ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா | பல தாழிசைகளோடு மற்ற உறுப்புக்களைக் கொண்டு வருவது. |
பஃறுளி | 1. குமரியாற்றிற்குத் தெற்கிலுள்ள நதி, கடல் கொள்ளப்பட்டது. (சிலப்பதிகாரம்.) 2. இது வடிம்பலம்பநின்ற பாண்டியனா லுண்டாக்கப்பட்ட ஓராறு. (புற~நா). |
பஃறொடை வெண்பா | நான்கடியின் மிக்க பல அடிகளைப் பெற்று வருவது. |
பகட்டு முல்லை | பழனத்தின் மிக்க நன்மையாகிய முயற்சியான் வந்த இளைப்பும் பாரம் பொறுத்தலும் அகன்ற மனைக்குரிமையாளனை ஏருடன் உவமித்தது. புறவெண்பா பொது.) |
பகதத்தன் | ஆதிவராக மூர்த்திக்கும் பூமி தேவிக்கும் பிறந்த நரகாசுரன் குமரன். இந்திரனுடன் யுத்தம்புரிந்த அரக்கர் ஓடி மொளிக்கும்படி இந்திரனுக்கு உதவிபுரிந்து தோழமைபெற்றவன். இவன் பாஸ்கலன் அம்சமென்பர். இவன் பட்டணம் மாகிஷ்மதி, இவன் யானை சுப்ரதீபம், இவன் ஒருமுறை அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து நட்புச்செய்து கொண்டவன், பாரத முதனாள் யுத்தத்தில் துரியோதனனுக்கு உதவியாய்க் கடோற்கசனுடன் சண்டையிட்டவன். பூமிதேவி வேண்டுகோளால் கண்ணன் இவனைக் கொல்லாது விட்டனர். இவன் நகரம் பிராக்சோதிஷம். (பார ~ சபா.) |
பகநகன் | ஒரு ரிஷி, விஸ்வாமித்திர புத்திறன். |
பகநதரனம் | இது எந்நேரமும் குந்திக்கொண்டிருத்தல், குதிரையேற்றம், சதா கடின ஆசனத்தில் உட்காரல், மூலவியாதிக்குக் காரணமான வஸ்துக்களைப் புசித் தல் முதலியவற்றால் அடிவயிற்றிற்கும், மூத்திரப்பைக்கும் அருகிலிருக்கிற கெட்ட உதிரமாமிசங்களை யோட்டி உள்ளும் புறம் புமாய் ஒரு அங்குல இரண்டங்குல கட்டிகளைச் சேரவுண்டாக்குவது. இது வாத, பித்த, சிலேஷ்மாதிகளைப்பற்றி வாத பகந்தரம், பித்த பகந்தரம், சிலேஷ்ம பகந்தரம் வாதபித்த பகந்தரம், வாதசிலேஷ்ம பகந்தரம் சிலேஷ்மபித்த பகந்தரம், திரிதோஷ பகந்தரம், சதபோனக பகந்தரம், உஷ்டாகிக்வ பகந்தரம், பரிசிராவி பகந்தரம், பரிக்ஷேபி பகந்தரம், ருசு பகந்தரம், அரிசே பகந்தரம், சம்புகாவர்த்த பகந்தரம், கூதச பகந்தரம் எனப் பதினைந்து வகைப்படும். (ஜீவ.) |
பகன் | 1. கத்ருதநயன் நாகன், 2. பிருகு முனிவருக்கு இரண்டாம் பேரன். தாய்வயிற்றில் (100) வருஷமிருந்தவன். தந்தையர் கிருதவீரியனால் இறந்தமையறிந்து அவன் வம்சத்தவரைக் கொல்லத் தவஞ் செய்கையில் இவன் பிதுர்க்கள் அத்தவத்தைத் தடைசெய்ய விட்டு நீங்கி அத்தவாக்கினியை அவர் கட்டளையால் கடலில் விட்டனன். இதுவே வடவையானது. 3. தக்ஷ யாகத்தில் கண்பறி கொடுத்த வன். காசிபருக்கு அதிதியிட முதித்த குமரன். துவாதசாதித்தரில் ஒருவன். தேவிசித்தி, குமரர்மகிமா, விபு, பிரபு ஒரு பெண், ஆசுசி. 4. சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த குமரன். 5. கங்கிசனுக்குக் கங்கையிடம் உதித்த குமரன். 6. சூரபதுமன் மந்திரி. 7. வஸுதேவர் தம்பியாகிய கங்கர் குமரன். 8. கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு உருக்கொண்ட அசுரன். இவன் கண்ணனைக் கொல்லவந்து கண்ணனை விழுங்க வாய் அக்நிபோல் கொளுத்தியதால் விட்டுக் கண்ணனால் வாய்பிளவுண்டிறந்தவன். இவன் தம்பி அகாசுரன். 9. ஏகசக்கிர வனத்திலிருந்து அவ்விடமிருந்த குடிகளை வருத்திக்கொண்டிருந்த ஒரு அசுரன். பாண்டவர்கள் எகசக்கிர புரத்தில் வசிக்கையில் அவ்வூரார் இந்த அசுரனுக்கு ஒரு வண்டி அன்னமும் இரண்டு கடாக்களும் ஓட்டுபவனையும் ஆகாரமாக முறையாக அனுப்புதல் அறிந்து தாம் குடியிருந்த வீட்டுக்காரியின் முறை வரக்கண்டு அவ்வீட்டுப் பிள்ளையின் தாய் அழுதல் நோக்கிக் குந்தியின் ஏவலால் வீமராசன் அவ்வண்டி யன்னத்தை மாடுகள் பூட்டித் தானே ஒட்டுபவனாகச் சென்று அவ்வாகாரமெல்லாம் தான் புசித்துப் பசி வேளை கழித்துச்சென்று அசுரன் யுத்தத் திற்குவர அவனுடன் போரிட்டுக் கொன்றனன், இவனுக்குப் பகாசுரன் எனவும் பெயர். 10. தேவாசுர யுத்தத்தில் இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். 11. ஒரு ரிஷி, தாலப்பியன் உடன் பிறந்தவன், |
பகற்குறியிடையீடு | பகற்குறிக்கண் வந்த தலைவன் குறிக்கட்செல்லாது இடையீடு பட்டுப்போதல். இது விலக்கல், சேறல், கலக்கம் எனும் வகையினையும், இறைவனைப் பாங்கி குறிவால்விலக்கல், இறைவியைக் குறிவால்விலக்கல், இறைவி ஆடிடநோக்கியழுங்கல், பாங்கி ஆடிடம் விடுத்துக்கொண்டகறல், பின்னாள் நெடுந் தகை குறிவயினீடு சென்றிரங்கல், வறுங்கள நாடிமறுகள், குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல், |
பகலிரவின்முகூர்த்தங்கள் | ஒரு முகூர்த்தமாவது (2) நாழிகை, உதய முதலாக, ரௌத்ரம், சர்ப்பம், மைத்ரம், பைத்ருகம், வாஸவம், அம்பு, விசுவதேவம், அபிசித்து, பிரசாபத்யம், அயிந்திரம், அக்னி, நிருதி, வாருணம், அக்கியம், பாக்யம் என்ற (15)ம், பகல் முகூர்த்தங்களாம். ரௌத்ரம், அஜேகபாதம், அகிர்ப்பு தனி, பூஷா, கந்தருவம், இராக்கதம், அக்னி, பிரசாபத்யம், சந்திரம், அதிதி, பார்க்கவஸ்பத்யம், வைஷ்ணவம், ஸாவித்ரி, துவாட்டிரம், வாயவ்யம் என்ற (15) ம், இராமுகூர்த்தம், இந்த முகூர்த்தங்கள் நந்தாளோ டொக்கும். இந்தச் சுபமுகூர்த்தங்களில் சுபகன் மங்கள் செய்யப்படும். இவற்றில் அசுவநியைக் காந்தருவம் எனவும், பாணியை ராக்கதம் எனவும் பெயரிட்டனர். (விதானமாலை.) |
பகல் நித்திரை | பகல் நித்திரையானது, தண்டம், மேட்டாஷியம், ஊருஸ்தம்பம், சருவாங்கம், உக்கிராக்கிரகம், சுப்தி, அனுஸ்தம்பம், திருக்கும் தம்பம், சோணிதம், ஆட்டியம், புருவாடோபகம், கிருத்திரசி, பகவதியார் ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம, அவதந்திரம், அவதானம், விவுர் தாசியம் என்னும் (18) வித வாதரோகங்களைத் தருதற்கு ஒரு வித்தாகும் என்க. |
பகழிக்கூத்தர் | இவர் சேதுமன்னர் அரசாட்சிக்குள்ளாகிய செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவப் பிராமண குலத்தினராகிய தர்ப்பாதனரென்னு மறையவ ரருந்தவத்தால் அவருக்கு மைந்தராகப் பிறந்து வளர்ந்து தமிழிலக்கிய விலக்கணங்களையும் ஐயந்திரிபறக் கற்று வல்லவராய் எல்லாரும் நன்கு மதிக்கத் தக்க வித்துவானாக விளங்கியிருந்தனர். அங்கனமிருக்குங் காலத்திலொருநாள் வயிற்றுவலி நோயாற் பீடிக்கப்பட்டு பெரிதும் வருந்தி அந்நோய் நீங்குதற்குத் தக்க பகழிக்கூத்தர் மருந்துகள் பலவாகவுண்டும் நீங்காமையால் இனி எம்பெருமானாகிய திருச்செந்தூரி லெழுந்தருளியிருக்குங் குமாரக்கடவுளைப் பாடி இந்நோயைத் தீர்த்துக்கொள்ளுவே னென்று நினைத்துப் பிரார்த்தித்து அக்கடவுள் மீது திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் எனப் பெயரிய பிரபந்தத்தைப் பாடி முடித்து நோய் நீங்கப் பெற்று மன மகிழ்ச்சியடைந்து திருவருளை வியந்து திருச்செந்தூருக்குச் சென்று முருகக்கட வளைத் தரிசனஞ்செய்து அவர் சந்ததியவே அநேக வித்வான்களும், அடியார்களும் சூழ இருந்து அரங்கேற்றி ஆனந்த பரவசமடைந்து ஆராதித்தனர். பின்னர் சபையிலிருந்தவர் பகழிக்கூத்தருக்குச் செய்ய வேண்டிய மரியாதையொன்றேனும் செய்யாமற் பராமுகமாக இருந்துவிட்டனர். அங்கன மிருத்தற்குக் காரணம் இவர் வைணவராயிருந்ததென்று சிவர் கூறுவர். பகழிக்கூத்தர் சபையார் செய்யு மரியாதையைப் பொருட்படுத்தாது தமதிருப்பிடஞ் சென்று நித்திரை செய்வாராயினர். குமாரக்கடவுள் பகழிக்கூத்தரதுமெய்யன்பைப் பிறருக்கு அறிவிக்கும் பொருட்டுத் தமது திருமார்பில் விசேஷாலங்காரமாகச் சாத்தப்பெற்றிருந்த விலையுயர்ந்த மாணிக்கப் பதக்கத்தைக் கொண்டுவந்து நித்திரை செய்து சயனித்திருந்த பகழிக்கூத்தாது மார்பிலணிந்துவிட்டுச் சென்றனர். மறு நாள் திருவனந்தற் பூசைசெய்யவந்த பெரியவர்களுங் கோவிலதிகாரிகளுஞ் சுவாமி மார்பிலிருந்த பதக்கத்தைக் காணாமல் மதிமயங்கி இதைத் திருடிச்சென்றவன் யாவனென்று ஊரெங்குந் தேடுவாராய் எங்கும் காணாமல் பகழிக்கூத்தாது மார்பிலிருக்கக் கண்டு, இக்காரியஞ் செய்தவன் உயிர்தொறு மொளித்திருந்த நம் குமாரக்கடவுளேயன்றி வேறில்லையென்று முன்னை நாள் நிகழ்ச்சியாலறிந்து பகழிக்கூத்தரை வணங்கி உம்முடைய பெருமையை அறியாதிருந்த எங்கள் அபராதத்தைப் பொறுத்துக்கொள்ளல் வேண்டுமென்று பிரார்த்தித்துப் பல்லக்கிலேற்றி அநேக விருதுகள், வாத்தியங்கள் சூழ வெகு விநோதமாக நகர்வலஞ் செய்வித்துச் சாமி சந்நிதானத் திற் கொண்டுபோய்த் தீர்த்தம், விபூதி, சந்தனம், மாவை, பரிவட்டம் முதலியவைகளாலுபசரித்தனுப்பினர். இவரைச் செங்குந்தர். மரபினர் என்றுங் கூறுகின்றனர். |
பகவதியார் | திருஞான சம்பந்த சுவாமிகளுக்குத் தாய். சிவபாத இருதயருக்குத் தேவியார். |
பகவத்கீதை | அருச்சுநன் பொருட்டுக் கண்ணன் உபதேசித்த ஞானயோக நூல். |
பகவன் | பெருஞ்சாகான் புதல்வன். இவன் காசியாத்திரையின் பொருட்டுப் புறப்பட்டு மேலூர் அகரத்தில் தங்கினன். அவ்விடம் ஒரு பெண் வர அவளைப் புலைச்சியென்று சட்டுவத்தால் அடித்துத் துரத்திக் காசியாத்திரை சென்று மீண்டு மறுபடி அச்சத்திரம் வந்து தங்கி முன் சட்டுவத்தடியுண்ட பெண்ணைக்கண்டு மயல் பூண்டு அவளை வளர்த்தவரிடஞ் சென்று அவளை மணந்து மங்கலஸ்நானத்தின் பொருட்டு அவள் மயிரைவகிர்ந்து தாம் அடித்த அடியைக் கண்டு இவள் ஆதியாளென்று ஓடுகையில் அவளும் பின்றொடா இருவரும் பாணர்சேரியில் ஒரு மண்டபத்திற் புணர்ந்தனர். இவ்விருவருக்கும் ஒளவை பிறந்தனள். கணவனுடன் செல்லவேண்டி ஆதி, குழந்தையை விட மனமிலாது மயங்குகையில் அக்குழந்தை என்னைவிட்டு நீங்க மயங்கற்க எனக் கவிகூறக் கேட்டு அப்புறம் கணவனுடன் சென்று பல இரவுகள் தங்கி ஆங்காங்கு உப்பை, அதிகமான், உறுவை, கபிலர், வள்ளி, திருவள்ளுவர் முதலியவரையும் பெற்று விட்டுச் சென்றவன். இவனுக்கு ஞாளிதத்தன் எனவம் பெயர். |
பகவான் | ஐச்வரியம், வீரியம், புகழ், திருஞானம், வைராக்கியம் இவ்வாறு பெருங்குணங்களையுடைய கடவுளுக்குப் பெயர், |
பகவாபதம் | யமபுரவழியிலுள்ள பட்டணம், இவ்விடம் ஆன்மா எட்டாமாணிக பிண்டமுண்டு செல்வன், |
பகஸ்தமநன் | கூரயாநன் புத்திரன். |
பகாக்ஷன் | ஒரு அசுரன். இவன் தேவரை வருத்திவருகையில் தேவர் முறையிடக் கேட்டுச்சிவமூர்த்தி, வேதத்தைத் தேராகவும், உபநிடதம் குதிரையாகவும், பிரணவம் சவுக்காகவும், காலசக்கிரம் வில்லாகவும், மாயை நாணாகவும், பாசுபதம் அத்திரமாகவும், உமையைச் சாரதியாகவுங் கொண்டு யுத்தஞ்செய்து கொன்றனர். |
பகாசி | திருதராட்டிரன் குமாரில் ஒருவன். |
பகாசுரன் | கொக்குருவாய்ச் சிவமூர்த்தியை எதிர்த்து இறந்தவன். இவனிறகைச் சிவமூர்த்தி தேவர்வேண்டலாற் சடையிலணிந்தனர். |
பகிரம்பட்டர் | இவர் பைடணபுரியிலிருந்த வேதியர்: இவர் வேதங்களை யுணர்ந்து ஒழுக்கந் தவறாது அதிதிபூசை செய்து கொண்டு வருநாட்களில் ஒரு நாள் தாம் உணவு கொள்கையில் போஜனபதார்த்த மொன்றில் உப்பிலாதது கண்டு மனைவியை நோக்கிப்பதார்த்தத்தில் உப்பின்மை உணர்த்தினர். அவள் தங்களுக்கு வயது அறுபது முடிந்தும் பதார்த்தருசி விடவில்லை யெனக் கூறப் பட்டருக்கு விரக்தி பிறந்து தம்மைக் கண்டோர் வெறுக்கும் வகை ஒரு காஜியையடைந்து சுன்னத் முதலிய சடங்குகள் செய்துகொண்டு மகம்மதியராய்ச் சிலநாள் தரித்து வேதியரிடம் வந்து பிராயச்சித்தாதிகளைச் செய்து கொண்டு திரிகையில் அத்தேசத்தரசனாகிய மகம்மதியன் இவரை அழைத்துத் துருக்கனாகிய நீ ஏன் மீண்டும் வேறு மார்க்கத்திற் சென்றனையென வினாவினன். பட்டர் நான் மகம்மதியனாய காலத்தும் என் இந்து மார்க்க சின்னமாகிய கர்ணவேதை போகவில்லை, இந்து மார்க்கத்தான் ஆனகாலத்தும் உங்கள் அடையாளமாகிய சுன்னத் நீங்கவில்லை ஆதலால் நான் எவனோ தெரிந்திலன் என்று விடைகூறி நீங்கிப் பித்த னைப்போல் திரிந்து நாகநாதர் அநுக்ரகம் பெற்று நற்கதியடைந்தவர். |
பகிர்முகத்திலங்கம் பதின்மூன்று | இது நாடகலிகற்பம், விலாசம், பரிசர்ப்பம், விதூதம், சமம், நாபம், நமதூதி, பிராகமம், நிரோதம், பரியுபாசனம், வச்சிரம், புட்பம், உபரியாசம், வருணசங்காரம் என்பன. |
பகிர்முகமாவது | முளைத்த அங்குரம் ஒங்கி மூத்தாற்போலத் தலைமக்கள் சொன்ன பொருளைப் பொலியுமாற்றால் விரிவாற் சொல்வது. (வீரசோ.) |
பகீரதன் | 1. (சூ.) திலீபன் குமரன். இவன் தன் மூதாதைகள் வரலாற்றினை வசிட்டராலுணர்ந்து அவர்கள் நற்கதியடையப் பிரமனை கோக்கி (10,000) வருஷர் தவம் புரிந்தனன். பிரமன் தரிசனந் தந்து கங்கையையுஞ் சிவமூர்த்தியையு மெண்ணித் தவம்புரியக் கட்டளையிடக் கங்கை அரசனுக்குத் தரிசனந்தந்து, நான் பூமிக்குவரின் என்னைப் பொறுக்க வல்லவரைத்தேடுக என்று மறைய, அரசன் மீண்டும் பிரமனை யெண்ணித் தவம்புரிந்து பொறுப்பாருணர்ந்து சிவமூர்த்தியை நோக்கித் தவமியற்றித் தாங்கவேண்டி வரம்பெற்றுக் கங்கையை யெண்ணித் தவமியற்றி அவள் வர முன்சென்று கங்கையைக் கொணருகையில் வழியில் சந்நுருஷி தமது ஆச்சிரமங் கெடுதல்கண்டு அக்கங்கையை ஆசமித்தனர். அரசன் திகைத்து இருடியை வேண் டிக் குறைகூறிக் கங்கையை இறந்தோர் எலும்பில் பாய்வித்துச் சுவர்க்கமடைவித்தவன். இவன் குமரன் சிறுதன். இவன் அக்கங்கை தன் காரணமாகப் பூமியில் வந்ததால் பாகீரதியென மும்முறை அழைத்து அப்பெயர் நிலைக்கச் செய்தனன். இவன் பிராமணர் செய்த யாகத்திற்கு இடையூறு வாராமற் காத்ததனால் அவர்கள் இவனைத் தேகத்துடன் சத்திய உலகம் போய்த் திரும்பிவர வரமளித்தனர். அங்ஙனமே அவ்வுலகம் போய் மீண்டவன். இவன் தனக்குக் கோரனால் உண்டாகிய இடரைத் தீர்த்துக் கொள்ளச் சுக்கிரனை யடுத்துக் கந்தவிரதம் சுக்கிரன் உபதேசிக்கப்பெற்று அநுட்டித்து அவனை வென்றவன். 2. இவன் ஒரு யாகஞ்செய்து அந்த யாகத்தில் பத்துலக்ஷம் கன்னிகைகளை சுவர்ணம் யானை, தேர், குதிரைகளுடன் தானஞ் செய்தான். இந்த யாகத்தில் வலியடைந்த இந்திரன் பல்லாயிரம் அசுரர்களைச் செயித்தான். இவனுக்குப் பகீரதி பெண்ணாகி இவன் மடியில் வளர்ந்தாள், ஊர்வசிப் பெயர் அடைந்தாள். (பார ~ சாந்.) |
பகுபிரத்தன் | இவன் ஒரு சூத்திரன், மறுபிறப்பில் பிரியவிரதன் என்கிற அரசனானான். (திருமுட்ட ~ புராணம்) |
பகுரதன் | (பூ.) புரஞ்சயன் குமரன், |
பகுளாசுவன் | மிதிலாபுரிக்கரசன். இவன் கிருஷ்ணனிடம் மிக்க அன்புள்ளவன். இவன் பட்டணத்திற்குக் கண்ணன் இருடிகளுடன் எழுந்தருள அரசன் எதிர் கொண்டு உபசரித்தனன். |
பகை | பைசாசர், உலகு, உடல், |
பகைவீடு | (சூரி) ரிஷப, மிது, கர்க், கன், விரு, மகம், கும்பமும், (சந்) மேஷ, மிது, சிங், துலா, மக, கும்பமும் (செவ்) சிங், தனு, கும், மீனமும், (புத) சிங், தனுசும், (குரு) மேஷ, விருச்சிகமும், (சுக்) கர்க், சிங்கமும், (இராகு) மிது, துலா, தனு, கும்ப, மீனமும், (கேது) (குளிக)க்கும் மேஷ, மிதுன, சிங்க, கன்னி, தனுசும், பகையாம். |
பகோதான் | ஒரு இராவண சேநாவீரன. |
பகோளம் | சூரியனை, நாபியாயுடைய காலச்சக்கிரம் பச்சிமமுகமாய் மானசேயாத் திர பர்வதத்தின்மீது நித்யம் ஒரு பிரதக்ஷ ணம் வருவதாயும், அதில் பிரதிஷ்டிதங்களான கிரகங்கள், தம்தம் கக்ஷைகளில் எதிர்முகமாய் அவரவர்கட்குத் தக்க அளவின் படி சுற்றிவருகிறதாகவும் பூமி நிலையாக நிற்பது பிரத்தியகூ சித்தமாயிருப்பதைப்பற்றிக் கப்பலில் இருப்பவர்களுக்குக் கரையோடுவதாய்த் தெரிந்தபோதிலும் நிதானித்துப் பார்க்கும் போது கரை யோடாமல் கப்பலோடுவதாய்த் தெரிவது போல், எவ்வளவு நிதானித்துப் பார்த்தா லும் பூமியோடாமல் நிலையாக நிற்பதாய்க் காணப்படுகிற தென்கிற தாயும் பூமி சுற்றுகிறதென்னும் பக்ஷத்தில், மேகமண்டல சந்திரமண்டல பரியந் தங்களான ஆகாசாதி சுற்றுகிறதென்றே கொள்ள வேண்டுகையாலே இரண்டிற்கும் கதியுண்டென்று கொள்ளுகிறதைக் காட்டிலும் பிரத்யக்ஷ சித்தமான பூமியை ஸ்திரமாகக்கொண்டு கோளமே சுற்றுகிறதாகக் கொள்ளுகை உசிதமாய்ச் சாஸ்திரங்களுக்கு விரோதமின்றி இருக்கிறதென்றும் பூர்வ திருக்கணிதசித்தாந்திகள் பலரும் பூமியை ஸ்திரமாகக்கொண்டே கிரகணகிரகசமாக வக்கிராதி சராதிகளைக் கண்டறியும்படி காட் டிய கணனமார்க்கங்கள் சரியாயிருக்கின்றன வென்பதாகவும் சூரியனை நாபியாக வுடைய காலசக்கரத்தில் கிரகங்களெல்லாம் பிரதிஷ்டிதங்களா யிருக்கையாலே அந்தச் சக்கிரநாபியான சூரியன் பிராக்கதியாய்ச் சுற்றுகையா லுண்டாகும் சக்காசலனமே கிரகநக்ஷத்திரங்களுடைய தூரத்திற்குத் தக்கபடி பேதப்பட்டுச் சகல கிரகங்களுடைய வக்கிராதி சாங்களுக்குக் காரணமாகிற தென்கிறதாகவும் பூர்வமீ மாம்சையில் லோகவேதாதி கரண சித்தாந்தமுதலியவற்றில் விவரித்திருக்கிறது. |
பக்கசித்திரை | திதிகளில் பூர்வபக்ஷம் உத்தமம், அபாபகம் மத்திமம், அதமம், அதமாதமம் எனப்படும். இவ்விரண்டு பக்ஷத் தில் சதுர்த்தியும், நவமியும், சஷ்டியும், அஷ்டமியும், துவாதசியும், சதுர்த்தசியும் பக்கசித்திரையெனத் தவிரப்படும். பக்க சித்திரையென்ற பக்கங்களில் தோஷமான நாழிகை சதுர்த்திக்கு 9, நவமிக்கு 25, சஷ்டிக்கு 9, அஷ்டமிக்கு 14, துவாதசிக்கு 10, சதுர்த்தசிக்கு 5 ஆக நாழிகைகளைக் கழித்தால் இத்திதிகள் நன்றாம். பிரதமை முதலாக நந்தை, பத்திரை, சயை, இருத்தை, பூரணை என்றடைவே பெயராக 15 பக்கமும், 3 பரிவிருத்தியாக எண்ணப்படும். சுபகாரியங்களில் பக்கசித்திரை யொழிந்த திதியும், பூரணை யும் நன்றும், பூர்வபக்ஷத்து பிரதமை முதல் பஞ்சமி இறுதியும், அபரபக்கத்து ஏகாதசி முதல் அமாவாசை இறுதியும் தவிரப்படும். சிலர் சுபகருமங்களுக்கு இரண்டு பக்கத்தும் ஒற்றித்த பக்கத்துப் பிரதமையும், பௌரணையும், நவமியும் நீங்கிய திதிகள் நன்றெனவும், இரட்டித்த திதிகளில் தசமியும், அதியையும் ஒழிந்தன தீதாமென்றுங் கூறுவர். இரண்டுபக்ஷத்திலும் வந்த சத்தமியும், திரயோதசியும், வித்யாரம்பத்திற்கு விசேஷித்துத் தவிரப்படும், |
பக்குடுக்கை நன்கணியார் | ஒரு செந்தமிழ்ப் புலவர். (புற. நா.) |
பக்தவர் | (3) கருமகாண்டி, ஞானகாண்டி, பத்தகாண்டி, |
பக்திஸாரர் | திருமழிசை யாழ்வாருக்கு உருத்திரமூர்த்தி இட்ட பெயர். |
பக்தேச்வாவிரதம் | இது எல்லா பௌர்ணமிகளிலும் நோற்கும் சிவகௌரி விரதம். இதனைச் சந்திரபாண்டியனும் குமுதவதியும் நோற்றுப் புத்திரப்பேறு அடைந்தனர். புத்திரனுடைய மனைவி யநுட்டித்துக் கணவனுக்குத் தீர்க்காயுள் பெற்றனள், அமாவாஸ்யை பிதுர்க்களின் பிரீதியின் பொருட்டுச் செய்யப்படும் விரதம். |
பக்ஷசபக்ஷ ஏகதேசவிருத்தி விபக்ஷவியாபகம் | திக்கு, காலம், இவை திரவியம், அமூர்த்தமாகையினால் என்திற ஏது பசு எகதேசமாயிருக்கிற மனத்தினிடத்திலும், சபக்ஷ ஏகதேசமாயிருக்கிற பூமியாதியிடத்திலும் இராதிருத்தலால் விபக்ஷமான ஆன்மா ஆகாசத்தில் வியாபித்திருத்தலாலும் என்ப. (சிவ. சித்). |
பக்ஷசபக்ஷவியாபகவிபக்ஷ எகதேசவிடுத்தியென்கிற அனைகாந்திகள் | இது பசு, கொம்பை யுடைத்தாசையினால் என்கிற இந்த எது, பக்ஷமாயிருக்கிற இந்தப் பசுவினிடத்தும், சபகமாயிருக்கிற எல்லாப் பசுக்களிடத்தும், வியாபித்திருத்தலாலும் விபக்ஷ ஏகதேசமாகிற கோஜாதியிலிருத்தவினாலு மென்க. (சிவ. சித்) |
பக்ஷத்ரயவ்யாபக அனைகாந்திகள் | சத்தம் அநித்யம் அறியப்படுகையினா வென்கிற ஏது; பக்ஷமாயிருக்கிற சத்தத்தினிடத்திலும், சபக்ஷமாயிருக்கிற கடத்திலும் விபஷமாயிருக்கிற ஆகாசத்திலும் இருக்கையாலென்க. (சிவ. சித்). |
பக்ஷப் பிரதோஷ விரதம் | இது கிருஷ்ணபக்ஷ, சுக்லபக்ஷங்களில் சிவ பூசை, உபவாசம், அக்னி கார்யம் செய்து விரதமிருப்பது. இதனை அநுட்டிப்போர் எல்லா நலமும் அடைவர். சமித்திரயோதசிப் பிரதோஷ விரதத்தில் கூறியது கொள்க. |
பக்ஷம் | 1. பூர்வபக்ஷம், அபரபக்ஷம் என இரண்டாம். பக்ஷம் பதினைந்து நாள் கொண்டது. பிரதமை முதல் பௌர்ணமி வரையில் பூர்வபக்ஷம் எனவும், பௌர்னமி முதல் அமாவாஸ்யை வரையில் அபரபக்ஷம் எனவுங் கூறுவர். இதனைச் சுக்கிலபக்ஷம், கிருஷ்ணபக்ஷம் எனவுங்கூறுவர். 2. துணி பொருளுக்கிடமாம். அதாவது இந்த மலையில் நெருப்புண்டென்று சுட்டிக் கூறுதல் |
பக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தி சபக்ஷவியாபகனுகிய அனைகாந்திகள் | திக்கு, காலம், திரவியமல்ல மூர்த்தமாயிருக்கை யினால், எனவே, பக்ஷ ஏகதேசமான மனத்திலும், விபக்ஷ ஏகதேசமான ஆன்மாவினிடத்தும், இருத்தலாலும், சபகமாயிருக்கிற குணாதிகளை யெல்லாம் வியாபித்திருக் சையாலும், சபக்ஷ முதலிய விருத்தியுமிவைகளில் வந்து வியாபிக்குமாதலால் என்பர். (சிவ சித்). |
பக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தி யென்கிற விருத்தன் | நித்யஞ் சத்தம் பிரயத்னாந் திரமாகையினால், இந்த ஏது, வாயு முதலான சத்தமாயிருக்கிற பசு ஏகதேசத்தி லும், திரணமாதியா யிருக்கிற விபட்ச ஏகதேசத்திலும் இல்லாதபடியால் என்க. (சிவ. சித்). |
பக்ஷவிபக்ஷவியாபகசபக்ஷ ஏகதேசவிருத்தியெனும் அனைகாந்திகள் | இது, கோவல்ல கொம்பை யுடைத்தாகையால், இந்த ஏது, பக்ஷமாயிருக்கிற பசுவினிடத்திலும் விபடிமான எல்லாப் பசுக்களிடத்தும், சபமான யானை முதலியவிடத்தும் இருக்கையினால் என்க. (சிவ. சித்). |
பக்ஷவிபக்ஷவ்யாபக விருத்தன் | சத்தம், நிதயம் காரியமாகையால் இந்தக் காரியத்வ மென்கிற சாத்தியத்திற்கு விபரீதமாயிருக்கிற அநித்யத்தோடு வியாப்தமாகையாலும் பக்ஷவிபக்ஷ வியாபகனாகையாலும், (சிவ. சித்). |
பக்ஷவியாபகசபக்ஷவிபக்ஷ ஏகதேசவிருத்தியெனும் அனைகாந்திகள் | சத்தம், அநித்யம், பிரத்யக்ஷமாகையினால் என்கிற ஏது, பிரத்யஷ்தவம் பக்ஷமான சத்தம் எல்லாவற்றிலும் இருக்கையினாலும் சபடி விபஷங்களிலெங்கு மிராமலிருக்கையாலு மென்பர். (சிவ. சித்). |
பக்ஷாபாசம் | பக்ஷமாயுள்ள நெருப்பினிடம் சூடில்லாமை ஆபாசமாகையால், அநூஷ்ணம் வந்தி என்பது. இதனை அப்ரசித்திவிசேடணம் என்பர். (சிவ. சித்). |
பக்ஷி | (5) வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில், இவற்றிற்கு முறையே எழுத்து அ, இ, உ, எ, ஒ உண்டி, நடை, அரசு, தூக்கம், சாவு; பிற்பக்கமாகில் உண்டி, சாவு, தூக்கம், அரசு, நடை; சா, தூக்கம் இல்லாதபொழுது அறிந்து செய்யுள் முதலிய செய்தல் நன்மை. |
பக்ஷிகள் | பக்ஷிகளில் பலபுண்ணிய வுருக்கொண்டன உள. அவற்றிற் சில சுருக்கிக் கூறுகிறேன். அன்னம் பிரமனுக்கு வாகனம். கருடன் விஷ்ணுவிற்கு வாகனம். மயில் கந்தமூர்த்திக்கு வாகனமாயது, இந்திரனுக்கு ஆபத்துக்காலத் தில் உடம்பை யுதவியது. கழுகு சடாயுவின் உரு, இவ்வுருக் கொண்டோர் இருமுனிவர் பிரத்தியக்ஷமாகக் கழுகாசலத்தில் தவம் புரிகின்றனர். சிம்புள்: நரசிங்கத்தின் கர்வ பங்கத்தின் பொருட்டு வீரபத்திரரால் எடுக்கப் பட்டவுரு. குயில், தகூயாகத்திற்குப் பயந்த இந்திரற்கு உருவம். மன்மதகா னம், கரிக்குருவி, மதுரையில் சிவமூர்த்தியாலுபதேசிக்கப் பெற்றது. கோழி, கந்தமூர்த்திக்குக் கொடியாம். அன்றி, திருசிராப்பள்ளியில் அரசன் சேனையை மறித்துப் போரிட்டதுமாம். புறா, சிபியின் பொருட்டு அக்னிகொண்ட தேகமாம். அன்றி வாதிட்ட இருவர் தவத்தால் புணர உருக் கொடுத்ததுமாம், ஆந்தை, சிவ பூசைசெய்து முத்தியடைந்த உருவமுமாம். காகம், சநிக்கு வாகனமாம், இவ்வுருக்கொண்ட அசுரன் உருவமுமாம். யமப் பிரீதியுமாம். நாரை, மதுரையில் பொற் முாமரையினின்று நல்லறிவு பெற்ற உருவாம். ஈ, சிவபூசை செய்ததால் ஈங்கோய் மலையெனப் பெயர் தந்ததுமாம். பூவை மன்மதன் தூதாம். கருடன், விஷ்ணுவிற்கு வாகனமாம். கழுகு; சம்பாதி, சடாயு, முதலியோர் கொண்ட உருவாம். சக்ரவாகம், இது பெண்கள் கொங்கைக் கிணையாகக் கூறும் பக்ஷி. இதனைக் காமத்திற்குத் தூண்டும் புள்ளாகக் கூறுவதுண்டு, இது பகற்காலத்திணை பிரியாதிருந்து இரவில் பிரிந்து நிற்பதாகக் கூறுவர். இதனைக் கவிகள் நூல்களிற் புகழ்ந்து கூறுவர். கிளி, மன்மதனுக்கு வாகனமாம். தூது செல்லவுமாம். சுகருக்கு உருவமாம். கல்கிக்குச் சிவமூர்த்தியால் கொடுக்கப்பட்டது. இது காலமறிந்து கூறுவது. இது சிம்மளத்தீவின் பெருமையையும் பத்மாவதியின் விசனத்தையும் கல்கிக்குக் கூறி மணக்கச் செய்தது. அநந்தருஷியின் மன மயக்கத்திற்குக் காரணம் வினவி மார்க்கண்ட ருஷியைப் பிரளயகாலத்தில் எதை எப்படிக் கண்டீர் அதை அப்படிக் கூறுக எனக் கேட்டது. (கல்கி~புரா.) கோட்டான் இலக்குமியைக் காண்க. |
பக்ஷிசுவரர் | ஒரு முனிவர், இவர் விருதை புத்திரருள் ஒருவர். இவர் க்ஷராப்தியின் பாலுண்டு உயிர் தாங்கி வருகையில் அக்கடலிலுள்ள சலசரங்கள் மனைவி மக்களுடனிருத்தல்கண்டு தாமும் அவ்வாறிருக்க விரும்பிச் சுதன்மனெனும் அரசனிடஞ்சென்று தன்னெண்ணத்தைத் தெரிவிக்க அரசன் இவர் பக்ஷியுருக் கொண்டிருத்தலை யெண்ணித் தம் பதினைந்து பெண்களுள் விரும்பியவர் உம்மை மணந்து கொள்ளக்கடவர் என இருடி மன்மதனையொப்ப வடிவு கொண்டு அவர்களிடஞ்செல்ல அவர்களனை வரும் இருடியை மணந்து சுகித்தனர். (சிவமகாபுராணம்.) |
பக்ஷிதோஷம் | அந்தி, சந்தி, நடுப்பகல், பாதியாவு ஆகிய காலங்களில் சிசக்களைத் தெருக்கடக்க வேறு தெருவிற் கெடுத்துச் செல்வதால் நான்குவித பக்ஷிதோஷங்களுண்டாம். அவை ஆண்பக்ஷ, பெண்பு, அலிப்பு, மலட்டுப்பு என்பவற்றுலுண்டாம். அவை ஆண்பக்ஷிதோஷம், முதல் நான்கும், வரப்புள் தோஷம், நீர்ப்புள் தோஷம், தூங்குப்புள் தோஷம், அனா மத்துப்புள் தோஷம், காணாப்புள் தோஷம், என்பனவாம். (ஜீவ.) |
பங்கயச் செல்வி | 1. திருவாளன் என்னும் வேடனுக்குத் தேவி, திருமழிசை யாழ்வாரை வளர்த்தவள், 2. திருமகள், 3. சரஸ்வதி, |
பங்காசுவன் | இவன் இந்திரனைப் பகைத்து யாகஞ்செய்து நூறு பிள்ளைகளைப் பெற்று வேட்டை மேலேகி இந்திரனால் வெருட்டப்பட்ட குதிரையுடன் ஆற்றிற் படிந்து பெண்ணுருக்கொண்டு ஒரு இருடியை மணந்து மீண்டும் (100) குமரரைப் பெற்றுத் தன் பட்டணமேவந்து தான் அரசனாகியிருந்த காலத்திருந்த பிள்ளைகளிடத்தில் இவர்களையுஞ் சேர்த்து வாழச்செய்து சென்றதையறிந்த இந்திரன், பிள்ளைகளுக்குள் கலகம் விளைத்து (200) பிள்ளைகளையும் சாகச் செய்கையில் மனைவியர் அழ இந்திரன் வேதியர் உருக்கொண்டு வந்து பகையின் வரலாறு கூறி அரசனை உனக்கு எந்தப் பிள்ளைகள் வேண்டுமென நான் பெண்ணாயிருந்த காலத்துப் பெற்ற பிள்ளைகளும் என் பெண்ணுருவமுமே வேண்டுமென இந்திரனைக் கேட்டுக்கொண்டவன், |
பங்குநமாநதி | ஒரு தீர்த்தம். |
பங்குனி பௌர்ணமை | இது ஹோலி பண்டிகை; இதில் போளி யொன்று செய்து அதனைத் தீயிலிட்டு மன்மதனைத் தகனஞ் செய்ததாகத் துக்கங் கொண்டாடுவர். இதனைக் காமன் பண்டிகை யென்பர். காமனைப்போல் உருவெழுதி அப்படத்தைக் கிராமப் பிரதக்ஷி ணஞ் செய்வித்துப் பின் தகனசஞ்சயனாதிகள் செய்வர். இந்த நாளில் துக்கக்குறியாகத் தங்கள் மேல் செஞ்சாயத்தை ஊற்றிக்கொள்வர். |
பசமாநன் | 1. சாத்துவதன குமரன். இவன் குமரர் நிமரோசி, கங்கணி, விருஷணி. மற்றொரு மனைவியிடத்தில் சதசித், சகத்ரசித், அயுதசித். 2, அநந்தன் குமரன். |
பசவேசன் | நந்தியைக் காண்க. |
பசாசுரன் | இவன் தேவர் முதலியவர்களை வருத்தத் தேவர் வேண்டுகோளால் சிவ மூர்த்தி, இவனைச் சோமதேவராகிக் கொன்றனர். |
பசி | சாத்வதன் குமரன. |
பசு | 1. கபிலையைக் காண்க. முகயோக்யமல்லாமை சீதைகொடுத்த சாபம், 2. இது முதுகெலும்புள்ள சாகபக்ஷணி. தலை குதிரையினும் சற்று சிறிது. இது அகன்ற நெற்றியும், இரண்டு கொம்புக ளும், பருத்த கண்களும், நீண்டு தடித்த கழுத்தும், அலதாடியும், அகன்ற மார்பும், தடித்த தோலும், நீண்ட வாலும், உறுதியான கால்களும், பிளவுபட்ட குளம்பும் உள்ளது. இதற்குக் கீழ்வாயில் மாத்திரம் பற்கள் உண்டு, மேல்வாயில் இல்லை, கடைவாயில் மேலும் கீழும் உண்டு இது புல்லைத் தலையசைத்துத் துண்டிக்கும். இதற்கு 4 இரைப்பைகள் உண்டு. முதற்பையில் உட்கொள்ளும் உணவை நிரப்பிக் கொண்டு சற்று இளைப்பாற, முதலில் உண்ட உணவு இரண்டாம்பைக்குச் செல்லும், சென்றவுணவு சிறு சிறு உருண்டைகளாகி மீண்டும் வாய்க்கு வந்து அரைக்கப் பட்டு மூன்றாம்பை சென்று, அவ்விடமிருந்து நான்காம் பை சென்று ஜீரணமாகும், பசு பால் தரும். இதனாண் எருது வண்டி இழுக்கும். எருதிற்கு முசிப்புண்டு, சாணம், மூத்ரம் எருவாகும். பால், தயிர், வெண்ணெய் பயன்படும். இவ்வினத்தில் சீமைப்பசு, வடநாட்டுப்பசு, குட்டைப்பசு, எருமை, ஆடு, மான் கடம்பை முதலிய சேர்ந்தவை. இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவர். 3. திக்குப்பாலகருக்குக் கொடுக்கப்பட்ட பசுக்கள சுஷுதை, இந்திரனுக்கும், கபிலை, யமனுக்கும்; ரோஹிணி, வருணனுக்கும்; காமதேனு குபேரனுக்கும் கொடுக்கப்பட்டன. (பார ~ அநுசா.) |
பசுங்குண்டன் | ஒரு அசுரன். |
பசுசகன் | 1. ஒரு இருடி. இவன் தேவி சண்டி. 2. ஒரு ருஷி, இவன் பசுக்களுக்குத் துணையாயிருப்பவன். |
பசுபதி | அக்னிக்கு அதிதேவதை, இவருக்கு ருத்திரர் எனவும் பெயர். சரங்களா கிய ஆத்மாக்களைச் செலுத்துந் தலைவன். சிவமூர்த்தி. |
பசுபதிநாயனர் | இவர் வெய்யலூர் என்னுந் தலத்திலிருந்த வீரசைவர். இவர் சிவமூர்த்தி விடமுண்டாரெனச் சில சங்கமர் வருந்த இவர்க்குச் சிவமூர்த்தி தரிசனம் தரக்கண்டு விஷத்தை உமிழவேண்டினர். சிவமூர்த்தி அதனைப் பூமியில் விடின் உயிர்களுக்குத் துன்பமுண்டாம், அந்த விஷம் நம்மை யொன்றும் புரியாது என மடிமீதிருந்து பார்க்கவெனக் கூறக்கேட்டு அவ்வகை ‘சிவமூர்த்தியின் மடியிலிருந்தவர். |
பசுப்பறவை | (Cow Bird) இது அமெரிகாவிலுள்ள ஒருவகைப் பறவை. இது கூட்டமாக உலாவுவது, தன் பேடையேயல்லாமல் மற்ற பக்ஷிகளுடன் புணருமியல்பினது. இது மற்ற பங்களின் கூடுகளில் குயிலைப்போல் முட்டை யிட்டுவிட் நிப்போக அம்முட்டைகள் வேறு பக்ஷிகளால் பொரிக்கப்பட்டு வளர்க்கப்படும். இது பூச்சிகளை உணவாக்கும், |
பசுமான் | துட்பண்ணியனைக் காண்க, |
பசுவின் முலைகள் | பசுக்களின் நான்கு முலைகளும் சுவாஹாகாரம், சுவதாகாரம், வஷ்டாகாரம், ஹந்தாகாரம் என்று நான்கு வகை. இவற்றை முறையே தேவர், பிதுரர், பூதேசுவரர், மனுஷர், புசிக்கின்றனர். |
பச்சை | தமிழ்ப் பறையர்களில் ஒரு வகுப்பு. இவர்கள் பச்சைமலையில் தங்கியிருந்தவர், பச்சைகுத்தி குறவர்க்கும் ஒரு பெயர். |
பச்சையப்ப முதலியார் | இவர் காஞ்சிபுரம் விஸ்வநாத முதலியார் குமரர் தாய் பூச்சியம்மாள். இவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்துவந்த ஏழைகுடும்பத்தினர், சாதி யில் அகமுடைய வேளாளர். இவர் கருப்பத்தி லிருக்கையிலேயே தந்தை காலமாயினர். பின் தாய் தன்னிரண்டு பெண் குழந் தைகளையும் அழைத்துக்கொண்டு தம் கணவருக்கு நண்பராயிருந்த ஆர்க்காட்டுச் சுபேதாரின் காரியகாரராய்ப் பெரியபாளையத்ததிகாரியா யிருந்த பெட்டிராயரெனும் மார்த்தவரிடம் வந்து சேர்ந்தனர். இந்த ராயர் இவர்களைத் தந்தைபோலாதரித்து வந்தனர். ஆங்கில ஆண்டு 1754 இல் பெரி யபாளயத்தில் பச்சையப்ப முதலியார் ஜநநம், பச்சையப்ப முதலியாரின் ஐந்தாம் வயதில் ராயர் காலமாயினர். பிறகு பூச்சியம்மாள் ஆதரவற்றுச் சென்னை வந்து மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து கோட்டைக்கு வடமேற்கிலுள்ள ஒற்றைவாடை சாமிமேஸ்திரி தெருவிலுள்ள ஒரு சந்து வீட்டில் குடியிருந்தனர். பிறகு இந்தம்மாள் நெய்த வாயல் பௌனி நாராயண பிள்ளை தவபாஷியின் உதாரகுணத்தைக் கேள்வியுற்று அவரையடுத்து தம்மிட மிருந்த சிறு பொருளை அவரிடம் ஒப்புவித்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டினர். பிள்ளையவர்களும் பூச்சியம்மாளைத் தங்கை போல் காத்திப் பிள்ளைக்குக் கல்வி பயிற்றியும் வந்தனர். முதலியாரும் பிள்ளையவர்களிடத்தில் அன்பும் பணிவும் கொண் டொழுகினர். பின் முதலியார் பிள்ளையவர் களின் வர்த்தகமுறை த்விபாஷித்தன்மை முதலியவற்றை நன்குணர்ந்தனர். முதலில் இவர் பீங்கான் கடைகளில் சரக்குகள் கொள்ள வரும் ஐரோப்பியருக்கு தவிபாஷியாயிருந்து சிறிது பொருள் சோத்தனர். பிறகு ராணுவ உத்யோகத்திருந்த ஒரு துரையிடம் முதலியார் பழக நேர்ந்தது. இந்தத் துரை இவர்க்கு ஓர் உத்யோகம் கொடுத்தனர். இதைக் கொண்டு இவர் மரக்கலயாத்திரை செய்து பொருள் சேர்க்க எண்ணிப் பிள்ளையவர்களுக்கும் தாய்க்கும் கூறாமல் பாலவாயில் சத்திரம் சேர்ந்தனர். தாயாரிவரது பிரிவாற்றாதவராய்ப் பிள்ளையவர்களிடம் முறையிட. பிள்ளையவர்கள் அவரை உத்யோகத்திலமர்த்திய துரையிடம் பேசி அழைத்து வந்தனர். பிறகு முதலியார் தென்னாட்டிற்குப்போன ஓராங்கில அதிகாரியிடம் தவிபாஷியாய்ச் சென்று சிறிது பொருள் சாம்பாதித்தனர். அவ்வதிகாரி நிக்கல்ஸ். இவர் தம் சம்பாதனையைப் பிள்ளையவர்களிடமே வைத்திருந்தனர். இவர்க்கு தமக்கை சுப்பம்மாள், அவளுக்கு ஓர்பெண் ஐயம்மாள் என இருந்தனள். அவளையே முதலியாருக்கு மணஞ் செய்வித்தனர். இவர் முதலில் செய்வித்த சிவதருமம் காஞ்சியில் ஏகம்பராலயத்தில் ஸ்ரீபலிநாயகர் சிவகாமியம்மையெனும் இரண்டு விக்ரங்கள் வார்ப்பித்து 1774 மார்ச் 27 கும்பாபிஷேகமும் முடித்தனர். பிறகு பங்குனி உத்திரகல்யாண மண்டபமும் முடித்தனர் பிறகு இவர் கம்பெனியாரவர்களுக்கு தவிபாஷியாக இருந்து வெகு திரவியம் சம்பாதித்தனர். வாலாஜாநவாபின் காரியஸ்தராகிய ஜோஸப்சலிவன் துரையவர்களுக்கு தவிபாஷியாக இருந்து பெரும்பொருள் சேர்த்தனர். தஞ்சாவூர் அரசர் சிலபாளையப்பட்டுச் சிற்றரசர்களுக்கும் உதவி செய்து பெரும் பொருள் சம்பாதித்தனர். இவர் தஞ்சாவூரில் சிலநாள் வசித்திருந்தனர். இவர் சென்னையில் பிரபலராயிருந்த வீரப்பெருமாள் பிள்ளையவர்களிடம் நட்புபூண்டு இருந்தனர். வீரப்பெருமாள் பிள்ளை சிந்தாதிரிபேட்டையில் வசித்தனர். முதலியார் அவர்க்கருகில் வசிக்கவேண்டுமென எண் ணிக் கோமளீசுரன் பேட்டையில் ஒரு வீடு கட்டுவித்து வசித்தனர். பிறகு இவர்க்குத் தேகத்தில் பலவித நோய்களுண்டாக அவை தணியுநிமித்தம் கும்பகோணத்தில் வசித்தனர். அது 1794 ஆம் வருடம் இக்காலத்தில் முதலியாரவர்கள் ஒருவில் சாசனம் எழுதினர். இவர் 1794 மார்ச் 31. சிவபதமடைந்தனர். இவர்க்குப்பின் வாரீஸ் இலாமையால் இவரது ஆஸ்தியை அண்ணாசாமிப் பிள்ளை அவர்கள் 42,080 பெறுமான கம்பெனி பத்திரங்களையும், 200000 ரூபாய்கள் பிறரிடமிருந்து வரவேண்டியவைகளையும் கோர்ட்டில் கட்டி னர். இந்தப் பணம் 47 வருஷம் கோர்ட் டில் இருந்தது. இவற்றின் வட்டிமுதல் எல்லாம் சேர்ந்து கடைசியில் நான்குலக்ஷத்து நாற்பத்தேழாயிரத்து இறு நூற்று அறுபத்தேழு. இப்பெருநிதியை சென்னையில் வசித்திருந்த பௌணி நாராய ணப்பிள்ளை ஐயாப்பிள்ளை, அண்ணாசாமிப் பிள்ளை, ஸ்ரீநிவாசப் பிள்ளை முதலிய பிரபுக்களின் பெருமுயற்சியாலும், அக்காலத்தில் அட்வோகேட் ஜெனரலாகவிருந்த ஜார்ஜ் நார்ட்டன் துரை அவர்களுடைய பேருதவியாலும், அப்போது கவர்னராக விருந்த கனம் யெல்பின் சடன் பிரபிவின் உதாரகுணத்தாலும், சுப்ரீம் கோர்ட்டார் அவர்கள் ஒன்பது நிர்வாக அங்கத்தினரை (டிரஸ்டிகளை). நியமித்து தர்மபரிபாலனஞ் செய்யும்படி ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஏற்படுத்திய தருமம் இதுசாறும் நிலைத்து நடைபெறுகின்றது. |
பச்சையம்மன் | மலையரையன் புத்திரி. மன்னாதனாகிய சிவமூர்த்தியை மணந்தவள், (இரேணுவைக் காண்க.) |
பச்சோந்தி | இது பச்சைநிறமுள்ள மலை ஒணான் சாதி. மெலிந்த தேகமும், சுருண்ட வாலும், சற்று நீண்ட காலு முடையது. இது அடிக்கடி தன்னியற்கை நிறமாகிய பசுமையை வெவ்வேறு நிறமாக மாற்றவல்லது. மயிலுக்குப் பகை. விஷப் பிராணி. இது தன் ஆகாரத்தை நாவினால் தாவிப் பிடித்துத் தின்னும், |
பஜமாநன் | 1. அந்தகன் குமரன். 2. விடூர தன் தந்தை. |
பஞ்ச ஒளஷதங்கள் | இவை யாகத்திற் குரியவை. சீதேவியார் செங்கழுநீர், குமிழ், நறுமுருங்கை, ஓரிலைத்தாமரை, விஷ்ணு கிராந்தி. (சைவபூஷணம்) |
பஞ்சகந்தம் | 1. இவை அகிற்சந்தனம், காச்மீரசந்தனம், வில்வசந்தனம், செஞ்சந்தனம் என்பவை. (சைவபூஷணம்.) 2. உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம். (மணிமேகலை.) |
பஞ்சகன்னியர் | மேனை, சாவித்திரி, அருந்ததி, அநசூயை, சுநீதி எனவும், அகஸ்யை, மந்தோதரி, சீதை, தாரை, திரௌபதி, எனவும் கூறுவர். |
பஞ்சகம்பார்க்க | ஞாயிறு முதலாக அன்றைய வாரம் வரையும் பிரதமை முதலாக அன்றைய திதிவரையும் அச்சுவினி முதல் அன்றைய நக்ஷத்திரம் வரையும் மேஷ முதல் அப்போது தயலக்கினம் வரையும் எண்ணிக்கண்ட தொகையை ஒன்பதிற் கழித்து மிச்சம் 3,5,7,9 உத்தமம். மற்ற 1,2,4,6,8 நீக்கப்படும். இவைகளில் ஒன்று மிருத்யு பஞ்சகம், 2 அக்னி பஞ்சகம், 4 ராஜபஞ்சகம், 6சோரபஞ்சகம், 8 ரோகபஞ்சகம், இவ்வாறு கண்டுகொள்க. இவற்றுள் ராஜபஞ்சகமும், அக்னிபஞ்சகமும், இராத்திரியில் சொரபஞ்சகமும், ரோகபஞ்சகமும் எல்லாக் காரியங்களிலும் மிருத்யுபஞ்சகமும் ஆகா, இவற்றிற்குத் தான பிரீதி 1 இரத்தினம். 2 சந்தனக் குழம்பு, 4 எலிமிச்சம்பழம் 6 தீபம், 8 தான்யம், |
பஞ்சகற்பம் | இவை ஸ்நானம் செய்யும் பொருள்கள். கஸ்தூரிமஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய்த்தோல், நெல் லிப்பருப்பு இவற்றை முறைப்படி காராம் பசுவின் பால்விட்டரைத்துக் கொதிக்க வைத்துத் தலைமூழ்கின் பிணிகள் சேரா. (தேரையர்.) |
பஞ்சகலைகள் | நிவர்த்திகலை : தம்மையடைந்த ஆன்மாக்களின் சங்கற்பநிவர்த்தி செய்வது. பிரதிட்டாகலை : இது ஆன்மாவின் சங்கற்பநிவர்த்தியைப் பிரதிட்டித்து உறுதியாக்குவது. வித்யாகலை : சங்கற்ப நிவர்த்தி திடமானபின் சர்வார்த்தஞானத்தைப் பிரகாசிக்கச்செய்வது. சாந்திகலை : இது தன்னையடைந்த ஆன்மாவிற்கு ஞானம் பிரகாசித்தபின் இராகத்வேஷம் நீங்கச் சாந்தியைச் செய்வது. சாந்தியா தீதகலை : தன்னிற் பொருந்தின ஆன்மாக்களுக்கு விகற்பஞானஞ் சாந்தமாயிற்றென்கிற முன்னினைவுங் கழிந்து அதீதமாய்ப் பரமாய் நிற்கச் செய்வது. (சித்தாந்தம்.) |
பஞ்சகௌடம் | இது சுத்தகௌடம், கானுகோபிஜம், சராசந்து, மாந்தலை, உக்கலம். என்பன. அவற்றுள் சுத்தகௌடம், ஸ்ரீநகரமுதல் பதரிகேதாரம் வரையிலுள்ள இடம், கானுகோபிஜம் : அயோத்திமுதல் காசிவரை. சராசந்து : டில்லி முதல் அஸ்தினாபுரிவரை, மாந்தலை : மிதிலை முதல் பங்காளம் வரை. உத்கலம். ஜகந்நாதம் முதல் ஒட்டியம் வரை உள்ள இடங்களாம். |
பஞ்சகௌளர் | உத்கலம், கன்னியாகுப்சம், கௌடம், மிதிலை, சராஸ்வதம், என்னும் ஐந்து தேசத்து வேதியர். |
பஞ்சகௌவ்யம் | இது கோமூத்திரம் கோமயம், பால், தயிர், நெய் இவை பஞ்சகவ்வியம் என்று கூறப்படும். கோமூத்திரத்திற்கு வருணனும், கோமயத்திற்கு அக்நியும், பாலிற்குச் சந்திரனும், தயிர்க்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகளென்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. பின்னும் செந்நிறத்த பசுவினிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப்பசுவினிடம் கோமயத்தையும், பொன்னிறத்த பசுவிடத்துப் பாலையும், நீலநிறத்த பசவினிடம் தயிரினையும், கருகிறத்த பசுவினிடம் நெய்யினையும் கொள்ளின் நலமெனப்படும். கோமூத்திரம் கோமயம் இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை இடையளவும் இருத்தல் வேண்டும். இதை மந்திரபூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவன் சகல பாபத்தினின்றும் நீங்கிச் சுத்தமடைகிறான், |
பஞ்சசத்திகள் | பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி இவ்வைந்து சத்திகளும் பரமசிவ பிரேரகமாகிய நிட்களம். |
பஞ்சசன் | 1, சங்குருவமான ஒரு அசுரன். பிரபாச தீர்த்தத்தில் சாந்தீபனி குமாரனைத் கொன்றவன். இவனைக் கிருஷ்ணமூர்த்தி கடலில் நுழைந்து கொன்று அவன் உடலைப் பாஞ்சசன்னியமாகப் பெற்றனர். 2. சுக்கிலாதன் குமரன். |
பஞ்சசபூதாசுான் | ஒரு அசுரன், இவன் ஆத்மாக்களின் பஞ்சபூதங்களினும் நெருங்கி வருத்தச் சிவமூர்த்தி இவனை இந்திரனைப்போல் உருக்கொண்டு வச்சிரத்தால் வீசி இறக்கச் செய்தனர். |
பஞ்சசமஸ்காரம் | வைஷ்ணவர்கள் தீக்ஷையில் ஆசாரியரிடம் பெறுவன. தப்தசங்க சக்ராங்கனம், ஊர்த்வபுண்டரம், தாஸ்யநாமம், திருமந்திரம், திருவாராதனயாம். |
பஞ்சசாதாக்ய மூர்த்திகள் | சதாசிவன், ஈசன், பிரமீசன், சசுரன், ஈசாநன், |
பஞ்சசாதாக்யம் | சிவசாதாக்யம், அமூர்த்திசாதாக்யம், மூர்த்திசாதாக்யம், கர்த்திருசாதாக்யம், கன்மசாதாக்யம் என்பனவாம். இவை முறையே பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தியில் தோன்றும். (சதா.) |
பஞ்சசாயகன் | அரவிந்தம், அசோகம், மாம்பூ, முல்லை, நீலம் ஆகிய புட்பங்களைக் கனைகளாகக் கொண்ட மன்மதன். |
பஞ்சசிகன் | 1. ஜநகனுக்குத் தத்துவ முபதேசித்த முனிவன். இவன் தவத்தால் அக்நிசிகாகாரமாய் ஐந்து சிகைகளைப் பெற்றதால் இப்பெயர் அடைந்த பிரமபுத்ரன். 2. ஒரு ருஷி, ஜனகரிடம் மோக்ஷதர்மம் கேட்டவன். (பிரகன்னார தீயம்) |
பஞ்சசுத்தி | பூதசுத்தி, ஆன்மசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, லிங்கசுத்தி என்பன. (36) தத்வங்களும் நாமல்ல அவை ஜடமென அறிதல் : பூதசுத்தி, பூதங்கள் ஜடமென அறிதலும் திருவருளாலன்றி ஆன்மபோதத்தாட்லன்றென அறிகை : ஆன்மசுத்தி. ஆன்மபோதத்தால் தானே அறிகைக்குச் சேட்டையில்லையென்று கண்டதுகொண்டு ஆன்மாவிற்கறிவில்லையென அறிந்து கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறிவ தெல்லாம் திருவருளென அறிகை: திரவியசுத்தி, ஐந்தெழுத்தைச் சிவாமுதலாக மாறியதனுண்மையை விசாரித்தறிகை : மந்திரசுத்தி. பதி, பசு பாசங்களில் பிரிவறநின்று அவற்றைச் சேட்டிப்பித்து நின்ற தன்மையை அறிந்து அத்தகைய சிவம் இலிங்கமூர்த்தத்தினும் எழுந்தருளி யிருக்குமென அறிகை : இலிங்கசுத்தி. |
பஞ்சசூடை | 1. நாரதருக்குப் பெண்களின் இயற்கையைப்பற்றிக் கூறியவள். (பார. அநுசா.) 2. நாரதருக்குப் பெண்ணிழிவு கூறிய ஒரு அப்சரசு. |
பஞ்சசூனம் | இல்லறத்தானுக்கு ஒவ்வாரு பகலினும் ஐவகைச்சூனம் உள. அவை கண்டினி, பேஷிணி, சுல்லி, சலகும்பம், உபஸ்கரம் என்பன. (சூனம்~ கொலை) கண்டினி : உலக்கை, உரல், அரிகருவி முதலியவற்றால் முறித்தல் முதலிய. பேஷிணி : அம்மிகொண்டு அரைத்தல், சுல்லி : சமைக்குமிடம், சலகும்பம் : நீர்க் குடம், இதனா லாடை முதலிய வெளுத்தல், உபஸ்கரம் : முறம், சல்லடை முதலியவற்றால் நோம்பல் சலித்தல் முதலிய, இவை உயிர்க்கொலைக்கிடமாதலின் இவற்றை ஐவகை வேள்வியால் நீக்கல் வேண் டும். (யமஸ்மிருதி.) |
பஞ்சசேநன் | 1. தக்ஷனுக்கு மாமன், அசக்நி தந்தை. 2. சமகிலாதனுக்கு மதியிடம் உதித்த குமரன். |
பஞ்சதாமோதை | பூதாவின் தேவி. பூதங்களைப் பெற்றவள். |
பஞ்சதிசை | சநநகாலத்து உதிக்கின்ற ராசியின் நவாம்சத்தால் பிராணதிசையும், செநநதாலத்து தற்காலம் ஆதித்யனின்ற ராசிவசத்தால் ஜீவ திசையும், சந்திரமா தத்துத்திதி (30) தின் நடக்கின்ற திதி வகையால் வந்த ராசி நவாம்சத்தால் மனோதிசையும், தற்காலத்து ராகுநின்ற ராசி நவாம்சத்தால் மிருத்துதிசையும், ஒருவன் பிறந்தபொழுது நின்ற உதயராசியின் நவாம்சத்தையுடைய நாளில் காலால் சரீர திசையும் அறிக. (விதானமாலை.) |
பஞ்சதிரவியம் | ஏலம், இலவங்கம், அதிமதுரம், கோஷ்டம், சண்பகமொட்டு என்பன. (சைவபூஷணம்.) |
பஞ்சதிராவிடர் | கன்னடம், தெலுங்கு, மகாராட்டிரம், கர்நாடகம், கூர்ச்சரம், என்னுந்தேசத்துப் பிராமணர்,கன்னடம்,மைசூர் முதல் கோலகொண்டாவரை; தெலுங்கு, காளத்திமுதல் கஞ்சம்வரையில்; மகாராட்டிரம், கோலகொண்டா முதல் மேற்குக் கடல்வரை; கர்நாடகம் (தமிழ்) கன்யாகுமரி முதல் காளத்திவரை; கூர்ச்சரம் குசராத்திமுதல் டில்லிவரையிலுள்ள தேசங்களாம். |
பஞ்சநதம் | இது காசியிலுள்ள தீர்த்தகட்டம். பிருகுவின் மருமகனாகிய வேதசிரசு முனிவர், சுசியைக்கூடி ஒரு குமரியைப் பெற்றனர். அக்குமரி தவஞ்செய்கையில் தருமன் அவளை வலுதிற் புணர்ந்தனன். அதனால் அக்குமரி அவனை நதியாகவெனச் சபித்தனள். அப்பெண்ணைத் தருமன் கல்லாகச் சபித்தான். இவ்விருவர் செய்தியும் அறிந்தமுனிவர் நீ சந்திரகாந்தக் கல்லாய்த் தூதபாவையென்னும் நதியுருக்கொண்டு உன் நாயகனாகிய தருமனுடன் கூடுக என்றனர். இவ்விரு நதிகளுடன் சூரியன் தவஞ்செய்ததால் அவனுடலில் ஒழுகிய வியர்வையாலாகிய கிரணை (1) கங்கை (2) யமுனை (3) இவை சேர்த்து பஞ்சநதமாயின. (காசிகாண்டம்.) The Panjab : The country of 5 rivers called Satadra, Vipasa, Iravati, Chandrabhagh, and Vitasta. |
பஞ்சநன் | நரகாசுரன் மந்திரி, நரகாசுச் சங்காரத்தில் கண்ணனால் சங்கரிக்கப்பட்டவன். |
பஞ்சநாதம் | இவை பஞ்சபூதங்களால் உண்டாம் நாதங்களாம். அவையாவன: மரத்தாலுண்டான மத்தளம், முழவு முதலிய பிருதிவி சம்பந்தங்களாம். சங்கு முதலிய நாதங்கள் ஆப்ஜமென்னும் ஜலசம்பந்த வாத்யங்களாம். செம்பு, பித்தளை முதலியவற்றாற் செய்யப்பட்ட பூரி சின்ன முதலிய ஆக்னேய சம்பந்தமாம். மூங்கிலினுண்டான புல்லாங்குழல் முதலிய வாயவ்ய மாம். வாயாற்பாடப்பட்ட இசை முதலிய ஆகாய சம்பந்தங்களாம். (ஸ்ரீ~ காரணம்.) |
பஞ்சபட்டை | இவை யாகத்திற்குரியவை. நாவற்பட்டை, அத்திப்பட்டை, மாம்பட்டை, அரசம்பட்டை, ஆலம்பட்டை. (சைவபூஷணம்.) |
பஞ்சபன் | சோழர் சரிதை காண்க, |
பஞ்சபருவங்கள் | கிருஷ்ணபக்ஷத்து அஷ்டமி, கிருஷ்ணபக்ஷசதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு. (சைவ பூஷணம்,) |
பஞ்சபறமேட்டிகள் | அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள். இது சைந நூலிற் கண்டது. |
பஞ்சபல்லவம் | (தளிர்) அரத, அத்தி, இரளி, மா, வெண்ணொச்சி. (பிரமாண்ட புராணம்.) |
பஞ்சபாரதீயம் | இது நாரதன் செய்த இசைத்தமிழ் நூல், |
பஞ்சபிரமதோற்றம் | சிவசாதாக்ய மெனுந்தத்துவமும், சதாசிவமெனும் மூர்த்தியும் பொருந்தினது ஈசானம், அமூர்த்தி சாதாக்யமெனுந் தத்துவமும், ஈசனெனும் மூர்த்தியும் பொருந்தினது சத்யோஜாதம், மூர்த்தி சாதாக்யமெனுந் தத்துவமும் பிரமீசனெனு மூர்த்தியும் பொருந்தினது வாமதேவம், கர்த்திரு சாதாக்யமெனும் தத்துவமும் ஈசரனெனும் மூர்த்தியும் பொருந்தினது அகோரம், கன்மசாதாக்ய மெனும் தத்துவமும், ஈசாகன் எனும் மூர்த்தியும் பொருந்தினது தற்புருஷம். (சதா.) |
பஞ்சபூதத்தலம் | திருக்காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, ஸ்ரீசிதம்பரம். |
பஞ்சபூதவாதிகளின் மதம் | இதில் பிருதிவிபூதவாதிமதமாவது பிருதிவி சத்தபரிச ரசசுந்தங்களுடனும் கூடி ஷட்ருசி முதலிய சகல பதார்த்தங்களுக்கும் சகல போகங்களுக்கும் தனுகரண புவன போகங்களுக்கும் நால்வகை யோனிகளுக்கும் பிறப்பிடமாயும் நவநிதிகளுக்கு உற்பத்திக் காரணமாயும், மகாம லைகள் மகாநதிகளுக்குப் பிறப்பிடமாயும் எல்லா அண்டங்களாயும் விரிந்திருப்பதால் இதுவே திரிமூர்த்திகளின் சுவரூபமெனவுங் கூறுவர். அப்பு பூதவாதிமதம் : சகல ஜீவராசிகளையும் சலமயமான சுக்லசோணித வுருவங்களாய்ச் சரங்களைச் சிருட்டித்து அசரங்கள் முளைத்து வளர்தற்குத் தான் காரணமாதலால் பிரம சுவரூபமாயும் எல்லாப் பொருள்களையும் மழையுருவாய் வளர்த்து உணவாதிகளைத்தருவதால் விஷ்ணு சுவரூபமாயும் பின் வானங்குன்றச் சராசரங்களையுமழித்தவால் உருத்திரசுவரூபமென்றுங் கூறுவர். இம்முத்தொழிலும் அப்புவே புரிதலால் அதனைப் பிரமசுவரூபமென்பர். அக்கிபூதவாதி மதம் : அக்னியே ஆகாரம், நித்திரை, பயம், சுகமுமாம். இந்த நான்கில் ஆகாரத்தால் சத்ததாதுக்களுண்டாய்த் தாதுக்களாற் சுக்வசுரோணித முண்டாய் அதனால் விஷயங்களாய் அதனால் சராசரங்களுண்டாம். ஆகையால் பிரமசுவரூபமாகவும், அதனால் தண்டுலாதிகள் உணவாகி ஆன்மாக்களினுதரத்தில் அக்னிமயமாய் நின்று பசனமுதலிய செய்வித்து வளர்த்தலால் விஷ்ணுவாகவும், இறுதியில் காலாக்னியாய் அழித்தலால் உருத்திர சுவரூபமாகவும், இம்முத்தொழிலுமேற்று நிற்றலால் பிரமசுவரூபமென்றுங் கூறுவர். வாயுபூத வாதிமதம் : வாயு நால்வகையோநி, எழுவகைத் தோற்றங்களாகிய சராசரங்களிற் புகுந்து யோனிகளின் வழி வீரியத்தைப் பதித்து ஏற்றக்குறைவால் பலவுருக்களைச் சிருட்டித்து (72000) நாடிகளிலும் நிறைந்து ஆன்மாக்களை யாக்கலால் பிரமசுவரூப மென்றும், அவ்வகைப் படைக்கப்பட்ட உருக்களில் தானியங்கிக் காத்தலால் விஷ் ணுவாகவும், தானச் சராசரங்களினீங்கின் அவை அழிதலால் ருத்திரனாய் முத்தொழிற் செய்தலின் வாயுவே பிரமமாமென்பர். ஆகாசபூதவாதிமதம் : ஆகாசந் தன்னை யொழிந்த நான்கு பூதங்களைத் தாங்கிக் கொண்டு எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய் அவற்றுள்ளும் புறம்பும் வியாபித்து முத்தொழிலுஞ்செய்து நிற்றலால் ஆகாசமே பிரமமென்பர். |
பஞ்சப்பிரம்மம் | (1) 1. மந்திரப்பிரம்மம், 2. கிரியாப்பிரம்மம், 3. தத்வப்பிரம்மம், 4. பீஜப்பிரம்மம், 5. முகப்பிரம்மம். இதில் ஈசானாதி ஐந்தும் மந்திரப்பிரம்மம், ஆவாகனம், ஸ்தாபனம், ஸானித்யம், ஸந்நிரோதனம், அவகுண்டனம் என்பவை கிரியாபிரமமாம். பிரமன், விஷ்ணு, ருத்திரர், மகேச்வரர், சதாசிவர் இவர்கள் தத்வபிரமமெனக் கூறப்படுவர். ல, வ, ர, ய, ஹ, இவைப் பீஜப்பிரமம். மேற்கூறிய பஞ்சப் பிரம்மங்களில் சத்யோஜாதிகளைந்தும் முகப்பிரமங்களாம். (2) மூர்த்திபிரமம், தத்வப்பிரமம், பூதப்பிரமம், பிண்டப்பிரமம், கலாப்பிரமம், பதப்பிரமம் எனப் பகுக்கப்பட்டிருக்கிறது. இவற்றைச் சிவாகமங்களிலறிக. |
பஞ்சப்பிரேதபரசிவம் | சர்வசம்மார காலத்தில் பிரம, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேகங்களைத் தெப்பமாகக்கொண்டு அவற்றின் மீது எழுந்தருளி மீண்டும் சிருட்டியாதிகளைச் செய்விக்க விஷ்ணுவாதியரைச் சிருட்டிக்கும் சிவமூர்த்தியின் திருவுரு இவரது சத்தி பஞ்சப்பிரேத பராசத்தி. |
பஞ்சமகாயஞ்ஞம் | கிரகஸ்தன் எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, தண்ணீர்க்குடம், இவற்றினை உபயோகித்துக் கொள்வதால் அவனுக்கு ஐவகைக் கொலைகள் உண்டாகின்றன. இந்த ஐவகைப் பாவங்களையும் போக்குவதற்காக மகருஷிகளால் தினந்தோறும் ஐந்து மகா யக்யங்கள் கிரகஸ்தனுக்கு விதிக்கப்பட் டிருக்கின்றன. அவ்வைந்து யக்யத்தில் வேதம் ஓதுதல் பிரம்ம யக்யம், அன்னத் தினாலாவது திலத்தினாலாவது பிதுர்க்களைக் குறித்துத் தர்ப்பணஞ்செய்வது பிதுர்யஞ்ஞம், தேவதைகளைக் குறித்து அக்னியில் ஹோமஞ்செய்வது தேவயஞ்ஞம், வாயசபலி முதலியவைப்பது பூதயக்ஞம், அதிதிகளுக்குச் சாப்பாடு போடுவது மாநுஷயக்ஞம், இவர் இந்த ஐந்து யஞ்ஞங்களையும் அமுதம், குதம், பிரகுதம், பிராமிய குதம், பிராசிதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். |
பஞ்சமண் | இவையாக காரியத்திற்குதவி. மலைமண், கடல்மண், குளத்தின் மண், ருஷபத்தின் கொம்பிலுள்ள மண், சிவாலயத்திலுள்ள மண். |
பஞ்சமரபு | அறிவனார் செய்த இசைத்தமிழ் நூல், |
பஞ்சமி | சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமி; விஷ்ணுவைப் பூசித்துப் புஷ்பவூஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதமதுஷ்டிப்பது, |
பஞ்சமுக ஆஞ்சநேயன் | சதகண்டன் என்னும் அரக்கன் இராவண வதை கேட்டு இராமனிடம் யுத்தஞ்செய்ய எண்ணினன். இராமன் அநுமன் மீதாரோகணித்து இவன் பட்டணம் போயினன். இவன் மாயையால் பலவுருக்கொண்டு யுத்தம்புரிய அநுமான் இராமனை இளைப்பாறச்செய்து தான் குரங்கு, நரசிங்கம், கருடன், வராகம், குதிரை ஆகிய (5) முகங்களுடனும் (15) கண்கள், (10) தோள்களுடன் தோன்றி அரக்கனை வதைத்தனன். |
பஞ்சயஞ்ஞம் | தேவயஞ்ஞம், பூதயஞ்ஞம் பிதுர்யஞ்ஞம், நரயஞ்ஞம், பிரம்மயஞ்ஞம், |
