ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
நாக சதுர்த்தசி விரதம் | இது ஐப்பசிய கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் விடியற்காலத்தில் மங்கள ஸ்நாகஞ் செய்தல் வேண்டும். தைலத்தில் வக்ஷ்மியையும், ஜலத்தில் கங்கையையும் ஆவாகித்து ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் செய்யின் பமபயத்தினின்று நீங்குவர். இதனைக் கார்த்திகை சுக்லபடித்துச் சதுர்த்தசியில் செய்யும்படி கூறியிருக்கிறது. இதில் புது வேஷ்டி பூஷணம் முதலியன செய்து தரிப்பர். இத்தினத்தில் விஷ்ணு திரிவிக்ரம ஸ்வரூபராய் மகாபலியின் மூவுலகத்தை மூன்று அடியால் அபகரித்தபோது அவன் மூன்று நாள் தன்பொருட்டுத் தீப தானம் மூவுலகத்தாரும் செய்யக் கேட்டுக் கொண்டபடி வரம் தந்ததினால் இந்நாளில் மூன்று தினம் தீபமிடுவர். இதனால் இப் பண்டகை தீபாவளி யெனப்படும். |
நாக நாட்டரசர் | மணிபல்லவத்துள்ள புத்த பீடிகையை எடுத்துச் செல்லமுயன்று தம் முட்பகைமை கொண்டு போர் செய்த இரண்டரசர். (மணிமேகலை.) |
நாக பஞ்சமி விரதம் | இது ஆவணி மாதம் சுக்கிலபக்ஷ பஞ்சமியில், சதுர்த்தியில் ஒருவேளை உணவு கொண்டு மறுநாள் ஐந்தவையுள்ள நாகத்தின் உருவைப்பொன் முதலிய லோகத்தாலாயினும் மண்ணா லாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தக்ஷிணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையும் துதிப்பது, |
நாககன்னிகை | உரகபதியின் மகள், அருச்சுநன் தேவி, குமரன் அரவான். |
நாககன்னிமணந்தசோழன் | சூர ஆதித்த சோழனைக் காண்க. |
நாகசம் | பரிச்சித்தால் தக்ஷகனுக்கு அஞ்சி நிருமிக்கப்பட்ட கோட்டை, |
நாகணவாய்ப்புள் | 1. (மைனா) இது சிட் டினத்தில் சேர்ந்தது. இது, கறுப்பு நிறமாய் இரக்கையில் வெளுத்திருக்கும், மூக்குமஞ்சள் நிறம், இதைக் கிளியைப்போல் பழக்கிப் பேசப் பயிற்சி செயின் நன்றாகப் பேசும், 2, இதில் இருவகை. ஒன்று கறுப்பு நிறங்கொண்டது, இறகில் வெண்மை நிற முண்டு. இதன் அலகும் கண்ணின் ஓரமும் மஞ்சள் நிறம். இது கூடு கட்டுவதில்லை. மரப்பொந்துகளிலும் சுவரிடுக்குகளிலும் பஞ்சு முதலிய வைத்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். இது உருவத்திற் சிறியதாயினும் பக்ஷிகளுடன் சண்டையிட்டு அவைகளைக் கூரிய அலகால் குத்திவோட்டும். இச்சாதியில் மஞ்சள் நிறங்கொண்டதும் உண்டு இதனை மைனா என்பர். |
நாகதந்தன் | திருதராட்டிரன் குமரன். |
நாகதன்வம் | வாசுகி ராஜனாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம், |
நாகதஷ்ட விரதம் | இதுவும் ஆவணிமாத சுக்கிலபக பஞ்சமியில் மேற்கூறியவாறு, மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்தி செய்து விஷ்ணுப்பிரீதி செய்வது, இதைச் செய்தவர்கள் நாகபய நீங்கி நலம் அடைவர். |
நாகந்தைமகருஷிகோதரன் | ஒளவைக்குப் பொற்படாமும் கருநெல்லிப் பழமுங் கொடுத்து அந்தாதியும் நவமணிமாலையும் பெற்றனன், |
நாகனார் | ஒரு இசைத்தமிழ் வல்ல புலவர். பரிபாடலில் உள்ள (11) ஆம் பாடலுக்கு இசைவகுத்தவர். (பரிபாடல்). |
நாகன் | 1. கண்ணப்பர் தந்தை. பாரி தத்தை. 2. (8) வாசுகி, அநந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன், இவை யெண்டிக்கில் பூமியைத் தாங்க நடுவில் சேஷன் தாங்குவன். |
நாகன்றேவனார் | கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (திருவள்ளுவமாலை) |
நாகபந்தம் | இது சித்திரக்கவியிலொன்று. இது இரண்டு பாம்புகள் தம்முள் இயைவனவாக உபதேசமுறைமை யானெழிதி அதில் ஒரு நேரிசை வெண்பாவினையும் ஒரு இன்னிசை வெண்பாவுமெழுதிச் சந்திக்களினின்ற வெழுத்தே மற்றையிடங்களினு முறுப்பாய் நிற்கப் பாடுவது. இதில் மேற் சுற்றுச்சந்தி நான்கிலும் (4) எழுத் தும், கீழ்ச்சுற்றுச்சந்தி (4) இலும் (4) எழுத்தும் (2) பாம்பிற்கு நடுச்சந்தி (4) இலும் (2) பாட்டிற்கும் பொருந்த (4) எழுத்துமாகச் சித்திரத்தில் அடைப்பது. |
நாகபலி | பலியைப் புஷ்பங்களோடும் கறுப்பு வஸ்திரங்களோடும், சந்தனத்துட னும் சூரியன் அஸ்தமிக்கும் போது புற்றில் போடவேண்டும். இப்படிப் போடுவதால் பூமியைத் தாங்கும் நாகர்கள் சந்தோஷிக்கிறார்கள். இதனால் வேண்டிய இஷ்டசிந்திகள் உண்டாம். இச்சரிதை திக்கஜங்களால் ரேணுகன் எனும் யானைக்குக் கூறப்பட்டது. (பார, அரசா.) |
நாகபுரம் | சாவக நாட்டுப்பட்டணம், புண்ணிய ராஜனுடைய இராசதானி. சிலசாசனங்களில் போகவதிபுரமென்று வழங்கும். (மணிமேகலை.) |
நாகபுராணன் | கத்ருகுமரன், நாகன. |
நாகப்பிரதிட்டை | ஒரு கருங்கல்லில் ஒரு படம், இருபடமுள்ளனவாகப் பாம்புகள் எழுதி அச்சிலையை முதனாள் சலவாசஞ் செய்வித்து அன்றிரவு தம்பதிகள் உபவாசமிருந்து மறுநாள் நாகசிலைக்குப் பூசை, முதலிய செய்து அரசடியில் விதிப்படி பிரதிட்டை புரிந்து பூஜித்துப் பந்துசனங்களுடன் பிராமணபோஜனஞ் செய்விப்பது. இது செய்தோர் புத்திரபாக்கியம் பெறுவர். பெண்ணாகவே பெறும்பேறு ஆணாக மாறும். |
நாகமாலை | சச்சந்திரன் பரிவார்சனங்களில் ஒருத்தி. |
நாகமுக்கியர் | சர்ப்பங்கள் அதிகமாகையால் எல்லாவற்றின் பெயர்களைக் கூற முடியாது. முக்கியானவை மாத்திரம் கூறப்படுகிறது சேஷன் முதலிற் பிறந் தவர், அவருக்குப் பின் வாசுகி, ஐராவதன், தக்ஷகன், கார்க்கோடகன், தனஞ்சயன், காறியன், மணிநாகன், ஆபூரணன், பிஞ்சாகன், எலாபத்ரன், வாமான், நீலன், அலேன், கல்மாஷன், சபலன், ஆர்யகன், உக்கன், கலசபோதகன, சுமனஸ், ததிமுகன், விமலபிண்டகன், ஆப்தன், கோடசகன், சங்கன், வாலிசிகன், நிஷ்டாநகன், ஹேமகுஹன், நகுஷன், பிங்லன், பாஹ்ய கர்ணன், ஹஸ்திபதன், முத்தர பிண்டகன், கம்பலன், அசுவதரன், காலீயகன்,வ்ருத்தன், சம்வர்த்தகன், பத்மகரிருவர், சங்கமுகன், கூச்மாண்டகன், க்ஷேமகன், பிண்டாரகன், காவீரன், புஷ்பதமிஷ்டசன், பில்வகன், பில்வபாண்டுரன், மூஷிகாதன், சங்கசிரஸ், பூர்ணபத்ரன், ஹரித்திரகன், அபராஜிதன், ஜ்யோதிகன், ஸ்ரீ, வஹன், கௌரவ்யன், திருதராஷ்டிரன், சங்கபிண்டன், விரஜஸ், சுபாகு, சாலிபிண்டன், ஹஸ்திபிண்டன், பிடாகன், சுமுகன், கேளணபாசனன், குடரன், குஞ்சான், பிரபாகரன், குமுதன், குமுதாக்ஷன், தித்திரி, ஹவிகன், கர்த்தமன், பகுமூலகன், கர்க்கரன், அகர்க்கான், குண்டோதரன், மகோதரன், இவர்கள் சிறந்தோர். இவர்களில் ஆதிசேஷன் அயோக்யாளா கிய நாகர்களுடன் சேர விருப்பமற்றவராய்த் தவமேற்கொண்டு பிரமாவினால் பூமியைத் தாங்கக் கட்டளை பெற்றார். வாஸுகி தன் குமரியாகிய சலற்காரையை ஜாத் காருருஷிக்கு மணஞ் செய்வித்தான். பாற்கடல் கடையத் தாம்பானான், தக்ஷகன் பரீக்ஷித்தைக் கடித்துப் பிராமண சாபத் தைப் பூர்த்திசெய்தான். எலாபுத்ரன் ஆஸ்தீகரால் சாபநிவர்த்தியை நாகர்களுக்குக் கூறினான். இவர்களுள் பெரும்பான்மையோர். தாயின் சாபமேற்று ஜநமேஜயன் சர்ப்பயாகத்தில் மாண்டனர். |
நாகம் போத்தன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களில் ஒருவராக இருக்கலாம், (குறு,242). |
நாகரர் | இவர் ஒரு ருஷி. தம் பெயரால் ஒரு லிபி ஏற்படுத்தியவர். அதற்குப் பெயர் நாகரம். |
நாகரிதாசர் | இவர் திருமாலிடம் அன்பு பூண்டவராய்த் திருமால் கொண்ட பல அவதாரங்களையும் நாடகமாக நடித்து வருவர். இவரது சீடர் இவர் கொண்ட வேடத்திற் கிணங்கத் தாமும் வேடங்கள் பூண்டு நடிப்பர். ஒருமாள் இவர் நரசிங்க வுருக்கொள்ளச் சீடன் ஒருவன் இரண்யவேடமும் மற் றொருவன் பிரகலாத வேடமும் கொண்டு நடிக்கையில் பிரகலாதன் இரணியன் முன் விஷ்ணுமூர்த்தியின் ‘சர்வ வியாபகநிலை கூற இரணியன் கோபித்து இந்தத் தூணிலுந் திருமாலிருப்பனோ எனக் கோபத்துடன் அறைய அதில் நரசிங்கவேடங்கொண்டிருந்த தாசர் வெளிப்பட்டு இரணியவேடங்கொண்டிருந்த அவனது உடலைப்பிளந்து மாலையிட்டனர். இதனை அக்காலத்திருந்த இராமராஜர்முன் பலர் கூற அரசர் நாஹ ரிதாசரைத் தசாதராகவும் ராம, கைகேசி யர் இருவரும் சீடராகவும் வரச்செய்து இராமனை விட்டுத் தசரதர் பரிதபித்து உயிர் நீங்கும் சரிதை நடிக்கச் செய்கையில் இராமன் வனம் புகவும் தசரத வேடம் பூண்ட தாசர் உண்மையாகவே உயிர் நீங்கிப் பரமபதம் பெற்றவர். |
நாகரிபக்தர் | இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்த ஒரு தட்டார். சிவப்ரீதி யுள்ளாராய்த் திருமாற் கோயிலருகிருந்து உட்செல்லாதவராய் வாழ்கின்ற நாளில் வணிகன் ஒருவன் புத்திரப்பேறு வேண்டிப் பெருமாளை வணங்கிப் பெற்று அப்பெருமாளுக்கு அரைநாண் செய்யவேண்டி இவரிடத்துச் சென்று கூற அவர் பெருமாளின் அளவெடுத்துவா வென்றனர். வணிகன் அவ்வாறே அளவெடுத்துத் தரத் தட்டார் அவ்வாறு செய்து தந்தனர். அதைப் பெருமாளுக் குச் சாத்த அது பற்முதிருப்பதைக் கண்டு வணிகன் தட்டானுக்குச் சொல்லி வேண்டினன். மீண்டும் அதைச் சரிப்படுத்தித் தர வணிகன் கொண்டு காட்ட ஒரு விரற்கடை அதிகப்பட்டது. அதைச் சரிப்படுத் தித்தர ஒரு விரற்கடை குறைந்தது. இவ்வாறு நீட்டவுங் குறையவும் இருத்தலைக் கண்டு வணிகன் நான் செய்த குற்றமென்னோ என, வருந்தி, நீயே அளவுகாண் என வேண்டலும் நாம் சிவமூர்த்தியையன்றிக் காண்பதில்லென் மறுத்தனன். பின்னும் வணிகன் வேண்டக் கண்களைக் கட்டிக் கொண்டு வணிகன் அழைத்துச் செல்லக் கோயிலுட் புகுந்து பெருமாளைத் தடவ அவர் மான்மழு சதுர்ப்புஜத்துட னிருக்கக் கண்டு துணுக்கெனக் கண்களை யவிழ்த்துப் பெருமாளைக் கண்டு மீண்டும் கண்களை மூடினன், மீண்டு அவ்வாறு சிவச் சின் னங்களைக் கண்டு கண்களைத் திறக்க விஷ்ணுவாகக்கண்டு மயங்கிக் கண்மூடின் சிவனாகவும் திறக்கில் திருமாலாகவும் இருக்கக் கண்டு கண்களில் நீர் ததும்பத் திருவடிகளில் வணங்கி மனமுருகி உன்னில் சிவன் வேறென்று நினைத்த எனக்கு என்னில் அவன் வேறல்லன் என அறிவித்து நின்றவனே எனத் துதிக்கப் பெருமாளும் தம் சிரத்தில் சிவக்குறி காட்ட நாஹரியும்! பணிந்து நாமதேவர் செய்த விருந்துண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி பெருமா ளைப் பணிந்து வந்தனர். |
நாகர் | 1. ஒரு மனித ஜாதியார். இவர்கள் நாடு நாகநாடு, நாகர்மலை முதலிய உண்டு, வாசுகி முதலிய குலநாகங்களின் குலத்திற் பிறந்து நாகமுத்திரை பெற்றிருத்தலின் இப்பெயர் பெற்றனர். (மணிமேகலை). 2. தமிழ்நாட்டில் பண்டைக் காலத்துப் பரவியிருந்த ஒருவகைச் சாதியர். இவர்கள் தங்கள் முடிமேல் ஐந்தலை, முத்தலைகளையுடைய நாகவடிவமுடைய தொன்றைத் தரித்து வந்தமையின் இப்பெயரடைந்தனர். |
