அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தகடூர்

இது மைசூர் இராச்சியத்திலுள்ள நாடு என்பர். பழைய தமிழ் நூல்களில் எடுத்தாளப்பட்டு வருகிறது. இது மைசூருக்கும், குடகிற்கும் தெற்கிலுள்ளது. இது அதிகமானஞ்சியினாடு.

தகடூர் எறிந்த பேருஞ்சேரலிரும்பொறை

ஒரு சேரன், அரிசில் கிழாரால் பாடப்பெற்றவன். தகடூர் யாத்திரை இவன்மீது செய்திருக்கலாம். இவன் வேளாவிக்கோவின் மகண்மகன். இவன் பேகன் காலத்தவன்.

தகரம்

1. ஒரு பிரமவித்தை, இது சிவச்வரூபம் சொன்னதென்பர். 2. ஒரு உபநிஷத்து. 3. கனிகளிலிருந்தெடுக்கப்படும் உலோகப் பொருள்களுள் ஒன்று. இது, வெள்ளியைப்போல் வெண்மையுள்ளது. இது ஜலத்திலும் (7) மடங்கு கனமுள்ளது. வெள்ளீயம் என்பர். இது, களிம்புள்ளதன்று. அதிக நயப்புள்ள தாதலால் இதனால் பாத்திர முதலிய செய்ய இயலாது. இதனுட னீயத்தையாவது துத்தநாகத்தையாவது கலந்து பாத்திரங்கள் செய்வார் கள். இதனால் செம்பு முதலிய பாத்திரங்கள் களிம்பேராமற் பூச்சுப் பூசுவர். இதை இருப்புத் தகட்டிற் பூசி விளக்குக்கூடு, குவளை முதலிய செய்வர். இதைச் செம்புடன் கலக்கின் வெண்கலமாகிறது. முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்குப் பின்புறத்தில் ரஸம் போடுதற்கு அச்சமான தகரத்திற்கு உபயோகப்படுகிறது. கண்ணாடி யளவிற்குத் தக்க தகட்டின்மீது ரஸத்தை வார்த்து அதன்மீது கண்ணாடியைப் பொருத்தின் சிறிது பொழுதில் ரஸம் கண்ணாடியில் சேர்ந்துவிடுகிறது. இது இங்கிலாந்து, ஸ்பெயின், பான்காக், மலயா, ஆஸ்திரேலியா முதலான இடங்களி லுண்டாகிறது.

தகுதி வழக்கு

இடக்கரடக்கல்;சொல்லத் தகாததை மறைத்து வழங்குவது; மங்க லம்;அமங்கலமானதை மங்கலமாக்கூறல்; குழூஉக்குறி; ஒரு கூட்டத்தார் யாதேனும் ஒரு காரணம்பற்றி ஒன்றன் பேரை மாற்றி வேறு பெயரிட்டு வழங்குவது. (நன்.)

தகுதியணி

தகுதியாகிய இரண்டு பொருள்களுக்குச் சம்பந்தத்தைக் கூறுதல். இதனைச் சமாலங்கார மென்பர். (குவல.)

தகுதியின்மையணி

பொருந்துதற்குத் தகுதியில்லாத பொருள்களுக்குப் பொருத்தங் கூறுதல், இதனை விஷமாலங்கார மென்பர். (குவல.)

தகைவு

வாதியானவன் தன்னாற் கூறப்பட்ட காரியத்தில் நில்லாமலும், அக்காரியத்தைக் கேட்டுக் கடந்தேனும் போகிற பிரதிவாதியை அரசனாணையால் தகைவு செய்தல். அத்தகைவு, இடத்தகைவு, காலத்தகைவு, பயணத்தகைவு, செய்கைத் தகைவு என நான்கு வகைப்படும். இடத் தகைவு: இடத்தை விட்டுப் போக்கு தலைத் தகைதல், காலத்தகைவு: இன்ன காலத்தில் நீ காணப்படல் வேண்டும் அன்றேல் அரசனணை கடந்தவனாவாய் என்பது, பயணக் தகைவு: வேற்றூர்க்குச் செல்லுதலை அரசனாணை கூறித் தடுத்தல், செய்கைத்தகைவு; பிரதிவாதி செய்யும் காரியத்தைக் தகைத்தல். (விவகாரசாரசங்கிரகம்)

தக்கநாடு

கேமமாபுரத்தையுடைய தேசம்.

தக்கன்

1. பிரமன் மானசபுத்திரர்களில் ஒருவன், பிரமனது கட்டைவிரலிற் பிறந்தவன் என்றுங் கூறுவர். இவன் தரணியைக் கூடி (1000) குமரர்களைப் பெற்றனன், இவர்கள் நாரதர் உபதேசத்தால் மகா ஞானிகளாய்த் துறவடைந்தனர். இதனால் பிரசாவிருத்தி யில்லாது போனதால் தக்ஷன் நாரதனிடத்துக் கோபித்து நிலையிலாது திரியவும், கலகப்பிரியனா யிருக்கவும் சாபந் தந்தனன். பின், இவன், அசக்னியிடம் (90) பெண்களைப் பெற்றுத் தருமப்பிரசாபதிக்கு (10) பெண்களையும், காசிபர்க்குப் பதின்மூவரையும், சந்திரனுக்கு இருபத்தெழுவரையும்; பூதர், ஆங்கீரச, கிரிசுவா என்பவர்களுக்கு இவ்விரண்டு பெண்களையும், தாட்சயபருக்கு நான்கு பெண்களையும் கொடுத்தான். இவர்களுள் சந்திரன், கிருத்திகை, உரோகணிகளொழிந்த மற்றவரிடம் அன்பிலாதிருந்ததால் சந்திரனைக் கலைகள் தேயச் சபித்தனன். அச்சந்திரன் சிவமூர்த்தியை வேண்டிச் சாபம் போக்கிக்கொண்டனன் இவன் சிவமூர்த்தியை யெண்ணித் தவஞ் செய்து அம்மூர்த்தி பிரத்தியக்ஷமாகத் தான் உமையைக் குமரியாகப் பெறவும் சிவமூர்த்தி மருமகனாகவம் வரம் வேண்டிப் பெற்று உமாதேவியைப் புத்திரியாகப் பெற்றுத் தாக்ஷாயணியெனப் பெயரிட்டு வளர்த்துச் சிவமூர்த்திக்குத் திருமணஞ் செய்வித்தனன். ஒருநாள் தன் குமரியைக் காணவேண்டித் திருக்கைலைக்குச் செல்லப் பூதகணங்களால் தடைபட்டுத் திரும்பிக் கோபாவேசனாய் விஷ்ணுவாதி தேவர்களை யாகத் தலைவராக்கி ஒரு வேள்வி செய்யத் தேவர், இருடியர் முதலியோர்க்குத் திருமுகம் அனுப்பினன். யாகத்திற்கு வந்த இருடிகளில் ததீசி முனிவர் சிவமூர்த்திக்கு அவி கொடுக்கும்படி பலவிதத்திற் கூறியும் கேளாது யாகந் தொடங்கினன். இந்த யாகக் காட்சியைக் காணத் தாக்ஷாயணி வந்தனர். தக்கன், உபசரிக்காது இருக்க உமாதேவியார் இது சுடுகாடாக எனச் சபித்து நீங்கிச் சிவமூர்த்தியை யடைந்து நடந்தவை கூறி யாகமழிய வேண்டினள். சிவமூர்த்தி, வீரபத்திரரைச் சிருட்டிக்க உமாதேவியார் மகா காளியைச் சிருட்டித்து யாகத்தை அழித்துவர அனுப்பினர். அக்கட்டளை யேற்ற தேவ தேவிகளிருவரும் பூத கணங்களோடு தக்கன் யாகசாலை புகுந்து தேவர்களை வருத்தித் தக்கன் தலையையும் அறுத்தனர். அத் தக்கனது தலையை ஒரு பூதம் விழுங்கிற்று. மீண்டும் பிரமன் தன் குமரனை எழுப்பச் சிவமூர்த்தியை வேண்டிய காலத்துத் தக்கனது தலையைக் காணாது அத்தலைக்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்து எழுப்பினர். தக்கன், ஆட்டுத்தலை பெற்றுப் பிரமன் சொற்படி கங்கா தீரத்தில் சிவப்பிரதிஷ்டைசெய்து பூசித்துச் சிவகணத் தலைமை பெற்றனன். இவன் பெண்கள் புருஷன் வேண்டிப் புருஷாயதம் என்னுந் தவஞ் செய்ததால் புருஷனையும் நக்ஷத்ர பதத்தையும் பெற்றனர். இவன் உமாதேவியார் யாகங்காண வந்தபோது மதியாதிருந்ததால் சூரியகுலத்து மாரிஷையிடம் மனிதனாய்ப் பிறந்தான். 2. பானு பட்டணத்தையாண்ட வல்லவனுக்கும், கமலை யென்பவளுக்கும் பிறந்தவன். இவன் பிறப்பில் குட்ட நோயுட னிருக்கத் தந்தை, தாயுடன் குமரனைக் காட்டிற்றுரத்தினன். இவள் தன் குமரனுடன் காட்டிற் செல்லுகையில், முற்கல முனிவர் அவ்வழி செல்ல அவரது தேகக்காற்றுப்பட நோய் நீங்கி மன்மதனைப் போல் வடிவுகொண்டு குண்டின தேசாதி பதியாயினான். இதற்கு முன் பிறப்பி லிவன் வல்லாளன் தந்தை கல்யாணன். இவன் குமரன் பிரகத்பானு.

தக்கயாகப்பரணி

ஒட்டக்கூத்தராலியற் றப்பட்ட பரணிப்பிரபந்தம். சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது.

தக்கயோகம்

திதிகளைக் காண்க.

தக்கிணன்

பாண்டி நாட்டிலுள்ள திருத்தங்காலி லிருந்த வார்த்திகன் என்னும் வேதியன் குமரன். (சிலப்பதிகாரம்).

தக்ஷகன்

1. கத்ரு குமரன், பிராமண வடிவங் கொண்டுவந்து பரிச்சித்தின் விஷவேகம் தீர்க்கவந்த வேதியனைச் சந்தித்து அவனுக்கு வேண்டிய கொடுத்துத் திருப்பிப் பரிச்சித்தினைப் பாம்பாகச் சென்று கடித்தவன். சர்ப்பயாகத்திற்குப் பயந்து இந்திரனிடம் அபயம் புகுந்தவன். வாசுகியின் தம்பி. 2. பரதன் குமரன.

தக்ஷகர்

ஒரு இருடி, இவர் குமரி மாரிஷை இவள் பதின்மரை மணந்தனள்.

தக்ஷசிலை

1. பரதரால் காந்தருவநகரத்தில் நிருமிக்கப்பட்ட பட்டணம். இது தக்ஷனால் நிருமிக்கப்பட்ட பட்டணம் என்ப. காந்தாரதேசத்துப் பட்டணம். 2. Taxila, one mile North East of Kalaka Serai between Attook and Rawalpindi. It is on the bank of the Vitasta. (Jhelum) தக்ஷசிலையைக் காண்க.

தக்ஷணாதேவி

1. விஷ்ணுவினம்சாவதாரமாகிய சுயக்கியன் தேவி, 2. பிரஜாபதியின் புத்ரி.

தக்ஷணை

ஒருமுறை ருசிப்பிரசாபதிக்குச் சுவாயம்புமநுவின் குமரியாகிய ஆகுதியிடம் பெண்ணாக உதித்த இலக்குமி அவதாரம் யக்ஞமூர்த்தியாகிய விஷ்ணுவை விவாகஞ் செய்து கொண்டவள். யக்ஞ மூர்த்தியை உடன் பிறந்தோன் என்பர். இவள் பதின்மரைப் பெற்றனள் என்பர்.

தக்ஷன்

1. தக்கனைக் காண்க, 2. (சூ.) பரதருக்குக் குமரன். 3. அஷ்ட மாநாகங்களில் ஒன்று. 4. வசுதேவன் தம்பியாகிய விருகன் குமரன். பிரமனது தக்ஷண பாகத்தில் வேகத்துடன் பிறந்ததால் இப்பெயர் பெற்றனன். 5. யாகத்தால் சிக்ஷிக்கப்பட்டுத் தவமேற்கொண்டு மூன்று கண் பெற்றன் (பார~சாங்.)

தக்ஷபிரமா

மகாசுவேதையின் தந்தையான அம்சனுக்கும், காதம்பரியின் தந்தையான சித்திரரதனுக்கும் பாட்டன்.

தக்ஷயக்ஞஹதமூர்த்தி

தக்ஷன் செய்த யாகத்தை. விக்கவந்த சிவமூர்த்தியின் திருவுருவம்.

தக்ஷிணபினாகினி

தென்பெண்ணை,

தக்ஷிணாக்னி

யஜமானனைத் தக்ஷிண திசையை அடைவிப்பதால் தக்ஷிணபாகத்தை யடைவதால் இப்பெயர் பெற்றது. இது ருத்ரர் என்று சொல்லப்படுகிறது இது கோபஸ்வபாவமுள்ளது. இது அந்தரிக்ஷமாகக் கருதப்படுகிறது. இது அர்த்தசந்திர வடிவுள்ளது. (பார்~அச்.)

