ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
மா | இஃது இந்தியாவிலுள்ள மரங்களில் இந்துக்களால் சுபாசுபவைதிக காரியங்களில் கொண்டாடப்பட்ட விருக்ஷம். இதன் பிஞ்ச காய்கள் புளிப்புள்ளவை ஆதலால் இவற்றை உப்பிவிட்டு பல நாட்களுக்கு உணவிற்குப கரணமாகக் கொள்வர். இதன் பழம் மிக்க இனிமையுடையது. இது இனிமையால் பலவகைப் பெயர்கள் பெறும், |
மாகசுக்லபஞ்சமி விரதம் | மாசி மாதம் சுக்லபடி பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது. |
மாகடதானம் | ஒரு சாணிற்குக் குறையாது அதிகம் நூறு சாணாய் ஒரு பொற்குடஞ் செய்வித்து வயிரத்தால் அலங்கரித்து நெய், பால், குடத்தில் விட்டு ஒரு கற்பகத்தரு செய்தமைத்து அடியில் திரிமூர்த்திகள், கணபதி, வேதம், புராணம், இவர்களை எழுந்தருளச் செய்து கும்பத்தைச்சூழத் தானியாதிகள் பாப்பித்தான் சுசிர்பூதனாய் கும்பத்தை வலம் வந்து வேதி யர்க்குக் கடத்தைத் தானஞ் செய்வதாம். |
மாகதன் | க்ஷத்திரியப் பெண் வைசியனைக் கூடிப் பெற்ற பிள்ளை. இவனுக்குச் சிலகன் எனவும் பெயர், கடலிலும் கரையிலும் வர்த்தகஞ் செய்வது தொழில். (மநு) |
மாகதருஷி | வசிட்டன் மரபில் உதித்தவர். இவரை விபுதை யென்னும் அசுரப் பெண் அசுரராசன் சொற்படி மயக்கிப் புணர்ந்து கயமுகா சானைப் பெற்றனள். விபுதையையும் கயமுகாசுரனையுங் காண்க, பதினான்கா மன்வந்தரத்து ருஷியென்ப. |
மாகதர் | 1. ஒருவகை அரச சாதியர், 2. இருந்தேத்துவார். |
மாகதி | 1, மகததேசத்துப் பாஷை. இது யிராக்ருத பாஷை. 2. சோண நதிக்கொருபெயர். |
மாகந்தன் | ஒரு வேதியன். தந்தை தேடிய பொருள்களைத் தீயவழியிற் செலவிட்டு நண்பன் தேவியைப் புணர்ந்து செல்வம் கெட்டதால் இழிந்தவனிடம் தானம் வாங்கினன். ஆதலால் வேதியர் இவனை ஊரை விட்டுத் துரத்த மனைவி மக்களுடன் ஒரு காட்டின் வழிச் செல்லுகையில் கள்ளர் இவனிடமிருந்த பொருள்களைப் பறித்துக் கொண்டு மனைவி மக்களையும் இவனையும் கொன்றனர். இவன் சாகும் தருணத்தில் காசியை நினைத்ததால் இவன் தாழ்ந்த தேசத்தில் சேவலாகவும், மனைவி பெட்டையாகவும், குமரர் குஞ்சுகளாகவும் பிறந்து காசிக்குக் காவடி கொண்டு செல்வாருடன் சென்று முத்திமண்டபத்தில் இறந்து முத்தி பெற்றவன். இம்மண்டபம் குக்கிட மண்டபம் எனப்படும். (காசி காண்டம்.) |
மாகந்தி | 1. தக்ஷிண பாஞ்சாலத்து இராஜதானி. 2. கங்கா தீரத்திலுள்ள துருபதன் நகரம் (பா. உத்தி.) |
மாகன் | இவன் தத்தன் மகன். சமஸ்கிருதமாக காவியஞ்செய்த கவி, |
மாகலூர்க்கிழான் | புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரையியற்றிய உரையாசிரியர். இவர்க்குச் சாமுண்டி தேவநாயனார் எனவும் பெயர். |
மாகவிதன் | ஒரு பாண்டியன். இவன் சிவப்பிரசாதத்தால் முத்தியடைந்தான். |
மாகாயன் | சூரபன்மன் படைவீரன். |
மாகாலன் | ஒரு சிவகணத்தவன், |
மாகாளர் | 1. அரிகரப் புத்திரர்க்குச் சேநாபதி. 2. சிவகணத்தவருள் ஒருவர். 3. இவர் சம்பூரில் இருந்த வீரசைவ அடியவர். இவர் தம் சிரத்தையரிந்து சிவசன்னிதானத்து வைத்து அதை மீண்டும் தரித்துக் கொள்ள இதைக் கண்ட கோவிந்த பட்டராகர் தம் தலையை அரிந்து அரனிடமளித்து வேறு தலைபெற்றனர். இதைக் கண்ட வங்கையர் இவர் செய்ததும் தகாதெனத் தம் தலையை அரிந்து சந்நதியிலிட்டு வேறு தலை வர அதனையும் அரிய மீண்டும் வேறு வேறு தலைகள் வந்து கொண்டிருக்க அரியச் சலிக்காதவரா யிருக்கச் சிவமூர்த்தி நாமே தோற்றனம் என்று அவர் கையைப் பிடித்து அருள் செய்தனர். |
மாகிட்டியான் | வைசியப் பெண்ணிடம் அரசனால் உதித்தவன். |
மாகிஷம் | ஒரு தேசம் (Mysore). |
மாகிஷ்மதி | 1. நருமதை தீரத்தில் உள்ள பட்டணம். ஒரு காலத்து அக்னி இப்பட்டணத்தில் அயலான் தாரத்தைக் கூடச் சென்று அகப்பட்டு அரசனுக்குத் தன்னுருக் காட்டி அரசனை ஆசீர்வதித்துத் தப்பினன். நரகாசுரன் பட்டணம். கேகய ராசாக்களின் அரசு. |
மாகுத்தன் | கழுகாசலத்தில் கழுகுருவாய்த் தவஞ்செய்த இருடி. 2. கார்த்திவீரியன் பட்டணம் (பா. சபா.) Makeshwara on the right bank of the Narbada 40 miles South of Indore. |
மாகேயர் | முல்டானாவென்று வழங்கும் தேசத்து வேளாளர். |
மாக்காயனார் | கணிமேதாவியருக்கும், காரியாசனுக்கும் ஆசிரியர். |
மாங்கல்ய சூத்ரம் | மங்கல சூத்திரம் காண்க. |
மாங்காடு | குடமலைப் பக்கத்துள்ளதோர் ஊர். (சிலப்பதிகாரம்.) |
மாங்குடி மணியசிவனார் | ஒரு சைவர். |
மாங்குடி மருதனார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர். மதுரைக் காஞ்சி பாடியவர். இவர் ஊர் சோழநாட்டு மாங்குடியா யிருக்கலாம். அகம், (புறம்) நற்றிணை முதலியவற்றுள்ளும் சிலபாடியவர், தலையானங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் உய்விக்கப்பட்டவர். |
மாங்குடிகிழார் | 1. ஒரு தமிழ்ப்புலவர். இவராற் பாடப்பட்டவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், வாட்டாற்று எழினியாதன். (புற நா). 2. இவரே மாங்குடி மருதனாரெனப் படுவார் இவர் மதுரைக்காஞ்சி பாடினமையிற் காஞ்சி புலவனெனவும் கூறப்படுவர். |
மாசதிசை யென்னும் கோசாரபலன் | ஜன்ம நட்சத்திரமாவது நாமநட்சத்திரமாவது; அந்தநட்சத்திர முதற்கொண்டு மாசப்பிரவேச நட்சத்திரம் வரைக்கும் எண்ணிய கணக்கை எழில் பெருக்கி ஒன்பதில் கழித்து மிகுந்த கணக்கு 1 ஆனால் சூரிய திசை. 2 புத்திசை. 3 ராகுதிசை. 4 குருதிசை 5 கேது திசை, 6 சந்திர திசை. 7 சனிதிசை. 8 சுக்கிர திசை. 9 குஜதிசை யென்று தெரிந்து கொள்ள வேண்டியது. சூரியதிசை நாள் 1க்கு அலைச்சல், சிரோரோகம். விரோதம், புததிசை நாள் 4க்குப் பந்துலாபம், சவுக்கியம். உற்சவதரிசனம். ராகுதிசை நாள் 4க்கு நீச்சசினேகம். விதவைசங்கமம், விரோதம் குருதிசைநாள் 4க்கு போஜ னசவுக்கியம். தானியலாபம், வாகனலாபம், கேது திசைநாள் ஒன்றே முக்காலுக்குச் சரீரசாட்டியம். அல்பஸ்திரிசங்கமம். சந்திரதிசைநாள் 2க்குப் பூர்ணசந்திரனானால் திரவியலாபம். க்ஷணசந்திரனானால் திரவியநஷ்டம். சனிதிசை நாள் நாலே முக்காலுக்கு ஸ்திரிவிரோதம், காயம். சண்டை சுக்கிர திசை நாள் 5க்கு இரத்தினலாபம். குஜதிசைநாள் ஒன்றே முக்காலுக்கு அல்பபோஜனம் கலகம். இந்தத் திசைகள் கோசாரத்தை அனுசரித்துப் பார்த்துக் கொள்ளவும். |
மாசாத்தன் | 1. அரிகரப் புத்திரன். 2. திருக்கைலாச ஞானவுலாவைத் திருக்கைலையில் கேட்டுவந்து திருப்பிடவூரில் வெளிப்படுத்தியவர். |
மாசாத்துவான் | கோவலன் தந்தை; இவன் கோவலன் இறந்தமை கேட்டுத் தன் பொருளைத் தான முதலிய செய்து துறவு பூண்டவன். இவனுக்கு மாசத்து வாணிபன் எனவும் பெயர். மணிமேகலையை அறவணவடிகளைத் தரிசிக்கத் தூண்டியவன். (மணிமேகலை) |
மாசேநன் | இவன் வாமதேவன் மாணாக்கன். இவன் ஆசிரியன் சொற்கேளாது பல தீமைகளைப் புரிந்து நல்லொழுக்கமும் தெய்வ பக்தியுமுள்ள காசியாசன் மீது மூன்று முறை படையெடுத்துத் தோல்வி யடைந்து ஆசிரியரை நோக்கி என் பெரும்படை அவன் சிறுபடைமுன் தோற்றதென்ன? என அவன் தெய்வபக்தியுள்ளவன் அது உனக்கு இல்லையெனக்கூறக் கேட்டு அதை மதியாது மீண்டும் பெரும் படையுடன் சண்டையிட்டுத் தோற்று ஆசிரியர் கூறியது. உண்மை யென மதித்துக் காசியடைந்து தீர்த்த மாடி முத்திபெற்றவன். (காசி கசியம்.) |
மாச்சாத்து வாணிப மகருஷி கோத்ரன் | கோவலன் வம்சத்திற்கு ஆதி புருஷன், இவன் வைசியன். |
மாச்சிதேவர் | ஒரு வீரசைவ அடியவர். வசவர் காலத்தவர். |
மாடக்குளக் கீழ்மதுரை | மாடக்குள மென்பது மதுரைக்கு மேற்கேயுள்ள தோரிடம்; இது ஒரு தாலுக்காவாகவும் இருந்தது. அவ்விடத்தில் ஒரு குளமுண்டு, “மாடக் குளம் பெருகினால் மதுரை பாழ்” என்ற பழமொழி வழங்குகின்றது. (திருவிளை.) |
மாடன் | தலைமாத்திரம் மாட்டின் உருக்கொண்ட ஓர் க்ஷத்ரதேவதை, பஞ்ச பூதங்களில் ஒன்று |
மாடலனார் | யாப்பருங்கல விருத்தியுள் எடுத்துக் கூறப்பட்ட தொல்லாசிரியருள் ஒருவர். |
மாடலன் | தலைச்செங்கானத்துள்ள ஓரந்தணன். கோவலன் மதுரையிற் கொலையுண்டது முதலியவற்றைக் காவிரிப்பூம் பட்டினத்தாருக்குச் சொல்லித் தன் சொல்லால் சிலர் இறந்தமை தெரிந்து அப்பாவம் நீங்கக் கங்கையாடி மீண்டு செங்குட்டுவனைக் கண்டு அளவளாவி அவனை யாகஞ் செய்யத் தூண்டியவன். (சிலப்பதிகாரம்.) |
மாடலூர்கிழார் | (வேளாளர்) கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர்; இவரதூர் மாடலூர்; இன்ன இடமென்று விளங்கவில்லை, இவர் வேளான் குடியினர். (குறு 150.) |
மாடான் | சூரியனுக்குச் சமீபத்திலிருக்கும் தேவதை, (பா~சாந்,) |
மாட்டிலக்கணம் | புஷ்டியாய்ச் சுபலக்ஷணமுள்ள எருதைக்ருகஸ்தன் கொள்ளுதல் தகுதி. அவ்வகைக் கொள்ளப்போம் எருதை முதலில் பார்க்கும் பொழுது அது வலக்காலைத் தூக்கித் தன் தலையைச் சொரிந்து கொள்ளக் கண்டால் அது சத்தியஞ்செய்து கொடுத்ததாகும். அகத்யம் அதை வாங்கவேண்டும். பசுவானால் நீரும் எருதானால் சாணமுமிடக் கண்டால் நலம். நெற்றியில் சுழிமேல் சுழியிருந்தால் அது கொடை மேற்கொடை ஆகாது. வாங்கில் இடிமேல் இடிவரும். இரண்டு காதின் கீழும் இரண்டு சுழிகள் எதிரெதிர் இருந்தால் கொள்க, ஒருகாதின் கீழ்மாத்திரம் சுழியிருந்தாலது பூரான் கவ்வலென்பார் ஆகாது. முன் முழங்காலிரண்டின் கீழ் இரண்டு சுழிகளிருந்தால் அது விலங்குவைச்சுழி அதைக் கொள்பவன் காலுக்கு விலங்குவிழும். நடுமுதுகந்தண்டில் நீள மாக ஒருகோடும் அந்தக் கோட்டின் இரண்டு பக்கத்திலும் இரண்டு சுழிகளுமிருக்தாலது தாமணிசீசுழி இது மாடுகள் அதிகமாகச் சேர்க்கும், இந்தக் கோட்டின் வலப்புறத்தில் மாத்திரம் ஒருசுழியிருந்தாலது பாடைச்சுழி. இதுகொண்டவனை உடனே பாடையேறச் செய்யும். இடது பக்கமொரு சுழியிருந்தாலது விரிசுழி நல்லது. வாலில் சுழியிருந்தால் நாகம் அது ஆகாது, மாப்பல் மாடு பலஈனம். குதிரைப் பல் மாடு உரம். பில்லைமாடும். மயிரழுத்தமுள்ள மாடும், நல்லது, ஏறுவால், வெட்டுக்குளம்புமாடுமாகா, இடிக்கிறது, உதைகாலி, மிரணி, படுக்காங்கொளியுமாகா, கடைக்கண் புள்ளிமாடு கவடு, வெள்ளை மாடு தோல் இளப்பம், கறுப்புமாடு கால்வாசி பலம், செவிலிநிறம் நல்லது. பில்லைநிறம் சிலாக்யம். வயிற்றில் மறு ஒருபுள்ளியாவது இருப்பது நல்லது. உடம்பெல்லாம் புள்ளியாயிருந்தாலாகாது, கலங்கானது பக்கங்களிலிருக்கும் மாடு மழையில் நனைந்தால் உடம்பெல்லாம் பொங்கி ரணமாகும் மயிருதிரும். மறுபடியும் ரணமாறி மயிர் முளைக்கும் இது பலவீனமுள்ள எருதாம், வாய், இரண்டு கண்கள், குய்யம், முலை, வால், கறுப்பும், மற்றையுறுப்புக்கள் துவசைநிறம் உள்ளது காராம்பசு இதை வீட்டிற்கட்டினால் குடிநசிக்கும் இதனைக் காட்டில் கட்ட வேண்டும், இதன்பாலை தேவதாவிஷயத்தில் உபயோகிக்க வேண்டியது. வயது நடுப்பல் தாழ்ந்திருந்தால் பாதிவயது. இவற்றின் வயதுகளைப் பல்லைப்பார்த்தும் கொம்பின் கணுவிடுதலைப் பார்த்தும் நிதானித்தல்வேண்டும். “நல்லெருமை நாகு, நற் பசுசேவு” ஈனல் நலம், வெள்ளிக்கிழமை எருமைகன்று போடுதல் நலம், வியாழக்கிழமை பசுகன்றீனின் பசுவிர்த்தியாகாது. |
