அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
போக பத்திரம்

ஒருவனுக்கு இப்பொருளை அனுபவித்துக் கொள் என எழுதிக் கொடுத்தது,

போககாமியப்பிரியநாட்கள்

சுயக்கிரகம் விட்ட நாள் போகநாள் நின்றநாள், பிரிய நாள், பற்றப்படும் நாள், பாவநாள், சாமியநாள் என்றும் சந்திராதித்தர், வசிட்டர் முதலியோர் கூறினர். (விதானமாலை)

போகசங்கிராந்தி விரதம்

இது வருவுக்கடையில் சூர்ய பூஜை செய்து தனதான்ய பசுவாதிகளை வேதியர்க்குத் தானஞ் செய்வது. இதினும் சூர்யபூஜை.

போகபூமி

1. போகபூமியாவது, பதினாலுவயதுடைய குமரனும் பன்னிரண்டு வயதுடைய குமரியுமாய்த் தம்முள்ளொத்த மரபும், தம்முளொத்த அன்பு முடையவனாகிய தலைவனும் தலைவியும் கற்பகம் போலச் செல்வம் வந்து வாய்ப்பத் தாம் செய்த தவம்காறும் அப்பூமியில் இன்பநுகரும் இடம். 2. (6) ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், தேவகுருவம், உத்த ரகுருவம்.

போகம்

(8) பெண், ஆடை, அணி, போஜனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி.

போகர்

இவர் காலாங்கி நாதருக்கு மாணாக்கர். இவர் சித்தராய்ச் சத்த சமுத்திரங்களையும் தாண்டிச் சஞ்சீவி மூலிகைகள் கண்டு பிடிக்கையில் அது கையில் அகப்படாதிருக்கத் தம்பனா மந்திரத்தால் அதை ஒரிடத்தில் நிலைக்கச் செய்து பிடித்துவந்தவர். மேருக்கு அப்பாற் சென்று தாது வகை கொண்டுவந்தவர். சிங்கத்திற்கும், புலிக்கும், பூனைக்கும் ஞானோபதேசஞ் செய்தவர். இவர் ஆதிரசம் கொண்டு வந்தவர் என்று சொல்வர். இவர் தக்ஷிணாமூர்த்தி சத்திக்கு அருளிச் செய்த ஏழு லக்ஷத்தை ஏழுகாண்டமாக்கித் தமது மாணாக்கருக்கு உபதேசிக்கச் சித்தர்கள் இதைத் தக்ஷிணாமூர்த்தியிடம் கூறத் தக்ஷிணாமூர்த்தி இவரை வருவித்து நீர்செய்த நூலைச் சொல்லுமெனக் கேட்டுக் களித்து, சித்தருக்கு நீங்கள் இதைப்பற்றி ஒன்றும் கவலை கொள்ள வேண்டாம். அவரவர்கள் தங்கள் சமர்த்தைத் தெரிவிக்கின் அதையேன் தடுத்தல் வேண்டுமெனக்கூறி இருடிகளைத் தங்கள் இருப்பிடம் அனுப்பினர். அதுமுதல் சித்தர் பலர் இவரிடம் வந்து குளிகை பெற்று போவர். இவர் ஒருநாள் மலையடிவாரஞ் செல்ல அங்கு ஒரு புலி துரத்த இடையனை விட்டுக் குகையில் ஒளித்துக் கருவிழுதியின் பலத்தால் காயகற்பம் பெற்று ஒரு கன்று போட்டு வசித்திருந்த பசு தன் கன்றுடன் இவரை வந்து திருவடியில் மோப்ப இரங்கி அதற்குபதேசித்து நீங்கினர். இவர் செய்த தீக்ஷை யென்னும் நூலைச் சட்டைமுனி கிழுத்தெறிந்தனர். இவர் செய்த தூற்கள். போகர் 7000, நிகண்டு 17000 சூத்திரம், 700 யோகம் இவர் கந்த மூர்த்தியால் சித்தி பெற்றவர். இவர் சதுரகிரி, சிவகிரி முத லிய இடங்களில் வசித்ததாகத் தெரிகிறது. கருவூர்த்தேவருக்குத் தஞ்சைச் சிவப்பிரதிட்டைக்காகக் காக்கையின் கழுத்தில் ஓலை அனுப்பினர். இவருக்கு மாணாக்கர் கொங்கணர், கருவூர்த்தேவர், சுந்தராநங்தர், மச்சமுனி, நந்தீசர், இடைக்காடர், கமலமுனி, சட்டைமுனி, முதலியவ ராம். இவர்மீது இன்னும் சில பொய்க்கதை கூறுவர். இவரை அகத்தியற்கு மாணாக்கர் என்பர். இவர் காலாங்கிநாதருக்கு மாணாக்கர் என்பதைப் போகர் ஏழாயிரத்தால் அறிக.

போகவதி

1. பாதாள கங்கை. 2. நாகர் பட்டணம். 3. சுதரிசநன் என்னும் ரிஷியின் பத்னி. இவள் தனித்திருக்கையில் யமன் அதிதி போல் வந்து தன்னுடன் புணரவேண்ட இவள் சாஸ்திர நியாயங்களால் மறுப்பவும் கேளாது வருத்த இவள், தன் கணவன் அதிதிகள் வேண்டியவைகளை மறுக்காதே என்று கூறியபடி உடன்பட்டிருக்கையில் கணவன் வந்தழைக்க இவள் மறு உத்தரங் கூறச் செல்லுகையில் யமன்கூறாதிருக்கச் செய்து தான், உன் மனைவி அதிதி பூசை செய்கிறாளென இருடிக்குக் கூறக் கேட்டுக்களிப் படைந்து தன்னுருவுடன் வெளிப்பட்டு இருடிக்கு யமவாதனை யொழிய வரம்தந்து இவளை உலகர் பாபங்களை நீக்கும் போகவதியெனும் நதியாக வரம் தந்தனன்.

