அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பொகுட்டெழினி

அதியமான் மகன்.

பொங்குசநி

சநி இரண்டாமுறை வருவது,

பொசை

வீரவிரதன் தேவி.

பொடாவண்ணான்

பள்ளர் பறையர்களுக்குத் துணி வெளுக்கும் வண்ணான்.

பொதினி

பழனிக்குப் பழைய பெயர், இதனை ஆவியர் ஆண்ட காரணத்தால் இதனை ஆவினன்குடி என வழங்குவர். வள்ளலாகிய பெரும்பேகன் இவ்வாவியர் குடியில் பிறந்தவன்.

பொதியில்

பாண்டி நாட்டில் உள்ள மலை. தேவர் முனிவர்க்குப் பொதுவாய் இருத்தலின் இப்பெயர் பெற்றது. இதன் வளங் காணவந்த காயசண்டிகை விருச்சிகன் சாபத்தால் யானைத் தீ நோயடைந்தாள். அகத்தியர் இருக்கை. (மணிமேகலை)

பொதுகயத்துக்கீரந்தை

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் கீரந்தை. இவரது ஊர் பொதுக்கயமென விருக்கலாம். குறு. 337.

பொதுப்பாயிரம்

நூலினது வரலாறும், ஆசிரியனது வரலாறும், ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடஞ் சொல்லுதலின் வாலாறும், மாணாக்கன் வாலாறும், மாணாக்கன் பாடங்கேட்டலின் வரலாறும் ஆகிய ஐந்தினையுங் கூறுவது.

பொதுமையணி

அஃதாவது, ஒப்புமையாலிரண்டு பொருள்களுக்கு விசேஷந் தோன்றாமையாம். இதனை வட நூலார் சாமானியாலங் காரமென்பர்.

பொதும்பிற்புவலாளனங் கண்ணியார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.)

பொதும்பில் கீழார் மகனார் வெண்கண்ணியார்

இவர் மேற்கூறிய பொதும்பில் கீழாரின் புதல்வர் வெண்கண்ணி யென்னும் இயற் பெயருடையவர், வெண்கண்ணி யென்றதனானே இவர் பெண்பாலார் போலுமெனவுமாம் (கீழார் மகனார்) (கீழார் மகன்) என்றிருத்தலானே பெண்பாலாகக் கூற வழியில்லை. இவர் தலையாலங்களத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடியிருத்தலானே அவ்வரசன் காலத்தினவராவர். வெண்கண்ணன் என்றொருவர் காணப்படுகிறார். அவர் தாமோ இவர் என்றையப்படவுமாம். அவரும் பாண்டியரைப் புகழ்ந்து பாடியவரே இவ்வெண் கண்ணியார். நெய்தலையும் பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும் அகத்தில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பொத்தியார்

இவர் கோப்பெருஞ்சோழன் உயிர்த் தோழர். இவரது நகரம் உறையூர். இச்சோழன் வடக்கிருத்தற்குச் செல்லும்போது அவனுடன் செல்ல அவன் நீர் புதல்வனைப் பெற்றபின் வருகவென உடன்பட்டு மீண்டு புதல்வனைப்பெற்று வடநாடு சென்று சோழன் நடுகல்கண்டு வருந்தி ‘எனக்கு இடந்தா’ என்று கேட்டு அவன் இடங் கொடுக்க அவனைப் பாடித்தாமும் உயிர்நீத்தனர். இவர் பிசிராந்தை யாரையும் பாடினர் என்பர் (புற நா)

பொந்தைப்பசலையார்

கடைச்சங்கத்துப் புலவர். (அகநானூறு.)

பொன்

1. இது சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என நான்கு வகைப் படும். இது சிவமூர்த்தியின் வீர்யத்தை பெருமாள்கவி வாயுவும் அக்கினியும் கங்கையில் விட்டதால் பிறந்தது. இதனால் பொன்னுக்குக் காங்கேயமெனவும் ஒரு பெயருண்டு. இவை சாதகும்ப மென்னும் சாதரூபம், சதகும்பமென்கிற பர்வதத்தில் பிறத்தலானும், கிளிச்சிறை, சற்றுப் பசுமை நிறமுடைமையாலும், ஆடகம், மிக்க ஒளி கொண்டிருத்தலாலும், சாம்பூந்தம், மேரு விற்கருகில் நாவற்பழ ரஸத்தினாலுண்டான நதியிற் பிறத்தலானும் நால்வகை ஆயின. 2 இது, மிக்கபள பளப்பும், மஞ்சள் நிறமுள்ள உலோகம், எல்லாலோசங்களினும் பாரமுள்ளது. தகடாகவும், கம்பியாகவும் அடிக்கவும் நீட்டவும் கூடியது. இது மலைகளிலும், சுரங்கங்களிலும், அருவிகளிலும் பாளங்களாகவும் கற்களுடன் ஒட்டியும் இருக்கும். இவற்றை இவை கலந்திருக்கும் கட்டிகளுடன் பொடித்து ஓடுகிற சீரிற் கழுவினால் பளுவுள்ள இவை அடியில் தங்கும் அவற்றை ரஸத்துடன் கலந்து காய்ச்சினால் ரஸம் ஆவியாய்ப் போகப் பொன் தங்கும். பின் சந்தகத்திராவகம் விட்டுக் காய்ச்சினால் சுத்த பொன்னாம். கலப்பான பொன் சீக்கிரம் உருகும். சுத்த பொன் சீக்கிரம் உருகாது. சிறிது வெங் சாரம் சேர்த்தாலுருகும். இது, நாணயங்கள் செய்யவும், ஆபாரணங்கள் செய்யவும் உதவும். இதைச் செப்புத்தகடு முதலியவற்றின் மேல், தகடாக அடித்து தகட்டில் இரசத்தைப் பூசித்தேய்க்க பொன்ரேக் அதில் ஒட்டிக் கொள்ளும் பின்னெருப்பிற் காய்ச்சச் சாயம் நீங்கும் இதில் சுத்தமானது தங்கம். இது, ஐரோப்பாவில் ஸகாத்லாண்ட், ஹங்கெரி, ருஷியா, ஆசியாவில், இந்தியா, சுமத்ரா, போர்னியோயூால்மலை, ஆபிரிகாவில் டிரான்ஸ்வால், அமெரிக்காவில் காலிபோர்னியா, பிரேசில், மெக்லிகோ, முதலிய இடங்களில் அகப்படும். 3. சிவபிரான் வீர்யத்தை மேனோக்கிய காலத்துச் சிறிது பூமியில் விழ அது அக்னியைச் சென்றது. ஒளியுடன் ஒளிகூடிப் பொன்னாயிற்று. அக்னியும் சந்திரனும் கூடியதே பொன். (பார். அநுசா.)

பொன் பரப்பினனான மகதைப்பெருமாள் கவி

இவன் நடுநாடு அல்லது மகதநாட்டு சிற்றரசன். இவன் வாணவம்சத்தைச் சேர்ந்தவன்.

பொன் முடியார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். அரிசில்கிழார் காலத்தவர். இவர் சேரமான் தகடூசெறிந்த பெருஞ் சோலிரும் பொறையின் நண்பர். அதியமா னெடுமானஞ்சியைப் பாடியவர் (திருவள்ளுவமாலை.)