மாணகன் | இஃது உதயணன் சில நிமித்தம் பற்றித் தன்னைப் பிறர் அறிந்து கொள்ளாதபடி இராசகிரியித்திவிருந்த பொழுது கொண்ட வேறு பெயர். (பெ. கதை,) |
மாணாக்கரிலக்கணம் | ஆசிரியரிடம் நியமந்தவறாது சென்று வழிபாடு செய்தலில் மனஞ் சலியாது, ஆசிரியனது குணத்தொடு பழகி, வரலாமென்னுங் கருத்திருப்பதறிந்து அணுக, உட்காரென்று ஆசரியன் கூறவுட்கார்ந்து பாடஞ்சொல்லெனச் சொல்லிப் பசியுடையோன் அன்னத்தை யுண்பது போல் பாடத்தை மனதிற்கொண்டு, பிரதிமை போல் அமைதியுடையவனாய், செவியே, வாயாகவும், மனமே வயிறாகவும், கேட்டபொருள்களை விடாது மனதில்வைத்துப் போவெனக் கூற ஆசிரியனை நீங்குவோன் மாணாக்கனாம். இந்த மாணாக்கர் முதல் மாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணாக்கர் என முத்திறப்படுவர். அவர்களில் முதன்மாணாக்கர் பாலினின்றும் நீரைப் பிரித்துண்ணும் அன்னத்தையும், மேய்ந்ததையெடுத்து அசைபோடும் பசுவைப்போலவும் நல்லதைக் கொண்டு மற்றவைகளை நீக்கியும், பாடங்கேட்டதை யோரிடத்திருந்து சிந்திப்போர் முதன் மாணாக்கர், இடை மாணாக்கர், உழைத்தவரையிற் பலங் கொடுக்கும் பூமியையும், சொன்னதைச் சொல்லுங்கிளியையும், ஒப்பர். கடை மாணாக்கர் நீர்பெய்யுந்தோறும் கீழ்விட்டு விட்டு நிரம்பாத இல்லிக் குடத்தையும், ஒரேவிடத்தில் மேயாது பலவிடஞ் சென்று நுனிமேய்கின்ற ஆட்டினையும், தெளிந்த நீரிருப்பினும் அதைக் கலக்கிப் பயன்படாது செய்யும் எருமையினையும், நல்லதைக் கீழ்புகவிட்டு ஈ எறும்பு முதலியவற்றை யேந்திக்கொள்ளும் பன்னாடையையும் ஒப்பர். |
மாணிக்கத்தாள் | தமிழ் நாட்டு தேவதாசி. |
மாணிக்கவாசகர் | திருவாதவூரைக் காண்க. |
மாணிதரன் | ஒரு காந்தருவன், |
மாணிபத்திரன் | 1. குபேரன் சேனாபதி. குபேரராவணயுத்தத்தில் இராவணனால் அடியுண்டு தலைசாய்ந்ததால் பரிசமௌலி யெனப் பெயர்பெற்றவன். 2. தேவர்களில் சிறந்தவன், இவன் ஒரு வேதியன் பொருட்டு குண்டதரான் மூலமாய் ஞானங்கொடுத்தவன். (பார~சாங்) |
மாண்கோஜிபோதலே | இவர் தாமணமென்னும் கிராமவாசி, சூத்திரர், ஏகாதசி விரதமிருந்து ஆதுலர்க்குண வளித்து வருகையில் ஷாமகாலம்வரத் தமது உடைபொருள் அனைத்தும் விற்று, அன்னமளித்துப் பண்டரிசென்று பெருமாளைத் தரிசிக்கக் காசில்லாமையால் காட்டில் விறகு பொறுக்கி அவைகளை விற்றுப் பெருமாளுக்கு அர்ப்பணஞ்செய்து மீண்டும் ஆது லர்க்கிட இவரது மனைவியிடமிருந்த மாவைப் பெற்று அதிதியாக வந்த பெருமாளுக்கிட்டு அவர் தம்முடனழைத்துச் சென்ற ஓர் அன்னசாலையில் உரியவன் பொருமாளைக் தள்ளியதுணர்ந்து தம்மூர் செல்லுகையில் வழியில் பெருமாள் இளைப்பிற் குணவு தரவுண்டு தம்மூர் சென்று சோளக் கொல்லையில் காவலிருக்கையில் வரையாது ஈதலை நோக்கி யினி யீவை யேல் பெருமாளாணையென மனைவிகூறக் கேட்டுத் தம்மைக் கேட்போரைத் தாமே சோளங்களைப் பறித்துக்கொள்ள விடைதந்தனர். கொல்லையில் தானியமில்லாமையால் வாயு தாவிற்குக் காசு இலாது கடன் கேட்க அகப்படாதது கண்டு மாண்கோஜி அயலூர்க்குப் பொருள்பெறச் செல்ல அரசன் ஏவலர் தாசர் வீட்டினை யடைந்து முத்திரையிடப் பெருமாள் வெட்டியான் போல் வந்து அப்பொருளை அரசனுக்களித்தனர். மாண்கோஜி இஃதுணர்ந்து பெருமாளைத் துதித்திருக்கையில் பாம்பு கடித்திறந்தவனைச் சவமென அறியாது பஜனை செய்யக்கூறி யுயிர்ப்பித்து, ஓர் தாசியின் அடிமை நீக்கி, உபதேசம் பெற விரும்பிய புலையனைத் தமது எருதைக் கொலை செயக்கூறி யதனிறைச் சியைச் சுற்றத்தாருடனுண்டு, புலையனை நோக்கிக் கூறாதிருக்க என, அவன் பலரறியக் கூறக்கேட்டு, உற்றார் மாண்கோஜியை வருத்த வர அவர் பெருமாளைத் துதித்து அவ்வெருதின் அங்கங்களை ஆட்டின் அங்கங்களாகவும் இறந்த எருதை உயிர்ப்பித்தும் தமதில்லகத்திருந்த விதையனைத்தையும் இரவலர்க்கீந்து விதைக்க விதையின்மையால் பேய்ப்பூசுணை விதை விதைத்து அதின் காய்களிற் பெருமாளருளால் கோதுமை பெற்று அரசன் அருத்திய கோமாமிசத்தை மெல்லிய மலராகக் காட்டித் திருவருள் பெற்றவர். |
மாண்டவி | பரதன் தேவி, குசத்துவசன் பெண். இவளை மாளவி யென்பர், |
மாண்டவ்யர் | 1. இவர் தவளையிடம் பிறந்த விருடி என்பர். சாளுவன் பொக்கிஷத்தைக் கொள்ளையிட்ட திருடரைப் பிடிக்க வந்த காவலாளிகள் இவரையும் கள்ளரெனப் பிடித்து அரசனிடம் சென்றனர். அரசன் காவலர் சொற்படி இவரைக் கழுவிலேற்றினன். இவரது தன்மையைப் பின் அறிந்த அரசன் வணங்கிக்கம்மியனால் கழுத்திலிருந்த சூலத்தை மெதுவாக இரு புறத்திலும் அராவுவித்து நடுத்துண்டை விட்டனன். அன்று முதல் இவருக்கு ஆணி மாண்டவ்யர் எனப் பெயர் வந்தது. தாம் பாலப் பருவத்தில் தும்பிகளைப் பிடித்து வாலில் துரும்பை நுழைத்து விளையாடி அவற்றிற்கு வேதனை தருவித்ததால் அந்தப் பாவம் கழுமரத்தில் இட்டதென யமனா லுணர்ந்து அறியாப் பருவத்தில் செய்த பாவத்திற்கு இவ்வகைக் கடுந்துன்பம் செய்ததனால் நீ பூமியில் மனிதனாகப் பிறக்கவெனச் சாபமிட்டவர். இச்சாப மேற்றதனால் யமன் விதுரனாகப் பிறந்தான். இவரது மற்ற சரிதங்களை நளாயினியைக் காண்க 2. சிவபூசையால் தாம் சூலத்தின் பட்ட துன்பநீங்கி இன்பமடைந்தனர். |
மாண்டு கேயர் | இந்திரப் பிரமிதியின் குமரர். |
மாண்டுகண்ணர் | ஒரு இருடி. இவர் கோரதவஞ் செய்கையில் இந்திரன் இவரது தவத்தினைக் கெடுக்க எண்ணி இவர் இருந்த தாமரை மடுவில் அரம்பையரை எவினன். அந்த அரம்பையர் அந்த முனிவரைத் தம்வசப்படுத்த முனிவர் ஓடையைத் தவச்சாலையாக நியமித்து அப்பெண்கள் நலன் உண்டிருந்தனர். இராமமூர்த்தி ஆரண்யஞ் செல்கையில் இத்தவச்சாலை வழி சென்றனர். இவர்க்கு மாண்டு கன்னியெனவும் பெயர். (காஞ்சி புராணம்) |
மாண்ட்ராக் | (Mandrake) இது, மத்யதரைக் கடலிலுள்ள தீவுகளிலும், அதையடுத்த கரைப் பக்கங்களிலும் காட்டுப் பயிராகப் பயிராகிறது. இதன் இலைகளில் சுணை முட்கள் உண்டு. இதன் கிழங்கு, பருத்து மனிதவுருவுடன் தலை கால் முதலிய உறுப்புக்கள் கொண்டிருக்கிறதாம். இதை இழுக்கின்ற வாத்துக் கூச்சலிடல் போல் ஒரு வித சத்தம் உண்டாகிற தென்கிறார்கள், அச்சத்தம் எங்கிருந்துண்டாகிற தெனத் தெரிய வில்லையாம். ஜர்மனியில் (1628) ஆண்டில் மனித வுருக்கொண்ட கிழங்கொன்று விவசாயகாட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதாம். (1802) வருஷத்தில் பிர்மிங்காம் விவசாய பொருட்காட்சி சாலையில் கையுருக்கொண்ட கிழங்கு வைக்கப் பட்டிருக்கிறது. |
மாதங்கம் | சண்டாள சாதிகளில் ஒன்று. |
மாதங்கர் | தோல் துன்னும் தாழ்ந்த சாதியார். |
மாதங்களில் காலசர்ப்பகதி | ருஷபம், மிதுனம், கடகம், இந்த மூன்று சங்கி ராந்தியிலும் காலசர்ப்பம், ஈசான்யத்தில் சிரமும், வாயுமூலையில் இடுப்பும் நிருதி மூலையில் வாலும், இதன் பின்பக்கமாய் வந்து, சிம்பம், கன்னி, துலாம் இந்த மூன்று சங்கிராந்தியிலும் வாயு மூலையில் சிரசம் நிருதி மூலையில் இருப்பும் அக்னி மூலையில் வாலும் இதன் பின்பக்கமாய் வந்து விருச்சிகம், தனசு, மகரம், இந்த மூன்று சங்கிராந்தியிலும் நிருதி மூலையில் சிரமும் அக்னி மூலையில் இடுப்பும் ஈசான்யத்தில் வாலும், இந்தப்பக்கம் வந்து கும்பம், மீனம், மேஷம், இந்த மூன்று சங்கிராத்தியிலும் அக்னி மூலையில் சிரமும், ஈசான்யத்தில் இடுப்பும், வாயு மூலையில் வாலும், இவ்விதமாக இருக்கத் தம்பப் பிரதிட்டைசெய்யில் சுபப்பிரதம். சிரசில் செய்யில் மிருத்யுபயம், முதுகின் மேற் செய்யில் கெடுதியுண்டு வாலின்மேற் செய்யில் சலனம். |
மாதங்கி | 1. காசிபர் பெண் யானைகளைப் பெற்றவள். மதங்கனைக் காண்க. 2. மதங்கருடவடைந்த பாசிராமரால் வெட்டப்பட்ட ரேணுகை, |
மாதசூன்யம் | (சித்திரை) அஷ்டமி,த்வாதசி, ரோகணி, கும்பம், (வைகாசி) எகாதசி, சித்திரை, சோதி, உத்திராடம், மீனம், (ஆனி)த்ரயோதசி, புனர்பூசம், ருஷபம், (ஆடி) ஷஷ்டி, அவிட்டம், பூரம், மிதுனம், (ஆவணி) அமாவாஸ்யை, பூரணை, பூராடம், மேஷம், (புரட்டாசி) சத்தமி, சதயம், பூரட்டாதி, ரேவதி, கன்னி, தனுசு, (ஐப்பசி) நவமி, விருச்சிகம், பூரட்டாதி, (கார்த்திகை) பஞ்சமி, கார்த்திகை, பூசம், மகம், துலாம், (மார்கழி) துதியை, நவமி, அனுஷம், உத்திரட்டாதி, விசாகம், தனுசு. (தை) பிரதமை, அஸ்தம், திருவாதிரை, ஆயிலியம், கர்க்கடகம், (மாசி) சதுர்த்தி, தசமி, மூலம், திருவோணம், மகரம், (பங்குனி) சதுர்த்தசி, பாணி, கேட்டை, சிங்கம் வருவனவாம். இவை சுபகாரியங்களுக்காகா. |
மாததினம் | கார்த்திகைக்கு கார்த்திகை ரோகணி, மார்கழிக்கு மிருகசீரிஷம், திருவாதிரை, தைக்குப் புனர்பூசம் பூசம் மாசிக்கு ஆயிலியம், மகம், பூரம், பங்குனிக்கு உத்திரம், அஸ்தம், சித்திரைக்குச் சித்திரை சோதி, வைகாசக்கு விசாகம் அநுஷம், ஆனிக்குக் கேட்டை மூலம், ஆடிக்குப் பூராடம் உத்திராடம், ஆவணிக்குத் திருவோணம், அவிட்டம், புரட்டாசிக்கு சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ஐப்பசிக்கு ரேவதி, அச்வதி, பரணி இந்நாட்களிலும்,பூரணையிலும் சுபங்கள் நீக்க வேண்டும். (விதானமாலை,) |
மாதபலன் | ஜன்ம நட்சத்திரமுதல் மாதம் பிறந்த நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையை எழிற்பெருக்கி எட்டிற்கழித்த சேடம். 1. ரோகம், 2. இலாபம், 3. செலவு, 4. அலைச்சல், 5. போசன சௌக்கியம், 6. அயிஸ்வரியம், 7. கலகம், 8. மிககஷ்டம். |
மாதம் | (12) சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி, இவற்றிற்கு நக்ஷத்திரங்களாவன முறையே சித்திரை, விசாகம், மூலம், உத்தராடம், அவிட்டம், பூரட்டாதி, அசுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், பூசம், மகம், உத்திரம். இவை அந்த நக்ஷத்திரங்கள் கூடுகையில் இப்பெயர் பெறும், |
