அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
நகன சித்தை

நக்ன சித்தின் குமரி, கிருஷ்ணன் பாரி, இவளுக்குச் சவுந்தரியவதி யெனவும் பெயர்; இவளுக்கு அசுவசேனன் முதலிய பதின்மர் குமரர்.

நகபானன்

அங்கன் குமரன்; இவன் குமரன் திவிரதன்.

நகரன்

கத்ரு குமரன், நாகன்,

நகர்வன

இவ்வினத்திற் சில தரையில் ஊர்ந்து செல்வன. சில கால்களால் நடப்பன. சில பறப்பன உண்டு. நகர்வன புழு, பாம்பு முதலிய; நடப்பன எலி, கீரி, அணில் முதலிய; பறப்பன ஈ, கொசுகு, வண்டு முதலிய. இவற்றிற் சில மனிதர்க்கு உதவியாயும், சில துன்பஞ் செய்வனவாயு மிருக்கின்றன. பட்டுப் புழு மண்புழு போல்வன பட்டைத் தருகின்றன. மண்புழு பூமியைத் தொளைத்துப் பண்படுத்துகின்றன. சில வண்டுகள் துன்பஞ் செய்யும் கொசு முதலியவற்றைத் தின்று சுகமுண்டாக்குகின்றன. மண்புழ : இது, மண்ணில் அழுகிய பொருளைப் பிறப்பிடமாக்கொள்வது. இதற்குக் கைகால் முதலிய உறுப்புகளில்லை. இதற்கு வாயும், ஆசனத்வாரமும் உண்டு. இது வளைதோண்டும்போது மண்ணை வாய்வழி யுறுஞ்சி மலத்வாரவழி விட்டுவிடும். இவ்வினத்தில் சிறுபாம்பு என ஒன்றுண்டு. அது விஷமுள்ளது. ஒளிப்புழ : இது, மேனாடுகளிலுள்ள புழுக்களில் ஒன்று. இப்புழுவின் உடலில் ஒருவகை ஒளியுண்டு. அவ்வொளியால் விரோதிகளைப் பயமுறுத்தும். அவ்வொளியைத் தான் வேண்டும் போது உண்டாக்கிக் கொள்கிறது. ஆண்புழுவிற்கு ஒளி யில்லை. அது பறந்து போய்விடுகிறது. இது தளிர்களை உணவாக் கொள்ளும். இன்னும் ஐரோப்பாவில் ஒருவகைப் புழு (Bristleworm) இப்புழு அட்டையைப் போன்று நகருகையில் ஒருவித திரவத்தைக்கொண்டு நகருகிறது. இதனுடம்பில் மயிர்களடர்ந் தழகாயிருக்கும் என்பர். சிறுப்புழு : சாணிகளிலும் மலங்களிலும், அழுகிய மாம்சங்களிலும், புளித்த மாக்களிலும், ஈக்களிடும் முட்டைகளிலும், அழுகிய பொருள்களிலுண்டாம். சில புழுக்கள் மரங்களிலும், இலைகளிலும், இடத்திற்குத் தக்க நிறம் பெற்றிருக்கும். உடம்பில் கூடு கட்டும் புழு : சில புழுக்கள் தங்கள் வாயிலுள்ள எச்சிலைக்கொண்டு தங்களைச் சுற்றிக் கூடுகட்டிக்கொண்டு அவைகளை மூடவும் திறக்கவும் வைத்துத் தம்மைக் காத்துக்கொள்கின்றன, எறும்பின் பகை : சில புழுக்கள் மண் வெட்டி போன்ற தலைகளைப் பெற்றுப் பூமியில் குழிதோண்டி அக்குழியைச்சுற்றி மணலைக் காவலாகக் கொண்டிருக்கும். ஏதேனும் எறும்பு தவறிக் குழியில் விழின் அதனை ஆகாரமாகக் கொள்ளும், இவ்வகை புழுக்கள் ஆபிரிக்கா பாலைவனத்திலதிகம் உண்டு என்பர். ஒருவகை வண்டு பாம்பார்டியர் பீட்டல் இது தன் பின்புறத்தில் ஒருவகை விஷத்ரவத்தைப் பீச்சுவது.

நகுஷன்

1. (சந்.) ஆயுவிற்குச் சுவர்ப்பாவியிடம் பிறந்தவன். புரூரவசுவின் பேரன், காண்டவப்பிரஸ்த மாண்டவன். செம்படவர் வலையிலகப்பட்ட சௌநகரை மீட்கப் பசுவை விலையாகத் தந்தவன். இவன் நூறு அச்வமேதயாகஞ் செய்து இந்திரபதம் பெற்றுப் புலோமசையாகிய இந்திராணியிடம் சத்த முனிவர்களும் பல்லக்குத் தாங்கச் செல்கையில், விரைவில் செல்லும் அவாவால் காமவெறி மீறிச் சர்ப்ப சர்ப்ப வென்றனன். இதனால் அகத்தியர் கோபித்துச் சர்ப்பமாகச் சபித்தனர். இவன் பெரும்பாம்பாகவிருந்து வீமசேநனை விழுங்கித் தான் கேட்ட தருமசந்தேகங்களுக்கு விடையளித்த தருமபுத்திர ரால் சாபம் நீங்கப் பெற்றவன். இவன் தேவி பிரியம்வதை; குமரர் ஆயாதி, உத்தவன், சங்கியாதி, யயாதி, எதி, கிருதி, (பாகவதம்.), 2. கத்ரு குமரன், நாகன். நளனைக் கடித்தவன். 3. பிரசாபதிக்கு ரதையிடம் பிறந்தவன் வசு.

நகைக்கும் பறவை

இது ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ளது. இஃது இந்தியா நாட்டின் மீன்குத்திப் பறவை போலிருக்கிறது. இதற்குத் தலையும் வயிறும் கருமை கலந்த செந்நிறம், பின்புறம் நீலங்கலந்த பசுமை. மாம்ஸபக்ஷணி. கழுத்து உடலுடன் சேர்ந்தே பிரிவிலாதிருக்கிறது. இஃது இனிய குரலுடன் முதலில் பாடத் தொடங்கிப் பிறகு பின் உரத்த சத்தத்துடன் வெகுநேரம் ஹா, ஹா, ஹா என்று நகைக்கிறதாம். இது, அதிகாலையிலும் மனிதர் படுக்கைக்குப் போகும் போதும் நகைக்கிற தாம். பழகிய பறவைகள் சில குறிப்பிட்டால் நகைக்கின்றன. இவற்றை வைத்தியசாலைகளில் நோயாளிகளைக் களிப்பிக்க வளர்க்கின்றனர்.

நக்கணன்

கடைச்சங்கமருவிய புலவர்.

நக்கண்ணையார்

இவர் பெண்பாலார். பெருங்கோழிநாய்க்கன் மகள். நக்கண்ணை எனவும் கூறப்படுவர். நக்கண்ணை சுலோசனை என்னும் வடசொல்லின் மொழி பெயர்ப்பு. அரசற்கு மகட்கொடை நேரும் வணிக மரபினர். உரையூர் வீரைவேண்மான்வேளியன் தித்தனின் மகன். போர் வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் சோழன் தன் தந்தையோடு பகைத்து நாடிழந்து புல்லரிசி கூழுண்டு வருந்தியவன். ஆமூர் மல்லனைப் போரில் வென்றது கண்ட இந்தக் கண்ணையார் அவ்வரசனைத் தாம் உணர்ந்து முயங்க விரும்பித் தம் காதன் மிகுதியையும் அவனை அணைத்து முயங்குதற்கு அவையத்தார் காண்பரே என்றஞ்சுவதையும் அவனைப் பல்காலும் காணப்பெறினும் முயங்காமையினாலே தம் மேனி பசலை பூத்ததையும் பலவாறாக விரித்துக் கூறி வருந்துவாராயினார். புறம் (83,84) இன்னும் தாம் சிலம்பொலிப்ப ஒடிச் சென்று தம் மனையின் கண்ணுள்ள பனையடியில் மறைந்து நின்று நோக்கித் தாம் தம்முடைய வளையும் கலையும் முதலானவை தோற்கும் ஆண்மை உடையன் அவன் எனவும் கூறியுள்ளார். புறம் (85). இவர் நெய்தலையும் குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். சோழர் மரபின் அழிசியினது ஆர்காட்டைச் சிறப்பிக்கிறார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (19,87) பாடல்களும் அகத்திலொன்றும் புறத்தில் மூன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நக்கத்திரசீவகன்

க்ஷத்திரியப் பெண்கள் சோரத்தில் மறையவனைக் கூடிப்பெற்ற குமரன்.

நக்கீரனார்

இவர் மதுரைக்கணக்காயனார் மகனார். கடைச்சங்கத்துத் தலைமைப்புலவர். இவர் முடத்திருமாறன் கடைச்சங்கம் கண்ட காலத்தில் புலவர் திலகராயிருந்து இறையனார் திருவாய் மலர்ந்தருளிய அகப்பொருளுக்கு உரைகண்டு வங்கிய சூடாமணிபாண்டியன் காட்டிய பொற்கிழி பெறத்திருமுகப்பாசுரம் ஆலவாயாரிடம் பெற்றுத்தந்த தருமிக்கு அப்பாசுரத்தில் குற்றங்கூறி மறுத்துச் சிவமூர்த்தி யெதிரில் வந்து கேட்கவும் அஞ்சாது குற்றங் கூறி மறுத்த அக் குற்றத்தால் பொற்றாமரையில் வீழ்ந்து கறையேறி அகத்திய முனிவரிடம் அவ்விலக்கணமுணர்ந்து பார்வதி பிராட்டியார் கூந்தலுக்கும் செயற்கைமணம் என்ற பழிப்பால் குட்டநோயடைந்து அது தீரும்படி ”ஆலவாயிலமர்ந்தாய் தணிந்தென்மேல், மெய்யெரிவு தீர்த்த ருளுவேதியனே” எ ம், “என்மேற், சீற்றத்தைத் தீர்ந்தருளுந் தேவாதிதேவனே, யாற்றுவு நீ செய்யுமருள்” என்றும் வேண்டி வெப்புத்தணியத் திருக்கைலையடையச் செல்கையில் வழியிலிருந்த ஒரு தீர்த்தத்தையும் ஆலமரத்தையுங் கண்டு சிவபூசை செய்ய உட்கார்ந்து சிவபூசை செய்கையில் ஒரு ஆலிலை மரத்திலிருந்து வீழ்ந்து பாதி மீனாகவும் பாதிபறவையாகவும் மாறிச் சலத்தில் விழுந்தபாகம் பறவையையும் பூமியில் வீழ்ந்தபாகம் மீனையும் இழுக்கக் கண்டு சிவபூசையினின்று மனத்தைமீட்டு இதனைக் கண்டனர். இது நிற்க அயக்கிரீவன் எனும் பிரமரக்ஷஸு ஒன்று, இரு மனப்பட்டுச் சிவபூசையியற்றும் வித்துவான்கள் ஆயிரவரை ஒருமிக்க உண்ண எண்ணங்கொண்டு தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்னமரை ஒரு குகையில் அடைத்து வைத்து ஒருவருக்காகத் தேடிக்கொண்டு இருந்து நக்கீரர் அகப்பட ஆயிரவராக்கி நற்காலமென்று எண்ணித்தூக்கிச் சென்று குகையிலடைத்து ஸ்நானஞ் செய்துவரச் சென்றது. இவரைக் கண்ட குகையிலிருந்த புலவர்கள், இவரைக் கண்டு ஓகோ, எங்களுக்கு இன்றைக்கு முடிவு காலம் வைத்தனையே யென்று பூதத்தின் செய்தியினையும் தங்கள் செய்தியினையும் கூறி முறையிட்ட னர். இவற்றைக் கேட்ட நக்கீரர், திருமுருகாற்றுப்படையோதி “குன்றமெறிந் தாய் ‘ எனவும், ‘குன்ற மெறிந்ததுவும்” எனவும் துதித்து அப்பூதத்தினைக் குமாரக்கடவுள் வேலாற் கொல்வித்துச் சிறையிருந்த புலவர்களைத் தங்களிடம் போக விடுத்துத் தாம் முருகக்கடவுள் கட்டளைப்படி ஒரு தீர்த்தத்தில் மூழ்கித் தக்ஷிணக்கைலையாகிய திருக்காளத்தியில் எழுந்து குட்ட நோய் நீங்கிப் பிராட்டியையும் சிவமூர்த்தியையும் தரிசித்துக் கைலைபாதி காளத்திபாதி யந்தாதி பாடித்துதித்து முத்திபெற்றனர். இவர் தமிழறியும் பெருமாளை வாதில் வென்றனர் என்பர். இவர் செய்த நூல்கள் திருமுருகாற்றுப்படை, கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, இறையனாரகப் பொருளுரை, திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்பதேவர் திருமறம் முதலிய. இவர்குமரர் கீரவிகொற்றனார், நெடுநல்வாடை இயற்றியவர். இவர் மதுரை நக்கீரரெனவும் கணக்காயனார் மகனார் நக்கீரரெனவும் கூறப்படுவார். இயற்பெயர் கீரனார் ந சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல், ஒரு காலத்துச் சங்கப்புலவரில் இவர் தலைமை பெற்றிருந்ததுமுண்டு. இறையனார் அகப்பொருளுக்கு உரை செய்தவர் இவரே (இப்பொழுதுள்ள அவ்வுரை இவர் கூறியதனை வரன்முறையாகப் பாடங்கேட்டு வந்து ஈற்றில் இளம்பூரணர் எழுதிவைத்த தென்று ஊகிக்கப்படுகின்றது. திருமுருகாற்றுப் படை, நெடுநல்வாடை இவ்விரண்டினையும் இவரே இயற்றியருளினார். எல்லா நிலங்களிலுஞ் சென்று அவற்றின் இயற்கையமைப்பை ஆராய்ந்து அவ்வந்நிலங்களிலே பிறந்து வளர்ந்தவரினும் வல்லவராய்ச் செய்யுளியற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் மகனே கீரவிகொற்றனாரென்பவர். இந்நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளில் கொண்டான் என்னும் குயவன் பட்டி மண்டபமெய்தி வடமொழியே சிறப்புடைய தென்றும் தமிழ் சிறப்புடையதன்றெனவு மிழித்துக் கூறினான். அது கேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள்ளுகின்றது. தமிழை இகழ்ந்த நின்னை வடமொழியாலே இறக்கும்படி கூறுகிறேன். அது நின்னை இறக்கச் செய்யாதாயின் தமிழ் தீதேயென்று சொல்லி, “முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி, பரண கபிலரும் வாழி அரணிலா, ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக் கொண்டான், ஆனந்தஞ் சேர்கசுவாகா” என்று கூறலும் அவன் அவ்விடத்தே வீழ்ந்து உயிர்துறந்தான். (ஆனந்தம் சாக்காடு) அதனை நோக்கிய ஏனையோர் வந்து வேண்ட, “ஆரிய நன்று தமிழ் தீதென வுரைத்த, காரியத்தாற் காலற்கோட் பட்டானைச் சீரிய, அந்தண் பொதியி லகத்தியனா ராணையினாற, செந்தமிழே தீர்க்கசுவாகா” என்றொரு வெண்பாப்பாட அவன் உயிர்பெற் றெழுந்தான் என்பர். இந்நக்கீரனார் பிரபுவாகிய அருமனையும் அவனது சிறுகுடி யென்னும் ஊரையும் பாராட்டிப் பாடியுள்ளார். நற், (367) பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்றதனை விளங்கக் கூறியிருக்கிறார். அகம் (36) வள்ளலாகிய பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகை செய்திருந்தபொழுது அடைபட்டிருந்த பாரிபுலவர் பெருமானாகிய கபிலரது கட் டளைப்படி கிளிகளை விடுத்து நெற்கதிர்களைக் கொண்டுவந்து உண்டிருந்ததை சுருக்கி கூறியுள்ளார். அகம் (78) வைப்பூர் எவ்வி இடையிலே தூதாகச் சென்று சமாதானப்படுத்தவும் அடங்காது, அன்றியும், அழுந்தூர் திதியினும் போர் செய்ததனைக் கூறியுள்ளார். அகம் (126) கார்த்திகை மாதத்துக்குக் கார்த்திகைக்குப் புதுவதாக மணம் புரிந்து கொண்ட மருமகளை அழைத்து வந்து அவளால் முதலில் பால் அடுப்பில் வைக்கச் செய்வதும் கார் நெற்கதிர்களை மண்படாமற் கொணர்ந்து அவலிடித்துப் பொரித்து நிவேதிப்பதும், அன்று வீடுகளிலும், தெருக்களிலும் வைத்துக் கொண்டாடுவதுமாகிய கார்த்திகை விழாவை இவர் விரித்துக் கூறுவது படிப்பார்க்கு வியப்பைக் கொடாநிற்கும். அகம் (141) மற்றும் இவர் கிள்ளிவளவனையும், இடையர் தலைவனாகிய கழுவுளென்பானையும், வடுகர் தலைவன் எருமையென்பானையும், குட்டுவளைசோலையும், திறையனையும், பழையன்மாறனையும் ஆங்காங்குப் பாராட் டிக் கூறுவதுடன் அவரவர்க்குரிய காவி ரிப்பட்டினம், மருங்கூர்பட்டினம், தொண்டி, குடநாடு, பவத்திரி, மதுரை முதலிய பதிகளையுங் சிறப்பிக்கின்றார். அகம் (205,253,290,390,346), தூங்கலோரியார் பாடிய தழும்பனது ஊணுரென ஊணுரைப் பாராட்டிக் கூறியுள்ளார். அகம் (226) இவர் பாடிய அகப்பாட்டுகளில் பெரும்பாலுஞ், சேர சோழ பாண்டியர் சிற்றரசர் இவர்களில் யாரையேனுங் கூறாது விடுவதில்லை. இன்னும் இவரால் புறத்தின் பாடப் பெற்றோர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனும் புறம் (56) சோழநாட்டுப் பிட வூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனும் புறம் (395) (பிடவூர் திரிசிராப்பள்ளிக்கு கீழ் பாலுள்ளது). இவர் சிவபெருமானொடு வாது கூறியதாகத் திருவிளையாடல் கூறா நிற்கும். இவர் பாடியனவாகப் பத்துப் பாட்டில் இரண்டும், நற்றிணையில் ஏழும், குறுந்தொகையில் எட்டும், அசத்தில் பதினேழும், திருவள்ளுவமாலையில் ஒன்றும், புறத்தில் மூன்றுமாக முப்பத்தெட்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இவையேயன்றிப் பதினோராந் திருமுறையில் இவர் செய்த பிரபந்தஞ் சில உள, யாப்பருங்கல விருத்தியுரையில் நக்கீரர் நாலடி நாற்பது என ஒன்று கூறப்படுகிறது. இதுகாறும் அது அச்சில் வந்திலது.

நக்கீரர் கோயில்

இது மேலமாசி வீதியிலிருக்கின்றது. சங்கத்தார் கோயிலெனவும் வழங்கும். (திருவிளையாடல்).

நக்கீரர் திருவுருவம்

இது திருப்பாங்கிரிக் கோயிலில் ஸ்ரீமுத்துக்குமாரஸ்வாமியின் பக்கத்தேயுள்ளது; உத்ஸவமூர்த்தி; திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு வருடத்தும் நடக்கும் பங்குனித் திருவிழாவில் நான்காந் திருநாளில் முருகக்கடவுள் நக்கீரனாரைச் சிறைமீட்டருளிய திருவிளையாடல் நடைபெறும்பொழுது இந்த மூர்த்தி எழுந்தருளுதல் மரபு. (திருவிளையாடல்).

நக்தன்

பிருது குமரன்.

நக்னசித்

அயோத்திநாட்டரசன், இவன் குமரி சவுந்தரியவதி. இவன் கும்பாண்டனிடத்திலிருக்கிற எழுருஷபங்களை எவன் செயிக்கிறானோ அவனுக்குத் தன் குமரியைக் கொடுப்பதாகக் கூறினன். உடனே கண்ணன் அந்த எழுருஷபங்களுக்கு எழு ரூபமாகிக் கொம்பைப் பற்றிக் கீழே தள்ளிக் கட்டிப்போட்டதைக் கண்டு திருமண முடிப்பித்தவன். நக்னசித்தை யென்று இவன் குமரிக்குப் பெயர்.

நக்னிஜிதன்

சுவாகாதேவியைப் பெண்ணாகப் பெற்றவன். சுவாகாதேவியைக் சாண்க.

நக்ஷத்திர ஆண் பெண் அலி

புருஷ நக்ஷத்திரங்கள் : பரணி, கிருத்திகை, உரோகணி, புனர்ப்பூசம், பூசம், அஸ்தம், அதுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதியாம். பெண் நக்ஷத்திரங்கள் : அசுவனி, திருவாதிரை, ஆயிலியம், மகம், ஆரம், உத்திரம், சித்திரை, சோதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம். இரேவதி இவை பெண்ணும். மிருக சீரிஷம், சதயம், மூலம் இவை அலியாம். (விதானமாலை,)

நக்ஷத்திர திருஷ்டி

ஆதித்தன் நிற்கின்ற நாளும், அதற்கு முன் (3) நாட்களும், பின் (3) நாட்களும் குருடாம். அதற்கு முன் (4) நாட்களும், பின் (4) நாட்களும் ஒரு கண் உள்ள நாட்களாம். ஒழிந்த (12) நாட்களும் இரு கண்களுள்ள நாட்களாம். (விதானமாலை).

நக்ஷத்திர மீன்

இது கடலில் வசிக்கும் பிராணி, இதன் எலும்பு நக்ஷத்திர உருப்போல் காணப்படுகிறது.

நக்ஷத்திரகல்யன்

ஒரு இருடி அதர்வண வேதி.

நக்ஷத்திரங்களின் தசைகளும் இருக்கும் கால அளவும்

அசுவதி, மகம், மூலம் கேது திசை வருடம் 7. பாணி, பூரம், பூரா டம் : சுக்ரதிசை வருடம் 20. திருத்திகை, உத்திரம், உத்திராடம் : சூரிய திசை வருடம் 6. ரோகணி, அஸ்தம், திருவோணம் : சந்திரதிசை வருடம் 10. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் : அங்காரசதிசை வரு டம் 7. திருவாதிரை, சுவாதி, சதையம் : இராகு திசை வருடம் 18. விசாகம், பூரட்டாதி, புனர்பூசம் : குருதிசை வருடம் 16. பூசம், அனுஷம், உத்திரட்டாதி : சநிதிசை வருடம் 19. ஆயிலியம், கேட்டை, ரேவதி : புதன் திசை வருடம் 17. ஆக திசை 9 க்கு வருடம் 120, ஜன்ம நகத்திரத் திற்கு 6 வது நக்ஷத்திரதிசை உற்பன்ன திசை, 3 வது நக்ஷத்திரதிசைமிருத்யு திசை, சூர்ய ஸ்புடத்தில் கண்ட நக்ஷத்திரதிசை பிராண தசை, 8 வது நக்ஷத்திர தசை ஆதா ன தசை, இடமாக 4 வது நக்ஷத்திர தசை வாம்தசை, சூர்ய சந்திரர்களுடைய ஸ்புடங்களைக் கூட்டிக் கண்ட நகூத்திர தசை உடுதசை, சனிஸ்புடத்திற் கண்ட நக்ஷத்திரதசை நிர்யாண தசை, சந்திர சூர்ய லக்னஸ்புடங்களைக் கூட்டிக் கண்ட நக்ஷத்திர தசை மகாப்பிராணத்சை, குளிக நிர்யாண தசை. (சோதிட நூலிற் காண்க).

நக்ஷத்திரங்கள்

(இவர்கள் தக்ஷன் குமரிய ராய்க் கிரகராசியாதிகளுடனியைந்து உலகத்துப் பலாபலன்களை அறிவிப்பர்.) அவற்றின் மிருகம், பக்ஷ, மரம், கணம், அதிதேவதை, தியாச்சியம், கீழ்நோக்கு நாள், மேனோக்குநாள், சமநோக்கு நாள், சதாசிவ நாள், சுஷ்கநாள், ஜலநாள், புருஷநாள், பெண்ணாள், அலிநாள், அமங்கலநாள் முதலிய வருமாறு: அசுவனி : குதிரை, இராஜாளி, எட்டி, தேவகணம், சரஸ்வதி, (50) சமசுஷ், புரு, பரணி யானை, காக்கை, நெல்லி, மனுஷகணம், துர்க்கை, (24) மேல் சுஷ், புரு, கார்த்திகை : ஆடு, மயில் அத்தி, இராக்கதகணம், அக்கினி, (30)) மேல், சுஷ், பெண், உரோகணி : பாம்பு, ஆந்தை, நாவல், மனுஷகணம், பிரமன்(40), கீழ், சதா, சல, புரு, மிருகசிரம் : சாரை, சோழி, கருங்காலி, தேவகணம், சந்திரன், (14) சம. சல, அவி, திருவா திரை : நாய், அன்றில், செங்கருங்காலி, மனுஷகணம், சிவன், (21) கீழ், சுஷ், பெண், புனர்பூசம் : பெண்பூனை, அன்னம், மூங்கில், தேவகணம், அதிதி, (30) சம, சல, பெண்; அமல், பூசம் : கடா, சீர்க்காக்கை, அரசு, தேவகணம், பிரகஸ்பதி, (30) சதா, சல, பெண், அமங், ஆயிலியம் : ஆண்பூனை, சிச்சிலி, புன்னை, இராக்கதகணம், ஆதிசேடன், (32) மேல், சல, புரு, மகம் : ஆணெலி, ஆண் கழுகு, ஆல், இராக்க தகணம், சுக்கிரன், (30) மேல், சுஷ், புரு, பூரம் : பெருச்சாளி, பெண்கழுகு, பலாசு, மனுஷகணம், பார்வதி (20) கீழ், மேல், சுஷ், உத்தரம் எருது, சில்வண்டு, அலரி, மனுஷகணம், சூரியன், (18) கீழ், சதா, சுஷ், புரு, அஸ்தம் எருமை, பருந்து, ஆத்தி, தேவகணம், சாத்தா, (22) சம, சதா, சல, பெண், சித் திரை : ஆண்புலி, மரங்குத்தி, வில்வம், இராக்கதகணம், விஸ்வகர்மா, (20) சம சல, புரு, சுவாதி : கடா, ஈ, மருது, தேவகணம், வாயு, (14) சம, சல, புரு, விசாகம் : பெண்புலி, செவிரற்குருவி. விளா, இராக்க தகணம், குமரன், (14) மேல், சல அலி, அனுஷம் : பெண்மான், வானம்பாடி மகிழ், தேவகணம், லக்ஷ்மி, (10) சம, சத சுஷ், அலி, கேட்டை : கலை, சக்கிரவாகம், பிராய், இராக்கதகணம், இந்திரன், (14) சம, சல, புரு, மூலம் : பெண்ணாய், செம் போத்து, மரா, இராக்கதகணம், அசுரர், (59) மேல், சுஷ், புரு, பூராடம் : ஆண் குரங்கு. கௌதாரி, வஞ்சி, மனுஷகணம், வருணன், (24) மேல், சல, புரு, உத்திராடம் மலட்டுப் பசு, வலியன், பலா, மனுஷகணம், கணபதி, (20) சதா, சுஷ், புரு, திருவோணம் : பெண்குரங்கு, நாரை, எருக்கு, தேவகணம், விஷ்ணு, (10)கீழ், சதா, சல, அவி, அவிட்டம் : காமதேனு, வண்டு வன்னி, இராக்கதகணம், வசுக்கள், (10) கீழ், சுஷ், அலி, சதயம்:பெண்குதிரை, அண்டங்காக்கை, கடம்பு, மனுஷகணம், யமன், (18) கீழ், சுஷ், அலி, பூரட்டாதி : புருஷாமிருகம், உள்ளான், தேமா, மனுஷகணம், குபேரன், (16) மேல், சுஷ், புரு, உத்திரட்டாதி : பாற்பசு, கோட்டான், வேம்பு, மனுஷகணம், காமதேனு, (24) கீழ், சதா, சுஷ், அலி, ரேவதி : பெண்யானை, வல்லூறு, இருப்பை, தேவசணம், சனி, (30) சம, சதா, சுஷ், அலி இந்த நக்ஷத்திரங்களுக்குக் கூறிய நாழிகைக்குமேல் (4) நாழிகைதியாச்சியம். நத்திர இராசிகள் : அசவநி, பாணி, கார்த்திகை, முதற்கால், மேஷம், கார்த்திகைப்பின் முக்காலும். உரோகணியும், மிருகசிரத்து முன்னரையும், ருஷபம் மிருகசிரத்துப் பின்னரையும், திருவாதிரையும், புனர்பூசத்து முன் முக்காலும் மிதுனம், புனர்பூசத்துப் பின்காலும், பூசமும், ஆயிலியமும், கர்க்கடகம், மகம், பூரம், உத்திரத்து முதற்காலும், சிங்கம். உத்திரத்துப்பின் முக்காலும், அத்தமும், சித்திரைமுன் அரையும் கன்னி. சித்திரைப் பின் அரையும், சோதியும், விசாகத்து முன் முக்காலும், துலாம், விசாகத்துப் பின்காலும், அனுஷமும், கேட்டையும், விருச்சிகம், மூலம், பூராடம், உத்திராடத்து முதற்காலும், அவிட்டம் சதயம் ப்பூத்திடுஞ் செரின் 9 பாதம், மூடவேண்டும். விகற்ற (1/4) கருத்தியை முதற்கேக : தனுசு, உத்திராடத்துப் பின் முக்காலும், திருவோணமும் அவிட்டத்து முன் அரையும் மகரம். அவிட்டத்துப் பின்னரையும், சதயமும், பூரட்டாதி முன் முக்காலும், கும்பம். பூரட்டாதி பின் காலும் உத்திரட்டாதியும், ரேவதியும், மீனம். இவை நக்ஷத்திரங்கள், நிற்கும் இராசிகள். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவை மூன்றும் காலற்ற நாள் கள். மிருகசிரம், சித்திரை, அவிட்டம் இவை மூன்றும் உடல் அற்றன. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை மூன்றும் தலை அற்ற நாட்கள், இந்த ஒன்பது நாட்களும் மனை முகூர்த்தத்திற்கும், புணர்ச்சிக்கும் யாத்திரைக்கும் ஆகா. தனிஷ்டா பஞ்சமிகளாவன : அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவற்றில் மரணமானால் அந்த வீட்டினை (9) மாதம் மூடவேண்டும். விகற்ப பாகமாகிய ரோகணிக்கு மாதம் (4), கார்த்திகை, உத்திரத் திற்கு மாதம் (3), மிருகசிரம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடத்திற்கு மாதம் (2). நக்ஷத்திர நாசயோகங்களாவன : ஞாயிறில் விசாகமும், திங்களில் சதயமும், செவ்வாயில் அவிட்டமும், புதனில் ரேவதியும், வியாழனில் ரோகணியும், வெள்ளியில் பூசமும், சனியில் உத்திரமும், வருவன. கிழமை பிறந்தநாள் : ஞாயிறில் பரணியும், திங்களில் சித்திரையும், செவ்வாயில் உத்திராடமும், புதனில் அவிட்டமும், வியாழனில் கேட்டையும், வெள்ளியில் பூராடமும், சனியில் ரேவதியும் வருவனவாம். இந்த நாட்களில் செய்யும் காரியங்கள் எல்லாம் தீமையாய் விளையும், பஞ்சக்கோள் நின்றதோஷம் : சூரியன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் உற்பாதம் எனவும், பத்தாம் நக்ஷத்திரம் தாரகம் எனவும், பதினைந்தாம் நக்ஷத்திரம் பிரமதண்டம் எனவும், இருபத்தொன்றாம் நக்ஷத்திரம் காலன் எனவும் பெயராம். செவ்வாய் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழாம் நக்ஷத்திரம் சூலம் எனவும், பத்தாம் நக்ஷத்திரம் சக்கிரம் எனவும், பதினைந்தாம் நக்ஷத்திரம் கண்டம் எனவும், இருபத்தொன்ராம் நக்ஷத்திரம் காவன் எனவும் பெயராம். புதன் நின்ற நக்ஷத்திரத்திற்கு எட்டு, பதினெட்டு, இருபத்து நான்காம் நக்ஷத்திரங்கள் கண்டம் என்பர். வியாழன் நின்ற நக்ஷத்திரத்திற்கு (7,9) ஆவதும் கொடுமை. சுக்கிரன் நின்ற நக்ஷத்திரத்திற்கு ஏழு, ஒன்பதாம் நக்ஷத்திரங்கள் கொடுமை என்பர். சனி நின்ற நக்ஷத்திரத்திற்கு (5,6,10,11,12) நக்ஷத்திரங்கள் பந்தம் எனவும் பெயர். இராகு கேது நின்ற நக்ஷத்திரங்களுக்கு ஏழாம் நக்ஷத்திரம் பரிகம் எனப்படும். இவை சுபகாரியங்களுக்கு ஆகா. அபிசித்து நக்ஷத்திரம் : உத்திராடத்து முடிவில் பதினைந்து நாழிகையும், திருவோணத்து முடிவில் நான்கு காழிகை யும், நான்கு விநாடியுமாம், அக்கினி நக்ஷத்திரமாவன : பரணி மூன்றாம்பாத முதல் உரோகணி முதல் பாதம் வரையிலும், சூரியன் நிற்கும் நக்ஷத்திரமாம். அஷ்டம ராசிக்கூறு : சன்ம நக்ஷத்திரத்திற்குப் பதினாறாம் நக்ஷத்திரம் முதல் பதினெட்டாம் நக்ஷத்திரம் வரையிலுள்ள நக்ஷத்திரம், கலைஞானபாத நக்ஷத்திரம் : சன்ம நக்ஷத்திரத்திற்குப் பதினாமும் நக்ஷத்திரம் வைநாசிக நக்ஷத்திரம் : சன்ம நக்ஷத்திரத்திற்கு (22) ஆம் நக்ஷத்திரம், கண்டாந்த நாழிகை : அசுவனி, மகம், மூலம் முதற்காலும் ஆயிலியம், கேட்டை, ரேவதி (4) ஆம் காலுமாம். அர்த்தமூல நாழிகை : மூல நக்ஷத்திரத்தின் முதலில் இரண்டு நாழிகையாம். பாடாவாரி நக்ஷத்திரம் :பரணி, சதயம், திருவோணம், அநுஷம், கேட்டை, சோதி, விசாகமாம்.

நக்ஷத்திரங்கள்

இவை ஆகாயத்திற் காணப்படும் கிரகங்களை யொத்த சுடர்ப் பகுதிகள் இவை அளவற்றவை. அவற்றுள் பலவகை உருவங்களும் நிறங்களும் பெற்றவை அதிகம் உண்டு. அவற்றுள் சில பூமிக்குக் காணப்பட்டு மறைவன.

நக்ஷத்திரங்கள் ஆகாயத்தில் பிரகாசிக்கும் ஜோதி உருவமானவை

இவற்றுட் சில தனியாகவும், சில கூட்டங்கூட்டமாகவும் இருக்கின்றன. இவை, ஒவ்வொன்றும் காந்தியிலும், உருவத்திலும் சூரியனுக்குச் சமமானவை. இவை யாதொரு கிரகங்களின் ஒளியைப் பெற்றவைகள் அல்ல, சுயம்பிரகாசமானவை. அவை பூமிக்கு வெகு தூரத்திலிருப்பதால் மிகச் சிறிய உருவினவாகவும், சாந்தியற்றனவாகவும் காணப்படுகின்றன. கம்பி இல்லாத தந்தி பூமியிலிருந்து சூரியனைப் போய்ச் சேர (8) நிமிஷம் ஆகின்றது என்றும் மிருகசீருஷ நக்ஷத்திரங்களுக்குச்சமீபத்திலிருக்கும் அக்கினி நக்ஷத்திரத்தைப் போய்ச்சேர (6) வருஷம் ஆகின்றது என்றும் கூறுகிறது. ஆதலால் நமக்கும் நக்ஷத்திரங்களுக்கும் அதிக தூரம் இருக்கின்றது. அவற்றின் தொகை கணக்கிட முடியா. இவ்வாறு மேற் கூறிய நக்ஷத்திரங்கள் சற்றேறக் குறைய (7000) இருக்கின்றன என்று கூறுகிறார்கள். அசுவனி முதலிய (27) நக்ஷத்திரங்களும் உரு முதலியவும் சூரிய வீதிக்கு ஒரு புறத்திற்கு (80) டிகிரியாக (160) டிகிரி அகலமுள்ள பிரதேசத்திற்கு ராசி மண்டலம் என்று பெயர். இந்த ராசி மண்டலத்தின் எல்லைக்குள் பூமியும், சந்திரனும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இந்த ராசிமண்டலத்தில் சந்திரன் பூமியை (27) நாட்களில் ஒருதடவை சுற்றி வரும் போது இம்மண்டலத்தையும், அதன் உட்புறமாக ஒரு தடவை சுற்றி வருகின்றது, ஒவ்வொரு தினத்திலும் இம் மண்டலத்தில் சந்திரனுக்கு நேர் மேலாக இருக்கும் ஸ்தானத்தைக் குறித்துக் காட்ட, ராசி மண்டலத்தை (27) சமபாகங்களாக வகுத்திருக்கிறார்கள், நக்ஷத்திரம் : அசுவனி (25) குதிரைமுகம் எண் 3, பரணி (2) அடுப்பு (எ) 3, கார்த்திகை (2) அம்பட்டன் கத்தி (எ) 6, ரோகணி (2) வண்டி (எ) 5, மிருகசீருஷம் (2) அம்பு (எ) 3, திருவாதிரை (2) பவளம் (எ) 1, புனர்பூசம் (2) வில் (எ) 6, பூசம் (2) புடலம்பூ (எ) 3, ஆயிலியம் (2) ஸர்ப்பம் (எ) 6, மகம் (2) டோளி (எ) 5, பூரம் (2) கட்டிற் கால் (எ) 2, உத்திரம் (2) கட்டிற்கால் (2) 2, அஸ்தம் (2) கை (எ) 5, சித்திரை (2) முத்து (எ) 1, ஸ்வாதி (2) மாணிக்கம் (1) 1, விசாகம் (2) குசவன் சக்கரம் (எ) 5, அநுஷம் (2) மோதிரம் (எ) 4, கேட்டை 2) சக்கரம் (எ) 3, மூலம் (2) மேழி (எ) 5, பூராடம் (2) கட்டிற்கால் (எ) 2, உத் திராடம் (2) கட்டிற்கால் (எ) 2, திருவோ ணம் (2) வேர் (எ) 3, அவிட்டம் (2) மிருதங்கம் (எ) 5, சதயம் (2) பூனைக்கண் (எ) 100, பூரட்டாதி (2) கட்டிற்கால் (எ) 2, உத்திரட்டாதி (2) கட்டிற்கால் (எ) 2, ரேவதி (2) மீன் (எ) 2. அசுவனி முதல் (27) நக்ஷத்திரங்கள். மேற்கூறிய (27) நக்ஷத்திரக் கட்டங்களுள் ஒவ்வொரு நக்ஷத்திரக் கூட்டமும் ஷ (27) ஸமபாகங்களுள் ஒரு ஸமபாகத்தைக் கவர்கிறது. ஷ ஒவ்வொரு ஸமபாகத்தையும் சந்திரன் கடந்து செல்லவேண்டிய காலத்தையொரு நக்ஷத்திரம் என்கிறார்கள். எந்தத் தினத்தில் எந்த நக்ஷத்திரக் கூட்டத்திற்கு நேர் கீழாகச் சந்திரன் இருக்கிறதோ அந்த நாள் அந்நக்ஷத்திரம், வலவோட்டு நக்ஷத்திரங்கள் : அசுவநி, பரணி, கார்த்திகை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், அஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ஆக 15. இடவோட்டு நாள் : ரோகணி, மிருக சீரிடம், திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் சதயம். ஆக 12,

நக்ஷத்திரபதம்

சத்த இருடியர், உல்கைகள், மின்னல், தூமகேதுக்கள், ரோகிணேயர், ஊஷ்ணபாதம் முதலிய கூடிய கணதேவர்களிருக்கும் பதவி.

நக்ஷத்திரபுருஷவிரதம்

சித்திரை மாதம் சோமவாரங்கூடிய மூலக்நக்ஷத்திரத்தில் பொன்மயமான லக்ஷமி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜாதானங்கள் செய்தவர்கள் இஷ்ட சித்திகளை அடைந்து விஷ்ணுலோகம் அடைவர். இது நாரதனுக்கு ருத்திரர் சொன்னது.

நக்ஷத்திரமழை

ஆகாயத்தில் சில காலங்களில் எரிநக்ஷத்திர கூட்டங்கள் போல் நக்ஷத்திரங்கள் மழைபோல் வருஷித்து அடங்குகின்றன. அவை ஆகாயத்தைவிட்டுப் பூமியில் வருகையில் புதை பாணங்களைப்போல் காணப்பட்டு அடங்குகின்றன. இதனைத் தத்வ சாஸ்திரிகள் கிரகங்கள் நிலைமாறுதலால் உண்டாவதென்று கூறுகின்றனர்.

நக்ஷத்ரகன்

விச்வாமித்திரன் மாணாக்கன். அரிச்சந்திரனிடம் கடனைத் தண்ட உடன் சென்றவன்.

நங்கள்

ஒரு அரசன், மகாத்தியாகி.

நசிரம்

ஒரு தீர்த்தம்,

நச்சிகேநசன்

ஒரு அரசன், வல்வியென்னும் வேதபாகத்திற்கு வியாக்யானி இவன் தந்தை வர்ஜசாவன். இவன் தன் பிதாவை நோக்கி உலக வெற்றியின் பொருட்டு என்னை யாருக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறீரென்று தொந்தரைசெய்ய அவர் யமனி டம் இவன் ஒப்புக்கொடுக்க யமன் இவனை ஏற்றுக்கொண்டு இவனுக்கு வேதாந்த ஞானம் போதிக்க ஞானம் பெற்றவன்.

நச்சினார்க்கினியர்

(இவரை மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் எனவுங் கூறுவர்.) ஆசிரியர் நச்சினார்க்கினியர், பாண்டிவளநாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணகுலத்திற் பாரத்துவாச கோத்திரதிற் பிறந்தவர். தமிழ்ப்பாஷையிலுள்ள பலவகையான எல்லா நூல்களிலும் அதிபாண்டித்திய முடையவர். இவரது சமயம் சைவமே. இவர் இன்னராதல், “வண்டி மிர்சோலை மதுராபுரிதனி, லெண்டிசை விளங்க வந்த வாசான், பயின்ற கேள்விப் பாரத்துவாச, னான்மறை துணிந்த நற்பொரு ளாகிய, தூய ஞான நிறைந்த சிவச் சுடர், தானே யாகிய தன்மை யாளன்” என்னும் உரைச் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். சிவஸ்தலங்களுட் சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய “திருச்சிற்றம்பலம்”, “பெரும்பற்றப்புலியூர்'” என்பவற்றை முறையே ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழெழுத்தொரு மொழிக்கும் உதாரணமாக, இவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில், “ஒரேழுத்தொருமொழி” என்னுஞ் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவசமயத்துச் சிறந்த நூல்களாகிய திரு வாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்பவற்றினின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய விலக்கணப் பொருள்களுக் கன்றித் தத்துவப் பொரு ளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டி யிருத்தலாலும், அங்ஙனம் மேற்கோள் கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேட வுரைகளாலும், சிந்தாமணியிற் நாமகளிலம்பகத்து ”மேகம்மீன்ற” என்னும் 333 ம் செய்யுளில் “போகம்மீன்ற புண்ணியன்” என்பதற்கு எழுதிய விசேட வுரையாலும், திருமுருகாற்றுப் படை யுரையிற் காட்டிய சில நயங்களாலும், உரைச் சிறப்புப்பாயிரத்தில் தூய ஞான நிறைந்த சிவச்சுடர், தானேயாகிய தன்மையாளன்” எனக் கூறப்பெற்றதனாலும், மற்றுஞ் சிலவற்றலும் இவர் சைவசமயியாதல் நன்கு வெளியாகும். இவ்வுரையாசிரியர், பத்துப்பாட்டினுக்கும், தொல் காப்பியத்திற்கும், கலித் தொகைக்கும், சீவகசிந்தாமணிக்கும், குறுந்தொகையிற் பேராசிரியர் பொருளெழுதா தொழிந்த இருபது செய்யுட்களுக்கும், உரை செய்தருளினர், இன்னும் சில நூல்களுக்கு இவர் உரையியற்றினரென்பர்; அவை இவையென்று புலப்படவில்லை. இக்காலத்து வழங்கும் திருக்கோவையாருரை, பேராசிரியராற் செய்யப்பட்டதென்று தெரிகின்றமையாலும், இவர் அந்நூற்குச் செய்த வேறுரை கிடையாமையாலும், அதற்கும் திருக்குறள் முதலிய மற்றுஞ் சிலவற்றிற்கும் இவர் உரை செய்திருப்பதாக இவருடைய உரைச் சிறப்புப்பாயி ரத்திலேனும் வேறொன்றிலேனும் கூறப்படாமையாலும், அவைகள் இங்கே எழுதப்பட்டில. சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் முதன்முறைஓருரை யெழுதி, அக்காலத்துப் பிரசித்திபெற்றிருந்த சைன வித்துவான்கள் சிலருக்குக் காட்ட, அவர்கள் அவ்வுரையை அங்கீகரியாமைகண்டு, பின்பு ஆருகத நூல்கள் பலவற்றையும் நலமுற ஆராய்ந்து இரண்டாமுறை ஓர் உரையை எழுதி அவர்களுக்குக் காட்டவே, அவர்கள் உற்றுநோக்கி வியந்து அவ்வுரையை அங்கீகரித்துக் கொண்டார்களென்று சைனர் கூறுகின்றனர். தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதாங்கம் முதலிய பல நூல்களிலிருந்தும் பல உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குவிளக்கிப் போகின்றமையாலும் பிற வாற்றலும் இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சியுள்ளவராகச் சொல்லுவதுடன் பலவகையான கலைகளிலும் பயிற்சியுடையவரென்று சொல்லுதற்கிடமுண்டு, உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர், ஆளவந்தபிள்ளை யாசிரியர் முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருத்தலின், அவர்களுக்கு இவர் காலத்தினாற் பிற்பட்டவ ரென்று தெரிகின்றது. அமிழ்தினுமினிய தமிழ்மடவரால் செய் அருந் தவத்தின் பெரும்பயனாக அவதரித்தருளிய இம்மகோபகாரியின் அருமை பெருமைகள் விரிவஞ்சி விடுக்கப்பட்டன. இவர் காலத்தில் ஆசிரியர் பரிமேலழகரும் உடனிருந்ததாகக் கூறுவர். எவ்வகையெனின் “குடம்பை தனித் தொழியப் புட்பறக் தற்றே, உடம்போடுயிரிடை நட்பு, என்னுங் குறளில் குடம்பை என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூண்டு எனவும் ஆசிரியர் பரிமேலழகர் முட்டையெனவும் கூறினதாகவும், பரிமேலழகரது உரை கேட்ட நச்சினார்க்கினியர் பரிமேலழகர் உரையைப் புகழ்ந்ததாகவும் கூறுவர். “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியு, மாரக்குறுந் தொகையுளைஞ்ஞான் குஞ் சாரத், திருத்தகு மாமுனி செய் சிந்தாமணியும், விருத்தி நச்சினார்க் கினியமே,” “எவனாலவாயிடை வந்த முதவாயுடையனென வியம்பப் பெற்றோன், எவன் பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை யெழுதி யீந்தோன், எவன் பரம வுபகாரி யெவனச்சினார்க்கி னியனெனும் பேராளன், அவன்பாத விரு போது மெப்போது மலர்கவென தகத்து மன்னோ. “

நச்சுமனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர், (திருவள்ளுவமாலை.)

நச்செள்ளையார்

ஒரு தமிழப் புலவர். இவர், காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனப்படுவர். இவர் பதிற்றுப்பத்தின் கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாடுச் சேரலாதனைப் புகழ்ந்து பாடி அவனாற்கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும்நூறாயிரங்காணமும் அளிக்கப்பெற்று அவன் பக்கத்து வீற்றிருக்குஞ் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை எனும் பெண்பாற் பெயர்களானும், கலனணிதற்குப் பொன் பெற்றதனானும் பெண்பாலாராக, அறியப்படுகின்றார். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தில் ”யாத்த செய்யுளடங்கிய கொள்கைக் காக்கைபாடினியார் நச்செள்ளையார்’ இதில் அடங்கிய கொள்கை, என்பது பெண்பாலாரைக் குறிக்கின்றது. குறுந் தொகையில் ”திண்டேர்நள்ளி,. விருந்து வரக்கரைந்த காக்கையது பலியே” எனும் பாட்டில் காக்கை கரைந்தமைபற்றியருமை பாராட்டிக் கூறியதனால் இவர்க்கு இப்பெயர் வந்தது. குறுந்தொகையில் 210 ம் பாட்டும், புறநானூற்றில் 278 ம் பாட்டும், எட்டுத்தொகையுள் இவர் செய்தனவாக (12) செய்யுட்களும் காணப்படு கன்றன.

நஞ்சீயர்

இவர் திருநாராயண புரத்தில் (4214) கலிக்குமேல் விஜய வரு. ஜநநம். பட்டர் திருவடிசம்பந்தி. இவர் வேதாந்தி என முதலில் நாமம்பெற்று இருக்கையில் வாதபிக்ஷைக்குவந்த பட்டரால் செயிக்கப் பெற்றுச் சிலநாளிருந்து பிக்ஷைக்குவந்த ஸ்ரீவைஷ்ணவருக்குப் பிக்ஷையிட மறுத்த தேவியை வெறுத்துத் திரவியத்தைப் பகுத்துப் பெண்சாதிக் களித்துக் குருதக்ஷணைகொண்டு பதியாச்ரமம் அடைந்து ஆசாரியரைக் காணப்போகையில் பட்டர், நம் ஜீயர்வந்தார் என அன்று முதல் இவர்க்கு நஞ்சீயர் எனப் பெயர் உண்டாயிற்று. இவர்க்கு ஸ்ரீரங்கநாதரென்பது தாசிய நாமம். இவர் திருவாய்மொழிக்கு 90000 படி வியாக்கியானம் செய்து ஒரு ஸ்ரீவைணவரிடம் தர அந்த ஸ்ரீவைஷ்ணவர் அதை யெடுத்துச் செல்கையில் வெள்ளத்தில் சிதற அவைகளை ஒருவாறு கேட்ட படி அவர் பூர்த்திசெய்து நஞ்சீயரிடம் கொடுக்கச் சீயர் அபிப்பிராய பேதத்தைக் கண்டு உண்மை வினவிக் களித்து நம்பிள்ளையென அழைத்தனர். அதுமுதல் அவருக்கு நம்பிள்ளையெனப் பெயராயிற்று. இவர்க்கு வேதாந்த வேதியர், மாதவாசார்யர் என்று வேறு பெயர்கள். இவர் திருநக்ஷத்ரம் பங்குனி யுத்திரம்.

நஞ்சுகன்

ஓர் இயக்கன். (பெ ~ கதை).

நஞ்சுகலந்த அன்னசோதனை

நஞ்சு கலந்த அன்னத்தைக் கண்ட அன்னம் சோர்ந்து விழும், வண்டுகள் குழறி யொலிக்கும், மயில் நிலைகலங்கித் துள்ளியாடும், கோழிகள் விரைந்து கத்தும், அன்றில் மயங்கும், குரங்கு மலங்கழிக்கும், காடை மயிர் சிலிர்க்கும், நாகணவாய் எதிரெடுக்கும். (சுக் ~ நீ.)

நஞ்சுண்டதேவர்

மைசூரில் நெடுநாளைக்கு முன் அரசராயிருந்தவர்.

நடராஜர்

1. சிவமூர்த்தத்துள் ஒன்று. 2. கீரனூரிற் பிறந்த ஒரு சோதிடர்; சாதகாலங்கார மியற்றியவர்.

நடாதூரம்மாள்

சுபத்திராம்சரான இவர் கலி (4299) க்குமேல் பார்த்தி வரு சித்திரை மாதம் திங்கட்கிழமை காஞ்சியில் தேவராஜப் பெருமாளுக்கு வரதகுரு என்று அவதரித்தனர். இவர் எங்களாழ்வானிடம் பாஷ்யம் சேவிக்கப் பிதாவின் கட்டளைப்படி சென்று எங்களாழ்வான் வீட்டு வாசற்கதவைத் திறக்க எங்களாழ்வான் யார் என்றனர். வரதகுரு பிரதியுத்தரமாக நான் தான் என்றனர். இதைக்கேட்ட எங்க வாழ்வான், நான் செத்தபின் வருக என அனுப்பத் திரும்பிப் பிதாவிடம் கூறினர். பிதா ஆசாரியரிடம் நானென்னும் அகங்காரத்தை யொழித்து அடியேன் எனக் கூறுத லொழிந்து, நான் என்ற தனால், அவர் அவ்வகைக் கூறினர் என்று மீண்டும் அனுப்பினர். வரதகுருவும் மீண்டும் சென்று ஆசாரியரைக் கண்டு அடியேன் இராமாநுசதாசன் என்று தண்டன் சமர்ப்பித்தனர். ஆசாரியர்களிடத்துப் புத்திரனைப்போல் அன்புள்ளவராய் எனக்குக் கொள்ளியிட்டுக் கர்மாதிகிரியைகள் செய் வதாய்ப் பரதிக்ஞை செய்து தருவீராகில் ஸ்ரீபாஷ்யம் பிரசாதிக்கிறே னென்றனர். வரதகுரு அதனைப் பிதாவிற்கு விண்ணப்பித்துப் பிதாவின் நியமனம் பெற்று ஸ்ரீபாஷ்யகோசத்தைக் கொண்டு ஆழ்வானுக்குப் பிரதிக்ஞை செய்து கொடுத்துப் பாஷ்யாதிகளை ஐயந்திரிபறச் சேவித்தனர். இவர் தமதாசார்யர் திருநாட்டுக் கெழுந்தருள அவர்க்குச் செய்யவேண்டிய சரமக் கிரியைகளை முடித்துக் கச்சிவாய்த்தான் மண்டபத்தில் காலக்ஷேபஞ் சாதித்திருந்தனர். இவரிடத்தில் கிடாம்பு அப்புள்ளார் ஸ்ரீகிருஷ்ணபாதர் என்கிற வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலியவர்கள் ஆச்ரயித்திருந்தனர். இவ்வகை இவர் பாஷ்ய கால க்ஷேபம் செய்து வருகையில் ஒருநாள் அப்புள்ளார் ஸ்ரீவேங்கடநாதாசார்யர் என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்ற வேதாந்த தேசிகருடன் காலக்ஷேபங் கேட்டிருக்கையில் வேதாந்த தேசிகரின் திவ்ய தேஜசைக் கண்டு மயங்கிக் காலக்ஷேபத்தில் விட்ட விடந் தெரியாமலிருக்க மூன்று வயதுள்ள வேங்கடநாதாசாரியர் விட்டவிடங் குறிப்பித்திருந்தனர். இதனால் அதிகக் களிப்படைந்த வரதகுரு தூப்பில் பிள்ளையை ஆசீர்வதித்து அப்புள்ளாரிடம் ஒப்புவித்து ஸ்ரீபாஷ்யாதிகளைப் பிரசாதிக்கக் கட்டளை யிட்டனர். ஸ்ரீபராசபட்டர் இவரது காலக்ஷேபம் சேவித்து வருநாளில் ஒருநாள் வராதிருந்தது கண்டு வரதகுரு பிரசங்கத்தை நிறுத்த மற்றவர்கள் பிரசங்கத்தை நடத்தக் கூற வரதகுருவும் அவர் வந்தவுடன் தாம் கூறிய அர்த்தங்களைக் கூறச்செய்து அதற்குச் சுருதப்பிரகாசிகை யெனப் பெயரிட்டனர். இவ்வகையிருக்கையில் சிலர் இவரிடம் வாதத்திற்குவர அவர்களிடம் வாதிட அப்புள்ளார் கேட்க அங்கனமே அவர் வாதிட்டு வென்றது கண்டு அவர்க்கு வாதி ஹம்ஸாம்புதர் எனப் பெயரிட்டுப் பெருமாளுக்குப் பாலமுது செய்வித்துவந்தனர். அவ்வகை வருகையில் ஒருநாள் பாலமுது ஸமர்ப்பிக்கையில் பால் உஷ்ணமாயிருந் ததுகண்டு தம்முடைய கைவிரலைப் பாலில் இட்டுப் பார்த்தனர். இதனைக் கண்ட பெருமாள், தாய் குழந்தைக்கு அன்றோ இவ்வாறு பால் ஊட்டுவது என்று என் அம்மாளோ” என்று அழைத்தனர். அது முதல் அம்மாள் எனத் திருநாமம் வந்தது. இவர் ஒருநாள் ஆரண்யத்தின் வழியாகத் திருவேங்கடஞ் செல்கையில் வழியில் மகாரண்ய மாகையால் பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கத் தகுந்த இடம் நேராமல் இருந்தது. அதனால் இவர் பெருமாளுக்குத் திரு ஆராதனம் செய்துவிட் குத் தாம் உபவாசமா யிருந்தனர். இதைக் கண்ட திருவேங்கடமுடையான் ஒரு வேதியராய் இவர்க்கு முன் எழுந்தருள அம்மாளும் தேவர் யார் என்ன நான் திருவேங்முடையான் அமுது செய்த பிரசாதத்தைத் தேவர் பொருட்டுக் கொண்டு வந்தேன் தேவர் அமுது செய்தபின் உமக்கு விடை தருகிறேன் என்று கூறி அம்மாளமுது செய்தபின் மறைந்தருளினர். அம்மாள் இது பெருமாள் செயலென்று துதித்துத் திருவேங்கடஞ் சென்று பெருமாளைச் சேவித்துத் திரும்பிக் கச்சிக் கெழுந்தருளிச் சிலகாலமிருந்து திருநாட்டுக்கு எழுந்தருளினர்,

நடாதூராழ்வான்

உடையவர் திருவடிசம்பந்தி, உடையவர் சகோதரி புத்திரர், இவர் குமரர் நடாதூர் தேவராசப் பெருமாள். நயினாசாரியர் திருவடிசம்பந்தி. (குருபரம் பரை).

நடாதூர் தேவராசப்பெருமாள்

நடாதூர் ஆழ்வான் குமரர்.

நடிக்கும் ஆஸ்திரேலிய மயில்

இது, மயிலைப்போல் உருவமுள்ள தாயும் அழகுடைய தாயுமுள்ளது. இதன் தோகை, நீண்டு முனை வளைந்து சுருண்டு சிவப்பும், பசுமையும் கறுப்பும் கலந்து மற்ற இறகுகளுக் கிடையிலிருக்கிறது. இதனிடையிலுள்ள (16) சிறகுகள் வீணைகளின் தந்திகள் போல் அமைந்திருக்கின்றன. இப் பறவை பல நிறமுடையது. வால் செகப்பு, உச்சி மண்டூர நிறம், கழுத்துப் பச்சை, முதுகு மங்கலான செகப்பு, வயிறு செம் மைகூடிய மஞ்சள். இது, களிப்பு மிகுந்த போது காலை மாலைகளில் தோகையை விரித்து நடிக்கிறது. இது புழுக்களைத் தின்னும், இதனை லையர் பறவை (Lyrs Bird) என்பர்.

நடிக்கும் சித்திரப் பறவைகள்

(1) இரு கொண்டை கொண்ட ஊங்காரப்பறவை (Double Orested Humming Bird) இது தென் அமெரிக்காவாசி. இதற்கு நெற்றியின் மீதுள்ள இறகும், செவிப்பக்கங்களிலுள்ள இறகுகளும், தாடியும், இறக்கை, தோகை, வயிறு, முதுகு முதலிய இடங்களிலுள்ள சிறகுகள் வெவ்வேறு வகையும் நிறமும் உண்டு, இது தனக்குக் களிப்பு மிகும்போதும், தன் பேடையைப் பார்த்து அதிக ஆனந்தத்துடன் நடனம் செய்கிறது. (2) இவ்வினத்தில் மற்றொன்று நியூகினியா வாசி. இதனிறகுகள் பச்சையும் நீலமுங் கலந்த பொன்னிறம். இதனை ஊங்காரத் தங்கப்பறவை (Gold Humming Bird) என்பர். இதன் விரிந்த சிறகுகளும் தோகையும் ஆடுதற்கே அமைக்கப்பட்டவை போலிருக்கின்றன. இது சிறு சிட் டளவினது, இதன் முட்டைகள் பட்டாணி அளவுள்ளவை, இதனைச் சூரியப்பறவை (Sun Bird) என்பர். (3) இவ்வினத்தில் வேறொன்று அமெரிக்கா நாட்டுக் காடுகளிலிருக்கிறது. இதனைக் கொலீன்பறவை (The Goolaa Bird) என்பர். இப்பறவையின் அலகிற்கருகில் மீசையைப் போன்ற மெல்லிய இறகுகள் பக்கத்திற்கு மும்மூன்றாக இருபக்கங்களிலும் வெகு நீண்டிருக்கின்றன, அம்மீசைகளின் கடைசியில் மயிலின் இறகுக் கண் போல ஒரு சிறகு இருக்கிறது. இதன் தோகைகள் மற்றப் பறவைகளுக் கிருப்பதுபோலில்லாமல் வெகு அழகானவை. இது நடிக்கையில் தோகைகளையும் சிறகுகளையும் விரித்து நடிக்கிறது. (4) அமெரிக்கா நாட்டில் பாரடைசியா மாக்னிபிகா (Paradisea Magnifica) என்னும் பறவை உண்டு. இதன் வாற்புறத்திலிரண்டு கம்பிகள் போன்று (3) அடிகள் நீண்ட தோகை வளைந்திருக்கிறது. (5) இவ்வினத்தில் சூபர்ப் (The Superb) எனும் ஓர்வகை மெலூகா தீவுகளி லிருக்கிறது. இது ஒரு காக்கை அளவுள்ளது. இதன் முதுகு பக்கத்தில் படல்போல் விரிக்கக்கூடிய இறகுகளிருக்கின்றன, அவை அழகிய செந்நிறமுள்ளவை. இவை சூரியனைக் கண்டு ஆடும்போது அதிவிகோதமாய் மறக்கத்தகாத்தாயிருக்கும் என்பர். (6) இவ்வினத்தில் வேறொன்று நியூகி னியா தீவிலிருப்பது. அதனைக் கிங்க்பர்ட் ஆப்பாரடைஸ் (King Bird of Paradis.) என்பர். இதன் சிறகுகள் பச்சை நிறம், தலை, கழுத்து, முதுகு பசுமை கலந்த நீலம்; வயிறும், வாலும் கரிய செந்நிறம், இதன் வால்புறத்தி லிரண்டு சிறு கம்பிகள் நீண்டு வளர்ந்து வளைந்து முனைகள் சுருண்டிருக்கின்றன. அச்சுருள் முனையிலுள்ள சிறகுகள் அழகியன. இது ஆடும்போது புறாககளைப்போல் சிறகுகளை அகல விரித்துப் வளைந்தும் நெகிழ்ந்தும் ஆடும். (7) இவ்வினத்தில் வேறொன்று கிரேட் பர்ட் ஆப் பாரடைஸ் (Grest Bird of Paradise) என்னும் ஒருவகை நியூகினியா நாட்டுக் காடுகளில் இருக்கிறது. இதன் உடல் (16) அங்குல நீளம். இதன் கண்கள் வட்டமாய்ச் செந்நிறமுள்ள ‘இமைகளுக் கிடையில் பொன்னிறமாய் விளங்குகின்றன. இதன் இறகுகள் பல வர்ணமுள்ளவை. இதன் நெற்றியும், கழுத்தின் முன்பாகமும் மஞ்சள் நிறம். இதன் தொண் டையிலும், மார்பிலும், கழுத்திலும் உள்ள சிறு சிறகுகள் நிலங் கலந்த பசும் பொன் னிறமானவை. இதன் உடலின் இருபக்கங்களிலும் (2) அடிகள் நீண்ட தோகை இறகுகள் வளர்ந்திருக்கின்றன. இவ்விறகுகள் அழகிய செம்பொன்னிறமாய் முனை செம்பினிறங்கொண்டு இருக்கின்றன. தோகைகள் மிக நீண்டு மயிற்றோகைபோ லிருக்கின்றன. இத்தோகைகளி லிரண்டு மயிரிலாத கம்பிபோல் அதிகமாய் நீண்டு வளர்ந்திருக்கின்றன. அவற்றி னுனியில் அழகிய குஞ்சுகளுண்டு, இதற்கு உற்சா கம் உண்டாகும்போது இது தன் தோகையை விரித்தாடித் தன்னைக் களிப்பித்துக்கொள்கிறது. இவை கூட்டங் கூடி ஆடுகின்றன. மாம்ஸபக்ஷணி.

