அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
புகலர்

ஒரு இருடி.

புகழனார்

அப்பர் சுவாமிகளுக்குத் தந்தையார். இவர் தேவியார் மாதினியார்.

புகழாப் புகழ்ச்சி

இது பழித்தாற் போலும் பாகு பாட்டால் ஒன்றற்கு மேம் பாடு தோன்றவுரைப்பது. இதனை வஞ்சப் புகழ்ச்சியணியெனவும் வியாஜஸ்து தியலங்கார மெனவுங் கூறும். (தண்டி.)

புகழேந்திப்புலவர்

இவர் தொண்டை நாட்டுக் களந்தைப்பதியாகிய பொன் விளைந்த களத்தூரிற் பிறந்தவர். இதனை “மாலார்களந்தைப் புகழேந்தியும் தொண்டைமண்டலமே” எ.ம், ஐயன் களந்தைப் புகழேந்தி எ.ம், காரார் களந்தைப் புகழேந்தி எனவுங் கூறிய தனானும் அறிக. இவரை முதலில் ஆதரித்தவன் முரணை நகர்க்கதிபனாகிய சந்திரன் சுவாக்கியெனுஞ் சிற்றரசன். இவ்வரச்னைப் புலவர் தாம்பாடிய நளவெண்பாவில் பலமுறை புகழ்ந்திருக்கின்றனர். இம்முரணை நகர் உறையூர்ப் புறத்துமள்ளுவ நாட்டின் கண்ணது. இவர் செஞ்சியர் கோனாகிய காடவர் தலைவன் சொற்றந்தையைப் புகழ்ந்து ஓர் கலம்பகம் பாடினார் என காரார்களந்தை யெனும் தொண்டை மண்டல சதகத்தாலும், இவர் அக்கலம்பகத்து “நையும்படியே நங்கொற்ற நங்கோன் செஞ்சிவரைமீதே, யையம் பெறு நுண்ணிடை மடவாய கிலின் நூபமுகி லன்று, பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது, வையம் பெறினும் பொய்யுரைக்கமாட்டார் தொண்டை நாட்டாரே” என்பதாற் றெரிகிறது. இவர் இதற்குப் பிறகு பாண்டி மண்டலமடைந்து அப்பாண்டியன் சமத்தானத்து வித்வானயமர்ந்து பாண்டியனிடத்து விக்ரமசோழனுக்குப் பெண்கேட்கவந்த ஒட்டக்கூத்தர் சோழனைச் சிறப்பித்து “கோரத்துக் கொப்போ” எனப்பாடக் கேட்டு இவர் “ஒரு முனிவனேரியிலோ வுரைதெரித்த தம்மானே, ஒப்பரிய திருவிளையாட் டுறந் தையிலோ வம்மானே, திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானே, சிவன் முடியி லேறுவதுஞ் செங்கதிரோ வம்மானே, கரையெதிரல் காவிரி யோவையையோ வம்மானே, கடிப்பகைக்குத் தாதகி யங் கண்ணியோ வம்மானே, பரவைபணிந் ததுஞ் சோழன் பதந்தனையோ வம்மானே பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே” என்ற பாடலைக் கூறினர் அதைக்கேட்ட கூத்தர், பின்னும் சோழனைப் புகழவேண்டி “வெற்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான் என்று முதுகித் கிடான் கவசம் துன்றும்”, எனக்கூறிச் சற்று ஆலோசிக்கையில் புகழேந்தியார் “வெறியார் தொடைகமழு மீனவர் கோன் கைவேல் எறியான் புறங்கொடுக்கினென்று” எனக் கூறி முடித்தனர். தாம் கூறியவற்றிற்கு மாறாகக் கூறிய புகழேந்தியார்மீது ஒட்டக்கூத்தர்க்குப் பகைமை யுண்டாயிற்று. பின்னர் பாண்டியன் பெண் கொடுக்கச் சம்மதித்த படியால் சோழன் தன் சமத்தான வித்வானை இரா ஜகாரியத்தி லிருத்தி மனத்தின் பொருட்டு மதுரைக்குச் சென்று பாண்டியன் புத்திரியை மணந்தனன். பாண்டியன் தன் குமரிக்குக் கொடுத்த சீதனப்பொருள்களுள் ஒருவராகப் புகழேந்திப் புலவரையும் கொடுத்தனன். சோழன் அச்சீதனப் பொருள்களை முன்னதாக அனுப்புகையில் புகழேந்திப்புலவரையும் முன்னம் அனுப்பினன். சோணாவெந்த புகழேந்திப் புலவரை ஒட்டக்கூத்தர் கண்டு முன்பு தம்மை அவமதித்ததை மனங்கொண்டு சிறையிலிட்டனர். சிறையி லிருந்து புகழேந்தியார் சிறைச்சோறு வேண்டாது அச்சிறையின் சாளர வழியாக அந்நாட்டுப் பெண்கள் தண்ணீர்க்குச் செல்வது நோக்கி அவர்கள் காதுக்கினிமையாய்ச் செம்பாகமாக மகாபாரதக்கதைகளிற் சிலவற்றை அல்லி அரசிமாலை முதலியவாகப் பாடிவந்தனர். இக்கதைகளைக் கேட்கும் பெண்கள் நாடோறும் கொடுக்கும் அரிசி காய்கறிகளைத் தாம் சமைத்துண்டு மிகுதியைக் காவற் சேவகர்களுக்குக் கொடுத்து வருவர். சேவகர்களும் இவரிடத்து அன்பு மிகுந்து வந்தனர். சோழன் கல்யாணம் முடிந்து மனைவி யுடன் நகரமணுகி ஒரு நாள் யானை மீது பவனி வந்தனன். அச்சிறப்பைக் காணுமாறு சிறைச் சாலைமீது நிற்கும் புகழேந்தியாரைக் கூத்தர்க்குக் காட்டி இப்புலவர் சிறந்தவரன்றோ என் வினவுகையில் கூத்தர் “மானிற்குமோ” என்னும் கவிகூறப் புகழேந்திப்புலவர், சோழனை நோக்கி அக்கவியை வெட்டிப் பாடவோ அல்லது ஒட்டிப்பாடவோ வென்னச் சோழன் கூத்தரிடம் வைத்த அபிமானத்தால் ஒட்டிப் பாடுக என்ன, புலவர் “மானவனானந் தவாளரி வேங்கையும் வற்றிச்செத்த, கானவனானந்த வெரியுந்தழலுல் கனை கடலின், மீன வனானந்த வெங்கட் சுறவமும் வீசுபனி, தானவனானக் கதிரோனு தய முந்தார் மன்னனே” எனப்பாடியும், சோழன் ஒட்டக் கூந்தரிடம் வைத்த அபிமானத்தால் சிறை மீட்கிலன். ஒட்டக்கூத்தப் புலவன் சோழனிடம் பரிசுபெறவரும் புலவர்களில் தாம் கேட்ட வினாக்களுக்கு விடைதராதவர்க ளைச் சிறையிலிட்டுவைத்து நவராத்திரியிற் காளிக்குப் பலியிடுதல் வழக்கம், புகழேந்திப்புலவர் அவ்வாறு அடைபட்ட புலவர்களிற் சிலரை ஆராய்ந் தெடுத்து அவர்களைக் கல்வியில் வல்லவராக்கிக் கூத்தர், சமத்தானத்தி விவர்களை வருவித்தபோது தம்மால் தேற்றுவிக்கப்பட்ட குயவன், அம்பட்டன், கருமான், தச்சன், தட்டான், வேளாளன் ஆகிய இவர்களை அனுப்பினர் ஒவ்வொருவரும் அரசன் கொலுமுன் சென்று கூத்தரை அவமதித்து வந்தனர். இது புகழேந்தியால் வந்ததென்றறிந்த ஒட்டக்கூத்தர் அப்புலவர்க்குத் தக்க பரிசளிப்பித்து அனுப்பினர். இச்செய்தி யுணர்ந்த அரசன் தேவி புகழேந்திப்புலவரை அரசன் சிறையினின்று விடுதலை செய்யாமை யுணர்ந்து அரசன் பள்ளியறைக்கு வருகையில் வாயிற் கதவடைத்துத் தாழிட்டுக் கொண்டனள். தான் பற்பல இனிய மொழிகள் கூறியும் திறவாமையால் அரசர்கள் தங்களுக்கும் தங்கள் மனைவியருக்கும் பாடல் நிகழுகையில் அவ்வூடலைப் புலவர்களைக் கொண்டு தீர்த்துக் கொள்ளு தல்போல் அரசன் ஒட்டக்கூத்தரை ஊடலைத் தீர்க்க அனுப்பக் கூத்தர் சென்று “நானேயினி” என்னுங் கவிகூறித் திறக்க வேண்ட அரசி ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாளென மற்றொரு தாழிட்டனள். இது புகழேந்தியைச் சிறையிலிட்டதால் வந்ததென வுணர்ந்த அரசன் புகழேந்தி யாரைச் சிறையினின்று நீக்கித் துனி தீர்க்க அனுப்ப, அவர் சென்று “இழையொன் றிரண்டு வகிர்செய்த வற்றொன்றிணையுமிடை, குழையொன் றிரண்டுகட் கொம்பனையாய் கொண்டகோபந் தவிர், மழை யொன்றிரண் டுகை மானா பரணன், நின் வாயில் வந்தால், பிழை யொன்றிரண்டு பொறுப்பதன்றோ கடன் பேதையர்க்கே. ” எ.ம், “தீபங்கமழும் பைங்கோதையன் விக்ரமசோழன் மன்னர், தீபன் புறங்கடைவந்து நின்றானின்றிருப் புருவச், சாபங் குனியவிழி சிவப்பத்தலை சாய்த்து நின்ற, கோபந் தணியன்னமே யெளிதோநங் குடிப்பிறப்பே. ” எனவும் கூற இக்கவியைக் கேட்டதும் அரசபத்தினி ஊடல்நீங்கினள். அதுமுதல் சோழன் புலவரைச் சமத்தானத்துப் பெருமையாகவே வைத்து ஆதரித்து வந்தனன், இவர் மூரணைநகர் சந்திரன் சுவர்க்கி வேண்டு கோளால் நளவெண்பா முடித்து அதனைப் புலவர் முன்பு அரங்கேற்றுகையில் “மல்லிகையே வெண்சங்கா” எனும் வெண்பாவில் ஒட்டக்கூத்தர் மல்லிகை சங்காகவும் வண்டுகளைச் சங்கநாதஞ் செய்வோனாகவும் கூறக்கேட்டுச் சங்கை ஊதுவோன் சங்கின் புறத்தூதுதலே வழக்கமன்றி மேற்புறத் தூதல் வழக்கமன்று. அவ்வாறு வண்டு தாதுமேற் புறத்தூதல் குற்றமெனப், புலவர் கள்ளுண்டு களித்தான் மயக்கால் அடிப்புற மேற்புற மறியானாதலின் மதுவுண்ட மதுகரங்கள் அவ்வகை ஊதினவெனவும், செப்பிளங் கொங்கைமீர்” என்ற செய்யுளில் திங்கட்சுடர்பட்டுக் கொப்புளங் கொண்டவான்” என்றதைக் கொப்புள மாயின் அதில் சீநீர் வடிதலுண்டோ வென்ன, ஆம் அதில் சீவடிதல் இல்லை சிலைநீர் வடிதலுண்டென்று அது பனிநீர் எனவுஞ் சமர்த்தித்துப் பிரசங்க முடித்தனர். ஒருநாள் ஒளவையார் இருவரையும் நோக்கி மும்மதிவரும் வகை ஒருகவி பாடக் கூறியதற்கு பங்கப்பழனத்துழு முழவர் பலவின் கனியைப் பறித்ததென்று, சங்கிட்டெறியக் குரங்கிளநீர் தனைக் கொண்டெறியுந் தமிழ்நாடா, கொங்கைக்கமரா பதிய ளித்த கோவே ராஜகுலதிலகா, வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்த பிறைக்கும் விழிவேலே” எனக்கூறியிருந்தனர். ஒளவையார் இவ்விருவர் அறிவின் நுட்பத்தை அறிவிக்க வேண்டிச் சமிஞ்ஞையாகச் சில குறிப்புகள் காட்டக் கூத்தர் “இவ்வளவு கண்ணினாள் ” என்று தொடங்கி முடித்தனர். புகழேந்தியார் “ஐயமிடு மினற நெறியைக் கைப்பிடிமின், இவ்வள வேயாயினு நீரிட்டுண்மின் தெய்வம், ஒருவனே யென்றுள்ளுணர வல்லீரேல், அருவினை களைந்துமறும் என்றனர். இவர் ஒட்டக்கூத்தர் தம்மீது வயிரங் கொண்டி ருத்தலை எண்ணி அவரைக் கொல்ல ஒளித்திருக்கும் ஒருநாள், கூத்தர் நளவெண்பாவின் செய்யுளருமை எண்ணிக் கொண்டிருக்கையில் ஒட்டக்கூத்தரின் தேவிபோ ஜனவேளை கடத்தல் எண்ணிப் போஜனத்திற்கு வந்து அழைக்கக் கூத்தர் மறுத்தது கண்டு சீனிகலந்த பால் கொண்டுவரு வேன் எனக் கூத்தர் புகழேந்தியின் வெண்பாவைப் பாலிற்பிழிந்து கொண்டுவரினும் உண்ணே னென்றதை அவ்விடம் கூத்தரைக் கொன்று பழி தீர்த்துக்கொள்ள வந்திருந்த புகழேந்தியார் கேட்டுப் பொருக்கென வெளிப்பட்டுப் பகைவிட்டு அன்பு பாராட்டி யிருந்தனர். இதனைக் கேட்ட சோழனும், அன்புபாராட்டி யிருந்தனன். இவ்விருவருடன் அரசன் ஒருநாள் திருநெய்த்தானஞ் சேவிக்கச் சென்று இருவரையும் பாடக் கூறக் கூத்தர் ”விக்காவுக்கா” எனப் பாடி முடித்தனர். புகழேந்தியார் தற்சோலிப்பூ சற்பாசத்தே, தப்பாமற் சாகைக்கே நிற்பீர், முற்கோலிக்கோ விப்பாவித்தே முட்டாமற் பூசித்தே நிற்பீர், வற்றாநெட் டோடைப் பாரைச் சேல்மைப்பூகத் தேறித் தாவிப் போய், நெற்ற வற்றாலைப் பாகிற்சேர் நெய்த்தானத்தானைச் சேவித்தே” எனப் பாடினர். மற்றொருநாள் திருக்குறுங்குடிப் பெருமாளைப் பாடக் கூறக்கூத்தர் பதிக்குளெட்டுக்கய மெனப் பாடினர். புகழேந்தியார் ‘எட்டெழுத்தைக் கருத்திற் குறித்திட்டு நித்தம் பாவும், சிட்டர்கட்குத் திருப்பொற் பதத்தைச் சிறக்கத் தருமவ், வட்ட நெட்டைப் பணித்தற்ப நித்தற்கிடம் வாரிசப்பொ, குட்டினத்துக் குலந்தத்தி முத்தீனுங் குறுங்குடியே” என்று பாடினர். இராஜா துலாபுருட தானஞ் செய்தபோது பாடியது. “பொருந்தவொரு தட்டுமேருப் புகினு, மிருந்த திருத்தட் டெழா தாற் றிருந்து, மறைபுக்க சொல்லபயா வன்புறவுக்காக, நிறைபுக்க தெவ்வாறு நீ” எ.ம், புகழேந்தியார் சூதிற்றேவியை உயர்த்திப் பாடியது “பழியும் புகழுமெவர்க்கு முண்டாமிந்தப் பாரிலுனக், கழியுஞ்சிலையுங் கயலுமென் சோவகளங்கதுங்க, மொழியும் பொழுதெங்கள் பெண் சக்ரவர்த்தி முகத்திரண்டு, விழியும் புருவமுமாகி யிப்போதுன்னை வெல்கின் றனவே” எ.ம், இவர் ஒரு சமயத்தில் “தென்னவன் றென்னர் பெரு மான்றிறன் மதுரை, மன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் பொன்னி நாடா லிக்கும் வேந்தா மபயகுலன் மகளிர், தாலிக்கு மொன்றே தளை’ எனப்பாடினர். மற்றொரு சமயத்தில் சத்தம் பயிலும் புலவோர் கதலித்தண்டோட்டம் புகும், பித்தனிவனென் பாரென்னைக் கண்டார் பெருத்துப் பணைத்துத், தத்தம் பிறகிடும் பார்வேந்தர் தங்கட்டமகுட, சத்தமசத்தமாகுங் கொல்யானைச் சயதுங்கனே’ என இவ்வாறு பல சமயங்களில் தனித்தனிக்கவிதைகள் பாடிச் சோழனாட்டிலிருந்து காலங் கழித்தனர். இவர் செய்த நூல்கள் நளவெண்பா, கொற்றந்தைக் கலம்பகம், உபமான சங்கிரகம் என்ப. ‘நானே யினிச்சொல்லி வேண்டுவ தில்லை நளினமலர்த, தேனேகபாடந் திறந்து விடாய்ச்செம் பொன் மாரிபொழி, மானேர பயனிரவி குலோத்துங்கன் வாசல்வங்தால், தானே திறக்கு நின்கைம்மலராகிய தாமரையே சார்வபௌம பாண்டிய நுண்டி நிமித்தமாகக் கோபித்து ஆரியசேகரன் வாசலிலேயும் இந்தக் குறும்பு செல்லுமோ எனப் பாடியது. கவியரசர் தாமுனிவு கொண்டாற் புகழ்கொள், புவியரசர் சீரார் பொறுப்பர் கவியரசர், உன்னால் முனியிலவர் பொறா ரோதுமவர்க், கெந்நாடுஞ் செல்லாததில், ஆரியசேகர னிடத்திற் போயிருந்து புத்தசமயத்தின் கடகம்யானை வாங்கி மீண்டு மதுரையில் வந்து பாண்டியன் வரிசையளிப்ப இருந்த பின் ஆரியசேகரன் பட்டானென்று கேட்ட போது பாடியகவி. “அ ஆவிதியோ வடலாரியர் கோமான், எ ஏவலராலிழிந்த நாள் ஒ. ஒ, தருக்கண்ணிலுங் குளிர்ந்த தண்ணளிதந்தாண்ட திருக்கண்ணிலுஞ் சுடு மோதீ கதிர்காமத்து வேலர்முன் பாம்பை மயில்விடப் பாடியது தாயரவை முன் வருத்துஞ் சந்திரோதந் தனக்குள், வாயரவை விட்டுவிடமாட்டாயோ தீயாவைச் சிறுமயிற் பெருமாள் தென் கதிர்காமப் பெருமாள், ஏறு மயிற் பெருமாளே,” இராஜாவைப்பாடாமல் ஓடக்காரனைப் பாடியது. “கயக்காவிநானுங்கொழும்பிற் பிரசண்டா, கரரோர் கொடைச்செங்கை யீரரோ தன்மைந்தா; இயக்காநின்மார்பிற் செழும் புன்னையந்தார், இப்போது நீ நல்கினென் பேதை தன் மேல், சயக்காமவேளம் புதை யாது முத்தின், தாமஞ்சுடா சந்தன பூசினாலும், தியக்காதுவேயுஞ் செவிக்கும், பொறுக்கும், தீயென்று மூளாது திங்கட் கொழுந்தே. ” பாண்டியன் வாசலில் வந்து அவன் புறப்படவில்லை யென்று பழியாகப் பாதி பாடி, அவன் வந்து வணங்கப் புகழாகப் பாதி பாடியது. “எண்ணீர் மை நூலுக் ககத்தியனாமிவ னென்ப தெல்லாம், வெண்ணீர்மை யன்றிவிரகல்ல விக்ரம மாறன் செஞ்சொல், பண்ணீர்மைதேனும் பராக ரமமாறன் பதங்கழுவும், தண்ணீர் குடித்தல்லவோ கும்பயோனி தமிழ் கற்றதே. ” ஆரியசேகரன் ஆனையின் மேல் ஆயிரம் பொன்னும் வரவிட அந்த யானையைப் பாண்டியன் வந்து கேட்கப் பாடியது பாவலன் வாசவில் வந்திபம் வாங்கப்பு படிபுரக்கும், காவலர் நிற்கும்படி வைத்தவர் கண்டியொன்பதினும், மேவலர் மார்பினும் திண்டோளினும் செம்பொன் மேருவினும், சேவெழுதும் பெருமாள் சிங்கை யாரிய சேகரனே சித்திரத்தனு. மனைப் பாடியது. ‘புராதனமெண்ணுவா கவிப் புலவீரிந்த புன்குரங்கு, மராவனம் விட்டிங்கு வந்ததென்னோ வந்தவாறு சொல்வேன், தராதலமெண்ணுந் தமிழ் மாரனையு மித்தம்பியையும், இராகவனென்று மிலக் குவனென்று மிங்கெய்தியதே. ” வேம்பத் தூரார் சமுத்தி சொல்லப் பாடியது. இந்து நுதலழகோ ரகுராமாவிவட்குக், கொந்து முடிமுகிலோ கோவிந்தா. வெந்தி நில்சேர், வேலோவிழி யிரண்டும் வேங்கடவாணாவயிறும், ஆலிலையோ நாராயணா.

