அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
முகடி

மூதேவிக்கு ஒரு பெயர்.

முகதூஷிக ரோகம்

பிள்ளைகளுக்கு வாயில் இலவமுள்களைப் போலவே முன்ளுகளை உண்டாக்குவது. இதனை நாய்முள் என்பர். (ஜீவ).

முகத்துவாரம்

ஆறு, சமுத்திரத்தில் கலக்கும் இடத்திற்கு முகத்துவாரம் என்று பெயர், (பூகோளம்)

முகமத்நபி

இம்மஹான் அரப் நாட்டின் தலைநகராகிய மக்காவின் கண் கி பி. 571ல் ஆகஸ்டு (29)ந் தேதி திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் (யானையாண்டின் ரபீ உல் அவ்வல்மாபிறை 9ல்) அத் தேயத்தின்கண் விளங்கிவந்த மஹாசிரேஷ்டம் வாய்ந்த கோத்திரமாம் குறைஷிக் குலத் திலே அப்துல் முத்தலிபின் இளைய குமாரராகிய அப்துல்லாவுக்கு, அவரது பாரியாள் ஆமினா என்பவரின் உதரத்தினின்று உதயமாயினார். இம்மஹானது அவதாரத்திற்கு அவ்வரப்நாடு மட்டுமல்லாது, ஏனைய பகுதிகளுங்கூட அஞ்ஞான மென்னும் அந்தகாரத்தில் அதிகம் ஆழ்ந்து கிடந்தன வென்பதற்கு அவ்வத்தேய சரித்திரங்கள் பகர்ந்து கொண்டிருக் கின்றன. இப்பெரியாருக்கு (5) நூற்றாண்டுகளுக்கு முன்னே தான் இயேசு கிறிஸ்து ஆசியாவின் மேற்குப் பகுதியிலும், அவருக்கு (5) நூற்றாண்டுகளுக்கு முன்னே தான் கௌதமபுத்தர் ஆசியாவின் கிழக்குப் பகுதியிலும் அவதரித்து நல்லுபதேசம் புரிந்து சென்றிருந்தும், கி பி. 6 வது நூற்றாண்டில் எல்லா மேற்குத் தேயங்களும், எல்லாக் கிழக்குத் தேயங்களும் நாகரிகத்திலும், நல்லொழுக்கத்திலும், ஞானப் பிரகாசத் திலும் மிகத்தாழ்ந்து கிடந்தனவாதலின், அப்பொழு தொரு விசுவப் பொதுத்தீர்க்கதரிசி இத்தரணியின் உஜ்ஜீவிப்பின் பொருட்டே அவத ரிக்க வேண்டுவது அத்தியாவசியமாய்க் காணப்பட்டு விட்டது. ஆயின், ஒழுக்கவீனத்திலும், மடமைத்தனம் குடிகொண்ட இழிய பாமரத் தன்மை யிலும் அப்பண்டை உலகின் மத்தியபாகமாய் விளங்கிய அரப்தேயமே அத்தகைய தீர்க்கதரிசியின் அவதாரத்திற்குரிய சிறந்த பூபாகமாய்க் காணப்பட்டு வந்தது. முஹம்மதென்பார் கி. பி. 6 வது நூற்றாண்டின் இறுதியிலே அந்நாட்டின் கண் ஜனனமாகி, ஆண்டவனுக்குரிய ஏகேசுவர்க் கொள்கையையும், ஏசு சகோதர வாஞ்சையையும் எல்லோ ருக்கும் கரிசமானமாகவே எடுத்தோதத் தொடங்கினார். இவர் ஜனனமாகச் சில மாதம் முன்னரே இவரது தந்தை காலகதியால் தேசவியோசமாய்ப் போய்விட்டார். பிறந்து 6. வயதாகு முன்னரே அன்னை ஆமினாவும் ஆண்டவனடி சேர்ந்து விட்டார். ஆகவே, அன்னையும் பிதாவும் மற்ற அனாத முஹம்மதை அப்துல் முத்தலிபே பிறகு ஈராண்டுகள் மட்டும் போற்றி வந்தார்; அதன் பின் அப்பாட்ட னாரும் இறந்துபட்ட பின் பெரிய தந்தையாய் விளங்கிய அபூத்தாலியின் மீதே அவ்வனாதச் சிறுவரை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு வீழ்ந்து விட்டது. இப்பெரிய தந்தையார் அவ்வாலிபருக்கு வயது 25 ஆகும் வரை தம்மிடத்திலேயே வைத்திருந்து, ஷரம் (ஸிரியா) முதலிய பகுதிகளுக்குச் சென்று வர்த்தகம் செய்து வரும் முறையையும் கற்றுக் கொடுத்து வந்தார். பாலிய முதலே இந்த யுவர் வாய்மையுடைமை, தீமையின்மை, யோக்கியப் பொறுப்பு, ஒழுக்கப்பெருமை, நம்பிக் கைக்குரிய தன்மை முதலிய சற்குணங்களில் தலைசிறந்து விளங்கிய மையால், “அல் அமீன்” (சரியான நம்பிக்கைக் குரியவர்) என்னும் அழகிய பட்டத்தையும் அத்தேயமக்களால் வழங்கப்பெற்று, அம்மக்கமா நகரின் கண்ணே அதற்குமுன் 40 பிராயத்தை அடைந்து விதவையாய்ப் போயிருந்த கதீஜா வென்னும் பெரிய பணக்காரச் சீமாட்டியின் வர்த்தகத் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாதுசிரோ மணியின் ஷாம்தேய வியாபாரத்தில் நம்பிக்கையுடன் நடந்து நல்ல இலாபத்தையும் காண்பித்துத் தந்ததனால், அன்னவரது யோக்கியப் பொறுப்பிலும், வர்த்தக வாய்மையிலும், களங்கமற்ற ஒழுக்கத்திலும், பெருமதிப்புக் கொண்டு விட்ட கதீஜாப்பிராட்டியார் அன்னவரையே திருமணம் செய்து கொள்ளத் துணிவு கொண்டு விட்டார். ஒழுக்கவீனத் திற்கே சிறந்து விளங்கிய அவ் வரப்தேயத்தின்கண் தம்முடைய 25 வது பிராயம் வரை மஹாபரிசுத்தத்துடனே நடந்துவந்த முஹம்மதானவர் 40 பிராயம் நிறைந்திருந்த அவ்விதவையை மனமார மணந்து கொண்டு, தமது 50 வது பிராயம் வரை சம்பூரண சௌஜன்னியத்துடனே தான் இல்லறம் நடாத்தி வந்தார்; அதுகாறும் வேறொரு கன்னியையும் அப்பெரியார் மணந்து கொள்ளவில்லை. ஆகவே, அந்த கதீஜாப் பிராட்டியுடன் ஐக்கியப்பட்டு, அந்தச் சீமாட்டியின் ஐசுவரியங்களனைத்தையும் தான தர்மங்களிலே அதிகம் செலவிட்டுக் காலங்கழித்து வந்தார். அந்த விவாகத்திற்குப் பின் முஹம்மத் என்பார் வர்த்தகத்திலே ஈடு படாது, தனித்திருந்து தியானம் புரிவதிலும், தான தர்மம் செய்வதிலும், சமூக சேவை புரிவதிலும், இம்சிக்கப்பட்ட ஏழை எளியோர்களுக்கு உதவி செய்வதிலுமே காலங் கழித்துவந்தார். அப்படிப்பட்ட யோக நிஷ்டைகளிலெல்லாம் அடிக்கடி வானவர்கள் (மலக்குகள்) வந்து அவரது ஞானக்கண்ணுக்குப் புலனாவது வழக்கமா யிருந்துவந்தது. இவ்வுலக மக்களின் அஞ்ஞானத்தை நீக்கி, சுஞ்ஞானத்தைப் புகட்டு வதற்கும் இவர்களையெல்லாம் ஏக தெய்வத்தின் மக்களாகவே அமைப் பதற்கும், இவர்களுக்குள் ஏக சசோதரக் கொள்கையை நிலைநாட்டு வதற்கும் அவ்விறைவனாலேயே நல்வழியொன்று சாட்டப்பட மாட்டாதா வென்று அல்லும் பகலும் அனவரதமும் சதாசிந்தாகுலரா யிருந்து வந்தார்; இவ்வாறாக 15 ஆண்டுகள் மட்டும் கழிந்து வந்தன. அதன்பின் முஹம்மதுக்கு 40 வது பிராயம் நிகழ்ந்து வந்தக்கால் அம்மஹானுபாவர் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு, மக்காவுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஹிராவென்னும் ஒரு மலைப் பொதும்பருள்ளே தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து, அல்லும் பகலாக ஆண்டவனையே தியானம் புரிந்து வந்தபோது, அந்த மாதத்தின் 27 வது தினத்தன்று இரவிலே வானவர் ஜிப்ரீல் என்பவர் அவர் முன் தோன்றி மகாகண்ணியம் வாய்ந்த இப்பிரபஞ்ச கர்த்தாவின் திருநாமத்தின் உதவியைக் கொண்டு ஓதுமாறு கட்டளையிடப்பட்டார்; உடனே அந்தச் சிருஷ்டி கர்த்தாவின் அனுக்கிரஹத்தைக் கொண்டு முஹம்மது நபி ஞானோதயம் பெற்று ஓதக் கற்றுக்கொண்டார். அந்த நபிபெருமானார் தமக்குக் கிடைத்த ஞானோபதேசத்தை வெளியிலெடுத்துப் பிரசாரம் செய்யத் தயங்கிக்கொண்டே சில மாதங்கள் வரை காலம் கழித்து வந்தார். பிறகும் ஜிப்ரீல் என்னும் அந்தவானவர்மூலம், தமக்கருளப்பட்டிருக்கும் ஞானவிலாசத்தை வெளியிலெடுத்து அனைவருக்கும் போதிக்குமாறு ஆண்டவன் அறிவித்திருப்பதாக அறிவுறுத்தப்பட்டார். அப்பொழுதும் அப்பெரியார் இரகசியத்திலேயே முதல் மூன்றாண்டுகள் மட்டும் இஸ்லாமியப் பிரசாரம் செய்துவந்தார். மக்காவிலுள்ள குறைஷிகள் இவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டு இஸ்லாத்தில் சேர்ந்து வந்தவர்களையெல்லாம் எளனம் செய்து இம்சிக்கத் தொடங்கினார்கள். மறைமுகமாக முஹம்மத் நபி பிரசாரம் செய்து வந்ததனாலும் எதிரிகளின் இன்னல்களும் இடை யூறுகளும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வந்ததனாலும் முதல் மூன்றாண்டுகளில் சுமார் (40) மனிதர்களே இஸ்லாத்தில் சேர்ந்திருந்தார்கள். அவர்களுக்குள் பணக்காரர்களுட்பட ஏழைகளும் ஏட்டில் எழுதி முடியாவண்ணமெல்லாம் எதிரிகளால் சித்திரவதை செய்யப்பட்டும், உயிருடனே ஒரு சிலர் கொல்லப்பட்டும், அம்முஸ்லிம்களுள் ஒருவ ரேனும் இஸ்லாத்தைவிட்டுப் பிரிந்து விடவில்லை எனவே, அந்தக் குறைஷிகள் தங்களுடைய விக்கிரஹ ஆராதனைக்கும், வேறு பலதெய்வக் கொள்கைக்கும், தாங்கள் வகித்து வந்த மக்காவின் தலைமைப் பதவிக்கும் பேராபத்து விளைந்துவிட்டதெனக்கண்டு, இச்சன் மார்க்க முயற்சியை அடியோடு கல்லியெறிந்துவிடுவதே சாலச் சிறந்ததெனக் கொண்டு, அதற்குரிய ஏற்பாடுகளை யெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். இவ்வாறு அந்தக் குறைஷிகள் செய்துவந்த பல சாம பேத தான தண்டங் களாலெல்லாம் அம்முஸ்லிம்களை ஒறுத்துப்பார்த்தும் ஒன்றும் பலியாது போய்விட்டமைகண்டு, அம்மக்காவாசிகள் சில தூதர்களையனுப்பி நபிபெருமானுக்குப் பொன்னும், பெண்ணும், அரசபதவியுங் கூட அளிப்பதாகக் கூறினார்கள், இதற்கும் அந்தத் தீர்க்கதரிசி இணங்கி வராதது கண்டு, அவர்கள் அபூத்தாலிப்பிடம் சென்று, இந்த இயக்கம் இனி நிறுத்தப்படாவிடின் உள் நாட்டுக் கலகமே அதிகம் விளையு மென்று பயமுறுத்தினார்கள். அது சமயம் அபூத்தாலிப் வேண்டிக் கொண்டதற்கு நபிபெருமான், எதிரிகள் சூரியனைக் கொணர்ந்து தம் வலக்கரத்திலும், சந்திரனைக் கொணர்ந்து தம் இடக்கரத்திலும் வைத்தபோதிலும் தம்முடைய சத்திய சன்மார்க்கப் பிரசாரத்தை ஒரு சிறிதும் விட்டுவிட முடியாதென்றும், இம்முயற்சியில் இறுதிவரை வெற்றியே பெறாவிட்டால் தாம் மடிந்து தீருவதே ஷரத்தென்றும் உறுதிகூறினார். இவ்வாறு எல்லாம் ஒன்றும் பலியாதது கண்ட குறை ஷியரின் கொடுமை இன்னும் பன்மடங்கு மகா உக்கிரத்துடனே தலை விரித்தாடத் தொடங்கிற்று. ஆதலின், அவர்களுடைய இன்னல்களைச் சகிக்க இயலாது நபிப்பட்டம் வந்தபின் 5 வது ஆண்டில் 15 ஆண்களும் பெண்களும் சேர்ந்து செங்கடல் கடந்து அபிஸ்ஸீனியாவில் இருந்த நஜ்ஜாஷூ என்னும் மன்னனது பாதுகாப்பிற்குள் சென்று தங்கி விட்டார்கள். அப்பொழுதும் அவர்களைச் சும்மாவிடாது குறைஷிகள் சிலரை அந்த மன்னனிடம் அனுப்பி அம்முஸ்லிம்களைத் திருப்பிக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். ஆனால், அந்த நஜ்ஜாஷி மன்னன் வாதிப்பிரதிவாதிகளின் கட்சிகளைக் கேட்டுச் சன்மார்க்கர் களாகிய அம்முஸ்லிம்களைத் துன்மார்க்கர்களாகிய அந்தக் குறைஷியரி டம் திருப்பிக் கொடுப்பது முடியாதென்று மறுத்துவிட்டான். அதன்பின் சிறுகச்சிறுக 101 முஸ்லிம் ஆண் பெண்கள் வரை அந்த அபிஸ்ஸீனி யாவுக்கே சென்று புகலிடம் தேடிக்கொண்டார்கள். பிறகு அபூஜஹ்ல் என்னும் கொடிய துஷ்டன் நபிபெருமானை ஒரு நாள் உதிரம் சொரிய அடித்துவிட்ட செய்திகேட்டு முஹம்மத்நபியின் சிறிய தந்தையாகிய ஹம்ஜாவும் அந்த அபூஜஹ்லைப் பதிலுக்குத் தமது தனுஸைக் கொண்ட டித்துவிட்டு இஸ்லாத்திலே சேர்ந்து கொண்டார். இச்செய்திகேட்ட குறைஷிகளெல் லோரும் ஆத்திரமதிகம் கொண்டு விட்டார்கள். ஆதலின், அபூஜஹ்ல் உமரென்னும் வாலிபரை அழைத்து முஹம்மதைக் கொன்று விட்டுவந்தால் தக்க சன்மானம் அளிப்பதாகக் கூறினான். ஆனால், ஆண்டவனது நாட்டம் வேறுவிதமாயிருந்ததனால், முஹம்மதைக் கொல்லச்சென்ற அந்த உமரே (பிறகு உலகப்பிரசித்தி பெற்று இரண்டாவது கலீபாவாய் விளங்கியவர்) தீனுல், இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டுவிட்டார். இச்செய்தியும் கேட்டு அக்குறைஷியர் பட்ட அவதிக்கோர் அளவில்லை. அவ்விரோதிகள் எல்லாரும் சேர்ந்து கொண்டு முஹம்மத் நபியையும் அவரைச் சேர்ந்த முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதார் ஆகிய எல்லா பனூஹாஷிம் குடும்பத்தினரையும் ஒரு மலைக்கணவாய்க்குள்ளே அடைத்து மூன்றாண்டுகள் வரை ஜாதிக் கட்டென்னும் கட்டுப்பாட்டுக்குள்ளே ஒடுக்கிவைத்து விட்டார்கள். அந்த 3 ஆண்டு கழியும்வரை அவ்வடைபட்ட மக்கள் பட்டுவந்த பாட்டிற்கோர் அளவு சொல்லி முடியாது. இறுதியில் ஒரு சில மக்கா வாலிபர்களால் அக்கட்டுப்பாட்டுச் சீட்டுக்கிழித்தெறியப்பட்டு அடை பட்டிருந்தவர்க ளெல்லாரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அதன் பின் நபிப்பட்டம் வந்த 10 வது ஆண்டில் அபூத்தாலியும், கதீஜாப் பிராட்டியும் காலகதி யடைந்து விட்டார்கள், இதனால் நபிபெருமானுக்குப் பக்கபலமென்பது ஒரு சிறிது அம்மக்காவின் கண் தளர்வுறத் தலைப்பட்டது கண்டு எதிரிகளும் அதிகம் துள்ளத் தொடங்கிவிட்டார்கள். முஹம்மத் நபிதாயி பென்னும் மற்றொரு நகருக்குப் போந்து ஆங்கேனும் பிரசாரம் செய்யலா