நடுகல்

இது, வென்றியான் மேம்பட்டுத் துறக்கம்புக்க பெருவீரர் பெயரையும் அவர்கள் ஆங்காங்குப் புரிந்த போர்ச்செயல்களையும் ஒரு நெடுங்கல்லில் எழுதி அதனை நாட்டி அதில் அவர்களின் உருச்செய்து மாலை, பீலி முதலிய புனைந்து வழிபடுதல் தமிழ்நாட்டுப் பழைய வழக்கமானது.

நடுக்காட்டுத்தியாகி

இவர் இடையர், தம்மை விரும்பி வந்தவர்க்கு உபகரித்துப் புகழடைந்தவர்.

நடுவிலாழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை).

நடுவில் திருவீதிபிள்ளை பட்டர்

நம்பிள்ளை திருவடி சம்பந்தி. இவர் பின் பழகிய பெருமாளுடன் சமஸ்தானஞ் சென்று அரசன் கேட்ட இராமாயணசங்கைக்கு விடை தர மயங்குகையில் பின் பழகிய பெருமாள் கூறிய சமாதானத்தைக் கேட்டு அரசனுக்கு விடை தந்து அரசனளித்த பரிசுகளை நம்பிள்ளைக்கு அளிக்க நம்பிள்ளை மறுக்க விசனமுற்று அவரை ஆச்ரயித்தவர்.

நடுவூர்

இஃது, இம்மையே தருவார் கோயில் உள்ள இடம். இதிலுள்ள ஸ்வாமிக்கு இஹாபீஷ்டப்ரதாயகர், இம்மையே என்மை தருவாரெனவும் அம்பிகைக்கு மத்கியபுரநாயகி, நடுவூர் நாயகியெனவும் திரு நாமங்கள் வழங்கும். சுந்தரமாறர் பூசித்த தலம்; இது மேலைவாசிக்கு மேற்கேயுள்ளது, (திருவிளையாடல்).

நடைமச்சம்

இம் மீன் அமெரிக்கா நாட்டைச் சார்ந்த மெக்சிகோ நகரத்திலுள்ள நீர்நிலைகளிலுள்ளது. இம் மீன் 8, 9 அங்குல நீளமுள்ளது. இதன் தோல் கபில நிறமாய்ப் புள்ளி கொண்டது. இதன் கழுத்தை யடுத்து இரண்டு கால்கள் நான்கு விரல்களுடன் இருக்கின்றன. இதற்கு மீனுக்கிருப்பது போல் செட்டைகளும் செவிகளும் சுவாசப்பையும் உண்டு, தரையில் நடமாடும் பிராணிகள் போல் காற்றுத் தாங்கும் பையுமுண்டு.

நடையாடுபதஞ்சலி

கூரத்தாழவானுக்கு ஒரு பெயர்.

நட்டுவன்

இவன் நடனத்தொழிலில் வல்லவன், இவன் தேவ தாசிகளுக்கு நடனத் தொழில் கற்பிப்பவன். இவன் தாசி புத்திரன். சில ஓச்சர்களும் நட்டுவத்தொழில் தமிழ் நாட்டில் செய்கின்றனர், நடனி நடிக்கையில் இவன் பின்னின்று நடன பாஷையைக் கூறிச் சதிக்குத் தக்கபடி தாளவொத் தறுப்பவன். (தர்ஸ்டன்).

நட்வலை

சக்ஷர்மநுவின் பாரி; உல்முகனுக்குத் தாய்,

நண்டு

இது, எட்டுக் கால்களும் நீண்டு நாற்புறமும் சுழலத்தக்க கண்களிரண்டும், இரண்டு விரல்போலங்கங்களுள்ள கைகளிரண்டும் பெற்றது. நமக்கு எலும்புகளுள்ளது போல அதன் உடம்பு ஒட்டால் மூடப்பட்டிருக்கிறது. கடல் நண்டுகளின் ஓடு பல வர்ணமாய்ப் புள்ளி பெற்றிருக்கும். கால்கள், அடிவயிற்றிலிருந் துண்டாம். இதற்கு முதுகின் பிற்பாகத்தில் வால் ஒன்று உண்டு. இது நீரிலும் நிலத்திலும் வசிக்கும். இதில் கழிநண்டு, கழனிநண்டு, குளநண்டு, கடல் நண்டு எனப் பல. நண்டுகளில் பலவகைப் பேதங்களிருக்கின்றன. இவற்றில் சிறிது காலங்குல அகலம், பெரியது (2) அடிகளுக்குமே லிருக்கின்றது. இது தன் வயிற்றிலேயே முட்டைகளைப் பொரித்துக் குஞ்சுகள் வெளியில் உலாவும் பருவத்தில் தன் வாய்ப்பக்கத்தினடியிலுள்ள புது ஒட்டைத் திறந்து வெளிவிடுகிறது. பழைய ஒடு விழுந்து விடுகிறது. இதனால் முதல் கெடாது. இவற்றிற்கு எட்டுக்கால்களும் கத்தரி போன்ற இரண்டு கைகளும் உண்டு. இவ்வினத்திற் சில தம்மைக் காத்துக்கொள்ள நத்தை ஓடுகளிற் புகுந்து தம்மைக் காக்கும் எனவும் சில கடற்றாமரை யெனும் புழுவை வேறு பிராணிகள் தம்மை யடையாமல் தாங்கிநிற்கும் எனவும் கூறுவர். சில நண்டுகள் பல வர்ணங்களுடன் இருக்கும் என்பர். ஐரோப்பாக் கடல்களில் சில நண்டுகளுக்கு அளவுக்கு மேல் ஓடு வளர்ந்து இருப்பதால் அதனை எதுவும் தொந்தரவு செய்வதில்லை.

நண்டு வாய்க்காலி

இதை நண்டுதெறுக் கால் என்பர். இது தேளைப்போல் உருவுடைத்தாய் உறுப்புகள் வலுத்துக் கறுப்பாயிருக்கும். கொடிய விஷப் பிராணி. கல்லிலும் புதர்களிலும் வசிப்பது.

நதலன்

பாண்டுவின் தேவியாகிய மித்திராதேவியிடம் அச்வநிதேவர் மந்திரத்தால் பிறந்தவன். இவனுக்குத் திரௌபதியிடம் சதாநீகனும், இரேணுமதி யென்னும் பெண்சாதியிடம் நிர்மித்திரனும் பிறந்தனர். இவன் தன்னை அழகுள்ளவன் எனச் செருக்குற்றதால் சகாதேவனுக்குப் பின்னிறந்தனன்.

நதலேஸ்வரி பீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

நதிகள்

1. (7) கங்கை, யமுனை, சரஸ்வதி, நருமதை, காவிரி, குமரி, கோதாவரி. 2. இவை, மலையின் அருகிலுள்ள நீரூற்றிலிருந்து உண்டாவன. நிலத்திலிருந்து குமிழியிட்டுப் புறப்படுவன ஊற்று நீர். இந்த ஊற்று நீரே நதி. இது, பூமி எந்தப் பக்கம் சாய்ந்திருக்குமோ அந்தப் பக்கம் ஒடும். இது பாயும்போது பூமியைக் கரைத்துக் கொண்டே போகும். உற்பத்தி ஸ்தானத்திருந்து போகப்போக அகலும், இதற்குக் காரணம் பல உபநதிகள் சேர்தல், பெருநதிகளால் பல கிளை நதிகள் பிறந்து பல பூபாகங்களிற் பிரவகித்தும் பூமியைச் செழுப்பிக்கும். ஊரிலுண்டாம் அதிக ஜலத்தைத் தன்னிற் பெற்றுக் கடலிற் சேர்க்கும்.

நதிகள்

மலைகளிலும், மேட்டு நிலங்களிலும் பெய்யுமழை நீரும், பனிப்பாறை களின் கரைநீரும் அவ்விடங்களில் ஊறி ஊற்றெடுப்பது. சில நதிகள் வெயிற்கால பத்து வற்றிப்போம். சிலவற்ற, அவ்வற்றா. நதிகள் ஜீவந்திகளாம். இவ்வகை நதிகளில் பெரியது வட அமெரிக்கா கண்டத்திலுள்ள மிசிசிபி. இது (4382) மைல் நீளம், மற்றொன்று தென் அமெரிக்காவிலுள்ள அமேசான். இது, (400) மைல் நீளமுள்ளது.,

நதிபன்

சுக்கிரன் என்னும் பிராமணனுக்குத் தம்பி. தாயபாகங்கொடாத தமயனை மூன்று யோசனை யகலம் ஆறு யோசனை உயரமுள்ள ஆமையாகச் சபித்தவன்,

நதிமுகப்பூமி

ஆறு சமுத்திரத்தில் கலக்கு முன் பல கிளைகளாகப் பிரிந்து தனித்தனியே ஓடிக் கடலிற் கலப்பதும் உண்டு, அப்போது அந்தப் பிரிவுகளுக்கு இடையில் திட்டுத்திட்டாக தீவுகள் ஏற்படும். அந் தத் தீவுகளுக்கு நதிமுகப்பூமி அல்லது டெல்டா என்று பெயர். (பூகோளம்).

நதிமூலம்

ஆறுகள் உற்பத்தியாகுமிடம். நதி கடலிற் சேருமிடம் முகத்துவாரம், ஒரு நதியிலிருந்து பிரியும் நதி கிளைநதி, ஒரு நதியில் வந்து சேரும் நதி உபநதி, மலையிலிருந்து நீர் பாய்தல் நீர்வீழ்ச்சி,

நத்தத்தனார்

இடைக்கழிநாட்டு நல்லூரார், இவர் ஏறுமாநாட்டு நல்லியக்கோடன் மீது சிறுபாணாறு பாடியவர், கடைச்சங்கத்தவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை).

நத்திதுர்க்கம்

மைசூரில் உள்ள மலை. இதில் பாலாறும், வடபெண்ணை உற்பத்தி,

நத்தை

இது மெதுவான தேகத்தையுடையது. இச் சாதி முதுகெலும்பில்லாதவை. இதற்கு முன்புறத்தில் வட்டமான தலையிருக்கிறது. அதில் (4) கொம்புகளுண்டு. (2) பெரியவை, (2) சிறியவை. பெரிய கொம்புகள் கண்கள். சிறியவை ஸ்பர்சனிகள் அடியில் ஒரு பாகத்தைச் சுருக்கி மற்றொரு பாகத்தை நீட்டிக்கொண்டு நகருகிறது, ஓடு, தேகத்தை மறைத்துக்கொண் டொட்டி யிருக்கும், இது பம்பரம் போலிருக்கும். இது நகருகையில் ஒருவித பிசின் தேகத்திலுண்டாகிறது. இது அப்பிராணி நகருதற்கு அதுகூலமாய்ச் செய்கிறது. வெயிற் காலத்தில் இது கற்பாறை, மரங்கள் முதலியவற்றில் ஒட்டியிருக்கும். இவை நிலத்திலுள்ளவை, நீரிலும் இவ்வகைப் பிராணிகளுண்டு. இவற்றில் சிற்றின நத்தைகளும் உண்டு.

நந்தகன்

1. குரோதகீர்த்தியின் குமரன். (பக்தாஸ்தன அம்சம்). 2. வச்சமித்திரன் குமரன். இவன் குமரன் புனிந்தன்.

நந்தகமகாமுனி

சோணாட்டுக் கூடலூரில் தவம் புரிந்து விஷ்ணுமூர்த்தியின் அருள் பெற்றவர்.

நந்தகோபன்

கோகுலத்தரசன், வசுதேவர் நண்பன்; பலராம கிருஷ்ணர்களை வளர்த்தவன்; இவன் முற்பிறப்பில் துரோணன் என்பவன் ஏகாதசி விரதமிருந்து துவாதசி தீர்த்தமாட யமுனை நதிக்கும் சென்று வருணப் பிரத்தியனால் வருணலோகத்திற்குக் கொண்டு போகப்பட்டுக் கண்ணன் மீட்க மீண்டும் யமுனையை யடுத்த மடுவில் ஸ்நானஞ் செய்து பரமபத தரிசனஞ்செய்து கண்ணனை நாராயணன் என்று தரிசித்திருந்தவன். அம்பிகை பூசைக்குச் சென்று அவ்விடத்து மலைப்பாம்பினால் விழுங்கப்பட்டுக் கிருஷ்ண மூர்த்தியால் விடுபட்டவன்.

நந்தட்டன்

கந்துக்கடன் புதல்வன், சீவகனுக்குச் சகோதரன் என்பர்.

நந்தனப் பறவைகள் (Paradise Bird)

இவை உருவத்தில் அழகிய சிறகும் ஓசையும் பெற்றுக் கண்ணைக் கவர்வன, இவ்வினத்தில் ஒருவகை நியூகினியா நாட்டுக் காடுகளிலுள்ளவை. இவற்றிற்குத்தலையும், உடலும் ஊதா நிறம் இதன் முதுகுப்பக்க முள்ள சிறகுகள் மேலுயர்ந்து முனை வளைந்து குவிந்து அடுக்கடுக்கா யிருக்கின்றன, சிறகுகளின் அடிப்பாகம் ஊ தா நிறமாயும், இடையில் உயர்ந்த பச்சை நிறமாயும், முனை வெளுத்துப் பளபளப்பாயும் இருக்கிறது. இதனை (Grand Promerops) என்பர். இவ்வினத்தில் வேறொன்று உண்டு, அதனைப் பாரடைசியா என்பர். அது கயானா முதலிய இடங்களிலுண்டு, இச்சிட்டினத்திற்குத் தலையில் அழகிய கொண்டையுண்டு. இவற்றினாணிற்கு (3) அடிகள் நீண்ட அழகிய இரண்டு தோகைகள் இருக்கின்றன. இதற்குத் தலையும் கழுத் தும் செம்பு நிறம். இவை இந்தியாவிலும் சிலோனிலும் உண்டு, ஒரிநாத்ராகட்டெயில் (Orpith Racket Tail Bird) இது, நியூகினியா முதலிய நாடுகளிலிருக்கிறது. இதன் தலை கறுப்பு, கழுத்து நீலங் கலந்த பசுமை, வயிறு மஞ்சள் நிறம், முதுகு கறுமை கலந்த செம்மை, இதற்குள்ள வால் சிறகுகளில் (2) இறகுகள் (3) அடி நீண்டு அவற்றின் முனையில் வட்டமாக சிறு இறகுகள் பெற்றிருக்கின்றன. இதன் காலில் மயிர்க் குச்சுகள் உண்டு. இதன் மூக்கு மீன்குத்திப் பறவை மூக்குப்போல் நீண்டிருக்கிறது. இதுவும் பாடுமினம்,

நந்தனார்

திருநாளைப்போவாரைக் காண்க.

நந்தன்

1. விஷ்ணுமூர்த்தியின் படர்களில் ஒருவன், 2. திருதராட்டிரன் புத்திரன். 3. கண்ணனை வளர்த்தவன். இவன் தேவி யசோதை., 4. பிருதுஷேணன் குமரன், தாய் ஆகுதி, தேவி பிரதிபுத்திரை, குமரன் கேயன். 5. மகாநந்திக்குச் சூத்திரப் பெண்ணிடம் உதித்துப் பிறகு மகாபத்மன் என்கிற பெயரடைந்து க்ஷத்திரியரை நாசஞ் செய்தவன். மகத தேசாதிபதி இவனுக்குச் சுமாலி முதலிய எட்டுக் குமாரர். 6. வசுதேவர்க்கு மந்தரையிடம் உதித்த குமரன். 7. சந்திரகுலத் தரசனாகய தருமகுத்தனுக்குத் தந்தை. 8. நபாகனைக் காண்க.

நந்தன் சாம்பன்

பேராவூர்ப் பிரபுவைக் காண்க.

நந்தி

1. இவர்க்கு இடது கையில் சூலம், வலதுகையில் செபமாலை. இராவணனைக் குரங்கால் உன் பட்டணமழிகவெனச் சபித்தவர். சர்வசம்மார காலத்தில் சிவ மூர்த்தியை அடைக்கலம் புகுந்து வாகனமானவர். கருடனை உச்வாசநிச்வாசத்தால் கர்வபங்கஞ் செய்ததால் பூமியில் பசவேசராகப் பிறந்து சிவபூசை செய்து கைலையடைந்தவர். சிவாக்கினையால் பிரமன் யாகசாலைக்குச சென்று அவ்விடத்துச் சிவ மூர்த்தியை நிந்தை கூறிய தக்கனைத் தலையறவும் இந்தச் சிவ நிந்தை கேட்டிருந்த தேவர் பிறந்திறந்து சூரனால் வாதையடையவும் சாபமிட்டுத் திருக்கைலை யடைந்தவர். சிவமூர்த்தி பிராட்டிக்கு ஞானோபதேசஞ் செய்த காலத்தில், குமாரக்கடவுளை அவர்களிடம் கட்டளையின்றி விட்டு இதனால் சுறா மீனாகச் சாபமடைந்து வலையராய் வந்த சிவமூர்த்தியால் பிடியுண்டு சாப நீக்க மடைந்தவர். இவர் தவமியற்றிப் பருவதவடிவம் பெற்று ஸ்ரீபர்வதமாய்ச் சிவ மூர்த்தியைத் தாங்கினவர். விஷ்ணு மூர்த்திக்குச் சிவமான்மியங் கூறியவர். 2. அருஷன் மனைவி, 3. ஒரு சிவகிங்கரன். 4. பாரசருஷியின் புத்திரன். 5. இவன், தொண்டை நாட்டு ஆறைப் பதிக்காவலன். இவன் பல்லவர் வம்சத்தவன். இதனை ‘மல்லைவேந்தன் மயிலை காவலன், பல்லவர் தோன்றல் பைந் தார் நந்தி” எனவும், பல்லவர்கோனந்தி” எனவும், “அமரர்கோமானடு போர்தந்தி’ எனவும் கூறியவற்றாலறிக. இவன் அவனி நாராயணன், விடேல், விடுகு, குவலமார்த் தாண்டன், மனோதயன், தேசபண்டாரி, நந்திச்சீராமன் எனவும் பெயர் பெறுவன். இவன், குருக்கோட்டை வென்ற தாகவும், தெள்ளாற்றில் பகைவரை வென்றதாகவும், பழையாற்றுச் சண்டை வென்றதாகவும், புகழப்படுவன். இவன் பொருளை யிரவலர்க்குச் செலவு செய்தலில் பொறாது இவனைக் கொலை புரிய வெண்ணிய இவன் சகோதரன் வசையாகக் கலம்பகம் பாடி அதில் ஒரு கவியை ஒரு புலவனை அவர் ஏகாந்தத் தலத்துச் சுவரைத் தொளைத்துக் கூறிவிட்டு ஓடச் செய்தனன். அவ்வகை செய்த புலவன் கூறிய செய்யுள் ஒன்றைக் கேட்டு அவற்றை முற்றும் கேட்க ஆவல் கொண்டவனாய் இருக்கும் நாட்களில் ஒரு நாள் நகரை வலம் வருகையில் தாசி யொருத்தி இச் செய்யுளை வீணையில் பாடக் கேட்டு (99) பந்தல்களைச் சுடலையளவு போடச் செய்வித்துச் சுடலையில் சிதை யடுக்கச் செய்வித்துத் தாசியை அழைப் பித்து ஒவ்வொரு பந்தலில் ஒவ்வொரு செய்யுளைக் கேட்டு வருகையில் அப்பந்தல்கள் தீப்பற்றக் கண்டும் மனஞ் சலியாது நூறாவது செய்யுளைக் கேட்க ஆவல்கொண்டு சிதைமேலிருந்து “வானுறு மதியை யடைந்த துன் வதனம் வையகமடைந்த துன் கீர்த்தி, கானுறு புலியை யடைந்த துன் வீரம் கற்பகமடைந்த துன் கரங்கள், தேனுறு மலராளரியிடஞ் சேர்ந்தாள் செந்தழல் புகுந்ததுன் மேனி, யானுமென் கலியுமெவ்விடம் புகுவேமெந்தையே நந்தி நாயகனே ” என இதைக்கேட்டுச் சிதை தீப்பற்ற உயிர் நீங்கினவன். இவனது நாடு மயிலையென்றுங் கூறுவர். இவனையே நந்தித் தொண்டைமான் என்பர். அதனை பொள்ளா நுழை வழிப்போய்த் தலை நீட் டும் புலவர் முன் சொல், கள்ளாருஞ் செஞ் சொற்கலம்பகமே கொண்டு காயம்விட்ட, தெள்ளாறை நந்தியெனுந் தொண்டை மான் கலி தீர்ப்பதற்கு, வள்வார் முரசம திர்த்தாண்டதுந் தொண்டை மண்டலமே” என்னும் தொண்டைமண்டல சதகத்தா லறிக. 6. இவனுக்கு நந்திபோத்தரையன் எனவும் பெயர். இவன் பல்லவ அரசர்களில் எட்டாந் தலைமுறையானவன். இவன் கி. பி. 830 முதல் 854 வரை ஆண்டான். இவனுக்கு இராஜதானி காஞ்சி முதலிய. இவன் தந்தையாகிய தந்திவர்மனை வரகுணபாண்டியன் படை யெடுத்து வந்து வென்று பெண்ணையாற்றின் கரையிலுள்ள அரைசூரிலிருக்கையில் அப்பாண்டியனை இவன் தெள்ளாற்றில் வென்றனன். பிறகு இவன் வரகுணனைப் பின் தொடர்ந்து பழையாறு, வெள்ளாறு, குருக்கோட்டை, வெறியலூர், தொண்டி முதலிய இடங் களில் வென்றான்.

நந்திகள் நால்வர்

சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதமுனிவர், திருமூலர்.

நந்திகிராமம்

இராமன் காடுசென்று மீளும் நாள் வரையில் அவரது திருப்பாதுகையை வைத்துப் பரதன் பூசித்த இடம். அயோத்தியாபுரியைச் சேர்ந்தது. இதில் பரத குண்டம், சத்துருக்கின குண்டம், கயா குண்டம், சடாகுண்டம், பிசாசவிமோசன தீர்த்தம், மானச தீர்த்தம் முதலிய இருக்கின்றன.

நந்திகோத்ரர்

அவுரவருஷியின் தந்தை.

நந்திக்குகை

இக் குகை திருத்தணிகையில் விஷ்ணு தீர்த்தத்திலிருந்து மேல் திருத் தணிகைக்குப் போகும் வழியில் வடக்கில் உள்ளது. (திருத்தணிகை புராணம்).

நந்திசேநன்

சண்முக சேநாவீரருள் ஒருவன்.

நந்திதேவன்

ஒரு புண்ணியசீலன்; இவன் நாற்பத்தெட்டு நாள் காட்டில் சலபானத் துடனிருந்து ஒருநாள் சிறிது ஆகாரங் கிடைத்துக் குடும்பத்துடனுண்ண விருக்கையில் இந்திரன் பசியுள்ளவன் போல் வந்து யாசிக்க அவனுக்குக் கொடுத்துச் சுவர்க்கமடைந்தவன்.

நந்திதேவர்

செந்நிறம், முக்கண், சடை, வலக்கையில் ஜபமாலை, இடைக்கையில் சூலம், அபய, வரதங்கொண்டு சதுர்ப் புஜராயிருப்பார்.

நந்தித்தொண்டைமான்

நந்தியையும் கருணாகரத் தொண்டைமானையுங் காண்க,

நந்திநாதோத்பவம்

காசியிலுள்ள நதி, நந்திதேவர் செய்த நாதவொலியா லுன்டானது.

நந்தினி

1. இந்திரப்பிரத்தத்திற் கருகிலுள்ள நதி, 2. வீரன் தேவி, விவிம்சன் தாய்,

நந்திமண்டலம்

ஸ்ரீசைலத்தில் நிருதி மூலையில் நந்திமாதேவர் தவஞ்செய்த இடம்

நந்திமாதேவர்

1. வீதஹவ்யர் எனும் சிலாத முனிவர், தம் பத்தினியார் சித்ரவதியார் புத்திரப்பேறு வேண்ட முனிவர் சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றச் சிவ பெருமான் தரிசனந்தந்து யாகஞ்செய்வதற்கு நிலத்தை யுழுவாய் ஆண்டு நம்மை யொக்கும் அழகுவாய்ந்த புதல்வன் உண்டாவன் என்று திருவுருக்கரந்தனர். அவ்வாறே சிலாதர் யாகஞ் செய்ய நிலத்தை உழ உழுசாலில் பொற்பெட்டியில் அவதரித்துப் பிரமதேவரால் எல்லாத் தேவர் களையுங் களிப்பித்தமையால் நந்திதேவர் எனப் பெயரடைந்து சிலாதமுனிவர் புத்திராதலால் சைலாதியென இருடிகளால் பெயர்பெற்று வளர்ந்து சகலகலை வல்லவராய்ச் சிவபெருமானை யெண்ணி மும்முறை தவஞ்செய்து முதலில் திருவடியில் நீங்காத அன்பும், இரண்டாமுறை சிவ நிந்தை, சிவனடியவர் நிந்தை, விபூதி ருத்ராக்ஷநிந்தை செய்பவரைத் தண்டிக்கும் ஆணையும், மூன்றாமுறை சிவபெருமானைப் போல் நித்யராய் எல்லாராலும் துதிச்சுப் பெறுதலும், சிவசாரூப்யமும், பட்டாபிஷேகமும், மகவாம்பேறும், கணாதிபத்யமும், சிவஞானாசாரியத்வமும், பிதுர்தேவர்களின் இருதயத்திற்றோன்றிய கன்னிகையாகிய சுயஞ்ஞையின் திருமணமும், பெற்றுத் திருக்கைலை யடைந்தவர். (சிவரஹஸ்யம்.) 2. ஸ்ரீசைலத்தில் சிலாதமுனிவர் சிவ மூர்த்தியை யெண்ணித் தவமியற்றி அவரருளால் இறவாக்குமரன் வேண்டினர், சிவமூர்த்தி நமதருளால் உன்னிடம் ஒரு குமரன் உதிப்பன் எனத் திருவாய்மலர்ந்து மறைந்தனர். அந்தப்படி சிலாதமுனிவர் யாகஞ்செய்ய உழுத நிலத்தில் நந்திமாவர் குழந்தையருக்கொண்டு திருவவதரித்தனர். இவர் திரு அவதரித்த ஏழாம் ஆண்டில் மித்திராவருணரால் மரணமறிந்து சிவமூர்த்தியை யெண்ணித் தவமியற்றிச் சிவமூர்த்தியின் அருள் பெற்றுப் பிராட்டியாரால் ஞானப்பால் அபிஷேகிக்கப்பட்டுச் சிவகணங்களுக்கு இறைமை பூண்டு சுயசையென்பாளை மணந்து திருக்கைலையில் எழுந்தருளியிருந்தனர். வீரகனைக் காண்க.

நந்திமுகன்

சிவகணத்தவரில் ஒருவன், ஈசானரிடம் யோகசாஸ்திரம் கேட்டவன்.

நந்திவர்கன்

(சூ.) உதாவசு குமரன்.

நந்திவர்த்தனனாசயன்

அற்பகன் குமரன்; இவன் குமரன் மகாநந்தி.

நந்திவர்த்தனன்

வாசகன் குமரன்; இவன் குமரன் சுசநாகன்.

நந்தை

1 ஒருநதி, கைலைக்கருகிலுள்ளது. 2. ஒருகன்னிகை இவள், தந்தை சாபத்தால் ஊமையாய் மீண்டும் சுகர்மனால் நீங்கப் பெற்றவள். 3. இவள் சிவபத்தியால் உருத்திராக்ஷத் தைப் பூண்டு சிவபூசை கடைப்பிடித்து முத்திபெற்றவள். இவள் தான் வளர்த்த கோழிக்கும், குரங்கிற்கும் உருத்திராக்ஷம் புனைந்தனள், அதனால் கோழி காச்மீரத் தரசன் புத்திரனாகவும், குரங்கு அவ்வரசன் மந்திரியாகிய சுதன்மாலின் குமரனா கவும் பிறந்து முத்திபெற்றன. மந்திரி குமரன் பெயர் தாரகன். 4. திதிகளைக் காண்க.

நந்நிதி

அநங்கன் குமரன், காமக்குரோத முதலிய துர்செய்கையால் சந்ததியில்லாது இறந்தனன். முனிவர் இவன் நாட்டிற்கரசன் இல்லாமைகண்டு இவனிடது தோளைக் கடைந்தனர். அதினின்றும் கோரரூபமாய் ஒருவன் பிறக்க அவனை நீ வேடர்க்கரசனாய்க் காட்டையாள்க என விடுத்துப் பின் னும் வலது தோளைக் கடைந்தனர். அதில் பரமகாரன் என்பவன் நற்குணனாய்ப் பிறந்தான். அவன் எலும்பைக்கடையத் தாதா, விதாதா பிறந்தனர்.

நன்னனார்

கடைச்சங்கமருவிய தமிழ்ப் புலவர். பரிபாடலில் (12) பாடலுக்கு இசை வகுத்தவர்.

நன்னன்

1. விச்சிக்கோவின் பரம்பரையைச் சேர்ந்தவன். பல்குன்றக் கோட்ட முடையான். இவன் மகன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌ சிகனார் மலைப்படுகடாம்பாடினர். இவன் ஒரு காலத்துப் பெண் கொலை செய்தவன். (புறநானூறு.) 2. இவன் மலையாளம் ஜில்லாவில் மேல்பால் மேலைக் கடலோரத்திலுள்ள பூழி நாட்டையாண்ட ஒரு சிற்றரசன். சோர் பரம்பரையைச் சேர்ந்தவன் நன்னனுதியனருங் கடிப்பாழி” அகம் (258); உதியன் சேரன். இவன் சிற்றரசனாதலின் வேள் என்னும் பட்டம் எய்தினான் நறவு மகிழிருக்கை நன்னன் வேண்மான்” கம் (97). பாண்டியர் நாயக்கருக்குக் கபபங்கட்டத் தொடங்கியபின் வேள் எனப்பட்டஞ் சூடியது இங்கு நோக்கத்தக்கது. சீவலவேளென மகுடஞ் சூடினானே” இந்நன்னனது பூழி நாடும் பிறவுங் கொங்கணதேச மெனப்படும்; “பொன்படு கொண்கான நன்னன்” நற். (391), (கொண்கானம் : கொங்கணம்) கடம்பின் பெருவா யில், பாரம், பிரம்பு, வியலூர் இவை இவனுடைய ஊர்கள்; பதிற்று (4) ம் பதிகம் அகம் (152,356). இவனாடு மிக்க நீர் வளமுடையது; அகம் (366). (எழில் மலை மேலைக்கடலருகிலுள்ள சுற்றூரிலிருந்து வடக்கே (18) மைலிலுள்ளதொரு மலை. எழில்மலையென்ற ரெயில்வே ஸ்டேஷனுமுள்ளது; அதனை ஸப்தசைலமெனப் பலருங் கூறுவர். பாழியை முன்பு வடுகர் கைப்பற்றி ஆண்டு வருநாளில் சோழன் நெய்தலங்கானலிலுள்ள இளஞ்சேட் சென்னியென்பவன் படையோடு சென்று பொருது வடுகர்களைக் கொன்று பாழியையும் அழித்து மீண்டான். அதனால் இவன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யெனவுங் கூறப்படுவன். “இளம்பெருஞ் சென்னி. செம்பொழி புரிசைப் பாழி நூறி வம்பவடுகர் பைந்தலை சவட்டி” அகம் (375). வம்பவடுகர் : புதியராய்த் தமிழ் நாடு புகுந்த வடுகர்). இந்நன்னன் மிக்க கொடையாளி; இரவலர்க்கு யானை முதலாய பரிசளிப்பவன். “இசைநல்லி கைக்களிறு வீசுவண் மகிழ். நன்னன் அகம் (152). “அகவுநர்ப் புரந்த அன்பின். நன்னன்” அகம் (97). இவன் ஆற்றலாற் பிண்டன் முதலானோரை வென்று மிகுந்த பொருளீட்டி அப்பொருளைப் பாழியிற்சேமித்து வேளிர் பலரைக் காக்குமாறு வைத்திருந்தனன்; அகம் (258). முன் கூறிய பிண்டனோடும் இன்னும் பல அரசரோடும் போர்செய்து அவரைக் கொன்றவுடன் அகம் (152) அப்பிண்டன் முதலானோருடைய உரிமை மகளிரைப்பற்றி வந்து அம்மகளிர் தலையைச் சிரைத்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து அக்கயிற்றினால் அப்பகையரசரின் யானையைப் பிணித்து வந்தவன்; நற். (270). இவன் பிறந்தநாட் கொண்டாட்டம் பலராலும் புகழப்படுவது; மதுரைக்காஞ்சி (618,619) அடிகள். இவனது தோட்டத்திலுள்ள மரத்தின் பசுங்காய் அருகிலோடிய கால்வாயில் விழுந்து வருவதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண்ணெடுத்துத் தின்ற தவறுக்காக அவளை அவளது தந்தை பல யானைகளும் அவள் நிறை பொன்னும் கொடுப்பதாக இரந்து வேண்டியும் இரங்கானாய்க் கொல்லுவித்தனன். குறு, (292). இவன் கொடுங்கோலன்றோ வேறெதனாலோ சேரநாட்டை அக்காலத்து அரசாண்டு வந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இவனை போர்செய் தழிப்பது கருதித்தன் சேனாபதி ஆஅய் எயின்னை பெரும் படையொடு செல்ல விடுத்தனன். இந்த ஆஅய்எயினன் வெளியம் என்னும் ஊரில் வேளிர் மரபிற் பிறந்தவன். அகம் (208). மிக்க வீரமுடையவன் வேண்டினோர்க்கு வரையாது யானை முதலியவற்றைக் கொடுக்கும் வண்மையுடையவன். அந்நாளில் மதுரையிலிருக்கும் அகுதை யென்பவன் தான் மிக்க வீரமுடையவனா யிருந்தும் இவ் ஆஅய்எயினனுக்கு நடுங்கி யொடுங்கியிருந்தனன்; இத்தகைய மேம்பாடு கொண்ட இவ் ஆஅய் எயினன் நன்னனது படைத்தலைவனாகிய மிஞிலி மிக்க வீரமுடையவனென்று பிறர் தடுத்துக் கூறியதையுங் கேளாமல் (அகம் 366). அவனோடு பாழியென்னு மிடத்திற் போர் தொடங்கினான். அப்பொழுது அந் நன்னன் தனது பேய் கூட்டருகில் (அகம்142) நின்று கூறிய கட்டளையை மேற்கொண்டு அவன் படைத்தலைவனாகிய மிஞிலி வந்தெதிர் நின்று போர் தொடங்கி நண்பகற்பொழுதில் வேலாலெறிந்து ஆஅய்எயினனைக் கொன்றான். விழுந்த எயினன் மேல் வெயில் படாவாறு பறவை பந்தரிட்டாற்போலச் சூழ்ந்தன. நன்னன மனமழுங்கியிருந்தனன்; (அகம் 208). பிறகு அவ்எயினனது உரிமை மகளிர் திரண்டெழுந்து காவிரியாற்றுக்கு வந்து தங்கள் வழக்கப்படி சரமக்கிரியை முடித்து அலங்கரித்த எயினன் போன்ற வடிவ மொன்றனை அந் நீரில் போகட்டு நீராடிப் பெயர்ந்து போயினர்; (அகம் 181). இப் பெரும்பூசல் கேட்டு மதுரையில் அடங்கிக்கிடந்த அகுதை அச்சம் நீங்கி மகிழ்வானாயினான்; (அகம் 208). இங்ஙனம் சேனாபதி முடிந்தானென்பது கேட்ட களங்காய்க்கண்ணி நார்முடிச் சோல் வெகுண்டு பெரும் படையொடு வந்து பெருந்துறையென்னு மிடத்தில் நன்னனால் பாதுகாக்கப்பட்டு வந்த அவனது காவன் மரமா இயவாகையை வெட்டிச் சாய்த்தனன். (இவ்வாகைப் பறந்தலை வாகையென்னும் பெயரொடு இப்பொழுதுமுளது) இதனைஅறிந்த நன்னன் தன் பெரும் படையொடு வந்து எதிர்நின்று பலநாள் காறும் போர் செய்ய சற்றில் சோலன் படையால் நன்னன் இறந் தொழிந்தனன்; “குடா அ, திரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவிற், பொலம்பூணன்ன பொருகடத்தொழிய வலம்படு கொற்றந் தந்தவாய்வாட், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேர, லிழந்த நாடு தந்தனன்” (அகம் 199). நன்னன் கதையை யாண்டும் எடுத்துக் காட்டினவர் பரணர்; (நற். 270,391). இந்நன்னனுடைய பாழியும் பாரமும் பிறவும் சேனாபதி மிஜிலி யென்பவனால் முன்பு காக்கப்பட்டு வந்தன; (நற்.265),

நன்னன்வேண்மான்

என்பவன், சங்க நாளிலே, தமிழகத்திற் பெருவள்ளலாய் விளங்கிய ஒரு சிற்றரசன், இவன் வேளிர் குலத்தைச் சேர்ந்தவ னென்பது, இவனுக்கு வழங்கும் வேண்மான்’ ‘வேள்’ என்னும் அடைகளால் விளங்குகின்றது. வேண்மான் வேளிர் தலைவன். சங்க நூல்களிலே, நன்னன் என்னும் பெயருடையாரிருவர் காணப்படுகின்றனர். இவரில் ஒருவன், பத்துப் பாட்டிலொன்றாகிய மேலைபடுகாண்டம்’ கொண்டவன். அப்பாட்டியற்றிய இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்க் கௌசிகனார், தாம் பாடிய வேண்மானை ‘நன்னன் சேய் நன்னன்’ எனக் கூறுதலால், மற்றொருவனாகிய நன்னன், இவ்வேண்மானுடைய தந்தையென்று தெரிகின்றது. இவ்விருவருள் மகனாகிய நன்னனே புலவர் புகழ்ச்சிக்கு இலக்காய் விளங்கியவன். இவனை ‘நன்னன் ஆய்’ எனவும் வழங்குவர். பத்துப்பாட்டில் இவனுக்கு ‘பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள்”” என்னும் அடை குறிக்கப்பட்டிருத்தலால், இவன் நாடு பல்குன்றக் கோட்டமென்னும் பெயர் கொண்டது என்பதும், இவன் தலைநகர் செங்கண்மா என்பதும் வெளியாகின்றன. இவன் மலைநாடு எழிற்குன்றம்” எனவும் வழங்கும். அஃது எழுமலைப் பகுதிகளைப் பெற்றிருந்தமையால், இப்பெயர் கொண் டதாகத் தெரிகிறது. பல்குன்றக்கோட்டம் என்னும் பெயர் வந்ததன் காரணமும் இதுவேயாம். அவ்வேழு மலைகளிற் பாழிச் சிலம்பு, நவிரம் என்னுமிரண்டே இப்போது தெரிவன. நன்னனாட்டில், பாழி, வியலூர், பாரம், பிரம்பு என்ற ஊர்களும், சேயாறு என்னும் நதியும் இருந்தன வென்பது முன்னூல்களால் அறியப்படுகிறது. இவனாண்ட பல்குன்றக் கோட்ட நாடு, இப்போது வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களில் அடங்கியுள்ள தென்பர். நன்னனது நவிரமென்னும் மலைமேல் காரியுண்டிக் கடவுள் ” என்னும் சிவபிரான் கோயிலொன்றுண்டு. அகநானூற்றில் பாடுநர்செவினே, அருங்குறும் பெறிந்த பெருங்கல வெறுக்கை, சூழாது சுரக்கும் நன்னன்” “இசைகல் லீகைக்களிறு வீசுவண்மகிழ்ப், பாரதத்துத் தலைவனார நன்னன்” என இவன் புகழப்படுதலோடு, மலைபடுகடாத்தில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றான். “வின்னவி நடக்கை மேவரும் பெரும்பூண் நன்னன் சேய் நன்னற் படர்ந்த கொள்கையோடு” மதுரைக் காஞ்சியில் மதுரையினிகழும் பலவகை யான உவகையாரவாரத்தைப்பற்றிச் சொல்லும்போது, மான் குடிமருதனர் என்னும் பழைய புலவர், “பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட், சேரிவிழவி னார்ப்பெழுந் தாங்கு” என்று உவமிக்கின்றார். இதனால் செங்கண் மாவில் நன்னன் வேண்மானது பிறந்த நாட் கொண்டாட்டம், தமிழக முழுதும் புகழத்தக்க விமரிசையுடன் நடை பெறுவதென்பது விளங்கும். இக்கொண்டாட்ட தினம், நன்னனாள்’ என்ற பெயர் பெற்றது என்று நச்சினார்க்கினியர் கூறுவர். இந்நன்னன் சேரமானது படைத்தலைமை வகிக்கும் கௌரவமும் பெற்றிருந்தான். இவனுக்கு வானவிறல்வேள்” என்னும் சிறப்பு மலைபடுகடாத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தொடர் மொழியே மதுரைக் காஞ்சியில் அழும்பில்வேள் என்பானுக்கும் வழங்குகிறது. இனி, நன்னன் வேண்மானுடைய தந்தையாகிய நன்னன், கொடுங்கோலனென்றும், கல்வியருமை யறியாதவ னென்றும், அதைப்பற்றிப் புலவரை வெறுத்தவ னென்றும் தெரிகின்றன, இவனது கொடுங்கோலைக் குறித்து ஒரு கதை, பாணர் என்னும் பழைய புலவ ராற் குறிக்கப்பட்டுள்ளது. இந்நன்னனது சோலையிலே அவன் தின்று மகிழ்தற்கென்றே வைத்து வளர்க்கப்பட்ட ஒரு மரத்தின் இனிய காயொன்று, அச்சோ லைப்பக்கத்தே ஓடும் ஆற்றில் வீழ்ந்து அயலதாகிய துறையில் ஒதுங்க, அவ்விடத்தே குளித்தற் பொருட்டுச் சென்ற பெண்ணொருத்தி, அவ்வொதுங்கிய காயை அறியாது எடுத்துத்தின்றாள். இச்செய்தியைச் சோலைக் காவலரால் அறிந்த நன்னன் பெருஞ் சினங்கொண்டவனாய், தான் தின்னற்குரிய காயை அப்பெண் தின்றதன் பொருட்டு, அவளைக் கொலை புரிந்து விடும்படி கட்டளையிட்டனன். அப்பெண்ணின் தந்தையோ, தன் செல்வமகளுக்கு நேர்ந்த விபத்தை எண்ணிக்கலங்கி, நன்னனிடஞ் சென்று “அரசே! என் மகள் தமக்குரிய காய் என அறிந்துவைத்து அதனைத் தின்றவளல்லள். அறியாது செய்ததைப் பொறுத்தருள்க; அவள் புரிந்த இத்தவறுக்காக எண்பத்தொரு யானைகளையும், அவள் நிறையளவு பொன்னாற் செய்த பாவையையும் யான் ஈடு தரவல்லேன், அவட்கு விதித்தகொலைக்குற்றத்தை மட்டும் நீக்கியருள்க” என்று பலவாறு மன்றாடினன். எவ்வளவு மன்றாடியும், அறத்தை நோக்கானாய், உள்ளீரஞ்சிறிது மில்லானாய், அக்கொடுங்கோல் நன்னன் அப்பெண்ணைக் கொலை புரிந்தே தன் சினந் தர்ந்தனன்” என்பது, இதனை, “மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை. பகைமுக வூரிற்றுஞ்சலோ விலளே” எனக் குறுந்தொகையில் வரும் பரணர் பாடலான் அறிக. நன்னனுடைய அறிவீனத்தையும் கொடுங்கோலையுங் குறித்தற்கு, சங்கநாளிலே வழங்கிய இக்கதை யேசான்றாம். இக்கொடியோனுக்கு,நற்குணமே திரண்ட நன்னன் வேண்மான், பிறந்தனன். பண்டைக்கால வழக்கப்படி, தந்தை பெயரையும் உடனிணைத்து நன்னன் சேய்நன்னன்” என்று இவ்வேண்மானை முன்னோர் வழங்கினர். உலகத்தார் கூறும் பழிச்சொல்லுக் கிலக்காய் நின்ற நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சே ரல் என்னும் வேந்தனால், தன்னூர்ப் புறத்தே போரிற் கொல்லப்பட்டு ஒழிந்த பின், அவன் மகனாகிய நன்னன் வேண் மான் பல்குன்றக் கோட்டத்தைத் தன் செங்கோலால் மகிழ்வித்தான். தன்றந்தை சேரனுடன் பகைத்திறந்தனனாயினும் நன்னன் வேண்மான் அவனுடன் நட்புக் கொண்டிருந்ததோடு, முற்கூறியவாறு அச்சேரன் படைத்தலைவனும் ஆயினன். நன்னன் சேய் நன்னன், பெருவள்ளலாய்ப் புலவர் புகழ்ச்சிக்குரியவனாக விளங்கினும், இவன் தந்தை புரிந்த தீச்செய்கைகளை, இவன் நற்செய்கைகள் பிற்காலத்து மறைத்துவிட்டனவாகக் காணவில்லை, தந்தையாகிய நன்னன், பெண் கொலை புரிந்த பழி மட்டும் உடையனல்லன். அவன் கல்வியருமையறியாத கசடனுமாதலால் தன் பாற் பரிசில் வேண்டி வரும் நல்லிசைப் புலவரை யெல்லாம் வெறுத்து, அவர் வராமல் தன் வாயிற் கதவடைத்து வந்தான், இஃது, அக்காலத்துப் புலவர்களுக்கெல்லாம் பெருத்த கோபமுட்டியதோடு அவன் மேல் வசைபாடவும் அவர்களைத் தூண்டிற்று, நல்விசைப் புலவராகிய ஒளவையார், ஒருகால், பல்குன்றக்கோட்டம் என்ற ஏழிற்குன்றஞ் சென்றிருந்தபோது, இந் நன்னன் அவரது அருமை பெருமைகளை அறியாது உதாசீனனாயிருக்க, அதனைப் பொறுக்காத அம்மெல்லியற் புலவர், “”இருடீர் மணிவிளக்கத் தெழிலார்கோவே குருடேயு மன்று நின் குற்றம் மருடேயும், பாட்டு முரையும், பயிலாதனவிரண், டோட்டைச் செவியு முள” என அவனை முனிந்து பாடினர். நன்னன் வழிவந்த இளவச்சிரக்கோ என்பானும் இளம்கண்டீ ரக்கோ என்பானும், ஓரிடத்துச் சேர்ந்திருந்தபோது, அங்கே சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்னும் நல்விசைப் புலவர், முன்னவனைத் தழுவி மரியாதை செய்து, பின்னவனாகிய இளவச் சிரக்கோவைப் புல்லாதொழிய இதனைக் கண்டான் என்னைநீர் புல்லாமைக்குக் காரணமென்ன” என்று புலவரைக் கேட்பவும், அவர் இவன் பெண்டிருந் தம்தரத்தினின்று பரிசிலர்க்கு யானைக் கொடையளிக்கும் கண்டீரக்கோன்: ஆதலால் அவனைத் தழுவினேன், நீயும் நன்னன் மரபிலுதித்த பெருமையுடைமையோடு இயற்கையின் நற்குணங்களுடையனாதலால் தழுவற்குரியவனேயாயினும், நின் முன்னோனொருவன் பரிசில் வேண்டிச்சென்ற புலவர்க்கு வாயிற் கதவடைத்தமை பற்றி; நும்மலையை எம்மவர்பாடுதல் தவிர்ந்தார்” நன்னன் வழி யில் வந்த இளைஞனொருவன் “இளவச்சி ரக்கோ’ என்னும் பெயருடையா னென்பது, புறநானூற்றால் அறியப்படும். இளவச்சிரக்கோ என்பது இளவிச்சிக்கோ எனத்திரித்தும் வழங்கப்பெறும். இவ்விளைஞன் பெயர் கொண்டு, இவன் முன்னோர் வச்சிரக்கோ ” அல்லது ‘விச்சிக்கோ’ என்றழைக்கப்பட்டனர். என்பது பெறலாகின்றது. இவ்வாறே நன்னன் வழியினனொருவனை வில்கெழு தானைவிச்சியர் பெருமகன்” எனக்குறுந்தொகையிற் (328) வது செய்யுளில் கூறப்படுதல் காண்க. வச்சிரக்கோ என்பதற்கு வச்சிரநாட்டரசன் என்பது பொருள். “

நன்னாகனூர்

கரும்பனூர்க் கிழானைப் பாடியவர். இவர்க்குப் புறத்திணை நன்னாகனார் எனவும் பெயர் (புறநானூறு)

நன்னாகையார்

இவர் கடைச்சங்ககாலத்து பெண்கவியாகலாம். இவரது ஊர் நாகைப்பட்டினமாக இருக்கக்கூடும். (குறு 118,325),

நன்னூல்

1 இஃது எழுத்துச்சொல் ப ருள் யாப்பு அணி முதலிய ஐந்தும் நிறைந்த நூல். பிற்கூறிய மூன்றுமிறந்தன. தற்காலமுள்ளவை எழுத்துஞ் சொல்லுமேயாம். இது சநாகாபுரம் பவணந்தி முனிவராற் செய்யப்பட்டது. 2, இது பவணந்திமுனிவர் செய்தது. இவர் தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு தம்காலத்தில் வழங்கிய வடமொழி இலக்கணங்களையும் தழுவிச் சுருங்கச் செய்தனர். இதில் எழுத்தும், சொல்லுமே காணக் கிடைக்கும். இதற்குச் சமண முனிவர் ஒருவர் உரை செய்தனர். இதனை நூலாசிரியரே செய்தனர் என்றும் கூறுப. பின்னர் சங்கர நமச்சிவாயப் புலவர் என்பார் விளக்கமாக விருத்தியுரை செய்தனர்.

நன்பலூரீச்சிறுமேதாவியார்

கடைச்சங்கமருவிய புலவர்.

நபசகவதி

1. அந்தர்த்தானன் இரண்டாம் தேவி, அவிர்த்தானன் தாய், 2. விகிதாசுவன் இரண்டாவது பாரி, நபஸ்தி எனவும் பெயர்.

நபசுவான்

முராசுரன் குமரன், கண்ணனுடன் பொருதிறந்தவன்.

நபன்

1. (சூ.) நடன் குமரன், இவன் குமரன் புண்டரீகன். 2. விப்ரசித்தி குமரன்.

நபஸ்தி

நபச்சுவதிக்கு ஒரு பெயர்

நபாகன்

1. நாபகன் தந்தை, 2 வைவச்சுவதமனுவின் புத்திரனாகிய திருஷ்டன் புத்திரன். இவன் ஒரு வைசியகன்னிகையாகிய சுப்பிரபையை இச்சித் துத் தந்தை முதலியோர் மறுக்கவும் நிற்காது இராக்கதமணஞ் செய்துகொண்டு இராஜபிரஷ்டனாகி அரசனை எனக்கு என்ன கதி என்றனன். தந்தை பசுபாலனஞ்செய்து சீவிக்கக் கட்டளையிட்டபடி ஜீவித்து வந்தனன். இவனுக்குச் சிலநாள் தரித்துப் பனந்தனன் என்னும் புத்திரன் பிறந்து தன் தாயால் தங்கள் வரலாறு உணர்ந்து தவஞ்செய்யச் சென்று, நீபன் என்னும் முனியிடத்துத் தன் குறைகூறி அவர் கற்பித்த அஸ்திரசஸ்திர வித்தைகளைக் கற்று வல்லவனாய் ஞாதிகளை போட்டித் தந்தையிடத்துக் கூறினன், தந்தை, நான் இராச்சியமாளேன் என் தந்தை கூறிய சொல்லைப் பரிபாலித்து வருவேன் என்றனன். பனந்தன் தாய், அரசனை நோக்கி நீர் வைசியன் அன்று. நானும் வைசியகன்னிகை அல்லள். என் தந்தையும் வைசியனல்லன். என் தந்தையின் சரித்திரம் கூறுகிறேன் கேளும் என்றனள். பூர்வம் சுதயவன் என்னும் அரசன், தன் சிநேகனும் தூம்ராசுவன் குமரனுமாகிய நளனுடன் கூடி வேடிக்கையாக வனம் பார்க்கச் சென்றனன். அவ்விடம் ஜலத்திற்கு ஒரு வேதியன் தேவி பிரமதி யென்பவள் வந்தனள். இவளை நளன் தொட்டி ழுத்தனன், அதனால் பிரமதி வாய்விட்டரற்ற அவள் கணவனாகிய வேதியன் வந்து அரசனைக்கண்டு கூறினன். அரசன், தன் நண்பனிடம் வைத்த கருணையால் தான் வைசியன், அரசனிடம் கூறுக என்றனன். இதனால் வேதியன், அரசனை வைசியனாகச் சபித்து நளனைச் சாம்பலாக்கினன். இதைக்கண்ட அரசன் பயந்து வேதியனை வேண்டினன. வேதியன், உன் குமரியை எந்த அரசன் பலாத்காரமாய்க் கல்யாணஞ் செய்து கொள்ளுகிறானோ அக்காலத்தில் நீ அரசனாவாய் என்று போயினன். அந்தச்சுவேதனே சுதயவன் இந்த என் தந்தை, இனியென் சரிதை கூறுகிறேன் கேளும். “பூருவம் சந்தமாதனத்தில் சுரதன் என்னும் முனிவன் தவஞ் செய்துகொண்டிருந்தனன். அக்காலையில், ஒரு கழுகு மான் குட்டி ஒன்றைத் தூக்கிச்சென்று அம்முனிவர் முன் நழுகவிட்டது. அந்த இருடி, அதன்மீது கருணையுடன் தன் கண்களை புலவிபுலர் மூடித்திறந்து பார்க்கையில் நான் பிறந்தனன். அதனால் எனக்குக் கிருபாவதி யென்று பெயரிட்டனர். இவ்கைப்பட்ட நான் வளர்ந்து என் தோழியருடன் ஒரு நாள் வனத்தில் விளையாடச் சென்றேன். அவ்விடம் அகஸ்தியன் என்னும் வேதியன் வந்தனன். அவனை நான் பார்த்து நீ வைசியன் அன்றோ என வேதியன், நீ என்னை வைசியன் என்றதால் வைசியக் கன்னிகையாகவெனச் சபித்தனன். நான் வேதியனை வணங்கிக் கேட்க அவ்வேதியன் உன் மகன் எக்காலத்து அரசு செய்கின்றானோ அக்காலத்து உன் வைசியத்துவம்போய் இராஜஸ்திரீ ஆக என்றனன். ஆதலால் நான் இராஜஸ்திரியே என்றனள். இதைக்கேட்ட அரசன், நான் பித்ருவாக்ய பரிபாலனஞ் செய்கிறேன் உன் குமரன் அரசாளட்டும் என்று குமரனுக் குப் பகுதி செலுத்தி வந்தனன். குமரன் நெடுநாள் அரசாண்டு, பருந்தன், வத்சந்திரன், நந்தன் என்னும் குமரரைப் பெற்றுத் தவமடைந்தவன்.

நபியாருபர்

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குப் பிள்ளைத் திருநாமம்.

நபுலவிபுலர்

சீவகன் தம்பியர்; காமக்கிழத்தியரிடத்துச் சச்சக்கணக்குப் பிறந்தவர்,

நப்பண்ணனூர்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். பரிபாடலில் குமாரக் கடவுளைப் பாடியவர். இவர் பண் பாடுதலில் வல்லவரா யிருக்கலாம். ஆதலினிவர்க்குப் பண்ணனார் என்பது பெயர்.ந சிறப்புணர்த்தும் இடைச்சொல். (பரி. பா.)

நப்பாலத்தனார்

1, கடைச் சங்கத்தவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை). 2, ந, சிறப்புப் பொருளுணர்த்து மிடைச்சொல், பாலத்தன் இயற்பெயர். இனிப் பாலத்தனாரெனக் கூறப் படுவரும் இவரேயாவர். யாப்பருங்கல மேற்கோளுள் நப்பாலத்தனார் சூத்திரமெனச் சில சூத்திரங்காட்டப் படுதலின் இவர் யாப்பிலக்கணம் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இவர் பாலைத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். கடையெழுவள்ளலி லொருவனாகிய கொல்லியாண்ட வல்வில் லோரியைப் பாராட்டிக் கூறியுள்ளார். நற். (52) இப்பாலை நிலத்தைப் படைத்தோன் இதில் மெல்ல நடந்து காண்பானாகவென்று சுரத்தினருமை கூறியுள்ளார். நற். (240) இவர் பாடியனவாக இரண்டு பாட்டுகள் கிடைத்திருக்கின் றன.

நப்பின்னை

கண்ணன் தேவியரில் ஒருத்தி, இவளை நீளாதேவியின் அவதாரம் என்பர்.

நப்பூதனர்

இவர் காவிரிப்பூம் பட்டினத் துப் பொன் வாணியனார் மகனார்; இவர் முல்லைப்பாட்டியற்றியவர்.

நமச்சிவாய தம்பிரான் சுவாமிகள்

திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த ஒரு தம்பிரான், இருபா இருபஃதிற்கு உரையாசிரியர்,

நமச்சிவாயக்கவிராயர்

இவர் ஊர் பாண்டிநாட்டுச் செங்கோட்டை, சைவ வேளாளர். காலம் நூறு வருஷங்களுக்கு முன்னிருக்கலாம். இவர் கல்வி வல்லவர். உலகுடையம்மை யந்தாதி சிங்கைச் சிலேஷை வெண்பா முதலிய இயற்றியவர். விக்ரமபுரவாசி எனவும் கூறுவர்.

நமச்சிவாயதேசிகர்

சிவப்பிரகாச தேசிகர் மாணாக்கர்.

நமச்சிவாயப்புலவர்

தொண்டைநாட்டிலிருந்த தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இன்ன வருணத்தினர் எனத் தெரியவில்லை. இவர் பிரம்பூர் ஆனந்தரங்க பூபதியைப் புகழ்ந்து பாடி யிருத்தலால் தொண்டை நாட்டில் இருந்தவராகத் தெரிகிறது, (தனிப்பாடற்றிரட்டு).

நமஸ்காரம்

இது தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் வணக்கமாம். இது தண்டாக்ருதியாய் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும், இருந்தபடியும் நம ஸ்கரித்தலென இருவகைப்படும். விழுந்து நமஸ்கரித்தல் இருவிதப்படும், அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமெனவு மாம், இவற்றுள் அஷ்டாங்க நமஸ்காரம் தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய். புஜங்களிரண்டு என்னு மெட்டவயவங்களும் நிலத்துப் பொருந்தும்படி நமஸ்கரிப்பது. இது பூமியில் சிரத்தை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப் புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்க நீட்டி வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச் செய்வது. பஞ்சாங்க நமஸ்கார மென்பது தலை, கை யிரண்டு, முழந்தாளிரண்டு என்னுமைக் தவயவங்களும் நிலத்திற் பொருந்தும்படி வணங்குவதாம். மற்ற நமஸ்காரமென்பது இரண்டு கைகளையும் அஞ்சலிப்பதாம், இந்த நமஸ்காரம் தேவர், குரு, பெரியோர், மூத்தோர், நண்பர், தாய், தந்தை முதலியவர்களுக்கு உரியதாம், தவத்தாலும், வயதாலும், ஞானத்தாலும், உயர்ந்தவர்கள், நித்யம் நமஸ்கரிக்கத் தக்கவர்கள். எந்தக் குருவானவர் வேத சாஸ்திரோபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்யம் நமஸ்கரிக்கவேண் கும், நாஸ்திகனையும், கெட்டமரியாதையுள்ளானையும், நன்றி மறந்தவனையும், கிராம புரோகிதனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும், மூர்க்கனையும், சூதாடுபவனையும், நடந்து கொண்டிருப்பவனையும், அசுசியாளனையும்,எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், செபஞ் செய்து கொண் டிருப்பவனையும், வேத பாஹ்யனையும், காருடவித்தைக்காரனையும், சோதிஷம் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும் ” அதுபோலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையான வளையும், விபசாரியையும், பிரசவித்தவளையும், செய்த நன்றி மறந்தவனையும், அதிகோபியையும் நமஸ்கரிக்கக்கூடாது. சபையிலும் யஞ்ஞசாலையிலும், தேவாலயத்திலும், புண்யக்ஷேத்திரத்திலும், புண்ய தீர்த்தத்திலும், வேதாத்யயன காலத்திலும், பிரத்யேகமான நமஸ்காரம் பூர்வத்திற் செய்த புண்ணியத்தைப் போக்கும். சிரார்த்தம், தானம், தேவ தார்ச்சனம், யஞ்ஞம், தருப்பணம் செய்பவனையும் நமஸ்கரிக்கக் கூடாது.

நமி

கச்சன் புதல்வன.

நமிசதண்டம்

ஒரு தீர்த்தம்,

நமிதீர்த்தங்கரர்

இவர் அங்கதேசத்தில் மிதிலாநகரத்தில் விசயமகாராஜாவுக்குப் பிப்பலாதேவியிடம் முதல் தீர்த்தங்கரர்கள் அவதரித்த யுகத்தில் ஆடிமாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி, அசுவனியில் பிறந்தவர். உன்னதம் (15) வில், சுவர்ணவர்ணம், (1000) ஆயுஷ்யம். புத்திரன் சுப்பிரபன். சுப்பிரபர் முதலான (17) கணதரர். சக்ரவர்த்தி சயசேநன்.

நமிநந்தியடிகள்

இவர் சோழநாட்டில் ஏமப்பேரூரில் பிராமணகுலத்தில் திரு அவதரித்துச் சிவத்தொண்டு சிவனடியவர் தொண்டில் வழுவாது இருந்தவர். இவர், திருவாரூரில் வன்மீகநாதரை வழிபட்டு அளவில்லாமல் தீபம் ஏற்றுதற்கெண்ணி மாலைக்காலம் நெருங்கியவுடன் ஆங்கு அரு கிலிருந்த சமணர்வீடுகளில் நுழைந்து சிவ மூர்த்திக்குத் திருவிளக்கிட நெய் தருக என்று கேட்டனர். சமணர், உங்கள் மூர்த்திக்குக் கரத்தில் நெருப்பிருக்க எரிமிகை யன்றோ என்று மறுத்தனர். அடியவர் அதுகேட்டு வருந்திச் சிவசந்நிதானத்து முறையிட்டனர். சிவமூர்த்தி ஆகாயவாணியாக அடியவரை நோக்கி நமிநந்தியே குளத்தின் நீரை மொண்டு தீபமிடுக என்றனர். இதைக் கேட்ட அடியவர் மனங்குளிர்ந்து அந்தப்படி விடியுமளவும் விளக் கெரித்து வந்தனர். அடியவர், ஒரு முறை திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் உற்சவங் கொண்டு திருமணவிக்கு எழுந்தருள உடன் சென்று மீண்டு, சுவாமிதிருச் சந்திதிக்கு எழுந்தருளியபின் தமது வீடுசென்று உள்புகாமல் வெளியில் இருந்தனர். இவரது பத்தினியார் சிவார்ச்சனைக்கு உள்ளே எழுந்தருள்க என்றனர். அடியவர் நான் சுவாமி உற்சவத்தில் உடன் சென்று பலரைத்தொட்டுத் தீட்டுண்டாயிற்று. ஸ்நாந முடித்தபின் அர்ச்சிப்பேன் என்றனர். இதனுள் சிவச்செயலால் அடியவர்க்குச் சிறிது நித்திரை உண்டாயிற்று. அந்நித் திரையில் கனாவில் சிவமூர்த்தி அடியவர்க் குத் தரிசனந் தந்து திருவாரூர்ப் பிறந்தாரனைவரும் சிவகணங்கள் அதை நீ காண்பாய் என்று மறைந்தனர் நாயனார் விழித்தெழுந்து தாம் நினைத்தது குற்றமென்று சிவார்ச்சனை முடித்து மனைவியார்க்கு நிகழ்ந்ததைக் கூறி விடிந்தபின் திருவாரூர்க்குச் சென்று, திருவாரூர்ப் பிறந்தவர்களையெல்லாம் சிவ கணங்களாகக் கண்டு தரிசித்து அவர் அவ்வுருநீங்கி முன்போலானம்மையுங் கண்டு சிவ மூர்த்தியை அபராதக்ஷமை வேண்டித் தம்மூர் விட்டுத் திருவாரூரில் குடி புகுந்து சிவப்பணி செய்து முத்தி பெற்றவர். இவர் தொண்டைச் சிறப்பித்து அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் புகழ்ந்திருக்கிறார். (பெரிய புராணம்).

நமீத்தண்டிநாயனார்

இவர் சிவாலயங்கள் தோறும் திருவிழா தரிசிக்கும் நியமம் பூண்டவர். இவர், ஒரு சிவாலயத்தில் நடேச மூர்த்தியின் திருவுருவத்தைத் தரிசித்து இவர்க்கு வாதகோயானதால் திருமேனி வளைந்தது. ஒருகண்ணும் சாய்ந்தபார்வை. ஒரு திருவடியேற்றம் எனக் கவலைய டைந்து இந்நோய் தீரும் மருந்து ஆராய்வேன் என்று அருச்சகரைக் கேட்டனர். இவர் பேதையென அறிந்த வேதியர், அடியவரிடம் பொருள் வாங்கிக்கொண்டு ஒரு தயிலத்தைக் கொடுத்தனர். அடியவர் அத்தயிலத்தைச் சிவமூர்த்தியின் திருமேனியிற் சாத்தியும் நோய் தீராமைகண்டு சுரிகையெடுத்து ஊட்டியரிய முயலுகையில் சிவமூர்த்தி பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டுமென உமது திருமேனியில் வாத நோய் தீரவேண்டுமெனச் சிவமூர்த்தி அதின் விளைவை அருளிச்செய்து முத்தி தரப் பெற்றவர்.

