அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மோகநீயம்

28. 1. மித்யாத்வம், 2. யம்யக்மித்யாத்வம், 3. ஸம்யகத்வம், 4. அநந்தாநுபந்திகுரோதம், 5. அநந்தானு பந்திமானம், 6. அநந்தானு பந்தி மாயை, 7. அநந்தானு பந்திலோபம், 8. அப்பிரத்தி யாக்ஞானகுரோதம், 9. அப்பிரதியாக்ஞானமானம், 10. அப்பிரதியாக்ஞானமாயை, 11. அப்பிரதியாக் ஞானலோபம், 12. பிரதியாக்ஞானகுரோதம், 13. பிரத்தியக்ஞானம், 14. பிரத் யக்ஞான மாயை, 15. பிரத்யக்ஞான லோபம், 16. சஞ்சலன குரோதம், 17. சஞ்சுலனமானம், 18. சஞ்சுலனமாயை, 19. சஞ்சலனலோபம், 20. ஹாஸ்யை 21. ரதி, 22. அரதி, 23. சோகம், 24. பயம், 25. சுகுப்சை, 26. ஸ்திரிவேதம், 27. புருஷவேதம், 28. நபும்ஸகவேதம். (சி. ப.)

மோகனாங்கி

களமேகருக்குரிய தாசி. இவள் சரிதையைப் பற்றிக் காளமேக ரைக் காண்க.

மோகமானக்கடலார்

கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவர்.

மோகவதி

ரேகமவந்தன் பெண்.

மோகவந்தன்

நிருகன் வம்சத்தரசன்.

மோகினி

1. இவ்வுருவத்தை ஜகன் மோகினியவதாரம் எனவும் கூறுவர். அமிர்த மதனகாலத்தில் தேவாசுரர் இருவரும் அமிர்தம் கடைந்தனர். அசுரர் அமிர்தம் உண்ணில் தேவர்க்கு நீங்காத் துன்பம் உண்டாம் என நினைத்த விஷ்ணுமூர்த்தி அவர்களுக்கு அமிர்த விருப்பொழியத் தாம் மோகினி யெனும் பெண்ணுருக் கொண்டு அமிர்தம் தேவர்க்குப் பங்கிடுகையில், அசுரர் இவ்வுருவத்தைக் கண்டு மயங்கியிருந்தனர். அசுரர்களுள் இராகு கேதுக்கள் இருவரும் வேற்றுருக்கொண்டு அமுதம் புசிக்கத் தேவர் கூட்டத்தில் இருந்தனர். அவர்களை இன்னவர் என்று அறிந்த மோகினி சட்டுவத்தால் புடைத்தனள். 2. திருமகள்தன்னிலும் அழகுள்ளார் இலர் என்று இறுமாந்திருந்த காலத்து அவ்விறுமாப்பைக் கெடுக்க எடுத்த விஷ்ணுவின் திருக்கோலம். 3. தாருகவனத்து இருடிகளை மயக்க அழகிய பெண்ணுருக் கொண்டு சென்ற விஷ்ணுவின் திருவுரு. 4. பஸ்மாசுரன் பொருட்டு அவனை மயக்கிச் சிவமூர்த்தியைக் கூடி அரிகர புத்திரனைப்பெற்ற விஷ்ணுவின் திருவுரு. 5. மமகாரன் தேவி. 6. திதியின் குமாரி.

மோகூர்

பழையனென்னும் குறுநில மன்னனூர்.

மோசி

இடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர்.

மோசி கண்ணத்தனார்

மோசி என்பது ஒரூர், திருப்புவனந்தாலுக் காவில் மோசிப்பட்டி யெனவும், பரமக்குடி தாலுக்காவில் மோசுகுடி யெனவும், இரண்டு ஊர்காணப் படுகின்றன. இவ்வூர் மோசிகீரனார், மோசி சாத்தனார், முடமோசியார் என்று பேருடைய பலவித்வான் களைத் தன்னிடத்தே தோற்றுவித்து அளவிலாப் புகழைப்பெற்றது. இப்புலவர் நெய்தல் வளத்தைச் சிறப்பித்துப் பாடி, தலைவன் தலைவி பிரியிற் காமந் தாங்காது இறந்துபடுவதுண்மை யென்பதைக் காரணத் தோடு விளக்கிக் காட்டியிருக்கிறார்.

மோசிகரையனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களுள் ஒருவர். இவரியற் பெயர் கரையனார். ஊர் மோசி. இவர் அகத்தில் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். (அக 260.)