மென்றெண்ணிச் சென்றார்கள். அங்கிருந்தும், காவாலிகளால் கல்லாலெறியப்பட்டுக் காலில் உதிரம் சொரியத் துரத்தப் பட்டார். பிறகும் மக்காவுக்கே திரும்பி வந்து யாத்திரைக் காலங்களில் வெளியூர் களிலிருந்து அங்கு விஜயம் செய்யும் மனிதர்களை நோக்கி இஸ்லாத் தின் உபதேசம் புரிந்து வந்தார். அவர்களுள் ஒரு சிலர் செவிதாழ்த்து வதும், மற்றும் பலர் உதாசினம் செய்வதுமாகவே சிலகாலம் கடந்து வந்தது. ஒருமுறை மதீனாவிலிருந்து மக்கத்திற்கு விஜயஞ்செய்திருந்த அறுவர் மஹம்மத் நபியின் உபதேசத்தைக் கேட்டு இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார்கள், அடுத்த ஆண்டில் அவ்வறுவரும் மற்றோர் அறுவருடனே வந்து இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டார்கள். இது நபிப்பட்டம் வந்த 11 வது ஆண்டிலாகும். அடுத்த ஆண்டில் மதீனாவி லிருந்து 75 ஆண் பெண் முஸ்லிம்கள் மக்காவிற்கு வந்து நபிகள் நாதரை மதீனாவிற்கு வந்து விடுமாறும், அவர்களுக்காகத் தங்களுயிரையுங் கொடுக்கக் காத்திருப்பதாகவும் வாக்குறுதி செய்து கொடுத்தார்கள், என்ன நேரினும் இஸ்லாத்தைத் தற்காத்துக்கொள்ளாது விடுவதில்லை யென்பதே அவர்களுடைய பிடிவாதமாயிருந்து வந்தது. எனவே, நபி பெருமானும் அதற்கு இடங்கொடுத்து விட்டமையால் அபிஸ்ஹினியா வுக்குச் சென்று தங்கிய முஸ்லிம்களல்லாத ஏனையோரெல்லாம் சிறுகச் சிறுக அனேகமாய் மதீனாவுக்குச் சென்று விட்டார்கள். பிறகு நபிப் பட்டம் வந்த 13 வது வருட ஆரம்பத்திலே நபிபெருமானும் புறப்பட்டுச் செல்லலாமென்னும் ஆண்டவனது அருள் வாக்கு அனுப்பப்பட்டது. உடனே முஹம்மத்நபியும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்படச் சித்தமாகி விட்டார். இதற்கிடையில் எல்லா முஸ்லிம்களும் மதீனாவிற்குத் தப்பி ஓடிவிட்டார்களென்னும் ஆத்திரங்கொண்டு, முஹம்மத் நபியையும் அவ்வாறு ஓடவிடக் கூடாதென்று தீர்மானித்துக்கொண்டு அக்குறை ஷியர் ஒரு நாளிரவிலே அந்த முஹம்மத் நபியைக் குத்திக்கொன்று விடுவதென்றே ஏற்பாடு செய்து முடித்துவிட்டார்கள். இது தெரிந்து முஹம்மத் நபி அன்றிரவே தம் படுக்கையின் மீது அபூத்தாலியின் மைந்தர் அலீயென்னும் தமது எதிர்கால மருகரைப் படுக்கச் செய்து விட்டு நள்ளிரவிலே அவ்வீட்டைவிட்டுப் புறப்பட்டு அபூபகர் என்னும் தம்முடைய பிரதம சிஷ்யரை மட்டும் அழைத்துக்கொண்டு அவ்விரு ளிலே சென்று தௌர் என்னும் ஒரு குகைக்குள்ளே மறைவாகத் தங்கி விட்டார்கள், அவ்வாறு அந்தத் தீர்க்கதரிசி புறப்பட்டபோது அவ் வீட்டை வளைத்து முற்றுகை போட்டிருந்த எதிரிகளெல்லாரும் ஆண்டவன் சோதனையால் அயர்ந்து உறங்கிவிட்டார்களென்று சரித்திராசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், விடிந்தவுடன் விஷயம் தெரிந்து அவ்வெதிரிக ளனைவரும் எங்கெங்கும் ஓடித்தேடி னார்கள். தௌர்க்குகையின் வாயில் வரையுங்கூடச் சிலர் தேடிக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால், ஒருவரும் அதற்குள்ளே எட்டிப் பார்க்க எண்ணம் கொள்ளவில்லை, ஆதலின், எதிரிகள் ஏமாந்து மக்காவிற்குத் திரும்பியபின் 3 நாள் வரை அக்குகையினுள்ளே தங்கி யிருந்து 4 வது நாள் புறப்பட்டு மதீனாவிற்குச் சென்றார்கள், வழியிலும் ஆபத்தொன்று நேரும்போற் காணப்பட்டது; ஸுராக்கா என்னும் மக்கா வாசி முஹம்மத் நபியின் சிரத்தைக் கொய்துவந்து பரிசு பெறுவான் வேண்டித் துரத்திச் சென்றான். ஆனால், அவனுடைய குதிரை இடை வழியிலே பலமுறை இடறி வீழ்ந்து அவனையும் தள்ளிவிட்டதால் அந்த ஸுராக்கா வென்பவன் நபிநாயகத்தைக் கொல்ல மனந்துணியாது பயந்து அன்னவர்பால் மன்னிப்புப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான். பிறகு சுகமே நபிநாயகம் அபூபகருடனே மதீனா போய்ச்சேர்ந்தார்கள். இது நிகழ்ந்தது நபிப்பட்டம் வந்த 13 வது ஆண்டு ரபீஉல் அவ்வல் மாபிறை 8 ஆகும். இதுதான் நபிநாயகத்தின் சரித்திரத்தில் ஹிஜ்ரத் தென்று பிரபலமாகச் சொல்லப்படுகிறது; இதிலிருந்துதான் முஸ்லிம் களின் ஹிஜ்ரி வருடம் கணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்காவை விட்டு வடக்கில் 300 மைல்களுக்கப்பாலுள்ள மதீனாவுக்குச் சென்று ஆங்கிருந்த யூதர்களையும் ஏனையோர்களையும் சீர்திருத்தி வந்தக்காலும் குறைஷிகள் மட்டும் முஸ்லிம்கள் மீது வைத்த வர்மத்தைச் சிறிதும் மறந்துவிடவில்லை. இஸ்லாத்தை ஒழித்து விடுவான் வேண்டி 1000க்கு மேற்பட்ட குறைஷிகள் அம்மதீனாவின் மீது ஹிஜ்ரி வரையில் படையெடுத்துச் சென்றார்கள்; சிரியாவுக்குச் சென்று திரும்பிவரும் மக்கத்தவரின் வர்த்தகக் கூட்டத்தை அம்மதீனாவிலுள்ள முஸ்லிம்கள் தாக்கப்போகிறார்களென்னும் ஒரு பொய் வதந்தியைச் சாக்காக வைத்துக் கொண்டே அம்முஸ்லிம்களைத் தாக்கச் சென்றார்கள். நபி பெருமான் இவ்விஷயம் தெரிந்து தம்மிடமிருந்த சிறுவர்களும், வயோதிகர்களும், பலாட்டியர்களும் சேர்ந்த 313 ஆயுதபாணிகளல்லாத முஸ்லிம்களை அழைத்துக்கொண்டு, மக்காவிலிருந்து வரும் குறைஷிப் படைகளை நடுவழியிலேயே தடுக்கச் சென்றார்கள். ஆகவே, பத்ரென்னு மிடத்தில் அந்தக் கடும் போர் நிகழலாயிற்று. குறைஷிகள் ஆயுதபாணி களாகவும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களாகவும் இருந்து வந்ததனால், அளவிறந்த மமதையுடனே அலக்ஷியமாக யுத்தம் புரிந்தார்கள். ஆனால், நிராயுதபாணிகளாயிருந்த முஸ்லிம்களோ தங்கள் தெய்வத்தின் மீது வைத்த உறுதியின் காரணத்தால், இருந்தால் வெற்றி, இறந்தால் வீர சுவர்க்கமென்ற திண்ணிய எண்ணத்துடனே மிகத்திறமையாக யுத்தம் புரிந்து வெற்றிக்கொடி நாட்டினார்கள். ஆனால், பத்ரின் யுத்தகளத்தில் முழுத்தோல்வியுற்றுப் புறமுதுகுகாட்டி மக்காவிற்கோடிய குறைஷிகள் தங்கள் இனத்தவர்களையும், சுற்றுப்புறங்களிலுள்ள மற்றெல்லா வர்க்கத்தினரையும் திரட்டிக் கொண்டு 3000 வீரர்கள் வரை மதீனாவிற் கருகேவந்து பாடிவீடு செய்து கொண்டார்கள். அதுபோது முஹம்மத்நபி தம்முடைய 700 சிஷ்யர்களுடனே சென்று மிக்க தீரத்துடனே “உஹதென்னும் மலையடிவாரத்தில் யுத்தம் புரிந்து, அந்த எதிரிகளனை வரையும் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். ஆனால், நபிபெருமானின் ஒருசில வில்வீரர்கள் அம்மலைக்கணவாயின் வழியில் நின்று எதிரிகளை வரவொட்டாது தடுத்து வைத்தனர்; ஆயின், எதிரிகள் தோல்வியுற்றுக் கலைந்தோடுவதைக் கண்ட அவ்வில்வீரர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டுக் கீழேயுள்ள சமவெளிக்கு வந்து சேர்ந்தார்கள், இதனை யுணர்ந்த எதிரிகள் மீண்டும் வந்து அக்கணவாய் வழியே நுழைந்து அணிகலைந்து நின்ற அவ்வெற்றிபெற்ற முஸ்லிம்களை யெல்லாம் பின்புறமாகத் தாக்க ஆரம்பித்தார்கள். இதனால் மீண்டும் அப்போர் மிகக் கடுமையாக மாறி நபிநாயகமும் ஒரு பள்ளத்துள் வீழ்ந்து எதிரிக ளெறிந்த கவண் கல்லால் இரண்டொரு தந்தங்களையும் இழந்து விட்டார்கள்; அதுசமயம் முஹம்மத் இறந்துவிட்டாரென்ற ஒரு வதந்தியையும் எதிரிகள் கிளப்பி விட்டார்கள், ஆகவே, முஸ்லிம்களெல்லோரும் அவ்வெதிரிகளால் செவ்வனே தாக்குண்டு அல்லோலகல்லோலப் பட்டோடினார்கள். பிறகு நபிகள் நாயகமும் ஒரு சில முஸ்லிம்களும் சேர்ந்து எதிரிகளைத் தாக்கிக் கொண்டே ஆங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறிக் கொண்டார்கள். பிறகு எதிரிகளால் ஒன்றும் செய்ய இயலாது வாளா திரும்பி விட்டார்கள். இந்த உஹத் யுத்தத்தில் முஸ்லிம்கள் ஜயித்தார்க ளென்று கூறுவதற்கில்லை. எனினும் குறைஷிகளும் வெற்றி மாலை சூடி முஸ்லிம்களைத் தொலைத்துவிட முடியவில்லை, ஆதலின், அங்குச் சம்பூரண வெற்றிபெற முடியாது திரும்பிய குறைஷியர் மக்காவிற்குச் சென்று இன்னமும் தங்கள் குரோதபுத்தியை விட்டனரில்லை. ஆகவே, அவர்கள் அரப்நாடு முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து எல்லா அரபிக் கூட்டத்தினரையும் முஸ்லிம்களுக்கு விரோதமாகக் கிளப்பி விட்டார்கள் மதீனாவிலிருந்த யூதர்களையும் தூண்டிவிட்டனர்; முஸ்லிம்களுக் குள்ளும் ஒரு சிலரைக் கிளப்பிவிட்டு நயவஞ்சகமாக நடிக்குமாறு செய்துவிட்டனர் இவ்வாறெல்லாம் செய்து கொண்டு, குறைஷிகளும் எனைக் கூட்டத்தினர்களும் 24,000 படைகள் வரை திரட்டிக்கொண்டு ஹி 5ல் மதீனாவிற்கே சென்று அங்ககரைச் சூழ்ந்து முற்றுகை போட்டு விட்டார்கள். அந்நகரத்துக்குள்ளே யூதர்களும், முஸ்லிம் நயவஞ்சகர்களும் எந்த நேரத்திலும் எத்தகைய துரோகமும் செய்யக்கூடிய நிலையி விருந்தும், நபி பெருமான் தங்களுக்குக் கிடைத்த 3000 வீரர்களுடனே சென்றும் மதினாவைச் சூழ ஓர் அகழ்வெட்டிக்கொண்டு யுத்தத்திற்குச் சன்னத்தமாய் நின்றார்கள். எதிரிகள் அவ்வகழதை தாண்ட முடியாது 3 வார காலம் வரை வெளியில் நின்றே முற்றுகையை நடாத்தினார்கள். பிறகு ஒரு சில வீரர்கள் தங்கள் புரவிகளின் உதவி கொண்டு அவ்வ கழைத் தாண்டியும் தோல்வியே யுற்றார்கள். மீண்டும் சிலதினம்வரை அம்முற்றுகையை அகழிக்கு வெளியிலிருந்து நடத்திப் பார்த்தார்கள். இறுதியில் இறைவன் சோதனையாலேற்பட்ட கடும்புயலாலும், பெரு மழையாலும், குளிராலும் அந்த நேசப்படையினர் 24 ஆயிரம் பேர்களும் தங்கள் ஆயுதங்களையும் பிற தட்டுமுட்டுச் சாமான்களையும் எறிந்து விட்டு மக்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள். மேற்கூறிய நேசப் படையார் நிகழ்த்த வந்த அகழ்யுத்தமும் இவ்வாறு அக்குறைஷியருக்குச் சற்றும் பயனளியாமலே போய் விட்டது. அதன்பின் தக்க சமயத்தில், நபிநாயகத்துடன் செய்து கொடுத்திருந்த உடன்படிக்கைக்கு மாறாக மதீனாவிலிருந்த யூதர்கள் இந்த அகழ் யுத்தத்தின்போது எதிரிகளுக்குச் சார்பாக நடந்து கொண்டதன் நிமித்தம் பலர் அந்த நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஒரு சில குறும்பர்கள் மட்டும் யுத்த காலமுறைப்படி சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் பிறகு ஹி. 6ல் நபிபெருமான் 1400 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ்ஜு செய்யப் புறப்பட்டார்கள். ஆனால், மக்காவிற்கருகிலுள்ள ஹுதை பிய்யா வென்னுமிடத்தில் அந்தக் குறைஷியர் எதிர் கொண்டுவந்து அம் முஸ்லிமகளைத் தடுத்து விட்டார்கள். முஸ்லிம் வீரர்கள் யுத்தத்திற்குச் சித்தமாயிருந்தும், நபிகள் நாயகத்தின் கருத்திற்கிணங்கக் குறைஷியரின் சமாதானத்திற்கு கட்டுப்பட்டு ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டு திரும்பினார்கள். இவ்வாண்டு திரும்பிச்சென்று அடுத்த ஆண்டிலே தான் ஹஜ்ஜுக்கு வரலாமென்பது ஒரு நிபந்தனை; மக்காவாசி இஸ்லாத்தில் சேர்ந்து மதீனாவிற்கோடி விட்டால் அன்னவரை முஹம்மத் நபி திருப்பி யனுப்பிவிட வேண்டும்; ஆனால், ஒரு முஸ்லிம் காபிராயப் போய் மக்கா விற்கோடிவந்துவிட்டால் அவரைக் குறைஷிகள் திருப்பியனுப் பார் என்பது மற்றொருநிபந்தனை. இருகட்சியாரும் தத்தமக்குரிய வேறு வர்க்கத்தின ருடனே சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம். குறைஷிகளின் நண்பர்களை முஸ்லிம்கள் எதிர்ப்பது கூடாது,அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷியர் தாக்குவது தகாது என்பது பின்னுமொரு நிபந்தனையாகும். ஆனால் இந்த உடன்படிக்கையின் இறுதி நிபந்தனைக்கு மாறாகக் குறைஷியரின் நேசக் கூட்டத்தினர் சிலர் முஸ்லிம்களின் நேசக் கூட்டத்தினரை அகாரணமாகத் தாக்கிக் கஃபா வென்னும் தேவாலயத் திற்குள்ளும் துரத்திச் சென்று சிலரைக் கொலையும் புரிந்து விட்டார்கள்; அது சமயம் குறைஷிகளும் தங்கள் நண்பர்ளுடனே சேர்ந்து முஸ்லிம்களின் நேயர்களைத் தாக்கினார்கள். இதற்குச் சமாதானம் யாதெனக் கேட்டனுப் பியக்கால், அந்த மக்கா வாசிகள் ஒன்றும் திருப்திகரமான சமாதானம் கூறாது, முஸ்லிம்களைத் தத்துக்கழைத்தனர். ஹி. 