அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பேகன்

கடையெழுவள்ளல்களில் ஒருவன் ஆவியர் குடியிற் பிறந்தவன். மலைநாடன். மயில் குளிர்ந்து கூவியதென்று ஆடையளித்தவன். கபிலபரணர்க்கு உபகரித்தவன். இவன் மனைவி கண்ணகி. இவளை வேறொருத்தி காரணமாகத் துறந்தவன். இவனைப் பாடினோர், கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார். இவன் நல்லூர்க்கதிபன். இவனது நாடு பழனி மலைக்கருகிலிருந்த நாடு, (புற, நா.)

பேடு

1. இது வாணாசுரன் நகரத்திருந்த தன் மகனாகிய அநிருத்தனைச் சிறைமீட்டு ஆண் திரிந்த பெண்கோலத்துடன் காமன் ஆடிய கூத்து. 2. இது ஆண்பேடு பெண்பேடு என, இருவகைத்து, அவற்றுள் ஆண் பேடாவது ஆண்மைத் தன்மையின்றிரிதல் அதாவது, விகாரமும் வீரியமும் நுகரும் பெற்றியும் பத்தியும் பிறவும் மின்றாதலும் பெண்மைக் கோலமாகிய முலை முதலிய பெண்ணுறுப்புகள் பலவுமுளவாதல். பெண்பேடாவது பெண்ணுறுப்புகள் பல பெற்றும் ஆண் தன்மையை அவரவியிருத்தல்; இதனை, ‘சுரியற்றாடி மருள்படு பூங்குழல், பவளச் செவ்வாய் தவள வொண்ணகை, ஒள்ளரி நெடுங்கண் வெள்ளி வெண் டோட்டுச், கருங்கொடிப் புருவத்து மருக்குவளை பிறை நுதல், காந்தளஞ் செங்கையேந்திள வனமுலை, அகன்ற வல்கு லந் நுண் மருங்குல் இகந்த வட்டுடை வெழுது வரிக் கோலத்து, வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணில மளந்தோன் மகன் முன்னாடிய, பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும். ” என்பதால் ஆண் பேடாவதறிக. பேடியினிலக்கணமாவது, நச்சுப் பேசுதல், நல்லிசையோர்தல், அச்சுமாற லாண் பெண்ணாதல், ஒரு கையை வீசி நடத்தல், தலையில் ஒரு கை வைத்தல், எதிர்ந்தோரைக் கண்டு விலகல் எதிர்ந்தோர்மேற் செல்லுதல், பார்வை வேறுபடுதல், பிறருக்கு நடுநடுங்கிச் சுழன்று திரிதல், பிறரைக்கண்டு நகைத்தல், நாணுதல், திரிதல், பல நாடகஞ் செய்தல், பக்கம் பார்த்தல், பதுங்கித் திரிதல், காரணமில்லாமற் பலவற்றைக் கோபங் கொண்டுபேசல், தன் முலையைத் தானே வருத்தல், அசக்கல், அழுதல், சோர்ந்தரு வருத்தல், குறுக்கிக்கூட்டிப் பார்த்தல், இடையில் ஒரு கைவைத்தல், அதனை வாங்கல், இரங்கிப்பேசல், எல்லென்று பாடுதல் முதலிய,

பேணபன்

வானப்பிரத்த உட்பகுப்பினன். தானே மரத்தினின்று விழும் பழத்தால் ஜீவிப்பவன்.

பேதம்

3. சுகதபேதம், சுசாதிபேதம், விசாதிபேதம். அவையாவன: மரத்திற் கிலை, அரும்பு, பூ, காய் முதலிய சுசத பேதம். மரத்திற்கு மறுமரம் சுசாதி பேதம். மரத்திற்குக்கல், விசாதிபேதம்.

பேதவாதசைவன்

உயிர் மெய்ஞ்ஞானஞ் சேர்ந்தபோதே மலம் நீங்கப் பெறுமென்றும், இதுவே முத்தியென்றுங் கூறுவோன்.

பேனபன்

பார்க்கவம்ச சுமித்திராபரன் என்னும் பெயருள்ள ஒரு ரிஷி. திரிசிகர மலையில் வசிப்பவன். (பா அண்ஹு.)

பேனபர்

நுரையைக் குடித்துயிர்வாழும் தேவகணங்கள், (பார~சபா.)

பேன்

இது அழுக்காலும் வியர்வையாலும் தலையிலும் சீலையிலு முண்டாம் பூச்சி வகை. இதற்கு பற்களும் உதடுகளுமுண்டு. இவற்றால் கடித்து இரத்தத்தை யுரிஞ்சும், தலைப்பேனின் முட்டையை ஈர் என்பர். சிறு பேனை நமடு என்பர். சீலைப்பேன் இவ்வினத்தது.