போகாங்கன்

இவன் கொடுங்கோலரசன். இறந்து நரகடைந்து குமரன் செய்த புண்ணியத்தால் நரகத்தை நீங்கினன்.

போகி

1. இந்திரன். 2. விளைவு முதலிய பயன் தருதற் பொருட்டு மழை பெய்விக்கும் மேகநாதனாகிய (போகி) இந்திரனை ஆராதிக்கும் நாள். இது மார்கழி மாச பூர்த்தியில் வருவது. இதனைக் கண்ணன் தாம் அவதரித்த காலத்துத் தமக்குச் செய்யக்கட்டளையிடக் கேட்ட இந்திரன், சினந்து மழை பொழிவிக்கக் கண்ணன் கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்து மழை தடுக்கச் செருக்கடங்கிய இந்திரன் பணியத், தை மாதத்திற்கு முன்னாள் உனை உலகர் பணிய எனக் கட்டளையிட்டபடி இந்திரனைப் பூசிக்கு நாள் என்ப. இந்நாளில் ஆயச் சிறுவர்காளிங்க மடுவிற்குதித்த கண்ணனுக்கு விடமேறாத படி இராமுழுதும் தீக்காய்ந்து பறைகொட்டி விழிப்பித்தி ருந்தனராதலின் அவ்வறிகுறியாகத் தீக்கொளுத்துவது வழக்கு. இதை வைணவர்கள் சூடிக் கொடுத்தாளுக்குப் போகங்கொடுத்த நாள் என்பர்.

போகையர்

கெம்பாவிலிருந்த வேதியச்சிவனடியவர். இவரைக் கண்டு உலகம் வழிபடச் சிவமூர்த்தி நீசவுருத் தாங்கி இறந்த கன்றினைத் தோளில் தூக்கி வரலும் போகையர் எதிர் கொண்டு இவர் சிவனடியவர் என அதை வாங்கி வைத்து உப்சரிக்கச் சிவனடியவராய் வந்த இவர் இக்கன்றினிடம் நமக்கு ஆவல் உண்டு நீரே சமைத்திடும் எனப் போகையர் அவ்வகை செய்ய வேதியர் கோபித்து மடத்தைத் திறந்து உள்புகச் சிவமூர்த்தி மறைய வேதியர் பிரமித்து நிற்கப் போகையர் வேதியரை வணங்கி வேதியரே உங்கள் அக்ராரத் தில் நாம் வரவில்லை தனித்திருந்த எமது இருக்கையில் நீங்கள் வந்து வருத்தி யதால் உம்மூரில் நாமும் சிவலிங்க மூர்த்தியும் இரோமென்று போகையர் நீங்க அவ்வூரிலிருந்த சிவலிங்கத் திருவுருக்களும் மறைந்தன. சிவபிம்பம் மறைய நகர்வளம் குன்றியது. மீண்டும் வேதியர் போகையரை வேண்டி வருவிக்க வளமுண்டாயின.

போக்கியார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை.)

போசநன்

சகரன் புத்ரன்.

போஜகடகம்

1. நர்மதாந்திக்கு அருகில் உள்ள பட்டணம். 2. விதர்ப்ப தேசத்திலுள்ள இடம். Elliobipur on the river Purna in Berar (பா. சபா)

போஜகன்

சாம்பனால் யாதவ கன்னியரைத் தானமாகப்பெற்ற அரசன். (பவிஷ் புரா.)

போஜகூடம்

உருக்மீ என்பவனால் புதிதாய் நியமித்த பட்டணம்.

போஜன விதி

இஃது உணவு கொள்ளும் கால் இவ்வாறிருந்து உண்க வெனக் கூறும் விதி. போஜன காலத்தில் சமபந்தியில் உண்ணத்தக்கோர் அந்நியரல்லாத சமசாதியராய் நியமாசார முடையவர்களாயிருத்தல் வேண்டும். போஜனம் செய்யுமிடம் வெளிச்சமுள்ளதாய் அந்நியர் புகப்பெறாததாய்க் கோமயத்தால் மெழுகப்பட்டதாயிருத்தல் வேண்டும்.

போஜனக்கிரமம்

1. நீராடி வாயைத் துடைத்துக்கொண்டு உண்ணு மிடத்தை மண்டலஞ்செய்து உண்டவரே உண்டவர்கள். கால் கழுவிய ஈரம் உலருமுன்னர் உண்ணவேண்டும். கால் ஈரம் உலர்ந்தபின் படுக்கை அடைய வேண்டும். உண்ணும் போது கிழக்காக உட்கார்ந்து தூங்காது அசையாது நன்றாக உட்கார்ந்து வேறொன்றையும் பாராமலும், பேசாமலும் உணவைத்தொழு துண்க, (ஆசாரக்கோவை) 2. தம் பொருட்டாக உலையேற்றலும், தமக்காக உயிர்வதை செய்தலும், மடைப்பள்ளியை எச்சிற் படுத்தலும், சிறுவர்கள் உண்ணுகையில் பெரியோர் உயர்ந்த பீடத்திருத்தலும் சிறுவர்களுண்கையில் அவரை மனம் வருந்த ஏதேனும் கூறலும் ஆகாது. 3. விருந்தினர், முதியோர், பசுக்கள், பக்ஷிகள், பிள்ளைகளுக்குணவு கொடாமல் முந்தி உண்ணலும், படுத்துண்ணலும், நின்றுகொண்டும், வெளியிடத்து இருந்துகொண்டும், அதிகமாக உண்ணலும், கட்டிலின் மீதிருந்து கொண்டும், பெரியோர்களுடன் சமபந்தியிலுண்ணும்போது அவர்களுண்ணு முன் உண்ணலும், அவர்கள் எழுதற்குமுன் எழுதலும், அவர்களை நெருக்கியிருத்தலும், அவர்களுக்கு வலப்பக்கத்திருந் துண்ணலும், ஆகா, உண்கையில் தீம்பொருள்களை முதலாகவும் மற்ற வைகளை நடுவாகவும் கசப்பைக் கடையாகவும் உண்க. தம்மினு முதியோரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு உண்ணல்காது, உண்டபின் வாய்நீர் உட்புகாமல் கொப்புளித்து உமிழ்ந்து எச்சிலறும்படி வாயையும் பாதங்களையும் நன்றாகத் துடைத்து (3) முறையாகத் தண்ணீர் பருகிக் கண் காது மூக்கு செவி முதலிய உறுப்புகளைத் துடைத்துக்கொள்க. தண்ணீரை இரண்டு கைகளால் வாரிக்குடித்தலும், ஒரு கையால் தண்ணீர் பருகலும், ஒரு கையால் கொடுத்தலும் ஆகாது. (ஆசாரக் கோவை.)

