனக் கூறக்கேட்டுக் களித்திருந்து மகளுக்குச் சகல கலைகளும் கற்பித்துத் தன் முடியை மகளுக்குச் சூட்டிச் சுவர்க்கமடைந்து சிலநாள் பொறுத்து சோமசுந்தர பாண்டியனால் கைலாயத்திருந்து வந்து ஏழு கடலாடிச் சென்றவன்.

மலயம்

பொதிகை மலை,

மலர்க்கொண்டைப் பறவை

இது, அமெரிகா நாட்டில் இருக்கிறது. இது மாம்ஸபக்ஷணி இது அழகாய்ப் பாடக்கூடிய பக்ஷி. இது புறத்தில் நீலங்கலந்த வெண்ணிறமாய் வயிறு வெளுத்து அழகிய மலர்க்கொண்டை பெற்றிருப்பது, இது மரங்களிலுள்ள இலைகளில் மறைந்து தன் கொண்டையை மாத்திரம் வெளிப்படுத்தி இருக்கையில் தேனை நாடி வரும் வண்டுகள் முதலிய இதனை மலரென்றெண்னி இறங்குகையில் அவற்றை ஆகாரமாகக் கொள்ளும். இதனை (Bee Martin) என்பர்.

மலர்ச்சியணி

இது சிறப்புப்பொருளைச் சாதித்தற்குப் பொதுப் பொருளையும் மீட்டும் அப்பொதுப்பொருளைச் சாதித்ததற்கு மற்றொரு சிறப்புப் பொருளையும் சொல்லுதலாம். இதனை வடநூலார் விகஸ்வராலங்காரம் என்பர். (குவல.)

மலாக்காமதம்

(Malacca.) இத் தேசத்தவர் பூர்வத்தில் வாயுவை லானிக்ஷோ என்னும் பெயரால் முதற்கடவுளென்று பூஜித்து வந்தனர். இவர்களுக்கு நிட்டோ என்னும் துஷ்ட தேவதையுமுண்டு. வருஷங்களில் அநேக பண்டிகைகளைச் செய்வர்.

மலாடு

1. மலையமாநாடு, இது சேலம் திருக்கோவலூர் முதலிய 2. (மலையமா நாடு). அருவாராட்டிற்கு மேற்கிலுள்ளது. இது மலையமானால் ஆளப்பட்டது. இவனது இராஜதானி திருக்கோயிலூர்.

மலேயமதம்

இவர்களிற் சிலர் வாயுதேவனையும் சமுத்திரத்தையும் தெய்வங்களாக ஆராதித்துக் கொண்டிருந்தனர். இவர்கள்ளுக்கு டாவிடஸ் என்பவர் சிருட்டிகர்த்தா. பஞ்சபூதங்களை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். வியாதி முதலியன பிசாசங்களின் காரியமென்று அவற்றைப் பரிகரிக்கப் பலி முதலியவை கொடுப்பர்.

மலை

1. (7) கைலை, இமயம், மந்தாம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், இவற்றுடன் கந்தமாதனம் கூட்டி (8) என்பர். 2. மணல் நாளேற ஒன்றுடன் ஒன்று சேர்ந்திறுகிப் பெரும்பாறைகளாய் நின்ற பூமியின் மேட்டுப் பாங்கான உயர்நிலை.

மலைக்கொழுந்து நாவலர்

இவர் காஞ்சிபுரம் தலமூற்றாரெனும் கச்சி மயேசுர குலத்தினர் திருப்பாண்டிக்கொடி முடியார் மாணிக்கமாமலைத் திருத்தொண்டர் சதக மியற்றியவர்.

மலைச்சரிவு

மலையின் மேலிருந்து அடிவரையில் பார்த்தால் சரிவாகத் தோன்றும். அதற்கு மலைச்சரிவு என்று பெயர். பூகோளம்,

மலைச்சாரல்

மலையின் அடிவாரத்திலிருந்து கொஞ்ச தூரம் வரையில் பூமிசற்று உயர்வாகவே இருக்கும். இதற்கு மலைச்சாரல் என்று பெயர். (பூகோளம்.)

மலைத்தொகுதி

மலைகள் கும்பலாக இருப்பதற்கு மலைத்தொகுதி என்று பெயர். (பூகோளம்.)

மலைத்தொடர்

மலைகள் தொகுதியாக இராமல் ஒன்றை படுத்து ஒன்றாகத் தொடர்ந்து செல்வதும் உண்டு. அவைகளுக்கு மலைத்தொடர் என்று பெயர். (பூகோளம்.)

மலைபடுகடாம்

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் மல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனைப் பாடிய நூல்,

மலைபடுமமுது

தக்கோலந் தீம்பூ தகை சாலிலவங்கம் கற்பூரஞ் சாதியோடைந்து

மலைப்பாம்பு

பாம்பினத்தில் பெரிய உருவமும் நீளமும் கனமும் உள்ளது. இப்பாம்பிற்கு பெரிய மிருகங்களும் அஞ்சும். இவை பிராணிகளின் மீது பாய்ந்து சுற்றிக் கொண்டும் கடித்தும் கொல்கின்றன.

மலையகந்தனி

இவளைக் கபாலகேதுவின் குமானாகிய கங்காள கேது என்னும் அரக்கன் தூக்கிச்சென்று பாதாளத்துச் சிறையிட்டனன். இவன் நாரதரைக் கண்டு தன் செய்தியை மித்திரசித்திற்குக் கூறித் தன்னை மீட்க வேண்ட அங்கனமே அவர் கூறக்கேட்ட மித்திரசித்து பாதாளஞ் சென்று அவனிடம் இருந்த சூலத்தை மலையகந்தனி எடுத்துக்கொடுக்க வாங்கி அவனைக் கொன்று அவளையும் மணந்தனன். (காசிகாண்டம்.)

மலையகேது

இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன்.

மலையடிவாரம்

மலையின் அடிப்பாகத்திற்கு மலையடிவாரம் என்று பெயர். (பூகோளம்).

மலையத்துவச பாண்டியன்

மலயத்துவச பாண்டியனைக் காண்க

மலையனார்

இவர் தமது பாடவில் மலை வளம் பலபடக்கூறி “மல்லற்றம் மவிம்மலை கெழுவெற்பு” எனக்கூறிய அருந்தொடர் மொழியையே தமக்குப் பெயராகப் பெற்றவர். இயற்பெயர் புலப்படவில்லை. குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடலிலுள்ள இறைச்சிப் பொருள் மிக்க நயமுடையது இவர் பாடியது. (நற் 93ம் பாட்டு.)

மலையமான்

சிவமூர்த்தியை வணங்கிச் சோணாட்டில் காவிரி வர வேண்டியவன். (காவிரித்தல புராணம்.)

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் அல்லது திருக்கிள்ளி

மாறோக்கத்து நப்பசலையாரால் பாடப்பட்டவன். இவன் மலையமாநாட்டுக் கோவலூர்க்காசன். முள்ளூர் மலையுடையவன். சோழனுக்கு உதவி புரிந்தவன். (புற நா.)

மலையமான் திருமுடிக்காரி

கடையெழு வள்ளலில் ஒருவன். இவன் பெண்ணை யாற்றருகிலுள்ள மலை நாடாகிய மலாடு நாட்டரசன். இவன் இராசதானி கோவலூர், தமிழ் நாட்டரசர் மூவர்க்கும் ஒவ்வொரு சமயத்தில் உதவி புரிந்தவன். முள்ளூர் மவையையுடையான், புலவர்க்கு உபகாரி, இவனே மலையனென்னும் வள்ளல். இவன் குதிரைக்குக் காரியென்று பெயர். இவன் ஓரியென்பவனுடன் போரிட்டவன். இவனுக்கு மலையன் எனவும் பெயர். இவனை மாறோக்கத்து நப்பசலையார், பாடினவர். (புற~நா.)

மலையமான் மக்கள்

இவர்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையால் இடறவிடத் தொடங்கிய காலத்துக் கோவூர்கிழார் சோழனைப் பாடிப் பிழைப்பித்தார். (புற~நா.)

மலையம்

குலபர்வதங்களில் ஒன்று.

மலையாண்டியப்பய நாயகர்

இவர் கன்னிவாடி ஜமீன்தார். இவரை ஓர் கவிஞர் “கல்லொக்குஞ் சிந்தை முட்டாட்டுரை காள் கொடைகற்க வென்றால், வல்லக்கவ சர்குலனார் சிங்கையன் வரத்துதித்த செல்வக் குமாரன் மலை யாண்டியப்பய சிங்கத்துக்குப் பல்லக்குக் கொம்பு சுமந்தீரென் நான் புத்திபாலிக்குமே” என்றனர். இந்த ஜமின்தார் ஸ்ரீசிவஞான யோகியர் மாணாக்கருள் ஒருவராகிய இராஜபாளயம் சங்காமூர்த்தி கவிராயரவர்களுக்கு யானைக் கன்றும் வளநாடும் கொடுத்து உபசரித்தவர்.

மலையாளர்

மலையாளத்திலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்கள். இவர்கள் பாஷை மலையாளம். இவர்கள் பலவிதவேலை செய்து பிழைக்கின்றனர்.

மலையுச்சி

மலையின் முடிவுக்கு மலையுச்சி என்று பெயர். (பூகோளம்.)

மல்

வாணாசுரனை வெல்ல மல்லனாய்க் கண்ணன் சென்று அறைகூவி வென்று ஆடியகூத்து.

மல்கலாக்கிய சூலை

(மண்குத்து நோய்) பிரசவித்தவுடன், அழுக்கினால், மார்பு, சிரம், கீழ்வயிறு இவற்றில் நோவுண்டாகும்.

மல்செட்டி

அரசன், வைசியன் கன்னிகையைப் புணரப்பிறந்தவன். மஞ்சள் இஞ்சி முதலிய விற்போன்,

மல்லதேவன்

பாணவம்சத்தாசருள் ஒருவன்.

மல்லநாதன்

பீமனால் திக்விஜயத்தில் ஜெயிக்கப்பட்டவன். (பார சபா.)

மல்லன்

தருசகனோடு போர்செய்தற்கு வந்த பகையாசர் எழுவர்களுள் ஒருவன். (பெ~கதை)

மல்லபூமி

காருபதமென்னும் நாட்டில் இலக்குமணர் நிருமித்த பட்டணம்.

மல்லம்

ஒரு தேசம். There are two Malla Desa, One in the west The Multan The other is in the east, The Country in which Paragnath hills are situated, that is, portion of the districts of Hazaribagh and Manbhum.

மல்லயுத்தம்

1. பகைவரது உயிர்நிலை யுறுப்புகளையும், உறுப்புக்களின் பொருத்துக்களையும், முறைமையாக ஆதல், முறை தவறிச் சென்றாதல், திறமையோடு உராயதலாலும், கைகளால் பிணித்தலாலும், அவரைக் கொல்லுதலாம். அக்கைப்போர் (8) வகைப்படும். (1) தன் இடக்கையாற் பகைவன் தலைமயிரை இறுகுறப்பிடித்தல், (2): வன்மையால் நிலத்தில் வீழ்த்திப்பிசைதல், (3) கால்களால் தலையில் உதைத்தல், (4) முழங்காலால் வயிற்றில் மோதுதல், (5) திரண்டகை முஷ்ட்டியால் சதுப்புக்களில் கருமையாகக் குத்தல், (6) அடிக்கடி முழங்கால்களால் தாக்குதல், (7) அகங்கையால் உடம்பில் எப்பக்கத்தும் அறைதல், (8) பகைவன் சோர்ந் திருக்குங்கால் கபடமாக அவனைப் போரிற் சுழற்றுதல் என்பன. (சுக்~நீ.) 2. இருவர் கைகோத்து கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவரையொருவர் வெல்ல வேண்டிச் செய்யும் போர்.

மல்லர்

திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒருவர்.

மல்லாலர்

விநாயகர் திருவவதாரத்தில் ஒன்று, இவ்வவதாரத்தில் கமலாசுரனைக் கொன்றனர்.

மல்லிகார்ச்சுநன்

ஸ்ரீசந்திரன் என்போன் புத்திரப்பேறு வேண்டிச் சிவமூர்த்தியை யெண்ணி விஷ்ணு தனக்குப் புத்திரராகத் தவமியற்றி மல்லிகார்ச்சுநரைப் பெற்றான், ஒருநாள் மல்லிகார்ச்சுநர் வேட்டைக்குப் புறப்பட்டுத் திண்டீரவனஞ் சென்று வேட்டையாடுகையில் திண்டீரன் எனது கட்டளையின்றி என் காவலில் வந்த நீ யார் என்று எதிர்க்க இருவரும் (1000) வருஷம் போரிட்டும் அசுரன் இறவாமையால் மல்லிகார்ச்சுநர் காலதண்டத் தால் இவனுயிரைப் போக்கினர். திண்டீரன் உயிர் நீங்குகையில் ஸ்ரீஹரி, என்று உயிர்விடுத்ததால் விஷ்ணுமூர்த்தி தரிசனம் தந்து உனக்கு என்ன வரம் வேண்டுமென்ன அசுரன், உமது தண்டத்தால் என்னுயிர் நீங்கினேன் ஆதலால் இவ்வனம் லோக தண்டவனம் என்றும், அப்பெயரால் ஒரு தீர்த்தமும், அந்தக் கதாயுதமும் அத்தீர்த்தக்கரையில் நிறுத்தப்பட வேண்டு மெனவும் அத்தீர்த் தத்தில் மூழ்கித் தண்டத்தைத் தழுவினோர் பாபம் நீங்கிச் சுத்தராய் உன்னருள் பெறவும் வரம் அருள்க என்று வரம்பெற்றனன்.

மல்லிகிழான் காரியாதி

இவன் குடநாட்டை ஆண்டவன். ஏற்போர்க்கு அன்புடையவன். இவனை ஆவூர் மூலங்கிழார் பாடிப் பரிசுபெற்றார். (புற நா.)

மல்லிநாததீர்த்தங்கரர்

பத்தொன்பதாவது சைந தீர்த்தங்கரர். இவர் அங்கநாட்டில் மிதிலாபுரியிற் கும்பசு மகாராஜாவிற்குப் பிரசாவதியிடம் மார்கழி பூர்வபக்ஷம் ஏகாதசி அச்வரிநக்ஷத்திரத்தில் பிறந்தவர். இவர் உன்ன தம் (25, வில் சுவர்ணவர்ணம், ஆயுஷ்யம் (55000) வருஷம். இவர் காலத்துக் கணதார் விசாகர் முதல் இருபத்தெண்மர், அரசர் பத்மசக்கிரவர்த்தி, பலதேவன், நந்திமித்திரன், தத்தவாசுதேவன், பலீந்திரபிரதிவாசுதேவன்

மல்லிநாதன்

காளிதாசன் செய்த கவிகளுக்கு வியாக்யானஞ்செய்த ஸமஸ்கிருத வித்துவான்.

மல்லிராசையர்

இவர் வீரசைவ அரசர். இவர் ஸ்ரீபர்வதத்துள் தமது அரசு துறந்து யோகத்திருந்து முத்தியடைந்தவர். இவர் சரிதையைச் சகளேச மாதிராசையரைக் காண்க.

மல்லிஷேணாசாரியர்

நாற்குமார காவியம் செய்த சைநர்.

மள்ளனார்

1. இவரது இயற்பெயரொன்றொழிய வேறியாதும் தெரியவில்லை. கள்ளூரில் இளமகளொருத்தியின் கற்பழித்தா னொருவனைப் பற்றி நீற்றறையில் இட்ட கதையையும், வையை நீராடற் சிறப்பையுங் கூறுகிறார். செஞ்சை நோக்கி நின்கைப்பட்ட ஒருத்தியை நீ கைவிட்டு ஏமாந்திருக்கலாமோ வென்றது வியப்பு டையதாகும், இவர் குறிஞ்சியையும், மருதத்தையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 204ம் பாட லொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர்

மழநாடு

மலை நாட்டில் திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்த நாடு,

மழபுலவஞ்சி

பகைவர் வேற்றுப் புலத்தைக் கொள்ளையூட்டி அகங்கள் பாழ்படக் கொள்ளை கொண்ட தொழிலைச் சொல்லியது. (பு. வெ.)

மழவராயன்

கோடைசிவந்தான் ஊர், ஒரு ஒற்றன், இவன் உப்பரிகை மீதிருந்த ஒருத்தி கிராமப்பிர தக்ஷிணம் வந்த புலவனை நோக்கி “என்னெஞ்சு மென்விழியுங் கொண்டோ விலங்கேசன், பொன்னஞ் சிகாமணியும் பொன் முடியும். வன்னெஞ்சும், சிந்துங் கொடைச்சிவந்தான் தென்கோடையிர் கழங்கும், பந்தும் சாதித்தபடி,” என்று கூற அவளைக் கொடுக்கார் “கண்டு பணியக் கடவேனோகாதலுடன், தொண்டை பிதழருந்தித் தோய்வேனோ கொண்டற் கொடைச்சிவந்தான் கோடைக்குளிர் காவிலன்ன நடைச் சிவந்தானென் செய்வேனான்” எனவருஞ் செய்யுள் புலவன் கூற்றாயிருக் கலாம். (தமிழ்நாவலர்சரிதை.)

மழு

சிவாயுதம், இது பிரளய காலாக்னியால் புருஷரூப மடைந்துள்ளது. இத னைப் பாசிராமர் தவத்தாற் பெற்றுப் பல அரசவம்சங்களைக் கருவறுத்தனர்.

மழை

1. ஆவியாய்ப் பரிணமித்த மேகங்களின் மீது குளிர்ந்தகாற்றும்படித் அவைகள் நீரினணுக்களாக ஒன்று சேரும். இக்கனத்த அணுக்களை மேகம் தாங்கமுடியாது சொரிவது 2. ஆகாயத்தில் பறந்தமேகங்கள் குளிர்ச்சியினாலி றுகிப் பூமியின் மீது துளிப்பது, இவை உஷ்ணநிலையினின்று குளிர்ந்த நிலைக்கு மாறுகையில் மழையாம். அப்போது வெண்மேகம் கருமேகமாம். இவை விழுகையில் ஒன்றுடனொன்று சேர்தலால் துளிகளாகின்றன. 3. வெப்பத்தால் மேகமாகப் பரிணமித்த நீராவியின் மீது குளிர்ந்த காற்று வீச நீர் கொண்டமேகம் தன்னிடமுள்ள நீரைப் பொழிவது.

மழை அளக்கும் கருவி

(Rain gauge) தட் டையான அடியுள்ள ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை மழை பெய்யுமிடத்தில் வைத்தால் அதில் நிரம்பிய நீரை அளவு கருவி கொண்டளந்து கொள்வது.

மழைக்குறி

1. ஆடி மாதத்துச் சோதியும், நவமியும், உத்திராடமும், பௌரணையும், சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமை கூடினும் அன்றித் தனித்துறினும் இந்த நாட்களில் மந்தாரம், மழை, பரிவேடம், இந்திரதனு, முழக்கம் இவை உண்டாகில் அவ்வாண்டு சுபக்ஷ காலமாம். சுக்ரன், இராகு, கேது, புதன் இவர்களுடன் சந்திரன் கூடில் மழை உண்டாம். சந்திரனை யொழிந்து புதனுக்கும் சுக்ரனுக்கும் யுத்தம் உண்டாய்ப் புதன் செயிக்கின் காற்றுண்டாம், சுக்ரன் செயிக்கின் மழை உண்டாம். மாசி முதல் ஆடியிறு தியாக மாதந்தோறு மூடுபனி பெய்யில் கார்த்திகை, ஐப்பசி, புரட்டாசி, ஆவணி, ஆடி, ஆனி, இம்மாதங்களில் மழை மிகவுண்டாம், ஆவணி முதலாக முன் சொல்லாத மாதங்களில் மூடுபனி யுண்டாகில் அம்மாதங்களில் மழையுண்டாம். (விதானமாலை.) 2. வைகாசி தேய்பிறை சதுர்த்தசியில் மழை பெய்தால் அவ்வருஷம் நல்ல மழை உண்டு, “வைகாசி மாதம் மதி குறைந்த நாலாநாள், பெய்யுமேயாயிற் பெருமழையாம்;பெய்யாக்கால், ஏரி குளமு மெழிற் கிணறு நீர்வற்றும், பாரில் மழையில்லைபார்”

மழைமரக்கால் அளவு

(60) யோசனை அகலமம், நூறுயோசனை உயரமுமுள்ளது.

மழைமரம்

இது அத்லான்டிக் கடலிலுள்ள தீவுகளில் இருக்கின்றது. இத்தீவில் நல்ல தண்ணீர் கிடைக்காது. ஒருவிதமரம் பகற் காலத்து வாட்டமுற்றுச் சூரிய அத்தமன காலத்தில் தளிர்த்து மழைபோல் நீரைக் கொட்டுகிறது. அத்தீவவாசிகள் தொட்டிகளில் நீரைப் பிடித்து உபயோகித்துக் கொள்கின்றனராம்.

மழைவூர்நம்பி

ஒரு ஸ்ரீவைஷணவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

மவுசலர்

ஒரு இருடி.

மவுதகல்யர்

சாகல்யர் மாணாக்கருள் ஒருவர்.

மஹா அசனி

ஒரு தைத்தியன். இவனை இந்திரன் வேண்டுகோளால் விஷ்ணு வதைத்தனர்.

மஹாலக்ஷ்மி விரதம்

இது புரட்டாசிய சுகலாஷ்டமி முதல் பதினாறுகாள் லஷ்மியை நோக்கி விரதமிருப்பது இதனை அநுட்டிப் போர் எல்லா நலமும் பெறுவர்.

மஹாஷ்டமி விரதம்

இது ஐப்பசி சுக்லபக்ஷ அஷ்டமியில் தக்ஷயஞ்ஞ நாசனியாகிய காளியை யெண்ணி யநுட்டிப்பது.

மா

இஃது இந்தியாவிலுள்ள மரங்களில் இந்துக்களால் சுபாசுபவைதிக காரியங்களில் கொண்டாடப்பட்ட விருக்ஷம். இதன் பிஞ்ச காய்கள் புளிப்புள்ளவை ஆதலால் இவற்றை உப்பிவிட்டு பல நாட்களுக்கு உணவிற்குப கரணமாகக் கொள்வர். இதன் பழம் மிக்க இனிமையுடையது. இது இனிமையால் பலவகைப் பெயர்கள் பெறும்,

மாகசுக்லபஞ்சமி விரதம்

மாசி மாதம் சுக்லபடி பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது.

மாகடதானம்

ஒரு சாணிற்குக் குறையாது அதிகம் நூறு சாணாய் ஒரு பொற்குடஞ் செய்வித்து வயிரத்தால் அலங்கரித்து நெய், பால், குடத்தில் விட்டு ஒரு கற்பகத்தரு செய்தமைத்து அடியில் திரிமூர்த்திகள், கணபதி, வேதம், புராணம், இவர்களை எழுந்தருளச் செய்து கும்பத்தைச்சூழத் தானியாதிகள் பாப்பித்தான் சுசிர்பூதனாய் கும்பத்தை வலம் வந்து வேதி யர்க்குக் கடத்தைத் தானஞ் செய்வதாம்.

மாகதன்

க்ஷத்திரியப் பெண் வைசியனைக் கூடிப் பெற்ற பிள்ளை. இவனுக்குச் சிலகன் எனவும் பெயர், கடலிலும் கரையிலும் வர்த்தகஞ் செய்வது தொழில். (மநு)

மாகதருஷி

வசிட்டன் மரபில் உதித்தவர். இவரை விபுதை யென்னும் அசுரப் பெண் அசுரராசன் சொற்படி மயக்கிப் புணர்ந்து கயமுகா சானைப் பெற்றனள். விபுதையையும் கயமுகாசுரனையுங் காண்க, பதினான்கா மன்வந்தரத்து ருஷியென்ப.

மாகதர்

1. ஒருவகை அரச சாதியர், 2. இருந்தேத்துவார்.

மாகதி

1, மகததேசத்துப் பாஷை. இது யிராக்ருத பாஷை. 2. சோண நதிக்கொருபெயர்.

மாகந்தன்

ஒரு வேதியன். தந்தை தேடிய பொருள்களைத் தீயவழியிற் செலவிட்டு நண்பன் தேவியைப் புணர்ந்து செல்வம் கெட்டதால் இழிந்தவனிடம் தானம் வாங்கினன். ஆதலால் வேதியர் இவனை ஊரை விட்டுத் துரத்த மனைவி மக்களுடன் ஒரு காட்டின் வழிச் செல்லுகையில் கள்ளர் இவனிடமிருந்த பொருள்களைப் பறித்துக் கொண்டு மனைவி மக்களையும் இவனையும் கொன்றனர். இவன் சாகும் தருணத்தில் காசியை நினைத்ததால் இவன் தாழ்ந்த தேசத்தில் சேவலாகவும், மனைவி பெட்டையாகவும், குமரர் குஞ்சுகளாகவும் பிறந்து காசிக்குக் காவடி கொண்டு செல்வாருடன் சென்று முத்திமண்டபத்தில் இறந்து முத்தி பெற்றவன். இம்மண்டபம் குக்கிட மண்டபம் எனப்படும். (காசி காண்டம்.)

மாகந்தி

1. தக்ஷிண பாஞ்சாலத்து இராஜதானி. 2. கங்கா தீரத்திலுள்ள துருபதன் நகரம் (பா. உத்தி.)

மாகன்

இவன் தத்தன் மகன். சமஸ்கிருதமாக காவியஞ்செய்த கவி,

மாகலூர்க்கிழான்

புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரையியற்றிய உரையாசிரியர். இவர்க்குச் சாமுண்டி தேவநாயனார் எனவும் பெயர்.

மாகவிதன்

ஒரு பாண்டியன். இவன் சிவப்பிரசாதத்தால் முத்தியடைந்தான்.

மாகாயன்

சூரபன்மன் படைவீரன்.

மாகாலன்

ஒரு சிவகணத்தவன்,

மாகாளர்

1. அரிகரப் புத்திரர்க்குச் சேநாபதி. 2. சிவகணத்தவருள் ஒருவர். 3. இவர் சம்பூரில் இருந்த வீரசைவ அடியவர். இவர் தம் சிரத்தையரிந்து சிவசன்னிதானத்து வைத்து அதை மீண்டும் தரித்துக் கொள்ள இதைக் கண்ட கோவிந்த பட்டராகர் தம் தலையை அரிந்து அரனிடமளித்து வேறு தலைபெற்றனர். இதைக் கண்ட வங்கையர் இவர் செய்ததும் தகாதெனத் தம் தலையை அரிந்து சந்நதியிலிட்டு வேறு தலை வர அதனையும் அரிய மீண்டும் வேறு வேறு தலைகள் வந்து கொண்டிருக்க அரியச் சலிக்காதவரா யிருக்கச் சிவமூர்த்தி நாமே தோற்றனம் என்று அவர் கையைப் பிடித்து அருள் செய்தனர்.

மாகிட்டியான்

வைசியப் பெண்ணிடம் அரசனால் உதித்தவன்.

மாகிஷம்

ஒரு தேசம் (Mysore).

மாகிஷ்மதி

1. நருமதை தீரத்தில் உள்ள பட்டணம். ஒரு காலத்து அக்னி இப்பட்டணத்தில் அயலான் தாரத்தைக் கூடச் சென்று அகப்பட்டு அரசனுக்குத் தன்னுருக் காட்டி அரசனை ஆசீர்வதித்துத் தப்பினன். நரகாசுரன் பட்டணம். கேகய ராசாக்களின் அரசு.