நமுகாசி

தநு குமரன், தாநவன்.

நம்பாடுவார்

இவர் ஒரு பாணக்குடியில் திருக்குறுங்குடிக் கருகிலுள்ள முனிக்கிராமத்தில் அவதரித்த பாகவதர். இவர் ஏகாதசிதோறும் வீணையைக் கையிற் கொண்டு திருக்குறுங்குடி பெருமாளை மதிற்புறத் திருந்து பாடி யுவப்பித்துப் பெருமாளே தம்மிடம் வந்து வெகுநாள் சேவை சாதிக்கப்பெற்று அந்தரங்கமா யிருந்தனர். இவ்வாறு நடத்தி வருகையில் இவர் ஒரு கார்த்திகை மாதத்திய சுக்லபக்ஷ ஏகாதசியில் பெருமாளைப் பாடிக்கொண்டே தம்மை யறியாதவராய்க் காட்டிற்குள் புக அங்குப் பூர்வஜன்ம மந்தரலோபகிரியா லோபத்தால் பிரம்மரக்ஷஸாய் இருந்த வேதியன் இவரை விழுங்கவரத் திடுக்கிட்டு அந்தப் பிரமரக்ஷஸிற்குத் தாம் பெருமாளை யுகப்பித்து மீளுகையில் தம்மைக்கொடுப்பதாய் வாக்களிக்க அவ்வாறே பிரம்மாஷஸ் விடைகொடுக்கச் சென்று பெருமாளைப் பாடி மீண்டு பிரம்மாக்ஷஸிடம் வரப் பிரமஷஸ் இவரை வணங்கித் தன் வரலாறு கூறி ரக்ஷிக்க வேண்ட இவர் தாம் பாடும் கைசிகிசானத்தினாலுண்டான புண்யத்திற் சிறிது உதவ அப்பிரமராஷஸப் பிறவி மாற்றிப் பரமபத மடைந்தவர். ஆகையால் அந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்பர்.

நம்பாணன்

திருப்பாணாழ்வாருக்கு ஒரு பெயர். இவர்க்குப் பாணநாதன், பாணன், முனிவாஹனன், பாண்டு பெருமாள், கவீச்வரன் என்றும் பெயர்.

நம்பாண்டார் நம்பி

திருஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பெண் கொடுத்தவர்.

நம்பி

இவர் திருக்குறுங்குடியில் வாழ்ந்த புலவர். வல்லமென்னும் ஊரில் வாழ்ந்த காளத்திமுதலியாரிடஞ் சென்று கண்டவுடனே பொரடக்கயம்பிடி யென்றான் மதனுமிப்பூவையுமா, தாடக்கமுஞ் சற்ற விந்திலளே மலர்த்தாள் வணங்கா, முரடக்க வடக் கெடிமன்னர் வெற்றி முடிபிடுங்குங். கரடக்களிற் றண்ணலே வல்லைமாநகர் கா ளத்தியே’. இப் பாடலைப் பாடியவர் யானை முதலிய செல்வந்தரப் பெற்றவர்.

நம்பி

வீரத்தன்மை யுடையவன். இவர் நெய்தல் வளத்தைப் பெரும்பாலும் பாராட்டிப் பாடியிருப்பதோடு குறிஞ்சியையும் பாடியுள்ளார். தலை மகனது மலைமேற்பட்ட காற்று வந்து வீசின் இறைமகளது ஆகத்துள்ள பசலை தணியுமென்று இவர் காதற் சிறப்புக் கூறியது சுவையுடையதாகும். நற். (236). ஆம்பல் மலர்வது காக்கை கொட்டாவி விடுதல்போலுமென்று கூறியுள்ளார். நற். (345). இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாடல்களும், குறுந்தொகையில் இரண்டுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நம்பி நெடுஞ்செழியன்

பேரெயில் முறுவலாராற் பாடப்பட்டவன், இவன் அரசர்க்குரிய எல்லா இன்பங்களையும் அனுபவித்ததன்றி எல்லா நன்மைகளையு முடையவன், (புற. நானூறு).

நம்பிகருணாகரதாசர்

நாதமுனிகளை ஆச்ரயித்த ஸ்ரீவைஷ்ணவர்.

நம்பிகாடநம்பி

இவர் சோழநாட்டுப் பூந்துருத்தித் தலவாசியான வேதியர், இவர் தாம் அருளிச்செய்த திருமுறையில் ஆங்காங்குச் சைவசமயாசாரியர் மூவரையும் துதித்திருக்கின்றனர். இவர் சிவ பக்தி சிவனடியவர் பக்தியால் சிவத்தைப் பாடி முத்தி பெற்றவர்.

நம்பிதட்டுவனூர்

குட்டைநாட்டை ஆட்சி புரிந்தமையிற் சோர்பாம்பரையார் குட்டுவரெனப்பட்டார். ஆதலின் இவர் சேரவம் சத்தினரேயாவர்.

நம்பிதறுந்தேவர்

உடையவர் திருவடி சம்பந்தி, பரமைகாந்தியரில் ஒருவர்.

நம்பியாண்டார் நம்பி

திருநாரையூரில் எழுந்தருளியிருந்த சிவவேதியர் குலத்துதித்தவர். இவர் தந்தையார் ஒரு நாள் வேற்றூருக்குப் போயிருக்கையில் தாய், பிள்ளையாரைப் பூசிக்க அன்ன முதலிய கொடுத்து ஏவினள், அவ்வண்ணமே நம்பியுஞ் சென்று பூசித்துப் பிள்ளையார் சந்நிதியில் அன்ன முதலிய படைத்துப் புசிக்க வேண்ட, அவர் புசிக்காதிருந்ததால் தமது தலையைச் சிலைமேல் மோத இருக்கையில் பிள்ளையார் தடுத்து அமுது செய்தனர். பின்னும் நம்பி, காலதாமதமாயிற்று உபாத்தியாயர் தண்டிப்பர் கல்வியருளிச் செய்க என வேண்ட அவ்வகையே விநாயகர் சகலகலையும் அருளிச் செய்தனர் என்பர். இவ்வகை நடந்து வரும் அற்புதத் தைக் கேள்வியுற்ற அபயகுலச் சோழன் (இராசராசதேவர்) நம்பிகளை வணங்கிப் பிள்ளையாருக்கு மகாபூசையாதிகள் செய்வித்து மூவரோதியருளிய தேவாரத் திருமுறைகளிருக்குமிடம் அறிய விரும்பி விநாயகரைக் கேட்கும்படி வேண்டினன். நம்பி யார் விநாயகரைக் கேட்டுத் தில்லையின் மேற்குக் கோபுரத்தை யடுத்த திருமதிலில் சேமித்திருக்கிறதாகக் கூறியவர். இவர் அருளிச் செய்த நூல்கள், திருநாரையூர் விநாயகர்மீது திருவிரட்டைமாலை, கோயிற்றிருப்பண்ணியர் திருவிருத்தம், திருஞானசம்பந்தர் திருவந்தாதி, திருஞானசம் பந்தர் திருச்சண்பை விருத்தம், திருஞானசம்பந்தர் திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருஞானசம்பந்தர் திருத்தொகை, திருநாவுக்கரசு சுவாமிகள் திருவேகாதச மாலை. இவர் பிள்ளையாரால் திருத்தொண் டர் சரித்திரமறிந்து திருத்தொண்டர் திருஅந்தாதி அருளிச் செய்தனர். இவர் திருமுறைகளை ஏழாக வகுத்தவர்.

நம்பிள்ளை

இவர் கலி. (4308)க்குமேல் பிரபவ கார்த்திகை நம்பூரில் திருவவதரித்தவர். இவர் நம்பூரில் வரதராஜரென்னும் பெயருடன் அவதரித்து கஞ்சீயரால் நம்பிள்ளையெனப் பெயரடைந்தவர். நஞ்சீயரைக் காண்க. இவர் திருநாமம் கலிவைரி, திருக்கலிக்கன்னி தாசர், லோகாசாரியர். ஸ்ரீ சூக்திசாகரர். இவர் திருவடிகளில் வடக்குத் திருவீதிப்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, இருவரும் ஆச்யித்தனர். இவர், ஒரு ஆற்றைக் கடக்கையில் ஒடம், பாரத்தால் முழுகுவதறிந்த ஓடக்காரன் யாராவது ஒருவர் இறங்கின் எல்லாரும் உயிர் பிழைக்கலாம் என, அதிலிருந்த அம்மையொருத்தி பிள்ளை யுயிர் வாழின் உலோகோபகாரமாகும் என்று வெள்ளத்தில் குதித்தனள். அம்மை யாற்றில் விழுந்து ஒரு திடர் கண்டு உயிர் தப்பி விசனமுறும் நம்பிள்ளையை அடைந்தனள், தம்மை வேண்டிய அம்மைக்கு வைகுந்தம் தர எழுத்திட்டுக் கொடுத்தவர். வடக்குத் திருவீதிப்பிள்ளை யியற்றிய வடித்திருப்பத் தையாயிரம் கிரந்தத்தைப் புற்றில் வைத்தவர். ஈயுண்ணிமாதவருக்கு முப்பத்தாறு யிரப் படியைக் கொடுத்தவர். இவர் பெரியவாச்சான் பிள்ளையைத் திருவாய்மொழிக்கு (24000) ப் படி வியாக்யானம் எழு தக் கட்டளை யிட்டவர். இவர்க்குக் கந்தாடைதோழப்பர், லோகாசாரியர் என்று பெயரிட்டனர். நடுவிற்றிருவீதிப்பிள்ளை, அரசன் தனக்குக் கொடுத்த பரிசை யிவர்க்குக் கொடுக்க அதனை மறுத்தவர். இவர் திருவடிகளில் ஆச்ரயித்தவர்கள், பெரிய வாச்சான்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, பின் பழகிய பெருமாள் ஜீயர், ஈயுண்ணி மாதவப் பெருமாள்,

நம்பூத்ரி

(நம்பூரி) இவர்கள் மலையாளத்திலுள்ள ஒருவகை பிராமணர். இவர்கள் பெரும்பாலார் காணியாட்சிக்காரர் பெரிய வர்த்தகர்கள். இவர்கள் ராஜதானி வேலைகளில் விருப்பமில்லாதவர். இவர்களில் சிலர் சிவாலயங்களில் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலார் கல்விமான்கள் அதிக வைதீகர்கள்,

நம்பூர்வாதராஜர்

ஒன்பதினாயிரப்படியை நஞ்சீயர் சொற்படி பட்டோலை கொண்டு எழுதினவர்; நஞ்சீயர் திருவடி சம்பந்தி.

நம்மாழ்வார்

இவர் கவியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாநாள் பிரமாதி, வைகாசிம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை விசாகாடித்திரம் கூடிய கற்கடலக்கினத்தில் சேனை முதலியார் அம்சமாய்த் திருக்குருகூரில் காரியென்பவருக்கு உடைய நங்கையிடத்தில் திருவவதரித்துத் தாய்ப்பாலுண்ணாது தாமே வளர்ந்தனர். இது பெருமான் செயலென்று தாய் தந்தையர் (12) ஆம் நாள் மாறன் என்று நாமகரணஞ் செய்து பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்கு எடுத்துச் செல்ல, ஆழ்வார் தவழ்ந்து சென்று பெருமாள் சந்நிதியின் வடபுறத்திலிருந்த திருப்புளியடியில் பதுமாசனமிட்டு யோகத்தெழுந்தருளி யிருந்தனர். இவ்வகை (16) நாள் கழிந்தபின் பெருமாள் கட்டளையால் சேனைமுதலியார் அவரிடத்தெழுந்தருளிப் பஞ்சஸமஸ்கார முதலிய செய்து போயினர். இவர் இவ்வகை இருத்தலைக் கண்ட தாய் தந்தையர், இவர் சடவாயுவைக் கோபித்தவராகையால் சடகோபன் எனப் பெய ரிட்டு மகிழ்ந்தனர். இவர் அப்புளிக்கீழ் எழுந்தருளியிருந்து மதுரகவியாழ்வார் பொருட்டு நான்கு வேதசாரங்களையும் தமிழில் அருளிச்செய்து பெருமாள் பிரசாதி நத்த மகிழமாலை சூடி வகுளாபரணரென்றும், தம் பாசுரங்களால் பர மதங்களைப் போக்கினதால் பராங்குசரெனவும். திருநாமம் பெற்று (35) திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்து திருநாட்டுக் கெழுந்தருளினர். இவர் மற்றைய சரி தங்களை மதுர கவியாழ்வாரைக் காண்க. (குருபாம்பரை) இவர் மதுரையில் (300) புலவர்களைப் பெற்றிருந்த சங்கப் பலகை ஆழ்வார் எழுதித்தந்த ஒரு சீட்டிற்கு இடந்தந்து அவர்களைக் கீழ் தள்ளியது. அதனால் புலவர்கள் ஆழ்வாரைப் புகழ்ந்தனர் என ஒரு செய்தி உண்டு. (சடகோபரந்தாதி காண்க).

நயநிலைப்படலம்

(நாடகம்) இது கூத்த மார்க்கமெனவும் படும். அது பெரியோரை தலைமக்கள் மேவச் செய்யப்பட்ட மெய்ப் பொருள் பற்றி வருதல், சிறியோரைத் தலை மக்களாக்கி ஒளியும், விருத்தியும், சாதியும், சந்தியும், சுவையும் முதலாகப் பல விகற் பத்தானும் வருவதுமாம். (வீரசோ.)

நயித்திரு

1. ஒரு முனிவன். 2. சிவசன்மாவைக் காண்க.

நயினராசாரியர்

தேசிகர் குமரர். இவர்க்கு வரதாசாரியர் என்றும் பெயர். இவரும் தந்தையைப்போல் பலரிடத்தில் வாதஞ்செய்து திவ்ய தேச யாத்திரை செய்து வருகையில் கேரளதேசம் சென்று மடைப் பள்ளி பரிசனங்களுக்குத் தலைச் சுமையாய் க்ஷத்ரர் ஏவிய கல்லை அவர்களுக்கே திருப்பி அவர்கள் வேண்ட அதைப் போக்கிச் சாகல்லியமல்லன் விட்ட பூதத்தைப் பல்லக்குச் சுமப்பித்துத் தாஸராஜாவென்கிற பிராமணனை ஸ்ரீவைஷ்ணவனாக்கித் தம்மிடம் வாதத்திற்கு வந்த மாய சந்நியாசியை அண்ணனைக் கொண்டு வெல்வித்துத் தம்மை ஆச்ரயித்த முதலிகளுக்குப் பாஷ் யகாலக்ஷேபாதிகளைச் செய்து (69) வருஷமிருந்து திருநாட்டிற் கெழுந்தருளினர். (குருபரம்பரை).

நயினார்

இது வேளாளரின் ஒரு வகுப்பு இவர்கள் ஜயினர்களாயிருந்து பின் வேளாளரானவர்கள், “இது ஜயினர்க்குரிய பட்டம். தற்காலம் கைக்கோளர், பள்ளிகள், உடையார் முதலியவர்க்கும் வழங்கி வருகிறது. இது சிவனடியவர்களுக்கும் வழங்கி வருகிறது. இளையான்குடிமாறனாயினர். (தர்ஸ்டன்).

நயிஷதன்

ஒரு அரசன்.

நயுதன்

(சந.) செயசேநன குமரன்,

நயுதாயு

ஒரு மகாரதன்.

நரகசதுர்த்தசி

தீபாவலியைக் காண்க.

நரகன்

விப்ரசித்தி குமரன்.

நரகம்

I. இது உலகத்தில் பாபஞ் செய்தவர் அடையும் இடம். இது புராணங்கள் தோறும் பலவகைப்படும். இது தொகையால் இருபத்தெட்டு வகையால் நூற்று நாற்பது, விரியால் இருபத்தெட்டுக்கோடியாம், 1, கோரம், 2. கோராத்கோரம், 3, அதிகோரம், 4. கோரதரம், 5. கோரரூபம், 6. தாள தரம், 7. பயாநகம் 8. காளா ராத்திரி, 9. பயோற்கடம், 10. சண்டம், 11, மகாசண்டம், 12. சண்டகோலாகலம், 13, சண்ட தரம், 14. சரோருஹம், 15. சல சவதி, 16. வீமம், 17, வீமலீடனம், 18. கரளம், 19. விகாளம், 20. குலிசம், 21. முக்கோணம், 22, ஐங்கோணம், 23. தீர்க்க தரம் 24. பரிவர்த்துளம், 25, எழுநிலம், 26. எண்ணிலம், 27. தீர்க்கவொளி, 28. மாயை, மற்றுமொரு விதம்: 1, தாமிச்ரம், 2. அந்ததாமிச்ரம், 3. பவுரவம், 4. மகாரவுரவம், 5. கும்பிபாகம், 6. காலசூத்திரம், 7. அசிபத்திரவநம், 8. சூகரமுகம், 9. அந்த கூபம், 10. கிருமிபோஜனம், 11. சங்தங் கிசம், 12. சூரமி, 13. வச்சிரகண்டம், 14. சலமரி, 15. வைதரணி, 16. பூயோதம், 17. பாணரோதம், 18. வைச்சம், 19, லாலாபக்ஷம், 20, சராமேயா தனம், 21. விசாயபானம், 22. ஷாரகர்த்தபம், 23. ரஷோகண்போஜனம், 24. சூலப்புரோதம், 25. தெந்தசூகம், 26. வடதிரோதானம், 27. பரியாவர்த்தனம், 28. சூசீமுகம் என்பவை யாம். இவற்றுள் இராசநாகம், ரௌரவம், இதற்கு இராசநரகம் கும்பீபாகம், ஆதலாலிவை இராஜராஜநாகம் எனப்படும். இந்த இரண்டு இராஜ நரகங்களுக்கும் உயாந்த தாதலால் அவீசியை இராஜாதிராஜநாகம் என்பர். இவற்றை மகாபாவிகள் அடைவர். இவற்றின் விரிவுகளையும், இவற்றை அடைவோரையும் மகாபுராணாதிகளிலும் ஆகமங்களிலும் காண்க. II. (28) (1) தாமிச்ரம் : பிறர்பொருள், மனைவியரைக் கவர்ந்தோரிந் நரகத்தில் தள்ளப்பட்டு மூர்ச்சித்திருக்கு மிடம், (2) அந்ததாமிச்ரம் : மனைவி கணவனை வஞ்சித்த வஞ்சகர் கண்ணிழந்து வருந்தும் நரகம், (3) ரௌரவம் : பிறன் பொருள்களை வஞ்சித்தோர், ருகு எனு மிருகங்களால் வருந்தும் இடம், (4) மகாரௌரவம் : குகு எனு மிருகங்கள் வெளிவிடாது பாபிகளை வருத்துமிடம். (5) கும்பிபாகம் : பிறவுயிரைக்கொன்று தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொருளைப்போல் வருந்தும் இடம், (6) காலசூத்திரம் : தாய் தந்தையரை வருத்தினவர்கள், காலத்தைக் காட்டுஞ் சூரியனைப்போல் கொளுத்தப்படும் இடம், (7) அசிபத்ரவனம் : தெய்வத்தை நம் பாது விட்டவன், இவ்விடத்தில் வாள் போன்ற முட்களையும் இலைகளையுமுடைய மரங்களால் துன்புறுத்தப்படுவான். (8) பன்றிமுகம் : அதர்மமாகச் சிக்ஷை செய்பவனும் மற்றத் தீமை செய்வோரும் அடையும் பன்றி போன்ற முகத்தையுடைய நரகம், (9) அந்தகூபம் : கொலை செய்வோன், துரோகிகள் அடையும் நரகம். இதில் பல விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண்தெரியாது ஆன்மா வருந்துவன். (10) கிருமி போஜனம் : தெய்வ பூசை யில்லாதார் பசியால் வருந்தித் தாமும் புழுக்களாய்த் தம்மையொத்த பெரும் புழுக்களால் புசிக்கப்படும் இடம். (11) அக்நிகுண்டம் : வலிவாகப் பிறன் பொருள் கொண்டானடையும் தீ நிறைந்த இருப்புச்சால். (12) வச்ரகண்டம் : புணரக்கூடாதவரைப் புணர்ந்த ஆண் மகனும் பெண்ணும் அணையும் இருப்புத் தம்பம். (13) சான்மலி : உயர்வு தாழ்வு எண்ணாது புணர்ச்சி விரும்பினேன் முட்களால் கொத்துண்ணும் நரகம். (14) வைதரணி : சாஸ்திர தர்மக்கேடு செய்தவர்களைத் தள்ளி வருத்தும் சீரத்தம் நரகம் முதலிய தூர்க்கந்தப் பொருள்களும், புழுக்களும் நிறைந்த நீர்நிலை. (15) பூயோதம் : ஆசார பிரஷ்டனடையும் மலமூத்ர சிலேத்மாதிகள் நிறைந்த நரகம். (16) பிராணரோதம் : பிராணிகளை ரோதனஞ் செய்பவனும் செய்விப்பவனும் யம படர்களால் பிராண இம்சையடையுமிடம். (17) வைசசி : டம்பத்தின் பொருட்டு யாகாதிகள் செய்பவனைச் சாட்டையால் யமபடர் வீசியடிக்கும் நரகம். (18) லாலாபக்ஷம் : தன் மனைவியைக் களிப்பால் தீயகாரியத்திற்கு உட்படச் செய்வோன் அடையும் நரகம்.(19) சாரமேயாதனம் : வீட்டில் தீயிட் டவர், விஷமூட்டியவர், பிராணிவதை செய்வோர், இராஜாங்கத்தைப் பாழாக்குவோர் பலவகைப்பட்ட (700) நாய்களால் துன்புறுத்தப்படும் நரகம். (20) அவீசி : பொய்சாக்ஷி சொல்வோர், பாவ புத்தியுடையோர் முதலியவர்களை நூறு யோசனை யுயரமான மலை யுச்சியிலிருந்து தள்ளி உயிர்போகாது வருத்தும் நரகம்., (21) பரிபாதனம் : கள் முதலிய குடிப்போரை உருகிய இரும்பைக் குடிக்கச் செய்யும் நரகம். (22) க்ஷாரகர்த்தமம் : தன்னைத் தானே புகழ்பவனடையும் நரகம், (23) ரஷோகணம் : நரமேதஞ் செய்தவர்களையும், நரமாம்சம் புசித்தவர்களையும், கொல்லப்பட்டவர்கள் ரக்ஷஸ்களாய்க் கொன்றவைகளைப் புசிக்கும் நரகம். அவ்வகை மாம்சபக்ஷணிகளும் அப்பிராணிகளால் உண்ணப்படுவர். (24) சூலப்ரோதம் : கிராமகாதி, அபகாரி, தற்கொலைஞன், நம்பிக்கைத்துரோகி முதலியவர்கள் குலத்திற் கோக்கப்பட்டு கழுகு முதலிய பக்ஷிகளால் துன்புறுநரகம். (25) தந்தசூகம் : தீய பாபாதி காரியங்களைச் செய்தோர், விஷப்பிராணிகளாலும், பல முகங்களையுடைய பிராணிகளாலும் வருத்தப்படும் நரகம். (26) வடாரோகம் : மலைகளிலும், விருஷங்களிலும் வசிக்கும் மிருக, பக்ஷிகளை வருத்துவோர் மலையினின்றும் விருக்ஷத்திருந்தும் கீழ்விழத் தள்ளி வருத்தும் நரகம் (27) பிரியாவர்த்த னகம் : அதிதிகளைப் பூசிக்காதவன் அடையும் நரகம்.(28) சூசீமுகம் : தங்களைச் செல்வர்கள் என்று மதித்து இறுமாந்திருப்போர், தர்மஞ் செய்யாமல் பொருளைக் காத்திருப்போர் அவர்களை ஊசியின் முகமொத்து வருத்தும் நரகம். (தேவி ~ பாகவதம்). III. (7) அள்ளல், ரௌரவம், கும்பீபாகம், கூடகாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி. IV. (1) ரெளரவம் : ருரு எனும் பிராணிகளால் ஒரு கணமேனும் தாங்கற்கரிய துன்பம் விளைப்பதாய் அக்நிச்வாலையுடைய தாய்ப் பற்பல துன்பம் அனுபவிக்குமிடம். (2) சூகரம் : பன்றிகளால் வருத்தப்படும் இடம்., (3) உரோதம் : அசையாது நிறுத்தப் படும் இடம், (4) தாலம் : பனை மடற்களால் அறுத்தலும் அதன் மீதிருந்து நூக்கலுமான இடம். (5) தப்தகும்பம் : காய்ச்சிய எண்ணெய்க் கும்பத்தில் தள்ளும் இடம். (6) இலவணம் : உடலைப் பிளந்து உப்பிடும் இடம். (7) இலோகிதம் : இரத்தம் ஒழுக வதைக்கும் இடம். (8) உதிராம்பம் : கொதிக்கும் இரத்தத்திற் போடும் இடம்.(9) வைதரணி : உதிரப்பெருக்கமைந்து எவ்வகையினுந் தாண்டற்கரிய தானவிடம், (10) கிருமிசம் : புழுக்கள் தொளைக்கும் (11) கிருமிபோசனம் : புழுக்களை உண்பிக்கும் இடம், (12) கிருட்டிணம் : நெருப்பிற் காய்ச்சிய இருப்பு முட்களின்மேல் நடக்கச் செய்யும் இடம்., (13) தாருணம் : தாங்கக்கூடாத குளிராயிருப்பது.(14) சந்தமிசனி : ஆயுதத்தால் நாக்கை அறுக்கப்படும் இடம்.(15) அசிபத்திரவனம் : வாள் போன்ற இலைகளையுடைய காடு. (16) பூயவகம் : சகிக்கக்கூடாத துர்நாற்றமுடைய இடம், (17) கருட்ணசூத்ரம் : சக்கிரத்திற் சுற் றிக் கால்விரலிற் கயிறு பூட்டி உடல் முழுதும் ஒன்றாகும்படி இறுக்கி வருத்துமிடம், (18) தமசு : இருள் நிறைந்த இடம், (19) சுவபோசநம் : தன்னுடம்பை அறுத்துக் கொடுக்கத் தானே உண்ணுமிடம்

நரகரி

இரண்யகசிபைக் கொன்ற விஷ்ணுவின் திருவுரு. இவர் சிரம் சிங்கவுருவமாகவும் மற்றத் தேகம் மனிதவுருக்கொண்டு தம்மைத் துதித்த பிரகலா தன் பொருட்டுத் தூணிற்றோன்றித் தேவரைத் துன்புறுத்திய அவ்வசுரனைக் கொன்று கோபமடங்காது நின்று, தேவர் வேண்டுகோளால் இலக்குமி யடையக் கோபநீங்கிப் பிரகலாதனை அநுக்கிரகித்தனர் என்பர். இவர் கோபங்கொண்ட காலத்தில், சாபவுருக் கொண்ட சிவமூர்த்தியால் தோல் உரி யுண்டு கோபமடக்கினர் என்பர் சைவர். அச்சாபத்தை வெல்ல நாராயணப்பணியாய் விஷ்ணு வந்தனர் என்பர் வைணவர். (பாகவதம், ஸ்காந்தம்).

நரகாசுரன்

வராகவுருக்கொண்ட விஷ்ணுவிற்குப் பூமிதேவியிடம் பிறந்த அசுரன். இவன் பிராக்சோதிஷம் எனும் பட்டணம் ஆண்டவன். இவன் துவஷ்டாவின் குமரியாகிய கசேரு என்பவளை யானையாகச் சென்று சிறை கொண்டான். குமரன் பகதத்தன். இவன் மந்திரிமார், அயக்கிரீவன் பஞ்சகன், நிசும்பன், பிராபணன், முரன் முதலியவர். இவன் அதிதியின் காதணியையும், வருணன் குடையினையும் கவர்ந்தமையால் விஷ்ணுமூர்த்தி கிருஷ்ணாவதாரத் தில் இவனிடத்துப் போர்புரிந்து கொலை செய்து இவன் செல்வங்களையும் காதணியையும் இவனிடமிருந்த மணிமாலையினையும் பரித்தனர். இவனுக்குத் துவிவிதன் என்கிற வாநரன் நண்பன். (பாகவதம்) இவன் பட்டணம் மாகிஷ்மதி யெனவுங் கூறுவர்.,

நரசிங்கமுனையரைய நாயனூர்

1. திருமுனைப்பாடி நாட்டில் அரசு வீற்றிருந்து சிவனடியவரிடத்து அன்பு பூண்டவர். இவர் திருவாதிரை நக்ஷத்திரத்தில் வருகின்ற சிவனடியவர்க்கு அமுதுடன் நூறு பொன் கொடுத்து வருவர். இவ்வகை நடத்தி வரு கையில் பொன் பெறவேண்டிக் காமுகன் ஒருவன் சிவவேடம் பூண்டுவர அவனை மற்ற அடியவர்கள் இகழ்ந்தது கண்டு அவனுக்கு அமுதிட்டு இருநூறு பொன் கொடுத்தனுப்பிச் சிவவேடந் தரித்த அடியவரிடத்து அன்பால் முத்தி யடைந்தவர். (பெரிய புராணம்). 2. இப்பெயர் கொண்ட மற்றொருவர் இருந்ததாகத் தெரிகிறது. இவர் சுந்தர மூர்த்திசுவாமிகளைப் புத்திரராகக் கொண்டு வளர்த்தவர். இவர் குறுநில மன்னர். இவர் திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டவரின் வேறாதல்வேண்டும். ஏனெனில் அவர் சரித்திரத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப்பற்றிக் கூறாததாலும், திருத்தொண்டத்தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரைப் புகழ்ந்திருத்தலாலும் என்க. இவர்கள் வழியில் நந்தமான் வம்சம் உண்டாயிற்று. தெய்வீக அரசனைக் காண்க. இவர் காலம் ஒளவையார் காலம். தந்தை தெய்வீக அரசன், தாய் பாண்டியன் குமரியாகிய காஞ்சனமாலை.

நரசிங்கமுனையரையர்

திருநாவலூர் சாசனத்திற் கூறிய நாசிங்கவர்மன் கன்னரதேவன் கி பி. 957. இவருக்குமுன முனையதியரையன், குலமாணிக்கன் இராமதே வன், நரசிங்கவர்மனுக்கு முன்னோர்கள்.

நரசிங்கமூர்த்தி

இரண்யகசிபுவை வதைத்த விஷ்ணு வினவதார விசேஷம், நரகரியைக் காண்க, இம்மூர்த்தி காசிபர்க்குச் சமித்தின் பொருட்டுச் சென்று சமுத்திரத் தில் முழுகிய வாலகில்லியரை ரக்ஷித்தனர்.

நரசிங்கவர்மன்

ஒரு மலை நாட்டரசன்.

நரசிம்மமேதா

கடேமண்டலீ யென்னும் ஊரில், நாகாவேதியர்க்குக் குமாரராய்ப் பிறந்து உபநயனம் முதலியவடைந்து தாய் தந்தையர் இறக்கச் சிறிய தந்தையால் வளர்க்கப் பெற்றவர். இவர் விளையாட்டில் காலம் போக்கி ஒருநாள் களைத்து வந்து அண்ணன் மனைவியைத் தாகங் கேட்க நீ என்ன செய்திளைத்தனை நீ இவ்வாறு திரிந்து வருகின்றாய் கலியாணஞ் செய்துகொண்டு கல்வியில்லாமல் மனைவி மக்களே எவ்வாறு காப்பாற்றப்போகிறாய் எனக் கூறிய வார்த்தையைக் கேட்டு இல்லற வெறுப்புடையவராய் நாடு விட்டுக் காடடைந்து அங்கோர் சிவாலயந் தோன்ற அதனுட்புகுந்து அந்தச் சிவக்குறியின் மேல் ஏழுநாள் படுத்து ஆகாரம் முதலிய இல்லாமலிருக்கச் சிவமூர்த்தி தரிசனந்தந்து இராமமந்திர முப்பதேசித்துக் கண்ணனைத் தெரிசிப்பிக்கிறேன் எனக் காளிந்தி தீரமடைந்து கண்ணனைக் கண்டு இருவரும் வணங்கினர். கண்ணன் இவர் யார் என்ன இவர் பூர்வ ஜன்மத்தில் புலியாய்ப் பிம்பாஜி அருள் பெற்று இச்சன்மத்தில் வேதியராய் என்னை வேண்ட நான் உம்மைத் தரிசிப்பித்தனன் என்றனர். இதைக் கேட்ட கண்ணன் அவருக்கு அருள் புரிந்து என்னைப் பாடுகவென அவ்வாறு பாடியிருக்குங் காலத்தில் இவரது சுற்றத்தவர் இவரைத் தேடிச் சிவாலயத்தில் கண்டு திருமண முடித்து வைத்தனர். மேதா அவ்வூரில் உஞ்சவிருத்தி செய்து பிழைத்து வருநாளில் சாமபுரத்து ஒரு வேதியன் தன் பெண்ணை மேதாவின் மகனுக்குக் கொடுக்கக் கிருஷ்ணபட்டரால் நிச்சயிக்கப்பட்டு மணமுடிக்க இருக்கையில் பலரால் மேதா அதிகவறியன் எனக்கேட்டு விசனமடைந்து கிருஷ்ணபட்டரை வெறுக்கக் கிருஷ்ணபட்டர் மேதாவை அடைந்து நாளை சம்பிரமத்துடன் மணத்திற்கு வருக வென்ன மேதாவும் கண்ணனைத் தியானிக்கக் கண்ணன் ருக்மணியை நோக்கி நீ முன்னின்று மணத்தை முடிப்பிக்கவென அவ்வாறே யானை சேனை பரிவாரங்களு உன் மேதா பிள்ளையை அழைத்துக்கொண்டு செல்ல மணப்பிள்ளை வருவதைக் கேட்ட திரிபுராந்தகன் என்னும் வேதியன் அதிக வியப்படைந்து கலியாண மண்டபத்திலழைத்துச் சென்று பெண்ணை விட அவ்விடத்தில் கண்ணன் எழுந்து உபசரிக் கக் கண்டு திரிபுராந்தக வேதியன் நீர் யார் எந்த ஊர் புதிதாக இருக்கின்றதே என்று கேட்க நாம் இருப்பது துவாரகை என் பெயர் சாமளநம்பி எனக்கு மேதா, நண்பனாகையால் மணம்புரிவிக்க வந்தேனென்று இருவருக்கும் மணமுடித்து அவர்கள் சொந்த ஊருக்கனுப்பி மேதாவை நோக்கி நீ எக்காலத்தில் எண்ணுகின்றனயோ அப்போது வந்து உதவுகின்றனன் என்றனன். ஒருநாள் கேசவபட்டர் என்பவர் துவாரகைக்குச் செல்வோர் வழியில் கள்ளரால் பொருளை இழந்து செலவிற்கு இல்லாமல் மேதாவையடைய மேதா அறுநூறு வராகன் தந்து துவாரகையிலிருக்கும் சாமள நம்பியிடம் அதை மீண்டும் கொடுத் துவிடும்படி அனுப்ப அவ்வாறே கேசவ பட்டர் துவாரகை சென்று கண்ணனைத் தரிசித்து அர்ச்சகரை நோக்கி இவ்வரில் சாமள நம்பி என்பவர் யாவரென்று கேட்க அவர் அப்பெயர் கொண்டார் யாவருமிவ் வூரிலிலர் என்று சொல்லக் கேட்டு ஊர் முழுதுந் தேடிக் காணாதவராய் அலுத்திருக்கையில் கண்ணன் சாமள நம்பியாய்த் தரிசனந் தந்து நானே சாமள நம்பி என்று அப்பொருளைப் பெற்றுக் கள்ளரால் இழந்த பொருளையும் அவருக்குக் கொடுத்து மறைந்தனர். பின்பு ஒருநாள் மேதா தன் மகள் சோபனத்திற்கு வேண்டிய வரிசை முதலிய வேண்டுமென இவரை ஒருவன் வந்து கேட்க மேதா சும்மா வெறும் கையுடன் செல்ல அங்கிருந்தவர் என்ன வேண்டுமோ யெழுதுகவென்ன வேண்டிய பொருள்களெல்லா மெழுதினர். பின்பு மேதாவின் ஆளாகச் சென்று எழுதிய எல்லாவற்றை யுந் தந்தனர். பின்பு அனைவரும் வியந்து இவரைப் பெருமாளின் தொண்டர் என்று கொண்டாடினர். இவர் தாம் பஜனை செய் யுங் காலத்தில் பெருமாள் தரித்துக் கொள்ளுந் துளவமாலை தாசர் கழுத்திலிருத்த லக்கண்டு பலர்கூற அவ்வூர் அரசன் நீ உலகத்தாரை மயக்குகின்றாய் இன்று நான் காண அதனை விழச்செய்ய வேண்டும் அன்றேல் தண்டிப்பன் எனத் தாசர் பெருமாளைப் பஜனை செய்யவும் விழாதிருத்தல் கண்டு, பின்னும் பஜனை செய்ய மற்றும் விழாதிருக்கத் தாசர், நீர் இன்றைக்கு உடம் துழாய்மாலையை அணியாவிடின் உமக்கு என்ன குறைந்து போகும் என்று பாடுகை யில் அத்துழாய்மாலை இவர் கழுத்தில் வந்து வீழ்ந்தது. அரசன் பயந்து உபசாரஞ் செய்தனன்.

நரதேவன்

தடமித்தனுக்குப் பெயர். சைநன்.

நரநாராயணர்

1. தருமப் பிரசாபதிக்கு மூர்த்தாதேவியிட முதித்த விஷணுவினவதார விசேஷம். இவர்களை வெதிரிகாச்சிரமத்திலிருந்த இருடிகள் யோகமுரைக்க வேண்ட இவர்களிருவரும் சிவவிஷ்ணுச்சகையில் இவரை மயக்க பின் அகேக்ளாயிருந்து அவர்களுக்கு யோக முரைத்தனர். (கூர்மபுராணம்) இவர் தவமியற்றுகையில் இந்திரனால் ஏவப்பட்ட தெயவ கன்னியரிவரை மயக்க வந்தனர். அதனை யறிந்த இவர் தொடையில் அநேக அப்சரசுக்களைச் சிருட்டித்து விட்டனர். இப்பெண்களை இந்திரனால் ஏவப்பட்ட அப்சரசுக்கள் கண்டு இவர்கள் தம்மினும் அழகு பெற்றிருத்தலால் வெட்கி மறைந்தனர். ஊருவில் பிறந்ததால ஊர்வசி எனப் பெயர் பெற்றனள். தேவர்க்குச் சகாயமாக யுத்தஞ் செய்து அசுரரைச் செயித்தவர். (பாகவதம்.) 2. பிரமனுக்குத் தருமன் எனும் ஒரு குமரன் இருந்தனன். அவனுக்கு அரி என்றும், கிருஷ்ணன் என்றும் இரண்டு குமரர் இருந்தனர். இவ்விருவரே நரநாராயணர். இவர்கள் மகாயோகிகளாயிருந்தது கண்டு இந்திரன் இவர்களின் தவத்தைக் கெடுக்க அப்ஸரஸ்ஸுக்களையேவச் சலிக் காது இருந்து அந்த அப்ஸரஸுகளினும் அழகு மிகுந்தவளாய்த் தமது தொடையிலிருந்து ஊர்வசியினையும் பல அப்ஸரஸுக்களையும் சிருட்டித்துத் தவமழியாது பெற்றவர். இவர்களுடன் தீர்த்தயாத்திரைக்கு வந்த பிரகலாதன் ருஷிகளுக்கு அம்பறாத் தூணி, வில் அம்பு இருப்பது யுக்தமன்று என்று போரிட்டு வெற்றிபெறாமல் நாராயணர் சொற்படி யுரதத்தை நிறுத்திப் பாதாளஞ் சென்றனன. மேலே இந்திரனால் ஏவப்பட்ட அப்ஸரஸுக்களை நாரா யணர் சபிக்கத் தொடங்குகையில் நான் தடுக்க, நின்று மோகித்த அவர்களைத் துவாரகையில் பிறக்கச் செய்தவர்.

நரன்

1. தாபசன் என்னும்மநுப்புத்திரன், 2. (சூ.) சுந்திரிதி குமரன். 3. ஒரு தேவருஷி. 4. கயன் குமரன். 5. சங்கிருதி தந்தை. (சந்.) மன்யு குமரன். இவன் குமரன் சங்கிருதி.

நரபதிதேவன்

கேமமாபுரத்தரசன்.

நரபாகன்

1. (சூ) திஷ்டன் குமரன். 2, (சூ.) சிறுதன் குமரன்; இவன் கும்ரன் அயுதாயுசு. 3. வைவச்சுத மனுபபுத்திரன்; இவன் குருகுலவாசியாகச் சென்று, மீண்டு, தன் முன்னவரை யெனக்கு என்ன வைத்தீ சென்று கேட்க அவர்கள் உன் தந்தையை வைத்தோமென, இவன், தந்தையைச் சென்று வினவினன். தந்தை உன்னை அவர்கள் வஞ்சிக்கும் வகை அவ்வகை கூறினர். ஆயினும் உனக்கு உதவி புரிகின்றேன் அவ்வகை செய்க. அதாவது, அங்கீரசுக்கள் யஞ்ஞம் செய்கிறார்கள் அதில் ஆறாம் நாள் கர்மத்தில் செய்யவேண்டிய வைவச்சுவசூக்தங்களை அவர்கள் மறந்து விடுவர். அதை அவர்க்கு அச்சமயத்தில் கற்பிப்பையேல் அந்த யாகமுடிவிலுனக்கு வேண்டிய தனத்தைக் கொடுப்பர்களென்று எவினன். இவன் அவ்வகை புரிந்து முடிவில் தனத்தைப் பெறுகையில் யஞ்ஞத் தினின்று ஒரு மகாபுருஷன் தோன்றி யஞ்ஞசேஷம் எனதெனத் தடுக்கத் தந்தை யின் அநுமதி பெற்ற குமரன், மீண்டும் தந்தையை அடைந்து யஞ்ஞமூர்த்தியாய்த் தோன்றியவர் உருத்திரமூர்த்தி யெனவு ணர்ந்து அவரைவேண்டி அந்தமூர்த்தியால் அநுக்கிரகிக்கப் பெற்றவன். (பாகவதம்.)

நரப்பிரசாபதி

ஒரு பிரசாபதி; இவர் தேவி மேரு. உருக்கிரயனென்னும் விஷ்ணுவைப் பெற்றவர்.

நரமேதம்

1 ஒருமலை; இமயத்திற்கருகிலுள்ளது. இதில் ஒருகால் கருடன் வால கில்லியரிருந்த ஆலின்கிளையை எறிந்தான். இது நூறுயோசனை விஸ்தார முள்ளது. 2. இது புருஷப்பசுவை வைத்துயாகஞ் செய்யும் யாகம்,

நரம்புகள்

தலை மூளையிலிருந்து முதுகெலும்புகளுடன் சேர்ந்து அரசிலையின் பெருநரம்பிலிருந்து நரம்புகள் வியாபித்திருப்பது போல், தேகமெங்கும் வியாபித்துச் சத்த பரிச ரஸ ரூப கந்தங்களையும் மற்றத் தொழில்களையும் செய்வன இவை பலவகை. தோல்: இது, தேகத்தின் மேற் போர்வை; இது, தேகத்தில் தனக்கடியிலுள்ள மற்றப் போர்வைகள் செய்யுந் தொழில்களை வெளிப்படுத்துகிறது. இந்த மேற்றோலுக்கடியில் மற்றொரு தோல், குழல்களுடன் தசையுடனமைந்து உள் தோலாயிருக்கிறது. இந்த உள் தோலுக்கடியில் சுவேதகோளம், நிணக்கோளம், மயிர்க்கால் இரத்த நரம்புகள், ஸ்பர்ச நரம்புகள், வேர்க்குறுவை ஒத்த சிறுமேடுகள் உள.

நரவர்மணன்

இவன ஒரு அரசன, இவன் நல்லோரை அடைந்து சிவமகாத்மியம், சிவபூஜாவிசேஷம் முதலிய கேட்டறிந்து அவ்வழி ஒழுகி நலம் பெற்றவன். (சௌரபுராணம்).

நரவாணதத்தன்

உதயணனுக்கு வாசவதத்தையினிடம் பிறந்த புத்திரன். இவன் குபேரனது அருளினாலுதித்தவனாதலின் இப்பெயர் பெற்றனன். (நரவாகனன் ~ குபேரன்.) இவன் வித்தியாதர சக்கரவர்த் தியாகப் பின்பு ஆயினன். (பெ. கதை.)

நரவாமன்

சூர்யவம்சத்தரசன்; இவனுக்கு (10,000) தேவிமார். இவன் பாஞ்சாலதேசமாண்டவன். இவன் தேவியரில் முதல்வி சுதேவி.

நராந்தகன்

1. இராவணன் குமரன்; அங்கதனால் கொல்லப்பட்டவன். 2. தேவாந்தகனிறந்ததைக் கேட்டு மகோற்கடர்மீது யுத்தத்திற்கு வந்து பூமி தேவி யெடுத்து விழுங்கச் சூக்குமவருக் கொண்டு வேளவி நடத்திக் குதிரையொ என்று பெற்று அதில் ஏறித் தானே மகோற் கடருடன் யுத்தஞ்செய்து விநாயகமூர்த்தி யின் கொம்பினாலிறந்தவன்.

நரி

இது நாயினத்தைச் சேர்ந்த பிராணி. இது நாயைப் போலவே உருவுள்ளது ஆயினும் முகமும் காதும் நீண்டு வால் மயிர்படர்ந்திருக்கும். பற்களும் கால் நகங்களும் உறுதியுள்ளவை. இது மோப்பம் பிடிக்கும் சக்தியுள்ளது. இது இரவில் இரை தேடுவது வழக்கம். நடு இரவில் கண் தெரியாது. அந்தக் காலத்தில் இடுக்குகளில் நுழைய மீசை மயிரை உபயோகிக்கிறது. நரியின் காது ஒசைவரும் பக்கம் திரும்புஞ் சக்தியுள்ளது, நரி மாம்ஸ முதலியவற்றைக் கடித்துத் தின்னாமல் விழுங்கும். கோழிகளைத் திருடுகையில் நாவினால் கூண்டைத் தோண்டி உள் நுழைந்து திருடும். ஆண் நரிகளில் சிலவற்றிற்குக் கொம்பு முளைப்பதுண்டு. இதற்கு பீஜத்தருகில் ஒருவித தைலம் உண்டு. வேட்டை நாய் முதலிய தன்னைத் துரத்துகையில் அது தன்னை நெருங்குவதறிந்து தைலத்தை விடும். அந்தத் துர்நாற்றத்தால் துரத்திய நாய் பின்னிடைய நரி ஓடி மறையும்.

நரி கழுது சம்வாதம்

ஒரு பிராமணனுக்கு ஒரே பிள்ளை. அது இறக்க அதனை மயானத்திலிட எடுத்துச் சென்று துக்கப்படுகையில் கழுகு, இறந்த பிள்ளைக்குத் துக்கப்படுவதால் பயனில்லை யென்று கூறி அவர்களை வீட்டிற்கனுப்புகையில், நரி மறுத்து அப்பிள்ளை பிழைக்கும், கழுகின் சொற்களைக் கேளாதீரென்று தடுத்தது. இவ்வாறு இரண்டும் பலமுறை தடுக்கும் செய்கை கண்ட சிவமூர்த்தி பிள்ளைக்கு உயிர் தந்து தாய் தந்தையரைக் களிப்பித்தனர். (பா ~ சாந்தி.

நரிக்குடி

இது ஆளுடைநாயகர் நரிகளைக் குதிரைகளாக்கிய இடம்; புதுக்கோட்டையைச் சார்ந்த மிழலை நாட்டில் உள்ளது. (திருவிளையாடல்).

நரிவெரூ உத்தலையார்

கடைச்சங்கத்துத் தமிழ்ப் புலவருள் ஒருவர்; இவர் யாது காரணத்தாலோ தம்முடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய வொள்வாட் கோப்பெருஞ் சேரலிரும்பொறை யைக்கண்ட நாளில் அவ்வேறுபாடு நீங்கித் தம்முடம்பு பெற்றனர். இதனைப் புறநானூறு (5 ம்) செய்யுளாலும், தொல்காப்பிய நச்சினார்க்கினியம் மெய்ப்பாட் டியல் “புதுமை பெருமை” எனும் சூத்திரத்திற்கு அவர் எழுதிய உரையாலும் அறிக. இவராற் பாடப்பட்டோன் சேரமான். (திருவள்ளுவமாலை.)

நரிஷ்யந்தன்

1. வைவச்சதமனுவின் குமரன்; இவன் குமரன் சித்ரசேகன். 2. மருத்சக்ரவர்த்தியின் குமரன், 3. இந்திரசேனை என்பவளை மணந்தவன். இந்த இந்திரசேனை (9) வருடம் கருத்தாங்கித் தமனைப் பெற்றாள்.

நருமதை

1. நாகராசன் தங்கை; புருகுச்சன் பாரி. 2. ஒரு காந்தருவப்பெண்; சந்தரி, கேதுமதி, சுவதை இப்பெண்களைப் பெற்று மாலியவான், மாலி, சுமாலி இவர்களுக்கு அளித்தவள். 3. ஒரு நதி; இவள் பெண்ணுருக் கொண்டு சுயோதனனை மணந்து சுதர்சனையைப் பெற்றவள். 4. பித்ருக்களைக் காண்க. இப்பெயர் கொண்ட நதி விந்தமலைக்கருகில் அமரகண்டகியில் உற்பத்தியாய் மேற்கே செல்லுகிறது; இது மேற்கடலில் விழுவதால் நதமெனப்படும். 5. உஞ்சை நகரில் உள்ள ஐம்பதினாயிரம் நாடகக் கணிகையருள் தலைக்கோற் பட்டம் பெற்றவளும், சாமரையிரட்டையுந் தமனியக்குடையு மாமணியடைப்பையு மருப்பிய லூர்தியும் பைந்தொடி யாயமும் பட்டமு முடையோளும் ஆகிய ஒருத்தியின் மகள், பிரச்சோதனனால் நன்கு மதிக்கப் பெற்றவள். வாசவதத்தைபாலுள்ள அன்பின் மிகுதியால் தனக் குண்டான வேறுபாடு இவளாலுண்டாயிற்று என்று பிறரறிந்து கொள்ளும்படி வயந்தகனைக் கொண்டு உதயணனால் வருவித்துக்கொள்ளப்பட்டவள். (பெ. கதை).

நருமதையாறு

விந்தமலையிலுண்டாவது. பத்திரை யென்னும் தெய்வ மகளொருத்தி பெண் யானையாகும்படி குபோனாற் சாபம் பெற்றது, இதன் கரையிலே தான். (பெ. கதை). THe RIver NarbadA rises in the Amarakantaka Mountain, (நர்மதைக் காண்க).

நரைமுடி நெட்டையார்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் உருவக்தைநோக்கிய பெயர்போலும். அக339

நற்குணம்

(10) மெய்யுரை, நல்வார்த்தை, இனியவை கூறல், பயனுடைய சொல்லவ், இவைவாக்கின் நலம், திருக்கோயில் வலம்வால், தவம்புரிதல், தானஞ்செயல், இவை காயத்தின் நலம், அருள்நினைவு, அவாவறுத்தல், தவப்பற்று இவை மூன் றும் மனத்தின் நற்குணம்,

நற்சேந்தனார்

இவர் கோடி மங்கலத்துவாதுளி நற்சேந்தனாரெனவும் கூறப்படுவர். வாதுளியென்றதனால் வாதுள கோத்திரத்தினரெனவும் அந்தணர் மாபினரெனவுங் கொள்ளப்படும். பாலைத்திணையையுங், குறிஞ்சித்திணையையும், புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய குறைநயப்பு நுண்ணுணர் வினோரை மகிழப் பண்ணா நிற்கும். நற் 128. இவர் பாடியனவாக நற்றிணையில் மேற்காட்டிய பாடலொன்றும், அகத்திலிரண்டுமாக மூன்று பாடல் கள் கிடைத்திருக்கின்றன.

நற்பாக்கிழான் மகருஷிகோத்ரன்

வணிக வம்சமுதல்வரில் ஒருவன். இந்த வம்சத் தில் திருக்கச்சி நம்பி காஞ்சியில் வரதராஜப் பெருமாளுக்குப் புட்பத் திருவாலவட் டக் கைங்கர்யஞ் செய்துவந்தனர்.

நற்றங்கொற்றனார்

இவர் குறிஞ்சியைப் புனைந்து பாடியுள்ளார். தலைவன் பிரிவினாலே தலைவி தன்னுடம் பிளைத்தமை யறிவுறுத்துவாள் யான்கைவளை வேண்டினேனாக எவ்வளவு இளைத்தாலும், கழ “லாதபடி எந்தை சிறுவளை யணிந்தனென்று கூறியது பெருநயம் பயக்கும் தன்மையதா கும். இவர் பாடியது. நற். 136 ம் பாட்டு,

நற்றத்தம்

நற்றத்தர் செய்த நூல்.

நற்றத்தர்

அகத்தியர் மாணாக்கர். இவர் யாப்பிலக்கணஞ் செய்தவர். அதற்கு நற்நத்தம் எனப்பெயர்.

நற்றமனூர்

இவர் குறிஞ்சித் திணையைப் பாடியுள்ளார். பிரிவிடைத் தோழியாற்று விப்பது இரும்பினைப் பழுக்கக் காய்ச்சிய உலையிற் கொல்லன் பனை மடற் சின்னீர் தெளித்து நெருப்பைத் தணிப்பது போல் ஆகுமென்று கூறியுள்ளார். இவர் பாடியது. நற். (133) ம் பாட்டு,

நற்றமிழணர்ந்த நங்கைமார்கள்

1. ஆதி மந்தியார் : இவர் நல்லிசைப்புலமை மெல்லியலார் “மள்ளர்குழீ இய விழவினாலும்” எனும் குறுந்தொகையில் இது காதலற் கெடுத்த ஆதிமந்தியார் பாட்டு என்றமையான், அறியப்படும் இவர், திருமாவளவன் எனச் சிறந்த கரிகால்வளவன் திருமகளார். சேரநாட்டு ஓர் மன்னனாகிய ஆட்டனத்தியை மணந்தவர். இவர் தங் காதலனுடன், கரிகாற்சோழனாற் கழாஅர் எனும் ஊரிற் காவிரி முன்றுறையிற் சிறப்பித்துக் கொண்டாடப்பட்ட புதுப்புனல் விழாவிற் குச் சென்றாராக ஆண்டு வனப்பினும், ஆடுதற்றொழிவினும், கண்டார் எல்லாரும் விரும்பத்தக்க தம்முயிர்க் காதலனாகிய ஆட்டனத்தியை நீர்விளையாடுகையில் காவிரிவௌவ, அவனை யாண்டுந்தேடிக் காணப்பெறாது புனல்கொண் டொளித்ததோ கடல்கொண்டு புக்கதோ என்று கலுழ்ந்த கண்ணராய் மருண்ட சிந்தையராய் அலமந்து அக்காவிரிசெல்லுந் திசையெல்லாஞ் சென்று கடல்வாய்புக்கு, அவனைக்கூவி யாற்றினார்க்கு அக்கடலே அவ்வாட்டனத்தியைக் கொணர்ந்து வந்து முன்னிறுத்திக் காட்டியவளவில் ஆங்கவனைத் தழுவிக்கொண்டு பொற்கொடி போலப்போந்தார் என்ப. இக்கதை நெடுந்தொகையினும் சிலப்பதிகாரத்தும் கண்டது. இவர் பெயரும் இவரது கணவர் பெயரும் சிறுபான்மை முதற்சொல் லொழித்து மந்தி எனவும், அத்தி எனவும் வழங்கப்படும். இவ்வாதி மந்தியார் வெள்ளிவீதியார் எனும் புலமை மெல்லிய லார்க்கு முற்பட்டவர். 2, வெள்ளிவீதியார் : இவரும் பெண் கவி, இவர் சரிதையை இவர்பெயர் கூறும் வழிக் காண்க, 3. உப்பை : உறுவை. 4. ஒக்கூர் மாசாத்தியார் : இவர் பாண்டிநாட்டு ஒக்கூர் எனும் ஊரினராக இருக்கலாம். இவர் புறத்திணையில் ஒருத்தி தன்மகனைப் போருக்கனுப்புதல் பற்றிப் பாடினர். குறுந்தொகை, அகநானூறு, முதலியவற்றில் சில பாடல் பாடினவராகத் தெரிகிறது. 5. ஒளவையார் : ஒளவையாரைக்காண்க. 6. காவற்பெண்டு : இவர், புறப்பாட் டில் ‘சிற்றி நற்றூண்” எனும் பாட்டைப் பாடியவர். இச்செய்யுளை நோக்கின் ஒரு மறமகள் என்பதூஉம், புலியொத்த போர் வீரனொருவனை மகனாகவுடையார். என்றும், அத்தகைய வீரகுமாரனைப் போர்க்களத் துப் போக்கியபின் அவனைப் பெற்ற தம் வயிற்றினைப் புலிகிடந்துபோன முழையாகக் கருதினவர், என்றும், அறியக்கிடந்தன. இவர் அரசரது மெய்க்காவல், மனைக்காவல், ஊர்க்காவல், பாடிகாவல், இவற்றிலொன்றற்குரிய காவற்குடிக்கண் பிறந்தவர்., 7. காக்கைபாடினியார் நச்செள்ளையார்: நச்செள்ளையாரைக் காண்க, 8 காரைக்காற் பேயம்மையார். 9. காமக்கணிப்பசலையார் : நற்றிணை (243). 10. கிழார் கீரனெயிற்றியார் : குறுந் தொகையில் 35, 261, பாடல்களும், நற்றிணையில், 281, ஆம் பாட்டும், அகநானூற்றில் ககக, 163,217,235,294, பாடல்களும் இவர் பாடியவை. இவரது நற்றிணைப் பாட்டில் சோழர்கழாரூரும், அதன் கட்புலாற் சோற்றாற் பலியீ தலும் கூறப்பட்டுள்ளன. 11. குறமகள் இளவெயினி இவர் குன்றுடை வாழ்க்கைக் குறவர் குடியினர். குறமகள் குறியெயினி யென்பாரொருவர் உளராதல் பற்றி இவர் இளவெயினியெனப் பட்டனர். இவர் தமது எயினர் குடித் தலைவனாகிய ஏறையென்பானை “தமர் தற்றப்பின்” எனும் புறப்பாட்டாற் புகழ்ந்து பாடினர். இதனால் ஏறைக்கோன் தன்னிற் சிறந்தோர் தவறிழைப்பிற் பொறுமையும், பிறர்வறுமைக்கண் நாணுடையனாதலும், பிறராற் பழிக்கப்படாத வலியுடையனாதலும், காந்தண்மாலையுடை யானென்பதும், மலை நாடுடையன் என்பதும் அறியக் கிடந்தன. இவன் சேரன் படைத்தலைவன் என்ப. இவனது நாடு பெருங்குன்ற நாடாகும். 12. குறமகள் குறிஎயினி : இவர் குறவர் குடியினர். இவர் குறிசொல்லும் வழக்குடையராதலால் இவர்க்கு இப்பெயர் வந்தது. இவர் நற்றிணையுள் நின்குறிப்பெவனோ தோழி யென்குறி. சாரனாட னோடாடியநாளே” எனும் (375) வது பாடல் பாடினர். 13. குன்றியாள் : இவரும் பெண்கவி இவர் குறுந்தொகையுள் (50) பாட்டுப் பாடியவர். 14. குமிழி நாழல் நப்பசலையார் : அகப் பாட்டு (160), 15. தமிழறியும் பெருமாள. 16. நல்வெள்ளி : நற்றிணை, 747, குறுந்தொகை, 365 பாடியவர். 17. நெடும்பல்லியத்தை : இவர் பாடியன குறுந்தொகையில், 178,203 செய்யுட்கள். 18. பாரிமகளிர் : இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க. 19. பூதபாண்டியன் தேவியார் : இவர் சரிதையை இவர் பெயர் கூறியவழிக் காண்க. 20. பூங்கண்ணுத்திரையார் : இவர் பெயரான் பெண்பாலாராகக் கருதப்படுகிறார். புறநானூற்றில் மீனுண்கொக்கு எனும் செய்யளும், குறுந்தொகையில் 48,171, செய்யுட்களும் இவர் பாடியன 21. பேய்மகள் இளவெயினி : இவர் பெயர் கூறியவழிக் காண்க. 22. பொன்மணியார் : குறுந்தொகை,391. 23. போந்தைப்பசலையார் : அகப்பாட்டு 110. 24. மதுவோலைக் கடையத்தார் : நற் றிணை 369, 25. மாறோக்கத்து நப்பசலையார் : இவர் நாயகன் பிரிவுக்காலத்து மகளிர்க் கெய்தும் பசலையெனும் தேமவின் பெயரால் இவர் சிறந்து விளங்கியதால் பெண் பாலாராகக் கருதப்படுகின்றனர். இவர் புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், மலையமான் திருமுடிக்காரியையும், அவன் மகன் மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணனையும், பாடியுள்ளார், இவர் புலவர் பெருமானான கபிலரையே அதிகமாக மதித்தவராவர். இவர் நற்றிணையுள் “புணரிற் புணருமாரெழிலே பிரியின் எனுஞ் செய்யுளில் பசலையினியல்பு நன்குரைத்த வாற்றால் இப்பெயருற் றாரென ஊகிக்கப்படுகிறார். பசலைப்பெய ருற்றார் சிலருளர். 26. மாற்பித்தியார் : புறம், 256,252, 27. முன்னியூர்ப்பூதியார் : அகம் 173, 28. வருமுலையாரித்தி : இவர் குறுந்தொகையில் 176 ஆம் பாட்டுப் பாடியவர்; இவர் தன்னெஞ்சு நெகிழ்த்தவன் வராமை பொருட்டிரங்கினார். வருமுலை யென்பதால் பெண்பாலாகக் கருதப்படுகிறார். 29. வரதுங்கராமன் தேவியார். 30. வில்லிபுத்தூர்க் கோதையார். 31. வெண்மணிப் பூதியார் : குறுந்தொகை. 299.

நற்றிணை நானூறு

இது ஐந்திணை களைப்பற் றிக் கூறிய நூல், இது கடைச்சங்கத்தவ ராற் கையாளப்பட்டது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல், ஆலங்குடி வங்கனாரிறு தியாகப் பாடிய பாக்களையுடை யது. இதைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதியாம்.

நற்றுருவன்

துரியோதனன் தம்பி,

நலன்

சூர்யகுலத்தரசனாகிய பரிச்சித்திட் குச் சோபனையிடம் உதித்தவன். ஒரு முறை இவனிடம் இவனது தமயனைக் கொன்ற வாமதேவமுனிவர் வந்தனர். அரசன் கோபித்து என் தமையனைக் கொன்ற உன்னைக் கொல்வேன் என்று அம்பினையேவினன், முனிவர் அதனை அரசன் குமரன் மீது ஏவி, அரசன் கையினைத் தப்பிக்கச் செய்தனர்.

நல்கூர் வேள்வியார்

கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை.)

நல்ல பாம்பு

விஷமுள்ள பாம்புகளில் முதன்மையானது. இதற்கு வாயில் விஷப்பையுண்டு. அவ்விஷப்பைக்குத் தொளை கொண்டு வளைந்த கூர்மையான பற்களுக்கும் சம்பந்தம் உண்டு. இவை பிராணிகளைக் கடித்து ஒருசார் தலையைத் திருப்புகிறது. திருப்பியவுடன், அவ்விஷப்பையிலிருந்து விஷம் பல்வின் வழி ரத்தத்திற் கலந்து கொல்கிறது. இதன் கழுத்து தசைப் பெற்று அகன்று பரவியிருக்கிறது. அதனைப் படம் என்பர். அப்படத்தில் வளைந்து பகர எழுத்துப்போல் ஒரு கறுத்தரேகை இருக்கிறது. இதன் விஷம் நீலங்கலந்த மஞ்சள் நிறம், இப்பாம்பினத்தில் சிலவற்றிற்கிரண்டு தலைகளிருக்கின்றன வாம். அவற்றை இருதலைமணியன் என்பர். எகிப்து தேசத்தில் ஒருவகைப் பாம்பிற்குத் தொளைகளமைந்த இரண்டு கொம்புகளிருக்கின்றனவாம். இது விரைந்து செல்வதால் இதனை சர்ப்பம் என்பர். இவை திவ்யசர்ப்பம் பெளம சர்ப்பம் என இருவகை, திவ்யசர்ப்பம் ஆதிசேஷன் முதலிய எண்வகை நாகங்கள்.