நாகர்மலை | இதிலுள்ள நாகர்கள் ஆடையில்லாமற் சஞ்சரித்தவர்களென்றும், இழிவான தொழில்கள் பலவற்றைச் செய்து கொண்டிருந்தவர்க ளென்றும் தெரிகின்றது. (மணிமேகலை). |
நாகவீதி | தருமன் பெண். |
நாகாசுரன் | ஒரு அசுரன். இவன் விஷ்ணு, பிரமன், வாசுகி முதலியவரை வென்று சிவமூர்த்தியிடம் வந்து திருவடியால் உதையுண்டு அழுந்தின நாகவுருவமுள்ளவன். |
நாகாம்பை | 1. வசவதேவர்க்குத் தங்கை, வசவர் சொற்படி குண்டலத்தைச் சங்கமருக்கு அளித்தவள். இவள் குமரர் சென்னவசவர். 2. கிருஷ்ணதேவராயன் தாய். |
நாகைக்காத்தான் | இவன் மீது வருண குலாதித்தன் மடல் என்று ஒரு பிரபந்தம் ஒரு பெண் கவியால் பாடப்பட்டது. |
நாகைக்காரோணம் | இது நாகப்பட்டினத்துள்ள சிவத்தலம். இது சிவமூர்த்தி பிரம விட்டுணுக்களையும் மற்றவர்களையும் தம்முள் அடக்கிக்கொண்ட சிவன் திருவுரு இவ்விடம் பிரதிட்டிக்கப்பட்டது. |
நாக்கு | இது, தடித்ததசைப் பொருள், வாயிலடங்கியது. நாக்கினடியிலும் மேலும் முட்கள் போன்ற சதைகளுண்டு, மூளையிலிருந்து நாவிற்குச் சிறு நரம்புகள் வருகின்றன. இந்நரம்புகள் நாவின் மேலிருக்கும் முட்களில் மலர்ந்து முடிகின்றன. நாம் உருசியுள்ள பொருள்களை வாயிற் கொண்டவுட.ன் கரையச் செய்து நாவில் மலர்ந்துள்ள நரம்பில் படருசியை மூளைக்கறிவிக்கும். வாயிற்கொண்ட பொருளைத் தொண்டைபின் வழியாய் உட்செலுத்தும். |
நாங்குடிவேளாளர் | கோட்டை வேளாளரை விட்டுப் பிரிந்த வேளாளர். இவர்களும் கொண்டைகட்டி வேளாளரைப் போல் அரசர்க்கு முடிசூட்டுவோர் என்று கூறுவர். |
நாசயனன் | கலாவதியைக் காண்க. |
நாசயோகம் | திதிகளைக் காண்க. |
நாசிகரோகங்கள் | இவை பனி, பனிக்காற்று, எதிர்க்காற்று, நாசியில் தூசு அடைதல் உரத்தவார்த்தை, மிகுரித்திரை, நித்திரைபங்கம், குளிர்ந்த ஜலத்தில் மூழ்கல், கண்ணீரை அடக்குதல், மேடுபள்ளமுள்ள இடத்தில் படுத்தல், தேசபேத ஜலபானம், வெகுதாகபானம், அதிக ஸ்திரிசையோகம், வாந்தி அடக்கல் இக் காரியங்களினால் முத்தோஷங்களும் அதிகரித்து நாசியைச் சேர்ந்து ரோகத்தை யுண்டாக்கும் அது வாதபீனிசம் முதலாக (18) வகைப்படும். 1, வாதபீநசரோகம், 2. பித்தபீநசரோகம், 3. சிலேஷ்மபீநச ரோகம், 4. திரிதோஷபீநசரோகம், 5. ரத்தபீநசரோகம், 6. துஷ்டபீநசரோ கம், 7. அதிதும்மல்பீநசரோகம், 8. நாசி காசோஷரோகம், 9. நாசிகாநாகரோகம், 10. இராணபாகரோசம், 11. நாசிகாசிராவ ரோகம், 12. அபீநசரோகம், 13. நாசிகாகீபிகைரோகம், 14. பூகிளாசிகாரோகம், 15. பூயாசிரநாசிகரோகம், 16. நாசிகாபுடகரோகம், 17. நாசாரசரோசம், 18. நாசிகாற்புத ரோகம் என (18) வகைப்படும். |
நாசிகேது | 1. திவ்யாங்க மகருஷி குமரன். இவன் தந்தை சொல்லிய காலந்தவறிச் சிவபூசைக்குப் புட்பங் கொண்டுவந்ததால் தந்தை சொற்படி நாகதரிசனஞ் செய்து பின் இந்திர, பிரம விஷ்ணு சிவலோகங்களைத் தரிசித்து மீண்டவன். 2, உத்தாலகமுனிவர்க்கு ஒருநாள் வீரியங் கலிதமாக அதையொரு தாமரை மலரிலிட்டு விதிசை நதியில் விட்டனர். அந்நதிக்குத் தீர்த்தமாடப் பிரதூதரன் குமரியாகிய சுகேசினி வந்தனன். அவள் அந்த மலரினையெடுத்து முகர அம்மூக்கின் வழி இருடியின் வீரியஞ்சென்று கருக்குழியில் பதியக் கன்னிகை கருக்கொண்டனள், குமரியின் கருக்குறியைத் தாயறிந்து புருடனுக்கு அறிவிக்க அரசன் தன் குமரியைத் துற்கடமுனிவ ராச்சிர மத்திற்கருகாம் வநத்தில் விட்டனன், சுகேசினி அம்முனிவராக்சிரம மடைந்து தன்னை இன்னாளென அறிவித்து அவ்விருடிக்கு ஏவல் புரிந்திருக்கையில் நாசியின்வழி ஒரு ஆண்குழந்தையைப் பெற அம்முனிவர். அவள் நாசியின் வழி பிறந்ததால் நாசிகேது எனப் பெயரிட்டனர். பின் துற்கடமுனிவர் நாசிகேதுவை உத்தாலகரிடம் அனுப்பி அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்யக் கட்டளை யிட்டனர். அவ்வாறே நாசிகேது அவர்க்கும் ஆண்டிருந்த முனிவர்களுக்குஞ் செய்து வருகையில் முனிவர் களிப்படைந்து நீ யார் என நாசிகேது உமது குமரன் எனக்கேட்டு ஞான திருஷ்டியால் நடந்தவை அறிந்து ஆயின் உன் தாயை அழைக்க என அவ்வாறே தாயையழைக்க அவள் துர்கடர் கட்டளைப்படி நடக்க என அவர் கட் டளைப்படி தன் பாட்டனாராகிய பிரதுதரனுக்கு அறிவித்து உத்தாலகமுனிவரை வருவித்துத் தன் தந்தைக்கு மணஞ் செய்வித்தவன். இவ்வாறிருக்க உத்தாலகர் ஒருநாள் தன் குமரனுடன் தீர்த்தமாடச் சென்று தருப்பையை மறந்து வந்தபடியால் குமரனை நோக்கித் தருப்பை யெடுத்துவர ஏவக் குமரர்சென்று தருப்பையைச் காணாது வெறுக்கையாய் வந்து தருப்பையில்லாமை கூற முனிவர் வேறு கருப்பையாயினும் கொண்டுவராது வந்தமையால் கோபித்து நீ யமபுரங் கண்டு மீளுக என்றனர். உடனே குமரன் இறக்க முனிவர் அறியாது சபித்தேனென விசனமுருகையில் குமரன் எழுந்திருந்து தந்தையைப் பணியத் தந்தை குமரனைத் தீர்க்காயுளாயிருக்க என வாழ்த்த அவ்வாறிருக் கையில் முனிவர்கள் இவனிடம் வந்து நரகலோக மெவ்வாறிருந்ததென அவர்களுக்கு யமபுரச்செய்தி கூறினவன். (நாசிகேது கதை). |
நாசியன் | கத்ருதநயன் நரகன். |
நாச்சையர் | ஒரு வீரசைவர், சமணரை வென்று கருவறுத்தவர். |
நாஞ்சினாட்டுவேளாளர் | இவர்கள் மலையாளத்துப் பரவியுள்ள வேளாண்குடி மக்கள். இவர்கள் பாண்டியர்களுக்கும் மலைநாட்டாருக்கும் யுத்தம் நடக்கையில் திருவனந்தபுரத்தை அடைக்கலமாகக் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலார் உழவர். (தர்ஸ்டன்). |
நாஞ்சில்வளவன் | இவன் ஒரு வள்ளல. இவனை ஒளவை அரிசிகேட்க ஒரு யானை கொடுத்தான். ஆதலால் இவன் மீது “தட வுசிலைப் பலவுநாஞ்சிற் பொருநன்’ எனப் பாடினள், |
நாஞ்சில்வள்ளுவன் | ஒரு சிறைப் பெரியனாராற் பாடல் பெற்றவன், நாஞ்சில் மலையுடையான் இவனைப் பாடிய புலவர், மருதன் இளநாகனார், கருவூர்க் கதப்பிள்ளை, சேரனுக்குப் படைத்துணையானவன். (புற நா) |
நாடகச்சாதி | இது பத்துவகை. நாடகம், பிரகரணம், பரணம், பிரகசனம், ஷமம், வியாயோகம், சம்வாகாரம், வீதி, அங்கம், ஹீயாமிருகம் முதலிய. (தண்டி ~ உரை). |
நாடகத்தமிழ் | இது நிலத்தோடும், கலத்தோடும், கண்டத்தோடும், கருவியோடும், நிலையோடும், இயக்கத்தோடும், இருவகை. பலவகை விலக்கு றுப்புக் கை கால் வட்டணை, பொருள், விருத்தி, யோனி, சந்தி, சாதி, சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்பனவற்றோடும்; கதையோடும் பல கூத்துக் கூறுங்கால் உய்த்துணர்வில்லோர்க்குச் செவிச்சுவை பயக்கக் கூறுவது. (சிலப்பதிகாரம்.) |
நாடகம் | அகநாடகம், புறநாடகம் என இரண்டு. அகநாடக உரு (28). அவை கந்த முதலாகப் பிரபந்த மிறுதியாகவுள் எவை. கந்தம் என்பது : அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற் புணர்ப்பது. பிரபந்தமென்பது : அடிவரையறையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது, புறநாடக உருவாவன தேவபாணி முதலாக அரங்கொழிச் செய்யுளீறாகச் செந்துறை விகற்பங்களெல்லாம் என்க, அகநாடகத்திற் குரியவை கீற்றுக்கடிசரி முதலிய தேசிற்குரிய கால்களும், சுற்றுதல், எறிதல், உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும், உடற்றுக்கு முதலாகிய உடல் வர்த்தனையுமாம். புறநாடகத்திற் குரிய ஆடல்களாவன : பெருநடை, சாரியை, பிரமரி முதலாயினவும் பதினோராடலிற் கூத்துக்களுமாம். |
நாடார் | சாணார்க்கு ஒரு பட்டப்பெயர். |
நாடி | (9) சுழிமுனை, இடை, பிங்கலை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி, இவற்றுள் சுழிமுனை, ஆதாரம் ஆறிலும் நிற்பது. இடைகலை பிங்கலை கத்திரிகைக் காற்போல் உடல் முழுதும் பின்னிகிற்பது. காந்தாரி, நாபியிலும், அத்தி, சிதவை கண்களிலும், அலம்புடை, புருடன், இவை. காதுகள் இரண்டினும், குரு, நாபியிலும், சங்கினி, உபத்தத்திலும் உறையும், |
நாடிகள் | (உடம்பிலுள்ள நிலையை நாடுதலால் இப்பெயர்.) இவை தேகத்தில் உந்திச் சுழியிலிருந்தெழுந்து கீழ்மேலாய்ப் பேய்ப்பீர்க்கின் கூடுபோல் தேகத்தைப் பின்னி நிற்பனவாம். இவை தேகமுழுதும் (72,000) எனத் தமிழ் நூல்கள் கூறும். ஆயினும் இவற்றில் தசநாடிகள் முக்யமானவை, அவற்றிலும் இடைகலை, பிங்கலை, சுழிமுனை முக்கியமானவை. இவை மூன்றும் ஒன்றாய் ஒருநரம்பாகி இடைகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்தநாடியாகவும் சுழிமுனை சிலேத்மநாடியாகவும் நடந்து இருதயத்தின் குணங்களைத் தெரிவிக்கும். தசநாடிகளினிலையினை நாடிகள் பத்தில் தெரிவித்தோம். இந்தாடிகளினடை இருதயத்தின் சம்பந்தமான சுவாசநிலையையும் அநுசரித்து நிற்கும். இச்சுவாசம் நாழிகை யொன்றுக்கு (340) சுவாசமாக, நாள் ஒன்றுக்கு (24600) ஆக அங்குலப்பிரமாணம் ஒடும், இதுவே வாதநாடி, இதற்கு மாத்திரை (1) பிங்கலை (12) அங்குலப்பிரமாண மோடும் இதுவே பித்தநாடி, மாத்திரை (அரை). சுழிமுனை இந்த இரண்டு நாடிகிளினும் பகிர்ந்தோடும் இதுவே சிலேத்ம நாடி முத்திரை (1/4) நாடிகளின் நடை இருதயத்தினிடது சடரங்குவியும்போது இரத்தம் நரம்பின் வழியோடிப் பல நாடிகளில் பரவும், அப்போது நாடிகள் விரியும். மீண்டுமது விரிகையில் நாடிகளில் இரத்தங் குறைந்து நாடிசுருங்கும். இவ்வாறு விரிந்துங்குவிந்தும் வருதலால் அதனுடனியைந்த நாடிகளும் விரிதலும் குவிதலு மடைகின்றன. இச்செய்கையே நாடி நடையாம். நாடி பார்க்கும் விதம் கையைப் பிடித்து நெட்டை வாங்கிப் பெருவிரற் பக்கமாகவிருக்கும் ஆரையென்பின் மேல் ஒடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குல மேலாக மூன்று விரலாற் சமமாக மெதுவாக அழுத்தி நாடியைப் பரீக்ஷித்த பின் விரல்களை மாறிமாறி அழுத்தியுந் தளர்த்தியும் பார்த்தால் நாடி நடையை யறியலாம். புருஷருக்கு வலதுகையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடிபார்க்கவேண் டும். இவ்வாறு நாடியையாராயு மிடத்துப் பெருவிரல் நீங்கச் சுட்டுவிரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் சிலேஷ்மமாம். இவற்றில் சேராத பெருவிரல், சுண்டுவிரல் பூதநாடிகளாம். புருஷர்களுக்கு வாதநாடி மயில், அன்னம், கோழி நடைகளை யொத்தும், பித்தநாடி, ஆமை, அட்டைகளை யொத்தும், சிலேத்மம் பாம்பு, தவளைகளை யொத்தும் நடக்கும். பெண்களுக்கு வாதம் சர்ப்பம் போலும், பித்தம் தவளைபோலும், சிலேஷ்மம் அன்னம்போலும் நடக்கும். இதில் குரு நாடி இந்த ஐந்து விரலையுஞ் சேர்ந்திருக்கும். இந்த நாடிகளின் நடைவேறுபட்டால் நோய்களின் வேறுபாடுகளை யறிய வேண்டும். நாடி படபடக்கும் காலம் : நடந்தலுத்தபோதும், உணவருந்திய பின்பும், உஷ்ணமாகப் பதார்த்தங்களைத் தின்ற காலத்தும், சாராயம், புகையிலை, லாகிரி வஸ்துக்கள், வெயில், சுரம் நித்திரைபங்கம், மனச்சஞ்சலம், அதிக பலவீனம், இரத்தம் வடிதல் முதலிய காலங்களிலாம். நாடிகளின் உண்மை யறியாமை பசி, விசனம், குளிர், அதிநித்திரை, விருத்தர், பாலர், யரோகிகள், தரித்திரர், சிற்றின் பஞ்செய்தோர், தண்ணீரில் மூழ்கினோர்க்கு நாடி உண்மை தெரியாது. |