பேயனார்

ஐங்குறு நூற்றில் முல்லைத்திணை பாடிய புலவர். கடைச் சங்க மருவிய புலவர். (ஐங்குறு நூறு).

பேயார்

காரைக்காலம்மையார்க்குப் பேய் வடிவுவுற்ற பின் வந்த பெயர்,

பேயாழ்வார்

இவர் நந்தகாமிசமாய்த் துவாபரயுகத்தில் எட்டுலக்ஷத்து ஆறாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றொராவதான சித்தார்த்தி வருஷம் ஐப்பசிச தசமி சதய நக்ஷத்திரம் வியாழக்கிழமை திருமயிலைக் கேசவப் பெருமாள் சந்நிதிக்கு அடுத்த பொய்கையில் மலர்ந்த அல்லிப் புஷ்பத்தில் அவதரித்தவர். இவர் நந்தகாமிசம். இவர் நெருக்குண்டத னால் பெருமாளை ஞானக் கண்ணாற்கண்டு திருக்கண்டேன்’ என்கிற மூன்றாந்திரு அந்தாதி நூறு பாடலும் திருவாய்மலர்ந்தனர். இவரது மற்ற சரிதையைப் பொய்கையாரைக் காண்க. (குரு பரம்பரை).

பேய்

இது ஒரு பெண்ணுரு அமைந்தது புஷ்கரக்ஷேத்ரத்திலுள்ளது. ஒரு பிராமண பெண்ணை யணைந்து நீ பாவியாகையால் அச்சுதநாமஸ் மரணை செய்யென்று கூறியது. பார்ப்பினி பயந்து தன் புத்த ரர்களுடன் அரிபஜனை செய்து புஷ்கரக்ஷேத்ர மடைந்தாள். பிசாசம் இவளை யடைந்து என்னைச் சுத்தமாக்குக எனக் கேட்டது. பார்ப்பினி அரிரு மஸ்மரணையுடன் தீர்த்தத்தை அப்பிசாசத்தின் மீது புரோக்ஷித்தாள், அது பேயுருங்கிச் சுத்த மடைந்தது. (பார சாங்.)

பேய்கள்

1. சிருட்டி செய்ய அறியாமல் பிரமன் அழுத கண்ணீரில் உதித்த தேவ வகுப்பினர். இப்பேய் வகுப்பினர்க்கு உணவு, “நீறிடா ரரனை நினைத்திடா ரீசனிம வவஞ்செழுத்தினை நாவாற், கூறிடார் சிவ ஜனப் பூசனை புரியா ருண்டிடுங் கோது சேருணவு, மாறிடா விதியிற் சிராத்தமே யாதி மாகடன் செய்திடாரென்று, மூறிடா வெந்தீச் சினத்தினர் முடை யூனருந்துவோருணவும் ” ‘புனிதவாமயத்தின் மெழுகி டாவகத்திற் பொங்கிருண் மணிவிளக் சேற்ற, மனையினிலுணவும் பூப்புற மடந்தை வரிவிழி கண்டிடுமுணவும், பனி கொள் பூங்கூந்தற் பரத்தையர் தம்பாலுண்டிடும் பதகர்த முணவும், கனியுமா கருத்தினிவே தனஞ் செய்யாதுண்டிடுங் கயவர்த முணவும்,” “அதிதியர் பசிப்ப வுண்பவருணவு மையமீந் துண்டிடாருணவும், பதிதர் பாலுணவும் பன்றினாய் முதலபயின் மனையுணவுநீர் படியா, மதிநுதன் மாதர் சமைத்திடு முணவும், வனப்பழி மட்கலத் துணவும், முதிர்மயி சணைந்த வுணவுமே யாங்களுண்டிடு முண்டிமற்றுரவோய். ” என்பதாலறிக. இவை அகாலமிர்த்தியு அடைந்து காலம் வருந்துணையும் அந்தராத்மாவாய் இருக்கும் பைசாச வகுப்பு, 3. ஒரு தேவவகுப்பினர்.

பேய்க்காஞ்சி

பிணம் மிக்க போர்க்களத்திலே பட்டார்க்குப் பேய் மிகவும் அச்ச முறுத்தியது. (பு. வெ.)