பஞ்சயவம் | சம்பாநெல், வால்நெல், குழைச்செந்நெல், வரகு, மூங்கிலரிசி. |
பஞ்சரத்னம் | சுவர்ணம், ரஜிதம், மூச்தம், ராஜாவர்த்தம், பவழம், இவையன்றி, பொன், வயிரம், நீலம், பத்மராகம் முத்து எனவும் கூறுப. (ஆதித்ய புராணம்.) |
பஞ்சரூபங்கள் | அநுமானத்திலுள்ள, பக்ஷ தருமத்வம், சபக்ஷத்வம், விபக்ஷவியாவிருத்தி, அபாதிதவிஷயத்வம், அசத்பிரதிபக்ஷம் என்பன. (தரு.) |
பஞ்சலாங்கலதானம் | சந்தனமரத்தாலேனும், தேக்காலேனும், ஐந்து கலப்பைகள் செய்து கொம்பைப் பொன்னாலும், குளம்பை வெள்ளியாலும் அலங்கரித்துள்ள எருதுகள் பத்துப் பூட்டி ஓமஞ்செய்து பத்து வேதியரைப் பூசித்து ஒரு சிற்றூராயினும் பேரூராயினும் பிராமணருக்குக் கொடுத்துக் கலப்பையைத் தானஞ் செய்வது. |
பஞ்சலிங்கம் | இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் இலிங்கங்கள் இவை திருக்காஞ்சி, ஜம்புகேசுரம், திருவண்ணாமலை. திருக்காளத்தி, ஸ்ரீசிதம்பரம் என்னும் தலங்களில் வீற்றிருக்கும் மூர்த்தங்களாம். |
பஞ்சவடி | 1. தண்டகவனத்தில் கோதாவரி தீரத்தருகில், அரசு, வில்வம், ஆல், நெல்லி, அசோகமென்னும் ஐந்து மகாவிருஷங்கள் சூழ்ந்த இடம். இதில் ஸ்ரீராமமூர்த்தி அரண்யவாசத்திற் சிலநாள் தங்கி இருந்தனர். இதில் அருச்சுநன் கண்ணனிறந்தபின் அவர் தேவிகளுடன் மீண்டு, இவ்விடம் தங்கி வேடராற் பொருள் முதலிய இழந்தனன். இது நாஸிக் எனும் பட்டணத்திற்கு இரண்டு மைல் தூரத்திலுள்ளது. 2, கோதாவரி தீரத்தில் நாசிகக்ஷேத்தி ரத்தின் சமீபத்திலுள்ள ஒரு ஸ்தலம். (Nasik on the Godavari.) |
பஞ்சவற்கலம் | நியக்ரோதம், ஔதும்பரம், அசுவத்தம், கல்லால், நீர்நொச்சி, |
பஞ்சவில்வம் | வில்வம், கிளுவைப்பத்திரம், மாவிலங்கு, விளா, நாயுருவி, அல்லது நொச்சி. (சைவபூஷணம்.) |
பஞ்சாக்னி | இராகம், வெகுளி, காமம், சடம், தீபனம், |
பஞ்சாக்ஷரம் | இது சைவர்களால் இஷ்டகாம்யசித்திகளை விரும்பியும், முத்தியை விரும்பியும், செபிக்கப்படும் மகாமந்திரம். இதுபோக பஞ்சாக்ஷரம் எனவும், முக்தி பஞ்சாக்ஷர மெனவும். ஸ்தூரபஞ்சாக்ஷரமெனவும், ஸுமபஞ்சாஷரமெனவும் பலவகைப்படும். இவற்றின் அக்ஷரங்களை மாறிச் செபித்தலால் பலன்கள் வேறுபடும். அப்பலன்களை விரும்பியோர் ஆசாரியர் கூறியவகைமாறிச் செபிக்கின் அப்பயன்களைப் பெறுவர். இம்மகாமந்திரத்தைப் பிரணவத்துடனும், பீஜாக்ஷரத்துடனும் சேர்த்தும், அஃதின்றியும் செபிப்பர். இதன் உண்மைகளை ஞானாசிரியர்பாற் சைவர் கேட்டறிக. |
பஞ்சாங்ககுணம் | பக்ஷம் ஒருகுணம், காணம் (2) குணம், வாரம் (8) குணம், நக்ஷத்திரம் (4) குணம், யோகம் (3) குணம் முகூர்த்தம் லக்ஷம் குணம், நக்ஷத்திரம், திதிகூடின வாரயோகங்கள் பதினாயிரம் குணமாம். (விதானமாலை.) |
பஞ்சாங்கம் | திதி, வாரம் நக்ஷத்திரம், யோகம், கரணத்தைக் கூறுவது. |
பஞ்சான்னம் | எள்ளன்னம், கடுகன்னம், புளியன்னம், பயற்றன்னம், உளுந்தன்னம், வேறுவகை கோதுமையன்னம், சம்பா அரிசி அன்னம், யுவையரிசியன்னம், மூங்கிலரிசியன்னம், குழைச்செந்நெலரிசி யன்னம். பின்னும், சத்தான்னம், தயிரன்னம், சர்க்கரையன்னம், நெய்யன்னம், பரமான்னம், என்பன. (சைவபூஷணம்.) |
பஞ்சாபகரசு | மந்தகருணன் தண்டகாரணியத்தில் உண்டாக்கிய மடு, |
பஞ்சாமிர்தம் | 1. இது கருப்பஞ் சாறு, தேன், நெய், பால், தயிர் முதலியவற்றைத் தனித்தனி பாத்திரங்களில் வைத்து அப்பாத்திரங்களில் கருப்பஞ் சாறிட்ட பாத்திரத்தை இடையினும், தேன் பாத்திரத் தைக் கிழக்கினும், பால் வார்த்த பாத்திரத்தை மேற்கிலும், தயிர்ப் பாத்திரத்தைத் தெற்கிலும், நெய்ப் பாத்திரத்தை வடக்கினும் கீறிய யந்திரத்தில் வைத்து மந்திரத் தாற் பூசித்துத் தேவர்களுக்கு அபிஷேசிப்பது. 2. பால், தயிர், சர்க்கரை, தேன், நெய், (சிவதர்மம்). |
பஞ்சாயுததாரணம் | பிள்ளை பிறந்த ஐந்தாம் நாள் பிள்ளையை சுத்த ஜலத்தினால் முழுக்காட்டிச் சுபக்கிரகங்களுதயமாகப் பஞ்சாயுதந் தரித்து பூதபிசாசு அணுகாதபடி காவற்செய்வதாகிய காப்புந்தரித்து அரைஞாண் கட்டவேண்டியது. |
பஞ்சாயுதன் | திருமால், சங்கு, சக்கிரம், வாள், கோதண்டம், கதை முதலிய ஏந்தினவன். |
பஞ்சார்க்கதோஷம் | இந்திரதனுவிலே (17) பாகையைக்கூட்ட சுத்தரவிபுடமாம். இந்தப் புடங்களை நாட்பார்க்கும்படியே பார்த்துற்றநாளும், சந்திரனும் ஒருநாளாக நின்றதாகில் பஞ்சார்க்கதோஷமாம். இதில் சுபகன்மங்கள் தவிரப்படும். இப்படியே இலக்னத்தையும் தவிரப்படும். இலக்னமா வது, உற்ற நாளுடைய இராசி. சந்திரன் இடபம், கர்க்கடகத்திலும், ரவி, சிங்கமேடத்திலும், ரவி, சந்திரனு பசயதானத்து நிற்பினும் பஞ்சார்க்கம் ஞாயிற்றுக்கிழமையில் வரினும் மேற்படி தோஷம் இல்லை. (விதானமாலை.) |
பஞ்சார்க்கம் | இந்திரவில், கேது, தூமம், பரிவேடம், விதிபாதம், |
பஞ்சாளத்தார் | கருமான், கொல்லன், தட்டான், கன்னான், தச்சன் இவர்கள் காந்தக்கற்கோட்டை யொன்று கட்டிக்கொண்டு அதில் குடிபுகுந்து அரசனை மதியாமலிருக்கையில் அரசன் இவர்களைச் செயிக்கப் பலவழியில் முயன்றும் முடியாமை நோக்கி இவர்களைச் செயிப்பவர்க்கு வெகுமானஞ் செய்வதாய்ப் பிரசித்தப்படுத்தினன். இதனையறிந்த தாசியொருத்தி அந்தக் காந்தக் கற்கோட்டையின் புறத்தில், வீடு ஒன்று கட்டிக்கொண்டு வசித்து அக்கோட்டையிலிருந்த கம்மாளனைத் தன் வசப்படுத்தி அவனுடன் விளையாட்டாய்க் காந்தக் கற்கோட்டை எவ்வாறு வெல்லப்படுமென்று கேட்க அவன் கோட்டை அழிதற்கு வரகுவைக்கோல் காரணமென உளவறிந்து அரசனுக் கறிவித்தனள். அரசன அதனால் இவர்களைச் செயித்தனன். |
பஞ்சாவயம் | இது தருக்கத்திற்குரியது. பிரதிஞ்ஞை, எது, திருஷ்டாந்தம், உபநயம், நிகமனம் என்பன. |
பஞ்சுகொட்டி | இது தொழிலால் சிலஜாதிகளுக்கு வந்தபெயர். தற்காலம் சிலமகம்மதியரும் மற்றவர்களும் இந்தத் தொழில் செய்து ஜீவிக்கின்றனர். |
பஞ்சுகொண்டான் | மகம்மதியர் திருவாங்கத்தைக் கொள்ளை கொண்டபோது தடை செய்தவர். |
பஞ்சோதகம் | பலோதகம், பில்வோதகம், இரத்னோதகம், கந்தோதகம், குசோதகம் என்பன. |
படகுதச்சன் | சூத்திரன் பார்ப்பினியைப் புணர்ந்து பிறந்தவன். |
படச்சரர் | அபர மச்சிய தேசத்தவர். |
படலம். | 1. ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களுடையதாய் பல்பொருள்களைத் தரும் பொதுச்சொற்கள் தொடர்ந்து வருவது. (நன். பா.) 2. வேற்றுமையுடைய பல பொருள்களால் தோற்ற முடைத்தாகத் தொடரவைப்பது. |
படிக்காசுப்புலவர் | ஏறக்குறைய (250) வருஷங்களுக்குமுன் தொண்டைமண்டலத்தில் பொன் விளைந்தகளத்தூரில் செங்குந்தர்மரபிற் பிறந்து சிவானுக்கிரகத்தால் தமிழ்க்கலை முழுதும் கற்று இல்லறம் நடத்திவரும் நாட்களில் வல்லைநகர் காளத்தி பூபதியைக் கண்டு “பெற்றா ளொருபிள்ளை யென்மனையாட்டியப் பிள்ளைக்குப் பால் பற்றது கஞ்சி குடிக்குந் தரமல்ல பாலிரக்கச், சிற்றாளு மில்லை யிவ்வெல்லா வருத்த முந்தீரவொரு, கற்றாதரவல்லை யோவல் லைமாநகர்க் காளத்தியே” எனப் பாடிக் கன்றும் ஆவும் பெற்றுத் திரும்பி மாவண்டூரில் மிக்க பிரபுவாயிருந்த கஸ்தூரிமுத வியார் குமாரராகிய கறுப்பு முதலியார் வேண்டுகோளின்படி தொண்டைமண்டல சதகம் பாடி அரங்கேற்றிப் பல பொருள் பெற்று முதலியார் பல்லக்குச் சுமக்கக் களிப்படைந்து, “காவைவென்றிடு கத்தூரிகண்மணிக் கறுப்பனென்று, மாவையம் பதியான் றொண்டைமண்டல சதகங் கேட்டு, நாவலர் புகழ்ந்து மெச்ச நவநிதி பொழிந்து நன்றாய், பூவுலகெங்கும் போற்றப் புகழ்நிலை நிறுத்தினானே எனவும், “ஓர் கறுப்புமில்லாத தொண்டைவள நன்னாட்டி வசிதவேளைச், சீர்கறுப் பொன்றில்லாத கஸ்தூரி மன்னனருள் சேயைப்பார்மே, லார்கறுப்பனென்று சொல் லியழைத்தாலு நாமவனை யன்பினாலே, பேர் கறுப்பனிறஞ் சிவப்பன் கீர்த்தியினால் வெளுப்பனெனப் பேசுவோமே” எனவும், “எல்லப்பனம்மையப் பன்றரு திருவேங் கடநாத னெழிற்சீராமன், வல்லக்கொண்டையன்மாதை வேங்கடேசுரன் போல் வரிசை செய்தே, செல்வத்தம்பி யருடனே கத்தூரிமகன் கறுப்பன் தெருவீதிக்கே, பல்லக்குத்தான் சுமந்தானது நமக்கோரா யிரம் பொன் பரிசுதானே” எனப்பாடித் தென்னாட்டில் இரகுநாத சேதுபதி சமஸ்தான மடைந்து மூவேந்து மற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றெடிரு, கோவேந்தரு மற்றுமற்றொரு வேந்தன் கொடையு மற்றுப், பாவேந்தர் காற்றிலிலவம் பஞ்சா கப்பறக்கையிலே, தேவேந்திர தாருவொத் தாய் ரகுநாத செயதுங்கனே” எனப்பாடிப் பரிசுபெற்றுப் பல்லக்கு வரிசைகளுடன் மதுரையை அடைந்தபொழுது இவரது ஆரவாரத்தைத் திருமலைராயன் கண்டு கிளிக்கூட்டுச் சிறையிலிவரை அடைக்கப் புலவர் நாட்டிற் சிறந்த திருமலையாதுங்க நாகரிகா, காட்டில் வனத்திற்றிரிந்துழலாமற் கலைத்தமிழ்தேர், பாட்டிற்சிறந்தபடிக் காசனென்னுமோர் பைங்கிளியைக், கூட்டிலடைத்து வைத்தாயிரை தாவென்று கூப் பிடுதே” எனப்பாடி (இச்செய்யுள் சவ்வாது புலவர் கூறியதாகவுங் கூறுவர்.) அவரைத் தம் வசப்படுத்திப் பரிசுபெற்றுக் காயற்பட்டண மடைந்து “காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே, தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்க டொல்பல நூ, லாய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மநுதினமும், ஈயந்து சிவந்தது மால்சீதக் காதியிருகாமே” எனப்பாடி அவர் சமாதியான தறிந்து சமாதிக்குழியிடம் போய் “தேட்டாளன் காயற்றுரை சீதக்காதிசிறந் தவஜ்ர, நாட்டான் புகழ்க்கம்பநாட்டிவைத்தான் புகழ்நாவலரை, யோட்டாண்டியாக் கியவர்கடம் வாயிலொரு பிடிமண், போட் டானவனு மொளித்தான் சமாதிக் குழி புகுந்தே” எனப்பாடிச் சமாதி வெடிக்க வைரமோதிரம் விரலிலிருந்து தரப்பெற்றுத் திருச்செந்தூரடைந்து முற்கரையப் பரையெனச் செய்யுள் பாடி வைதீசுரன் கோயிலடைந்து புள்ளிருக்கும் வேளூர்க் கலம்பகம்பாடிச் சின்னாட் சென்றபின் துறவு பூண்டு சிதம்பரமடைந்து பொல் லாத மூர்க்கருக் கெத்தனை தான் புத்திபோ திக்கினும், நல்லார்க்குண்டான குணம் வருமோ நடுராத்திரியில், சல்லாப்புடவை குளிர் தாங்குமோ நடுச்சந்தைதனில், செல்லாப்பணஞ் செல்லுமோ தில்லைவாழுஞ் சிதம்பரனே.” எனவும்,’வேல்கொடுத்தாய் திருச்செந்தூரர்க்கம்மியின் மீது வைக்கக், கால் கொடுத்தாய் நின்மணவாளனுக்குக் கவுணியர்க்கும், பால் கொடுத்தாய் மதவேளுக்கு மூவர் பயப்படச் செங்கோல் கொடுத்தாயன்னையே யெனக் கேதுங் கொடுத்திலையே, எனச் சிவகாமியைத் துதித்துத் தில்லையில் வசித்து ஒருதிருமடங்கட்டி ஆலயமடைந்து ஸ்ரீ நடராஜ மூர்த் தியைத் தரிசித்து ஸ்ரீ நடராஜமூர்த்தி பஞ்சாக்ஷரப்படியில் நாடோறும் வைத்தருளும் ஐந்து பொற்காசு பெற்றுப் படிக்காசுத்தம் பிரான் எனப் பெயரடைந்து சிலநாளிருந்து சிவபதமடைந்தனர். இவர் செய்யுள் பாடுந்திறத்தைப் பலபட்டடைச் சொக்க நாதப்புலவர் புகழ்ந்து ‘மட்டாருந்தென் களந்தைபடிக் காசனுரைத்த தமிழ்வரைந்த வேட்டைப், பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும் பரிமளிக்கும் பரிந்தவேட்டைத், தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னா லும் வாய்மணக்குந் துய்ய சேற்றில், நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந்தானே” எனப்பாடியிருக்கின்றனர். இவர் சந்தப்பாக்கள் பாடுவதில் வல்லவர் என்பதை வெண்பாவில் ” என்னுஞ் செய்யுளாற்காண்க. இவர் பாடிய நூல் புள்ளிருக்குவேளூர்க்கலம்பகம், தொண்டைமண்டலசதகம். |
படியாரிப் பாச்சையர் | வசவர் காலத்து அவரிடத்திருந்த சங்கமர். |
படுகர் | நீலகிரி பக்கத்திலுள்ள ஒருவகைச் சாதியர். இவர்கள் தோடர், கோடர் என இருவகை. இவர்கள் பல வேலைகள். |
படுத்தெழும் ஈச்சமரம் | இது ஒரு ஆச்சரிய மான ஈச்சமரம். இந்தியாவில் வங்காள நாட்டிலுள்ள பரித்பூரிலுள்ள ஒரு தோட்டத்தில் இருப்பது. இது 16 அடி உயரமும், 10 அங்குல கனமுள்ள தாம், இது சூரிய அஸ்தத்தில் படிப்படியாகத் தாழ்ந்து உறங்கி விடுகிறது. சூரிய உதயத்தில் படிப்படி பழையபடி நிமிர்கிறதாம். |
படுமாத்து மோசிகீரனார் | மோசிகீரனார் காண்க. (குறு 33,75,383,) |
படுமாத்தூர் மோசிகான் கொற்றன் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவரது இயற்பெயர் கீரர் கொற்றன். இவரது ஊர் மோசி, படுமாத்துர், பாண்டி நாட்டிலுள்ளவை. (குறு 376) |
படை வகுப்பு | 1. படைத்தலைவன், ஆறு, மலை, காடு, மதில் ஆகிய இடங்களில் எந்தெந்த இடங்களில் அச்சந்தோன்றுமோ அந்தந்த இடங்களுக்கு வியூகமாகச் செய்யப்பட்ட படைகளுடன் செல்லவேண்டும். படைகளின் முன்னணியில் அச்சமுண்டாயின் மகரவியூகம், சேனவியூகம், சூசிவியூக மாதல் வகுத்துச் செல்லவேண்டும். பின்னணியில் அச்சமுண்டாயின், சகடவியூகத்தையும், முன்னும் பின்னுமச்சமுண்டாயின் வச்ரவியூகத்தையும், எல்லாப் பக்கத்திலுமச்சமுண்டாயின் சருவதோபத்திர வியூகம், சக்ரவிகம், வியாளவியூகம் வகுத் தல்வேண்டும். வாத்திய முதலிய ஒலிக்குறிப்பால் செய்யப்படும் படைவகுப்பின் செயல்கள் : திரண்டுகூடல், பாவிநிற்றல், நாற்புறத்துஞ் சுற்றுதல், நெருங்குதல், முன்போதல், விரைந்து போதல், பின்னாக நடத்தல், வரிசையாக எதிர் நோக்கிப் போதல், நேராக எழுந்து நிற்றல், நிலத் திற் புரளுதல், அஷ்டதளம், சக்கிரம், கோளம், ஊசி, சகடம், அர்த்த சந்திரன் ஆகிய இவற்றின் வடிவை யொப்ப விருத் தல், சிற்சிலவாகப் பிரிந்து நிற்றல், ஒழுங்குபட நிரைநிரையாக நிற்றல், படைகளை கையிற்றாங்குதல், அவற்றை உபயோகிக் கக் கையிற் சங்குதல், சித்தஞ்செய்தல், குறியைத் தாக்குதல் பிறவுமாம். (சுக் ~ நீ) 2. (4) அணி, உண்டை, ஒட்டு, யூகம். |
படை வழக்கு | 1, முத்து விளங்கும் ஆபரணத்தையுடைய சின்மன்னன் தம்மில் இனமொத்தவர்க்கு ஆயுதத்தைக் கொடுத் தது. (பு. வெ.) 2. அரசன் படை வழங்கின பின்னர்க் கழல்வீரர் உயர்த்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ.) |
படைகளின் வகை | உரிமைப் படை, துணைப்படை, மூலப்படை, அமயப்படை, வன்படை, மென்படை, பயிற்சிப்படை, பயிற்சியில்படை, குழுப்படை, தனிப்படை, கருவிபெறுபடை, தன்கருவிப் படை, ஊர்திபெறுபடை, தன்னூர்திப் படை எனப் பலவகைப்படும். உரிமைப்படை:வேதன முதவிக்காக்கப்படுவது; இது கூலிப்படை யெனவும்படும், துணைப் படை : நட்புரிமைப்பற்றிக் காரியத்திற்கு துணை செய்வது. மூலப்படை : பல் யாண் டுகளாகத் தொடர்ந்து நிற்பது. அமயப் படை : சின்னாட்களிற் சேர்க்கப்படுவது; இதற்குப் புதுப்படை யெனவும் பெயர். வன்படை : போர் செய்தலில் மனவெழுச்சியுள்ளது; போர் செய்தலில் மனவெழுச்சி யில்லாதது : மென்படை, படை வகுத்துப் போர்செய்தலில் திறமைவாய்ந்தது. பயிற்சிப்படை, அத்திறமை யில்லாதது : பயிற்சியில் படை. அரசனால் நியமிக்கப்படும் படைத்தலைவனையுடையது : குழுப் படை, படைத்தலைவனை யின்றித் தனியே தலைமை கொண்டு போர்செய்வது : தனிப் படை, தலைவனால் தரப்பட்ட அம்பு வாள் முதலிய உடையது : கருவிபெறுபடை, அங்ஙனம் கருவி பெறாமல் தாமே கருவி கொண்டு செல்வது : தன்கருவிப்படை. தலைவனால் தரப்பட்ட வூர்தியை யுடையது : தன்வூர்திப்படை. வேடர் முதலியோரால் கூட்டப்பட்ட படை : காட்டுப் படை. பகைவனை விட்டுத் தன்னிடம் வந்த படை : பகைப்படை, |
படையாச்சி | இவர் பள்ளிகளில் ஒரு வகுப்பார். |
பட்டபாதாசாரியர் | குமாரக்கடவுள் அவதாரமானவர், இவர்க்குப் பட்டகுமரன் எனவும் பெயர். இவர் செய்த எல்கள் கௌமாரம் என்னும் வியாகரணம், பாட்டபிர தீபம் என்னும் மீமாம்ஸை முதலியவாம். இவர் சுதன்வா அரசன் சபையிலிருந்த புத்தரை வாதில் வென்று மலைமீதிருந்து குதித்து வேதம் உண்மையென்று சாதித்து அரசன் வைத்திருந்த பாம்பின் குடத்தில் கையிட்டு அதிலிருந்த திருமால் விக்ரகத்தை எடுத்துக்காட்டிப் புத்தரைக் காணத்தில் இட்டவர். இவர் மாணாக்கர் மண்டனமிசரர். |
பட்டமங்கலம் | இது சோமசுந்தரக்கடவுள் அட்டமாசித்தி அருளிய ஊர்; பட்டமங்கை யெனவும் வழங்கும். சிவகங்கையைச் சார்ந்தது. (திருவிளையாடல்). |
பட்டர் | 1. இவர் திருக்காஞ்சிக்கு அடுத்த கூரம் எனும் ஊரில் ஜனித்த ஆழ்வான் எனும் திருநாமம்கொண்ட கூரத்தாழ்வார் குமாரர். கலி (4224) சுபகிருது வைகாசி. பௌர்ணமியில் அனுஷம் புதன்கிழமை அவதரித்தவர். இவர்க்குப் பராசரபட்டர் என்று உடையவரால் பெயரிடப்பட்டது. இவர் சகோதரர் சீராமப் பிள்ளை. இவர் குழந்தைப் பருவத்தில் பெருமாளுக்கு நிவேதிக்கும் இன்னடிசிலையளாவி விளையாடினமையின் ரங்கபுத்ரர் என்று ஒரு பெயர் இவர்க்குண்டு. இவர் ஒருநாள் ஆழ்வான் திருவாய்மொழி அனுசந்திக்கையில் “உறுமோபாவி” எலும் திருப்பாசுரத்தில் சிறு மாமனிசர் என வருதலின்கண் சிறுமை பெருமை ஒன்றிற் பொருந்துமோ வென்னத் தந்தையார் வடிவுசிறுத்து அறிவு பெருத்தவர்கள் என்று கூற ஏற்றுக்கொண்டவர். ஐந்தாவது வயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருக் கையில் விருதுடன் சென்ற சர்வஞ்ஞபட் டனை ஒருபிடி மண்ணெடுத்து இது என் எனவினாவி அவன் சொல்லாதுநிற்க இது ஒருபிடி மண்ணென்று கூற அறியாத உனக்கு விருதெற்றுக்கு எனக் கர்வபங்கப் படுத்தியவர். இவர் எழாவது ஆண்டில் வேதாத்தியனத்திற்குச் சென்று உபாத்தியாயர் ஓதுவிக்க அத்யயனஞ்செய்து மறு நாள் சென்று மற்றவர்கள் ஓதினதையே ஓதுதல் கண்டு அதை ஓதாமல் விளையாடிக்கொண்டிருக்கத் தாய்தந்தையர் அத்யயனத்திற்குப் போகவில்லையோ வென்று கேட்க இவர் ஓதினதையே மீண்டும் ஓதலால் போகவில்லை யெனத் தாய் தந்தையர் ஆயின் நேற்று ஓதியதைக் கூறுக என அணுவும் பிசகாமல் கூறக்கேட்டுக் களித்தனர். ஒருநாள் பெருமாளைச் சேவிக்கச் சென்று திரைநீக்கி உள் செல்லப் பெருமாள் சினந்து வெளியேறக் கட்டளையிட்டு மீண்டும், அழைத்து வெளியில் சென்ற காலத்தென்னினைந்தா யென்ன, பெருமாளயும் பிராட்டியையும் நினைத்தேனென் நம்மாணை அவ்வாறிருக்கவெனப் பெருமாளால் நியமிக்கப் பட்டவர். இவர் பெருமாள் ஆணையாற் பெரிய நம்பிகளின் சம்பந்திகள் வம்சத்தில் திருமணஞ் செய்யப்பட்டவர். இவரது வேதாந்தோபம் யாசத்தைக் கேட்ட உடையவர் இவர்க்கு வேதாந்தாசார்யர் எனப் பெயரிட்டனர். பின் ஆழ்வானிறக்க அவருக்குச் சாமகைங்கர்ய முடித்துத் தந்தையின் பிரிவாற் முது பெருமாள் சந்நதியில் நிற்கப் பெருமாள் தேற்றி வேதாசார்யபட்டர் என்று பெயரிட்டனர். ஒரு காலத்துப் பலர் கூடி வாதமிட அவர்களுக்குத் தக்கவிடை கூறியடக்கினவர். மற்றொரு காலத்தில் இவரது சர்வஞ்ஞதையை அறிவோ மென்று ஒரு குடத்தில் பாம்பையடைத்து இதில் உள்ளதென்ன என வெண்கொற்றக்குடை யென்று விடைதந்து சர்வஞ்ஞதையை வெளியிட்டவர். இவர் மேல்நாட்டு வேதாந்தியை வெல்லச் செல்லுகையில் அநந்தாழ்வான் பட்டர் எதிர்கொண்டு இவரைத் தழுவி எங்கள் குடிக்கரசு என்றனர். அதுவே இவர்க்கு ஒரு பெயராயிற்று. பின் வேதாந்தியிடம் ஆடம்பரங்களுடன் செல்வின் நாள் பல ஆகும் எனப் பலர் கூறக் கேட்டுப் பிக்ஷவைப்போல் அவனிடம் சென்று பிக்ஷை வேண்ட அவன் என்ன பிக்ஷை யென்ன தர்க்க பிக்ஷை யென்ன அவனுடன் பத்து நாள் வாதமிட்டு வென்று திருவரங்கம் திரும்பியிருச்கையில் வேதாந்தி சந்நியாசித்துக்கொண்டு அடைய, நஞ்ஜீயர் வந்தார் என்றனர். அன்று முதல் வேதாந்திக்கு நஞ ஜீயரென்று பெயர் உண்டாயிற்று. பின் நஞ்ஜீயர் வினாவிய சில வினாக்களுக்கு விடை தந்தருளித் தமது பிரசங்கத்தில் ஐயமுற்று ஆக்ஷேபித்த வித்வான்களுக்குத் தக்க விடை பகர்ந்திருந்தனர். ஒரு காலத்துப் பட்டர் பிரம்மரதத்தில் எழுந்தருளுகையில் நஞ்ஜீயர்பட்டரை யறியாது ஸ்ரீபாதந்தாங்கப் பட்டர் மறுத்தது கண்டு விசனமுற்று நான் பழையபடி கிரகத்தனாதல் தமக்கு விருப்போ எனப் பட்டர் அவரது ஆசார்ய பக்திக்கு வியந்திருந்தனர். சேதுயாத்திரை செய்து திரும்புகையில்வேடன் ஒருவன் குடிலில் தங்கி அவன் கூறிய முயலின் செய்தியால் சரணாகதியினிலையை நஞ்சீயருக்கு அருளிச்செய்து திருவரங்கஞ் சேர்ந்து, வீரசுந்தரன், ஜீரணமான ஆறாவது பிரசாரத்தைப் பழுது பார்க்கத் தொடங்குகையில் அம்மதிலின் சீர்மைக்கு மாறாகவிருந்த பிள்ளை பிள்ளை யாழ்வான் திருமாளிகையைவிட்டுத் திரு மதில் எடுக்கவேண்ட வீரசுந்தான் சம்மதியாது அதனை இடித்ததால் மனஸ்தாபம் கொண்டு தனித்து நீங்கி நடுவழியில் பசி தாகத்தால் வருந்தி கஞ்சியரை யெண்ணினர். ஈஞ்சீயர் ஆசாரியர் போனவழி அறிந்து பொதி சோறும் நன்னீருங் கொண்டு சென்று காலமறிந்து உண்பிக்க உண்டவர். பின்னர் போசளதேசத்து அம்மணியாழ்வானடிமைபுக அவர்க்குக் கடாக்ஷித்துப் போக்கப் போதில்லை அடியேற்கு உய்ய அருள் செய்க என வேண்ட அவர்க்குக் கடற்கரைவெளியை நினைத்திருக்க அருளி அதன் தொழிலையுமருளிச் செய்தனர். திரிபுவன தேவராயனென்கிற அரசன் தன்னரண்மனைக்குப் பட்டரை எழும் தருளவேண்ட மறுத்ததுகண்டு அவனே வந்து பணிய அவனுக்கு உய்யும் வழி அருளிச் செய்தவர். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் உமக்கும் நமக்கும் பணியில்லையென்று விலக அவரை வலிய ஆட்கொண்டவர், பெருமாள் திருவோலக்கம் தெரிசிக்கச் சென்று ஏவலாளன் ஒறுக்க அவனுக்குப் பொறுமை கூறி அவனை ஆட்கொண்டவர், ஒருநாள் பெருமாளுக்குத் திரு ஆலவட்ட கைங்கர்யஞ் செய்து வருகையில் சந்தியா காலந் தவறுதலை மாணாக்கர் அறிவிக்க அது பெருமாளின் கைங்கர்யபார்களுக்கின் றெனப்ரமாணமருளிச் செய்தவர். தாம் உண்ணும் உணவில் வேப்பெண்ணெய் விடக்களிப்புடன் உண்டு ஜிதேந்திரிய சென்று அறிவித்தவர். இவருடைய தாயாராகிய ஆண்டாள் இவரிடம் புத்ரவாஞ்சை வையாது ஆசார்ய பக்தி வைத்திருந்தனள், இவர் திருவரங்கர் சந்நதியில் புராணம் வாசிக்கும் நியமனத்தால் ஸ்ரீரங்கேச புரோகிதர் எனப் பெயர் பெற்றவர். இவர் ஒரு முறை கைசிக புராணத்தைப் பாக்கப் பிரசங்கிக்கப் பெருமாளுகந்து திருமாலை, திருப்பரிவட்டம், திருவாபாணம், திவ்ய சிங்கா தனத்தையுமருளி மேல்வீடு தந்தோமென அங்கீகரித்துத் தாயைச் சேவிக்க ஆண்டாளும் “நலமந் தமில்லாத நாடுபுகு வீர்” என்று வாழ்த்த பட்டரும் “ அம்மாள் அடியேன் வேண்டுவ தீதே” என்று கோஷ்டியிலிருந்து ”அலம்புரிந்த” எனும் பாசுரத்திலுள்ள “அஞ்சிறைப்புள்ளின் தனிப் பாகன்” என்பதையெண்ணப் பெருமாள் தரிசனந்தரத் திருவடி யடைந்தவர். 2. தமிழில் பகவத்கீதை இயற்றியவர். இன்ன இடத்தினரென்று தெரியவில்லை, |
பட்டர்பிரான் | பெரியாழ்வாரைக் காண்க. |
பட்டவை | விவசுவான் மூன்றாவது பாரி. |
பட்டாபிஷேகம் | இச்சடங்கு அரசன் ஒருவன் சிங்காசனத்திற்கு வரும்போது செய்யும் சடங்காம். இது இருக்கு வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இச்சடங்கில் அரசனை அவனுக்காகச் சித்தம் செய்யப்பட்ட சிங்காதனத்தில் உட்காருவிந்து அவன் உட்கார்ந்திருக்கையில் பல புண்ணிய தீர்த்தங்களைக்கொண்டு அரசனுக்குச் சர்வாதிகாரத்தை நிச்சயப்படுத்தவேண்டி வேதருக்குகளால் மந்திரபூர்வமாக அப்புண்ணிய தீர்த்தங்களைப் பிரார்த்தித்து, தேன், தயிர், மது, இரண்டுவிதப்புல், தானியக்கதிர், இவைகள் கலந்த தீர்த்தத் தை அரசன் சிரசில் அபிஷேகம் செய்து பட்டம் கட்டுவது. |
பட்டாரியர் | பட்டு நெய்யும் சாலியர். |
பட்டி | விக்கிரமார்க்கன் தம்பியும் மந்திரியுமா யிருந்தவன், |
பட்டின சுவாமி | ஓர் வணிகன், தன் செல்வம் இழந்து வறியனாய்க் காட்டில் அலைந்து பின் திருவாரூர் அடைந்து சிவபூசை செய்வார்க்குத் தாமரைமலர் விற்றுச் சீவித்துத் தானும் ஒருநாள் சிவபூசை செய்த பலத்தால் மறுபிறப்பில் சூரியகுலத்துப் பத்திர சேநன் எனும் வேந்தனாகப் பிறந்து சிவ பூசைசெய்து முத்திபெற்றவன். |
பட்டினத்தடிகள் | சிவமூர்த்தி குபேரனுடன் பல தலங்களுக்குச் சென்று காவிரிப் பூம்பட்டினத்தையடைய அத்தலத்தில் குபேரனுக்கிருந்த விருப்பத்தைச் சிவமூர்த்தி உணர்ந்து இப்பட்டணத்தில் பிறக்க என்றனர். குபேரன் சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கேட்டு அடியேனை ஆட்கொள்ள வேண்டும் என வேண்டச் சிவமூர்த்தி அவ்வகை அருள்புரிந்து திருக்கைலைக்கு எழுந்தருளினர். அக்கட்டளைப்படி குபேரன் அப்பட்டணத்தில் சிவநேய குப்தருக்கும் அவர் மனைவிக்கும் புத்திரராய்ச் சுவேதாரண்ணியரென்னும் பெயருடன் அவதரித்துச் சகல கலைகளையுங் கற்றுக் கனவில் சிவமூர்த்தி சுவேதாரண்யரைச் சந்நிதிக்கு வரும்படி கட்டளையிட்டபடி சென்று கனவிற்கண்ட உருவுடன் வந்த ஞானாசாரியரிடம் தீக்ஷை பெற்று அவர் எழுந்தருளச்செய்த சிவலிங்க மூர்த்தந்தைப் பூசித்து மகேச்வர பூசையும் நடத்திவந்தனர். இவ்வகை நடத்திவருகையில் செல்வம் குறைந்ததால் தாமும் தாயும் இனிவரும் மகேச்வாபூசைக்குத் திரவியம் இல்லாதிருந்தமைகண்டு விசனத்துடன் நித்திரை செய்கையில் சிவமூர்த்தி வீட்டில் சேமித்துவைத்திருந்த பொருள்களைத் தெரிவித்தனர். சுவேதாரண்யர் பொருள்களை யெடுத்துச் சிவனடிவர்க்குச் செலவிட்டு 16 வது வருஷத்தில் சிவகலை யென்னுங் கற்புடையாளை மணந்து இல்லறம் நடத்திப் பட்டினத்துச் செட்டியாரென்று பெயர்பெற்றுச் சிவசருமர், சுசீலை யென்பவர்கள் கொடுத்த குழந்தையுருவாகிய சிவமூர்த்தியைப் பெற்று அக்குழந்தை நிறையுள்ள பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அக்குழந்தைக்கு மருதப்பிரான் என நாமகரணஞ் செய்து அக்குழந்தையிடம் பல திருவிளையாடல்கள் தரிசித்து அவர் கொடுத்த பெட்டியினிடமாகக் காதற்ற ஊசியும் ஒலையுங்கண்டு துறவு பூண்டு தாயின் ஈமக்கடன் முடிக்க அந்தவூரில் மௌனமடைந்திருந்தனர். இவர் இருந்த நிலையறிந்த தமக்கை பொறாளாகி அப்பத்தில் விஷங்கலந்துதர அதனையறிந்த பட்டினத்தடிகள் அப்பத்தை வீட்டிறப்பில் செருகினர். அது வீட்டைச் சுட்டெரித்தது. பின் தாயார் இறக்க அவளைச் சுற்றத்தவர் மயானத்திற்குக் கொண்டு வந்தனர். பட்டினத்தடிகள் விரைந்து சென்று சுற்றத்தவரை விலக்கிச் சவத்தை, வாழைத் தண்டுகளின் மீதுவைத்துச் சமஸ்காரஞ் செய்து தாய்க்கடன் கழித்து அவ்விடம் விட்டு நீங்கித் திருமருதூரடைந்து சிவமூர்த்தியைத் துதித்துத் திருவாரூரில் இறந்த பிள்ளையை எழுப்பிக் கொங்கு நாடடைந்து இரவில் பசியால் பிக்ஷைகேட்கையில் கள்ளனென்று ஒருவன் அடித்த அடியைப்பட்டு உச்சயினிபுர மடைந்து காட்டிலிருந்த ஒரு கணபதி ஆலயத்தில் நிஷ்டைகூடி இருந்தனர். அந்நாட்டரச னாகிய பத்திரகிரிராஜன் அரண்மனையில் கொள்ளையிடச் சென்ற கள்ளர் எமக்குப் பொருளகப்படின் உமக்கு முத்தாரம் சாத்துகிறோமென்று சொல்வி அரசன் அரண் மனை சென்று திருடி அவ்வழி வருகையில் விநாயகர் மீது முத்தாரத்தை எறிந்தனர், அவ்வாரம் அவ்விடம் நிஷ்டைகூடியிருந்த பட்டினத்தடிகள் திருக்கழுத்தில் விழுந்தது. உலகத்தோற்ற மறியாத பட்டினத்தடிகள் நிஷ்டை நீங்கி வெளியில்வர அரசன் சேவகர் பட்டினத்து அடிகளைப்பிடித்து அரசனிடம் சென்றனர். அரசன் பட்டினத்தடி களைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். அக்கட்டளைப்படி சேவகர் கழுமரத்தடியில் அடிகளை நிறுத்தினர். அடிகள் ” என் செயலாவது” என்ற திருப்பதிகமோதிக் கழுமரத்தை நோக்கக் கழுமரம் தீப்பட்டெரிந்தது. அதுகண்ட அரசன் அச்சமடைந்து அடிகள் திருவடியையடைய அடிகள் கருணை செய்து அரசனைத் திருவிடைமருதூருக்கு அனுப்பித் தாம் பல தலங்கள் தரிசித்துத் திருவிடைமருதூரை யடைந்தனர். இவரிடம் சிவமூர்த்தி சித்த மூர்த்திகளாக வந்து பிக்ஷை கேட்க அடிகள் பத்திரகிரியார் நாய், சட்டி வைத்திருத்தலை யெண்ணிப் பத்திரகிரியான் சமுசாரி அவனிடம் செல்கவென அருளினர். அவ்வாறு சித்தர் சென்று பட்டினத்தடிகள் அருளிய வார்த்தைகளையும் கூறப் பத்திரகிரியார் நாயையுஞ் சட்டியையும் விட்டனர். பின் சிவமூர்த்தி பத்திரகிரி ராஜாவிற்குத் தரிசனம் தந்து முதலில் முத்தியளித்தனர். அடிகள் ஆராமையால் விசனமடைந்து சேந்தனாரைச் சிறையினின்று நீக்கித் திருவண்ணாமலையடைந்து “தாசியைக்கண்டு மயல் கொண்டு அவள் அழைத்தபோது வாராமையால் அவளை நீக்கி, அவளிடம் அருணகிரிநாதர் திருவயதரிக்க அருள் புரிந்து அவ்விடமிருந்து நீங்கித் திருவொற்றியூரடைந்து இடைச் சிறுவரோடு கூடி விளையாடிக்கொண்டி ருக்கையில் ஒருநாள் இடைச்சிறுவர்களை நோக்கி விளையாட்டாகத் தம்மை மூடச் செய்ய அவர்கள் அவ்விதம் மூடச் சிவலிங்க உருவமாயினர். இவாருளிய பிரபந் தங்கள் கோயினான் மணிமாலை, திருக்கழு மல மும்மணிக்கோவை, திருவிடைமரு தூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது முதலியன. இவர்காலம் 11 ஆம் நூற்றாண்டென ஊகிக்கப்படுகிறது. |
பட்டினப் பறவைகள் | இவை மத்திய ஆபிரிக்காவாசி. இவை ஆயிரக்கணக்காய் ஒன்று சேர்ந்து புற்களால் பல கூடுகள் கட்டுகின்றன. அவை (8, 10) அடிகள் உயரத்திலும் அகலத்திலும் கட்டி பட்டினம்போல் வசிப்பதால் பட்டினப்பறவை என்பர். இக்கூடுகளுக்கு வழி பின்புறத்தில் உள்ளது. |
பட்டினப்பாக்கம் | காவிரிப்பூம் பட்டினத்து உள்ளநகர், (சிலப்பதிகாரம்) |
பட்டினப்பாலை | சோழன் கரிகாற்பெருவ ளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய தமிழ் நூல். |
பட்டினவர் | இவர்கள் இந்தியாவின் கீழ்க் கடற்கரையில் கிருஷ்ணாந்தி முதல் கன்யாகுமரி வரையில் வியாபித்திருக்கும் கடலோடிகள். இவர்கள் செம்படவரின் வேறு. இவர்கள் கரையிலிருத்தலால் கரையார் என்பர். பட்டினவர் எனின் கடற்கரை படுத்த பட்டினத்துள்ளார் என்பது. அவ்வாறன்றி இவர்கள் சிவபெருமானுக்குப் பட்டு நெய்து கொடுத்தலால் பட்டு நெய்வோர் பட்டனவர் என மருவிற்றென்பர். தாசராஜன் என்று ஒருவன் ஹஸ்தினபுரத் தருகில் அரசு செய்து கொண்டிருக்கையில் அவன் புத்திரரிலாது வருந்திச் சிவபெருமானை நோக்கித் தவமியற்றினன். சிவபெருமான் தவத்திற்கு உவந்து தாமரைகள் நிறைந்த தடாகத்தைக் காட்டி அதனிடம் போய்ப் பிள்ளைகளை அழையென அங்கனம் அரசன் செய்ய அதிலிருந்து ஐயாயிரம் பிள்ளைகள் வந்தனர். அவர்களில் மூத்தவனுக்கு அரசும் மற்றவருக்குப் பெருஞ் செல்வமும் கொடுக்க மூத்தவனொழிந்த மற்றவர் கப்பலேறி “கரைவழி வந்து தங்கி உள்நாட்டுச் செம்படவரை நட்புக்கொண்டு அவர்கள் தொழிலை கடலிற் செய்தனர். இந்தப் பட்டினவர்கள் சின்ன பட்டினவர், பெரிய பட்டினவர் என இரு வகுப்பார். இவர்களுக்குப் பட்டம் ஆரியர், ஐயாயிரத்தலைவர், ஆர்யநாட்டுச் செட்டிகள், அச்சுவேளாளர், கரை துறைவேளாளர், வருணகுலவேளா ளர், வருணகுலமுதலி, குருகுலவம்சத்தார், பிள்ளை. இவர்கள் உள்நாட்டுச் செம்படவரி னும் உயர்ந்தவர்கள் என்பர். இவர்கள் பெரும்பாலும் சைவர். இவர்கள் மற்ற தேவதைகளையும் வணங்குவர். இவர்களுக்குக் குலதேவதை குட்டியாண்டவன், பாவாடைராயன், படைத்தலைத்தெய்வம். இவர்கள் ஜாதித்தலைவன் யஜமானன். அவனுக்கடங்கி ஜாதியாரிருக்கவேண்டியது. இவர்களது மற்றக் காரியங்கள் இந்துக் களைப் போன்றது. (தர்ஸ்டன்.) |
பட்டினவர் கருவிகள் | பெருவலை, மடி, தளை, மடங்கு, மாட்ளே, உறிக்கயிறு, மேலாவலை, புணைக்கட்டை, மடிக்கட்டை, மதவலை, பெரியமரம், மேங்கா, தைலே மரம், கோக்காமரம், தூரிவலை, குப்பா, கோலாவலை நெற்றிலிவலை, கண்ணிவலை, மாப்பு வலை, இறுக்காவலை, வாழைவலை, வௌவால்வலை, கொண்டைவலை, கடுப்பு, சின்ன கண்ணிவலை, தூண்டில்கள், மேலாமரம், கடப்பா, முண்டுபலகை, தாளா, அல்சா, தண்டு, படகு, கட்டுமாம், துடுப்பு, |
பட்டிமுனி | இவர் பிரமன் அவதாரமாய் மேலைச் சிதம்பரத்தில் தவஞ்செய்து சிவமூர்த்தியின் நடன தரிசனங் கண்டவர். |
பட்டு | ஒரு புழுவினால் உண்டாகும் நூல். இது மிருதுவாயும் இலேசாயும் உள்ளது. இப்பூச்சி வெள்ளை நிறமுள்ள புழு. இது வயதடைந்து பூச்சியாக மாறுகிறது. இது தனக்குக் கூடுகட்ட முசுக்கொட்டைச் செடியில் இடம் கிடைத்தவுடன் தன் தாடையினடிப்புறத்துள்ள பிசின் போன்ற திரவத்தால் தன்னைச் சுற்றிக்கொள்ளுகின்றது. அத் திரவம் காற்றில்பட நூலாகிறது. இது கூட்டிலிருந்து வெளிவந்தவுடன் கூட்டையெடுத்து வெந்நீரிலிட்டு நுனியைக் கண்டு நூலை யெடுக்கின் றனர். |
பட்டு நூல்காரர் | இவர்கள் முதலில் குஜராத்தி தேசத்திலிருந்து வந்தவர் என்கிறார்கள். பின்னும் இவர்கள் சௌராஷ்டகத்திலிருந்து வந்த சௌராஷ்டக பிராமணாளென்று தங்களைக் கூறிக்கொள்வர். இவர்கள் பெரும்பாலும் வைஷ்ணவரும் சிலர் வடமர்களுமாயிருக்கின்றனர். பிராமணரைப்போல் நடை வுடை பாவனை. இவர்களில் பெண்கள் மாத்திரம் பிராமணப் பெண்கள் போல் காணப்படவில்லை. தொழில் பட்டு நெய்தல், மதுரையாண்ட மங்கம்மாள் காலத்து இவர்களுக்குப் பிராமண மரியாதை கொடுக்கப்பட்டதாம். இவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து துரத்தப்பட்டு வடநாடுகளில் குடிபுகுந்து கடைசியாய் மதுரை வந்து சேர்ந்தனர். இவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுவர். கௌண்டர், சாலியர், வைத்தியர், பௌதுலர். அதாவது முதல்வர், மூத்தோர். வைத்தியர், வைதிகர். (தர்ஸ்டன்.) |
பட்டுப்பூச்சியும் பட்டும் | இதன் பிறப்பைப் பூச்சியினம் காண்க. இப்பூச்சி தன்னைச் சுற்றிக்கொண்ட நூற் கூண்டை விட்டு வெளிவராமுன் கூட்டை வெந்நீரிற் போட்டுப் பூச்சை இறக்கச்செய்து நூலைப் பிரிப்பர். இதுவே பட்டு, |
பட்டைப்பேன் | இதுவே மரமூட்டுப்பூச்சி. இது மரங்களின் பட்டைகளின் சாரத்தை உறுஞ்சி ஜீவிப்பது. |
பட்டோஜீதீக்ஷதர் | சித்தாந்த கௌமுதி செய்த வட நூலாசிரியர். |
பணிகொள்வோன் | (பணிச்சவன்) இவன் தமிழ் நாட்டில் வேலை செய்வோன். இவனது வேலை பிரேதம் கண்ட வீட்டார் சொற்படி பிரேத செய்தி கூறிப் பிரேதத்திற்கு வேண்டிய பாடை, பல்லக்கு மற்ற சிறு வேலைகளைச் செய்து சங்கு முதலிய ஊதிப் பிரேதத்திற்கும் கர்மாந்தத்திற்கும் தொழில் செய்வது. இவர்களில் வலங்கை இடங்கைப் பணி செய்வோர் உண்டு. இவர்கள் திருநெல்வேலி முதலிய இடங்களில் நூலச்சு வேலை, கோயில்களில் நாகசுரம் வாசித்தல், செங்கல்பட்டுஜில்லாவில் சவத்திற்குரிய வேலை செய்தல். இவர்களுக்குப் புலவர், பண்டாரம், பிள்ளை, முதலி பட்டம். (தா’ஸ்டன்.) |
பணிக்கன் | இந்தப் பட்டம் மலையாள நாட்டது. இது அவ்விடத்தில் அம்பட்டன், கம்மாளன், மாரன், பாணன், பறையன் முதலியவர்க்கு வழங்கி வருகிறது. சிலர் இந்தப் பட்டங்கொண்டு மதுரை திருநெல்வேலி ஜில்லாக்களில் சாணார்க்குத் தலை சிறைத்து ஜீவிக்கின்றனர். |
பணியர் | இவர்கள் கறுத்த உருவமும் அகன்ற மூக்கும் சுருண்ட மயிரும் உள்ள சாதியார். இவர்கள் வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம் முதலிய காபி தோட்டங்களில் வேலை செய்து அடிமைகளாக உள்ள சாதியார். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தவராகக் கூறப்படுகின் றனர். இவர்களின் பெண்களும் கிழங்கு முதலிய தோண்டித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையுள்ள வேரிலயாட்கள். (தர்ஸ்டன்.) |
பண் | 1. (4) பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. 2. பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் என நான்கு. இவற்றின் திறனாவன, அராகம், நேர்திறம், வன்பு, குறுங்கவி நான்கும் பாலையாழ்த்திறம். நைவளம், காந்தாரம், பஞ்சுரம், படுமலை, மருள், செந்திறம் இவை குறிஞ்சியாழ்த் திறம். நவிர், வடுகு, குறிஞ்சி, திறம் இவை மருதயாழ்த்திறம். நேர்திறம், பியாதிறம், யாமயாழ், சாதாரி, செவ்வழி யாழ்த்திறம். பண்ணின் நரம்புகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, கிளி, விளரி, தாரம் என ஏழு. (வீரசோ.) |
பண் வகை | பண்கள் : பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி. பண் என்பது நிறைந்த நரம்புள்ளது. பாலையாழ்த்திறம் : என்பது குறைந்த நரம்புள்ளது, அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான், பாலையாழ்த்திறத்தின் வகை : தக்கராகம், அந்தாளிபாடை, அந்தி, மன்றல், நேர்திறம், வராடி, பெரியவராடி, சாயரி, பஞ்சமம், திராடம், அழுவகு, தனாசி, சோமராகம், மேகராகம், துக்கராகம், கொல்லிவராடி, காந்தாரம், சிகண்டி, தேசாக்கிரி, சுருதி, காந்தாரம். குறிஞ்சியாழ்த்திறம் : நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சாம், அரற்று, செந்நிறம். குறிஞ்சி யாழ்த்திற வகை : நட்டபாடை, அந்தாளி, மலகரி, விபஞ்சி, காந்தாரம், செருந்தி, கௌடி, உதயகிரி, பஞ்சரம், பழம்பஞ்சுரம், மேகராகக்குறிஞ்சி, கேதாரி, குறிஞ்சி, கௌவாணம், பாடை, சூர்துங்கரா ஈய, நாகம், மருள், பழந்தக்காரம், திவ்யனாடி, முதிர்ந்த இந்தளம், அதுத்ரபஞ்சமும், தமிழ்க்குச்சரி, அருட்புரி, நாராயணி, நட்டராகம் ராமக்கிரி, வியாழக்குறிஞ்சி, பஞ்சமம், தக்கணாதி, சாவகக்குறிஞ்சி, ஆநந்தை மருதயாழ்திறம் : நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம். மருதயாழ்த்திறவகை : தக்கேசி, கொல்வி, ஆரியகுச்சரி, நாகத்வனி, சாதாரி, இந்தளம், தமிழ்வேளர், கொல்லி, காந்தாரம், கூர்ந்தபஞ்சமம், பாக்கழி, தத்தளபஞ்சமம், மாதுங்கராகம், கௌசிகம், சீகாமாம், சாரல், சாங்கிமம். செவ்வழியாழ்த்திறம் : நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை செவ்வழியாழ்த் திநவகை : குறண்டி, ஆரியவேளர், கொல்லி, தனுக்காஞ்சி, இயந்தை, யாழ்பதங்காளி, கொண்டைக்கிரி, சீவனி, யாமை, சாளர், பாணி, நாட்டம், தாணு, முல்லை, சாதாரி, பைரவம், காஞ்சி, மன்னுமந்தாரம். பண் திறம்பையுள், காஞ்சி, படுமலை இம் மூன்றும் (103) வகைப்படும். இன்னும் நேர்திறம் : துக்கராகம் எனவும், காந்தார பஞ்சமம் : ஊழ்ப்பு எனவும், சோமராகம் : குறுங்கலி எனவும், காந்தாரம் : சாரல் எனவும், நட்டபாடை : நைவளம் எனவும், பழம்பஞ்சுரம் : பஞ்சரம் எனவும், கவிவாணம், படுமலை எனவும், அநுத்திரபஞ்சமம் : அயிர்ப்பு எனவும், குறிஞ்சி : அரற்று எனவும், செந்துருதி. செந்திறம் எனவும், தக்கேசி : நவிர் எனவும், வடுகு : இந்தளம் எனவும், பாக்கழி : வஞ்சி எனவும், சிகண்டி : செய்திறம் எனவும், சாதாரி: முல்லை எனவும், நேர்திறம் : புறநீர்மை எனவும் கூறுவா. |
பண்டரன் | பலியின் மனைவியரிடத்துத் தீர்க்க தபசாலுதித்த குமரன். இவன் பேரால் பௌண்டரகதேசம் உண்டாயிற்று, |
பண்டர் | இவர்கள் மொண்டித்தனம் செய்யும் ஒருவிதச் சாதியார். |
பண்டா | இது இமயமலையில் (7000) அடிக்குமேலுள்ள காட்டில் வசிக்கும் பிராணி. இது பூனை போன்று வட்டமான முகமும் நீண்ட, வாலும் மயிரடர்ந்த தேகமும் பெற்ற சாகபக்ஷணி. இது இரவில் பதுங்கியிருந்து பகலில் இரைதேடும். |
பண்டாசுரன் | இவன், சிவமூர்த்தியிடம் ஊடல் கொண்ட பிராட்டி, மன்மதன் இறந்த சாம்பலைநோக்க அதிலிருந்து பிறந்து ஆன்மாக்களின் சுக்கில சோணிதங்களையுண்டு வருத்திவருகையில் தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி உயிர்களையெல்லாம் ஓமத்திலிட்டு எரித்து ஒழிந்து நின்ற பண்டாசுரனைப் பிராட்டியை யேவிக் கொல்வித்தனர். |
பண்டாரத்தார் | 1. இவர்கள் சோழநாட்டு வேளாளரில் உயர்ந்தவர்கள். தீக்ஷாவானவர்கள். சமயம், விசேடம், திருவாணம், ஆசார்யாபிஷேக மடைந்து சிவாலயங்களில் ஓதுவார் மூர்த்திகளாகவும், திருக்கோயில்களில் அணுக்கத்தொண்டராகவும், திருஆவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், சூரியனார் கோவில் முதலிய மெய்கண்ட சந்தானாதிபதிகளாய் மகா கல்விமான்களாய் அம்மடத்துப் பொருள்களை நிர்வகிக்கும் காரிய நிர்வாகராய்ப் பல தேவஸ் தான தருமத்தாபகராய் இருக்கும் நான்கா மாச்ரமப் பண்டார சந்நிதிகள். இவர்கள் சிவாசாரியர்களாய் குருபீடத்தில் அமர்ந்தவர்கள். இவ்வாறாந் தன்மை சில வீரசைவ மடத்திலுமுண்டு, 2. இவர்கள் குடும்பிகளாய் காவி வேஷ்டி யடுத்துத் தேகமெங்கும் விபூதிபூசி லிங்கதாரணஞ்செய்து கோவில்களில் திருவிழா முதலிய ஆகும்காலத்துப் பிக்ஷையெடுத்தும் சிறு மடங்கள் கட்டிக்கொண்டு பங்கியடித்து ஒன்று பாதியாக தேவார திருவாசங்களைப் பிணங்களுக்கோதிக் கண்ட வீட்டில் பிக்ஷை சோறுண்ணும் பள்ளி, ஏகாலி, அம்பட்டன் முதலிய கலப்பு சாதி வேஷக்காரர். இவர்கள் சில பிடாரி கோவில்களில் பூஜாரி வேலை செய்தும் ஜீவிப்பர். இந்தப் பண்டாரப்பட்டம் சில வள்ளுவர்க்கும், பணிச்சவர்க்கும், பறையர்க்கும் உண்டு, |
பண்டாரி | தேவஸ்தான பொக்கிஷதாரன். தேவாங்கரில் ஒரு வகுப்பு. தேவாங்க சாதியாருக்குப் பணிசெய்யும் ஒருவன். கொங்கணி வேதியர் தலைவனுக்கு உதவியா யிருப்பவன். (தர்ஸ்டன்.) |
பண்டி | இருசு, பார், சக்கரம் முதலியவற்றாலாக்கப்பட்டுத் திறந்து மூடியுமுள்ள சகடம். இது ஒன்று இரண்டு முதலிய எருது, குதிரைகளா லிழுக்கப்படுவது. |
பண்டிகாரர் | கொங்கணிவானபர். |
பண்டிதன் | 1. இது வித்வான்களுக்கும் முற்காலத்தில் கோர்ட்டுகளில் இந்து தர்ம சாஸ்திரங்களை நியாயாதிபதிகளுக்கு எடுத் கூறும் தரும சாஸ்திர வித்வான்களுக்கும் பெயர். இப்பட்டம் அம்பட்டன், ஜோசியன், வைத்தியனுக்கும் வழங்கி வருகிறது. 2. அறத்தின் உண்மை யறிந்தவன். 3. திருதராஷ்டிரன் புத்திரன், (பார பீஷ்ம.) |
பண்டிதர் | திரிபுவன தேவன் காலத்து அவன் சபையிலிருந்து வச்சணந்திமாலை யைக் குணவீரபண்டிதர் அரங்கேற்றக் கேட்டவர். |
பண்ணன் | தமிழ் நாட்டுச் சிற்றரசர்களி லொருவன். இவனை மாற்றார்கிழார்மக் னார் கொற்றங்கொற்றனார் ”தனக்கென வாழாப்பிறர்க் குரியாளன் பண்ணன் சிறு குடிப்படப்பை ‘ எனப் பாடப்பட்டவன். (அக ~54.), |
பண்பு | உயிர், உயிரிலாவாகிய பொருட்களின் குணம். (நன்.) |
பதகர் | நீலகிரியிலுள்ள மலைநாட்டார். |
பதங்கள் | 1. சண்முகசேநாவீரன். 2. இவன் பராந்தகன் ஏவலால் விதுலனுடன்கூடிக் காசிப்பட்டணஞ் சென்றிருந்த மகோற்கடருடன் சென்றரை வருத்தி மகோற்கடரால் இறந்தவன். நராந்தகன் சிறியதந்தை. |
பதங்கி | காசிபன்றேவி, தக்ஷன் குமரி, பக்ஷிகளைப் பெற்றவள். |
பதசக்தி விருத்தியைக் கிரகித்தற்கேது | (8) வியவகாரம், உபதேசம், உபமானம், கோசம், வியாகரணம், விவாணம், சந்நிதானம், வாக்கிய சேஷம் என்பன. |
பதஞ்சலி | அத்திரியின் றேவியாகிய அகசூயையிடம் பிறந்தவர். இவர் ஆதிசேடன் அவதாரம். தாருகவனத்தில் சிவமூர்த்தியின் ஆநந்த நடன தரிசனத் தரிசித்த விஷ்ணு மூர்த்தி தனித்து ஆதிசேஷன்மீ திருந்து பரவசப்பட்டுப் புளகாங்கிதம் அடைந்தனர். இதைக்கண்ட சேடன் விஷ்ணுமூர்த்தியை நோக்கி இப்புளகிதத்திற்குக் காரணமென்னவென்றனர். விஷ் ணுமுர்த்தி காரணங்கூறச் சேடன் அத்திருநடன தரிசனங்காண ஆவல் கொண்டு சிவமூர்த்தியை யெண்ணித் தவஞ்செய் கையிற் சிவமூர்த்தி பிரமன் போல் வந்து சேடனை நோக்கி யாது வேண்டுமென்றனர். சேடன் நாம் உம்மிடத்தில் யாதும் வேண்டோமென்று தவந் தொடங்குகையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து யாது வேண்டுமென்றனர். சேடன் பணிந்து தாம் அறியாது செய்தற்கு க்ஷமைவேண்டிச் சுவாமி அடியேன் நடன தரிசனங்காண விரும்புகின்றேன் எனச் சிவமூர்த்தி சேடனை நோக்கி நீ அநசூயையிடம் குழந்தையாய் வளர்ந்து தில்லையடைந்து அவ்விடம் முன்பே நடன தரிசனங் காணத் கவஞ்செய்திருக்கும் வியாக்கிரபாதமுனிவருடன் இருக்க, நாம் அவ்விடம் நடன தரிசனம் தருகிறோமென மறைந்தனர். அவ்வகையே சேடன் ருதுஸ்நானஞ் செய்து சிவத்தியானத்துடன் அஞ்சலி செய்து நிற்கும் அநசூயையின் கரத்தில்விழ அநசூயை பாம்பெனக் கையெடுக்கப் பாதத்தில் விழுந்து பதஞ்சலியெனக் காரணப்பெயரடைந்து சிதம்பரமடைந்து வியாக்கிரபாத ருடனிருந்து சிவமூர்த்தியின் நடன தரிசனங்கண்டு களித்துப் பாணினிசூத்திரத்திற்குப் பாஷ்யம், இன்னும் பல நூல்கள் இயற்றியவர். (கோயிற் புராணம்.) |
பதஞ்சலி முனிவர் ஸ்தோத்திரம் | திருமணம் நிகழ்ந்த பின்பு நடன தரிசனஞ் செய்த பதஞ்சலி முனிவர் சோமசுந்தாக் கடவுளை ஸ்துதித்தனவாகச் சில சுலோகங்கள் மதுரை முதலிய இடங்களில் வழங்குகின்றன; அவை பதஞ்சலிக்கு நடம் புரிந்ததை வலியுறுத்தும். (திருவிளை) |
பதஞ்சலிமுனிவர் | தம் பாஷ்யத்தில் சந்திர குப்தன் புஷ்பமித்திரன் சபையையும் எடுத்து தகரித்தலால் இவர் அவ்வரசர் காலத்திற்குப் பின்னவரெனலாம். |
பதடிவைகலார் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் தாம் பாடிய குறுந்தொகை (323) இல் “பதடி வைகல்” எனப் பாடியிருத்தலி னிவாக்கு இது பெயராயிற்று. |
பதம் | எழுத்துக்கள் தனித்தேனும் தொடர்ந்தேனும் பொருளைத் தெரிவிப்பது. இது பிரிக்கப்படுமாயின் பகுபதம், பிரிக்க முடியாததாயின் பகாப்பதம், இப் பகுபதம் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறுருப்புகள், |
பதரி | 1, வடக்கில் இருடிகள் தவஞ்செய்த இடம், இதில் நரநாராயணர் தவஞ்செய்தனர். பின்னும் வியாசர் முதலியவர் இவ்வனத்தில் இருந்தனர். இது இலந்தைவனம், 2; Badarinath. The temple of Naranarayana is built on the bank of the Bishes Ganga (Alakanands). It was the hermitage of the celebrated Rishi Viyasa. |
பதரீபாசனம் | ஒரு புண்ணிய தீர்த்தம், |
பதளை | உத்தானபாதன் புத்திரனாகிய உத்தமன்பாரி, |
பதவடிவம் | (32) சகளம், பேசகம், பீடம், மஹாபீடம், உபபீடம், உக்ரபீடம், ஸ்தண்டிலம், மண்கேம், பரமீசம், ஆசனம், ஸ்தானீயம், தேசீயம், உபயசண்டகம், பத்ராசனம், பத்மகர்ப்பம், திரியுதம், விருத்தபோகம், கர்ணாஷ்டகம், கணீதபாதகம், சூர்யவிலாசம், சசம்ஹிதம், சப்ரதி சாந்திகம், விசாலம், விப்ரகர்ப்பம், விச்வேசம், விபுலபோகம் விப்ரகாந்தம், விசாலாக்ஷம், விப்ரபுத்தி, விச்வசாராம், ஈஸ்வாகாந்தகம், இந்திரகாந்தகம். (ஸ்ரீ காமிகாகமம்.) |
பதவி | (4) சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்யம், இவற்றுள் கடவுளின் உலகம் அடைதல் சாலோகம். கடவுளின் சமீபத்தில் இருத்தல் சாமீபம், கடவுளின் உருவு அடைதல் சாரூபம், கடவுளை ஒன்றி வாழ்தல் சாயுச்யம். |
பதாபாசனம் | இது ஒரு தீர்த்தம். இதில் ஒருகாலத்துப் பன்னிரண்டு வருடம் க்ஷாமம் நேரிட ரிஷிகள் இத்தீர்த்தம் விட்டு உணவின் பொருட்டு இமயஞ் சென்றனர். தனித்த அருந்ததி இத்தீர்த்தக்கரையில் தவமேற்கொண்டிருந்தனள். சிவமூர்த்தி இவளது நியமமறிய இருடியாய் வந்து இலந்தைப் பழங்களைத் தந்து பாகஞ் செய்யக் கூறினர். இவள் அந்தப் பழங்களைப் பாகஞ் செய்துகொண்டே வந்த இருடியைக் கதைகள் சொல்லக் கேட்டனள். இக்கதையால் பன்னிரண்டு வருடங்கள் சென்றன. ருஷி அருந்ததியை ஆசீர்வதித் தேகினர். ஷாமம் நீங்கியது. ருஷிகள் வந்து சேர்ந்தனர். தீர்த்தம் சிவபிரானால் ஆசீர்வதிக்கப்பட்டது. (பார ~ சல்லி.) |
பதிசேவன விரதம் | இது தன் நாயகனே தெய்வமென்றும் வேறு தெய்வம் போற்றாளாய் நாயகனையே சேவித்திருக்குங் குலமகள் செய்யும் விரதம், இது நாரி தான் மணங்கொண்ட நாள் தொடங்கி நாடோறுங் குலமகள் தன் கொழுநனைப் பேணிப் பூஜிக்கும் விரதம். இவ்விரதம் அநுட்டித்தோர் பதிவுலகம் அடைவர் என ஸ்காந்தபுராணம் கூறுகிறது. ஸ்திரீகளுக்கு இதனினும் மேலான விரதம் இன்று. இது சர்வவிரதங்கள், தீர்த்தங்கள், தர்மங்கள், ஷேத்ரங்கள், யஞ்ஞ, யோக, போகங்களினும் உயர்ந்ததாகும், இன்னும் பலவிரதங்கள் உண்டு. அவை (1) தேவவிரதம். (2) ருத்திரவிரதம். (3) வீரவிரதம். (4) பிரீதி விரதம். (5) சௌரிவிரதம், (6) காமவிரதம் (7) சிவவிரதம். (8) சௌமிய விரதம். (9) சௌபாக்கியவிரதம். (10) சாரஸ்வதவிரதம். (11) சம்பத் விரதம். (12) சுத்திவிரதம். (13) கீர்த்திவிரதம். (14) காமதுக்விரதம். (15) பித்ருவிரதம். (16) ஆனந்த விரதம். (17) ராஜ்ய விரதம். (18) அஹிம்சா விரதம், (19) சூரியவிரதம். (20) விஷ்ணுவிரதம். (21) சீலவிரதம். (22) தீபவிரதம். (23) தீப்பியவிரதம். (24) சாந்தி விரதம். (25) பிரம்மவிரதம். (26) சுவிரதம். (27) கல்பவிரதம் (28) பீம்விரதம். (29) தாரவிரதம், (30) மகாவிரதம். (31) பாவிரதம். (32) பிராப்தி விரதம். (33) சுகதிவிரதம். (34) வைஸ்வானாவிரதம். (35) கிருஷ்ண விரதம். (36) தேவிவிரதம். (37) பானுவிரதம், (38) விநாயகவிரதம். (39) காலவிரதம், (40) சௌர விரதம். (41) நாராயணவிரதம். (42) வருஷ விரதம். (43) பிராஜா பத்திய விரதம். (44) திரியம்பக விரதம். (45) கிருத விரதம். (46) இந்திர விரதம், (47) சதாசிவ விரதம். (48) அஸ்வ விரதம். (49) கஜவிரதம். (60) நிர்துக்க விரதம். (51) வருண விரதம், (52) சந்திர விரதம். (53) ருத்திர விரதம். (54) பவானி விரதம். (55) ஸ்நாபக விரதம், (56) தாம விரதம். (57) சிகிவிரதம். (58) விப்ரவிரதம். முதலியன. (மச்சபுராணம்) |
பதினான்காம் நாள் இராச்சண்டை | பதினான்காநாளிரவில் இருபடைகளும் போரிடுகையில் கடோற்கசளை வருவிக்க என, அவ்வாறு செய்யக் கடோற்கசன் வந்து அன்றிரவு பெரும்போர் மாயைகளுடன் செய்து பலரைவருத்திக் கன்னனுடன் போரிடுகையில் கன்னன் விடுத்த வேலால் மாய்ந்தனன். |
பதினான்காம் நாள் யுத்தம் | பதினான்காம் நாள் அருச்சுநன் தருமரைக் காணத் தருமர் அருச்சுனை நோக்கி, எது உன் முகத்தில் மலர்ச்சியென விஜயன் தான் கண்ட கனாநிலை யுரைத்துக் கண்ணனைப் புகழ்ந்து இராஜமண்டல யூகம் வகுப்பித்து அதினிடை நிற்க, துரோணர் சூசிகாயூகம் வகுத்து அதில் சயத்திர தனையிருத்தி வேறு ஐந்து யூகங்கள் வகுத்து நின்றார்கள். இதற்குள் அருச்சுநன் சாத்தகியை நோக்கித் தருமபுத்திரரைக் காக்கக் கூறி யூகத்திற் சென்று துன்முகனையுந் துச்சாதனனையும் ஓடச்செய்யத், துச்சாதனன் துரோணர் தேரின் பின் சென்று ஒளிக்க அருச்சுநன் துரோணருக்குத் தன் சபதங்கூறி வழிவிடக் கேட்கத் துரோணர் என்னுடன் யுத்தஞ் செய்துபோக எனக்கேட்டு ஒருவாறு துரோணரை விட்டு விலகி யப்பாற் சென்று கிருதவன் மனை மூர்ச்சையடையச் செய்து சுதாயு வந்தெதிர்த்துக் கதைவிட அதைக் கண்ணன் தன் மார்பிலேற்க அவனைக் கொன்று, அப்பாற். சுதீஷணனைக் கொன்று பின் சுதாயு, நியுதாயு, தீர்க்காயு, முதலியவரைக் கொன்று விந்தானு விந்தர் வந்து தடுக்க அவரைக் கொன்று இவ்வாறு பதினைந்து நாழிகைக்குள் ஏழக்குரோணி சேனைகளை மடித்துக் குதிரைகளின் இளைப்புத் தீரக் கண்ணன் நீர் வேண்டுமென வருணாஸ்திரத்தால் தடாக மொன்றுண்டாக்கிக் குதிரைகளுடன் தாங்களும் இளைப்பாறியிருக்கத் துரியோதனன் சேனை மடிந்தமை கண்டு துரோணரை நொந்து கூறத் துரோணர் அவனுடன் சண்டை செய்ய என்னாலாகாது நீயே செல்க என ஒரு கவசத்தை யுதவி யுத்தத்திற் கனுப்பினர். இத்துரியோதனனுடன் அருச்சுநன் யுத்தஞ் செய்ததால் களைத்துச்சாயக் கண்ணன் பாஞ்சசந்யம் பூரித்துக் கௌரவர் சேனை மூர்ச்சிக்கவும், அருச்சுநன் மூர்ச்சை தெளியவுஞ் செய்தனர். பின் கண்ணன் அருச்சுநனை நோக்கி நீ யேது கவசத்திற்குப் பயந்தனைபோலும், அது இந்திரன் கொடுத்த கத்தியால் அழியும் என்று கத்தியைத் தந்து வில்லை வளைத்து எய்க என்ன அருச்சுநன் அவ்வாறு செய்யத் துரியோதனன் கவசம் பிளந்து பொடிபடப் பின்னிடைந்தனன். இப்பால், தருமபுத்திரர் தேவதத்தத்தொலி முன்னாகப் பின் பாஞ்சசன்னியத்தொலி கேட்டதால் எதோ தவறெனச் சங்கித்துச் சாத்தகியைப் பார்த்துவர ஏவ, அவரை வழியில் கிருதவன்மன் எதிர்க்க அவனை வென்று இப்பால் துச்சாதனனையடிக்க அவன் துரோணருடன் முறையிடத் துரோணர் அவனை நிந்தித்தனர். அருச்சுநன் நிலையறிய வந்த சாத்தகி மீளாமையால் அருச்சுநனிலை யறிந்துவாப் பீமனைத் தருமர் அனுப்ப வீமன் துரோணரது சேனைக்கருகில் வருதலைக் கண்டு சேநாவீரர்களும் துரியோதனன் ஏழு தம்பியரும் எதிர்க்க அவர்களைக் கொன்றனன், இதைக் கண்டு துரோணர் எதிர்க்க அவர் தேரைத் தூக்கியெறிந்து பொடியாக்கி அவரையுங் கலங்கச் செய்து அப்பாற்சென்று சாத்தகியையும், பின் கிருஷ்ணார்ச்சுநர்களையுங் கண்டு வீமன் தன் சங்கத்தைப் பூரித்தனன். மற்ற நரநாராயணர்களும் சங்கம்பூரித்தனர். இதைக் கேட்டுத் தருமபுத்திரன் களிப்படைந்தான். பின்பு இவ்விருவருடனும் துரியோதனன் முதலியோர் எதிர்க்க அவர்களைப் புறங் கொடுக்கச் செய்து கன்னனைப் பதின் மூன்று முறை வென்று பின்னிடச் செய்து துன்முகன் முதலிய வரியோதனன் தம்பியர் இருபத்தெழுவரைக் கொன்று, விகர்ணன் எதிர்க்க நீ நல்லொழுக்கமுள்ளவன் உன்னோடு நான் போரிடேனென்று விலக அவன் என் துணைவர்களிறக்க நான் தனித்திரேன் என்று வலியச்சண்டைக்கு வர அவனையுங் கொன்று கன்னன் எதிர்க்க அவனுடன் போரிட்டுக் கதையிழந்தனன். இப்பால் சாத்தகியுடன் பூரிசிரா, அலம்பு தன் இவர்கள் போரிடுகையில் சாத்தகியைத் தள்ளிப் பூரிசிரா வாளால் வெட்டத் துணிகையில் அருச்சுநன் கண்ணன் சொற்படி அவன் கரத்தைத் துணிக்கப் பூரிசிராவைச் சாத்தகி கொன்றான். இப்பால் அருச்சுநன் கன்னனைத் தூஷித்து அவனுடன் பொருது பின்னிடச் செய்து சயத்திரதனைத் தேடிச் செல்கையில் துரியோதனன் வேண்டுகோளால் மீண்டும் கன்னன் அருச்சுரனுடன் போரிட்டுப் பின்வாங்குகையில் கண்ணன் தம் சக்கரத்தால் பொழுதினை மறைத்தனர். பொழுதின் மறைவுகண்ட அருச்சுநன், காண்டீ வத்தைப் பூமியில் வைக்கக் கண்ணன் ஏன் வில்லைப் பூமியில் வைத்தனை யென அருச்சுநன் சபதப்படி செய்வேன் என்று தீப்பாய விருக்கையில் துரியோதனன் கேட்டுச் சயத்திரதனை யானை மீதேற்றிக் கொண்டுவந்தான். இப்பால் தருமபுத்திரர் தேவதத்தத்தொலி கேளாமையால் நானும் அருச்சுனுடன் தீப்பாய்வேன் என்று கூறினர். இவ்வகை அருச்சுநன் தீப்பாய இருக்கையில் கண்ணன் அருச்சுநனை நோக்கி அருச்சுநா அதோ பொழுதிருக் கிறது சயத்திரதனைக் கொன்று அவன் தலை சிமந்த பஞ்சகமடுவில் தவஞ்செய்து கொண்டிருக்கும் அவன் தந்தையின் கரத்தில் விழச்செய்க என அருச்சுநன் அவ்வாறு செய்யச் சயத்திரதனுடன் அவன் தந்தையு மிறந்தனன். இவ்வாறு இறந்த சயத்திரதனைப் பற்றித் துரியோதனன் விசனப்படுகையில் துரோணர் அவன் விசனத்தைமாற்றி நான் போர்செய்வேனென்று போரிடுகையில் அஸ்வத்தாமன் அஞ்சனவன்மன் முதலியோரை மாய்த்தான், வீமன் வாகுலீகன் தம்பியர் பன்னிருவரை மாய்த்தான். இவ்வகை இருக்கையில் சூரியன் அத்தமித்தனன். |