நல்லச்சுதனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் அச்சுதராயிருக்கலாம். நல்லழுசி, நல்லெழுனி என்பனபோல் நல் என்பது அடைமொழி. இவர் பரிபாடலில் கந்தமூர்த்தியின் படை வீடுகளில் ஒன்றாகிய திருப்பரங்குன்றத்தைப் புகழ்ந்திருக்கின்றனர். (பரிபாடல்).

நல்லதங்காள்

மதுரைநகரத்தில் இராமலிங்கமகாராசன் இந்திராணியென்பாளை மணந்து அரசாண்டு வருகையில் புத்திரப் பேறிலாது சிவபெருமானை யெண்ணித் தவம்புரிந்து அவாநுக்ரகத்தால் ஒரு குமாரனையுங் குமரியையும் பெற்றனர். இவர்க்கு நல்லதம்பி நல்லதங்கையெனப் பெயரிட்டு வளர்த்தனர். இராமலிங்கப் புரவலர் நல்லதம்பிக்கும் மூளி அலங்காரிக்கும் விவாகம் நடத்தித் தாம் தேகவியோகமாயினர். நல்ல தம்பி தங்கையாகிய நல்ல தங்கையைக் காசிராஜனுக்கு வதுவை புரிவித்துச் சகல ஸ்ரீதனங்களும் தந்து தம்பதிகள் இருவர்களையும் காசி நகர்க்கனுப்ப அங்கு ஈச்வர திருபையால் மக்களெழுவரை ஈன்று சுகமாக (40) வருடம் வாழ்ந்துவரும் நாளில் 12 வருடம் மழையில்லாது பஞ்சம் உண்டாக அப்பொழுது காசிராஜன் தனக்குண்டான செல்வமனைத்தையும் குடிகளுக்கு உதவி புரிந்து ஏழையாகிய காசி மன்னன், மனைவி புதல்வரோடு ஈனஸ்திதியை நினைத்து வருந்து வதைக் கண்ட நல்ல தங்கை, தன் அண்ணன் ராச்சியமடைதலே தகுதியெனக் கூறினதை மறுத்த மன்னனுக்குச் சமாதானங்கூறி அரசனை விடுத்துக் காட்டில் கிடைக்கும் கிழங்கு முதலியவற்றைப் பறித்து மக்களுக்குக் கொடுத்துப் பசி தீர்ந்து தன் அண்ணன் இராஜ்யமடைய மூளியலகாரி நாத்தி வருகையை அறிந்து தாளிட் டுக் கதவை அடைக்க நல்ல தங்கை பலமுறை கெஞ்சியும் கதவைத் திறவாமல் இருக்கவே தன் பதிவிரதா தர்மத்தால் கதவு திறக்கச்செய்து உள் நுழைந்து அண்ணியுடன் வார்த்தையாடிக்கொண் டிருக்கச் சுற்றிலுமுள்ள தின்பண்டங்களைக் கண்ட குழந்தைகள் அவாவினால் எடுப்பதைத மூளி கண்டு பிடுங்கியெறிந்து விரட்டப் பசி மேலிட்டதால் வருந்தும் குழந்தைகளுக்கு உணவு வேண்டுமென, வேண்டியபடி, மூளி 12 வருடஞ்சென்ற பழைய கேழ்வரகையும் சில்லித் தோண்டியையுங் கொடுத்தும், கல் மனதுடைய கபடியாம் மூளி அலங்காரி அடுப்பெரிப்பதற்குப் பச்சைவாழை மரத்தையும் கொடுக்கத் தன் பதிவிரதா மகிமையால் கொழுந்தோங்கி எரியச் செய்து கூழாக்கினும் மூளி பசி தணியாதபடி அதைக் கரைத்துக் குழந்தைகளுக்கும் நாத்திக்கும் வார்த்து வெளிப்படுத்தி மறுபடியும் கதவை யடைக்கத் துக்கசாகரத்தில் மூழ்கின நல்ல தங்கை, மனது பொருது அண்டை யயலாருக்குத் தன்னிலை தெரிவித்து வெளி சென்றிருக்கும் அண்ணனுக்கு அறிவிக்கச் செய்து எங்கேனும் பாழ்ங்கிணற்றிலாவது வீழ்ந்து உயிர் துறப்பது நலமெனத் தேடி வருகையில் இடைப்பிள்ளைகளால் பாழுங் கிணறொன்று கண்டு அதன் கரையில் தமையன் கலியாணத்துத் தனக்குக் கொடுத்த புடவையின் மீது அழுகல் தேங்காயை வைத்துத் தன் மங்கலநாணைத் தாமரையிலை மேல் கழற்றி வைத்துவிட்டுக் குழந்தைகளின் நிலை கண்டு அழுது தன் ஏழு பிள்ளைகளையுந் தள்ளித் தானும் விழுந்தனள். இங்கிப்படியிருக்க வேட்டைக்குச் சென்ற நல்லண்ணன் அரண்மனைக்குத் திரும்பித் தங்கையுங் குழந்தைகளையும் எங்கெனத் தன் தங்கையும் மக்களும் எவ்வளவு கூறியும் நில்லாமல் தம் ஊருக்குத் திரும்பிச் சென்றனர் என்று மனைவியாம் மூளி கூறினதை நம்பாது, தன் தங்கையைத் தேடி வரும் வழியில் இடைப்பிள்ளைகளால் உண்மை தெரிந்து கிணற்றிடை வந்து கரைக் கண் இருந்த அடையாளங்களைக் கண்டு மக்களெழுவரையும் தங்கையையும் எடுத்து ஈமக்கடன் முடித்து அரண்மனை வந்து கபடமாய் மூளியின் பந்துக்களைக் கல்மண்டபஞ் சேர்த்து மண்டபம் இடிந்து யாவரும் மாளச்செய்து மூளியைச் சுண்ணாம்புக் காளவாயில் எரித்தனன், மழை பெய்ய நகர் க்ஷேமப்படவும் தன் மனைவி நல்ல தங்கையைப் புத்திரருடன் அழைத்துக் கொண்டு போக வந்த காசிராஜன் மைத்துனனால் அவர்களுக்கு நேர்ந்த மரணத்தைக் கேட்டு இனி இருப்பதில்லையெனத் தானும் தன் உயிர்விடப்போகுஞ் சமயத்தில் பரமாத்மா தரிசனந் தந்து யாவரையுமெழுப்பி நல்வாமீந்து ஆசிகூறி மறைந்தனர். இது கற்பனா கதை.

நல்லந்துவனூர்

1. கடைசங்கப் புலவருள் ஒருவர்; கலித்தொகையில் நெய்தற்கலியும் பரிபாடலில் நான்கும் பாடியவர். (கலித்தொகை). 2. இவர் அந்துவனாரெனவும் ஆசிரியர் நல்லந்துவனாரெனவுங் கூறப்படுவர். இவர் இயற்பெயர் அந்துவன் ” அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” (அகம்59) என மதுரை மருதனிளநாகனார் கூறு மாற்றானு மறிக. அந்துவனெனப் பிறருமுளராகலின் இவர் நல்லந்துவனாரெனவும், அந்தணராதலின் ஆசிரியர் நல்லந்துவனாரெனவுங் கூறப்பட்டார். ஆசிரியர் என அடைமொழி கொடுத்துக் கூறுவது அந்தணர்க்கேயன்றிப் பிறர்க்குக்கூறும் வழக்குப் பண்டில்லை. கலித்தொகை இவர் செய்ததாக அதன் பதிப்பாசிரியர் கூறாநிற்பர். இவர் அகப்பொருட்சுவையைக் கலிப்பாக்களாற் பலப்படப் புனைந்து யாவரும் வியக்கப் பாடும் ஆற்றலுடையவர் பரிபாடலில் நீர்விளையாட்டணி இவர் பாடியவை பயிலுந்தோ றும் அளவிலா மகிழ்ச்சியெய்துவிக்குந் தன் மையன அன்றிப் பிரிந்த தலைவி கையறவு கொண்டு புலம்பும் பாடல்கள் கருதுழிக் கன்மனத்தையும் உருகச் செய்யும் (கலித் தொகை) இவர் எல்லா திணையையும் விரித்துப் பாடுந் திறமுடையவர். நம்மை நினைந்து குன்றமும் அழாநிற்குமென்று கேட்போரிரங்குமாறு கூறியுள்ளார். (நற். 88) நாழிகை வட்டிலாற் பொழுதறிவதல்லது ஞாயிற்றை அறியப்படாத மழைக் காலமெனக் கார்காலத்தைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். (அகம் 73). இதனைக் ‘காலமறிவுற் றுணர்தல் கன்னலள வல்லால் மாலைபகலுற்ற தெனவோர் வரிது மாதோ” என்றார் கம்பரும். கார்காலப் படலம் செய்யுள் (73) கலித்தொகையை நீக்கி இவர் பாடியனவாக நற்றிணையில் (88) ம் பாடலொன்றும், அகத்திலொன்றும், பரிபாடலில் நாலும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாக எழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நல்லழுசியார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் அழுசியாக இருக்கலாம். நல் என்பது அடைமொழி, இவர் பரிபாடலில் வையையைச் சிறப்பித்துப் பாடியவர். (பரிபாடல்).

நல்லவை

இருவர் மாறுகொண்ட காலத்து அவரது இயல்புணர வல்லோர், தரும நெறி நின்றோர், மெய்ப்பொருளைக் கண்டோர், பொறுமையுடையோர், கற்றவர், கல்விக்கடாவிடையறிந்தோர், கோபமில் லார், மூர்க்கமிலார், இனிய முகத்தோர், இருந்துரை கேட்போர், வேந்தனாரு சார்பானாயினும் தாம் நடுநிலை பிறழாதோர், கூடியது நல்லவையாம். இதில் தோல்வியுறினும் தோல்வியல்ல,வெற்றிபெறின் சிறப்பாம். (யாப்பு~ வி.)

நல்லாசிரியர்

யாப்பருங் கலக்காரிகை யுரையிற் கூறப்பட்ட தொல்லாசிரியரில் ஒருவர்.

நல்லாதனார்

கடைச்சங்கத்தவா காலத்து இருந்த புலவருள் ஒருவர். இவர் திரிகடுகமென ஒரு நீதி நூல் செய்திருக்கின்றனர். இவர் தாம் செய்த நூலுக்கு முதலில் திருமாலைக் “கணணகன் ஞாலமளந்தது” எனத் துதித்திருத்தலால் இவரைத் துணிந்து வைணவர் என எண்ணலாகாது. திருமால் காத்தற் கடவுளாதலின் அந்நூல் இடையூறின்றி நின்று நிலவுதல் வேண்டிக் காப்புக் கூறினார் என்பர்.

நல்லான் சக்கரவர்த்தி

திருமலை நல்லானுக்கு ஒரு பெயர்.

நல்லாப்பிள்ளை

இவர் சோழமண்டலத்தில் மதலம்பேட்டில் கணக்கர் குலத்தில் சற்றேறக்குறைய 200 வருஷங்களுக்கு முன் பிறந்தவர். இவர் வில்லிபுத்தூரார் செய்த பாரதத்தை விரித்துத் தம் “பெயராற் செய்தவர்.

நல்லார் பூரான் கீழான்

கடைசசங்கமருவிய புலவன். (அகநானூறு).

நல்லாறனார்

யாப்பருங் கலக்காரிகையுரையிற் கூறப்பட்ட தொல்லாசிரியரில் ஒருவர்.

நல்லாவூர்கீழார்

இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாளர், இயற்பெயர் எழுதப்படவில்லை. இவர் தாம் பாடிய ‘உழுந்து தலைப்பெய்த” என்னும் (அகம 86) ம் பாட்டில் முன் காலத்து நிகழ்த்தும் வதுவைச் சடங்கை விரித்துக் கூறியுள்ளார். குறிஞ்சித் திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையிலொன்றும், அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நல்லிசைவஞ்சி

1, சத்துருக்கள் வேற்றுப்புலம் அழியவிட்ட வென்றிவேலனை யுடையவன் வெற்றியைச் சொல்லியது. (பு. வெ.), 2. எடுத்து விட்ட பின்பு பகைவர் தேசத்துக் கோட்டை இரங்களை அழித்துச் சொல்லினும் முன்பு சொன்ன துறையேயாம். (பு. வெ.)

நல்லியக்கோடன்

ஒரு சிற்றரசனாக இருக்கலாம். இவன் ஏறுமாநாட்டை ஆண்டவன். இவன் மீது நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படை இயற்றிப் பரிசு பெற்றனர்.

நல்லிறையனர்

இவர் வறுமையால் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவள் வனைப் பொருள் தரப் பாடியவர். (393) (புற 400.)

நல்லூர் நத்தத்தனார்

நல்லியக் கோடன்மேற் சிறுபாணாறு பாடிய புலவர்.

நல்லூர்ச்சிறுமேதாவியார்

இவர் நன்பலூர்ச்சிறுமேதாவியா ரெனவுங் கூறப்படுவர், அந்தணரென்று ஊகிக்கப்படுகிறார்; முல்லைத் திணையில் நரி ஊளையிடுகின்ற பேரொலி முதைப்புனங்காவலர் ஊதுங்கொம்பினொலியோடு ஒருங்கிசைக்குமெ என்று வியப்புறக் கூறியுள்ளார். (அகம் 94) இவர் முல்லையையும், குறிஞ்சியையும் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் ஒன்றும், அகத்திலொன்றும், திருவள்ளுவமாலையி லொன்று மாக மூன்று பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நல்லேமுனியார்

இவர் கடைச்சங்க காலத்துப் புலவரோ அக்காலத்திருந்த அரசர் பரம்பரையினரோ தெரியவில்லை. இப்பெயர் கொண்ட அரசர் ஒருவர் மத்தியுடன் போரிட்டனர். இவர் பரிபாடலில்: திருமாலைப் புகழ்ந்து பாடியுள்ளார். (பரி பாடல்).

நல்வழதியார்

இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த புலவர். இவர் பெயரை நோக்குமிடத்து இவர் பாண்டியர் வம்சத்தவர்போல் காணப்படுகிறது. இவர் கல்வி வல்லவர். இவர் செய்யுள் பரிபாடலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர் தம் நாட்டின் வையையைப் புகழ்ந்திருக்கிறார். (பரிபாடல்).

நல்விளக்கனர்

இவர் நல்விளக்கு என்னுமூரினர். இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் குறிஞ்சியைச் சிறப்பித்துப்பாடினர். இவரது பாடலிற் கூறிய உள்ளுரையும், இறைச்சியும், இனிமைதரா நிற்கும். இவர் பாடியது (நற். 85) ம் பாட்டு,

நல்வெள்ளியார்

இவர் மதுரை நல்வெள்ளியா ரெனவும், நல்லொளியா ரெனவுங் கூறப்படுவர். இஃது ஏடெழுதுவோர்மிகை. இவர் பெயரானே பெண்பாலரென்று தெரிகிறது. இவர் பாடியவற்றில் குறை நேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது. நுண்ணுணர்வினோரை மகிழச்செய்யும் (அகம் 32) இவர் குறிஞ்சியையும், பாலையையும் புனைந்து பெருஞ்சுவை பயப்பப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு பாடல்களும், குறுந் தொகையிலொன்றும், அகத்தில் ஒன்றுமாக நான்கு பாடல்கள் கிடைத்திருக்கின்றன,

நல்வேட்டனார்

இவர் மிளைகிழான் நல்வேட்டனாரெனவுங்க றப்படுவர். வேளாண் மரபினர். மிளை ஒரூர். இவர் பேய்க்காஞ்சியைத் தலைமகன் தனக்கு உவமை கூறியதாகப் பாடியுள்ளார். அடைந்தார்க்கு வரும் துன்பத்தைப் போக்குவதே செல்வமெனப்படும். ஏனைச்செல்வம் தவப்பயனா லெய்துவனவா மென்கிறார். (நற். 250). இரவுவரும் நெறியினேதத்தை விரித்துக் கூறுகிறார். (நற்.232). இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு பாடல்களும், குறுந்தொகையி லொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நல்வேளாளர்

வேளாளரில் ஒரு வகுப்பார். இவர்கள் கொண்டைகட்டி வகுப்பார்போல் நாங்களும் ஒருவகையென்பர்.

நளகிரி

இது பிரச்சோதனது பட்டத்துயானை, மிக்க வீர்யமுடையது. மதவெறி கொண்டு உஞ்சை நகரை அழித்துக் கலக்கிய இதன் கோபத்தை அடக்கி ஊர்ந்தமையாலே தான் உதயணன் சிறைவீடு பெற்றான். (பெ. க.)

நளகூபரன்

குபேரன் குமரரில் ஒருவன். இவனும் இவன் தம்பியாகிய மணிக்கிரீவனும் மதுவுண்ட மயக்கத்தால் சலக்கிரீடை செய்து கொண்டிருந்தனர். அப்போது நாரதர் அவ்விடம் வந்தனர். அவரைக் கண்டு இவ்விருவரும் எழுந்திராது வணங்காதிருந்ததால் முனிவர் கோபித்து மரமாகச் சபித்தனர், இவன் தம்பியுடன் நந்த கோபன் வீட்டில் விருக்ஷமாயிருந்து கிருஷ்ணமூர்த்தி ஆய்ச்சி கட்டிய உலுடன் தவழ்ந்து சென்றதால் சாபநீங்கி நலமடைந்தனன். இவனிடம் ஆசைகொண்டு அரம்பை ஒருமுறை வந்து கொண்டிருக்கை யில் இராவணன் கண்டு அவளை வலிதிற் புணர்ந்தனன். அரம்பையாலுணர்ந்த இவன் இராவணனை இனி உடன்படாப் பெண்களைப் புணரின் தலை வெடித்து இறக்கவெனச் சபித்தனன்.

நளன்

1. நிடதநாட்டில் மாவிந்த நகரத்தையாண்ட வீரசோன் குமரன்; சந்திர வம்சத்தவன், இவன் ஒருநாள் பூஞ்சோலையில் உலாவுகையில் அவ்விடம் வந்த அன்னப் பறவையைக் கண்டு பிடித்தனன். அது பயந்ததைக் கண்டு மீண்டும் விடுத்தனன். அதனால் அன்னம் செய்ந்நன்றி மறவாது அரசனை நோக்கி நளனுக்கு ஆசையுண்டாகும்படிக்குக் குண்டினபுரத்தாசன் குமரியாகிய தமயந்தியினது அழகு முதலியவற்றைக் கூறியது. இதைக்கேட்ட அரசன் அவளிடம் ஆசைகொண்டு அன்னத்தைத் தூதாகச் செல்ல வேண்டினன். அதற்கு உடன்பட்ட அன்னம் தமயந்தியிடந் தூதாகச் சென்று நளனது அழகு முதலியவைகளைத் தமயந்திக்குக் கூறியது. இவனது அழகு முதலிய கேட்ட தமயந்தி, இவனிடம் ஆவல்கொண்டு வருந்தினள். இதைத் தோழியாலறிந்த அரசன் சுயம்வரம் நாட்டினன். இதைக்கேட்ட இந்திரன், வாயு, அக்னி, யமன் முதலியவரும் அவளிடம் ஆவல் கொண்டு சுயம்வரத்திற்கு வந்து இவள் நளனிடம் ஆவல் கொண் டிருப்பதறிந்து நளனைத் தூதாக மாயவுருக் கொடுத்து அனுப்பினர். இவன் சென்று தேவரை மணக்க வேண்டியும் தமயந்தி இசையாமையால் திரும்பித் தேவர்க்குக் கூறினன். இதனால் இந்திரன் பல ஆயதங்களையும் அக்நி, தீயிலாது சமைக்கவுட் வாயு அச்வமந்திரத்தையும், யமன் கதாயுதத்தையு நளனுக்குக் கொடுத்தனர். பின் நளன் சுயம்வர மண்டபமடைய இந்நான்கு தேவரும் அவனைப்போ உருக் கொண்டு நின்றனர். தமயந்தி தார்வாடல், கண்ணிமைத்தல் முதவியவற்றால் தேவர்களினின்றும் நளனைத் தெய்வச்செயலால் அறிந்து மாலையிட்டனள், தமயந்தியின் சுயம் வரங்கேட்ட கலிபுருஷன் இவளை மணக்கும்படி ஆவல் கொண்டு வருகையில் தமயந்தி நளனை மணந்தனள் எனக் கேட்டுக் கோபித்து அவர்களைச் சுகமநுபவிக்காமற் பிரித்துவிடுகின்றேன் என்று நெடு நாள் காத்திருந்தனன். ஒருநாள் சந்திவந் தனை செய்ய நளன் பாதங்களைச் சுத்தி செய்கையில் அப்பாதத்திற் சிறிது மறுக்கண்டு அது காரணமாக அவனிடம் புகுந்து அவனது நல்வசிந்தையெல்லாந் தன் வசப்படுத்திப் புட்கர ராஜனுடன் கூடி அவனைச் சூதாட ஏவினன். புட்கரன் கொடிதூக்கி இவன் நாட்டில் வர நளன் இது என்ன கொடி யென்றனன். புட்கரன் இது சூதுவெல்லும் கொடியென்ன ஆயின் ஆடுவோமென மந்திரிகள் தடுக்கவும் சூதாடி நாடுநகர முதலியவற்றைத் தோற்றுத் தன் மனைவி மக்களுடன் அரண்யஞ் சென்றனன். இவ்வகை சென்ற அரசன், தன் மனைவி தன்னுடன் வருதல் தனக்கு மனம் பொறாது அவளது தந்தையின் நாட்டிற்கு ஏகச் சொல்லினன். தமயந்தி நாயகனைப் பிரிய உடன்படாமை சுண்டு குமரனாகிய இந்திரசேநனையும், குமரியாகிய இந்திரசேனையையும் வீமன் பட்டணம் அனுப்பினள். தேவியோ அரசனைப் பின்பற்றிச் சென்று காட்டின் வழிச் செல்கையில் ஒரு அன்னத்தைக் கண்டு முன் தனக்குக் கணவனது அழகு முதலியவற்றைக் கூறிய அன்னமென எண்ணி அதைத் தனக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டினள், அவ்வகை நளன் “தான் உடுத்த உத்தரீயத்தை எறிந்து பிடிக்க எண்ணித் தனது உத்தரியத்தை வீசியெறிகையில் அந்த அன்னம் கலியால் ஏவப்பட்டதாதலின் அவனது ஆடையைக் இரகித்துக் கொண்டு சென்றது. ஆடையின்றி யிருந்த அரசன் தன் மனைவியை விட்டு நீங்குமெண்ண முடையவனாய் மனைவியுடன் மண்டபத்தில் உறங்குகையில் அவளது ஆடையிற் பாதியைக் கருவி கொண்டு துணித்து மனைவியைத் தனித்து விட்டு நீங்கினன். நீங்கிய அரசன் காட் டின் வழிச் செல்லுகையில் கார்க்கோடகன் என்னும் பாம்பு சனியினேவலால் தன்னுருவுடன் தீயிலிருந்து நளனைத் தன்னைக் காக்கும்படி அழைக்க, நளன் இரக்கப் பட்டு அப்பாம்பை வாலைப்பிடித்து இழுத் துத் தீயைவிட்டு வெளியில் விடுகையில் அப்பாம்பு திரும்பிக் கடித்தது. அரசன் இவ்வகை உபகாரத்திற்கு அபகாரஞ் செய்யலாமோவெனக் கார்க்கோடகன் அரசனை நோக்கி அரசனே! நீ உன் உண்மையுருவுடன் செல்லின் எல்லாரும் அஞ்சுவர் ஆதலின் இவ்வகை செய்தேன் நீ உன் உண்மை யுருவேண்டின் என்னை நினைக்கின் உனக்கு இவ்வுரு நீக்கி உன் சொந்த உருவத்தைத் தருவேன் என்று நீங்கியது. பின் அரசன் இருதுபர்ணனிடஞ்சென்று வாகுகன் என்னும் பெயருடனிருந்தனன். இதுநிற்க, அரசனைவிட்டுத் தனித்த தம யந்தி விசனமடைந்து காட்டின் வழி புலம்பிச் செல்லுகையில் பாம்பொன்று இவளைப் பிடித்துக்கவ்வ இவள் புலம்புகையில் வேடன் ஒருவன் வந்து அப்பாம்பைக் கொன்று தமயந்தியிடம் கெட்ட நினைவு கொள்கையில் தமயந்தி அவனை எரித்துப், பொதிமாட்டுக்காரரைப் பின்பற்றிச் சென்று சேதிநகரத்து அரசன் அரண்மனைபோய்ச் சேர்ந்தனள். இவ்வகையிருக்க வீமராசன் தன் மருமகனும் மகளும், நகர் நீங்கின செய்தியறிந்து விசனமடைந்து பல இடங்களுக்குத் தம் தூதுவரை யனுப்பிப் பார்த்துவரச் செய்கையில் புரோகிதன் ஒருவன் சேதிநகரத்தில் தமயந்தியைக் கண்டு விசனமடைந்து இவளிருக் குஞ் செய்தியை அரசனுக்கு அறிவித்தனன். வீமராசன் சேதிநகரத்திலிருந்து தன் குமரியை வருவித்தனன். பின் வீமன் தன் மருமகன் இருக்கும் இடத்தையறிய விரும்பித் தூதரையனுப்பத் து தனொரு வன் இருதுபர்ணன் சபை சென்று அரசனை நிந்திக்க அங்கிருந்த வாகுகன் பரிந்து பேசியதுணர்ந்து அரசனிடங்கூற அரசன் அதை அறியும்படி தமயந்திக்கு நாளைமறு சுயம்வரமென இருதுபர்ணனுக்கு அறிவித்தனன். இருதுபர்ணன் களிப்புடன் வாகுகன் தேரோட்டுவதில் வல்லவனென அறிந்து தேரோட்டிச் செல்லுகையில் இருதுபர்ணன் மேலாடை வீழ்ந்தது கண்டு வாகுகனை நோக்கி யெடுக்கச் சொல்லுகை யில் வாகுகனாகிய நளன், இருதுபர்ணனை நோக்கி இரதம் இப்போது இருபத்து நான்கு காதம் வந்தது என்றனன். இதைக்கேட்ட இருதுபர்ணன் ஆச்சரியமடைந்து ஒரு ஆலமரத்தினை நோக்கி அம்பொன்று எய்து அவ்வொரு அம்பு அம்மரத்தின் இலைகளிலெல்லாம் வடுச்செய்தது காட்டி இந்த அஸ்திரமந்திரம் உனக்குத் தருகிறேன் இந்த அஸ்வமந்திரத்தை எனக்குத் தெரிவிக்கவெனக் கேட்க வாகுகன் அவ்வாறு செய்து திரும்புகையில் கலி அரசனையணைந்து நான் செய்த கொடுமைகளைப் பொறுக்க இனி உன் சரிதம் படித்தவரிடத்தும் அணுகேன் எனக் கூறி வேண்டிய வரம் தந்து போயினன். வாகுகனாகிய நளன் வீமன் பட்டணமணைந்து அரசனுடன் வீமன்விட்ட விடுதியில் இருந்தனன். இவ்வகை இருக்கத் தமயந்தி அரசனைக் குறிப்பாலுணர்ந்து உருவேறுபட்டிருத்தலால் சந்தேகித்து அச்சந்தேகம் நீக்கிக் கொள்ளத் தம் மக்களிருவரையும் வாகுகன் தனித்திருக்கையில் அனுப்பினள். வாகுகனாகிய நளன் மக்களைப் பார்த்து, மக்களை முன் காணா மனநடுங்கா வெய்துயிராப் புக் கெடுத்து வீரப்புயத் தணையா மக்காணீர், என் மக்கள் போல்கின்றீர் யார் மக்களென் றுரைத்தான், வன்மக்களியானைமன்,”” என்று, மக்காள் நீர் என்மக்களைப் போல் கின்றீர் யார்மக்கள் என விசனமடைந் ததை யறிந்த தமயந்தி தந்தையிட மறிவிக்க வீமன் வாகுகனிடம் வந்து ஒளியாமல் தன் உருவினைக் காட்டவேண்டினன். நளன் கார்க்கோடகன் கொடுத்த துகிலை யுடுத்துச் சொந்தவுருவுடன் நின்றனன். இதைக் கண்ட வீமன் களித்து நளனைத் தன்னிடமிருத்தி இருதுபர்ணனைத் தன் பட்டணமனுப்பினன். பின் நளன் தன் பட்டணமணைந்து புட்கரனைவென்று அரசு கொண்டு நெடுநாளாண்டு பின் தன் குமரனுக்கு அரசு தந்து தவமேற்கொண்டனன். நளனைக் கடித்த பாம்பைக் கார்க்கோடகன் எனவும் நகுஷன எனவுங் கூறுவர். 2. நளாயினியின் தந்தை, இவனுக்கு நளாயணன் எனவும் பெயர். 3. (சூ.) நிஷதன் குமரன், இவன் குமரன் நபன், 4. வாநரத்தச்சன் மயன்குமரன், இரத்தக்கண்ணனைக் கொன்றவன். விச்வகர்மனாற் பிறந்தவன், சேதுகட்டினவன். 5. முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். 6. நிருசஷசுகுமரன். இவன் குமரன் பாரி பிப்பிலவன். 7. அணுவின் குமரன். 8. ஆகுகனைக் காண்க.

நளவெண்பா

இது புலவர் திலகராகிய புகழேந்திப் புலவரால் மூன்று காண்டங்க ளாக வகுத்துப் பாடப்பட்ட நளன் சரிதை. இதில் ஆங்காங்கு சந்திரன் சுவர்க்கியைப் புகழ்ந்திருக்கிறது.

நளாயணன்

இந்திரசேனையின் தந்தை ஒரு இருடி,

நளாயினி

நளன் அல்லது நளாயணன் குமரி. இவளே திரௌபதியாகப் பிறந்த வள். இவளை மௌத்கல்யருஷி மணந்து பலவாறு சோதித்துப் பின்னும் சோதிக்க எண்ணிக் குட்ட நோய்கொண்டு தீர்த்த யாத்திரை செய்யவேண்டுமெனத் தேவியிடங் கூறினர். அவ்வகையே இவள் கணவனைக் கூடையிலிட்டுத் தூக்கிக்கொண்டு தீர்த்தங்கள் தோறுஞ்சென்று ஸ்நானஞ் செய்வித்து வந்தனள். இவ்வகை வருகையில் முனிவர் ஒரு தாசியிடம் புணரவேண்டுமெனக் கேட்க இவள் ஒரு தாசிக்கு வேண்டிய பணிசெய்து அவளை இசைவித்து இவரைத் தூக்கிக்கொண்டு இருளில் ஓர் சோலைவழி சென்றனள், அவ்விடம் பூர்வகர்மத்தால் மாண்டவ்யருஷி கழுமரத்தில் தொங்கிக்கொண்டிருந்தனர், இவள் சென்றது இருளிலாதலால் அக்கூடை மாண்டவ்யர் காலிற்பட்டு அவருக்கு வருத்தம் உண்டாக்கியது. மாண்டவ்யர் இவளைப் பெண்ணெனவறிந்து நீ பொழுதுவிடிய மங்கலமிழக்கவெனச் சபித்தனர். இவள் பொழுதுவிடியாதிருக்கச் சபித்தனள். இதனால் தேவர்க்கு நித்திய கருமாதிகள் நடவாதது கண்டு தேவர் மாண்டவ்யரை வேண்ட அவர் இவளிடம் அநுக்கிரகம் புரியப் பொழுது விடியச் செய்த கற்பினி. இவளது கற்பின் நிலை கண்ட மௌத்கல்யமுனிவர் உனக்கு என்ன வேண்டுமென நீரே எனக்கு ஐந்துருவாயிருந்து இம்மை மறுமைகளில் சுகமளிக்கவென அவ்வகையருளிச் சிலநாளிருந்து நன்னெறியடையச் செல்லுகையில் இவள் பின்தொடர்தல் கண்டு நீ மனிதயோனியிற்பட்டு ஐந்து புருடரை மணக்க எனச் சபித்து நீங்கினர். இவள் அவ்வுடல்விட்டுக் காசிராஜன் புத்திரியாகப் பிறந்து சிவ மூர்த்தியை யெண்ணித் தவஞ்செய்து அம்மூர்த்தி தரிசனந் தந்து என்ன வேண்டு மென நாயகன் வேண்டுமென ஐந்து முறை கேட்டதால் அவ்வகையருளி மறைந்தனர். இவள் பின் துருபதன் யாகத்தில் திரௌபதியாகப் பிறந்து ஐவரை மணந்தனள். இவளது மற்ற சரித்திரங்களைத் திரௌபதியைக் காண்க. இவளுக்கு இந்திரசேனையெனவும் பெயர்.

நளினி

1. அகமீடன் பாரி. இவள் குமரன் ளேன். 2. கங்கையின் பிரிவு,

நளினை

கனகமாலையின் தாய்.

நள்ளி

கடையெழு வள்ளல்களில் ஒருவன், தோட்டியெனும் மலைநாட்டிற்குத் தலைவன். தன்மனத்து நிகழ்கின்றவற்றை மறையாது கூறி நட்புச்செய்தவர்க்கு இல்லறத்து வேண்டிய நல்கினவன். கண்டீரக்கோ பெருநள்ளிக்கு ஒருபெயர். இவன் காட்டில் வன்பரணரெனும் புலவர் மிடி யைப்பார்த்து அவர்க்கு வேண்டிய நல்லுணவு தந்து தான் பூண்டிருந்த ஆரத்தினையுங் கடகத்தினையும் தந்து தன் பெயர் கூரு துசென்றவன். (புற, நா.)

நழசி

விப்ரசித்தியின் குமரன். பாரி பிரபை, தேவாசுர தொந்த யுத்தத்தில் இந்திரன் இவன் மீது வச்சிர மெறிந்தனன். அவ்வச்சிரம் இவன் சருமத்தையு மறுக்காதிருந்தது. அதனைக் கண்ட இந் திரன் இவன் மீது நனையாமலும் ஈரமாயுமிருந்த நுரையை யெறிந்து கொன்றனன். (பாகவதம்).

நவகண்டங்கள்

நவவருஷங்கள், கண்டங்கள் காண்க.

நவகிரகவாதிமதம்

இது நவக்ரகங்களால சிருட்டி, திதி, சங்காரம் மூன்றும் உண்டாம் என்னும் எவ்வாறெனின், திசாபுத்தி, உச்ச, நீச்சங்கள், நட்பு, ஆட்சி, பகை, கவிப்பு, பார்வை இவற்றால் உண்டாம் சுகாசுகம், ஆயுள், மரணம், இவைகளை யுண்டாக்கி ஆக்கியும், காத்தும், அளித்தும் தங்கள் பதங்களைத் தருதலால் இக்கிரகங்களே தெய்வமென்னும். இதனால் வழக்கத்தில் நான் பிறந்த வேளை என்றும், பிறந்த நக்ஷத்ர பலம், என்றும். என்கிரகசாரம், என்றும் திரிமூர்த்திகளையும் இக்கிரகங்கள் பிடித்தலைக்கும். என்றும், இம்மதங்கொண்டாரும் மற்றவரும் கூறுவர். இதில் நவக் ரகம்ச்வரூபநிலை, இக்கிரகங்கள் நக்ஷத்ர ராசி முதலியவற்றுடன் கூடி விரிகிறதே தடத்தம், இவைகளில் கட்டுப்பட்டு ஜருந மரணப்படுவதே பந்தம், இந்தக் கிரகங்களைப் பூசித்து ஓமாதிகளைச் செய்து லயப்படுவதே முத்தி. இவர்களுள் சூர்யவாதி சூர்யன் உதயத்தில், அயனாய் உலகத்தை யெழுப்பி, மழைபொழிவித்துத் தான்யாதிகளையுண்டாக்கி ரக்ஷித்து விஷ்ணுவாய், பின் அச்சீவராசிகளைச் சங்கரித்தலால் ருத்ரனாய்த் திரிமூர்த்தியாய் விளங்குவன் என்பன். இவனது மந்திரத்தால் இவன் உலகடைதல் முத்தியென்பன், சந்திரவாதி : சந்திரனது அமுதகலை, நில, நீர், பை, முட்டை மற்றைப் பூதங்கள், இவற்றில் வர்த்திக்கும். சந்திரன் ஸ்திரீபுமான்களுக்குக் காம விகாரத்தை உண்டாக்கிக் கூட்டுவிப்பன்; அதனால் உலகம் சிருட்டி யாம். இவனால் பயிர்கள் விருத்தியாம். அந்தப்பயிரால் உலகம் பிழைக்கும். அதுவே, திதியாம். பின் சந்திரகலை குறையச் சீவராசிகள் கெடும். ஆதலால் அதுவே சங்காரமாம். இவனைப் பூசித்து அவனுலகடைதல் முத்தி. ஏனைய கிரகங்களு மிவ்வாறே, (தத்துவநிஜாது.)

நவகோடி நாராயணசெட்டி

இவன் வைர வாணிப மகருஷிகோத்ரன், இவன் முதலில் ஒரு மனைவியை மணந்து மீண்டு மற்றொருத்தியை மணந்தனன், இதனால் சுற்றத்தவர் கோபித்தனர். இவன் அந்த இரண்டாவது மனைவியை விட்டுவிட்டுக் கப்பலிற் சென்றனன். இந்த இரண்டாவது மனைவி காளியை வேண்டிக் குறையிரப்பக் காளி புத்திரப்பேறு அருளினள். இவ்வாறு காளியின் வரத்தால் பிறந்த புதல்வன் வளரு நாள்களில் ஒரு நாள் இவனுடன் கற்கும் மாணாக்கர்கள் உன் தந்தை, யார் என்றனர். குமரன் தாயிடம் வந்து கேட்டனன். தாய் இப்புத்திரன் தந்தை அயலூருக்குப்போய் வந்திருப்பதறிந்து புத்திரனுக்குத் தந்தையைக் காட்டினள். குமரன் அறிந்து தந்தையிடம் சென்றனன். தந்தை இவனை அறியாதவனாதலால் துரத்தினன். குமரன் பலறறிய இவனைத் தெருவிற்கு இழுத்துக் காளியைக் கொண்டு சாக்ஷி கூறுவித்து நாடு முதலிய பெற்று வயிரவாணிபன் எனப் பெயர் பெற்றனன். இதுவே தமிழ் நூலாகிய வளையாபதி கதை என்பர்.

நவக்கிரக அம்ஸங்கள்

நவக்கிரகமென்பது சோதிஷ சாஸ்திரங்களில் பிரதானமாகக் கொண்டுள்ளது எப்படியெனில், சிவபெருமானே சூரியனாகவும், உமையம்மையரே சந்திரனாகவும், சுப்பிரமணியரே அங்காரகனாகவும், திருமாலே புதனாகவும், பிரமாவே குருவாகவும், இந்திரனே பாக்கிரனாகவும், யம தருமரே சனியாகவும், பத்திரகாளியே இராகுவாகவும், சித்திரகுத்தனே கேதுவாகம், இருப்பதாகத் தெரிகிறது. இவையன்றியும் தூமாதி பஞ்சக் கிரகங்களும் சொல்லப்படுகின்றன.

நவக்கிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி, ராகு, கேது முதலியவர்.

நவசத்திகள்

வாமை, ஜேஷ்டை, ரௌத்ரீ, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூத்தமனி, மனோன்மனி, பின்னுமவவாறும் கூறுவர். தீப்தை சூக்ஷமை, குஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோமுக்யை இவர்கள் விளக்குகளின் சவாலைபோல் தீ நிற முள்ளவர்களாய் ஒருகையிற் பதுமமும், மற்றொரு கையிற் சாமரமும் உள்ளவர்களாய்ச் சர்வாபரண பூஷிதர்களாயிருப்பர்.

நவசாத்திரன்

வசுதேவருக்குத் தேவகியடம் உதித்த குமரன்.

நவதானியம்

அரிசி, கோதுமை, துவரை, பயறு, கொள், உளுந்து, எள், காராமணி, கடலை,

நவநதி

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவிரி, காவிரி, சரயு, குமாரி, பயோஷ்ணி.

நவநந்தனர்

ஒன்பது இடையர்கள், கோபிகைகளைக் காண்க.

நவநாதசித்தர்

சத்துவநாதர், சாலோகநாதர், ஆதிநாதர், அருளிதநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடயந்திரநாதர், கோரக்கநாதர், குக்குடநாதர் முதலியோர்; இவர்கள் உச்சாடனம், மோகனம், ஸ்தம்பனம், மாரணம், ஆக்ருஷ்ணம், வித்துவேஷணமாகிய ஆறுக்கும் நூல் செய்தவர்கள், கந்தளேந்திரர், கோரக்கர், கொங்கணர், நாகார்ச்சுநர், மச்சேந்திரர், பீமநாதர், அருணகிரிநாதர், புஜங்ககுருநாதர், ஆதிநாதர் எனவும் கூறுவர்.

நவநிதி

கச்சபநிதி, கற்பநிதி, சங்கநிதி, பதுமநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, மகாபதுமநிதி, முகுந்தநிதி யென்பர். மற்றொருவிதம் வண்டோகை, மனோகை, பிங்கலிகை, பதுமை, சங்கை, வேசங்கை, காளை, மகாகாளை, சர்வதம் எனவுங்கூறுவர்.

நவன்

உசீநரன் குமரன்.

நவபாஷாணம்

1. இது இராமர் நவக்ரக பிரதிட்டை செய்த இடம். இராமேச்சுரத் தருகிலுள்ளது. 2. சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகற்பூரம், வெள்ளைப் பாஷாணம், கௌரிபாஷாணம், தொட்டிப்பாஷாணம். பின்னும் இவை முப்பத்திரண்டு வகை யென்ப.

நவப்பிரம்மாக்கள்

பிரம தேவருக்குச் சிருட்டிக்குத் துணையாய் அவர்க்குள்ள செல்வம், போகம், ஆயுள், ஆயுதம், உரு முதலிய பெற்றிருப்பர்.

நவமணிகள்

கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்,வைரம்.

நவமி

ஸ்ரீராமநவமி விரதம்; இது சித்திரை சுக்லபக்ஷ நவமியில் அநுஷ்டிப்பது. இத்திதி மத்யான்ன வியாபினியாய்ப் புனர்பூச நக்ஷத்ரம் கூடிய தாயின் நலம்.

நவரதன்

பீமரதன் குமரன்.

நவரத்நம்

விக்ரமார்க்கன் சபையிலிருந்த ஒன்பது புலவர்கள், இவர்கள் தன்வந்தரி, ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதால பட்டர், கடகர்ப்பார், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி என்பவர்கள்,

நவராத்திரி விரதம்

திதி விரதத்தில் கூறினோம். ஆண்டுக் காண்க.

நவராத்திரிவிரதம்

1. ருதுக்களில் வசந்த ருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்சூச் சமானமாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆகையால் அவற்றால் உண்டாம் துன்பத்தினின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தைச் செய்தல் வேண்டும். பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்திலேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒருவேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும். நான்குமுழ நீளமும் ஒருமுழ உயரமுள்ள வேதிகையமைந்த அலங்கரித்த மண்டபத்தில் ஒரு சிங்காதனம் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்பர் அல்லது ஐவர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதாபத்மத் துடன் கூடிச் சதுர்ப்புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத்துடன் கூடியவளாகவே தேவியின் திரு வுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய ஐந்துவகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும். பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவியங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படிபூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும். பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத்துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல்வேண்டும். பூஜிப் போன் சயன சுகாதிகளைவிட்டுத் தரையிற்படுத்து உறங்கவேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங்கூடில் விசேஷமென் றும், அத்தினத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாபீஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர். கும்ப பூசைமுதல் ஓமாந்தம்வரையிற் செய்யத் தகுவனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும். அக்கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்க ளாம். இக்கன்னியர்களுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொருவருக்கும் பெயராகும், இவர்களை வேதமந்திரங்களால் பூஜித்தல் வேண்டும், மேற்சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ்வொருவராகவேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண் டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவனேல் அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி நவமி இம்மூன்று தினத்திலும், பூசிப்பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவரெல்லாச் செல்வங்களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர், 2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசிமாசம் பூர்வபக்ஷப பிரதமை முதல் திரிதிகை வரையில் உருத்திரியையும், சதுர்த்தி முதல் ஷஷ்டிவரையில் இலக்குமியையும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனைச் சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனைவியாகிய துவேதியை ஆங் கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித்தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத்திற்குப் பின் அவள் வயிற்றிற் பிறந்த குமரனாகிய சூரியப்பிரதாபன் இழந்த நாட்டைப் பகைவரிடமிருந்து மீட்டனன் என்பர்.

நவவருஷம்

பரதவருஷம், ஏமகூட வருஷம், நிஷதம், இளாவிருதம், நீலம், சிவேதம், குரு, பத்திராச்வம், கேதுமாலம் என்பன.

நவவிதசம்பந்தம்

பிதாபுத்ர சம்பந்தம், ரஷ்யாக்ஷக சம்பந்தம், சேஷசேஷி சம்பந்தம், ஞாத்ருஞேய சம்பந்தம், சரீரசரீரி சம்பந்தம், ஆதார ஆதேய சம்பந்தம், விசேஷண விசேஷிய சம்பந்தம், ஆசரியாச்ரியி சம்பந்தம், ரக்ஷயாக்ஷ கஸம்பந்தம்.

நவவீரர்

உமாதேவியாரின் காற்சிலம்பினின்று சிந்தியமணிகளில் பிறந்த பெண்கள் சிவமூர்த்தியை விருப்பால் நோக்கிக் கருப்பெற்று நவவீரர்களைப் பெற்றனர். இவர்கள் குமாரக்கடவுளுக்குத் துணையாயிருப்பவர். இவர்களில் முதல்வர் வீரவாகுதேவர். மற்ற எண்மர் வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந் தரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் என்பவராம்.

நஸ்வசீரன்

பாரதவீரருள் ஒருவன். நயசீரன் அம்சம்.

நாக சதுர்த்தசி விரதம்

இது ஐப்பசிய கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் விடியற்காலத்தில் மங்கள ஸ்நாகஞ் செய்தல் வேண்டும். தைலத்தில் வக்ஷ்மியையும், ஜலத்தில் கங்கையையும் ஆவாகித்து ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் செய்யின் பமபயத்தினின்று நீங்குவர். இதனைக் கார்த்திகை சுக்லபடித்துச் சதுர்த்தசியில் செய்யும்படி கூறியிருக்கிறது. இதில் புது வேஷ்டி பூஷணம் முதலியன செய்து தரிப்பர். இத்தினத்தில் விஷ்ணு திரிவிக்ரம ஸ்வரூபராய் மகாபலியின் மூவுலகத்தை மூன்று அடியால் அபகரித்தபோது அவன் மூன்று நாள் தன்பொருட்டுத் தீப தானம் மூவுலகத்தாரும் செய்யக் கேட்டுக் கொண்டபடி வரம் தந்ததினால் இந்நாளில் மூன்று தினம் தீபமிடுவர். இதனால் இப் பண்டகை தீபாவளி யெனப்படும்.

நாக நாட்டரசர்

மணிபல்லவத்துள்ள புத்த பீடிகையை எடுத்துச் செல்லமுயன்று தம் முட்பகைமை கொண்டு போர் செய்த இரண்டரசர். (மணிமேகலை.)

நாக பஞ்சமி விரதம்

இது ஆவணி மாதம் சுக்கிலபக்ஷ பஞ்சமியில், சதுர்த்தியில் ஒருவேளை உணவு கொண்டு மறுநாள் ஐந்தவையுள்ள நாகத்தின் உருவைப்பொன் முதலிய லோகத்தாலாயினும் மண்ணா லாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தக்ஷிணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையும் துதிப்பது,

நாககன்னிகை

உரகபதியின் மகள், அருச்சுநன் தேவி, குமரன் அரவான்.

நாககன்னிமணந்தசோழன்

சூர ஆதித்த சோழனைக் காண்க.

நாகசம்

பரிச்சித்தால் தக்ஷகனுக்கு அஞ்சி நிருமிக்கப்பட்ட கோட்டை,

நாகணவாய்ப்புள்

1. (மைனா) இது சிட் டினத்தில் சேர்ந்தது. இது, கறுப்பு நிறமாய் இரக்கையில் வெளுத்திருக்கும், மூக்குமஞ்சள் நிறம், இதைக் கிளியைப்போல் பழக்கிப் பேசப் பயிற்சி செயின் நன்றாகப் பேசும், 2, இதில் இருவகை. ஒன்று கறுப்பு நிறங்கொண்டது, இறகில் வெண்மை நிற முண்டு. இதன் அலகும் கண்ணின் ஓரமும் மஞ்சள் நிறம். இது கூடு கட்டுவதில்லை. மரப்பொந்துகளிலும் சுவரிடுக்குகளிலும் பஞ்சு முதலிய வைத்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது உருவத்திற் சிறியதாயினும் பக்ஷிகளுடன் சண்டையிட்டு அவைகளைக் கூரிய அலகால் குத்திவோட்டும். இச்சாதியில் மஞ்சள் நிறங்கொண்டதும் உண்டு இதனை மைனா என்பர்.

நாகதந்தன்

திருதராட்டிரன் குமரன்.

நாகதன்வம்

வாசுகி ராஜனாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம்,

நாகதஷ்ட விரதம்

இதுவும் ஆவணிமாத சுக்கிலபக பஞ்சமியில் மேற்கூறியவாறு, மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்தி செய்து விஷ்ணுப்பிரீதி செய்வது, இதைச் செய்தவர்கள் நாகபய நீங்கி நலம் அடைவர்.

நாகந்தைமகருஷிகோதரன்

ஒளவைக்குப் பொற்படாமும் கருநெல்லிப் பழமுங் கொடுத்து அந்தாதியும் நவமணிமாலையும் பெற்றனன்,

நாகனார்

ஒரு இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் உள்ள (11) ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர். (பரிபாடல்).

நாகன்

1. கண்ணப்பர் தந்தை. பாரி தத்தை. 2. (8) வாசுகி, அநந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன், இவை யெண்டிக்கில் பூமியைத் தாங்க நடுவில் சேஷன் தாங்குவன்.

நாகன்றேவனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (திருவள்ளுவமாலை)

நாகபந்தம்

இது சித்திரக்கவியிலொன்று. இது இரண்டு பாம்புகள் தம்முள் இயைவனவாக உபதேசமுறைமை யானெழிதி அதில் ஒரு நேரிசை வெண்பாவினையும் ஒரு இன்னிசை வெண்பாவுமெழுதிச் சந்திக்களினின்ற வெழுத்தே மற்றையிடங்களினு முறுப்பாய் நிற்கப் பாடுவது. இதில் மேற் சுற்றுச்சந்தி நான்கிலும் (4) எழுத் தும், கீழ்ச்சுற்றுச்சந்தி (4) இலும் (4) எழுத்தும் (2) பாம்பிற்கு நடுச்சந்தி (4) இலும் (2) பாட்டிற்கும் பொருந்த (4) எழுத்துமாகச் சித்திரத்தில் அடைப்பது.

நாகபலி

பலியைப் புஷ்பங்களோடும் கறுப்பு வஸ்திரங்களோடும், சந்தனத்துட னும் சூரியன் அஸ்தமிக்கும் போது புற்றில் போடவேண்டும். இப்படிப் போடுவதால் பூமியைத் தாங்கும் நாகர்கள் சந்தோஷிக்கிறார்கள். இதனால் வேண்டிய இஷ்டசிந்திகள் உண்டாம். இச்சரிதை திக்கஜங்களால் ரேணுகன் எனும் யானைக்குக் கூறப்பட்டது. (பார, அரசா.)

நாகபுரம்

சாவக நாட்டுப்பட்டணம், புண்ணிய ராஜனுடைய இராசதானி. சிலசாசனங்களில் போகவதிபுரமென்று வழங்கும். (மணிமேகலை.)

நாகபுராணன்

கத்ருகுமரன், நாகன.

நாகப்பிரதிட்டை

ஒரு கருங்கல்லில் ஒரு படம், இருபடமுள்ளனவாகப் பாம்புகள் எழுதி அச்சிலையை முதனாள் சலவாசஞ் செய்வித்து அன்றிரவு தம்பதிகள் உபவாசமிருந்து மறுநாள் நாகசிலைக்குப் பூசை, முதலிய செய்து அரசடியில் விதிப்படி பிரதிட்டை புரிந்து பூஜித்துப் பந்துசனங்களுடன் பிராமணபோஜனஞ் செய்விப்பது. இது செய்தோர் புத்திரபாக்கியம் பெறுவர். பெண்ணாகவே பெறும்பேறு ஆணாக மாறும்.

நாகமாலை

சச்சந்திரன் பரிவார்சனங்களில் ஒருத்தி.

நாகமுக்கியர்

சர்ப்பங்கள் அதிகமாகையால் எல்லாவற்றின் பெயர்களைக் கூற முடியாது. முக்கியானவை மாத்திரம் கூறப்படுகிறது சேஷன் முதலிற் பிறந் தவர், அவருக்குப் பின் வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காறியன், மணிநாகன், ஆபூரணன், பிஞ்சாகன், எலாபத்ரன், வாமான், நீலன், அலேன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கன், கலசபோதகன, சுமனஸ், ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கோடசகன், சங்கன், வாலிசிகன், நிஷ்டாநகன், ஹேமகுஹன், நகுஷன், பிங்லன், பாஹ்ய கர்ணன், ஹஸ்திபதன், முத்தர பிண்டகன், கம்பலன், அசுவதரன், காலீயகன்,வ்ருத்தன், சம்வர்த்தகன், பத்மகரிருவர், சங்கமுகன், கூச்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், காவீரன், புஷ்பதமிஷ்டசன், பில்வகன், பில்வபாண்டுரன், மூஷிகாதன், சங்கசிரஸ், பூர்ணபத்ரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜ்யோதிகன், ஸ்ரீ, வஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், விரஜஸ், சுபாகு, சாலிபிண்டன், ஹஸ்திபிண்டன், பிடாகன், சுமுகன், கேளணபாசனன், குடரன், குஞ்சான், பிரபாகரன், குமுதன், குமுதாக்ஷன், தித்திரி, ஹவிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கான், குண்டோதரன், மகோதரன், இவர்கள் சிறந்தோர். இவர்களில் ஆதிசேஷன் அயோக்யாளா கிய நாகர்களுடன் சேர விருப்பமற்றவராய்த் தவமேற்கொண்டு பிரமாவினால் பூமியைத் தாங்கக் கட்டளை பெற்றார். வாஸுகி தன் குமரியாகிய சலற்காரையை ஜாத் காருருஷிக்கு மணஞ் செய்வித்தான். பாற்கடல் கடையத் தாம்பானான், தக்ஷகன் பரீக்ஷித்தைக் கடித்துப் பிராமண சாபத் தைப் பூர்த்திசெய்தான். எலாபுத்ரன் ஆஸ்தீகரால் சாபநிவர்த்தியை நாகர்களுக்குக் கூறினான். இவர்களுள் பெரும்பான்மையோர். தாயின் சாபமேற்று ஜநமேஜயன் சர்ப்பயாகத்தில் மாண்டனர்.

நாகம் போத்தன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம், (குறு,242).

நாகரர்

இவர் ஒரு ருஷி. தம் பெயரால் ஒரு லிபி ஏற்படுத்தியவர். அதற்குப் பெயர் நாகரம்.

நாகரிதாசர்

இவர் திருமாலிடம் அன்பு பூண்டவராய்த் திருமால் கொண்ட பல அவதாரங்களையும் நாடகமாக நடித்து வருவர். இவரது சீடர் இவர் கொண்ட வேடத்திற் கிணங்கத் தாமும் வேடங்கள் பூண்டு நடிப்பர். ஒருமாள் இவர் நரசிங்க வுருக்கொள்ளச் சீடன் ஒருவன் இரண்யவேடமும் மற் றொருவன் பிரகலாத வேடமும் கொண்டு நடிக்கையில் பிரகலாதன் இரணியன் முன் விஷ்ணுமூர்த்தியின் ‘சர்வ வியாபகநிலை கூற இரணியன் கோபித்து இந்தத் தூணிலுந் திருமாலிருப்பனோ எனக் கோபத்துடன் அறைய அதில் நரசிங்கவேடங்கொண்டிருந்த தாசர் வெளிப்பட்டு இரணியவேடங்கொண்டிருந்த அவனது உடலைப்பிளந்து மாலையிட்டனர். இதனை அக்காலத்திருந்த இராமராஜர்முன் பலர் கூற அரசர் நாஹ ரிதாசரைத் தசாதராகவும் ராம, கைகேசி யர் இருவரும் சீடராகவும் வரச்செய்து இராமனை விட்டுத் தசரதர் பரிதபித்து உயிர் நீங்கும் சரிதை நடிக்கச் செய்கையில் இராமன் வனம் புகவும் தசரத வேடம் பூண்ட தாசர் உண்மையாகவே உயிர் நீங்கிப் பரமபதம் பெற்றவர்.

நாகரிபக்தர்

இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்த ஒரு தட்டார். சிவப்ரீதி யுள்ளாராய்த் திருமாற் கோயிலருகிருந்து உட்செல்லாதவராய் வாழ்கின்ற நாளில் வணிகன் ஒருவன் புத்திரப்பேறு வேண்டிப் பெருமாளை வணங்கிப் பெற்று அப்பெருமாளுக்கு அரைநாண் செய்யவேண்டி இவரிடத்துச் சென்று கூற அவர் பெருமாளின் அளவெடுத்துவா வென்றனர். வணிகன் அவ்வாறே அளவெடுத்துத் தரத் தட்டார் அவ்வாறு செய்து தந்தனர். அதைப் பெருமாளுக் குச் சாத்த அது பற்முதிருப்பதைக் கண்டு வணிகன் தட்டானுக்குச் சொல்லி வேண்டினன். மீண்டும் அதைச் சரிப்படுத்தித் தர வணிகன் கொண்டு காட்ட ஒரு விரற்கடை அதிகப்பட்டது. அதைச் சரிப்படுத் தித்தர ஒரு விரற்கடை குறைந்தது. இவ்வாறு நீட்டவுங் குறையவும் இருத்தலைக் கண்டு வணிகன் நான் செய்த குற்றமென்னோ என, வருந்தி, நீயே அளவுகாண் என வேண்டலும் நாம் சிவமூர்த்தியையன்றிக் காண்பதில்லென் மறுத்தனன். பின்னும் வணிகன் வேண்டக் கண்களைக் கட்டிக் கொண்டு வணிகன் அழைத்துச் செல்லக் கோயிலுட் புகுந்து பெருமாளைத் தடவ அவர் மான்மழு சதுர்ப்புஜத்துட னிருக்கக் கண்டு துணுக்கெனக் கண்களை யவிழ்த்துப் பெருமாளைக் கண்டு மீண்டும் கண்களை மூடினன், மீண்டு அவ்வாறு சிவச் சின் னங்களைக் கண்டு கண்களைத் திறக்க விஷ்ணுவாகக்கண்டு மயங்கிக் கண்மூடின் சிவனாகவும் திறக்கில் திருமாலாகவும் இருக்கக் கண்டு கண்களில் நீர் ததும்பத் திருவடிகளில் வணங்கி மனமுருகி உன்னில் சிவன் வேறென்று நினைத்த எனக்கு என்னில் அவன் வேறல்லன் என அறிவித்து நின்றவனே எனத் துதிக்கப் பெருமாளும் தம் சிரத்தில் சிவக்குறி காட்ட நாஹரியும்! பணிந்து நாமதேவர் செய்த விருந்துண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி பெருமா ளைப் பணிந்து வந்தனர்.

நாகர்

1. ஒரு மனித ஜாதியார். இவர்கள் நாடு நாகநாடு, நாகர்மலை முதலிய உண்டு, வாசுகி முதலிய குலநாகங்களின் குலத்திற் பிறந்து நாகமுத்திரை பெற்றிருத்தலின் இப்பெயர் பெற்றனர். (மணிமேகலை). 2. தமிழ்நாட்டில் பண்டைக் காலத்துப் பரவியிருந்த ஒருவகைச் சாதியர். இவர்கள் தங்கள் முடிமேல் ஐந்தலை, முத்தலைகளையுடைய நாகவடிவமுடைய தொன்றைத் தரித்து வந்தமையின் இப்பெயரடைந்தனர்.

நாகர்மலை

இதிலுள்ள நாகர்கள் ஆடையில்லாமற் சஞ்சரித்தவர்களென்றும், இழிவான தொழில்கள் பலவற்றைச் செய்து கொண்டிருந்தவர்க ளென்றும் தெரிகின்றது. (மணிமேகலை).

நாகவீதி

தருமன் பெண்.

நாகாசுரன்

ஒரு அசுரன். இவன் விஷ்ணு, பிரமன், வாசுகி முதலியவரை வென்று சிவமூர்த்தியிடம் வந்து திருவடியால் உதையுண்டு அழுந்தின நாகவுருவமுள்ளவன்.

நாகாம்பை

1. வசவதேவர்க்குத் தங்கை, வசவர் சொற்படி குண்டலத்தைச் சங்கமருக்கு அளித்தவள். இவள் குமரர் சென்னவசவர். 2. கிருஷ்ணதேவராயன் தாய்.

நாகைக்காத்தான்

இவன் மீது வருண குலாதித்தன் மடல் என்று ஒரு பிரபந்தம் ஒரு பெண் கவியால் பாடப்பட்டது.

நாகைக்காரோணம்

இது நாகப்பட்டினத்துள்ள சிவத்தலம். இது சிவமூர்த்தி பிரம விட்டுணுக்களையும் மற்றவர்களையும் தம்முள் அடக்கிக்கொண்ட சிவன் திருவுரு இவ்விடம் பிரதிட்டிக்கப்பட்டது.

நாக்கு

இது, தடித்ததசைப் பொருள், வாயிலடங்கியது. நாக்கினடியிலும் மேலும் முட்கள் போன்ற சதைகளுண்டு, மூளையிலிருந்து நாவிற்குச் சிறு நரம்புகள் வருகின்றன. இந்நரம்புகள் நாவின் மேலிருக்கும் முட்களில் மலர்ந்து முடிகின்றன. நாம் உருசியுள்ள பொருள்களை வாயிற் கொண்டவுட.ன் கரையச் செய்து நாவில் மலர்ந்துள்ள நரம்பில் படருசியை மூளைக்கறிவிக்கும். வாயிற்கொண்ட பொருளைத் தொண்டைபின் வழியாய் உட்செலுத்தும்.

நாங்குடிவேளாளர்

கோட்டை வேளாளரை விட்டுப் பிரிந்த வேளாளர். இவர்களும் கொண்டைகட்டி வேளாளரைப் போல் அரசர்க்கு முடிசூட்டுவோர் என்று கூறுவர்.

நாசயனன்

கலாவதியைக் காண்க.

நாசயோகம்

திதிகளைக் காண்க.

நாசிகரோகங்கள்

இவை பனி, பனிக்காற்று, எதிர்க்காற்று, நாசியில் தூசு அடைதல் உரத்தவார்த்தை, மிகுரித்திரை, நித்திரைபங்கம், குளிர்ந்த ஜலத்தில் மூழ்கல், கண்ணீரை அடக்குதல், மேடுபள்ளமுள்ள இடத்தில் படுத்தல், தேசபேத ஜலபானம், வெகுதாகபானம், அதிக ஸ்திரிசையோகம், வாந்தி அடக்கல் இக் காரியங்களினால் முத்தோஷங்களும் அதிகரித்து நாசியைச் சேர்ந்து ரோகத்தை யுண்டாக்கும் அது வாதபீனிசம் முதலாக (18) வகைப்படும். 1, வாதபீநசரோகம், 2. பித்தபீநசரோகம், 3. சிலேஷ்மபீநச ரோகம், 4. திரிதோஷபீநசரோகம், 5. ரத்தபீநசரோகம், 6. துஷ்டபீநசரோ கம், 7. அதிதும்மல்பீநசரோகம், 8. நாசி காசோஷரோகம், 9. நாசிகாநாகரோகம், 10. இராணபாகரோசம், 11. நாசிகாசிராவ ரோகம், 12. அபீநசரோகம், 13. நாசிகாகீபிகைரோகம், 14. பூகிளாசிகாரோகம், 15. பூயாசிரநாசிகரோகம், 16. நாசிகாபுடகரோகம், 17. நாசாரசரோசம், 18. நாசிகாற்புத ரோகம் என (18) வகைப்படும்.