பேய்க்காரம்

இது நாடக விகற்பத்தொன்று. இது தலைமக்கள் தேவ காந்தருவ பைசாசராதி பதினறுவராய் பெண்ணுடைத்தாய் முன்பின் மூன்றினும் ஒன்றின் பொருள் பெறுதலும் அங்கமொன்றாதலுங் கண்ட மொன்று தலுமாம்.

பேய்க்குரவை

அரசன் செலுத்தும் கொடுமை மிக்க மணியையுடைய தேரின் பின்பும் முன்பும் பேய் ஆடியது. (பு. வெ.)

பேய்நிலை

போரைச் செய்யும் வேலினையுடையான் திறப்பாட்டை நோக்கி நீங்குதலொழிந்து பேய் பரிகரித்தது. (பு. வெ.)

பேய்மகள் இளவெயினி

இவர் நற்றமிழுணர்ந்த செல்வ தேனாய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ எனுஞ் சேரமானைப் பாடியவர். இவர் பாடியது “அரிமயிர்த்திரன் முன்கை’ எனும் புறப்பாட்டாகும். இச்செய்யுள் வஞ்சிவேந்தனாகிய சேரன்வலியோ டெதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான். அப்புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னாற்செய்த இழை பல பெற்றாள். அவளுக்கேற்பப் பாடவல்லபாணனும் வெள்ளினாறாற் றொடுக்கப்பட்ட தாமரைப்பூப் பெற்றான். யானொன்றும் பெறவில்லை யென்பதைத் தெரிவிக்கும் இவர் தம் மந்திர வலியாற் பேயைத் தம் வயமாக்க வல்லவராதலின் பெற்ற பெயராயிருக்கலாம். (புற நா).

பேரருளாளஜீயர்

பேரருளாளைய ரெனத்தேசிகரிடம் ஆச்ரயித்தவர். பின் தேசிகரிடம் சந்நியாசமடைந்து தேசிகரிடம் வாதத்திற்கு வந்தவர்களைச் ஜெயித்துத் தேசிகரால் பிரமதந்திர சுவதந்திரர் எனப் பெயர் பெற்றுப் பலரை ஸ்ரீவைஷ்ணவ ராக்கித் திருமலையில் பெருமாள் நியமனப்படி கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்து திருநாட்டிற்கு எழுந்தருளினவர்.

பேரருளாளனப்பை

பேரருளாள ஜீயரால் தோல்வி செய்யப்பட்டு அவரை ஆசரயித்த வித்துவான்.

பேரருளாளன்

திருக்காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் பெருமாள்.

பேரளிப்பாக்கம் நயினர்

நயினாராசாரியர் திருவடி சம்பந்தி.

பேராசிரியர்

ஒரு உரையாசிரியர். இவரது நாடு முதலிய புலப்பட வில்லை. ஆயினும் சிலர் மதுரை யென்பர். ஆதலால் இவரை மதுரையாசிரியர் என்றும் கூறுப. பழைய உரையாசிரியர்களில் ஒருவர் திருச்சிற்றம்பலக் கோவை யார்க்கும் குறுந்தொகையில் (8) செய்யுட்களுக்கும், தொல்காப்பியத்திற்கும் உரைசெய்திருக்கின்றனர். இவரை நச்சினார்க் கினியர், உரைச் சிறப்புப் பாயிரத்தில் ‘நல்லறிவு டைய தொல் பேராசான்’ என்றெடுத்துக் கூறியதனா னிவர் அவர் காலத்திற்கு முந்தியவர் எனத் தோற்றுகிறது. இவர் காலம் இருக்கை முதலிய ஒன்றும் தெரியவில்லை. இப்பெயர் கொண்ட மற்றொருவர் ஒட்டக் கூத்தர் காலத்திருந்ததாகத் தெரிகிறது, அவர் இவரின் வேறு,

பேராண்முல்லை

மனம் விரும்பச் சினமன்னன் போர்களத்தைக் கொண்ட மிகுதியைச் சொல்லியது.

பேராண்வஞ்சி

1, உறவல்லாதார் பொரும் செருவைத் தொலைத்த தலைமையையுடைய வீரர்கட்குப் பெரிதுங் கொடுத்தது. (புறவெண்பா.) 2. பெறுதற்கரிய பொருளைப் பகைவர் கொடுப்பத் தணிந்த கோபத் தோடு பேரணி கலங்களையுடைய மன்னன் மீண்டு போதலும் அத்துறையாம். (புறவெண்பா.)

பேராறு

சேரநாட்டுள்ள ஆறு, (சிலப்பதிகாரம்.)

