அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
பிக்ஷாடனமூர்த்தம்

தாருகவனத்து இருடி பத்தினிகள் கொண்ட செருக்கை அடக்கக்கொண்ட மோகனத்திருவுரு. இவ்வுருவைக்கண்டு தாருகவனத்து இருடிபத்தினிகளும் மோகினி யுருக்கொண்ட விஷ்ணுமூர்த்தியும் மயங்கினர் என்பர் சைவர்.

பிக்ஷூக்கள்

அச்மகுட்டர். இவர்கள் கல்லால் தான்யத்தைக் குத்தி பெடுப்பவர். மரீசிபர்: சந்திர கிரணத்தைப் பானஞ் செய்து திருப்தியடைபவர். பரிப்ருஷ்டிகர்: ஒருவன் கொடுப்பதை வாங்கி யுண்பவர். வைகஸிகர்: பெரியோர்க்கிட்டு மிச்சத்தை யுண்போர். பிரஸங்கியானவர்கள் அக்கா லத்திற்கு வேண்டிய மட்டும் எடுத்துக்கொள்வோர். (பா~அச்.)

பிங்கல முனிவர்

பிங்கலந்தை எனும் நிகண்டு இயற்றியவர். இந்நிகண்டு சூடாமணி நிகண்டு, சேந்தன் திவாகரம் முதலியவற்றிற்கு முந்திய நூலாதலால் இவர் அந்நூலாசிரியர்களுக்கு முந்தியவர். இவர் ஆதிதிவாகர முனிவர்க்குப் புத்திரர்.

பிங்கலகடகர்

இவர் பிங்கலனும், கடகனுமெனக் கூறப்படுவர். இவர்கள் உதயணன் தம்பிகள்; அவனுக்கு உயிர் போன்றவர்கள் “தன்னுயிரன்ன தம்பியர். அவன் பால் மிக்க அன்புடையவர்கள் உதயணன் மாயயானையாற் பிடித்துக் கொண்டு போகப் பட்டபொழுது யூகியின் வேண்டுகோளால் தாய் மிருகாவதியையும், கோசாம்பி நகரத்தையும், பாதுகாத்திருந்து ஆருணியரசன் அந்நகரைக் கைப்பற்றிய பொழுது அவனை வெல்லமாட்டாதவர்களாய்த் தம்முருவத்தை மறைத்துக் கொண்டு பல வீரர்களோடு வேறிடஞ்சென்று ஒளித்திருந்து உதயணன் ஆருணியோடு போர் செய்தற்குச் செல்லும்பொழுது அவனைக் கண்டு பணிந்து பலவாறு புலம்பி வழிபடுவார்களாய் உடனி ருந்து உதவி செய்தவர்கள். இவர்கள் புலம்பிய பகுதி யாருடைய மனத்தையும் உருக்கும். ஆருணியரசனுடைய பெரும்படைத் தலைவர்களுள் ஒருவனாகிய காந்தாரகனை, இவர்கள் அம்பால் எய்து வென்றார்கள். கடகபிங்கல ரெனவும் வழங்கப்படுவர். (பெருங் கதை).

பிங்கலகேசி

சுமாலிபுத்திரி. அக்ரகேசன் தேவி.

பிங்கலசன்

துரியோதனன் தம்பி, நாலாநாள் யுத்தத்தில் வீமனால் இறந்தவன்.

பிங்கலசாரமாணி

உதயணன் வீரர் பதின்மருள் ஒருவன். (பெருங்கதை).

பிங்கலந்தை

பிங்கலர் செய்த தமிழ் நிகண்டு.

பிங்கலன்

1. சிவகணத்தவரில் ஒருவன். 2. ஒரு வேடன் காட்டில் திரிகையில் புலிதுரத்தப் பயந்து வில்வமரத்தில் ஏறினன். புலி அவனை விடாது மரத்தடியில் படுக்கக்கண்டு இரவு முழுதும் உறக்கம் வராதபடி வில்வப் பத்திரத்தைப்பறித்துப் போட்டுக் கொண்டிருந்தனன். அப்பத்திரம் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்த தால் வேடன் சிலநாள் தரித்து உயிர்நீங் கக்காலபடர்பற்றினர். சிவமூர்த்தி யமபடரைச்சீறி முத்தியிற் சேர்ப்பித்தனர். 3. ஒரு கொடுங்கோலரசன், இவன் தன் ஆயுள் இறுதியில் சிவன் திருநாமத் தைப் பெற்ற தன் புத்திரரைஅழைத்துச் சிவநாம மகிமையால் காலதூதர் பற்றுதலினின்றும் நீங்கி முத்திபெற்றவன். 4. வீதகவ்யனை காண்க 5. கத்ருதநயன் நாகன் 6. ஸர்ப்பயாகத்திருந்த ருஷி. (பார~ஆதி.)

பிங்கலம்

ஒருநூல், சந்தோபிசிதம் சொன்னது.

பிங்கலர்

பிங்கலந்தை நிகண்டு இயற்றிய சைநர். திவாகரன் குமரன் என்பர்.

பிங்கலாக்ஷன்

நிருதியைக் காண்க.

பிங்கலை

1. உமையின் தோழியரில் ஒருத்தி, கவரி வீசுபவள். 2. இவள் ஒருவேசை. இவள், நாள் ஒன்றுக்கு (100) பொன்கொடுப் போரைப் புணர்வது என்னும் நியமம் பூண்டிருக்கையில், இவளைச் சேரச் சக்தியில்லாச் சுநந்தன் என்னும் வணிகன், இவளைச் சேரவிருப் புற்று மறுபிறப்பிலாயினும் இவளை நாயகியாகக் கொள்ள எண்ணி நினைத்ததைத் தரும் காயத்ரி மடுவில் வீழ்ந்து இறந்தனன். இவனது செயலறிந்த வேசை அந்த வணிகனுக்குத் தங்கையாகும்படி அம்மடுவில் வீழ்ந்து இறந்தனள். இருவரும் தங்கள் இஷ்ட சித்திகளை அடையும் பொருட்டுப் புறாக்களாகப் பிறந்து இருவரும் நாயக பாவத்தையும் சகோதர பாவத்தையும் அடைந்தனர். (பவாநி கூடற் புராணம்).

பிங்களன்

1. ஒரு இருடி. இவன் சிவமூர்த்தியையெண்ணித் தவம்புரிந்து நித்தியத்துவமடைந்தவன். 2. இவன் விகிர்தன், சபலன், விசாலன், பிங்காகன் முதலியவருடன் கூடி வேதியர் உருக்கொண்டு மகோற்கடர்மீது அகதையில் அத்திர ஆவாகனஞ்செய்து, தூவ அவை அவரைத்தம் உருக்கொண்டு பணிந்தன. மீண்டும் விநாயகர் அவர்கள் மீது அக்ஷதை தூவிக்கொன்றனர்.

பிங்களர்

1. உலகப்போர்வையைத் தைத்துக் கொண்டிருக்கும் கைலாச மேற்கு வாயிற்காவலர். இவர்க்கு ஊசி நூல் ஆயுதம். 2. இவர் சிவகணத்தவர், இவர் திருக்கைலையில் வாயுதிக்கில் செந்நிறமுள்ளவ ராய்ச் சர்வ பூஷணாலங்கிருதராய் ஊசியும் நூலும் கையிற் கொண்டிருப் பவர். பிரமராத்ரியாகிய கறுப்புப்புடவை யுலகத்திற் கெல்லாம் போர்த்திருப்பதைச் சூரியன் உதயகாலையில் கிழித்துப்போட்டு உள்ளே புகுந்து வருவன், பகற்காலத்தில் உலகத்திற்கெல்லாம் போர்த்திருக்கும் வெள்ளைப் புடவையைக் கிழித்து அஸ்தமிப்பன். அவ்விரண் புடவைகளையுந் தைத்துத்கொண்டிருப்பவரும் தடியுடன் வாசற் காப்பவரு மாயிருப்பவர்

பிங்களை

1, தெற்கின் கண் உள்ள பெண் யானை. இதற்கு ஆண்யானை வாமனம். 2. மிதிலா நகரத்திருந்த தாசி. இவன் தன்னை யாராவது புருஷர் நாடிவருவர் எனக் காத்திருந்து வாராமைகண்டு விரக்தியால் ஞானம் பெற்றவள். 3. ஒரு வேசி. (பார். சாங்.)

பிங்காக்ஷன்

1. தரும்பக்ஷியைக் காண்க. 2, பிங்களனைக் காண்க.

பிசாங்கிசு

(சூ.) வச்சப் பிரீதி குமரன்.

பிசாசகை

ருக்ஷபர்வதத்தில் உற்பத்தியாகும் நதி

பிசாசன்

இராவண சேநாபதியரில் ஒருவன், யக்ஷர்களைக் கையால் சுக்கித் தின்னும் வலியுள்ளவன். இவன் குதிரையில் இருந்து போரிட்டு அநேக வாநரரை மாய்த்து இலக்குமணர்விட்ட வாய்வாஸ்திரத்தால் மாண்டவன்.

பிசாசமோசனவாவி

காசியில் உள்ள தீர்த்தங்களில் ஒன்று, இதில் பேயொன்று மூழ்கித் தன் உருப்பெற்றது. சங்குகன்னனைக் காண்க.)

பிசாசம்

1. தூல தேகத்திற்கு விதித்த ஆயுளின் அளவை முடியுமுன் தேகநீங்கி வாயுவின் உருவடைந்து கால அளவை நோக்கியிருக்கும் அந்தராத்மாக்கள். 2. பாலிகம், குந்தலம், நேபாளம் முதலிய தேசத்து வழங்கும் பாஷை.

பிசாசர்

ஒருவிதத் தேவ வகுப்பினர்.

பிசாசி

ஒரு தேசம்

பிசி

சாத்துவதன் குமரன்.

பிசின்

மரத்தின் பால்கள் வடிகையில் காற்றினால் இறுகிப்போதல், இவற்றிற் சில ஒட்டுந் தன்மையுள்ளவை. அவை விளாம்பிசின் வேலம்பிசின் முதலிய.

பிசின்கள்

இவை பலவகை மரத்தினின்று உண்டாம் பசைகள், மாம்பிசின், முருக்கம்பிசின், மலைவேப்பம் பிகின் சுருங்காலி, வாகை, இலவு, விளா, முருங்கை, விடத்தேர், அடம்பு, கருவேல், வெள்வேல், ஆவாரை, முதலிய விருக்ஷங்களி லுண்டாம்.

பிசிராந்தையார்

கோப்பெருஞ்சோழன் நண்பராகிய புலவர். பாண்டி நாட்டில் பிசிரென்னும் ஊரில் இருந்தவர். சோழன் உயிர்நீத்தது கண்டு பொறாது தாமும் உயிர்விட்டவர். இவர் பெயர் ஆந்தையாராய் இருக்கலாம். பிசிரென் னும் ஊர்ப் பெயர் சார்ந்து இப்பெயர் பெற்றனர் போலும் ஆந்தையென வேறொருவன் இருத்தலின் இவர்க்குப் பிசிராந்தை எனப் பெயர் வந்தது. (புற. நா) (அகநா.) இவர் பாண்டி நாட்டுப்பிசிர் என்னுமூரிலுள்ள ஆதன் தந்தையார். உறையூரை ஆண்டிருந்த கோப்பெருஞ்சோழனுக்கு உயிர்த் தோழனாயுள்ளவர். பரிமேலழகர் அருங்குறள் உரையில் கோப்பெருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சியொப்பின் அதுவே உடனுயிர் நீங்குமுரிமைத்தாய நட்பினைப் பயக்கும்’ என்றெழுதிய தனாலும் இவர்கட்பின் திறமையறிக. ஒருகாலத்துக் கோப்பெருஞ் சோழன் தன் மக்களோடு பதைத்துப் போருக்கெழுதலும் புல்லாற்லூர் எயிற்றியனார் தடுத்து நன்னெறிப் படுத்தினர். புறம்213. அவர்மொழி. வழிநின்ற அரசன் தன் இராச்சியத்தை வெறுத்து ஒருமரத்து நிழலில் வடக்கு முகமாகப் பட்டினி யிருந்து உயிர்விடத் துணிந்தனன், புறம் 214. அப்பொழுது பற்பல புலவரும் அறிவுடை முதியரும் அருகிருப்ப அரசன் எனது நட்பாளன் பிசிர் ஆந்தை இன்னே வருகுவன். (புறம் 215.) அவனுக்கும் என்னோடு இடமொழிப்பீராக புறம் 216. வென்னுமளவிற் பிசிராந்தையாரும் வந்து சேர்ந்தனர். புறம்217. வந்த இவரும் பட்டினியாகி வடக்கு முகமாயிருந்து அரசனோடு உயிர் நீத்தருளினார். இவ்விருவரும் ஏனைப்புலவரும் ஆங்குப்பாடிய பாடல்கள் கேட்போரை உருக்குந் தன்மைய. இப்பிசிராந்தையர் நரைதிரையின்றி நெடுங்காலஞ் ஜீவித்திருந்த முதியோர். புறம் (191) இவர் பாண்டியன் அறிவுடைநம்பியைப் பாடி மகிழ்வித்தார். பறம் 184. இவர் நெய்தலையும் குறிஞ்சியையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் (91) பாடலொன்றும் அகத்திலொன்றும் புறத்தில் நாலுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

பிசிர்

இது பாண்டிமண்டத்திலுள்ளதோரூர். (புற. நா)

பிச்கையப்பமுதலியார்

இவர் தொண்டைநாட்டில் பெருநகர் என்னும் ஊரில் இருந்த வேளாளர். இவரை ஒருவித்துவான் காணவா அவ்வித்துவானை எதிர் கொண்டு அவருக்குப் பல்லக்குச் சுமந்து அவர் கேட்ட குறிப்புப்படி உணவு முதலிய செய்து முதலியாரும் மனைவியும் படைத்தனர். அதனால் அவ்வித்துவான் இவர்களைப் புகழ்ந்து ஒரு சதகம் பாடினர்.

பிச்சுக்கட்டியேரி

தார் (Asphalt) தென் அமெரிக்காவின் வடக்கிலுள்ள அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் உள்ள டிரினிடாட் எனும் சதுரமான தீவுண்டு. அத்தீவில் லாப்ரியா எனும் (100) ஏகெராவுள்ள வட்டமான ஏரி ஒன்று இருக்கிறது, அவ்வேரியின் நடுவில் தார் சுரந்து பொங்கி வெளியில் வந்து இறுகிப்போகிறது. இறுகின பின் அதை வெட்டி யெடுத்து புறத்தேசம்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு இது பல நூற்றாண்டுகளாகப் பொங்கி வழிந்து வருகிறது. இவ்வருவாயின் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இத்தாரே தேசமெங்கும் உபயோகப்பட்டு வருகிறது.

பிச்சைப்புரட்டு

கஷ்டப்பட்டு வேலை செய்ய மனமில்லாச் சிலர் தேகமுழுதும் விபூதிபூசித் திருவோடு கொண்டு பிச்சை யெடுத்தும், சிலர் கண்ணாடிப் படங்களைப் பரப்பிவைத்து சில காசுகளை அதில்பரப்பி, போவார் வருவார்களை பலாத்காரமாய்க் கேட்டு வாங்கியும், சிலர் முள் மிதியடிமேல் நின்று கையில் தண்டாயுதம் தாங்கி உருக்கமாக எதோபாடியும், சிலர் வேலமரமுள், நாகதாளி படைகளைப் பக்குவஞ் செய்து அதன்மேல் படுத்து யாசித்தும், சிலர் அண்டை அயலிலுள்ள மொண்டி, முடம், குருடுகளைப் பங்கு கொடுப்பதாயழைத்து வேஷமிட்டு யாசித்தும், ஒற்றைச் கம்பியில் பக்குவமாய்ப் படுத்து மயக்கி யாசிததும் புரட்டுவார்கள். மற்றும் பலவித பிச்சைபாட்டுகள் உண்டு.

பிடகம்

பௌத்தாகமம். இது விநயபிடகம், சூத்ரபிடகம், அபிதர்ம பிடகம் எனப்படும். (மணிமேகலை).

பிடவூர்

இது சோழமண்டலத்திலுள்ளதோரூர் (புற, நா.)

பிடாரன்

இவன் பாம்பு பிடித்தாட்டி சீவிக்கும் ஒருவகைச் சாதியான்.

பிட்டங்கொற்றன்

ஒருவள்ளல், சேரனுக்குச் சேநாபதி. மிக்க கொடையாளி, காரிக் கண்ணனாராலும், உறையூர் மருத்துவன் தாமோதானாராலும் பாடல் பெற்றவன், குதிரை மலைக்குத் தலைவன். (புற. நா)

பிட்டன்

பிட்டங்கொற்றனுக்கு ஒரு பெயர்.

பிட்டுத்தோப்பு

இது மதுரைக்கு வடமேற்கில் வையையின் தென்கரையிலுள் ளது. பிட்டுக்கு மண்சுமந்ததிருவிளையாடல் விழா நடக்குமிடம், (திருவிளை)

பிணந்தின் பெண்டிர்

யுத்தகாலத்து மடிந்து வீழ்ந்தாருடலைத்தின்ன அவாவிய பேய்ப்பெண்டிர். (நச்சர்.)

பிணி

(3.) வாதம், பித்தம், சிலேத்மம்,

பிண்டகன்

கதருதாயன் நாகன்,

பிண்டமாவது

உறுப்பு மூன்றும் உள்ளடக்கி நெறிப்பா டுடைத்தாய்க் கிடப்பது. (யா, வி.)

பிண்டம்

1, பிதுர் பலி. 2. பூமியைத் தன் கொம்பிற்றாங்கிய திருமால் தம் கொம்பில் மூன்று மண்கட்டிகளைக்கொண்டு பூமியில் கர்ப்பங்களின் மேல் வைத்து அதில் தம்மை உத்தேசித்துக் காமாவைத் தம் சோமுஷ்ணத்தின் பிறந்த எள்ளை அபஸங்யமாக இறைத்து நானே பித்ருக்களைச் செய்கிறேன் என்றனர். உடனே அவருடைய கோரப்பற்களி லிருந்துண்டான அந்தப் பிண்டங்கள் தென்திசையை யடைந்தன. இந்தப் பிண்டங்களே, பிதா, பிதாமஹர், பிரபிதாமஹராசட்டும். நானே இந்த மூன்று பிண் டங்களிலுள்ள வனாகிறேன். இந்த நிமித்தமாக பிதுருக்கள் பண்டமென்கிற பெயரை, யடைந்தனர். (பார~சாந்)

பிண்டரகன்

கத்ருகுமரன் நாகன்,

பிண்டாரகம்

துவாரகைக்கு அருகிலுள்ள ஒருக்ஷேத்திரம், இதில் சிலரிஷிகள் வசித்திருந்தனர். இந்தரிஷிகளை யாதவர்களில் ஒருவனுக்குக் கர்ப்பிணி வேஷமிட்டு ஒரு ரிஷியை நோக்கி இவள் வயிற்றுப் பிறப்பது ஆணோ பெண்ணோ என அந்தரிஷி கோபித்து உங்கள் குலத்தைக் கருவறுப்பதாகிய ஒரு இருப்புலக்கையென அவன் அவ்வண்ணமே கருவுற்று இருப்புலக்கை பெற அதற்கஞ்சிய யாதவர் அதனை யராவிக் கடலிலிட அவை நாணல்களாக முளைத்தன. ஒருகாலத்துக் கடற்கறைக்கு வேடிக்கையாக வந்த யாதவர் விளையாடுகையில் ஒருவர்க் கொருவர் போர் மூண்டு அந்நாணல்களால் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டு மாண்டனர்.

பிண்டாரிகள்

பொம்பாய் நாட்டிலிருந்து வந்து மைசூர் முதலிய இடங்களில் வேலை செய்யும் ஒரு வகுப்பினர். இவர்கள் முதலில் கள்ளராயிருந்தவர்கள் ஆங்கில அரசில் திருந்தியவர். (தர்ஸ்ட்டன்.)

பிண்டோற்பத்தி

பகிஷ்டையான பெண்கள் நான்குதினம் வரையில் மனைக்குப் புறம்பே இருத்தல்வேண்டும். பகிஷ்டையான நான்காநாள் புனலாடிய பின்பு சுத்தையாகிறாள், பகிஷ்டையான ஆறானாள் முதல் பதினெட்டு நாள் வரையிலும் உள்ள இரட்டைநாள் ஏழில் இரவில் புணரின் ஆண்பிரஜைஉண்டாம், ஐந்து தினம் முதல் பதினெட்டுத்தினம் வரையிலும் உள்ள ஒற்றைநாட்களில் புணரின் பெண்மகவு பிறக்கும். இவ்வுயிர் பிறக்கும் வகை எவ்வாறு எனில் காமத்தால் மேனிலைசென்ற ஆன்மா மீண்டும் கருமவசத்தால் பூமியில் வருமிடத்து ஆகாயத்தில் இருந்து வாயுவில் தங்கி மேகமார்க்கமாய் மழையுடன் பூமியில் தான் யாதியில் விழுந்து பாகப்பட்டு ஷட்ருசிகளோடு கூடித் தந்தையின் தேகத்தை அடைந்து தாதுவுடன் மூன்று மாதம் இருந்து ஸ்திரீசையோகத்தில் தந்தைவிந்து வாகனமாக வாயுவசத்தால் கருப்பையில் பவளப்பையில் முத்துப் பதித்தாற்போல் பதியும். இவ்வகை சுரோணிதத்தில் கலந்த விந்துவானது ஒருநாளில் குன்று மணியளவு திரண்டு தோய்ந்தபாலாம். (5 நாளில்) நீர்க்குமிழியாம். (7ல்) இளவூனாம் (10ல்) சுரோணிதத்திற் கலக்கும். (14ல்) செந்நீர்பறந்து ஊனம் (15ல்) யாம்சப் பிசினியாம். (24ல்) பூர்ண மாம்சமாம் (25ல்) பஞ்சாங்குறமாம், மாதமொன் றில் பஞ்சபூதமும் ஒருமிக்கக்கூடிப் பீஜம் சிறிது உதிக்கும். இரண்டாம் மாதம் மாம்சமும் மேதையும் உண்டாம். மூன்று மாதம், மச்சை அஸ்திகளும் உண்டாம். நாலாம்மாதம் தோலும் கேசமும் ஆம். ஐந்தாமாதம் கண்ணும் நாசியுமாம். ஆறாம் மாதம் முதல் மாதா உதரத்தில் விழுந்த அன்னசாரம் இவள் வயிற்றுக்கும் பிள்ளை நாபிக்கும் ஒரு நாளமாய் இருந்து அதன் வழியாக அன்னசாரம் சென்று பிள்ளையின் சுழிமுனை நாடி அடைபடப் பிராணவாயு இடைகலை பிங்கலை வழியாய் நாளொன்றுக்கு 21,900 சுவாசம் தோன்றும், இதன்றிச் சிங்குவை முதலானவைகளும் உண்டாம், (7ல்) குய்யமும் பாதமும் ஆம். (8ல்) சந்துகளும் சர்வாங்கங்களும் உண்டாம், (9ல்) 24 தத்வங்களும் உண்டாம். (10ல்) பிறப்பு நோக்கும். அப்போது மலையின் கீழ் அகப்பட்டவன் போலக் கருப்பாசயப்பையில் கட்டுப்பட்டுச் சமுத்திரத்தில் ஆழ்ந்தவன் போலக் கருப்பாசய வெள்ளத்தில் அழுந்தி உதாராக்கினியால் வெந்து பிறவி நோக்கும் போது தலைகீழாகி ஆலை வாயிற் கரும்பு போல் நெருக்குண்டு பூமியில் விழும்.

பிண்ணாக்கு

இஃது எண்ணெயுள்ள சரக்குகளைச் செக்கிலிட்டு எண்ணெய் கொண்ட பின் தங்கிய பொருள். இது; எள்ளுப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, இலுப்பைப் பிண்ணாக்கு, முதலிய. இவற்றை மாடுகளுக்கும் கழனிகளுக்கும் உபயோகிப்பர். இலுப்பைப் பிண்ணாக்கை சிகண்டெடுக்க உபயோகிப்பர்,

பிதாதா

தக்ஷன் மருகன்.

பிதுரர்

ஒருவகைத் தேவ சாதியார். சமதக்னிக்கு நகுலவுருக் கொடுத்தவர். வஸுருத்ரர் ஆதித்தஞ்பராய்ச் சந்திரலோகத்திருக்கும் தேவஜாதியர். ஆங்கீரசருக்குச் சுதையிடம்பிறந்த தேவவகுப்பினர்.

பிதுருகுல்யை

மலயத்தில் உற்பத்தியாகும் நதி.

பிதுர்க்கள்

1. பிரமதேவர் சில தேவர்ககளைப் பூர்வத்தில் சிருட்டித்துத் தம்மைப் பூசிக்கக் கூறினர். பிரமன் வார்த்தையை மதியாது தங்களைத் தாங்களே பூசித்துக் கொண்ட அவர்களை ஞானவீனராக எனப் பிரமதேவன் சபித்தனன். பிறகு அத்தேவர் சாபத்தீர்வு வேண்டப் பிரமன் என் புத்திரரைக் கேட்டுத் தீர்க என அவர்கள் பிரமபுத் திரர்களை வேண்ட அப்பிரமபுத்திரர் புத்திரர்களே உங்களை அச்சாபம் பாதியாது; விருப்பின்படி செல்க என்று சாபத்தை விலக்கினர். அப்பொழுது பிரமதேவர் தேவர்களை விளித்து நீங்கள் என் புத்திரர்களால் புத்திரர்களே என அழைக்கப் பெற்றமையின் அவர்கள் பிதுர்க்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குக என்று அனுக்கிரகித்தனர். இவர்களைப் பூசிக்கின் பிதுர் பிரீதியாம். (சிவமகாபுராணம்.) பிதுர் தேவர்கள் எழுவர் கவ்யவாகன், அனவன், சோமன், யாமன், அரியமான் அக்னிஷ்வாத்தன், பர்ஹிஷதன், என்போர், இவர்களில் நால்வர் தேகத்தோடும் மற்றவர் தேகமின்றியுமிருப்பர். 2, பூர்வசிருட்டியில் பிரமதேவர் எழுவர் பித்ருக்களைச் சிருட்டித்தனர். அவர்களில் நால்வர் தேகத்தோடு கூடியவர். மூவர் தேஜஸ்வரூபர். இவர்களுக்குச் சார்த்த தர்ப்பண பூர்வகமாய் ஆகாரத்தைக் கற்பித்தார். இவர்கள் எழுவருக்கும் ஸ்வதா என்பவள் தேவி. (பிரம்மகைவர்த்தம்) 3. சோமபர் என்னும் வேறு பித்ருக்கள் உளர். இவர்களின் மானச புத்திரியாகு நருமதை அதிவேகமுடையளாக இருப்பள், ஆதலால் வேதியர் பித்ருக்களை யறிந்து சிராத்தாதிகள் செய்தல் வேண்டும் (மச்சபுராணம்.)

பிதுர்யானம்

அஜவீதியின் அஸ்திய நக்ஷத்திரத்தின் மத்யபிரதேசம், சுவர்க் காமிகள் இவ்வழியாக சுவர்க்கம் செல்வர் (யாக்கியவல்க்யம்.).

பித்தபேதம்

இது அனலபித்தம், ரஞ்சக பித்தம், சாதகபித்தம், ஆலோசக பித்தம், பிராசகபித்தம் என ஐந்து வகை. அவற்றுள் அனலபித்தம் ஆமாசயத் தானத்திற்கும், பக்குரவாசய ஸ்தானத்திற்கு மத்தியிலிருந்து கொண்டு சலரூப வஸ்துக்களை வற்றச்செய்து உண்பதைச் சீரணிக்கச் செய்யும். பஞ்சகபித்தம், இது ஆமாசய ஸ்தானத்திருந்து ரஸதாதுவைப் போஷிக்கும் சாதகபித்தம் இதயத்திருந்து இஷ்டத்தை முடிக்கும். ஆலோசக பித்தம் கண்களிலிருந்து ரூபங்களைத் தெரிவிக்கும், பிராசக பித்தம் இது சருமத்தைப் பிரவிக்கச் செய்யும். (ஜீவ.)

பித்தம்

இது, பளபளப்பு, உஷ்ணம், இலேசத்வம், சலத்தை தருதல், பேதி முதலிய ரூபங்களைப்பெற்றது, ஸ்தானம்; உந்தி, கண், ஆமம், உதிரம், வியர்வை, சருமம், நாக்கு முதலிய இடங்களைப் பெற்றிருக்கும். குணம்; சீரணம், உஷ்ணம், பார்வை, பசி, தாகம், சுவை, ஞாபகம், சௌரியம் முதலியவற்றைக் குணமாகப்பெறும். தொழில்; மஞ்சள் நிறத்தால், வெப்பம், தாகம், வியர்வை கோபம், மூர்ச்சை புளித்தல், கசத்தல் இத்தொழில்களைச் செய்யும், கோபம்; உப்பு, புளி, காரம், அதிதீக்ஷணவஸ்து, தாகமீறும்வஸ்து, கோபகாலம், சீரணகாலம், ஐப்பசி, கார்த்திகை காலம் இவை அதிகமாகும் காலங்களிலும் மாதங்ளிலும் கோபிக்கும். விருத்தி; இது அதிகமாயின் மலம், சிறுநீர், கண் சருமம், அதிகரித்தல் தாகம், அதிபசி, எரிச்சல் உண்டாம். சீரணம்; இது குறைந்தால், மந்தாக்னி, சைத்யம், உண்டாம்.

பித்தரோக பூர்வம்

இது, அரோசகம், அன்னத்வேஷம், கசப்பு புளிப்பான வாந்தி, வெள்ளோக்காளம், குளிர், சுரம், பிதற்றல், சித்தபிரமை, நாவறட்சி, மயக்கம் மூர்ச்சை, தலை சுழற்சி, ஈண் சிவத்தல், சுழலல் விழித்தபடியிருத்தல், கொட்டாவி, விக்கல், பற்கடித்தல், தேகம், கண், நா, மலம், மூத்திரம், மஞ்சளித்தல், மந்தாக்னி, அசீரணம், வெறித்தபார்வை, திடுக்கிடல், இக்குணங்களைத் தனக்குப் பழைய ரூபமாகக் கொண்மருக்கும். (ஜீவ)

பித்தரோகம்

(40) வகை அவை, ரத்த பித்தம், ஆம்லபித்தம், ஆவாணபித்தம், உன்மாதபித்தம், விய்மிருதிபித்தம், திக்த பித்தம், ஆசியபாகபித்தம், சிம்மிக பித்தம், துர்கந்த பித்தம், தத்துரு பித்தம், சோகபித்தம், மூர்ச்சைபித்தம், கண்டுபித்தம், பிடக பித்தம் அனலபித்தம், சுவேதபித்தம், இத்மரபித்தம், இக்கரபித்தம், சூலைபித்தம், விஷ்டமப்பித்தம், விரணபித்தம், ஊர்த்தவ பித்தம், சுவாசபித்தம், செம்பித்தம், கரும்பித்தம், கரப்பான் பித்தம், எரிபித்தம், துடிப்பித்தம், விஷமப்பித்தம், மூலபித்தம், களப்பித்தம், ஓடுபித்தம், மூடுபித் தம், நடுக்குபித்தம், கபாலபித்தம், தாக பித்தம், திமிர்பித்தம், வலிப்பித்தம், கிருமி பித்தம், மருந்திடுபித்தம், என்பனவாம். (ஜீவ)

பித்தளை

இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு துத்தநாகமும் கலந்த கலப்பே பித்தளையாகிறது. இது, மஞ்சள் நிறமுடையது. இது உருகவும், தகடாக அடிக்கவும் கூடியதாதலால் பலவகை பாத்திரங்களும் கருவிகளுமிதனால் செய்யப்படுகின்றன.

பித்தாமத்தர்

இவர் இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் (7) ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். (பரிபாடல்.)

பித்ரு

1. பிரகதகர்மாவின் குமரன். இவன் குமரன் பிரகன் மனசு. 2 தக்கன் குமரன்.