நாசிகேது

1. திவ்யாங்க மகருஷி குமரன். இவன் தந்தை சொல்லிய காலந்தவறிச் சிவபூசைக்குப் புட்பங் கொண்டுவந்ததால் தந்தை சொற்படி நாகதரிசனஞ் செய்து பின் இந்திர, பிரம விஷ்ணு சிவலோகங்களைத் தரிசித்து மீண்டவன். 2, உத்தாலகமுனிவர்க்கு ஒருநாள் வீரியங் கலிதமாக அதையொரு தாமரை மலரிலிட்டு விதிசை நதியில் விட்டனர். அந்நதிக்குத் தீர்த்தமாடப் பிரதூதரன் குமரியாகிய சுகேசினி வந்தனன். அவள் அந்த மலரினையெடுத்து முகர அம்மூக்கின் வழி இருடியின் வீரியஞ்சென்று கருக்குழியில் பதியக் கன்னிகை கருக்கொண்டனள், குமரியின் கருக்குறியைத் தாயறிந்து புருடனுக்கு அறிவிக்க அரசன் தன் குமரியைத் துற்கடமுனிவ ராச்சிர மத்திற்கருகாம் வநத்தில் விட்டனன், சுகேசினி அம்முனிவராக்சிரம மடைந்து தன்னை இன்னாளென அறிவித்து அவ்விருடிக்கு ஏவல் புரிந்திருக்கையில் நாசியின்வழி ஒரு ஆண்குழந்தையைப் பெற அம்முனிவர். அவள் நாசியின் வழி பிறந்ததால் நாசிகேது எனப் பெயரிட்டனர். பின் துற்கடமுனிவர் நாசிகேதுவை உத்தாலகரிடம் அனுப்பி அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்யக் கட்டளை யிட்டனர். அவ்வாறே நாசிகேது அவர்க்கும் ஆண்டிருந்த முனிவர்களுக்குஞ் செய்து வருகையில் முனிவர் களிப்படைந்து நீ யார் என நாசிகேது உமது குமரன் எனக்கேட்டு ஞான திருஷ்டியால் நடந்தவை அறிந்து ஆயின் உன் தாயை அழைக்க என அவ்வாறே தாயையழைக்க அவள் துர்கடர் கட்டளைப்படி நடக்க என அவர் கட் டளைப்படி தன் பாட்டனாராகிய பிரதுதரனுக்கு அறிவித்து உத்தாலகமுனிவரை வருவித்துத் தன் தந்தைக்கு மணஞ் செய்வித்தவன். இவ்வாறிருக்க உத்தாலகர் ஒருநாள் தன் குமரனுடன் தீர்த்தமாடச் சென்று தருப்பையை மறந்து வந்தபடியால் குமரனை நோக்கித் தருப்பை யெடுத்துவர ஏவக் குமரர்சென்று தருப்பையைச் காணாது வெறுக்கையாய் வந்து தருப்பையில்லாமை கூற முனிவர் வேறு கருப்பையாயினும் கொண்டுவராது வந்தமையால் கோபித்து நீ யமபுரங் கண்டு மீளுக என்றனர். உடனே குமரன் இறக்க முனிவர் அறியாது சபித்தேனென விசனமுருகையில் குமரன் எழுந்திருந்து தந்தையைப் பணியத் தந்தை குமரனைத் தீர்க்காயுளாயிருக்க என வாழ்த்த அவ்வாறிருக் கையில் முனிவர்கள் இவனிடம் வந்து நரகலோக மெவ்வாறிருந்ததென அவர்களுக்கு யமபுரச்செய்தி கூறினவன். (நாசிகேது கதை).

நாசியன்

கத்ருதநயன் நரகன்.

நாச்சையர்

ஒரு வீரசைவர், சமணரை வென்று கருவறுத்தவர்.

நாஞ்சினாட்டுவேளாளர்

இவர்கள் மலையாளத்துப் பரவியுள்ள வேளாண்குடி மக்கள். இவர்கள் பாண்டியர்களுக்கும் மலைநாட்டாருக்கும் யுத்தம் நடக்கையில் திருவனந்தபுரத்தை அடைக்கலமாகக் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலார் உழவர். (தர்ஸ்டன்).

நாஞ்சில்வளவன்

இவன் ஒரு வள்ளல. இவனை ஒளவை அரிசிகேட்க ஒரு யானை கொடுத்தான். ஆதலால் இவன் மீது “தட வுசிலைப் பலவுநாஞ்சிற் பொருநன்’ எனப் பாடினள்,

நாஞ்சில்வள்ளுவன்

ஒரு சிறைப் பெரியனாராற் பாடல் பெற்றவன், நாஞ்சில் மலையுடையான் இவனைப் பாடிய புலவர், மருதன் இளநாகனார், கருவூர்க் கதப்பிள்ளை, சேரனுக்குப் படைத்துணையானவன். (புற நா)

நாடகச்சாதி

இது பத்துவகை. நாடகம், பிரகரணம், பரணம், பிரகசனம், ஷமம், வியாயோகம், சம்வாகாரம், வீதி, அங்கம், ஹீயாமிருகம் முதலிய. (தண்டி ~ உரை).

நாடகத்தமிழ்

இது நிலத்தோடும், கலத்தோடும், கண்டத்தோடும், கருவியோடும், நிலையோடும், இயக்கத்தோடும், இருவகை. பலவகை விலக்கு றுப்புக் கை கால் வட்டணை, பொருள், விருத்தி, யோனி, சந்தி, சாதி, சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்பனவற்றோடும்; கதையோடும் பல கூத்துக் கூறுங்கால் உய்த்துணர்வில்லோர்க்குச் செவிச்சுவை பயக்கக் கூறுவது. (சிலப்பதிகாரம்.)

நாடகம்

அகநாடகம், புறநாடகம் என இரண்டு. அகநாடக உரு (28). அவை கந்த முதலாகப் பிரபந்த மிறுதியாகவுள் எவை. கந்தம் என்பது : அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது. பிரபந்தமென்பது : அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது, புறநாடக உருவாவன தேவபாணி முதலாக அரங்கொழிச் செய்யுளீறாகச் செந்துறை விகற்பங்களெல்லாம் என்க, அகநாடகத்திற் குரியவை கீற்றுக்கடிசரி முதலிய தேசிற்குரிய கால்களும், சுற்றுதல், எறிதல், உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும், உடற்றுக்கு முதலாகிய உடல் வர்த்தனையுமாம். புறநாடகத்திற் குரிய ஆடல்களாவன : பெருநடை, சாரியை, பிரமரி முதலாயினவும் பதினோராடலிற் கூத்துக்களுமாம்.

நாடார்

சாணார்க்கு ஒரு பட்டப்பெயர்.

நாடி

(9) சுழிமுனை, இடை, பிங்கலை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி, இவற்றுள் சுழிமுனை, ஆதாரம் ஆறிலும் நிற்பது. இடைகலை பிங்கலை கத்திரிகைக் காற்போல் உடல் முழுதும் பின்னிகிற்பது. காந்தாரி, நாபியிலும், அத்தி, சிதவை கண்களிலும், அலம்புடை, புருடன், இவை. காதுகள் இரண்டினும், குரு, நாபியிலும், சங்கினி, உபத்தத்திலும் உறையும்,

நாடிகள்

(உடம்பிலுள்ள நிலையை நாடுதலால் இப்பெயர்.) இவை தேகத்தில் உந்திச் சுழியிலிருந்தெழுந்து கீழ்மேலாய்ப் பேய்ப்பீர்க்கின் கூடுபோல் தேகத்தைப் பின்னி நிற்பனவாம். இவை தேகமுழுதும் (72,000) எனத் தமிழ் நூல்கள் கூறும். ஆயினும் இவற்றில் தசநாடிகள் முக்யமானவை, அவற்றிலும் இடைகலை, பிங்கலை, சுழிமுனை முக்கியமானவை. இவை மூன்றும் ஒன்றாய் ஒருநரம்பாகி இடைகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்தநாடியாகவும் சுழிமுனை சிலேத்மநாடியாகவும் நடந்து இருதயத்தின் குணங்களைத் தெரிவிக்கும். தசநாடிகளினிலையினை நாடிகள் பத்தில் தெரிவித்தோம். இந்தாடிகளினடை இருதயத்தின் சம்பந்தமான சுவாசநிலையையும் அநுசரித்து நிற்கும். இச்சுவாசம் நாழிகை யொன்றுக்கு (340) சுவாசமாக, நாள் ஒன்றுக்கு (24600) ஆக அங்குலப்பிரமாணம் ஒடும், இதுவே வாதநாடி, இதற்கு மாத்திரை (1) பிங்கலை (12) அங்குலப்பிரமாண மோடும் இதுவே பித்தநாடி, மாத்திரை (அரை). சுழிமுனை இந்த இரண்டு நாடிகிளினும் பகிர்ந்தோடும் இதுவே சிலேத்ம நாடி முத்திரை (1/4) நாடிகளின் நடை இருதயத்தினிடது சடரங்குவியும்போது இரத்தம் நரம்பின் வழியோடிப் பல நாடிகளில் பரவும், அப்போது நாடிகள் விரியும். மீண்டுமது விரிகையில் நாடிகளில் இரத்தங் குறைந்து நாடிசுருங்கும். இவ்வாறு விரிந்துங்குவிந்தும் வருதலால் அதனுடனியைந்த நாடிகளும் விரிதலும் குவிதலு மடைகின்றன. இச்செய்கையே நாடி நடையாம். நாடி பார்க்கும் விதம் கையைப் பிடித்து நெட்டை வாங்கிப் பெருவிரற் பக்கமாகவிருக்கும் ஆரையென்பின் மேல் ஒடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குல மேலாக மூன்று விரலாற் சமமாக மெதுவாக அழுத்தி நாடியைப் பரீக்ஷித்த பின் விரல்களை மாறிமாறி அழுத்தியுந் தளர்த்தியும் பார்த்தால் நாடி நடையை யறியலாம். புருஷருக்கு வலதுகையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடிபார்க்கவேண் டும். இவ்வாறு நாடியையாராயு மிடத்துப் பெருவிரல் நீங்கச் சுட்டுவிரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் சிலேஷ்மமாம். இவற்றில் சேராத பெருவிரல், சுண்டுவிரல் பூதநாடிகளாம். புருஷர்களுக்கு வாதநாடி மயில், அன்னம், கோழி நடைகளை யொத்தும், பித்தநாடி, ஆமை, அட்டைகளை யொத்தும், சிலேத்மம் பாம்பு, தவளைகளை யொத்தும் நடக்கும். பெண்களுக்கு வாதம் சர்ப்பம் போலும், பித்தம் தவளைபோலும், சிலேஷ்மம் அன்னம்போலும் நடக்கும். இதில் குரு நாடி இந்த ஐந்து விரலையுஞ் சேர்ந்திருக்கும். இந்த நாடிகளின் நடைவேறுபட்டால் நோய்களின் வேறுபாடுகளை யறிய வேண்டும். நாடி படபடக்கும் காலம் : நடந்தலுத்தபோதும், உணவருந்திய பின்பும், உஷ்ணமாகப் பதார்த்தங்களைத் தின்ற காலத்தும், சாராயம், புகையிலை, லாகிரி வஸ்துக்கள், வெயில், சுரம் நித்திரைபங்கம், மனச்சஞ்சலம், அதிக பலவீனம், இரத்தம் வடிதல் முதலிய காலங்களிலாம். நாடிகளின் உண்மை யறியாமை பசி, விசனம், குளிர், அதிநித்திரை, விருத்தர், பாலர், யரோகிகள், தரித்திரர், சிற்றின் பஞ்செய்தோர், தண்ணீரில் மூழ்கினோர்க்கு நாடி உண்மை தெரியாது.

நாடிக்ரந்தம்

சோதிட நூல்கள்; சூர்யநாடி, சந்திரநாடி, குசநாடி, புதநாடி, சுக்ரநாடி, குருநாடி, சாமிநாடி, இராகுநாடி, கேது நாடி, சர்வசங்கிரகநாடி, பாவநாடி, துருவ நாடி, சர்வநாடி, சுகநாடி, தேவி நாடி முதலிய தெரிவிக்கு நூல்,

நாடிவிரணரோகம்

இது நரம்புகளில் உண்டாகும் கட்டி விஷமித்தால் நரம்பைப் பற்றி மாமிசதாது முதல் அஸ்திவரையில் சிலையோடித் துன்பப்படுத்துவது. இது வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷ, அஸ்திபேதத்தால் உண்டாம். (ஜீவ.)

நாடுகோட்பாடு சேரலாதன்

காக்கைபாடினியார் நச்செள்ளையாராற் பாடல் பெற்றவன்.

நாடுபடுதிரவியம்

செந்நெல், சிறுபயறு, செவ்விளநீர், செங்கரும்பு, வாழை முதலிய,

நாடுவாழ்த்து

காலிலே உறத்தாழ்ந்த பெரிய கரத்தினையுடையான் தேசத்தினது நன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.)

நாட்டமைதி

(10) செல்வம், விளைநிலம், செங்கோல், நோயின்மை, வளம், குறும்பின்மை.

நாட்டான்

நாட்டுப்புறத்தான் எனும் பொருள்பட்டது. இது வேளாளனுக்குத் தாழ்ந்த ஒரு பிரிவு. இந்தப் பட்டம் தமிழ்ச் செம்படவர், பட்டணவர், கள்ளர் இவர்களுக்கும் வழங்கி வருகிறது.

நாட்டாழ்வார்

(நாடாவார்) கள்ளர்சாதியில் ஓர் வகுப்பினர்.

நாட்டுக்குற்றம்

1, (7) தொட்டியர், கள்வர், யானை, பன்றி, விட்டில், கிள்ளை, பெருமழை. 2. (8) விட்டில், தன்னரசு, வேற்றரசு யானை, மிகுமழை, மிகுகாற்று, கிள்ளை, நட்டம்.

நாட்டுக்கோட்டைச் செட்டிமார்

இவர்கள் ஆதியில் சந்திரகுலத்தைச் சேர்ந்த வைசியர்கள். இவர்கள் நாகநாட்டில் சந்தியாபுரியில் வாழ்ந்து கொண் டிருந்தவர்கள். இவர்கள் இரத்தின விநாயகரை வணங்கி வருவர். இவர்கள் சைவர். இவர்கள் தாங்களிருந்த நாட்டரசனால் பீடிக்கப்பட்டுத் தொண்டை மண்டலத் துக்காஞ்சிபுரியில் குடிபுகுந்தனர். இது கலி. (204) இல் இங்கு அரசனால் இடம் விடப்பட்டு வாழ்ந்து வருகையில் கலி. (2312) இல் அரசன் விதித்த வரியின்கொடுமை சகிக்க முடியாமல் காவிரிப்பூம்பட்டணம் சேர்ந்தனர். அந்தக்காலத்தில் அப்பட்டணம் அதிக வளம் பெற்றிருந்தது. இதிலிருந்த வடக்குவீதி மற்ற செட்டிகளுக்கு இருப்பிடமாயிற்று. அரசன் இவர்களை கிழக்கு, மேற்கு, தெற்கு வீதிகளில் இருக்கச் செய்தனன். அரசன் இவர்களுக்குச் சிங்கக்கொடியும், பொற்கலசமும் கொடுத்தனன். இவர்கள் அரசன் தூண்டுதலாற் சிதம்பரத்தி லுள்ள ஈசான சிவாசாரியார் மடத்திற்குச் சீடர்களாயினர். கலி. (3775) இல் பூவாண்டி சோழன் இவர்களை வருத்தியதால் இவர்கள் தங்கள் குழந்தைகளை ஆத்மநாதாசாரியார் வசம் ஒப்புவித்துத் தற்கொலை புரிந்துகொண்டனர். பிறகு இராஜபூஷணசோழன் பட்டமடைந்தனன். வளர்க்கப்பட்ட மூன்று வீதிக்காரரும் திருவாரூர், கும்பகோணம், திருவாஞ்சியம் எனும் மூன்று மடத்திற்குச் சீடராயினர். ஏறத்தாழ கலி (3808) இல் சுந்தரபாண்டியன்வைசியரில் சிலரைப் பாண்டி நாட்டிற்கனுப்பக் கேட்டுக் கொண்டனன். அவ்வாறே இவர்கள் பாண்டிநாட்டில் ஓங்காரக்குடியில் குடி புகுந்தனர். கிழக்குவீதியார் இளையாத்தைக் குடியிலும், மேற்கு வீதியார் அறையூரிலும், தெற்குவீதியார் சுந்தர பட்டணத்திலும் மூன்று வகையாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் இளையாத்தைக் குடிவகுப்பு நாட்டுக்கோட்டைச் செட்டிகள் தங்களுக்கு ஒரு கோவில் போதாதெனக் கேட்க அரசன் இவர்களுக்கு மாத்தூர், வயிரவன்பட்டி, இரானியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரைகுடி, வேளாங்குடி முதலிய தேவஸ்தானங்களைக் காட்டினன். இவர்கள் நாட்டரசன் கோட்டையிலிருந்து வந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றனர். இவர்கள் வெகு செட்டாக வர்த்தகஞ் செய்வோர். பெருஞ் செல்வ முள்ளவர்கள் இவர்களுக்குத் தற்கால இருப்பு திருப்பத்தூர், தேவக்கோட்டை. இவர்கள் வர்த்தகத்தின் பொருட்டுப் பெண்டு பிள்ளைகளையும் விட்டுத் திரைகடலோடி வேற்று நாடுகளிலும் தங்கள் வர்த்தகத்தைச் செய்வர். இவர்களுக்குப் பல புத்திரர் இருக்கினும் தந்தையிருக்கும் வரையில் ஒற்றுமையாய் வாழ்வர். இவர்கள் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியைத் தருமத்தின் பொருட்டுச்செலவிடுவர். இவர்கள் பிறந்த சில நாள் பொறுத்துத் தலையை முண்டனஞ் செய்வர், அதுமுதல் தாங்கள் அவ்வாறே முண்டனஞ் செய்து கொள்வர். இவர்கள் சைவசமயத்தை அநுசரித்தவர்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, திருக்காளத்தி முதலிய பல சிவாலயங்களைப் புதுக்கிய திருப்பணி வியக்கத்தக்கது. இவர்களைத் தமிழ்நாட்டரசரின் மாறிய பிறப்பெ னவே புகழலாம். இவர்கள் தேச, மத, கல்வியின் பொருட்டு ஏற்படுத்தியுள்ள கலாசாலைகள் இவர்களுடைய புண்ணிய நிலைமைக்கு ஒரு அறிகுறியாம். இவர்கள் உலக நன்றி யெக்காலு மறகத்தக்கதன்று.

நாட்டுச்சாம்பன்

கிராமப் பறையன்.

நாணயங்கள்

இவை பொன், வெள்ளி, செம்பு, அலுமீனியம் பித்தளை முதலிய லோகங்களால் பண்டமாமற்றுப் பொருட்டு அரச முத்திரையிட்டுச் செய்யப்பட்ட காசுகள்.

நாண்மங்கலம்

தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும், அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் நன்மையைச் சொல்லியது. (பு.வெ. பாடாண்.)

நாண்முல்லை

பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினையுடைய மடந்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது. (பு.வெ.பொது.)

நாதசன்மா

விருத்தாசல புராணம் அநவர்த்திக்குக் கூறியவன்.

நாதமுனிகள்

கஜாநனாம்சரான இவர் கலியுகம் (3684) இல் சோபகிருதுவருஷம் ஆனிமாதம் புதன்கிழமை வீரநாராயணபுரத்தில், ஈச்வரமுனிகளுக்குத் திருவவதரித்து நாதரெனப் பிள்ளைத்திருநாமம் பெற்று ஓதியுணர்ந்து அரவிந்தப் பாவையை மணந்து மன்னனார் என்று திருநாமமுடைய வீரநாராயணபுரத்துப் பெருமாளிடத்தில் ஈடுபட்டு யோகநிஷ்டராய் இருந்தனர். அக்காலத்தில் இவருக்கு ஒரு புத்திரர் பிறந்தனர். அக்குமரருக்கு ஈச்வர முனிகள் எனத் தந்தையின் பெயரிட்டு யோகத்திருந்து நீங்கித் திவ்யதேச யாத்திரை செய்து தமதிடந் திரும்பி மன்னனாருக்குக் கைங்கர்யஞ் செய்து வருகையில் திருநகரியிலிருந்துவந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஓதியருளிய “ஆராவமுதே” என்னுந் திருவாய் மொழியைக் கேட்டு மகிழ்ந்து அதைக் கிரகித்து மற்றப் பாசுரங்களைக் கேட்க அவர்களதையறியாமையால் மனம் வருந்தி அவர்களுக்கு அந்தப் பாசுரம் வந்தவழி வினவினர். அவர்கள் திருக்குடந்தையிற் பெற்றோமென அத்திருப்பதிக் கெழுந்தருளி அங்கிருந்த பெரியவர்களைக் கேட்டனர். அக்குடந்தை நாட்டவரும் இத்திருப்பதிகமே அறிவோமென அங்கிருந்து திருநகரிக் கெழுந்தருளி வினவினர். அங்கிருந்தாரில் பெரியராகிய பராங்குசதாச ரென்பவர் திருவாய்மொழி யென்று கேட்டதுண்டு ஓதியறியோம் ஆயினும் எங்கள் சாம்பிரதாயமாய் ஆழ்வார் விஷயமாய் அருளிச் செய்யப்பட்ட கண்ணினுண் சிறுத்தாம்பு என்னும் பாசுராதிகளை (12000) முறை ஓதின் ஆழ்வார் பிரத்தியக்ஷமாவாரெனக் கேட்டு அவ்வகை புரிய ஆழ்வார் மதுரகவிகளிடம் யோகத் தெழுந்தருளி என்ன வேண்டு மென்றனர். நாதமுனிகள் திருவாய்மொழி பிரசாதிக்க என்றனர். ஆழ்வார் அவ்வகை அருளிச்செய்து மறைந்தனர். பின்பு நாதமுனிகள் திருவரங்கஞ் சென்று திருஅத்தியயனோற்சவம் நடப்பித்துத் திருக்குடந்தையில் நம்மாழ்வாரைப் பிரதிட்டை செய்வித்து ஆராவமுதாழ்வாரெனப் பெரு மாளுக்குத் திருநாமம் சாற்றி அங்கிருந்து வீரநாராயணபுர மெழுந்தருளிக் கீழையகத்தாழ்வான் மேலையகத்தாழ்வான் முதலியவர்க்குத் திவ்யப்பிரபந்தங் கற்பித்தருளிப் பிரசித்தி செய்தனர். இப்பிரபந்தத்தை இரண்டு தாசிகள் தேவகான. மனுஷ்ய கானத்துடன் கங்கைகொண்ட சோழபுரத் தில் சோழன் சமஸ்தானத்தில் பாடினர். அரசன் மனுஷ்யகானம் பாடினவளுக்கு வேண்டிய பரிசளித்துத் தேவகானம் பாடி னவளைச் சம்மானிக்காது விட்டனன். தேவகானம்பாடிய தாசி ஆத்மார்த்தமாய்ப் பாடிக்கொண்டு வீரநாராயணபுரத்திற்பாட நாதமுனிகள் களிப்படைந்து மாலை முதலிய பிரசாதித்தருளினர். இதையறிந்த சோழன் நாதமுனிகளை வருவித்துத் தேவகானத்தின் பெருமை என்னவென அவர் ஒரு தாளத்தைக் கருங்கற்றூணில் வைத்துக் கானம் பாடச்சொல்ல அத்தூண் உருகிற்று. பின்பு பாடலை நிறுத்தித் தாளத்தை, யெடுக்கச் சொல்லத் தாளம் இறுகிற்று. பின்னும் நாதமுனிகள் ஏககாலத்து 400 தாளங்களைத் தட்டச் சொல்ல அவைகள் இவ்வளவினவென்று நிறைகூறித் தேவகானப் பெருமை அறிவித்தனர். அரசன் மகிழ்ந்து தேவகான தாசிக்கு மரியாதைமுதலியநடத்திநாதமுனிகளைத்துதித்திருந்தான்.இவ்வகைநடத்தியபின்புநாதமுனிகள்,குருகைக்காவலப்பன்,புண்டரீகாக்ஷர்,நம்பிகருணாகரதாசர்,எறுதிருவுடையார்,திருக்கண்ணமங்கையாண்டான், வானமாதேவியாண்டான், உறுப்புட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூர் ஆழ்வான், இவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்திருக்கையில் வங்கிபுரத்தாய்ச்சி தன் பெண்ணாகிய அரவிந்தப்பாவையைப் பார்க்க அழைத்தனள். நாதமுனிகள் அரவிந்தப் பாவையைப் புண்டரீகாக்ஷருடன் வங்கிபுரத்தாய்ச்சியிடம் அனுப்பினர். ஆய்ச்சி புண்டரீகாக்ஷருக்கு முன்னாள் நீரிலிட்ட சேடித்த அன்னத்தை இட்டனள், புண்டரீகாக்ஷர் அதைக் களிப்புடன் உண்டு நாதமுனிகள் வினாவிய காலையில் நடந்தவைகூற நாதமுனிகள் களித்து நம்மை உய்யக்கொண்டீர் என்றனர். இவற்றையறிந்த வங்கிபுரத்தாய்ச்சி புண்டரீகாக்ஷரிடம் வந்து க்ஷமிக்கக் கேட்கக் களித்திருக்கையில் நாதமுனிகள் தம் குமாரரிடத்தில் ஒரு குமரன் உதிப்பன் அவனுக்கு யமுனைத்துறைவன் எனப் பெயரிடுக என உய்யக்கொண்டாருக்குக் கட்டளையிட்டு யோகத்தெழுந்தருளியிருந்தனர். சிலநாள் கழித்து யோகநீங்கி யெழுந்து ஈசுரமுனிகளின் குமாருக்கு மணக்கால்நம்பி, யமுனைத்துறைவன் எனப் பெயரிட்டதைக் கண்டு களித்து இருந்தனர். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் நாதமுனிகள் தீர்த்தமாடச் சென்றிருக்கையில் இவரது குமரிகள் வந்து ஜயரே இரண்டு வில்லிகள் ஒரு பெண்பிள்ளை, ஒரு குரங்குடன் வந்து உம்மை வினவினர். நாங்கள் அவர் நீராடி வருவரென்றோம், அவர்கள் விரைந்துவரச் சொல்லுகவெனக் கூறித் தென்திசை சென்றனர் எனக் கேட்டு, அவ்வில்லிகள் சென்ற திசைநோக்கிச் சென்று கங்கைகொண்டசோழபுரத்தை அடைந்தனர்.அங்கிருந்தாரை இரண்டுவில்லிகள்ஒருபெண்ணரசியுடனும்குரங்குடனும் சொல் காதம் இன்றதைக் கண்டீனோவெனக் கேட்டு அப்புறஞ் செல்லுகையிற் பெருமாள் அழகியசிங்கராய்ச் சேவைசாதித்தருளினர். நாதமுனிகள் சக்கரவர்த்தி திருமகனை வலிய வந்தும் காணப்பெற்றிலோமென்று மூர்ச்சித்திருக்கையில் பெருமாள் சக்கிரவர்த்தித் திருமகனாய்ச் சேவைசாதித்தருளக் கண்டு களித்துக் குருகைக்காவலப்பன் கோவிலில் திருநாட்டுக் கெழுந்தருளினர். இவர் (340) வருஷம் எழுந்தருளியிருந் தனர். இவர் அருளிய பிரபந்தம் நியாயதத்வம், யோகரகஸ்யம்.

நாதம்

1, சிவரூபமாய்ச் சூக்ஷ்மாதி சூஷ்மமாய் யோகிகளால் உணரப்படும் பொருள். 2. என்பது, தவனி. இது இரண்டு கரத்திலுள்ள கட்டைவிரல்களை இரண்டு காதின் துவாரத்தில் மூடிக்கொண்டால் கேட்கும் ஓசையே நாதம். (சி ~ சா.) 3. என்பது அதிகிராந்த விந்துக பரா சத்தியினிலை. இந்த நாதம் பரநாதம், அபறநாதம், பராற்பரநாதம் என மூவகைப்படும். அவற்றுள் பரநாதம் : உன்மனாகலாதி சாந்திய தீத கலாந்தகாரிய சிவகலா சத்தியையும், சமனாதி அபரவிந்து நிவர்த்தியந்த காரியசத்தி கலாசத்தியையும், சமாகாராத்மகமாயுள்ள காரணசாந்திய தீத கலா ரூபமகாமாயை. இது பரசிவதத்வங்களாகிய வியாபினி, வியோமரூபை, அருந்தை, அநாதை, அநாசிருதை முதலிய ஐந்து கலைகளை வியாபித்திருக்கும், அபரநாதம் : என்பது இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்தவகை, முதலிய சத்திகளின் கலைகளாய் அபரசிவ தத்வ மெனப்படும். பராற்பரநாதம் : உன்மனை எனப்படும், இந்த உன்மனை சமனை இவ்விரண்டும் சிவசத்தி கலைகளாம்.

நாதர்

நாதமுனிகளுக்குப் பிள்ளைத்திரு நாமம்.

நாதவன்

குண்டலபுரத்தின் முதல் அரசன், இவனால் தோன்றியகுலம் நாதவகுலம்.

நாதிகன்

பாரதவீரரில் ஒருவன். காலபுத்திரர் அம்சம்.

நாநீண்ட பறவை

இது மீன்குத்தியினத்தது. இதன் வால் சிறகுகள் குட்டை, இதன் இறக்கையிலும் முதுகிலும் கறுப்பும் வெண்மையுமான கோடுகள் அடுக்காயிருக்கின் றன. இதனலகு சிறியதாயினும் அதிலுள்ள நாக்கு அலகினும் நீண்டது. இப்பறவை அந்நாவை நீட்டித் தூரத்திலுள்ள பூச்சி புழுக்களை அக்நாவிலுள்ள பசையால் ஒட்டச்செய்து உண்ணும்,

நாநேசுவரர்

குமுதன் என்ற நாகன் பொருட்டுத் தோன்றிக் குசனால் ஆராதிக்கப்பட்டுச் சரயு தீர்த்தத்தில் எழுந்தருளிய சிவப்பிரதிட்டை,

நானகதாசர்

இவர் பஞ்சாபுதேசத்தவர்; அரிபக்தி மிகுந்தவராய்த் துருக்கதேசமாதலால் வேதியர்களையும் தேவாலயத்தையும் தம்மாசனிடஞ் சொல்லி இடித்து விடுவறென்று தாமே கோயிலை இடித்துப் பின்னர் ஒரு மசீதுகட்டி அதனை யுமிடித்துச் செல்வமுழுது மழித்துத் தனித்திருக்கையில் துருக்கர் தம்மவன் ஒருவன் வேஷதாரியாய்த் திரிகின்றானென்ன அரசன் கேட்டு ஒரு தூதனையனுப்பி வருக எனத் தாசர் அரசனுக்கு நான் நாராயணனை வணங்குவோனுன்னிடம் வரவேண்டியதில்லையென்று ஒருகவி எழுதியனுப்ப அரசன் கண் இளமகிழ்ந்து ஆயினும் பின்னுமறிவோமென்று கோபித்தவன்போல் சில வீரரையனுப்பி அவரை அழைத்து வரக் கட்டளையிட வீரர் தாசரிடஞ்சென்று அழைக்கத் தாசர் நாராயணஸ்மரணை செய்ய அயுதமென்னு மெண்கொண்ட விஷ்ணுபடர் அவர்களைப் புறங்கொடுக்கச் செய்தனர். இதனையறிந்த அரசன் தாசரை யடைந்து, பணிந்து புகழ்ந்தனன். இவர் மக்கத்திற்குச் சீடருடன் செல்லுகையில் வழியில் ஆற்றில் வெள்ளம்வர அலக்நிரஞ்சன் என்று தாண்டிச்சென்றனர். சீடர் திகைக்கத் தாசர் நம்மைநினைத்து ஆற்றைக் கடக்க என அவ்வாறு செய்து கடந்தனர். பின் மக்கத்தை அடைந்து அங்கிருந்தோர் இங்குப் புதைந்திருக்கும் இந்துக்கள் விக்ரகத்தை எழுப்புமெனக் கேட்கப் பூமியில் மூடியிருந்த திருமால் விக்ரகத்தை எழுப்பித் தரிசிப்பித்து ஒரு ஆற்றைக் கடக்கமுடியாது திகைத்த அரசனுக்குக் கடுதாசியால் கலஞ்சமைத்து அதில் அவன் சேனையுடன் ஆற்றைக் கடப்பித் துக் கோரக்கர் சொற்படி அரித்துவாரத் திருந்த நான்குலக்ஷம் ஜனங்களுக்கு உணவளித்து அரிபஜனைசெய்து களித்தவர்.

நான்காம் நாள்

படைவகுத்து வீமன் பகைவரைக் கொல்லுகையில் துரியோ தனன் வீமனுடன் எதிர்த்து மூர்ச்சித்தனன். இதனைக்கண்ட அவன் தம்பியரா கிய சுதக்கணன், பிங்கலசன், விம்வாகு, கலாசந்தன், சேநாவிருந்து, முதலியவர் எதிர்த்து மாய்ந்தனர். இவ்வாறு வீமன் செய்வதைக்கண்ட பகதத்தன் வீமனையெதிர்க்க அதைக் கண்ட கடோற்கசன் வந்து எதிர்த்து முதுகிட அடித்தான். இவ்வாறு யுத்தஞ் செய்கையில் சூரியன் அத்தமித்தனன்.

நான்மணிக்கடிகை

இது சங்கமருவிய பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று. நீதி நூல். ஒவ்வொரு செய்யுளும் தனித்தனி நான்கு நீதிகளைக் கற்பிக்கும். இதனை இயற்றியவர் விளம்பிநாகனார். கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக்களையுடையது.

நான்மாடக்கூடல்

தென்மதுரைக்கு ஒரு பெயர். இம்மதுரைமா நகரத்தின்மீது வருணன் கோபித்து மேகங்களை ஏவி மழை பொழிவித்த காலத்துப் பாண்டியன் சோமசுந்தர மூர்த்தியை மழையைத் தடுக்க வேண்டினன். அதனால் சிவமூர்த்தி தம்மிடமிருந்த மேகங்களை நான்கு மூலையிலும் ஏவி நீரைப்பருகி மழைதடுக்க ஏவினர். அதனால் இப்பெயருண்டாயிற்று. இங்ஙனமன்றி வேறுங்கூறுவர். திரு ஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திரு நடுவூர் இவைகளுக்கு நடுவிருத்தலின் இப்பெயர் பெற்றதென்பர் நச்சினார்க்கினியர்.

நாபகை

ஒரு நதி,

நாபாகன்

1. நரபாகன் எனவும் பெயர். திஷ்டன் குமரன். இவன் சுப்பிரபை யென்னும் வைசியப் பெண்ணை மணந்ததால் வைசியனானான். இவன் குமரன் பலந்தன். இவன் இராஜருஷியாயினான். 2. சுகோதரன் குமரன்.

நாபாஜிபக்தர்

காசி நகரத்தில் அக்ரஜியென்னும் பக்தர் அரிபக்தி மிகுந்தவராய் வருங்காலையில் க்ஷாமம் வந்தது, அந்நாட்களில் ஒருநாள் அவ்வூரிலிருந்த ஒருத்தி தன் பிள்ளையுடன் உணவில்லாது வருந்தி ஆற்றினருகடைந்து பிள்ளையைக் கரையில் விட்டு ஆற்றில் வீழ்ந்து இறந்தனள். குழந்தை தாயைக் காணாமல் ஆற்றருகு தனித்து அழுது கொண்டிருக்கையில் அக்ரஜிபக்தர் ஆற்றிற்கு ஸ்நானத்திற்குச் சென்று அப்பிள்ளை தனித்தழுதலைக்கண்டு வரலாறறிந்து பயப்பட வேண்டாமென்னும் பொருள் பட நாபாஜி என்று கூறி உடனழைத்துவந்து மடத்தில்விட்டு நாபாஜி யென அழைத்துவந்தனர். பக்தர் இளைமைப் பருவமுதல் தாசரது ஏவல் முதலிய செய்தலாலும் அரிகீர்த்தனை கேட்டலாலும் மெய்யறிவடைந்திருந்தனர். இதனை அறியாத அக்ரஜி ஒருநாள் நாபாஜியை நோக்கி நான் பெருமாளைப் பூசிக்கச் செல்கின்றேன் உள்ளே ஒருவரையும் விடாது புறத்தே காத்துக்கொண்டிருக்க எனக் கூறித் தியானத்திருக்கையில் அன்றைக்குப் பெருமாள் தரிசனங்கொடாதது கண்டு வருந்துகையில் புறத்திருந்த நாபாஜி இன்று பெருமாள் கடலின் வணிகன் ஒருவனது கப்பல் மூழ்க அதனை அவன் அக்ரஜிக்கு இக்கப்பலிலுள்ள பொருள்களில் ஐந்திலொன்று தருவதாகப் பிரார்த்திக்கக் கேட்டு அக்கப்பலைக் காக்கச் சென்றிருக்கிறார் ஆதலால் தரிசனந்தந்திலர், அத்தொழில் முடிந்தமையால் இனித்தியானிக்கின் வருவர் என, அவ்வாறு தியானிக்கப் பெருமாள் ஈரவஸ்திரத்துடன் தரிசனந் தரச் செய்தி கேட்டுணர்ந்து நாபாஜியைப் புகழ்ந்து உமக்கு இத்தகைய ஞான மெவ்வகை வந்ததெனத் தேவரீரது பெருமையெனக் கூறிப் பெருமாள் அருள் பெற்று இருந்தவர்,

நாபாநேதிக்ஷிதன்

மநுவின் புத்ரன். இவன் தமது பிதுரார்ச்சித பொருளைப் பாகித்துக் கொள்வதினின்று நீக்கப்பட்டிருந்தவன்.

நாபி

1. ஆக்னீத்ரசுதன். குமரி சுதேவி. தேவி மேரு. (பாகவதம்,) 2. இரண்யரோமன் அல்லது இரண்ய ரேதஸுக்குக் குமரன்.

நாபிக்கிழங்கு

இதுவே விஷநாபி. இது விஷமுள்ள மருந்து. இவ்வகையில் வெண்ணாவி, கருநாவி, சூத்திரநாவி முதலிய உண்டு. இவற்றைச் சுத்தி செய்யாது மருந்துகளுடன் சேர்க்கின் மரணத்தை யொத்த துன்பம் விளைக்கும்,

நாபிமகாராசா

இவனாண்டது அயோத் தியாநகரம், இக்ஷவாகுவம்சம். தேவி மரு தேவியம்மாள். குமரர் இருஷபதீர்த்தங்கரர். இவரைச் சைநர் தம் சமயத்தினர் என்பர். (மா ~ புராணம்.)

நாமகரணம்

பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12 ம் நாளும், க்ஷத்திரியருக்கு 16 ம் நாளும், வைசியருக்கு 21 ம் நாளும், சூத்திரருக்கு 31 ம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்தநாட் கழிந்தால் சுபதினங்களிலே ஸ்திரிராசிகளுதயமாக லக்கினம் 5 ம் இடம், 8 ம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்யவேண்டும்.

நாமகள்

கடைச்சங்கத்திலிருந்த சரஸ் வதியினம்சம், திருவள்ளுவர்க்கு நாடாமு தனான்மறை நான் முகனாவிற், பாடாவிடைப்பாரதம் பகர்ந்தேன், கூடாரை, என்ராவன் மீனுயர்த்த வேந்திலை வேல்வேந்தனே, வள்ளுவன் வாயதென்வாக்கு” எனப்புகழ்ச்சி கூறியவள்,

நாமதேவர்

ஒரு பாகவதர். இவர் ஒரு தொழிலுமின்றி இருந்தபோது தாய் இவரை நோக்கி மகனே நமக்குப் பொருளுண்டாகும் வகை ஏதேனும் வர்த்தகாதிகள் செய்யாதொழியினில்லறம் எவ்வாறு நடக்குமெனக் கூறக்கேட்டு யான் பணமிலாது யாது செய்வதெனக் கேட்ட தாய் இவரை நோக்கி இவ்வூரில் எவர்க்கும் உபகரியாத லோபிதாதா என்பவன் அதிக பொருள் வைத்திருக்கின்றான் அவனிடைச் சென்று கடன்பெற்று வர்த்தகஞ் செய்வோமென்று தானே சென்று எனது மகன் ஒரு வேலையுமின்றிச் சும்மாவிருக்கின்றான் அவனுக்கு வர்த்தகஞ் செய்யப் பொருளுமில்லை ஆதலால் நீ எனக்கு ஆயிரம் வராகன் தரில் ஆறுமாத அளவில் கொடுத்து விடுகிறேனெனக் கேட்க விட்டலன் அவனது இற்புகுந்துடன்படுத்தத் தரப் பொருள் பெற்று வந்து மகனிடங் கூறினள். மகனுமதற் குடன் பட்டு நிதி பெற்று வேதியருடன் எந்த வர்த்தகஞ் செயினன்றாமென ஆயத்தாம் எண்ணியபடி அவரும் சமாராதனை செய்வது குற்றமில்லாத வர்த்தகமெனக் கூறக்கேட் இக்கங்கையினருகு ஒரு மடங்கட்டி அதிலன்ன தானஞ் செய்து வருகையில் அனை வருங்கேட்டு நாமதேவரிடஞ் செல்லின் அன்னங் கிடைக்குமென்று சென்று புசித்துவந்தனர். இச்செய்தி நாடெங்கும் பரவப் பண்டரிபுரத்து வேதியரும் நாமதேவரிடம் செல்லின் உண்டு தக்ஷணையும் பெற்று மீள்வோமென்று செல்லச் செல்வோரைக், கடன் கொடுத்த சௌகார் எங்குச் செல்கிறீர்களெனக் கேட்க அவர்களுண்மை கூறக்கேட்டுத் தானுஞ் செல்ல உடன்பட்டுச் சென்று அவரது ஈகையைக் கண்டு மனம் புழுங்கிச் செல்வர்க்குங் கொடுக்கவராத ஈகையை நோக்கி என் பணம் போயிற்று இனி இவனிடம் தரப் பணமேது என்று எங்கி வருந்தியிருப்பவனை நாமதேவர்கண்டு அடிவணங்கிச் சமாராதனைக்கு வந்தவர்களை நோக்கி, அடிகளே இதோ இருக்கிற பிரபுவே சமாராதனைக்குரியவர் அவரிடம் நீர் பெற்று அன்னமுண்க எனக் கூற அவ்வாறே சமாராதனைக்கு வந்தோரிவனை நீர்வார்க்கக் கேட்கக்கண்ட சௌகார், நான் தாய் தந்தையரின் சிரார்த்தமும் பொருள் செலவாமெனச் செய்தறியேன், கோவில் போயறியேன்,குளமெடுத்தறியேன்,தருமகாரி யங்கள் செய்தறியேன், இப்போதிவ்விடம் வந்திருக்கும் பிராமணரால் இந்த நாமதேவனால் நிந்திக்கப்படலானேனென்று விழலுக்கு இறைத்த நீர்போல் என் பணம் போயிற்றென்று “நாங்கள் வெகு தூரத்திலிருந்து அன்ன தானத்தை நோக்கிவந்து அதிக பசியுடனிருக்கின்றோமென்று தம்மை நிந்தித்துக்கூறும் வேதியரை நோக்கி இதோ நிந்தனைக்கும் உங்கள் பசிக்குமஞ்சி நீர் வார்க்கிறேன், இந்த அன்ன தானப் பலன் நாமதேவனதாக என நீர்வார்த்தனன். இதனைக்கண்ட வேதியர் சிரித்தனர். சமாராதனைக்கு வந்தோர் நாமதேவர் உபசரிக்கக் கண்டு தக்ஷணை வாங்கிச் சென்றனர். பின் சௌகார் நாமதேவரை நோக்கி நாமதேவர் என் கடனை நீயே தரவேண்டு மெனச் சண்டவாதம் புரிந்து இல்லையென்பையேல் உன்னெதிரில் உயிர்விடுவேனென்றனன். இவனது முரட்டுச் செய்கைகண்ட நாமதேவர் பெருமாளைத் துதிக்க அவர் ஒரு வற்சவுருவுடன் தோன்றி எதிரிலிருக்கும் தீர்த்தத்தில் அவனை மூழ்கச்செய்யின் கடன் தீருமென்று கூறி மறைந்தனர். நாமதேவரும் சௌகாரை நோக்கி நீ இந்தத் தீர்த்தத்தில் மூழ்கின் உன் கடனைத் தருகி றேனெனச் சௌகார் ஓகோ எனை நீரில் தள்ளி உயிர்போக்க எண்ணுகின்றனை யெனக் கூறி அவ்வாறுடன்படேனென்று கடைமுறை துணிந்து சலத்திற்சென்று மூழ்க அவ்விடமிருந்த பிலவழிச்சென்று பாதாளலோகத்தை அடைந்தான். அங்கு துருக்கர் உருக்கொண்டு இருக்கும் சாதுக்களுடன் பெருமாள் ஓர் துருக்க அரசரைப் போல் கண்ணைக் கவரத்தக்க சோதிமயமான இரத்தின சிங்காசனத்தில் வீற்றிருக்கக்கண்டு இதென்னென ஆச்சரியமடைந்திருக்கையில் ஆங்கு நின்றவர் எம்பெருமானும்மை உண்ணவழைக்கின்றான், மாம்ச முதலியவும் அன்னமும் பலவாகப் புசிக்க விருக்கின்றன எனக் கூறக்கேட்ட சௌகார் மனனடுங்கி ஆங்குப் பணமிழந்தோம் ஈங்குச் சாதியுமிழக்கக் காலம் வந்ததென் வெண்ணி இத்தருணத்தில் நம்மைக் காப்பவன் நாமதேவனேயெனச் சிந்திக்கையில் நாமதேவர் தோன்றி அஞ்சேல் சிங்காசனத்திலுள்ளான் துளவுபூண்டோன், மற்றவர் சாதுக்கள் அவர்களுடன் நீ உண்கவென நீர் மாயஜாலம் செய்ய வல்லவர் என்று அறியேன் உம்மிடம் கடன் சீட்டு எழுதியும் வாங்கிலன் நீர் இவ்வேளை என்னிடம் விடுவிரேல் இனி என்றும் கடன் கேளேன் எனக்கூறத் தேவர் இவ்விடம் உண்டுவருக என நான் உண்ண எனக்குணவாதிகளையும் சமைக்க எரிமுட்டையும் வாங்கித் தருக என்றனர். அவை தந்தபின்னிந்த யவனர்களுக்குப் புறத்து என்னை விடுக என்ன நாமதேவர் உன்விழியை மூடிக்கொள் என அவன் மூடிக்கொண்ட மாத்திரையில் பண்டரிபுரத்துச் சந்திரபாகைத் தீர்த்தத்தில் எழுந்து அவ்விடங் கொடுத்த எரிமுட்டையை நதியில் உதறி வெளிவந்து இதென்ன நான் கங்கையில் மூழ்கினேன் சந்திரபாகையி லெழுந்தேன் நாமதேவர் கொடுத்த சாமகிரியைகளெல்லா நாமம்மிருக்கின்றன என்று வீடடைய மனைவி பொருள் பெற்றீரோவென நாமதேவர் மனிதரல்லர் தேவர் எனக் கூறுகையில் மனைவி வஸ்திரத்திலிருந்த முடியிலொட்டி யிருந்த எரிமுட்டையை நோக்க அது பொன்னாயிருந்தது கண்டு என் விதியினளவாகப் பொருள் கிடைத்தது நான் நாமதேவரை வீணே நிந்தித்தேன், என அவரைத் துதித்திருந்தனன். பின் நாமதேவர் என்பொருட்டு மிலேச்ச வேடங்கொண்டு வந்தனையெனத் திருமாலை வணங்கி அவருடன் பண்டரிபுர மடைந்தார்.

நாமம்

(63) நரககதி, திரியக்கதி, மனுஷ்யகதி, தேவகதி ஆக 4. நாகத்த்யாநுபூர்வி, திரியக்கத்யாநுபூர்வி, மனுஷ்யகத்யாது பூர்வி, தேவகத்யா நுபூர்வி ஆக 4. ஏகேந்திரியம், தவிவிந்திரியம், திரீந்திரியம், சதுரிந்திரியம், பஞ்சேந்திரியம் ஆக 5. ஔதாரிகசரீரம், வைகரீகசரீரம், ஆகாரகசரீரம், தைசசசரீரம், கார்மணசரீரம், ஆக 5. ஔதாரிக பந்தனம், வைகரீக பந்தனம், ஆகாரகபந்தனம், தைசசபந்தனம், கார்மணபந்தனம் ஆக 5. ஔதாரிகஸங்காதம், வைகாரிகஸங்காதம், ஆகாரகஸங்காதம், தைசசஸங்காதம், கார்மணசங்காதம் ஆக 5. ஔதாரிகாங் கோபாங்கம், வைகாரிகாங் கோபாங்கம், ஆகாரகாங் கோபாங்கம், ஆக 3. வச்சிரவிருஷப நாசாசசம்ஹநநம், வச்சிர நாசாசசம்ஹநாம், நாராசசம்ஹாநம், அர்த்த நாராசசம்ஹநாம், கீலிதஸம்ஹா நம், அசம்பிராப்த ஸரபாடிகாசம்நநம். ஆக. 6. சமசதுரச்ச சமஸ்தானம், நியக்ரோத சமஸ்தானம், சுவாதி சமஸ்தானம், வாமன சமஸ்தானம், குப்ச சமஸ்தானம், ஹீண்ட சமஸ்தானம் ஆக 9. சினிக்தஸ் பரிசம், ரூக்ஷஸ்பரிசம், சீதஸ்பரிசம், உஷ்ணஸ்பரிசம், உருபரிசம், லகுபரிசம், மிரு துபரிசம், கர்கசபரிசம் ஆக 8. சிவவேதம், பீதம், அரிதம், அருணம், கிருஷ்ணம் ஆக வருணம் 5. திக்தம், கடுகம், கஷாயம், ஆம்லம், மதுரம் ஆக ரஸம் 5. துர்கந்தம், சுகந்தம், ஆக கந்தம் 2. 1. அகுர்லகு, 2 உபகாதம், 3 பாகதம, 4. ஆபதம், 5 உத்யோதம், 6 உச்வாசநிச்வாசம், 7 பிரச்ச தவிஹாயோகதி, 8. அப்: பச்சதவிஹாயோகதி, 9 ஸ்திரம், 10 அலதிரம், 11 சுபம், 12 அசுபம், 13 பாதாம், 14 சூஷ்மம், 15 திரம், 16 ஸ்தாவரம், 17 பிரத்யேகம், 18 ஸாதாரணம், 18 பரிகாலார்மகன 19 பியாப்தி 20 அபர்யாப்தி, 21 சுபகம், 22. துர்பகம், 23 சுசுரம், 24 துச்சுரம், 25 ஆதேயம், 26. அநாதேயம், 27 அச்ச கீர்த்தி, 28. அயச்சகீர்த்தி, 29 நிர்மாணம், 30 தீர்த்த காதவம் ஆக 31.

நாமலார்மகன் இளங்கண்ணன்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் இளங்கண்ணராக இருக்கலாம். இவரது தந்தையார் நாமலார் என்பவர் போலும், (குறு ~ உடு.)

நாமுனூர்

மேகத்திற்குப் புணைகொடுப்போர் யாரென்று பாண்டியன் கேட்ட பொழுது வந்த மற்றையோரைத் தள்ளி விட்டு ‘நாம்முன்’ என்று சொல்லிக்கோண்டு புணைகொடுத்தற்கு வந்த உபகாரியினுடைய ஊர். இது களவேள்வி நாட்டிலுள்ள ஏழூர்களுள் ஒன்று. (திருவிளை யாடல்.)

நாயகன்

1. பத்துச் சிற்றூர்களுக்கு அதிபனாக நியமிக்கப்பட்டவன். 2. இருபது யானைகளுக்கும், (20) குதிரைகளுக்கும் தலைவன். (சுக். நீ.)

நாயடி

இவர்கள் இந்துக்களில் மிகத் தாழ்ந்த ஜாதியார். இவர்கள் நாயடித்துத் தின்போராதலால் இவர்கள் இப்பெயர் பெற்றனர். இவர்கள் இந்துக்களிருக்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஏதாவது கொடுப்பதனால் அதை வெகு தூரத்தில் கீழேவைத்து விட்டால் அவர்கள் அதை எடுத்துக் கொள்வர். தர்ஸ்டன்.

நாயன்மார் அறுபத்துமூவர் முதலியோர்

(1) தில்லைவாழந்தணர், (2) திருநீலகண்ட குயவகாயனார், (3) இயற்பகையார், (4) இளையான்குடிமாறநாயனார், (5) மெய்ப் பொருணாயனார், (6) விறன்மிண்ட நாயனார், (7) அமர்நீதிநாயனார், (8) எறிபத்த நாயனார், (9) ஏனாதிநாத நாயனார், (10) கண்ணப்பநாயனார், (11) குங்கிலியக்கலய நாயனார், (12) மானக்கஞ்சாற நாயனார், (13) அரிவாட்டாய நாயனார், (14) ஆனாதி நாயனார், (15) மூர்த்திநாயனார், (16) முருக நாயனார், (17) உருத்திரபசுபதி நாயனார், (18) திருநாளைப்போவார், (19) திருக்குறிப்புத் தொண்டர், (20) தண்டீச நாயனார், (21) திருநாவுக்கரசு சுவாமிகள், (22) குலச்சிறை நாயனார், (23) பெரு மிழலைக்குறும்ப நாயனார், (24) காரைக்கா லம்மையார், (25) அப்பூதியடிகள், (26) திருலோக்கர், (27) நமிநந்தியடிகள், (28) திருஞானசம்பந்த சுவாமிகள், (29) ஏயர்கோன் கலிக்காமர், (30) திருமூலர், (31) தண்டியடிகணாயனார், (32) மூர்க்கநாயனார், (33) சோமாசிமாறர், (34) சாக்கிய நாயனார், (35) சிறப்புலி நாயனார், (36) சிறுத்தொண்டர், (37) கழறிற்றறிவார், (38) கணநாதநாயனார், (39) கூற்றுவ நாயனார், (40) பொய்யடிமையில்லாத புலவர், (41) புகழ்ச்சோழ நாயனார், (42) நரசிங்க முனையரையர், (43) அதிபத்த நாயனார், (44) கலிக்கம்பநாயனார், (45) கலிநீதி நாயனார், (46) சத்திநாயனார், (47) ஐயடிகள் நாயனார், (48) கணம் புல்லநாயனார், (49) காரிநாயனார், (50) நின்றசீர் நெடுமாற நாயனார், (51) வாயிலார் நாயனார், (52) முனையடுவார் நாயனார், (53) கழற்சிங்க நாயனார், (54) இடங்கழி நாயனார், (55) செருத்துணை நாயனார், (56) புகழ்த்துணை நாயனார், (57) கோட்புலி நாயனார், (58) பத்தராய்ப்பணிவார், (59) சித்தத்தைச் சிவன்பால் வைத்தார், (60) திருவாரூர்ப் பிறந்தார், (61) முப்போதுந் திருமேனி தீண்டுவார், (62) முழுநீறு பூசிய முனிவர், (63) அப்பாலுமடி சார்ந்தார், (64) பூசல் காயனார், (65) மங்கையர்க்கரசியார், (66) நேசநாயனார், (67) கோச்செங்கட்சோழ நாயனார், (68) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், (69) சடைய நாயனார், (70) இசைஞானியார்,

நாயர்

மலையாளத்திலுள்ள சாதியார். இவர்கள் ஆரியர்களுக்கும் யக்ஷகாந்தருவப் பெண்களுக்கும், பிறந்தவர்கள் என்கிறார்கள்: சுத்த நாயர்கள் போர்வீரர்களாயிருந் தனர். தற்காலம் உள்ள பலவகைச் சாதி யார் இங்குக்குடி புகுந்து சிலநாள்கள் சென்றபின் நாயர்கள் என்பர். தற்கால வர்த்தகர் சித்திரவேலையர், எண்ணெய் விற்போர், பல்லக்குச் சுமப்போர், அம்பட்டர் முதலியவரும் தங்களை நாயர் என்பர். (தர்ஸ்டன்.)

நாயுடு

இது தெலுங்கு பேசும், பலிஜர், போயர், கவரைகள், கொல்லா, கலிங்கர், காபு, வெலமர். இவர்களுக்குப் பட்டம்.

நாய்

1. இது நீண்டவுடலும் உறுதியான தேகமும் கால்களும் உடையது. இதன் மார்பு நீண்டு அகன்றிருக்கும் ஆதலால் அதிக ஆகாயத்தை சுவாசித்து களைப்படைவதில்லை. சில நாய்கள் ரோமம் குட்டை யாயிருத்தலால் தண்ணீரில் நீந்தும். இதன் கண்ணின்மணி, வெளிச்சம் அதிகமாக இருக்கையில் சிறுத்தும் வெளிச்சம் குறையும்போது பெருத்தும் இருக்கும், தலை நீண்டும் கீழ்வாய் உறுதியாயுமிருக்கும் இதற்கு மேலும் கீழுமாக (42) பற்கள் உண்டு, நாக்கு மிருதுவாயும் ஈரமாயும் இருக்கும். இதற்கு முன் கால்களில் (5) விரல்களும் பின்கால்களில் (4) விரல்களும் உண்டு, குளிர்தேசத்திலுள்ள நாய்களுக்கு மயிர் நீண்டும், மற்றவற்றிற்குக் குட்டையாயுமிருக்கும். வால் மேனோக்கி வளைந்திருக்கும். இது சந்தோஷத்தில் வாலை ஆட்டும். பயத்தில் வாலைப் பின்கால்களுக்கிடையில் வைக்கும். ஓடும்போது வால் விறைத்து நிற்கும். வேட்டைநாய் இதற்கு தேகமும் காலும் மெலிந்தும், தலையும் வாயும் நீண்டுமிருக்கும். இதற்கு மோப்பம் விடிக்கும் சக்தி அதிகம் உண்டு. பாளையக்காரநாய், நரிவேட்டைநாய், இரத்தமோப் நாய், பறவைவேட்டைநாய், காவல்காக்கும் நாய், புல்டாக், மாஸ்டிப்நாய், பட்டி நாய், மலைநாய் : இது குளிர்தேசங்களில் பனியிலழுந்துவோரைக் காப்பது, நியு பவுண்ட்லண் நாய் இது கப்பலினின்று கடலில் தத்தளிக்கும் பிராணிகளைக் காப்பது. நீர் வேட்டைநாய் இது நீரிலுள்ள பிராணிகளைப் பிடிப்பது. முயல்வேட்டை நாய் இது குள்ளமானது முயல் சென்ற வழியை மோப்பத்தாலறிந்து பிடிக்கும். கௌதாரி பிடிக்கும் நாய் இது கௌதாரியுள்ள இடத்தை மோப்பத்தாலறிந்து வேட்டைக்காரனுக்கு அறிவிக்கும். வீர நாய் மூக்குச் சிறிதாயும், நெற்றி அகன்றுமிருப்பது. இது எருதோடும் சண்டைசெய்யும் எலிகொல்லி : இது அதிககுள்ளமானது இது ஸ்காட்லண்டிலு மிங்கிலாண்டிலுமுண்டு. இன்னும்பலவகை நாய்கள் உண்டு, 2. இவ்வுருவங்கொண்டு யமன் சுவர்க்காரோகணஞ் சென்ற தருமராசனைப் பின் தொடர்ந்து சென்று தன்னைத் தெரிவித்தனன். (பார ~ சுவர்க்கம்.) 3. இது தருமர் சுவர்க்கத்திற்கு சென்றபோது தம்பியர் திரௌபதி முதலியோர் நீங்கியகாலத்தும் நீங்காது சென்ற யமனுரு, 4. வயிரவர்க்கு வாகனமானது. 5. விச்வாமித்ரன் ஷாமகாலத்து இதன் ஊனைத் தேவர்க் கவிசாகத் தந்தான். 6. நெடுங்காலத்திற்கு முன் மனிதர்களால் தமக்கெனக் காட்டிலிருந்து கொண்டு வந்து வீட்டில் பழக்கிய இனத்தில் ஒன்று, இவ்வினம் தேசகால வேறுபாட்டால் பல வுருவமும் குணமும் கொண்டவைகளாக இருக்கின்றன. இவை தன்னை வளர்த்த எசமானனிடம் விஸ்வாஸ முள்ளவை. மோப்பம் பிடிப்பதில் வல்லவை. 7. இது பல நாடுகளில் பல உருவமும் தன்மையுங்கொண்ட பிராணி. வீடுகளில் காவற்குப் பயனுறுத்தும் பிராணி. இச்சாதியில் பலவகை உண்டு. அவற்றினை உருவப்படத்தில் காட்டினாலன்றி அவை விளங்கா. அவற்றிற்கு மேனாட்டார் வழங்கிவரும் பெயர் மாத்திரம் கூறுவன்: (1) கூகர்ஸ்பானியல், (2) ஸ்கைடெரியர், (3) பிரஸ்ஸல்ஸ்கிரிப்பன், (4) பீல்ட்ஸ்பானியல், (5) புல்டெரியர், (6) எஸ்கிமோ நாய், (7) பக், (8) ஸ்மூத்பாக்டெரியர், (9) கிரேட்டேன், (10) பிளாகரிட்ரைவர், (11) பீகில்ஹவுண்ட், (12) பாஸ்ட்ஹவுண்ட், (13) கால்வி, (14) ஓடர்ஹவுண்ட், (15) மாஸ்டிப், (16) புல்டாக், (17) கிங் சார்லஸ்பானியல், (18) ஸ்காட்ச்டெரியர், (19) விப்பெட், (20) நியூபவுண்லண்ட் நாய், (21) ஸ்காட்ச்டீர்ஹவுண்ட், (22) ஸெயிண்ட்பெர்னார்ட், (23) ஐரிஷ்டெரி யர், (24) பிரெஞ்ச்புல்டாக, (25) டாச்சண்ட், (26) சௌ, (27) பெகினீஸ், (28) யார்க்ஷையர்டெரியர், (29) களம் பர்ஸபானியல், (30) டால்மரடியன், (31) பாயின்டர், (32) பாக்ஸ்ஹ வுண்ட், (33) ஸெட்டர், (34) கிரேஹவுண்ட், (35)ப்ளட்ஹவுண்ட், (36) பாஸ்டன் டெரியர், (37) பொமரானியன், (38) ஸ்கிப்பெர்க், (39) இங்கிலிஷ்ஷிப்டாக், (40) ஏயிரிடேல் டெரியர், (41) ரஷ்யன் போர்ஸோயி, (42) பிரெஞ்ச்கார்டெட்பூடில், 8.காட்டு நாய் : இது நாயை ஒத்த பிராணி. இது, எல்லாத் தேசகாடுகளிலும் உண்டு. இது புதர், மலைகளிலிருந்து இரவில் இரைதேடத் தொடங்கித் தம்மில் சில வெளியில் காவற்காத்துச் சில மிருகங்களைப் புதரிலிருந்து வெளிப்படுத்தி வேட்டையாடும். தப்பினவற்றை வெளியில் காவலிருக்கும் நாய்கள் கொன்றருந்தும், இந்நாய்கள் உருவத்தில் சிறியவை ஆயினும் புலி, சிங்கம் முதலியவற்றையும் எதிர்க்கும்.

நாய்கள்

சியாமம், சபளம் இவையிரன் இம்யமபுரஞ் செல்வோரைத் தடுக்கும் நாய்கள். உலகத்தவர் நாய்களுக்குப் பலியிடின் யமவேதனையினின்று நீக்குவர்.

நாய்க்

இது அரசசேநாபதிகளுக்குப் பட் டப் பெயர். இது தற்காலம், பிள்ளைகள், இருளர், வேடர், பலிஜர், கவரைகள், முத்திலியர், ஒட்டன், தோட்டியன், உப்பிலி யன் முதலியவர்களுக்குப் பட்டப்பெயரா யிருக்கிறது. (தர்ஸ்டன்.)

நாய்ச்சியார் திருக்கோலம்

இலக்ஷ்மி தேவி தன்னினும் அழகு வாய்ந்தார் இல்லையென்று செருக்குக் கொண்ட காலத்து அவளது வீறு அடக்கத் திருமால் எடுத்த ஜகன்மோகினி திருவுரு.

நாரசிங்கம்

உபபுராணத் தொன்று.

நாரதன்

1. விஸ்வாமித்திர புத்திரன், 2. கசியபர் பாரியையிடத்துப்பிறந்தவர்,

நாரதம்

ஒரு தீர்த்தம்.

