அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பீகா

எலியினத்தது. அமெரிகாவைச் சார்ந்தகயான முதலிய இடவாசி. (62) அடி நீளம் (1) அடி உயரம் நிறம் பழுப்பு உடலிற் புள்ளிகள் வால் குட்டை, நீர்நிலைகளை யடுத்து வளையில் வசிப்பவை, தண்ணீரில் நீந்தும். இரவில் இரைதேடும் சாக பக்ஷணி. இது, தனக்கு வேண்டிய ஆகாரத்தை வளையில் சேமித்து வைத்துக் கொள்கிறது.

பீச்சாங்குழல்

1. இது ஒரு புறம் வாய் குவிந்தும் ஒருபுறம் வாயகன்றும் உள்ள நீரெறியுங் கருவி. இது உட்டுளைக் கருவி. இதற்குள் அக்குழைக்குச் சரியாய் ஒரு காம்பமைத்து நீரையிழுக்க நீர் மேவேறும். அதைக் கீழழுத்த நீர் சிதறியோடுவது. 2. ஒரு வாய்க்குவிந்த குழலின் நுனி குறுகிச் சிறு துவாரமுள்ள தாயிருக்கும். இதற்குள் மேலும் கீழுமாக இழுக்கத்தக்கதாய்க் காற்றை யிழுக்கவும் இழுத்தபொருள்மேல் போகாமலும் சுற்றிய ஒருதடை யுடன் கூடிய கொம்பு. அதனை திரவப்பொருள்களில் போட்டு இழுத்தால் திரவம் கொள்ளும், தள்ளின் பீச்சும் தன்மைவாய்ந்த கருவி.

பீஜாபஹாரிணி

ஆண்பெண்களின் சுக்ல சோணிதங்களை அபகரிப்பவள்.

பீடன்

நரகாசுரன் சேநாபதி.

பீடபூமி

பூமி மட்டத்திற்குச் சற்று உயர்ந்திருக்கும் பூபாகத்திற்குப்பீடபூமி என்று பெயர். 2. சாதாரண பூமியின் பரப்பிற்கு மேல் மிகவுயர்ந்து மேடுபள்ள மில்லாததாகவுள்ள சமபூமி. இது பெரும்பாலும் மலையடுத்து இருக்கிறது. இப்பீடபூமிகளுள் ஆசியா கண்டத்தினிடையிலுள்ள பாமிர்பீடபூமி கடல் மட்டத்திற்கு (11) ஆயிரம் அடிமுதல் (22) ஆயிரம் அடியளவு உயர்ந்திருக் கிறது. சில சமதரைகள் புல் வெளிகளாகவும், சில சமவெளிகள் பலவகை விருக்ஷ வகைகள் உள்ளனவாகவும் இருக்கின்றன. இவ்வகையான பூப்பிரதேசத்தைச் சமவெளிகள் என்பர்.

பீதகற்பம்

1. சிவ பெருமான் பீதவர்ணமாய் விளங்கிப் பீதாங்கியைப் படைத்தனராதலால் அப்பெயர் பெற்றது. 2. பிரமன் சிவமூர்த்தியை யெண் ணித்துதித்துக் காயத்திரி பெற்ற கற்பம்.

பீதாம்பரப் புலவர்

இவர் யாழ்ப்பாணத்து நீர்வேலியூரினர். தமிழ்நூற் பயிற் சியுள்ளவர். மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா முதலிய செய்தவர்.

பீனருஷி

சுமத்திரருஷிக்கு ஒரு பெயர்.

பீபற்சு

அருச்சுனன்.

பீமகருமன்

திருதராட்டின் புத்திரன்.

