அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மைசூர் சமஸ்தானம்

மைசூர் என்பது மஹிஷாசுரனுடைய நகரமாம், அதாவது எருமைத்தலையையுடைய ஒரு இராக்ஷதன் அங்குவந்து அந்நகரத்தின் குடிகளை வருத்தி வருகையில், அக்கஷ்டத்தைச் சகிக்க முடியாத குடிகளின் வேண்டுகோளைக் கருதி காளிகா தேவியானவள் சாமுண்டி அவதார மெடுத்து வந்து அந்த இராக்ஷதனைக் கொன்று குடிகளுடைய கஷ்டத்தை நீக்கியபடியால் அப்பட்டணத்திற்கு அந்த இராக்ஷதன் பெயராகிய மஹிஷாசான் பட்டணம் அல்லது மைசூர் என்று நாளதுவரையில் வழங்கி வருகிறார்கள். இப்போது மைசூர் இருக்கும் இடம் பூர்வத்தில் இராமாயணத்திற்கண்ட சுக்ரீவனுடைய சமஸ்தான மிருந்த இடமென்பது சிலர் கருத்து. கி. பி. மூன்றாம் நூற்றாண்டில். புத்தர்களும், பிறகு ஜயினரும், இங்குவந்து தம் தம் மதவிஷயமான கோயில்களைக் கட்டு வித்தார்களாம்.

மைத்திரி

தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமாரி. இயமன் தேவி,

மைத்திரேயன்

வைதிரேயனுக்கு அயோகவஸ்திரீயிடத்து உதித்தவன். இவனுக்குக் குடும்பாண்டி எனவும் பெயர். இவனுக்கு விடியற்காலம் மணி அடித்துக்கொண்டு அனைவரையும் துதிப்பது தொழில். (மநு.)

மைத்திரேயர்

குசீலவர் குமாரர். இருடி பராசர் மாணாக்கர். இவர் துரியோதனனுக்கு நீதிகூறத் துரியோதனன் மறுத்தமையால் கோபித்து வீமன் கதையால் சாகச் சபித்தனர். வியாசருக்கு நண்பர். விதூருக்குத் தத்துவம் உபதேசித்தவர்.

மைநாகம்

இமவான் புத்திரனாகிய பர்வதம். இவன் புத்திரன் கிரௌஞ்சன். The Sevalik hills at the foot of the Himalayas between the Beas and the Ganges.

மைந்தன்

கிட்கிந்தையில் இருந்த வாநரன். அச்வநிதேவராய்ப் பிறந்தவன். சுக்கிரீவன் சேநாபதியரில் ஒருவன்.

மைந்நாகன்

மேனைபுத்திரன். பித்ரு வம்ச விவரணம் காண்க.

மைந்நாகம்

ஒரு பர்வதம். இமயத்திற்கும் மேருவிற்கும் பிறந்த குமாரன். இந்திரனுக்குப் பயந்து வாயுவின் சகாயத்தால் கடலில் ஒளித்து அநுமன் இலங்கை மேற்செல்லுகையில் ஒரு வியாஜமாகத் தடுக்க எண்ணி எதிரில் இருந்து அவனால் தலைகீழாகத் தள்ளப்பட்டுப் பிராமண உருக்கொண்டு (தனக்குக் கடலிற் செல்ல உதவியது வாயுபுத்திரன் ஆதலால் செய்ந்நன்றி மறவாது) எதிரில் நின்று தங்க இடம்தந்து மீளுகையிலும் தன்னிடம் தங்கிப்போக வரம் வேண்டிப் பெற்றது.

மையல்

இது பாண்டி மண்டலத்திலுள்ளதோரூர். இது மாவனுக்குரியது. (புற. நா.)

மையோடக் கோவனார்

இவர்கடைச் சங்கப் புலவர் காலத்தவர். இவர்க்குக் கோவனார் என்பது இயற்பெயராக இருக்கலாம். இவர்தாம் பாடிய பரிபாடற் செய்யுளில் ஓடத்தைப் புகழ்ந்திருத்தல் பற்றி இப்பெயர் வந்திருத்தல் கூடும் என எண்ணப்படுகிறது. (பரிபாடல்.)