பதினாறாம் நாள் யுத்தம் | துரியோதனன் கன்னனுக்குச் சேதாபதிபட்டங் கொடுத்தனன், கன்னன் யுத்தகளம் நெருங்கி யுத்தஞ்செய்கையில் வீமன் கேமதூர்தியைக் கொன்றான். கன்னன் அருச்சுகனுடன் சண்டையிட்டு இளைக்க விஜய்ன் இன்று போய் நாளை யுத்தத்திற்கு வாவென்று கூறினன். பின் அருச்சுநன் கிருஷ்ணன் கட்டளையால் சஞ்சாத்த கோபாலரைக் கொன்று நிற்கையில் தருமர் துரியோதனனை யெதிர்த்து நிராயுதனாக்கிப் பழிக்க மரண மூர்ச்சையடைந்த துரியோதனன் ஓடி மறைந்தனன். சூரியனும் மறைந்தான். |
பதினெட்டாம் நாள் இராச்சண்டை | பதினெட்டாநாளிரவு அசுவத்தாமன் பாண்டவர்களைக் கொல்லப் பாசறைக்குச் சென்றபோது ருத்ரமூர்த்தி பூதவுருக் கொண்டு எதிரில் வெருட்ட அஞ்சினன். பின்னவனைத் தேற்ற அசுவத்தாமன் வேண்ட ருத்ரமூர்த்தி ஒருவாள் அருளி, இன்றிரவு எவரைச் சந்திக்கினும் வாளால் வெல்வாய் என்று மறைந்தனர். அசுவத்தாமன், இளம் பஞ்சபாண்ட வர்களையும், சோழனையும் மடித்தனன். இதைக்கேட்ட வீமன் அசுவத்தா மனைப் போர்க்கழைக்க அஸ்வத்தாமன் கோபித்துப் பிரமாஸ்திரம் விட அதுகண்டு அருச்சுநனும் பிரமாஸ்திரம்விட இரண்டும் போர்செய்ய வியாசர் சரங்களை மீட்கக் கட்டளையிட அருச்சுநன் சரம் அசுவத்தாமன் சிரோ மணியைக் கொண்டு மீண்டது, அசுவத்தாமன் கணை பாண்டவர் தேவியரின் கருவழிக்கச் செல்கையில் உத்தரையின் வயிற்றிலிருந்த பரிச்சித்தைக் கண்ணன் காத்தனர். மற்ற கருக்களையழித்த அசுவத்தாமனுக்கு (3000) வருஷம் குட்டநோய் அனுபவிக்கக் கண்ணன் சாபமளித்தனர். இவ்வாறு பாரத யுத்தம் முடிந்தது. பிறகு திருதராட்டிரன் தன் புத்திரர்களுக்குத் திலதர்ப்பணாதிகள் முடித்து வனஞ்செல்ல வியாசராற் றூன்டப்பட்டுக் காந்தாரியுடன் குந்தியும் உடன் வரச் சதரூபருடைய ஆசரமம் சென்று பர்ணசாலை செய்து கொண்டு (6 வரு) இருந்து காட்டுத்தீயில் பிரவேசமாயினன். பிரபாச தீர்த்தக்கரையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டிறந்தனர். பல ராமர் தேக நீங்கினர். கிருஷ்ணமூர்த்தியும் வேடன் அம்பு எறுண்டிறந்தனர். பின் தருமர் தம்பியருடன் (36 வரு) அர சாண்டு பின் தவமேற்கொண்டு இமயமடைந்து (9 வருடங்களுக்கு பின் சுவர்க்கமடைந்தனர். |
பதினெட்டாம் போர் | துரியோதனன், இறந்த சுற்றத்தினர்க்காகத் துக்கித்துச் சகுனியால் தேறி யுத்தம் தொடங்க வீமனால் துரியோதனனாதியர் மூர்ச்சித்தனர். நகுலன் சகுனியின் சிரத்தைக் கண்டிதான். பின் துரியோதனன், சிறிது சேனைகளுடன் யுத்தத்திற்கு வந்து சேனையிழந்து ஓடி ஒருமடுவில் ஒளிக்க அச்வத்தாமனால் தேறி வீமனால் வெளிப்பட்டுச் சிமந்த பஞ்சக நதிக்கரையில் தருமர் சண்டையை நிறுத்தக்கேட்க அவரைப்பழித்து வீமனால் தொடைமுரியு அடிபட்டுப் போர்களத்தில் விழுந்தனன். தொடைமுரிந்து விழுந்தவனை வீமன் உதைக்கத் தருமரும் பலராமரும் கோபிக்கக் கிருஷ்ணமூர்த்தி அவர்களது கோபத்தைத் தணித்தனர் பின் திருதராட்டிரன் காந்தாரி முதலியோர் விசனப்படக் கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தேற்றினர். பின் கண்ணன் அருச்சுநனைத் தேர்விட்டிறங்கக் கூற உடனே தேர் எரிந்தது. பின் துரியோதனன், வீமன் தனக்குச் செய்த தீமைகளை அசுவத்தாமனுடன் கூறி வருந்தி அசுவத்தாமனுக்குச் சேதாபதிபட்டங் கட்டினான். |
பதினெண்கணத்தவர் | அமரர், சித்தர், அசார், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாயவாசியர், போகபூமியர். (பிங்கலம்.) |
பதினெண்கீழ்கணக்கு | 1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னாநாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழிநாற்பது, 7. ஐந்திணையைம் பது, 8. ஐந்திணையெழுபது, 9. திணை மொழியைம்பது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. கைந்நிலை, 12. திருக்குறள், 13. திரிகடுகம், 14. ஆசாரக்கோவை, 15. பழமொழி, 16. சிறுபஞ்சமூலம், 17. முதுமொழிக்காஞ்சி, 18. ஏலாதி என்பனவாம். இப்பதினெட்டில் திணை யைப்பற்றிய நூல் ஒன்று இருத்தல்வேண்டும். அதன் பெயர் தெரியவில்லை. |
பதினெராந்திருமுறை | இது திருவாலவாயுடையார், சேரமான் பெருமாணாயனாருக்கு அருளிச்செய்த திருமுகப்பாசுரம். காரைக்காலம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம், திரு இரட்டைமணிமாலை, அற்புதத் திருவந்தாதி, ஐயடிகள் காடவர்கோன் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பா, சேரமான் பெருமாணாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திரு ஆதியுலா, நக்கீரதேவர் அருளிய கைலைபாதி காளத்தி பாதியந்தாதி, திருவீங்கோய்மலை யெழுபது, திருவலஞ்சுழிமும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந் தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை திருக்கண்ணப்பர் திருமறம், கல்லாடர் அருளிய திருக்கண்ணப்பர் திருமறம், கபி லதேவநாயனார் அருளிய மூத்தநாயனார் இரட்டைமணி மாலை, சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி, பரணதேவநாயனார் அருளிய சிவ பெருமான் திருவந்தாதி, இளம் பெருமானடிகள் அருளிய சிவபெருமான் திருமும் மணிக்கோவை, அதிராவடிகள் அருளிய மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை, பட்டினத்தடிகள் அருளிய கோயினான் மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் திருமும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது, நம்பியாண்டார் நம்பியருளிய திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணிமாலை கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, திருஞானசம் பந்தர் திருவந்தாதி, திருஞானசம்பந்தர் திருச்சண்பை விருத்தம், திருஞானசம்பந் தர் திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் திருவுலா, திருக்கலம்பகம், திருத்தொகை முதலிய பிரபந்தங்களின் திரட்சி, |
பதினேழாம்நாள் யுத்தம் | இருவர்சேனைகளும் போர்தொடங்கத் தருமபுத்திரர் கிருஷ்ணமூர்த்தியைப் பிரார்த்தித்து யுத்த சந்தத்தராயினர். கன்னன், துரியோத னனை நோக்கி இன்றைக்கு எனக்குச் சல்லியனைச் சாரதியாகச் செய்வித்தால் நலம் என அவ்வாறே துரியோதனன் வேண்டு கோளால் கன்னனைச்சினந்து பின் ஒரு வாறிசைந்து அருச்சுநனை வெல்வேனென்ற கன்னனைப்பழிக்கச் சல்லியனும், கன்னனும் ஒருவர்க்கொருவர் வாட்போர் தொடங்கத் துரியோதனன் சமாதானஞ் செய்தனன். பின் கன்னன் பாண்டவர் சேனை யைக்கண்டு பயந்து குறைகூறிச் சண்டை தொடங்கினன். கன்னன், தரு மருடன் போரிட்டுத் தருமரை நிந்தித்தனன். இதற்குப் பின் கன்னன் அருச்சு னுடன் போரிட அருச்சுநன் இவனை வெற்றி பெறாது பாசறை புகுந்தனன். கண்ட தருமர் அருச்சுநன் வெற்றி பெறாது மீண்டது பற்றி ஏச அருச்சுநன் தருமரைக் கொல்வேன் என்று சினந்தெழக் கண்ணபிரானால் தடுக்கப்பட்டு யுத்தத்திற்குச் சென்றனன். இந்த யுத்தத்தில் துச்சாதனனும் அவன் தம்பிமாரும் இறந்தனர். பின் கன்னன் மிகுந்த கோபமுற்றுச் சல்லியனைப் பழித்து வீமனுடன் எதிர்த்துப் போரிடுகையில் விடசேநன் நகுலனை வென்றார்க்க அருச்சுநன் அவன் தலையைக் கொய்தனன். இதனால் கன்னன் விசனமுறச் சல்லியன் தேற்றினன். பின், அருச்சுநனை வெல்லத் தேரோட்டச் சல்லியனுடன் கூறச் சல்லியன் இன்றைக்குச் செல்லின் வெற்றிபெறாய் என்னக்கேளாது அருச்சுநனுடன் போரிட்டனன். இந்த யுத்தத்தில் அருச்சுநன் வெற்றி பெறாமை கண்ட கண்ணன் கன்னனிடம் வேதியராகச் சென்று அவனது தருமத்தைத் தானம்வாங்கிமீண்டு அருச்சுகனைப் பாணம் பிரயோகிக்க ஏவ அருச்சுநன் அவ்வாறு செய்யக் கன்னன் இறந்தனன், கன்னனது மரணங்கேட்ட குந்தி புலமபக்கண்ட பாண்டவரும் புலம் பக்கண்டோர், ”காடாண்டாரும் பாண்டவர், நாடாண்டாரும் பாண்டவர் ” என்னப் பாசறை இருவரும் புகுந்தனர். |
பதினைந்தாம் நாள் யுத்தம் | பதினைந்தா நாள் இருபடைகளும் யுத்தகளம் புகுந்து யுத்தஞ்செய்கையில் துரோணர் பாண்டவர் சேனைகளை அதஞ்செய்து நிற்கச் சப்தருஷிகளும் துரோணரையணுகி நீர் வேதியர் இவ்வசை யுத்தஞ் செய்தல் உமக்குத் தகாதெனத் துரோணர் ஓய்ந்திருக்கையில் கண்ணன் திட்டத்துய்மனைத் துரோணரிடம் போரிடக்கட்டளையிட்டுத் தரும புத் திரரிடஞ் சென்று அசுவத்தாமா எனும் மாளவன் யானை போரிடைமாய்ந்த தென்றுகூறின் அசுவத்தாமன் போரிடைமாய்க்ததாக எண்ணித் துரோணர் உயிர் விடுவர் என்று கூறத் தருமர். நான் பொய்கூறேனென்று அசுவத்தாமா அதாகுஞ்சாமென்று சங்கம் பூரித்த மாத்திரையில் கண்ணன் பாஞ்சசன்னியம் பூரித்துக் குஞ்சா மென்பதை மறுக்கக்கேட்ட துரோணர், மகன் மாண்டான் என்று அசைவறச் சுவானு பவத்திலிருக்கையில் திட்டத்துய்மன் துரோணர்மீது அம்பேவித் தலையை யறுத்தனன். இதையறிந்து அசுவத்தாமன் அக்னியாஸ் திரம், நாராயணாஸ்திரம், பிரயோகஞ்செய்தும் பயனற்றிருக்கையில் வியாச பகவான் தோன்றி, அவனுக்கு ஊழின் வலி கூறக் குருக்ஷேத்ரம் அனுப்பப் பாண்டவரும் பாடி வீடு புகுந்தனர். பொழுது சாய்ந்தது. |
பதினொராமகாள் | இருவர் சேனைகளும் யுத்தஞ் செய்யத் தொடங்குகையில் துரியோதனன் துரோணரைச் சேநாபதியாக்கி இன்று தருமரைப் பிடித்துத் தருக எனக் கூறிய செய்தியை யருச்சுநன் தூதராலுணர்ந்து தமயனைக்காக்க வெண்ணிப் போர்க்களம் புகுந்து போரிடுகையில் துரோணர் தருமருடனும், அருச்சுநன் கர்ணனுடனும், போரிட்டனர். இதில் சகாதேவன் சகுனியின் தேரையழித்து அவன் தேர்ப்பாகனையுங் கொன்றான். ஒரு பால் சல்லிய னுடன் நகுலனும் போரிட்டான். மற்றோர் பால் விராடனும் கன்னனும், துருபதனும் யாகசேநனும், பகதத்தனும், சோமதத்தனும், இலக்கணனும் அபிமனும் போர்செய்தனர். இவ்வாறிருக்கையில் இலக்கணகுமரனை அபிமன் பிடித்துச் செல்லுகையில் சயித்திரதன், சல்லியன், கன்னன் மூவரும் எதிர்க்கக் கண்ட வீமன் சல்லியனுடன் போரிட்டு அவனை மூர்ச்சையாக்கினான். அத்தரு ணத்தில் அபிமன்யு வீமனை நோக்கி நான் அவனை வெல்லேனா எனக்கு நீங்கள் உதவி வரவேண்டுமோ எனப் பேசிக்கொண்டிருக்கையில் இலக்கணகுமரன் தப்பியோடிச் சென்றான். பொழுது சாய்ந்தது. |
பதினொருதிசைகள் | 1 வது ஏழுகிரகங்களுக்கும் விதித்த நக்ஷத்ர திசைகள், 2 வது உற்பன்னதிசை, 3 வது மிருத்யு திசை, 4 வது பிராணதிசை, 5 வது ஆதானதிசை, 6 வது வாமதிசை, 7 வது உடுதிசை, 8 வது நிரியாணதிசை, 9 வது மகாப்பிராண திசை, 10 வது குளிகநிர்யாண திசை, 11 வது காலசக்ரதிசை, |
பதின்மூன்றாம் நாள் யுத்தம் | இருதிறத்தவரும் போர்க்கெழுந்து துரோணர் தம் சேனைகளைப் பதும, சூசிக, சக்ரயூகங்களாக வகுத்தனர். திட்டத்துய்மன் தன் சேனைகளை மகரயூகமாக வகுத்துப் போர் செயத் தொடங்குகையில் துரோணர் திட்டத்துய்மனை வருத்த அவன் தருமனையணுகக்கண்டு தேற்றிப் பதுமயூகத்தை நீயுடைக்கவென அவ்வாறு சென்று பதுமயூகத்தைக் கலக்கிப் போரிட்டு அரசர்களை யதஞ்செய்கையில் வீமனும் அவற்குத் துணையாய்ப் போரிடத் துரியோதனன் சேனைகள் அடிபடுகையில் துரியோதனன் சயத் திரதனை நோக்கி, நீ, அபிமனுடன் வீமன் நெருங்காவகை செய்க என அவ்வாறு போரிடுகையில், துரியோதனன் பல வீரர்களுடன் அபிமன்யுவை நெருங்கிப் போரிட அபிமன் பலரை வென்று தின்முகனைக் கொன்று வீமனுக்குத் துணை வரத் திரும்புகையில் விடசேனனை மாய்த்துத் துரியோத னனை வருத்தத் துரியோதனன் இலக்கண குமரனை அவன்மீதேவ அவன் வந்து போரிட்டு மாய்ந்தான். பின் அபிமன், சக்ரயூகத்தைப் பேதிக்கையில் அபிமன்னுடன் சயத்திரதன் எதிர்த்து அபிமன்னுவை மாய்த்தான். இதனைத் தருமன் முதலியோர் அறிந்து விசனமுறுகையில் வியாசர் தேற்றினார். இச்செய்தியறியா அருச்சுநன் சஞ்சத்தவரை வென்று மீளுகையில் அபிம னிறந்த செய்தியறிந்த கண்ணன், இந்திரனை வேதியவுருக் கொண்டு தீக்குழியில் அருச்சுநன் காண விழ ஏவ, அவன் அவ்வாறு செயக்கண்ட அருச்சுநன், என் தீயில் விழுகிறீர் எனக் கேட்க, என் மகன் மரணங்கேட்டிறக் கின்றேனெனக் கூறுகையில் அருச்சுநன் சமாதானங்கூற அந்தணன் உன் மகன் இறப்பின் நீ இவ்வாறு செய்யாதிருப்பின் நானிவ்வாறு செய்யேனெனக் கூற உடன் படக்கேட்டு மீண்டு, தேரேறித் தூர்நிமித்தங்கள் கண்டு மாயனை நோக்கி இன்றேதோ தீது விளைந்ததென்று பின் அபிமனிறந்த செய்தி கேட்டு விசனமடைந்து தீயில்விழ முயலுகையில் வேதியனாகிய இந்திரனால் தடையுண்டு நாளைச் சூரியாத்தமனத்திற்கு முன் சயத்திரதனைக் கொல்லச் சபதங்கூறிக் கண்ணனைச் சிவபெருமானாகப் பூசித்து நித்திரை செய்து கண்ணனுடன் திருக்கைலையடைந்து, கண்ணன்மேற் சாத்திய மலர்களைச் சிவ பெருமான் மீது கண்டு நீரில் முழுகி இருடியால் தருவித்த அத்திரத்தைப் பெற்று மீண்டு கனாநிலை யுரைத்தனன். பொழுது போயிற்று. |
பதிரிகாஸ்ரமம் | இங்கு நரனுடன் நாராயணனிருக்கிறான். இவ்விடம் கொடுக்கப்படும் தானமும் தவமும் செபிக்கப்பட்ட மந்திரமும் விசேஷ பலனைத் தருகிறது. விசேஷமாய் அவ்விடம் மஹாதேவர்க்குப் பிரீதியான தீர்த்தமாகிய கங்கையிருக்கிறது. இவ்விடம் பிதுர்கர்மம் செய்பவன் தன் குலத்துப் பிதுர்க்களையெல்லாம் துன்பத்தினின்று கடக்கச் செய்கிறான். இங்கு சுடுகையுடன் கூடிய தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இதில் சந்திர சூரியர்கள் முதலி யோர் கோவில்களிருக்கின்றன. (பா ~ மா.) |
பதிற்றுப்பத்து | ஒரு தமிழ் நூல், பத்து கடைச்சங்கத்து புலவர்களியற்றியது. இது எட்டுத் தொகையுள் கான்காவது. இது சேரர் வளம் முதலியவற்றை நன்கு தெரிவிப்பது. இது ஒவ்வொரு புலவரும் பப்பத்தாகச் செய்தமையின் இப்பெயர் பெற்றது. இதில் முதலும் கடையுமிறந்தன. இரண்டாம்பத்து : இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார்பாடி உம்பற் காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் (38) யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் பெற்றது. மூன்றாம்பத்து : இமய வரம்பன் றம்பி பல்யானைச்செல் புகழ்க் குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடிச் சவர்க்கம் பெற்றது. நான்காம்பத்து : களங்காய்க் கண்ணி நார்முடிச்சோலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி நாற்பது ஏராயிரம்பொன் பரிசிலும் அவனாள் வதிற் பாகமும்பெற்றது. ஐந்தாம்பத்து : கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாணர் பாடி உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசில்பெற்றது. |
பதும கற்பம் | பிரமாவுக்குக் கூறிய ஆயுள் முடியுங்காலம். |
பதுமகாரிகை | இவள் பிரச்சோதனுடைய தேவிமார் பதினாயிரவருள் முதல்வி, வாசவதத்தையின் நற்றாய். இவள் பெயர் வடமொழி நூவொன்றில் ஸ்ரீமதியென வழங்கும். (பெ ~ கதை.) |
பதுமகோமளை | விச்வகர்மன் பெண், சூரபன்மன் தேவி, |
பதுமசாஸு | மகதநாட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓடை. |
பதுமநாபன் | ஒரு விஷ்ணு பக்தன், இவனை பக்ஷிக்கவந்த பூதத்தை விஷ்ணு சக்கரம் கொன்றது. |
பதுமநிதி | தாமரைவடிவினதாகிய ஒருநிதி. பாற்கடலில் தோன்றிய பொருள்களில் ஒன்று. |
பதுமனார் | 1, வையையிலெறிந்த ஏடுகளில் எதிர்ந்த ஏடுகளிலிருந்த வெண்பாக்களைத் திரட்டிய நாலடியார்க்குப் பால் இயல் அதிகாரம் வகுத்து உரை இயற்றிய தமிழாசிரியர். 2. கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் நாலடியார்க்குப் பாலியல் வகுத்தவரல்லர். (குறு 4.) |
பதுமன் | 1. பத்மதடாகத்திருந்த ஒருசர்ப் பராசன். பிருகுவென்னும் பிராமணனுக்குச் சூரியமண்டலப் பெருமை கூறியவன், பதுமாபதி 2. பிரமதேவனுக்கு ஒரு பெயர். 3. சண்முகசேநா வீரருள் ஒருவன். 4. ஒரு அரசன். இவன் தேவிலீலை, இவன் ஒரு பிறப்பில் அரசனாயிருந்து மறுபிறப்பில் வேறு அரசனாகி மற்றொரு பிறப்பில் விரதனாய் மற்றொரு பிறப்பில் வசிட்டனாயினான். இவன் தேவி அருந்ததி யாயினாள். (ஞானவாசிட்டம்) 5. அஷ்டமாகாகங்களில் ஒன்று. |
பதுமபாதாசாரியர் | சநந்தனாசாரியருக்கு ஒரு பெயர். |
பதுமபுராணம் | இது மகாபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (55 000) கிரந்தமுள்ளது. இது பிரமத்தோற்றம். பூப்பிரதேசம், சுவர்க்கவிசேஷம். பாதல விசேஷம், மகாதீர்த்தஸ்நான மான்மியம், நாராயண மந்திரவிசேஷம், முதலியவற்றையுணர்த்தும். இதற்குப்பதுமம் எனவும் பெயர். |
பதுமயோனி | ஒரு லோபிப்பிராமணன். இவனிடம் தேவதத்தன் எனும் வேதியன் வந்து என் வறுமையின் பொருட்டு உணவும் வேட்டியும் தருகவென், நீ என்னிடம் ஏவல் செய்யின் அவ்வகை தருவேன் என்றனன். தேவதத்தன் உடன்பட்டு ஏவல் செய்து வருகையில் ஓர் நாள் வேட்டிகேட்கக் கடையிலிருக்கிறது கொள்க என்றனன். அதனால் தேவதத்தன் கோபித்து நீ செல்வமிழந்து பலபிறவியடைந்து வேதாளம் ஆகுக எனச்சபித்து நீங்கினன். அவ்வாறே பதுமயோனி அத்தினம் இரவில் கள்ளரால்பொருள் இழந்து பலபிறவியடைந்து வேதாளமாய் ஒரு மாத்திலிருக்கக் காசிக்குச்சென்று தன் மனைவியுடன் வரும் பிரகஸ்யோமன் தேவியைப் பிடித்துக்கொண்டு அப்பிரகஸ்யோமன் மூன்று நாள் பினாகினி நதியில் தீர்த்தஸ் நானஞ் செய்த பலனைத்தரப் பெற்றுச் சுத்தனாய்த் தெய்வ உருவடைந்தவன். (பெண்ணை நதி புராணம்.) |
பதுமவத்தன் | நளனது மாதிரி. |
பதுமாக்ஷன் | கௌசிகரென்னும் பாகவதரையும் அவர் மாணாக்கரையும் ஆதரித்தவன். |
பதுமாதன் | மேகபுர ராசகுமரன், |
பதுமாபதி | தருசக அரசன் தாயினுடைய சகோதரியின் மகள். இவன் தந்தை காசிராசன், தாய் உதயையோடை, அபிமான புத்திரியாகத் தருசகன் தாய் மிகப் பாராட்டி வளர்த்துவந்தமையின் இவள் தருசகன் தங்கையென்று கூறப்படுவாள். இராசகிரியத்தில் எழுநாள் நடந்த காமனுடைய விழாவில் வழிபடுதற்குக் காமன் கோட்டத்திற்குச் சென்ற பொழுது அக்கோயிலின் வாயிலில் வேற்று வடிவங்கொண்டு மாணகனென்னும் பெயருடன் நின்ற உதயணனுக்கும் இவளுக்கும் நட்புண்டாகிக் காந்தருவ மணம் முதலில் நடைபெற்றது. பிறகு அவளைத்தன் கன்னிமாடத்திற்கு ஒருவரும் அறியாதபடி அழைத்துவந்து பலநாள் வைத்திருந்தனள். பகைவர் தரு சகனோடு போர் செய்தற்கு வந்தபோது உதயணன் புறத்தேயிருந்து வந்தவன் போல வந்து தன்னை இன்னானென்று பலருந் தெரிந்து கொள்ளச் செய்து தோழர்கள்ளோடு சேர்ந்து அப்பகைவரை வென்றனன். அதனால் இவள் உதயணனுக்கு மணஞ் செய்விக்கப்பட்டு இரண்டாம்பட்டத் தேவியாயினள், உதயணன் வெற்றியடைந்தபின் பட்டத்தேவி கட்குரிய விருத்தியையும் இவள் பெற்றவள். கற்பிற் சிறந்தவள். பலகாலம் பிரிந்து வந்த வாசவதத்தையுடன் இருக்கும்படி தன் கணவனை வேண்டிய உத்தமி. அவனுடன் ஒரு கலத்திலே அயின்றவள், வாசவதத்தையின் கோபத்தைத் தீர்த்தற்கு நீ செல்” என்று உதயணன் அனுப்பும் பொழுது “என்செ யிர்காணாத தெய்வமாதலினுயிர் தந்தருள்” என்றும் அவனாற் கூறப்பட்டவள். இவள் வாசவதத்தை போன்ற தோற்ற முடைய வள், சிறந்த குணத்தினள், பிறருடைய குற்றத்தைச் சிறிதும் அறியாதவள், இனிய சொல்லை யுடையவள், கல்விகேள்விகளில் சிறந்தவள், தன் மாற்றாளாகிய வாசவதத்தைபாற் பொறாமை கொள்ளாதவள், அவளுக்கு அநுகூலத்தையே தேடுபவள். இராசனை, ஐராவதி, யாப்பியாயினி என்பவர்கள் இவளுடைய உயிர்க் தோழியர்கள். இவள் பெயர் பதுமாகங்கை, பதுமாவதி யெனவும் வழங்கும். (பெருங்கதை) |
பதுமினி | வியனைக் காண்க. |
பதுமுகம் | சீவகன் தோழரில் ஒருவன். |
பதுமை | 1. ஸ்ரீதத்தன் மனைவி, 2. சீவகன் மனைவியரில் ஒருத்தி. 3. இவள் ஒரு தூதி, உதயணன் வெற்றிபெற்றுக் கௌசாம்பி நகரத்தில் வாசவ தத்தையுடன் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் பொழுது அவளுடைய அன்பைப் பெறவேண்டி அவனுக்கும், அவளுக்கும் பல வேலைக்காரர்களுடன் அரும் பொருள்கள் பலவற்றை அனுப்பிய பிரச்சோதனனால் சமாதானமாகப் பேசுதற்கு அவளிடம் அனுப்பப்பட்டவள். இவள் அங்கனமே உதயணனைப் பார்த்தபொழுது பேசித் தன் தலைவன்மீது அவனுக்கிருந்த மனவருத்தத்தைப் போக்கினவள் (பெ ~ க.) 4. ஒரு வேட்டுவச்சி, சிவபூசா நிவேத்னஞ் செய்த சேட பரிகலபரிசத்தால் மறுமையில் நற்கதியடைந்தவள். (சிவா.) |
பத்தராய்ப்பணிவார் | இவர்கள் தொகை யடியவர். சிவதரிசனஞ் செய்தல், சிவகதைகேட்டல், முதலியவைகளையே பொருளாகக்கொண்டு திருவாரூரில் புற்றிடங்கொண்ட சிவபிரானிடத்தன்பு பூண்டு முத்தியடைந்தவர். (பெரிய ~ பு.) |
பத்தர் | இவர் செட்டி வகுப்பினர். லிங்கதாரிகள், சில தட்டாரும் இந்தப் பட்டம் பெறுவர். |
பத்தாகர்மன் | சுக்கிரன் புத்திரன், |
பத்தாம் நாள் | இருவர் படைகளுடன் படைக்களம் புகுந்தனர். வீஷ்மர் அருச்சுநனுடன் எதிர்த்துப் போரிடுகையில் வீமன் அவர்க்குத் துணை வந்தாருடன் போர்செய்தனர். வீஷ்மர் வெகுசேனைகளை யழிக்கக்கண்ட அருச்சுநன் சிகண்டியையுடன் கொண்டு வீஷ்மருடன் போரிட வீஷ்மர் சிகண்டியைக் கண்டு வில்லினைக் கீழிட்டு அருச்சுநன் அம்பினால் ஓய்ந்து உயிர்மாயாது சரசயனத்திருந்தனர். |
பத்தினிக்கடவுள் | கண்ணகியின் சிறப்புப் பெயர், (சிலப்பதிகாரம்). |
பத்தினியர் | கண்ணகி, திரௌபதி, சாவிதரி, அகலிகை, சீதை, நளாயினி முதலியவர்கள். |
பத்திபாலன் | 1. யாமங் காப்போரை மாற்றியமைக்குந் தொழில் மேற்கொண்ட படைத்தலைவன், (சுக் ~ நீ.) 2. ஐந்து அல்லது ஆறு காலாட்களுக்குத் தலைவன். (சுக் ~ நீ.) |
பத்திய பதார்த்த வகை | பொன்னாங்காணி, சிறுகீரை, அன்றுருக்கிய பசுநெய், சுண்டைக்காய்வற்றல், கோவைக்காய்களின் வற்றல், அவரை, முருங்கை, பனிப்பயறு, மாவடு,, அத்திப்பிஞ்சு, வாழைக்கச்சல், ஏரிவரால், குறவை, ஆமை, மலங்கு, கடற்குரவை, தேளி, அயிரை, சன்னை, சுதும்பு, நெய்த்தோலி, உடும்பு, சுறா, திருக்கை, காடை, கௌதாரி, ஊர்க்குருவி, வெள்ளாட்டு வற்றல், குறவைக்கருவாடுகளுமாம். (தேரையர்.) |
பத்தியன் | கபந்தருஷியின் மாணாக்கன், இருடி. |
பத்தியம் | இது, வியாதிப்பட்டவன் மருந்துண்கையில் உண்ட மருந்தின் குணம் கெடாமல் மருத்துவன் கூறியபடி உணவும் மற்றையவுங் கொண்டிருத்தல். |
பத்தியம் | இன்ன நோய்க்கு இன்ன ஆகாரம் ஆகும் இன்ன ஆகாவென வைத்திய நூலில் கூறியவண்ணம் உணவாதிகளைக் கொள்வது. |
பத்திரகாளி | 1. காளிக்கு ஒரு பெயர். 2, பத்திரைக்கு ஒரு பெயர். |
பத்திரகாளிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
பத்திரகிரிராஜர் | இவர் பத்ரகிரி அரசர், இவர் அரசளிக்கையில் பட்டினத்தடிகள் அவ்வூர்க்காட்டுப் பிள்ளையார் கோவிலில் நிஷ்டை கூடியிருக்க இவ்வரசர் மாளிகையில் திருடப்போம் கள்வர் எமக்குப் பொருள் அகப்படின் ஆபாணஞ் சாத்துகிறோமென்றபடி கள்வர் பொருள் கொண்டு மீளுகையில் ஆபறணஞ் சாத்த அது நிஷ்டை கூடியிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் விழுந்தது. கழுத்தில் பூண்ட முத்தாரத்துடன் வெளிவந்த பட்டினத்தடிகளைக் காவலர் கள்வனென்று அர ரிடம் விட அரசர் அடிகளைக் கழுவிலேற்றக் கட்டளையிட்டுத் தாமுந்தொடர்ந்து கழுமரத்தை யடைந்தனர். பட்டினத்தடி கள் சிவமூர்த்தியைத் தியானித்துக் கழுமரத்தை நோக்க மரம் பற்றியது. அரசர் துணுக்குற்றுப் பணிந்து அடிமை பூண்டு அடிகள் கட்டளைப்படி துறவு பூண்டு திருவாரூரடைந்து பிக்ஷை செய்து ஆசாரியருக் களித்துச் சிவயோகிக்கு எச்சில் அளித்ததால் நாயுருக்கொண்டு தம்மை யடைந்த நாய்க்கும் சிறிது அன்னம் அளித்து வந்தனர். இவ்வகை இருக்கையில் சிவமூர்த்தி சித்தவுருக்கொண்டு பட்டினத்தடிகளிடம் பிக்ஷைக்கு எழுந்தருள அடிகள் பத்திரகிரியான் சமுசாரி அவனிடம் செல்க என்ற படி அரசனிடம் எழுந்தருளிப் பட்டினத் தடிகள் திருவாய்மலர்ந்த சொற்களைக்கூறி யருளினர். அரசர் இவ்வோடும் நாயுமல்லவோ என்னைச் சமுசாரியாக்கினவென்று ஓட்டை நாயின்மீது எறிந்தனர். அந் நாய் உயிர் நீங்கிக் காசிராசன் மகளாய்த் தம்மை யடைய, ஆசாரியரிடங்காட்டி அவர் அநுக்கிரகத்தாற் சோதியில் கலந்தனர். பின் னும் இவர் ராஜாவாயிருக்கையில் (3) விவாகஞ்செய்து, பிதாவாகிய கோவிந்த சுவாமி, பிரமவீரியம் சூத்திரயோனியில் உற்பவித்ததால் நரகமென்று சொல்லக் கேட்டு அரசை விட்டுத் துறவடைந்து பட்டினத்தடிகளை அடைந்தவர் எனவுங் கூறுவர். |
பத்திரசெயனன் | இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். |
பத்திரசேனன் | 1, கண்ணனுடன் விளையாடிய கோபால குமரன். 2, (சந்) மகிஷ்மான் குமரன் மகிஷ்மந்தன், இவன் குமரர் துற்மதன், தனகன். 3. இக்ஷவாகு வம்சத்தரசன். பகையா சரைச் சிவபூசாபலத்தால் வென்றவன், 4, தருமன் தந்தை, காச்மீரத்தரசன், |
பத்திரசோழன் | இவன் கல்யாணசோழன் மகன். இவன் (70) வருஷம் அரசாண்டு சிவாக்னையால் சிவபதமடைந்தவன். இவனுடன் சோழவம்சம் அற்றுப்போய் விட்டது. இச்சோழர்கள் கலியுகத்தில் (1156) வருஷம் ஆண்டார்கள். |
பத்திரன் | 1. சுக்கிரன் குமரன். அசுர புரோகிதன். 2. யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்தகுமரன். 3. அரக்கனிடஞ் சென்ற சீதையை இராமமூர்த்தி வைத்து இல்வாழ்க்கை நடத்துகிறானெனக் கூறியவன். 4. சண்முக சேநாவீரன். 5. பத்திரபாகுக்கு ஒரு பெயர். 6. விசுவசேகனைக் காண்க. 7. ஒரு அரசன், சிவபெருமானிடம் துவஜம் பெற்று அக்கொடியினை நாட்டி அன்னமிட்டு வருகையில் வெவேதியர் ஒருவர் உண்ண அத்துவசம் விழக்கண்டு சிவபெருமான் சொற்படி உயர்ந்தோரைத் தெரிந்துகொண்டவன். |
பத்திரபாகு | வசுதேவருக்குப் பௌரவியிடம் உதித்தகுமரன். இவனுக்குப் பத்திரன் எனவும் பெயர். |
பத்திரமாது | குரோதவசையின் குமரி, |
பத்திரமித்திரன் | பத்மஷண்டம் எனும் நகரத்து வைசியன். இவன் தன்னாடு விட்டன்னிய நாடு சென்று செல்வமடைந்து சிம்மபுரமடைந்து அந்நகரத்துக் குடிபுக எண்ணித் தன் பொருளை சிம்மசேநராஜனது மந்திரியாகிய சத்தியகோஷனிடம் ஒப்புவித்துத் தன்னாடு சென்று திரும்பி வந்து கேட்க மந்திரி மறுத்துத் துன்புறுத்த அரசனும் வணிகன் புலம்பலைக் கேளாதிருக்க அரசன் தேவியாகிய இராமதத்தைச் சூதினால் மந்திரியிடமிருந்த செல்வத்தை வாங்கித்தந்து சத்தியகோஷனைச் சிக்ஷத்தனள். பின் பத்திரமித்திரன் வரதர்மரிடமும் தேசம் பெற்று நன்மை பெற்றனன். இவன் மறுஜன்மத்தில் இராமதத்தையிடம் சிம்மசந்திரனாகிப் பிறந்தான். இவனது முதற் பிறப்பு பத்திரமித்திரன் இரண்டாவது சிம்மசந்திரன், பின் அஹமித்திரன், பின் சக்ராயுதன், |
பத்திரம் | இராஜகீயம், வௌகீகம் என இருவகை, இன்னும் தன்கையாலெழுதப்படுவன, பிறர்கையாலெழுதப்படுவன என இரண்டு வகைப்படும். அவை சான்றுடையன, சான்றில்லன என இரண்டு வகைப்படும். |
பத்திரவகைகள் | இவைகள் அரசாட்சிகளில் காரியக்காரரால் எழுதப்படும் பத்திரங்கள், |
பத்திரவடம் | கைலாச பர்வதத்திலுள்ள ஒரு ஆலவிருக்ஷம். (பார~வனபர்வம்). |
பத்திரவதி | பரிட்சித்தின் தேவி, புத்திரன் ஜனமேஜயன். |
பத்திரவேகை | சந்திராபீடனது தாம்பூல கரங்கத்தை தாங்குபவள். |
பத்திராக்கன் | வசுதேவருக்கக் தேவகியிடம் உதித்தகுமரன். |
பத்திராங்கி | காசிபர் பௌதரி, சுரதையின் பெண், மரங்களையும் கொடிகளையும் பெற்றவள். 2. (சூ) குவலயாசுவன் குமரன். |
பத்திராசிரவசு | பத்திராசுவ வருஷம் ஆண்டவன். |
பத்திராசுல வருஷம் | மேருமலைக்குக் கீழ்ப்புறத்தில் பத்திராசுவனால் ஆளப்பட்ட பூமி. |
பத்திராசுவன் | 1. அக்னியித்திரனுக்குப் பூர்வசித்தியிடம் உதித்த குமரன். இவன் தேவிபத்திரை, |
பத்திராதன் | 1. பிருகத்கர்ணன் தந்தை. சம்பன் பேரன். 2. பரதன் குமரன். |
பத்திராதேவி | 1. குபேரன் மனைவி. 2. வசுதேவர் மனைவி, |
பத்திராபதி | இஃது ஒரு பெண்யானை, பிரச்சோதனனுக்குரியது, மிக்கவேக முடையது; ஒப்பற்றது; ஊர்ந்து செல்லும்படி உதயணனுக்குப் பிரச்சோ தனனாற் கொடுக்கப்பட்டது. நீர் விழவில் இதன் மேலே தான் வாசவதத்தையை ஏற்றிக் கொண்டு உதயணன் தன் நகர் சென்றனன். செல்லுகையில் காலகூடமென்னும் வியாதியால் இடையே இது வீழ்ந்து இறந்து விட்டது. கோசாம்பி நகரத்தை அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கை யில் உதயணன் இதன் ஞாபகார்த்தமாக இதுவீழ்ந்த இடத்திலும் கோசம்பியிலும், கோயில் சமைத்து அவற்றில் இதன் வடிவங்களை யமைப்பித்து நித்தியபூசை முதலியவற்றை நடத்திவரும்படி செய்வித்ததன்றி இதன் பெயரால் அன்னசத்திரமும், தண்ணீர் பந்தர் முதலியனவும் அமைப்பித்தனன். இப்பெயர் பத்திராவதியெனவும் வழங்கும், பத்திராபதி யென்னும் தெய்வப்பெண் குபேரன் சாபத்தால் இந்த யானையாகப் பிறந்து இறந்த பின்பு பழைய உருவத்தை யடைந்தாளென்று ஒரு வரலாறு காணப்படுகின்றது. இறக்கும் பொழுது உதயணன் தனக்குச் செய்த மந்திரோபதேசத்தை நினைத்து பத்திராபதி யென்பவள் அவனுக்குச் சந்ததி உண்டாக வேண்டுமென்று குபேரன் முதலியவர்களிடத்தில் வரம்பெற்று அதனாற் கருப்பவதியாயிருந்த வாசவதத்தையின் மயற்கையைத் தீர்க்கும் பொருட்டு ஒரு தச்சனாகவந்து விமானமொன்றைச் செய்வித்து அதில் அவளையும்,உதயணன் முதலியவர்களையும் ஏற்றிச் சென்று காட்டவேண்டிய இடங்களைக் காட்டி அவர்களுக்கு மகிழ்ச்சியளித்து விடைபெற்றுத் தன்னிடம் சென்றனள். (பெ~கதை.) |
பத்திராயு | இவன் ஒழுக்கங்கெட்ட பிராமணச் சிறுவன், சிவயோகி யொருவரை யுபசரித்ததால் மறுபிறப்பில் சந்திராங்கதன் என்னும் அரசன் குமாரனாகப் பிறந்து தாயின் சக்களத்திகளால், கருப்பத்திருக்கையில் விஷமூட்டப்பெற்றுத் தாயுங் குமரனும் நீங்கா கோயினராய்க் காட்டில் விடப்பட்டனர். இப்படியிருக்க முன் இந்த இராசகுமாரன் பிராமணச் சிறுவனாயிருக்கையில் வந்த சிவயோகி தோன்றி விபூதி கொடுத்து இருவரையும் நிர்மல தேகிகளாக்கினர். இவ்வகையிருக்கையில் அயல் நாட்டரசர் சந்திராங்கதனை வென்று தேர்க்காலிற்கட்டிச் செல்வதை யுணர்ந்து பத்திராயு, அரசனைமீட்டுத் தாயிடம்வரப் பகையாசர் இவனுக்குப் பெண்ணினைக் கொடுத்துத் தகப்பனிடஞ் சேர்த்தனர். சிவபத்திமானா யிருக்கும் பத்திராயு வேட்டைக்கு வருகையில் உமாமகேசர் பிராமண உருக்கொண்டுவரப் புலியொன்று அந்தப் பிராமண தம்பதிகளைத் துரத்தியது. தம்பதிகள் இருவரும் அரசனிடம் அபயமடைந்தும், புலி பிராமணன் மனைவியைப் பிடித்துக்கொண்டு குகைக்குட் செல்லப் பிராமணன் அரசனை நோக்கி நீ அம்புடனிருந்ததை யெண்ணி உன்னையடைந்தும் காவாததால் உன்னைச் சபிக்கிறேன். அல்லாவிடின் உன் மனைவியை யெனக்குக் கொடு வென்றனர். அரசன் பழிக்கஞ்சி மனைவியைக் கொடுத்துத் தான் தீப்புக இருக்கையில் சிவமூர்த்தி தரிசனந்தந்து பிராமணராக வந்த தம்பதிகள் நாங்களே, துரத்திய புலி மாயையாகும்; உனதன்பை வெளியிடவந்தோம் என்று அவனுக்கு வேண்டிய வரங்கள் பிரசாதித்து மறைந்தனர். |
பத்திராள் | மூன்றா மன்வந்தரத்துத் தேவர்கள். |
பத்திராவதி | அத்தினபுரத்திற்கு ஐந்து காதத்திலுள்ள நகரம். |
பத்திரை | 1. மேருதேவியின் பெண், பத்திராசுவன் பாரி. 2. சுதகீர்த்தியின் குமரி, கேகயகாட்டுச் சந்தர்த்தனன் தங்கை; கிருஷ்ணனை மணந்தனள், இவள் குமரர் அநலன், சங்கரசித்தன் முதலிய பதின்மர். 3. சிவஞாய தானத்து அமருஞ் சத்தி. 4, கோசலராசன் பெண், குமரன்கேசி. வசுதேவன் பாரி. 5. வீரபத்திரர் தேவி 6, கேகயன் பெண். 7. உச்சத்தியின் தேவி. சோமன் மகள். வருணனால் அபகரிக்கப்பட்டவள். (பாரதம்~அநு.) 8. குபேரன் தேவி. (பரா~ஆதி.) 9. இவள் ஒரு தெய்வமங்கை, குபேரனுக்குப் பலவகைப் பணி புரிந்தொழுகும் எண்பது நாடக மகளிருள் ஒருத்தி. (பெ கதை) 10. திதிகளைக் காண்க, |
பத்திரைபீடம் | சத்திபீடங்களில் ஒன்று, |
பத்துப்பாட்டு | இது பத்து நூல்களீடங்கிய தமிழ்நூல், சங்கமருவியது. இதிலடங்கியவை திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி. நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம். |
பத்துவகை நூற்குற்றம் | நூற்குற்றம் காண்க |
பத்மகிரி | பௌத்தர் இருக்கை. இவ்விடமிருந்த பௌத்தர்களை இராமாநுசர் செயித்தனர் என்பர். |
பத்மசாலியர் | இவர்கள் வடுகு பேசும் நெய்யக்காரர்கள். இவர்கள் சென்னை ராஜதானி முழுதும் வியாபித்திருக்கின்றனர். இவர்கள் பாவனருஷியைத் தங்கள் கோத்ர முதல்வனாகக் கொண்டவர்கள். இவர்களில் சிலர் வைணவர், சிலர் சைவர், சிலர் இலிங்கதாரிகள். |
பத்மநாபன் | விஷ்ணு. |
பத்மநாபவேதியர் | ஒரு பாகவதர், காசியில் செல்வ நிறைந்தோனாகிய ஓர் வணிகன் ஐந்து பிள்ளைகளுடன் கூடிய தன் மனைவியுடன் வாழ்கின்ற நாளில் குட்டநோயால் வருந்தி வெகுகாலம் துன்புற்றுப் பல நல்ல தர்மங்களைச் செய்தும் நோய் குறையாமல், தன் சுற்றத்தவரை நோக்கி என்னைக் கங்கையில் விடுகவென்னச் சுற்றத்தோர், அவனைக் கொண்டு கங்கைக்கரையையடைய ஆங்குப் பலர்கூடியிருக்கையில் அக்கூட்டத்தைக் கண்ட பத்மநாப வேதியர் இது என்ன கூட்டமென்று கேட்க ஓர் வணிகன் தர்மஞ்செய்வோன் குட்டநோயால் வருந்துற்றுக் கங்கையில் விழவந்தனன் என்றனர். அதனைக் கேட்ட பத்மநாபவேதியர் அவனிடஞ் சென்று தேகத்தின் அருமைகூறி அவனுக்குத் தாரகமந்திரம் உபதேசித்தனர். அதனால் வணிகன் நோய் தீர்ந்து அவர் திருவடியில் வீழ்ந்து பத்மநாபவேதியர்க்கு அருள் செய்த கபீரிடத்திற்போய்ப் பத்மநாப வேதியாது புகழை எடுத்துரைத்தனன். |
பத்மன் | ஒரு நாகன். கோமதி தீரத்தில் நைமிசவனத்திலுள்ள நாகச்சுனை யிலுள்ளவன். இவனைக் கண்டு தரும் விசாரஞ் செய்ய தர்மாரண்யன் எனும் ஒரு வேதியர் சென்று நாகன் சூரியரதத்தை வகிக்கப் போயிருக்கிறார் என்னக் காத்திருந்து வந்த பின் நாகன் சூரியனுடைய கதையினையும் சூர்யாந்தர் யாமியின் ஸ்வரூபத்தையுங் கூறக் கேட்டுக் களித்தனர். (பார~சாந்தி.) |
பத்மப்பிரபர் | இவர் ஆறாவது சைந தீர்த்தங்கார். இக்ஷவாகு வம்சத்தவர், பட்டணம் கௌசாம்பி. தந்தை தரணன். தாய் சுசிமை. இவர் ஜநநம் கார்த்திகைமாசம் கிருஷ்பணபக்ஷம் திரயோதசி சித்திரை நக்ஷத்திரம், உன்னதம் (250) வில், பத்மராக வர்ணம், ஆயுஷ்யம் (30) நூறாயிரம் வரு வச்ரசமரர் முதலாக (110) கணதரர். |
பத்மயூகம் | கௌரவரால் வகுக்கப்பட்ட க்ஷத்திரயூகம். இதை அபிமன்யு உடைத்தான். (பா~துரோ.) |
பத்மாவதி | 1. விச்வபூர்த்தியாண்ட நகரம், விந்தமலைக் கருகிலுள்ளது. 2. லக்ஷ்மியின் அவதாரமாய் நதியுருவானவள், துலசியைக் காண்க |
பத்மினி | சித்தூர் அரசனாகிய லக்மணசிங்கின் மாமன் பீமசிங்கின் தேவி. இவள் அழகிற் சிறந்தவள். இவளது அழகைக் கேள்விப்பட்ட பட்டாணி அரசனாகிய அல்லாவுதீன் எனும் மகம்மதிய அரசன் ஒரு பெருஞ் சேனையைத் திரட்டிக்கொண்டு சித்தூரை பலநாள் முற்றுகையிட்டான். இரசபுதரர் சித்தூரைப் பலநாள் காத்தனர். பின் அல்லாவுதீன் பத்மினியைத் தன்னிடம் ஒப்புவித்தால் முற்றுகை விடுவதாகக் கூறினன். அது மறுக்கப்பட்டது. அவ்வாறில்லா விடினும் ஒருமுறை பார்க்கவாவது விடுங்களென்றான். அதுவும் மறுக்கப்பட்டது. அதுவுமறுக்கப்படக் கண்ணாடிகளைக் கொண்டு பிரதி பிம்பமாவது காட்டப்படின் போதும் எனவே இக்கொள்கைக் கிசைந்தனர். அல்லாவுதீன் தன் காவலரைக் கோட்டைக்கு வெளியே நிறுத்திக் கோட்டைக்குள் நுழைந்தான், அல்லாவுதீனை மரியாதையுடன் அழைத்துச் சென்றனர். இராஜபுத்திரர்கள் வாக்கை நிறைவேற்றினர். அல்லாவுதீன் திரும்புகையில் அவனை வழிவிட பீம்சிங்கும் உடன் சென்றான். பீம்சிங் கோட்டைக்கப்புரஞ் செல்ல, மறைந்திருந்த பட்டாணிய காவலர் பீம்சிங்கை சிறையிட்டனர். அல்லாவுதீன் மீம்சிங்குக்கு பதில் பத்னியைத் தரின் சிறை நீக்கப்படும் என்றான். பத்மினி தன் மானங்காக்க ஏற்பாடு செய்துகொண்டு அல்லாவுதீனிடம் போகத் தீர்மானித்தாள். அப்போது இவளுடைய மாமனாகிய கோராவும், மருமகனாகிய படாலும் ஒரு யோசனை சொன்னார் கள். போர்க்களத்தை விட்டுச் சேனைகள் தங்களிட்ங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், அவளுடைய அந்தஸ்துக்குத்தக்க படி தோழிமார்கள் பலர் சூழ்ந்துவரவும் பந்தோபஸ்து செய்து வைக்கும்படி சொல்லி யனுப்பினர். அவ்வாறே முகம்மதியன் இசைந்தான். குறித்த தினத்தில் ஆயுதபாணியாகிய சிறந்த போர் வீரர்களை உட்காருவித்த (700) பல்லக்குகளும் அப்பல்லக்கு களை சுமக்க போர்வீரர் அவ்வாறு பெயராக உருமாற்றி முகம்மதியனிருக்கும் இடத்தில் மறைவுடனிருக்கின்றனர். பத்மினி பீம்சிங்கைப் பார்த்து வருவதற்கு அரைமணி காலம் கொடுக்கப்பட்டது. முகம்மதிய அரசன் காலதாமதம் குறிப்பதற்கு முன் வேடதாரிகள் தங்கள் போர்க்கோலத்துடன் வெளிப்பட்டதால் உண்டான கிளர்ச்சியில் பீம்சிங் சிறையினின்று தப்பி அருகில் ஆயத்தமா யிருந்த குதிரைமேலேறிக் கோட்டையடைந்தனன். இதில் இரசபுத்திரர்களுக் கும் மகம்மதியருக்கும் நடந்த யுத்தத்தில் பல ரசபுத்ர வீரர் மாண்டனர். கோசாவும் மரணமடைந்தான். இவன் மனைவியும் தீப்புகுந்தனள், இக் காலத்திற்குப் பிறகு வக்ஷ்மணசிங் பட்டமடைந்தான். இவன் காலத்தில் அல்லாவுதீன் பெருஞ் சேனையுடன் சித்தூரைத் தாக்கினான். லஷ்மண சிங்கவர்களை யெதிர்த்து தன் கிராம தேவியின் சொற்படி (12) புத்திரர்களையும் யுத்தத்தில் இழந்தான். அதில் அஜேஷிங் ஓடியொளித்தான். இதில் சித்தூரிலிருந்த பல இராசபத்தினிகளும் பத்மினியும் பூமிக்குள் வெட்டப் பட்டிருந்த தீ நிறைந்த குழிகளில் விழுந்து மானத்தைக் காத்துக்கொண்டனர். இவ்வாறு செய்த தார்த்தாரியன் தான் சித்தூரை நாசஞ்செய்து தான் ஜெயித்த சிற்றரசனாகிய மால்தேவனிடம் ஒப்புவித்துத் தன் நகரம் சென்றான். இந்த லஷ்மணசிங்கிற்கு ஆர்சிங் என மற்றொரு குமாரன் உண்டு. |
பத்ரமதி | காசிபர் பெண், ஐராவதத்தைப் பெற்றாள் என்பர். |
பத்ரம் | வடக்கில் பூமியைத் தாங்கி நிற்கும் திக்கு யானைகளில் ஒன்று. (இரா. பால.) |
பத்ரை | உசத்தியரைக் காண்க. |
பநசன் | ஒரு வானாவீரன். சங்கனென்னும் அரக்கனைக் கொன்றவன். |
பநந்தன் | நபாகனைக் காண்க. வத்சந்திரன் குமரன், |
பநம்பரனார் | அகத்தியரது மாணாக்கர் பன்னிருவரில் ஒருவர். இவர் பனம்பாரமென்னும் ஊரிற்பிறந்ததால் இப்பெயர் பெற்றனர். இவர் தம்பெயரால் இலக்கணஞ் செய்தனர் என்பர். அதிற் சில சூத்திரங்கள் தவிர நூல் அரிதாயிற்று. இவர் தொல்காப்பியத்திற்குப் பாயிரங் கூறினர். |
பந்தகன் | கத்ரு குமரர்களில் ஒருவன். நாகன் |
பந்தனந்தாதி | பந்தனென்னும் வணிகன் மீது ஒளவையாராற் பாடப்பட்ட வெண்பாமாலை. |
பந்தன் | 1. திரணபிந்துக்குத் தந்தை, 2. இவர் காவிரிப்பூம்பட்டினத்து வணிகர். இவர் வர்த்தகஞ் செய்தற் பொருட் இக்கப்பலிற் சரக்குகளை யேற்றிக் கப்பலை நடுக்கடலிற் செலுத்தச் செய்து பிரயாணப்பட்டுப் போகையில் ஆதிசேடன் இவரிடம் விருப்புற்றுக் கடலினுள்ளி டத்திருந்து ஒருகரத்தை இவரது கப்பலுக்கெதிரில் நீட்டினன். செட்டியார் நம்மை யாரோ யாசிக்கிறானென்று எண்ணித் தமது கப்பலில் இருந்த சரக்குகளிற் சிறந்தவை களைத் தந்தனர். இவ்வகை இரண்டு மூன்று முதலாக ஆயிரங்கரங்கள் தனித்தனி ஒவ்வொரு கரங்களுக்குங் கப்பலில் இருந்த சரக்குகளை யெடுத்துக் கொடுத்துக் கடைசி கரத்திற்குக் கொடுக்கச் சரக்கு இல்லாமையால் தாமே அக்காத்தில் புகுந்தனர். ஆதிசேடன் மகிழ்ந்து இவுரைச் சுமந்து சென்று தன்னகரத்தில் இருத்தித் தமது குமரியை இவருக்குத் திருமணஞ் செய்வித்துப் பன்னிரண்டு வருடம் நாகலோகத்தில் வைத்திருந்தனன். இவரது சுற்றத்தார் இவர் கடலில் இறந்தன சென்று எண்ணி இவர்க்குக் கர்மாதிகள் செய்விக்கத் துணிந்தனர். இதனையறிந்த சேடன் பந்தனுக்கு வேண்டிய உபசாரத்துடன் மரியாதை முதலிய செய்வித்துப் பல நாகரத்தின்ங்களும், பொத்திக் கொண் டால் இளமைமாருத பொன் வஸ்திரமும், உண்டால் நீடுவாழச் செய்வதாகிய கருநெல்லிக்கனி யொன்றுந் தந்து, அனுப்பினன். பந்தன் தனது பட்டணம் வந்ததும் அரசனைக் கண்டு தான் கொண்டுவந்த நெல்லிக்கனியில் ஒரு பாதியைக் கொடுத்து இருக்கையில் ஒளவை இவன் மீது அந்தாதியும் நவமணி மாலையையும் பாடிவந்தனள், பந்தன் அரசனுக்குக் கொடுத்து மிகுந்த பாதி நெல்லிக்கனியையும் பொன் வஸ்திரத்தையும் ஒளவைக்குக் கொடுத்துக் களிப்புற்று இருந்தனன் |
பந்தாட்டு | இது, பலவிதமாகிய பந்துகளைச் செய்கை வேறுபாட்டால் ஒருவர், இருவர், மூவர் பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு, இது, தற்காலம் நம்நாட்டில் இறந்தது. இப்போது மேனாட்டாரதைக் கொண்டாடுகிறார்கள், குதிரை மீதிருந்தும் ஆடுவர். |
பந்து | (சூ.) வேகவான் குமரர். |
பந்தும், பாவையும் | முற்காலத்தரசர்கள் தம் அரண்மனை வாயிலில் வலியறியா தெதிர்க்கும் அரசாது ஆண்மையினை யழித்து மகளிரொடொப்ப நோக்கி அவர் கொண்டு விளையாடுவதற்குப் பந்தும்பாவையும் தருதல் ஒருதலையெனத் தெரிவிக்கப் பந்தும் பாவையினையும் தூங்கவிடுதல் மரபென்ப. இதனை “வரிப்புனை பந்தொடு பாவை தூங்க” என்னும் திருமுருகாற்றுப் படையானறிக |
பனம்பாரனார் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் தொல்காப்பியத்திற்குப் பாயிரங்கூறிய பனமபானாரின் வேறாகலாம். காலத்தை நோக்கின் இவர் ஊர் பனம்பாரமாயிருக்கலாம். இவர் குறுந்தொகை (52) வது செய்யுள் பாடியவர், |
பனி | 1. ஆகாயத்தில் கலந்துள்ள நீராவி குளிர்ந்த காற்றுப்பட நீராகப் பரிணமிப்பது. இது, மூடுபனி, உறைபனி, ஆலம் கட்டி முதலியவாகும். 2, பூமியினின்று கிளம்பின நீராவி மழைத் துளிகளாகப் பரிணமிக்கு முன் இறுகுவது. இந்நீரணுக்கள் படிப்படியாகக் கீழிறங்கி வாயு மண்டலத்தை அணுகுகையில் கல்மழை ஆம், இதுவே ஆலங்கட்டி, 3. இது, இரவில் வானம் தெள்ளிதாக இருக்கையில் பூமிகுளிர அதிலுள்ள வெப்பம் ஆவியாய்ப் பரிணமித்துக் குளிர்ந்து பெய்வது. இதனைப் புல், மரம், கல் முதலிய பொருள்களில் அறியலாம். |
பனிக்கட்டி | அதிக குளிர்ச்சியினால் நீர் உறைந்து கற்போலாதல். இது ஆலங்கட்டி போல்வது. ஆலம்; சலம், |
பனிநீல நங்கை | ஜைநராகிய ஜினதாஸர் பௌத்தராகிய சாகாதத்தர் மகள், சீலகல்யாணியை மணந்து ஒரு பெண் பெற்றார். இப்பெண் பொழுது விடியுமுன் ஜினாலய பூசைக்கு மலர் பறித்துக் கொண்டு தருகையில் அவன் கேசத்தில் முத்துக்கோத்தது போலிருந்த பனித்துளிகளைக் கண்ட தவசியவளுக்குப் பனிநீல நங்கையெனப் பெயரிட்டனர். ஜினதாசர் தன் தங்கை குமரன் ஆர்ஹதனாக இருப்பதெண்ணி, தன் குமரியாகிய பனிநீலநங்கையைப் பார்சுவதத்தனுக்கு மணஞ் செய்வித்தனர். பின்பொரு நாள் பார்சுவதத்தன் மணச்செய்தியை விசாரிக்க விசாகதத்தனிடம் தன் குருவாகிய பௌத்தர் வர பனிநீலநங்கை அவரை வணங்கவில்லை. அவள் வணங்காமையால் மனம் வருந்திய குரு அவ்விடம் விட்டு நீங்குகையில் மாமனாராகிய விசாகதத்தன் குருவை நிர்ப்பந்தப்படுத்தி மருமகளை மாம் சம்சமைத்துப் படைக்கக் கூறினன். அருகமத விரோதமாகிய செயலாதலால் மனங்கொள்ளாது தோழி சொன்ன உபாயத்தால் குருவின் செருப்பி லொன்றைச் சமைத்தூட்டி அவர் கேட்டபொழுது ஒரு செருப்பைக் கொடுப்பித்தனன். இச்செய்தியறிந்த குரு வெட்கமடைய பனிநீலகங்கையின் தோழி சிறுவர்களைத் தூண்டிப் பௌத்த குருக்கண்மார் தங்கள் செருப்புக் களைத் தாங்கள் சமைத்துண்பர் எனப் பரிகசிப்பித்தனள். இதனால் விசாகதத்தரும் அவர்தம் பெண்ணும் கோபித்து பனிநீலநங்கையைத் தனியே வைத்தனர். பின்னொரு நான் பார்சுவதத்தன் மாக்கலமேறப் போயினன். அன்றே பனிநீலநங்கை பருவமடைந்து தோழிக்குச் செவ்வணியணிந்து விடுப்ப அவன் நாலாம் நாள் வருவேன் என்று கூறினன், நாலாம் நாள் வெள்ளணியணிந்து விடுப்ப அவனன்றிரவு வந்து கூடி மோதிரமும் வேறும் அடையாளந் தந்து நீங்கினன். இவள் கருவுற்ற (5) ஆம் மாதம் நாத்துணார் பழிக்க நங்கை என் கற்பு காட்டியல்லது உணவு கொள்ளேன் என (18) நாட்கள் பட்டினிகிடந்தனள், இதனால் சாதனதேவதை ஏரியையுடைய்ச் செய்தது. அரசன் பெருமுயற்சி செய்து கட்டியும் நிற்காமையால் பதிவிரதை களைக் கொண்டடைப்பிக்கவும் அடைபடாமையால் இன்னும் பதிவிரதைக ளுளரோ வென்ன பனி நீலநங்கை கர்ப்பிணியாதலால் வரவில்லை யென அரசன் விசாகதத்தரைக் கேட்டுப் பல்லக்கனுப்பி வருவிக்க நங்கை தன் கற் புக்கூறி ஒரு கூடை மண் மடையில் போட ஏரி அடைபட்டது. பிறகு அரசன் அவளது பிரியப்படி ஜினாலய பிரதிட்டை செய்வித்தனன். (சைந. கதை) |
பனை | 1, இது உஷ்ணதேசத்து மரம். இது கொட்டையிலிருந்து முளை யுருவிக் கிழங்காகி முளைக்கும். இதற்கு நீர் பூசாரமே இது (20)க்கு மேற்பட்ட வருஷங்களில் பலன் தரும். தோட்டக்கால்களில் வேலியாக வைப்பர். அடிமரம் கனத்துத் தூண் போக விருக்கும். மடல்கள் வாள் போல் கூர்மை யுடனிருக்கும். ஓலை வீடு மூடவும், பாய் முடையவும், புத்தகங்கள் முதலிய பல வேலைகளுக்குதவும், காய்நுங்காம், பழம் பனாட்டு செய்வர். எள்ளைச் சாறாக்கி வெல்லம், கற்கண்டு முதலிய செய்வர். அடிமரம் வீட்டிற்கு வலச்சல் முதலிய செய்வர். 2 சிந்துதேசத்தில் பெரும்பாலும் எல்லா நிலங்களிலும் வளரும் மரம். இது புல்வகையில் பெரிது. இப் பனை இந்துக் களுக்குப் பலவகையில் உதவி, வீட்டுக்குக் கூரையாகவும், படுக்கப் பாயாகவும், எழுத வும் மற்றும் பலவிதத்தில் உதவுகிறது. இது முதலில் கிழங்கையும், முதிர்ச்சியில் நுங்கு, பழம், கள், சாறு, வெல்லம், வீடுகளுக்குத் தூலப்பட்டை, வரிச்சல், நார், கயிறு முதலிய வகைகளாக உபயோகப்படுகிறது. இதன்வகை, நாட்டுப் பனை, அலகுப்பனை, கூந்தற்பனை, தாளிப்பனை, நிலப்பனை முதலிய. |
பனைநாடு | முடத்திருமாறன் காலத்தழிவடைந்த பாண்டி நாட்டில் ஒன்று. |
பனையோலை விசிறி | பனையோலை விசிறியினால் வாததோஷம், சிலேஷ்மரோகம், பித்தாதிக்கம், அரோசகம், ஆகிய இவைகள் நீங்கும். |
பன்சசேனி | இருஷபன் குமரனாகிய பரதன் பாரி. விச்வரூபன் பெண். |
பன்னக சயனன் | பாம்பிடம் பள்ளிகொண்ட திருமால். |
பன்னகாபரணன் | தாருகவனத்து இருடிகள் சிவமூர்த்தியிடம் விசோதித்து ஆபிசாரயாகஞ்செய்து ஏவிய பாம்புகளை அணிகளாக அணிந்த சிவமூர்த்தி. |
பன்னவாதை | சுதாயுவின் தாய், |
பன்னாசன் | திரணாசனைக் காண்க. |
பன்னிரண்டாம் நாள் | துரியோதனன் தருமரைப் பிடித்துத் தருகவெனத் துரோ ணரை வேண்டத் துரோணர் அருச்சுருனும் வீமனும் என்னிடம் அணுகாவிடிற் பிடித்துத் தருவேனென்று சமரிற்புகுந்து மகரயூகம் வகுத்தார், தருமர் மண்டல யூகம் வகுத்தார். திரிகர்த்தன் முதலியோர் அருச்சுநனுடன் போரிட்டனர். துரோணர் திட்டத்துய்மன் வில்லை முரித்துச் சிகண்டியின் தேரைப்பொடித்து நகுலசகாதேவரைச் சாடுகையில் தருமன பொருது துரோணரை யெதிர்த்து அவரைப் பல பாணங்களால் பொத்தி நிராயுதராக்கி அவர் தேரையுமழிக்க அவர் வேறு தேரேறி யுத்தத்திற்குவா அபிமன், விராடன், திட்டத்துய்மன், குந்திபோஜன் சூழ்ந்து கொள்ளத் துரோணருக்குச் சகுனி, கன்னன், கலிங்க ராஜன் முதலியோர் துணையாக வந்து போர்செய்தனர். இதனைச் கண்ட துரியோதனன் ஒருபால் சண்டை செய்தனன். பகதத்தன் யானைச் சேனையுடன் வந்து தருமரை எதிர்த்துச் சேனைகளை அதமாக்ககண்ட தருமர் விசனமுற்றுக் கண்ணபிரானைத் தியானிக்கக் கண்ணன் அருச்சகனுடன் யுத்தகளங் குறுதினர். அர்ச்சுகன் பகதத்தனை எதிர்த்துப் பலவாறு வருத்த அவன் பொறாது இந்திரன் தந்த வேலாயுதத்தை அர்ச்சுநன் மீது ஏவ அது வருதல் கண்டு திருமால் அதனை மார்பில் ஏற்றனர். அது கண்ணன் திருமார்பில் மாலையாயிற்று. உடனே அருச்சுநன் பகதத்தனது கவசத்தை யறுத்து அவனை மாய்த்தான். பின் காந்தார மன்னர் சகுனியிடம் போரிட்டுப் பின்னிடைந்தனர். சூரியன் மேல் பாலடைந்தான். |
பன்னிரண்டு (பாவம்) தெசை | உதயம், தனம், பிராத்ரு, தோழமை, புத்ரன், சத்ரு பாரி, மிருத்யு, புண்ணியம், கருமம், ஆயம், வியம், இவை ஒருவனுக்குச் சன்மம் முதலாக நேர்வன. (விதான). |
பன்னிரண்டு லக்னம் | 1 வது சன்மலக்னம், 2 வது ஓராலக்னம், 3 வது கடிகா லக்னம், 4 வது ஆருடலக்கனம், 5 வது நக்ஷ தரலக்னம், 6 வது காரகலக்னம், 7 வது ஆதெரிசலக்னம், 8 வது ஆயுர்லக்னம், 9 வது திரேக்காணலக்னம், 10 வது அங்கிசலக்னம், 11 வது நவாங்கிசலக்னம், 12 வது பாவலக்னம், |
பன்னிரு பாட்டியல் | இஃது இந்திரகாளியார் முதலான பல புலவர்களாற் செய்யப்பட்டது. இதில் நூல்களுக்குரியப் பத்துப் பொருத்தங்களின் இலக்கணமும் தொண்ணூற்றறு வகைப் பிரபந்தங்களின் இலக்கணமும் சொல்லப்பட்டுள்ளன. இது பழைய நூல். |
பன்னிருபடலம் | அகத்தியர் மாணாக்கர் பன்னிருவராலும் கூறப்பட்ட புறப்பொருனூல், |
பன்னிருவர் ஆழ்வார்கள் | பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி யாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை யாழ்வார். |
பன்னுடுதந்த பாண்டியன் மாறன் வழுதி | நற்றிணை தொகுப்பித்த பாண்டியன். |
பன்றி | இதன் முகம் நீண்டு இருபுறத்திலும் கொம்புகளைப் பெற்றிருக்கும். இது தன் நீண்டமூக்கை பூமிக்குள் நுழைத்துக் கிழங்கு முதலிய தோண்டித் தின்னும். பிளவுபட்ட குளம்புகள் உள்ளது. இதன் தேகத்தில் முரட்டு மயிர்கள் உண்டு, இது நாட்டில் தாழ்ந்த ஒட்டர், குறவர், உப்புரவர் முதலியவர்களால் ஆகாரத்தின் பொருட்டு வளர்க்கப்படுகிறது. இது ஒருமுறைக்கு ஐந்தாறு குட்டிகள் போடும். இதன் உடல் பருத்தும், கால்கள் குறுகியுமிருக்கும். இதில் ஒருவகை, காட்டில் வாழும் பன்றியுமுண்டு. அது காட்டுப்பன்றி. இது பருத்தவுடல் பெற்றுக் காட்டில் வசித்து நாட்டில் வந்து பயிர்களை நாசஞ் செய்வது. இதை ஆகாரத்தின் பொருட்டு வேட்டையாடுகிறார்கள். |
பன்றி நாடு | இராமநாதபுரம் சிவகங்கை முதலிய சேர்ந்தது. |
