ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மூகாசுரன் | 1. துரியோதனனுக்குச் சிநேகனாகிய அசுரன். அருச்சுனன் தவத்திலிருக்கையில் துரியோதனன் இவனை யழைத்து அருச்சுனனை வதைக்க ஏவினன். இவன் பன்றியுருக்கொண்டு அருச்சுனனிடம் சென்று தவத்திற் கிடையூறு செய்கையில் சிவமூர்த்தியாலும் அருச்சுனனாலும் கொலை செய்யப்பட்டவன். 2. கொல்லாபுரியில் சத்தியாற் கொல் லப்பட்ட அசுரன், |
மூகாம்பை | சையபர்வதத் தெழுந்தருளியிருக்கும் சத்தி. |
மூக்கப்பன் | நீதிசாரம் என்னும் நூலினாசிரியர், இவர்க்குத் தந்தை திருவரையப்பன். |
மூக்கு | நமக்கு அருகிலும் தூரத்திலும் உள்ள பொருள்களின் மணத்தை அறியும் உறுப்பு. இவற்றினிலக்கணம் முகத்தில் கூறப்பட்டது. இதன் மேல்பாகம் எலும்பினாலும் கீழ்ப்பாகம் ஜவ்வினாலும் ஏற்பட்டு உட்புறம் இடையிலுள்ள கலப்பையடி போன்ற தண்டால் இருபாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. இத்துவாரங்கள், தொண்டைவரையில் செல்கின்றன. நாசி துவாரத்தின் மேற்பக்கத்தில் வாசனை நாம்புகள் பரவி இருக்கின்றன. இவற்றின் வேர் மூளையிலிருந்து வருகிறது. இவை மேற் பக்கத்திலிருப்பதால் நாம் வாசனை அறிய மூச்சை இழுக்கவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாசித் துவாரத்தினும் மூன்று பள்ளங்கள் உண்டு. அடியிலிருக்கும் பள்ளத்தில் கண்ணிலிருந்து நாசித் துவாரத்திற்குப் போகும் குழல் இருக்கிறது. நாசித் துவாரத்தை அணைந்திருக்கிற ஜவ்விலிருந்து சளி சுரக்கிறது. நாசியின் உட்பிரதேசத்தில் தூசு முதலிய உட்புகாவண்ணம் உரோமங்கள் உண்டு. வாய்க்குட் செல்லும் பொருளைச் சோதித்தனுப்ப மூக்கு மேலமைக்கப் பட்டிருக்கிறது. |
மூக்கு வளைந்த கொக்கு | (The Avocet) இது ஆசியா கண்டத்தில் சைபீரியாவிலும், ஐரோபாவின் வடபாகத்திலும் கூட்டம் கூட்டமாய் வசிக்கிறது. இது அந்த நாடுகளிலுள்ள கடல், ஆறு, ஏரி முதலிய இடங்களில் இரைதேடியுண்கிறது. இதன் சிறகின் மேற்புறம் கருமை கலந்த வெண்மை, பாதங்கள் தோலடி கொண்டவை. மூக்கு மேல் நோக்கி வளைந்து உறுதியாயிருக்கிறது. இது தண்ணீரில் வேகமாய் நீந்தி மீன்களை வேட்டையாடும். இவ்வினத்தில் வளைந்தமூக்குள்ளவை (20) வகை யுண்டென்பர். பெண்கொக்கு வருடத்திற் கொருமுறை புதர்களில் பசுமையான முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. |
மூங்கிலணை நல்லகாம நாயக்காவர்கள் | இவர் ஏழுமலை ஜமீன்தார். இவரது கொடையை வியந்து ஒரு கவிஞர், “ஆராயும் வேதியர்க்கு ளாருமில்லை யறிவுகெட்ட வலையருமப் படியே யாவர், சீராய துருக்க ருக்குட் சீதக்காதி சிறப்புடைய வணிகருக் குட் செந்தில் காத்தான், காராளர் தங்களுக்குள் வெண்ணெ யூரான் கருதரிய மறவ ருக்குள் மூவ ராயன், பேரான மூங்கிலணை நல்ல காமர் தொட்டியர்க்கு ணீயொருவன் பேர்பெற்றயே” என்றனர். |
மூங்கில் | 1. ஒரு காலத்தில் கண்ணுவர் தவமிருக்கையில் புற்று அவரை மூட அவர் மீது இது முளைத்தது. இதை மூன்று விற்களாக்கி, பினாக மெனப் பெயரிட்டுச் சிவனுக்கும், சார்ங்கமெனப் பெயரிட்டு விஷ் ணுவுக்கும், காண்டீவம் எனப் பெயரிட்டுச் சந்திரனுக்கும் பிரமன் கொடுத்தனன். (பார. அநு 6.) 2, இது புல்வினத்தைச் சேர்ந்தது. இது புதர் போல் முளைத்து ஒன்றையொன்று பின்னிக்கொண்டிருக்கும். கணுக்களை யுடையது, நிறம் பசுமை, இலைகள் புல்லைப்போல் கூர்மையுடையன. வேரில் பல முளைகள் தோன்றிப் பெருகும். சில கெட்டியாகவு மிருக்கும். முள்ளுள்ளவை இந்தியக் காடுகளிலும் சீனாவிலும் உண்டு, பல விதத்தில் பயன்படும். வீட்டுக்கு வரிச்சல், பந்தக்கால், ஏற்றக்கோல், பாய்; முறம், கூடை, பானபாத்திரம், பல்லக்குத் தண்டு முதலியனவாம். சீனர் உள்ளிருக்கும் மெல்லிய தோலால் காகிதம் செய்வர். |