மாதரத்தூடையார் | ஒரு வீரசைவர். இவர் காலத்துச் சிவநிர்மால்ய மாகிய அபிஷேக ஜலத்தாலாகிய சேற்றில் ஒரு பசு செல்ல அதை யோட்டிச் சென்ற ஒரு வேதியனும் அழுந்தித் தாண்ட அவன் உடலில் இருந்த நோய் நீங்கியது. இதை அறிந்த வேறு பாண்டு நோய் கொண்ட (700) பேர் அச்சேற்றில் மூழ்கிப் புனிதமடைந்தனர். |
மாதரி | இடைச்சியர் தலைவி. கோவலன் கொலையுண்டதனால் தீயில் விழுந்து இறந்தவள். (சிலப்பதிகாரம்.) |
மாதர் | உசகச்சன் பாரி. |
மாதர் ஒழக்கம் | ஸ்திரீகள் பாலியராயினும், யௌவனராயினும், வார்த்திபராயினும், தம் வீடுகளில் தமது மனம்போனபடி செய்ய லாகாது. பாலியத்தில் தகப்பன் கட்டளையிலும், கணவன் இறந்த பின் புத்திரன் ஆஞ்ஞையிலும் இருக்கவேண்டியது. ஸ்திரீகள் ஒருபோதும் சுயாதீனமாக இருக்கக்கூடாது. தந்தை, கணவன், புத்திரன், இவர்களை நீங்கித் தனி இருக்கும் பேதை, பிறந்த குலத்திற்கும் புகுந்த குலத்திற்கும் நிந்தனை விளைப்பவள் ஆவாள். எப்போதும் வீட்டுக் காரியத்தில் சமர்த்துள்ள வளாயும், சந்தோஷ முள்ளவளாயும், வீட்டுப் பொருள்களைச் சுத்தப் படுத்துகிறவளாயும், அதிகச் செலவில் மனமிலாதவ ளாயும், இருத்தல் வேண்டும். தன் தந்தை, மூத்தோன், இவர்கள் யாருக்குப் பாணிக்கிரகணம் செய்வித்தார்களோ அவனுக்குப் பணி விடை செய்ய வேண்டியது. கணவன் இறந்த பின்னும் அவனுக்குச் சிரார்த்த காரியம் முதலியவை செய்து கொண்டு, விபசாரம் செய்யா திருத்தல் வேண்டும். கணவன் துராசார முள்ளவனாயினும், அன்னிய ஸ்திரீலோலனாயினும், நற்குணம் இலானாயினும், அவனைத் தெய்வம் போற் பூசிக்க, ஸ்திரீகளுக்குக் கணவன் பணிவிடை அன்றி உபவாச விரத எஞ்ஞங்கள் வேண்டியதில்லை. கணவனிருக்கினும் இறக்கினும் அவனுக்கு விரோதமான காரியத்தைச் செய்யக்கூடாது. கணவன் இறந்தபின்பு கிழங்கு பழம் முதலிய சொற்ப ஆகாரத்தால் காலத்தைக் கழிக்க வேண்டியது. காம இச்சையால் பர புருஷன் பெயரையும் சொல்லக்கூடாது. கணவன் இறந்தபின் பிள்ளைக்காக வேறொரு கணவனைச் சேர்பவள் இவ்வுலகத்தில் எல்லாராலும் நிந்திக்கப்படுவள், பதிவிரதைகளுக்கு இரண்டாவது விவாகம் ஒரு சாஸ்திரத்திலும் கூறப் படவில்லை. புருஷன் தாழ்ந்தவன் என்று உயர்ந்தவனைக்கூடுகிற ஸ்திரீ எல்லாராலும் நிந்திக்கக்படுகிறாள், விபசாரத்தினால் உலகத்தில் நிந்திக்கப்பட்டவள் இம்மையில் தீங்கை அடைதலே அன்றி மறுமையில் குட்டவியாதி கொண்டவளாதலே அன்றிக் குள்ள நரியாகவும் பிறப்பள். எந்த ஸ்திரீ மனம் வாக்கு காயங்களை அடக்கிக்கொண்டு விபசாரம் செய்யாது நல்லொழுக்கத்துடன் இருப்பாளோ அவள் பதி உலகத்தை அடைவதும் அன்றிப் பதிவிரதை என்னும் பெயரையும் பெறுகிறாள், |
மாதர்கள் | (7) மாதுருக்கள் காண்க. |
மாதலி | இந்திரன் தேர்ச்சாரதி, ஒருகால் இராவண யுத்தத்தில் தேர் செலுத்தின. |
மாதளவனூர் இளநாகனார் | திருக்குன்றத்தாசிரியரிடம் பொருளிலக்கணம் கேட்டவர். |
மாதவக்கோன் | ஒரு இடையன், இவன் காட்டில் காலி மேய்த்துக் கொண்டிருக்கையில் இவனையொரு முனிவன் அன்று தளிர்த்தான் மூலிகைகாட்டுக என இவன் காட்ட அதனடியில் யாகஞ்செய்து மாத வக்கோனைத்தள்ள முயலுகையில் இடையன் தப்பி முனிவனைத் தள்ளினன். முனிவன் சுடர்விடு பசும் பொன்னாகக் கண்டு அவ்விக்ர கத்தை யெடுத்து அதின் உறுப்புக்களில் ஒன்றைத் துணித்தனன். அது பழையபடி வளாக்கண்டு சீவித்து வந்தனன். இதனை அரசன் கேள்வியுற்று இவனைக்கேட்க இவன் அதனை அரசனுக்குக் கொடுத்துப் புகழடைந்தவன். |
மாதவசூரி | இவர் மேல்நாட்டில் திருநாராயண புரத்தில் கலி (4215) விஜயக பங்குனி உத்தர நக்ஷத்ரம் அவதரித்து பண்டிதராய்க் கங்கோரை என்கிற ஊரை வாழுமிடமாகக் கொண்டு ஆறு சாஸ்திரம் வருமென் பதற்கு அத்தாஜியாக ஆறு ஆஸனமிட்டு அதின்மீது உட்கார்ந்திருப்பர். இவரை பட்டர், உடையவர் நியமனப்படி மேல் நாடு சென்று வாதமிட்டு வென்று ஸ்ரீவைஷ்ணவராக்கினர். இவர் சந்நியசித்துத் திருவரங்க மடைந்து பட்டரை வணங்கப் பட்டர் நம்முடைய ஜீயர் வந்தார் என அணைத்துக்கொள்ள அன்று முதல் கஞ்ஜீயர் என்று இவர்க்குத் திருநாமம் உண்டாயிற்று. இவர் பட்டரிடம் பலசங்கைகளை வினாவித் தெரிந்து பட்டர் பிரம்மரத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருகையில் அவரது ஸ்ரீபாதந்தாங்கப், பட்டர் தடுக்கவும் அதற்குச் சமாதானங்கூறித் தாங்கினர். |
மாதவசேனை | சசியின் தோழி. (சூளா.) |
மாதவதாசர் | இவர் பால்யத்தில் தாய் தந்தையரை இழந்து சம்சார பந்தம் விட்டதற்குப் பரம சந்தோஷமடைந்து பல தலங்களையடைந்து தரிசிக்கவெண்ணி ஜகநாதம் சென்று பெருமாளின் சகுண ரூபத்தைச் சந்நிதி முன்னிருந்து தோத்திரஞ்செய்து அனுபவித்திருக்கையில் அர்ச் சகர் தங்களுக்கு ஒரு காசும் பயனில்லாததினால் கோபித்து வெளியிற் றள்ளத் தாசர் வெளிவந்து ஒரு புறத்தில் மூன்று நாட்கள் ஆகாரமில்லாது பஜனை செய்யப் பெருமாள் ருக்மணி தேவியை அவருக்கு அமுதூட்டி வர அனுப்பினர், பிராட்டியார் பொற்றாம்பாளத்தில் அமுதருத்தி அந்தத் தட்டினை அங்கு வைத்துச் செல்லத் தாசர் அதனை அலம்பித் தலைக் கண் வைத்து உறங்கினர். விடியக் கோவிலர்ச்சகர் தட்டினைக் காணாது தாசரிடம் கண்டு அவரைச் சிறையிலிடப் பெருமாள் அருச்சகர் கனவிடைச் சென்று நடந்தவை கூற அருச்சகர் அவரிஷ்டப்படி பெருமாளைச் சேவிக்க இடந்தந்தனர், இவ்வாறு ஒரு நாள் திருக்கோயிliல் தியானித்திருக்கையில் அருச்சகர் கோயிலைக் காப்பிட்டுச் சென்றனர். பாதியிரவில் தாசருக்குக் குளிர்வரப் பெருமாள் தம் சால்வையைத் தாசருக்குப் போர்த்துச் சென்றனர். விடிந்து அருச்சகர் கண்டு பெருமாளுக்கு மிக்க அன்பர் என வியந்தனர். இதனை ஊர் அரசன் கண்டு உபகரிக்கத் தாசர் உபகாரம் வேண்டாது நீங்கி வடமதுரை யடைந்து பெருமாளைத் தியானிக்க அவ்விடம் அர்ச்சகர் புறத்தில் நீக்க இவர் புறஞ் சென்று ஒருவர் அமுது தர அதனைப் பாகஞ்செய்து பெருமாளுக்கு நிவேதிக்க அழைக்கப் பெருமாள் தரிசனக் தந்துண்டு கோயிலடைய அருச்சகர் பெருமாளுக்கு அன்னம் நிவேதிக்க மாதவ தாசனிட முண்டேனெனக் கூற அவர்களிவரிடம் அபார தக்ஷமை வேண்ட நீங்கிச் ஜகநாதஞ்சென்று அதிசார கோயில் பெருமாள் சௌசத்திற்குச் சலமுதவவும், ஆடையைக் கசக்கித் தரவும் இருந்து தார்க்கிகன் வாதுக்குவர அவனைப் பெருமாள் தம்மைப் போலிருந்து வெல்ல அத்தார்க்கிகனை வென்று பாமபதநாதனைப் பஜனை செய்திருந்தவர். |
மாதவன் | 1. கௌசிகனென்னும் பாகவதனுக்குச் சீடன் பாகவத் கைங்கர்யபானா யிருந்தவன். 2. திருமாலின் திருநாமத் தொன்று, 3. புரந்தரன் குமரன். |
மாதவராசன் | ஒரு அரசன். காட்டில் பாலசந்திரரைப் புத்திரராகப் பெற்றவன். தேவி சமுதை. |
மாதவர் | யதுகுலத்தவர். கம்சன் பகைவர். விருஷ்ணியைக் காண்க. |
மாதவவூறன் | இவன் விசுவகன்மன் கண்ணில் உதித்துச் சிருட்டி நடத்துகையில் பிரமன் கோபித்து நீ நூலிழைக்குஞ் சிலந்தியாக எனச் சபித்தனன். மீண்டும் இவன் வேண்ட நீ திருக்காளத்தியில் சிவபூசை செய்து சாபம் நீங்குக என அவ்வகை சிவ பூஜை செய்து முத்தி பெற்றவன். |
மாதவாசாரியர் | மாயணன் குமரர். இவர் செல்வ விருப்பினராய்க் காடு சென்று தவமேற்று அரசனது பசுமேய்ப்பானாகிய புக்கணனை யடைந்து அவன் பசி தணியப் பால் தரவுண்டு தவஞ்செய்கையில் திருமகள் புக்கணனை யடைந்து இவற்கு இப்பிறப்பில் செல்வங் கிடையாதெனக் கூறவும் தவஞ்செய்து சலித்துத் தனது உபவீதத்தை அறுத்தெறிந்து துறவடைம்தனர். பின் திருமகளும் கலைமகளும் தரிசனந் தந்து யாது வேண்டுமென இவர் எனக்குக் கல்வியும், எனக்குப் பால் தந்து பசி போக்கிய புக்கணனுக்கு அரசச் செல்வமும் தருகவென அவ்வாறளித்து மறைந்தனர். பின் அரசனிறக்கப் புக்கணனை அரசயானை அபிஷேகித்து அரசனாக்கியது. இவன் அரசாளுகையில் புக்கணன் இவரைத் தங்கள் புகழ் நிலவ நூல்களியற்றுக வென வேண்ட இவர்பல வடநூல்களுக்கு உரையியற்றினர். இவர் சகோதரர் போக நாதர், சாயணாசாரியார். இவர்க்கு வித்யாரண்யர் எனவும் பெயர். |
மாதவி | 1. யயாதியின் பெண். காலவன் தேவி. 2. கோவலன் காதற்பரத்தை. இவள் குமரி மணிமேகலை. கோவலன் இறந்தது கேட்டுத் துறவு பூண்டு அறவணவடிகள் பாற்சென்று தருமங் கேட்டுக் காஞ்சி நகரத்து நோற்றிருந்தவள். (மணிமேகலை) 3. அகத்தியர் சாபத்தால் பூமியிற் பிறந்த உருப்பசி. (சிலப்பதிகாரம்.) 4, இந்திர சாபத்தால் பூமியிற் பிறந்த தேவஸ்திரீ |
மாதவீயம் | 1. வித்யாரண்யர் செய்த சோதிட நூல், 2. பராசரஸ்மிருதி வியாக்யானம். |
மாதா பித்ரு சேவனவிரதம் | இது தாய் தந்தையரைப் பூஜித்து விரத மிருப்பது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாதலின் அவர்களைச் சுத்தனாய் நாடோறுஞ் சேவிக்கின் எல்லா நலமும் அடைவன் எனக் கூறியிருக்கிறது. இங்ஙனம் பிதுர்வாச்யம் கடவாதார் ஸ்ரீராமன், பரசுராமன், பார்க்கவர் முதலியோர். இங்கனஞ் செய்வாரைத் தேவர் வணங்குவர் |
மாதாம்பை | மாதிராசர் மனைவி, நந்திமா தேவரை மூன்று வருடம் கருவில் பெற்று வசவர் என்று பெயரிட்டு வளர்த்தவள். |
மாதினியார் | புகழனார்க்குத் தேவியார். திருநாவுக்கரசுகளுக்குத் தாயார். திருநாவுக்கரசுகளைக் காண்க. |
மாதிமாதிரத்தனார் | ஒரு புலவர். (புற. நா.) |
மாதிராசர் | மாதாம்பை கணவர். வசவ தேவர் தந்தை. இவர் ஒருமுறை கூழுண்ண அது ருசியாயிருக்கக்கண்டு சிவப் பிரீதியென்னச் சிவமூர்த்தி இவர் வாயே பாத்திரமாக உண்டனம் என்ன அசரீரி கேட்கப் பெற்றவர். |
மாதிராசையர் | சிக்கமாதையர் தேகவியோகமடைய அவர் குமரர் சொல்லால் உயிர் தந்து சிவபூசைக்கு ஏவினவர். |
மாதீரத்தன் | கடைச்சங்கமருவிய புலவர், (குறு 113.) |
மாதுராகன் | யாதவபேதம். |
மாதுருக்கள் எழுவர் | இவர்கள் சிவமூர்த்தி அந்தகாசுரனைக் கொல்ல எழுந்த காலத்தில் அவர் திருமேனியிலிருந்து அவதரித்தவர்கள், பெயர், பிராமி, மகேச்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, சாமுண்டி, இந் திராணி முதலியவர். இவர்களைத் திரிலோகத்தவரும் பூசிக்கின் எல்லா நன்மையு மடைவர். இவர்க்கு முறையே வாகனம், அன்னம், இடபம், மயில், கருடன், சிங்கம், யானை, பேய். முறையே ஆயுதங்களாவன, மறை, பினாகம், வேல், ஆழி, கலப்பை, வச்சிரம், சூலம். |
