அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பூ

கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப் பூ என நால்வகைப்படும். கோட்டுப்பூ மாரத்திற் பூப்பன, கொடிப்பூ கொடிகளில் மலர்வன; நீர்ப்பூ தடாகாதிகளில் வளர்வன; நிலப்பூ பூமியிற் படர்ந்து விரிவன; அவை முறையே பாதிரி, மல்லிகை, தாமரை, செவ்வந்தி முதலியவை. இம்மலர்களில் புட்பவிதியிற் கூறிய முறைப்படி காலம் அறிந்து இன்ன தேவர்க்கு இன்னமலர் உரிமையென வறிந்து அம்மலர்களில் சாத்துவிக முதலிய குணங்களுள்ள மலர்களிவையென உணர்ந்து விடியற்காலத்து வண்டு புகுதாமுன் சுத்தனாய் அன்று மலர்ந்த மலரினையெடுத்து தேவதாராசனஞ் செய்க. இம்மலர்களில் கொன்றை, ஆத்தி, கொக்கு மந்தாரை,” தாமரை இவை சிவமூர்த்திக்கு உகந்தன. விநாயகருக்கு வெட்சி. அறுமுகற்குச் கடம்பு. குருந்து, தாமரை, அலரி இலை விஷ்ணுவிற்காம், பார்வதியார்க்கு நீல மலர். சூரியனுக்குத் தாமரை, திருமகட்குச் செந்தாமரை, நெய்தல். சரஸ்வதிக்கு வெண்டாமரை. துஷ்ட தேவதைகட்குச் செம்மலர்களுமாம். மலர்களுள் அரவிந்தம், மாம்பூ, அசோகமலர், முல்லை, நீலம் இவை மன்மதனுக்குரிய பாணங்களாம். செவ்வந்தி சாரமாமுனிவரால் நாகலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இவைகளுள் ஆத்தி சோழனுக்கும், வேம்பு பாண்டியனுக்கும், பனம்பூ சேரனுக்கும் மாலைகளாம். குவளை தருமராஜனுக்கும், நந்தியாவட்டம் துரியோதனனுக்கும், வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை இவை நிரைகவர்வோர் முதலியவர்க்கு மாலைக்குரிய மலர்களாம். முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் இவை, அவை மலரும் நிலத்தின் பெயருமாம். 2. இருவகைத்து போர்ப்பூ, தார்ப்பூ. போர்பபூவாவது போரில் இன்ன வேந்தன் வென்றான் என்பதற்கு ஓறிகுறி வேண்டிச் சூடும்பூ. தார்ப்பூ ஆவது ஓர் விசேடமாக இடுவது முருகக்கடவுளுக்குக் கடம்பினைத் தார்ப்பூவாகவும் காந்தளை அடையாளப்பூவாகவும் கூறுப.

பூகம்பம்

1. பூமியின் அசைவு. இது பூமியினடிப்பாகத்துண்டான கனலின் மிகுதியால் கொதிப்பேறிய பூமியின் மேற்பாகம் பாரத்தால் அசைவது. இது மிகுதியும் எரிமலைகளி னருகிலுண்டாம். 2. ஆதித்திய னின்ற நாளுக்கு ஏழாம் நாள் பூகம்பமாம். இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது (விதான.) 3. விரூபாக்ஷம் காண்க. (இரா பால.)

பூகோளபகோளவிஷயம்

சகல சுருதி ஸ்மிருதி ஹதிகாஸ புராணங் களிலுள்ள பிரமாண வசனங்களாலும் பிரம்மசூரிய வியாசாதி வித்தாந்தவசனங்களாலும் பூரணமாயிருக்கிற புராணமார்க்க தீபிகையிலுள்ள பல விஷயங்களுள் சில சுருக்கிக் காட்டப்படுகின்றன. அப்பிரமாணங்கள், சதுர்த்தசபுவனசப்தத்வீபசப்த சாகரங்கள் இருக்கிறதாகவும் அவற்றுள் ஜம்புத்வீபம் நடுவிலிருக் கிறதாகவும் அதன் நடுவில் மேரு இருக்கிறதாகவும் அதற்குத் தெற்கில் பார தவருஷம், கிம்புருஷவருஷம், ஹரிவருஷம், வடக்கில் ரம்மியகவருஷம், குருவருஷம், ஹ்ரண்மயவருஷம், மேருவைச் சுற்றிலும் இளாவிரு தவருஷம், கிழக்கில் பத்ராஸ்வவருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின் றனவாகவும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பாரதவருஷம் விஷ்ணு புராணத்தில் கூறிய விதம் சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமாலயத்திற்குத் தெற்கிலிருக்கின்ற தாகவும் (9000) யோசனை விஸ்தாரமுள்ளதாயும் சுவர்க்கமோக்ஷங்களை யடைகிறவர்களுக்குப் பிரலிர்த்தி விருத்தி கர்மசாதனமான பூமி இது தான் என்பதாகவும் இது இந்திரத்வீபம், சேறு, தாம்பிரபரணம் கபஸ்திமான், நாகத்வீபம், சௌமியத் வீபம், காந்தர்வத்வீபம், வார்வணத்வீபம், பாரத்வீபம், என்கிற பேர்களையுடைய ஒன்பது கண்டங் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஆயிரம் யோசனை விரிவுடையதா யிருப்பதாகவும், சகரர் தோண்டிய உவர்க்கடலால் பெரும்பாலும் சூழப்பட் டிருக்கிறதாகவும், ஸ்ரீராமாயணம் கிட்கிந்தாகாண்டம் (40) வது சர்க்கத்தில் “அயம் சுதர்ஸனத் வீபி” என்பதில் சமஸ்த பிராணிகளுடைய கண்களும் சூரியாதிதேஜசும், இந்தச் சுதர்ஸன தலீபத்திலேயே பிரயோஜனப்படா நின்றன என்பதாகவும் ஸ்ரீமகாபாரதம் பீஷ்மபர்வத்திலடங்கிய ஜம்புகண்ட பர்வத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் ” சுதர்சனம்பிரவக்ஷியாமி’ என்பதில் ஜனங்களுக்கு நன்றாய்க் கண்ணுக்குக் காணப்படுகையாலும் வர்த்துலா காரமாய்ப் பகவத்சக்ர சதுர்சமாயிருக்கை யாலும் சுதர்சன தேவாதிஷ்டித காலசக்ரா க்ஷத்திலே கோக்கப்பட்டிருத்தலாலும் சுதர்சனமென்ற பேருடைய தாய் விளாம்பழம் போல காலுபக்கமும் மண்டலாகாரமா யருக்கையாலே கோளரூபமா யிருக்கிறதாயும் கூறப்படும். இந்தத்த்வீபத்தைச் சந்திர மண்டலத்திலே போய்ப் பார்த்தால், இதன் சொரூபம் நன்றாய்க் காணப்படும் என்றதாயும் இந்தப் பாதகண்டத்தில் ஒரு பாதியில் முயலின் உருவத்தைப் போன்ற பூமியுடன் சிறிய அரசிலை போன்ற பூமியும், மற்றொருபாதியில் அரசிலை ஆகாரத்தைப் போன்ற பூமியுமிருக்கிறதாகவும், அவை சமஸ்த ஒளஷ திகளாலே சூழப்பட்டிருக் கின்றனவாகவும் இந்தப் பரதவருஷத்தில் முயலின் உருவம் போலவும் அரசிலையின் உருவம் போலவும் காணப்படுகிற பூமிகளை யொழிந்தவிடமெல்லாம் சிறிய பூகண்டங் களோடு கூடி ஜலமயமாக இருக்கின்ற தாகவும் முயலின் உருவத்தின் தலைப்பக்கத்தையும் உடற்பக்கத் தையும் தக்ஷணோத்தர கண்டங் களாகவும், நாக்கஸ்யப தீபங்களிரண்டையும் இரண்டு காதாகவும், தாம்பிர பர்வதத்தைத் தலையாகவும், மலைய பர்வதத்தைக் கழுத் தாகவும் கூறித் தக்ஷண கண்டத்தை விவரித்துக்காட்டி உத்தர கண்ட மெல்லாம் உடற்பக்கமாகச் சொல்லியிருக்கிறதாகவும், இப்பொழுது இந்தப் பரதகண்டத்தில் ஒருபாதியிலிருக்கும் முயலின் உருவத்தைப் போன்ற பூமியுடன் சிறிய அரசிலைபோன்ற பூபாகத்தில் முயலின் காதோடு கூடிய தலைப்பக்கத்தை ஆப்ரிக்கா வென்றும், கழுத்தருகிலி ருக்கும் முன்கால் பிரதேசத்தை யூரப் என்றும், உடற்பக்கத்தை ஏஷ்யா வென்றும், சிறிய அரசிலைபோன்ற பிரதேசத்தை ஆஸ்டிரேலியா வென்றும், மற்றொரு பாதியிலிருக்கும் அரசிலை ஆகாரத்தைப் போன்ற கண்டங்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்காவென்றும், ஊணர்கள் சொல்லுவதாகவும், பாரத வருஷத்தை யொழிந்த வருஷத் வீபங்களி லுள்ளவர்களுடைய சம்பத் தானவை மானுஷ்மா யிருந்தபோதிலும் தேவதைகளுடைய சம்பத்தாகவே இருப்பதாயும் கூறப்பட்டிருக்கிறது. பப்பிரசுரமாயும் ஆகாயப்பிரசுரமாயும் இருக்குங் கோளங்கள் விளாம் பழங்கள் போல ஒன்றின்மேல் ஒன்றாய்க் கணக்கற்றிருக் கின்றனவாயும், மகாபூமிக்கு மேரு இருக்கிறதைப்போல் இந்தப் பார தவருஷத்திற்கும் ஒரு சிறிய மேருவும் நாபிஸ்தானமும் உண்டென்றும், கைலாசாதி பர்வதங்களுடன் கூடிக் குபேரசங்கராதி தேவதைகளுக்கு வாசஸ்தான மாயிருக்கும் மகாஹிமோத் பர்வதம் நமக்குக் காணப்படமாட்டா தென்பதாகவும், காணப்படுகிற இமோத்பர்வதம் மேற்சொன்ன மகா ஹிமோத் வரத்தினுடைய அம்சமாய் அங்குள்ள விசேஷங்களோடே கூடிக் கொண்டிருக் கிற ஹிமவான் முதலிய பேர்களுடைய ஓர் சிறு பர்வதமாகவும், லவண சமுத்திரத்திற்குச் சற்றுத் தூரத் திற்கப்பால் லங்கையும், அதற்கப்பால் பொன் வெள்ளி சிகரங்களோடு கூடிச் சூரியன் தக்ஷணாயனத்தில் சுவர்ணசிருங்கத்திற்குச் சரியாய்ச்சஞ்சரிக்கும்படி ஆகாசத்தை அளாவிப் புஷ்பிதக மென்று ஒரு மலையிருப்பதாகவும், அனந்தரம், குஞ்சரபர்வதம், அகஸ்திய பவனம், போகாவதி, ருஷ்யபர் வதாதி கள் இருக்கின்றனவாகவும் அவை தேவதைகளுக்கன்றி மற்றவர்களுக்குப் புலப்படாவென்றும், இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சொல்லியிருக்கிறது. காலதேசவை பரீத்தியாதிகளால் இப்பொழுது இங்குள்ளகிருகக்ஷேத்திராதிகள் அடிக்கடி பூர்வநாம ரூபங்களை யிழந்து வேறுநாமங்களை அடைவதைப்போலக் கஸ்யப் பிரஜாபதி முதலியவர்களால் பகுக்கப்பட்டிருந்த தேச, நதி, வாவி, கூப, பர்வத, அரண்யாதி பிரதேசங்களும் முன்னொழிந்த பேரொழிந்து புதுப் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. இதை அறியாதார் குற்றங் கூறுவர்.