பித்ருவம்சவிவரணம்

பித்ருக்கள் ஏழு வம்சங்களாகப் பிரிக்கப்படுவர். அவர்களுள் முதல் மூன்று கணத்தவரும் சரீரமில்லாமலும், மற்ற நான்கு கணத்தவரும் சரீரத்தோடு மிருப்பர். சரீரமில்லாதவர் வைராஜர் எனப்பட்டு யோகப்பிரஷ்டராய்த் தேவபூஜ்யராய்ப் பிரமன் நாளினது கடையில் பிரம்ம வேதிகளாய்ப் பிறந்து பூர்வஞ் ஞானத்துடன் உத்தமபதவியடைவர், மற்றவர் யோகிகள் ஆயினர். இந்தப் புத்திரர்களுக்கு மேனை யென்னும் மானசபுத்திரி பிறந்தனள். அந்தமோசைக்கு மைனாகனும் மைனாகனுக்கு கிரவுஞ்சனும் பிறந்தனர், பின்னும் உமை, ஏகவருணை, அபரணை என மூன்று பெண்கள் பிறந்து முறையே ருதான் பிருகு, சைகிஷவ்யன் என்பாரை மணந்தனர். முன் சொன்னவர்களே யன்றி விப்ராஜர் என்றும் பார்க்கிஷர் என்றும், இரண்டு பித்ருகணங்கள் உண்டு. இவர்கள் தருப்பை விமானத்திருப்பவர். புலத்திய வம்சத்திற் பிறந்தவராய்த் தானவ யக்ஷராக்ஷச காந்தருவாதிகளால் பூசிக்கப்பட்டு வருவர். இவர்களில் பீவிரியென்னும் யோகினி வந்து விஷ்ணுவையெண்ணிக் கணவன் பொருட்டுத் தவஞ்செய்து குசிசுனை மணந்து கிருத்தியென்னும் பெண்ணையும் கிருஷ்ண, கௌர, பிரபு, சம்பு என்னும் நான்கு குமாரையும் பெற்றனள், கிருத்தி, பாஞ்சால தேசாதிபதியை மனந்தனள். இவர்களன்றி வசிட்டருக்கு சுமூர்த்தி, மந்தன் என்னும் மானச பித்ருக்கள் தோன்றிச் சுவர்க்கத்துக்கு மேல் ஊர்த்துவ லோகத்தை இடமாய்ப் பெற்றுப் பிராமணரால் பூசிக்கப்படுவர். இவர்கட்குக் கௌ என்னும் மானஸபுத்திரி பிறந்து சுக்கிரனை மணந்தனள். இவர்களன்றி அங்கீரஸபுத்திரரும் மரீசி புத்திரர்களும் சூர்யமண்டல வாசிகளாய் க்ஷத்திரியர்களுக்குப் பித்ருக்களாவர் இவர்களுடைய மானச கன்னிகையாகும் யசோதை பஞ்சவன் புத்திரனாகும் பாசுமதனை மணந்து திலீபனுக்குத் தாயும், பகீரதனுக்குத் தாயும் ஆயினள். இவர்களன்றிக் கார்த்த புலக பிரசாபதிகளுக்குச் சந்தானங்களான, சுவதர், ஆஜ்யபர், என்பவர்கள் வைசியர்க்குப் பிதுர்க்களாயினர், இவர்களின் மானச புத்திரியாகும் விரசை நகுஷன்பாரியாய் யயாதி என்னும் குமரனைப் பெற்றாள். பின்னும்மானஸர் என்னும் நாலாவது பித்ருகணங்கள் சூத்திரர் களுக்குப் பித்துருக்களாய்ச் சத்தியலோகத் திருப்பர். இவர்களுக்கு மானஸ கன்னிகை தருமதை. இவர்கள் அல்லாமல், விராட்புருஷனாலே சிருட்டிக்கப் பட்ட சோமசதர்கள், சாத்திய தேவர்களுக்குப் பித்ருக்கள் மரீசி முதலியவர் களால் சிருட்டிச்சுப்பட்ட அக்னிஷ் வாத்தர்கள் தேவர்களின் பிதுர்க்கள், அத்திரிருஷியின் புத்திரரான பருஹிஷத்துக்கள், தயித்தியர், தானவர், யக்ஷர், கந்தருவர், உரகர், இராக்கதர், சபாகர், சின்ரைர்களாம். பிராமணர்களின் பிதுர்க்களுக்குச் சோமபாள் என்றும், கூத்திரிய பிதுர்க்களுக்கு ஹவிர்புக்கு என்றும், வைசியபிதுர்க்களுக்கு ஆஜ்யபர் என்றும், சூத்திரர் பிதுர்களுக்குச் சுகாலிகளென்றும் பெயர், இவர்களில் சோமபாள் பிருகுபுத்திரர். ஹவிர் புக்குகள் ஆங்கீரசபுத்திரர். ஆஜ்யபர் புலஸ்திய புத்திரர்; சுகாவிகள் வசிட்ட புத்திரர், அக்னிதத்தர்கள், சோமபர்கள், பருஹ்ஷத்துகள், அக்னிஷ் வாத்தர்கள், சௌமியாள் இவர்களையும் பிராமண பிதுர்க்களாக அறியவேண்டியது,

பிநாகம்

சிவமூர்த்தியின் வில், கண்ணுவரைக் காண்க.

பிநாகி

1. ஒரு நதி. இதனைப் பிநாகினி யென்பர். 2. சண்முக சேநாவீரன்.

பிநாகிமாமுனி

ஓர் முனிவர்.

பிந்து

விந்துவைக் காண்க.

பிந்துசாசு

கர்த்தமப் பிரசாபதிக்கு வரந்தர வந்த விஷ்ணு மூர்த்தியின் கண்ணீர் அவ்விடத்தில் விழுந்தமையால் ஒரு ஸரஸாயிற்று,

பிந்துசாய்

A Saவ்red pool two miles of Gangotbri in Himelays where Bagiratha performed Dedence to bring down the Gange from heaven, (பா~சபா.)

பிந்துசாரன்

மகததேசாதிபதி, சந்திரகுப்தன் புத்திரன்.

பிந்துசிரவசு

சசிபிந்து குமரன். இவன் குமரன் தருமன்.

பிந்துமதி

1. மரீசியின் தேவி. 2. சசிபிந்துவின் பெண். 3. மாந்தாதாவின் தேவி. 3. இது சித்திரக்கவியினுள் ஒன்று. இது பாடிய செய்யுளில் எல்லா வெழுத்தும் புள்ளியுடையனவாக வருதல்,

பிந்துமான்

மரீசிக்குப் பிந்துமதியிடத்து உதித்த குமரன். தேவி, சாகா; குமரன் மது.

பிந்துயசன்

சசிபிந்து குமரன்,

பினாகம்

1. இது சிவதனு. இது ஏழுதலைகளும், பெரியவுடலும், கூரான கோரப்பற்களும், கொடிய விஷமுள்ள நாணினால் சுற்றப்பட்டதும் ஆனது, (பாரா அனு) 2. திரிபுர விஜயத்தின் பொருட்டுக் கோபங்கொண்ட சிவ பெருமான் தம் கரத்திலிருந்த சூலத்தை வளைக்க அது வில்லாய் இப்பெயரா லழைக்கப்பட்டது. (பார சாங்.)

பினாகினி

இது சிவமூர்த்தியின் பினாகத்தின் வழி வந்தபடியால் இப்பெயர் பெற்றது, பாலாறு, செய்யாறு இவ்விரண்டிற்கும். நடுவிலிருத்தலால் இதனை வெண்ணெய் நதி யென்பர். இது ஒளவை தெய்வீக மகாராஜன் கல்யாணத் திற்கு வெண்ணெய் கொண்டுவரச் செய்தலால் வெண்ணெய் நதியாயிற் றென்பார். தெய்வீக மகாராசனைக் காண்க. நந்திக்குச் சிவ மூர்த்தி அபிஷேகஞ் செய்விக்க அழைப்பித்த தென்பர் (பெண்ணை நதி புராணம்)

பின்சென்றவல்லி

கரம்பனூர் அம்மை. திருவரங்கப் பெருமாளைத் துருக்கர் கொண்டு போகையில் பெருமாளுடன் சென்று பெருமாளினிலை யறிவித்தவள்.

பின்னிலை முயறல்

தலைவி முன்பு தோற்றதன் அழகை நச்சி இரந்து பின்னிற்றலை மேற் கொண்டது. (பு. வெ. பெருந்திணை).

பின்பழகிய பெருமாள் ஜீயர்

நம்பிள்ளை திருவடி சம்பந்தி.

பின்றேர்க்குரவை

இட்டவீரக் கழலினை யுடையான் தேரின் பின் செறிந்த தொடியினையுடைய பாணிச்சியர் வீரரோடு கூத்தாடியது. (பு வெ.) 2 பெரிய கழல் வீரரோடு விளர்த்த வளையினையுடைய பாணிச்சியர் பெரிய மேம்பாட்டினை யுடையான்றனது தேரின் பின் ஆடியது. (பு. வெ.)

பின்வரு விளக்கணி

அஃதாவது முன் வாக்கியத்தில் வந்த விளக்கச் சொல்லேனும் பொருளேனுஞ் சொல்லும் பொருளுமேனும் பின்வாக்கியங்களில் வருதலாம். இதனை வடநூலார் ஆவர்த்தி தீபகாலங்கார மென்பர்.

பின்வருநிலை

முன்வருஞ் சொல்லும் பொருளும் பல விடங்களில் பின்வரில் பின்வருநிலை. (தண்டி.)

பிப்பபாச்சையர்

ஒரு வீரசைவ அடியவர். இவர் சிவனடியவர் உண்ட சேடத்தை வண்டியில் இட்டு இடபக் கொடி நாட்டி அக்ராரத்து வழிச் செல்லுகையில் அவ்விடமிருந்த வேதியர் பலவாறு தூஷித்துக் கோபித்துக் கொண்டனர். அதனால் இவர் பண்டியில் பொதிந்திருந்த சேடத்தை யெடுத்து வீடுகளின் மேல் எறிந்தனர். அதனால் வீடுகள் எரிந்தன. பின் வேதியர் கூடி வேண்ட எரியும் தீயை வருவித்துக்கொண்டவர்.

பிப்பலாமகாதேவி

நமி தீர்த்தங்கரின் தாய்.

பிப்பலாயனன்

சூர்யவம்சத்தரசன். யோகியாயினன்.

பிப்பிலன்

1, மித்திரனுக்கு ரேவதியிடம் உதித்த குமரன். 2. இல்வலன் புத்திரனாகிய அரக்கன். 3. அரிட்டன் தம்பி. 4. சண்முக சேநாலீரன்.

பிப்பிலாதனன்

1, இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். 2. ஒரு இருடி, வேதாந்த விசாரணைக் கருத்தன்.

பிம்பசாரன்

கௌதமபுத்தர் மாணாக்கரில் ஒருவன்.

பிம்பப்பிரதி பிம்பபாவம்

இது, சுபாவத்திலே பின்னங்களா யிருக்கினும், ஒன்றற் கொன்றுண்டாகிய ஒப்புமையினால் அபின்னங்களாகிய உபமான உபமேயங்களின் தருமங்களை இரண்டு வாக்யங்களில் தனித்தனி சொல்லுதல், (குவ.)

பிம்பப்பிரதிபிம்பம்

(Photograph) இது ஒரு இருண்ட பெட்டி (காமிரா). இது பெரிய பொருளைச் சிறியதாகவும், சிறியதைப் பெரியதாகவும் காட்டும் நகரும் கண்ணாடிகளை உட்பெற்ற குழலாலமைந்தது. இப்பெட்டியின் கடைசியில் ஒரு கண்ணாடித் தட்டமைந்திருக்கும். இவ்விடம் படமெடுப்பவனிற்பன். இவன் அக்கண்ணாடிகளை நன்றாகவுருக்கொள்ள திருத்தி, அவனுக்குத் திருப்தி ஆனபின் மருந்து பூசிய மற்றொரு கண்ணாடியிட்டுப் பெட்டியின் வாயைமூடிப் படமெடுத்துக் கொள்ள சரியான நிலையிலிருக்கையில் பெட்டியின் வாயைத் திறப்பன். பின்பு அதில் உரு அமையும்.

பிம்பாஜிபக்தர்

மண்டலியென்னு மூருக்கு அரசனாகி எல்லா வளங்களுங் குறைவின்றிச் சத்திபூசை செய்பவனாய்ப் பிம்பாஜீயென்பவன் ஒருவனிருந்தான். அவன் நித்தியமும் காளிக்குப் பூசை செய்து அவள் உண்டபின் தான் உணவுண்டு வருவான். இவ்வகை வருகையில் இவன் செய்த புண்ணியத்தால் நீர்த்தயாத்திரையாக வந்த பாகவதர்கள் இவன் நாட்டையடைந்தனர். இவர்களது வரவைக்கேட்ட அரசன் அவர்களுக்கு வேண்டிய உபசாரக்களைச்செய்து சத்தியைப் பூசிக்கக் கோவிலையடைந்து பூசித்து அமுதுண்ண அழைக்கையில் காளிகாதேவி தரிசனந்தந்து உன்னிடம் வந்த பாகவதர்கள் உண்ட பின்பே நான் உணவுகொள்வேன் எனப் பிம்பாஜி அதனைக்கேட்டு உன்னிலும் உயர்ந்தோர் உளரோ என்ன, காளிகாதேவி எனக்கும் மற்றவர்க்கும் நாயகனாவான் திருமால், அவனுக்கு அன்பர் பாகவதர் மிக்க உயர்ந்தோர் என்ன, அரசன் காளியை வணங்கி அவனை நான் தரிசிக்க அருள் செய் என்ன அது என்னால் ஆகாது. பாகவதரைப் பணிந்து கொள்கவென, அரசன் அவர்களைப் பணிந்து துதித்து வீட்டிலமுது செய்வித்துக் கூறுவானாயினான். அடிகளே, எனக்கு ராமதரிசனஞ் செய்விக்கவென வேண்ட அவர்கள் சாமானந்தரிடம் உபதேசம் பெறின் ஆகுமென்ன அவ்வாறு ராமானந்தரைச் சரணடைந்து உபதேசம் பெற்றுச் சில நாளிருந்து துவாரகை சென்று கண்ணன் தரிசனந்தரப் பணிந்து மனை வியுடன் அவ்விடம் நீங்கி ஒரு காட்டின் வழி மனைவியுடன் வருகையில் ஒரு புலிவர மனைவியார் கண்டு பயந்து புலிதின்ன வந்ததென்னப் பிம்பாஜி அதனுள்ளும் இறைவனமர்ந் திருக்கின்றான். நீ ஏன் அஞ்சுகின்றனை யென்னுமளவில் புலியின் முகக்குறிப்பைக் கண்டு தம்மிடமிருந்த துளபமாலையை அதன் கழுத்திலிட்டனர். புவி தனது கொடுங்தொழில் மறந்து எதிரில் நிற்க அதன் தலையில் தம் கையைவைத்து ராமநாமத்தைச் சொல்லி இன்று முதல் நீ கொடுந்தொழில் செய்யாதே எனறனர். அதுமுதல் புலி கொடுமை செய்யாது சருகருந்தி ஏழு நாளில் முத்திபெற்றது.

பிரகடை

வீரேச லிங்கத்திடையமர்ந்த தெய்வம்.

பிரகதகட்சு

அசமீடன் குமரன்.

பிரகதிசுவன்

அரம்யாசுவன் குமரன்.

பிரகத்கர்ணன்

பத்ராதன் குமரன்.

பிரகத்காயன்

பிரகத்தனுவின் குமரன்.

பிரகத்திருதன்

(சூ.) தேவராதன் குமரன்.

பிரகத்துவாசன்

(சூ.) அமித்ரசித் குமரன்.

பிரகத்தூர்த்தன்

சதத்துவன் குமரன். இவன் தன் சேனாபதியாகிய புஷ்யதூர்த்தனால் கொல்லப்பட்டவன். இவன் நந்தனுக்குப் பின் கலியாரம்பத்தில் அரசாண்டான்.

பிரகத்பலன்

1. கோசலத்தரசன். 2. விசுவசாகியன் குமரன் இவன் பாரத யுத்தத்தில், அபிமன்யுவால் கொலையுண்டான். இவன் சூர்யவம்சத்துக்ரசன் வம்சத்தவன். பாண்டவர் இராசசூயம் செய்த காலத்தில் அக்கிரபூசைக்கு உரியவன் என்று சிசுபாலனால் குறிப்பிக்கப்பட்டவன். மகாபலவான். 3. தேவபாதனுக்கு மூசையிடம் பிறந்த குமரன், 4. சகுனியின் தம்பி.

பிரகத்பாநு

பதினான்காவது மன்வந்தரத்து மது, விஷ்ணுவின் அம்சம் சாத்தராயணர் புத்திரர்.

பிரகத்ரதன்

1. உபரிசரவசுவின் குமரன். இவன் குமரன் சாக்ரன், சராசந்தன். 2. பிருதுலாக்ஷன் குமரன். இவன் குமரன் பிரகதகர்மா. 3. மகததேசத்து அரசருள் ஒருவன். 4. அகிலதரன் குமரன். இவன் குமரன் சிந்துரதன்.

பிரகந்நளை

அருச்சுநன் பேடியுருக்கொண்டு மச்சநாட்டில் இருந்தகாலத்து வைத்துக் கொண்ட பெயர்.

பிரகந்மனசு

பிரகத்பானு குமரன். இவன் குமரன் செய்தாதன்.

பிரகனன்

சுபாலி குமரன்.

பிரகரணசமம்

1. எந்த எதுவிற்கு துணி பொருளுக்கு மறுதலையான துணிந்த பொருளைச் சாதிக்கும் வேறு எது உண்டாயிருக்கிறதோ அது. (தரு) 2. எதற்குப் பிரதிபக்ஷமான வேறாகும் ஏது உண்டோ அது.

பிரகலாதன்

1, இரணயகசிபு குமரன். இவன் இளமையில் ஆசாரியபுத்திர னாகிய சண்டனிடத்தில் கல்விகற்கத் தந்தையால் ஏவப்பெற்று ஆசாரியன் கற்பித்தவாறு ஓதாமல் அரிநாமம் ஓதினன். இதை உபாத்தியாயர் அரசனுக்கு அறிவிக்கவும் அஞ்சாது மீண்டும் தந்தை எதிரிலும் அரிநாமமே ஓதினன். அரசன் குமரனிடத்தில் கோபித்து ஆயுதம் முதலியவைகளைப் பிரயோகித்தும் அக்கினியில் தள்ளியும், நாகங்களைவிட்டுக் கடிப்பித்தும், யானையை யேவுவித்தும் கோபுரத்தில் இருந்து தள்ளுவித்தும், கடலில் பாய்ச்சுவித்தும், விஷம் ஊட்டுவித்தும், சம்மட்டியால் அடிப்பித்தும் இம்சிக்கச் சிறிதும் அஞ்சாது இரண்யகசியின் எதிரில் இருந்து அரிநாமம் ஸ்மரித்தனன். அசுரன் கோபித்து உன் தேவன் எங்கு இருக்கின்றனன் எனக் குமரன் எங்கும் உளன் என, எதிரில் இருந்த தூணில் இருக்கின்றனனோ எனக்கேட்கக் குமரன் ஆம் என அசுரன் அதை உதைக்கத் தூணில் இருந்து வெளிவந்த நரசிங்கத்திரு வுருவை அவனுக்குக் காட்டித் தந்தையை உயிர்போக்கு வித்தனன். இவன் விஷ்ணு மூர்த்தி தரிசனந் தந்தகாலத்து அசுரரை இனிக்கொல்லாவரமும் அரிபதம் மறவா உரிமையும் பெற்றவன் இவன் தாய்வயிற்றில் இருக்கையில் நாரதரால் உபதேசிக்கப் பட்டவன். இவன் தன் தந்தைக்குப் பிறகு இராஜ்ய பட்டாபிஷேகம் அடைந்து கொலுவில் இருக்கையில் ஒருநாள் இருடி ஒருவர் இவனிடம் வந்தனர். அவரை எதிர்கொண்டு உபசரிக்காது இறுமாப்புடன் இருக்க இருடி இது உனக்குத் திருமாலால் வந்தது ஆகையால் இனித் திருமால் உனக்குச் சத்துருவாக எனச் சபித்துச் சென்றனர். அந் தப்படி இவன் திருமாலிடம் விரோதித்துப் பாற்கடல் சென்று ஸ்ரீவிஷ்ணு மூர்த்தியுடன் தேவவருஷம் ஒன்று போராடித் தோற்று நல்லறிவு அடைந்து தவத்தன் ஆயினன். இவன் தாய் வீலாவதி. குமரன் விரோசனன் (கூர்மபுராணம்.) 2. இவன் கௌசிகபுறத்திலிருந்த வேதியன். இவன் சகோதரன் குமாலன். இவ் விருவரும் அப்புறுசால் முனிவரை அடைந்து தவமேற்கொண்டு அவர்க்குப் பணி விடை செய்திருக்கையில் ஒருநாள் சமித்துக்கொண்டு வரச்சென்று அவற்றை வெட்டிவந்து ஆச்சிரமத்தின் சுவரிடைச்சாத்தச் சுவரிடிந்து விழுந்து குருவின் குழந்தை இறந்தது. இதனைக் குருவறிந்து உங்களில் யாவர் குழந்தையைக் கொன்றவர்கள் அறிந்து வருகவெனக் குளிகைகொடுத்து யமபுரமனுப்பினர். சென்ற இருவருள் பிரகலாதன் தான் கொலை புரிந்தோ னென யமனால் அறிந்துவந்து குருவிடம் கூறக் குரு அவனைப் பெண்ணை நதியில் நீராட்டுவித்துப் புனிதனாக்கினர். (பெண்னை திபுராணம்) 3. இவனுக்கு இந்திரநந்தனன்,க்ரஹன், என்றும் பெயர். இவன் சிவாநுக்ர கத்தால் விஷ்ணுவின் சக்ரமும், இந்திரன் வச்சிரமும், தன்மீதுபடில் பொடியாகும் வரத்தையடைந்தவன். (சிவமகாபுராணம்.)

பிரகஷ்திரன்

(சந்.) மன்யு குமரன்.

பிரகஸ்பதி

1. பிரமன் மானசபுத்திரர்களில் ஒருவனாகிய (அங்கிரா) அல்லது ஆங்கீரசருஷிக்குச் சிரத்தாதேவியிடம் பூராடத்தில் பிறந்தவன் என்றுங் கூறுவர். பார்யை தாரை, இவன் தவத்தால் கிரகபதம் பெற்றனன். இவனுக்கு ஆங்கீரவன் எனவும் பெயர், தேவகுரு; சகோதரன் உதத்தியன், (உசத்தியன்), சகோதரி யோகசித்தி, அங்காரகனுக்கு இரண்டுலக்ஷம் யோசனை உயரத்தில் இருப்பவன். தாரையிடம் சந்திரனுக்குப் பிறந்த புதனைக்கண்டு தன் குமரன் எனச் சந்திரனிடம் வாதாடியவன், இந்திரன் தன்னை அவமதித்ததால் சிறிதுகாலம் அவனைவிட்டு நீங்கி இந்திரனுக்குத் துன்பம் வருவித்தவன். ஒருமுறை தன் தம்பியாகிய உதத்தியன் தேவி, (மமதை), யென்பவள் கருவுற்றிருக்கையில் அவளிடம் அதியாயமாய்க் கருப்பதித்துப் பரத்து வாசனைப் பெற்றவன். அந்த மாதாவின் கருவில் இருந்த குமரன் இவன் கருப்பதிக்க இடம் தராததினால் அக்குமரனை அந்தகனாகச் சபித்தவன். சநமேசயனுக்குப் புத்திகூறிச் சர்ப்பயாகத்தை நிறுத்தச் செய்தவன், ஒரு முறை இந்திரன் இராச்சியகார்யம் பாராது தெய்வசிந்தனை மேலிட்டிருக்கையில் அவனுக்கு உலகாயதமதம் போதித்துத் தெய்வசிந்தனை நீக்கிச் சிறிது சிறிதாகத் தெய்வபுத்தி யுண்டாக்கினவன். இவன் தேரில் பொன்மயமான எட்டுக்கு திரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனது நிறம் பொன். 2. இவர் நீராடச்சென்று ஜலந்தெளியாததால் ஜலத்தைக் கோபித்து இனி தவளை மீன் முதலிய செந்துக்களால் நீங்கள் கலக்கமடைக எனச் சபித்தனர். (பார~சார்.)

பிரகஸ்ஸோமன்

பதுமையோனியைக் காண்க.

பிரகாணசமை

வாதி கூறிய எதுவினும் சாத்யத்திற்கு விபரீதசாதகமான வேறு ஏது வைக்காட்டல். (தரு)

பிரகித்ரன்

1. நிமிபுத்திரன். இவன் குமரன் சுதாசநன். 2, சிம்மளத்தீவின் அரசன். இவன் தேவி கௌமதி, இவளிடம் இலக்ஷமி அவதரிப்பள்.

பிரகிருதி

பஞ்சத்திகளாகிய துர்க்கை, ராதை, லக்ஷ்மி, சரஸ்வதி, சாவித்ரி இவர்களே ஐவகை பிரகிருதிகள் என்பர். பிர; என்ப தெழுச்சி, கிருதி என்பது சிருட்டியையும் தெரிவிப்பதெனக்கொண்டு சிருட்டியில் மனவெழுச்சியுடையர் எனவும்,ப்ர; சத்வகுணம், கிரு; ரஜோகுணம், தி; தமோகுணம் எனத் திரி குணாத்மக சத்தியெனவும், பிர; முதல், கிருதி; சிருட்டி, சிருட்டிக்கு முதலானவர் என்றும் பொருள் கூறுவர். (தேவி~பா)

பிரகிருதிகலாஸ்வரூப தேவியார்

சுவாகா தேவி அக்னிபத்திளி, இவளில் லாவிடில் ஓமத்தின் அவிசைத்தேவர்களடையார். தவணாதேவி, தீகாதேவி: யஞ்ஞபத்தினிகள், இவர்கள் பூஜிக்கப்படாவிடில் எல்லா யஞ்ஞங்களும் வீணாம். சுவதாதேவி: பிதுர்க்கள் பத்தினி, இவளைப் பூசிக்காவிடின் பிதுர்க்கள் பூஜை வீணாகும். சுவஸ்திதேவி: வாயுபத்தினி, இவள் தானம் வாங்கும் போதும் கொடுக்கும்போதும் பூசிக்கப்படுவள். புஷ்டிதேவி: கணேசபத்தினி, இவளில்லாவிடில் எல்லோரும் க்ஷீணித்து விடுவர். துஷ்டிதேவி: ஆதிசேஷபத்தினி, எல்லோரையும் களிப்பிப்பவள். சம்பத்: ஈசானபத்தினி, எல்லா செல்வங்களையும் தருபவள். திருதி: கபிலபத்தினி, தைரியமடைவர். சதி: சத்தியபத்னி, இவளில்லாவிடில் பந்துக்களுள்ள வராகார். தயை, பதிவிரதை: இவர்கள் மோகபத்னியர், இவர்களில்லாவிடில் யாதொரு பயனும் அடையார்.

பிரகிருதிசுவரூபம்

ஐந்து முகங்கள், மூன்று விழிகள், எட்டுப்புயங்கள் மூன்று கால்கள் உடையாள். (சிவமகா~புரா.)

பிரகேதி

1, திதிபுத்திரனாகிய ஒரு அசுரன் 2. மால்யவந்தன் முதலிய அரக்கர்குல முதல்வன். எதிக்குச் சகோதரன்.

பிரகோடன்

(சூ.) கண்ணனுக்கு இலக்கணையிடத்து உதித்த குமரன்.

பிரக்திர்மா

1. பிரகத்ரன் குமரன். இவன் குமரன் பிரகத்பானு. 2. சுநக்ஷத்ரன் குமரன். இவன் குமரன் சேநதித்.

பிரசங்கசமை

சாதனத்தின் பரம்பரையை வினாவுவது.

பிரசங்கன்

இராவண சேநாபதியரில் ஒருவன். அங்கதனால் இறந்தான்.

பிரசண்டன்

1. ஒரு விஷ்ணு படன். 2. கழுகாசலத்தில் கிரேதாயுகத்தில் பூசித்து முத்தியடைந்த கழுகரசன். 3. பலியைக்காண்க. 4. வத்சந்திரன் குமரன். 5. ஸ்மிருதிஹாரணியின் குமரன். பாழடைந்த வீடுகளில் இருந்து துன்பம் விளைவிப்பவன்.

பிரசண்டைபீடம்

சத்திபீடங்களில் ஒன்று.

பிரசநி

1. சவிதாவின் தேவி. இவள் அக்னி கோத்ரம், பசுபாகம், சாதுர் மாஸ்யம், முதலியவற்றைப் பெற்றவள். 2. அநமித்ரன் குமரன். இவன் குமரர் சுவபலக்கர், சித்திரகர்.

பிரசநிகர்ப்பர்

1. சுதசுக்குப் பிரசந்தியிடத்துதித்த குமரர். 2. திரேதாயுகத்தில், விஷ்ணுவின் பெயர்.

பிரசந்தி

சுதசுக்குப்பாரி; சுவாயம்புமன் வந்தரத்தில் இருந்தவள். இவளே ஒருபிறப்பில் தேவகியாய் வசுதேவருக்குப் பாரியாயினள், குமரர் பிரசநிகர்ப்பர்; மற்றொரு பிறப்பில் அதிதி,

பிரசந்நுவான்

(சந்) சன்மசயன் குமரன், இவன்குமரன் பிரவீரன்.

பிரசாக்ரன்

புரஞ்சயன் சேநாபதி,

பிரசாதசிவர்

சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர்.

பிரசாதன பத்திரம்

அரசன் ஒருவன் செய்த வேலையினானாதல் வீரச்செயல் முதலியவற்றாலு மகிழ்ந்து அவனுக்களித்த நில முதலியவற்றைக் குறிப்பிடும் பத்திரம்,

பிரசாதன்

1. இந்திரத்துய்ம்மன் வம்சத்தவனாகிய ஒரு அரசன், 2. யமனுக்கு மைத்திரியிடம் உதித்த குமரன்.

பிரசானி

1. மனுப்புத்திரருள் ஒருவன். இவன் குமரன் இக்கு. 2. கனித்திரன் தந்தை.

பிரசாபதி

1. தேவலர் குமரர்;, இவர் மனைவியர் தூய்ரை, புத்தி,மனஸ்வரி, ரதை, சுசனை, சாண்டிலி, பிரபாசலை இவர்களிடம் அஷ்டவஸுக்கள் பிறந்தனர். 2. ஒரு பிரமரிஷி. இவர் கௌதமரை நீ காமவேட்கையன் என்று இகழக் கௌதமர் நீ புறாவாகி நரமாமிசம் புசிக்க எனச் சபித்தனர். அச்சாபம் ஏற்ற இருடி, புறாவாய் நரமாமிசம் புசித்துச் சஞ்சரிக்கையில் ஒருநாள் சோழ அரசன், ஒருவனை நரமாமிசம் கேட்க அச்சோழன் உடல் முழுதும் அறிந்து தந்து உயிர் நீத்தனன். இதனைக்கண்ட இருடி சீர்காழியில் சிவபூசை செய்து அரசன் உயிரை ஈந்து, தம் சாபத்தைப் போக்கிக் கொண்டனர். இதனால் சீர்காழிக்குப் புறவம் என ஒரு பெயர் உண்டாயிற்று. 3. சுரமைநாட்டரசன். திவிட்டன் தந்தை, பாகுவலி வம்சத்தில் பிறந்தவன். (சூளா.)

பிரசாபதிக்ஷேத்திரம்

பிரயாகை, பிரதிஷ்டானபுரம், வாசுகி ஹிரதம், வெகுமூ லபர்வதம், இவைகளுக்கு இடையேயுள்ள புண்ணிய க்ஷேத்திரம். இதில் ஸ்நானஞ் செய்வோர் புண்ணியம் பெறுவர்.

பிரசாபத்தியன்

ஓரக்னி; புரந்தரன் புத்ரன்.

பிரசாபத்தியம்

ஒரு விரதம்.

பிரசாவதி

கும்பகமகாராசாவின் தேவி. மல்லிநாத தீர்த்தங்கரின் தாய்.

பிரசிதாவன்

உத்கீதன் குமரன். தாய் தேவகுல்லி. மனைவி விருச்சை, குமரன் விபு.

பிரசிரமன்

வசுதேவருக்குச் சாந்திதேவியிடம் உதித்த குமரன்.

பிரசு

பயனுக்குத் தமயன்,

பிரசுசுருகன்

(சூ.) மருத்தின் குமரன்.

பிரசூதி

1. சுவாயம்பு மனுவின் குமரி. தக்ஷப்பிரசாபதியை மணந்து (16) பெண்களைப் பெற்று யமனுக்கு (13) அக்னிக்கு (1) பிதுர்தேவருக்கு (1) உருத்திரனுக்கு (1) ஆகக் கொடுத்தவன். 2. மநுவிற்குச் சதரூபையிடம் உதித்த குமரன்.

பிரசேதநன்

1. பிரசேதசுகளுக்குக் குமரனாய்ப் பிறந்த தக்ஷன். 2. பிரமனது தேசசால் பிறந்தவன்.

பிரசேதஸ்

இவர்கள் பதின்மர். இவர்கள் பிராசீனபர்திக்குச் சதத்ருவிடம் பிறந்தவர்கள். இவர்கள் உருத்திர உபதேசத்தால் தவஞ்செய்திருக்கையில் நாராயணர் தரிசனந்தந்து கண்டுமகருஷியின் குமரியை மணக்கக் கட்டளையிட்டபடி அவள் ஒருத்தியைப் பதின்மரும் மணந்து பிரசாசிருட்டி செய்யத் தொடங்கி விஷ்ணுமூர்த்தியிடம் பல வரங்களைப்பெற்று எங்கும் தழைத்திருக்கும் விருக்ஷங்களை அழிக்கத் தமது முகத்தில் அக்கினியையும் வாயுவையும் சிருட்டித்து விட்டனர். இதனையறிந்த பிரமன் விருக்ஷ கன்னிகையாகிய மாரிஷையைக் கலியாணஞ் செய்வித்துச் சமாதானப் படுத்தினன். இவர்களிடம் தக்ஷன் பிறந்து பிரசாசிருட்டி செய்தனன். இவர்கள் நாரத உபதேசத்தால் முத்தி பெற்றனர். இவர்கள் ஓஷதிகளை யழிக்கையில் இவர்கள் அதை அழிக்காதிருக்கச் சந்திரன் நீதி கூறினன். (பாகவதம்,) (பிரம புராணம்.)

பிரசேநசித்

1, வாங்கலன் குமரன், சூர்ய வம்சத்தவன். ஜமதக்னிக்கு மாமன். இரேணுகையின் தந்தை, 2, க்ஷத்திரியன், யாதவன், சத்திராஜித்தின் உடன் பிறந்தவன் இவனுக்கு சேனன் என்றும் பெயர். (பா. சபா.)

பிரசேநன்

1. சத்ராசித்தின் சகோதான் சியமந்தக மணியைப் பூண்டு வேட்டை மேற்சென்று சிங்கத்தால் மணியுடன் கொல்லப்பட்டவன். 2, நிம்மனர் குமரன்.

பிரசை

பிராம்சுவின் குமரன்.

பிரச்சின்னயோகன்

ஒரு இருடி.

பிரச்சிரவணமலை

இராமமூர்த்தி இலங்கைமேற் சென்ற காலத்தில் மழைக்காலம் மாறும்வரையில் சுக்ரீவன் உபசரிக்கத் தங்கியிருந்த மலை.