தக்ஷிணாதேவி

1. யக்ஞனுக்குத் தேவி. இவள் தீக்ஷாரூபிணியாய் எவ்விடத்தும் பூசையேற்பவள். இவளில்லாத கர்மங்கள் நிஷ்பலமாம். இவள் மகாலக்ஷ்மியின் தேகத்திற் பிறந்து சகலகர்ம பூர்த்தியின் பொருட்டுப் பிரமனால் யக்ஞனுக்குக் கொடுக்கப்பட்டவள். (பிரம்மகைவர்த்தம்). 2. இவள் கோலோகத்தில் கிருஷ்ணனுடன் ரமித்திருந்த சுசீலாதேவி. இவள் கிருஷ்ணனது வலப்பாகத்தில் இருக்கக் கண்ட ராதை இவளைக் கண்டு கோபித்து இனிக் கோலோகத்திருப் பையாயின் நீ பஸ்பமாக எனச் சபித்தனள். சுசீலை பூலோகம் வந்து தவமியற்றினள், அப்போது தேவர்கள் ஒரு பெரிய யாகத்தைச் செய்து பலமடையாமற் போயினர். அப்போது தேவர்கள் பிரமனிடம் முறையிடப் பிரமன் கிருஷ்ணனைத் தியானிக்கக் கிருஷ்ணன் மகாலக்ஷ்மியிடமிருந்து மானுஷலக்ஷமியைப் பிரித்தெடுத்துப் பிரமனுக்குத் தக்ஷிணையாகக் கொடுத்தார். அவளைப் பிரமன் யக்ஞமூர்த்திக்கு மனைவியாக்கினன், அவள் சர்வகர்மபலனாகப் பிள்ளையைப் பெற்றாள். இவளைச் சர்வகர் மங்களுக்கும் தக்ஷிணையாகக் கொடுக்கின் எல்லாப் பலன்களையு மடைவர். துணையில்லாமல் செய்யும் யாகாதிகிருத்ய பலன் பலிச்சக்ரவர்த் தியை அடையும்படி வாமனரால் பலிக்கு வரமளிக்கப்பட்டது. (தேவி~பாக.)

தக்ஷிணாமூர்த்தி

1. சநகர் முதலிய முனிவர்க்கு உண்மை உபதேசிக்க எழுந்தருளிய சிவ மூர்த்தியின் திருவுரு. இந்தத் தக்ஷிணாமூர்த்தம் யோக தஷிணாமூர்த்தம், வீணாதக்ஷிணாமூர்த்தம் எனப்படும். 2. திருஆவடுதுறை மடத்தைச் சார்ந்த ஒரு தம்பிரான் சுவாமிகள். இவர் செய்த நூல்கள் தசகாரியம், உபதேசப் பஃறொடை,

தக்ஷேச்வரம்

குருக்ஷேத்திரத்தில் உள்ள சிவத்தலம். (பிரகன்னாரதீய புராணம்.)

தங்கபதி

உக்ரசேநன் குமரி.

தங்கால்

இது பாண்டி நாட்டுள்ள ஊர்களுளொன்று.

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

செங்கண்ணனெனப் பலருளராதலின் அவரின் இவர் வேறென்பது தெரிய “ஊரும் பெயருழடைத் தொழிற் கருவியும், யாருஞ்சார்த்தியவை யவைபெறுமே” (தொல். பொருள். 630) என்ற விதிப்படி ஊரும் குலழம் கூட்டித் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனெனப்பட்டார். தங்கால் என்பது திருத்தண்காலென இக் காலத்து வழங்கப்படுகிறது; இது ஸ்ரீவில்லிபுத்தூருக் கருகிலுள்ள தொரு விஷ்ணுத் தலம். ஆத்திரேயன்: ஆத்திரேய கோத்திரத்துப் பிறந்தவன். எனவே இவர் அந்தணர் மாபினராவர். முகம் புகுகிளவி பாடவல்லவருள் இவருமொருவர்; குறிஞ்சித்திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடிய உள்ளுறை வியப்புடையது. இவர் பாடியது நற். 386ம் பாட்டு,

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

பொற்கொல்லனென்றமை யானே இவர் கம்மாளரென்பது வெளிப்படை, ஊர் முற்கூறிய திருத்தண்காலே. அகம் முதலாய சில எடுகளிலும் புறத்திலும் பொற் கொல் லனென்பது பிறழ்ந்து பூட் கொல்லனென்றும் பூட் கொற்றனென்றும் எழுதப்பட்டுள்ளது. இஃது ஏடெழுது வோரால் நேர்ந்தவழு. பூட்கொல்ல னென்பது பொருள் பொருந்தாமையால் பூட்கோலவன் (பூண்கட்டிய தடிக்கொம்புடையவன்) எனத்திருத்தப்பட்டது போலும். பூட் கொற்றனை முடக்கொற்றனென்று திருத்தவுமாயிற்று. (பூட்கொல்லன். பூண் செய்யும் கொல்லன். அஃதாவது பணித்தட்டான் என்று பொருள் படலாம்.) இவர் பாடலிற் சிலவற்றிலே தமது மரபைப் “பொன்செய் கம்மியன் சைவினை கடுப்ப” (நற் 313) எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். மதுரைப் பொற் கொல்லன் வெண்ணாகன என ஒருவர் அகத்திற் காணப்படுகிறார். திருத்தண் காலிலிருந்த இவர் மதுரைக்குச் சங்கமேறி அங்கு, வைகியத் னால் மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனெனப் பட்டாரோ அறியக் கூட வில்லை. ஆயினும் மதுரையை நீங்கித் தங்காலென்ற தளவே இவர் பாடல் கணக்கிடப்படுகிறது. இவர் குறிஞ்சியையும் பாலையையும் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 313 ஆம் பாடலொன்றும் குறுந்தொகையில் ஒன்றும் அகத்தில் இரண்டும் புறத்திலொன்றுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

தங்கால் முடக்கொற்றனார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.)

தங்கால்பூட்கோவலனார்

ஒரு செந்தமிழ்க் கவி, கடைச்சங்கமருவியவர். கோவனர் என்ப. (புற. நா.)

தசகாரியம்

1, தத்வரூபம், தத்துவ தரிசனம், தத்வசுத்தி, ஆத்மரூபம், ஆத்மதரிசனம், ஆத்மசுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம். 2. தத்துவரூபம்: (36) தத்வங்களின் தொழிலைத் தனக்கு வேறாயறிதல். தத்வ தரிசனம்: தத்வங்களைச் சடமென அறிந்து நீங்குதல். தத்வசுத்தி: தத்வங்களைச் சிவ ஞானத்தால் தனக்கு அன்னியமாக்காணல், ஆத்மரூபமாவது: மூவகை மலங்களுநீங்கி ஆத்மஞானமெனும் அறிவே வடிவென அறிதல், ஆத்மதரிசனமாவது: தனக் கொரு செய்தியுமில்லையென்றறிந்து சிவன் செயலென நிற்றல், ஆத்மசுத்தியாவது: பெத்தத்தினும் முத்தியினும் சிவன் உபக ரிக்கிறானென்று தற்சுதந்தரமற்றுச் சிவஞானத் தழுந்தி நிற்றல், சிவரூபமாவது: ஆணவ மலத்திலழுந்திக் கிடக்கும் ஆன்மாவைச் சிவன் பஞ்சகிருத்தியஞ் செய்து மலங்களை நீக்கி மோக்ஷத்தில் விடுவன் என் றறிதல், சிவதரிசனமாவது: சிவன் செய்யும் பஞ்சகிருத்யத்தை ஆன்மா செய்யான் என்றறிந்து ஆன்மாவைத் தெரிசிப்பது. சிவபோகமாவது: சிவசத்தி செய்யுங் கிருத்தியங்க எனைத்தும் சிவனுக்குச் சற்றுமிலை யென்றறிந்து சிவசத்தியை யன்றித் தனக்கும் பிறர்க்கும் செய்தி யிலையென்று தெரிந்து திருவருளிலழுந்தல். சிவபோகமாவது சிவத்தோடிரண்டறக் கலந்து சிவாநந்தத்தை அனுபவித்தழுந்தல்,

தசநாடி

இடைகலை, பிங்கலை, சுழுழனை, காந்தாரி, அத்தி, சிகுவை, அலம்புடை, சங்குனி, வைரவன், குருதை என்பன.

தசனோற்பவரோகம்

பிள்ளைகளுக்குப் பல் முளைக்கும்போது உண்டாம் ரோகம், இதனால் பேதி அற்பசுரம், மயக்கம், தாகம் முழதலியவுண்டாம். (ஜீவ)

தசபார்மிதை

தானம், சீலம், பொறை, நிஷ்கர்மம், பிரக்கனை, வீர்யம், சத்தியம், துணிவு, மயித்ரி, பிதாகம், (பௌத்தம்.)

தசமிவிரதம்

தசஹாதசமி விரதம்; இது ஆனி மாத சுக்கிலபக்ஷ தசமியில் அநுஷ்டிப்பது. இதுஸம்வச்சாத்தின் முகமாகக் கூறப்பட்டிருக் கிறது. இத்தினத்தில் ஒருநதியை யடைந்து ஸ்நானதானாதிகள் செய்து நியமத்துடனிருப்பவர் பத்துவித பாபங்களிலிருந்து நீங்குவர். ஆதலால் இதற்குத் தசஹாதசமி யென்று பெயர்.

தசமுகன்

1. இராவணனுக்கு ஒரு பெயர். 2. சண்ழக சேதாவீரன். 3. சிங்கழகாசுரனுடைய படைவீரன் சிங்கனென்னும் பூதனால் மாண்டவன்.

தசரதன்

1. இவன் சூரியவம்சத்து அஜன் புத்திரன், இவன் தேவியர் கௌசலை, சுமித்திரை, கைகேசி. 2. இவன் தேவர் வேண்டுகோளால் கைகேசி தேர் நடத்தச் சென்று அசுரத் தலைவனாகிய சம்பரனைக் கொன்றவன். 3. இவன் அரசாளுகையில் சநி உரோகணிசகடையிற் பிரவேசித்தலறிந்த கணிதர் இவனிடம், நாடு பன்னிரண்டு வருடம் மழையிலாது வற்கடமாமெனக் கூறக் கேட்டுச் சநிபகவானிடஞ் சென்று யுத்தஞ் செய்து இனி எந்தக்காலத்தும் உரோகணிசகடையிற் போகாதபடி வரம் தாப பெற்று 60,000 வருஷம் அரசு புரிந்தவன். 4. இவன் குமரியாகிய சாந்தையை உரோமபதன் சுவீகாரமாக வேண்டிக் கலைக்கோட்டு முனிக் களித்தனன், 5. இவன் ஒருமுறை வேட்டைமேற் சென்று இருளில் ஒரு தடாகத்தரு கிருந்தனன். அவ்விடம் கண்ணில்லாத தந்தையின் தாகம் தணிக்கவந்த முனிச் சிறுவனை யானையென்று அம்பெய்து அருகில் வந்து கண்டு அஞ்சி அக்குமரனது வரலாறு அறிந்து கண்ணில்லாத முனிவரைக் கண்டு நடந்ததைக் கூறினன். அரசன் அறியாது செய்ததைப் பொறுக்க என வேண்டியதால் முனிவர் விசனழற்று உயிர் நீங்குகையில் யான் புத்திர சோபத்தால் உயிர் நீங்குமாறு நீயும் புத்திர சோபத்தால் உயிர் நீங்குக எனச் சாபமேற்றவன். 6. இவன் தனக்குப் புத்திரரிலாமையால் உரோமபதனிடமிருந்த மலைக்கோட்டு முனிவரைக்கொண்டு அசவமேத மியற்றிப் புத்திரகாமேஷ்டியுஞ் செய்ய அதினின்று, பூதந்தோன்றிப் பாயச மளித்து மறைந்தது. அப்பாயசத்தில் ஆசாரியர் சொற்படி பாதிகூறு மூத்த மனைவியாகிய கௌசலைக்கும், சிறிது சுமித்திரைக்கும், சிறிது கைகேசிக்குந் தந்து மிகுதியை மீண்டும் சுமித்திரைக் களித்தனன். இதனால் அம்மூவரும் நான்கு குமரரைப் பெற்றனர் 7. ஒருமுறை வசிட்டராச்சிர மத்தில் துருவாசர் வர அவரை நோக்கி எம்மக்கள் ஆயுளுந் திறலும் கூறுக எனக் கேட்டனன். துருவாசர், பிருகு மனைவியை யொறுத்ததால் அவரால் உன் மனைவியைப் பிரிக என்ற சாபப்படி இவ்வவதாரத்தில் உன் புத்திரருள் மூத்தவன் அனுபவிப்பன் எனக் கூறக் கேட்டவன். வளர்ந்த குமாரருக்கு இராம, பரத, இலக்குமண, சத்துருக்கர் எனப் பெயரிட்டுக் கல்வி முதலிய கற்பித்து விச்வாமித்திரர் இராம இலக்குமணரை யாசிக்க அவர்க்குப் பின் அனுப்பினவன். இராமமூர்த்தியின் மணச்செய்தி கேட்டு மிதிலை சென்று குமரருடன் அயோத்தி மீளுகையில் வந்தெதிர்த்த பரசிராமரை இராமருடன் யுத்தஞ் செய்யாதிருக்க வேண்டிப் பரசிராமன் தோற்கக் கண்டு களித்துக் குமரருடன் அயோத்தியடைந்து இராமனுக்கு முடிசூட எண்ணி ஆயத்தப்படுகையில் கைகேசி செய்த வஞ்சனையாலும் இருடியின் சாபத்தாலும் உயிர் நீங்கப் பெற்றவன். 8. இராவண வதத்திற்குப் பிறகு மௌனநிலை யடைந்த இராமரைத் தரிசித்துக் களித்துப் பரதனைத் தம்பியாகவும், கைகேசியைத் தாயாகவும் பெற வரங்கள் அளித்தவன். 9. இவன் எட்டுத் திக்கிலும் பூமி, ஆகாசத்திலும் செல்லும் ரதங்கள் பெற்றிருந்தமைபற்றித் தசரதன் என்று நாமம் பெற்றவன் என்பர். 10. இவன் சநியுடன் யுத்தஞ் செயப்புகக் கண்ட சூரியனிவனைச் சநியைப் பூசித்து அதனை நீக்கிக்கொள்ளக் கட்டளை செய்தனன். 11. ஒரு முறை தண்டகாரண்யத்தில் வேட்டைக்குச் சென்று இளைப்புடன் தன் சேனை முதலியவற்றைத் தூரத்திலிருத்தித் தான் ஒரு விருக்ஷத்தடியில் நித்திரை செய்தனன். அந்த மரத்தடியில் ஒரு புற்றிருந்தது. அந்தப் புற்றினைத் தசரதன் நித்திரை மயக்கத்தால் உதைக்க அப்புற்று உடைபட்டு அதிலிருந்து ஓர் அரவம் கோபத்துடன் நித்திரை செய்யும் தசரதனைக் கடிக்க வந்தது. இவை அனைத்தையும் ஓர் மரத்திலிருந்து பார்த்திருந்த சடாயு திடீரென்று பறந்து வந்து நாகத்தை மூக்காற் கௌவிக் கொத்திக் கொன்றனர். பக்ஷிராசனது வேகத்தால் நித்திரை தெளிந்த தசரதன் காலயமன் என்று எண்ணி வில்வினைக் கையிலேந்தச் சடாயு அரசனை அணுகி நடந்தவை கூறி அரசனுக்குக் கனியும் நீரம் உதவி இளைப்பைப் போக்கித் தனது வரலாறு கூறினன். இதனால் தசரதன் இது முதல் நீ எனக்குச் சகோதரனாக எனத் தழுவிக்கொண்டனன். புள்ளிருக்கு வேளூர்ப்புராணம். இவன் மந்திரிகள் திருஷ்டி, சயந்து, விஜயன், சித்தார்த்தன், அர்த்தசாதகன், அசோகன், மந்திரபாலன். (a) (சூ.) மூவகன் குமரன் அல்லது நாரி கவசன் குமரன், கல்மாஷபாதன் பேரன், விருத்தசருமன் தந்தை. (b) நவரதன் குமரன், இவன் குமரன் சகுனி. (c) தர்மரதன் குமரன், இவனுக்கு ரோமபதன் என்றும் பெயர்,