8ல் நபிபெருமான் 10. 000 முஸ்லிம் வீரர் களுடனே புறப்பட்டுச் சென்று மக்கமா நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள். குறைஷிகள் எதிர்த்து நிற்வுமில்லை; வேறொன்றும் செய்து கொள்ளவும் முடியவில்லை. எல்லோருஞ் சிரங்குனிந்து வாளா இருந்து விட்டார்கள். ஆதலின், முஹம்மத் நபியும் ஒரு துளி இரத்தமும் சிந்தாது அந்நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அந்த ஜன்மப் பகைவர்கள னைவர்களையும் அடியோடு மன்னித்தும் விட்டார்கள். இதற்கிடையில் அரப்தேயத்தின் பற்பல பகுதிகளும் சுயமாகவே இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டே வந்தன. ஒரு சில முருடர்கள் மட்டும் சிறிது எதிர்ப்பிற்குப் பின்னே இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்கள். ஹி. 9ல் ஹஜ்ஜுக்குச் சென்ற முஸ்லிம்களால் நபி பெருமானின் அரச விளம்பரம ஒன்று அந்நகரின் கண் வாசிக்கப்பட்டது. அதன் மூலம் இனி விக்கிரஹ ஆராதனைக்காரர்கள் கஃபாவுக்கு ஹஜ்ஜு செய்ய அனுமதி யளிக்கப் பட்டார்கள் என்றும், அதற்கு முன் பண்டைப் பாமரமக்கள் செய்து வந்ததேபோல் இனி ஒருவரும் நிர்வாணத்துடனே அவ் வாலயத் தைச் சுற்றி வலம் வரக்கூடாதென்றும் தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பின்னர் ஹி. 9, 10ல் அரப்தேயத்தின் பற்பல பகுதிகளிலிருந் தெல்லாம் தூதுக் கூட்டங்கள் அடுக்காககாக வந்து தீனுல் இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டே வந்தன. பிறகு ஹி. 10ல் நபி பெருமான் 1,50,000 சிஷ்யாகளுடனே புறப்பட்டு மக்காவிற்குச் சென்று தங்களுடைய இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றிக் கொண்டார்கள். அது சமயம் அருகிலுள்ள அரபாத் மைதானத்தில் நின்று ஓரினிய இறுதிப் பிரசங்கமும் செய்து முடித்தார்கள் அதில் ஏக தெய்வக்கொள்கையும், ஏக சகோதாரக் கொள்கையும், ஸ்திரீகளின் உயர்வும், அடிமைகளின் மேன்மையும், அண்டை அயலாருடனும், பந்து மித்திரர்களுடனும் நடந்துகொள்ள வேண்டிய முறையும் அதிகம் வற்புறுத்திக் கூறப்பட்டன, கொலை, களவு, காமம், கள், சூது, அனாதைக் குழந்தைகளின் பொருளை அபகரித்தல் ஆகியவற்றைப் பற்றியும் அழகாக வற்புறுத்தப்பட்டன. இறுதியாக, ஹி. 11ல் ரபீஉல் அவ்வல் மாதம் முதற்றேதி யன்று (கி. பி. 632) நபிநாயகம் ஆண்டகையின் திருவடி நீழலையடைந்துவிட்டார்கள், முஹம்மதநபி இஸ்லாத்தைப் பாப்புவதற்காக எப்பொழுதுமே வாளின் துணையைக் கோரியதில்லை. ஆனாலும், எதிரிகள் இவரையும் இவர் போதித்து வந்த இஸ்லாத்தையும் இந்நாட்டிலில்லாது செய்துவிடுவான் வேண்டி எதிர்த்து வந்தபோது தான் தற்காப்பினிமித்தமாகவே யுத்தத்தில் இறங்கியிருகின்றார். ஒருபோதும் ஒருவரையும் இப்பெரியார் பலவந்தம் செய்து இஸ்லாத்தில் சேர்க்கவில்லை. இவர் தமது 25 பிராயம்வரை மஹா பரிசுத்தத்துடனே இருந்து பிறகு தம்மினும் 15 பிராயம் முதிர்ந்திருந்த ஒரு விதவையை முதன் முதலாக மணந்து கொண்டு முழுத்திருப்தி யுடனே தமது 50 வது வயது வரை சுகமாகக் காலங்கழித்து வந்தார். பிறகு 60 வது பிராயத்திற்குள் வேறு பல விதவைகளையும் விவாக விலக்குப் பெற்றவர்களையும் மணமுடித்துக் கொண்டார்; அபூபக்கரின் குமாரி ஆயிஷா ஒருவரே கன்னி மனைவியா வார். ஈதெல்லாம் சித்த விகாரத்தால் நிகழ்த்தப்பட்ட விவாகங்களல்ல; அகதியானவாகளை ஆதரிப்பான் வேண்டியும், ராஜதந்திர நிபுணத்து வத்தைக் கொண்டுமே செய்துகொள்ளப்பட்ட திருமணங்களாகும். இப்பெரியாரின் வாய்மை யைப்பற்றியும், சீலத்தைப்பற்றியும், அகப்புறப் பரிசுத்தத்தைப் பற்றியும் அவரை நேரில் கண்டவர்கள் அதிகம் கூறியிருக்கின்றார்கள். இஸ்லாம் : முஹம்மத் நபியால் நிலைநிறுத்தப்பட்ட மதத்திற்கு “இஸ்லாம்” என்பதே சரியான பெயராகும். இதனைப் பின்பற்றுவோர் “முஸ்லிம்கள்” என்றே அழைக்கப்படுவர். (முஹம்மதிய மார்க்கம், முஹம்மதியர்கள் என்னும் பிரமயாகங்கள் தருவனவை). ஏகதெய்வக் கொள்கையும் ஏகசகோதரக் கொள்கையுமே இம்மார்க்கத்தின் அடிப்படையாகும். இந்த இஸ்லாம், முஹம்மத் நபியால் உற்பத்தி செய்யப்பட்டதன்று. மனிதன் உற்பத்தியான காலமுதற்கொண்டே இத்தகைய “இஸ்லாம்” இறைவனால் இவ்வுலக மன்பதைகளுக் கெல்லாம் அடிக்கடி அறிவுறுத்தப்பட்டே வந்திருக்கிற தென்பது தான் இம்மார்க்க வேதம் (குர்ஆன்) கூறியிருப்பது, எல்லாத் தேயங்களுக்கும், எல்லா மக்களுக்கும், அவ்வக்காலத்திலே ஆண்டவனுடைய அடியார் களான தூதர்கள் (நபிமார்கள்) அனுப்பப்பட்டே வந்திருக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியக் கொள்கையாகும். ஆதலின், எல்லாத் தேயத்தின் தீர்க்கதரிசிகளையும், அவரவரின் வேதங்களையும் உண்மையென்றே முஸ்லிகள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள். மனிதன் இறந்தபின் மறு ஜன்மம் இல்லையென்பது இவர்களின் நம்பிக்கை, ஆனால் உலக இறுதிநாளன்று இறைவனால் இம்மன்பதை களெல்லோரும் நியாய விசாரணை புரியப்பட்டு, அவரவருடைய இகலோக நன்மை தீமை களுக்குத் தக்கவாறே பலாபலன்களைப் பெற்றுக்கொள்வார்ளென்பது இம்மார்க்கம் கூறியிருக்கும் இறுதி வாழ்க்கையாகும். மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை இவ்விகலோக வாழ்க்கையின் தொடர்பே யென்றும், அஃது இத்தரணியின் வாழ்க்கையினது பிரதிபிம்பமேயென் றுங் கூறுவர். அந்தச் சூக்குமலோகத்திலுள்ள ஆன்ம முன்னேற்றமானது அவ்வான்ம உலகவாழ்க்கையின் நகரமென்பது ஆன்மாக்களின் இக லோகப்பாபத்தை ஒழித்தற்குரிய பிராயச்சித்தமாகவே யிருகின்ற தல்லாது ஆண்டகையின் ஷாத்திரமாக அமைந்ததில்லை. அவரவரின் பாபத்திற்குரிய தண்டனை கழிந்து ஆன்மபரிசுத்தம் அடையப்பெற்ற வுடனே எல்லாப்பரிசுத்த ஆன்மாக்களும் மேன்மேலும் முடிவில்லாது சுகானந்த அபிவிருத்தியை அடைந்து கொண்டு செல்வதுதான் முஸ்லிம்களின் சுவர்க்கானந்தமாயிருக்கிறது. இத்தகைய நம்பிக்கை களுக்குரிய அனுஷ்டானங்கள் ஐவகைப்படும். 1. ஏகதெய்வத்திற்கு இணையில்லையென்று கொண்டு, அவ்வொருவனையே அல்லும் பகலும் அனவரதமும் இடைவிடாது வணங்கி வருதல் வேண்டும். ஏதெய்வத்திற்கு இணையாகவேனும், உறவாகவேனும், பிரதிநிதி யாகவேனும் அவதாரமாகவேனும் ஒருவரும் இத்தரணியில் காணப் படுவதில்லை. 2. ஆதலின், அவ்வொனவனையே தியானித்துத் தினமும் ஐந்துவேளைத் தொழுகைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும். வேறெந்த இறந்தவரை நாடியோ உயிருள்ளவர்ளைக் கோரியோ அல்லது வேறு பிராணிகளையேனும் ஜடப்பொருள்களையேனும் முன்னிட்டோ முஸ்லிம்கள் தொழுது பிரார்த்தனை புரியமாட்டார்கள், 3. சுமார் 52 ரூபாய்க்கு மேற்பட்ட முதலையுடைய ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஆண்டுக்கொருமுறை 100க்கு 2 1/2 விகிதம் ஏழைவரிகொடுத்து உதவ வேண்டும். இதனால் யாசகர்களைப் பெருக்கி வருவதென்பது கருத்தன்று. 4, ஆண்டுக்கொருமுறை ஏமலான் மாதத்தில் அம்மாத முழுதும் முஸ்லிம் ஆண் பெண் வயோதிகர் சிறுவர் அனைவரும் நோன்பு நோற்றல் வேண்டும். வைகறைக்குப் பின் சூரியாஸ்தமனம் வரை ஒன்றும் புசிக்காமலும், தாகத்துக்குத் தண்ணீரருந்தாமலும், மனைவியரை நெருங்காமலும் இருப்பதே இந்நோன்பின் முக்கிய இலக்ஷணமாம், 5. போதிய முதலும், துணையும், பலமும் உள்ளவர்கள் தங்கள் ஆயுளிலேயே ஒரு முறை மக்காவிற்குச் சென்று ஆங்குள்ள கஃபாவைத் தரிசித்து ஹஜ்ஜு செய்துவரவேண்டும். இந்தக் கஃபா வென்பது உள்ளே ஒன்றுமில்லாது நாற்புறச் சுவரையுடைய ஒரு வெறுக் கூடமேயாகும்; அதற்குள்ளே விக்கிரஹமேனும், சித்திரமேனும், அல்லது வேறெந்த அடையாளமேனும் வைக்கப்படவில்லை. பண்டைக் கால முதலே எகேசுவரக் கொள்கைக்காக நிர்மாணிக்கப்பட்ட தேவாலய மென்று இது கருதப்படுகிறது. இப்ராஹீம் நபியும் (ஆப்ரஹாம் தீர்க்க தரிசி) இஸ்மாயீல் நபியும் (இஸ்மவேல் தீர்க்கதரிசி) இவ்வாலயத்தைப் பழுது பார்த்து ஏகேசுவரக் கொள்கையை நன்கு நிலைநாட்டிச் சென்றார்கள். பிறகும் விக்கிரஹங்கள் 360 வரை காலக்கிரமத்திலே அதற்குள் புகுந்து விட்டன. எனவே, அவற்றையெல்லாம் அப்புறப் படுத்தி ஏசேசுவரக் கொள்கை இறுதியாக நிலேகிதத்திச் சென்றவர் முஹம்மது நபியே யாவார். இவருடைய சமாதிஸ்தலங்கூட மக்கத்தி லில்லை இவர் இறந்தபோது மதீனாவிலேயே ஆயிஷாவின் இல்லத்தினுளே புதைக்கப்பட்டிருக்கிறார். மக்காவிற்கு ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம் யாத்ரீகர்கள் பெரும்பாலும் மதீனாவிற்கும் சென்ற கோரி யையும் மரியாதையாகத் தரிசனம் செய்து வருகிறார்கள். முஸ்லிம் களுக்கு வியபசாரம், மதுபானம், சூது, பொருதல், வட்டி வாங்கல் கொடுக்கல், ஆதிய பாதகங்களெல்லாம் அடியோடு விலக்கப்பட்டிருக் கின்றன. (Contributed by an Islumita) இவர் மதக் கொள்கை : இம்மதத்தை இஸ்லாம் மதம் என்று சொல்லு வதுண்டு. இஸ்லாம் என்றால் பக்தி என்று அர்த்தம், இவர்கள் வேதத் திற்குக் குர்ஆன் என்று பெயர். இது ஜிப்ரையில் மூலமாய்க் கிடைத்த தாகையால் இதை தேவவாக்யம் என்பர். இந்த இஸ்லாம் மதத்தில் விசு வசிக்கத் தகுந்த இமாம் என்றும், ஆசரணக்கிரமமான தீன் என்றும் இரண்டு பாகங்கள் உண்டு. இமாம் ஆறுவிதம், 1. அல்லா, (தேவனிருக் கின்றான்) 2. தேவதூதர்களிருக்கின்றனர், 3. வேதமிருக்கின்றது, 4. நபி புருஷர்களிருக்கின்றார்கள், 5. இறந்த சரீரம் ஜீவித்து நியாயத் தீர்ப்பை அடையும், 1. நிஜமான அல்லா என்னும் கடவுளைத் தவிர வேறொரு வனில்லை, அல்லா ஹூ ராப் என்றும அவனுக்குப்பேருண்டு 2. ஜிப்ராயேல், மிகாயேல், அஸ்ராயேல், இஸ்ரபேல், என்னும் தேவ தூதர்கள் உளர். ஹிப்லீஸ் என்னும் சைதான் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதருடனும், இரண்டு தூதர்களிருந்து புண்ணிய பாவங்களை யெழுதிக்கொண் டிருப்பர். 3. தௌராத்து, ஜபூரு, இஞ்சிலு, குர்ஆன் என்பன வேத புத்தகங்கள், 4. 224000 நபீக்களிருக்கின்றனர். அவர்களில் ஆதாம், நோவா, ஆப்ரஹாம், மோசே, இசா, முகமத் என்பவர்கள் சிரேஷ்டர். 5. ஏழு மோக்ஷலோகங்களும், ஏழுநரகங்களும் உண்டு. புண்ணிய பாவங்கள் தராசில் வைக்கப்பட்டு நிறுத்தறியப்படும். 6. உலகமுழுதும் நஜிப் என்னும் விதிப்பிரகாரம் நடந்துவருகின்றது. ஆசரணக் கிரமமான தீன் நான்கு விதப்படும் (1) நமாஸ் செய்தல், (2) பிஷாக்கிரமம், (3) உபவாசம், (4) மெக்காயாத்திரை. 1 ஒவ்வொரு மனிதனும் ஸ்நாகஞ் செய்து ஒருநாளைக்கு ஐந்து முறை மெக்காவை நோக்கிய திசையாய்க். கிப்லாவைப் பார்த்து நமாஸ் செய்ய வேண்டும். முகமத்தியர்கள் சிலர் 99 மணிகளடங்கிய ஜெய மாலையை வைத்துக் கொண்டு முகமதின் (99) விசேஷகாமக்களை ஜெபிப்பர். 2. தம் ஆஸ்தியில் அரைப்பாகத்தைத் தேவனுக்கு அர்ப்பணஞ் செய்தல்; மற்றவைகளை உற்சாகத்துடன் தக்கவர்களுக்கு தானஞ் செய்தல், 3. ரம்ஜான் மாதத்தில் குர்ஆன் வந்த தாகையாலே அம்மாதம் முழுதும் பகற்காலத்தில் எச்சிலையும் விழுக் காமல் உபவசித்தல் வேண்டும். 4. இஸ்லாம் மதத்தன், மரணகாலத்திற் குள் மெக்காயாத்திரை தவறாமல் செய்தல்வேண்டும். முகமத்நபி மெக்காவிற்கு வெள்ளிக்கிழமை போனதினால் சுக்கிர வாரத்தில் அதிக பக்தியுடன் தேவனைத் தியானிபபர். இவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத்து செய்வார்கள். நமாஸில் பாத்யா என்னும் தேவனுடைய ஸ்தோத்திரம் விசேஷமானது. மதுபானஞ் செய்யக்கூடாது. கடவுளுக்கு அற்பிக்காத மாமிசம் புசிக்கக்கூடாது. 73 பேதங்களுள்ள முகமதியர் களில் ஒருவருக்கொருவர் வட்டி வாங்கல் கூடாது. முகமத் மதத்தினர் தவிர மற்றவர்களுக்கு மோக்ஷமில்லை யென்பர். இம்மதத்தவர்களில் ஆவியைச் சேர்ந்தவர்கள் ஷியா என்றும், அபூபேகரைச் சேர்ந்தவர்கள் சுன்னி என்றும் கூறப்படுவர். ஷியா மதத்தார் குர்ஆனை மாத்திரம் நம்புவார்கள். சுன்னிகள் குர்ஆனை யன்றி முகமத் கூறினவற் றையும் நியாயமாகக் கொண்டு நடப்பர்.

