ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
பெகுமதம் | இந்தத் தேசத்தவர்களுக்கு ஐந்து தேவதைகளுண்டு. இவர்கள் ஐவரும் லோகத்தைக் காத்துக்கொண்டு வருவர். இந்த ஐவர்களில் நான்காவதுதேவன் பிறந்து தற்காலம் 2225 வருஷங்களுக்கு முன் இறந்துபோயினன். ஐந்தாம் தேவன் சீக்கிரத்தில் மோக்ஷ மடைவன், பிறகு உலகமெல்லாம் அக்னியால் தகிக்கப்படும். பின்னும் சுபகாரியங்களுக்குத் தேவன் கர்த்தா. கெட்ட காரியங்களுக்குப் பிசாசு கர்த்தா, இவர்களுடைய தேவாலயங்களுக்கு விர்லான் என்று பெயர். ஒவ்வொரு கோயிலிலும் 120,000 விக்கிரகங்களிருக்கின்றன. வியாதிப் போக்கு நிமித்தம் தேவப் பிரார்த்தனை செய்வர். இவர்கள் பூஜைக்குச் சோமவாரம் முக்கியம், பிசாசு வசிக்கிறதற்குத் தங்கள் வீட்டை வருஷத் தில் மூன்று மாதம் மூடிவைப்பர். |
பெகூதன் | தன்னாச்சிரம தர்மம் விடாத சன்னியாசி, |
பெச்சமா தேவியார் | சிவமூர்த்தியை தாயிலி, தாயிருக்கின் பாம்பணிதல் விஷ முண்ணல் முதலிய சகியாள் எனத் துக்கித்து வருந்துகையில் சிவமூர்த்தி அம்மைக்கெதிர் ஒரு பசுங்குழந்தையாய் விளையாடப் பெச்சமாதேவியார் எடுத்து வளர்த்து வருகையில் ஒரு நாள் குழந்தை மிகவும் அழுதல்கண்டு குழந்தை இனிப் பிழைப்பதில்லை யென எண்ணிக் குழந்தைக்கு முன் உயிர்விடத் துணிந்து சுரிகைகொண்டு தம் ஊட்டியரிய எண்ணுகையில் சிவமூர்த்தி தரிசனந் தந்து உனது அன்பை வெளியிட இவ்வகை புரிந்தோம். உனக்கு வேண்டியதைக் கேள் என அம்மை உமது திருமேனி சுகத்துடன் இருக்க வரம் வேண்டுமென அவ்வகை அருளி அம்மவ்வையெனப் பெயரிட்டு அந்தர்த்தான மாயினார். |
பெட்டனாகனார் | இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் 3, 4 ஆம் பாடல்களுக்கு இசைவகுத்தவர். (பரிபாடல்). |
பெட்டி | இது மரத்தாலும் இரும்பாலும் அடியாழ்ந்து நான்கு பக்கங் களையும் உள்ளறைகளையும் உடையனவாகச் செய்யப்பட்டது. இது பூண்கொள் பெட்டி, நிலைப் பெட்டி, பாணி, பேழை. |
பெட்ராகுலஸ்ப்ளூரிஸிங்கஸ் | கொம்பு மூக்குப் பறவை. இது தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டுக் காட்டிலுள்ளவை. இது பெருங்காக்கைப் போலுருவுள்ளது. இதன் முதுகு சாம்பல் நிறம், தலை, கழுத்து, மார்பும் கருப்பு. இதன் உடல் (20) அங்குல நீளம், மூக்கு (5) அங்குலநீளம், சிவந்த மஞ்சள் நிறம், இதில் ஆணிற்கு மேல் மூக்கின் இருபுறத்திலும் கருங்கோடொன்று அடியிலிருந்து முனை வரையிலும் உண்டு. இக்கோடு பெண் பறவைக்கில்லை. இப்பறவைக்கு நீண்ட நாவுண்டு, இதன் மூக்கு வாளின் பற்கள் போன்றது. இதன் மார்பின் பக்கம் வெள்ளை நிறமான பட்டைகளடுக்கா யிருக்கின்றன. பெண் பறவைக்கு காதைச்சுற்றி வெள்ளைக்கோடுண்டு. இது பூச்சி புழுக்களைத் தின்னும், |
பெண்களுக்குரிய ஆடைவகைகள் | பட்டாலும், பருத்தியாலும் நெய்யப்பட்டுச் சரிகை கலந்த புடவைகள், தாவணிகள், ரவிக்கைகள், பாவாடைகள், உள்ளாடைகள், அங்கி போன்ற ரவிக்கைகள் முதலிய. |
பெண்களுக்குரியபருவம் | பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் முறையே இவற்றி னாண்டாவன, 7,11,13,19,25,31,40. |
பெண்கள் விளையாட்டு | அம்மானை, கந்துகம், ஊசல், உலக்கைப் பாட்டு, |
பெண்கொலைகள் | தாடகைவதை: இராமன் செயல், புலோமசை வதை: விஷ்ணு செயல். சூர்ப்பநகை பங்கம்: இராமன் செயல், பூதனைவதை: கண்ணன் செயல். அங்காரதாரைவதை: அநுமன் செயல், (இரா~பாகவ) |
பெண்ணாசையால் கெட்டவர்கள் | இந்திரன், சந்திரன், இராவணன், நகுஷன், விச்வாமித்ரன், தண்டகன். (சுக்ரநீதி.) |
பெண்ணிலக்கணம் | பெண்கள், பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நால்வகையர். இவர்களுள் பத்மினி செண்பக மலர்போன்ற சிவந்த மேனியும், பொய்பேசாமையும், நன்மணம் தங்கிய சரீரமும், மருண்ட பார்வையுடைமையும், உடையாள் மற்றும் அவ்வகையே மற்றப் பெண்களும் ஒருவருக் கொருவர் தாழ்ந்தவர் ஆவார். அவர்களில் உயர்ந்தவள் பதுமினி சாதிப்பெண். அவ்வகைப் பெண்ளுக்கும் மற்ற ஜாதிப் பெண்களுக்கும் பொதுவில் அங்கலக்ஷணங்களைக் கூறுகின்றேன் மிக நீண்டு குறுகாதவளாய்ப் பிளவுபடாத கடையிணைகளை யுடையவளாய்த் தழைத்து, மேகம் போலவும் வண்டு போலவும் கறுத்துக் கடை குழைந்து இயற்கை மணம் பெற்று நெருங்கி தெறித்து நெய்த்து இருண்ட கூந்தலையுடையாள் தன்னாயகனுக்கு மிக்க செல்வ முண்டாக்குபவள் ஆவள். யானை மத்தகம் போலத் திரண்டுயர்ந்த தலையினையுடைளா யிருப்பின் அவள் புருஷன் தீர்க்காயுள் பெற்று அரசனோடு ஒத்த செல்வமுள்ளவன் ஆவன். எட்டாம்பிறைச் சந்திரன் போல் மயிரும் நரம்பு மில்லாமல் தசை பெற்று மூன்று விரல் அளவு அகன்று விளங்கும் நெற்றியையுடையாள் செல்வத்துடன் ஆரோக்கியத்தை யுண்டாக்கு வள், கண்ணின் கடைசிவந்து பசும் பால்போல் வெளுத்து நடுவிழி கறுத்து இமை கருமையாய் இருப்பின் நன்மையடைவள். புருவம் வந்த வில்போல் தம்மிலிரண்டும் ஒத்து இருப்பின் நன்மை பெறுவள். மூக்கு இருதொளையும் உருண்டு எட்பூவைப்போலிருப்பின் நலம் அடைவள். பின்னும் காதுகள் வெள்ளைக் கொடிபோல் நீண்டும் தாழ்ந்தும் நல்ல சுழிகளையுடையனவாயும், முன் தள்ளியும், கபோலம் வட்டமாய், தசையுடையதாய் உயர்ந்து கண்ணாடி மண்டலம் போல் தெளிவான ஊற்றமுடைய தாயும், இதழ் கொவ்வைக்கனி போல் திரண்டு இருபக்கமும் குவிந்து சிவந்தரேகை