நாடிக்ரந்தம் | சோதிட நூல்கள்; சூர்யநாடி, சந்திரநாடி, குசநாடி, புதநாடி, சுக்ரநாடி, குருநாடி, சாமிநாடி, இராகுநாடி, கேது நாடி, சர்வசங்கிரகநாடி, பாவநாடி, துருவ நாடி, சர்வநாடி, சுகநாடி, தேவி நாடி முதலிய தெரிவிக்கு நூல், |
நாடிவிரணரோகம் | இது நரம்புகளில் உண்டாகும் கட்டி விஷமித்தால் நரம்பைப் பற்றி மாமிசதாது முதல் அஸ்திவரையில் சிலையோடித் துன்பப்படுத்துவது. இது வாத, பித்த, சிலேஷ்ம, திரிதோஷ, அஸ்திபேதத்தால் உண்டாம். (ஜீவ.) |
நாடுகோட்பாடு சேரலாதன் | காக்கைபாடினியார் நச்செள்ளையாராற் பாடல் பெற்றவன். |
நாடுபடுதிரவியம் | செந்நெல், சிறுபயறு, செவ்விளநீர், செங்கரும்பு, வாழை முதலிய, |
நாடுவாழ்த்து | காலிலே உறத்தாழ்ந்த பெரிய கரத்தினையுடையான் தேசத்தினது நன்மையைச் சொல்லியது. (பு. வெ. பாடாண்.) |
நாட்டமைதி | (10) செல்வம், விளைநிலம், செங்கோல், நோயின்மை, வளம், குறும்பின்மை. |
நாட்டான் | நாட்டுப்புறத்தான் எனும் பொருள்பட்டது. இது வேளாளனுக்குத் தாழ்ந்த ஒரு பிரிவு. இந்தப் பட்டம் தமிழ்ச் செம்படவர், பட்டணவர், கள்ளர் இவர்களுக்கும் வழங்கி வருகிறது. |
நாட்டாழ்வார் | (நாடாவார்) கள்ளர்சாதியில் ஓர் வகுப்பினர். |
நாட்டுக்குற்றம் | 1, (7) தொட்டியர், கள்வர், யானை, பன்றி, விட்டில், கிள்ளை, பெருமழை. 2. (8) விட்டில், தன்னரசு, வேற்றரசு யானை, மிகுமழை, மிகுகாற்று, கிள்ளை, நட்டம். |
நாட்டுக்கோட்டைச் செட்டிமார் | இவர்கள் ஆதியில் சந்திரகுலத்தைச் சேர்ந்த வைசியர்கள். இவர்கள் நாகநாட்டில் சந்தியாபுரியில் வாழ்ந்து கொண் டிருந்தவர்கள். இவர்கள் இரத்தின விநாயகரை வணங்கி வருவர். இவர்கள் சைவர். இவர்கள் தாங்களிருந்த நாட்டரசனால் பீடிக்கப்பட்டுத் தொண்டை மண்டலத் துக்காஞ்சிபுரியில் குடிபுகுந்தனர். இது கலி. (204) இல் இங்கு அரசனால் இடம் விடப்பட்டு வாழ்ந்து வருகையில் கலி. (2312) இல் அரசன் விதித்த வரியின்கொடுமை சகிக்க முடியாமல் காவிரிப்பூம்பட்டணம் சேர்ந்தனர். அந்தக்காலத்தில் அப்பட்டணம் அதிக வளம் பெற்றிருந்தது. இதிலிருந்த வடக்குவீதி மற்ற செட்டிகளுக்கு இருப்பிடமாயிற்று. அரசன் இவர்களை கிழக்கு, மேற்கு, தெற்கு வீதிகளில் இருக்கச் செய்தனன். அரசன் இவர்களுக்குச் சிங்கக்கொடியும், பொற்கலசமும் கொடுத்தனன். இவர்கள் அரசன் தூண்டுதலாற் சிதம்பரத்தி லுள்ள ஈசான சிவாசாரியார் மடத்திற்குச் சீடர்களாயினர். கலி. (3775) இல் பூவாண்டி சோழன் இவர்களை வருத்தியதால் இவர்கள் தங்கள் குழந்தைகளை ஆத்மநாதாசாரியார் வசம் ஒப்புவித்துத் தற்கொலை புரிந்துகொண்டனர். பிறகு இராஜபூஷணசோழன் பட்டமடைந்தனன். வளர்க்கப்பட்ட மூன்று வீதிக்காரரும் திருவாரூர், கும்பகோணம், திருவாஞ்சியம் எனும் மூன்று மடத்திற்குச் சீடராயினர். ஏறத்தாழ கலி (3808) இல் சுந்தரபாண்டியன்வைசியரில் சிலரைப் பாண்டி நாட்டிற்கனுப்பக் கேட்டுக் கொண்டனன். அவ்வாறே இவர்கள் பாண்டிநாட்டில் ஓங்காரக்குடியில் குடி புகுந்தனர். கிழக்குவீதியார் இளையாத்தைக் குடியிலும், மேற்கு வீதியார் அறையூரிலும், தெற்குவீதியார் சுந்தர பட்டணத்திலும் மூன்று வகையாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் இளையாத்தைக் குடிவகுப்பு நாட்டுக்கோட்டைச் செட்டிகள் தங்களுக்கு ஒரு கோவில் போதாதெனக் கேட்க அரசன் இவர்களுக்கு மாத்தூர், வயிரவன்பட்டி, இரானியூர், பிள்ளையார்பட்டி, நேமம், இலுப்பைக்குடி, சூரைகுடி, வேளாங்குடி முதலிய தேவஸ்தானங்களைக் காட்டினன். இவர்கள் நாட்டரசன் கோட்டையிலிருந்து வந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றனர். இவர்கள் வெகு செட்டாக வர்த்தகஞ் செய்வோர். பெருஞ் செல்வ முள்ளவர்கள் இவர்களுக்குத் தற்கால இருப்பு திருப்பத்தூர், தேவக்கோட்டை. இவர்கள் வர்த்தகத்தின் பொருட்டுப் பெண்டு பிள்ளைகளையும் விட்டுத் திரைகடலோடி வேற்று நாடுகளிலும் தங்கள் வர்த்தகத்தைச் செய்வர். இவர்களுக்குப் பல புத்திரர் இருக்கினும் தந்தையிருக்கும் வரையில் ஒற்றுமையாய் வாழ்வர். இவர்கள் தங்கள் இலாபத்தில் ஒரு பகுதியைத் தருமத்தின் பொருட்டுச்செலவிடுவர். இவர்கள் பிறந்த சில நாள் பொறுத்துத் தலையை முண்டனஞ் செய்வர், அதுமுதல் தாங்கள் அவ்வாறே முண்டனஞ் செய்து கொள்வர். இவர்கள் சைவசமயத்தை அநுசரித்தவர்கள். சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, திருக்காளத்தி முதலிய பல சிவாலயங்களைப் புதுக்கிய திருப்பணி வியக்கத்தக்கது. இவர்களைத் தமிழ்நாட்டரசரின் மாறிய பிறப்பெ னவே புகழலாம். இவர்கள் தேச, மத, கல்வியின் பொருட்டு ஏற்படுத்தியுள்ள கலாசாலைகள் இவர்களுடைய புண்ணிய நிலைமைக்கு ஒரு அறிகுறியாம். இவர்கள் உலக நன்றி யெக்காலு மறகத்தக்கதன்று. |
நாட்டுச்சாம்பன் | கிராமப் பறையன். |
நாணயங்கள் | இவை பொன், வெள்ளி, செம்பு, அலுமீனியம் பித்தளை முதலிய லோகங்களால் பண்டமாமற்றுப் பொருட்டு அரச முத்திரையிட்டுச் செய்யப்பட்ட காசுகள். |
நாண்மங்கலம் | தருமத்தினை யுண்டாக்கும் செங்கோலினையும், அருளினையும் விரும்பியோன் பிறந்த நாளின் நன்மையைச் சொல்லியது. (பு.வெ. பாடாண்.) |
நாண்முல்லை | பகைவர் நாணச் சிவந்த ஆபரணத்தினையுடைய மடந்தை கணவன் பிரிந்த இல்லிலே தங்கித் தன்னைப் பரிகரித்தது. (பு.வெ.பொது.) |
நாதசன்மா | விருத்தாசல புராணம் அநவர்த்திக்குக் கூறியவன். |
நாதமுனிகள் | கஜாநனாம்சரான இவர் கலியுகம் (3684) இல் சோபகிருதுவருஷம் ஆனிமாதம் புதன்கிழமை வீரநாராயணபுரத்தில், ஈச்வரமுனிகளுக்குத் திருவவதரித்து நாதரெனப் பிள்ளைத்திருநாமம் பெற்று ஓதியுணர்ந்து அரவிந்தப் பாவையை மணந்து மன்னனார் என்று திருநாமமுடைய வீரநாராயணபுரத்துப் பெருமாளிடத்தில் ஈடுபட்டு யோகநிஷ்டராய் இருந்தனர். அக்காலத்தில் இவருக்கு ஒரு புத்திரர் பிறந்தனர். அக்குமரருக்கு ஈச்வர முனிகள் எனத் தந்தையின் பெயரிட்டு யோகத்திருந்து நீங்கித் திவ்யதேச யாத்திரை செய்து தமதிடந் திரும்பி மன்னனாருக்குக் கைங்கர்யஞ் செய்து வருகையில் திருநகரியிலிருந்துவந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஓதியருளிய “ஆராவமுதே” என்னுந் திருவாய் மொழியைக் கேட்டு மகிழ்ந்து அதைக் கிரகித்து மற்றப் பாசுரங்களைக் கேட்க அவர்களதையறியாமையால் மனம் வருந்தி அவர்களுக்கு அந்தப் பாசுரம் வந்தவழி வினவினர். அவர்கள் திருக்குடந்தையிற் பெற்றோமென அத்திருப்பதிக் கெழுந்தருளி அங்கிருந்த பெரியவர்களைக் கேட்டனர். அக்குடந்தை நாட்டவரும் இத்திருப்பதிகமே அறிவோமென அங்கிருந்து திருநகரிக் கெழுந்தருளி வினவினர். அங்கிருந்தாரில் பெரியராகிய பராங்குசதாச ரென்பவர் திருவாய்மொழி யென்று கேட்டதுண்டு ஓதியறியோம் ஆயினும் எங்கள் சாம்பிரதாயமாய் ஆழ்வார் விஷயமாய் அருளிச் செய்யப்பட்ட கண்ணினுண் சிறுத்தாம்பு என்னும் பாசுராதிகளை (12000) முறை ஓதின் ஆழ்வார் பிரத்தியக்ஷமாவாரெனக் கேட்டு அவ்வகை புரிய ஆழ்வார் மதுரகவிகளிடம் யோகத் தெழுந்தருளி என்ன வேண்டு மென்றனர். நாதமுனிகள் திருவாய்மொழி பிரசாதிக்க என்றனர். ஆழ்வார் அவ்வகை அருளிச்செய்து மறைந்தனர். பின்பு நாதமுனிகள் திருவரங்கஞ் சென்று திருஅத்தியயனோற்சவம் நடப்பித்துத் திருக்குடந்தையில் நம்மாழ்வாரைப் பிரதிட்டை செய்வித்து ஆராவமுதாழ்வாரெனப் பெரு மாளுக்குத் திருநாமம் சாற்றி அங்கிருந்து வீரநாராயணபுர மெழுந்தருளிக் கீழையகத்தாழ்வான் மேலையகத்தாழ்வான் முதலியவர்க்குத் திவ்யப்பிரபந்தங் கற்பித்தருளிப் பிரசித்தி செய்தனர். இப்பிரபந்தத்தை இரண்டு தாசிகள் தேவகான. மனுஷ்ய கானத்துடன் கங்கைகொண்ட சோழபுரத் தில் சோழன் சமஸ்தானத்தில் பாடினர். அரசன் மனுஷ்யகானம் பாடினவளுக்கு வேண்டிய பரிசளித்துத் தேவகானம் பாடி னவளைச் சம்மானிக்காது விட்டனன். தேவகானம்பாடிய தாசி ஆத்மார்த்தமாய்ப் பாடிக்கொண்டு வீரநாராயணபுரத்திற்பாட நாதமுனிகள் களிப்படைந்து மாலை முதலிய பிரசாதித்தருளினர். இதையறிந்த சோழன் நாதமுனிகளை வருவித்துத் தேவகானத்தின் பெருமை என்னவென அவர் ஒரு தாளத்தைக் கருங்கற்றூணில் வைத்துக் கானம் பாடச்சொல்ல அத்தூண் உருகிற்று. பின்பு பாடலை நிறுத்தித் தாளத்தை, யெடுக்கச் சொல்லத் தாளம் இறுகிற்று. பின்னும் நாதமுனிகள் ஏககாலத்து 400 தாளங்களைத் தட்டச் சொல்ல அவைகள் இவ்வளவினவென்று நிறைகூறித் தேவகானப் பெருமை அறிவித்தனர். அரசன் மகிழ்ந்து தேவகான தாசிக்கு மரியாதைமுதலியநடத்திநாதமுனிகளைத்துதித்திருந்தான்.இவ்வகைநடத்தியபின்புநாதமுனிகள்,குருகைக்காவலப்பன்,புண்டரீகாக்ஷர்,நம்பிகருணாகரதாசர்,எறுதிருவுடையார்,திருக்கண்ணமங்கையாண்டான், வானமாதேவியாண்டான், உறுப்புட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூர் ஆழ்வான், இவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்திருக்கையில் வங்கிபுரத்தாய்ச்சி தன் பெண்ணாகிய அரவிந்தப்பாவையைப் பார்க்க அழைத்தனள். நாதமுனிகள் அரவிந்தப் பாவையைப் புண்டரீகாக்ஷருடன் வங்கிபுரத்தாய்ச்சியிடம் அனுப்பினர். ஆய்ச்சி புண்டரீகாக்ஷருக்கு முன்னாள் நீரிலிட்ட சேடித்த அன்னத்தை இட்டனள், புண்டரீகாக்ஷர் அதைக் களிப்புடன் உண்டு நாதமுனிகள் வினாவிய காலையில் நடந்தவைகூற நாதமுனிகள் களித்து நம்மை உய்யக்கொண்டீர் என்றனர். இவற்றையறிந்த வங்கிபுரத்தாய்ச்சி புண்டரீகாக்ஷரிடம் வந்து க்ஷமிக்கக் கேட்கக் களித்திருக்கையில் நாதமுனிகள் தம் குமாரரிடத்தில் ஒரு குமரன் உதிப்பன் அவனுக்கு யமுனைத்துறைவன் எனப் பெயரிடுக என உய்யக்கொண்டாருக்குக் கட்டளையிட்டு யோகத்தெழுந்தருளியிருந்தனர். சிலநாள் கழித்து யோகநீங்கி யெழுந்து ஈசுரமுனிகளின் குமாருக்கு மணக்கால்நம்பி, யமுனைத்துறைவன் எனப் பெயரிட்டதைக் கண்டு களித்து இருந்தனர். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் நாதமுனிகள் தீர்த்தமாடச் சென்றிருக்கையில் இவரது குமரிகள் வந்து ஜயரே இரண்டு வில்லிகள் ஒரு பெண்பிள்ளை, ஒரு குரங்குடன் வந்து உம்மை வினவினர். நாங்கள் அவர் நீராடி வருவரென்றோம், அவர்கள் விரைந்துவரச் சொல்லுகவெனக் கூறித் தென்திசை சென்றனர் எனக் கேட்டு, அவ்வில்லிகள் சென்ற திசைநோக்கிச் சென்று கங்கைகொண்டசோழபுரத்தை அடைந்தனர்.அங்கிருந்தாரை இரண்டுவில்லிகள்ஒருபெண்ணரசியுடனும்குரங்குடனும் சொல் காதம் இன்றதைக் கண்டீனோவெனக் கேட்டு அப்புறஞ் செல்லுகையிற் பெருமாள் அழகியசிங்கராய்ச் சேவைசாதித்தருளினர். நாதமுனிகள் சக்கரவர்த்தி திருமகனை வலிய வந்தும் காணப்பெற்றிலோமென்று மூர்ச்சித்திருக்கையில் பெருமாள் சக்கிரவர்த்தித் திருமகனாய்ச் சேவைசாதித்தருளக் கண்டு களித்துக் குருகைக்காவலப்பன் கோவிலில் திருநாட்டுக் கெழுந்தருளினர். இவர் (340) வருஷம் எழுந்தருளியிருந் தனர். இவர் அருளிய பிரபந்தம் நியாயதத்வம், யோகரகஸ்யம். |
