ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மிகுதி நவிற்சியணி | இது ஆச்சர்யமடையத் தக்கதாகவும், பொய்யாகவு மிருக்கிற கொடை, சௌர்ய முதலியவற்றைப் புகழ்வது. இதனை அதியுக்தி யலங்காரம் என்பர். (குவல.) |
மிக்க குளிர்ந்தபூமி | ஆசியா கண்டத்திலுள்ள சைபீரியா நாட்டின் வடபாகத்தில் இருக்கும் வர்க்கோயான்ஸ்க். இது எல்லாப் பாகங்களிலும் அதிக குளிர்ந்த பூமி. |
மிசிசாரம் | சிற்பநூலுள் ஒன்று, |
மிசிசிப்பிமதம் | இத்தேயத்தவர்கள் சூரியனைக் கடவுளாகத் தியானிப்பர். இவர்களில் பலர் பூலோகமும் சுவர்க்கலோகமும் ஆதியில் ஒரு ஸ்திரீயாற் சிருட்டிக் கப்பட்டவையென்றும், அந்த ஸ்திரீயும் அவள் குமரானும் லோகங்களைப் பாலித்துக்கொண்டு வருகையில் அந்தஸ்திரீ பலவீனத்தால் சுவர்க்கலோகத்தினின்று பூமியில் விழும்போது ஆமை யொன்று அவளைத் தாங்கிற்றென்றும் கூறுகின்றனர். மற்றும் சிலர் ஒட்காம் என்பவனே முதல் கடவுளென்று நம்பியிருக்கின்றனர். வேறுஞ்சிலர் வேறுதேவதை களையும் நதிகளையும் பூஜிக்கின்றனர். |
மிசிரகேசி | 1 ஒரு அப்சரசு. 2 வசுதேவன் தம்பியாகிய வற்சன் மனைவி. |
மிசிரம் | யயாதியால் துரத்தப்பட்ட அவன் புதல்வர் மிலேச்சருடன் கலந்தாண்ட இடம் தற்காலம் ஆபிரிகாவில் ஈஜிப்ட் என்று வழங்குந் தேசம். |
மிஞ்சுகர் | ருத்திரர்களிடம் பிறந்தவர். (பா, வன.) |
மிட்டுவான் | தக்ஷன் குமரன். |
மிண்டாசுரன் | உமாதேவியார் தவத்திருக்கையில் கண்டு காமுற்றுச் சண்டிகையா லிறந்த அசுரன். சண்டாசுரன் சகோதரன். |
மிதக்கும் தீவு | பசிபிக் மகாசமுத்திரத்திலும், அத்லாண்டிக், இந்து மகாசமுத்திரங்களிலும் சில புதிய தீவுகள் கண்டு பிடித்ததில் சில நிலைத்திராமலும் தண்ணீருக்கடியிலுள்ள பூமியின் சம்பந்தப்படாமலும் மிதந்துகொண்டே இடம்விட்டு நகர்கின்றன என்பர். இதில் ஒன்று போர்னியோ தீவையடுத்த (7) ஏகர் விரிவுள்ள பரப்பும் பலவித விருஷங்களு முடையதாம். |
மிதத்துவசன் | (சூ.) தர்மத்துவசன் குமரன். |
மிதன் | (ச.) சயன் குமரன், |
மிதர்ச்சநர்கள் | பாரத வீரர். |
மிதி | நிமியைக் காண்க. |
மிதியடி | நுணா, பலா, முதலிய மரல்களால், காலில் நீர் ஏறாவகை வாரிட்டமைப்பது இதில் வாரமைக்காமல் மரத்தாலேயே கொட்டை யிட்டமைப்பது பாதகுறடு. |
மிதிலன் | (சூ) வசிட்டராலுடலிழக்கப் பெற்ற நிமியின் கடைந்த தேகத்திற் பிறந்தவன். இவனே மிதிலையை நியமித்தவன். இவனுக்கு விதேகன் எனவும் பெயர். நிமியைக்காண்க. |
மிதிலை | 1. ஓர் நகரம் Janakapur, The Capital of the kingdom of Raj Janaka. Mithila was the name both of the country and the capital, 2. சநகன் ஆண்ட பட்டணம். சீதை பிறந்த இடம், விதேகன் அரசு. கண்டகி, கௌசிதி நதிகளினிடையிலிருப்பது. இப்போது பேகாரில் (டிரட்) என்பது. (Trat) மகததேசத்துக்குத் தென்கிழக்கிலுள்ளது. பஞ்சகௌடத்தொன்று. |
