ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மீகாமன் | கும்பகோணத்திலுள்ள வலங்கைக் கிராமத்திலிருந்த தமிழ்ப் புலவன். இவன் இயற்றிய நூல் அறுவானந்தசித்தி. |
மீட்சி | செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும், உடன் போய் தலைவனுந் தலைவியு மீண்டுவருதலுமாம். இது, உடன் பொக்கின் வகையுலொன்று. இது, தெறித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல் இதன் வகையாம். இது, தலைவிசேணகன்றமை செவிலித்தாய்க் குணர்த்தல், தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல், தலைவி முன் செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல், முன் சென்றோர் பாங்கியர்க் குணர்த்தல், பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல், ஈற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல் எனும் விரிவினையுடைத்து. (அகம்) |
மீட்டுவான் | சக்கிரனென்னும் துவாதசாதித்தியனுக்குப் பௌலோமியிடம், உதித்த குமரன். |
மீனகேதனன் | மன்மதனுக்கு ஒரு பெயர். |
மீனாக்ஷி | மதுரையில் எழுந்தருளியிருக்கும் சொக்கலிங்க மூர்த்தியின் சத்தி, |
மீனாக்ஷிசுந்தர கவிராயர் | இவர், பாண்டி மண்டலத்துள்ள முகவூர். எட்டயபுரம் சமஸ்தான வித்வானாயிருந்தவர். இவர் தமிழ்க் குவலயா நந்தமெனும் அலங்கார சாஸ்திரத்தின் வடமொழி உதாரணப்படி தமிழில் செய்யுளாக உதாரணம் பாடிச் சேர்த்தவர். |
மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை | சென்னை ராஜாதானியில் தழிழ் வழங்கு தென்னாட்டில் திரிசிரபுரத்தில் சிதம்பரம் பிள்ளைக்குக் குமாரராய்த் தமிழ் வல்லராயிருந்த ஒரு தமிழ்ப்புலவர். இவர் ஆற்றூர்ப் புராணம், எறும் பீசர் வெண்பாவந்தாதி, கண்ட தேவிப்புசாணம், கன்னபுரப்பாகம் பிரி யாள் பிள்ளைத்தமிழ், காசிரகசியம், காழிக் கோவை, கோயிலூர்ப் புராணம், சூரைக் குடிப்புராணம், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், தண்ட பாணி பதிற்றுப்பத்தந்தாதி, தருமை சச்சிதாநந்த தேசிகர்மாலை, தனியூர்ப் புராணம், திருக்கலசைமாலை, திருக்குடந்தைத் திரிபந்தாதி, திருக்குடந்தைப் புராணம், திருக்குடந்தை மங்களாம்பிகைப் பிள்ளைத் தமிழ், திருக்குறுக்கை வீரட்ட புராணம், திரிசிராப்பள்ளி யமகவந்தாதி, திருஞான சம்பந்தரானர் தக்களிப்பு, திருஞானசம் பந்தர் பதிற்றுப்பத் தந்தாதி, திருத்தவத்துறைப் பெருந்தவப் பிராட்டிப் பிள்ளைத் தமிழ், திருத்தில்லை யமகவந்தாதி, திருத்துருத்தி புராணம், திருத்துறைசை யமகவந்தாதி, திருநாகைக் காரோண புராணம், திருப்பெருந்துறை புராணம், திருப்பெருமண நல்லூர்த் திருநீற்றுமைப் பிள்ளைத் தமிழ், திருப்பைஞ்சீலித்திரிபந்தாதி, திரு மயிலை புராணம், திருவம்பர் புராணம், திருவாரூர்த் தியாகராஜலீலை, திருவாவடுதுறை சுப்ரமண்ய தேவிகமாலை, திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ், திருவாளொளிபுற்றூர்ப் புராணம், திருவானைக்கா திரிபந்தாதி, திருவானைக்காமாலை, திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ், திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ், திருவிடை மருதூருலா, திருவிடை மருதூர்த்திரிபந்தாதி, திருவுறந்தைக் காந்திமதி யம்மைப் பிள்ளைத்தமிழ், திருவுறந்தைப் புராணம், திருவூறைப் பதிற்றுப்பத் தந்தாதி, திருவெண்காட்டுப் பெரிய நாயகியம்மைப் பிள்ளைத்தமிழ், துறைசைக் கலம்பகம், பட்டீச்சுரப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலைவனப் பதிற்றுப் பத்தந்தாதி, மண்ணிப் படிக்கரைப் புராணம், மாயூரப்புராணம், வாட்போக்கிக் கலம்பகம், விளத்தொட்டிப் புராணம், வீரைவன புராணம், முதலிய பல ஸ்தல புராணங்கள் இயற்றியிருக்கின். |