பன்றிக்கரடி | இது, இமயமலைச் சார்பில் உள்ள பிராணி. இதன் தேகத்தில் கரடிக்கிருப்பது போல் மயிர் மூடியிருக்கும். இதன் உடலும் முகமும் பன்றியை யொத்தவை. இதன் வால் நீளம். இது கோபிக்கையில் மயிரைச் சிலிர்த்துக் கொண்டு கரடிபோல் பின் கால்களில் நின்று கொண்டு போரிடும். |
பன்ஹாஜிரசபுத்திரர் | குஜராத்தி தேயத்தில் டோகராபூர் என்னும் நகரத்தில் இருந்த அரசனிடத்தில் உத்தியோகஸ்தர். ஒரு தீபாவளி பண்டிகையில் ஒருநாள் தீபோற்சவம் செய்து கொண்டிருக்கும் போது பன்ஹாஜி, தம் முன்றானையைக் கசக்சினர். அரசன் அதுகண்டு என்ன என்று வினவத் துவாரகையில் பெருமாள் தீபோற்சவங் கொள்ளுகையில் அர்ச்சகர் தீபார்த்தி செய்யத் தீப்பட்டுப் பெருமாள் திருவாடை பற்றியது. அதனைக் கசக்கினேன் என்றனர். அப்போது பெருமாள் என்ன ஆடையுடுத்திருந்தனர் என்னப் பச்சையாடை யென்றனர். உடனே அரசன் தன்னினத் தவனாய்த் துவாரகை யிலிருந்த அரசனுக் கெழுதி உண்மையறிந்து பக்தருக்கு மானிய முதலிய கொடுத்துபகரித்து வந்தனன். |
பப்பரவாயணி | விஸ்வாமித்திர புத்திரன். (பா~அநு.) |
பப்பா | இவன் சூரியவம்சத்து நாகதீடன் குமரன். இவன் தந்தை மலைநாட்டரசர்களால் கொல்லப்பட்ட பொழுது இவனைச் சில பிராமணர்கள் வளர்த்தனர். இவன் இளமையில் மாடு மேய்த்து கொண்டிருக்கையில் அருகிருந்த சோளங்கிராஜ புரத்து ராஜகன்னிகை அக்காட்டிற்குள் ஊஞ்சலாட வந்தனள். வந்தவள் ஊஞ்சற்கயிறு கொண்டுவர மறந்து மாடுமேய்க்கும் பப்பாவை ஒரு கயிறு கேட்டனள். பப்பா முன்பு ஒரு விவாக விளையாட்டுக் குடன்படின் தான் கயிறு கொடுப்பதாகக் கூறினன். அவ்வாறே அக்கன்னி கைகள் பப்பாவைமணமகனாகவைத்து ராஜபுத்திரியை மணமகளாக்கி விவாகச் சடங்கை முடித்தனர். இவ்விளையாட்டு, வினையாக முடிந்தது. சிலநாள் சென்றபின் சோளங்கிராஜ புத்ரத்தலைவன் தன் மகளின் விவாகத்தைப் பற்றி புரோகிதரை யோசிக்கையில் அவளுக்கு முன்னமே விவாகம் முடிந்திருக்க வேண்டுமெனக் கூறத் திடுக்கிட்டு உண்மை யறிந்தனன். பப்பா தனக்கு என்ன நேரிடுமோ வெனப்பயந்து அருகிருந்த பலேவன் தேவன் எனு மலைநாட்டரசர்களை நட்பு கொண்டு அந்த ராஜ புத்திரியையே மணங்கொண்டான். பின் இவன் சித்தூர் அரசன் பிரமராஜ வம்சத்தவனென்று அவனுடன் நட்பு கொண்டான். அவன் இவனை பெரிய ஜாகீர் தாராக்கினான். இதனால் மற்ற சாகீர்தாரர்கள் பொறாமை கொண்டு சித்தூர் அரசன்மீது சத்துரு ஒருவன் எதிர்த்தகாலத்து உதவி செய்ய மறுத் தனர். இதனால் பப்பா ஒருவனுமே போர்க்களம் சென்று எதிரிகளைத் தாக்கினன். இதனால் மற்ற சாகீர்தாரர்களும் பணிந்து பப்பாவையே சித்தூருக்கு அரசனாக்கினர். இவனே கி. பி. (713) இல் சித்தூரைத் தாக்கிய முகம்மதபின் காசிமைத் தோற்கச் செய்தவன். |
பப்புரு | 1. (சந்.) திரியு குமரன். இவன் புத்திரன் சேது. 2, தேவவிரதன் குமரன். 3. துருஹ்யன் குமரன். 4. சாத்வதன் பேரன். 3. விதர்ப்பன் பேரன். 6. ஒரு இருடி, |
பப்புருமாலி | ஒரு ரிஷி |
பப்புருவாகனன் | 1. அருச்சுனனுக்கும் பாண்டி நாட்டரசன் குமரியாகிய சித்திராங்கதைக்கும் பிறந்தவன். உலூபியால் தந்தையுடன் யுத்தஞ்செய்யத் தூண்டப்பட்டு அருச்சுநனுடன் பெரும்போரிட்டு மூர்ச்சிக்கச் செய்து தந்தையென்றறிந்து வாசுகி கொடுத்த நாகரத்தினத்தால் உயிர்ப்பித்தவன். இவன் முத்துக்கதிபதி, யாதவர் சமுத்திர ஸ்நானத்திற்குப்போய், ஒருவருக் கொருவர் சண்டையிட் டிறந்தகாலத்துத் தனித்த கிருஷ்ணன் இவனை நோக்கித் தமது மனைவியரைத் துவாரகையில் விட்டுவரக் கட்டளை யிட்டனன், அக்கட்டளையேற்ற இவன் அப்பெண்களை யழைத்துச் செல்கையில் செண்பையெடுத்துச் சுழற்றி வந்த வேடன் அடிக்க இறந்தவன். 2, மகோதய நாட்டரசன். இவன் ஒரு முறை வேட்டைக்குச் சென்று ஒரு மானை யெய்ய அது அடியுண்டு அக்காட்டைத் தாண்டிச் சென்றது. பின் தொடர்ந்த அரசன், அங்கு ஒரு பிரேத ஜன்மத்தைக்கண்டு அதன் பிறப்புக் கேட்டு அதனிடம் மணி பெற்று அப்பிரேதத்திற்குக் கர்மஞ்செய்து பிரேத சன்மத்தை நீக்கினவன். பிரேதம் முற்பிறப்பில் தேவன் எனும் வணிகன். |
பப்ருதன் | வஸுதேவன குமரன். |
பம்பரம் | இது ஒரு சிறுமரத்துண்டால் குடம் போன்று முனையில் கூரிய ஆணி பதித்த கருவி. இது சிறுவர் விளையாட்டுக்கருவி. இதில் கயிறு சுற்றிப் பூமியில் எறிய இது பம் என்ற ஓசையுடன் தன்னைச் சுற்றுவது. இந்த விளையாட்டில் பலவகை உண்டு. இவ்வகை விளாம்பழத்திலும் பம்பரம் செய்வதுண்டு. இது கண்களுக்குச் சுழற்சியின் வேகத்தைக் காட்டுவது. |
பம்பை | 1. கிட்கிந்தைக்கருகில் தண்டகவனத்திலுள்ள மடு. 2. ஓர் தவப்பெண். 3. A branch of the river Thungabhadra. I rises in the Rishyamukha mountain which is 8 miles from the Anagandi hills. இராமர் தங்கிய இடம், |
பம்பைக்காரன் | தொழிலால் வந்த சாதி. இவன் பூஜாரிக்கு உடனிருந்து பம்பை யடிப்பவன். |
பயன் | 1. தருமன் குமரன். 2. காலகன்னியை மணந்தவன். இவனுக்கு யவனேசுரன் எனவும் பெயர், |
பயமுறுத்துஞ் செடி | (The frightening Plant) அமெரிக்காவின் அகன்ற வெளிகளில் உண்டாகும் ஒருவகைச் செடி. காய் முற்றிச் சிதறி விழுகையில் கிலுகிலு எனும் சத்தம் உண்டாகிறது. அதைக் கேட்கும் ஊரார் கிலுகிலுப்பை பாம்பெனத் திடுக்கிட்டு ஓட்டம் பிடிப்பராம். |
பயாபதி | பிராசாபதியெனும் ஒரு சைநராசன், |
பயிரவமுனிவர் | ஒரு இருடி, இவர் தவத்தில் இருக்கையில் பரிட்சித்து இவர் கழுத்தில்செத்த பாம்பினையெடுத்துச் சுற்றினன். |
பயிரவர் | பிரமன் தனக்குச் சிவமூர்த்தியைப்போல் ஐந்து சிரம் உண்டெனச் செருக்கடைந்த காலத்தில் அவனிடஞ் சென்று அவனுடைய நடுச்சிரத்தைக் கிள்ளிய சிவா அவசரம். |
பயிரைக் கெடுக்கும் பூச்சிகள் | நாவைப் பூச்சி, கருவண்டு, புழுக்கள், பட்டாம் பூச்சி, கம்பளிப்பூச்சி, வெட்டுக்கிளி, அந்து, சிட்டு, எலி. |
பயிலவமுனிவர் | ஒரு இருடி. உதங்கருக்கு ஆசிரியர். வியாசர் மாணாக்கர். இருக்கு வேதி, இவர் தம் குமரியை உதங்கருக்குக் கொடுத்தனர். இவர் குமரர் வேத்தருமர். |
பயை | ஏதியென்பவன் தேவி, |
பயோவிரதம் | பங்குனிமாதம் சுக்கிலபக்ஷ பிரதமை முதல் பன்னிரண்டு நாள்கள் அநுட்டிக்கும் விரதம். இது பிரமதேவனால் காசிபருக்கு உபதேசிக்கப் பட்டுக் காசியரால் அதிதிக்கு உபதேசிக்கப்பட்டது. |
பயோஷ்ணி | விதர்ப்பநாட்டில் விந்திய பர்வதத்தருகில் பிரவகிக்கும் நதி. இதை தபதியென்பர். |
பரகாலன் | மற்ற மதத்தவர்களை வென்றதால் திருமங்கையாழ்வாருக்கு வந்த பெயர் |
பரகேசரி ராஜேந்திர சோழ தேவன் | இவன் இராஜராஜன் குமரன். இவனுக்கு பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட இராஜேந்திரனெனவும் பெயர். இவனுக்கு மதுராந்தகன், உத்தமசோழன், விக்ரமசோழன், பண்டித சோழன், முடிகொண்டசோழன் எனப் பல பெயர்கள் உண்டு. இவன் கி. பி. (1012) முடிசூட்டப் பெற்றான். இவன் மைசூர்நாட்டு, இடைதுறைநாடு, வனவாசி, கொற்றிப்பாக்கை, மண்ணைக்கடகம், ஈழம், மலைநாடு முதலிய வென்று மேலைச்சாளுக்கிய அரசனாகிய ஜயசிங்கன் 2 ஐ, உச்சங்கி துர்க்கத்தில் தாக்கினான். பின்னும் ஒட்டரதேசம் கோசலைநாடு, இலாடம், வங்காளம் முதலிய தேசங்களை வென்று இந்நாட்டாசர்களாகிய இந்திராதன், கோவிந்தசந்திரன், இரணஜான், மகிபாலன் முதலியவர்களை வென்று மதிபாலன் தலையில் கங்காதீர்த்தங் கொணர்வித்தா னென்பர். பின் கப்பற்படை கொண்டு நக்கவாரி தீவுகளை வென்று கடாரத்துறையாகிய மாப்பப் பாளயத்திலிறங்கி அந்நாட்டரசனாகிய சங்கிராம விஜயோத்துங் கனை வென்றான் இவன் தன் தங்கை குந்தவவையின் கணவனாகிய விமலாதித்தனை வென்ற அவனாட்டிலுள்ள மஹேந்திர பர்வதத்தில் புலிக் கொடி நாட்டினான். இவன் கல்வியில் விருப்புள்ளவன். இவன் தன் பெயராகிய கங்கைகொண்ட சோழனென்பதைக் குறியாகக் கொண்டு கங்கைகொண்ட சோழீச்வரம் எனும் தலம் ஏற்படுத்தினான். இவ்வரசனுக்குப் பின் வந்த சோழர் பலர் இதை ராஜதானியாகக் கொண்டனர். இக்கங்கை கொண்ட சோழபுமே கருவூர்த்தேவரால் திருவிசைப்பாவில் பாடப்பட்டது. ஸ்ரீமந் நாதமுனிகள் இவ்வூரில் தான் பரமபதம் அடைந்தனர், |
பரசிராமர் | 1. பிருகுவம்சத்திற் பிறந்த சமதக்னி முநிவர்க்கு இரேணுகையிடம் பிறந்த குமரர். இவர் விஷ்ணுவின் அம்சாவதாரம். இவர் க்ஷத்திரிய நாசஞ் செய்யும்படி யெண்ணிச் சிவமூர்த்தியை நோக்கித் தவம்புரிந்தனர். சிவமூர்த்தி புலையர் உருக்கொண்டு இவர் இருக்குமிடம்வர இராமர் கோபித்து யுத்தஞ் செய்தனர். கடைசியில் புலையர் உருக்கொண்ட சிவமூர்த்தி, வேதியர் வருந்தும்படி யுருட்ட வேதியர் மனக்கவலையடைந்து துதிக்கையில் சிவ மூர்த்தி தரிசனந்தந்து பரசு கொடுத்து இன்று முதல் உனக்குப் பரசிராமன் எனப் பெயருண்டாகவென்று திருவாய்மலர்ந்து மறைந்தனர். அதுமுதல் இப்பெயர் இவருக்காயிற்று. 2. இராமமூர்த்தி மிதிலையில் வில் மூரித்து ஜானகியைத் திருமணம்புரிந்து மீளுகையில், வழியில் எதிர்த்துத் தம்மிட மிருந்தவில்லை வளைக்கச்செய்து தமது, தவத்தை அவ்வில்லிற் பூட்டிய அம்பிற்கு இலக்காக்கித் தவத்தை யிழந்தவர். 3. கர்ணனுக்குத் தாம் சிவமூர்த்தியிடம் கற்ற வில்வித்தையைக் கற்பித்து அவன் தன்னைப் பிராமண னென்று கூறி வஞ்சித்தமையால் சமயத்தில் அவ்வித்தை பலியாதிருக்கச் சாபமளித்தவர். 4, அம்பையென்னும் காசிராசன் பெண் பொருட்டு மாணாக்கராகிய பீஷ்மரிடம் யுத்தம் புரிந்து தோற்றவர். 5. கார்த்தவீரியனைக் கொன்ற தோஷத்தால் தந்தை சொற்படி ஒருவருஷம் தீர்த்த யாத்திரை சென்றவர். 6. தந்தைசொற்படி தாயைக் கொன்று மீண்டும் தந்தையால் தமயன்மார் தபோதனராகவும், தாய் கற்புக்கெடாது உயிர்பெறவும் வரம் பெற்றவர். கார்த்தவீரியனைக் கொன்றதால், இவர் இல்லாத சமயங்கண்டு கார்த்தவீரியன் குமரர், ஜமதக்னியைக் கொன்றனர். இதைக் கண்டு இரேணுகை வர அவளையும் எதிர்க்க அவள் இருபத்தொரு அடியுண்டு தன் குமரன் வருமளவும் உயிர் தாங்கியிருந்தனள். குமரன் வர நடந்தது கூறியி றந்தனள். குமரன் இறந்த தாய் தந்தையர்க்குக் கருமஞ் செய்கையில் ஐந்தாம்நாள் இரவில் தன் மீது ஒருபுலி பாய்ந்தது போற் கனாக்கண்டு “அம்மா, அம்மா” என்று அலறினன். இரேணுகை தன்னைக் குமரன் அழைக் கிறானென்று அதுவரையில் தனக்குக் குமரன் செய்த கருமத்தால் ஏற்பட்டிருந்த தலையுடன் வெளிப்பட்டுப் பார்க்கப் பரசிராமர் இதனைக்கண்டு தத்தாத்திரேயருக்கு அறிவிக்க முனிவர் கர்மம் பூர்த்தியாகுமுன் அழைத்ததால் இவ்வகையாயிற்று எனக் கர்மத்தைப் பூர்த்தி செய்வித்தனர். தாய் உயிர் பெற்றுத் தலைமாத்திரமாய்த் தெய்வமாயினள். தந்தை சத்திய உலக மடைந்தனர். 7. இனி வரப்போகிற மன்வந்தரத்தில் சப்தருஷிகளில் ஒருவராகப் போகிறவர். மகேந்திரபர்வதத்தில் இருக்கிறார். இவர் சிரஞ்சீவி களில் ஒருவர். 8. தாய் இருபத்தொரு அம்புபட்டு இருபத்தொருமுறை தன்னைக்கண்டு மார்பில் அறைந்து கொண்டதால் இருபத்தொரு தலைமுறை அரசர்களை நாசஞ்செய்த இரத்தம் பெருகிச் சமந்த பஞ்சகமென்னும் பெயரால் ஐந்து மடுக்களாயின. 9. இவர் அரசரை நாசஞ்செயது அபபூமிகளை யெல்லாம் காசிபருக்குத் தானஞ் செய்தனர். 10. காந்தனென்னும் சோழனிடம் போரிட வந்து அவன் ஒளிக்கச் சென்றவர். 11. இவர் ஷத்ரிய நாசஞ் செய்து யயாதிபதனமெனும் க்ஷேத்திரத்தில் நடந்த யாகத்தில் பராவசு சொல்லால் பிரதர்த்தனன் முதலிய க்ஷத்ரியர்களை நாசஞ்செய்து பூமியை கச்யபருக்குத் தானஞ் செய்தார். கச்யபர் க்ஷதரியரைக் காக்க வேண்டித் தானம் வாங்கிய பூமியில் இருத்தல்கூடாது தென்கரை செல்கவெனச் சென்றவர். சமுத்திர ராஜன் இவருக்குப் பயந்து சூர்ப்பாகார மெனும் ஒரு தேசம் நியமித்துத் தந்தான். (பார~அநு.) 12. சிவசூலத்தால் கார்த்திவீர்யனைச் செயித்தவர். இவர் தன் சகோதாரை வதைத்ததால் துக்கமடைந்து சிவபூசை செய்து நல்வரங்களையும் மரணமிலாமையையும் கோடாலியையும் பெற்றார். (பாரதம் அநுசானிகபர்வம்). |
பரசிவன் | உன் மனாதீதத்தில் யோகியரால் தரிசிக்கப்படும் சிவமூர்த்தி; சக்தி மனோன்மனி. |
பரசு | ஒரு அரக்கன், இவன் பிராமண வேடங்கொண்டு சாகல்ய முனிவரிடம் அதிதியாகச் சென்று அன்னம் வேண்ட அவர் இவனது கபடமறிந்து முற்பிறப் புணர்த்த அவரைத் துதித்துச் சென்றவன். (பிரம்ம புராணம்). |
பரசுராம சதுர்வேதி மங்கலம் | செல்லி நகர். (திருவிளையாடல்). |
பரஞ்சோதி முனிவர் | 1. சத்தியஞான தரிசநிகள் மாணக்கர். மெய்கண்ட தேவர்க்கு ஆசிரியர். 2, இவர் சோழநாட்டு வேதாரண்யத்தவர். சைவ வேளாளர். (வேதாரண்ய புராணம்.) இவர் அதிவீர ராமபாண்டியன் காலத்து மதுரையிலிருந்த புலவர் திலகர், இவர் சைவவேளாளர், இவர் நிரம்ப அழகியர் காலத்தவர் என்பர். இவர் செய்த நூல்கள் திருவிளையாடற் புராணம், மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியவை. இவர் சாலிவாகனசகம் (1430)க்கு மேல் இருந்ததாகத் தெரிகிறது. (திருவிளை.) |
பரஞ்சோதியார் | 1. இவர், மதுரையுலா, சிதம்பரபுராணம் இயற்றிய திருமலைநாதருக்குப் புத்திரர். மெய்கண்டார் சந்தானத்தினராய்க் கச்சிப்பதியி லிருந்தவரும் தமக்கு ஞானாசாரியருமாகிய தத்வஞான பிரகாசமுனிவர் ஆணைப்படி சிதம்பரப்பாட்டி யல் செய்தவர். 2. சிறுத்தொண்டருக்குப் பிள்ளைத் திருநாமம். |
பரணர் | 1. இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர், கபிலரோடு நட்புடையரா யிருந்தவர். சோழன் உருவப்பஃறேரிளஞ் சென்னியைப் புகழ்ந்து பாடியவர். புறம் (4). நெடுஞ்சேரலாதனும் பெருவிறற்கிள்ளியும் போர் புரிந்து மடிந்த தனையும் போர்க்களத்தின் அழிவையும் நோக்கி இரங்கிக் கூறினார். புறம் (63), வையாவிக்கோப்பெரும் பேகனைப் பாணாற்றுப்படையும் இயன் மொழியும் பாடி உவப்பித்தருளினார். புறம் (141, 142). அவனால் நீக்கப்பட்ட கண்ணகி யென்பாளை மீட்டும் அவன் அழைத்துக் கொள்ளும்படி பாடியருளினார். புறம் (144, 145). மகட்பாற் காஞ்சியென்னுந்துறை பலரினும் பலபடப் புனைந்து பாடியுள்ளார் புறம் (336, 341). அம்மகட்பாற் காஞ்சியின் கட் குட்டுவனையும் அவனது முசிறியையும் புகழ்ந்து பாடினார். புறம் (343). “வாய்மொழித் தழும்பனூ னூரன்ன” எனத் தழும்பனையும் அவனது உனூரையும் பாராட்டிக் கூறுவராயினர். புறம் (348). தித்தனையும் அவனது உறையூரையும் கூறியுள்ளார். புறம் (352). சேரமான் கடலோட்டியவேல் கெழுகுட்டுவனை ஏர்க்கள உருவகம் பாடிப் பரிசில் வேட்டனர். புறம் (369). (சிலப்பதிகாரத்திற் கூறப்படும் செங்குட்டுவனிவனே). இச்செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப்பாடி அவன் கொடுத்த வரிசை எல்லாம் பெற்று மீள்வாராயினார். அசத்திலும் இவரால் அச்செங்குட்டுவன் புகழ்ந்து பாடப் பெற்றான். அகம் (396). வள்ளலாகிய வல்விலோரியைப் புகழ்ந்து கூறுவாராயினர். நற்றிணை (6) கொல்லி மலையிலமைந்த கொல்லிப்பாவையின் தோற்றமும் அதனியல்பும் ஆங்காங்கு உவமை முகத்தால் கூறியுள்ளார். நற். (201) குறு. (89) அகம் (62, 208). கொண்கானத்து (கொங்கணம்~மலையாளம் ஜில்லா) முன்பிருந்த நன்னன் என்னுஞ் சிற்றரசனது கொடை முதலியனவும் அவனது கொடுஞ் செயல்களும் அவனொடு சேரமான் போர் செய்ததும், சேரன் சேனாதிபதி ஆஅய் எயினனை நன்னன் சேனாபதி மிஞிலி என்பான் கொன்றதும் பிறவும், நன்னனது பாழியில் பொருள் சேமித்துக் காவலோம் பியதும், இவரே விரித்துக் கூறுகின்றார். நற். (265, 270). குறு, (73, 292). அகம் (152, 181, 208, 258, 356, 396). சேரலனது தொண்டியைப் புகழ்ந்தது. குறு, (128). சேந்தனது உறையூர் காவிரி அழிசியின் ஆர்க்காடு, இவற்றைப் பாராட்டிக் கூறியது. குறு, (258). அஃதை தந்தையைப் பாராட்டியது. குறு. (298). விச்சியர்கோன் போரும் குறும்பூரார் ஆரவாரிப்புங் கூறியது. குறு. (328). தித்தனது உறையூருங் காவிரியும் மத்தியின் கழாருங் கூறியது. அகம் (6), வெளியன் தித்தனது கானலம் பெருந்துறையும் பிண்டன் தோல்வியும் கள்ளியின் சோலைச் சிறப்பும் ஆஅய்கானத்துச் சிறப்புக் கூறியது. அகம் (152). அதகனது வேங்கை மலையைப் புகழ்ந்து கூறியது. அகம் (162), மணல்வா யில் உறத்தூறைப் பாடியது. அகம் (262), பேஎர் என்னுமூரிலுள்ள சோழர் சேனாபதி பழையனைப் புகழ்ந்தது. அகம் (186), ஆஅய் அண்டிரனது பொதிய மலையைப் புகழ்ந்தது. அகம் (198). மற்றும் இவர் சோழன் கரிகாற் பெருவளத்தான் மகள் ஆதிமந்தி யென்பாள் தன் காதலனை யிழந்து புலம்பிய கதையை விரித்து சுருக்கியும் உவமமாக்கியும் பல இடங்களில் கூறுகின்றார், அகம் (135, 222, 126, 236, 376, 396). திருவழுந்தூர்த திதியனும் அன்னிகுடி அன்னியும் பொருத கதையை விளக்கிப் பல இடங்களிலும் உவமிக்கிறார். அகம் (196, 262). அதிகமான் நெடுமானஞ்சி திருக்கோவலூரை வென்ற வினைப் பாராட்டிக் கூறினார். அகம் (372). அங்கனம் பாடியதனை எடுத்துக் காட்டிப் “பரணன் பாடினன் மற்கொல்” என ஒளவையாராற் புகழ்ந்து பாடப் பெற்றார். புறம் (99). இவர் பாடிய பாடல்களொவ் வொன்றினும் யாரையேனும் புகழாமலும், அக்காலத்து நிகழ்ந்த கதைகளினொன்றைப் புகுத்தாமலும் பாடுவதில்லை. இன்னும் வாகைப்போரிற் பாண்டியன், அதிகன், கொங்கர், சோசோழ பாண்டியர், வேளிர், சோலன், சேனாபதி கணையன் இவரெல்லாம் நம்புலவர் பாடலால் நிலைபெற்று விளங்கு கிறார்கள். அகம் (202)ல் மாதரை இவர் வருணித்திருப்பது வியக்கத்தக்கது இவர் பாடியனவாக நற்றிணையில் பன்னிரண்டு (6, 100, 204, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356) பாடல்களும், குறுந்தொகையில் பதினைந்தும், பதிற்றுப்பத்தில் பத்தும், அகத்தில் முப்பத்திரண்டும், புறத்தில் பன்னிரண்டும், திருவள்ளுவமாலையி லொன்றுமாக எண்பத்திரண்டு பாடல்கள் கிடைத்து இருக்கின்றன. 2. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் செய்த நூல் சிவபெருமான் திரு அந்தாதி 3. இவர் சங்கப்புலவருள் ஒருவர். எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்துப்பாடிக் கோச்செங் குட்டுவனிடம் மலைநாட்டிலுள்ள உம்பற் காட்டுவாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றவர். இவர் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான்குடக்கோ நெடுஞ்சொலாதன், சோழன் வேற்பஃறடக்கை பெருநற்கிள்ளி, வையாவிக்கோப் பெரும்பேகன், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் முதலியவரைப் பாடியதாகத் தெரிகிறது. திருவள்ளுவமாலையிலுள்ள “மாலுங்குறளாய் ” எனும் வெண்பா செய்ததாகத் தெரிதலின் உக்கிரப்பெருவழுதியாரும் அம்மாலையை இயற்றிய மற்றப் புலவர்களும் இருந்த காலத்தவர் என்று எண்ணப்படுவர். கபிலருடைய அருந்துணைவர், அதிகமானெடுமானஞ்சி, கோவலூர்த் தலைவனை வென்று அவ்வூரைக் கைக்கொண்டமை இவராற் கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகையில் (82) செய்யுட்கள் இவர் பாடினவாகத் தெரிகிறது. சிவபெருமான் றிருவந்தாதி இயற்றிய பரணரும் இவராக இருக்கலாம் என்பது சில அறிவாளிகளின் நோக்கம். (பதிற்றுப்பத்து.) 4. சுதேசப் பழங்குடிகளில் ஒரு வகுப்பினர். இவர்கள் கல்வியிலும், ஆடல் பாடல்களிலும் வல்லவராயிருந்தது பற்றித் தமிழ் நாட்டரிசர்களால் மதிக்கப்பெற்று இருந்தனர். இவர்கள் ஒரு மூங்கிற்கோல் கைக்கொண்டிருப்பர். |
பரத சேநாபதியம் | ஆதிவாயிலார் செய்த ஒரு தமிழ் நூல், |
பரதகண்டம் | பரதனால் ஆளப்பட்ட பூமி, இஃது அரசிலையுருவாய் மகாகண்டமாகிய ஆசிய கண்டத்திற்குத் தெற்கில் இருப்பது. |
பரதகன் | பிரச்சோதனனுடைய மந்திரிகள் பதினாயிரவருள் ஒருவன். சாலங்காயனுக்கு அடுத்தபடி யென்னும் பெருமை வாய்ந்தவன்; சிறந்த நூற்பொருள்களை அறிந்தவன். உதயணன் பால் மிக்க அன்புடையவன். ஐராபதம் என்னும் மலையிற் பிறந்த சிங்கச்சுவண மென்னும் பொன்னில் எட்டிலக்கம் நன்கொடையாக உதயணனால் அளிக்கப்பெற்றவன். (பெ~கதை.) |
பரதசேநாபதியார் | இவர் பரத நூலாசிரியர். |
பரதன் | 1. துஷ்யந்தனுக்குச் சகுந்தலையிடம் பிறர்த குமரன். தேவி, சுநந்தை, குமரன் பெளமன். இவன் சம்ராட்பட்டம் பெற்றவன்; இவன் பரத்துவாசர் அநுக்கிரகத்தால் புமன்யன், உதமன்யன் என்பவர்களைப் பெற்றான். இவன் அக்னிசயன மென்னும் யாகம் (27000) வருஷஞ் செய்து, விதேக புத்திரிகள் மூவரிடத்துங் கூடிப் புத்திரனைப்பெற்று, இவர்கள் யோக்கிய ரன்றெனத் தோன்றி வெறுத்த படியால் இவன் தேவிமார் இப்புத்திரரைச் கொலை செய்தனர். இவ்வகை மும்முறை கொலைபுரியவே, சந்ததி நிலையாமைகண்ட அரசன், தேவர்களைக்குறித்து யாகமொன்று இயற்றினன். அந்த யாகத்தில் தேவர் தோன்றி அரசனுக்குப் பரத்துவாசன் என்னும் ஒருபுத்திரனை அளித்தனர் (பாகவதம்). இவன் தனது ஆசாரியருக்குப் பதினேழு கோடி வெள்ளை யானைகளைத் தானமளித்தவன். 2. இவன் ஒரு சக்கிரவர்த்தி, உதயணணுடைய குல முதல்வன். (பெ~கதை) 3. இவன் தேவர்களைக் குறித்து யமுனைக்கரையில் (300)ம், ஸரஸ்வதிக் கரையில் (20)ம், கங்கைக் கரையில் (14)ம், மற்ற இடங்களில் பலவுமாக (1000) அசுவமேத யாகங்களைச் செய்தான். பல வேதிகைகளைப் போட்டு ஆயிரக்கணக்கான குதிரைகளைக் கட்டி யாகஞ் செய்தவன். (பார~சாந்தி.) 4. அக்னி விசேடம். (பார~வனபர்.) |
பரதம் | இது, பாவ ராக தாளமென்னும் மூன்றின் முதலெழுத்துக்களைத் திரட்டியிட்ட பெயராம். இம் மூன்றெழுத்துக்களும் பிரணவ விகாரமெனவும், இவற்றிற்குப் பிரமன் முதலிய மும்மூர்த்திகளும் அதிதேவதைகள் எனவுங் கூறுவர். இப்பாதம் பாவராக தாளவகையால் மூன்று விதப்படும், அந்தப் பாவம் கரவகையால் நாற்பத்தொன்றும், சிரவகையாற் பத்தும் பதவகையாற் பத்தும், நேத்திரவகையால் எழும், இரசவகையால் ஒன்பதும், சுரவகையால் ஆறுமாம். அக்கரவகை, ஒற்றைக்கை, இரட்டைக்கை என இருவகைப்படும், ஒற்றைக்கையினை வகுக்குமிடத்தில் பதாகை, திரிபதாகை, பிறை, சர்ப்பசிரம், சாளையம், மான்றலை, பற்மகோசம், சிலீமுகம், தேசிமுஷ்டி, சிகரம், சூசிகம், கபித்தம், கடகம், சாந்தாங்கிசம், அன்னவாய், முகிழ், திரிலிங்கம், மிருகசிரம், சிங்காகம், கூர்மம், பூர்ணம், மென்றிலை, முன்னதம் என (23) ஆம். இனி இரட்டைக்கை அஞ்சலி, புஷ்பாஞ்சலி, தாடனம், பதாகை, சங்கற்பம், டோளம், உற்சங்கம், உபசாரக்கை, அபயவரதம், மகாக்கை, கருடக்கை, பாரதிக்கை, கலகக்கை, சுபசோபனக்கை, பத்மமுகிழ்க்கை, மல்லயுத்தக்கை, பதாகை சோத்திகம், கத்திரிசோத்திகம் எனப் பதினெட்டாம், ஆகக் கரவகை (41). இனிச் சிரவகை; சமசிரம், கம்பிதசிரம், ஆகம்பிதசிரம், துதசிரம், விதாத சிரம், உக்கிதசிரம், நிகுஞ்சிதசிரம், அதோமுகசிரம், கந்தானன சிரம், அனுக்குச் சிரம் என (10). இனிப் பதவகை: சமபதம், மண்டிலபதம், குஞ்சிதபதம், அஞ்சிதபதம், வடிம்புபதம், தாடிதபதம், நாகபந்தபதம், சாடகதிப்பதம், நிருத்தமூர்த்திப் பதம், கருடநிலைப்பதம் ஆக (10). இனி நேத்திரம்: காந்தைக்கண், பயாநகக்கண், கருணைக்கண், மூடாம்பரக்கண், அற்புதக்கண், லீரக்கண், நகைக்கண் என (7). இரச வகை: பெருநகைரசம், சோகரசம், கருணாரசம், வீரரசம், அச்சாசம், சாந்திரசம், அம்புதரசம், ரௌத்திரரசம், சிருங்காராசம் என (9). சுவை: இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, உவர்ப்பு என (6) இவை சேர்ந்தது பாவமாம். இனி இராகம்: மொழிக்கு முதற்காரணமாய் நாதந்தோன்றும். அந்த நாதமே, அகர, உகர, மகாரம் என்கிற பிரணவத்தின் வடிவு. அந்தப் பிரணவமாகிய ஓங்கார தவனி யினின்றும் சுரதவனி, நீர்க்கோஷத்வனி, நிர்ணயத்வனி, வேணுத்வனி, காளத்வனி, சங்கத்வனி; மேகத்வனி. பேரித்வனி, மத்தளத்வனி, குமந்தத்வனி யென்னும் பத்துவித துவனிகள் தோன்றின. அத்தொனிகள் காரணமாக ஆன்மாமனது, அக்னி, வாயு, ஆகிய நான்கின் முயற்சியால் ஏழு சுரங்களும், மந்த இசை, தாரை இசை, மத்திம இசை, யென்னும் மூன்று இசைகளும் தோன்றின. அச்சுரங்களாவன ச, ரி, க, ம, ப, த, நி என்னும் குறிகளையுடைய குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரமென்பனவாம். முறையே இவற்றின் ஆயுள். அதிதேவதை, இடம், காலம்,த்வனி, மலர், சுவை, நாமம், பயன், வாரம், திதி, நக்ஷத்திரம், நிறம், உணவு, ஜாதி, பூச்சு, வஸ்திரம், அணி, அப்யசித்தவர், விருக்ஷம், வாகனம், ஆயுதம் முதலியவற்றை விரிந்த நூல் களுட் காண்க. மேற்கூறிய சுரங்கள் சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தெய்வதம், நிஷாதம் எனப் பெயர் பெறும். அச்சுவரங்கள் ஆரோகணம், அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம், ஆவாதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தி பாஹதம், கற்பிதமெனப் பத்துவித கமகங்களோடு சுருதியுடன் கூடி மேகவிரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலஹரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, சீராகம், பங்காளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்போதி, இலலிதை, தேவக்கிரியை, தேசாக்ஷரி, மாளவி, சாவேரி, தேசி, சாரங்கம், தோடி, இராமக் கிரியை, வேளாவளி, பைாவி, குண்டக்கிரியை, தன்னியாசி யென்னும் தலைமை பெற்ற இராகங்களைப்பெற்று நிலவும். இந்த முப்பத்திரண்டு இராகங்களும் விரிவாற் பலவிதப்படுமென்பர் இசைநூலார். இவற்றுள் பைாவி, புருட விராகம்; பிராமண்சாதி; மனைவிகள், தேவகரியை, மேகவிரஞ்சி, குறிஞ்சி; அதிதேவதை, ஈசன். பூபாளம், புருடவிராகம், பிராமண ஜாதி, இதன் மனைவிகள் வேளாவளி, மலஹரி, பௌளி, அதிதேவதை திருமால். சீராகம், புருடவிராகம், அரசசாதி, இதன் மனைவிகள் இந்தோளம், பல்லதி, சாவேரி; அதிதேவதை சரஸ்வதி. படமஞ்சரி புருடராகம் அரசசாதி; இதன் மனைவியர், தேசி, இலலிதை, தோடி; அதிதேவதை இலக்குமி. வசந்தம், புருடராகம், வைசிய சாதி, இதன் மனைவியர் இராமக்கிரியை, வராளி, கைசிகம்; அதிதேவதை, சூரியன். மாளவி, புருடராகம், வைசியசாதி இதன் மனைவியர் நாராயணி, குண்டக்கிரியை, கூர்ச்சரி; அதிதேவதை நாரதன். பங்காளம், புருடராகம், சூத்திரசாதி, இதன் மனைவியர், தன்னியாசி, காம்போதி, கௌளி; அதிதேவதை விநாயகர். நாட்டை புருடராகம். சூத்திரசாதி இதன் மனைவியர், தேசாக்ஷரி, காந்தாரி, சாரங்கம். அதிதேவதை தும்புருவர், இனி இராகங்களில் குணம்பற்றியவை, இரக்கம்பற்றிய ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி, பியாகடம், புன்னாகவராளி, துக்கவிராகங்கள். மேற்கூறிய இராகங்களுடன் வராளியுஞ் சேர்ந்து வரும். மகிழ்ச்சியிராகம் காம்போதி, தன்னியாசி, சாவேரி. யுத்த இராகம் நாட்டை. இனிக் காலங்குறித்த இராகங்களாவன: வசந்தகால இராகங்கள் காம்போதி, அசாவேரி, தன்னியாசி. மாலையிராகம், கல்யாணி, காபி, கன்னடம், காம்போதி. யாமராகம், ஆகிரி. விடியற்காலராகம், இந்தோளம், இராமகலி, தேசாக்ஷரி, நாட்டை, பூபாளம், உச்சியிராகம், சாரங்கம், தேசாக்ஷரி முதலிய, இராகங்கள் பலவற்றுள், ஆகிரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம், பூபாளம் நீங்கின மற்றவை, உச்சியிராகங்களாம். இனிப்பாப் பற்றிய இராகங்களாவன சங்கராபரணம் வெண்பாவிற்கும், தோடி அகவற்கும், பந்துவராளி கலிப்பாவுக்கும், பைரவி கலித்துறைக்கும், தோடி தாழிசைக்கும், கலியாணி, காம்போதி, மத்தியமாவதி முதலிய விருத்தத்திற்கும், சௌராட்டிரம் உலாவிற்கும், பூபாளம் தேவாரத்திற்கும், கேதாரகௌளம் பிள்ளைக்கவிக்கும், கண்டாரவம் பரணிக்கும், தக்கவை யென்பர். பின்னும் விரிப்பிற் பெருகுமென நிறுத்தித் தாள வகை சிறிது கூறுதும். சதாசிவமூர்த்தியின் ஈசான திருமுகத்தில் உற்கடிதமும், தற்புருடமுகத்தில் சம்பத்து வேட்டமும், அகோரமுகத்தில் சட்பிதா புத்திரிகமும், வாமமுகத்தில் கச்சற்புடமும், சத்தியோ சாதமுகத்தில் சாசற்புடமும், தோன்றின வென்பர், பின்னும், ஆதிதாளம், பார்வதி லோசனம், குடுக்கம், சிங்கணந்தம், திரிமாத்திரை என்பன முற்கூறியவற்றிற்கு உபதாளங்களாம். பின்னும் சில நூலார் அங்கதாளம், உபாங்க தாளம், பங்க தாளம், விபாங்க தாளம், சுத்ததாளம், அனு தாளம் என ஆறு விதங் கூறுவர். மற்றுஞ் சிலர் துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், உரூபக தாளம், சம்பைதாளம், மட்டிய தாளம் எனவும், சிலர் அருமதாளம், சமதாளம், சித்திர தாளம், நிவர்த்த தாளம், துருவ தாளம், சயதாளம், படிம் தாளம், விடதாளம், அரிதாளம் என ஒன்பது விதமெனவுங் கூறுவர். இவற்றைச் சச்சற் புடமுதல் பெத்தாபரண மீருக (108) பேதங் கூறுவர். இது காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், ஜாதி, களை, இலயை, யதி, பிரத்தாரமெனப் பத்துவித தாளப் பிரமாணத்தைப் பெறும். காலத்தைக் கூறுமிடத்துத் தாம ரைப்பூவின் இதழ், நூறடுக்கி அதில் ஊசியைச் செலுத்துங்காலம் கணமாம். கணம் எட்டுக் கொண்டது இலவமாம். இலவம் எட்டுக்கொண்டது காட்டையாம். காட்டை எட்டுக் கொண்டது நிமிடமாம். நிமிடம் எட்டுக் கொண்டது துடியாம். துடி இரண்டு கொண்டது துரிதமாம், துரிதம் இரண்டு கொண்டது இலகுவாம். இலகு இரண்டு கொண்டது குருவாம். இலகு (3) கொண்டது புலுதமாம். குரு இரண்டுகொண்டது காகபதமாம். அதாவது நிமிடத்திற்கு அரைவீச மாத்திரை, துடி கால்மாத்திரை, துரிதம் அரைமாத்திரை, குரு இரண்டுமாத்திரை, புலுதம் மூன்று மாத்திரை, காகபதம் நான்கு மாத்திரை, மார்க்கம் என்பது தக்கணம், வார்த்திகம், சித்திரம், சித்திரதரம், அர்த்தசித்திரம், அதிசித்திரம் என ஆறாம். தக்கணமாதியாகக் கூறிய மார்க்கமாறில் தக்கணம் எட்டுமாத்திரை கூடியகளையையும், வார்த் திகம் நான்குமாத்திரை கூடியகளையையும், சித்திரம் ஒருமாத்திரை கூடிய களையையும் சித்திரதரம், ஒருமாத்திரை கூடிய களையையும், அர்தவசித்திரம் அரைமாத்திரைகூடிய களையையும், அதிசித்திரம் கால் மாத்திரை கூடியகளையையும் பொருந்தும். கிரியையாவது, தேசிகம், மார்க்கமென இரண்டுவகைப்படும். தேசிகமென்பது துர்வகம், சர்ப்பிணி, கிருடியை, பதுமினி, விசர்ச்சிதை, பதாகை, விட்சிப்த்தம், பதிதம், என எட்டுவகைப்படும். மார்க்கமாவது நிசத்தம் நான்கும், சசத்தம் நான்கும் என எட்டாம். நிசத்த மாவது ஆவாபம், நிட்கிராமம், விட்சேபம், பிரவேசம், என நான்கு வகைப்படும், சசத்தமாவது துருவம், சம்மியம், காளம், சந்நிபாதம் என நான்காம். அங்கமாவன பிறை, மதி, கணை, வில், பாம்பு, புள்ளடி. இவற்றின் பரியாய நாமம் முறையே அநதுரிதம். துரிதம், இலகு, குரு, புலுதம், காகபதம் என்பனவாம். பிறைக்குக் கால்மாத்திரை, மதிக்கு அரைமாத்திரை, கணைக்கு ஒரு மாத்திரை, வில்லுக்கு இரண்டுமாத்திரை, பாம்புக்கு மூன்று மாத்திரை, புள்ளடிக்கு நான்கு மாத்திரை, அந்தக்கரணமென்பது உத்து வேட்டிதம், அபவேட்டிதம், பரிந்தாய விருத்தம், பரிவிருத்தமென நான்காம். தானகமாவது ஆடவர் நிலைத்தானம் ஆறு, பெண்களின் நிலைத்தானம் ஏழு, தேசி இருபத்து மூன்று, ஆதனம் பதினைந்து, ஆக தானகம் ஐம்பத்தொன்று. கிரகம் நான் காவன, அதீதம், அநாகதம், சமம், விடமென நான்காம். அவற்றுள் குரல் முன்னும், தாளம் பின்னும் வருவது அதீதமாம். தாளம் முன்னும் குரல் பின்னும் வருவது அநாகதம். குரலுந்தாளமும் முன்னும் பின்னுங் கலப்பது விடமாம். சாதியாவன: சதுரசிரம், திரிசிரம், மிசிரம், கண்டம், சங்கீரணம் என ஐந்தாம். களை யென்பது ஒருகளை, இருகளை, நாற்களை என மூன்றாம். அந்தக் களைகள் அக்கரகாலமாகக் கிரியையோடு வரல் ஏககளை; இரட்டித்துவரல் துவிகளை. துவிகளை யிரட்டித்துவால் சதுர்க்களையாம். இலையையாவது விளம்பமென்றும், மத்திமமென்றும், துரிதமென்றும் மூன்று வகைப்படும். யதி யென்பது சமம், விடமம், மிருதங்கம், வேதமத்தியம், கோபுச்சம், சரோதோவதம் என ஆறாம், நெட்டங்கமும் குற்றங்கமும் சமமாய்வரல் சமயதியாம். எல்லா அங்கமும் ஒழுங்கின்றி விரவிவருவது விடமயதியாம். முதலிலும் இறுதியிலும் குற்றங்கமும், இடையில் நெட்டங்கமும் வருவது மிருதங்கியதியாம். முதலிலும் இறுதியிலும் நெட்டங்கமும் இடையில் குற்றங் கமும் வருவது வேதமத்தியயதியாம். முதலிற் நெட்டங்கமும் கடையிற்குற்றங் கமும் நிரையே வருவது கோபுச்சயதியாம். முதலிற் குற்றங்கமும் கடையில் நெட்டங்கமும் நிரையே வருவது சுரோதோவகயதியாம். பிரத்தாரயதியைப் பெருநூல்களிற் காண்க. தாளங்கள் சச்சற்புடத்துக்கு குரு 2, இலகு 1, புலுதம் 1 ஆகமாத்திரை (4). சாசற்புடத்திற்கு குரூ 1, இலகு 2, குரு 1, ஆகமாத்திரை (4). சட்பிதாபுத்திரிகத்திற்குப் புலுதம் 1, இலகு 1, குரு. 2. இலகு 1, புலதம்1 ஆகமாத்திரை 12, சம்பத்து வேட்டத்திற்குப் புலுதம் 1, குரு 3., புலதம் 1 ஆகமாத்திரை 12. உற்கடிதத்திற்கு குரு 3, ஆகமாத்திரை ஆறாம். மற்றொரு சாரார் கூறிய துருவத்திற்கு இலகு 1, குரு 1, துரிதம் 1, இதற்குச் சுரம், சரிகம, கரிசரி, கரிசரிகம, மட்டியத்திற்கு இலகு 1, துரிதம் 1, இலகு 1, இதற்குச் சுரம் சரிகரி, சரி, சரிகம. உரூபகத்திற்கு இலகு 1, துரிதம் 1. இதற்குச்சுரம் சரிசரி கம. சம்பைக்கு இலகு1, அது துரிதம் 1, துரிதம் 1 இதற்குச்சுரம் ச, ரிக, சரி, சரி, கம, திரிபுடைக்கு துரிதம் 3, அதநுதுரிதம் 1, இதற்குச்சுரம் சரிக சரிகம அடதாளத்திற்கு இலகு 1, துரிதம் 2, இலகு 1 இதற்குச் சுரம், சரிகா, சாரிகா, மா, மா, ஏக தாளத்திற்கு இலகு 1, இதற்குச்சுரம் சரிகம. 2. நாடகத் தமிழ் நூலுள் ஒன்று, |
பரதர் | 1. இருஷபருக்குச் சயந்தியிடம் உதித்தகுமரர். இவர் ஆண்டதால் இக்கண்டம் பரதகண்டமெனப் பெயர்பெற்றது. இவர் பாரி பஞ்சசேரி. இவர் கோடி வருஷம் அரசாண்டு புலகராச்சிரமம் அடைந்து யோகத்திருக்கையில், ஒரு முறை கண்டகி நதிதீரமடைந்து சந்திவந்தனை செய்கையில் பெண் மானொன்று சிங்கத் தொனிகேட்டு நடுங்கிக் கருவுயிர்த்திறந்தது, பரதராகிய இராசருஷி அந்தமான் குட்டியை யெடுத்து வளர்த்து அதனிடத்து அதிக அன்புள்ளாராய் மரணாந்தத்தில் அம்மானிடம் நினைவுடன் உயிர்விட்டன ஆகையால் முனிவர் மறுபிறவியில் அம்மானுருவடைந்து முன்னைய நினைவு மறவாராய்ச் சில நாள் கழித்து அப்பிறவி நீங்கி ஆங்கீரச சோத்திரத்துள் ஒரு பிராமணனுக்குள்ள இரண்டு தேவியரில் கனிஷ்டையிடத் துதித்த இரட்டை களில் ஆணாகப்பிறந்து பித்தனைப்போல் திரிந்து இருந்தனர். இவ்வகைத் திரிகையில் ஒருவன் புத்திரப்பேறு வேண்டி நரபலி கொடுக்க இவரைக் கொண்டுபோய்ப் பலி கொடுக்க முயற்சிக்கையில் காளி எதிர்த்து அவனைச் சங்கரித்தனள், பின் இவர் இட்சுக்மகிதீரத்தில் உன்மதம் பிடித்தவர் போல் திரிந்திருக்கையில், சவ்வீரதேசாதிபதியின் பல்லக்குச் சுமப்பவர் இவரைத் தம்மொடு பல்லக்குச் சுமக்கப்பிடித்தனர். அவ்வகை இவர் பிடிபட்டுப் பல்லக்குச் சுமந்து மெல்லச் செல்லுகையில் பகுகுணனென்னும் அவ்வரசன் கோபிக்க அதற்கு விடைகூறி அரசனுக்கு ஞானோபதேசஞ் செய்தவர். இவரே சடபாதர் (பாகவதம்.) 2. தசரதருக்குக் கைகேசியிடம் உதித்த குமரன். தேவி மாண்டவி, இவன் தன் சகோதரராகிய ஸ்ரீராமமூர்த்தி பட்டம் விட்டுக் காட்டிற்குச் சென்றது பற்றித் தாயைக்கோபித்து இராமமூர்த்தி மீண்டும் நாடுவந்து சேருமளவும் நந்திகிராமத்தில் அவரது திருப்பாதுகையை யாசித்துப் பெற்றுப் பூசித்து வந்து நகர் வருங்காலம் தவறுதல் அறிந்து தீயில் விழ யத்தனித்துத் தீவலம் வருகையில் கௌசலா தேவியால் நீதி கூறப்பட்டு அநுமன் காட்டிய முத்திரைமோதிரத்தால் தடையுண்டு பின் இராமபிரானைத் தரிசித்து அவரிடம் இராச்சியத்தை யொப்புவித்து அவர்கட்டளைப்படி காந்தருவாகரைச் செயித்துப் பிள்ளைகளுக்கு அளித்து அயோத்தியடைந் தவன். (இராமாயணம்.) 3. அங்கிராவிற்கு மிருதியிடம் உதித்த குமரன், 4. சீவகன் புதல்வரில் ஒருவன், 5. இவனே கோவலன். இது இவனுக்கு முற்பிறப்பின் பெயர். இவன் சிங்க புரத்தரசனிட மிருந்தபொழுது காரண மின்றிச் சங்கமனென்னும் வணிகனைக் கொன்று அவன் மனைவியாகிய நீலியாற் சபிக்கப்பட்டான். (மணிமேகலை.) 6. சூர்யகுலத்தரசன். இவன் குமாரன் பத்திரரதன். 7. பரதத்தை இயற்றிய ஒரு தேவன். |
பரதழனிவர் செய்த பாதராட்டிய வகை | அப்பரதங்கள் 108 இன் பெயர் மாத்திரம், மைசூர் கவர்ன்மெண்டார் அச்சிட்ட பரதசாஸ்திரம் (vol I) இன்படி எழுதப்பட்டன. 1. தாலபுஷ்பம், 2, வர்திதம். 3. வலிதோருகம், 4. அபவித்தம். 5. ஸமனகம் 6. வீனம். 7. ஸ்வஸ்திகரேசிதம். 8. மண்டலவஸ்திகம். 9. நிகுட்டகம். 10. அர்த்த நிகுட்டகம், 11. கடிச்சின்னம், 12 அர்த்தரேசிதகம். 13. வக்ஷஸ்வஸ்திகம், 14. உன்மத்தம். 15. ஸ்வஸ்திகம். 16. புருஷ்டஸ் வஸ்திகம். 17. திக்ஸ்வ ஸ்திகம், 18. அலாதகம். 19. கடிஸமம். 20. ஆக்ஷிப்தரேதம். 21. விக்ஷிப்தாக்ஷிப்தகம். 22. அர்த்த ஸ்வஸ்திகம். 23. அஞ்சிதம், 24. புஜங்க கத்ராவிதம். 25. ஊர்தவஜாநு 26. நிகுஞ்சிதம், 27, மத்தள்ளி. 28. அர்த்தமத் தள்ளி. 29. ரேசகநிகுட்டிதம். 30. பாதாபவித்திகம் 31. வலிதம். 32. தூர்ணிதம. 33. லாலிதம். 34. தண்டபக்ஷம், 35 புஜங்கத்ரஸ்தரேசிதம். 36. நூபுரம். 37. வைசாகரேசிதம், 38.ப்ரமாகம். 39. சதுரம், 40. புஜங்காஞ்சிதம் 41. தண்டரேசிதம். 42. விருச்சிக்குட்டிதம். 43. கடிப்ராந்தம். 44. லதாவிருச்சிகம் 45. சித்ரம், 46. விருச்சிகரேசிதம், 47. விருச்சிகம். 48. வியம்சிதம். 49. பார்க்வ நிகுட்டகம், 50. வலாடதிலகம், 51. திராந்தகம், 52, குஞ்சிதம் 53. சக்ர மண்டலம். 54. உரோமண்டலிகம். 55. ஆக்ஷிப்தம். 56, தலாவிலாஸிதம். 57, அர்கலம், 58. விக்ஷிப்தம். 59. ஆவர்தம், 60. டோலாபாதம், 61. நிவிருத்தம். 62, விநிவிருத்தம், 63. பார்ச்வகாந்தம். 64. நிசும்பிதம். 65. வித்யுத்பிராந்தம் 66. அதிக்ராந்தம். 67. விவர்த்திதகம். 68, கஜக்ரீடிதம். 69. தலஸம்ஸ்போடிதம். 70. கருடபுலுதகம். 71. கண்டசூசி. 72, பரிவிருத்தம். 73. பார்ச்வஜாநு. 74. கிருத்ராவலீனகம். 75. ஸம்கதம். 76. ஸூசி, 77. அர்த்தசூசி. 78. சூசிவித்தம். 79. அபக்ராந்தம். 80, மயூரலலிதம், 81. ஸர்பிதம், 82. தண்டபாதம். 83. ஹரிணப்லுதம். 84. பிரேங்கோலிதம், 85. நிதம்பம், 86. ஸ்கலிதம். 87. கரி ஹஸ்தகம். 88. பிரஸர்பிதகம், 39, சிம்மவிக்ரீடிதம் 90, சிம்மாகர்ஷிதகம். 91. உத்ருத்தம். 92. உபஸ்ருதம். 93. தலஸங்கட்டிதம், 94, ஜரிதம், 95. அவஹித்தம். 36. நிவேசம். 97. ஏலகாக்ரீடிதம். 98. ஊருத்ருத்தம், 99. மலஸ்கலிதகம். 100, விஷ்ணுச்ராந்தம். 101. ஸம்பிராந்தம். 102. விஷ்கம்பம். 103. உத்தட்டிதம், 104, விருஷபக்ரீடிதம், 105. லோலிதம். 106. நாகா பஸர்பிதம், 107. சகடாஸ்யம். 108. கங்காவதரணம், |
பரதவருஷம் | இது இமயத்திற்குச் தென்பாகமுள்ள பூமி. இதனை அக்னித்துருவன் தன் குமரனாகிய நாபிக்குக் கொடுக்க அந்தாபிதன் பேரனாகிய பரதனுக்குக் கொடுத்ததால், இப்பெயர் அடைந்தது. பரத கண்டமும் இதுவே. |
பரதவர் | ஒரு குருநிலமன்னர். புலவர்க்குப் பொருள் கொடுத்துப் புகழடைந்தவர். (புற~நா) |
பரதேச்வரசக்கிரவர்த்தி | சைநர், இருஷ பதீர்த்தங்காருக்கு யசச்சுதியிடம் பிறந்த குமரர். |
பரத்துவாசர் | 1. ஒரு இருடி. தந்தை உதத்தியன். தாய் மமதை. பிரகஸ்பதி பாற் பிறந்தவர். இவர் ஆச்சிரமம் சிருங்கிபேரம். தற்காலம் பிரயாகை யென்னப்படும். ஒருமுறை வியாழன் தன் தம்பியாகிய உதத்தியன் பாரியாகிய மமதை கருத்தாங்கி யிருக்கவும் அவளை வலிதிற் புணர்ந்தனன். வயிற்றி லிருந்த கருவாகிய தீர்க்கதமன், வியாழன் கருவைத் தடை செய்ததனாலும் அந்த வியாழ வீரியத்தை மமதை தாங்காததினாலும் வியாழன் கரு வெளிப் பட்டு ஒருருக்கொண்டது. அதற்குத் தேவர் பரத்துவாசர் எனப் பெயரிட் டழைத்துப் பரதன் வம்சவுத்தாரணத்திற்கு அப் பிள்ளையை அளித்தனர். இவருக்கு வித்தன் எனவும் ஒரு பெயர். இவரைக் கலசத்திற் பிறந்தவ ரெனவுங் கூறுவர். இவர் குமரன் துல்யவான். கரிக்குருவியிடம் பிறந்தவ ரெனவும் கூறுவர். இப்பெயர்கொண்ட மற்றொருவர் சயன் என்னும் அக்கினிக்குக் குமரராயிருந்தனர். இவர் ஆச்சிரமத்தில் இராமமூர்த்தி வனஞ் சென்றபோது தங்கிச்சென்று மீளுகையில் இவர் எதிர்கொண்டு அழைக்க வந்து தங்கி விருந்துண்டு சென்றனர். இவர் துல்யவக்ரன் என்னுந் தன்குமரன் பூதத்தாலிறந்தானென்று உயிர் நீத்தவர். இவர் இருக்குவேதத்தின் ஆறாவது காண்ட தீதங்களைச் செய்தவர். சுகேசன் என இவர்க்கு ஒரு குமரன் உண்டு. இவர் பசியினால் விருது என்னுந் தச்சனிடம் அநேக பசுக்களைத் தானம் வாங்கினர். (மநு) (பாகவதம்) யவக்ரீவனைக் காண்க. 2. இவர்க்கு வாக்துஷ்டன், குலோதனன், ஹிமகிரன், பிசுநன், கபி, பிதுர்வர்த்தி, ஸ்வஸ்வரூபன் என ஏழு புத்திரர் இருந்தனர். இவர்கள் தீ நடக்கையால் பிரஷ்டர்களாய் அச்சநன மொழிந்து கௌசிக புத்திரராகத் தோன்றிக் கர்க்கமுனிவர் சீடர்களாய் அவர் தம் பசுவினையும் கன்றினையும் ஓட்டிவரக் கூறக்கேட்டு அவ்லாறு கன்றையும் பசுவையும் ஒட்டி வருகையில் பசியால் பசுவைக் கொன்று கர்க்கருக்குப் புலியடித்துவிட்டதென்று பொய் கூறிப் பிதுர்க்களுக்குப் பிரீதி செய்து அக்கோமிச மருந்திப் பொய் பேசியதால் வேட ராகப் பிறந்து, பிதுர் பிரீதி செய்ததால் பூர்வஜன்ம ஞானமுண்டாய்க் காலாஞ்சர மலையில் மிருகங்களாய்ப் பின் சக்கரவாகப் பக்ஷிகளாய் நீபதேசத்தாசனைக் கண்டு நாம் இவ்வகை அரசனாவோமென்று பிதுர் பிரீதி செய்ததால் மறுஜன்மத்தில் காம்பிலி தேசத்தில் அவ்வாசனுக்கு அறுஹன் எனப் புத்திரனாகவும் மற்றப் பக்ஷிகள் அக்நாட்டில் வேதிய புத்திரர்களாகவு மானார்கள். (சிவமகா புராணம்.) 3. இவர்க்குக் குமரர் எழுவர் இருந்தனர். இவ்வெழுவரும் மானஸசாசின் கரையில் யோகு புரிகையில் ஒழுக்கக் குறைவால் யோகம் கைகூடாது மரணமடைந்து மறுபிறப்பில் குருக்ஷேத்திரத் தில் கௌசிக முனிவரது குமாரராய்த் தோன்றித் தந்தை இறக்கப் பின் கார்க்க முனிவர்க்குச் சீடராய் அவரது ஓமதேனுவைக் காத்து வருகையில் பசியால் வருந்தி அப்பசுவைக் கொன்று தின்ன முயலுகையில் அவர்களுள் ஒருவன் ஆலோசனையாய் அப்பசுவைக் கொன்று பிதுரர்களுக்குச் சிரார்த்தஞ்செய்து உண்போமென்ன உடன்பட்டு அவ்வகை செய்துண்டனர். பின் இவர்கள் குருவின் பசுவைக் கொன்றதால் சில இழி பிறப்புக்களையும், பிதுர் சிரார்த்தஞ் செய்ததால் பூர்வஜன்ம ஞானமும் உயர்கதி அடைதலையும் பெற்றுத் தசார்ணவ தேசத்தில் எழு வேடர்களாயும், சாலாஞ்சாகிரியில் ஏழு மிருகங்க ளாயும், சரத்வீபத்தில் ஏழு சக்ரவாகப் பணிகளாயும், மானஸசரசில் பத்மகர்ப்பம், அரவிர்தாக்ஷம், க்ஷாகர்ப்பம், சுலோசனம், குருபிந்து, சுபிந்து, ஹைமகர்ப்பம் எனப் பெயர் பெற்று பொன்னிறமாகிய ஏழு அன்னங்களாயும், காம்பிலிதேயத்து ஏழு சிறந்த மானிடராயும் பிறந்து முற்பிறப்பினை ஞானத்தா லுணர்ந்து முடிவில் முத்தி பெற்றனர். (கம்பராமா~ஆரண்யபர்வம்.) 4. இவர் கங்கையிற் ஸ்நானஞ் செய்யச் சென்ற காலத்து உலக மளக்க எடுத்த திரிவிக்ரமனால் அடிக்கப்பட்டார். (பாரதம் சாந்திபாவம்). |
பரத்தை வாயில் பாங்கி கண்டுரைத்தல் | உங்கள் வீட்டிடத்து மடவாள் சொன்ன வார்த்தை நீங்க எங்கள் அகத்திடத்துப் பாகனும் தேரும் வருமெனச் சொல்லி இற்பரத்தை தோழிக்குச் சேரிப்பரத்தை தோழி சொல்லியது. (பு. வெ. நற்றிணை.) |
பரத்தைகூறல் | மணங் கமழும் மாலையையுடைய தலைவன் மாலை எமக்குப் பெறுதற்கு எளிதென்று சொல்லிப் பாங்காயினார் கேட்பப் பரத்தை மொழிந்தது, (பு. வெ, பெருந்திணை.) |
பரத்தையிற் பிரிவு | இது, தலைவன் பரத்தையர்மேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் சேறல், இது வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயினேர்வித்தல், வாயினேர்தல், என நான்கு வகையினையும், காதலன் பிரிவுழி கண்டோர் புலவிக்கு ஏதுமதாமவ் விறைவிக்கென்றல், தனித்துழியிறைவி தனித் தழுதிரங்கல், சங்கிதுவென்னெனப் பாங்கி வினாதல், இறைமகன் புறத்தொழுக் கிறை மகளுணர்த்தல், தலைவியைப் பாங்கி கழறல், தலைவி செவ்வணி யணிந்து கேடியை விகுப்புத்தி யவ்வணி யுழையர் கண் டழுங் சிக்கூறல், பரத்தையர் கண்டு பழித்தல், பரத்தைய ருலகிய னோக்கி விடுத்தலிற் மலைவன் வாவு கண்டு வந்து வாயில்கண் மொழிதல், தலைமகன் வாவு பாங்கி தலைவிக் குணர்த்தல், தலைவனைத் தலைவி எதிர் கொண்டு பணிதல், புணர்ச்சியின் மகிழ்தல், முதலிய (11)ம் உணர்த்தவுணரு மூடற்குரியனவாம், இனி உணர்த்தவுணராமூடற்குரியன வெள்ளணி யணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல், தலைவி நெய்யாடிய திகுளை சாற்றல், தலை வன் தன் மனத்துவகை கூர்தல், தலைவிக் சவன்வரல் பாங்கி சாற்றல், தலைவி யுணர்ந்து தலைவனொடு புலத்தல், தலைவி பாணனை மறுத்தல், வாயின் மறுக்கப்பட்ட பாணன் கூறல், வறவியாயின் மறுத்தல், விருந்தொடு வந்துழி பொறுத்தல் கண்டு இறையோன் மகிழ்தல், விருந்து கண்டொளித்த வூடல் வெளிப்பட நோக்கிச் சீறே வென்றவள் சீறடி தொழுதல், இஃதெங்கையர் காணினன்றன் றென்னல், அங்கவர் யாரையு மறியே னென்றால், காமக்கிழத்தியைக் கண்டமை பகர்தல், தலைவியைப் பாங்கி தணித்தல், தலைமகள் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடல், பாங்கியன் பிலை கொடியையெனத் தலைவனை யிகழ்தல், ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாக வாவெதிர்கோடல், மணந்தவன் போயபின் வந்த பாங்கியோடு இணங்கிய மைந்தனை யினிதிற் புகழல், தலைவி தலைவனைப் புகழ்தல், பாங்கி மனைவியைப் புகழ்தல் என்பன. (அகம்.) |
பரத்தையேசல் | அழகிய பழனத்தையுடைய பானுடனே தீர்விளையாட்டு விரும்பும் மெல்லிய சொல்லினையடைய தலைமகள், பரத்தையைப் புல்லற் கூறியது. (பு வெ. பெருந்திணை.) |
பரத்வாசதீர்த்தம் | தென்கடற் கருகிலுள்ளது. அச்வமேத பலந்தருவது. |
பரத்வாசி | மாளவதேசத்தில் பிரவகிக்கும் |
பரநாதகலைகள் | வியாபினி, வியோமரூபை, அனந்தை, அனதை, அனாசிருதை, இவை ஐந்தும் அபரநாதத்தை நடத்தும் கலைகள். பரவிந்தும் பரநாதமும் சத்திசிவா தமகமாயிருந்து அபரவிந்து அபரநாதத்தை நடத்தும். (சதா.) |
பரந்தாமன் | விஷ்ணுவின் திருநாமங்களில் ஒன்று, |
பரபிரமம் | அபின்னாசத்தி விசாம்பித்துச் சுத்த பிரமத்தை வியாபரிக்கையில் அப்பிரமம் பரையினது வியாபகத்தி விருக்கு நிலை, (நானா). |
பரமகாரன் | நன்னிதியின் வலப்புசத்தில் உதித்தவன். |
பரமசுகம் | சிவ சூர்ய பீடத்தொன்று. |
பரமசுந்தரி | 1. பிரமசுந்தர யோகியின் மனைவி, கற்பிற் சிறந்தவள். 2. யூகியின் தாய். (பெ~கதை.) |
பரமதத்தன் | புனிதவதியார்க்குக் கணவன். நிதிபதி வனரிகன் குமரன். |
பரமனையேபாடுவார் | சிவபெருமானையே பாடி முத்திபெற்ற தொகை யடியவர்கள். |
பரமன் | சிவன், விஷ்ணு, பிரமன். |
பரமபதத்திலுள்ள நித்ய முத்தர்கள் | ஆதிசேஷன், கருடன், சேனை முதலியார், ஜயர், விஜயர், சுநந்தர், நந்தர், சங்ககர்ணர், புஷ்கார், புஷ்கராக்ஷர், குமுதாக்ஷர், கஜாநார், பிருச்சநிகர்ப்பர், காளர், புண்டரீகர், குமுதர், வாமர், ஜயச்சேகர், சுப்பிரதிஷ் டர், சுமுகர், அமாணவ புருஷர், சருவகந்தி முதலியோர். (அரிசமய தீபம்.) |
பரமானந்தர் | காரணமான ஆனந்தரூப சத்தியுடன் பரப்பிரமங் கூடிச் சர்வானந்த மெனுஞ் சுழுத்தி யவஸ்தையடைகையில் பரப்பிரமமென்கிற பெயர் நீங்கிய நிலை. (நானா.) |
பரமேசுவரப்புலவர் | இவர் திருவண்ணாமலையிலிருந்த ஒரு புலவர். சேறைக் கவிராஜ பண்டிதர் காலத்தவர். இவரைப்பற்றிய சரிதம் ஒன்றும் தெரியவில்லை. இவர் சேறைக்கவிராஜ பண்டிதரை “கண்ணார் மதிக்கும் கவிராஜசிங்கம் கடந்து திருவண்ணாமலை யப்பர்மேல் வண்ணம்பாடி முத்தாலத்தி கொண்டெண்ணாயிர மடவார்சூழ பல்லக்கிலேறி வந்தான், உண்ணாமுலையெல்லன் மூலைகடோறு மொதுங்கினனே” எனப் பாடியவர். |
பரமேஷ்டி | 1. பிரமனுக்கு ஒரு பெயர். 2. இந்திரத்துய்மனுக்கு ஒரு பெயர். 3. தேவததிமுன் குமரன். தாய் தேவமதி, மனைவி சுவலை, குமரன் பிரதிகன். 4. ஒரு பிரஜாபதி, இவன் புத்ரன், எஜநயன். |
பரராசகுஞ்சரன் | அயோதன பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன். |
பரர் | ஒன்பதாமன் வந்தரத்துத் தேவர். |
பரவர் | 1. நெய்தளிலமாக்களில் ஒரு வகைச் சாதியார்; வலை வீசின திருவிளையாடல் விழா நடத்துவிப்போர். (திருவிளையாடல்) 2 இவர்களைப் பரதவரென்றும் கூறுவர், இவர்கள் கடலோட்டி வகுப்பினர். இவர்கள் தங்களை கந்தமூர்த்தி சரவணப் பொய்கையிலிருந்து உதித்த காலத்தி வதித்து அவர்க்குத் துணை புரிந்தவரென்றும் சீர்காழி வெள்ளங் கொண்ட காலத்து தோணியியக்கித் தோணிபுரத்தில் தங்கினவர் என்றும், பராசருக்குப் பெண் கொடுத்த குலமென்றும், சிவபெருமானுக்குத் தங்கள் பெண்ணைக் கொடுத்த வர்களென்றும் உயர்வு கூறுவர் இவர்கள் தமிழ், மலையாளம், கன்னடமென மூன்று வகைப்படுவர். தமிழர் மீன் பிடிப்போர், பாலை பாளப்பாவர் முத்துக் குளிப்போர், சுண்ணாம்பு சுடுவோர். இவர்கள் பட்டம் குருப், கன்னடபரவர் குடை கட்டிகள் பேய்க்கூத்தாடுவோர். (தர்ஸ்டன்). |
பரவிந்து கலைகள் | சூக்ஷமை, அதிசூக்ஷ்டை மிருதை, அமிருதை, வியாபினி இவை அபரவிந்துவை அதிட்டித்து நிற்கும் கலைகள். (சதா.) |
பரவை | போர் செய்ய எழுந்த அவுணர் மோகிக்கத் திருமகள் ஆடிய கூத்து. |
பரவையார் | திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்து அவதரித்தவர், இவர்க்கு முற்பிறப்புக் கமவினியைக் காண்க, |
பரஷூ | ஒரு அரசன், இவன் புத்திரன் திருந்திரன். |
பராகி | விபுவின் தேவி. |
பராக்கிரமவாத பாண்டியன் | விக்கிரமவாகு பாண்டியனுக்குக் குமரன். |
பராக்கிரமவாது | ஈழத்தரசர்களில் ஒருவன். |
பராங்குசதாசர் | திருக்குருகூர்வர்சியாகிய ஸ்ரீவைணவர். நாதமுனிகளுக்குக் கண்ணினுண் சிறுத்தாம்பு அருளி, ஆழ்வாரை யோகத்தில் காண அருளியவர், |
பராங்குசநம்பி | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒருபெயர். (குருபாம்பனா) |
பராங்குசர் | நம்மாழ்வாருக்கு ஒரு பெயர். |
பராசக்தி | அருட்சத்தி. பாசிவத்தில் ஆயிரத்தில் ஒரு கூறான நிட்கள சிவத்துடன் கூடிக் கிருத்யத்தைத் திருவுளத்திற் கொள்வது. (கதா~ம்). |
பராசரன் | 1. சோழநாட்டிலிருந்த ஒரு வேதியன். இவன். மாந்தரஞ்சேரலிரும் பொறையிடம் பரிசு பெற்றுத் திருத்தங்காலில் தக்ஷிணாமூர்த்தியைப் பரீக்ஷித்து அவனுக்குப் பரிசளித்தவன். (சிலப்பதிகாரம்.) 2. பாஷ்களர் மாணாக்கன். |
பராசரம் | 1. ஒரு புராணம், 2. ஒரு தரும் நூல். |