மிதுனம் | ஸ்திரிபுமானாகிய இரட்டைப் பேறு, ருசிப்பிரசாபதிக்கு ஆவுதியிடம் பிறந்தவர். |
மித்தியை | அதர்மன் தேவி, துர்ச்சனரால் பூசிக்கப்பட்டவள், |
மித்திரகாமன் | இவன் நற்குண நற்செய்கையையுடைய ஒரு வணிகன். பெருஞ்செல்வத்தால் மிக்கவன். வேறு வேடங்கொண்ட வாசவதத்தை முதலிய நால்வரும் இவன் வீட்டிலேதான் சிலகாலம் மறைந்திருந்தனர். (பெ. கதை) |
மித்திரகேசி | ஒரு அப்சரசு. வச்சகன்பாரி, குமரன், விருகன் இவளுக்கு மிச்ரகேசி யெனவும் பெயர். |
மித்திரசித் | மலையகந்தனியைக் காண்க. |
மித்திரதேவர் | 1, பகதேவனுக்குத் தக்ஷயாகத்தில் வீரபத்திரர் போக்கிய கண்ணைக் கொடுத்தவர். 2. இவர் சோணாட்டில் சாவளம்பாடியில் பெருமாள் அருள் பெற்றவர். |
மித்திரன் | 1. நகுலனுக்கு இலகீர்மதியிடம் பிறந்த குமரன். 2. ஒரு தேவதை 3. வசிட்டருக்கு ஊர்வசியிடமுதித்த குமரன். 4. கிருஷ்ணன் குமரன், 5. கசியபருக்கு அதிதியிடமுதித்த குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். பாரி, ரேவதி, குமரர், உற்சாகன், அரிஷ்டன், பிப்பலன். 6. வருணனுடனிருக்குந் தேவன், 7. மனோஞ்ஞையைக் காண்க 8. ஒரு வேதியன். இவன் தவஞ் செய்தலில் விருப்புள்ளவனாய்த் தந்தையிட மநுமதிபெற்றுக் கண்டகி தீரத்திற்றவஞ் செய்கையில் குமரனது நிலையறியத் தந்தை இருட்காலத்திற் சென்றனன். குமரன் தந்தையென அறியாது மிருகமென வெண்ணித் தந்தையைக் கொன்றனன், பின் தந்தையென அறிந்து வியசனமடைந்து புண்ணிய தீர்த்தங்களாடிப் பிரமகத்தி நீக்கிக் கொண்டவன். |
மித்திரமகருஷி | இவர் ஒருமுனிவர். இவர் பன்னிரண்டு வருஷத்திற் கொருமுறை யோகத்திருந் தெழுந்திருப்பர். இவர்க்கு அக்காலையில் ஒருநெல்விக்கனி பழுக்கும்; அதை இம்முனிவர் நியமாதிகள் முடித்துக் கொண்டுண்பது வழக்கம். பாண்டு மக்கள் வனஞ் சென்றிருக்கையில் இக்கனியைத் திரௌபதிகண்டு தனக்குப் பறித்துத்தர அருச்சுனனை வேண்ட அருச்சுனன் பறித்துக் கொடுத்துப்பின் அதன் வரலாறு அருகிருந்தாரா லுணர்ந்து இருடி சாபத்திற்கஞ்சிக் கண்ணனைத் துதித்து அவர் சகாயத்தாற் பொருந்தச் செய்தனன், |
மித்திரவன்மன் | ஒரு அரசன். வியன் தந்தை. |
மித்திரவிந்தை | விந்தாது விந்தரின் தங்கை. இவள் கிருஷ்ணமூர்த்தியை மணம் புணர்ந்தனள். இவளுக்கு அரசன் முதலிய பதின்மர் குமரர். |
மித்திராக்கள் | ஒரு அரக்கன், வீடணனால் மாய்ந்தவன். |
மித்திராயு | தீவோதாசன் குமரன். இவனுக்கு (100) குமரர். இவர்களில் மூத்தோன் சுகந்தகிருது. |
மித்திராவருணர் | வசிட்டரையும் ஊர்வசியையுங் காண்க. இவர்கள் அகத்திய வசிட்டர்களுக்குப் பிறப்பிடமானவர்கள். |
மித்திராவருணி | வசிட்டன், அகத்தியன், |
