ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனர் | மான் கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமையால் இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரென்று தெரிகிறது. அதுவே கலைக்கோட்டுத் தண்டனெனப் படுவது. இதனை இடுகுறிப்பெயர் என்று கொண்டார். களவியலுரைகாரரும், நன்லூல் விருத்தியுரைகாரரும் (சூத். 49) அஃது இதுகாறும் வெளிவந்திலது. இவர் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது (நற்.382 ம்) பாட்டு. |
நிகம்பன் | சுந்தோபசுந்தருக்குத் தந்தை, |
நிகழ்வினவிற்சியணி | இது முன் நடந்ததையேனும், பின் நடப்பதையேனும் அப்போது நடக்கிறதாகச் சொல்லுதலாம். இதனைப் பாவிகாலங்காரம் என்பர். (குவல.) |
நிகாகத்தானம் | என்பது, ஒருவராலும் கண்டிக்கப்படேன் என்பவன் மதத்தைக் கண்டிக்கப்படுவது. இது அப்ரதிபத்தி, விப்பதிபத்தி எனவும், இவற்றின் பேதம் பிரதிஞ்ஞாஆனி,பிரதிஞ்ஞாந்தம்,பிரதிஞ் ஞாவிரோதம்பிரதிஞ்ஞாசந்யாசம்,ஏதுவந்தரம்,அர்த்தாந்தரம்,நிரர்த்தகம், அவிக் நிசாகரர் யாதார்த்தம், அபார்த்தகம், அப்பிராத்தகாலம், நூனம், அதிகம், புனருத்தம், அந்துபாடன், அஞ்ஞாதம், அப்பிரதியை, விக்ஷேபம், மதானுஞை, பரியநுயோச்சி யாபேக்ஷணம், அபசித்தாந்தம், எதுவாபாசன், இருபத்திரண்டு, (சிவ ~ சித்.) |
நிகிர்தி | டம்பமாயைகளின் குமரன், இது (உருவகம்.) |
நிகும்பன் | 1. (சந்.) அஸ்தன் குமரன். 2, அரியசுவன் குமரன். குமரன் பர்ஹிணாசுவன், 3. இராவணனுக்கு அம்மான். பெரிய ஆகாரமுடையவன். இவனுக்கு ஒன்பது கோடி சைந்யம். இவன் அக்னியுடன் போர்செய்து வென்றவன். இராவணனுக்குச் சீதையை விட்டுவிடும்படி புத்திபோதித்தவன். மாருதியால் அறையுண்டிறந்தவன். 4. கும்பகர்ணன் குமரன். அநுமனால் இறந்தவன். 5. சிவமூர்த்தியால் கொல்லப்பட்ட அரக்கன். 6. சண்முக சேநாவீரன். 7. சிவகணத்தவன், இவன் தேகமுழுதும் வாயும், எண்ணிறந்த கைகால்களு முள்ளவன். |
நிகும்பலை | இலங்கைத் தீவில் இந்திரசித்து யாகஞ்செய்த இடம். |
நிக்கனன் | யதுவம்சத்து அநமித்திரன். ஜேஷ்டபுத்திரன். இவன் புத்திரர் சத்ராசித், பிரசேநன். |
நிக்குரோதன் | உக்கிரசேநன் குமரன். |
நிக்தருந்தனம் | ஒரு நகரம். |
நிசாகார் | விந்திய பர்வதத்தை ஆச்சிரமமாகக் கொண்ட இருடி, இவராச்சிரடித்தில் சம்பாதி சூரியனைக் காணப் பறந்து இரக்கைகள் கருகிவிழ இவர்கண்டு இராமதூதனாகிய அநுமனுக்குச் சீதையை இராவணன் கொண்டு சென்றவழி கூறின் இரக்கை முளைக்குமென அறுக்கிரகித்தவர். |
நிசிதன் | 1. தோஷாவிற்குப் பட்சிபாரானால் பிறந்த குமரன். 2. ஒரு யாதவன். |
நிசுந்தன் | சுந்தோபசுந்தர் தந்தை. |
நிசும்பன் | 1. சத்தியுடன் யுத்தஞ்செய்து மாண்ட அசுரன், சும்பனுக்குச் சகோதான். 2. நரகாசுரனுக்கு மந்திரி. இவன் நரகாசுர சம்மாரத்தின் பொருட்டுக் கண்ணன் செல்லுகையில் கண்ணனை எதிர்த்து மாண்டவன். 3. சும்பன் எனும் அசுரனுக்குத் தம்யன். இவன் ஒருகாலத்தில் தனக்குத் தன் தம்பியால் இரையாகக் கொடுக்கப் பட்ட பிரத்யும்நனை ஆகாயமார்க்கமாக நெடுந்தூரங் கிளம்பி அங்குவிடுப்ப இவன் தெய்வகதியால் சும்பன் பட்டணத்தில் ஒரு மலையை அடைந்து அம்மலையிலிருந்த உத்யானவனத்திருந்த சும்பன் புதரியாகிய லக்ஷ்மியைக் காந்தர்வ மணஞ்செய்து கொண்டனன். இதனையறிந்த சும்பனிருவரையும் வஜ்ரபஞ்சரத்தில் காவலிடப் பிரத்யும்நன், தேவி உபாசனை புரிய, தேவியார் ஒரு கிளியுருக்கொண்டு உள்ளடைந்து பஞ்சாத்தை உடைத்தெறியச் சும்ப நிசும்பர் யுத்தத்திற்கு வந்து பிராட்டியைக்கண்டு மோகித்து ஒருவருடன் ஒருவர் யுத்தஞ் செய்திறந்தனர். |
நிசுளாபுரியாசன் | தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்திருந்த உறையூர் அரன். |
நிசூளிகா இரணம் | இது தேகமெங்கும் சட்டையிட்டது போல் கொப்புளங்களை உண்டாக்கும் ரோதம். |
நிச்சக்கிரன் | அசீம கிருஷ்ணன் குமரன் அஸ்தினபுரம் கங்கையில் முழுகிய காலத் துக் கௌசாம்பிகை நகரத்தில் வசித்தவன். இவன் குமரன் உதகன். |
நிஜகுணயோகீந்திரர் | கன்னடத்தில் விவேகசிந்தாமணி இயற்றியவர். |
நிடதம் | அஷ்ட குலாசலங்களில் ஒன்று, இது ஏமகூடபர்வதத்திற்கப்பால் (1000) யோசனையில் இருக்கிறது, |
நிடாதன் | சவனனைக் காண்க. |
நிதந்து | ஒரு இராசருஷி. இவன் குமரர் சால்வேயன், சூரசேநன், சுருதசோன், திந்துசாரன், அதிசாரன் முதலியவர்கள். |
நிதரிசனவணி | ஒருவகையான் நிகழ்வ தோன்றற்குப் பொருந்திய பயனைப் பிறிதொன்றற்கு நன்மை புலப்பட நிகழ்வதாதல், தீமைபுலப்பட நிகழ்வதா தல், செய்த தனைச் சொல்லுவது, (காட்சியணி) |
நிதாகர் | 1. ருபன் சீடர் புலத்தியர் குமரர். 2. இரிபுவின் மாணாக்கர். இவர் சநகர் முதலியவர்க்கு உபதேசித்தவர். |
நிதி | இது எட்டு வகைப்படும். பதுமநிதி, மகாபதுமநிதி, மகாநிதி, கச்சபநிதி, முகுந்தநிதி, குந்தநிதி, நீலநிதி, சங்கநிதி என் பன. |
நிதிபதி | பரமதத்தன் தந்தை, |
நிதியின் கிழவன் | 4. குபோனுக்கு ஒரு பெயர். 2. தலைச்சங்கப் புலவருள் ஒருவர், இவர் குபேரனாகவே இருக்கலாம். |
நிதியைப்பற்றியது | நிலத்திற்றோண்டிப் புதைத்து வைக்கும் பொருளின் வைப்பு. உபநிதி : மற்றொருவன்பால் நம்பி அடைக்கலமாக வைப்பது, பண்டமாற்று : ஒரு பொருளைப் பெறுதற்கு விலையாகக் கொடுக்கப்படுவது. ஆதமர்ணிகம் : வட்டியுடனாதல், அது இல்லாமலாதல் பெற்றுக் கொள்வதாக கொடுக்கப்பட்ட பொருள், கடன் : வட்டியுடன் பெறுவதாகக் கொடுக்கப்பட்ட பொருள். யாசிதம் : வட்டியின்றிப் பெறுவதாகக் கொடுக்கப்பட்டது தன்னுரிமை யொழிவதாகிய செலவு இம்மையது, மறுமையது என (2) வகை. இம்மைச் செலவு பிரதிதானம், பரிசில், வேதனம், போக்யம் என (4) வகைப்படும். பிரதி தானம் : ஒன்றற்கு விலையாகக் கொடுக்கப்படுவது. பரிசில் : ஒருவனுக்கு வீர முதலியன குறித்து உவகையுடன் கொடுப்பது, வேதனம் : கூலியாகக் கொடுப்பது, இரவாகன உபபோக்யம் : நெல் முதலிய தானியக் கள், இல்லம், சோலை பசு முதலிய, கல்வி முதலிய ஈட்டுதற் பொருட்டும் காத்தற் பொருட் செலவிடும் பொருள். போக்யம். அரசன் தன் சௌக்யத்தின் பொருட்டுச் செலவிடும் பொருள். மறுமைச் செலவு : செபம், ஓமம், அருச்சனை, தானம் என் யன நிதியைப் பற்றியது. புனர்யாதம். விசேடவரவினிமித்தம் செய்யப்படுஞ் செலவு இதற்கு நிவர்த்தம் எனவும் பெயர். ஆவர்த்தம் : விசேட செலவினா லுண்டாகும் வாவு இதற்கு நிவர்த்தி யெனவும் பெயர். திரவியம் : பலகறை முதல் இரத்தின மிறுதியாயின. தனம் : பசு, ஆடை, தானிய முதல் புல்லிறுதியாயின. (சுக் ~ நீ). |