மாகுத்தன்

கழுகாசலத்தில் கழுகுருவாய்த் தவஞ்செய்த இருடி. 2. கார்த்திவீரியன் பட்டணம் (பா. சபா.) Makeshwara on the right bank of the Narbada 40 miles South of Indore.

மாகேயர்

முல்டானாவென்று வழங்கும் தேசத்து வேளாளர்.

மாக்காயனார்

கணிமேதாவியருக்கும், காரியாசனுக்கும் ஆசிரியர்.

மாங்கல்ய சூத்ரம்

மங்கல சூத்திரம் காண்க.

மாங்காடு

குடமலைப் பக்கத்துள்ளதோர் ஊர். (சிலப்பதிகாரம்.)

மாங்குடி மணியசிவனார்

ஒரு சைவர்.

மாங்குடி மருதனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். மதுரைக் காஞ்சி பாடியவர். இவர் ஊர் சோழநாட்டு மாங்குடியா யிருக்கலாம். அகம், (புறம்) நற்றிணை முதலியவற்றுள்ளும் சிலபாடியவர், தலையானங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் உய்விக்கப்பட்டவர்.

மாங்குடிகிழார்

1. ஒரு தமிழ்ப்புலவர். இவராற் பாடப்பட்டவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வாட்டாற்று எழினியாதன். (புற நா). 2. இவரே மாங்குடி மருதனாரெனப் படுவார் இவர் மதுரைக்காஞ்சி பாடினமையிற் காஞ்சி புலவனெனவும் கூறப்படுவர்.

மாசதிசை யென்னும் கோசாரபலன்

ஜன்ம நட்சத்திரமாவது நாமநட்சத்திரமாவது; அந்தநட்சத்திர முதற்கொண்டு மாசப்பிரவேச நட்சத்திரம் வரைக்கும் எண்ணிய கணக்கை எழில் பெருக்கி ஒன்பதில் கழித்து மிகுந்த கணக்கு 1 ஆனால் சூரிய திசை. 2 புத்திசை. 3 ராகுதிசை. 4 குருதிசை 5 கேது திசை, 6 சந்திர திசை. 7 சனிதிசை. 8 சுக்கிர திசை. 9 குஜதிசை யென்று தெரிந்து கொள்ள வேண்டியது. சூரியதிசை நாள் 1க்கு அலைச்சல், சிரோரோகம். விரோதம், புததிசை நாள் 4க்குப் பந்துலாபம், சவுக்கியம். உற்சவதரிசனம். ராகுதிசை நாள் 4க்கு நீச்சசினேகம். விதவைசங்கமம், விரோதம் குருதிசைநாள் 4க்கு போஜ னசவுக்கியம். தானியலாபம், வாகனலாபம், கேது திசைநாள் ஒன்றே முக்காலுக்குச் சரீரசாட்டியம். அல்பஸ்திரிசங்கமம். சந்திரதிசைநாள் 2க்குப் பூர்ணசந்திரனானால் திரவியலாபம். க்ஷணசந்திரனானால் திரவியநஷ்டம். சனிதிசை நாள் நாலே முக்காலுக்கு ஸ்திரிவிரோதம், காயம். சண்டை சுக்கிர திசை நாள் 5க்கு இரத்தினலாபம். குஜதிசைநாள் ஒன்றே முக்காலுக்கு அல்பபோஜனம் கலகம். இந்தத் திசைகள் கோசாரத்தை அனுசரித்துப் பார்த்துக் கொள்ளவும்.

மாசாத்தன்

1. அரிகரப் புத்திரன். 2. திருக்கைலாச ஞானவுலாவைத் திருக்கைலையில் கேட்டுவந்து திருப்பிடவூரில் வெளிப்படுத்தியவர்.

மாசாத்துவான்

கோவலன் தந்தை; இவன் கோவலன் இறந்தமை கேட்டுத் தன் பொருளைத் தான முதலிய செய்து துறவு பூண்டவன். இவனுக்கு மாசத்து வாணிபன் எனவும் பெயர். மணிமேகலையை அறவணவடிகளைத் தரிசிக்கத் தூண்டியவன். (மணிமேகலை)

மாசேநன்

இவன் வாமதேவன் மாணாக்கன். இவன் ஆசிரியன் சொற்கேளாது பல தீமைகளைப் புரிந்து நல்லொழுக்கமும் தெய்வ பக்தியுமுள்ள காசியாசன் மீது மூன்று முறை படையெடுத்துத் தோல்வி யடைந்து ஆசிரியரை நோக்கி என் பெரும்படை அவன் சிறுபடைமுன் தோற்றதென்ன? என அவன் தெய்வபக்தியுள்ளவன் அது உனக்கு இல்லையெனக்கூறக் கேட்டு அதை மதியாது மீண்டும் பெரும் படையுடன் சண்டையிட்டுத் தோற்று ஆசிரியர் கூறியது. உண்மை யென மதித்துக் காசியடைந்து தீர்த்த மாடி முத்திபெற்றவன். (காசி கசியம்.)

மாச்சாத்து வாணிப மகருஷி கோத்ரன்

கோவலன் வம்சத்திற்கு ஆதி புருஷன், இவன் வைசியன்.

மாச்சிதேவர்

ஒரு வீரசைவ அடியவர். வசவர் காலத்தவர்.

மாடக்குளக் கீழ்மதுரை

மாடக்குள மென்பது மதுரைக்கு மேற்கேயுள்ள தோரிடம்; இது ஒரு தாலுக்காவாகவும் இருந்தது. அவ்விடத்தில் ஒரு குளமுண்டு, “மாடக் குளம் பெருகினால் மதுரை பாழ்” என்ற பழமொழி வழங்குகின்றது. (திருவிளை.)

மாடன்

தலைமாத்திரம் மாட்டின் உருக்கொண்ட ஓர் க்ஷத்ரதேவதை, பஞ்ச பூதங்களில் ஒன்று

மாடலனார்

யாப்பருங்கல விருத்தியுள் எடுத்துக் கூறப்பட்ட தொல்லாசிரியருள் ஒருவர்.

மாடலன்

தலைச்செங்கானத்துள்ள ஓரந்தணன். கோவலன் மதுரையிற் கொலையுண்டது முதலியவற்றைக் காவிரிப்பூம் பட்டினத்தாருக்குச் சொல்லித் தன் சொல்லால் சிலர் இறந்தமை தெரிந்து அப்பாவம் நீங்கக் கங்கையாடி மீண்டு செங்குட்டுவனைக் கண்டு அளவளாவி அவனை யாகஞ் செய்யத் தூண்டியவன். (சிலப்பதிகாரம்.)

மாடலூர்கிழார்

(வேளாளர்) கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்; இவரதூர் மாடலூர்; இன்ன இடமென்று விளங்கவில்லை, இவர் வேளான் குடியினர். (குறு 150.)

மாடான்

சூரியனுக்குச் சமீபத்திலிருக்கும் தேவதை, (பா~சாந்,)

மாட்டிலக்கணம்

புஷ்டியாய்ச் சுபலக்ஷணமுள்ள எருதைக்ருகஸ்தன் கொள்ளுதல் தகுதி. அவ்வகைக் கொள்ளப்போம் எருதை முதலில் பார்க்கும் பொழுது அது வலக்காலைத் தூக்கித் தன் தலையைச் சொரிந்து கொள்ளக் கண்டால் அது சத்தியஞ்செய்து கொடுத்ததாகும். அகத்யம் அதை வாங்கவேண்டும். பசுவானால் நீரும் எருதானால் சாணமுமிடக் கண்டால் நலம். நெற்றியில் சுழிமேல் சுழியிருந்தால் அது கொடை மேற்கொடை ஆகாது. வாங்கில் இடிமேல் இடிவரும். இரண்டு காதின் கீழும் இரண்டு சுழிகள் எதிரெதிர் இருந்தால் கொள்க, ஒருகாதின் கீழ்மாத்திரம் சுழியிருந்தாலது பூரான் கவ்வலென்பார் ஆகாது. முன் முழங்காலிரண்டின் கீழ் இரண்டு சுழிகளிருந்தால் அது விலங்குவைச்சுழி அதைக் கொள்பவன் காலுக்கு விலங்குவிழும். நடுமுதுகந்தண்டில் நீள மாக ஒருகோடும் அந்தக் கோட்டின் இரண்டு பக்கத்திலும் இரண்டு சுழிகளுமிருக்தாலது தாமணிசீசுழி இது மாடுகள் அதிகமாகச் சேர்க்கும், இந்தக் கோட்டின் வலப்புறத்தில் மாத்திரம் ஒருசுழியிருந்தாலது பாடைச்சுழி. இதுகொண்டவனை உடனே பாடையேறச் செய்யும். இடது பக்கமொரு சுழியிருந்தாலது விரிசுழி நல்லது. வாலில் சுழியிருந்தால் நாகம் அது ஆகாது, மாப்பல் மாடு பலஈனம். குதிரைப் பல் மாடு உரம். பில்லைமாடும். மயிரழுத்தமுள்ள மாடும், நல்லது, ஏறுவால், வெட்டுக்குளம்புமாடுமாகா, இடிக்கிறது, உதைகாலி, மிரணி, படுக்காங்கொளியுமாகா, கடைக்கண் புள்ளிமாடு கவடு, வெள்ளை மாடு தோல் இளப்பம், கறுப்புமாடு கால்வாசி பலம், செவிலிநிறம் நல்லது. பில்லைநிறம் சிலாக்யம். வயிற்றில் மறு ஒருபுள்ளியாவது இருப்பது நல்லது. உடம்பெல்லாம் புள்ளியாயிருந்தாலாகாது, கலங்கானது பக்கங்களிலிருக்கும் மாடு மழையில் நனைந்தால் உடம்பெல்லாம் பொங்கி ரணமாகும் மயிருதிரும். மறுபடியும் ரணமாறி மயிர் முளைக்கும் இது பலவீனமுள்ள எருதாம், வாய், இரண்டு கண்கள், குய்யம், முலை, வால், கறுப்பும், மற்றையுறுப்புக்கள் துவசைநிறம் உள்ளது காராம்பசு இதை வீட்டிற்கட்டினால் குடிநசிக்கும் இதனைக் காட்டில் கட்ட வேண்டும், இதன்பாலை தேவதாவிஷயத்தில் உபயோகிக்க வேண்டியது. வயது நடுப்பல் தாழ்ந்திருந்தால் பாதிவயது. இவற்றின் வயதுகளைப் பல்லைப்பார்த்தும் கொம்பின் கணுவிடுதலைப் பார்த்தும் நிதானித்தல்வேண்டும். “நல்லெருமை நாகு, நற் பசுசேவு” ஈனல் நலம், வெள்ளிக்கிழமை எருமைகன்று போடுதல் நலம், வியாழக்கிழமை பசுகன்றீனின் பசுவிர்த்தியாகாது.

மாணகன்

இஃது உதயணன் சில நிமித்தம் பற்றித் தன்னைப் பிறர் அறிந்து கொள்ளாதபடி இராசகிரியித்திவிருந்த பொழுது கொண்ட வேறு பெயர். (பெ. கதை,)

மாணாக்கரிலக்கணம்

ஆசிரியரிடம் நியமந்தவறாது சென்று வழிபாடு செய்தலில் மனஞ் சலியாது, ஆசிரியனது குணத்தொடு பழகி, வரலாமென்னுங் கருத்திருப்பதறிந்து அணுக, உட்காரென்று ஆசரியன் கூறவுட்கார்ந்து பாடஞ்சொல்லெனச் சொல்லிப் பசியுடையோன் அன்னத்தை யுண்பது போல் பாடத்தை மனதிற்கொண்டு, பிரதிமை போல் அமைதியுடையவனாய், செவியே, வாயாகவும், மனமே வயிறாகவும், கேட்டபொருள்களை விடாது மனதில்வைத்துப் போவெனக் கூற ஆசிரியனை நீங்குவோன் மாணாக்கனாம். இந்த மாணாக்கர் முதல் மாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணாக்கர் என முத்திறப்படுவர். அவர்களில் முதன்மாணாக்கர் பாலினின்றும் நீரைப் பிரித்துண்ணும் அன்னத்தையும், மேய்ந்ததையெடுத்து அசைபோடும் பசுவைப்போலவும் நல்லதைக் கொண்டு மற்றவைகளை நீக்கியும், பாடங்கேட்டதை யோரிடத்திருந்து சிந்திப்போர் முதன் மாணாக்கர், இடை மாணாக்கர், உழைத்தவரையிற் பலங் கொடுக்கும் பூமியையும், சொன்னதைச் சொல்லுங்கிளியையும், ஒப்பர். கடை மாணாக்கர் நீர்பெய்யுந்தோறும் கீழ்விட்டு விட்டு நிரம்பாத இல்லிக் குடத்தையும், ஒரேவிடத்தில் மேயாது பலவிடஞ் சென்று நுனிமேய்கின்ற ஆட்டினையும், தெளிந்த நீரிருப்பினும் அதைக் கலக்கிப் பயன்படாது செய்யும் எருமையினையும், நல்லதைக் கீழ்புகவிட்டு ஈ எறும்பு முதலியவற்றை யேந்திக்கொள்ளும் பன்னாடையையும் ஒப்பர்.

மாணிக்கத்தாள்

தமிழ் நாட்டு தேவதாசி.

மாணிக்கவாசகர்

திருவாதவூரைக் காண்க.

மாணிதரன்

ஒரு காந்தருவன்,

மாணிபத்திரன்

1. குபேரன் சேனாபதி. குபேரராவணயுத்தத்தில் இராவணனால் அடியுண்டு தலைசாய்ந்ததால் பரிசமௌலி யெனப் பெயர்பெற்றவன். 2. தேவர்களில் சிறந்தவன், இவன் ஒரு வேதியன் பொருட்டு குண்டதரான் மூலமாய் ஞானங்கொடுத்தவன். (பார~சாங்)

மாண்கோஜிபோதலே

இவர் தாமணமென்னும் கிராமவாசி, சூத்திரர், ஏகாதசி விரதமிருந்து ஆதுலர்க்குண வளித்து வருகையில் ஷாமகாலம்வரத் தமது உடைபொருள் அனைத்தும் விற்று, அன்னமளித்துப் பண்டரிசென்று பெருமாளைத் தரிசிக்கக் காசில்லாமையால் காட்டில் விறகு பொறுக்கி அவைகளை விற்றுப் பெருமாளுக்கு அர்ப்பணஞ்செய்து மீண்டும் ஆது லர்க்கிட இவரது மனைவியிடமிருந்த மாவைப் பெற்று அதிதியாக வந்த பெருமாளுக்கிட்டு அவர் தம்முடனழைத்துச் சென்ற ஓர் அன்னசாலையில் உரியவன் பொருமாளைக் தள்ளியதுணர்ந்து தம்மூர் செல்லுகையில் வழியில் பெருமாள் இளைப்பிற் குணவு தரவுண்டு தம்மூர் சென்று சோளக் கொல்லையில் காவலிருக்கையில் வரையாது ஈதலை நோக்கி யினி யீவை யேல் பெருமாளாணையென மனைவிகூறக் கேட்டுத் தம்மைக் கேட்போரைத் தாமே சோளங்களைப் பறித்துக்கொள்ள விடைதந்தனர். கொல்லையில் தானியமில்லாமையால் வாயு தாவிற்குக் காசு இலாது கடன் கேட்க அகப்படாதது கண்டு மாண்கோஜி அயலூர்க்குப் பொருள்பெறச் செல்ல அரசன் ஏவலர் தாசர் வீட்டினை யடைந்து முத்திரையிடப் பெருமாள் வெட்டியான் போல் வந்து அப்பொருளை அரசனுக்களித்தனர். மாண்கோஜி இஃதுணர்ந்து பெருமாளைத் துதித்திருக்கையில் பாம்பு கடித்திறந்தவனைச் சவமென அறியாது பஜனை செய்யக்கூறி யுயிர்ப்பித்து, ஓர் தாசியின் அடிமை நீக்கி, உபதேசம் பெற விரும்பிய புலையனைத் தமது எருதைக் கொலை செயக்கூறி யதனிறைச் சியைச் சுற்றத்தாருடனுண்டு, புலையனை நோக்கிக் கூறாதிருக்க என, அவன் பலரறியக் கூறக்கேட்டு, உற்றார் மாண்கோஜியை வருத்த வர அவர் பெருமாளைத் துதித்து அவ்வெருதின் அங்கங்களை ஆட்டின் அங்கங்களாகவும் இறந்த எருதை உயிர்ப்பித்தும் தமதில்லகத்திருந்த விதையனைத்தையும் இரவலர்க்கீந்து விதைக்க விதையின்மையால் பேய்ப்பூசுணை விதை விதைத்து அதின் காய்களிற் பெருமாளருளால் கோதுமை பெற்று அரசன் அருத்திய கோமாமிசத்தை மெல்லிய மலராகக் காட்டித் திருவருள் பெற்றவர்.

மாண்டவி

பரதன் தேவி, குசத்துவசன் பெண். இவளை மாளவி யென்பர்,

மாண்டவ்யர்

1. இவர் தவளையிடம் பிறந்த விருடி என்பர். சாளுவன் பொக்கிஷத்தைக் கொள்ளையிட்ட திருடரைப் பிடிக்க வந்த காவலாளிகள் இவரையும் கள்ளரெனப் பிடித்து அரசனிடம் சென்றனர். அரசன் காவலர் சொற்படி இவரைக் கழுவிலேற்றினன். இவரது தன்மையைப் பின் அறிந்த அரசன் வணங்கிக்கம்மியனால் கழுத்திலிருந்த சூலத்தை மெதுவாக இரு புறத்திலும் அராவுவித்து நடுத்துண்டை விட்டனன். அன்று முதல் இவருக்கு ஆணி மாண்டவ்யர் எனப் பெயர் வந்தது. தாம் பாலப் பருவத்தில் தும்பிகளைப் பிடித்து வாலில் துரும்பை நுழைத்து விளையாடி அவற்றிற்கு வேதனை தருவித்ததால் அந்தப் பாவம் கழுமரத்தில் இட்டதென யமனா லுணர்ந்து அறியாப் பருவத்தில் செய்த பாவத்திற்கு இவ்வகைக் கடுந்துன்பம் செய்ததனால் நீ பூமியில் மனிதனாகப் பிறக்கவெனச் சாபமிட்டவர். இச்சாப மேற்றதனால் யமன் விதுரனாகப் பிறந்தான். இவரது மற்ற சரிதங்களை நளாயினியைக் காண்க 2. சிவபூசையால் தாம் சூலத்தின் பட்ட துன்பநீங்கி இன்பமடைந்தனர்.

மாண்டு கேயர்

இந்திரப் பிரமிதியின் குமரர்.

மாண்டுகண்ணர்

ஒரு இருடி. இவர் கோரதவஞ் செய்கையில் இந்திரன் இவரது தவத்தினைக் கெடுக்க எண்ணி இவர் இருந்த தாமரை மடுவில் அரம்பையரை எவினன். அந்த அரம்பையர் அந்த முனிவரைத் தம்வசப்படுத்த முனிவர் ஓடையைத் தவச்சாலையாக நியமித்து அப்பெண்கள் நலன் உண்டிருந்தனர். இராமமூர்த்தி ஆரண்யஞ் செல்கையில் இத்தவச்சாலை வழி சென்றனர். இவர்க்கு மாண்டு கன்னியெனவும் பெயர். (காஞ்சி புராணம்)

மாண்ட்ராக்

(Mandrake) இது, மத்யதரைக் கடலிலுள்ள தீவுகளிலும், அதையடுத்த கரைப் பக்கங்களிலும் காட்டுப் பயிராகப் பயிராகிறது. இதன் இலைகளில் சுணை முட்கள் உண்டு. இதன் கிழங்கு, பருத்து மனிதவுருவுடன் தலை கால் முதலிய உறுப்புக்கள் கொண்டிருக்கிறதாம். இதை இழுக்கின்ற வாத்துக் கூச்சலிடல் போல் ஒரு வித சத்தம் உண்டாகிற தென்கிறார்கள், அச்சத்தம் எங்கிருந்துண்டாகிற தெனத் தெரிய வில்லையாம். ஜர்மனியில் (1628) ஆண்டில் மனித வுருக்கொண்ட கிழங்கொன்று விவசாயகாட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதாம். (1802) வருஷத்தில் பிர்மிங்காம் விவசாய பொருட்காட்சி சாலையில் கையுருக்கொண்ட கிழங்கு வைக்கப் பட்டிருக்கிறது.

மாதங்கம்

சண்டாள சாதிகளில் ஒன்று.

மாதங்கர்

தோல் துன்னும் தாழ்ந்த சாதியார்.

மாதங்களில் காலசர்ப்பகதி

ருஷபம், மிதுனம், கடகம், இந்த மூன்று சங்கி ராந்தியிலும் காலசர்ப்பம், ஈசான்யத்தில் சிரமும், வாயுமூலையில் இடுப்பும் நிருதி மூலையில் வாலும், இதன் பின்பக்கமாய் வந்து, சிம்பம், கன்னி, துலாம் இந்த மூன்று சங்கிராந்தியிலும் வாயு மூலையில் சிரசம் நிருதி மூலையில் இருப்பும் அக்னி மூலையில் வாலும் இதன் பின்பக்கமாய் வந்து விருச்சிகம், தனசு, மகரம், இந்த மூன்று சங்கிராந்தியிலும் நிருதி மூலையில் சிரமும் அக்னி மூலையில் இடுப்பும் ஈசான்யத்தில் வாலும், இந்தப்பக்கம் வந்து கும்பம், மீனம், மேஷம், இந்த மூன்று சங்கிராத்தியிலும் அக்னி மூலையில் சிரமும், ஈசான்யத்தில் இடுப்பும், வாயு மூலையில் வாலும், இவ்விதமாக இருக்கத் தம்பப் பிரதிட்டைசெய்யில் சுபப்பிரதம். சிரசில் செய்யில் மிருத்யுபயம், முதுகின் மேற் செய்யில் கெடுதியுண்டு வாலின்மேற் செய்யில் சலனம்.

மாதங்கி

1. காசிபர் பெண் யானைகளைப் பெற்றவள். மதங்கனைக் காண்க. 2. மதங்கருடவடைந்த பாசிராமரால் வெட்டப்பட்ட ரேணுகை,

மாதசூன்யம்

(சித்திரை) அஷ்டமி,த்வாதசி, ரோகணி, கும்பம், (வைகாசி) எகாதசி, சித்திரை, சோதி, உத்திராடம், மீனம், (ஆனி)த்ரயோதசி, புனர்பூசம், ருஷபம், (ஆடி) ஷஷ்டி, அவிட்டம், பூரம், மிதுனம், (ஆவணி) அமாவாஸ்யை, பூரணை, பூராடம், மேஷம், (புரட்டாசி) சத்தமி, சதயம், பூரட்டாதி, ரேவதி, கன்னி, தனுசு, (ஐப்பசி) நவமி, விருச்சிகம், பூரட்டாதி, (கார்த்திகை) பஞ்சமி, கார்த்திகை, பூசம், மகம், துலாம், (மார்கழி) துதியை, நவமி, அனுஷம், உத்திரட்டாதி, விசாகம், தனுசு. (தை) பிரதமை, அஸ்தம், திருவாதிரை, ஆயிலியம், கர்க்கடகம், (மாசி) சதுர்த்தி, தசமி, மூலம், திருவோணம், மகரம், (பங்குனி) சதுர்த்தசி, பாணி, கேட்டை, சிங்கம் வருவனவாம். இவை சுபகாரியங்களுக்காகா.

மாததினம்

கார்த்திகைக்கு கார்த்திகை ரோகணி, மார்கழிக்கு மிருகசீரிஷம், திருவாதிரை, தைக்குப் புனர்பூசம் பூசம் மாசிக்கு ஆயிலியம், மகம், பூரம், பங்குனிக்கு உத்திரம், அஸ்தம், சித்திரைக்குச் சித்திரை சோதி, வைகாசக்கு விசாகம் அநுஷம், ஆனிக்குக் கேட்டை மூலம், ஆடிக்குப் பூராடம் உத்திராடம், ஆவணிக்குத் திருவோணம், அவிட்டம், புரட்டாசிக்கு சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ஐப்பசிக்கு ரேவதி, அச்வதி, பரணி இந்நாட்களிலும்,பூரணையிலும் சுபங்கள் நீக்க வேண்டும். (விதானமாலை,)

மாதபலன்

ஜன்ம நட்சத்திரமுதல் மாதம் பிறந்த நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையை எழிற்பெருக்கி எட்டிற்கழித்த சேடம். 1. ரோகம், 2. இலாபம், 3. செலவு, 4. அலைச்சல், 5. போசன சௌக்கியம், 6. அயிஸ்வரியம், 7. கலகம், 8. மிககஷ்டம்.

மாதம்

(12) சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, இவற்றிற்கு நக்ஷத்திரங்களாவன முறையே சித்திரை, விசாகம், மூலம், உத்தராடம், அவிட்டம், பூரட்டாதி, அசுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், பூசம், மகம், உத்திரம். இவை அந்த நக்ஷத்திரங்கள் கூடுகையில் இப்பெயர் பெறும்,

மாதரத்தூடையார்

ஒரு வீரசைவர். இவர் காலத்துச் சிவநிர்மால்ய மாகிய அபிஷேக ஜலத்தாலாகிய சேற்றில் ஒரு பசு செல்ல அதை யோட்டிச் சென்ற ஒரு வேதியனும் அழுந்தித் தாண்ட அவன் உடலில் இருந்த நோய் நீங்கியது. இதை அறிந்த வேறு பாண்டு நோய் கொண்ட (700) பேர் அச்சேற்றில் மூழ்கிப் புனிதமடைந்தனர்.

மாதரி

இடைச்சியர் தலைவி. கோவலன் கொலையுண்டதனால் தீயில் விழுந்து இறந்தவள். (சிலப்பதிகாரம்.)

மாதர்

உசகச்சன் பாரி.

மாதர் ஒழக்கம்

ஸ்திரீகள் பாலியராயினும், யௌவனராயினும், வார்த்திபராயினும், தம் வீடுகளில் தமது மனம்போனபடி செய்ய லாகாது. பாலியத்தில் தகப்பன் கட்டளையிலும், கணவன் இறந்த பின் புத்திரன் ஆஞ்ஞையிலும் இருக்கவேண்டியது. ஸ்திரீகள் ஒருபோதும் சுயாதீனமாக இருக்கக்கூடாது. தந்தை, கணவன், புத்திரன், இவர்களை நீங்கித் தனி இருக்கும் பேதை, பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும் நிந்தனை விளைப்பவள் ஆவாள். எப்போதும் வீட்டுக் காரியத்தில் சமர்த்துள்ள வளாயும், சந்தோஷ முள்ளவளாயும், வீட்டுப் பொருள்களைச் சுத்தப் படுத்துகிறவளாயும், அதிகச் செலவில் மனமிலாதவ ளாயும், இருத்தல் வேண்டும். தன் தந்தை, மூத்தோன், இவர்கள் யாருக்குப் பாணிக்கிரகணம் செய்வித்தார்களோ அவனுக்குப் பணி விடை செய்ய வேண்டியது. கணவன் இறந்த பின்னும் அவனுக்குச் சிரார்த்த காரியம் முதலியவை செய்து கொண்டு, விபசாரம் செய்யா திருத்தல் வேண்டும். கணவன் துராசார முள்ளவனாயினும், அன்னிய ஸ்திரீலோலனாயினும், நற்குணம் இலானாயினும், அவனைத் தெய்வம் போற் பூசிக்க, ஸ்திரீகளுக்குக் கணவன் பணிவிடை அன்றி உபவாச விரத எஞ்ஞங்கள் வேண்டியதில்லை. கணவனிருக்கினும் இறக்கினும் அவனுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது. கணவன் இறந்தபின்பு கிழங்கு பழம் முதலிய சொற்ப ஆகாரத்தால் காலத்தைக் கழிக்க வேண்டியது. காம இச்சையால் பர புருஷன் பெயரையும் சொல்லக்கூடாது. கணவன் இறந்தபின் பிள்ளைக்காக வேறொரு கணவனைச் சேர்பவள் இவ்வுலகத்தில் எல்லாராலும் நிந்திக்கப்படுவள், பதிவிரதைகளுக்கு இரண்டாவது விவாகம் ஒரு சாஸ்திரத்திலும் கூறப் படவில்லை. புருஷன் தாழ்ந்தவன் என்று உயர்ந்தவனைக்கூடுகிற ஸ்திரீ எல்லாராலும் நிந்திக்கக்படுகிறாள், விபசாரத்தினால் உலகத்தில் நிந்திக்கப்பட்டவள் இம்மையில் தீங்கை அடைதலே அன்றி மறுமையில் குட்டவியாதி கொண்டவளாதலே அன்றிக் குள்ள நரியாகவும் பிறப்பள். எந்த ஸ்திரீ மனம் வாக்கு காயங்களை அடக்கிக்கொண்டு விபசாரம் செய்யாது நல்லொழுக்கத்துடன் இருப்பாளோ அவள் பதி உலகத்தை அடைவதும் அன்றிப் பதிவிரதை என்னும் பெயரையும் பெறுகிறாள்,

மாதர்கள்

(7) மாதுருக்கள் காண்க.