பொன்னனையாள்

மதுரைக்குக் கிழக்கே திருப்பூவனத்தில் உத்திர கணிகையார் குலத்தில் பிறந்தவள். இந்த அம்மை தனக்கிருந்த பொருளால் சிவமூர்த்திக்கும் சிவனடியவர்க்கும் செலவு செய்து வந்தனள், இவளுக்குச் சோமாஸ்கந்த திருவுருவம் செய்துவைக்க வேண்டு மென்னுங் கவலை யொன்று நாடோறும் வருத்தியிருந்தது. ஆயினும் அதைப் பூர்த்தி செய்வதற்கு ஆகவில்லை. ஒருநாள் சிவமூர்த்தி இவளது மனக்கவலை போக்க எண்ணி ஒரு சித்த மூர்த்திகள் போல் திருவுருக் கொண்டு இவள் வீட்டுப்புறத்தை யணைந்தனர், இவளது பணி செய்வோர் சித்த மூர்த்திகளின் வரவைத் தமது தலைவிக்கு அறிவித் தனர். பொன்னனையாள் எதிர் சென்று வணங்கி உள்ளழைத்துச் சென்று ஆசனம் உதவி உபசரித்தனள். சித்தர் பொன்னனையாளை நோக்கி அம்மே ஏதோ உன் தேகம் வாடியிருக்கிறது. நீ மனக் கவலை கொண்டிருப்பதை உன் முகம் அறிவிக்கிறது கூறுக எனப் பொன்னனை யாள் உள்ளது கூறினள் சித்தர் ஆயின் உன் கருத்தை முடிக்கிறேன் என்று அவளிடம் இருந்த லோக பாத்திரங்களைக் கொண்டுவரக் கட்டளையிட அவ்விதமே கொண்டுவந்து சேர்த்தனள் சித்த மூர்த்தி அப்பாத்திரங்களின் மேல் விபூதி தெறித்து இவைகளை உலையிலிட்டு உருக்கச் செம்பொனாம். இவற்றால் உன் மனப்படி செய்க என்று மறைந்தனர். பொன்னனையாள் பிரிவாற்றது கவலை கொண்டு ஒரு வாறு தேறிச் சிவமூர்த்தியின் திருவுருவார்ப்பித்து அத்திருவுருவைக் கண்டு ஆராமையின் மிகுதியால் என் அழகப்பிரானோ என ஐந்து விரலாலும் விக்கிரக மூர்த்தியின் இரண்டு கன்னங்களையும் அள்ளி முத்தமிட்டனள். அள்ளிய நகக்குறி இக்காலத்தும் அத்தல மூர்த்தியின் திருவுருவில் விளங்குகிறது. இந்த அம்மைக்குப் பொன்னனை எனவும் பெயர்.

பொன்னம்பலத்தார்

பிக்ஷையெடுக்கும் கைக்கோள ஜாதியார்,

பொன்னம்பலப் பிள்ளை 1.

இவரை மரவைப் பொன்னம்பலப் பிள்ளை யென்பர். இவர் யாழ்ப்பாணத்து மரவிட்ட புரத்தவர். இன்றைக்கு முப்பது வருஷங்களுக்கு முன்னிருந்தவர். மரவை யந்தாதி பாடியவர். 2. இலர் யாழ்ப்பாணத்து நல்லூரினர் சைவ வேளாளர். இவர் ஆறுமுக நாவலர்க்கு மாணாக்கர், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். பாரதம் ஆதிபருவத்திற்கும் மயூரகிரி புராணத்திற்கும் உரை யெழுதியவர்.

பொன்னளந்த பெருமாள்

ஒரு வணிகன் காட்டில் விறகு விற்றுச் சீவித்துத் தெய்வகதியால் ஒரு குகை கண்டு அளவிறந்த நிதிபெற்று வறுமை யிழந்தவன்,

பொன்னவன்

அம்பா நகரத்துக்கணபுரத் தேவன் வேண்டுகோட்படி கனாநூலியற்றினோன்.

பொன்னாகன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் இயற்பெயர் நாகனாயிருக்கலாம். இவர் செல்வ மிக்கவரா யிருந்தமை நோக்கி இப்பெயர் வந்தது போலும். (குறு 114).

பொன்னாய்ச்சியார்

பிள்ளையுறங்கா வில்லிநாசரின் தேவியார். பட்டர் சர்வஞ்ஞ பட்டனுடன் செய்த சாகச வினாவிற்குக் கண்ணேறு படுமெனத் திருஷ்டி தோஷம் போக்கியவள்.

பொன்னி

1, இவள் கம்பநாடரைத் தமக்கு அடிமையாக்குகிறேன் என்று அரசனிடம் சபதஞ்செய்த தாசி. இவள் கம்பரிடம் தாசி பொன்னிக்குக் கம்பனடிமையென எழுதிவாங்கி அவர் அரசன் முன் அதற்கு வேறு பொருள் கூற ஏமாறியவள். 2. பொன்னனையாட்கு ஒரு பெயர்

பொன்பற்றியூர்ப் புத்தமித்திரனர்

வீரசோழன் பெயரால் இலக்கணஞ் செய்தபுலவர்.

பொன்மணியார்

இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த தமிழறி புலமையர். பொன் மணியார் எனப் பெயரிருத்தலால் இவர் பெண்கவியாக இருத்தல் கூடும். (குறு. 391)

பொப்பண்ணகாங்கெயர் கோன்

அடியார்க்கு நல்லார் என்னும் கவியைச் சிலப்பதிகாரத்திற்கு உரைசெய்ய ஏவின பிரபு.

பொம்மி

மதுரைவீரனைக் காண்க.

பொம்மையர்

1. இவர் பாவூரில் இருந்த சிவனடியவர். இவர் கல்லினை இடபமாக்கி மேயவிட்டுச் சோளத்தைச் சிவலிங்க உருவமாக்கித் தம்மை எதிர்த்து வந்த அரசனது யானையால் சிவபூஜைக்கு எடுத்த புட்பம் கெடாதவிதம் யானையைச் சினத்தாற்கொன்று அரசன் வேண்டு கோளால் அதை உயிர்ப்பித்தவர். இவர் வீரசைவர். 2, சோவூரில் இருந்த வீர சைவர். சமணரிடம் வாதிட அவர்கள் பிரத்தியக்ஷப் பிரமாணங் கேட்க அடியவர் என்ன வேண்டுமென்னச் சமணர்கள் இதோ எதிரில் இருக்கும் ஆலமரத்தைச் சுட்டெரிக்கிறோம் நீர் தளிர்க்கச் செய்க என அவ்வண்ணஞ் செய்து சமணர்களை அழித்த சிவனடியவர். நெல்விதைக் காமலே அதிகம் விளைவித்தவர். இவர் பிராட்டி முலைப் பாலருள வளர்ந்தவர். (அரிசமய தீபம்).

பொய்கைக் கதத்தயானைச் சூழாசிரியர்

இவர் ஓர் தமிழாசிரியர். இவர் செய்யுள் மூன்று யாப்பருங்கல விருத்தியுள் ஒற்றுப் பெயர்களுக்கு உதாரணம் எடுத்துக் காட்டப்பட்டன.

பொய்கைத்தலையானைச்சூழாசிரியர்

இவர் யாப்பருங்கல விருத்தியுள் கூறப்பட்ட தொல்லாசிரியர்களில் ஒருவர்.

