அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பௌண்டரம்

1. தெலுங்க நாட்டிற்கு வடக்கில் உள்ள நாடு, புண்டான் ஆண்டது. 2. பீமன் சங்கிற்கு ஒரு பெயர். 3. ஒரு யாகம்,

பௌண்டாகவாஸுதேவன்

இவன் காசி ராசன். மகா மாயாவி. விஷ்ணுவைப் போல் பஞ்சாயுதமும் கருடனும் மாயையாற் பெற்றுப் போகங்களை யநுபவித்தவன். (இவன் சகோதரன் இறுதி) இவன் கிருஷ்ண மூர்த்தியுடன் சண்டையிட்டு இறந்தவன். இவன் குமரன் சுதக்ஷணன், இவனைக் கொன்ற கண்ணனைக் கொல்லச் சுதக்ஷணன் ஆபிசாரயாகஞ் செய்து பூத முண்டாக்கிக் கண்ணன் மீதேவ அப்பூதம் கண்ணனை விட்டு மீண்டும் சுதக்ஷணனையே கொன்றது. (பார~சபா.)

பௌண்டிரமச்சன்

பாரதவீரன்.

பௌதிக சாத்திரம்

பூதங்களின் நிலைமைகளைக்கூறும் நூல்,

பௌதிகம்

பிரமனிடத்து உதித்த அக்னி.

பௌத்தம்

புத்தனைக் காண்க.

பௌத்தர்

புத்தமதத்தவர்.

பௌத்திய மன்வந்தரம்

ஆங்கீரசருக்குப் பூதியென்னும் புத்திரன் இருந்தான். அவன் கடுங்கோபியாதலால் தேவர் பயந்து அடங்கி நடந்து வந்தனர். இவன் தனக்குப் புத்திரரில்லாமையால் நாம் தவஞ்செய்யினும் தேவர் நமக்குப் புத்திரப் பேறு அளியார் என்று தன் சகோதரன் சுவர்ச்சஸ் செய்யும் யாகத்திற்குக் கர்த்தாவாய் இருந்து யாகஞ் செய் விக்கையில் ஒரு அவசர நிமித்தமாகத் தனக்குப் பதில் தன் மாணாக்கன் சாந்தியை யாகாக்னியை வளர்க்கக் கட்டளை யிட்டுச்சென்றனன். சாந்தி பூசைக்குப் புஷ்ட மெடுக்கச் செல்ல ஓமாக்னி சாந்தமாயிற்று. சாந்தி வந்து அக்னி சாந்தமாகக் கண்டு ஆசாரியர் கோபிப்பார் என்ற அச்சத்தால் நடுங்கி அக்னி தேவனைத் துதித்தனன். அக்னி தேவன் தரிசனம் தந்து என்ன வரம் வேண்டுமென்னச் சாந்தி அக்னியை நோக்கி என் குரு கடுங்கோபியாதலால் முன்போல் யாகாக்னி வளரவும் அவர்களுக்குச் சர்வபூதங்களிடத்தும் தயையுண்டாகவும் அவருக்கு ஒரு புத்திரன் உண்டாகவும் வரம் பெற்று முன்போல் யாகாக்னி வளர்த்துக் கொண்டிருக்கையில் ஆசாரியர் வந்து மாணாக்கனைக்கண்டு இன்றைக்கு என் மனம் எல்லாரிடத்தும் தயையுள்ள தாயிருக்கிறது. இதற்குக் காரணம் தெரியவில்லையெனச் சாந்தி நடந்தவைகளைக் கூறப் பூதி சந்தோஷித்து மாணாக்கனுக்குச் சகல கலைகளையும் கற்பித்துச் சில நாளில் பௌத்தியன் என்னும் மனுவைப்பெற்றான் (மார்க் கண்டேயம்.)

பௌமசர்ப்பங்கள்

தருவீகரம், மண்டலி, இராஜமந்தம், நிர்விஷம், வைகாஞ் சம் என ஐவகைச் சாதியாம்.

பௌமாசி

சிபி குமரி, இவள் நிதந்துவின் குமரர் ஐவரை மணந்தனள். இவள் ஐவரை மணந்ததால் ஐந்து அரசர் குல முண்டாயிற்று. நிதந்துவைக் காண்க.

பௌரிகன்

புரிகையெனும் பட்டணத்தரசன். இவன் தீய ஒழுக்கத்தால் மறுபிறவியில் நரியாய்ப் புலாலுணவு நீங்கி இனமாகிய நரிகளால் விலக்கப்பட்டுப் புலிக்கு மந்திரியாகி இருந்தனன். இவ்வாறிருக்கையில் நரிகள் புலியிடம் கோள் கூறப் புலி கொல்ல விருக்கையில் தாயால் விலக்கப் பட்டுப் பிறகு நரியான தான் மற்றை நரிகளின் கபடத்தைத் தெரிவித்து மந்திரி பதவியை விட்டு நற்கதி யடைந்தனன். (பார~சாங்.)

பௌர்ணமாசம்

பௌர்ணமியில் செய்யும் யாகம்,

பௌர்ணமி

சித்திராபெளர்ணமை; சித்திரை பௌர்ணமி விசேஷர். இதினும் சித்திரை நக்ஷத்திரம் கூடின விசேஷம். இதில் சித்திரவேட்டிகள் நானஞ்செய்து விரதமிருக்கின் நலம், பௌர்ணமி; சநி, ஞாயிறு, வியாழக்களில் வரின் விசேஷம். வைசாக பௌர்ணமி விரதம் விசேஷம், ஆனி மாதத்திய பௌர்ணமி அல்லது அமாவாசை விசேஷம்.

பௌலஸ்தீ

சூர்ப்பணகை.

பௌலோமதீர்த்தம்

தென்கடற் கருகில் உள்ள தீர்த்தம்.

பௌலோமன்

இந்திரன் குமரன்,

பௌலோமம்

புலோமராற் செய்யப்பட்ட நீதி நூல்

பௌலோமர்

வைச்வாநரன் என்னும் அரக்கன் குமரியாகிய புலோமையிடம் மரீசிரிஷியாற் பிறந்த அரக்கர், இவர்களை அருச்சுநன் கொன்றனன்.

பௌலோமி

இந்திராணிக்கு ஒருபெயர்.

பௌஷியன்

உதங்கருக்குக் குண்டலமுதவிய அரசன். இவன் மனைவி ஓர் இருடி புங்கவர் அநுக்கிரகத்தால் நாகரத்தின குண்டலம் பெற்று உதங்கர் கேட்க நாயகன் கட்டளைப்படி கொடுத்தனள்,