தசவர்க்கம்

1 வது கிருகமிருக்கிற ராசி வர்க்கம், 2 வது சூரிய சந்திரவோரை, 3 வது திரைக்காணம், 4 வது திரிம் சாங்கிசம், 5 வது சத்தமாம்சம், 6 வது நவாம்சம், 7 வது தசாம்சம், 8 வது துவத் சாம்சம், 9 வது கலாம்சம், 10 வது சஷ்டியாம்சம்.

தசவாயு

பிராணன், அபாநன், உதாதன், வியாதன், சமாகன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்.

தசாசுவன்

சூரியவம்சத்து அரசன் இக்ஷவாகு புத்திரன். மாகிஷ்மதி யாண்டவன். இவன் புத்திரன் மதிராஸ்வன்.

தசாச்சுவமேதம்

ஒரு தீர்த்தம்.

தசாயுத வடிவங்கள்

1. வஜரம்: புருஷாகாரமான பெருத்தவுரு, கடினம், மிக்க பலம் உள்ளது. 2. சக்தி: ஸ்ரீரூபம் சிவந்த நிறம் முக்கோண வடிவம். 3. தண்டம்: புருஷாகாரம் கறுத்த நிறம், சிவந்த கண் உடையது. 4. கட்கம்: புருஷரூபம், கருநிறம், கோபக்கண் உடையது, 5. பாசம்: ஏழுமுடிச்சு, வாலுடன் கூடிய சர்ப்பரூபம் புருஷவுருவம் உடையதாயிருக்கும். 6.த்வஜம்: புருஷவுருவம், மஞ்சள் நிறம், திறந்த வாய், பலமுள்ள கைகள் உடையதாயிருக்கும். 7. கதை: மஞ்சணிறம், கன்னிகையுரு, பெருத்த புருஷ்டம் உடையதாயிருப்பது. 8. திரிசூலம்: புருஷவுரு, தெய்வத்தன்மை, நீலநிறம் உடையது. 9. பத்மம்: புருஷவடிவம், தெய்வத்தன்மை, வெண்ணிறம், அழகுள்ள கண்கள் உடையது. 10. சக்கரம்: நூறு கிரண முடைய முகம், கறுத்த நிறம், புருஷ வடிவம் உடையது.

தசாயுதங்கள்

வச்ராயுதம்,த்வஜாயுதம், கதாயுதம், பத்மாயுதம், சக்ராயுதம், சக்தியாயுதம், தண்டாயுதம், வாளாயுதம், பாசாயுதம், திரிசூலாயுதம். (சைவபூஷ.)

தசாரணதேசம்

தசாரணை யென்னும் நதியால் சூழப்பட்ட தேசம்.

தசாருகன்

1. நிருவிருதி குமரன், இவன் குமரன் வியோமசுதன். 2. மதுரையிலிருந்த எதுகுல மன்னன். காசிராச புத்ரியாகிய கலாவதியை மணந்து அணையப்புக அவள் உனக்குத் தீக்ஷையின்று என மறுக்கக் கற்கருஷியிடம் சிவ தீக்ஷை பெற்று அவளைப் புணர்ந்து நற்கதி யடைந்தவன்.

தசார்ணவம்

1, A Part of the Chatis garh District. 2. காசிக்குத் தெற்கிலுள்ள தேசம்.

தசார்ணி

காந்தார அரசனாகிய அமலன் புத்திரி.

தசாவதாரவிரதம்

இது புரட்டாசி சுக்லதசமி (விஜயதசமி) யில் தசாவதார சுவர்ணபிரதிமை செய்வித்துப் பூசை முதலியன செய்து விரத மிருப்பது.

தச்சன்

அரசன், பார்ப்பினியைப் புணரப் பிறந்தவன். (அருணகிரிபுராணம்.)

தஞ்சன்

ஒரு அரக்கன் இவனை விஷ்ணு கொல்ல இவன், தன் பெயரால் இப்பட்டணம் இருக்கக் கேட்டனன். அவ்வாறு ஆகுக எனத் தஞ்சாவூர் எனப்பட்டது. (தஞ்சை~கெஜடி,)

தஞ்சாசூரன்

தஞ்சாவூராண்டு குலோத்துங்கனால் ஜெயிக்கப்பட்டவன்.

தஞ்சைவாணன்

1. இவனுக்கு வரோதயன், சந்திரன் என மறு பெயருண்டு, இவன் மதுரைக்குத் தஞ்சாக்கூரை ஆண்ட சிற்றரசன் எனவும், மதுரை, திருநெல்வேலிகளை ஆண்ட பாண்டியர்களுக்கு மந்திரியாயும், சாமந்தனாயு மிருந்தவனென்றும், வாண வம்சத்தவன் எனவும் கூறுவர். தஞ்சைவாணன் கோவையில் இப்பிரபுவை ‘வையை நாடன்’ வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் மீனவர் தம் செங்கோன் முறைமை செலுத்திய வாணன்”, “மாவலிவாணன்”, “மல்லையம் போர் வென்ற வாணன்’, ‘தென் னன்றன்னைப் பணிந்து குற்றேவல் செய்யாது சமர்க்கெழுந்த மன்னைப் புறங் கண்டவாணன்”, ” கன்னடர் மண் கொண்ட வாணன்”, “வேளாண்மரபு விளக்கிய வாணன்” எனக்கூறியிருத்தலால் தட இவன் மூவேந்தரும் அஞ்சத்தக்கவனாக இருந்தான் எனத் தெரிகிறது. தஞ்சை வாணன் கோவையில் வல்லத்துப்போர் செய்தவனாகக் கூறியிருத்தலால் இவன் காலம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டின் கடைக்காலமாகும். இவன் மீது பொய்யா மொழிப்புலவர் ஒரு கோவைப் பிரபந்தம் பாடி மேற்கூறியபடி புகழ்ந்தனர். பின்னும் தஞ்சைத் தெருவினை “திறையின் தட்டான கருவிகள் முறை கொணர்ந்து தேவரெலா மீன்ற (வி) றையு மிறை கிடக்கலாமா வறை கழற்கால், போர்வேந்தர் போர்மாளப் போர்வாளுறை கழித்த, தேர்வேந்தன் தஞ்சைத் தெரு” எனப் புகழ்ந்தனர். 2. சந்திர வாணனைக் காண்க,

தஞ்சைவாணன் கோவை

தஞ்சாக்கர் வாணன்மீது பொய்யாமொழிப் புலவராற் செய்யப்பட்ட கோவைப் பிரபந்தம்,

தடத்தலக்ஷணம்

பொதுலக்ஷணம்,

தடமித்தன்

கனகமாலையின் பிதா. (சிங்.)

தடாதகைப்பிராட்டியார்

மலையத்துவச பாண்டியன், புத்திரர் வேண்டித் தவமியற்றினன். இவனிடம் இந்திரன் தோன்றி யாகஞ்செய்ய எவினன். அவ்வகை யாகஞ் செய்கையில் யாகத்தில் பார்வதி பிராட்டியார் மூன்று முலையுடைய குழந்தையாகத் திரு அவதரித்தனர். அரசன் குமரியின் உறுப்பின் மிகுதியைப் பற்றிக் கவலுகையில் அசரீரி இக்குழந்தைக்குக் கணவன் தோன்றுகையில் ஒரு முலை மறையுமென அரசன் கேட்டுக் களிப்புடனிருந்தனன் தடாதகைப்பிராட்டியார் சகல கலைகளும் கற்றுத் தந்தை முடி புனைவிக்கப் புனைந்து செங்கோல் செலுத்தி உலகெலாம் வென்று பகைவரிடம் திறைகொண்டு கைலாயத்திற்கு யுத்தத்திற்குச் சென்று நந்தி முதலிய சிவகணத்தவருடன் யுத்தஞ் செய்து அவர்களைப் பின்னிடச் செய்தனள், இதனால் சிவமூர்த்தி யுத்தத்திற்கு வர அசரீரியின் சொற்படி ஒரு முலை மறைந்தது கண்டு நாணிச் சோமசுந்தரராக எழுந்தரு ளிய சிவமூர்த்தியை மணந்து குண்டோதரனுக்கு அன்னமிட்டு நாணி உக்கிர குமார பாண்டியனைப் பெற்றுத் திருமணம் புணர்த்தி இறைவருடன் திருக்கோயிலில் எழுந்தருளியவள். தாய் காஞ்சனமாலை.

தட்சன்

விருகனுக்குத் துருவாக்ஷியிடம் பிறந்தவன்.

தட்டான்

கம்மாள வேறுபாடு, பொன் வேலை செய்வோன்.

தட்டான் கருவிகள்

பட்டறைக்கட்டை பட்டறை, சுத்தி, கம்பீச்சு, கொறடு, சாமணம், ஊதுகுழல், நீர் கார், கும்பிடுசட்டி, கரி, உமி, திராசு, படிகட்டு, குன்றி மணி, அறம், ராவி, வாள், பர்மா, பிரஷ், தண்ணீர்த்தொட்டி, கரித்தொட்டி, பூட்டுசு, உருக்கு வார்க்கும் கல், மூசை, கதிர், உமித் தொட்டி, சுத்தி பட்டறை தேய்க்கும் கல், விளக்கு குழை, பித்தளை பிரஷ், பாஷாதிம்மை, பேராதிம்மை, மெட்டச்சு, கடியச்சு, வெட்டறம்பு, மணி தேய்க்கும் அச்சு, கரசாணை, கைசாணை, மெருபாளை முதலியன.

தட்டாரப்பூச்சி

வண்டினத்தைச் சேர்ந்தவை. மாம்சபக்ஷணி இது பறந்து ஆகாயத்திற் பறக்கும் சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்,

தண்டக நாட்டெல்லை

தென் திசைக்கண் கன்யாகுமரி, வட திசைக்கண் விந்தியம், கிழக்கு மேற்குக்கடல் எல்லையாகக் கொண்ட நாடு,

தண்டகன்

1. துரியோதனன் தம்பி. 2. ஒரு அரசன் திருக்காஞ்சியில் தவ மியற்றினவன். 3. சண்முக சேநாவீரன். 4. இக்ஷவாகுவின் புதல்வன் விந்தியத்திற்கும் சைவலத்திற்கும் இடையிலுள்ள நாட்டையாண்டவன். சுக்கிரன் புதல்வியாகிய அரசையை வலிதிற் புணர்ந்ததால் சபிக்கப்பட்டுத் தன்னாட்டில் கன்மாரி பொழிய அழிவெய்தினன். (சுக்~நீ.)

தண்டகபுரம்

தண்டகராசன் இத்தலத்து விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றினதால் காஞ்சிக்கு இவன் பெயரால் ஒரு பெயர் வந்தது.

தண்டகாரண்யம்

தண்டனைக் காண்க.

தண்டகேது

ஒரு க்ஷத்திரியன் தமிழ் நாட்டரசன் பாண்டியன். (பா~துரோ.)