புகழ்ச்சோழநாயனார்

சூரியவம்சத்தில் சோழர்குலத்தில் திருஅவதரித்துச் சிவபக்தி மிகுந்தவராய்ச் சகல அரசரும் தமக்குத் திறைகொடுக்க வாழ்ந்திருக்கையில் அதிகன் என்ற மலைநாட்டரசன் தமக்கு அடங்காதிருக் கிறான் என்று மந்திரியால் அறிந்து அவனை அடக்கும்படி சேனைகளை அனுப்ப அச்சேனை வீரர் பகைவரை வென்று அவர்கள் தலைகளில் சிலவற்றைக் கொண்டுவந்து அரசன் முன் வைத்தனர். அரசன் அத்தலைகளில் ஒன்றில் ஒருசடை இருக்கக்கண்டு நான் சிவனடியார்க்கு அபராதியானேன் என்று அத்தலையைத் தாம்பாளத்தில் எந்தித் தீவலம்வந்து ஸ்ரீபஞ்சாக்ஷரத் தியானத்துடன் தீப்புகுந்து முத்திபெற்றவர். இவர் பல அரசரைவென்று தமது புலிக்கொடியை மேருவில் நாட்டியவர். (பெ~புராணம்.)

புகழ்த்துணை நாயனார்

இவர் செருவிலி புத்தூரிலிருந்த சிவமறையவர் குலச்சிரேட்டர். இவர் நாடோறும் விடாது சரார்த்த பூசை சிவபெருமான் சந்நிதியில் நடத்தி வருகையில் பஞ்சகாலம் வரப்பஞ்சத்தால் இளைத்தவராய்ச் சக்தியற்று அபிஷேகஞ் செய்யப்புகுந்த அபிஷேக்கலயத்தைச் சிவபெருமான் திருமுடியில் கைசோர்ந்து நழுகவிட்டு நடுங்கி மூர்ச்சித்து விழுந்தனர். சிவபெருமான் இவர்க்கு அவ்விட நேர்ந்த சிறு நித்திரையிற்றோன்றி அன்ப இப்பஞ்சம் நீங்கும் வரையில் நாடோறும் பீடத்தடியில் ஒரு பொன்காசு வைப்போமெடுத் துக் கவலையொழிகவென அவ்வாறே பெற்றுச் சிவபூஜை விடாது செய்து முத்தி பெற்றவர். (பெ. புரா.)

புகழ்ந்தனர் பரவல்

இன்னதொரு பதத்தைக் கிட்டுவோமாகப் பெரிய பூமியிடத்து யாங்களெனச் சொல்லிக் கிட்டுதற்கரிய தெய்வத்தின் கட்டும் வீரக்கழலையுடைய பாதங்களைப் பணிந்தது (பு. வெ. படாண்.)

புகழ்பொருளுவமையணி

அஃதாவது, இரண்டு வாக்கியங்களுள் முன்னதிலும் மானமாகச் சொல்லப்பட்டதைப் பின்னதிலுபமேயமாக்கியும், உபமேயமாகச் சொல்லப்பட்டதை உபமானமாக்கியுஞ் சொல்லுதல். இதனை வடநூலார் உபமேயோப மாலங்கார மென்பர்; தண்டியாசிரியர் இதரவிதர மென்பர்.

புகழ்விப்பிவர்கண்டன்

பாணவம்சத்திற் பிறந்த ஒரு அரசன். இவன் முதலாம் விக்ரமார்க்கனுடைய புத்ரன். இவனுக்கு இரண்டாம் விஜயாதித்தன் என்று பெயருண்டு.

புகார்

காவிரிப்பூம்பட்டினம். இது கடல் கொண்டது, (சிலப்பதிகாரம்.)

புகை

இது, தீக்கு அறிகுறியாய் அது கொண்ட பொருளிடம் உண்டாகும் பொருள்,

புகைக்கப்பல்

நீராவி யந்திரசக்தியால் இலைபோன்ற சக்கிரங்கள் நீரைத் தள்ளிக் கொண்டு செல்லும் கப்பல். இது காற்றில்லாமலே செல்லும் வன்மையுள்ளது. ஒரு பெரிய கப்பல் அகன்ற பத்தடுக்குகளைப் பெற்று இருக்கும். மேல் மூன்று அடுக்குகளில் கப்பற்குரியவர்களும் வேலையாட் களுமிருப்பர். அடியில் சாமான்களின் கிடங்குகளிருக்கும், நடுவில் மனிதர்க்கு சௌக்யமான வீடுகள் போன்ற இருக்கை கொண்டிருப்பது.

புகைக்கூடு

வெப்பவாயுவால் நிரப்பப் பட்டபட்டுப்பை. இயற்கையான வாயுவினு இலேசாக இருத்தலால் இது ஆகாயக்கப் பலாய் ஆகாயத்தில் செல்லுகிறது. இதற்குள் பை ஒன்று உண்டு.

புகைக்கூண்டு

இது ஒரு பெரும்பட்டுப் பை. முழுதும் பின்னற்கயிறால் மூடப்பட்டு புகையால் நிரப்பப்பட்டது. ஆவி காற்றிலும் லேசானதால் அது ஆகாயத்தில் எளிதில் மனிதரையும் சுமந்து செல்லும்,

புகையிலை

1. இது ஒருவிதச் சிறுசெடி. இது (3, 4) அடி உயரம், இலைகள் ஒன்றரை அங்குல நீளமும் (7, 8) அங்குல அகலமும் இருக்கும். இதனிலையே முக்கியமானது இந்தச் செடிகளினிலைகள் முதிர்ந்தமினிவைகளைச் செடியுடன் வெட்டி வெயிலில் (2, 3) மணிநேரம் வைத்து வதங்கியபின் (2,3) செடிகளை ஒன்றாகக்கோத்து நிழலில் உலர்த்துவார்கள். இவை 1 மாதத்தில் நன்றாய் உலர்ந்துபோம். அவைகளை எடுத்துக்காற்று நுழையாத இடத்தில் குவி யலாகப் போட்டு வைக்கோலால் மூடுவர். இவ்வாறு (10, 12) நாட்கள் வைத்து எடுக்கின் இலைகள் கறுப்பு நிறமடைந்து மக்கியிருக்கும். இவற்றைக் கட்டாகக் கட்டுவர். இது, இந்துதேசப் பொருளன்று. இது அமெரிக்காவி லிருந்து ஐரோப்பா ஆசியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, திருசிராப்பள்ளி முதலிய ஜில்லாக்களில் பயிரிடப்படுகிறது. 2. இது காரமும் நெடியுமுள்ள மயக்கப் பொருள். இது, கோதாவரி, திரிசிராப்பள்ளி, மதுரை முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. இதனை விதைத்து நட்டுப் பயிரிட்டுருக்கும் சமயத்தில் அறுத்துக் கொத்து கொத்தாக நிழலில் உலர்த்திப் பதப்படுத்துவார்கள். இதைப் பலவகைப் பதப்படுப்பர். மூக்குத்தூள், சுருட்டுப்புகையிலை, வாய்ப்புகையிலை எனப் பலவகை உண்டு

புங்கனூர்க்கிழவன்

இவன் தஞ்சாவூர் ஜில்லா சீர்காழி தாலூகாவிலிருந்த பிரபு, இவர் ஒரு கல்யாணஞ்செய்ய அதில் உண்டவர் பலர் செரியா நோய்கண்டு கண்டை புரட்சியடைந்தார் என ஒருபுலவன் பாடக்கேட்டு மானம் பொறாது உயிர் நீத்தவன். புலவன் பாட்டு வெண்ணையும் பார்த்தன் னைகண்ணையும் பார்த்துத் தன் மெய்யிற்பட்ட, புண்ணையும் பார்த்ததிரு நெடுமால் புங்கனூர்க்கிழவன், பண்ணையுஞ் சேலுகளுந்தட நீள்கயல் டாயுநெடுந் திண்ணையுங் கண்டைபுரட்டுங் கல்யாணத்திற் சென்ற வர்க்கே. ” சோழமண்டல் சதகத்திலும் புகழப் பெற்றவர். தமிழ் நா~ச.

புசுண்டர்

1. மதுவுண்டு அன்னங்கள் இரண்டு களிக்கும்போது சிவமூர்த்தி அவற்றைப் பார்க்க அந்த அன்னங்களிடம் சிவகலை காகவுருவத்துடன் பதிந்தது. அன்னம் இருபது முட்டைகளைப் பொரித்து இருபத்தொராவது ஒருகாகத்தைப் பொரித்தது. இதுவே புசண்டர் எனப் பெயருற்றது. இப்புசுண்டர் என்னும் காகம் வசிட்டரைக்கண்டு தன் வரலாறும் சதுர்யுகத்தில் தான் கண்ட அதிசயங்களையும், தன் ஆயுளில் பலமுறை தேவர் கடல் கடைந்ததும் விஷ்ணுமூர்த்தி பலமுறை அவதரித்ததும் கூறி உம்மைப்போல் எட்டு வசிட்டர்களைக் கண்டேன் எனவும் கூறினபக்ஷி உருவாகிய இருடி, இவர் குமரர். உரோமரிஷி யென்பர். (போகர்.) 2. ஒருகாலத்துச் சிவசந்நிதியில் சத்தி கணங்கள் நடித்தனர். அச்சத்திகளின் வாகனங்களும் மதுக்களிப்பால் களித்தன. அக்காலத்தில் பிரமசத்தியின் அன்னங்கள் சண்டனென்னும் வாயசத்தைக் கூடிக்களித்திருந்து கருவடைந்தன. இதனை அறிந்த அபிராமி அவ்வன்னங்களை நீங்கித் தியானித்திருந்தனள். காலாவதியில் அன்னங்கள் கருமுதிர்ந்து காகவுருவமான புஜண்டர் முதலிய இருபத்தொரு குஞ்சுகளைப் பொரித்தன. இவ்விருப்பத்தொருவரும் பிராம்மியை யெண்ணித் தவமியற்றப் பிராமியினருளால் ஞானமடைந்து தம் பிதாவாகிய சண்டனைக் காணச் சண்டன் அலம்புதா சத்தியின் அருளால் கற்பகத்தருவில் இருக்க இருந்தனர். இக்கற்பகத்து இருக்கையில் புஜண்டர் ஒழிந்த மற்ற இருபதின்மரும் அநித்யமுணர்ந்து முத்தியடைந்தனர். புஜண்டர் தம்தேகத்துடன் கற்பகத் திருந்து வசிட்டரைக் கண்டு வார்த்தையாடுகையில் உம்மைப் போல் எட்டு வசிட்டர்களைக் கண்டேனென்றவர். (ஞான வாசிட்டம்.)

புஜகேசி

மானஸமடுவிற்குக் காவலாளி.

புஜங்கத்திராகமூர்த்தி

தாருகவனத்து இருடிகள் எவிய பாம்புகளை அச்ச முறுத்தி அப்புறப்படுத்திய சிவமூர்த்தியின் திருவுருவம்,

புஜங்கலளிதம்

கருடனுக்கு அஞ்சி அபயம்புகுந்த அரவாசினைக் களிப்பித்து அபயமளித்துத் தம்மிடமிருத்திய சிவன் திருக்கோலம்.

புஜபலன்

வங்கதேசாதிபதி. இவனிடம் சுசீலன் வந்து கண்டு விபூதி தரியாத உன்னிடம் தானம் வாங்கேனென்று நீங்கினன். நீங்கவே அரசன் செல்வம் நாடு முதலியவற்றை இழந்து மனைவியை வேடர் பிடித்துக்கொள்ள மறுதேய மடைந்து கள்ளனெனக் கையறுப்புண்டு விதர்ப்நாட்டின் தெருவில் சென்று சிறிது புண்ணியத்தால் சுசீலன் வீட்டுக்கடை சென்று பிச்சை கேட்கச் சுசீலன் கண்டு விபூதி தரியாதவன் அன்றே வெனப் பழைய நினைவுவந்து விபூதி கெட்டுப் பழையபடி குறைந்த கை பெற்று அரசடைந்தவன்.

புஞ்சன்

ஒருநாகன். கத்ரு தநயன்.

புஞ்சிகஸ்தலை

1. வருணன் பெண். 2. ஓர் அரம்பை; இவள் பாரனைக்கூடிக் கலாவதியைப் பெற்றனள்.

புடவகை

கஜபுடம் (1000) வறட்டிகள், பன்றிப்புடம். (50) வறட்டிகள், குக்கிடப்புடம் (6) வறட்டிகள், காடைப்புடம் (3) வறட்டிகளாலானவை.

புடவேதை

(6) இராசியும், (10) பாகையும் வைத்து இதில் ஆதித்யன் முதலான கிரகங்களின் புடங்களைக் கூட்டி நின்றது வேதைப் புடமாம். இவ்விடத்துச் சந்தி எனை யொழித்துக் கொள்ளப்படும். இந்த வேதைப் புடத்தை நாட்பார்க்கும்படியே பார்த்துக்கண்ட நாள், தான் கருதிய நாளாகில், அந்நாள் புடவேதை யென்று தவிரப்படும். (விதானமாலை)

புடையன்

இது நீண்ட உருவத்தையும் அழுக்குநிறத்தையும் பெற்று வாலின் முனையால் குத்தி தேகத்தில் புடைகளை உண்டாக்கும்,

புட்கரன்

1. வீமனது கதையால் இறந்த ஒரு அரக்கன், 2. நளனைச் சூதாடும்படி செய்து நாட்டைப் பறித்துக் கொண்டவன். பின்மறு சூதாடித் தான் முதலில் வென்ற நாடு முதலியவற்றை நளனுக்கு விட்டு ஓடியவன். 3. பரதன் குமரன்; இராமபிரான் கட்டளைப்படி காந்தருவநகா மாண்டவன். 4 சிவநாம சங்கீர்த்தனத்தால் முத்தியடைந்த பக்தன். 5. வருணபுத்திரன். பிரமலோசையிடம் மாலினியைப் பெற்றவன். 6. சிவன் திரேதாயுகத்தில் நந்தியம்பதியில் இருந்த புண்ணிய வேதியன். யமன் தன் கிங்கரரை நோக்கிப் புட்கலன் என்பவனைக் கொண்டு வாருங்கள் என்ன படர்கள் இவனைக் கொண்டு செல்ல யமன் படரைச் சினந்து புட்கானைக் கண்டுகளித்து அவனையும் சரித்து அவனுக்கு நரகங்களைக் காட்டினன். புட்கரன் நரகவேதனைப் படுவாரைக்கண்டு கடவுளைத் துதித்து அவர்களை மன்னிக்கக் கேட்டு யமபுர நீங்கினவன். இவன் முதல் யுகத்தில் நரகலோகம் கண்டு மீண்டவன். (மகாபுரா.)

புட்கரபாகம்

ஞாயிற்றுக்கிழமைக்கு (11) அடி, திங்கட்கிழமைக்கு (4 1/2) அடி, செவ்வாய்க்கிழமைக்கு (6) அடி, புதன்கிழமைக்கு (8) அடி, வியாழக் கிழமைக்கு (4 1/2) அடி, வெள்ளிக்கிழமைக்கு (4 1/2) அடி, சனிக்கிழமைக்கு (4 1/2) அடி மேஷத்திற்கு (21) ஆம் பாகம், இடபத்திற்கு (14) பாகம் மிதுனத்திற்கு (24) ஆம் பாகம், கர்க்கடகத்திற்கு (7) ஆம் பாகம் பின் சிங்கமுதல் (4)ம், தனு முதல் (4)ம் இவ்வடைவே புட்கரபாசமாம் இவ்வாரங்களில் கூறிய அடிகளிலும் இந்த ராசிகளில் இந்த பாகங்கள் உதிக்கும் காலங்களிலும் சுபகன்மங்கள் செய்யலாம். இவையன்றிச் சிலர் மேடத்திற்கு (7,8) ஆம் பாகைகளும், இடபத்திற்கு (5,3) ஆம் பாகைகளும், மிதுனத்திற்கு (5,8) ஆம் பாகைகளும், கர்க்கடகத்திற்கு (3,1) ஆம் பாகைகளைப் புட்காமாக கூறுவர். இப்படியே சிங்கதனுவாதி கொள்க. (விதானமாலை.)

புட்கரம்

1. ஒரு தீர்த்தம், 2. ஒரு மகாஸ்தலம்.