மாதேசன் | ஒரு அரசன். இவன் வணிகத் தொழில் செய்து பெருந் திரவியம் சம்பாதித்துத் தருமஞ்செய்யாது வைத்திருந்தனன். இவன் மனைவியுமிறந் தனள். இவனுக்குப் புத்திரர் முதலியர் இல்லாமையால் ஒரு வேசியினிடம் இருந்தனன். அந்த வேசி, இவன் உலோபத் தன்மையையும், தருமசிந்தை யிலாமையும் கண்டு, நீ தருமஞ் செய்யின் உன்னைக் கூடுவேனென்று வெறுத்தனள். இவன் அவளை விட்டுக் காசி சென்று புராணம் முதலிய கேட்டுப் பொருளைத் தருமத்திற் செலவிட்டுச் சுதபசு என்னும் சிவபக்தி மானுக்கு வீடு கட்டித்தந்து முத்தியடைந்தனன். (காசி. ரக.) |
மாதேவன் | 1. சிவன் திருநாமங்களில் ஒன்று: 2 ஏகாதசருத்ரருள் ஒருவன். |
மாதைத் திருவேங்கடநாதர் | இவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய (500) வருஷங்களுக்குமுன் சோழநாட்டில் மாதை யென்னும் ஊரில் ஸ்மார்த்த வேதியர் குடியிற் பிறந்து கல்வி வல்லவராய்ப் பாண்டி நாட்டையாண்ட நாயகவம்சத்தைச் சேர்ந்த எங்ககிருஷ்ண முத்து வீரப்பநாயகரிடம் மந்திரியாக அமைந்து தமிழ்ப்புலவரை ஆதரித்துக் கவிபெற்றவர், கவிக்கு ஆயிரம் பொன் கொடுத்துப் பிரபந்தம் முடிந்தபின் நூறு கவிகொண்ட நூலுக்கு நூறாயிரம் பொன் பரிசு தந்தவர். இதனைப் பணவிடுதூது முதலியவற்றால் அறிக. இவர் ஆசாரியர் சொற்படி பிரபோத சந்திரோதயத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். |
மாத்தச்சன் ஆயுதம் | வாள், உளி, இழைப்புளி, துரப்பணம், துரப்பணக் கோல், சிற்றுளி, கொட்டாப்புளி, |
மாத்திகவதகன் | சித்தராதன் என்னும் பெயருள்ள கந்தர்வன். ஜமதக்கினி ரிஷியின் பாரியையான இரேணுகையால் காணப்பட்டவன். (பா. வன.) |
மாத்திரை | என்பது, அளவு, எழுத்தளவு உன்னல் கால், உறுத்தல் அரை, முறுக்கல் முக்கால், விடுத்தல் ஒன்று என்ப. “இயல் பெழுமாந்தரிமை நொடி மாத்திரை குற்றெழுத்திற்கு மாத்திரை (1) நெட்டெழுத்திற்கு மாத்திரை (2) மெய்யெழுத்திற்கரை இனி இசைக்குரிய மாத்திரை “கொட்டும், அசையும் தூக்குமளவும் ஒட்டப் புணர்ப்பது பாணியாகும். ” கொட்மோத்திரை அரை, வடிவு (1) அசை மாத்திரை (4) வடிவு (7) தூக்கு மாத்திரை (2) வடிவு (2) அளவு மாத்திரை (3) வடிவு (ஃ) இவற்றின் தொழில் கொட்டு அமுக்கல், அசை, தாக்கியெழல், தூக்குத் தாக்கிக் தூக்கல். அளவு தாக்கின ஓசை நேரே (3) மாத்திரை பெறுமளவும் வருதல். |
மாத்மிகன் மதம் | தேகாவயவமே பொருளெனவும், அது கெட்டால் வேறு பொருள் இன்றெனவும், பொருளில்லாவிடின் அறிவில்லை யெனவுங் கூறுவோன், |
மாத்யந்தினாள் | யாஞ்ஞவல்கியர் மாணாக்கர். |
மாத்ரி | 1. மத்திரதேசாதிபதியின் குமரி. பாண்டுவின்தேவி. குமரர் நகுலசகாதேவர். இவள் பாண்டுவுடன் தீக்குளித்தனள். இவளைப் பாண்டு தனக்குற்ற சாபமறந்து புணர்ந்திறந்தனன் 2. பரீச்சித்தின் தேவி. குமரன், சன மேசயன், |
மாத்ருகா | அரியமா வென்னும் ஆதித்தன் தேவி, ஞானிகளாகவே பிள்ளைகளைப் பெற்றவள். |
மாத்ருக்கள் பதின்மர் | கௌரி, லக்ஷ்மி, இந்திராணி, மேதை, சாவித்திரி, விஜயை, ஜயை, தேவசேனை, ஸ்வதா, ஸ்வாகா. |
மாநகரி | ஒரூர். மதுரைக்கு வடகிழக்கிலுள்ளது. பாண்டியர்களுடைய அரண்மனை முதலியன இருந்த இடம், மாணிக்கவாசகர் பொருட்டு வந்த குதிரைகள் இடசாரி, வலசாரி புரிந்த இடமென்றுங் கூறுகின்றனர். (திரு.) |
மாநக்கஞ்சாறநாயனார் | இவர் கஞ்சாறூரில் வேளாளர் குடியில் பிறந்து பரமசிவ உபாசனையால் ஒரு பெண்ணைப் பெற்றனர். அப்பெண்ணுக்கு மணப்பருவம் வந்தது. அவளை எயர்கோன் கலிக்காமநாயனார் திரு மணஞ் செய்து கொள்ள நல்ல சுபமுகூர்த்தத்தில் கஞ்சாநூருக்குச் செல்ல முயன்றனர். இதற்கு முன்பே சிவமூர்த்தி மாவிரதியார் வடிவு கொண்டு கஞ்சாற நாயனார் வீடுசென்று நாயனாரைக்கண்டு இங்கு என்ன சுபகாரியமென்று வினவினர். காயனார் தமது புத்திரிக்குத் திருமண மென்று தமது புத்திரியையும் பணிவித்தனர். மாவிரதியார் பெண்ணின் கூந்தலக்கண்டு இப்பெண்ணின் கூந்தல் நமது பஞ்சவடிக்கு உதவும் என்று அதனைக் கேட்டனர். நாயனார் திருமணமாகா முன் கேட்டதற்கு அதிக ஆகந்தங்கொண்டவராய், அக்கூந்தலை உடனே அரிந்து தந்தனர். சிவமூர்த்தி மாவிரதியர் கோலமொழித்துப் பிராட்டியுடன் விடைமேல் காட்சிதந்து சந்நிதியில் தம்மைப்புகழும் பெரும்பேறு தந்து மறைந்தனர். மணமகராகிய கலிக்காமர் கஞ்சாறூரில் வந்து முண்டிதமுள்ள பெண்ணை மணக்க விதியிலாததால் மீளக்கருதியபோது சிவமூர்த்தி கலிக்காமரை நோக்கி இப்பெண்ணின் கூந்தல் வளரச்செய்கிறோ மென்று பணிக்கக்கேட்டு அப்பெண்ணை மணந்து தமது ஊருக்குச் சென்றனர். (பெரிய புராணம்) |
மாநச தீர்த்தம் | சிவமூர்த்தியின் நெற்றிக் கண் காரணமாக உமாதேவி யாரின் திருவிரலிற் றோன்றிப் பிரமனால் சத்தியவுலகத்தில் பிரதிட்டிக் கப்பட்டது. இமயமலையில் பிரமனால் சிருட்டிக்கப்பட்ட தெனவுங் கூறுவர். |
மாநந்தை | ஒரு தாசி. இவள் சிவபக்தியுள்ளவள். இவள் தன்னிடமிருந்த குரங்குக்கும் கோழிக்கும் உருத்திராக்ஷமணிந்து வளர்த்து வருகையில் சிவமூர்த்தி இவளிடம் ஒரு வணிகர்போல் தரிசனந் தந்து இரத்தின கடகங் காட்டினர். அதைக் கண்ட தாசி ஆவலுடன் கேட்கச் செட்டியார் நீ என்னுடன் மூன்று நாள் இருப்பையேல் இதனைத் தருவேன் என அவ் வகையே தாசியுடன் பட்டுச் செட்டியாருடனிருக்கையில், பாதியிரவில் தாசி தன் வீடு தீப்பற்றி எரியக்கண்டு குரங்கையும் கோழியையும் விடுவித்து மாணிக்கலிங்கம் வேகக்கண்டு வணிகருக்குக்கூற வணிகர் இனி வாழேன் என்று தீப்புகத் தாசியும் நான் மூன்று தினங்களுக்குச் செட்டியாரடிமையாதலின் நானும் உயிர் விடுவேனென்று தீப்புகுந்து சிவமூர்த்தி, உண்மையுருக்காட்ட முத்தியடைந்தவள். அந்தக் குரங்கும், சேவல்களுமே தருமன் தாருகன் என்னும் காச்மீரத்தாசனும் மந்திரியு மாயினர். (பிரமோத்தா காண்டம்.) |
மாநவம் | 1. ஒரு தேசம். 2. உபபுராணத்தொன்று. |
மாநவி | திரௌபதிக்கு ஒருபெயர். |
மாநாய்கன் | கண்ணகியின் பிதா. கோவலன் கண்ணகி முதலியவர் இறந்ததால் துறவு பூண்டோன் (சிலப்பதிகாரம்) |
மாநிநி | விடூரதன் குமரி. இராஜ்யவர்த்தனன் தேவி, தமனைக் காண்க. |
மாநுஷன் | ஒரு சிற்பி. |
மாநுஷம் | ஒரு தீர்த்தம். |
மாந்தரஞ்சேரலிரும்பொறை | சேரருள் ஒருவன் (சிலப்பதிகாரம்) |
மாந்தரன் | இவன் ஒரு சேரர் தலைவன். இவனை மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பர். இவன் பரணரால் பாடப்பட்டவன், மோரிய அரசனுக்கு வணங்காது நின்றவன். |
மாந்தரோகம் | இது பிள்ளைகளுக் குண்டாம் ரோகங்களிலொன்று. இது தாய், தேங்காய், வெல்லம், சுண்டற்கறி, கீரை, மீன், இறைச்சி, புளித்த மோர், கிழங்குகள், மந்தவஸ்துக்கள் தின்பதால் உண்டாம். பாலைக் குடிக்கும் பிள்ளைகளுக்குண்டாகும் ரோகம், இது, பலநிறமான கழிச்சல், சுரம், மயக்கம் முதலிய தரும். இது, செரியாமாந்தம், பீர்மாந்தம், சுரமாந்தம், விஷமாந்தம், கழிமாந்தம், ஊதுமாந்தம், நீர்மாந்தம், தலைமாந்தம், சிங்கி மாந்தம், கணமாந்தம், சொருகு மாந்தம், குழிமாந்தம், இழுப்பு மாந்தம், உப்புமாந்தம், இரைப்பு மாந்தம், கட்டு மாந்தம், அள்ளுமாந்தம், விக்கல் மாந்தம், சந்திமாந்தம் எனப் பல வகைப்படும். |
மாந்தாதா | 1. யுவனாசவன் குமரன். (யுவனாசவனைக் காண்க) இவனுக்கு இந்திரன் இட்டபெயர் திரிசதசு. பாரி, விந்துமதி, குமரர் புருகுச்சன், அம்பரீஷன், முசுகுந்தன். இவனுக்கு ஐம்பது பெண்க ளுண்டு. அந்த ஐம்பதின்மரைச் சௌபரி முநிவர் விவாகஞ் செய்து கொண்டனர். இவன் இராஜசூயம் செய்து சம்ராட் பட்டமடைந்தவன். இவன் தன்னாடு மழையிலாதிருக்க இந்திரனுடன் போரிட்டு மழை பெய்வித்தவன். இவன் தன் தந்தையினுடலின் வாம பாகத்தைப் பிளந்து வெளிப்பட இருடிகள் இச்சிசுயாரைத் தனபானஞ் செய்யத் தக்கதெனச் கங்கையடைகையில் புருஷன் கருவுற்றுப் பிள்ளை பெறுதல் மூவுலகத்தும் இல்லையாதலால் அவ்விடம் வந்திருந்த இந்திரன் என் தற்சனியைப் பானம்பண்ணக் கடவதெனக் கரத்தை நீட்டினன். நீட்டிய விரலின் வழியொழுகிய அமிர்தத்தைப் பானஞ்செய்தபடியால் மாந் தாதா என்று பெயர் அடைந்தனன். 2, சூர்ய குலத்தரசன் லவணாசுரனால் கொல்லப்பட்டான், (பார~அநுசா.) |
மாந்தாத்ரி | ஒரு அரசன். இவன் பௌத்ரன் திரசதாசயன். |
மாந்துங்காசாரியர் | பக்தாயிர் தம் செய்த சைனர். |
மாந்தேகர் | இவர்கள் அரக்கர். இவர்கள் முப்பது கோடியெண் கொண்டவர்கள். இவர்கள் சூரியனை விழுங்க இச்சித்தவர்கள். இவர்களது இச்சையைக் கெடுக்கத் தேவர்களும் ரிஷிகளும் சந்தியை உபாசித்து உதகாஞ்சலியாகிய அர்க்கியத்தை விடுகின்றனர்: விட்டவுடன் அந்த அர்க்கியஜலம் வச்சிர வுருக்கொண்டு அந்த ராக்ஷஸரைக் கொளுத்துகிறது. (தேவி~பார.) |
மாந்தை | இதுசேரர் தலைவர்களுக்கிருந்த இராஜதானிகளில் ஒன்று. இதில், நார்முடிச்சேரல் அரசு வீற்றிருந்தான். |
மானசவேகன் | வெள்ளி மலையிலுள்ள நூற்றொருபது வித்தியாதர அரசர்களுள் ஒருவன். இவன் மதனமஞ்சிசையை விரும்பி எடுத்துச் சென்று நரவாணதத்தனால் வெல்லப்பட்டான். (பெ. கதை.) |
மானனீகை | இது கோசலத்தரசனுடைய மகளது வேறு பெயர். இவளது இயற்பெயர் வாசவதத்தை யென்பது. இவள் தாய் வசுந்தரி யென்பாள். கோசலத்தரசனைவென்று அவளது அந்தப்புரத்திலிருந்து பாஞ்சால ராசன் கவர்ந்து சென்ற மங்கையர்களுள் இவளும் ஒருத்தி. பின்பு அவனுடைய பட்டதேவியின் பணிப்பெண்னாக இருந்து அவனைக் கொன்ற உதயணனாற் கொண்டுவந்த மகளிரோடு இவளும் கொண்டு வரப்பட்டு வாசவதத்தையின் பணிப்பெண்ணாக இருந்து தன்னுடைய பந்தாட்டத்தைக் கண்டு மோகித்த உதயணனுக்கு பின்பு மனைவி யாயினள். இவள் யவன பாஷையிலும் சிற்ப வேலையிலும் பந்தாடுதல் முதலியவற்றிலும் மிகத்தேர்ச்சியுள்ளவள், (பெ. கதை) |
மானமங்கலம் | திருவாதவூரருடைய முன்னோர்களிருந்தவூர்; இதனால் அவர்கள் மானமங்கலத்தாரென்று கூறப்படுவர். இவ்வூர் மானபுர மெனவும் வழங்கும். (திரு.) |
மானஸாதேவி | இவள் பிரகிருதி தேவியினம்சம். இவள் சங்கரப்ரியை அநந்தன் சகோதரி, நாகங்களால் பூசிக்கப்பட்ட நாகபூஷனி நாகேச்வரி, சாதகாரபத்னி ஆஸ்திக முனிவரின் தாயாதலால் ஆஸ்திக மாதா இவளைத் துதிப்பார்க்குச் சர்ப்ப பயமில்லை. காசிபமுனிவர்க்கு மனதில் பிறந்தவள் என்பர். (தேவி. பா.) |