நாதம் | 1, சிவரூபமாய்ச் சூக்ஷ்மாதி சூஷ்மமாய் யோகிகளால் உணரப்படும் பொருள். 2. என்பது, தவனி. இது இரண்டு கரத்திலுள்ள கட்டைவிரல்களை இரண்டு காதின் துவாரத்தில் மூடிக்கொண்டால் கேட்கும் ஓசையே நாதம். (சி ~ சா.) 3. என்பது அதிகிராந்த விந்துக பரா சத்தியினிலை. இந்த நாதம் பரநாதம், அபறநாதம், பராற்பரநாதம் என மூவகைப்படும். அவற்றுள் பரநாதம் : உன்மனாகலாதி சாந்திய தீத கலாந்தகாரிய சிவகலா சத்தியையும், சமனாதி அபரவிந்து நிவர்த்தியந்த காரியசத்தி கலாசத்தியையும், சமாகாராத்மகமாயுள்ள காரணசாந்திய தீத கலா ரூபமகாமாயை. இது பரசிவதத்வங்களாகிய வியாபினி, வியோமரூபை, அருந்தை, அநாதை, அநாசிருதை முதலிய ஐந்து கலைகளை வியாபித்திருக்கும், அபரநாதம் : என்பது இந்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்தவகை, முதலிய சத்திகளின் கலைகளாய் அபரசிவ தத்வ மெனப்படும். பராற்பரநாதம் : உன்மனை எனப்படும், இந்த உன்மனை சமனை இவ்விரண்டும் சிவசத்தி கலைகளாம். |
நாதர் | நாதமுனிகளுக்குப் பிள்ளைத்திரு நாமம். |
நாதவன் | குண்டலபுரத்தின் முதல் அரசன், இவனால் தோன்றியகுலம் நாதவகுலம். |
நாதிகன் | பாரதவீரரில் ஒருவன். காலபுத்திரர் அம்சம். |
நாநீண்ட பறவை | இது மீன்குத்தியினத்தது. இதன் வால் சிறகுகள் குட்டை, இதன் இறக்கையிலும் முதுகிலும் கறுப்பும் வெண்மையுமான கோடுகள் அடுக்காயிருக்கின் றன. இதனலகு சிறியதாயினும் அதிலுள்ள நாக்கு அலகினும் நீண்டது. இப்பறவை அந்நாவை நீட்டித் தூரத்திலுள்ள பூச்சி புழுக்களை அக்நாவிலுள்ள பசையால் ஒட்டச்செய்து உண்ணும், |
நாநேசுவரர் | குமுதன் என்ற நாகன் பொருட்டுத் தோன்றிக் குசனால் ஆராதிக்கப்பட்டுச் சரயு தீர்த்தத்தில் எழுந்தருளிய சிவப்பிரதிட்டை, |
நானகதாசர் | இவர் பஞ்சாபுதேசத்தவர்; அரிபக்தி மிகுந்தவராய்த் துருக்கதேசமாதலால் வேதியர்களையும் தேவாலயத்தையும் தம்மாசனிடஞ் சொல்லி இடித்து விடுவறென்று தாமே கோயிலை இடித்துப் பின்னர் ஒரு மசீதுகட்டி அதனை யுமிடித்துச் செல்வமுழுது மழித்துத் தனித்திருக்கையில் துருக்கர் தம்மவன் ஒருவன் வேஷதாரியாய்த் திரிகின்றானென்ன அரசன் கேட்டு ஒரு தூதனையனுப்பி வருக எனத் தாசர் அரசனுக்கு நான் நாராயணனை வணங்குவோனுன்னிடம் வரவேண்டியதில்லையென்று ஒருகவி எழுதியனுப்ப அரசன் கண் இளமகிழ்ந்து ஆயினும் பின்னுமறிவோமென்று கோபித்தவன்போல் சில வீரரையனுப்பி அவரை அழைத்து வரக் கட்டளையிட வீரர் தாசரிடஞ்சென்று அழைக்கத் தாசர் நாராயணஸ்மரணை செய்ய அயுதமென்னு மெண்கொண்ட விஷ்ணுபடர் அவர்களைப் புறங்கொடுக்கச் செய்தனர். இதனையறிந்த அரசன் தாசரை யடைந்து, பணிந்து புகழ்ந்தனன். இவர் மக்கத்திற்குச் சீடருடன் செல்லுகையில் வழியில் ஆற்றில் வெள்ளம்வர அலக்நிரஞ்சன் என்று தாண்டிச்சென்றனர். சீடர் திகைக்கத் தாசர் நம்மைநினைத்து ஆற்றைக் கடக்க என அவ்வாறு செய்து கடந்தனர். பின் மக்கத்தை அடைந்து அங்கிருந்தோர் இங்குப் புதைந்திருக்கும் இந்துக்கள் விக்ரகத்தை எழுப்புமெனக் கேட்கப் பூமியில் மூடியிருந்த திருமால் விக்ரகத்தை எழுப்பித் தரிசிப்பித்து ஒரு ஆற்றைக் கடக்கமுடியாது திகைத்த அரசனுக்குக் கடுதாசியால் கலஞ்சமைத்து அதில் அவன் சேனையுடன் ஆற்றைக் கடப்பித் துக் கோரக்கர் சொற்படி அரித்துவாரத் திருந்த நான்குலக்ஷம் ஜனங்களுக்கு உணவளித்து அரிபஜனைசெய்து களித்தவர். |
நான்காம் நாள் | படைவகுத்து வீமன் பகைவரைக் கொல்லுகையில் துரியோ தனன் வீமனுடன் எதிர்த்து மூர்ச்சித்தனன். இதனைக்கண்ட அவன் தம்பியரா கிய சுதக்கணன், பிங்கலசன், விம்வாகு, கலாசந்தன், சேநாவிருந்து, முதலியவர் எதிர்த்து மாய்ந்தனர். இவ்வாறு வீமன் செய்வதைக்கண்ட பகதத்தன் வீமனையெதிர்க்க அதைக் கண்ட கடோற்கசன் வந்து எதிர்த்து முதுகிட அடித்தான். இவ்வாறு யுத்தஞ் செய்கையில் சூரியன் அத்தமித்தனன். |
நான்மணிக்கடிகை | இது சங்கமருவிய பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று. நீதி நூல். ஒவ்வொரு செய்யுளும் தனித்தனி நான்கு நீதிகளைக் கற்பிக்கும். இதனை இயற்றியவர் விளம்பிநாகனார். கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக்களையுடையது. |
நான்மாடக்கூடல் | தென்மதுரைக்கு ஒரு பெயர். இம்மதுரைமா நகரத்தின்மீது வருணன் கோபித்து மேகங்களை ஏவி மழை பொழிவித்த காலத்துப் பாண்டியன் சோமசுந்தர மூர்த்தியை மழையைத் தடுக்க வேண்டினன். அதனால் சிவமூர்த்தி தம்மிடமிருந்த மேகங்களை நான்கு மூலையிலும் ஏவி நீரைப்பருகி மழைதடுக்க ஏவினர். அதனால் இப்பெயருண்டாயிற்று. இங்ஙனமன்றி வேறுங்கூறுவர். திரு ஆலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திரு நடுவூர் இவைகளுக்கு நடுவிருத்தலின் இப்பெயர் பெற்றதென்பர் நச்சினார்க்கினியர். |
நாபகை | ஒரு நதி, |
நாபாகன் | 1. நரபாகன் எனவும் பெயர். திஷ்டன் குமரன். இவன் சுப்பிரபை யென்னும் வைசியப் பெண்ணை மணந்ததால் வைசியனானான். இவன் குமரன் பலந்தன். இவன் இராஜருஷியாயினான். 2. சுகோதரன் குமரன். |
நாபாஜிபக்தர் | காசி நகரத்தில் அக்ரஜியென்னும் பக்தர் அரிபக்தி மிகுந்தவராய் வருங்காலையில் க்ஷாமம் வந்தது, அந்நாட்களில் ஒருநாள் அவ்வூரிலிருந்த ஒருத்தி தன் பிள்ளையுடன் உணவில்லாது வருந்தி ஆற்றினருகடைந்து பிள்ளையைக் கரையில் விட்டு ஆற்றில் வீழ்ந்து இறந்தனள். குழந்தை தாயைக் காணாமல் ஆற்றருகு தனித்து அழுது கொண்டிருக்கையில் அக்ரஜிபக்தர் ஆற்றிற்கு ஸ்நானத்திற்குச் சென்று அப்பிள்ளை தனித்தழுதலைக்கண்டு வரலாறறிந்து பயப்பட வேண்டாமென்னும் பொருள் பட நாபாஜி என்று கூறி உடனழைத்துவந்து மடத்தில்விட்டு நாபாஜி யென அழைத்துவந்தனர். பக்தர் இளைமைப் பருவமுதல் தாசரது ஏவல் முதலிய செய்தலாலும் அரிகீர்த்தனை கேட்டலாலும் மெய்யறிவடைந்திருந்தனர். இதனை அறியாத அக்ரஜி ஒருநாள் நாபாஜியை நோக்கி நான் பெருமாளைப் பூசிக்கச் செல்கின்றேன் உள்ளே ஒருவரையும் விடாது புறத்தே காத்துக்கொண்டிருக்க எனக் கூறித் தியானத்திருக்கையில் அன்றைக்குப் பெருமாள் தரிசனங்கொடாதது கண்டு வருந்துகையில் புறத்திருந்த நாபாஜி இன்று பெருமாள் கடலின் வணிகன் ஒருவனது கப்பல் மூழ்க அதனை அவன் அக்ரஜிக்கு இக்கப்பலிலுள்ள பொருள்களில் ஐந்திலொன்று தருவதாகப் பிரார்த்திக்கக் கேட்டு அக்கப்பலைக் காக்கச் சென்றிருக்கிறார் ஆதலால் தரிசனந்தந்திலர், அத்தொழில் முடிந்தமையால் இனித்தியானிக்கின் வருவர் என, அவ்வாறு தியானிக்கப் பெருமாள் ஈரவஸ்திரத்துடன் தரிசனந் தரச் செய்தி கேட்டுணர்ந்து நாபாஜியைப் புகழ்ந்து உமக்கு இத்தகைய ஞான மெவ்வகை வந்ததெனத் தேவரீரது பெருமையெனக் கூறிப் பெருமாள் அருள் பெற்று இருந்தவர், |
நாபாநேதிக்ஷிதன் | மநுவின் புத்ரன். இவன் தமது பிதுரார்ச்சித பொருளைப் பாகித்துக் கொள்வதினின்று நீக்கப்பட்டிருந்தவன். |
நாபி | 1. ஆக்னீத்ரசுதன். குமரி சுதேவி. தேவி மேரு. (பாகவதம்,) 2. இரண்யரோமன் அல்லது இரண்ய ரேதஸுக்குக் குமரன். |
நாபிக்கிழங்கு | இதுவே விஷநாபி. இது விஷமுள்ள மருந்து. இவ்வகையில் வெண்ணாவி, கருநாவி, சூத்திரநாவி முதலிய உண்டு. இவற்றைச் சுத்தி செய்யாது மருந்துகளுடன் சேர்க்கின் மரணத்தை யொத்த துன்பம் விளைக்கும், |
நாபிமகாராசா | இவனாண்டது அயோத் தியாநகரம், இக்ஷவாகுவம்சம். தேவி மரு தேவியம்மாள். குமரர் இருஷபதீர்த்தங்கரர். இவரைச் சைநர் தம் சமயத்தினர் என்பர். (மா ~ புராணம்.) |
நாமகரணம் | பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12 ம் நாளும், க்ஷத்திரியருக்கு 16 ம் நாளும், வைசியருக்கு 21 ம் நாளும், சூத்திரருக்கு 31 ம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்தநாட் கழிந்தால் சுபதினங்களிலே ஸ்திரிராசிகளுதயமாக லக்கினம் 5 ம் இடம், 8 ம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்யவேண்டும். |
நாமகள் | கடைச்சங்கத்திலிருந்த சரஸ் வதியினம்சம், திருவள்ளுவர்க்கு நாடாமு தனான்மறை நான் முகனாவிற், பாடாவிடைப்பாரதம் பகர்ந்தேன், கூடாரை, என்ராவன் மீனுயர்த்த வேந்திலை வேல்வேந்தனே, வள்ளுவன் வாயதென்வாக்கு” எனப்புகழ்ச்சி கூறியவள், |