புட்கலாவர்த்தம்

ஒரு மேகம் பிரமன் மூச்சிற்பிறந்த மலைகளின் சிறகிற் பிறந்தது.

புட்கலை

அரிகரப்புத்திரன் தேவி.

புட்சன்

விருகனுக்குத் துருவாட்சியிடம் உதித்த குமரன்,

புட்சிபாரன்

வச்சிரன் குமரன்; பாரியர் பிரபா, தோஷா.

புட்பகந்தன்

இவன், யமபடர் கையிலகப்பட அவ்யமபடர் திருக்குற்றால வழியாக இவனை அழைத்துச் செல்லல் கூடாதெனக் கேட்டுக் குற்றாலமெனத் துதித்து முத்தியடைந்தவன்,

புட்பகம்

உதயணனுக்குரிய நகரங்களுள் ஒன்று. சேனைகளுடனிருந்து இதனைப் பாதுகாத்து வந்தவன், பிடிவீழ்ந்து இறந்தபின்பு வந்து ஓரிடத்தில் வாசவதத்தையும், உதயணனும் தனியே யிருத்தலை வயந்தகனாலறிந்த இடவகன் இந்நகரத்திருந்த சேனைகளுடன் சென்று அவர்களைச் சூழ்ந்து கொண்ட வேடர்களை அகற்றிப் பாதுகாத்து வந்தனன், உதயணனால் இடவகனுக்குக் கொடுத்த விருத்திகளுள் இந்நகரமும் ஒன்று,

புட்பகாசை

சத்தியைக் காண்க.

புட்பகை

1. சோமன் நலங்கிள்ளிக்கு ஒரு பெயர். 2. வரேணியன் தேவி.

புட்பதந்தன்

இவன் கைலையில் இருந்த கணநாதன், இவன் மாலியவான் என்னும் மற்றவனுடன் பகைத்து ஒருவரை யொருவர் யானையும் சிலம்பி யுமாகச் சபித்துத் திருவானைக்காவில் சிவபூஜைசெய்து இறந்து சுவதேவன் என்னும் சோழனுக்கும் கமலவதிக்கும் குமரனாய்ப் பிறந்து தெய்வத் தச்சனால் குறையாக விடப்பட்ட திருப்பணியை முடித்து முத்திபெற்றவன்.

புட்பதந்தமுனிவர்

இவர் யமபுரஞ்செல்ல அங்கு ஒருவன் தீப்பட்டு எரிதலைக்கண்டு அவன் சிவத்திரவியம் கவர்ந்தவன் என்று அறிந்து திருக்கைலையடைந்து சிவமூர்த்தியை அவன் மீது கருணைசெய்ய வேண் டினர். சிவமூர்த்தி முனிவரை நோக்கி அவன் மரபினர் யாரேனும் தீர்த்தயாத் திரை சென்று புண்ணியாதிகளில் நீராடின் நீங்குவன் என்றனர். அதனால் முனிவர் இவன் மரபில் பிறந்து புண்ணிய தீர்த்தமாடி அவனை நரகத்தில் இருந்து நீக்கினவர்.

புட்பதௌட்டரன்

நாகன், கத்ரு குமரன்.

புட்பமாகாண்டம்

பிரசாபதியின் நந்தவனம். (சூளா.)

புட்வாகனன்

இவன் முற்பிறப்பில் வேடன். இவன் தன் மனைவியுடன் கூடி ஒரு தடாகத்திலிருந்த தாமரை மலர்களைப் பரித்துக் காசிக்ஷேத்ரத்து விலைபகர வாங்குவோரின்மையின் ஆண்டிருந்த ஒங்காரலிங்கத்தின் மேல் இட்டபலத்தினால் இப்பெயருடன் அரசனாகப் பிறந்து சிவ பக்திமானாய்த் தவஞ்செய்து சிவபெருமான் பிரத்திய க்ஷமாய் ஒரு தாமரைமலர் தர அதிலேறிப் பல இடஞ்சஞ்சரித்துத் தன் மனைவியாகிய வேடத்தி இப்பிறப்பில் லாவண் யவதியென்னும் பெயருடன் மனைவியாக வரப்பெற்று ஆயிரம் குமாரைப் பெற்றுச் சித்தியடைந்தவன்.

புணர்ச்சி

சேர்க்கை, இது, இலக்கண நூலில் எழுத்துப்புணர்ச்சி பொருட் புணர்ச்சியென இருவகைப்படும். எழுத்துப் புணர்ச்சி பதங்கள் ஒன்றுடன் ஒன்று புணர்கையில் உண்டாம் தோன்றல் திரிதல் கெடுதலைக் கூறுவது. பொருட்புணர்ச்சியாவது பதங்கள் வேற்றுமை யாலும் அல்வழியாலும் பொருணோக்கிப் புணர்வது. நிலை மொழி வருமொழிகள் கூடுமிடத்துத் தோன்றும் எழுத்துகளின் விகாரம் எழுத்துப் புணர்ச்சி, சொற்கள் பொருணோக்கத்தால் புணர்வது பொருட்புணர்ச்சி, (நன்.)

புணர்நிலையணி

வினையாலும், பண்பாலும் இரண்டு பொருளுக்கொன்றே பொருந்தச் சொல்லுவது (இதனைச் சகோக்தியலங்கார மென்பர்.) (சண்டி.)

புண்டரநகரம்

இது வாசவதத்தையும் சாங்கியதாயும், யூகியும் வேற்று வடிவங் கொண்டு தங்கிய இடங்களுள் ஒன்று; அவர்களை கோசம்பி நகரத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணிய உருமண்ணுவா, அவர்களைக் கண்டது இந்நகரத்தேதான், (பெ. கதை)

புண்டரன்

1. பலியின் புத்திரன். இவனால் பௌண்டரநாடு உண்டாயிற்று. 2, பலியின் பாரியையாகிய சுதேஷ்னையின் புத்திரன். (பா. ஆதி.)

புண்டரம்

1, வங்காளத்துக்கு மேற்கில் உள்ள நாடு, 2. இது திரிபுண்டரம், ஊர்த்வபுண்டரம் என இருவகைப்படும். அவற்றுள் திரிபுண்டாமே விபூதியை மூன்று ரேகைகளாக நெற்றியின்கண் தரித்தலாம். இத்திரிபுண்டரம் மூன்று ரேகைகளாகத் தரித்தற்குப் பலவகைப்பட சுருதி சிவாகமங்கள் கூறும். அகர உகர மகரங்கள் சேர்ந்த மூன்று மந்திரங்களையும், முறையே அநாமிகை, மத்யமை, தர்ஜனிகளில், தியானித்துத் தரித்தல் எனக் கூறும். இவற்றிற்கு அதிதேவதை பிரமா, விஷ்ணு, ருத்ரராம். இதனை வேதியர் ஏழங்குல விஸ்தார அளவும், அரசர் ஆறு அங்குல அளவும், வைசியரும், சூத்திரரும், மூன்று அங்குல அளவும், ஸ்திரிகள் ஒரு அங்குல அளவையும் தரித்தல் வேண்டும். இது முறையே 23,16, 8, 5 ஸ்தானங்களில் தரித்தல் வேண்டும். இதனை வேதியர் அரசர் முதலியோர் தரிக்கின் இராஜவஸ்ய முதலிய சம்பத்துக்களும், மோக்ஷசம்பத்தும் உண்டாம். ஊர்த்வ புண்டரமாவது: மலையின் மேலும் நதிக்கரைகளிலும், புண்ணிய பூமியினும், சமுத்திர தீரத்தினும், புற்றுக்களிலும், துளவத்து அடியினும், கிரகித்த மண்ணினைக்கொண்டு நெற்றியினும் குறித்த வேறிடங்களிலும் ஊர்த்வமாக இருதலாம். இதில் சுவேத மிருத்திகையே விசேடம் ஊர்த்வ புண்டரங்களை இடையில் வெளி உள்ளவைகளாயும், அழுக்கில்லாத வைகளாயும் எவர்கள் தரிக்கிறார்களோ அவர்கள் அதனால் ஒரு ஆலயம் நியமிக்கின்றனர் என்று விஷ்ணு அருளிச்செய்கிறார். இதனைப் பெருவிரலால் தரிக்கின் புஷ்டியும், நடுவிரலால் தரிக்கின் ஆயுளும், தர்ச்சரியால் தரிக்கின் இச்சித்த உண்டியும், சுட்டுவிரலால் தரிக்கின் மோக்ஷ மும் உண்டாம். நகத்தால் தொடலாகாது. அதனை வர்த்தியில் பொருந்திய தீபத்தைப் போலவும், மூங்கிலின் இலையைப் போலவும், தாமரையின் அரும்பு போலவும், வெண்டாமரையின் இதழ்போலவும், மீனைப்போலவும், ஆமையைப் போலவும் தரித்தல் வேண்டும். (10) அங்குலமுள்ள ஊர்த்வ புண்டரம் உத்தமமானதாம். (9) மத்திமம். (4) அதமமாம். திரிபுண்டர் ஊர்த்தவபுண்டா ஸ்தானாதி மந்திர விசேஷங்களைச் சமயாசாரியர்கள் பால் கேட்டாறிக, ஈண்டு எழுதின் விரியும். இப்புண்டரங்களைப் பல சமயத்தினர் பலவகைப் படத் தரிக்கின்றனர். அது கால இயல்பாம்.

புண்டரீகன்

1. ஒருவேதியன். மகாபாபி, பிருகுவின் கட்டளைப்படி சகன்னாத நிவேதனம் புசித்துப் புனிதனானவன். 2. பலியின் நான்காம் புத்திரன். 3. கத்ருதநயன் நர்கன்.

புண்டரீகம்

1. திக்கானைகளில் ஒன்று. தருமகோபனுக்குச் சிலநாள் வாகனமாயிருந்து வீரவாகுதேவரால் மீட்சிபெற்றது. அக்னிதிக்கில் உள்ளது. 2. ஒரு தீர்த்தம்.

புண்டரீகருஷி

1. சிவபூசையால் முத்தி யடைந்தவன். கற்ககோத்திரத்தில் கர்த்தமன் புத்திரன், 2. இவர் யாகஞ்செய்கையில் அசுரர்யாக அவி வேண்டியவரை வருத்த ருஷி மண்டப முதலிய சிருட்டித்தும் வாத்ய கோஷங்கள் செய்தும் ஒரு பிரமசாரியையும் விதவையையும் கலந்து பேசும்படியும் செய்வித்து இருக்யையில் அசுரர் அந்த வாத்ய கோஷாதிகளிலும் பிரம்மச்சாரி விதவை சம்வாதத்திலும் மயங்கியு மிருக்கையில் ருஷிதேவர்களுக்கு அவிகொடுத்து யாகபூர்த்தி செய்தனர். இதில் அசுரர் வஞ்சிக்கப்பட்டனர். இதுவேபௌண்டாயாசம்.

புண்டரீகர்

1. ஒரு விஷ்ணுபடர். 2. ஒரு அரசவகுப்பினர். 3. நாரதரிடத் தில் விஷ்ணு தர்மங் கேட்டவேதியர்.

புண்டரீகாக்ஷதாசர்

உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி.

புண்டரீகாக்ஷன்

விஷ்ணு,

புண்டரீகாக்ஷயஜ்வர்

அநந்தசோமயாஜியார் குமரர். இவர் குமரர் அநந்தசூரிகள்.

புண்டரீகாக்ஷர்

திருக்குருகைப் பிரான் பிள்ளான் குமரர். நாதமுனிகளுக் சீடர். இவர் ஆசாரியர் கட்டளையால் வரும் புரத்தாய்ச்சியகத்திற்கு அரவிந்தப் பாவைக்குத் துணை சென்று அந்த இடத்தில் இட்ட சேடித்த நீருஞ் சோற்றையு முண்டு, ஆசாரியார் சொற்படி சேடத்தை உகப்பாயேற்றதால் உய்யக் கொண்டார் எனப் புகழ்பெற்று வங்கிபுரத்தாய்ச்சி பரிசாரகர் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்ட அருள் செய்து, ஸ்ரீராமமிச்ரர், என்னும் மணக்கால் நம்பி. திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளரையர், சேட்டலூர் செண்டலங்கார தாசர், புண்டரீகாக்ஷ தாசர், கோமடத்துத் திருவிண்ணகாப்பன் உலகப்பெருமாள் நங்கை, இவர்களுக்கு ஞானபதேசஞ் செய்து இருக்கையில், (ஆளவந்தார் மனைவி திருநாட்டுக் கெழும் தருள மணக்கால் நம்பி கிருக்கார்யத்தையும் பார்த்து வந்து உய்யக் கொண்டாரால் ததியாராதனை செய்யப்பட்டு மீண்ட அவ்வூர்ப் பெண்களுக்கு வழி சேறாக இருந்து அப்பெண்கள் மயங்குகையில் முதுகில் நடக்கும்படி செய்த நம்பியின் அற்புத செயல்களைக் கேட்டு) மணக்கால் நம்பிக்குத் திருவடி தீக்ஷை செய்து தாம் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கையில் தமக்கு நாத முனிகள் இட்ட பணியை மணக்கால் நம்பிக்கு இட்டுத் திருக்கண்ணமங்கை யாண்டான் நாய்களிரண்டு சண்டை செய்து இறக்கக் கண்ட அதற்குரியார் தம்மில் சண்டை செய்து பராக்ருதாபி மானத்தால் இறக்கக்கண்டு அப்பிராக்கிருதமாகிய திருநாட்டுக் கெழுந்தருளிய செய்தி கேட்டுத் தாமும் திருநாட்டுக் கெழுந்தருளினர். (குரு~பா.)

புண்டலீகர்

லோக தண்டமென்னும் நகரில் சந்து எனும் பெயருள்ள பாகவதர் ஒருவர் இருந்தார். அவர் சாத்தியகி யென்பாளை மணந்து புத்திரப் பேறின் மையால் பலநாள் தவஞ்செய்து ஒரு புத்திரனைப் பெற்று அவருக்குப் புண்டலீகர் என்று பெயரிட்டு வயது வந்தபின் திருமணமுடித்தனர். இப்புண்டலீகர் தாய் தந்தையரைப் பலவாறு வருத்தி வந்தனர். தாய் தந்தை யர் குமரனுக்குப் பல விதத்தில் புத்தி போதித்தும் கேளாமையால் இருமுது குரவரும் அவ்விடம் வந்த கங்காயாத்திரிகர்களுடன் காசிவசிக்கச் சென்றனர். புண்டலீகரும் தந்தை தாயர் காணத் தன் மனைவியுடன் குதிரையேறிச் சென்று காசிக்கருகில் குக்குடயோகியர் வசிக்கும் ஆச்சிரமத்தருகிற் சென்று இறங்கினர். மேற்கூறிய குக்குடர், தாய் தந்தையரே தெய்வமெனவும் அவர்களுக்குச் செய்யும் பணியே புண்ணியகேத்ர தீர்த்ததேவ தரிசனம் எனவும் கொண்டு வாழ்பவர். இவரது ஆச்சிரமத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூவரும் நாடோறும் தங்கள் பாபங்கள் நீங்க வேற்றுருக் கொண்டு பணிந்து வருவர். இப்புண்டலீகர் குக்குடாச்சிரமத்தையணுகி இன்னும் காசி எவ்வளவு தூரம் இருக்குமெனக் குக்குடர் நான் அறியேன் என்றனர். இதனைக் கேட்ட புண்டலிகர் குக்குடரைக் காசியறியாத நீர் கொண்ட பிறப்பு என்ன வென்று பரிகசித்து அவரிடமிருக்கையில் பாதியிரவில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூவரும் புலைச்சியா உருக்கொண்டு குக்குடர் வீடுவர, புண்லீகர் பேய்களென்று பயந்து பார்க்கப், புகுந்த மூவரும் குக்குடர்வீடு சுத்தஞ் செய்து மெழுகி மற்றும் பணிகளைச் செய்து ஒளி பெற்று வந்ததைக் கண்டு வியப்புற்றுப் புண்டலீகர் இந்தச் சாமவேளையில் வந்த நீங்கள் யாவர் என்று கேட்க அவர்களுள் கங்கை, மகாபாபி அப்புறம் விலகடா வென்னப் புண்டலீகர் துதித்து என் பாபத்தைப் போக்கம்மாவென வேண்டக் கங்கை கூறுவாள். நீ இச்சன்மத்தில் அதிபாதகஞ் செய்தவன் முன்னையஜன்ம புண்ணியத்தால் இக்குக்குடரையும் எங்களையும் தரிசித்தாய் என்றனள். புண்டலீகர் நீங்கள் யார் என நான் கங்கை மற்றிருவருள் ஒருத்தி சரஸ்வதி மற்றொருத்தி காளிந்தி நாங்கள் எங்களில் மூழ்குவோர் பாபங்களைக் கைக்கொண்டு ஒளியிழந்து நாடோறும் இந்தக் குக்குடருக்குப் பணிசெய்து ஒளிபெற்றுப் போகின்றோம் எனப் புண்டலீகர் கங்கையை நோக்கி இக்குக்குடர் நீங்கள் தொழத்தகுந்த அவ்வளவு புண்ணியம் என் செய்தார் எனக் கங்கை இவர் அன்னையும் பிதாவும் அன்றி வேறு தெய்வம் உண்டென்று நினையாத புண்ணியர் எனப் புண்டலீகர் பயந்து தான் செய்த தவறுகளைக் கங்கா தேவியிடம் கூறிநிற்கக் கங்கை மனதிரங்கி இனி நீ உன் தாய் தந்தையரைத் தெய்வமாகக் கொண்டு வழிபடுவையேல் உனக்குத் திருமாலருள் உண்டாம் எனக் கூறி மூவரும் நீங்கினர். பின் புண்டலீகர் குக்குடரை வணங்கித் தம் தாய்தம் தையரைத் தேடியடைந்து அவர்களுடன் தீர்த்தமாடித் தாய்தந்தையர்க்குப் பணி செய்திருந்தனர். இதுநிற்க இந்திரன், விருத்திராசுரன் தவஞ் செய்திருககையில் அவனைக் கொலை செய்த பாபத்தால் பூமியிற் கல்லாய் விழச் சபிக்கப்பட்டு வீழ்கையில் திருமாலைத் துதிக்க அவர் தரிசனம் தந்து நீ பூமியிற் புண்டலிகர் வீட்டில் கல்லாயிரு; நாம் உமது பழையவுருவைத் தருகிறோமென்றபடி தாய் தந்தையருக்கு ஏவல் புரியும் புண்டலீகர் வீட்டில் கல்லாயிருக்கும் இந்திரன் மீது கண்ணன் புண்டலீகர் காணத் தரிசனந் தந்தார். புண்டலீகர் துதிக்க உனக்கு என்ன வரம் வேண்டுமென்ன எக்காலத்தும் விட்டலன் எனும் திருகாமத்தால் ஈண்டு எழுந்தருளியிருக்கவும் பண்டரி என்னும் இத்தலச்சார்பால் பாண்டுரங்கப் பெயர் நீர் அடையவும் எல்லாத் தீர்த்தங்களும் ஈண்டுவரவும் வரமருள்க என்று பெற்றவர்.