பேராலவாயர்

இவர் மதுரைப் பேராலவாயரெனவுங் கூறப்படுவர். சிவபிரான் நக்கீரரோடு வாது தொடுக்க வேண்டி ஒரு புலவராக வந்த பொழுது நும்பெயர் யாதென்றார்க்கு யாம் “பேராலவாயர்” என்னும் பெயருடையோமென்று கூறியதாகப் பழைய திருவிளையாடல் கூறாநிற்கும். இவர் மதுரையையும், அதனையாளும் பாண்டியன் செழியனை யும், அவனது கொற்கை நகரையும், வையையாற்றையும் சிறப்பித்துள் ளார். இவர் எல்லாத் திணையிலும் பயின்றுளராதலின் அவ்வவற்றைப் புனைந்து பாடியுள்ளார். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் காலத்தினர். அவன் இறந்ததாக அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாயப் போதலும், இவர் அதனைக்கண்டு பரிந்து ஆற்றாராய் வருந்திப் பாடியது மனத்தை நெகிழ்விக்கும். வெட்சித்திணையில் உண்டாட்டுக்கு இவர் கூறிய பாட்டு ஆராயத்தக்கது. இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், அகத்தில் இரண்டும், புறத்தில் இரண்டுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பேராவூர்ப் பிரபு

அரசனால் துரத்தப்பட்ட நந்தன் சாம்பானென்னும் புலையனுடன் உண்டு அவனைக் காத்தவர். தொண்டைநாட்டுப் பேராவூரில் இருந்த பிரபு. வேளாளர்.

பேரிசாத்தனார்

இவர் வடவண்ணக்கன் பேரிசாத்தனெனவும், வடம் வண்ணக்கன் பேரிசாத்தனெனவுங் கூறப்படுவார். வடக்கிலிருந்து வந்த நாணய சோதகன் (நோட்டகாரன்) பேரிசாத்தனென்பது, பாண்டியன் இலவந்திகைத்துஞ்சிய நன்மாறன் சேரமான் யானைக்கட்சேய் மாந்தாஞ் சேரலிரும்பொறை சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இவர்கள் காலத்தினர் இச்சேரனும், சோழனும் போர் செய்தபொழுது சோழனுக்குத் துணையாய் நின்ற தேர்வண்மலையனைப் பாடி உவப் பித்தார். மேற்கூறிய பாண்டியன் நன்மாறனைப் பரிசில்கேட்டு அவன் கொடானாக இவர் வருந்திக்கூறிய பாடல் ஆராயத்தக்கது. நெய்தலையும், குறிஞ்சியையும், சிறுபான்மை பாலையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் கூறிய குறைாயப்பு நுண்ணுணர்வினோரை மகிழ்விக்கும். இவர் பாடியனவாக நற்றிணையில் எட்டு பாடல்களும், குறுந்தொகை யில் நாலும், அகத்தில் ஐந்தும், புறத்தில் இரண்டுமாகப் பத்தொன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பேரிசாத்தன்

பேரிசாத்தனாரைக் காண்க (குறு 278)

பேரிசெட்டி

வைசியர் வகுப்பிற் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒருகாலத்து அரசனால் தகாத இடத்தில் மணங்கொள்ளக் கட்டளை யிடப்பட்டு அதற் குடம்படாமல் பெதரி (பயந்து) நாட்டைவிட்டு ஓடியதால் இப்பெயர் அடைந்தனர். பெருமையென்பது பேரியென மருவி உயர்ந்தார் என நின்றது என்பர். இவர்கள் திருத்தணியார், அச்சிறுபாக்கத்தார்,தெலுங்கு, பாக்கம், முசல்பாக்கம் முதலியவாகப் பகுக்கப்படுவர். (தர்ஸ்டன்.)

பேரிற்கிழத்தி

கோவலன் தாய். கோவலனிறந்த செய்தி மாடலனாலறிந்து உயிர் துறந்தவள்.

பேருசங்கன்

சசிபிந்து பாட்டன்,

பேரெயின் முறுவலார்

நம்பிநெடுஞ்செழியனைப் பாடியவர் (புற நா.) (குறு தொ).

பேரையம்

இது அரையநகரத்தின் ஒரு பாகமாக உள்ளது, (புறநானூறு.)

பேறு

(16) புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளைமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்

பேறையூரான்

இவர் ஒரு வேளாளர், வித்துவானுக்கு நல்ல உணவாதிகள் கொடுத்துத் தாம் உப்பில்லாக்கூழுண்டு வெளி வந்தபோது வித்வான் நீர் நல்லுணவு உண்டீரெனக் கேட்க வயிற்றைப் பீறிக் கூழைக் காட்டியவர்.