மாதலி

இந்திரன் தேர்ச்சாரதி, ஒருகால் இராவண யுத்தத்தில் தேர் செலுத்தின.

மாதளவனூர் இளநாகனார்

திருக்குன்றத்தாசிரியரிடம் பொருளிலக்கணம் கேட்டவர்.

மாதவக்கோன்

ஒரு இடையன், இவன் காட்டில் காலி மேய்த்துக் கொண்டிருக்கையில் இவனையொரு முனிவன் அன்று தளிர்த்தான் மூலிகைகாட்டுக என இவன் காட்ட அதனடியில் யாகஞ்செய்து மாத வக்கோனைத்தள்ள முயலுகையில் இடையன் தப்பி முனிவனைத் தள்ளினன். முனிவன் சுடர்விடு பசும் பொன்னாகக் கண்டு அவ்விக்ர கத்தை யெடுத்து அதின் உறுப்புக்களில் ஒன்றைத் துணித்தனன். அது பழையபடி வளாக்கண்டு சீவித்து வந்தனன். இதனை அரசன் கேள்வியுற்று இவனைக்கேட்க இவன் அதனை அரசனுக்குக் கொடுத்துப் புகழடைந்தவன்.

மாதவசூரி

இவர் மேல்நாட்டில் திருநாராயண புரத்தில் கலி (4215) விஜயக பங்குனி உத்தர நக்ஷத்ரம் அவதரித்து பண்டிதராய்க் கங்கோரை என்கிற ஊரை வாழுமிடமாகக் கொண்டு ஆறு சாஸ்திரம் வருமென் பதற்கு அத்தாஜியாக ஆறு ஆஸனமிட்டு அதின்மீது உட்கார்ந்திருப்பர். இவரை பட்டர், உடையவர் நியமனப்படி மேல் நாடு சென்று வாதமிட்டு வென்று ஸ்ரீவைஷ்ணவராக்கினர். இவர் சந்நியசித்துத் திருவரங்க மடைந்து பட்டரை வணங்கப் பட்டர் நம்முடைய ஜீயர் வந்தார் என அணைத்துக்கொள்ள அன்று முதல் கஞ்ஜீயர் என்று இவர்க்குத் திருநாமம் உண்டாயிற்று. இவர் பட்டரிடம் பலசங்கைகளை வினாவித் தெரிந்து பட்டர் பிரம்மரத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருகையில் அவரது ஸ்ரீபாதந்தாங்கப், பட்டர் தடுக்கவும் அதற்குச் சமாதானங்கூறித் தாங்கினர்.

மாதவசேனை

சசியின் தோழி. (சூளா.)

மாதவதாசர்

இவர் பால்யத்தில் தாய் தந்தையரை இழந்து சம்சார பந்தம் விட்டதற்குப் பரம சந்தோஷமடைந்து பல தலங்களையடைந்து தரிசிக்கவெண்ணி ஜகநாதம் சென்று பெருமாளின் சகுண ரூபத்தைச் சந்நிதி முன்னிருந்து தோத்திரஞ்செய்து அனுபவித்திருக்கையில் அர்ச் சகர் தங்களுக்கு ஒரு காசும் பயனில்லாததினால் கோபித்து வெளியிற் றள்ளத் தாசர் வெளிவந்து ஒரு புறத்தில் மூன்று நாட்கள் ஆகாரமில்லாது பஜனை செய்யப் பெருமாள் ருக்மணி தேவியை அவருக்கு அமுதூட்டி வர அனுப்பினர், பிராட்டியார் பொற்றாம்பாளத்தில் அமுதருத்தி அந்தத் தட்டினை அங்கு வைத்துச் செல்லத் தாசர் அதனை அலம்பித் தலைக் கண் வைத்து உறங்கினர். விடியக் கோவிலர்ச்சகர் தட்டினைக் காணாது தாசரிடம் கண்டு அவரைச் சிறையிலிடப் பெருமாள் அருச்சகர் கனவிடைச் சென்று நடந்தவை கூற அருச்சகர் அவரிஷ்டப்படி பெருமாளைச் சேவிக்க இடந்தந்தனர், இவ்வாறு ஒரு நாள் திருக்கோயிliல் தியானித்திருக்கையில் அருச்சகர் கோயிலைக் காப்பிட்டுச் சென்றனர். பாதியிரவில் தாசருக்குக் குளிர்வரப் பெருமாள் தம் சால்வையைத் தாசருக்குப் போர்த்துச் சென்றனர். விடிந்து அருச்சகர் கண்டு பெருமாளுக்கு மிக்க அன்பர் என வியந்தனர். இதனை ஊர் அரசன் கண்டு உபகரிக்கத் தாசர் உபகாரம் வேண்டாது நீங்கி வடமதுரை யடைந்து பெருமாளைத் தியானிக்க அவ்விடம் அர்ச்சகர் புறத்தில் நீக்க இவர் புறஞ் சென்று ஒருவர் அமுது தர அதனைப் பாகஞ்செய்து பெருமாளுக்கு நிவேதிக்க அழைக்கப் பெருமாள் தரிசனக் தந்துண்டு கோயிலடைய அருச்சகர் பெருமாளுக்கு அன்னம் நிவேதிக்க மாதவ தாசனிட முண்டேனெனக் கூற அவர்களிவரிடம் அபார தக்ஷமை வேண்ட நீங்கிச் ஜகநாதஞ்சென்று அதிசார கோயில் பெருமாள் சௌசத்திற்குச் சலமுதவவும், ஆடையைக் கசக்கித் தரவும் இருந்து தார்க்கிகன் வாதுக்குவர அவனைப் பெருமாள் தம்மைப் போலிருந்து வெல்ல அத்தார்க்கிகனை வென்று பாமபதநாதனைப் பஜனை செய்திருந்தவர்.

மாதவன்

1. கௌசிகனென்னும் பாகவதனுக்குச் சீடன் பாகவத் கைங்கர்யபானா யிருந்தவன். 2. திருமாலின் திருநாமத் தொன்று, 3. புரந்தரன் குமரன்.

மாதவராசன்

ஒரு அரசன். காட்டில் பாலசந்திரரைப் புத்திரராகப் பெற்றவன். தேவி சமுதை.

மாதவர்

யதுகுலத்தவர். கம்சன் பகைவர். விருஷ்ணியைக் காண்க.

மாதவவூறன்

இவன் விசுவகன்மன் கண்ணில் உதித்துச் சிருட்டி நடத்துகையில் பிரமன் கோபித்து நீ நூலிழைக்குஞ் சிலந்தியாக எனச் சபித்தனன். மீண்டும் இவன் வேண்ட நீ திருக்காளத்தியில் சிவபூசை செய்து சாபம் நீங்குக என அவ்வகை சிவ பூஜை செய்து முத்தி பெற்றவன்.

மாதவாசாரியர்

மாயணன் குமரர். இவர் செல்வ விருப்பினராய்க் காடு சென்று தவமேற்று அரசனது பசுமேய்ப்பானாகிய புக்கணனை யடைந்து அவன் பசி தணியப் பால் தரவுண்டு தவஞ்செய்கையில் திருமகள் புக்கணனை யடைந்து இவற்கு இப்பிறப்பில் செல்வங் கிடையாதெனக் கூறவும் தவஞ்செய்து சலித்துத் தனது உபவீதத்தை அறுத்தெறிந்து துறவடைம்தனர். பின் திருமகளும் கலைமகளும் தரிசனந் தந்து யாது வேண்டுமென இவர் எனக்குக் கல்வியும், எனக்குப் பால் தந்து பசி போக்கிய புக்கணனுக்கு அரசச் செல்வமும் தருகவென அவ்வாறளித்து மறைந்தனர். பின் அரசனிறக்கப் புக்கணனை அரசயானை அபிஷேகித்து அரசனாக்கியது. இவன் அரசாளுகையில் புக்கணன் இவரைத் தங்கள் புகழ் நிலவ நூல்களியற்றுக வென வேண்ட இவர்பல வடநூல்களுக்கு உரையியற்றினர். இவர் சகோதரர் போக நாதர், சாயணாசாரியார். இவர்க்கு வித்யாரண்யர் எனவும் பெயர்.

மாதவி

1. யயாதியின் பெண். காலவன் தேவி. 2. கோவலன் காதற்பரத்தை. இவள் குமரி மணிமேகலை. கோவலன் இறந்தது கேட்டுத் துறவு பூண்டு அறவணவடிகள் பாற்சென்று தருமங் கேட்டுக் காஞ்சி நகரத்து நோற்றிருந்தவள். (மணிமேகலை) 3. அகத்தியர் சாபத்தால் பூமியிற் பிறந்த உருப்பசி. (சிலப்பதிகாரம்.) 4, இந்திர சாபத்தால் பூமியிற் பிறந்த தேவஸ்திரீ

மாதவீயம்

1. வித்யாரண்யர் செய்த சோதிட நூல், 2. பராசரஸ்மிருதி வியாக்யானம்.

மாதா பித்ரு சேவனவிரதம்

இது தாய் தந்தையரைப் பூஜித்து விரத மிருப்பது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாதலின் அவர்களைச் சுத்தனாய் நாடோறுஞ் சேவிக்கின் எல்லா நலமும் அடைவன் எனக் கூறியிருக்கிறது. இங்ஙனம் பிதுர்வாச்யம் கடவாதார் ஸ்ரீராமன், பரசுராமன், பார்க்கவர் முதலியோர். இங்கனஞ் செய்வாரைத் தேவர் வணங்குவர்

மாதாம்பை

மாதிராசர் மனைவி, நந்திமா தேவரை மூன்று வருடம் கருவில் பெற்று வசவர் என்று பெயரிட்டு வளர்த்தவள்.

மாதினியார்

புகழனார்க்குத் தேவியார். திருநாவுக்கரசுகளுக்குத் தாயார். திருநாவுக்கரசுகளைக் காண்க.

மாதிமாதிரத்தனார்

ஒரு புலவர். (புற. நா.)

மாதிராசர்

மாதாம்பை கணவர். வசவ தேவர் தந்தை. இவர் ஒருமுறை கூழுண்ண அது ருசியாயிருக்கக்கண்டு சிவப் பிரீதியென்னச் சிவமூர்த்தி இவர் வாயே பாத்திரமாக உண்டனம் என்ன அசரீரி கேட்கப் பெற்றவர்.

மாதிராசையர்

சிக்கமாதையர் தேகவியோகமடைய அவர் குமரர் சொல்லால் உயிர் தந்து சிவபூசைக்கு ஏவினவர்.

மாதீரத்தன்

கடைச்சங்கமருவிய புலவர், (குறு 113.)

மாதுராகன்

யாதவபேதம்.

மாதுருக்கள் எழுவர்

இவர்கள் சிவமூர்த்தி அந்தகாசுரனைக் கொல்ல எழுந்த காலத்தில் அவர் திருமேனியிலிருந்து அவதரித்தவர்கள், பெயர், பிராமி, மகேச்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, சாமுண்டி, இந் திராணி முதலியவர். இவர்களைத் திரிலோகத்தவரும் பூசிக்கின் எல்லா நன்மையு மடைவர். இவர்க்கு முறையே வாகனம், அன்னம், இடபம், மயில், கருடன், சிங்கம், யானை, பேய். முறையே ஆயுதங்களாவன, மறை, பினாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம், சூலம்.

மாதேசன்

ஒரு அரசன். இவன் வணிகத் தொழில் செய்து பெருந் திரவியம் சம்பாதித்துத் தருமஞ்செய்யாது வைத்திருந்தனன். இவன் மனைவியுமிறந் தனள். இவனுக்குப் புத்திரர் முதலியர் இல்லாமையால் ஒரு வேசியினிடம் இருந்தனன். அந்த வேசி, இவன் உலோபத் தன்மையையும், தருமசிந்தை யிலாமையும் கண்டு, நீ தருமஞ் செய்யின் உன்னைக் கூடுவேனென்று வெறுத்தனள். இவன் அவளை விட்டுக் காசி சென்று புராணம் முதலிய கேட்டுப் பொருளைத் தருமத்திற் செலவிட்டுச் சுதபசு என்னும் சிவபக்தி மானுக்கு வீடு கட்டித்தந்து முத்தியடைந்தனன். (காசி. ரக.)

மாதேவன்

1. சிவன் திருநாமங்களில் ஒன்று: 2 ஏகாதசருத்ரருள் ஒருவன்.

மாதைத் திருவேங்கடநாதர்

இவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய (500) வருஷங்களுக்குமுன் சோழநாட்டில் மாதை யென்னும் ஊரில் ஸ்மார்த்த வேதியர் குடியிற் பிறந்து கல்வி வல்லவராய்ப் பாண்டி நாட்டையாண்ட நாயகவம்சத்தைச் சேர்ந்த எங்ககிருஷ்ண முத்து வீரப்பநாயகரிடம் மந்திரியாக அமைந்து தமிழ்ப்புலவரை ஆதரித்துக் கவிபெற்றவர், கவிக்கு ஆயிரம் பொன் கொடுத்துப் பிரபந்தம் முடிந்தபின் நூறு கவிகொண்ட நூலுக்கு நூறாயிரம் பொன் பரிசு தந்தவர். இதனைப் பணவிடுதூது முதலியவற்றால் அறிக. இவர் ஆசாரியர் சொற்படி பிரபோத சந்திரோதயத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

மாத்தச்சன் ஆயுதம்

வாள், உளி, இழைப்புளி, துரப்பணம், துரப்பணக் கோல், சிற்றுளி, கொட்டாப்புளி,

மாத்திகவதகன்

சித்தராதன் என்னும் பெயருள்ள கந்தர்வன். ஜமதக்கினி ரிஷியின் பாரியையான இரேணுகையால் காணப்பட்டவன். (பா. வன.)

மாத்திரை

என்பது, அளவு, எழுத்தளவு உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என்ப. “இயல் பெழுமாந்தரிமை நொடி மாத்திரை குற்றெழுத்திற்கு மாத்திரை (1) நெட்டெழுத்திற்கு மாத்திரை (2) மெய்யெழுத்திற்கரை இனி இசைக்குரிய மாத்திரை “கொட்டும், அசையும் தூக்குமளவும் ஒட்டப் புணர்ப்பது பாணியாகும். ” கொட்மோத்திரை அரை, வடிவு (1) அசை மாத்திரை (4) வடிவு (7) தூக்கு மாத்திரை (2) வடிவு (2) அளவு மாத்திரை (3) வடிவு (ஃ) இவற்றின் தொழில் கொட்டு அமுக்கல், அசை, தாக்கியெழல், தூக்குத் தாக்கிக் தூக்கல். அளவு தாக்கின ஓசை நேரே (3) மாத்திரை பெறுமளவும் வருதல்.

மாத்மிகன் மதம்

தேகாவயவமே பொருளெனவும், அது கெட்டால் வேறு பொருள் இன்றெனவும், பொருளில்லாவிடின் அறிவில்லை யெனவுங் கூறுவோன்,

மாத்யந்தினாள்

யாஞ்ஞவல்கியர் மாணாக்கர்.

மாத்ரி

1. மத்திரதேசாதிபதியின் குமரி. பாண்டுவின்தேவி. குமரர் நகுலசகாதேவர். இவள் பாண்டுவுடன் தீக்குளித்தனள். இவளைப் பாண்டு தனக்குற்ற சாபமறந்து புணர்ந்திறந்தனன் 2. பரீச்சித்தின் தேவி. குமரன், சன மேசயன்,

மாத்ருகா

அரியமா வென்னும் ஆதித்தன் தேவி, ஞானிகளாகவே பிள்ளைகளைப் பெற்றவள்.

மாத்ருக்கள் பதின்மர்

கௌரி, லக்ஷ்மி, இந்திராணி, மேதை, சாவித்திரி, விஜயை, ஜயை, தேவசேனை, ஸ்வதா, ஸ்வாகா.

மாநகரி

ஒரூர். மதுரைக்கு வடகிழக்கிலுள்ளது. பாண்டியர்களுடைய அரண்மனை முதலியன இருந்த இடம், மாணிக்கவாசகர் பொருட்டு வந்த குதிரைகள் இடசாரி, வலசாரி புரிந்த இடமென்றுங் கூறுகின்றனர். (திரு.)

மாநக்கஞ்சாறநாயனார்

இவர் கஞ்சாறூரில் வேளாளர் குடியில் பிறந்து பரமசிவ உபாசனையால் ஒரு பெண்ணைப் பெற்றனர். அப்பெண்ணுக்கு மணப்பருவம் வந்தது. அவளை எயர்கோன் கலிக்காமநாயனார் திரு மணஞ் செய்து கொள்ள நல்ல சுபமுகூர்த்தத்தில் கஞ்சாநூருக்குச் செல்ல முயன்றனர். இதற்கு முன்பே சிவமூர்த்தி மாவிரதியார் வடிவு கொண்டு கஞ்சாற நாயனார் வீடுசென்று நாயனாரைக்கண்டு இங்கு என்ன சுபகாரியமென்று வினவினர். காயனார் தமது புத்திரிக்குத் திருமண மென்று தமது புத்திரியையும் பணிவித்தனர். மாவிரதியார் பெண்ணின் கூந்தலக்கண்டு இப்பெண்ணின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவும் என்று அதனைக் கேட்டனர். நாயனார் திருமணமாகா முன் கேட்டதற்கு அதிக ஆகந்தங்கொண்டவராய், அக்கூந்தலை உடனே அரிந்து தந்தனர். சிவமூர்த்தி மாவிரதியர் கோலமொழித்துப் பிராட்டியுடன் விடைமேல் காட்சிதந்து சந்நிதியில் தம்மைப்புகழும் பெரும்பேறு தந்து மறைந்தனர். மணமகராகிய கலிக்காமர் கஞ்சாறூரில் வந்து முண்டிதமுள்ள பெண்ணை மணக்க விதியிலாததால் மீளக்கருதியபோது சிவமூர்த்தி கலிக்காமரை நோக்கி இப்பெண்ணின் கூந்தல் வளரச்செய்கிறோ மென்று பணிக்கக்கேட்டு அப்பெண்ணை மணந்து தமது ஊருக்குச் சென்றனர். (பெரிய புராணம்)

மாநச தீர்த்தம்

சிவமூர்த்தியின் நெற்றிக் கண் காரணமாக உமாதேவி யாரின் திருவிரலிற் றோன்றிப் பிரமனால் சத்தியவுலகத்தில் பிரதிட்டிக் கப்பட்டது. இமயமலையில் பிரமனால் சிருட்டிக்கப்பட்ட தெனவுங் கூறுவர்.

மாநந்தை

ஒரு தாசி. இவள் சிவபக்தியுள்ளவள். இவள் தன்னிடமிருந்த குரங்குக்கும் கோழிக்கும் உருத்திராக்ஷமணிந்து வளர்த்து வருகையில் சிவமூர்த்தி இவளிடம் ஒரு வணிகர்போல் தரிசனந் தந்து இரத்தின கடகங் காட்டினர். அதைக் கண்ட தாசி ஆவலுடன் கேட்கச் செட்டியார் நீ என்னுடன் மூன்று நாள் இருப்பையேல் இதனைத் தருவேன் என அவ் வகையே தாசியுடன் பட்டுச் செட்டியாருடனிருக்கையில், பாதியிரவில் தாசி தன் வீடு தீப்பற்றி எரியக்கண்டு குரங்கையும் கோழியையும் விடுவித்து மாணிக்கலிங்கம் வேகக்கண்டு வணிகருக்குக்கூற வணிகர் இனி வாழேன் என்று தீப்புகத் தாசியும் நான் மூன்று தினங்களுக்குச் செட்டியாரடிமையாதலின் நானும் உயிர் விடுவேனென்று தீப்புகுந்து சிவமூர்த்தி, உண்மையுருக்காட்ட முத்தியடைந்தவள். அந்தக் குரங்கும், சேவல்களுமே தருமன் தாருகன் என்னும் காச்மீரத்தாசனும் மந்திரியு மாயினர். (பிரமோத்தா காண்டம்.)

மாநவம்

1. ஒரு தேசம். 2. உபபுராணத்தொன்று.

மாநவி

திரௌபதிக்கு ஒருபெயர்.

மாநாய்கன்

கண்ணகியின் பிதா. கோவலன் கண்ணகி முதலியவர் இறந்ததால் துறவு பூண்டோன் (சிலப்பதிகாரம்)

மாநிநி

விடூரதன் குமரி. இராஜ்யவர்த்தனன் தேவி, தமனைக் காண்க.

மாநுஷன்

ஒரு சிற்பி.

மாநுஷம்

ஒரு தீர்த்தம்.

மாந்தரஞ்சேரலிரும்பொறை

சேரருள் ஒருவன் (சிலப்பதிகாரம்)

மாந்தரன்

இவன் ஒரு சேரர் தலைவன். இவனை மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பர். இவன் பரணரால் பாடப்பட்டவன், மோரிய அரசனுக்கு வணங்காது நின்றவன்.

மாந்தரோகம்

இது பிள்ளைகளுக் குண்டாம் ரோகங்களிலொன்று. இது தாய், தேங்காய், வெல்லம், சுண்டற்கறி, கீரை, மீன், இறைச்சி, புளித்த மோர், கிழங்குகள், மந்தவஸ்துக்கள் தின்பதால் உண்டாம். பாலைக் குடிக்கும் பிள்ளைகளுக்குண்டாகும் ரோகம், இது, பலநிறமான கழிச்சல், சுரம், மயக்கம் முதலிய தரும். இது, செரியாமாந்தம், பீர்மாந்தம், சுரமாந்தம், விஷமாந்தம், கழிமாந்தம், ஊதுமாந்தம், நீர்மாந்தம், தலைமாந்தம், சிங்கி மாந்தம், கணமாந்தம், சொருகு மாந்தம், குழிமாந்தம், இழுப்பு மாந்தம், உப்புமாந்தம், இரைப்பு மாந்தம், கட்டு மாந்தம், அள்ளுமாந்தம், விக்கல் மாந்தம், சந்திமாந்தம் எனப் பல வகைப்படும்.

மாந்தாதா

1. யுவனாசவன் குமரன். (யுவனாசவனைக் காண்க) இவனுக்கு இந்திரன் இட்டபெயர் திரிசதசு. பாரி, விந்துமதி, குமரர் புருகுச்சன், அம்பரீஷன், முசுகுந்தன். இவனுக்கு ஐம்பது பெண்க ளுண்டு. அந்த ஐம்பதின்மரைச் சௌபரி முநிவர் விவாகஞ் செய்து கொண்டனர். இவன் இராஜசூயம் செய்து சம்ராட் பட்டமடைந்தவன். இவன் தன்னாடு மழையிலாதிருக்க இந்திரனுடன் போரிட்டு மழை பெய்வித்தவன். இவன் தன் தந்தையினுடலின் வாம பாகத்தைப் பிளந்து வெளிப்பட இருடிகள் இச்சிசுயாரைத் தனபானஞ் செய்யத் தக்கதெனச் கங்கையடைகையில் புருஷன் கருவுற்றுப் பிள்ளை பெறுதல் மூவுலகத்தும் இல்லையாதலால் அவ்விடம் வந்திருந்த இந்திரன் என் தற்சனியைப் பானம்பண்ணக் கடவதெனக் கரத்தை நீட்டினன். நீட்டிய விரலின் வழியொழுகிய அமிர்தத்தைப் பானஞ்செய்தபடியால் மாந் தாதா என்று பெயர் அடைந்தனன். 2, சூர்ய குலத்தரசன் லவணாசுரனால் கொல்லப்பட்டான், (பார~அநுசா.)

மாந்தாத்ரி

ஒரு அரசன். இவன் பௌத்ரன் திரசதாசயன்.

மாந்துங்காசாரியர்

பக்தாயிர் தம் செய்த சைனர்.

மாந்தேகர்

இவர்கள் அரக்கர். இவர்கள் முப்பது கோடியெண் கொண்டவர்கள். இவர்கள் சூரியனை விழுங்க இச்சித்தவர்கள். இவர்களது இச்சையைக் கெடுக்கத் தேவர்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதகாஞ்சலியாகிய அர்க்கியத்தை விடுகின்றனர்: விட்டவுடன் அந்த அர்க்கியஜலம் வச்சிர வுருக்கொண்டு அந்த ராக்ஷஸரைக் கொளுத்துகிறது. (தேவி~பார.)

மாந்தை

இதுசேரர் தலைவர்களுக்கிருந்த இராஜதானிகளில் ஒன்று. இதில், நார்முடிச்சேரல் அரசு வீற்றிருந்தான்.

மானசவேகன்

வெள்ளி மலையிலுள்ள நூற்றொருபது வித்தியாதர அரசர்களுள் ஒருவன். இவன் மதனமஞ்சிசையை விரும்பி எடுத்துச் சென்று நரவாணதத்தனால் வெல்லப்பட்டான். (பெ. கதை.)

மானனீகை

இது கோசலத்தரசனுடைய மகளது வேறு பெயர். இவளது இயற்பெயர் வாசவதத்தை யென்பது. இவள் தாய் வசுந்தரி யென்பாள். கோசலத்தரசனைவென்று அவளது அந்தப்புரத்திலிருந்து பாஞ்சால ராசன் கவர்ந்து சென்ற மங்கையர்களுள் இவளும் ஒருத்தி. பின்பு அவனுடைய பட்டதேவியின் பணிப்பெண்னாக இருந்து அவனைக் கொன்ற உதயணனாற் கொண்டுவந்த மகளிரோடு இவளும் கொண்டு வரப்பட்டு வாசவதத்தையின் பணிப்பெண்ணாக இருந்து தன்னுடைய பந்தாட்டத்தைக் கண்டு மோகித்த உதயணனுக்கு பின்பு மனைவி யாயினள். இவள் யவன பாஷையிலும் சிற்ப வேலையிலும் பந்தாடுதல் முதலியவற்றிலும் மிகத்தேர்ச்சியுள்ளவள், (பெ. கதை)

மானமங்கலம்

திருவாதவூரருடைய முன்னோர்களிருந்தவூர்; இதனால் அவர்கள் மானமங்கலத்தாரென்று கூறப்படுவர். இவ்வூர் மானபுர மெனவும் வழங்கும். (திரு.)