போஜனஞ் செய்யும் பாத்திரம்

பொன், வெள்ளி, வெண்கல பாத்திரங்களும், இலைகளில் வாழை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரி யிலை, பலாசிலை, சுரையிலை, கமுக மடல் முதலியவையாம். இவற்றுட் பொற்பாத்திரம் சுக்லவிர்த்தி யுண்டாம்; வாதபித்த சிலேத்மாதிகளைச் சமனஞ்செய்யும் வளப்பத்தினையு மனவுற்சாகத்தையும் தந்து சோபா ரோகத்தை நீக்கும். வெள்ளிப்பாத்திரம் சிலேத்மபித்த கோபத்தை நீக்கித் தேஜஸையு மகிழ்ச்சியையும் தரும், வெண் கலப்பாத்திரம் சிக்கல், சோர்வு, இரத்த பித்தரோகம், இவைகளை நீக்கித் தாதுவிர்த்தியையும் வன்மையையு முண்டாக்கும். வாழையிலை சருமதாதுக் களுக்குப் பளப ளப்பும் சுகபோகங்களையுந் தந்து மந்தாக்னி. துர்ப்பலம், க்ஷணவாத சிலேஷ்மம், அரோசகங்களைப் போக்கும். தாமரையில் வெப்பம், வாதரோகம், மந்தாகனிகளை உண்டாக்கும், சம்பத்தைப் போக்கும். பலவகையான பாலுள்ள மரங்களின் இலைகள் பங்கு வாதம், க்ஷயம் தாகசோகம் இவையணுகாது காக்கும். பலாவிலை குன்மரோகத்தையும் பித்தத்தையு மதிகப்படுத்தும். பொதுவாக இலைகளில் வெள்வாழை யிலை மனத்திற் குற்சாகத்தையும் திருப்தியையும் தரும். மற்றவிலைகள் மத்திம பலனைத்தரும். கல்லைகள் தைக்குமிடத்து ஒரு ஜாதியான இலையால் தைக்க. வாழையிலையிலுண்ணுங்கால் அறுத்த அடிப் பாகத்தை வலப்பக்கமாக வைத்துண்க. போஜன பாத்திசங்களையும் இலைகளையுஞ் செம்மையாகச் சுத்தஞ்செய்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழமளவை சதுரச்சிரமாகப் புள்ளியின்று மெழுகிப்போடல் வேண்டும். இரண்டு கால்களையு முடக்கி இடமுழங்தாளின் மேல் இடமுழக்கையை யூன்றிக் கொண்டு போஜன சமயத்தில் தகாதவார்த் தைகள் பேசாமலும், பேசுதல், சிரித்தல், நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு, என்பவைகளையும் அதீக்ஷதர், புலையர், விரதபங்க முடையார், பூப்புடைமங்கையர் முதலியோரைப் பாராமல் விதிப்படி அன்னமுதலியவற்றைச் சுத்திசெய்து இஷ்டதேவதைக்கும், அக்நிக்கும், குருவிற்கும், நிவேதித்து மௌனமாய்ச் சிந்தாமல் புசித்தல் வேண்டும். எவன் தலைமேலாடையுடனும் தென்முகமாகவும் புசிக்கின்றானோ அவனது அன்னத்தினை அரக்கர் புசிக்கின்றனர். மண்டலஞ் செய்யு மிடத்து வேதியர்க்குச் சதுரமாயும், அரசனுக்கு முக்கோணமாயும், வைசியனுக்கு வட்டமாயும், சூத்திரனுக்குப் பிறைவடிவாகவும் மண்டலஞ்செயல் வேண்டும். ஆதித்தர் வசுக்கள், உருத்திரர், பிரமன் இவர்கள் மண்டலங்களின் வசிக்கின்றனராதலின் மண்டலமவசியஞ் செய்ய வேண்டும். கால், கை, வாய், பூசி இவ்வைந்துறுப்புக்களும் உலராததற்கு முன் கோபமற்றவனாய்க் கிழக்கு முகமாகவிருந்து இரண்டு காலினாலாயினும் ஒற்றைக்காலினாலாயினும் நிலத்தினைத் தொட்டுக்கொண்டு புசிக்கவேண்டும். பொன் வெள்ளி வெண்கலம் இந்தப் பாத்திரங்களிலும் தாமரையிலை முருக்கிலை இவற்றாற் சமைத்த கல்லைகளினும் புசித்தால் மூன்று தினம் தீக்ஷையோடு செய்த வேள்விப் பயனை யடைகிறான், எவன் வெண்கலப் பாத்திரத்தில் புசித்து வருகின் சனோ அவனுடைய ஆயுளும் அறிவும் புகழும் வன்மையும் விருத்தி யடைகின்றன. முருக்கிலை தாமரையிலையிற் புசித்தால் இல்லறத்தான் சாந்திராயண விரதஞ் செய்க, பிரமசாரியுந் துறவியுமவற்றிற் புசித்தால் சாந்திராயண பலனைப்பெறுவர். உண்கலத்தை நிலத்தில் வைத்துண் ணில் அது உபவாசத்தோடொத்த பலமென்று கூறியிருக்கிறது. பிராணா குதி கொள்ளுமளவே நிலத்தின் மேல் வைக்கவேண்டும். பிறகு ஆசனத் தின் மீது வைத்துண்ணல் வேண்டும். என்னெனின் நீர்த்துளி, சோற்றின