பராசாமுனிவர் | 1. வசிட்டர் பேரர். சத்தி முனிவர் குமரர். தாய் திரசந்தி. இவர் தாய் வயிற்றில் இருப்புழி, தந்தை இறந்தனர். இவர் பிறந்து தாய் மடியிலிருக் கையில் தாயை அமங்கலையாகக்கண்டு உதிரன் என்னும் அரக்கனால் தந்தையிறந்ததைத் தாயாலறிந்து அரக்கரைக்கொல்லச் சத்திரவேள்வி செய்தனர். அதில் அரக்கர்வந்து இறக்கையில் நிருதியின் வாகனமாகிய பூதம் சிவமூர்த்தியை யெண்ணி ஓலமிட்டது. அதனால் சிவமூர்த்தி புலத்தியர் முதலியோர் வேண்டுகோளால் யாகத்தை நிறுத்தக் கட்டளையிட்டனர். அதனால் நிறுத்தி அரக்கவம்ச முதல்வராகிய புலத்தியரால் புராணம் பாட அருள் பெற்றவர். இவர் புத்திரர்களாகிய தத்தன், அருந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி முதலிய அறுவரும் விளையாட்டாகச் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு நீரைமோதி விளையாடினர். அதனால் நீர் கலங்கி அதிலிருந்த மீன்கள் மேல் மிதந்தன. அம்மீன்களை இந்த இருடி புத்திரர்கள் பொறுக்கிக் கோரையிற் கோத்து விளையாடுகையில், பிதா சரவணப் பொய்கைக்கு ஸ்நானத்திற்கு வந்து பிள்ளைகளைக்கண்டு கோபித்து நீங்கள் நெறியல்லா நெறிசெய்வதால் மீன்களாக எனச் சபித்தனர். சாபமேற்ற குமரர் சாபம் நீங்கும் வகை எவ்வகையென முனிவர், குமாரக் கடவுள் இப்பொய்கையில் திருவவதரிப்பார். அவர் பொருட்டு உலக மாதாவாகிய உமாதேவியின் திருமுலைப்பால், இப்பொய்கையிற் சிதறும் அதனால் நீங்கள் சாபத்தினின்று நீங்குவீர்கள் என்றனர். இவர் ஒருமுறை யமுனையாற்றினைக் கடக்கச் செல்கையில் அவ்விடமிருந்த செம்படவராஜன் பெண்ணைக்கண்டு விரும்பி அவளுக்கிருந்த மச்ச நாற்றத்தைப் போக்கி மணந்தந்து கூடி வியாசரைப் பெற்றனர். இவர் தாய்வயிற்றில் (12) வருட மிருந்தவராம். கொல்ல வேண்டி வந்த அரக்கர்களால் விடப்பட்ட அம்பைப் பின்னிட்டுப் போம்படி செய்ததாலும், யாவரினும் சிறந்த மன்மதனுடைய சம்மோஹன முதலிய அம்பின் வேதனை யொழித்தவராதலாலும் பாவ எண்ணத்தையுடைய அன்னியரிடத்துத் தமது கோபமென்னும் அம்பைச் செலுத்துவ தொழிந்தவரா தலாலும், தாயின் கருப்பத்திருந்து மந்திரோச்சாரணத்தால் வயிற்றைப்பீறி வெளிப்பட்டவராதலாலும் பராசர் எனப்பட்டனர். 2. விஷ்ணுமூர்த்தி தேவர்களுக்குப் பாகித்து மிகுந்த அமிர்தத்தை இவரிடம் கொடுக்க இவர் அசுரர்க்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தனர். அதைக் கவர வக்ராசான், தண்டாசுரன், வீராசுரன், மூவரும் முயலுகையில் அவர்களுக்குப் பயந்து பராசர் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி சத்தியிடம் சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி எனும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அசுரரைக் கொலை செய்வித்தனர். பிறகு முனிவர் அந்த அமுதகுடத்தை எடுக்கவராது அது நதியாய்ப் பிரவகித்தது. அதுவே அமுத நதி, பவாநி கூடலிலுள்ளது. 3. இவர் சிவபூஜையால் சாவர்ணிமன் வந்தரத்தில் சப்த ரிஷிகளில் ஒருவனும், பாரதவம்ச விருத்தி செய்பவனும், பாரத சதாகர்த்தாவும், வேதத்தைப் பகுப்பவ னும், கிருஷ்ணத்வைபாயன னென்னும் பெயருள்ளவனும் ஆகிய வியாசரைப் பெற் றவர். (பார~அநுசா.) |
பராசிதன் | பாரதவீரரில் ஒருவன். காலபுத்திரன் அம்சம். |
பராசுரன் | 1. சிவமூர்த்தியின் வரத்தால உலகர்க்குத் தீமை செய்து கொண்டிருந்த அசுரன். இவனை நரசிங்கவுருக்கொண்டு விஷ்ணுமூர்த்தி கொலை புரிந்தனர். 2. ஒரு இருடி, இவர் தேவி வீர்யவம்சலை, விக்னராசர் என்னும் விநாயகமூர்த்தியை வளர்த்தவள். |
பராதீதன் | கத்ருதநயன்; நாகன். |
பராந்தகச்சோழன் | சூர ஆதித்தசோழன சந்ததியான். இவன் சாரமாமுனிவர் சிவ மூர்த்தி பொருட்டு நாகலோகத்திலிருந்து கொண்டுவந்து பதித்த செவ்வந்திமலரைப் பூவாணிகன் பறித்துக்கொடுக்க விருப்பா யேற்றுச் சாரமாமுனிவர் பூவாணிகனைப் பிடித்துக் கொடுத்தும் தண்டியாமல் மீண்டும் பூவைத் திருடிவந்துகொடுக்க உடன் பட்டிருந்தமையால் முனிவர் சிவமூர்த்தி யிடம் முறையிட்டு வேண்டினர். அதனால் சிவமூர்த்தி ஏவலால் மண்மாரி இவன் பட்டணத்தையும் இவனையும் பின்றொடர்ந்து அழித்தது. இதில் இவன் மனைவி ஒருத்தி தப்பிக் கரிகாற்சோழனைப் பெற்றாள். |
பராந்தகன் | 1. இவர் விஜயாலயன் மகனான ஆதித்தசோழனது குமரர். இவர்க்கு இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் என்று மூன்று குமரர் உண்டு. இவர் பாண்டிநாடு ஈழநாடு ஜெயங்கொண்டவர். இவர் வாணராசனை வென்று தம் சிற்றரசில் ஒருவரான பிரதிவிபதிக்கு ஆந்திர தேயத்தின் மேற்கிலுள்ள வாணதேசத்தைத் தந்து அவனுக்கு மாவலிவாணரா யன் எனும் பட்டமுஞ் சூட்டினார். இவர் பல்லவர்களையும் வென்று தம் பெயரால் வீரநாராயணச்சேரி என்று ஓர் ஊர் உண்டாக்கினார். கொப்பர கேசரியைக் காண்க. இவர்க்குக் கோக்கிழானடிகள் எனும் கேரளத்தரசன் புதல்வி மனைவி. இவர்க்கு மதுரைகொண்ட பரகேசரியெனவும் பெயர். (Epigraphia Indian Vol. VII. Dates of Chola kings.) 2. ஆதித்தன் 1. குமரன் கி. பி. 907 இல் முடிசூட்டப் பெற்றவன். இவனுக்கு வீரநாராயணனென்றும், மதுரைகொண்ட கொப்பரகேசரி எனவும், இவன் இலங்கையை வென்றதனால் சங்கிராமாரகவன் எனவும் பெயருண்டு. இவன் மதுரையைச் செயித்தபோது அவ்விடம் மாண்டவன். 2. இராஜசிம்ம பாண்டியன், இந்த ராஜசிம்மனுக்கு இலங்கையரசனாகிய ஐந்தாம் காசிபன் உதவி புரிந்ததால் பராந்தகன் இலங்கையையும் போரிட்டு வென்றான். ஆதலால் மதுரையும், ஈழமும் கொண்ட கொப்பரகேசரி எனப்பட்டனன். இவன் வைதும்ப அரசனாகிய சயந்தனையும், வாணபுர அரசர்களையும் வென்று அவர்களிடத் துப் பெண் கொண்ட கங்க அரசனாகிய பரதிவிபதிக்கு வாணகப்பாடி அல்லது வடுகவழியைக் கொடுத்துச் செம்பியன் மாவலிவாணராயன் எனப் பட்ட மளித்துத் தனக்குட்படுத்தினான். இப்பிரதிவிபதிக்கு வீரசோழன் என மற் றொரு பெயருண்டு. இவன் சிதம்பரம் பொன்னால் வேய்ந்தான். இவன் பட் டத்தரசி கேரளராஜன் பெண். இவனுக்குப் பல மனைவியர் உண்டு. இராஜா தித் தன் கோக்கிழானடிகள் எனும் மனைவியிடம் பிறந்தவன். |
பராயனார் | இவரைப் பற்றி யாதும் விளங்கவில்லை. நெய்தலைச் சுவைமிகத் தோன்றப் பாடியுள்ளார். இவர் பாட்டில் தலைமகன் தலைமகளை ஐயுற்று வினாவுவது இனிமை பயவாநிற்கும். இவர் பாடியது நற். (155)ம் பாட்டு. |
பரார்த்தாநுமானம் | (பிறர்பொருட்டது மானம்) சுவார்த்தாநுமானத்தாற் தான் கண்டதைப் பிறர்க்குத் தெரிவிப்பது. (சிவ சித்). |
பராவசு | 1. இரப்பியர்குமரராகிய ருஷி. அருத்தாவசு சகோதரன். இவர் அரசன் பொருட்டு வேள்வி செய்கையில் ஒரு காம வசத்தால் இரவில் செல்கையில் மான்தோல் போர்த்திருந்த தந்தையை மிருக மென்று கொன்று நீங்கித் தந்தை யென்று அறிந்து தம்பியாகிய அருவாவசுவை (அர்த்தாவசு) தன் பிரமகத்தி நீங்கத் தவஞ் செய்ய ஏவித்தான் அரசனுக்கு வேள்வி செய்து கொண்டிருந்தனன். அருவாவசு பன்னிரண்டு வருஷம் தவமுடித்து மீண்டு வேள்விச் சாலை வரத்தமயன் அரசனை நோக்கி இவன் பிரமகத்தி செய்தோன், இவனை நீக்குக எனத் தம்பி திடுக்கிட்டு அரசனாணையால் நீங்கிச் சூரியனை எண்ணித் தவம் புரிந்து தந்தையை உயிர்ப்பித்துத் தமயனைச் சேதுஸ்நானத்தால் புனிதனாக்கினவன். (சேது~புராணம்.) 2. யவக்ரீவனைக் காண்க. |
பராவதன் | இலிங்கியைக் காண்க. |
பரிகசப்பறவை | இது வட அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்ஸ் முதல் பிரேஸில் நாடு வரையிலுள்ளது. இதன் முதுகு கருமை கலந்த செம்மை, இறக் கைகளும் வாலும் கருமை, வயிறு மங்கலான வெண்ணிறம். இப்பறவையின் குரல் கம்பீரமாயும் இனிப்பாயும் இருக்கும். இது ஒரு சங்கீத வித்துவானைப் போலக் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடும். இது ஒவ்வொரு வகையான பக்ஷிகளின் குரல் போல் பாடி அவற்றை அவமதித்து ஏமாற்றும். சில வேளைகளில் இராஜாளிப்பறவை போலக் கூவிப் பறவைகளை மருட்டும். பழக்கப்பட்டால் வீட்டிலுள்ள நாய் கோழி முதலியதுபோல் கூவி விகடஞ் செய்யும். இது போர் வீரனாகவுமிருக்கிறது. பறவைக் குஞ்சுகளைக் கவர வரும் பாம்புகளைக் கொத்திக் கொல்லும். இதன் வன்மை இனிமைகளைக் கருதிய அரசாங்கத்தார் இதை யாரும் கொல்லக்கூடாதென உத்தரவளித்திருக்கின்றனர். |
பரிகநேமி | சண்முக சேநாவீரன். |
பரிகிஷ்துக்கள் | அக்னியபிமானி தேவதைகள். 2. பிதுரா. |
பரிகிஷ்த் | அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடம் பிறந்த குமரன். |
பரிகிஷ்மதி | பிரியவிரதன் தேவி. விச்வகர்மன் பெண். |
பரிகிஸ்தன் | பராசீனப்பர்கிக்கு ஒரு பெயர். |
பரிசினிலை | உபகாரி இன்பத்திலே அசைய இரப்பாளன் போவானாக ஒருப்பட்டது. (பு. வெ. பாடாண்.) |
பரிசிரவர் | சந்திரவம்சத்து அரசர். பீமசேனன் புத்திரர். தாய் சுகுமாரி, பாரியை சைபியசுந்தரி, புத்திரர் தேவாபி, சந்தனு, பாகலிகன். (பாரதம் ஆதிபர்வம்). |
பரிசிற்றுறை | பூமியிடத்தைக் காக்கும் தொழிலையுடைய அரசன் முன்னேகருதிய பேறு இதுவெனச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.) |
பரிசில்விடை | அரசனுடைய மனங்களிப்ப வெல்லும் புகழைச் சொன் னோர்க்குப் பெறும் பேற்றை வழங்கி இனிமை மிகவிடை கொடுத்தது. (பு. வெ. பாடாண்.) |
பரிச்சித்து | (பரிக்ஷித்து) அபிமன்யுவிற்கு உத்தரையிடம் பிறந்த குமரன். இவன் தாய் வயிற்றிலிருக்கையில் பாரதயுத்தம் நடந்தது. அக்காலத்தில் அசுவத்தாமன் பாண்டு புத்திரர் வம்சம் நாசமாம்படி பாணப்பிரயோகஞ் செய்தனன். அந்தப் பானம் உத்தரையின் வயிற்றிலிருந்த இக்கருவைப் பேதிக்கச் சென்றது. அவ்விடம் திருமால் பஞ்சாயுதத்துடன் நின்று அத்திரத்தை யுங்கரிக்க அத்திரம் நீங்கியது. அங்குத் திருமால் திருவடிப் பரிசம் பெற்றமையால் பரிச்சித்து எனப் பிறந்து கலிகடிந்து தருமம் நான்குபாதத்தால் நடக்கச் செய்தனன். 2. இவன் இராஜருஷி. இவன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்று வேட்டையாடுகையில், அம்பிற்குத் தப்பிச் சென்ற மிருகத்தைப் பின்றொடருகையில் அது மறைந்தது கண்டு அவ்விடம் மௌன மடைந்திருந்த சமீகருஷியைக் கண்டு மிருகம் எப்படிப் போயிற்றென்ன அவர் பேசாதிருந்தது கண்டு அவ்விடம் இறந்து கிடந்த பாம்பொன்றை யெடுத்து அந்த ருஷியின் கழுத்தில் சுற்றி நீங்கினன். அவ்வரசன் செயல்களை அருகிருந்த இருடியராலுணர்ந்த அம்முனிவரின் குமாராகிய சிருங்கி முனி கோபித்து இவ்வகை தீமைபுரிந்த இவன் இன்று எழாநாள் தக்ஷகனால் இறக்க என்று சாபமிட்டனன். இதனைக் கௌரமுகரால் அறிந்த அரசன் சுகரால் தத்துவமுணர்ந்து ஏழாநாள் தக்ஷ கனால் கடியுண்டு இறந்தனன். இவன் குமரன் ஜநமேஜயன், சாபமிட்ட முனிவரை மகாசத்தர் எனவும், கடித்த பாம்பினைக் கார்க்கோடகன் எனவும் தேவி பாகவதம் கூறும். (பரிக்ஷயம்~நாசம்). குருகுலம் நாசமடைந்த பின் பிறந்தவனாதலால் பரிசமித்து எனவும் பெயர் பெற்றவன். 3. குரு குமரன். 4. சூர்யகுலத்தவனாகிய ஒரு அரசன், இவன் ஆயுதமகாராஜன் புத்திரியாகிய சோபனையைக் காட்டில் மணந்து ஒரு தடாகத்தில் நீர்விளையாடச் செல்லுகையில் அவள் மறைய அவ்விட மிருந்த தவளைகள் விழுங்கினவென்று அக்குளங்களிலிருந்த தவளைகளை யெல்லாங் கொலைபுரியச் செய்தவன். |
பரிச்சேதம் | (3) காலப்பரிச்சேதம், தேசப் பரிச்சேதம், வஸ்து பரிச்சேதம், ஒரு காலத்து உண்டு, ஒருகாலத்து இல்லை என்பது காலப்பரிச்சேதம். ஒரு தேசத்து உண்டு, ஒரு தேசத்து இல்லை என்பது தேசப்பரிச்சேதம். ஒரு பொருள் இதுவாகும், ஒருபொருள் இது அன்று என்பது வஸ்து பரிச்சேதம். |
பரிணாமவாதசைவன் | உயிர் கெட்டுக் கூடி அரனடியில் ஒன்றுபடும் என்பன். |
பரிதி | 1. ஒரு தீர்த்தம், 2. திருவள்ள வநாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளுக்கு உரையிட்டவர்களில் ஒருவர். 3. அக்நிக்கு அலங்காரமாகச் சூழப்படும் சாகைகளாகும். இவை பெரும்பாலும் பலாச சாகைகளாம் 4. யாககாரியத்தில் பலாசம், மா இவற்றின் கொம்புகளால் இரண்டு முழ நீளமும் பெருவிரல் கனமுமாக அமைக்கப்பட்ட விறகு. |
பரிதிக்கண்ணன் | சூரபதுமன் குமரன். |
பரிதிபாணி | பராசருஷியின் புத்திரன். |
பரிதியின் ஏழு குதிரைகளாவன | தினமணி, கத்யை, லோகபந்து, சுரோத்தமை, தாமநிதி, பத்மினீவல்லபை, ஹரி: இவையன்றிச் சப்தா என்கிற ஒரு குதிரையே யுண்டு, (விங்காபட்டீயம்.) |
பரிபாடல் | இது சங்கத்தாரால் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகையுள் ஐந்தாவது பாவகையுள் ஒன்று. இது முறையே திருமால், குமரவேள், கடல், வையை, மதுரை முதலியவர்க்கு, 8,31,1,26,4, ஆக எழுபது பாடல்கள் கொண்டது. இதனைத் “திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத், தொருபாட்டுக்கார் கோளுக் கொன்று. மருவினிய, வையையிருப்பத்தாறு மாமதுரை நான்கென்ப, செய்யபரி பாடற்றிறம் ” (இதற்குப் பரிமேலழகர் உரையியற்றியதாகத் தெரிகிறது) “விரும்பியருணி லவெற்பிமயக் குன்றின், வரும்பரிசு புள் ளூருமாலே. சுரும்பு, வரிபாடலின் சீர்வளர் துளவத்தோளாய், பரிபாடலின் சீர்ப்பயன்” என்பதால் அறிக. |
பரிமளகந்தி | வேதவியாசர் தாய், பராசர் தேவி, |
பரிமளாலயன் | இரத்தினாவலியைக் காண்க. |
பரிமாணனார் | யாப்பருங்கல விருத்தியுட் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர். |
பரிமேலழகர் | இவர் தொண்டை நாட்டில் திருக்காஞ்சிபுரத்திலிருந்த அருச்சக வேதியர். இவர் இளமையில் அழகரெனப் பெயரடைந்து தமிழ்ப்புலமையும் வடநூற் புலமையும் பெற்று வேதப்பொருளமைதியுடைய வள்ளுவர் அருளிய திருக்குறளுக்குத் தருமர், மணக்குடையர், தாமத்தர், நச்சர், பரிதி, திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் என்பவர்கள் இயற்றிய உரையேயன்றித் தாமும் ஓர் உரை செய்தனர். அவ்வுரையை அரசன் முன் பிரசங்கிக்க அரசன் இதனை அவ்விடமிருந்த உருக்குப் பரிமேலிருந்து கூறு வீராயின் ஒப்புவோமென அவ்வகையே பழுக்கக் காய்ச்சிய பரிமேலிருந்து தம் உரை சிறந்ததெனக் கூறிப் பழுதில்லாமல் வந்தமையால் பரிமேலழகர் எனப் பட்டனர். இதனை திருத்தகு சீர்த்தெய்வத் திருவள்ளுவர் தங்கருத்தமைதி தானே கருதி விரித்துரைத்தான், பன்னு தமிழ் தேர்பரிமேலழகனெனு, மன்னு முயர் நாமன் வந்து எ.ம் பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள, நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ. நூலிற், பரித்த வரையெல்லாம் பரிமேலழகன், தெரித்த வரையாமோ தெளி எனக் கூறியிருத்தலின், இவரே உரையாளர் எனப் பெயரடைந்தனர். இவர் காலத்திருந்த நச்சினார்க்கினியர் விருத்தராதலின் அவர்க்குத் தாம் இயற்றிய உரையைக்காட்ட ஆசிரியர் சென்றிருக்கையில் நச்சினார்க்கினியர், “குடம்பை தனித் தொழியப் புட்பறக் தற்றே” என்னும் திருக்குறளுக்கு உரை கேட்க ஆசிரியர், முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப, அதனுட் கிடந்தபுள் பருவம் வந்த காலத்துப் பறந்து போன தன்மைத்து” எனக் கூறிக்கேட்டுத் தாம் கூடென உரை கூறியதைத் தெரிவித்து ஆசிரியர், பரிமேலழகர் உரையைப் புகழ்ந்தனர். இவர் தம் உரையில் ஆங்காங்குத் திருக்கோவையார், நாலடியார், சீவகசிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றை யெடுத்து உதகரித்திருப்பதி னாலும், கம்பராமாயண முதலியவற்றை உதகரித்தில்லாமையாலும், இவர் காலம் கம்பர் காலத்திற்கு முந்தியிருக்கலாம். இவர் நக்கீரர் அருளிச்செய்த திருமுருகாற்றுப் படைக்கும் ஒரு சுருங்கிய உரை இயற்றினர். அதனை அரிமேலழகுறூஉ மன்பமைநெஞ்சப், பரிமேலழகன் பகர்ந்தான் விரிவுரைமூ, தக்கீரிஞ்ஞான்று தனிமுரு காற்றுப்படையாம், நக்கீரனல்லகவிக்கு,” என்பதாலறிக. இவர் சைவ நூல்களுக்கு உரையியற்றி யிருத்தலாலும், திருக்குறளில் இறைவனது எட்டுக்குணங்களைத் தமது கொள்கையாகக் குறித்து மற்றவைகளைப் பிறன் கோளாகக் கூறுதலானும் ஸ்மார்த்தர் என்பர். அரிமேலன் புறூஉம் அன்பமையந்தணன் என்பதால் வைணவர் என்பர். இவர் பரிபாடற்கு ஒருரை செய்திருப்பதாக கண்ணுதற் கடவுளண்ணலங் குறுமுனி, முனைவேன் முருகனென விவர்முதலிய, திருந்து மொழிப் புலவரருந்த மிழாய்ந்த, சங்கமென்னும் துங்கமலி கடலு, எரிதினெழுந்த பரிபாட்டமுதம், அரசுநிலை திரீ இயவளப் பருல் காலங், கோதில் சொன் மகணேத கக்கி டத்தலிற், பாடிய சான்றவர் பீடு நன்குணா, மிகைப்படுபொருளை நகைபடு புன் சொலிற், றந்திடைமடுத்த சந்திதன் பிழைப்பும், எழுதினர்ப் பிழைப்பு மெழுத் துருவொக்கும், பகுதியின்வந்த பாடகர்ப் பிழைப்பும், ஒருங்குடன் கிடந்த வொவ்வாப்பாடமும், திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற், சிற்றறிவினர்க்கும் தெற்றெனத் தோன்ற, மதியின்றகைப்பு விதியுளியகற்றி, யெல்லையில் சிறப்பிற் சொல்லோர் பாடிய, வணிதிகழ் பாடத்துத் துணி தருபொருளைச் சுருங்கியவுரையின் விளக்கக் காட்டினன், நீணிலங் கடம் தோன்றா டொழு மரபிற், பரிமேலழக னுரிமையி னுணர்ந்தே. ” என்பதால் தெரிகிறது. பின்னும் திருந்திய தமிழறி தெய்வப் புலமை. பரிமேலழக னெனப் பெயர் படைத்துத், தரைமேலுதித்த தலைமையோனே” எனும் பழைய வுரைப்பாயிரத்தையடுத்து விரைத்தாரலங் கற்றிருவள்ளுவர் முன்னம் வெண் குறட்பா, நிறைத்தார்மிகு பொருணான்கும் விளங்க நெறிப்புலவ, ருரைத்தார் பலரு மதற்குரை தன்னை யுலகறிய, கருத்தான் வகுத்தமைத்தான் கலைதே பொக்கை காவலனே” என்பதனாலும், “முன்னுரைத்த தேவர்குறள்., இன்னதிது வென்றுரைக்க வெய்தினான் முன்னூற், பரிமேலழகிய கோப்போற்று தமிழ்க் கூடல், பரிமேலழகிய னென்பான். ” என்பதால் இவர் சோழபாண்டி மண்டலங்களிலுள்ள ஒக்கூரினராகவும், மதுரை நகரத்தின ராகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது. |
பரியாயவணி | இது தான் கருதியதனைக் கூருது அப்பொருள் தோன்றப் பிறிதொன்று கூறுவது. இதனை முறையிற் படர்ச்சியணி யென்பர் தமிழ் நூலார். (தண்டி.) |
பரிவநுயோச்சியாபேக்ஷணம் | வாதம் பண்ணவந்த இடத்து அந்த வாதம் பிறரால் நிக்ரயிக்கப்படுதலால் திக்ரயிக்கப் பட்டோமென்னும் பரிபவமின்றி யிருத்தவல், (சிவ~சிதி). |
பரிவருத்தனையணி | ஒரு பொருள் ஒன்றற் கொன்று கொடுத்து ஒன்று கொண்டனவாகச் சொல்வது. (தண்டி,) |
பரிவர்த்தகன் | இவன் சிசுக்களைக் காப்பத்திலிருந்து கலைக்குந் தேவதை. |
பரிவர்த்தினி | பர்வதையின் தாய். |
பரிவாரம் | மறவரில் ஒரு வகுப்பார். இவர்களிற் சிலர் அகமுடையராகவு மிருக்கின்றார். இவர்கள் மதுரை, திருநெல்வேலி ஜில்லாக்களில் இருக்கின் றனர். கோயம்பத்தூரிலுள்ள சில மீன் பிடிப்பவர்களும் பரிவாரிகள் எனப்படுவர். இவர்களை சேர்வைக்காரர், அம்பலக்காரர் என்பர். (தர்ஸ்டன்). |
பரிவித்தி | தம்பி கல்யாணஞ்செய்துகொள்ளத் தான் கலியாணமின்றி யிருக்குந் தமயன், |
பரிவீரமங்கலம் | சிவபெருமான் குதிரை வீரராக எழுந்தருளிய இடமாம். இவ்வூர் ஆளுடையார் கோயிலுக்குத் தெற்கே 13 நாழிகை வழித் தூரத்திலுள்ளது. (திருவிளையாடல்). |
பரிவேடக்குறி | ஆடிமாதம் பூரணையில் முதற் பத்து நாழிகையில் சந்திரனைப் பரிவேடமிட்டால் ஐப்பசியிலும், இரண்டாம் பத்திலிட்டால் கார்த்திகையிலும், மூன்றாம் பத்திலிட்டால் மார்கழியிலும் மழையுண்டு, இரவு முழுதும் இட்டிருந்தால் இந்த மூன்று மாதங்களிலும் மழை உண்டு. சந்திரன், குரு, சுக்ரருடனே பரிவேடமிட்டால் நல்ல மழை உண்டு. செவ்வாய், சநியுடன் பரிவேடமிடில் மழையில்லை. கிரகணகாலத்தில் பரிவேடமுண்டானால் ராஜாக்களுக்கு ஆகாது. |
பரிவேடக்குறியின் குறி | பூரம், உரோகணி, உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம் இந்நாட்களில் மழை பெய்யும் போது வில்விட்டால் 5, 6, 10, 20, 21 இந் நாட்களுக்குள் மழை பெய்யும். உத்தரம், பூரம், இரேவதி, திருவாதிரை இந் நாட்களிலே சந்திராதித்தர்களைப் பரிவேடிக்கில் 7, 8, 9, 18 நாட்களுக்குள் மழை பெய்யும். (விதானமாலை). |
பரிவேத்தா | உடன்பிறந்த தமயன் விவாக மில்லாதிருக்க எவன் முன்னதாக விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக்குப் பெயர். |
பரீக்கைத்தலைவன் | பிறர்க்குதவி புரியும் விருப்பம், பிறர்பழி தூற்றாமை, அழுக்காறின்மை, பிறர்குணங்கோடல், பிறர்குணமறிந்து மகிழ்தல் ஆகிய குணங்களை யுடையவன். (சுக்~நீ.) |
பரீக்ஷை | இலக்கியத்திற்கு இலக்கணம் பொருந்துமோ பொருந்தாதோ என ஆராய்தல், |
பருஉமோவாய்ப்பதுமன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் பதுமன், இவரது மோவாய் பருத்திருத்தலை நோக்கி இப்பெயரிட்டனர் போலும். (குறு 101.) |
பருத்தி | 1. ஒருவித தாவரம். இது மரப்பருத்தி, செடிப்பருத்தி யென இருவகை. பருத்திமரம் சீனா முதலிய தேசங்களில் பயிராகிறது. செடிப்பருத்தி 2, 3 அடி உயரம் பயிராகிறது. இதிலுண்டாகும் பஞ்சு உலகினர்க்கு துணி முதலியவற்றிற்கு உபயோகம். 2. இது ஒருவகைச் செடி. இது உருவத்தில் மூன்று பிளவுள்ள இலைகளுள்ளதாய் கருமைகலந்த பசுநிறங்கொண்டிருக் கும், இது பயிராகக் கரிசல், செவ்வல் நிலங்களே தக்கவை. இவற்றில் பலவகையுண்டு. உப்பம்பருத்தி, போர்பன்பருத்தி, நாடான் பருத்தி, ஈஜிப்ட்பருத்தி, பெகு பருத்தி யென்பன. இதன் வித்துக்களைச் சாணியிலிட்டு ஊறவிட்டு மேலிருக்கும் பஞ்சைப்போக்கிக் காயவைத்துப் பூமியையுழுது உழுபடைச்சாலில் விதைப்பார்கள். இது காய்க்கும் பருவத்தில் மழை கூடாது. இது ஆறு மாதத்தில் காய்க்கும். காய்கள் வெடித்தவுடன் பஞ்செடுக்கத் தொடங்க வேண்டும், செடியிலிருந்து (3) முறை பஞ்செடுப்பார்கள். இதில் நூல் நூற்று வஸ்திரங்கள் செய்வர். இதில் வெண் பஞ்சு, செம்பஞ்சு, இலவம்பஞ்சு என (3) வகை. இலவம்பஞ்சு மரத்திலுண்டாவது. இது இந்தியாவில் பல்லாரி, கர்நூல், கடப்பை, திருநெல்வேலி, பம்பாய் குசிராத், பீரார் மாகாணத்திலும் பயிரிடப்படுகிறது. இதில் ஒருவித எண்ணெயும் எடுக்கிறார்கள். இதன் கொட்டைகளை மாட்டிற்கு ஆகாரமாக்குவர். |
பருத்தி வகைகள் | உப்பம்பருத்தி, ஐம்பருத்தி, காட்டுப்பருத்தி, குப்பைப் பருத்தி, செம்பருத்தி, தாளிப்பருத்தி, நாடன்பருத்தி, பூப்பருத்தி, வேலிப்பருத்தி யெனப் பலவகைப்படும். |
பருத்திக்கொல்லையம்மாள் | முபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர் (குரு பரம்பரை.) |
பருந்து | 1. இது சாதாரண இந்து தேசத்தில் காணப்படும். மாம்சபக்ஷணி யாகிய பக்ஷி. இது, கறுத்த நிறமும் வளைந்த அவகும் வலிய கால்களும் 1 1/2 அடி நீளமுள்ள இரக்கைகளும் உள்ள பறவை. மரங்களில் சிறு குச்சுகள் கந்தைகளைக் கொண்டு கூடுகட்டி முட்டைகள் இட்டு வாழ்வது, கிராமங்களில் செத்துக் கிடக்கும் பிராணிகளையும் கோழி, எலி, பெருச்சாளி முதலிய தின்று ஜீவிப்பது 2. இப்பறவை பிங்கல நிறமுள்ளது, இதன் இறக்கை நீண்டு நன்றாய்ப் பறக்கக் கூடிய வன்மையுள்ளது. இதன் கால்க ளில் கூர்மையான நகங்களுண்டு, அவற்றால் இவை இரைகளைத் தாவிப் பிடிக்கும். மூக்கின் முனை வளைந்து மாமிசங்களைக் கிழிக்குந் திறத்திலிருக்கும். கண்கள் கூர்மையாய்க் காணும் வன்மையுள்ளவை. |
பருவதகன் | சிவகணத்தவன் |
பருவதன் | ஒரு இருடி. அம்பரீஷனுக்கு புத்திரகாமேஷ்டி செய்வித்து நீங்க, அவன் கவலுகையில் அம்பரீஷன் குமரியாகிய ஸ்ரீமதியிடம் விருப்பமடைந்து விஷ்ணுவின் மாயைக்குட்பட்டுக் குரங்கு முகம் பெற்று அப்பெண்ணைத் தான் மணவாததினால் அம்பரீஷனைக் கோபித்து அந்த காரத்தை யேவினன். அம்பரீஷனிட மிருந்த ஆழி முனிவனைத் தூரத்த விஷ்ணுவால் இரக்ஷிக்கப் பெற்று விஷ்ணு செய்த வஞ்சனையால் அவரை வணங்காதவன் நாரதர் உடன் பிறந்தாள் குமரன். இவரும் நாரதரும் ஒருவருக்கொருவர் மன எண்ணங்களை ஒளிக்காது இருப்போமென இருக்கையில் நாரதர் அதைக் கடந்ததால் குரங்கு முகமாக நாரதரைச் சபித்தவன், இவன் நாரதனைக் குரங்கு முகமாக்கியதால் இவனைக் கழுதை முகமாக ஸ்ரீமதி சபித்து விஷ்ணுவை மணந்தனள். |
பருவதம் | நந்திமாதேவர் தவத்தால் மலையுருக்கொண்ட இடம். இதுவே ஸ்ரீசைலம். |
பருவமயங்கல் | 1 அழகிய வெள்வளையினை யுடையாள் வருந்தப் பாங்கி காலத்தை அன்றாமென மருண்டு வருத்தமுற்றது. (பு. வெ. பெருந்திணை.) 2. அவ்விடத்துத் தலைவர் சொன்ன காலம் இஃது அன்றென மணம் பொருந் தின மாலையினையுடைய தலைவி தேறுதலும் அத்துறையேயாம் (பு. வெ. பெரும்.) |
பருவம் | (7) பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். இவர்க்கு முறையே வயதெல்லை ஐந்து முதல் ஏழளவும் பேதை, எட்டு முதல் பதினொன்று அளவும் பெதும்பை, பன்னிரண்டு முதல் பதின்மூன்று அளவும் மங்கை, பதினான்கு முதல் பத்தொன்பது அளவும் மடந்தை. இருபது முதல் இருபத்தைந்து அளவும் அரிவை, இருபத்தாறு முதல் முப்பத்தொன்று அளவும் தெரிவை. முப்பத்திரண்டு முதல் நாற்பது அளவும் பேரிளம்பெண். (2) வாலை, தருணி, பிரவிடை, விருத்தை. (3) கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், இவை ஆவணி முதவிரண்டிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும். |
பரோக்ஷன் | அநுபுத்திரன். இவன் புத்திரன் காலதான். |
பர்கருத்விதியை | இதுவும் கார்த்திகை சுச்லபக்ஷ தவிதியையில் அனுஷ்டிப்பதே. இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்துவந்து விருந்திட்ட நன்னாள், இதில் உடன் பிறந்தாள் தன் அண்ணனை அவன் மனைவியுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமதூதர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும். இவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெறுவர் |
பர்கிணாசுவன் | கிருசாசுவன் தந்தை. இவனுக்கு அமிதாசுவன் என்றும் பெயர், |
பர்க்கன் | 1. (சந்.) விதிகோதரன் குமரன். இவன் குமரன் பார்க்கபூமி. 2. பிரகிருதியை அஷ்டமூர்த்தமாய்த் தாங்கி நிற்கும் சிவமூர்த்தம். |
பர்சன்யன் | 1, ஓர் பிரசாபதி, 2. மேகநாதன். |
பர்ணாதன் | ஒரு வேதியன். சருகு முதலிய போஜனஞ்செய்து சிவபூசை செய்து வருகையில் ஓர் நாள் தருப்பை கொய்ய அது அவன் கையிற்பட்டு உதிர மொழுகியது. அதனைக்கண்ட யோகியாகிய அவன் ஆநந்தக் கூத்தாடுதல் கண்ட சிவபெருமான், ஓர் வேதியரா யாங்குச் சென்று எக்காரணத்தால் கூத்தாடுகின்றனை யெனக் கேட்க விடை பகராது நடித்தது கண்டு அவ் விரலின் இரத்தத்தை யகற்ற அதினின்றும் அமுதமொழுகியது. பின்னும் சிறிதுநேரங் கழித்ததினின்றும் விபூதி யொழுகியது. அதனைக்கண்ட வேதியன் அவரைப் பணிந்து கணாதிபர் பதமடைந்தவன. (சிவமகா புராணம்). |
பர்நாகன் | தமயந்தியைத் தேடச் சென்ற பிராமண தூதன். (பாரதம் வனபர்வம்). |
பர்நாசை | ஒரு நதி, இதற்குச் சீததோ பயம் என்றும் பெயர். The River Banas in Rajaputana; a tributary of the Chambal, (பாரதம் துரோணபர்வம்). |
பர்மியாசுவன் | இருக்ஷன் குமரன். இவன் குமரர் காம்பீலியன், சிருஞ்சயன், பிருகதிக்ஷன், யவீநரன், முத்கலன். |
பர்வதங்கள் | பருவதங்கள் மனதை ஒருமைப்படுத்தி தவஞ் செய்யவல்ல முனிவர்களுக்கு மனோக்யமான வாசஸ்தலமாகும். அங்கு பாபிகள் வசித்தால் அவர்கட்கு யக்ஷர்களின் பாதை யுண்டாகும். |
பர்வதராஜபுத்திரி | பார்வதி. |
பர்வதர் | தேவமுனிவர், இராவணன் இவரையார் என்னிடம் யுத்தஞ் செய்யும் வலியுள்ளார் என மாந்தாதாவைப் பலசாலியெனக் காட்டியவர், நாரதருடன் பிறந்தாள் குமரர். |
பர்வதை | ஒரு தேவதை இவளுடன் விருக்ஷை கூடியிருப்பள். இவர்கள் இருவரும் மரம் மலை முதலியவற்றிலிருந்து பெண்களின் கருப்பத்தை அபகரிப்பவர்கள். |
பறக்கும் மிருகங்கள் | ஆப்ரிகாவின் கீழ்ப்பாகவாசி. பிராணிகளில் சில மரமேறும் பழக்கமுள்ளவை. அவ்வினத்தில் சிலவற்றிற்குப் பறப்பதற்கு உதவியான இறக்கை போன்ற தோல் கழுத்திற்கும் தோள்களுக்கு மிடையிலும் முன்கால் பின் கால்களுக்கிடையிலும் உள்ள விலாப்பக்கங்களிலும் பின்கால்களின் பின்புறந்தொடங்கி வால் வரையிலும் வளர்ந்திருக்கிறது. இவற்றின் உதவியால் இப்பிராணிகன் மரம் விட்டு மரம் தாவும்போது (50) கஜத்திற்கு மேல் தாவுகின்றன. இவற்றிற் சில பறக்கும் பூனை, பறக்கும் குரங்கு, பறக்கும் குள்ளநரி. இவற்றை (பிளிரோபிட்ரா) என்பர். |
பறக்கும் மீன் | இது நீர்வாழ் சாதியிலொன்று, இது (12) அங்குல நீளமுள்ளது. இது கூட்டமாக வசிக்கும். இம்மீன்களை வேறு மீன்கள் துரத்தின் இவை அவற்றினின்று தப்ப நூற்றுக்கணக்காய் மேலெழும்பிச் சிறிது தூரம் பறந்து தப்பும், பின் நீரில் நீந்திச் செல்லும் என்பர். |
பறநாட்டுப் பெருங்கொற்றனர் | கடைச் சங்கமருவிய புலவர். (அகநானூறு,) |
பறம்புநாடு | 1. பாரி என்னும் வள்ளலின் நாடு. முந்நூறு ஊர்களையுடையது (புற. நா) 2. இது வேள்பாரியெனும் வள்ளல் ஆண்ட நாடு, இது பாண்டி நாட்டிலிருந்ததாகச் சாசனங்கள் கூறும், இது பாரிமலை, பிரான்மலையெனும் கொடுங்குன்றமா யிருக்கலாம். |
பறவைகள் | இவற்றின் பொது இலக்கணம் பறத்தலால் பறவை. இவை எலும் புக்கூடு, அலகுகள், பாதம், நகம், கழுத்து, காது, கண், இறகுகள் எனும் இவற்றின் சேர்க்கையால் அமையப்பெற்றவை, பிராணிகளின் எலும்புக ளவற்றின் தேகங்களைத் தாங்கிச் செல்கின்றன. பூமியில் நடமாடும் பிராணிகளின் எலும்புகள் கனமாயிருக்கின்றன. ஆகாய சஞ்சாரியாகிய பக்ஷிகளின் எலும்புக்கூடு, இலேசாய்த் துவாரமுள்ள தாயிருக்கிறது. இக்குழா யெலும்புகள் சுவாசாசயத்துடனியைந்து பறவைகள் பறக்கையில் தங்களிடத்துள்ள காற்றை உதவுகின்றன. அப்போது எலும்புகளில் காற்றில்லாமையால் பறவைகள் எளிதாகப் பறக்கின்றன. இறக்கைகள்; இவை இறகுகளைப் பெற்று ஆகாயத்தில் செல்லச் செய்தலா லிறக்கையெனப்படும். இறக்கை ஒரு விசிறி போன்றது. இதில் அடியில் குழல் போன்ற உட்சத் தமைந்த எலும்புடன் சம்பந்தப்பட்ட இறகுகள் பக்கவிலாவுட னியைந்து இருக்கின்றன. இவ்விறக்கைகள் பறவைகளுக்குக் கைபோல் உதவுகின்றன. இவ்விறக்கைகள் உயர்ந்து பறக்கும் பணிகளுக்கு நீண்டும், பூமியில் உலாவும் பறவைகளுக்குக் குறுகியும் உள்ளன. இறகுகள்; பேரிறகுகள், நடுத்தரமான போர்வை யிறகுகள், சிற்றிறகுகள் என மூவிதம்; பேரிறகுகள் பறவைகளின் இறக்கையிலும் வாலிலும் உள்ளவை. போர்வையிறகுகள்; இவை பறக் கும்போது தேகத்துடன் ஒட்டிக்கொண்டு பறப்பதற்கு உதவுகின்றன. சிற்றிறகுகள். பக்ஷிகளின் தேகத்தையொட்டித் தேகத்துள்ள உஷ்ணம் வெளிப்படாது காக்கின்றன. இறக்கைகளி னிறகுகள்; தென்னோலைபோல் இருபக்கங்களிலும் நெருங்கிய மிருதுவான மயிர்போன்ற பொருளால் ஆக்கப்பட்டவை. பறவைகள் இறக்கைகளின் தொடர்ச்சி பிரியாமல் தமது வாவிற்கடியிலிருக்கும் ஒருவகை தைலப் பொருளை மூக்கிற்கொண்டு இறக்கைகளுக்குத் தடவிப் பிரியாதிருக்கச் செய்யும். அலகுகள்; பறவைகளின் ஜீவனத்திற்குத் தக்கபடி இருக்கின்றன. தான்யத்தால் ஜீவிப்பவைகளுக்கு அலகுகள் குட்டையாயும் உறுதியாயும் இருக்கின்றன, கொட்டையை உடைத்துத் தின்னும் பறவைகளுக்கு அலகுகள் உறுதியுடையனவாயும், நுனியில் சற்று வளைந்து மிருக்கின்றன. ஜலத்திலும் ஜலக்கரையிலும் ஜீவிக்கும் அன்னம், வாத்து முதலியவற்றிற்கு அலகுகள் தட்டையாயும் சீப்பையொத்த பற்களிருக்கின்றன. மரங்கொத்தும் பறவைகளின் அலகுகள் நீண்டும் நீளமான நாவையும் பெற்றிருக்கின்றன. மீன்கொத்தும் பறவைகளி னவகுகள் நீண்டு கூர்மையாக இருக்கின்றன. மாம்ச பக்ஷணிகளினலகுகள் வலிவாகவும் நுனிவளைந்து மாம்சங்களைக் கிழிக்கத்தக் கனவாகவு மிருக்கின்றன. பறவைகளுக்கு இரண்டு இரைப்பைகளுண்டு, விழுங்கும் இரைகள் முதல் இரைப்பையில் தங்கி அதிலுள்ள ஒருவகை சத்தில் ஊறிப் பிறகு இரண்டாவதான சுரசுரப்புள்ள கல்லீரலை யடைகிறது. பறவைகளின் கால்கள்; இவைகளுக்குக் கால்கள் அவைகள் தங்கியுலாவும் இடங்களைப் பற்றினவாக அமைந்துள்ளன. இரையாக பக்ஷி மாம்சங்கள் முதலியவற்றைப் பிடிக்கும் பக்ஷிகளுக்குக் கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின் பக்கத்தில் ஒரு விரலும் உண்டு. கிளைகளைப் பற்றிக்கொண்டு விழாது உட்காரும் பறவைகளுக்குக் கால்கள், முன்பக்கம் நீண்டு மெலிய மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு குட்டையான விரலும் உண்டு. மரம் ஏறும் மரங்கொத்தி முதலியவற்றிற்கு முன்பக்கத்தில் இரண்டு விரல்களும், பின்பக்கத்தில் இரண்டு விரல்களும் உண்டு. காடை, கவுதாரி முதலிய நடக்கும் பறவைகளுக்கு கால்களில் முன்பக்கத்தில் மூன்று விரல்களும், பின்பக்கத்தில் ஒரு விரலும் தடித்து இருக்கின்றன. கோழி முதலியவற்றிற்கு விரல்கள் தடித்திருக்கின்றன. நீரில் நடக்கும் நாரை முதலிய பக்ஷிகளுக்குக் கால்களும் மூக்கும் நீண்டிருக்கின்றன. நீந்தும் பறவைகளாகிய அன்னம் வாத்து முதலியவற்றிற்கு முன்பக்கத்தின் இடையில் தோலகன்ற மூன்று தோலடிப்பாதங்களும், பின் பக்கத்தில் குட்டையான ஒரு விரலும் உண்டு, ஓடும் பறவையாகிய தீப்பறவை முதலியவற்றிற்குத் தடித்துக் குட்டையான இரு முன்விரல்களுண்டு. அவை ஒன்றைவிட வொன்று நீண்டிருக்கும். பற வைகள் நிலப்பறவை, நீர்ப்பறவை என இருவகைப்படும். இவற்றிற்கு அலகும் சிறகும் பாதமுமே முக்யமானவைகள். இவை இடபேதங்களாலும், நிறபேதங்களாலும், உருவபேதங்களாலும், பலவகைப்படும். இவ்வினங்களில் ஒரு அங்குல முதல் 10 அடி உயரமுள்ளவைகளும் உண்டு. இவற்றின் உடல் அவற்றின் தொழிலைப்பற்றி யதாயிருக்கிறது. இவை காற்றில் பறப்பவை ஆதலால் இறக்கைகள் உண்டு. இவற்றின் உடலை சிறு சிறகும், பெருஞ் சிறகும் மூடியிருக்கும், இச்சிறகுகளில் மார்பின் புறத்தை மூடியிருப்பவை சிறு சிறகு, இறக்கையிலுள்ளவை பெரியவை, வால்புறத்தது இறக்கையினும் சற்று சிறியது. பறவைகள் காற்றில் நீந்திச்செல்பவை ஆதலால் அவற்றின் சிறகு ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும். இவை மழைகாலத்தும் பறப்பவை ஆதலால் சிறகுகள் தண்ணீர் ஒட்டாத தைலப் பசையுள்ளவைகளாக இருக்கின்றன. பறவைகளின் கால்களில் 4 விரல்களே உண்டு, அவற்றில் 3 முன்புறம் உண்டு. மூக்கு முன்புறம் கூர்மையாயும், பின்புறம் மிருதுவாயு மிருக்கிறது. மாம்ச பக்ஷணிகளின் மூக்கு வளைந்து கூர்மையாயும், சாகபக்ஷணிகளின் அலகு நேராகவும் இருக்கிறது. பக்ஷிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும். அவை உருவிற்குத் தக்கபடி பெரிதாயும் சிறிதாயுமிருக்கும், அவை அடைகாக்கும் காலமும் உருவிற்குத்தக்க வேறுபாடு கொண்டன. சிட்டுகள் 12 நாளும், கோழிகள் 21 நாளும், வாத்துகள் 25 நாளும், நீர்ப்பறவை 31 நாளும், அன்னம் 42 நாளும், தீக்கோழி 42 நாட்களும் அவயக் காக்கின்றன. பறவைகளை சிட்டு, புறா, காக்கை, கொக்கு, கோழி, ஆந்தை இனங்களாக வகுத்திருக் கின்றனர். 1. தையற்பறவை, 2. பட்டினப்பறவை, 3. பவர்பர்ட், 4. வானம் பாடி, 5. ஊர்க்குருவி, 6. தூக்கணங்குருவி, 7. ஆகாயவலை, 8. சைநா சிட்டு, 9. கொட்டைப்பாக்குச்சிட்டு, 10. ஊங்காரப்பறவை, 11. நகைக்கும் பறவை, 12. பரிகசப் பறவை, 13. தேன்சிட்டு, 14, மலர்க்கொண்டைப் பறவை, 15. கனேரிப் பறவை, 16. நந்தனப் பறவைகள், 17. நடிக்கும் சித்திரப் பறவைகள், 18. கிளிகள், 19. மயில், 20. கோழிகள், 21. புறாக்கள், 22. மீன்குத்தி, 23. கொண்டலாத்தி, 24. மரங்கொத்தி, 25. நாநீண்டபறவை, 26. ஆள்காட்டிக் குருவி, 27. காகம், 28. குடைப் பறவை, 29, கைவி, 30. விநோத மூக்குள்ள பறவை, 31. உள்ளான், 32, அன்றில், 33. கொக்கினம், 31, நாரைகள், 35, ஆலா, 36. இரேட் ஆல்பட்ராஸ், 37. துருவமண்டலப்பறவைகள், 38. கொம்புள்ள மூக்குப் பறவை, 39. வாத்துகள், 40. அன்னப் பறவை, 41. கோட்டான், 42. பருந்து, 43. வல்லூறு, 44, கழுகுகள். |
பறவைப் பெயர்கள் | அன்னம், சிம்புள், சக்கிரவாகம், மயில், கருடன், சாதகப்புள், கழுகு, பருந்து, அசுணம், கருக்கிளி, பசுங்கிளி, பஞ்சவர்ணக்கிளி, வெள்ளைக்கிளி, நிலாமுகி, செம்போத்து, குயில், கோட்டான், ஆந்தை, நாகணவாய்ப்புள், வலிபன், காரிப்பிள்ளை, கரிக்குருவி, சிச்சிலி, கூகை, கோழி, தூக்கணக்குருவி, ஊர்க்குருவி, நிலக்கு, கானக்கோழி, வானம்பாடி, காடை, சிவல், கௌதாரி, பகன்டை, அண்டங்காக்கை, மணிக்காக்சை, கரும்புரு, மாட்ப்புரு, தவிட்டுப்புளு, காட்டுப்புறா, உள்ளான், சம்பங்கோழி, அன்றில், கொய்யடி நாரை, கருநாரை, வெள் நாரை, நீர்க்காக்கை, தீக்குருவி, வாத்து, பலவகைக் கோழிகள். |
பறிசாபாகவதர் | இவர் லக்ஷ்மிக் கன்பராய்ப் பண்டரியில் வாழ்ந்து கொண்டிருக்குங்கால் ஒரு நாள் லக்ஷ்மிதேவி தரிசனந்தந்து உனக்கு என்ன வேண்டுமெனப் பாகவதர் என்னுடைய வறுமை நீங்கவேண்டுமென லக்ஷ்மிதேவி, ஓர் பரிசக்கல் இவரிடம் கொடுத்து இதனிடம் இரும்பைக் காட்டின் பொன்னாக்குமாதலால் அவ்வகை செய்து வறுமை நீஙகுக என்றனள். அவ்வாறே பாகவதர் மனைவியிடத்திதைக் கொடுத்து அவ்வாறு செய்து வாழ்ந்துவருகையில், ஒரு நாள் மனைவியாகிய கமலசா, சந்திரபாகை தீர்த்தத்தில் நீர் முகந்து வருங்காலத்தில் நாமதேவரது மனைவி ராஜாயி இவளை எதிர்கண்டு நானும் வருகிறேன் சற்றுநில் என்று கூறி அவளும் நீர் மொண்கொண்டு வருகையில் இருவருள் இராஜாயி கமலசாவைப் பார்த்து நான் வறுமையால் வருந்துகின்றேன் நீ வளத்தோடு கூடியிருப்பதற்குக் காரணம் என்னவெனக் கமலசா தனக்கு லக்ஷ்மிதேவியால் உண்டான பரிசக்கல்லின் தன்மைகூறக் கேட்டு அதனைத் தான் பார்க்கவேண்டுமெனக் கமலசா வீட்டிற்குச்சென்று அதைக் கண்டு, அதைக் கமலசா இவளுக்குக் கொடுத்து நீ இரும்புகளைப் பொன்னாக்கிக் கொண்டு இதை என்னிடத்தில் மீண்டும் தருகவெனக் கூறித்தர, அவ்வகை ராஜாயி புரிந்து வளமாக அன்ன முதலிய தன் புருஷருக்குப் படைத்து வருங்காலத்தில் நாமதேவர் இவ்வகை வளப்பத்திற்குக் காரணம் என்னவென வினவ, இவள் கூருமை கண்டு தான் கூறினால் அல்லாமல் உணவு செய்யேன் என்ன அவ்வகையே மனைவியார் அக்கல்லைக்காட்ட நாமதேவர் அந்தக் கல்வைச் சந்திரபாகைத் தீர்த்தத்தில் வாங்கி, யெறிந்து விட்டனர். கமலசா இதை அறிந்து கேட்கச் சிலரிது ஞாயமன்றெனவுங் கூறினர். இதையறிந்த பறிசாபாசவதர் நாமதேவரை நோக்கி இது நிராசை யற்றவர்க்கு அழகன்தெனக் கோபிக்க நாமதேவர் பாகவதரை நோக்கி அந்த ஆற்றிற்கு அழைத்துப்போய் அதில் மூழ்கி அதிவிருந்த கற்களை வாரிக்குவித்து உமது பரிசக்கல்லை எடுத்துக் கொள்ளுகவெனப் பாகவதர் ஒன்றும் தோன்றாமல் தம்மிடத்திருந்த இரும்புகளை அந்தச் கற்களின் மீது நீட்ட அவையனைத்தும் பொன்னாயின. இதையறிந்த பாகவதர், நான் நாமதேவரது மகிமையறியாமல் இவ்வகை செய்தேனென்று அவரது திருவடியில் வணங்கித் தீக்ஷை பெற்று அடியவராயினர். |
பறையன் | ஊர்காத்துப் பறைசாற்றும் புலைமகன், |
பறையர் | இவர்கள் தமிழ்நாட்டுப் புராதன குடிகள். இவர்கள் தமிழ்நாட்டில் பறையரென்றும், வடநாட்டில் மாலமாதிக ரென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர் கள் தொழில் பயிரிடுதல், அடிமைவேலை செய்தல், சுபாசுபங்களுக்குப் பறைகொட்டல், பயிர்க்கு நீர்ப்பாய்ச்சும் கம்புகட்டி பண்ணையாள், தலையாரி, வெட்டுவான், ஊர்க்காவல் முதலிய வேலை செய்தல், இவர்கள் ஒருகாலத்தில் பலமுள்ள கூட்டத்தினராக இருந்தனர். இவர்களை வழக்கத்தில் பறையர் என அழைப்பது. இவர்களைப் புலையரென நிகண்டு, பிங்கலந்தை, திவாகாரம் முதலிய கூறும். இவர்கள் புலைத்தொழில் செய்தலால். நந்தனார், பெற்மான்சாம்பான், திருப்பாணாழ்வார், முதலியோர் இப்புலையர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிராமணர்களை எங்களை யொத்தவர்கள் என்பர். அவர்களுக்கும் ஊர்க்குப்புறம்பாக அக்கிராகாரம் உண்டு. எங்கட்கும் ஊர்க்குப் புறம்பாக, இடம் உண்டு, அவர்களிருக்குமிடத்தில் நாங்கள் போகக்கூடாது, நாங்களிருக்குமிடத்தில் அவர்கள் வரக்கூடாது. அவர்களுக்கும் பூணூல் உண்டு, எங்களுக்கும் பூணூல் உண்டு என்பர். இவர்கள் சில திருவிழாக்களில் மற்ற சாதியாருடன் ஒத்த சுதந்திரர்களா யிருக்கின்றனர். பெரும்பாலும் தென்னாட்டில் நடைபெறும் இரதோற்சவங் களில் ரதமிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர், திருவாரூரில் சுவாமிக்குமுன், யானையேறும் பெரும்பறையன் யானை மீது ஏறிக்கவரிவீசிச் செல்கிறான், இவன் பிடாரியார் திருவிழாக்களில் மாரிக்குத்தாலி உரைகொண்டு தன்குலப் பெருமை கூறிக்கொண்டு சார்த்தி மரியாதை பெறுகிறான். மைசூரிலுள்ள மேற்கோட்டையில் நடக்கும் உற்சவத்தில் புலையர்களுக்கு சந்ததிக்குட் புகுந்து தரிசனம் செய்யும் சுவதந்திரம் உண்டு. இவர்கள், மழையிலாக் காலத்து ஒரு சடங்கு செய்வது உண்டு, அச்சடங்கின் செய்தி, சுக்ரன், தன்னிடம் விட்டு வைப்பாட்டி வீட்டிற்குச் சென்றிருத்தலால் மழை பெய்யவில்லை என்று அவன் வைப்பாட்டியைக் கொடும்பாவியாக மண் னுலும் வைக்கோலாலும் பிரதிமை செய்து அதை ஒரு ரதத்தில் வைத்து ஏழு எட்டு நாட்கள் தெருக்களில் இழுத்து கடைசி நாளில் வெட்டியான் தன் தலை சிறைத்துக் கொண்டு அக்கொடும் பாவிக்குப் பிரேதசமஸ்காரம் செய்வன் இதனால் வெட்கமடைந்த சுகரவைப்பாட்டி சக்ரனை சொந்த இடம் அனுப்புவள். பின் மழை பொழியும் என்பது மழைக்கும் முதலானவர்கள். இவர்கள் சில இடங்களில் திராமாதிபதிகளா யிருக்கின்றனர். செங்கல்பட்டு ஜில்லா தையூரில் ஏழுபறைச் சேரிக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், இடைப்பாளையம், வரதராஜபுரம் (வண்டலூருக் கருகிலுள்ளது) தென் ஆற்காடு ஜில்லாவில் கோவிந்தநல்லூர், ஆண்டி பேட்டை, இந்த இடங்களில் அவர்களே கிராமமுனிஸிப் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பல வகுப்புகள் உண்டு. அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க் கட்டி, கோவியான், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக்கட்டாதவர், வலை, தாதன். இவர்களுள் கோவியன் துணி நெய்வோன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொடராயன் வண்ணார் வேலை செய்பவன். இவர்கள் 9 வது நூற்றாண்டில் பல்லவர் காலத்து உயர்பதவியில் இருந்ததாகத் தெரி கிறது. பல்லவர்க்கு வள்ளுவரே புரோகிதம் செய்திருந்தார்களென்று கூறப்பட் டிருக்கிறது. இந்த வள்ளுவர்கள் கோவில்களில் இருந்ததாகவுஞ் சொல்லப் படுகிறது, “ஸ்ரீவள்ளுவம் பூவாணவன் உவச்சன்” ஆறுவள்ளுவரை நித்யகட்டளைக்கு வைத்துக்கொண்டு கோவில் காரியம் நடத்த வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஆதி திராவிடரென்று தங்களை உயர்த்திக் கூறும் பறையர் ஒரு காலத்து உயர்ந்த நிலையிலிருந்தவளாகக் காணப்படுகின்றனர். எல்லாப் பறையர்க்கும் மேலதிகாரியாக நவாபு காலத்தில் தேசாயி செட்டியை எற்பாடு செய்தனர். அத்தேசாயி வாரியன் அல்லது சலவாதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நேர்ந்த வழக்குத் தீர்த்து அதிகாரஞ் செலுத்துவன். தேசாயி இவர்களிடம் கட்டணம் பெறுவன். |
பறையூர் | சேரநாட்டில் உள்ளதோர் ஊர். (சிலப்பதிகாரம்.) |
பற்கரன் | சிவகணத்தவரில் ஒருவன். |
பற்கள் | இவை வாயினுள் ஆகாரத்தை மெல்வதற்கு உதவியான கருவிகள். இவை மேல்வாயி னிருபக்கங்களிலும் பதினாறாகவும், அடிவாயி னிருபக்கங்களிலும் பதினாறாகவும் முப்பத்திரண்டு இருக்கின்றன. குழந்தைப் பருவத்திலுண்டாம் பற்கள் நிலைத்தவையல்ல. அவை பிள்ளைகளுக்கு (7) ஆம் மாதம்முதல், இரண்டு வருஷத்திற்குள் உண்டாகும். இவை, (3~4) வருஷம் வரையில் பயன்பட்டுப் பிறகு விழுந்துவிடும். அந்தப் பற்களைப் பால்பற்கள் என்பர் (7) வயதிற்குமேல் முளைக்கும் பற்கள் நிலையான பற்கள், அவை முன்பற்கள் (8) கோரப் பற்கள் (4) கடைவாய்ச் சிறிய பற்கள் (8) கடைவாய்ப் பெரிய பற்கள் (12) ஆக (32) பற்கள். இவை, எழுத்துக்களை நன்றாய் உச்சரிப்பதற்கும், ஆகாரத்தைக் கடித்திழுத்து மெல்லுவதற்கும் உதவி புரிகின்றன. |
பற்குநன் | அருச்சுநன், |
பலகறை | இது, கடலிலுண்டாம் ஒருவித பூச்சியின் மேற்புறவோடு. இது, பல நிறங்களுடனும், வடிவங்களுடனும் இருப்பது, இதனை நாணயமாகவும் வழங்குவர். |
பலகாச்வன் | குசிகன் தந்தை. |
பலகார வகை | உளுந்தின் பலவகை வடை, பலவகை தோசை, உளுந்து முதலிய பயற்று வகை உருண்டை இடுலி, முருக்கு, மனோப்பு, தித்திப்புவடை, கடலை ரொட்டி பலவித பணிகாரங்கள், தோய்ப்பான், எருக்கங்காய்க் கொழுக்கட்டை, நீர்க்கொழுக்கட்டை, குழவுருண்டை, பூரண வுருண்டை, பலவித அடைகள், கோதுமை கஜருக்காய், கோதுமை நொய்சுருளைப் போளி, எள்ளுருண்டை, பூரி, பாலேட்டுப் பலகாரம், பேணிப்பலகாரம், பூந்தி இலட்டு, பனிநீர்லட்டு, ஜிலேபி என்னும் தேன்குழல், அல்வா, பலவித அல்வாக்கள், பொரிவிளங்காய், மசால்வடை, பகோடா, மோர்வடை, பலவகைப் பாயசங்கள், அமாமோகன் மாங்காய் தித்திப்பு முதலிய. |
பலக்புகார் | ஒரு மிலேச்ச அரசன். இவன் கபீர்தாசரிடத்தில் உபதேசம் பெற்று அதை மறந்து ஒருநாள் தன் படுக்கையில் வந்து தன்னைக் கூடாது ஒருபுறமாகப் படுத்துறங்கின தாசியை நான்கு சவுக்கு கள் முரியுமளவும் அடிக்கும்படி கூறித் தானும் பார்த்திருக்கையில் தாசி அடிபட்டும் தான் அழாதவளாய்ச் சிரித்துக்கொண்டு வருதலை நோக்கி அரசன் அவளை என்னே சிரிக்கின்றனை என்றனன். தாசி படுக்கையின் ஒருபுறத்திலுறங்கின எனக்கு இவ்வளவு தண்டனையானால் முழுதிலும் படுத்துறங்கின உமக்கு எவ்வளவு உண்டாகுமெனச் சிரித்தேன் எனக் கேட்டு அரசன் திடுக்கிட்டு ராச்சிய முழுதும் மந்திரி வசமாக்கித் துறவடைந்து ராமநாமம் பஜித்துக் காடடைந்து பெருமாளைத் தரிசித்து அவ்விடம் நீங்கி அப்பாற் சென்று ஒரு பக்கீரை யடைய, அப்பக்கீர் தனக்குப் பெருமாள் கொடுத்த இரண்டப்பத்தை வைத்துக்கொண்டு இவரைக்கண்டு இவர்க்கு ஒரு அப்பம் போதுமேயென்று எண்ணி இவரை நீ புதியவனிங்கிருத்தல் கூடாதெனப் பலக்புகார் சற்றகல இருந்தனர். இதுவரையில் அரசனுக்கு எட்டு நாட்களாயின. ஆகாரங் கிடையாமையால் பெருமாள் பிராட்டியைப் பலக்புகாருக்கு அன்னமளித்து வரக் கூறப் பிராட்டி அன்னமளித்தனள். இதைக் கண்ட முன்னைய பக்கீர் நான் நெடுநாள் தியானித்தும் அன்னந்தரவில்லை. எட்டுநாளைய பக்தனுக்கு அருளினான் என்று பெருமாளிடத்து வெறப்பாய் உறங்கப் பெருமாள் கனவிடை அவன் ராச்சிய சம்பத்தனைத்தையும் விட்டு நிஷ்காமியனாய் என்னைத் தியானித்தான். நீயோ அவ்வாறு செய்யாது தியானித்தாய் என்று விடையருளப் பக்கீர் பலக்புகாரைச் சரணயடைந்து இருவரும் நட்பினராய்ப் பக்கீர்களின் மடமடைய அப்பக்கீர்கள் இவரைப்பககீர்களுக்குரிய சின்னமிலாமை கண்டு இகழப் பெருமாள் பெரிய பக்கீர் போல வந்து இவரது நிலையை தெரிவித்தனர் பக்கீர்கள் வெளிவந்து பலக்புகாரைப் பணிந்து மடத்திற் கொண்டடைந்தனர். |
பலசப்தமி விரதம் | மார்க்கசீரிஷ சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரையில் சூரியனைப் (13) மாதம் பூசிப்பது. |
பலசூதனன் | பலனைக்கொன்ற இந்திரன். |
பலதன் | அரசப்பெண் வணிகனைக்கூடப் பிறந்த கரு. |
பலதேவன் | பலராமன் (மணிமேகலை.) |
பலத்தியாக விரதம் | மார்க்க சீரிஷ சுக்ல அஷ்டமி துவாதசி சதுர்த்தசி இந்தத் திதிகளில் எதிலாயனும் சுபமாதக்களில் ஆரம்பிக்க வேண்டியது. இது நாரதனுக்கு நந்தி சொன்னது, |
பலந்தன் | நாபாகன் குமரன். இவனுக்கு அலந்தன் எனவும் பெயர். வச்சிர பிரீதி தந்தை. |
பலன் | 1. சுமதி குமரன். இவன் குமரன் சுகிதன். 2, பாணாசுரன் குமரன். 3. பலராமனுக்கு ஒரு பெயர். 4. வத்சந்திரன் குமரன். 5. இவன் எஞ்ஞனுக்குத் துணையிடம் பிறந்தவன். இவன் சகல கர்மங்களி லும் தக்ஷிணை கொடுத்த பலனளிப்பவன். 6. இவன் ஒரு அசுரன். சிவபிரானால் வரம் பெற்றவன். (பார~அநுசா.) 7. க்ஷத்திரியன், பரிக்ஷித்தின் மூன்றாவது புத்திரன், மண்டுக கன்னிகையாகிய சுசோபனையிடம் பிறந்தவன். |
பலபடப்புனைவணி | ஒரு பொருளில், பலரும் பல தருமங்களினால் பல பொருள்களை ஆரோபித்தலும், ஒருவரே ஒரு பொருளில் விஷய பேதங்களால் பல பொருள்களை ஆரோபித்தலுமாம். இதனை வடநூலார் உல்லேகாலங் காரம் என்பர். |
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் | 1, இவர் வேளாண்குடியினர். இவர் ஒருநாள் தெருவழிச் செல்லுகையில் கம்மாளராகிய சுப்பிரதீபக் கவிராயர் காலிற் பாதாக்ஷையிட்டுச் செல்லுதலைக் கண்டு “சாணாருங்கள் குடியார் பணிக்கர் சாராயமுண்ணார், கோணாது பாதகுறடு செய்தான் பெருங் கூலி யல்லால், நாணாது வீதிதோறும் போபட்டுச் செல்வது ஞாயமில்லை, வீணாவடா சுப்ரதீபா வஞ்ஞான விளக்கொளியே. ” என்று பாடியதைக் கேட்ட சுப்ர தீபக் கவிராயர், ”தேவை முத்துராமலிங்கச் சேதுபதிமீது விஞசைக் கோவையென்ற பில்லி வைத்துக் கொன்றாயே பாவி நீ, இட்டகவி தான் வசையாயேன் சொன்னாய் சேர்ந்த பல, பட்டரை சொக்கா முழுவம்பா”என்றனர். சுப்ரதீபக் கவி இறந்தபோது இவர், ”செய்யகொழுனைச் சிவசுப்ர தீபா, வெய்ய கொழுந்தழலில் வேவுதே ஐயையோ, நின்மலனார் வெண்ணீற்று நெற்றிக்கண் காணாத, மன்மதன் காண் என்று சொன்ன வாய்” என்றனர். 2. சற்றேறக்குறைய (250) வருடங்களுக்கு முன் இவர் சிவகங்கை ஜமீனைச் சார்ந்த கடம்பங்குடியிருந்தவர் என்பர். இவர் எப்போதும் அரையில் பட்டுடுத்திருந் தமையாலிவரைப் பட்டரையென்றும் கூறுவர். இவர் சொக்கர் மீதும் மீனாக்ஷியம்மை மீதும் கவிகளும், சிவந்தான், செங்குன்றை யூரன் வல்லைக் காளத்தி முதலியார் முதலியவரைப் புகழ்ந்தும் பாடியிருக்கின்றனர். இவர் படிக்காசுப் புலவர் கவியைப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். |
பலபத்திரர் | பலராமருக்கு ஒரு பெயர். பராக்கிரமத்தால் விசேஷித்ததால் பெற்ற பெயர். |
பலப்பிரமதனர் | பலப்பிரமதனி சத்திக்கு நாயகராகிய சிவமூர்த்தம், சூர்யவியாபி. |
பலப்பிரமதனி | சூர்யனிடம் வியாபித்திருக்கும் சிவசத்தி. இவளுக்கீசர் உகார் அல்லது பலப்பிரமதனர். |
பலராமர் | 1. இவர் விஷ்ணுவின் அம்சமாய் வஸுதேவருக்கு உரோகணி யிடம் அவதரித்தவர். இவரை ஆதிசேஷன் அம்சமெனவும் பரமபதநாதரது வெண்ணிறமான அம்சமெனவும் புராணங்கள் கூறும், இவர் யோகமாயை யால் கிரகிக்கப்பட்ட வராதலால் சங்கருவுண ரெனவும், பெயர் பெறுவர். 2. இல்வலன் என்னும் நிசாசரனைக் கொன்றவர். ஒரே குண்டலத்தையுடைய வர். ஆயுதம் கலப்பை. இவர்க்கு வாருணியாகிய யமுனை இரண்டு நீலவஸ்திரம்களும் ஒரு பொன்மாலையு மளித்தனள். ஆகையால் அதனை யணிந்து, நீலாம்பரன் எனப் பெயரடைந்தனர். 3. ஆயர்பாடியில் இருக்கையில் வெந்து விதனென்னும் வாகரனைக் கொன்றவர். இவர் முதலில் தேவகிகர்ப் பத்தில் இருந்து பின் உரோகணி கர்ப்பத்தில் சேர்ந்தனர் என்பர். 4. சங்கசூடனது சிரோரத்தினத்தின் பொருட்டு கண்ணனிடம் கோபித்து விதர்ப்பதேசத்திலிருந்து மீண்டும் அதைக் கண்ணனளிக்கப் பெற்றுக் கொண்டவர். 5. உருக்மணி மணத்தில் தம்முடன் சொக்கட்டான் ஆடித்தோற்றுச் செயித் தேனெனப் பரிகசித்த உருக்மியை அலாயுதத்தாற் கொன்றவர், 6. கிருஷ்ண னாற் பிருந்தாவனத்திற் கேவப்பட்டுக் கள்ளுண்டு களித்துக் கோபிகைக ளுடன் விளையாட யமுனையை அழைக்க வாராதிருத்தல் கண்டு கோபித்துக் கலப்பையால் அதை இழுத்தவர். இவருக்குக் காந்தியென்று ஒரு தேவி. 7. துரியோதனன் குமரியாகிய இலஷ்மணை பொருட்டு அத்தினபுரத்துடன் கௌரவரை அலாயுதத்தால் கங்கையிற் நள்ள உத்தேசித்தவர், 8. பாண்டவர் யுத்தத்தை உற்பாதத்தால் அறிந்து தீர்த்தயாத்திரை சென்று வலன் என்பவனை அலாயுதத்தாற் கொன்று ரைவதமலைக்கு அருகில் புராணம் சொல்லிக் கொண்டிருந்த சூதர் தம்மைக்கண்டு எழுந்திராததினால் அவர் சிரத்தைக் கொய்து மீண்டும் இருடிகள் வேண்டலால் உயிர்ப்பித்து உக்கிரசிரவஸு என்னும் பெயர் தந்து பன்னிரண்டு வருடம் தீர்த்த யாத்திரை பூப்பிரதக்ஷணம் செய்து பிரமகத்தி போக்கிக்கொண்டு துரியோதனனை இடுப்பின் கீழ் அடித்து இறக்கச் செய்து அவன் மகுடத்தை உதைத்த வீமன்மீது கோபித்துக் கடுஞ்சினமடைந்து கண்ணனாற் கோபமாறினவர். 9. இவர் ஒருமுறை சராசந்தனிடங் கோபித்துக் கலப்பையால் அவனை மோதினர். 10. கம்சனால் மல்லயுத்தத்திற்கு ஏவப்பட்ட முஷ்டிகனையும் அவன் துணைவன் கடனையும் கொன்றனர். 11. கம்சனைக்கொன்ற கண்ணனுடன் யுத்தத்திற்கு வந்த அவன் தம்பியர் எண்மரையும் அலாயுதத்தாற் கொன்றவர். இவர், கண்ணனை நீங்கினவரல்லராதலால் கண்ணன் சரித்திரங்கள் பெரும்பான்மை இவரையுஞ் சாரும். இவர் பாரி இரேவதி மற்றொரு தேவி வாருணி, 12. இவர் சில நாளிருந்து யதுவம்சம் இருடிசாபத்தால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இறந்த காலத்துச் சமுத்திர ஸ்நானத்திற்குச் சென்ற இவர் தனித்து ஓர் விருக்ஷத்தையடைந்து அதனடியில் தியானத்திருக்கையில் கண்ணன் தம்மிடம் வரக்கண்டு சேஷவுருக்கொண்டு கடலடைந்தனர் என்பர். இவர்க்குப் பனைக்கொடி, |