யொழுங்காகவும், பற்கள் வெளுத்தும், முப்பத்திரண்டிற்குக் குறையாமலும், மிகாமலும் இடைவெளி பெறாமலும் இருக்கிறவள் சகலசுகத்தையும் அடைவள், மெல்லிதாய்ச் சிவந்து கோமளமாயும் உள்ள நாபியினையடையவள் தான் இச்சித்த பொருள்களை நுகருவள். தசைபெற்று வட்டமாய் இரண்டங்குல அளவினையுடையதாகி அழகாகிய மோவாய் உடையவள் எல்லா நன்மையும் அடைவள். பின்னும் முகம் அகவிதழையுடைய செந்தாமரைபோலவும், சந்திரனைப்போலவும், கழுத்துச் சங்குபோன்று தசைபெற்று நான்குவிரல் அளவினதாய்த் திரண்டு மூன்று ரேகை வரையுண்டாயிருந்தால் அவள் கணவன் அரசனோடு ஒத்தவனாம். மார்பு தடைபெற்றுப் பதினெட்டு விரல் அளவு அகன்று, மயிர், நரம்பு முதலிய தோன்றாமல் மிதந்து இருப்பவள் சிறப்பை அடைவள். தோள்கள் மூங்கில்களை யொப்பத் திரண்டு தசையுடைத்தாய் மயிர் அகன்று எலும்பு தோன்றாமலும், கைகள் நீண்டும், உருண்டும், விரல்கள் கணுக்கள் பெற்றுச் சிறுத்தும், நகங்கள் சிவந்தும் உருண்டும், சரசரப்பின்றியும், உள்ளங்கை மிருதுவாகிச் சிவந்தும், இடைவெளி யகன்று நடுவிரல் உயர்ந்து மங்கலமாகி நல்ல இலக்கணவரைகளைப் பெற்றிருப்பவள் எல்லா நன்மையும் பெறுவள். தனங்கள், கடினமாய்த் தசையுடையதாய் வட்டமாய், தாமரை யரும்பை யொத்து இரண்டும் ஒத்து, இறுமாந்து ஈர்க்கிடை நுழையா வகை நெருங்கியும், வயிறு வட்டமுடைய தாய் உரோமவரிசையுடன் கூடிப் பக்கங்க ளில் மயிர் நரம்பின்றியும், நாபிவலஞ் சுழி பெற்று, ஆழ்ந்திருப்பவள் அழியாச் செல்வமுடையளாம். நிதம்பம் இடையில் மயிர் நரம்பு அற்று இருபத்து நான்குவிரல் அளவாய்ச் சிறுத்து மெலிவதாய் மத்தகம் ஆமையின் முதுகு இரண்டும் நேர் ஒத்தும், தொடைகள், மயிர் எலும்பு தோன்றாமல் யானைத் துதிக்கையையும், வாழைத்தண்டையும் ஒத்தும், முழங்கால் எலும்பு தோன் ராமல் வட்டமாய், தசையைப் பெற்றும், கணைக்கால் மயிர் நரம்பு தோன்றது, இரண்டும் சமமாக உருண்டு சிறுத்தும், புறவடி நரம்பு, எலும்பு, தசைபெற்றும், ஆமைமுதுகுபோல் திரண்டு உயர்ந்தும், கால்விரல்கள் சுத்தமாய் உயர்ந்து செங்கழு நீரினிதழ்போல் ஒழுங்காய்த் திரண்டும், அவற்றினகங்கள் சந்திரன் பிளவுபோல் மிருதுவாகித் தசைந்தும், உள்ளங்கால் தசைப்பிடிப்பாய் மிருதுவாய்ச் சமமாயும், மேனி பொற்சாயலாய் வியர்வு இல்லாமல் அழகாயும், தேகமணம் பாதிரி, குவளை, தாமரை, மல்லிகை, சண்பகம், போலவும், சொற்கள், கிளி, குயில், யாழ் முதலிய ஓசைபோலவும் இருப்பவள் சகலபாக்யமும் பெற்று இந்திராணிபோல் சுகம் அடைவள். |
பெண்ணை | சிவமூர்த்தியின் பினாகத்தின் வழி வந்தபடியால் பினாகினி யென்று பெயர் பெற்றது. இது பாலாறு, செய்யாறு இரண்டிற்கும் நடுவில் இருப்பதால் பெண்ணெயாறு எனப் பெயர் பெற்றது. இதனை ஒளவை தெய்வீக மகாராசன் கல்யாணத்திற்கு வருவித்தனள் என்பர். இது சிவமூர்த்தி நந்திமா தேவர்க்குப் பட்டாபிஷேகஞ் செய்தநீர் வழியுண்டான தாதலின் இப்பெயர் பெற்றதென்பர். |
பெண்பாற்கிளவி | சங்கவளை சோரவும் எம்மை நினையாது வெள் வளையினைக் கொண்டகள்வனைக் காணாது இப்பதியென்று சொல்லியது. (பு~வெ பெருந்திணை.) |
பெண்வகை | (4) பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி. |
பெந்துமான் | சூ. கேவலன் குமரன். |
பெனின் அண்டராமதம் | இத்தேசத்தவர் துஷ்ட தேவதைகளை ஆராதித்துக்கொண்டு அத்தேவதைக்கு நரபலி முதலிய பலி செலுத்துவர், ஆயினும் சிருட்டிகர்த்தாவான தேவன் ஒருவன் உளன் என்றும் அவன் பலவிதத்திலும் சத்கார்யஞ் செய்பவன் ஆதலால் அவன் கெடுதி செய்யா னாதல் பற்றி அவனை வணங்கார். துஷ் சார்யஞ் செய்யும் தேவதையை மாத்திரம் வணங்குவர். பாவநிவாரணத்தின் பொருட்டுப் பிரார்த்தனை செய்வர். இச்சாதியர்களில் பெண்களும் பிள்ளைகளும் தேவர்களை ஆராதித்தல் இல்லை. யுத்தத்தில் இறந்தவர் மோக்ஷமடைவர் என்பது இவர்கள் சித்தாந்தமாதலால் பிரேதங்களின் கைகளைப் பின்புறங்கட்டி நிற்கச் செய்து ஆயுதங்களாலும் பாணங்களாலும் அலங்கரித்துப் புதைப்பர். இராஜாக்களும் தனவான்களும் செத்தால் அவர்க்குப் பணி விடைசெய்தற் பொருட்டு அவருடன் நாலைந்து பெயரைச் சேர்த்துச் சமாதி செய்வர். |
பெப்புரு | ஒரு இருடி, சுநகர் மாணாக்கர். |
பெயரெச்சம் | செயலையுங் காலத்தையும் தோன்றுவித்துப் பாலுடன் செய்பவன் முதலிய அறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது. |
பெயர் | இடுகுறியும், காரணமும், மரபும், ஆக்கமும் தொடர்ந்து வினையாலணையும் பெயரொன்றுங் காலங்காட்ட அல்லவை காலங்காட்டாவாய் எட்டு வேற்றுமையுஞ் சார்தற்கிடமாய் திணை பாலிடங்களில் ஒன்றினை யேற்பனவும் பலவற்றினை யேற்பவுமாய் வருவன. அப்பெயர், பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர், சுட்டுப் பெயர், வினாப் பெயர், முதற்பெயர் முறைப் பெயர், தன்மைப் பெயர், முன்னிலைப் பெயர், எண்ணுப்பெயர் எனப் பல, |
பெயர்ச்சொல் | பொருளின் பெயரைக் காட்டுவது. அது, இடுகுறிப் பெயர், காரணப்பெயர், காரண இடுகுறிப் பெயர், பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், முதலியன அடியாகப் பிறந்த பெயர்கள், முதற்பெயர், சினைப்பெயர், சினை முதற்பெயர், தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், சுட்டுப்பெயர், வினாப் பெயர், எண்ணுப் பெயர், ஆகுபெயர், எனப் பலவகைப்படும். |
பெரிகசு | சூ. பிராகத்துவாசன் குமரன் |