புண்ணிபுஞ்சன்

சவுராட்டிர தேசாதிபதி, இவனுக்குப் புண்யசீலன், தருமசீலன், சுப்பிரதாபன், சத்துருபரதாபன், என நான்கு புத்திரர். இவர்கள் நால்வரும் வாசுகியின் குமரியை மணந்தனர்.

புண்ணியசிரவணம்

அழகர் மலைக்கண்ணுள்ள பொய்கை. (சிலப்பதிகாரம்.)

புண்ணியசீலன்

புண்ணியபுஞ்சன் குமரன்.

புண்ணியதமிஷ்டரன்

கத்ருகுமரன் நாகன்.

புண்ணியத்தோற்றம்

(4) கல்வி, கொடை, ஒழுக்கம், தவம்.

புண்ணியன்

தீர்க்க தவனைக் காண்க,

புண்ணியபத்திரை

யமபுரஞ் செல்லும் வழியில் உள்ள நதி; யாமிய நகரத்தருகில் உள்ளது.

புண்ணியம்

1. (9) எதிர்கொளல், பணிதல், ஆசனந்திருத்துதல், கால்கழுவல், அருச்சித்தல், தூபங்கொடுத்தல், தீபங்காட்டல், புகழ்தல், அமுதமேந்தல் முதலிய இவை துறவிகளுக்குச் செய்வன. 2. (7) நகங்கிருதி, தானம், விரதம், சிநேகம், நயபோசரும், கனம், உற்சாகம்,

புண்ணியராசன்

நாகபுரத்தரசன். பசு வயிற்றிற் பொன் முட்டையிற்றங்கிப் பிறந்தோன், இவன் பிறந்த காலத்து பல நற்குறிகள் நிகழ்ந்தமையின் இப்பெயர் இட்டனர். தருமசாவகமுனிபால் அறங்கேட்டவன். மணிமேகலையுடன் புத்த பீடிகையடைந்து தன் பழம் பிறப்புணர்ந்தவன். இவனுக்குப் பூர்வசன்மப்பெயர் ஆபுத்திரன். (மணிமேகலை.)

புண்ணியவதி

1, பாக்கியவதியைக் காண்க. 2. துச்சீலன் தாய்.

புண்ணொடுவருதல்

பூமியுடனே இசையை நிறுத்தி ஆயுதம்பட்ட புணணுடனே வீரன்றான் வந்தது. (பு. வெ.)

புண்யகீர்த்தி

1. பாண்டி நாட்டரசன் காசியில் கங்கையாடிக் கங்கா தேவியைக் கண்டு முத்தியடைந்தவன். (காசிரகசியம்.) 2. விதபர்பதேசாதிபதி, இவன் தேவி மதனாவதி.

புண்யகோடீசம்

காஞ்சியில் உள்ள தலம்.

புண்யகோட்டி முதலியார்

இவர் தொண்டைநாட்டில் மாகறல் என்னும் தலத்தவர். கேட்பவர் வெட்கத்தால் வாய்திறந்து கேட்காரென்று முற்றத்திற் மணற்பரப்பி அதில் எழுதச்செய்து வேண்டிய அவரித்துப் பாடல் பெற்றவர் ”நீணிலத்திலுறு மேழைமாந்தரீர் தவிர வேண்டு வனவின் புறீஇ, நேரில் கேண்மினவை தருவன்யானலதும் நினைவி லுன்னும நவிலநீர், நாணிலென்னுடைய மனைமுன் வாயிறனி னன்மணன் மிகுதி கொட்டியே, நாம் பாப் பியுமிருக்கிறோம் தனினாடி வந்ததனை யெழுதுமின், காணிலங்குடனே யருள்வ மென்ன வவன் கட்டளைப்படியே திட்டமாய்க், கையினா லெழுதவு வகையோடு பொருள் கண்டளித்த பிரபுவாரெளிற், பூணிலங்குவாநதி குலத்தில் வருபுண்யனா னதி கண்யனும், புலவர் போற்றுமாகற லின் மேவு மெழில்புண்ய கோடியெனும் பூபனே.

புண்யவிருக்ஷங்களும், பூண்டுகளும்

அரசு (அரசுபார்க்க) ஆல் திருமால் பள்ளி கொண்ட இலை, கல்லால் தக்ஷிணாமூர்த்தி குருமூர்த்த மாயெழுந்தருளி இருந்தது, வில்வம் (வில்வம் காண்க) கொன்றை, ஆத்தி சிவனுக்குரிய விருக்ஷம், மருது திருமாலிம் மரத்தை இடந்தனர், குருந்து திருமால் கிருஷ்ணாவதாரத்தில் இதை ஒசித்தனர், வேங்கை குமாரக் கடவுள் வள்ளி நாயகியார் பொருட்டு இம்மரவுருக் கொண்டனர், வன்னி (வன்னியைக் காண்க) மா இது மங்கலகாரியங்களில் கலசாபிமுகமான தேவதைகளின் முடியாகும் பத்திரங்கொண்டது, நெல்லி இம்மரத்தடியில் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளினர், துளசி விஷ்ணுவிற்குரிய பத்திரம் (துளசிகாண்க) தருப்பை (தருப்பை காண்க) அறுகு அறுகு காண்க, வாழை இதனடியில் உமாமகேஸ் வரர்க ளெழுந்தருளச்செய்து கதலீ விரதமிருப்பர், எள் எள்ளைக் காண்க, வெற்றிலை நாகலோகத்திருந்து கொண்டு வரப்பட்டது.

புதன்

1. இவன் வியாழன் தேவியாகிய தாரையிடம் சந்திரனுக்கு உதித்தவன். பிரகஸ்பதியும் சந்திரனும் இன்னானுக்குப் பிறந்தவன் என்று அறியாது வாதாடுகையில் தாயைநோக்கி உண்மைகூறச் சொன்னவன். இவன் தவத்தால் கிரகபதம் அடைந்தனன். நான்கு குதிரைகள் பூண்ட தேரினை யுடையான். சந்திரனுக்கு அவிட்டத்தில் உதித்தவன். இவன் தேர்க் குதிரைகள் எட்டென்றுக் கூறுவர். சுக்கிரனுக்குமேல் இரண்டு லக்ஷம் யோசனைப் பிரமாணத்தில் இருக்கிறவன், இவன் தவச்சாலையருகு, இளை தோழியருடன் வர அத்தோழியர்களுக்கு இதஞ் சொல்லிக் காந்தருவர்களை அவர்களுக்குக் கணவாக்கி இளையை வசப்படுத்தி மணந்து புரூரவனைப் பெற்றனன். இளனுடைய சாபம் நீங்கிச் சிவபிரானை நோக்கி அச்வமேதஞ் செய்வித்துச் சாபம் நீங்கச் செய்தவன். இருக்குவேதத்தின் ஐந்தாவது காண்டத்ததி காரியானான். (காசி காண்டம்) (வேறு.) 2. பந்தனுக்கு ஒருபெயர். 3. தவசீலன் என்னும் வேதியன் குமரன். இவன் தாசி விருப்பனாய்த் தாய் தந்தை முதலியவரைக் கொன்று காமத்தால் தாலவமுனிவர் பத்தினி சுலபையைக் கைப்பற்ற அவள் இவனைக் குட்டம் பிடிக்சுச் சபிக்க அந்த வியாதியால் இறந்து மறுபிறப்பும் அவ்வியாதியால் வணிகனாய்ப் பிறந்து சூரசேகனால் வியாதி நீங்கி நல்லுலகு அடைந்தவன். 4. சூரியனையடுத்துச் சுற்றிவரும் கிரகம். இது சூரியனுக்கு (3) கோடியே (60) லக்ஷம்மைலுக்கு அப்பாலிருந்து (24) மணி. நேரத்தில் தன்னைத்தானே ஒருநாஞ் சுற்றிக்கொண்டு (88) நாட்களில் சூரியனையும் ஒருமுறை சுற்றிவருகிறது. இதன் சுற்றளவு சுமார் (9500) மைல், குறுக்களவு (3000) மைல் என்றும் எண்ணு கின்றனர், இது நமது பூமிக்கு (5) கோடியே (70) லஷம் மைல் தூரத்திருக்கிறது. சூரியனொளி இதன் மேல் நெருங்கிப் படுதலால் இது நன்றாய்த் தெரிகிறதில்லை. இந்துக்கள் இக்கிரகநிறம் பசுமை என்பர். இதனை அடுத்த கிரகம் சுக்ரன்.

புதவாரவிரதம்

புதவாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவாஹனஞ்செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும்.

புதவி

கோவிந்தமகாராசன் மனைவி,

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்

இவர் வேளாண் மரபினர் கம்பூரென்னு சரினர் வண்ணக்கன், நாணய சோதகன் நோட்டக்காரன் புதுக்கயம் என்ற ஊரில் நோட்டக்காரராய் வந்து தங்கியவர். இவர் குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது நற் 294ம் பாட்டு,

புதுநாட்டான்

இடையரில் ஒரு வகுப்பு.

புதுவஸ்திரமுடுத்தல்

திங்கள், புதன், வியாழன், வெள்ளி வாரங்களும், அசுவினி, ரோகிணி, புகர்பூசம், பூசம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்தாட்டாதி, ரேவதி இந்நட்சத்திரங்களும், சதுர்த்தி, அஷ்டமி, வேமி, சதுர்த்தசி, அமாவாசியை யொழிந்த திதிகளும், விருஷபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், மகரம், கும்பராசிகளும் ஆசமிடஞ் சத்தமாக கோடிவஸ்திர முடுக்க உத்தமம்.

புதுவைச்சேதிராயன்

வெண்ணெய்ச் சடையன் குமரன். மகா தியாகி, கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய காலத்து உடனிருந்து கேட்கையில் சர்ப்பந்தீண்டப்பெற்றுக் கம்பரால் நீக்கமடைந்தவர். “காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம் மரபை, நாவலரைக் காவலரை நல்லோரைப் பூவலய, முள்ளத்தகும் புதுவை யூரைச் சிறப்பித்தான், பிள்ளைப் பெருமாள் பிறந்து”, ”மெய்கழுவிவந்து விருந்துண்டு மீளுமவர், கைகழுவ நீர்போதும் காவேரி, பொய்கழுவும்,போர்வேற் சடையன் புதுவையானில்லத்தை, வார் போற்ற வல்லாரறிந்து. ” எனப் புகழப்பட்டவன்.

புத்

பூமியில் புத்திரப்பேறு இல்லாதான் அடையும் நரகம்

புத்தகயை

நம்மவர்கள் சொல்லும் கயைக்குத் தெற்கே ஐந்துநாழிகை வழி தூரத்தில் உள்ள ஓர் இடம். இதில் புத்தர் ஞானம் பெற்ற அரசமரம் இன்னும் இருக்கின்ற தென்பர்.

புத்தநந்தி

ஒரு புத்தன். இவன் திருஞானசம்பந்த சுவாமிகளுடன் வாதிடவந்து சம்பந்தசரணாலயர் கூறியபடி தலையில் இடி விழுந்து இறந்தவன்,

புத்தன்

ஏறக்குறைய 2500 வருஷங்களுக்குமுன் பாதகண்டத்தின் வடபாகத் தில் கங்கையின் உபநதியாகிய ரோகிணி நதியின் கரையில் கபிலவாஸ்து என்னும் ஒரு நகரம் இருந்தது. அந்த நகரத்தை யாண்ட சுத்தோதன் தன்மனைவி மாயையுடன் கூடி அரசாளுகையில் புத்திரன் இல்லாக்குறையால் துன்புற்று இருக்கையில் மாயை, ஆகாயத்தில் இருந்து பேரொளியுள்ள நக்ஷத்திரம் ஒன்று வெளிப்பட்டுத் தன் வயிற்றில் புகுந்ததாய்க் கனவு கண்டு தன் கனவைக் கணவனுக்கு அறிவித்தனள். சுத்தோதன் நிமித்திகரை அழைத் துத் தன்மனைவி கண்டகனா நிலையுணர்த்த, அவர்கள் உன் மனைவியிடம் அதிக ஞானவானாய் ஒருபுத்திரன் உதிப்பன், என்று போயினர். அவ்வகையே மாயை கருவுற்று ஒரு புத்திரனைப் பெற்றனள். இப்பிள்ளை “அரசனுக்குப் பிறந்ததால் மற்ற அரசர் முதலியோர் களித்து அரசனைக் காணப் பல விலையுயர்ந்த பொருள்கள் கொண்டு வந்தனர். அதனால் களித்த அரசன் தன் குமரனுக்குச் சர்வார்த்தசித்தி அல்லது சித்தார்த்தன் எனப் பெயரிட்டனன், இவ்வகை குழந்தையைக் காண வந்தவர்களுள் சித்தார்த்தன் என்பவர் ஒருசந்யாசி இவர் குழந்தையின் இலஷணங் கண்டு தம்மைப் பிறர் வணங்குவதைவிட்டுத் தாமே குழந்தையின் பாதங்களைக் கண்களில் ஒத்தினர், இவ்வகை குழந்தை வளருநாட்களில் தாய், குழந்தை பிறந்த ஏழாநாள் இறந்தனள். பிறகு செவிலித்தாயாகிய பிரசாபதியைக் குழந்தையை வளர்க்கும்படி அரசன் நியமித்தனன். குழந்தைக்குக் கல்வி கற்பிக்கும் வயது வந்தபோது பிதா விச்வாமித்திரன் என்பவனைக் கல்விகற்பிக்க ஏற்படுத் தினன். இவன் ஒருநாள் தனது மைத்துனனாகிய தேவதத்தன் என்பவனுடன் வேட்டைக்குச் செல்ல, அவ்விடம் தேவதத்தன் ஒரு அன்னத்தை அம்பினால் எய்ய அவ்வடி அன்னத்திற்குப்பட்டு அது கீழே விழச் சித்தார்த்தன் அதை யெடுத்துக் காயத்தையாற்றத் தேவதத்தன் அந்த அன்னத்தைக் கேட்கச் சித்தார்த்தன் இது எனக்குரியது கொடேனென்று ஒரு பெரியவரிடம் தங்கள் வழக்கையுரைக்க அவர் வளர்த்தவனுக்கு உரியது என அவ்வகை அதை வளர்த்து இனத்தில் விட்டுத் தன் தந்தை நாட்டின் வளங்காண அழைக்கச் சென்று வளங்களைக் கண்டு தனக்கு அவை அதிக துன்பம் வருவித்ததை யெண்ணி ஒரு நாகமரத்தடியில் உட்கார்ந்து சிந்திப்பானாயினன். உலகத்து உயிர்கள் ஒன்று சுகமாயிருக்க அவற்றைப் பாரிக்க வேறோன்று காத்திருக்கிறது. இவ்வகை ஒன்றுக் கொன்று விரோதமே செய்கின்றன. எவனும் உழைக்காவிட்டால் பிழைப்பில்லை என்பதை நெடுநோமெண்ணித் தியானத்தில் இருந்தனன். இத்தியானத்தில் காலையில் உட்காரப் பகற்பொழுதும் நீங்கிற்று. அரசனது வேலையாட்கள் வலிந்தழைக்கச் சித்தார்த்தன் அரசனிடம் சென்றனன். இவ்வகையிருக்கையில் சித்தார்த்தனுக்கு மணப்பருவம் வர அரசன் தன் குமரனுக்கு மணஞ் செய்விக்க எண்ணி அவன் பிறந்த நாளில் அரண்மனை அலங்கரித்து அவ்வூர்க் கன்னிகை களுக்குப் பரிசளிப்பதாய் முரசு அறைவித்தனன். கன்னியர் எல்லாரும் இவ்னது அழகைக்கண்டு நாணினவர்களாய்த் தலைகுனிந்து பரிசு கொண்டு சென்றனர், அவர்களுள் சுப்ரபுத்தன் என்பவனது குமரி யசோதை தலைகுனியாது சித்தார்த்தனிடம் வந்து எனக்கு ஒன்றுமில்லை யோவென எல்லாமாய்விட்டது எனக்காக இதை வைத்துக்கொள் என்று தன் மார்பிலிருந்த பதக்கத்தை அவள் கழுத்தி விட்டான், பின் அரசனுக்கு அருகிருந்தார் நடந்தவைகற அரசன் சுப்புத்தனை என் குமரனுக்கு உன் குமரியைத் தருகவெனக் கேட்கச் சுப்ரபுத்தன் அரசர் முறைப்படி கொள்க எனச் சித்தார்த்தன் அப்பெண் பொருட்டு வந்த மற்ற அரசரை வென்றனன். அரசன் இவ்விரு தம்பதிகளுக்கும் திருமணஞ் செய்வித் தனன். இவ்வகை தன் மனைவியுடன் இருந்து ஒருநாள் தன் தேர்ச்சாரதியாகிய சன்னனுடன் நகரவாழ்க்கை காணச்சென்று ஒரு கிழவனையும், ஒரு பிணியாளனையும், ரோகிணி நதிதீரத்தில் ஒரு பிணத்தையுங்கண்டு சன்னனை அவற்றின் நிலைவினாவித் தனக்கும் அவை உண்டாமோவென்று பயந்து தன் மனைவி யிடம் தனக்குப் பிறந்த குமாரனைவிட்டுத் துறவடைந்தனன். இவன் அஜாதசத்துருவின் காலத்தவன். (மணிமேகலை.)