விழ்கள், ஆடையுறுப்புக்களிற் சிதறுமாதலானும் காற்றூசு ஆடைத்தூசு அந்த அன்னத்திற் படுமாதலானும் மேலெடுத்து ஆசனத்தில் வைத்துண் ணலாம். மந்திர நியமத்துடன் கூடிய பிராணாகுதிக்கும் தென்புலத் தார்க்குச் செய்யுஞ் சிரார்த்தவுணவிலும், பாத்திரம் நிலத்தின் மீது வைத்தே உணவு கொளல் வேண்டும். இலையிலிட்ட அன்னத்தை நோக்கி வணங்சி அஞ்சலியத்தனாய் இஃது எமக்கு ஆகுக வெனக்கூறிப் பத்தியோடுந் தொழ வேண்டும், வியாக்ருதி, காயத்ரி இம்மந்திரங்களை மந்திரித்து அன்னத்தின் மீது நீரைத் தெளித்து மந்திர பூர்வகமாக உண் கலத்தினை வலமாக நீர் வளையக்கட்டி எல்லா உயிர்களினுடைய இதயத்திலும் பிராண வடிவனா யுலவுகின்றயென்ற பொருளுள்ள மந்திரத்தைத் தியானித்து முதலில் நீர் சிறிதருந்தி அவ்வன்னத் திலிருந்து சிறிதெடுத்துப் பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுக்கும், சுட்டு விரல் நடுவிரல் பெருவிரலால் பிராணனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரல் பெருவிரலால் அபானனுக்கும், ஈற்றயல் விரல் கடைவிரல் பெருவிரலால் வியானனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரலொழிய மற்றைச் சுட்டு விரல் கடைவிரல் பெருவிரலாலு தானனுக்கும், ஆகுதி செய்ய வேண்டும். பிராணாகுதி யன்னச்சுவை நாவினுக்குத் தெரியாதபடி விரைவில் விழுங்க வேண்டும். உண்ணுமுன் அன்னத்திருந்து சிறிதெடுத்துத் தருமனுக்கும், சித்திரகுத்தனுக்கும் பலி கொடுத்து எவ்விடத்தாயினும் பசி தாகத்தோடு வருந்தியிருக்கும் பிரேதங்கட்குத் திருப்தியுண்டாம் பொருட்டு இந்த நீர் கெடாது வளர்க என்று நீர் விட்டுப் பின்பு ஆபோசனங் கொள்ளல் வேண்டும். உண்ணத்தக்க எல்லாவுண்டிகளும் சிற்றுண்டிகளும் கிழங்குவகைகளும் பழங்களும் மாமிசங்களும் மற்றுள்ளவைகளையும் பல்லாற் கடித்துத் தின்னலாகாது. சிறு துணிக் கைகளாகச் செய்து தின்னல் வேண்டும். கடித்த சேடத்தை இலையிலா யினும் மீண்டும் வாயிலாயினும் வைக்கலாகாது. அளவுகடந்தவுண்டி தின்னலாகாது. உண்ணுமிடத்து முதலில் தித்திப்பினை யும், நடுவே உவர்ப்பு, புளிப்பினையும், பின் கைப்பு, கார்ப்பினையும் புசித்தல் வேண் டும். முதல் நீர்த்தன்மையுடைய பண்டங்களையும் நடுவில் வலிய பண்டங்களையும் முடிவில் நீர்த்தன்மையுள்ள பண்டங்களையும் புசிக்க வேண்டும். இவ்வாறு புசிப்பவன் வன்மையையும் நோயின் மையையும் தவறாது பெறுவன். முனிவர்கள் எட்டுக்கவளமும், காட்டிலுள்ளோன் பதினாறு கவளமும், இல்லறத்தான் முப்பத்திரண்டு கவளமுங் கொள்ளல் வேண்டும். பிரமசரியனுக்கு எல்லையில்லை, ஒருவாய்க்கவளம் ஒவ்வொன்றாக வொத்தபடி கொள்ள வேண்டும். வாய்கொண்டது போகக் கையின் மிகுந்திருந்த வுண்டி எச்சிலெனப் படும். அவ்வாறு மிகுந்த அன்னத்தினையும் வாயிலிருது விழுந்த அன்னத்தினையும் புசிக்கலாகாது, உண்ணில் சாந்தி ராயண விரதஞ் செய்யவேண்டும், யார் அங்கையி இண்கிறானோ, யார் ஆகாரத்தைக் கையிலெடுத்துக் கைவிரித்து வளைத்து நக்கித் தின்பானோ, அவனுக்கு அந்த வுண்டி பசுவின் மாமிசம் போலாம். அசீரணத்தில் புசிக்கலாகாது. மிகவும் பசித்திருத்தலாகாது. அசீரணஞ் செய்யும் பொருளையும் புசிக்க லாகாது, யானை, குதிரைவண்டி, ஒட்டகம் முதலிய வாகனத்தின் மீதிருந்தும், சுடு காடு, மனைக்குப்புறம், தேவாலயம், படுக்கைமீதிருக் கும் போதும், புசிக்கலாகாது. (வைத்திய நூலார் காபாத்திரம் சிறந்த தென்பர்.) ஈரவுடையுடுத்தும், ஈரத்தலையோடும், பூனூலின்றியும், காலை நீட்டிக் கொண்டும், கால்மேல் வைத்துக்கொண்டும், இடது