அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
மேககன்

உடுண்டுபன் நண்பன். விரத ஒழுக்கமுடையவன். அவனைப் பாம்பாகும்படிச் சாபமிட்டவன். பிறவற்றிற்கு உடுண்டுபனைக் காண்க.

மேககூடம்

ஒரு வித்தியாதர நகரம், (சூளா.)

மேகசந்தி

1. ஒரு க்ஷத்திரியன். ஜாரசர் தன் புத்திரனாகிய சகதேவன் புத்திரன், (பார~ஆதி.) 2. சாரசந்தன் பேரன். மகத தேசாதிபதி. இவன் அச்வமேதக் குதிரையின் பின் சென்ற அருச்சுனனுடன் யுத்தஞ்செய்து தோற்றவன். (பார~அச்.)

மேகசுவாதி

சிபௌகன் குமாரன். இவன் குமாரன் அடமாகன்.

மேகநாதன்

1, இந்திரசித்தின் பெயர். இந்திரசித்தைக் காண்க. 2. சந்திராபீடனது சேனாபதி,

மேகனை

கர்பக்னன் குமாரி. கர்ப்பிணிகள் உண்ட அன்னத்தை நீக்குவதுடன் வயிற்றில் புழுக்களை உண்டாக்குபவள்.

மேகன்

1. ஒரு அரசன், சோதிடரைப் போல் வந்து மகோற்கடமூர்த்தியின் கழுத்தில் வஞ்சக முத்துமாலையை யிட்டு அதன் சுவாலையால் தானே இறந்தவன். 2. இராவண தூதரில் ஒருவன். 3. சண்முகன் சேநாவீரன். 4. சூரபன்மன் சேநாவீரருள் ஒருவன்,

மேகபுரம்

ஒரு வித்தியாதர நகரம், (சூளா.)

மேகபுஷ்பம்

கிருஷ்ணன் தேர்க்குதிரைகளில் ஒன்று.

மேகப்பிரஷ்டன்

பிரியவிரதன் பேரன். கிருதபிருஷ்டன் குமாரன்.

மேகப்பிருத்தியன்

சிவகணத்தவரில் ஒருவன்.

மேகமலன்

கல்கியின் குமாரன்.

மேகமாலி

சண்முகன் சேதாவீரன்.

மேகமாலினி

மேகவாகனன் மனைவி. (சூளா.)

மேகம்

1, (7) சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பன. இவை முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ இவற்றைப் பொழியும் 2. நீராவியின் பரிணாமமே மேகம் எனப் பேர் பெறும், இதன் மீது குளிர்ந்த காற்றுப் படின் பனி, மழை முதலியவாக மாறுகிறது. இது ஆகாயத்தில் கறுப்பான நிறத்துடன் தோன்றில் கார்மேகம் எனவும், படைப் படையாக இருக்கில் படைமேகம் எனவும், குவியலாகத் தோன்றின் குவியல்மேகம் எனவும், சுருண்டு தோன்றின் சுருள் மேகமெனவும் கூறுவர். இவை பூமிக்கு (2, 3) மைலுக்கு மேல் காணப்படும். மேற்கூறிய நீராவி ஏன் கிளம்புகிற தென்னில் அது ஆகாயத்தினும் லேசாக இருப்பதால் உயருகிறது, 3. மழையென்றொரு பொருளுண்டு, ஆறு, குளம், எரி, முதவியவற்றி லுள்ள நீர் ஆவியாகப் பரிணமிப்பது. இதுவே குளிர்ந்த காற்றுப் படின் மழையாம். 4, பனி, இது உஷ்ணமடைந்த ஆகாயம் குளிர்ந்து பல காரணங்களால் தன் உஷ்ணத்தை வெளிவிட வானத்தில் இறுகிய ஆகாய பரிணாமம். இது ஓரிடத்தில் நிலைத்திராமல் காற்று உலாவும் பக்கமே ஓடுவதும் மறைவதுமாயிருக்கும்,