புத்தமதம்

1. புத்தன் புத்த தத்துவத்தைப் பொருளாகக்கொண்டு பௌத்தம் என மதம் உண்டாக்கித் தன்னுடன் உடிய கண்ணங்க ராகுகாவீரர் முதலிய இருபத்து மூன்று புத்தர்களுக்கும் ஞானபிடகம், விசயபிடகம், அவிதர்மபிட கம் முதலிய ஆகமங்களைப் போதித்துப் பிரசங்கித்துவரச் செய்தனன். இவர்கள் கூறும் உலகோற் பத்தியாவது பாபம் மேலிட்டுக் கோபாகனியா யெழுந்து செத்து ஜீவர்களை யெரிக்கத் தொடங்குசைால் ஜீவர் நவத்தானங்க ளில் ஒன்றாகும் பிரம உலகத்தையடைவர். அக்கோபம் அடங்கினபின் புண்யம் மழைத்தாரையாக வருஷத்துக் கோபத்தை யாறச்செய்து பிரளயமாய் மூடிக்கொள்ள அதன் மீது காற்று வீச ஏடுபோற் படியும். அந்த நீரேட்டில் மண்ணும் பறந்து பூமியாம். இதில் முன் பிரமத்தானத்தில் இருந்த ஆன்மாக்கள் வந்து பிறப்பர். இவ்வகை உடல் எடுத்த சீவன் பஞ்சசந்தத் தாற் போதமடைந்து வியவகாரியாய்ச் சானமரணமடைந்து பிரமா, உம்பர், அசுசர், நாகர், நரர், பேய், விலங்கு முதலிய நவத்தானமடைந்து சார்பு கெட்டுச் சந்ததி யுமாறக் கந்தம் பங்கமடைந்து பேதமை சார்பாக அநித்தமாகிற கன்மகோன் புண்டாய்ப் போதமானபுத்தி சந்தான பரம்பரையாகக் கெட்டு க்ஷணபங்க மடையும் என்பன். இவன் சந்தான பரம்பரையறப் பஞ்சகர்தங் கெடுகிறதே முத்தியென்பன். இவன் பஞ்சகந்தங்களாகிற அநதிசமூகத்தில் எல்லா முண்டாகி லயமடைகையால் கருத்தா இல்லை, அநாதியான சீவரின் வகையாக உடம்பெடுக்கையால் சீவரும் இதைவிட இல்லை யென்பன். புத்தன் தேவனல்லனோ எனின் இப்பஞ்சகந்தத்தைக் கெடுத்தவனாதலின் தேவனெனப் பட்டனன். இவர்களைப்பற்றிச் சைநர் கூறுவது. பாரிஸ்வ தீர்த்தங்கரர் காலத்தில் புத்தகீர்த்தி என்கிற சந்நியாசி சைநரை விரோதித்துச் சில கக்ஷிகள் கூறியதால் அச்சைநர் இவனை விரோதித்து நீக்கினர். இவன் தனித்து ஒரு மதம் உண்டாக்கி அரசருக்குப் போதித்து இம்மதத்தை யுண்டாக்கினன். இம்மதம் காசியில் ஆண்ட பாரசீதள மகாராஜாவாலும், அவன் குமரன் சோமசீதள மகாராஜாவாலும், அவன் குமரன் உக்ரசிதள மகாராஜாவாலும், பிரபலமடைந்தது. இந்தச் சாத்தியில் ஏமசீதள மநாராஜா தொண்டீர நாடடைந்து காஞ்சியில் அரசாண்டு புத்தகை தேவாலயங்கள் உண்டு பண்ணினன். இவ்வகை இருக்கையில் சைநருக்கும் பௌத்தருக்கும் வாதம் நேரிடச் சைநரில் விசம் அகளங்காசாரியர் என்பவர் 8 நாள் புத்தரிடம் வாதிட்டு வெற்றியடைய அரசன் சைநன் ஆயினன். பின் தோற்றவரைக் காணத்தாட்டுதல் என்ற சங்கேதப்படி அரசன் ஆசாரியரைக் கேட்க ஆசாரியர் கொல்லாவிரதியர் ஆதலால் அதற்கிசையாது அவர்களைக் கப்பலேற்றிச் சிம்மளத்தீவிற்கு அனுப்பக் கட்டளையிட்டனர். அரசன் அவ்வாறு செய்ய இம்மதம் சிம்மள மடைந்தது. மதுரையாண்ட வீரபாண்டியன் புத்தனாயிருந்து சைநனாய் விட்டதால் இவர்கள் சிம்மனமடைந்தனர் என்றும் கூறுவர். 2, கேடதேசத்துச் சீநன் குமரன். விஷ்ணுவின் அம்சம். 3. காரியின் தந்தை.

புத்தமித்திரர்

பதினொராம் நூற்றாண்டில் மலக்கூற்றம் என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்து கல்விவல்லவராய் ஒரு இலக்கணம் விருத்தப்பாவாற் செய்து தன்னை ஆதரித்த வீரசோழன் என்பவன் பெயரை அந்நூலுக்கு இட்டவர். இவர் செய்த நூல் வீரசோழியம்.

புத்தர் (27) வர்

இவர்கள் கௌதமபுத்தருக்கு முன்னிருந்தவர்கள். (1) தண்ண காரர், (2) மேதங்கரர், (3) சாணங்கார், (4) தீபங்கரர், (5) கௌண்டின்னியர், (6) மங்களர், (7) சுமங்களர், (8) இரேவதர், (9) சோபிதர், (10) அநோமதர்சி, (11) பதுமர், (12) நாரதர், (13) பதுமோத் தரர், (14) சுமேதர், (15) சுஜாதர், (16) பிரியதர்சி, (17) அர்த்ததர்சி, (18) தர்மதர்சி, (19) சித்தார்த்தர், (20) திஷ்பர், (21) புஷ்யர், (22) விபச்சித், (23) சிகி, (24) விருஷபர், (25) ககுந்தர், (26) கோவகாமர், (27) கசியபர்.

புத்தி

1. பிரசாபதியின் மனைவியரில் ஒருத்தி 2. மன்யு என்னும் ஏகாதசருத்ரன் தேவி. 3. இவர் தொண்டை நாட்டுப் பொன் பன்றியூரிலிருந்த பௌத்தர். இதற்கு உரைகண்டார் பெருந்தேவனார் என்னும் ஒருவர். இவரை ஒரு சிற்றரசர் என்பர். 4. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி. 5. விநாயகசத்தி, தருமதத்தனிடம் பிறந்து விநாயகரை மணந்தவள்.

புத்திசாகரன்

ஒரு பௌத்தன், மத்வாகாரியரிடம் வாதிட்டுத் தோற்றவன்.

புத்திசேதன்

சீவகன் தோழர் நால்வரில் ஒருவன்

புத்தியின் எட்டு வகை பாவங்கள்

தர்மம், ஞானம், வைராக்யம், ஐச்வர்யம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்யம், அனைச்வர்யம்,

புத்திரமார்க்கம்

அன்றலர்ந்த மலர், தூப, தீபங்கள், திருமஞ்சனம், திருவமுது முதலியகொண்டு பூதசுத்தி முதலிய பஞ்ச சுத்தி செய்து ஆசனம் பூசித்து அதில் மூர்த்தியைக் கற்பித்து மூர்த்திமானாகிய சுத்தசிவத்தைத் தியானித்துப் பூசித்து அக்னி காரிய முதலிய செய்தல். இவர்கள் சாமீப பதமடைவர்

புத்திரர்கள்

1. ஒளரசன், 2. கேத்திரஜன், 3. தத்தன், 4. கீருத்திரிமன், 5. கூடோதபக்கன், 6. அபவித்தன், இவ்வார புத்திரர்களும் பிதுராஸ் திக்கும், பிள்ளையில்லாத ஞாதிகளாஸ்திக்கும் உரிய வர்கள். 7. காரிகன், 8. சகோடன், 9. பிரீதன், 10. பௌகற்பவன், 11. சுயதத்சன், 12. செனத்திரன், இவ்வாறு புத்தி சர்களும் தந்தையின் பொருளுக்கு மாத்திரம் உரியவர்கள். (மநு.) 1. தன் ஜாதிஸ்திரியைக் கன்னிகையாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளிடத்தில் எந்தப் பிள்ளையைத் தானே பெறுகிறானோ அவனை முக்கியமான ஔரஸ புத்திரனென்று அறியவேண்டியது (மநு) 2. பிள்ளை பிறக்கிறதற்குமுன் இறந்து போனவன், பேடி, பிள்ளை பிறக்க விரோதமான பிணியுற்றவன், இவர்களின் மனைவியரிடத்தில் மைத்துனன் முதலானவர் களால் மேற்சொன்ன விதிப்படி உண்டு பண்ணப்பட்ட பிள்ளையை கேத்திரஜன் என்று சொல்லுகிறார்கள். (மநு.) 3. தந்தையுந் தாயும் சம்மதித்து இருவருங் கூடியேனும், ஒருவராயேனும், தங்கள் வயிற்றிற் பிறந்த பிள்ளையைத் தன்ஜாதியாயும் பிள்ளையில்லாமல் துன்பப்படுகிற வனாயும் இருக்கிற ஒருவனுக்குப் பிரீதியுடன் இந்தப்பிள்ளை உனக்கே சொந்த மென்று சொல்லி ஜலத்தைவிட்டுத் தாகஞ் செய்யப்பட்ட வனைத் தத்தனென்று சொல்லுகிறார்கள். (மநு.) 4. தன் ஜாதியாயும் பிதுர்க்களுக்குச் சிரார்த்தஞ் செய்வதாலும், விடுவதாலும், வரும் குணாகுணங்களை யறிந்தவனாகவும் தாய்தந்தையர்களைப் பூசிக்கிறவனாயு மிருக்கிற எந்தப் பிள்ளையைத் தானே பிள்ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவனைக் கிரந்திரப் புத்திரனாகச் சொல்லுகிறார்கள். (மநு.) 5. ஒருவன் மனையாள், கணவன், வீட்டிலிருக்கும் போது அவனுக்குத் தெரியாமல் எந்த ஜாதிபுருஷனேனும் அவளிடத்தில் ஒரு பிள்ளையை உண்டுபண்ணினால் அப்பிள்ளையை அந்தக் கணவனுக்குக் உடோத்பக்க புத்திரனென்று சொல்லுகிறார்கள். 6. தாய் தந்தை இருவராலாவது அல்லது ஒருவராலாவது எறிந்துவிடப்பட்ட பிள்ளையை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு அபவித்தபுத்திரனென்று சொல்லுகிறார்கள். 7. எந்தப்பெண் விவாகத்துக்கு முன் தகப்பன் வீட்டிலிருக்கும்போது யாருக்குங் தெரியாமல் இரகசியமாக ஒருவனைப் புணர்ந்து ஒரு பிள்ளையைப் பெற்றுச் கொள்ளுகிறாளோ அந்தப் பிள்ளையைப் பின்பு அவளைக் கலியாணஞ் செய்துகொள்ளுகிறவனுக்குக் காருபுத்திரன் என்று சொல்லுகிறார்கள். (மநு.) 8. எவன் ஒரு பெண்ணைக் கருப்பமாக யிருக்கிறாளென்று அறிந்தாவது அறியாமலாவது விவாகஞ்செய்து கொள்ளுகிறானோ அவனுக்கு அந்தக் கர்ப்பத்தினாற் பிறந்த பிள்ளையைச் சகோடபுத்திரன் என்று சொல்லு கிறார்கள். (மநு.) 9. எவன் தனக்குப் பிள்ளையில்லாமையால் ஒரு பிள்ளையை அவன் தாய் தகப்பன் மாரிடத்து விலக்கு வாங்கிக்கொள்ளுகிறானோ அவன் குணத்தினால் தமக்குத் தக்க வனாயினும் தகாதவனாயினும் வாங்கு கிறவனுக்குக் கிரீதபுத்திரனென்று சொல்லப்படுகிறான். (மநு.) 10. எந்த ஸ்திரியானவள் கணவனால் நீக்கப்பட்டாவது கணவனிறந்த பின்பா வது மற்றொருவனைச் சுவேச்சையாகவே புணர்ந்து எந்தப் பிள்ளையைப் பெறுகிறளோ அந்தப் பிள்ளையைப் பௌநற்பவ புத்திரனென்று சொல்லுகிறார்கள். (மநு.) 11. ஒரு சிறுவன் தாய் தந்தை இறந்து போயாவது அல்லது அவர்களில் காரண மின்றி நீக்கப்பட்ட வனாயாவது தானாகவே ஒருவனைப் புத்திரனாக வந்தடைந்தால் அவனைச் சுயதத்தனென்று சொல்லுகிறார்கள் (மநு.) 12. பிராமணன் தன்னால் விவாகஞ் செய்யப்பட்ட சூத்திர மனையாளிடத்தில் காமத்தினால் உண்பெண்ணின பிள்ளையானவன் செய்கிற சிரார்த்த காரியங்கள் பாலோகத்திற்கு உபயோகமாகாதாதலால் உயிரோடிருந் தாலும் பிணத்தோடு சரியாகச் சொல்லப்படுகிறான். ஆதலால் அவனைப் பார்சவ புத்திரனென்று சொல்லுகிறார்கள். இவன் தான் முன்பு சௌத்திரனென்று சொல்லப்பட்டவன், (மநு.)

புனகா

இது பிரம்மசாரி தன்னையறியாது வீர்யம் கலிதமானால் ஸ்நானஞ் செய்து ஜபிக்க வேண்டிய மந்திரம். (மநு~அத்.)

புனருத்தம்

சத்தத்தினாலும் அத்யாகாரத்தினாலும் தான் சொன்ன வசனங்களைப் பிரயோசனமின்றியில் மீளவும் அதனையே சொல்லுகை. (சிவ~சித்,)

புனர்வசு

1, தரித்திரன் குமரன்; இவன் குமரன் ஆகுகன். 2. யதுவம்சத்துத் துந்துபி குமரன்.

புனிதவதியார்

1. காரைக்கால் அம்மையார்க்கு முதற் பெயர். 2. காரைக்கா லம்மையாரின் கணவரது இரண்டாவது மனைவியின் புத்திரி

புனிந்தன்

நந்தகன் குமரன். இவன் குமரன் பாகவாதன்.

புனுகுப் பூனை

இது ஒரு காட்டில் வசிக்கும் பிராணி, உருவத்தில் சிறுபூனைபோல்வது. இதனிடம் புனுகு எனும் வாசனைப் பொருள் உண்டாவதால் இதைப் புனுகு பூனை யென்பர். இதற்குப் பீஜத்தருகில் வாலின் கீழ்ப்பக்கமாய் ஒரு தைலப்பை இருக்கிறது. இப்பையில் தைலம் ஊறுகையில் அத்தைலத்தை எங்கேனும் தேய்த்து விடும். அதைக் காட்டு வாசிகள் மணங்கொண்டு வழித்துச் சேர்ப்பர். இதை நகரத்திலுள்ளவர் நடுவில் சுழலும் மூங்கில் அமைந்த கூண்டிலடைத்து வைப்பர். தைலம் ஊறுகையி லதை அதில் தேய்க்கும். அதை வழித்துப் பத்திரப்படுத்தி உபயோகிப்பர். இதுவே புனுகு.

புனுது

புழுகு; இது புனுகு பூனையெனும் பூனையொத்தவை. காட்டில் வாழ்பிராணி. காட்டில் மர முதலிய இடங்களில் தன் பீஜத்தைச் சார்ந்த பையிலுள்ள ஒருவித பசைப்பொருளைப் பீச்ச அதனைச் சேர்த்தெடுக்கும் பொருள்,

புனைவிலிபுகழ்ச்சியணி

இது அவர்ணியத்தை வர்ணிக்க அதனது சம்பந்தத்தால் வர்ணியந் தோன்றுவது. இதனை வடநூலார் அப்பிரஸ்துத பிரசம்சாலங்கார மென்பர். (குவல.)

புனைவுளிவிளைவணி

அஃதாவது, சொல்லப்பட்டவொரு வர்ணியத்தினால் சம்மதமாகிய மற்றொரு வர்ணியந் தோன்றுவது. இதனை வடநூலார் பிரஸ்து தாங்குராலங்கார மென்பர். (குவல.)

புன்னாடு

தஞ்சாவூர்.

புன்னானக நாடு

இலாவாணக நகரத்திற்கும் மகத நாட்டிற்கும் இடையே யுள்ளதொரு நாடு (பெ கதை)

புமன்யன்

துஷ்யந்தன் புத்திரனாகிய தன் தேவியிடம் பாத்துவாசர் அறுக்கரகத்தால் பிறந்தவன்.

புமும்சலிகள்

சபவன் முகத்துரித்த பாதாளப் பெண்கள், மிகுந்த காமினிகளாய் எல்லாரிடத்தும் விபசரிக்கிறவர்,

பும்சவனம்

1. இது கர்ப்பிணிகள் ஆண் சிசு பெறும்படி செய்யுங்கிரியை; கர்ப்பம் வியக்தமாவதற்கு முன் முதல் மாசத்தில் பூசநக்ஷத்திரத்தில் பொன், வெள்ளி, இரும்பு இவை முதலியவற்றால் சிறு புருஷ உருச்செய்து அக்னியிற் சிவக்கக் காய்ச்சி நான்குபலம் பாலில் தோய்த்து அப்பாலைக் கர்ப்பிணிக்கு அருத்துவது. வெளுத்த தண்டோடு கூடிய நாயுருவி வேர், ஜீவகம், ரிஷபகம், முள் ஐவனம் இவைகளை அரைத்துத் தண்ணீரிற் கலக்கி அருந்தச் செய்யுங் கிரியை. 2. ஒரு விரதம், மார்கழி மாச சுக்லாகூர் பிரதமையில் அநுட்டிப்பது.

புரகதன்

காலபுத்திராம்சமாகிய பாரத வீரன்

புரக்ஞயன்

1. (சூ) விகுக்ஷி குமரன். இவனைத் தேவேந்திரன் அசுரருக்கு அஞ்சிச் சரண்புக இவன் இந்திரனை நோக்கி நீ எனக்கு வாகனமாயின் அசுரரை வென்று பயமகற்றுவேன் என இந்திரன் அவ்வகை இசைந்து எருதாகித் தாங்கின்ன். இவன் அதனால் அசுரரை வென்று இந்திரனது பதவியை அவனுக்கு அளித்தனன். இவனுக்கு இந்திரவர்கன் எனவும், ககுத்தன், புரஞ்சயன் எனவும் பெயர், இவன் குமரன் பரணன். (பாகவதம்.) 2. பூருவம்சத்து சுவீரன் குமரன். இவனுக்கு நிருபஞ்சயன் எனவும் பெயர். 3. அணுவம்சத்து சுருஞ்சயன் குமரன்.

புரஞ்சகன்

கத்ரு குமரன். நாகன்.

புரஞ்சனன்

ஒரு அரசன், தவஞ்செய்யச் சென்று ஒரு பெண்ணிடத்தில் மோகங்கொண்டு நூறு வருடம் அவளிடம் கூடியிருந்தனன். இவன் தேவியர் புரஞ்சனி, வைதற்பி. இவன் பட்டணத்தைப் பயன், கால கன்னிகை யென்பவர்கள், அபகரித்தனர். இவன் பட்டணத்தை ஒரு நாகம் காத்திருந்தது. இவன் ஜீவ இம்சைக்கு அஞ்சாதவன். இவன் தன் மனையாளையே மனத்தில் வைத்து உயிர்விட்டவனாதலால் விதர்ப்பநாட்டில் பெண்ணாகப் பிறந்து மலயத்துவசனை மணக்கப் பெற்றான்.

புரஞ்சயன்

1. பிரகலா தவம்சத்து அரசன், இவன் மந்திரியாகிய சுநகன் என்பவனால் கொலை செய்யப்பட்டவன். 2, விச்வபூர்த்திக்கு ஒரு பெயர். 3. அவிவேகத்தால் நஷ்டமடைந்த ஒருவன்.