மானேடெர்மிஸ் | ஒருவகை ஆஸ்திரேலிய வாசி எறும்பு தின்னி மிருகம், இது, அழுத்தமான கொம்பு போலும் மயிர்மூடிய தேகமுள்ளது. வாய் மெலிந்து உருண்டு நீண்டு குழாய் போல் எலும்பழுத்த முள்ளதாக இருக்கிறது. இதன் நாக்கும் உருண்டு நீண்டு அடிதடித்தும் முனை சிறுத்தும் பசையுள்ளதாயும் இருக்கிறது. அந்த நாவை எறும்பு புற்று முதலியவற்றில் நீட்டிப் பசையால் பிடித்து எறும்பு முதலியவற்றைத் தின்கிறது. இவ்வினத்தில் பல பேதம் உண்டு. இவை விலங்கினமாயினும் முட்டையிட்டு அவற்றை வயிற்றிலுள்ள பையில் வைத்து உஷ்ணத்தால் அதை பொரியச் செய்கிறது. அக்குஞ்சு தாயின் மடியிலிருந்த வண்ணம் மூக்கால் பாலையுண்கிறது. இவை வளை தோண்டி வசிக்கும். இவ்வினத்தில் ஒருவகை ஆண்டிஸ் மலைப் பிரதேசத்தில் இருக்கிறது. அது எறும்பு தின்னிகளில் பெரிது. இதனை டாமண்டுவா (கிரேட் ஆண்ட் ஈடர்) என்பர். (4 1/2) அடி நீளம் கரடிபோல் உடலெங்கும் மயிர் மூடியிருக்கிறது. |
மானோக்கத்து நப்பசலையார் | மானோக்கம் கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு, பசலை மகளிர் கணவனைப்பிரிந்த காலத்து அவர்க்கு முன்புள்ள நெற்றியினொளி கெட்டுக் கண்ணாடியில் வாயினா லூதியபொழுது ஆவிபடர்ந்து ஒளி மழுங்குவதுபோல வேறுபட்டுக் காட்டுந் தன்மை நற். 304ம் பாட்டில் மறிமிடை பொன்னின் மாமை சாய வெண்ணிற்கு சிதைக்கு மார்பசலை” என்று பசலையி னியற் கையைத் தெளியக் கூறியவதனால் நப்பசலையா ரெனப்பட்டார். சிறப்பு பொருள் உணர்த்தும் இடைச்சொல். இவர் பெண்பாலர். இவரது இயற்பெயர் புலப்படவில்லை இவர் சோழன் குளமுற்றத் துஞ்சிய கிள்ளிவளவனது போர் வெற்றியைப் புனைந்து பாடியுள்ளார். புறம் 37. மற்றும் அவனது கொடை முதலாயினவற்றைச் சிறப்பித்து இயன்மொழி கூறினார். பின்பு அவனிறந்தபொழுது இரங்கிக் கூறிச்சென்றார். புறம். 224 மலையமான் திருமுடிக்காரி யிடஞ்சென்று பரிசிற்றுறைப் பாடிப்பரி சில் பெற்றனர். புறம். 126. முற்கூறிய காரியின் மகன் சோழியவேனாதி திருக்கண்ணனைப் புகழ்ந்து அரசவாகை பாடினர். இவர் கபிலரைப் பெரிதும் புகழ்ந்துள்ளார். குறிஞ்சியையும், பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும் அகத்தில் ஒன்றும், புறத்தில் ஏழுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
மானோக்கம் | இது கொற்கையைச் சூழ்ந்த நாடென்பர். மானோக மெனவும் வழங்கும். (புற. நா.) |
மான் | இது உருவத்தில் இளங்கன்று குட்டிபோன்றது. இச்சாதியிற் பலவகைகள் உண்டு. இது வளர்த்தால் பக்ஷமாக இருக்கும். இது ஓடுகையில் இதன் கால்கள் பூமியில் தங்கா, இதின் ஆணிற்குக் கொம்புகள் உண்டு. அவை வருஷத்திற் கொருமுறை வீழ்ந்து முளைக்கும். இதற்குப் பிளந்த குளம்புகளுண்டு. பெண்மானுக்குக் கொம்புகள் இல்லை. இதன் தோல் பழுப்பு நிறமாக விருக்கும். புள்ளிமான் உடம்பில் புள்ளிகொண்டிருக்கும். இது பயந்த பிராணி. இவைகள் கூட்டமாக மேயும்போதும் உறங்கும் போதும் ஒன்று அல்ல திரண்டு காவல் காத்திருக்கும். ஏதாவது சிற்றொலி அபாயக்குறி கண்டவுடன் தலையைத் தூக்கிக்கொண்டும் காதை உயர்த்திக் கொண்டும் ஓடி மறையும். இதிற் பலவரையுண்டு, கஸ்தூரிமான், கவரிமான், புல்வாய், கஸ்தூரி கஸ்தூரிமான் வயிற்றிலுண்டாம். |
மான்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பண்ணன் என்பவனைப் பாடிப் பரிசு பெற்றவர். இவர் இயற்பெயர் கொற்றங்கொற்றனாரா யிருக்கலாம் ஊர் மாற்றூர், தந்தை மாற்றூர்கிழார் வேளாளர். அகம் 54 |
மாபலன் | சூரபதுமனுக்குப் படைத்தலைவன், |
மாபலி | 1. பலியைக் காண்க. 2. பாம்பனைக் காண்க. |
மாபுராணமுடையார் | யாப்பருங்கல விருத்தியுள் கூறப்பட்ட தொல்லா சிரியருள் ஒருவர் |
மாபுராணம் | 1. இடைச்சங்கமருவிய ஒரு இலக்கண நூல். 2. சைந தீர்த்தங்கரின் சரித்திரமுரைத்த நூல். |
மாப்பிள்ளை | மேல்நாட்டு மகமதிய மதத்தவர் மலையாள பாஷை பேசுவோர். அரேபியரின் சந்ததியார். இவர் பல வேலைகள் செய்து பிழைக்கின்றனர். (தர்ஸ்டன்.) |
மாமதநன் | துரியோதனன் தம்பி. |
மாமிலாடன் | கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். (குறு 46.) |
மாமூலனார் | இவர் அந்தணர் மரபினர். முக்காலமும் அறிந்த யோகியார். இதனைத் தொல்பொருள் எடும் சூத்திரவுரையில் பார்ப்பனப் பக்கத்து வகையாவன என்பதன் கீழ், நச்சினார்க்கினியர் யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலை வகையோ ராவர்’ என்று கூறுவதனா லறிக. அறிவன் கலசயோனியாகிய அகத்தியன் என முன்னர்க்கூறி யிருத்தலினால் மாமூலனார் அகத்தியரோடு அவர் வகையில் சேர்ந்தவரென்றறியற் பாலது. இவ்வளவு மேம்பாடுற்ற இவர் அகப் பொருட் சுவையை அளவு கடந்து அனுபோக முடையாருஞ் சொல்ல மாட்டாதவாறு இன்பம் பெருகத் தெளியக்கூறுவது வியப்புடையதாகும். இதற்கு ‘எத்தொழிலைச் செய்தாலு, மேதவத்தைப் பட்டாலு, முத்தர் மனமிருக்கு மோனத்தே’ என்பதொன் றல்லது வேறு காரணங்கூற யான் அறிந்திலேன். சைவ சமய நூலாகிய திருமந்திரம் எழு திய திருமூலர் வேறு இவர் வேறு, இவர் அகத்தியர் கூறும் பாடல்களில் யாரையேனும் கூறாது வாளா செய்யுள் செய்தனர். அது வருமாறு: ஆவி நெடுவேன் பொதினியைப் பாராட்டியது; அகம் 1, 91. சந்திரகுப்தன் மகன் துளுவென்பவன் ஸ்தாபித்த துளுநாட்டையும் (தென் கன்னடம்) நன்னனது பாழியையும் பாராட்டியது. அகம் 15. மூவேந்தர் தமிழ் நாட்டைக்கூறியது. அகம் 31. கரிகாற் சோழனோடு கோயில் வெண்ணிப் போர்க்களத்திற் போர் செய்த பெருஞ் சோலாதன் தோற்றுப் புறப்புண்பட்டு நாணமுற்று உயிர்விடத் துணிந்து வடக்கு நோக்கி யிருத்தலும் அதனையறிந்த அவனுக்கு நட்பாளராகிய பல சான்றோர் தாமும் உடனிருச்து உயிர்விட்டமை கூறியது. அகம் 55. கள்வர் கோமான் புல்லி யென்பது வேங்கடமலையைப் புகழ்ந்தது; அகம், 61. பெருஞ்சோறு பயந்த உதியஞ்சேரலின் கொடையைப் புகழ்ந்தது, அகம் 65. நன்னன் வேண்மான்வியலூரைச் சிறப்பித்தது; அகம் 97. வடுகர் தலைவன் எருமை யென்பானது குடநாட்டைக் கூறுவதுடன் எவ்வியி நந்ததற்குப் பாணர் வருந்தியதும் அதிகமானெடுமானஞ்சி பகைவர்க் கஞ்சி யொளித்ததுங்கூறியது; அகம் 115 பெருஞ்சேரலாதன் மாந்தை முற்றத்து நிதிகொட்டியிரவ வலர்க்களித்த கதை கூறியது; அகம் 127. ஆயுதபூசை செய்யும் வழக்குக்கூறியது; அகம் 186. கண்ணனெழினி கதை கூறியது; அகம் 166. பாண்டியனது கொற்கையில் முத்தும் சங்கு மெடுத்தல் கூறியது; அகம் 201. மத்தியென்பவன் எழினி யென்பவ னுடைய பல்லைப்பிடுங்கி வெண்மணிவாயிற் கதவிலழுத்திய கதை கூறியது; அகம் 211. (வெண்மணி நாகபட்டணம் தாலூகாவிலுள்ள தோரூர்). உதயஞ்சேரல் பாரதப்போரிற் சோறளித்த பொழுது கூளிச்சுற்றஞ் சூழ்ந்திருந்த கதை கூறியது; அகம் 233 சங்கநிதியின் சிறப்பு, கோசர் பொதியமலை, போகூரிற் புதிய மோரியரின்றேருருள் குறைத்த கதை இவற்றைக் கூறியது; அகம் 251. வேங்கடத்தைப் புகழ்ந்தது; அகம் 245. வடுகர் போந்தமை கூறியது; அகம் 281, புல்லியின் வேங்கடம், வடுகரின் ஆரவாரங்கூறியது; அகம் 295. புல்லி நன்னாட்டைப் புகழ்ந்தது; அகம் 311 பாண னன்னாட்டுப்புகழ்ச்சி கூறியது; அகம் 325, சேரலாதன் கடம்பு முதல் தடிந்தது கூறியது, அகம் 347. நன்னது கொடைச் சிறப்பும் அவனது எழிற் குன்றச் சிறப்புங் கூறியது; அகம் 349. சேரலனது வெளியும், புல்லியின் மலை இவற்றைப் பாராட்டிக்கூறியது; அகம் 356. புல்லியின் வேங்கடச் சிறப்புக் கூறியது; அகம் 393, வடுகர் முனையிற் கட்டியென்பது நாட்டைக்கூறியது; குறு, 11. சேரலனது கழுமலத்தைச் சோழன் வென்ற கதை கூறியது; நற். 14, சேட்படுத்த வழித்தலைவன் புலம்புவதாகக் கூறியதைக் கேட்டோரு மிரங்குவர்; நற். 75, இவர் பாடிய நற். 75ம் பாட்டு ஒன்றொழிய ஏனையவெல்லாம் பாலைத்திணையே. இவர் பாடியருளினவாக நற்றிணையில் இரண்டு (11,75) பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் இருபத்தாறும், திருவள்ளுவ மாலையிலொன்றுமாக முப்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
மாமூலர் | கடைச்சங்க மருவிய புலவர். |
மாமூவனார் | கடைச்சங்க மருவிய புலவர். |
மாம்சதன் | ஒரு அரசன். இடபவுருக்கொண்டு கிரிவிரசத்தைத் துன்பமுறச் செய்தவன். இவனைப் பிரகத்திரதன் கொன்று இவன் தோலால் பேரி செய்தனன். |
மாம்பழக் கவிச்சிங்க நாவலர் | இவர் பழனியில் கம்மாளர் குலத்தில் பிறந்தவர். இவர் தந்தை முத்தையாசாரி. இவர் கி. பி. 1836 இல் பிறந்தார். இவருக்குத் தந்தையார் குலமக்கட் பெயராகிய மாம்பழம் என்பதைப் பெயராக இட்டு அழைத்தனர். இவர்க்கு 3 வயதில் வசூரி கண்டது. குழவியின் வருத்தந்தரியாத தந்தை குமாரக்கடவுள் சந்நிதியில் குழந்தையைக் கொண்டுபோய் அபயமிட்டனர். மறு நாள் உதயத்தில் குமாரக் கடவுளருளால் அவதரிமுழுது நீங்கியது. இவர் தந்தை முதுகில் ஐந்தாமாண்டில் எழுதிக் காட்டியபடி தமிழிற்பழகிச் சின்னாளிற் கற்று வல்லவராய்ப் பழனிப்பதிகம், குமரகுருப்பதிகம், செந்திற்பதிக முதலிய இயற்றினர். தென்முகவை பொன்னுசாமித் தேவரவர்கள் வாழும் இராமநாதபுரம் சமஸ்தானம் சென்று ஒருசீட்டுக் கவிபாடிக் கையேட்டி னர்பால் கொடுத்தனுப்பினர். அரசர் இவர் அந்தகர் ஆதலால் இவரைக் காண இசைந்திலர். அரசர் கொடுத்த சமஸ்யைபாட வல்லீரோவென அவ்வாறே கொடுத்த சமஸ்ஸைகளைப்பாட கவிச்சிங்க மெனப்பட்ட மளித்து தம் சமஸ்தான வித்வானாக்கப் பெற்றவர். |
மாம்பழச்சிங்கக் கவிராயர் | இவரைப் பற்றி மாம்பழச்சிங்க கவிராய ரென்பதால் இவரூர் பழனிபோலும். இவர் கவிபாடுவதில் வல்லவர் போலும். இராமநாதபுரம் வந்தபோது ‘கிரியிற் கிரியுருகுங்கேட்டு” என சமுசை கொடுத்தபோது பாடியது “மாலாம் பொன்னுசாமி மன்னர் பிரா னின்னாட்டிற், சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் நீலாம், பரியிற் பரிய கொடும்பாலை குளிரும்மா, கிரியிற் கிரி யுருகும் கேட்டும் சேதுபதியவர்கள் பழங் கொடுத்தபோது பாடியது “அஞ்சேலெனப் பலந் தந்தான் இனியார் நமக்கு, நெஞ்சே கலிப்புலியை நீவெருட்டு, விஞ்சு பெரும், சீர்படைத்த கோனலர்ந்த தேன் மலர்ப் பொன்மாதிணங்கு, மார்பன் முத்து ராமலிங்கமால் ” எனப் பாடினர். இவர் மற்றும் பலகவிகளும் பாடினர் என்ப. |
மாயசந்நியாசி | பட்டணங்களில் சிலவஞ்சகர் முண்டனஞ் செய்து கொண்டு தேக நிறைய விபூதி பூசிக்கொண்டு மான்தோல் அல்லது சால்வை பொத்திக்கொண்டு ஒரு சிஷ்யனுடன் புறப்பட்டு ஏமாந்தவர்களை ஏமாற்றும் கட்குடியர், |
மாயன் | ஒரு இராஷத வீரன். |
மாயா | சத்தபுரியுள் ஒன்று. இது வைகுந்தத்திற்கு ஏறும் ஏணியாக உள்ளது. இதற்கு அரித்துவாரம், கங்காத்துவாரம், மாயாத்துவாரம் எனவும் பெயர். கங்கை இவ்விடத்துச் சுழன்று செல்லுதலால் இப் பெயர் பெற்றது. இத்தீர்த்தத்தில் மூழ்கி அங்குள்ள மூர்த்திகளைத் தரிசிக்கில் முத்தியடைவர். (காசிகாண்டம்.) |