தண்டதரன்

திருதராட்டிரன் புத்திரன்.

தண்டத்தலைவன்

குடிகள் அழிவெய்தாவாறு தண்டம் விதித்தல், மிக்கவன் கண் இன்மை, மிக்க இரக்க மின்மையாகிய குணங்களுடையான். (சுக்~நீ.)

தண்டநாதன்

திருதராட்டிரன் புத்திரன்.

தண்டன்

1. மகதநாட்டரசன். 2. (தண்டகன்) இக்ஷவாகுவின் குமரன், இவன் கொடியவனாய்த் தண்டத்திற் குட்படுவன் என அறிந்த தந்தையா விடப்பட்ட பெயர். விந்தியத்திற்கும் சைவலத்திற்கும் இடைநாட்டை யாண்டவன். பார்க்கவ புத்திரியாகிய அரசையை வலிதிற் புணர்ந்த காரணத்தால் சாபம் பெற்றான். இச்சாபத்தால் நாடு காடாகி மண்மாரி பொழியப் பார்க்கவரால் சாபமேற்றவன். 3, சண்முக சேநாவீரன். 4. சூரபதுமன் மந்திரி. 5. இவன் ஒரு அரசன், வேட்டைக்கு வந்து பார்க்கவ முனிவர் ஆச்சிரமத்தில் அம்முனி பத்தினி உபசரிக்கக் கண்டு மயல் கொண்டு கைப்பற்ற அதனைத் தருப்பைப் பொருட்டுக் காட்டிற்குப் போன முனிவர் கண்டு கோபித்து அரசனை அலி ஆகவும் விலக்காத மந்திரியை வேடனாகவும், சபித்தனர். இவன் மந்திரி சிந்துமேதன். இவ்வரசன் சாபம் கலிகாலனால் நீங்கிற்று.

தண்டபாணி

1. அகீநரன் குமரன், இவன் குமரன் க்ஷேமகன். 2. காசியிலுள்ள ஒரு தேவன். இவன் காசியில் தவம் புரிந்து சிவமூர்த்தியிடம் தண்டம் பெற்றுக் காசியின் வளங்கள் வெளி போகாது காத்திருக்கும் சந்நியாசி, 3. சுப்பிரமண்ய சுவாமிகளின் ஆசார்ய திருக்கோலத்துள் ஒன்று, 4. வாமனமூர்த்தியின் முதுகெலும்பைக் கொண்ட சிவாவசரக்கோலம்.

தண்டம்

இது, அரசனிடமிருந்து தீமை செய்வோரைத் தண்டிக்கும் தெய்வம். பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அரசனிடம் வைத்திருப்பது தண்டபுருஷன் என்பர். (மனு.)

தண்டலங்கிழவமகரஷிகோத்ரன்

காஞ்சியில் சோழன் சபையில் தலை வழக்கிட்டு கீர்த்தி பெற்றவன்.

தண்டாசுரன்

1. ஒரு அசுரன், இவன் நாரதரால் வயிற்றில் உபதேசிக்கப் பெற்றவன். சில்லிகையின் குமரன். இவன் பிரம விஷ்ணுக்களைத் தொந்தரை செய்யச் சிவமூர்த்தி இவனைச் சத்தியால் கொலை செய்வித்தனர். 2. (சூ.) துந்துமாரன் குமாரன், குமரன் அரியசுவன். இவனுக்குத் திருடாசுவன் எனவும் பெயர். சந்திராசுவன் எனவும் பெயர்.

தண்டாயினன்

காஞ்சியாண்ட அரசருள் ஒருவன்.

தண்டாரணி

பல தாபதர்கள் தங்கியிருக்கும் ஆச்சிரமங்களையுடையது. (பெ~கதை)

தண்டி

1. பிரமன் புத்ரரில் ஒருவன் திரிதன்வாவுக்குச் சிவநாம சங்கீர்த்தனஞ் செய்யக் கற்பித்து அச்வமேத பலமுண்டாக்கினவன். 2. கையில் மைக்கோல் கொண்டு ஜனங்கள் செய்யும் நன்மை தீமைகளைக் குறிக்கும் தேவன். 3. சூரியனுக்கு வாயிற் காவலன. 4. ஒரு தமிழாசிரியர். அலங்கார நூல் தமிழில் இயற்றியவர். அம்பிகாபதி புத்திரர் என்றுங் கூறுவர். தண்டியாசிரியர் எனவுங் கூறுவர். (தண்டியலங்காரம்.) 5. சத்தியால் கொல்லப்பட்ட அசுரன். 6. ஒரு மகருஷி, இவர் சத்தியவுலகத் திருந்தவர். இவர் சிவாநுக்ரகத்தால் பெருநூலாசிரியரானார். இவர் செய்த சாங்கிய நூலைப் பலர் அநுசரித்து நற்பதமடைந்தனர். சிவமகாபுராணம் 17. இவர் ஒரு ருஷி. கிருதயுகத்தில் (1000) சிவத்யானஞ் செய்து சாங்கிய சாஸ்திராதிகளைக் கண்டித்து வித்வாம்சராயினர். எக்காலத்தும் நீங்காத பக்தியையும் விரும்பினவர். (பா~அநுசா.)

தண்டினி

மணித்வீபத்தில் சக்ராலயத்தின் கீழ்த்திசையிலுள்ள கிருகத்தில் உள்ள சத்திகளில் ஒருத்தி. (சிவரஹ.)

தண்டியடிகள் நாயனார்

திருவாரூரில் திரு அவதரித்துப் பிறவிக் குருடராய்ச் சிவத்தொண்டு வழுவாமல் செய்துவரும் நாட்களில் கமலாலயமருங்கு, சமணர் மடம் நெருங்கித் தீர்த்தங் குறைவாயிருப்பதை யெண்ணியதைத் தோண்டி நீர்க் குறைநீக்க நீர்க்கரைக்கும் மேற் கரைக்குமாகத் தறி நட்டு அதில் கயிறு கட்டி அக்கயிறு கண்ணாக அந்தக் குளத்தைச் சீர்திருத்துகையில் சமணர் பொறாமல் நீர், இந்தப்படி செய்வதனால் செந்துக்கள் இறக்குமே உமக்கு நேத்திரமில்லாதது போல் நாங்கள் சொல்லும் அறம்கேட்கக் காதுமில்லையோ வென்று கூறி அவர் கட்டியிருந்த தறி, கூடை, மண்வெட்டி, முதலியவைகளைப் பிடுங்கி எறிந்தனர். நாயனார் அவர்களை நோக்கிச் சிவனருளால் எனக்குக் கண் தெரிந்தால் நீங்கள் என்ன செய்துகொள்ளுகிறீர்கள் என, நாங்கள் ஊரைவிட்டு ஓடி விடுகிறோம் என்றனர். நாயனார், சுவாமி சந்நிதியில் சென்று சமணர் கூறியதைக் கூறி முறையிட்டனர். சிவபெருமான், நாயனார் கனவில் எழுந்தருளி அன்பனே உன் கண் தெரிந்து சமணர் குருடராகக் காண்பாய் என்று, அரசனுக்கும் நாயனார் வழக்கைத் தீர்க்கக் கனவிற் பணித்து மறைந்தனர். விடிந்த பின் அரசன், நாயனாருடன் சமணரை வினவ அவர்கள் சம்மதித்தது கண்டு தீர்த்தக்கரை சென்றனன். நாயனார், நான் பரமசிவனுக்கு மெய்யடி யனானால் நான் கண் பெற்றுச் சமணர் கன்ணிழப்பர் என்று குளத்திலுள்ள நீரில் மூழ்கி எழுந்து கண் பெற்று நின்றனர். சமணர்கள் கண்ணிழந்தனர். இதனை அரசன் கண்டு வியந்து சமணரை ஊரைவிட்டகற்றினன். நாயனார் இவ்வகை தொண்டு செய்திருந்து முத்தியடைந்தனர். (பெ. புராணம்.)

தண்டியலங்காரம்

1. ஒரு அணியிலக்கணம். இது தண்டியாசிரியராற் செய்யப்பட்டது. இதற்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை செய்தனர். இது பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் மூன்று இயல்களையுடையது.

தண்டியின் உருவம்

இவர் திருக்கைலையின் தென்புறத்தில் பெரிய வயிறும் தொங்குகின்ற சிகையும், மைக் கூண்டும், எழுது கோலும் வைத்துக்கொண்டு ஜனங்கள் செய்கிற கன்மங்களுக்குச் சாக்ஷியாய் அந்தக் கன்மங்களை எழுதுகிறவராவர்.

தண்டிலேயன்

ரௌத்திராஸ்வன் புத்திரன்

தண்டீசர்

சண்டேசுர நாயனாருக்கு ஒரு பெயர்.

தண்டுலசாயி

திருதராட்டிரன் குமரன்.

தண்டுலபிரஸ்தகம்

ஜராஸந்தன் சிவபூசை செய்து இஷ்டசித்தியடைந்த இடம். (பார~சபா.)

தண்ணீர் வடியுமரம்

இவ்வகை மரங்கள் ஐரோப்பாவிலுள்ள ஸ்வ்ட்ஜர்லாண்டின் காடுகளிலுள்ளவை. இம்மரத்தை முதிர்ந்தபின் வெட்டினாலும், தொளைத்தாலும் இதிலிருந்து சுத்தமான தண்ணீர் ஏராள மாகச் சுரக்கின்றது என்பர்.

ததிபாண்டன்

ஒரு இடையன், கண்ணன் இவனிடம் ஒரு நாடகமாக அடைக்கலம் புக இந்த இடையன் இவரைத் தயிர்ப் பானையால் மறைத்தனன். பிறகு கிருஷ்ணமூாத்தி தம்மை விடக் கேட்க இடையன் எனக்கும் என்சாவிற்கும் மோக்ஷம் தரின் விடுவேனென்ன அவ்வகை இருவ ருக்கும் முத்திதரப் பெற்றவன். இவனைக் குயவன் என்பர் குலாலர்.

ததிமுகன்

1. கத்ருகுமரன், நாகன். 2. சுக்கிரீவனுக்கு அம்மான்; ஒரு வானரவீரன் மதுவனக்காவலன் அங்கதனிடம் அடிபட்டுச் சரண்புக்கவன்.

ததியக்கன்

அதர்வணன் புத்திரன்.

ததிவாகன்

1, அங்கன் குமரன். 2. ஓர் க்ஷத்திரியன் தவிதரன் புத்திரன்.

ததீசி

1. அதர்வ என்னும் ருஷிக்குச் சாந்தியிட முதித்த குமரர். இவர்க்குத் தத்தியங்கர் எனவும் பெயர். இவர்க்குக் குதிரைமுகம் என்று கூறுவர். மகாவிரத ஒழுக்கழடையவர், துவட்டாவிற்கு நாராயண கவசம் உபதேசித்தவர். இந்திரன், விருத்திரன் முதலிய அசுரரை வெல்ல இவரிடம்வந்து முன்பு தேவரும் அசுரரும் பாற்கடல் கடைகையில் இருதிறத்தவரும் ஆயுதங்களுடன் வர அவைகளை விஷ்ணு மூர்த்தி வாங்கி இம்முனிவரிடத்து வைத்தனர். அந்த ஆயுதங்களை நெடுநாள் இவர் வைத்திருந்தும் அவற்றை யாரும் கேளாததால் இவர் விழுங்கினர். அவைகள் திரண்டு இம்முனிவாது முதுகந் தண்டைச்சேர்ந்திருந்தன. அம்முதுகந்தண்டை இந்திரன் கேட்கத் தமது உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல் முதுகெலும்பு கொடுத்த கருணாமூர்த்தி. குபன் என்னும் அரசனை நண்புபூண்டு அவன் அரசர் பெரியர் என இவர் அந்தணர் பெரியார் என வாதிட்டு அரசனைமோத அரசன் வச்சிரத்தால் எறிய உடலறுந்து சுக்கிரனை நினைக்கச் சுக்கிரன் மிருதசஞ்சீவிரி மந்திரத்தால் உயிர்தரப்பெற்றுச் சிவபூசைசெய்து வச்சிரயாக்கை பெற்றுக் குபனை முடியிடர வுதைத்தனர். இதனால் குபனுக்கு விஷ்ணுமூர்த்தி பரிந்துவந்து சக்கரத்தையும் அனேக விஷ்ணுக்களையும் ஏவினர். இருடி அவ்விஷ்ணுவின் மாயைகளைத் தமது கட்டைவிரலில் உதித்த அனேக விஷ்ணுக்களையேவி மாற்றிச் சக்கரத்தைப் பின்னிடச்செய்து பல பாணங்களைத் தருப்பையி லாவாகித்துப் பிரயோகித்துப் பிரமன் வேண்டுகோளால் நிறுத்திக் குபனுக்கு அருள் புரிந்தவர். தக்கன் செய்த யாகத்திற்குச் சென்று அவனுக்குச் சிவமூர்த்தியின் சிறப்புக்களைக் கூறிச் சிவமூர்த்திக்கு அவிகொடுக்கப் போதித்தனர். அவன் இவரது சொற்களைக் கேளாததால் செய்யும் யாகமழியவும் அந்த யாகத்திற்கு வந்த தேவர்கள் மாளவும் வேதியர் இருபிறப்பாளராகத் தங்கள் நிலைதவறி வேறு தெய்வங்களைத் தொழுது முத்தியிழக்கவும் சபித்தவர். இவரது மற்றசரி தங்களை இந்திரனைக்காண்க. ஒருமுறை முனிவர்கள் வைகுண்டத்தை வாயினால் சிருட்டித்தனர். இதனால் திருமால் கோபித்தனர். இதைக்கண்ட ததீசி முனிவர் தமது உடலெல்லாம் வைகுண்டம் காட்டினர்’ (தீர்த்த கிரிபுராணம்). 2. சாரஸ்வதரைக் காண்க. 3. இவர் பிருகுவம்சத்தவராகிய துந்துமுகர் குமரர். இவருடன் சூர்யவம்சத்தரசனாகிய சையாதியின் குமரன் க்ஷபன் தனது தந்தையின் கட்டளையால் துந்துமுகரைச் சரணடைந்து வேதழதலிய சகல கலைகளையுங் கற்றுவருகின்ற நாட்களில் ததீசி க்ஷபனைநோக்கி நான் ஒரு காலத்தில் உன்னிடம் தனதான்ய பசுக்களை வேண்டி வருவேனாயின் தருவையோவென, அவ்வாராகுக வென்றனன். பின் க்ஷுபன் தன்னரசையடைந்து ராஜ்ய மாளுகையில் ததீசி செல்ல க்ஷபன் மறந்து பேசுதலறிந்து கோபித்தவராயுன் செல்வத்தினும் மிக்க செல்வத்தை நான் சிவபெருமானிடம் பெற்றுவருகிறேனென அவனை விட்டுச் சிவமூர்த்தியை யெண்ணித் தவம்புரிந்து பெற்றுத் தம் செல்வத் தைக் காணும்படி க்ஷபனுக்குக் கூற க்ஷபனும் முனிவரை வச்சிரத்தால் எறிந்து முனிவர் செல்வத்தைக் கண்டு அவ்வாறு பெற எண்ணி விஷ்ணுவை நோக்கித் தவம்புரிந்து செல்வங்களையும் அஸ்திரங்களையும் பெற்று முனிவரது வீறடக்க யுத்தத்திற்கு வந்து அஸ்திரங்களைப் பிரயோகிக்க முனிவர் தருப்பையை அபிமந்திரித்துச் சேனை முதலியவர்களைக் கொல்லவும் விஷ்ணு உதவி செய்ய வந்து சக்ரப்ர யோகஞ் செய்து, இளைத்து முனிவரை வேண்டிச் செல்ல அரசனும் அடங்கிப் பணிந்து சென்றனன். இவர் தேவி கர்க்க முனிவர் குமரியாகிய மித்ராணி. (சிவரஹ)