நிதிவாகள் | ஒரு வணிகன், குருவாலேவப் பெற்று மடமிடித்து நரகமடைந்தவன். |
நித்தயோகினிநிலை | பகலை (8) பங்காக்கி (1) வது பங்கில் கிழக்கிலும், (2) வது வடமேற்கிலும், (3) வது தெற்கிலும், (4) வது வடக்கிலும், (5) வது மேற்கிலும், (6) வது தென்கிழக்கிலும், (7) வது வடக்கிலும், (8) வது தென்மேற்கிலும் நிற்கும். யாத்திரைக்கு இந்த யோகினி பின்பக்கமும், இடப்பக்கமுமாக இருத்தல் வேண்டும். இதனைப் பார்க்குமிடத்துக் இழக்கை முதலாகக்கொண்டு பார்க்க |
நித்தியசூரிகள் | ஸ்ரீவைகுந்தத்தில் பரமபத நாதனைப்போல் சாரூபமடைந்து நித்தியானந்த வாசிகளாய் எழுந்தருளியிருக்கும் முத்தாத்மாக்கள். அவர்கள் சேனை முதலியார் குமுதர், குமுதாக்ஷர், புண்டரீகர், வாமனர், சங்குகர்ணர், சர்ப்பதேத்திரர், சுமுகர், சுப்பிரதிஷ்டர், சண்டர், பிரசண்டர், பத்திரர், சுபத்திரர், ஜயர், விஜயர், தாத்ரு, விதாத்ரு, பிரப்புருதி முதலியவர்கள். |
நித்தியதானம் | பலன் கருதாது முனிவர்க்குப் பொருளைப் பரிவுடன் அளிப்பது. |
நித்தியநாதன் | இவன் முக்கால முணர்ந்த அரசன், இனி வரும்பிறப்பில் சென்ம நீக்க மென்றறிந்து தவஞ்செய்கையில் குமாரக்கடவுள் ஆசாரியாராய் எழுந்தருளி ஞானோபதேசஞ்செய்ய முக்திபெற்றவன். |
நித்தியப்பிரளயம் | ஜன்மாதி யவஸ்தைகளால் ஆத்மா நாடோறும் லயமடைந்து திரும்பிச் சாக்கிராவஸ்தையடைதல். |
நித்திரன் | பாண்டுவிற்குப் பௌத்திரன். |
நித்திரை | காலாக்கினிருத்ரர்க்குத் தேவி; இவள் சகலரையும் இளைப்பாறச் செய்யவள். (பிரம்மகைவர்த்தம்.) |
நித்திரை செய்து விழிக்கையில் பார்க்கக் கூடாவிதி | நித்திரை செய்து விழித்த உடன் அங்கயீனம், வஸ்திரயீனம், பாவம், காவிவஸ்திரம், கிரகசங்கை, ஊமை, மொட்டைத்தலை, செவிடு, அழுகை, சடை, கூன், அழக்குமேனி, விரிந்த மயிர்த்தலை, குஷ்டம், கொலை, எண்ணெய்த்தல, மனோவியாகூலம், உன்மாதம், ஆககம், விதவை, பாம்பு, பூனை, சாம்பல், எருமை, கயிறு, உலக்கை, முறம், இவைகளைப் பார்த்தால் அன்றைக்குக் கெடுதி அல்லது பல துன்பங்களுண்டா மென்றறிக. |
நித்திரை செய்து விழித்தவுடன் பார்க்கவே ண்டிய விதி | நித்திரைசெய்து விழிக்கும்போது தாமரைப்பூ, தங்கம், தீபம், கண்ணாடி, சூரியன், புகையொழிந்த நெருப்பு, செஞ்சந்தனம், கடல், வயல், சிவலிங்கம், முகில் சூழ்ந்தமலை, கன்றையுடைய பசு, கற்பகவிருட்சம், தமது வலக்கை, மனைவி, மிருதங்கம், இவற்றுளெதுவேனும் ஒன்றைப்பார்க்கில் உத்தமம். விழித்தவுடன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டுவரில் வீரியவிர்த்தியும், மகிழ்ச்சியும், சர்வவசியமும், ஞானம் அதிகரிக்கு மென்பர். |
நித்திரை செய்விதி | முறைப்படி இடது பக்கமாகப் படுத்துக் காலை நீட்டிக்கொண்டு நித்திரை செய்தால் பஞ்சேந்திரியங்களினயர்வும்,ச்ரீரவருத்தமும் நீங்கும். இளைத்த மீனத்திற்கு உற்சாகமும் ஆயுள் விர்த்தியு முண்டாகும் தேகாதிபாதம் வரைக்கும் வஸ்திரத்தால் மூடிக்கொண்டு நித்திரை செய்தால் இரண்டு நேத்திரங்களுக்கும், இரண்டு புஜங்கட்கும் வன்மையுண்டாம். அன்றியும் குளிர், பனி, வெயில், தூசி, மேகம், இவைகளால் விளைகின்ற குற்றங்களுணுகாவென்றறிக. |
நித்யகர்மப்பிரிவு | ஆறு, நித்யம், நித்யாங்கம், நைமித்திகம், நைமித்திகாங்கம், காமி யம், காமியாங்கம். (சைவபூஷணம்.) |
நித்யசமை | தர்மம், நித்யம் அநித்யம் எனும் விகற்பத்தினால் தர்மிநித்யமென்று சாதிப்பது, (தரு.) |
நித்யசையோகம் | வியாபகப் பொருள்களிரண்டிற்குள்ள சையோகம்.(தரு.) |
நித்யா ரவிவாரவிரதம் | முற்கூறியபடி செய்து ரவிவாரந்தோறும் விரதமிருக்கின் சூர்ய சாயுஜ்யமடைவர். |
நிநாசுரன் | இவன் ஒரு அசுரன். இவன் விஷ்ணுமூர்த்தி உலகங்களை உண்டு உமிழ்வதுபோல் உலகங்களெல்லாம் உண்டு பிராணிகளை வருத்தி வருகையில் பிரம்மாதி தேவர்கள் இவன் துன்பம் பொறுக்காது சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவ மூர்த்தி இவன் மீது ஒரு அம்பினையேவ அவ்வொரு அம்பு இவன் உயிரை உண்டு மீண்டது. |
நிந்தியகருமம் | இது ஒவ்வொருவனும் நாடோறுஞ் செய்யத்தக்க கருமங்கள். நல்லவன் பிராம்ம முகூர்த்தத்தில் எழுந்து இஷ்டதேவதையை வணங்கி உதயகாலத் ஓக்கோற் கையனாய் வீட்டிற்குத் தூரத்தில் நிர்ச்சனமாயும் சலமுள்ள இடமாயு மிருக்குமிடத்தை அடைந்து மூத்திரம், முன், புழு, எலும்பு, மலஞ் சூழ்ந்த இடம், வழி, புல், ஆறு, பள்ளம், ஜலமுள்ள இடம், பசுவின் சாணமுள்ள இடம், சாம்பல் சூழ்ந்த இடம், சுடுகாடு, வீட்டை அடைந்த தோட்டம், மாட்டுக்கொட்டகை, அரசு முதலிய புண்ணிய விருக்ஷங்கள், நாற்சந்தி கூடுமிடம், இவைகளையொழித்து, ஸ்திரீகள், பசுக்கள், அந்தணர், சூரியன், சந்யாசி, சந்திரன், விகாரப்ரதேசம், இவைகளைப் பாராமல், பகலினும், இருசந்தியினும் வடக்கு முகமாகவும், இரவில் தெற்கு முகமாயும் காதில் பஞ்ஞோபவீதத்தைச் சேர்த்துத் தலையை உத்தரீயத்தால் மூடிப் புல் முதலிய செத்தைகள் அமைந்த பூமியில் தன்னை ஒருவரும் காதைபடி மறைந்த புதருக்குள் மௌனமுடையனாய் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டு மலஜலத்தைக் கழித்தல் வேண்டும், மல விசர்ஜனஞ்செய்தபின் புல், ஓட்டுப்பாளம், மண்ணாங்கட்டி இவற்றால் குதத்தையடைந்திருக்கிற மலத்தை நீக்கி, இடதுகையினால் தனது குறியைப் பற்றினவனாய் நல்லமண்ணை யெடுத்துத் தனக்கு வலது பக்கத்தில் வைத்துக்கொண்டு, குதத்தைப் பத்து முறைக்குமேல் மனத் தூய்மையுண்டாம் வரையில் சுத்திசெய்து கால்களை அலம்பிக் கொண்டு இரண்டு கைகளையு மெழுமுறை சத்திசெய்து வேறொரு கரையடைந்து ஆசமனஞ் செய்து குச்சுகளில் முருங்கை, நறுவிலி ஆமணக்கு முதலிய வொழித்து புங்கு பில்வம், கருங்காலி, அருச்சுனம், நாயுருவி, நாகை, மா, மருது இவைகளில் சுண்டுவிரற் பருமனுள்ளதாய், பன்னிரண்டங்குலமுதல் எட்டங்குல நீளமுள்ள தாய் ஈரமுள்ளதாய்த் தோலுடன் கூடினதாய் ஒழுங்காயுள்ளதைக் கொண்டு தந்தங்களிலுள்ள அழுக்கைப் போக்கி நாவழித்துச் சுத்தியுண்டாம் அளவுவாயைக் கொப்புளித்து நீராடல் வேண்டும். இந்நீராடல் வாருணம், பஸ்மம், ஆக்னேயம், ஐந்திரஸ்நாநம், வாயவ்யஸ்நாநம், மந்திர ஸ்நாநம், மானஸஸ்நாநம் எனப்படும். இவற்றில் எல்லா மதத்தாருக்கும் வாருணஸ்நா நம் உரியது. அதிலும் ஆற்றங்கரை, மலையருகு, புண்ணிய பூமி, பிரம்மவிருக்ஷத்தினடி, தருப்பையினடியிலுள்ள