மித்தீரசகன் | 1, கல்மாஷபாதனைக் காண்க. மித்திரசக்யன் மித்திரசதன் எனவும் பெயர் கூறுவர். 2. சவுதாசனுக்கு ஒரு பெயர். |
மினைகிழானல் வேட்டன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் நல்வேட்டன். ஊர்மிளை. இவர் வேளாளர் (குறு 341.) |
மினைகீழான் நல்வேட்டனார் | நல்வேட்டனார். காண்க. |
மினைக்கந்தன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவாதியற் பெயர் கந்தன், ஊர்மிளை. (குறு. 196.) |
மினைப்பெருங்கந்தன் | இவர் கடைச்சங்கப் புலவரில் ஒருவர். இவரியற்பெயர் பெருங்கந்தன் ஊர்மிளை. இவர் காமம் புது வரவிற் றென குறிஞ்சிபாடியவர். 204,234,139 |
மினைவேடித்தன் | இவர் கடைங்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் தித்தர், வேள் என்பது வேளாண் குடிப்பெயராகலாம். மிளை யென்பதவரது ஊர், (குறு. 284) |
மின்னல் | உஷ்ணம், சராசாப் பொருள்கள் எல்லாவற்றினும் நிறைந் திருக்கிறது. அவ்வுஷ்ணத்தின் சாரமே மின்சாரம். இது எல்லாப் பொருள்களிலு மிருக்கினும் விசேஷமாய் ரோலியில் கூடி மேகங்களில் மின்னலாகத் தோன்றுகிறது. இந்த மின்சாரம், சிலவேளைகளில், சில பொருள்களில் அளவிற்கதிகமாயும், சில பொருள்களில் குறைந்து மிருக்கும், அளவிற்கதிகமாயின் ஸ்வயமென்றும், அளவிற்குக் குறைந்திருக்கின், அபஸ்வயமென்றும் கூறுவர். மேகங்கள் வருஷிக்கக் கூடும்போது நெருங்குதலால் இவ்வுஷ்ணம் அதிகமாயிருக்கும் மேகத்திலிருந்து குறைந்திருக்கும் மேகத்தின் கோடியுஷ்ணத்தைச் சமமாக்கிக் கொண்டிருக்கும். இவ்வாறு இவ்வுஷ்ணம் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பாய்வதே மின்னலுக்குக் காரணம் ஸ்வயத்திலிருந்து ஸ்வயத்திற்கும் அபஸ்வயத்திலிருந்து அபஸ்வயத்திற்கும் மின்னல் பாயாது. |
மின்னுக்கேசன் | (வித்யுத்கேசன்) சாலகடங்கடையைப் புணர்ந்து சுகேசனைப் பெற்றவன். |
மின்மினிப்பூச்சி | இது வண்டின் இனத்தது, இரவில் பறக்கையில் இதன் இறக்கைகள் விரிதலால் இதன் உடம்பிலுள்ள ஒருவகை யொளி மின்னுகிறது. ஆதலாலிதனை இப்பெயரிட்டழைப்பர். |
மின்வாங்கி | மின்னலைத் தன்னிடம் பெற்றுக்கொள்ளும் கருவி, காந்தம் முதலிய லோசங்களினாற் செய்யப்பட்ட கம்பிகளைக் கட்டடங்களின் உன்னத ஸ்தானங்களிலிருந்து பூமிக்குள் அழுந்தப் பதித்திருப்பது, இவ்வாறு செய்தால் கம்பியின் உயரத்தினிரட்டிப்பான சுற்றுப்புறம் இடி விழாது. |
மிருககண்டுயர் | குச்சகருடைய குமரர். இவர் தவத்திலிருக்கையில் மிருகங்கள் உடல் தினவு தீரத்தறியென்று இவருடலிற் தம்முடலைத் தேய்த்துக்கொண்டமையின் இப்பெயர் இவர்க்கு வந்தது. இவர் தவ முடித்து உசத்தியர் குமரியாகிய விருத்தையெனுங் கன்னிகையை மணந்து மிருகண்டைப் பெற்றனர். இவர்க்குக் கௌச்சிகர் எனவும் பெயர். |