நாமதேவர் | ஒரு பாகவதர். இவர் ஒரு தொழிலுமின்றி இருந்தபோது தாய் இவரை நோக்கி மகனே நமக்குப் பொருளுண்டாகும் வகை ஏதேனும் வர்த்தகாதிகள் செய்யாதொழியினில்லறம் எவ்வாறு நடக்குமெனக் கூறக்கேட்டு யான் பணமிலாது யாது செய்வதெனக் கேட்ட தாய் இவரை நோக்கி இவ்வூரில் எவர்க்கும் உபகரியாத லோபிதாதா என்பவன் அதிக பொருள் வைத்திருக்கின்றான் அவனிடைச் சென்று கடன்பெற்று வர்த்தகஞ் செய்வோமென்று தானே சென்று எனது மகன் ஒரு வேலையுமின்றிச் சும்மாவிருக்கின்றான் அவனுக்கு வர்த்தகஞ் செய்யப் பொருளுமில்லை ஆதலால் நீ எனக்கு ஆயிரம் வராகன் தரில் ஆறுமாத அளவில் கொடுத்து விடுகிறேனெனக் கேட்க விட்டலன் அவனது இற்புகுந்துடன்படுத்தத் தரப் பொருள் பெற்று வந்து மகனிடங் கூறினள். மகனுமதற் குடன் பட்டு நிதி பெற்று வேதியருடன் எந்த வர்த்தகஞ் செயினன்றாமென ஆயத்தாம் எண்ணியபடி அவரும் சமாராதனை செய்வது குற்றமில்லாத வர்த்தகமெனக் கூறக்கேட் இக்கங்கையினருகு ஒரு மடங்கட்டி அதிலன்ன தானஞ் செய்து வருகையில் அனை வருங்கேட்டு நாமதேவரிடஞ் செல்லின் அன்னங் கிடைக்குமென்று சென்று புசித்துவந்தனர். இச்செய்தி நாடெங்கும் பரவப் பண்டரிபுரத்து வேதியரும் நாமதேவரிடம் செல்லின் உண்டு தக்ஷணையும் பெற்று மீள்வோமென்று செல்லச் செல்வோரைக், கடன் கொடுத்த சௌகார் எங்குச் செல்கிறீர்களெனக் கேட்க அவர்களுண்மை கூறக்கேட்டுத் தானுஞ் செல்ல உடன்பட்டுச் சென்று அவரது ஈகையைக் கண்டு மனம் புழுங்கிச் செல்வர்க்குங் கொடுக்கவராத ஈகையை நோக்கி என் பணம் போயிற்று இனி இவனிடம் தரப் பணமேது என்று எங்கி வருந்தியிருப்பவனை நாமதேவர்கண்டு அடிவணங்கிச் சமாராதனைக்கு வந்தவர்களை நோக்கி, அடிகளே இதோ இருக்கிற பிரபுவே சமாராதனைக்குரியவர் அவரிடம் நீர் பெற்று அன்னமுண்க எனக் கூற அவ்வாறே சமாராதனைக்கு வந்தோரிவனை நீர்வார்க்கக் கேட்கக்கண்ட சௌகார், நான் தாய் தந்தையரின் சிரார்த்தமும் பொருள் செலவாமெனச் செய்தறியேன், கோவில் போயறியேன்,குளமெடுத்தறியேன்,தருமகாரி யங்கள் செய்தறியேன், இப்போதிவ்விடம் வந்திருக்கும் பிராமணரால் இந்த நாமதேவனால் நிந்திக்கப்படலானேனென்று விழலுக்கு இறைத்த நீர்போல் என் பணம் போயிற்றென்று “நாங்கள் வெகு தூரத்திலிருந்து அன்ன தானத்தை நோக்கிவந்து அதிக பசியுடனிருக்கின்றோமென்று தம்மை நிந்தித்துக்கூறும் வேதியரை நோக்கி இதோ நிந்தனைக்கும் உங்கள் பசிக்குமஞ்சி நீர் வார்க்கிறேன், இந்த அன்ன தானப் பலன் நாமதேவனதாக என நீர்வார்த்தனன். இதனைக்கண்ட வேதியர் சிரித்தனர். சமாராதனைக்கு வந்தோர் நாமதேவர் உபசரிக்கக் கண்டு தக்ஷணை வாங்கிச் சென்றனர். பின் சௌகார் நாமதேவரை நோக்கி நாமதேவர் என் கடனை நீயே தரவேண்டு மெனச் சண்டவாதம் புரிந்து இல்லையென்பையேல் உன்னெதிரில் உயிர்விடுவேனென்றனன். இவனது முரட்டுச் செய்கைகண்ட நாமதேவர் பெருமாளைத் துதிக்க அவர் ஒரு வற்சவுருவுடன் தோன்றி எதிரிலிருக்கும் தீர்த்தத்தில் அவனை மூழ்கச்செய்யின் கடன் தீருமென்று கூறி மறைந்தனர். நாமதேவரும் சௌகாரை நோக்கி நீ இந்தத் தீர்த்தத்தில் மூழ்கின் உன் கடனைத் தருகி றேனெனச் சௌகார் ஓகோ எனை நீரில் தள்ளி உயிர்போக்க எண்ணுகின்றனை யெனக் கூறி அவ்வாறுடன்படேனென்று கடைமுறை துணிந்து சலத்திற்சென்று மூழ்க அவ்விடமிருந்த பிலவழிச்சென்று பாதாளலோகத்தை அடைந்தான். அங்கு துருக்கர் உருக்கொண்டு இருக்கும் சாதுக்களுடன் பெருமாள் ஓர் துருக்க அரசரைப் போல் கண்ணைக் கவரத்தக்க சோதிமயமான இரத்தின சிங்காசனத்தில் வீற்றிருக்கக்கண்டு இதென்னென ஆச்சரியமடைந்திருக்கையில் ஆங்கு நின்றவர் எம்பெருமானும்மை உண்ணவழைக்கின்றான், மாம்ச முதலியவும் அன்னமும் பலவாகப் புசிக்க விருக்கின்றன எனக் கூறக்கேட்ட சௌகார் மனனடுங்கி ஆங்குப் பணமிழந்தோம் ஈங்குச் சாதியுமிழக்கக் காலம் வந்ததென் வெண்ணி இத்தருணத்தில் நம்மைக் காப்பவன் நாமதேவனேயெனச் சிந்திக்கையில் நாமதேவர் தோன்றி அஞ்சேல் சிங்காசனத்திலுள்ளான் துளவுபூண்டோன், மற்றவர் சாதுக்கள் அவர்களுடன் நீ உண்கவென நீர் மாயஜாலம் செய்ய வல்லவர் என்று அறியேன் உம்மிடம் கடன் சீட்டு எழுதியும் வாங்கிலன் நீர் இவ்வேளை என்னிடம் விடுவிரேல் இனி என்றும் கடன் கேளேன் எனக்கூறத் தேவர் இவ்விடம் உண்டுவருக என நான் உண்ண எனக்குணவாதிகளையும் சமைக்க எரிமுட்டையும் வாங்கித் தருக என்றனர். அவை தந்தபின்னிந்த யவனர்களுக்குப் புறத்து என்னை விடுக என்ன நாமதேவர் உன்விழியை மூடிக்கொள் என அவன் மூடிக்கொண்ட மாத்திரையில் பண்டரிபுரத்துச் சந்திரபாகைத் தீர்த்தத்தில் எழுந்து அவ்விடங் கொடுத்த எரிமுட்டையை நதியில் உதறி வெளிவந்து இதென்ன நான் கங்கையில் மூழ்கினேன் சந்திரபாகையி லெழுந்தேன் நாமதேவர் கொடுத்த சாமகிரியைகளெல்லா நாமம்மிருக்கின்றன என்று வீடடைய மனைவி பொருள் பெற்றீரோவென நாமதேவர் மனிதரல்லர் தேவர் எனக் கூறுகையில் மனைவி வஸ்திரத்திலிருந்த முடியிலொட்டி யிருந்த எரிமுட்டையை நோக்க அது பொன்னாயிருந்தது கண்டு என் விதியினளவாகப் பொருள் கிடைத்தது நான் நாமதேவரை வீணே நிந்தித்தேன், என அவரைத் துதித்திருந்தனன். பின் நாமதேவர் என்பொருட்டு மிலேச்ச வேடங்கொண்டு வந்தனையெனத் திருமாலை வணங்கி அவருடன் பண்டரிபுர மடைந்தார். |
நாமம் | (63) நரககதி, திரியக்கதி, மனுஷ்யகதி, தேவகதி ஆக 4. நாகத்த்யாநுபூர்வி, திரியக்கத்யாநுபூர்வி, மனுஷ்யகத்யாது பூர்வி, தேவகத்யா நுபூர்வி ஆக 4. ஏகேந்திரியம், தவிவிந்திரியம், திரீந்திரியம், சதுரிந்திரியம், பஞ்சேந்திரியம் ஆக 5. ஔதாரிகசரீரம், வைகரீகசரீரம், ஆகாரகசரீரம், தைசசசரீரம், கார்மணசரீரம், ஆக 5. ஔதாரிக பந்தனம், வைகரீக பந்தனம், ஆகாரகபந்தனம், தைசசபந்தனம், கார்மணபந்தனம் ஆக 5. ஔதாரிகஸங்காதம், வைகாரிகஸங்காதம், ஆகாரகஸங்காதம், தைசசஸங்காதம், கார்மணசங்காதம் ஆக 5. ஔதாரிகாங் கோபாங்கம், வைகாரிகாங் கோபாங்கம், ஆகாரகாங் கோபாங்கம், ஆக 3. வச்சிரவிருஷப நாசாசசம்ஹநநம், வச்சிர நாசாசசம்ஹநாம், நாராசசம்ஹாநம், அர்த்த நாராசசம்ஹநாம், கீலிதஸம்ஹா நம், அசம்பிராப்த ஸரபாடிகாசம்நநம். ஆக. 6. சமசதுரச்ச சமஸ்தானம், நியக்ரோத சமஸ்தானம், சுவாதி சமஸ்தானம், வாமன சமஸ்தானம், குப்ச சமஸ்தானம், ஹீண்ட சமஸ்தானம் ஆக 9. சினிக்தஸ் பரிசம், ரூக்ஷஸ்பரிசம், சீதஸ்பரிசம், உஷ்ணஸ்பரிசம், உருபரிசம், லகுபரிசம், மிரு துபரிசம், கர்கசபரிசம் ஆக 8. சிவவேதம், பீதம், அரிதம், அருணம், கிருஷ்ணம் ஆக வருணம் 5. திக்தம், கடுகம், கஷாயம், ஆம்லம், மதுரம் ஆக ரஸம் 5. துர்கந்தம், சுகந்தம், ஆக கந்தம் 2. 1. அகுர்லகு, 2 உபகாதம், 3 பாகதம, 4. ஆபதம், 5 உத்யோதம், 6 உச்வாசநிச்வாசம், 7 பிரச்ச தவிஹாயோகதி, 8. அப்: பச்சதவிஹாயோகதி, 9 ஸ்திரம், 10 அலதிரம், 11 சுபம், 12 அசுபம், 13 பாதாம், 14 சூஷ்மம், 15 திரம், 16 ஸ்தாவரம், 17 பிரத்யேகம், 18 ஸாதாரணம், 18 பரிகாலார்மகன 19 பியாப்தி 20 அபர்யாப்தி, 21 சுபகம், 22. துர்பகம், 23 சுசுரம், 24 துச்சுரம், 25 ஆதேயம், 26. அநாதேயம், 27 அச்ச கீர்த்தி, 28. அயச்சகீர்த்தி, 29 நிர்மாணம், 30 தீர்த்த காதவம் ஆக 31. |
நாமலார்மகன் இளங்கண்ணன் | இவர் கடைச்சங்க மருவிய புலவருள் ஒருவர். இவர் பெயர் இளங்கண்ணராக இருக்கலாம். இவரது தந்தையார் நாமலார் என்பவர் போலும், (குறு ~ உடு.) |
நாமுனூர் | மேகத்திற்குப் புணைகொடுப்போர் யாரென்று பாண்டியன் கேட்ட பொழுது வந்த மற்றையோரைத் தள்ளி விட்டு ‘நாம்முன்’ என்று சொல்லிக்கோண்டு புணைகொடுத்தற்கு வந்த உபகாரியினுடைய ஊர். இது களவேள்வி நாட்டிலுள்ள ஏழூர்களுள் ஒன்று. (திருவிளை யாடல்.) |
நாயகன் | 1. பத்துச் சிற்றூர்களுக்கு அதிபனாக நியமிக்கப்பட்டவன். 2. இருபது யானைகளுக்கும், (20) குதிரைகளுக்கும் தலைவன். (சுக். நீ.) |
நாயடி | இவர்கள் இந்துக்களில் மிகத் தாழ்ந்த ஜாதியார். இவர்கள் நாயடித்துத் தின்போராதலால் இவர்கள் இப்பெயர் பெற்றனர். இவர்கள் இந்துக்களிருக்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஏதாவது கொடுப்பதனால் அதை வெகு தூரத்தில் கீழேவைத்து விட்டால் அவர்கள் அதை எடுத்துக் கொள்வர். தர்ஸ்டன். |
நாயன்மார் அறுபத்துமூவர் முதலியோர் | (1) தில்லைவாழந்தணர், (2) திருநீலகண்ட குயவகாயனார், (3) இயற்பகையார், (4) இளையான்குடிமாறநாயனார், (5) மெய்ப் பொருணாயனார், (6) விறன்மிண்ட நாயனார், (7) அமர்நீதிநாயனார், (8) எறிபத்த நாயனார், (9) ஏனாதிநாத நாயனார், (10) கண்ணப்பநாயனார், (11) குங்கிலியக்கலய நாயனார், (12) மானக்கஞ்சாற நாயனார், (13) அரிவாட்டாய நாயனார், (14) ஆனாதி நாயனார், (15) மூர்த்திநாயனார், (16) முருக நாயனார், (17) உருத்திரபசுபதி நாயனார், (18) திருநாளைப்போவார், (19) திருக்குறிப்புத் தொண்டர், (20) தண்டீச நாயனார், (21) திருநாவுக்கரசு சுவாமிகள், (22) குலச்சிறை நாயனார், (23) பெரு மிழலைக்குறும்ப நாயனார், (24) காரைக்கா லம்மையார், (25) அப்பூதியடிகள், (26) திருலோக்கர், (27) நமிநந்தியடிகள், (28) திருஞானசம்பந்த சுவாமிகள், (29) ஏயர்கோன் கலிக்காமர், (30) திருமூலர், (31) தண்டியடிகணாயனார், (32) மூர்க்கநாயனார், (33) சோமாசிமாறர், (34) சாக்கிய நாயனார், (35) சிறப்புலி நாயனார், (36) சிறுத்தொண்டர், (37) கழறிற்றறிவார், (38) கணநாதநாயனார், (39) கூற்றுவ நாயனார், (40) பொய்யடிமையில்லாத புலவர், (41) புகழ்ச்சோழ நாயனார், (42) நரசிங்க முனையரையர், (43) அதிபத்த நாயனார், (44) கலிக்கம்பநாயனார், (45) கலிநீதி நாயனார், (46) சத்திநாயனார், (47) ஐயடிகள் நாயனார், (48) கணம் புல்லநாயனார், (49) காரிநாயனார், (50) நின்றசீர் நெடுமாற நாயனார், (51) வாயிலார் நாயனார், (52) முனையடுவார் நாயனார், (53) கழற்சிங்க நாயனார், (54) இடங்கழி நாயனார், (55) செருத்துணை நாயனார், (56) புகழ்த்துணை நாயனார், (57) கோட்புலி நாயனார், (58) பத்தராய்ப்பணிவார், (59) சித்தத்தைச் சிவன்பால் வைத்தார், (60) திருவாரூர்ப் பிறந்தார், (61) முப்போதுந் திருமேனி தீண்டுவார், (62) முழுநீறு பூசிய முனிவர், (63) அப்பாலுமடி சார்ந்தார், (64) பூசல் காயனார், (65) மங்கையர்க்கரசியார், (66) நேசநாயனார், (67) கோச்செங்கட்சோழ நாயனார், (68) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், (69) சடைய நாயனார், (70) இசைஞானியார், |
நாயர் | மலையாளத்திலுள்ள சாதியார். இவர்கள் ஆரியர்களுக்கும் யக்ஷகாந்தருவப் பெண்களுக்கும், பிறந்தவர்கள் என்கிறார்கள்: சுத்த நாயர்கள் போர்வீரர்களாயிருந் தனர். தற்காலம் உள்ள பலவகைச் சாதி யார் இங்குக்குடி புகுந்து சிலநாள்கள் சென்றபின் நாயர்கள் என்பர். தற்கால வர்த்தகர் சித்திரவேலையர், எண்ணெய் விற்போர், பல்லக்குச் சுமப்போர், அம்பட்டர் முதலியவரும் தங்களை நாயர் என்பர். (தர்ஸ்டன்.) |
நாயுடு | இது தெலுங்கு பேசும், பலிஜர், போயர், கவரைகள், கொல்லா, கலிங்கர், காபு, வெலமர். இவர்களுக்குப் பட்டம். |