புரதை

சோமன் என்னும் வசுவின் குமரி; இவளுக்குப் பதினொரு கந்தருவர் பிறந்தனர்.

புரந்தரசித்பாண்டியன்

வங்கியதீப பாண்டியன் குமரன். இவனது குமரன் வங்கிய பதாகன்,

புரந்தரன்

1. வைவச்சுத மன்வந்தரத்து இந்திரன் 2. அக்னி. 3. மாதவன் தந்தை. 4. ஒரு வேதியன் விஷ்ணுபூசாபலத்தால் சித்திபெற்றவன்.

புரமீடன்

அசமீடன் தம்பி. அஸ்திகன் குமரன்.

புரம்

(3) இருப்புமதில், வெள்ளிமதில், பொன்மதில்களையுடைய அரண்கள். இவையே திரிபுரம்,

புரவிசுரதன்

சகதேவி குமரன்.

புராணம்

ஸ்ரீசிவமூர்த்தியினிடம் இவைகளைக் கேட்ட நந்திமாதேவர், சநற்குமார முனிவருக்கு உபதேசிக்க அவர் வியாசருக்கு உபதேசிக்க வியாசபகவான் சூதருக்கு உபதேசித்தனர். இப்புராணங்கள் பதினெண் வகைப்படும். அவை சைவ. பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காம்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பதுமம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம் முதலியன. இவையன்றி உபபுராணம் பதினெட்டுள. அவை உசனம், கபிலம், காளி, சாற்குமாரம், சாம்பவம், சிவதர்மம், சௌரம், தூர்வாசம், நந்தி, நாரசிங்கம், நாரதீயம், பாராசரீயம், பார்க்கவம், ஆங்கிரம், மாரீசம், மானவம், வாசிட்டம், இலைங்கம், வாருணம் முதலிய. இப்புராணங்களுள் சைவம், பௌஷிகம், மார்க்கண்டம், லிங்கம், காந்தம், வராகம், வாமாம், மச்சம், கூர்மம், பிரமாண்டம் இவை சிவபுராணங்களாம். காருடம், நாரதீயம், விண்டு, பாகவதம், விஷ்ணு புராணங்கள். பிரமபுராணம், பதுமபுராண மிரண்டும் பிரமபுராணங்கள். ஆக்னேயம், அக்னிபுராணம். பிரமகைவர்த்தம், சூரிய புராணம், சைவ முதலிய பத்துப்புராணங்களும், இரண்டு லக்ஷத்தறுபத் தெண்ணாயிரங் கிரந்தமுடையன, காருட முதலிய விஷ்ணு புராணங்கள் நான்கும் ஐம்பத்தையாயிரம் கிரந்தமுடையன. பிரமமுதலிய இரண்டும் அறுபத்தையாயிரங் கிரந்தமுடையன. ஆக்னேயம் எண்ணாயிரம் கிரந்த முடையது. பிரமகைவர்த்தம் பன்னீராயிரங் கிரந்தமுடையது. இப்புராணங்கள், கிருதயுகத்துப் பிரமதேவரால் பிரமமென வொன்றாகி நூறு கோடி கிரந்தங்களாயும், திரேதாயுகத்து இருடிகளால் கோடி கிரந்தங் களடங்கிய நூற்றுப்பதினெட்டுச் சங்கிதைகளடங்கிய பதினெட்டு வகையினவாகவும், துவாபரயுகத்து வியாச பகவானால் நான்குலக்ஷத்து எண்ணாயிரங் கிரந்தங்களடங்கிய பதினெண்புராணங்களாயின. இப்புராணங்கள் வியாசர் வழியாக ரோமகர்ஷணருக்கும் ரோமகர் ஷணர் சுமதி, அக்னிவர்ச்சஸ் முதலியோருக்கும் கூற வெளிவந்தன.

புராணலக்ஷணம்

இவை சர்க்கம், பிரதி சர்க்கம், மனுவந்தரம், வம்சம், வம்சா நுசரிதம், ஸ்திதி, ரக்ஷணம், சமுஸ்தை, ஏது, ஆசிரயம், இப்பத்து லக்ஷணங் களையுடையன. இது கிருதயுகத்தில் நூறு கோடி கிரந்தங்களாகப் பிரமனாலும், திரேதாயுகத்தில் கோடி கிரந்தங்களாய்ப் பதினெண்பாகங்களாக இருடியராலும், துவாபரயுகத்தில் வியாசரால் பதினெண் புராணங்களாகவும், வகுக்கப்பட்டது. பின்கூறிய ஐந்தையும் நீக்கி ஐந்தெனவும் கூறுவர்.

புராணிகன்மதம்

திரிமூர்த்திகள், எழுவகைத்தோற்றம், பிரமாண்டம் இவற்றின் நிலைகளையறிவித்துத் தான் கெடாமல் இருப்பதால் புராணமே பிரமம் என்பன். இப்புராணங்கள் சொல்லியவற்றைத் தவறி நடப்பதே பந்தம், இவை நீங்கிப் புராணம் சொன்னவழியில் நடப்பது மோக்ஷம்.

புராந்தக சோழன்

ஒளவை காலத்திருந்து அவளால் பாடல்பெற்ற சோழன்.

புரி

(7) அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை.

புரிசைக்கிழார்

குன்றத்தூரில் இருந்த வேளாண் குலத்தவர். முதுமொழிக் காஞ்சி செய்தவர். சோழனால் குடியேற்றப்பட்ட நாற்பத்தெண்ணாயிரவரில் ஒரு குடி.

புரிமணை

பானை முதலிய தாங்க வைக்கோற் புரி, பனை நார் முதலியவற்றால் செய்யப்பட்டது.

புரிமான்

கோமதி குமரன்; இவன் குமரன் சாதகர்ணன்.

புரியஷ்டகசரீரம்

பூதமைந்து 5, தன் மாத்திரைஐந்து, 1. ஞானேந்திரியமைந்து 1, கன்மேந்திரியம் ஐந்து 1. அந்தக்கரணம் 1, முக்குணம் 1, கலாதி பஞ்சகம் 1, பிரகிருதி 1, ஆக 8. இது சூக்ஷ்மசரீரம் எனவும்படும்.

புரீசன்

சுசாந்தி குமரன். இவன் குமரன் அரதன்.

புரு

1. சவ்வீரநாட்டில் இருந்த யாதவன். இவன் மனைவியைச் சிசுபாலன் கவர்ந்தனன், 2. ஒரு சக்கிரவர்த்தி, தேவி ஜரை. காலகன்னிகையால் நினைத்த இடத்தில் சஞ்சரிக்கச் சாபம் பெற்றவன். 3. உரோமபதன் குமரன். இவன் குமரன் கிருதி. 4. தேவவிரதன் குமரன். 5. (ச) யயாதிக்கு சன்மிஷ்டையிடம் உதித்தவன். தந்தைக்கு இளமைதந்து முதுமையேற்றவன். 6 வசுதேவனுக்குச் சகதேவியிடம் பிறந்தவன்.

புருககீர்த்தி

ஒரு இருடி. பிரகஸ்பதி அம்சம்.

புருகுச்சன்

மாந்தாதா புத்திரன், இவன் கஸ்யபுத்திரர்களால் நாகர்களைப் பயமுறுத்தியபடியால் நாகர் தங்கள் குமரியாகிய நருமதையை இவனுக்கு அளித்தனர். இவன் காந்தருவரை வென்றான். இவன் குமரன் வஸுதன்.

புருகூதபீடம்

சத்திபீடங்களில் ஒன்று,

புருகோதரன்

அணு குமரன்.

புருசன்

சுசாந்தி புத்திரன்.

புருசித்

1. போஜவம்சத்தவன். தருமனுக்கு அம்மான் 2. (சூ.) அசன்குமரன். 3. ருசகன் குமரன். 4. வசுதேவன் தம்பியாகிய கங்கிசனுக்குக் கங்கனிடம் உதித்த குமரன்.

புருசுண்டி

இவர் முதலில் விப்பிராதனென்னும் வேடன். தண்டகவனத்து வழிப்பறித்துத் திரிந்து ஒருநாள் அவ்வழிவந்த முத்கலமுனிவரைக் கொல்லப் போக அவரது பார்வையால் ஞான முண்டாகி வேண்ட இவருக்கு மந்திரமுப தேசித்து ஒருமரத்தைக் காட்டி இதை நீர் விட்டு முக்காலமும் பூசிக்கவென, அவ்வாறு பலநாள் செய்தல் கண்டு முத்கலர் ஆங்கு அடைந்து பக்திக்கு மகிழ்ந்து இவரிடம் கருணையால் விநாயக மந்திரம் உபதேசிக்க அதனால் தவமேற் கொண்டு விநாயக சாரூபமும் புருசுண்டி யென்னும் பெயரும் பெற்றவர். மகோற்சட விநாயகர் காசிராஜன் வீட்டில் எழுந்தருளியிருந்த போது அவனுக்கு இவாது மகிமையைச் சொல்லி அழைத்து வரச்சொல்ல அவன் தண்டகவனம் வந்து மகோற்கடர் அழைத்தனர் எனப் புருசுண்டி அரசனது கண்ணை மூடிக் காசியில் இருத்தினர். மீண்டும் அரசன் விநாயகர் ஏவலால் வந்து கஜாநநர் அழைத்தனர் எனக் காசியடைந்து விநாயகரைத் தரிசித்தவர்.

புருடாவதிக பத்திரம்

இப்பொருள் இவனன்றியிருவர் மூவர் மக்களால் அநுபவிக்கற்பாலது என எழுதித்தந்தது.

புருடோத்தமநம்பி

இவர் வேதியர், சிவ பத்திமான். சிவமூர்த்தியைப் பாடி முத்தி பெற்றவர். இவரது திருப்பாசுரம் ஒன்பதாந் திருமுறையிற் சேர்க்கப்பட்டது.

புருபுருஷன்

சாட்சூத மநுவின் குமரன்,

புருமித்திரன்

துரியோதனன் சபையில் இருந்த சூதில் வல்லவன்,

புருமீடன்

அஸ்தி குமரன். இவன் குமரன் பிரகதிட்சு

புருவசன்

மது குமரன்; இவன் குமாரன் அநு.

புருவன்

சாட்சூசமனுவிற்கு நட்வலையிடம் உதித்த குமரன்.

புருவன்மன்

ஒரு அரசன், வேட்டைக்குச் சென்று விலங்குகளை வருத்து கையில் மரீசி முனிவர் கோபித்து நீ சிங்கமாக என அரசன் சிங்கவுருக் கொண்டு காட்டில் திரிந்து கொண்டிருந்தனன். இவ்வகை இருக்கையில் பாகவதன் ஒருவனைக் கொல்லச்செல்ல அவன் விஷ்ணுவைத் துதிக்க அதைக் கேட்டு ஞானமடைந்து முன்னுருவடைந்தவன். இவனுக்குச் சிங்கோதாபவன் எனவும் பெயர்.

புருஷசாமுத்ரிகாலக்ஷணம்

ஒரு உத்தம புருஷனுக்கு உள்ள உறுப்புக்களுள் உன்னதமான அவயவங்கள் ஆறு, நீண்ட உறுப்புக்கள் ஐந்து, குறுகிய உறுப்புக்கள் நான்கு, அகன்ற உறுப்புக்கள் இரண்டு. செவந்த உறுப்புக்கள் ஏழு, ஆழ்ந்த உறுப்புக்கள் மூன்று, இவை தொகை. இவற்றை விரிக்கின் முப்பத்திரண்டாம், அவற்றினிலக் கணங்களைச் சுருக்கிக் கூறுகின்றேன். வயிறு, தோள், நெற்றி, நாசி, மார்பு, கையடி இவை ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திர போகத்துடன் இருப்பன். கண், கபோலம், செங்கை, மூக்கு, முலை, நடுமார்பு இவை ஐந்தும் நீண்டிருப்பின் நன்மையடைவன். சிகை, சருமம், விரற்கணு, நகம், பற்கள் இவை ஐந்தும் சிறிதாயிருப்பின் தீர்க்காயு ளையடைவன். கோசம், கணைக்கால் நா, முதுகு, இவை நான்கும் குறுகி யிருப்பின் செல்வமுள்ளவன் ஆவன். சிரம், நெற்றி இவை இரண்டும் அகன்று இருப்பின் மிகுந்த நலம் அடைவன். உள்ளங்கால், உள்ளங்கை, கண்கள், இதழ்க்கடை, அண்ணம், நா, நகம், இவையேழும் சிவந்திருப்பின் மிக்க இன்பத்தைப் பெறுவன். இகல், ஓசை, நாபி இம்மூன்றும் ஆழ்ந்து இருப்பின் மேலான நன்மை அடைவன்.

புருஷமேரு

ஸ்தம்பகன் குமரன். இவன் குமரன் சுநந்தன்.

புருஷாதர்

ஒருவித இராக்கதர்; வீமனுடன் யுத்தஞ் செய்தவர்கள்.

புருஷாமிருகம்

புருஷவடிவும் மிருகவடிவும் உள்ளது; வீமசேநனைக் காண்க. தாமசமனுவைக் காண்க

புருஷோத்தம பாண்டியன்

காருண்ய பாண்டியன் குமரன்.

புருஷோத்தமன்

வட இந்தியாவில் ஏறக்குறைய (2250) வருஷங்களுக்கு முன் அரசாண்டிருந்த அரசர். இவர் கிரேக்கத் தலைவனாகிய மகா அலக்சாந்தரை எதிர்த்துச் சண்டையிட்டுப் பின் சமாதானம் செய்து கொண்ட அரசர்.

புருஷோத்தமம்

ஜகந்நாதஸ்தலம்.

புரூடன்

வசுதேவனுக்குச் சகதேவியிடத்துப் பிறந்த புத்திரன்.

புரூரவன்

(புரூரவசு) இவன், இளன் இளையென்னும் பெண்ணுருக்கொண்ட காலத்துப் புதன் அவளைக்கூடப் பிறந்தவன். பிரதிஷ்டானபுரம் காண்டவப் பிரஸ்த மாண்ட சந்திரவம்சத்தவன். இவன் இராச்சிய கருவத்தால் வேதியரை அவமதிக்க அவர்கள் சாபத்தால் பித்தனாய்த் திரிந்தனன். இவனது கீர்த்தியை நாரதர் யாழில் பாடக்கேட்ட ஊர்வசி, இவனையணைந்து இவனிடம் இரண்டு ஆடுகளைக் கொடுத்து வளர்க்கக் கட்டளையிட்டு அரசனை நோக்கி உன்னைச் சம்போக காலத்தன்றி மற்றைக் காலங்களில் நிர்வாணமாய்க் காணின் நீங்கு வேன் என்று கூறி அரசனுடன் இருந்தனள், ஒருநாள் இந்திரன் தன் சபைக்கு ஊர்வசியை வருவிக்கக் காந்தருவர் அவளிருக் குமிடம் அணைந்து அவள் தன் ஆடுகளைக் கவர்ந்து சென்றனர். ஊர்வசி கண்டு புலம்ப இருளாகையினாலும் கள்ளர் நீங்குவார் என்ற விரைவினாலும் நிர்வாணமாய்ப் படுக்கைவிட்டு வெளிவந்து காந்தரு வரைத் தொடர்ந்தனன். காந்தருவர் இதையறிந்து பன்னலைப் பிரகாசிப் பித்தனர். இது காரணமாக ஊர்வசி நீங்க அரசன் ஊர்வசிமேல் பித்தங் கொண்டவனாய்ச் சரஸ்வதி நதி தீரத்தில் ஊர்வசியைக் கண்டு தன் குறை கூற அவள் வருஷாந்தத்தில் உன்னை அணைகிறேன் என்று அவ்வகை வந்து நீங்குகையில் அரசன் பரிதமிக்க ஊர்வசி அரசனை நோக்கிக் காந்தருவரைப் பூசித்தால் அவர்கள் என்னை உனக்கு அளிப்பர் என்று நீங்கினள். அவ்வகை அரசன் புரியக் காந்தருவர் ஒரு ஸ்தாலியைத் தந்தனர். அரசன் அதை ஊர்வசியாக எண்ணியிருக்கச் சஞ் ரிக்காமை கண்டு காட்டில் விட்டனன். அதனை மீண்டும் போய்ப் பார்க்கக் காணாது அதினால் உண்டான அரசமரத்தை இரண்டாக்கி உருவசி சாலோக்கியத்தை யெண்ணிக்கடைய அதில் அக்னியுண்டா யிற்று. அது அரசனுக்குக் குமானாகக் கற்பிக்கப்பட்டது. இவனுக்கு ஊர்வசியிடம் ஆயு, தீயந்தன், அமவஸு, சதாயு, பிறந்தனர். (பாகவதம்,) இவனுக்கு அயிலனெனவும் ஒரு பெயருண்டு.

புரோகிதன்

1. ஒரு வேதியன், அரசன் வேதியர்க்குத் தானமளிக்க இவன் முன்னிலையாகக் கொடுத்த தனங்களைக் கொள்ளை கொண்டதனால் நரக வேதனையுழன்று பின்னர் பிரமாக்ஷஸாகப் பிறந்து வருந்திக் கபிலரால் நீங்கப் பெற்றவன் 2. ஊரிலுள்ளார்க்கு வைதீகச்சடங்கு செய்வோன். 3. மந்திரா நுட்டானம், வேதஞானம், கன்மங்களில் விரைந்த ஆற்றல், பொறி யடக்கல், சினலோப மோகங்களின்மை, வேத உபவேதவுணர்ச்சி, அறப்பொரு ணூலறிவு, அரசனைத் தன் ஒழுக்கத்தாலச் சுறுத்தல், நீதி நூற்பயிற்சி, சத்திர அத்திர தனுர்வேதப் பயிற்சி, படைகளை அணிவகுக்கும் திறம். சாபாநுக்கிரக வன்மை ஆகிய இவையுடையவனாம். (சுக் நீ)

புரோசநன்

1. முதலில் பாண்டவர்க்கு மந்திரியாயிருந்து துரியோதனனுடன் கூடிக்கொண்டு அரக்கு மாளிகையில் ஐவரைக் கொல்ல நினைத்தவன். இவன் ஒரு சில்பி யெனவும் கூறுவர். 2. சோமனென்னும் வசுவின் குமரன். 3. அணிலனென்னும் வசுவின் குமரன் என்றுங் கூறுவர்.

புரோசன்

1. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமரன். 2. தருமனை வாரணவதத்திற்கு அனுப்பியகாலத்தில் உடன் சென்ற மந்திரி.

புரோசவன்

பிராசனனென்னும் வசுவின் குமரன்; தாய் உற்சவதி.

புரோச்சிங்கம்

இந்திரப்பிரத்திற்கு அருகிலுள்ள பிரதேசம்.