பூகோளம்

இது, (2) பகுதிகளாக வகுக்கப்பட்டிருக்கிறது. ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும் இருக்கின்றன. கிழக்குப் பாதி யுருண்டை குண கோளார்த்தமெனவும், மேற்குப் பாதியுருண்டை குடகோளார்த்தமெனவும் கூறப்படும். கிழக்குப் பாதியில் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்டிரேலியாவும், மேற்குப் பாதியில் உத்தர தக்ஷிண, அமெரிக்காக்களும் அடங்கியுள்ளன.

பூக்கள்

1. தாமரை, அல்லி, பலவகைக் கொன்றை, குங்குமப்பூ, ஆத்தி, சண்பகம் பாரிஜாதம், மல்லிகை, முல்லை, பாதிரி, மந்தாரம், புன்னை, மகிழ், பன்னீர்ப்பூ, குருக்கத்தி, குருந்து, செந்தாழை, செம்பரத்தை, அலரி, நந்தியா வட்டம், செவ்வந்தி, கழுநீர், பிச்சி, வெட்சி, இவை யன்றிக் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூக்களில் பலவகை உண்டு. இவை விருக்ஷத்திற்கு முதற்காரணமானவை. இவற்றில் ஆண் பூ, பெண் பூக்கள் உண்டு. 2. புஷ்ப வகைகளைக் காண்க.

பூக்கொணிலை

மேகம் பொருந்திய கடல்போல் ஒலிக்குஞ்சேனை, பூசலை ஏற்றுக் கொள்வான் வேண்டி அரசன் கொடுத்த பூவினைக் கொண்டது. (பு. வெ.)

பூங்கணுத்திரையார்

ஒரு செந்தமிழ்ப் புலவர். மகளிர் போலும். (புற~நா) (குறு~தொ).

பூங்கோதை

மதுரையில் இருந்த கல்வி வல்ல ஒரு தாசி, இவள் சீதக்காதியென்னும் காயலானாகிய பிரபுவிற்குக் காமக்கிழத்தியா யினமையால் மனனெர்வர் நீக்கினர். இவள் ஒருமுறை கள்ளரால் பறிக்கப்பட்டுப் பொருள் இழந்து மீண்டும் அப்பிரபுவை நோக்கி யிரக்கமாய்த் ‘தினங்கொடுக்குங் கொடையானே தென்காயம் பதியானே சீதக்காதி யினங்கொ இந்த வுடைமையல்ல தாய்கொடுத்த வடைமை யல்ல வெளியாளாசை, மனங்கொடுத்து மிதழ்கொடுத்து மபிமானந்தனைக் கொடுத்து மருவிரண்டு, தனங்கொடுத்தவுடைமை யெல்லாங் கள்வர்கையிற் பறிகொடுத்துத் தவிக்கின்றேனே” எனப் பாடி மீண்டும் பொருள் பெற்றனள்.

பூசகண்டகன்

விராத்திய வேதியனுக்கு அவ்விதஸ்திரியிடம் பிறந்தவன். இவனுக்கு ஆவந்தியன், வாடதாநன், புஷ்பதன், சைகன், எனப் பலதேசப் பெயர்களுண்டு. (மநு)

பூசந்தி

இரண்டு பெரிய பூபாகங்களை ஒன்று சேர்த்து இரண்டு ஜலபாகங்களைப் பிரிக்கும்; அதற்குப் பூசந்தி என்று பெயர். (பூகோளம்)

பூசன்மயக்கு

1. பூவையொத்து மழை போலக் குளிர்ந்த கண்ணினை யுடைய பிள்ளை இறந்தானாகப் பொருந்திய பெரிய சுற்றத்தினது ஆரவாரத்தினைச் சொல்லியது. (பு. வெ. பொது) 2 அரசன் இறந்தானாக அகன்ற பூமியினுள்ளார் இரங்கினும் ஆராய்ந்த அறிவினையுடையோர் முன்பின்னுறை யென்று சொல்லுவர். (பு. வெ. பொது.)

பூசன்மாற்று

நிரைத்திரட்சி பெருக்கக் கைப்பற்றின கரந்தையார் தம் பிணம் பெருக்க வெட்சியார் கெடுத்தது. (பு. வெ.)

பூசல்நாயனார்

திருநின்ற ஊரில் இருந்த வேதியர். இவர் சிவாலயஞ் சமைக்க ஆயத்தங்கொண்டு பொருள் இல்லாமையால் மனத்தால் சிவாலயம் ஒன்று இயற்றிக் கும்பாபிஷேகத்திற்கு நாள் வைத்தனர். காடவர்கோன் என்னும் அரசன் தான் சிவாலயத்திருப்பணி முடித்துக் கும்பாபிஷேகஞ் செய்வதற்கு நாயனார் வைத்த நாளே வைத்தனன். சிவமூர்த்தி அரசன் கனவில் எழுந்தருளி நான் பூசல் கும்பாபிஷேகத்குப் போகிறேன் நீ மற்றொரு நாள் வைத்துக் கொள்க என்று திருவாய் மலர்ந்து அந்தர்த்தானமாயினார். இதைக் கனவில் உணர்ந்த காடவர் கோன் திருநின்றவூர்வந்து திருக்கோயிலைக் காணாது பூசல்காயனாரின் மகிமைகண்டு பணிந்து சென்றனன், பூசல்நாயனார் சிவப்பிரதிட் டைசெய்து கும்பாபிஷேகம் பூர்த்திசெய்து சிவபதமடைந்தனர். (பெரியபுராணம்)

பூச்சிகளினியல்பு

பூச்சிகள் முட்டையிலிருந்து வெளிவந்து தம்முருவடை வதற்கு முன் பல வேறுபாடுகளை யடைகின்றன. ஒரு பூச்சி ஏறக்குறைய நூறு முட்டைகள் இடுகின்றன. இம் முட்டைகள் முட்டையிலிருந்து வெளிவரும் வரையில் வேண்டிய வுணவு முட்டையில் இருக்கிறது. பெண் பூச்சிகள் முட்டையிடுதற்கு ஊசிபோன்ற ஒரு உறுப்பு அதன் பின்புறத்தில் உண்டு. அதனால் அவை மரங்களைத் தொளைத்து அவற்றுள் முட்டையிடும். சில பூச்சிகளுக்குப் பின் புறத்தில் வாள் போன்ற உறுப்புண்டு; அதனால் தொளை செய்து முட்டையிடும். சில பூச்சிகள், செடிகள், இலை, வேர், பூ, பழம், மாம்சம், அழுகிய பொருள் முதலியவற்றிலும் முட்டையிடும். முட்டையி லிருந்து வருங் குஞ்சு, முதலில் புழுவுருவாக இருக்கிறது. இப்புழு செடிகளி லுள்ள தளிர்களைத் தின்று நன்றாக முதிர்ந்து பருக்கிறது. இவ்வாறு பருப்பதால் தேகம் வெடிக்கிறது. இவ்வாறு, 5 6, முறை தோலுரிந்தபின் கடைசியாக ஒரு சிறு கூடு கட்டியதற்குள் தான் அடைபடுகிறது. இக்கூட்டினில் அது தன்னுருமாறும், மாறினும் அதனை ஒருதோல் மறைத்து இருக்கும். இது பிறகு வெளிவரும்போது இறக்கை முதலியவற்றோடு வரும். இது வந்தவுடன் தான் முட்டையிடத் தொடங்கும். முட்டையிட்டவுடன் இறந்து போகிறது.

பூச்சியபாதசுவாமி

வைத்திய சாஸ்திரம் செய்த சைநாசிரியர்.

பூச்சியபாதர்

இவர் ஒரு சைநாசாரியர் (கி. பி. 470) இல், இருந்தவர். இவர் மாணாக்கர் வச்சிராந்தி என்பவர். இவரால் தென்மதுரையில் ஒரு தமிழ்ச்சங்கம் கூட்டப்பட்டது. இது திருஞானசம்பந்த சவாமிகள் காலத்துக்குப்பின் அழிக்கப்பட்டது.

பூஜனி

இது ஒரு சிட்டுக்குருவி. பிரமதத்தன் எனும் அரசன் வீட்டில் வளர்ந்தது. இது ஒரு குஞ்சு பொரித்தது. அரசனுக்கும் அதே காலத்தில் ஒரு பிள்ளை பிறந்தான். இக்குருவி அக்குழந்தைக்கும் அப்பிள்ளைக்கும் பழங்களைக் கொணர்ந்து கொடுத்து வந்தது. ஒரு நாளந்தப்பிள்ளை பறவைக் குஞ்சைக் கொன்று விட்டது, சிட்டு கண்டு வருத்தமடைந்து அவ்வரச புத்திரனது கண்ணைப் பேர்த்துவிட்டது, அப்படி செய்தும் அரசன் பக்ஷியை யிருக்கக் கூறினன் பக்ஷி பகைதேர்ந்தவிடத்து இருக்கக் கூடாதென அநீதிகூறி நீங்கியது. (பார~சாந்.)

பூஜாரி

இது ஒரு ஜாதிப்பெயரன்று. காளி, மாரி, பெரியாண்டவன், கன்னிமார் முதலிய க்ஷத்ரதேவதைகளுக்கு பூஜை செய்யுமவர். இவர்களில் குசவன், பள்ளி, முதலியவர், சில குறவரும் பூஜாரிகள் என்பர். (தர்ஸ்டன்.)