நாரதர்

1. பிரமன் புத்திரர். இவர் கையிலிருப்பது மகதியாழ். இவர் தக்ஷன்குமாராகிய அரியசுவர்கள், சபள சுவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து ஞானிகளாக்கின மையால் தக்ஷனால் நிலையிலாது திரியச் சபிக்கப்பட்டவர். வந்தை முதலியவர். முதலையாகச் சாபம் பெற்று எந்தத் தீர்த்தத்தில் அடையலாமென்றெண்ணி யிருங்தபோது தோன்றித் தென்சமுத்திரக் கரையிலுள்ள தீர்த்தங்களைக் கூறி மறைந்தனர். 2. (1000), வருஷம் பிரமசபையைக் காணத் தவஞ் செய்தவர். 3. தருமபுத்திரனை இராசசூய யாகஞ் செய்யத் தூண்டிவிட்டவர். 4. விசுவாநானுக்கு உன் குமானாகிய அக்னி (12) வயதில் இடிவிழுந்து சாவான் எனக் கூறியவர். 5. கம்சனுக்குக் கிருஷணன் முதலியோர் உற்பத்தி கூறியவர். 6. நரகாசுரனாற் சிறையிடப்பட்ட கன்னிகைக்கு முன் தோன்றி நீங்கள் கண்ணனால் சிறைநீக்கப் படுவீர் என்றனர். 7. பாண்டவர் காட்டிற் கேகியபின், திருதராட்டிரனுக்குக் குலகாசங் கூறியவர். 8. துரியோதனனுக்கு அருச்சுநன் தவநிலை குறிப்பித்தவர். 9. தமயந்தியின் சுயம்வரத்தைத் தேவேந்திரனுக்குத் தெரிவித்தவர். 10. உன்னைப்போல் உயர்ந்தமலை உலகத்தில் இல்லையென்று மேருவைப் புகழ்ந்தவர். 11. தருமருக்குத் தீர்த்தமகிமை கூறியவர். 12. வேருவின் தன்மையை விந்தமலைக்குக் கூறி விந்தமடைந்த இறுமாப்பைச் கண்டவர். 13. அசுபதியெனும் மத்திர தேசாதிபதிக்குச் சாவித்திரி விரதம் கற்பித்தவர், 14 அசுபதிக்குச் சத்தியவான் குண முதலிய கூறியவர். சாவித்திரிக்கு உபதேச மளித்தவர். 15. பாகவதத்தை வியாசருக்கு உபதேசித் தவர் 16. அருவனுக்குத் தத்துவ முபதேசித் தவர், 17. பிராசீனபர்கியிடஞ் சென்று நீ செய்த கர்மத்தால் சகப்பிராப்தி இல்லையென்று துறவடையக் கூறியவர். 18. இவர் பிரமபுத்திரர்களை வஞ்சித் துத் தவசிகளாக்கினதால் பிரமன் இவரைப் பல பெண்களைப் புணர்ந்து காமுகராயிருக்கச் சபித்தனர். இவர் பிரமாவை நோக்கி நிரபராதியாகிய என்னைச் சபித்ததால் உன் மந்திரங்கள் உலகத்தில் பலிக்காமலிருக்க, மூன்று கற்பம் வரை நீ அபூஜ்யனாகுக எனச் சபித்து நாரதர் உபபர்க்கணன் எனும் கந்தருவனாய்ப் பிறந்து தவஞ் செய்கையில் சில காந்தருவ ஸ்திரிகள் இவரைக்கண்டு மோகித்து அவ்வுடலை விட்டுச் சுத்ரா தன் குமரிகளாய் இவரை மணந்தனர். இவர் ஒருநாள் பிரமன் சபைக்குச் சென்று அவ்விடம் நடித்துக் கொண்டிருந்த அரம்பையைக் கண்டு ரேதஸை விட்டனர். இவரது சித்த சப்லத்தைக் கண்ட பிரமனிவரை மனிதராகப் பிறக்கச் சபித்தனன். (பிரம்மகை வர்த்தம்.) உபபாக்கணன் தேவியரில் சிறந்தவள், மாலாவதி. இவர் பிறந்த காலத்து மழையில்லாதிருந்தது. இவர் பிறந்தவுடன் நாரமாகிய மழை வருஷித்ததால் நாரதர் என்று பெயருண்டாயிற்று. பின்னும் இவர் தம்மோடு கூடியிருந்த சிறுவர்களுக்கு நாரம் என்னும் ஞானத்தை உபதேசித்ததால் இப்பெயர் பெற்றனர். நாரதன். எனும் நாமம்பூண்ட காச்யப முனிவன் அநுக்ரகத்தால் பிறந்தமையின் இப்பெயருண்டாயிற்று. (பிரம்மகை வர்த்தம்). இவர் சூத்ர யோனிஜராகிய நாரதர் பிரம்ம புத்திரராகிய நாரதர் பிரமனது கண்டத்திலிருந்து அநேக நரர் பிறந்தமையால் அக்கண்ட்ம் நரதம் எனப்படும். அந்த நரதமாகிய கண்டத்தில் இவர் பிறந்தபடியால் நாரதர் எனப்பட்டனர். 19. பிரதேசுக்களுக்கு ஞானோபதேசஞ் செய்தவர். இவர் ஒரு கற்பத்தில் உபபிரமணன் எனுங் காந்தருவனாயிருந்து நவப்பிரசாபதிகள் சத்திரயாகஞ் செய்கையில் கானஞ்செய்ய இவரை அவர்கள் அழைத்த காலத்துச் சென்று கானஞ் செய்து அவ்விடத்துத் தம்மோடு வந்த காந்தருவப் பெண்களைக் கண்டு காமாதுரராய்க் கூடியிருக்கப் பிரசாபதிகள் சூத் திரராகச் சபித்தனர். அவ்வகை பிறந்து பிரம்மஞானிகளுக்குப் பணி செய்து மறு ஜன்மத்தில் பிரமனுக்கு மானஸபுத்திரராய்ப் பிறந்தனர். இவர் தக்ஷப்பிரசாபதி புத்திரருக்குப் பொருளுண்மை யுபதேசித்து அவர்களைத் திருப்பினதால் அந்தத் தகப்பிரசாபதியால் நிலையிலாது திரியவும், மனைவிபுத்திரர் இல்லாதிருக்கவும் சாபமேற்றனர். இவர் நைட்டிகப்பிரமசரியம் அநுட்டித்த ஊர்த்தரேதஸான இருடி. 20. பிரகலாதன் கருவி லிருக்கையில் ஈராயணமந்திரம் உபதேசித்தவர். 21. மணிக்கிரீவனை விருக்ஷமாகச் சபித்தவர். 22. இரண்யகசியின் தேவியைச் சிறை கொண்ட இந்திரனுக்கு ஞான உபதேசஞ் செய்து நீக்கியவர். 23. திரிமூர்த்திகளும் எழுந்தருளியிருக்கையில் பொதுவில் நமஸ்கரித்து உத்தம தேவருக்கென்று கலகம் விளைவித்தவர். 24, பெண்ணுருவடைந்து கண்ணனைப் புணர்ந்து பிரபவாதி வருஷங்களைப் பெற்றவர். 25. வாயுவிற்கும் ஆதிசேடனுக்கும் நடந்த யுத்தத்தில் ஆதிசேடனிடஞ் சென்று இசைவாசித்துச் சேடனைத் தம்வசப்படுத்தித் தலை யெடுக்கச்செய்து வாயுவிற்கு வெற்றியளித்தவர். (காஞ்சிபுராணம்.) 26. சித்திர கேதுவென்னும் சூரசேந தேசத்தரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து துக்கநிவாரணஞ் செய்தவர். 27. தேவாசுர் தொந்த யுத்தத்தில் இரு வரையுஞ் சமாதானப்படுத்தி நிலைக்கனுப்பினவர். 28. அரிச்சந்திரனுக்குப் புத்திர உற்பத்தி நிமித்தம் வருண மந்திரம் உபதேசித்துப் புத்திரப்பேறு அளித்தவர். 29. இவர் பஞ்சபாரதீயமென ஒரு நூல் செய்தனராம். 30. தருமருக்குச் சிசபாலன் பர்வநிலை கூறியவர். 31. இவர் தேவேந்திரன் சபையில் புரூரவச சரியையைக் கானஞ்செய்ய உருவசி கேட்டுப் புரூரவசவிடம் மோகங்கொண்டு புரூரவசுவை அடைந்தாள். 32, கம்சனிடஞ்சென்று கண்ணன் வசுதேவருக்கும். தேவகியிடம் பிறந்தவர் என்று உண்மை கூறியவர். 33. கண்ணனிடஞ்சென்று உற்பாதங் கூறிக் களித்தவர். 34. மாயாவதியிடஞ் சென்று பிரத்தியம்கன் முன்பிறப்புணர்த்திப் பிரத்தியும்நனை மணக்கச் செய்தவர். மீண்டும் துவாரகை சென்று பிரத்தியும்நன் மாயாவதி இவர்களின் பூர்வோத்திரங் கூறியவர். 35. கிருஷ்ணமூர்த்தியிடத்துப் பாரிசாதமலர்கொடுத்து அதைக் கண்ணன் உருக்குமணிக்குக் கொடுத்ததைக்கண்டு வந்து சத்தியபாமைக்கு அறிவித்துச் சத்தியபாமைக்கும் கண்ணனுக்கும் ஊடல் உண்டாக்கியவர். 36. கண்ணன் முதலியவர்க்கு அநிருத்தன் இருக்கை கூறியவர். 37. கண்ணனது சர்வவியாபகங்கண்டு துதித்தவர். 38. நாராயணருஷியிடம் தத்துவங்கேட்டு வியாசமுனிவர்க்குக் கூறியவர். 39, சிரஞ்சயனுக்குப் புத்திரப் பேறு அருளிச்செய்தவர். 40. திரிபுராதிகளை அழிக்கப் புத்தர் உருக்கொண்ட விஷ்ணுவிற்குச் சீடராய்ச் சென்றவர். 41, சுவர்ணடீ எனும் குழந்தை இறந்த காலத்துத் தந்தைக்கு உறுதிகூறி இறந்த பிள்ளையை யமனிடத்துச் சென்று மீட்டு அளித்தவர். 42. பஞ்சசூடையால் பெண் பிறப்பு இழிவெனச் சொல்லக் கேட்டவர். 43. மருத்துவிற்குச் சமவர்த்தனரால் யாகம் முடிக்கக் கற்பித்தவர். 44. பாண்டவர்க்குத் திருதராட்டிரன் காந்தாரி குந்திசஞ்சயன் இவர்கள் தாங்கள் இருந்த வனம்விட்டு வேறு வனஞ்சென்று மூங்கிற் றீயில்பட்டு இறந்ததைத் தெரிவித்தவர். 45. தருமனைச் சுவர்க்கத்திற் கண்டவர். 48. தக்கன் வேள்வியை உமைக்குத் தெரிவித்தவர். 47. திருமால் சந்நிதானத்துத் தும்புரு முதலியோர் ஒருகால் பாடப் பார்க்கச்சென்ற நாரதரை விஷ்ணுகணங்கள் துரத்த வெட்கி யாழ்கற்கத் திருமாலை நோக்கித் தவம்புரியத் திருமால் அசரீரியாய்க் கான விந்துவிடம் கற்கவென அதைக்கேட்டு கானவிந்துவிடங் கற்று அமையாது தும்புருவிடங்கற்று அமையாது சாம்பவதியினிடத்துப் பூரணமாய் யாழ்கற்றவர். 48. அம்பரீஷன் குமரியாகிய சிரீமதியைவிரும்பி அரசனைக்கேட்க அம்பரீஷன் பருவதரிஷியும் விரும்பினபடியால் உங்களிருவரில் கன்னிகையாருக்கு மாலை யிடுவளோ அவர் கொள்கவென முனிவர் மணமாலைகாலத்துப் பருவதனுக்குக் குரங்கு முகமாகவெனச் செய்து தாம் மண மண்டபம்வரப் பருவதரிஷியும் அவ்வாறு நாரதரைச்செய்து மணமண்டபம்வர இருவரும் குரங்கு முகமாயிருக்க இருவருக்கும் நடுவில் விஷ்ணு தோன்றினர். அப்பெண் விஷ்ணுவை மாலையிட்டனள், நாரதர் அம்பரீஷனிடம் வந்து கோபிக்க அம்பரீஷனிடமிருந்து ஆழிதுரத்த விஷ்ணுவால் ரக்ஷிக்கப்பட்டு மாயஞ்செய்த விஷ்ணுவைத் துதியாதிருந்தவர். 49. இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் தோன்றி அவனை இது யமபுரம் போம் வழியெனத் தூண்டி யமனுக்கும் இராவணன் வருகையைத் தெரிவித்தவர், 50. சராசந்தனிடம் அடைபட்ட அரசர் செய்தியைக் கண்ணனுக்குக் கூறி அரசரை மீட்பித்தவர். 51. தக்கன் சிவத்தைநோக்கி வேள்வி செய்வதைச் சிவமூர்த்திக்கு அறிவித்தவர். 52. இருவரும் பர்வதரென்னும் உடன் பிறந்தாள் குமரரும் ஒருவருக்கொருவர் மனோவிருத்தியில் எப்படி நேருகிறதோ அதனை மறைக்கக் கூடாதென்று பூப்பிர தக்ஷணஞ் செய்யவந்து கார்காலத்தில் சஞ்சயதேசத் தரசனிடந் தங்க அவ்வரசனிவ் விருடிகளிருவரையும் வரவேற்றுத் தன் குமரி தமயந்தியை அவர்களுக்குப் பணி செய்யக் கட்டளையிட்டான, அவ்வாறு தமயந்தி பணி செய்து வருகையில் இவள் நாரதரின் மகதியாழின் இசைவயப்பட்டு நாரதரிடம் அதிக அன்புவைத்துத் தன்னை அவ்வாறு நடத்தாதிருத்தல அறிந்த பருவதர் இவரைக் காரணங்கேட்க இவர் கூறாது தாமதித்தலால் இவரைக் குரங்கு முகமாகுக எனச்சபித்தனர். நாரதரும் சொற்ப குற்றத்திற்கு இவ்வகைச் சபித்ததால் நீ சவர்க்கவாச மொழிந்து மிருத்யு லோகவாசியாக எனச்சபித்தனர். பின் தமயந்திக்குத் தந்தை மணஞ் செய்விக்க எண்ணி நாயகனைத் தேடுகையில் தமயந்தி நாரதரொழிந்த மற்றவர்களை மணக்கேன் எனத் தாயாகிய கைதையும் தந்தையும் குரங்கு முகனாகிய இருடிக்கோ வாழ்க்கைப்பட வுள்ளாயென்று பலவாறு தடுக்கவுங் கேளாது நாரதரை மணந்தனள். பின் நாரதமுனிவர் மனங்குன்றி அவ்விடமிருந்த காலத்தில் பர்வதர் அவ்விடம்வா நாரதர் எதிர்கொண்டுபசரிக்கத் தமயந்தியை யெண்ணி இரக்கமுற்று நன்முகமடைய நாரதருக்குக்கூற இவரும் பிரதியாய்ச் சுவர்க்க சஞ்சாரஞ்செய்ய வசந்தந்தனர். (தே பாகவதம்.) 53. ஒருகாலத்து இவர் ஸ்வேதத்வீபத்தில் விஷ்ணுவைக் காணச் சென்றனர். அப்போது அவருடனிருந்த வஷ்யிமறைய இவர் நான் இருடியாய் மாயையை வென்றிருக்க என்னைக்கண்டு லஷ்மி மறையக் காரணமென்ன என்ன விஷ்ணு மாயை எவரையும் விடாதென்ன இவர் அம்மாயையை எனக்கு அறிவிக்க வேண்டு மென வேண்ட விஷ்ணு இவரை உடனழைத்துச் சென்று கன்யா குப்ஜமென்னும் பட்டணத்தருகில் ஒரு சிங்கார வனத்திலுள்ள தடாகத்தில் இவரை ஸ்நானஞ் செய்யும்படி கூற அவ்வாறே இவர் தமது மகதியாழை வைத்துவிட்டு ஸ்நானஞ்செய்து கரையேறுதலும் ஒரு திவ்யமான பெண்ணுரு வடைந்தனர். விஷ்ணுவோ யாழைக் கையிற்கொண்டு மறைந்தனர். இவ்வாறு நாரதர் பெண்ணுருக் கொண்டி ருக்கையில் அவ்வழிவந்த தாலத்துவஜன் எனும் அரசனிவரைக் கண்டு காமுற்றுத் தன்ன கரங்கொண்டு சென்று மணந்தனன். இவருக்கு அவனிடம் பன்னிரண்டு குமரர் பிறந்து அக்குமரர் பாணிக்கிரகணஞ் செய்து கொண்டு அவர்களுக்குப் பல குமரர்கள் பிறக்க அவர்களைக்கண்டு களித்துத் தமது பூர்வநிலை இதுவென்று அறியாம் லிருக்கையில் வேற்றரசன் தாலத்துவசனோடு யுத்தத்திற்கு வந்து போர் செய்து அவன் குமரர்வையும் பேரன்மார்களையும் கொல்ல இவர் விசனமடைந்து இருக்கை யில் விஷ்ணு விருத்த வேதியராய் வந்து தேற்றி அவ்விடமிருந்த தடாகத்தில் மூழ்கச் சொல்ல இவர் மூழ்கவும் புருஷவுருக் கொண்டு தம் எதிரில் வீணைகொண்டு நிற்கும் விஷ்ணுவை நோக்கித் தமக்கு இந்த உரு இவரால் வந்ததென்று சிந்தித்திருக் கையில் நாம் போகலாம் வா என்று அழைக்கத் தமக்குப் பெண்ணுருவமும் ஆண் உருவமும் வந்ததற்குக் காரணமறியாமற் போயினர். இவர் பெண்ணாய்ப் பன்னிரண்டு வருஷ மிருந்தபோது பிறந்த பல பின்ளைகள் வீரவன்மன், சுதன்மன் முதலியோர். 54. பிரமவிஷ்ணுக்கள் தாம்பரமென்று புத்தஞ் செய்தகாலத்துச் சிவத்தினுண்மை கூறியவர். 55. சூரபன்மனுக்குப் பயந்து இந்திரன் ஒளித்தகாலத்துச் சயந்தனுக்கு உறுதி கூறியவர். 56. அகத்தியர் கமண்டலத்திருந்த காவிரியை இந்திரனிடத்துக் கூறி விநாயகரால் கவிழ்க்கச் செய்தவர். 57. இவர் ஒரு யாகஞ்செய்ய அதில் ஒரு ஆடுபிறந்தது. அதனைக் குமாரக்கட வுள் வாகனமாகப் பெற்றனர். 58. கிருத்திகா விரதம் விநாயகரிடம் போதிக்கப் பெற்றுச் சத்தருஷிகளினும் மேலாம்பதம் பெற்றனர். 59. சம்புவன் தவஞ்செய்வதை இராமமூர்த்திக்கு அறிவித்தவர். 60. இவர் கங்கையைப் பணியாது சென்று அக்கரையில் நிஷ்டைகூடி யிருந்தனர். அவ்வகை இருக்கையில் கங்கை நம்மைப் பணியாது சென்றனன் எனப் பெருகிவர அதை இவர் அறியாதிருந்தனர். அப்போது அவ்விடம் வந்திருந்த யானை அக்கங்கை நீரைவாரி யிறைத்து அறிவித் தது. நாரதர் கங்கையின் வீறைக் கண்டு மந்திரத்தால் அதைத் தம்பிக்கச் செய்தனர். 61, சிருஞ்சயனிடஞ் சென்று அவன் குமரியாகிய சுகுமாரியை மணக்க எண்ணியிருக்கையில் இவர் தங்கை குமரனாகிய பர்வதன் இளைத்துப் போதலைக் கேட்கச் சொல்லாதிருத்தல்கண்டு குரங்கு ஆக என இவரைச் சபிக்க இவர் சுரலோகம் போகாதிருக்க என அவனைச் சபித்தவர். 62. சுகருக்கு ஞானோபதேசஞ் செய்து தந்தையினின்று நீக்கியவர்.

நாரதி

விஸ்வாமித்திர புத்திரன்.

நாரதீய புராணம்

இது (25 000) கிரந் தங்களுடையது. விஷ்ணுதுதி. விஷ்ணுவின் ஆராதனைக்குரிய புண்ணியகாலம் துருவர், பிரகலா தர்சரிதை மோகினியின் சரிதை முதலியவற்றைத் தெரிவிக்கும்.

நாராயண சுவாமி

கடுவையெனும் ஊரினன். தமிழில் விதானமாலை நூலாசிரியன்.

நாராயணகண்டர்

சித்தாந்தசாராவலி யெனும் சைவசாத்திர உரையாசிரியர்,

நாராயணகிரி

திருவேங்கடம்.

நாராயணகோபாலர்

கிருஷ்ணனுக்குச் சமானமான வலியுள்ளார். அருச்சுனனால் பாரதயுத்தத்திற் கொலையுண்டவர்.

நாராயணசரஸு

ஒரு தீர்த்தம். இதன் கரையில் தக்ஷன் புதல்வர் தவம்புரிந்து இஷ்டசித்தி பெற்றனர்.

நாராயணதாசன்

நாராயணச சுகம் பாடிய ஒரு புலவன்.

நாராயணதாசர்

ஒரு தமிழ்க் கவிஞர். திருவெவ்வளூர் அந்தாதி இயற்றியவர்.

நாராயணன்

திருமாலுக்குள்ள திருநாமங்களில் முதன்மையானது. இதுவே (நாராயணநம்) எனும் திருமந்திரம். நாரம் என்றால் சலம், அதனை இடமாகக்கொண்டவர் ஆதலின் இவர்க்கு இத்திருநாமம் உண்டாயிற்று, இந்தமந்திரம் பிரணவசகிதமாய் அஷ்டாக்ஷரம் எனப்படும். இது எட்டுத் திரு அகரமும், மூன்று பதமுமாய் இருக்கும். மூன்று பதமும் மூன்று பொருள்களைச் சொல்லும். அதாவது சேஷத்வம், பாரதந்தர்யம், கைங்கர்யமுமாம். இதில் முதற்பதம், எகாக்ஷரமான பிரணவம். இது வேதசாரம். அதாவது வேதங்கள் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு அக்ஷரமாக எடுத்தது. இதன் பெருமையினை விரிக்கிற்பெருகும், இதுநிற்க நாராயணபதம் நாரங்களுக்கு அயனமென்றபடி. நாரங்களாவன, நித்திய வஸ்துக்களுடைய திரள். அவையாவன ஜ்ஞாநாநந்தா மலத்வாதிகளும், ஞானசக்தியாதிகளும், வாத்ஸல்ய ஸௌசீல்யாதிகளும், திருமேனியும், காந்தி ஸௌ குமா ராதிகளும், திவ்ய பூஷணங் களும், திவ்யாயு தங்களும், பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும், நித்தியஸூரிகளும், சத்ர சாமராதிகளும், திருவாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும், பரமாகாசமும், பாக்ருதியும், பத்தாத்மாக்களும் காலமும், மகதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டங் கட்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும், ஆம், அயனமென்றது இவற்றிற்கு ஆச்ரயமென்றபடி. அங்ஙனம் அன்றி இவை, தம்மை ஆச்ரயமாக வுடையன என்னலுமாம். ஆய என்கிறபதத்தால் எல்லா அடிமைகளும், செய்யவேண்டுமென்று அபேக்ஷிக்கிறது. நமஸ்ஸாலே நாம் வழுவில்லா அடிமை செய்யவேண்டும் என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது. இன்னும் இந்த மகாமந்திரத்தின் பெருமையை விரிந்தநூல்களிற் காண்க.

நாராயணபாரதி

தொண்டை நாட்டில் வெண்ணெயென்னும் ஊரிற் பிறந்த பிராமணர். இவர் மணவாள நாராயணனென்னும் பிரபுவை முன்னிட்டுத் திருவேங்கட சதகமென்னும் மணவாள நாராயணசதகம் பாடியவர். முத்தாரையர் குமரர்.

நாராயணமுதலியார்

தொண்டை நாட்டிற் கூவமெனும் ஊரிலிருந்து தானிருக்கும் ஊரைக் கடலென்று பாடிய புலவனுக்குப் பொன்மீன் செய்து கொடுத்துக் கவிபெற்றவர். இவர் மரண காலத்து ஒரு புலவர் “இடுவோர் சிறிதிங்கிரப்போர் பெரிது, கெடுவாய் நமனே கெடுவாய் படுபாவி, கூவத்துநாரணனைக் கொன்றாயே கற்ப கப்பூங், காவெட்டலாமோகரிக்கு” என்று பாடிச்சென்றனர்.

நாராயணருஷி

1. திருவேங்கடத்தில் தவஞ் செய்து சித்திபெற்ற இருடி. 2 விஷ்ணுவினம்சாவதாரங்களில் ஒருவர். இவர் ஆன்மாக்களுக்குஞானோபதேசஞ் செய்யும் பொருட்டு இவ்வுருத்தாங்கினர்.

நாராயணர்

ருத்ர நாராயணப் போரில் ருத்ரர் நாராயணர்மீது சூலத்தையெறிய அது பட்டவிடம் ஸ்ரீவர்கம் ஆயிற்று. ருத் நாராயணன்ரரை நாராயணர் கழுத்தில் பிடிக்க அவர் பிடித்த இடம் நீலகண்டமாயிற்று. (பார ~ சாந்திபர்வம்.)

நாராயணி

சத்தமாதர்களில் ஒருத்தி.

நாரி

1. மேருதேவியின் பெண். குருவின் பாரி. 2. தக்ஷன்பெண். புலத்தியன் தேவி.

நாரிதீர்த்தம்

காரண்டவம், ஸௌபத்ரம், பிரசஸந்தம, பௌலோமம், பாரத்வாசம், நாரைகள் என்னும் பெயர் கொண்ட தீர்த்தங்கள் இதில் இருக்கும். இதில் நந்தை, ஸயீடு, ஸௌறபேயி, லதை, வஸை எனும் தாக்தருவப்பெண்கள் ஒரு இருடி சாபத்தால் முதலைகளாயிருந்தனர். இவர்கள் அருச் சுகனால் சாபம் நீங்கினர்.

நாரின் வகை

நார் என்பது செடிகளினி என்று எடுக்கப்படுவது. சணல், கற்றாழை, பனை, தென்னை முதலியவற்றின் தண்டு, மட்டை இவற்றைத் தண்ணீரில் ஊறவிட்டெடுத்து அடித்துச் சுத்தம் செய்து கயிறு திரிப்பர்.

நாரீகவசன்

மூலகனுக்கு ஒரு பெயர். பாசிராமர் அரசர்களைக் கொலை செய்த காலத்துப் பெண்கள் இவனைக் கவசம் போற் காத்ததலால் இவனுக்கு இப்பெயர் கிடைத்தது, மூலகனைக் காண்க. (பாகவதம்.)

நாரைகள்

இவை கொக்கினத்தில் பெரியவை. இவ்வினத்தில் பல வேறுபாடுகள் உண்டு. இவைகளுக்கு கழுத்தும், மூக்கும், காலும் மிக நீளம். உடல் சற்றுப் பருத்தது. காலும் மூக்கும் மஞ்சள் கலந்த செந்நிறம். உடம்பு வெண்மை முதலிய பலநிறம். இவ்வினத்தில் ஐரோப்பாவின் வடபாகத்தில் ஒரு இனம் உண்டு, இவ்வினத்திற்குத் தலையிலும் கழுத்திலும் கொண்டையும் தாடியுமுண்டு, அவற்றிலுள்ள சிறகுகள் சுருண்டிருக்கும். இதன் தலைப்பக்கம் கறுத்தும், முதுகு சாம்பல்கிறமாயும், வயிறு வெண்மையாயுமிருக்கும். கழுத்தில் சிற்றிறகுகள் புள்ளியுடன் வழுவழுப்பாயுள்ளன. இவை நின்றபடி தூங் கும். தூங்குகையில் சில காவல்புரிகின்றன. நெடுங்கால் நாரை : இது நீண்ட கால்களை யுடையதாதலால் இப்பெயர் பெற்றது. தலை கறுப்பு, முதுகுப்பக்கம் செவப் புக்கலந்த சாம்பல் நிறம். இதன் கால்களும் அலகும் செந்நிறம், இதன் மூக்கு கீழ்நோக்கி வளைந்திருக்கிறது. இவை மீன்களையும் தளிர்களையும் தின்கின்றன. இதன் கால்கள் தோலடிகள். இவை 2, 3 அடி தண்ணீரிலும் நடந்து சென்று இரைதேடும். இது தூங்கும்போது ஒரு காலை மடக்கிக்கொண்டும், கழுத்தை வளைத்து உடலில் சுற்றிக்கொள்ளும். இது மெதுவாய்ப் பறக்கும். வருஷத்திற் கொருமுறை 2 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும். தாடிப்பை நாரை : இது தென்ஆபிரிகா கண்டத்தின் மேற்குக்கன நீர் நிலைகளில் வகிப்பவை. இது 5, 6 அடிகள் உயரம், இதற்குத்தரமாகப் பறப்பதற்கான இறக்கைகளுண்டு. இவ்வின ஆணிற்குக் கழுத்துப்பக்கத்தில் ஒரு தோற்பை தொங்குகிறது. அப்பையின் மேற்பாகம் இரத்தம் போற் சிவந்து பளபனப்பாயிருக்கிறது. இது அந்நாட்டாரால் வளர்க்கப்பட்டு வீட்டில் அவர்களுடன் உலாவுகிறது. நெடுங்கழுத்து நாரை : இது அமெரிக்கா கண்டவாசி. இதன் கால்கள் 1.1/2 அங்குலம் உயரம், இதன் தோலகன்ற பாதங்களி உள்ள விரல்கள் 3 அங்குல நீளம், உடல் 3/4 அடி கனம், இதன் கழுத்துப் பருத்து 8,9, அடிகன் நீளத்திற்குப் பாம்பைப்போல் நீண்டிருக்கிறது. இதில் பெண்பறவை கழுத்து முதல் வால்வரை 5, 6 அடிகள் நீளமும், ஆண் பறவை 8, 10 அடிகள் நீளமும் இருக்கின்றன. மூக்குக் கூர்மையாய் 4 அங்குலம் நீளம், வாயினுட்புறத்தில் உரிய சிறு பற்களுண்டு. இதன் மேல்மூக்குக் கருமை, கீழ்மூக்கு மஞ்சள் நிறம். இதன் வாய் கண்ணுக்குப் பின் புதம் வரையில் நீண்டிருக்கிறது

நார்ப்பொருள்கள்

சணல் (Flax) : இது ஒருவித வருஷாந்தாப் பயிர், இரண்டடி உயரம் உள்ளது, நீலப்பூப் பூப்பது, இது தற்காலம் எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது. இச்செடிகளை நன்றாக உலர்த்தித் தண்ணீரில் ஊறியபின் தண்டுகளிலுள்ள பசுமை நீங்கும். பின்னவற்றை நறுத்தி அவற்றிலுள்ள கயிறு போன்ற நாரினைச் சிக்கறுத்துச் சணல்லாக்கி நெய்வர். இந்தச் சணல் துணிகளில் முக்கியமான சல்லா டாமஸ்க். இது முதலில் சிரியா தேசத்திலுள்ள டாமஸ்க் தேசத்தில் நெய்யப்பட்டது. இரண்டாவது கேம்பிரிக். இது பிரான்ஸ் தேசத்திலுள்ள கேம்பிரிக் எனும் இடத்தில் நெய்யப்பட்டது. பஞ்சு : இது பல இடங்களில் பயிராகும் பொருள். இது உயரத்தில் நான்கு ஐந்தடி யிருக்கும். இதிற் பலவகையுண்டு. இது ஏராளமான பஞ்சைக் கொடுக்கும். இதனை நூலாக்கிப் பலவித வேஷ்டிகள் நெய்வர். பாரசீக சணல் : (Hamp) ஆது முதலில் பாரீச விளைபொருள். தற்காலம் ரஷ்யா, வடஇந்தியா, வட அமெரிகா, ஆபிரிகா முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. இதன் நாரினால் உறுதியான கான்வாஸ்கள், கப்பற் பாய்கள், மெல்லிய கயிறுகள் மற்றும் பல செய்யப்படுகின்றன. காசருக்கனார் : இச்செடி இந்தியாவின் வடபாகங்களில் பயிரிடப்படுகிறது. இது 12, 14 அடி உயாம் வளரும், இதன் நாரினால் கோணிகள் நெய்வர். தென்னை, பனை : இவற்றின் நாரினால் கயிறுகள் பின்னுவார்கள்.

நாற்கவிராச நம்பி

இவர் தொண்டைநாட்டிற் புளியங்குடியில் பிறந்த உய்யவந்தார் என்பவருக்குக் குமரர். இவர் சைநர். இவா தமிழ் பல்கற்று வல்லவராய் ஆசு, வித்தாரம், மதுரம், சித்திரம் என்னும் கவியில் வல்லவரானதுபற்றி, இவருக்கு நாற்கவிராசநம்பி என்று பெயர் வந்தது, இவர்க்கு இதற்குமுன் நம்பியென்பது பெயராயிருக்கலாம். இவர் அகப்பொருளின் விரிவைச்சுருக்கிச் சுருங்கிய நூலாகத் தம்பெயரால் நாற்கவிராசநம்பி அகப் பொருளென இயற்றினர். அந்நூல் அகத் திணையியல் களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து இயல்களையுடையது. (அகப்பொகுள் விளக்கம்.)

நாற்கால் இராசி

மேஷம், ரிஷபம், சிங்கம், தனுசு ஆக 4.

நாலடியார்

1. இது சைநமுனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். சங்க மருவிய பதினெண்கீழ் கணக்கினுள் ஒன்று. நானூறு வெண்பாக்களை யுடையது. பதுமனார் என்பவர் இவைகளை முப்பாலாய் நாற்பது அதிகாரங்களாகப் பகுத்து உரையும் இயற்றினர். கடவுள் வாழ்த்தும் அவரே இயற்றியதென்பர்.

நாலாயிரக்கோவை

காங்கேய முதலியார் மீது ஒட்டக்கூத்தர் பாடிய கோவைப் பிரபந்தம்,

நாலுகவிப் பெருமாள்

திருமங்கை மன்னன் பட்டப்பெயர்.

நாலூரச்சான்

ஒரு வைஷ்ணவர் சோழனுக்கு மந்திரியென்பர்.

நாலூராச்சான்பிள்ளை

திருவாய்மொழிப் பிள்ளைக்கு மருமகன்,

நாலூரான்

உடையவரை ஆச்ரயித்தவர்.

நாலைகிழவன் நாகன்

ஒருவள்ளல். வட நெடுந்தத்தனாற் பாடப்பட்டவன். பாண்டியனுடைய வீரன். (புற, நா.)

நால்வகைத்தேவர்

முப்பத்து மூவர் அவர் வசுக்கள் எண்மர், திவாகார் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவர். மூவாறு கணங்களாவார் கின்னரர், திம்புருடர், விச்சாதரர், கருடர், பூதர், இயக்கர், உரகர், சுரர், சாரணர், முனிவர், பாகதியோர், சித்தர், காந்தருவர், தாரகை கள், பசாசர், இராக்கதர், போகபூமியர், ஆகாசவாசிகள்.

நாளீசங்கன்

ஒரு கொக்கு. இதற்கு இராஜதம்மன் எனவும் பெயர். ஒரு வேதியச் சிறுவன் தன் பிதுராஸ்திகளைத் தீய வழியில் செலவிட்டு இதனிடை வர இது தன்னண்பனால் பொருள் தருவித்தது. இந்நன்றி பெற்ற வேதியச் சிறுவன் கொக்கினைக் கொல்லக் கொக்கினண்பன் வேதியச் சிறுவனைக் கொன்றனன். பின் கொக்கின் மனைவி கணவனை உயிர்ப்பிக்க எழுந்து வேதியச் சிறுவனையும் எழுப்பி நற்புத்தி கூறி நெடுநாளிருந்தது.

நாள்

பூமி ஒருமுறை தன்னைச் சுற்றிவருவது.

நாள்விஷம்

அஸ்தத்திற்கு (22) இன்மேலும், ஆயிலியத்திற்கு (31) இன் மேலும், திருவாதிரைக்கு (11) இன் மேலும், பூரட்டாதிக்கு (14) இன் மேலும் அடையவே நான்கு நாழிகை விஷம். இரேவதி, புனர்பூசம், கார்த்திகை, மகம் இவற்றிற்கு (30) இன்மேல் நான்கு நாழிகை விஷம், உத்திரட்டாதி, பரணி, பூராடம் இவற்றிற்கு (24) இன்மேல் நான்கு நாழிகை விஷம். பூசம், உத்திராடம், மூலம், பூரம், சித்திரை இவற்றிற்கு (20) இன்மேல் நான்குநாழிகை விஷம், அவிட்டம், அனுஷம், திருவோணம் இவற்றிற்கு (1) இன்மேல் நான்கு நாழிகை விஷம்.. அச்வநிக்கு (50) இன்மேல் நான்கு நாழிகை விஷம். மிருகசீரிஷம், சோதி, கேட் டை இவற்றிற்கு (14) இன்மேல் நான்கு நாழிகை விஷம். உரோகணிக்கு (40) இன்மேல் நான்கு நாழிகை விஷம், உத்திரம், சதயம் இவற்றிற்கு (18) இன்மேல் நான்கு நாழிகை விஷம். இதில் சகல மங்கல காரியங்களும் நீக்கவேண்டும். இந்த விஷகடிகையில் சந்திரன் சுபாங்கி சத்து நிற்கச் சபகிரகத்தாற் பார்க்கப்பெறினும், சுபக்ரகத்துடன் கூடி நிற்பினும், பிரகஸ்பதிகேந்திர திரிகோணத்தில் நிற்பினும் விஷகடிகை தோஷமில்லை. அப்போது அமுதத்தைச் செய்வன் சந்திரன். (விதானமாலை)

நாழி

அரிசி முதலிய தானியங்களை அளக்கும் கருவி. இது மரக்கால், படி முதலாகப் பலவகைப்படும்.

நாழிகைக்கருவி

இது பளிங்கினால் உடுக்கைபோன்று ஒருபுரம் சிறு மணல்நிறையப் பெற்றது. இம் மணல் மேல்புறமிருந்து, கீழ்புறம் சிறுக விழுந்துவிடின் அரைமணி, அம்மணல் விழுந்த பக்கத்தை மீண்டும் திருப்ப அது மறுபக்கம் நிறையின் அரைமணி, இவ்வாறு திருப்பி மணி தெரிந்து கொள்வோர் ஆன்றோர். (உல.)

நாழிகைவட்டில்

இது நாழிகையின் அளவைத் தெரிவிக்கும் ஒருவகைச் கருவி, இது மெல்லிய தகட்டால் கிண்ணம் போன்று இடையில் ஊசி முனையினும் சிறிய துவாரமுள்ளது. இதனை நீருள்ள தொட்டியில் மிதக்கவிடின் இதில் நீர் அச்சிறு புழைவழி சென்று நிரம்பிக் கிண்ணம் நீரில் அமிழின் ஒரு நாழிகையாம். (உல ~ வ.),

நாவில் உண்டாம் ரோகம்

நாவில் திரிதோஷங்களினால் சிவந்தும், கொப்பளங்கள் உண்டாகியும் வருவது. இவை நாபிக்கு அடி இடம், நாபி, இருதயம், கண்டம், நாக்கு இந்த ஐந்து ஸ்தானங்களைப்பற்றிப் பிறக்கும். இது (1) வாதஜிக்வாகண்டக ரோகம், (2) பித்தஜிக்வாகண்டக ரோகம், (3) சிலேஷ்மஜிக்வாகண்டகரோகம், (4) ஜிக்வாலஜகரோகம், (5) அதிஜிக்வாரோகம் (6) உபஜிக்வாரோகம் ஆக ஜிக்வாரோகம் 6.

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனர்

மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமையால் இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது. அதுவே கலைக்கோட்டுத் தண்டனெனப் படுவது. இதனை இடுகுறிப்பெயர் என்று கொண்டார். களவியலுரைகாரரும், நன்லூல் விருத்தியுரைகாரரும் (சூத். 49) அஃது இதுகாறும் வெளிவந்திலது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது (நற்.382 ம்) பாட்டு.

நிகம்பன்

சுந்தோபசுந்தருக்குத் தந்தை,

நிகழ்வினவிற்சியணி

இது முன் நடந்ததையேனும், பின் நடப்பதையேனும் அப்போது நடக்கிறதாகச் சொல்லுதலாம். இதனைப் பாவிகாலங்காரம் என்பர். (குவல.)

நிகாகத்தானம்

என்பது, ஒருவராலும் கண்டிக்கப்படேன் என்பவன் மதத்தைக் கண்டிக்கப்படுவது. இது அப்ரதிபத்தி, விப்பதிபத்தி எனவும், இவற்றின் பேதம் பிரதிஞ்ஞாஆனி,பிரதிஞ்ஞாந்தம்,பிரதிஞ் ஞாவிரோதம்பிரதிஞ்ஞாசந்யாசம்,ஏதுவந்தரம்,அர்த்தாந்தரம்,நிரர்த்தகம், அவிக் நிசாகரர் யாதார்த்தம், அபார்த்தகம், அப்பிராத்தகாலம், நூனம், அதிகம், புனருத்தம், அந்துபாடன், அஞ்ஞாதம், அப்பிரதியை, விக்ஷேபம், மதானுஞை, பரியநுயோச்சி யாபேக்ஷணம், அபசித்தாந்தம், எதுவாபாசன், இருபத்திரண்டு, (சிவ ~ சித்.)

நிகிர்தி

டம்பமாயைகளின் குமரன், இது (உருவகம்.)

நிகும்பன்

1. (சந்.) அஸ்தன் குமரன். 2, அரியசுவன் குமரன். குமரன் பர்ஹிணாசுவன், 3. இராவணனுக்கு அம்மான். பெரிய ஆகாரமுடையவன். இவனுக்கு ஒன்பது கோடி சைந்யம். இவன் அக்னியுடன் போர்செய்து வென்றவன். இராவணனுக்குச் சீதையை விட்டுவிடும்படி புத்திபோதித்தவன். மாருதியால் அறையுண்டிறந்தவன். 4. கும்பகர்ணன் குமரன். அநுமனால் இறந்தவன். 5. சிவமூர்த்தியால் கொல்லப்பட்ட அரக்கன். 6. சண்முக சேநாவீரன். 7. சிவகணத்தவன், இவன் தேகமுழுதும் வாயும், எண்ணிறந்த கைகால்களு முள்ளவன்.

நிகும்பலை

இலங்கைத் தீவில் இந்திரசித்து யாகஞ்செய்த இடம்.

நிக்கனன்

யதுவம்சத்து அநமித்திரன். ஜேஷ்டபுத்திரன். இவன் புத்திரர் சத்ராசித், பிரசேநன்.

நிக்குரோதன்

உக்கிரசேநன் குமரன்.

நிக்தருந்தனம்

ஒரு நகரம்.

நிசாகார்

விந்திய பர்வதத்தை ஆச்சிரமமாகக் கொண்ட இருடி, இவராச்சிரடித்தில் சம்பாதி சூரியனைக் காணப் பறந்து இரக்கைகள் கருகிவிழ இவர்கண்டு இராமதூதனாகிய அநுமனுக்குச் சீதையை இராவணன் கொண்டு சென்றவழி கூறின் இரக்கை முளைக்குமென அறுக்கிரகித்தவர்.

நிசிதன்

1. தோஷாவிற்குப் பட்சிபாரானால் பிறந்த குமரன். 2. ஒரு யாதவன்.

நிசுந்தன்

சுந்தோபசுந்தர் தந்தை.

நிசும்பன்

1. சத்தியுடன் யுத்தஞ்செய்து மாண்ட அசுரன், சும்பனுக்குச் சகோதான். 2. நரகாசுரனுக்கு மந்திரி. இவன் நரகாசுர சம்மாரத்தின் பொருட்டுக் கண்ணன் செல்லுகையில் கண்ணனை எதிர்த்து மாண்டவன். 3. சும்பன் எனும் அசுரனுக்குத் தம்யன். இவன் ஒருகாலத்தில் தனக்குத் தன் தம்பியால் இரையாகக் கொடுக்கப் பட்ட பிரத்யும்நனை ஆகாயமார்க்கமாக நெடுந்தூரங் கிளம்பி அங்குவிடுப்ப இவன் தெய்வகதியால் சும்பன் பட்டணத்தில் ஒரு மலையை அடைந்து அம்மலையிலிருந்த உத்யானவனத்திருந்த சும்பன் புதரியாகிய லக்ஷ்மியைக் காந்தர்வ மணஞ்செய்து கொண்டனன். இதனையறிந்த சும்பனிருவரையும் வஜ்ரபஞ்சரத்தில் காவலிடப் பிரத்யும்நன், தேவி உபாசனை புரிய, தேவியார் ஒரு கிளியுருக்கொண்டு உள்ளடைந்து பஞ்சாத்தை உடைத்தெறியச் சும்ப நிசும்பர் யுத்தத்திற்கு வந்து பிராட்டியைக்கண்டு மோகித்து ஒருவருடன் ஒருவர் யுத்தஞ் செய்திறந்தனர்.

நிசுளாபுரியாசன்

தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்திருந்த உறையூர் அரன்.

நிசூளிகா இரணம்

இது தேகமெங்கும் சட்டையிட்டது போல் கொப்புளங்களை உண்டாக்கும் ரோதம்.

நிச்சக்கிரன்

அசீம கிருஷ்ணன் குமரன் அஸ்தினபுரம் கங்கையில் முழுகிய காலத் துக் கௌசாம்பிகை நகரத்தில் வசித்தவன். இவன் குமரன் உதகன்.

நிஜகுணயோகீந்திரர்

கன்னடத்தில் விவேகசிந்தாமணி இயற்றியவர்.

நிடதம்

அஷ்ட குலாசலங்களில் ஒன்று, இது ஏமகூடபர்வதத்திற்கப்பால் (1000) யோசனையில் இருக்கிறது,

நிடாதன்

சவனனைக் காண்க.

நிதந்து

ஒரு இராசருஷி. இவன் குமரர் சால்வேயன், சூரசேநன், சுருதசோன், திந்துசாரன், அதிசாரன் முதலியவர்கள்.

நிதரிசனவணி

ஒருவகையான் நிகழ்வ தோன்றற்குப் பொருந்திய பயனைப் பிறிதொன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வதாதல், தீமைபுலப்பட நிகழ்வதா தல், செய்த தனைச் சொல்லுவது, (காட்சியணி)

நிதாகர்

1. ருபன் சீடர் புலத்தியர் குமரர். 2. இரிபுவின் மாணாக்கர். இவர் சநகர் முதலியவர்க்கு உபதேசித்தவர்.

நிதி

இது எட்டு வகைப்படும். பதுமநிதி, மகாபதுமநிதி, மகாநிதி, கச்சபநிதி, முகுந்தநிதி, குந்தநிதி, நீலநிதி, சங்கநிதி என் பன.

நிதிபதி

பரமதத்தன் தந்தை,

நிதியின் கிழவன்

4. குபோனுக்கு ஒரு பெயர். 2. தலைச்சங்கப் புலவருள் ஒருவர், இவர் குபேரனாகவே இருக்கலாம்.

நிதியைப்பற்றியது

நிலத்திற்றோண்டிப் புதைத்து வைக்கும் பொருளின் வைப்பு. உபநிதி : மற்றொருவன்பால் நம்பி அடைக்கலமாக வைப்பது, பண்டமாற்று : ஒரு பொருளைப் பெறுதற்கு விலையாகக் கொடுக்கப்படுவது. ஆதமர்ணிகம் : வட்டியுடனாதல், அது இல்லாமலாதல் பெற்றுக் கொள்வதாக கொடுக்கப்பட்ட பொருள், கடன் : வட்டியுடன் பெறுவதாகக் கொடுக்கப்பட்ட பொருள். யாசிதம் : வட்டியின்றிப் பெறுவதாகக் கொடுக்கப்பட்டது தன்னுரிமை யொழிவதாகிய செலவு இம்மையது, மறுமையது என (2) வகை. இம்மைச் செலவு பிரதிதானம், பரிசில், வேதனம், போக்யம் என (4) வகைப்படும். பிரதி தானம் : ஒன்றற்கு விலையாகக் கொடுக்கப்படுவது. பரிசில் : ஒருவனுக்கு வீர முதலியன குறித்து உவகையுடன் கொடுப்பது, வேதனம் : கூலியாகக் கொடுப்பது, இரவாகன உபபோக்யம் : நெல் முதலிய தானியக் கள், இல்லம், சோலை பசு முதலிய, கல்வி முதலிய ஈட்டுதற் பொருட்டும் காத்தற் பொருட் செலவிடும் பொருள். போக்யம். அரசன் தன் சௌக்யத்தின் பொருட்டுச் செலவிடும் பொருள். மறுமைச் செலவு : செபம், ஓமம், அருச்சனை, தானம் என் யன நிதியைப் பற்றியது. புனர்யாதம். விசேடவரவினிமித்தம் செய்யப்படுஞ் செலவு இதற்கு நிவர்த்தம் எனவும் பெயர். ஆவர்த்தம் : விசேட செலவினா லுண்டாகும் வாவு இதற்கு நிவர்த்தி யெனவும் பெயர். திரவியம் : பலகறை முதல் இரத்தின மிறுதியாயின. தனம் : பசு, ஆடை, தானிய முதல் புல்லிறுதியாயின. (சுக் ~ நீ).

நிதிவாகள்

ஒரு வணிகன், குருவாலேவப் பெற்று மடமிடித்து நரகமடைந்தவன்.

நித்தயோகினிநிலை

பகலை (8) பங்காக்கி (1) வது பங்கில் கிழக்கிலும், (2) வது வடமேற்கிலும், (3) வது தெற்கிலும், (4) வது வடக்கிலும், (5) வது மேற்கிலும், (6) வது தென்கிழக்கிலும், (7) வது வடக்கிலும், (8) வது தென்மேற்கிலும் நிற்கும். யாத்திரைக்கு இந்த யோகினி பின்பக்கமும், இடப்பக்கமுமாக இருத்தல் வேண்டும். இதனைப் பார்க்குமிடத்துக் இழக்கை முதலாகக்கொண்டு பார்க்க

நித்தியசூரிகள்

ஸ்ரீவைகுந்தத்தில் பரமபத நாதனைப்போல் சாரூபமடைந்து நித்தியானந்த வாசிகளாய் எழுந்தருளியிருக்கும் முத்தாத்மாக்கள். அவர்கள் சேனை முதலியார் குமுதர், குமுதாக்ஷர், புண்டரீகர், வாமனர், சங்குகர்ணர், சர்ப்பதேத்திரர், சுமுகர், சுப்பிரதிஷ்டர், சண்டர், பிரசண்டர், பத்திரர், சுபத்திரர், ஜயர், விஜயர், தாத்ரு, விதாத்ரு, பிரப்புருதி முதலியவர்கள்.

நித்தியதானம்

பலன் கருதாது முனிவர்க்குப் பொருளைப் பரிவுடன் அளிப்பது.

நித்தியநாதன்

இவன் முக்கால முணர்ந்த அரசன், இனி வரும்பிறப்பில் சென்ம நீக்க மென்றறிந்து தவஞ்செய்கையில் குமாரக்கடவுள் ஆசாரியாராய் எழுந்தருளி ஞானோபதேசஞ்செய்ய முக்திபெற்றவன்.

நித்தியப்பிரளயம்

ஜன்மாதி யவஸ்தைகளால் ஆத்மா நாடோறும் லயமடைந்து திரும்பிச் சாக்கிராவஸ்தையடைதல்.

நித்திரன்

பாண்டுவிற்குப் பௌத்திரன்.

நித்திரை

காலாக்கினிருத்ரர்க்குத் தேவி; இவள் சகலரையும் இளைப்பாறச் செய்யவள். (பிரம்மகைவர்த்தம்.)

நித்திரை செய்து விழிக்கையில் பார்க்கக் கூடாவிதி

நித்திரை செய்து விழித்த உடன் அங்கயீனம், வஸ்திரயீனம், பாவம், காவிவஸ்திரம், கிரகசங்கை, ஊமை, மொட்டைத்தலை, செவிடு, அழுகை, சடை, கூன், அழக்குமேனி, விரிந்த மயிர்த்தலை, குஷ்டம், கொலை, எண்ணெய்த்தல, மனோவியாகூலம், உன்மாதம், ஆககம், விதவை, பாம்பு, பூனை, சாம்பல், எருமை, கயிறு, உலக்கை, முறம், இவைகளைப் பார்த்தால் அன்றைக்குக் கெடுதி அல்லது பல துன்பங்களுண்டா மென்றறிக.

நித்திரை செய்து விழித்தவுடன் பார்க்கவே ண்டிய விதி

நித்திரைசெய்து விழிக்கும்போது தாமரைப்பூ, தங்கம், தீபம், கண்ணாடி, சூரியன், புகையொழிந்த நெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்தமலை, கன்றையுடைய பசு, கற்பகவிருட்சம், தமது வலக்கை, மனைவி, மிருதங்கம், இவற்றுளெதுவேனும் ஒன்றைப்பார்க்கில் உத்தமம். விழித்தவுடன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டுவரில் வீரியவிர்த்தியும், மகிழ்ச்சியும், சர்வவசியமும், ஞானம் அதிகரிக்கு மென்பர்.

நித்திரை செய்விதி

முறைப்படி இடது பக்கமாகப் படுத்துக் காலை நீட்டிக்கொண்டு நித்திரை செய்தால் பஞ்சேந்திரியங்களினயர்வும்,ச்ரீரவருத்தமும் நீங்கும். இளைத்த மீனத்திற்கு உற்சாகமும் ஆயுள் விர்த்தியு முண்டாகும் தேகாதிபாதம் வரைக்கும் வஸ்திரத்தால் மூடிக்கொண்டு நித்திரை செய்தால் இரண்டு நேத்திரங்களுக்கும், இரண்டு புஜங்கட்கும் வன்மையுண்டாம். அன்றியும் குளிர், பனி, வெயில், தூசி, மேகம், இவைகளால் விளைகின்ற குற்றங்களுணுகாவென்றறிக.

நித்யகர்மப்பிரிவு

ஆறு, நித்யம், நித்யாங்கம், நைமித்திகம், நைமித்திகாங்கம், காமி யம், காமியாங்கம். (சைவபூஷணம்.)

நித்யசமை

தர்மம், நித்யம் அநித்யம் எனும் விகற்பத்தினால் தர்மிநித்யமென்று சாதிப்பது, (தரு.)

நித்யசையோகம்

வியாபகப் பொருள்களிரண்டிற்குள்ள சையோகம்.(தரு.)

நித்யா ரவிவாரவிரதம்

முற்கூறியபடி செய்து ரவிவாரந்தோறும் விரதமிருக்கின் சூர்ய சாயுஜ்யமடைவர்.

நிநாசுரன்

இவன் ஒரு அசுரன். இவன் விஷ்ணுமூர்த்தி உலகங்களை உண்டு உமிழ்வதுபோல் உலகங்களெல்லாம் உண்டு பிராணிகளை வருத்தி வருகையில் பிரம்மாதி தேவர்கள் இவன் துன்பம் பொறுக்காது சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவ மூர்த்தி இவன் மீது ஒரு அம்பினையேவ அவ்வொரு அம்பு இவன் உயிரை உண்டு மீண்டது.

நிந்தியகருமம்

இது ஒவ்வொருவனும் நாடோறுஞ் செய்யத்தக்க கருமங்கள். நல்லவன் பிராம்ம முகூர்த்தத்தில் எழுந்து இஷ்டதேவதையை வணங்கி உதயகாலத் ஓக்கோற் கையனாய் வீட்டிற்குத் தூரத்தில் நிர்ச்சனமாயும் சலமுள்ள இடமாயு மிருக்குமிடத்தை அடைந்து மூத்திரம், முன், புழு, எலும்பு, மலஞ் சூழ்ந்த இடம், வழி, புல், ஆறு, பள்ளம், ஜலமுள்ள இடம், பசுவின் சாணமுள்ள இடம், சாம்பல் சூழ்ந்த இடம், சுடுகாடு, வீட்டை அடைந்த தோட்டம், மாட்டுக்கொட்டகை, அரசு முதலிய புண்ணிய விருக்ஷங்கள், நாற்சந்தி கூடுமிடம், இவைகளையொழித்து, ஸ்திரீகள், பசுக்கள், அந்தணர், சூரியன், சந்யாசி, சந்திரன், விகாரப்ரதேசம், இவைகளைப் பாராமல், பகலினும், இருசந்தியினும் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாயும் காதில் பஞ்ஞோபவீதத்தைச் சேர்த்துத் தலையை உத்தரீயத்தால் மூடிப் புல் முதலிய செத்தைகள் அமைந்த பூமியில் தன்னை ஒருவரும் காதைபடி மறைந்த புதருக்குள் மௌனமுடையனாய் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டு மலஜலத்தைக் கழித்தல் வேண்டும், மல விசர்ஜனஞ்செய்தபின் புல், ஓட்டுப்பாளம், மண்ணாங்கட்டி இவற்றால் குதத்தையடைந்திருக்கிற மலத்தை நீக்கி, இடதுகையினால் தனது குறியைப் பற்றினவனாய் நல்லமண்ணை யெடுத்துத் தனக்கு வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு, குதத்தைப் பத்து முறைக்குமேல் மனத் தூய்மையுண்டாம் வரையில் சுத்திசெய்து கால்களை அலம்பிக் கொண்டு இரண்டு கைகளையு மெழுமுறை சத்திசெய்து வேறொரு கரையடைந்து ஆசமனஞ் செய்து குச்சுகளில் முருங்கை, நறுவிலி ஆமணக்கு முதலிய வொழித்து புங்கு பில்வம், கருங்காலி, அருச்சுனம், நாயுருவி, நாகை, மா, மருது இவைகளில் சுண்டுவிரற் பருமனுள்ளதாய், பன்னிரண்டங்குலமுதல் எட்டங்குல நீளமுள்ள தாய் ஈரமுள்ளதாய்த் தோலுடன் கூடினதாய் ஒழுங்காயுள்ளதைக் கொண்டு தந்தங்களிலுள்ள அழுக்கைப் போக்கி நாவழித்துச் சுத்தியுண்டாம் அளவுவாயைக் கொப்புளித்து நீராடல் வேண்டும். இந்நீராடல் வாருணம், பஸ்மம், ஆக்னேயம், ஐந்திரஸ்நாநம், வாயவ்யஸ்நாநம், மந்திர ஸ்நாநம், மானஸஸ்நாநம் எனப்படும். இவற்றில் எல்லா மதத்தாருக்கும் வாருணஸ்நா நம் உரியது. அதிலும் ஆற்றங்கரை, மலையருகு, புண்ணிய பூமி, பிரம்மவிருக்ஷத்தினடி, தருப்பையினடியிலுள்ள தீர்த்தம் விசேடம். இப்படிப்பட்ட சுத்தசலத்தில் எட்டங்குல அளவின் கீழ்நின்று இரண்டு கைகளாலும் முகம், கண், மூக்கு, காது முதலான வுறுப்புகளை மூடிக்கொண்டு இஷ்டதெய்வத்தைத் தியானித்து நீராடல் வேண்டும். இரவில் நீராடல் கூடாது. மகாயக்யம், மாதப்பிறப்பு, கிரகணம், இத்தினங்களில், இரவிலும் நீராடலாம். நிர்வாணமாக நீராடல் கூடாது. மற்றப் பஸ்மஸ்நாகம் முதலியவை சைவருக் குரியவை. அதில் பஸ்மஸ்நாநம் வெண்மையுள்ள விபூதியால் செய்வது; ஆக்னேய ஸ்நாநம் பிராதக்காலத்திற்கு முன் விதிப் படி ஜலத்தில் ஸ்நாகஞ்செய்து முடித்துப் பின் பஸ்மஸ்நாகஞ் சந்திகள் தோறுஞ் செய்வது. ஐந்திரஸ்நாநம் வெயிலிலும் மழையிலுஞ் செய்வது. வாயவ்யஸ்காகம் கிழக்கு முகமாயிருந்து கைகளை உயர்த் தூக்கினவனாய்ச் சிரோமந்திரத்தை நினைத்து ஏழடிசென்றவனாய்ப் பசுவின் கூட்டத்தில் காற்றினால் பறக்கிற தூளிகளில் செய்கிற ஸ்நாகம், இந்த ஸ்நாநம் ஸ்நாகங்களிற் சிறந்ததாம். மந்திரஸ்நாநம் சத்யோஜாத முதலிய ஆகமமந்திரத்தால் செபிக் கப்பட்ட சலத்தால் ஸ்நாகஞ் செய்வது. மானஸஸ்நாநம் பிரணவவுச்சரிப்புடன் கூடிய பிராணாயாமாதிகளைச் செய்வது; நீராடும் போது பேசினால் வருணன் சத்தியைக் கெடுக்கிறான். இவ்வகை ஸ்நா நாதிகள் முடித்து மந்திரபூர்வகமாக நீர்க் கடன் முதலியவற்றைத் தேவருஷி பிதுரர்களுக்குச் செய்து சைவ வைஷ்ணவர்கள் நெற்றியில் திரிபுண்டராதி குறிகளைத் தரித்துக் கிழக்கேனும் வடக்கேனு மிருந்து சந்திகளிற் காயத்ரி முதலிய ஜபித்தல் வேண்டும். சந்தியாவந்தனம் : இச்சந்தியாவந்தனம் பிராதக்காலம், மத்யான்னம் சாயங்காலம் அர்த்தயாமம் ஆகிய நான்கு காலங்களிலும் செய்தல் வேண்டும்; பிராதக்காலசந்தி நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம். சூரியன் பாதி உதிக்கும் போது செய்தல் அதமம்; சாயங்காலச் சந்தியைச் சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயமானபின் ஆகாசத்தில் நகூத்திரங்கள் தோன்று முன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்; மத்தியான சந்தி யைப் பதினைந்து நாழிகையாகிய மத்தியான்னத்தில் செய்தல் உத்தமம்; மத்தியான்னத்துக்கு முன் ஒரு நாழிகையில் செய்தல் அதமம். இச்சந்தியா தேவதை காலையில் காயத்திரி யென்றும் மத்யான்னத்தில் சாவித்ரியெனவும் சாயங்காலத்தில் சரஸ்வதியெனவும் கூறப்படும். இச்சந்தியா தேவதைகளுள் காயத்ரி செந் நிறத்தவராயும் சாவித்ரி வெண்ணிறத்தவராயும் சரஸ்வதி கருநிறத்தவராயும் உபாசிக்கப்படுவர். இவர்களுள் காயத்ரி பிரமன் வடிவம், சாவித்ரிருத்ரன் வடிவம் சரஸ்வதி விஷ்ணு வடிவம். இக்காயத்ரி தேவதைகளின் தியானம் சைவஸ்மார்த்த வைணவர்களுக்கு வேறுபடும். யார் விரத நியமத்துடன் சந்தியை உபாசிக்கிறார்களோ அவர்கள் பாவத்தை உதறி அழியாத பிரமலோகத்தை அடைகிறார்கள். பகற்காலத்தில் மனோவாக்குக் காயங்களால் செய்கிற பாபங்களை மாலைச்சந்தி யுபாசனை யால் உபாசகன் போக்கடிக்கிறான். இரவில் அங்கனஞ் செய்தோன் காலேச்சந்தியா வந்தனத்தால் போக்குவன். இதனை இருடிகள் நெடுங்காலம் உபாசித்தால் தீர்க்காயுளையும் நல்ல போறிவையும் பெரும் புகழையும் கீர்த்தியையும் பிரமவொளியை யும் பெறுகின்றனர். சந்தியாவந்தன மில்லாதவன் அசுசியுடையனாய் நித்தமும் எல்லாக் கருமங்களுக்கும் தகாதவனே யாகின்சான். எக்கருமமும் பயன் தராது. சந் தியைவிட்டவன் சூத்திரனே யாகின்றான். அவ்வகைச் சந்தியா வந்தனாதிகளைச் செய்தவன் சுத்தனாய் ஆசமனாதிகளைச் செய்து சைவனேல் சிவபூசையையும் வைணவனேல் விஷ்ணுவாதி தேவதா பூசைகளுஞ் செய்க. இந்தக் காயத்ரிக்குரிய மந்திரங்களைக் குருமுகமாயறிக.

நினைக்கலாகாதன

பொய், கோள், பிறர் பொருளைக்கவர விரும்பல், பிறர் செல்வங்கண்டு பொறாமைகொளல் முதலிய,

நினைப்பணி

ஒரு பொருளைக்கண்டு ஒப்புமையினால் மற்றொருபொருளை நினைத்தல். இதனை ஸ்மிருதிமத் அலங்காரம் என்ப. (குவ.)

நினைப்பு

இது போலிகளுள் ஒன்று. இது, குழவிப்பருவத்தே தந்தை தாயரை யிழந்தோன் காரணங்கருதாது நினக்கின்னார் தந்தை தாயெனப் பிறர் சொல்வதனைக் கருதிக்கோடல்.

நின்மலன்

இவன் தன் தமயன் தேவியைப் புணரச்செல்கையில் அவளால் குட்டநோய் அடையச் சாபம் ஏற்று ரோமசருஷியால் பினாகினி நதியில் மூழ்கிச் சுத்தம் அடைந்தவன், (பெண்ணை நதி புராணம்).

நின்மலர்

இவர் மண்டூகருஷியின் மாணாக்கரில் ஒருவர். இவர் கல்விவல்லராய் ஆசிரியரை மதியாததனால் அவரால் பிரமரக்ஷஸாகச் சாபம் அடைந்து நாரதர் சொற்படி தக்ஷிண பிநாகினியில் தீர்த்தமாடிப் புனிதரானவர். (பெண்ணை நதிபுராணம்).