தத்தனேரி

திருவிளையாடலிற் கூறப்பெற்றுள்ள தத்தனென்னும் பாண்டியனுண்டாக்கிய ஊரென்று தெரிகின்றது. குதிரை வடிவமொழிந்த நரிகள் தத்திச் சென்ற இடமாதலின் தத்து நரியென்று முதலில் வழங்கிய பெயர். அப்பால் இங்கனம் ஆயிற்றென்று சொல்வதுமுண்டு; இவ்வூர் செவ்லூர்க்கு மேற்கேயுள்ளது. (திருவிளை)

தத்தன்

1. மெய்ப்பொருள் நாயனாருக்கு மந்திரி. நாயனாரைக் கொன்றவனைக் கொலை செயவெழுந்து நாயனார் தடுக்கச் சொற்கடவாது நின்றவன் 2. சீவகன் குமரருள் ஒருவன். 3. பராச ருஷியின் புத்ரன்.

தத்தாத்ரேயர்

1. அத்திரி குஷியின் புத்திரர். அத்திரி ருஷிக்கு அநசூயையிடம் அவதரித்து யோகத்திருக்க விரும்பிய போது இருடிச் சிறுவர் விடாது பின்பற்றுவதை யெண்ணி இவர்களை விட்டுத் தனித் திருக்க (100) வருஷம் சலத்தில் யோகஞ் செய்து கொண்டிருந்து அம் மடுவினின்றும் வெளிவருதையில் சிறுவர் விடாதது எண்ணி ஒரு அழகுள்ள பெண்ணுடன் வந்தனர். அதைக் கண்ட முனிச்சிறுவர் அவரிடம் வெறுப்புக் கொள்ளாதிருக்கவும் முனிவர், கள்ளருந்தல் முதலிய பஞ்சமகா பாதகஞ் செய்து வெறித்திருப்பவராய் அவர்களுக்குக் காட்ட இருடிச் சிறுவர்கள் விட்டு நீங்கினர். முனிவர், பற்றற்றவரா யோகத்திருந்தனர். இவ்வாறு இருக்கையில் தேவர்களுக்கும் சம்பராசுரனுக்கும் யுத்தம் நடந்தது. தேவர்கள், முனிவரிடம் தம் குறை கூறினர். முனிவர் என் கண்காண அசுரர் உங்களை வருத்துகையில் அசுரர் அழிவர் என்றனர். பின் சம்பராசுரன் யுத்தத்திற்கு வந்து தேவரை வருத்துகையில் தேவர் தத்தாத்திரேயரிருந்த ஆச்சிரமத்தில் ஒளிந்தனர். சம்பரன் முதலியோர் தத்தாத்திரேயரிடம் இருந்த இலக்ஷ்மியின் அவதாரமாகிய அவருடைய பத்தினியைக் கண்டு தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு தேவரை வருத்தாமல் ஆச்சிரமத்தை விட்டு (7) அடி சென்றனர். இலக்குமி அவரிடமிருந்து மறைந்தனள். முனிவர் தேவர்களை நோக்கி இலக்குமி அவர்களிடமிருந்து நீங்கினள். இனி அசுரர் உங்களுக்குத் தோற்பர். சென்று யுத்தஞ் செய்யுங்களெனக் கூறித் தேவர்க ளுக்கு வெற்றி தருவித்தவர். அத்திரி தவஞ் செய்கையில் விஷ்ணு தரிசனந் தந்து தம்மை அவருக்குத் தத்தஞ் செய்ததால் இப்பெயர் பெற்றனர். இவரால் யதுக்கள், ஏயாள், ஞானசம்பந்தத்தை யடைந்தனர். சகோதரர் சோமன், துர்வாசன், (பாகவதம்) 2. வேதங்களைப் பரவச் செய்தவர், பாண்டவர் முற்பிறப்பில் இவரை ஆதரித்து மறுபிறப்பில் சகல சாம்பிராச்சியமும் பெற்றனர். கார்த்தவீர்யார்ச்சுநன் இவரையடுத்து ஆயிரங் கைகளும் சகல சம்பத்தும் பெற்றனன். 3. புலருக்குப் பிரீதியிடம் பிறந்தவன்.

தத்தியங்கர்

தத்தாத்திரயருக்கு ஒரு பெயர்.

தத்துவதர்சி

பதின்மூன்று மன்வந்தரத்து ருஷி.

தத்துவப்பிரகாசர்

1. திருவொற்றியூர் ஞானப்பிரகாச தேசிகருக்கு மாணாக்கர். சிவஞான சித்தியாருக்குப் பரபசுவுரை இயற்றியவர். 2. சிற்றய்பல நாடிகளுக்கு மாணாக்கர். இவர் தத்துவப் பிரகாசமென்னும் சைவ சித்தாந்த சாத்திரஞ் செய்தவர்.

தத்துவம்

(96) ஆன்மதத்துவம் (24), நாடி (10), அவத்தை (5), மலம் (3), குணம் (3), மண்டலம் (3), பிணி (3), விகாரம் (8), ஆதாரம் (6), தாது (7), மரபு (10), கோசம் (5), வாயில் (9).

தத்துவராயர்

இவர் சோழநாட்டில் வீரையென்னும் ஊரில் பிறந்த வேதியர். இவர் உபயகவி. இவருடன் சகபாடியாயிருந்தவர் சுவரூபாநந்தர். இவ்விருவரும் சந்தியாசிகளாய் ஞானாசாரியரைத் தேட ஒருவர் தென்னாடும், மற்றவர் வடநாடும் செல்லப் புறப்படுகையில், அவ்விருவரும் நம்மில் யார் முதலில் ஆசாரியரைக் காண்கிறோமோ அவர்கள் மற்றவருக்கு ஆசாரியர் ஆகிறதென உடன்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர். தென்னாடு சென்ற சுவரூபாநந்தர் சிவப்பிரகாசரைத் தரிசித்து உண்மை யுணர்ந்தனர். முன் சொன்ன சங்கேதப்படி தத்துவராயர் இவர்க்கு மாணாக்கர் ஆயினர். இவர் செய்த நூல் தத்துவராயர் சரித்திரம் அல்லது பாடுதுறை, இவராற் சசிவர்ண போதமும் சசிவர்ணன் என்னும் மாணாக்கன் பொருட்டுச் செய்யப்பட்டது. இவர் கலிமடலும் ஈசுரகீதை பிரமகீதையும் செய்தனர்.

தத்தை

1. கண்ணப்ப நாயனார்க்குத் தாய். 2. சம்பன் பெண், இரண்யகசிபின் தேவி 3. பிரச்சோதனன் மகளாகிய வாசவத்ததை. (பெ. க.)

தத்புருஷகல்பம்

பிரமன் ஒரு காலத்துச் சிவபெருமானைத் தத்பரமாகத் தியானிக்க அப்போது தத்புருஷ வுருவாகத் தோன்றின கல்பம், (லிங்க~புரா)

தத்புருஷமூர்த்தி

இவர் மூன்று கண்கள், பொன்னிறம், மஞ்சள் பட்டு வஸ்திரம், கரத்தில் ஜபமாலை யுடையவர்.

தத்வப்ரகாசர்

1. இவரை ராயர் கூத்தனூர் அப்பன்வால் கோகிவர்கள் எப்படி யென்றபோது கூறியது. கட்டளைக்கலித்துறை “மன்கவிதரவும் பொழிற் கூத்தனூரப் பன்வாய் தலைமன், தன்கவி தெள்ளியபால் வாலகோகிலந் தானுரைத்த, நன்கவி பாலுக்கிடு சர்க்கரைக்கவி நாங்கள் சொல்லும், புன்கவியுப் பொடுகாய மென்றே சொல்லி போற்றுவரே” ஒட்டக்கூத்த னென்றொரு புலவன் வரவு கேட்டுச் சொல்லியது. பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர், முறியாரோ நின்ழதுகின் முள்ளைச் சிறுகவொரு, மட்டப்பேர் போதாதோ வாக்கிதுவே யானக்கால், ஒட்டக் கூத்தன் தானுனக்கு” ஒருவன் புடவை தரப் பார்த்துச் சொல்லியது. வெற்றிப் பாடுங் குணப்பாடும் வீரப்பாடு மொருகவியில், தெற்றிப் பாடவதுகண்டு சீனக்கரசர் துகிலீந்தார், பற்றிப் பார்க்கவதனூடே பலதேவேசர் வீற்றிருந்தார், சுற்றிப் பார்க்கப் பயப்பட்டுத் தூரவைத்துத் தொழு தோமே” உலோபரைப் பாடியது. ‘குரங்குமாய் நண்டு கட்டித் தேளுங் கொட்டிக், குடியாத மதுக்குடித்தே பேயுமேறி, இரங்வருங் காஞ்சொறியின் பொடியுந் தூவி, இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத், தருங்கருணை யில்லாத புல்லர் வாழ்வில், தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக், கருங்கை மதக்களிறேறிக் கழுவிலேறிக், காடேறி நாடேறித் திரிவார் கண்டீர்’ தீயோரைப் பாடியது. ”பாம்பு கடித்தா லதுவுமீட்க வல்லோம், பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம், வேம்பு கசப்பறக் கறியு மாக்க வல்லோம், விறல் வேழத்ததிகந் தந்தணிக்க வல்லோம், சாம் பொழுது திடமாகப் பேச வல்லோம், தரணியின் மேல் கல்லாத தொன்று மில்லை, தீம்பரை நல்லவராக்கிக் குணமுண்டாக் கத், திறம தறியாம னின்று திகைக்கின் றோமே” தத்வப் பிரகாசப்பண்டாரத்திற் கிலக்கணம் வருமோவெனக் கேட்டபோது பாடியது. “கவிகளாகத் திரியுங் கள்ளர்காள் நன்னூற், சுவடியிருந் தாவதென்ன சொல்வீர் குவலயத்துக், காட்டுக் கெரித்தநிலாக் கண்ணிரண்டு மில்லாதான், வீட்டுக் கெரித்த விளக்கு” 2. இவர் விஜய நகரத்தரசர் கிருஷ்ண தேவமகராயர் காலத்திருந்த ஒரு புலவர், இவர் சரிதம் ஒன்றுந் தெரியவில்லை. இவர் பண்டாரம் என்பர். இவர் திருவாரூர் கொடியிறங்காமற் றகைந்தது. மருவுபுகழ் கிட்ணமக ராயராணை, யரியவட மலையானாணை, திருவாரூர்ப், பாகற்கொடி யறும்பார் பாதந் திருவாணை, தியாகக் கொடி யிறக்காதே” கிருஷ்ண தேவராயருக்கு எழுதி விடுத்த பாட்டு, “ஊழி துலுக்கல்ல வொட்டியான் தானுமல்ல, வீழிதுலுக்கு வந்து மேலிட்டு வாழி, சிறந்த திருவாரூர்த் தியாகருடை பூசை, இறந்ததே கிட்ணராயர்” இது கேட்டு ராயர் பட்டர்களை மாற்றியபோது பாடியது. உண்ட வயிற்றிலு மிக்காந்த லிட்டதே, தொண்டரே வீழித்துலுக்கரே பண்டெல்லாம், அப்மவ லெள்ள திரசழந் தோசைகளும், சுப்புவதும் போச்சே கவிழ்ந்து விஜயநகாரத் தரசாது அதிகாரியாகிய சாளுவநாயகர் புலவரைப் படுத்துக் கொள்ளக் கூறிய போது பாடியது. மூட்டை கலம்புழுதி முக்கலஞ் சுத்தப்பாழ், வீட்டை விடுதியாய் விட்டாயே போட்ட தடுக்கெல்லாம் பீறல் தலையணையேல் வைக்கோல், படுக்கலாமோ சொல்லப்பா இதைக் கேட்டுத் திருத் தோணியப்பர் பாடியது.