பொய்கையார்

1, இஃது ஊர்பற்றி வந்த பெயர்; பொய்கை ஒரூர். இவர் சேரன் கணைக்காலிரும்பொறையின் அவைக்களத்தில் சிறப்புற வீற்றிருந்த புலவர் பெருமான். சேரன் கணைக்கா லிரும்பொறைக்கும் சோழன் செங்கணா (கோச்செங்கட் சோழன்) னுக்கும் பகைமை மேலிட்டதனால் இருவரும் வெண்ணிப் பறந்தலை (கோயில் வெண்ணி வெளி) யில் பெரும் போர் செய்தார்கள். அப்போரிலே சேரமான் தோற்கச் சோழன் வென்று அச்சேரனைப் பிடித்துக் குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டனன். இதையறிந்த பொய்கையார் சோழனது வெற்றியைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்னும் ஒரு நூலியற்றிச் சோழனவைக்களத்துப் பிரசங்கம் பண்ணித் தம் அரசனை மீட்டுக் கொண்டார். இதனைக் “களவழிக் கவிதை பொய்கை யுரைசெய்ய உதியன், கால் வழித் தளையை வெட்டி யாசிட்ட பரிசும்” (கலிங்கத்துப் பரணி) என்பதனாலறிக, சேரன் கோக்கோதைமார்பனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். புறம் 48 “கானலந் தொண்டி யஃதெம்மூ” ரென்றதனால் இவர் மேலைக்கடற் கரையிலுள்ள தொண்டி நகருக் கணித்தாகிய ஊரினரென்றூகிக்கப் படுகின்றது. மற்றும் மூவனென் பானைப் போரில் வென்று அவனது பல்லைப் பிடுங்கித் தொண்டிக் கோட்டை வாயிற்கதவிலே தைத்த சேரலன் கணைக்காலிரும் பொறையென அவனைச் சிறப்பித்துக் கூறுகின்றனர். “கிடங்கில்” என்னுமூரைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். “ஆழியிழைப்ப” என்ற பாட்டினால் தொண்டைமான் இளந்திரையனைப் பாராட்டிக் கூறியுள்ளார். பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் யாப்பருங்கல விருத்தியுரைக்காரர் நாலாயிரப்பிரபந்தத்து இயற்பா முதற்றிருவந்தாதியில் வரும் பாடல்களுள் “பாலன்றனதுரு வாய்,” (49) ‘எளிதினிரண்டடியும்’ (51) என்னும் வெண்பாக்களை எடுத்துக் காட்டி “இப்பொய்கையார் வாக்கினுள்” என்று கூறியவதனால் இவரே வைஷ்ண வர்கள் துவாபர யுகத்திற் பிறந்தவராகக் கூறும் பொய்கை யாழ்வா ரென்றறியப்படும். இவர் பாடியனவாக நற்றிணையில் (18)ம் பாடலொன்றும், புறத்தில் இரண்டும், யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாகக் காட்டப்படுஞ் சில பாடல்களும், வைஷ்ணவாது நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள இயற்பா முதற் திருவந்தாதியும் களவழி நாற்பது என்னும் நூலும் கிடைத்திருக் கின்றன. 2. சோழன் செங்கணானுஞ் சேரமான் கணைக்காலிரும் பொறையும் போர்ப்பறத்துப் பொருதுழிச் சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிச் சோழன் செங்கணான் சிறைவைத்துழி இவர் கள வழி (40) பாடி வீடு கொண்டனர். இவர் ஊர் தொண்டி, இவர் கோக்கோதை மார்பனையும் பாடினர். (புற. நா)

பொய்கையாழ்வார்

இவர் துவாபர யுகத்தில் (8, லக்ஷத்து 6291) ஆவதான சித்தார்த்திவருஷம் ஐப்பசிமாசம் சக்லாஷ்டமி திருவோணம் செவ்வாய்க் கிழமையில் திருக்காஞ்சியில் சொன்ன வண்ணஞ் செய்தான் சந்நிதியை அடுத்த தடாகத்தில் மலர்ந்த பொற்றாமரையில் அவதரித்தனர். பாஞ்ச சன்னியாம்சம், இவர் திருக்குருகூருக்கு எழுந்தருளிப் பெருமாளைச் சேவித்து ஒரு பாகவதர் வீட்டு இடையகழியில் சயனிக்க இருக்கையில் இவரைப் போல, இருக்க இடம் வேண்டிப் பேயாழ்வாரும் பூதத்தாழ்வாரும் வர இவர்கள் ஒருவருக்கொருவர் கலந்து சம்பாஷிக்கையில் பெருமாள் இவர்களுக்கு இடையில் சென்று ஒருவர் படுக்கவும் இருவர் இருக்கவும், மூவர் நிற்கவும் ஆன இடத்தை நெருக்க மூவரும் காரணமறிந்து பெருமாளைப் பாடினர். அவர்களுள் இவர் “வையந் தகளியா” என்றெடுத்து (100) செய்யுள் திருவாய் மலர்ந்தவர். இவர் (4000)த்தில் முதல் திருவந்தாதி அருளினவர். (குரு பரம்பரை).

பொய்த்தற்குறிப்பணி

அஃதாவது, ஒரு பொருளைப் பொய்யாக்குதற்கு மற்றொரு பொய்ப்பொருளைக் கற்பித்தலாம். இதனை வடநூலார் மித்தியாத்தியவசிதி யலங்காரம் என்பர். (குவல)

பொய்யடிமையில்லாத புலவர்

இவர்கள் கடைச்சங்கத்தவர்களாகிய நாற்பத் தொன்பதின்மர். இவர்களுள் நக்கீரர், கபிலர், பரணர், கல்லாடர் முதலியவர்கள் முதல்வர்கள், இவர்கள் சிவ பக்திமான்களாய்ச் சிவ மூர்த்தியிடம் அன்பு பூண்டு முத்தியடைந்தவர்கள். இவர்கள் செய்த நூல்களைப் பதினொராந் திருமுறையிற் காண்க. (பெ. புராணம்.)

பொய்யாமொழி மங்கலம்

இது பெரு நம்பி எனும் தமிழ்ப்புலவர் இருந்த இடம், இது செங்கல்பட்டு ஜில்லா தாலுக்காவில் உள்ளது. பெருநம்பி காண்க.