நின்மலாவத்தை

(சுத்தாவத்தை) இது, அமலசாக்ரம், அமலசுவப்பனம், அமலசுழுத்தி, அமலதுரியம், அமலதுரியாதீதம். ஆக 5. அமலசாக்ரமாவது : ஆசாரியராலே ஞானதீக்ஷை பெற்றுத் திரிபதார்த்தவுண்மையை விசாரித்தறிந்து கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பொருளுடனே நிட்டை கூடும் பகுதிக்குக் கருவியினின்று நீங்கி விசாரித்து நிற்பது, அமலசுவப்பனமா வது : கருவிகளினின்று நீங்கியும் நீங்காதும் நிற்காது நடுவே சற்றுப்பதைப் புண்டாய் நிற்பது. அமலசுழுத்தி : தத்துவங்களினின்று நீங்கி மேலான கேவலத்தனாய் நிற்பது. அமலதுரியம் : கேவல நீங்கி அருளினாலே தன்னையுமருளையுங் கண்டு தன் வசமழிந்து அருள் வசமாய் நிற்றல். அமலதுரியாதீதம் : பணியற நின்று சிவத்தைத் தரிசித்து ஆனந்தத்தில் அழுந்தி நிற்பது. (சித்தா.)

நின்றசீர் நெடுமாற நாயனார்

சத்துருசாதன பாண்டியன் குமரர். இவர் சைநசமயத்துக்குட்பட்டு, மயங்கி நிற்கையில் இவரது பத்தினியாராகிய மங்கையர்க்கரசியார் சைவப்பற்றுள்ளவராய்த் திருஞானசம்பந்த மூர்த்திகளை மதுரைக் கெழுந்தருள வேண்டி அவர் வரச்சமணரை வாதில் வெல்வித்தனர். அதனால் இவ்வாசர் சைவராயினவர். இவரது மற்ற சரிகங்களைத் திருஞானசம்பந்த சுவாமிகளைக் காண்க, (பெ~புராணம்.)

நிபகண்டர்

ஒரு இருடி.

நிபந்தனகாரர்

சுருதி ஸ்மிருதி யாசாரறியமனஞ் செய்தவை தீகர்.

நிபந்தனர்

ஒரு ருஷி. இவர் தம் தாய்க்கு சம்சாரத்தை அரணயமாகக் கூறியவர். (பார ~ சாக்.)

நிப்புதி

கேமசரியின் தாய்.

நிமரோசி

பசமாகன் குமரன்.

நிமாத்தனன்

சுவபலருக்குக் காந்தியினிடம் உதித்தகுமரன்.

நிமி

1. சூர்யவம்சத்து இகவாகு குமரன். இவன் ஒரு யாகஞ்செய்ய வசிட்டரை வரிக்க அவர், இந்திரன் யாகத்தின் பொருட்டு வரித்தானாகையால் அது முடிந்தபின் வருவேன் என்றனர். அரசன் கௌதமரைக் கொண்டு யாகமுடிப்பித்து அந்த இளைப்பால் துயில் புரிந்தனன். இச்சமயத்தில் ஒருநாள் வசிட்டர் இவன் கொலுவிற்கு வந்தனர். அரசன் துயில்வது கண்டு தம்மால் யாகமுடித்துக் கொள்ளாத கோபமும்; காத்தும் தம்மை எதிர்கொள்ளாத கோபமும் மிஞ்சி அரசனை உடல்நீங்கச் சபித்தனர். அரசன் துயில் நீங்கித் தனக்கு நேரிட்ட சாபமுணர்ந்து நான் துயிலும் போது சபித்தமையால் வசிட்டரும் உடல் நீங்க எனச்சபித்தனன், உயிர்நீங்கிய அரசன் தேகத்தை முனிவர்கள் தயிலத்திவிட்டுப்பக்குவப்படுத்தினர். பின் முனிவர் ஒன்று கூடி அரசனுக்காக ஒரு யாகஞ்செய்தனர். தேவர் வந்து காற்றுருக்கொண்ட நிமியை யாது வேண்டுமென இனித்தேகம் வேண்டேன், எல்லாருடைய கண்களிலும் இருக்க விரும்புகிறேன் என்றனன். தேவர் அங்ஙனமளித்ததனால் இவன் எல்லாவுயிர்களின் கண்களிலிருந்து இமைகளையசைத்து நிமிஷமாக்கிக் கொண்டிருக்கின்ற னன். இதுநிற்க, இவன் நாட்டிற்கு அரசன் இலாமையால் முனிவர்கள் இவனுடலை அரணியிலிட்டுக் கடைந்தனர். அதினின்று ஒருமகா புருஷன் தோன்றினன். அக்கடைந்ததினாற் பிறந்த புருஷனுக்கு முனிவர்கள் மிதிலன். எனவும், ஜனித்ததால் ஜனகன் எனவும், விதேகனால் உண்டானதுபற்றி வைதேகன் எனவும் பெயரிட்டனர். இவன் யாகத்தில் சுவிஹரி முதலிய யோகியர் அரசனுக்கு அரிகதை கூறினர். அரசன் சாபத்தால் உயிர்நீங்கிய வசிட்டர் ஊர்வசியைக் கண்டு மோகித்த மித்திராவருணரால் உயர் பெற்றனர். (பாகவதம்.) 2. அபூர்வன் குமரன். இவன் குமரன் பிரகித்ரன்.

நிமிடம்

ஒரு தீர்த்தம்,

நிமித்தகாரணம்

எது சமவாயி காரணம், அசமாவாயி காரணமல்லாததாய் மற்றுங் காரணமாவது. (தரு.)

நிமித்திகன்

சச்சந்தன் மந்திரி,

நிம்பன்

1. ஒரு அசான், காளியாற் கொலையுண்டவன். 2. பாண்டியனுக்கு ஒரு பெயர்.

நிம்பராஜு

தேவதைடணம் எனும் கிராமத்தில் கருணிகர் விருத்தியை அவலம்பித்துக் குடும்பசமேதராய்த் தீர்த்த யாத்திரை செய்து, தாம் கீர்த்தனங்கள் செய்ய என்ணங்கொண்டு பகவதாராதனை செய்கை யில் பகவான் விநாயகர் வழியாய் வித்தை யிற்றேர்ச்சிவாச் செய்வித்து நிம்பராஜர் கீர்த்தனை செய்கையில் கேட்டுண்டான ஆனந்தத்தால் பெருமாளிவர்க்குச் சிரம பரிகாரத்தின் பொருட்டுச் சாமரமிரட்டப் பெற்றவர்.

நிம்பார்க்கமதம்

கிறிஸ்து பிறந்த (12)வது சகாப்தத்தில் இம்மதம் உண்டாயிற்று. இம்மதத்தாபகர், பாஸ்கராசாரியர். இந்தப் பாஸ்கராசாரியர் ஒருநாள் ஒரு துறவியைத் தமது வீட்டிற்குப் பிக்ஷைக்கழைக்க அவர் வருவதாய் வாக்களித்துச் சூரியாஸ் தமன சமயம் வரையிலும் வராமையால் ஆசாரியர் அதுவரையில் போஜன மின்றி யிருந்தனர். இவ்வாறிருக்கையில் சூரியன் அத்தமித்தனன். சந்நியாசியும் வந்தனர். சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு துறவிகள் போஜனம் செய்வதில்லை யாதலால் ஆசாரியர் சூரியனைப் பிரார்த்தித்தனர். அப்போது சூரியன் நிம்பவிருக்ஷ மாகிய வேம்பின் மேல் தன் கிரணத்துடன் பிரகாசித்தான்; அச்சூரியனைக் கண்டு இருவரும் புசித்தனர். அது முதல் பாஸ்கராசாரியருக்கு நிம்பார்க்கர் என்று பெய ருண்டாயிற்று. இவரைச் சூரியசித்தாந்தம் செய்தவர் எனவும், வேதபாஷ்யம் செய்தவர் எனவும் கூறுவர். இம் மதசித்தாந்தம், கடவுள் ஒருவனே எனவும், அவர் விக்ரகத்தைத் தொழுது ஆனந்தப்படுதல் போல் மறுமையிலும் இவ்வகை ஆனந்தம் உண்டு எனவும் கூறும். இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி தெய்வம், இவர்கள், ஜீவனை நாயகியாகவும், பரமாத்மாவை நாயகனாகவும் எண்ணுவர்.

நிம்மனர்

அநமித்திரன் குமரர். இவர் கும்ரர் சத்திராசிதன் பிரசேகன்.

நிம்மலகன்

சிவகணத்தவரில் ஒருவன்.

நிம்மவ்வை

இந்தம்மாள் வீரசைவ ஒழுக்க மேற்கொண்டவள். இவள் புதலையென்னும் ஊரில் சிவனடியவர்க்குத் தீர்த்தமெடுத்துக் கொடுக்கும் திருப்பணி செய்து தன் குமரன் மாடு மேய்த்ததனால் வரும் கூலி கொண்டு சிவனடியவரைப் பூசித்து வருவர். இவ்வகையிருக்கு நாட்களில் திருக்கைலையில் சிறுத்தொண்டநாயனார் வலிய செயல்செய்து முத்தியடைந்தோமென இறுமாந்திருத்தலைச் சிவமூர்த்தி அடக்கத் திருவளத்தெண்ணிச் சிறுத் தொண்டரைச் சீடாக அழைத்துத் தாம் ஒரு சங்கமர் வேடம்பூண்டு நிம்மவ்வை வீட்டுக் கெழுந்தருளினார், நிம்மவ்வை எதிர்கொண்டு பணிந்து இருவரையும் உபசரித்து எழுந்தருளியிருக்கச் செய்து அதிரசமுதலிய பலகார வகைகளையும் திருவமுதும் சமைத்துத் தீர்த்தத்திற்குச் சென்றனள். அச்சமயத்தில் இவள் குமரன் அன்னைவருமுன் அவ்விடமிருந்த அதிரசத்தில் ஒன்றெடுத்தருந்தினன். அன்னை உணர்ந்து அவ்விடத்திருந்த உலக்கையெடுத்து அவன்மீது அடித்தனள். அதனால் புத்திரனிறந்தனன். பின்பு அவன் தொட்ட பலகாரவகைகளை எடுத்தெறிந்து வீடு முதலியவைகளை மெழுகிட்டுப் பல காரம் திருவமுது முதலிய விரைவிற் செய்து முடித்துச் சங்கமரை எழுப்பினள். சங்கமர் உன்னைத் தேடிவந்த கும ரன் எங்குச் சென்றனன் என ஒளவை. குமரன் செய்த தீமைகளைக்கூறித் தேவரீர்க்குச் சமைத்த அன்னத்தைத் தேவரீர் அருந்தவேண்டுமென வேண்டினள். சிவமூர்த்தி குமரனையெழுப்பித் தாயிடம் அனுப்ப ஒளவை இவன் சிவனடியவர்க்குத் தீமை செய்தவன். இவன் முகத்தைப் பாரேன் என்று சிறுத்தொண்டர் பிரமிக்கக் கூறினள். சிவமூர்த்தி இந்தத் தாயுடன் குமரருக்கும் முத்தியளித்தனர்.

நிம்ரோசி

பசமாகன் குமரரில் ஒருவன்.

நியகோதான்

கஞ்சன் தம்பி.

நியக்குரோதம்

இதனடியில் பாண்டவர் சென்றனர். இந்த விருக்ஷத்தைத் தட்சகன் கடித்தான்.

நியதி

மேருவென்பவன் குமரி, விதாதாவின் தேவி.

நியாயமன்றம்

உலகியல், வேதம், அறநூல் முதலியவற்றிற் சிறந்த அந்தணர், 7,5,3, வரைக்கொண்டது. அம்மன்றத்தில் அறிவுவாய்ந்த வணிகர்களை வழக்கு கேட்போராக நியமித்தல் வேண்டும். இதன் (10) அங்கங்களாவன அரசன், நீதிபதி, நீதிமன்றத்தவர், அறநூல், கணக்காளர், எழுத்தாளர், பொன், நெருப்பு, நீர், வலாளர். (சுக் ~ நீ.)

நியாயவகை

இவை இக்காரணத்தால் இவ்வகையாகும் என ஆட்சியை எண்ணி மீமாம்சை ஆதி நியாய நூல்களில் ஆன்றோரால் எடுத்துக்காட்டிய நியாயங்களாம். அவை ஆங்காங்குப் பலவிடங்களில் வந்த வழிக் காண்க. எனக்குக் கிடைத்த சிலவற்றை மாத்திரம் ஈண்டுத் தெரிக்கிறேன். அவை: 1. அப்பர் ஹித நியாயம் : அதாவது முன்னே சம்மானிக்கத் தக்கவரை முன் பூசித்து மற்றவர்களுக்குப் பின் மரியாதை செய்வது. 2, ஸ்தாலி புலாக நியாயம்: அதாவது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறே பதமாகக் கொள்வது. 3. காகதாலிய நியாயம் : பனையின் மேல் காக்கை ஏறவும் பனம்பழம் வீழவும் உள்ள சம்பந்தம். 4. வீசிதரங்கநியாயம் : அலை எதிர்த் துக் கரையினிடம் வீச அதைத்தொடர்ந்து மற்றொன்று பின்பற்றுதல் போன்றது, 5. கதம்பமுகுள நியாயம் : கதம்ப விருக்ஷத்தின் அரும்பு மலருகையில் நான்கு இதழும் ஒன்று சேர விரிந்து மணம் வீசுவது போல்வது. 6. களேகபோதமியாயம் : பலநெற்களங்களில் புறாக்கள் தானியங்களைப் பொறுக்கி உணவு அருந்தல் போல்வது. 7. தண்டா பூபிகாநியாயம் : தடியை எலி தின்றது என்றாற் போல்வது. 8. கைமித்திகநியாயம் : அதுவே அப்படி ஆனால் மற்றதற்குக் கூறுவானேன் எனற்பாலது. 9. தூலாருந்ததிநியாயம் : தூலமாய் எதிர்தோற்றும் பொருளைக் காட்டி அருந்ததியைக் காட்டுதல் போல்வது. 10. ஸ்வாமிபிருத்ய நியாயம் : ஆண் டான் அடிமைத்திறம் கூறுவது. 11. மயூரநிருத்தநியாயம் : ஒன்றைத் தாபிக்கும் வழி மற்றொன்று விட்டுப் போதலுக்கு மயிலின் நடக்கையை எடுத்துக் காட்டுவது. 12. கபோதகநியாயம் : புறாக்கள் ஏதேனும் ஒரிடத்திலிறங்கப் பெறின் பலவும் ஒருங்கே இறங்குவது போல்வது.13. குணாக்கரநியாயம் : ஒரு புழு யாதே னும் ஒரு மரத்தினை அரித்துச் செல்லுகைகையின் அம்மரத்தில் அதனால் உண்டாகிய இரேகைகள் எழுத்து போல் தோன்றுவது. இது ஒன்று செய்ய ஒன்றாய் முடிவது 14. காகாக்ஷோகோள கதியாயம் : காக்கையின் இருகண்களுக்கும் ஒரு மணியே நின்று உதவுவது போல, ஒரு பொருளே நின்று இருபக்ஷத்தும் உதவுவது. 15. தேகளீ தீபநியாயம் : வாசற்படியிலிட்ட தீபம் வீட்டினுள்ளும் புறமுமாகிய இருபுறத்து இருளையும் நீக்குதல் போல் ஒரு பொருள் இடையினின்று இரண்டிடத்தும் பயன்றருவது. 16. பிராமணவசிட்டநியாயம் : பிராமணர் வந்தார் என்றபோது அவருள் ஒருவராகிய வசிட்டரும் வந்தார் என்பது போதருமாயினும், விசிட்டம் பற்றி வசிட்டரை வேறு பிரித்துக் கூறுதல்போல், ஓரினப்பொருளைக் கூறுகையில் அவற்றுள் தலைமைபற்றி ஒன்றை வேறெடுத்துக் கூறுதல் போல்வது. 17. அந்தகூப்பதனநியாயம் : குருடனொருவனுக்குக் கண்ணுள்ளானிவ்வழி செல்லுக என வழிகாட்டியும் அவ்வழி செல்லாது வேறு வழி சென்று கிணற்றில் விழுவதைப்போல்வது. 18. சியாலசாரமேயநியாயம் : ஒருவன் தன் வீட்டிலிருக்கும் நாய்க்கிட்ட பெயரே தன்மைத்துனனுக்கு மிருத்தல் நோக்காது, அந்த நாயைத் தன் வீட்டிலிருந்து விலக்க எண்ணியபோது, தன்மனைவியை நோக்கி நாயின் பெயரைக் கூறியதை வீட்டினின்றும் விலக்குக என, மனைவி (சியாலன் ~ மைத்துனன்) மைத்துனனை விலக்கக் கூறியதாக எண்ணி விலக்கியது போல்வழி. இது பெயர் இரண்டிற்கும் ஒன்றாயிருத்தல் பற்றி, ஒன்றை மற்றொன்றாக ஆராயாது, செய்யும் நெறி, 19, சந்தோபசுந்தநியாயம் சுந்தன், உபசுந் தன் இருவரும் திலோத்தமை பொருட்டு ஒருவரோடொருவர் போரிட்டு மாய்க்ததை யொப்பது. இது ஒன்றினை யொன்றொழிக்கும் நெறிபோல்வது. 20. அந்தகஜநியாயம், அந்த ஹஸ்தி நியாயம் : யானை காண விரும்பிய குருடன் ஒருவன், யானையின் ஒருறுப்பைத் தடவிப் பார்த்து யானையின் வடிவை நிச்சயிப்பது போல்வது. இது ஒன்றினை முற்ற ஆராயாது ஒரு பாகத்தினை மாத்திரம் பார்த்து நிச்சயிப்பது போல்வதோர் நெறி.21. அசமலோட்டிர நியாயம் : ஒரு கல்லுடன் மண்ணாங்கட்டியை ஒப்புநோக்கின் மண்ணங்கட்டி மெல்லிதாகவும், அத னையே பஞ்சுடன் ஒப்புநோக்கின் மண்ணாங்கட்டி வலியதாகவும் கொள்ளப் படுதல்போல், ஒன்றொடு நோக்கி ஒன்றற்கு வன்மை மென்மைகள் கற்பிக்கப்படுதலா திய ஒரு நெறி. பின் வருவனவற்றை விளக்கின் விரியுமாதலின் அறிந்தார்பால் கேட்டுணர்க. 22, சாகா சங்கரமணரியாயம். 23. பசு பாகநியாயம். 24. வரகோஷ்டி நியாயம். 25. லீடாலீடநியாயம். 26. கௌதமபசு நியாயம். 27. அந்த ஜடகநியாயம். 28 அந்தபரம்பராநியாயம், 29, அசோகவநிகா தியாயம். 30. காகதந் தகவேஷணநியாயம், 31, கூபயந்தர தாடிகாநியாயம், 32. கட்டகுடி பிரபாதநியாயம், 83. அருணா ஷரநியாயம். 34. நிருபநாபித புத்திர நியாயம். 35. பங்கப்ரஷாளனநியாயம். 36. பிஷ்டபேஷணநியாயம். 37. பீஜாங் ஞாநியாயம். 38. லோகஜும்பகநியாயம், 39. வந்நீதூமமியாயம். 40, விஷக்கிரிமி நியாயம், 41, விஷவிருக்ஷநியாயம். 42. விருத்தகுமாரி வாக்கியநியாயம், 43, சாகா சந்திரநியாயம். 44. விம்ஹாவலோகநியா யம், 45 ஸுசிகடாகநியாய்ம், 46. ஸ்தூணாங்கநகநியாயம். 47. ரோடிபக்ஷணநியாயம் 48. லூதா தந்துநியாயம்: 49. மணி மந்திராதிநியாயம். 50, கோபலீவர்த்த நியாயம். 51. உஷ்டாகண்டக போஜக நியாயம், 52, அந்தபங்கு நியாயம். 53. அந்தகோலாங்குலரியாயம், 54. சாவிநீ நியாயம். 55. திரணாரணீ மணிநியாயம். 56. தண்டசக்ரநியாயம். 57, இராசபுரபி ரவேசதியாயம். 58. சங்கவேளாநியாயம். 59. சதபத்ரபேதநியாயம். 60, சிருங்ககி ராஹிகாநியாயம், 61. ஸ்தவிரலகுடநியாயம், முதலிய,

நியோசிகை

ஒரு தேவதை, பாதாரம், பரதிரவ்வியம், கிரகிக்கத் தூண்டுபவள். இவளுக்கு மத்தை, உன்மத்தை, பிரகிருஷ்டை, நாரி என நால்வர் குமரிகள். இவர்கள், கிரகத்தர் முதலியோர், தமது பாட்டன் பூட்டன் முதலியவர்க்குப் பலியிடா விட்டால் அவர்கள் செல்வத்தைக் கெடுப்பவர்கள்.

நிரக்ஷரேகை

பூமியின் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் (90) டிகிரியில் பூமத்யபாகத்திலுள்ள ரேசை.

நிரஞ்சரன்

சணமுகசேநாவீரரில் ஒருவன்.

நிரநுயோச்யாது போகம்

நிக்ரகத்தாத் பிராத்தனாகாதவனை நிச்சகஞ் செய்யவேண்டுமென்று நிக்கிரகிக்கிறது. (இது ஏவப் படாதவனை ஏவுதல்) (சிவ சித்.)

நிரனிரையணி

சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது. இதனை யதாசங்கியாலங்கார மென்பர் வடநூலார். (தண்டி.)

நிரமித்திரன்

நகலன் குமரன்.

நிரம்ப அழகியர்

ஒரு தமிழாசிரியர். இவர் வேதாரண்யத்தில் சைவவேளாளர் குலத்தில் தோன்றிக் கல்வி பயின்று வல்லவராய் ஞான நூல் அறியவேண்டி விருப்பம் கொள்ளக், கருணை ஞானப்பிரகாசசுவாமிகளிடம், சிவ தீக்ஷை பெற்று மதுரையில் வசித்து இருந்தனர். இவர் ஒருநாள் ஒரு மரத்தடியில் சிவத்தியானத்துடன் இருக்கையில் அவ்வழி சென்ற சிற்றாசன் ஒருவன் அவ்விடம் தனித்து மரத்தடியில் உட்கார்ந்திருப்பவர் யாரென்று வினவ அவ்வேவலர் இவர் இருந்த நிலையையும் இவரது தேக அடையாளங்களையும் கூற அரசன் இவரை அறிந்தவன் ஆதலாலும் இவர் தேகத்திலிருந்த நுணாக்காய்க் கிரக்தியாலும் நிரம்ப அழகியரோ என்றனன். அதுவே பெயராயிற்று. இவர் சாலிவா சனசகம். (1430) க்கு மேலிருந்தவர் என்பர். இவர் திருவிளையாடற் புராணம் பாடிய பாஞ்சோதி முறிவருடன் வாசித்தவராம். இவர் செய்த நூல் சேதுபுராணம், சிவஞான சித்திசுபக்ஷ உரை, திருவருட்பயனுரை. (சேதுபுராணம்).

நிரம்பையர்காவலர்

அடியார்க்கு நல்லார்க்கு ஒரு பெயர்,

நிரர்த்தகம்

பிரதிவாதி ஒன்றுஞ் சொல்லாதிருக்கையில் தான் வீண் வார்த்தையைச் சொல்லுகை. (சிவ ~ சித்.)

நிராங்காரன்

அல்லமதேவருக்குத் தந்தை.

நிரீசுாசாங்கியன் மதம்

பிரகிருதி மூலம், புரியஷ்டகம், விகிர்தி என மூன்றாமெனவும் அது தூலசூக்ஷ்ம பரமெனப் பெயரடைந்து சுத்தபுருடன் சந்நிதானத்தில் பாலன் சேட்டை புரிவதுபோல் உலகம் யோனி பலவாய்ப்பிறந்து ஒடுக்குமென வும் தெய்வம் வேண்டா எனவும் கூறுவன், (தத்துவநிஜா துபோகசாரம்.)

நிருகமகாராசன்

1. இவன் இக்ஷவாகுவம் சத்து வைவச்சுதமதுவின் இரண்டாம் புத்திரன். இக்ஷ்வாகு தம்பியெனவுங்கூறுவர். இவன் புஷ்காஷேத்திரத்தில் பிராமணருக்குக் கோதானஞ் செய்தனன், தானஞ் செய்த பசு மீண்டும் அரசன் பசுக்கூட்டத்தில் வந்தது. அதை மீண்டும் அரசன் வேறொருவருக்குத் தானஞ் செய்தனன். தானங்கொண்ட இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் மாறுகொண்டு அரசனையணுகிச் சிலநாள் காத்திருந்தும் அரசன் குறைகளைக் கேளாததினால் நீ எழைகளுக்குத் தரிசனங் கொடாததினால் ஒணானாகவெனச் சபித்தனர். இவ்வரசன் தான் வசிக்கச் சுகமாகப் பள்ளங்களைச் செய்து கொண்டு வசித்துக்கொண் டிருந்தனன். இவனுக்குச் சாபம் கிருஷ்ணாவதாரத்துக் கிருஷ்ண மூர்த்தியால் நீங்கிற்று, 2. உசீநரன், இரண்டாங் குமரன்.

நிருசஷ்சு

சுநிதன் குமரன். இவன் குமரன் நளன்.

நிருசிம்ம ஜயந்தி

இது வைகாசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பிரதோஷ சமயத்தில் பகல் நிசாமுகத்தைச் சமீபிக் குஞ் சமயத்தில் அநுட்டிப்பது. அவ்வேளை நிருசிம்மமூர்த்தி பிறப்பு. இதில் சோமவாரங் கூடில் நலம். இந்நாளில் விரதம் ஆயிரம்த்வாதசி பலனுண்டு. இதில் ஸ்வாதிநக்ஷத்திரம் கூடில் மிகு புண்யம். இந்த விரதத்தை வாசுதேவன் என்னும் வேதியன் அநுட்டித்துப் பிரகலாதனாகப் பிறந்தான்.

நிருடலக்ஷணை

நீலஞ்சூடினாள் என்பதில் நீல குணத்தைவிட்டுக் குணியை உணர்த்தல். (தரு.)

நிருதன்

1. வைவச்சு தமநுவின் இரண்டாம் புத்ரன். இக்ஷவாகு தம்பி. 2. உசீநரன் இரண்டாம் புத்ரன்.

நிருதி

இவன் பூர்வஜன்மத்தில் பிங்கலாக்ஷன் என்னும் வேடன், இவன் வேடனாயிருந்தும் தீமை செய்யும் வேடர்களை அடக்கி வருவன். இவ்வகை ஒழுகி வரும் நாட்களில் புண்ணியத்தால் யாத்திரை செய்வோரைச் சிலவேடர் மறுக்க அவ்வேடர் பலருடன் இவன் போரிடுகையில் மாண்டு நிருதியாயினன். இவன் தவத்தால் தென்மேற்குத் திசைக்குக் கடவுளாயினன். தேவி தீர்க்காதேவி; பட்டணம், கிருஷணாங்கனை; வாகனம் நரவாகனம்; (பூதம்) ஆயுதம் குந்தம், இவன் உலகத் தை, இழிந்தவராயினும் நன்மை செய்தவர் அடைவர். இவர் வாகனமாகிய பூதம் பராசரமுறிவர் வேள்வியா லிழுக்கப்படச் சிவபெருமானை யெண்ணி அது முறையிடச் சிவபிரான் வேள்வியை நிறுத்தக் கட்டளையிட்டதால் நிறுத்த, உயிர் பெற்றது. (காசிகாண்டம்.) 2. முதல்வள்ளல் எழுவரில் ஒருவன். 3. இராமனென்னும் மநுப்புத்திரனுக்கு மனைவி.

நிருத்தக்கை

(30) அவை சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்ரகீர்ணம், அருத்தரேசிதம், அராளகடகாமுகம், சூவித்தவத்திரம், ஆசிமுகம், இரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப்பிரதியோகம், கருடபக்கம், தண்டபக்கம், ஊர்த்துவ மண்டலி, பக்கமண்டலி, உரோமயண்டலி, உரப்பார் சுவார்த்த மண்டலி, முட்டிக்சுவத்திகம், நளிநீபதுமகோசம், அலப்பதுமம், உற்பணம், இலளிதை, வலிதை என்பனவாம்.

நிருத்தி

ஒரு தருக்க நூல்.

நிருபஞ்சயன்

மேதாவி குமரன். இவன் குமரன் அபூர்வன்.

நிருபதுங்கன்

ஒரு பல்லவ அரசன், இவன் தந்திவக்ரன் குமரன்; இவன் சதுர்வேதி மங்கலமெனுங் கிராமத்தைப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்ததாகப் பல்லவர் வம்சாவளியில் கூறப்பட்டுள்ளது. (சுவல்ஸ்.)

நிருபன்

பிரகலாதன் குமாரன்.

நிருபருத்ரன்

நரேந்திரமிருகராசன சகோதரன் ஹேஹயவம்சத்தவன்.

நிருமலதானம்

கடவளுவப்பெய்த ஞானிகளுக்கு தவல்,

நிருலோமன்

திருவேங்கடத்தில் தவஞ்செய்து கொண்டிருந்து ஸ்ரீராமமூாத்தி எழுந்தருளத் தரிசித்துப் பரமபதமடைந்தவன்.

நிருவண முகத்தினங்கங்கள்

பதினான்கு. இவை நாடகவிகற்பங்கள். சந்தி, விரோதம், கிரதனம், கிண்ணயம், பரிபாடனம், பிரசாதம், ஆனந்தம், சமயம், கிருதி, ஆபாடனம், உபகூகனம், பிரசத்தி, பிரசனம், சங்காரம்,

நிருவாணமாவது

விளைந்தபோ கம் வீதிவரையாலறுத்துப் படுத்துவைத்து துகளுங்களைந்து கொண்டுண்மகிழ்ந்தாற் போலக்கொள்வது. (வீர ~ சோ.)

நிருவிருதி

விருஷ்ணி குமரன். இவன் குமரன் தசாருகன்.

நிரைநிரை

இது பொருள் கோளில் ஒன்று. பெயரும் வினையுமாகிய சொல்லையும் அவை கொண்டு முடியும் பயனிலைகளையும் வேறுவேறாக நிறுத்தி முறையாகவேனும் எதிராகவேனும் நிறுத்தி இதற்கிது பயனிலையென்பது படக்கூறுவதாம். (நன்.)

நிரையசை

குறிலிணையேனும், குறினெடிலேனும் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது.

நிரோதினி

ஒரு சத்தி,

நிர் உரத்தசஷன்

தாமச மநுவைக் காண்க.

நிர் மோகன்

1. சாவர்ணிமதுப் புத்திரன். 2. பதின்மூன்றா மன்வந்தரத்துருஷி,

நிர்மித்திரன்

1. நகுலனுக்கு ரேணுவதியிடம் பிறந்த குமரன். 2 யுதாயுதாயு குமரன். இவன் குமரன் சுநக்ஷத்ரன்.

நிர்வாக்கியன்

புரஞ்சயனுக்கு நண்பன்.

நிர்வாண தீக்ஷை

மோக்ஷத்தைத் தரும் தீக்ஷை அது (4) வகை, சத்யோ நிர்வாணம், அசத்யோ நிர்வாணம், லோகதர்மிணி, சிவதர்மிணி என்பன. சத்யோ நிர்வாணம் : ஆசாரியர் ஷடத்வசோதனை சிகரச்சேதம் ஓமஞ்செய்து சிவபதத்தில் ஆன்மாவைச் சேர்த்த மாத்திரையில் தேக நீக்க முண்டாவது. அசத்யோ நிர்வாணம்: கர்மத்தின் முடிவில் ஆன்மாவைச் சிவ பதத்தில் சேர்ப்பது. உலோகதர்மிணி : பாபகர்மங்களைச் சோதித்துப் புண்யகர்மங் களைச் சோதியாமல் இவ்வாழ்வானுக்குச் செய்யப்படுவது, சிவதர்மிணி : புண்ணிய பாபங்களளிரண்டையுஞ் சோதித்து மோக்ஷவிருப்புள்ள துறவிக்குச் செய்யப்படுவது. (சைவபூஷணம்.)

நிர்வாணருஷிகள்

பதுமனாரா மனவந்தரத்துத் தேவர்.

நிர்வாணிநிலை

ஞாயிறு, வியாழம்,தென் கிழக்கு, திங்கள், வெள்ளி, தென்மேற்கு செவ்வாய், சனி, வடமேற்கு புதன், வட கிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் நன்று, முற்பக்கந் தீது இவள் நிற்குந்திசை யில் போகல் ஆகாது.

நிர்விர்த்தி

திருஷ்டி குமரன்,

நிர்விஷசர்ப்பம்

திவ்யம், சாலகம், பாதகம், விருக்ஷசாயி, கலசி, புட்கரம், க்ஷரி, வாகினி, சாரவாகினி, வருஷாப்புவிகம், சோதிரதம், சுட்கம், கோத்திரம், பலாக்கம், கசபக்ஷம், பிலவோற்பேதம் எனப் பதினாறு வகை

நிறவிந்தி

ஒரு நதி.

நிறையறிகருவி

இது, இரும்பினால் பல கைபோன்று முனையில் எண்ணினளவைக் காட்ட வைக்கப்பட்ட இரும்பு பிம்பத்தைப் பெற்ற அளவு கருவி. இதில் வைக்கப்பட்ட கனப்பொருள்களின் நிறையை இதுகாட்டும், இவ்வாறே மேனாட்டார் ஒருவன் யாத்திரை செய்த அளவைக் காணக் கடிகாரம் போன்று பதவளவறி கருவிகண்டு பிடித்திருக்கின்றனர். அதனைப் பீடோமிட்டர் என்பர். (Pedometer.)

நில அளவு

ஐயாயிரமுழம் ஒரு குரோசம், ஒரு குரோச அளவுள்ளதும், ஆயிரம் கருட அளவுள்ள வெண்பொற் காசுகள் அரசிறையாகப் பெற்றதும் கிராமம் எனப்படும். அந்தக் கிராமத்தின் அரைக்கூறு பல்லி. பல்லியின் அரைக்கூறு கும்பம் எனப்படும், பிரமன் கொள்கைப்படிக் (2.1/2) கோடி முழங்களாதல் (2500) சதுரநிவர்த் தனங்களாதல் ஒரு குரோசம், நடுவிரலினடுவண் உள்ள இரண்டு ரேகைகளி னடுப்பாகம் அங்குலம். அங்குவம் (24) கொண்டது முழம், முழங்கள் (4) கொண்டது கோல், முழங்கள் (5) கொண்டது இலகு. (25) கோல்கள் கொண்டது நிவர்த்தனம். (25) நிவர்த்தனங்கள் பரிவர்த்தனம்,

நிலக்கரி

1, நெடுநாட்களுக்கு முன் கடல்களாலும் ஆறுகளாலும் மூடப்பட்ட பூமியில் இருந்த மகாலிருஷங்கள் மண்ணில் உருக்கெட்டுக் கரியாக மாறுவது. 2. இது பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படுவது. கருநிறமும், மிருதுவும், பளபளப்பும் உள்ளது. யந்திரங்களுக்கும் உலோகங்களை உருக்குதற்கும் அடுப்பெரிக்கவும் உதவும், டெக்கான், இங்கிலாந்து முதலிய தேசங்களிலுண்டாவது,

நிலங்கு

இது ஒருவகை நிலங்கீறி உணவு கொள்ளும் பறவை.

நிலந்தரு திருவிற்பாண்டியன்

கடைச்சங்கம் நிறுவிய முடத்திருமாறனுக்கு ஒரு பெயர். இவனுக்குச் சயமாகீர்த்தி யெனவும் ஒருபெயர் உண்டு, சயமாகீர்த்தியைக் காண்க.

நிலன்

கத்ருகுமரன் நாகன்.

நிலமண்டில் வாசிரியப்பா

எல்லா அடிகளும் அளவொத்த நாற்சீரடிகளாக வருவன. (யாப்பு ~ இ.)

நிலம்

ஐவகைப்படும், அவை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அவற்றுள் குறிஞ்சி, மலைசார்ந்த நிலம், பாலை, சுரஞ்சார்ந்த நிலம், முல்லை, காடுசார்ந்த நிலம், மருதம், ஊர்சார்ந்த நிலம், நெய்தல், கடல்சார்ந்த நிலம். சொன்ன முறைப் படி குறிஞ்சிக்குத் தெய்வம், குமாரக்கட வுள், உயர்ந்தோர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி; தாழ்ந்தோர், குறவர், கானவர், குறத்தியர்; புள், கிளி, மயில்; விலங்கு, புவி, கரடி, யானை, சிங்கம்; ஊர், சிறுகுடி; நீர், அருவி, சுனை; பூ, வேங்கை, குறிஞ்சி, காந்தள்; மரம், சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாங்தம் மூங்கில், உணா, மலைநெல், மூங்கிலரிசி, தினை; பறை, தொண்டகம்; யாழ், குறிஞ்சியாழ்; பண், குறிஞ்சிப்பண்; தொழில், வெறியாடல், தேனழித்தல், ஐவன மென்னும் மலைநெல் விதைத்தல், தினை காத்தல், கிழங்கு அகழ்தல், அருவியாடல், சுனையாடல் முதலியவாம். இது கதிரும் யாமமும், முன்பனியுமாகிய இருபொழுதுகளையுமுடைத்து. இந்நிலத்து வசிப்போருக்கு உதிரத்தைப் பீடிக்கின்ற சுரமும், வயிற்றில் ஆமக்கட்டியும், வல்லைக் கட்டியும், உண்டாம். சிலேஷ்மம் மீறும். பாலைக்கு: தெய்வம், கன்னி, உயர்ந்தோர், விடலை, காளை, மீளி, எயிற்றி. தாழ்ந்தோர், எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், புள், புறா, பருந்து, கழுகு: விலங்கு, செந்நாய்; ஊர், குறும்பு, நீர், குழி. கூவல்; பூ, கரா, மரா, உழிஞை, மரம், பாலை, ஓமை, இருப்பை, உணவு வழி பறித்தன, பதியிற்கவர்ந்தன; பறை, துடி; யாழ், பாலையாழ்; பண்,பஞ்சுரம் தொழில் : போர்புரிதல், சூறையாடல்; பொழுதுவேனில், நண்பகல், பின்பனி என்பன. இந்நிலத்தார்க்கு முத்தோஷங்களும் அவற்றால் வரும் நோய்களும் உண்டாம். முல்லைக்கு : தெய்வம் ; நெடுமால்; உயர்ந்தோர் : குறும்பொறை நாடன், தோன்றல்; மனைவி, கிழத்தி, தாழ்ந்தோர், இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்; புள் காட்டுக்கோழி, விலங்கு : மான், முயல்; ஊர் : பாடி, நீர் : கான்யாறு, குறுஞ்சுனை பூ : குல்லை, முல்லை, தோன்றி, பிடவம்; கொன்றை, காயா; மரம் குருந்து; உணவு, வரகு, சாமை, முதிரை; பறை : எற்றுப்பறை; யாழ் : முல்லையாழ்; பண் : சாதாரி; தொழில் : சாமை வரகுவிதைத்தல், கடாவிடல், கொன்றைக்குழலூதல், ஆடு மாடுகள் மேய்த்தல், விடைதழுவல், குரவையாடல், கான்யாறாடல்; பொழுது கார்காலமு மாலையுமாம். இந்நிலம் பித்தாதிக்கமான இடமாம், அதனுடன் வாததோஷமும் அதிகப்படும். இவ்விருவகைத் தோஷங்களால் பல ரோகங்கள் உண்டாம் மருதநிலம் : தெய்வம் ; இந்திரன், உயர்ந்தோர் ஊரன், மகிழ்நன் கிழத்தி மனைவி; தாழ்ந்தோர் ; உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்; புள் : வண்டானம், அகன்றில், நாரை, போதாகம்புள், குருகு, தாரா; விலங்கு :எருமை, நீர் : யாறு, கிணறு, குளம்; பூ; தாமரை, கழுநீர், குவளை, காஞ்சி வஞ்சி மரம் : மருது; உணவு. செந்நெலரிசி வெண்ணெலரிசி; பறை : கிணை முழவு; யாழ் : மருதயாழ்; பண் : மருதம், தொழில் : விழாக்கொளல், வயற்களைகட்டல், அரிதல், கடாவிடல்; குளங்குடைதல், புனலாடல், கலம் விடுதல். இந்நிலம் நல்லநீர் வளப்பம் பொருந்தினால் முத்தோஷங்கலால் உண்டாகும் தோஷங்களைப் போக்கும்; அன்றியும் இந்நிலப் பொருள்களை உண்பவர் தம் பேர்சொல்லினும் நோய்கள் அணுகா. நெய்தனிலம் : தெய்வம் : வருணன். உயர்ந்தோர் : சேர்ப்பன், புலம்பன், பாத்தி, நுளைச்சி. தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர். புள் : காக்கை, விலங்கு. சுறா. ஊர் : பாக்கம், பட்டினம், நீர்: உவர் நீர்க்கேணி, கவர்நீர். பூ : நெய்தல் கைதை, முண்டகம், அடம்பு. மரம் : கண் டல், புன்னை, ஞாழல், உணவு : மீன், உப்பு, முதலிய விற்றலால் பெறுவனவும், மீனுமுணங்கலும், பறை : கோட்பறை, நாவாய்ப்பம்பை. யாழ் : விளரியாழ். பண் : செவ்வழி, தொழில் மீனுப்புப்படுத்தல், அவை விற்றல், மீனுணக்கல், புள்ளோப்பல், கடலாடல், காலம் : ஆதித்தன் அஸ்தமனம், இந்நிலம் உவர்ப்பு உள்ளது ஆதலின் பித்த வாத சேர்க்கை உள்ளதாம். இதில் வசிப்போர் தேகத்து ஒருவித தடிப்பும், பாதத்துச் சிலீபதரோகமும், குடலண்ட விருத்தியும் பெறுவர். பின்னும் இந்நிலம் வன்பால், மென்பால், இடைப்பால் என்று மூன்று வகைப்படும். அவற்றுள் வன்பால் குழியின் மண்மிகுவது. மென்பாலாவது மண்குறைவது. இடைப்பாலாவது ஒப்பது.

நிலாழகி

இதனைச் சகேராபக்ஷி யென்பர். இது சந்திரோதய காலத்தில் சந்திரிகையையுண்டு ஜீவிப்பதென்பர். (உல ~ வ.)

நிலை

(4) பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்யாலீடம். இவை விற்கொடுத்து அம்பினை எய்வார்க்கு நிலை. ஒரு காலில் நின்று ஒருகால் மடக்கல் பைசாசம், இருகாலும் பக்கமாக வளைய மண்டலித்தலே மண்டலம், வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறலே ஆலீடம், வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டவித்தலே பிரத்தியாலீடம்.

நிலை ஜலயந்திரம்

1. (Brahmah Press) இது, திரவபதார்த்தமாகிய நீர் முதலியவற்றை அழுத்துஞ் சக்தியால் மேல்கொண்டு வருவது. இது பஞ்சுமூட்டை முதலியவற்றை அழுத்தவும் உதவும். 2. இது, நிலையாகவுள்ள ஜலத்திற்குள்ள சக்தியை நமக்குத் தெரிவிப்பது. இதனைப் பர்மா பிரெஸ் என்பர். இது பஞ்சு மூட்டைபோன்ற மூட்டைகளை அழுத்திக்கட்டும் நீர்சக்தி யந்திரம்.

நிழலின் மறைவான்

திருமங்கையாழ்வாரின் மந்திரியரில் ஒருவன்.

நிவரையெளியந்தியனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.)

நிவர்த்திகலை

இது சிவாகமம் கூறிய கலாபுவனங்களில் ஒன்று. இதில் (108) அசுத்த புவனங்கள் உள என்று கூறும். நீவர்த்தி கலையில் கீழ்பால் இந்திர திசையிலுள்ள உருத்திரர் கபாலீசன், சடன், புத்தன், வச்சிரதேசன், பிரமர்த்தனன், விபூதி, அவ்வியயன், சாத்தன் பினாகி, திரிதசாதிபன், எனப்பத்து உருத்திரர். இந்திரனைக் கீழ்த்திசைக் காவவின் நியமித்து வைகும்புவனங்கள் பத்து. மேலும் அவ்வத் திசையிற் கூறப்படும் உருத்திரர் அவ்வத்திசைக் காப்பாளராகிய அங்கியங்கடவுள் முதலியோரை அவ்வத்தொழிவில் நியமித்து அவர் வழிபட வீற்றிருப்பசென்றறிக. தென் கீழ்பால் அங்கித் திசையின் அங்கி யுருத்திரன், உதாசனன், பிங்கலன், காதகன், அரன், சுவலனன், தகனன், பப்புரு, பதுமாந்தகன், கயாந்தகன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. தென்பால் நீ இயமன்றிசையில் யாமியன், மிருத்தியு, அரன், தாதா, விதாதா, கருத்தா, சையோத்தா, வியோத்தா, தருமன், தருமபதி என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. தென்மேல்பால் நிருதிதிசையில் நிருதி, மாரணன், அந்தர, குரூரதிருட்டி, பயரனகன், ஊர்த்துவகேசன் விருபாக்கன், தூமிரன், உலோகிதன், திமிட்டிரி என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. மேல் பால் வருண திசையிற் பலன், அதிபலன், பாசவத்தன், மாபலன், சுவேதன், சயபத்திரன், தீர்க்கவாகு, சலாந்தகன், மேகநாதன், சுநாதன் என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. வடமேல்பால் வாயு திசையிற். சீக்கிரன், இலகு, வாயுவேகன், சூக்குமன், தக்கணன், கயாந்தகன், பஞ்சாந்தகன், பஞ் சசிகன், கபர்த்தி, மேகவாகனன் என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து, வடபாற் குபேரனுஞ் சோமனும் வைகுந் திசையில் நிதிசன், உருபவான், தன்னியன், சௌமியதேகன் சடாதரன், இலக்கு மிதரன், அரதனதரன், சீதரன், பிரசாதன், பிரகாமதன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து, வடகீழ்பால் ஈசான திசையில் வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், ஞானபுக்கு, வேதபாரகன், சுரேசன், சருவன், சேட்டன், பூதபாலன், பலிப்பிரியன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து,கீழ்க்கண்ணதாகிய மாயோன்றிசையில் இடபன், இடபதான், அருந்தன், குரோதனன், மாருதாசனன், கிரசனன், உதும்பரன், ஈசன், பணிந்திரன், வச்சிரதமிட்டிரி என்னும் உருத்ரர் வைகும் புவனம்பத்து. மேற்கண்ண தாகிய பிரமன் திசையிற். சம்பு, விபு, கணாத்தியகன், திரியக்கன், திரிதசேசன், சமூவாகன், விவாகன், நபன், இலீச்சு, திரிலோசனன் என்னும் உருத்திரர் வைகும்புவனம்பத்து. எல்லாவற்றிற்கும் மேலாக வீரபத்திரன், பத்திரகாளி, என்னுமிவர் வைகும் புவனம் இரண்டு, ஆகச் சாதாரண புடவிதத்துவத்திற் புவனம் நூற்றெட்டுங் கண்டுகொள்க. இந்த நூற்றெட்டுப் புவனமும் பிருதிவியண்டம் ஆயிரங்கோடியினும் இவ்வாறே வேறு வேறுள்ளன. (சிவஞான பாடியம்.),

நிவாதகவசம்

இது காற்றும் நுழையாத திண்ணிய கவசம்.

நிவாதகவசர்

எக்காலத்தும் நீங்காத கவசத்தைப் பெற்றவர். இவர்கள் பிரகலாதன் வம்சத்து அசுரர். இவர்கள் முப்பது கோடியர், இவர்களிருக்கை மேற்றிசைக் கடலுக்கருகிலுள்ள தோயமாபுரம், யமனை நோக்கித் தவம்புரிந்து மகாவரம் பெற்றவர்கள். இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் பிரமன் சொற்படி இவர்களை நட்புக்கொண்டு இவர்கள் பட்டணத்தில் (99) திங்கள் தங்கிவந்தனன். இவர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். தேவர்கள் அருச்சுநன் சிவமூர்த்தியிடம் தவத்தால் பாசுபதம் பெற்றதறிந்து இந்திரனிடம் கூற இந்திரன் அருச்சுநனை இவர்கள் மீது யுத்தத்திற்கு ஏவுவித்தனன், அதனால் இவர்கள் கருவற்றனர்.

நிஷக்கிரியன்

தத்வஞானத்தை யுடையவனான சந்நியாசி.

நிஷதன்

1. (சூ.) அதிதியின் குமரன். இவன் குமரன் நளன். 2, குரு குமரன். 3. சீராமன் பௌத்ரன். குசன்புத்திரன்.

நிஷதம்

1, நிஷதனால் ஆளப்பட்டதேசம், 2. ஒருமலை இந்நாட்டில் உள்ளது. 3. Narwar, The Capital of Nalaraja. This is also called Nalapura.

நிஷதாதிபன்

பாரதவீரரில் ஒருவன். கால புத்திரன் அம்சம்.

நிஷாதன்

பிராம்மணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன். தொழில் மீன் பிடிப்பது. (மநு.)

நிஷாதர்

கருடனால் பக்ஷிக்கப்பட்ட வேடர்,

நிஷிதா

பாகுகனைக் காண்க. இவன் வம்சத்தவர், நிஷிதா காடுகளில் வசித்தனர்.

நிஷ்ஃருதி

அக்னி விசேடம்.

நிஷ்டாநுபூதி

தாம் நிஷ்டையில் அனுபவித்த அநுபவம் கூறும் நூல். இது ஆறுமுகசுவாமிகளால் இயற்றப்பட்டது.

நிஷ்டூகன்

கத்ருகுமரன். நாகன்.

நீக்கத்தக்கவா

அபத்னீ கன், பொய்சாக்ஷி சொல்வோன், கிராம புரோகிதன், துஷ்டன், விஷமிட்டவன், சடன், சோதிஷசீவி, குண்டன், பௌநர்பவன், விடன், அதிவிர்த்தன், அதிக முண்போன், தந்தைக் கிணங்காதவன், அபஷ்யபு, பஞ்சாங்கம் சொல்வோன், துச்சீலன். (முதலியவர்.)

நீசகன்

அபிமன்யுவுக்குப் பிறகுவந்த ஏழாவது அரசன். இவன் அரசில் அத்தின புரம் முழுகியது.

நீதிநெறிச்சோழன்

ஒரு சோழன். இவன் காலத்தில் வல்லான் என்பவன் அரசர்களை வருத்திக் கொண்டிருக்க அவனை அதிசூரன், சூரன், என்னும் செங்குந்தரால் அடக்கி வென்று வந்த அவ்வீரருக்குப் பரிசு அளித்தவன்.

நீதிபதி

உலகியலையும், நூன் முறையையும், நீதியையும் அறிந்தவன். (சுக் ~நீ)

நீபன்

1. பிருதுகுமரன். இவனுக்கு நூறு பிள்ளைகள் உண்டானார்கள். இவன் குமரன் சமரன், இவன் காம்பீலிதேசத்து அரசன், 2. நபாசுனைக் காண்க.

நீராட அவசியம் வேண்டியகாலம்

தெய்வ வணக்கம் செய்யும் போதும், தீக்கனாக்காண் கையிலும், அசுசி உண்டான காலத்தும், உண்டதைக் கக்கின போதும், க்ஷெளாம் செய்து கொண்ட காலத்தும், உண்ணும் போதும், புணர்ச்சி உண்டானபோதும், பொழுதேற நித்திரை செய்தபோதும், இழிசநர்களைத் தீண்டினபோதும், மலசலங் கழித்தபோதும், நீராடல்வேண்டும்.

நீராடும் நீர்மை

தடாக முதலியவற்றில் நீராடுகையில் நீந்துதலும், நீரில் எச்சிலு மிழ்தலும், தண்ணீரைக் குடைதலும், தண்ணீரில் விளையாடுதலும் கூடா.

நீரின் வகை

மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், தண்ணீர், ஆற்று நீர். குளத்து நீர், தாமரைக் குளத்து நீர், ஏரிநீர், சுனை நீர், ஓடை நீர், கிணற்று நீர், ஊற்று நீர், பாறை நீர், அருவிநீர், அடவிநீர்; வயல் நீர், பாசி கலந்தநீர், கடல்நீர், துவர்நீர், வேர்கள் ஊறியநீர், இன்னும் பலவகை நீர்களுள, இவற்றின் குணங்களைப் பதார்த்தகுண சிந்தாமணியால் அறிக.

நீரூற்று

பூமியில் விழுந்த மழையைக் கிரகித்த மணற்பூமி தான் கிரகித்த நீரைமீண்டும் வெளியில் ஊற்றுவது.

நீர்

1. பஞ்சபூதங்களி லொன்றாய்த் தன் மாத்திரை காரணமான தாயுள்ள திரவம். இந்நீர் நில வேறுபாட்டால் பல ருசிகளையும் குணங்களையும் பெற்றிருக்கும். கடல் நீர் ஆற்று நீர், ஏரிநீர், குளத்து நீர், சுனை நீர், மடுநீர், கிணற்று நீர், முதலிய இவையன்றி, மழைநீர், பனிநீர், முதலியவும் உண்டு. 2. இது இரசதன் மாத்திரையில் தோன்றியது. இது சத்தம், பரிசம், ரூபம், கந்தமெனும் நான்கு குணமுடைத்தாய் நெகிழ்வித்துப் பதஞ்செய்தலாகிய தொழிற் பாட்டைப்பெற்று உயிர்களெல்லாம் தன்னாற் சீவித்தற்கேதுவாய் நிற்பது. இது, திரவ ரூபமாயினும், பனிக்கட்டி, ஆலங்கட்டி, ஆவி, காற்று எனும் வேறுருக்களைப்பெ றும். நீர், ஆவியாகப் பரிணமிக்கையில் அதன் இயற்கையில் (1700) பங்கு மிகுகின்றது. ஜலத்தில் உப்பின் குணமொன்று அதிகரித்திருக்கிறது. அக்குணம், கடின பதார்த்தங்கள் உண்டாவதற்கும், உண்பனவற்றிற்கு உரிசை தருதற்கும் உதவுகிறது. நீரில் ஒருபங்கு பிராணவாயுவும், இரண்பெங்கு ஜலவாயுவும், இருக்கிற தாகத் தற்கால ஆராய்ச்சிக்காரர் கூறுகின்றனர்.

நீர் எட்டுக்கால் பூச்சி

இது நீரின் அடிப்பாகத்திலும் மேற்பாகத்திலுமுள்ள பூச்சி. இன்னும் நீரில் பூமியில் வசிக்கும் பிராணிகளைப்போல் நீர்வண்டு, நீர்த்தேள், நீர்ச்சிலந்தி, நீர்க்குளவி, அட்டைகள். கிளிஞ்சல் பூச்சிகள், நத்தைப்பூச்சிகள்,முத்துப்பூச்சிகள், சங்குகள் முதலிய விலாங்கு : இதனை மலங்கு மீன் என் பர். இது பாம்பைப்போல் நீண்டவுட லும் முகமும், மீனைப்போல் வாலுமுள்ள பிராணி. இது கடலிலும், நன்னீரிலுமுண்டு, இவ்வினத்தில் தென் அமெரிகாவைச் சார்ந்த ஏரிகளில் ஒருவகை மின்சார சக்தியுள்ள விலாங்கு உண்டு. அவை தம்மிடமுள்ள மின்சாரத்தால் பிராணிகளை மயக்கி ஆகாரமாக்குகின்றன. இவை (20) அடி நீளமிருக்கிறதாம். விலாங்கினத்தில் அமெரிக்கா கடல்களில் ஒருவகை உண்டு. அவை கடலின் அடிப்பாகத்திலிருண்ட இடங்களிலிரைதேடத் தமது விளக்கொளி போன்ற கண்களை நீட்டி அவ்வெளிச்சத் தில் இரை தேடுகிறதாம். அதனை விளக்கு மீன் (Lantern Eel) என்பர். அமெரிகாவைச் சேர்ந்த மெக்சிகோ நாட்டுநீர் நிலைகளில் விலாங்குபோல் உருவமும் பல்லியின் கால்கள் போல் கால்கள் கழுத்தருகிலுமுள்ள ஒருவிதமுண்டென்று கூறுவர்.

நீர்களின் குணாதணங்கள்

நீர் கடவுளால் ஆன்மாக்கள் பொருட்டுப் பல இடங்களில் சுறக்கச் சிருட்டித்த திரவப்பொருளாம். அந்நீர், மழைநீர், ஆற்று நீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், குளத்துநீர், எரிநீர், கிணற்று நீர், ஓடைநீர், சுனை நீர், ஊற்று நீர், பாறை நீர், அருவிநீர், அடவிநீர், உப்பு நீர், சமுத் திரநீர் எனப் பலவிதப்படும். இவை நிலத்தியல்பால் அவற்றின் குணங்களும் வேறுபடும். இவற்றுள் மழைநீர், குளிர்ச்சியையும், நல்லறிவையும், ஆற்று நீர், சுக்கில விருத்தியையும், ஆலங்கட்டி நீர், குளிர்ச்சியையும் உண்டாக்கும். பனிநீர், சொரி, கிரந்தி இவைகளைப் போக்கும், குளத்து நீர், வாதரோகத்தையும், ஏரிநீர், வாயுவையும், உண்டாக்கும். கிணற்றுநீர், விதாகம், உஷ்ணம், தீபனம் இவற்றை நீக்கும். ஓடை நீர், மிகுந்து தாபத்தையும், சுனை நீர், சீத சுரத்தையும், உண்டாக்கும். ஊற்றுநீர், பித்தாதிகத்தைப் போக்கும். பாறை நீர், சந்தத சுரம் உண்டாம். அருவிநீர், இரத்த பித் தரோகத்தைப் போக்கும், அடவிநீர், தேகபாரம், வலியவிஷம் சுரம், உண்டாம், உப்புநீர், பித்தரோகத்தை உண்டாக்கும். சமுத்திர நீர், பலவித வியாதிகளைப் போக் கும், “பாசித்தண்ணீர் நோயாக்கும், பருத்தவோடைத் தெளிவூறல், நேசித்திடவே பிணியில்லை, நிலைநீர்க்குண்டாம். குடல் வாதம், மாசித்தண்ணீர் பித்தகற்றும், வளர்க்குஞ் சுரத்தைச் சாசுறல், தேசத் தண்ணீர்க் குணந்தன்னைத் தெளியச் சொன்னோந் திண்ணமிதே. ஆற்றுத் தண்ணீர்க் கழகுண்டாம், அடைந்த சுனைக்கு மகோதரமாம், தூற்று மாரிமெய்யிறுக்கும், தொலையாக்கிணறே கயந்திரட்டும், மாற்றுங் குளமே வியாதியில்லை, மாறாம் குளமே வியாதியுண்டு, தோற்று மது மொழிமயிலே துலங்குந் தண்ணிர்க் குணங் காணே. ” சந்திர சூரியகிரணங்கள், காற்று, அணுகாத்தும், கிருமி, தூர்வாசனை, சேறு,தடித்தல், சாகுதிரல், ருசியின்மை முதலிய நீர்கள் ஸ்நான பானங்களுக்கு உதவா. வெந்நீரால், எதிர்க்கின்றவுணவு, புளியேப்பம், குன்மம், சீதக்கட்டு, சுரம், காச முதலிய நீங்கும்.

நீர்க்காக்கை

இது, நீரிலுள்ள மீன்களைப் பிடித்துத் தின்பது. இது காக்கையின் உருவில் சிறிது வேறுபாடுடையது. இதன் அலகு நீண்டிருக்கிறது, பாதம் நீந்துவதற்கான தோற்பாதம். நிறம் கருமை, நீரில் நீந்தும் வன்மையுடையது. இதனை ஜைனர் ஜபானியர் பிடித்து மீனை பிடித்துத் தம்மிடங் கொடுக்கப் பழக்கியிருக் கின்றனர். அவ்வாறே அவை மீன்களைப் பிடித்து யஜமானரிடத்தில் கொடுக்கின்றன.

நீர்க்காக்தை

இது காக்கை உருவொத்து நீரிலுள்ள பிராணிகளால் வாழும் பறவை. நீரில் நீந்தி மீன்களை வேட்டையாடுவது, நீர்க்கரை யோரங்களிலுள்ள மரங்களில் கூடுகட்டி வாழும்.

நீர்க்குதிரை அல்லது ஆற்றுக்குதிரை

இது மத்திய ஆபிரிகாவின் ஆற்றோரங்களில் வசிப்பது. இது பெரிய எருமைபோல் தடித்த தோலுள்ள மிருகம், துப்பாக்கியால் சுடினும் சாகாதது. கால்கள் குறுகி உடல் நீண்டது. (Hippopotamus.)

நீர்க்குதிரை அல்லது நீர்ப் பன்றி

(ஹிபோடமஸ்) இது காண்டாமிருகத்தை ஒருவாறு ஒத்திருக்கும். இதற்குப் பருத்தவுடலும், தடித்துக் குறுகிய கால்களும், தடித்த தோலும், அகன்றவாயும், நீண்ட பற்களும் உண்டு. கொம்பில்லை. ஏறத்தாழ நாலடி உயரமும் (12) அடி நீளமும் உள்ளது. இது தண்ணீரில் வசிக்க விருப்பமுள்ளது. இது காய், கிழங்கு, இலை முதலியவற்றைத் தின்று ஜீவிக்கும். இது ஆப்பிரிகா கண்டத்து நயில் நதிக்கரையில் வசிப்பது. இது தம் கூட்டத்துடன் கூடி வாழும் மிருகங்களில் ஒன்று.

நீர்நாய்

இது நீர்க்கரை யோரங்களில் வசிக்கும் பிராணி. இது உருவத்தில் எலியைப்போன் றது. வால் அகன்று தட்டையாய்ச் செதிள் மூடியிருக்கும். பருமனில் பூனையளவிருக்கும், முன்னங்கால் குறுகியும் பற்கள் பலமாகவுமிருக்கும். உடலில் மிருதுவான மயிர் அடர்ந்திருக்கும். இவை பல ஒன்று சேர்ந்து வாழும். இவை ஆற்றோரங்களில் வீடு கட்டுதற்குப் பற்களால் பெரிய மரக்கிளைகளைக் கடித்துத் தள்ளி அகன்றவாலினாலும் முன்கைகளைச் சேர்த்தும் மணலைக்கொண்டு வட்டமாக வீடு கட்டி நீர் மட்டத்தடியில் வாழும். இது கோடை காலத்தில் கந்த மூலாதிகளைப் புசிக்கின்றன. மழைக்காலத்தில் மரப்பட்டைகளைத்தின்று பிழைக்கின்றன. இவை அணிற பிள்ளைகளைப்போல் உட்கார்ந்து முன்னங்கால்களால் ஆகாரத்தைத்தின்கின்றன. இவற்றின் ரோமத்தால் தொப்பிகள் செய்யப்படுகின்றன. வட அமெரிக்கா, ஐரோப்பா நதிகளில் வாழ்வன.

நீர்ப்பரப்பு

சில வேளைகளில் தரையில் வீசும் சுழல்காற்று, கடலிலுண்டாகி ஜவத்தைமேல் நோக்கியிழுத்துத் தூண்கள் போல் நிற்கச்செய்கிறது. அக்காலத்திலதிலகப்பட்ட பொருள்களை ஆகாயத்தில் தூக்கியெறிந்து பின் தரையில் மோதுகிறது. இவ்வாறாகிய தீர்ப்பரப்புக்களில் சில பள்ளமாயும், சிலமேட்டுப் பாங்காயு மிருகின்றன. காஸ்பியன் கடல் அதிக பள்ளமான நீர்மட்டமுடையது. மத்ய தரைக்கடல் மேட்டுப்பாங்கானது. பெரும்பாலும் இக்கடல்கள், உருசியாலும், குணத்தாலும் நிறத்தாலும் வேறுபடுகின்றன. எல்லாக் கடல்களும் உப்பு நீர் உடையன. மத்யதரைக் கடலின் கீழ்க்கரையில் சாக்கடல் (Dead Ses) என்பதொன்றுண்டு. இது (9) மைல் அகலமும் (47) மைல் நீளமும் உள்ளது. இதனீர் பசுமை, ஆழம் (1308 அடி) இதில் ஜார்டன், முதலிய பலாதிகள் பாய்கின்றன. ஆயினும் இந்நதி அந்நீரை எங்கு ஒளிக்கின்ற தென்பதறியவில்லை, இதில் நீர்வாழ்வன இல்லை, வெயிற்காலத் துப் பறவைகள் அக்கடலின் மீது பறந்து செல்லினும் இறக்கும் என்பர். இதனீர் உப்பால் கனத்திருப்பதால் இதில் மனிதன் விழுந்தால் அமிழ்ந்து போகிறதில்லை மிதப்பன்.