தீர்த்தம் விசேடம். இப்படிப்பட்ட சுத்தசலத்தில் எட்டங்குல அளவின் கீழ்நின்று இரண்டு கைகளாலும் முகம், கண், மூக்கு, காது முதலான வுறுப்புகளை மூடிக்கொண்டு இஷ்டதெய்வத்தைத் தியானித்து நீராடல் வேண்டும். இரவில் நீராடல் கூடாது. மகாயக்யம், மாதப்பிறப்பு, கிரகணம், இத்தினங்களில், இரவிலும் நீராடலாம். நிர்வாணமாக நீராடல் கூடாது. மற்றப் பஸ்மஸ்நாகம் முதலியவை சைவருக் குரியவை. அதில் பஸ்மஸ்நாநம் வெண்மையுள்ள விபூதியால் செய்வது; ஆக்னேய ஸ்நாநம் பிராதக்காலத்திற்கு முன் விதிப் படி ஜலத்தில் ஸ்நாகஞ்செய்து முடித்துப் பின் பஸ்மஸ்நாகஞ் சந்திகள் தோறுஞ் செய்வது. ஐந்திரஸ்நாநம் வெயிலிலும் மழையிலுஞ் செய்வது. வாயவ்யஸ்காகம் கிழக்கு முகமாயிருந்து கைகளை உயர்த் தூக்கினவனாய்ச் சிரோமந்திரத்தை நினைத்து ஏழடிசென்றவனாய்ப் பசுவின் கூட்டத்தில் காற்றினால் பறக்கிற தூளிகளில் செய்கிற ஸ்நாகம், இந்த ஸ்நாநம் ஸ்நாகங்களிற் சிறந்ததாம். மந்திரஸ்நாநம் சத்யோஜாத முதலிய ஆகமமந்திரத்தால் செபிக் கப்பட்ட சலத்தால் ஸ்நாகஞ் செய்வது. மானஸஸ்நாநம் பிரணவவுச்சரிப்புடன் கூடிய பிராணாயாமாதிகளைச் செய்வது; நீராடும் போது பேசினால் வருணன் சத்தியைக் கெடுக்கிறான். இவ்வகை ஸ்நா நாதிகள் முடித்து மந்திரபூர்வகமாக நீர்க் கடன் முதலியவற்றைத் தேவருஷி பிதுரர்களுக்குச் செய்து சைவ வைஷ்ணவர்கள் நெற்றியில் திரிபுண்டராதி குறிகளைத் தரித்துக் கிழக்கேனும் வடக்கேனு மிருந்து சந்திகளிற் காயத்ரி முதலிய ஜபித்தல் வேண்டும். சந்தியாவந்தனம் : இச்சந்தியாவந்தனம் பிராதக்காலம், மத்யான்னம் சாயங்காலம் அர்த்தயாமம் ஆகிய நான்கு காலங்களிலும் செய்தல் வேண்டும்; பிராதக்காலசந்தி நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம். சூரியன் பாதி உதிக்கும் போது செய்தல் அதமம்; சாயங்காலச் சந்தியைச் சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயமானபின் ஆகாசத்தில் நகூத்திரங்கள் தோன்று முன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்; மத்தியான சந்தி யைப் பதினைந்து நாழிகையாகிய மத்தியான்னத்தில் செய்தல் உத்தமம்; மத்தியான்னத்துக்கு முன் ஒரு நாழிகையில் செய்தல் அதமம். இச்சந்தியா தேவதை காலையில் காயத்திரி யென்றும் மத்யான்னத்தில் சாவித்ரியெனவும் சாயங்காலத்தில் சரஸ்வதியெனவும் கூறப்படும். இச்சந்தியா தேவதைகளுள் காயத்ரி செந் நிறத்தவராயும் சாவித்ரி வெண்ணிறத்தவராயும் சரஸ்வதி கருநிறத்தவராயும் உபாசிக்கப்படுவர். இவர்களுள் காயத்ரி பிரமன் வடிவம், சாவித்ரிருத்ரன் வடிவம் சரஸ்வதி விஷ்ணு வடிவம். இக்காயத்ரி தேவதைகளின் தியானம் சைவஸ்மார்த்த வைணவர்களுக்கு வேறுபடும். யார் விரத நியமத்துடன் சந்தியை உபாசிக்கிறார்களோ அவர்கள் பாவத்தை உதறி அழியாத பிரமலோகத்தை அடைகிறார்கள். பகற்காலத்தில் மனோவாக்குக் காயங்களால் செய்கிற பாபங்களை மாலைச்சந்தி யுபாசனை யால் உபாசகன் போக்கடிக்கிறான். இரவில் அங்கனஞ் செய்தோன் காலேச்சந்தியா வந்தனத்தால் போக்குவன். இதனை இருடிகள் நெடுங்காலம் உபாசித்தால் தீர்க்காயுளையும் நல்ல போறிவையும் பெரும் புகழையும் கீர்த்தியையும் பிரமவொளியை யும் பெறுகின்றனர். சந்தியாவந்தன மில்லாதவன் அசுசியுடையனாய் நித்தமும் எல்லாக் கருமங்களுக்கும் தகாதவனே யாகின்சான். எக்கருமமும் பயன் தராது. சந் தியைவிட்டவன் சூத்திரனே யாகின்றான். அவ்வகைச் சந்தியா வந்தனாதிகளைச் செய்தவன் சுத்தனாய் ஆசமனாதிகளைச் செய்து சைவனேல் சிவபூசையையும் வைணவனேல் விஷ்ணுவாதி தேவதா பூசைகளுஞ் செய்க. இந்தக் காயத்ரிக்குரிய மந்திரங்களைக் குருமுகமாயறிக. |
நினைக்கலாகாதன | பொய், கோள், பிறர் பொருளைக்கவர விரும்பல், பிறர் செல்வங்கண்டு பொறாமைகொளல் முதலிய, |
நினைப்பணி | ஒரு பொருளைக்கண்டு ஒப்புமையினால் மற்றொருபொருளை நினைத்தல். இதனை ஸ்மிருதிமத் அலங்காரம் என்ப. (குவ.) |
நினைப்பு | இது போலிகளுள் ஒன்று. இது, குழவிப்பருவத்தே தந்தை தாயரை யிழந்தோன் காரணங்கருதாது நினக்கின்னார் தந்தை தாயெனப் பிறர் சொல்வதனைக் கருதிக்கோடல். |
நின்மலன் | இவன் தன் தமயன் தேவியைப் புணரச்செல்கையில் அவளால் குட்டநோய் அடையச் சாபம் ஏற்று ரோமசருஷியால் பினாகினி நதியில் மூழ்கிச் சுத்தம் அடைந்தவன், (பெண்ணை நதி புராணம்). |
நின்மலர் | இவர் மண்டூகருஷியின் மாணாக்கரில் ஒருவர். இவர் கல்விவல்லராய் ஆசிரியரை மதியாததனால் அவரால் பிரமரக்ஷஸாகச் சாபம் அடைந்து நாரதர் சொற்படி தக்ஷிண பிநாகினியில் தீர்த்தமாடிப் புனிதரானவர். (பெண்ணை நதிபுராணம்). |
நின்மலாவத்தை | (சுத்தாவத்தை) இது, அமலசாக்ரம், அமலசுவப்பனம், அமலசுழுத்தி, அமலதுரியம், அமலதுரியாதீதம். ஆக 5. அமலசாக்ரமாவது : ஆசாரியராலே ஞானதீக்ஷை பெற்றுத் திரிபதார்த்தவுண்மையை விசாரித்தறிந்து கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து பொருளுடனே நிட்டை கூடும் பகுதிக்குக் கருவியினின்று நீங்கி விசாரித்து நிற்பது, அமலசுவப்பனமா வது : கருவிகளினின்று நீங்கியும் நீங்காதும் நிற்காது நடுவே சற்றுப்பதைப் புண்டாய் நிற்பது. அமலசுழுத்தி : தத்துவங்களினின்று நீங்கி மேலான கேவலத்தனாய் நிற்பது. அமலதுரியம் : கேவல நீங்கி அருளினாலே தன்னையுமருளையுங் கண்டு தன் வசமழிந்து அருள் வசமாய் நிற்றல். அமலதுரியாதீதம் : பணியற நின்று சிவத்தைத் தரிசித்து ஆனந்தத்தில் அழுந்தி நிற்பது. (சித்தா.) |
நின்றசீர் நெடுமாற நாயனார் | சத்துருசாதன பாண்டியன் குமரர். இவர் சைநசமயத்துக்குட்பட்டு, மயங்கி நிற்கையில் இவரது பத்தினியாராகிய மங்கையர்க்கரசியார் சைவப்பற்றுள்ளவராய்த் திருஞானசம்பந்த மூர்த்திகளை மதுரைக் கெழுந்தருள வேண்டி அவர் வரச்சமணரை வாதில் வெல்வித்தனர். அதனால் இவ்வாசர் சைவராயினவர். இவரது மற்ற சரிகங்களைத் திருஞானசம்பந்த சுவாமிகளைக் காண்க, (பெ~புராணம்.) |
நிபகண்டர் | ஒரு இருடி. |
நிபந்தனகாரர் | சுருதி ஸ்மிருதி யாசாரறியமனஞ் செய்தவை தீகர். |
நிபந்தனர் | ஒரு ருஷி. இவர் தம் தாய்க்கு சம்சாரத்தை அரணயமாகக் கூறியவர். (பார ~ சாக்.) |
நிப்புதி | கேமசரியின் தாய். |
நிமரோசி | பசமாகன் குமரன். |
நிமாத்தனன் | சுவபலருக்குக் காந்தியினிடம் உதித்தகுமரன். |