முகமன்

சுக்ரீவன் அடைக்கலம் புகுந்த மலை

முகம்

(14) அஞ்சிதம், அதோமுகம், ஆகம்பிதம், பிரகாபிதம, ஆலோ விதம், உலோவிதம், உத்வாகிதம், சமம், சௌந்தரம், துதம், விதுதம், பராவிருத்தம், பரிவாகிதம், திரச்சீனம் என்பன. இவற்றுள் வருத்த மாற்றாது இருதோள்மேல் தலை சாய்த்தல் அஞ்சிதம். தலைகுனிந்து பார்த்தல் அதோமுகம். சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழ் தலை யாட்டல் ஆகம்பிசம். அதிசயத்தால் சிறிதாய்த் தலையாட்டல் பிரகம் பிதம். ஆசையால் மலர்ந்த முகமாய் ஒருவனை அழைத்தல் ஆலோவிதம். சிந்தையால் ஒரு தோள் மேல் தலை சாய்த்தல் உலோபிதம், தலையண் ணாந்து பார்த்தல் உத்வாகிதம், தியானித்தல்போலத் தலையசையா திருத்தலேசமம். பூரித்த மகிழ்ச்சியால் மலர்ந்தமுகம் காட்டல் சௌந்தரம். வேண்டாததற்கு முகம் திருப்பலே பராவிருத்தம். மதத்தால் ஒருபுறம் சாய்ந்த தலையைச் சிறிதாய்ச் சுற்றியாட்டல் பரிவாகிதம். நாணத்தால் தலையாட்டலே திரச்சினமுகம்,

முகரகோணன்

சத்ரு குமரனாகிய நாகன்.

முகரோகங்கள்

மீன், எருமை மாமிசம், பன்றி மாமிசம், சைத்திய வஸ்துகள், முள்ளங்கிக்கிழங்கு, உளுத்தம்பருப்பு, தயிர், பால், காடி, லவணவஸ்து, கரும்பு ரசம், காந்திய அன்னம், இவைகளை இடை விடாது விசேஷமாக அகாலத்தில் புசித்தலினாலும், ஒருபுறமாகப் படுத்தல், பல் விளக்காதிருத்தல், ஜலத்தைக் கொப்பளித்துக் கொப்பளித்து விசையாக உமிழ்தல், புகைபிடித்தல், வாந்தி செய்தல், விடாத தலைநோய் இலைகளினால் முத்தோஷம்களும் அதிகரித்து முகத்திலுள்ள சத்த தாதுக்களிலும் பரவி அந்த அந்த இடங்களில் சோகங்களைப் பிறப்பித்து அது உதட்டில் (11) தாடைக்கு நடுவில் (1) தந்தத்தில் (10) தந்தமூல ரோகம் (13) நாவில் (6) தாடைகளில் (8) தொண்டையில் (18) முகமுற்றிலும் (8) ஆக (75) வித ரோகங்களை உண்டாக்கும். முகத்தில் உண்டாகும் ரோகம் (8). இது வாய்க்குள் உண்டாகும் ரோகம், திரிதோஷங்களினால் வாய்க்குள் இரணத்தை உண்டாக்கி நாவினது ருசியை கெடுப்பது. அவை எட்டு வகைப்படும். 1 வாதமுகபாக ரோகம், 2. பித்தமுகபாக ரோகம், 3. சிலேஷ்ம முகபாக ரோகம், 4. திரிதோஷமுசபாக ரோகம், 5. ரத்தமுகபாக ரோசம், 6. புத் தியாசிய ரோகம், 7. கண்டாற்புத ரோகம், 8. ஊர்த்துவகுத ரோகம், ஆக சர்வமுக ரோகம் எட்டு.

முகலிங்கம்

ஆட்ய, அநாட்ய, ஸுரேட்ய, சர்வ சமலக்ஷணங்கொண்ட சிவலிங்கம்.

முகுந்த தேவராயன்

ஒரு வைணவராசன். இவன் சமத்தான வித்து வான்களைச் சடகோபாசார்யர், நடாதூரம்மாள் சொற்படி வென்றார்.

முகுந்த நிதி

நவநிதிகளில் ஒன்று.

முகுந்தை

கவிமுநிவர் பத்தினி. இவள் உருக்குமாங்கதனிடத்து ஆசைகொண்டு தன் எண்ணத்தை அவனுக்குத் தெரிவிக்க உருக்குமாங்க தன் மறுத்தனன். இவன் மறுத்ததால் இவள் இவனையே எண்ணி விகாரங்கொண்டிருக்கையில் இந்திரன் உருக்குமாங்கதன் உருக் கொண்டு இவளிடம் புணர்ந்தனன். அதனால் இவளிடம் கிருச்சமதர் எனும் இருடி பிறந்தனர். இக்கிருச்சமதர் தமக்குத் தக்கப்பருவம் வந்து ஒரு நாள் சூரன் என்னும் அரசனது சிரார்த்த காரியத்திற்குச் சென்று அவ்விடம் தம்மிடம் வாதிட்ட அத்திரியை வாதத்தில் வென்றனர். தோற்ற அத்திரி நீ அரச புத்திரன் என்று இழித்துக்கூற கிருச்சமதர் தாயை வினவி உண்மையுணர்ந்து தாயை இலந்தை மரமாகச் சபித்தனர். சாபமேற்ற முகுந்தை என்னைச் சபித்தமையால் உனக்குக் கொடிய புத்திரன் பிறக்க எனச் சபித்தனள். அச்சாபம் பெற்ற கிருச்சமதர் நீங்கிக் கடுந்தவஞ் செய்து விழிக்கையில் அந்தவிழிப்பில் பலி பிறந்தனன்.

முகூர்த்தை

தருமப் பிரசாபதியின் தேவி.

முகையலூர்

இது சோழ மண்டலத்திலுள்ளதோர் ஊர். (புற, நா.)

முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை)

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முக்கல் ஓரூர். ஆசான் என்றதனால் அந்தணராவார். இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆங்கு உள்ளுரை கூறியது ஆராயத்தக்கது. இவர் பாடியது (நற்றிணை 72ம் பாட்டு.)

முக்காவல்நாட்டு ஆமூர்மல்லன்

இவன் உறையூரிலிருந்த சோழனாகிய தித்தன் மகன். இவன் மற்போரிற் சிறந்தவன். சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியார் பொருது கொல்லப்பட்டவன். சாத்தந்தை யரால் பாடல் பெற்றவன். (புற நானூறு.)

முக்கிரந்தி

பிரமக்கிரந்தி, விஷ்ணுக்கிரந்தி, ருத்திரக் கிரந்தி, இவற்றை முக்கட்டென்றுங்கூறுவர். (திருமந்.)

முக்கெலும்புகள்

இவை, இரண்டு எலும்புகளின் சேர்க்கையுள்ளவை. இவை, பாலம்போன்று உறுதியாய்க் கபாலத்தை நோக்கிச் செல்வன. 2. கடற்காளான் போன்ற எலும்புகள்: இவை இரண்டு, இவை, பின்னல் போன்று ஒன்றைஒன்று பின்னிக்கொண்டு மூக்கின் சுவாசவழியினீட்சியை வளர்க்கின்றன. 3 மூக்கின் கண்ணீர் சம்பந்தமான எலும்புகள் 2, இவை, சிறு எலும்புக்கால் வாய்கள், இவை கண்குழியிலிருந்து கண்ணீரைக் கொண்டுவருவன. 4. மூக்கைப் பிரிக்கும் தட்டை எலும்பு ஒன்று, இது, கலப்பையிலுள்ள உழுபடை போன்று மூக்கின் இரண்டு தொளைகளுக்கிடையில் சுவர் போன்றிருப்பது. 5. தவடை எலும்புகள்: இரண்டு, இவை தவடையின் இருபுறத்திலும் உள்ளவை. 6 மேல் கன்ன எலும்புகள்: இரண்டு, இவை, குழந்தைப் பருவநீங்கிய பாலியத்தில் எட்டுப்பற்களைக் கொள்ளும், 7. மேல்வாய் எலும்புகளிரண்டு: இவை வாய்க்குக், கூரை போன்று வாயைக்காப்பது. 8. கீழ்க் கன்னஎலும்பு ஒன்று, இது, பதினாறு பற்களைக் கொண்டு காதுகளுக்கு முன்னுள்ள கீல்களின் உதவியால் மேலுங்கீழும் அசைவது.

முசகன்

காதி தந்தை.

முசலன்

விசுவாமித்திர புத்திரன். (பா. அநு)

முசிகுந்தம்

1, சூரியன் சங்கு. 2. குபேரன் வில்.

முசிரி

இதனை முரசீபத்தனம் என்னும் வால்மீகி ராமாயணம். இது மேற்கடற்கரையிலுள்ள பட்டணம். இது முற்காலத்துலே சுள்ளி என்னும் பேரியாறு கலக்குமிடத்து இருந்த பட்டணம். முற்காலத்து யவனர் முதலியோர் மிளகு முதலிய சரக்குகளை மேனாட்டிற்குக் கொண்டு புகும் துறைமுகம் எனத் தாலமி முதலிய யவன யாத்திரிகரால் புகழப்பட்ட சேரரது தலைநகரத்தொன்று இதனை மரீசியத்தன மென்பர் வராகமிகிரர்,

முசிறி ஆசிரியர் நீலகண்டனார்

மாதளவனார் இளநாகரிடம் பொரு ளிலக்கணம் கேட்டவர்.

முசுகுந்தன்

1. இவன் இதற்கு முன் பிறப்பில் விதூமன் என்னும் காந்தருவனாவான். இவன் மறு பிறப்பில் முசு (குரங்கு) ஆய்கைலைச் சாரலில் சிவமூர்த்தி ஒரு வில்வ விருக்ஷத்தடியில் எழுந் தருளியிருக் கையில் அவ்வில்வ விருக்ஷத்தின் மீதிருந்து வில்வத்தைப் பரித்து அருச்சித்தனன். அதனால் சிவபெருமான் கருணைக்கண் சாத்த முன்னைய அறிவு தோன்றித் துதித்துச் சிவாஞ்ஞையால் மறுபிறப்பில் சூர்யவம்சத்தில் திலீபன் என்பவனுக்கும் மங்கலவதிக்கும் குமாரனாயு தித்து விசித்திரவதியை மணந்து வசிட்டரிடம் கந்தவிரதம் கேட்டு அநட்டித்து வலனைக்கொல்ல இந்திரனுக்கு உதவி புரிந்து இந்திரன், பூசித்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை அவன் தரப்பெற்றுத் தரிசித்த தருவாயில் அது விஷ்ணு பூசித்த மூர்த்தியல்லாமை கண்டு இந்திரனைக் கேட்க, ஐந்து முறை இந்திரன் ஐந்து மூர்த்தங்கள் தரப் பெற்று அவற்றை மறுத்துக் கடைசியில் இந்திரன் தனக்கு உயிருக்கொப்பாய் நினைத் திருந்த மூர்த்தியைத் தரப்பெற்றுத் திருவாரூரில் பிரதிட்டித்து மற்ற ஆறு சிவமூர்த்தங்களை அந்தப்படி திருமறைக்காடு, நாகப்பட்டினம், திரு நள்ளாறு, திருக்காறாயல், திருவாய்மூர், திருக்குவளை முதலிய தலங்களில் பிரதிட்டை செய்து பூசித்தவன், இவன் ஒருமுறை வேட்டை மேற்சென்று திரும்புகையில் படுத்திருந்த வேதியன் ஒருவன் மீது இவன் ஏறியிருந்த குதிரை காலவைத்துக் கொல்ல, அரசனைப் பிரமகத்தி பற்ற அரசன் சிவபூசை செய்து போக்கிக் கொண்டனன். தேவேந்திரன் முதலியவர் வேண்டுகோளால் குமாரக்கடவுள் வருந்துணையும் தெய்வ உலகத்தைக்காத்து தேவர் என்னவரம் வேண்டும் என்ன. நான் அதிகச் சோர்வடைந்தேன், அது தீர உறங்கவேண்டும் என்று கேட்டனன். தேவர் அந்தப்படி அருளிச்செய்து உன்னை இடையில் எழுப்பினவன் சாம்பராய் இறக்கவென்று வரந்தந்து இருக்கை சென்றனர். இவன் தன்னை யாரும் தொந்தரை செய்யாவிதம் ஒரு மலைக்குகையில் தனித்து உறங்குகையில் கண்ணனைக் காலயவநன் துரத்த, கண்ணன் பயந்தவர் போல் ஒட்டங்காட்டி இவன் உறங்கும் குகையினுள் புகக் காலயவானும் பின்தொடர்ந்து புகுந்து அவ்விடம் உறங்கும் முசுகுந்தனைக் கண்ண னென்று அறைந்தனன். முசுகுந்தன் விழித்து நோக்கக் காலயவான் சாம்பராயினன். பின் கிருஷ்ணமூர்த்தி தரிசனந்தந்து பதரிகாச்சிரமம் போகக் கட்டளை யிட்டனர். இவன் அரசாட்சியில் (12) வருஷம் மழையிலாதிருக்க இவன் பூமியைக் கண்டித்து ஊற்றுண்டாக்கிப் பயிர்களைச் செழிப்பித்தான், விருத்தகார்க்கரால் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில் நாராயணப் பிரத்தியக்ஷம் கிடைக்குமெனக் கேள்வியுற்றவன். இவன் தன் குமாரனுக்குப் பட்டமளித்துக் கந்தமாதனத்தில் தவமியற் றினன். மாந்தாதாவின் குமாரன் எனவும் கூறுவர். 2, ஒரு இருடி,

முசுண்டிச் சவுண்டையர்

முசுண்டியெனுங் கிராமத்தில் இருந்த வீரசைவர். இவர் வசவதேவரின் புகழைக்கேட்டுக் காண விரும்பிச் சென்று எட்டிக்கனி பழுத்திருக்கக்கண்டு சிவமூர்த்திக்கு நிவேதித்து அதை அடியவர்களுக்குத் தந்து வசவரோடு இருக்கையில், ஒரு சிவனடியவர் தமது வீட்டில் நடக்கும் கலியாணத்திற்கு எழுந்தருள வேண்டினர். அடியவர் உடன்பட்டுச் செல்லும் வழியில் ஆறு வெள்ளங் கொண்டு வழி தடையானது கண்டு, அதைத் தமது கைகளால் திணித்து இருபிளவாக்கி மறுகரையடைந்து ஊரின் வீதியடைந்தனர். அப்போது ஒரு கன்னிசைவந்து வணங்கினள். அவளை அடியவர் தீர்க்காயள் உள்ள வளாக வாழ்த்தினர். சிலநாள் பொறுத்து அந்த வாழ்த்தடைந்த கன்னிகை யிறக்கத் தாய் தரந்தையர் இருவரும் அக்கன்னிகையைச் சவுண்டையரிடம் கொண்டுவந்தனர். ஐயர் அவள் பேரிட்டழைக்க அவள் உயிருடன் எழுந்தனள். இவர் ஒரு காலத்துத் தவராஜர் என்பவர் இறந்து போக அவரை எடுத்துச் செல்வாரை வாள் கொண்டு வெருட்டி இறந்த அவரை இறங்கி வரச்செய்தனர். இவ்வற்புதங் கண்ட சமணர் பொறாது கோணியாற் பொய்யுருச் செய்து ஐயர் இருந்த மடத்தின் வழி தூக்கிவரச் சவுண்டையர் கண்டு அவ்வுருவிற்கு உயிர் தந்து அரசன் சொற்படி பலநாட்களுக்கு முன்னிருந்த எருதுகளையும் எழுப்பினர்.