மீனெறி தூண்டிலார் | 1 இவர் கடைச்சங்க காலத்திருந்த பெண் கவி, இவர் தலைவனது வரவு நீட்டிக்க அவனது நீக்கத்தைக் கவணிற்கஞ்சி கைவிட்ட மூங்கில் மீனெறி தூண்டிலினீக்கம் போன்றதென உவமை கூறினமையின் இப்பெயரடைந்தனர். (குறு 45.) 2. இவர் தப்பாடலுள எடுத்தாண்ட உவமையே இவர்க்குப் பெயராயிற்று. |
மீன் குத்திக்குருவி | இது இந்தியா தேசப்பறவை இது உடல் பருத்து காலும் வாலும் குறுகி மூக்கு நீண்டு அடிபருத்து முனை கூரியதாய்ச் சிறுத்துத் தலை செந்நிறமும், முதுகு பசுமை கலந்த நீலமும் கொண்டது. நீர்க்கருகிலுள்ள மரஞ் செடிகளில் உட்கார்ந்திருந்து நீர்க்குமேல் (10,20) அடி உயரத்தில் பறந்து நின்று, தனக்கிரைக்கமைந்த மீனைக் கண்டவுடன் நீரில் மூழ்கிப் பிடித்து அருந்தும். இவ்வினத்தில் வெள்ளை நிற முள்ளனவும், பசுமை நிறமுள்ளனவும் உண்டு. இதனைப் பொன்னாங் தட்டான் என்பர். |
மீன் வகைகள் | திருக்கைமீன்: இது, தட்டையான அகன்ற உருவுள்ள பிராணி, கோணம் போன்ற முகத்தின் கீழ்பாகத்தில் வாயும், மேல் பாகத்தில் கண்களும் பெற்றிருக்கும். இதன் வால் ஒரு அடிமுதல் 12. அடிகள் நீண்டு சாட்டை போலிருக்கும். இதன் இரண்டு பக்கங்களிலும் இரக்கை போன்ற உறுப்பு ஒன்றுண்டு. அதனால் இது நீரில் தாவிச் செல்லும். இதனை வௌவால்மீன் எனவும் கூறுவர். இவ்வினத்தில் கழுகு திருக்கை, கொடுக்குவால் திருக்கைமீன் சாரத்திருக்கைகளும் உண்டென்பர். புட்டிமீன் இது திருக்கையின் பேதம். இது, அமெரிகா கடல்வாசி, புட்டியைப் போல் உருவமும் திருக்கையைப் போல் நீண்ட வாலுமுள்ளது. கண்மூடாக் கோழி மீன்கள்: இவ்வினத்தில் முள்ளிக் கோழி மீன்கள், வரிக்கோழிமீன், புள்ளிக்கோழி மீன் என்பன உண்டென்பர். இவற்றின் நெற்றியிலுள்ள கண்கள் மிகப்பெரியன வாய் இமைகளிலாதனவா யிருக்கின்றன. சில பலவகை வர்ணமமைந்த வுடலுள்ளன. கடல்மான்: இது ஒருவகை மீனினத்தைச் சேர்ந்தது. இதற்கு மீன் கண் போன்ற பெரிய கண்களும் தலையைச் சுற்றிலும் பத்துக்கைகளும் உண்டு. இது, பச்சை ஒணானைப்போலத் தன்னிறத்தை மாற்றிச் சத்துருக்களை வெருட்டும். கெண்டைமீன்: இது உடம்பெங்கும் செதிள்களைப் பெற்றிருப்பதுடன் நீர்வாழ்வன வற்றிற்குள்ளது போல செவிகளும் செட்டைகளுமுண்டு. இக்கண்டையினத்தில் சிறியவை நெற்றிலி, அசரை, என்பர். சேல்மீன்: இது கெண்டைமீன் வகைகளில் ஒன்று. இது நீரில் உலாவுகையில் பிறழுமியல்புடையது. பாடும்மீன்: இது இலக்கைக்கருகிலுள்ள மட்டகளம் எனும் இடத்தை அடுத்த கடலி லுள்ளது. இது, (10) அங்குல நீளமாம். இது களித்து உலாவுகையில் தன்னிடமுள்ள செதிள்களை மூடித்திறப்பதால் ஒருவித ஓசை இனிதாக உண்டாகிறதாம். காட்மீன்: இம்மீன் ஐரோபா கண்டத்தின் வடகடலி லுள்ளது. இம்மீனின் விருத்தியால் அக்கடலோடிகள் செல்வமடை கின்றனர். இது ஒரு தடைவைக்கு (10) லக்ஷத்திற்குமேல் முட்டையிடு கிறது. இதன் ஈரலிலிருந்து ஒருவகை எண்ணெய் எடுக்கின்றனர். அதுவே காட்டலிவர் ஆயில், பறக்கும் மீன்: இம் மீனினங்களுக்கு விலாப்பக்கங்களில் இரக்கைகள் உண்டு. இது நீரில் (3) அடி உயரம் கிளம்பி (50) அடி தாவிச்சென்று நீரில் மூழ்குகிறது. இவை கூட்டம் கூட்டமாகவே வசிக்கின்றன. தட்டைமீன்: இது, தட்டையாய் ஓரத்தில் இதற்கு முதுகிலிருந்து வால்வரையில் சிறு செட்டைகளிருக்கின்றன. இதற்கு மனிதற்குள்ளது போல் நாக்குண்டு. ஆகையாலிதனை நாக்குமீன் என்பர். கண்ணாடி மீன் இதன் உடல் தட்டையாய்க் கண்ணாடி போல் இருப்பதாலும், தண்ணீரினிறத்தைப் பெற்றிருப்பதாலும் இதனை அவ் வாறு கூறுவர். காதும், கொம்புமுள்ள மீன், இவ்வகைமீன் ஜபான் கடலில் (1918) வருஷம் அகப்பட்டதாம். அதற்கு இரண்டடி நீளமுள்ள காலும் கொம்பும் இருந்ததாம். கூடுகட்டுமீன்: இது, ஜபான் கடலி லுள்ள மீன் வகைகளைச் சேர்ந்தது. இது கடலிலுள்ள பூண்டுகளைக் கொண்டு கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அக்குஞ்சுகள் இரை தேடித்திரியும் பருவம் வரையில் காத்துவிடும் என்பர். பட்டு மீன்: இது மத்யதரைக் கடலையடுத்த உஷ்ண