மிருகங்கள் | சிங்கம்;தேவிக்கும் சிந்தாமணி விநாயகருக்கும் வாகனமாம், இவ்வுருக்கொண்டு இரண்யாக்ஷனைத் திருமால் சங்கரித்தனர். இவ்வுருக் கொண்ட சிங்க முகாசுரனைக் கந்தமூர்த்தி கொன்றனர். திலீபனை மருட்டவந்த சிவகிங்கரர் வுருவமுமாம். புலி; இவ்வுருவத்தால் பசுக்களை யொரு அசுரன் மருட்ட அவனைச் சிவமூர்த்தி சங்கரித்தனர். இது வியாக்ரபாதருக்கு உருவமுமாம். சிவமூர்த்தியிவ் வுருக்கொண்டு வேடனைத் துரத்தி சோதித்தனர். இதன் தோல் சிவமூர்த்திக்கு ஆடையுமாம். இவ்வுரு சிவபூசை செய்து முத்தி பெற்றதுமாம், புலியூர் என்பதனாலறிக. யானை; விநாயகருக்கும், விஷ் வக்சேகருக்கும் கஜாசுரனுக்கும், கஜமுகாசுரனுக்கும் உருவமாம். இந்திரற்கும், கந்தமூர்த்திக்கும், சிவமூர்த்திக்கும் வாகனமாம். இவ்வுரு வள்ளி நாயகியை மருட்டச் சென்றது. சிவபூசை பலவிடங்களிற் செய்து முத்தி பெற்றது. நாரதராற் சாபம் பெற்றது. சிலந்தியுடன் வாதிட்ட துமாம். இவ்வுரு முதலையாற் கவ்வப்பெற்றுத் திருமாலால் இரக்ஷிக்கப் பட்டது. ஒரு அரசன் இவ்வுருவாக அகஸ்தியராற் சபிக்கப்பட்டனன். குதிரை சிவமூர்த்திக்கு வேதவுருவமாகிய வாகனமாம். இதை யூர்ந்து குதிரை விற்கவும் திரிபுர மெரிக்கவுஞ் சென்றனர். இவ்வுரு விஷ்ணுவிற்கு முகமுமாம். ஒரு அசுரனுமாம். ஊழித்தீயின் உருவமுமாம் சூரியனும் அவன் தேவியும் கொண்ட உருவமுமாம். தேவ ஜாதிகளின் உருவமுமாம். உதங்கரைக் காண்க. குவலயாசுவம் என்னும் குதிரை சூரியனாலனுப்பப் பட்டது. இரு தத்துவசனைக் காண்க. காமதேனு; தெய்வப்பசு. இது திருப்பாற்கடலிற் பிறந்து தேவர்க்கும் ருஷிகளுக்கும் வேண்டிய உணவாதி களைத் தருவது, வசிஷ்டர், ஜமதக்னி முதலியோர்க்கு உதவியது. பசு யமன், தேரூர்ந்த சோழன் பொருட்டுப் பசுவானான். இது ஷட்கவ்யந் தரும் புண்ணியவுரு. இதன் தேகத்தில் திரிமூர்த்திகளுந் தேவர்களனை வரும் வசிக்கின்றனர். இவ்வுருக்கொண்டு மாயப் பசு ஒன்று மதுரையிற் தோன்றியது. இதனைச் சிறப்பித் தெழுதியுள்ளோ மாண்டுக் காண்க. இது தர்ம சுவரூபமாம். சூரிய வம்சத்தரசனால் காக்கப்பட்டதுமாம், தானப் பொருளாம். இடபம்; நந்திமா தேவர் திருவரு, தர்ம சவரூபம். இவ்வுருக்கொண்டு திருமால் திரிபுர மெரித்தகாலத்தில் தாங்கினர். எருமை; யமனுக்கு வாகனம். இவ்வுருக்கொண்ட அசுரனைக் காளி சங் கரித்தனள். காளிக்குப் பலிப் பொருளாம். ஆடு; அக்னியின் வாகனமும் யாகத்திற்றோன்றிக் குமாரக்கடவுளுக்கு வாகனமுமாம். இதனைக் காளிக்குப் பலியிடுவர். உத்தராதித்தனைக் காண்க. மான்; இருடிகளுக் குதவிய வுரு. இதன் தோல் அவர்களுக்கு உடையாம். இவ்வுருக்கொண்ட மாரீசனை இராமர் கொன்றார். சிவ மூர்த்திமேல் தாருகவன ருஷிகள் ஏவியதுமாம். மந்தபால முனியைக் காண்க. உத்பலாவதியைக் காண்க, கழுதை; இது மூதேவி வாகனமாம். இவ்வுருக் கொண்ட