பொய்யாமொழிப் புலவர்

1. இவர் தொண்டை நாட்டு செங்காட்டங் கோட்டத்து உறையூரிற் பிறந்தவர். இவர் வயிரபுரத்தில் தமதாசாரி யரிடம் கல்விபயிலுகையில் ஆசிரியர் தமது கொல்லைக்குக் காவலிருக் கக்கூற அவ்வாறு சென்று ஆண்டிருந்த காளிகோயிற்கணிருந்த மர நிழலில் படுத்துறங்குகையில் குதிரை யொன்று கொல்லைப்பயிரை மேய்வதாகக் கனாக்கண்டு விழித்துக் காளி சந்நிதியடைந்து ஆசானுக் கஞ்சிக் காளியை வேண்டக் காளியருள் செய்யக் கல்விபெற்று “வாய்த்தவயிர புரமா காளியம்மையே, ஆய்த்த வருகா ரணிவயலில் காயத்த, கதிரை மாளத் தின்னுங்காளிங்கனேறுங், குதிரைமாளக் கொண்டுபோ” எனக் கவிகூற அக்குதிரை மாண்டது. கண்ட அருகிருந்தோர் ஆசிரியர்க்குக்கூறக் கேட்ட ஆசிரியர் வந்து இது அரசனறியின் யாதாமோ என நடுங்கு கையில் இவர் அவ்வெண்பா வினை மீண்டும் “குதிரை மீளக்கொண்டுவர” எனப் பாடக் குதிரை உயிர்பெற்றது. இதனைக் கண்கூடாகக் கண்ட ஆசிரியர் இவரை நோக்கி “பொதியிலகத்தியனாய்ப் பொய்யா மொழியாய், சிதைவில் புலவர் சிறப்பாய்த் துதி செய்யச், செங்காட்டக் கோட்டத்துறையூ ரெனுந் தலத்தில், தங்காட்டங் கொண்டிருப்பாய் தான். ” என வாழ்த்தினர். இவர்க்கு ஆசிரியரிட்ட பெயரே பெயரானது. இவர் சத்தியையே பாடும் இயல்புடையவர். இவரைக் குமாரக்கடவுள் ஒருமுறை தம்மீது கவி பாடும்படி கேட்கப் புலவர் “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவனோ” என்று மறுத்தனர். இதனால் சமயங்கண்டிருந்து கவிபெறக் காத்திருந்த குமாரக்கடவுள் புலவர் தஞ்சையையாண்ட சந்திரவாணன் மீது கோவைபாடி மீண்டு தனித்து ஒரு காட்டின் வழிவருகையில் குமாரக்கடவுள் ஒரு வேடச்சிறுவன் போல் உருக்கொண்டு புலவரை வந்து மறுத்தனர். புலவர், இன்று கள்ளனிடம் அகப்பட்டோமென்று அஞ்சி நான் புலவன் என்றார். ஆயின் உனக்கு அகத்தியரைப் போல் கவிபாடத் தெரியுமோ எனப்புலவர் ஆம் என்றனர். இதனால் புலவர் இவர் கவியருமை அறிந்தவன் போல் தோன்றுகிறது உயிர்க்கு மோசமில்லை யென்று சந்தோஷமடைந்தனர். வேட்டுக் குமரன் என்மீது சுரம் போக்காக ஒரு கவிபாடுக எனப்புலவர் உன் பெயர் யாது என்றனர். வேட்டுக் குமரன் பொய்யாமொழிப் புலவரைத் தம்மீது பாடக்கேட்டபோது முட்டையையும் பாடுவனோ” என்றதற்கு ஏற்பக் குமாரக் கடவுள் என் பெயர் முட்டையென்றனர். புலவர் சுரம் போக் குத்துறையாகப் “பொன் போலுங்கள்ளிப் பொரிபறக்குங் கானலிலே, என் பேதை செல்லற்கிசைந்தனளே மின் போலு, மானவேன் முட்டைக்குமாறாய தெவ்வர்போவ், கானவேன் முட்டைக்குங்காடு” எனப் பாடினர். இச்செய்யுளைக் கேட்ட, குமரன் இச்செய்யுளில் பொருட்குற்றம் இருக்கிறது அதாவது வெட்டிக் காயாவிடினும் நாட்டட்டுக்காயும் இயல்புள்ள கள்ளி வெந்து பொறியாய்ப் பறக்கும் பாலையில் பச்சையிலும் தீப்பட்டு வேகுமியல்புள்ள வேலமுள் வேக திருந்து காலில் தைப்பது இசையுமோ, இவ்வகை தவறுள்ள பாட்டுப் புலவர் பாடுவரோ என்று கூறி, நான் பாடுகிறேன் என்று “விழுந்த துளியந்தரத் தேவேமென்றும், வீழின், எழுந்த சுடர்சுமென்றேங்கிச் செழுங்கொண்டல், பெய்யா தகானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே, பொய்யா மொழிப்பகைஞர்போல்” என்று பாடினர். இதைக் கேட்ட புலவர்வியப்படைந்து நிற்கக் குமாரக்கடவுள் “பெட்டை முட்டை” யென்று கூறிய முன்னைய நினைவுவரச் செய்து அருள் நகை செய்து மறைந்தனர். புலவர் குமாரக்கடவுளை வணங்கி நீங்கிப் பாண்டி நாடு செல்லத் திரிசிராப்பள்ளியடைந்து ஆண்டிருக்கையில் சிவமூர்த்தி இவர்பால் ஒரு புலவர் போற்றோன்றி “கோட்டாற் கொழும்பிரசம் குத்தியத னடுவே, பாட்டாற் பனைக்கை புகமடுக்கும் காட்டானை, தேனீரருந்துஞ் சிராமலையே செஞ்சடைமேல், வானீர்கரந்தான் மலை. ” எனத் தாம் விரும்பிய திருத்தலம் தென்று குறிப்பிக்கப் பொய்யா மொழி யார் அங்கம் புலியதளாடையைச் சாத்தியாவமுடன், பங்கம் புலிவைத்த பண்பர்க் கிடம் பனை வாளெயிற்று, வெங்கட்புலியை விட்டானையைத் தேடி விதம் விதமாய்ச், சிங்கமிருந்து தனித்தனி நோக்குஞ் சிராமலையே” என்று துதித்தனர். இவர் ஒரு முறை திருக்கானப்பேரென்னும் காளை யார் கோயிற்சென்று கூத்தாள் எனுந் தாசி வீடடைந்து அவளை ஏதேனுங் கேட்கலாமெனச் செல்ல அவளும் அவள் தாயும், பாட்டியும் பூட்டியும் குருடிகளாக விருக்கக்கண்டு மனமிரங்கிக் கண்வர கூத்தாண் முகத்திரண்டு உர்வேல்கள் கூத்தா டன், மூத்தாண் முகத்தின் முழுநீலம் மூத்தாடன், ஆத்தாண் முகத்தி லாவிந்த மாத்தாடன், ஆத்தாண் முகத்தி லிரண் டம்பு” என அவர்கள் அனைவரும் கண் பெற்றுப் புலவரை யுபசரித்தனர். இச் செயலுணர்ந்த அவ்வூர் வேசையர்கள் எழுபதின்மர் இவரிடம் கவிபெற எண்ணிப் பொன் தந்து வேண்டப் புலவர் அவர்களை நோக்கி வாசமலர் மடந்தை போல் வார் வண் கானப்பேர், ஈசன் தன் மக்க ளெழு பதின்மர் தேசத், திரவலர், மேனீட்டுவர் கையீண் லெகங்காக்கும், புரவலர் மேனீட்டுவர் பொற்கால். ” என்று பாடி பலநாடுகள் சென்று, மீண்டும் திருக்கானப் போடைகையில் குருடு நீங்கிக் கண் பெற்ற