நாய் | 1. இது நீண்டவுடலும் உறுதியான தேகமும் கால்களும் உடையது. இதன் மார்பு நீண்டு அகன்றிருக்கும் ஆதலால் அதிக ஆகாயத்தை சுவாசித்து களைப்படைவதில்லை. சில நாய்கள் ரோமம் குட்டை யாயிருத்தலால் தண்ணீரில் நீந்தும். இதன் கண்ணின்மணி, வெளிச்சம் அதிகமாக இருக்கையில் சிறுத்தும் வெளிச்சம் குறையும்போது பெருத்தும் இருக்கும், தலை நீண்டும் கீழ்வாய் உறுதியாயுமிருக்கும் இதற்கு மேலும் கீழுமாக (42) பற்கள் உண்டு, நாக்கு மிருதுவாயும் ஈரமாயும் இருக்கும். இதற்கு முன் கால்களில் (5) விரல்களும் பின்கால்களில் (4) விரல்களும் உண்டு, குளிர்தேசத்திலுள்ள நாய்களுக்கு மயிர் நீண்டும், மற்றவற்றிற்குக் குட்டையாயுமிருக்கும். வால் மேனோக்கி வளைந்திருக்கும். இது சந்தோஷத்தில் வாலை ஆட்டும். பயத்தில் வாலைப் பின்கால்களுக்கிடையில் வைக்கும். ஓடும்போது வால் விறைத்து நிற்கும். வேட்டைநாய் இதற்கு தேகமும் காலும் மெலிந்தும், தலையும் வாயும் நீண்டுமிருக்கும். இதற்கு மோப்பம் விடிக்கும் சக்தி அதிகம் உண்டு. பாளையக்காரநாய், நரிவேட்டைநாய், இரத்தமோப் நாய், பறவைவேட்டைநாய், காவல்காக்கும் நாய், புல்டாக், மாஸ்டிப்நாய், பட்டி நாய், மலைநாய் : இது குளிர்தேசங்களில் பனியிலழுந்துவோரைக் காப்பது, நியு பவுண்ட்லண் நாய் இது கப்பலினின்று கடலில் தத்தளிக்கும் பிராணிகளைக் காப்பது. நீர் வேட்டைநாய் இது நீரிலுள்ள பிராணிகளைப் பிடிப்பது. முயல்வேட்டை நாய் இது குள்ளமானது முயல் சென்ற வழியை மோப்பத்தாலறிந்து பிடிக்கும். கௌதாரி பிடிக்கும் நாய் இது கௌதாரியுள்ள இடத்தை மோப்பத்தாலறிந்து வேட்டைக்காரனுக்கு அறிவிக்கும். வீர நாய் மூக்குச் சிறிதாயும், நெற்றி அகன்றுமிருப்பது. இது எருதோடும் சண்டைசெய்யும் எலிகொல்லி : இது அதிககுள்ளமானது இது ஸ்காட்லண்டிலு மிங்கிலாண்டிலுமுண்டு. இன்னும்பலவகை நாய்கள் உண்டு, 2. இவ்வுருவங்கொண்டு யமன் சுவர்க்காரோகணஞ் சென்ற தருமராசனைப் பின் தொடர்ந்து சென்று தன்னைத் தெரிவித்தனன். (பார ~ சுவர்க்கம்.) 3. இது தருமர் சுவர்க்கத்திற்கு சென்றபோது தம்பியர் திரௌபதி முதலியோர் நீங்கியகாலத்தும் நீங்காது சென்ற யமனுரு, 4. வயிரவர்க்கு வாகனமானது. 5. விச்வாமித்ரன் ஷாமகாலத்து இதன் ஊனைத் தேவர்க் கவிசாகத் தந்தான். 6. நெடுங்காலத்திற்கு முன் மனிதர்களால் தமக்கெனக் காட்டிலிருந்து கொண்டு வந்து வீட்டில் பழக்கிய இனத்தில் ஒன்று, இவ்வினம் தேசகால வேறுபாட்டால் பல வுருவமும் குணமும் கொண்டவைகளாக இருக்கின்றன. இவை தன்னை வளர்த்த எசமானனிடம் விஸ்வாஸ முள்ளவை. மோப்பம் பிடிப்பதில் வல்லவை. 7. இது பல நாடுகளில் பல உருவமும் தன்மையுங்கொண்ட பிராணி. வீடுகளில் காவற்குப் பயனுறுத்தும் பிராணி. இச்சாதியில் பலவகை உண்டு. அவற்றினை உருவப்படத்தில் காட்டினாலன்றி அவை விளங்கா. அவற்றிற்கு மேனாட்டார் வழங்கிவரும் பெயர் மாத்திரம் கூறுவன்: (1) கூகர்ஸ்பானியல், (2) ஸ்கைடெரியர், (3) பிரஸ்ஸல்ஸ்கிரிப்பன், (4) பீல்ட்ஸ்பானியல், (5) புல்டெரியர், (6) எஸ்கிமோ நாய், (7) பக், (8) ஸ்மூத்பாக்டெரியர், (9) கிரேட்டேன், (10) பிளாகரிட்ரைவர், (11) பீகில்ஹவுண்ட், (12) பாஸ்ட்ஹவுண்ட், (13) கால்வி, (14) ஓடர்ஹவுண்ட், (15) மாஸ்டிப், (16) புல்டாக், (17) கிங் சார்லஸ்பானியல், (18) ஸ்காட்ச்டெரியர், (19) விப்பெட், (20) நியூபவுண்லண்ட் நாய், (21) ஸ்காட்ச்டீர்ஹவுண்ட், (22) ஸெயிண்ட்பெர்னார்ட், (23) ஐரிஷ்டெரி யர், (24) பிரெஞ்ச்புல்டாக, (25) டாச்சண்ட், (26) சௌ, (27) பெகினீஸ், (28) யார்க்ஷையர்டெரியர், (29) களம் பர்ஸபானியல், (30) டால்மரடியன், (31) பாயின்டர், (32) பாக்ஸ்ஹ வுண்ட், (33) ஸெட்டர், (34) கிரேஹவுண்ட், (35)ப்ளட்ஹவுண்ட், (36) பாஸ்டன் டெரியர், (37) பொமரானியன், (38) ஸ்கிப்பெர்க், (39) இங்கிலிஷ்ஷிப்டாக், (40) ஏயிரிடேல் டெரியர், (41) ரஷ்யன் போர்ஸோயி, (42) பிரெஞ்ச்கார்டெட்பூடில், 8.காட்டு நாய் : இது நாயை ஒத்த பிராணி. இது, எல்லாத் தேசகாடுகளிலும் உண்டு. இது புதர், மலைகளிலிருந்து இரவில் இரைதேடத் தொடங்கித் தம்மில் சில வெளியில் காவற்காத்துச் சில மிருகங்களைப் புதரிலிருந்து வெளிப்படுத்தி வேட்டையாடும். தப்பினவற்றை வெளியில் காவலிருக்கும் நாய்கள் கொன்றருந்தும், இந்நாய்கள் உருவத்தில் சிறியவை ஆயினும் புலி, சிங்கம் முதலியவற்றையும் எதிர்க்கும். |
நாய்கள் | சியாமம், சபளம் இவையிரன் இம்யமபுரஞ் செல்வோரைத் தடுக்கும் நாய்கள். உலகத்தவர் நாய்களுக்குப் பலியிடின் யமவேதனையினின்று நீக்குவர். |
நாய்க் | இது அரசசேநாபதிகளுக்குப் பட் டப் பெயர். இது தற்காலம், பிள்ளைகள், இருளர், வேடர், பலிஜர், கவரைகள், முத்திலியர், ஒட்டன், தோட்டியன், உப்பிலி யன் முதலியவர்களுக்குப் பட்டப்பெயரா யிருக்கிறது. (தர்ஸ்டன்.) |
நாய்ச்சியார் திருக்கோலம் | இலக்ஷ்மி தேவி தன்னினும் அழகு வாய்ந்தார் இல்லையென்று செருக்குக் கொண்ட காலத்து அவளது வீறு அடக்கத் திருமால் எடுத்த ஜகன்மோகினி திருவுரு. |
நாரசிங்கம் | உபபுராணத் தொன்று. |
நாரதன் | 1. விஸ்வாமித்திர புத்திரன், 2. கசியபர் பாரியையிடத்துப்பிறந்தவர், |
நாரதம் | ஒரு தீர்த்தம். |
நாரதர் | 1. பிரமன் புத்திரர். இவர் கையிலிருப்பது மகதியாழ். இவர் தக்ஷன்குமாராகிய அரியசுவர்கள், சபள சுவர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து ஞானிகளாக்கின மையால் தக்ஷனால் நிலையிலாது திரியச் சபிக்கப்பட்டவர். வந்தை முதலியவர். முதலையாகச் சாபம் பெற்று எந்தத் தீர்த்தத்தில் அடையலாமென்றெண்ணி யிருங்தபோது தோன்றித் தென்சமுத்திரக் கரையிலுள்ள தீர்த்தங்களைக் கூறி மறைந்தனர். 2. (1000), வருஷம் பிரமசபையைக் காணத் தவஞ் செய்தவர். 3. தருமபுத்திரனை இராசசூய யாகஞ் செய்யத் தூண்டிவிட்டவர். 4. விசுவாநானுக்கு உன் குமானாகிய அக்னி (12) வயதில் இடிவிழுந்து சாவான் எனக் கூறியவர். 5. கம்சனுக்குக் கிருஷணன் முதலியோர் உற்பத்தி கூறியவர். 6. நரகாசுரனாற் சிறையிடப்பட்ட கன்னிகைக்கு முன் தோன்றி நீங்கள் கண்ணனால் சிறைநீக்கப் படுவீர் என்றனர். 7. பாண்டவர் காட்டிற் கேகியபின், திருதராட்டிரனுக்குக் குலகாசங் கூறியவர். 8. துரியோதனனுக்கு அருச்சுநன் தவநிலை குறிப்பித்தவர். 9. தமயந்தியின் சுயம்வரத்தைத் தேவேந்திரனுக்குத் தெரிவித்தவர். 10. உன்னைப்போல் உயர்ந்தமலை உலகத்தில் இல்லையென்று மேருவைப் புகழ்ந்தவர். 11. தருமருக்குத் தீர்த்தமகிமை கூறியவர். 12. வேருவின் தன்மையை விந்தமலைக்குக் கூறி விந்தமடைந்த இறுமாப்பைச் கண்டவர். 13. அசுபதியெனும் மத்திர தேசாதிபதிக்குச் சாவித்திரி விரதம் கற்பித்தவர், 14 அசுபதிக்குச் சத்தியவான் குண முதலிய கூறியவர். சாவித்திரிக்கு உபதேச மளித்தவர். 15. பாகவதத்தை வியாசருக்கு உபதேசித் தவர் 16. அருவனுக்குத் தத்துவ முபதேசித் தவர், 17. பிராசீனபர்கியிடஞ் சென்று நீ செய்த கர்மத்தால் சகப்பிராப்தி இல்லையென்று துறவடையக் கூறியவர். 18. இவர் பிரமபுத்திரர்களை வஞ்சித் துத் தவசிகளாக்கினதால் பிரமன் இவரைப் பல பெண்களைப் புணர்ந்து காமுகராயிருக்கச் சபித்தனர். இவர் பிரமாவை நோக்கி நிரபராதியாகிய என்னைச் சபித்ததால் உன் மந்திரங்கள் உலகத்தில் பலிக்காமலிருக்க, மூன்று கற்பம் வரை நீ அபூஜ்யனாகுக எனச் சபித்து நாரதர் உபபர்க்கணன் எனும் கந்தருவனாய்ப் பிறந்து தவஞ் செய்கையில் சில காந்தருவ ஸ்திரிகள் இவரைக்கண்டு மோகித்து அவ்வுடலை விட்டுச் சுத்ரா தன் குமரிகளாய் இவரை மணந்தனர். இவர் ஒருநாள் பிரமன் சபைக்குச் சென்று அவ்விடம் நடித்துக் கொண்டிருந்த அரம்பையைக் கண்டு ரேதஸை விட்டனர். இவரது சித்த சப்லத்தைக் கண்ட பிரமனிவரை மனிதராகப் பிறக்கச் சபித்தனன். (பிரம்மகை வர்த்தம்.) உபபாக்கணன் தேவியரில் சிறந்தவள், மாலாவதி. இவர் பிறந்த காலத்து மழையில்லாதிருந்தது. இவர் பிறந்தவுடன் நாரமாகிய மழை வருஷித்ததால் நாரதர் என்று பெயருண்டாயிற்று. பின்னும் இவர் தம்மோடு கூடியிருந்த சிறுவர்களுக்கு நாரம் என்னும் ஞானத்தை உபதேசித்ததால் இப்பெயர் பெற்றனர். நாரதன். எனும் நாமம்பூண்ட காச்யப முனிவன் அநுக்ரகத்தால் பிறந்தமையின் இப்பெயருண்டாயிற்று. (பிரம்மகை வர்த்தம்). இவர் சூத்ர யோனிஜராகிய நாரதர் பிரம்ம புத்திரராகிய நாரதர் பிரமனது கண்டத்திலிருந்து அநேக நரர் பிறந்தமையால் அக்கண்ட்ம் நரதம் எனப்படும். அந்த நரதமாகிய கண்டத்தில் இவர் பிறந்தபடியால் நாரதர் எனப்பட்டனர். 19. பிரதேசுக்களுக்கு ஞானோபதேசஞ் செய்தவர். இவர் ஒரு கற்பத்தில் உபபிரமணன் எனுங் காந்தருவனாயிருந்து நவப்பிரசாபதிகள் சத்திரயாகஞ் செய்கையில் கானஞ்செய்ய இவரை அவர்கள் அழைத்த காலத்துச் சென்று கானஞ் செய்து அவ்விடத்துத் தம்மோடு வந்த காந்தருவப் பெண்களைக் கண்டு காமாதுரராய்க் கூடியிருக்கப் பிரசாபதிகள் சூத் திரராகச் சபித்தனர். அவ்வகை பிறந்து பிரம்மஞானிகளுக்குப் பணி செய்து மறு ஜன்மத்தில் பிரமனுக்கு மானஸபுத்திரராய்ப் பிறந்தனர். இவர் தக்ஷப்பிரசாபதி புத்திரருக்குப் பொருளுண்மை யுபதேசித்து அவர்களைத் திருப்பினதால் அந்தத் தகப்பிரசாபதியால் நிலையிலாது திரியவும், மனைவிபுத்திரர் இல்லாதிருக்கவும் சாபமேற்றனர். இவர் நைட்டிகப்பிரமசரியம் அநுட்டித்த ஊர்த்தரேதஸான இருடி. 20. பிரகலாதன் கருவி லிருக்கையில் ஈராயணமந்திரம் உபதேசித்தவர். 21. மணிக்கிரீவனை விருக்ஷமாகச் சபித்தவர். 22. இரண்யகசியின் தேவியைச் சிறை கொண்ட இந்திரனுக்கு ஞான உபதேசஞ் செய்து நீக்கியவர். 23. திரிமூர்த்திகளும் எழுந்தருளியிருக்கையில் பொதுவில் நமஸ்கரித்து உத்தம தேவருக்கென்று கலகம் விளைவித்தவர். 24, பெண்ணுருவடைந்து கண்ணனைப் புணர்ந்து பிரபவாதி வருஷங்களைப் பெற்றவர். 25. வாயுவிற்கும் ஆதிசேடனுக்கும் நடந்த யுத்தத்தில் ஆதிசேடனிடஞ் சென்று இசைவாசித்துச் சேடனைத் தம்வசப்படுத்தித் தலை யெடுக்கச்செய்து வாயுவிற்கு வெற்றியளித்தவர். (காஞ்சிபுராணம்.) 26. சித்திர கேதுவென்னும் சூரசேந தேசத்தரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து துக்கநிவாரணஞ் செய்தவர். 27. தேவாசுர் தொந்த யுத்தத்தில் இரு வரையுஞ் சமாதானப்படுத்தி நிலைக்கனுப்பினவர். 28. அரிச்சந்திரனுக்குப் புத்திர உற்பத்தி நிமித்தம் வருண மந்திரம் உபதேசித்துப் புத்திரப்பேறு அளித்தவர். 29. இவர் பஞ்சபாரதீயமென ஒரு நூல் செய்தனராம். 30. தருமருக்குச் சிசபாலன் பர்வநிலை கூறியவர். 31. இவர் தேவேந்திரன் சபையில் புரூரவச சரியையைக் கானஞ்செய்ய உருவசி கேட்டுப் புரூரவசவிடம் மோகங்கொண்டு புரூரவசுவை அடைந்தாள். 32, கம்சனிடஞ்சென்று கண்ணன் வசுதேவருக்கும். தேவகியிடம் பிறந்தவர் என்று உண்மை கூறியவர். 33. கண்ணனிடஞ்சென்று உற்பாதங் கூறிக் களித்தவர். 