தத்வவதி

ஒரு வேதியன், இவன் தேவி வம்சவதி, புத்திரப்பேறிலாது சிவபூசையால் புத்திரப்பேறு பெற்றவன்.

தநு

1. காசிபர் தேவியரில் ஒருத்தி, இவளிடம் விப்ரசித்தி, நமுசி, சங்கன், வருணன், பலோயன், விலோமன் முதலிய தாநவர் பிறந்தனர். 2. ஒரு காந்தருவன், தூலகேச ருஷியால் கபந்தனாகச் சபிக்கப்பட்டவன்.

தநுக்கிரகன்

திருதராட்டிரன் குமரன்.

தநுர்வேதம்

உபவேதம் நான்கனுள் ஒன்று.

தந்தகாதகன்

அரிச்சந்திரனை வெருட்ட விச்வாமித்திரனாலனுப்பப்பட்ட வேதாளம்.

தந்தன்

சண்ழகசேநா வீரன்.

தந்தமூலரோகங்கள்

இது பற்களின் வேரில் உண்ணுகின்ற ரசாதி வஸ்துகளின் பேதத்தால் சீதளவாய்வு வியாபிக்கும் போது பிறந்து ரோகத்தைத் தருவது. அது: 1. சிதாதரோகம், 2. உபகிருச ரோகம், 3. தந்தபுப்புட ரோகம், 4. தந்த வித்திரதி ரோகம், 5. தந்தசுஷிர ரோகம், 6. தந்தமகாசுஷர ரோகம், 7. அதிமாமிச ரோகம், 8. தந்தவிதர்ப்ப ரோகம், 9. வாததந்தமூல ரோகம், 10. பித்ததந்தமூல ரோகம், 11, சிலேஷ்ம தந்தமூல ரோகம், 12. திரிதோஷதந்த மூலரோகம், 13. க்ஷததந்தமூலரோகம் ஆக தந்தமூலரோகம் 13.

தந்தரோகங்கள்

10. தந்தரோகம் உண்ணுகின்ற ரசாதி வஸ்துக்களின் பேதத்தால் வாயினிடத்தில் சீதளவாய்வு வியாபிக்கும்போது பிறந்து உபத்திரவத்தைச் செய்யும். இதனால் பற்களில் உஷ்ண வஸ்துக்கள் படின் இதவும், சீதளவஸ்துகள் படின் வேதனையும் உண்டாம். அதனால் உண்டாகும் ரோகங்கள் 10, 1. தந்த தாளனரோகம், 2. தந்தஹரிஷரோகம், 3. தந்தபேதரோகம், 4. தந்தசலனரோகம், 5. தந்தகாராளரோகம், 6. அதிதர்த ரோகம், 7. தந்தசருக்காரா ரோகம், தந்தகபாலீகாரோகம், 9. தந்தசியாவரோகம், 10. தந்தபிரலூனரோகம், ஆக தந்த ரோகம் 10,

தந்தவக்கிரன்

1. கரூசதேசாதிபதி 2. ஒரு அசான். 3. விருத்தர்மாவிற்குச் சிருத்தேவாவிடம் ருஷியின் சாபத்தால் பிறந்தவன் 4. இடையெழு வள்ளல்களில் ஒருவன். 5. இவன் பூர்வம் விஷ்ணுமூர்த்தியின் துவாரபாலகன், குரோதகீர்த்தியின் குமரன், சால்வனுக்கும் சிசுபாலனுக்கும் தோழன். கிருஷ்ணன் அத்தை மைந்தன், இவன் கிருஷ்ணமூர்த்தியா லிறந்தான்.

தந்தாகிருஷ்டி

இவள் குழந்தைகள் உறங்குகையில் பல்கடிக்கச்செய்யும் தேவதை. இவளது குமரிகள் விஜல்பை, கலகை,

தந்தி

1, சுவர்க்கன் குமரன். 2. வெகு தூரத்தில் நடக்குஞ் செய்திகளை அடையாளங்களால் மின்சார ஆகர்ஷண சக்தியைக்கொண்டு கம்பிகளின் வாயிலாகத் தெரிவிக்கும் கருவி.

தந்திசயிலம்

ஒரு புண்ணியமலை,

தந்திரபாகை

ஒரு நதி, காச்மீரத் தருகிலுள்ளது.

தந்திரபாலன்

சகாதேவன் மச்சநாட்டில் ஒளித்து வசித்த காலத்தில் வைத்துக் கொண்ட பெயர்,

தந்திரம்

இது ஆகமம்; இது லௌகிக தந்திரம், வைதிகதந்திரம், ஆத்யாத்மிகம் அதிமார்க்கம், மந்திர முதல் பலவகை. இவை ஈசான தத்புருஷ அகோர, வாம, சத்யோஜாத முதலான மூர்த்த சதாசிவ மூர்த்தியால் கூறப்பட்டன. இவை சித்தாந்தம், காருடம், வாமம், பூத்தந்தரம், பைரவம் என 5 பேதம்.

தந்துக ஆகர்ஷணசக்தி

இது திரவப் பொருளைத் தனக்குள்ள துவாரங்களின் வழியாய் உரிஞ்சுஞ் செயலுள்ள சக்தி. (Capillary attraction).

தந்துநிறை

வாராலே கட்டின துடிகறங்க ஊரினுள்ளார் விரும்ப ஆனிரையை மன் நத்திடத்துச் செலுத்தியது. (பு~வெ.)

தந்துமான்

அக்னிவிசேடம்.

தந்துமாறன்

சங்கவருணரென்னும் நாகசரியாரால் பாடப்பட்டவன். புற. நா

தந்துவர்த்தன சோழன்

1. ஒரு சோழன். இவன் புத்திரப்பேறிலாது பவாநி கூடலை யடைந்து சங்குகன்னரால் தீர்த்தஸ்நான முதலியசெய்து இலந்தைக்கனி பெற்றுக் குலவர்த்தன சோழனைப் பெற்றான்.

தந்தை

(சந்.) புருகுமரனாகிய சனமேசயன் மனைவி.

தந்தையர்

(5) பிறப்பித்தோன், கற்பித்தோன், மணழடிப்பித்தோன், அன்னக்தந்தோன், ஆபத்திற்குதவினோன்.

தந்தையின் ஆணையைக்கடந்த துன்பமடைந்தோர்

யயாதியின் புதல்வர், விசுவாமித்ரரின் புதல்வர்.

தந்தோற்பவரோகம்

பாலரோகங்களில் ஒன்று. பிள்ளைகள் பஞ்சினூல் சரடு, கயிறு முதலியவற்றை விழுங்குதலால் உண்டாவது. இதனால் சுரம், பேதி, இருமல் முதலிய உண்டாம். (ஜீவ.)

தனகன்

பத்திரசெநகன் குமரன், இவன் குமரர் கிருதவீர்யன், கிருதாக்னி, கிருதகர்மா, கிருதோசா

தனகுத்தன்

திரிசிராப்பள்ளி வர்த்தகன், இவன் மனைவி பொருட்டுச் சிவமூர்த்தி தாயுருக்கொண்டு உதவித் தாயுமானத்திருநாமம் பெற்றனர்.

தனக்ஷயன்

ஒரு காந்துருவன், குபேரன் தனதில்லாளுடன் விளையாடிகொண்டிருக்க அத்தம்பதிகளைக் கண்டு அசுரனாகச் சாபமேற்றவன்.

தனசிரி

ஒரு சைநப்பெண், ஜம்புத்வீபத்துப் பரதக்ஷேத்ரத்து முருகச்சமெனும் நகரத்து ராஜா தனபாலன், அந்நகரத்து வைசியன் ஸ்ரீபாலன் இவன் தேவி தனஸ்ரீ இவர்களுக்குப் புத்ரன் ஜயத்சேநன், இவனுக்கிளையாள் ஸ்வர்ணமாலை, இவர்களுக்குக் கர்மகரனாய் வர்த்திப்பான் சீலதரன். ஸ்ரீபாலன் ஒரு வியாதியாலிறந்தான். தனஸ்ரீசீலதரனைக் கொண்டே கிருஷியாதி ஜீவனோபாயங்க ளெல்லாஞ் செய்வித்துச் செல்லா நின்ற காலத்து, தனச்சரி சீலதரனுடன் கூட ஏகாந்த பிரதேசத்திருந்து கிருககாரியங்களைப் பேசுவதைக் கண்டு ஜயத்சேநன் சகியாதவனாகி அரசனிடம் முறையிட அரசன் தனசரியை அழைப்பித்து உண்மை விசாரிக்கத் தனச்சரி அச்சத்தால் புகுந்தபடி உரைக்க அரசன் கோபித்து இவளை மூக்கரிவித்துச் சகட்டின் காலில் கட்டி யிழுப்பிக்க ஆஞ்ஞை பெற்றவள். (சைநகதை.)

தனஞ்சயன்

1. கத்ரு குமரன் நாகன். 2. (சூ.) பெரிகச் குமரன். 3. (ச.) சத்தியாயுசு குமரன். 4. சண்முக சேநாவீரன். 5. ஒரு அக்நி. 6. அருச்சுநன். 7. காசியில் தாயின் எலும்பை விடச் சென்று பொருளென்று கள்ளரிடம் பறி கொடுத்துத் தான் மாத்திரஞ் சென்று ஆடிய வணிகன். 8. தனஞ்சய மென்னும் வடநூல் இயற்றிய சைநன். 9. ஒரு வணிகன, குலசேகரபாண்டிய னைக் காண்க.

தனஞ்சயன் வடிவம்

பொற்றாமரையிற் பாண்டியன் படித்துறையிற் கிழக்குத் தூணிலுள்ள வடிவம் தனஞ்சயனென்பவன் இத்தலத்தை முதலிற் கண்டு, மணலூரிலிருந்த குலசேகர பாண்டியனுக்கு இத்தல விசேடத்தைத் தெரிவித்த வணிகன். (திருவிளை. திருநகர)

தனதத்தன்

1. தருமதத்தனைக் காண்க. 2. விண்டுதத் தன் குமரன், இவன் வாம தேவமுனிவரிடம் உபதேசம் பெற்றுச் சிவபூசை செய்து யமபுரஞ் சென்று மீண்டும் உயிர்பெற்று முத்தியடைந்தவன். 3. புனிதவதியாரின் தந்தை.

தனதேவன்

இவன் ஒரு சைவைசியன், புண்டரீக நகரத்து ஜினதேவன் கப்பல் யாத்திரை வர்த்தகத்தின் பொருட்டுத் தன் தேவனைத் துணையாக் கொண்டு அவனுக்கு (1,000) பொன் சரக்கு வாங்கக் கடன் கொடுத்தான். தனதேவன் கப்பல் வர்த்தகம் நடத்தி அதில் அவனுக்குக் கிடைத்த (10,000) பொன்னில் சினதேவனிடம் வாங்கிய ஆயிரம் பொன்னும் லாபம் உள்பட (1,500) பொன் கப்பற் கூலி (500) பொன்னும் ஆக (2000) பொன்னைச் சினதேவனுக்குக் கொடுத்து மிஞ்சிய (8000) பொன்னைத் தான் எடுத்துக்கொண்டான். இதனால் பொறாமை கொண்ட ஜினதேவன் அரசனிடம் கப்பலில் கிடைத்த பொருளனைத்தும் தன்னைச் சேரவேண்டு மென அரசனுக்கு இரண்டு மாணிக்கங்களைக் கொடுத்து நீதிக்கழைப்பிக்க அரசன் தனதேவனை வருவித்துச் சாக்ஷியில்லாமையால் இருவரையும் துலாபாரத்து நிறுப்பித்து மூன்று நாட்கள் உபவாசமிருக்கச் செய்து சினதேவனே அசத்தியனென்றறிந்து தனதேவனுக்கே பொருளனைத் தையும் கொடுப்பிக்கத் தனதேவன் (8000) பொன்னல் கொள்ளேன் என அதனைக் கொடுத்து ஜினதேவன் பொன்னனைத்தையும் தனதாக்கிச் சினதேவனைத் தேசாந்தரம் செல்லும்படி கட்டளையிடத் தனதேவன் வருந்தி என்னையே அவ்வாறு செய்கவென அரசன் அதிசயித்துத் தனதேவனுக்கு 200,00 பொன்னும் ஆடை முதலியவுங் கொடுத்துச் சம்மானம் செய்வித்துத் தனதேவன் வேண்டு கோளால் சினதேவனை மன்னித்தான் என்பது (சைந் கதை).