பூஜை

தாம் நினைத்த தேவதையை எண்ணிச்செய்யும் கிரியாபேதம். இது பாஹ்ய பூஜை என்றும், அந்தர பூஜை என்றும் இருவிதமாம். இவற்றுள் ஆன்மஞானிகள் பூஜை செய்யுமிடத்து மலர் பறித்தல் முத வியவற்றால் குற்றம் வரும். ஆதலால் அந்தர்யாக பூஜையே விசேஷ மாம். கிரியாதி காரிகளுக்கே பாஹ்ய பூஜை விதிக்கப்படும். பாஹ்ய பூஜை செய்வோரும் அந்தர் பூஜை செய்தே செய்தல் வேண்டும். எனெனில் இதயத்திலிருக்கும் தியான மூர்த்தமே வெளியிலும் பூசிக்கப்படும் ஆதலால் என்க. பூஜை செய்யுமிடத்து இறைவனைத் தாம் எண்ணிப் பூசிக்கும் திருவுருவத்தில் ஆவாகித்தல், ஸ்தாபித்தல், சாந்த் தியஞ் செய்தல், பூஜா நிமித்தம் அங்கே நிரோதித்தல், அவகுண்டனஞ் செய்தல், முத்திரை காண்பித்தல் பாததீர்த்தஞ் சமர்ப்பித்தல், ஆசமனஞ் சமர்ப்பித்தல், அர்க்கியம் சமர்ப்பித்தல், புஷ்பம் சமர்ப்பித்தல் முதலிய சமஸ்காரங்கள் செய்து பஞ்சபூதாதிகளாலும் உபசரிக்க வேண்டியது. அவற்றுள் நைவேத்யம், பார்த்தி வோபசாரம், பாநீயம், ஆப்யோப சாரம், கண்ணாடி முதலிய காட்டல், தைஜசோப சாரம், விசிறி, கவரி முதலிய காட்டல், வாயவ்யோபசாரம், ஸ்தோத்திரம் முதலியவை கூறல், ஆகாச சம்பந்தமான உபசாரங்களைச் செய்து கடவுளை க்ஷமை கேட்டுக் கொண்டு பூஜா சமர்ப்பணஞ் செய்வதாம். இப்பூஜை சமயக்கோட்பாடுகளுக்குத் தக்கவாறு நூல்களிற் கூறியிருத்தலால், அவை அனைத்தும் எழுதாமல் பொதுவாகச் செய்யும் பூஜை மாத்திரமே ஈண்டுக் கூறினம், இப்புஜை சத்வரஜஸ் தாமத தேவ பேதத்தால் பலதிறப்பட்டுப் பலங்களும் வேறுபடும்.

பூஞ்சாற்றூர்

சோழமண்டலத்திலுள்ளதோர் ஊர். (புற. நா.)

பூஞ்சோலைத்தலைவன்

அரசனது மரஞ் செடிகளுக்கு மண்ணிடல் நீர் பாய்ச்சல் மலர், பழம் மிகுதற்கு வசையறிதல், மரஞ் செடிகளைப் புதிதாக வுண்டாக்குந் திறமை, புழுப்பூச்சிகளாலுண்டாந் தீங்கை நீக்குமறிவு வாய்ந்தவன். (சுக், நீ.)

பூட்டு

இது, கதவு, பெட்டி முதலியவற்றில் வைத்தபொருட்களைப் பிறர் தொடாதபடி இரும்பு முதலியவற்றால் தொடர்ப்படுத்துங் கருவி. இதன் திறப்பு திறவுகோல் அல்லது சாவி எனப்படும். தற்காலம் இதனைப் பலவிதப்படச் செய்வர்.

பூட்டுவிற்பொருள்கோள்

செய்யுட்களில் முதலிலும் கடையிலும் நிற்கு மொழிகள் தம்முள் பொருணோக்க முடையது.

பூணூல்

உபவீதங் காண்க.

பூதகணம்

இவை, மந்திர ஸாஸ்திரத்தில் கூறியபடி (18) வகைப்படும். அவையாவன. தேவ, அசுர, காந்தருவ, யக்ஷ, சர்ப்ப, ராக்ஷஸ, கூஷ் மாண்ட, காம, கிரகண, வேதாள, பிரமராக்ஷஸ, யதாகாரிஷ, அர்த்த பிதா, பைசாச, ருகு, விருத்த, சித்த, முனி, முதலிய, இவற்றிற்குப் பரிவாரங்களும் உண்டு, பூதப்பிரவேச பூர்வம். இது பிடிக்குங்காலத்தில் புத்தி கெடல், மிகு சையோக விருப்பம், லோபம், மோகம், முதலிய குணம் உண்டாம். இது பிடித்த பின்பு, தருமக்கெடுதி, ஆசாரவிரதாதிக ளைக் கைவிடல், அசுசி, துன்மார்க்கம், பெரியோரை வணங்காமை, மனத்தின்படி நடக்குதல் முதலிய உண்டாம், கணவேச நிதானம் இந்தப் பூதகணங்கள் மனிதரிடத்தில் பிரவேசிக்குமிடத்தில், படிகத்தில் பிரதி பலிக்கிற சூரியகிரணத்தைப் போலும், மனையின் கூறை முகட்டுவழி இறங்கும் சூரியகிரணம் போலவும் பிரவேசிக்கும், பூதகாரியநிதானம் தேவ, அசுர, பூதந்தொடரில் மனதில் பயங்கரம், சாந்தருவபூதம்; தேகத்தைத் தொட்டு அசைக்கும், சர்ப்ப பூதம்: தேசத்தில் வாசமாக இருக்கும். யக்ஷபூதம்: தேகமணங்கொண்டு தொடரும், ராக்ஷத்பூதம்: மனிதரை வாகனமாக எறித்திரியும். கூஷ்மாண்டம், காமம், கிரணம் வேதாளம், பிரமராக்ஷஸம், யதாகாரிஷ, அர்த்தபிதரம், பைசாசம், ஆகிய எட்டுப் பூதங்களும் எடுத்து விழுங்கவருவதுபோல் எதிரில் தோற்றப்படும். குரு, விருத்த, சித்த, முனி, எனும் 4. பூதங்களும் சபிக்கும் பூதக்கிரகண காலநிதானம்: ஒருவருக்குக் கேடுசெய்ய நினைக்குங் காலம், வாழ்வினை யநுபவ காலம், கிரகண சந்தி, பக்ஷங்களின் சந்தி, யாலைமயக்கம், அசுசி, சையோகம், திரிகமனம், விரதாநுஷ்டானக் கேடு, விடியச்சாமத்திற்கு முன்ஸ்திரிகளுடன் பரயாணம், அசுத்த இடசஞ்சாரம், விந்துகலிதம், பாழுங்கோயில், பாழ்ச்சாவடியில் நித்திரை ஒருவர் எச்சில் புசித்த கையுடனிருத்தல், கருவாணம், வனத்திலும், ஸ்ம சானத்திலும் பாதியிரவிலிருத்தல் பெரியோர்களை இந்தித்தல், ஆகிய இக்காலங்ளில் தொடரும். 1. தேவபூதம்: குணம்குளிர்ந்த சமப்பார்வை, சுத்தம், கோபமின்மை, மிதவார்த்தை, நற்சயனம் அற்ப மல மூத்ரம், வெகு காலசமாசாரம் கூறுதல், தேவப் பிராமண பக்தி, வெள்ளை வஸ்திரம், புஷ்ப சுந்தாதிகளில் விருப்பம், நதி, மணற் குன்று, மலை, மேல்வீடு, பால், தயிர் முதலியவைகளில் விருப்பம், முகவிலாசம், ஒருவேளை கண்களை மூடிக்கொள்ளுதல், வரங்கொடுக்குந் தன்மை முதலியவாம், 2. அசுரபூதம்: பிரமாதிதேவர்களைத் சானெனக் கூறல், விகாரவார்த்தை, அதிபராக்ரமம், அஞ்சாமை, சரீரத்தில் வியர்வு, சோபம், சஞ்சலபுத்தி, அபிமானம் விடுதல் மது மாம்ச விருப்பு, தேவப்பிராமண குருமாரிடம் விரோதம், பெரியோரைக் கண்டு நகைத்தல், வாய், பல், நகங்களால் சேஷ்டை முதலிய. 3. காந்தருவபூதம்: ஆசாரம், ஒழுக்கம், சந்தோஷம், வாசனை, மிதவார்த்தை, நந்தவனம், மணற்குன்றுகளிலும் செம்மலரிலும் விருப்பம், அடிக்கடி நகைப்பு, கீதப் பாட்டு முதலிய உடைமை. 4 யக்ஷபூதம்: குந்திக்கொண்டுறங்கல், நகைத்தல், ஆடல், பாடல், அழுதல், வந்தவர் துணியைப் பிடித்திழுத்தல், துர்பாஷை, பரிகாசம், கைடிளையாட்டுதல், ஸ்நானம், போஜனம், மது மாம்சம், ரத்தம், சந்தனம், தூபம். வஸ்திரம், இவற்றில் இச்சை, கண் சிவப்ப, கலக்கம், நீர்வடிதல் மதத்த நடை, களிப்பு, அதிவார்த்தை, ஸ்திரிகளிடம் கோலாகலம், விகாரமுகம், அதிகோபம், மிகுபலம், அறிவின்மை, தானே பிதற்றல். 5. ராக்ஷசபூதம்: இது செங்கண், புருவ நெறிப்பு, கொடும்பார்வை பேய்க்கூச்சல் பிரமித்து ஓடுதல், அநித்திரை, அன்னவெறுப்பு, நகை, ஏரி மடுக்கரைகளில் திரிதல், இளைத்தல், துர்பலம், ஆடல், கண்டவர்களை அடித்தல், விகார உருவம், நாணின்மை முதலிய. 6. கூஷ்மாண்டபூதம்: பயங்கர முகம், அதி கோபம், தாமதம் அல்லது மிகுவார்த் தைமுதலிய. 7. காமபூதம்: தானே அடித்துக்கொள்ளல், பலவிதமாகப் பேசல், அடிக்கடி நாவை நீட்டுதல் ஜபம், அசைவறத் திக்குகளைப் பார்த்தல் அசுசிமுதலிய சூணங்களை உண்டாக்கும். 8. கிரணபூதம்: இது ரத்தநேத்திரம். உக்கிரபார்வை பயங்கரவார்த்தை மிகு ஊண் தீய ஒழுக்கம் உடையது. 9. வேதாளபூதம்: மெய்மை, நடுக்கம், தவடை உலரல், சுகந்தாதிகளிலும், மலர் மாலைகளிலும் தூபவர்க்கத்திலும் இச்சை கொண்டிருக்கும். 10. பிரம்மராக்ஷஸ பூதம்: கெடுதிச் சேஷ்டை, அதிகதண்டி, தேவர், வைத்தியர், மாந்திரியர், தவத்தர் இவர்களிடத்தில் விரோதம் கத்தி முதலிய ஆயுதங்களால் தானே அடித்துக் கொள்ளல் தேவர்களையும் அவமரியாதையாக அழைத்தல் சமயம் பார்த்து அடித்தல் முதலான குணங்களை உடையதாம். 11. அர்த்தபிதா பூதம்: இது கண்ணிமைகள் சரிந்து தொங்குதல் தலைமயிர் முறைத்தல் விகாரமுகம், தவடை உலரல் உறுத்தபார்வை அகால நித்திரை மந்தாக்கினி சுவப்பனத்தில் இறந்தவர்களைக் கண்டுபேசல், கறுப்பாகிய பொருள் வெல்லம் பால் மாமிசம் இவைகளில் விருப்ப முடையனவாயிருக்கும். 12. பைசாச பூதம்: மனம் தீயவழியில் செல்லல், நகைத்தல், அறிவுதீங்குதல், நகத்தால் கீறிக் கொள்ளுதல், எவரையும் மதிக்காது பேசுதல், ஒளி நீங்கிச் சங்கை யுள்ளவர்களைப் போல் இருத்தல், தெரிந்தும் தெரியாத வார்த்தை, தனது துக்கத்தை ஒருவரோடு சொல்லுதல், தேகதுர்க்கந்தம், தலையிறக்கம், பயங்கரக் கூச்சல் அசுத்த நடை, எச்சில், கள், மாமிசம், கீதம், நாட்டியம் பாழ்வீடு இவைகளில் இச்சை, கல், முள், பாம்பு இவைகளிருக்கும் இடங்களில் ஓடுதல், தலை சுற்றியாடுதலாம். பின்னும் சித்தர் முனிவர் குரவர், விருத்தர் முதலிய நான்கு பூதங்களின் லக்ஷணம் அச்சித்தர் முதலிய நால்வாது குணங் களைப் பெற்றிருக்கும் பின்னும் ஈஸ்வரபூதம் இந்திர பூதம், குபோபூதம், வருணபூதம், யாக்சேனாபூதம், விரூபாக்ஷபூதம், வித்யுன்மாலி பூதம், சுகபூதம், நிஸ்ததேசபூதம், சாகோர்த்தபூதம், நகுபூதம், மணிமலபூதம், நிகடபூதம், விசாகபூதம், பித்தபூதம், சுமலபூதம், முதலிய பூதங்களின் குணங்களை ஜீவரக்ஷா மிர்தத்தில் காண்க.