நிமி | 1. சூர்யவம்சத்து இகவாகு குமரன். இவன் ஒரு யாகஞ்செய்ய வசிட்டரை வரிக்க அவர், இந்திரன் யாகத்தின் பொருட்டு வரித்தானாகையால் அது முடிந்தபின் வருவேன் என்றனர். அரசன் கௌதமரைக் கொண்டு யாகமுடிப்பித்து அந்த இளைப்பால் துயில் புரிந்தனன். இச்சமயத்தில் ஒருநாள் வசிட்டர் இவன் கொலுவிற்கு வந்தனர். அரசன் துயில்வது கண்டு தம்மால் யாகமுடித்துக் கொள்ளாத கோபமும்; காத்தும் தம்மை எதிர்கொள்ளாத கோபமும் மிஞ்சி அரசனை உடல்நீங்கச் சபித்தனர். அரசன் துயில் நீங்கித் தனக்கு நேரிட்ட சாபமுணர்ந்து நான் துயிலும் போது சபித்தமையால் வசிட்டரும் உடல் நீங்க எனச்சபித்தனன், உயிர்நீங்கிய அரசன் தேகத்தை முனிவர்கள் தயிலத்திவிட்டுப்பக்குவப்படுத்தினர். பின் முனிவர் ஒன்று கூடி அரசனுக்காக ஒரு யாகஞ்செய்தனர். தேவர் வந்து காற்றுருக்கொண்ட நிமியை யாது வேண்டுமென இனித்தேகம் வேண்டேன், எல்லாருடைய கண்களிலும் இருக்க விரும்புகிறேன் என்றனன். தேவர் அங்ஙனமளித்ததனால் இவன் எல்லாவுயிர்களின் கண்களிலிருந்து இமைகளையசைத்து நிமிஷமாக்கிக் கொண்டிருக்கின்ற னன். இதுநிற்க, இவன் நாட்டிற்கு அரசன் இலாமையால் முனிவர்கள் இவனுடலை அரணியிலிட்டுக் கடைந்தனர். அதினின்று ஒருமகா புருஷன் தோன்றினன். அக்கடைந்ததினாற் பிறந்த புருஷனுக்கு முனிவர்கள் மிதிலன். எனவும், ஜனித்ததால் ஜனகன் எனவும், விதேகனால் உண்டானதுபற்றி வைதேகன் எனவும் பெயரிட்டனர். இவன் யாகத்தில் சுவிஹரி முதலிய யோகியர் அரசனுக்கு அரிகதை கூறினர். அரசன் சாபத்தால் உயிர்நீங்கிய வசிட்டர் ஊர்வசியைக் கண்டு மோகித்த மித்திராவருணரால் உயர் பெற்றனர். (பாகவதம்.) 2. அபூர்வன் குமரன். இவன் குமரன் பிரகித்ரன். |
நிமிடம் | ஒரு தீர்த்தம், |
நிமித்தகாரணம் | எது சமவாயி காரணம், அசமாவாயி காரணமல்லாததாய் மற்றுங் காரணமாவது. (தரு.) |
நிமித்திகன் | சச்சந்தன் மந்திரி, |
நிம்பன் | 1. ஒரு அசான், காளியாற் கொலையுண்டவன். 2. பாண்டியனுக்கு ஒரு பெயர். |
நிம்பராஜு | தேவதைடணம் எனும் கிராமத்தில் கருணிகர் விருத்தியை அவலம்பித்துக் குடும்பசமேதராய்த் தீர்த்த யாத்திரை செய்து, தாம் கீர்த்தனங்கள் செய்ய என்ணங்கொண்டு பகவதாராதனை செய்கை யில் பகவான் விநாயகர் வழியாய் வித்தை யிற்றேர்ச்சிவாச் செய்வித்து நிம்பராஜர் கீர்த்தனை செய்கையில் கேட்டுண்டான ஆனந்தத்தால் பெருமாளிவர்க்குச் சிரம பரிகாரத்தின் பொருட்டுச் சாமரமிரட்டப் பெற்றவர். |
நிம்பார்க்கமதம் | கிறிஸ்து பிறந்த (12)வது சகாப்தத்தில் இம்மதம் உண்டாயிற்று. இம்மதத்தாபகர், பாஸ்கராசாரியர். இந்தப் பாஸ்கராசாரியர் ஒருநாள் ஒரு துறவியைத் தமது வீட்டிற்குப் பிக்ஷைக்கழைக்க அவர் வருவதாய் வாக்களித்துச் சூரியாஸ் தமன சமயம் வரையிலும் வராமையால் ஆசாரியர் அதுவரையில் போஜன மின்றி யிருந்தனர். இவ்வாறிருக்கையில் சூரியன் அத்தமித்தனன். சந்நியாசியும் வந்தனர். சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு துறவிகள் போஜனம் செய்வதில்லை யாதலால் ஆசாரியர் சூரியனைப் பிரார்த்தித்தனர். அப்போது சூரியன் நிம்பவிருக்ஷ மாகிய வேம்பின் மேல் தன் கிரணத்துடன் பிரகாசித்தான்; அச்சூரியனைக் கண்டு இருவரும் புசித்தனர். அது முதல் பாஸ்கராசாரியருக்கு நிம்பார்க்கர் என்று பெய ருண்டாயிற்று. இவரைச் சூரியசித்தாந்தம் செய்தவர் எனவும், வேதபாஷ்யம் செய்தவர் எனவும் கூறுவர். இம் மதசித்தாந்தம், கடவுள் ஒருவனே எனவும், அவர் விக்ரகத்தைத் தொழுது ஆனந்தப்படுதல் போல் மறுமையிலும் இவ்வகை ஆனந்தம் உண்டு எனவும் கூறும். இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி தெய்வம், இவர்கள், ஜீவனை நாயகியாகவும், பரமாத்மாவை நாயகனாகவும் எண்ணுவர். |
நிம்மனர் | அநமித்திரன் குமரர். இவர் கும்ரர் சத்திராசிதன் பிரசேகன். |
நிம்மலகன் | சிவகணத்தவரில் ஒருவன். |
நிம்மவ்வை | இந்தம்மாள் வீரசைவ ஒழுக்க மேற்கொண்டவள். இவள் புதலையென்னும் ஊரில் சிவனடியவர்க்குத் தீர்த்தமெடுத்துக் கொடுக்கும் திருப்பணி செய்து தன் குமரன் மாடு மேய்த்ததனால் வரும் கூலி கொண்டு சிவனடியவரைப் பூசித்து வருவர். இவ்வகையிருக்கு நாட்களில் திருக்கைலையில் சிறுத்தொண்டநாயனார் வலிய செயல்செய்து முத்தியடைந்தோமென இறுமாந்திருத்தலைச் சிவமூர்த்தி அடக்கத் திருவளத்தெண்ணிச் சிறுத் தொண்டரைச் சீடாக அழைத்துத் தாம் ஒரு சங்கமர் வேடம்பூண்டு நிம்மவ்வை வீட்டுக் கெழுந்தருளினார், நிம்மவ்வை எதிர்கொண்டு பணிந்து இருவரையும் உபசரித்து எழுந்தருளியிருக்கச் செய்து அதிரசமுதலிய பலகார வகைகளையும் திருவமுதும் சமைத்துத் தீர்த்தத்திற்குச் சென்றனள். அச்சமயத்தில் இவள் குமரன் அன்னைவருமுன் அவ்விடமிருந்த அதிரசத்தில் ஒன்றெடுத்தருந்தினன். அன்னை உணர்ந்து அவ்விடத்திருந்த உலக்கையெடுத்து அவன்மீது அடித்தனள். அதனால் புத்திரனிறந்தனன். பின்பு அவன் தொட்ட பலகாரவகைகளை எடுத்தெறிந்து வீடு முதலியவைகளை மெழுகிட்டுப் பல காரம் திருவமுது முதலிய விரைவிற் செய்து முடித்துச் சங்கமரை எழுப்பினள். சங்கமர் உன்னைத் தேடிவந்த கும ரன் எங்குச் சென்றனன் என ஒளவை. குமரன் செய்த தீமைகளைக்கூறித் தேவரீர்க்குச் சமைத்த அன்னத்தைத் தேவரீர் அருந்தவேண்டுமென வேண்டினள். சிவமூர்த்தி குமரனையெழுப்பித் தாயிடம் அனுப்ப ஒளவை இவன் சிவனடியவர்க்குத் தீமை செய்தவன். இவன் முகத்தைப் பாரேன் என்று சிறுத்தொண்டர் பிரமிக்கக் கூறினள். சிவமூர்த்தி இந்தத் தாயுடன் குமரருக்கும் முத்தியளித்தனர். |
நிம்ரோசி | பசமாகன் குமரரில் ஒருவன். |
நியகோதான் | கஞ்சன் தம்பி. |
நியக்குரோதம் | இதனடியில் பாண்டவர் சென்றனர். இந்த விருக்ஷத்தைத் தட்சகன் கடித்தான். |
நியதி | மேருவென்பவன் குமரி, விதாதாவின் தேவி. |
நியாயமன்றம் | உலகியல், வேதம், அறநூல் முதலியவற்றிற் சிறந்த அந்தணர், 7,5,3, வரைக்கொண்டது. அம்மன்றத்தில் அறிவுவாய்ந்த வணிகர்களை வழக்கு கேட்போராக நியமித்தல் வேண்டும். இதன் (10) அங்கங்களாவன அரசன், நீதிபதி, நீதிமன்றத்தவர், அறநூல், கணக்காளர், எழுத்தாளர், பொன், நெருப்பு, நீர், வலாளர். (சுக் ~ நீ.) |