தாசிகளிருக்கும் மனையடைந்து கதவினைத்தட்ட, தாசிகள் செருக்கால் திறவாமை கண்டு அவர்களுள் ஒருத்தியை நோக்கி ”பழைய குருடி கதவைத் திறடி” என்றனர். அதனால் அவர்களுள் ஒருத்திக்குக் கண் மறையப் பயந்து கதவைத் திறந்து வேண்டி மீண்டும் கண் பெற்றனள் என்பர். இவர் தொண்டை நாட்டை நீங்கிப் பாண்டி நாடு சென்று ஆண்டு அரசாண்டிருந்த வணங்காமுடிப் பாண்டியனை வீட்டிற் காணாது அவன் ஆலயத்தில் இருக்கக் கண்டு, “குழற்காலா விந்தங் கூம்பக் குமுத முகை யவிழ்ப்ப, நிழற்கால் மதியமன்றோ நின்றிருக்குல நீயவன்றன், அழற்கால விர்சடை மீதே யிருந்து மவ்வந்தி வண்ணன், சுழற்கால் வணங்குதியோ வணங்காமுடிக் கைதவனே” எனப் பாடித் தெரிவிக்கவும், பாண்டியன் புலவரிடத்து மதிப்பிலாது அங்கு விக்கிரக உருவாக இருக்கும் சங்கப்புலவுரைச் சிரக்கம்பம் கரக்கம்பம் செய்விக்க எனப், புலவரிசைந்து உங்களிலே யானோ ருவனொவ் வுவனோ வொவ்வேனோ, திங்கட் குலனறியச் செப்புங்கள் சங்கத்தீர், பாடு கின்றமுத்தமிழ்க் கென்பைந்தமிழு மொக்கு மோ, ஏடெழுதாரே ழெழுவீரின்று” எனப் பாடினர். அவ்வகை (49) தின்மர் செய்யப் பின்னும் பாண்டியன் அங்குப் பொற்றாமரையில் அமிழ்ந்த சங்கப் பலகையை மிதக்கப் பாடுக எனப் புலவர் “பூவேந்தர் முன் போற் புரப்பாரிலை யெனினும், பாவேந்தருண்டென்னும் பான்மையால் கோவேந்தன், மாறனறிய மதுராயுரித் தமிழோர், விறணையே சற்றேமித” என எக்காலத்திலோ அமிழ்ந்த சங்கப்பலகை வெளியில் தோன்றியது இவ்வற்புதக் காட்சிகளைக்கண்டும் பாண்டியன் புலவரைச் சம்மானிக் காததால் புலவர் சினங்கொண்டு நீங்கினர். இவற்றை மறைவில் இருந்து கண்ட பாண்டிமாதேவி, அரசனது அறியாமைக்கு வருந்தி மாறுவேடம் பூண்டு புலவரது சிவிகையைச் சுமக்கப் புலவர் அறிந்து பாண்டியன் தேவியை வாழ்த்தி இருப்பிடம் செலுத்தினர். பின் புலவர் சேரணாட டைந்து சீனக்கள் முதலியாரிடஞ் சேர்ந்து நட்புக்கொண்டு உயிரும் உடலும் போலிருக்கையில் ஒருநாள் இரவில் முதலியாரும் புலவரும் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்து புலவர் உறங்கிவிட முதலியார் அரசகாரியமாக வெளியிற் சென்றனர். முதலியாரின் மனைவி வீட்டின் காரியங்களை முடித்து வழக்கம்போல் மஞ்சத்தில் உறங்குவோர் தமது நாயகரென எண்ணித் தாமும் களங்கமற்று நித்திரை செய்தனர். முதலி யார் இராசகாரிய முடித்து வந்து புலவரைச் சற்று ஒதுங்கும்படி கேட்டுத் தாமும் இருவருக்கும் இடையில் நித்திரை புரிந்தனர். விடிந்து ஒருவர் பின் ஒருவராக ஒரு இடத்திலிருந்து வெளிவர ஏவலாளர் சந்தேகித்து இச்செய்தியை வெளியாக்கினர். இச்செய்தி அரசன் வரையில் அணுக அரசன் புலவரை அழைத்துக் கேட்கப் புலவர் “தேரையார் செவ்விளநீர்” என்ற செய்யுளைக் கூறினர். அரசன் இவரிடம் அப்படிப்பட்ட தீக்குறி யொன்றுங் காணாமையால் சும்மா இருந்தனன். முதலியாரும் அவ்வகை பழைய நட்புடன் இருந்தனர். புலவர் சீனக்கனை “அளிகொளுந் தொடையன் அரசக்குமரன், ஒளிகொள் சீநக்கனின்று வந்திட்டசீர்ப், புளியஞ் சோறு மென் புந்தியிற் செந்தமிழ், தெளியும் போதெலாந் தித்தியா நிற்குமே. ” எனப் புகழ்ந்தனர். இவ்வகை யிருக்கையில் புலவர் ஏதோ காரியமாய் வெளி சென்று மீளுகையில் முதலியார் இறந்து காட்டத்திற்குக் கொண்டுபோன செய்தியறிந்து வருந்தி அவ்விடம் சென்று அவ்விடம் தமமைப்போல் வருந்தி நிற்கும் சோழனைப்பார்த்து ‘வாழிசோழ வென் வாய்மொழி கேண்மோ, ஊழி நிலவெறி மாளிகையின் வயிற், கட்டிளங்கணவன் கவின்பெறு சேக்கை, என்றறி மனைவி நெடிது துயில் கொளச், செல்லக்கிடமின் எனக்கிடந் தருகெனச், சொல்லிய நண் பன்றனிச் செல்பவனோ, நானுமேகுவன் நற்றுணையவற்கே” என்று கூறி முதலியாரைக் கிடத்தியிருக்கும் சிதையருகு சென்று அன்று நீசெல்லக் கிடவென்றாயா யிழையோ, டின்று நீவானுலக மேறினாய் மன்றல் கமழ், மானொக்கும் வேல்விழி யார் மாறனே கண்டியூர், சீனக்கா செல்லக்கிட’ என அச்சிதையில் இருந்ததேகம் ஒதுங்க அதில் தாமும் நண்பருடன் படுத்துச் சுவர்க்க மடைந்தனர். இவர் காலம் தஞ்சைவாணன், அரசூரரசன் சீனக்கன் காலம். கி. பி. 16 ஆம் நூற்றாண்டென்பர். 2. சீநக்கனுக்குப் பாடிய கவி, பதிறையின் முறை கொணர்ந்து தெவ்வ ரெல்லாமீண்ட, இறையுமிறை கடக்கலாகா, அறை கழற்கால், போர்வேந்தர் போர்மாளப் போர் வாளுறை கழித்த, தேர் வேந்தன் நஞ்சைத்தெரு. ” கண்டியூர் வண்ணத் தியை பாடிய வெண்பா, ” தூசு தூசாக்கு வார்பாவை சுடர்த்தொடிக்கை ஆசிலாக் கண்டியூராரணங்கு வாசமலர்க் கண்ணங்கை கொங்கை முகங்காலுங் கடி, கமலம், கண்ணங்கை கொங்கை முகக்கால். ” பாண்டியன் நீர் நல்ல புலவர் என்ற போது பாடிய வெண்பா. ” அற முரைத்தானும் புலவன் முப்பாலின், திற முரைத்தானும் புலவன், குறு முனிதானும் புலவன் தாணி பொறுக்குமோ, யானும் புலவனெனில்,” புலையன் உடல் வெடிக்கப் பாடியது. ” கோதில் குல மங்கை குலோத் துங்க சாவகனென், றோதினேன் தன்னை பொறுப்பதனால் மாது, இளையாது முத்துவடந் தூக்கினாராம், விளையாடு செப்பிரண்டின் மேல் ” தமிழ் நாவலர் சரிதை.