கையை யூன்றியும், கட்டிலின் மேலிருந்து கொண்டும், யார்தொடை மீதுட்கார்ந் தாயினும், ஒற்றை யாடையோடும், கல்லின் மீதும், படியின் மீதும், காலிற் பாதக்குறடு முதலிய தரித்தும், தோலின் மீதிருந்தும், தோல் போர்த்து முண்ணலாகாது. வாயில்வைத்த மீதியைத் தின்ன லாகாது. குடித்து மிகுந்ததைக் குடிக்கலாகாது. பலருடன் நடுவிலிருந்து புசிப்பவன் விரைந்து புசிக்கலாகாது. வீணே அன்னத்தை எறியலாகாது. பிறனெச்சிலைத் தின்னலாகாது. எச்சிலோடு எங்கும் போகலாகாது எச்சிலையெங்கு மெறியல காது, புசித்துக் கொண்டிருப்பவன் வேறு அன்னத்தினை ஒருபோதும் தொடலாகாது. கால், தலை, ஆண்குறி இவற்றினைத் தொடலாகாது. உண்கலத்தின் மேல் கால் படலாகாது. பலபேர் பார்த்திருக்கையில் அவர்களுக்குக் கொடாமல் நல்ல உணவு களை ஒருவனே புசிக்கலாகாது. ஒருவன் பார்த்திருக்கும்போது அவனுக்குக் கொடாமல் பலருந்தின்னலாகாது. உண்டு மிக்கதை விட்டு விடல் வேண்டும். நடுராத்திரியிலும் உண்ட வன்னஞ் செரியாதபோதும் நிலத்திலு முண்ணலாகாது, எச்சில் நெய் வாங்கலாகாது. தலையைத் தொட்டுக் கொண்டும், வேத மோதிக்கொண்டும், கலத்தில் மீதியாகாத படி துடைத்தும், மனைவியோடு முண்ணலாகாது. இடது கையா லுண்ணலும் குடித்தலுமாகாது. ஒற்றைக்கையால் நீருண்ணலாகாது. சூத்திரனால் வார்க்கப்பட்ட நீருண்ணலாகாது. வாயிலிருந்து உண்ணு மன்னத்தின் மீது நீர்படின் அது எச்சிலா மாதலின் அதனை உண்ண லாகாது, பந்தியிலுண்ணும்போது பிறர் வேண்டுகோளில்லாம லுயர்ந்த வாசனத்தி லிருக்கலாகாது. முன்பாக உண்ணலாகாது. முன்பாக உண்டவன் அந்த வரிசையிலுள்ளார் பாவத்தை யடைகின்றான். பந்தியில் புசித்திருப்பவன், அவர்களுக்கு முன் உண்கலத்தை விடு வானாயின் அனைவரு முண்ணாது எழுந்து விடுவாராதலின் அவன் பிரமகத்தி செய்த பாவத்தை யடைவன், உண்ணும்போது பிராணா குதிகளமைந்து கொள்ளும் வரை மௌனமாக வுண்ணல்வேண்டும். அவ்வகைப் பேசினவனது ஆயுளை மிருத்தியு தெய்வங் கொண்டுபோய் விடுமென்று கூறப்பட்டிருக்கிறது. எச்சில் மயங்கியுள்ள வாயினோடும் பேசலாகாது, கையால் பரிமாறப்பட்ட சோறு முதலியவற் றையும் வேறு பதார்த்தவகைகளோடு கூடாது நேராக விருக்கின்ற உப்பினையும் தின்னலாகாது. அவ்வகை தின்பது கோமாமிசத்தை யொக்கும். உப்பு, கறிவகை, நெய் எண்ணெய் முதலியவற்றைக் கையாற் பரிமாறலாகாது. போஜன காலம், இரண்டு கால போஜனமே நலமாம். அது தவறி மூன்று கால போஜனங் கொள்ளவேண்டுமானால் சூரியனுக் கிளம்பருவமாகிய உதயமுதல் (மூன்றே அரைக்கால்) நாழிகைக்குள்ளும், காலைப் பருவ மாகிய (பதினைந்து) நாழிகைக்குள்ளும், மூப்புப் பருவமாகிய இரவில் (ஏழரை) நாழிகைக் குள்ளும் நலம். சூரியனுதயமாகி (பதினொன்றே கால்) நாழிகைக்குள் உண்ணுகிற வுணவு தேகத்திற்குப் பொருந்தும். (பதினைந்து) நாழிகை யுணவு மிதவுணவு நோய்களை விலக்கும்; இதுவே காலபோஜனமாம். (இருபத்திரண்டரை நாழிகையிற் புசிக்கில் ரோகசம்பவமாம். (முப்பது) நாழிகையிற் புசிக்கில் உயிருக்கு முடிவைத் தரும். பின்னையவிரண்டும் அகால போஜன மாம். எல்லாத் தேகிகளுக்கும் (முக்கால்) வயிறு உத்தமம். அதன் விவரம்: அன்னமுக் கறிகளுங்கூடி (அரை) வயிறு, பால் மோர் சலங்கூடி (கால்) வயிறு; பிற சமான வாயுவுலாவி அன்னத்தைச் சீரணிப்பிக்க விடவேண்டும். அதிக சுடுகையான அன்னம் உதிரப்பித்தம், தாகம், பிரமை, மத ரோகம், இவைகளை உண்டாக்கும். கொஞ்சஞ் சுடுகையன்னம் உத்தமத்தி லுத்தமமாம். சரீரத்திற்கு வன்மையுண்டாக்கும். நன்றாகப் பாகமாகாத நட்டரசி அன்னம் மலஜலஞ் சிக்குவதும் தவிர