நியாயவகை | இவை இக்காரணத்தால் இவ்வகையாகும் என ஆட்சியை எண்ணி மீமாம்சை ஆதி நியாய நூல்களில் ஆன்றோரால் எடுத்துக்காட்டிய நியாயங்களாம். அவை ஆங்காங்குப் பலவிடங்களில் வந்த வழிக் காண்க. எனக்குக் கிடைத்த சிலவற்றை மாத்திரம் ஈண்டுத் தெரிக்கிறேன். அவை: 1. அப்பர் ஹித நியாயம் : அதாவது முன்னே சம்மானிக்கத் தக்கவரை முன் பூசித்து மற்றவர்களுக்குப் பின் மரியாதை செய்வது. 2, ஸ்தாலி புலாக நியாயம்: அதாவது ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறே பதமாகக் கொள்வது. 3. காகதாலிய நியாயம் : பனையின் மேல் காக்கை ஏறவும் பனம்பழம் வீழவும் உள்ள சம்பந்தம். 4. வீசிதரங்கநியாயம் : அலை எதிர்த் துக் கரையினிடம் வீச அதைத்தொடர்ந்து மற்றொன்று பின்பற்றுதல் போன்றது, 5. கதம்பமுகுள நியாயம் : கதம்ப விருக்ஷத்தின் அரும்பு மலருகையில் நான்கு இதழும் ஒன்று சேர விரிந்து மணம் வீசுவது போல்வது. 6. களேகபோதமியாயம் : பலநெற்களங்களில் புறாக்கள் தானியங்களைப் பொறுக்கி உணவு அருந்தல் போல்வது. 7. தண்டா பூபிகாநியாயம் : தடியை எலி தின்றது என்றாற் போல்வது. 8. கைமித்திகநியாயம் : அதுவே அப்படி ஆனால் மற்றதற்குக் கூறுவானேன் எனற்பாலது. 9. தூலாருந்ததிநியாயம் : தூலமாய் எதிர்தோற்றும் பொருளைக் காட்டி அருந்ததியைக் காட்டுதல் போல்வது. 10. ஸ்வாமிபிருத்ய நியாயம் : ஆண் டான் அடிமைத்திறம் கூறுவது. 11. மயூரநிருத்தநியாயம் : ஒன்றைத் தாபிக்கும் வழி மற்றொன்று விட்டுப் போதலுக்கு மயிலின் நடக்கையை எடுத்துக் காட்டுவது. 12. கபோதகநியாயம் : புறாக்கள் ஏதேனும் ஒரிடத்திலிறங்கப் பெறின் பலவும் ஒருங்கே இறங்குவது போல்வது.13. குணாக்கரநியாயம் : ஒரு புழு யாதே னும் ஒரு மரத்தினை அரித்துச் செல்லுகைகையின் அம்மரத்தில் அதனால் உண்டாகிய இரேகைகள் எழுத்து போல் தோன்றுவது. இது ஒன்று செய்ய ஒன்றாய் முடிவது 14. காகாக்ஷோகோள கதியாயம் : காக்கையின் இருகண்களுக்கும் ஒரு மணியே நின்று உதவுவது போல, ஒரு பொருளே நின்று இருபக்ஷத்தும் உதவுவது. 15. தேகளீ தீபநியாயம் : வாசற்படியிலிட்ட தீபம் வீட்டினுள்ளும் புறமுமாகிய இருபுறத்து இருளையும் நீக்குதல் போல் ஒரு பொருள் இடையினின்று இரண்டிடத்தும் பயன்றருவது. 16. பிராமணவசிட்டநியாயம் : பிராமணர் வந்தார் என்றபோது அவருள் ஒருவராகிய வசிட்டரும் வந்தார் என்பது போதருமாயினும், விசிட்டம் பற்றி வசிட்டரை வேறு பிரித்துக் கூறுதல்போல், ஓரினப்பொருளைக் கூறுகையில் அவற்றுள் தலைமைபற்றி ஒன்றை வேறெடுத்துக் கூறுதல் போல்வது. 17. அந்தகூப்பதனநியாயம் : குருடனொருவனுக்குக் கண்ணுள்ளானிவ்வழி செல்லுக என வழிகாட்டியும் அவ்வழி செல்லாது வேறு வழி சென்று கிணற்றில் விழுவதைப்போல்வது. 18. சியாலசாரமேயநியாயம் : ஒருவன் தன் வீட்டிலிருக்கும் நாய்க்கிட்ட பெயரே தன்மைத்துனனுக்கு மிருத்தல் நோக்காது, அந்த நாயைத் தன் வீட்டிலிருந்து விலக்க எண்ணியபோது, தன்மனைவியை நோக்கி நாயின் பெயரைக் கூறியதை வீட்டினின்றும் விலக்குக என, மனைவி (சியாலன் ~ மைத்துனன்) மைத்துனனை விலக்கக் கூறியதாக எண்ணி விலக்கியது போல்வழி. இது பெயர் இரண்டிற்கும் ஒன்றாயிருத்தல் பற்றி, ஒன்றை மற்றொன்றாக ஆராயாது, செய்யும் நெறி, 19, சந்தோபசுந்தநியாயம் சுந்தன், உபசுந் தன் இருவரும் திலோத்தமை பொருட்டு ஒருவரோடொருவர் போரிட்டு மாய்க்ததை யொப்பது. இது ஒன்றினை யொன்றொழிக்கும் நெறிபோல்வது. 20. அந்தகஜநியாயம், அந்த ஹஸ்தி நியாயம் : யானை காண விரும்பிய குருடன் ஒருவன், யானையின் ஒருறுப்பைத் தடவிப் பார்த்து யானையின் வடிவை நிச்சயிப்பது போல்வது. இது ஒன்றினை முற்ற ஆராயாது ஒரு பாகத்தினை மாத்திரம் பார்த்து நிச்சயிப்பது போல்வதோர் நெறி.21. அசமலோட்டிர நியாயம் : ஒரு கல்லுடன் மண்ணாங்கட்டியை ஒப்புநோக்கின் மண்ணங்கட்டி மெல்லிதாகவும், அத னையே பஞ்சுடன் ஒப்புநோக்கின் மண்ணாங்கட்டி வலியதாகவும் கொள்ளப் படுதல்போல், ஒன்றொடு நோக்கி ஒன்றற்கு வன்மை மென்மைகள் கற்பிக்கப்படுதலா திய ஒரு நெறி. பின் வருவனவற்றை விளக்கின் விரியுமாதலின் அறிந்தார்பால் கேட்டுணர்க. 22, சாகா சங்கரமணரியாயம். 23. பசு பாகநியாயம். 24. வரகோஷ்டி நியாயம். 25. லீடாலீடநியாயம். 26. கௌதமபசு நியாயம். 27. அந்த ஜடகநியாயம். 28 அந்தபரம்பராநியாயம், 29, அசோகவநிகா தியாயம். 30. காகதந் தகவேஷணநியாயம், 31, கூபயந்தர தாடிகாநியாயம், 32. கட்டகுடி பிரபாதநியாயம், 83. அருணா ஷரநியாயம். 34. நிருபநாபித புத்திர நியாயம். 35. பங்கப்ரஷாளனநியாயம். 36. பிஷ்டபேஷணநியாயம். 37. பீஜாங் ஞாநியாயம். 38. லோகஜும்பகநியாயம், 39. வந்நீதூமமியாயம். 40, விஷக்கிரிமி நியாயம், 41, விஷவிருக்ஷநியாயம். 42. விருத்தகுமாரி வாக்கியநியாயம், 43, சாகா சந்திரநியாயம். 44. விம்ஹாவலோகநியா யம், 45 ஸுசிகடாகநியாய்ம், 46. ஸ்தூணாங்கநகநியாயம். 47. ரோடிபக்ஷணநியாயம் 48. லூதா தந்துநியாயம்: 49. மணி மந்திராதிநியாயம். 50, கோபலீவர்த்த நியாயம். 51. உஷ்டாகண்டக போஜக நியாயம், 52, அந்தபங்கு நியாயம். 53. அந்தகோலாங்குலரியாயம், 54. சாவிநீ நியாயம். 55. திரணாரணீ மணிநியாயம். 56. தண்டசக்ரநியாயம். 57, இராசபுரபி ரவேசதியாயம். 58. சங்கவேளாநியாயம். 59. சதபத்ரபேதநியாயம். 60, சிருங்ககி ராஹிகாநியாயம், 61. ஸ்தவிரலகுடநியாயம், முதலிய, |
நியோசிகை | ஒரு தேவதை, பாதாரம், பரதிரவ்வியம், கிரகிக்கத் தூண்டுபவள். இவளுக்கு மத்தை, உன்மத்தை, பிரகிருஷ்டை, நாரி என நால்வர் குமரிகள். இவர்கள், கிரகத்தர் முதலியோர், தமது பாட்டன் பூட்டன் முதலியவர்க்குப் பலியிடா விட்டால் அவர்கள் செல்வத்தைக் கெடுப்பவர்கள். |
நிரக்ஷரேகை | பூமியின் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் (90) டிகிரியில் பூமத்யபாகத்திலுள்ள ரேசை. |
நிரஞ்சரன் | சணமுகசேநாவீரரில் ஒருவன். |
நிரநுயோச்யாது போகம் | நிக்ரகத்தாத் பிராத்தனாகாதவனை நிச்சகஞ் செய்யவேண்டுமென்று நிக்கிரகிக்கிறது. (இது ஏவப் படாதவனை ஏவுதல்) (சிவ சித்.) |
நிரனிரையணி | சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது. இதனை யதாசங்கியாலங்கார மென்பர் வடநூலார். (தண்டி.) |
நிரமித்திரன் | நகலன் குமரன். |
நிரம்ப அழகியர் | ஒரு தமிழாசிரியர். இவர் வேதாரண்யத்தில் சைவவேளாளர் குலத்தில் தோன்றிக் கல்வி பயின்று வல்லவராய் ஞான நூல் அறியவேண்டி விருப்பம் கொள்ளக், கருணை ஞானப்பிரகாசசுவாமிகளிடம், சிவ தீக்ஷை பெற்று மதுரையில் வசித்து இருந்தனர். இவர் ஒருநாள் ஒரு மரத்தடியில் சிவத்தியானத்துடன் இருக்கையில் அவ்வழி சென்ற சிற்றாசன் ஒருவன் அவ்விடம் தனித்து மரத்தடியில் உட்கார்ந்திருப்பவர் யாரென்று வினவ அவ்வேவலர் இவர் இருந்த நிலையையும் இவரது தேக அடையாளங்களையும் கூற அரசன் இவரை அறிந்தவன் ஆதலாலும் இவர் தேகத்திலிருந்த நுணாக்காய்க் கிரக்தியாலும் நிரம்ப அழகியரோ என்றனன். அதுவே பெயராயிற்று. இவர் சாலிவா சனசகம். (1430) க்கு மேலிருந்தவர் என்பர். இவர் திருவிளையாடற் புராணம் பாடிய பாஞ்சோதி முறிவருடன் வாசித்தவராம். இவர் செய்த நூல் சேதுபுராணம், சிவஞான சித்திசுபக்ஷ உரை, திருவருட்பயனுரை. (சேதுபுராணம்). |