பூதகண்ணாடி

1, இது உருவங்களைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி. இந்தக் கண்ணாடியால் உருக்களை நோக்குமிடத்துப் பொருளின் உருவம் நேராகக் குவிந்து சென்று கண்ணாடியில் திரும்புகையில் ஒளிவிரிந்து தோன்றுகிறது. ஆதலால் பொருள் பெரிதாகக் காணப் படுகிற தென்கிறார்கள். 2. கனத்த வடிவான பளிங்கு. இது தன்னைய டைந்த பொருளைப் பெரிதாகக் காட்டுவது.

பூதகுடி

காவனூர்க்கு மேற்கே 4 நாழிகை வழித் தூரத்திலுள்ளது; குண்டோதரரால் இது இப்பெயர் பெற்றதென்பர். (திருவி.)

பூதங்கண்டகுளம்

இது திருப்பரங்குன்றத்திற்கு வடக்குள்ள தோரேரி “தென் காற்கம்வாய்” என வழங்கும்; குண்டோ தரனாகிய பூதத்தால் வெட்டப்பட்டது; இதன்கரை பூதங்கண்ட கரையென, இக்காலத்தும் வழங்கும்; இதற்குச் சமீபத்தில் கூடை தட்டிப் பறம்பெனச் சிறிய மலை யொன்றுண்டு. வெட்டியமண்ணை யெடுத்துக் கரையிற் கொட்டிய கூடையை குண்டோதானாகிய பூதம் இதில் தட்டிய தென்பர். (திருவிளையாடல்)

பூதங்கண்ணனார்

இவர் பூங்கண்ணனா ரெனவுங் கூறப்படுவர். இவர் குறிஞ்சித்திணையைப் பலபடப் புனைந்து பாடியுள்ளார். தோழியாலே குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன்னெஞ்சை நோக்கி அவனருளினும் அருளாது விடினும் என் நோய்க்கு அவளன்றிப் பிறிதொரு மருந்தில்லை யென்று கூறுவதாக இவர் பாடியது மகிழ்ச்சிதருவதாகும். நற் (140) இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய பாடலொன்றும் குறுந்தொகையில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பூதங்கள்

(8) இவை ஈச்வராக்னையால் திக்குகளைக் காக்க நியமிக்கப் பட்டவை. கிழக்கில் சம்வர்த்தன் வெள்ளைநிறமுள்ளது. தென்கிழக்கில் உன்மத்தன், பொன்னிறமுடையது, தெற்கில் குண்டோதரன், கறுப்பு நிறமுள்ளது. தென்மேற்கில் தீர்க்ககாயன், செந்நிறமுள்ளது. மேற்கில் ஹிரஸ்வபாதன், பசுமைநிறமுள்ளது. வடமேற்கில் சிங்கரூபன், புகை ரூபமுள்ளது. வடக்கில் கஜமுகன், அதிரக்தநிறமுள்ளது. வடகிழக்கில் பிரியம் முகன், நீலநிறமுள்ளது. இப்பூதங்கள் ஒவ்வொன்றும் ஒரு முகம், இரண்டு அஸ்தம் உள்ளன வாய்க்கையிற் றண்டம் தாங்கி நிற்கும். (ஸ்ரீ காரணம்.)

பூதசதுக்கம்

காவிரிப்பூம்பட்டினத்துள்ளது. இது தவவேடத்து மறைந்து தீமை செய்வோரைக் கொன்று தின்னும் வாழ்க்கையுடைய பூதநிற்கும் இடம், (மணிமேகலை.) (சிலப்பதிகாரம்.)

பூதசந்தானன்

இரண்யாகான் குமரன்.

பூதச்சோதி

நிருகன் பேரன்,

பூதச்சோதிசு

சுமதியின் புத்திரன்.

பூதஞ்சேந்தனார்

செங்குன் நூர்க்கிழார் புத்திரர், இனியவை (40) செய்தவர். மதுரைத் தமிழாசிரியர் மகனார் எனவுங் கூறுவர். இவர் சைவவேளாளர்.

பூதத்தாழ்வார்

துவாபாயுகம் எட்டுலக்ஷத்து அறுபத்தீராயிரத்துத் தொள்ளாயிரத் திரண்டாவதான சித்தார்த்தி வருஷம் ஜப்பசி மாதம் நவமி அவிட்டத்தில் மாவலிபுரத்தில் நந்தவனத்தில் உள்ள குருக்கத்தி மலரில் திருவவதரித்தனர். இவர் கதாம்சம் ” அன்பேதகளியா” என்றெடுத்து துறு செய்யுட்களால் திருமாலைப் பாடினவர். இவரது மற்ற சரிதம் பொய்கையாரைக் காண்க. (குருபரம்பரை.)

பூதநந்தன்

கலிங்கலைதேசத்து அரசன் இவன் குமரர் பாகுபலியர் பதின்மூவர்.

பூதனார்

இவர் பாலைத்திணையைப் புனைந்து பாடியுள்ளார். மகட்போக்கியதாய் பாலையை வருணிப்பதாக இவர் கூறியது மிக்க சுவையுடையதாகும் இவர் பாடியது. நற் உ.ம் 9 பாட்டு,

பூதனை

ஒரு அரக்கி, கம்சன் எவலை யேற்றுக் கோகுலத்தில் இருந்த கண்ணபிரானுக்கு வஞ்சனையால் முலைப்பால் ஊட்டி மாய்க்க முயலுகையில் கண்ணனால் முலைவழியாக உயிருண்ணப்பட்டு மாய்ந்தவன்.

பூதன்

1. பூதாவைக் காண்க. 2. வசுதேவருக்குப் பெளாவியிடம் உதித்த குமரன். 3. தொண்டமண்டலத்துப் புள்வேளூர் என்னும் ஊரிலிருந்து தன்னை யாசித்த வித்துவான்களுக்குப் பொருள் உதவிப் புகழ் அடைந்த பிரபு. இவன் ஒருமுறை ஒளவைக்கு உணவளித்து “வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், முரமு ரெனவே புளித்த மோரும் திரமுடனே, புள்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ, றெல்லா வுலகும் பெறும்” எனப் பாடல் பெற்றவன். இவன் ஒளவையின் அருளால் கிணற்று நீர் மேலெழுந்து பாய அருள் பெற்றவன்.

பூதன் தேவனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர், அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களில் சிற்சில கவிகள் பாடி இருக்கின்றனர். இவர் ஈழநாட்டிலிருந்து மதுரையடைந்தவ ரென்பது சிலர் கொள்கை.

பூதன்றேவனார்

ஈழத்துப் புதன்றேவனா ரென்பவரொருவர் காணப் படுகிறார். அவர் தாமோ இவரென்றைய மெய்துமாயினும் இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப்பாடி அத்திணையிலே களவு நிகழ்ந்த தாகவும் கூறியிருப்ப, ஈழத்துப் பூதன்றேவனார் பாடியிருப்பதெல்லாம் குறிஞ்சித்திணையே, ஆதலால் இருவரும் வெவ்வேறாவரென்று கருதலாயிற்று. வைகறையில் எருமையை மேய்க்கக்கொண்டு செல்லுஞ் சிறுவர் அம்மாட்டின் முதுகில் ஏறியிருந்து நடத்தா நிற்பரென்று கூறுகிறார். தலைமகன் நெஞ்சினை நெருங்கித்தைந் நீராடும் அத்தலை மகனல்லது யானுற்ற நோய்க்குப் பிறி தொருமருந்தில்லை யென்று கூறுவதாக இவர் மொழியா நிற்பர். நற் 80. இவர் பாடியனவாக நற்றிணையில் 80ம் பாடலொன்றும் குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன,

பூதபவ்யம்

ஒருயாகம். இது பிராணிகளைப் பசுவாகக் கொள்ளும் யாகம். (பார~சாங்.)