பொருச்சுநன்

ஒரு வேடன்.

பொருட்கரு வூலத்தின் தலைவன்

வணக்கமுடைமை, பொருளுடைமை, உலகியவறிவு, உயிரைப்போல் பொருளைக் காத்தல், ஈகையின்மை முதலிய குணங்கள் வாய்ந்தவன், (சுக்~நீ.)

பொருண்மயக்கம்

வேற்றுமை யுருபுமுதலிய தொக்குகின்ற இடத்து பல பொருள் பட மயங்குவது. (நன்.)

பொருத்தங்கள்

1. நட்சத்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம்வரையில் எண்ணிக் கண்ட தொகையை 9ல் கழித்த மிச்சம் 2,4,6,8. ஆனால் உத்தமம், 1,5,9. ஆனால் மத்திமம்,3,7 ஆனால் அதமம். 2, ஏகதினப் பொருத்தம்: ரோகணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி, இவை 8ம் ஸ்திரீ புருஷர்களின் ஒருநாளாகில் உத்தமம்; அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், புநர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், இவை 8.ம், ஸ்திரீ புருஷர்களின் ஒருநாளாகில் மத்திமம்; இதில் ஸ்திரிபுருஷர்கள் நாள் ஒன்றாகி இரண்டிராசிக்குப் பங்குப்பட்ட நாளாகில் முதலிராசிநாள் புருஷனும் இரண்டாமிராசிநாள் பெண்ணுமாகில் பொருந்தும், இது மாறிவரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒருநாளாகிற் பொருந்தாது. 3. கணப்பொருத்தம் : பெண் நக்ஷத்திரமும் புருஷனுடைய நக்ஷத்திரமும் ஒரேகணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் தேவகணமானா லும் உத்தமம்; பெண் தேவகணமும் புருஷன் மனுஷகணமானாலும், இராக்ஷ தகணமானாலும் மத்திமம். பெண் இராக்ஷ தகணமும் புருஷன் தேவகணமானாலும், பெண் மனுஷகணமும் புருஷன் இராக்ஷத கணமா னாலும் அதமம்; பெண் இராக்ஷதகணமும் புருஷன் மனுஷகணமு மானால் அதமாதமம், பெண்ணினுடைய நக்ஷத்திரத்திற்கு 2,4,ன் மேற் புருஷநக்ஷத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியாயிருப் பினும் பெண் இராக்ஷத கணமானாலும் பொருந்தும். 4. மாகேந்திரப் பொருத்தம் : பெண் நக்ஷத்திரமுதல் புருஷநக்ஷத்திரம் 4,7,10,13,16,19,22,25 ஆனால் விவாதம் செய்யலாம். 5. ஸ்திரீதீர்க்கப் பொருத்தம் : பெண் நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் 13க்கு மேற்பட்டால் விவாகஞ் செய்யலாம். 6. பிராணிப் பொருத்தம் : பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரு பிராணி நக்ஷத்திரமானால் உத்தமம், அதில் ஆண், ஆணாகவும், பெண், பெண் ணாகவுமிருந்தா லதிக உத்தமம். இதர பிராணி நக்ஷத்திரமாகிலும் வைரசாதி யாகாமற்போனால் விவாகஞ் செய்து கொள்ளலாம். 7. இராசிப் பொருத்தம் : பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 6க்கு மேற்படினும் உத்தமம். பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 9ம் 4ம் இராசி ஆகில்மத்திமம். 2.ம் 5.ம் 9.ம் இராசியாகில் அதமம். 8. இராசி அதிபதிப்பொருத்தம் : சூரியனுக்கு குருவும், சந்திரனுக்கு குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிரனும் நட்பு; மற்றவர்கள் சத்துரு. புதனுக்குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சத்துரு, மற்றவர் மித்துரு. ஸ்திரீராசி அதிபதியும் புருஷராசி அதிபதியும் மித்துருவானாற் பொருந்தும், சத்துருவானாற் பொருந்தாது. 9. வசியப் பொருத்தம் : மேஷத்திற்குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத் திற்குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும்; கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன்னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகரத்திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகரமும் வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரீ யுடைய ராசிக்கு வசியமானராசி புருஷராசியாகில் உத்தமம், புருஷனு டைய ராசிக்கு வசியமான ராசி ஸ்திரீகாசியாயின் மத்திமம்; இரு வருடைய ராசியும் இவ்வாறு வாராதிருந்தால் வசியம் பொருந்தாது. 10, விருக்ஷப்பொருத்தம் : புருஷநக்ஷத்திரம் வயிரமரமும் பெண்ணின் நாள் பால் மரமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண் வயிரமரமும், புருஷன் பால்மரமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும், அர்த்தசேதமுமாம். இருவர் நக்ஷத்திரமும் பால்மரமாகில் அதிக பிள்ளைகளும் பாக்கியமுமுண்டாம் 11 ஆயுட்பொருத்தம் : பெண்ணினுடைய நக்ஷத்திரமுதல் புருஷனுடைய நக்ஷத்திரம் வரையும், எண்ணின தொகையையும், புருஷனுடைய நகூத்திர முதல் பெண்ணினுடைய நக்ஷத்திரம் வரையும் எண்ணின தொகையையும், தனித்தனியே ஏழிற்பெருக்கி 27க்கீந்த சேஷம் பெண்ணினுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும், புருஷனுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் பொருந்தாது, 12. பஞ்சபட்சிப்பொருத்தம் : மயிலுக்கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும், காகத்திற்கு ஆந்தையும், வல்லூறுக்கு ஆந்தையும் மயிலும் கோழியும் பகை. இதில் சொல்லப்படாதவை யெல்லாமுறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரேபக்ஷியானாலும் பகையில்லா திருந்தாலும் பக்ஷி பொருந்தும், பகையானாற் பொருந்தாது 13. பஞ்சபூதப் பொருத்தம் : அசசுவினிமுதல் 5ம் நாள் பிருதுவி. திருவாதிரை முதல் 6 நாள் அப்பு. உத்திர முதல் 6 நாள் தேயு. கேட்டை முதல் 5. நாள் வாயு. அவிட்ட முதல் 5 நாள் ஆகாயமென் றறியப்படும். ஸ்திரீயும் புருஷனும் ஒரே பூதமாயின் உத்தமம். அப்புவும் தேயுவுமாயின் அதமம், மற்றப் பூதங்களாயிருப்பின் மத்திமம், 14. வேதைப் பொருத்தம் : அசுவினி; மகம் மூலம், தம்மிற் பொருந்தா தென்க. பரணிக்குக் கேட்டை, கார்த்திகைக்கு அனுஷம், ரோகணிக்கு விசாகம், மிருக சீரிடத்திற்குச் சோதி, திருவாதிரைக்கு அவிட்டம், புதர்பூசத்திற்குத் திருவோணம், பூசத்திற்கு உத்திராடம், ஆயிலியத் திற்குப் பூராடம், பூரத்திற்கு ரேவதி, உத்திரத்திற்கு உத்திரட்டாதி, அஸ்தத்திற்குப் பூரட்டாதி, சித்திரைக்குச் சதையம் பகை ஆதலால் பொருந்தாது. மேற்சொன்ன நாட்களொழிய மற்றுள்ள நாட்களெல்லாம் பொருந்தும், 15. இரஜ்ஜுப் பொருத்தம் : மிரு சித் அவி இந்த 3ம், அரோரஜ்ஜு, ரோ திருவா அஸ்சுவா திருவோ சத இந்த 6 கண்டரஜ்ஜு, கார் புன உத்திரம் விசா உத்ரா பூரட் இந்த 6 நாபிரஜ்ஜு, பர பூசம்பூரம், அனு பூரா உத்திரட்இந்த 6ம் தொடைாஜ்ஜு, அசு ஆயி மக கேட் மூல ரே இந்த 6ம் பாதாஜ்ஜு, வதூவரர்களுடைய நட்சத்திரங்கள் ஒரு ரஜ்ஜுவி லிருந்தால் பொருந்தாவாம். 16. கோத்திரப் பொருத்தம் : அச்சுவினி முதல் 4ம் மரீசியும், மிருகசீரிட முதல் 4ம் அத்திரியும், ஆயிலிய முதல் 4ம் வசிட்டரும், அத்தமுதல் 4ம் அங்கிராவும், அனுஷமுதல் 4ம் புலத்தியரும், உத்திராட முதல் 3ம் புலகரும், சதய முதல் 4ம் கிருதுவுமாம். ஸ்திரீ புருஷர்கள் ஒரு கோத்திர நக்ஷத்திரங்களாயின் கோத்திரம் பொருந்தாது. மாறிவரிற் பொருந்தும். 17. வருணப் பொருத்தம் : கடக விருச்சிக மீனம் பிராமண வருணம். மேடசிங்க தனுசுஷத்திரிய வருணம், இடபம் கன்னி மகரம் வைசிய வருணம், மிதுனம் துலாம் கும்பம் சூத்திர வருணம், ஸ்திரி ராசி தாழ்ந்தவருணம், புருஷராசி உயர்ந்த வருணமுமாயினும், 2ம் ஒரு வருணமாயினும் வருணம் பொருந்தும். மாறிவரிற் பொருந்தாது. 18. நாடிப்பொருத்தம் : அசு திருவா புன உத்திர அஸ். கேட் மூல சத பூரட், இந்த 9 நட்சத்திரங்கள் இடைநாடி, பர. மிரு பூச பூரம் சித் அனு பூரா அவிட் உத்திரட் இந்த 9 நட்சத்திரங்களும் சுழிமுனை நாடி, கார், ரோ ஆயி, மக, சுவா, விசா, உத்திரா, திருவோ, ரேவ இந்த 9ம் பிங்களை நாடி. ஸ்திரீநட்சத்திரமும், புருஷ நட்சத்திரமும், ஒரு நாடியி லிருந்தால் விவாகஞ் செய்யக்கூடாது. மாறியிருந்தால் உத்தமம். பிராமணருக்கு அதிபதிப் பொருத்தமும், ஷத்திரியருக்குக் கணப் பொருத்தமும், வைசியருக்கு ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமும், சூத்திரர், சங்காசாதி முதலானவர்களுக்கு யோனிப் பொருத்தமும், பிரதானமாக விருத்தல் வேண்டும்.