மூங்கைப்பிள்ளையார் | இவர் குமாரக்கடவுளின் அவதாரம். ஒருமுறை கடைச்சங்கத்துப் புலவர்கள் தாம் அகப்பொருளுக்கிட்ட உரையை ஒவ்வொருவரும் அதிகமாக மதித்து வரம்பு அறியாது இருக்கையில், அவற்றின் உயர்வு தாழ்வுகளை அறிய எண்ணிச் சொக்கநாத மூர்த்தி களை வேண்டினர். சொக்கநாதர் புலவர் தமை நோக்கி, தனபதியும் குணசாலினியும் செய்த தவத்தால் குமாரக்கடவுள் அவர்களிடம் அவ தரித்திருக்கின்றான்; அவனிடஞ்சென்று உமது செய்யுட்களைக்கூறி எல்லை காண்க என்றனர். புலவர் அவ்வாறே சென்று மூங்கைப் பிள்ளையாரை வணங்கி அவர் சந்நிதிமுன் அவரவர் செய்த உரையைக் கூற, பிள்ளையார் புலவர்க்குச் சமிஞ்ஞையால் வரம்பு அறிவித்தனர். இவர் மூங்கைப் பிள்ளையாகப் பிறந்த காரணம் சிவ மூர்த்தி தமது தேவியாருக்குச் சாஸ்திரோ பதேசஞ்செய்கையில் பிராட்டி அதில் பார் முகமாக இருந்ததைக் கண்டு சாபமிட்டனர். இச்சாபங் கேட்ட குமாரக் கடவுள் பொறாது சாஸ்திரங்களைக் கடலில் இட்டுச் சிவமூர்த்தியால் வணிகர் குலத்தில் ஊமையாய்ப் பிறக்கச் சாபமேற்றனர். (பாஞ்~திருவிளை) |
மூஞ்சூரு | இது சுண்டெலியினத்தின் வேறுபாடு. இவ்வினத்தில் 6 அங்குல முதல் பன்றியளவு முண்டென்பர். அவை கஸ்தூரி மூஞ்சூரு, துதிக்கை மூஞ்சூரு, நக்ஷத்ரமூக்கு மூஞ்சூரு, பன்றிக்கால் மூஞ் சூரு, குண்டெலி மூஞ்சூரு, சுண்டெலி மூஞ்சூரு எனப்படும். இம் மூஞ்சூருக ளுக்குப் பின்காலின் பக்கமாய் ஒருவகை நாற்றத்தைல மிருக்கிறது. அதை அது விரோதிகளிடம் பயம் உண்டாம் போது வெளியிடுகிறது. இவ்வகை மூஞ்சூறுகளில் அமெரிக்காவிலுள்ள வற்றிற்கு வயிற்றின்பக்கமாய் ஒருவகை வாசனைப் பொருளுண்டு. ஆதலாலதனைக் கஸ்தூரிமூஞ்சூறு என்பர். வட அமெரிக்கர் முதலிய இடங்களில் ஒருவகை மூஞ்சூறுக்கு மூக்கு யானைத் துதிக்கைபோல் நீண்டிருக்கிறது. அது துதிக்கை மூஞ்சூறு, நக்ஷத்ரமூக்கு மூஞ்சூறு : ஐரோப்பாவின் வடபாகத்தில் இருக்கிறது. இம்மூஞ்சூறின் மூக்கின் தசை நக்ஷத்திரம்போ லிருக்கிறது. இது தன் நீண்ட நாவால் பூச்சிகளைப் பிடிக்கும். பன்றிக்கால் மூஞ்சூறு : இது ஆஸ்திரேலியா வாசி, இதன் உடல் அடியில் பருத்தும், தலைப்பக்கம் சிறுத்தும், பின்காலும் வாலும் பருத்தும், முன்கை சிறுத்தும், காதுகள் மீண்டும் இருப்பதால் முயலைப் போல உட்காருவதற்கும், குதித்துச் செல்வதற்கும் உதவி, கால்களிலுள்ள நகங்கள் பன்றியை யொக்கும். மூஞ்சூறு மிருகம் : இது தென் அமெரிக்கா பிரதேசவாசி, இது உருவத்தில் மூஞ்சூறை ஒத்தது. 3 அடி நீளம், 2 அடி உயரம். இது பன்றியைப்போலிருக்கிறது. இதற்கு வால் இல்லை. தாவரங்களைத் தின்கிறது. மர மூஞ்சூறு : இது ஐரோப்பியவாசி, இதன் கால் கைகள் பூனையை யொத்தவை. விரல் கள் மூஞ்சூறு போன்றவை. தேகம் மயிரடர்ந்தது. இது மரங்களில் ஏறிக் கூடு கட்டி வாழும். மாம்சபக்ஷணி. பெருச்சாளி : இது எலியினத்தில் பெ ரிது. இதற்குக் கூரிய நகங்களும் வலுத்த பற்களுமுண்டு. இவற்றின் உதவியாலிது வலுத்த கட்டடங்களையும் மரங்களையும் கல்லும், இது வளை தோண்டி வசிப்பது, இவ்வினத்தில் பலவகை உண்டு. தீனிப்பை பெருச்சாளி : இது வட அமெரிக்கா வாசி. இதன் கழுத்தடியில் தீனிப்பை பெற்றிருக்கிறது, இது