34. மாயாவதியிடஞ் சென்று பிரத்தியம்கன் முன்பிறப்புணர்த்திப் பிரத்தியும்நனை மணக்கச் செய்தவர். மீண்டும் துவாரகை சென்று பிரத்தியும்நன் மாயாவதி இவர்களின் பூர்வோத்திரங் கூறியவர். 35. கிருஷ்ணமூர்த்தியிடத்துப் பாரிசாதமலர்கொடுத்து அதைக் கண்ணன் உருக்குமணிக்குக் கொடுத்ததைக்கண்டு வந்து சத்தியபாமைக்கு அறிவித்துச் சத்தியபாமைக்கும் கண்ணனுக்கும் ஊடல் உண்டாக்கியவர். 36. கண்ணன் முதலியவர்க்கு அநிருத்தன் இருக்கை கூறியவர். 37. கண்ணனது சர்வவியாபகங்கண்டு துதித்தவர். 38. நாராயணருஷியிடம் தத்துவங்கேட்டு வியாசமுனிவர்க்குக் கூறியவர். 39, சிரஞ்சயனுக்குப் புத்திரப் பேறு அருளிச்செய்தவர். 40. திரிபுராதிகளை அழிக்கப் புத்தர் உருக்கொண்ட விஷ்ணுவிற்குச் சீடராய்ச் சென்றவர். 41, சுவர்ணடீ எனும் குழந்தை இறந்த காலத்துத் தந்தைக்கு உறுதிகூறி இறந்த பிள்ளையை யமனிடத்துச் சென்று மீட்டு அளித்தவர். 42. பஞ்சசூடையால் பெண் பிறப்பு இழிவெனச் சொல்லக் கேட்டவர். 43. மருத்துவிற்குச் சமவர்த்தனரால் யாகம் முடிக்கக் கற்பித்தவர். 44. பாண்டவர்க்குத் திருதராட்டிரன் காந்தாரி குந்திசஞ்சயன் இவர்கள் தாங்கள் இருந்த வனம்விட்டு வேறு வனஞ்சென்று மூங்கிற் றீயில்பட்டு இறந்ததைத் தெரிவித்தவர். 45. தருமனைச் சுவர்க்கத்திற் கண்டவர். 48. தக்கன் வேள்வியை உமைக்குத் தெரிவித்தவர். 47. திருமால் சந்நிதானத்துத் தும்புரு முதலியோர் ஒருகால் பாடப் பார்க்கச்சென்ற நாரதரை விஷ்ணுகணங்கள் துரத்த வெட்கி யாழ்கற்கத் திருமாலை நோக்கித் தவம்புரியத் திருமால் அசரீரியாய்க் கான விந்துவிடம் கற்கவென அதைக்கேட்டு கானவிந்துவிடங் கற்று அமையாது தும்புருவிடங்கற்று அமையாது சாம்பவதியினிடத்துப் பூரணமாய் யாழ்கற்றவர். 48. அம்பரீஷன் குமரியாகிய சிரீமதியைவிரும்பி அரசனைக்கேட்க அம்பரீஷன் பருவதரிஷியும் விரும்பினபடியால் உங்களிருவரில் கன்னிகையாருக்கு மாலை யிடுவளோ அவர் கொள்கவென முனிவர் மணமாலைகாலத்துப் பருவதனுக்குக் குரங்கு முகமாகவெனச் செய்து தாம் மண மண்டபம்வரப் பருவதரிஷியும் அவ்வாறு நாரதரைச்செய்து மணமண்டபம்வர இருவரும் குரங்கு முகமாயிருக்க இருவருக்கும் நடுவில் விஷ்ணு தோன்றினர். அப்பெண் விஷ்ணுவை மாலையிட்டனள், நாரதர் அம்பரீஷனிடம் வந்து கோபிக்க அம்பரீஷனிடமிருந்து ஆழிதுரத்த விஷ்ணுவால் ரக்ஷிக்கப்பட்டு மாயஞ்செய்த விஷ்ணுவைத் துதியாதிருந்தவர். 49. இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் தோன்றி அவனை இது யமபுரம் போம் வழியெனத் தூண்டி யமனுக்கும் இராவணன் வருகையைத் தெரிவித்தவர், 50. சராசந்தனிடம் அடைபட்ட அரசர் செய்தியைக் கண்ணனுக்குக் கூறி அரசரை மீட்பித்தவர். 51. தக்கன் சிவத்தைநோக்கி வேள்வி செய்வதைச் சிவமூர்த்திக்கு அறிவித்தவர். 52. இருவரும் பர்வதரென்னும் உடன் பிறந்தாள் குமரரும் ஒருவருக்கொருவர் மனோவிருத்தியில் எப்படி நேருகிறதோ அதனை மறைக்கக் கூடாதென்று பூப்பிர தக்ஷணஞ் செய்யவந்து கார்காலத்தில் சஞ்சயதேசத் தரசனிடந் தங்க அவ்வரசனிவ் விருடிகளிருவரையும் வரவேற்றுத் தன் குமரி தமயந்தியை அவர்களுக்குப் பணி செய்யக் கட்டளையிட்டான, அவ்வாறு தமயந்தி பணி செய்து வருகையில் இவள் நாரதரின் மகதியாழின் இசைவயப்பட்டு நாரதரிடம் அதிக அன்புவைத்துத் தன்னை அவ்வாறு நடத்தாதிருத்தல அறிந்த பருவதர் இவரைக் காரணங்கேட்க இவர் கூறாது தாமதித்தலால் இவரைக் குரங்கு முகமாகுக எனச்சபித்தனர். நாரதரும் சொற்ப குற்றத்திற்கு இவ்வகைச் சபித்ததால் நீ சவர்க்கவாச மொழிந்து மிருத்யு லோகவாசியாக எனச்சபித்தனர். பின் தமயந்திக்குத் தந்தை மணஞ் செய்விக்க எண்ணி நாயகனைத் தேடுகையில் தமயந்தி நாரதரொழிந்த மற்றவர்களை மணக்கேன் எனத் தாயாகிய கைதையும் தந்தையும் குரங்கு முகனாகிய இருடிக்கோ வாழ்க்கைப்பட வுள்ளாயென்று பலவாறு தடுக்கவுங் கேளாது நாரதரை மணந்தனள். பின் நாரதமுனிவர் மனங்குன்றி அவ்விடமிருந்த காலத்தில் பர்வதர் அவ்விடம்வா நாரதர் எதிர்கொண்டுபசரிக்கத் தமயந்தியை யெண்ணி இரக்கமுற்று நன்முகமடைய நாரதருக்குக்கூற இவரும் பிரதியாய்ச் சுவர்க்க சஞ்சாரஞ்செய்ய வசந்தந்தனர். (தே பாகவதம்.) 53. ஒருகாலத்து இவர் ஸ்வேதத்வீபத்தில் விஷ்ணுவைக் காணச் சென்றனர். அப்போது அவருடனிருந்த வஷ்யிமறைய இவர் நான் இருடியாய் மாயையை வென்றிருக்க என்னைக்கண்டு லஷ்மி மறையக் காரணமென்ன என்ன விஷ்ணு மாயை எவரையும் விடாதென்ன இவர் அம்மாயையை எனக்கு அறிவிக்க வேண்டு மென வேண்ட விஷ்ணு இவரை உடனழைத்துச் சென்று கன்யா குப்ஜமென்னும் பட்டணத்தருகில் ஒரு சிங்கார வனத்திலுள்ள தடாகத்தில் இவரை ஸ்நானஞ் செய்யும்படி கூற அவ்வாறே இவர் தமது மகதியாழை வைத்துவிட்டு ஸ்நானஞ்செய்து கரையேறுதலும் ஒரு திவ்யமான பெண்ணுரு வடைந்தனர். விஷ்ணுவோ யாழைக் கையிற்கொண்டு மறைந்தனர். இவ்வாறு நாரதர் பெண்ணுருக் கொண்டி ருக்கையில் அவ்வழிவந்த தாலத்துவஜன் எனும் அரசனிவரைக் கண்டு காமுற்றுத் தன்ன கரங்கொண்டு சென்று மணந்தனன். இவருக்கு அவனிடம் பன்னிரண்டு குமரர் பிறந்து அக்குமரர் பாணிக்கிரகணஞ் செய்து கொண்டு அவர்களுக்குப் பல குமரர்கள் பிறக்க அவர்களைக்கண்டு களித்துத் தமது பூர்வநிலை இதுவென்று அறியாம் லிருக்கையில் வேற்றரசன் தாலத்துவசனோடு யுத்தத்திற்கு வந்து போர் செய்து அவன் குமரர்வையும் பேரன்மார்களையும் கொல்ல இவர் விசனமடைந்து இருக்கை யில் விஷ்ணு விருத்த வேதியராய் வந்து தேற்றி அவ்விடமிருந்த தடாகத்தில் மூழ்கச் சொல்ல இவர் மூழ்கவும் புருஷவுருக் கொண்டு தம் எதிரில் வீணைகொண்டு நிற்கும் விஷ்ணுவை நோக்கித் தமக்கு இந்த உரு இவரால் வந்ததென்று சிந்தித்திருக் கையில் நாம் போகலாம் வா என்று அழைக்கத் தமக்குப் பெண்ணுருவமும் ஆண் உருவமும் வந்ததற்குக் காரணமறியாமற் போயினர். இவர் பெண்ணாய்ப் பன்னிரண்டு வருஷ மிருந்தபோது பிறந்த பல பின்ளைகள் வீரவன்மன், சுதன்மன் முதலியோர். 54. பிரமவிஷ்ணுக்கள் தாம்பரமென்று புத்தஞ் செய்தகாலத்துச் சிவத்தினுண்மை கூறியவர். 55. சூரபன்மனுக்குப் பயந்து இந்திரன் ஒளித்தகாலத்துச் சயந்தனுக்கு உறுதி கூறியவர். 56. அகத்தியர் கமண்டலத்திருந்த காவிரியை இந்திரனிடத்துக் கூறி விநாயகரால் கவிழ்க்கச் செய்தவர். 57. இவர் ஒரு யாகஞ்செய்ய அதில் ஒரு ஆடுபிறந்தது. அதனைக் குமாரக்கட வுள் வாகனமாகப் பெற்றனர். 58. கிருத்திகா விரதம் விநாயகரிடம் போதிக்கப் பெற்றுச் சத்தருஷிகளினும் மேலாம்பதம் பெற்றனர். 59. சம்புவன் தவஞ்செய்வதை இராமமூர்த்திக்கு அறிவித்தவர். 60. இவர் கங்கையைப் பணியாது சென்று அக்கரையில் நிஷ்டைகூடி யிருந்தனர். அவ்வகை இருக்கையில் கங்கை நம்மைப் பணியாது சென்றனன் எனப் பெருகிவர அதை இவர் அறியாதிருந்தனர். அப்போது அவ்விடம் வந்திருந்த யானை அக்கங்கை நீரைவாரி யிறைத்து அறிவித் தது. நாரதர் கங்கையின் வீறைக் கண்டு மந்திரத்தால் அதைத் தம்பிக்கச் செய்தனர். 61, சிருஞ்சயனிடஞ் சென்று அவன் குமரியாகிய சுகுமாரியை மணக்க எண்ணியிருக்கையில் இவர் தங்கை குமரனாகிய பர்வதன் இளைத்துப் போதலைக் கேட்கச் சொல்லாதிருத்தல்கண்டு குரங்கு ஆக என இவரைச் சபிக்க இவர் சுரலோகம் போகாதிருக்க என அவனைச் சபித்தவர். 62. சுகருக்கு ஞானோபதேசஞ் செய்து தந்தையினின்று நீக்கியவர். |
நாரதி | விஸ்வாமித்திர புத்திரன். |
நாரதீய புராணம் | இது (25 000) கிரந் தங்களுடையது. விஷ்ணுதுதி. விஷ்ணுவின் ஆராதனைக்குரிய புண்ணியகாலம் துருவர், பிரகலா தர்சரிதை மோகினியின் சரிதை முதலியவற்றைத் தெரிவிக்கும். |
நாராயண சுவாமி | கடுவையெனும் ஊரினன். தமிழில் விதானமாலை நூலாசிரியன். |
நாராயணகண்டர் | சித்தாந்தசாராவலி யெனும் சைவசாத்திர உரையாசிரியர், |
நாராயணகிரி | திருவேங்கடம். |
நாராயணகோபாலர் | கிருஷ்ணனுக்குச் சமானமான வலியுள்ளார். அருச்சுனனால் பாரதயுத்தத்திற் கொலையுண்டவர். |
நாராயணசரஸு | ஒரு தீர்த்தம். இதன் கரையில் தக்ஷன் புதல்வர் தவம்புரிந்து இஷ்டசித்தி பெற்றனர். |
நாராயணதாசன் | நாராயணச சுகம் பாடிய ஒரு புலவன். |
நாராயணதாசர் | ஒரு தமிழ்க் கவிஞர். திருவெவ்வளூர் அந்தாதி இயற்றியவர். |
நாராயணன் | திருமாலுக்குள்ள திருநாமங்களில் முதன்மையானது. இதுவே (நாராயணநம்) எனும் திருமந்திரம். நாரம் என்றால் சலம், அதனை இடமாகக்கொண்டவர் ஆதலின் இவர்க்கு இத்திருநாமம் உண்டாயிற்று, இந்தமந்திரம் பிரணவசகிதமாய் அஷ்டாக்ஷரம் எனப்படும். இது எட்டுத் திரு அகரமும், மூன்று பதமுமாய் இருக்கும். மூன்று பதமும் மூன்று பொருள்களைச் சொல்லும். அதாவது சேஷத்வம், பாரதந்தர்யம், கைங்கர்யமுமாம். இதில் முதற்பதம், எகாக்ஷரமான பிரணவம். இது வேதசாரம். அதாவது வேதங்கள் ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு அக்ஷரமாக எடுத்தது. இதன் பெருமையினை விரிக்கிற்பெருகும், இதுநிற்க நாராயணபதம் நாரங்களுக்கு அயனமென்றபடி. நாரங்களாவன, நித்திய வஸ்துக்களுடைய திரள். அவையாவன ஜ்ஞாநாநந்தா மலத்வாதிகளும், ஞானசக்தியாதிகளும், வாத்ஸல்ய ஸௌசீல்யாதிகளும், திருமேனியும், காந்தி ஸௌ குமா ராதிகளும், திவ்ய பூஷணங் களும், திவ்யாயு தங்களும், பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும், நித்தியஸூரிகளும், சத்ர சாமராதிகளும், திருவாசல் காக்கும் முதலிகளும், கணாதிபரும், முக்தரும், பரமாகாசமும், பாக்ருதியும், பத்தாத்மாக்களும் காலமும், மகதாதி விகாரங்களும், அண்டங்களும், அண்டங் கட்குட்பட்ட தேவாதி பதார்த்தங்களும், ஆம், அயனமென்றது இவற்றிற்கு ஆச்ரயமென்றபடி. அங்ஙனம் அன்றி இவை, தம்மை ஆச்ரயமாக வுடையன என்னலுமாம். ஆய என்கிறபதத்தால் எல்லா அடிமைகளும், செய்யவேண்டுமென்று அபேக்ஷிக்கிறது. நமஸ்ஸாலே நாம் வழுவில்லா அடிமை செய்யவேண்டும் என்கிற பிரார்த்தனையைக் காட்டுகிறது. இன்னும் இந்த மகாமந்திரத்தின் பெருமையை விரிந்தநூல்களிற் காண்க. |
நாராயணபாரதி | தொண்டை நாட்டில் வெண்ணெயென்னும் ஊரிற் பிறந்த பிராமணர். இவர் மணவாள நாராயணனென்னும் பிரபுவை முன்னிட்டுத் திருவேங்கட சதகமென்னும் மணவாள நாராயணசதகம் பாடியவர். முத்தாரையர் குமரர். |
நாராயணமுதலியார் | தொண்டை நாட்டிற் கூவமெனும் ஊரிலிருந்து தானிருக்கும் ஊரைக் கடலென்று பாடிய புலவனுக்குப் பொன்மீன் செய்து கொடுத்துக் கவிபெற்றவர். இவர் மரண காலத்து ஒரு புலவர் “இடுவோர் சிறிதிங்கிரப்போர் பெரிது, கெடுவாய் நமனே கெடுவாய் படுபாவி, கூவத்துநாரணனைக் கொன்றாயே கற்ப கப்பூங், காவெட்டலாமோகரிக்கு” என்று பாடிச்சென்றனர். |