மானஸாதேவி

இவள் பிரகிருதி தேவியினம்சம். இவள் சங்கரப்ரியை அநந்தன் சகோதரி, நாகங்களால் பூசிக்கப்பட்ட நாகபூஷனி நாகேச்வரி, சாதகாரபத்னி ஆஸ்திக முனிவரின் தாயாதலால் ஆஸ்திக மாதா இவளைத் துதிப்பார்க்குச் சர்ப்ப பயமில்லை. காசிபமுனிவர்க்கு மனதில் பிறந்தவள் என்பர். (தேவி. பா.)

மானேடெர்மிஸ்

ஒருவகை ஆஸ்திரேலிய வாசி எறும்பு தின்னி மிருகம், இது, அழுத்தமான கொம்பு போலும் மயிர்மூடிய தேகமுள்ளது. வாய் மெலிந்து உருண்டு நீண்டு குழாய் போல் எலும்பழுத்த முள்ளதாக இருக்கிறது. இதன் நாக்கும் உருண்டு நீண்டு அடிதடித்தும் முனை சிறுத்தும் பசையுள்ளதாயும் இருக்கிறது. அந்த நாவை எறும்பு புற்று முதலியவற்றில் நீட்டிப் பசையால் பிடித்து எறும்பு முதலியவற்றைத் தின்கிறது. இவ்வினத்தில் பல பேதம் உண்டு. இவை விலங்கினமாயினும் முட்டையிட்டு அவற்றை வயிற்றிலுள்ள பையில் வைத்து உஷ்ணத்தால் அதை பொரியச் செய்கிறது. அக்குஞ்சு தாயின் மடியிலிருந்த வண்ணம் மூக்கால் பாலையுண்கிறது. இவை வளை தோண்டி வசிக்கும். இவ்வினத்தில் ஒருவகை ஆண்டிஸ் மலைப் பிரதேசத்தில் இருக்கிறது. அது எறும்பு தின்னிகளில் பெரிது. இதனை டாமண்டுவா (கிரேட் ஆண்ட் ஈடர்) என்பர். (4 1/2) அடி நீளம் கரடிபோல் உடலெங்கும் மயிர் மூடியிருக்கிறது.

மானோக்கத்து நப்பசலையார்

மானோக்கம் கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு, பசலை மகளிர் கணவனைப்பிரிந்த காலத்து அவர்க்கு முன்புள்ள நெற்றியினொளி கெட்டுக் கண்ணாடியில் வாயினா லூதியபொழுது ஆவிபடர்ந்து ஒளி மழுங்குவதுபோல வேறுபட்டுக் காட்டுந் தன்மை நற். 304ம் பாட்டில் மறிமிடை பொன்னின் மாமை சாய வெண்ணிற்கு சிதைக்கு மார்பசலை” என்று பசலையி னியற் கையைத் தெளியக் கூறியவதனால் நப்பசலையா ரெனப்பட்டார். சிறப்பு பொருள் உணர்த்தும் இடைச்சொல். இவர் பெண்பாலர். இவரது இயற்பெயர் புலப்படவில்லை இவர் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவனது போர் வெற்றியைப் புனைந்து பாடியுள்ளார். புறம் 37. மற்றும் அவனது கொடை முதலாயினவற்றைச் சிறப்பித்து இயன்மொழி கூறினார். பின்பு அவனிறந்தபொழுது இரங்கிக் கூறிச்சென்றார். புறம். 224 மலையமான் திருமுடிக்காரி யிடஞ்சென்று பரிசிற்றுறைப் பாடிப்பரி சில் பெற்றனர். புறம். 126. முற்கூறிய காரியின் மகன் சோழியவேனாதி திருக்கண்ணனைப் புகழ்ந்து அரசவாகை பாடினர். இவர் கபிலரைப் பெரிதும் புகழ்ந்துள்ளார். குறிஞ்சியையும், பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும் அகத்தில் ஒன்றும், புறத்தில் ஏழுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மானோக்கம்

இது கொற்கையைச் சூழ்ந்த நாடென்பர். மானோக மெனவும் வழங்கும். (புற. நா.)

மான்

இது உருவத்தில் இளங்கன்று குட்டிபோன்றது. இச்சாதியிற் பலவகைகள் உண்டு. இது வளர்த்தால் பக்ஷமாக இருக்கும். இது ஓடுகையில் இதன் கால்கள் பூமியில் தங்கா, இதின் ஆணிற்குக் கொம்புகள் உண்டு. அவை வருஷத்திற் கொருமுறை வீழ்ந்து முளைக்கும். இதற்குப் பிளந்த குளம்புகளுண்டு. பெண்மானுக்குக் கொம்புகள் இல்லை. இதன் தோல் பழுப்பு நிறமாக விருக்கும். புள்ளிமான் உடம்பில் புள்ளிகொண்டிருக்கும். இது பயந்த பிராணி. இவைகள் கூட்டமாக மேயும்போதும் உறங்கும் போதும் ஒன்று அல்ல திரண்டு காவல் காத்திருக்கும். ஏதாவது சிற்றொலி அபாயக்குறி கண்டவுடன் தலையைத் தூக்கிக்கொண்டும் காதை உயர்த்திக் கொண்டும் ஓடி மறையும். இதிற் பலவரையுண்டு, கஸ்தூரிமான், கவரிமான், புல்வாய், கஸ்தூரி கஸ்தூரிமான் வயிற்றிலுண்டாம்.

மான்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பண்ணன் என்பவனைப் பாடிப் பரிசு பெற்றவர். இவர் இயற்பெயர் கொற்றங்கொற்றனாரா யிருக்கலாம் ஊர் மாற்றூர், தந்தை மாற்றூர்கிழார் வேளாளர். அகம் 54

மாபலன்

சூரபதுமனுக்குப் படைத்தலைவன்,

மாபலி

1. பலியைக் காண்க. 2. பாம்பனைக் காண்க.

மாபுராணமுடையார்

யாப்பருங்கல விருத்தியுள் கூறப்பட்ட தொல்லா சிரியருள் ஒருவர்

மாபுராணம்

1. இடைச்சங்கமருவிய ஒரு இலக்கண நூல். 2. சைந தீர்த்தங்கரின் சரித்திரமுரைத்த நூல்.

மாப்பிள்ளை

மேல்நாட்டு மகமதிய மதத்தவர் மலையாள பாஷை பேசுவோர். அரேபியரின் சந்ததியார். இவர் பல வேலைகள் செய்து பிழைக்கின்றனர். (தர்ஸ்டன்.)

மாமதநன்

துரியோதனன் தம்பி.

மாமிலாடன்

கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். (குறு 46.)

மாமூலனார்

இவர் அந்தணர் மரபினர். முக்காலமும் அறிந்த யோகியார். இதனைத் தொல்பொருள் எடும் சூத்திரவுரையில் பார்ப்பனப் பக்கத்து வகையாவன என்பதன் கீழ், நச்சினார்க்கினியர் யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலை வகையோ ராவர்’ என்று கூறுவதனா லறிக. அறிவன் கலசயோனியாகிய அகத்தியன் என முன்னர்க்கூறி யிருத்தலினால் மாமூலனார் அகத்தியரோடு அவர் வகையில் சேர்ந்தவரென்றறியற் பாலது. இவ்வளவு மேம்பாடுற்ற இவர் அகப் பொருட் சுவையை அளவு கடந்து அனுபோக முடையாருஞ் சொல்ல மாட்டாதவாறு இன்பம் பெருகத் தெளியக்கூறுவது வியப்புடையதாகும். இதற்கு ‘எத்தொழிலைச் செய்தாலு, மேதவத்தைப் பட்டாலு, முத்தர் மனமிருக்கு மோனத்தே’ என்பதொன் றல்லது வேறு காரணங்கூற யான் அறிந்திலேன். சைவ சமய நூலாகிய திருமந்திரம் எழு திய திருமூலர் வேறு இவர் வேறு, இவர் அகத்தியர் கூறும் பாடல்களில் யாரையேனும் கூறாது வாளா செய்யுள் செய்தனர். அது வருமாறு: ஆவி நெடுவேன் பொதினியைப் பாராட்டியது; அகம் 1, 91. சந்திரகுப்தன் மகன் துளுவென்பவன் ஸ்தாபித்த துளுநாட்டையும் (தென் கன்னடம்) நன்னனது பாழியையும் பாராட்டியது. அகம் 15. மூவேந்தர் தமிழ் நாட்டைக்கூறியது. அகம் 31. கரிகாற் சோழனோடு கோயில் வெண்ணிப் போர்க்களத்திற் போர் செய்த பெருஞ் சோலாதன் தோற்றுப் புறப்புண்பட்டு நாணமுற்று உயிர்விடத் துணிந்து வடக்கு நோக்கி யிருத்தலும் அதனையறிந்த அவனுக்கு நட்பாளராகிய பல சான்றோர் தாமும் உடனிருச்து உயிர்விட்டமை கூறியது. அகம் 55. கள்வர் கோமான் புல்லி யென்பது வேங்கடமலையைப் புகழ்ந்தது; அகம், 61. பெருஞ்சோறு பயந்த உதியஞ்சேரலின் கொடையைப் புகழ்ந்தது, அகம் 65. நன்னன் வேண்மான்வியலூரைச் சிறப்பித்தது; அகம் 97. வடுகர் தலைவன் எருமை யென்பானது குடநாட்டைக் கூறுவதுடன் எவ்வியி நந்ததற்குப் பாணர் வருந்தியதும் அதிகமானெடுமானஞ்சி பகைவர்க் கஞ்சி யொளித்ததுங்கூறியது; அகம் 115 பெருஞ்சேரலாதன் மாந்தை முற்றத்து நிதிகொட்டியிரவ வலர்க்களித்த கதை கூறியது; அகம் 127. ஆயுதபூசை செய்யும் வழக்குக்கூறியது; அகம் 186. கண்ணனெழினி கதை கூறியது; அகம் 166. பாண்டியனது கொற்கையில் முத்தும் சங்கு மெடுத்தல் கூறியது; அகம் 201. மத்தியென்பவன் எழினி யென்பவ னுடைய பல்லைப்பிடுங்கி வெண்மணிவாயிற் கதவிலழுத்திய கதை கூறியது; அகம் 211. (வெண்மணி நாகபட்டணம் தாலூகாவிலுள்ள தோரூர்). உதயஞ்சேரல் பாரதப்போரிற் சோறளித்த பொழுது கூளிச்சுற்றஞ் சூழ்ந்திருந்த கதை கூறியது; அகம் 233 சங்கநிதியின் சிறப்பு, கோசர் பொதியமலை, போகூரிற் புதிய மோரியரின்றேருருள் குறைத்த கதை இவற்றைக் கூறியது; அகம் 251. வேங்கடத்தைப் புகழ்ந்தது; அகம் 245. வடுகர் போந்தமை கூறியது; அகம் 281, புல்லியின் வேங்கடம், வடுகரின் ஆரவாரங்கூறியது; அகம் 295. புல்லி நன்னாட்டைப் புகழ்ந்தது; அகம் 311 பாண னன்னாட்டுப்புகழ்ச்சி கூறியது; அகம் 325, சேரலாதன் கடம்பு முதல் தடிந்தது கூறியது, அகம் 347. நன்னது கொடைச் சிறப்பும் அவனது எழிற் குன்றச் சிறப்புங் கூறியது; அகம் 349. சேரலனது வெளியும், புல்லியின் மலை இவற்றைப் பாராட்டிக்கூறியது; அகம் 356. புல்லியின் வேங்கடச் சிறப்புக் கூறியது; அகம் 393, வடுகர் முனையிற் கட்டியென்பது நாட்டைக்கூறியது; குறு, 11. சேரலனது கழுமலத்தைச் சோழன் வென்ற கதை கூறியது; நற். 14, சேட்படுத்த வழித்தலைவன் புலம்புவதாகக் கூறியதைக் கேட்டோரு மிரங்குவர்; நற். 75, இவர் பாடிய நற். 75ம் பாட்டு ஒன்றொழிய ஏனையவெல்லாம் பாலைத்திணையே. இவர் பாடியருளினவாக நற்றிணையில் இரண்டு (11,75) பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் இருபத்தாறும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாக முப்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மாமூலர்

கடைச்சங்க மருவிய புலவர்.

மாமூவனார்

கடைச்சங்க மருவிய புலவர்.

மாம்சதன்

ஒரு அரசன். இடபவுருக்கொண்டு கிரிவிரசத்தைத் துன்பமுறச் செய்தவன். இவனைப் பிரகத்திரதன் கொன்று இவன் தோலால் பேரி செய்தனன்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

இவர் பழனியில் கம்மாளர் குலத்தில் பிறந்தவர். இவர் தந்தை முத்தையாசாரி. இவர் கி. பி. 1836 இல் பிறந்தார். இவருக்குத் தந்தையார் குலமக்கட் பெயராகிய மாம்பழம் என்பதைப் பெயராக இட்டு அழைத்தனர். இவர்க்கு 3 வயதில் வசூரி கண்டது. குழவியின் வருத்தந்தரியாத தந்தை குமாரக்கடவுள் சந்நிதியில் குழந்தையைக் கொண்டுபோய் அபயமிட்டனர். மறு நாள் உதயத்தில் குமாரக் கடவுளருளால் அவதரிமுழுது நீங்கியது. இவர் தந்தை முதுகில் ஐந்தாமாண்டில் எழுதிக் காட்டியபடி தமிழிற்பழகிச் சின்னாளிற் கற்று வல்லவராய்ப் பழனிப்பதிகம், குமரகுருப்பதிகம், செந்திற்பதிக முதலிய இயற்றினர். தென்முகவை பொன்னுசாமித் தேவரவர்கள் வாழும் இராமநாதபுரம் சமஸ்தானம் சென்று ஒருசீட்டுக் கவிபாடிக் கையேட்டி னர்பால் கொடுத்தனுப்பினர். அரசர் இவர் அந்தகர் ஆதலால் இவரைக் காண இசைந்திலர். அரசர் கொடுத்த சமஸ்யைபாட வல்லீரோவென அவ்வாறே கொடுத்த சமஸ்ஸைகளைப்பாட கவிச்சிங்க மெனப்பட்ட மளித்து தம் சமஸ்தான வித்வானாக்கப் பெற்றவர்.

மாம்பழச்சிங்கக் கவிராயர்

இவரைப் பற்றி மாம்பழச்சிங்க கவிராய ரென்பதால் இவரூர் பழனிபோலும். இவர் கவிபாடுவதில் வல்லவர் போலும். இராமநாதபுரம் வந்தபோது ‘கிரியிற் கிரியுருகுங்கேட்டு” என சமுசை கொடுத்தபோது பாடியது “மாலாம் பொன்னுசாமி மன்னர் பிரா னின்னாட்டிற், சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் நீலாம், பரியிற் பரிய கொடும்பாலை குளிரும்மா, கிரியிற் கிரி யுருகும் கேட்டும் சேதுபதியவர்கள் பழங் கொடுத்தபோது பாடியது “அஞ்சேலெனப் பலந் தந்தான் இனியார் நமக்கு, நெஞ்சே கலிப்புலியை நீவெருட்டு, விஞ்சு பெரும், சீர்படைத்த கோனலர்ந்த தேன் மலர்ப் பொன்மாதிணங்கு, மார்பன் முத்து ராமலிங்கமால் ” எனப் பாடினர். இவர் மற்றும் பலகவிகளும் பாடினர் என்ப.

மாயசந்நியாசி

பட்டணங்களில் சிலவஞ்சகர் முண்டனஞ் செய்து கொண்டு தேக நிறைய விபூதி பூசிக்கொண்டு மான்தோல் அல்லது சால்வை பொத்திக்கொண்டு ஒரு சிஷ்யனுடன் புறப்பட்டு ஏமாந்தவர்களை ஏமாற்றும் கட்குடியர்,

மாயன்

ஒரு இராஷத வீரன்.

மாயா

சத்தபுரியுள் ஒன்று. இது வைகுந்தத்திற்கு ஏறும் ஏணியாக உள்ளது. இதற்கு அரித்துவாரம், கங்காத்துவாரம், மாயாத்துவாரம் எனவும் பெயர். கங்கை இவ்விடத்துச் சுழன்று செல்லுதலால் இப் பெயர் பெற்றது. இத்தீர்த்தத்தில் மூழ்கி அங்குள்ள மூர்த்திகளைத் தரிசிக்கில் முத்தியடைவர். (காசிகாண்டம்.)

மாயாசுரன்

வியோமாசுரன் தந்தை.

மாயாசைநன்

திரிபுராதிகளையழிக்க முதலில் விஷ்ணுவால் தம் தேகத்தினின்று சிருட்டிக்கப்பட்டவன். இவன் தனக்குச் சீடராக நால்வரைச் சிருட்டித்துக்கொண்டான்.

மாயாதேவி

மயன் குமரி. சம்பராசுரன் வீட்டிலிருந்த பதிவிரதை, இவளுக்கு மாயாவதி எனவும் பெயர்,

மாயாபுரம்

தாருகாசுரன் பட்டணம். கிரவுஞ்சகிரியை அடுத்தது.

மாயாப்பிரலாபம்

இது ஒரு ஞான நூல், கண்ணுடைய வள்ளலார் இயற்றியது.

மாயாவதி

பிரத்தியும்கனை மீன் வயிற்றிலிருந்து எடுத்து வளர்த்து நாரதர் சொற்படி அவனை மணந்தவள். இவள் பூர்வத்தில் இரதிதேவி, இவள் சம்பானால் அபகரிக்கப்பட்டனள்.

மாயாவாதி மதம்

அத்வைதமதத்தைக் காண்க. (தத்துவ நிஜாநுபோக சாரம்.)

மாயாவி

1. வாலியை யுத்தத்திற்கு அழைத்து அவனுக்கு இளைத்துப் பிலத்தில் புக வாலியால் துப்புண்டு இறந்தவன். 2. மயன் குமரன். துந்துபியின் சகோதரன். மந்தோதரியுடன் பிறந்தவன். இவனே வாலியை யுத்தத்திற்கு அழைத்த வனாயிருக்கலாம். 3. இவன் பிரமனது அச்வமேதக்குதிரையை மறைக்கப் பிரமன் விஷ்ணுமூர்த்தியை வேண்ட விஷ்ணு மூர்த்தி அரக்கனைக்கொன்று குதிரையை மீட்டுத் தந்த

மாயேசபவனம்

ஒரு ருத்ர உலகம்

மாயேண்டன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களுள் ஒருவர். குறு235

மாயை

1, அதர்மத்தின் குமரி. 2. விஷ்ணுவின் நாபிக்கொடியில் பிரமனுடன் உதித்து ஆன்மாக்களை மயக்குபவள். 3. விஷ்ணு மூர்த்தி யின் கட்டளைப்படி இரண்யன் புத்திரர் அரவரையும் தேவகி வயிற்றில் இட்டு யசோதையிடம் தான் பிறந்து மீண்டும் தேவகியிடமிருந்து கஞ்சனை மார்பில் உதைத்து ஆகாசமடைந்தவள். 4. சுரசையென்பவளுக்கு ஒரு பெயர். இவள் சுக்கிரனால் மகாமாயாவியாகிச் சுக்ரேன் சொற்படி காசிபரை முதற்சாமத்து இரவிற்புணர்ந்து சூரபத்மனையும் (30,000) வெள்ளம் தானவரையும், இரண்டாஞ் சாமத்திற் சிங்கவுருக் கொண்டு புணர்ந்து சிங்கமுகாசுரனையும் (40,000) வெள்ளம் சிங்கமுகத் தானவரையும், மூன்றாஞ்சாமத்திற் பெண்யானை யுருக்கொண்டு புணர்ந்து தாருகாசுரனையும் (400000) வெள்ளம் யானை முகத்தானவ ரையும், நான்காஞ்சாமத்தில் பெண் ஆட்டின் உருக்கொண்டு புணர்ந்து அசமுகியென்னும் பெண்ணையும் (30,000) வெள்ளம் அவுணரையும் பெற்றுப்பின்னும் வெவ்வேறு உருக்கொண்டு புணர்ந்து அந்த உருக் கொண்ட (40,000) குமரர்களைப் பெற்றவள். இவள் சூரபன்மன் குமாரக்கடவுளிடம் போரிட்டுப் பதாதியாய் நின்றகாலத்து அவனுக்கு இறந்த சைநியங்களை யெழுப்ப மிருதசஞ்சீவியின் இருப்பிடங்கூறி மறைந்தவள், 5. சம்பரன் தேவி. 6. ஸ்ரீகைலாயத்தில் சிவமூர்த்தியைப் பிராட்டியார் நோக்கி உலகத்தில் என் சத்தியால் மயக்கப்படாதவர் இருக்கின்றனரோ எனச் சிவமூர்த்தி, அல்லமர் எமது அம்சமாய்ப் பிறந்திருக்கின்றனர். அவர் உன்னால் மய்க்கப்படார் எனக்கேட்டு, அவரை மயக்குவதாகச் சபதஞ் செய்து கொண்டு பூமியில் வந்து அவதரித்த சத்தியின் தமோ குணவடிவம். இவள் விளவலதேசத்தில் வநவசைநகரத்தில் மமகாரன் என்பவனும் மோகினியும் செய்த தவத்தால் புத்திரியாகப்பிறந்து வளர்ந்து பரதமே முதலிய கலை வல்லவளாய்ப் புருஷனை விரும்பிச் சிவபூசை செய்து சிவமூர்த்தியின் சந்நிதியில் நடித்து வருபவளாயினள். இவள் கருத்தறிந்த அல்லமர் மத்தளிகனாய் வந்து இவள் நடிக்கையில் மத்தள முழங்க மாயை அவரது அழகு முதலிய கண்டு மயங்கி அவரைத் தன் மனப்படி இசைவித்துத் தாய் தந்தையர் அறியாது அணையில் வரச் செய்து தழுவச்செல்கையில் கைக்கு அகப்படாமல் நீங்குதல் கண்டு தன் முயற்சியில் சோர்ந்து கையுஞ்சலித்து மயங்கியிருந்தனள். இவள் செய்தியறிந்த உமை, இவ ளுக்குத்தான் வந்த காரியமறிவிக்க விமலையை அனுப்பினன். விமலைவந்து வந்த காரியம் தெரிவிக்க அறிந்து மறுநாள் நடிக்கையில் அல்லமரை விமலை சமிக்ஞையால் காட்டினள். மாயை அவர்மீது விழுந்து பற்றப்போகையில் அல்லமர் மத்தளத்தை யெறிந்துவிட்டு ஓடினர். மாயை பின்றொடர்ந்து சபதம் பேச அல்லமர் மறைந்தனர். மாயை விமலையுடன் கைலைசென்றனள். 7. (5) தமம், மாயை, மோகம், அவிததை, அமிர்தம் அவையாவன: சீவசைதன்யத்தை மறைச்கையால் தமம், ஜகத்ரூபமான அந்நிதா தோற்றத்திக்குக் காரணமாகையால் மாயை, விபரீத ஞானமுண்டாக்குகையால் மோகம், உணர்வை அழிக் கையால் அவித்தை, சத்ரூபத்திற்கு அந்தியமாகையால் அமிர்தம், 8. இது, நித்தமாய், ஒன்றாய், சகலத்திற்கும் காரணமாய், சடமாய், எவ்விடத் துக் காரியங்காணப்படு தலால் வியாபகமாய், ஆன்மாக் களுக்கு மாயேயமான தனுவாதிகளை யுண்டாக்குவதாய் நிற்பது. இது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயையென மூவகைப்படும். இவற்றிற் சுத்தமாயை மலகன்மங்களோடு விரவாது சுத்தகாரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. அசுத்தமாயை சுத்த மாயையின் கீழடங்கி மலகன் மங்களோடு விரவிச் சுத்தாசுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. பிரகிருதி மாயை; அசுத்தமாயையின் தூலபரிணாமமாய் அசுத்தகாரியப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. இவை, முறையே விந்து, மோகினி, மான் எனப் பெயர் பெறும் (சித்தா.) 9. இது, நித்தியமாய் ஆன்மாக்கள் செய்த கன்மத்துக் கீடாகப் பிரகிருதியில் தோன்றிய பதார்த்தங்களைப் புசிக்கும்படி இச்சையைப் பண்ணியிருக்கவும் தோன்றாததாய் ஒன்றாய், எல்லாவற்றிற்குங் காரணமாய், சடமாய், வியாபகமாய் ஜகத்திற்கு வித்தாய் உள்ளது. இது சுத்தம், சத்தா சுத்தம், அசத்தம் என (4) வகைப்படும், சுத்தம்; பிரோகாண்டம் எனவும், சுத்தா சுத்தம்; போககாண்டம் எனவும், அசுத்தம்; போக்யகாண்டமெனவும்படும். இம் மாயையின் காரியம் பாஹ்யம், ஆப்யந்தசாம் என இருவகைப்படும். பாஹ்யம்; சிருஷ்டிகாலத்தில் கலாதிதத்வங்களிலிருக்கும் புவனா திரூபமாக வெளியில் பிரசரித்திருப்பது. ஆப்யந்தாம்; சங்கார காலத்தில் மாயா கர்ப்பத்தில் சூஷ்மரூபமாய் அடங்கியிருப்பது. பிரளய காலத்தில் ஜசத்சத்தி ரூபமாய் இதிலடங்குகிறபடியால் மா என்றும் சிருட்டியில் வியத்திரூபமாய் வெளிப்படலால் யா என்றும் கூறுவர். ஆதலால் மாயை யெனப்பட்டது. (சிவ ஞா.)

மாரதன்

சிவபூசையால் முத்திபெற்ற அரசன்

மாரன்

மன்மதன், (மணிமேகலை)

மாராசுரன்

இவன் ஒரு அசுரன். வரப்பிரசாதத்தால் திரிலோகங் களையும் இம்சிக்கத் தேவர் வேண்டுகோளால் தேவியின் அம்சமாய் ஒருசக்தி இவனைச் சங்கரித்து மாரியெனும் பெயர் பெற்றனள். (ஸ்ரீகாரணம்).

மாராட்டம்

மகாராட்டிரதேயம். இத்தேயத்து ஆபரணங்கள் மிகப்புகழ் பெற்றவை. (பெ கதை.)

மாராபிராம முதலியார்

கொற்றந்தையூர் வேளாள குலத்தினவர். இவ்வூர் செஞ்சிக்கு அருகில் உள்ளது. இவர் புகழேந்திப் புலவரால் “நையும்படி யென்கொற்றந்தை கங்கோன் செஞ்சிவரைமீதே, ஐயம் பெறு துண்ணிடை மடவாயகிலின் றூமமுகி வன்று, பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது, வையம்பெறினும் பொய்யு ரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே” எனப் பாடல் பெற்று அவருக்கும் பல புலவருக்கும் பரிசளித்து உயர்ந்தவர்.

மாராயவஞ்சி

மாற்சரியத்தினையுடைய மன்னனாலே சிறப்புப்பெற்ற வெற்றிமிக்க வேலினையுடையோர் நிலைமையைச் சொல்லியது. (பு~வெ.)