அசுரன் கண்ணனாற் கொல்லப்பட்டான். கரடி; சாம்பவந்தர்க்கு உருவ மாம், பன்றி; வராகமூர்த்தியாகிய திருமால் உருவமும், முலை கொடுக்க வந்த சிவ மூர்த்திக்கு உருவமுமாம். குரங்கு; வாலி, சுக்ரீவன், ஆஞ்சநேயர், அங்கதன், நீலன் முதலியோர் உருவமாம். சிவபூசை செய்த உருவமாம். நாய்; பயிரவர் வாகனம். பெருச்சாளி; விநாயகருக்கு, வாகனமான அசான் உருவமாம். பாம்பு; சிவனுக்கு அணியும், விஷ்ணுவிற்குப் படுக்கையும், நடனசாலையும், ராகு கேதுக்கள் உருவமு மாம். புழுகுபூனை; அண்ணா மலைக்குப் புழுகு சாத்திப் பேறு பெற்றது. |
மிருகசிருங்கன் | இவன் குச்சருஷியின் குமரன். இவனுக்குத் தாய் தந்தையரிட்ட பெயர் வச்சன். இவன் தவத்திலிருக்கையில் மிருகங்கள் கொம்பாவிடித்தும் குத்தியும் ஊறலுக்குராய்ந்தும் நிலைகுலையா திருந்தனனாதலால் இவன் தவத்திற்குக் களிப்படைந்த சிவபிரானிவனை மிருக சிருங்கனென அழைத்தனர். இவன் தந்தை இவனுக்கு உசத்தியன் குமரியாகிய சுவிர்த்தை என்பவளை மணம் பேசினன். சுவிர்த்தை தீர்த்தமாடத் தோழியருடன் நதிக்கரை செல்கையில் ஒரு காட்டானைத் துரத்தத் தவறிக் கிணற்றில் வீழ்ந்து இறந்தனன். அக்காட்டில் தாய் தந்தையர் அழுகை யொலிகேட்ட மிருகசிருங்கன் தான் யமனை வணங்கியிறந்த வுயிர்தந்து சுவிர்த்தையைத் தந்தையளிப்ப மணந் தனன், (மாக புராணம்) |
மிருகசீருஷம் | இவை மான் கணங்கள் வேடன் ஒருவன் உணவின் பொருட்டு ஆண்மானையெய்ய அம்பு தொடுக்கையில் கண்ட ஆண், வேடனைநோக்கி நான் என் கர்ப்பிணியாகிய மனைவியைக் கண்டு வார்த்தைகூறி மீளுகிறேன் என்று உறுதி கூற வேடன் அவ்வகை விடையளிக்கச் சென்றது. இதன் பெண்மான் ஆணினைக்காணாது வேடனிடம் வந்து அவ்வாறு ஆணைக்கண்டு வருவதாய் உறுதி வாக்களித்தது. அவ்வகை ஒன்றுக்கொன்று தமக்கு நேர்ந்ததைப்பற்றிக் கூறிப் பிள்ளைகளுடன் வேடனிடம்வர முன் வேட்டைக்குச் சென்று மகா சிவராத்திரியில் சிவபூஜை வனத்தில் செய்தவர்களையும் சிவதரிசனத்தையும் கண்டதினாலும் வேடனுக்கு ஞானோதயமாய் மான்களே எனக்கு ஞானத்தைத் தந்தமையால் நீங்கள் குருவிற்கொப்பா கின்றீர் ஆதலால் இனி எவ்வுயிர்களையுங் கொல்லேன் என்று சிவ மூர்த்தி தர்சனந்தர முத்தி பெற்றவன். மான்கள் சிவமூர்த்தியால் நக்ஷத்ரபதம் பெற்றன. இவையே மிருகசீருஷநக்ஷத்திரம் ஆண், பெண், குருளை இவை மூன்று நட்த்திரங்கள். |
மிருகண்டு | 1. கௌசிகா குமரா. இவர் முற்கல ருஷியின் குமரியாகிய மருத்துவதியை மணந்து புத்திரரின்மையால் காசியடைந்து சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றினர். சிவமூர்த்தி தரிசனந்தந்து என்ன வேண்டுமென்னப் புத்திரப்பேறு கேட்டனர். சிவமூர்த்தி நீ நற்குண நற் செய்கையுள்ள புத்திரனை விரும்பில் அற்பாயுளாம். அறிவில்லாத குமானை விரும்பில் தீர்க்காயுள் உள்ளவனாம். இவ்விருவரில் எவரை விரும்புகின்றனை யெனக் கேட்க முநிவர் நற்புத்திரனைக் கேட்டு (16) வயதுள்ள மார்க்கண்டனைப் பெற்று அவனுக்கு அவனுடைய ஆயுள் அளவு உணர்த்திச் சிவபூசை செய்ய ஏவினர். தாதாவின் குமரன் எனவும், பிருகுவின் பேரன் எனவும் கூறுவர். 2. விஷ்ணுவை நோக்கித் தவமியற்றிப் புத்திரப் பேறடைந்தான். (பிரகன்னார தீய புரா.) |