புரோடாசம்

1. சுத்தமாகிய நெல்லை அரிசியாக்கி மாவு செய்து வறுத்து உண்டை செய்து அமைத்தல். (பரா~மா) 2. ஹோமத்திற்காக மாவினால் உப்பில்லாமல் தட்டிச் சுடப்பட்ட அடை,

புறத்திணை நன்னாகனார்

ஒய்மான் நல்லியக் கோடன், ஓய்மான் நல்லியா தன், கரும்பனூர் கிழான் முதலியவரைப் பாடியவர். இவர்க்கு நன்னாகனார் எனவும் பெயர். (புறநா.)

புறத்திரை

1. சினத்தின் வழிமிக்குமேற் கொண்டு பகைவருடைய வெற்றிக் கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது. (புவெ) 2. பகைவரது கண்ணாற் பார்த்தற்கரிய குறும்பின் நூழையும் பெருவா யிலும் யாவரும் புறப்படாதபடி வளைந்து ஊர்மருங்கே விட்டது.

புறநாட்டுப்பெருங்கொற்றனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் இயற்பெயர் பெருங்கொற்றனார். இவர் நாடு புறநாடா யிருக்கலாம். (அக 323)

புறநானூறு

இது எட்டுத் தொகையின் ஒன்று. இது கடைச்சங்கப் புலவர் பலராற் பாடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுப் புலவர் அரசர் முதலியோரது சரிதை விளங்கும்.

புறநிலைவாழ்த்து

நீ வணங்குந் தெய்வம் நின்னைப் பரிகரிப்ப நின்வழி வழியிகுவ தாகவெனச் சொல்லி உண்மை சொல்லியது. (பு. வெ. பாடாண்).

புறந்துழிஞை

ஆகாயத்தைக் கிட்டும் காவற் காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலே விட்டது (பு~வெ.)

புறப்பொருள் வெண்பாமாலை

1. இது, தமிழிலக்கணம் ஐந்தனுட் பொருளின் பகுதியாகிய புறப்பொருளுக்கு இலக்கணமும், இலக்கியமு மாக அமைந்துள்ளது. பன்னிருபடலத்தின் வழி நூல் இதுவும் பன்னிரு படலங்களை யுடையது. இதில் இலக்கியமாக அமைந்துள்ள வெண் பாக்கள் (361) நூலாசிரியர் ஐயனாரிதனாரென்பவர். இவர் சேரகுலத் தவர். மிகச்சிறந்த நால் 2. ஐயனாரிதனாரால் இயற்றப்பட்ட புறப் பொருள் இலக்கணம். இது பன்னிரு படலத்தை முதனூலாகக் கொண்டது, இந்நூற்கு மாகலூர்கிழார் ஓர் உரை செய்திருக்கின்றனர்.

புறமலை நாடு

கள்ளரில் ஒருவகை.

புறவம்

சீர்காழியின் திருநாமங்களில் ஒன்று, பிரசாபதியைக் காண்க.

புறா

1, இது தன் மனைவியைப் பிடித்துக் கொண்ட வேடன் பொருட்டு அதிதிபூசை செய்யக் கூறிய பெண் புறா சொற்கேட்டு வேடனுக்கு ஆதித்யம் செய்து மழையால் வருந்திய அவனைத் தீக்காயச் செய்து மனைவி யினீக்கத் தால் அத்தீயில் வீழ்ந்து சுவர்க்கமடைந்தது. வேடனும் புறாவின் செய்கை யாலறிவடைந்து காட்டுத்தீயில் மாய்ந்து சித்தி பெற்றான். (பரா காந்) 2. இஃது, ஒரு வானப்பறவை. தான்யத்தால் ஜீவிப்பது. இதற்குக் குறுகிய அலகும் சிறிய தலையும் பவழம்போல் சிவந்த கால்களுமுண்டு. இது மூச்சைப் பிடித்து மேகமண்டலம் வரையில் பறக்கும் சக்தியுண்டு இது தன்னினத்தைப் பிரியாது கூட்ட மாய் வாழும். இவ்வகையில் பல பல நிறமுள்ள வர்ணமும் உருவ வேறுபாடுகளும் கொண்டுள்ளன. காட்டுப் புறா, பச்சைப் புறா, மணிப்புறா, தவிட்டுப்புறா முதலிய இவ்வினத்தைச் சேர்ந்தவை. கரும்புறா, மாடப்புறா எனப் பலவகை உண்டு. 3. இவை, மற்றப் பறவையினங்கள் போலாது, உருவத்திலும் உறுப்புக்களிலும் ஒத்து இருக்கின்றன. இவ்வினத் தில் பலவகை உண்டு. அவற்றில் சில நிறத்தாலும் இடத்தாலும் பேதப்பட்டு இருக்கின்றன. இவ்வகையில், மணிப்புறா காட்டுப்புற, தவிட்டுப்புறா, பச்சைப்புற என்பனவும், மணிப்புறா : அழகிய நிறமுள்ளதாய் மரங்களில் வாழ்வது. காட்டுப் புறா : நீல நிறமாய்க் காட்டில் வாழ்வது. தவிட்டுப்புறா : தவிட்டினிறமாய் கழனிகளில் தான்யங்களைப் பொறுக்குவது. பச்சைப்புறா : பச்சை நிறமாய் மரங்களில் வாழ்வது. இப்புறாக்கள் சாது வானவை, வல்லூறு முதலியவை இவற்றை வேட்டையாடும், இவற்றில் வீட்டில் வளர்க்கும் மாடப்புறா நிலத்திலும், ஆகாயத்திலும் கரணம் முதலிய இட்டு உலவும், இவை தம்மை வளர்ப்பவனிருக்கும் இடமறிந்து வெகுதூரம் கொண்டுபோய் விடினும் வந்து சேரும். இவை ஆகாயத்தில் சூரிய மண்டலம் வரையில் பறந்து இரக்கைகள் தீந்தும் வருவது முண்டு, இதிற்சில ஆகாயத்தில் பறந்து செல்கையில் கரணம் போடும், சில தம் பேடுகளை நோக்கி வாலை விரித்து நடனம் செய்வதுண்டு. இவ்வினப் புறாக்களின் உருவபேதங்களை நான்விரி வஞ்சி யெழுதாது, பெயர்களை மாத்திரம் எழுதினேன். இவை தம் பெடைகளைத் தவிரவேறு பெடைகளை விரும்புவதில்லை.

புறாவின் வகை

இவைகளில் தற்காலம் தெரிந்தவரையில் (40) வகைகளுக்கு மேல் பர்லண்ட் சூலஜி (Zoology) யில் கூறப்பட்டிருக்கிறது. இவற்றின் பெயர் ஆங்கிலத்திலுள்ள படி எழுதுகிறேன். காரியர், பௌடர், ஆமண்ட்டம்ளர், டர்ம்படர், பார்ப், பான்டெயில், ஜாசொபின் காபௌசின், டிராகூன், மொடீனா, ஸ்காண்டரூன், டர்பிட், இங்கிலிஷ் அவுல், நன், மோடில், மாக்பி, ஷோஓமர், ஆர்கேஞ்சில், ஒரியாண்டில் ரோலர், நார்விச்கிராபர், டம்பளர், சாடில்டம்பளர், இங்கிலிஷ் பியர்ட் பால்ட்எட், ரண்ட், குயுமுலெட், டிபவர், ஆபிரிகன் அவுல், ஒர்கிங் ஓமர்மேன, டொம்னே. ஒரியண்டல் டர்பிட் பிளாண்டி நெட்டி, சாடி நெட்டி, ஷார்ட்பேஸ்ட், ஆண்ட்வெர்ப், பிரீஸ்ட், பெய்ரி, பிரில்பாக், சுவாலோ, சுவாபெயின், பயர்ஸ்பாட் முதலிய. இவை உருவத்தில் ஒன்றிற்கொன்று வேறுபட்டும். உணவாதிகளிலும், செயல்களிலும் வேறுபட்டும் இருக்கின்றன.

புலகன்

பிரமன் மானஸ புத்திரர்களில் ஒருவன். பிரமன் நாபியில் பிறந்தவன் எனவுங் கூறுவர். இவனுக்குக் கின்னா கிம்புருஷர் என இரண்டு குமரர்கள் தேவி, கதி.

புலக்கசம்

சண்டாள சாதிகளில் ஒன்று.

புலத்தியர்

பிரமன் புத்திரர். இவர் திரணபிந்துவின் தவச்சாலையில் தவஞ்செய்கையில் அரம்பையர் நீர் விளையாட அச்சோலையில் வரக்கண்டு கோபித்து ஓ பெண்களே இனி என்னெதிரில் யாராவது வரின் கருப்பமுறுக எனச் சபிக்கப் பெண்கள் பயந்து வராதிருந்தனர். இதனையறியாத திரணபிந்துவின் குமரி இவராச்சிரமத்தருகு செல்லக் கருப்பமுற்றுத் தந்தையிடம் கூறிப் புலத்தியரை மணந்தனள். கார்த்த வீரியனால் சிறையிடப்பட்ட இராவணனை மீட்டவர். பராசரமுநிவர் அரக்கரைக் கொலை செய்த வேள்வியைத் தடைசெய்தவர். இவர் சரஸ்வதியிடம் செல்ல அவள் புத்திரவாஞ்சை இல்லாதிருந்தமையால், நதியாக என அவளால் அரக்கர் குலத்தில் விபீஷணனாகச் சாபமடைந்தவர். பிரமதேவன் காதிற்பிறந்தவர். இவர் தேவி ஆவிர்ப்பூ, இவர்க்கு விசிரவஸு, அகத்தியர் என இரண்டு குமரர் உண்டு. புலம் என்றால் வேதத்தில் தவத்தை அறிவிக்கும். இவர் தவத்தால் புகழுற்றோராதலின் இப்பெயர் பெற்றனர்.

புலத்துறைமுற்றிய கூடலூர்கிழார்

இவர் யானைக்கட்சேய் மாந்தாஞ் சேரலிரும் பொறையாரின் வேண்டுகோளின்படி ஐங்குறு நூறு தொகுத்தவர். இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவர். மலைநாட்டினதாகிய கூடலூரிற் பிறந்த வேளாளர். இவர்க்குக் கூடலூர்கிழார் என்பது இயற் பெயர், மேற்கூறிய அரசரால் ஆதரிக்கப்பட்டவர். அவரிறந்தபின் மிகவருந்திப் புலம்பியவர். சேரநாட்டினதாகிய மாந்தையெனும் நகரம் இவராற் பாடப்பெற்றது. முதுமொழிக் காஞ்சி மியற்றிய கூடலூர்கிழார் இவரின் வேறாயினவர். இவர்காலத்துப் புலவர்கள் குறுங்கோழியூர்கிழார், பொருந்தி விளங்கீர்னார். புலத்துறை முற்றிய என்பது இவர்க்கு அடைமொழி. (ஐங்குறு).

புலனறிசிறப்பு

வெவ்விய வேற்றுப் புலத்தினது நிலைமையை அறிவித் தார்க்குத் தம்முடைய கூற்றிலும் பெருகச் சிறப்புக் கொடுத்தது. (பு. வெ.)

புலன்

1. (5) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். 2. இயற் சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு. (யாப்பு~வி).

புலமையோர்

(4) கவி, கமகன், வாதி, வாக்கி இவர்களுள் ஆசுமுதலிய நாற்கவி பாடுவோன் கவி, அரும்பொருளைச் செம்பொருணடையாக் காட்டி விவகரிப்போன் கமகன், காரணமும் மேற்கோளும் எடுத்துக்காட்டிப் பிறன் கோள் மறுத்துத் தன்கோள் நிறுத்துபவன் வாதி. அறம்பொருள் இன்பம் வீடுகளைக் கேட்கக் கேட்க விரித்துரைப்போன் வாக்கியாம்.

புலவராற்றுப்படை

பெரிய இடத்தினையுடைய வானத்துத் தேவர்களிடை மிக்க அறிவாளனை நெறியிலே செலுத்தியது. (பு வெ. பாடாண்).

புலவரேத்தும் புத்தேணாடு

நுண்ணிதான அறிவுசென்ற குற்றமற்ற தரிசனத்தை யுடையராய் இந்திரிய சயம் பண்ணினார் விரும்பும் மேலுலகத்தைச் சொல்லியது. (பு வெ. பொது).

புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு

விற்போன்ற நெற்றியினை யுடையாள் வீரன்றன் அகலத்திடத்தை தழுவேம் யாமென்று சொல்லி ஊடிச் சொல்லியது.

புலவியுட்புலம்பல்

அழகிய தொடியினையுடைய மடவாள் தலைவன் மார்பின் மாலையை அறுத்து ஊடலாற்றாளாய்த் தனிமையுற்றது. (பு வெ. பெருந்திணை).

புலி

இது சிவிங்கி, சிறுத்தையினத்தில் பெரிது. இது நாலடி உயரமும் வால் முதலிய 5 அடி நீளமும் இருக்கும். இதன் உடல், பருத்து வளைந்த கருமையான பட்டைகளைப் பெற்றிருக்கும். இதன் கண்கள் இரவில் அதிகம் பிரகாசிக்கும், ஆதலால் இதன் கண்களைக் கண்ட மிருகங்கள் அஞ்சி மயங்கி இரையாகும். நகங்களும் பற்களும் உறுதியானவை. இது காட்டிலுள்ள நீர்த்துறைகளில் பதுங்கியிருந்து தண்ணீர் குடிக்க வரும் பிராணிகளைக் கொல்லும். இது மனிதர்க்குப் பயப்படும். ஒருமுறை இது மனித மாம்சத்தைத் தின்று ருசிகாணின் பிறகு மனிதனையே கொல்ல எண்ணும். புலி, சிறுத்தை, பூனை, புனுகுபூனை, சிங்கத்தின் இனத்தைச் சேர்ந்தவை. தேக அமைப்பு சதுர அடி உயரம், 9 அடி நீளம், இது சிங்கத்தினினத்தது இராக்காலத்தில் இதற்குக் கண் நன்றாகத் தெரியும், நிறம் மஞ்சள், தேகத்தில் கருமையான கோடுகள் உண்டு, அடிவயிறு வெண்மை, முன்கால் வலிமையாய் நீட்டவும் சுருக்கவுங் கூடிய நகங்களைப் பெற்றது, மீசை உண்டு, உணவு ஆடு, மாடு, மான் முதலிய. மனிதரையும் கொல்லும், வழக்கம் இரவில் இரைதேடப் புறப்படும், அதிக குரூரமுடையது. இது தான் கொன்ற இரையைத் தின்னும், இதைப் போனிலும், ஒருவகைப் பிசினைத் தடவிய இலைகளை இது போகும் வழியில் பரப்ப இது அதின் மீதோடுகையில் காலில் ஒட்டியதை கண்ணிலும் முகத்திலும் தேய்க்க ஒட்டிக் கொண்டு கண்மறைய தரையிற்புரளும் அப்போது சுட்டுக்கொல்வர். உபயோகம்: தோல், நகம், பல் அணை, ஆபரணம், கத்திப்பிடிக்கு உபயோகம்,

புலிகடிமால்

இருங்கோவேளைக் காண்க. துவரையில் முனிவன் தடவினுட் டோன்றியோர் வழித்தோன்றி அரயத்துக்கதி பதியாய்த் தவத்திற்றங்கிய பெரியோரைப் பிழைப்பிப்பான் புலியைக் கடிந்தவன்.

புலிப்பாணி

போகருஷியின் மாணாக்கராகிய சித்தர். இவர் புலியை நட்பாக்கிக் கொண்டு ஜலத்தைத் திரட்டிக் கையிற் கொண்டதால் இப்பெயர் பெற்றார் என்பர். இவர் வைத்தியத்திலும், ஜாலத்திலும் வல்லவர்.

புலிமுகன்

1. பிரமவிஷ்ணுக்கள் ஒருவர்க் கொருவர் சண்டையிட்டு விஷ்ணு புலிமுகனையும் பிரமன் மகிடனையும் சிருட்டிந்து ஏவ அவ்விருவரும் சண்டையிட விஷ்ணு பிரமாதிகள் வெருவிக் கைலையடைந்தனர். பார்வதிதேவியார் சிவாஞ்ஞையால் அவ்விருவர் சிரத்தையும் அறுத்தனள், அவ்விருவருள் மகிடன் தலை பிராட்டியைத் துதித்ததால் அம்மகிடனுக்குச் சிவகணப்பேறு பிராட்டி அநுக்கிர கித்தனள். 2. இவன் ஒரு அசரன். தேவரை வருத்தித் திரிந்து சிவமூர்த்தி யிடம் வாச்சிவ மூர்த்தி இவன் தோலையுரித்து ஆடையாக அணிந்தனர். 3. ஒரு காந்தருவன். இவன் ஏகாதசி விரதமிருந்து இவன் துவாதசியில் எண்ணெயிட்டு முழுகியதால் மறுபிறப்பில் புலி முகனாய்ப் பிறந்து பிறகு முனிவருபதேசத்தால் மகாமாதத்தில் புண்ணிய நீராடிச் சத்தமடைந்தவன், (மகாபுராணம்)

புலையன்

1. சூத்திரன் பார்ப்பினியைப் புணரப் பிறந்தவன். பறைகொட்டு பவன், 2. பறையனைக் காண்க.

புலோமசை

1. இந்திராணி. புலோமன் தங்கை அல்லது குமரி. 2. பிருகுவின் மனைவி. புலோமை யெனவுங் கூறுவர். 3. பிருகு பத்தினி, இவள் ஒரு காலத் தில் இந்திரனிடம் கோபங்கொண்டு உலகத்தில் இந்திரன் இல்லாமற் செய்வேன் எனக்கற விஷ்ணுமூர்த்தி இவளைக் கொன்றனர். (இரா~பால.)

புலோமன்

1. திதியின் புத்திரனாகிய அசுரன்; இவன் விஷ்ணுவிற்குப் பயந்து பிருகுவிடம் அடைக்கலம்புக விஷ்ணு அவனைக் கொடுக்கக் கேட்க இருடி மறுத்தமையால் விஷ்ணு இருவரையும் கொன்றனர். 2. விப்பிரசித்தியின் குமானாகிய அசுரன்; இவன் இந்திரனால் கொல்லப் பட்டவன், இவன் தங்கையாகையால் இந்திராணி பெனலோமியெனப் பட்டனள். இந்திராணியை இவன் குமரியெனவுங் உறுவர். 3. ஒரு அசரன், இவன் பிருகுபத்தினியாகிய புலோமையைக் கிரகித்துச் சியவனரால் நீறானவன்.