தன் இரையை அப்பையில் அடக்கிக்கொண்டு வேண்டிய போது உண்கிறது. இதன் வால் குட்டை. காங்கேரு பெருச்சாளி : இது ஆஸ்திரே லிய வாசி, இதன் முன்கை குறுகியும், பின் கால் நீண்டும், தடித்தும் இருக்கிறது. உடல் முன் சிறுத்தும், பின் பருத்துமிருக் கிறது. இது எலியைப்போல் கை கால்களை ஊன்றி நடவாது, பின் கால்களை ஊன்றிக் காங்காருபோல் குதித்துக் குதித்து நடக்கிறது. இதற்கு வால் கைபோல் உதவுகிறது. இது வளை தோண்டி வாழாமல் கூடு கட்டி வாழ்கிறது. பையுள்ள பெருச்சாளி : இது ஆஸ்திரேலிய வாசி, இதன் முகம் வட்டம், கால் கை வால் குட்டை, உடல் பருமன், கழுத்தும் தலையும் பன்றியை யொத்த பருமன். இதனடி வயிற்றில் காங்கேருக்கு இருப்பதுபோல் ஒரு பை உண்டு. அதில் அது தன் குட்டிகள் தாமே இரை தேடும் வரையில் வைத்து உலாவுகிறது. பெருச்சாளி மிருகம் : இது தென் அமெ ரிக்கா வாசி. இது ஒரு பன்றியைப்போன்றது. வாலில்லை, மற்ற உறுப்புகள் பெருச்சாளியை யொத்தவை. இது (2 1/2) அடி உயரம். கால்கள் தடித்து உயர்ந்தவை. விரல்கள் நீரில் வசிக்கும் பிராணிகளுக்கு உள்ளவைபோல தோற்பாதம். இது தண்ணீரில் மூழ்கி நீர்ப் பூண்டுகளை உண்டு வசிக்கிறது. வாத்து மூக்கு மிருகம் : இஃது ஆஸ்திரேலியாவின் தெற்கிலுள்ள நீர்நிலைகளின் கரையில் வளை தோண்டி வசிப்பது. இதன் முகத்திலுள்ள மூக்கு வாத்தின் மூக்கைப் போன்று தட்டையாயிருக்கும். இதன் குறுகிய கையும் காலும் மிருகங்களுக் குள்ளவை போன்றவை. இதனடி தோலடி, இது தண்ணீ ரில் வேகமாய் நீந்து மீன் முதலியவற்றை ஆகாரமாக்கும். இது கருப்பமடைகையில் வயிற்றிற்குள் முட்டையாயிருந்து அதிலே முதிர்வடைந்து பருவகாலத்தில் முட்டையை விட்டு வெளிப்படுகிறது. இதனுடல் மயிரால் மூடப்பட்டிருக்கிறது. ஒணான் : இது பல்லியினத்தில் ஒரு வகை. இதன் முதுகு பல்லிகளுக்கிருப்பது போலிவ்லாமல் தலை முதல் வாலின். தொடக்கம் வரையில் வாள் போன்ற முள்ளின் வரிசைகளுண்டு. இவ்வினத்தில் பலவகை ஒணான்களுண்டு, மலையோணான், கறுப்போணான், பச்சைாணான், செந்நிற ஒணான், பச்சோந்தி முதலிய. இவை மலைகளிலும், புதர்களிலும், பூச்சிகளையும், புழுக்களையுந் தின்று ஜீவிக்கின்றன. இவற் றிற்கு முதுகு கரடுமுரடுள்ள தோலைப் பெற்றிருக்கிறது. மலையோணான் மலைகளில் செந்நிறமுள்ள தலையுடையதாய் உடல் முழுதும் கறுப்பு நிறம் உடையதாயிருக்கிறது. கறுப்போனான் : மலைகளிலேயே கறுப்பு நிறமாயிருக்கிறது. இவைகள் தசைப்பற்றுள்ள தோல் போல் பூமியில் குழி தோண்டி முட்டைகளிட்டு அக்குழியை மண்ணால் நிரப்பிப் போய்விடுகின்றன. அம்முட்டைகள் சூரிய உஷ்ணத்தால் பருவகாலத்தில் வெளிவருகின்றன. இவற்றில் சில ஒணான்களுக்குச் சிரத்தில் கொண்டையும், சிலவற்றிற்கு அவை தாடியும் உண்டு. இவ்வகை ஒணான்கள் ஆபிரிக்காகண்டக் காடுகளிலிருக்கின்றன. இதை (Hooded Blood Suoker) என்பர். ஆஸ்திரேலியா நாட்டின் மேற்பக்கத்துக் காடுகளில் ஒருவகை விநோத அமைப்பு உள்ள ஒணான் உண்டு, அதன் உடலும் பின் காலும் வாலும் நீண்டவை. முன்கைகள் குறுகியிருக்கின்றன. அதன் கழுத்தைச் சுற்றிலும் மெல்லிய தோல் வளர்ந்து இறக்கை போல் உதவுகிறது. இது ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவுகையில் அத்தோல் விரிந்து வேகமாய்ச் செல்லச் செய்கிறது. ஆதலால் இதனைப் பறக்கும் அணிலைப்போல் பறக்கும் ஓணான் என்பர். இதனை ஆங்கிலத்தில் (Erill Lizard) என்பர். பச்சை ஒணான் : இது உடலில் பசுமை நிறமுள்ளது. இது, மற்ற ஒணான்களை