மறுநாளும் சீரணிக்காது. குழைந்த அன்னம் வாதப் பிரமேகம், இருமல், அக்னிமந்தம், தூர்ப் பலம், பீனசம், இவைகளை யுண்டாக்கும். சுத்த அன்னம் அரோகத்தை விளைத்து வாதாதி முக்குற்றங்களை நீக்கி வன்மை தரும். அன்னத்தைப் பருப்புட னெய் சேர்த்துண்ணில் அது பழைய மலபந்தம், ஜிக்வாகண்டக ரோகம், பித்தா திக்கம், வாதகபதோஷம், நீங்காச் சொறி இவைகளை நீக்கும். பொரியல் கபத்தை விருத்தி செய்யும் புளிச்சுவை மிகுந்த பொரியல் அலசரோகத்தையும், வாத நோய்களையு முண்டாக்கும். வற்றல் இளவறுப்பால் மந்த ரோகமும், சருகும்படி வறுத்த வற்றலால் வாதபித்த கபதோஷங்களு முண்டாம். இளவறுப்புங் கருகலுமில்லா துண்ணில் நலமாம், பச்சடி புளிப்புள்ளது பித்தத்தையும், உறைப்புள்ளது சிலேஷ்ம வாதத்தையும், இனிப்புள்ளது அரோசகத்தையும் நீக்கும். துவையல் புளிப்புள்ளது பித்தத்தை நீக்கும். வெறும்புளித் துவையல் இரத்தத்தை முறிக்கும். புளிசேராத் துவையல், நலமாம். அதிககாரஞ் சேர்ந்தது பசியை யுண்டாக்கலால் உத்தமோத்தமமாம். குழம்புகள் உறைப்புள்ளது வாத கோபத்தை நீக்கும். அவ்வாறில்லாக் குழம்பால் வாதரோகஞ் சனிக்கும். காரத்துட னீர்க்கவைத்த குழம்பு முத்தோஷங் களையும் விலக்கும். சலத்தின் குணம், துவரம் பருப்பின் கணிறுத்த ஜலத்தில் மிளகு பூண்டு முதலிய சம்பாரங்களிட்டுச் செய்தது அக்னி மந்தம் முதலிய பல பிணிகளை நீக்கும். போஜனத்தின் முடிவில் புளித்த தயிரும் லவணமுங்கூட்டி யுண்ணில் உண்ட உணவிலுள்ள திரி தோஷங்களும் வாயுவையும் நீக்கி உணவைச் சீரணப்படுத்தும். மோர் அன்னம்ஜடராக்கினி வளர்ந்து முளை மூலம் பாண்டு, தாகம் கிரகணி சிலேஷ்மம் சோபை இவைகளை விலக்கும். ஊறுகாய்கள் தீபாக்னியை விளைத்து அசோசகம் சிலேஷ்மம் பைத்திய தொந்தரோகங்களை விலக்கும். நீரருந்தும் வகை: கைவிரல் நகம்பட்ட நீரை யாண்டுக் குடிக்கலாகாது. அது கள்ளினைக் குடித்தலோடொக்கும். இடது கையினாலெடுத்துக் குடிக்கினும் அவ்வகைத் தோஷத்தைத் தரும் நீர் குடித்த பாத்திரத்தைப் பூமியின் மேல் வைக்கும் வரையில் எச்சிலல்ல எலும்புள்ள குளத்து நீர், கிணற்று நீர், தோல் முதலிய ஆறியநீர், காய், நரி, குரங்கு, மனிதன், காக்கை, ஊர்ப்பன்றி, கழுதை காட்டுப் பசு, யானை, மயில், புலி முதலிய மிருகங்கள் முழுகியிருந்ததைக்கண்ட நீர், உண்ணத்தகாத நீர்களாம். நீரை அண்ணாந்தும், குனிந்தும், படுத்து முண்ணலாகாது. இவ்வாறருந்தில் ரோகங்களுண்டாம். பாத்திரத்தை வாயாற் கடித்தருந்தில் ஒரு ரோகமும் வாராது, “தண்ணீர், குடிக்க வென் றாற் பாத்திரத்தைக் கோதறவே வாயாற், கடித்தருந்தத் துனபமறுள் காண்” என்பதாலுணர்க, நீருண்ணுகையில் பாத்திரத்திலுள்ள நீரைச் சிறிது பூமியிற் சாய்த்து அருந்துதல் சம்பிரதாயம். இதனை உண்கையில் சுத்தமான நீரைக் காய்ச்சியருந்தின் அது ரூட்சை, வாதாதிக்கம், விதாகம், அலசம், வயிற்றுப்பிசம், இவைகளை நீக்கிச் சுக்லவிருத்தி யையும் ஆயுளையும் வளரச்செய்யும். உண்கையில் அன்னத்தில் ஈ. மயிர், எறும்பு முதலிய விருக்கினவற்றைச் சிறிது அன்னத்துடன் புறத் தெறிந்த கைகால் சுத்திசெய்து புசித்தல் வேண்டும். இரவில் புசிக்கையில் தீபம் அவியின் அவ்வன்னத்தை வலக்கையால் போஜனஞ்செய்யாது மூடியிருந்து விளக்கு வந்தபின் இலையிலுள்ள அன்னத்தை மாத்திரம் புசித்து எழுந்திருத்தல் வேண்டும். உண்டு முடிந்த பின் எழுந்து புறத்திற் சென்று (16) முறை வாய்கொப்புளித்து இடப்புறத்திலுமிழ்ந்து கைகால்களைச் சுத்திசெய்து ஆசமனஞ் செய்தல் வேண்டும்,