நிரம்பையர்காவலர் | அடியார்க்கு நல்லார்க்கு ஒரு பெயர், |
நிரர்த்தகம் | பிரதிவாதி ஒன்றுஞ் சொல்லாதிருக்கையில் தான் வீண் வார்த்தையைச் சொல்லுகை. (சிவ ~ சித்.) |
நிராங்காரன் | அல்லமதேவருக்குத் தந்தை. |
நிரீசுாசாங்கியன் மதம் | பிரகிருதி மூலம், புரியஷ்டகம், விகிர்தி என மூன்றாமெனவும் அது தூலசூக்ஷ்ம பரமெனப் பெயரடைந்து சுத்தபுருடன் சந்நிதானத்தில் பாலன் சேட்டை புரிவதுபோல் உலகம் யோனி பலவாய்ப்பிறந்து ஒடுக்குமென வும் தெய்வம் வேண்டா எனவும் கூறுவன், (தத்துவநிஜா துபோகசாரம்.) |
நிருகமகாராசன் | 1. இவன் இக்ஷவாகுவம் சத்து வைவச்சுதமதுவின் இரண்டாம் புத்திரன். இக்ஷ்வாகு தம்பியெனவுங்கூறுவர். இவன் புஷ்காஷேத்திரத்தில் பிராமணருக்குக் கோதானஞ் செய்தனன், தானஞ் செய்த பசு மீண்டும் அரசன் பசுக்கூட்டத்தில் வந்தது. அதை மீண்டும் அரசன் வேறொருவருக்குத் தானஞ் செய்தனன். தானங்கொண்ட இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் மாறுகொண்டு அரசனையணுகிச் சிலநாள் காத்திருந்தும் அரசன் குறைகளைக் கேளாததினால் நீ எழைகளுக்குத் தரிசனங் கொடாததினால் ஒணானாகவெனச் சபித்தனர். இவ்வரசன் தான் வசிக்கச் சுகமாகப் பள்ளங்களைச் செய்து கொண்டு வசித்துக்கொண் டிருந்தனன். இவனுக்குச் சாபம் கிருஷ்ணாவதாரத்துக் கிருஷ்ண மூர்த்தியால் நீங்கிற்று, 2. உசீநரன், இரண்டாங் குமரன். |
நிருசஷ்சு | சுநிதன் குமரன். இவன் குமரன் நளன். |
நிருசிம்ம ஜயந்தி | இது வைகாசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பிரதோஷ சமயத்தில் பகல் நிசாமுகத்தைச் சமீபிக் குஞ் சமயத்தில் அநுட்டிப்பது. அவ்வேளை நிருசிம்மமூர்த்தி பிறப்பு. இதில் சோமவாரங் கூடில் நலம். இந்நாளில் விரதம் ஆயிரம்த்வாதசி பலனுண்டு. இதில் ஸ்வாதிநக்ஷத்திரம் கூடில் மிகு புண்யம். இந்த விரதத்தை வாசுதேவன் என்னும் வேதியன் அநுட்டித்துப் பிரகலாதனாகப் பிறந்தான். |
நிருடலக்ஷணை | நீலஞ்சூடினாள் என்பதில் நீல குணத்தைவிட்டுக் குணியை உணர்த்தல். (தரு.) |
நிருதன் | 1. வைவச்சு தமநுவின் இரண்டாம் புத்ரன். இக்ஷவாகு தம்பி. 2. உசீநரன் இரண்டாம் புத்ரன். |
நிருதி | இவன் பூர்வஜன்மத்தில் பிங்கலாக்ஷன் என்னும் வேடன், இவன் வேடனாயிருந்தும் தீமை செய்யும் வேடர்களை அடக்கி வருவன். இவ்வகை ஒழுகி வரும் நாட்களில் புண்ணியத்தால் யாத்திரை செய்வோரைச் சிலவேடர் மறுக்க அவ்வேடர் பலருடன் இவன் போரிடுகையில் மாண்டு நிருதியாயினன். இவன் தவத்தால் தென்மேற்குத் திசைக்குக் கடவுளாயினன். தேவி தீர்க்காதேவி; பட்டணம், கிருஷணாங்கனை; வாகனம் நரவாகனம்; (பூதம்) ஆயுதம் குந்தம், இவன் உலகத் தை, இழிந்தவராயினும் நன்மை செய்தவர் அடைவர். இவர் வாகனமாகிய பூதம் பராசரமுறிவர் வேள்வியா லிழுக்கப்படச் சிவபெருமானை யெண்ணி அது முறையிடச் சிவபிரான் வேள்வியை நிறுத்தக் கட்டளையிட்டதால் நிறுத்த, உயிர் பெற்றது. (காசிகாண்டம்.) 2. முதல்வள்ளல் எழுவரில் ஒருவன். 3. இராமனென்னும் மநுப்புத்திரனுக்கு மனைவி. |
நிருத்தக்கை | (30) அவை சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்ரகீர்ணம், அருத்தரேசிதம், அராளகடகாமுகம், சூவித்தவத்திரம், ஆசிமுகம், இரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப்பிரதியோகம், கருடபக்கம், தண்டபக்கம், ஊர்த்துவ மண்டலி, பக்கமண்டலி, உரோமயண்டலி, உரப்பார் சுவார்த்த மண்டலி, முட்டிக்சுவத்திகம், நளிநீபதுமகோசம், அலப்பதுமம், உற்பணம், இலளிதை, வலிதை என்பனவாம். |
நிருத்தி | ஒரு தருக்க நூல். |
நிருபஞ்சயன் | மேதாவி குமரன். இவன் குமரன் அபூர்வன். |
நிருபதுங்கன் | ஒரு பல்லவ அரசன், இவன் தந்திவக்ரன் குமரன்; இவன் சதுர்வேதி மங்கலமெனுங் கிராமத்தைப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்ததாகப் பல்லவர் வம்சாவளியில் கூறப்பட்டுள்ளது. (சுவல்ஸ்.) |
நிருபன் | பிரகலாதன் குமாரன். |
நிருபருத்ரன் | நரேந்திரமிருகராசன சகோதரன் ஹேஹயவம்சத்தவன். |
நிருமலதானம் | கடவளுவப்பெய்த ஞானிகளுக்கு தவல், |
நிருலோமன் | திருவேங்கடத்தில் தவஞ்செய்து கொண்டிருந்து ஸ்ரீராமமூாத்தி எழுந்தருளத் தரிசித்துப் பரமபதமடைந்தவன். |
நிருவண முகத்தினங்கங்கள் | பதினான்கு. இவை நாடகவிகற்பங்கள். சந்தி, விரோதம், கிரதனம், கிண்ணயம், பரிபாடனம், பிரசாதம், ஆனந்தம், சமயம், கிருதி, ஆபாடனம், உபகூகனம், பிரசத்தி, பிரசனம், சங்காரம், |
நிருவாணமாவது | விளைந்தபோ கம் வீதிவரையாலறுத்துப் படுத்துவைத்து துகளுங்களைந்து கொண்டுண்மகிழ்ந்தாற் போலக்கொள்வது. (வீர ~ சோ.) |
நிருவிருதி | விருஷ்ணி குமரன். இவன் குமரன் தசாருகன். |
நிரைநிரை | இது பொருள் கோளில் ஒன்று. பெயரும் வினையுமாகிய சொல்லையும் அவை கொண்டு முடியும் பயனிலைகளையும் வேறுவேறாக நிறுத்தி முறையாகவேனும் எதிராகவேனும் நிறுத்தி இதற்கிது பயனிலையென்பது படக்கூறுவதாம். (நன்.) |
நிரையசை | குறிலிணையேனும், குறினெடிலேனும் தனித்தும் ஒற்றடுத்தும் வருவது. |
நிரோதினி | ஒரு சத்தி, |
நிர் உரத்தசஷன் | தாமச மநுவைக் காண்க. |
நிர் மோகன் | 1. சாவர்ணிமதுப் புத்திரன். 2. பதின்மூன்றா மன்வந்தரத்துருஷி, |
நிர்மித்திரன் | 1. நகுலனுக்கு ரேணுவதியிடம் பிறந்த குமரன். 2 யுதாயுதாயு குமரன். இவன் குமரன் சுநக்ஷத்ரன். |
நிர்வாக்கியன் | புரஞ்சயனுக்கு நண்பன். |
நிர்வாண தீக்ஷை | மோக்ஷத்தைத் தரும் தீக்ஷை அது (4) வகை, சத்யோ நிர்வாணம், அசத்யோ நிர்வாணம், லோகதர்மிணி, சிவதர்மிணி என்பன. சத்யோ நிர்வாணம் : ஆசாரியர் ஷடத்வசோதனை சிகரச்சேதம் ஓமஞ்செய்து சிவபதத்தில் ஆன்மாவைச் சேர்த்த மாத்திரையில் தேக நீக்க முண்டாவது. அசத்யோ நிர்வாணம்: கர்மத்தின் முடிவில் ஆன்மாவைச் சிவ பதத்தில் சேர்ப்பது. உலோகதர்மிணி : பாபகர்மங்களைச் சோதித்துப் புண்யகர்மங் களைச் சோதியாமல் இவ்வாழ்வானுக்குச் செய்யப்படுவது, சிவதர்மிணி : புண்ணிய பாபங்களளிரண்டையுஞ் சோதித்து மோக்ஷவிருப்புள்ள துறவிக்குச் செய்யப்படுவது. (சைவபூஷணம்.) |
நிர்வாணருஷிகள் | பதுமனாரா மனவந்தரத்துத் தேவர். |