யொத்து நிறத்தில் மாத்திரம் மாறுதலுள்ளது. செந்நிற ஓணான் : இது ஒணானையொத்து உடல் செந்நிறமாய்ப் பருத்துள்ளது. இது மலைவாசி. பச்சோந்தி : இது பச்சை ஓணான் சாதியில் ஒன்று. இதன் தலை தட்டையாயும், கால் விரல்கள் அகன்றும் இருக்கும். இது, தரையில் நடப்பதில்லை, இது மரக்கிளைகளில் வசிக்கும், இது மிக்க கோபமுள்ளது. பாம்பைப்போல் சீறுந்தன்மையுள்ளது. நாக்கும் பாம்பின் நாக்கைப் போல் நீண்டே யிருக்கும். இது, தன் வாலை மரங்களில் சுருட்டிக்கொண்டு தாவி ஏறும், இது, இயற்கையில் பசுமை நிறங் கொண்டதாயினும் பலவித நிறபேதங்க ளைக் கொள்ளத்தக்க சக்தியைப் பெற்றிருக்கிறது. இது, தன் நிறபேதத்தால் பிராணிகளை மயங்கச்செய்து அவற்றை இரையாக்குகிறது, இந்த ஒணானினத்தில் உடும்பு சேர்ந்ததே, அதனை மலை ஒணான் என்பர். இதனை உடும்பு எனும் வரியில் காண்க. இவ்வினத்தில் சில அமெரிக்கா கண்ட காடுகளில் உள்ளன. இதற்கு மெட்டாகோ என்று பெயர் (The Mataco) என்பர். இதன் முதுகில் வட்டமான செதிள்களும் அம்முதுகின் நடுவில் நடுக்கட்டிட்டது போல் மூன்று பட்டைகள் காணப்படுகின்றன. இதற்குத் தலை சிறிது உடல் பெரிது, வாலும் கால்களும் குறுகியன. இது, பாலைவனங்களில் வளை தோண்டிக் கொண்டு அதில் வசிக்கிறது. இது மற்ற பிராணிகளுக்கு அஞ்சுவதில்லை. இதை யொத்த மற்றொரு பிராணியும் வட அமெரிக்காவைச் சேர்ந்த மெண்டோசா தீவிலிருக்கின்றது. அதற்குக் கிளாம்போரஸ் உரங்காடஸ் என்று பெயராம். இது (15) அங்குல நீளமுள்ள குறுகிய பிராணி. இதன் கால்களில் நீண்ட பாதங்களுண்டு. இதன் தோல் செதில்களைப் பெற்றுக் கனமாய் ஒழுங்காக முதுகை மூடிக்கொண்டு இருக்கும். அதன் விளிம்பில் குஞ்சம்விட்டதுபோல் மயிர்க் குச்சுகளிருக்கின்றன. இதற்கு வால் குச்சுபோல் நீண்டிருப்பதால் வாலினால் உடலின் மீதுள்ள தூசுகளைத் துடைத்துக்கொள்ளும் இது பூமியில் வளை தோண்டிக் கொண்டு பூச்சிகளைத் தின்று ஜீவிக்கும். (இயற்கை அற்புதம்). எறும்புத்தின்னி : இது, தென் அமெரிக்கா பிரேசில் நாட்டிலுள்ளது. இது கரடியைப்போல் மரமேற வன்மை பெற்ற வளைந்த நகங்கொண்டது. இம்மிருகத் தின் வாலிலுள்ள மயிர்கள் கூரிய முட்கள் போல் அடர்ந்து நுனி அழுந்திக் கூர்மையாயிருக்கிறது. அவ்வாலினால் புற் றுக்களைத் தோண்டி எறும்பு, செல் முதலியவற்றை ஆகாரமாக்குகிறது. சிலந்திப் பூச்சிகளின் பேதம் : (28) இவை வாதத்தில் (7), பித்தத்தில் (7), சிலேஷ்மத்தில் (7), சங்கீரணத்தில் (7). வாதச்சிலந்தி (7) வகை, பீதச்சிலந்தி, குமுதச்சிலந்தி, மூலவிஷச்சிலந்தி, ரத்தச் சிலந்தி, சித்திரச்சிலந்தி, சந்தானிகச்சிலந்தி, மேஜகச்சிலந்தி, பித்தச்சிலந்தி (7) வகை. கபிலாசிலந்தி, அக்னிமுகச்சிலந்தி, பீதச்சிலந்தி, பதுமச்சிலந்தி, மூத்திரச்சிலந்தி, சிவேதச்சிலந்தி, கறுப்புச்சிலந்தி, சிலேஷ்மசிலந்தி (7) வகை, பாண்டுச் சிலந்தி, ரத்தபாண்டுச்சிலந்தி, வண்டுச்சிலந்தி, பிங்கச்சிலந்தி, திரிமண்டலச்சிலந்தி, துர்க்கந் தச்சிலந்தி, சித்திரமண்டலச்சிலந்தி என்பர். சங்கீரணச்சிலந்தி (3) வகை அவை காகச்சிலந்தி, அக்னிபதச்சிலந்தி, லாஜவர்ணச்சிலந்தி, வைதேகிச்சிலந்தி, ஜாலமாலினிச்சிலந்தி, மாலாகுணச்சிலந்தி, சுவர்ச்சச்சிலந்தி என்பன, இந்தச் சிலந்தி களுக்கு விஷம், சுவாசம, பல், மலம், மூத் திரம், சுக்லம், வாய், வாய்நீர், ஸ்பரிசம் எனும் (8) இடங்களில் உண்டாம். இவை மனிதர்மீது படில் எல்லா துர்க்குணங்களுமுண்டாம். |