மாரி

1. யமனிடம் இருக்கும் தேவதை. 2. இவன் ஜமதக்னிருஷியின் பத்தினியாகிய இரேணுகை, ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் புத்திரராலிறக்க உடன் தீப்புக்க இவளது தேகத்தை வேகுமுன் இந்திரன் வருணனைக் கொண்டு மழை பொழிவித்துத் தணிவித்தனன். ரேணுகை தரித்திருந்த வஸ்திரமுழுது மெரிந்து தேகந்தீக் கொப்புளமரும்பியது. ரேணுகையெழுந்து வஸ்திரமில்லாமையால் அவ்வனத்திலிருந்த வேம்பின் தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு அருகிருந்த புலைச்சேரியடைந்து தன்பசிக்கு ஏதேனும் தரக்கேட்டனள். அவர்கள் இவள் யாரோ வேதியப்பெண் என்று எண்ணித் தங்கள் ஆகாரத்தைத் தராது. பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், பானகம் முதலிய தந்து உப சரித்தனர். பின்பு அவ்விடம் நீங்கி வண்ணார வீதிவந்து அவர்கள் கொடுத்த வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு ஜமதக்கினி ருஷியிடம் வந்து துயருறும் போது தேவர்கள் தரிசனந் தந்து துயர்மாற்றினர். சிவ மூர்த்தி இவளை நோக்கி நீ சத்தியம் சமாதலால் பூமியிலிருந்து கிராமத்தில் உண்டாகும் தீமைகளை விலக்க வரம் தந்து நீ கொண்ட தீச்கொப்புளம். உலகத்து உயிர்களுக்கு அம்மைக் கொப்புளங்களாகும் எனவும், அதனாலுண்டாம் துன்பம் தணிய நீதரித்த ஆடையாகிய வேப்பிலையே அதற்குரிய ஒளஷதமாகவும், நீ புசித்த பச்சரிசி, மா, வெல்லம், இளநீர் உனக்குரிய நிவேதனமாக எ.ம், உன்னை ஆராதிப் போர் தீமையை விலக்குக எ.ம், ஆராதியாதோரை உன்னருகிருக்கும் சண்டாளரூபத்தை உன்னுள் ஆக்ரஹித்துக்கொண்டு வருத்துக என்றும் வரந்தந்து மறைந்தனர். அதனால் இவள் முத்துமாரி என்று பெயர் பெற்றுக் கிராமதேவி யாயினன். இவள் மற்ற சரித்திரங்களை ரேணுகையைக் காண்க.

மாரிமுத்துப்பிள்ளை

சிதம்பரத்திற்கு அருகிலுள்ள தில்லை விடங்கனில் வேளாளர் மாபில் தெய்வங்கள் பெருமாள் பிள்ளை யென்பவருக்குக் குமரராய்ப் பிறந்து, கல்வி கற்று நடராச மூர்த்தியின் திருவருள் உடையராய்த் திருமணஞ் செய்து கொண்டு மூன்று புத்திரர்களைப் பெற்று முதற் புத்திரருக்குச் சித்த பிரமையுண்டாக அதைச் சபாபதி திருவருளால் புலியூர் வெண்பாப் பாடி நீக்கிச் சிலகாலமிருந்து சாலிவாகன சகம் (1704)ல் சிவபத மடைந்தனர். இவர் செய்த நூல்கள் சிதம்பரேசர் விறலிவிடுதூது, வருணாபுரிக் குறவஞ்சி, புலியூர் வெண்பா, நொண்டி, அநீதி நாடகம், பள்ளு, சித்திரக்கவி முதலிய,

மாரிஷை

இவள் கண்டு மகருஷிக்குப் பிரமலோசையிடம் பிறந்தவள். இவள் கன்னிப் பருவத்தில் மங்கலமிழந்து புத்திர சந்தான மில்லாததால் விஷ்ணுமூர்த்தியை யெண்ணித் தவமியற்றினள், அவர் தரிசனந்தந்து உனக்குப் பதின்மர் புருஷகும், ஒரு புத்திரனும் உண்டாவன் என்று கூறி மறைந்தனர். இவளுக்குப் பிரசேதஸுக்கள் பதின்மரும் கணவர் களாயினர், குமரன் தக்ஷன், கண்டு மகருஷியைக் காண்க.

மாரீசன்

சுகந்தனுக்குத் தாடகையிடம் பிறந்தவன். இவன் தன் தந்தையைக் கொன்ற அகத்தியரை வெல்லக் கருதிச் சென்று அவரால் அரக்கனாகச் சபிக்கப்பட்டுச் சுமாலியைத் தந்தையாகப் பெற்றவன். சுபாகின் சகோதரன். விச்வாமித்திரர் யாகஞ்செய்கையில் சுபாகு மாரீசரிருவரும் அவரைத் தொந்தரை செய்து வந்தனர். இதனால் விச்வாமித்திரர் இராமரை அழைத்து வந்து தாம் செய்யும் யாக காதகரைக் கொலைசெய்யக் கட்டளையிட்டிருக் கையில் அவ்வரக்கர் இருவரும் வந்து யாகத்தைக் கெடுக்கத் தொடங்கினர். இராமமூர்த்தி ஆக்னேயாஸ்திரம் பிரயோகித்துச் சுபாகுவைக்கொன்று வாயுவாஸ்தி சம் பிரயோகித்து மாரீசனைக் கடலில் விழுத்தினார். இதனால் இவன் இராமமூர்த்தி யெதிரிற்செல்லின் கொலைநேருமென்னும் அச்சத்தால் தென்கடற்கரையில் ஒரு ஆச்சிரமம் செய்து கொண்டு தவஞ்செய்து வந்தனன். இவன் இராவணன் வேண்டுகோளால் ஆரண்யவாசத்திற்கு வந்த இராமமூர்த்தியின் பத்தினியாகிய சீதாபிராட்டி மன் பொன்மான் உருக் கொண்டு மேய்க்தனன். சிதை மானைக்கண்டு மயங்கித் தனக்கு அம்மானைப் பிடித்துக் கொடுக்க இராமமூர்த்தியை வேண்டினள். இராம மூர்த்தி இதனைப் பின்தொடர்ந்து பிடிக்கப்போகையில் மான் நெடுந் தூரஞ் சென்றது கண்டு இது மாயமானாக வேண்டுமென எண்ணி அத்திரம் பிரயோகிக்க அடியுண்டு விழுந்த அரக்கன், தன் உருவத்துடன் ‘சீதா இலக்ஷ்மன” எனக்கூறி உயிரைவிட்டனன். புஷ்போத்சடைக்கு விச்ரவாகால் பிறந்தவன் என்றுங் கூறுவர்.

மாரீசம்

உபபுராணத் தொன்று.

மாருதவேகன்

இந்திர விழாக்காணக் காவிரிப்பூம்பட்டினம் வந்த சுதமதியைச் சண்பைநகரத்திற் கவர்ந்து கொண்ட ஒரு வித்யாதரன். (மணிமேகலை)

மாருதி

அநுமானுக்கு ஒரு பெயர். அநுமனைக் காண்க. மாருதி புத்திரன்.

மாருதிச் சிறியாண்டான்

உடையவர் மடத்திற்கு அமுதுபடி, நெய், பால், கறியமுது நடத்தினவர்.

மாருதிப் பெரியாண்டான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர்க்குக் சைச்செம்பு பிடிப்பவர். (குரு பரம்.)

மார்கண்டேயர் ஆஸ்ரமம்

கோமதி, சரயு, இரண்டும் சேருமிடத்தி லுள்ள க்ஷேத்திரம். A the conflaenae of tha Sarau and the Gomati, near Bageswara in the district of Kumaun. Markanda Rishi performed asceticism at this Place.

மார்கழி அமாவாஸ்யை

கௌரி தபோவிரதம்,

மார்கழி ஏகாதசி விரதம்

இது மார்கழி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது, இந்தாள் தேவர்க்கு இடுக் கண்புரிந்த முராசானை விஷ்ணு கொன்று தேவரைக் களிப்பித்த நாள். இதில் உத யம் ஏகாதசி, மத்யம்த்வாதசி, அந்தியம் திரயோதசி உத்தமம். இந்நாளில் ஒருநாள் விரதமிருக்கின் ஆயிரம் ஏகாதசி பலம் உண்டு.

மார்கழிமாத பௌர்ணமி

திருவாதிரை நக்ஷத்திரத்தில் நடராஜ மூர்த்தி விரதம். மகா பலந்தருவது. இந்நாளில் சிவாலயங்களில் நடராஜமூர்த்திக்குப் பஞ்சகிருத்திய உற்சவம் நடத்துவர். நடராஜ மூர்த்தி பீடத்தைவிட்டு எழுந்தருளல் சிருட்டி, ரக்ஷாபந்தனந் தரிப்பது. திதி, கிருஷ்ணகந்தந் தரிப்பது சங்காரம், வெள்ளை சாத்துவது திரோபவம், உற்சவம் கொண்டருளுதல் அநுக்ரகம். அகங்கரித்த அசுரர் சரீரத்தை நீறாக்கித் தரித்ததே கிருஷ்ணகந்தம். சங்கார காலத்தில் எழுந்த உக்ரவுருவைத் தேவர்கள் வெள்ளைப் புஷ்பத்தாலும் வஸ்திரத்தாலும் மறைத்ததே வெள்ளை சாத்தல்.

மார்க்கங்கள்

இவை முத்தியடையும் வழிகள். அவை, சன்மார்க்கம், சகமார்க்கம், புத்திர மார்க்கம், தாசமார்க்கம் என நால்வகைப்படும். இவற்றை ஞானம், யோகம், கிரியை, சரியை எனக்கூறுவர். இவற்றால் சாயுச்சியம், சாரூபம், சாமீபம், சாலோக பதவிகளுண்டாம். (சித்தா.)

மார்க்கசகாயதேவர்

திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ் பாடிய புலவர். இப்பிள்ளைத் தமிழ் சொற்பொருள் அழகும், இனிமையும் உடையது.

மார்க்கசகாயர்

1. திருவிரிஞ்சையில் கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவமூர்த்தியின் திருநாமம், 2, திருவள்ளுவரால் பூதத்தைப் போக்கப்பெற்றுத் தம் குமரியை அவளுக்குக் கொடுத்த வேளாண் குலத்தவர். இவர் காவேரிப்பாக்கத்து இருந்தவராம்.

மார்க்கண்டன்

1. ஒரு சிவவேதியன். கழுகாசலத்தில் கடை வைத் திருந்த விசாலக் கண்ணி இடம் சிவத்திரவியம் நாள்தோறும் கவர்ந்து கொடுத்துத் தீமை புரிகையில் ஒருநாள் சிவமூர்த்தியின் மீது அணிந் திருந்த பொன் அணிகவருகையில் சர்ப்பந் தீண்டி இறந்து மறுபிறப்பில் புலியாய்க் காளத்தி க்ஷேத்திரத்துக் காட்டில் உலாவிச் சிவ தரிசனத்தின் பொருட்டுத் திருக்காளத்தி செல்லும் ஒருவனைத் துரத்திச்சென்று அவன் சந்ததிக்குள் புகுந்து ஒளிக்க ஆண்டுத் தீபார்த்திகண்டு நின்ற பலத்தால் முத்தி அடைந்தவன். 2, ஒருபிரளயத்தில் விஷ்ணுவைக்காண அவர் நீ யாசென்ன இவர் இவரது நிலை கூற அவர் வாய்வழி சென்று உலகமெலாங் கண்டு வெளிவந்து துதித்தவர், 3. விஷ்ணுவிடம் பலவரங்களைப் பெற்றான். (பிரஹன்னா தீய~புரா)

மார்க்கண்டேயனார்

1. ஒருபுலவர். மார்க்கண்டேயர் காஞ்சி இவராற் செய்யப்பட்டது. மதுரைத் தலைச்சங்கப்புலவருள் ஒருவர். இவர் செய்த நூலை நச்சினார்க்கினியர் தலையாயவோத்தென்று கூறுவர்.

மார்க்கண்டேயம்

பதினெண் புராணத் தொன்று. இது முப்பத்தீராயிரம் கிரந்தமுடையது. இது சைமினிபகவான் முற்பிறப்பில் வேதமுதலிய உணர்ந்து பிற்பிறப்பில் தரும் பக்ஷிகளாயிருந்த இரண்டு பக்ஷிகளை விஷ்னு மானிடவுருத் தாங்கியதற்குக் காரணம் யாதெனவும், பாண்டவர் ஐவருக்கும் திரௌபதி பொருத்தி மனைவியாவது ஏன் என்றும், பலராமர் மதுமயக்கத்தாந் செய்த பிரமகத்திக்குப் பிராயச்சித்தஞ் செய்வான் ஏன் எனவும், கிருஷ்ணார்ச்சுநர் இருவருக்கும் அகாலமர ணம் எய்தியது ஏன் எனவும், வினாவியதற்கு விடைகூறியது.

மார்க்கண்டேயர்

மிருகண்டு முநிவருக்கு மருத்துவதியிடம் பிறந்த குமரர். இவரது தாய் தந்தையர் தமக்குப் பதினாறாவது வயதில் ஆயுளின் கால அளவு எனக்கூறக் கேட்டுச் சிவமூர்த்தியையெண்ணிப் பூசித்து வருகையில் ஆயுளின் முடிவில் யமன் வந்து சிவபூசை செய்திருக்கும் காலையில் பாசம்வீச இவர் சிவபூசையினின்று நிலை தவறாதவராயிருந்தார். சிவமூர்த்தி சிவலிங்கத்திடமாக உக்கிர மூர்த்தியாய் யமனுக்குத்தோன்றி யமனைவிழ உதைத்து இவருக்குச் சிரஞ்ஜீவி, இவ்வயதுடன் இருக்க அருளிச்செய்து பூமிதேவி வேண்ட யமனையெழுப்பி அதுக்கிரகித்து அனுப்பினர். பாண்டவர்க்குத் தருமங்கூறினவர் அநேக சலப்பிரளயம் கண்டவர். இந்திரத்துய்ம் மனைச் சந்தித்து ஆயுளின் அளவைக் கூறியவர். கோட்டானைச் சந்தித்து ஆயுளின் அளவைக் கேட்டவர். கண்ணனைச் சிவபூசைக்குக் காரணம் வினவி அவரால் முதற்பொருள் அறிந்தவர். விஷ்ணு மூர்த்தியின் தேகத்துட்புகுந்து பிரபஞ்சங்களைக் கண்டவர்.

மார்க்கதாயினிபீடம்

சத்திபீடங்களில் ஒன்று,

மார்க்கவன்

நிஷாதனுக்கு அயோகஸ்திரிவிடம் பிறந்தவன். இவனே செம்படவன், இவனுக்கு ஒடம் விடுவது தொழில் (மநு.)

மார்ச்சாரி

சகதேவன் குமரன், இவன் குமரன் சுதசிரவசு.

மார்த்தவமதசித்தாந்தம்

நாராயணனை சர்வோத்தமனானதேவன். ஜகத்சத்தியம் ஜீவாத்மா பரமாத்மாக்களுக்குப் பேதமுண்டு, எல்லா உயிர்களும் தாரதம்மியாதி குணமாய் விஷ்ணுவின் பரிஜனங்கள். ஸவாதார சுகானுபவமே மோக்ஷம், நிர்மலமான பரவத்பக்தியே மோக்ஷமார்க்கோபாயம் பிரத்தியக்ஷாதி பிரமாணத்திரயம் பிரமாணம். இம்மதத்தில் சுதந்தரம் அசுதந்தரம் என்று இரண்டு தத்துவங்கள் முக்கிய மானவை. சுதந்தரன். பகவானான நாராயணன், அசுதந்தரன் ஜீவன், இந்த ஜீவர்கள் இராஜனுக்கு ஏவலாளிகளைப் போல நாராயணனுக்குத் தாசராய் விஷ்ணுலோகத்தில் வசித்திருப்பர். ஆதலால் ஜீவேஸ்வரர்கள் பாஸ்பர வேறுபாடுள்ளவர்களேயன்றி அபேத முள்ளவர்களல்லர். ஒன் றென்போர் அரசனுடன் ஒரு தானத்தை விரும்பும் ஏவலாளி. அரசனால் தண்டிக்கப்படுவான் போன்று நரகத்தையடைவர். பகவான் சேவை யெத்தன்மைத்தெனின் அங்கம் நாமகரணம் பஜனம் என்று மூவகைத்து. அவற்றுள் அங்கமென்பது நாராயணனுடைய பஞ்சாயுதங்களையும் தேகத்தில் தரித்தல். நாமகரணமெனின், புத்ராதியருக்கு நாராயணன் பேரை விடுதல். பஜனபெனின் நாராயண நாமத்தியானம், இம்மதத் தினர்க்கு ஆத்மா அணு, ஜீவர்கள் பலர். ஆத்மாக்கள் புண்ணிய பாவங் களைக் கொண்டு தேகமெடுப்பர். பகவான் கிருபையினாலே மோக்ஷ தனத யடைவர்.

மார்த்தவமதம்

இம்மதத்தவர் துவிதமத சித்தாந்தங் கூறுவர். இம் மதத்திற்குப் பாஷ்யஞ்செய்தவர், ஆநந்த தீர்த்தாசாரியர். இம்மதம் ஜீவாத்மாக்கள் பரமாத்மாக்கள் வேறு எனவும், பஞ்சபேதமாகிய ஜீவேஸ்வரபேதஞானம், ஜீவபரஸ்பர பேதஞானம், ஜடஜீவபேதா ஞானம், ஜடசபேதஞானம், ஜடபரஸ்பாபேதஞானம், எனும் சித்தாந் தத்தைப் பெற்றது, இதில் ஜீவன் நல்வினை, தீவினையென இரு பகுதிபெற்றுத் தம்தம் பழையவுருக்களாகவே வெவ்வேறாக இருந்து பஞ்சபேத்ஞானத்தை யடைந்து அவ்வுருவத் தோடிருத்தலே முத்தியெனவும் கூறுவர்.

மார்த்தாண்டன்

1. சூரியன் உலகங்களைப் பிழைக்கச் செய்பவன், 2. ஒரு சூரியன் இவன் பிரமனால் சிருட்டிக்கப்பட்ட சாபியை மணந்து உலகத்தில் கோக்களை விருத்தி செய்வித்தான். (பார. அநுசா.)

மார்த்தாண்டமூர்த்தி

மூன்று முகம், ஆறு கைகள், அபயம், வரதம், ஜபமாலை, கமண்டலம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள் முத்துமாலை யுடையவராயிருக்குஞ் சூரியமூர்த்தி,

மார்த்தாண்டி

1. சத்தியவதிக்கு ஒரு பெயர். 2. ஒரு வலைஞன், யமுனைத்துறைவன்.

மார்பன்

திருதராட்டிரன் குமரன்.

மார்புநோய்

இது இருத்ரோக மெனப்படும். இதனைத் தமர்வாதம், ருத்ரவாத மெனவுங் கூறுவர். வாதபித்த, சிலேஷ்ம, திரிதோஷதிருமி மார்பு ரோகமென ஐந்து வகைப்படும். இது மார்பில் குத்தல், நோ, அதிரல், மரத்தல், வறளல், மூர்ச்சை, எரிச்சல், புளியேப்பம், இளைப்பு வாந்தி ஸ்தம்பித்தல், சோம்பல், ஆமாசயத்தில் பூச்சிகள் இவைகளைக் கொண்டிருக்கும். இவற்றில் நான்கு சாத்யம் இறுதியது அசாத்யம் இதனை சுகுமாரவிரேசனம், பன்னீர்ப் பூக்கஷாயம், மகா வில்வாதி லேஹ்யம் முதலியவற்றால் வசமாக்கலாம்.

மார்ப்பித்தியார்

1. ஒரு தமிழ்ப் புலவர். 2. புறநானூறு பாடிய புலவரில் ஒருவர்.

மார்மாட்

இது எலியினத்தில் ஒருவகை. இது, வட அமெரிக்கா, ஆசியா, தார்த்தாரி, மங்கோலியா, சைபீரியா முதலிய நாடுகளில் வசிப்பது. இவ்வினத்தில் (14) வகைகளுண்டு. இது, பூனையை யொத்த உருவத்தில் நீண்டு பருத்த உடலும், குறுகிய காலும் உள்ளது. இதன் கை கால்களில் அவ்வைந்து விரல்களிருக்கின்றன. இது பூமியில் வளை தோண்டி வசிக்கிறது, அவ்வளைகளில் மேலும் கீழுமாக (2) வளைக ளுண்டு, வேனிற்காலத்தில் மேல்பாக வளையில் செத்தைகளைப் பரப்பித் தங்கும். மாரிகாலத்தில் வளையை விட்டு வருவதில்லை. மாரி காலத்திற்குரிய ஆகாரத்தை வளையில் சேர்த்து வைத்துக் கொள்ளு கிறது. இவ்வினத்தில் அணிலைப்போன்று முதுகில் வரிகளுள்ளவையும் உண்டு, இவ்வினத்தில் மற்றொன்று வாயில் இரைகளை அடக்கிக் கொள்ள பைபெற்று இருக்கிறது.

மார்வாடி

(மார்வாரி) இவர்கள் மார்வார் தேசத்திலிருந்து தென் இந்தியா முழுதும் பரவிப் பணத்தை வட்டிக்குக் கொடுத்து வியாபாரஞ் செய்யும் சாதியார்.

மாறஞ்சடையன்

பாண்டி நாட்டாசர்களில் ஒருவன். இவன் பத்தினி நக்கங்கொற்றியார். இவன் பல தருமங்கள் செய்தனன்.

மாறநேர் நம்பி

இவர் பராந்தகம் எனும் கிராமவாசி. சாதியாற் பஞ்சமர், இவர் ஒரு நாள் தம்மூர்வழி ஆளவந்தார் வந்து கொண்டிருக் கையில் கழனி வேலைசெய்து கொண்டிருக்கப் பசிமேலிட்டுக் கழனி யிலிருந்த சேற்றினைப் பெருமாளுக்கு நிவேதித்து உட்கொண்டனர். இதனை ஆளவந்தார் கண்டு தமது சிஷ்யர்களை விட்டு இவரை அழைக்கக் கூறப் பஞ்சமர் வந்தனர். ஆளவந்தார் இவரை நோக்கிக் கடவுளால் படைக்கப்பட்ட பொருள்கள் பசிவருங்கால் உண்ணச் சோறிருக்க இச்சேற்றினை உண்பானேன் என்ன, இவர் இம் மண்ணிற்கும் அதற்கும் வேற்றுமை காண்கிலேனாதலால் பசிவந்த காலத்து உண்டேனென்று விடைதர ஆளவந்தார் நோக்கி இவர் பிறந்தபோதே கடந்தை முனிந்த மறனோவென்று கூற இவர்க்கு இன்று முதல் மாறநேர்நம்பி என்று பெயர் உண்டாகுக என்று தம்மாணாக்கருள் ஒருவராக்கினர். இவர் தமது ஆசாரியருக்குற்ற பிராக்ருதானுபவமாகிய ராஜரணத்தை விருப்பாயேற்று அநுபவித்து வருகையில் இவரது ஆசார்ய பக்தியை நோக்கிப் பெரியநம்பி பஞ்சமரென்று பாராமல் தண் டன் சமர்ப்பித்துப் பிரசாதங்கொடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் பெரியநம்பிகள் பிரசாதமெடுத்துச் செல்கையில் உடையவர் பின் தோடர்ந்து இவரது ரணத்தைக்கண்டு பெருமாளைத் யானிக்க ரணம் மறைய மாறநேர்நம்பி ஆசார்யத்ரோகமாக நீர் ஏதோ செய்தீரேன்று கல்லெடுத்துத் தமது தலயைமோதச் செல்கையிலிவரது ஆசார்ய பக்தியை கண்டு ரணத்தை அவருக்கே தந்து உடையவர் சென்றனர். பின்பு சில காலத்திற்குப் பிறகு இவர் பிரமகபாலந்திறந்து ஆசார்யர் திருவடியடைந்தார்.

மாறனலங்காரம்

1. இது திருக்குருகைப் பெருமாள் கவிராய ரென்பவராலியற்றப் பெற்ற ஓர் அலங்கார நூல். இதற்கு உதாரணமான செய்யுட்கள் சடகோபாழ்வார் விஷயமானவை. அவையும் அவரால் இயற்றப்பட்டனவே. இந்நூலாசிரியருக்கு சடையனென்றும் ஓர் இயற்பெயருண்டு, 2. ஒரு அணியிலக்கணம், இதில் உதாரணம் முதலியவை யெல்லாம் விஷ்ணுபுரமாக உதகரித்திருக்கிறது.

மாறனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர்.

மாறன்

ஒரு பாண்டியன். குறுநில மன்னன்.

மாறன் பொறையன்

ஐந்திணையைம்பது பாடிய புலவன்.

மாறன்வழுதி

பாண்டியன் மாறன் வழுதி காண்க.

மாறுபடு புகழ்நிலை

இதுகவி, தான் கருதியபொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறொன்றினைப் புகழ்வது. (தண்டி)

மாறோக்கத்து நப்பசலையார்

கபிலரைப் புகழ்ந்தவர். மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலியவரைப் பாடியவர். (புறநா).

மாறோக்கத்துத் தாமக்கண்ணி நப்பாலத்தனார்

கடைச்சங்கமருவிய புலவர்,

மாறோக்கம்

கொற்கையைச் சூழ்ந்தநாடு,

மாற்று நிலையணி

அஃதாவது இழிவாகிய பொருளைக்கொடுத்து உயர்வாகிய பொருள் வாங்குதலைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் பரிவிர்த்தியலங்காரமென்பர். (குவல)

மாற்றுரைகாட்டிய விநாயகர்

திருவாரூர்க் குளக்கரையில் எழுந்தருளி யிருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்க் குளத்திலெடுத்த பொன்னுக்கு மாற்றுகூறிய விநாயகர்,

மாலகன்

அசமகன் மகன்

மாலதி

1. தொண்டீரன் தேவி. 2. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு பார்ப்பினி. (சிலப்பதிகாரம்). 3. சாகலன் தேவி, சாவித்திரிக்குத் தாய்.

மாலன்

அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணரால் கொல்லப்பட்டவன்

மாலய அமாவாசை

மகாலய அமாவாசை காண்க.

மாலருஷி

வேடர் பெண்களைப் புணர்ந்து ஏனாதிகளைப் பெற்றவர்

மாலாங்கமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர். (திருமந்.)

மாலாதரன்

ஒரு வேடன். இவன் மாதவி மரத்தில் தனக்காக மாலை தூக்க அது அடியிலிருந்த சிவலிங்கத்திற் கணிந்தது போலிருக்க அதனால் முத்தி பெற்றவன்,

மாலாவதி

உபபர்க்கணன் தேவியரில் ஒருத்தி, பதிவிருதை, இவள் தன் கணவன் பிரிவிற்கு ஆற்றதவளாய்த் தேவரைச் சபிக்கத் தொடங்கியவள். (பரம்ம கைவர்த்தம்).

மாலி

1. சுகேசன் குமரன் மாலியவானைக் காண்க விஷ்ணு சக்கரத்தால் கொல்லப் பட்டவன் 2. துரியோதனன் கம்பி. 3. இராவண சேநாவீரன், இலக்குமணரால் இறந்தவன். 4. பராசருஷியின் புத்திரன், 5. கௌசிசன் மருமகன்.

மாலினி

1. உமையின் தோழியரில் ஒருத்தி, குடை பிடிப்பவள். 2. திரௌபதியின் அஞ்ஞாத வாசப் பெயர். 3. ஒரு நதி. அயோத்தியிலுள்ளது. 4. ஒரு அசுரன். விஷ்ணுவால் கொலையுண்டவன். 5. பிரமலோசையின் பெண். உருசிப் பிரசாபதியை மணந்து ரௌச்சியனைப் பெற்றவள். 6. விபீஷணன் தாய், 7. ஒரு நதி. Malini is the name of a river, which falls into the river Chogra (Saraju) 50 miles above Ayodhya. The Hermitage of Kanwa stands upon it. 8. சுவாயம்பு மநுவின் தேவி. சஷ்டி தேவியைக் காண்க.