பிரச்சோதனன்

இவன் ஒரு சக்கரவர்த்தி என்பர். வாசவதத்தையின் தந்தை, இவனது நாடு, அவந்தி இராசதானி எத்தனையோ நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற உச்சைனி நகர் வேறு தேசத்தரசர் பலர் ஆண்டு தோறுந் திறை கொடுத்து வணங்கப்பெற்ற பெருவிறல் வாய்ந்தவன். அங்கனம் திறை கொடாமையினாலே தான் உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறையில் வைக்கும்படி செய்வித்தனன். இவனது சென்னி வழிபடு தெய்வத்தை யன்றியாரையும், வணங்கியறியாதது. இவனுக்குத் தேவியர் பதினாறாயிரவர். வாசவதத்தையைப் பெற்ற நற்ரயாகிய பதுமகாரிகை யென்பவள் இவர்களுள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பால குமரன், கோபலக னென்பவர் முதலிய பல குமாரர்கள் உண்டு, மந்திரிகள் பதினாறாயிரவர் அவர்களுள் முதன்மை வாய்ந்தவன் சாலங்காய னென்பவன, இவனுக்குள்ள முரசம் பதினாறாயிரம். இவனுக்கு இப்படியே ஒவ்வொன்றும் பதினாறாயிரம் பதினாயிரமாகப் பதினாறு பகுதிகளிருந்தன. தேவர்கள் விரும்புவதும் சொல்லில் அடங்காததுமான சிறப்பை யுடையவன். இவன் சொல் மிக்க பொருட் சிறப்பையுடையது. ஆற்றலிலும், வெற்றியிலும், அறிவிலும், நிகரற்றவன்; யாவரும் அஞ்சுதற்குரிய கடுங்கோபத்தினன்; ஆணையிற் சிறந்தவன்; இவனது சேனை பலவகையாகப் பாராட்டப்படுகின்றது; படை யுடைவேந்தன் படைப்பெரு வேந்தன் வீரிய வேந்தன்” “அவந்தி வேந்தன்’ ஏகத்திகிரி இறைவன்” வெற்றி வேந்தன்” “உஞ்சையர் பெருமகன்” பெரு வேந்தன் ஆற்றல் வேந்தனெனவும் இவன் பெயர்கள் வழங்கும். (பெ. கதை)

பிரச்தசேயன்

யமனுக்கு இரியிடம் உதித்த குமரன்.

பிரஜாபத்தியம் முதலிய கிருச்சிர சுவருபங்கள்

1, இவ்விரதம் அநுட்டிக்கிற துவசன், மூன்று நாள் பகலில் ஒவ்வொரு வேளை உப்பில்லாத அன்னத்தில் இருபத்தாறு கவளமும், மறு மூன்று நாள் அப்படியே இரவில் முப்பத்திரண்டு கவளமும், மறு மூன்று நாள் தான் யாசிக்காமல் இருக்கும்போது யாராவது வலிவில் கொடுத்த அன்னத்தில் இருபத்துநான்கு கவளமும், புசித்து, மறு மூன்று நாள் சுத்த உபவாசம் இருக்கவேண்டியது. 2. சாந்தடனக் கிருச்சிரமாவது: பஞ்ச கவ்வியத்தை மாத்திரம் ஒருநாள் உண்டு மறுநாள் சுத்த உபவாசமிருப்பது. 3. மகா சாந்தபனமாவது: பஞ்சகவ்வியமாகிய ஐந்தில் ஒவ்வொன்றைத் தனித்தனி ஒவ்வொருநாள் உண்டு எழாம் நாள் சுத்த உபவாசம் இருப்பது, 4. அதிகிருச்சிரமாவது: மூன்று நாள் பகலில் ஒவ்வொரு கவளமும், மறு மூன்று நாள் இரவில் ஒவ்வொரு கவளமும் மறு மூன்று நாள் யாசிக்காமல் வந்த அன்னத்தில் ஒரு கவளமும் உண்டு, பின் மூன்று நாள் சுத்த உபவாசம் இருப்பது, 5. தப்தகிருச்சிர மாவது: மூன்று நாள் ஒவ்வொரு வேளை ஆறு பலமுள்ள உஷ்ணோதகத்தையும், மறு மூன்று நான் ஒவ்வொரு வேளை மூன்று பலமுள்ள சுடுகையான பாலையும், பின் மூன்று நாள் ஒரு பலம் உள்ள உஷ்ணமான நெய்யையும், பின் மூன்று நாள் உஷ்ணமாக வீசுகிற காற்றையும், உண்டு ஒரிடத்தில் வசித்திருப்பது. இந்தப் பன்னிரண்டு நாளும் ஒரேகாலம் ஸ்நாகம் செய்யவேண்டும். 6. பராக கிருச்சிரமாவது: இந்திரியங்களை அடக்கிக் கொண்டு சாக்கிரதையுடன் பன்னிரண்டு நாள் சுத்த உபவாசம் 7. பிபீலி காசாந்திராயனம் என்பது: பகலில் மூன்று காலத்திலும் ஸ்நானம் செய்து, பௌர்ணமாவாசியில் உப்பில் லாபதினைந்து கவளம் அன்னம் புசித்து மறுநாளாகிய கிருஷ்ணபக பிரதமை முதல் அந்தப் பதினைந்து கவளத்தில் ஒவ்வொரு கவளமாகக் குறைத்து வந்து அமாவாசி யில் சுத்த உபவாசம் இருந்து மறுநாள் துவக்கி ஒவ்வொரு கவளம் வளர்த்துக்கொண்டு வந்து, மறுபடி பௌர்ணமியில் பதினைந்து கவளம் புரிப்பது, எலும்பு போல் முன்னும் பின்னும் வளர்ந்து நடுக்குறைதலால் இப்பெயர் தந்தனர். 8. யவசாந்திராயன மாவது; மேற்கூறிய நியமத்துடன் சுக்கிலபக்ஷ பிரதமை முதல் ஒவ்வொரு கவளமாக வளர்த்து வந்து பௌர்ணமாவாசியில் பதினைந்து கவளம் உண்டு, பின் கிருஷ்ணபக்ஷ பிரதமை முதல் ஒவ்வொன்றாகக் குறைத்து வந்து அமாவாசியில் உபவாசம் இருப்பது. 9 யதிசாந்தி ராயனமாவது: கிருஷ்ணபக்ஷம் அல்லது சுக்கிலபடித்தின் பிரதமைகளில் துவக்கி முப்பது நாள் வரையில் நாடோறும் எவ்வெட்டுக் கவள அன்னத்தை உப்பில்லாமல் உண்டு இருப்பது. 10 சிசு சர்ந்திராயனமாவது: மேற்கூறிய நியமத்துடன் முப்பது நாள் வரையில் நான்கு கவளமும், சூரியன் அஸ்த மித்தவுடன் நான்கு கவளமும் சாப்பிட்டிருப்பது.

பிரஞ்சயன்

சுவிரன் குமரன். இவன் குமரன் பாகுரதன்.

பிரஞ்ஞாபன பத்திரம்

பெரியோர்க்கு வணக்கமாக அறிவிக்கும் பத்திரம்,

பிரஞ்ஞை

இந்தப்பருவத நெருப்புடையது என்பது, எது புகையினாலென்பது, திருஷ்டாந்தம் பாகசாலைபோல என்பது, உபநயம்:அப் பாகசாலைபோவிப்பர்வதமும் புகையுடையதென்பது, நிகமனம் : ஆகையாலிப்பர்வதமும் நெருப்புடையது,

பிரணவம்

இது மூன்றக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய், ஏகாஷரமாய், ஏகபதமாய் ஏகார்த்தப்பிரகாசமாய் இருக்கும். இதில் முதலெழுத்தாகிய அகரம் ஒப்பற்ற முதல்வனாகிய பகவானைத் தெரிவிக்கும். மத்யபதமான உகரம், அவதாரணவாசியாய் இருக்கும். மூன்றாவதான மகரம், ஆத்மவஸ்ரூபத்தை விளக்கும். இம்மூன்று எழுத்துக்களும் மூன்று வேதங்களின் ஸாரமாகும். இதன் முதலெழுத்துக்குப் பொருள் க்ஷகம் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் சகல ஐச்வர்யத்தோடு கூடிய ஈச்வரனுக்கேயன்றி மற்றவருக் கில்லாமையால் அது பகவானைத் தெரிவிக்கும். மற்ற அகூரங்கள் முன்சொன்ன படி உணர்த்தும், இது, வைத்துதி, தாமசி, நிர்க்குணா விர்த்தி, என மூவிதப்படும். இது, சகல தேவர்க்கும் பிறப்பிடமாயும், மந்திரங்களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும். இது, சமஷ்டி, வியஷ்டி, என இருவிதப்படும். இதனை வேத ஆரம்பத்திலும் முடிவிலும் உச்சரிப்பர். இதனை உத்கீதை யெனவும், சுத்தமாயை யெனவும் கூறுவர். இதில் எல்லா உலகங்களும் எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்கு மென்பர். இதன் உற்பத்தியைச் சூதசம் மிதையில் இவ்வகை கூறியிருக்கிறது. ஒருமுறை பிரமன், திரிலோகங்களை நீராக்க அதினின்றும் அக்னி, காற்று, சூரியன் தோன்றினர். மீண்டும் தபோ அக்கினியால் அவைகளை அழிக்க அவற்றினின்றும் அகர உகர யகரங்கள் உண்டாயின. அம்மூன்று எழுத்துக்களையும் திரட்டி ஓம் என வைத்தனன். இது வலம் புரிச்சங்கின் வடிவினது. இதன் பெருமைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் இருந்து சாகோப சாகைகள் தோன்று மாறுபோல இதில் மந்திரம், புவனம் முதலிய சராசரங்கள் எல்லாம் தோன்றும். இதன் விரிவை உபநிஷத்து ஆதி பெரு நூல்களிற்கண்டு கொள்க.

பிரணிந்தகன்

(சூ.) மருவின் குமரன்.

பிரதக்ஷிணம்

இது தேவர்களை வலம் வருதல். இது செய்தலில் ஒவ்வொரு அடிக்குப் பலகோடி புண்யபலமுண்டாம். இவ்வலம் சிவசந்நிதானத்து ஒற்றை எண்ணுள்ள தாகவும், பிராட்டி சந்நிதானத்து இரட்டை யெண்ணுடனும் பிரதக்ஷணஞ் செய்க,

பிரதத்தன்

இவன் வடநாட்டரசன். இவன் தலயாத்திரை புறப்பட்டுத் திருவண்ணாமலையடைந்து உருத்திரகணிகையைக் கண்டு மோகித்துக் குரங்கு முகமாய் அத்தலத்தில் திருப்பணிசெய்து தன்னுருப் பெற்றவன்.

பிரதத்திருது

பாரதவீரன், சூக்குமன் அம்சம்.

பிரதபநன்

இராவணசேநாபதியரில் ஒருவன். நளன் என்னும் வாநாவீரனால் மாய்ந்தவன்,

பிரதமசாகையர்

பிராமணரில் ஒருவகைப் பிரிவினர். இவர்களை மத்யான காலத்தில் பிராமணர் தீண்டார்.

பிரதமை

நவராத்ரி பிரதமை; இது புரட்டாசிமாதம் சுக்லபக்ஷப் பிரதமையில் தேவியை நோக்கி யுபாசிக்கும் விரதம், இது அஸ்தா நக்ஷத்திரம் கூடின் விசேஷமென்று தேவிபுராணம் கூறும். இது ஒன்பது நாட்கள் அநுஷ்டிப்பது, இதை அநுஷ்டிக்கின் துர்ப்பிஷம் ஒழியும்.

பிரதரன்

தியுமானுக்கு ஒரு பெயர்.

பிரதர்தனன்

1, சத்ருசித்துக்கு ஒரு பெயர். 2. தீவோதாசன் புத்திரன். யயாதியின் தௌகித்திரன், தாய் மாதவி. (பா. உத்தி).

பிரதர்த்தனன்

ஒரு அரசன், இவன் சிவபூசையால் நற்கதி அடைந்தவன்,

பிரதானன்

1. ஒரு ரிஷி, பெண் சுலபை (பா ~ சாந்) 2. அரசியற் காரியங்க ளனைத்தையும் பார்ப்பவன்,

பிரதாபசிங்

ராஜ புதனத்திலுள்ள மீவார் நாட்டு அரசன். உதயசிங்கின் குமரன், மகாவீரன். இவன்றன் சுற்றத்தார் பட்டணம் முதலிய இழந்து மனவலி கெட்டிருந்தனர். ஆயினும் இவன் மாத்திரம் தன் மனவலி குன்றாமல் தான் உள்ள அளவும் தம் நகரத்தையும் ரஜபுத்திர வம்சத்தையும் முன்னுக்குக் கொண்டுவரப் பார்த்தான். பெரும்பாலான இரஜபுத்திர சிற்றாசர் அக்பருக்குக் கீழ்ப்பட்டதைப்பற்றி விசனமடைவன். இவனுக்கு நண்பனாகிய பூண்டி யரசனும் இவன் சகோதரனும் அக்பரைச் சேர்ந்து கொண்டனர். இவன் ஒரு வனாகவே இருந்து கொண்டு மொகலாயரை (25) வருஷம் ஆட்டுவித்தான். இவன் மொகலாயரைச் சமயம் பார்த்துத் தாக்கிக் குன்றுகளிலும் மலைகளிலும் காணாமல் ஒளிப்பன். இவன் காடு மலைகளைக் கடக்குமிடம் எல்லாம் தன் குமரன் அமரசிங்கையும் இழுத்துச் செல்வான். இவர்க்கு உதவிய இரஜ புத்திரர் தம் உயிரையே இவர் பொருட்டும் வம்சத்தின் பொருட்டும் விட்டனர். இவன் மீண்டும் சித்தூரை மீட்கும்படி சில சங்கற்பங்கள் செய்துகொண்டான். அவை, தங்கொள்கை முடியுமளவும் எவ்வித போகங்களும் ஏற்பதில்லை, சுவர்ண பாத்திரங்களைத் தொடாது இலையிலுண்பது, பஞ்சணை முதலிய வேண்டாது புல்லணையில் சயனித்தல், க்ஷௌரமில்லை. இவன் இந்த நியமங்கொண்டதால் இப்போதும் உதயபுரி ரானா தாடிவைத்துக் கொள்வதும், தன் பொற் பாத்திரத்தினடியில் இலை போட்டுக் கொள்வதும், தன் படுக்கையின் கீழ் புல்விட்டுக் கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. இவன் சிதறின இரஜபுத்திரர்களை யொன்று சேர்த்து ஒரு மனதாயிருக்கச் செய்தான். கோமல்மர் கோட்டையைத் தனக்கிருப்பிட மாக்கினான். மொகலாயரிருக்கும் இடங்களுக்குக் கொண்டுபோம் சாமான்களைக் கொள்ளை கொள்ள உத்தரவிட்டான், இதனால் அக்பர் கோபங் கொண்டு அஜ்மூரில் சேனையுடனிறங்கி இவனை எப்படியாயினும் அடக்க வேண்டு மெனத் தீர்மானித்தான். இதனால் பல நாட்டு ராஜபுத்திரர் அக்பருக்குக் கீழ்ப்படிந்தனர். ஒரு நாள் அக்பருக்குப் பெண்ணைக் கொடுத்த மான்சிங் அக்பரைக் காணவர சமஸ்தானத் திருந்தவர் அவனுக்கு மரியாதை செய்து விருந்தளித்தனர். இவன் பிரதாபசிங் எங்கேயென அருகிருந்தவர் அவர்க்குத் தலைவலி யென்றனர். அவரது தலைவலி எனக்குத் தெரியுமென மான்சிங் சொல்ல பிரதாபசிங் எதிரில் வந்து நீ துருக்கியரோடு சம்பந்தமாய் அவருடன் உண்டவனல்லவா என்றான். மான்சிங் உன் கர்வத்தைப் பார்க்கிறேன் என்றான். பிரதாபசிங் நீ எப்பொழுதானாலும் பார்க்கலாமென்று அவனிருந்த இடத்தைக் கங்கா தீர்த்தத்தால் சுத்திசெய்ய உத்தர விட்டான். இந்த சமா சாரத்தைக் கேட்டு அக்பர் கோபித்துத்தன் மகன் சிலீமையும், மான் சிங்கையும், மகபத்கான் என்பவனையும் சேனையுடன் அனுப்பினான். மலைப்பாங்கான ஹால்டிகாடெனு மிடத்தில் சண்டை நடந்தது, இவன் சலீமைத் தாக்கச் சலீம் உயிர்தப்பி ஒடினான். பிரதாபசிங்கை நாலைந்து முறை சேநாபதிகள் அபாயத்தி லிருந்து தப்புவித்தனர். அதில் ஒருவன் மானா என்பவன். இவ்வாறு நடக்குஞ் சண்டையில் ரானா தனது சிகுக் எனும் குதிரை மீதேறித் துணையில்லாமல் ஒடுகையில் இவனைத் தொடர்ந்து இரண்டு முகலாயத் தலைவர்கள் பின்பற்றினர். அவ்வழியில் ஒரு மலையருவி குறுக்கிடச் சிகுக்கு ஒரேபாய்ச் சலாகப் பாய்ந்து எஜமானனை வேகமாய்க் கொண்டு போயிற்று. அந்த மொகலாயத் தலைவர்கள் சற்றுத்தாமதித்துப் பின்தொடருகையில் ஓ! நீலக்குதிரையில் சவாரி செய்பவனே என்ன, பழகிய தன் குரல் கேட்க இது அக்பரைச் சேர்ந்துகொண்ட சுக்தா எனும் தன் சகோதரன் குரல் எனத் தெரிந்தான். சுக்தா துணையின்றி யோடும் சகோதரனைக்கண்டு மனமிரங்கிச் சகோதர வாஞ்சை மேலிட்டுப் பின் தொடரும் மொகலாயரை வாளால் வீசிக்கொன்று சகோதரனை முத்தமிட்டான். இவ்விடத்தில் குதிரையுமிறந்தது. சுக்தா தன் குதிரையைச் சகோதரனுக்குக் கொடுத்தான். இவன் வலியற்று உண்ணவுமுண விலாதிருக் கையில் தம் முன்னோரிடம் உதவிபெற்ற ஒருவன் கொஞ்சம் திரவியம் கொடுக்க இதைக்கொண்டு சேனை சேர்த்து மொகலாயரையும் மான்சிங் ராஜ்யமாகிய அம்பர் மீதும் திடீரென்று பாய்ந்தான். இவ்வாறு இருக்கையில் அவனுக்கு வாழ் நாள் குறுகி மரணாவஸ்தையிலிருக்கையில் என் வருத்தப் படுகிறீரென ஒருவன் கேட்க துரிக்கியருக்கு நமது கோட்டையை ஒரு பொழுதும் விடமாட்டோம் என்கிறஉறுதி மொழியைக்கேட்க என் மனம் தடமாடுகிறது என்றான். உடனே வீரர்களெல்லாம் முன் வந்து மீவார் நாட்டுச் சுதந்தர மெல்லாம் மீட்டாலன்றி நாங்கள் மாளிகை கட்டுவதில்லையெனச் சபதம் செய்தனர். பிரதாபன் இறந்தான். இவன் குமரன் அமரசிங்.

பிரதாபசூர்யபாண்டியன்

வங்கிய சூடாமணி பாண்டியன் குமரன்.

பிரதாபமகுடன்

1. ஒரு கிருகத்தன். இவனுக்கு ஒரு குமரன் விரக்தனாகப் பிறந்து இவன் மணஞ்செய்து கொள்ளக்கூறியும் கேளாது தந்தையையும் தன் வசப்படுத்திக்கொண்டு சந்நியாச மடைந்து காசி க்ஷேத்திரத்தில் வசித்தனன். 2. இந்திரனிடம் உபதேசம் பெற்ற அரசன்,

பிரதாபமார்த்தாண்ட பாண்டியன்

வீரபராக்கிரம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் விக்ரமகஞ்சுகன்.

பிரதாபருத்ரன்

காவிரிக்கரைகண்ட சோழனைக் காண்க. 2. (சகம் 1238) (A, D. 1316) இவன் காகதீய அரசன். காஞ்சியில் தருமஞ் செய்தவன். இவன் ரவிவர்மன் கோளத்தாசனுடன் யுத்தஞ் செய்து தோல்வியடைந்தவன். (காஞ்சி~சாம்).

பிரதி

பாரதன் குமரன். இவன் குமரன் சுகுருதி

பிரதிகன்

பரமேஷ்டியின் குமரன். தாய் சுவலை, தேவி சுவர்க்கலை, குமரன் பிரதி கர்த்தா,

பிரதிகர்த்தா

பிரதிகன் குமரன். தாய் சுவர்க்கலை, தேவி ஸ்துதி, குமரர் வியோமன், பூமா.

பிரதிசாச்வன்

(சூ.) பானுமான் குமரன்.

பிரதிஞ்ஞாஆனி

வாதிக்கையில் வாதி, சபக்ஷ முதலியவைகளைச் சொல்லியதனை முற்ற சாதிக்க மாட்டாமல் விடுகை. (சிவ சித்).

பிரதிஞ்ஞாசநீயாசம்

தான் சொன்ன பிரதிஞ்ஞாதிகளைப் பிரதிவாதி யானவன் நிந்தித்த வினாவினைச் சொல்லவில்லை என்கை.

பிரதிஞ்ஞாந்தம்

வாதி விசேஷியாமல் சொன்ன பிரதிஞ்ஞாதிகளைப் பிரதிவாதியானவன் அதனைத் தூஷித்த அளவில் அந்தப் பிரதிக்யாதிகளைப் பின் விசேஷணத்துடனே கூட்டிச் சொல்லுதல், (சிவ~சித்).

பிரதிஞ்ஞாபாசம்

சுத்தியிலாசித மென்னும் அறிவு, இதனை அப்ரசித் தோபயம் என்பர்.

பிரதிஞ்ஞாவிரோதம்

ஒருவன் பதவாக்கியங்களினால் ஜகத்கர்த்தாவை அங்கீகரித்துப் பின்பு அந்த ஈச்வரனைக் கர்த்தா அல்ல என்கை, (சிவ~சித்).

பிரதிட்டாகலை

அப்புமண்டலத்தில்: அமரேசம், பிரபாசம், நைம்சம், புட்கரம், ஆசாடி, திண்டிமுண்டி, பாரபூதி, இலகுளீச்சுரம் ஆகிய குய்யாட்டக புவனம் எட்டு. தேயுவண்டத்தின்: அரிச்சந்திரம், சீசைலம், செற்பேசம், ஆமிராதகம், மத்திமேசம், மாகாளம், கேதாரம், வைாவம் ஆகிய அதிகுய்யாட்டக மென்னும் புவனம் எட்டு, வாயுவண்டத்தில்: கயை, குருகேத்திரம், நாகலம், நகலம், விமலம், அட்டகாசம், மகேந்திரம் பீமேசம் ஆகிய குய்ய தராட்டகமென்னும் புவனம் எட்டு, ஆகாயவண்டத்தில் வத்திராபதம், உருத்திரகோடி, அவிமுத்தம், மகாலயம், கோகர்ணம், பத்திரகரணம், சுவர்ணாக்கம் தாணு ஆகிய பவித்திராட்டகமென்னும் புவனம் எட்டு, தன்மாத்திரை: ஐந்தும், இந்திரியம் பத்தும், மனமும் என்னும் தன் காரியமாகிய பதினாறண்டங் களையும் தன்னுளடக்கி நிற்கும். ஆங்காரவண்டத்தில்: சகலண்டம், துவிரண்டம், மாகோடம், மண்டலேச்சு ரம், காளாஞ்சரம், சங்குகன்னம், தூலேச்சுரம், தலேச்சுரம் ஆகிய தாணுவட்டக மென்னும் புவனம் எட்டு, புத்தியண்டத்தில்: பைசாசம், இராக்கதம், இயக்கம். காந்தருவம், ஐர்திரம், சௌமியம், பிராசேசம், பிராமம் ஆகிய சூக்கும புவனாட்டகம் எட்டு, பிரகிருதியண்டத்தில் அகிருதம், கிருதம், பைரவம், பிராமம், வைணவம், கௌமாரம் ஒளமம், சீகண்டம் என்னும் யோகாட்டக புவனம் எட்டு. ஆக அப்புதத்துவ முதல் மூலிப்பகுதி யீறாகிய அண்டங்களைக் காக்கும் உருத்திரர் வைகும் புவனம் ஐம்பத்தாறு. சிவாகமங்களுட் கூறிய “கலாபேதத்திலும் (56) புவனங்கள் உள” என்று.

பிரதிட்டானபுரம்

கங்கை யமுனை கூடுகைக்கு வடக்கில் உள்ள பட்டணம். இது புரூரவன் அரசாண்டது,

பிரதிட்டை

புண்ணியன் தேவி, இவளில்லாத இடம் ஜீவன் மிருத்யு வாயிருக்கும்.

பிரதிதிருஷ்டாந்தசமை

வேறு திருஷ்டாந்தத்தால் சாத்யாபாவத்தைச் சாதிப்பது.

பிரதிநிதி

செய்யதக்கன இன்ன செய்யத் தகாதன இன்ன என்று நன்றாக அழுந்தி ஆராயும் அறிவுடையவன், (சுக்ரநீதி).

பிரதிபாண்டியன்

மலயத்துவசன் குமரன்.

பிரதிபிம்பவாதிமதம்

பிரமம் ஆகாயத்து நிர்மலமாய்ப் பிரகாசிக்கும். சூரியன் கடகத்தில் உள்ள ஜலத்தில் தன்னுருவை யொளிப்பித்துத் தனக்குச் சிறிதும் உபாதியில் லாதிருப்பதுபோல், தான் எங்குமாய் ஆன்மாக்களிடம் விளங்கித் தனக்கு உபாதியிலாது தேக நீக்கத்தில் ஆன்மாவைத் தன்னிடம் ஒடுக்கி விளங்கும் என்னும். (தத்துவநிஜா நுபோகசாரம்)

பிரதிபுத்திரை

நந்தன் தேவி,

பிரதிபூ

ஒருவனுக்காகப் பிணைபட்டு நிற்பவன். (யஞ்ஞவல்கியம்.)

பிரதிரதன்

மது குமரன்,

பிரதிலோமன்

உயர்குலப் பெண்ணும் இழிகுலத்தானுங் கூடிப் பிறந்தவன்.

பிரதிவாகு

1 (சூ.) வச்சிரன் குமரன். இவன் குமரன் சுவாகு. (பிரதிபாகு.) 2, சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமரன். 3. அக்ரூான் சகோதரன்,

பிரதிவாதிபயங்கரம் அண்ணன்

நயினாசாரியர் திருவடிசம்பந்தி; பெருமாள் கோயிலில் மஹாவாக்மியாயிருந்தாரென்று அறிந்த மணவாளமா முனிகள் இவரை வருவித்து இவர்க்கு முப்பத்தாறாயிரப்படி யருளிச் செய்தனர். இதனைக் கேட்டுணர்ந்த இவர், மணவாளமா முனிவரிடத்துப் பஞ்ச சமஸ்காரம் பெற்றனர். இவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவதாசரென்று ஒரு பெயர். அண்ணரைக் காண்க,

பிரதிவிந்தன்

தருமராசன் குமரன். தாய் திரௌபதி.

பிரதிவிந்தியன்

காசிராஜனுக் குட்பட்ட தீவையாளும் ஓர் அரசன். அருச்சுனால் செயிக்கப்பட்டவன்.

பிரதிவிபதி

மைசூருக்கருகிலுள்ள கங்கபாடியென்னும் நாட்டிற்கரசன், வாகுண பாண்டியனுடன் யுத்தஞ்செய்து தோற்றவன்,

பிரதிஷ்டானம்

அஸ்தினபுரத்துக்குச் சமீபத்திலுள்ள பட்டணம். வர்த்தமான புரம் என்றும் ஒருபெயர். (பா. ஆதி.)

பிரதிஷ்டை

புண்யபத்னி, புண்ணியம் தருபவள். சம்சித்தி, கீர்த்தி: சுகர்மபத்னிகள். கிரியை: உத்யோகபத்னி. மிந்யை: அதர்ம பத்னி. இவள் கிருதாயுகத்தில் காணப்படாமலும், திரேதாயுகத்தில் சூக்ஷ்மையாயும், தவாபரயுகத்தில் பாதியுருவுடனும், கலியில் முழுவுருவுடன் கலகனுடன் திரிவள். சாந்தி, லச்சை: சுசீலைக்குப் பத்தினிகள். புத்தி, மேதை, திருதி தியானபத்னிகள், காந்தி தருமபத்தினி. லக்ஷ்மி மதிபத்னி. காலாக்னிதேவி, சித்தயோகினி, நித்ராதேவி மூவரும் உருத்ரபத்னிகள். சந்தி, இரவு, பகல் இவர்கள் காலபத்தினிகள். பசியும், தாபமும் லோபபத்தினிகள். பிரமை, தாஹிகை தேஜவின் பத்தினிகள். காலகன்னி, மிருத்யு, ஜரை இவர்கள் சுவரபத்தினிகள், நித்ரா புத்திரிகளான தாந்திரை (சோம்பல்) பிரீதியும், சுகபத்தினிகள் சிரத்தையும், பக்தியும் வைராக்ய பத்தினிகள். இவர்களன்றி தேவமாதா வான அதிதி, பசுக்களின் தாயான காமதேனு, அசுரமாதாவான திதி, கர்த்துரு, விநதை, தது, சந்திரபத்தினி ரோகணி, சூாயபத்தினி சம்ஞா, மதுபத்தினி சதகுடை இந்திரபத்தினி சசி, குருபத்தினி தாரை, வசிட்டபத்தினி அருந்ததி, கௌதமபத்தினி அகலியை, அத்திரி பத்தினியான அநசூயை, கர்த்தமபத்தினி தேவவூதி, தக்ஷபத்தினி பிரசூதி, பிதுர்க்களின் மானசிகபுத்திரி மேனகை, அகஸ்தியபத்தினி லோபாமுத்திரை, குபேரபத்தினி குந்தி, வருணபத்தினி பிரசித்தி, வாயுபத்தினி விந்தியா, தமயந்தி, யசோதை, தேவகி, காந்தாரி, திரௌபதி, சௌம்யா, சத்யவதி, ருஷபபுத்திரி குலோத்வகா, மந்தோதரி, கௌசலை, சுபத்திரை, கௌபாவி, ரேவதி, சத்தியபாமா, காளிந்தி, லக்ஷ்மணா, ஜாம்பவதி, அக்னிஜிதி, மித்திர விந்தை, லக்ஷ்மளை, ருக்மணி, சீதை, காளி, பரிமளகந்தி, உஷை, இவளுடைய சகியான சித்ரலேகை, பிரபாவதி, பாநுமதி, மாயாவதி, ரேணுகை, பலராமர் தாயான ரோகணி, கிருஷ்ண சகோதரியான ஏகதந்தை, துர்க்கை, கிராமதேவியர் இவர்கள் எல்லோரும் பிரகிருதியின் கலையானவர்கள், பிரபஞ்ச ஸ்திரீகள் எல்லாரும் அப்பிரகிருதி அம்சத்திற் பிறந்தவர்களே. (தேவி~பா.)

பிரதீபன்

சந்திரவம்சத்துப் பீமன் குமரன். இவன் தேவி சுநந்தை, இவன் குமரர் தேவாபி, சந்தனு, பாக்லீசன். இவன் பாண்டு பௌத்திரன் அல்லன். இவன், தொடையில் கங்கை வந்து உட்கார்ந்து உன்னை மணக்கவந்தேன் என, இவன், தொடையில் உட்காரத்தக்கவர் புத்திரன், புத்திரி, மருமகள் முதலியவர்; நான் எகபத்தினி விரதனாதலால் என் மகனை மணக்கவென்று கூறி மறுத்தவன்.

பிரதுகர்மன்

பிரது கீர்த்தி, பாதுசயன், பிரது தாசன், பிரதுயசன், யதுவம்சத்துச் சசபிந்து குமரர்.

பிரதூதகம்

சரஸ்வதிக்கு அருகில் உள்ள தீர்த்தகட்டம். இதில் தீர்த்தயாத்திரை காலத்துப் பலராமர் ஸ்நானஞ்செய்தனர்.

பிரதேசசு

துர்மதன் குமரன். இவனுக்கு நூறு குமரர். மிலேச்சருக்கு அதிபராயினர்.

பிரதேஷிணி

தீர்க்கதமன் தேவி.

பிரதை

குந்திபோஜன் வம்சத்தவனாகிய சூரசேநன் பெண். குந்தியைக் காண்க.

பிரதோஷன்

யஞ்சமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்த குமரன். 2 தோஷாவிற்குப் புட்சிபாரனால் பிறந்த குமரன்.

பிரத்தியக்ஷம்

(காட்சிப் பிரமாணம்) நேராகக் காண்கின்ற உண்மை யறிவிற்குக் காணமாம். இது, கவிகற்பம், நிருவிகற்பம், இந்திரியப் பிரத்தியக்ஷம், மான தப்பிரத்தியக்ஷம், ஸ்வவே தனாப்பிரத்தியக்ஷம். வஸ்து மாத்திரங் காண்டலும், பொதுவாகச் காண்டலும், கண்ணாற் காண்டலும், மனத்தாற் காண்டலுமாம். ஐயக்காட்சி, திரிவுக் காட்சி,

பிரத்தியுக்ரன்

உபரி சரஸுவின் குமரன் பிரத்தியக்ரன் எனவுங் கூறுவர்.

பிரத்தியும்நன்

1. ஸ்ரீகிருஷ்ண மூர்த்திக்கு உருக்மணிதேவியிடம் உதித்த குமரன். இவன் பிறந்த பத்தாநாள், சாம்பாசுரன் இவனைத் தூக்கிக் கடலில் இட மீன் ஒன்று இவனை விழுங்கிற்று. அம்மீனை ஒருவலைஞன் பிடித்தனன். அதன் வயிற்றில் இருந்த குமரனை மாயாவதி வளர்த்தனள். இவனே வளர்ந்து சாம்பாசுரனைக் கொன்று மாயாவதியுடன் துவாரகைச் சென்று தன்னை வளர்த்த மாயாவதியை மணங்கொண்டனன். இவன் முற்பிறப்பில் மன்மதன். மாயாவதி இரதிதேவி. சாம்பவனைக்கொன்ற காரணத்தால் மன்மதனுக்குச் சம்பராரி என ஒரு பெயர் வந்தது, இவன் மீன் வயிற்றில் உதித்ததால் மீனக்கொடியாயிற்று. இவன் குமரன் அநிருத்தன். 2. விஷ்ணு மூர்த்தியின் வியூகங்களில் ஒன்று 3. விருஷ்ணிகளுக்குள்ளே மகாரதன். 4. சாக்ஷஸ மனுவிற்கு நட்வலையிடம் உதித்த குமரன். 5. நிசும்பனைக் காண்க.