மேகரதன்

ஒரு அரசன். சுமதியின் தந்தை, தேவி சமங்கலை,

மேகரோக தசாவஸ்தை நிதானம்

கீழ் வயிற்றில் வேதனை, ஆயாஸம், வாயுப்பிரபலம், திரிதோஷகோபம், சுக்கிலநாசம், அதிதாகம், நீரில் மேகங்காணல், அரோசகத்துடன் தேகசாட்யம், கட்டிகள் எழும்பல், பேதி அதிகரித்தல், ஞாபகமாளல், இவை காணுதற்கு முன் ஆவாரைப் பஞ்சாங்கத் தீநீர், சீந்திற் சர்க்கரை, மேக குலாந்தக மாத்திரை, மேசுபஞ்சா மிர்தம், பஞ்சானனாஸம் முதலிய சிகிச்சைகளைச் செய்யவேண்டும். இவைகளால் உண்டாம் கட்டிகள் மடக்குக்கட்டி, ஆமையோட்டுக் கட்டி, வலைக்கண் கட்டி, அதோமுகக்கட்டி, பேய்ச்சுரைக்காய்க் கட்டி, கடலைக்கட்டி, கடுகுகட்டி, புத்திராதிக்கக் கட்டி, நிலப் பூசனிக் கிழங்கு கட்டி, வித்திரிதிக்கட்டி என்பனவாம். (ஜீவாட்)

மேகரோகம்

கோதையர் கலவியை மிக விரும்புதலால் மூலத்திற் கனல் மிஞ்சி மேகஞ்சனித்துச் சிரம் வரையில் வெந்துருகித் தாது கெட்டுத் தேக நரம்பெல்லாம் பலம் குறைய இந்த ரோகம் உண்டாகின்றது. இது திரிதோஷத்தால் பிறந்தது. மேகம் (20) வகை. அவை மதுமேகம், வசாமேகம், மச்சாமேகம், அஸ்திமேகம், மஞ்சிஷ்டிமேகம், சாரமேகம், அரித்ராமேகம், நீலமேகம், ரத்தமேகம் காளமேகம், பிஷ்டமேகம், இட்சுமேகம், சாங்திரமேகம், சிகீதாமேகம், லாலாமேசம், சீதமேகம், கைனர்மேகம், சுராமேகம், சுக்ல மேகம், சலமேகம், ஆச்யகந்தி மேகம், சுத்த மேகம், பிரமிய மேகம், மாமிசசிராவிச விரணமேசம், அப்பிய மேகம், பித்தபிரமிய மேகம், சாந்திரமேகம், உத்தமமேகம், ஆதிக்க மேகம், தைத்தியமேகம், (ஜீவரட்.)

மேகலன்

விந்தியபர்வதத்திற்கு அருகிலிருந்த இருடி,

மேகலம்

நருமதையடுத்த தேசம்.

மேகலை

மேசாலா பர்வதத்தின் சமீபத்திலுள்ள தேசம். (பார. பீஷ்.) The country around the Mekala hills, (1. 6.) the mount Anarakantaka, in which the river Narbuda has got its sources hence the Narbuda is called Makalakanyaka.

மேகவாகனகற்பம்

இக்கற்பத்தில் விஷ்ணு சிவமூர்த்தியை மேக வுருக்கொண்டு (100) வருஷந் தாங்கிப் படைப்புத் தொழிலடைந்து பிரமன் முதலியவரைப் படைத்தனர். (காஞ்சிப்புராணம்,)

மேகவாகனன்

1. இவன் ஒரு அரசன். இவன் தலையில் ஒரு மாணிக்க மிருந்தது. அதனால் அற்புதமணி என்று பேர்பெற்றான். 2. இந்திரனுக்கு ஒரு பெயர். 3 சுரேந்திர காந்த அரசன் (சூளா.)