மாலியகேது

சுமாலியைக் காண்க.

மாலியவான்

சுகேசன் குமரன். பிரமனை யெண்ணி நெடுநாள் தவம்புரிந்து உலகமெல்லாந் தன் ஒரு குடைக்கீழ் அடங்க வரம் பெற்றவன், விச்வகர்மன் முன்னிருமித்த பட்டணமாகிய திரிகூடத்தில் குடிபுகுந்து அரசாண்டவன், (இச்சரிதையை மாலி சுமாலிகளுக்குள் கொள்க. இம்மூவர்களுக்கும் தேவியர் சுந்தரி, சேதுமதி, சுவதை.) தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவிற்குப் பயந்து பாதலமடைந்து கைகேசியை விச்சிரவாவிடம் ஏவி அவகருடன் இருக்கச் செய்து இராவணன் முதலியவரை விருத்தி செய்வித்தவன், சீதையை விட்டு விடும்படி இராவணனுக்குப் புத்தி கூறியவன். புட்பதந்தனைக் காண்க.

மாலுதானர்

ஒரு இருடி. வைகானச முனி புத்திரர், எக்ய சருமனைக் காண்க.

மாலுமி

மருத்துவன் பிராமண ஸ்திரீயைப் புணரப் பிறந்தவன்.

மாலை

1. குணமாலையின் தோழி. 2. பூக்களால் தொடுத்தது. இது இண்டை மாலை, பத்தி மாலை, நுதலணி மாலை, மத்தக மாலை, பின்னிய மாலை, வாகை மாலை, கோத்த மாலை, முதலியன. வெட்சி, குறிஞ்சி, வஞ்சி, கரந்தை முதலியவும் உண்டு,

மாலைநிலை

ஒளியால் மிக்கவேலினையுடைய கொழுநனோடு செறிந்த நெருப்பிலே புகுவான் வேண்டிப் பிறையையொத்த நெற்றி யினை யுடையாள் மாலைக் காலத்திலே நின்றது. (பு வெ. பொது.)

மாலைப்பொழுது செய்வனதவிர்வன

மாலைப்பொழுதில் சயனித்தலும், வழி நடத்தலும் செய்தல் ஆகா. அந்திப்பொழுதில் விளக்கு ஏற்றல் வேண்டும். அந்திப் பொழுதில் உணவு கொள்ளாது அந்திக் குறைகையில் உண்டு ஓரிடத்தில் அடங்கல் வேண்டும்.

மாலைமாறன்

இவர் கடைச்சங்க காலத்திருந்த பாண்டி நாட்டரசர் போலும், (குறு 245)

மாலைமாற்று

இது சித்திரக்கவியிகிலொன்று. ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டேமாவது. (யாப்பு~வில.)

மாலைவிளக்கணி

அஃதாவது, தீபகத்தையும் ஏகாவளியையுஞ் சேர்த்துச் சொல்லுதலாம். இதனை வடநூலார் மாலா தீபகாலக் காரம் என்பர்.

மால்

விஷ்ணுமூர்த்திக்கு ஒரு பெயர்.

மால்யகிரி

ஒரு பாகவதன்.

மால்யவந்தம்

இராமமூர்த்தி கார்காலத்துத் தங்கியிருந்த மலை; கிஷ்கிந்தைக்கு அருகில் உள்ளது.

மால்யவான்

ஒரு பர்வதம். Northern portion of the Eastern Ghats in the Districts of Cuddapa, Kurnool, Nellore, Guntur. ete.,

மாளவதேவீ

கேகயராசன் இரண்டாவது தேவி. குமரன் கீசகன்.

மாளவம்

1. (மால்வா) உச்சயினியின் முக்கிய பட்டணம். 2. இது ஒருதேசம், Malwa. Its Capitals wera Ujjain and Dharanagara at the time of Raja Bhoja. It is situated in the North West of Anuradesa.

மாளவி

1. கேகயன் என்னும் பெயருள்ள சூதன்தேவி. கீசகர்களுக்குத் தாய். 2. அசுவபதியின் பாரியை, சாவித்திரியின் தாய்,

மாளுவவேந்தர்

மாளுவதேசத்தரசர் (சிலப்பதிகாரம்.)

மாவசு

அச்சோதைக்குத் தந்தை,

மாவண்கிள்ளி

ஒரு சோழன். (மணிமேகலை.)

மாவண்டூர் கருமான்

இவன் கம்பர் செய்யுளை நன்றென அங்கீகரித்தவன்.

மாவண்முல்லை வவூத்தனார்

கடைச்சங்க மருவிய புலவர்.

மாவன்

மையலென்னும் ஊரிலிருந்தவன். ஒல்லையூர் தந்த பூதபாண்டியனுக்கு நண்பண்.

மாவலி

1. பலியைக் காண்க, 2. ஓர் அரசன், நெடுமுடி கிள்ளியின் மனைவியாகிய சீர்த்தி இவன் குலத்திற் பிறந்தவள். (மணிமேகலை).

மாவலி கங்கை

ஒரு நதி; இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது, திரு.

மாவளத்தன்

இவர் ஒரு பிரபுவாக இருத்தல் கூடும். கடைச்சங்கத்தவர் காலத்திருந்தவர். இவர் முல்லையரும்பு யானைக் கோடுபட்டுத் தேனொழுகுதலை முலைமீது கண்ணீர் விழுதற்குவமை கூறியுள்ளார். (குறு 348.)

மாவளத்தான்

சோழன் நலங்கிள்ளியுடன் பிறந்தவன். தாமப்பல் கண்ணனாரால் பாடப் பெற்றவன். இவன் தாமப்பல் கண்ணனாருடன் வட்டாடியபோது அவர் கைகாப்பத்தான் வெகுண்டு வட்டுக்கோண் டெறியப் புலவர், சோழன் மகன் அல்லையென தாணிப் பின்பு அவராற்புகழ்ந்து பாடப் பெற்றவன். (புறநா).

மாவிரதன்

சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றி நற்பயன டைந்தவன்.

மாவிலங்கை

இது ஒய்மா நல்லியக்கோடனூர். (புற. நா.)

மாவிலை

இது சகல சுபகார்யங்களில் ஸ்தபனகும்பாதி தேவதை களுக்கு முடிமயிராக உபயோகப்பட்டும் மங்கலபத்ரங்களாகிய பஞ்ச பல்லவங்களில் ஒன்றாகவும் கொண்டு வழங்கி வரப்பட்டது,

மாஸ உபவாஸம்

இது ஆடிமீ சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது. இது லக்ஷ்மீ நாராயணவுருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதமிருப்பது,

மாஹேச்வர சூத்ரம்

பாணினி முனிவர் வேண்ட உலக உபகாரமாய்ச் சிவமூர்த்தியின் திருக்கரத்திலிருந்த டமருகத்தின் வழித்தோன்றிய வியாகாண சூத்திரங்கள்.

மாஹேச்வரம்

உப புராணங்களில் ஒன்று.

மிகுதி நவிற்சியணி

இது ஆச்சர்யமடையத் தக்கதாகவும், பொய்யாகவு மிருக்கிற கொடை, சௌர்ய முதலியவற்றைப் புகழ்வது. இதனை அதியுக்தி யலங்காரம் என்பர். (குவல.)

மிக்க குளிர்ந்தபூமி

ஆசியா கண்டத்திலுள்ள சைபீரியா நாட்டின் வடபாகத்தில் இருக்கும் வர்க்கோயான்ஸ்க். இது எல்லாப் பாகங்களிலும் அதிக குளிர்ந்த பூமி.

மிசிசாரம்

சிற்பநூலுள் ஒன்று,

மிசிசிப்பிமதம்

இத்தேயத்தவர்கள் சூரியனைக் கடவுளாகத் தியானிப்பர். இவர்களில் பலர் பூலோகமும் சுவர்க்கலோகமும் ஆதியில் ஒரு ஸ்திரீயாற் சிருட்டிக் கப்பட்டவையென்றும், அந்த ஸ்திரீயும் அவள் குமரானும் லோகங்களைப் பாலித்துக்கொண்டு வருகையில் அந்தஸ்திரீ பலவீனத்தால் சுவர்க்கலோகத்தினின்று பூமியில் விழும்போது ஆமை யொன்று அவளைத் தாங்கிற்றென்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் ஒட்காம் என்பவனே முதல் கடவுளென்று நம்பியிருக்கின்றனர். வேறுஞ்சிலர் வேறுதேவதை களையும் நதிகளையும் பூஜிக்கின்றனர்.

மிசிரகேசி

1 ஒரு அப்சரசு. 2 வசுதேவன் தம்பியாகிய வற்சன் மனைவி.

மிசிரம்

யயாதியால் துரத்தப்பட்ட அவன் புதல்வர் மிலேச்சருடன் கலந்தாண்ட இடம் தற்காலம் ஆபிரிகாவில் ஈஜிப்ட் என்று வழங்குந் தேசம்.

மிஞ்சுகர்

ருத்திரர்களிடம் பிறந்தவர். (பா, வன.)

மிட்டுவான்

தக்ஷன் குமரன்.

மிண்டாசுரன்

உமாதேவியார் தவத்திருக்கையில் கண்டு காமுற்றுச் சண்டிகையா லிறந்த அசுரன். சண்டாசுரன் சகோதரன்.

மிதக்கும் தீவு

பசிபிக் மகாசமுத்திரத்திலும், அத்லாண்டிக், இந்து மகாசமுத்திரங்களிலும் சில புதிய தீவுகள் கண்டு பிடித்ததில் சில நிலைத்திராமலும் தண்ணீருக்கடியிலுள்ள பூமியின் சம்பந்தப்படாமலும் மிதந்துகொண்டே இடம்விட்டு நகர்கின்றன என்பர். இதில் ஒன்று போர்னியோ தீவையடுத்த (7) ஏகர் விரிவுள்ள பரப்பும் பலவித விருஷங்களு முடையதாம்.

மிதத்துவசன்

(சூ.) தர்மத்துவசன் குமரன்.

மிதன்

(ச.) சயன் குமரன்,

மிதர்ச்சநர்கள்

பாரத வீரர்.

மிதி

நிமியைக் காண்க.

மிதியடி

நுணா, பலா, முதலிய மரல்களால், காலில் நீர் ஏறாவகை வாரிட்டமைப்பது இதில் வாரமைக்காமல் மரத்தாலேயே கொட்டை யிட்டமைப்பது பாதகுறடு.

மிதிலன்

(சூ) வசிட்டராலுடலிழக்கப் பெற்ற நிமியின் கடைந்த தேகத்திற் பிறந்தவன். இவனே மிதிலையை நியமித்தவன். இவனுக்கு விதேகன் எனவும் பெயர். நிமியைக்காண்க.

மிதிலை

1. ஓர் நகரம் Janakapur, The Capital of the kingdom of Raj Janaka. Mithila was the name both of the country and the capital, 2. சநகன் ஆண்ட பட்டணம். சீதை பிறந்த இடம், விதேகன் அரசு. கண்டகி, கௌசிதி நதிகளினிடையிலிருப்பது. இப்போது பேகாரில் (டிரட்) என்பது. (Trat) மகததேசத்துக்குத் தென்கிழக்கிலுள்ளது. பஞ்சகௌடத்தொன்று.

மிதுனம்

ஸ்திரிபுமானாகிய இரட்டைப் பேறு, ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடம் பிறந்தவர்.

மித்தியை

அதர்மன் தேவி, துர்ச்சனரால் பூசிக்கப்பட்டவள்,

மித்திரகாமன்

இவன் நற்குண நற்செய்கையையுடைய ஒரு வணிகன். பெருஞ்செல்வத்தால் மிக்கவன். வேறு வேடங்கொண்ட வாசவதத்தை முதலிய நால்வரும் இவன் வீட்டிலேதான் சிலகாலம் மறைந்திருந்தனர். (பெ. கதை)

மித்திரகேசி

ஒரு அப்சரசு. வச்சகன்பாரி, குமரன், விருகன் இவளுக்கு மிச்ரகேசி யெனவும் பெயர்.

மித்திரசித்

மலையகந்தனியைக் காண்க.

மித்திரதேவர்

1, பகதேவனுக்குத் தக்ஷயாகத்தில் வீரபத்திரர் போக்கிய கண்ணைக் கொடுத்தவர். 2. இவர் சோணாட்டில் சாவளம்பாடியில் பெருமாள் அருள் பெற்றவர்.

மித்திரன்

1. நகுலனுக்கு இலகீர்மதியிடம் பிறந்த குமரன். 2. ஒரு தேவதை 3. வசிட்டருக்கு ஊர்வசியிடமுதித்த குமரன். 4. கிருஷ்ணன் குமரன், 5. கசியபருக்கு அதிதியிடமுதித்த குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். பாரி, ரேவதி, குமரர், உற்சாகன், அரிஷ்டன், பிப்பலன். 6. வருணனுடனிருக்குந் தேவன், 7. மனோஞ்ஞையைக் காண்க 8. ஒரு வேதியன். இவன் தவஞ் செய்தலில் விருப்புள்ளவனாய்த் தந்தையிட மநுமதிபெற்றுக் கண்டகி தீரத்திற்றவஞ் செய்கையில் குமரனது நிலையறியத் தந்தை இருட்காலத்திற் சென்றனன். குமரன் தந்தையென அறியாது மிருகமென வெண்ணித் தந்தையைக் கொன்றனன், பின் தந்தையென அறிந்து வியசனமடைந்து புண்ணிய தீர்த்தங்களாடிப் பிரமகத்தி நீக்கிக் கொண்டவன்.

மித்திரமகருஷி

இவர் ஒருமுனிவர். இவர் பன்னிரண்டு வருஷத்திற் கொருமுறை யோகத்திருந் தெழுந்திருப்பர். இவர்க்கு அக்காலையில் ஒருநெல்விக்கனி பழுக்கும்; அதை இம்முனிவர் நியமாதிகள் முடித்துக் கொண்டுண்பது வழக்கம். பாண்டு மக்கள் வனஞ் சென்றிருக்கையில் இக்கனியைத் திரௌபதிகண்டு தனக்குப் பறித்துத்தர அருச்சுனனை வேண்ட அருச்சுனன் பறித்துக் கொடுத்துப்பின் அதன் வரலாறு அருகிருந்தாரா லுணர்ந்து இருடி சாபத்திற்கஞ்சிக் கண்ணனைத் துதித்து அவர் சகாயத்தாற் பொருந்தச் செய்தனன்,

மித்திரவன்மன்

ஒரு அரசன். வியன் தந்தை.

மித்திரவிந்தை

விந்தாது விந்தரின் தங்கை. இவள் கிருஷ்ணமூர்த்தியை மணம் புணர்ந்தனள். இவளுக்கு அரசன் முதலிய பதின்மர் குமரர்.

மித்திராக்கள்

ஒரு அரக்கன், வீடணனால் மாய்ந்தவன்.

மித்திராயு

தீவோதாசன் குமரன். இவனுக்கு (100) குமரர். இவர்களில் மூத்தோன் சுகந்தகிருது.

மித்திராவருணர்

வசிட்டரையும் ஊர்வசியையுங் காண்க. இவர்கள் அகத்திய வசிட்டர்களுக்குப் பிறப்பிடமானவர்கள்.

மித்திராவருணி

வசிட்டன், அகத்தியன்,

மித்தீரசகன்

1, கல்மாஷபாதனைக் காண்க. மித்திரசக்யன் மித்திரசதன் எனவும் பெயர் கூறுவர். 2. சவுதாசனுக்கு ஒரு பெயர்.

மினைகிழானல் வேட்டன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் நல்வேட்டன். ஊர்மிளை. இவர் வேளாளர் (குறு 341.)

மினைகீழான் நல்வேட்டனார்

நல்வேட்டனார். காண்க.

மினைக்கந்தன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவாதியற் பெயர் கந்தன், ஊர்மிளை. (குறு. 196.)

மினைப்பெருங்கந்தன்

இவர் கடைச்சங்கப் புலவரில் ஒருவர். இவரியற்பெயர் பெருங்கந்தன் ஊர்மிளை. இவர் காமம் புது வரவிற் றென குறிஞ்சிபாடியவர். 204,234,139

மினைவேடித்தன்

இவர் கடைங்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் தித்தர், வேள் என்பது வேளாண் குடிப்பெயராகலாம். மிளை யென்பதவரது ஊர், (குறு. 284)

மின்னல்

உஷ்ணம், சராசாப் பொருள்கள் எல்லாவற்றினும் நிறைந் திருக்கிறது. அவ்வுஷ்ணத்தின் சாரமே மின்சாரம். இது எல்லாப் பொருள்களிலு மிருக்கினும் விசேஷமாய் ரோலியில் கூடி மேகங்களில் மின்னலாகத் தோன்றுகிறது. இந்த மின்சாரம், சிலவேளைகளில், சில பொருள்களில் அளவிற்கதிகமாயும், சில பொருள்களில் குறைந்து மிருக்கும், அளவிற்கதிகமாயின் ஸ்வயமென்றும், அளவிற்குக் குறைந்திருக்கின், அபஸ்வயமென்றும் கூறுவர். மேகங்கள் வருஷிக்கக் கூடும்போது நெருங்குதலால் இவ்வுஷ்ணம் அதிகமாயிருக்கும் மேகத்திலிருந்து குறைந்திருக்கும் மேகத்தின் கோடியுஷ்ணத்தைச் சமமாக்கிக் கொண்டிருக்கும். இவ்வாறு இவ்வுஷ்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பாய்வதே மின்னலுக்குக் காரணம் ஸ்வயத்திலிருந்து ஸ்வயத்திற்கும் அபஸ்வயத்திலிருந்து அபஸ்வயத்திற்கும் மின்னல் பாயாது.

மின்னுக்கேசன்

(வித்யுத்கேசன்) சாலகடங்கடையைப் புணர்ந்து சுகேசனைப் பெற்றவன்.

மின்மினிப்பூச்சி

இது வண்டின் இனத்தது, இரவில் பறக்கையில் இதன் இறக்கைகள் விரிதலால் இதன் உடம்பிலுள்ள ஒருவகை யொளி மின்னுகிறது. ஆதலாலிதனை இப்பெயரிட்டழைப்பர்.

மின்வாங்கி

மின்னலைத் தன்னிடம் பெற்றுக்கொள்ளும் கருவி, காந்தம் முதலிய லோசங்களினாற் செய்யப்பட்ட கம்பிகளைக் கட்டடங்களின் உன்னத ஸ்தானங்களிலிருந்து பூமிக்குள் அழுந்தப் பதித்திருப்பது, இவ்வாறு செய்தால் கம்பியின் உயரத்தினிரட்டிப்பான சுற்றுப்புறம் இடி விழாது.

மிருககண்டுயர்

குச்சகருடைய குமரர். இவர் தவத்திலிருக்கையில் மிருகங்கள் உடல் தினவு தீரத்தறியென்று இவருடலிற் தம்முடலைத் தேய்த்துக்கொண்டமையின் இப்பெயர் இவர்க்கு வந்தது. இவர் தவ முடித்து உசத்தியர் குமரியாகிய விருத்தையெனுங் கன்னிகையை மணந்து மிருகண்டைப் பெற்றனர். இவர்க்குக் கௌச்சிகர் எனவும் பெயர்.

மிருகங்கள்

சிங்கம்;தேவிக்கும் சிந்தாமணி விநாயகருக்கும் வாகனமாம், இவ்வுருக்கொண்டு இரண்யாக்ஷனைத் திருமால் சங்கரித்தனர். இவ்வுருக் கொண்ட சிங்க முகாசுரனைக் கந்தமூர்த்தி கொன்றனர். திலீபனை மருட்டவந்த சிவகிங்கரர் வுருவமுமாம். புலி; இவ்வுருவத்தால் பசுக்களை யொரு அசுரன் மருட்ட அவனைச் சிவமூர்த்தி சங்கரித்தனர். இது வியாக்ரபாதருக்கு உருவமுமாம். சிவமூர்த்தியிவ் வுருக்கொண்டு வேடனைத் துரத்தி சோதித்தனர். இதன் தோல் சிவமூர்த்திக்கு ஆடையுமாம். இவ்வுரு சிவபூசை செய்து முத்தி பெற்றதுமாம், புலியூர் என்பதனாலறிக. யானை; விநாயகருக்கும், விஷ் வக்சேகருக்கும் கஜாசுரனுக்கும், கஜமுகாசுரனுக்கும் உருவமாம். இந்திரற்கும், கந்தமூர்த்திக்கும், சிவமூர்த்திக்கும் வாகனமாம். இவ்வுரு வள்ளி நாயகியை மருட்டச் சென்றது. சிவபூசை பலவிடங்களிற் செய்து முத்தி பெற்றது. நாரதராற் சாபம் பெற்றது. சிலந்தியுடன் வாதிட்ட துமாம். இவ்வுரு முதலையாற் கவ்வப்பெற்றுத் திருமாலால் இரக்ஷிக்கப் பட்டது. ஒரு அரசன் இவ்வுருவாக அகஸ்தியராற் சபிக்கப்பட்டனன். குதிரை சிவமூர்த்திக்கு வேதவுருவமாகிய வாகனமாம். இதை யூர்ந்து குதிரை விற்கவும் திரிபுர மெரிக்கவுஞ் சென்றனர். இவ்வுரு விஷ்ணுவிற்கு முகமுமாம். ஒரு அசுரனுமாம். ஊழித்தீயின் உருவமுமாம் சூரியனும் அவன் தேவியும் கொண்ட உருவமுமாம். தேவ ஜாதிகளின் உருவமுமாம். உதங்கரைக் காண்க. குவலயாசுவம் என்னும் குதிரை சூரியனாலனுப்பப் பட்டது. இரு தத்துவசனைக் காண்க. காமதேனு; தெய்வப்பசு. இது திருப்பாற்கடலிற் பிறந்து தேவர்க்கும் ருஷிகளுக்கும் வேண்டிய உணவாதி களைத் தருவது, வசிஷ்டர், ஜமதக்னி முதலியோர்க்கு உதவியது. பசு யமன், தேரூர்ந்த சோழன் பொருட்டுப் பசுவானான். இது ஷட்கவ்யந் தரும் புண்ணியவுரு. இதன் தேகத்தில் திரிமூர்த்திகளுந் தேவர்களனை வரும் வசிக்கின்றனர். இவ்வுருக்கொண்டு மாயப் பசு ஒன்று மதுரையிற் தோன்றியது. இதனைச் சிறப்பித் தெழுதியுள்ளோ மாண்டுக் காண்க. இது தர்ம சுவரூபமாம். சூரிய வம்சத்தரசனால் காக்கப்பட்டதுமாம், தானப் பொருளாம். இடபம்; நந்திமா தேவர் திருவரு, தர்ம சவரூபம். இவ்வுருக்கொண்டு திருமால் திரிபுர மெரித்தகாலத்தில் தாங்கினர். எருமை; யமனுக்கு வாகனம். இவ்வுருக்கொண்ட அசுரனைக் காளி சங் கரித்தனள். காளிக்குப் பலிப் பொருளாம். ஆடு; அக்னியின் வாகனமும் யாகத்திற்றோன்றிக் குமாரக்கடவுளுக்கு வாகனமுமாம். இதனைக் காளிக்குப் பலியிடுவர். உத்தராதித்தனைக் காண்க. மான்; இருடிகளுக் குதவிய வுரு. இதன் தோல் அவர்களுக்கு உடையாம். இவ்வுருக்கொண்ட மாரீசனை இராமர் கொன்றார். சிவ மூர்த்திமேல் தாருகவன ருஷிகள் ஏவியதுமாம். மந்தபால முனியைக் காண்க. உத்பலாவதியைக் காண்க, கழுதை; இது மூதேவி வாகனமாம். இவ்வுருக் கொண்ட அசுரன் கண்ணனாற் கொல்லப்பட்டான். கரடி; சாம்பவந்தர்க்கு உருவ மாம், பன்றி; வராகமூர்த்தியாகிய திருமால் உருவமும், முலை கொடுக்க வந்த சிவ மூர்த்திக்கு உருவமுமாம். குரங்கு; வாலி, சுக்ரீவன், ஆஞ்சநேயர், அங்கதன், நீலன் முதலியோர் உருவமாம். சிவபூசை செய்த உருவமாம். நாய்; பயிரவர் வாகனம். பெருச்சாளி; விநாயகருக்கு, வாகனமான அசான் உருவமாம். பாம்பு; சிவனுக்கு அணியும், விஷ்ணுவிற்குப் படுக்கையும், நடனசாலையும், ராகு கேதுக்கள் உருவமு மாம். புழுகுபூனை; அண்ணா மலைக்குப் புழுகு சாத்திப் பேறு பெற்றது.

மிருகசிருங்கன்

இவன் குச்சருஷியின் குமரன். இவனுக்குத் தாய் தந்தையரிட்ட பெயர் வச்சன். இவன் தவத்திலிருக்கையில் மிருகங்கள் கொம்பாவிடித்தும் குத்தியும் ஊறலுக்குராய்ந்தும் நிலைகுலையா திருந்தனனாதலால் இவன் தவத்திற்குக் களிப்படைந்த சிவபிரானிவனை மிருக சிருங்கனென அழைத்தனர். இவன் தந்தை இவனுக்கு உசத்தியன் குமரியாகிய சுவிர்த்தை என்பவளை மணம் பேசினன். சுவிர்த்தை தீர்த்தமாடத் தோழியருடன் நதிக்கரை செல்கையில் ஒரு காட்டானைத் துரத்தத் தவறிக் கிணற்றில் வீழ்ந்து இறந்தனன். அக்காட்டில் தாய் தந்தையர் அழுகை யொலிகேட்ட மிருகசிருங்கன் தான் யமனை வணங்கியிறந்த வுயிர்தந்து சுவிர்த்தையைத் தந்தையளிப்ப மணந் தனன், (மாக புராணம்)

மிருகசீருஷம்

இவை மான் கணங்கள் வேடன் ஒருவன் உணவின் பொருட்டு ஆண்மானையெய்ய அம்பு தொடுக்கையில் கண்ட ஆண், வேடனைநோக்கி நான் என் கர்ப்பிணியாகிய மனைவியைக் கண்டு வார்த்தைகூறி மீளுகிறேன் என்று உறுதி கூற வேடன் அவ்வகை விடையளிக்கச் சென்றது. இதன் பெண்மான் ஆணினைக்காணாது வேடனிடம் வந்து அவ்வாறு ஆணைக்கண்டு வருவதாய் உறுதி வாக்களித்தது. அவ்வகை ஒன்றுக்கொன்று தமக்கு நேர்ந்ததைப்பற்றிக் கூறிப் பிள்ளைகளுடன் வேடனிடம்வர முன் வேட்டைக்குச் சென்று மகா சிவராத்திரியில் சிவபூஜை வனத்தில் செய்தவர்களையும் சிவதரிசனத்தையும் கண்டதினாலும் வேடனுக்கு ஞானோதயமாய் மான்களே எனக்கு ஞானத்தைத் தந்தமையால் நீங்கள் குருவிற்கொப்பா கின்றீர் ஆதலால் இனி எவ்வுயிர்களையுங் கொல்லேன் என்று சிவ மூர்த்தி தர்சனந்தர முத்தி பெற்றவன். மான்கள் சிவமூர்த்தியால் நக்ஷத்ரபதம் பெற்றன. இவையே மிருகசீருஷநக்ஷத்திரம் ஆண், பெண், குருளை இவை மூன்று நட்த்திரங்கள்.