தனபதி

1. பதுமைக்குப் பிதா. 2. ஒரு வணிகர், இவர் தேவர் சுசீலை, இவர் அதிக திரவியம் சம்பாதித்துத் தமக்குப் புத்திரர் இல்லாமையால் தங்கை பிள்ளையை வளர்த்து வருகையில் தங்கை தன்பிள்ளையால் நீங்கள் பெருவாழ்வடைந்தீர் என்று ஏசினள். இதனால் விசனமடைந்து இருவரும் இனிவரும் பிறப்பிலாவது புத்திரப்பேறடையச் செல்வங்களை மருமகனாகிய தங்கையின் குமரனிடம் ஒப்புவித்துத் தவஞ்செய்யச் சென்றனர். இதனையறிந்த தாயத்தார் மருமகனிடம் இருந்த பொருள்களைப் பறித்துக் கொள்ளத் தனபதி வணிகரின் தங்கை, சொக்கரைத் துதித்தனள். சொக்கர் கனவிற்றோன்றி அம்மே, நீ தனபதியின் தாயத்தாரை அரசனாணையிட்டு அம்பலமேற்று நாம் உன் பொருளை வாங்கித் தருகிறோம் என்றனர். இவள் விடிந்து அவ்வாறு செய்து அவர்களைக் கூட்டிக் கொண்டு அம்பலமேறினள். சொக்கர் மாமனைப்போல் வந்து சாதி முதலிய கூறிப்பொருளை வாங்கித்தந்தனர். (திருவிளை). 3. மதுரையிலிருந்த வணிகர், தேவி குணசாலினி மூங்கைப் பிள்ளையாருக்குத் தந்தை.

தனபாலன்

1. பதுமுகன் தந்தை 2. ஒரு வணிகன்,மிளகுப் பொதி போட்டுக் கொண்டு திருவிரிஞ்சை நகருக்கருகில் வருகையில் பொழுதுபோனது கண்டு சிவமூர்த்தியை வழித்துணயாயின் முளகு பொதி தருகிறேனென்று வேண்டினன். அவ்வகையே சிவமூர்த்தி இவன் காஞ்சிநகர் போமளவும் வழித்துணையாய் மறைந்தனர். பிறகு கள்ளர் மறிக்க வழித்துணை வந்தோர் கள்ளரைத் துரத்தி மறைந்தனர். வணிகன் சொன்னது மறந்து முழுதும் விற்க வாங்கியவர் மிளகு முழுதும் பயறாயின. அதை வாங்கியவர் மீண்டும் வணிகனிடம் கொடுப்ப வணிகன் மிளகுப்பொதியை சிவமூர்த்தி சொற்படி அடியவர் களித்துக் களித்திருந்தவன். இத்தலத்தில் சிவமூர்த்திக்கு மார்க்கசகாயத் திருநாமம். (திருவிரிஞ்சை புராணம்) 3. குபேரனுக்கு மந்திரி. இவன் கிருதாசியெனும் வேசியின்பத்தில் மூழ்கிக் குபேரன் சபைக்குச் செல்லாததால் யானையாகச் சாபம்டைந்து திரிந்து வேதாரண்ய தீர்த்தம் படிந்து பவித்ரமானவன் (வேதாரண்ய புராணம்)

தனயித்துருக்கன்

வித்யோதனன் குமரன்.

தனஸ் ஸங்கிராந்தி

சங்கிராந்தி நாளில் ஒரு கலசத்தில் தீர்த்தம் நிறைத்துச் சுவர்ணத்தில் சூர்யப் பிரதிமை செய்வித்துக் கலசத்தில் சூரியனைப் பூஜித்து வேதியர்க்கு அன்னமளித்துத் தானஞ் செய்வது.

தனாசாடர்

இவர் ஒரு அரிபக்தர். இவர் ஏழு வயதாக இருக்கையில் இவர் வீட்டினைச் சில பாகவதரடைந்து சாளகிராம பூசை செய்கையில் இவர் கண்டு அவரை நோக்கித் தானும் அவ்வாறு பூசை செய்ய வேண்ட இவர்கள் இவன் இளையனென்று ஒரு கல்லினை இவரிடம் கொடுத்துச் செல்லப் பக்தர் அதனைப்பூசித்து தாம் கொள்ளும் உணவை நிவேதித்து வருவர். ஒருநாள் ஆடுமாடுகளை மேய்த்துவருகையில் தமது பெருமாளைப் பூசித்துக் கட்டமுதை நிவேதுதுண்டனர். மற்றொரு தினம் கழனியில் நெல் விதைக்கக் கொண்டுசெல்கையில் அரிதாசர் பசித்துவரத் தாம் கொண்ட நெல்லை அவர்களுக்கு அமுது செய்திட்டனுப்பினர். இவ்வாறு விதைக்க விதையிலாது பாகவதரை அமுது செய்வித்து வருகையில் அயலார் நிந்திக்கப் பெருமாள் விதையிலாது கழனியில் பெருவிளைவு செய்விக்கக் கண்ட அயலார் இவர் அரிபக்தர் என்று அஞ்சி அன்பு பாராட்ட தாசரும் பெருமாளைப் பூசித்து வந்தனர்.

தனாதிகாரி

கொடைக்குணம், அவாவிண்மை, பிறர்குணம் அறிதல், மடியிண்மை, அருள், இன்சொல், தானத்திற்குத் தக்க வரையறிதல், வணக்கம், இறப்போர் முகத்தை வேறுபடச் செய்யாமை, தான் கவர்ந்து கொள்ளாமை ஆகிய இக்குணச்செயல்களை வாய்ந்தவன் (சுக்~நீ)

தனாயு

1. தட்சப்பிரஜாபதியின் புத்திரர் 2. கசியபன் தேவி.

தனிகன்

தூத்தமன் குமரன், கார்த்தவீர்யார்ச்சுனன் பேரன்

தனிச்சயம்

இது பாண்டியன் இந்திரனைத் தனித்து நின்று செயித்த இடம்; மதுரைக்கு மேற்கே உள்ளது. முருகக்கடவுளின் ஆலயத்தை உடையது. “ஐயங்கோட்டை தனிச்சயம்” என வழங்கும். (திருவிலையாடல்)

தனித்திருக்கலாகா இடங்கள்

தாயாயினிம், உடன்பிறந்தாலாயினும், மகளாயினும் தனித்திருக்கின் அந்த இடத்தில் ஆண்மகன் தனித்திருத்தல் ஆகாது. புலந்களை அடக்கலரிதாத்லால் என்பர் (ஆசாரக்கோவை)

தனிமகனார்

இவர் பாடலுள் ” பாழ்காத்திருந்த தனிமகன் போன்றே”என உவமைக் கூறிய அருந்தொடர் மொழியே இவர்க்குரியவையாகி வழங்கலாயிற்று. இயற்பெயர் புலப்படவில்லை. பாலைத்திணையை புணைந்து பாடியுள்ளார். என்நெஞ்சம் அவர்பாற் சென்றொழிந்தது. உடம்பு மாத்திரம் பாழ் காத்திருந்த தனி மகன்போல் இங்கு இராநின்ற தெனத் தலைவி கூற்றாக வியக்குமாறு கூறியுள்ளார். இவர் பாடியது (நற் 153ம் பாட்டு)

தனிஷ்டாபஞ்சமி

நட்சத்திரங் காண்க.

தனு

ஒரு அசுரன் இவனுக்கு ரம்பன், கரம்பன் என்பவர் குமரர். இவர்களிருவரும் புத்திரப்பேறு வேண்டிப் பஞ்சந்த மெனும் நதிக்கரையில் தவஞ் செய்கையில் கரம்பன் செய்யுந் தவத்தினை யாற்றாது இந்திரன் முதலையாய் அவனை ஆற்றில் இழுத்துக் கொன்றனன். இவனிறந்ததை யறிந்த ரம்பன் தன் தலையை அரியச் சிகையைப் பிடித்து வாளெடுக் கையில் அக்நிதேவன் பிரத்யக்ஷமாய் என்ன வேண்டுமென்ன உலகம் வணங்கத்தக்க ஒரு புத்ரன் வேண்டுமென்றனன். அப்படியே ஆகுக என்று வரந்தந்து சென்றனன், மற்ற சரித்தித்தை மகிஷனைக் காண்க. (தேவீ~பா.)

தனுக்கோடி தீர்த்தம்

இராமமூர்த்தி சிவபூசை செய்யும்படி தமது வில்லின் நுனியால் கண்ட தீர்த்தம். (சேதுபுராணம்).

தனுத்தரன்

கனகவிசயருக்கு நட்பாளனாகிய அரசன். (சிலப்பதிகாரம்).

தனுஸ் ஸங்கிராந்தி

தனுர் மாசத்தில் உண்டாகுஞ் சங்கிராந்தி. இதில் சூர்யனைச் கலசத்தில் ஆவாகித்துப் பூஜித்துப் பிராமணர்களுக்கு அன்னாதிகள் அளிப்பது.

தனேச்வரன்

ஒரு வேதியன் மகா பாபி. இவன் தனேச்வரத்தில், தீர்த்த ஸ்நானம் செய்து கார்த்திகை விரதம் அனுஷ்டித்துப் பாபநீக்க மடைந்தவன். (பதுமபுராணம்)

தன்குணமிகையணி

அஃதாவது, மற்றொன்றன் சார்பினாலே தனதியற்கைக் குண மிகுதலாம். இதனை வடநூலார் அநுகுணாவங்கார மென்பர்.

தன்னை வேட்டல்

1 பகையைச் சீக்கும் ஒளிநெடு வேலினையுடைய கொழுநனைக் காண வேண்டி அவன் பட்ட போர்க்களத்துள் அழகிய ஆபரணத்தையுடைய மனையாள் போயினதும் அத்துறையேயாம். (புறவெண்பா.) 2. தமது வேந்தன் விசும்பைச் சேர்ந்தானாக, வெய்ய மாறுபாட்டை யுடையானொரு வீரன் உயிரை ஆகுதிபண்ணியது. (புறவெண்பா.)

தன்மசயன்

மனோசயனைக் காண்க.

தன்மநிட்டை

இவள் முன் பிறப்பில் ஒரு புலைச்சி. பசுவிற்கு நீர் அருத்திச் சிவாலயத்தில் பிராட்டியின் திரவியத்தைக் கவர்ந்ததால் பாண்டி நாட்டில் விருகன் எனும் அரசனுக்குக் குமரியாய்ப் பிறந்து தந்தை, நாடு முதலிய இழப்பக் காட்டில் அலைந்து புண்ணிய தீர்த்தக்கரைப்பாங்கர் தேவியைப் பூசைசெய்து பல வரங்களைப் பெற்றவள்.

தன்மனைவரைதல்

இது, உடன்போய் மீண்டுவந்த தலைவன், தலைவியைத் தன்னூர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின் கண் வரைந்துகோடல். இது வினாதல், செப்பல், மேவல் எனும் வகையினையும்; நற்றாய்மணனயற் வேட்கையிற் செவிலியை வினாதல், செவிலிக்கு இளைவரைந் தமையுணர்த்தல், வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல், தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கியம்பு சென்று எனல், பாங்கிதானது முன்னே சாற்றிய துரைத்தல்.

தன்மன்

வராகமந்திரஞ் செபித்துப் பிரமபத மடைந்தவன்.

தன்மேம்பாட்டுரையணி

இது, ஒருவன் தன்னைத்தானே புகழ்வது. (தண்டி.)

தன்மை நவிற்சியணி

சாதிசுபாவ தருமத்தையாவது, தொழிற்சுபாவ தருமத்தையாவது கூறுதலாம். இதனை வடநூலார் சுபா வோக்தியலங் காரம் எனபர். (குவல.)

தன்வந்தரி

1. இவர் அநு எனும் அரசன் புத்திரர் என்பர். இவர் பரத்வாஜரிடம் ஆயுர்வே தங்கற்று அதை எட்டுவகையாகப் பிரித்துத் தம் மாணவர்களுக்கு உபதேசித்தவர். (பிரம புராணம்.) 2. விஷ்ணுவினம்சங்களில் ஒன்று. இவர் பாற்கடற் பிறந்த தேவ வைத்தியர். ஒரு கையில் கமண்டலம், ஒரு கையில் கதையுடையவர். (பாகவதம்). இவர் மீண்டும் தீர்க்கதமர் புத்திரராய் அவதரித்து வைத்திய நூல் லோகோபகாரமாய் அருளிச் செய்தனர் என்பர். இவர் அருளிச்செய்த நூல்கள் தன்வந்திரி நிகண்டு, வைத்திய சிந்தாமணி, சிமிட்டு ரத்தினச் சுருக்கம், கலை ஞானம். இவர் காசிராஜனிடத்தும் அவதரித்தனர் என்பர். இவரைத் தீர்த்தபசு குமரர் எனவும், இவர் குமரர் கேதுமான் எனவும், இவர் மாணாக்கர் சுசருதர் எனவுங் கூறுவர்.

தன்வன்

சமதக்னியின் குமரன், தாய் இரேணுகை,

தபங்கமுனிவர்

இவர் தவத்திலிருக்கையில் இவரை ஒரு புலி பாயப் போயிற்று. சளன் என்கிற அரசன் அப்புலியைக் கொன்று விஜயன் எனப் பெயர் பெற்றனன்.

தபசி

சமவர்ணன் தேவி, சூரியன் குமரி.

தபசு

பன்னிரண்டாமன் வந்தரத்து ருஷி.

தபதி

1. ஓர் மநு, சூர்யபுத்ரன். 2. யயாதியின் பெண். 3. சம்வர்ணனை மணந்தவள், சூர்ய புத்ரி 4. குருவின் தாய், சவ்வருணன் தேவி. 5. பிரகஸ்பதி ஸவனமென்கிற யாகஞ் செய்தவன். 6. ஸ்தல நிர்மாணம் முதலியவைகள் செய்யும் சாஸ்திரி.