பிரதேசத்தின் கடலிலுள்ளது. இது, பட்டுப்பூச்சிகளைப்போல் பட்டு உண்டாக்குகிறதாம். இதன் நாக்கின் அடிப்பாகத்தில் சிறு குழாய் போன்ற உறுப்புண்டு. அதிலுண்டாம் பசையினால் பட்டு உண்டாக்குகிறது. ஒட்டுமீன்: இது சுறாமீனின் இனத்தது. இதன் தலையின் மேற்புறத்தில் தட்டையாக ஒரு காற்றுறிஞ்சும் சதை ஒன்றிருக்கிறது. அதனாலிது பெரிய பிராணிகளின் உடல்களிலொட்டிக் கொண்டும் மரக்கலங்களினடியில் ஒட்டிக் கொண்டும் ஜீவிக்கிறது. தூண்டில் மீன்: இது ஐரோப்பிய கடல்வாசி. (2) முதல் (10) அடி நீளமும் கனமுமுள்ளது. இதற்கு முகத்திலும் நெற்றியிலும் மீசை போன்ற உறுப்புக்கள் உண்டு. அவ்வுறுப்புக்களில் ஒன்று. நெற்றியில் நீண்டு நுனியில் தூண்டில் போலிருக்கிறது. இம்மீன் கடலடியில் தங்கித் தன்னை மறைத்துத் தூண்டில்போலும் உறுப்பை வெளிவிட மற்ற மீன்கள் அதனை இரையென எண்ணிக் கௌவத் தன்னுறுப்பை இழுத்துக்கொண்டு கவ்விய மீனை யிரையாக்குவது. தொப்பைமீன்; இதுவும் தூண்டில் மீன்வகையிலொன்று. இது வங்காளக் குடாக்கடலின்டிப் பாகத்திலிருக்கிறது. இதற்கு மூக்கின் மீதுள்ள கொம்பின் முனையில் செண்டுபோன்ற ஒரு உறுப்புண்டு, அதனை வெளியிட்டுத் தான் மறைந்திருக்கும். ஏதேனும் பிராணி அதனைத் தீண்ட உடனே அப்பிராணியை இரையாக்கும், நச்சுக்குழற் கண்ணுள்ள மீன்: (Telescope Fish) இது, சைனா, ஜப்பான் கடல் களிலும் நீர்நிலைகளிலுமுள்ளவை. இம்மீனின் கண்கள் தூர திருஷ்டி கண்ணாடி நீண்ட குழாயில் பதித்ததுபோல் நீண்ட உறுப்பில் பதிந்திருக் கின்றன. இதனிறம் கபில நிறமாகவும், சில வேளைகளில் பொன்னிற மாகவும் மாறுகிறதாம். இதன் உடல் பலவகை நிறமும் புள்ளிகளும், கோடுகளும் பெற்று அழகாயிருக்கிறது. ஆகையால் இதை வீடுகளில் வளர்க்கின்றனர். சண்டை செய்யும் மீன்: இம்மீன் ஸயாம்நாட்டு சிங்கப்பூர் முதலியவற்றிலுள்ள நீர்நிலையிலிருப்பது. இது (10) அங்குல நீளமுள்ளது. இது, தன்னினங்களுடன் தன்னினத்தை மாற்றிச் சண்டை யிடல் அழகாகத் தோன்றுமாதையால் இதை வீட்டில் வளர்ப்பது, நீர்த்துருத்திமீன்: இது சேலினத்தைச் சேர்ந்து இது ஜாவா தீவின் நீர்நிலைகளிலுள்ளது. இது நீரின் மேனிலையில் மேய்ந்து வருகையில் அருகில் பறக்கும் பட்டாம்பூச்சி வண்டுகள் மேல் தண்ணீரைப் பீச்சாங்குழல் போல் பீச்சி அப்பூச்சிகளை மயக்கி அவை நீரில் விழுந்தவுடனிரை யாக்கும். அம்புவிடுமீன்: (Cyliudirda) இது, ஐரோப்பிய கடல்களிலிருக் கிறது, இம்மீனின் தேகத்தில் குழாய்போல் ஒரு உறுப்புண்டு, இது, தன் விரோதியைக் கண்டபோது அவ்வுறுப்பின் வழியாக ஒருவித நீலவர் ணமான திரவத்தை வெளிவிட அத்திரவம் மற்றப் பிராணிகளின் மீது பட்டவுடன் நோவுதருதலால் இதைக்கண்டவுடன் பிராணிகள் விலகிப் போகின்றன. இவ் வினத்தில் மற்றொன்றிற்கு ஆசனத்தருகிலுள்ள குழையில் வழுவழுப்பான தசை சத்திருக்கிறது. அதைப் பீச்சி விரோதிகளை அது பயப்படுத்துகிறது. மற்றொரு வகை மீன், தன் கடைவாயின் இருபுறமுள்ளத்வாரத்திருந்து பொரிபோன்ற முட்டைகளை விரோதி மேல் தூவ அது விரோதிகள் மீது பட்டவுடன் வெடித்து அதிலிருந்துண் டாம் ஊசிபோன்ற அணுக்கள் தைக்கும், அதனால் அவை நீங்கும். லினோபிரியன் பாலிபோசன் (Linophryne polypogon). இம் மீன் கடலினடியில் (3000) அடிகளுக்குக் கீழ் இருக்கிறது. இதன் உடல் குறுகிப் பருத்திருக்கிறது. தேகத்தில் பலாக்காய்போன்று சிறு சொறிமுள் உண்டு. இது சிங்கத்தையொத்த அகன்ற வாயும், நெற்றியில் ஒரு கொம்பும் மூக்கு முனையில் மயிலிறகுபோன்ற குஞ்சமும், தாடியும் பெற்றிருக்கும். (2) இவ்வினத்தில் மற்றொன்றுக்கு தேகம் அதனை யொத்து வாயடியினும் மூக்கின் மீதும் கவைத்த கொம்பு போலுறுப்பு பெற்றிருக்கிறது. இவ்வினத்தில் வேறொன்று இதற்கு ஆங்கிலத்தில் லினோபரியன் மக்ராடன் (Linophryne Maorodan) (3) இவ்வினத்தில் வேறொன்று, பேரோப்ரியன் ஆபோகான் (Borophryne