நிர்வாணிநிலை | ஞாயிறு, வியாழம்,தென் கிழக்கு, திங்கள், வெள்ளி, தென்மேற்கு செவ்வாய், சனி, வடமேற்கு புதன், வட கிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் நன்று, முற்பக்கந் தீது இவள் நிற்குந்திசை யில் போகல் ஆகாது. |
நிர்விர்த்தி | திருஷ்டி குமரன், |
நிர்விஷசர்ப்பம் | திவ்யம், சாலகம், பாதகம், விருக்ஷசாயி, கலசி, புட்கரம், க்ஷரி, வாகினி, சாரவாகினி, வருஷாப்புவிகம், சோதிரதம், சுட்கம், கோத்திரம், பலாக்கம், கசபக்ஷம், பிலவோற்பேதம் எனப் பதினாறு வகை |
நிறவிந்தி | ஒரு நதி. |
நிறையறிகருவி | இது, இரும்பினால் பல கைபோன்று முனையில் எண்ணினளவைக் காட்ட வைக்கப்பட்ட இரும்பு பிம்பத்தைப் பெற்ற அளவு கருவி. இதில் வைக்கப்பட்ட கனப்பொருள்களின் நிறையை இதுகாட்டும், இவ்வாறே மேனாட்டார் ஒருவன் யாத்திரை செய்த அளவைக் காணக் கடிகாரம் போன்று பதவளவறி கருவிகண்டு பிடித்திருக்கின்றனர். அதனைப் பீடோமிட்டர் என்பர். (Pedometer.) |
நில அளவு | ஐயாயிரமுழம் ஒரு குரோசம், ஒரு குரோச அளவுள்ளதும், ஆயிரம் கருட அளவுள்ள வெண்பொற் காசுகள் அரசிறையாகப் பெற்றதும் கிராமம் எனப்படும். அந்தக் கிராமத்தின் அரைக்கூறு பல்லி. பல்லியின் அரைக்கூறு கும்பம் எனப்படும், பிரமன் கொள்கைப்படிக் (2.1/2) கோடி முழங்களாதல் (2500) சதுரநிவர்த் தனங்களாதல் ஒரு குரோசம், நடுவிரலினடுவண் உள்ள இரண்டு ரேகைகளி னடுப்பாகம் அங்குலம். அங்குவம் (24) கொண்டது முழம், முழங்கள் (4) கொண்டது கோல், முழங்கள் (5) கொண்டது இலகு. (25) கோல்கள் கொண்டது நிவர்த்தனம். (25) நிவர்த்தனங்கள் பரிவர்த்தனம், |
நிலக்கரி | 1, நெடுநாட்களுக்கு முன் கடல்களாலும் ஆறுகளாலும் மூடப்பட்ட பூமியில் இருந்த மகாலிருஷங்கள் மண்ணில் உருக்கெட்டுக் கரியாக மாறுவது. 2. இது பூமியிலிருந்து வெட்டியெடுக்கப்படுவது. கருநிறமும், மிருதுவும், பளபளப்பும் உள்ளது. யந்திரங்களுக்கும் உலோகங்களை உருக்குதற்கும் அடுப்பெரிக்கவும் உதவும், டெக்கான், இங்கிலாந்து முதலிய தேசங்களிலுண்டாவது, |
நிலங்கு | இது ஒருவகை நிலங்கீறி உணவு கொள்ளும் பறவை. |
நிலந்தரு திருவிற்பாண்டியன் | கடைச்சங்கம் நிறுவிய முடத்திருமாறனுக்கு ஒரு பெயர். இவனுக்குச் சயமாகீர்த்தி யெனவும் ஒருபெயர் உண்டு, சயமாகீர்த்தியைக் காண்க. |
நிலன் | கத்ருகுமரன் நாகன். |
நிலமண்டில் வாசிரியப்பா | எல்லா அடிகளும் அளவொத்த நாற்சீரடிகளாக வருவன. (யாப்பு ~ இ.) |
நிலம் | ஐவகைப்படும், அவை. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன. அவற்றுள் குறிஞ்சி, மலைசார்ந்த நிலம், பாலை, சுரஞ்சார்ந்த நிலம், முல்லை, காடுசார்ந்த நிலம், மருதம், ஊர்சார்ந்த நிலம், நெய்தல், கடல்சார்ந்த நிலம். சொன்ன முறைப் படி குறிஞ்சிக்குத் தெய்வம், குமாரக்கட வுள், உயர்ந்தோர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, கொடிச்சி; தாழ்ந்தோர், குறவர், கானவர், குறத்தியர்; புள், கிளி, மயில்; விலங்கு, புவி, கரடி, யானை, சிங்கம்; ஊர், சிறுகுடி; நீர், அருவி, சுனை; பூ, வேங்கை, குறிஞ்சி, காந்தள்; மரம், சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாங்தம் மூங்கில், உணா, மலைநெல், மூங்கிலரிசி, தினை; பறை, தொண்டகம்; யாழ், குறிஞ்சியாழ்; பண், குறிஞ்சிப்பண்; தொழில், வெறியாடல், தேனழித்தல், ஐவன மென்னும் மலைநெல் விதைத்தல், தினை காத்தல், கிழங்கு அகழ்தல், அருவியாடல், சுனையாடல் முதலியவாம். இது கதிரும் யாமமும், முன்பனியுமாகிய இருபொழுதுகளையுமுடைத்து. இந்நிலத்து வசிப்போருக்கு உதிரத்தைப் பீடிக்கின்ற சுரமும், வயிற்றில் ஆமக்கட்டியும், வல்லைக் கட்டியும், உண்டாம். சிலேஷ்மம் மீறும். பாலைக்கு: தெய்வம், கன்னி, உயர்ந்தோர், விடலை, காளை, மீளி, எயிற்றி. தாழ்ந்தோர், எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், புள், புறா, பருந்து, கழுகு: விலங்கு, செந்நாய்; ஊர், குறும்பு, நீர், குழி. கூவல்; பூ, கரா, மரா, உழிஞை, மரம், பாலை, ஓமை, இருப்பை, உணவு வழி பறித்தன, பதியிற்கவர்ந்தன; பறை, துடி; யாழ், பாலையாழ்; பண்,பஞ்சுரம் தொழில் : போர்புரிதல், சூறையாடல்; பொழுதுவேனில், நண்பகல், பின்பனி என்பன. இந்நிலத்தார்க்கு முத்தோஷங்களும் அவற்றால் வரும் நோய்களும் உண்டாம். முல்லைக்கு : தெய்வம் ; நெடுமால்; உயர்ந்தோர் : குறும்பொறை நாடன், தோன்றல்; மனைவி, கிழத்தி, தாழ்ந்தோர், இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்; புள் காட்டுக்கோழி, விலங்கு : மான், முயல்; ஊர் : பாடி, நீர் : கான்யாறு, குறுஞ்சுனை பூ : குல்லை, முல்லை, தோன்றி, பிடவம்; கொன்றை, காயா; மரம் குருந்து; உணவு, வரகு, சாமை, முதிரை; பறை : எற்றுப்பறை; யாழ் : முல்லையாழ்; பண் : சாதாரி; தொழில் : சாமை வரகுவிதைத்தல், கடாவிடல், கொன்றைக்குழலூதல், ஆடு மாடுகள் மேய்த்தல், விடைதழுவல், குரவையாடல், கான்யாறாடல்; பொழுது கார்காலமு மாலையுமாம். இந்நிலம் பித்தாதிக்கமான இடமாம், அதனுடன் வாததோஷமும் அதிகப்படும். இவ்விருவகைத் தோஷங்களால் பல ரோகங்கள் உண்டாம் மருதநிலம் : தெய்வம் ; இந்திரன், உயர்ந்தோர் ஊரன், மகிழ்நன் கிழத்தி மனைவி; தாழ்ந்தோர் ; உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர்; புள் : வண்டானம், அகன்றில், நாரை, போதாகம்புள், குருகு, தாரா; விலங்கு :எருமை, நீர் : யாறு, கிணறு, குளம்; பூ; தாமரை, கழுநீர், குவளை, காஞ்சி வஞ்சி மரம் : மருது; உணவு. செந்நெலரிசி வெண்ணெலரிசி; பறை : கிணை முழவு; யாழ் : மருதயாழ்; பண் : மருதம், தொழில் : விழாக்கொளல், வயற்களைகட்டல், அரிதல், கடாவிடல்; குளங்குடைதல், புனலாடல், கலம் விடுதல். இந்நிலம் நல்லநீர் வளப்பம் பொருந்தினால் முத்தோஷங்கலால் உண்டாகும் தோஷங்களைப் போக்கும்; அன்றியும் இந்நிலப் பொருள்களை உண்பவர் தம் பேர்சொல்லினும் நோய்கள் அணுகா. நெய்தனிலம் : தெய்வம் : வருணன். உயர்ந்தோர் : சேர்ப்பன், புலம்பன், பாத்தி, நுளைச்சி. தாழ்ந்தோர்: நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர். புள் : காக்கை, விலங்கு. சுறா. ஊர் : பாக்கம், பட்டினம், நீர்: உவர் நீர்க்கேணி, கவர்நீர். பூ : நெய்தல் கைதை, முண்டகம், அடம்பு. மரம் : கண் டல், புன்னை, ஞாழல், உணவு : மீன், உப்பு, முதலிய விற்றலால் பெறுவனவும், மீனுமுணங்கலும், பறை : கோட்பறை, நாவாய்ப்பம்பை. யாழ் : விளரியாழ். பண் : செவ்வழி, தொழில் மீனுப்புப்படுத்தல், அவை விற்றல், மீனுணக்கல், புள்ளோப்பல், கடலாடல், காலம் : ஆதித்தன் அஸ்தமனம், இந்நிலம் உவர்ப்பு உள்ளது ஆதலின் பித்த வாத சேர்க்கை உள்ளதாம். இதில் வசிப்போர் தேகத்து ஒருவித தடிப்பும், பாதத்துச் சிலீபதரோகமும், குடலண்ட விருத்தியும் பெறுவர். பின்னும் இந்நிலம் வன்பால், மென்பால், இடைப்பால் என்று மூன்று வகைப்படும். அவற்றுள் வன்பால் குழியின் மண்மிகுவது. மென்பாலாவது மண்குறைவது. இடைப்பாலாவது ஒப்பது. |