மூஞ்சூறு | இது உருவத்தில் எலியைப் போல இருக்கும் ஒருவிதச் சாம்பல் நிறமுள்ளது. இதன் கால்கள் குட்டையாயும் முகம் சற்று நீண்டு பன்றியின் முகமொத்துத் துதிக்கைடோல் அசையக்கூடியதாயு மிருக்கும். இது இரவில் ஓடித்திரியும். இதன் கண்கள் சிறியவை. இதனிடம் சத்துருக்களை யோட்ட ஒருவித நாற்றமுண்டு. அதனால் பூனை முதலியன இதனை விரும்பா. |
மூடகர்ப்பம் | மூடவிஷ்டம்ப கருப்பம் காண்க. |
மூடன் | ஒரு தயித்தியன். வேதியச் சிறுமி ஒருத்தியைத் துன்புறுத்தி நந்தி, கங்கை இவர்களால் மோட்சமடைந்தவன். |
மூடவிஷ்டம்ப கருப்பம் | கருப்பிணி மேடு பள்ளங்களில் படுப்பதாலும், அபானவாயுவின் விகுணத்தாலும், பிரசவகாலத்துப் பலவிதமாகப் புரளுவதாலும் சிசுவின் சிரம், கை, கால், இடந்தப்பி வேறிடத்திற் சிக்கும். இதனால் பிண்டம் வெளிப்படாது வருத்த முண்டாம். இதுவே மூடகர்ப்பம். யோனித்தானத்தில் ஒரு காலும், குதத்தானத்தில் ஒரு காலும் சிக்கிக்கொண்டு பிரசவ முகங்காணாது ஸ்தம்பிப்பது விஷ்டம்ப சுருப்பமாம். (ஜீவரட்.) |
மூடுபனி | 1, பகற்காலத்தில் வெப்பத்தால் பூமி சூடடைய அதிலிருந்து எழுந்த ஆவி உஷ்ணமடைகிறது இது இரவு எறவேறக் குளிர்ந்து நீர்கொண்ட மேகத்தைப் போல் பரிணமிக்கிறது. 2 சற்று உறைந்த நீர்த்திவலை பூமிக்கு அருகாக வரும்போது பூமிக்கருகிலுள்ள ஆகாயம் பூமியினும் குளிர்ந்திருத்தலால் புகைபோல் பூமியைக் கவிந்து கொள்ளு கிறது. இது பெரும்பாலும் இரவுக்கு முன்னும் பின்னுமாக உண்டாம். சூரிய உதயத்தில் மறைந்து போம். |
மூட்டுப்பூச்சி | இது பேனையொத்தது. இது இரத்தத்தை யுறுஞ்சிச் சீவிப்பது. அழுக்கினால் பிறப்பது. இவ்வகையைச் சார்ந்தது மரமூட்டுப் பூச்சி. இதுவும் பேனையொத்தது. இதுவும் இரத்தங் குடிப்பது, மூட்டுப்பூச்சி போலிருக்கும். மோட்டுப்பூச்சி யென்னும் சொல்வதுண்டு. |
மூதானந்தம் | கயலையொத்த விழியினை யுடையாள் தன் கொழுந னோடு இறந்து பட, அகன்ற வழியிடத்துப் போவார் உண்டு அதிசயித்துச் சொல்லிய துறை, (2) கடுவினையாளன் தன்மேற் பகைவருடைர் கூரிய அம்பு அழுந்தத் தான் நினைவந்த வினையை முடிவு செய்யானாகி இறத்தலும் மூதானந்தம் என்ற துறையாம். (பு வெ. பொதுவியல்.) |
மூதின் முல்லை | கொல்லும் வேவினையுடைய வீரர்க்கல்லது அந்த மறக்குடியில் மடப்பத்தினையுடைய அரிவைமார்க்கும் சினத்தைச் சிறப்பித்த துறை. (பு. வெ. வாகை.) |
மூதெயினனார் | கடைச்சங்கமருவிய ஒரு புலவர். |
மூதேவி | 1, இவள் முதலில் ஆதிசக்தியினிடந்தோன்றி இரண்டாமுறை திருப்பாற்கடவிற் பிறந்தவள். இவள் காளாஞ்சன நிறமும், சர்ப்பா பரணமும், கழுதை வாகனமும் உடையவள். (சுப்ரபேதம்.) 2. மூத்தாளைக் காண்க, கணவன் துப்பிரதன் எனவும் பாதாபுத்திருப்பன் எனவுங் கூறுவர். |
மூதேவிவாழிடங்கள் | அரசு நீழல், விளா மரத்தடி, விளக்கினீழல், மனிதர் நீழல், இரவு, ஆசாரமில்லாத வேதியனீழல், உண்ட நீர்ச்சேடம், ஆடை தோய்த்தநீர், விளக்கு மாற்றின் புழுதி, மயிர்ப்புழுதி, கழுதை, நாயின் புழுதி, வெந்தசாம்பல், வேகாக்கரிப் புழுதி, ஆட்டுத் தூசு இவை முதலியன. (அண்ணா~சத.) |
மூத்தாள் | பாற்கடலிற் பிறந்தவள். இவள் ஆன்மாக்களுக்குச் சோம்பல் முதலியன வருவிப்பவள். வருணன் தேவியென்பர். இவள் இலக்குமணர் வனவாசஞ் செய்கையில் கங்கைக் கரையில் வந்து உறக்கம் உண்டாக்க, இலக்குமணர் இவளை நோக்கி வனவாசத்திற்குப் பிறகு வருக என, அவர் கட்டளைப்படி (14) வருஷம் பொறுத்து வந்தவள். இவளுக்கு வாகனம் கழுதை. ஆயுதம் துடைப்பம். கொடி காகம். |