Apogon) என்பது, இம்மீனின் தேகம் முன்னையதை ஒத்தது, பெரியது, இதன் வாயும் பற்களும் சிங்கத்தை ஒத்திருக்கிறது. இதன் மூக்கின் முனையில் பந்து போல் திரண்ட அழகிய உறுப்பு ஒன்றுண்டு, இது ஒருவகையான நெடியுள்ள திரவத்தை விரோதிகளிடம் பீச்சுகிறது. விசித்திரவண்ண மீன்கள் : இவை பவழத்தீவில் உள்ளன. இவை பலவித வர்ணங்களையும் தேகத்தில் பலவித புள்ளிகளையும் உடையன. அவற்றினிறத்தால் அவைகளை நீலமீன், கிளிமீன், கோழிமீன், வண்ணாத்தி மீன், வரிக்கோழிமீன், முள்ளிக் கோழிமீன், புள்ளிக்கோழி மீன் எனப் பெயரிட்டிருக்கின்றனர். இவை பொன்மை, செம்மை, நீலம், மஞ்சள், கறுப்பு முதலிய நிறங்களைப் பெற்றவை. ஒளியுள்ள மீன்கள்: இவ்வினத்திற் சில கடலின் அடிப்பாகத்திலிருக்கின்றன. அவற்றிற் சில தம் உறப்பில் ஒளியுள்ள உறுப்புகளைப் பெற்றவை, அவற்றை மிக் டோபஸ் (Myetophos) என்பர். சில ஒளியை வேண்டிய போது வருவித்துக்கொள்வன, அவை நிக்டோபஸ் (Npotopbos) என்பர். ஒளிகக்கு மீன் கிரீனடியர் வகுப்பு மின் (Grenadier Specias): இம்மீனின் உடலில் செதிள்களிலாப்பாகத்தில் வெண்மையான புள்ளிகளுள்ளன. இம்மீன்கள் விரும்பிய போது அவற்றினின்று ஒருவித வழுவழுப்புள்ள பசை வெளிப்படுகிறது. அப்பசை நீரில் பட்டவுடன் நீலங்கலந்த ஒளியுண்டாகிறது. அவ்வொளியால் இது இரை தேடிக்கொள்ளுகிறது. அப்பசையை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்தால் வாசிக்கக்கூடிய ஒளிதருகிறதாம். நக்ஷத்திரமீன் : Star Fish இம்மீன் தன் தேகத்தில் ஒருவகைப் புள்ளிகள் செதிள்களில்லாமல் கண்ணாடி வட்டங்கள் பதித்தவை போலக் காணப் படுகின்றன. அவை நக்ஷத்திர ஒளிபோல ஒளிவீசவதால் அவ்வொளி யால் இவை ஆகாரம் தேடிக்கொள்கின்றன. விளக்கு மீன்கள்: இவற்றில் நான்குவகை உண்டு, ஒன்று கெண்டையினம். இதன் பெயர் பரோப் பிரியன் ஆபகோன் (Borophryne Apogon) என்பர். இம்மீனின் கண்ணின் கருவிழியையடுத்து வெண்மையான. ஒருவட்ட வுறுப்புள்ளது அவ்வட்டவுறுப்பி னொருசார் ஒரு வெளிச்ச முண்டாயிருக்கிறது. அதைச் சுழற்றி வெளிச்சத்தையுண்டாக்கி இரை தேடுகிறது. இரண்டாவதான மீன் வினோபிரியன் பாலிபோகன் (Lipophryno Poly pogon). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது மூன்றாவது மீனோ மிகப்பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்களும் உருவமும் உடையது. இதனைக் கடற்பேய் என்பர். இதன் பெயர் லீனோபிரியன் பாலி போகன் (Linophrgue Polypogon). இதுவும் மேற்சொன்ன மீன் போலக் கண்வழியாக வெளிச்சம் உண்டாக்கிக் கொள்கிறது. மூன்றாவது மீனோ மிகப்பருத்தும் குறுகியும் பிராணிகளும் மனிதரும் அஞ்சத்தக்க பயங்கரப் பற்களும் உருவமும் உடையது. இதனைக் கடற்பேய் என்பர். இதன் பெயர் (லீனோப்ரியன் மக்ராடன் (Linoplryne Maorodon) என்பர். இம் மீனுக்கு மூக்கின் முனையில் கொம்பு போல் ஒரு உறுப்பு நீண்டிருக் கிறது. அதன் முனையில் காந்தவிளக்குப் போல் ஒரு உருட்சியான ஒளியுற்ற உறுப்பிருக்கிறது. நான்காவது தவளைமீன் (Fishing Frog). இது தவளைக்குஞ்சின் உருப்போல நீண்டவுருவுள்ளது. இது தன்னு டலை விரும்பிய போது நீட்டவும் சுருக்கவும் கூடியது. இதற்குக் கண்கள் விலாப்பக்கத்தி லிருக்கின்றன, இக்கண்களில் இதற்கு ஒளி உண்டு. அவை மீட்டவும் சுருக்கவும் கூடும். அக்கண்களின் ஒளியாவிரை தேடுகின்றன. இம்மீன் வகைகளில் சிலவற்றிற்குத் தலைமீது பிரகாசமான பச்சை மத்தாப்பின் ஒளியும், சிலவற்றிற்குக் கண்களைச்சுற்றி ஒளி கொண்ட புள்ளிகளுண்டு. அவை மின்மினிப்பூச்சி போல் ஒளி தரு கின்றன. சிலவற்றிற்கு உடலில் ஒளிகலந்த வரிகளும், புள்ளிகளுமுண்டு அவை ஒளிதருகின்றன. தூங்கு மீன்கள்: இவ்வின மீன்கள் கடல் மத்தி யில் நின்று கொண்டே தூங்குகின்றன. மாலையில் கடலடியில் படுத்து விடியுமளவும் தூங்குகின்றனவாம். முட்டையை வாயில் வைத்துக் காக்குமீன்: இம்மீன் கெளுத்திமீன் வகையைச் சேர்ந்தது. இதில் பெண்மீன் சில முட்டைகளையிட அவற்றை ஆண்மீன் வாயில் வைத்து அடைகாத்து குஞ்சுகளான பின் வெளிவிடுகின்றன. விநோதநிற்குமீன் : இதற்கு சங்கன் என்பது பெயர் (Cir iticthys aureus). இது வெண்மை கலந்த செந்நிறத்த தாய் மார்பினிரு பக்கங்களிலுள்ள துடுப்புகளை ஊன்றிக்கொண்டும் வாலை யூன்றிக்கொண்டும் நிற்கிறதாம். மண்மீன்: இது விலாங்கு மீன் போல் நீண்டு சட்டைகளிலாமல் மீசையுடன் இருக்கிறது. இது மழைக் காலத்தில் வெளியாகி நீரில் உலாவுகிறது. வேனிற்காலத்தில் மண்ணிற்குள் புதைந்திருக்கும். இது மண்ணிற் புதைந்திருக்கையில் தன் கொழுப்பையே ஆகாரமாகக் கொள்கிறதென்பர். இரட்டைமீன்: இது அமெரிகாவாசி. கெண்டையினத்தைச் சேர்ந்த மீன். இம்மீனில் ஒன்று பெரிது, மற்றொன்று அவ்வினத்தில் அதன் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கு ஆகாரம் வேறு. இவற்றின் வாயில் இரண்டு கூரிய முட்கள் இருக்கின்றன. சூரியமீன்: இம்மீனின் விலாப் பக்கம் தட்டை, முதுகு வயிற்றின் பக்கங்கள் அகன்று தட்டையாக இருக்கிறது. இதனிரண்டு செட்டைகளும் முதுகின் பக்கத்திலும், வயிற்றின் பக்கத்திலும் நீண்டு இருக்கின்றன. இம்மீனின் மேற்றோல் மெருகிட்ட வெள்ளி போல் காணப்படலால் இது தன்னுடலிற் பாதியை நீரினுள்ளும் பாதியை வெளியிலும் வைத்துக்கொண்டு திரியும், காட்சியில் சூரிய ஒளி அதின்மீது படுகையில் மற்றொரு சூரியன் போல் காணப்படுதலால் இதனைச் சூரியமீன் என்பர். தும்பிமீன் : இதன் செட்டைகளும் வாலும் கழுகின் செட்டைபோன்று, தோலாலும் எலும்பாலும் இணைக்கப்பட்டிருக்கின்றன. உடல் புள்ளி களாலும் கோடுகளாலும் நிறைந்துள்ளது. இதனுடல் எலும்பால் மூடப் பட்டிருத்தலால் எந்தப் பிராணியுமிதனிடம் வருவதில்லை. இது சுயேச் சையாய்க் கடலில் உலாவும். மாட்டு மீன்: இதன் உடல் தட்டையாயும், முதுகில் உயர்ந்து முகம் நீண்டு தலைப்பாகத்தில் மாட்டின் கொம்பு போல 2. கொம்புள்ள தாயிருக்கிறது. நிறமாறுமீன்: இது கெண்டை யினத்தது. இதன் முகமும் வாலும் செந்நிறம், காலையில் வெள்ளி போல் நிறம். மாலையில் மங்கல், கோபங் கொள்கையில் செம்மை. நான்கு கண்களுள்ள மீன்: இது கெண்டையினம். இதற்கு செஸ்டோடன் எனப்பெயர். (Chastodon). இதற்கு முகத்தில் இரண்டு கண்களும், வாலின் முனையில் செட்டைக்குட்பட்ட பாகத்தில் 2. கண்களும் இருக் கின்றன. இந்திய பறவைமீன்: (The Indian Flying gurmand) இது கெளித்தியினம். இதன் பிடரியில் நீண்ட ஒருமுள் இருக்கிறது. இதன் செட்டைகள் மெல்லிய எலும்புக்கம்பிகள் பெற்றுத் தோலால் இணைக் கப்பட்டிருக்கின்றன. இவ்விரக்கைகள், உடலினும் நீண்டிருத்தலால் தண்ணீரின் மேற் பறந்து சிலநேரம் நிற்கவுஞ் செய்கின்றன. இந்து மகா சமுத்ரவாசி, முண்டைக்கண் காக்காசி : (Blotch Eye Fish). இது, கெளுத்தியினம். இம் மீனின் கண்கள் பெரியவை. இதன் கண்களின் வெளியிலும் உள்ளிலும் கறுப்புப் புள்ளிகள் அழகாயுண்டு. இம்மீனின் கண்கள் பூனையின் கண்போல் ஒளியுள்ளது, விநோத தலையுள்ள மீன்: இம்மீன்கள் ஐரோப்பியக் கடலகத்தன. இவற்றின் தலையில் தொப்பியணிந் திருப்பது போன்று மெல்விய தகடுபோல அழுத்தமாகவும் வட்டமாயும் உள்ள ஒரு உறுப்பு இருக்கிறது. இது அதனைக் கழுத்து வரையில் மூடிக்கொண்டிருக்கிறது. இதைக் காணுமீன்களிதைப் பிராணியென அறியாது விட்டுவிடும். விநோத வயிற்று மீன்: (Black Swallower). இது, கடல் வராலினத்தது. இம்மீனின் வயிறு மற்ற மீன்களின் வயிறு போலாது ரப்பரைப்போல விரியவும் சுருங்கவும் கூடியதாயிருக்கிறது. அதனாலிதன் வயிறு உடலினும் மும்மடங்கு பெரிதாயிருக்கிறது. இதன் தொண்டையும் தலையைவிடப் பெரிது. இது இரையகப்படுங் காலத்தி லதிகந் தின்று சிலநாள் வரையில் இரை தேடாமல் கடலினடியிலிருக்கும் என்பர். எலும்புடல் மீன்: (The Trunk Fish). இம்மீன் உடல் செதிள்க