பிரத்தியூஷன்

1. பிரசாபதிக்குப் பிரபாசலையிடம் உதித்த குமரன், இவன் குமரன் தேவலன். 2. ஒரு வஸு.

பிரத்தியோதன்

1. சுருகன் குமரன். தந்தையால் அரசனுக்கு விற்கப்பட்டவன். இவன் வம்சத்துப் பிறந்த அரசர் ஐவர். (138) வருஷம் பூமி யாண்டார்கள். 2. சூரியன். 3. சுக்ரீநகன் குமரன். 4. ஓர் புத்த அரசன்.

பிரத்திவிந்தியன்

பாரதவீரன். சகரன் அம்சம்.

பிரத்திவிஷேணை

சுபார்சுவ தீர்த்தங்கரின் தாய், சுப்பிரதிஷ்ட மகாராசாவின் தேவி.

பிரத்துவம்சாபாவம்

காரணங்களில் தோன்றிய காரியத்தின் அபாவம் இது கெடுதலென்னும் அளவு. இது குடமுடைகையில் ஓட்டில் குடமில்லை யென்றார் போல்வது.

பிரத்துவேஷி

தீர்கதமக ரிஷியின் பத்தினி, குமரர் கௌதமாதியர் (பா~ஆதி).

பிரத்துஷாதேவி

சூர்யன் தேவியரில் ஒருத்தி.

பிரத்யயம்

தர்மாதிகளே மிகுந்து ஸ்தல ரூபமாய்ப் போக்ய திசையை அடைந்த போது பிரத்யயங்களாம். பிரத்யயமாவது நம்பிக்கை, அறிவு. அவை ஐம்பதுவகையாம். சித்திகள் எட்டு, துஷ்டிகள் ஒன்பது, அசத்திகள் இருபத்தெட்டு, புத்தி மாற்றங்கள் ஐந்து. இவற்றின் இலக்கணம் மதங்கத்திற் கூறப்படும்.

பிரபங்கான்

ஷத்திரியன், ஜயதிரிதன் உடன் பிறந்தான்.

பிரபஞ்சனன்

1, ஒரு அரசன். இவன் வேட்டைக்குச்சென்று காட்டில் பாலருந்திக் கொண்டிருந்த பசுவின் கன்றின் மேல் பாணத்தை விட்டுத் தாய்ப் பசுவால் புலியாகச் சாபமடைந்து பின் அப்பசுவை வேண்ட அது நந்தை யெனும் பசுவின் தரிசனத்தால் சாபம் நீக்கமடைவாய் எனப் பெற்றவன். (பாத்மபுராணம்). 2. மணலூர் புறத்தின் அரசன். (பா~ஆதிபர்)

பிரபந்தம்

(96.) 1. அவற்றுள் சாதகம். திதி, வார, நக்ஷத்திர, யோக, கரண, ஒரை. கிரகநிலைகளை நன்கறிந்து தலைவனுக்குக் கூறல். 2, 2.பிள்ளைக்கவி : காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் இவற்றை முறையே அகவல், விருத்தத்தால் பப்பத்தாகக் கூறுவது ஆண்பால் பிள்ளைக் கவி. இவ்வுறுப்புக்களுள் கடைமூன்றும் ஒழித்துக் கழங்கு, அம்மானை, ஊசல், என்பவற்றைக் கூட்டிச்சொல்வது பெண்பாற் பிள்ளைக்கவி, 3.பரணி : போர்க்கண் (1000) யானைகளைக்கொன்ற தலைவனை வீரனாகக் கொண்டு, கடவுள் வாழ்த்தும், கடை திறப்பும், பாலை நிலமும், காளி கோயிலும், பேய்களோடு காளியும், காளியோடு பேய்களும் சொல்லத் தான் சொல்லக்கருதிய தலைவன் சீர்த்திவிளங்கலும், அவன் வழியாகப்புறப் பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பலும், என்றிவை எல்லாம் இருசீரடி முச்சீரடி ஒழித்து ஒழிந்த மற்றயடியாக வீரடிப் பஃறாழிசையால் பாடுவது. 4. கலம்பகம் : ஒருபோகும், வெண்பாவும், கலித்துறையும், முதல் கவி உறுப்பாக முற்கூறிப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல், என்னும், இப்பதினெட்டு உறுப்புகளும் இயைய மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வெண்டுறை, இவற்றால் இடையே, வெண்பா, கலித்துறை விரவி அந்தாதித் தொடையால் முற்றுறக் கூறுங்கால் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்னூறறைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க்கு ஐம்பதும், சூத்திரர்க்கு முப்பதுமாகப் பாடுவது. 5. அகப்பொருட் கோவை : இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும், பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளைமுதலுற்ற அன்புடைக்காமப் பகுதிய வாகும் களவு ஒழுக்கத்தினையும், கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கட்டளைக் கலித்துறை நானூற்றால் திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும், வழுவின்றித் தோன்றப்பாடுவது, இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றனும் வழங்கப்படும். 6. ஐந்திணைச்செய்யுள் : புணர்தல் முதலிய ஐந்து உரிப்பொருளும் விளங்கக் குறிஞ்சி முதலிய ஐந்திணையினையும் கூறுவது. 7. வருக்கக்கோவை : அகர முதலாகிய எழுத்து வருக்கமொழிக்கு முதலாம் எழுத்தும் முறையே காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது. 8. மும்மணிக்கோவை : ஆசிரியப்பாவும், வெண்பாவும், கலித்துறையும், முப்பது பெறப்பாடுவது. 9. அங்கமாலை : ஆண்மகனுக்கும், பெண் மகளுக்கும், மிக்கென எடுத்துக்கூறும் அவயவங்களை வெண்பா வாயிலாலும், வெளி விருத்தத்தாலாயினும், பாதாதி கேசம், கேசாதிபாதம் முறை பிறழாது தொடர் வுறப்பாடுவது. 10. அட்டமங்கலம் : கடவுளைப்பாடி அக்கடவுளர் காக்க என ஆசிரியவிருத்தம் எட்டில் அந்தாதித்துக் கூறுவது. 11. அநுராகமாலை : தலைவன் கனவில் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப் பாங்கற்கு உரைத்ததாக கேரிசைக்க, வெண்பாவாற் கூறுவது. 12. இரட்டைமணிமாலை : முறையானே வெண்பாவும், சலித்துறையும், இருபஃது அந்தாதித்தொடையால் வருவது. 13. இணை மணிமாலை : வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக விரண்டிரண்டாக விணைத்து வெண்பா வகவலிணை மணிமாலை, வெண்பா கலித்துறை இணை மணிமாலைகான நூறு நூறு அந்தாதித் தொடை நான்காலும் பாடுவது. 14. நவமணிமாலை : வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமுமாக ஒன்பது செய்யுள் அந்தாதித்துப்பாடுவது, 15. நான்மணிமாலை : வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவலும் அந்தாதித் தொடையாக நாற்பது கூறுவது. 16. நாமமாலை : அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மக்களைப் புகழ்ந்து பாடுவது. 17. பல்சந்தமாலை : பப்பத்துச் செய்யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது, 18. கலம்பகமாலை : கலம்பகத்துள் கூறிய ஒருபோகும், அம்மானையும், பாசலும், இன்றி ஏனை உறுப்புகள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது. இதனை நான்மணி மாலை என்ப. 19. மணிமாலை : எப்பொருள் மேலும் வெண்பா இருபதும், கலித்துறை நாற்பதும் விரவி வருவது. 20, புகழ்ச்சிமாலை : அகவல் அடியும், கலி அடியும், வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் மாதர்களின் சீர்மையைக் கூறுவது. 21. பெருமகிழ்ச்சிமாலை : தலைவியின் அழகு, குணம், ஆக்கம், சிறப்பினைக் கூறுவது. 22. வருக்கமாலை : மொழிக்கு முதலாம் வருக்க எழுத்தினுக்கு ஒவ்வோர் செய்யுள் கூறுவது. 23. மெய்க்கீர்த்திமாலை : சொற்சீர் அடி என்னும் கட்டுரைச்செய்யுளால் குலமுறை யிற்செய்த கீர்த்தியைக் கூறுவது, 24, காப்பு மாலை : தெய்வம் காத்தலாக மூன்று செய்யுளானும், ஐந்து செய்யுளானும், எழு செய்யுளானும் பாடுவது. 25. வேனின் மாலை : இளவேனிலையும், முதுவேனிலையும் சிறப்பித்துப் பாடுவது. 26. வசந்தமாலை : தென்றலைச் சிறப்பித்துப் பாடுவது. 27. தாரகைமாலை : அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு இன்ன இயற்கைக் குணங்களை வகுப்பிற் கூறுவது. தூசிப்படையின் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும் உளர். 28. உற்பவமாலை : திருமால் பிறப்புப் பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் கூறுவது. 29. தானைமாலை : அகவ லோசையில் பிறழாது ஆசிரியப்பாவால் முன்னர் எடுத்துச் சொல்லும் கொடிப்படையைக் கூறுவது. 30. மும்மணிமாலை : வெண்பாவும் கலித்துறையும், அகவலும், அந்தாதித்தொடையின் முப்பது பாடுவது 31. தண்டகமாலை : வெண்பாவால் முப்பது செய்யுள் கூறுவது. இது வெண்புணர்ச்சி மாலை என்ப. 32. வீரவெட்சிமாலை : சுத்தவீரன் மாற்றார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு வெட்சிப் பூமாலை சூடி அவ்வண்ணம் போய் நிரைகவர்ந்துவரில் அவனுக்கு முன்பு தசாங்கம் வைத்துப்போய் வந்த வெற்றி பாடுவது. 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி : பகைவர் கொண்ட தன்னிரை மீட்போர் கரந்தைப் பூமாலை சூடிப்போய் மீட்பதைக் கூறுவது. 34. போர்க்கு எழுவஞ்சி : மாற்றார் மேல் போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப்பூ, மாலை சூடிப் புறப்படும் படை எழுச்சிச்சிறப்பை ஆசிரியப்பாவாற் கூறுவது. 35. வரலாற்று வஞ்சி : குலமுறை பிறப்பு முதலிய மேம்பாட்டின் சிறப்பை வஞ்சிப் பாவால் கூறுவது. 36. செருக்கள வஞ்சி : போர்க்களத்திலே அட்டமனிதர் உடலையும், யானை குதிரைகளின் உடலையும், நாயும், பேயும், காகமும், கழுகும், பருந்தும், விருந்து உண்டு களித்திருக்கப் பூதமும், பேயும் பாடி ஆடும் சிறப்பைப் பாடுவது. இதனைப் பறந்தலைப்பாட்டு என்ப. 37. காஞ்சிமாலை : மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சிப்பூ மாலைசூடி யூன்றலைக் கூறுவது. 38. நொச்சிமாலை : புறத்து ஊன்றிய மாற்றார் கோடலின்றி நொச்சிப்பூ மாலை சூடித் தன் மதில்காக்கும் திறம் கூறுவது. 39. உழிஞைமாலை : மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூ மாலை சூடிப் படை வளப்பதைக் பெறுவது 40, தும்பைமாலை : மாற்றாருடன் தும்பைமாலை சூடிப்பொருவதைக் கூறுவது. 41. வாகைமாலை : மாற்றாரை வென்று புகழ்படைத்து வாகைமாலை சூடுவதை ஆசிரியப்பாவால் கூறுவது. 42. வாதோரணமஞ்சரி : கொலைபுரி மதயானையையும், எதிர்பொரு களிற்றினையும், அடக்கியும், வெட்டியும், பிடித்துச் சேர்த்தவரின் வீரத்தின் சிறப்பை வஞ்சிப் பாவால் கூறுவது. 43 எண்செய்யுள் : பாட்டுடைத் தலைவனது ஊரினையும், பெயரினையும், பத்து முதல் ஆயிரம் அளவும்பாடி எண்ணால் பெயர் பெறுவது. 44. தொகைநிலைச்செய்யுள் : நெடிலடிச் செய்யுளால் தொகுத்த நெடுந்தொகையும், குறளடிச் செய்யுளால் தொகுத்த குறுந்தொகையும், கலிப்பாவால் தொகுத்த கலித்தொகையும், போல்வது. 45. ஒலியலந்தாதி : பதினாறு கலை ஓரடியாகவைத்து, இங்கனம் நாலடிக்கு அறுபத்து நாலு கலைவகுத்துப் பலசந்தமாக வண்ணமும், கலைவைப்பும், தவறாமல் அந்தாதித்து முப்பது செய்யுள் பாடுவது. சிறுபான்மை எட்டுக் கலையானும் வரப்பெறும். அன்றியும் வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத்தாக அந்தாதித்துப் பாடுவதுமாம். 46. பதிற்றந்தாதி: பத்துவெண்பா, பத்துக் கலித்துறைப் பொருட்டன்மை தோன்ற அந்தாதித்துப் பாடுவது. 47. நூற்றந்தாதி : நூறு வெண்பாவினாலேனும், நூறு கலித்துறையினா லேனும், அந்தாதித் தொடையாற்கூறுவது. 48. உலா : இளமைப்பருவம் உற்றதலை மகனைக் குலம், குடி, பிறப்பு, மங்கலம், பாம்பரை, இவற்றால் இன்னான் என்பது தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய வீதியிடத்து அவன் பவனிவரப் பேதை முதலிய எழுபருவப் பெண்களும் கண்டு தொழ உலா வந்ததாக நேரிசைக்கலி வெண்பாவால் உறுவது. 49. உலாமடல் : கனவில் ஒரு பெண்ணைக்கண்டு கலவி இன்பம் நுகர்ந்தோன் விழித்தபின் அவள் பொருட்டு மடல் ஊர்வேன் என்பதைக் கலிவெண்பாவால் முற்றுவிப்பது. 50. வளமடல் : அறம், பொருள், இன்பமாகிய அம்முக் கூறுபாட்டின் பயனை எள்ளி மங்கையர் திறத்துறு உம்காம இன்பத்தினை யேபயனெனக் கொண்டு பாட்டுடைத் தலை மகன் இயற்பெயர்க்குத் தக்கதை எதுகையாக நாட்டி உரைத்து அவ்வெதுகைப்படத் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவால் தலைமகன் இரந்துகுறைபொது மடலேறுவதால் ஈரடி எதுகை வாப் பாடுவது. 51, ஒருபா ஒருபஃது : அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாய் இவற்றுள் ஒன்றனால் அந்தாதித்தொடையால் பத்துப் பாடுவது. 52. இருபா இருபஃது : பத்து வெண்பாவும், பத்து அகவலும், அந்தாதித் தொடையான் இருபதிணைந்து வருவது. 53. ஆற்றுப்படை : அகவற்பாவால் விரலி, பாணர், கூத்தர், பொருநர், இந்நால்வரில் ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசுபெற்று வருவார் ஆற்றிடைக்கண்டு தலைவன் கீர்த்தியும், கொடையம், கொற்றமும், கூறுவது. 54. கண்படைநிலை : அரசரும் அரசரைப் போல்வாரும், அவைக்கண் நெடிது வைகிய வழி மருத்துவர், அமைச்சர் முதலியோர் அவர்க்குக் கண்துயில் போட கருதிக் கூறுவது, 55. துயிலெடைலை : தம் வலியால் பாசரைக் கண் ஒரு மனக்கவற்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தாக் கருதிய சூதர் துயில் எழுப்புதலாகப் பாடுவது 56. ஊரின்னிசை : பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார இன்னிசை வெண்பா வால் தொண்ணுறேனும், எழுபதேனும், அம்பதேனும், பாடுவது. 57. பெயரின்னிசை : பாட்டுடைத்தலைவன் பெயரினை சார காசைவெண்ப வால், தொண்வாரேனும், எழும்தேனும், இம்பதேனும், பாடுவது. 58. பெயர்கேரி : பாட்டுடைத் தலைவன் பெயரினைச்சார இன்னிசை வெண்பாவால் 90, 70, 50. பாடுவது 59. ஊர் நேரிசை : பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சாரகோசை வெண்பாவால் 90, 70, 50. பாடுவது. 60. ஊர் வெண்பா : வெண்பாவால் ஊரைச்சிறப்பித்துப் பத்துச்செய்யுள் பாடுவது 61. விளக்கு நிலை : வேலும், வேற்றலையும், விலங்காதோங்கிய வாறுபோலக் கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு இங்குமாறு பங்குவதாகக் கூறுவது. 62. புறநிலை : வணங்கும் தெய்வம் நின்னைப் பாதுகாப்பாகன் வழிவழி மிகுவதாக எனக் கூறுவது. 63. கடைநிலை : சான்றோர் சேணிடை, வருதலால் பிறந்த வருத்தம் தீர வாயில் காக்கின்றவனுக்கு என்வரவினைத் தலைவற்கு இசைஎனக் கடைக்கணித்துக் கூறுவது. 64. கையறுநிலை : கணவன் ஒரு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப்பொருள் எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துப்படாது ஒழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்தசெயல் அறுநிலையைக் கூறுவது, 65. தசாங்கப்பத்து : நேரிசைவெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத் தினைப் பத்துச்செய்யுளால் கூறுவது, 66. தசாங்கத்தயல் : அரசன் தசாங்கத்தினை ஆசிரியவிருத்தம் பத்தினாற் கூறுவது 67. அசன் விருத்தம் : பத்துக் கலித்துறையும், முப்பது விருத்தமும், கலித்தாழி சைபுமாக, மலை, கடல், நாடு, நில, வருணனையும், வாள் மங்கலமும், தோள் மங்கலமும் பாடி முடிப்பது. 68. நயனப்பத்து : கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது. 69. பயோதரப்பத்து : முலையினைப் பத்து. செய்யுளால் கூறுவது, 70 பாதாதிகேசம் : கலிவெண்பாவால் முடிமுதல் அடிவரையில் கூறுவது. 71. கேசாதிபாதம் : கலிவெண்பாவாக முடிமுதல் அடிவரையிற் கூறுவது 72 அலங்காரபஞ்சகம் : வெண்பா, அகவல், கலித்துறை, ஆசிரியவிருத்தம், சந்த விருத்தம், இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுளந்தாதித்துப் பாடுவது 73. கைக்கிளை : ஒருதலைக் காமத்திகை பந்து செய்யுளார் கூறுவது, அன்றி வெண்பா முப்பத்திரண்டு செய்யுளாற் கூறுவதுமாம். 74. மங்கலவெள்ளை : உயர்குலத்து உதித்த மடவாலை வெண்பா என்பதாலும் வகுப்பு ஒன்பதாலும் பாடுவது. 75. தூது : ஆண்பாலும் பெண்பாலும் அவரவர் காதலைப் பாணன் முதலிய உயர்திணையுடனும், கிள்ளை முதலிய அஃறிணைடனும், கூறித் தூதுபோய் மீள்க எனக் கலிவெண்பாவாற் கூறுவது. 76. நாற்பது : காலமும், இடமும், பொருளும் ஆகிய இவற்றுள் ஒன்றனை நாற்பது வெண்பாவாற் கூறுவது. 77. குழமகன் : கலி வெண்பாவால் மாதர்கள் தங்கையிற் கண்ட இளமைத் தன்மையடைய குழமகனைப் புகழ்ந்து கூறுவது. 78. தாண்டகம் : இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்துவந்தன அளவியற் முண்டகமெனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அளவழி தாண்டகம் எனவும்படும். 79. பதிகம் : ஒரு பொருளைக் குறித்துப் பத்துச்செய்யுள் கூறுவது. 80. சதகம் : அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள் ஒன்றன் மேலா தல், ஏறு செய்யுள் கூறுவது. 81. செவியறிவுறூஉ : பொங்குதலின்றிப் புரையோர் நாப்பண் நவிலுதல் கட னென அவை யடக்கியற்பொருள் உற வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியு மாகக் கூறுவது. 82. வாயுறைவாழ்த்து : வேம்பும் கடுவும் போல்வனவாகிய வெஞ்சொற்கள் முன்னர்த் தாங்கக் கூடாவாயினும் பின்னர்ப்பெரிதும் பயன் தருமென மெய்ப் பொருளான வெண்பாமுதலும் ஆசிரியம் இறுதியுமாகக் கூறுவது. 83. புறநிலைவாழ்த்து : வழிபடும் தெய்வ நிற்புறங்காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறக்க என வெண்பா முதலும் ஆசிரியம் இறுதியுமாகப் பாடுவது. 84. பவனிக்காதல் : உலகக் காட்சியால் எய்திய காமமிகுதியைப் பிறரோடு கூறி வருந்துவது. 85. குறத்திப்பாட்டு : தலைவன் பவனி வரவு, மகளிர் காமுறுதல், மோகனிவரவு, உலாப்போந் தலைவனைக் கண்டு வருந்தல், திங்கள், தென்றல், முதலிய ஆலம் பனம், பாங்கி உற்றதென்னென வினவல், தலைவி பாங்கியொடு உற்றது கூறல், பாங்கிதலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூது வேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூர, குறத்திவரவு, தலைவி குறத்தி யொடு மலை வளம் முதலிய வினவல், குறத்தி மலை வளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவன் தலவனம், கிளைவளம் முதலிய கூறல், குறத்தி, குறி சொல்லி வந்தமை கூறல், தலைவி குறிவினவல், குறத்தி தெய்வம் பரவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வாவு கூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும் ஆண் டாண்டுக் குறத்தி விடை கூறலுமாகக் கூறல், பெரும்பான்மை இவ்வகை உறுப்புக்களால் அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம், இச்செய்யுட்களை இடைக்கிடை கூறி, சிந்து முதலிய நாடகத் தமிழாற் பாடுவது. 86. உழத்திப்பாட்டு : கடவுள் வணக்கம் முதலாக முறையே மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடவன் பெருமைகூறல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளன், குயிற் கூக்கேட்டல், மழைவேண்டிக் கடவுட்பரவல், மழைக்குறி ஓர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற்கு இடை இடை அகப்பொருட் டுறையுங்கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகள் இருவர் முறையீடு, இளையாளை அவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல்வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வாவு, அவர் பெருமை கூறல், மூத்தபள்ளி முறையீடு, குடும்பன் கிடையிலிருந்தான் போல வரல், அவனை தொழுவின் மாட்டல், அவன் புலம்பல் மூத்த பள்ளியடிசிற்போடு வரல், அவனவளோடு படறன். அவனவளை மன்னித்தல், கேட்க வேண்டல், அவன் மறுத்தல். அவனவளை மீட்க வேண்டி பண்ணைத் தலைவனை வேண்டல், விதை முதலிய வளங்கூறல், உழவருழல், காளை வெருவல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவனெழுந்து வித்தல், அதைப் பண்ணைத் தலைவற் கறிவித்தல், நாறுநடல், விளைந்தபின் செப்பம் செய்தல், நெல் அளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் ஏசல் என இவ்வுறுப்புக்கள்உற பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவப்பாடுவது. 87. ஊசல் : ஆசிரிய விருத்தத்தானாதல் கலித்தாழிசையானாதல் சுற்றத் தோடும் பொலிவதாக, ஆடீரூசல், ஆடாமோவவூசல் என முடியப் பாடுவது. 88. எழுகூற்றிருக்கை : ஏழறையாக்கிக் குறுமக்கண் முன்நின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியாகும் பெற்றியால் வழுவாது ஒன்று முதலாக எழ் இறுதியாக முறையானே பாடுவது. 89. கடிகைவெண்பா : தேவரிடத்தும், அரசரிடத்தும் நிகழும் காரியம் கடிகை பளவிற் றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாவாற் கூறுவது, 90. சின்னப்பூ : நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய தசாங்கத் தினைச் சிறப்பித்து, 100,90,70,50,30, என்னும் எண்படக் கூறுவது. 91. விருத்த இலக்கணம் : வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, மார், கொடை இவ்வொன்பதினையும் பப்பாத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் பாடுவது 92. முதுகாஞ்சி : இளமை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் பாக்கட்குக் கூறுவதாம். 93. இயன்மொழி வாழ்த்து : இக்குடிப் பிறக்கோர்க்கெல்லாம் இக்குணம் இயல்பு என்னும் அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும் ஆன்றோர் போல நீயும் இயல்யாக ஈ என்றும் உயர்ந்தோர் வாழ்த்துவதாகக் கூறுவது. 94, பெருமங்கலம் : நாடோறுத் தான் மேற்கொள்ளகின்ற சிறைசெய்தன் முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறை விடுதன் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான கண்டது நிகழும் வெள்ளணியைக் கூறுவது. 95. பெருங்காப்பியம் : தெய்வவணக்கமும், செயப்படுபொருளும், இவற்றிற்கு இயைய வாழ்த்து முன்னுளதாய் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயக்கும் நெறியுடைத்தாய் நிகரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலையும், கடலும், நாடும், நகரும், பருவமும் இருசுடர்த் தோற்றமும் என்றிவற்றின் வளங்களைக் கூறுதலும், மணமும், முடிகவித்த லும், பொழில் விளையாட்டும், தீர்விளையாட்டும், உண்டாட்டும், மகப்பேறும், புலவியும், கலவியும் என்றிவற்றைப் புகழ்தலும் மந்திரமும், தூதும், செலவும், போரும், வென்றியும் என்றிவற்றைப் புகழ்ந்து கூறலும் ஆகிய இவை முறையே தொடர்வுறச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம், என்னும் பகுதியை உடைத்தாய் வீரமுதலிய அவையும் அவற்றை விளக்கும் கருத்தும் விளங்கக் கற்றோரானியற்றப் படுவதாம். நாள் பொருள் ஒழிந்து ஏனைய உறுப்புகளுள் சில குறைந்தியலினும் குற்றமின்று, 96. காப்பியம் : அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து எனைய உறுப்புக்கள் மேற்சுடறியவாறு இயல்வது.

பிரபலோத்பலன்

விஷ்ணுபடன்.

பிரபா

1. புட்சிபாரன் அல்லது புஷ்பாருணியின் தேவி; குமரர், பிராதம், மத்தியாக்கம், சாயம். 2, அஷ்டவக்ரர் தேவி.

பிரபாகரஜீயர்

குமாண்டூர் அப்பை; தேசிகரால் யதியாச்ரமம் அடைந்தவர்.

பிரபாகரன்

பாண்டி நாட்டரசன். சிவனை நோக்கித் தவஞ்செய்து சந்ததிக்கு ஒரு பிள்ளை பெற்றவன்

பிரபாகரபட்டர்

பட்டகுமாரர் மாணாக்கர். இவர்க்கு அஸ்தாமலகாசாரியர் எனவும் பெயர். இவர் வாயு அம்சம்.

பிரபாகாமதம்

பாட்டர் மாணாக்கரில் ஒருவரால் இம்மதம் கற்பிக்கப்பட்டது. இம்மதத்தவர் ஆத்மா சூனியமன்று எனவும், சூன்யவிலக்ஷணனான ஆத்மாவிற்கு மனஸியின் சம்யோகத்தால் ஞானமுண்டாகிறதென்றும், ஞான குணத்தினால் ஆத்மா சேதனனாகிறான் எனவும், சுபாவத்தில் ஆத்மா ஜடம் எனவும், இச்சடமான ஆத்மாவிடம் சுகதுக்காதிகளாகிய குணங்கள் உண்டாகின்றன எனவும், கூறுவர். இவர் ஆனந்தமயகோசமே ஆத்மா என்பர். இவருட்சிலர் வேதமே பிரமம் என்பர். பின்னும் சீவர்கள் செய்யப்பட்ட செயல்களால் கன்மங்கள் விரியும் எனவும் வேதா நுஷ்டானங்களால் கர்மம் கட்டுப்பட்டு மண் கல்லானது போல் சமாதி கூடியிருப்பது முத்தியெனவும் கூறுவர். (தத்துவ நிஜாநு போகசாரம்).

பிரபாசகதீர்த்தம்

சாந்தீபனி குமாரன் மரணமடைந்தது. இதனிடத்துக் கண்ணன் வருணனால் எதிர்கொள்ளப்பட்டார். தக்ஷனிட்ட சாபத்தை வருணன் இதில் மூழ்கி நிவாரணம் பெற்றனன். கோகருணத்திற்கு அடுத்தது. இதில் சந்திரன் தேஜசின் பொருட்டுத் தீர்த்தமாடினன்.

பிரபாசன்

1. பிரசாபதிக்குப் பிரபாசலையினிடம் பிறந்தவன். மனைவி யோகசித்தி. குமரன் விச்வகர்மன். 2. எட்டாம்வஸு, பீஷ்மனாகப் பிறந்த வன். இவனுக்குத் தியாஎனவும் பெயர்.

பிரபாசம்

1 ஒரு தீர்த்தம் Somnath in Guzarat. A Sacred place of pilgrimage to the Hindus. The celebrated temple of Somnath. பாண்டவர் வனவாசத்தில் தீர்த்தமாடினர். கிருஷ்ணன் தீர்த்தமாடிய இடம் (பா. ஆதி, வன). 2. இது மேற்கு திக்கில் சமுத்திரத்தில் ஹிரண்யஸாஸ் என்னும் தீர்த்தம், இதில் சந்திரன் தக்ஷனாலுண்டான சாப நீக்கத்தின் பொருட்டுத் தீர்த்தமாடினன். அவனுக்கு அத்தீர்த்தம் சாபத்தை நீக்கி ஒளியைத் தந்ததாதலால், இத்தீர்த்தம் இப்பெயரடைந்தது. (பார. சாந்)

பிரபாசலை

பிரசாபதி மனைவிகளில் ஒருத்தி, குமரர் பிரபாசன், பிரத்தியூசன்.

பிரபாசை

பிரசாபதியின் தேவி. பிரக்தியூஷன் தாய்.

பிரபாவதி

1. சஞ்ஞாதேவிக்கு ஒருபெயர். 2. வச்ரநாபன் என்னும் அரக்கன் பெண், பிரத்தய்மகன் தேவி. 3. இவள் ஒரு தெய்வமாது. இவள் இந்திரனை நாயகனாக எண்ணித் தவம் புரிய, அவன் வஹிஷ்டரைப் போல்வந்து சில இலந்தைப் பழங்களைக்கொடுத்துப் பக்குவஞ் செய்யச்சொல்ல, இவள் அவ்வ கையே அவைகளை அடுப்பிலிட்டு அதிக விறகிட்டெரித்தும் வேகாயாற் போயின பின் இவன் விறகுகள் ஆய்விட்டதால் விறகுதேடச் செல்லின் அடுப்பின் நெருப்பு நீங்குமென்று தன் கால்களை விறகாயிட்டு எரித்தனள். இதைக் கண்ட இந்திரன் தன்னுருக்காட்டி அவள் வேண்டிய வரம் அளித்தனன். 4. அரதீர்த்தங்கரின் தாய். 5. தேவசர்மன் தேவி. அங்க நாட்டரசனாகிய க்ஷித்திரரதன் புாரியை. (பா~அநு) 6. வலன் எனும் அசுரனது மனைவி. இவள் ஒரு நரியுரு அடைந்து தீர்த்தமாயினள். (பாத்மம்).

பிரபு

1. பகனுக்குச் சித்தியிடம் பிறந்த குமரன், 2. பீவரியின் குமரன்; பித்துருக்களைக் காண்க.

பிரபுடதேவன்

விஜயநகரத்தரசன், திருக்காளத்தியில் நூறுகால் மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்வித்துச் சுவப்பனத்தின்படி திருவண்ணாமலை சென்று அருணகிரிநாதரைக் கண்டு பணிந்து அவரால் கந்தமூர்த்தியைப் பிரத்தியக்ஷமாய்ச் சேவித்துத் திவ்விய ஒளியால் கண் மயக்கடைந்து அருணகிரியாரால் கண்பெற்றவன். இவன் சரிதையிற் சிலவற்றை அருணகிரியாரைக் காண்க. 1450 கி. பி. இல் இருந்ததாகத் தெரிகிறது.

பிரபுத்தன்

1. இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன். 2. சூரியவம்சத் தரசன், யோகியாயினான்.

பிரபுலிங்கலீலை

இது அல்லமர் மாயையைவென்ற கதைகூறிய தமிழ் நூல், துறை மங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள் இயற்றியது, இது வீரசைவ மதத்தைச் சார்ந்தது.

பிரபூதம்

சிவசூர்ய பீடம்.

பிரபை

நமுசியின் தேவி. 2. இவள் பூர்வத்தில் விசாலக்கண்ணி என்னும் துஷ்டை. கழுகாசலத்தில் சடை வைத்துக் காமுகரை மயக்கி மார்க்கண்டேயன் என்னும் சைவ வேதியனிடம் சிவத்திரவியம் கவர்ந்து மறுபிறவியில் சான்றார் குலத்தில் பிறந்து இறந்து புண்ணிய க்ஷேத்ர வாசபலத்தால் திருதமுனிவன் குமரியாய்ப் பிறந்து உதங்கனை மணந்து கங்கையில் இறந்து நலம் அடைந்தவள் 3. தவமாதா 4. ஒரு அப்சரசு.

பிரபோதசந்திரோதயம்

இது வடமொழியில் கிருஷ்ணமிச்ரர் செய்தநாடகம். இதைத்தமிழில் திருவேங்கட சுவாமி என்பவர் மொழிபெயர்த்தனர். இது வேதாந்த நூல்.

பிரமகீதை

பிரம்மாசெய்த உபநிஷத், தமிழில் தத்துவராயர் இதனை மொழி பெயர்த்தனர்.

பிரமகேசன்

சண்முக சேநாவீரன்.

பிரமகைவர்த்தம்

பதினெண் புராணத்துள் ஒன்று, சூரிய புராணம், இது (12000) கிரந்தமுள்ளது. கிருஷ்ண மூர்த்தி வராகமூர்த்தி முதலியவர்களின் சரிதை உணர்த்தும்,

பிரமசன்மன்

சோமசன்மன் தந்தை, சாரமாமுனிக்குப் பாட்டன்.