மேகேந்திரம்

மேகந்திரம். Mahendra hills in Ganjam Dt. பரசு ராமருக்கு வாசஸ்தானம் (பார. வன.)

மேடசங்கிரமபலன்

சித்திரை மாதத்தில் சூரியன் பிரவேசித்தபோது உண்டாகும் பலன். பரணி முதலாக (4) நாளும் புன் பயிராம், திருவாதிரை முதலாக (4) நாளும் மிகு மழையாம்; மகமுதற் (10) நாளும் மழை அற்பமாதல் அல்லது சுழித்துப் பெய்தலாம்; பூராடமுதல் (6) நாளும் சுபிக்ஷகாலமாம். மீனம், சிங்கம், தனுசு, மேடம், கன்னி, இடபம், இவை உதயமாக விஷூவாயனம் வரில் அவ்வாண்டு மழை யதிகமாய்க் காலம் நன்றாம், மகரம், துலாம், கும்பம், உதயமாகில் சமமாம், கர்க்கடகா, மிதுனம், விருச்சிகம் உதயமாகில் மழைசுருங்கிக் காலம் கெடும். (விதான.)

மேதவமுநி

ஒரு இருடி. இவர் குமாரியைப் பலிமிபிடிக்கத் திருநறை யூரில் பெருமாள் அவனைச் சபித்து இருடிக்கு அருள் புரிந்தனர்.

மேதவர்

சண்டாளனுக்கு வைதேகஸ்திரியிடம் பிறந்தவர். இவருக்குப் பாண்டுசோபர்கர் எனவும் பெயர். உத்தியோகம். மூங்கில் வேலை.

மேதஸ்

ஒரு முநிவர். சுரதனுக்குத் தேவி மந்திரம் அருள் செய்தவர்

மேதா

தருமன் என்னும் மநுவின் தேவி. தக்ஷன் குமாரி,

மேதாகேதையர்

வசவர் மடத்தில் இருந்த சிவனடியவர். இவர் உயிர் நீங்குகையில் வசவர் பிரிவாற்றாது தாமும் தேகம் விட்டனர். இதனைக் கண்ட மடவாலமர்ச்சையர் சிவமூர்த்தியைத் தியானித்து இருவரையும் பிழைப்பித்தனர்.

மேதாதிதி

1. பிரியவிரதனுக்குப் பெரிஹஷ்மதியிடம் பிறந்த குமாரன். பிலக்ஷத்தீவை யாண்டவன். (பாகவத.) 2. கண்ணுவர் குமாரர். இவர்க்கு ரிதேபு, விருக்குவா முதலிய பிராமணர் சனித்தனர்.

மேதாவன்

மூங்கில் முதலியவற்றால் கூடை, முறம், பாய், விசிறி, பெட்டி முதலியன கட்டிச் சீவிப்பவன்,

மேதாவி

1. ஒருபிராமணச் சிறுவன். தந்தையைக் காலத்தைப்பற்றி வினாயவன். (பார~சாந்.) 2. தந்தையிடம் பிரமத்தையடைய உபாயங் கேட்டவன். (பார, சாந்.) 3. சுதையின் குமாரி. 4. இல்லறத்திலிருந்து நன்மையடைந்த ஒரு வேதியன். 5. சுனையன் குமாரன். இவன் குமாரன் நிருபஞ்சயன்.

மேதாவிகம்

காலஞ்சர பர்வதத்திற்கு அருகிலுள்ள ஒரு தீர்த்தம்,

மேதிக்கண்ணன்

வீரமாயேந்திரத்து வட கீழைக் கோபுரத்துவாயிற் காவலாளியான அசுரன்.

மேதினி

மதுகைடவரைக் காண்க,

மேதிமாமுகன்

சூரபதுமனுக்கு மந்திரி.