பீமசேநன்

1. ஒரு காந்தருவன். (பா ஆதி.) 2. ரிக்ஷன் குமரன். இவன் குமரன் பிரதீபன் 3. அபிமன்னன் பௌத்திரன். 4. பாண்டுவிற்குக் குந்திதேவியிடம் வாயு அம்சத்தாற் பிறந்த குமரன். இவன் குழந்தையாயிருக்கையில் குந்தி தேவி இவனை எடுத்துக் கொண்டு ஒரு மலை மீது ஏறினள். இவளிடம் இருந்த குழந்தையாகிய வீமன் வழுவி மலையில் இருந்த பாறைமீது விழுந்தனன். அதனால் அங்கிருந்த கரும்பாறைகள் தூள்களாயின. இவன் ஆகாயவாணி யால் இடப்பட்ட பெயரையுடையவன். தன்தந்தை இறந்தபின் பெரிய தந்தை யாகிய திருதராட்டிரனால் வளர்க்கப்பட்டு வில்வித்தை முதலியவற்றைக் கற்று வருகையில் துரியோதனன் இவனிடத்தில் பொறாமை கொண்டு இவனைப் பலவிதத்தில் கொல்ல எண்ணி அன்னத்தில் விஷமிடுவித்தும், பாம்பைவிட்டுக் கடிக்கச் செய்தும், கங்கையில் வசிநாட்டிக்குதிப்பித்தும், பின்னும் பல கொடுமைகள் செய்தனன். இவற்றிற்குத் தப்பித் தங்களுக்குப் பெரிய தந்தை தந்த இடத்தில் இருந்து துரியோதனன் தந்தையை ஏவி வருவித்த காலத்துச் சென்ற அரக்குமாளிகையில் இருந்து அது தீப்பட்டு எரிந்த காலத்துத் தீக்குத் தப்பிச் சகோதரரையும் தாயையும் தூக்கிப் பிலத்தின் வழிச்சென்று இடும்பன் வனம் சேர்ந்தனன். அங்கு இடும்பன் இவர்கள் வந்த அரவங் கேட்டு இடும்பியை அனுப்ப அவள் இவனிடம் ஆசை கொண்டிருந்தனள். இதனை அறிந்த இடும்பன் வீமனுடன் யுத்தத்திற்கு வர அவனிடம் போரிட்டுக் கொன்று தாய் சொற்படி இடும்பியை மணந்து கடோற்கசனைப் பெற்று ஏகசக்கிரபுரத்தில் தாயுடன் சென்று வசித்துப் பகாசுரனைக் கொன்று சராசந்தனிடம் பதினைந்து நாள் போரிட்டு வென்று அவனால் சிறைப் பட்டிருந்த நூறுபெயரைச் சிறை நீக்கித் திரௌபதியுடன் இந்திரப்பிரத்தம் வந்து சாம்பிராச்சியத்துடன் வாழ்ந்திருக்கையில் பெரியதந்தை வருவிக்கச் சென்ற தமயனுடன் சென்று தமயன் நாடு முதலியவற்றைத் தோற்று இருக்கையில் துரியோதனன் ஏவலால் அவன் தம்பியர் திரௌபதியை அவமான படுக்துகையில் பல கொடுஞ் சபதம்கள் செய்து நாடு நீங்கிக் காடடைந்து இரௌபதி விரும்பிய மந்தார மலரின் பொருட்டு அளகை சென்று அநுமனுடன் போரிட்டு அவனை நட்புக் கொண்டு தன் தம்பியின் இரதத்தில் கொடியாயிருக்க வரம்பெற்றுப் புட்பத்துடன் மீண்டு மணிமாலன், சலேந்திரன், புண்டரீகன், கிம்மிராசுரன் முதலியவரைக் கொன்று பாம்பாயிருந்த நகுஷணனால் விழுங்கப்பட்டு அந்நகுஷனுக்கு இருந்த தருமசந்தேகத்தை நீக்கிய தமயனால் விடுபட்டு நகுஷன் சாபத்தை நீக்கி அஞ்ஞாத வாசங்கழிந் தபின் நாடு கொடாது யுத்தத்தில் தேருடன் ஆகாயத்தில் வாரியெறிந்தும், அசுவத்தாமன் ஏவிய நாராயணாஸ்திரத்திற்கு அஞ்சாது போரிட்டுக் கடைசியில் வணங்கியும், துச்வாசனைப் பதினேழாநாள் யுத்தத்தில் கதாயுதத்தால் கொன்றும், பதினெட்டாநாள் யுத்தத்தில் துரியோதனனுடன் போரிடுகையில் கண்ணன் குறிப்பாகக் காட்டிய இடங்கண்டு துரியோதனனை அடித்துக் கொன்றவன். தருமர் செய்த அச்வ மேதத்திற்குப் புருஷாமிருகத்தை அழைக்கச் சென்று அழைத்த காலத்தில் (4) காதம் முன்னே சென்றால் வருகிறேன். அல்லாவிடின் உன்னைப் பக்ஷிப்பேன் என உடன்பட்டு ஒருகல் விட்டெறிந்து சிவாலயம் தீர்த்தமுதலிய உண்டாக்கிமுன் செல்ல மீண்டு புருஷாமிருகம் சமீபமாக வரக்கண்டு பலகற்கள் விட்டெறிந்து முன் தம் நாட்டெல்லையில் ஒருகாலும் புருஷாமிருகத்தெல்லையில் ஒரு அடியும் வைக்கையில் மிருகம் பிடித்துக்கொள்ளத் தருமரிடம் நியாயம் கூறி அவர் தீர்ப்பின்படி புருஷா மிருகத்திற்குப் பாதிச் சரீரமளித்துத் தருமருக்கு முன் சுவர்க்க மடைந்தவன். இவன் குமரன் சுதசேநன், இவனுக்குக் காலியிடம் சர்வ கேதனும், சலந்தரையென்னும் தேவியிடம் சுகுணனும் பிறந்தனர். இவனுக் குச் சிங்கக்கொடி, இவனுக்கு இடும்பியடம் கடோற்கசன் பிறந்தனன். இவன் வெடுவெடுத்த சொல்லாலும் மிக்க ஊணாலும் அருச்சுநனுக்குப் பின் உயிர் நீங்கினன்.