முசை

தேவபாகன் இரண்டாம்பாரி. இவள் குமாரர் சித்ரகேது, பிரகத்லன்.

முஞ்சன்

போஜனுக்குச் சிறிய தந்தை

முஞ்சபிரஷ்டம்

இமயத்திலுள்ள ஒரு ஆலமரத்தடி. இராமர் இவ்விடத் தில் சடை தரிக்கும்படி ஆஞ்ஞாபித்தார். ஆதலால் இது இப் பெயரகடந்தது.

முஞ்சிகேசமுநி

சுநந்தமுநிவரைக் காண்க.

முஞ்சுவந்தம்

ஒரு பர்வதம். இதில் சிவ மூர்த்தி யெழுந்தருளியிருந்து ஆன்மாக்களுக்கு அநுக்கிரகிப்பர். இம்மலையிலிருந்து பொற்பாளங்கள் கொணர்ந்து மருத்து மகாராஜன் யாகம் நிறைவேற்றினன்,

முடங்கிக் கிடந்த நெடுஞ்சோலாதன்

கடைச்சங்கமருவிய புலவன். (அக. நா)

முடத்தாமக் கண்ணியார்

சோழன் பெருவளத்தானையும், பொருந ராற்றுப் படையால் சரிகாற் சோழனையும் பாடிப் பரிசு பெற்றவர்.

முடத்திருமாறன்

1. இம் முடத்திருமாறனார் இடைச்சங்கத் திறுதியிற் பாண்டி நாட்டை அரசாட்சி புரிந்தவர். இவர் காலத்துச் சங்கமிருந்த கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டுச் சங்கமழிந்து போதலும், உடனே இப்பொழுதுள்ள மதுரையிற் கடைச்சங்கத்தை நிலைநிறுத்தினவராவர். இதனை இறையனார் களவியற்கு உரை செய்த நக்கீரர் முகவுரை யாலும், சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற்கோளாகக் சாட்டப்பட்ட ‘வேங்கடங்குமரி’ என்ற அகவலாலுமுணர்க. இவர் பாண்டியர் மரபினர், பாலையையும், குறிஞ்சியையும், சுவைமிகப் பாடியுள்ளார். குட்டுவன்சேரனைப் பாராட்டி யிருத்தலாலே அவன் காலத்தினரென்றும் அவனோடு நட்புடையாரென்றுக் கொள்க. (நற். 105) இவர் ‘வெறிகொள் சாபத்’ என்று வடசொல்லைப் பிரயோகித் திருப்பதால் வடசொல் கடைச்சங்கத் தொடக்கத்தே தமிழிற் கலந்தது தெளிக, (நற். 228) இவர் பாடியவை மேற்காட்டிய இரண்டு பாடல்களே. 2. இடைச்சங்கமருவிய பாண்டியரில் கடைப்பட்டவன். சயமாகீர்த்தியைக் காண்க.

முடமோசியார்

உறையூர எணிச்சேரி முடமோசியார் பார்க்க,

முடவாண்டி

இவர்கள் கொங்கு வேளாளரில் கண்குருடு கால்மொண்டி கைமொண்டியாயள்ள பிள்ளைகளைக் கேட்டு வாங்கி அவர்களைக் கொண்டுபோய் வளர்த்துத் தன்னைப்போலப் பிச்சை எடுக்கச் செய்யும் பிக்ஷை அதிகாரிகள். இவர்கள் ஒருவகை பிக்ஷை எடுக்கும் கூட்டம். இவர்கள் கோயம்புத்தூர் ஜில்லா சத்யமங்கலத்திலும் சேலம் ஜில்லாவில் ஆண்டிப்பாளையத்திலும் இருக்கின்றனர். (தர்ஸ்டன்.)

முடி

இது அரசரும் சக்கரவர்த்திகளும் தாங்கள் அரசை ஏற்றுக் கொண்டதற் கறிகுறியாக அணிவது, நல்லோர்களாலாரனுக்குச் சிரத்தில் அணிவிப்பது முடியாம். இது பலதேசங்களில் பலவுருவமாகச் செய்யப் படுகிறது,

முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி

இவன் ஒரு சோழன், அந்துவஞ் சேரலிரும் பொறையின் பகைவன். (புற நா.)

முடியாலழகி

கங்கையின் பெண். மன்மதன தேவி என்பர். க்ஷத்ர தேவதை.

முடும்பை நம்பி

எழுபத்துனான்கு சிமமாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

முடும்பையம்மாள்

எழுபத்துனான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

முட்கள்

இவை பூண்டுகள் செடிகள் மரங்களைக் காக்க உண்டாகிய அங்கங்களாம். அவைகளிற் சில கொத்துமுட்களாகவும், சில கொக்கி முட்களாகவும், சில சுணை முட்களாகவும், சில பனை முதலிய மரங்களில் வாள் முட்களாகவும், ஈந்து முதலியவற்றில் இலை நுனி முட்களாகவும் பாகற்காய் பலாக்காய் போன்றவைகளில் பொருக்கு முட்களாகவும், சில சொரிமுட்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுட் சில விஷமுள்ளன.

முட்டைகள்

இவை முடைநாற்ற முள்ளவை யாதலின் இப்பெயர் பெற்றன. முட்டைகளைப் பெரும்பாலும் பறவைகளும் சிலவூர்வனவும் சில நீர்வாழ்வனவும் இடும். இவற்றை அப்பிராணிகள் அவயங்காத்துக் குஞ்சு பொரிக்கும். பறவைகளிரண்டு மூன்று முட்டைகளும், ஊர்வன நீர்வாழ்ன அதிகமும் இடும். முட்டைகளிற் பெரிது தீக்கோழி முட்டை,

முண்டகத்துறை

தண்டகாரண்யத்திலுள்ள ஒரு தடாகம்.

முண்டன்

1, ஒரு சிவகணத் தலைவன். 2, கௌசிகி தேவியால் சும்பநிசும்ப யுத்தத்தில் கொல்லப்பட்ட அசுரன், இதனால் தேவிக்கு முண்டமர்த்தனியென ஒரு பெயர். (தேவி~பா)

முண்டாசுரன்

ஒரு அசுரன். பிரமனைப் பலமுறை துன்பப்படுத்திக் கடைசியில் சிவமூர்த்தியின் கட்டளைப்படி வயிரவரால் இறந்தவன் துந்துபியெனும் அசுரபுத்திரன்.

முண்டை

காசியில் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கும் காளி

முதகாண்டன்

நாகன், தாய் கத்ரு.

முதசுரன்

நாகன். தாய் கத்ரு.

முதனிலை

வினைச்சொற்கு முதலாய் நிற்கும் தனிவினைப்பெயர். (நன்.)

முதனூல்

இறைவனால் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச்செய்யப்பட்ட வேதாகமங்கள். (நன்~பா.)

முதற் குறிப்பு மொழி

இது குறிப்பில் ஒன்று இது முதற் செய்யுளின் முதல் நூலுக்கிட்டு வழங்குவது,

முதற்சங்கம்

இது மதுரையில் தமிழ் வளர்ந்த இடம், இதில் சிவமூர்த்தி, குமரவேள், அகத்தியர், முரிஞ்சியூர் முடிநாகராயர், குபேரன் இவர்கள் முதலாக 549ன்மர் இருந்து தமிழ் ஆராய்ந்தனர். இவர்களை யுள்ளிட்டு (4449)ன்மர் பாடினர் இவர்கள் பாடிய நூல்கள்: எத்துணையோ பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை; இச்சங்கம் (4410) வருஷம் இருந்தது. இச்சங்க மிருத்தியவர், காய்சின வழுதிமுதல் கடுங் கோன் மாறன் கடைசியாக (59)ன்மர். அவருள் கவி பாடியவர் (7) பாண்டியர். இச்சங்கமிருந்த மதுரை கடலாற் கொள்ளப்பட்டது.

முதலியாண்டான்

காஞ்சீபுரத்தில் பச்சை வண்ணப்பெருமாள் கோயில் என்கிற புருஷமங்கலத்தில் அவதரித்தவர். உடையவரின் சகோதரி புத்தார். உடையவர் திருவடிகளை ஆச்ரயித்தவர். எழுபத்துனான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவரது மற்றப் பெயர்கள் தாசரதி, வாதூலதேசிகன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன், இராமாநுச பாதுகை, இவர் குமாரர் கந்தாடையாண்டான். (குருபரம்பரை.)

முதலியார்

இது முதலில் தொண்டை மண்டல வேளாளர்க்குரிய பட்டம். பிறகு தாசிபுத்திரர், கைக்கோளர், ஜயினர், ஓச்சர், பள்ளிகள் வன்னியர், பணிச்சவர் முதலியவர்களுக்கும் பட்டமாயிற்று. சில பட்டணவர் தங்களை வருணகுல முதலியென்கின்றனர்.

முதலியார் பெருமான் தாதர்

இவர் செங்கற்பட்டு ஜில்லா இரண்ட இரவேலிப்பட்டிலுள்ள நரியன் பாக்கத்திலிருந்த ஒரு தமிழ்ப்புலவர். இவர் கம்பருடன் வாதிட்ட தாதரென ஊகிக்கப்படுகிறது. இரண்ட இரவேலிப்பட்டு செங்கற்பட்டு ஜில்லா திருக்கச்சூருக்கு வடக்கிலுள்ளது. (திருச்சச்சூர் சாசனம்.)

முதலெழுத்துக்கள்

இது தமிழ்ப் பாஷைக்கு முதலாகவுள்ள எழுத்துக்கள். அவை உயிர் (12) மெய் (18) ஆக (30). (நன்.)

முதலை

1. இது நீர் வாழ்வனவற்றிற் சேர்ந்தது. இது பல்லியினத்தை யொத்தது. அச்சாதியிற் பெரியது. இது (25) அடிக்கு மேலிருக்கும். இதன் மேற்றோல் செதிள்களைப் பெற்றதாய்த் துப்பாக்கிக்கும் அசை யாததாகும். கண்கள் சிறியவை. முகம் மீண்டது, நாக்கு வாயுடன் ஒட்டியிருக்கும். கால்கள் குட்டை, வால் மிகப் பலமுள்ளது. பற்களுறுதியும் கூர்மையு முள்ளவை. இதின் பெண் ஒரு தடவைக்கு ஏறக்குறைய (2) முட்டைகள் மணலிலிடும். இவை சூரிய வெப்பத்தால் பொரிந்வுடன் கடலிற் செல்லும். யானையையும் நீரில் பிடிக்கத்தக்க வன்மையுள்ளது 2. இது, பல்லியினத்தில் பெரியது. இது நீரில் வாழும் பிராணி. பெரிய நீர் நிலைகளிலிருப்பது. இது எட்டடி முதல் (30) அடி வரையில் நீண்டிருக்கும். இது நீரிலும் நிலத்திலும் வசிக்கும் பிராணி. இதற்கு நீரில் அதிகபலம் உண்டு, யானையையும் இழுக்கத்தக்க வலியுண்டு, இதன் மேற்றோல் வலுத்த செதிள்களைப் பெற்றிருக்கும். துப்பாக்கிக் குண்டிற்கும் அசையாது இது 100 வயதிற்கு அதிகம் ஜீவிக்கிறதென்பர். அமெரிகாதேச முதலைக்குப் பற்கள் வெளியில் தோன்றுகிறதில்லை, இவ்வகுப்பில் மூக்கு நீண்ட முதலைகளு முண்டென்பர். இவை கங்கை யமுனை முதலிய நதிகளிலிருக்கின்றன. இவற்றின் மூக்கு உடம்பின் நீளத்தில் மூன்றிலொருபாகம் நீண்டு பற்கள் நிறைந்து இருக்கும்.

முதல்நாட்போர்

யுத்தகளத்திற்கு வந்திருவர் சேனைகளும் அணிவகுப்ப டைந்து யுத்தஞ் செய்யத் தொடங்கி அருச்சுநனும் வீமனும், வீமனும் சுயோதனனும் தருமனும் சல்லியனும்,நகுலனும் சயிந்தவனும், சகாதேவன் சகுனி, சிவேதன் துச்சாதனன், திட்டத்துய்மன் துரோணன், அபிமன்யு லக்னன், விராடன் பூரி, சாத்தகி பூரிசிரா, சந்தனு உக்ரவேகன், குந்தி போஜன் அச்வத்தாமன், கடோற்கசன் பகதத்தன், பாஞ்சாலன் கலிங்கன், கிருதபன்மன் கேகயன், உத்தரன் திருதபன்மன், அரவான் அலம்புதன், சோமதத்தன் காம்போஜன், சோழன் மாகதன், பாண்டியன் திரதேவன் சீகதன் சிகண்டி, உத்தமோசா விகர்ணன், உதார்மன் விடசேதன் முதலி யோர் ஒருவருடன் ஒருவர் மாறுகொண்டு யுத்தம் புரிகையில் பாண்டவர் படைக்குச் சேநாபதியாகிய சிவபெருமானிடம் வரம் பெற்ற சிவேதன் வீஷ்மருடன் யுத்தஞ் செய்தனன், ஒருபுறம் சல்லியன் உத்தரனிடம் போர் புரிந்தனன். அந்தச் சல்வியனால் உத்தான் மடிந்தான். சிவேதன் பெரும் போரிட்டுப் படைகளைப் பின்னிடச் செய்கையில் ஆற்றுத வீஷ்மர் உனக்கு விற்போர் ஒன்று மாத்திரந்தான் வரும் மற்ற ஆயுதங்களில் வன்மையில்லை யென்று பரிகசிக்கக்கேட்டு வாளெடுக்கச் செல்லுகையில் வீஷ்மர் அவனது இரண்டுகைகளையுந் துணித்துக் கொன்றனர். சூரியன் அஸ்தமித்தனன்.

முதாவதி

விடூரதன் குமரி. இவள் ஒரு முறை வனம் பார்க்கச் சென்றிருக்கையில் குசம்பன் என்னும் அரக்கன் இவளைத் தூக்கிக் கொண்டு சென்று பாதாளத் திருத்தினன். இவ்வகை பாதாளத்தில் சென் றிருந்த இவளை வத்சந்திரன் கண்டு அரக்கனைக் கொன்று மீட்டு இவளையும் மணம் புரிந்தனன், வத்சந்திரனைக் காண்க

முதிரம்

குமணன் மலை (புற. நா.)