நாராயணருஷி | 1. திருவேங்கடத்தில் தவஞ் செய்து சித்திபெற்ற இருடி. 2 விஷ்ணுவினம்சாவதாரங்களில் ஒருவர். இவர் ஆன்மாக்களுக்குஞானோபதேசஞ் செய்யும் பொருட்டு இவ்வுருத்தாங்கினர். |
நாராயணர் | ருத்ர நாராயணப் போரில் ருத்ரர் நாராயணர்மீது சூலத்தையெறிய அது பட்டவிடம் ஸ்ரீவர்கம் ஆயிற்று. ருத் நாராயணன்ரரை நாராயணர் கழுத்தில் பிடிக்க அவர் பிடித்த இடம் நீலகண்டமாயிற்று. (பார ~ சாந்திபர்வம்.) |
நாராயணி | சத்தமாதர்களில் ஒருத்தி. |
நாரி | 1. மேருதேவியின் பெண். குருவின் பாரி. 2. தக்ஷன்பெண். புலத்தியன் தேவி. |
நாரிதீர்த்தம் | காரண்டவம், ஸௌபத்ரம், பிரசஸந்தம, பௌலோமம், பாரத்வாசம், நாரைகள் என்னும் பெயர் கொண்ட தீர்த்தங்கள் இதில் இருக்கும். இதில் நந்தை, ஸயீடு, ஸௌறபேயி, லதை, வஸை எனும் தாக்தருவப்பெண்கள் ஒரு இருடி சாபத்தால் முதலைகளாயிருந்தனர். இவர்கள் அருச் சுகனால் சாபம் நீங்கினர். |
நாரின் வகை | நார் என்பது செடிகளினி என்று எடுக்கப்படுவது. சணல், கற்றாழை, பனை, தென்னை முதலியவற்றின் தண்டு, மட்டை இவற்றைத் தண்ணீரில் ஊறவிட்டெடுத்து அடித்துச் சுத்தம் செய்து கயிறு திரிப்பர். |
நாரீகவசன் | மூலகனுக்கு ஒரு பெயர். பாசிராமர் அரசர்களைக் கொலை செய்த காலத்துப் பெண்கள் இவனைக் கவசம் போற் காத்ததலால் இவனுக்கு இப்பெயர் கிடைத்தது, மூலகனைக் காண்க. (பாகவதம்.) |
நாரைகள் | இவை கொக்கினத்தில் பெரியவை. இவ்வினத்தில் பல வேறுபாடுகள் உண்டு. இவைகளுக்கு கழுத்தும், மூக்கும், காலும் மிக நீளம். உடல் சற்றுப் பருத்தது. காலும் மூக்கும் மஞ்சள் கலந்த செந்நிறம். உடம்பு வெண்மை முதலிய பலநிறம். இவ்வினத்தில் ஐரோப்பாவின் வடபாகத்தில் ஒரு இனம் உண்டு, இவ்வினத்திற்குத் தலையிலும் கழுத்திலும் கொண்டையும் தாடியுமுண்டு, அவற்றிலுள்ள சிறகுகள் சுருண்டிருக்கும். இதன் தலைப்பக்கம் கறுத்தும், முதுகு சாம்பல்கிறமாயும், வயிறு வெண்மையாயுமிருக்கும். கழுத்தில் சிற்றிறகுகள் புள்ளியுடன் வழுவழுப்பாயுள்ளன. இவை நின்றபடி தூங் கும். தூங்குகையில் சில காவல்புரிகின்றன. நெடுங்கால் நாரை : இது நீண்ட கால்களை யுடையதாதலால் இப்பெயர் பெற்றது. தலை கறுப்பு, முதுகுப்பக்கம் செவப் புக்கலந்த சாம்பல் நிறம். இதன் கால்களும் அலகும் செந்நிறம், இதன் மூக்கு கீழ்நோக்கி வளைந்திருக்கிறது. இவை மீன்களையும் தளிர்களையும் தின்கின்றன. இதன் கால்கள் தோலடிகள். இவை 2, 3 அடி தண்ணீரிலும் நடந்து சென்று இரைதேடும். இது தூங்கும்போது ஒரு காலை மடக்கிக்கொண்டும், கழுத்தை வளைத்து உடலில் சுற்றிக்கொள்ளும். இது மெதுவாய்ப் பறக்கும். வருஷத்திற் கொருமுறை 2 முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும். தாடிப்பை நாரை : இது தென்ஆபிரிகா கண்டத்தின் மேற்குக்கன நீர் நிலைகளில் வகிப்பவை. இது 5, 6 அடிகள் உயரம், இதற்குத்தரமாகப் பறப்பதற்கான இறக்கைகளுண்டு. இவ்வின ஆணிற்குக் கழுத்துப்பக்கத்தில் ஒரு தோற்பை தொங்குகிறது. அப்பையின் மேற்பாகம் இரத்தம் போற் சிவந்து பளபனப்பாயிருக்கிறது. இது அந்நாட்டாரால் வளர்க்கப்பட்டு வீட்டில் அவர்களுடன் உலாவுகிறது. நெடுங்கழுத்து நாரை : இது அமெரிக்கா கண்டவாசி. இதன் கால்கள் 1.1/2 அங்குலம் உயரம், இதன் தோலகன்ற பாதங்களி உள்ள விரல்கள் 3 அங்குல நீளம், உடல் 3/4 அடி கனம், இதன் கழுத்துப் பருத்து 8,9, அடிகன் நீளத்திற்குப் பாம்பைப்போல் நீண்டிருக்கிறது. இதில் பெண்பறவை கழுத்து முதல் வால்வரை 5, 6 அடிகள் நீளமும், ஆண் பறவை 8, 10 அடிகள் நீளமும் இருக்கின்றன. மூக்குக் கூர்மையாய் 4 அங்குலம் நீளம், வாயினுட்புறத்தில் உரிய சிறு பற்களுண்டு. இதன் மேல்மூக்குக் கருமை, கீழ்மூக்கு மஞ்சள் நிறம். இதன் வாய் கண்ணுக்குப் பின் புதம் வரையில் நீண்டிருக்கிறது |
நார்ப்பொருள்கள் | சணல் (Flax) : இது ஒருவித வருஷாந்தாப் பயிர், இரண்டடி உயரம் உள்ளது, நீலப்பூப் பூப்பது, இது தற்காலம் எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது. இச்செடிகளை நன்றாக உலர்த்தித் தண்ணீரில் ஊறியபின் தண்டுகளிலுள்ள பசுமை நீங்கும். பின்னவற்றை நறுத்தி அவற்றிலுள்ள கயிறு போன்ற நாரினைச் சிக்கறுத்துச் சணல்லாக்கி நெய்வர். இந்தச் சணல் துணிகளில் முக்கியமான சல்லா டாமஸ்க். இது முதலில் சிரியா தேசத்திலுள்ள டாமஸ்க் தேசத்தில் நெய்யப்பட்டது. இரண்டாவது கேம்பிரிக். இது பிரான்ஸ் தேசத்திலுள்ள கேம்பிரிக் எனும் இடத்தில் நெய்யப்பட்டது. பஞ்சு : இது பல இடங்களில் பயிராகும் பொருள். இது உயரத்தில் நான்கு ஐந்தடி யிருக்கும். இதிற் பலவகையுண்டு. இது ஏராளமான பஞ்சைக் கொடுக்கும். இதனை நூலாக்கிப் பலவித வேஷ்டிகள் நெய்வர். பாரசீக சணல் : (Hamp) ஆது முதலில் பாரீச விளைபொருள். தற்காலம் ரஷ்யா, வடஇந்தியா, வட அமெரிகா, ஆபிரிகா முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. இதன் நாரினால் உறுதியான கான்வாஸ்கள், கப்பற் பாய்கள், மெல்லிய கயிறுகள் மற்றும் பல செய்யப்படுகின்றன. காசருக்கனார் : இச்செடி இந்தியாவின் வடபாகங்களில் பயிரிடப்படுகிறது. இது 12, 14 அடி உயாம் வளரும், இதன் நாரினால் கோணிகள் நெய்வர். தென்னை, பனை : இவற்றின் நாரினால் கயிறுகள் பின்னுவார்கள். |
நாற்கவிராச நம்பி | இவர் தொண்டைநாட்டிற் புளியங்குடியில் பிறந்த உய்யவந்தார் என்பவருக்குக் குமரர். இவர் சைநர். இவா தமிழ் பல்கற்று வல்லவராய் ஆசு, வித்தாரம், மதுரம், சித்திரம் என்னும் கவியில் வல்லவரானதுபற்றி, இவருக்கு நாற்கவிராசநம்பி என்று பெயர் வந்தது, இவர்க்கு இதற்குமுன் நம்பியென்பது பெயராயிருக்கலாம். இவர் அகப்பொருளின் விரிவைச்சுருக்கிச் சுருங்கிய நூலாகத் தம்பெயரால் நாற்கவிராசநம்பி அகப் பொருளென இயற்றினர். அந்நூல் அகத் திணையியல் களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்து இயல்களையுடையது. (அகப்பொகுள் விளக்கம்.) |
நாற்கால் இராசி | மேஷம், ரிஷபம், சிங்கம், தனுசு ஆக 4. |
நாலடியார் | 1. இது சைநமுனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். சங்க மருவிய பதினெண்கீழ் கணக்கினுள் ஒன்று. நானூறு வெண்பாக்களை யுடையது. பதுமனார் என்பவர் இவைகளை முப்பாலாய் நாற்பது அதிகாரங்களாகப் பகுத்து உரையும் இயற்றினர். கடவுள் வாழ்த்தும் அவரே இயற்றியதென்பர். |
நாலாயிரக்கோவை | காங்கேய முதலியார் மீது ஒட்டக்கூத்தர் பாடிய கோவைப் பிரபந்தம், |
நாலுகவிப் பெருமாள் | திருமங்கை மன்னன் பட்டப்பெயர். |
நாலூரச்சான் | ஒரு வைஷ்ணவர் சோழனுக்கு மந்திரியென்பர். |
நாலூராச்சான்பிள்ளை | திருவாய்மொழிப் பிள்ளைக்கு மருமகன், |
நாலூரான் | உடையவரை ஆச்ரயித்தவர். |
நாலைகிழவன் நாகன் | ஒருவள்ளல். வட நெடுந்தத்தனாற் பாடப்பட்டவன். பாண்டியனுடைய வீரன். (புற, நா.) |
நால்வகைத்தேவர் | முப்பத்து மூவர் அவர் வசுக்கள் எண்மர், திவாகார் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், மருத்துவர் இருவர். மூவாறு கணங்களாவார் கின்னரர், திம்புருடர், விச்சாதரர், கருடர், பூதர், இயக்கர், உரகர், சுரர், சாரணர், முனிவர், பாகதியோர், சித்தர், காந்தருவர், தாரகை கள், பசாசர், இராக்கதர், போகபூமியர், ஆகாசவாசிகள். |
நாளீசங்கன் | ஒரு கொக்கு. இதற்கு இராஜதம்மன் எனவும் பெயர். ஒரு வேதியச் சிறுவன் தன் பிதுராஸ்திகளைத் தீய வழியில் செலவிட்டு இதனிடை வர இது தன்னண்பனால் பொருள் தருவித்தது. இந்நன்றி பெற்ற வேதியச் சிறுவன் கொக்கினைக் கொல்லக் கொக்கினண்பன் வேதியச் சிறுவனைக் கொன்றனன். பின் கொக்கின் மனைவி கணவனை உயிர்ப்பிக்க எழுந்து வேதியச் சிறுவனையும் எழுப்பி நற்புத்தி கூறி நெடுநாளிருந்தது. |
நாள் | பூமி ஒருமுறை தன்னைச் சுற்றிவருவது. |
நாள்விஷம் | அஸ்தத்திற்கு (22) இன்மேலும், ஆயிலியத்திற்கு (31) இன் மேலும், திருவாதிரைக்கு (11) இன் மேலும், பூரட்டாதிக்கு (14) இன் மேலும் அடையவே நான்கு நாழிகை விஷம். இரேவதி, புனர்பூசம், கார்த்திகை, மகம் இவற்றிற்கு (30) இன்மேல் நான்கு நாழிகை விஷம், உத்திரட்டாதி, பரணி, பூராடம் இவற்றிற்கு (24) இன்மேல் நான்கு நாழிகை விஷம். பூசம், உத்திராடம், மூலம், பூரம், சித்திரை இவற்றிற்கு (20) இன்மேல் நான்குநாழிகை விஷம், அவிட்டம், அனுஷம், திருவோணம் இவற்றிற்கு (1) இன்மேல் நான்கு நாழிகை விஷம்.. அச்வநிக்கு (50) இன்மேல் நான்கு நாழிகை விஷம். மிருகசீரிஷம், சோதி, கேட் டை இவற்றிற்கு (14) இன்மேல் நான்கு நாழிகை விஷம். உரோகணிக்கு (40) இன்மேல் நான்கு நாழிகை விஷம், உத்திரம், சதயம் இவற்றிற்கு (18) இன்மேல் நான்கு நாழிகை விஷம். இதில் சகல மங்கல காரியங்களும் நீக்கவேண்டும். இந்த விஷகடிகையில் சந்திரன் சுபாங்கி சத்து நிற்கச் சபகிரகத்தாற் பார்க்கப்பெறினும், சுபக்ரகத்துடன் கூடி நிற்பினும், பிரகஸ்பதிகேந்திர திரிகோணத்தில் நிற்பினும் விஷகடிகை தோஷமில்லை. அப்போது அமுதத்தைச் செய்வன் சந்திரன். (விதானமாலை) |
நாழி | அரிசி முதலிய தானியங்களை அளக்கும் கருவி. இது மரக்கால், படி முதலாகப் பலவகைப்படும். |
நாழிகைக்கருவி | இது பளிங்கினால் உடுக்கைபோன்று ஒருபுரம் சிறு மணல்நிறையப் பெற்றது. இம் மணல் மேல்புறமிருந்து, கீழ்புறம் சிறுக விழுந்துவிடின் அரைமணி, அம்மணல் விழுந்த பக்கத்தை மீண்டும் திருப்ப அது மறுபக்கம் நிறையின் அரைமணி, இவ்வாறு திருப்பி மணி தெரிந்து கொள்வோர் ஆன்றோர். (உல.) |
நாழிகைவட்டில் | இது நாழிகையின் அளவைத் தெரிவிக்கும் ஒருவகைச் கருவி, இது மெல்லிய தகட்டால் கிண்ணம் போன்று இடையில் ஊசி முனையினும் சிறிய துவாரமுள்ளது. இதனை நீருள்ள தொட்டியில் மிதக்கவிடின் இதில் நீர் அச்சிறு புழைவழி சென்று நிரம்பிக் கிண்ணம் நீரில் அமிழின் ஒரு நாழிகையாம். (உல ~ வ.), |
நாவில் உண்டாம் ரோகம் | நாவில் திரிதோஷங்களினால் சிவந்தும், கொப்பளங்கள் உண்டாகியும் வருவது. இவை நாபிக்கு அடி இடம், நாபி, இருதயம், கண்டம், நாக்கு இந்த ஐந்து ஸ்தானங்களைப்பற்றிப் பிறக்கும். இது (1) வாதஜிக்வாகண்டக ரோகம், (2) பித்தஜிக்வாகண்டக ரோகம், (3) சிலேஷ்மஜிக்வாகண்டகரோகம், (4) ஜிக்வாலஜகரோகம், (5) அதிஜிக்வாரோகம் (6) உபஜிக்வாரோகம் ஆக ஜிக்வாரோகம் 6. |