பெரிகிஷ்மதி | 1, பிரியவிரதன் பாரி, விஸ்வகர்மன் பெண். 2. சுவாயம்பு மனுவின் பட்டணம், |
பெரிசாத்தன் | கடைச்சங்க மருவிய தமிழ்ப்புலவன், |
பெரிய தம்பிரான் | தக்ஷ யாகம் அழிந்த பின் தேவர்கள் ஒன்றுகூடி யாகத்தால் ஏற்பட்ட தேவதைக்கு இட்ட பெயர், இத்தேவரை வணங்குவோர் பெரிய யாக காரியம் போல் பலவித பண்டங்கள் சேகரித்து இத்தேவதையைப் பூசிப்பர். |
பெரியஜீயர் | மணவாள மாமுனிகளுக்கு ஒரு பெயர். |
பெரியதிருமலை நம்பி | ஆளவந்தார் திருவடி சம்பந்தி. கிடாம்பியாச் சான் அத்தை புருஷன். இவர் தம்பிதாவான தெய்வத்துக்கரசு நம்பிகளுடனும் இரண்டு தங்கை மார்களுடனும் திருமலை சென்று தமது இரண்டு புதல்வியர்களாகிய காந்திமதி,த்யுதிமதி யெனும் இருவர்களையும் ஆசூரி கேசவப் பெருமாள் வட்டமணிக்குலத்தவரான கமலநயன பட்டர், இவர்களுக்கு விவாகஞ்செய்து கொடுத்து அத்வைதி யாயிருந்த கோவிந்த பட்டரை மீண்டும் ஸ்ரீவைஷ்ணவராக்கித் திரு மலையில் இருந்து கைங்கர்யஞ்செய்து திருநாட்டிற்கு எழுந்தருளினர். இவர் குமாரர் பிள்ளான். இவர்க்கு வட்டமணி கோவிந்த பட்டர் எனவும் பெயர். இவர் ஆளவந்தாரிடம் காலக்ஷேபஞ் சேவித்துக் கொண்டிருக் கையில் ஆளவந்தார் திருவேங்கடத் தெந்தைக்கு நித்யம் ஒருகுடந் தீர்த்த கைங்கர்யம் செய்வார் இத்திரளில் உண்டோ ? என்ன இவர் எழுந்து அவ்வாறு செய்வதாகக் கட்டளை பெற்றுச் சென்று கைங்கர்யம் செய்து வருகையில் ஒருநாள் இரண்டு கோசு தூரத்திலுள்ள பாபவிநாசனியில் தீர்த்தங்கொண்டு திரும்புகையில் திரு வேங்கடமுடையான் ஒரு வில்லிபோல் தனுர்ப்பாணியாய் இவர்க்கு முன் உலாவிக் கொண்டு விந்தைகள் செய்யா நிற்க நம்பிகள் கண்டு ஒருவில்லிக்கு இவ்வரிய அங்க லக்ஷணமுண்டோ வென்று அவன் திரு பயனியைப் பார்த்துக் கொண்டே சமீபத்தில் வருகையில் வேடுவன் எதிரில் வந்து தாதா என்று அழைத்து எனக்கு மிகத் தாகமாயிருக்கிறது ஒரு சேரங்கை தீர்த்தம் கொடுக்க வேண்டுமென்று இரந்து கேட்க நம்பி ஆசார்ய நியமனமில்லை யென்று போய்க்கொண்டிருக்க வில்லி பின்சென்று அவர் அறியாமல் குடத்தைத் தொளையிட்டு அதின் வழியொழிகிய நீரை யுண்டுவிடத் தீர்த்தக்குடம் பளுக்குறையக்கண்ட நம்பிகள் இவ்வாறு திருமஞ்ன விக்னகாரி நீயன்றி வேறொருவரைக் கண்ட தில்லையென்று திருவேங்கடத்தப்பனை நோக்கி நான் மீண்டும் தீர்த்தங்கொண்டு திரும்புவதற்குள் அப்பனுக்குத் திருமஞ்சன காலம் தவறுமென்று திரும்புகையில் வில்லி அவரை மடக்கிச் சிரித்துக் கொண்டே தாதா நீர் தினமும் அரைக்காத வழிபோய்த் திரும்பும் சிரமத்தை யொழிக்கவன்றே இவ்வாறு செய்தேன் என்று கையிலிருந்த வில்லில் அம்பைப் பூட்டி அருகிருந்த மலைக்கூம்பின் உச்சியை நோக்கி யெய்ய அவ்வம்பு அம்மலையைத் தொளைக்க அவ்வழி ஒரு பெரும் பிரவாக முண்டாயிற்று, இவ்வற்புதச் செயல்கண்ட நம்பி திருவேங் கடத்தப்ப னென்று துணுக்குற்று நிற்க வேடன் தன்னுருக்காந்து உண்மையுருக் காட்டி இதுவே நமக்குவப்பென்று மறைந்தனர். இவருக்கு அன்று தொட்டுத் தாததேசிகர் என்றும் தாதாசார்ய ரென்றும் பெயர் உண்டாயிற்று. தீர்த்தத்திற்கு ஆகாச கங்கையென்று பெயர். |
பெரியநம்பி | குமுதாக்ஷசம்சரான இவர் கலி (4038)க்கு மேல் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் புதன்கிழமை திருவரங்கத்தில் அவதரித்தவர். திருக்கோட்டியூர் நம்பிக்குப்பின் வந்தவர். ஆளவந்தார் திருவடி சம்பந்தி. பெருமாள் நியமனத்தால் இளையாழ்வாரைக் காண வருகையில் மதுராந்தகத்தில் இளையாழ்வாரைக்கண்டு பஞ்ச சமஸ் காரஞ்செய்து சிலநாள் அவருடனிருந்து திருநாட்டுக்கு எழுந்தருளினவர். |
பெரியபிராட்டி | 1. திருமாலின் தேவி. 2, தெய்வத்துக்கரசுநம்பிகளின் பெண். |
பெரியபுராணம் | இது சிவனடியவர். மகாத்மியஞ்சொன்ன நூல். இதனை இரண்டு காண்டம் பத்துச்சருக்கம் கொண்ட விருத்தச் செய்யுட் களால் சேக்கிழார் சுவாமிகள் விரித்தருளிச் செய்தனர். இது ஸ்ரீசுந்தர மூர்த்தி சவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டத் தொகையை முதனூ லாகவும் நம்பியாண்டார் நம்பி அருளிச்செய்த திரு அந்தாதியை வழி நூலாகவும் கொண்டது. |
பெரியமூக்குப்பறவை | இது, அமெரிகாவில் பூமத்யரேகையை யடுத்த காடுகளிலிருக்கிற காக்கையினம். இதை டோகோ (Doco) என்பர். இதன் தலையும், முதுகும் கருஞ்சாம்பல் நிறம், கழுத்தும் மார்பும் வாயினடியும் வெண்சாம்பல் நிறம், இதன் கண்களைச் சுற்றி வெண்மை, மூக்கு அதிகம் பருத்து நீண்டது. இதன் மூக்கினுள் உணர்ச்சிக்கமைந்த ஜவ்விருக்கிறது. இது பறக்கையில் கழுத்தை நிமிர்த்தி மூக்கை நேரில் நீட்டிக் கொண்டு பறக்கிறது. இது தூங்குகையில் மூக்கை இறக்கையில் மறைத்துப் பந்துபோலுடலைச் சுருட்டிக்கொண்டுறங்கும். இது மாப் பறவையினமாதலால் நகங்கள் கூர்மை, எலி ஒணான் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும், |
பெரியவாச்சான் பிள்ளை | இவர் சநநம், கலி (4329) சர்வசித்து ஆவணிமீ ரோகணி நக்ஷத்திரம், நம்பிள்ளையின் திருவடி சம்பந்தி, இவருக்கு ஸ்ரீகிருஷ்ண பாதர் எனவும் பெயர். இவர் காலத்து வேதாந்த தேசிகர் தாம் கண்ட கனாநிலை யுரைத்து இவரை வழிபட்டு இவர் சொற்படி நடந்தனர் எனத் தென்னாசாரிய சாம்பிரதாயத்தார் கூறுவர். இவர் செய்த நூல்கள் தனிசுலோகி, பரந்தபடி, திரிமத சித்தாந்த சார சங்கிரகம். கலியனருளப்பாடு திவ்யப்ரபந்த வியாக்யானம், |