பீமசோழன்

இவன் பாண்டியன் புத்திரியாகிய வித்யுதவதை யென்பவளை மணந்து அநேக திருப்பணிகள் செய்து எழுபத்தேழு வருஷம் அரசாண்டு இராஜ ராஜேந்திர, சோழனைப்பெற்று நற்கதி யடைந்தவன்,

பீமநதி

ஒரு தீர்த்தம்.

பீமநாதன்

கைலாயத்து நிருதிதிக்கில் காவலாளி,

பீமன்

1. ஏகாதசருத்ரருள் ஒருவன். பூதனுக்குச் சுரபியிடம் உதித்த குமரன். 2. (ச.) விஜயன் குமரன். 3. (ச.) சகதேவன் குமரன். இவன் குமரன் சயசேகன், 4. ருக்ஷன் குமரன், பிரீதிபன் தந்தை, 5. விதிர்ப்பராசன். இவன் மகள் தமயந்தி 6: கும்பகர்ணனுக்குக் கற்கடி எனும் தைத்தியப் பெண்ணிடம் பிறந்து தன் தாயால் தந்தை இறந்தமையறிந்து தந்தையைக்கொன்ற இராமனுடன் போரிட எண்ணிப் பிரமனை நோக்கித் தவம்புரிந்து பல வரமடைந்து பிரிய தர்மன் எனும் அரசனைப் பிடித்துச் சிறையிலிட அரசன் சிறையில் சிவபூசை செய்கையில் வேவுகாரர் அரசன் உன்னைக் கொல்ல எதோ செய்கிறா னென்று கூறக்கேட்டு அரசனிடம் ஆயுதபாணியாய்ச் சென்று நீ என்ன செய்கிறாயென் அரசன் சிவபூசை செய்கிறேனென்று கூறுகையில் உக்ரரூபங் கொண்ட சிவபெருமானால் கொல்லப்பட்டவன். (சிவமகா புராணம்.) 7. பாண்டு புத்ரன், 8. விதர்ப்பதேசாதிபன். 9. அக்னி விசேஷம். 10. இறீநன் புத்ரன், துஷ்யந் தனுடன் பிறந்தான். (பார~ஆதி)

பீமபலன்

ஒரு அக்னி (பார~வந).

பீமபிந்து

திருதராட்டிரன் குமரன்.

பீமபீடம்

சத்திபீபங்களில் ஒன்று.

பீமரதன்

1. திருதராட்டிரன் குமரன். 2. யதுவம்சத்து விக்ருதி குமரன். இவன் குமரன் நவாதன். 3. கேதுமான் குமரன்; இவன் குமரன் திவோதாசன்.

பீமரதி

ஒரு நதி. பீமரதி யென்பர்.

பீமர்

1. சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2, ஆகாசாதிட்டான தேவர்; இவர்க்குக் கலவிகரணர் எனவும் பெயர். இவரது சத்தி கலவிகரணி.

பீமவாகு

திருதராட்டிரன் குமரன்.

பீமவேகன்

திருதராட்டிரன் குமரன்.