மாயாசுரன் | வியோமாசுரன் தந்தை. |
மாயாசைநன் | திரிபுராதிகளையழிக்க முதலில் விஷ்ணுவால் தம் தேகத்தினின்று சிருட்டிக்கப்பட்டவன். இவன் தனக்குச் சீடராக நால்வரைச் சிருட்டித்துக்கொண்டான். |
மாயாதேவி | மயன் குமரி. சம்பராசுரன் வீட்டிலிருந்த பதிவிரதை, இவளுக்கு மாயாவதி எனவும் பெயர், |
மாயாபுரம் | தாருகாசுரன் பட்டணம். கிரவுஞ்சகிரியை அடுத்தது. |
மாயாப்பிரலாபம் | இது ஒரு ஞான நூல், கண்ணுடைய வள்ளலார் இயற்றியது. |
மாயாவதி | பிரத்தியும்கனை மீன் வயிற்றிலிருந்து எடுத்து வளர்த்து நாரதர் சொற்படி அவனை மணந்தவள். இவள் பூர்வத்தில் இரதிதேவி, இவள் சம்பானால் அபகரிக்கப்பட்டனள். |
மாயாவாதி மதம் | அத்வைதமதத்தைக் காண்க. (தத்துவ நிஜாநுபோக சாரம்.) |
மாயாவி | 1. வாலியை யுத்தத்திற்கு அழைத்து அவனுக்கு இளைத்துப் பிலத்தில் புக வாலியால் துப்புண்டு இறந்தவன். 2. மயன் குமரன். துந்துபியின் சகோதரன். மந்தோதரியுடன் பிறந்தவன். இவனே வாலியை யுத்தத்திற்கு அழைத்த வனாயிருக்கலாம். 3. இவன் பிரமனது அச்வமேதக்குதிரையை மறைக்கப் பிரமன் விஷ்ணுமூர்த்தியை வேண்ட விஷ்ணு மூர்த்தி அரக்கனைக்கொன்று குதிரையை மீட்டுத் தந்த |
மாயேசபவனம் | ஒரு ருத்ர உலகம் |
மாயேண்டன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களுள் ஒருவர். குறு235 |
மாயை | 1, அதர்மத்தின் குமரி. 2. விஷ்ணுவின் நாபிக்கொடியில் பிரமனுடன் உதித்து ஆன்மாக்களை மயக்குபவள். 3. விஷ்ணு மூர்த்தி யின் கட்டளைப்படி இரண்யன் புத்திரர் அரவரையும் தேவகி வயிற்றில் இட்டு யசோதையிடம் தான் பிறந்து மீண்டும் தேவகியிடமிருந்து கஞ்சனை மார்பில் உதைத்து ஆகாசமடைந்தவள். 4. சுரசையென்பவளுக்கு ஒரு பெயர். இவள் சுக்கிரனால் மகாமாயாவியாகிச் சுக்ரேன் சொற்படி காசிபரை முதற்சாமத்து இரவிற்புணர்ந்து சூரபத்மனையும் (30,000) வெள்ளம் தானவரையும், இரண்டாஞ் சாமத்திற் சிங்கவுருக் கொண்டு புணர்ந்து சிங்கமுகாசுரனையும் (40,000) வெள்ளம் சிங்கமுகத் தானவரையும், மூன்றாஞ்சாமத்திற் பெண்யானை யுருக்கொண்டு புணர்ந்து தாருகாசுரனையும் (400000) வெள்ளம் யானை முகத்தானவ ரையும், நான்காஞ்சாமத்தில் பெண் ஆட்டின் உருக்கொண்டு புணர்ந்து அசமுகியென்னும் பெண்ணையும் (30,000) வெள்ளம் அவுணரையும் பெற்றுப்பின்னும் வெவ்வேறு உருக்கொண்டு புணர்ந்து அந்த உருக் கொண்ட (40,000) குமரர்களைப் பெற்றவள். இவள் சூரபன்மன் குமாரக்கடவுளிடம் போரிட்டுப் பதாதியாய் நின்றகாலத்து அவனுக்கு இறந்த சைநியங்களை யெழுப்ப மிருதசஞ்சீவியின் இருப்பிடங்கூறி மறைந்தவள், 5. சம்பரன் தேவி. 6. ஸ்ரீகைலாயத்தில் சிவமூர்த்தியைப் பிராட்டியார் நோக்கி உலகத்தில் என் சத்தியால் மயக்கப்படாதவர் இருக்கின்றனரோ எனச் சிவமூர்த்தி, அல்லமர் எமது அம்சமாய்ப் பிறந்திருக்கின்றனர். அவர் உன்னால் மய்க்கப்படார் எனக்கேட்டு, அவரை மயக்குவதாகச் சபதஞ் செய்து கொண்டு பூமியில் வந்து அவதரித்த சத்தியின் தமோ குணவடிவம். இவள் விளவலதேசத்தில் வநவசைநகரத்தில் மமகாரன் என்பவனும் மோகினியும் செய்த தவத்தால் புத்திரியாகப்பிறந்து வளர்ந்து பரதமே முதலிய கலை வல்லவளாய்ப் புருஷனை விரும்பிச் சிவபூசை செய்து சிவமூர்த்தியின் சந்நிதியில் நடித்து வருபவளாயினள். இவள் கருத்தறிந்த அல்லமர் மத்தளிகனாய் வந்து இவள் நடிக்கையில் மத்தள முழங்க மாயை அவரது அழகு முதலிய கண்டு மயங்கி அவரைத் தன் மனப்படி இசைவித்துத் தாய் தந்தையர் அறியாது அணையில் வரச் செய்து தழுவச்செல்கையில் கைக்கு அகப்படாமல் நீங்குதல் கண்டு தன் முயற்சியில் சோர்ந்து கையுஞ்சலித்து மயங்கியிருந்தனள். இவள் செய்தியறிந்த உமை, இவ ளுக்குத்தான் வந்த காரியமறிவிக்க விமலையை அனுப்பினன். விமலைவந்து வந்த காரியம் தெரிவிக்க அறிந்து மறுநாள் நடிக்கையில் அல்லமரை விமலை சமிக்ஞையால் காட்டினள். மாயை அவர்மீது விழுந்து பற்றப்போகையில் அல்லமர் மத்தளத்தை யெறிந்துவிட்டு ஓடினர். மாயை பின்றொடர்ந்து சபதம் பேச அல்லமர் மறைந்தனர். மாயை விமலையுடன் கைலைசென்றனள். 7. (5) தமம், மாயை, மோகம், அவிததை, அமிர்தம் அவையாவன: சீவசைதன்யத்தை மறைச்கையால் தமம், ஜகத்ரூபமான அந்நிதா தோற்றத்திக்குக் காரணமாகையால் மாயை, விபரீத ஞானமுண்டாக்குகையால் மோகம், உணர்வை அழிக் கையால் அவித்தை, சத்ரூபத்திற்கு அந்தியமாகையால் அமிர்தம், 8. இது, நித்தமாய், ஒன்றாய், சகலத்திற்கும் காரணமாய், சடமாய், எவ்விடத் துக் காரியங்காணப்படு தலால் வியாபகமாய், ஆன்மாக் களுக்கு மாயேயமான தனுவாதிகளை யுண்டாக்குவதாய் நிற்பது. இது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயையென மூவகைப்படும். இவற்றிற் சுத்தமாயை மலகன்மங்களோடு விரவாது சுத்தகாரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. அசுத்தமாயை சுத்த மாயையின் கீழடங்கி மலகன் மங்களோடு விரவிச் சுத்தாசுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. பிரகிருதி மாயை; அசுத்தமாயையின் தூலபரிணாமமாய் அசுத்தகாரியப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. இவை, முறையே விந்து, மோகினி, மான் எனப் பெயர் பெறும் (சித்தா.) 9. இது, நித்தியமாய் ஆன்மாக்கள் செய்த கன்மத்துக் கீடாகப் பிரகிருதியில் தோன்றிய பதார்த்தங்களைப் புசிக்கும்படி இச்சையைப் பண்ணியிருக்கவும் தோன்றாததாய் ஒன்றாய், எல்லாவற்றிற்குங் காரணமாய், சடமாய், வியாபகமாய் ஜகத்திற்கு வித்தாய் உள்ளது. இது சுத்தம், சத்தா சுத்தம், அசத்தம் என (4) வகைப்படும், சுத்தம்; பிரோகாண்டம் எனவும், சுத்தா சுத்தம்; போககாண்டம் எனவும், அசுத்தம்; போக்யகாண்டமெனவும்படும். இம் மாயையின் காரியம் பாஹ்யம், ஆப்யந்தசாம் என இருவகைப்படும். பாஹ்யம்; சிருஷ்டிகாலத்தில் கலாதிதத்வங்களிலிருக்கும் புவனா திரூபமாக வெளியில் பிரசரித்திருப்பது. ஆப்யந்தாம்; சங்கார காலத்தில் மாயா கர்ப்பத்தில் சூஷ்மரூபமாய் அடங்கியிருப்பது. பிரளய காலத்தில் ஜசத்சத்தி ரூபமாய் இதிலடங்குகிறபடியால் மா என்றும் சிருட்டியில் வியத்திரூபமாய் வெளிப்படலால் யா என்றும் கூறுவர். ஆதலால் மாயை யெனப்பட்டது. (சிவ ஞா.) |
மாரதன் | சிவபூசையால் முத்திபெற்ற அரசன் |
மாரன் | மன்மதன், (மணிமேகலை) |
மாராசுரன் | இவன் ஒரு அசுரன். வரப்பிரசாதத்தால் திரிலோகங் களையும் இம்சிக்கத் தேவர் வேண்டுகோளால் தேவியின் அம்சமாய் ஒருசக்தி இவனைச் சங்கரித்து மாரியெனும் பெயர் பெற்றனள். (ஸ்ரீகாரணம்). |
மாராட்டம் | மகாராட்டிரதேயம். இத்தேயத்து ஆபரணங்கள் மிகப்புகழ் பெற்றவை. (பெ கதை.) |
மாராபிராம முதலியார் | கொற்றந்தையூர் வேளாள குலத்தினவர். இவ்வூர் செஞ்சிக்கு அருகில் உள்ளது. இவர் புகழேந்திப் புலவரால் “நையும்படி யென்கொற்றந்தை கங்கோன் செஞ்சிவரைமீதே, ஐயம் பெறு துண்ணிடை மடவாயகிலின் றூமமுகி வன்று, பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது, வையம்பெறினும் பொய்யு ரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே” எனப் பாடல் பெற்று அவருக்கும் பல புலவருக்கும் பரிசளித்து உயர்ந்தவர். |
மாராயவஞ்சி | மாற்சரியத்தினையுடைய மன்னனாலே சிறப்புப்பெற்ற வெற்றிமிக்க வேலினையுடையோர் நிலைமையைச் சொல்லியது. (பு~வெ.) |
மாரி | 1. யமனிடம் இருக்கும் தேவதை. 2. இவன் ஜமதக்னிருஷியின் பத்தினியாகிய இரேணுகை, ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் புத்திரராலிறக்க உடன் தீப்புக்க இவளது தேகத்தை வேகுமுன் இந்திரன் வருணனைக் கொண்டு மழை பொழிவித்துத் தணிவித்தனன். ரேணுகை தரித்திருந்த வஸ்திரமுழுது மெரிந்து தேகந்தீக் கொப்புளமரும்பியது. ரேணுகையெழுந்து வஸ்திரமில்லாமையால் அவ்வனத்திலிருந்த வேம்பின் தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு அருகிருந்த புலைச்சேரியடைந்து தன்பசிக்கு ஏதேனும் தரக்கேட்டனள். அவர்கள் இவள் யாரோ வேதியப்பெண் என்று எண்ணித் தங்கள் ஆகாரத்தைத் தராது. பச்சரிசி, மா, வெல்லம், இளநீர், பானகம் முதலிய தந்து உப சரித்தனர். பின்பு அவ்விடம் நீங்கி வண்ணார வீதிவந்து அவர்கள் கொடுத்த வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டு ஜமதக்கினி ருஷியிடம் வந்து துயருறும் போது தேவர்கள் தரிசனந் தந்து துயர்மாற்றினர். சிவ மூர்த்தி இவளை நோக்கி நீ சத்தியம் சமாதலால் பூமியிலிருந்து கிராமத்தில் உண்டாகும் தீமைகளை விலக்க வரம் தந்து நீ கொண்ட தீச்கொப்புளம். உலகத்து உயிர்களுக்கு அம்மைக் கொப்புளங்களாகும் எனவும், அதனாலுண்டாம் துன்பம் தணிய நீதரித்த ஆடையாகிய வேப்பிலையே அதற்குரிய ஒளஷதமாகவும், நீ புசித்த பச்சரிசி, மா, வெல்லம், இளநீர் உனக்குரிய நிவேதனமாக எ.ம், உன்னை ஆராதிப் போர் தீமையை விலக்குக எ.ம், ஆராதியாதோரை உன்னருகிருக்கும் சண்டாளரூபத்தை உன்னுள் ஆக்ரஹித்துக்கொண்டு வருத்துக என்றும் வரந்தந்து மறைந்தனர். அதனால் இவள் முத்துமாரி என்று பெயர் பெற்றுக் கிராமதேவி யாயினன். இவள் மற்ற சரித்திரங்களை ரேணுகையைக் காண்க. |
மாரிமுத்துப்பிள்ளை | சிதம்பரத்திற்கு அருகிலுள்ள தில்லை விடங்கனில் வேளாளர் மாபில் தெய்வங்கள் பெருமாள் பிள்ளை யென்பவருக்குக் குமரராய்ப் பிறந்து, கல்வி கற்று நடராச மூர்த்தியின் திருவருள் உடையராய்த் திருமணஞ் செய்து கொண்டு மூன்று புத்திரர்களைப் பெற்று முதற் புத்திரருக்குச் சித்த பிரமையுண்டாக அதைச் சபாபதி திருவருளால் புலியூர் வெண்பாப் பாடி நீக்கிச் சிலகாலமிருந்து சாலிவாகன சகம் (1704)ல் சிவபத மடைந்தனர். இவர் செய்த நூல்கள் சிதம்பரேசர் விறலிவிடுதூது, வருணாபுரிக் குறவஞ்சி, புலியூர் வெண்பா, நொண்டி, அநீதி நாடகம், பள்ளு, சித்திரக்கவி முதலிய, |
மாரிஷை | இவள் கண்டு மகருஷிக்குப் பிரமலோசையிடம் பிறந்தவள். இவள் கன்னிப் பருவத்தில் மங்கலமிழந்து புத்திர சந்தான மில்லாததால் விஷ்ணுமூர்த்தியை யெண்ணித் தவமியற்றினள், அவர் தரிசனந்தந்து உனக்குப் பதின்மர் புருஷகும், ஒரு புத்திரனும் உண்டாவன் என்று கூறி மறைந்தனர். இவளுக்குப் பிரசேதஸுக்கள் பதின்மரும் கணவர் களாயினர், குமரன் தக்ஷன், கண்டு மகருஷியைக் காண்க. |