பூதபுராணம்

இடைச்சங்க மருவிய நூல், அகத்தியர் காலத்து இருந்ததென்பர்.

பூதப்பாண்டியன்

ஒல்லையூர்தந்த பூதப் பாண்டியனுக்கு ஒரு பெயர், தேவி பெருங்கோப்பெண்டு, கல்விவல்வன், இவன் புலவனும் வீரனு மாய்ச் சிறந்து விவாங்கினோன். அகநானூற்றிலும் புறநானூற்றிலும் காணப்படும் இவனது பாடல்களானும் ஒல்லையூர் தந்த எனும் அடைச் சிறப்பானும் இவனது புவமையும் வீரமும் உணரத்தக்கன. “மடங்கலிற் சினைஇ மடங்காவுள்ளத். டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, போம ருண் ணிவளொடும் பிரிக” எனும் செய்யுள் இவனது வீரத்தைக் குறிக்கும். இவன் மையல் எனும் ஊரிலிருந்த மாவன் என்பானையும், எயில் எனும் ஊராளியாகிய ஆந்தை யென்பவனையும், அந்துவஞ்சாத் தன், ஆதனழிசி, இயக்கன் என்பவனையும் நண்பனாகக் கொண்டவன். இவனுக்குக் கற்பினுங் கல்வியினுஞ் சிறந்த பெருங் கோப்பெண்டு சிறந்திருந்தனளாதலின் அவளைச் சிறிதும் பிரியாதவனென்பது மேற்கூறிய செய்யுளா லறியக்கிடந்தது.

பூதப்பாண்டியன் தேவியார்

இவர் ஒல்லையூர் தந்த பூதபாண்டியரின் அருந்ததிக்கற்பின் அருங்கலை முதிர்ந்த கோப்பெருப் பெண்டிர். இவர், தங்காதலர்மாட்டு மிக்க அன்புடையார். காதலரும் அவ்வாறிருந்தனர். இவர் நற்றமிழுணர்ந்த நங்கையரில் ஒருவர். இவர் கல்வி வனப்புக் குண முதலியவுடன் ஒத்துத் தம் கணவருடனில்ல றத்துணையாய் ஒழுகு நாட்களில் அறிவில் பெருங்கூற்றம் அப்பூதப்பாண்டியரினின் னுயிரைக் கவர்ந்தது. இந்நிலை அறிவுடைக்கோப் பெருந்தேவியாரின் மன நிலையை யுருக்கியது, பின்னர் ஒருவாறு தேறிய தேவியார் கணவனு டன் தீப்புக எண்ணுகையில் அவ்வமயத்தில் ஆண்டுக் குழீஇ இருந்த மதுரைப் பேராலவாயிலார் முதலிய புலவரும் சான்றோரும், தம்மோ டொத்த அறிவுடையாசனை இழக்க நேர்ந்த இந்நிலையில் தம்மோ டொத்த அரசியையம் இழக்கல் ஆகுமோ என்று தேவியாரைத் தீப்புகா மல் விரைந்து தடுப்பாராயினர். அது கண்டு பெருந்தேவியார் ஈமத் தீப் புறத்து நின்றுகொண்டு அச்சான்றோரை நோக்கி “பல்சான்றீரே பல்சான்றீரே, செல்கெனச்செவ்லா தொழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே, யணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ங்திட்ட, காழ்போனல்விளர் நறு நெய்தீண் டா, தடையிடக் கிடந்த கைபிழி பிண்டம், வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்தட்ட, வேளை வெந்தை வல்சியாகப், பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு, முயவற் பெண்டிரே மல்லோமாதோ, பெருங்காட்டுப் பண்ணியகருங் கோட்டீம, நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம், பெருந்தோட்கணவன் மாய்ந்தெனவரும்பற, வள்ளி தழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ சற்றே. ‘ எனும் பாடலைக் கூறித் தீயிற் பாய்ந்து மாய்ந்தனர். இச்செய்யு ளொன்றே இந்நற்றமிழுணர்ந்த மெல்லியலாரின் நற் தமிழ்ப் புலமை யினைச் செவ்விதி னறிவுறுத்தும். இவரது அரிய செயலை வியந்து. உடனிருந்து கண்ட மதுரைப் பேராலவாயிலார் எனும் புலவர் புறப்பாட்டுள் “மடங் கலிற்சினைஇ” எனும் புறப்பாட்டியற்றினர்.

பூதமக்பாலன்

புள்ளலூர் வேளாளன், ஔவையார்க்கு விருந்திட்டுப் பாடல் பெற்றவன்.

பூதம்

1, ஒரு தேவசாதி. 2. (5) நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். 3. தனக்கு உதவி புரிந்த முசுகுந்தனைக் காக்க இந்திரனால் அனுப்பப் பட்டுக் காவிரிப்பூம்பட்டினத்துக் கோயில் கொண்ட தெய்வம், (சிலப்பதிகாரம்.) 4. பூதம் (5) வேதாளம், பிரம்மாக்ஷஸ், இருளன், மாடன், கறுப்பன். 5. அங்காடிப்பூத மெனவும் சதுக்கப்பூத மெனவும் இரண்டுள்ளன. (மணிமேகலை.) 6. ருத்ரமூர்த்தி பாண்டவர்களைக் கொல்ல வந்த அச்வத்தாமாவின் முன்னின்று அவனைப் பயமுறுத்தினர்.

பூதம்புல்லன்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். (குறு110),

பூதர்

பிரமனாலாச்யத்தினால் படைக்கப்பட்டவர். தேவவகுப்பினர்.

பூதா

தக்ஷன் இரண்டு பெண்களை மணந்த இருடி, பாரி சரூபா, இவனுக்குப் பூதனெனவும் பெயர்.

பூதாசுரன்

இவன் தேவரை இடுக்கண்படுத்தச் சிவ மூர்த்தி இவன் முன் வெகுகோடி அற்புதமூர்த்தியாக எழுந்தருளிக் கொன்றனர்.

பூதாயன்

ஐந்தா மன்வந்தரத்துத் தேவன்.

பூதார்த்தவாதம்

தன தர்த்தத்தில் பிரமாணமுள்ள தாய் இலக்ஷணை யால் விதேய அர்த்தத்தின் மேன்மையை யறிவிக்கும் வாக்யம். (தரு.)

பூதி

1. ஆங்கீரசர் மாணாக்கன், பெளத்தியன் தந்தை. பௌத்திய மன்வந்தரத்தைக் காண்க. 2. ஓர் அந்தணன், வயனங்கோடென்னு மூரிலுள்ளவன், ஆபுத்திரனை வளர்த்தவன். இளம்பூதியெனப் பெயர் பெற்றவன். (மணிமேகலை.) 3. யூகியின் புதல்வன். (பெ. கதை.)

பூதிபீடம்

சத்திபீடங்களில் ஒன்று, இது பாரபூதியிலுள்ளது.

பூதேவி

1. திருப்பாற்கடலிற் பிறந்து விஷ்ணுவைச் சேர்ந்தவள். இவள் வராகாவதாரத்தில் விஷ்ணு மூர்த்தியைக்கூடி நாகாசுரனைப் பெற்றவள். பூதேவி விஷ்ணுமூர்த்தியை நோக்கித் தன் புத்திரனாகிய நரகாசுரன் சாகாதிருக்க வரம்வேண்ட விஷ்ணு மூர்த்தி அவனது குற்றத்தை உனக்கு அறிவித்து அவனைக் கொல்லுகிறேனென்று கூறினர். பகதத்தனுக்கு அபயம் கொடுக்கும்படி கண்ணனைப் பிரார்த்தித்தவள். உதங்கர் குண்டலமிழந்த காலத்து நாகலோகத்திற்கு வழியளித்தவள். சீதாபிராட்டி இராமமூர்த்தியை விட்டுப் பிரிய எண்ணிய காலத்துச் சீதையைக் கையால் தழுவித் தன்னிடம் இருக்கச்செய்தவள். சீதாபிராட்டி தன்னிடம் ஒளித்த காரணத்தால் இராமபிரானால் பயமுறுத்தப்பெற்றவள். பூபாரத்தின் பொருட்டுப் பிரமனிடம் முறையிட்டுப் பாரதம் காரணமாகப் பூபாரந் தீர்த்துக் கொண்டவள். 2. பிரகிருதி தேவியின் பிரதான அம்ச மானவள். எல்லாவற்றிற்கும் ஆதார மானவள். எல்லா ஓஷதிரூபிணி,ரத்னகர்ப்பிணி, பிராணிகளுக்கு ஜீவனா தாரமான சத்திஸ்வ ரூபிணி. (தேவி~பா.) 3. வராஹவுருக்கொண்ட திருமால் இரணியாக்ஷன் கவர்ந்து சென்ற பூமியை நிறுத்தினபின் பூதேவி பெண்ணுருக் கொண்டு நிற்க அவரிடம் மயல் கொண்டு புணர்ந்து கடேசன் எனும் குமரனைப் பெற்று என் மனைவியுடனீயும் ஒரு பத்தினியாக, நீ இந்தப் பூமியை வராகவுருக்கொண்டு தாங்குக உன்னை வழிபடுவோர் பல சித்திகளை யும் பெறுக; என வரமளித்தனர். இதனால் களிப்படைந்த பூதேவி நான் எல்லாவற்றையும் தாங்குவேன் ஆயினும், முத்து, சிவலிங்கம், தேவி, விஷ்ணு பிம்பங்கள், சங்கம், தீபம், யந்திரங்கள், யஞ்ஞசூத்ரம், ஜபமாலை, புஸ்தகம், துளசி, புட்பம், மாணிக்கம். வச்ரம், பொன், கோரோசனம், சந்தனம், தீர்த்தம், சாளக்ராமம், இவற்றை ஆசன மில்லாமல் வைக்கின் தாங்க வலியிலேன் என அவ்வாறு வைப்போர் (1000) தேவவருஷம் காலசூத்தநாகம் பெறுக என வரமடைந்தனள். இவள், எல்லோர்க்கும் ஸ்தானமாயிருத்தலால் பூமி எனவும், காச யபருக்குச் சம்பந்தமுள்ளவளாதலால் காச்யமி எனவும், சகல விசவத் தையும் பொறுத்தலின் விச்வம்பரை எனவும், அளவிலாத ரூபமுடை மையால் அருந்தை எனவும், விருது புத்ரியாயும் பெருத்திருத்தலாலும் பிருத்வி எனவும் கூறப்படுவள் (தேவி பா)

பூத்திரன்

ஒரு ருஷி, இவனுக்குப் பேரன் சரதன்.