மிருகனாதி | கேகயன் குமரன். தாய் சயந்தி |
மிருகன் | விராடநகரத்து வேதியன். ஒழுக்கங்குன்றி வேசையுடன் கூடி வேற்றூர்க்குச்சென்று அவ்விடத்தில் பழம் ஒன்றைத் திருடினன் அதற்கு உரியவர் தொடர்ந்து பிடிக்கவரப் பழத்தைச் சிவார்ப்பணமென்று எறிந்து நற்கதிபெற்றவன் |
மிருகமந்தை | குரோதவசையின் புதரி (பா. ஆதி.) |
மிருகாசுரன் | ஒரு அசுரன். விஷ்ணுவிடம் மூன்று நாள் யுத்தஞ்செய்து சாகாமல் தேவர்களை வருத்திச் சிவமூர்த்தியின் வேலால் இறந்தவன். |
மிருகாபதி | உதயணன் நற்றாய. இவளுடைய சகோதான் விக்கிரன். இவன் தந்தை ஏயர் குலத்திற்குத் தலைவன், உதிதோதய காவ்ய மென்னும் வடநூலில் அவனது இயற்பெயர் சேடகனென்று காணப்படு கின்றது. இவளது பெயர் மிருகாவதி யெனவும் வழங்கும் (பெ. கதை.) |
மிருகாவதி | 1. விதூமனைக் காண்க. 2. பிரசாபதியின் முதற்றேவி 3 தேவராதன் என்னும் முனிவன் தவஞ்செய்கையில் மேனகை வந்தனள், அவளைக் கண்டு முனிவனுக்கு ஆசைபிறக்க வீரியம் நீரிடை வீழ்ந்தது. அந்நீரினை உண்ட மானின் வயிற்றில் இவள் பிறந்து வற்சமுனியை மணந்து ஒருநாள் பூக்கொய்கையில் பாம்பு கடித்து இறந்தனள். இவள் கணவன் பாம்புகளைக் கொல்ல முயலுகையில் ஒருவன் தீர்த்தக் கரைக்குச் செல்ல ஆண்டு வேதியர் கூட்டத்துத் தண்ணீர்ப் பாம்பை எறிந்து பாம்பு உருப்பெறச் சாபம் அடைந்த வேதியச் சிறுவன். வற்சமுனிவரால் சாபம் தீர்ந்து தனது வரலாறு கூறிச் சிவ பூசை செய்பின் சித்தி அடைவாய் எனப் போயினவன். |
மிருகை | காசிபர் பெண், பன்றி முதலிய மிருகங்களைப் பெற்றவள். |
மிருடன் | சிவன் திருநாமங்களில் ஒன்று. |
மிருதசஞ்சீவி | மரணத்தைப் போக்கும் ஒரு மந்திரம். |
மிருதி | அங்கிராவின் தேவி. தக்ஷன பெண், குமரன் அங்கீரன் பரதன், |
மிருதுகன் | அக்குரூரன் தம்பி |
மிருதுபத் | அக்குரூரன் சகோதரன். |
மிருதுரன் | சுவபலருக்குக் காந்தியடம் உதித்த குமரன். |
மிருதுவி | சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமரன். |
மிருத்திகாபக்ஷணரோகம் | இது பிள்ளைகளுக்குண்டாம் ரோகத் தோன்று. நாள் தோறும் மண்ணைத்தின்னும் பிள்ளைகளுக்குத் தேகவெளிறு, இருமல் இளைப்பு முதலிய தரும் ரோகம். (ஜீவ) |
மிருத்துகாவதி | மாளவதேசத்துள்ள பட்டணம், |