புலோமை

1. ஒரு அசுரன். தேவி காளகை, இவர்கள் அறுபதினாயிரம் புத்திரர் களைப் பெற்றனர். பிரமனையெண்ணித் தாய் தந்தையர் இருவரும் தவம் புரிந்து பலவரமும் பொன்மயமான கோட்டையும் பெற்றுப் புத்திரரைப் பாதுகாத்தவர். புத்திரர் காலகேயர். 2. கச்யபன் தேவி. 3. பிருகுவின் பார்யை. இவர் பூலோமன் எனும் அசுரனால் கவரப்பட்டுப் போங்காலத்தில் சியவனருஷி கர்ப்பத்திருந்து நழுவி விழுந்தனர். அதனால் அவருக்கு அப்பெயர் வந்தது. பிறகு சியவனரால் அரக்கன் நீறானான். இவளை அரக்கன் கவர்ந்து சென்ற காலத்தழுத கண்ணீர் ஆறாய்ப் பெருக அதனால் வதூசரை என்கிற நதி உண்டாயிற்று. (பெண்ணுடன் சென்றது.) இவள் துக்கித்துக் கொண்டிருக்கப் பிருகு உன்னை அரக்கலுக்குக் காட்டிக்கொடுத்தது யார் என்ன புலோமை அக்னியென்று கூறப் பிருகு அக்னியைச் சர்வபக்ஷகனாகச் சபித்தனர்.

புல் இனம்

இவ்வினத்தில் கொடிவகை யெனவும், செடிவகை யெனவும் இரண்டு வகைகளுண்டு. புல் முதலாக உற்றறியும் ஓரறியுயிர் வகைகளில் பனைமரம் வரையில் இவ்வினத்தைச் சேர்ந்ததென பாகிக்கப்படுகிறது. இக் காரணத்தால் தான் பனைக்குப் புற்பதியெனத் தமிழ் நூலார் பெயரிட்டிருக் கின்றனர். இவ்வகையில் கொடிப்புல், இலைப்புல், கொழுக்கட்டைப்புல், சுணைப்புல், அறுகம்புல், புளித்தப்புல், கோரைப்புல், வாசனைப்புல், ஒட்டுப் புல், நெல், கோதுமை, வரகு, கேழ்வரகு, அளத்துப்புல், இரத்தகோமாரிப் புல், உப்பறுகம்புல், ஊர்ப்புல், கச்சற்புல், கடுக்கன் புல், கணைப்புல், கதிர்ப்புல், கமரிப்புல், கம்பம்புல், கர்ப்பூாப்புல், கழிப் புல், கழிமுட்டான் புல், காவட்டம் புல், குசைப்புல், குச்சுப்புல், குஞ்சப்புல், குடைப்புல், கோழிக்காற்புல், சீலைப்புல், சுக்கு நாறிப்புல், நாணற்புல், சோனைப் புல், தன்டையம்புல், விசுவாமித்திரப்புல், பிரப்பங்காய்ப் புல், விழற்புல், பீசைப்புல், மத்தங்காய்ப் புல், மருக்குருப்புல், மாந்தப்புல், முசுறுப்புல், முயற்புல், மூங்கிற்புல் முதலிய. இவற்றுள் கொடிவகைப் புற்களிற் சில (100) அடிகளுக்கு அதிகமாக வளரு கின்றன. செடிவகைப் புற்களில் சோளம், கம்பு, முதலிய பெரியவை இப்புல் வினத்தில் பெரும்பாலா னவை கணுக்களுடையன. இவற்றிற் சில உட்குழலு டையன, சில சிறு துவாரமுடையனவாய் வயிர முடையனவாயிருக்கின்றன. இவற்றிற் சில மணமுடையனவாயும், சிலவற்றின் தான்யம் எறும்பு, காட்டுவாசிக ளுக்கு ஆகாரமாகவும் இருக்கின்றது. கரும்பும், மூங்கிலுமிவ் வினத்த.

புல்கசன்

நிஷாதனுக்குச் சூத்ரஸ்திரீயிடம் பிறந்தவன், இவனுக்கு வளை கல்லியெலி முதலிய பிடித்தல் தொழில். (மநு).

புல்லவர்

ஒரு இருடி. புல்லாரணியத்தில் தவம் இயற்றி விஷ்ணு தரிசனம் கண்டவர். புல்லாரணி யெனவும் இவர்க்குப் பெயர்.

புல்லாரணி

புல்லவரைக் காண்க.

புல்லாற்றார் எயிற்றியனார்

இவர், கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு போர்க்கு எழுந்தபோது பாடித் தடுத்த புலவர். (புற. நா).

புல்லியர்

இவர்கள் மதுரை ஜில்லாவில் மலையடிவாரத்தில் கிழங்கு காய்கனி முதலிய பறித்துச் சீவிக்கும் ஒருவகைக் காட்டுச் சாதியார். இவர்களுக்குப் பாலியர் எனவும் பெயர்.

புல்லுருவி

ஒருவிதப் பூண்டு, இது மரங்களின் மீதே பரவி மரத்தின் சாரத்தைக் கிரகித்துத் தான் படர்ந்த மரத்தைக் கெடுப்பது.

புல்வகை

சதுரக்கள்ளி, நாகத்தாளி, பேய் கற்றாழை, செங்கற்றாழை, கற்றாழை, கள்ளி முளையான், மேகநாதப் பூண்டு, அறுகம்புல், சோதிப்புல், தருப்பைப்புல், மாந்தப்புல், காவட்டம்புல், பீனசப்புல், வாசனைப்புல், பேய்ப்புல், பருங்காளான், புற்றுக்காளான், வலைக்காளான், பொறிக்காளான், வரிக்காளான் முதலியன.

புளகன்

ஒரு அரசன். அருணாசலத்தில் புழுகுசாத்தி வலிமை பெற்றுத் தேவரை வருத்தத் தேவர் முறைப்பாட்டால் சிவமூர்த்தி இவனுக்கு முத்தியளிக்தனர்.

புளிந்தன்

வைசியகுமரியை அரசன் கரவினால் புணரப் பிறந்தவன்.

புளிந்தம்

இஃது ஒரு தேசம். (பீ. பர்வம்) This inoludes the Western portion of Bundelkhand and the district of Sagar.

புளிந்தர்

விதர்ப்ப அநர்த்த தேசத்தவர்.

புளினன்

அமிர்தத்தைக் காத்ததேவன், (பா ஆதி.)

புளுவர்

கொங்கு வேளாளரில் ஒரு வகையார். இவர்கள் கம்பராமாயணத்தில் வல்லவர் என்பர். இவர்கள் கோயம்புத்தூரில் இருப்பவர்.

புள்ளுவர்

பக்ஷிதோஷம் போக்கும் ஒரு வகை மலையாள சாதியார்.

புழு

இது வியாசரால் காணப்பட்டு அதனை ஓட்டத்தின் காரணம் கேட்க தான் வண்டிகளுக்குப் பயந்து ஓடுகிறேன் எனக்கேட்டு அதன் பூர்வ நிலையுணர்த்த புழுப்பிறவியை நீங்கி அவரது அநுக்ரகத்தால் அரசனாகியது. (பார அநுசா.)

புழு முதலியன

இவற்றினுடலில் பல வளையங்கள் உண்டு. அந்த வளையங் களினடிப்புறம் சுறசுறப்பாயும் மேற்புறம் மிருதுவாக வுமிருக்கும். ஒவ்வொரு அடிப்புறத்திலும் 4 ஜதை முட்கள் உண்டு. இவைகளே புழுவின் கால்கள். இவற்றினுதவியால் பூமிமீது நகர் கின்றன. உடம்பில் பிசின் போன்ற பசையுண்டு. இப்பசை பூமியைத் தோண்டுதற்கும், பூமிமீது நகரவும் கூடும். இவை அழுகின பொருள்களைத் தின்கின்றன.

புவநேகவாகு

விஜயகூழங்கைச் சக்கிரவர்த்தி யாழ்ப்பாணத்தில் அரசு செய்த போது அவர்க்கு மந்திரியாயிருந்து பல தருமம் நடாத்திய பிரபு.

புவநேசன்

கானவிந்துவைக் காண்க.

புவனங்கள்

சுத்தமென்றும் அசுத்தமென்றும் இருவகையாகக் கூறுவர் சைவர். சாந்தியதீத கலையில் (15)ம், சாந்திகலையில் (18)ம், சத்தம். வித்யா கலையில் (27)ம் பிரதிஷ்டாகலையில் (59)ம், நிவர்த்தி கலையில் (108)ம், அசுத்தம். (சி~சா.)

புஷ்கசி

ஒரு அரக்கி, கர்க்கடனுக்கு மனைவி, இவள் குமரி கர்க்கடி, இவள் புருடனுடன் சென்று சுதக்ஷண முனிவரை வருத்த அவரால் புருடனுட னிறந்தவள்

புஷ்கரன்

1, பரதன் குமரன். 2. வசுதேவன் தம்பியாகிய விருகன் குமரன், 3. நளன் தாயாதியாய்க் கலியுடன் சேர்ந்து நளனுடன் சூதாடி வென்று நளனைக் காட்டிற்கனுப்பி மீண்டும் அவன் செயிக்கக் கொடுத்தவன், 4. வருணபுத்திரன், 5. பரதனது இரண்டாம் புத்திரன் இவன் தாபித்த நகரம் புஷ்கரம்,

புஷ்கரம்

1. இஃது ஒரு தீர்த்தம். The Pushkar, a Iake 6 miles from Ajmer. It is called also Pokhra. 2. ஒருதேசம். 3. சத்ததீவுகளில் ஒன்று. 4. மாளவ தேசத்துள்ள ஒரு நதி. இதில் விச்வாமித்ரன் தவம் செய்தான்.

புஷ்கரர்

திருஷ்ணன் குமரர்.

புஷ்கராருணி

புருவம்சத்து ருக்ஷயன் குமரன்.

புஷ்கரிணி

1. வியுஷ்டிக்குத் தேவி. ஸர்வதேஜஸ் என்பவனுடைய தாய். 2, உல்முகன் தேவி, அங்கன் தாய்.

புஷ்கரேக்ஷணிபீடம்

அறுபத்து நான்கு சத்திபீடங்களுள் ஒன்று. இது பிரபாசக்கரைக் கணுள்ளது.

புஷ்கலயோகம்

அமாவாசை, திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் கூடிவருவது.

புஷ்கலாருணி

உருகூடியன் குமரன். இவன் வம்சத்தவர் பிராமணராயினர்.

புஷ்கலாவதி

காந்தாரக்கரத்தில் பரதரால் நியமிக்கப்பட்ட பட்டணம்.

புஷ்கலாவருத்தம்

புட்கலா வருத்தம் காண்க.

புஷ்காரரண்யம்

புஷ்கரத்தீவிற் கருகிலுள்ள காடு,

புஷ்டி

1. தருமன் என்னும் மனுவின் தேவி. 2. தகனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி. 3. கணபதியின் தேவி, உலகத்தில் பூசிக்கப் பெற்றவள். (பிரம்மகைவர்த்த. புராணம்).

புஷ்பகம்

இது குபேரன் விமானம்; பிரமனால் குபேரனுக்குக் கொடுக்கப்பட்டது. இதில் எவ்வளவினர் இருக்கினும் இடங்கொடுக்கும். இதைக் குபேரனிடமிருந்து இராவணன் கவர்ந்தனன். இராவண சங்காரத்திற்குப் பிறகு இது இராமமூர்த்தியைச் சேனையுடன் தாங்கித் திரு அயோத்தி சேர்ந்தது.

புஷ்பதந்தன்

விஷ்ணுபடன்,

புஷ்பதந்தம்

மேற்றிசையானை.

புஷ்பதந்தர்

1. சிவகணங்கரில் ஒருவர், இவர் தெய்வமில்லையென இகழ்ந்த பாவ மேலீட்டால் தம்மால் பூசிக்கப்பட்ட ஆன்மார்த்தமூர்த்தி மறைய அஞ்சி நாத்திகம் பேசிய வாயின் தந்தங்களை யொவ்வொன் றாகக் கழற்றிப் புஷ்பங்களாக அருச்சித்து மஹம்நஸ்துதி கூறச் சிவபெருமான் களிப்புற்றுப் புஷ்பதந்த திருநாமமளிக்கவேண்டிய சித்திபெற்றவர். 2. (சைநர்) ஒன்பதாவது தீர்த்தங்கர் இவரது பட்டணம் காகந்திபுரம், இக்ஷவாகு வம்சத்தவர். தந்தை சுக்கிரீவமகாராஜா, தாய் சயராமை, இவர் மார்கழி மாசம் பூர்வபடி பிரதமை மூலகக்ஷத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (100) வில் வெள்ளையர்ணம், ஆயுஷ்யம் இரண்டுலயும் பூர்வம், புத்ரன் சுமதி, விதர்ப்பர் முதலிய எண்பத்தெட்டுக் கணதரர்.

புஷ்பபத்திரை

மார்க்கண்டர் தவம்புரிந்த நதிதீரம்.

புஷ்பம்

இதற்கு சுமனஸ் என்று ஒரு பெயர். தேவர்களுக்கும் சுமனஸ் என்று பெயர். சந்திரன் ஓஷதிநாயகன் ஓஷதிகள் அமிர்தமயமானவை, எவன் இவ்விதமான புஷ்பத்தினால் தேவதைகளைப் பூசிக்கிறானோ அவன் இஷ்டசித்திகளை அடைவான். தேவர்கள் வாசனைகளால் திருப்தி அடைகின்றனர். இது பலிக்கு சுக்ரர் கூறியது. (பார~அநுசா.)

புஷ்பவகைகள்

இவற்றிற் சில மணமுள்ளன, சில அழகுள்ளன, சில மணமில் லன குங்குமப்பூ, கொன்றை, மைக்கொன்றை, காட்டாத்தி, சண்பகம் பாதிரி, மந்தாரம், பாரிசாதம், புன்னை, மகிழ், பன்னீர்பூ, குருக்கத்தி, செந்தாழை செம்பரத்தை, அலரி, செம்பருத்தி, நந்தியா வர்த்தம், செவ்வந்தி, தும்பை, தாமரை, அல்வி, குவளை, செங்கழுநீர், நீலோற்பலம், பிச்சி, பலவகை மல்லிகை, முல்லை, வெட்சி, ரோஜா எனும் பலவகைப்பூ, புல், நிலசம் பங்கி, கொடிசம்பங்கி, குருந்து, கோங்கு முதலிய. இவை கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ எனப் பிரிக்கப் படும் இவை தாவரவர்க்கங்களைச் சேர்ந்த புல் பூண்டு வகைகளின் வித்திற் காதாரமானவை. இவை அகவிதழ் புறவிதழ் புட்பகோசம் அண்ட கோசமெனும் பிரிவுகளைப் பெற்றிருக்கின்றன. இம்மலர்களினி தழ்கள் ஒரிதழ் முதல் ஆயிரமிதழ்கள் பெற்றும் அணுமுதல் பல அடிப் பிரமாண நீளமுடையவையாகவும் சில மண முள்ளவையாகவும் சில மண மற்றும் பல நிறங்களும் பெற்றுத் தனித்தனியாகவும் கொத்துக்க ளாகவும், சில புட்பங்கள் கருச் சின்னங்களுடன் கூடியும் சில அவை யின்றியும், சில எலும்பை யொத்த புறப்புற விதங்களாகிய பாளைகளு டன் கூடியும் உள்ளன. பூக்களில் சில வினோதம் உண்டு. சில புட்பங்கள் இலைகளையே தமக்கிடமாகக் கொண்டு புட்பிக்கின்றன, சில இரவில் மலர்வன. சில பகலில் மலர்வன. சில குறித்த காலம் தவறாமல் மலர்வன. மிகப் பெரிய புட்பம் சுமத்ரா தீவிலுள்ள நீர்நிலைகளில் அமர்போபால்ஸ் எனும் ஒரு நீர்ப்பூ (8) அடி உயரமும் உட்கமலம் (5) காலன் தண்ணீர்கொள்ளத்தக்க ஆழமும் (5) அடி அகலமுள்ளதாய் ஒரு நீர்ப்பூ மலருகிறதென்பர். இதைப்போலவே தென் சமுத்திரத்திவிலுள்ள நீர் நிலைகளிலும் ரப்லீஷா ஆர்னால்டி எனும் ஒருவித தீர்ப்பூ (3) அடி அகன்றும் உட்புறம் (3) காலன் தண்ணீர் கொள்ளத்தக்கதாயும் (5) இதழ்கள் கொண்டதாயும் ஒருவகை மலருண்டு என்பர்.

புஷ்பவந்தன்

உபரிசரவஸு குலத்தரசன்.

புஷ்பவாகனன்

1. ஒரு அரசன், இவன் காசியில் தவஞ்செய்து சிவப்பிரசா தத்தால் நினைத்த இடஞ் செல்லத்தக்க தாமரையொன்று பெற்று அதனை வாகனமாகக் கொண்டு பிரமதேவரைப் புஷ்கரத்தீவிற் கண்டு அதற்கு அரசனாக வேண்டிப்பெற்று அரசாளுகையில் பதினாயிரம் புத்திரர்களைப் பெற்றுப் பிரசேதஸ் முனிவரால் முற்பிறப் பறிந்து மீண்டுங் காசியெய்தித் தவஞ்செய்து முத்திபெற்றவன். 2, ஒரு அரசன். பல தானங்கள் செய்த புண்யபலத்தால் சுவர்க்கபதமடைந் தவன், (பதுமம்.)

புஷ்பவான்

விருஷபன் குமரன். இவன் குமரன் சத்தியவிரதன்.

புஷ்பாருணன்

துருவன் குமரனாகிய வச்சரனுக்குச் சர்வர்த்தியிடம் பிறந்த குமரன். இவன் தேவியர், பிரபை, தோஷை; முதற்கூறிய பிரபைக்குப் பிராதம் முதலிய குமாரும் தோலைக்குப் பிரதோஷன் முதலிய குமாரும் உதித்தனர்.

புஷ்போதகி

இது யமலோகத்திலுள்ள புஷ்கரிணி, தண்ணீர் தானஞ்செய்தவர் களுக்கு யமபுரத்தில் தாகந்தணிப்பது. (பார~அச்.)

புஷ்போத்கடை

விசிரவஸுவின் தேவி. சமாலியின் பெண். இவளுக்கு மகாபாரி சுவன், மகோதரன், பிறந்தனர்.

புஷ்யமித்திரன்

1. பிரகத்தூர்த்தனுடைய சேநாதிபதி. இவன் குமரன் சுங்கன். 2. பாதகண்டம் ஆண்ட ஒரு அரசன். இவன் குமரன் துர்மித்திரன். 3. மகத தேசாதிபதியாகிய பகுத்ரதன் சேநாதிபதி. இவன் அரசனைக்கொன்று தானே அரசனாயினான். இவன் குமரன் அக்னி மித்திரன்.

புஷ்யர்

இருபத்தொன்றாவது புத்தர்.