மாரீசன் | சுகந்தனுக்குத் தாடகையிடம் பிறந்தவன். இவன் தன் தந்தையைக் கொன்ற அகத்தியரை வெல்லக் கருதிச் சென்று அவரால் அரக்கனாகச் சபிக்கப்பட்டுச் சுமாலியைத் தந்தையாகப் பெற்றவன். சுபாகின் சகோதரன். விச்வாமித்திரர் யாகஞ்செய்கையில் சுபாகு மாரீசரிருவரும் அவரைத் தொந்தரை செய்து வந்தனர். இதனால் விச்வாமித்திரர் இராமரை அழைத்து வந்து தாம் செய்யும் யாக காதகரைக் கொலைசெய்யக் கட்டளையிட்டிருக் கையில் அவ்வரக்கர் இருவரும் வந்து யாகத்தைக் கெடுக்கத் தொடங்கினர். இராமமூர்த்தி ஆக்னேயாஸ்திரம் பிரயோகித்துச் சுபாகுவைக்கொன்று வாயுவாஸ்தி சம் பிரயோகித்து மாரீசனைக் கடலில் விழுத்தினார். இதனால் இவன் இராமமூர்த்தி யெதிரிற்செல்லின் கொலைநேருமென்னும் அச்சத்தால் தென்கடற்கரையில் ஒரு ஆச்சிரமம் செய்து கொண்டு தவஞ்செய்து வந்தனன். இவன் இராவணன் வேண்டுகோளால் ஆரண்யவாசத்திற்கு வந்த இராமமூர்த்தியின் பத்தினியாகிய சீதாபிராட்டி மன் பொன்மான் உருக் கொண்டு மேய்க்தனன். சிதை மானைக்கண்டு மயங்கித் தனக்கு அம்மானைப் பிடித்துக் கொடுக்க இராமமூர்த்தியை வேண்டினள். இராம மூர்த்தி இதனைப் பின்தொடர்ந்து பிடிக்கப்போகையில் மான் நெடுந் தூரஞ் சென்றது கண்டு இது மாயமானாக வேண்டுமென எண்ணி அத்திரம் பிரயோகிக்க அடியுண்டு விழுந்த அரக்கன், தன் உருவத்துடன் ‘சீதா இலக்ஷ்மன” எனக்கூறி உயிரைவிட்டனன். புஷ்போத்சடைக்கு விச்ரவாகால் பிறந்தவன் என்றுங் கூறுவர். |
மாரீசம் | உபபுராணத் தொன்று. |
மாருதவேகன் | இந்திர விழாக்காணக் காவிரிப்பூம்பட்டினம் வந்த சுதமதியைச் சண்பைநகரத்திற் கவர்ந்து கொண்ட ஒரு வித்யாதரன். (மணிமேகலை) |
மாருதி | அநுமானுக்கு ஒரு பெயர். அநுமனைக் காண்க. மாருதி புத்திரன். |
மாருதிச் சிறியாண்டான் | உடையவர் மடத்திற்கு அமுதுபடி, நெய், பால், கறியமுது நடத்தினவர். |
மாருதிப் பெரியாண்டான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர்க்குக் சைச்செம்பு பிடிப்பவர். (குரு பரம்.) |
மார்கண்டேயர் ஆஸ்ரமம் | கோமதி, சரயு, இரண்டும் சேருமிடத்தி லுள்ள க்ஷேத்திரம். A the conflaenae of tha Sarau and the Gomati, near Bageswara in the district of Kumaun. Markanda Rishi performed asceticism at this Place. |
மார்கழி அமாவாஸ்யை | கௌரி தபோவிரதம், |
மார்கழி ஏகாதசி விரதம் | இது மார்கழி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது, இந்தாள் தேவர்க்கு இடுக் கண்புரிந்த முராசானை விஷ்ணு கொன்று தேவரைக் களிப்பித்த நாள். இதில் உத யம் ஏகாதசி, மத்யம்த்வாதசி, அந்தியம் திரயோதசி உத்தமம். இந்நாளில் ஒருநாள் விரதமிருக்கின் ஆயிரம் ஏகாதசி பலம் உண்டு. |
மார்கழிமாத பௌர்ணமி | திருவாதிரை நக்ஷத்திரத்தில் நடராஜ மூர்த்தி விரதம். மகா பலந்தருவது. இந்நாளில் சிவாலயங்களில் நடராஜமூர்த்திக்குப் பஞ்சகிருத்திய உற்சவம் நடத்துவர். நடராஜ மூர்த்தி பீடத்தைவிட்டு எழுந்தருளல் சிருட்டி, ரக்ஷாபந்தனந் தரிப்பது. திதி, கிருஷ்ணகந்தந் தரிப்பது சங்காரம், வெள்ளை சாத்துவது திரோபவம், உற்சவம் கொண்டருளுதல் அநுக்ரகம். அகங்கரித்த அசுரர் சரீரத்தை நீறாக்கித் தரித்ததே கிருஷ்ணகந்தம். சங்கார காலத்தில் எழுந்த உக்ரவுருவைத் தேவர்கள் வெள்ளைப் புஷ்பத்தாலும் வஸ்திரத்தாலும் மறைத்ததே வெள்ளை சாத்தல். |
மார்க்கங்கள் | இவை முத்தியடையும் வழிகள். அவை, சன்மார்க்கம், சகமார்க்கம், புத்திர மார்க்கம், தாசமார்க்கம் என நால்வகைப்படும். இவற்றை ஞானம், யோகம், கிரியை, சரியை எனக்கூறுவர். இவற்றால் சாயுச்சியம், சாரூபம், சாமீபம், சாலோக பதவிகளுண்டாம். (சித்தா.) |
மார்க்கசகாயதேவர் | திருவிரிஞ்சைப் பிள்ளைத்தமிழ் பாடிய புலவர். இப்பிள்ளைத் தமிழ் சொற்பொருள் அழகும், இனிமையும் உடையது. |
மார்க்கசகாயர் | 1. திருவிரிஞ்சையில் கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவமூர்த்தியின் திருநாமம், 2, திருவள்ளுவரால் பூதத்தைப் போக்கப்பெற்றுத் தம் குமரியை அவளுக்குக் கொடுத்த வேளாண் குலத்தவர். இவர் காவேரிப்பாக்கத்து இருந்தவராம். |
மார்க்கண்டன் | 1. ஒரு சிவவேதியன். கழுகாசலத்தில் கடை வைத் திருந்த விசாலக் கண்ணி இடம் சிவத்திரவியம் நாள்தோறும் கவர்ந்து கொடுத்துத் தீமை புரிகையில் ஒருநாள் சிவமூர்த்தியின் மீது அணிந் திருந்த பொன் அணிகவருகையில் சர்ப்பந் தீண்டி இறந்து மறுபிறப்பில் புலியாய்க் காளத்தி க்ஷேத்திரத்துக் காட்டில் உலாவிச் சிவ தரிசனத்தின் பொருட்டுத் திருக்காளத்தி செல்லும் ஒருவனைத் துரத்திச்சென்று அவன் சந்ததிக்குள் புகுந்து ஒளிக்க ஆண்டுத் தீபார்த்திகண்டு நின்ற பலத்தால் முத்தி அடைந்தவன். 2, ஒருபிரளயத்தில் விஷ்ணுவைக்காண அவர் நீ யாசென்ன இவர் இவரது நிலை கூற அவர் வாய்வழி சென்று உலகமெலாங் கண்டு வெளிவந்து துதித்தவர், 3. விஷ்ணுவிடம் பலவரங்களைப் பெற்றான். (பிரஹன்னா தீய~புரா) |
மார்க்கண்டேயனார் | 1. ஒருபுலவர். மார்க்கண்டேயர் காஞ்சி இவராற் செய்யப்பட்டது. மதுரைத் தலைச்சங்கப்புலவருள் ஒருவர். இவர் செய்த நூலை நச்சினார்க்கினியர் தலையாயவோத்தென்று கூறுவர். |
மார்க்கண்டேயம் | பதினெண் புராணத் தொன்று. இது முப்பத்தீராயிரம் கிரந்தமுடையது. இது சைமினிபகவான் முற்பிறப்பில் வேதமுதலிய உணர்ந்து பிற்பிறப்பில் தரும் பக்ஷிகளாயிருந்த இரண்டு பக்ஷிகளை விஷ்னு மானிடவுருத் தாங்கியதற்குக் காரணம் யாதெனவும், பாண்டவர் ஐவருக்கும் திரௌபதி பொருத்தி மனைவியாவது ஏன் என்றும், பலராமர் மதுமயக்கத்தாந் செய்த பிரமகத்திக்குப் பிராயச்சித்தஞ் செய்வான் ஏன் எனவும், கிருஷ்ணார்ச்சுநர் இருவருக்கும் அகாலமர ணம் எய்தியது ஏன் எனவும், வினாவியதற்கு விடைகூறியது. |
மார்க்கண்டேயர் | மிருகண்டு முநிவருக்கு மருத்துவதியிடம் பிறந்த குமரர். இவரது தாய் தந்தையர் தமக்குப் பதினாறாவது வயதில் ஆயுளின் கால அளவு எனக்கூறக் கேட்டுச் சிவமூர்த்தியையெண்ணிப் பூசித்து வருகையில் ஆயுளின் முடிவில் யமன் வந்து சிவபூசை செய்திருக்கும் காலையில் பாசம்வீச இவர் சிவபூசையினின்று நிலை தவறாதவராயிருந்தார். சிவமூர்த்தி சிவலிங்கத்திடமாக உக்கிர மூர்த்தியாய் யமனுக்குத்தோன்றி யமனைவிழ உதைத்து இவருக்குச் சிரஞ்ஜீவி, இவ்வயதுடன் இருக்க அருளிச்செய்து பூமிதேவி வேண்ட யமனையெழுப்பி அதுக்கிரகித்து அனுப்பினர். பாண்டவர்க்குத் தருமங்கூறினவர் அநேக சலப்பிரளயம் கண்டவர். இந்திரத்துய்ம் மனைச் சந்தித்து ஆயுளின் அளவைக் கூறியவர். கோட்டானைச் சந்தித்து ஆயுளின் அளவைக் கேட்டவர். கண்ணனைச் சிவபூசைக்குக் காரணம் வினவி அவரால் முதற்பொருள் அறிந்தவர். விஷ்ணு மூர்த்தியின் தேகத்துட்புகுந்து பிரபஞ்சங்களைக் கண்டவர். |
மார்க்கதாயினிபீடம் | சத்திபீடங்களில் ஒன்று, |
மார்க்கவன் | நிஷாதனுக்கு அயோகஸ்திரிவிடம் பிறந்தவன். இவனே செம்படவன், இவனுக்கு ஒடம் விடுவது தொழில் (மநு.) |
மார்ச்சாரி | சகதேவன் குமரன், இவன் குமரன் சுதசிரவசு. |
மார்த்தவமதசித்தாந்தம் | நாராயணனை சர்வோத்தமனானதேவன். ஜகத்சத்தியம் ஜீவாத்மா பரமாத்மாக்களுக்குப் பேதமுண்டு, எல்லா உயிர்களும் தாரதம்மியாதி குணமாய் விஷ்ணுவின் பரிஜனங்கள். ஸவாதார சுகானுபவமே மோக்ஷம், நிர்மலமான பரவத்பக்தியே மோக்ஷமார்க்கோபாயம் பிரத்தியக்ஷாதி பிரமாணத்திரயம் பிரமாணம். இம்மதத்தில் சுதந்தரம் அசுதந்தரம் என்று இரண்டு தத்துவங்கள் முக்கிய மானவை. சுதந்தரன். பகவானான நாராயணன், அசுதந்தரன் ஜீவன், இந்த ஜீவர்கள் இராஜனுக்கு ஏவலாளிகளைப் போல நாராயணனுக்குத் தாசராய் விஷ்ணுலோகத்தில் வசித்திருப்பர். ஆதலால் ஜீவேஸ்வரர்கள் பாஸ்பர வேறுபாடுள்ளவர்களேயன்றி அபேத முள்ளவர்களல்லர். ஒன் றென்போர் அரசனுடன் ஒரு தானத்தை விரும்பும் ஏவலாளி. அரசனால் தண்டிக்கப்படுவான் போன்று நரகத்தையடைவர். பகவான் சேவை யெத்தன்மைத்தெனின் அங்கம் நாமகரணம் பஜனம் என்று மூவகைத்து. அவற்றுள் அங்கமென்பது நாராயணனுடைய பஞ்சாயுதங்களையும் தேகத்தில் தரித்தல். நாமகரணமெனின், புத்ராதியருக்கு நாராயணன் பேரை விடுதல். பஜனபெனின் நாராயண நாமத்தியானம், இம்மதத் தினர்க்கு ஆத்மா அணு, ஜீவர்கள் பலர். ஆத்மாக்கள் புண்ணிய பாவங் களைக் கொண்டு தேகமெடுப்பர். பகவான் கிருபையினாலே மோக்ஷ தனத யடைவர். |
மார்த்தவமதம் | இம்மதத்தவர் துவிதமத சித்தாந்தங் கூறுவர். இம் மதத்திற்குப் பாஷ்யஞ்செய்தவர், ஆநந்த தீர்த்தாசாரியர். இம்மதம் ஜீவாத்மாக்கள் பரமாத்மாக்கள் வேறு எனவும், பஞ்சபேதமாகிய ஜீவேஸ்வரபேதஞானம், ஜீவபரஸ்பர பேதஞானம், ஜடஜீவபேதா ஞானம், ஜடசபேதஞானம், ஜடபரஸ்பாபேதஞானம், எனும் சித்தாந் தத்தைப் பெற்றது, இதில் ஜீவன் நல்வினை, தீவினையென இரு பகுதிபெற்றுத் தம்தம் பழையவுருக்களாகவே வெவ்வேறாக இருந்து பஞ்சபேத்ஞானத்தை யடைந்து அவ்வுருவத் தோடிருத்தலே முத்தியெனவும் கூறுவர். |
மார்த்தாண்டன் | 1. சூரியன் உலகங்களைப் பிழைக்கச் செய்பவன், 2. ஒரு சூரியன் இவன் பிரமனால் சிருட்டிக்கப்பட்ட சாபியை மணந்து உலகத்தில் கோக்களை விருத்தி செய்வித்தான். (பார. அநுசா.) |
மார்த்தாண்டமூர்த்தி | மூன்று முகம், ஆறு கைகள், அபயம், வரதம், ஜபமாலை, கமண்டலம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள் முத்துமாலை யுடையவராயிருக்குஞ் சூரியமூர்த்தி, |
மார்த்தாண்டி | 1. சத்தியவதிக்கு ஒரு பெயர். 2. ஒரு வலைஞன், யமுனைத்துறைவன். |
மார்பன் | திருதராட்டிரன் குமரன். |
மார்புநோய் | இது இருத்ரோக மெனப்படும். இதனைத் தமர்வாதம், ருத்ரவாத மெனவுங் கூறுவர். வாதபித்த, சிலேஷ்ம, திரிதோஷதிருமி மார்பு ரோகமென ஐந்து வகைப்படும். இது மார்பில் குத்தல், நோ, அதிரல், மரத்தல், வறளல், மூர்ச்சை, எரிச்சல், புளியேப்பம், இளைப்பு வாந்தி ஸ்தம்பித்தல், சோம்பல், ஆமாசயத்தில் பூச்சிகள் இவைகளைக் கொண்டிருக்கும். இவற்றில் நான்கு சாத்யம் இறுதியது அசாத்யம் இதனை சுகுமாரவிரேசனம், பன்னீர்ப் பூக்கஷாயம், மகா வில்வாதி லேஹ்யம் முதலியவற்றால் வசமாக்கலாம். |
மார்ப்பித்தியார் | 1. ஒரு தமிழ்ப் புலவர். 2. புறநானூறு பாடிய புலவரில் ஒருவர். |