மிருத்யு | 1. தருமன் குமரன். 2. பூமிதேவி பூபாரம் பொறுக்காது வேண்டச் சிவாஞ்ஞையால் பிரமதேவன் வீர்யத் துதித்து உயிர்களின் காலவிறுதியில் மாய்க்கும் பெண்தேவதை, இவள் உயிர்களை மாய்க்க அழுதகாலத்து இவள் கண்ணீரில் பல வியாதிகள் பிறந்தன. இவள் யமனிடம் இருப்பள். 3 பிரமன் ஒருகாலத்து உலகங்களை அழிக்க முயன்று தம்மிடமெழுந்த தீயால் உலகங்களையழித்தார். அப்போது ருத்ரரது வேண்டுகோளால் அதை நிறுத்த அத்தீ பெண்ணுருவாய் நின்றது அது மிருத்யு என்றனர். அவர் அவளை நோக்கி நீ உல கங்களை அழிக்கவென நான் பாபியாவேனென்று அழுது பலமுறை தவமியற்றி கொல்லாவரம் வேண்டினள், பிரமன் மீண்டும் நீ கொல்ல வேண்டும் என்றனன். அவ்வாறு கேட்ட அவள் ஒன்றுங் கூறாதிருக்க, பிரமன் நீ ஆண்களிடத்து ஆணாகவும் பெண்களிடத்துப் பெண்ணு ருவாகவும் நிற்பாய், உன் கண்களிருந்து வந்த நீர் பலநோய்களாக விரியும் அவற்றைக் காரணமாகக் கொண்டு உலகத்தையழிக்க என்றனர். (பா சாங்.) |
மிருத்யுஜித் | சோழர் சரிதையில் சுரகுருவைக் காண்க, |
மிருத்யுஞ்சய பக்தர் | இவர் பிதரி பட்டடணத்திலிருந்த சாந்த பிரம்மணி யென்னும் ஒரு அரசர். இவர் தம் அரண்மனையின் மேன் மாளிகையில் மனைவியுடன் வாழைக்கனியுண்டு தோலினைச் சாளர வழியாக எறிகையில் ஒருவர் அச்சாளாத் தடியிலிருந்த வாழைக் கனிகளின் தோல் களை ருசியாயிருக்கிறதென்று புசித்தனர். இதைக் கண்ட அரசன் தேவி, அரசனுக்குக் கூற அரசன் அரண்மனையில் அன்னியன் வந்ததைப் பற்றிச் சேவகரைக் கோபிக்கச் சேவகர் அவரைக் கட்டியடிக்கையில் அவர் அழாமல் சிரித்தனர் இதைக் கண்ட அரசன் அவரைத் தன்னிடம் வருவித்துச் சேவகர் உன்னை வருத்துகையில் அழாது சிரித்தலுக்குக் காரணமென்னை எனப் பரதேசி உலகத்தில் எவர்க்கும் பொதுவாகிய வஸ்துக்களில் பழத்தின் தோலை யுண்டனாலும், மாளிகைக்கு வெளி யிருந்ததாலும் இவ்வகைத் தண்டனையாயின், பழத்தையேயுண்டு அரண்மனைக்குள்ளிருக்கும் உனக்கு யாது நேருமெனச் சிரிக்கின்றே னென, அரசனுக்கு ஞானோதயமாய் விரக்தியடைந்து பண்டரியடைந்து ஞானாசாரியரிடம் உபதேசமடைந்து மிருத்யுஞ்சயன் என்னும் பெயரடைந்து வேதாந்த சித்தாந்தங்களைத் தம்மிடம் நாய்களாக வைத்துக் கொண்டு பவராயன் எனும் தன் சிஷ்யன் பொருட்டுச் சங்கமர்களின் சிவலிங்கங்களை நாய்களைக்கொண்டு கக்குப்படி செய்து கண்ணனிடம் அன்பு கொண்டிருந்தவா. |
மிருத்யுஞ்சய மந்தரம் | யமனை வெல்லும் மந்திரம். |
மிருஷை | அதர்மத்தின் பாரி. |
மிலேச்சன் | பார்ப்பினி களவினால் அரசனைப் புணர்ந்து பெற்ற குமரன் தம்தம் கடமைகளைச் செய்யா தொழிதல், அருளின்மை, பிறர்க்குத் துன்பம் செய்தல் வெகுளிமேற் கோடலுடையவன் (சுக்சநீதி) |
மிலேச்சம் | இது ஒருதேசம். |
மிலைச்சன் | இவன் போதனபுரத்திற்கு அரசன், தருசகனோடு பகைமை கொண்டு போர்செய்தற்கு வந்த அரசர்களுள் ஒருவன், மிக்க வீர முடையவன். (பெ~கதை) |