பெரியாண்டவன் | தக்ஷயாகம் அதமானபின் சிவா நுக்ரகத்தாலெழுந்த தக்கன் யான் செய்த யாகம் பயனடைய அநுக்ரகிக்க வேண்ட சிவபிரான் யாக முதல்வராயிருந்தமையால் பெரியாண்டவன் எனப்பட்டனர். சிலர் இந்தயாக அறிகுறியாக அங்காளம் மைவேடம் பூண்டு பூசையிடுவர். (உ~வ) |
பெரியாண்டான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.) |
பெரியான் | இவன் திருத்தினை நகரிலிருந்த பள்ளர் சிரேட்டர் சிவபக்தி யுள்ளவர் இவர் ஒருநாள் தம் கழனியை உழுதுகொண்டிருக்கையில் சிவ பிரான் ஒரு சங்கமர் உருக்கொண்டிவரிடம் வந்து அன்னம் கேட்டனர். பள்ளர் வீடு சென்றன்னம்கொண்டு வருகிறேனென்று கூறிப்போய் அன்னம் கொண்டு மனைவியாரும் தாமும் வருவதன் முன்னம் சிவ பெருமான் பள்ளர் உழுதிருந்த கழனியில் தினை விளைந்து முதிர்ந்தி ருக்கச்செய்து மறைந்தனர். பள்ளர் மனைவியாரும் தாமும் வந்து கண்டு வியப்புற்றுச் சிவபெருமானைத் துதிக்கையில் சிவபெருமான் இடபாரூட ராய்க் காட்சி தந்து பள்ள தம்பதிகளுக்கு முத்தி தந்தருளினர். திருத்தினை நகர்ப் புராணம். |
பெரியாழ்வார் | ஸ்ரீகருடாம்சரான இவர் கலியுகம் (47) வதான குரோதன ஆனிய சுகல ஏகாதசி பானுவாசம்கூடின சுவாதி நக்ஷத்திரத் தில் ஸ்ரீவில்லிபுத்துரில் ஒரு புரச்சூட வைணவருக்குப் புத்திரராய் அவதரித்து ஓதியுணர்ந்து நந்தவனம் வைத்துப் பெருமாளுக்குத் திருமாலை தொடுத்துச் சாத்திங் கைங்கர்யம் செய்து வருகையில் வல்லபதேவன் பொற்கிழி கட்ட அதையறுத்து விசிட்டாத்வைதம் ஸ்தாபித்துப் பட்டர்பிரான், விஷ்ணுசித்தர் எனத் திருநாமம்பெற்று அரசன் வழிவிட வில்லிபுத்தூர் எழுந்தருளித் துளசி வனத்தில் ஆண்டாளைக் குழந்தையுருவாகக்கண்டு எடுத்துக் கோதையெனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவ்வகையிருக்கத் தாம் பெருமாளுக்குக் கட்டிய மாலைகளைக் கோதை தாம் சூடிக்கொடுக்க மனங்கொள்ளா ராய் வேறு மாலை தொடுத்துப் பெருமாளுக்குச் சாத்தச் செல்லப் பெருமாள் கோதை சூடிக் கொடுத்தது சுத்தமெனக் கேட்டுப் பெருமாள் நியமனத்தால் கோதையை அழகிய மணவாளருக்குத் திருமணஞ் செய்வித்து (85) திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்து அழகர் கோயிலில் திருநாட்டுக்கு எழுந்தருளினர். இவர் அருளிச்செய்த நூல் பெரியாழ்வார் திருமொழி. (குருபரம்பரை.) |
பெரியோரியல்பு | 7. அறம், பொருள், இன்பம், அன்பு, புகழ், மதிப்பு, பொறுமை. |
பெரிஹிணாசுவன் | நிகும்பன் குமரன். |
பெருங்கண்ணனார் | மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ண னாரெனவும் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனா ரெனவும் இரு வருளர். அவரின் இவர் வேறென்பது தெரிய அடைமொழி கொடாது கூறப்பட்டார். இவர் பாலையையும் நெய்தலையும் புனைந்து பாடி யுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 137ம் பாடலொன்றும் குறுந்தொகையி லிரண்டுமாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருங்கதை | ஒரு தமிழ் நூல். இது பிருசத்கதையின் மொழிபெயர்ப்பு, வத்சதேசத்தாசனாகிய உதயணன் சரித்திரத்தைக் கூறும். இது சொன் னோக்கம், பொருணோக்கமுற்றது; அகவற் பாக்களாலாகியது. இது 1 வது உஞ்சைக்காண்டம், 2 வது இலாவாண காண்டம், 3. வது மகத காண்டம், 4 வது வத்தவ காண்டம், 5 வது நாவாண காண்டம் முதலிய வாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. |
பெருங்கருணை | ஓரூர், பெருங்கிராமமாக இருக்கலாமென்று நினைக் கின்றனர். இதில் ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுதியாக உளர். (திருவிளை.) |
பெருங்காஞ்சி | 1. எதிர்வரும் படையினைத் தடுக்கும் வலியினையுடைய கொடுவினையாளர் தத்தம் வலியை மிக்க பெருஞ்சேனையிடத்துத் தோற்று வித்தது. (பு. வெ.) 2. வரையுயர்ந்த பெரியகுவலயத்து நிலைநில்லா நெறியைச் சொல்லியது. (பு. வெ. பொதுவியல்.) |
பெருங்காப்பியம் | வாழ்த்து, வணக்கம், இவைகளில் ஒன்றை முன்னு டைத்தாய், அறம் பொருளின்பும் வீடென்று கூறும் நடை நெறித்தாய், தன்னிகரில்லாதானை நாயகனாகக் கொண்டதாய், மலை, கடல், நாடு, நகரம், இருது, இரவி, மதி ஆகிய வருணனைகளைப் பெற்று, திருமணம், முடிகவிப்பு, பொழிலாட்டு, நீராட்டு, புதல்வர்ப்பேறு, புலத்தல்,களித்தல், மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி, சந்தி முதலிய தந்திரங்கொண்டு சருக்கம், இலம்பகம் பரிச்சேதமெனும் பிரிவினதாய், சுவை, பாவம் கூடியதாய்ப் புலவனால் பாடப்படுவது. (தண்டி.) |
பெருங்காயம் | 1. இஃது ஒருவித மரத்தின் வேரிலிருந்து சித்தஞ் செய்யப்பட்ட பால், இது ஜலத்தில் கரைவதில்லை. ஆனால், சாராயத் தில் கரையும். இது பர்மா, துர்க்கி, ஆப்கனிஸ்தானம் முதலிய இடங் களிலுண்டாகிறது. இதனை இந்துக்கள் விசேஷமாக மருந்துகளுக்கும் போஜனாதிகளுக்கும் உபயோகிக் கின்றனர். 2. இந்தியாவின் வட மேற்குப்பாகம் முதலிய இடங்களில் உண்டாம் சரக்கு. இஃது, ஒருவித மரத்தின் பால். இது மருந்திற்கியைந்தது, வெள்ளுள்ளி வாசனை யுள்ளது. சிறப்பானது இதனை வாசனை போகாது பாய் முதலியவைகளில் சிப்பம் சிப்பமாகக் கட்டி வர்த்தகர் பல நாடுகளுக்கனுப்புவர். இது நிறத்தில் செம்மை கலந்த கறுப்பு. |