பொருத்தம்

இது செய்யுள் செய்யவல்ல கவிகள் தலைமகனுக்குத் தீமைவாராது மங்கலம்பயப்பத் தலைமகன் பெயர்க்குத் தக்கவாறு எழுத்துச்சொல் முதலிய புணர்த்திப் பொருந்தப்பாடும் பொருத்தமாம். அது; எழுத்து, சொல், தானம், பால், உணா, வருணம், நாள், கதி, கணமெனப் பிரிவுபடும். அவற்றுள், எழுத்துப் பொருத்தமாவது: ஒற்றுட்பட, 3,5,7,9 எழுத்துக்களால் முதன் மொழி வருவது நன்று. 4,6,8 ஆகிய எழுத்துக்களால் வருவன தீது. சொற் பொருத்தம்: சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, நீர், திங்கள், சொல், கார், பரிதி, யானை, கடல், உலகம், தேர், மலை, மா, கங்கை, நிலம், முதலியவும் இவற்றின் பரியாயமுமாம். மேற்கூறிய மங்கல மொழிகள் முதன் மொழிக்கண் வருமிடத்து, வகையுளி சேர்தல், சிறப்பின்றி நிற்றல், பலபொருளொரு சொல் பொடுளில் சொல், தோன்றல், திரிதல், கெடுதல் பெற்றன குற்றமாம். தானப் பொருத்தம் : குற்றெழுத் தைந்தோடும் தமக்கொத்த நெடிலைச் சேர்த்து, இ உக்கள் நின்ற தானத்து முறையே ஐகார ஒளகாரங்களைச் சேர்த்தால், உயிரும் உயிர் மெய்யுமென்று சொல்லப்பட்ட தொகை யெல்லாம் ஐந்து கூறாயடங்கும், இவற்றைப் பாட்டுடைத் தலைமகன் இயற் பெயரின் முதலெழுத்தின் கூற்றைத் தொடங்கிப், பாலன், குமரன், இராசன், மூப்பு, மரணமென வருவித்தல்; அவற்றுள், மூப்பும், மரணமும், ஆகா, அல்லன் முதற் சீரின் வருவன நன்று. பாற்பொருத்தம்: குறிலெல்லாம் ஆண்பால், நெடில் பெண்பால், ஒற்றும் ஆய்தமும் அலி யெழுத்தாம், பாலறிந்து எழுத்தியைக்க, உணாப் பொருத்தம் க, ச, த, ந, ப, ம, வ, எனும் ஒற்றுக்களேழும், அ, இ, உ, எ, எனும் நான்கு குற்றுயிரும் அமுத எழுத்தாம். இவை மொழி முதற்கண்ணும், தசாங்கத்தயலிலும் வருவன நன்று. யா,ர, ல, எனும் ஒற்றுக்கள் மீதேறிய ஆ, ஓ,க்களும், ய, ர, ல, என்னும் ஒற்றும், ஆய்தமும், அளபெடையிரண்டும், மகரக் குறுக்கமும், ஆய்தக் குறுக்கமும் ஆகிய பதினான்கும் நஞ்செழுத்தாம். இவை மொழி முதற்கும் தசாங்கத் தயற்குமாகா, வருணப் பொருத்தம் : உயிர் 12, முதல் 9, ஒற்றுக்கள், அந்தணர் வருணம், அல்லாமெய்யின் (9) அரசவருணம், லவறன, வணிகர், ழ ள சூத்திர வருணமாம். 4.நாட் பொருத்தம் : அ, ஆ, இ, ஈ கார்த்திகை, உ ஊ எ ஏ ஐ பூராடம், ஒ ஓ ஔ உத்திராடம், க கா கி கீ திருவோணம் கு கூ திருவாதிரை, கெ கே கை புனர்ப்பூசம், கொ கோ கௌ பூசம், ச சா சி சீ ரேவதி, சு சூ செ சே சை அசுவனி, சொ சோ சௌ பரணி, ஞ ஞா ஞெ. அவிட்டம், த தா சுவாதி, தி தீ து தூ தெ தே தை. விசாகம், தொ தோ தௌ சதயம், ந நா நி நீ நு நூ அனுடம், நெ நே நை கேட்டை, நொ நோ நௌ பூரட்டாதி, ப பா பி பீ உத்திரம், பு பூ அத்தம், பெ, பே பை பொ போ பௌ சித்திரை, ம மா மி மீ மு மூ மகம், மெ மே மை ஆயிலியம், மொ மோ மௌ பூரம், யா உத்திரட்டாதி, யூ யோ மூலம், வ வா வி வீ உரோகணி, வெ வே வை வௌ மிருகசிரம். மேற் சொல்லிய நாளிருபத் தேழையும், ஒன்பதொன்பதாக மூன்று கூருக்கிப் பாட் இடைத் தலைமகனியற் பெயரின் முதலழுத்து நாளைத் தொடங்கிக் கூறுகளை யெண்ண க, ங, ரு, எ, வரிற் பொருந்தா. அல்லாத நாட்களுட் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தின் ராசி தொடங்கி பெட்டாமிராசி நாட்களும் பொருந்தா. கதிப்பொருத்தம் : அ இ உ எ, கசடதப என்பன தெய்வகதியாம். ஆ ஈ ஊ ஏ, ஞ ண ந ம என்பன மக்கட் சாதியாம். இவை முன் மொழிக்காம்.

பொருநராற்றுப்படை

இது இளஞ்சேட் சென்னியின் புதல்வனாகிய சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய நூல், இதற்குப் பொருநாறெனவும் பெயர். இது பத்துப் பாட்டினுன் ஒன்று. இது (248) அடிகளுடையது,

பொருநர்

ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர், பரணிபாடுநர்.

பொருநவாகை

நின் கீர்த்தியோடு மிகுதியைப் பார்த்து யாவரையும் எள்ளுதலைப் பரிகரியென்று ‘உயர்த்திச் சொல்லியது. (பு. வெ.)

பொருநாற்றுப்படை

மிக்க நன்மையினை யுடையவன் பக்கத்தீராக வெனக்கிணை கொட்டு மவனை வழிப்படுத்தது (பு. வெ. பாடாண்.),

பொருந்திலிளங்கீரனார்

1. இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் இயற்பெயர் இளங்கீரனார். இவர் ஊர் பொருந்திலாக இருக்கலாம். (அக 351) 2. ஒரு வள்ளலும் புலவருமானவர். கபிலரைப் புகழ்ந்தவர். சேரமான்மாந்தரஞ் சேரலிரும்பொறையைப் பாடியவர். (புறநானூறு).

பொருனை

தாம்பிரபர்ணி நதிக்குப் பெயர். (சிலப்)

பொருளாராய்ச்சி

(8) திணை, பால், செய்யுள், நிலம், காலம், வழு, வழக்கு, இடம் என்பன.