மூத்திரகிரிச்சரரோகம் | இது அதிக வருத்தத்துடன் மூத்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விழச்செய்வது. இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷகிரிச்சரம் என நான்கு வகைப்படும். இவைகளை வெடியுப்புத் திராவகம், நவச்சாரக்குழம்பு, மகாவசந்த குசுமாகர மாத்திரை முதலியவற்றால் வசஞ்செய்யலாம். (ஜீவரட்.) |
மூத்திரதோஷம் | இது மூத்திரத்தால் உண்டாம் தோஷத்தால் பிறக்கும் நோய். “இது வாதவஸ்தி, வாதகுண்டலி, வாதாஷ் டீலம், மூத்திராதீதம், மூத்திரச் சடாம், மூத்திரோச்சங்கம், மூத்திரக்கிரந்தி, மூத்திர சுக்லம், மூத்திரவிட் விகாதம், மூத்திரவுஷ்ணவாதம், மூத்திரக்ஷயம், மூத்திர சாதம் எனப் பலவாம். இவற்றுள் வாதம் வஸ்தி, வாதகுண்டலி, வாதாஷ்டலம் எனும் மூன்றிற்கும் வாயுவே அரசனாம். மூத்திரதீதம், மூத்திரசடாம் இவ்விரண்டிற்கு வாதபித்தங்களே அரசர்களாம். மற்றையவற்றிற்குப் பித்த கபங்களே அரசர்களாம். |
மூன்றாநாள் | வீஷ்மர் தம் சேனைகளைக் காருடயூகம் வகுக்கத் திட்டத்துயம்மன் தன் சேனையைச் சத்திரயூகமாக வகுக்க வீஷ்மர் பாண்ட வருடன் போரிடுகையில் துரியோதனனை மூர்ச்சையடையச் செய்தனன். அதனால் வீஷ்மர் துரியோதனனை மூர்ச்சை தெளிவித்துப் பாண்டவர் சேனை களைக் கொல்லக் கிருஷ்ணமூர்த்தி கோபித்துச் சக்கரமெடுக்க வீஷ்மர் தேரினின்று இறங்கித் துதிக்க அருச்சுனன் கண்ணனைத் தேரின்மீது ஏறவேண்டக் கண்ணன் தேர்ஏற அருச்சுநன் பகைவர் படையைக் கொல்லுகையில் சூரியன் மறைந்தனன். |
மூன்றாம்பிறை | பங்குனியும், சித்திரையும், தென்கோடுயரவேண்டும். வைகாசி முதல் மார்கழி வரை வடகோடுயர வேண்டும். தையும் மாசியும் சமனாக இருக்கவேண்டும். இல்லாவிடில் கலகமும் பஞ்சமும் உண் டாகும். பின்வரும் வெண்பாவைக்காண்க. மீனாடு தெற்குயா மிக்கெட்டுமே வடக்காம், தான் மகா கும்பஞ் சரியாக மானே கேள், சொன்னபடி சோம னிரானெனி. லோகோன் மடிவன், அன்ன மரிதாய் விடும். |
மூப்பன் | உழவர், இடையர், அளவர், அம்பலக்காரர், குடுமி, பள்ளர், பறையர், திருவனந்தபுரத்துத் தண்டான், சேனைக்குடியர், சேணியர், சாலியர், சாணார், வலையர் முதலியோர் பட்டப் பெயர். (தர்ஸ்டன்.) |
மூருசி | பிருடியின் மனைவி. பிருடியைக் காண்க. |
மூர்க்க நாயனார் | இவர் தொண்டை மண்டலத்தில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் அவதரித்துச் சிவனடியார்க்கு அமுது படைக்கும் நியமம் பூண்டு வருகையில், செல்வங் குறைந்து வருதல் கண்டு பொருள் இலாமையால் சூதாடிவென்று அந்தப் பொருள் கொண்டு தொண்டு செய்து வேறு சூதாடுவாரின்மையால் பல தலங்களுஞ் சேவித்து அங்குச் சூதாடி வென்று அப்பொருளை அடியவருக்கிட்டுக் கும்பகோணஞ் சென்று சிவமூர்த்தியைத் தரிசித்துச் சூதாடி முன் தாம் தோற்பது போற் காட்டிப் பின் அவர்களைத் தோற்பித்துப் பொருள் பெற்று அப் பொருளைத் தாம் பெறாமல் பரிசனங்களால் எடுப்பித்துச் சிவனடி யார்க்கு அன்னமிட்டுத் தாம் கடைப்பந்தியில் இருந்து அன்னம் புசித்து வருவர். தாம் சூதாடி வெல்கையில் மாறு பேசுவரேல் அவர்களைக் கையில் இருக்கும் சுரிகையால் குத்துங் காரணத்தால் மூர்க்கர் எனப் பெயர் பெற்றுச் சிலநாளிருந்து முத்தியடைந்தனர். |
மூர்க்கன் | இது பாம்பின் வகைகளில் இதற்கு கொம்பேறி மூர்க்கன், சாணாமூர்க்கன், பனையேறி எனவும் பெயர். இது மரங்களின் மீதிருந்து தொந்தரை செய்வது. |
மூர்க்கருஷி | ஒரு இருடி, சிவனடியவர். |