பெருங்கிராமம் | சோமசுந்தரக் கடவுள் விருத்த குமார பாலராகிய ருளும்படி பத்தி புரிந்தொழுகிய மங்கை அவதரித்த ஊர். (திருவிளை.) |
பெருங்கிள்ளி | பெருநற்கிள்ளிக்கு ஒரு பெயர். இவன் கோவலன் காலத்து உறையூர் ஆண்டவன். (சிலப்பதிகாரம்.) |
பெருங்குடியார் | செட்டிகள் பேதம். |
பெருங்குன்றூர்க்கிழார் | 1. குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை மீது பதிற்றுப் பத்தில் (9) பத்தைப் பாடி (32,000) பொன் பெற்ற வேளாளர். வையாலிக் கோப்பெரும் பேகனால்துறக்கப்பட்ட கண்ணகி யென் பவளை அவனுடன் சேர்த்தற்கு அவனைப் பாடியவர். இவராற் பாடப் பட்டோர் மேற்கூறிய இருவருடன் உருவப் பஃறேரிளஞ் சேட்சென்னி முதலியோர். (அகநானூறு) (பதிற்றுப்பத்து). 2. இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாண் மரபினர். இவர் தமிழ் பயின்று பெரும் புலமையுடயவராய் வறுமை மேலீட்டினால் வருந்திக் குடக்கோச்சேரலிரும் பொரைடஞ் சென்று பாடிப் பல நாள்காறும் அவன்பாலிருந்தும் அவன் யாதோ பரிசில் கொடுப்பவன் போலக் காட்டிப் பின்பு கொடானாய் ஏமாற்றிவிட்டனன். புலவர் வருத்தமுற்றுத் தமது வறுமையினிலைமை யும், அதனால் தம் மனைவியும் புதல்வனும் படுந் துன்பமும் விரித்துக் கூறி அவனையும் நீ பொய்ம்மையுடையையெனறு குறிப்பாகப் பல வாறு மொழிந்து இகழ்ந்துவிட்டு வையாவிக் கோப்பெரும் பேகனிடஞ் சென்றார். அங்கு அவன் தன் மனைவி கண்ணகி யென்பாளைக் துறந்தமை யறிந்து அவனைப் பாடி நீ நின் மனைவியை மீட்டுக் கொள்வதே எமக்குப் பரிசில் கொடுத்ததாகுமென்று கூறி, மீண்டு சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியிடஞ் சென்று தம் வறுமை புலப்படக்கூறி அவனால் ஆதரிக்கப்பெற்றிருந்தனர். அங்ஙன மிருக்குநாளில் சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறை இறந்துவிட அவன் தம்பி குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை என்பான் அரசாட்சி கைக் கொண்டனன். அதனையறிந்த நமது புலவர் பெருமான் அவ்வரசனிடஞ் சென்று அவன் விச்சிரக்கோனை வென்றதும், பெருஞ்சோழனையும், பழையன் மாறனையும், போர் தொலைத்ததும் ஆகிய இன்னொன்ன சிறப் பெல்லாம் அமைத்துப் பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடி, அவனால் அளவுகடந்த பரிசில் கொடுக்கப்பெற்று வாழ்ந்திருந்தனர் இவர் பாடிய ஒன்பதாம்பத்தில் “நல்லிசைக் கபிலன் பெற்றவூரினும் பல’ என்று கபிலரைப் பாராட்டிக்கூறியது அறியத்தக்கது. இவர் குறிஞ்சித் திணையைப் பலபடியாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சந்தனமரத்து வேர் தனியே இருத்தலால் மரத்தில் வாசனை அமையாதென்றும், பிற வேர்களோடு கலந்தால் மரம் நறுமணங் கமழுமென்றும் குறிப்பிக்கிறார். இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், அகத்தில் ஒன்றும், புறத்தில் ஐந்தும், பதிற்றுப் பத்தில் பத்துமாக இருபத்தொரு பாடல்கள். கிடைத்திருக்கின்றன. |
பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனூர் | பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய்நன்னனைப் பாடியவர். |
பெருங்குருகு | முதற்சங்கத்தவர் இயற்றிய இசைத் தமிழ் நூல். இறந்தது. |
பெருங்குறிஞ்சி | ஒரு தமிழ் நூல். |
பெருங்கோப்பெண்டு | பூதப்பாண்டியன் தேவியைக் காண்க, |
பெருங்கோழி நாய்கன் மகன் கண்ணனார் | ஒரு தமிழ்ப் புலவர். இவராற் பாடப் பெற்றோன் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி, பெருங் கோழி நாய்கன் ஒருவன், ஒத்த அன்பினாற் காமமுறாத வழிச் சிறப் பின்மை நோக்கித் தாமே காமுற்றுப் பாடல் கூறினவர். இவர்க்குப் பெருங்கோழி நாய்கன் மகன் நக்கண்ணை யார் எனவும் பெயர் கூறுப. (புற~நா). |
பெருங்கௌசிகனார் | 1. இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்க்கு ஒருபெயர். இவர் நன்னன் சேய் நன்னனைப் பாடியவர். 2. இவர் தொண்டைநாட்டு இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌ சிகனார் எனப்படுவார். தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண், மாத்துவேள், நன்னன் சேய், நன்னனை மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) பாடியவர் இவரே. அந்தணர் மரபினர், “ஊரும் பெயரும்” என்ற தொல். பொரு. 430ம் சூத்திரவுரையிற் பெருங்குன்லூர்ப் பெருங்கௌசிகன் அந்தணர்க் குரியன்’ என்று பேராசிரியர் கூறுமாற்றினு மறிக. இவர் மலைபடுகடாத் தில் தீயனன்னவொண் செங்காந்தள் என்று பாடியதனை நன்ன னென்றும் பெயர் தீயோ டடுத்தமையின் ஆனந்தக் குற்றமாய்ப் பாடினாரும், பாட்டுண்டாரும், இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர் குற்றங் கூறினாறோவெனின் அவர் அறியாது கூறினார் என்று நச்சினார்க்கினியர் தம் உரையகத்துக் கூறியுள்ளார். அஃது ஆனந்தக் குற்றமாயினும், அன்றாயினும், பாடினாரும், பாட்டுண்டாரும் ஒரு காலத்து இறந்தனரென்றதனை மறுத்திலாமையின் அங்ஙனமே இப்பெருங் கௌசிகனார் மல படுகடாம்பாடி அரங்கேற்றியவுடன் இறந்தனராதல் வேண்டும். இவர் குறிஞ்சியையும், முல்லையையும், புனைந்து பாடியுள்ளார், வினை முடித்து மீண்டு வந்து தலைவியின் பந்துய்த்து அவளுடனிருந்த தலை மகன் மழையை வாழ்த்துவது இனிய சுவைபயவா நிற்கும். நற்றிணையில் இவர் பாடிய பாட்டு இரண்டு. |