மிலைச்சமன்னர் | இவர்கள் ஒருவகை வீரர்களின் தலைவர் இவர்கள் உதையணனுக்குத் திறையளப்பவர்கள். (பெ~கதை) |
மிலைச்சர் | இவர்கள் ஒருவகை வீரர் அரசர்பால் மெய்க்காப்பு, வாயில் காவல் முதலியவற்றைச் செய்து நம்பிக்கையோடு ஒழுகியவர்கள். பெரும் பாலும் போரில் இவர்கள் முற்படையிலேயே நிற்பவர்கள். (பெ. கதை) |
மிளகாய் | இது, தோட்டக்கால்களில் பயிரிடப்படும் காரமுள்ள பொருள், இது சம்பாரங்களுக்குரிமையுடையது. இதில் பல வகை உண்டு, ஊசிமிளகாய், குடமிளகாய் முதலிய, இது, முதலில் மத்ய ஆசியா வினின்று வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் நிகண்டில் இதற்குப் பெயர் கூறப் படவில்லை. இச்செடி நம் நாட்டின் தன்று, இதனை அந்நிய நாட்டினின்றும் இந்திய முன்னோர் நம் நாட்டிற்குக் கொண்டுவந்து பயிராக்கினர். இக்காயினை காயாகவும் பழமாவுலர்த்தியும், கறி முதலியவற்றிற்கு உபயோகிக்கின்றனர். |
மிளகாழ்வான் | இவர் உடையவரால் நியமிக்கப்பட்ட எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். இவர் சிறந்த விச்வாசி, இவர் உடைய வர்க்குப் பாலமுது நாடோறும் ஜம்புகேச்வாஞ்சென்று ஆங்கு அர்த்த ஜாமத்திற்குப் பிறகு சிவநிவேதனமாய் அந்தணர்க்களிக்கும் திருப்பாலினை வாங்கிக் கொண்டு வந்து உடையவர்க்குக் கொடுத்து வருவர். இவ்வகை இவர் அபேதமாய்ச் செய்வதை ஸ்ரீனவஷ்ணவர் சிலர் சிவநிவேதனம் என்று உடையவரிடம் குறைகூற, உடையவர் இவரையழைத்து அவ்வகை செய்யலாமோவென்றனர். மறு நாள் வழக்கப்படி தாம் உடையவர்க்குச் செய்யும் மடைப்பள்ளி கார்யத்தில் மிளகு நீர் செய்யத்தொடங்கி, வழக்கம்போல் செய்யாது மிளகினை அம்மியில் வைத்து நுறுக்காமல் முழுமிளகை மிளகு நீரிலிட்டு வைக்க, உடையவர் இது என்ன என்று கேட்க ஆழ்வான், தேவரீர் சிவநிவேதன மாகாதென்ற கட்டளைப்படி செய்தேன் என்றனர். உடையவர் இதென்ன சிவநிவேதனமாமோவென்ன, இதனை நசுக்கும் அம்மியும் அவ்வுருத்தான் ஆதலால் அபராதமாம் என்று, அவ்வாறு செய்தேன் என்றனர். உடையவர் இவரது பக்திக்கு வியந்து மற்றவர்க்கு அவரது சமரச அறிவைத் தெரிவித்தனர். (குருபரம்பரை) |
மிளகு | இது, ஒரு காரமுள்ள சம்பாரப் பொருள், மலையாளம், வைநாட்டிலும், பயிரிடப்படுகிறது. இது வெற்றிலைக்கொடி போலும் கொம்பில் தாவும், கொடியில் பயிராகும். இவ்வகையில், பாலங் கொட்டை, உதிரங்கொட்டை, கல்லு, வள்ளி, சிறு கொடி, என நான்கு வகை, வால்மிளகென ஒரு சாதியுண்டு இதைக் காயவைப்பதற்கு முன் தரையில் தேய்க்கின் மேல்தோல் நீங்கி வெள்ளைமிளகாம். |
மிழலைக்கூற்றம் | வேள் எவ்வியின் நாடு, இது தஞ்சாவூர் மதுரை ஜில்லாக்களைச் சார்ந்த ஒரு பகுதி. தமிழ் நாட்டிலிருந்த பழைய ஊர். கடற்கரையிலுள்ளது. இப்போது பெயர் மாறியது. தஞ்சாவூர்க்கல் வெட்டுகளில் கூறியிருக்கிறது. (புற~நா.) |