பொருளொடு புகறல்

பூமியிடத்துப் பற்ராய விருப்பத்தினை யொழித்து மெய்மையான பொருளை விரும்பியது. (பு. வெ.)

பொருள்

1. (2) கல்விப்பொருள், செல்வப்பொருள். 2. (4) அறம், பொருள், இன்பம், வீடு, இவை புருஷார்த்தமாம். 3. சொல்லோ டொற்றுமை யுடையதாய்ப் பொருளைத் தெரிவிப்பது. அது, உயர் திணைப் பொருள், அஃறிணைப் பொருள், ஆண்பாற் பொருள், பெண் பாற் பொருள், பலர்பாற் பொருள், ஒன்றறி பொருள், பலவறி பொருள், நன்மைப் பொருள், முன்னிலைப் பொருள் படர்க்கைப் பொருள், வழக்குப் பொருள், செய்யுட்பொருள், வெளிப்படைப் பொருள், குறிப்புப்பொருள் எனப் பலவகை, (நன்.)

பொருள்கள்

இவை தருக்கத்தின் கொண்ட பிரமேயப் பொருள்கள் அவை (9) பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், காலம், திக்கு, ஆத்மா, மனம், என்பர்.

பொருள்மொழிக்காஞ்சி

அவிர்ந்து விளங்கும் சடாமகுடத்தினை யுடைய முனிவர் விரும்பித் தெளிந்த பொருளைச் சொல்லியது. (பு. வெ பொதுவியன்)

பொருள்வகை

இத்திணைக்கே இப்பொருளுரித் தாவதென்னாமல் எல்லாத் திணைக்கும் பொதுவாய் நிற்குநிலை. (அகம்)

பொருள்வயிற் பிரிவு

பொருளீட்டுதல் காரணமாகப் பிரிதல், இது, தோழி தலை மகட்குணர்த்தல், தலைவி இளவேனிற் பருவங்கண்டு புலம்பல், தோழியாற்றுவித்தல் முதலிய; மற்றும், தலைமகன் தலைமக ளது உருவு வெளிப்பாடு கண்டு சொல்லல், பாசறைமுற்றி மீண்டூர் வயின் வந்த தலைவன் பாகற்குச் சொல்லல், தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங் கண்டு சொல்லல் முதலிய; கற்பியவில் அடங்கும்.

பொறி

1. (3) மனம், வாக்கு, காயம், 2. (5) மெய், வாய், கண், மூக்கு, செவி. 3. இது, வீட்டில் தொந்தரை செய்யும் எலி, பெருச்சாளி முதலியவைகளைப் பிடிக்கும் பொறி. இது ஒரு சிறு பெட்டி போன்று பிராணி உள்ளிருக்கும் இரையை உட்புகுந்து கவரின், தடுத்துக் கொள்ளும் தடைக் கதவு கொண்டது. இவ்வகையில் பலவகை உண்டு.

பொறி நக்ஷத்திரங்கள்

இவை விண் வீழ்கொள்ளிகளில் வேறுபட்டவை. இது பெரிய தீவட்டி போல் எரிந்துகொண்டு பூமியை நோக்கி வருகையில் அளவற்ற பொறிகளைச் சிதறிக்கொண்டு பல இடி முழக்கம் போன்ற வெடிகளுடன் கீழிறங்குவனவாம். இது (1869) வருஷத்தில் ஒருமுறை இங்கிலாந்தில் காணப்பட்ட தாம்.

பொறையாற்றுக் கிழான்

பொறையாறு ஆண்டவள்ளல். வேளாளராக இருக்கலாம். கல்லாடராற் பாடப்பட்டவன், (புற. நா).

பொற்கையான்மாறன்

இவன் ஒரு பாண்டியன். இவனரசில் ஒரு வேதியன் கங்காஸ்நானத்திற்குப் போக எண்ணி நாளைப் புறப்பட இருக்கையில் மனைவி என்னை யாவர் காப்பார் என்றனள், வேதியன் அரசன் காப்பான் என்று கூறி மறுநாள் யாத்திரை சென்றனன். இவ்வகை நடந்த செய்திகளை நகர சோதனைக்கு வந்து அந்த வீட்டின் புறத்தில் இருந்த அரசன் கேட்டு அன்று முதல் அந்த வீட்டுடன் அந்த அக்கிராரத்தில் இருந்த வேதியர் அனைவருக்கும் உணவளித்து வந்தனன் இவ்வகை நாடோறும் உணவும் காத்தலும் செய்துவருவோன் ஒருநாள் அந்த வீட்டின் புறத்தில் இருக்கையில் ஆண் குரல் கேட்கக் கதவைத் தட்டினன். கங்கா ஸ்நானஞ் சென்று அன்றைக்கு வந்த அந்த வீட்டு வேதியன் தீரமாய் யார் அங்கு என்று கேட்டனன். அரசன் அயலானாயின் தீரமாய் ஆரென மாட்டானென் றுணர்ந்து அந்த வீட்டைத் தட்டினதுபோல் மற்ற வேதியர் வீடுகளையுந் தட்டிவிட்டு அரண்மனை சென்றனன். வேதியரெல்லாரும் நடந்த சங்கதிகளைப்பற்றி அரசனுக்கு அறிவித்தனர். அரசன் வேதியர்களை வருவித்து அவ்வகை தீமை செய்தவனுக்கு யாது தண்டனையென வேதியர் தட்டிய கையை வாங்கிவிட வேண்டுமென்று கூறினர். உடனே அரசன் தனது உடை வாளை யெடுத்துத் தன் கையை வெட்டியெறிய வேதியர் அஞ்சி யாக மொன்று இயற்றி அரசனுக்குப் பொற்கை வளரச் செய்தனர். ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது.

பொற்சபை

கனகசபையாகிய சிதம்பரம்.

பொற்றாமரை

பாண்டி நாட்டு மதுரைமா நகரில் எழுந்தருளியிருக்குந் திரு ஆலவாயுடையார் திருச்சந்நிதி தீர்த்தம். இது தென் மதுரையில் சங்கப்புலவர்க்கு இருப்பிடமாய்ச் சொக்கர் கட்டளைப்படி சங்கப் பலகை தாங்கியிருந்தது. இதில் நக்கீரர் சிவகோபத்தால் விழுந்து கைலை பாதி காளத்திபாதியந்தாதி பாடிக் கரையேறினர். இது நாரை முத்திபெறல் முதலிய பல விசேடங்களைப் பெற்றது.

பொலிந்து நின்றபிரான்

திருக்குருகூரில் கோயில் கொண்ட பெருமாள்.

பொலிவு மங்கலம்

வேலையுடைய மன்னன் மனமுவப்ப புதல்வன் பிறத்தலாற் பலரும் கொண்டாடியது. (பு. வெ பாடாண்)

பொல்லாப்பிள்ளையார்

திருநாரையூரில் எழுந்தருளியிருந்து அபயகுல சேகர சோழராஜன் நிவேதித்த பலங்களை யுண்டு நம்பியாண்டார் நம்பிக்குத் திருமுறையிருந்த இட முதலிய அருளிச்செய்த விநாயக மூர்த்தி.

பொழுது

(6) மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, இவை அத்தமனகால முதல் பப்பத்து நாழிகை

பொழுதுகண்டிரங்கல்

உயிர் நிற்றலைப் போற்றாளாய் நெட்டுயிர்ப்புக் கொண்டு சுழலும் பொன்னாற் செய்த வளையினை யுடைய தலைவி மாலைப்பொழுதைக் கண்டு வருந்தியது. (பு. வெ. பெரும்.)