பெருச்சாளி | இது, எலியைப் போன்ற உருவமுடைய தாயினும்; பருத்த வுடலும், குறுகிய காலும், இரவில் நன்றாகப் பார்க்கக்கூடிய கண்களும், முன்னீண்ட மேல்வாய்ப் பற்களும், உரோமமற்ற வாலுமுடையது. இதன் தேசத்திலுள்ள உரோமங்கள் முறடாய்ப் பன்றி மயிர்போலிருக் கும். இது பன்றிச்சாதியைச் சேர்ந்தது. பூமியையும், சுவர்களையும்,கூரிய பற்களாலும் நகங்களாலும் தோண்டும் வலிமையுள்ளது. இது கருநிறம் பெற்றது. இச்சாதியில் வெள்ளையுமுண்டு. அது வெள்ளை நிறமானது. இதைப்போல் குரூரமுடையதன்று. பன்றியைப்போலுறுமும். |
பெருஞ்சாகரன் | அகத்தியர்க்கும் சமுத்திர கன்னிகைக்கும் பிறந்தவன். இவன் திருவாரூர்ப் புலைச்சியைப் புணர்ந்து பகவன் என்பவனைப் பெற்றான். |
பெருஞ்சாத்தனார் | 1. ஒல்லையூர் கிழான் மகன், குடிவாயில் நல்லா தனாராற் பாடப் பெற்றவன். 2. பிடவூர் கிழான்மகன். கடைச்சங்கத்த வருள் ஒருவன், |
பெருஞ்சித்திரனார் | ஒரு தமிழ்ப் புலவர், இவர் கடையெழு வள்ளல்களையும், குமணன், இளவெளிமான் முதலியவரையும் பாடி வறுமை போக்கிக் கொண்டவர். (புறநா.) |
பெருஞ்சீத்தனர் | கடைச்சங்கப் புலவரில் ஒருவர். (திருவள்ளுவமாலை). |
பெருஞ்சோற்று நிலை | பகைவர் வேற்றுபுலத்தைநமக்கு அழித்துத் தருவரிவரென்று சொல்லி மிக்கசோற்றை வீரர்கொள்ளும் வகையிலே கொடுத்தது. (பு~வெ). |
பெருஞ்சோலிரும்பொறை | 1. தகடூர் எறிந்தவன். அரிசில்கிழாரால் தகடூர்யாத்திரை பாடப்பெற்றவன். 2, இவன் செல்வக் கடுங்கோவாழியாதன் குமரன். இவன் அதியமான் தகடூர் மேற்படை கொண்டு சென்று அவ்வூரையும் அதியமானையு மழித்தனன். இப்போர்ச்செயலைப் புகழ்ந்து பாடியது தகநீர்யாத்திரை ஆதலால் இவனுக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையெனப் பெயர். இவனைப் பதிற்றுப்பத்தில் குறுத்தண்ஞாயில், உருத்தெழுவெள்ளம், நிறந்திகழ் பாசிறை, நலம்பெரு திருமணி, தீஞ்சேற் றியாணர், மாசிதறிருக்கை, வென்னாடு துணங்கை, பிழைநோக்கியவர், நிறம்படு குருதி, புண்ணுடை யெறுழ்த்தோள், என எட்டடாம்பத்தில் அரிசில்கிழார் புகழ்ந்தனர். இவர்க்கு (9000) கரணத் துடன் அரசுகட்டிலையுங் கொடுக்கப் புலவர் கட்டிலைகொடுத்துவிட்டு அமைச்சத்தொழில் பூண்டிருந்தனர். இவன் மனைவி அந்துவஞ் செள்ளை. இவன் குமரன் இளஞ்சேர லிரும்பொறை. |
பெருநம்பி | 1. குலச்சிறை நாயனாருக்கு ஒரு பெயர், 2. சாத்தனாரின் வம்சத்தவன். சாத்தனார் முத்தமிழாசிரியர் எனப்படுகிறார். இவர் மணிமேகலையியற்றிய சாத்தனாரா அன்றி அவரின் வேறா என ஊகிக்கப்படுகிறது. இவர் இருந்தவூர் செங்கல்பட்டு ஜில்லாவிலுள்ள பொய்யாமொழிமங்கலம். பொய்யாமொழிப் புலவர் இருந்த உறை யூரும் ஒருகால் இந்தப் பொய்யாமொழி மங்கலத்தினிடையிருத்தல் கூடும். பொய்யாமொழிமங்கலத்தில் கடிகையென ஒரு தமிழ்ச்சங்க மிருந்ததெனத் தெரிகிறது. (திருக்கச்சூர்சாசனம்) இந்தவூர் தமிழாசிரியர்களால் பெயர் பெற்றது. மணிமேகலை யாசிரியர் சாத்தனார் கல்வி பயின்ற இடமிதுவாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள். உறையூர் செங்காட்டுக் கோட்டத்தி லுள்ளது. |
பெருநற்கிள்ளி | உறையூர்ச்சோழன்; கோவலன் காலத்துச் சோணாடு ஆண்டவன், இவனுக்குப் பெருங்கிள்ளி யெனவும் பெயர். |
பெருநாரை | முதற்சங்கத்தவர் இயற்றிய இசைத் தமிழ் நூல். |
பெருந்தலைச் சாத்தனார் | 1 தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காட்டில் இருந்த குமணனைக் கண்டு பாடி அவன் தன் தலை துணித்தற்கு வாள் கொடுப்ப அதனைக் கொணர்ந்து இளங்குமணற்குக் காட்டி அவன் மனத்தின் மாறுபாடு போக்கியவர். இவர் இளங்கண்டீறக்கோவும், இளவிச்சிக்கோவும் உடனிருந்தபோது சென்று, இளவிச்சிக்கோவை மதியாது இளங்கண்டீரக் கோவைத் தழுவி அதற்குக் காரணமும் கூறியவர். காரணம், இளவிச்சிக் கோவின் மரபின் பெண்டிரும் பாடுவார்க்குப் பரிசில் அளித்தல் காரணமாக அவனைப் புல்லினேன் உன் மரபினர் பாடுவார்க்குக் கதவடைத்தல் காரணமாக உன்னைப் புல்லா தொழிந்தேன் என்றவர். (புறம் 164 காண்க.) (அகம்.) 2. இவர் ஆவூர் மூலங்கீழார் மகனார் பெருந்தலைச் சாத்தனா ரெனவும், மூலக் கீழார் மகனார் பெருந்தலைச்சாத்தனாரெனவுங் கூறப் படுவர். வேளாண் மரபினர். எனைய வெளிப்படை. பெரிய தலையை யுடையராதலிற் பெருந்தலைச்சாத்தனா ரரெனப்பட்டார் போலும், இவர் வறுமை மேலீட்டினால் வருந்திக் கொடைவள்ளலாகிய குமணனிடஞ் சென்றனர். அவன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு சென்றன னென்பதறிந்து அவனிருக்கும் காட்டையடைந்து தாம் வறுமையாற் படுந் துன்ப மெல்லாங் கூறினர். அதனைக் கேட்ட குமணன் என் தலை கொணர் தற்கு இவ்வளவு பொருள் கொடுப்பேனென்று தம்பி புலப்படுத்தியுளனாதலின், அவ்வாறே என் தலையைக் கொய்து கொண்டு போய்க் கொடுத்து நின் வறுமையைப் போக்கிக்கொள்ளென்று தன் வாளை அவர் கையிற் கொடுத்தனன். அதனைப்பெற்ற புலவர் உடனே இளங்குமணனிடஞ் சென்று நிகழ்ந்தது கூறி அவனுள்ளத்திருந்த குறையைப் போக்கி நட்பாக்கிவித்தனர். ஒருகால் நள்ளியென்பவனது தம்பி இளங் கண்டீரக்கோவும், விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோவும் ஓரிடத்து இருந்த பொழுது அங்குச் சென்ற இப்புலவர் நள்ளியின் தம்பியை மட்டும் அணைத்து மகிழ்ந்து அளவளாவினர். இளவிச்சிக்கோ என்னைத் தழுவாதது என்னென பெண்கொலை புரிந்தந்த நன்னன் மருகனாத லோடு பாடுவார்க்கு யாதுங் கொடாது கதவை யடைக்கின்றனை யாதலால் தழுவுதற்கு உரியையில்லை யென்றிகழ்ந்து கூறினர். மற்றொரு கால் கோடைமலைத் தலைவனும், பாண்டியன் சேனாபதியுமாகிய கடியநெடு வேட்டுவனிடஞ் சென்று பரிசில் வேண்ட அவன் கொடாது தாழ்ந்தனன். அது கண்டு புலவர் வெறுத்துக் கூறிப் பின்பு அவனால் பரிசளிக்கப் பெற்றனர். பெற்றதனால் பின்பு புகழ்ந்தனர். அப்பால் மூவனென்பானிடஞ் சென்று அவனும் ஈயானாக அவனையும் அங்கனமே கூறி மீண்டனர். இவர் பாலையையும், முல்லையையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்தில் இரண்டும் புறத்தில் ஆறுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருந்தாலி | இடையரிலும் கைக்கோளரிலும் பெரிய தாலியைக் கட்டிக் கொண்டிருக்கும் வகை. |