முதுகாஞ்சி

மேலாய்வரும் பொருளைத் தக்கபடி அறிவித்து நிலை நில்லாமையை முறைப்படச் சொல்லிய துறை. (பு. வெ பொது)

முதுகுருது

முதற் சங்கத்தவர் இயற்றிய தமிழ் நூல்.

முதுகூற்றனார்

இவர் உறையூர் முதுகூற்றனாரெனவும் முதுகூத்தனா ரெனவும் கூறபடுடுவர். சோழன் போர்வைக் கோப்பெரு நற்கள்ளியின் தந்தையாகிய வீரைவேண்மான் வெளியன் தித்தனைப் புகழ்ந்து பாடி பிருத்தலானே அவன் காலத்தினராகக் கருதப்படுகிறார். (நற். 58) சோழரது உறையூரையும் காவிரியையும் பாராட்டிக் கூறியுள்ளார் அகம் (137). பெரும்பாலும், பாலையையும், சிறுபான்மை குறிஞ்சியையும், நெய்தலையும், சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர்கூறிய குறைநயப்பு: நுண்ணுணர்வி னோரை மகிழப்பண்ணுந் தன்மையது. (நற் 28). இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையில் நாலும், அகத்தில் இரண்டும், புறத்தில் ஒன்றும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாகப் பத்துப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

முதுகெலும்பில்லாப் பிராணிகள்

நத்தை, சங்கு, சிப்பி, பொருத்துடம் புள்ளவை. குளவி, வண்டு, சிலந்தி. உடல் வளையங்களுள்ளவை புழு சில நக்ஷத்ரமீன் போன்றவை, பவளக்கொடி, கடற்பஞ்சு முதலியன.

முதுநாரை

முதற் சங்கத்தவர் இயற்றிய ஒரு தமிழ் நூல்.

முதுபாலை

மூங்கில் ஓங்கின கானகத்துத் தன் கொழுநனையிழந்த பொலிந்த கொடி போன்ற மடந்தையது தனிமையைச் சொல்லுந்துறை (பு. வெ. பொதுவியல்)

முதுமக்கட்டாழி

முற்காலத்து ஆன்றோருட் சிலரும், ஆருகதரும் தமிழ் நாட்டில் பிணங்களையிட்டு மேலே கவிக்குஞ்சாடி. இதனை ‘ஓடி மறலி மறையமுது மக்கட், சாடி வகுத்த தராபதியும் ” எனும் விக்கிரம சோழனுலா அடியால் அறிக.

முதுமொழிக்காஞ்சி

1. கூடலூர்க்கிழார் இயற்றிய நீதி நூல், 2. மதுரை கூடலூர்க்கிழார் இயற்றியது. பத்ததிகாரமாய் ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்தாக குறட்டாழிசையால் அமைந்தது. ஒவ்வோரடியும் ஒவ்வொரு முதுமொழியாக இருப்பது. (தொல் பொருள். 490.) 3. எல்லாரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றநீக்கி யாராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம்பொருளின்பத்தை அறியச்சொல்லுந் துறை, (பு. வெ. பொது.)

முதுமொழிவஞ்சி

பழைய வரலாற்றினையும் வாளினையுமுடைய மறக்குடியில் பிறந்த தன் அப்பனுடைய நிலைமையைச் சொல்லிய துறை. (பு வெ. வஞ்சி)

முதுவர்

இவர்கள் கோயம்புத்தூர், மதுரை, திருவாங்கூர் முதலிய இடங்களில் மலையையடுத்த பூமிகளில் பயிரிடும் உழவர் கூட்டம், இவர்கள் மதுரையிலிருந்து சோழபாண்டிய அரசர்களின் கலகத்தில் ஊரைவிட்டுக் காட்டில் குடி புகுந்தவர்கள் என்பர். இவர்கள் மதுரையிலிருந்து காட்டிலோடிய காலத்து மீனாக்ஷியை முதுகிற் சுமந்து சென்றனர் என்ப. (தர்ஸ்டன்)

முதுவுழிஞை

1. மூங்கில் தலைமணந்த காவற்காட்டினையுடைய குறும்பிலே இரைகண்டு பாயும் பறவை யொப்ப வீரர் கைவளர்ந்து குதித்தலைக்கூறும் துறை. (பு. வெ.) 2. போரைச்செய்யும் எயிலினுள்ளோருடைய மிகுதியைக் கூறலும் வெல்லுதற்குரிய மாறுபாட்டைக் கூறும் உழிஞைத்துறை.

முத்கலன்

1. ஒரு வேதியன். அமாவாசை வரையில் பட்டினியிருந்து அது வரையில் வயல்களிற் பொறுக்கிய நெற்களைச் சேர்த்து அமாவாசையில் அதிதிகளுக்கு அன்னம் படைத்து மிகுந்ததை யுண்டு சீவிப்பவன். இவ்வகை இருத்தலை இந்திரன் கண்டு தானே அமாவாசை தோறும் அதிதியாகச் சென்று உண்டு ஆறு அமாவாசை யுண்டும் வேதியன் இளைக்காதிருத்தல் நோக்கி வியந்து சுவர்க்கந் தரப்பெற்றவன். இவனை இருடியெனவும் கூறுவர். 2. அரம்மியாசுவன் குமாரன். இவனிடமிருந்து மௌத்சலரென்னும் பிராமணர் உதித்தனர். இவன் குமாரி அகலிகை. 3. ஒரு ருஷி இவர் குமாரி மருத்துவதி. அவளை மிருகண்டு மணந்தனர். 4. அஜமீடன் புத்திரனாகிய நீலன் மரபில் உதித்தவன். அரியசுவன் மகன்,

முத்கலர்

கண்வருஷியின் குமாரர். இவர் ஆச்சிரமம் கோமதி தீரத்தில் கோவிதாரவனம், இவர் கைரவணிதீரத்தில் தவஞ் செய்கையில் ஆங்கிருந்த மீனை நோக்கி இனி இத்தீர்த்தத்திலிருந்து தவத்திற் கிடையூறு செய்யாது வேறிடஞ் செல்கவெனக் கட்டளையிட்டனர். அக்காலமுதற் கொண்டு இத்தீர்த்தத்தில் மீன்கள் கிடையா. (திருவல்லிக் கேணிப் புராணம்.)

முத்தகச் செய்யுள்

தனியே நின்று ஒரு பொருள் தந்து முடிவது.

முத்தசங்கையர்

ஒரு வீரசைவ அடியவர். இவர் வசவரிடத்து அநேக விடசங்கமர் வந்து பொருள் பெற்றுச் செல்லுதலைக் கண்டு தாமும் அவ்வகைபுரிய எண்ணி வசவரைக்கேட்க, வசவர் தாசிவீட்டில்விட ஆஞ்ஞாபிக்க, அவ்வாறே முத்தசங்கையர் சென்று அவர்கள் வீட்டி லிருந்த பஞ்சணையைக்கண்டு வியந்து இது சிவமூர்த்திக்கு ஆம் எனவும் இவர்கள் சிவநிஷ்டர்கள் ஆவர் எனவும் எண்ணி இராமுழுதும் சிவ பூசை செய்து நீங்கினவர்,

முத்தமிழ்க்கவி

சுசீந்திரபுராணம் பாடியவர்.

முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார்

இவர் தொண்டை மண்டலத்துச் செங்கற்பட்டு ஜில்லா பொன் விளைந்த களத்தூரிற் பிறந்தவர். இவர் பிறப்பில் வேளாளர். வைஷ்ணவர். இவர் கவிபாடுதலில் வல்லவர் என்பதைப்பற்றி “விரகன்முத் தமிழ்க்கவி வீரராகவன், வரகவி மாலையை வழுத்துக் தோறெலாம், உரகனும் வாணனு மொக்கக் கூடினால், சிரகாகம்பிதஞ் செய்யலாகுமே,” எனப் புகழ்ந்திருத்தலாலும், இவர் பாடிய திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கை மாலை முதலியவற்றாலும் உயர்ந்த கவிஞர் எனத் தோன்றுகிறது. இவர்க்கு நம்மாழ்வார் உபாசனையால் கல்வி விருத்தியாயிற்று என்பர்.

முத்தாநந்த சுவாமி

ஞான மதியுள்ளான் என்னும் நூல் இயற்றியவர்,

முத்தாயி அம்மை

ஒருவீரசைவ தவப்பெண். அசகணரைக் காணாது வருந்துகையில் இவள் நிலையறிந்த அல்லமர் அசகணருக்கு அறிவித்து இவளுக்கு ஞானம் உபதேசித்தனர் என்ப.

முத்தாலை

ஒரு தொட்டியப்பெண், இவள் பெருங்கற்புடையாள்; இவள் கற்புக் குலைந்தனளெனச் சந்தேகித்து இவள் தமயன்மார் இவளைக் கருமவசத்தால் கொல்ல இருக்கையில், இவள் குசவனை வேண்டி மட்கலம் சுடும் சூளையிற் புகுந்து வெந்து நீறாகித் தெய்வமானவள். இவளை முத்தாலம்மன் என்பர்.

முத்தி

இது சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு வகைப்படும், இவற்றுள் முதற்கூறிய மூன்றும் பதமுத்தி, மற்றது உண்மை முத்தி, இவற்றுள் சாலோகம், அவ்வுலகமடைந்து நித்தியசுகம் அடுப்பவித்தல், சாமீபம் இறைவனுக்கு அருகிலிருந்து சேவித்திருத்தல். சாரூபம் அவனது உருவத்தையடைந்து ஆநந்தமடைதல், சாயுச்சியம் அவ்விறைவனுடன் கலந்துங் கலவாமலும் பரமாநந்தம் அனுபவித்தல், இவற்றை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானத்தில் முதிர்ச்சி பெற்றவர் அடைவர்.

முத்தித்தலம்

அயோத்தியை, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை, இவையே சத்தபுரி,

முத்திமண்டபம்

இது காசிக்கணுள்ள ஒரு மண்டபம், இதில் சேவல்கள் (3) முத்தியடைந்தன.

முத்திருளப்பப் பிள்ளை

1. இவர் சேதுபதி சமஸ்தானத்திருந்த மந்திரியார். இவர் திருப்பணி முதலிய பல நற்காரியங்கள் செய்து புகழ்பெற்றவர். இவர் மீது “பருப்பதங்க ளொவ்வொரு தூண்பாவுக்கல் வளையாத பாரமேரு, சுருப்படங்காப் போதிகை நீசெய்த பணி விடையை யென்ன சொல்வேனையா, தருப்பொவியுங் காதலமுத் திருளப்பசாமி நின்றாய்ப் பாலுன்னைக், கருப்பணிமுன் றிருப்பணிக் கென்னுருப்பணினான மருப்பொவியுங் கமலத்தோனே. ” என்பது போன்ற பல செய்யுட்கள் பாடப் பட்டிருக்கின்றன. 2. சேதுபதியின் மந்திரிகளில் வேறு ஒருவர். இவர் ஒரு கவிஞருக்கு நான் நூறு பொன் கொடுக்கச் சொன்னேனென்று எழுதினபோது, அவனதனை நானூறு பொன்னென்று வாசிக்க அதனைக்கிறக்கி எழுதக் கூறியபோது கவிஞர் கூறியது. “உனக்கு பதிவந்தருக்கும் கள்வருக்கும் நீதி தப்பி ஒளிக்கின் றோர்க்கும், கிறுக்குவரச் செய்யுந்துரையே பாவாணரோலையினும் கிறுக்குண்டாமோ, பொறுக்குமார சுரிமை முத்து ராமலிங்க சேதுபதி பூமியெல்லாம், நிறுக்குமதி மந்திரி முத்திருளப்பா வருளப்பா நிருபந்தானே” இம்மந்திரியவர்கள் சேதுபதி அரசரின் நகரங்களில் பல கன்னியர்கள் விவாசமிலாதிருப்பது கண்டு குறுணித்தாலி செய்து செலவிற்குக் கொடுத்து விவாகஞ் செய்வித்தனர் என்பதை ஒரு புலவர் வியந்து, ”அமரிக்கையாளன் முத்துராமலிங்க சேதுபதி யவனிக்கெல் லாம், சுமுகப்ரதாபனெங்கள் முத்திருளப் பேந்திர மந்திரி துலங்கு நாளில், சமருக் கென்றெதிர்த்த மன்னர் தரையிலில்லை மதனொருவன் தவிரமின்னார், குமரிக்குள் கன்னியாகுமரியல்லால் மற்றில்லைப் பெண் குமரிதானே. ” என்றனர்.

முத்திரை

(24). சம்முகம், சம்புடம், வித்தம், விஸ்தருதம்,த்விமுகம், திரிமுகம், சதுர்முகம், பஞ்சமுகம், ஷண்முகம், அதோமுகம், வியாப காஞ்சலி, சகடம், யமபாசம், இரதிதம், சம்முகோன் முகம், பிரலம்பம், முஷ்டிகம், மச்சம், கூர்மம், வராகம், சிம்மாக்ராந்தம், மகாகிராந்தம், முத்காம், பல்லவம். (தேவி~பா)

முத்திரைகள்

(3) இவை திருவாலவாய்த் திருக்கோயிற் கரவூல முதலியவற்றில் வைக்கப்பட்டு வழங்கி வருகின்றன; 1. இடபமுத்திரை, 2. மீன முத்திரை, 3. இராசகரநாகர் முத்திரை. (திருவிளையாடல்)

முத்திரையாவது

தேவர்களைச் சந்தோஷிப் பித்தலாலும், அசுரர்களைத் துரத்தலாலும் உண்டான காரணப்பெயராம். இம்முத்திரைகள் ஆவாஹன முத்திரை, ஸ்தாபன முத்திரை, சன்னிதான முத்திரை, நிஷ்டுரை என்னும் முத்திரை, அவகுண்டன முத்திரை தேனு முத்திரை அல்லது சுரபி முத்திரை என்பன. இவற்றுள் இரு கரங்களையும் சேர்த்து விரித்து இரண்டு அநாமிகை விரல்களின் அடிக்கணுக்களில் இரண்டு அங்குஷ்டங்களையும் சேர்த்துக் காட்டுவது ஆவாகன முத்திரையாம். இதையே அதோ முகமாகச் செய்தல் ஸ்தாபன முத்திரையாம். இரு கரங்களையும் முஷ்டியாக மூடிக்கொண்டு இரண்டு அங்குஷ்டங்களையும் உயரத்தூக்குதல் ஸங்கிதான முத்திரை, அந்த முஷ்டிகளையே அங்குஷ்டங்களை உள்ளடக்கிப் பிடித்தல் நிஷ்டுரை என்னும் முத்திரை இரண்டு முஷ்டிகளையும் பிடித்துத் தாச்சனி விரல்களை மாத்திரம் நீட்டி மண்டலாகாரமாகச் சுற்றுதல் அவகுண்டன முத்திரை, இருகை விரல்களையும் ஒன்றாகக் கோத்துக் கனிஷ்டை அநாமிளையும், மத்யமா தர்ச்சனிகளையும், பசுவின் முலைபோற் சேர்ப்பது தேனு முத்திரை அல்லது சுரபி முத்திரை எனப்படும். பின்னும் அஸ்திர முத்திரை, சக்கிர முத்திரை, மகா முத்திரை, சோதன முத்திரை, சம்மார முத்திரை, பஞ்சமுகி முத்திரை, திரவிய முத்திரை, முதளிகா முத்திரை, பத்ம முத் திரை, சகான முத்திரை, சத்திமுத்திரை, வீசமுத்திரை, சாந்தி முத்திரை, மனோரம்மிய முத்திரை, தத்வ முத்திரை, இலிங்க முத்திரை, காயத்திரி முத்திரை, காலகண்ட முத்திரை, சூல முத்திரை, நமஸ்கார முத்திரை, யோனி முத்திரை, விச்சோடண முத்திரை, ஆச்சாதான முத்திரை முதலியன தானமறிந்து பிரயோகித்தல் வேண்டும். பின்னும் யோக நூலு டையார் மகாமுத்திரை, நபோமுத்திரை, ஒட்டியாண முத்திரை, சலந்தர முத்திரை, மூபைந்த முத்திரை எனவும் வழங்குவர். இதில் மகா முத்திரையாவது, வலக்கால் நீட்டி இடப்பாற்குதத்து அழுத்தி, நீட்டிய தாளை வலக்கையாற்பிடித்து நாடிவளைத்து ஒடுகின்ற பிராண வாயுவை மாறி மாறி விடுதல் நாடி சோதித்தல் கூட்டல் என்பது. நபோ முத்திரை யாவது நாக்கைக் கபாலத்துள் ஏற்றிப் புருவநடுவில் திருஷ்டிகளை இருத்தியிருப்பது. ஒட்டியாண முத்திரையாவது வயிறு, நாபி, முதுகு, இவ்விடங்களில் பிராண வாயுவை நிறுத்தல் சலந்தர முத்திரையாவது வாயுவாலும், நரம்புகளாலும், மிடற்றை யிறுக்கி இருப்பது, மூலபந்த முத்திரையாவது குதி இரணடாலும் குத்ததை இறுக்கிக் குத்துவாரத்தை உள்ளேவாங்கி அபானவாயுவை மேலே எற்றிப் பிராணனுக்கு எதிராக ஆகுள்சனஞ் செய்வது.