நீர்ப்பரப்புகள்

இவைகள், மகாசமுத்ரங்கள், கடல்கள், விரிகுடாக்கள், வளைகுடாக்கள், ஆறுகள், ஏரிகள், எனப்பிரிவுள்ள வைகளாயிருக்கின்றன. இவ்வகை நீர்ப்பரப்பு இக்கோளத்தைச் சூழ்ந்து பூமி வறளாமல் நெய்ப்பைத்தந்து காக்கின்றது. இந்நீர்ப் பரப்புகளின் ஆழங்கள், எங்கும், 2, 3, மைல்கள் ஆழமுள்ளவைகளென்பர். ஆயினும் சிற்சில இடங்களில் அதிகம் உண்டு. தென் அமெரிகாவின் கீழ்க்கரையிலுள்ள ரையோடிலாபிளாடா முகத்து வார சமுத்திரத்தின் ஆழம் (8) மைல். பிலிப்பயின் தீவுக்கு வடக்கில் உள்ள கடலின் ஆழம் (18) மைல் என்பர். கடலில் (1000) அடிகளுக்குக் கீழ் இருளே திணிந்திருக்கிறதாம். ஒளியென்பதே இல்லை, மகாசமுத்திரங்களினடிப்பாகம், பூமியைப் போலவே, மலைகள், குன்றுகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள், இரத் தினவகைகள், உலோகவகைகள், மரங் கள், செடிகள், பூண்டுகள் முதலிய பெ றிருக்கிறது. ஒவ்வொரு காலங்களில் மகாசமுத்திரங்களில் அலைகள் இவற்றை தவிர (70) அடிக்குமேல் கிளம்புகிறதும் உண்டென்பர். சில கடல்களில் ஆறுகளைபோல் நீரோட்டம் கொள்ளுகிறது. ஆதலால் கடல்களில் நீர்ச்சுழிகள் தோன்றுகின்றன. அந்நீர்ச் சுழல்கள் நீரோட்டங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்வதனால் உண்டாகி யாத்திரை செய்யும் கப்பல்களை நாசஞ்செய்கின்றன. இவ்வகைச் சுழல்கள் நார்வே தேசக் கடற்கரை யோரமாக நேரிடுகின்றன என்பர்.

நீர்ப்பல்லி

இது, நீரிலுள்ள பிராணி பல்லிபோல்வது, இது ஐரோப்பா, அமெரிகா தேசங்களின் நீர்நிலைகளிலுள்ளது. இது, (3) அடிகள் முதல் (12) அடிகள் வரையில் நீண்டுள்ளது. இதற்கு மீனுக் கள்ளது போல கழுத்திலிருந்து வால்வரையில் தட்டையாகச் சட்டைகள் இருக்கின்றன. இது நீரிலுள்ள பூண்டுகளுக்கிடையில் குஞ்சபொரிக்கிறது.

நீர்ப்பல்வி

(நீர்ப்பல்லி) காண்க. நடை மச்சம், முதலை, இறால்மீன் இது, நீர்ப்புழு இனத்தில் ஒன்று, இதன் மேற்சோல் வளையம் போன்று எளிதில் உரிக்கக்கூடியதாய் இருக்கிறது. இதற்கு மீசையும் கால்களும் உண்டு. இது நீரில் தன் உடலை மடக்கியும் நீட்டியும் அதிவேகமாய்த் தாண்டும். இவ்வினத்திற் சில (3) அடிகளுக்கு மேலுண்டு. இவ்வினத்தில் சிறியது சின்ன கூனி. இவ்விறால்களிற் சில பல கால்களையும் வால்களையும் பல வர்ணங்களையும் பருமனீளமுள்ளவைகளா யிருக்கின்றன. பலவகை நண்டுகள், ஆமைகள், பலவகை மீன்கள் பலவகைத் திமிங்கிலங்கள், சீல்கள், நீர்நாய்கள், டால்பின் மீன்கள்.

நீர்ப்பூ

தாமரைப்பூ, வெள்ளைத்தாமரைப் பூ, அல்லிப்பூ, செவ்வல்லிப்பூ, கழுநீர்ப் பூ, கருநெய்தற்பூ முதலிய.

நீர்ப்பூண்டுகள்

இவை, நீரிலுண்டாம் பூண்டு செடி கொடி முதலிய நீர்ப்பூண்டு வகைகளில், நீர் ஆரை, நீரடிமுத்து, நீர்ப் பூலா, நீர்முள்ளி, நீர்மேனெருப்பு முதலிய பூண்டுகளும், தீர்வஞ்சி அல்லி, நெய்தல், கழுநீர், தாமரை, செங்குவளை முதலிய, தாமரையில் செந்தாமரை, வெண்டாமரை, நீலத்தாமரையென வேறுபாடுண்டு. இவற்றின் கொடிகள், நீர்நிலைகளில் அழகாய்ப் பரந்து ஒரு அடிக்கு மேற்பட்ட இலைகளைப் பரப்பி நிற்கும். இவ்விலைகளின் மேற்புறத்தில் ஒருவகைசுணையுண்டு. அதில் நீர் பற்றுவதில்லை. மலர் வெண்டாமரையில் புறவிதழ் வெண்மை கலந்த பசுமையாயும் அகவிதழ் மிக்க வெண்மையாயும் மணத்தோடு கூடிப் பல இதழ்க ளைப்பெற்றிருக்கும். இவ்விதழ்கள் ஆயிரக்கணக்காகவும் இருக்குமென்பர். செந்தா மரை மலரின் அகவிதழ் வெண்மை கலந்த செந்நிறமாயிருக்குமென்பர். நீலத்தாமரையு முண்டென்பர். இவற்றின் இதழ்கள் ஆயிரங்கொண்டவை சகஸ்ர பத்திரமெனவும், தூறிதழ்கொண்டவை சதபத்ரமெனவும் கூறுவர். இத்தாமரைகளின் நடுவிலுள்ள கொட்டைகளை மணிகளாகக் கொண்டு அணிவர். இவற்றின் கிழங்குகளை அவித்து உணவுப்பொருளாகக் கொள்வர். நீல நிறத்தாமரை அமெரிகாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இது நீர்க்குள் வளர்ந்து பல பாகங்களில் பரவி வயல்களிலுஞ் சென்று தான் விருத்தியடைந்து பயிர் முதலியவைகளைக் கெடுத்தலால் இதனை இராஷஸ தாமரை யென்பர். இவ்வகையில் தென் அமெரிகாவிலுள்ள அமேசான் நதியைச் சார்ந்துள்ள ஓடைகளில் (30) அடி முதல் (40) அடி அகலமுள்ள இலைகளுள்ளதும், மலர் (2) அடி குறுக்களவும், (7) அடி சுற்றளவுள்ளதாகவும் உள்ள விக்டோரியா தாமரை என்பதுண்டென்பர். அதில் ஒரு குழந்தையை உட்காருவித்தால் தாங்கி நிற்கும் என்பர். இதன் காய்களின் வித்துக்களை அந்நாட்டினர் உணவாகக் கொள்கின்றனர்.

நீர்முள்ளி

இது நீர்க்கரைகளிலும் நீருள்ள வயல்களிலும் வளரும் பூண்டு, இது நீரில் கரைத்த மஞ்சளைத் திரட்டித்தரும் ஆச்சரிய சக்தியுள்ளது. நெட்டி இது சிறு இலைகளையுடைய செடி. இது நீரிலிருந்தும் நீரைப்பற்றது. இலேசானது, இதனால் பிரதிமைகள் முதலிய செய்வர். கோரைவகை : சம்பங்கோரை, நெட் டிக்கோரை, கத்திக்கோரை, வாட்கோரை முதலிய. இவற்றின் இலைகள் புல் வகையில் பெரியவை. இவை வளர்ந்து பூவிடுந் தருணத்திலிடையில் தண்டுண்டாம். அத்தண்டுகளால் பாய்கூடாரம் முதலிய செய்வர். ஆப்பிரிகாவின் நயில் நதிக்கரையில் பாபிரஸ் எனும் ஒருவகை. அந்நாட் டார் ஒலைபோல் அதனைப்பிளந்து தங்கள் நூல்களை எழுதிப்படித்தனர் என்பர். அல்லி, தாமரை போன்ற சாதியாயினும் இதின் இலைகள் வாள் போன்ற விளிம்புடையன. இவற்றுள் வெள்ளல்லி, செவ்வல்லி, நீல அல்லி, ஆகாச அல்லி, சிற்நல்லி முதலிய, செங்கழுநீர் மிகச்செவந்து மணமுள்ள தாயிருக்கும். இதனை அரக்காம்பல் என்பர்.

நீர்மேடைப்பான்

திருமங்கையாழ்வாருக்கு மந்திரி,

நீர்யானை

இதனை டாபிர் என்பர். இது யானையைப்போல் உடலும், காலும் குறுகியும் தடித்தும் இருக்கும். இதற்கு மூக்கு யானையின் துதிக்கை போலச் சற்று நீண்டிருக்குமாயினும் யானையைப்போல் நீட்சியுடையதன்று. இது மிக்க வன்மைகொண்ட மிருகம், நீரில் வசிக்கப் பிரியமுள்ளது. இதற்குக் காய்கனி கிழங்குகளில் பிரியமதிகம். இதற்குச் சிவிங்கியே விரோதி. இச்சிவிங்கி இதன் மேல் பாய்கையிலிது விரைந்து ஓடி மரத்தில் பாய்ந்து. அதனைக் கீழே தள்ளிவிட்டு ஓடி விடும். இதன் தோல் தடித்திருப்பதால் முட்புதர்களுக்கு அஞ்சாது. இது சாதுவான மிருகம். கோபமூட்டப்படின் எதிரியின்மீது பாய்ந்து கொல்லும். இது (5, 6) அடி உயரமுள்ளது.

நீர்வாழ்வன

இவை ஜலத்தில் வாழ்வன. தற்கால நூதன ஆராய்ச்சியார் நீரில் பல லக்ஷக்கணக்கான பிராணிகள் இருக்கின்ரனவெனக் கூறுகின்றார். அவை பூச்சியினம், புழு இனம், விராட்டு இனம், சங்கு இனம், அசரையினம், விலாங்கு இனம், கெண்டையினம், வாளையினம், இறாலினம் எனப் பலவகைப்படும். இப்பிராணிகள் நீரில் அழுகிய பொருள்களைத் தமக்குப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. முதலில் இவைகளின் தோற்றம் வழுவழுப் புள்ள பொருளாய்க் காணப்படுகிறது. அவை அமீபா, பாக்டீரியா எனப்பிரிவுடையன. அமீபா வழுவழுப்புத் தோற்றவுற்பத்தி, பாக்டீரியா சிறு அணுக்களிடம் பிறப்பு. இவ்விருவகையும் காலதேச மாறுபாட்டால் பலவகை யுருப்பெறுகின்றன. ஜெல்லிமீன், இதை நாய்க்குடல் என்பர். இது உச்சியில் வழுவழுப்புடைய குடை போன்று அடியில் குடல்போல் தொங்கும் உறுப்புக்களையுடையது. இது தன்னிடம் தொங்கும் குடலுருவ மூலமாய்ப் பூச்களை உணவாகக் கொண்டு சிரத்திலுள்ள குடையுருவத்தை விரித்தும் குவித்தும் நீரில் நீந்திச்செல்லும், இதனைச் சொறி மீன் என்பர். இது மனிததேகத்திற் படில் அரிப்புண்டாம். இரவில் இதனிடம் வெளிறிய ஒளி உண்டு. இவ்வினத்தில் கடம்பான் (Octopus) என்பதும் ஒன்று. இவை கடல்களினடிப்பாகத்தில் வசிப்பவை. இவை கம்பி போன்ற கைகளால் பிராணிகளைச்சுருட்டி உணவாக்கும். முள்பலாச்சி (கடல், முட்பன்றி அல்லது கோளமீன்) (The Diodout) இது கிளிபோல் முகமும் மீன் போல் வாலும் செவுள் போல் காதும் உடைய கடற்பிராணி. இது தன் தேகத்தில் பலாக்காயின் முட்கள் போல் முட்களைப் பெற்றிருக்கிறது. இது, தன்னியற்கையி லுலாவுகையில் தன் தேகத்து முட்களைச் சுருக்கிக்கொள்ளும், தன் விரோதிகளைக் கண்டபோது உடம்பின் முட்களைச் சிலிர்த்துக்கொள்ளும். இதைக் கண்ட மற்றவை இதனை நெருங்கா. இது தன்னிடம் விஷமுள்ள மலத்தைப்பெற்று இருத்தலால் இதைக் கடலோடிகள் பிடிப்பதில்லை,

நீர்விழவு

இதன் காலவரையறை இருப்பத்தொரு நாள், இது மிகவுஞ் சிறப்பாக உஞ்சை நகரத்தில் நடைபெற்றது. இந்த விழவு நடக்கும்போது தான் யூகியின் வேண்டுகோளால் வாசவதத்தையை உதயணன் பிடிமீதேற்றித் தன்னிடஞ் சென்றனன், இது துறைகொள்விழவு, புனல் விழவு, பொங்கு புனவ்விழவெனவும் வழங்கும். (பெ ~ கதை.)

நீர்வீழ்ச்சி

மலையுச்சிகளில் உள்ள ஊற்றுகள் பெருக்கெடுத்து மலையிலிருந்து கிழே விழும். அதற்கு நீர்வீழ்ச்சி அல்லது ஆகாயகங்கை என்று பெயர், (பூகோளம்.)

நீர்வீழ்ச்சிகள்

வட அமெரிகா கண்டத் தில் (228) அடி உயரமுள்ள பாறைமீதிருந்து விழும் நயகார நீர்வீழ்ச்சி உலகநீர் வீழ்ச்சிகளில் பெரிது. தென் ஆப்பிரிகா கண்டத்தில் சாம்பசி நீர்வீழ்ச்சி. இது (400) அடிகளுக்கு மேலிருந்து விழுகிறது. இந்தியாவில் குற்றால நீர்வீழ்ச்சி.

நீறுபூசிகள்

இது வேளாளரை ஜைநர் கூறும் சொல். இவர்கள் சிவனடியவர்கள் காலத்து ஜைநர்களாக இருந்து சைவர்களாக மாறியவர்கள்.

நீலகண்டசிவாசாரியசுவாமிகள்

இவர் பிறப்பால் வைதிகசைவரோ அல்லது சிவாசாரியரோ நன்றாகத் தெரியவில்லை. இவர் சைவபாஷ்யகாரர், சுவேதாசாரிய சுவாமிகளுக்கு மாணாக்கர். இவர் சைவசித்தாந்த புறமாகப் பிரமசூத்திர பாஷ்யம் அருளியவர். இவர் காலம் சங்கராசாரிய சுவாமி களுக்கு முற்காலம் என்பர். இவர் தமது பாஷ்யத்தால் தகரவுபாசனை அதிகமுள்ளவர் என்பது தெரிகிறது. இவர் இயற்றியவை பிரம்ம மீமாம்சா பாஷ்யம், சிவதத்வ ரஹஸ்யம், சிவலீலார்ணவம்.

நீலகண்டதீக்ஷிதர்

இவர் வைதிகவேதியர், இவர் செய்தக்ரந்தங்கள், கலிலிடம்பனம், கங்காவதாணம், நளசரித்ரம், நீலகண்ட சம்பு, நீலகண்ட தீக்ஷிதீயம், வைராக்யசதகம், சாந்தி விலாசம், ஸபாரஞ்ஜனம்,

நீலகண்டன்

1. அச்சுவக்கிரீவன் தம்பி, 2. சிவகணத்தவன்,

நீலகிரி

செங்குட்டுவன் வஞ்சி நகரத்திலிருந்து இமயமலைக்குச் செல்லும் பொ ழுது இம்மலையில் தங்கியிருந்தான். (சிலப்பதிகாரம்.)

நீலகேசி

1 இவள், ஆவணநகாத்து நாதகுப்தனார் எனும் அருக சமயத்தாசிரியரை வென்றனள் எனக்கூறப்படுதலை உணர்ந்த சைநர் மிகச்சினந்து குண்டலகேசியையும் அவளுக்குபதேசித்த அருக்கசந்திரனையும் வாதில் வென்றதாகக் கூறிய நூல். இந்நூல் நீலகேசித் தெருட்டெனப்படும். இது குண்டல கேசிபோல் ஓர் பெண்ணின் செய்திகூறி அவள் பல சமயங்களை வென்றமை கூறுவது. இவள் கபிலவாஸ்துவில் புத்தரிடம் வாதிட்டவளாம். 2. காசியரசன் மகள், 3. மந்திரவரசன் மனைவி, (பெ. கதை) 4. விரிசிகையின் தாய்.

நீலகேசித்தெருட்டு

ஒரு தமிழ்ச்சைன நூல், இது சுகதநிர்ணயச் சருக்கமுதல் பத்துச் சருக்கம் அடங்கியது, வியந்தாரமங்கையாகிய நீலகேசி, பௌத்த முதலிய சமயங்க னைக் கண்டித்துச் சைநசமயத்தைத் தாபித்ததாகக் கூறப்பட்டது. இதற்கு நீலகேசி விருத்தி சமயதிவாகரம் எனும் ஒரு உரையும் உண்டு.

நீலத்துவசன்

நீலன் குமரன். விந்திய தேசாதிபதி, விஜயனுடன் போரிட்டிறந்தவன்.

நீலநிறத்தன்

திருமங்கை யாழ்வாருக்கு ஒரு பெயர்,

நீலன்

1. குரோதகீர்த்தியின் குமாரன். 2. (சந்.) திடன் குமாரன். தாய் காளிந்தி. 3. திருமங்கையாழ்வாருக்குத் தந்தை. 4. சண்முகசேநா வீரன். 5. சுக்கிரீவன் சேனைத்தலைவன். அக்னியம்சம். பிரகத்தனைக் கொன்றவன். கும்பகர்ணனாற் சோர்ந்தவன். 6. அஜமீளன் குமரன். 7. வாகரத்தலைவன். 8. செங்குட்டுவனுடைய ஒற்றரிற்றலைவன், (சிலப்பதிகாரம்) 9. மாஹிஷ்மதியாசன். இவன் நித்தியாக்னி வளர்க்கையில் அக்னி ஜ்வலிக்காது நின்று இவனது பெண் சதர்சனை வந்து தொட்டகாலத்தில் ஜ்வலிக்கக்கண்டு நீலன் கோபமடைந்து சபிக்கப் போகையில் அக்கினி பிராமண உருக்கொண்டு எதிரில் வந்து தான் நீலன் குமரியிடம் ஆசை கொண்டிருப்பதைக் கூறி மணந்தனன். இவன் சகாதேவனிடம் யுத்தஞ்செய்து மாண்டான். விந்திய தேசாதிபதி என்பர். இவன் அக்கினியைத் தன் கோட்டைக்குக் காவலாக்கினன். (பார சபா) 10, இவன் சிவஞ்ஞானியென்று பெயர் பூண்டு தங்கையாகிய நவஞ்ஞானியின் மரணத்தால் தானும் மரணமடைந்து பேயுருப்பெற்றுத் திருவாலங்காட்டில் புரிசைக் கிழான் பேயெனநீக்க ஒரு வேலமாத்தில் இருந்தனன். ஊரார் அந்த வேலமரத்தை வெட்ட அந்தக் கோபத்தால் அவ்வழியாக இரத்தினசபாபதிக்கு நிவேதனங்கொண்டு சென்ற வேதியரை மோதினன். வேதியர் சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவமூர்த்தி குண்டோதரனை ஏவி அப்பேயைக் கொலை செய்வித்தனர். 11, மாகிஷ்மதி பட்டணத்தரசன். இவன் மனைவியை அக்னி காவிற் புணரக் கருதினமை அறிந்து இவனக்னின சிறையிட்டவன். (சிவமகா புராணம்.)

நீலபதி

சீதரனென்னும் அரசன் புத்திரி, இராகுலனுடைய தாய், அத்திபதியெனும் அரசன் மனைவி. (மணிமேகலை.)

நீலமாலை

1. இராமமூர்த்தி வில்லொடித்த சேதியைச் சீதைக்கறிவித்த தோழி. 2. சோணாட்டிலுள்ள ஒரு மலை,

நீலம்

அஷ்ட குலாசலங்களில் ஒன்று. மேருவிற்கு (5000) யோசனை அப்புறத்திலுள்ளது.

நீலரதன்

அசயக்காவன் தம்பி.

நீலலோகிதகற்பம்

சிவன் அகோரத் தோற்றமாய்ப் பிரமனுக்கு அகோர மந்திரம் அருள்புரிந்த கற்பம்.

நீலலோகிதன்

1 சிவன் திருநாமங்களில் ஒன்று. 2. வகாதசருத்திரருள் ஒருவன்,

நீலவண்ணன்

இவன் சோழதேசத்துச் சசிவர்ணனாகிய வேதியன் குமரன். இவன் மகாபாதகனாய் ஒரு வேளாளன் குமரியுடன் கூடித் திருடிப்பிழைத்து ஊராரால் துரத்தப்பட்டுத் தன்னாடு விட்டுப் பாண்டிநாடு சென்று ஒரு வீட்டில் அன்னந்திருடித் தான் சித்து ஒரு வேதியனுக்கு அருத்திப் பாம்பு தீண்ட இறந்து வேதியனுக்கு அன்னமிட்டதால் நற்கதி அடைந்தான்.

நீலவராகர்

இரண்யாக்ஷனைக் காண்க,

நீலாங்கனை

மயூரகண்டன் மனைவி.

நீலாம்பரிபீடம்

சத்திபீடங்களில் ஒன்று.

நீலி

1. இவள் முற்பிறப்பில் நவஞ்ஞா யென்னும் பார்ப்பினி, தன் கவணவன் தனையும் தன்குமாரனையும் கொலை செய்ததால் பழிக்குப் பழிவாங்கத் திருவாலங்காட்டில் புரிசைக்கிழாருக்குப் புத்திரியாகப் பிறந்து அவன் பேயென்று நீக்க அலைந்து திரிந்து தரிசன செட்டியாகப் பிறந்திருக்கும் தன் கணவனைக் கண்டு களித்து அவனைப் பலவாறு மயக்கிப் பழையனூர் வேளாளரிடம் முறையிட்டு அவர்கள் (70) பெயரையும் அவனுயிர்க்குப் பிணையாக இருக்க உடன்படுத்தினள். அவர்கள், அவ்வாறு பிணையிருப்பதாகச் செட்டிக்குக் கூறி அவனுடன் இருக்கும்படி உடன்படுத்தினர். இவள் அவனிடமிருந்த மந்திரவாளை நீக்கச்செய்து அவனுடனிருந்து அவனைக் கொலை புரிந்து மீண்டும் செட்டியின் தாய்போல் வந்து வேளாளர் (69) பெயரையும் தீயில் முழு கச் செய்வித்து மிகுந்த ஒருவன் போயிருந்த கழனியிடம் அவன் மகள் போற் சென்று நடந்த செய்தி கூறிப் பழிவாங்கினன். வேலமரத்திலிருந்த அண்ணன் இறந்ததற்கு ஊரார் வெட்டிய வேலமாம் காரணமாதலால் ஊரார் எழுபது பெயமாயும் பழிவாங்கினன். 2. சங்கமவின் என்னும் வைசியன் மனைவி. கோவலன் கொலையுண்டிறக்க முற்பிறப்பில் அவனைச் சபித்தவள். (சிலப்பதிகாரம்,) 3. அஜமேடன் தேவி. இவள் புத்திரர் துஷ்யந்தன், பரமேஷ்டி முதலானவர்கள்.

நீலை

கும்பன் பெண், கிருஷ்ணன் தேவி.

நீளன்

அசமீடனுக்கு நளனியிடம் உதித்த குமரன், இவன் குமரன் சாந்தி.

நீளாதேவி

விஷ்ணு மூர்த்தியின் சத்தி.

நீளோபாபக்தர்

இவர் ஒரு வேதியர். துக்காராம் எனும் பக்தருக்குச் சீடர், இவர் அரிகீர்த்தனை செய்துகொண்டு பிக்ஷை செய்து மனைவியுடன் வாழ்ந்து வருநாளில் தம் குமரிக்கு மணநாள் நெருங்கியது கண்டு வருந்தப் பெருமாள் ஒரு விருத்த வேதியராய் வந்து தமக்கு அன்னமிடும்படி தாம் கொண்டுவந்த சிறிது அமுதைச் சமைப் பதில் கூடப்போட்டுச் சமைக்கச் செய்து பெருமாளுக்கு நிவேதனஞ் செய்வித்து அதை அவர்கள் அளிக்கவுண்டு நீளோபாவை நோக்கி நாளை உன்குமரியின் திருமணமாதலின் அதனில் நானும் உண்டு களித்திருக்க வெண்ணுகிறேனெனக் கேட்டு, அவ்வகை இருந்து அம்மணத்திற்கு வேண் டிய எல்லா மடைத்தொழில் முற்றும் தாமே செய்தும் உண்ட பரிகல முதலியவற்றைத் தாமே புறத்திட்டு மணந்தீர்ந்த பின் நீளோபா சுற்றத்தினர்க்கு வேஷ்டி முதலிய கொடுக்கையில் இவ்வேதியர்க்கும் ஒரு வேஷ்டி தர விடோபா, விடோபா, என்று அவர் கூறிய பெயரிட்டழைக்க மறைந்தது கண்டு, இவ்வாறு நம்மிடம் வந்தோன் கண்ணன் என்று வருந்துகையில் பெருமாள் கனவிடைத்தோன்றி உன் அன்பினை உலகறிய வந்தேனென்று தரிசனந்தந்து ஆசீர்வதித்து மறைந்தனர்.

நீஷிங்கி

திருதராட்டிரன் குமரன்.

நுக்கிராயுதன்

திருதராட்டிரன் குமரன்.

நுட்ப அணி

இது பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு வேறுபட மொழியாது குறிப்பினாலாயினும், தொழிலினாலாயினும், அரிதாகநோக்கி உணருந் தன்மையுடையது. இதனை சூக்ஷ்மாலங்காரம் என்பர் வட நூலார். (தண்டி.)

நுரையீரல்

இவை இருதயத்தினிரண்டு பக்கங்களிலுமுள்ளவை. இவற்றில் காற்றுப்பைகள் உண்டு. இவையே சுவாச கோசம். நெஞ்சுலராமலிருக்கக் காற்றுக் குழல்கள் கோழையை உண்டாக்கி ஈரத்தைத் தருகின்றன. காற்றுக்குழலின் மேற்பாகம் தொண்டையிலிருக்கிறது. அதுவே குரல்வளை. நாம் உட்கொள்ளும் வாயு, காற்றுக்குழல் வழியாகச் சுவாசப்பைக்குச் செல்லுகிறது.

நுளம்பு

கொதுகின் சாதியிற் சிறிதாகிய ஒருவகை.

நுளையர்

செம்படவர்க்கு ஒரு பெயர்.

நூனம்

ஸ்வசித்தாந்தத்தில் கூறிய அவயவங்களை யறிந்து பிரயோகிக்காமல் மாறிக் குறைத்துப் பிரயோகித்தல். (சிவ. சித்)

நூற்கு உரை கூறும் வகை

பாடம், கருத்துரை, சொற்களை வகுத்துரைத்தல், பதப்பொருளுரைத்தல், தொகுத்துரைத்தல், உதாரணம், வினாவுதல், விடைகூறல், விசேடங்கூறல், வேற்றுமைத்தொகை முதலிய விரித்தல், அதிகாரத்தோடு பொருந்த வுரைத்தல், துணிந்திதற்கிதுவே பொருளெனவுரைத்தல், பயனுரைத்தல், ஆசிரியவசனங்காட்டல் ஆக (14) வகை. (நன் ~ பா.)

நூற்குக்குற்றம்

(10) குன்றக்கூறல், மிகை படக்கூறல், கூறியது கூறல், மாறுகொளக்கூறல், வழுஉச்சொற் புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மையாம்

நூற்பயன்

அறம், பொருள், இன்பம், வீடு அடைதலாம்.

நூற்பெயர்

நூற்குப் பெயர், முதனூலாலும், கருத்தனாலும், மிகுதியாலும், அளவாலும், பொருளாலும், செய்வித்தவனாலும், குணத்தாலும், காரணத்தாலும், இடுகுறியாலும், உண்டாம். இவை முறையே பாரதம், தொல்காப்பியம், களவியல், நாலடி, அகப்பொருள், சாதவாகனம், நன்னூல், நிகண்டு முதலிய, (நன்.)

நூற்றுவர்கன்னர்

கங்கையின் வடகரையிலுள்ள மாதவப் பிரதேசங்களை ஆண்டவர்கள். இவர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்தவர்கள். வடநாட்டு யாத்திரையில் சேரனுக்குதவி புரிந்த நூற்றுவர்.

நூலிற்குப் பத்துவகை அழகு

சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், முறையின்வைப்பு, உலக மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது. (நன்~ பா.)

நூல்

1. இது முதனூல், வழிநூல், சார்பு நூல் என மூவகைப்படும். அவற்றுள் முதனூலாவது, ஆதிபகவனால் ஆன்மாக்கள் பொருட்டுத் திருவாய்மலர்ந்தருளிய வேதாகமங்களாம், வழிநூலாவது, முதல்வன் நூலை முழுதும் ஒத்துச் சிறிது வேறுபட்டிருப்பதாம், சார்புநூலாவது, முதனூற்கும் வழி ஏற்கும் சிறிதொத்து வேறு பாடுடையதாய் முடிவதாம். எதிர் நூலென்பது மொன்றுண்டு. அது முதல்வனூலின் முடிந்த பொருளை ஓராசிரியன் யாதானுமோர் காரணத்தாற் பிறழ வைத்தால் அதனை கருவியாற்றிரிபு காட்டி ஒருவா மை வைத்தற்கு ஒள்ளியோனொரு புலவனால் உய்க்கப்படுவது. (யாப்பு ~ இலக்கணம்.) 2. இது சாத்திரத்திற்கு ஒரு பெயர். பஞ்சினாலாகிய நூல் கனத்த மரத்தின் கோணல் முதலிய தீர்த்து செம்மைப்படுத்து வதுபோல் மாணாக்கரது மனக்குற்றங்களை நீக்கிச் செம்மையுறச் செய்தலின் இது உவமை ஆகுபெயராய்ச் சாத்திரத்திற்கும் கூறப்பட்டது. (நன்.) 3. இது பொதுச்சிறப் பென்னும் பாயிரங்களையுடைத்தாய் முதல் வழி சார்பென் னும் மூன்றிலொன்றாய் அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கையுந் தருவதாய் ஏழு மதங்களைத் தழுவி, பத்துவகைக் குற்றங்கணீங்கப் பெற்றதாய், பத்துவகை அழகுடைத்தாய், (32) உத்திகளைப் புணர்க்கப் பெற்ற தாய், ஒத்து, படலம், எனும் உறுப்புக்களைப் பெற்றுச் சூத்திரங் காண்டிகை விருத்தியெனும் விகற்பங்களையுடையது. (நன்னூல்.) 4. பருத்தியெனும் ஒருவகைச் செடியில் வித்தினை மூடிக்கொண்டிருக்கும் மெல்லிய பஞ்சை இராட்டினத்திலிட்டு நூலாக்கிப் பலவித ஆடைகள் நெய்வர். இந்நூல் களுக்குப் பலவகை சாயமிட்டு சாயவஸ்தி பங்களாக்குவர்.

நூல்யாப்பு

தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு, என நான்குவகை. (நன்னூல்.)

நூழிலாட்டு

பொருகளத்தைப் பொருந்திய சேனைகெடத் தன் மார்பைத்திறந்த வேலைப் பறித்து எறிந்தது. (பு. வெ)

நூழில்

வீரக்கழன்மன்னர் சேனையைக் கொன்று அழலும் வேலைத்திரிந்து ஆடுதலை விரும்பியது. (பு. வெ).

நெடியோன் குன்றம்

தமிழ் வழங்கு நிலத்திற்கு வடவெல்லையாக உள்ளதோர் மலை. (சிலப்பதிகாரம்).

நெடுங்கணக்கு

உயிர் முதல் எல்லா எழுத்துக்களின் வரிசை.

நெடுங்கல்தின்றமன்றம்

காவிரிப்பூம் பட்டினத்துள்ள ஐவகைமன்றத்துள் ஒன்று. இது பித்தேறினோர், நஞ்சுண்டோர், முதலியவரின் துயர் தீர்ப்பது (சிலப்பதிகாரம்).

நெடுங்கழத்துப்பாணர்

ஒரு செந்தமிழ்ப் புலவர். (புற ~ நா)

நெடுங்கிள்ளி

காரியாற்றுத் துஞ்சியநெடுங்கிள்ளிக்கு ஒருபெயர். இவன் சோழர் பரம்பரையைச் சேர்ந்தவன். ஆவூரும், உறையூரும் இவனதுரிமை. சோழன் நலங்கிள்ளி இவனை முற்றுகை செய்து இவன் கோட்டைவாயிலடைக்க உள்ளிருந்து கோவூர்க்கிழாரால் தேற்றப்பட்டவன். (புற ~ நா).

நெடுங்குளம்

பாண்டி நாட்டுள்ள ஒரூர். மதுரைக்குச் செல்லும் வழியிலுள்ளது. (சிலப்பதிகாரம்).

நெடுஞ்சடையன்

அதிகனுடன் பொருதபாண்டியன்.

நெடுஞ்செழியன்

1, பாண்டிநாட்டரசருள் ஒருவன். இவன் தேவியின் பெயர் கோப்பெருந்தேவி. கோவலனைச் சிலம்பின் பொருட்டுக் கொல்வித்துத் தான் செய்தது தவறென அறிந்து கண்ணகியால் மாண்டவன். (மணிமேகலை) 2. இவன் வெற்றிவேற்செழியன் மகன். இவன் தன்னுடனெதிர்த்த தமிழரசர் எழுவருடன் தலையாலங்கானத்துப் போரிட்டு வென்றான். இவனுக்குப் பின் பட்ட மடைந்தவன் உக்கிரப் பெருவழுதி.

நெடுநல்வாடை

இது பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர்பாடிய அகவற்பா.

நெடுநேரம் நிற்கலாகா இடங்கள்

கோபித்துச் சண்டை செய்யும் இடத்திலும், கள் குடித்துக் களித்தாடும் இடத்திலும், பரத்தையர் சேரியிலும், சிநேகம் தளர்ந்த இடத்திலும், அநேகர் வருவதும் போவதுமாயிருக்கும் தண்ணீர்த் துறையிடத்தும் நிற்கலாகாது. (ஆசாரக்கோவை).

நெடுந்தொகை

(400) கடைச்சங்கத்தவர் கையாண்ட தமிழ் நூல்.

நெடுமாறநாயனூர்

கூன்பாண்டியனுக்கு ஒரு பெயர்.

நெடுமாறன்

இவர்க்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் எனவும் பெயர். இவரே நின்ற சீர்நெடுமாற நாயனார் இவருடன் நெல்வேலியில் பொருதவன் நந்திபோதவன்மனுடைய சேநாபதி உதயசந்திரன். நந்தி போதவன்மன் காலம் உதயேந்திரசாசனத்தால் கி. பி. 710 முதல் 760 வரையென அறியப்படுகிறது. திருஞானசம்பந்தர் காலமும் இதுவாம்.

நெடுமுடிகிள்ளி

இவன் காரியாற்றிற் போரிட்டுச் சேரர் பாண்டியர்களை வென்ற பாண்டியன். இவனுக்குக் கிள்ளிவளவன், மாவண்கிள்ளி, வடிவேற்கிள்ளி, வென்வேற்கிள்ளி யெனவும் பெயர். இவன் கரிகாற்சோமன் குமரன். இவன் காலத்திற் புகார் கடல் கொண்டது, சோழர் மேன்மை கெட்டது. இவன் குமரன் தொண்டைமானிளந்திரையன், (மணிமேகலை).

நெடுமொழிகூறல்

மன்னரின் மேம்பட்ட நிறைமதிபோலும் கொற்றக் குடையினையுடையோற்கு ஒரு வீரன் தன்னுடைய மேம்பாட்டைத் தான் உயர்த்திச் சொல்லியது. (பு. வெ).

நெடுமொழிவஞ்சி

பகைவர் தஞ்சேனையைக் கிட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திச் சொல்லியது. (பு ~ வெ).

நெடும்பல்லியத்தனர்

பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிப் பரிசுபெற்றவர். (புற ~ நா)

நெடும்பாரநாயனூர்

இவர், இமயவாம்பன் தம்பி. பல்யானைச் செல்கெழுகுட்டுவனுக்குப் புரோகிதர். இவர் தம்மரசனை நான் சுவர்க்கம் புகவேண்டுமென அரசன் ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப் பத்தாம் வேள்வியில் தம்மனைவியுடன் சுவர்க்க மடைந்தவர். (பதிற்றுப்பத்து).

நெடுவெண்ணிலவினர்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் குறுந்தொகையுள் “நெடுவெண்ணில” வென நிலவை நோக்கிச் செய்யுள் கூறினமையின் இப்பெயர் பெற்றனர். குறு 47. பெண் பாலார் ஆகலாம்.

நெடுவேளாதன்

குன்றூர் கிழாராற் பாடப்பட்ட வன். (புற ~ நா).

நெடுவேள் குன்றம்

திருச்செங்குன்றென்னும் குமரவேள் மலை, (சிலப்பதிகாரம்).

நெட்டிமையார்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியவர். (புற ~ நா).

நெட்டெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களில் நெடிய ஓசைகளைப் பெற்ற, ஆ, ஈ, ஊஉ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் எழுமாம். (நன்.)

நெப்டியூன்

இந்தக் கிரகம் சூரியனுக்கு எட்டாவது வட்டத்திலிருப்பதாக காலி என்பவரால் (1846) வருஷத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது, சூரியனுக்கு (279) கோடியே (17) லக்ஷம் மைல் தூரத்திற்கப்பால் இருந்து சூரியனைச் சுற்றி வருகிறது. இது, சற்றேறக்குறைய (164) வருஷகால அளவில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறதென்பர். இதன் குறுக்களவு (34,800) மைல். இதற்கு ஒரே உபக்கிரகம் உண்டென்பர். இது தன்னைத்தான் சுற்றும் நிலை அறியப்படவில்லை யென்பர்.

நெய்

1. இது, தேஜஸ் தருவது, பாவத்தைப் போக்குவது, தேவர்க்கு யஞ்ஞமூலமாய் ஆகாரமாவது, இது காமதேனுவிடம் பிறந்தது. ஆகையால் பாபஹரம் என்று விஷ்ணு தர்மோத்தரம் கூறுகிறது. 2. நெய்ப்புள்ள திரவப்பொருள். இது மிருகங்களிடத்தும் மரக்கொட்டைகளிடத்தும் எடுத்து உருக்கப்படும். பசு, ஆடு, எருமை, ஒட்டை முதலிய மிருகங்களிடமும், எள், ஆமணக்கு, இருப்பை, புன்னை, வாதுமை, வேம்பு, புங்கு, தேங்காய், கடுகு, சேங்கொட்டை, முதலிய வித்துக்களிடத்தும் நெய் எடுப்பர்.

நெய்க்குறி

தேரையர் செய்த மூத்திர பரீக்ஷை நூல்.

நெய்தற் சாயத்துய்த்த ஆவூர்க்கிழார்

கடைச்சங்கமருவிய புலவர். (அகநானூறு.)

நெய்தற்கார்க்கியனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் கார்க்கியனார். இவர் நெய்தலைப் பாடுதலில் வல்லவராதலில் இவர்க்கு இப்பெயர் வந்ததுபோலும். (குறு 55,212),

நெய்தற்றத்தனர்

1. கடைச்சங்கமருவிய புலவர், 2. இவர் இயற்பெயர் தத்தனென்பதே. வேறு தத்தனென்பார் பலருளராதலாலும், இவர் நெய்தற்றிணையைச் சிறப்பித்துப் பாடியிருத்தலாலும் ஏனைய தத்தர்களின் இவர் வேறென்பது தெரிய நெய்தற்றத்தனர் எனப்பட்டார். நெய்தலேயன்றிப் பாலையையும், பாடியுள்ளார். நீ படுந்துயரை தலைமகனூர்க்குச் சென்று அவனறியும்படி கூறுவோமோவென்று தோழி தலைமகளை நோக்கிக் கூறியதாக மகழ்விக்கின்றார். நற் (49) இவர் பாடியனவாக மேற்கூறிய பாடலொன்றும் அகத்திலொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

நெய்தல்

நிலத்தின் வகைகளைக் காண்க.

நெய்யுண்டாழ்வான்

எழுபத்தினாலு சிங்காசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்.)

நெருப்புக்கோழி

இது எல்லாப் பறவைகளிலும் பெரிது, கால்கள் நீண்டிருக்கும். விரல்களைக்கொண்டிருக்கும். உயரம் ஆறடி முதல் எட்டடியிருக்கும். தலை சிறிது. தொடையிலிங்குமங்கும் மயிருண்டு, இது (2) மனிதரைத் தன்னுடம்பிற்றாங்கி ஓடும். இதன் சிறகுகள் சிறியவை; ஆதலால் மேற் கிளம்பிப் பறவா. அதிக விரைவாய் குதிரை வேகத்திற்கதிகம் ஓடும். இதின் பெட்டை மணலில் முட்டையிட்டு அவயவங்காக்கும். இதினிரகுகள் அழகாகவும் மெதுவாகவு மிருத்தலால் ஐரோப்பியர் முடியணிக்காக ஆப்பிரகரிதனை வேட்டையாடுகிறார்கள். இது வேட்டையில் களைத்த காலத்துத் தன்னை வேட்டைக்காரர் பார்க்கவில்லையென வெண்ணித் தலையை மணலில் மறைத்துக்கொள்ளும். இதன் முட்டைகளை உணவாகவும், முட்டையோட்டைப் பான பாத்திரமாகவும், ஆபரணமாகவும் உபயோகிப்பர். இது ஆப்பிரிகா கண்டத்துப் பாலைவனவாசி. ஆகாரம் புல் பூண்டு முதலிய.

நெருப்புப்பொடி

இது வெடிமருந்து நாளிகக் கருவிகளுக்கிடுவது. செய்முறை சுவர்ச்சிலவணம் (வெடியுப்பு) பலம் (5) கந்தகம் பலம் (1) சதுரக்கள்ளி அல்லது எருக்கன்கரி பலம்(1)இவைகளைப்பொடித்துக்கலந்து சதுரக்கள்ளி,எருக்கு,வெள்ளைப்பூண்டுஇவற்றின் ரஸங்களால் காய்ச்சி வெயிலிலுலர்த்தி சருக்கரைபோல் பிசைந்து உபயோகித்தலாம். இதற்கு இரும்பு, ஈயங்களினாலாக்கப்பட்ட உருண்டை தாக்குங் கருவி (குண்டு.) (சுக். நீ.)

நெற்குன்றவாண முதலியார்

இவர் தொண்டைநாட்டு நெற்குன்றமென்னும் ஊரில் இருந்த வள்ளல், காளமேகர் என்னும் கவிவாணர், இவர் இல்லாதகாலத்து வீட்டு முன்றிலில் வந்து கவிபாட அக்கவியைக் கேட்ட தாதியொருத்தி தக்க பரிசளித்தனுப்பினள். இதற்குள் முதலியார் வந்து மணி பொன் முதலிய தம் பொருள்களையுங் கொடுத்துத் தாமும் அடிமையென்று, “கற்கும்கவிவல்லவந்தணர் கோனபிகாளிக்கியாம், விற்கும் பரிசனமாகி விட்டோம் வடவேங்கடமும், பொற்குன் றமும் புகழ்க் கங்காந்தியும் பொதியமும் போல், நெற்குன்றமும் நம்மரபு மெந்தாளும் நிலைநிற்கவே” எனப் பாடித் தந்தவர். இவர் இருந்த ஊரில் களப்பாளன் என்னும் வேளாண்குலத்துக் கவியும் இருந்ததாகத் தெரிகிறது. திருப்புகலூரில் தரிசனார்த்தமாக வந்தபோது திருப்புகலூரந்தாதி பாடியவர். (காளமேகர் காலம்).

நெற்பயிருக்கு ஏற்ற எருவகை

எருக்கிலை, கொழுஞ்சி, அவிரி, ஆவிரை, வேப்பிலை, நொச்சி வாகை,பூவரசு, புங்கு, வாதநாராயணதி இலைகளும், ஆமணக்கு, வேம்பு, வேர்க்கடலை, இருப்பை, புங்கு, புன்னை, முதலான பிண்ணாக்குகளும் போடலாம். ஒரு ஏக்கருக்கு மாட்டு எரு பத்து வண்டியாகவும், இலை எரு ஐந்து வண்டியாகவும், அல்லது தனி அவிரியாகில் மூன்று வண்டியும், வேர்க்கடலைப் பிண்ணாக்கு இரண்டு பாரமாகவும், தோற்கிடங்கு மயிரை ஒரு வண்டியாகவும் உபயோ கிக்கலாம். சீனா, ஜப்பான், முதலிய தேசங்களில் புளித்த மலத்தையும், ஐரோப்பா, அமெரிக்கா தேசங்களில் எலும்புப் பொடி, பிரகாசிதம் கலந்த சுண்ணாம்பு, சாம்பல், பலவகைப் பசுந்தாள், மீன் எலும்புத் தூள், பட்சிகளின் புழுக்கை முதலியவற் றையும் எருவாக உபயோகப்படுத்தி வருகிறார்கள். நிலத்தில் களர் இருந்தால் பாச்சான், பிரண்டை, பனையோலைகளைப் போட்டு மிதித்து அதிகத் தண்ணீர் கட்டினால் களர் எடுபட்டுப்போம். பசுவின் எருவைப் போட்டால் சாதம் ருசியாக இருக்கும்.

நெற்பயிருக்கு வேண்டிய உழவு

நெல்லுக்கு நான்குழவு என்னும் பழமொழி நம் நாட்டாருக்குத் தெரிந்த விஷ யம். நெல் தொன்று தொட்டுச் சேற்றில் விளையும் பயிராகையால் இதற்குப் புழுதியுழவு கூடாது. மேலும், மண் மட்க வேண்டியதைக் கருதி நான்கு நாள் விட்டு, விட்டு உழுதல் உத்தமம். நெற்பயிரின்வேர் ஒரு அங்குலம் வளர்ந்து பரவும் தன்மை யுடையதாதலால் உழவுக்குத் தக்கபடி பயிர் விருத்தியாகும்.

நெற்பயிர்

இது புன்செய், நன்செய் நிலங்களில் பயிரிடப்படுவது, பூமியை நன்றாயுழுது புழுதியாக்கி உலர்த்தி நனறாகக் காய்ந்த விதையைப் புழுதியில் விதைப்பர். இது புழுதிக்கால்பயிர். கழனியை உழுது நீர்பாய்ச்சி எருத்தழை முதலிய போட்டு அவை நன்றாயழுகியபின் பறம்படித்து நாற்றுகளைத் தூரமாச நட்டுப் பயிரிடுவது நடவு. இது நன்செய் பயிர், நெற்பயிருக்கு நிறையத் தண்ணீர்ப் பாய்ச்சி, களை பறித்து எருவிடவேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பலன் தரும். இதில் பலவகை நெற்கள் உண்டு. இது, முக்யமாய் சம உஷ்ணமுள்ள தேசங்களில் பயிராகிறது. இந்தியா, பர்மா, சீனா, முதலிய இடங்களில் பயிராகிறது. இதன் தாள் வைக்கோலாய் மாடுகளுக் குணவாகும், நெல்லை அரிசியாக்கி ஆகாரமாகவும், தின்பண்டப் பணிகாரங்களாகவும் செய்கிறார்கள். இதன் விரிவை தான்யவகைகளில் காண்க.

நெற்பயிர்க்குத் தக்க நிலம்

நெற்பயிரானது அதிகத் தண்ணீருள்ள இடங்களிலெல்லாம் மிகுதியாக விளையக்கூடினும் களிமண், செம்மண், எதியோரம், மணல்படுக்கை, மிச்ரமண் முதலானவையே இப்பயிருக்கு ஏற்றவை.

நெல்

புல்வகையில் சேர்ந்த பயிர். இது உலகிலுள்ள எறும்பு முதல் யானை யீறாகவுள்ள எல்லாப் பிராணிகளுக்கும் ஆகாரமாகவுள்ளது. இது, நன்செய், புன்செய் நிலங்களில் விளையும் பயிர், இவ்வகை நெற்கள் உருவ வேறுபாட்டினும், உரிசை வேறுபாட்டினும் பலவகைப்படும். இந் நெல்வகை இந்தியாவில் (300)க்கு மேற்பட்ட வேறுபாடுள்ளன வென்பர். ஜபானியர் இதில் (4000) வகைகளுக்கு மேற்பட்டிருக்கிற தென்பர். இவற்றின் நிறம் பொன்மை, வெண்மை. இந்தியாவில் பூர்வம் பெரும்பாலார் உழவைக் கொண்டே எல்லா செல்வங்களையும் பெற்றனர். அரசனும் உழவரிடம் பெற்ற செல்வத்தாலேயே அரசாண்டு வந்தான். வேற்று நாட்டவரும் இந்நாட்டின் வளங்கண்டே இந்நாட்டிற் படையெடுத்து வந்தனர். அத்தகைய பெருஞ் செல்வத்தைத் தந்த நெல் தற்காலம் உழவர் தாழ்வடைந்ததால் குறைவுபட்டது. அதற்குக் காரணம் நம் நாட்டு எரு முதலிய அயல்நாடு சேருதலாம். இவ்வகை பெருமை பெற்ற நெல்லின் வகை கார்நெல், மணக்கத்தைநெல், வாலான், கருங்குறுவை, ஈர்க்குச்சம்பா, புழுகுச் சம்பா, கைவரைச் சம்பா, செஞ் சம்பா, கல்லுண்டைச் சம்பா, குண்டுச் சம்பா, மல்லிகைச்சம்பா, இலுப்பைப்பூச் சம்பா, மணிச்சம்பா, வளை தடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச்சம்பா, காளான் சம்பா, மைச். சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகிச் சம்பா, புட்டரிசி நெல் முதலிய பல உண்டு.

நெல்லின் பல வகுப்புகள்

நமது நாட்டில் விளைவிக்கும் நெல்லில் 1, கார், 2. சம்பா, 3. குறுவை, 4. அன்னதானம், 5. அறுபதாங்கோடை, 6, மிளகி, 7. செம்மிளகி, 8. சீரகச்சம்பா, 9. சிறுமணிச் சம்பா, 10. சின்னசம்பா, 11. பெரிய சம்பா, 12. வாடைச்சம்பா, 13. ஊசிச் சம்பா, 14. இலுப்பைச்சம்பா, 15. மல்லிகைச்சம்பர், 16. கம்பன் சம்பா, 17. கைவளைச்சம்பா, 18. குங்குமச்சம்பா, 19. குண்டுச்சம்பா, 20, கோடைச்சம்பா, 21. ஈர்க்குச்சம்பா, 22. புனுகுச்சம்பா, 23. துய்யமல்லிச்சம்பா, 24. மோரன்சம்பா, 25. பாலன் சம்பா, 26. சீவன்சம்பா, 27. செம்லிப்பிரியன், 28. பிசானம், 29. மலை குலுக்கி, 30. மடுவிழுங்கி, 31, காடைக் கழுத்தன், 32. செம்பாளை, 33. பூம்பாளை, 34. முட்டைக்கார், 35. கடப்புக்கார், 36. வெள்ளைக்கார், 37. மோசனம், 38. மணக் கத்தை, 39. பிச்சைவாரி, 40. ஈசற் கோவை, 41. இறங்குமேட்டான், 42.தென்னெல், 43.வெண்ணெல், 44.அருஞ்சோதி, 45. பொங்கையோச்சாலி, 46. பொன்கம்பி, 47: புளங்கல், 48. பெங் காளம், 49. பர்மான், 50. பைகோசம்பா முதலான அநேக ஜாதிகளுமிருக்கின்றன.

நெல்லை வருக்கக் கோவை

வேம்பத்தூர் புலவர்களுள் ஒருவாராகிய அம்பிகாபதி என்பவரா லியற்றப்பட்டது.

நெல்லைநாதர்

சிவராத்திரி புராணம் பாடிய புலவர்.

நெல்லையப்பபிள்ளை

இவர் திருநெல்வேலியலிருந்த தமிழ்வித்வான், திருநெல்வேலி புராணம், திருப்பாச்சூர் புராணம் முதலிய பாடியவர்.

நேசநாயனர்

காம்பீலியென்னும் திருப்பதியிலிருந்த சாலியர். இவர் சிவனடியவர்க்கு உடைகோவணம் கீள் முதலிய நெய்து கொடுத்துச் சிவனடியவர்களைப் பூசித்துச் சிவபக்தி யுடையவராய் முத்தியடைந்தவர். (பெ. புராணம்).

நேதாதேவர்

செந்நிறம், பாமசிவத்தின் இச்சாஞானக்கிரியாச்வரூபமாய்ச் சோம சூர்யாக்னி சவரூபமாயுள்ளவர்.

நேத்திரன்

தர்மன் குமரன். இவன் குமரன் குந்தி.

நேத்திரரோகங்கள்

இவை தாய், வயிற்றில் பிள்ளை இருக்கும் காலத்தில் கிருமி ஜனிக்கும் வஸ்துக்களைப் புசித்தலாலும், பாஷாண முதலிய புகைப்படுதலாலும், சிரத்திலும் கண்களிலும் அடி உண்டாலும், பாரம் சுமத்தலாலும், வெயிலில் நடத்தலானும், தைல முழுக்கு தவறுதலாலும், முத்தோஷங்களும் அதிகரித்து, தனித்தாவது, தொந்தித்தாவது மூவித நரம்புகளின் வழியாய் சிரசை அனந்து கண்களின் ஆறுஸ் தானங்களைப்பற் (94) விதரோகங்களைப் பிறப்பிக்கும். அவை, இமைகளில் (24) வெள்விழிச்சந்தில் (9) வெள்விழியில் (13) கருவிழியில் (5) பாவையில் (27) கண்கள் முற்றிலும் (16). இதன் விரிவை ஜீவாக்ஷாமிர்தத்தில் காண்க.

நேமிசந்திராசாரியர்

சைக ஆசாரியருள் ஒருவர். இவர் கோமடாசாரம், லப்தீசாரம் என்னும் நூல்கள் செய்தவர்.

நேமிநாத சுவாமிகள்

சைந தீர்த்தங்கர், இவர் கசார்த்தாதேசத்தில் சௌரிய புரத் திலிருந்த சமுத்திரவிசய மகாராஜாவுக்குச் சிவதேவியிடம் பிறந்தவர். இவர் ஆவணி மாசம் சுக்கிலபக்ஷம் ஷஷ்டி சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (10) வில், நீலவர்ணம், ஆயுஷ்யம் (1000) வருஷம், இவர்க்குக் கணதார் வரதத்தர் முதலியவர். இவர் காலத்து இராசாக்கள், பலராம பலதேவர், கிருஷ்ண வாசுதேவர், சராசந்த பிரதிவாசுதேவர், பிரமதத்தன், சக்கிரவர்த்தி, பாண்டவர், துரியோதனாதிகள். இவர் வாமநாதபுர மென்னும் தென்மயிலையில் இருந்தபோது இந்த நாடு இரு முறை கடல் கொண்ட காலத்து மயிலை மான் அரசனை நோக்கி ஜைநபிம்பத்தை அப்புறப்படுத்த எவினர். இந்த நேமிநாத சுவாமியே இரண்டாமுறை மயிலை கடல் கொண்ட காலத்துச் சித்தாமூரில் பிரதிஷ் டிக்கப்பட்டவர். இவர் இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர்.

நேமிநாதம்

நேமிநாத தீர்த்தங்கார் பெயரால் குணவீரபண்டிதராற் செய்யப்பட்ட எழுத்தும் சொல்லும் அமைந்த இலக்கண நூல். இது பத்து வகை அழகோடுங்கூடிய வெண்பாவாலாயது.

நேரிசை ஆசிரியப்பா

ஈற்றயலடி முச்சீரும் மற்றையவடிகள் நாற்சீருமாய் வருவது. (யாப்பு ~ இ.)

நேரிசை வெண்பா

நான்கடியாய் இரண்டாமடியினிறுதிச்சீர் தனிச்சீராக நான்காமடி முச்சீராக முடிவது. (யாப்பு ~ இ.)

நேரிசையொத்தாழிசைக்கலிப்பா

தரவு, முதலிய ஆறுறுப்புக்களில் அராகம், அம்போதரங்கம் ஒழிய வருவது (யாப்பு ~ இ.)

நேரிவாயில்

உறையூரின் தெற்குவாயிற்கண்ண தோர் ஊர். (சிலப்பதிகாரம்).

நைசாசரி

நிருதிசம்பந்தமான சக்தி.

நைடதம்

இது தமிழில் நளன் சரித்திரத்தை விரித்துக் கூறுவது. (300) வருடத்திற்கு முன் தென் காசியிலிருந்து அரசு செலுத்திய அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பட்டது. இது வடமொழி நைஷதம் போன்று பலவகை அலங்காரம் அமைந்தது.

நைமிசாரண்யம்

1. இஃது இமயமலைக்கருகிலுள்ள வனம். இருடிகள் தாங்கள் தவமியற்று தற்கு வசதியான நல்ல இடம் அருளுக எனப் பிரமதேவனை வேண்டப் பிரமதேவர் ஆராய்ந்து தருப்பையொன்றை யெடுத்து நேமி (சக்கரம்) போற்செய்து அதனை உருட்டி இதன்பின் செல்லுக. இது எவ்விடம் நிற்குமோ அந்த இடம் உமக்குத் தவமியற்றுத்ற்கு வசதியான நல்ல இடமாகும் என்றனர். அவ்வகை சென்ற நேமி நின்ற இடமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது. ஒருகால் நிமிஷமாகிற கண்ணிமைப்போதில் திருமால் இவ்விடமிருந்து அசுரரைக் கொன்றதாலும் இப்பெயர் பெற்றதென்பர். இங்கு நரநாராயண இருடி தவஞ்செய்தனர். இதற்கு நைமிசவனம் எனவும் பெயர், 2, Nimser, 24 miles from the Sadila Station of oudb, and Rohilkand Railway, and 20 miles, from Sitapur. It is situated on the left book of Goomti.

நைமித்திகப்பிரளயம்

பிரமனுடைய பகற்காலம் நீங்கி இரவுண்டாமளவில் உண்டாம் பிரளயம், வராக்கற்பத்தைக் காண்க.

நைமீஷீயம்

ஸரஸ்வதி ருஷிகளின் பொருட்டு ஏழாகப்பிரிந்த இடம். (பார ~ சல்ய.)

நையாண்டிப்புலவன்

ஒரு தமிழ்ப்புலவன். இராமசந்திர கவிராயன் காலத்தவன். தொண்டை நாட்டவன்; பள்ளிகொண்டான் என்னும் பாதவன்மீது “வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலுமலை, வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் விண்ணவர்க் கமுதம், துள்ளிக் கொண்டான் புள்ளி லேறிக்கொண்டான் சுபசோபனஞ் சேர், பள்ளிகொண்டான் புகழேறிக் கொண்டா னென்று பார்க்கவென்றே” என்று பாமா லைப்பாடிப் பரிசுபெற்றவன். (தனிப்பாடற்றிரட்டு).

நையாயிகன்

இவன் பிருதிவி முதலாகிய பூதம் ஐந்தெனவும், திக்கு, மனம், புத்தி, ஆத்மா முதலிய திரவியம் ஒன்பதெனவுங் கூறுவன். பூதங்கள் அணுக்கூட்டம் என்றும் இதில் அநாதி அணுச்சத்தாய்க் கெடாதிருக்கு மெனவும், காரியமாகிய அணுக்கள் வேறாயிருந்து உலகங்களாய்ச் சத்தாய்ச் சடமாய் நித்தியமுமாய்க் கெடுமெனவும், இவ்வகை ஸ்தூல அணுசூக்ஷம அணு என அணுக்கள் இருவி தமெனவும், இந்த அணுக்கூட்டங்களே அகிலமாயிற்றெனவும், அகிலங்களில் ஆத்மாக்கள் வியாபிகளாய் அநேகமாய் இருக்குமெனவும், ஆன்மகுணமே புத்தியெனவும், முன் சொன்ன அகிலங்களில் குணம் புத்தியாயிருக்கிற ஆத்மாக்க ளியல்பாக அதில் மறைந்து பந்தப்பட்டுச் சநனமாணப்படும் எனவும், ‘ ஆன்மாக்கள் தமக்கென அறி வைப் பெறாவெனவும், புத்தி முதலாகிய அந்தக்கரணமே அறிவைத் தருமெனவும், இவற்றைத் தரும் சருவஞ்ஞசீவன் ஆத்மாவுக்குக் கன்மத்தால் அறிவிப்பான் எனவும், காலம் நித்தியம் எனவும், இவற்றைப் பிரேரேரிப்பவன் கடவுள் எனவும், ஆத்மா ஆகாயம் போல் மகத்பரிமாணமாய்ப் பாஷா ணம்போல் சடமாய் மனச்சையோகத்தால் சித்த தர்மயுக்தனாயிருப்பன் எனவும், முன் சொன்ன கர்மங்கள் எல்லாம்விட்டுப் புத்தி முதலான காணவிகற்பங்கெட்டு ஆகாயம்போலும் பிணம்போலும் சமாதி பொருந்திப் பாஷாணம்போல்வது முத்தியெனவும் கூறுவன். (தத்துவநிஜாநுபோகசாரம்)

நைஷதம்

நளன் கதைசொன்ன ஒரு நூல்.

நைஷ்டிக பிரமசாரி

விவாகமில்லாமலும் சந்நியாஸ ஆச்சிரமம் கொள்ளாமலுமிருக்கிற பிரமசாரியாம். (ஹரீ தஸ்மிருதி.)

நைஷ்டிகன்

ஒர் சிற்பி.

நொச்சி

ஏவறையையுடைய முடக்குக்களைத் தாங்கின நிலைமையினையுடைய எயில் காக்கும் வீரர்மலைந்தபூவைப் புகழ்ந்தது. (புறவெண்பா.)

நொச்சிநியமங்கிழார்

ஒரு செந்தமிழ்க்கடைச்சங்கப் புலவர். இஃது ஊர்பற்றி வந்த பெயர். நொச்சிநியமம் ஒரூர், இவர் வேளாண் மரபினர். இக்காலத்து ஆராய்ந் தறிதற்குமரிய பூக்கோட்காஞ்சி யியற்றியவர் (புறம் 293) குறிஞ்சித்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளாராதலின் இவரூர் குறிஞ்சியினகத்தது போலும் நீ படும் துயர்தான் யாதென்று வினவிய தாய்க்குத் தலைவன் மார்பணங்கென்று தவறியுரைக் கத்தொடங்கினேனென் தலைவி கூறுவதா கப் படிப்போர்க் கினசுவையூட்டுகின்றனர் (நற். 17) தலைவியின் மொழி கேட்பினுய்வேன் அன்றேலென் னுயிரோடெல்லா மொருங்கழியுமென்று தலைவன் கூறுவது, இனிய சுவையதாகும், (நற். 209) புதுவதாகப் பூத்த வேங்கைமலரைப் பெற வேண்டி மகளிர், புலி, புலி, யென்று பூசலிடுவதையும் அதனைக்கேட்டுப் புலிபோலு மென்று ஆடவர் வில்லம்புடன் வருவதை யும் விரித்துக் கூறியுள்ளார். (அகம் 52) (புலி, புலி என்றால் வேங்கையின் கிளைதாழ்ந்து கொடுக்குமென்பது வழக்கு. இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று பாடல்களும், அகத்திலொன்றும், புறத்தி லொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன,

நொய்

அரிசியைச் சுத்தப்படுத்த குத்துகையில்நொறுங்கிய அரிசியின் துணிக்கைகள்,

நோக்கர்

இவர்கள் பள்ளிகளுக்குச் சாதிப் பிள்ளைகளென வருஷந்தோறும் ஜாதியார் இருக்கும் கிராமங்களிற்சென்று கடமை வாங்குகிறார்கள். இவர் சுபாசுபங்களில் அதுமன், புலி, அக்னி முதலிய கொடிகளைத் தாங்கி விருது கூறி வருவர். இவர்கள் காஞ்சியில் தேர் அழுந்திய போது நோக்கன் ஒருவன் கர்ப்பிணியாகிய தன் குமரியைப் பலியாகத் தந்தனன். பின் ரதம் நிலவிட்டுக் கிளம்பியது. அது முதல் அரசன் இவர்களைச் சாதிப்பிள்ளைகளாக ஏற்படுத்தினன் என்பர். இவர்கள் பூணூல் தரித்து ஒரு பறையும் பூரியும் கொண்டு திரிவர். (தர்ஸ்டன்.)

நோசை

குறிலேனும், நெடிலேனும் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது.

நோதகர்

கௌதமருடைய குமரர். இருக் குவேதத்தில் ஒரு பாகத்திற்கதிகாரி.

நோதனுக்யசையோகம்

பரிசமுடைய திரவியத்திற்கு மூர்த்த திரவியத்தோடு உண்டாகிய சையோகம். (தரு.)

நோய்பாடியார்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவர். யுத்தத்தில் வீரங்காட்டி வென்றோரது பெயரும் பீடுமெழுதி நடுகல் நடுதலைக் கூறியுள்ளவர். இவர் நோயின் தன்மையைப் பாடிய மருத்துவத்தொழில் மேற்கொண்டதனால் இப்பெயர் பெற்றாரென ஊகிக்கப்படுகிறது. (அகம் 67)