மூர்சாரோகம் | ஆகாயம் பலவண்ணமாகக் காணப்பட்டு மூர்ச்சை யுண்டாம், மார்பு வலி, கடுக்கல், பிரமை, தேகவெரிவு, தாகம், வியர்வு, சேராசேஷ்டை முதலிய குணங்களும் பெற்றிருக்கும். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷம் முதலியனவற்றை விளக்கும் இதனை மகாவிஷ முஷ்டித்ரைவாதிகளால் வசமாக்கலாம். |
மூர்த்தம் | 1 பூமி, நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற சிவபெருமானது எட்டுவடிவங்கள், |
மூர்த்தாண்டான் | சிவகணத் தலைவன். |
மூர்த்தி | தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமாரி. இயமன் தேவி. தருமப்பிரசாபதியின் தேவி யெனவுங் கூறுவர். இவளிடம் விஷ்ணு நரநாராயணராக அவதரித்தனர். |
மூர்த்தி நாயனார் | இவர் பாண்டி நாட்டில் மதுராபுரியில் வைசியர் குலத்தில் அவதரித்தவர். இவர் நாடோறும் சோமசுந்தரக்கடவுளுக்குச் சந்தனக் காப்பிடச் சந்தனமரைத்துக் கொடுத்து வருவாராயினர் இவ்வகையிருக்கையில் கருநாடக தேசத்தரசன் பாண்டியனை வென்று அந்நாட்டைக் கவர்ந்து சமண சமயத்தவர்க்கு உட்பட்டு அந்நாட்ட வரையும் அச்சமயத்தவர்கட்கு உட்படுத்த எண்ணி நாயனாரை அவ்வழிப் படுத்த, நாயனார் சந்தனக்கட்டை வாங்குங் கடைகளில் சந்தனக்கட்டை கொடாதிருக்கக் கட்டளையிட்டனன். இதனால் நாயனார் மனம் வருந்திச் சந்தனக்கட்டை கிடையாவிடினும் அதனை யுரைக்குங் கைக்கு முட்டில்லையெனத் தேறிச் சந்தனக்கல்லில் தமது கரத்தை அதிலுள்ள மூளை யொழுகும்வரையில் உரைத்தனர். சிவமூர்த்தி இவரை நோக்கி, ‘அன்பனே இவ்வகை புரியாயல், உனக்கு இடுக்கண் செய்தவன் மாள்வன்; ” அரசனாக இருந்து சைவசமயத்தை வளர்த்து நம் உலகடைக’ என்று திருவருள் புரிந்து மறைந்தனர் சந்தனம் உரைத்த கையும் வளர்ந்தது. மறுநாள் அரசன் இறக்க, மந்திரியர் அரசனுக்குச் செய்வகை செய்து புத்திரனில்லாமையால் யானையைக் கண்கட்டி விட, அது சொக்கநாதர் சந்நிதியில் இருந்த மூர்த்தி நாயனாரையெடுத்து முடியிலிட்டுச் சென்றது இவர் சொற்படி மந்திரியர் விபூதி ருத்ராக்ஷமே திருமுடிசூட்டும் திரவியமாகக் கொண்டு முடிசூட்டினர். இவ்வகை மூர்த் திகாயனார் நெடுங்காலம் அரசாண்டு முத்தியடைந்தனர். |
மூர்த்திசாதாக்யம் | வித்தையெனும் பெயருடைய இச்சாசத்தி, சுத்தகுணமான கலையைப் பொருந்தலால் மூர்த்தியெனும் பெயரடைந்து காணப்பட்ட வடிவையுமுடைத்தாதி காலாக்னிக் கொத்த ஒளி பெற்று இலிங்கவுருவடைந்து அதன் ஊர்வபாகத்தில் ஒரு திருமுகமும் இச்சாஞான கிரியைகளெனும் திரிநேத்ரங்களும், கண்டிப்பற்ற வடிவும் பெற்றிருப்பது. (சதாசிவ.) |
மூலகன் | இக்ஷவாகு குலத்து அச்மசன் குமாரன். பரசிராமரால் அழிந்த சூரியவம்சம் தோன்றுவதற்கு மூலமாயிருந்த படியால் இவனுக்கு மூலகன் எனவும், பாசிராமரால் அழிவுநேராதபடி பெண்கள் இவனைக் காத்திருந்ததால் நாரீகவசன் எனவும் பெயர் பெற்றவன். இவன் குமாரன் தசரதன். (பாகவ.) |
மூலங்கீரனார் | இவர் பாவையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். பேய்களை வருணிப்பதில் வல்லவர். முண்முருக்கின் நெற்றைப் பேயின் கைவிரலுக்கு உவமை கூறியது வியக்கத்தக்கது. சோழநாட்டின்கணுள்ள திருச்சாய்க்காட்டை (சாயாவனத்தைப்) புகழ்ந்து பாடியுள்ளார். இவர் பாடியது (நற். 73ம் பாட்டு,) |
மூலத்திரிகோணம் | சூரியனுக்குச் சிங்கமும், சந்திரனுக்குக் கர்க் கடகமும், செவ்வாய்க்கு மேஷமும், புதனுக்குக் கன்னியும், குருவுக்குத் தனுசும், சுக்கிரனுக்குத் துலாமும், சநி ராகுக்குக் கும்பமும், கேதுக்குச் சிங்கமும், குளிகனுக்கு மீனமும் ஆகும். |