முத்திவிக்கினம்

அறியாமை, ஐயம், திரிபு.

முத்து

1. இயமனுக்குத் துஷ்டியிடம் உதித்த குமாரன். 2. நவரத்தினங் களுள் ஒன்று. வெண்மைநிறமுடையது. உலகத்தில் பெரிய முத்து லண்டன் காட்சிச் சாலையிலுண்டு. அது (4 1/2) அங்குலம் சுற்றளவும் (3) அவுன்ஸ் கனமுமுள்ளது. மற்றொன்று மாஸ்கோ பட்டணக் காட்சிச் சாலையிலிருக்கிறது, அது (28) காரெட் நிறையுள்ளது,

முத்துக்கிருஷ்ண முதலியார்

இவர் சென்னையில் இருந்த ஒருபிரபு. இவர் ஊர் மணலி. இவர் இராமாயண கீர்த்தனை பாடிய அருணாசலக் கவியைப் பாடியவர்.

முத்துக்குமார கவிராசர்

இவர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் என்னும் ஊரினர். வேளாளர், சைவர். சற்றேறக்குறைய எண்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர், இலக்கிய இலக்கணங்களில் வல்லவர் தொல்காப்பியம், இலக்கண விளக்கம் முதலாய நூல்களச்சிட்டு வெளியிட்ட தாமோதரம் பிள்ளை முதலாயவரின் ஆசிரியர், இவரியற்றியன பல தனிக்கவிகளே யன்றி எசுமதபரிகாரம், ஞானக்கும்மி, ஐயனாரூஞ்சல், நடராசர்பதிக முதலியனவாம்.

முத்துக்குமாரசாமி புலவர்

இவர் புதுவை திரிபுரசுந்தரி பின்ளைத்தமிழ் இயற்றியவர்.

முத்துக்குமாரசுவாமி பாண்டியன்

இவர் கல்போது ஜமீன்தார். தன் கடன் வருஷம் தீர்க்கவேண்டுமென எட்டைய புரத்திலும், பேரை யூரிலும் இவர் போய்ச் சொன்ன போது உடன்படாமையால் ஆற்றங்கரை ஜமீன்தாரவாகளிடம் போய்க் கூறிய வெண்பா. “எட்டையா பேரையா வென்றுரைப்ய யென்றுரைத்தேன், எட்டையா பேரையா வென்றுரைத்தார் சட்டக், குரைக்கடற்குளீர்த்துக் கொடு போகாதாற்றங், கரையதனிற் சேர்த்தெனை நீ கா. “

முத்துச்சனிக்குமிடங்கள்

மதி, மேகம், சங்கு, சிப்பி, மீன், முதலை, உடும்பு, தாமரை, வாழை, கமுகு, எரும்பு, செந்நெல், மூங்கில், யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, பசுவின்பல், நாகம், கொக்கு, நங்கையர்கழுத்து.

முத்துத்தாண்டவர்

இவர் சீர்காழியிலே வாத்தியக்காரர் மரபிற் பிறந்து தாண்டவர் எனப் பெயரடைந்து சிவமூர்த்தியிடம் அன்புவளர நாடோறும் சிவதரிசனம் செய்து வந்தனர். இவ்வகையிருக்கையில் கரும வசத்தால் இவர் உடம்பில் ஒருவிதநோய் கண்டது. இவர் ஒருநாள் சிவ தரிசனம் செய்துகொண்டு பசியால் வருந்தித் திருக்கோயிலுள் இருக் கையில் பிராட்டியார் குழந்தைக் கிரங்குந் தாய்போல இவரிடத்துப் பொன் வட்டிலிற் சாதஞ் சுமந்துவந்து அளித்தனர். இதைத் தாண்டவர் வாங்கியுண்டு பசிப்பிணியுடன் உடம்பின் பிணியும் நீங்கிப் பிராட்டி யாரின் கட்டளைப்படி சிதம்பரத்தலம் அடைந்து நடராசமூர்த்தியைத் தரிசித்து வருகையில் முத்துத்தாண்டவர் எனப் பெயரடைந்து மாணிக் கவாசகர் அடைந்த பேறு தாம் அடையவேண்டி மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தரவல்லையோ அறியேன்’ எனப்பாடி வேண்டி அப்பேறு பெற்றவர்.

முத்துப் புலவர்

கடிகை யென்ற ஊரிற் பிறந்தவர். அனேக தனிப் பாடல்களியற்றியவர்.

முத்தும் சிப்பியும்

இது, இலங்கை, மன்னார் ஊர்களையடுத்த கடல் களிலும், பாம்பன் கடலோரத்திலும் பாரசீகக் கடலினும் உண்டாகிறது. இப்பூச்சிகளுக்கு மேலுங்கீழுமாக வட்டமான கற்கள் போல் இரண்டு மூடிகள் இருக்கின்றன. இந்த மூடிகளினடுவில் சதையுள்ள இப்பூச்சி இருக்கிறது. இது இரைக்காகக் கடலின் கீழ் ஓடுகையில் நண்டும், மீன் களும் கலக்கிய சேறும் கல்லும் இதன் வயிற்றினுட் புகுந்து நோவைத் தரும், கையில்லாமையால் கற்களை வெளியில் விடாது, கற்கள் உட்சென்றதால் உண்டான நோவினால் ஒருவிதப்பசையை அது கல்லின் மேல பூசுகிறது. அதுவே முத்தாகிறது. இப்பசை அதிகமாகப் பதிந்தது கறையில்லாத நல்ல முத்து. இதை யெடுப்போர் மூச்சைப் பிடித்துக் காற்றைத்தரும் மூடியுடன் கடலிலிறங்கி அடுக்கடுக் காயிருக்கும் சிப்பிகளைக் கூடையிலிட்டு மேலேறச் சமிக்கை செய்தவுடன் வெளிவருவர். முத்துகளின் வேறுபாட்டை இரத்னோற் பத்தியின் கீழ்க்காண்க

முத்துராஜர்

இவர் சோழ மண்டலத்துள்ள உறையூரார். இவர் சிங்கையாரிய சக்கரவர்த்தி யாழ்ப்பாணத்து நல்லூரில் தங்கி அரசியல் முதலியன செய்த சரிதங்களை யடக்கிக் கலிவெண்பாவால் கைலாய மாலை பாடிய புலவர். சைவசமயத்தினர். தந்தை பெயர் செந்தியப்பர்.

முத்துவீர உபாத்தியாயர்

முத்து வீரியம் என்ற இலக்கண நூலி னாசிரியர். சென்ற நூற்றாண்டிலிருர்தவர். விசுவகர்ம வகுப்பினர்.

முத்துவீரியம்

இது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற பஞ்சலட்சணங்களையுங் கூறு மொரு இலக்கண நூல், உறையூரிலிருந்த முத்துவீர உபாத்தியாயர் இயற்றியது.

முத்தூற்றுக் கூற்றம்

பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். பழைய வேளிரால் ஆளப்பட்டது; முத்தூர்க் கூற்றமெனவும் வழங்கும்; மருதநிலத்தி லுள்ளது. (புறநா).

முத்தொள்ளாயிரம்

தமிழ்நாட்டு மூவேந்தரைக் கடைச்சங்கத்தவர் பாடிய நூல். இதனை நீதிநூற் கோவையெனவும் அகப்பொருட்டுறை யுள்ள வெண்பாக்களெனவும் கூறுவர்.

முநி

காசிபர் மனைவி, தக்ஷன்பெண். குமாரன் கணன். இவர் குமரியர் மந்தை, அரிணி, பத்ரமதி, மாதங்கி, சார்த்தூலி, சுவேதை, சுரசை. இவர்களையன்றி அப்சரசுக்களையும் பெற்றாள்.

முநிசுவ்விருத தீர்த்தங்கரர்

சைந தீர்த்தங்கரருள் இருபதாவது தீர்த்தங்கரர். இவர் மகத தேசத்தில் குசாக்ர புரத்தில் அரிவம்சத்தில் சுமித்திரனுக்குப் பத்மை பிடத்தில் சித்திரை மாசம், கிருஷ்ணபக்ஷம் அஷ்டமி, திருவோண நக்ஷத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (20) வில், நீல நிறம். (30) வருஷ ஆயுஷ்யம். புத்திரன் விஜய மகாராஜா. இவருக்கு மல்லி முதலிய கணதார் பதினெண்மர் உண்டு. இவர் காலத்துச் சக்கர வர்த்தி அரிஷேணர். இராம பலதேவர், இலக்ஷமண வாசுதேவர், இராவணப் பிரதி வாசுதேவர்.

முநிதேசம்

கிரௌஞ்ச தீபத்தின் சமீபத்திலுள்ள ஓர் இடம்

முநிவர்

(7) அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்னி, பாரத்வாசன், வசிட்டன், விசுவாமித்திரன்; அன்றியும் அகத்தியன், ஆங்கீரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் என்ப.

முந்நூற்றார்

கும்பகோணத்திலுள்ள ஒருவகை வேளாண் வகுப்பினர். (தர்ஸ்டன்.)

முனி

மகா சுவேதையின் தாய் முறையானவள்

முனைகடி முன்னிருப்பு

வேந்தரெல்லாரையும் சினத்தைக் காலப் பண்ணிப் பகைவர் முன்னே இருந்தவரைப் பூசற்களரியினின்றும் போக்கிய துறை. (பு. வெ. காஞ்சி.)

முனைப்பாடியார்

இவர் ஊர் முனைப்பாடியாக இருக்கலாம். சமயம் அருகம். அற நெறிச்சார நூலாசிரியர்.

முனையடுவார் நாயனார்

இவர் சோணாட்டில் திருநீடூரில் வேளாளர் குலத்தில் திருவவதாரஞ் செய்து பகைவர்களை வென்று, வரும் பொருள் களைச் சிவனடியவர்களுக்குக் கொடுத்துச் சிவனருளால் முத்தி யடைந்தவர். (பெ. புராணம்.)

முனையதரையன்

1. ஒரு பிரபு. இவனைக் கண்ணபுரத்துத் தாசி, “இன்றுவரி வென்னுயிரை நீபெறுவை யின்றைக்கு, நின்றுவரி லதுவு நீயறிவை வென்றி, முனையா கலவி முயங்கியவாறெல்லாம், நினையாயோ நெஞ்சத்து நீ. ” எனப்பாடினள். 2. விக்கிரம சோழனுடைய மந்திரிகளிலொருவராக இருக்கலாம் என்று தெரிகிறது. ” பலர் முடிமேல் ஆர்க்குங் கழற்கா வனகன் நன தவையுட், பார்க்குமதி மந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த புகழ்முனையர் கோனும்” என்னும் விக்கிரமசோழனுலா அமகளாலறிக.

முனையூர்

இஃது இடவகனுக்கு உதயணன் கொடுத்த நாடுகளுள் ஒரு நாட்டினது தலைக்காப் பெயர். (பெ. கதை)

முன்னத்தினுணருங்கிளவி

குறிப்பா னுணரப்படுஞ் சொல், (நன்)

முன்னவிலக்கு

ஒரு பொருளைக் குறிப்பினான் விலக்குவது. இது, இறந்தவினை விலக்கு, எதிர்வினை விலக்கு, கேழ்வினை விலக்கு, பொருள் விலக்கு, குணவிலக்கு, காரணவிலக்கு, காரியவிலக்கு, வன்சொல் விலக்கு, வாழ்த்து விலக்கு, தலைமைவிலக்கு இகழ்ச்சி விலக்கு, துணை செயல்விலக்கு, முயற்சிவிலக்கு, பாவகவிலக்கு, உபாய விலக்கு எனப் பலதிறப்படும். (தண்டி) கையறல் விலக்கு, உடன்படல் விலக்கு, வெகுளிவிலக்கு, ஐயவிலக்கு, வேற்றுப்பொருள்வைப்புவிலக்கு சிலேடைவிலக்கு, ஏது விலக்கு எனவும் உண்டு

முன்றுறையரையர்

பழமொழி நூலாசிரியர். இவர் சைநர், பழமொழியின் பாயிரத்தில் “முன்றுறைமன்னவன்” என இருத்தலின், இவர் முன்றுறை என்னும் ஊருக்கு அரசனாக இருக்கலாம். இவர் சடைச்சங்கத்தார் காலத்தவர்.

முன்றேர்க்குரவை

1. கணையத்தை யொத்த திண்ணிய தோளினை யுடைய மன்னனுடைய வெல்லுந்தேர்முன் நிறைந்த வலியாற் சிறந்தவீரர் ஆடிய துறை, (பு, வெ தும்பை) 2. வென்றெடுத்த வெற்றி யான் மிக்க ஆயுதத்தையுடையான் தேரின் முன் பேயாடிய துறை, (பு வெ. வாகை),

முப்பத்துமூவர் தேவர்

ஆதித்தர் பன்னிருவர். அசுவினிகள் இருவர். ஈசர் பதினொருவர். வசுக்கள் எண்மர்,

முப்பூ

காரமான பூநீற்றை பனி ஜலத்தில் கரைத்துவைத்து மூன்றாநாள் தெளிவெடுத்து ரவியில் பத்து முறை காய வைத்து, கல்லுப்பு, கற்சுண் ணாம்பு, கபால வோட்டுப்பு, சூடன், முதலியவற்றை அண்ட வெள்ளைக் கருவால் ஆட்டிப்புடமிட உண்டான உப்பு.

முப்போதுந் திருமேனி தீண்டுவார்

சிவமூர்த்தியை முக்காலத்தும் தீண்டிப் பூசிக்கும் தவப்பேறடைந்த சிவவேதியராகிய தொகையடியவர் (பெ~புராணம்).

முப்போர் நாகனார்

முப்போர் என்பது ஒரூர். (திருவாடானைத் தாலுக்காவில் முப்பையூர் என்று ஒன்றுளது.) இவர் பாலையைப் பாடியுள்ளார். நாளது சின்மை இளைமைய தருமை முதலாயவற்றை விரித்துக்கூறுவர். இவர் பாடியது நற். 314ம் பாட்டு,

மும்மண்டலம்

சந்திரமண்டலம், ஆதித்த மண்டலம், அக்னிமண்டலம், சந்திர மண்டலம்: மூலாதாரந் தொடங்கி ஒவ்வோரெழுத்தை முன்னிட்டுக் கொண்டு சிரசு நடுவில் கோடி சூரியர் உதயமானாற் போலப் பிரகாசிப்பது. இந்த அமிர்தகலை அக்னி மண்டலத்தை நோக்கிச் சோதியாய் நிற்கும். ஆதித்தமண்டலம் இருதயகமலத்தில் அறுகோணமாய் எட்டிதழ்களுடைய ஒரு புஷ்பமாயிருக்கும். இது, வாழைப்பூப் போல் கீழ்நோக்கியிருக்கும். அக்னிமண்டலம் பிருதிவியும், அப்புவும் கூடினவிடத்து நாற்சதுரமாய் நடுவே முக்கோணமாய் நாலி தழுடைய ஒரு புஷ்பமாய் விளங்கும். (சித்தா.)