மிருகண்டு

1. கௌசிகா குமரா. இவர் முற்கல ருஷியின் குமரியாகிய மருத்துவதியை மணந்து புத்திரரின்மையால் காசியடைந்து சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றினர். சிவமூர்த்தி தரிசனந்தந்து என்ன வேண்டுமென்னப் புத்திரப்பேறு கேட்டனர். சிவமூர்த்தி நீ நற்குண நற் செய்கையுள்ள புத்திரனை விரும்பில் அற்பாயுளாம். அறிவில்லாத குமானை விரும்பில் தீர்க்காயுள் உள்ளவனாம். இவ்விருவரில் எவரை விரும்புகின்றனை யெனக் கேட்க முநிவர் நற்புத்திரனைக் கேட்டு (16) வயதுள்ள மார்க்கண்டனைப் பெற்று அவனுக்கு அவனுடைய ஆயுள் அளவு உணர்த்திச் சிவபூசை செய்ய ஏவினர். தாதாவின் குமரன் எனவும், பிருகுவின் பேரன் எனவும் கூறுவர். 2. விஷ்ணுவை நோக்கித் தவமியற்றிப் புத்திரப் பேறடைந்தான். (பிரகன்னார தீய புரா.)

மிருகனாதி

கேகயன் குமரன். தாய் சயந்தி

மிருகன்

விராடநகரத்து வேதியன். ஒழுக்கங்குன்றி வேசையுடன் கூடி வேற்றூர்க்குச்சென்று அவ்விடத்தில் பழம் ஒன்றைத் திருடினன் அதற்கு உரியவர் தொடர்ந்து பிடிக்கவரப் பழத்தைச் சிவார்ப்பணமென்று எறிந்து நற்கதிபெற்றவன்

மிருகமந்தை

குரோதவசையின் புதரி (பா. ஆதி.)

மிருகாசுரன்

ஒரு அசுரன். விஷ்ணுவிடம் மூன்று நாள் யுத்தஞ்செய்து சாகாமல் தேவர்களை வருத்திச் சிவமூர்த்தியின் வேலால் இறந்தவன்.

மிருகாபதி

உதயணன் நற்றாய. இவளுடைய சகோதான் விக்கிரன். இவன் தந்தை ஏயர் குலத்திற்குத் தலைவன், உதிதோதய காவ்ய மென்னும் வடநூலில் அவனது இயற்பெயர் சேடகனென்று காணப்படு கின்றது. இவளது பெயர் மிருகாவதி யெனவும் வழங்கும் (பெ. கதை.)

மிருகாவதி

1. விதூமனைக் காண்க. 2. பிரசாபதியின் முதற்றேவி 3 தேவராதன் என்னும் முனிவன் தவஞ்செய்கையில் மேனகை வந்தனள், அவளைக் கண்டு முனிவனுக்கு ஆசைபிறக்க வீரியம் நீரிடை வீழ்ந்தது. அந்நீரினை உண்ட மானின் வயிற்றில் இவள் பிறந்து வற்சமுனியை மணந்து ஒருநாள் பூக்கொய்கையில் பாம்பு கடித்து இறந்தனள். இவள் கணவன் பாம்புகளைக் கொல்ல முயலுகையில் ஒருவன் தீர்த்தக் கரைக்குச் செல்ல ஆண்டு வேதியர் கூட்டத்துத் தண்ணீர்ப் பாம்பை எறிந்து பாம்பு உருப்பெறச் சாபம் அடைந்த வேதியச் சிறுவன். வற்சமுனிவரால் சாபம் தீர்ந்து தனது வரலாறு கூறிச் சிவ பூசை செய்பின் சித்தி அடைவாய் எனப் போயினவன்.

மிருகை

காசிபர் பெண், பன்றி முதலிய மிருகங்களைப் பெற்றவள்.

மிருடன்

சிவன் திருநாமங்களில் ஒன்று.

மிருதசஞ்சீவி

மரணத்தைப் போக்கும் ஒரு மந்திரம்.

மிருதி

அங்கிராவின் தேவி. தக்ஷன பெண், குமரன் அங்கீரன் பரதன்,

மிருதுகன்

அக்குரூரன் தம்பி

மிருதுபத்

அக்குரூரன் சகோதரன்.

மிருதுரன்

சுவபலருக்குக் காந்தியடம் உதித்த குமரன்.

மிருதுவி

சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமரன்.

மிருத்திகாபக்ஷணரோகம்

இது பிள்ளைகளுக்குண்டாம் ரோகத் தோன்று. நாள் தோறும் மண்ணைத்தின்னும் பிள்ளைகளுக்குத் தேகவெளிறு, இருமல் இளைப்பு முதலிய தரும் ரோகம். (ஜீவ)

மிருத்துகாவதி

மாளவதேசத்துள்ள பட்டணம்,

மிருத்யு

1. தருமன் குமரன். 2. பூமிதேவி பூபாரம் பொறுக்காது வேண்டச் சிவாஞ்ஞையால் பிரமதேவன் வீர்யத் துதித்து உயிர்களின் காலவிறுதியில் மாய்க்கும் பெண்தேவதை, இவள் உயிர்களை மாய்க்க அழுதகாலத்து இவள் கண்ணீரில் பல வியாதிகள் பிறந்தன. இவள் யமனிடம் இருப்பள். 3 பிரமன் ஒருகாலத்து உலகங்களை அழிக்க முயன்று தம்மிடமெழுந்த தீயால் உலகங்களையழித்தார். அப்போது ருத்ரரது வேண்டுகோளால் அதை நிறுத்த அத்தீ பெண்ணுருவாய் நின்றது அது மிருத்யு என்றனர். அவர் அவளை நோக்கி நீ உல கங்களை அழிக்கவென நான் பாபியாவேனென்று அழுது பலமுறை தவமியற்றி கொல்லாவரம் வேண்டினள், பிரமன் மீண்டும் நீ கொல்ல வேண்டும் என்றனன். அவ்வாறு கேட்ட அவள் ஒன்றுங் கூறாதிருக்க, பிரமன் நீ ஆண்களிடத்து ஆணாகவும் பெண்களிடத்துப் பெண்ணு ருவாகவும் நிற்பாய், உன் கண்களிருந்து வந்த நீர் பலநோய்களாக விரியும் அவற்றைக் காரணமாகக் கொண்டு உலகத்தையழிக்க என்றனர். (பா சாங்.)

மிருத்யுஜித்

சோழர் சரிதையில் சுரகுருவைக் காண்க,

மிருத்யுஞ்சய பக்தர்

இவர் பிதரி பட்டடணத்திலிருந்த சாந்த பிரம்மணி யென்னும் ஒரு அரசர். இவர் தம் அரண்மனையின் மேன் மாளிகையில் மனைவியுடன் வாழைக்கனியுண்டு தோலினைச் சாளர வழியாக எறிகையில் ஒருவர் அச்சாளாத் தடியிலிருந்த வாழைக் கனிகளின் தோல் களை ருசியாயிருக்கிறதென்று புசித்தனர். இதைக் கண்ட அரசன் தேவி, அரசனுக்குக் கூற அரசன் அரண்மனையில் அன்னியன் வந்ததைப் பற்றிச் சேவகரைக் கோபிக்கச் சேவகர் அவரைக் கட்டியடிக்கையில் அவர் அழாமல் சிரித்தனர் இதைக் கண்ட அரசன் அவரைத் தன்னிடம் வருவித்துச் சேவகர் உன்னை வருத்துகையில் அழாது சிரித்தலுக்குக் காரணமென்னை எனப் பரதேசி உலகத்தில் எவர்க்கும் பொதுவாகிய வஸ்துக்களில் பழத்தின் தோலை யுண்டனாலும், மாளிகைக்கு வெளி யிருந்ததாலும் இவ்வகைத் தண்டனையாயின், பழத்தையேயுண்டு அரண்மனைக்குள்ளிருக்கும் உனக்கு யாது நேருமெனச் சிரிக்கின்றே னென, அரசனுக்கு ஞானோதயமாய் விரக்தியடைந்து பண்டரியடைந்து ஞானாசாரியரிடம் உபதேசமடைந்து மிருத்யுஞ்சயன் என்னும் பெயரடைந்து வேதாந்த சித்தாந்தங்களைத் தம்மிடம் நாய்களாக வைத்துக் கொண்டு பவராயன் எனும் தன் சிஷ்யன் பொருட்டுச் சங்கமர்களின் சிவலிங்கங்களை நாய்களைக்கொண்டு கக்குப்படி செய்து கண்ணனிடம் அன்பு கொண்டிருந்தவா.

மிருத்யுஞ்சய மந்தரம்

யமனை வெல்லும் மந்திரம்.

மிருஷை

அதர்மத்தின் பாரி.

மிலேச்சன்

பார்ப்பினி களவினால் அரசனைப் புணர்ந்து பெற்ற குமரன் தம்தம் கடமைகளைச் செய்யா தொழிதல், அருளின்மை, பிறர்க்குத் துன்பம் செய்தல் வெகுளிமேற் கோடலுடையவன் (சுக்சநீதி)

மிலேச்சம்

இது ஒருதேசம்.

மிலைச்சன்

இவன் போதனபுரத்திற்கு அரசன், தருசகனோடு பகைமை கொண்டு போர்செய்தற்கு வந்த அரசர்களுள் ஒருவன், மிக்க வீர முடையவன். (பெ~கதை)

மிலைச்சமன்னர்

இவர்கள் ஒருவகை வீரர்களின் தலைவர் இவர்கள் உதையணனுக்குத் திறையளப்பவர்கள். (பெ~கதை)

மிலைச்சர்

இவர்கள் ஒருவகை வீரர் அரசர்பால் மெய்க்காப்பு, வாயில் காவல் முதலியவற்றைச் செய்து நம்பிக்கையோடு ஒழுகியவர்கள். பெரும் பாலும் போரில் இவர்கள் முற்படையிலேயே நிற்பவர்கள். (பெ. கதை)

மிளகாய்

இது, தோட்டக்கால்களில் பயிரிடப்படும் காரமுள்ள பொருள், இது சம்பாரங்களுக்குரிமையுடையது. இதில் பல வகை உண்டு, ஊசிமிளகாய், குடமிளகாய் முதலிய, இது, முதலில் மத்ய ஆசியா வினின்று வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் நிகண்டில் இதற்குப் பெயர் கூறப் படவில்லை. இச்செடி நம் நாட்டின் தன்று, இதனை அந்நிய நாட்டினின்றும் இந்திய முன்னோர் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து பயிராக்கினர். இக்காயினை காயாகவும் பழமாவுலர்த்தியும், கறி முதலியவற்றிற்கு உபயோகிக்கின்றனர்.

மிளகாழ்வான்

இவர் உடையவரால் நியமிக்கப்பட்ட எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் சிறந்த விச்வாசி, இவர் உடைய வர்க்குப் பாலமுது நாடோறும் ஜம்புகேச்வாஞ்சென்று ஆங்கு அர்த்த ஜாமத்திற்குப் பிறகு சிவநிவேதனமாய் அந்தணர்க்களிக்கும் திருப்பாலினை வாங்கிக் கொண்டு வந்து உடையவர்க்குக் கொடுத்து வருவர். இவ்வகை இவர் அபேதமாய்ச் செய்வதை ஸ்ரீனவஷ்ணவர் சிலர் சிவநிவேதனம் என்று உடையவரிடம் குறைகூற, உடையவர் இவரையழைத்து அவ்வகை செய்யலாமோவென்றனர். மறு நாள் வழக்கப்படி தாம் உடையவர்க்குச் செய்யும் மடைப்பள்ளி கார்யத்தில் மிளகு நீர் செய்யத்தொடங்கி, வழக்கம்போல் செய்யாது மிளகினை அம்மியில் வைத்து நுறுக்காமல் முழுமிளகை மிளகு நீரிலிட்டு வைக்க, உடையவர் இது என்ன என்று கேட்க ஆழ்வான், தேவரீர் சிவநிவேதன மாகாதென்ற கட்டளைப்படி செய்தேன் என்றனர். உடையவர் இதென்ன சிவநிவேதனமாமோவென்ன, இதனை நசுக்கும் அம்மியும் அவ்வுருத்தான் ஆதலால் அபராதமாம் என்று, அவ்வாறு செய்தேன் என்றனர். உடையவர் இவரது பக்திக்கு வியந்து மற்றவர்க்கு அவரது சமரச அறிவைத் தெரிவித்தனர். (குருபரம்பரை)

மிளகு

இது, ஒரு காரமுள்ள சம்பாரப் பொருள், மலையாளம், வைநாட்டிலும், பயிரிடப்படுகிறது. இது வெற்றிலைக்கொடி போலும் கொம்பில் தாவும், கொடியில் பயிராகும். இவ்வகையில், பாலங் கொட்டை, உதிரங்கொட்டை, கல்லு, வள்ளி, சிறு கொடி, என நான்கு வகை, வால்மிளகென ஒரு சாதியுண்டு இதைக் காயவைப்பதற்கு முன் தரையில் தேய்க்கின் மேல்தோல் நீங்கி வெள்ளைமிளகாம்.

மிழலைக்கூற்றம்

வேள் எவ்வியின் நாடு, இது தஞ்சாவூர் மதுரை ஜில்லாக்களைச் சார்ந்த ஒரு பகுதி. தமிழ் நாட்டிலிருந்த பழைய ஊர். கடற்கரையிலுள்ளது. இப்போது பெயர் மாறியது. தஞ்சாவூர்க்கல் வெட்டுகளில் கூறியிருக்கிறது. (புற~நா.)

மீகாமன்

கும்பகோணத்திலுள்ள வலங்கைக் கிராமத்திலிருந்த தமிழ்ப் புலவன். இவன் இயற்றிய நூல் அறுவானந்தசித்தி.

மீட்சி

செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும், உடன் போய் தலைவனுந் தலைவியு மீண்டுவருதலுமாம். இது, உடன் பொக்கின் வகையுலொன்று. இது, தெறித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல் இதன் வகையாம். இது, தலைவிசேணகன்றமை செவிலித்தாய்க் குணர்த்தல், தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல், தலைவி முன் செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல், முன் சென்றோர் பாங்கியர்க் குணர்த்தல், பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல், ஈற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல் எனும் விரிவினையுடைத்து. (அகம்)

மீட்டுவான்

சக்கிரனென்னும் துவாதசாதித்தியனுக்குப் பௌலோமியிடம், உதித்த குமரன்.

மீனகேதனன்

மன்மதனுக்கு ஒரு பெயர்.

மீனாக்ஷி

மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கலிங்க மூர்த்தியின் சத்தி,

மீனாக்ஷிசுந்தர கவிராயர்

இவர், பாண்டி மண்டலத்துள்ள முகவூர். எட்டயபுரம் சமஸ்தான வித்வானாயிருந்தவர். இவர் தமிழ்க் குவலயா நந்தமெனும் அலங்கார சாஸ்திரத்தின் வடமொழி உதாரணப்படி தமிழில் செய்யுளாக உதாரணம் பாடிச் சேர்த்தவர்.

மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை

சென்னை ராஜாதானியில் தழிழ் வழங்கு தென்னாட்டில் திரிசிரபுரத்தில் சிதம்பரம் பிள்ளைக்குக் குமாரராய்த் தமிழ் வல்லராயிருந்த ஒரு தமிழ்ப்புலவர். இவர் ஆற்றூர்ப் புராணம், எறும் பீசர் வெண்பாவந்தாதி, கண்ட தேவிப்புசாணம், கன்னபுரப்பாகம் பிரி யாள் பிள்ளைத்தமிழ், காசிரகசியம், காழிக் கோவை, கோயிலூர்ப் புராணம், சூரைக் குடிப்புராணம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், தண்ட பாணி பதிற்றுப்பத்தந்தாதி, தருமை சச்சிதாநந்த தேசிகர்மாலை, தனியூர்ப் புராணம், திருக்கலசைமாலை, திருக்குடந்தைத் திரிபந்தாதி, திருக்குடந்தைப் புராணம், திருக்குடந்தை மங்களாம்பிகைப் பிள்ளைத் தமிழ், திருக்குறுக்கை வீரட்ட புராணம், திரிசிராப்பள்ளி யமகவந்தாதி, திருஞான சம்பந்தரானர் தக்களிப்பு, திருஞானசம் பந்தர் பதிற்றுப்பத் தந்தாதி, திருத்தவத்துறைப் பெருந்தவப் பிராட்டிப் பிள்ளைத் தமிழ், திருத்தில்லை யமகவந்தாதி, திருத்துருத்தி புராணம், திருத்துறைசை யமகவந்தாதி, திருநாகைக் காரோண புராணம், திருப்பெருந்துறை புராணம், திருப்பெருமண நல்லூர்த் திருநீற்றுமைப் பிள்ளைத் தமிழ், திருப்பைஞ்சீலித்திரிபந்தாதி, திரு மயிலை புராணம், திருவம்பர் புராணம், திருவாரூர்த் தியாகராஜலீலை, திருவாவடுதுறை சுப்ரமண்ய தேவிகமாலை, திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ், திருவாளொளிபுற்றூர்ப் புராணம், திருவானைக்கா திரிபந்தாதி, திருவானைக்காமாலை, திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ், திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ், திருவிடை மருதூருலா, திருவிடை மருதூர்த்திரிபந்தாதி, திருவுறந்தைக் காந்திமதி யம்மைப் பிள்ளைத்தமிழ், திருவுறந்தைப் புராணம், திருவூறைப் பதிற்றுப்பத் தந்தாதி, திருவெண்காட்டுப் பெரிய நாயகியம்மைப் பிள்ளைத்தமிழ், துறைசைக் கலம்பகம், பட்டீச்சுரப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப் பத்தந்தாதி, மண்ணிப் படிக்கரைப் புராணம், மாயூரப்புராணம், வாட்போக்கிக் கலம்பகம், விளத்தொட்டிப் புராணம், வீரைவன புராணம், முதலிய பல ஸ்தல புராணங்கள் இயற்றியிருக்கின்.

மீனெறி தூண்டிலார்

1 இவர் கடைச்சங்க காலத்திருந்த பெண் கவி, இவர் தலைவனது வரவு நீட்டிக்க அவனது நீக்கத்தைக் கவணிற்கஞ்சி கைவிட்ட மூங்கில் மீனெறி தூண்டிலினீக்கம் போன்றதென உவமை கூறினமையின் இப்பெயரடைந்தனர். (குறு 45.) 2. இவர் தப்பாடலுள எடுத்தாண்ட உவமையே இவர்க்குப் பெயராயிற்று.

மீன் குத்திக்குருவி

இது இந்தியா தேசப்பறவை இது உடல் பருத்து காலும் வாலும் குறுகி மூக்கு நீண்டு அடிபருத்து முனை கூரியதாய்ச் சிறுத்துத் தலை செந்நிறமும், முதுகு பசுமை கலந்த நீலமும் கொண்டது. நீர்க்கருகிலுள்ள மரஞ் செடிகளில் உட்கார்ந்திருந்து நீர்க்குமேல் (10,20) அடி உயரத்தில் பறந்து நின்று, தனக்கிரைக்கமைந்த மீனைக் கண்டவுடன் நீரில் மூழ்கிப் பிடித்து அருந்தும். இவ்வினத்தில் வெள்ளை நிற முள்ளனவும், பசுமை நிறமுள்ளனவும் உண்டு. இதனைப் பொன்னாங் தட்டான் என்பர்.