பீமேசுரம்

வசவர் பூசித்த தலம்.

பீமை

1. சத்தியைக் காண்க. 2. ஒருநதி, இது திரிபுராரியாகிய சிவ மூர்த்தியின் தேகத்தின் வியர்வையிற் தோன்றிய தென்கிறார்கள்.

பீலிவளை

வளைவணனென்னும் அரசன் மகள். காவிரிப்பூம் பட்டினத்துக் கழிக்கானற்சோலையில் நெடுமுடி கிள்ளியுடன் கூடிக் கருவுற்றுத் தந்தைநகர் அடைந்தவள். (மணிமேகலை)

பீலீகரோகம்

மேடு, பள்ளம், வாய்க்கால் முதலியவைகளை வேகமாகத் தாண்டல், அதிநடை, உண்டபின் வேகமாக வோடுதல், இவற்றால் இருதயத்திற் கிடபாகத்திலுள்ள பீலீகம் குலுங்கும் இதன் மேல் பெருந்திண்டி, பகல் நித்ரை, அசீரணம் (14) வேகங்களை யடக்கல் இவை முதலியவற்றால் பீலீகம் தன் ஸ்தானத்தை விட்டுச் சரிந்து பலவித உபத்திரவத்தைச் செய்து கட்டி போல் தோன்றும். இது வாதபீலீகம், பித்தபீலிகம், சிலேத்மபீலீகம், திர்தோஷ பீலீகம், அசாத்ய பீலீகம் எனப் பல. இவற்றை லவணச்சூரணம், யவாக்ஷாரக்குழம்பு, சூலைக்குடராக் குளிகை முதலிய வசமாக்கும். (ஜீவா.)

பீவரி

1. விதேகராசனைக் காண்க. 2. ஒரு யோகினி, பித்ருக்களைக் காண்க. குசிகன் தேவி.

பீஷணன்

1. காசிராசனுக்குச் சேகவன்; சந்திரமதி சிசு அத்தி செய்தனளெனத் தம் அரசனிடம் விட்டவன், 2. ஒரு அரக்கன், பகாசுரன் தம்பி.

பீஷ்மகன்

1 குண்டினபுரத்து அதிபதி. 2. இருக்குமணியின் தந்தை. கிருஷ் ணன் மாமன். இவன் குமரன் இருக்குமி, உருக்மீதரன், உருக்மீபாகு, உருக்மீகேசி, உருக்மீநேத்ரன், ஒருபெண் (இருக்மணி) உருக்மணி.

பீஷ்மர்

(சந்.) சந்தநு குமரர், தாய் பாகீரதி, இவர் முற்பிறப்பில் பிரபாசன் என்னும் வசு, பிரமன் சாபத்தால் பாகீரதி வயிற்றில் உதித்தவர். பாசிராமரிடம் வில் வித்தை கற்றவர். இவருக்கு முதற்பெயர் காங்கேயன். தந்தை, செம்படவர் அரசன் குமரியை மணஞ்செய்து கொள்வதின் பொருட்டுத் தாம் இனி மணஞ்செய்து கொள்ளுகிறதில்லையென்று சூளுரைத்தமையால் இப்பெயர் அடைந்து தந்தையால் புண்ணிய உலகப்பிராப்தியும், யம வாதனையின்றிச் சுகமாய் நினைக்கும் போது உயிர்நீங்கவும், வரம்பெற்றவர். அம்பையின் பொருட்டு ஆசாரியராகிய பரசிராமரிடம் போரிட்டு அவரைக் களிப்பித்தவர். பாரதயுத்தத்தில் பத்துநாள் யுத்தஞ் செய்து சிவேதனை முதனாள் வஞ்சனையாற் கொன்று பத்தாநாள் தம்மைக் கொல்ல உருமாறி வந்த சிகண்டி முன்னிற்க ஆயுதம் தொடாது நின்று அருச்சுநன் பாணத்தால் மூர்ச்சையடைந்து பாரதப்போர் முழுதும் சரசயனத்து இருந்து கண்டு உயிர் நீத்தவர். இவர்க்குப் பனைமாலை, இவர் வசுவாயிருந்த காலத்து வசிட்டரால் இச்சாபம் அடைந்தார் என்ப. இவர் தியா என்கிற வசு என்பர். தியாவைக் காண்க.