மோசிகீரனார்

1. கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். இவர் சங்கறுக்கும் குலத்தவராய் இருக்கலாம். சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேர லிரும்பொறையைப் பாடியவர். (திருவள்ளுவமாலை). 2. இவர் மோசியென்னும் ஊரிலே தோன்றிய கீரனென்றும் இயற் பெயருடையவர். ஒரோவிடத்துப் படுமாற்றூர் மோசிகீரனெனவுங் கூறப்படுவார். படுமாற்றூர் மதுரையைச் சார்ந்ததோரூர். சிவகங்கைத் தாலுக்காவில் படமாத்தூர் என்றொரு ஊர் காணப்படுகின்றது. படு மாற்றூரில் வந்து தங்கிய மோசிகீரனாரெனக் கொள்க. ஒரு காலத்துச் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறைபிடத்துப் பரிசில் பெறச் சென்றிருந்த இவர் அவனரண்மனையிலிருந்து நீராட்டக் கொண்டுபோயிருந்த வீரமுரசம் மீண்டு வருமுன் அம்முரசு வைத்திருந்த கட்டிலிலேறிப் படுத்து உறங்குவராயினர். அதனை அறிந்த அரசன் தமிழருமையறிந் தோனாதலின் இவரை யாதோரூறு பாடுஞ் செய்யாது இவர் தாமே தூங்கியெழுமளவும் அருகினின்று சாமரம் வீசிக்கொண் டிருந்தனன். இவர் விழித்தெழுந்து துணுக்குற்றஞ்சி இயன்மொழி பாடி அரசனை உவப்பித்தார். புறம் 50. மற்றொருபொழுது கொண்கானம் (கொங்கணம்) கிழானிடஞ் சென்று பரிசில்வேண்டி இவர் கூறிய பரிசிற்றுரையும், பாணாற்றுப்படையும், இயன்மொழியும், நற்சுவை கொடா நிற்கும், அரசரது கோட்பாடு இத்தன்மை யதாயிருக்கற்பால தென்று இவர் கூறிய பாடல் கவனிக்கத்தக்கது. இவர் கூறிய குறை நயப்பு எனையோர் பாடல் போன்று நுண்ணுணர் வினோரை மகிழ் விக்கும். அகம் 392. பரதவர் கோமான் அதலை யென்பவனது மலையையும், அண்டிரனது பொதிய மலையையும் பாராட்டிக் கூறியுள் ளார். இவர் நெய்தலையும், குறிஞ்சியையும் சிறப்பித்துக் கூறியவர். முகம்புகு கிளவி பாடியவரி விவருமொருவர். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் மூன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் ஐந்தும், திருவள்ளுவமாலையி லொன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

மோசிகொற்றன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் கொற்றன். ஊர் மோசி. பாண்டி நாட்டிலுள்ளது. (குறு 377.)

மோசிசாத்தனார்

ஒரு தமிழ்ப் புலவர். புறம் 272ம் செய்யுளைப் பாடியவர். (புற. நா.)

மோச்சி

ஒரு ஜாதிவகை. மாராத்தி பேசுவர். இவர்கள் முன்னாளில் இராஜதானி உத்தியோக சாலைகளில் பேனாசீவல், மை செய்தல், பென்ஸில் சீவல் முதலாயவேலைகள் செய்வர்.

மோதாகிரி

அங்கதேசத்தின் கிழக்கிலுள்ள ஒரு பர்வதம். Monghir Mudgagiri or Mudgallgiri in Bhagalpur District.

மோதாசனார்

இவர் கடைச்சங்கமருவய புலவர்களில் ஒருவர். இவர் தலைவன் தலைவியின் கூந்தலையும் தலைவி தலைவன் சிகையைப் பிடித்தலுமாகிய சிறுபோரை பாலைத்திணையாகக் குறுந்தொகை (229) ஆவது செய்யுளிற் கூறினர்.

மோதாதர்

வேததரிசனன் மாணாக்கனாகிய ஒரு இருடி,

மோநக்கற்றுறையனார்

கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்.

மோளிகைமாரையர்

இவர் விறகு விற்றுச் சீவித்து அதனால் வரும்பொருளால் சிவனடியவரை உபசரித்து வந்தார். இவரது நிலையறிந்த வசவதேவர் இவாறியாது பொன்னைப் பெட்டகத்தில் மறைத்து மாரையர் வீட்டில் அன்னம் வேண்டிச் சென்று இட்டுவந்தனர். மாரையர் நடந்தவை யறிந்து தாம் கொண்டு சென்ற விறகின் மீது நீர் தெளிக்க, அவையனைத்தும் பொன்னாயின. அவற்றைச் சிவனடியவர்க்குக் கொடுத்தனர். இப்பொன் பெற்ற அடியவர் வசவருக்குக்கூற வசவர் இவரிடம் வந்து அபராத க்ஷமை வேண்டிச் சென்றனர்.