மீன் வகைகள்

திருக்கைமீன்: இது, தட்டையான அகன்ற உருவுள்ள பிராணி, கோணம் போன்ற முகத்தின் கீழ்பாகத்தில் வாயும், மேல் பாகத்தில் கண்களும் பெற்றிருக்கும். இதன் வால் ஒரு அடிமுதல் 12. அடிகள் நீண்டு சாட்டை போலிருக்கும். இதன் இரண்டு பக்கங்களிலும் இரக்கை போன்ற உறுப்பு ஒன்றுண்டு. அதனால் இது நீரில் தாவிச் செல்லும். இதனை வௌவால்மீன் எனவும் கூறுவர். இவ்வினத்தில் கழுகு திருக்கை, கொடுக்குவால் திருக்கைமீன் சாரத்திருக்கைகளும் உண்டென்பர். புட்டிமீன் இது திருக்கையின் பேதம். இது, அமெரிகா கடல்வாசி, புட்டியைப் போல் உருவமும் திருக்கையைப் போல் நீண்ட வாலுமுள்ளது. கண்மூடாக் கோழி மீன்கள்: இவ்வினத்தில் முள்ளிக் கோழி மீன்கள், வரிக்கோழிமீன், புள்ளிக்கோழி மீன் என்பன உண்டென்பர். இவற்றின் நெற்றியிலுள்ள கண்கள் மிகப்பெரியன வாய் இமைகளிலாதனவா யிருக்கின்றன. சில பலவகை வர்ணமமைந்த வுடலுள்ளன. கடல்மான்: இது ஒருவகை மீனினத்தைச் சேர்ந்தது. இதற்கு மீன் கண் போன்ற பெரிய கண்களும் தலையைச் சுற்றிலும் பத்துக்கைகளும் உண்டு. இது, பச்சை ஒணானைப்போலத் தன்னிறத்தை மாற்றிச் சத்துருக்களை வெருட்டும். கெண்டைமீன்: இது உடம்பெங்கும் செதிள்களைப் பெற்றிருப்பதுடன் நீர்வாழ்வன வற்றிற்குள்ளது போல செவிகளும் செட்டைகளுமுண்டு. இக்கண்டையினத்தில் சிறியவை நெற்றிலி, அசரை, என்பர். சேல்மீன்: இது கெண்டைமீன் வகைகளில் ஒன்று. இது நீரில் உலாவுகையில் பிறழுமியல்புடையது. பாடும்மீன்: இது இலக்கைக்கருகிலுள்ள மட்டகளம் எனும் இடத்தை அடுத்த கடலி லுள்ளது. இது, (10) அங்குல நீளமாம். இது களித்து உலாவுகையில் தன்னிடமுள்ள செதிள்களை மூடித்திறப்பதால் ஒருவித ஓசை இனிதாக உண்டாகிறதாம். காட்மீன்: இம்மீன் ஐரோபா கண்டத்தின் வடகடலி லுள்ளது. இம்மீனின் விருத்தியால் அக்கடலோடிகள் செல்வமடை கின்றனர். இது ஒரு தடைவைக்கு (10) லக்ஷத்திற்குமேல் முட்டையிடு கிறது. இதன் ஈரலிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கின்றனர். அதுவே காட்டலிவர் ஆயில், பறக்கும் மீன்: இம் மீனினங்களுக்கு விலாப்பக்கங்களில் இரக்கைகள் உண்டு. இது நீரில் (3) அடி உயரம் கிளம்பி (50) அடி தாவிச்சென்று நீரில் மூழ்குகிறது. இவை கூட்டம் கூட்டமாகவே வசிக்கின்றன. தட்டைமீன்: இது, தட்டையாய் ஓரத்தில் இதற்கு முதுகிலிருந்து வால்வரையில் சிறு செட்டைகளிருக்கின்றன. இதற்கு மனிதற்குள்ளது போல் நாக்குண்டு. ஆகையாலிதனை நாக்குமீன் என்பர். கண்ணாடி மீன் இதன் உடல் தட்டையாய்க் கண்ணாடி போல் இருப்பதாலும், தண்ணீரினிறத்தைப் பெற்றிருப்பதாலும் இதனை அவ் வாறு கூறுவர். காதும், கொம்புமுள்ள மீன், இவ்வகைமீன் ஜபான் கடலில் (1918) வருஷம் அகப்பட்டதாம். அதற்கு இரண்டடி நீளமுள்ள காலும் கொம்பும் இருந்ததாம். கூடுகட்டுமீன்: இது, ஜபான் கடலி லுள்ள மீன் வகைகளைச் சேர்ந்தது. இது கடலிலுள்ள பூண்டுகளைக் கொண்டு கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அக்குஞ்சுகள் இரை தேடித்திரியும் பருவம் வரையில் காத்துவிடும் என்பர். பட்டு மீன்: இது மத்யதரைக் கடலையடுத்த உஷ்ண பிரதேசத்தின் கடலிலுள்ளது. இது, பட்டுப்பூச்சிகளைப்போல் பட்டு உண்டாக்குகிறதாம். இதன் நாக்கின் அடிப்பாகத்தில் சிறு குழாய் போன்ற உறுப்புண்டு. அதிலுண்டாம் பசையினால் பட்டு உண்டாக்குகிறது. ஒட்டுமீன்: இது சுறாமீனின் இனத்தது. இதன் தலையின் மேற்புறத்தில் தட்டையாக ஒரு காற்றுறிஞ்சும் சதை ஒன்றிருக்கிறது. அதனாலிது பெரிய பிராணிகளின் உடல்களிலொட்டிக் கொண்டும் மரக்கலங்களினடியில் ஒட்டிக் கொண்டும் ஜீவிக்கிறது. தூண்டில் மீன்: இது ஐரோப்பிய கடல்வாசி. (2) முதல் (10) அடி நீளமும் கனமுமுள்ளது. இதற்கு முகத்திலும் நெற்றியிலும் மீசை போன்ற உறுப்புக்கள் உண்டு. அவ்வுறுப்புக்களில் ஒன்று. நெற்றியில் நீண்டு நுனியில் தூண்டில் போலிருக்கிறது. இம்மீன் கடலடியில் தங்கித் தன்னை மறைத்துத் தூண்டில்போலும் உறுப்பை வெளிவிட மற்ற மீன்கள் அதனை இரையென எண்ணிக் கௌவத் தன்னுறுப்பை இழுத்துக்கொண்டு கவ்விய மீனை யிரையாக்குவது. தொப்பைமீன்; இதுவும் தூண்டில் மீன்வகையிலொன்று. இது வங்காளக் குடாக்கடலின்டிப் பாகத்திலிருக்கிறது. இதற்கு மூக்கின் மீதுள்ள கொம்பின் முனையில் செண்டுபோன்ற ஒரு உறுப்புண்டு, அதனை வெளியிட்டுத் தான் மறைந்திருக்கும். ஏதேனும் பிராணி அதனைத் தீண்ட உடனே அப்பிராணியை இரையாக்கும், நச்சுக்குழற் கண்ணுள்ள மீன்: (Telescope Fish) இது, சைனா, ஜப்பான் கடல் களிலும் நீர்நிலைகளிலுமுள்ளவை. இம்மீனின் கண்கள் தூர திருஷ்டி கண்ணாடி நீண்ட குழாயில் பதித்ததுபோல் நீண்ட உறுப்பில் பதிந்திருக் கின்றன. இதனிறம் கபில நிறமாகவும், சில வேளைகளில் பொன்னிற மாகவும் மாறுகிறதாம். இதன் உடல் பலவகை நிறமும் புள்ளிகளும், கோடுகளும் பெற்று அழகாயிருக்கிறது. ஆகையால் இதை வீடுகளில் வளர்க்கின்றனர். சண்டை செய்யும் மீன்: இம்மீன் ஸயாம்நாட்டு சிங்கப்பூர் முதலியவற்றிலுள்ள நீர்நிலையிலிருப்பது. இது (10) அங்குல நீளமுள்ளது. இது, தன்னினங்களுடன் தன்னினத்தை மாற்றிச் சண்டை யிடல் அழகாகத் தோன்றுமாதையால் இதை வீட்டில் வளர்ப்பது, நீர்த்துருத்திமீன்: இது சேலினத்தைச் சேர்ந்து இது ஜாவா தீவின் நீர்நிலைகளிலுள்ளது. இது நீரின் மேனிலையில் மேய்ந்து வருகையில் அருகில் பறக்கும் பட்டாம்பூச்சி வண்டுகள் மேல் தண்ணீரைப் பீச்சாங்குழல் போல் பீச்சி அப்பூச்சிகளை மயக்கி அவை நீரில் விழுந்தவுடனிரை யாக்கும். அம்புவிடுமீன்: (Cyliudirda) இது, ஐரோப்பிய கடல்களிலிருக் கிறது, இம்மீனின் தேகத்தில் குழாய்போல் ஒரு உறுப்புண்டு, இது, தன் விரோதியைக் கண்டபோது அவ்வுறுப்பின் வழியாக ஒருவித நீலவர் ணமான திரவத்தை வெளிவிட அத்திரவம் மற்றப் பிராணிகளின் மீது பட்டவுடன் நோவுதருதலால் இதைக்கண்டவுடன் பிராணிகள் விலகிப் போகின்றன. இவ் வினத்தில் மற்றொன்றிற்கு ஆசனத்தருகிலுள்ள குழையில் வழுவழுப்பான தசை சத்திருக்கிறது. அதைப் பீச்சி விரோதிகளை அது பயப்படுத்துகிறது. மற்றொரு வகை மீன், தன் கடைவாயின் இருபுறமுள்ளத்வாரத்திருந்து பொரிபோன்ற முட்டைகளை விரோதி மேல் தூவ அது விரோதிகள் மீது பட்டவுடன் வெடித்து அதிலிருந்துண் டாம் ஊசிபோன்ற அணுக்கள் தைக்கும், அதனால் அவை நீங்கும். லினோபிரியன் பாலிபோசன் (Linophryne polypogon). இம் மீன் கடலினடியில் (3000) அடிகளுக்குக் கீழ் இருக்கிறது. இதன் உடல் குறுகிப் பருத்திருக்கிறது. தேகத்தில் பலாக்காய்போன்று சிறு சொறிமுள் உண்டு. இது சிங்கத்தையொத்த அகன்ற வாயும், நெற்றியில் ஒரு கொம்பும் மூக்கு முனையில் மயிலிறகுபோன்ற குஞ்சமும், தாடியும் பெற்றிருக்கும். (2) இவ்வினத்தில் மற்றொன்றுக்கு தேகம் அதனை யொத்து வாயடியினும் மூக்கின் மீதும் கவைத்த கொம்பு போலுறுப்பு பெற்றிருக்கிறது. இவ்வினத்தில் வேறொன்று இதற்கு ஆங்கிலத்தில் லினோபரியன் மக்ராடன் (Linophryne Maorodan) (3) இவ்வினத்தில் வேறொன்று, பேரோப்ரியன் ஆபோகான் (Borophryne Apogon) என்பது, இம்மீனின் தேகம் முன்னையதை ஒத்தது, பெரியது, இதன் வாயும் பற்களும் சிங்கத்தை ஒத்திருக்கிறது. இதன் மூக்கின் முனையில் பந்து போல் திரண்ட அழகிய உறுப்பு ஒன்றுண்டு, இது ஒருவகையான நெடியுள்ள திரவத்தை விரோதிகளிடம் பீச்சுகிறது. விசித்திரவண்ண மீன்கள் : இவை பவழத்தீவில் உள்ளன. இவை பலவித வர்ணங்களையும் தேகத்தில் பலவித புள்ளிகளையும் உடையன. அவற்றினிறத்தால் அவைகளை நீலமீன், கிளிமீன், கோழிமீன், வண்ணாத்தி மீன், வரிக்கோழிமீன், முள்ளிக் கோழிமீன், புள்ளிக்கோழி மீன் எனப் பெயரிட்டிருக்கின்றனர். இவை பொன்மை, செம்மை, நீலம், மஞ்சள், கறுப்பு முதலிய நிறங்களைப் பெற்றவை. ஒளியுள்ள மீன்கள்: இவ்வினத்திற் சில கடலின் அடிப்பாகத்திலிருக்கின்றன. அவற்றிற் சில தம் உறப்பில் ஒளியுள்ள உறுப்புகளைப் பெற்றவை, அவற்றை மிக் டோபஸ் (Myetophos) என்பர். சில ஒளியை வேண்டிய போது வருவித்துக்கொள்வன, அவை நிக்டோபஸ் (Npotopbos) என்பர். ஒளிகக்கு மீன் கிரீனடியர் வகுப்பு மின் (Grenadier Specias): இம்மீனின் உடலில் செதிள்களிலாப்பாகத்தில் வெண்மையான புள்ளிகளுள்ளன. இம்மீன்கள் விரும்பிய போது அவற்றினின்று ஒருவித வழுவழுப்புள்ள பசை வெளிப்படுகிறது. அப்பசை நீரில் பட்டவுடன் நீலங்கலந்த ஒளியுண்டாகிறது. அவ்வொளியால் இது இரை தேடிக்கொள்ளுகிறது. அப்பசையை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்தால் வாசிக்கக்கூடிய ஒளிதருகிறதாம். நக்ஷத்திரமீன் : Star Fish இம்மீன் தன் தேகத்தில் ஒருவகைப் புள்ளிகள் செதிள்களில்லாமல் கண்ணாடி வட்டங்கள் பதித்தவை போலக் காணப் படுகின்றன. அவை நக்ஷத்திர ஒளிபோல ஒளிவீசவதால் அவ்வொளி யால் இவை ஆகாரம் தேடிக்கொள்கின்றன. விளக்கு மீன்கள்: இவற்றில் நான்குவகை உண்டு, ஒன்று கெண்டையினம். இதன் பெயர் பரோப் பிரியன் ஆபகோன் (Borophryne Apogon) என்பர். இம்மீனின் கண்ணின் கருவிழியையடுத்து வெண்மையான. ஒருவட்ட வுறுப்புள்ளது அவ்வட்டவுறுப்பி னொருசார் ஒரு வெளிச்ச முண்டாயிருக்கிறது. அதைச் சுழற்றி வெளிச்சத்தையுண்டாக்கி இரை தேடுகிறது. இரண்டாவதான மீன் வினோபிரியன் பாலிபோகன் (Lipophryno Poly pogon). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப்பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்களும் உருவமும் உடையது. இதனைக் கடற்பேய் என்பர். இதன் பெயர் லீனோபிரியன் பாலி போகன் (Linophrgue Polypogon). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது. மூன்றாவது மீனோ மிகப்பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்களும் உருவமும் உடையது. இதனைக் கடற்பேய் என்பர். இதன் பெயர் (லீனோப்ரியன் மக்ராடன் (Linoplryne Maorodon) என்பர். இம் மீனுக்கு மூக்கின் முனையில் கொம்பு போல் ஒரு உறுப்பு நீண்டிருக் கிறது. அதன் முனையில் காந்தவிளக்குப் போல் ஒரு உருட்சியான ஒளியுற்ற உறுப்பிருக்கிறது. நான்காவது தவளைமீன் (Fishing Frog). இது தவளைக்குஞ்சின் உருப்போல நீண்டவுருவுள்ளது. இது தன்னு டலை விரும்பிய போது நீட்டவும் சுருக்கவும் கூடியது. இதற்குக் கண்கள் விலாப்பக்கத்தி லிருக்கின்றன, இக்கண்களில் இதற்கு ஒளி உண்டு. அவை மீட்டவும் சுருக்கவும் கூடும். அக்கண்களின் ஒளியாவிரை தேடுகின்றன. இம்மீன் வகைகளில் சிலவற்றிற்குத் தலைமீது பிரகாசமான பச்சை மத்தாப்பின் ஒளியும், சிலவற்றிற்குக் கண்களைச்சுற்றி ஒளி கொண்ட புள்ளிகளுண்டு. அவை மின்மினிப்பூச்சி போல் ஒளி தரு கின்றன. சிலவற்றிற்கு உடலில் ஒளிகலந்த வரிகளும், புள்ளிகளுமுண்டு அவை ஒளிதருகின்றன. தூங்கு மீன்கள்: இவ்வின மீன்கள் கடல் மத்தி யில் நின்று கொண்டே தூங்குகின்றன. மாலையில் கடலடியில் படுத்து விடியுமளவும் தூங்குகின்றனவாம். முட்டையை வாயில் வைத்துக் காக்குமீன்: இம்மீன் கெளுத்திமீன் வகையைச் சேர்ந்தது. இதில் பெண்மீன் சில முட்டைகளையிட அவற்றை ஆண்மீன் வாயில் வைத்து அடைகாத்து குஞ்சுகளான பின் வெளிவிடுகின்றன. விநோதநிற்குமீன் : இதற்கு சங்கன் என்பது பெயர் (Cir iticthys aureus). இது வெண்மை கலந்த செந்நிறத்த தாய் மார்பினிரு பக்கங்களிலுள்ள துடுப்புகளை ஊன்றிக்கொண்டும் வாலை யூன்றிக்கொண்டும் நிற்கிறதாம். மண்மீன்: இது விலாங்கு மீன் போல் நீண்டு சட்டைகளிலாமல் மீசையுடன் இருக்கிறது. இது மழைக் காலத்தில் வெளியாகி நீரில் உலாவுகிறது. வேனிற்காலத்தில் மண்ணிற்குள் புதைந்திருக்கும். இது மண்ணிற் புதைந்திருக்கையில் தன் கொழுப்பையே ஆகாரமாகக் கொள்கிறதென்பர். இரட்டைமீன்: இது அமெரிகாவாசி. கெண்டையினத்தைச் சேர்ந்த மீன். இம்மீனில் ஒன்று பெரிது, மற்றொன்று அவ்வினத்தில் அதன் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு ஆகாரம் வேறு. இவற்றின் வாயில் இரண்டு கூரிய முட்கள் இருக்கின்றன. சூரியமீன்: இம்மீனின் விலாப் பக்கம் தட்டை, முதுகு வயிற்றின் பக்கங்கள் அகன்று தட்டையாக இருக்கிறது. இதனிரண்டு செட்டைகளும் முதுகின் பக்கத்திலும், வயிற்றின் பக்கத்திலும் நீண்டு இருக்கின்றன. இம்மீனின் மேற்றோல் மெருகிட்ட வெள்ளி போல் காணப்படலால் இது தன்னுடலிற் பாதியை நீரினுள்ளும் பாதியை வெளியிலும் வைத்துக்கொண்டு திரியும், காட்சியில் சூரிய ஒளி அதின்மீது படுகையில் மற்றொரு சூரியன் போல் காணப்படுதலால் இதனைச் சூரியமீன் என்பர். தும்பிமீன் : இதன் செட்டைகளும் வாலும் கழுகின் செட்டைபோன்று, தோலாலும் எலும்பாலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. உடல் புள்ளி களாலும் கோடுகளாலும் நிறைந்துள்ளது. இதனுடல் எலும்பால் மூடப் பட்டிருத்தலால் எந்தப் பிராணியுமிதனிடம் வருவதில்லை. இது சுயேச் சையாய்க் கடலில் உலாவும். மாட்டு மீன்: இதன் உடல் தட்டையாயும், முதுகில் உயர்ந்து முகம் நீண்டு தலைப்பாகத்தில் மாட்டின் கொம்பு போல 2. கொம்புள்ள தாயிருக்கிறது. நிறமாறுமீன்: இது கெண்டை யினத்தது. இதன் முகமும் வாலும் செந்நிறம், காலையில் வெள்ளி போல் நிறம். மாலையில் மங்கல், கோபங் கொள்கையில் செம்மை. நான்கு கண்களுள்ள மீன்: இது கெண்டையினம். இதற்கு செஸ்டோடன் எனப்பெயர். (Chastodon). இதற்கு முகத்தில் இரண்டு கண்களும், வாலின் முனையில் செட்டைக்குட்பட்ட பாகத்தில் 2. கண்களும் இருக் கின்றன. இந்திய பறவைமீன்: (The Indian Flying gurmand) இது கெளித்தியினம். இதன் பிடரியில் நீண்ட ஒருமுள் இருக்கிறது. இதன் செட்டைகள் மெல்லிய எலும்புக்கம்பிகள் பெற்றுத் தோலால் இணைக் கப்பட்டிருக்கின்றன. இவ்விரக்கைகள், உடலினும் நீண்டிருத்தலால் தண்ணீரின் மேற் பறந்து சிலநேரம் நிற்கவுஞ் செய்கின்றன. இந்து மகா சமுத்ரவாசி, முண்டைக்கண் காக்காசி : (Blotch Eye Fish). இது, கெளுத்தியினம். இம் மீனின் கண்கள் பெரியவை. இதன் கண்களின் வெளியிலும் உள்ளிலும் கறுப்புப் புள்ளிகள் அழகாயுண்டு. இம்மீனின் கண்கள் பூனையின் கண்போல் ஒளியுள்ளது, விநோத தலையுள்ள மீன்: இம்மீன்கள் ஐரோப்பியக் கடலகத்தன. இவற்றின் தலையில் தொப்பியணிந் திருப்பது போன்று மெல்விய தகடுபோல அழுத்தமாகவும் வட்டமாயும் உள்ள ஒரு உறுப்பு இருக்கிறது. இது அதனைக் கழுத்து வரையில் மூடிக்கொண்டிருக்கிறது. இதைக் காணுமீன்களிதைப் பிராணியென அறியாது விட்டுவிடும். விநோத வயிற்று மீன்: (Black Swallower). இது, கடல் வராலினத்தது. இம்மீனின் வயிறு மற்ற மீன்களின் வயிறு போலாது ரப்பரைப்போல விரியவும் சுருங்கவும் கூடியதாயிருக்கிறது. அதனாலிதன் வயிறு உடலினும் மும்மடங்கு பெரிதாயிருக்கிறது. இதன் தொண்டையும் தலையைவிடப் பெரிது. இது இரையகப்படுங் காலத்தி லதிகந் தின்று சிலநாள் வரையில் இரை தேடாமல் கடலினடியிலிருக்கும் என்பர். எலும்புடல் மீன்: (The Trunk Fish). இம்மீன் உடல் செதிள்க ளுள்ளதாய்ப் பலாக்காய் முட்கள் போன்று எலும்பாலானதாய் வால் குழல் போன்ற வுறுப்பில் விசிறி போன்று அழகாய் இருக்கிறது. ஆதலால் இதனைப் பணப்பெட்டி மீன் என்பர். ஸ்டர்ஜியன் மீன் : (The Stargeon Fish) இது, அதலாண்டிக், காஸ்பியன் கடலிலுள்ள மீன். இது வியப்புள்ள உடலும் குடலுமுள்ளது. இதன் நீளம் (25) அடிகள், கனம் (300) பவுண்ட், முதுகில் முதலைக்கிருப்பது போன்ற செதிள்களுண்டு, அவை கவசம்போல் (5) வரிசைகளாய் தலைமுதல் வால்வரையில் வியாபித்திருக்கிறது. வாய் தலையின் கீழ்ப்பாகத்தி லிருக்கிறது. இதன் முதுகு எலும்பின் கீழ் காற்றுப் பையொன்று கொதிநீருள்ள தாயிருக்கிறது. அம்மீனின் குடலைத்தொட்டால் விருவிருப்புத் தோன்றுகிறதாம். தாடி நீண்ட மீன்: இம்மீன் கெண்டை யினத்தது. (Polynemus Artedi). இது (1/2) அடி முதல் (5) அடிகள் நீளமுள்ளது, இம்மீனின் கழுத்தடியில் செவுள்களின் பக்கமாய் உடலினும் நீண்டதாய் மயிர்க்கம்பிகள் போன்று தாடிகள் உண்டு. முட்டையுதிர்க்கு மீன்: ஐரோப்பிய மீன் வகையிலொன்று. கெண்டை யினத்தது, இம்மீனின் செதிள்களுக் கிடையிலுள்ள தோலில் சிறு தொளைகளிருக்கின்றன. அம்மீனைப் பிடிக்கின் அத்தொளைகளிலிருந்து சிறு முட்டைகள் போன்று வழுவழுப்பான பொருள்களுதிர்கின்றன. இவை குஞ்சு தரும் முட்டைகளல்ல. இம்முட்டை களம்மீனுக்கு ஆகாரமாகின்றன. முக்குமீன் : (The Sword Fish). இது சுராவகையைச் சேர்ந்தது. இது மத்யதரைக் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலு முள்ளவை. இதன் மூக்கு குத்துவாள் போலிருக்கிறது. இவ்வினத்தில் சிலவற்றிற்கு மேல் கீழ்வாய்களில் பற்களிருக்கின்றன. இதில் ஒருவகை மீனுக்கு நாக்கு மிருக்கிறது. அது வெளியில் நீட்டவும் சுருக்கவும் கூடியதாயிருக்கிறது. சுறா மீன்: இதனைக் கடற்புலி என்பர். இவ்வினத்தில் (2) அடிகள் முதல் (50) அடிகள் நீளம் உண்டு. இதற்கு முன்னும் பின்னுமாக (2) செட்டை களும், கழுத்தின் பக்கத்தில் கைபோலுதவும் (2)ம், வயிற்றின் கீழ் பாகத்தில் பின்பறமாக கால் போன்ற (2) செட்டைகளும், அதன் கீழ் ஒரு செட்டையும், வால் முனையில் ஒரு செட்டையுமாக (8) செட்டைகள் உண்டு. இவற்றின் உதவியாலிது மணிக்கு (20) மைலுக்குமேல் நீந்திச் செல்லும். இம்மீன்களில் பெரியவை ஆழமுள்ள நீரில் வசிக்கின்றன. இவ்வினத்தில் பல வேறுபாடுகளுண்டு, இம்மீன்களின் பெண்மீன் முட்டைகளைக் கடற்பூண்டுகளில் சிக்கச் செய்துபோக குஞ்சுகள் பருவம் வந்த போது முட்டையின் தலைப்பாகத்தைக் கடித்து வெளிவரும், இவ்வினத்தில், வெள்ளைச்சுறா, புள்ளிச்சுறா, நாய்ச்சுறா, சுத்தித் தலைச்சுறா, வாள் பல்மூக்குச்சுறா எனப்பலவகை. வெள்ளைச்சுறா இதன் மேற்றோல் கபில நிறமாயும் வயிறு வெண்ணிறமாயு மிருக்கிறது. இம்மீனினங்களுக்கு வாய் தலையின் கீழ்ப்பாகத்திலிருக்கிறது, இம் மீனின் பற்கள் அதிக கூர்மையுள்ளவை. இது பெரிய பிராணிகளைத் துண்டாக்கி விழுங்கும், இது குட்டி போடுகிறது. புள்ளிச்சுறா: இதன் மேல் சிறுத்தைப் புலிமேல் காணப்படும் புள்ளிகள்போல் புள்ளிகளிருப் பதால் இதனைப் புலிச்சுறா என்பர். இது குட்டி போடுகிறது. நாய்ச்சுறா இவ்வினத்தில் பெரிது (50) அடிகள் கொண்டது. இதன் உடல் சுறசுறப் பான முட்களடர்ந்தது. இது, எல்லாப் பிராணிகளையுந் துரத்தியுணவாக் கும். சுத்தித்தலைச்சுறா: இதன் தலை இரு பக்கங்களிலும் சுத்திபோல் அகன்றிருக்கிறது. இதன் கண்கள் சுத்திபோலகன்ற பக்கத்திலிருக் கின்றன. இம்மீனினத்தில் சிலவற்றிற்குத் தலைப்பக்கம் அகன்று முன்புறம் நீண்டு மண்வெட்டி போலிருப்பதால் அதனை மண்வெட்டித் தலைச்சுறா என்பர். வெள்ளைச்சுர இனத்தில் சிலவற்றிற்கு மாட்டின் தலைபோலிருப்பதால் அதனை மாட்டுமூஞ்சி சுறா என்பர். மற்றொரு வகை திமிங்கிலத்தை ஒத்திருத்தலால் அதனைத் திமிங்கிலச்சுறா என்பர். வாள்பல் மூக்குச்சுறா: இதனைக் கடலோடிகள் வாளா என்பர். இது (10) அடிகள் முதல் (60) அடி நீளமும் கனமும் உள்ளவை. இம்மீனின் தலையின் மேற்பாகம் மூத்தின்முனை வாளின்பற்கள் போன்று இரு பக்கங்களிலும் மிக நீண்டிருக்கிறது. இதனைக் கண்ட திமிங்கிலங்கள் போன்ற பெருமீன்களும், கடலோடிசளும் அஞ்சி நீங்குவர். சிலவற்றின் மூக்கு (15) அடிகளுக்கு மேலும் நீண்டுள்ளது. (இயற்கை அற்புதம்) டால்பின் மீன் : இதன் உடல் குழவி போல் நீண்டிருக்கும். இது (4) அடி முதல் (10) அடிகள் நீண்டிருக்கும். இது, பெரிய கடல்களிலும் பெரு நதிகளிலும் கூட்டங்கூட்டமாய் வசிக்கும். இது கூர்மையாய் நீண்ட மூக்குடையது. இதன் வாய்களில் சற்றேறக்குறைய (100) பற்களுண்டு,

மீன் வலையன்

(செம்படவன்). சாலியன் வைசியப் பெண்ணின் தோள் புணரப் பிறந்தவன். (அருணகிரி புராணம்.)

மீன்கள்

பொதுவாக தேக அமைப்பு, இவற்றின் தேகம் நடுப்பாகம் பருத்து இரண்டு நுனிப்பக்கங்களும் சிறுத்திருக்கின்றன. முதுகெலும்பு தலைமுதல் வால் வரை நீண்டிருக்கும். எலும்புக்கோவை, உடுக்கை போன்ற சிறு எலும்புகளால் பொருத்தப்பட்டிருக்கிறது. இவ்வெலும் புகளினிரு பக்கங்களும் குழிந்திருப்பதால் ஒன்றையொன்று பொருந்தி யிருக்கிறது. இப்பொருத்துக் களினுள்ளிடம் எண்ணெயொத்த பொரு ளால் நிரம்பி யிருத்தலால் மீன் தேகத்தை எண்ணியவாறு திருப்பும். இதன் தேகத்தில், வட்டமான செதிள்கள், ஒன்றன்மேலொன்று கீழ் நோக்கி அடுக்கப் பட்டனவாக இருக்கின்றன. ஒவ்வொரு செதிளின் முனையும் தேகத்தை யொட்டி நிற்கும். இவற்றினு தவியாக மீன் எளிதில் நீந்துகிறது. இன்னும் தேகத்திலுள்ள உஷ்ணத்தை வெளிவிடாது காக்கின்றன. சிறகுகள் மீன் ஜலத்தில் நீந்துவதற் குதவியானவை சிறகுகளே. இதன் தேகத்தில் (8) சிறகுகள் உள. மார்பில் (2) சிறகுகள் உண்டு, இவற்றை படுத்து (2) ஜதை துடுப்புகள் உண்டு, இவைகள் கால்போல் உதவுகின்றன. தேகத்தின் அடிப்புறத்தில் வாலுக்கு அருகில் ஒரு சிறகு இருக்கிறது. இது வயிற்றுச்சிறகு, சில மீன்களுக்குச் சிறகு உருவிற்குத் தக்கபடி அதிகமாகவும் உண்டு, மீனுக்கு மேற்புறம் கனத்தும் அடி சிறுத்தும் இருக்கிறது. அவ்வாறு இருப்பதைத் தாங்குதற்கே இச்சிறகுகளிருக்கின்றன. இச்சிறகுகளும் வாலும், மீன் ஜலத்தில் விரைந்து செல்ல உதவுகின்றன. இது ஜலத்திலுள்ள ஆகாயத்தைச் சுவாசிக்கிறது. செவுள்கள் மீனின் கழுத்திற்குப் பக்கத்திலுள்ள தாடைக் கடுத்து இருபுறத்திலும் நீண்ட பிளவுகளிருக்கின்றன. இவற்றைப் பிரித்துப் பார்த்தால் சீப்பைப்போல் பற்களுள்ள பக்கத்திற்கு நான்கான மடிப்புகள் தோன்றும். இவையே செவுள்கள். இவற்றிற்கிடையில் துவாரம் உண்டு. இவை கழுத்துப் பக்கத்திலுள்ள பிளவுகளுடன் சம்பந்தமுள்ளவை. இவை இச்செவுள்களால் மூச்சுவிடுகின்றன. இவற் றிற்கு வாய்வழிச் செல்லும் ஜலம் செவிகளின் வழியாக வருகின்றன. இவற்றிற் சிலவற்றிற்குச் சுவாஸப் பையுண்டு. இதனால் இவை, மேல்வந்து வாயுவை யுட்கொண்டுள் புகுதலும் செய்கின்றன. இவற்றின் இரத்தம் குளிர்ந்தது. இவைகள் சிறு மீன்களையும் பூச்சிகளையும் பிடித்துத் தின்னும். இவற்றிற்குப் பற் சிறியவையாயும் ஒரே மாதிரி யாயும், கூரியவாயும் தொண்டையை நோக்கி வளைந்தன வாயுமிருக் கின்றன. மீன்களின் முட்டைகள் சூர்ய வுஷ்ணத்தால் குஞ்சுகளாகின்றன, சுறாமின் : இதனைக் கடற்புலி என்பர். இவ்வினம் கடலில் வாழ்வன. இவ்வினத்திற் சிறிய வுருவுள்ளது நாய்ச்சுறா இது நாலடி நீளமிருக்கும். கொம்பன் சுறா : இது தலையில் சம்மட்டிபோன்ற அகன்ற உறுப்பைத் தலையிற்பெற்றது. வாள்சுறா : இதனை வாளா என்கிறார்கள். இதன் உதட்டில் வாள் போன்ற ஒரு பலமான உறுப்பு ஆறடி நீண்டிருக்கிறது. இதனால் இது கப்பல்களையும் பெருமீன்களையுங்குத்திப் பயப்படுத்தும். வெள்ளைச் சுறா : இது (25) முதல் (40) அடிகள் நீண்டு வளரும். இதன் அடிப்பக்கத்தில் வாய், வாயினடியில் ஆறு வரிசையான கத்திபோல் கூர்மையான பற்கள் உண்டு. இதன் உடலில் எலும்பு அதிகமில்ல யாதலால் எந்தப் பக்கத்திலும் வளையும், இது தன் குட்டிகளைப் பால் கொடுத்து வளர்க்கும். இதற்கு, முதுகில் (2) நெஞ்சில் (2) வயிற்றில் (2) வயிற்றருகில் (1) வாவில் (1) ஆக எட்டுச்சிறகுகள் உண்டு. செவுளுக்குப் பிரதியாக இரண்டு பக்கங்களில் சுவாசத்வாரங்களுண்டு. இன்னும், வன்சிரம், கல்லாந்தலை, கெளிற்றி, வாளை, காரப்பொடி, வௌவால், பாறை, திருக்கை,கொள்ளிமீன், மடவை, முள்ளுவாளை, குரவை, வரால், கெண்டை, புராசினா, ஓலை வாளை, நவரை, கிழங்கான், தும்பிலி, செங்கரா, ஆற்றுகுண்டலம், சொட்டைவாளை, நெற்றிலி, சுதும்பு, உல்லம், கற்றளை, மயறி, விலாங்கு (மலங்கு) சேல்மீன், ஆரால், இறால், புண்டு விரிஞ்சான், செம்படக்கா, இரால், சின்ன கூனி, முதலிய, இம்மீன் வகையில் பெரிது யானை மீன் (திமில்). இதை விழுங்குவது திமிங்கிலம்,

மீன்வகை

பால் கொடுக்கு மீன்கள். திமிங்கிலகிலம், திமிங்கிலம், யானை மீன் பலவகை சுறா முதலிய, வரால், குறவை, அயிரை, இறால், கெண்டை, சன்ன