பலராமர் ஸ்நானஞ் செய்த தீர்த்தங்கள் | ஸ்தலங்கள், விநசனை, சுபூமிகை, கர்க்கஸ் ரோதஸ், மகாசங்கம், நைஸர்க்கிகம், நாகதன்வா இது நாகரிருப்பிடமான இடம், ஸப்தசாரஸ்வதம். |
பலவிகரணர் | சந்திரவியாபக மகாதேவருக்கு ஒரு பெயர். |
பலவிகரணி | சந்திரனிடத்தில் வியாபித்துப் பலத்தை விளைக்குஞ்சத்தி, இவட்கு ஈசர், மகாதேவர் அல்லது பலவிகரணர். |
பலா | இது, இந்தியாவில் இனிப்பான மா, வாழை என்னும் முக்கனிகளில் ஒன்று, இதன் பழம் இரண்டடிக்கு மேற்பட்டு நீண்டுமிருக்கும். மலையாள நாட்டில் இதை பலவகையாக உபயோகப்படுத்துகின்றனர். இவ்வகையில் வேர்ப்பலா, தேன்பலா முதலிய பலவகை உண்டு. இதன் இலையை உண்கலமாக உபயோகிப்பர். |
பலாகன் | 1, கத்ருதநயன் நாகன், 2. வத்சந்திரன் குமரன். உத்தமனைக் காண்க, |
பலாகாச்வன் | குசிகன் தந்தை, அசகன் குமரன், பூரு வம்சத்தவன். |
பலாசினி | மகாநதியிற் கலக்கும் ஒரு நதி. |
பலாசுரன் | இந்திரனிடம் போரிட்டு அவனால் கொல்லப்பட்ட அசுரன். |
பலாசுவன் | விஃவகாசனைக் காண்க. |
பலாச்வன் | 1. கனித்திரன் பேரன். இவ னுக்குக் காந்தமன் எனவும் பெயர். 2. வீர்யசந்திரன் குமரியாகிய வீரையை மணந்து ஒரு குமரனைப் பெற்று சோதிடரால் பிறப்பின் கிரகநிலையாராய் கையில், தீயகிரகவீக்ஷண்ய மில்லாமையால் அவீக்ஷித்து எனப் பெயரிட்டு வளர்த்தவன். |
பலாயநன் | வீமன் மச்சநாட்டிற் கரந்துறைகையில் வைத்துக்கொண்ட பெயர். |
பலி | 1. விரோசனன் என்னும் அசுரனுக்குத் தேவியென்பவளிடம் பிறந்த அசுரன், பிரகலா தன் பேரன், இவன் மகாவீரன். இவன் ஒரு யாகஞ்செய்ய அதில் குதிரை, தேர், சிங்கத்துவசம், தனுசு, இரண்டு அம்பறாத்தூணி, ஒருகவசம் உண்டாயின. இவனுக்குப் பிரகலாதன் கவசமொன்று அளித்தனன். சுக்கிரன் சங்கம் கொடுத்தனன், இவன் இவைகளைக் கொண்டு சுவர்க்க முதலியவற்றைச் செயித்து அரசாண்டிருந்தனன். பின்பு சில நாள் பொறுத்து அச்வமேதஞ் செய்கையில் விஷ்ணு காசிபரிடத்து வாமனராய் அவதரித்துப் பலியின் யாகசாலையாகிய பிருகுவடி சேத்திரத்திற் சென்று மூன்றடி மண்யாசித்தனர். இது விஷ்ணுவின் மாயையென்று அசரப் புரோகிதனாகிய சுக்கிரன் தடுத்தனன். அதைப் பலிகேளாததால், சுக்கிரன் சினந்து நீ ஐஸ்வர்ய பிரஷ்டனாகவெனச் சபித்தனன். வாமனர் யாசித்தபடி பலி தந்தனன். ஏற்ற வாடினர், ஈரடியால் மூவுலகளந்து ஓரடி வைக்க இடம் பெறாமலிருக்கச் சக்கிரவர்த்தி தன் சிரத்தைக் காட்டினன், அச்சிரத்தை வாமனர் கிரகித்துப் பலிக்குச் சாவர்ணிமன்வந்தரத்தில் இந்திரனாகவாந் தந்து இந்திரனாகும் வரையில் பாதாளவுல கத்திற் சகல இன்பங்களையும் அனுபவிக்கச் செய்து விஷ்ணு மூர்த்தியையும் துவாரகபாலகராய் எழுந்தருளியிருக்கின்றனர், இந்த உலகத்தில் பாட்டனாகிய பிரகலாதனும் உடனிருக்கின்றனன். இவன் பாதாங் குஷ்டத்தால் இராவணன் திக்கு விஜயத்தில் தள்ளப்பட்டான். இவன் தேவி விந்தியாவலி. இவன் சிரஞ்ஜீவி. இவனுக்கு நூறு குமரர். அவர்களுள் வாணாசுரன் மூத்தோன். இவன் எலியாயிருந்து சிவாலயத்துத் திருவிளக்கைத் தூண்டிச் சக்கிரவர்த் தியாயினன் என்பர். இவன் பாதாளத்திருக்கையில் தேவகியிடம் உதித்த மைந்தர் இவனிடம் இருந்தனர். அவர்களை அனுப்பக் கண்ணன் கட்டளையிட அவ்வகை அனுப்பினன். 2. இவன் ஒருகாலத்தில் இந்திரனுக்குப் பயந்து கழுதை உருக்கொண்டு பாழ்ஞ்சுவரில் ஒளித்திருந்தனன். அப்பொழுது இந்திரன் இவனிருப்பிடத் திலிவனைத் தேடிக்காணாது சுவரிடம் கண்டு இவ்வாறி ருப்பதற்குக் காரணம் கேட்க இதற்கு விஷ்ணு மீன், ஆமை, வராகம் முதலிய ஆனதற்கு என்ன காரணமோ அது தான் காரணமெனக் காலபலக் கூறி நட்புக்கொண்டவன் (தேவி~பாகவதம்). 3. கிருச்சமத முனிவர் யோகவிழிப்பில் பிறந்த அவுணன், இவன் தவத்தால் திரிபுரங்களைப் பெற்றுத் திரிபுரன் எனப் பெயர் பெற்றனன். இவன் சுக்கிலம், சுபிலம், சுவிர்த்தி என்னும் கோட்டைகளை நிருமித்து அவற்றைக் காக்க வச்சிரதமிஷ்டிரன், வீமாகாயன், காளகூடன் என்பவர்களை நியமித்துச் சண்டன், பிரசண்டன் இவர்களைச் சத்தியலோகம், வைகுந்தம் இவைகளைக் காக்க ஏற்படுத்தி ஒரு மனைபலியும் பலிதேவதையும் வியுடன் கூடி மதனன் என் பலனைப் பெற்று அநேககாலம் அரசாண்டனன். (பாகவதம்.) 4, சூர்யகுலத்தரசன், புத்திரனில்லாது தவஞ்செய்யப் போயினவிடத்துத் தீர்க்க தமனைக் கண்டு அரண்மனைக் கழைத்து வந்து அவனால் தன் மனைவியாகிய சதேஷ்ணையிடம் அங்கன், வங்கன், களிங்கன், புண்டாசன், சுக்கன் எனும் குமாரைப் பெற்றான். இவன் தந்தை, சுதபசு, சதி பன் எனவும் கூறுவர். 5. இந்திரனாற் கொல்லப்பட்ட அசுரன். 6. எக்காலத்தும் தேவர்கள் கிருகஸ் தனை அநுசரித்திருக்கின்றனர். ஆதலால் இல்லறத்தான் முதலில் தேவர்களுக் கும் பின் அதிதிகளுக்கும் கொடுக்கவேண்டும். அதிதிகளுக்கிடுவதால் யக்ஷ, ராக்ஷஸ பித்ருக்கள் முதலியோர் திருப்தியடைகின்றனர். நல்லபழம் அன்னம் தேவர்களுக்கும், மாம்ச மது முதலிய பைசாசர் முதலியவர்க்கும், பொரி எள் முதலிய பிதுரர் யக்ஷர் முதலியோர்க்கும் பலியிடவேண்டும். (பார்~அநுசா.) |
பலிஜர் | தெலுங்கு நாட்டு வர்த்தக ஜாதியார். இவர்கள் வளையல் முதலிய விற்று வாழ்வோர். |
பலிதன் | ஒரு எலி. வேடன் விலையில் அகப்பட்ட பூனையை விடுவித்தது. |
பலினன் | (சூ.) விவசன் குமரன். மகா கொடிய திருத்தியங்களைச் செய்த கொடுங்கோலரசன். இவன் குமரன் கரந்தன். |
பலிபுச்சகன் | ஆரியாவர்த்தத்தை ஆண்ட அரசர்களில் தலைவன். இவன் வழி அரசர் முப்பத்து மூவர். (விஷ்ணு புராணம்). |
பலிபூஜனப் பிரதமை | இது பலியின் உருவமெழுதிப் பலியைப் பூசித்துப் பிராமணர்களுக்குத் தக்ஷிணை அன்னாதிகள் அளிப்பது. |
பலியும் பலிதேவதையும் | 1. பலி என்பது தேவர்களை யெண்ணியிடும் தான்ய ஸக்கிரகம். இதில் பகாரம்; பலவர்த்தன்யம்; லிகாரம் தான்யஸங்கிரகம், இவ்விரண்டும் சேர்ந்தது பலி எனப்படும். இந்தப் பலிகளுக்குத் தேவதை இடங்களுக்குத் தக்கபடி உறப்பட்டிருக்கிறது. 2. கிரகஸ்தன் ஓமகார்யத்தை முடித்துக் கொண்டு கிழக்குத் திக்கில் இந்திரனுக்கும், இந்திரபரிஜனங்க ளுக்கும், தெற்கில் யமனுக்கும், யம்பரிஜனங்களுக்கும், வடக்குத் திக்கில் சோமனுக்கும், சோம பரிஜனங்களுக்கும், தேவர்களுக்கு வீட்டின் வாசற்படியிலும், ஜலதேவதைகளுக்கு ஜலத்திலும், வனதேவதைகளுக்கு உரல், உலக்கை இரண்டில் ஒன்றிலும், லஷ்மிக்குத் தன் வீட்டில் வடகிழக்கிலும், அல்லது தன் சயனத்தின் தலைப்பக்கத்திலும், பத்ரகாளிக்குத் தன் வீட்டின் தென் மேற்கிலாவது அல்லது தனது சயனத்தின் காற்பக்கத்திலும், பிரமனுக்கும் வாஸ்து புருஷனுக்கும் வீட்டின் நடுவிலும், விசவேதேவர்களுக்கும் பகலிரவுகளில் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தேவதைகளுக்கும் முற்றத்திலும், சர்வாந்தர்யாமிக்கு மெத்தையின் மேலிடத்திலும் அல்லது தனக்குப் பின்புறத்திலும், பிதுர்க்களுக்கு மிகுந்த எவ்வாவற்றையும் தென் முகமாகக் காலை மடித்துக்கொண்டு பூமியிலும், பலி வைக்கவேண்டியது. பின் தன் வீட்டிற்குச் சமைத்த அன்னத்திற் கொஞ்சம் எடுத்து நாய், பதிதன், சண்டா என், தீராப்பிணியன், காக்கை, கிருமி முதலியோருக்குச் சுத்த பூமியில் பலி வைக்க வேண்டியது. இவ்வாறு நாடோறுஞ் செய்பவன் மேலான பதவி யடைகிறான். |
பலை | 1, இராமமூர்த்தி மிதிலைக்குச் செல்லுஞ் சமயத்தில் விச்வாமித்திரர் உபதேசித்த மந்திரம். 2. (3) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவை திரிடலை யென்பர். |
பலோமன் | தனுப்புத்திரனாகிய தானவன். |
பல் விளக்கக்கூடா விதி | செங்கல்மாவு, மணல், கரி, தென்னம்பாளை, வைக்கோல் இவைகளால் தினமும் பல் துலக்குவோரிடமிதில் இலட்சமி நீங்கி மூதேவி வந்து சேர்வாள். |
பல் விளக்கும் விதி | கருவேலங் குச்சியினால் பற்களுக் குறுதியும் வேப்பங்குச்சியினால் பற்களுக்கு ஒளியும் நீர்ப்பூலாக் குச்சியினால் வீரிய விருத்தியும் ஆலம் விழுதினால் லஷ்மி கடாக்ஷமும் நாயுருவியினால் துலக்கினால் வசிகரமு முண்டாம். |
பல்காயனார் | ஒரு யாப்பிலக்கண நூலாசிரியர். இவர் யாப்பு, காரிகைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறது. |
பல்கு | இஃது ஒரு நதி. |
பல்குநன் | அருச்சுகனுக்கு ஒரு பெயர்; பங்குனி உத்தரத்தில் பிறந்தவனாதலால், |
பல்பொருட் சொற்றொடரணி | அஃதாவது பல பொருள்களைத் தருதற்குரிய சொற்களைப் புணர்த்துக் கூறுதலாம். இதனை வடநூலார் சிலேஷாலங்காரம் என்பர். |
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | இவன் பஃறுளியானும் பிறநாடுகளும் கடல் கொள்வதற்கு முன் ஆண்ட பாண்டியன். முடத்திரு மாறனுக்கு முன் ஆண்டவன். இவனை “எங்கோவாழி” (புறம் 6) நெட்டிமையார் பாடினர். |
பல்யானைச் செல்கெழுகுட்டுவன் | 1. இவன் நெடுஞ்சோலாதனுக்குத் தம்பி, செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தை. இவன் பாலைக்கௌதமனார் வேண்டு கோளின்படி (10) வேள்விகளை நடப்பிக்க முடிவில் பார்ப்பனப் புலவரும் அவர் பத்தினியும் சுவர்க்கம் புகக் கண்டவன். இவன் (25) ஆண்டு செங்கோல் செலுத்தினன். 2. இமயவரம்பன் தம்பி, பாலைக் கௌதமனாரால் பாடல் பெற்றவன். இவனைப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்பர். |
பல்லக்கு | இது பரதகண்ட வாசிகளில் மனிதரால் சுமக்கப்பட்ட வாஹனம். இது மூடுபல்லக்கு, மூடாப்பல்லக்கு எனப் பலவகை. மூடாப்பல்லக்கு ஒரு கோணக்கணை மேலிருக்க பலகை பூட்டிக் கணைகளில் ஆள்கள் சுமந்து செல்வது. மற்றவை பெட்டி போல் உள்ளில் தலைவனிருக்கக் கணைதாங்கிச் செல்வது. இலை பலவிதமாகச் செய்யப்படும் தண்டிகையும் இதன் பாற்படும். |
பல்லவதேயம் | 1. பல்லவன் ஆண்ட நாடு. 2. தனபதி அரசன் நாடு, |
பல்லவன் | இவனும் வில்வலன் என்பவனும் பூர்வம் விஷ்ணு துவார பாலகராகிய ஜயவிஜயர். இவர்கள் அர்சராகப் பிறந்து விஷ்ணு பூசாபலத்தால் அப்பதமடைந்தவர். |
பல்லவராயன் | காஞ்சிபுரத்தை அரசாண்ட அரசன். இவன் காஞ்சியில் கணிகண்ணன் இராதவண்ணம் அகல்வித்துப் பின்பு க்ஷமைவேண்டியவன். |
பல்லவி | இந்திரத் தீயுமனுக்குப் பாட்டன். |
பல்லாங்குழி | இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு (7) ஆக இரண்டு பக்கத்திற்கு (14) குழிகளில் குழிக்கு (5) ஆக (70) காய்களைக்கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்து விடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒருவசை இன்னும் இதிற் பலவகையுண்டு, |
பல்லாடம் | ஒரு தேசம். |
பல்லாதன் | உதக்சேநன் குமரன்; கர்ணனால் பாரதயுத்தத்தில் கொல்லபட்டவன். |
பல்லி | இது ஊரும் இனத்தைச் சேர்ந்தது. தேகம் நீண்டு நான்கு கால்களும் ஒரே அளவாக இருக்கும். வால் நீண்டிருக்கும். மணலில் முட்டையிடும். முட்டைகள் சூரிய வெட்பத்தால் பொரிந்து விடும். இதன் மூத்திரம் தேகத்திற்படின் நெருப்புப் பட்டதுபோல் சிறு கொப்புளங்க ளெழும்பும். இதன் வால் அறுந்தாலும் முளைக்கும். இது சிறுதேள், ஈ, கொசுகு முதலிய தின்னும், |
பல்லி சொல்லுகை, விழுகை | ஞாயிறு; கிழக்குத் திக்கில் கெவுளி சொன்னால் பயம், அக்னிதிக்கில்; தீமை, தெற்கு திக்கில்; சுகம், நைருதி திக்கில்; பந்து தரிசனம், மேற்கு திக்கில்; சண்டை, வாயு திக்கில்; வஸ்திரலாபம், வடக்கில்; தனலாபம், ஈசான்யதிக்கில்; லாபம், ஆகாயத்தில்; ஜயம், பூமியில்; நினைத்த காரியமாகும். திங்கள்; கிழக்கு திக்கில்; தனலாபம், அக்கினிதிக்கில்; கலகம், தெற்குதிக்கில்; பகை, நிருதி திக்கில்; விரோதம், மேற்கு திக்கில்; இசாஜ சபாப் பிரவேசம், வாயுதிக்கில்; அமங்கலம், வடதிக்கில்; வஸ்திர லாபம், ஈசான்யதிக்கில்; கலியாணவார்த தைகள், ஆகாயத்தில்; கேடுசமாச்சாரம், பூமியில்; ஐஸ்வரியப் பிராப்தி. செவ்வாய்; கிழக்கு; சம்பத்து, அக்கினி; பந்துலாபம், தெற்கு; விசனம், நிருதி; சத்துரு, மேற்கு; காரியானுகூலம், வாயு; தூரதேசத்து சமாச்சாரம், வடக்கு; சத்துரு பயம், ஈசான்யதிசை; வாகனாரோகணம், ஆகாயத்தில்; தூரதேசப் பிரயாணம், பூமியில்; விசேஷ தனலாபம். புதன்; கிழக்கு; சந்தோஷம், அக்கினி; திரவிய லாபம், தெற்கு; சரீரசாட்டியம், நிருதி பந்துஹானி, மேற்கு; பயம், வாயு; தனநாசனம், வட; சுகம், ஈசான்யம்; நினைத்தகாரியமாகாது, அம்பரத்தில்; நல்ல சமாச்சாரம், பூமியில்; ஐஸ்வரிய முண்டாகும். வியாழம்; கிழக்கு; அசுபம், அக்கினி பந்துசன்மானம், தெற்கு; தனலாபம், நைருதி சமஸ்தகாரியங்கள் சித்திக்கும், மேற்கு; நஷ்டம் வாயு; நல்லவார்த்தை, வடக்கு; நினைத்த காரியமாகாது, ஈசான்யம்;போஜன, சௌக்கியம் வானத்தில்; கலகம், பூமியில்; கலக முண்டாகும். வெள்ளி; கிழக்கு சுபவார்த்தை, அக்கினி; அலங்காரம், தெற்கு; பந்து தரிசனம், திருதி நல்ல கேள்வி, மேற்கு; சந்தோஷம், வாயு; வீட்டிற் கலகம், வடக்கு; கலக வார்த்தை, ஈசான்யம்; ஆகாயத்தில்; வஸ்துலாபம், பூமியில்; சூதகஸ்நானம். சனி; கிழக்கு; வெகு வார்த்தை. அக்கினி; சந்தன திரவியலாபம், தெற்கு; ராஜ தரிசனம் நிருதி; ரோகம், மேற்கு; நூதன வஸ்திரலாபம், வாயு; நூதன ஸ்திரி சம்போகம், வடதிசை; பிரியசமாச் சாரம், ஈசான்யம் திருடர்பயம், ஆகாயம்; காரிய ஹானி, பூமியில்; சகல காரிய சித்தி, |
பல்லி சொல்லும் பதினாறு காதல் | அருக்கன்மேற் பயநாச மிரண்டிற்சாவு அகன்றவர்பின் மீண்டிடுவார் மூன்றேயாகில், உருக்கமுள்ள சாவதனைக் கேட்கநாலு, ஒரு சண்டையுண்டைந்தா முறவாமாறு, விரிதலையு மழுகுரலு மழையுகோயு மென்மேலும் துக்கமுண்டாகுமேழு தரித்திடு பூச்சந்தனமு மணமுள்கொண்டு, தகுதி யுள்ளோர் கூடிவரலாகு மெட்டே சித்தமிக மகிழ்ச்சியுனடா நாலோடைந்து, தீதாகவேயுரைக்கும் தெரியும்பத்து, அத்தமிசை யாத்திரைகா ணாசோடைந்து, அகமகிழ்ச்சிக் கலியாணமா றோடாறு, பத்திவருங் காணிக்கை பதிமூன்றிற்குப் பறந்து வருமிழவோலை பதினாலுக்கு, மெத்தவரு முறவின் முறையேழு மெட்டும், மென்மேலும் யோகமுண்டாம் பதினாறுக்கே. ” |
பல்லி சொல்லும் ராசி | எழுவாய் மேஷம் படைபூசல், இடவங்கடகக் குடிபோக்கும், நழுவாய் மிதுன மல்வசனம், நண்டு விழுந்து களிப்பாகும், கழிவேயாகுந் தனஞ்சிங்கம், கன்னிபழங்காய் வெற்றிலையாம், தொழுதே தாதன்றுலமாகும், தூங்குதேள் பொன் பெண் வருத்தே வில்லில் விருந்து மிகவுண்டு, வேண்டுமகாம் விண்ணமுதாம், நல்ல கும்பநோயுண்டாம், நாட்டு மீனங்களியாகும், அல்லிற் சிறந்த குழன் மடவா, யறியச்சொன்னோ மன்னிசையாஞ், சொல்லும் பல்லி கொடிகான், தும்மலென்றே யறிந்திடவே. |
பல்லிவிழும்பலன் | தலையில் கலகம், முகம் பந்து தரிசனம், புருவம் இராஜானுச்கிரகம், மேலுதடு தனவிரயம், கீழுதடு தனலாபம், மூக்கு வியாதி சம்பவம், வலது செவி தீர்க்காயுசு, இடது செவி வியாபார லாபம், நேத்திரங்கள்: காராக்கிரகப் பிரவேசம் முகவாய்க்கட்டை; இராஜ தண் டனை, வாயில் பயம், கண்டம் சத்துருநாசனம், வலது புஜம், ஆரோக்கியம், இடது புஜம் ஸ்திரிசம்போகம், வலது மணிக்கட்டு பீடை, இடது மணிக்கட்டு கீர்த்தி, ஆண்குறி தரித்திரம், மார்பு தனலாபம், வயிறு தானியலாபம், நாபி இரத்தினலாபம், உபயபாரிசம் வெகுலாபம், தொடைகள் பிதாஅரிட்டம், முழங்கால்கள் சுபம், கணைக்கால் சுபம், பாதம் பிரயாணம், ஸ்தனங்களில் பாவசம்பவம், புட்டம் சுபம், நகங்கள் தனநாசம், கூந்தல் மிருத்து பயம். |
பல்வலன் | இல்வலன் என்னும் அரக்கன் குமரன். இவன் இருடிகளை வருத்திக் கொண்டிருந்ததைக் கண்ட பலராமர் அலாயுதத்தால் இழுத்துக் கதாயுதத்தாற் கொல்ல இறந்தவன். |
பளிக்கறைமண்டபம் | இது காவிரிப்பூம் பட்டினத்தைச் சார்ந்த உவவனத் திலுள்ளதோர் மண்டபம், இதில் மணிமேகலை தன்னை உதயகுமரன் கவர வந்தபொழுது முதலில் இம்மண்டபத்திலேதான் ஒளித்துக்கொண்டாள் இதிற் புத்தபாத பீடிகையொன்றுண்டு. (மணிமேகலை). |
பள்ளத்தாக்கு | இரண்டு மலைகளுக்கு இடையில் பள்ளமாய் தோன்றும் பாகம் பள்ளத்தாக்கு. (பூகோளம்). |
பள்ளர் | திரிசிராப்பள்ளி, திருநெல்வேலி முதலிய இடங்களில் பயிரிடுந் தொழில் மேற்கொண்ட சாதி. இவர்கள் முதலில் பள்ளமான குழிகளில் வாழ்ந்து வந்தனர் என்றும் அல்லது பள்ளமான கழனிகளைப் பயிரிடுவதில் வல்லவரென்பதனால் இப்பெயர் பெற்றனர் என்பர். இவர்கள் பறையரினும் சற்று உயர்ந்தவர்கள். இவர்களிற் சிலர் மார்மீது சீலை இட்டு மறையார். இவர்களிருக்கும் இடம் பள்ளச்சேரி, இவர்கள் பிராமண பெண்ணிற்கும் சூத்திரனுக்கும் பிறந்தவர்கள். (தர்ஸ்டன்). |
பள்ளிகள் அல்லது வன்னியர் | இவர்கள் தாங்கள் அக்னிகுல க்ஷத்ரியர் என்பர். இவர்கள் ஒரு ஈஜிப்ட் தேசத்து இடையரின் தலைவராகவும் இருந் தனராம். திருவாங்கூர் அரசராயிருந்த குலசேகராழ்வார் தங்கள் குலத்தவ ரென்று அவருக்கு விஷ்ணுத் தலங்களில் பூசையாதி சிறப்புக்கள் செய்து வருகின்றனர். இவர்களிற் சிலர் குலசேகரப் பெருமாள் சபையென்று ஒன்று வைத்துக்கொண்டும் இருக்கின்றனர். இவர்கள் காஞ்சிபுரத்தில் பல்லவரால் கட்டப்பட்ட கோபுரத்தைப் பள்ளி கோபுரமென சுவதந்தரம் பாராட்டித் தமதென்று பழுது முதலிய பார்த்து வருகின்றனர். இவர்கள் பல்லவ அரசனும் சிதம்பர ஸ்தலத்தைக் கோயிலாக்கியவனுமான இரண்யவர்மன் தங்கள் குலத்தவன் என்பர். அர்ச்தோமை காலத்தில் மைலையை யாண்ட கந்தப்ப ராஜா தங்கள் அரசன் என்பர். அக்னி, வன்னி ஒரு பொருட் சொற்களாதலால் இவர்கள் அக்னிகுலத்தவர் அல்லது வன்னியர் எனப்படுவர். தென்னிந்தியா வில் யாவரும் ரசபுத்திரர் என்று இவர்களைத் தவிரக் கூறுவாரில்லை. வடபி, மாஹி என்றிரண்டரசர்கள் வாயுவையும், சூரியனையும் பக்ஷிக்க உலகம் இருண்டது. தேவர்கள் வேண்டப் பிரமன் ஜம்புமகருஷியை யாகஞ் செய்யக் கூறினன். ருஷி யாகஞ்செய்ய அதில் ஒரு புருஷன் அச்வாரூடனாய்த் தோன்றிப் பன்னிரண்டு முறை அசுரர்களுடன் யுத்தஞ் செய்து வாயுவையும் சூரியனையும் அவர்கள் தேகத்தினின்று விடுவித்தனன். அவன் ருத்ரவன்னியன் எனப்பட்டு அரசாண்டனன். அவனுக்கு ஐந்து குமாரர், இவர் களே வன்னியகுல முதல்வர்கள் என்பர். இந்தச் செய்தி சீர்காழி வைதீசுவரர் ஆலயத்திற் கூறியுள்ளது. (இது வடாபி செய்தி. அதாவது பல்லவ சாளுக்யர் யுத்தம்) இவர்கள் பிராமணரினும் தங்களை உயர்ந்தவர் என்பர். பிராமணர் உபநயனத்தில் பூணூல் தரிப்பர். இவர்களுக்குப் பூணூல் பிறப்பிலேயே உண்டென்பர். செங்கல் பட்டு ஜில்லா திருவிடைச்சுரம், மணிமங்கலம் முதலிய இடங்களில் வந்தியராயனால் நன்கொடை அளிக்கப்பட்டது. இந்தத் திருவிடைச்சுரம் (AD. 1509~30) விஜய நகரத்தரசனாகிய கிருஷ்ண தேவராஜன் காலத்தில், வன்னிய அரசராகிய கந்தவராயன், செந்தவராயனால் ஆளப்பட்டது. இவர்கள் சம்புமகருக்ஷி கோத்ரத்தவராதலால் இவர்கள் அரசருக்கு, சம்புகுலபெருமாள், சம்புவராயன், அழகிய பல்லவன், எதிரிலி சோழ சம்புவராயன் எனப் பட்டங்களுண்டு காஞ்சிபுரத்தில் வந்தியர் சாதித் தலைவன் மஹாநாட்டான் எனப்படுவன். இவன் வீரசம்புகுலத்தவன் என்பர். இவர்கள் வீரர் எனப்படுதலால் இவர்களுக்குப் படையாச்சி பட்டமும் உண்டு. இவர்கள் பல்லவர் அரசாக்ஷிக்குப்பின் வேளாளர்க்குப் பயிரிடுங் குடிகளா யிருந்தனர். இவர்கள் திரௌபதி அக்னியிற்பிறந்தவ ளாதலால் அவளை வணங்கி நெருப்புத் திருவிழா செய்வர். தற்காலம் தாங்கள் உயர்ந்தார் என பிராமணரைப்போல் வெண்ணூல் பூண்டு க்ஷத்ரியர் என்றும் பிராமணர் என்றும் கூறுவர். சிலர் கட்டுப்பாட்டிற்குள் ளடங்கி மீன் பிடித்தல், பட கோட்டல், நடுவீட்டுத் தாலிகட்டல், மாமிசம் புசித்தல் முதலிய விட்டிருக் கின்றனர். இவர்கள் அக்னி குதிரை யேறிய ராயரௌத்தமிண்டநாயனார் எனவும், சாமிதுரை சூழப்ப சோழகனார் அஞ்தசாசிங்கம் எனவும், குப்தர் எனவும் பட்டங் கூறுவர். இவர்கள் குமளத்தில் ஸ்ரீநிவாஸன்கோவில் கட்டித் தாங்களே பட்டர்கள் போல் அர்ச்சகராயிருப்பர். இந்தக் குமுளப்பள்ளிகள் தாங்கள் பள்ளிகளுக்கு குருக்கள் என்பர், இவர்களின் பட்டங்கள் நாய்க்கர், வர்மா, படையாச்சி, கண்டன், சேரன், சோழன், பாண்டியன், நயினார், உடையார், சம்புராயர், பிள்ளை, ரெட்டி, கௌண்டன், காவாண்டான், செம்பியன், சோழகனார். இவர்கள் சூர்ய, சந்திரவம்சத்தவ யன்றியும், அக்னிகுலம், ருத்ர வன்னியன், கிருஷ்ண வந்நியன், சம்புவந்நியன், பிரம்மவந்நியன், இந்திரவந்தியன் எனவும் கூறுவர். பின்னும் அக்னி, அரசு, க்ஷத்ரியன், நாகவடம், நாட்டாமன், ஒலைவந்தியன், பாண்டமுட்டு, பெருமாள் கோத்ரம், பள்ளிகள் சைவர், வைஷ்ணவர். இவர்களிற்சிலர் பேய் பிசாச வணக்கமுடையர். மைசூரில் வநபள்ளிகள் என சிலருண்டு. இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மற்ற சாதியருடன் சேராமல் தனித்திருப்பர். இவர்க ளிருக்கும் தெரு பள்ளித்தெரு எனப்படும். இவர்களிற் சிலர் தேன் பள்ளிகள் என்பர். இவர்கள் பாண்டவர்கள் வந்திமரத்தில் தங்கள் ஆயுதங்களை வைத்தனர் வந்திசம்பத்தினால் என்பர். |
பள்ளிகொண்டான் | இவர் ஒரு பரதவர் குலத்தைச் சேர்ந்த பிரபு. இவர் பலவித்வான்களுக்குப் பொருள் உதவிக் கவி கொண்டவர்; இவர்மீது நையாண்டிப் புலவன் வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலுமலை, வெள்ளி கொண்டான் விடையேறிக்கொண்டான் விண்ணவர்க்கமுதம், துள்ளிகொண்டான் புள்ளிலேறிக் கொண்டான் சுபசோபனஞ் சேர், பள்ளிகொண்டான் புகழேறிக் கொண்டானென்று பார்க்கவென்றே. ” எனப் பாடிப் பரிசுபெற்றவன், |
பள்ளிதாசிரி | தமிழ்நாட்டுத் தமிழ் பேசும் தாசிரி ஜாதியர். |
பள்ளிமிசைத் தொடர்தல் | மிகவும் பெரிய கங்குவிடத்துப் பெரியவரை நாடனை உறக்கத்தை யொழிந்து சயனத்திலே பற்றி யது. (பு. வெ. பெருந்திணை). |
பழனி ஜமீன்தார் | இவர் ஒரு புலியைச் சுட்டுக் களிப்புடன் வந்த சமயத்தில் ஒரு கவிஞர் கூக்குரலிட்டு பின் வருங்கவி கூறக் கேட்டு, அக் கவிப்புலிக்கு இரண்டுபை ரூபா கொடுவென்று கட்டளையிடப்பெற்ற போது கூறியது. “பையாடரவப் பணி யேந்து சொக்கர் பதியைவிட்டு, வையாபுரிக்கு வரும்போதிலென்னை வழிமறித்து, மெய்யாத் தொடர்ந்து கவிப்புலி தானும் வெருட்டுகின்றது, ஐயா விசயகிரித் துரை யேயுன் னடைக்கலமே. “ |
பழனியப்பன் சேர்வைக்காரர் | இவர் நொச்சியூரிலிருந்த கவிவாணர். இவர் சற்றேறக்குறைய (300) வருஷங்களுக்கு முன்னிருந்தவர். திருவுசாத்தான புராணம் இயற்றியவர். |
பழமதுரை | இது கடல் கொள்ள வந்த மதுரை. இது இப்போதுள்ள மதுரைப் பதிக்குக் கிழக்கே இருந்ததாகத் தெரிகின்றது; “தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்தகொடி” மீனாட்சி, சப்பாணி. 15. பழமதுரை மேடென்ற ஓரிடமும், பழமதுரை முனியென்ற ஒரு முனியின் கோயிலும் அங்கேயுண்டு. (திருவிளை.) |
பழமொழி | சைநமுனிவராகிய மூன்றுறை யரையனாரால் செய்யப்பட்ட நீதி நூல். சங்க மருவியபதினெண் கீழ்க்கணக்கினுள் ஒன்று ஒவ்வொரு பழமொழியை இறுதியில் பெற்ற நானூறு வெண்பாக்களையுடையது. |
பழவகை | ரஸ்தாளிப்பழம், மொந்தன்பழம், செவ்வாழை, வெள்வாழை, அடுக்குவாழைப்பழம், மலைவாழை பச்சைவாழைப் பழம், கருவாழைப்பழம், நவரைவாழை பலவகை பலாப்பழங்கள், பலசாதி மாம்பழங்கள், விளாம்பழம், இலந்தைப்பழம், அத்திப்பழம், நாவற்பழம், வெள்ளை நாவற்பழம், சம்பு நாவற்பழம், குழிநாவற்பழம், கொட்டை முந்திரிகைப்பழம், தமரத்தம் பழம், கொய்யாப்பழம், எலுமிச்சம்பழம், பலவகை நாரத்தம்பழம், சீத்தாப்பழம், கொம்மட்டி மாதுளம்பழம், பேரீச்சம்பழம். பலவகைக் கிச்சிலிப்பழம், பூதகிச்சிலிப் பழம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்போசிப்பழம், காரை, சூரை, பாலை, புளி, களா, மாதுளம்பழம், பனம்பழம், |
பழிச்சினர்பணிதல் | விளங்கிய கீர்த்தியையுடைய, இறைவனைப் பெறும் பேற்றை நினைந்து வாழ்த்தினராய் வணங்கியது. (பு. வெ. பாடாண்.) |
பழையனூர் நீலி | நீலியைக் காண்க |
பழையன் | 1. பாண்டிநாட்டில் மோகூரில் உள்ள குறுநிலமன்னன். இவன் காவல் மரமாக வேம்பினை வளர்த்தனன். (புற நா.) 2. இவன் பாண்டியன் படைத்தலைவன், மோகூராண்டவன். இவன் அறுகை என்னும் மோரிய அரசனுக்குப் பகைவனாதலால் அவ்வறுகைக்கு நண்பனாகிய செங்குட்டு வனிவனுடன் போரிட்டு வென்றான், |
பழையர் | இவர் மலைநாடுகளில் தேனெடுத்துவரும் ஒரு பழங்குடியினர். “பழையர் தம் மனையன பழநறை” என்பது இராமாவதாரம். இக்குடித் தலைவர் முன்னாளிற் சிறந்த வீரராய் விளங்கினர். சங்க காலத்தே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியற்கு முக்கிய படைத் தலைவகை விளங்கிய “பழையன் மாறன்” என்பான் இக்குடியைச் சேர்ந்தவனென்றே கருதப்படுகிறான். |
பவகாரணி | அழகர் மலையிலுள்ள ஓர் பொய்கை. (சிலப்பதிகாரம்.) |
பவகிரி | ஓர் வித்யாதர நகரம். (சூளா.) |
பவச்சுதன் | சடியின் மந்திரிகளில் ஒருவன். (சூளா.) |
பவணத்தாசன் | இவன் பூகியின் வலப்பக்கத்துப் பற்களுள் ஒன்று முறிந்துவிடும்படி வேலை யெறிந்தவன். (பெ~கதை.) |
பவணந்திமுனிவர் | 1. இவர் சைந மதத்தவர். இவர் சநகாபுரம் எனும் ஊரினர். இவரது ஆசிரியர் சநகாபுரம் சன்மதிமுனிவர். இவனைத் தொண்டைமண்டல சதகம் “தன்னூர்ச் சநகையின் சன்மதிமாமுனி தந்த மைந்தன், நன்னூலுரைத்த பவணந்திமா முனி நற்பதியும், சின்னூலுரைத்த குண வீரபண்டிதன் சேர்பதியும், மன்னூபுரத் திருவன்ன மின்னே தொண்டைமண்டலமே” என்பதாலறிக. இவர் செய்த நூல் நன்னூல் எனும் இலக்கணம் இந்நூல் தமிழ் நாட்டாரால் கொண்டாடப்படும் சிறந்த அழகமைந்த இலக்கணக் களஞ்கியம். இதனை “முன்னோ ரொழியப் பின் னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரு மிணையோ வென்னும் துணிவே மன்னுக” எனும் இலக்கணக்கொத்திரை யானும் “பலகலைக் குரிசில் பவணந்தி யெனும் புலவர் பெருமான் ” எனும் (நன். விரு. சூ. 136) லும் அறிக. இந்நூலைச் செய்வித்தவன் சீயகங்கன். இவன் கொங்கு மண்டலத்திலுள்ள குறும்பு நாட்டில் சநாகாபுர மாண்டவன். இதனை “கங்கக்குரி சிலுவக்க நன்னூலைக் கனிந்து புகல், துங்கப்புலமைப் பவணந்திமாமுனி தோன்றி வளர், கொங்கிற் குறும்புதனிலாதி நாதகுரு விளங்கும், மங்குற்பொழிற் சதகாபுரமுங் கொங்குமண்டலமே” என்பதாலறிக, இவர் காலம் கி. பி 1178 முதல் 1216 வரையில். இது மூன்றாங் குலோத்துங்கன் காலம். இவர் பிங்கலமுதலா நல்லோருரிச் சொலி னயந்தனர் கொளரே” எனக்கூறு தலால் இவர் செய்த நூல் பிங்கலங்கண்டிற்குப் பிற்பட்டதாம். இராமநாதபுரத்திற்கும் மதுரைக்கும் இடையில் அரசுசெய்து கொண்டிருந்த சீயகங்கன் தமிழ் இலக்கண மைந்தினையும் எளிதில் உணர ஒரு நூல் செய்ய வேண்டுமென வேண்ட நன்னூல் என்னும் ஒரு நூல் செய்தனர். இது ஐவகை இலக்கணம் நிரம்பியது. இதில் தற்காலம் எழுத்துஞ் சொல்லுமே இருக்கிறது. இந்நூற்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர் இவர் மாணாக்கராகிய சமணமுனிவர். இந்நூற்கு மயிலைமான், ஆண்டிப் புலவர், சங்கரநமச்சிவாயர், சிவஞான சுவாமிகள் முதலியோர் உரை இயற்றினர். (நன்னூல்.) |
பவணமாதேவன் | யசோதான் பிதா. |
பவணம் | இது நாகலோகம், போகத்திலும் சிறந்தது, பிறர் அணுகுதற்கரியது. (பெ. கதை) |
பவநஞ்சயன் | கின்னரதேச ராசகுமாரன். |
பவநர் | மன்யுவிற்குச் சத்தியையிடத்து உதித்த குமரர். தேவி தோஷை. குமரன் துவஷ்டா. |
பவநவேகன் | பவபுரத்தாசன். |
பவனஞ்சன் | கின்னாகீதராச குமாரன். (சூளாமணி.) |
பவனவேகன் | பவபுரத்தரசன், (சூளா.) |
பவன் | 1. ஒரு பிரசாபதி, சோமதேவனுக்கு அசுாரைச் செயிக்க இரத முதலிய கொடுத்தவன். தக்ஷயாகத்தில் நந்தியால் சிக்ஷிக்கப்பட்டவன். 2. கொத சருத்திரருள் ஒருவன். தேவி அம்பிகை, இவன் பூதனென்பவனுக்குச் சுரபி யென்பவளிடம் உதித்தவன். 3. அருச்சுநனுக்குப் பிராமண ஒழுக்கக் கூறிய பிராமணன். 4. பூமியை அதிஷ்டித்து ஆத்மாக்களைக் காக்கும் சிவமூர்த்தி. |
பவபுரம் | ஒரு வித்யாதரநகரம். (சூளா.) |
பவபூதி | போஜன் சமஸ்தானத்திருந்த ஒரு வடநூற்புலவன். |
பவமானன் | 1. அக்னிக்குச் சுவாகாவிடத்து உதித்த குமரன். 2. இவன் ஒரு அரசன், இவன் சிச்சிக பக்ஷியிடம் தரும சம்வாதஞ் செய்து தருமமுணர்ந்து கங்கா தீர்த்தமாடிச் சுத்த மடைந்தவன். (பிரம புராணம்.) |
பவம் | சிவகணங்கள் வசிக்கும் உலகம். |
பவரத்தனன் | சிவகணத்தவரில் ஒருவன். |
பவர்பர்ட் | (Bower Bird) இது ஆஸ்திரேலியா கண்டவாசி. இது நம் நாட்டு மணிப்புறாவை ஒத்து இருக்கிறதாம். இது மரக்கிளைகளிலும், தரையிலும் புற்களைக்கொண்டு அலங்காரமான கட்டு கட்டித் திரைக்கூடுகளில் உல்லாசமாக விளையாடுகிறதாம். இதுபோல் இங்கிலாந்தில் ஒருவகைப் பறவை அழகிய கூடு மாங்களில் கட்டி அவற்றிற்கு அலங்காரமான பொருள்களைப் பட்டணங்களிலிருந்து சேகரித்து அமைக்கின்றன என்பர். |
பவளக்கொடிப் பூச்சி | இது, கடலில் பாறைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இது கடலிலிருந்து உறிஞ்சும் சுண்ணாம்பின் உதவியால் இறுகிப்போகிறது, |
பவளப்பாடிப் புலவர் | இவர் வீரசைவர். சாநந்தகணேச புராணம் பாடியவர். |
பவளம் | இது, கடலில் பாறைகளைத் தமக்கு இடமாக்கொண்ட பூச்சிகளின் உடற் கவசம். இது உஷ்ணமான பிரதேசங்களில் கடலில் அதிகமாக உண்டு. இது, சுண்ணாம்பின் சத்தைக் கொண்டது. இப்பூச்சிகள் பவழத்தைக் கவசமாக் கொண்டு தலையில் பல மலர்போல் உறுப்புக்களைப் பெற்றிருக்கிறது. தனக்கு அபாயம் நேரும்போது, கைகளை யுள்ளிழுத்துக் கொள்கின்றன. இவை பலவகையாய்ப் புற்றுகளாகவும், பூண்டுகள் போலவும் ஊர்ந்துமிருந்தும் வளர்கின்றன. |
பவளம் கட்டி | இவர்கள் கோங்கு வேளாலரில் ஒருவகையார். பவள மாலை தரித்திருப்பவர். (தர்ஸ்டன்.) |
பவாதிகரணம் | கரணமாவன: பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை, வணிசை, விட்டி இவையேழும் சரகரணம், சகுணம், சதுஷ்பாதம், நாகவம், நிமஸ்துக்கினம் என்ற நான்கும் ஸ்திரகரணம், இவை வருமாறு, பூர்வபக்ஷத் துப் பிரதமை பிற்கூருதி அமரபக்ஷத்துச் சதுர்த்தசி முற்கரக்தம் (26) கரணமும் ஒரு திதிக்கு (2) கரணமாக வரும். அவை வருமாறு, பூருவபடித்துப் பிரதமை பிற் கூறுபவம், துதியை முற்கூறு பாலவம், பிற்கூறு கௌலவம், திரிதியை முற்கூறு தைதுலம், பிற்கூறு காசை, சதுர்த்தி முற் கூறுவணிசை, பிற்கூறு விட்டி, பஞ்சமி முற்கூறு முதல் அஷ்டயி முற்கூறளவும், அஷ்டமி பிற்கூறு முதல் ஏகாதசி பிற்கூறளவும், துவாதசி முற்கூறு முதல் பௌரணை முற் கூறளவும், பௌரணையிற் கூறுமுதல், அமரபக்ஷத் திரிதியை பிற்கூளவும், சதுர்த்தசி முற்கூறு முதல் சத்தமி முற்கூறளவும், சத்தமி பிற்கூறு முதல் தசமி பிற்கூறளவும், ஏகாதசி முற்று முதல் சதுர்த்தசி முற்கூறளவும் இவ்வகை சர சரணங்கள் எழும் வரும். சதுர்த்தசி பிற்கூறு முதலாகத் திரகரணங்கள் நான்கும் வரும். அவை வருமாறு சதுர்த்தசி பிற்கூறு சகுனம், அமாவாசை முற்கூறு சதுஷ்பாதம், பிற்கூறு நாகவம், பிரதமை முற்கூறு கிமஸ்துக்கினம் இவை நான்கும் சாகரணத்தில் ஏழாவதான விட்டியும் தவிரப்படும். பவம், பாலவம், கௌலவம், தைதுலம், வணிசை என்ற ஐந்து கரணங்களில் சுபகாரியங்கள் செய்யலாம். சுரசை மத்திமம், திரகரணங்கள் நான்கும் விட்டியிற் தோஷாங் கமான சாமங்களும் தவிரப்படும். விட்டியின் முடிவில் (3) நாழிகை நன்று. (விதான மாலை) |
பவாநி | 1. இமயபர்வத ராஜகுமரி. 2. கங்கையின் பிரிவுகளில் ஒன்று. 3. கலாவதியைக் காண்க |
பவானிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
பவித்திரம் | 1. இது தருப்பையால் வலயமாக முடிந்து சுத்தத்தினிமித்தம் கரத்தில் தரிக்கப்படுவது. பவித்திரத்தின் வலயம் இரண்டு அங்குலமும், பிரமமுடி ஒரு அங்குலம் பிரமாணமுமாக அனைத்தும் கலந்து நான்கு அங்குலம் இருக்கவேண்டும், சுருதி ஸ்மிருதி சம்பந்தமான காரியங்களைப் பவித்திரம் இன்றி ஒருக்காலும் செய்யக் கூடாது. அப்படிச் செய்யின் செய்யும் காரியம் அனைத்தும் வியர்த்தமாம். இது மனோவாக்குக் காயங்களினால் செய்யப் படுகிற பாவத்தினால் விழுகின்ற நரகத்திலிருந்து காக்கப்படுகிறதால் பவித்ரம் என்று பெயர். 2. பதுமுகன் தாய், 3. பிளவாத முனைகளை யுடையதும், உலராத முனைகளுடையதும், பசுமையான நிறமுள்ளதுமான தர்ப்பையால் பவித்ரம் செய்யவேண்டும். கோவின் வால் ரோமத்தால் செய்தபவித்ரம் விசேஷம். (விடுத ஸ்மிருதி.) |
பவித்திரர் | பதினான்காம் மந்வந்தாத்துத் தேவர். |
பவித்திரை | விசாரசருமர் தாய். எச்சதத்தன் தேவி. |
பவிரகராசன் | புரிசைக் கிரியென்னும் பட்டணத்து அரசன். பாவஞ்செய்து நரியாய்ப் பிறந்தும் மாம்சபக்ஷணம் நீக்கி நன்மையடைந்தவன். |
பவிஷ்யத்புராணம் | இது பதினெண்புராணங்களுள் ஒன்று. இது உலக உற்பத்தி சிருட்டிபேதம் முதலியவற்றை உரைப்பது. (3000 கிரந்தமுடையது.) |
பவீய சூடாமணி பாண்டியன் | முழுது கண்டராமனைக் காண்க. |
பவுராரி | வசுதேவருடைய பாரி. |
பவுஷ்பஞ்சி | சகவர்மா மாணாக்கர். |
பவோற்ப்வன் | 1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று, 2. ஏகாதசருத்ரரில் ஒருவன், |
பவ்யன் | 1. ஓர் முனிவன், பாரி மமதை. 2. பிரியவிரதன் குமரன்; சாகத்தீவை யாண்டவன். |
பஷ்யன் | இரண்யநாபன் குமரன். |
பஸ்மம் | விபூதி இஃது ஆதியில் சிவனிடத்தில் பக்தியுள்ளவர்க்குக் காப்பின் பொருட்டுச் சிவபிரானால் கொடுக்கப்பட்டது. (பார். அநு 147 சுத்). |
பஸ்மாசுரன் | சுகன் என்னும் அரசன் கும்ரன். (இவனை விருகாசுரன் எனவுங் கூறுவர்.) இவன் சிவமூர்த்தியை யெண்ணித் தவம்புரியச் சிவமூர்த்தி இவனுக்குத் தரிசனந் தந்து யாது வேண்டு மென்றனர். அசுரன், நான் எவர் சிரத்தில் கைவைக்கினும் அவர்கள் இறக்கவென வரங்கேட்டு அவ்வகை அம்மூர்த்தி அருள் புரியப் பெற்றனன், இதன் உண்மையறிய அசுரன் சிவமூர்த்தியின் சிரத்தில் கை வைக்கத் தொடங்குகையில் சிவமூர்த்தி நாடகமாய் மறைந்தருளினர். உடனே விஷ்ணுமூர்த்தி இவ்வசுரன் காணும்படி பெண்ணுருக்கொண்டு வந்தனர், அசுரன் இப்பெண்ணைக்கண்டு விரும்பிப் பின் செல்லப் பெண் நீ ஸ்நானஞ்செய்து வருகவென அவ்வகை அவன் ஸ்நானஞ் செய்கையில் அறியாது தன் கரத்தைத் தானே தலையில் வைத்துக் கொண்டு இறந்தனன். இவர் செய்கையைக் கண்ட சிவமூர்த்தி விஷ்ணுவின் கோலத்தைக்கண்டு புணர்ந்து அரிஅரப்புத்திரனைப் பெற்றனர் என்பர் சைவர். பின்னும் சிலர் விஷ்ணு பிரமசாரி யுருக்கொண்டு அவனெதிரில் தோன்றி அவன் தலையை அவனே தொடும்படி தந்திரஞ்செய்து இறக்கக் செய்தனர் எனவுங் கூறுவர். |
பஹிஷ்டை | முன்னொருமுறை தேவேந்திரன் விருத்திராசரனைக் கொன்ற பழி, இவனைப் பிரமகத்தியாய்ப் பிடித்தது. ஆதலால் இந்திரன் தன் குறையைப் பிரம தேவரிடத்துக் கூறி இரக்க, அந்தத் திசை முகன் பிரம்மகத்தி தோஷத்தை நான்கு பாகமாய்ப் பகுத்து ஸ்திரீகளிடம் ஒரு பாகத்தைத் தந்து, ரஜஸ்வலையாகும் போது அத்தோஷம் அணுகுமாறு நியமித்தனன். ஆகையால் பகிஷ்டையான ஸ்திரீயை நான்கு நாளும் புருஷன் பார்க்கலாகாது. இந்தப் பஹிஷ்டையான ஸ்திரீ பஹிஷ்டையான முதனாள் சண்டாள ஸ்திரீயையும், இரண்டாம் நாள் பிரம்மஹத்தி செய்தவளையும், மூன்றாநாள் வண்ணாத்தியையும், நான்காநாள் புனலாடியபின் சுத்தம் உடையாளையும் ஒப்பள், மற்றை மூன்று பாகம் ஜலத்தில் நுரை, மண்ணில் உவர், மரத்திடைப் பிசின் ஆயின. |
பா | 1. (4) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, இவற்றுடன் மருட்பாக் கூட்ட ஐந்தாம். முறையே இவற்றிற்குச் சாதி, நிலம், நிறமாமாறு. வெண்பா மறையோர், முல்லை, வெண்மையும், ஆசிரியப்பா; வரசர், குறிஞ்சி, செம்மை, கலிப்பா; வணிகர், மருதம், பொன்மை வஞ்சிப்பா; சூத்திரன், நெய்தல், கருமை, நாள் இராசியாவன, கார்த்திகை முதல் ஆயிலிய மீமுக வேழுநாள்களும், கர்க்கடகம், விருச்சிகம், மீனமென்னும் மூன்று இராசியும் வெண்பாவிற்காம். மகமுதல் விசாக மீனாகிய ஏழுகாள்களும், மேஷம், சிங்கம், ததுசு எனும் மூன்று ராசிகளும் ஆசிரியப்பாவிற்காம். அனுஷமுதல் அவிட்டமீறாகிய ஏழுநாளும் மிதுனந்துலாம் கும்பமென்னும் மூன்றும் கலிப்பாவிற்காம். சதய முதல் பரணியீறாகிய ஆறு நாளும், இடபம், கன்னி, மகரம் என்னும் மூன்று ராசியும் வஞ்சிப்பாவிற்காம், முறையே அதிதேவதை, புஷ்பம், சந்தனம், ஆடை, ஆபரணமாமாறு வெ; சந்திரன், வியாழம், ஆ; சூரியன், செவ்வாய், க; புதன், சநி வ; இராகு, கேது, புஷ்பமுதலிய மேற்கூறிய நிறப்பகுதியாற் கொள்க. 2, பாட்டு, இது இரண்டு முதலிய அடி களால் ஆக்கப்பட்டு வெண்பா முதலிய பெயர்பெற்று வருவது. அப்பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா நூற்பா, என ஆறு வகைப்படும். (யாப்பிலக்கணம்). |
பாக பத்திரம் | உடன் பிறந்தார் முதலியோர் மனவொற்றுமையுடன் குடும்பப் பொருளைக் கூறிட்டுக்கொள்ளும் பத்திரம். |
பாகஎக்ஞம் | இது அஷ்டகம், ஆக்ரஹாயணம், ஈசானபலி, சர்ப்பபவி, சிரார்த்தம், ஸ்தாலிபாகம், பார்வணம், மாசிகம் முதலிய சேர்ந்த வைதிக எஞ்ஞம். |
பாகஎக்யன் | சசிவர்ணனைக் காண்க, |
பாகசாசநன் | பாகன் என்னும் அசுரனைக் கொன்ற இந்திரன். |
பாகன் | விருத்திராசுரன் தம்பியாகிய அசுரன். இந்திரனாற் கொல்லப் பட்டவன், |
பாகராட்டிரன் | பாரதவீரருள் ஒருவன். |
பாகர் | யானை ஓட்டுவோர். இரதம் ஒட்டுவோன் சாரதி. |
பாகலீகம் | கேகயத்திற்கு வடகிழக்கிலும் பியாஸ், சட்விஜ் என்னும் இருந்தி களுக்கிடையே உள்ள ஒரு நாடு. |
பாகவதபுராணம் | இது பதினெண்ணாயிரங்கிரந்த முள்ளது. இது பரிச்சித்தின் சாபம், சுகர் உபதேசம், கிருஷ்ணன் சரிதை, மன்வந்தரம், சூர்யவம்சசரிதம், பூரு, யயாதி, பிரியவிரதன் மரபு, புவிதாமம் முதிலியவற்றை உரைக்கும். இப் பெயரால் மற்றொரு புராணம் வழங்கும். அதனைத் தேவிபாகவதம் என்பர். இதனைத் தமிழில் அருதாரியப்ப முதலியார் (4970) செய்யுளாக மொழிபெயர்த்தனர். |
பாகவரதன் | புனிந்தன் குமரன், இவன் குமரன் தேவவூதி. |
பாகஸ்வரி | தலாரண தேசத்து அதிபதி. ருதுபானி. (பா. சபாபர்வம்). |
பாகாசித்தன் | சத்தம நித்யம்பிரயத்தினத்திற்குப் பின்புண்டாகையினால், இந்த எதுவில், யாலவாதி சத்தங்களுக்கு ஈச்வரப் ரயத்னம் பூர்வத்வ முண்டாயிருக் கையினும், மானுஷப்ரயத்தினத்தினலே உண்டாயிருக்கிற தீவிரத்வம், மந்தத்துவ முதலாயிருக்கிற தந்ததர லோஷ்டகங்களின் வியாபாரத்தினாலே ஜந்யத்வ மில்லாதபடி யாலென்க. (சிவ சித்). |
பாகீரதி | 1, கங்கைக்கு ஒரு பெயர். சூர்யவம்சத்துப் பகீரதன் தவத்தால் பூமிக்குவந்த படியால் இப்பெயர் அடைந்தனள். இவள் பிரமன் சபைக்கு வந்தபோது வாயுவும் உடன் வந்த வேகத்தால் ஆடைசற்று விலக அதை வருணன் ஆவலுடன் கண்டதால் பிரமனிடம் சாபமடைந்து வருணனாகப் பூமியில் உதித்த சந்தனுவை மணந்து வசுக்களைப் புத்திரனாகப் பெற்றுத் தன்பதம் அடைந்தனள். 2. தேவராட்டி வேடம் பூண்ட ஒருத்தி தன் மக்கள் உதயணன்பாற் கற்று கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்குவதாகத் தெரிந்த பிரச்சோதனன் அவன் அழைத்துப் பாராட்டி மறுநாட் சேனைகளுடன் கௌசாம்பிக்கு அனுப்ப எண்ணியது தெரிந்து அதனால் தன்னுடைய சூளுறவு தவறி விடுமே யென்றெண்ணிய யூகியின் கட்டளையால் தெய்வாவேசங் கொண்டவள் போல் உஞ்சை நகரின் வீதியில் வந்து ஆடிச்சனங்களை நோக்கி நீங்கள் நீர் விழவு செய்யத் தொடங்கீராயின் மறுபடியும் நளகிரியினிடத்தே புகுந்து ஊரை அழித்துவிடுவேன் என்று சொல்லி அச்சுறுத்தி நீர் விழாச் செய்யும்படி செய்வித்தவள் இவள். (பெ. கதை). |
பாகீலீயர் | பூதநந்தன் குமரர் பதின்மூவர். |
பாகுகன் | 1. வோனுடைய வலது தொடையைக் கடைந்ததால் பிறந்த கோரரூப முடையவன், இவனை இருடிகள் நிஷிதா வென்றழைத்தனர். 2. (சூ.) விருகன் குமரன், இவன் இராச்சியத்தைப் பகைவர் அபகரிக்கையில் அரசன் பாரியருடன் வநமடைந்து மரணமடைய உடனிறக்கவெண்ணிய பாரியரை அவுரவருஷி தடுத்தனர். இவர்களுள் முதல்வி சுமதி, கருப்பிணியென்றுணர்ந்த சகக்களத்தியர் அவளுக்கு நஞ்சூட்ட அவள் அவுரவர் அனுக்கிரகத்தால் உயிர்பெற்றுச் சகரனைப்பெற்றாள். (பாகவதம்.) |
பாகுதாயன் | பார்ப்பினி வைசியனைக்கூடிப் பெற்ற பிள்ளை. |
பாகுதை | இமயபர்வதத்தில் பிறக்கும் ஓர் நதி. (பா~வன) |
பாகுபலி | ருஷபத்தீர்த்தங்கரருக்குச் சுநந்தையிடம் பிறந்தவர். |
பாகுரதன் | பிரஞ்சயன் குமரன், |
பாகுலிகன் | சோமதத் தன் தந்தை, அசாங்கனம்சம், சந்தனு தம்பி, பிரதீபன் குமரன். |
பாக்கிழார் | குன்றத்தூரில் இருந்த வேளாண் குலத்தவர். |
பாக்கு | 1, இளம்பாக்கு, களிப்பாக்கு, மற்றது வெட்டை. இது பனை, தென்னை போன்ற புல்வகையினைச் சேர்ந்தது. குளிர்ந்த இடங்களில் பயிராவது, இது நெடுநாள் இருக்குமென்பர். இது பாளைவிட்டு மலர்ந்து குலைகளினிறையக் காய்கொண்டு பழுக்கும். ஒவ்வொரு குலையிலும் அதிக காய்களிருக்கும். ஒரு மரத்தில் 4, 5, 6 குலைகளுண்டாம். இதன் காய்கள் பழுத்த பின் தோல் நீக்கி வெற்றிலையும் சுண்ணாம்பும் கலந்த நீரில் வேகவைத்துச் சாயப் பாக்குச் செய்வர். 2, பாக்கு என்பது கமுகமரக்கொட்டை, இதனைப் பகுத்துப் பதஞ்செய்வதால் இதனைப் பாக்கென்பர் போலும். இச்சொல் பகு எனும் பகுதி இரட்டித்து முதனீண்ட ஆகுபெயர். 3. மிகவும் பிஞ்சு, அதிகமுதிர்ச்சி மிகவும் புதிய பாக்கு, பச்சை நிறமான மேனிப் பாக்கு, சொக்குதல், ஆகிய இப்பாக்குகளில் ஒன்றகப்பட்டாலும் தின்னாமல் ஒழிக்கக்கடவாய். |
பாக்யவதி | ஒரு வைசியன் பெண். இவள் தமக்கை புண்ணியவதி. இவ்விருவரும் கேதாரநாதர் விரதம் அநுட்டித்து அரசரை மணந்து செல்வத்திருந்தபோது பாக்யவதி செல்வத்தால் விரதத்தை மறந்து அரசனால் நீக்கப்பட்டுக் காடடைந்து புத்திரனைத் தமக்கையிடம் அனுப்பிச்செல்வம் பெற்றுவரக் கூறினள். இப்புத்திரன் செல்வம் பெற்று வரும் வழியில் இரண்டு முறை கள்ளரால் பறிபட்டு அசரீரியால் கேதாரவிரதக் கேடென்று கூறப்பெற்றுப் பெரியதாயிடங் கூறி விரதம் அனுட்டிப்பித்து மீண்டும் செல்வம் முதலிய பெற்றுத் தாயிடம் அடைந்து செல்வத்துடன் இருந்தனன். |
பாக்லிகம் | ஒருதேசம் இந்து நதிக்கருகில் உள்ளது இளன் ஆண்டது. |
பாக்லீகன் | பாகுலிகனைக் காண்க. |
பாங்கற்கூட்டம் | இது மூன்றாநாள் பாங்கனால் கூடுங் கூட்டம், இது சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கிற்கூடல் எனும் வகையினை யும், தலைவன் பாங்கனைச் சார்தல், பாங்கன் தலைவனை யுற்றது வினாதல், தலைவன் உற்றதுரைத்தல், கற்றறி பாங்கன் கழறல், கிழவோன் கழற்றெதிர் மறுத்தல், கிழவோன் பழித்தல், கிழவோன் வேட்கை தாங்கற் கருமைசாற்றல், பாங்கன் தன் மனத்தழுங்கல், தலைவனோடழுங்கல், எவ்விடத் தெவ்வியற்றென்றல், அவனஃதிவ் விடத்திவ்வியற்றென்றல், பாங்கனிறைவனைத் தேற்றல், குறிவழிச்சேறல், இறைவியைக் காண்டல், இகழ்ந்ததற் கிரங்கல், தலைவனை வியத்தல், தலைவியை வியத்தல், தலைவன் தனக்குத் தலைவிநிலைகூறல், தலைவன் சேறல், தலைவியைத் தாண்டல், கலவியின் மகிழ்தல், புகழ்தல், பாங்கியொடு வருகெனப் பகர்தல், பாங்கிற்கூட்டல், |
பாங்கிமதியுடன்பாடு | இது தலைவி வேறுபாட்டைக்கண்டு புணர்ச்சியுண்மை கண் டாராய்ந்து தன் மதியையுடம் படுத்தல். அது முன்னுறவுணர்தல், குறையு றவுணர்த்தல், இருவருமுன் வழியவன் வரவுணர்தல், என்பனவற்றையும், இதில் முன்னுறவுணர்தல், ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், ஆராய்தல், இருவருமுன் வழியவன் வரவுணர்தல் எதிர்மொழி கொடுத்தல், இறைவனை நகுதல், மதியினவாவர் மனக்கருத் அணர்தல் எனும் வகையினையும் தோற்றத் தாலாராய்தல், ஒழுக்கத் தாலையர் தீர்தல், சனை நயப்புரைத்தல், சுனை வியந்துரைத்தல், தகையணங்குறுத்தல், நடுங்கநாட்டம், பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல், ஊர்வினாதல், பெயர் வினாதல், கெடுதி வினாதல், ஒழிந்ததுவினாதல், யாரேயிவர் மனத்தெண்ணம் யாதெனத்தேர்தல், என் ணந்தெளிதல், தலைவன் கையுறையேந்தி வருதல், தலைவனவ்வகை வினாதல், எதிர்மொழி கொடுத்தல், இறைவனை நகுதல், பாங்கிமதியின வரவர்மனக்கருத் துணர்தல், முதலிய விரியினையு முடைத்து. |
பாங்கியிற்கூட்டம் | இது, பாங்கி கூட்டுவிக்கத் தலைவன் கூடும் கூட்டம். இது இரந்து பின்னிற்றல், சேட்படை, மடற்கூற்று, மடல்விலக்கு, உடன் படல், மடற் கூற்றொழிதல், குறைநயப்பித்தல், நயத்தல், கூட்டல், கூடல், ஆயங்கூட்டல், வேட்டல் எனப் பன்னிருவகையினையும், தலைவனுட்கோள் சாற்றல், பாங்கி குல முறைகிளத்தல், தலைவன் தலவி தன்னை யுயர்த்தல், பாங்கியறியாள் போன்று வினாதல், இறைவனிறைவி தன்மையியம்பல், பாங்கி தலைவியருமை சாற்றல், தலைவனின்றி யமையாமை யியம்பல், பாங்கி நின் குறை நீயே சென்றுரையெனல், பாங்கியைத் தலைவன் பழித்தல், பாங்கி பேதமை பூட்டல், காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல், பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக்கூறல், தன்னிலை தலைவன்சாற் நல், பாங்கி உலகியலுரைத்தல், தலைமகன் மறுத்தல், பாங்கியஞ்சி யச்சுறுத்தல், தலை வன் கையுறைபுகழ்தல், பாங்கி கையுறை மறுத்தல், ஆற்றாநெஞ்சினோடவன் புலத்தல், பாங்கியாற்றுவித்தகற்றல், இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலேபொருளெனமதித்தல், பாங்கிக்கு உலகின்மேல் வைத் துரைத்தல், அதனைத் தன் மேல்வைத்துச் சாற்றல், பாங்கி தலைமகளவயவத்தருமைசாற்றல், தலைமகன் தன்னைத்தானே புகழ்தல், பாங்கி அருளியல் கிளத்தல், கொண்டுநிலைகூறல், தலைவி யிளமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல், தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல், பாங்கி செவ்வியருமை செப்பல், தலைவன் செவ்வியெளிமைசெப்பல், பாங்கி யென்னை மறைத்தபின் எளிதென நகுதல், அந்தகை பொருதவன் புலம்பல், பாங்கி தலைவனைத்தேற்றல், பாங்கி கைடறையேற்றல், கிழவோனாற்றல், இறைவன்றனக்கு குறைநேர்பாங்கி பிறைவிக்கு அவன்குறையுணர்த்தல், இறைவியறியான் போன்று குறியாள் கூறல், பாங்கியிதை யோர்கண்டமை பகர்தல், பாங்கியைத் தலைவி மறைத்தல், பாங்கி யென்னை மறைப்பதென் னெனத்தழால், பாங்கி கையுறைபுகழ்தல், தோழிகிழவோன் துயர்நிலை கிளத்தல், மறுத்தற்கருமைமாட்டல், தலைவன்குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல், தோழி தலைவியைமுனிதல், தலைவி பாங்கியைமுனிதல், தலைவி கையுறையேற்றல், இறைவி கையுறையேற்றமை பாங்கியிறைவற் குணர்த்தல், (பகற்குறி) பால்கி தலைமகற்குக் குறியிடங்கூறல், பாங்கி குறியிடத்து இறைவியைக்கொண்டு சேறல், பாங்கி தலைமகளைக் குறியிடத்துய்த்து நீங்கல், இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல், புணர்ச்சியின் மகிழ்தல், புகழ்தல், தலைமகளைத் தலைமகன் விடுத்தல், பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறை காட்டல், தலைவியைப் பாங்கிற்கூட்டல், நீங்கித் தலைவற் கோம்படைசாற்றல், உலகியல் மேம்படவிருந்து விலக்கல், விருந்திறை விரும்பல், எனும் விரியினை யுடைத்து. (அகம்). |
பாங்சுவனன் | ராஜரிஷி. (பா. அநு.) |
பாசகர்ணன் | சுமாலி குமரனாகிய அரக்கன், இராவண சோபதி, அநுமனால் மாண்டவன். |
பாசண்டசாத்தன் | (96) வகைத்தருக்கக் கோவையில் வல்லஜயனென்னுங் கடவுள். (சிலப்பதிகாரவுரை.) |
பாசண்டம் | இது சமயங்களைத் திரட்டிச் சொன்ன நூல், |
பாசன் | 1. இருடிபுத்திரன் தவத்தால் ஞானமடைந்தவன். 2. திருதராட்டிரன் குமரன். |
பாசமறுத்தான்றுறை | சிதம்பரத்தில் குருத்துரோகத்தால் வருணனுக்குண்டான பாசமொழித்த, துறை, |
பாசறைநிலை | நிறைமதி போன்ற கொற்றக்குடையின் கீழேதாழ்வு சொல்லி வேந்தர் பலரும் மாற்சரியத்தை விடவும் அவ்விடத்தினின்றும் போகானாகி மறத்தினையுடைய மன்னன் பாடி வீட்டிலே இருந்தது. (பு~வெ) |
பாசி | 1. இது பசுமை நிறங்கொண்டிருக்குங் காரணத்தால் பாசி எனப் பெயர்பெற்றது. இதில் பலவகை உண்டு. நீர்ப்பாசி, நிலப்பாசி, கற்பாசி, கடற்பாசி முதலிய, முதலில் நீர்ப்பாசியில் உப்பு நீர்ப்பாசி, நன்னீர்ப்பாசி என இருவகையுண்டு. உப்புநீர்ப் பாசிகள் கடற்பாசிகளாம். இப்பாசிகள், கடலில் காடுகளைப் போலடர்ந்து கப்பல்கள் போகவழியிலாது கடலை நிலமெனக் கூறும்படி நெடுந்தூரம் அடர்ந்திருக்கின்றன. இவ்வகைப் பாசிகளை லேசோனியா (Lessonia) என்கின்றனர். இன்னும் கடல்களில் ஆயிரக்கணக் கான நீண்ட ஒருவகைப் பாசி உண்டு. அப்பாசி உஷ்ணப் பிரதேசத்தையடுத்த கடல்களில் உண்டென்பர் அதனை மேக்ராகிஸ்டிஸ் (Myerogyatis) என்பர். இன்றும் கடல்களில் மூங்கிலைப்போல் கிளைக்கும் கெல்ப் (Kelp) எனும் ஒருவகையும், உண்டு, இதில் உப்புண்டாக்கிப் பலவகைக்கு உபயோ கிக்கின்றனர். ஐரோப்பாவின் வடகடலில் ஐஸ்லண்டை யடுத்துள்ள கடற் பாறைகளில் ஒருவகைப் பாசிகள் கற்றாழைபோல் வளருகின்றன. அவற்றை அந்நாட்டார் உணவாகக் கொள்கின்றனர். அன்றியும், கடல்வாழ் திமிங்கிலங் களும் உணவாகக் கொள்கின்றன. அவற்றை சீவிட் ஐசிங் கிளாஸ் என்பர். அப்பாசி ஜர்லாண்டை அடுத்த கடற்பாறைகளிலு முண்டென்பர். இவற்றை ஆகாரப்பொருளாகப் பிற நாடுகளுக்கும் அனுப்புகின்றனர். இன்னும் பாலுள்ள கள்ளிகளைப் போலச் சோதிப்பாசிகளும் உண்டென்பர். இவை இரவில் ஒரே சோதியாய்க் காணப்படுகின்றன என்பர். நன்னீர்ப்பாசி; இது, நல்ல நீருள்ள ஆறு, ஏரி, ஓடை, கசம், குளம், முதலிய நீர்நிலைகளில் உண்டாவது. இச்சாதியில் பலவகை உண்டு. அவை கொத்துப்பாசி, கொட்டைப்பாசி, குடற் பாசி, கோழைப்பாசி, அழுக்குப்பாசி, அழுக்கு நீக்கும்பாசி, சினைப்பாசி, இலைப்பாசி, கொடிப்பாசி, வேப்பம்பாசி, வேலம்பாசி, நாற்றப்பாசி, ஆற்றுப்பாசி, கடற்பாசி, கற்பாசி, கூந்தற்பாசி, பழம்பாசி, முட்டைப்பாசி, வழுக்குப்பாசி எனப் பல வகையுண்டு. நிலப்பாசி வகைகளில் பல வகை உண்டு. அவை, மண்ணிலும், கற்கள், பாறைகள், மரங்கள் முதலியவற்றில் உண்டாவன. இவை பாறைகளில் கண்ணுக் கெட்டாத சிறிய இலைகளைப் பெற்றுப் பச்சைப்பட்டு விரித்தாற்போல் வளருகின்றன. கற்பாசி மலைகளில் நீர் தங்குமிடங்களில் வளர்வன. |
பாசிநிலை | பகைவருடைய வலிகெட அகழியிடத்துப் பூசலை மேற் கொண்டது. (பு. வெ.) |
பாசினி | தருமன் குமரி. பருந்துகளையும், ஆந்தைகளையும் பெற்றனள். |
பாசுபதசைவன் | இம்மதத்தவர்க்குச் சிவன் விபூதியுஞ் சடைமுடியும் உடைய மூர்த்தியாய் அருள் செய்வன். இது அகச்சமயத்துள் ஒன்று. |
பாசுபதமூர்த்தி | அருச்சுநனுக்குப் பாசுபதந்தாவும், ஆத்மாக்களுக்குப் பதியாந் கன்மையைத் தெரிவிக்கவும் எழுந்தருளிய சிவபிரான் திருக்கோலம், |
பாசுபதம் | இது சிவாஸ்திரம், சூர்யனைப் போலப் பிரகாசிப்பதும், எல்லாத் தேவர்களின் ஸாரமானதும், ஆயிரம் கைகளும், நாக்குகளும், வாய்களுடைய தும், பயங்கரமான ஸர்ப்பரூப முடையதாயக் கைகளில் பலவிதமான அஸ்திர சஸ்திரங்களைப் பெற்றுமிருப்பது, நிகரற்றது. எல்லாப் பிராணிகளுக்கும் பயத்தைத் தருவது. (பாரதம் அது சாரிகபர்வம்.) |
பாசுபதாஸ்திரம் | 1. இஃது ஐந்து முகம் பத்துக்காதுகள் முகம்ஒவ்வொன்றிற்கு மும்மூன்று நேத்ரம், பார்க்கக்கூடாத அதிபயங்கரமான பத்துக்கைகளும், மகாபலமும், கோரைப்பற்களுடைய அதிபயங்கரமும், அதியுக்ரமும், மகத்தாகிய தவனியும், ஜயிக்கப்படாததாகியும், நாக்கையுதட்டிலே நக்கிக் கொண்டு கோடி சூர்யப் பிரகாசமாய் வலதுகைகளில் அக்னி, வேதாளம், சூலம், சத்தி, அங்குசம், இடதுகைகளில் சர்ப்பம், குந்தம், சக்ரம், கட்கம், முத்காம், இவ்வித ஆயுதங்களை யுடையதாய்ச் சத்ருசங்காரியாய் ரோகங்களைப் போக்கடிப்பதாய் இருக்கும், 2, சிவாஸ்திரம், அர்ச்சுனனால் அடையப்பட்டது. (பா~துரோ.) |