பூநீர்

(பூமிநாதம்) நிலத்தில் முன்பனி பின்பனிக் காலங்களில் உப்பு பூமியிலிருந்து இராக்காலங்களில் சோதியுருவாய் வெளி வருவது, இதனால் பாஷாணாதிகளைக் கட்ட வைத்தியர்கள் ஜெயநீர் செய்வார்கள்.

பூந்துருத்திநம்பி

நம்பி காட நம்பியைக் காண்க.

பூனை

1. புலியின் சாதியைச் சேர்ந்தது. புலிக்குரிய உடல் வரி கிடையாது. இது குட்டையாய் ஒரு அடி உயரமும் இரண்டடி நீளமும் உள்ளது. இது வீட்டிலிருப்பதால் இற்புலி யெனப்படும். பலவித நிறம் பெற்றிருக்கும். இரவில் நன்றாய்ப் பார்க்கும். எலி, பறவை முதலிய வற்றை வேட்டையாடிக் கொல்லும். ஜலத்தில் செல்லாது. இது மரமேறும். புலி இவ்விரண்டும் செய்யாது. பிராணிகளைப் பிடிப்பதற்கு அதன் வால் துணை செய்கிறது. 2. வீட்டில் வளர்க்கும் பிராணிவகைகள், ளில் ஒன்று, இது காட்டுப்பூனை யிலிருந்து திருந்தியது. சிங்கம், புலி, சிறுத்தை, முதலிய இவ்வினத்தவை. இவற்றின் கண்கள் இரவில் பார்க்க ஒளி தருவன. இவற்றின் நகங்கள் கோபம் கொள்கையில் வெளிவந்து மற்ற காலத்தில் மறையும். சில தேச பூனைகளுக்கு உடம்பில் மயிர் நீண்டுவளரும், இப்பிராணி கோபங்கொண்டபோது வளர்த்தவர்களையும் கடிக்கும். இது சத்தத்தை கூர்மையாய்க் கேட்டுப் பிராணிகளை வேட்டையாடும். காட்டுப் பூனை காண்க.

பூனை, எலி, கீரி, கழுகு

இவற்றின் கதை சமயத்தில் பகைவனை சந்தி செய்ய வேண்டும் என்பது. ஒருவேடன் பூனையுமெலியுமிருந்த ஆலினடியில் வலை வைத்திருக்கப் பூனை அதில் அகப்பட்டது. மரத்தடியிலிருந்த எலி அவ்விடமிருந்து வெளிவந்து எலியின் வலையிலிருந்த ஆகாரத்தைத் தின்னத் தொடங்குகையில் ஒரு கழுகையும் கீரியையும் கண்டது. எலி இந்தச் சமயத்தில் கீரிக்கும் கழுகிற்கும் பயந்து பூனையுடன் சந்திசெய்து அதின் வலையை அறுக்கத் தொடங்கியது. கழுகும் கீரியும் பூனையுடன் எலி நட்பாயிருத் தலைக்கண்டு நீங்கின.

பூபசூடாமணிபாண்டியன்

இராஜ சூடாமணி பாண்டியனுக்கு நண்பன்.

பூபாலக பாண்டியன்

பாண்டவர்க்குச் சிநேகனாகிய ஒரு பாண்டியன்,

பூமகன்

ஒரு கிரகம். இது பலர் நிறம்படத் தோன்றின் பூமிக்குத் தீமை விளைவிப்பது.

பூமா

பிரதிகர்த்தாவின் குமரன். தாய் ஸ்துதி, தேவி ரிஷிகுல்லி, குமரன் உத்கீதன்.

பூமி

1. இது சைவீபூமி, பிராம்மபூமி, வைஷ்ணவபூமி, ஐந்தீரபூமி, பசுபூமி, பூதபூமி, ஆசுரபூமி, பைசாசபூமி, ராக்ஷஸபூமி, வாயு பூமி, வருணபூமி, ஆக்னேயபூமி எனப் பன்னிரண்டுவிதம். இவற்றுள்: சைவீ பூமி: கோங்குமரம், மருது, அரசு, விளா, அசோகு, ஆச்சா, நிலத் தாமரை, துளசி, அறுகு, விஷ்ணு கிராந்தி, எலிக்காதுகீரை, இலவு, மலைநன்னாரி, புறா, கிளி, அன்னங்களால் வியாபிக்கப்பட்டது. இது சுபத்தைத் தரும். பிராம்மபூமி: வில்வம், முருக்கு, விஸ்வாமித்ரம், நாணல், மான், நன் மணமுள்ள ஓமத்ரவயங்கள் உள்ள இடங்களாம். வைஷ்ணவபூமி: தும்பைச்செடி, புளியமரம், புங்கமரம், மூங்கில், பருத்தி, எருக்கு, செம்பருத்தி, அன்னப்பக்ஷீ, சாமான்ய பக்ஷி மிருகங்கள், முள்ளில்லாத விருக்ஷங்களோடு கூடினது. ஐந்திர பூமி யானது: வாழை, பலா, மாமரம், சுரபுன்னை, மகிழமாம், பாதிரிமரம், நொச்சிலி, நெல்லி, கருநெய்தலாலும் வியாபிக்கப்பட்டு வைசிய சூத்திரர்களால் வசிக்கப்பட்டதாம். பசுபூமியாவது: பாதிரி, அகில்களின் மணத்தால் நிறைந்ததும், தன தான்யாதி சம்பத்தைத் தருவதும், அழிஞ்சில் விருக்ஷங்களாலும், பூனை, கீரி, முயல், உடும்பு, சகோரப் பக்ஷீ, செந்நாய்களால் வியாபிக்கப்பட்டதுமாம். இது ஜனங்களுக்குச் சம்பத்தும், சௌர்யவீர்யாதிகளை யுண்டுபண்ணுவதுமாம். பூதபூமி யாவது: பெருநொச்சில், குறுக்கத்தி, அறுகு, அழிஞ்சில், முருக்கு, மல்லிகை, அலறி, இருப்பையுடன் கூடினதும் விபூதி மணமுள்ளதும், மனிதர்க்கு அன்னத்தையும், புஷ்டியையும் தருவது. ஆசுரபூமி யாவது: செராமரம், பெருமரம், மருத மரம், வெங்காயம், துஷ்டஜந்துக்கள், பருந்து, வேடர் முதலியவருடன் கூடித் துர்க்கந்தந் தருவது. பைசாச பூமியாவது: இலவு, மகிழ், தான்றி, நறுவிலி, கழுதை, ஒட்டகம், பன்றி, நரி, சண்டாளர், வேடர் முதலானவர்களால் நிறைந்து சவிட்டு நிலமாய்த் துர்க்கந்தத்துடன் கூடியிருப்பது. ராக்ஷஸ பூமியாவது: சண்டாளர், விஷம், திருடர், தலைநோய் முதலியவற்றாலும், மிளகு, வெல்லம், பரிமளவஸ்துக்களாலும் நிறைந்தது. வாயுபூமியாவது: குள்ள நரி, சுவர்க்கோழி, பருக்காங்கல் முதலியவற்றால் நிறைந்ததும் நீர்ப்பாக்கிய மானதுமாம், வருணபூமியாவது: பாக்குமரங்களால் நிறைந்து சமஸ்த சித்தியைத் தருவது. ஆக்னேயபூமியாவது: சதுரக்கள்ளி, நறுவிலி மரங்களுள்ளதும், பருக்காங்கற்களுடன் கூடியதும், சவிட்டுமண் உள்ளதும், தண்ணீரில்லாததுமானது. இது சமஸ்தத்தையுங் கெடுக்கிறது. சிவபூமி, பிராம்மபூமி, வைஷ்ணவபூமி இவை பிராம் மணர்களுக்கு வாச யோக்யமுள்ளவை. பசுபூமி அசுரர்க்கும், பூதபூமி சூத்ரருக்கும் சிறந்தன. பிசாச, ராகூத, அசுரபூமிகள் அந்திமர்க் குரியதாம். பின்னும் பூமியானது ஜாங்கலம், அநூபம், சாதாரணம் என மூவகைப்படும். அவற்றுள் ஜாங்கல பூமியாவது: ஸ்திரமாயும், மிகப் பெரிதாயும் மிக்க பருக்கைக்கற்களை யுடையதாயும், அதி ஆழமாக வெட்டப்படினும் உப்பு நீருடையதாயும் உள்ளது. அநூபபூமியாவது ஆம்பற்புஷ்பங்கள் நிறைந்திருப்பதும், செங்கழுநீர், நெய்தற் புஷ்பங்களையு டையதும், சூக்ஷ்மமான மணல்களை யுடையதும், கிருஷி செய்யப்படுவதும், உயர வெழும்பும் ஜலத்தின் சுரப்புடையதுமாம். சாதாரணபூமியாவது: மேற்கூறிய இரு வகைக் குணங்களுள்ளதாம். ஜாங்கலபூமி, வாழை, பனை. பலா முதலிய விருக்ஷங்களும் பலவகைப் பயிர்களுக் குரியதுமாம். அநூபபூமி சமஸ்த ருதுக்களிலும் சுகத்தைத் தருவதும் எல்லா அநுகூலங்களைத் தருவதுமாம். சாதாரண பூமி மேற்கூறிய இருவகையங் கொண்டது. 2. இது, சூரியனுக்கு மூன்றாவது வட்டத்திலுள்ள கிரகம், இது, சூரியனுக்கு (9) கோடியே (20) லக்ஷம் மைல் தூரத்திற்கப்பாலிருந்து சூரியனைச் சுற்றிவருகிறது. இதன் சுற்றளவு சுமார் (24,902) மைல் குறுக்களவு (79265) மைல், வடக்குத் தெற்குத் துருவ முனைகளின் நேரளவு (78997) மைல் நீளம், கோளப் பரப்பின் விரிவு (19) கோடியே (69) லக்ஷத்து, (40) ஆயிரம் சதுரமைல், கனம் சுமார் (600000 00000000000000) டன் எடை என்றும் கணித் திருக்கின்றனர். இப்பெருங்கோளம் (23) மணி, (56) நிமிஷம், (4. 09) விநாடியில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளுகிறது. இதனால் பூமிக்கு இரவு பகல் உண்டாகிறது. இது, சூரியனை (365) நாள், (5) மணி (43) விநாடியில் ஒரு தரம் சுற்றி வருகிறது. அது ஒரு வருஷம். பூமி சூரியனைச் சுற்றி வரும் வட்டம் சுமார் (58) கோடியே (60) லக்ஷம் மைல் தூரம் இருக்கலாம் என எண்ணுகின்றனர். இது நமக்கு ஒளியற்ற தாகத்தோன்றினும் மற்ற கிரகங்களிலிருந்து நோக்கின் ஒளியுள்ளதாகக் காணப்படும் என எண்ணுகின்றனர். இதனைச் சந்திரன் ஒன்று மாத்திரம் சுற்றிவருகிறது. 3. இது, ஒரு கிரகம். இது சூரியனை (366) நாட்களில் ஒரு தடவை சுற்றிவருகிறது. மற்ற கிரகங்களிலிருந்து இதைப் பார்த்தாலிது பிரகாச முள்ளதாகத் தெரிகிறதாம். இது ஒரு காலத்தில் திரவவுருவாக இருந்ததென்றும் காலக்ரமத்தில் உஷ்ணம் தணிய இறுகி உறுதியாயிற் றென்று பூமி சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர். பூமி உருண்டையாய்த் தன்னைத்தானே சுற்றுகிறது. பூமியின் அடிப்பாகம் அதிக உஷ்ணமான தென்பதற்கு அக்னிமலைகளே சாக்ஷியாம். பூமியை அகழுங்கால் அந்நில வேறுபாடுகளால் அவை பூர்வத்திலிருந்த நிலை தெரிகிறது. இதற்குச் சந்திரன் உபக்கிரகம். சிலதூரம், அகழ்ந்தால் ஒருவித மண்ணும் அதற்கப்பால் வேறுவித மண்ணும் வருதலால் இது படிப்படியாய் வேறு பட்டதென்பது தெற்றென விளங்குகிறது. (இ பொ.)