மேதை

1. ஒரு இருடி. 2. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமாரி. இயமன் தேவி. 3. சீர்க்காரியின் குமாரன், சீர்க்காரியைக் காண்க.

மேதையதிதி

ஒரு ருஷி. அசங்கனைக் காண்க.

மேனகை

1. காசிபருக்குச் சுரபியிடம் பிறந்தவள். 2. இவள் தெய்வமகளிர் எண்பதின் மருள் ஒருத்தி. குபேரனுக்குப் பணிபுரிபவள். (பெ. கள.) 3. விச்வாமித்திரன் தவத்தைக் கெடுத்து அவனுடன் கூடிச் சகுந்தலையைப் பெற்றவள். 4. ஒருமுறை சாபத்தால் மானுருக் கொண்டு திரிகையில் வேடனால் துரத்துண்டு வேதாரண்ய தீர்த்தம் படிந்து நல் லுருப்பெற்று விசுவாமித்திரரைக் கூட முயன்று அவரால் கிழவுருப் பெறச் சாபம் அடைந்து அத்தீர்த்தம் படிந்து தூய்மை பெற்றவள். (வேதாரண்யபுராணம், திருவாரூர்ப்புராணம்.) 5. விசுவாவசு என்னுங் கந்தருவனைப் புணர்ந்து பிரமத்வரையைப் பெற்றுத் தூலகேசர் ஆச்சிரமத்தில் இட்டுச் சென்றவள். 6. மேருவின் பெண்.

மேனை

1, இமவான் தேவி. பார்வதியாரைப் புத்திரியாகப் பெற நோற்றவள். 2. பஞ்சகன்னியரில் ஒருத்தி. 3. மைநாகத்தின் தாய்.

மேன் மேலுயர்ச்சியணி

அஃதாவது, மேன்மேலு மொன்றற் கொன்றுயர் குணத்தாலேனு மிழிகுணத்தாலேனு முயர்வா தலைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் சாராலங்கார மென்பர். (குவல.)

மேரு

1. நிடதத்திற்கு கடக்கு (6000) யோசனைக்கு அப்பால் உள்ள மகாபர்வதம். இதன் விஸ்தாரம் (32000) யோசனை. இது தேவர்கள் இருக்கை. சிவமூர்த்தியால் ஒருகாலத்துத் தனுவாகத் தாங்கப் பெற்றது. பொன்னிறமுடையது. ஆயிரம் சிரங்களையுடையது. வாயுவால் மோத அசைவற்று இருந்தது. நவக்கிரகங்களாலும் மற்ற நக்ஷத்திரங்களாலும் நாடோறும் வலஞ்செய்யப் பெற்றது. குலகிரிகளால் சூழப்பெற்றது. வாயுவும் ஆதிசேடனும் மாறுகொண்டு முடியைத் தாக்கவும் காக்கவும் நின்றபோது வாயுவால் மூன்று சிகரங்களை இழக்கப்பெற்றது. சாபத் தினால் பருக்கைபோல வாரியெறியப் பெற்றது. கணேசர் கொம்பாற் பாரதம் எழுதப்பெற்றது. ஒரு காலத்து விந்தமலை இதனுடன் மாறு கொண்டு உயர அது அகத்தியரால் பூமியில் அழுந்தியது. இதைத் தெய்வ வடிவாகக் கூறுவர். உருவம் நான்கு சிரம், எண்டோள். இது உக்கிர குமாரனால் அடியுண்டபொழுது, பாண்டியனுக்கு இவ்வுருவத்துடன் வெளிப்பட் இப்பொன்னறை காட்டியது. பூமிக்கு இரிசு என்பர். 2. நரப்பிரசாபதியின் தேவி, 3. ஆயதியின் தந்தை, தாதாவென்னும் பிருகு புத்திரனுக்கு மாமன்.

மேருசாவர்ணி

இமயமலையில் பாண்டவருக்குத் தருமம் உபதேசித் தவர். ஒரு மநுவாயிருக்கலாம்.