ளுள்ளதாய்ப் பலாக்காய் முட்கள் போன்று எலும்பாலானதாய் வால் குழல் போன்ற வுறுப்பில் விசிறி போன்று அழகாய் இருக்கிறது. ஆதலால் இதனைப் பணப்பெட்டி மீன் என்பர். ஸ்டர்ஜியன் மீன் : (The Stargeon Fish) இது, அதலாண்டிக், காஸ்பியன் கடலிலுள்ள மீன். இது வியப்புள்ள உடலும் குடலுமுள்ளது. இதன் நீளம் (25) அடிகள், கனம் (300) பவுண்ட், முதுகில் முதலைக்கிருப்பது போன்ற செதிள்களுண்டு, அவை கவசம்போல் (5) வரிசைகளாய் தலைமுதல் வால்வரையில் வியாபித்திருக்கிறது. வாய் தலையின் கீழ்ப்பாகத்தி லிருக்கிறது. இதன் முதுகு எலும்பின் கீழ் காற்றுப் பையொன்று கொதிநீருள்ள தாயிருக்கிறது. அம்மீனின் குடலைத்தொட்டால் விருவிருப்புத் தோன்றுகிறதாம். தாடி நீண்ட மீன்: இம்மீன் கெண்டை யினத்தது. (Polynemus Artedi). இது (1/2) அடி முதல் (5) அடிகள் நீளமுள்ளது, இம்மீனின் கழுத்தடியில் செவுள்களின் பக்கமாய் உடலினும் நீண்டதாய் மயிர்க்கம்பிகள் போன்று தாடிகள் உண்டு. முட்டையுதிர்க்கு மீன்: ஐரோப்பிய மீன் வகையிலொன்று. கெண்டை யினத்தது, இம்மீனின் செதிள்களுக் கிடையிலுள்ள தோலில் சிறு தொளைகளிருக்கின்றன. அம்மீனைப் பிடிக்கின் அத்தொளைகளிலிருந்து சிறு முட்டைகள் போன்று வழுவழுப்பான பொருள்களுதிர்கின்றன. இவை குஞ்சு தரும் முட்டைகளல்ல. இம்முட்டை களம்மீனுக்கு ஆகாரமாகின்றன. முக்குமீன் : (The Sword Fish). இது சுராவகையைச் சேர்ந்தது. இது மத்யதரைக் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலு முள்ளவை. இதன் மூக்கு குத்துவாள் போலிருக்கிறது. இவ்வினத்தில் சிலவற்றிற்கு மேல் கீழ்வாய்களில் பற்களிருக்கின்றன. இதில் ஒருவகை மீனுக்கு நாக்கு மிருக்கிறது. அது வெளியில் நீட்டவும் சுருக்கவும் கூடியதாயிருக்கிறது. சுறா மீன்: இதனைக் கடற்புலி என்பர். இவ்வினத்தில் (2) அடிகள் முதல் (50) அடிகள் நீளம் உண்டு. இதற்கு முன்னும் பின்னுமாக (2) செட்டை களும், கழுத்தின் பக்கத்தில் கைபோலுதவும் (2)ம், வயிற்றின் கீழ் பாகத்தில் பின்பறமாக கால் போன்ற (2) செட்டைகளும், அதன் கீழ் ஒரு செட்டையும், வால் முனையில் ஒரு செட்டையுமாக (8) செட்டைகள் உண்டு. இவற்றின் உதவியாலிது மணிக்கு (20) மைலுக்குமேல் நீந்திச் செல்லும். இம்மீன்களில் பெரியவை ஆழமுள்ள நீரில் வசிக்கின்றன. இவ்வினத்தில் பல வேறுபாடுகளுண்டு, இம்மீன்களின் பெண்மீன் முட்டைகளைக் கடற்பூண்டுகளில் சிக்கச் செய்துபோக குஞ்சுகள் பருவம் வந்த போது முட்டையின் தலைப்பாகத்தைக் கடித்து வெளிவரும், இவ்வினத்தில், வெள்ளைச்சுறா, புள்ளிச்சுறா, நாய்ச்சுறா, சுத்தித் தலைச்சுறா, வாள் பல்மூக்குச்சுறா எனப்பலவகை. வெள்ளைச்சுறா இதன் மேற்றோல் கபில நிறமாயும் வயிறு வெண்ணிறமாயு மிருக்கிறது. இம்மீனினங்களுக்கு வாய் தலையின் கீழ்ப்பாகத்திலிருக்கிறது, இம் மீனின் பற்கள் அதிக கூர்மையுள்ளவை. இது பெரிய பிராணிகளைத் துண்டாக்கி விழுங்கும், இது குட்டி போடுகிறது. புள்ளிச்சுறா: இதன் மேல் சிறுத்தைப் புலிமேல் காணப்படும் புள்ளிகள்போல் புள்ளிகளிருப் பதால் இதனைப் புலிச்சுறா என்பர். இது குட்டி போடுகிறது. நாய்ச்சுறா இவ்வினத்தில் பெரிது (50) அடிகள் கொண்டது. இதன் உடல் சுறசுறப் பான முட்களடர்ந்தது. இது, எல்லாப் பிராணிகளையுந் துரத்தியுணவாக் கும். சுத்தித்தலைச்சுறா: இதன் தலை இரு பக்கங்களிலும் சுத்திபோல் அகன்றிருக்கிறது. இதன் கண்கள் சுத்திபோலகன்ற பக்கத்திலிருக் கின்றன. இம்மீனினத்தில் சிலவற்றிற்குத் தலைப்பக்கம் அகன்று முன்புறம் நீண்டு மண்வெட்டி போலிருப்பதால் அதனை மண்வெட்டித் தலைச்சுறா என்பர். வெள்ளைச்சுர இனத்தில் சிலவற்றிற்கு மாட்டின் தலைபோலிருப்பதால் அதனை மாட்டுமூஞ்சி சுறா என்பர். மற்றொரு வகை திமிங்கிலத்தை ஒத்திருத்தலால் அதனைத் திமிங்கிலச்சுறா என்பர். வாள்பல் மூக்குச்சுறா: இதனைக் கடலோடிகள் வாளா என்பர். இது (10) அடிகள் முதல் (60) அடி நீளமும் கனமும் உள்ளவை. இம்மீனின் தலையின் மேற்பாகம் மூத்தின்முனை வாளின்பற்கள் போன்று இரு பக்கங்களிலும் மிக நீண்டிருக்கிறது. இதனைக் கண்ட திமிங்கிலங்கள் போன்ற பெருமீன்களும், கடலோடிசளும் அஞ்சி நீங்குவர். சிலவற்றின் மூக்கு (15) அடிகளுக்கு மேலும் நீண்டுள்ளது. (இயற்கை அற்புதம்) டால்பின் மீன் : இதன் உடல் குழவி போல் நீண்டிருக்கும். இது (4) அடி முதல் (10) அடிகள் நீண்டிருக்கும். இது, பெரிய கடல்களிலும் பெரு நதிகளிலும் கூட்டங்கூட்டமாய் வசிக்கும். இது கூர்மையாய் நீண்ட மூக்குடையது. இதன் வாய்களில் சற்றேறக்குறைய (100) பற்களுண்டு, |
மீன் வலையன் | (செம்படவன்). சாலியன் வைசியப் பெண்ணின் தோள் புணரப் பிறந்தவன். (அருணகிரி புராணம்.) |
மீன்கள் | பொதுவாக தேக அமைப்பு, இவற்றின் தேகம் நடுப்பாகம் பருத்து இரண்டு நுனிப்பக்கங்களும் சிறுத்திருக்கின்றன. முதுகெலும்பு தலைமுதல் வால் வரை நீண்டிருக்கும். எலும்புக்கோவை, உடுக்கை போன்ற சிறு எலும்புகளால் பொருத்தப்பட்டிருக்கிறது. இவ்வெலும் புகளினிரு பக்கங்களும் குழிந்திருப்பதால் ஒன்றையொன்று பொருந்தி யிருக்கிறது. இப்பொருத்துக் களினுள்ளிடம் எண்ணெயொத்த பொரு ளால் நிரம்பி யிருத்தலால் மீன் தேகத்தை எண்ணியவாறு திருப்பும். இதன் தேகத்தில், வட்டமான செதிள்கள், ஒன்றன்மேலொன்று கீழ் நோக்கி அடுக்கப் பட்டனவாக இருக்கின்றன. ஒவ்வொரு செதிளின் முனையும் தேகத்தை யொட்டி நிற்கும். இவற்றினு தவியாக மீன் எளிதில் நீந்துகிறது. இன்னும் தேகத்திலுள்ள உஷ்ணத்தை வெளிவிடாது காக்கின்றன. சிறகுகள் மீன் ஜலத்தில் நீந்துவதற் குதவியானவை சிறகுகளே. இதன் தேகத்தில் (8) சிறகுகள் உள. மார்பில் (2) சிறகுகள் உண்டு, இவற்றை படுத்து (2) ஜதை துடுப்புகள் உண்டு, இவைகள் கால்போல் உதவுகின்றன. தேகத்தின் அடிப்புறத்தில் வாலுக்கு அருகில் ஒரு சிறகு இருக்கிறது. இது வயிற்றுச்சிறகு, சில மீன்களுக்குச் சிறகு உருவிற்குத் தக்கபடி அதிகமாகவும் உண்டு, மீனுக்கு மேற்புறம் கனத்தும் அடி சிறுத்தும் இருக்கிறது. அவ்வாறு இருப்பதைத் தாங்குதற்கே இச்சிறகுகளிருக்கின்றன. இச்சிறகுகளும் வாலும், மீன் ஜலத்தில் விரைந்து செல்ல உதவுகின்றன. இது ஜலத்திலுள்ள ஆகாயத்தைச் சுவாசிக்கிறது. செவுள்கள் மீனின் கழுத்திற்குப் பக்கத்திலுள்ள தாடைக் கடுத்து இருபுறத்திலும் நீண்ட பிளவுகளிருக்கின்றன. இவற்றைப் பிரித்துப் பார்த்தால் சீப்பைப்போல் பற்களுள்ள பக்கத்திற்கு நான்கான மடிப்புகள் தோன்றும். இவையே செவுள்கள். இவற்றிற்கிடையில் துவாரம் உண்டு. இவை கழுத்துப் பக்கத்திலுள்ள பிளவுகளுடன் சம்பந்தமுள்ளவை. இவை இச்செவுள்களால் மூச்சுவிடுகின்றன. இவற் றிற்கு வாய்வழிச் செல்லும் ஜலம் செவிகளின் வழியாக வருகின்றன. இவற்றிற் சிலவற்றிற்குச் சுவாஸப் பையுண்டு. இதனால் இவை, மேல்வந்து வாயுவை யுட்கொண்டுள் புகுதலும் செய்கின்றன. இவற்றின் இரத்தம் குளிர்ந்தது. இவைகள் சிறு மீன்களையும் பூச்சிகளையும் பிடித்துத் தின்னும். இவற்றிற்குப் பற் சிறியவையாயும் ஒரே மாதிரி யாயும், கூரியவாயும் தொண்டையை நோக்கி வளைந்தன வாயுமிருக் கின்றன. மீன்களின் முட்டைகள் சூர்ய வுஷ்ணத்தால் குஞ்சுகளாகின்றன, சுறாமின் : இதனைக் கடற்புலி என்பர். இவ்வினம் கடலில் வாழ்வன. இவ்வினத்திற் சிறிய வுருவுள்ளது நாய்ச்சுறா இது நாலடி நீளமிருக்கும். கொம்பன் சுறா : இது தலையில் சம்மட்டிபோன்ற அகன்ற உறுப்பைத் தலையிற்பெற்றது. வாள்சுறா : இதனை வாளா என்கிறார்கள். இதன் உதட்டில் வாள் போன்ற ஒரு பலமான உறுப்பு ஆறடி நீண்டிருக்கிறது. இதனால் இது கப்பல்களையும் பெருமீன்களையுங்குத்திப் பயப்படுத்தும். வெள்ளைச் சுறா : இது (25) முதல் (40) அடிகள் நீண்டு வளரும். இதன் அடிப்பக்கத்தில் வாய், வாயினடியில் ஆறு வரிசையான கத்திபோல் கூர்மையான