பூமிசந்திரன்

நாகபுரத்தரசன். தேவி அமரசுந்தரி. புண்ணியராசனை வளர்த்தவன். (மணிமேகலை)

பூமிதேவி

1. கறுத்த நிறமும், கமலங்களொத்த இரண்டு கண்களும், பொன் பூணுலும், இரண்டு கையும், சர்வாபரண பூஷிதையாய், காண்டா ரூபமான கிரீடமும், சிவப்புப் புடவையும், வலக்கையில் கருநெய்தற் புஷ்பமுடையளா யிருப்பள். 2. இவள் கூத்ரியவம்சம் பாசிராமரா லிழிந்தபின் அவரிடம் தானம் பெற்ற கச்யபரை க்ஷத்திரியரைக் காக்கவேண்டிப் புரு வம்சத்தவனான விதூரதன் புத்ரனாகிய ரிஷவான் கரடிகளால் காக்கப்பட்டிருக்கிறான், சௌதரச புத்திரன் பராசரால் காக்கப்பட்டிருக்கிறான். சிபியின் புத்திரனாகிய கோபதி பசுக்களால் காக்கப்பட்டிருக்கிறான். வத்சனென்பவன் பசுங்கன்று களால் காக்கப் பட்டிருக்கிறான், பிருஹத்ரதன் என்பவன் குரங்குகளால் காக்கப்பட் டிருக்கிறான். இவர்கள் என்னைக் காக்கவென இருந்து மீண்டு கதரியரை நிலைக்கச் செய்தவள்.

பூமித்திரன்

வாசுதேவன் அல்லது கண்ணுவன் குமரன், இவன் குமாரன் நாராயணன்.

பூமிபிராட்டி

தெய்வத்துக்கரசு நம்பிக்குக் குமரி.

பூமிமாதிலகம்

பவணமாதேவன் நகர்,

பூமியின் சீதோஷண வேறுபாடுகள்

பூமி (5) மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) உத்தர சீதமண்டலம், (2) உத்தர சம சீதோஷ்ண மண்டலம், (3) உஷ்ண மண்டலம், (4) தக்ஷிணசமசீதோஷ்ண மண்டலம், (5) தக்ஷிண சீதமண்டலம். இவை வடபாகத்திலும் தென்பாகத்திலும் அதி குளிர்ச்சியாகவும், அதன்மேல், கீழ் (2) பாகத்திலும் சீதோஷ்ண சமமாகவும், நடுவில் அதி உஷ்ணமாகவும் உள்ள பூபாகம்கள். (பூகோ.)

பூமியின் பல பிரிவுகள்

கண்டம்: இது பெரிய பூபாகம், தேசம்: கண்டங்களிலடங்ககிய பூபாகம். தீவு: நான்கு பக்கங்களிலும் நீர் சூழ்ந்த நிலப்பிரிவு. தீபகற்பம்: மூன்று பக்கங்களில் நீர்சூழ்ந்த நிலப்பிரிவு. பூசந்தி: பெரிய இரண்டு பூபாகங்களை யொன்று சேர்க்கும் நிலப்பிரிவு. முனை: கடலிற் சென்றிருக்கும் பூபாகத்தின் குறுகிய பாகம், பீடபூமி; கடலுக்கு மேலுயர்ந்துள்ள பூபாகம். மலை: பூமியில் கரடு முரடாய் உயர்ந்து கற்களும் மரங்களும் நிறைந்தது. குன்று: மலையிற் சற்றுக் குறைந்தது. கணவாய்: இரண்டு மலைகளுக்கு நடுவிற் செல்லுமிடம்.

பூம்பாவையார்

சிவநேசர் குமரி. திருஞானசம்பந்தரைக் காண்க.

பூரணகுண்டலன்

இவன் ஆருணியரசனுடைய அமைச்சன், உதயண னோடு போர் செய்தற்கு அவன் புறப்பட்டபோது நிமித்தம் நன்றாக இல்லாமையால் “நாம் திரும்பி ஊர் செல்லுதல் நலம்” என்று அவனுக்கு புத்தி கூறியவன் (பெ. கதை)

பூரணசேநன்

கட்டியங்காரனுக்குப் படைத்தலைவன்.

பூரணபத்திரன்

1, ஒரு சிவகணத்தவன். 2. அரிகேசனுக்குத் தந்தை. அரிகேசனைக் காண்க.

பூரணவருணன்

மகததேசாதிபதி. பௌத்தன். இவன் கயாவிலிருந்த போதிவிருக்ஷத்தைச் சசாங்கன் வெட்டினானெனக் கேள்வியுற்றுத் துக்கமடைந்து ஒருவாறு தேறி ஆயிரம் கன்றாக்களைக் கொண்டு அவற்றின் பால்கொண்டு மரத்திற்குச் சொரிந்தனன். அதனால் அம்மரம் ஒரிரவில் 7 முழம் வளரக்கண்டு ஆகந்தமடைந்தனன். அதற்கு இவ்வகை இடுக்கண் நேராவகை மதில் செய்வித்தோன் இவனே.

பூரணவித்து

பதிரிகாச்சிரமத்தில் இருந்த முனிவன்.

பூரணாநாமன்

திருதராட்டிரன் குமரன்.

பூரணை

அரிகரபுத்திரன் தேவி.

பூரணையன்

இவன் ஐதராலிடிப்புக்களின் மந்திரி. இவனது தாய் தந்தையர் மைசூர் வாசிகள். இவர்கள் புத்திரப் பேறிலாது இராமேசுர யாத்திரை செய்து வருகையில் வழியில் தென்னாட்டுக் குஞ்சமேட்டுப் பிராமணர் இவர்களைத் தம் ஊரில் இருக்கச் செய்ய அவ்விடம் இவன் பிறந்தான். இவன் கும்பகோணத்தில் வாசித்து வல்லவனாய்த் தம்மூர் போய் ஐதருக்கு மந்திரியாயினன். (தென் ஆர்காடு கெஜடியர்.)

பூரான்

இதற்குப் பூரம் எனப்பெயர். இது சங்கிலியொத்த நீண்ட வுருவுடையது. செந்நிறமாயும், மஞ்சள் நிறமாயும் கறுத்த புள்ளியுள்ள தேகமுடையது. இதற்கு முகத்தில் கொடுக்குப்போன்ற இரண்டு கொம்பு களும் வாலில் இரண்டு முள் போன்ற உறுப்பும் பல கால்களும் உண்டு. இது விஷ செந்து. உஷ்ணபிரதேசங்களில் வீடுகளின் சுவர்களிலும் வெடிப்புகளிலும் பூமியிலும் சஞ்சரிப்பது, பூச்சிசளைப் பிடித்தருந்தும்.

பூரி

1. முதனாள் பாரதயுத்தத்தில் விராடனுடன் யுத்தஞ் செய்தவன். 2. பூரிசிரவன் தம்பி. 3. சோமதத்தன் குமரன். சந்திர வர்க்கனம்சம், பூரிசிரவன் எனவும் உறுவர். 14ம் நாள் பாரதயுத்தத்தில் சாத்தசியிடம் யுத்தஞ்செய்யுங் காலத்தில் அருச்சுகனால் ஒருகை யறுப்புண்டு சாத்தகியாற் கொல்லப்பட்டவன்.

பூரிக்கோ

குறுந்தொகை தொகுத்தான்.

பூரிசிரவன்

பூரிக்கு ஒரு பெயர்.

பூரிசிரவஸு

பூரிசிரவனுக்குப் பெயர்.

பூரிசேநன்

சர்யாதி குமரன்.

பூரிச்சீலன்

சண்முக சேநாவீரன்.

பூரிதுய்மனன்

வீராய்மனைக் காண்க.

பூரிஷேணன்

1. பிரமசாவர்ணிமனுப் புத்திரன். 2. சையாதி குமரன்

பூரு

யயாதிக்குச் சன்மிஷ்டையிடம் உதித்த குமரன். இவன் தன் தந்தையாகிய யயாதியின் மூப்பைத் தான் வாங்கிக்கொண்டு இளமை கல்கித் தந்தையால் இராச்சியபட்ட மடைந்தவன். குமரன் ஜன்மஜயன் (பாகவதம்).

பூருவதேசம்

காந்தார நாட்டின் ஒரு பகுதி, இதற்கரசன் அத்திபதியென்பான். (மணிமேகலை)

பூருவோத்திரன்

அநு குமரன்,

பூரூ

அர்ச்சுனன் சாரதி.

பூர்சபத்திரம்

ஒருவித ஒலை. வங்க நாட்டார் முற்காலத்து வட நூல்களை எழுதியிருந்த ஒலை. இது இமயமலை முதலிய பிரதேசங்களிலுள்ளது.