மேருதேவி

நாபியின் மனைவி.

மேருமந்தரபுராணம்

இது சிம்மசேக மகாராஜனும், இராமதத்தையும் செய்த தவத்தாற் பிறந்த சிம்மசந்திரன், பூரணசந்திரன் என்னும் குமாரரிருவரும், சத்திகோடன் என்னும் மந்திரி வசப்பட்டுத் தீமை செய்து பல பிறவி பிறந்து பின் சுவர்க்கமடைந்து மீண்டும் பூமியிற் பிறந்து முத்திபெற்றதும் மந்திரி நரகமடைந்ததுமாகிய சரித்திரத்தைக் கூறுவதும், விமல தீர்த்தங்கருடைய கணதார்களாகிய மேரு, மந்தரர் என்பவர்களின் சரிதங்களை விரித்துக் கூறுவது மாகிய தமிழ்ச் சைநநூல். இந்நூலாசிரியர் வாமனாசாரியர்.

மேருமந்தரர்

உத்தரமதுரை நகரத்தில் அநந்த வீரியன் என்னும் அரசனுக்கு மேருமாலினி அமிர்தமாதி என்று இயண்டு தேவிகளிருந் தனர். அவர்களுக்கு முன்னமே முன்பவத்தில் ஆதித்யாபதேவன், தர ணேந்திரனாக இருந்தவர்கள் மேருவென்றும், மந்தரனென்றும் பிறந்து விமல நீர்த்தங்கரரால் சர்வசங்க பரித்யாகமடைந்து இராஜ்யம் விட்டுப் பர்வத சிகரமடைந்து நோற்று உலகாக்ரமடைந்தனர். மேருவின் முன் ஜன்மங்கள், மதுரை, இராமதத்தை, ஸ்ரீதரை, காபிஷ்டதேவன், அரதன மாலை, அச்சுதகல்பதேவன், வீதபயன், ஆதித்யா பதேவன், மேரு, ஸித்தபாமேஷ்டி முதலியன. மந்தரன் முற்பிறப்பில், வரருணி, பூர்ண சந்திரன், தேவன், யசோஹா, தேவன், இரத்னாயுதன், அச்சுத கல்ப தேவன், விபீஷணன், நரகன், ஸ்ரீதாமா, பிரம்மகல்பதேவன், ஜயந்தன், தாணேந்திரன், மந்தரன், பரமேஷ்டி என்பனவாம். (மேரு மந்~புரா)

மேலைக்கடை

ஒரூர்: இது சைனர்கள் ஏறிய கழுமரங்களின் மேலைக் கோடியாகிய இடமாம். (திருவிளையாடல்)

மேலையகத்தாழ்வான்

நாதமுங்களிடம் பண்ணுடன் பிரபந்தமோதிய ஸ்ரீவைஷ்ணவர்.

மேல்கோட்டை

மைசூருக்கு அருகிலுள்ள பட்டணம். இவ்வூர் மலையில் விஷ்ணு ஆலயம் இருக்கிறது. இப்பொழுது மேல்கோட் (Melkote) என வழங்கும்.

மேளக்காரர்

இவர்கள் வாத்யம் வாசிப்பவர். இவர்கள் தமிழ் பேசுகிறவர்கள். இவர்கள் அம்பட்டரின் வேறுபட்டவர்கள்.

மேஷவிருஷணன்

இந்திரன் அகலிகையைப் புணரக்கண்ட கௌதம முனிவர் கோபத்தால் அவனது விருஷ்ணம் அறுந்து விழச் சபிக்க அவ்வாறு அற்ற விருஷ்ணத்திற்குப்பதில் மேஷத்தின் விருஷணத்தைத் தேவர் பொருத்தி வீர்யவந்தனாக்கினர். அதுமுதல் இப்பெயர் அவனுக் குண்டாயிற்று. (சிவமகாபுராணம்.)