பாசுபதிமதம் | இவன் நிமித்தகாரணன். இவன், முதலில் பரமாணு உபாதான காரணமாய் உலகத்தையுண்டாக்க ஆன்மாக்கள் மும்மலத்தில் கட்டுண்டு ஆகமத்தின்படி சிவபூசையால் கன்மநீங்கிப் பதியோடு ஒப்பது மோக்ஷம் என்பன். (தத்.) |
பாசுமதன் | பஞ்சவன் புத்திரன், பித்ருக்களைக் காண்க. |
பாசுராம ஜயந்தி | இதுவும் வைகாசிமாதம் சுக்கில பக்ஷம் திருதியையில் ரேணுகா தேவியிடம் பரசராமர் பிறந்த திதி. இதில் விரதமிருக்கில் நலமுண்டாம். |
பாச்வரர் | அறுபத்து நான்கு கணதேவர், |
பாஞ்சசன்யம் | 1. பஞ்சசனைக் காண்க. 2. ஒரு அக்னி. |
பாஞ்சராத்ரம் | வைஷ்ணவாகமத்தில் ஒன்று. இதை அநுசரித்தவர் பாஞ்சராத் திரர். இது வைஷ்ணவாகமம், இது, விஷ்ணுவாலயப் பிரதிட்டைக்குரிய விதி, குண்டமண்டலஸ் தபனவிதி, அக்னிகார்ய விதி, துவஜாரோகண விதி, நீகை, ஆசாதனம், கிருஹாராதனம், பூஜை, பஞ்ச கௌவ்யம், மஹோற்சவம், யாகசாலா விதி, ஜீர்ணோத்தாரணம், நாராயணபவி, முத்ரா லக்ஷணம், துஸ்வப்னப் பிராயச்சித்தம், ஸ்ரீவைகுண்டலக்ஷணம், மந்திர விதி, யோகம், ஆசார்யலக்ஷணம், பிரதிமால க்ஷணம், ஜலாதிவாஸனம், நயனோன்மீலனம் முதலிய விரிவாகக் கூறும். இதில் பின் சொல்லும் சம்மிதைகளல்லாமல் காபிஞ்சலசம்மிதை, காச்யபசம்மிசை விரிவாகப் பலவிஷயங்கள் கூறும். இது பவித்ரோச்சவாதிவிதி முதலியவற்றை விரிவாகக் கூறுவது. இஃது ஐந்து நாளையில் திருமால் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமதேவர் நாரதருக்குப தேசிக்க நாரதர் மற்றமுனிவர்க்கு உபதேசித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது நூற்றெட்டுச் சம்மிதைகளாக வகுக்ககப்பட்டிருக்கிறது. அவை, 1 பாத்மம், 2 பாத்மோத்பவம், 3 மாயாவைப் வம், 4 நளகூபரம், 5 திரைலோக்யமோ ஹனம், 6 விஷ்ணு திலகம், 7 பாமாஹ்வயம், 8 நாரதீயம், 9 தான தீயம், 10 வாசிஷ்டம், 11 பௌஷ்கமாஹ்வயம், 12 ஸநத்குமாரம், 13 ஸநகம், 14 தியாகி யம், 15 விச்வசம்மிதை, 16 சாகாந்தம், 17 மகீப்ரச்னம், 18 ஸ்ரீபிரசனம், 19 புருஷோத்தமன், 20 மாஹேந்திரசம்மிதை 21 பஞ்சபிரச்னாக்யம், 22 தத்வசாகரம், 23 வாகீசம், 24 சாத்வதம், 25 தேசோத்ர விணம், 26 ஸ்ரீகராஹ்வயம், 27 சாம்பர்த் தம், 28 விஷ்ணுசத்பாவம், 29 சித்தாந்தம் 30 விஷ்ணுபூர்வகம், 31 விஷ்ணு தத்வம், 32 கௌமாரம், 33 ரஹஸ்யம், விஷ்ணு பூர்வகம், 34 விஷ்ணுவைபாவிகம், 35 சௌரம், 36 சௌம்யம், 37 ஈச்வாசம்மிதை, 38 அநந்தாக்யம், பாகவதம், 39 ஜயாக்யம் மூலசம்மிதை, 40 புஷ்டி தந்தரம், 41 சௌநகியம், 42 மாரீசம், 43 தக்ஷ சம்மிதை, 44 ஔபேந்திரம், 45 யோகஹிருதயம், 46 ஹாரீதம், 47 பாரமேச்வாம்; 48 ஆத்ரேயம், 49 ஐந்திரம், 50 விஷ்வக் சேநம் ஔசனசாஹ்வயம், 51 வைஹாய சம், 52 வைஹகேந்திரம், 63 பார்க்கவும், 54 பரபூருஷம், 55 யாஞ்ஞவற்கியம், 16 கௌதமீயம், 57 பௌலஸ்தியம் சாகலாஹ்வயம், 58 ஞானார்ணவம், 59 ஜாமதக்னியம், 60 யாம்யம் நாராயணாத்மகம், 61 பராசர்யம், 62 ஜாபாலம், 63 காபிலம், 64 காமனல்வயம், 65. ஜயோயாம், 66 பிரா கஸ்பத்வம், 67 அஜமினம், வாமனாஹ்வயம், 68 காத்யாயனீயம், 69 வால்மீகம், 70 ஒன்பகாயனசம்மிதை, 71 இரண்ய கர்ப்பம், 72 ஆகஸ்தியம், 73 காருஷம், 74 போதாயனாஹ்வயம், 75 பாரத்வாஜம், 75 நாரசிமயம், 77 கார்க்கியம், 78 உத்தர பூர்வகம், 79 சாதாதபம், 80 ஆங்கீரசம், 81 காச்யபம், 82 பைங்களாஹ் வயம், 83 நிரைலோக்ய விஜயம், 84 யோகம், 85 நாரதீயம், 86 வாருணம், 87கருஷ்ணம், 88 ஆம்பாம், 89 ஆக்னேயம், 90 மார்க்கண்டேய சங்கிரகம், 91 மகாசந்த்குமா சாக்கியம், 92 வியாசாக்கியம், விஷ்ணுசம்மிதை, 93 அகிர் புத்னியசம்மிசை, 94 பிரம்மசாகவசம்மிதை, 95 மார்க்கண்டே யம், 96 பார்வதம், 97 பிரம்மநாரதசம்மிதை, 98 சக்கருதரசம்மிதை, 99 உமாமகேச் வரசம்மிதை, 100 தத்தாத்ரேயம், 101 சர்வாக்யம், 102 வாராஹம், 103 மஹிராஹ்வயம், 104 சங்கர்ஷணாக்யம், 105 பிரத்தியும்னம், 106 வாமனம், 107 கல்கிராகவம், 108 பிராசேதசாக்யம் முதலிய. |
பாஞ்சலன் | ஆருணியென்னும் பெயருள்ள ரிஷி, (பா. ஆதி.) |
பாஞ்சாலதேயம் | இது மிக்க நீர்வளமுடையது. ஆருணியரசனுடைய தேயம். (பெருங்கதை). |
பாஞ்சாலன் | 1, சத்திக்கு ஓர்படன். 2. மதன நூல் ஆசாரியன். 3. அரம் மியாசுவனைக் காண்க, 4. பாஞ்சாலதேசம் ஆண்டவன். துருபதன்; அருச்சுநனால் கட்டுண்டவன். துரியோதனனைச் சோமகேயாதிகளால் அடிப் பித்தவன். உபயாசனாசன் முதலிய முனிவரால் யாகாக்னியில் திட்டத் துய்ம்மனையும் திரெளபதியையும் ஒருவில்லையும் பெற்றவன். பாரதவீரரில் ஒருவன், மருத்துவர் அம்சம். |
பாஞ்சாலமுனிவர் | இவர் வாமதேவரால் உபதேசிக்கப் பட்டவர். |
பாஞ்சாலம் | இந்திரபிரஸ்தத்திற்குக் கிழக்கில் உள்ள தேசம். இது வடபாஞ்சாலம், என்றும், தென்பாஞ்சாலம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலாவதற்கு இராஜதானிஹாஹிச்சத்திரம், இது துரோணரால் அபகரிக்கப்பட்டது. இரண்டாவதற்க்கு. இராஜதானி காம்பிலி தூவபதியின் தந்தையாகிய துருபதனால் ஆளப்பட்டது. Rohilkhand. (பா. பீஷ்மபர்வம்.) |
பாடகச்சீறடி பணிந்தபினிரங்கல் | குவடு நீண்ட மலையினையுடையவன் குவித்தசையுடனே பாடகமணிந்த சிற்றடியிலே வணங்கிய பின்பு நெஞ்சு நெகிழ்ந்தது. (பு. வெ. பெருந்திணை). |
பாடங்கேட்போர் கேட்கத்தகாதோர் | தன்மகன், ஆசிரியன் மகன், அரசன்மகன், அதிகப்பொருள் தருவோன், வழிபடுவோன் சொல்வதை விரைவிற் கிரகிப்போன் ஆகிய இவர்களுக்கு ஆசிரியன் பாடம் கூறலாம். கள்ளுண்போன், சோம்பேறி, மானி, காமி, கள்வன், பிணியன், எழை, பிணக்கன், சினத்தன், துயில்வோன், மந்தன், நூலின் விரிவிற்கஞ்சுவோன், இரக்கமிலான், பாவி பொய் கூறுவானுக்குப் பாடங்கூறலாகாது. |
பாடலனார் | ஒரு தமிழ் நூல் ஆசிரியர், இவர் சொன்ன சூத்திரம் காரிகையின் ஒரு இடத்தில் உதகரித்திருக்கிறது. |
பாடலாவதி | 1. இருக்ஷபர்வதத்தில் உற்பத்தியாகிப் பாயும் நதி. 2. அடுப தேசத்தின் சமிபத்தில் பாரி யாத்தரிகிரியில் தோன்றிச் சர்மன் நதியில் கலக்கும் உபநதி The Kaliscind s branch of the Cambol. |
பாடலிபுத்திரம் | இதற்குக் (குசுமபுரி, புஷ்பபுரி) எனவும் பெயர். இது தற்காலம் பாட்னா கங்கைக் கரைக்கண் இருக்கிறது. மகததேசாதிபதியாகிய உதயாச்வனால் நிருமிக்கப்பட்டது, இது பௌத்தரும் வைதிகசமயத்தாரும் இருந்த இடமென்று சீனயாத்ரிகன் ஹியூன் சாங் கூறியிருக்கின்றனன், |
பாடலீபுரம் | இது, வடக்கே சோணை நதிக்கு வடபுறத்திலும், கங்கை நதிக்குச் சிறிது தூரத்திலும் இருந்த பட்டணம். இது (9) மைல் நீளமும், ஒன்றரைமைல் அகலமும், (64) வாயில்களும், (574) கோபுரங்களும் பெற்றிருந்தது. இது, நந்தர், மௌரியர், ஆந்திரர் முதலியோரது பிரபல ஆட்சித்தலமாயிருந்தது. இது மௌரியவம்ச முதல்வனாகிய சந்திரகுப்தனும் அவன் பேரன். அசோகசக்ரவர்த்தியும் ஆண்டது. இதில் இருந்த அரச அரண்மனை (4) ஆம் நூற்றாண்டுவரை அழியாதிருந்தது என சீனயாத்திரிகனாகிய பாஹீ யான் என்பவன் எழுதிய சரித்திரத்தால் தெரிகிறது. இது பிற்காலத்துக் கங்கைப் பெருக்காலழிந்தது. இதன் அழிவை (4) ஆம் நூற்றாண்டின் சீனதேசத்தி லிருந்து யாத்திரை செய்த ஹ்யூந்த்ஸாங் கூறியிருக்கிறார். |
பாடல் | 1. என்பது இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் எனும் எட்டும் கொண்டது. 2, பாடாலிபுத்திர நகரம். இதிலுள்ள பொன்வினைஞர் பண்டைக்காலத்தில் மிக்க பெயர் பெற்று விளங்கினார்கள். |
பாடாணவாதசைவன் | இவன் ஆன்மா முத்தியிலும் சகசமலம் நீங்காது கல்போற் கிடக்கும் என்பன். |
பாடாண் | இசையும் வலியும் சீர்தூக்காக் கொடையும் தண்ணளியும் என்று சொல்லுமிவற்றைத் தெரிந்து சொல்லியது. (பு. வெ.) |
பாடிகாப்பான் | இவன் சர்வரக்ஷன் என்பவன். இவன் தன் மனைவியின் ஆபரணங்களை இரவலாக வாங்கி அணிந்து கொண்டு வியபசாரத் தொழிலால் அம்பலத்தில் வந்த தன் தாயை வெருட்டித் தீங்கிழைத்து அவளது ஆபரணங்களைப் பறித்துச் சென்று தன் மனைவிக்குக் கொடுப்ப அவள் ஊகித்தறிந்து உண்மை கண்டு வெளிப்படுத்த அவ்விருவரும் தண்டிக்கப் பட்டனர். (சைநகதை). |
பாடை | பிணந்தூக்க எட்டடி நீளமாய் இரண்டு கொம்புகளமைத்துப் பிணத்தின் அகலத்திற்குத் தக்கபடி குறுக்குப் புள்ளமைத்து எணிபோல் கட்டப்பட்ட பிணப்படுகை. |
பாட்சர் | இது எலியினத்தது. ஆசாம், அரகான் முதலிய மலைப்ரதேசங்களில் பூமியில் வளை தோண்டிக்கொண்டு வசிக்கிறது. இது, சாகப்பரணி. இதன் தேகத்திலழுத் தமான மயிருண்டு. இது கோபங்கொள்ளும்போது மயிரை முள்ளம் பன்றிபோல் சிலிர்த்துக்கொண்டு உருமுகிறது. இது நாயினளவாக இருக்கிறது. மரமேறித் தேன்கூடுகளை யுறிஞ்சித்தின்னும், இது மாரிக்காலத் திற்கென்று ஆகாரந்தேடிவைத்துக் கொள்ளுகிறது. இவ்வினத்தில் மற்றொரு வகை ஆப்ரிகா மலைப்பிரதேசங்களிலுண்டு. அவற்றிற்கு ராடில் என்று பெயர். இது (1 1/4) அடி நீளம் (3) அடி உயரம். பூமியில் வளைதோண்டி வசிப்பது, சாக பக்ஷணி, |
பாட்டகம் | சத்தியூதியென்பவனது நகரம். (பெ. கதை.) |
பாட்டமதம் | இம்மதத்தாபகர் பாட்டர் என்பவர், இம்மத சித்தாந்தம், ஆத்மா க்ஷணிக ரூபமன்று, ஆயினும் ஸ்திரச்வரூபமான ஆத்மா சடமாகவும் சித்தாகவும் இருக்கிறான்; எவ்வாறெனின் நித்திரையினின்று எழுந்தவன் நான் மரம்போல் தூங்கினேன் எனவும், விழித்துக் கொண்டவனுக்கு அறிவு உதித்தலின் சித்ஸ்வரூப மென்றுங் கூறப்படுகிறான். சுஷூபதியில் ஆத்மஸ்வரூபம் தவிர வேறொன்றும் தோன்றாதிருத்தலின் ஸ்மரணத்திற்குக் காரணம் சுஷுப்தியின் ஞானமே ஆதலால் இதுவே ஆத்மஸ்வரூபம் என்பன். இதனால் ஆத்மா பிரகாசனாகவும் அப்பிரகாசனாகவு மிருக்கிறான். எவ்வா றெனின் சுஷுப்தியில் சேதனனுடைய ஆபால சகித அஞ்ஞானா நந்தமய கோசம் ஆத்மா என்று கூறப்படுகிறது. ஆதலால் ஆருந்த மயகோசமே ஆத்மா என்பது இம்மதம். இம்மதத் தாபகருக்கு வார்த்திககாசர் எனவும் ஒரு பெயர். (தத்துவநிஜாறு). |
பாட்டாசாரியன் மதம் | இவன் வேதம் நித்தியமாய் அநாதியாய் முதல் ஈறு இன்றியிருப்பது, இது ஒருவராற் கற்பிக்கப்பட்டது அன்று என்பன். இதை அநுட்டித்து இதில் உள்ள யாகாதிகர்மங்களைச் செய்வது முத்தியென்பன், |
பாட்டியன் மரபுடையார் | இவர் யாப்பருங் கலவிருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர். இவர் செய்யுளிலக்கணஞ் செய்தவரா யிருக்கலாம். பெயர் விளங்கவில்லை, |
பாட்டியல் | இது வச்சணந்தி, குணவீரபண்டிதன், இந்திரகாளி முதலியவர் களாற் செய்யப்பட்ட செய்யுளிலக்கணம், |
பாணன் | 1, ஒர் காந்தருவன், பிற்பிறப்பில் கீசகனாய்ப் பிறந்தான். 2. பலிச்சக்கிரவர்த்தியின் குமரன். 3. சிவகணத்தவரில் ஒருவன். 4. சமீகருக்குச் சுதானினியிடம் உதித்த குமரன். 5. (சூர்.) புரக்ஞயன் குமரன். இவன் குமரன் அதரண்யன். 6. வசுதேவன் தம்பியாகிய அநீகன் குமரன். |
பாணபத்தன் | பாணர் குலத்தவனாகிய ஒரு சிவயோகி, பட்டினத்தடிகள் காலத்தவன். |
பாணபத்திரர் | இவர் வரகுண பாண்டியன் சபையிலிருந்த யாழ்வல்ல பாணர். இவர் காலத்துப் பாண்டியன் சபையில் தன் யாழ்வல்லமையைக் காட்டிப் பரிசுபெற ஏயநாதன் என்னும் வடநாட்டான் ஒருவன் வந்து செருக்குற்றிருத் தலைப் பாண்டியன் கண்டு பத்திரரை அழைத்து ஏமநாதனுடன் பாடவல்லீரோ என்றனன், பாணர் சொக்கர் அருளால் பாடவல்லேன் என்று சொக்கரைத் துதிக்கச் சென்றனர். சொக்கர் ஏமநாதன் வீறு அடங்க ஓர்விறகு விற்பவராய் விறகுகொண்டு யாழேந்தி ஏமாநாதன் வீட்டுப்புறத்தில் விறகையிறக்கித் தாம் ஒருபுறத்தில் எழுந்தருளி யாழினை மீட்டிச் சாதாரிசாகம் பாடினர். வீட்டில் இருந்த ஏமநாதன் புறத்தில் வந்து கேட்டு மனம் உருகி நீ யார் என்றனன். விறகு விற்பவர் நான் பாணபத்திரர் மாணாக்கருள் ஒருவன். என்னை அவர் கிழவன் என்று நீக்க நான் விறகு வெட்டிச் சீவிக்கிறேன் என்றனர். ஏமநாதன் இந்த விறகு தலையன் பாட்டு இப்படி யிருக்குமாயின் பாண பத்திரன் பாட்டு எப்படிப்பட்டதோவென்று அஞ்சிப் பாதி இரவில் ஊரைவிட்டு ஓடினன். இதனைச் சொக்கர் பாணருக்கு அறிவித்துத் திருக்கோயில் எழுந்தருளினர். பின்பு பாணபத்திரர் இதனை அரசனுக்கு அறிவிக்க அரசன் சொக்கரைப் பாடுக என்றபடி அரசனிடஞ் செல்லாது சிவமூர்த்தியைச் சந்நிதிக்கு எதிரில் இருந்து பாடி வந்தனர். இவர் அரசனிடஞ் செல்லாமையால் பொருளின்றி வறுமையடைந்து வருந்துவதைச் சொக்கர் அறிந்து அரசன் பொக்கிஷத்தில் இருந்து பல பணிகளையும், பொன்களையும் நாடோறும் கொடுத்து வருகையில் பாணர் இவைகளைப் பெற்று உருக்கித் தாமும் அநுபவித்துத் தன்னைச் சார்ந்தவர்க்கும் கொடுத்து வந்தனர். இவ்வகை கொடுத்தல் சிலநாள் நிற்கப் பத்திரர் வறுமையால் உடல்வாடி நித்திரை புரிந்தனர். அப்போது சொக்கர் சித்தமூர்த்திகளாய்க் கனவில் தரிசனம் தந்து இனி அரசன் காணில் காவலாளரைத் தண்டிப்பான் ஆதலால் நாம் உன்வறுமை நீங்கும்படி சேரனுக்குத் திருமுகங் கொடுக்கின்றோம், கொண்டு சென்று காட்டி வறுமை நீங்குக என்று “மதிமலி புரிசை மாடக்கூடற், பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை, அன்னம்பயில் பொழிலால வாயின், மன்னியசிவன் யான் மொழி தரு மாற்றம், பருவக்கொண்மூ உப்படி யெனப்பாவலர்க்கு, உரிமையினுரி மையினுதவி யொளிதிகழ், குருமாமதிபுரை குலவிய குடைக்கீழ்ச், செருமாவு கைக்குஞ் சேரலன் காண்க, பண்பால்யாழ்வல பாணபத்திரன், தன்போலென் பாலன் பன்றன் பால், காண்பது கருதிப் போந்தனன்மாண் பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” இத்திருப்பாசுரமளித்துத் திருக்கோயில் எழுந்தருளினர். பாணர்விழித்துத் திருமுகத்தை எதிரிற்கண்டு சிரமேற்கொண்டு சோநாடு சென்றனர். இதற்கு முன்பே சிவமூர்த்தி பாணரது வரவைச் சேரருக்கு அறிவித்ததால் சேரர் பாணரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றனர். பின் சேரமான் பெருமாணாயனார், உபசரிக்கப் பாணபத்திரர் அவ்விடமிருந்து மதுரைக்கு வரவேண்டுமென நினைக்கையில் சேரமான் பெருமாணாயனார் அவரது அவாவளவு பொன் கொடுத்து வழிவிட்டனர். இவ்வகை மதுரைக்கு மீண்ட பாணபத்திரர் நாடோறும் அர்த்தசாமவரையில் கடவுளைப்பாடும் நியமம்பூண்டு வருநாளில் இவரது அன்பைப் பலர்க்கும் சிவமூர்த்தி தெரிவிக்க வேண்டிப் பெருமழை வருஷிக்கச் செய்தனர். பாணர் நந்திதேவருக்குப் பின் னிருந்து பாடுகையில் மழையின் குளிர்ச்சியாலும் அடியில் வெள்ளம் ஒடு தலாலும் கைகால் முதலிய விறைத்தும் அசையாது பாடுதல் கண்ட சொக்கர் பலகையொன்று அருளி அதின் மீதிருந்து பாடி மழைவிட வீடுசென்றனர். விடிந்தபின் பாண்டியன் கேட்டுப் பத்திரரை அழைத்து முன்போலவே வரிசை நடத்தி வந்தனன். திருநீல கண்டயாழ்ப்பாண நாயனார் எனவும் இவர்க்குப் பெயர். இவர் திருஞானசம்பந்த மூர்த்திகள் காலத்து இருந்தவராகவும், சேரமான் காலத்தவராகவும் தெரிகிறது. |
பாணம் | நாடக விகற்பத்தொன்று. தூர்த்தனதல், தலைவனாதல் தானுஞ் சொல்லி நின்றார் சொல்லையு மநுவதித்து சொல்லிய ஐவகைச் சந்தியுள்ளும் கடைக்கண் சந்தியங்கம் ஒன்றாவது, (வீரசோ.) |
பாணர் | 1. வைசியன் பிராமணப் பெண்ணைப் புணரப்பிறந்தவர். 2. தையற்காரர் அங்கம் வெட்டின திருவிளையாடல் நடத்துவோர் இவர்களே. (திருவி) 3. இசைப்பாணர் யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலர். (நச்சர்.) 4. இவர்கள் தற்காலம் திருநெல்வேலி முதலிய தமிழ் நாட்டில் தையல்தைத்து ஜீவிக்கின்றனர். முற்காலத்து இவர்கள் அரசர்களைப் பாடிப்பரிசு பெற்று வாழ்ந்த அறிவுடையார். தற்காலத்திலும் சிலர் கூத்து முதலிய ஆடி ஜீவிக்கின்றனர். இக்குலத்தில் புகழ்பெற்ற சிவனடியவர்களு மிருந்தனர். அவர்கள் பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுஞ் சிலர் குடைமுதலிய செய்து ஜீவிக்கின்றனர். |
பாணலிங்கம் | பாணாசுரனைக் காண்க. |
பாணவித்யாதரன் | பாணவும்சத்திற் பிறந்த ஒரு அரசன். இவன் ஜகதேகமல்லனுடைய புத்ரன். |
பாணாசுரன் | 1. பலியின் குமரன். இவன் பட்டணம் சோணிதபுரம், இவன் கம்சனுக்கு நண்பன். இவன் சிவபூசாபலத்தால் அகண்டைச்வர்யமும் ஆயிரங்கைகளும் பெற்றுச் சிவமூர்த்தியை நோக்கித் தேவரீர் தவிர என்னோடு யுத்தம் புரியவல்லார் இல்லையாதலின் என்னோடு யுத்தம் புரிவாரைத் தெரிவிக்க என வேண்டினன், ஆவதுணர்ந்த சிவமூர்த்தி அசுரனை நோக்கி உன் கோட்டையின் துவசம் எக்காலத்துத் துணிபட்டு விழுகிறதோ அக்காலத்தில் உன்னிலும் வலியன் உன் வலியை அடக்குவன் என்று மறைந்தனர். இதனை யறிந்த பாணாசுரன் அரண்மனைக்குச் சென்று சுகத்துடன் சிலநாள் இருந்து உஷை யென்னும் குமரியைப் பெற்று வளர்த்து வந்தனன். அந்த உஷை வளர்ந்து பருவமடைந்து கனவில் அநிருத்தனைக் கண்டு காமுற்றுத் தன் தோழியால் அவனை வருவித்துக் களவிற்புணர்ந்து வருகையில் பாணாசுரன் அறிந்து அநிருத்தனை விலங்கிட்டனன். இதனை நாரதரால் அறிந்த கிருஷ்ணமூர்த்தி வாணாசுரன் மீது யுத்தத்திற்குச் சென்று சிவபூசை செய்த இரண்டு கரங்கள் தவிர மற்றக் கரங்களை யறுத்தனர். பின் இவன் தாய் கொட்டரி புத்திர் பிக்ஷை தரக் கண்ணனை வேண்ட அவ்வகை கண்ணன் அளித்தனர். பின்பு பாணாசுரன் அநிருத்தனையும் உஷையையும் கண்ணனிடம் சேர்த்து அபராதக்ஷமை வேண்டினன். இவனே கடைசியில் சிவ பூசாபலத்தால் திருக்கைலையடைந்து குடமுழா முழக்கும் திருப்பணி செய்து வருவானாயினான்: தென்திசை மலைகளில் பொருள் நிரப்பி வைத்தவன். இவன் சிவ பூசை செய்து இறைவன் எதிர்ப்பட நாடோறும் ஆயிரம் சிவலிங்கம் பூசிக்க வரம் பெற்றவன். இவன் பூசித்த விங்கம் பாணலிங்கம். 2. இவன் பல சாஸ்திரங்களைப் பெரியாரிடம் கேட்டு வருகையில் சிவலிங்க மகிமையையும் சிவபூஜா விசேஷங்களையும் கேட்டுச் சிவபூசை செய்ய விரும்பிச் சிவ பெருமானை நோக்கிப் பலநாள் தவஞ்செய்தனன். இவன் தவத்திற்குவந்த சிவபெருமான் நீ வேண்டிய தென்னவென எனக்கு ஆயிரஞ் சிரமும் இரண்டாயிரங் கைகளும் பதினாயிரம் லோக ஆட்சியும் பதினான்கு கோடி சிவலிங்கங்களும் வேண்டும் என்றனன். அவ்வாறே அவனுக்கு அநுக்ரகித்து பிரமத கணங்களைக்கொண்டு கங்கைக்கரை யினின்று சிவலிங்கங்களை வருவித்துக் கொடுத்துச் சிவபூஜை செய்யும்படி யேவி மறைந்தனர். அவ்வாறே வாணாசுரன் சிவ பூஜை செய்து பல கோடிகாலம் எல்லாப் போகங்களையும் அநுபவித்துப் பதினான்கு கோடிச் சிவலிங்கங்களை ஸ்ரீசைலம், கங்கை, நீலகண்டம், நேபாளம், யமுனை, மற்றும் புண்ணிய நதிகள், கன்யாகுமரி, முதலிய புண்யத்தலங்களி லமைத்தனன். அந்த விங்கங்களே, தற்காலம் காணப்படுவன. அவற்றுள் உத்தமமானவை, ரேகையாகிய கீறலும், பிந்துவாகிய வட்டமும், களங்கமாகிய கறுப்பும் மிகுகனமும், பலவர்ணங்களாகிய சித்திரமும், உச்சிக்குழியும், பருக்கைக் கல்லும், பக்கத்தழும்பும், வெடிப்பும், இன்றி, லிங்கத்திற் கமைந்த பீடத்துடன் உருண்டையாய், கருநாவற்பழம் போல் கறுப்பாய், பார்வையைக் கவரத் தக்கதாயிருப்பது உசிதமானதாகும். இவ்வகை லிங்கங்கள் இவனால் பூசிக்கப்பட்டவை. (சைவபூஷணம்.) |
பாணாற்றுப்படை | மிகவுமுயர்ந்த மலைவழியிடத்துப் பாணனை வழியிலே செலுத்தியது. (பு. வெ. பாடாண்.) |
பாணி | என்பது கொட்டும், அசைவும், தூக்கும் அளவும் ஒட்டப் புணர்ப்பது. |
பாணினி | ஒரு மகருஷி, இவர் தமது உள்ளத்தில் உலகமுய்ய வியாகரணம் அருளிச் செய்யவேண்டிச் சிவமூர்த்தியைத் தரிசித்து நிற்கையில், சிவமூர்த்தி இவரது மனஎண்ணமறிந்து தமது திருக்கரத்தில் இருந்த நாதமயமாகியட மருகத்தைச்சிறிது அசைத்தனர். அதிலிருந்து எழுத்துக்கள் உண்டாயின. அவ்வெழுத்துக்களை அருகிருந்த இவர், பன்னிரண்டு சூத்திரமாக்கினர். இதற்குப் பதஞ்சலி முநிவர் பாஷ்யஞ் செய்தனர். |
பாணினீயம் | பாணினி செய்த இலக்கணம். |
பாண்டரங்கண்ணனார் | சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடியவர். (புற. நா.) |
பாண்டரங்கம் | இது வானோராகிய தேரில் பிரமன் காணப் பராதி வடிவாகிய இறைவன் வெண்ணீறணிந்தாடிய கூத்து. |
பாண்டவர் | பாண்டுமகாராஜன் புத்திரர் பாண்டுவிற்குக் குந்தி, மாத்ரியென இருவர் தேவியர். இவர்களில் குந்திக்குத் தருமன் பீமன், அருச்சுநன் என மூவர் குமாரரும், மாதரியிடம் நகுலனும் சகாதேவனும் பிறந்தனர். இவர்கள் சரித்திரத்தைப் பாரதத்திற் காண்க. |
பாண்டாயனி | ஒரு ரிஷி. (பா. சபா) |
பாண்டிநாடு | வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியார், தெள்ளார் புனற் கன்னி தெற்காகும் உள்ளார, ஆண்ட சடல்கிழக் காமைம்பத் தறுகாதம், பாண்டி நாட்டெல்லைப்பதி’ இவற்றை எல்லை யாகக்கொண்ட நாடு. The Modern distriots of Tinnevelly and Madure in South India. Its Capitals at different periods were Uragepura now called Negapatim and Madura. |
பாண்டியன் அறிவுடை நம்பி | இவன் சிறந்த அறிவுடையான், எல்லாச் சுகங் களிலும் புத்திரப்பேறு சிறந்த தென்பதைப் பாடியவன். இவன் காலத்துப் பிசி ராந்தையார் புலவர். (புற நா) (அக நா.) |
பாண்டியன் ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன் | கோவலனைக் கொல்வித்தவன்; கற்றோர்பால் மதிப்புடையான். ஊழ்வலியாற் கோவலனைக் கொல்வித்தான், இவன் தன்னாகொக்க ஆரியரைத் தருவித்தமையின் இப்பெயர் பெற்றான். (புற~நா.) |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துசிய நன்மாறன் | ஆவூர் மூலங்கிழாராற் பாடப் பெற்றவன். இவன் தமிழ்நாட்டறசர் மூவரினும் மேம்பட்டு விளங்கினோன், இவனைப் பாடிய புலவர், மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஆவூர்மூலங்கிழார், வடம் வண்ணக்கன் பெரிய சாத்தனார். (புற~நா.) |
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் | பாண்டியனிடத்தில், ஏனாதிப்பட்டம் பெற்றவர்போலும், கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.) (குறுந்தொகை). |
பாண்டியன் கருங்கையொள்வாட பெரும் பெயர் வழுதி | ஒரு பாண்டியன். இரும் பிடர்த்தலையரால் பாடப் பெற்றவன்; ஈரமுங் கொடையு முடையவன். (புற. நா.) |
பாண்டியன் கானப் பேர்தந்த வுக்கிரப் பெருவழுதி | ஔவைபாடலுக்களிதவன். திருவள்ளுவர் குறளுக்குச் சிறப்புப்பாயிரங் கறினவன். வேங்கை மா பனை வென்று கானப்பேர் அரண்கொண் டான். (புறம்). |
பாண்டியன் கீரஞ்சாத்தன் | ஆவூர் மூலம் கிழாரால் பாடப் பெற்றவன். இவன் புலவர்க்கு ஆணையிட்டுப் போகாது மறுத்து உணவளித்தவன். இவனுக்குப் பாண்டிக் குதிரைச் சாக்கயவன் எனப் பெயர் உண்டு, (புறநா). |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சியமாறன் வழுதி | ஐயூர் முடவனாராலும், மருதனிள நாகனாசாலும், பாடப் பெற்றவன். வடநாட்டாசரை வென்று கீழ்ப்படுத்தினவன், இவன் கூடகாரத்து இறந்ததனால் இப்பெயர் பெற்றான். (புறநா.) |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் | மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் பாடப் பெற்றவன். கூடினோர்க் கினியன், கூடார்க்குப் பகைவன். (புற~நா.) |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் | பகை வரை, வெல்லுதலிற் சிறந்தவனும், குடிகளைப் பாதுகாத்தலில் வல்லவனும், கல்வியுடை யோனுமாம். (புற நா) |
பாண்டியன் நெடுஞ்செழியன் | குடபுலவியனாரால் பாடப்பெற்றவன். தலையாலங் கானத்துச் செருவென்றவன். இவன் சேரன், செம்பியன், திதியன், எழுங், எருமையூரான், இருங்கோ வொண்மான், பொருநன், இவர்கள் எழுவரையும் வென்றவன். இவன் ஊர் கொற்கை, இவன் மீது மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி பாடிப் பரிசுபெற்றார். இவனை சோழனும், சேரனும் சிறியனென் றிகழ வஞ்சினக்காஞ்சி பாடினன். (புறம் 72.) |
பாண்டியன் படித்துறை | இது பொற்ராமரையின் வடபாலுள்ள படித்துறை. (திருவிளை). |
பாண்டியன் பன்னாடு தந்தான் | இவன் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த பாண்டிய மன்னரில் ஒருவன். (குறு 270.) |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | நெடும்பல்லியத் தாராலும், காரிகிழாராலும், நெட்டிமையாராலும் பாடப் பெற்றவன். அநேக யாகங்களைச் செய்தவன். சிவமூர்த்தியிடம் அன்பு வாய்த்தவன். (புற நா.) |
பாண்டியன் புலவன் | சோழன் புறங்கொடையிற் பாடியது. “ஆறெல்லாஞ் செந்நீரருகெல்லாம் பல்பிணங்கள், துறெல் லாஞ் சோழன் சுரிகுஞ்சி மாறில்லாக், கன்னிக்கோனேவமுடிக்காரிக் கோன். பின்றொடரப் பொன்னிக்கோன்யோன புகார்” |
பாண்டியன் மதிவாணனார் | நாடகத் தமிழ் நூலாசிரியர்களில் ஒருவர். |
பாண்டியன் மாறன் வழுதி | இவன் மாறன் வழுதி யெனவுங் கூறப்படுவான். மதுரைப் பாண்டியர் மரபினன். குறிஞ்சியையும் முல்லையையும் புனைந்து பாடியவன். பூவிலை மடந்தையைக் காண்டலும் பருவவாவறிந்து தலைமகன் பிரிவிற் கிரங்குவது கேட்போரிரங்குதற் குரியதாகும். நற். 97. இவன் பாடியபாட்டு இரண்டு, (97,3011): |
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனால் பாடல் பெற்றவன். இவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவனுடன் நட்புடையான். (புற) |
பாண்டியன்மாகீர்த்தி | இவன் ஒரு பாண்டியன், இவன் இருபத்துநாலாயிரம் ஆண்டு அரசு வீற்றிருந்தான் ஆதலின் இவனும் இவன் சபையிலிருந்தாரும் அறிவு மிகுந்திருத்தலின் தொல்காப்பியமுனிவர் தாம் செய்த இலக்கணத்தை இவன் சபையில் அரங்கேற்றினர். |
பாண்டிவம்சசேனபாண்டியன் | சேரவம் சாந்தக பாண்டியனுக்குக் குமரன். |
பாண்டீச்சுர பாண்டியன் | வம்சசிரோமணி பாண்டியனுக்குக் குமரன், |
பாண்டீரம் | துவாரகையில் இருந்த ஓர் ஆலவிருக்ஷம். இதன் அடியில்கண்ணன் விளையாடிக் கொண்டிருந்தனன். |
பாண்டீரவடம் | கண்ணனும் பலராமனும் கன்றுகள் மேய்த்த துவாரகையி லுள்ள வெளி. (நாச்சியார் திருமொழி.) |
பாண்டு | 1. இவன் விசித்திரவீரியன் தேவியாகிய அம்பாலிகையிடம் வியாசரால் பிறந்தவன். இவன் தேவியர் குந்தி, மாத்திரி. இவன் ஒருமுறை வேட்டைக்குச் சென்று அவ்விடம் மான் உருக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த இருடி தம்பதிகளை மானென்று நிசபுத்தி செய்து அம்பினால் எய்தனன். மான் உருக்கொண்ட இருடி தன் நிசவுருவுடன் வெளிப்பட்டு நீ, யாங்கள் விளையாடியிருந்தபோது அம்பினால் எய்தனை ஆதலால் உன் நாயகியுடன் புணருகையில் உயிர் நீங்குக எனச் சபித்து உயிர்விட்டனன். இச்சாபம் உணர்ந்த அரசன் தனக்கு நேரிட்டதைத் தனது பாரியர்க்குத் தெரிவித்தனன். குந்தி தனக்குத் தெரிந்த மந்திரத்தால் தருமன், வீமன், அருச்சுநன் மூவரையும் பெற்று மிகுந்த மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித்து நகுலசகாதேவரையும் பெறுவித்தனள். பின் அரசன் சிலநாளிருந்து சுவர்க்க மடைந்தனன். இவனை யக்ஷத்தலைவன் அம்சமென்றும் மருத்கணாம்ச மெனவும் கூறுவர். 2. ஒரு இருடி, கொங்குநாட்டில் விஷ்ணுவையெண்ணித் தவஞ்செய்து சித்தியடைந்தவர். 3. தண்டகாரண்யத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு பர்வதம், |
பாண்டு கம்பளம் | இந்திரன் ஆசனம், இதன் அசைவால் இந்திரன் உலகச் செய்திகளை அறிவான் என்பர். (மணிமேகலை). |
பாண்டு சோபாகன் | சண்டாளனுக்கு வைதேக ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்கு மூங்கில் வேலை. (மநு.) |
பாண்டுராஷ்டரம் | பாண்டிய நாடு. (பா. பீஷ்.) |
பாண்டுரோகம் | மார்பு அதிரல், தேகம் சுறசுறத்தல், அரோசகம், மஞ்சள் மூத்ரம், வியர்வை, மந்தாக்னி, தேகம் இளைத்தல், ஆயாசம், இக்குணங் களைத் தனக்குப் பழைய ரூபமாகப்பெறும். இது, வாதபாண்டு, பித்தபாண்டு, சிலேஷ்மபாண்டு, திரிதோஷபாண்டு, மிருத்திகாபுக்தபாண்டு, அசாத்ய பாண்டு, விஷபாண்டு, முதலியவாகப் பேதப்படும். இதனை வசந்தகுசுமா காமாத்திரை முதலியவற்றால் வசமாக்குக. |
பாண்பாட்டு | விளிர்த்த கொம்பினையுடைய யானையை யெறிந்து பறந்தலையிற் பட்டார்க்குயாழ் வாசிக்கும் கைத்தொழிலில் வல்லபாணர் உரிமை செய்தது. (பு வெ.) |
பாண்வாவுரைத்தல் | மாண்ட ஆபாணத்தினை உடையாருக்கு வயலூரன் தன்பாணன் வரவைத் தோழி சொல்லியது. (பு. வெ. பெருந்திணை.) |
பாதகம் | 1. (5) கொலை, பொய், களவு, கள்ளருந்தல், குருந்தை 2. (7.) அகங்காரம், லோபம், காமம், பகை, பேருண்டி, காய்தல், சோம்பல், |
பாதகவுரு | உக்கிரன், புளிந்தன், காலகன், முத்தாயிகன், முதலியவர். |
பாதசுசி | பதினான்காம் மன்வந்தரத்து |
பாதஞ்சலம் | பதஞ்சலியால் இயற்றப்பட்ட யோகபாஷ்யம், |
பாதபங்கயமலை | இது பாதபங்கயமென்றும் வழங்கப்படும். இம்மலையைக் கிருத்திர கூடமென்று தற்காலத்தில் வழங்குகின்றனர். மகத நாட்டின் இராஜதானியாகிய இராசக்ருக நகரத்தின் அருகிலுள்ள மலை, இதில் புத்தன் அடிச்சுவடு உளதென்பர். (மணிமேகலை). |
பாதபீடிகை | புத்தனுடைய பாதப்படி மங்களுள்ள பீடம், பண்டைக் காலத்து பௌத்தரால் வழிபாடு செய்யப்பட்டு வந்ததென்றுந் தெரிகின்றது. இப்பீடிகை மாமணி பீடிகை யென்றும், தாமரைபீடிகை யென்றும், புத்தபீடிசை யென்றும், தருமபீடிகை யென்றும் வழங்கப்படும். (மணிமேகலை.) |
பாதபேதரோகம் | இது, வெகுதூர சஞ்சாரத்தாலும், அதிக உஷ்ணத்தாலும், பாதத்திலுள்ள சிலேஷ்மம் நாசமடைகையில் பிறந்து வாதபித்தத்தை அதிகமாக்கி குதிகால் உள்ளங்கால் முதலிய இடங்களிலும், அவற்றின் ஓரங்களிலும் கீற்றுக்கிற்றான வெடிப்புக்களையுண்டாக்கி அவ்வெடிப்பின் வழியாக இரத்தம் வடியச் செய்வது, (ஜீவ) |
பாதமயக்கு | இது சித்திரக் கவியிலொன்று. மூவர் மூன்றாசிரிய அடி சொன்னால்தான் ஓர் அடி பாடிக் கிரியை கொளுத்துவது. (யாப்பு~வி.) |
பாதம் | இது ஐந்துவகை அவை. சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம், என்பன. |
பாதரஸம் | இதுவே ரஸம் எனும் பொருள் இது பூமியிலுண்டாம் பொருள். இது வெண்மையும் ஒளியும் கனமுள்ள திரவப்பொருள் இது, சைநா,ஜபான். ஐரோப்பா, அமெரிகா முதலிய இடங்களில் அகப்படுகிறது. இது லிங்கமெனும் பொருளுடனும் கலந்திருக்கும். இலிங்கத்தை வாலையிலிட்டு இறக்குவது வாலரஸம் என்பர். இதனை ஒளஷதங்களுக்கும் வேறு வேலைகளுக்கும் உபயோகிப்பர். |
பாதவன்மீகரோகம் | நெய்த நிலவாசம், மலசலம் ஊறிய பதார்த்தம் சிலேஷ்ம பிரதான வஸ்து. இவற்றைப் புசித்தலால் இரண்டு தொடையிலுள்ள நரம்புகளில் சிலேஷ்ம நீர் நிறைந்து பாதங்களில் வியாபித்து துர்மாமிசத்தை வளர்த்து அதைப் புற்றுப்போல் பருக்கச் செய்யும். இது வாத வன்மீகம், பித்தவன்மீகம், சிலேஷ்ம வன்மீகம் எனப்படும். இதனைச் சிலிபதம் எனவும், யானைக்கால் எனவுங் கூறுவர். |
பாதவேகன் | திருதராட்டிரன் குமரன், |
பாதாளகேது | ஒரு அரக்கன், இவன் சரிதையைக் குவலயாச்வனைக் காண்க, காலவன் தவத்தினை மதாவசையால் அழிப்பித்தவன். இருதத்துவசனைக் காண்க. வச்சிரகேதுவின் குமரன் என்பர். |
பாதாஸவாயுமானி பரோமீடர் | (Barometer) இது வாயுவினழுத்தும் சக்தி, உஷ்ணத்தின் ஏற்றத்தாழ்வு, காற்றோட்டம், மழை அல்லது நீராவியின் ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவி, |
பாதீடு | கவர்த்ததலையம்பினையுடைய கிளை கொள்ளை கொண்ட பசு நிரையைச் செய்தார் செய்த தொழில் வகையை அறிந்து கொடுத்தது. (பு. வெ.) |
பாதுகாக்கத்தக்க எச்சில்கள் | மலங்கழித்தல், சலங்கழித்தல், புணர்ச்சி, உமிநீர், முதலிய எச்சிலுடன் செய்யத் தகாதவை ஓதல், பேசுதல், நித்திரை செயல். |
பாத்திரம் | பிரமனிடத்து உதித்த அக்னி. |
பாத்மபுராணம் | பதுமபுராணம் காண்க. |
பாத்ரு த்விதியைவிரதம் | கார்த்திகை சுக்ல பக்ஷத்துவிதியையில் வருவது, இந்நாளில் உடன் பிறந்தாள் தன் உடன் பிறந்தானைத் தன் வீட்டிற்கழைத்து வந்து மரியாதை முதலிய செய்வதாம். இது யமுனை, தன் உடன் பிறந்த யமனைத் தன் வீட்டிற்கழைத்து வந்து விருந்து முதலிய செய்வித்ததால் இதை உலகத்தவர் கொண்டாடுகிறார்கள். இதனால் யமபயநீங்கி இஷ்டசித்தி யடைவர். |
பாநு | 1. தக்ஷன் பெண். குமரன் தேவருஷபன். 2. வசுதேவன் தம்பி. 3. கிருஷ்ணமூர்த்திக்குச் சத்தியபாமையிடம் உதித்தகுமரன். இவனுக்கு ஒன்ப தின்மர் தம்பியர். 4. பிரதிவியோமன் குமரன். 5. தருமன் தேவி. 6. நான்கு முகமுடைய சூர்யன். சிவசூர்யனுக்கு வலப்புறம் இருப்பவன். 7. ஏமாங்கனைக் காண்க. |
பாநுகம்பன் | சிவகணங்களில் ஒருவன், சிவமூர்த்தியின் சந்நிதியில் ஆயிரம் வாயால் சங்கம் பூரிப்பவன். |
பாநுகோபன் | சூரபன்மன் குமரன். இவன் இளமைப்பருவத்தில் தொட்டிலில் தூங்கும்போது சூரியன் முகத்தில் காய்ந்தனன். அவனைப் பிடித்துக்கட்டிப் பிரமன் வேண்டுகோளால் விட்டுப் பாநுகோபன் எனப் பெயர் பெற்றனன். அசமுகியின் கையை அறுத்தவர்களைத் தண்டித்தற்குப் பிதாவின் ஏவலால் புறப்பட்டு இந்திரன் நாட்டைக்கொளுத்திச் சயந்தனைச் சிறையிட்டவன். நவவீரர்களையும் பூதப்படைகளையும் வென்று மூர்ச்சையாக்கிக் கடையில் வீரவாகுதேவர் பிரயோகிக்க எடுத்த பாசுபதாத்திரத்திற்குப் பயந்து மேகத்தில் மறைந்து மயேந்திரபுரி சேர்ந்து இரண்டாம் நாள் தகப்பன் தோற்றதற்கு வருந்தி அவனிடம் செலவுபெற்றுக் கொண்டு மூன்றாநாள் மாயயை வேண்டி அஸ்திரம் பெற்று வீரவாகுவுடன் சண்டை செய்யப் புறப்பட்டு யுத்தத்தில் பலதேவாஸ்திரங்கள் விட்டுச் சலித்து எதினாலும் வெல்லமுடியாதென்று மனமிளைத்து, கடைசியில் மாயை தந்த மோகனாஸ்திரம் பிரயோகித்து வீரவாகுதேவர் முதலியவரைப் பிணித்துக் கடலில் இட்டுத் தந்தையுடன் சயவார்த்தை கூறி மீண்டும் யுத்தஞ்செய்யப் புறப்பட்டு வீரவாகுதேவருடன் போர்செய்து தேவாஸ்திரங்களைப் பிரயோகித்து இரண்டு கரங்களும் முடிகளும் அறுபட்டு இறந்தவன். ஒரு காலத்துத் தன் தாயாகிய பதும கோமளை இலஷ்மி கரத்திருந்த பொன்னங்கிளி வேண்டுமென, வைகுந்தஞ் சென்று வலியப்பிடுங்கிக் கொண்டு வந்து தந்தவன். |
பாநுசீதளமகாராஜா | காசியில் ஆண்ட புத்த அரசன். இவன்குமரன் சோமசீதளன், |
பாநுதேவன் | 1 கிருஷ்ணன் குமரன். 2. க்ஷத்திரியன் பாஞ்சாலத்தேசத்தவன். கர்னனால் கொல்லப்பட்டவன். புத்திரன் சக்கரதேவன். (பா. கான.) |
பாநுமதி | 1. சையாதியெனுஞ் சந்திரகுலத்தரசன் மனைவி. 2. துரியோதனன் தேவி. 3. சகதேவன் பாரியை. 4. அகம்யாதியின் தேவி. 5. கிருதவீரியன் புத்திரி அவள் புத்திரன் சார்வபவுமன் (பா. ஆதி.) 6. ஆங்கிரச புத்திரி. |
பாநுமந்தன் | 1 சநகன் குமரன், 2. காண்டிக்யன் குமரன், 3. சுருதாயு தம்பி. 4. சநகன் இரண்டாம் பேரன் |
பாநுமான் | 1 (சூ) பிரகஸ்தன் குமரன். 2. (சூ.) கேசித்துவசன் குமரன். 3. கலிங்கதேசத்தவன். பீமனால் கொல்லப்பட்டவன், (பா. பீஷ்) |
பாநுவிதியை | இது சித்தரைமாசம் ஞாயிற்றுக்கிழமைத்விதியையில் சூரியனை எண்ணி ஆராதிக்கும் விரதம், |
பாநுவிந்தன் | 1, ஒரு யாதவவீரன். 2. கிருஷ்ணன் குமரன். |
பாநுவுரன் | (சந்.) கெற்கன் குமரன். இவன் குமரன் திரிசாது. |
பானப்பொருள்கள் | தேயிலைக் சஷாயப்பானம், காப்பிக்கொட்டைக் கஷாயபானம், கோகோபானம், திராக்ஷரஸ திராவகம், (ஒயின்) பானம் ஆப்பைன் (Hop bina) பானம், பார்லி அரிசியாலாகிய திரவபானம், ரம் எனும் பானம், இது கரும்பின் ரஸத்தால் செய்யப்பட்டது, அரக் எனும் பானம், இது அரிசியிவிறக்குவது. |
பானுதத்தன் | (க்ஷத்) சகுனியுடன் பிறந்தவன். பீமனால் கொல்லப்பட்டார். (பார்த்ரோ.) |
பானுதாசர் | பைட்னபுரத்தில் வேதியர் குலத்தில் பானுதாசர் எனும் அடியவர், சூரியப்பிரசாதத்தால் சத்யசீலாதி குணம் களூற்றவராய்த் தன் மனைவியுடன் கூடிச் சவுளிவியாபாரஞ் செய்து வந்தனர். ஒரு நாள் அயல்கிராமத்தில் நடந்த சந்தைக்குத் தம்மொத்த சவுளி வர்த்தகருடன் கூடிக்கொண்டு சென்று காரியம் முடித்துக்கொண்டு பொழுதுபோனதால் அரிகதை கேட்க ஆவல்கொண்டு தன் சவுளி முதலியவைகளைத் தன்னுடன் வந்தவர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிக் கதை நடக்குமிடத்திற் கேகினர். மற்ற வர்த்தகர்கள் இவரிடத்துப் பொருமையால் இவரது குதிரையை அவிழ்த்து விடுத்து மூட்டைகளத் தனையும் குளத்திலெறிந்து விட்டுத் திருடர் கொண்டனர். என்போமென் றிருக்கையில் பெருமாள் செயலால் கள்வர்வந்து மற்ற சவளிக்காரரது மூட்டை களைக் கொண்டு அகன்றனர். பானுதாசர் கதை கேட்டு வந்ததும் பகவான் குதிரையை மாத்திரம் பிடித்துவந்து தந்தனர். பின் தாசர் தம்மிடம் வந்து தம் நண்பர்கள் வருந்துதலைக்கண்டு நடந்தவைகளை யுணர்ந்து குளத்திலெறிந்த மூட்டைகளை எடுத்துத் தம் நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துப் பண்டரி புரத்த விருந்தனர். இப்பண்டரி புரத்தில் ஒரு வேதியன் வித்யாசகரத் தரசனாகிய ராமராஜன் அம்பிகை பூசாதுரந்தானாயிருத்தல் கண்டு அவனிடஞ் சென்று பண்டரி வைகுந்தம் என்றனன். அரசன் பண்டரி சென்று பெருமாளைத் தரிசித்து அன்று முதல் அம்பாள் பூஜைவிட்டு அரிபூஜை மேற்கொண்டனன். ஒரு நாள் பானுதாசர் வித்யா நகரஞ்சென்று பகவானைப் பூசிக்கையில் பகவான் தரிசனந்தந்து ஒரு ரத்னாஹாரத்தை அவரது கழுத்தி லிட்டுச்சென்றனர். விடிகையில் பானுதாசர்கழுத்தில் ஹாரமிருக்கக்கண்டார் பானுதாசர் திருடினர் என்று அரசனுக்குக் கூற அரசன் தாசரைக் கழுவேற்றக் கட்டளையிட்டனன். சேவகர்தாசரைக் கழுவேற்ற அம்மரத்தடியில் கொண்டு செல்லத் தாசர் எதுவரினும் உன்திருவடி மறவேனென்று கழுவை நோக்கக் கழு தளிர்த்தது. இதனை அரசனறிந்து அபராதக்ஷமை வேண்டினன். தாசர் பண்டரியடைந்து பெருமாளைத் துதித்திருந்தனர். |
பான்முல்லை | செவ்வரி கருவரி பரந்த மையுண்ட விழியினையும் தெரிந்த ஆபரணத்தினையு முடையாளை மணந்தவன் வருத்த நீங்கின மனத்துடனே விதியை ஏத்தியது. (பு. வெ. பொது). |
பாபநக்ஷத்ரம் | திருவாதிரை, கேட்டை, ஆயிலியம், பரணி, கார்த்திகை, முப்பூரம், இந்நாட்களில் சுபகார்யம் செய்யலாகாது. இந்நக்ஷத்ரங்களுடன் பாவவராங்களுற்று இருத்தைகள் கூடில் அவமிருத்து யோகம் எனப்படும். இதிற் செய்யும் காரியங்கள் நாசமாம் இந்த யோகங்களில் வியாதி கண்டால் மரணம் நேரும், (விதானமாலை) |
பாமுளூர் | இது சேரநாட்டிலுள்ள தோரூர், (புற. நா.) |
பாம்பன் | இவன் ஒரு வீட்டில் நெல்திருடித் தீமைமுதலிய செய்து மறுபிறப்பில் பாண்டியநாட்டிற் பிறந்து சிவபணிசெய்து திருவிழாவில் வாகனந்தாங்கி மீண்டும் எலியாகப் பிறந்து சிவாலயத்தில் பணிவிடை செய்து வலம் வந்திருக்குஞ் சமயத்தில் கார்த்திகை தீபவுற்சவத்தில் நெய்விளக்குஒளி குறைய அதனை முகத்தால் தூண்டித் தீ முகத்திற்பட்டு வெளியில் வரப் பருந்தடிக்க அதற்குத் தப்பித்துக்கொண்டு உயிர்விட்டு விமானத்தேறி யமபுரஞ்சென்று மறுபிறப்பில் சிவபணி செய்ததாலும் திருவிழாவில் வாகனந்தாங்கியதாலும் விரோசனன் என்னும் அசுரனுக்குப் புத்திரனாகிய மாபலியாகப் பிறந்தனன். |
பாம்பாட்டி | அந்தணன் சூத்திரகன்னிகையைப் புணரப் பிறந்தவன். |
பாம்பாட்டிச்சித்தர் | இவர் பாண்டிநாட்டில் இருந்ததாகக் கூறுகின்றனர். இவர், வனாந்தரத்தில் பாம்பைப் பிடித்தாட்டிக் கொண்டிருந்து ஒருமுறை நவரத்ன பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டை முனிவர் அங்குவர அவரிடம் தீக்ஷை பெற்றுச் சமாதியிலிருந்து மீண்டும் எழுந்து பல சித்துக்கள் செய்தவர். இவர் ஒரு அரசன் இறந்தபோது அவன் உடலிற் புகுந்து அவன் மனைவியுடன் இருந்து செத்த பாம்பொன்றை ஆட்டியதால் இப்பெயர் பெற்றனர் என்பர். இவர் செய்த நூல் பாம்பாட்டிச் சித்தர்பாடல், சித்த ராரூடம், சில வைத்திய நூல்கள். இவர் கொங்கு நாட்டில் மருதமலை யடிவாரத்தில் தவஞ்செய்திருந்ததாகவும் கூறுவர். |
பாம்பின் பகை | இருதலை மணியன், செந்நாய், மயில், அன்னம், எருதின் குளம்பு, கீரி, இடி, மின்னல், கரடி, பன்றி செம்போத்து, கருடன், முதலை, ஆந்தை, காக்கை, கூகை. வயது 120. இது 120 வருஷம் வாழ்ந்தபின் உடல் தேய்ந்து குறுகும். படம் சிறகாய்ப் பறக்கும். அது மாநாகம்; குக்குடசர்ப்பம் எனப்பெயர் பெறும். அக்காலத்து விஷம் கண்ணிலிறங்கிப் பார்த்த பொருளை எரிக்கும். இதனை ராசாளிப் பாம்பென்பர். இவற்றின் வேகங்களை வாயு வேகம், வருணவேகம், அங்கிவேகங் களிலடக்கிப் பத்துக் கூறுவர். (சித்தராரூடம்,) இவை, பூமியிலுண்டாம் கால்களிலாத புழு இனங்களில் திருந்தியவை. இவற்றிற்கு தலையும் வாலும் குறுகி உடல் பருத்து நீண்டிருக்கும். இவைகளில் சில 100. அடிகள் நீண்டவை. இவ்வினத்தில் 300க்கு மேற்பட்ட வகையுண்டு என்பர். இதிற் பல கொடுவிஷமுள்ளவை. சில சில் விஷ முள்ளவை. இவற்றில் நல்லபாம்பென்பதே பொல்லாத விஷமுள்ளது. இது படமெடுத்தாடிச் சீறிக்கடிப்பது. இவற்றிற்கு விஷம் காலையில் சூரிய வெப்பத்தில் படம் விரித்தாடலால் உண்டாகிறதென்பர். பாம்புகள் முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. அம்முட்டைகள் பாம்பினத்திற்குத் தக்க வுருவத்தினையும் நிறத்தினையும் பெற்று நீண்டுள்ளவை. இந்தப் பாம்பின் வகையில் பலபேதம் உண்டு, நல்லபாம்பு, சாரைப்பாம்பு, விரியன் வகை, மண்ணுளிப் பாம்பு, கொம்பேறி மூர்க்கன், பச்சைப் பாம்பு, நீர்ப்பாம்பு, சிறு பாம்பு முதலிய உண்டு. இவற்றின் எலும்பு பூமியில் நகரக் கூடிய விதமாய் இணைக்கப்பட்டுள்ளது. நாக்குப் பிளவுபட்டது, நிறம் பலவகை. இவை வருஷத்திற்கிருமுறை சட்டையுரிப்பவை, |
பாம்பின் பொது அமைப்பு | பாம்புகளின் தேகம் நீண்டு உருண்டிருக்கும். தலை முட்டை வடிவம் பெற்று வாய்ப் பக்கம் குறுகியிருக்கும், வால்மெலிந்து கூரியதாயிருக்கும், இதற்கு வேறு உறுப்புக்கள் இல்லை, சருமம் செதில் செதிளாகவிருக்கும், கண்கள் வட்டமாயிமையிலாதிருக்கும். இவைகளுக்கு காதுகள் கிடையா. கண்களுக்கடுத்துக் கேள்விச் சவ்வுகளுண்டு, அவற்றால் சிறு சத்தத்தையு மறியும். இது, அடிக்கடி தன் பிளந்த நாவை நீட்டி வஸ் துக்களின் தன்மையை யறிந்து கொள்ளும். இதற்கு ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்ட தொளை வாய்ந்த எலும்புகளாலாகிய முதுகெலும்புகளுண்டு. இவற்றால் பலவிதமாக வளைந்தோடும், இதன் விலா எலும்புகள், இரட்டையாட்டையாய் முதுகெலும்புடன் பொருந்தியிருக்கின்றன. பாம்பின் தோல், ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கின பல செதிள்களாலானது. இதன் விலா செதிள்களைப்பற்ற, செதில்கள் பூமியைப்பற்றுதலால் இது ஊர்ந்து செல்லு கிறது. நமக்கு இரண்டேகால், பாம்பிற் குடம்பெல்லாம் கால். அதன் விலாவுடனியைந்த செதிள்களெல்லாம் கால்கள். பற்கள் மேல்கீழ்வாய்களில் வளைந்து கூர்மையாக இருக்கின்றன. இது ஆகாரத்தை மென்று தின்கிற தில்லை. பல்லாற் பிடித்து விழுங்குகிறது. இதன் பற்கள் உள் நோக்கி வளைந்துள்ளன. பாம்பு இரையை விழுங்குகையில் அத்தாடை யெலும்புகள் விரிகின்றன. இது, தவளை, எலி குருவிசுளின் குஞ்சுகள் முதலியவற்றைத் தின்று ஜீவிக்கிறது. விஷப்பாம்புகளுக்கு பற்களில் சிறு தொளைகள் உண்டு, அவற்றின் வழியாக அருகிலிருக்கும் பையிலுள்ள விஷம் இரங்கிக் கடிவாயிலூரும். இந்த விஷப்பை மேல்வாயின் பின்பக்கத்திலிருக்கிறது. இதில் மஞ்சள் நிறமான எண்ணெய்போன்ற திரவம் உண்டு. இதுவே விஷம். இது, 20க்கு மேற்பட்ட தோல் முட்டைகளையிடும், அவை சூரிய உஷ்ணத்தாலும் மற்றவையாலும் சூடுகொண்டு பொரிந்து குஞ்சுகளாம். இது மண்டலமாக வளைந்து தூங்கும். பாம்புகள் அடிக்கடி சட்டையுரிக்கும். இவ்வகைப் பாம்பில் பலசாதி உண்டு. இந்துக்கள், சர்ப்பசாதியை பிரம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர ஜாதியாகப் பிரித்திருக்கின்றனர். பிரமசர்ப்பம், மேற்புறம் பல நிறமாய்ப் படத்தில் சங்கவடிவான புள்ளிகள் பெற்று ஆலயங்களிலும், க்ஷத்ரியசர்ப்பம், பொன், பேரீந்தின் பழம், முதலிய நிறம் பெற்று படத்தில் சங்கு, சந்திரன், சக்கிர முதலிய புள்ளிகளைப் பெற்று மரப்பொந்துகளில் வசிக்கும். வைசியசர்ப்பம், இது பல நிறம் பெற்று படத்தில் வட்டம், பிறை இவைகளை யொத்த புள்ளிகளைப்பெற்று வீடுகளில் வசிக்கும். சூத்திரசர்ப்பம் கருநிறம் பெற்று உடம்பெல்லாம் சிறுத்து நீண்ட புள்ளிகளைப் பெற்றுப் புற்றுகளில் வசிக்கும். ஆண்சர்ப்பம்; அகன்ற படத்தையும், பெண்சர்ப்பம் குறுகிய படத்தையும் பெற்றிருக்கும். இதில் கருநாகம், சிறுநாகம், விரியன், பெருவிரியன், ரத்தவிரியன், கட்டு விரியன், கண்ணாடி விரியன், கத்திரி விரியன், குறுவிரியன், புல்விரியன், சலவிரியன், முரட்டுக் கத்திரிவிரியன் துண்டுவிரியன், வழலைப்பாம்பு, வெள்வழலே, கருவழலை, மயக்கரவு, முருக்குசர்ப்பம், சாரை; இது பருத்து நீண்ட உடலுள்ளது. வெண்சாரை, கருஞ்சாரை, மஞ்சட்சாரை, செஞ்சாரை, புடையன் இது நீண்டவுருவத்தை யும், அழுக்கு நிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகளை உண்டாக்கும். |
பாம்பு | இது, ஒரு விஷமுள்ள ஊரும் பிராணி. இவைகளில் சில பெருவிஷ முள்ளவை. சில சில்விஷமுள்ளவை. இவை உருண்டு நீண்டு பிளவுபட்ட நாவினையுடையவாய், கண்ணே செவியாகவுடையன. இவற்றுள் நாகம், விரியன், கருவழலை பெருவிஷமுள்ளவை, சாரை, பண்டவி, கண்குத்திப் பாம்பு, கருவழலைப் பாம்பு, குக்கிடம், நீர்ப்பாம்பு, கொம்பேறி மூர்க்கன், சாணார மூர்க்கன், புடையன், சவுடி மயக்கரா, மண்ணுளி முதலிய, இவை ஆடி மாதம் கருக்கொண்டு கார்த்திகையில் பொரிக்கும். இவை 200க்கு மேல் முட்டையிடும். அவற்றிற் சில கெடும். இவை பிறந்த 10 நாட்களில் ஆதித்தனை நோக்கிப்பார்க்க மேற்பற்கள் நான்கிலும் விஷமூலும் இப்பற் களுக் கடுத்த பாகத்தில் விஷப்பையுண்டு. அவ்விஷத்தைப் பற்களிலுள்ள துவாரத்தின் வழியாய் விஷத்தை யூற்றும், இவற்றின் பற்கள் காளி, காளாதரி, யமன், யமதூதி. இது பிறந்த 60 நாளில் தோலுரிக்கும். விரியன் பாம்பின் வகை, கத்திரி விரியன், விரியன், பெருவிரியன், ரத்த விரியன், குறுவிரியன், புல்விரியன், முருக்கரவு சலவிரியன், முரட்டுக் கத்திரிவிரியன். |
பாயகன் | ஒரு இடையன். இவன் திருமாலின் சங்கு தாங்கிய கைகளுக்குக் கடகமும், ஆழ்வார்களின் பாசுரங் கேட்ட செவிக்குக் குண்டலமும் அணிந்து முத்தி பெற்றவன். |
பாயிரம் | 1, என்பது நூலிலடங்கிய பொருளை முன்னே கூறுதல். அது பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் என இருதிறப்படும். அவற்றுள் பொதுப்பாயிரம், நூலினது வாலாறும், ஆசிரியன் வாலாறும், ஆசிரியன் பாடங்கூறும் வரலாறும், மாணாகன் வரலாறும், மாணாக்கன் கல்வியறிவும் வாலாறுங்கூறுவது. சிறப்புப் பாயிரமாவது; நூலாசிரியன் பெயர், நூல் வந்தவழி, நூல் வழங்கும் எல்லை,நூலின் பெயர், நூலின் யாப்பு, நூல் குறித்த பொருள், கேட்போர், நூற்பயன், முதலிய கூறுவது. இப்பாயிரம் இயம்பு வோர், தன்னாசிரியன், தன்னோடு கற்றோன், தன் மாணாக்கன், உரைகாரன் முதலியோர். 2. பல்வகைப் பொருளையும் தொகுத்து முன்னுரைப்பது. இதற்கு முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை யெனவும் பெயர். இப்பாயிரம் பொதுச்சிறப்பென இருவகைத்து. (நன், பொ.) |
பாய் | இது, நித்திரை செய்தற்கு மெல்லிய கோரை முதலியவற்றால் செய்யப்பட்டது. இது, கொத்தளிப்பாய், கோரைப்பாய், புற்பாய், பிரப்பம் பாய், தாழம்பாய், ஓலைப்பாய், சம்புப்பாய், ஈச்சம்பாய், தோற்பாய், எனப் பலவகை. |
பாய்களின் விதி | பனையோலைப் பாயில், சயனிப்பவர்களுக்கு அதிக உஷ்ணமும், வாதரிக்கிரகமும் செய்யும், சற்று பித்தம் விளைக்குமென்பர். தாழம்பாயில், தூங்குபவர்களுக்கு தலை சுழற்றல், பாண்டுரோகம், பித்ததோஷம், நீராமைகட்டி, வெகு மூத்திரம், இவைகளை விலக்கும். மூங்கிற்பாயில், துயில்பவர்களுக்கு மூத்திரக் கிரிச்சினம், உஷ்ணபித்தம், ஆகிய இவைகள் மேலு மேலும் விருத்தியா மென்க. சிற்றீச்சம் பாயில், நித்திரை செய்பவர்களுக்கு அதிக உஷ்ணம், தேகவுளைவு, கபசினம் இவையுண்டா மென்க. கோரைப் பாயில், சயனிப்பவர்களுக்கு அக்கினி மந்தமும், சுரதோஷமும், நீங்ங்கும் தேசம் குளிர்ச்சியுண்டு. சுகநித்திரை கொடுக்கு மென்க. பேரீச்சம் பாயில், சயனிப்பவர்களுக்கு வாதகுன்மம், சோகையும், நீங்கும். பசிபாண்டு உஷ்ணாதிக்கம் உண்டாமென்க. சாதிப்பாயில், அல்லது பிரப்பம்பாயில் சயனிப்பவர்களுக்கு மூலரோகம், சீதமலம், சீதசுரம், சிரோரோகம் இவையுண்டாக்குமென்க. |
பாரசீக மதம் | இம்மதத்தை ஜரசுஸ்ரா யென்பவர் ஸ்தாபித்தார். இவர் திறிஸ்து பிறக்க அநேக வருஷங்களுக்குமுன் இருந்தவர். இவர் இறந்து 3534 வருஷம் ஆயினதென்று கூறுகிறார்கள். இவர் பால்யத்தில் வேத வேதாங் கங்களைக் கற்று மதஸ்தாபனஞ் செய்யத் தொடங்கினர். இவர்களுடைய தேவனுக்கு ஜரானஹாகுரான் என்று பெயர். இவர் இந்த உலகத்தைச் சிருட்டித்து அஹரீமா (இருட்டு) என்னும் உபதேவனைச் சிருட்டித்து அவனை அஞ்ஞானத்திற்குத் தேவனாக்கி அஹரீமா செய்யும் கெட்ட காரியங்களைப் போக்க ஆரமசெட் என்னும் சூரியனை சிருட்டித்தனர். இவ்விருவருக்கும் (3000) வருடம் யுத்தம் நேரிடப் பிறகு ஆரமசெட் செயித்தானாசையால் ஜனங்கள் அஞ்ஞானம் நீங்க ஆரமசெட்டைத் துதிக்க வேண்டும், இறந்தோர் மூன்று தினத்தில் கடவுளை அடைவர். இறந்த சரீரத்தைக் காக்கையும் கழுகும் உண்ணவிடல் புண்ணியம். இவர்கள் மீதி விஷயங்களெல்லாம் இந்துக்களை அனுசரித்திருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் அக்னியைப் பூசிப்பர். கடவுள் முதலில் ஆகாசத்தையும் பூமி, பர்வதங்கள் சூரிய சந்திராதி நக்ஷத்திரங் களையும் சிருட்டித்தாரென்றும், பிறகு கெயோமாத் என்னும் ஆதிமனுஷன் உற்பத்தியாகையில் அவனைக் கொல்ல அவ்விடத்திலிருந்து ஓர் இடபம் பிறந்ததென்றும், அதன் வயிற்றினின்று 10 புருடர்களும் பெண்களும் பிறந்தார்களென்றும் அவர்களில் மெஜிக்கியா, மெஜிக்கினா என்னும் முதல் தாய் தந்தையர்கள் பிறந்து ஆட்டின் பால் குடித்து அவர்களும் அவர்களுக்குப் பிறந்த சயமாக்விசிகாக், என்பவரும் பாவிகளானார்களென்றும்; ஆதலால் உலகத்தவர்களெல்லாம் பாவிகளானார்க ளென்றும் இந்த லோகமுழுதும் தூமகேதுவால் சாசமாகும் என்றும் கூறுவர். |
பாரதன் | சமரன் குமரன். இவன் குமரன் |
பாரதப்போர் | கி மு பன்னிரண்டாம் நூற்றாண்டு. |