பிரமசருமன்

1. ஒரு வேதியன், இவன் கொடுந்தொழில் இயற்றிப் பன்றியின் பிறப்படைந்து ஒரு வேதியனைத் துரத்திச் செல்கையில் காவிரியில் ஸ்நானஞ் செய்து மயிராற்றிக் கொண்டிருந்த தாசியின் தலை மயிரின் நீர்த்திவலை மேற்பட நற்சநநம் பெற்றவன். 2. சுசீலையின் கணவன்,

பிரமசாரி

1. அரித்துவாரமென்னு மிடத்தில் கல்யாண சுவாமி என்பவர் தீர்த்தயாத்திரை செய்யுங்காலத்தில் அவருடன் ஒரு பிரமசாரியுஞ் சென்றனர். இவ்விருவரும் பல தீர்த்தங்களையும் மூர்த்திகளையுந் தரிசித்து மதுராபுரிவந்து கண்ணனைத் தரிசித்து மூன்றிரவு அங்கிருக்கையில் கல்யாணசுவாமிக்குச் சுரங்கண்டது, உடன் சென்ற பிரமசாரி அவரைவிட்டு நீங்காதவராய் அவருக்கு வேண்டிய பத்திய முதலிய பரிகாரங்கள் செய்து அவ்விடத்தில் ஆறு மாதங்கழிந்த பின் பிரமசாரியை நோக்கி எட்டு வயதுள்ள என் குமரிக்கு நீரே கணவரென்றனர். இதைக் கேட்ட பிரமசாரி நீர் கூறின் உமது மனைவியுஞ், சுற்றத்தாரும் ஒப்புவரோவென, கல்யாணசுவாமி பெருமாள் முன் அழைத்துச் சென்று கையில் நீர்வார்த்தனர். கல்யாணசுவாமி பிரமசாரியுடன் தம்மூர டைந்து மனைவியையுஞ் சுற்றத்தாரையும் நோக்கி நடந்தவைகூற அவர்கள் ஒவ்வாமைகண்டு கல்யாணசுவாமி பிரமசாரியை யழைத்துச் சென்று வரலாறு கூறினன். அரசன் பிரமசாரியை நோக்கி கல்யாணசுவாமி நுங்கையில் நீர்வார்க்கையில் அங்கு யார் சாக்ஷியானவர்களெனப் பிரமசாரி கண்ண னென்று கூற அரசன் கேட்டு அப்பெருமாளிங்கு வந்து கூறின் ஒவ்வுவோ மென்றனர். இதைக்கேட்ட பிரமசாரி பெருமாளிடஞ்சென்று, நீர் சாக்ஷியாக வரவேண்டுமென்னப் பெருமாள் நீ பின்னே திரும்பிப் பார்க்காமல் முன் செல்லுக நான் உனக்கு முன் வருகிறேன். திரும்பிப் பார்ப்பாயேல் வர மாட்டேன் என்றனர். அதைக் கேட்ட பிரமசாரி முன்செல்ல, பெருமாள் பாதச் சிலம்பொலிக்கப் பின்சென்றனர். இச்சிலம்போசையைக் கேட்டு முன்செல்லும் பிரமசாரி அரித்துவாரத்திற்கருகு செல்லச் சிலம்போசை நிற்கக்கேட்டுத் திரும்பிப் பார்த்தனன். இதனால் பெருமாள் என் சொல்லை மறுத்தமையால் நான் அரசனிடம் அணுகேன். நான் இவ்விடமிருக்குஞ் செய்தியை அரசனுக் கறிவிக்கவென அவ்வாறே பிரமசாரிசென்று அறிவிக்க, அரசன் துணுக்குற்றுப் பெருமாளைக்கண்டு வணங்கிப் பிரமசாரிக்குக் கல்யாணசுவாமியின் மகளை மணம் புரிவித்தனன். 2. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து சுத்த ஜலத்தில் ஸ்நானஞ் செய்து தேவருஷி பிதுர் தர்ப்பணங்களையும் இஷ்ட பூஜை முடித்து இருவேளைகளிலும் சமிதாதானம் செய்யவேண்டும். தேன், மாம்சம், கந்தம், புஷ்பம், தித்திப்பு, ஸ்திரீகள், தயிர், பால், நெய், மோர், ஜீவஹிம்சை, சூது, அப்யங்கனம், அஞ்சனம், செருப்பு, குடை, காமம், குரோதம், லோபம், கூத்துப்பாட்டு, பதிசொல்லல், பொய், மாதர்களை ஆசையுடன் பார்த்தல், நீக்கவேண்டும். தனியே படுக்க வேண்டும். தண்ணீர், மலர்கள், தருப்பை, சாணம் முதலிய குருவுக்கு நாடோறும் தர வேண்டும். வேதங்ஷ்டராகிய கிரகத்தர் வீட்டில் அன்னபிக்ஷை எடுத்து உண்ண வேண்டும். வேதாத்யன காலத்தில் குருவிற்கு முன்னின்று அவர் கட்டளையிட மறைக்கவேண்டிய உறுப்புக்களை வஸ்திரத்தால் மறைத்து இருவென இருந்து ஓதல் வேண்டும், பிறர் குருவை நிந்திக்கின் காதைப் பொத்திக்கொள்ள வேண்டும். தான் குருவின் வீட்டிலிருக்கையில் தந்தை தாயர் வந்தால் குருவின் உத்தரவின்றி அவர்களை வணங்கக் கூடாது, குருவின் பத்தினிக்கு எண்ணெய் தேய்த்தல், ஸ்நானஞ்செய் வித்தல், உடம்பு தேய்த்தல், தலையாற்று வித்தல் செய்யக்கூடாது. பிரமசாரி தலையை முண்டி தஞ் செய்து கொண்டாய்னும், சடைவளர்த்துக் கொண்டாயினும் இருக்கலாம். ஆசாரியன் கல்வி போதிப்பதால் பரமாத்மாவாகவும், தகப்பன் புத்றோற்பத்தி செய்வதால் பிரமனுருவாகவும், தாய் தரித்திருப்பதால் பூமிதேவியுருவாகவும், சகோதான் தன்னுடன் பிறந்ததால் ஆத்மாவினுருவாகவும் எண்ணப்படுகிறார் கள். ஆதலால் இவர்களை வணங்க வேண்டும். சீடன் வேதமோதும் போது ஆசாரிய தக்ஷிணை கொடுக்கக் கூடாது. ஓதி முடிந்த பின் கொடுக்கலாம். (மநு.) 3. இவர் பெயரினாலேயே இவர் மணம் புரிந்து கொள்ளாது பிரம சாரியம் காத்திருந்த அந்தணரென்று தோன்றுகிறது. “கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே” என முருகவேளை இவர் பாடலிற் கடிந்து கூறிய மனத்திட்பம் கருதத் தக்கது. இவர் குறிஞ்சியைப் பாடியுள்ளார். இவர் பாடியது நற். 34.

பிரமசாவர்ணிமநு

பத்தாம் மன்வந்தரத்துமநு. சாவர்ணி மநுவைக் காண்க.

பிரமசிருட்டி

பூர்வத்தில் பிரமன், முகத்தில் வேதவேதாங்கங்களும் புராணாதிகளும் பிறந்தன. பின்பு மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலத்தியன், புலகன், கத்ரு, பிரசேதஸ், வசிட்டன், பிருகு, நாரதன் முதலிய மானச புத்திரரையும், தக்ஷணாங்குஷ்டத்தில் தக்ஷனையும், நாபியில் தருமனையும், மனதில் மன்மதனையும், புருவத்தில் குரோதனையும், அதரத்தில் லோபனையும், புத்தியில் மோகனையும், அகங்காரத்தில் மனசையும், காதில் பிரமோதனையும், கண்களில் மிருத்யுவையும், அங்கத்தில் ஒரு பெண்ணையும், சிருட்டித்துத் தன் மனதில் காயத்திரியை எண்ணினன். அவ்வேளை உடல் அர்த்தநாரி உருவாயிற்று. அந்த உருவில் சதரூபவதியென்னும் குமரி உண்டாயினள். இப்பெண்ணே காயத்திரி; சரஸ்வதியென்னும் பெயருடன் அழைக்கப்பட்டாள். இவள் பிரமனைப் பிரதக்ஷணம் செய்யத் தக்ஷணபாரிசம் சென்றனள். பிரமன் அப்பக்கம் ஒரு முகங்கொடு பார்த்தனன். அவ்வகை இவள்சென்ற மற்ற திக்குகளிலும் பார்த்து அவள் அந்தரத்தில் சென்றது கண்டு அந்தரத்தில் ஒருமுகங் கொண்டு பார்த்து அவளை மணந்தனன். (மச்ச புராணம்).

பிரமசீலன்

1. ஒரு ஆசாரமுள்ள வேதியன், சித்திரகுத்தன் ஒரு முறை யமபடர்களை அழைத்து இப்பெயர் கொண்ட மற்றொருவனை யமபுரம் அழைத்துவரக் கூற யமபடர் இவன் சிவபூசை செய்யும் வேளையில் இவனை அழைத்துச் சென்றனர். யமன் இவரைக்கண்டு அஞ்சி அருகில் உட்காருவித்து ஆசிகூறி யமபடரை நோக்கி அறைந்து மற்றொருவனன்றோ வாத்தக்கவன் எனக் கோபிக்க, பிரமசீலன் யானும் இந்த யமபுரம் காணும் ஆசையுள்ளேன், ஆதலின் எனக்கு நரகங்களைக் காட்டக் கட்டளையிட வேண்டுமென, யமன் அவ்வாறே படர்களை அழைத்துக் காட்டக் கட்டளை யிட்டனன், அந்நரகத்தில் வேதனைப் படுவோரைப் பிரமசீலன் கண்டு அரகர முழக்கம் செய்ய அதில் ஐவரொழிந்த அனைவரும் நரகம் நீங்கினர். மற்ற ஐவரின் செய்தி என்னென்று பிரமசீலன் யமனைக் கேட்க யமன் நானும் அறியேன். நாளை நீர் சிவபூசை முடித்துத் தேகத்துடன் இவ்விடம் வரின் தெரிவிப்பேன் என அவ்வாறே பிரமசீலன் வரக்கண்டு பிரமனிடம் சென்று கேட்க அவரும் அறியேன் என மூவரும் கூடிக் கைலை அடைந்து நந்திதேவர்பால் அவர்கள் ஐவரும் சிவநிந்தை, அடியவர் நிந்தை, சிவத்திரவிய கவர்ச்சி செய்தவர் எனக்கேட்டு அதற்குத் தீர்வு உணர்ந்து புண்ணிய தீர்த்தங்கொண்டு நாகபூமி சென்று அவர்மீது புரோக்ஷித்து அவர்களையும் நரகத்திருந்து நீக்கினவன். 2. ஒரு சிவகிங்கரன்.

பிரமசுந்தர முனிவன்

இவன் பல பெரிய முனிவர்களுக்குத் தலைவன். தருமத்தைப் பரிபாலனஞ் செய்வதே இவனுடைய கோட்பாடு, இவனுடைய மனைவியின் பெயர் பரமசுந்தரி என்பது, இவன் யூகியின் தந்தை, உதயணனுக்கு யானையின் கோபத்தை அடக்கும் வித்தையையும், இந்திரனால் தான் பெற்ற கோடவதி யென்னும் யாழையும், இசை நூலையும், மற்றுமுள்ள பல வித்தைகளையும் அளித்தவன். யூகியை உதயணன் பால் அடைக்கலமாக ஒப்புவித்தவன். யூகியின் பாலுள்ள கல்வி, அறிவு, ஒழுக்கம், ஆற்றல் முதலிய விசேட குணங்களுக்கு இவனுடைய தவமேகாரண மென்று தெரிகின்றது. (பெ. கதை)

பிரமசுரன்

ஒரு அசுரன். இவன் சிவனை எண்ணித் தவம் இயற்றினன், சிவமூர்த்தி பிரத்தியக்ஷமாகி என்ன வேண்டுமென்ன நான் என்கரத்தை யார் சிரத்திடை வைக்கினும் அவர் இறக்க என வரங்கேட்டனன். சிவமூர்த்தி அவ்வகை அருள் செய்யக்கொண்டு அவர்மீதே தன் கையை வைக்கச் செல்லச் சிவமூர்த்தி மறைந்தருளினர். உடனே விஷ்ணுமூர்த்தி ஒரு மோகினி யுருக்கொண்டு இவன் எதிரில் தரிசனந்தர அசுரன் கண்டு மயங்கிவேண்ட, மோகினியான் எவ்வகை நடிக்கின்றேனோ அவ்வகை நடிக்கின் உடன் படுவேன் எனக் கூறக்கேட்டு உடன்பட்டு மோகினி பல வகை நடித்துப் பின் சிரத்தில் தன் கரத்தை வைத்து நடிக்க, அசுரன் கொண்ட வரத்தை மறந்து தன்கரத்தைச் சிரத்தில்வைக்க மாய்ந்தனன். இவனை விருகாசுரனெனவுங் கூறுவர்.

பிரமசூத்ரம்

வேதாந்த சூத்ரம்.

பிரமசேனன்

இவன் ஆருனியரசனுடைய பெரும் படைத்தலைவர்களுள் ஒருவன். இவன் பெயர் பிரமசேனனெனவும், பமசேனனெனவும் வழங்கும். (பெ. கதை)

பிரமதகணம்

தாருகவனத்து இருடிகள் சிவமூர்த்தியிடம் விரோதித்து ஏவிய பூத கூட்டங்கள். ருத்ரமூர்த்தியிடம் இருப்பன.

பிரமதண்டம்

1. பிரமன் யாகஞ்செய்ய விரும்பித் தமக்கு ரித்விக்கைப் பெறாமல் ஆயிரம் வருஷ கருத்தாங்கினர். அவர் தும்முங் காலத்தில் கரு மூக்கின் வழியாய் வெளிவந்தது. அது க்ஷபன் என்றும் சிருட்டிக்காத்தாவாய் தண்டமாயிற்று. இது தண்ட நீதியாயிற்று. யாகமுடிந்ததும் தண்டமறைந்தது. தண்டத்திலிருந்து நீதி எனும் ஸரஸ்வதிதேவியும் நீதிகளும் உண்டாயின. இந்த தண்டம் நீதியற்றவரைத் தண்டிப்பது (பார~சாந்.) 2. ஆதித்தியனின்ற நாளுக்கு பதினைந்தாம் நாள் பிரமதண்டமாம். இதில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது. (விதானமாலை).

பிரமதத்தன்

1. பூசல் நகரத்து அரசன். 2. இவன் காம்பிலிதேசத்துச் சூளி குமரன். இவன் குசநாபன் நூறு பெண்களை மணந்து அவர்களுக்கு வாயுவால் நேர்ந்த கூனை நிமிர்த்துக்கொண்டவன். இவனை யுஞ்சூளி என்பர். 3. ஒரு அரசன்; கௌதமருக்கு அன்னம் படைக்கையில் அதில் புாலல் இருக்கக் கண்ட இருடியால் பிசாசமாகச் சாபமேற்றவன். இவனுக்கு இச்சாபம் இராமமூர்த்தியின் பரிசத்தால் நீங்கிற்று. 4. அணுகன் குமரன். இவன் யோகியாயினன். இவன் பாரி சரஸ்வதி, குமரன் விச்வசேனன். 5. மந்திரஹீனமாய் யாகஞ் செய்து ஊமையாய் அயோத்தியில் சீதை குண்டத்தில் மூழ்கி ஊமை நீங்கினன், 6. பாஞ்சால தேசத்து அநுகன் குமரன்; இவன் எறும்புகளின் பாஷையறிந்தவன். (மச்ச~புரா.)

பிரமதந்திரசுவதந்திரஜீயர்

பேருளாள ஜீயருக்கு ஒருபெயர்.

பிரமதன்

மூன்றாமன்வந்தரத்து இருடி.

பிரமதருமன்

ஒரு பௌத்த முனிவன், அத்திபதியின் மைத்துனன், காயங்கரையெனும் நதிக்கரையிலிருந்து நோற்றோன், முக்காலமறிந்தோன், மணிமேகலைக்குப் பழம்பிறப் புணர்த்தினவன் (மணிமேகலை)

பிரமதி

1, நபாகனைக் காண்க. 2. (சூ.) பிராங்கிசு குமரன். 3. சியவனரு ஷிக்குச் சுகன்னியிடம் பிறந்தவர். இவர் கிருதாசியிடம் ருரு என்பவரைப் பெற்றார். ருரு பிரமத்வரையிடம் சுனகரைப் பெற்றார்.

பிரமதேவர்

1. இவர் சிவபிரானை யெண்ணித் தவமியற்றினர். சிவமூர்த்தி தரிசனம் தந்து என்ன வேண்டுமெனத் தேவரீர் எனக்குப் புத்திரராக வேண்டுமென அவ்வாறு பெற்று இவரது நெற்றியினிடத்தில் நீலலோகிதராகத் தோன்றியவர். (ஆதித்ய புராணம்). 2. சக்தியை வேண்டி தக்ஷகுமரியாக வர வேண்டுமென அவ்வாறே தக்ஷகுமரியாகப் பிறந்தனள். (ஆதித்ய புராணம்). 3. நீலலோகிதரென்று பெயருள்ள இவரைப் பூசித்துத் தமக்குப் புத்திரராம் வரத்தையடைந்தார். (பார. அநுசா).

பிரமத்திரவம்

சாயுந்திக்கு ஒருபெயர்.

பிரமத்வரை

விச்வாவஸ் என்னும் காந்தருவனுக்கு மேங்கையிடம் பிறந்தகுமரி. இவள் தூலகேசருஷியிடம் வளர்ந்து வருகையில் ஒருநாள் பூஞ்சோலையில் சென்று உலாவகையில் பாம்பொன்று கடிக்க இறந்தனள். இவளை இருடிகள் கண்டு துக்கமுறுகையில் அவ்விருடிகளில் ஒருவராகிய ருருமாத்திரம் விசனத்துடனவர்களைப் பிரிந்து காட்டிற்சென்று அழ, தேவர்கள் எதிர்தோன்றிக் காரணம் வினவி ருருவின் ஆயுளில் ஒரு பாதி தருவதாகக் கூறியபடி தர உயிர்த்தெழச் செய்தனர். எழுந்த இவளை ருரு மணந்து தன்பார்யை பாம்பால் இறந்ததால் ருரு எப்போதும் பாம்புகளைக் கொல்லத் தொடங்கினார்ர, இவர் பாம்புகளைக் கொன்று வருகையில் ஒருநாள் ஒரு தண்ணீர்ப் பாம்பின் உருக்கொண்டிருந்த சகஸ்திரபாதருஷியைக் கண்டு அவருடைய சாபவரவாறு கேட்டனர். அந்தப் பாம்பு நான் பூர்வம் ககமரு ஷியை விளையாட்டாய்ப் புல்லையெடுத்து மாலையாகப் போட்டுப் பாம்பென்று பயமுறுத்த அவர் என்னைப் பாம்பாக என்று சபித்தனர். நான் வேண்ட இச்சாபம் ருருவால் நீங்குமென்றனர் என, இதைக்கேட்ட ருரு அந்தப்படி நீக்கி அது முதல் பாம்புகளைக் கொலை செய்வதை விட்டனர்.

பிரமனார்

ஒரு தமிழ்ப் புலவர், (புற~நா.)

பிரமன்

1. இவர் பொன்னிறமாய், தாடி, மீசை, நான்குமுகம், மேல்வலக் கையில் ஜபமாலை, இடக்கையில் தண்டாயுதம், கீழ் இடதுகையில் ஸ்ருக், ஸ்ருவம், வலதுகையில் கமண்டலம் உள்ளவராயிருப்பர். 2. இவர் சுயம்புவாயும், ஒவ்வொருகற்பத்தில் விஷ்ணு ருத்ரர்களிடத்தில் தாம் பிறந்தும் அவர்களைத் தம்மிடம் பிறப்பித்தும், தேவருஷி பித்ருக்களுக்கு மூலகார ணராடம், எல்லா சிருஷ்டிக்கும் காரணராயும் எழுந்தருளியிருப்பவர். இவருக்கு சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி தேவியர். 3. அசுரர் தவஞ்செய்து வரங்கேட்க அவர்களுக்குப் பல வரங்கொடுத்தவர், 4. இராவணன் திக்கு விசயத்திற்கு வந்து யமனுடன் போரிடுகையில் யமன் காலதண்டத்தை யேவச் சுழற்றுகையில் யமனுக்குத் தரிசனம் தந்து அதை இராவணன் மீது ஏவாதிருக்க வேண்டி இராவணனை யனுப்பியவர். 5. நிவாதகவசரை இராவணனுக்கு நட்புச் செய்வித்தவர். 6. இராவண புத்திரனாகிய மேகநாதனால் இந்திரன் கட்டுண்டகாலத்து அவன் முன்தோன்றி இந்திரனை மீட்டு நிகும்பலை யாகத்தில் இரதத்திற்றோன்றி வரமளித்து இந்திரசித்தெனும் பெயரளித்தவர். 7. வாயு புத்திரனாகிய அநுமனை இந்திரன் வச்சிராயுதத்தாலெறிந்த காலத்து அநுமனைத் தடவி உயிரளித்தவர். 8. கிருதயுகத்தில் குபனை நிருமித்துப் பூமிக்கு அரசனாக்கியவர். இவர் தும்மலில் குபன் பிறந்தனன். 9, சிவேதனைப் பசிப்பிணி சத்தியவுல கத்திலும் வருத்த அது வருத்தாது தன் னுடலைத் தின்னும்படி வரம் அளித்தவர். 10. இராமமூர்த்தி சீதையைத் தன்னிடம் மறைத்த பூமிதேவிமீது கோபங் கொண்ட காலத்தில் அவர் முன் தோன்றி உண்மையை யறிவித்தவர். 11. விஷ்ணுமூர்த்தியுடன் தான் பெரி யோனென வாதிட்டுத் தாணுமூர்த்தி இருவருக்கும் முன்னிற்க முடி காணாது இளைத்துக் கற்கபங்கள் தோறும் விஷ்ணுவிற்குக் குமாரராய்ப் பிறப்பவர். 12. சிவன் எனது புத்திரன், என்னாலுலகம் எல்லாமுண்டாயிற்று எனச் செருக்குக் கொண்ட காலத்துச் சிவமூர்த்தி ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியெறிய அக்க பாலத்தை, மற்றவர் இதை ருத்ரமூர்த்தியின் திருக்காத்தில் கண்டகாலத்து அவர்கள் செருக்கடங்கும் வகை தரிக்க வேண்டியவர். 13. குமாரக் கடவுள் வினாவிய பிரணவத்திற்குப் பொருள் கூருது அவரால் சிறையுண்டு சிவ மூர்த்தியால் மீண்டவர். 14. சிவமூர்த்தியை நோக்கித் தாம் யாகஞ் செய்யத் தொடங்குகையில் தக்கன் சிவனுக்கு அவீர்ப்பாகங் கொடுக்கக் கூடாது என அவனது உத்தரத்திற்கஞ்சி யாகஞ் செய்யாது விட்டவர். 15. சமுத்திர ராசனிடம் வளர்ந்த சலந்தராசுரனைக் காணச் சென்று அவனால் தாடி விழுப்புண்டவர். 16. சநகர் முதலியோர்க்குச் சிருஷ்டித் தொழில்கற்பிக்க அவர்கள் செய்யாமை கண்டு சிவானுக் கிரகத்தால் சிருஷ்டித் தொழில் செய்தவர். 17. ஒரு கற்பத்தில் பாற் கடலில் யோகநித்திரை செய்து கொண் டிருந்த திருமாலிடஞ் சென்று நீ யார் என அவர் உன் பிதா எனக்கேட்டுக் கோபித்து உண்மையுணர்ந்து அடங்கியவர். 18. ஒரு கற்பத்துத் தாமே பரமெனச் சிருஷ்டி செய்யத் தொடங்குகையில் அச்சிருஷ்டி நடைபெறாமை கண்டு அழுதனர். அந்நீர் ஓர் பிரளயமாயிற்று. அக்காலத்துப் பிரமன் நெற்றியின் வழி நீலலோகித ருத்ரர் தோன்றிச் சிருஷ்டி முறையைத் தெரிவித்து மறைந்தனர். இது நீலலோகித கற்பம் எனப்படும். பதினொரு ருத்ரர் தோன்றினர் என மற்றொரு புராணங் கூறும். 19. சூரியனைப் பாசத்தாற் கட்டிச் சென்ற பானுகோபனுக்குத் தெய்வப்படைகள் தந்து சூரியனை விடுவித்தனர். 20. சித்தி, புத்தியெனும் விநாயக சத்திகளைப் புத்திரிகளாகப் பெற்றவர். 21. திருக்காஞ்சியில் யாகஞ்செய்வதை இவருடனூடல் கொண்ட சரஸ்வதி தடுக்க வருகையில் விஷ்ணுமூர்த்தியை வேண்டி அவளைத் தடுப்பித்து யாகத்தில் வரதராசர் பிரத்தியக்ஷமாக வரம் பெற்றவர். பின் சரஸ்வதி வெட்கி மரத்தில் மறைந்து கொள்ள மரத்தைச் சோதித்துச் சரஸ்வதி யைக்கூடியவர். (காஞ்சி~பு.) 22, இவங்கணியை இலங்கைக்குக் காவலாளியாக்கி அநுமனாலறையுண்டு மீண்டும் சத்தியவுலகம் வருவை, அந்நாளில் இலங்கை இராவணனை விட்டு நீங்கும் என வரந் தந்தவர். 23. ஒரு கற்பத்தில் இவர் தியாகத்தில் இருக்கையில் ஐந்துருதரர் தோன்றிச் சிருஷ்டித்தொழில் கற்பித்து மறைந்தனர். 24. வசிட்டர் பொருட்டுச் சரயுந்தியைப் பூமியிர்போகச் செய்தவர், 25. ஓரு கற்பத்தில் நவப்பிரசாபதி களாகிய ஆங்கிரசன், அத்திரி, கத்ரு, புலஸ்தியன், புலகன், பிருகு, மரீசி, வசிஷ்டன், தக்ஷன் முதலியவரைப் படைத்தவர். இவரது தம் மானச புத்திரர் சனகர், சனத்குமாரர், சனந்தனர், சனாதனர்,குபன்,நாரதன், அருணி, அம்சன், யதி, முதலிடவர். இவர்கள் ஞானியாயினர். இவர் நிழலில் கர்த்தமன் பிறந்தனன். 26. தம் தேகத்தில் சரஸ்வதியைப் படைத்து அவளைத் தமக்குத் தேவியாக்கிக் கொண்டனர். 27. இவர் யோகத்தில் இருக்கையில் கண்ணீர்விழ அதிலிருந்து ருக்ஷவிரத னென்னும் வாநரன் பிறந்தனன். 28. ஒரு கற்பத்தில், கண்ணில் மரீசியையும், இதயத்தில் பிருகுவையும், சிரத்தில் அங்கிராவையும், அபானனில் கிருதுவையும், வியானனில் புலகனையும், உதானனில் புலஸ்தியனையும், பிராணனில் தக்கனையும், சமானனில் வசிட்டனையும், சுரோத்திரத்தில் அத்திரியையும் (இவர்கள் நவப் பிரசாதிகள்.) பின்னுந் தொண்டையில் அரக்கரையும் சிருஷ்டித்து அந்தவுடலை விட்டனர். அது இருளாயிற்று. இவர், வேறு உடல்கொள்ள முகத்தில் சத்துவ குணம் பிறந்தது. அதில் தேவர் பிறந்தனர். அத்தேகத்தையும் விட அது பகலாயிற்று. வேறுடலெடுத்துப் பிதுருக்களைப் படைத்து அதையும் விட அது சந்தியா காலமாயிற்று, பின்னும் வேறுடலை எடுத்து மனிதரைச் சிருஷ்டித்து அதைவிட அது சந்திரிகையாயிற்று. இன்னும் பலவுருக்கொண்டு பூத, பிரேத, பைசாசர்களைப் படைத்தனர். மற்றொரு சிருஷ்டியில் முகத்தில் வேதிய ரையும், புஜத்தில் அரசரையும், தொடையில் வணிகரையும், திருவடியில் சூத்திரரையும் சிருஷ்டித்தனர். தமோசிருஷ்டிக்குப் பிறகு இவருக்கு இரண்யகற்பத் திருநாமம் உண்டாயிற்று. பின் சலத்தைப் படைத்துண்ண அசுரர் பிறந்தனர். இவருடலில் பாம்புகளுதித்தன. அவற்றைக் கோபிக்க அக்கோபத்தால் உடல் பொன்னிறமடைந் தது. பின் பூதர், பேய்க் கணங்களைப் புடைத்து வாக்கையருந்துதலும் கந்தரு வருதித்தனர், காலத்தால் பருந்து முதலிய பறவைகளுமுதித்தன. முகத்தினும், மார்பினும் வேள்வியின் பொருட்டு ஆடுகளுதித்தன. இரண்டுவிலாவினும் வயிற்றினும் பசுக்கூட்டம் பிறந்தன. திருவடியில் சிங்க முதலியன பிறந்தன. உரோமத்தில் கிழங்கு முதலிய சாகமூலங்கள் உண்டாயின. வேதங்கள் முகத்தில் உதித்தன. பிரமன் தன் தமோ குணத்தைப் பிரிக்க அது இரு கூறாகி ஆண்பெண் வடிவுகொண்டு முறையே பாபங்கொலையாயின, அப்பிரமன் உடலிற் சுவாயம்பு மனுவும், சதரூபையும் பிறந்தனர். 29. விஷ்ணுவுடன் சண்டை செய்த காலத்தில் மகிடாசுரனைச் சிருஷ்டித்து ஏவியவர். 30. உருப்பசியின் நடனங்கண்டு அவளை விரும்பி அவளால் வெளிவந்த வீர்யத்தைக் கடத்தில்விட்டு அதில் அகத்தியரைப் பெற்றவன். 31. ஒரு கற்பத்தில் இவர் யாகஞ்செய்ய அங்கிருந் தகலசத்தில் சரஸ்வதி பிறந்தனள். 32. இவர் சிவனது முடி கண்டேனென்று பொய்கூறியதால் இவர்க்குக் கோயிலிலாது நீங்கச் சிவமூர்த்தி சாபமளித்தனர். 33. தம்மிடஞ் சரஸ்வதியைப் படைத்து அவளைப் புணரச் செல்லுகையில் அவள் மானுருக் கொண்டோடினள். இவர் ஆண் மானாகத் தெடர்ந்தனர். தேவர் முறையீட்டினால் சிவமூர்த்தி வேட வடிவங்கொண்டு ஆண்மானை யெய்தனர். அதில் ஒரு சோதியுண்டாகி ஆகாயத்தை யடைந்து ஆதிரை நாளாயிற்று, பின் சரஸ்வதி வேண்டுகோளால் சிவமூர்த்தி இவரை உயிர்ப்பித்து சரஸ்வதிக்கு நாயகனாக்கினர். இது மன்மதனால் விளைந்த தென்று மன்மதனைச் சிவபிரானெற்றி விழியினாலிறக்கச் சாபந் தந்தவர். 34. ஒரு கர்ப்பத்தில் விஷ்ணுவுடன் உலகமனைத்தையும் படைக்க விரும்பி விஷ்ணுவுடன் உலகமனைத் தையும் உண்டு மீண்டுஞ் சிருஷ்டித்தவர். 35. தத்புருஷ் கற்பத்தில் ஆண்மக்களைப் படைத்துப் பெண்மக்களைப் படைக்கத் தெரியாது சத்தியை வேண்டச் சத்தி பிரமனை நோக்கி பிரமனே உனது இடது பாகத்தைப் பெண்ணாக்குக, அவ்வுருவத்தை நோக்கிச் சிருஷ்டி செய்க எனக்கட்டளை பெற்று அவ்வகைப்பெண்களைச் சிருட்டித்தவர். 36, பிரமன், சாவித்திரியை நீங்கிக் காயத்ரியுடன் யாகஞ்செய்தனர். சாவித்ரி கோபித்து அந்தயாகத்திற்குப் போகும் தேவர்களை நீருருவாகச் சபித்தனள். அத்தேவரின் பத்தினிமார் பிரமனிடம் முறையிடப் பிரமன் விநாயகரை வணங்கி அவர்களின் நாயகரை மாற்றினர். இந்த விநாயகருக்கு ஏரம்பவி நாயகர் என்று பெயர். (பார்க்கவ புராணம்.) 37. ஒருமுறை தவஞ்செய்கையில் காம நினைவுண்டாய்ச சரஸ்வதியைத் தொடரச் சரஸ்வதி நீங்க வீரியம் வெளிப்பட்டுச் சலத்தில் தங்க அந்த நீரைக் குணவதி தாக வேட்கையால் உண்டு கண்ணைப் பெற்றனள். 38. இவர் கொட்டாவி விட அதினின்றும் சிந்துரன் என்னும் அசுரன் தோன்றப் புத்திரவாஞ்சையால் எவரைத் தழுவினும் இறக்க வரமளிக்க அசுரன் தந்தையையே தழுவச் செல்லப் பிரமன் நீங்கினர். 39. இவர் தவஞ்செய்வதைத் தடுக்க இந்திரன் திலோத்தமையை ஏவப் பிரமன் ஆண்மானுருக்கொண்டு தொடரச் சிவமூர்த்தியால் தடையுண்டவர். 40. ஒரு கற்பத்தில் சரஸ்வதியை நூறு பெண்ணுருக் கொளச்செய்து அவர்களைக் கூடித் திவாந்தகன் முதலிய அரக்கர் அநேகரைப் பெற்றனர். சரஸ்வதி நம் புதல்வர் அரக்கரானமை யென்னென நாம் பகற்காலத்தில் புணர்ந்ததால் குமரர் அரக்கராயினர் என்று குமாரையனுப்பித் தாம் இருக்கையில் இந்த அரக்கர் தேவரை இடுக்கண் புரியத் தேவர் பிரமனிடம் முறையிட்டனர். அதனால் இவருக்குக் கோபம்பிறக்க அதினின்று உக்கிரனென்பவன் பிறந்தனன். இவர் அவ்வுக்கிரனை நோக்கி நீ திவாந்தன் முதலியவரைக் கொன்று வருகென அவன் அவ்வாறு செய்து மீண்டு பிரமதேவனிடம் கூறினன், இவர் அம்மரணச் செய்தி கேட்டுப் பிள்ளைகள் இறந்தனரோ என்னும் விசனத்துடன் உக்கிரனைநோக்க அவனுமிறந்தனன், மீண்டும் இவர் நல்ல புதல்வன் வேண்டுமெனத் தவம்புரிந்து இரிபுவைப் பெற்றனர். 41. குமாரக்கடவுள் சூராதியரை வெற்றிகொண்டு கொலுவிருக்கையில் இவர்க்கு வேலால் வெற்றி வந்தது, அந்தவேல் என்னால் செய்யப்பட்டது என்று செருக்கடைந்து குமாரக் கடவுளால் பூமியிற் பிறக்கச் சாபம் பெற்றவர். 42. இவர் ஒருமுறை ஓமஞ் செய்கையில் கண்ணிலிருந்து வழிந்தொழுகிய நீரிலும் ஓமத்திலும் அநேகம் குதிரைகள் பிறந்தன, 43. இவர் சந்திவடிவாகிய தென்புலத்தவரை உண்டாக்கியபோது அவர்களினுட வழுக்குச் சிந்தினவிடத்தில் பவள முண்டாயிற்று. 44. சரஸ்வதியை நாற்பத்தெட்டுரு வாய்ப் பூமியிற் சநிக்கும்படி சபித்தவர். அவர்களே சங்கப்புலவர்கள், 45. பார்வதியாரின் திருமணத்தில் திரு விரலில் ஆசைவைத்துப் பழிசுமந்து சிவபூசையால் நீங்கினவர், 46. ஒரு கற்பத்தில் ஈசுவரசாபத்தால் சப்த இருடிகள் இறந்து பிறந்தனர். எவ்வகை யெனில் இப்பிரமதேவர் அசவமேதஞ் செய்யத் தொடங்கிய காலையில் தேவ பத்தினிகளைக்கண்டு அவர் வீரியம் வெளிப்பட்டது. அந்த வீரியத்தை அக்கினியில் இட்டு ஓமஞ்செய்ய அதிலிருந்து, பிருகு, அங்கீரஸர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர், வசிட்டர் பிறந்தனர். 47. இவர் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைகள் கொண்டு வேள்வியில் அர்ச்சிக்க அதில் ஆயிரக்குமரர்கள் பிறந்தனர். அவர்களை வளர்த்துக் குபேரனுக்குக் கொடுப்பித்து ஆயிரம் பெண்களை மணஞ் செய்வித்தனர். இவர்கள் வணிகராயினர். இவர்களுக்குப் பொன் தராசு பிரமன் தந்தனர். துலாம் விஷ்ணுகொடுத்தனர். மணி கடல்மகள் கொடுத்தனள். 48, ஒருமுறை சாஷசமனுவைக் கண்ணில் பிறப்பித்தனர். 49. சிவேதலோகித கற்பத்தில் சிவ மூர்த்தியைத் தியானிக்கச் சத்தி யோசாத மூர்த்தியாகத் தரிசனந்தந்து அதுக்கிரகித்தனர். 50 இரத்த கற்பத்தில் சிவமூர்த்தியைத் தியானித்து அவர் தரிசனந்தந்து நான்கு இருடிகளை உதவப்பெற்றவர். 51. நீலகற்பத்தில் சிவத்தியானஞ் செய்யச் சிவமூர்த்தி அகோர மூர்த்தி யாயெழுந்தருளி அநுக்கிரகிக்கப் பெற்றவர். 52, ஒரு கற்பத்தில் விஷ்ணு மூர்த்தியின் வயிற்றின் வழி அறியாதிருக்கையில் ஒரு காற்று வந்து தம்மை யசைக்க அது சிவமூர்த்தியின் சுவாசமென்று விஷ்ணு மூர்த்தியாலறிந்து சந்தேகம் தீர்ந்தவர். 53. ஒருகற்பத்தில் உலகசிருட்டி செய்யத் தொடங்கி முடியாது அழ அக்கண்ணீரினிடம் அநேகம் சர்ப்பங்கள் பிறந்தன. பின் நான் செய்தவத்திற்கு இதுவோ பயனென்று உயிர்நீங்க அவ்வுயிர் பதினொரு கூறாய் ஏகாதசருத்திரர் ஆயிற்று, 54. தாருகவனத்து இருடிகளைச் சிவ பூசை செய்யக் கற்பித்து அவர்கள் கலக்கம் போக்கியவர். 55. ஒரு கற்பத்தில் இவர் விஷ்ணுவை நெற்றியின் வழி புத்திரராகப் பெற்றவர், 56. ஒரு கற்பத்தில் சிவமூர்த்தியால் அழிந்து சத்தியிடந்தோன்றிச் சிருஷ்டி செய்தவர். 57. ஒரு கற்பத்தில் சிவ மூர்த்தியை யெண்ணிச் சிருஷ்டித்தொழில் வேண்டச் சிவமூர்த்தி நீலலோகிதராய்த் தோன்றி அஷ்டமூர்த்தங் காட்டினர். பிரமன் அதனைக் கண்டு சிருஷ்டித்தனன். அச்சிருஷ்டி பதினாயிரம் வருடத்தின் பின்னழிந்தது. அதனைக்கண்டு அழுதனன். அழுத நீரிடைப் பூதங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு பிரமன் மாய்ந்தனன், அவன் உயிர் சத்தியையடைய அச்சத்தி அநேக சத்திகளைப் படைத்தனன். பின் பிரமதேவர் சிவமூர்த்தியிடம் அநேக ருத்திரருடன் பிறந்தனர். 58. ஒரு கற்பத்தில் அக்னி மறைய பிரமன் அக்கினி யுருத்தாங்கித் தம்மிடத்தில் திவ்யம் பௌதிகம், பாத்தியம் என்னும் மூன்று அக்னிகளைப் படைத்துத் திவ்யத்தைச் சூரிய னிடமும், பௌதிகத்தினை ஆண்மக்களின் தேகத்திடத்தும், பாத்தியத்தை உலகத்தினும் மனைகளிடத்தும் கொடுத்தனன். 59. திரிபுரதகனகாலத்துச் சாரதியாயிருக்க வரம் வேண்டியவர். 60. ஒரு கற்பத்தில் சிவமூர்த்தியின் திருமுகத்திலுதித்தவர். 61. கிருஷ்ணாவதாரத்தில் ஆயச் சிறுவரையும் கன்றுகளையும் மறைத்து ஒரு வருஷத்திற்குப் பின் வெளிப்படுத்திக் கண்ணனை வணங்கினவர். 62. மரீசபுத்திரர் அறுவரும் தாம் தம் குமரியாகிய சரஸ்வதியை மணந்தது பற்றிச் சிரித்ததால் அசுரராகச் சபித்தவர். 63. மிருத்யு தேவதையையாக்கிப் பிராணிகளைச் சங்கரிக்கச் செய்தவர். 64. இராமமூர்த்திக்கு இராவணடித்த முடிந்தபிறகு (14) வருட முடிவு கூறி அயோத்திக்குப் போகச் செய்தவர். 65. திலோத்தமையைப் படைத்து அவள் அழகைக்கண்டு விரும்பியபோது அவள் நான்கு திக்கிலும் ஓடினள். அத்திக்குகளில் ஒவ்வொரு முகங்கொண்டு பார்த்தனர். அதனால் நான்முகன் ஆனவர். 66. இவருடன் முனிவர் வாதிட்ட காலையில் உரோமத்தில் உரோமாஞ்சரைச் சிருஷ்டித்து அவருடன் வாதிற்கு விட்டவர். (திருஆமாத்தூர்ப் புராணம்.) 67. (1) ஜன்மத்தில் மானஸர் எனப்படுவர், (2) ஜன்மத்தில் சாக்ஷசம் எனப்படுவர், (3) ஜன்மத்தில் வாசிகம் எனப்படுவர், (4) ஜன்மத்தில் சுரோத்ரஜம் எனப்படுவர், (5) ஜன்மத்தில் நத்யம் எனப்படுவர், (6) ஜன்மத்தில் அண்டஜம் எனப்படுவர், (7) ஜன்மத்தில் பத்மஜம் எனப்படுவர். 68. இவர், கௌரிதேவியின் திருமணங் காணச்சென்று அவரது அழகைக் கண்டு பொருது காமமேவீட்டால் துன்புற்றனர். அந்தக் காலையிலிவரிடம் வாலகில்லிய இருடிகள் தோன்றினர். (பிரம~புராணம்.)