பெருந்திணை | இட்டவீரக்கழலினையும் மிக்க தலைமையினையு முடையவன் விரும்பாத புல்லுதலை வேட்டுமிக்க இருட்காலத்துப் போம் அவளது தன்மையைச் சொல்லியது. (பு வெ~பாடாண்). |
பெருந்துறை | சுகுண பாண்டியனைக்காண்க. |
பெருந்தேவனார் | 1. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் பாரதத்தை வெண்பாவாகப் பாடியவர். ஆதலின் இவர்க்குப் பாரதம்பாடிய பெருந் தேவனார் எனவும் பெயர். இவர் புறநானூறு முதலிய நூல்களுக்குக் காப்புச் செய்யுள் கூறியிருக்கின்றனர். இவர் தொண்டை நாட்டு வேளாளர் எனத் தொண்டைமண்டல சதகம் கூறும், திருவள்ளுவர் மாலையில் “எப் பொருளும் யாரும்” எனும் வெண்பா இயற்றினர். இவர் உக்கிரப்பெருவழுதி காலத்தவர். (பாரதம்) 2. இவர்க்குக் கவிசாகரப் பெருந்தேவனார் எனப் பெயர். இவரும் கடைச்சங்கத்தவருள் ஒருவர். 3. வீரசோழிய மென்னும் இலக்கணத்திற்கு உரை இயற்றியவர். இவர் சைநர். 4. இவர் “வண்மையாற் கல்வியால் மரபலத்தால் நல்வினையால், உண்மையில் பாராளுமுரிமையால் திண்மையால் தேர் வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றனோ, டியார் வேந்தரென்பாரெதிர் இவர் நந்திபோத்தரையன் காலத்தவரேனத் தாம் பாடிய வெண்பாவினால் தெரிகிறது. ஆதலால் இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யென்பர். 5. பெருந்தேவனாரெனப் பலருளர். இவரின் வேறென்பது தெரிய மற்றையோர் பாரதம் பாடிய பெருந்தேவனாரெனவும், கடுகுபெருந் தேவனாரெனவும் கவிசாகரபெருந்தேவனாரெனவும், அடைமொழி கொடுக்கப் பட்டுள்ளார்கள். அவர்களின் வேறுபடுத்த அடைமொழிகொடாது இவர் பெயர் மாத்திரையாகவே கூறப்பட்டார். கூகையை நோக்கித் தலைவி கூறியதாக இவர் பாடிய செய்யுள் மிக்க சுவையுடையது. இவர் குறிஞ்சி யையும், பாலையையும், புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையிலொன்றும், அகத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருந்தேவனார் பாரதம் | வெண்பாவாகப் பெருந்தேவனாரால் பாடப் பட்ட பாரதக் கதை. |
பெருந்தேவி | திருக்காஞ்சியில் பூபிராட்டியின் திருநாமம். |
பெருந்தோட்குறுஞ்சாத்தன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களுள் ஒருவர். இவர் உருவத்திற் குறுகித் தோள் பருத்திருந்ததனால் இவர்க்கு இப்பெயர் இருத்தல் கூடும். (குறு 308). |
பெருமகள் | கோவலனுக்குத் தாய், கோவலன் இறந்ததை மாடலனாற் செவியுற்று இறந்தவள். இவளுக்குப் பெருமனைக் கிழத்தியெனவும் பேரிற்கிழத்தி யெனவும் பெயர். (சிலப்பதிகாரம்). |
பெருமலை | சேரநாட்டில் உள்ள மலை, (சிலப்பதிகாரம்). |
பெருமாக் கோதையர் | சேரமான் பெருமாணாயனாருக்கு ஒரு பெயர். |
பெருமிழலைக்குறும்பநாயனார் | இவர் பெருமிழலையென்னும் ஊரில் திருவவதரித்துச் சிவபக்தி, அடியவர் பக்தியால் சிறந்து ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளின் தியானமே மோக்ஷசாதன மெனக் கண்டு அவரை அகத்தும் புறத்தும் சிந்தித்திருப்பவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருவஞ்சைக்களத்துச் சிவபெருமான் உத்தர கைலாசத்தை அடையக் கட்டளை யளித்ததை யோகத்தால் உணர்ந்து அவரைப் பிரிந்து வாழேன் என்று அவருக்கு முன் யோகத்தால் பிரமரந்திரம் திறக்கச் சிவபெருமான் திருவடியடைந்தவர். (பெ. புராணம்) |
பெருமூக்கு நாரை | இது ஆபிரிகா கண்டத்தின் இடையில் வெள்ளை நதி பாயுமிடங்களில் வசிக்கிறது. இது உருவில் பெருநாரையினும் பெரிது. சிறகுகளின் மேற்புறம் கருநீலவர்ணம். இதன் மூக்கு நீண்டு பருத்தது. இம்மூக்கின் மேல் பாகம் பருத்தும், அடிப்பாகம் வளைந்து கூர்மையாயு மிருக்கிறது. இது ஆற்றில் தன் மார்பளவு நின்று குறித்த மீனைத் தவறாது கொள்ளும். இவ்வினத்திற்கு இரை அகப்படாவிட்டால் கூட்டமாக நின்று நாற்பக்கம் மீன்களை வளைத்துக் கரையகம் ஒதுக்கி இரைகொள்கிறது. இவை மரங்களில் கூடமைத்துக் குஞ்சு பொரித்து அவற்றிற்கு இரை தந்து வளர்க்கும். (Shoe Bill Crane). |
பெருமையணி | பெரிய ஆதாரத்தினும் ஆதேயத்தைப் பெரிதாகக் கூறுதல், இதனை அதிகாலங்காரம் என்பர். (குவல.) |
பெரும்பதுமனார் | 1. மீளப்பெரும்பதுமனார் என்றொருவருளர். இவ்விரு வரும் பாடியவெல்லாம் பாலைத்திணையே யாதலின், இருவரும் ஒருவரே யென்று கருதற்கிடனாயிற்று. மீளீ ஓரூர். ஸ்ரீவில்லி புத்தூர் தாலுக்காவில் (மல்லி) என்றோரூருளது; மீளி யென்பதே மல்லி யென்று திரிந்து வழங்கு கிறதோ தெரியவில்லை. குறுந்தொகையில் இவர் பாடிய வில்லோன் காலனகழ’ வென்ற பாடலும், புறத்தி லிவர் புலவர்கள் பறவைக் கூட்டமாகவும், செல்வமுடையவர் ஆலமரமாகவும் வைத்துக் கூறிய பாட்டும் எவர்க்கும் இன்பம் பயப்பனவாம். இவர் பாலைத்திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், குறுந்தொகையி லொன்றும், புறத்திலொன்றுமாக நாலு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2 ஒரு தமிழ்ப் புலவர். (புற~நா), |