மார்மாட் | இது எலியினத்தில் ஒருவகை. இது, வட அமெரிக்கா, ஆசியா, தார்த்தாரி, மங்கோலியா, சைபீரியா முதலிய நாடுகளில் வசிப்பது. இவ்வினத்தில் (14) வகைகளுண்டு. இது, பூனையை யொத்த உருவத்தில் நீண்டு பருத்த உடலும், குறுகிய காலும் உள்ளது. இதன் கை கால்களில் அவ்வைந்து விரல்களிருக்கின்றன. இது பூமியில் வளை தோண்டி வசிக்கிறது, அவ்வளைகளில் மேலும் கீழுமாக (2) வளைக ளுண்டு, வேனிற்காலத்தில் மேல்பாக வளையில் செத்தைகளைப் பரப்பித் தங்கும். மாரிகாலத்தில் வளையை விட்டு வருவதில்லை. மாரி காலத்திற்குரிய ஆகாரத்தை வளையில் சேர்த்து வைத்துக் கொள்ளு கிறது. இவ்வினத்தில் அணிலைப்போன்று முதுகில் வரிகளுள்ளவையும் உண்டு, இவ்வினத்தில் மற்றொன்று வாயில் இரைகளை அடக்கிக் கொள்ள பைபெற்று இருக்கிறது. |
மார்வாடி | (மார்வாரி) இவர்கள் மார்வார் தேசத்திலிருந்து தென் இந்தியா முழுதும் பரவிப் பணத்தை வட்டிக்குக் கொடுத்து வியாபாரஞ் செய்யும் சாதியார். |
மாறஞ்சடையன் | பாண்டி நாட்டாசர்களில் ஒருவன். இவன் பத்தினி நக்கங்கொற்றியார். இவன் பல தருமங்கள் செய்தனன். |
மாறநேர் நம்பி | இவர் பராந்தகம் எனும் கிராமவாசி. சாதியாற் பஞ்சமர், இவர் ஒரு நாள் தம்மூர்வழி ஆளவந்தார் வந்து கொண்டிருக் கையில் கழனி வேலைசெய்து கொண்டிருக்கப் பசிமேலிட்டுக் கழனி யிலிருந்த சேற்றினைப் பெருமாளுக்கு நிவேதித்து உட்கொண்டனர். இதனை ஆளவந்தார் கண்டு தமது சிஷ்யர்களை விட்டு இவரை அழைக்கக் கூறப் பஞ்சமர் வந்தனர். ஆளவந்தார் இவரை நோக்கிக் கடவுளால் படைக்கப்பட்ட பொருள்கள் பசிவருங்கால் உண்ணச் சோறிருக்க இச்சேற்றினை உண்பானேன் என்ன, இவர் இம் மண்ணிற்கும் அதற்கும் வேற்றுமை காண்கிலேனாதலால் பசிவந்த காலத்து உண்டேனென்று விடைதர ஆளவந்தார் நோக்கி இவர் பிறந்தபோதே கடந்தை முனிந்த மறனோவென்று கூற இவர்க்கு இன்று முதல் மாறநேர்நம்பி என்று பெயர் உண்டாகுக என்று தம்மாணாக்கருள் ஒருவராக்கினர். இவர் தமது ஆசாரியருக்குற்ற பிராக்ருதானுபவமாகிய ராஜரணத்தை விருப்பாயேற்று அநுபவித்து வருகையில் இவரது ஆசார்ய பக்தியை நோக்கிப் பெரியநம்பி பஞ்சமரென்று பாராமல் தண் டன் சமர்ப்பித்துப் பிரசாதங்கொடுத்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் பெரியநம்பிகள் பிரசாதமெடுத்துச் செல்கையில் உடையவர் பின் தோடர்ந்து இவரது ரணத்தைக்கண்டு பெருமாளைத் யானிக்க ரணம் மறைய மாறநேர்நம்பி ஆசார்யத்ரோகமாக நீர் ஏதோ செய்தீரேன்று கல்லெடுத்துத் தமது தலயைமோதச் செல்கையிலிவரது ஆசார்ய பக்தியை கண்டு ரணத்தை அவருக்கே தந்து உடையவர் சென்றனர். பின்பு சில காலத்திற்குப் பிறகு இவர் பிரமகபாலந்திறந்து ஆசார்யர் திருவடியடைந்தார். |
மாறனலங்காரம் | 1. இது திருக்குருகைப் பெருமாள் கவிராய ரென்பவராலியற்றப் பெற்ற ஓர் அலங்கார நூல். இதற்கு உதாரணமான செய்யுட்கள் சடகோபாழ்வார் விஷயமானவை. அவையும் அவரால் இயற்றப்பட்டனவே. இந்நூலாசிரியருக்கு சடையனென்றும் ஓர் இயற்பெயருண்டு, 2. ஒரு அணியிலக்கணம், இதில் உதாரணம் முதலியவை யெல்லாம் விஷ்ணுபுரமாக உதகரித்திருக்கிறது. |
மாறனார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர். |
மாறன் | ஒரு பாண்டியன். குறுநில மன்னன். |
மாறன் பொறையன் | ஐந்திணையைம்பது பாடிய புலவன். |
மாறன்வழுதி | பாண்டியன் மாறன் வழுதி காண்க. |
மாறுபடு புகழ்நிலை | இதுகவி, தான் கருதியபொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறொன்றினைப் புகழ்வது. (தண்டி) |
மாறோக்கத்து நப்பசலையார் | கபிலரைப் புகழ்ந்தவர். மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முதலியவரைப் பாடியவர். (புறநா). |
மாறோக்கத்துத் தாமக்கண்ணி நப்பாலத்தனார் | கடைச்சங்கமருவிய புலவர், |
மாறோக்கம் | கொற்கையைச் சூழ்ந்தநாடு, |
மாற்று நிலையணி | அஃதாவது இழிவாகிய பொருளைக்கொடுத்து உயர்வாகிய பொருள் வாங்குதலைச் சொல்லுதலாம். இதனை வட நூலார் பரிவிர்த்தியலங்காரமென்பர். (குவல) |
மாற்றுரைகாட்டிய விநாயகர் | திருவாரூர்க் குளக்கரையில் எழுந்தருளி யிருந்து சுந்தரமூர்த்தி சுவாமிகள் மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்க் குளத்திலெடுத்த பொன்னுக்கு மாற்றுகூறிய விநாயகர், |
மாலகன் | அசமகன் மகன் |
மாலதி | 1. தொண்டீரன் தேவி. 2. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த ஒரு பார்ப்பினி. (சிலப்பதிகாரம்). 3. சாகலன் தேவி, சாவித்திரிக்குத் தாய். |
மாலன் | அதிகாயன் யுத்தத்தில் இலக்குமணரால் கொல்லப்பட்டவன் |
மாலய அமாவாசை | மகாலய அமாவாசை காண்க. |
மாலருஷி | வேடர் பெண்களைப் புணர்ந்து ஏனாதிகளைப் பெற்றவர் |
மாலாங்கமுனிவர் | திருமூலர் மாணாக்கரில் ஒருவர். (திருமந்.) |
மாலாதரன் | ஒரு வேடன். இவன் மாதவி மரத்தில் தனக்காக மாலை தூக்க அது அடியிலிருந்த சிவலிங்கத்திற் கணிந்தது போலிருக்க அதனால் முத்தி பெற்றவன், |
மாலாவதி | உபபர்க்கணன் தேவியரில் ஒருத்தி, பதிவிருதை, இவள் தன் கணவன் பிரிவிற்கு ஆற்றதவளாய்த் தேவரைச் சபிக்கத் தொடங்கியவள். (பரம்ம கைவர்த்தம்). |
மாலி | 1. சுகேசன் குமரன் மாலியவானைக் காண்க விஷ்ணு சக்கரத்தால் கொல்லப் பட்டவன் 2. துரியோதனன் கம்பி. 3. இராவண சேநாவீரன், இலக்குமணரால் இறந்தவன். 4. பராசருஷியின் புத்திரன், 5. கௌசிசன் மருமகன். |
மாலினி | 1. உமையின் தோழியரில் ஒருத்தி, குடை பிடிப்பவள். 2. திரௌபதியின் அஞ்ஞாத வாசப் பெயர். 3. ஒரு நதி. அயோத்தியிலுள்ளது. 4. ஒரு அசுரன். விஷ்ணுவால் கொலையுண்டவன். 5. பிரமலோசையின் பெண். உருசிப் பிரசாபதியை மணந்து ரௌச்சியனைப் பெற்றவள். 6. விபீஷணன் தாய், 7. ஒரு நதி. Malini is the name of a river, which falls into the river Chogra (Saraju) 50 miles above Ayodhya. The Hermitage of Kanwa stands upon it. 8. சுவாயம்பு மநுவின் தேவி. சஷ்டி தேவியைக் காண்க. |
மாலியகேது | சுமாலியைக் காண்க. |
மாலியவான் | சுகேசன் குமரன். பிரமனை யெண்ணி நெடுநாள் தவம்புரிந்து உலகமெல்லாந் தன் ஒரு குடைக்கீழ் அடங்க வரம் பெற்றவன், விச்வகர்மன் முன்னிருமித்த பட்டணமாகிய திரிகூடத்தில் குடிபுகுந்து அரசாண்டவன், (இச்சரிதையை மாலி சுமாலிகளுக்குள் கொள்க. இம்மூவர்களுக்கும் தேவியர் சுந்தரி, சேதுமதி, சுவதை.) தேவாசுர யுத்தத்தில் விஷ்ணுவிற்குப் பயந்து பாதலமடைந்து கைகேசியை விச்சிரவாவிடம் ஏவி அவகருடன் இருக்கச் செய்து இராவணன் முதலியவரை விருத்தி செய்வித்தவன், சீதையை விட்டு விடும்படி இராவணனுக்குப் புத்தி கூறியவன். புட்பதந்தனைக் காண்க. |
மாலுதானர் | ஒரு இருடி. வைகானச முனி புத்திரர், எக்ய சருமனைக் காண்க. |
மாலுமி | மருத்துவன் பிராமண ஸ்திரீயைப் புணரப் பிறந்தவன். |
மாலை | 1. குணமாலையின் தோழி. 2. பூக்களால் தொடுத்தது. இது இண்டை மாலை, பத்தி மாலை, நுதலணி மாலை, மத்தக மாலை, பின்னிய மாலை, வாகை மாலை, கோத்த மாலை, முதலியன. வெட்சி, குறிஞ்சி, வஞ்சி, கரந்தை முதலியவும் உண்டு, |
மாலைநிலை | ஒளியால் மிக்கவேலினையுடைய கொழுநனோடு செறிந்த நெருப்பிலே புகுவான் வேண்டிப் பிறையையொத்த நெற்றி யினை யுடையாள் மாலைக் காலத்திலே நின்றது. (பு வெ. பொது.) |
மாலைப்பொழுது செய்வனதவிர்வன | மாலைப்பொழுதில் சயனித்தலும், வழி நடத்தலும் செய்தல் ஆகா. அந்திப்பொழுதில் விளக்கு ஏற்றல் வேண்டும். அந்திப் பொழுதில் உணவு கொள்ளாது அந்திக் குறைகையில் உண்டு ஓரிடத்தில் அடங்கல் வேண்டும். |
மாலைமாறன் | இவர் கடைச்சங்க காலத்திருந்த பாண்டி நாட்டரசர் போலும், (குறு 245) |
மாலைமாற்று | இது சித்திரக்கவியிகிலொன்று. ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டேமாவது. (யாப்பு~வில.) |
மாலைவிளக்கணி | அஃதாவது, தீபகத்தையும் ஏகாவளியையுஞ் சேர்த்துச் சொல்லுதலாம். இதனை வடநூலார் மாலா தீபகாலக் காரம் என்பர். |
மால் | விஷ்ணுமூர்த்திக்கு ஒரு பெயர். |
மால்யகிரி | ஒரு பாகவதன். |
மால்யவந்தம் | இராமமூர்த்தி கார்காலத்துத் தங்கியிருந்த மலை; கிஷ்கிந்தைக்கு அருகில் உள்ளது. |
மால்யவான் | ஒரு பர்வதம். Northern portion of the Eastern Ghats in the Districts of Cuddapa, Kurnool, Nellore, Guntur. ete., |
மாளவதேவீ | கேகயராசன் இரண்டாவது தேவி. குமரன் கீசகன். |
மாளவம் | 1. (மால்வா) உச்சயினியின் முக்கிய பட்டணம். 2. இது ஒருதேசம், Malwa. Its Capitals wera Ujjain and Dharanagara at the time of Raja Bhoja. It is situated in the North West of Anuradesa. |
மாளவி | 1. கேகயன் என்னும் பெயருள்ள சூதன்தேவி. கீசகர்களுக்குத் தாய். 2. அசுவபதியின் பாரியை, சாவித்திரியின் தாய், |
மாளுவவேந்தர் | மாளுவதேசத்தரசர் (சிலப்பதிகாரம்.) |
மாவசு | அச்சோதைக்குத் தந்தை, |
மாவண்கிள்ளி | ஒரு சோழன். (மணிமேகலை.) |
மாவண்டூர் கருமான் | இவன் கம்பர் செய்யுளை நன்றென அங்கீகரித்தவன். |
மாவண்முல்லை வவூத்தனார் | கடைச்சங்க மருவிய புலவர். |
மாவன் | மையலென்னும் ஊரிலிருந்தவன். ஒல்லையூர் தந்த பூதபாண்டியனுக்கு நண்பண். |
மாவலி | 1. பலியைக் காண்க, 2. ஓர் அரசன், நெடுமுடி கிள்ளியின் மனைவியாகிய சீர்த்தி இவன் குலத்திற் பிறந்தவள். (மணிமேகலை). |
மாவலி கங்கை | ஒரு நதி; இலங்கைத் தீவிற் சமனொளி மலையிலிருந்து உண்டாவது, திரு. |
மாவளத்தன் | இவர் ஒரு பிரபுவாக இருத்தல் கூடும். கடைச்சங்கத்தவர் காலத்திருந்தவர். இவர் முல்லையரும்பு யானைக் கோடுபட்டுத் தேனொழுகுதலை முலைமீது கண்ணீர் விழுதற்குவமை கூறியுள்ளார். (குறு 348.) |
மாவளத்தான் | சோழன் நலங்கிள்ளியுடன் பிறந்தவன். தாமப்பல் கண்ணனாரால் பாடப் பெற்றவன். இவன் தாமப்பல் கண்ணனாருடன் வட்டாடியபோது அவர் கைகாப்பத்தான் வெகுண்டு வட்டுக்கோண் டெறியப் புலவர், சோழன் மகன் அல்லையென தாணிப் பின்பு அவராற்புகழ்ந்து பாடப் பெற்றவன். (புறநா). |
மாவிரதன் | சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றி நற்பயன டைந்தவன். |
மாவிலங்கை | இது ஒய்மா நல்லியக்கோடனூர். (புற. நா.) |
மாவிலை | இது சகல சுபகார்யங்களில் ஸ்தபனகும்பாதி தேவதை களுக்கு முடிமயிராக உபயோகப்பட்டும் மங்கலபத்ரங்களாகிய பஞ்ச பல்லவங்களில் ஒன்றாகவும் கொண்டு வழங்கி வரப்பட்டது, |
மாஸ உபவாஸம் | இது ஆடிமீ சுக்ல ஏகாதசி முதல் கார்த்திகை சுக்ல ஏகாதசி வரையில் உபாசிப்பது. இது லக்ஷ்மீ நாராயணவுருவம் பிரதிமையில் செய்து பூசித்து விரதமிருப்பது, |
மாஹேச்வர சூத்ரம் | பாணினி முனிவர் வேண்ட உலக உபகாரமாய்ச் சிவமூர்த்தியின் திருக்கரத்திலிருந்த டமருகத்தின் வழித்தோன்றிய வியாகாண சூத்திரங்கள். |
மாஹேச்வரம் | உப புராணங்களில் ஒன்று. |