போஜனம் புசிக்கும் திக்கு

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை விரும்புகிறன் தெற்கு முகமாகவும், சம்பத்தை விரும்புகிறவள் மேற்கு முகமாகவும், சத்தியத்தை விரும்புகிறவன் வடக்குமுகமாகவும் இருந்து புசிக்கவேண்டும்.

போஜன்

1. சிரி குமரன். இவன் குமரன் இருதிகன். கிருதவர்மன் பாட்டன். 2. அங்கநாட்டரசன், குமரி இந்துமதி. 3. குந்தியை வளர்த்தவன், இவனுக்குக் குந்திபோஜன் எனவும் பெயர், யதுகுலத்துச் சாத்தவன் புத்திரன் 4. க்ஷத்திரியப் பெண் சோரத்தால் வேற்றாசனைப் புணரப் பிறந்தவன். 5. விதர்ப்பதேசத்தரசன். இவன் தந்தை இறந்த பிறகு சிறிய தந்தையாகிய முஞ்சன் அரசாளுகையில் சிறிய தந்தையுடன் அரசாட்சியில் கொலு விருக்கையில் ஒரு சோதிடன் இக்குமானாகிய போஜனைப்பார்த்து இவன் மகாபுகழுடன் அரசாளுவன் என, அதைக் கேட்டு முஞ்சன் சகியாது கொலையாளிகளை அழைத்து அண்ணன் பிள்ளையைக் கொலைபுரியச் செய்தனன், கொலையாளிகள் அவ்வகை கொலைக்களத்திற்குப் பிள்ளையை அழைத்துச் செல்லுகையில் குமரன், “மாந்தாதாச மஹீபதி கிருதயுகாலங்கார பூதோகத. ஸேதூர்யேன மஹோததௌ விரசித:க்வாஸௌத சாஸ்யாந்தக: அந்யேசாபி யுதிஷ்டிரப்ரபுருதயோயா தா திவம்பூபதே நைகேனா பிஸமங்கதா வஸுமதி ஏ நம்த் வயா யாஸ்யதி. ” “மாந்தாதா முதல் இது வரை அரசாண்ட சக்கிரவர்த்திகள் தாமாண்ட பூமியை யுடன் கொண்டு போனாரில்லை’ எனும் கருத்தடங்கிய மேற்படி செய்யுளை யெழுதி அக்கொலையாளிகளிடம் கொடுத்தனுப்ப, அவ்வகை கொலையாளிகள் அதை அரசனுக்குக் காட்டினர். அரசன், கொலையாளிகளை அழைத்துப் பிள்ளையைக் கொலை புரியாது கொண்டு வரச்செய்து அவனுக்குப் பட்டம் அளித்துத் தான் துறவுபூண்டனன், இப்போஜன் சகல சாம்பிராஜ் யங்களையும் அனுப்பவித்து மகாகவியாகிய காளிதாசனுடன் நண்பு பூண்டிருந்தனன். இவன் (10) வது நூற்றாண்டில் இருந்ததாகப் பிரசித்தி. இவன் தன்சவைக்கண் கவிரத்னங்கள் பலரைப்பெற்று ஆனந்தித்து வந்தானாயினும் அவர்களில் காளிதாசன், பவபூதி, தண்டியே சிறந்தவராயினர். அம்மூவருள்ளும் காளிதாசனே சிறந்தானாயினான். இக்காளிதாசனை நான்குமுறை இவனுடனிருந்த புலவர் சூழ்ச்சியால் அரசன் பிரிய நேரிடினும் கடையில் போஜன் காளிதாசனிருந்த ஊர்க்கண் வேற்றுருக் கொண்டடைந்து போஜனிறந்தன னெனக்கூறக் காளிதாசன் போஜனையெண்ணி விசனமடைந்து சரமகவி கூறப் போஜன் மரணமூர்ச்சையடையக் காளிதாசன் அரசனெனவறிந்து கவியை மாற்றிப்பாடி உயிர்ப்பிக்கக் களித்து நகரமடைந்து களித்துப் பலநாள் புலவனுடன் களித்திருந்தவன். 6, திரிமதியென்பாள் குமரன்,

போஜம்

ஒரு தேசம்,

போஜர்

யதுகுலபேதம், கம்சன் பகைவர். இவர்கள் பிராமண சாபத்தால் ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர்.

போஜை

சௌவீர தேசத்தாசன் பெண், சாத்தகியின் தேவி.

போண்டான்

(போகொண்டான்.) இவர்கள் தமிழ் நாட்டிலிருந்து கள்ளிக் கோட்டை சாமொரீன் அரசனுக்குப் பல்லக்குச் சுமக்கக் கொண்டு போகப்பட்ட இடையர் வகுப்பு (தர்ஸ்டன்.)

போதகன்

கத்ருகுமரன், நாகன்.

போதனபுரம்

நிலைச்சனென்னும் அரசனது நகரம்.

போதனம்

சுரமை நாட்டிராஜதானி. (சூளா.)

போதனார்

இவர் விஷயமாக யாதும் விளங்கவில்லை. பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடல் இந்நூலில் வரும் பாட்டின் பெருமை யைக் கூறிய பன்னீரடியின்மிக்குப்பதி மூன்றடி யுளதாயிராநின்றது. இவர் பாடியது (நற் 110)ம் பாட்டு,

போதன்

சாக்ஷூசமனுவைக் காண்க.

போதப் பிரகாரம்

3. உத்தேசம், லக்ஷணம், பரீக்ஷை இவற்றுள் உத்தேசமா வது, தான் விவகரிக்கும் பொருளின் பெயரை மாத்திரம் கூறல். அப்பொருளின் சிறப்புத் தன்மை கூறல் இலக்கணம். அப்பொருளில் இவ்விலக்கணம் உண்டோ இன்றோ எனப் பார்த்தல் பரீக்ஷை.

போதாயனர்

கண்ணுவர்க்குக் குமரர். இவர் தம் பெயரால் சூத்ரம் செய்தனர். அதற்குப் போதாயன சூத்ரம் எனப் பெயர்.

போதி

ஒரு அரசமரம். இந்த அரசு பல்குனி நதிக்கரையிலுள்ளது. புத்தன் இதன் நிழலில் தவமேற்கொண்டிருந்த காலத்து நான்கு வகைச் சத்தியஞான முண்டானமைபற்றி இதனை மகாபோதி யென்பர் புத்தர். (மணிமேகலை.)

போதினி

சிவசூர்யனுக்கு மேற்கில் உள்ள சத்தி.

போதும்பில்கிழார்

இஃது ஊர் பற்றி வந்த பெயர். பொதும்பில் பாண்டி நாட்டிலுள்ள தோரூர்; மதுரைத் தாலுக்காவிலுள்ளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகிறது. இவர் இயற்பெயர் புலப்படவில்லை. இவர் வேளாளர். இவர் கூறிய உள்ளுறை யாவரும் வியக்கத் தக்கது; இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துள்ளார். இவர் பாடியது நற் (57ம்) பாட்டு.