பற்கள் உண்டு. இதன் உடலில் எலும்பு அதிகமில்ல யாதலால் எந்தப் பக்கத்திலும் வளையும், இது தன் குட்டிகளைப் பால் கொடுத்து வளர்க்கும். இதற்கு, முதுகில் (2) நெஞ்சில் (2) வயிற்றில் (2) வயிற்றருகில் (1) வாவில் (1) ஆக எட்டுச்சிறகுகள் உண்டு. செவுளுக்குப் பிரதியாக இரண்டு பக்கங்களில் சுவாசத்வாரங்களுண்டு. இன்னும், வன்சிரம், கல்லாந்தலை, கெளிற்றி, வாளை, காரப்பொடி, வௌவால், பாறை, திருக்கை,கொள்ளிமீன், மடவை, முள்ளுவாளை, குரவை, வரால், கெண்டை, புராசினா, ஓலை வாளை, நவரை, கிழங்கான், தும்பிலி, செங்கரா, ஆற்றுகுண்டலம், சொட்டைவாளை, நெற்றிலி, சுதும்பு, உல்லம், கற்றளை, மயறி, விலாங்கு (மலங்கு) சேல்மீன், ஆரால், இறால், புண்டு விரிஞ்சான், செம்படக்கா, இரால், சின்ன கூனி, முதலிய, இம்மீன் வகையில் பெரிது யானை மீன் (திமில்). இதை விழுங்குவது திமிங்கிலம், |
மீன்வகை | பால் கொடுக்கு மீன்கள். திமிங்கிலகிலம், திமிங்கிலம், யானை மீன் பலவகை சுறா முதலிய, வரால், குறவை, அயிரை, இறால், கெண்டை, சன்னகேண்டை, ஆரால், உளுவை, வானை, சேல், கொளிற்றி. ஓலைவாளை, சின்னகூனி. திருக்கை, மடவை, சுரும்பு, உல்லம், சுற்றளை, வௌவால், நெற்றிலி, மயறி, விலாங்கு, கிழங்கான். |
மீமாம்சகன் | வேதம் அநாதி, கர்மம் பலன் தரும்; தெய்வம் வேண்டா என்பவன். |
மீமாம்சகமதம் | இம்மதம், ஜைமினி முனிவரால் தாபிக்கப்பட்டது. இம் மதசித்தாங்தம் (1) பிரபஞ்சம் சத்தியம் மித்தை யன்று. (2) அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை, (3) வேதம் ஆதியந்தம் அற்றது. (4) சுவர்க்க நraகங்களுண்டு, (5) ஆத்மா ஆதியந்தமற்றது. (6) கர்மாநு குணமாய் ஆத்மாக்களுக்கு மறுபிறவி உண்டு, (7) யஞ்ஞாதிகர்மங்கள் செய்வதால் சுவர்க்கப் பிராப்தி உண்டு, (8) யஞ்ஞத்தால் இம்மையிலும் சுக முண்டாம். (9) வேதார்த்த கிரகண ஞானம் சிறந்தது. (10) வேதியர்க்கே யஞ்ஞாதிகார முண்டு எனக்கூறும், |
மீமாம்சை | இது சைமினி இருடியால் ஏற்படுத்தப்பட்ட நியாய சாஸ்திரம். இதில் கர்ம காண்டம் பூர்வமீமாம்சை யெனவும், ஞான காண்டம் உத்தர மீமாம்சை யெனவும் படும். இதில் முன்னது பாதராயணரால் இயற்றப்பட்டது. |
மீராபாயி | இந்துஸ்தானத்தில் உதயபுரமென்னும் பட்டணத்தில் இருந்த ராணராஜன் புத்திரி. இவள் தன் தந்தை ஆராதித்துக் கொண்டுவந்த கிருஷ்ண விக்ரகத்தினிடத்தில் அன்புள்ளவளாய் வேறு அரசர்களை வரிக்காமல் கண்ணனது அர்ச்சாவிக்ரகத்தில் பேரன்புபூண்டு அவ்விக்ர கத்திற்கே அர்ப்பணஞ் செய்து பரமபாகவதருடன் கூடிக் கைங்கரியஞ் செய்து வருகையில் லோகாபவாதம் உண்டானமையால் தந்தை மணஞ் செய்து கொள்ளும்படி கூறியும் கேளாததனால் தந்தை இவளை விஷந் தந்து கொல்லவெண்ணித் தன் மனைவியிடம் விஷங்கொடுத்துப் பெண் ணுக் கூட்டும்படிக் கூறத் தாய் துக்கத்துடன் அதைப் பெண்ணுக்குத் தெரிவிக்கக் குமரியுமதனை அன்புடன் வாங்கிக் கண்ணனுக்கு அயிசை செய்து தான் உட்கொண்டு உயிர் பிழைத்திருந்தனள். அர்ச்சாவிக்ரக மாதிய கண்ணன் தேசயாத்திரம் விஷத்தால் பசுமைபட்டது இதை மனைவி கண்டு நாயகனுக்குக் கூற அரசன் கண்டு கண்ணா உனக்கு விஷமூட்டச் செய்தேனேயெனப் பலவாறு வருந்திக் குமரியின் பக்திக்கு மெச்சி, குமரியை அவ்வாறு அநுட்டிக்கச் செய்தனன். |
மீராபாயிமதம் | இவள் மார்வாடா தேசத்திலுள்ள மோத்நகரத்தில் விக்ரமசகம் (1475) இல் விஜயமல்லன் என்னும் சர்தாருக்குப் புத்திரியாகிக் கல்விவல்வவளாய் உதயபுரத்தாசனை மணந்தனள், இவளை அக்பர் பாதுஷா மோகித்தானென்று கேள்வியுற்று இவள் சணவனாஞ்ஞைபெற்று நதியில் குதிக்க அவ்விடத்தில் ஒரு சோதி தோன்றி எழுக எழுக எனக்கேட்டு எழுந்து பிருந்தாவனமடைந்து கிருஷ்ணபக்தி மேற்கொண்டு பல மாணாக்கர் வணங்கக் கீர்த்தனைகள் பாடிப் பகவத்பக்தியே பரமார்த்த மென்று போதித்துப் பரமபத மடைந்தவள், |
மீளிப்பெரும்பதுமனார் | பெரும்பதுமனார் காண்க. |