பாரதம் | சந்திரன் புத்திரன் புதன். இப்புதன் மனுப் புத்திரனாகிய இளன் என் பவன் பார்வதியாரின்சாபத்தால் இளையென்னும் பெண்ணுருவடைய அவளைப் புணர்ந்தனன். அவள் வயிற்றில் புரூரவா பிறந்தனன். இவன் ஊர்வசியைப் புணர்ந்து ஆயுவைப் பெற்றான். ஆயுவின் புத்திரன் நகுஷன். நகுஷன் புத்திரன் யயாதி, இவ்வகைமுறையே தோற்றிய அரசர்களின் சந்ததிகளைச் சந்திரவம்சாவளியிற் காண்க. இந்த வம்சத்தில் பரதன் என்னும் அரசன் பிறந்தான், அதனால் இக்குலத்தவர் பாரதராயினர். இக்குலத்தில் குரு என்பான் ஒருவன் பிறந்தான். அதனால் இக்குலத்தவர்க்குக் கௌரவர் எனவும் பெயர் உண்டு. பிரமன் சாபத்தால் வருணன் சந்திரகுலத்துச் சந்தனு என்னும் அரசனாகவும், கங்கையு மாண்ட பெண்ணாகவும் உதித்தனர். இக்கங்கை வயிற்றில் வசிட்டர் சாபத்தால் வசுவென்பவன் புத்திரனாகப் பிறந்தான். இவனே பீஷ்மன். சந்தனு பரிமளகந்தியைப் புணர்ந்து சித்திசாங்கதன், விசித்ரவீரியன் இருவரைப் பெற்றான். சித்திராங்கதன் என்னும் பெயரால் பொறாமை கொண்ட காந்தருவன், சித்திராங்கதனைக் கொல்லப், பீஷ்மன் விசித்திரவீரியனுக்கு முடிகவித்துக் காசிராஜன் புத்திரியாகிய அம்பிகை, அம்பாலிகை என்னும் இருவரையும் மணஞ் செய்வித்தனன். இவ்விசித்திர வீரியன் பன்னாள் அரசாண்டு சுவர்க்கமடைந்தபின் சந்ததிக்கு மகவிலாமை யால் பரிமளகந்தி வேதசியாசரைச் சந்தித்துத் தனதெண்ணத்தைத் தெரிந்து அம்பிகையைப் புணரும்படி வேண்ட அவ்வகை அவர் புணருகையில் அம்பிகை, கண்மூடிப் புணர்ந்தமையால் கண்ணிலான் பிறப்பன் என்றனர். அதனால் வருந்திய தாய், மீண்டும் அம்பாலிகையைப் புணரவேண்ட அவள் அச்சத்தால் உடல் வெளுத்தமையால் வெண்ணிறமான குமரன் உதிப்பன் என்றுகூறிப் போக மனக்குறைவடைந்து மீண்டும் வியாசரை நினைக்க வந்த அவரை நோக்கிக் குற்றமிலா மகவுவேண்டுமென, அம்பிகை அஞ்சித் தோழியை விடுக்க அவள் களித்திருந்தமையால் சுபத்திரன் பிறப்பான் என நீங்கினர். இவர்கள் முறையே திருதராட்டிரன் பாண்டு; விதுரன் முதலியோராம். இவர்களுள் திருதராட்டிரன் அத்தினபுரியை ஆண்டு வந்தான். இத்திருதராட்டிரனுக்த் துரியோதனன் முதலிய நூறுபுத்திரர் உண்டு. பாண்டு குந்தியை மணந்து ஒரு நாள் வேட்டைக்குச் சென்று கிந்தமன் சாபத்தால் புத்திரன் இன்றி இருந்தமை பின் குந்தி கணவனது கட்டளைப்படி துருவாசர் தனக்கு உபதேசித்த மந்திரப்லத்தால் யமனைத் தியானித்துத் தரும புத்திரனையும், வாயுவைத் தியானித்து வீமசேநனையும் இந்திரனைத் தியானித்து அருச்சுனனையும் பெற்று அசுவனிதேவ மந்திரத்தை மாத்திரிக்கு உபதேசித்தனள். மாத்திரி இம்மந்திரத்தைத் தியானித்து நகுல சகாதேவரைப் பெற்றனள். பாண்டு காமத்தால் மாத்திரியைப்; புணர்ந்து தேகவியோகமாயினன். பாண்டவரும் துரியோதனாதியரும் இளமைதொட்டு ஒருவர்க்கொருவர் பகைபாராட்டி வந்தனர். துரியோதனன் வீமனிடத்துப் பகைபாராட்டி ஒரு நாள் நித்திரை செய்கையில் கயிறுகளாற் கட்டிப் பிராமணகோடி யெனுங் கங்கைக்கரையில் வெள்ளத்திலிட அவன் கயிறுகளைச் சேதித்துக்கொண்டு கரையடைந்தனன். மற்றொருநாள் பல சர்ப்பங்களை ஏவிக்கடிப்பிக்க அவற்றைக் கொன்றனன். இவ்வாறு துரியோதனாதிகள் பாண்டவர்களுக்குத் தீமை செய்து வந்தனர். பாண்டவரும் துரியோதனாதியரும்கிருபாசாரியர் துரோணாசாரிய ரிவர்களிடம் தனுர்வித்தை பயின்று வந்தனர். இவ்விருவரும் இவ்வாறு வளருகையில் திருதராட்டிரன் தருமபுத்திரனுக்கு இளவரசு பட்டந் தந்தனன். அதுபொறாத துரியோதனன், தந்தையுடன் கூறி வாரணாவதத்தை ஆளும்படி கட்டளை யிட்டனன். ஒருமுறை அரக்குமாளிகை ஒன்று கபடமாய் நிருமித்துப் பாண்டவர்களைக் கொல்ல எண்ணி வருவித்து அதிலிருக்கச் செய்கையில் நடுராத்திரியில் வீமன் இவர்களது கபடமெண்ணி விழித்திருந்தோனாதலால் அதைக்கொளுத்தி விட்டு ஒருவரும் அறியாமல் தமயன் தம்பியரையும் தாயையும் தாங்கிக்கொண்டு இடும்பவனம் அடைந்தனன். அங்கு வந்த இடும்பனைக் கொன்று அவனுடன் பிறந்த இடும்பியைத் தாய்சொற்படி மணந்து கடோற்கசனைப் பெற்றனன், அவ்விடம் நீங்கி ஐவரும் வேதியர் வேடம் பூண்டு ஏக சக்ர நகரடைந்து தாய்சொற்படி பகாசுரனை வீமன் கொலைபுரிய வாழ்ந்திருந்தனர். பின் திரௌபதியின் சுயம்வரம் கேட்ட அருச்சுனன் சென்று அங்குக் கட்டியிருந்த மச்சயந்திரத்தை அம்பினாலெய்து அறுத்துத் திரௌபதியைக் கொண்டுவர, வேதவியாசமுனிவர் கட்டளைப்படி ஐவரும் அவளை மணந்து வாழ்ந்திருக்கையில் திருதராட்டிரன் சொற்படி அத்தினபுரம் ஐவரும் அடைந்தனர். ஆண்டு திருதராட்டிரன் அத்தினபுரியைத் துரியோதனனும் காண்டவ பிரத்தமென்னும் ஒரு பழைய நகரத்தைப் பாண்டவரும் ஆள நிருமித்தனன். கண்ணனருளால் அந்நகரம் தெய்வத்தச்சனால் நிருமிக்கப்பட்டு இந்திரப்பிரத்தம் ஆயிற்று. இவ்வாறிருக்கையில் ஏதோ ஒரு காரணத்தால் வனத்திற்குத் தருமபுத்திரரால் அனுப்பப்பட்ட அருச்சுநன் ஆண்டு நீர்த்த யாத்திரை செய்து நாககன்னிகையையும், பாண்டியன் குமரியையும் கிருஷ்ணன் தங்கையாகிய சுபத்திரையையும் மணந்து நீங்கிக் கிருஷ்ணனுடன் காண்டவன மெரித்துக் காண்டீவம், அம்பறாத்தூணி அநுமக்கொடியுள்ள ரதம், அக்நிதரப் பெற்று மயனால் சபை பெற்றுத் தம் பட்டணமடைந்திருக்கையில் தருமராசன் நாரதர் சொற்படி இராசசூய யாகஞ்செய்து சம்ராட் என்னும் பெயரடைந்து செல்வத்துடனிருப்பதைக் கண்டு போன துரியோதனன், பொறாமை கொண்டு சகுனி கணர்ன் முதலானோரது துசராலோசனையால் ஒரு மண்டபங் கட்டுவித்துப் பாண்டவரை வருவித்து அவருடன் சகுனியைக் கொண்டு சூதாடுவித்து எல்லாச் செல்வங்களையும் கவர்ந்து அவர்களையும் அடிமைகொண்டு திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு மானபங்கஞ் செய்வித்தான். கண்ணபிரானருளால் மாளாத்துகில் வளர அதை ஒழித்து அவளைத் தன் மடிமீது உட்காரக் கட்டளையிட்டதனால் திரௌபதி, அவனைத் தொடையின் வழி உயிர் நீங்கச் சபித்து என்னை அவமதித்த இத் துரியோதனாதியரை வென்று வெற்றி முரசு முழங்குகையில் என் கூந்தலை முடிப்பேனென்று சபதஞ்செய்தனள். மற்றவர்களும் அவ்வாறே சபதஞ் செய்தனர். இவை கேட்ட திருதராட்டிரன் பாண்டவரது அடிமை நீங்கி ஊருக்கனுப்பத், துரியோதனன் ஏவலால் துச்சாதனன், நாடும் செல்வமும் கொடோம் அடிமை நீங்கிக் காடுசெல்க என்றனன். பின் திருதராட்டிரன் கருத்துணர்ந்த துரோணர், நீங்கள் பன்னீராண்டு வனத்திலும் ஓராண்டு அஞ்ஞாத வாசத்திலும் போக்கி வருவீராயின் நாடுபெறுவீர் என்றான். இச்சொற்களைக் கேட்ட திரௌபதி பாண்டவர் ஐவரும் யானும் என்புத்திரரும் அடிமை நீங்கச் சூதாட வேண்டுமெனத் துரியோதனன் பந்தயப்பொருள் என் னென, யான் செய்த தருமமென்று தருமன் கூற அதற்கிசைந்து ஆடுகையில் தெய்வபலத்தால் பாண்டவர் அடிமை நீங்கித் தந்தை சொற்படி காடுசென்று (13) வருஷம் வசித்து ஒரு வருஷம் விராடபுரத்தில் ஒருவருந்தோன்றாது வசிக்கையில் நாடுவள மிகுந்திருத்தலைக்கண்டு பாண்டவர் இங்கு வசிக்கின்றாரோ என்னேவெனச் சந்தேகித்து அவ்விராடராசனது பசுக் கூட்டத்தைத் துரியோதனாதியர் வளைத்தனர். அவ்விராடராசன் புத்திரனாகிய உத்தரன், தான் அப்பசுக் கூட்டத்தை மீட்கவேண்டிப் பேடி உருக்கொண் டிருந்த அருச்சுநனைச் சாரதியாகக்கொண்டு தேர் ஏறிப்போய்ப் பகைவர் சேனையைக்கண்டு பயந்து பின்னிட விஜயன் அவனைத் தேரிற் பிணித்துச் சென்று வன்னிமரத்தின் மீதிருந்தபடைகளை எடுப்பித்து உத்தரனைத் தேர்ச்சாரதியாக்கிப் பகைவருடன் போர்புரிந்து வென்று நிரைமீட்டு விராட நகரை அடைந்தனன், தங்களுக்குக் குறித்தவருஷம் அன்றோடே முடிந்ததாகை யால் பாண்டவரும் தமது உண்மை உருக்கொண்டனர். பின் உத்தரையை அபிமன்யுவிற்கு மணப்பித்து உத்தரன் செய்த சிறப்பேற்றுத் தங்கள் வெளிப் பாட்டைச் சுற்றத்தவருக்கு அறிவித்து அவர்களுடன் உபப்பிலாவியத்திலிருந்து ஆலோசித்துப் புரோகிதனைத் தங்கள் நாடு தரும்படி துரியோதனனிடந் தூதாக அனுப்பினர். இத்தூதின் செய்திகேட்ட துரியோதனன் நாடு கொடேன் என்றனன். அதைக் கேட்ட வீஷ்மர் துரோணராதியரும் நீதி கூறவும் மறுத்த மையால் அச்செய்தியை உலூகமுனி பாண்டவர்க்கு அறிவித்தனன். துரியோ தனன் துரோணர் முதலானோர் ஆலோசனையால் கண்ணபிரானைப் படைத் துணை அழைக்கச் சென்று யோகத்திரை செய்யும் கண்ணபிரானது முடியின் பக்கத்தில் உட்கார்ந்தனன். அருச்சுநன் கண்ணபிரானது திருவடிப்பக்கத்து இருந்தனன். கண்ணன் துயிலுணர்ந்து முதலில் அருச்சுனைக்கண்டு பின் துரியோதனனது வேண்டுகோளுக்கு நாராயண கோபாலரைத் துணை கொள்ளும்படி ஏவித் தாம் அருச்சுநற்குச் சாரதியாய் இருக்க உடன்பட்டனர். பின் திருதராட்டிரன் ஏவலால் சஞ்சயமுனி பாண்டவரிடம் ஞானோபதேசஞ் செய்யச்செல்லப் பாண்டவர் அதற்கு உடம்படாமை அறிந்து மீண்டனன். பின் கண்ணபிரான் பாண்டவரது கருத்துணர்ந்து துரியோதனனிடம் தூது சென்று அன்று விதுரன் இட்ட விருந்துண்டு மறுநாள் சென்று நீதியைக் கூறக் கேட்காமையால் மீண்டனர். பின் துரியோதனன் விதுரனை நோக்கி நீ கண்ணனுக்கு விருந்திட்டனை என்று வெகுள விதுரன் இப்பாரதப்போர் முடியுமளவும் இந்த வில்லை எடுப்பதில்லை என முரித்துச் சென்றனன். இது நிற்க, கண்ணனைக்கொல்ல எண்ணிய துரியோதனாதியர் ஓர் நிலவறை சமைத்து அதில் அரக்கரை நிறைத்து மேலொரு பொய்ச் சிங்காதனம் அமைத்து அதில் கண்ணனை வருவித்து உட்காருவிக்கக் கண்ணன் அதில் உட்கார்ந்த மாத்திரையில் அதனை உணர்ந்து விசுவரூபங்கொண்டு தமது திருவடியால் அறைக்குள்ளிருந்த அரக்கர் உயிர்போக்கி இந்திரனை அழைத் துக் கர்ணனிடம் உள்ள கவசகுண்டலங்களைக் கவரப்போக்கினர். இந்திரன் விருத்த வேதியனாய்க் கர்ணனிடஞ் சென்று யாசித்து அவைகளைப்பெற்று மீண்டனன், பின்னர் கண்ணபிரான் குந்திதேவியிடம் சென்று கர்ணன் அவளது புத்திரன் என்பதைத் தெரிவித்துக் கர்ணனிடஞ்சென்று, அர்ச்சுநனுக்குப் பாரத யுத்தத்தில் உயிர்க்கொலை நேராதபடி ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரம் எய்யாதிருக்க வரம் பெறக்கற்பித்து ஏவ அவள் சென்று தன்னைத்தாயென அறிவித்து அவன் தந்தசேலையை யுடுத்து வரம் பெற்று மீண்டதைக் கண்ணனுக்கு அறிவித்தனன். கண்ணன் இவற்றைப் பாண்டவர்க்கு அறிவித்தனன். இதுநிற்க, திருதராட்டிரன் பாரதப்போர் யாதாய் முடியுமோ என்ற அச்சத்தால் சஞ்சயனை மீண்டும் பாண்டவர்கள் காடுசெல்லும்படி கற்பிக்க ஏவினன், அச்சஞ்சயன் உபப்பிலாவியம் வந்து கண்ணனைக் கண்டு பின் பாண்டவர்களைக்கண்டு ஞானோபதேசஞ்செய்ய அதற்குப் பாண்டவர் உடன்படாது போர் செய்தே நாட்டைப் பெறுவோ மென்று கூற அவ்வகை சென்று துரியோதனாதியர்க்கு உரைத்தனன். இருதிறத்தவரும் போர்க்கு நன்னான் குறித்து அரவானைக் காளிக்குப் பலியிட்டு அவன் பாரதப் போர்காண வரம்வேண்டத் தந்து அணிவகுத்துப் போர்க்களங் குறுகினர். |
பாரதம் | 1. வியாசரால் வடமொழியிற் செய்யப்பெற்றுத் தமிழில் வில்லிபுத்தூர்ராலும் நல்லாப்பிள்ளையாலும் மொழி பெயர்க்கப் பட்ட பாண்டவர் கதை. இதை வடமொழியில் வியாசர்கூற விக்னேச்வரர் எழுதின தாகக் கூறியிருக்கிறது. 2 ஜம்புத் தீபத்திலுள்ள வருஷம் {lNDIA). |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | 1, இவர் தொண்டைநாட்டவர். இவர் பாரதத்தை உரையிடையிட்ட வெண்பா ஆசிரியங்களால் (1200) பாடல்களாகப் பாடியவர். கடைச்சங்கத்திருந்த (49) புலவரில் ஒருவர். கடைச்சங்கத்தவர் அனைவரும் பொய்யடிமையில்லாத புலவர் எனத் துதித்திருத்தலால் இவர் சைவர். ஆயின் பாரதத்தில் திருமாலை வணங்கி யிருத்தலின், இவர் வைணவர் எனின், புலவர் ஏற்புடைக் கடவுளைத் துதித்தனர். ஆதலால் இவரை வைணவர் எனத் துணிதல் அடாது. இவர் புறநானூறு, நற்றிணை முதலிய நூல்களுக்குச் சிவத்துதி கூறியிருத்தலே இவர் சைவர் என்பதைத் தெரிவிக்கும். (ஐங்குறு. நூறு, அகநானூறு) 2. இவர் எட்டுத் தொகையுட் பெரும்பாலானவற்றிற்கும் காப்புச் செய்யுள் பாடியவர். பெருந்தேவனார் எனப் பிறரு முளராதலின் அவரின் இவர் வேறென்பது தெரியப் பாரதம் பாடிய பெருந்தேவனாரென அடைமொழி கொடுக்கப் பட்டார். வியாஸபாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப்பாடி வெளியிட்டமையிற் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனப்பட்டார். இவர் பிறந்தது தொண்டைநாடு எனச் ‘சீருறும் பாடல். பாரதம் பாடும் பெருந்தேவர் வாழும் பழம் பதிகாண், மாருதம் பூவின் மணம் வீசிடும் தொண்டை மண்டலமே” எனத் தொண்டைமண்டலச் சதகம் கூறாநிற்கும். இப்பொழுது பாரதவெண்பா வென்று அச்சிட்டு வழங்கு நூலில் முதலில் விநாயக வணக்கமும் அடுத்துத் தெள்ளாற்றிற் போர் வென்ற அரசன் சிறப்புக் கூறுவது காரணமாக இவர் தொண்டை நாட்டிற் பிறந்தவரென்று படிக்காசுப் புலவர் தமது தொண்டைமண்டல சதகத்து எழுதிவைத்தார். தெள்ளாற்றிற் போர் வென்றது கடைச்சங்கம் அழிந்த பல்லாண்டுகளுக்குப் பின்னரேயாம். அதனைக் கூறுதலின் இப்பெருந்தேவனார் கடைச்சங்கப் புலவரல்ல ரென்பது தேற்றம். ஆதலின் இப்பொழுது வழங்கும் பாரத வெண்பாப் பெருந்தேவனார் பாடிய தன்றெனவும் பெருந்தேவனார் பாடியது உதாரணமாக எடுத்தாண்ட சில செய்யுளன்றி நூல் முழுவதும் அழிந்து விட்டதென்றும் சில பெரியோர் கூறுவதுண்மையெனக் கொண்டு தொண்டை நாட்டினரென ஒருதலையாகக் கொள்ளா தொழிக. அச்சிட்டு வழங்கும் பாரதவெண்பா நடையையும் உதாரணமாக முன்பெடுத்தாண்ட பாரத வெண்பா அகவல்களின் நடையையும் ஒப்பு நோக்கியறிக. மற்றும் இந் நற்றிணைக்குக் கூறிய காப்பு விஷ்ணு ஸகஸ்திர நாமத்தியான சுலோகமாகிய ‘ஹுவாஉெள (பூ:பாதௌ) என்றதின் மொழி பெயர்ப்பேயாம். நற்றிணை யிலும் அகத்திலும் பெருந்தேவனாரென ஒருவர் காணப்படுகிறார். அவரின் இவர் வேறென்பது பாரதம் பாடிய என்ற அடை மொழியாற் பெறப்படும். நற்றிணையிலே திருமாலையும் மற்றவற்றிற் சிவபிரான் முதலாயினோரையும் இவர் வணக்கங் கூறுதலால் எல்லா மதத்தினையுந் தன் வயினடக்கிக் கொண்ட அத்து வைத மதத்தினராவர். இவர் பாடியனவாக நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு ஏறு, அகம், புறம் ஆகிய இவ்வைந்து தொகை நூல்களின் காப்புச் செய்யுள்களைந்தும் திருவள்ளுவமாலையி லொன்றுமாக ஆறு செய்யுள்கள் கிடைத்திருக்கின்றன. |
பாரதர் | பாரத வம்சத்தில் பிறந்த அரசர். |
பாரதவெண்பா | இது பாரதத்தை வெண்பாவாகக் கூறிய தமிழ் நூல். இது பெருங்தேவனாரால் இயற்றப்பட்டது. இதற்கு வெண்பாப் பாரதம் எனவும் பெயர், |
பாரதி | 1. கடம்பையூரில் இருந்த புலவர். இவர் பாரதி தீபமென நிகண்டு ஒன்று இயற்றினர். 2. இவர் இராமாயணத் திருப்புகழ் பாடிய கவி. இந்நூலுக்கு இராமஜயம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பது நூலால் தெரிகிறது. |
பாரதிதீபம் | ஒரு நிகண்டு பாரதியால் இயற்றப்பட்டது. |
பாரதியாவது | கவுத்தனையே தலையாகக் கூத்துக் கொடுக்கப்படுவது. |
பாரத்துவாசன் | 1. பரத்துவாசனைக் காண்க. 2 இவர் எல்லா குடும்பங்களை யும்தாங்குதலால் இப்பெயர் பெற்றவர். |
பாரன் | 1. பிருது குமரன். 2. புஞ்சிக ஸ்தலையென்னும் அரம்பையைக் கூடிக் கலாவதியைப் பெற்றவன். 3. கலாவதியின் தந்தை, |
பாரவி | கிராதார்ச்சு நீயம் செய்த வடநூற் புலவன். |
பாராசபட்டர் | 1, இவர் மார்த்தவ வித்துவான். அப்பைய தீஷிதரால் சைவரானவர். 2 கூரத்தாழ்வான் குமரர். உடையவர் சொற்படி ஸஹஸ்ர நாமபாஷ்யஞ் செய்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
பாரி | இவன் நாடு தகடூர் நாட்டிற்கு அருகிலுள்ளது. சேலம் கோயம் புத்தூருக்கு மேற்கு. இவனுக்கு வேள்பாரி என்றும் பெயர். அரண்வலி முதலிய பெருமைகளும் பல்வகை வளங்களுமுடையதும், முந்நூறு ஊர்களைக் கொண்டதுமாகிய பறம்பு அல்லது பறம்புமலையைத் தன் அரசிருக்கையாகக் கொண்ட, வேளிர் குலத்தலைவனான பாரி என்பான், ‘வரையாதளிக்கும் பெருவள்ளல்’ எனத் தமிழ்நாடு புகழ வாழ்ந்து வந்தான். இவன், மிக்க கொடையாளியும் மிழலைக் கூற்றத்துக்குத் தலைவனுமான வேள் எவ்வி என்பவனுடைய வழித்தோன்றல். இப்பாரிக்கு அங்கவை, சங்கவை என்னும் மகளிர் இருவர், எல்லாச் சிறப்புடன் கல்விச் சிறப்புடையராயு மிருந்தனர். அந்தணர் திலகராயும் புலவர் பெருமானாகவும் விளங்கிய கபிலர், இப்பாரிக்கு உயிர்த் தோழராக அமைந்தனர். பாரியுடைய பெருங்கருணை விளக்குதற்குச் சிறு கதை ஒன்றுண்டு. இவன் ஒருகால் தேரூர்ந்து காட்டுவழியே சென்ற போது, அங்கே முல்லைக்கொடி ஒன்று படர்தற்குக் கொழுகொம்பில்லாமல் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ்வோரறி வுயிரிடத்தும் உண்டாகிய தன் பேரருளால், அக்கொடி இனிது படரும்படி தான் ஏறிச்சென்ற பொற்றேரை யதன் பக்கத்தே நிறுத்திவிட்டுத் தன் மெல்லிய அடிகள் சிவக்குமாறு நடந்து சென்றனன் என்பர். இவ்வரலாறு, பழைய நூல்கள் பலவற்றிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, இவன், நிழலில்லாத நீண்ட வழியில் தனிமரம்போல நின்று, தன்னையடைந்த புலவர், மடவார், வறியார், மெலி யார் முதலிய யாவர்க்கும் தன் இன்னருள் சுரந்துவந்தமையால் இவன் புகழ் தமிழக முழுவதையும் தன் வயமாக்கிக் கொண்டது. இங்கனம், வேள் பாரி உலகம் புகழும் பெருவள்ளலாக விளங்கி நிற்ப, தமிழரசராகிய சேரசோழ பாண்டியர் மூவரும் இவனைத் தம் பகைவனாகக் கொண்டிருந்தனர். நன்மையன்றி வேறு செய்ய அறியாத இவ்வள்ளலிடம் இவ்வேந்தர் செற்றம் வைத்ததற்குக் காரணம் நன்கு அறியப்படவில்லையாயினும், தம்மினும் பாரி படைத்த பெரும்புகழால் நிகழ்ந்த பொறாமையே அதன் காரணமாக வேண்டு மென்பது பல ஏதுக்களால் ஊகிக்கப்படுகின்றது, இவ்வாறு, பாரிக்கும் மூவேந்தர்க்கும் உள்ள பகைமை முற்றிவளாவும், அவ்வேந்தர் ஒன்று சேர்ந்து படையெடுத்துச் சென்று பாரியது பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இந்நிலைக்குப் பாரி சிறிது மஞ்சாமலும், அவர் தாக்குதலைப் பொருட் படுத்தாமலும் ஊக்கத்தோடும் அவரை எதிர்த்து நின்றான். அம்முற்றுகைக் காலத்தே, பாரிக்கு உயிர்த்தோழரான கபிலர், உள்ளே கிளிகள் பலவற்றை வளர்த்துப் பழக்கி, அரணுக்கு அப்புறமுள்ள விளைநிலங்களிலிருந்து. நெற் கதிர்களை நாளுங் கொண்டுவரும்படி செய்வித்து, பாரியின் குடிபடைகளைக் காத்து வந்தார். முற்றுகையிட்ட மூவேந்தரும் நெடுங்காலம் வரை வெற்றி யின்றிப் பாரி சேனையாற் பரிபவப்பட்டு நிற்க, அப்போது, புலவர் பெருமானாகிய கபிலர் வெளியே வந்து, அவ்வேந்தர் நாணும்படி அவரை நோக்கி, “அளிதோ தானே பாரியது பறம்பே, நளிகொண் முரசின் மூவிரு முற்றினும், உழவருழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே, இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே, நான்கே, அணிநிற வோரிபாய் தலின்மீ தழிந்து, திணிநெடுங் குன்றந் தேன் சொரியும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து, மீன்க ணற்றதன் சுனையே யாங்கு, மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும், புலந்தொறும் பாப்பிய தேரினி பாயினும் தாளிந் கொள்ளவிர் வாளித் சாரலன், யானறி குவனது கொள்ளு மாறே, சுகிர்புரி நரம்பின் சீறியாழ்பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர் பின்வா, ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்று மொருங்கீ யும்மே. ” “கடந்தடு தானை மூவிருங்கூடி, யுடன்றனி ராயினும் பறம்பு கொளற் கரிதே, முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு, முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியுமுளமே. குன்று முண்டுநீர் பாடினிர் செலினே. ” என்னும் பாடல்களைக் கூறி, நீவிர் மூவிரும் ஒன்று கூடிப் படைவலி பெரிதுங் கொண்டு எத்தனையோ காலம் முற்றுகை செய்யினும் பாரியது இப்பறம்பு மலையைக் கொள்ளுதல் அரிது; அவனுடைய முந்நூ றூரையும் பாடிப்பரிசிலர் பெற்றது போல, நீவிரும் பாடினவராய் வரின் இதனைக் கொள்ளுதல் எளிது என்று பாரியது புரவலர்க் கருமையும், இரவலர்க் கெளிமையுமாகிய பெருநிலையை அழகாக வெளியிட்டனர். இதன்மேல், அவ்வேந்தர் சூழ்ச்சி செய்து, கபிலர் அறிவித்த பாரியியல்புக்குப் பொருந்துமாறு, தாமே பரிசிலர் வேடம் பூண்டோ, பிறரைப் பரிசிலராக விடுவித்தோ அவனைத் தம்மகப்படும் படி செய்து வஞ்சித்துக் கொன்றுவிட் டனர். அந்தோ! பாரியுடைய உயிர்த் தோழராகிய கபிலர், அவனருமை மகளிர் இருவருடன், தம்மைப் போற்றி வந்த கருணை வள்ளலுக்கு நேர்ந்த அநியாயத்தை எண்ணிக் கலங்கி அவன் பிரிவை ஆற்றாமல் புலம்பி, அவன் அரசிருக்கையையும் அவன் பெருவாழ்வையும், அவன் கொடைச் சிறப் பையும், மற்றும் அவன் குண விசேடங்களையும் நினைக்குந்தோறும் உள்ளம் நெக்கு நெக்குருகித் தவித்தனர். இப்பரிதாப நிலையுடன், கபிலர், பாரிமகளி ராகிய அங்கவை சங்கவை யென்பாரைத் தம்மோடு அழைத்துக்கொண்டு தாம் பழகிய பறம்புமலையை விடமுடியாமலே விடுத்து, அம்மகளிர்க்குத் தக்க மணவாளரைத் தேடித் தம் நட்புக்கடனைக் கழிக்கச் செல்வாராயினார். முதலில், கபிலர், வேளி குலத்தவனாகிய இளவிச்சிக் கோவையும் பின் அக்குலத்து இருக்கோவேள் என்பானையுங் கண்டு, பாரிமகளிரை மணம் புரிந்து கொள்ளும்படி வேண்ட அவ்விருவரும், பாரிக்கும் பெருவேந்தர் மூவர்க்கும் உண்டாகிய பகைமையைக் கருதிப்போலும் “முடியாது” என்று மறுத்துவிட்டார்கள். பின்பு அப்புலவர் செய்வதொன்று மறியாமல் திகைத்து தம் வாழ்க்கையை முற்றும் வெறுத்தவராய், திருக்கோடுலூரில் தமக்கு வேண்டிய பார்ப்பார் சிலரது பாதுகாவலில் அம்மகளிருவரையும் வைத்துத் தாம் வடக்கே சென்றார். இச்செய்தியெல்லாம் கேள்வியுற்ற நல்லிசைட் புலவராகிய ஒளவையார், பெரிதும் வருந்தி, பெருவள்ளலாகிய பாரிமகளிரைத் தாமே சிறப்பிக்க வெண்ணி, அக்காலத்துத் திருக்கோயிலூரை யாண்ட மலை மானாகிய தெய்வீசனுக்கு அவரை மணப்பே?, அம்மணத்துக்கு மூவேந்தரை யும் வரும்படி செய்வித்தும், பாரிகுடிக்கும் அவ்வேந்தர்க்கு மிகுந்த பகைமை யைட் போக்குவித்தும், தம் தெய்வத் தன்மையாற் பற்பல அற்புதச் செயல் களை நிகழ்த்தியும் அக்கலியாணத்தை விமரிசை பெற நிறைவேற்றி, பாரி மகளிரை நல்வாழ்வு பெற வைத்தனர். |
பாரிக்கிரகரோகம் | கருப்பஸ்திரீகளின் பாலைக்குடிக்கும் பிள்ளைகளுக் குண்டாம் ரோகம். இது வயிறு பருமை, இருமல், இரைப்பு, வாந்தி முதலிய தரும். (ஜிவ.) |
பாரிசமௌலி | மாணிபத்திரனுக்கு ஒரு பெயர். |
பாரிசாதம் | தெய்வ தருக்களாகிய ஐந்தில் ஒன்று. பாற்கடலிற் பிறந்தது. இது நினைத்ததைத் தரவல்லதில் ஒன்று. இதைக் கண்ணன் சத்தியபாமை பொருட் டுப் பூமியிற் கொண்டுவந்து நாட்டினர். |
பாரிபத்திரம் | கரூசதேசத்திலுள்ள கட்டணம், |
பாரிப்பிலவன் | நளன் குமரன், இவன் குமரன் சுனையன், |
பாரிமகளிர் | பாரி எனும் வள்ளல் இறந்த பின்னர் அவனதின்னுயிர்த் தோழராகிய கபிலர், பாரியை நீத்துத் தனித்துயிர்வாழ்தற்கு மனமிலராயினும், அவனுடைய அறிவுடை மகளிரைக் காத்தற்கு வேறொருவரு மிலராதல் பற்றி உயிர் கொடு நின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையுமுடைய கணவரைத் தேட நினைந்து, அவர்களுடன், அவர்கட்குந் தமக்கும் பேரன்புமிக்க பறம்பினை விடமுடியாமே விடுத்து, அப்பாரியை நினையுந்தோறும் பறம்பினைத் திரும்பி நோக்குந் தோறும் உள்ளம் நெக்கு நெக்குருகிக் கண்ணீர்வார நின்று ஆற்றொணத் துயராற் பொங்கி யெழுந்த அன்புடைப் பாடல்களாற் பாரியினையும் பறம்பினையும் புகழ்ந்து கொண்டே சென்று ஒரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத் தோன்றிய போது அவருட னிருந்த பாரியினருமை மகளிர், தாம் இதற்கு முந்திய நிலாக்காலத்துத் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளையாடியதும், அடுத்த இந்நிலாக் காலத்துத் தாம் தந்தையிழந்து தண்பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூர நின்றதும் தம் முள்ளத்தே தோன்ற, அப்போது, அற்றைத் திங்களவ்வெண் ணிலவி, னெங்தையு முடையேமெங் குன்றும் பிறர் கொளா, ரிற்றைத் திங்களிவ்வெண்ணில வின், வென்றெறி முரசின் வேந்தரெங், குன்றுங் கொண்டார்யா மெந்தைய மிலமே” என்னும் பாடலைப் பாடினர். இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒருமாதத்துக்கு முன், பாரி தன்னரசிருக்கையாகிய பறம்பின் கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருந்தன னென்பது புலப்படுகிறது. இப்பாடல், சங்கத்தாராற் றொகுக்கப் பட்ட புறநானூற்றி லொன்றாகக் காணப்பட்ட வாற்றால், இம்மகளிர் நற்றமிழுணர்ந்த நங்கையருள் ஒருவராக உணரப்படும். பாரிமக ளிர் இருவர் ஆதலின், ஈண்டும் ‘பாரிமகளிர் பாடியது’ எனப் பொதுப்படக் கூறப் பட்டமைபற்றி அவ்விருவருமே செந்தமிழ்ப் புலமையாற் சிறந்தா ராவரென்பதும் தெளியலாகும். புலவரிருவர் சேர்ந்து ஒரு பாடல் பாடுவது முன்வழக்கே, இம்மகளிரது இன்றமிழ்ப் புலமை, தமதரும்பெறற் றந்தையாகிய வள்ளற் பாரிக்கு ஆருயிர்த் தோழராகிய கபிலரென்னும் புலவர் தலைவர்பாற் பெற்றதாகும். பின்னர் கபிலர் அவ்வூரைவிடுத்து இளவிச்சிக்கோ என்பானிடஞ் சென்று இம்மகளிரது உயர்குடிப்பிறப்பு முதலியவற்றை எடுத்துரைத்து இவர்களை மணஞ்செய்து கொள்ளும்படி அவனைப் பாடி வேண்ட, அவனுடம் படாமையால் இருங்கோவே ளென்பானுழைச் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்கனமே உடம்படானாய் மறுக்க இதற்காக அவனை முனிந்து பாடி, பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கு முண்டாகிய பகைமைபற்றி அரசரொருவரும் இவர்களை மணஞ் செய்து கொள்ள இயையாமற் கபிலர் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலர் பாற் படுத்துப் பாரியின் பிரிவாற்றாது வடக்கிருப்பாராயினர். இம்மகளிர் வேளிர்குலக் கொடிகளாதலால் அக்குவத்து நல்லாண் மக்களையே தேடிச் சென்றன ரென்பது தெள்ளிது. அன்றியும், பார்ப்பார்களுக்கும் வேளிர்க்கும் மணநிகழ்ச்சி கூறுதலும் இயையாதாம், கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்ய லாகாமற் பார்ப்பாரது பாதுகாப்பில் வைத்து வடக்கிருக்க ஒளவையார் அது தெரிந்து தெய்வீகன் என்னும் அரசனை, இம்மகளிரை மணஞ் செய்து கொள்ளும்படி உடம்படுவித்து அவர் மணத்தைச் சிறப்ப வியற்றினர் என்பதே இயைபுடைத்தாவது காண்க. இம்மகளிர் புலவர் பேரணியாங் கபிலரந் தணர்பாற் பயின்றமைக்கேற்ற நல்லிசைப் புலமையேயன்றி, வரையா வள்ளியோனாகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற் நன்மை யுடையராயின ரென்பது, “மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும், பாரி மடமகள் பாண்மகற்கு நீருலையுட், பொன்றந்து கொண்டு புகாவாக நல்கினா, ளொன்றுறா முன்றிலோவில்” என்னும் பழமொழிச் செய்யுளாலறிக. முன்னமே ஔவையாரது வாலாற்றுள் இம்மகளிரது திருமணச் சிறப்பு முதலியன கூறப்பட்டனவாதலான், ஈண்டு வேறெடுத் தோதினேனில்லை. ” (புற. நா). |
பாரியர்டாக் | இது, மார்மாட் இனத்தைச் சேர்ந்தது. இது பேரிங் ஜலசந்தி பிரதேசத்திலிருக்கிறது. இது, சிறு நாயையொத்த உருவமுள்ளது. இது கூட்டம் கூட்டமாய் வசிக்கும், இவ்வினத்திற்கு வாயில் பை உண்டு. இவை மணலில் வளை தோண்டிக்கொண்டு வசிக்கும். இவை இரைதேடப் புறப்படுகையில் உயர்ந்த இடத்திலிரண்டு மூன்று இருந்து காவல் செய்கின்றன. அபாயம் வருவதாயின் காவலாளிகள் சத்தமிட மற்றவைகள் வளைகளில் ஓடி ஒளிக்கின்றன, இது, வெளிறிய சாம்பல் நிறமுள்ள தாதலால் இதன் மிருது வான தோலிற்கு இதை வேட்டை யாடுகின்றனர். |
பாரியாத்திரன் | 1. சிவகணத்தவரில் ஒருவன். 2, (சூ.) அங்கன் குமரன் |
பாரியாத்திரம் | 1. ஒரு பர்வதம், 2. குலபர்வதங்களில் ஒன்று, (பா. பீஷ்). The western part of Vindya Rangs extending from the source of the Narmada to the gulf of Canbay. |
பாரிஷதாள் | ஒருவகை பூதசாதியார். |
பாரிஷேணகுமாரன் | மகதநாட்டரசனாகிய சேணிகன், சேவினிடத்துப் பிறந்த தன் மூத்தகுமானை இளவரசாக்கினான். சேணிகனுக்கு மற்றொரு மனைவி யாகிய அமிர்தமகா சேனையிடம் பிறந்த குணசோன் இதனால் வருந்தித் தன் தாயிடம் கூறினன். அவள் சில திருடர்களுக்குப் பணங்கொடுத்துப் பாரிஷேணன் கட்டளையால் திருடுகிறோ மென்று கூறச் செய்தனள், அப்போது தனவான் பாரிஷேண குமரனைப் பிடிக்க அப்போது அவன் தியானாரூடனாயிருக்கச் சில தேவர்கள் வந்து தனவானைக் கீழே தள்ளிப் பாரிஷேணனைப் பூசித்தனர். பின் அரசனுக்குரிய ஐயத்தையும் ஒருதேவன் தெரிவித்துப் போயினன், தேவர்கள் தளவான் தொட்டதோஷம் நீங்கப் பாரிஷேணனைப் பாற்கடனீராலாட்டிச் சிங்காதனத் திருத்திப் போயினர். அரசன் அமிர்தசேனையையும் குணசேனனையும் சாட்டினின்று துரத்தினான். (சை கதை). |
பாரூ | 1, ஒரு காந்தருவன். இவன் பெண்ணை ஒரு காந்தருவன் கேட்க மறுத்தமையால் அவனால் கொலையுண்டவன். 2. சமரன் குமரன். 3. பிருது சேநன் குமரன். |
பார்காப்பான் | இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த அரசராக இருக்கலாம். இவர் குறுந்தொகையில் செய்யுள் (254) பாடினர். |
பார்க்க பூமி | 1. (ச.) பார்க்கன் குமரன். 2. காச்யபர் வம்சம், இவனுக்கு (500) புத்திரர். ஒருமுறை இந்திரனுக்குத் துன்பஞ் செய்து கொண்டிருந்த அசுரரைக் கொன்று துன்பந்தீர்த்தவன், |
பார்க்கக்கூடாதவை | மின்னல், எரிநக்ஷத்திரம், வேசையாலங்காரம், காலைவெயில், மாலைவெயில் இவற்றைப் புகழைவிரும்புவோர் நோக்கார். (ஆசாரக்கோவை). |
பார்க்கதீக்ஷர் | அஜமீடன் குமரர், |
பார்க்கத்தீரன் | மகததேசத்து அரசன். |
பார்க்கலாகாதவை | பிறர்மனையாள், கள், களவு, சூது, கொலை இவற்றை நோக்குதலும் செய்தலும், நினைத்தலும் ஆகா. இவை செய்யின் பலரிகழ்ச்சியும் நரகமும் உண்டாம். (ஆசாரக்கோவை). |
பார்க்கவச்யவனர் | ஒரு இருடி. இவர் தேவி சுகன்னி. இவரைச் சவனருஷி யெனவுங் கூறுவர். இராமமூர்த்தியிடம், லவணாசான் இடுக்கண் கூறியவர். |
பார்க்கவன் | 1. வேதசிரசையின் குமரன். 2. பாஞ்சாலதேசத்தவனாகிய குயவன். திரௌபதியின் சுயம்வரங் காணச்சென்ற பாண்டவர்க்கு இடந்தந்தவன். 3. சுரச்சேபனுக்கு ஒரு பெயர். 4, வீதிகோதரன் குமரன். |
பார்க்கவமுனிவர் | இவர் சதானிகன் குமரர், தானாதிகளைச் செய்த தன் தந்தை எவ்வாறு இருக்கிறானென்று கேட்ட வினாவிற்கு விடையளிக்கக் கருதிச் சூரியன் முன்னே பிராமண வடிவங்கொண்டு முன் சென்று வழிகாட்ட, யமபுரந் தாண்டிச் செல்லுகையில் ஒரு வேதியன் தன் கையில் தண்டந்தாங்கி இவரை மறுத்து நான் உனக்குப் புராணங் கூறுகையில் எதேனும் கொடுப்பதாகக் கூறிக் கொடா தொழிந்தனை இப்பொழுது நீ செய்த தவத்திற் பாதி தருகவென அதந்கிசையாதது கண்டு சூரியன் நடுக்கூற ஆறிலொன்று கொடுத்து நீங்கப், பின் இடையன் பசு மேய்த்ததற்குக் கூலி கொடாததற்கு ஆறிலொருபங்கு அவனுக்குக் கொடுத்து நீங்கி, ஒரு சாலிபன் வஸ்திரம் வாங்கியதில் பாக்கிக்காக மறுக்க மிச்சத்தைக் கொடுத்துப் புண்ணிய நீங்கிய தால் மேலே செல்ல வலியற்றுச் சூர்யன் தன் கையைப்பற்றச் சதானிகனிருந்த இடத்திற் சென்றனர். அச்சமயம் அவ்வாசனை யமகிங்கரர் அடுப்பிலேற்றிச் சமைத்துக் கொண்டிருந்தனர். முனிவர் அவனைக் கண்டு இதற்கென்ன காரணமென்ன நான் பல நானாதிகள் செய்தவனாயினும் பிரஜாபீடையாற் பொருள் தேடினேனாதலா லிவ்வகை நேர்ந்ததாதலின் என் குமானிட மிதனைக் கூறி அவனால் தானதிகள் செய்யக் கட்டளையிடின் என் துன்ப நீங்குவேனென அவ்வாறு பூமியில் சதானிகன் குமரனிடங் கூறிச் சதுர்த்தசி விரதமநுட்டிக்கச் செய்து தானாதிகளைச் செய்வித்தனர். (சிவமகாபுராணம்.) |
பார்க்கவம் | விநாயக மான்மியங் கூறிய உபபுராணத்தொன்று. |
பார்க்கவி | பிருகுருஷியின் தவத்தால் அந்த ருஷியிடம் திருவவதரித்த இலக்ஷ மிதேவி. |
பார்க்கஸ்பத்தியமானம் | சுக்கிரனை முதலாகக்கொண்டு கணிக்கும் கால அளவை, |
பார்சவ தீர்த்தங்கார் | சைந இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர். இவர் வாரணாசியில் உக்ரவம்சத்தில் விசுவசேகருக்கு அவர் மனைவி பிராம்மியிடத்தில் தைமாதம் கிருஷ்ணபக்ஷம் ஏகாதசி விசாக நக்ஷ்த்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (9) முழம், பச்சைவர்ணம், ஆயுஷ்யம் (100) வருஷம், இவர்க்குக் கணதரர் சுயம்பு முதலாகிய பதின்மர். |
பார்ப்பன வாகை | கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனையாகத் தான் வெற்றியைப் பெருக்கியது. (பு. வெ.) |
பார்ப்பனமுல்லை | செவ்விமிக்க நறுநாற்றஞ் செறிந்த மாலையினையுடைய வீரக்கழலாற் பொலிந்த மன்னர் மாறுபாட்டைக் செடுக்கும் நான்கு வேதத்தினையுடையோன் நன்மைமிக்க செப்ப முறைமையைச் சொல்லியது. (பு. வெ.) |
பார்வதி | தக்ஷனிடம் அவதரித்த தாக்ஷாயணியென்னும் பெயர் நீங்க மலையரையன் தவத்தால் மகளாகத் திருவவதரித்து அவனிடம் வளர்ந்து சிவமூர்த்தியை மணந்த உமை, |
பார்வதி சமேதன் | பார்வதியுடன் கூடிய சிவமூர்த்தி |
பார்வதியார் | இவர் பொருட்டுப் பர்வதராஜன் சுயம்வரம் நாட்ட சகல தேசத்தரசரும் அதன் பொருட்டு வந்தனர். அக்காலத்து சிவமூர்த்தி பார்வதியார் மடிமீது குழந்தை உருக்கொண்டிருந்தனர். இதையறிந்த தேவர்கள் பார்வதியையடைய யுத்தம் தொடங்கினர். தேவர்களனைவரும் கைதம்பித்து செயலற்று சிவமூர்த்தியைத் துதித்து அநுக்கிரகம் பெற்றுப் போயினர். (பிரமபுராணம்) |
பார்வதீயன் | சகுனிக்குச் சூதாட வன்மையைக் கற்பித்தவன். (பார சபா.) |
பார்ஷணிசேநன் | ஒரு ருஷி. இவரிடம் அருச்சுநன் தேவலோகத்திருந்து வருமளவும் பாண்டுபுத்திரர் நால்வரும் வசித்திருந்தனர். |
பாறைகள் | இவற்றின் சில வியப்பை விளைவிக்கத்தக்க தன்மையுடையன என்கின்றனர். இந்தியாவிலுள்ள இராஜபுதன நாட்டின் தென்புறத்தில் ஆபுமலை என்ற ஒரு மலையிலுள்ள பாறை ஒன்று ஒருமைல் விசாலமுள்ள ஏரியின் பாதி பாகத்தைக் கவிந்து கொண்டு விழாது நிற்கிறதாம். அதனாலதனைத் தவளைப்பாறை என்பர். பர்மா நாட்டிலுள்ள கலாசா என்னுமலையின் வடகோடியில் (3650) அடி உயரமுள்ள மலைமீது ஒரு பெரிய பாறை காற்றில் அசைந்தாடுகிறதாம். அப்பாறை மீது புத்தாலயம் கட்டப் பட்டுள்ளது. அதனை அடுத்த வேறோரிடத்தில் ஒரு செங்குத்தான படகு போன்ற பாறையும் அசைந்தாடுகின்றதாம். இதன் மீதும் புத்தாலயம் உண்டு, இந்தியாவில் மகாபலிபுரத்தில் ஒருபாறை செங்குத்தாக நிற்கிறது, |
பாற்கடல்கடைந்தது | தேவர், அசுரருடன் பெருயுத்தஞ் செய்து மடிந்ததால் மடியா மருந்து விரும்பித் தேவர், பூமி தாழியாக மந்தரம் மத்தாகச் சந்திரன் தறியாக வாசுகி நாணாகக் கடற்புனல் தயிராக ஆயிரம் வருஷம் கடைந்தனர். முதலில் விஷம் பிறந்தது. அதனைச் சிவமூர்த்தி பருகித் தேவர் வேண்டு கோளால் கண்டத்திருத்தி நீல கண்டர் எனப்பெயர் பெற்றனர். பின்பு தேவர் மீண்டுங்கடைய மந்தரந்தாழ்ந்தது. அதனை விஷ்ணு ஆமையாய்த் தாங்கினர். அக்கடல் தன்வந்திரி, அமுதம், அமுதத்துடன் அறுபது கோடி அரம்பையர். இவர்களுக்குத் தோழியர், உச்சைச் கிரவமென்னுங் குதிரை, கௌத்துவமணி, பஞ்சதருக்கள், காமதேனு, சந்திரன், ஐராவதம், மூதேவி, திருமகள், வாருணி, பிறந்தன. இவற்றுள், அமுதத்தைத் தேவர்க்கு மோகினி உருக்கொண்ட விஷ்ணு கொடுத்துச் சாகாநிலை யருளினர். திருமகளை விஷ்ணு தாம் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை இந்திரன் முதலியவர்க்கு அளித்தனர். தேவர்கள் அமிர்தம் பெற்றபின் அந்த அமிர்தத்தை நாற்புறங்களிலும் ஜ்வலிக்கின்ற அக்நியைக் காவலிட்டு அந்த அமிர்தமிருக்கும் இடத்திற்கு மேல் எவரும் தொடர்தற்குக் கூடாமல் விடாமல் சுழன்று கொண்டிருப்பதும், கூர்மையான முனைகளுள்ளதும், அக்கி, சூர்யன் முதலியவர்களைப்போல் தேஜசுள்ளதும், வாள் போல் எவர்களையுஞ் சோதிப்பதுமாகிய சக்கரத்தைக் காவலிட்டனர். இவை புறக்காவல். அச்சக்கரத்தின் கீழ் அக்னிக்கு ஒப்பான ஒளியுள்ளவையும் மின்னலைப் போல் நாவுள்ளவைகளும், விஷஜ்வாலையால் பார்த்தவன் நீராகும் வன்மையுடை யனவுமாகிய இரண்டு நாகங்களையும் காவலிட்டனர். |
பாற்கரன் | 1, நான்கு முகமுடைய சூர்யன். சிவசூர்யனுக்கு முன்னிருப்பவன். 2, உதங்கரால் கபிலை பூசைசெய்ய ஏவப்பெற்று முத்தியடைந்தவன், 3. ஒருவேதியன், தவத்தால் தலைமை மிக்கவன். |
பாற்கரியன் மதம் | இவன் சித்தே அரித்தாய்ப் பரிணமித்துச் சீவனாகி மீண்டும் சித்தினிடம் ஒடுங்கும் என்பன். |
பாலகன் | 1. பிரத்தியோதன் குமரன். இவன் குமரன் வியாகயூபன். 2. (ச.) சுவஞ்செயன் குமரன். 3. முனிவர் வேடங்கொண்ட ஒரு சமணன், 4, பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன். சிறந்த வீரன். இவனை அவன் உதயணனுக்கு உதவியாக்கப் பகைவன் மேல் அனுப்புதற்குத் தன்னுள் நிச்சயித்திருந்தான். (பெருங் கதை) |
பாலகர் | சாதுகாரணர் மாணாக்கர். |
பாலகிருஷ்ண முதலியார் | இவர் ஒரு வேளாண் பிரபு. இவர் இருந்தது குன்ற வர்த்தனமென்னும் ஊர். காஞ்சீபுரம் திருவிழாவிற்கு வந்த ஒரு பெண் திசை தப்பி அடைய அவளைப் பெண்போலாதரித்து அவளுக்கு வரிசை முதலிய செய்து அவள் புருஷன் தேடிவர அவனை மைத்துன முறை கொண்டாடி யனுப்பினவர்; இதனை செண்டு. தங்கை முறைமை பெற்ற சீலன்பூ பாலர் தங்குலத்து வந்த பாலகிருஷ்ணசாமியே” என்பதாலறிக. |
பாலகிருஷ்ணர் | அதர்வண வேதசாகைக்கு வியாக்கியானஞ் செய்த வேதியர். |
பாலகீர்த்தி | திருதராட்டிரன் குமரன் |
பாலகுமாரன் | ஆரியமன்னருள் ஒருவன். செங்குட்டுவனால் வெல்லப்பட்ட சனக விசயர் தந்தை. (சிலப்பதிகாரம்) |
பாலகுமாரர் | பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், (பெ. கதை.) |
பாலக்கிரகதோஷம் | இது புருஷக்ரகம், பெண்கிரகமெனப் பிரிவுப்படும். பாலசுப்ரமண்யருக்கு ஏவல் செய்திருந்து அவராக்னையால் அசுசியடைந்த மாதரின் பாலுண்ணும் சிசுக்களை வருத்துவது. இவற்றால் தோஷம் உண்டாமிடத்து அழுகை, சுரம், விகாரரூபம், கொட்டாவி, வாயில் நுரை, நெஞ்சில் குறு குறுப்பு, உண்டாம். அப்பூதங்களான தோஷங்களாவன. (1) கந்தகிரகதோஷம், (2) விசாககிரகதோஷம், (3) மேஷகிரகதோஷம், (4) சுவானகிரக் தோஷம், (5) பிதுர்கிரகதோஷம், (6) சகுனிகிரகதோஷம், (7) பூதனாகிரகதோஷம், (8) சீதபூதனாகிரகதோஷம், (9) அதிர்ஷ்டி பூதனா கிரகதோஷம், (10) முகமண்டலிகா கிரகதோஷம், (11) ரேவதிகிரகதோஷம், (12) சஷ்கரேவதிகிரகதோஷம் என்பனவாம். பின்னும் சிலர் (1) நந்தனா கிரகம், (2) சுநந்தனாகிரகம், (3) பூதனாகிரகம், (3) முகமண்ட லிகாகிரகம், (5) பிடாவி காகிரகம், (6) சகுனிகிரகம், (7) சஷ்கரேவதிகிரகம், (8) அந்நிய வோடாலிகாகிரகம், (9) மதபேதனாகிரகம், (10) ரேவதிகிரகம், (11) அர்ச்சகா கிரகம், (12) அற்புதாக்கிரகம். என்பர். பூர்வத்தில் சிவபெருமானால் படைக்கப்பட்ட இவ்வைந்து புருஷகிரகம்களும், இவ்வேழு பெண்கிரங்களும் குழந்தையாகிய குமரக்கடவுளுக்கு ஏவல் செய்திருந்து சிவாக்கினைப்படி அன்னாதி பலி, சத்த, கந்த, அக்ஷதை, இவைகளை விரும்பிப் பூலோகத்து வந்து அதிதிபிக்ஷை, பிதுர்விரதம், தேவபூஜை, அக்னிகார்யம், முதலிய வற்றைத் தவிர்த்து அசுசிமாதர், அமங்கலமாதர், முதலியவரின் பாலைக் குடிக்கிற சிசுக்களின் ஆரோக்கியம் சுகம், வயது. முதலியவற்றின் பாதியை அபகரிக்கச் சிசுக்கள் அழுங்காலத்தும் மலசலத்தால் அசஹ்யமாகக் கிடக்கும் காலத்தும் நித்ரா நித்திரை சாலத்தும், பருவகாலத்தும், வருஷ மாத சந்தி காலத்தும், காடி, ஆந்தை, பூனை, பக்ஷி, முதலியவைகளைப் போலும், முன்பு சேநாதிபத்யத்தைப் பெற்ற கந்த கிரகம் ஆதியான 12 கிரகங்களும் குழந்தை களைப் பிடித்து வருத்தும். |
பாலக்கிரகோற்பத்தி | பூர்வம் சிவபிரான் குமாரமூர்த்தியைக் காக்கும் பொருட்டு ஸ்கந்தக்ரஹம், புருஷவிசாக்கிரஹம், மேஷக்கிரஹம்,ச்வக்ரஹம், பித்ருக்ரஹம் எனும் (5) கிரஹங்களையும் சகுனி, பூதனை, சீதபூதனை, அதிருஷ்டிபூதனை, முகமண்ட லிகை, ரேவதி, சஷ்கரேவதி எனும் (7) பெண்கிரகங்களையும் சிருட்டித்தனர். இவை (12) கிரகங்களும் காமரூபிகளாய்ச் சென்று குமாரக்கடவுளைக் காத்து வந்தன. |
பாலசந்திரர் | விநாயகருக்கு ஒரு பெயர். இது, சிறுபிள்ளையாய்ச் சென்று அனலாசானை விழுங்கி அவன் வெப்பத்தைச் சகித்துச் சந்திரனைப்போலக் குளிர்ந்திருந்தமையாலும், மாதவராசனும் சுமுதையும் காட்டில் தனித்திருந்து துன்பப்படுகையில் அவர்களுக்குக் குழந்தையுருவாய்க் காட்சி தந்து இடுக்கண் நீக்கியதாலும், பெற்ற பெயர். |
பாலசரஸ்வதி | நன்னையபட்டர் மாணக்கர். வடநூற்புலவர். |
பாலசுப்பிரமணிக்கவிராயர் | பழனியிலிருந்தவர். பழனித்தல புராணம் பாடியவர் |
பாலசோஷரோகம் | சிலேஷ்ம மிகுந்து ரஸதாதுக்களை அடைத்துக் கொள்கையில் சரீரம் சுஷ்திக்கும். இதனை உள்ளுருக்கி, உடலுருக்கி என்பர். |
பாலத்தனார் | நப்பாலத்தனார் காண்க. |
பாலரோகம் | க்ஷீராலஜ ரோகம்; திரிதோஷத்தால் கெடுதி யடைந்ததாயின் பாலையுண்ட சிசுவிற் குண்டாம் ரோகம். |
பாலறுவாயர் | சேக்கிழாரின் கனிட்டர். அநபாயச் சோழரால் மந்திரித் தொழில் பெற்று இருந்தவர். தொண்டைமான் பட்டம் பெற்றவர். குன்றத்தூரில் பாலா வாயர் கேணியெனத் தம் பெயரால் தடாகம் ஒன்று தோண்டுவித்தவர். சைவ வேளாளர். |
பாலவற்சை | தியுமத்சேநன், தேவி, |
பாலவிசர்ப்பீரோகம் | பிள்ளைகளுக்குண்டாகும் விசர்ப்பிரோகம். இது மர்ம ஸ்தானங்களைப்பற்றி கொப்புளங்களாய்ப் பரவுவது. இது சாத்யா சாத்யம், (ஜீவ). |
பாலாகா | பாலாக் என்பவனுக்குத் தாய். |
பாலாகீ | அசாத சத்ருவிடம் ஞானோபதேசம் பெற்றவன். |
பாலாசுரன் | இவன் பிராமணப் பிள்ளை வடிவாய்ச் சிந்தாசுரன் ஏவலால் விநாயகருடன் விளையாடி அவரைக் கொலை புரிய வந்து அவரால் இறந்த அசுான். |
பாலாயினி | பாஷ்களர் குமாரிடம் வேதமோதிக்கொண்ட இருடிபுத்திரர். |
பாலாறு | வசிட்டதேனு ஒருகாலத்து நந்தமா தேவரைக் கண்டு மயல்கொண்டு காமத்தால் பால் சுவறியது. இதையறிந்த வசிட்டமுனிவர் தருப்பையால் ஒரு கன்றை உண்டாக்கி விட்டனர். அதனால் காமந்தணிந்து முலைவழியால் பால்சுரந்து ஒழுகிற்று. அது பாலாறாயிற்று. இது புண்ணிய நதி. இதன் கரையில் அநேக சிவப்பிரதிட்டைகள் இருக்கின்றன. |
பாலி | ஒரு பிராக்ரத பாஷை. இப்பாஷையில் பௌத்த நூல்கள் இருக்கின்றன, |
பாலிநதி | பாலாற்றைக் காண்க. |
பாலூட்டல் | பிள்ளை பிறந்த (31)ம் நாள் சந்திர பகவானையும், பூமி தேவியையும், பூசித்து சுபக்கிரக முதயமாகப் பிள்ளைக்குச் சங்கினாற் பாலூட்டல் வேண்டும். |
பாலை | 1. ஒன்றும் விளையாவெளி இதன் கருப்பொருள், தெய்வம்; கன்னி, உயர்ந்தோர்; விடலை, காளை, மீளி, எயிற்றி, தாழ்ந்தோர்; எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், புள்; புறா, பருந்து, எருவை, கழுகு, விலங்கு; செந்நாய், ஊர்; குறும்பு, நீர்; குழி, கூவல், பூ; குரா, மரா, உழிஞை, மரம்; பாலை, ஓமை, இருப்பை, உணவு; வழிபறித்தன, பதியிற் கவர்ந்தன, பறை; துடி, யாழ்;பாலை யாழ், பண்; பஞ்சுரம், தொழில்; போர் புரிதல், சூறையாடல். 2. இது ஒரு தாவரவகை. இதில் மரமும் கொடியுமுண்டு, மரம்; வெட்பாலை, தீம்பாலை, மலைப்பாலை, குடசப்பாலை குளப்பாலை, கொடிப்பாலை, ஊசிப்பாலை, ஏழிலைப்பாலை, கறிப்பாலை, கொடிப்பாலை, திருநாமப்பாலை, நிலப்பாலை, விழுப்பாலை, கழுதைப்பாலை முதலிய. |
பாலைக்கௌதமனூர் | இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்புகழ்க் குட்டுவனைப் பாடியவர். (பதிற்றுப்பத்து) |
பாலைநிலம் | எல்லாரோசங்களும் உண்டாதற் கிடமாம் |
பாலைபாடிய பெருங்கடுங்கோ | 1. இவன் ஒரு சேரன்; சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவிற்கு ஒருபெயர். கடைச் சங்கத்தவர் காலத்தவன். (புறநானூறு, அகநானூறு.) (குறுந்தொகை.) 2. இவர் சேரமான் மரபினர். சேரமான் பாவைபாடிய பெருங்கடுங்கோ வெனவும், பெருங் கடுங்கோவெனவும் கூறப்படுவர். பாலைத்திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையவர். பெருங்கடுங்கோவென்னு மியற் பெயருடையவர். பாலைத்திணை யொன்றனையே பாடிய தனாற் பாலைபாடிய வென்னு அடைமொழி கொடுக்கப்பட்டார். கொண்கான (கொங்கண)த் தன்னனையும் அவனது எழில் மலையையும் பாடியுள்ளார். நற் 391. பேய்மகன் இள வெயினி என்பவராற் பரிசில் வேண்டிப் பாடப் பெற்றவர். புறம் 11. மிக்க வீரமும் கொடையு முடையவர். பிரிவச்சங் கூறும் தலைமகன் கூற்றாக “நிற்றுறந் தமை குவெனாயி னெற்றுறந் திரவலர் வாராவைகல், பலவா சூகயான் செலவுறு தகவே. ” குறு. (137) என்பதனால் இவர் கொடைத்தன்மை இவ்வண்ண மாயிருக்கு மென்பதை தெரிந்து கொள்க. பாலைத் திணையை உடன்போக்கு முதலாய பலவகைத் துறைகளையு மமைத்தும் விரித்தும் விளங்கப் பாடியுள்ளார். தலைமகனைத் தலை மகன் பெற்றமை ஒருவன் தான் வழிபடு தெய்வத்தைக் கண்ணெதிர் வரப்பெற்றார் போன்றதென்று கூறுகின்றார். இதில் தலைமகனை இனிது கூறி நடத்திச் செல்வது வியக்கத்தக்கது. நற் 9, பிரிவுணர்த்திய வழித்தோழி தாம் முன்பு வந்த கொடியசுரம் இப்பொழுதும் என் கண்ணெதிரிலுள்ளது போலச் சுழலா நிற்கு மென இறும்பூது படக் கூறுகின்றார். நற் 48. பூவிலை மடந்தையைக் கண்டு பருவம் வந்ததும் அவர் வந்தாரில்லையே என்று தலைவி கூற்றாக நொந்து கூறுகின்றார். நற் 118. கோங்கம் மலர்ந்திருப் பதைக் கார்த்திகை விளக்கெடுத்தலுக்கு உவமிக்கிறார். நற் 202, கூந்தலின் சிறப்புக்கூறி அக்கூந்தலிற் சிறந்து கொள்ளும் பயனைக் கொள்ளாது பிரிவோர் அடைத்தானைக் காப்பதை மறந்தனரோவெனத் தோழி கூற்றாக விரித்துக் கூறாநிற்பர், நற் 337. குறு 37ல் இவர் கூறிய உள்ளுறையை அங்கனமே கொண்டார் வாதவூரடிகள் திருக்கோவையார் 276. தலைவன் வாராமையும் தன்னை முயங்காமையும் தன்னை அயலார் சுடலைபோல அகற் றலுமாகியவற்றைத் தலைவி கூறிய பகுதி இரங்குந் தன்மையதாகும். குறு 231 பிரிவுண்மையறிந்த தலைவி காதலனை மயக்குந் தன்மையுடைய கோலத் தோடு வந்து அவன் மீது சாய்ந்து முயங்கி வருந்துவதாக இவர் கூறியது நீத்தாரையும் விழைவிக்குந் திறத்ததாகும். அகம் 5, பிரியுங் காதலர் இரும்பினாலாகிய உயிருடையரெனத் தலைவி கூற்றாகக் கூருநிற்பர். அகம் 185, பிரிவோர் பழிவுடையால்லர். அவரைப் பிணிக்க அறியாத என் தோள் களே தவறுடையவெனத் தலைவி கூறுவதாக அமிழ்தம் பொழியாநிற்பர். அகம் 267. மான்கொம்பு முளைத்து முதிருமளவுந் தோல் பொதித்திருப்பது கூறுகின்றார். அகம் 291, பாலைநிலத்திற் பாம்பு வாடிக் கிடப்பது பணஞ் சொரிந்தமை போன்ற தென்கிறார். அகம் 313. இவர் பாடியனவாக நற்றிணையில் பத்து (9,48,11,202,224,256,318,337,384,399) பாடல்களும் குறுந்தொகையில் பத்தும் அகத்தில் பதினொன்றும் புறத்திலொன்றுமாக முப்பத்திரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பாலைப்பண் | 1. ஏழுவிதம், அவை செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை மேற் செம்பாலை என்பன. பின்னும் பாலை நான்கு வகைப்படும். அவை ஆயப்பாலை, சதுரப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப் பாலை என்பன. இப்பண்கள் தாரம் உழை இளி முதலியவற்றுடன் மாறப் பற்பல வாம, இப்பாலைப் பண்ணில் தக்கராகம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் முதலிய பிறக்கும். உழைகுரலாகிய கோடிப்பாலை நிற்க இடமுறைத்திரியு மிடத்துக் குரல் குரலாயது செம்பாலை இதனில் குரலிற் பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித் தாரத்திலே நின்றவோரலகை விளரியின் மேலே நடவிளரி குரலாய்ப் படுமலைப்பாலை பிறக்கும். இம்முறையே துத்தம் குரலாயது செவ்வழிப் பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற் செம்பாலையாம் 2. செம்பாலையினும் படுமலைப் பாய வலிது. படுமலையின் செவ்வழி வலிது. செவ்வழியின் அரும்பாலை வலிது. அரும் பாலையின் கொடிப்பாலை வலிது. கொடிப் பாலையின் விளரிப்பாலே வலிது. விளரிப் பாலையிற் மேற்செம்பாலை வலிது. ஏழிசை களில் தாரத்துள் உழையும், உழையுள் குரலும், குரலுள் இளியும், இளியுன் துத்தமும், துத்தத்துள் விளரியும், விளரியுள் கைக்கிளையும் பிறத்தல் தகுதி, இவற்றின் பிறப்பிடங்கள் மிடற்றால் குரல், நவாற்றுத்தம், அண்ணத்தாற் சைக்கிளை, சிரத்தாலுழை, நெற்றியாலிளி, நெஞ்சால் விளரி, மூக்காற்றரம், பிறக்கும் என்பர். இவற்றின் மாத்திரை, ஒசை, எழுத்து, மணம், சுவை முறையே வருமாறு, 4,4,3,2,4,3,2 வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேன், ஆ, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ, மௌவல், முல்லை, கடம்பு, வஞ்சி, நெய்தல், தாமரை, புன்னை, பால், தேன், கிழான், நெய், ஏலம், வாழை, மாதுளம்கனி. |
பாலையாநந்தர் | சச்சிதாகந் தமாலை இயற்றிய புலவர். |
பாலைவனங்கள் | சில சமபூமிகள் மழைக் காதாரமில்லாமலும், மரங்கள், குட்டைகள் முதலிய நிழல் நீர்வளங்களில்லாம லுளவாம். பொறுக்கக்கூடாத உஷ்ணமுள்ளவாய்ச் சூறைக்காற்றினால் துன்புறுத்தும் இடங்களாம். இவ்வகைப் பாலைவனங்களில் சில ஆசியா கண்டத்தில் உள. ஆயினும் ஆபிரிகா கண்டத்திலுள்ள சகாராபாலைவனமே அவற்றுள் பெரியது. சகாராபாலைவனம் இது கிழக்கு மேற்கில் (3000) மைல் நீளமும் தெற்கு வடக்கில் (900) மைல் பரப்புள்ள தென்று எண்ணுகின்றனர். இதில் சில முட்செடிகளும், கற்களுந் தவிரவேறொன்று மில்லை இங்கு தீக்கோழியும், ஒட்டகச் சிவிங்கியும் வசிக்கின்றன. இதிலடிக்கும் சூறைக்காற்று அதில் யாத்திரை செய்பவரை ஒட்டகங்களுடன் மூடிவிடுகின்றது. சில இடங்களில் பொய் மணற்புதையல் மனிதரை அழுத்திக் கொல்லுகின்றது. இதிலுண்டாம் சூறைக்காற்று (400) அடிமுதல் (6000) அடி உயர்ந்து தூண்கள் போல் நின்று பின் பெருமணல் மேடாகின்றது. இது வருவதையறியும் ஒட்டகம் கண்ணை மூடிக்கொண்டு பூமியில் கவிழ்ந்து படுத்துக் கொள்ளுமாம். அதிலிருக்கும் மனிதரும் அதன் பக்கத்தில் கம்பளியால் தம்மை மூடிக்கொண்டு படுத்துக் கொள்வர். சூறை சில வேளைகளில் மனிதரையும் மிருகங்களையும் திக்குமுக்காட்டி மரணத்தையு முண்டாக்கும். இவவகை வனாந்தரத்தில் சில இடங்களில் ஓயசீஸ் எனுமிடங்களுண்டு, அவ்விடங்களில் சிறிது நீர் நிலைகளும் பேரிச்ச மரங்களுமுண்டு, அவ்விடம் பிரயாணிகள் தங்கிப் போவார். இதிற் சில இடங்களில் சில காடுகளும் உண்டு, இந்த இடங்களிலும், இந்தப் பாலைவனத்திற்கு மேற்கிலும் ஒரு பள்ளத் தாக்கான பூமியுண்டு, அதைச் சுற்றிலும் சில பட்டணங்கள் இருக்கின்றன. மற்றொன்று மங்கோலியா விலுள்ள கோபி யென்பதாம். மற்றும் சிறு பாலைவனங்கள் பாரசீகத்திலும், இந்தியாவிலும் உண்டு. ஆயினும் அவை சிறந்தன அல்ல. வெளிகளாம். |
பால் | 1. (5) முடி, கொண்டை, சுருள், குழல், பளிச்சை என்பன. இவற்றுள் மயிரை உச்சியில் முடித்தல் முடி, பக்கமாக முடித்தல் கொண்டை, பின்னே செருகல் சுருள், சுருட்டி முடித்தல் குழல், பின்னிவிடுதல் பனிச்சை. |
பால் | (5) ஆண், பெண், பலர், ஒன்று, பல. 2. சராசரப் பொருள்களி லுண்டாம் சத்து. இது பெரும்பாலும் வெண்ணிறமாகவும், மஞ்சள் கலந்து மிருக்கும். அசரப்பால் கள்ளி எருக்கு முதலிய மரங்களிலுண்டாம் பால், 3. (14) கைக்கிளை முதல் பெருந்திணை இறுவாய் ஏழும், வெட்சி முதல் பாடாணிறுவாய் எழுமாம். |
பால்கரப்பான் | பிள்ளைகளுக் குண்டாம் ரோகங்களில் ஒன்று. தேகத்தில் ஊறல், சொறி, புண், விகாரரூபம் உண்டாக்குவது. கருங்காப்பான், செங்கரப்பான், வரிகரப்பான், சொறிகரப்பான், ஆனந்தகரப்பான், மண்டைகரப்பான் இது இடுப்பிலுண்டானால் கடுவன் எனப் பெயர் பெறும். (ஜீவ.) |
பால்வகை | இவை வெண்ணிறத்த ஆதலின் பாலெனப் பெயர் பெற்றன. இவை மக்கள், விலங்கு, தாவரவகைகளிலுண்டு. ஒவ்வொன்றும் பலவகைக் குணங்களுடையன. முலைப்பால், பசுவின் பால், காராம் பசுவின் பால், கொம்பசையும் பசுவின் பால், ஆகாப்பசுவின்பால், எருமைப்பால், வெள் ளாட்டுப்பால், செம்மறியாட்டுப்பால், யானைப்பால், குதிரைப்பால், கழுதைப்பால், தேங்காய்ப்பால், ஆலம்பால், அத்திப்பால், பேயத்திப்பால், தில்லைமரத்தின் பால், திருகுக்கள்ளிப்பால், சதிரக்கள்ளிப்பால், மான்செவிக் கள்ளிப்பால், இலைக்கள்ளிப்பால், கொடிக்கள்ளிப்பால், எருக்கம்பால், வெள்ளெருக்கம்பால், காட்டாமணக்கின் பால், எலியா மணக்கின்பால், பிரமதண்டின் பால், இவற்றின் குணங்களைப் பதார்த்த குணசிந்தாமணியிற் காண்க. |
பால்வடியுமரம் | இந்த மரம் தென் அமெரிக்கா காடுகளில் இருக்கின்றன. இந்த மரத்தின் பட்டையில் தொளையிடின் அத்தொனையிலிருந்து பசுவின் பாலைப்போல் சுத்தமான உரிசையுள்ள பால் வடிகிறதாம். அதனால் அந்நாட்டார் அதற்குப் பசு மரம் எனப் பெயரிட்டழைக்கின்றனர். |
பாளித்தியம் | பாகத இலக்கணம். |
பாளையக்காரர் | இவர்கள் தென்னாட்டில் சில இடங்களிலிருந்த ஒருவகைக் கூட்டத்தார். திருநெல்வேலி ஜில்லாவில் பாஞ்சாலங் குறிச்சியை இடமாகக்கொண்டு 1801 ஆங்கிலேயரில் பலரைக் கொன்ற வீரர். (தர்ஸ்டன்). |
பாவக |