ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நேசநாயனர் | காம்பீலியென்னும் திருப்பதியிலிருந்த சாலியர். இவர் சிவனடியவர்க்கு உடைகோவணம் கீள் முதலிய நெய்து கொடுத்துச் சிவனடியவர்களைப் பூசித்துச் சிவபக்தி யுடையவராய் முத்தியடைந்தவர். (பெ. புராணம்). |
நேதாதேவர் | செந்நிறம், பாமசிவத்தின் இச்சாஞானக்கிரியாச்வரூபமாய்ச் சோம சூர்யாக்னி சவரூபமாயுள்ளவர். |
நேத்திரன் | தர்மன் குமரன். இவன் குமரன் குந்தி. |
நேத்திரரோகங்கள் | இவை தாய், வயிற்றில் பிள்ளை இருக்கும் காலத்தில் கிருமி ஜனிக்கும் வஸ்துக்களைப் புசித்தலாலும், பாஷாண முதலிய புகைப்படுதலாலும், சிரத்திலும் கண்களிலும் அடி உண்டாலும், பாரம் சுமத்தலாலும், வெயிலில் நடத்தலானும், தைல முழுக்கு தவறுதலாலும், முத்தோஷங்களும் அதிகரித்து, தனித்தாவது, தொந்தித்தாவது மூவித நரம்புகளின் வழியாய் சிரசை அனந்து கண்களின் ஆறுஸ் தானங்களைப்பற் (94) விதரோகங்களைப் பிறப்பிக்கும். அவை, இமைகளில் (24) வெள்விழிச்சந்தில் (9) வெள்விழியில் (13) கருவிழியில் (5) பாவையில் (27) கண்கள் முற்றிலும் (16). இதன் விரிவை ஜீவாக்ஷாமிர்தத்தில் காண்க. |
நேமிசந்திராசாரியர் | சைக ஆசாரியருள் ஒருவர். இவர் கோமடாசாரம், லப்தீசாரம் என்னும் நூல்கள் செய்தவர். |
நேமிநாத சுவாமிகள் | சைந தீர்த்தங்கர், இவர் கசார்த்தாதேசத்தில் சௌரிய புரத் திலிருந்த சமுத்திரவிசய மகாராஜாவுக்குச் சிவதேவியிடம் பிறந்தவர். இவர் ஆவணி மாசம் சுக்கிலபக்ஷம் ஷஷ்டி சித்திரை நக்ஷத்திரத்தில் பிறந்தவர். உன்னதம் (10) வில், நீலவர்ணம், ஆயுஷ்யம் (1000) வருஷம், இவர்க்குக் கணதார் வரதத்தர் முதலியவர். இவர் காலத்து இராசாக்கள், பலராம பலதேவர், கிருஷ்ண வாசுதேவர், சராசந்த பிரதிவாசுதேவர், பிரமதத்தன், சக்கிரவர்த்தி, பாண்டவர், துரியோதனாதிகள். இவர் வாமநாதபுர மென்னும் தென்மயிலையில் இருந்தபோது இந்த நாடு இரு முறை கடல் கொண்ட காலத்து மயிலை மான் அரசனை நோக்கி ஜைநபிம்பத்தை அப்புறப்படுத்த எவினர். இந்த நேமிநாத சுவாமியே இரண்டாமுறை மயிலை கடல் கொண்ட காலத்துச் சித்தாமூரில் பிரதிஷ் டிக்கப்பட்டவர். இவர் இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர். |
நேமிநாதம் | நேமிநாத தீர்த்தங்கார் பெயரால் குணவீரபண்டிதராற் செய்யப்பட்ட எழுத்தும் சொல்லும் அமைந்த இலக்கண நூல். இது பத்து வகை அழகோடுங்கூடிய வெண்பாவாலாயது. |
நேரிசை ஆசிரியப்பா | ஈற்றயலடி முச்சீரும் மற்றையவடிகள் நாற்சீருமாய் வருவது. (யாப்பு ~ இ.) |
நேரிசை வெண்பா | நான்கடியாய் இரண்டாமடியினிறுதிச்சீர் தனிச்சீராக நான்காமடி முச்சீராக முடிவது. (யாப்பு ~ இ.) |
நேரிசையொத்தாழிசைக்கலிப்பா | தரவு, முதலிய ஆறுறுப்புக்களில் அராகம், அம்போதரங்கம் ஒழிய வருவது (யாப்பு ~ இ.) |
நேரிவாயில் | உறையூரின் தெற்குவாயிற்கண்ண தோர் ஊர். (சிலப்பதிகாரம்). |