பிரமன்யு

வீரவிரதனுக்குப் பொசையிடம் உதித்த குமரன்.

பிரமபுரம்

திருக்காஞ்சிக்கு ஒரு பெயர். இதிலுள்ள கச்சபேசத்துப், பிரமன், சிவபூசைசெய்து பேறுபெற்றதால் இப்பெயர் வந்தது. சீர்காழிக்கும் கூறுவர்.

பிரமபுராணம்

இது (10,000) கிரந்தமுள்ளது. இது சூரிய சந்திரவம்ச விவரணம், சிவவிஷ்ணு தலமான்மியம், சகந்நாதத் தலத்தின் சரித்திரம் முதலியவற்றை விவரித்துக் கூறும்.

பிரமபூ

வீரசித்தின் தந்தை.

பிரமமித்திரன்

இந்தீவராகனைக் காண்க.

பிரமமுனி

பதினெண் சித்தர்களிலொருவர்.

பிரமமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர்.

பிரமராம்பிகை

இவள் சிவசத்தி. பூர்வம் அருணன் எனும் அசுரன் பிரமனிடத்தில் எவர்களாலும் வெல்லமுடியாத வரம்பெற்றுத் தேவர்களை வருத்தி வந்தனன். இவனால் துன்பம் அடைந்த தேவகணங்கள் சத்தியைப் பிரார்த்திக்கத் தேவி, அவர்களுக்குத் தரிசனம் தந்து நீங்கள் விரும்பிய தென்னெனத் தேவர்கள், அம்மணி அருணனெனும் அசுரன் பாதையால் நிலை யற்று வருந்தும் எங்களைக் காக்கவேண்டுகின்றோம் எனத் தேவி அங்கனமே ஆகுக என்று தன் மலர்மாலையில் மொய்த்திருந்த வண்டுகளை நோக்கி அசுரனைக் கொலை செய்து வருக என அவ்வாறு அவை சென்று அருணனையும் அவன் சேனைகளையுந் தொளைத்து மீண்டன. (தேவி~பா)

பிரமருஷிதேசம்

குருஷேத்திரம், பாஞ்சாலம், சூரசேனம், மச்சதேசம் முதலியவை இது பிரம்மாவர்த்த தேசத்துக்குச் சிறிது தாழ்ந்தது.

பிரமரை

ஒரு அரக்கி; பதங்காசுரன் தேவி. குமரர், அந்தகன், அம்பன், துங்கன் இவள் தன் புதல்வரையும், கணவனையும், கொன்ற பழிதீர்க்கக் காசியில் குழந்தை உருக்கொண்டிருந்த விநாயகரிடம் அதிதி உருக்கொண்டு சென்று விநாயகருக்கு விஷங்கலந்த உண்டி தந்தனள். அதனை விநாயகர் உண்டு சலிக்காது அரக்கியைக் கொன்றனர்.

பிரமலோகவர்ணனம்

வேத ஒலிகளால் நிறைந்தும் ஓமப் புகைகளாலும் நாரதர் முதலிய மகருஷிகளாலும் யாக வேதிகைகளாலும் குண்டங்களாலும் புஷ்பங்கள் பழங்கள் தாமரை யோடைகளாலும் இராஜ் அம்ஸங்களாலும் சாரசபக்ஷிகளாலும் நிறைந்ததும், மந்தமாருதத்தால் அலைக்கப்பட்ட வண்டுகள் பறவைகளின் ஒலியுடையதுமாம். இதனை வேதவொழுக்கமுற்ற நல்லோர் அடைவர்.

பிரமலோசை

ஒரு அப்சரசு, கண்டுமகருஷியைச் சேர்ந்து, மாரிஷையெனும் ஒரு பெண் பெற்றுப் பிரசேதசுகளுக்குக் கொடுத்தாள். இவள் வருண புத்திரனாகிய புஷ்கரனால் மாலினியைப் பெற்று உருசிக்குக் கொடுத்தனள், உருசிபிரசாபதியைக் காண்க.

பிரமலோலுபன்

கும்பியின் குமரன்.

பிரமவத்தம்

சரஸ்வதி நதிக்கு அருகில் உள்ள தேசம்.

பிரமவித்தை

1. துருவன் என்னும் வசுவிற்குத் தாய். 2. பிரம்மா அதர்வனுக்கு உரைத்த நூல்.

பிரமவித்யாதவரர்

ஸ்ரீகண்ட பாஷ்யத்திற்கு வியாக்யானம் செய்த ஆசாரிய சுவாமிகள்.

பிரமஹத்தி

இது பிரமஞான முள்ளவனை யடையும் பேய். இது ரௌத்ரா கரமும், மகாகோரமும், பயத்தைச் செய்வதும், தெற்றி பற்களுடையதும், கறுத்துச் சிவந்த வருவுள்ளதும், பறட்டைத்தலை யுடையதுமாய் கொன்றவனை வருத்துவது. இது இந்திரன் முதலானவரை வருத்தியது. புராணங்களிற் காண்க. (பார~சாந்.) இது பெண்ணுருவானது. இந்தப் பிரமகத்தியை அக்கினி, ஜலம், பெண்கள், மரங்களுக்கு இருப்பிடமாக்கினர்.

பிரமஹத்திஸ்வருபம்

கருநிறம், நீண்ட கேசம், தீப்பொறிசிதறுங் கண்கள், கோர தந்தங்கள் பொருந்திய வாயும், பயங்கரமுள்ள முகம் பெற்ற தாயு முள்ளது.

பிரமாணம்

1, நியாயசபையில் வாதி பிரதிவாதிகள் செய்யும் பிரமாணங்கள் ஐந்துவகை. அவை, துலாபிரமாணம், அக்னிப் பிரமாணம், ஜலப் பிரமாணம், விஷப் பிரமாணம், தேவதாஸ் நானோதகம், என்பன. இவற்றைத் தனித்தனி காண்க. (யாஞ்ஞவல்க்யம்) 2. உண்மை யநுபவ ஞானத்திற்குக் கரணம். 3. ஆறுவகை. அவை பிரத்யக்ஷம், அநுமானம், ஆகமம், அபாவம், அருத்தாபத்தி என்பன. (தரு.)

பிரமாண்டதானம்

பொன்னினால் அண்டம் ஒன்று செய்வித்து அஷ்டகெசங்க ளின் உருவு அமைந்த யானைகளால் தாங்குவித்துப் பிரமதேவரைப் போல் உருச்செய்வித்து நடுவில் எழுந்தருளுவித்து விதிப்படி பூசித்து வேதியர்க்குத் தானஞ் செய்விப்பதாம்.

பிரமாண்டபுராணம்

இது (12000) கிரந்தமுள்ளது. இஃது அண்டத்தின் அளவு இனிவரும் கற்பங்கள் தோறும் நிகழும் கதை முதலியவற்றைத் தெரிவிக்கும்.

பிரமாதா

காண்பான், பிரமேயம் விஷயம்,

பிரமிட்டன்

இருடி, அகத்தியர் மாணாக்கருள் ஒருவன், கோபிதாரத்து வசனைச் சபித்தவன்.

பிரமுகன்

இரேவதிக்குத் தந்தை. இரைவதனைக் காண்க.

பிரமேகரோகம்

சதாபெண்போகம், பட்டினி, காரம், உப்பு, துவர்ப்புக்களை அதிகமாகப் புசித்தல் மனக்கிலேசம் இச்செயல்களாற் பிறந்து முதுகெலும்பு, நாபி, குய்யம், மூலாதாரம் இவைகளையடைந்து மிகுந்த நோவுடன் அடிவயிற்றில் வேதனை தருவது. இது (2) வகைப்படும். அவை, வாதம், பித்தம், சிலேஷ்மம், தொந்தம், வாதபித்தம், பித்தசிலேஷ்ம பிரமேகங்களெனவும், கட்டிப்பிரமேகம், சலப்பிரமேகம், தந்திப்பிரமேகம், ரத்தப்பிரமேகம், சீழ்ப்பிரமேகம், ஒழுக்குப்பிரமேகம், அரித்ராப்பிரமேகம், மூத்திரக்கிரிச் சரப்பிரமேகம், கரப்பானபிரமேகம், கல்லுப்பிரமேகம், தந்துப்பிரமேகம், நீச்சுப்பிர மேகம், மலினப்பிரமேகம், மதுப்பிரமேகம், இரணப்பிரமேகம் என்பன. (ஜீவ.)

பிரமேந்திரன்

ஒரு தவசி; தீர்த்தயாத்திரை சென்று புண்ணிய தீர்த்தமாடிச் சுத்தமடைந்து முத்தியடைந்தவன்.

பிரமேயசாரம்

அருளாளப் பெருமாள் அருளிச்செய்த விசிட்டாத்வைத நூல்.

பிரமை

யதார்த்தஞானம், இந்திரியார்க்க சையோசாதியே பிரமைக்குக் கரணமாதலின் அதுவே பிரமாணம் (பிரமாகாணம்)

பிரமோத்தரகாண்டம்

இது விபூதி, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம், சோமவாரம், பிரதோஷம், முதலியவற்றின் மதிமைகளைக் கூறும் நூல். இதைத் தமிழில் வரதுங்கராமபாண்டியர் மொழிபெயர்த்தனர்.

பிரம்பூர் ஆனந்தரங்கப்பிள்ளை

இவரைப் புதுவை ஆனந்தரங்கப்பிள்ளை யென்பது முண்டு. இவர் பல புலவர்களை ஆதரித்து அவர்களிடம் பாமாலை கொண்டவர். இவர் மீது “பாரார் சொல்லாரார் பாவைக்குலக் கடம்மில், சீராங்கிள்ளை முதற்செபu லால் ஒரா, இரம்பை யானந்தாங்கனின் பங்களன்பன், பிரம்பை யானந் தரங்கன் பேர்” எ.ம், பானுகிரணப் பார்க்கும் பங்கேருகநிலவு, தானும் வரப்பார்க்குஞ் சகோரங்கள் வானமரும், மையைப் பார்க்கும் மயில் கண் மாவிசயானந்தாங்கன், கையைப் பார்க்கும் புலவோர்கண்’ என்பவற்றாலறிக.

பிரம்ம சண்டாளன்

பிராம்மணப் பெண்ணிடத்தில் சூத்ரனுக்குப் பிறந்தவன்.

பிரம்மகூர்ச்சம்

1, பகலும் இரவும் பட்டினியிருந்து காலையில் பஞ்ச கவ்வியம் சாப்பிடுவது. (பார்~அஸ்வ.) 2. இது 50 தர்ப்பையால் கற்றையாகச் சேர்க்கப்பட்ட கற்றைவைதீக கார்யக்கருவி. இது பிராணிகளின் தேசத்திலுள்ள தோல், எலும்புகளில் பொருந்தியுள்ள பாவங்களைப் போக்கும். (பராசரம் விகிதஸ்மருதி).

பிரம்மசம்பு

சைவபத்ததி அருளிச்செய்த சிவாசாரியருள் ஒருவர்.

பிரம்மசிறச்சேதமூர்த்தி

பிரமன் தலையைக்கிள்ளிக் கர்வம் போக்கிய சிவன்றிருவுரு.

பிரம்மலோகம்

20 1. பிரம்மகாயிகலோகம், 2. பிரம்மபுரோகித லோகம், 3. மஹாப் பிரம்மலோகம், 4. பரீத்தாபலோகம், 5. அப்பிரமாண பலோகம், 6, ஆபாஸ்வரலோகம், 7. பரீத்தசுபலோகம், 8. அப்பிராமண சுபலோகம், 9. சுபகிருஸ்தலோகம், 10. பிரகத்பலலோகம், 11. அஸம் ஞயாயத்துவ லோகம், 12 அப்பிரகலோகம், 13. அதபலோகம், 14. சுதர்ச லோகம், 15. சுதர்சி லோகம், 16. அகநிஷ்டலோகம், 17, ஆகா சானந்தி யாயதனலோகம், 18. விஞ்ஞான சந்தியாய தனலோகம், 19. அகிஞ்சந யாயதனலோகம், 20. நைவஸம்ஜ்ஞாய தன லோகம் என்பன. (பௌத்த நூல்.)

பிரம்மவேதி

ஒரு நீர்த்தம், இதில் பாண்டவர் ஸ்நானஞ்செய்து பாவம் போக்கிக் கொண்டனர். இதில் ஸ்நானங் செய்தவர் தெய்வபிரப்பை அடைவர்.

பிரம்மாணி

சத்தமாதாக்களில் ஒருத்தி. (4) முகம், (4) புஜம், அன்ன வாகனம், ஜபமாலை, கமண்டலம், அபயம், வாதம் முதலிய உடையவள்,

பிரம்மாவர்த்ததேசம்

சரஸ்வதி திருஷத்வதி என்னும் தேவாதிகளடைய மத்ய பிரதேசமானது. தேவர்களால் எற்படுத்தப்பட்ட பிரம்மாவர்க்க தோம் என்று சொல்லப்படும்,

பிரயம்வகை

(1) சகுந்தலயின் தோழி. 2. நகுஷன் தேவி,

பிரயாகன்

இக்கிரன்.

பிரயாகை

காசியில் உள்ளநதி; இதில் தீர்த்தமாடினோர் முத்தியடைவர். இதனிடம் கோதானஞ் செய்தவர் அதின் உரோம அளவுகாலம் சுவர்க்கம் அனுபவித்துப் பின் முத்தியடைவர்.

பிரயாணத்தில் செய்வன

ஒரிடம் போகையில் இரண்டு தேவர்களின் நடுவிலும், பல பார்ப்பார் நடுவிலும் செல்லுதல் கூடாது. (ஆசாரக்கோவை.)

பிரயோகன்

ஒரு அரசன்.

பிரயோகவிவேகம்

மூலமும் உரையுஞ் செய்தவர் சுப்பிரமணிய தீட்சதர். இது வடமொழியிலக்கண அமைதிகளை விளங்கக் காட்டுவது. இது தமிழிற்கும் ஆரியத்திற்கும் உள்ள இலக்கண ஒற்றுமையையும் தெரிவிக்கும்.

பிரயோஜனவதி லக்ஷணை

கங்கையிலிடைச்சேரியெனின் கங்கையெனும் பதத்திற்குக் கரையில் பிரயோஜன முண்மை,

பிரருசன்

அமிர்த்தத்தை காத்துக்கொண்டிருந்த தேவன். (பா~ஆதி.)

பிரலம்பன்

ஒரு அசுரன். இவன் கம்சனுக்கு உதவியாயிருந்து கோபாலகிருஷ் ணனை வஞ்சிக்க ஒரு கோபாலவேடங் கொண்டு இராமகிருஷ்ணருடன் வந்து விளையாடினன். இவ்விளையாட்டில் தோற்றவர் வென்றவரை முதுகிற் சுமந்து பசுக்களைச் சுற்றி வருவது என்னும் சங்கேதப்படி பலராமரை முதுகிற் சுமந்து அளவு கடந்து போயினன். பலராமர் இவனை அசுரன் என்று அறிந்து காலால் உந்திக் குட்டிக் கொலை புரிந்தனர்.

பிரலாவதி

கலாவதியைக் காண்க.

பிரளயசித்

திருக்காஞ்சிக்கு ஒரு பெயர். பிரமகற்பத்து இறுதியில் வந்த வெள்ளம். இதனை முழுகச்செய்யாமல் சத்தியால் காக்கப்பட்டது ஆதலின் இப்பெயர் பெற்றது என்பர்.

பிரளயம்

இது உலக ஒடுக்கம்; இது நித்யம், நைமித்திகம், பிராக்கிருதம், ஆத்யந்திகம் எனப்படும். இதில் நித்யம்: நாள் தோறும் ஆத்மாக்கள் சிரமபரிகாரத்தின் பொருட்டுக் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட சுழுத்தி முதலிய அவத்தை. நைமித்திகம்: பிரமதேவனுக்கு ஒருநாள் முடிந்த இராத்திரி காலத்தில் உண்டாகும் உலக ஒடுக்கம். பிராக்ருதம்: பிரமனுக்கு விதித்த ஆயுட்காலத்தின் முடிவில் உண்டாம் பிரளய ஒடுக்கம். ஆத்யந்திகம்: பிரமாதி தேவர்களையும் மற்ற சராசரங் களையும் அழிக்க எழுந்த சர்வசம்மாரம். மனுஷ்ய மானத்தால் சதுர்யுகம் ஆயிரம் முறை திரும்பின் பிரமனுக்கு ஒரு பகல், அவ்வாறே இரவுமாகும். அத்திவாராத்ரம் கூடியது ஒரு நாள், அந்தநாளின் தொடக்கத்தில் சிருட்டி; அத்தினம் முடிவில் சங்காரம். இது தினப்பிரளயம்; அந்தத்தினம் (360) ஆயின் பிரமனுக்கு ஒரு வருடம். அந்த வருடம் பரார்த்தசங்கியை ஆனபிறகு பிரகிருதிவரையில் சங்காரம். மீண்டும் அந்தப் பரார்த்தகாலம் ஆன பின்பு பிரகிருதியிலிருந்து குணாதி தத்துவங்கள் சிருட்டிக்கப்படும். இவ்வகை சிருட்டி சங்காரகாலத்தின் அளவு தவிபரார்த்த மாகும். இந்தப் பிரகிருதிவரையில் சம்மாரமே, அவாந்தர சம்மாரமாம். இந்தத் திவிபரார்த் தகாலமும் பரார்த்தமான பின்பு மாயாதத் வத்திலும், மகா மாயையிலும் ததவசம்மாரம் செய்யப்படும். அதுதான் மகாசம்மாரம் எனப்படும். பரார்த்தம் ஒன்று முதல் பத்துக் கொண்டது. பத்துக் கொண்டதாக ஏற்பட்ட ஸ்தானங்களில் இருபதாவது ஸ்தானம் பரார்த்த சங்கியை,

பிரளயாகலர்

இவர்கள், ஆணவம் கன்மம் எனுமிரண்டு மலமுள்ள ஆன்மாக்கள் பிரளயத்தில் மாயதத்துவத்திற் கட்டுண்டிருத்தலால் இப்பெயர் பெற்றவர். இவர்களுக்குத் தனுகரண புவன போகங்கள் அசுத்தமாயை, இவர்களில் பக்குவரை முதல்வன், சகளத்திரு மேனியாகியமான் மழுசதுர்ப்புய, காளகண்ட திருநேத்ரதாரி யாயருட் டிருமேனி கொண்டெழுந்தருளி முன்னிலையாக நின்று தரிசனந் தந்து மலத்தைப்போக்கி அநுக்கிரகிப்பன்.

பிரவரன்

ஒரு வேதியன்; கிருஷ்ணமூர்த்தி பாரிசாத அபகரணஞ் செய்கையில் இந்திரனுடன் இருந்தவன். இவன் சாத்தகியுடன் யுத்தஞ்செய்தவன்.

பிரவர்ஷணம்

ஒருமலை; இதில் பலராமகிருஷ்ணர் தமக்குப் பயந்து ஒளித்துக் கொண்டனர் என்று சராசந்தன் இதைக் கொளுத்தினன்.

பிரவாகனர்

சீவலன் புத்ரர், சுவேதகேதுவை வேதாந்த சாஸ்திரத்தில் மூடனாக்கியவர்.

பிரவாநந்தி

பூதநந்தனுடன் பிறந்தவன். கலிங்கலை நாட்டரசன்.

பிரவாஹேஸ்வரவாதிமதம்

பதி ஒருவன் உண்டு; ஆன்மாக்கள் அனேகர்; மாயை, சன்மம், அனாதி. ஈச்வர அதிகாரத்தை முத்தன் ஒருவன் வந்து அடைவன் என்பன். பிதா குடும்ப பாரத்தைக் குமரனிடம் வைத்துத்தான் பாரமற்று இருப்பதுபோல், சிவன் தனது பஞ்சகிருத் தியத்தை முத்தாத்மாவிடம் வைத்துக் குடும்ப பாரம் அற்று இருப்பன். இந்த முத்தனும் தனக்குப்பின் வருபவனிடம் தன் தொழிலைவைத்துத் தான் பாரமற்று இருப்பன் என்பன், பாரமற்றவன் ஞெப்திமாத்திரமாய் இருப்பதே மோக்ஷமென்பன். இவ்வகைப் பரம்பரையாக வருதலால் பிரவாஹேஸ்வரவாதியெனப் பெயர் வந்தது.

பிரவீர பாண்டியன்

மதுரையாண்ட (34) வது பாண்டியன்,

பிரவீரநீலன்

விந்திய தேசாதிபதி,

பிரவீரன்

(1) (சந்.) பிரசந்நுவான் குமரன், இவன் குமரன் மனசுயுவு. 2. வத்சந்திரன் குமரன்.

பிரஷதசுவன்

விருபன் குமரன்,

பிரஷன்

சோமகன் குமரன்: இவன் குமரன் துருபதன்,

பிரஷ்டாநகரம்

புரூரவன் ஆண்ட பட்டணம்.

பிரஹதி

தேவவோத்திரர் பாரி.

பிரஹரன்

நாகன்; கத்ரு குமரன்.

பிராகத்தன்

1. (சூ.) சகதேவன் குமரன். 2. குபேரனிடத்துப் பட்டத்தை விரும்பி இராவணனால் ஏவப்பட்ட அரக்கன். (இராவணசேநாபதி) சுமாலியின் புத்திரன். நீலனால் கொல்லப்பட்டவன். 3. ஒரு ஆரியநாட்டரசன். இவனுக்குத் தமிழ் அறிவித்ததற்கு இவன் மீது கபிலர் குறிஞ்சிப் பாட்டுப் பாடினர்.

பிராகபாவம்

இது உற்பத்திக்கு முன் காரணங்களில் காரியமின்மை. இது நூல்களில் ஆடையில்லை யென்றாற் போல்வது, இது முன்னின்மை.

பிராக்கிருதம்

1. இது பிரளயத்தில் ஒன்று, இது பிரமனுக்கு இட்ட ஆயுளின் இறுதியில் உண்டாவது. அது இரண்டு பரார்த்தன் கழியின் உண்டாவது. 2. ஒரு பாஷை. இது அபப்பிரம்சம், பைசாசி, சூசிகா பைசாசி, சௌரசேரி, மாகதி, பிராக்கிருதம், என அறுவகைப்படும். இதற்கு வரருசி, வால்மீகி முதலியோர் இலக்கணஞ் செய்திருக்கின்றனர். இப்பாஷைகளுள் பைசாசி, சூசிகாபைசாசி, பிசாசசாதியர் வழக்கு எனவும், பிராக்கிரதம் பெண்கள் ஆசியக்காரர் வழக்கெனவும், மாகதி இழிந்தோர் வழக்கெனவும், அபப்பிரஞ்சம் துருக்கர் முதலிய அதமர் பேசுவதெனவும், சூரசேநி சண்டாளர் வழங்குவதெனவும் கூறுவர்.

பிராக்சோதிடம்

நரகாசுரன் பட்டணம்.

பிராக்ஜோதிஷம்

நாகராஜனாகிய பகதத்தன் பட்டணம் Kamrup or Kamakshya in Assam. (பா. சபா.)

பிராக்ஞன்

1. ருசிராச்ரவன் குமரன். (பிராஞ்ஞன்.) 2. கவியின் சகோதார். பாரி சந்நிதி. குமரர், யஞ்ஞன், விக்யன்.

பிராக்யன்

சுழுத்தியுடன் கூடிய ஆத்மா.

பிராசனச்சந்தி

நாடக விகற்பத்தொன்று, இது சுத்தமும், சங்கீரணமும் என இரண்டாம். சத்தமாவது, தக்காரை இகழ்ந்து வருவது சங்கீரணமாவது: பாஷண்டன் தலைமகனாய்த் தோழியரே, கணிகையரே, தூதரே, அலிகளே, பேடியரே யென்றி வரையுடைத்தாய்க் கடைக்கட் சந்தியின்றி யங்கமொன் றவது. (வீரா~சோ.)

பிராசாபதிகள் எழுவர்

மரீசி, அத்திரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலகர், கிரது, வசிட்டர். (பார~சாந்.)

பிராசின்னவாணன்

ஜனமேசயன் குமரன்.

பிராசீதபரிகி

அவிர்த்தானனுக்கு அவிர்த்தாளியிடம் பிறந்த குமரன் இவன் அநேக யஞ்ஞங்களைச் செய்து அந்தயக்ஞ சாலையில் கிழக்கு தனியாக இரண்டங்குலம் தருப்பை பரப்பியபடியால் இப்பெயர் அடைந்தனன் என்பர் இவன் தேவி சதத்துருக; இவளக்குப் பத்துக் குமாரர், அவர்கள் பிரசேதசுக்கள் எனப்படுவார். இவனுக்கு பாரதர் பாஞ்சான் கதை உபதேசித்த துறவில் இச்சை வருவித்தனர். இவன் தக்ஷன் காலத்தவன். (பாகவதம்.)

பிராசீநன்

ஜநமேசயன் குமரன்.

பிராசீநர்

ஒரு இருடி; தேவி சாவணி,

பிராசீனகர்ப்பர்

அபாந்தாதமரைக் காண்க.

பிராசீயினாவீதம்

வேதியர் பூனூலையாவது உத்தரீயத்தையாவது வலது தோளிலும் இடது கையின் கீழிலும் தரிப்பது. (மது~அத்)

பிராசேதமுனிவர்

(வாந்மீகி) வருணனுக்குப் பத்தாங் குமரர். சதையின் கற்பினிலையை அச்வமேதத்துச் சகலரும் அறிய இராமருக்கு எடுத்துரைத்தவர்.

பிராச்சின்னசாலன்

உபமன்யு புத்ரன்,

பிராச்சியர்

இரண்ய நாபன் மாணாக்கர்.

பிராட்டியார்

மஞ்சள் நிறம், சூலம், கண்ணாடியையுடைய இரண்டு கைகள் கரண்டகம் போன்ற மகுடம் முத்து முதலிய ஆபரணங்கள் உடையராயிருப்பர்.