பெரும்பாக்கன் | இவர் கடைச்சங்கமருவிய புலவரில் ஒருவர். இவர் ஊர் பெரும்பாக்கமென இருக்கலாம். (குறு. 266.) |
பெரும்பாணாறு | தொண்டைமா னிளந்திரயனைக் கடையலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய அசவற்பா. |
பெரும்பெற்ற புலியூர்நம்பி | பாண்டிநாட்டில் வேம்பத்தூர் சோழியர் குலத்தில் கௌணிய கோத்திரத்தில் பிறந்த வேதியர். இவர் ஊர் செல்விநகர். சைவர். இவர்க்குத் தில்லை நம்பியெனவும் ஒரு பெயர். இவர் திருவாலவாயுடையார் திருவிளையாடல் பாடியவர். இவர் வேம்பத்தூர் சங்கத்தவர். (திருவிளையாடல்) |
பெரும்பொருள் விளக்கம் | இது ஒரு தமிழ் நூல். |
பெரும்பொழுது | சித்திரையும் வைகாசியும் இளவேனில், ஆடியும் ஆனியும் முதுவேனில், ஆவணியும் புரட்டாசியும் கார்ப்பருவம், ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர்ப் பருவம், மார்கழியும் தையும் முன் பனிப் பருவம், மாசியும் பங்குனியும் பின்பனிப் பருவம். இவற்றை வடநூலார் முறையே வசந்தருது, கிரீஷ்மருது, வருஷருது, சரத்ருது, ஏமந்தருது, சசிரருது, என்பர் |
பெருவஞ்சி | தன்னுடைய முன்னேவந்து செறியாதார் நல்ல தேசத்தைப் பின்பும் கோபித்து நெருப்பைக் கொளுத்தியது. (புறவெண்பா.) |
பெருவழுதி | இவர் கடலுண்மாய்ந்த இளம் பெருவழுதியெனவும், இளம் பெருவழுதி யெனவுங் கூறப்படுவார். இவர் திருமாலிருஞ்சோலை வாசுதேவனையும், பலதேவனையும், பரவியவாறாகப் பரிபாடலில் புலவரையறிய புகழொடு பொலிந்து” என்னும் பாடலை இயற்றியவர். இப்பாட்டிற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இவர் பாடல் நற்றிணையில் தாய் கேட்பத் தோழி ஏமாற்றியதாகக் கூறும் கூற்றும், வியப்பைத் தருவனவாம், கடலுட் சென்றவிடத்து இதர் தமையின் இவர் கடலுண் மாய்ந்த வழுதியென்று கூறப்பட்டார். குறிஞ்சியையும் பாலையையும் நயந்தரப் பாடியுள்ளார். இவர் பாடியவை நற்றிணையில் இரண்டும், பரிபாடலில் ஒன்றும், புறத்தி லொன்றுமாக நாலு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
பெருவாயினன் | முள்ளியாசிரியர் தந்தை; இவர்க்குப் பெருவாயின் முள்ளியார் எனவும் பெயர். ஆசார்க்கோவை தமிழிவியற்றியவர். இவர் சைவர். |
பெருவியன் மதம் | (Peruvian) இவர்கள் மான் கோகூபர் என்னும் தர்மசாஸ்திரி காலத்தில் சூரியசந்திரர்களைத் தேவதைகளாகப் பூசித் திருந்தனர். சூரியன் சிருஷ்டி கர்த்தா. இவன் இடி மின்னல்களைத் தூதர்களாக நியமித்துக்கொண்டு இருப்பன். துஷ்டர்களைச் சித்துக் கொண்டிருப்பன். ஹான்கான் என்னும் தேவன் சிரஞ்ஜீவி தருபவன். அபஜிதான் என்னும் தேவன் கிருபை செய்பவன். சூரியன் தேவி சந்திரன் என்பர். குருக்கள்மார் தேவாலயங்களில் வசிப்பர். இம் மதத்தவர் ஆடுகளையும் பசுக்களையும் தேவர்களுக்குப் பலியிடுவர். ஒவ்வொரு காலங்களில் நரபலியுமிடுவர். கொஞ்சமாகப் பாபஞ் செய்தவர்கள் தங்கள் விரல்களை யாயினும் காதுகளை யேனும் மற்ற அவயவங்களில் ஏதேனும் ஒன்றை அறுத்து இரத்தத்தை ஒழுகவிடுவர். இவர்களில் சகோதரர் தமக்கைப் பெண்களை விவாகஞ் செய்து கொள்வர். இவர்கள் சித்தாந்தத்தில் மறுஜென்மமில்லை, |
பெற்றான் சாம்பான் | உமாபதி சிவாசாரியரைக் காண்க. |
பெலஸ்தனன் | சூ. பாரியாத்திரன் குமரன். |
பெலி | ரைவதன் என்னும் மனுப்புத்திரன், |
பெலிபகன் | ஒர் சூத்திரன். சுசர்மாவைக் கொன்று இராச்சியத்தைக் கிரகித்தவன். இவன் தமயன் கிருஷ்ணன். |
பெளத்தமதம் | பூர்வகாலத்து ஆரியர்கள் கடவுளின் பேரருளால் இறந்த பின்னும் ஆன்மா சுகத்துடனிருக்கு மென்னும் கொள்கையை உடைய வர்களாயிருந்தார்கள், இக்கொள்கையை மாற்ற இரண்டு மத போதகர் கள் தோன்றினர். அவர்களில் ஒருவர் விதேக நாட்டிலுள்ள வைசலை நகரத்தில் அரசகுலத்தில் பிறந்த ஜைனமத ஸ்தாபகரான வர்த்தமானர் என்னும் மகாவீரரும், கி. பி. ஆறாவது நூற்றாண்டில் பஸ்டி ஜில்லாவில் (U. P.) கபிலவாஸ்து என்னும் பட்டணத்தில் அரசாண்ட சாக்கிய குலத்தவரான பௌத்தமத ஸ்தாபகராகிய சித்தார்த்தரும் பிறந்தார்கள், சித்தார்த்தர் போதித்ததாவது. ”யாவனொருவன் தன்னை அடக்கி ஆளுகிறானோ அவன் துன்பத்தினை ஒழித்து நற்கதி அடைவானென் றும், மனோவாக்குக் காயங்களில் சுத்தமாக விருக்கவேண்டுமென்றும், தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதவேண்டு மென்றும், ஜாதிமத வித்தியாசங்கள் கூடாதென்பதையும் ” முதல் முதல் காசிக்ஷேத்திரத்தை அடுத்த சரனாத் (Saranath) என்னு மூரிலுள்ள டீர்பார்க் (Deer Park) என்னுமிடத்தில் பிரசங்கித்தார். பிறகு 44 வருஷம் பேகார் அயோத்தியா முதலிய இடங்களில் இம்மதக் கொள்கையைப் பரவச் செய்து (80) வது வயதில் கி. பி. 477 இல் நீர்வாணமடைந்தார். புத்தமதம்காண்க. |
பெளமன் | 1. (சந்.) பரதன் குமரன். 2. பூமிபுத்திரன் செவ்வாய். 3. விஸ்வ கர்மனுக்கு ஒரு பெயர் (பா. ஆதி) |
பெளரவர் | பூருவம்சத்தவர். |
பெளரவி | வசுதேவரின் தேவியரில் ஒருத்தி. |
பெளர்ணமாசன் | ஸ்ரீசாதகர்ணன் குமரன். இவன் குமரன் லம்போதகன். |