மூலன் | திருமூலநாயனாரைக் காண்க. |
மூலம் | (10) கண்டங்கத்திரிவேர், சிறுவழுதுணைவேர், சிறுமல்லிவேர், பெருமல்லி வேர், நெருஞ்சிவேர். இவை சிறுபஞ்ச மூலம். வில்வவேர், பெருங்குமிழ்வேர், தழுதாழைவேர், பாதிரிவேர், வாகைவேர் இவ்வைந்தும் பெரும்பஞ்சமூலம் என்பர். ஆக இவை பத்தும் தகழல மெனப் பெயர் பெறும். |
மூலரோகம் | இது ஆசன வளையங்களில் கிழங்கின் முளைகளைப் போலவும் வேர்களைப் போலவும் மாம்ச முளைகளைப் பெற்றிருப்பது. இது சகசமூலம், உத்தரசமூலம், சுஷ்கமூலம், ஆர்த்திரமூலம், வாதமூலம், பித்தமூலம், சிலேஷ்மமூலம், தொந்த மூலம், திரிதோஷமூலம், ரத்த மூலம், ஆசாத்யமூலம் எனப் பலவாம். இவைகளைச் சூரணம், லேகியம், சந்தகவடகம் இவைகளாலும் க்ஷத்ர, க்ஷாராகனிகளாலும் வசமாக்கலாம். (ஜீவரட்,) |
மூவன் | இவன் சிற்றரசன். பரிசு தராமையின், பெருந்தலைச் சாத்தனாரால் இகழ்ந்து பாடப் பெற்றவன். (புற நா. 209.) |
மூவாயிரவர் | சூரபன்மன் குமாரர். இவர்கள் விஜயன் எனும் இலக்கவீரனால் கொல்லப்பட்டவர். |
மூவேந்தர் | 1. சேர சோழ பாண்டியர். இவர் தொன்று தொட்டு வந்த தமிழ் நாட்டரசர். இவர்களின் தசாங்கமாவன: முறையே மலை;கொல்லி, நேரி, பொதிகை, நாடு; குடநாடு, புன்னாடு, தென்னாடு, நதி; பொருனை, காவிரி, வைகை, பதி; கருவூர், உறையூர், மதுரை, முரசு; மங்களம், வெற்றி, கொடை, கொடி; வில், புலி, மீன். ஊர்தி;கனவட்டம், பாடலம், கோரம். மாலை; பனை, ஆத்தி, வேம்பு. 2. அச்சுதகளப்பாளன் தளையிட்டபோது பாடியது. “தினைவிளைத்தார் முற்றந்தினை யுணங் குஞ் செந்நெல், தனைவிளைத்தார் முற்றமது தானாம் கனைசீர், முரசுணங் கச்சங்குணங்கு மூரித்தேர்த் தானை, அரசுணங்கு மச்சு தன்முற் றத்து. ” இது சேரன் கூற்று. “அரச குலதிலக னச்சு தன் முற்றத்தில், அரச ரவதரித்த வந்நாள் முரசதிரக, கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை, வெட்டிவிடு மோசை மிகும். ” இது சோழன் கூற்று. “குறையுளா செங்கிரார் கூர்வேலி ராமன், நிறையாறு திங்களிருந்தான் முறைமையால், ஆலிக்குந் தானை யலங்குதா ரச்சுத முன், வாலிக் கிளையான் வரை. ” இது பாடிய பின்பு பாண்டியனுக்கு ஒரு விலங்கு கூடப்போட அப்பொழுது பாடியது. ”குடகர் குணகடலென் சார்த்தார்குடகர்க், கிடவர் வடகடவென் பார்த்தார் வட கடலர், தென் கடலென் சார்த்தார்தென் றில்லையச்சுதா நின்றன், முன் கடைநின் றார்க்கு முரசு. ” தமிழ் நாவலர் சரிதை, 3. பழையனூரார் பழிதீர்த்த தீக்குழி அவியாதெரிய மூவேந்தரும் வந்து பார்த்துப் பாடியது. இதுசேரன் : யோவரே காராளர் யாவரிணை யாவார், நாவலோ நாவலோ நாவலோ கோவைப், பொருப்பா வளித் தார்க்குப் போதுமே யுண்மை, நெருப்பா லமைத்தார்க்கு நேர். ” இதுசோழன் : எல்லை பலகடந் தெங்கும் புகழ்பூத்துத், தொல்லை மனுக்காக்கத் தோன்றிற்றே கொல்லை, வழியிலொரு பேய்நின்று வஞ்சனையாற் செய்த, குழியி லெழு செந்தீக் கொழுந்து. ” இது பாண்டியன் : பிழைத்தாரோ காராளர் பேய்மகள் சொற் கேட்டுப், பிழைத்தார்க ளல்லர் பிழைதீர்ந்தார் பிழைத் தார்கள், எல்லாருங் காண வெரியகத்தே மூழ்கினார், எல்லாரு மென்று முளர்,” |
மூஷிகம் | 1. திருவநந்தபுரம், கொச்சி ராச்சியங்களுக்கு வடக்கேயுள்ள நாடு, 2. சௌபரியின் மனைவியைக் கைப்பற்றி அவரால் மூஷிகமாகச் சபிக்கப்பட்டுக் கடையில் விநாயகர் வாகனமானவன். |
மூஷிகாதன் | கத்ருதநயன், நாகன். |