பிராட்விவாகன்

இது நீதிபதிக்குப் பெயர். இவன் வழக்குகளை வினாவுதல் பற்றி பிராட் எனவும், வழக்குகளை நியாயமன்றத்தவருடன் கூடி விசாரித்து விசேடமாக எடுத்துரைத்தலால் விவாகன் எனவும் பெயர்

பிராணன்

1. விதாதாவின் புத்திரன். பிருகுவின் பேரன். தாய் நியதி. வேதசிரன் தந்தை. 2. தருமனுக்கு வசுவிடம் உதித்தவன்; பாரி, உற்சவதி. 3. சோமனென்னும் வசுவின் குமரன். 4. இஃது இருதய முதலிய தானங்களில் இருப்பதும், ஐவகைத் தொழிலை உடைத்தாகிய தோர் சாற்றின் விசேஷமு மாம். இப்பிராணத்தின் வடிவு முதலில் பிரஜாபதி ஒருவனே தன்னைத்தானே எண்ணி கொண்டிருந்தாள், அவன் களிக்கவில்லை. அதனால் அநேக உயிர்களைப் படைத்தான். அல்லமர்கள் சக்தியில்லாமலும், எழுந்திருக்காலும் கல்லைப்போல் கிடக்கக் கண்டான். அதனும் களிப்புண்டாகவில்லை. இவற்றை உயிர்ப்பிக்கும்படி இவற்றுள் நானே புகுவேன் என்று சிந்தித்தான் அவன் தன்ன வாயுரூபமாக செய்து உட்புகுந்தான். அவன் ஒருவனால் முந்தும் வல்லவகைாதவனானான், பின் ஐவகையாகத் தன்னைப் பிரித்துப் பிராணன், அபானன், சமானன், உதானன், விடானன் என்று கூறப்பட்டான்.

பிராதபன்

ஜயதிரதன் உடன் பிறந்தவன்.

பிராதஹ

பிரபாவின் குமரன்.

பிராதிகாமி

துரியோதனன் சாரதி, நீதிமான்.

பிராதை

தக்ஷன் பெண்,

பிரான் சாத்தனார்

இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். மகளிர் விளையாடாது இல்லின்கணிருத்தல் அறனுமன்று, ஆக்கமுந்தேயு மென்று அன்னையிடங் கூறுமாறு இற்செறிக்கப்பட்ட தலைவி கூறியதாக வியப்பெய்தக் கூறியுள்ளார். இவர் பாடியது (நற் 98.)

பிராப்தி

அஷ்டசிக்திகளுள் ஒன்று. நினைத்த இடஞ்சென்று மீள்வது.

பிராப்திசமை

பிராப்தியினால் எதிர்த்து நிற்பது. (அடைவு.)

பிராப்தை

சராசந்தன் குமரி; கம்சன் தேவி.

பிராமணமுனி

உரோமபதநாட்டை மழையிலாது நீங்கச்சபித்த இருடி.

பிராமணர்

இவர்களில் ஆதிசைவர், வைஷ்ணவர், ஸ்மார்த்தர், மார்த்தவர், ஆராத்யர் எனப் பலவித வகுப்புண்டு. இவர்கள் பிறப்பினை ஆராயுமிடத்துப் பிரமனது முகங்களிற்றோன்றிய இருடிகளின் சந்ததியாரெனப் பல புராணங்கள் கூறும். பின்னும் சில இருடிகள் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களில் உற்பவித்தவ ரெனவும் அவர்களின் சந்ததியார் ஆதிசைவர் எனவுங்கூறும், இவ்வேதியர்க்குத் தொழில் புறந்தூய்மை அகந்தூய்மை யுடையராய் ஸ்மிருதியாதிகளில் சொன்ன விதிகடவாது ஒதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் முதலிய அறுவகைத் தொழில் செய்து தெய்வம் வழிபடலாம். இவர்களில் ஆதிசைவர், முதலில் சிவசிருட்டியிற் றோன்றிய காசியபர் கௌசிகர் முதலிய இருடிகளின் கோத்திரத்திற்றோன்றி யவர்களாய்க் கோதாவிரி தீரத்திலிருந்த இந்திரகாளி என்னும் பட்டணத்தி லிருந்து முதலில் இராஜேந்திர சோழனால் அழைத்துவரப்பட்டுக் காஞ்சி மண்டலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சைவவேதியராகிய சிவாசாரியர்கள். இவர்களும் ஸகோத்திரத்திற் கொள்ளார்; கொடார். மற்றவர் தமிழ்நாடு முதலிய பலநாட்டவர். அவர்களில் வைஷ்ணவர் இருவகைப் படுவர். அவர்கள் வற்ச வாதூல, கௌண்டன்பய, பாரத்வாஜ, காசயபர், சடமர்ஷ்ணர் ஆத்ரேய, கொசிக கோத்திரத்தவரே, இவர்களில் தென்னாரிய சம்பிரதாயத் தவர், அஷ்டகோத்தார், சப்தகோத்தாத்தார், பஞ்சகோத்திரத்தார் எனப் பிரிவுப்பட்டு அவர்களுள் ஒருவருக்கொருவர் கொடுப்பது கொள்வதேயன்றி முறை தவறார். வடகலையார் முனித்திரயம், மடம் என இருவகைப் பட்டுத் தென்கலையாரின் ஆசாரபேதத்தால் வேறு படுவர். மற்றவர் ஸ்மார்த்தர், இவர்களில் தமிழ்நாட்டு வேதியர் சோழதேசத்து வடமர், வடதேசத்து வடமர், வாத்திமார், அஷ்டசகஸ்திரத்தார், பிரஹச்சாணத்தார், காணியாளர், முக்காணியார், சோழியர், வீழியர், கேசியர், குருக்கள், ஆழியாளர் போற்றிமார், சுக்கிலயசார் அல்லது, மாத்தியாயன சண்டாளர், மூவாயிரவர், சேரநாட்டார், பட்டர்மார், தில்லை மூவாயிரத்தார், தன்னாயிரத்தார் வேதசா கையார், சரணத்தார், மாத்யமான், நம்பூரியர் இரண்யகேசி சூத்ரதித்தார். பிரதம சாசையார், புதுவூர்திராவிடர், செவ்வையார், திருவாரூர் திராவிடர், ஜவுளிக்கடை வடமர், டமருவடமர் எனப் பலவகைப் படுவர். வடநாட்டு வேதியர் காணகம்முலு, முருகி நாடு, வெலநாடு, வேகிகாடு, நியோகியர், தெலுங்கானியர், மகராஷ்டிரர், கொங்கணத்தர், கன்னட. பிராமணர், கர்நாடகர், ஆறு வேலு பிராம்மணர், அறுவதுவக்கலு பிராம்மணர் பனக்க நாட்டார், கம்மானூரார், வங்காளவேதியர், காசிவேதியர், சுத்தவேல்நாடு, பெருபேடு நாடு, தெலகராண்யம், காசல் நாடு, பிரதம சாகை, ஆறு வேல நியோகிகள், பிராங்காடு, பஞ்சகவுடர் முதலியவர்களாம். இவர்களன்றிக் குசராத்திப் பிராம்மணர், கான்யகுப்ஜ பிராமணர், இந்துஸ்தானி பிராமணர், மச்சப்பிராமணர் எனப் பலவகையர். இவர் பிரமதேவர் முகத்திற் பிறந்த இருடிகளின் வம்சத்தவராய் எங்கும் இருப்பினும் இவர்களின் கோத்ர சூத்ரங்களுக்குத் தக்கவாறு ஆசாரங்களும் வேறுபடும். இவர்களுள் தென்னாட்டவர் ஆசாரத்திலு யர்ந்தோர். எனை நாடுகளில் அவ்வாசாரம் குறைந்திருக்கும். அத்தென்னாட்டவா, சைவ, வைஷ்ணவ, ஸ்மார்த்த, மார்த்தவர்கள் எனப் பிரிவுபட்டு ஆசாரத்தாற் பேதப்படுவர். அவர்களில் சைவர் இவர்கள் வேதசிவாகம ஆசாரங்களைக் கைக்கொண்டு அகோர பத்ததியிலும் ஏனைய சிவாசாரியர்கள் கூறிய பத்தயின் படியும் நடப்பவராம். இச்சைவ வேதியரில் ஒரு வேறுபட்டு வீரசைவாகம தீக்ஷை பெற்ற ஆபாந்தியர் என்னும் ஒரு சாரார் உளர், அவர்கள் கன்னட முதலிய தேசத்தவர்களாய்ப் பெரும்பாலார் இருக்கின்றனர். வைணவர்களில் ஆசாரத்தால் வறுபட்டுத் தென்சுலயார் வடகலையார் என இருதரத்தார் உளர் ஸ்மார்த்தர்களில் சில சிவதீக்ஷாவான்களாய் இருக்கின்றனர். மற்றவர்கள் ஸ்மார்த்தாசாரம் உள்ளவர்களாய் ஒழுகுகின்றனர். மார்த்தவர்கள் வைணவர்களாய் மர்த்தவ பாஷியம் அப்பியாசித்து வருவர். இவர்களேயன்றி ஏனை நாடுகளிலுள்ளோர் சத்திமதம், கணாதிபத் தியமதம் இவற்றை அனுசரித்து அவர்களுக்குக் கூறிய ஆசாரத்தின்படி ஒழுகுகின்றனர். கர்ப்பாதானம், பும்ஸவனம், சீமந்தம், உன்னயனம், சாதகர்மம், நாமகரணம், உபநிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், சௌளம், உபநயனம், மகாநாமியம், மகாவிந்தம் உபநிஷத்து, சோபனம், உத்வகனம், மிருதி என்னும் சோடச கர்மங்கள் உடனே, யசனயாசன, அத்யயன, அத்யாபன, தான, பிரதிக்கிரகம் என்னும் சட்கர்மமும், ஆகிய சகல சற்குணங்களுடனே கூடினவர் பிராமணர்.

பிராமணி

புருஷர்களுக்கு நிஷ்காரணமாய்ப் பயத்தை யுண்டாக்குந் தேவதை.

பிராமணுதிகளின் ஜீவனகிருத்தியம்

பிரமசரியம் நீங்கிய வேதியன் குலவொழுக்கங்களில் உயர்ந்தமனைவியை மணந்து கொண்டு கிருகத் தாச்சிரமத்தில் வசிக்க வேண்டியது. இவன் ஆபத்தில்லாத காலத்தில் பிராணிக ளுக்கு வருத்தம் இல்லாமலே எக்யம் செய்வித்தல், ஓதுவித்தல், நல்ல பொருளைத் தானம் வாங்கல், அவ்வகை அல்லாதபோது கிருஷிவியாபாரம் முதலிய செய்து சீவிக்கலாம். பின்னும் ருதம், அமிருதம், மிருதம், பிரமிருதம், சத்யாநிர்தம், குசீதம், முதலியவற்றால் ஜீவிக்கலாம். சுநகவிருத்தியால் ஜீவிக்கலாகாது. இவற்றுள் ருதம் என்பது கழனியிலும் மற்ற இடங்களிலும் சிந்தின நெற்களை இரண்டு விரல்களால் பொறுக்குவதும் மேற்சொன்ன இடங்களில் கதிர் நெல்லைப்பொறுக்குவதுமாம். தான் யாசிக்காமலே வருகின் றவை அமிருதமாம். தான் யாசித்து வருகின்றவை மிர்தமாம். பயிரிடுவது பிரமிர்தமாம். வியாபாரத்தால் வந்தது சத்தியாமிர்தமாம். வட்டிவாங்குதல் குசீதம் என்பதாம். சுருகவிருத்தியாவது யசமானன் தீனமாய்ப் பார்ப்பதாலும், அவனது மிரட்டுக்கு உட்படுதலாலும், ஈனவேலை செய்வதாலும் நாயின் பிழைப்புக்குச் சரியானதால் அதனை அகத்தியம் நீக்கவேண்டியது. இப்பிராமணன் தனக்கென்று தானியத்தை (3) வருடம் அல்லது ஒரு வருடம் பதனம் செய்யவேண்டியது. பெருங்குடும்பி மேற்கூறிய ஆறுகிருத்தி யங்களால் ஜீவிக்கலாம். அவனுக்குக் குறைந்தவன் வேட்பித்தல், ஓதுவித்தல், ஏற்றல் இம்மூன்றினாலும் ஜீவிக்கலாம். அவனிலும் குறைந்தான் வேட்பித்தல், ஓதுவித்தல் இரண்டினாலும் ஜீவிக்கலாம், அதினும் குறைந்தான் ஓது வித்தலால் மாத்திரம் ஜீவிக்கலாம். ருதவிருத்தியினால் ஜீவிக்கிறவன் ஏழையாதலால் அவன் அக்னி ஹோத்திரத்தில் விருப்புடையவனாய்த் தருச, பௌர்ணிமாச ஆக்ராயண இஷ்டிகளை மாத்திரம் சக்திக்குத் தக்கபடி செய்ய வேண்டியது.

பிராமரிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

பிராம்சு

1. வத்சந்திரன் குமரன். 2, பிரஜானி தந்தை.

பிராம்மி

1. சத்தமாதாக்களில் ஒருத்தி. 2. இவள் காலையில் சிவந்த ஆபரணங் கள், சிவந்த பட்டுப்புடவை, செந்நிறம், சடை, பூணுநூல், சரஸ்வதியின் திருவுருவத்தால் அம்சவாகனத்தி லுள்ளவளாய்ச் சிறுபெண்ணின் உருவமாய் நான்கு முகம் நான்கு அஸ்தங்கள் உள்ளவளாய்ச் சுருக்கு, ஜபமாலிகை வலக்கரத்திலும் தண்டகமண்டலங்கள் இடக்கரத்திலும், உள்ளவளாய்ப் பிராம்ஹி எனும் பெயருடையவளாய் எட்டு நேத்திரங்கள் உள்ளவளாய்த் தியாங்க்கப் படுவள். 3 ருஷப தீர்த்தங்கரின் குமரி.

பிராயாகை

Allahabad.

பிராயோபவேசம்

உயிர்நீங்கும்படி தருப்பைமேல் படுத்து உணவின்றியிருக்கும் வைராக்யம்.

பிரார்த்தனாமூர்த்தம்

கௌரியின் ஊடலைத் தீர்த்த சிவன் திருவுரு.

பிரார்த்துவகன்மம்

பண்டாரத்தில் சேர்த்து வைத்த பொருளை யெடுத்து அனுபவித்து வருதல்போல், சஞ்சிதத்திலிருந்து, எடுக்கப்பட்ட சரீரத்தில் புசிக்கப்பட்டு வருவது. (சித்தா.)

பிரிச்சந்திரன்

மநுவின் குமரன். இவன் பசுக்காத்து வருகையில் புலி ஒன்று பசுவைக்கொல்ல அதைக் கொல்லும்படி பாணம்ஏவ அது பசுவின் மீது பட்டுப் பசுவிறக்கப் புரோகிதரால் சூத்திரனாகச் சபிக்கப்பட்டுச் சூத்திரனானவன்.

பிரிதி

தகனுக்குப் பாத்தியிடம் உதித்த குமரன்.

பிரிதிமதி

சயசோன் மனைவி, (சூளா.)

பிரிதீவன்

கீசகன் குமரன்.

பிரிநிலைநவற்சியணி

அஃதாவது, பெயர்ச் சொற்களுக்கு உறுப்பாற்றலான் மற்றொரு பொருளைத் தந்துரைத்தலாம். இதனை வடநூலார் நிருக்தி யலங்கார மென்பர்.

பிரிமி

சிஞ்சுமாரன் குமரி, துருபன் பாரி; இவள் குமரர் கல்பவற்சரன்,

பிரியகாரணி

(சைநி.) வர்த்தமான தீர்த்தங்கரருக்குத் தாய்,

பிரியதரிசநன்

துருபதன் குமரன்.

பிரியதர்சன்

சாமரூப தேசத்தரசன் பார்த்திவ பூசை செய்பவன், இவனுடன் பீமன் சண்டைக்கு வந்து இவனை அவன் சிறைவைத்த காலத்தும் பூசை விடாது செய்யச் சிவலிங்கத்திடம் சிவபெருமான் தரிசனந்தந்து வீமனைச் செயிக்கப் பெற்றவன்.

பிரியமேதன்

அசமீடன் வம்சத்து உதித்த வேதியன். இவன் பலபசுக்கள் தான் செய்யப் பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது, (இருக்கு)

பிரியம்பதன்

ஒரு காந்தருவன். மதங்கர் சாபத்தால் யானையாயிருந்து அதனால் சாபம் நீங்கப்பெற்றவன்.

பிரியம்வதை

1. குஷன் தேவி. 2. சகுந்தலையின் தோழிகளுள் ஒருத்தி,

பிரியவிரதன்

சுவாயம்பு மநுவிற்குச் சதரூபையிடம் பிறந்தவன். தமயன் உத்தான பாதன், பிரமநாரத உபதேசத்தால் ஞானசம்பன்னன் ஆயினவன். இவன் தேவி, பெரிஹஷ்மதி அல்லது சுகன்னி, குமரர், ஆக்கினியித்திரன், இத்மசிக்குவன், எக்கியபாகு, மகாவீரன், இரண்யரேதஸ், கிருதபிருஷ்டன். சவான், மேதாதிதி, விதிகோத்ரன், கவி, ஒரு பெண் ஊற்சல்வதி. இவனுக்கு மற்றொரு பாரியிடத்தில் உத்தமன், தாபசன், ரைவதன் பிறந்தனர். இவன் பதினொரு கோடி வருஷம் அரசாண்டான். இவன் ஏழு முறை சூரியனுக்குப் பின் இரதத்துடன் சென்றதனால் இவன் தேர்ச்சக்கரம் அழுந்தின காரணத்தாலுண்டாகிய பள்ளத்தினால் சத்த சமுத்திரங்கள். உண்டாயின. அச்சமுத்திரங்களால் சத்ததீவுகள் உண்டாயின. அத்தீவுகளுக்கு அவன் தன் குமாரர்களை அரசர்களாக்கினன். பின்னும் மற்றொருவிதம், இவன் சுகன்னியை மணக்க அவளிடம் இவனுக்குச் சம்ராட்டு, குக்ஷி என இரண்டு குமரியரும், அக்னியித்ரன், அக்னிபாகு, வபுஷ்மந்தன், துயுதிமந்தன், மேதை, மேதாகிதி, அவ்யன், சவநன், புத்ரன், சோதிஷ்மந்தன், என்னும் பத்துக் குமரரும், பிறந்தனர். இவர்களில் மேதை, புத்ரன், அக்னிபாகு, மூவரும் யோகிகளாயினர், அக்குமரர்களில் ஆக்னியித்ரன் சம்புத்தீவையும், மேதாதிதி, பிலக்ஷத் தீவையும், வபுஷ்மந்தன், சான்மலித்தீவையும், சோதிஷ்மந்தன், குசத்தீவையும், துயுதிமந்தன், கிரௌஞ்சத் தீவையும், அவ்பன், சாகத் தீவையும், புஷ்கரன், புஷ்கரத்தீவையும் ஆண்டனர். (பாகவதம்)

பிரிவிடையாற்றல்

முன்கையில் தொடிசோரவெறுத்து வருந்தி இளமதிபோன்ற நுதலினையுடைய மடவாள் தலைமகன் பிரிந்த விடத்து அரற்றியது. (பு. வெ. பெருந்திணை).

பிரிவு

பரத்தையிற் பிரிவு, ஓதற்பிரிவு, காவற் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயிற் பிரிவு, பொருள் வயிற்பிரிவு, என அறு வகை.

பிரிவுழிக்கலங்கல்

தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் கலங்கிக்கூறல், இது மருளுற்றுரைத்தல், தெருளுற்றுரைத்தல் என இருவகைத்து, ஆய, வெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவெனலும், வாயில்பெற்றுய் தலும், பண்பு பாராட்டலும், பயந்தோர்ப் பழிச்சலும், கண்படை பொது கங்குனோதலு மெனும் விரியினையு முடையதாம். இதுவரை (அகம்) முதனாள் நிகழ்ச்சி முடிவு.

பிரிவுழிமகிழ்ச்சி

இது களவின் கிளவி. இது தலைவி பிரிந்து போதலைக் கண்ட தலை மகன் மகிழ்தல். பாகனொரு கூறுதலுமாம், (அகம்)

பிரீதகேசி

உன்முகன் தேவி,

பிரீதி

1. (சந்.) குசன் குமரன். இவன் குமரன் சஞ்யன், 2. தக்ஷன் பெண், புலகன் தேவி, குமரன் தத்தாத்திரயன். 3. புலத்தியன் தேவி. 4. காடு திருத்தி நாடாக்கி மலைகளெல்லாவற்றையும் கோமுகமாக்கி உலகம் அரசாண்டவன்.

பிரீதிமதி

தேவதத் தன் தாய்,

பிரீதிவன்

விராடராசன் மைத்துனனாகிய கீசகன் குமரன்.

பிரீதிவர்த்தனன்

வர்த்தமான புரத்து அரசன். (சூளா.)

பிருகக்ஷத்ரன்

புமன்பன் குமரன்.

பிருகதிஷன்

1. பர்மியாச்வன் குமரன். 2. அஜமீடன் குமரன்.

பிருகத்கரன்

அங்கதேசத்து அரசனாகிய பத்திரா தன் குமரன்,

பிருகத்கர்ணன்

பிருகத்திரதன் தந்தை.

பிருகத்காயன்

பிருகத்தனு புத்திரன்.

பிருகத்சம்மிதை

இது சூர்யசந்திர கிரகணபலாபலன் முதலிய கூறு நூல், வராகமிகிரர் செய்தது.

பிருகத்சவன்

1, தருமபுத்திரனுக்கு நளன் கதையை வதத்திற்கறித் தேற்றிய இருடி, 2. குவலாயாசுவன் தந்தை 3. சாவஸ்தன் குமரன்.

பிருகத்சாதகம்

வராகமி ஹிரர் செய்த சோதிட சாத்திரம்.

பிருகத்சேநன்

மத்திரதேசாதிபதி, கிருஷ்ணன் மாமன் ஷலமணைக்குத் தந்தை.

பிருகத்தனு

பிருகதிஷன் குமரன்,

பிருகத்திருதன்

(சூ.) தேவராதன் குமரன்.

பிருகத்துய்மன்

ஒரு அரசன்.

பிருகத்பானு

பிருகத்ரதன் குமரன். அங்க நாட்டரசன்.

பிருகத்ரதன்

1. சராசந்தன் தந்தை. இவன் நெடுநாள் புத்திரப்பேறு இல்லாது தன்னிரண்டு மனைவியருடன் காட்டிற்குச் சென்று சண்டகௌசிகர் என்னும் முனிவர் அநுக்கிரகத்தால் புத்திரப்பேற்றின் நிமித்தம் ஒரு மாம்பழம் பெற்றனன். அப்பழத்தை இருவருக்கும் இருபிளவாகக் கொடுக்க அம்மனைவியர் இருவரும் சில நாள் தரித்து ஒரே காலத்தில் ஒவ்வொரு பாதியுருக்கொண்ட ஆண்குழந்தை யுருவத்தைப் பெற்றனர். அரசன் இதைக் கண்டு இது தீமைக்கு உற்பாத மாதலால் புறத்தில் எறியக் கட்டளையிட்டனன். அவ்வகை எறிந்த இருபிளவையும் சரையென்னும் தேவதை ஆகாரமென எண்ணி உண்ணவந்து குழந்தையெனக் கண்டு ஒன்று சேர்க்க உயிரடைந்தது கண்டு, புத்திரன் இல்லாத அரசனுக்கு அளித்தனள். அவனே சராசந்தன். இவன், ருஷமன் எனும் நாமாம்ச பக்ஷணியைக் கொன்று அவன் தோலால் (3) நரபேரிகை செய்து வைத்திருந்தான். இந்தப் பேரிகை ஒரு முறை வாசிக்கின் ஒரு மாதம் சப்திக்கு யியல்புள்ளது. (பார~சபா.) 2. கலாதி பதியாகிய தேவரா தன் குமரன். 3. அங்க தேசாதிபதியாகிய பிருகக்கர்ணன் குமரன்.

பிருகந்தன்

உலூக தேசாதிபதி, அருச்சுநனுடன் நட்புக் கொண்டவன்.

பிருகந்நளன்

ஒரு அரசன் சிவதீர்த்தத்து இருந்த வெண்டாமரையை விருப்பாய்த் தொட்டதால் வெண்குட்ட மடைந்து கௌசிகர் புண்ணிய தீர்த்தம் ஆடச் சொல்லியபடி ஆடிப் புனிதனானவன்.

பிருகந்நளை

அருச்சுநன் விராடன் நகரத்தில் மறைந்து வசித்தகாலத்தில் வைத்துக் கொண்ட பெயர்.

பிருகன்

துரியோதனன் தம்பி. பதினான்காம் போரில் பீமனால் கொல்லப்பட்டான்.

பிருகன்மனஸ்

பிருகத்பாநன் குமரன்,

பிருகு

1, பிரமன் மானஸ் புத்ரரில் ஒருவர். மனைவி புலோமசை, மற்றொரு மனைவி கியாதி; இவர் குமரன் கவி. பௌத்தரன் சுக்ரன். இவர்களன்றி இவர்க்குக் கியாதியால் தாதை, விதாதை என்று இரண்டு குமரர் இருந்தனர். அவர்களுள் தாதைக்கு மிருகண்டும், விதாதைக்குப் பிராணனும் பிறந்தனர். பிராணன்குமரன் வேதசிரன். வேதசிரன் குமரன் உசேநஸ் மிருகண்டின் குமரன் மார்க்கண்டேயன். மற்றொரு குமரன் சௌநகன். இவர் தமது பாரியைக்கு யஞ்ஞத்தின் பொருட்டு அக்னியை உண்டாக்கும்படி கட்டளையிட்டு நீராடச் சென்றனர். இவள் தனித்து இருந்ததை அறிந்த புலோமன் என்னும் அரக்கன் பூர்ணகர்ப்பிணியா யிருந்த இருடி பத்தினியாகிய புலோமசையைத் தூக்கிக்கொண்டு போயினன். இவளது அபயங் கேட்ட வயிற்றிலிருந்த சியவநன் வெளி வந்து அரக்கனை யெரித்தனன். இதனை யோகத்தாலறிந்த இருடி அக்கினியை நோக்கி நீ கண்டும் தடைசெய்யாதிருந்ததால் சுத்தவன்துக்களேயன்றி அசுத்தப் பொருள்களை உண்ணும்படி சபித்தனர். இவர் ஒரு அரசனுக்குள்ள இரண்டு புத்திரிகளில் மூத்தவளை மணந்து புத்திரப்பேறு இல்லாது மனைவி வேண்ட அவளுக்குச் சோம வாரத்தில் அரசமரத்தைத் தழுவினால் புத்திரப்பேறு உண்டாகுமென அவள் அவ்வகை செய்து புத்திரப்பேறு அடைந்து காசிராஜனை மணந்த தன் தங்கை, புத்திரன் இலாதிருத்தலைத் தமது பிற நாயகருக்கு அறிவித்தனள். இருடி அவளைப் பலாசமரத்தைத் தழுவக் கட்டளையிட் பிற இப்புத்திரப் பேறளித்தவர். இவர்க்கு மற்றொரு குமரர் சமதக்கினி. ஒருமுறை இவர் பிறசத்துவ தேவரை அறியும்படி பிரமன், ருத்ரன், திருமால் இவர்களிடஞ் சென்று பிற அவர்களைக் கோபமூட்டினர். அதனால் ருத்ரனும் பிரமனும் கோபித்தனர். இவர் அந்தத் தேவர்கள் இருவரில் ருத்ரனுக்கு இலிங்க மறும்படியும், பிரமனுக்குக்கோயில் இல்லாதிருக்கவும் சாபமளித்து விஷ்ணு விடஞ் சென்று ஒரு உதை கொடுக்க விஷ்ணு உதைத்தகாலைப் பிடித்து உபசரித்ததால் இவரே சத்துவமூர்த்தி என்று அறிந்து வந்தனர். வீதவ்யனுக்கு அடைக்கலம் தந்து அவனை வேதியனாக்கியவர். மனைவியைக்கொன்ற விஷ்ணுவிற்குத் தன் மனைவியை நீங்கவும் பத்துப் பிறவி கொள்ளும்படியும் சாபம் அளித்தவர். இருசிகரும் இவர்குமரர். இவர் தக்ஷயாகத்தில் வீரபத்பிருதிரரால் மீசை, தாடி முதலியவைகளைக் கொளுத்தப்பட்டனர். இவரை வருணன் பிரு சந்ததியார் என்று யசுர்வேதங் கூறும், இவர் பிறந்து அதிதேஜோ ரூபமாயிருந்ததால் இப்பெயர் பெற்றனர். இவர்மனைவி அசுரர்க்கு அபயங்கொடுத்ததினால் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டபின் இவர் விஷ்ணுவைப் பூமியில் பலபிறவியெடுக்கும்படி சபித்துத் தமது தபோபலத்தால் இறந்த மனைவியின் சிரத்தினை உடலுடன் சேர்த்து உயிர்ப்பித்தனர். (தே~பா.) 2. இவர் தொடையிற் பிறந்ததால் ஒளரவர் என்று பெயர். 3. வருணன் என்னும் ஆதித்தனால் சாருஷ்ணியிடத்து உதித்த மகருஷி. 4. ஒரு வேதியன். சவனருஷியின் தூண்டுதலால் பத்மன் என்னும் நாகராசனிடத்தில் இல்லற தருமம் கேட்டவன். 5. சிவகணத் தலைவன். 6. ஒரு சத்தி. 7. பிருகுவம்சத்துப்பெண்களில் ஒருத்தி தொடையிற் பிறந்து ஹைஹ யரைக் கண்போக்கி மீட்டுந்தந்தவர். (தே பா.)

பிருகுகஞ்சம்

நர்மதை கடலோடு கலக்கும் புண்ணிய க்ஷேத்திரம், Broach, on the river Narbids. This was the hermitage of the Righi Bhrigu.

பிருகுகனர்

பிருகு ருஷியால் யஞ்ஞத்தில் உண்டாக்கப்பட்ட கிங்கரர்,

பிருகுக்ஷேத்ரம்

மேலைச்சமுத்திரக் கரையிலுள்ள புண்யத்தலம், ஆநர்த்த தேசத்து அருகில் உள்ளது.

பிருகுசிரவணம்

இமயகிரியிலே சகரன் தவஞ்செய்த தலம்,

பிருகுசைத்யர்

சோழநாட்டுத் திருக்கண்ணங்குடியில் திருமால் அருள் பெற்றவர்.

பிருகுதுங்கம்

ஒரு புண்ணியத்தலம். இவ்விடம் அருச்சுநன் தீர்த்த யாத்திரையில் பிராயச்சித்தம் செய்து கொண்டனன்.

பிருகுத்துய்மன்

இவன் இரப்பிய முனிவர் புத்திரரால் யாகஞ்செய்வித்துக் கொண்டவன்.

பிருக்குக்ஷத்திரன்

நிடததேசாதிபதி திருஷ்டதுய்மனால் கொல்லப்பட்டவன். (பா. து.)

பிருக்குத்ஜோதி

ஒரு ரிஷி. ஆங்கிரச புத்திரன். (பா. து)

பிருக்தகீர்த்தி

ஆங்கிரச புத்திரன்.

பிருங்கன்

ஒரு வேடராஜன். வீமனுடன் யுத்தம் புரிந்தவன்.

பிருங்கிமுனிவர்

1, இவர் தேவதரிசனப் பிரியராய், மாம்சமில்லாத தேகத்தை யுடையவராய்ச் சிகை வெண்மை நிறம், தண்டம், ஜபமாலை, மூன்று கண், நிருத்தனம் செய்பவராயிருப்பர். (அ. ப. தி.) 2. ஒரு இருடி; இவர் மோக்ஷ காமியாய்ச் சக்தியை விட்டுச் சிவமூர்த்தியைத் தரிசித்து நீங்குகையில் உமாதேவியார் இவரிடம் தமது கூறாகிய உதிர மாம்சங்களை வற்றச் செய்தனர். இருடி நடக்க வலியற்றுச் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி ஒரு கோலுங் காலுந் தந்து அநுக்கிரகித்தனர். இதனால் பிராட்டியார் தவஞ் செய்து பத்தர் வழிபாடு தனக்கும் உரிமை பெற்று அர்த்த பாகத்திற் கலந்தனர். 3. சமீகருஷி, “நீ எனக்குப் பிரியனாயிருந்து உன் பிராணனை எனக்குக் கொடுத்து என்னைக் காக்கவேண்டும்” என்னும் ஒலி கேட்டு யாரோ என் மீது விருப்பாக இவ்வகைக் கூறுகின்றாள் எனக் கருதிக் காமங்கொண்டு அங்கிருந்த உலர்ந்த சருகில் தம் வீரியத்தைவிட அதினின்று ருஷபமுகத்துடன் தோன்றினவர். (சிவ மகாபுராணம்.)

பிருசாசுவன்

1. இவன் அஸ்திரங்களைப் புத்திரராகப் பெற்றவன். (இரா~பால.) 2. (சூ.) சகதேவன் குமரன்.

பிருசாச்வன்

ஒரு பிரஜாபதி. இவன் புத்ரர்கள், உபசம்மார மந்திரரூபிகளாய் விச்வாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசிக்கப் பட்டனர். அவர்களாவார் சத்தியவந்தன், சத்தியகீர்த்தி, திருஷ்டன், ரபசன், பிரதி ஹாரதாம், பராங்முகம், அவாங்முகம், லக்ஷம், அக்ஷவிஷம், திருடநாபம், சுநாபம், தசாக்ஷம், சதவக்தாம், தசசீர்ஷம், சதோதரம் பத்மநாபம், மஹாநாபம், துந்து நாபம், சுநாபம், ஜ்யோதிஷம், கிருசநம், வைராச்யம், விமலம், யோகந்தரம், ஹரித்ரம், தைத்யப்ரசமனம், சுசி, பாஹு, மஹாபாஹு, நிஷ்குவி, விருசி, அர்சிமாலி, தருதிமாலி, விருத்திமான், ருசிரன், பித்ரு சௌமனஸ், விதூதன், மகான், கரவீரகரன், தனதான்யன், காமரூபன், காமருசி, மோஹன், ஆவரணம், சிரும்பகம், சர்வநாபன், சந்தானன், வாணன்.

பிருச்சினி

அநமித்திரன் குமரன்,

பிருடி

ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவர்கள் பஞ்சமகா பாதகஞ் செய்து துன்புற்றுத் தீர்த்த ஸ்நானத்தால் நற்பத மடைந்தவன்.