நிலாழகி | இதனைச் சகேராபக்ஷி யென்பர். இது சந்திரோதய காலத்தில் சந்திரிகையையுண்டு ஜீவிப்பதென்பர். (உல ~ வ.) |
நிலை | (4) பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்யாலீடம். இவை விற்கொடுத்து அம்பினை எய்வார்க்கு நிலை. ஒரு காலில் நின்று ஒருகால் மடக்கல் பைசாசம், இருகாலும் பக்கமாக வளைய மண்டலித்தலே மண்டலம், வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறலே ஆலீடம், வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டவித்தலே பிரத்தியாலீடம். |
நிலை ஜலயந்திரம் | 1. (Brahmah Press) இது, திரவபதார்த்தமாகிய நீர் முதலியவற்றை அழுத்துஞ் சக்தியால் மேல்கொண்டு வருவது. இது பஞ்சுமூட்டை முதலியவற்றை அழுத்தவும் உதவும். 2. இது, நிலையாகவுள்ள ஜலத்திற்குள்ள சக்தியை நமக்குத் தெரிவிப்பது. இதனைப் பர்மா பிரெஸ் என்பர். இது பஞ்சு மூட்டைபோன்ற மூட்டைகளை அழுத்திக்கட்டும் நீர்சக்தி யந்திரம். |
நிழலின் மறைவான் | திருமங்கையாழ்வாரின் மந்திரியரில் ஒருவன். |
நிவரையெளியந்தியனார் | கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு.) |
நிவர்த்திகலை | இது சிவாகமம் கூறிய கலாபுவனங்களில் ஒன்று. இதில் (108) அசுத்த புவனங்கள் உள என்று கூறும். நீவர்த்தி கலையில் கீழ்பால் இந்திர திசையிலுள்ள உருத்திரர் கபாலீசன், சடன், புத்தன், வச்சிரதேசன், பிரமர்த்தனன், விபூதி, அவ்வியயன், சாத்தன் பினாகி, திரிதசாதிபன், எனப்பத்து உருத்திரர். இந்திரனைக் கீழ்த்திசைக் காவவின் நியமித்து வைகும்புவனங்கள் பத்து. மேலும் அவ்வத் திசையிற் கூறப்படும் உருத்திரர் அவ்வத்திசைக் காப்பாளராகிய அங்கியங்கடவுள் முதலியோரை அவ்வத்தொழிவில் நியமித்து அவர் வழிபட வீற்றிருப்பசென்றறிக. தென் கீழ்பால் அங்கித் திசையின் அங்கி யுருத்திரன், உதாசனன், பிங்கலன், காதகன், அரன், சுவலனன், தகனன், பப்புரு, பதுமாந்தகன், கயாந்தகன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. தென்பால் நீ இயமன்றிசையில் யாமியன், மிருத்தியு, அரன், தாதா, விதாதா, கருத்தா, சையோத்தா, வியோத்தா, தருமன், தருமபதி என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. தென்மேல்பால் நிருதிதிசையில் நிருதி, மாரணன், அந்தர, குரூரதிருட்டி, பயரனகன், ஊர்த்துவகேசன் விருபாக்கன், தூமிரன், உலோகிதன், திமிட்டிரி என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. மேல் பால் வருண திசையிற் பலன், அதிபலன், பாசவத்தன், மாபலன், சுவேதன், சயபத்திரன், தீர்க்கவாகு, சலாந்தகன், மேகநாதன், சுநாதன் என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து. வடமேல்பால் வாயு திசையிற். சீக்கிரன், இலகு, வாயுவேகன், சூக்குமன், தக்கணன், கயாந்தகன், பஞ்சாந்தகன், பஞ் சசிகன், கபர்த்தி, மேகவாகனன் என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து, வடபாற் குபேரனுஞ் சோமனும் வைகுந் திசையில் நிதிசன், உருபவான், தன்னியன், சௌமியதேகன் சடாதரன், இலக்கு மிதரன், அரதனதரன், சீதரன், பிரசாதன், பிரகாமதன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து, வடகீழ்பால் ஈசான திசையில் வித்தியாதிபன், ஈசன், சர்வஞ்ஞன், ஞானபுக்கு, வேதபாரகன், சுரேசன், சருவன், சேட்டன், பூதபாலன், பலிப்பிரியன், என்னும் உருத்திரர் வைகும்புவனம் பத்து,கீழ்க்கண்ணதாகிய மாயோன்றிசையில் இடபன், இடபதான், அருந்தன், குரோதனன், மாருதாசனன், கிரசனன், உதும்பரன், ஈசன், பணிந்திரன், வச்சிரதமிட்டிரி என்னும் உருத்ரர் வைகும் புவனம்பத்து. மேற்கண்ண தாகிய பிரமன் திசையிற். சம்பு, விபு, கணாத்தியகன், திரியக்கன், திரிதசேசன், சமூவாகன், விவாகன், நபன், இலீச்சு, திரிலோசனன் என்னும் உருத்திரர் வைகும்புவனம்பத்து. எல்லாவற்றிற்கும் மேலாக வீரபத்திரன், பத்திரகாளி, என்னுமிவர் வைகும் புவனம் இரண்டு, ஆகச் சாதாரண புடவிதத்துவத்திற் புவனம் நூற்றெட்டுங் கண்டுகொள்க. இந்த நூற்றெட்டுப் புவனமும் பிருதிவியண்டம் ஆயிரங்கோடியினும் இவ்வாறே வேறு வேறுள்ளன. (சிவஞான பாடியம்.), |
நிவாதகவசம் | இது காற்றும் நுழையாத திண்ணிய கவசம். |
நிவாதகவசர் | எக்காலத்தும் நீங்காத கவசத்தைப் பெற்றவர். இவர்கள் பிரகலாதன் வம்சத்து அசுரர். இவர்கள் முப்பது கோடியர், இவர்களிருக்கை மேற்றிசைக் கடலுக்கருகிலுள்ள தோயமாபுரம், யமனை நோக்கித் தவம்புரிந்து மகாவரம் பெற்றவர்கள். இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் பிரமன் சொற்படி இவர்களை நட்புக்கொண்டு இவர்கள் பட்டணத்தில் (99) திங்கள் தங்கிவந்தனன். இவர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். தேவர்கள் அருச்சுநன் சிவமூர்த்தியிடம் தவத்தால் பாசுபதம் பெற்றதறிந்து இந்திரனிடம் கூற இந்திரன் அருச்சுநனை இவர்கள் மீது யுத்தத்திற்கு ஏவுவித்தனன், அதனால் இவர்கள் கருவற்றனர். |
நிஷக்கிரியன் | தத்வஞானத்தை யுடையவனான சந்நியாசி. |
நிஷதன் | 1. (சூ.) அதிதியின் குமரன். இவன் குமரன் நளன். 2, குரு குமரன். 3. சீராமன் பௌத்ரன். குசன்புத்திரன். |
நிஷதம் | 1, நிஷதனால் ஆளப்பட்டதேசம், 2. ஒருமலை இந்நாட்டில் உள்ளது. 3. Narwar, The Capital of Nalaraja. This is also called Nalapura. |
நிஷதாதிபன் | பாரதவீரரில் ஒருவன். கால புத்திரன் அம்சம். |
நிஷாதன் | பிராம்மணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன். தொழில் மீன் பிடிப்பது. (மநு.) |
நிஷாதர் | கருடனால் பக்ஷிக்கப்பட்ட வேடர், |
நிஷிதா | பாகுகனைக் காண்க. இவன் வம்சத்தவர், நிஷிதா காடுகளில் வசித்தனர். |
நிஷ்ஃருதி | அக்னி விசேடம். |
நிஷ்டாநுபூதி | தாம் நிஷ்டையில் அனுபவித்த அநுபவம் கூறும் நூல். இது ஆறுமுகசுவாமிகளால் இயற்றப்பட்டது. |
நிஷ்டூகன் | கத்ருகுமரன். நாகன். |