பூர்ஜபத்ரம்

ஒருவித விருக்ஷத்தின் இலை, இதில் இருடிகள் முற் காலத்து யந்திரங்கள் எழுதி வழிபட்டனர்.

பூர்ணன்

புத்தசிஷ்யன்.

பூர்ணபத்ரன்

யக்ஷன், அரிகேசன் தந்தை.

பூர்ணபிரஞ்ஞர்

ஆகந்த திர்த்தரைக் காண்க,

பூர்ணிமா

மரூசிருஷியின் சமரர், தாய் களை. இவருக்கு விரசை, விசுவகா, தேவகுல்யா என்பவர்கள் குமரிகள்.

பூர்ணிமை

தாதைக்கு அநுபதியிடந்த குமரி

பூர்த்தகர்மங்கள்

குளம், குட்டை, கிணறு, தடாகம், தேவப்பிரதிஷ்டை, நந்தவனம் வைத்தல், முதலிய, (ஏமாத்ரி.)

பூர்வசன்மத்தோற்றம்

பூர்வ ஜன்மத்தில் பாபம் செய்தவன், ஆசாரியனுக்கு அடங்கி நடப்பனேல் ஆசாரியன் தண்டிப்பன். அவ்வாறு இலனாயின் அரசன் தண்டிப்பன். யாரும் உணராவண்ணம் பாபம் செய்யின் யமன் தண்டிக்கின்றனன், பாபம் செய்தவன் பிராயச்சித்தம் செய்யாமல் மரிப்பனேல் அவன் யமலோகத்தில் நெடுநாள் நரக வாசஞ்செய்து பின் நாய் நரி முதலிய பிறப்படைந்து பின் மானிட சன்மம் அடைந்து பூர்வசன்மத்தில் செய்த பாபத்தை யாவரும் அறியத்தக்க குறியுடையவனாவன். வார்த்தை சொல்ல வொண்ணா நெஞ்சடைப்புடையான் பொய் பேசினவன் எனவும், ஊமை, பசு விஷ யத்தில் பொய்பேசினவன் எனவும், பிறன் இல்லத்தைக் கொளுத்தின வன் எனவும், குஷ்டரோகி, பிரம்ம அத்தி செய்தவன் எனவும், புழுக் குற்ற பல்வன், கட்குடித்தவன் எனவும், புழுக்குற்ற நகம் உடையானைச் சுவர்ணம் திருடினான் எனவும், விகாரமான மேனியுடையான், குரு பத்தினியைப் புணர்ந்தான் எனவும், சண்டாள சன்மனைத் தன் சாதியில் வேறொருத்தியைப் புணர்ந்தவன் எனவும், தரித்திரனை ஒருவனுக்கும் ஒனறும் கொடாதவன் எனவம் அறிக. அசத் சூத்திரனுக்குப் புரோகிதம் செய்தவன் பன்றி சன்மம் அடைவன். கிராம புரோகிதன் கழுதை ஜன்மம் அடைகிறான். ஸ்நானம் சந்தி தேவாராதனை யின்றிப் புசிப்போன் காக்கையாகிறான். வீட்டில் மறைவிடங்களில் அன்றி வெளியில் உண்டவன் குரங்காகிறான். யாரும் அஞ்ச அதட்டிப் பேசி னவன் பூனைச் சன்மம் அடைகிறான். செடிகளைக் கொளுத்தினவன் மின்மினிச் சன்மம் அடைகிறான். பிராமணனுக்குத் தீயபதார்த்தம் கொடுத்தவனும், சூத்திர ஸ்திரீயைப் புணர்ந்த வேதியனும் வண்டி இழுக்கும் எருதாவர். வேதியனுக்குப் பழஞ்சோறு அளித்தவன் கருங்குரங்காவன், காரணமின்றி விரோதித்தவன் குருடனாய்ப் பிறக்கிறான். புஸ்தகம் திருடினவன் பிறந்து சிறிது நாள் கழித்துக் குருடனாகிறான். பிராம்மண குடும்பத்தை நசிக்கச் செய்தவன் பெறுகிற குழந்தையை இழக்கிறவனாகிறான். பசிக்கிறவற்கு அன்னம் கொடாதவன் மக்களைப் பெருதவனாகிறான். ஆடை திருடினவன் உடும்பு பிறப்பை அடைகிறான். பிறர் மரிக்க விஷங்கொடுத்தவன் பாம்பாகிறான், சந்நியாசி ஆச்சிரமம் அடைந்தவன் மனைவியைப் புணர்ந்தவன், பிசாச சன்மம் அடைகிறான். அன்னிய ஸ்திரீகளைப் புணர்ந்தவன் சிறுவயதில் இறக்கிறான். குரு பத்தினியைக் கூட விரும்பினவன் ஒணானாகிறான். தனக்குக் கீழ்ச்சாதிய பெண்ணைக் கூடினவன் செந்நாயாகிறான். குளம், கிணறு தூர்த்தவன் மீன் பிறப்பு அடைகிறான். நியாய விரோதஞ் சொன்னவன் கோட்டானாகிறான். ஏகோதிஷ்டம் உண்டவன் நாயாகிறான், தத்தாபகாரம் அடைந்தவன் நரியாகிறான், இராஜ ஸ்திரீயைப் புணர்ந்தவன் இழிபிறப்பு அடைகிறான், வேதியருக்குத் தோஷம் கற்பித்தவன் ஆமைச் சன்மம் அடைகிறான், தக்ஷிணை பெற்று ஆராதனை வேதாத் பயனம் செய்வித்தவன் சண்டாளசன்மம் அடைகிறான், கனிவிருஷங்களை வெட்டினவன் ஒரு கதியும் இல்லாதவனாகிறான், வாசனைத் திரவியங்களைத் திருடினவன் நாற்ற சரீரி ஆகிறான், பிறன் பொருள் வவ்வினான் புழுவாகிறான். (காருடம்.)

பூர்வசித்தி

அக்னியித்திரன் தேவி, இவள் பிரமனால் அனுப்பப்பட்டு அரசனுக்கு (9) குமாரைப் பெற்றுப் பிரமனையடைந்தனள்,

பூர்வதேசம்

காந்தாரநாட்டின் ஒரு பகுதி. இதற்கு அரசன் அத்திபதி. பூருவதேசம் எனவும் படும்.

பூர்வமீமாம்சகன் மதம்

நாதமாகிற சத்தமே பரப்பிரமமாய் இருக்கும். இந்தச் சத்தம் விவர்த்தன மாயையால் பஞ்சபூதத்தை யுண்டாக்கிப் பிரமாண்டத்தை ஆக்கு மெனவும், ஆத்மா அறிவள்ளவனாய் அநே கனாய் வியாபியாய்ப் புத்தியைத் தனக்குக் குணமாகவுடையனாய்ப் புத்தியைப் பொறியில் உய்த்து விஷயங்களை அறிபவிக்கும் பொருட்டுப் பூதத்தைப் புத்தி முதலான தத்துவங்களாகவும் தூலசூக்கும தேகங்களாகவும் கொண்டு நல்வினை தீவினைக் கீடாக நரக சுவர்க்கங்களை அநுபவிப்பதாய் இருப்பனென்றும், உடலையும் சுக துக்கங்களையும் கொடுப்பது கன்மம் அல்லாமல் வேறொரு தெய்வம் கொடுக்கிற தில்லையென்றும், ஞானத்தால் வீடு இல்லையென்றும், வினைநீங்கா எனவும் பசுப்படுத்து யாகஞ்செய்து அந்த யாகத்தினால் உண்டான பலன்களைச் சுவர்க்கத்தில் அனுபவித்து அந்தப் பலன் நசித்துத் திரும்பிப் பூமியில் பிறப்பன் எனவும், சுருதி மந்திரங்களால் ஜபம் பண்ணினால் கருதிய பலன்களைக் கொடுக்குமென்றும், இவற்றால் ஆத்மா பந்தப்பட்டு நிற்பன் எனவும் கூறுவர் இம்மாதத்தில் சைமினி, சூத்திரம் செய்தவர். (தத்துவநிஜா நுபோகசாரம்.)

பூர்வாகமம்

சைநாகமத்துள் ஒன்று.

பூர்வான்னாதி

பகலளவை (3) கூறாக்கிப் பூர்வான்னம், மத்தியான்னம், அபரான்னம் என்பர். பூர்வான்னத்தில் தெய்வ காரியமும், மத்தியான்னத்தில் மனுஷ்ய காரியமும், அபரான்னத்தில் பிதுர்கர்மமும், காது குத்தலும் செய்யப்படும். (விதானமாலை.)

பூர்வாலயன்

ஒரு வேதியன். ஆனந்த தீர்த்தர் குழந்தையா யிருக்கையில் பாற்பசு கொடுத்தவன்.

பூலிங்கபுக்ஷி

இது இமவத் பார்சவத்தி லிருப்பது. சிங்கத்துடன் நட்புக்கொண்டு அதன் பற்களில் ஒட்டியிருக்கும் மாமிசத்தைத் தின்று ஜீவிப்பது. இது, எப்போதும் தர்மவிருத்தமாகப் பேசுவது, தான் சாகசம் செய்யக் கூடாதெனப் பிறருக்குப் போதித்துத் தான் சாகசஞ்செய்வது. சிசுபாலன், பீஷ்மனை இப்புக்கு உவமித்தான் (பார சபா)

பூலுசன்

ஒரு இருடி, சாமவேதி, இவன் சந்ததியான் சத்திய ஜநயன்.

பூழிநாடு

கள்ளிக்கோடு.

பூவரணியன்

இலை வாணியன். அரசகன்னியைப் புணரப் பிறந்தவன்

பூவாடைக்காரி

குடும்பத்தில் சுமங்கலிக ளாயிறந்த பெண்கள் பொருட்டு ஆடை வைத்துப் பூசிக்கப்படும் தெய்வம் (உல வழ.)

பூவாரகமூர்த்தி

ஊழி காலத்துப் பூமிவெள்ளத்தால் அழுந்த வராகமாய்த் தாங்கி நிறுத்திய விஷ்ணுமூர்த்தி.

பூவை கலியாணசுந்தர முதலியார்

திருவான்மியூர் புராணம் இயற்றியவர்.

பூவைநிலை

ஆனிரையைக் காத்த மாயவன். திருவுருவோடு உவமித்துக் காட்டித் தலரும் காயம் பூவைப் புகழ்ந்தது. (பு வெ~பாடாண்.)

பூஷா

ஒரு சூரியன். தக்ஷயாகத்தில் பற்கள் பறியுண்டவன், காச்யபருக்கு அதிதியிடம் உதித்தவன்.