போத்தராஜன்

கிராமரக்ஷணப் பொருட்டுக் கிராமாதிகளில் ஆராதிக்கப் பட்ட க்ஷத்ரதேவன். இத்தேவனைத் தருமராஜா கோவில்களில் வைத்து ஆராதிக்கின்றனர். இத்தேவதையை வீரபத்திராம்ச மென்பர்.

போத்தியர்

பாஷ்கள ருஷியிடம் இருக்கு வேதமோதிய மாணாக்கர்.

போத்யர்

ஒரு ருஷி, இவர் பிங்களை, அணில், சர்ப்பம், வண்டின் சுழற்சி, லக்ஷ்யத்தை அடிப்பவன், யுவதி இவர்களால் ஞானமடைந்தவர். (பார்~சாந்.)

போந்தை

பொருந்தாவேந்தர் கிட்டினப்பூசலிடத்துப் புலானாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப்புகழ்ந்தது. (பு. வெ. பொது வியன்.)

போந்தைப் பசலையார்

இவர் கடைச்சங்க காலத்துப் புலவருள் ஒருவர். நப்பசலையாரின் வேறானவர் என்பது தெரிவிக்க போந்தைப் பசலையார் எனப்பட்டனர். போந்தை இவாது ஊராக இருக்கலாம். (அக100.)

போனகிராப்

(Phonograph) இது, தகரப் பற்களடங்கிய மெல்லிய தகடுகளின் மூலமாய் யந்திர வழியால் ஒருவன் கூறிய கீதத்தையும், பலவகை ஓசைகளையும் திருத்தமான இயற்கைச் சத்தமாகவே கூறும் கருவி.

போன்

என்பது பிராணிகளைப் பிடிக்கும் பொறி. இது பிராணிகளின் உருவத்திற்குத் தக்கபடி பெருத்தும் சிறுத்தும் இருக்கும்.

போயர்

இவர்கள் வடநாட்டு வேட்டைக்காரர். தற்காலம் பல்லக்கு முதலிய சுமந்தும் பலவேலைகள் செய்துந்திரிவோர்.

போரங்கன்

துரியோதனனுக்குத் தம்பி.

போர்க்களத்துக் கொல்லத் தகாதவர்

போர்க்கஞ்சி பிறிதோரிடத்து ஒளித்திருப்போன், பேடி, கைகூப்பி வணங்குவோன், தலைமயிரவிழ்ந்து சரியப்பெற்றவன், உட்கார்ந்திருப்பவன், நான் உனக்கு ஆளாகிறேன் என்பவன், தூங்குபவன், கவச முதலிய பூண்டு யுத்த சந்தத்தனாகா தவன், ஆடையில்லாதவன், ஆயுதமில்லாதவன், போர்செய்யாதவன், போரிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பவன், பிறனொருவனுடன் போரிடுபவன், நீர் பருகுபவன், உணவுட்கொள்பவன், வேறு காரிய முயற்சியுள்ளவன், அச்சமுடையவன், புறங்கொடுத்து ஓடுபவன் முதலியவர்களாம். (சுக்~நீ.)

போர்க்களத்தொழிதல்

பகைவ ராயுதத்திற்குப் புறங்கொடாத வெற்றியினையுடைய வீரரைக் கூட்டித் தான் பூசற்களரியிலேபட்டது. (பு. வெ)

போர்க்காரியார்

செங்கண்ணர் குமரர். இவர் குமரர் காரியார். இவர் நம்மாழ்வாருக்குப் பாட்டன்.

போர்க்குரிய நாளிகக்கருவிகள்

இவை அஸ்திர சஸ்திரங்கள் என இருவகை, அஸ்திரங்களைக் காண்க, சஸ்திரம்: கைவிடாப் படை, இன்னும் சிறு நாளிகம், பெருநாளிகம் என இருவகை கருவிகள் உள, சிறுநாளிகம்; குறுக்காய் மேனோக்கிய துளையினை அடியில் உடையதும், ஐந்து சாண் அளவு நீண்ட இருப்புக்குழாய்த் தண்டினை யுடையதும், அடியினும், நுனியினும் குறிவைத்து அடித்தற்குரிய திலபிக் துக்களோடு கூடியதும், எந்திர தாடனத்தால் நெருப்பை வெளிப்படுத்து வதும், கற்பொடிகளைத் தாங்கியிருக்கும் கன்ன மூலத்தையுடையதும், நல்ல மரத்துண்டாற் செய்யப்பட்ட உபாங்கத்தை அடிப்பாகமாக வுடையதும், அடியில் ஓர் அங்குல அளவு, அகன்றத்வாரத்தையுடைய தும், தன்னுள்ளே நெருப்புப்பொடி (வெடிமருந்து) பொதியப்பெற்றதும், சலாகையோடு கூடியதும் (மருந்து கெட்டிக்கும் இருப்புக்கோல்) ஆம். இது (துப்பாக்கி) (சுக்~நீ.) பெருநாளிகம்: அடிப்பாகத்திலுள்ள முளையின் சுழற்சியால் குறியை யொத்துத் தாக்கும் நிலையினை யுடையதும் மரத்தினாலாக்கப்பட்ட அடிச்சட்டத்தை யுடையதும் வண்டியால் சுமந்து செல்லப்பட்டதுமானது. (சுக்~நீ.)

போர்மலைதல்

வெட்சியாரைக் கிட்டிச்சூழ்ந்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது. (பு. வெ.)

போற்றிமார்

கேரள பிராமணர், நம்பூரிகளைச் சேர்ந்தவர்களல்லர்.

போலி

அறுபத்தைந்து. அவை பக்ஷாபாசம் 4, ஏதுவாபாசம், 21, உவமைப் போளி 18, நிக்ரகத்தானம். 22.