மும்மீன்

வருமுன் காப்போன், வருங்கால் காப்போன், வந்தபின் காப்போன் என்பன. ஒரு தீர்வதறிய குளத்திலிருந்த மீன்கள் ஒன்றுக் கொன்று யோசித்து வேறிடம் போக யோசிக்கையில், அவை பெயர்க்குத் தக்கபடி இரண்டு தப்பின; ஒன்று செம்படவனிடம் அகப்பட்டிருந்தது. இக்கதை பீஷ்மால் தருமருக்கு வருமுன் காப்பதற் காகக் கூறியது. (பார~சாங்.)

மும்மை

(3) இம்மை, மறுமை, உம்மை.

முயலக நோய்

ஒருவிதநோய், கொல்லி மழவன் குமரிக்குற்ற இந்த நோயைத் திருஞான சம்பந்த சுவாமிகள் நீக்கியருளினர். (பெ. புராணம்,

முயலகன்

தாருகாவனத்து இருடிகள் சிவ மூர்த்தியைக் கொல்ல ஆபிசார யாகஞ் செய்ய அதில் எழுந்த பூதன். இவன் சிவ மூர்த்தியிடம் தன் உக்கிரவுருவுடன் வரச் சிவமூர்த்தி இவனை முதுகில் ஊன்றி மிதித்து இடுப்பை யொடித்தனர்.

முயல்

இது பூனையளவுள்ள பிராணி. இது உடப்பு நீண்டும், தலை குறுகியும், உடம்பில் மிருதுவான மயிர்கள் பெற்றும், காதுகள் நீண்டும், பின்னங்கால் முன்னங்காலினும் மீண்டும், கண்கள் பருத்தும் உள்ள பிராணி. இது பயமுடையது. சாந்தமுடையது. புதர்களில் கூடுகட்டிக் குட்டிபோட்டு வாழ்வது, இது சிறு சத்தத்தையும் நன்றாயறி யுமாதலால் தன் சத்துரு வருவதை யறிந்து அதிவேகமாக ஓடவல்லது. புல் நிறைந்த இடங்களில் வாழும் பிராணி, இதனாகாரம் புல், தண்ணீர் அகப்படா விடின் பனிநீரை நக்கும்,

முரசவாகை

ஆரவாரிக்கும் வீரக்கழலினை புடையானது பரந்த மாளிகையிடத்துப் பலியைப் பெறும் முரசினுடைய தன்மையைச் சொல்லிய துறை. (பு. வெ. வாகை),

முரசை

குபேரன் மனைவி

முரஞ்சியூர் முடிநாகராயர்

இவர் தலைச்சங்கத்திருந்து தமிழாராய்ந்த புலவருள் ஒருவர். இதனை இறையனார் அகப்பொருள் முதலியவற் றாலறிக. இவர் சேரமான் பெருஞ்சோற்று உதியனைப் பாடியவர். “அலங்குளைப் புரவியைவரொடு சினை இ, நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழி யப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புற. நா. 2.) எனப்பாடியதால் இவர் பாரத முடிந்த காலத்தவராக எண்ணப் படுகின்றார். இதனால் கடைச்சங்க மிருந்தது பாரத காலமாகிய பாண்டவர் காலத்துக்கு முன் என்பதும் பெறப்படும். இவர் தமிழ் நாட்டில் அக்காலத்திருந்த நாகரென்னும் சாதியாரில் ஒருவர். நாகர் காண்க,

முரண்டாள்

பாதகண்டமாண்ட பூர்வ அரச பேதம்.

முரண்விளைந்தழிவணி

அஃதாவது, ஓரிடத்துள்ளனவுங் காரிய காரணங்களாகா தனவுமாகிய இரண்டு தருமங்களுக்கு மேன்மேலும் தோன்றியழியும் பகைமையைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் வினோதா பாசாலங்கார மென்பர்.

முரன்

நரகாசுரன் சேநாபதி. (மந்திரியும்) இவன் கோட்டையைக் காத்திருப்புழி கண்ணன் சென்று இவனைக் கொலைசெய்தான். இதனால் கண்ணனுக்கு முராரியென்று ஒருபெயர் உண்டாயிற்று. இவன் குமாரர் விபாவசு, வசு, நபசுவான், அருணன், தாம்ரன், அந்தரிக்ஷன், சிரவணன். இவனை நரகாசுரனுக்குத் தமயன் என்றுங் கூறுவர். கம்சனுக்குச் சிநேகன். இவனுக்கு முராசுரன் எனவும் பெயர்.

முராசுரன்

முரனைக் காண்க

முராரி

1. முரனென்னும் அசுரனை வதைத்த விஷ்ணுவிற்கு ஒரு பெயர் 2. ஒரு வடநூற் புலவன்.

முருக நாயனார்

இவர் சோணாட்டில் திருப்புகலூரில் பிராமண குலத்திற்பிறந்து சிவ பக்தியிற் சிறந்தவர். இவர் பிராம்ம முகூர்த்தத்தில் எழுந்து தீர்த்தமாடி வர்த்தமானீச்சுரருக்குச் சாத்த மலர் பறித்துத் திரு மாலைகள் தொடுத்துச்சாத்தி அருச்சித்து வருவர். இவ்வகை நடத்துங் காலத்துத் திருஞானசம்பந்தமூர்த்திகளுக்கு நண்பராகி அவர் திருமணத் திற்சென்று பரம சிவமூர்த்தியின் திருவடியடைந்தனர். இவர்காலம் திருஞான சம்பந்தமூர்த்திகள் தாலம். (பெ~புராணம்).

முருகதாசர்

இவர் தண்டபாணி சுவாமிகளென்றும் திருப்புகழ்ச் சுவாமிகளென்றும் வழங்கப்படுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்தவர். அறுவகை யிலக்கணம், புலவர் புராணம் முதலாய பல பெருநூல்கள் இயற்றி யிருக்கின்றனர்.

முருகவேள்

1. இவர் பொய்யாமொழியைத் தம்மீது கவிபாடக்கேட்க அவர் பெட்டையையும் பாடி முட்டையையும் பாடவோ, பாடேன் என மறுக்கக் கேட்டுப்புலவர் தனித்துக்காட்டின்வழி வருகையில் வேடனைப் போற் சென்று வழிமறிக்க, புலவர் தாம்பாவலன் எனக்கூறக்கேட்டுத் தம்மீது கவிபாடக் கூறினர். புலவர் “பொன் போலும் ” எனக் கூறக் கேட்டுத் தாம் “வீழ்ந்ததுளி” எனக் கவி கூறித் தரிசனந்தந்து அநுக்கிரகித்தவர். 2. பொய்யாமொழியைக் காண்க,

முருகேசமுதலியார்

இவர் திருமயிலையிலிருந்த வேளாண் குலத்தவர். சென்னை பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்த் தலைமைப்புலமை நடாத்திய புலவர், தமிழிலக்கிய இலக்கணப் பயிற்சியுள்ளவர். பல தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டவர்.

முரை

நந்தன் தேவி சந்திரகுப்தன் தாய்.

முறம்

தானியங்களிலுள்ள குற்றம் நீங்க நோம்பவும், கொழிக்கவும், தெள்ளவும், தூற்றவும் அமைந்தது. இது சிறு மூங்கிற் பத்தைகளால் பின்னப்பட்டு அடி விரிந்து தலை குவிந்த கருவி.

முறுக்குச்சர்ப்பம்

இது கடித்தால் உடலை முறுக்குதலும், பதறலும் உண்டாகும்.

முறுவல்

இது ஒரு நாடகத் தமிழ் நூல்

முறுவெங்கண்ணனார்

இவர் வெங்கண்ணனாரெனவும் படுவர். குறிஞ்சித்திணையைப் பாடியுள்ளார். இவர் உள்ளுரை கூறியது வியப்புடையதாகும். (நற். 132.) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்கூறிய பாடலொன்றும், அசுத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

முறையிற் படர்ச்சியணி

அஃதாவது, முறையாக ஒரு பொருள பலவிடங்களிற் சென்றடைதலையேனு. மோரிடத்திற் பல பொருள் சென்றடைதலையேனுஞ் சொல்லுதலாம். இதனை வட நூலார் பரியாயாலங் காரமென்பர்.

முற்கலருஷி

1. மிருகண்டு ருஷியின் மாமனார். மருத்துவதி தந்தை. இவர் காசிபரிடம் வேதாத்யயனம் செய்கையில் எச்சில் தெறித்தமையால் காசிபர் கோபித்து எருதாகும்படிச் சாபங்கொடுக்கப் பெற்றவர். 2. ஒரு இருடி, இவர்தேவி வநசமாலை. இவள் புத்திரனில்லாததால் கீரி வளர்த்தனன். இக்கிரியை வளர்த்து வருகையில் புத்திரன் பிறந்தனன். அப்புத்திரனைத் தொட்டிலில் வளர்த்தி நீர்க்குச் செல்ல ஒரு நாகம் தொட்டிலில் இறங்குவதைக் கீரிகண்டு பாம்பைத் துண்டித்துத் தன்னை வளர்த்தவளிடம் சென்றது. வநசமாலை கீரி குழந்தையைக் கடித்துவிட்டு வந்து விட்டதென எண்ணிக் கீரியைக் கொன்று வீட்டில் வந்து பார்க்கப் பாம்பு இறந்திருக்கவும் குழந்தை உயிருடன் இருக்கவுங் கண்டு விசன மடைந்து தான் இறக்கத் துணிகையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து இவளை நோக்கி, ‘நீ முற்பிறப்பில் கீரி உன்னைக் கீரியுருக்கொண் டிருந்தவள் கொன்றதனால் நீ அவளை இப்பிறப்பில் பழி வாங்கினை’ எனக் கூறி மறைந்தனர். இவளும் தன் குழந்தையுடன் சுகமே வாழ்ந்தனள்

முற்றுழிஞை

அசையுந் தன்மையினை உடைத்தாய் விளங்கும் வேணியையுடையான் மலைந்தபூவினது நன்மையைச் சொல்லிய துறை. (பு. வெ உழிஞை.)

முலைப்பால்கூலி

பெண்களை நிச்சயிக்குங் காலத்தில், தாய் பால் கொடுத்து வளர்த்ததின் பொருட்டு அவளுக்குச் செய்யுஞ் சம்மானம். (உல~வ.)

முல்லை

1. பெரிய மலைபோன்ற மார்பினையுடையான் தன்னை மேவின அன்பினையுடைய மடப்பத்தினையுடையாளைக் கூடிய மிகுதியைச் சொல்லிய துறை. (பு. வெ. பொது.) 2. காடு சார்ந்த நிலம். அதன் கருப்பொருள்; தெய்வம் நெடுமால், உயர்ந்தோர் குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, தாழ்ந்தோர்; இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பள் காட்டுக்கோழி, விலங்கு மான், முயல், ஊர்; பாடி, நீர்; குறுஞ்சுனை, கான்யாறு பூ, குல்லை, முல்லை, தோன்றி, பிடவம், கொன்றை, காயா, மரம் குருந்து, உணவு; வரகு, சாமை, முதிரை, பறை; ஏற்றுப் பறை, யாழ்; முல்லையாழ், பண்; சாதாரி, தொழில்; சாமை, வரகு விதைத்தல், அறுத்தல், கடாவிடல், விடை தழுவல், ஆவின மேய்த்தல், கொன்றைக் குழலூதல், குரவையாடல் கான்யாறு ஆடல்,

முல்லை நிலம்

பித்ததோஷம் அதிகரித்தற்கிடம். இதனுடன் வாதமும் கூடும். இவற்றால் பல ரோகங்களுண்டாம்.

முல்லைக்குரிய கருப்பொருள்

தெய்வம். மால், உயர்ந்தோர்; குறும்பொறை நாடன் தோன்றல், மனைவி, தாழ்ந்தோர்; இடையர், இடைச்சியர், புள்; காட்டுக்கோழி, விலங்கு; மான், முயல், ஊர்; பாடி, நீர் குறுஞ்சுனை, கான்யாறு, பூ;முல்லை, கொன்றை, காயா, மரம் குருந்து, உணவு வரகு, சாமை, பறை ஏற்றுப்பறை, யாழ் முல்லையாழ், பண்; சாதாரி, தொழில்;சாமை, வரகு விதைத்தல், கடாவிடல், விடைதழுவல், குரவையாடல் முதலியன. (அகம்)

முல்லைப்பாட்டு

இது தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவியின் இயல்பைக் கூறியது. இப்பாட்டு காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது. பத்துப்பாட்டினுள் ஒன்று.

முள்ளம்பன்றி

இது உடம்பில் நீண்ட முட்களையும் பன்றிபோல் முகத்தையும் பெற்றிருத்தலால் முட்பன்றியெனப் பெயரடைந்தது. இது ஓரடி உயரமும் இரண்டடி நீளமும் உள்ளது. தலையும் மூக்கும் பன்றி போல் இருக்கும். மேல்வாயிலும் கீழ்வாயிலும் கோரப்பற்கள் உண்டு. இதன் கழுத்தில் வெண்ணிறம் பட்டை போலிருக்கும், காது அகன்றிருக் கும், உடம்பெங்கும் வளைந்த பெரிய முட்களைக் கொண்டிருக்கும். இது கோபங்கொள்ளின் முட்களைச் சிலிர்த்துக்கொண்டு எதிரியின் மேல் பாயும். ஆகாரம் கிழங்கு முதலியவும் பூச்சிகளுமாம்.

முள்ளியார்

பெருவாயின் மகன். ஆசாரக்கோவை நூலாசிரியர்.

முள்ளியூர்ப்பூதி

கடைச்சங்க மருவிய புலவர்,

முள்ளூர்மலை

கடையெழுவள்ளலில் ஒருவனான மலையமான் திருமுடிக்காரியின் மலை. இதில் பகைவர்க்கஞ்சிச் சோழன் பலநாள் வசித்திருந்தான், (புற~நா.)

முழுது கண்டராமன்

ஒருபாண்டியன். இவனுக்குப் பவ்யசூடாமணி பாண்டியன் எனவும் பெயர். இவனுக்கு ஒரு இடையன் நாடோறும் மந்தையில் பால் கறந்து தருவது வழக்கம். இவ்வகை வருகையில் ஒரு நாள் இடையன் வரும் வழியில் மூங்கின் முனை இடற, பாலைக் கவிழ்த்துக் குறைந்த பாலாய் அரசனிடம் செல்ல, அரசன் பால் என் குறைந்ததென்றனன். அதற்கு இடையன் நடந்த வரலாறு கூறி மறுநா ளும் அவ்வகை செய்து வருகையில் அரசன் கோபிக்க இடையன் விசனத்துடன் திரும்பி வீடுசென்று மூங்கின் முனையை வெட்டி யெறியக் கோடரியெடுத்து அருகில் வைத்துக்கொண்டும் மறந்து பின்னும் பாலை அவ்விடம் கருத்துடன் கொண்டுவந்தும் கவிழ்த்தனன். அரசன் இடையன் செய்தியறிந்து இனித் தண்டிப்பேன் என, இடையன் மனவருத்தத்துடன் வீடு வந்து கோடரியையெடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு அன்று இரவைப் போக்கி மறு நாள் பால்கொண்டு அவ்விடஞ் செல்லுகையில் எப்படியோ பாலைக்கவிழ்த்து அதிக கோபமுடைய வனாய் இடுப்பில் கட்டியிருந்த கோடரியை யெடுத்து மூங்கில் முனையை வெட்டினன். அந்த வெட்டுப்பட்ட இடத்திலிருந்து உதிரம் பெருக்கெடுக்க, இடையன் பயந்து அரசனிடம் இச்செய்தியைக் கூறினன். அரசன் மந்திரியருடன் வந்து துதிக்கச் சிவமூர்த்தி சிவலிங்க உருவாய் வெளிப்பட்டு அரசன் வேண்ட வளர்ந்து மீண்டுங் குறுகினர். இவ்வரசன் சுவாமிக்கு ஆலயமுதலிய திருப்பணி செய்வித்து முத்தி யடைந்தனன்,

முழுநீறுபூசியமுநிவர்

மந்திரவிதிப்படி விளைத்த திருநீற்றை மந்திர பூர்வமாக அணிந்து முத்தியடைந்த தொகையடியார்கள், (பெ~புராணம்)

முஷ்டிகாசுரன்

1. திரிலோகங்களையும் வதைத்திருந்த அசுரன். இவன் சிவமூர்த்தியால் இறந்தனன். 2. கம்சனுக்குத் துணையான அரசன். இவன் மல்லயுத்தத்திற்குப் பலராமர்மீது ஏவப்பட்டுத் துணைவருடன் உதையுண்டு இறந்தவன்