பிருடிதன்

ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவ்விருவரும் பலதல யாத்திரை செய்து சிவயோகி ஒருவரால் கோபர்வத மகிமை கேட்டு அந்த யோகி பிரசாதித்த விபூதி மகிமையால் கோபர்வதம் அடைந்து சிவசாரூபம் அடைந்தவன்.

பிருதசேநன்

பரு என்பவன் தந்தை பிராஞ்ஞன் குமரன்.

பிருதச்சிரவன்

சசிபிந்து குமரன்.

பிருதிவி

இது, வன்மை, மேன்மை, முதலிய அவயவசையோகமும், கந்தம், ரூபம், ரஸம், பரிசம், சங்கியை, பரிமாணம், வேற்றுமை, சையோகம், விபாகம், அண்மை, சேய்மை, குருத்வம், திரவத்வம், சமஸ்காரம், எனும் பதினான்கு குணங்களுமுடையது.

பிருதீவிராஜன்

1. இவன் ராஜபுத்திர அரசர்களில் ஒருவன். அஜ்மீர், டில்லிக்கரசன், இவனுடைய காலத்தில் ஜயசந்திரன் எனும் கன்னோசி அரசன் ஒருவன் இருந்தான். இவர்களிருவரும் மகாராஜ பட்டம் அடைய விரும்பினர். ஒருவருக் கொருவர் விரோதம் உண்டாகி யுத்த சந்நத்தராயினர். இவர்கள் காலத்தில் ஆப்கானிய அரசனாகிய கோரிமகம்மது இந்தியாவின் மீது படையெடுத்துவர இருவரும் சேர்ந்து அவனைத் துரத்தியடித்தனர். ஆயினு மிருவருக்கும் உள்ள விரோதம் ஒழியவில்லை. ஜயச்சந்திரன் மகாராஜ பட்டம் அடைய யாகம் செய்யத் தொடங்கி யாகம் முடித்தான். ஜயச்சந்திரனுக்கு சம்யுக்தை என ஒரு பெண் இருந்தாள். அவள் பிருதுவியின் வீரதீரங்களைக் கேட்டு அவனை மணக்க விரும்பினாள். பிருதுவியும் அக்கன்னிகையை மணக்க எண்ணங் கொண்டான். சம்யுக்தையின் பொருட்டுச் சுயம்வரம் நாட்டப்பட்டது. அரசர்கள் எல்லாரும் மண்டபத்தில் நிறைந்தனர். பிருதிவி அரசன் மாத்திரம் வரவில்லை. ஜயச்சந்திரன் பிருதிவியிடம் விரோதம் கொண்டதால் பிருதிவியைப் போல் பிரதிமை ஒன்று மண்டபத்தின் வாயிலில் காவலாளிபோல் வைத்தான். இதற்கு முன்பே பிருதிவி மாறுவேடம் பூண்டு அப்பிரதிமைப் புறத்தில் ஒளித்திருந்தான். சுயம்வரமாலை சம்யுக்தையிடம் கொடுக்கப்படச் சம்யுக்தைத் தான் விரும்பியவனைக் காணாது வெளிப்புறத் தில் அவனை யொத்திருந்த பிரதிமைமீது மாலையைச் சூட்டினாள். அவ்விடம் ஒளிந்திருந்த பிருதிவி சம்யுக்தையைத் தூக்கி, குதிரைமீது வைத்துக்கொண்டு குதிரைவீரர் பின் தொடர தனனகரம் வந்து சம்யுக்தையை மணந்தனன், இவன் கோரி மகம்மதுடன் சண்டையிட்ட டில்லியெனும் இந்திரப் பிரஸ்தத்தில் கடைசியாக ஆண்ட அரசன் அநங்கபாலன், இவன் பாண்டவர் வம்சத்தவன். இவனுக்குப் பின் சந்ததியில்லாமற் போனதால் இவன் அக்கினி குல அரசனுடைய மகனும் தன் பௌதானுமாகிய அஞ்மீர் அரசனாகிய பிருதிவிராஜனிடம் டில்லியை ஒப்புவித்தான். கனோஜை ஆண்ட சயசந்திரனும் அநங்க பாலன் போனாகையால் அவனுக்கு டில்லியைக் கைப்பற்ற எண்ண முண்டாயிற்று. அதற்காக கஜினி அரசனாகிய ஷாபுடீனை உதவி கேட்டான். மகம்மதிய அரசன் ஒரு சேனையை அனுப்பினான். பிருதிவிராஜன் சமரசிங்கெனும் சித்தூரரசன் உதவியால் மகம்மதியரை பின்னிடையச் செய்தனன். இதைக்கேட்ட ஷாபுடீன் இரண்டாமுறை பெருஞ்சேனையுடன் வந்து சித்தூரைப் பிடித்தனன். இதில் சித்தூர் ரானாவாகிய சமரசிங் கொலையுண்டான். இதைக்கேட்ட இவன் மனைவி பிருதை தீப்புகுந்தனள். இந்தக் கலகத்திற்குக் காரணமான கனோஜ் நகரத்தரசன் மீதும் முகம்மதியர் எதிர்த்துச் செல்ல சயசந்திரன் தானே கங்கையில் வீழ்ந்து மாண்டனன்.

பிருது

1. (சூ.) வேநன் வலக்கையை இருடிகள் கடைய உண்டான விஷ்ணு வின் அம்சம்; தேவி அக்கையிற் பிறந்த அர்ச்சசு. இவன் அரசாண்ட காலத்தில் பூமி வளம் தராதிருந்ததால், பூமிதேவியைக் கொலை செய்கிறேன் என இவன் எழுந்தனன். இவ்வகை ஆயுத பாணியாய் எழுந்த அரசனைக்கண்டு பூதேவி பசுவுருக் கொண்டு ஓட அரசன் தொடர்ந்து சென்றனன். அப்பூமிதேவி பசுவுருக்கொண்டு அரசனை நோக்கிக் கோபியாதிருக்க என வேண்டிக் கன்றும் பாத்திரமும் கொண்டு வேண்டிய வளத்தைக் கறந்து கொள்ளுக என்றனள். அந்தப்படி அரசன் மனுவைக் கன்றாக்கித் தன் கரத்தைப் பாத்திரமாக்கி ஓஷதிகளைக் கறந்தனன். இருடிகள். பிரகஸ்பதியைக் கன்றாக்கி வேதமயமான பாலைக் கறந்தனர். தேவர்கள், இந்திரனைக் கன்றாக்கி அமிர்தங் கறந்தனர், அசுரர், பிரகலாதனைக் கன்றாக்கிச் (சுரா) மத்திய பானத்தைக் கறந்தனர். பின்னும் இம்முறையே காந்தருவர், சிராத்த தேவதை கள், சித்தர், வித்தியாதரர், கிம்புருஷர், இராக்கதர், விசுவாவசு, அரியமா, கபிலர், மயன் முதலியவரைக் கன்றாக்கி வேண்டிய வளங் களைப் பெற்றனர். பிறகு பிரம்மா வர்த்தமென்கிற புண்ணிய க்ஷேத்திரத்தில் இவன் குமரன் விசித்திரசுவன் அல்லது விசிதாசுவன் யக்கியஞ் செய்கையில் அச்வத்தைக் கவர்ந்து சென்ற இந்திரனை அரசன் குமரன் தொடர்ந்து சென்று அச்வத்தைப் பிடித்து வந்தும் இந்திரன் மீண்டும் யாகத்தை மறுத்தது கண்டு அரசன் கோபித்து இந்திரனைக் கொலை செய்கிறேன் என்று எழத் தொடங்கினன். இருடிகள் இந்தக் காலத்தில் ஜீவ இம்சை ஆகாது; நாங்கள் இந்திரனை யாகத்தில் கொவை புரிகிறோம் என்றனர். இதை அறிந்த பிரமதேவன் இருடிகளை மறுத்த அரசனுக்குக் கோனசதக்கிருது எனப்பெயர் தந்து சமாதானப்படுத்தினன், பின் இவன் அரியினாலும் சநகர் முதலியவர்கள் ளாலும் யோகம் உபதேசிக்கப்பட்டு மனைவியுடன் தவமேற்கொண்டு காடடைந்து. சுவர்க்க மடைந்தனன். இவன் விஷ்ணுவின் அம்சமாய்ப் பிறந்தவன். இவன் வேள்வியில் விஷ்ணு சூத புராணிகர்போல் இருந்து புராணஞ் சொல்லினர். இவன் மற்றக் குமரர் அந்தர்த்தானவன், தூமா கேசன், அரியச்வன், திரவிணன், விகுகன், (மச்ச~பு.) 2. யாதவரில் ஒருவன், 3. (சூ.) அதோ குமரன், விச்சு சந்தன் தந்தை. இவனுக்குச் சாசவதன் விஸ்வகன் எனவும் பெயர். 4. ருசிராசுவான் குமரன்; இவன் குமரன் பாரன். 5. சசிபிந்தின் குமரன், 6. ருசகன் குமரன். சியாமகன் தம்பி. 7. விருஷ்ணி குமரன், 8. (சூ.) அநாண்யன் பொத்திரன், இவன் குமரன் திரிசங்கு. 9. பிராசதன் குமரன். 10. பரன் குமரன்,

பிருது கிருதி

சசிபிந்து குமரன்,

பிருது சேநன்

பிராஞ்ஞன் புத்திரன். பௌரன் தந்தை.

பிருதுகர்மன்

சசிபிந்து குமரன்,

பிருதுசக்ரவர்த்தி

பூர்வஜன்மத்திற் குத்திரன் அயோத்தி நகரில் இருந்த விஷ்ணுவாலய பணிவிடையால் மறுபிறப்பில் சக்ரவர்த்தியாயினன். (சிவமகாபுராணம்.)

பிருதுசேணன்

விபுவின் குமாரன்; தாய் பராகி, தேவி ஆகுதி, குமரன் நந்தன்.

பிருதுலாக்ஷன்

சதுரங்கன் குமரன். இவன் குமரன் பிரகத்ரதன். இவன் கரை திரை மூப்பின்றி நெடுநாளாசியன்றி தேவர்களுக்கு அமிர்தம் கடைந்து கொடுத்த சூரியவம்சத் தரசன்,

பிருதூதகம்

1,உசங்கு காண்க. (பார். கல்லி.) 2. இது ஓர் தீர்த்தம். (பா~வன.) Gaho a where the celebrated Brahmayoni thirtha is situated. It is 14 miles to the west of Thaneswara,

பிருதை

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி. இவள் இளமையில் தங்கள் தந்தையிடம் வந்திருந்த திருவாசரை வழிபட்டு நினைத்த தேவர் தன்னிடம் வரும்படி மந்திரம் பெற்று அம்மந்திர பலத்தை யறியத் தான் தனித்திருக் கையில் மந்திரத்தைச் செபித்தனள், அம்மந்திர தேவதையாகிய சூரியன் முன்னின்று மந்திர பலத்தை யறிவிக்க இவள் தான் கன்னிகை யென்று அறிவித்தனள். சூரியன் இவளுக்குத் தக்க பருவந்தந்து கற்பாதானஞ் செய்து நீங்கினன். இவளிடம் அக்காலத்துக் கவசகுண்டலங்களுடன் கர்ணன் பிறந் தனன். பிறந்த அக்குமானை இவள் ஊர் அலருக்கு அஞ்சித் தன் முன் தானையில் சிறிது கிழித்துப் பெட்டகத்தடக்கிக் கங்கை வெள்ளத்தில் விட்டனள். இவள் பிறகு பாண்டுராஜனை மணந்தனள். இவளுக்குக் குந்தி யெனவும் பெயர். தந்தையைக் குந்திபோஜன் எனவுங் கூறுவர்.

பிருந்தாவனம்

1. யமுனைக்கு மேற்கில் உள்ள துளசிவனம். இவ்விடம் கிருஷ்ண மூர்த்தி பத்தர்களுக்குப் பிரத்தியக்ஷமானர். 2. வலாசுரன் தேவியாகிய பிருந்தை உயிர் நீத்த ஸ்மசானம். இதில் திருமாலின் மயக்கந் தீர்தல் பொருட்டுப் பார்வதியாராலும் திருமகளாலும் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்தன. (பதுமபுராணம்.)

பிருந்தை

1. இவள் சலந்திராசுரன் தேவி. இவள் மீது விஷ்ணுமூர்த்தி மயல்கொண்டு சலந்திரன் சிவமூர்த்தியின் சக்கரத்தால் இறந்ததை அறியாத இவள் இடம் அவனைப்போல் உருக்கொண்டு புணர்ந்து இருந்தனர். இவரது புணர்ச்சி வேறுபாட்டாலும் மற்ற அடையாளங்களாலும் விஷ்ணுவென்று அறிந்த இவள் தீப்புகுந்தனள். அதனால் மயல் தெளியாத விஷ்ணு மால் கொண்டனர். திருமகள் சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி உமைக்குக் கூறப் பிராட்டி சிலவிதைகள் பிரசாதித்து இவ்விதைகளைப் பிருந்தையிருந்த சாம்பலில் தூவுக என்றனள். அவ்வகை திருமகள் செய்தனள். அதில் துளசி உண்டாயிற்று. அதனை விஷ்ணுமூர்த்தி அணிந்து மயல் தீர்ந்தனர். (காஞ்சிபுரா.) 2. இவள் திருமால் தன்னைச் சலந்தரனாக உருமாற்றி இவளை வஞ்சித்ததால் இவள் திருமாலை உன் மனைவியை ஒரு அசுரன் வஞ்சித்துச் செல்லவெனச் சாபம் தந்து தீப்புகுந்தனள். (பதுமபுராணம்.)

பிருமவலி

ஒரு இருடி, வேததரிசன் மாணாக்கன்.

பிருமாவிருதன்

இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன்.

பிருஷதபி

1. துருபதன் தந்தை. 2. வயைவத்ஸத்துத மதுவின் குமரன். (பா. துரோ.)

பிருஹத்ரதன்

இவன் அங்கதேசாதிபதி. இவன் விஷ்ணுபாதம் எனும் மலையில் யாகஞ் செய்து யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் அக்னிஷ்டோமம், முதலாய ஏழு யாகங்களில் தானஞ் செய்தவன். இவன் பெரும் புகழடைந்தவன், (பார~சாந்தி.)

பிரேதஜன்மம்

பூர்வஜன்மத்தில் மகாபாபம் செய்தவனே பிரேதஜன்மம் அடைவான். ஒருவன் பல தருமங்களைத் தாபித்துவைத்து இறக்க அவன் குலத்தில் பிறந்தவன் அவற்றை யழிப்பானாயின் அவனும், தருமசாலை, வயல், பூங்கா முதலியவற்றின் எல்லையைப் புரட்டினவனும் குளத்தைத் தூர்த்தவனும், சண்டாளனால் அடிபட்டிறந்தவனும், ஜலத்தில் மாய்ந்தவனும், பாம்பேனும் நாயேனும் கடித்திறந்தவனும், இடிவிழுந்து இறந்தவனும், நெருப்பாலும், மாடுமுட்டியும், கழுத்தில் சுருக்கிட்டும், பாஷாணம் தின்றும், ஆயுதத்தாலும், சமஸ்காரமில்லாமலும், தேசாந்தரத்தில் திக்கற்றும் குஷ்ட முதலிய மகாரோகங்களாலும், திருடனாலும், தாய் தந்தையருக்குச் சிரார்த்தம் செய்யாமலும் மாய்ந்தோர் பிரேத ஜன்மம் அடைவார். பப்புருவாகனைக் காண்க.

பிரேதபிதுர்க்கள்

பித்ரு, பிதாமஹா, பிரபிதாமஹா, விகுத்தப்ர பிதாமஹா, மாத்ரு, மாதாமஹி, பிரமாதாமஹி, விருத்தப்பமா தாமஹி, சர்வபித்ருக்கள்.

பிரேமாபாய்

இவள் காசியில் அரிபக்தி மேலிட்ட அணங்கு. பாகவதரிடத்தும் பாகவதத்தினிடத்தும் அதிக அன்புகொண்டு நாள் தவறாது பாகவதகால க்ஷேபஞ் செய்து வருகையில் ஒருநாள் பாகவதர் அவர்களுக்கு உணவளித்தற் பொருட்டு தன் மகனையனுப்பிப் பாகவதம் கேட்டுத் தனக்குக் கூறும்படி செய்து பாகவதர்க்கு உணவாதிகள் சமைத்தளித்துத் தன் மகன் காலக்ஷேபங் கேட்டு வரக்கண்டு மகனுடன் தானும் உண்டு மகனை நோக்கி கேட்ட பாகவத கதை எனக்குக் கூறுக என்றனள். குமரன், கண்ணன் தயிர்த்தாழியை யுடைத்து வீதியிற் செல்லக் கண்ட தாய் கண்ணனைத் தொடர்ந்து பிடிக்க அகப்படாதது கண்டு வருந்தக் கோபிகைகள் தாங்கள் அன்று கண்ணன் செய்த தீமைகள் கூறக் கேளாதீர் பிரத்யக்ஷமாகக் காண்க வென்றனர். இதைக் கேட்ட தாய் முகம் வாடியிருக்கையில் கண்ணன் அருகுறத் தாய் தாம்பினாற் பிணிக்கத் தாம்புகள் பற்றாது வருந்துகையில் மற்றொரு தாம்பிற்கு இடந்தந்து உரலில் பிணிபட்டு நிற்கையில் கோவியர் நகைத்துச் சென்றனர். கண்ணன் இனித் தீமை செய்யேன் கட்டவிழ்க்க எனத் தீனபாவனை காட்டத் தாய் இரங்கா திருந்தனள், என்று மகன் கூறிய கதை கேட்கையில், கண்ணனை யார்சென்று கட்டவிழ்ப்பார் என்று கண்ணீருகுத்து இதோ நான் வந்து கட்டவிழ்க்கிறேன் என்று உயிர் நீங்கிப் பரமபத மடைந்தவள்,

பிர்பலன்

விஷ்ணுபடன்.

பிறப்பு

(7) தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர் வாழ்வன தாவாம, இவற்றின் யோனி பேதம் எண்பத்து நான்கு நூறாயிரம், அவையாவன தேவர் பதினான்கு நூறாயிரம், மக்கள் ஒன்பது நூறாயிரம், விலங்கு பத்து நூறாயிரம், புள், பத்து நூறாயிரம், ஊர்வன பதினொரு நூறாயிரம், நீர்வாழ்வன பத்துநூ றாயிரம், தாவாம் இருபது நூறாயிரம். அன்றித் தேவர் பதினாறு நூராயிரம் எனவும், தாவரம் பதினெட்டு நூறாயிரம் எனவும் கூறுவர்.

பிறர் மனைத்துயின்றமை விறலி கூறல்

பரத்தையர் சேரியிடத்துத் தலைவன் தங்கினபடி இத்தன்மைத்தெனப் பானிச்சி எடுத்துச் சொல்லியது. (பு~வெ பெருந்)

பிறவாநெறிகாட்டியார்

திருமலைராயன் சமஸ்தானத்திருந்த புலவரில் ஒருவர்.

பிறிதி நவிற்சியணி

கருதிய பொருளை அதற்குரிய விதத்தாற் கூறாது மற்றொரு விதத்தாற் கூறுதலும், கபடத்தினால் தன்னாலிச்சிக்கப் பட்டதைச். சாதித்தலுமாம். இதனைப் பரியாயோக்தாலங்கார மென்பர். (குவல.)

பிறிதின் குணம் பெறலணி

அஃதாவது, ஒரு பொருளானது தன் குணத்தை யிழந்து பிறிதொன்றின் குணத்தைக் கவர்தலாம். இதனை வடநூலார் அதற்குணாலங் காரமென்பர்.

பிலக்ஷப்ஸ்ரவணம்

ஸரஸ்வதிக்கு உற்பத்திஸ்தானம்.

பிலக்ஷம்

ஒரு தீவு; மேல் சமுத்திரத்தில் உள்ளது. அநுமான் சீதா பிராட்டியைத் தேடிச்சென்ற காலத்துப் பாலைவனத்திருந்த பிலத்திற் சென்று அவ்விடத்திருந்த சுவயம்பிரபை தன்னைச் சுவர்க்கத்துக்கு அனுப்ப வேண்டியபோது பிலத்தைப் பிளந்து வெளியே வந்ததால் உண்டாகியது

பிலசேநன்

துரியோதனன் தம்பி.

பிலம்லோசை

ஒரு அப்ஜாஸ்திரி.

பிலாங்கர்

இது வயிற்றில் பையுள்ள மிருக இனத்தில் சேர்ந்தது. பூனையைப் போன்றது. இதன் பின்னங்கால் விரல்கள் மனிதர் விரல்போலும் முன்னங்கால் பூனை விரல்கள் போலிருக்கிறது. இது பக்ஷிகளைப் பிடித்துத்தின்கிறது. இவ்வினத்தில் கஸ்கஸ் என்றது ஒன்று.

பிலிப்பியன் மதம்

(Philipian) இத்தீவிலுள்ளோர் சூரியசந்திரர்களை ஆராதிப் போர், பின்னும் அநேக தேவர்களையும் பூஜிப்பர். பாட்டலா என்னும் தேவன் சிருஷ்டிக் கடவுள். இத்தேவனை அப்பா (Appa) என்னும் பெயரினால் விக்கிரகஞ் செய்து பூஜிப்பர்.

பில்கணியன்

ஒரு வட நூற்புலவன், பாஞ்சால தேசாதிபதியின் புதல்வியாகிய யாமினி பூர்ணதிலகைக்குக் கல்வி ஆசிரியனாகி அவளையே மணந்து கொண்டவன். இவன் செய்த நூல் பில்கணீயம்,

பில்வநதி

ஒரு நதி.

பில்வம்

சிவார்ச்சனைக்குரிய பத்திரம். இது பீமனால் சிவார்ச்சனைக்கு உபயோகிப்பது.

பிளாபாய்

ஒரு பிரதானி புத்ரி. இவள் ஒருவனை இளமையில் மணங்கொண்டு கைமையாயினள். இவள் இளமை தொட்டே அரிபூசனை யியற்றித் தன் கணவனிறந்த பின் தந்தை பாலடைந்து பூசைவழுவாது வருகையில் தந்தை இறக்க உடன் பிறந்தாரிருவரும் நாடுகளைப் பிரித்துக் கொன்டனர். இவ்விருவருள் தமயனைப் பினாபாயி பூசைப் பெட்டகத்துடன் அடைந்து ஜீவித்து வந்தாள். பிரிவுபட்ட இளையோன் தமயனைப் பகைத்து அவன் பொருள்களைக் கொள்கையில் பூசைப்பெட்ட சத்தையும் கொள்ளைக் கொண்டனன். பிளாபாயி, பூசைப்பெட்டகத்தைக் காணாது வருந்தி, அது வாராததால் உணவு கொண்டிலள். ஐந்தாநாள் பெருமாள் ஒருவேதியர்போல் கனவிடைவந்து பூசைப்பெட்டகத்தை உதவிச் சென்றனர். பிளாபாயி முன்போல் பூசையியற்றி உணவுகொன்டனள், இச்செய்தியறிந்த தம்பி தமயனையடைந்து தான் செய்த குற்றத்தை மன்னிக்கவேண்டி முன் போல் நாடு முதலிய கொடுத்துச் சென்றனன்.

பிளிந்தாள்

ஒருவகை மிலேச்சசாதியார்.

பிளோர்டியன் மதம்

இத்தேயத்தவர் விக்கிரக ஆராதனை செய்வர். பின்னும் டாயாவென்னும் பிசாசியை வணங்குவர். இவர்கள் ஆலயங்களில் சபங்களுக்கு உயர்ந்த பதார்த்தங்களை வைத்துப் பூசிப்பார்கள். இவர்களில் அபாலசிட் என்பவர்கள் சூரியனை ஆராதிப்பர். இவர்கள் குருக்கள்மார் ஜவனஸ் என்னும் பெயருடையவர்கள். இவர்கள் சூரியனுக்கு முன் முழங்காலூன்றி நமஸ்கரித்தலேயன்றிச் சாம்பிராணி தூபமுமிடுவர். பின்னும் சூரியனைக்கண்டு கூவும் பணிகளுக்கு ஆகாரமான தேனை ஆராதிப்பர். இச்சாதியார் தங்கள் முதல் சந்ததியைத் தேவர்களுக்கும் ராஜாவிற்கும் பலியிடுவர். இச்சாதியரில் கன்னிறந்தால் ஸ்திரீ மூன்றுகாட்கள் உபவாசம் செய்யவேண்டும். சிலர் சவத்தை அலங்கத்துப் பெட்டியில் வைத்து மூன்று வருஷம் பூஜிப்பர். இவர்கன் புண்ணிய பாபங்களினால் சவர்க்க நரகமடைவ ரென்றும் வேறு ஜன்மமடைவார் என்றும் கூறுவர்.

பிள்னை அப்பன்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

பிள்ளான்

திருமலை நம்பிக்குக் குமரர். உடையவர் திருவடி சம்பந்தி. திருவாய் மொழிப் பிரபந்தத்திற்கு ஆறாயிரப்படி வியாக்கியானம் செய்தவர். உடையவர்க்கு ஞானபுத்திரர்,

பிள்ளை

இது முதலில் வேளாளருக்குப் பட்டமாயிருந்தது. இது தற்காலம் அகமுடையான், அம்பலக்காரன், கொல்லா, இடையன், நாயர், நோக்கன், பணிச்சவன், பணிக்கன், பறையன், செய்யக்காரன், செம்படவன், சேனக் குடியன், தேவதாசிப் பிள்ளைகள், குறவர் முதலியவர்க்கும் பட்டமாக இருக்கிறது.

பிள்ளை அரசுநம்பி

ஆளவந்தார் குமரர். மணக்கால் நம்பியின் திருவடி சம்பந்தி.

பிள்ளை பிள்ளையாழ்வான்

அநந்தாழ்வான் திருவடி சம்பந்தி. கூரத்தாழ்வான் சீடர்.

பிள்ளைக்கூட்டம்

வட ஆர்காட்டு மான்யுலில் இது வன்னியரின் வைப்பாட்டிப் பிள்ளைகளின் பட்டமாக இருக்கிறது.

பிள்ளைத் திருமலைநம்பி

உடையவர் திருவடி சம்பந்தி. பெரிய திருமலை நம்பியுடன் இருந்தவர். எழுபத்தினாலு சிம்மாசனாதிபரில் ஒருவர். (குருபரம்பரை)

பிள்ளைத் திருவாய் மொழியரையர்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபரில் ஒருவர்.

பிள்ளைத் தெளிவு

துடியின் கண் மகிழ்ந் தொலிப்பத் தன் புண்ணைப் பிரியப் பட்டு விரும்பிக் கூத்தாடியது. (பு. வெ.)

பிள்ளைத்திருநறையூர் அரையர்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதியரில் ஒருவர். (குரு பரம்பரை.)

பிள்ளைபிறந்த வீட்டிலிருந்து குழந்தையைக் காக்கும் தேவதைகள்

சீவந்திகை இராகை, அதுமதி, சீனிவாலி, குருவாதக்னி இவர்கள் கன்னிகை யாஷஷ்டி தேவி சிக்ஷுரகணி,

பிள்ளைப் பெயர்ச்சி

புள்ளை விலக்கிப் பூசலைத் தாங்கினவனை மாலையினை யுடைய மன்னன் தண்ணளி செய்தது. (பு வெ)

பிள்ளைப்பெருமாளையங்கார்

இவர் மதுரையில் திருமலை நாயகர் அரசு செய்கையில் ஒரு இராயசவேலையில் அமர்ந்து பகவத் குணானுபவராய் இருக்கையில் ஒரு நான் அரச சபையில் தமது உத்தரீயத்தைக் கிருஷ்ண கிருஷ்ண என்று தேய்த்தனர். அரசன் தேய்த்தது என் என ஐயங்கார், திருவரங்கத்தில் பெருமாள், திருத்தேரில் உற்சவம் கொள்ளும்போது தீவட்டியின் தீப்பிடிக்கத் திரைபற்றியது அதை அவித்தேன் என்றனர். அரசன் இதன் உண்மையை வேவுகாரரை ஏவி யறிந்து ஐயங்காரை இனி உமக்கு நமது உத்தியோகம் வேண்டாம் உமது மனப்படி இருக்கவென்று தேவரீர்க்கு வேண்டியதென்ன வென்றனன். ஐயங்கார் திருவரங்கத்தில் ஒரு அறையும் தளிகைப் பிரசாதமும் வேண்டுமென அந்தப்படி கட்டளையிட்டு அவ்விடம் அனுப்பினன். ஐயங்கார் திருவரங்கஞ் சென்று பல பிரபந்தங்கள் பாடி நொண்டிப்பசு தன் மேல்விழ அது காரணமாகப் பரமபதம் அடைந்தனர். இவர்க்கு மணவாளதாசர் எனவும் பெயர். இவர் செய்த நூல்களுக்கு பிள்ளைப்பெருமாள் பிரபந்தமெனப் பெயர். அவை நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதி முதலிய எட்டாம். இவர் காலம் சைவ எல்லப்ப நாவலர் காலம் என்பர்.

பிள்ளையாட்டு

பகைவர் குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத் திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது. (பு வெ.)

பிள்ளையார் பாளையம்

ஒரூர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சைனர்களை வாதில் வெல்லுதர்கு வந்து திருக்கூட்டத்தோடு முதலில் தங்கிய இடமாம். இது மதுரைக்குத் தெற்கேயுள்ளது. (திருவிளையாடல்)

பிள்ளையுறங்காவில்லிதாசர்

1. உடையவர் திருவடி சம்பந்தி; தாஸநம்பி; உடையவர்க்குக் கருவூலம் காவல் காப்பவர். 2. இவர் சோழனிடம் ஜட்டிவேலை செய்திருந்தவர். இவர் உடையவர் காவிரி ஸ்நானத்திற்குப் போய் மீள்கையில் அவரைத் தண்டன் சமர்ப்பித்து நிற்பர். உடையவர், கோஷ்டிகளை நிஷேதித்து இவர் தோளின் மீது தமது கரத்தை விட்டுக் கொண்டு வருவர். இவ்வாறு வருதலைக் கண்ட கோஷ்டிகள் அசூயை கொண்டதறிந்த உடையவர் ஒருநாள் பிள்ளை யுறங்காவில்லி தாசரது ஆசார்ய பக்தி தெரிவிக்க எண்ணிக் கோஷ்டிகள் ததியாராதனத்திற்குச் சென்றிருக் குங்கால் ஒருவரை விட்டு அவர்கள் உலரவிட்ட வஸ்திரங்களில் ஒவ்வொரு முழம் கிழித்துவிடக் கட்டளை யிட அவர்களும் அவ்வாறே செய்தனர். பின் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் உண்டு வந்து தம் வஸ்திரங்களைக் கண்டு குறைகூற உடையவர் இருப்பவர் பாகவதர்கள். ஒருவருக்கொருவர் செய்திருக்க வேண்டும். அது பாகவத கைங்கர்யமாகட்டுமே என்று சமாதானங் கூறவுங் கேட்காமல் முணு முணுத்தனர், இது நிற்க, உடையவர் ஸ்ரீவைஷ்ணவர்கள் இருவர்களை அழைத்துப் பிள்ளையுறங் காவில்லி தாசர் மனைவியார் பொன்னாச்சியார் உறங்குஞ் சமயத்தில் அவரது ஆபரணத்தைக் கழற்றிவரக் கட்டளையிட அவ்வாறு சென்றவர் ஆபரணங்களைக் கழற்று கையில் அவள் மறுகாதிலுள்ளவைகளையும் பாவத கைங்கர்யமென்று கழற்றிக்கொள்ளத் திரும்புகையில் விழித்தனள் எனவுணர்ந்து ஸ்ரீ வைஷ்ண வர்கள் நீங்கி உடையவரிடம் பணிகளைத் தந்தனர். இச்செய்தியை மனைவி யாலறிந்த தாசர் பாகவதர்க்கு மற்றையாபரணங்களையும் கொடாமல் அபராதஞ் செய்தனையாதலால் நீ எனக் காகாயென்றனர். இவ்வரலாற்றிந்த உடையவர் இவ்விருவர் சங்கதிகளையும் பாகவதர்க்குக் காட்டி ஆசார்ய பக்தி தெரிவித்துப் பொன்னாச்சியாரைப் பிள்ளையுறங்காவில்லி தாசரிடம் கூறியேற்கச் செய்தனர்.

பிள்ளையுறந்தையுடையார்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

பிள்ளைராஜ மகேந்திரப் பெருமாளரையர்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதி களில் ஒருவர். (குருபரம்பரை,)

பிள்ளைலோகாசாரியர்

வடக்குத் திருவீதிப்பிள்ளையின் குமரர். இவர் குரோதன வருஷம் ஜப்பசிமாதம் திருவோணத்தில் பிறந்தவர். அழகிய மணவாள நயினார்க்குத் தமயன். துருஷ்கர் கலகத்தால் பெருமாள் நாய்ச்சிமாருடன் வெளியேறின பொழுது பெருமாளைப் பிரிதலாற்றது தாமும் முதலிகளுடன் புறப்பட்டுச் சோதிடக் குடியென்னும் கிராமத்தில் நோய் சாத்திக்கொண்டு விளாஞ்சோலைப் பிள்ளையைத் திருவனந்தபுரத்தமாத்தித் தாம் திருநாட்டிற்கு எழுந்தருளினவர். இவர் திருவடிகளில், கூரகுலோத்தம தாசர், மணப்பாக்கத்து நம்பி, கொல்விக் காவல் தாசர், கோயிலண்ணர், திருவாய்மொழிப் பிள்ளையவர் தகப்பனார் அண்ணர், விளாஞ்சோலைப் பிள்ளை ஆச்சயித்தனர். இவர் செய்த நூல்கள் ரஹஸ்யத்திரயம், தத்வத்திசயம், ஸாரசங்கிரகம், ஸ்ரீவசன பூஷணம்.

பிள்ளைவழக்கு

தப்பாமல் நிமித்தஞ் சொன்னார்க்கு வஞ்சியாதே பெறு முறைமையைச் சொல்லியது. (பு~வெ.)

பிவிக்கிரந்தன்

திருதராட்டிரன் குமரன்.