தபதி நாராயணர்

ஒரு இருடி. இவர் ஆச்சிரமத்தில் பாண்டவர் தீர்த்த யாத்திரையில் வசித்தனர்.

தபதிகுமரர்

யயாதி பெண்ணின் குமரர்.

தபநன்

1, ஒரு அரக்கன் கேசன் என்னும் வாநரரால் மாய்ந்தவன், 2. அமிர்தத்தைக் காப்பாற்றிய தேவன். (பார ஆதி.) 3. பாஞ்சாலதேசத்து அரசன், கர்ணனால் கொல்லப்பட்டவன்.

தபநாபி

வீமன் குமரன்,

தபந்தீ

ஒரு இருடி, இவனுக்குக் காதியாயநன் எனவும் பெயர்.

தபன்

ஒரு அக்நி, இவன் சவநன, ஆங்கீரசன், வசிட்டன், பிராணன், கஸ்யபன், என்பவர்க்குப் பிறந்தவன்,

தபுதாரநிலை

அணிந்த ஆபாணத்தினை யுடையாளை இழந்தபின் தனிமையுடனே தங்கி இல்லிடத்து அவதரிக்கும் ஆண் மகன் முறைமையைச் சொல்லியது. (புற வெண்பா பொது.)

தபோமூர்த்தி

பன்னிரண்டாம் மன்வந்தரத்து ருஷி.

தப்தகும்பம்

ஒரு நரகம், உருக்கெண்ணெய் நிரம்பியது.

தமகோஷன்

சேதிதேசத்தரசன், இவன் மனைவி சாத்வதி.

தமசாதீரம்

அயோத்தியின் வட கோடியெல்லை.

தமசு

ஒரு குளிர்ந்த இருள் சூழ்ந்த நரகு.

தமசை

1, ருக்ஷபர்வதத்திலுள்ள ஒருநதி. 2. The river Tonse between the Saraju and the Goomti, which flowing through Azambarh, falls into the Ganges, தமசைக் காண்க,

தமநமுனிவர்

குண்டினபுரத் தரசனாகிய வீமராசனுக்குப் புத்திரப் பேறளித்த முனிவர். இவர் அநுக்கிரகத்தாற் பிறந்ததால் தமயந்தி என்ன அரசன் குமரிக்குப் பெயரிட்டனன்.

தமநிகை

மேனகையென்னுந் தேவதாசியின்பெண், இவளுக்கு மதனினக யெனவும்பெயர், இவள் வித்யுத்துருவனால் கவரப்பட்டு அவன் இறந்த பிறகு கந்தரன் எனும் பக்ஷியரசனை மணந்து தாராக்ஷியைப் பெற்றாள். தருமபக்ஷிகளைக் காண்க.

தமனன்

ஒரு ரிஷி. இவனுடைய வரபிரசாதத்தால் தமயந்தி பிறந்தாள். 2. தமயந்தியுடன் பிறந்தவன். 3. பௌரவன் புத்திரன்,

தமன்

1. (சூ.) மருத்தன் தந்தை, 2. குபேரனைக் காண்க. 3. தமன் என்னும் அரசனுக்கு இராச்சியவர்த்தனன் என்னும் புத்திரன் பிறந்தனன். இவன் வளர்ந்து விடூரதன் குமரியாகிய மானினியை மணந்து (7000) வருஷம் ஆண்டுவந்தனன். ஒரு நாள் தன்தேவி. அரசனுக்கு எண்ணெயிடுகையில் அவள் கண்ணீர் அரசன் தலையில் விழுந்தது. அரசன் ஏன் அழுகின்றனை யெனத் தேவி உமக்கு நரை வந்ததே என்றனள். அரசன் இதற்கு வனவாசமே மருந்தென்று தன் புத்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய இருக்கையில் பட்டணத்துச் சனங்கள் அரசனை நீங்க மனம் இலாது சூரியனை யெண்ணித் தவமியற்றி அரசன் (10,000) வருஷம் ஜீவிக்க வரம்பெற அதை அரசி அரசனுக்கு அறிவிக்க அரசன் முன்னிலும் அதிக விசனழற அரசி விசனமுறுவதற்குக் காரணங் கேட்டனள். நான் சீவதிசை யுடனிருக்கையில் நீயும் உன் புத்திரனும் இந்தப் பட்டணவாசிகளும் சாக அதனைக் கண்டு விசனமுறலாயிற்றே என்றனன். அரசி, அதற்கு என்ன உபாயம் செய்யலாம் என்ன அரசன், அரசியுடன் சூரியனை யெண்ணித் தவமியற்றிப் பட்டணவாசிகளும், குமரனும், தன்பத்தினியும் சாகாதிருக்க வரம் பெற்றவன். (மார்க்கண்டேய புராணம்). 4. நரிஷ்யந்தன் புத்திரன், இவன் அரசாளுகையில் தசாரண தேசாதிபதியாகிய சாருகருமன், தன்னுடன் பிறந்தாளாகும் சுமனையென்பாளுக்குச் சுயம்வரம் சாற்றினன். அதில் அவள் தமனைவரிக்க அரசர்கள் கோபித்து அவளைப் பலாத்கார மாய்க்கிரகிக்க, தமன் பெரியோர்களால் தூண்டப்பட்டு அரசர்களை வென்று அவளை மணந்து அரசாளுகையில் இவனது பகைவனாகிய வபுஷ்மந்தன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்று அங்குத்தவஞ் செய்யும் தமன் தந்தையாகிய நரிஷ்யந்தனை நீயாறென்று அவன் யோகத்தால் பேசாதிருக்க கண்டு அருகிருந்த அவன் மனைவியாகிய இந்திரசேனையால் தவஞ்செய்வோன் தன் பகைவனாகிய தமன் தந்தையென்றறிந்து யோகத்திலிருந்த அவனைக்கொல்ல இந்திரசேனை தன் குமரனுக்கு நடந்த செய்தி கூறியனுப்பித் தன் கணவனுடன் தீக்குளித்தனள். தமன், தந்தை பகைவனால் இறந்த செய்திகேட்டு அதிகோபாவேசனாய் நான் வில் தாங்கி உயிருடன் இருக்கையில் என் தந்தையைப் பகைவன் கொல்லவா என்று என் தந்தையைக் கொன்றவனைக் கொன்று அவன் உதிரத்தால் என் தந்தைக்குப் பிதுர்க்கடன் செய்வேன் அவ்வகை செய்யாவிடில் என் வில்லுடன் தீயில் புகுகிறேன் என்று சபதம் கூறி வபுஷ்மந்தனுடன் யுத்தத்திற்குச் சென்று யுத்தஞ்செய்து கடுங்கோபத்துடன் அவனைத் தள்ளிச் சின்ன பின்னப்படுத்தி அவன் சிரத்தைக் கையில் கொண்டு உதிரத்தால் தர்ப்பண முடித்தவன், (மார்ககண்டேயம்).

தமப்பிரசாதன்

மனத்திலிருந்து குரோதமுண்டாக்குவோன்,

தமயந்தி

1, தமநமுனிவர் வரப்பிரசாதத்தினால் வீமராசனுக்குப் பிறந்தவள். இவள், சுயம்வரத்தில் மணமாலை சூட்டக் கொலுவில் வந்தகாலத்தில் சரஸ்வதி தோழியாக வந்து அரசர்களின் பெயரைக் கூறினள். இவள், நளனை மணந்து கலி புருஷன் கொடுமையால் கணவனைக் காட்டிற், பிரிந்து பாம்பின் வாய்ப்பட்டு வேடனால் நீங்கி அந்த வேடன் தன்னிடம் தீய எண்ணம் கொண்டதனால் அவனைக் கற்பின் வலியால் எரியச்செய்து சேதிதேசம் சென்று அந்நாட்டரசியால் ஆதரிக்கப் பெற்றுத் தாய் வீடடைந்து தந்தையால் தேடுவித்து வருவிக்கப்பட்ட நளமகாராசனைக் கூடிச் சுகித்திருந்தவள். இவள் குமரன் இந்திரசேநன், குமரி இந்திரசேனை. 2. ஆகுகனைக் காண்க,

தமலிப்தர்

கங்கைக்கு மேற்கிலுள்ளதேச வாசிகள்.

தமிழகம்

1. இது தமிழ் வழங்கும் இடமாகிய சோழ, பாண்டிய, சேரர்களால் ஆளப்பட்ட இடம் இம்மூவேந்தர்களும் இத்தமிழ் நாட்டுப் பழங்குடிகள். எவ்வாறெனின் மக்கள் வெள்ளை நிறமுடையார், மஞ்சணிறமுடையார், கருநிறமுடையார், செம்பினிறமுடையார் என நான்கு வகையினராவர். இவர்களுள் வெள்ளை நிறமுடையார் காக்கேசியர், மஞ்சணிறமுடையார் மங்கோலியர், கருநிறமுடையார் நீக் ரோவர், செம்பினிறமுடையார் அமெரிக்காவின் பழங்குடிகள். இவர்களில் மஞ்சள் நிறமுடைய மங்கோலியர் இமயமலையின் வடபக்கத்திருந்த மேட்டு நிலங்களில் வசித்தமையின் தம்மை உயர்ந்தவரெனும் பெயருள்ள வானவர் இயக்கர் என்றனர். இவர்கள் இமயமலைகளின் கணவாய் வழியாய் இந்தியாவில் நுழைந்து தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த தமிழுக் எனுந் தலத்தில் குடிபுகுந்து பழைய தமிழ் மக்களுடன் கலந்து தமிழராயினர். இத் தமிழர் தாங்களிருந்த இடம் விட்டு தமக்கு இன்னும் இடம் தேடித் தென்னாட்டிற் புகுந்து அங்கு வசித்து வந்த நாகர் முதலியவரை ஓட்டி, அவர்கள் வசித்து வந்த வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் எல்லைகளாகக்கொண்ட நாட்டை ஆண்டு வந்தனர். அவர்கள் ஆண்ட நாடே தமிழகம் எனப்பட்டது. 2. இது தமிழ் நாட்டிற்கு முற்காலத்து வழங்கிய பெயராம். இதனை “இமிழ்கடல் வரைப்பிற் றமிழக மறிய” எனச் சிலப்பதிகாரத்தும், செம்புத் தீவினுட்டமிழக மருங்கில்” என மணிமேகலையிலும், “இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க” எனப் பதிற்றுப்பத்திலும் கூறியவாற்றிக. இப் பெயர் 1750 வருடங்களுக்கு முன் டாலமி முதலிய யவன பண்டிதர்களால் லிமிரிக்’ எனவும் ‘டமிரிக்’ எனவும் திரிந்து வழங்கப்பட்டு வந்தது.

தமிழறியும் பெருமாள் ஏலங்குழலி

அளகேசன் ஆண்ட அளகாபுரி ராசகுமாரி. இவள் உப்பரிகையிலிருக்கையில் பத்திர கிரிராசகுமரனாகிய சந்தனகுமரன் கல்வி கற்காமல் மூடனானதால் தந்தையால் நாட்டினின்றும் துரத்தப்பட்டு இவளிருக்கும் அரண்மனை யோரமாய் வருகையில் இவள் சந்தன குமரனிடம் மோகித்துத் தன் காதிலிருந்த ஓலையில் தன் கருத்தை எழுதி அவ்வரசகுமாரன் எதிரில் இட்டனள். (அவ்வோலையின் கருத்து இன்று இரவு நீ அருகிலிருக்கும் நன்காட்டுச் சத்திரத்திலிருந்தால் நான் வந்து காண்கிறேன் என்பதாம்) எதிரில் விழுந்த ஓலையை இராசகுமாரன் எடுத்து எழுத்தறியாதவன் ஆதலால் ஒரு குட்டரோகியிடம் அதை வாசிக்கும்படி காட்டினன். குட்டரோகி, தான் இராசகுமரர்த்தியை வஞ்சிக்க எண்ணிச் சந்தனகுமரனை நோக்கி உன்னைக் கொலை செய்ய ஆக்னை பிறந்திருக்கிறதாம் நீ பிழைத்துப்போக வேண்டுமாம் என்று அவனுக்கு வாசித்துக் சாட்டி ஓலையைக் கிழித்தெறிந்தனன். இதைக்கேட்ட சந்தனகுமரன் பயந்து நீங்கினன். குட்டரோகி தன்னைச் சுத்தஞ் செய்து கொண்டு சத்திரத்தில் சென்றிருந்தனன். இராசகுமரர், ஆவலுடன் வந்து தழுவித் தான் கண்டவன அல்லாததால் உடனே மரித்தனள். அரச குமாரன் ஊராரால் அரசகுமாரி இறந்ததறிந்து குட்டரோகி நம்மை மோசஞ் செய்தனன் என்று உயிர் நீங்கினன். இந்த இருவரும் ஆண், பெண் பேய்களாய் அந்தச்சாவடியிலிருந்து யாரையும் அவ்விடம் வரவொட் டாமல் துரத்தியிருந்தனர். ஒருநாள் அச்சத்திரத்தில் ஒளவையார் வரப் பெண் பூதம் கோபத்துடன் வந்தது. இதனைக் கண்ட ஒளவை இவைகளின் வரலாற்றிந்து கவி கூறப் பேய்களிரண்டும் கேட்டு இவள் சரஸ்வதிதேவி யென்று தம்முருக் கொண்டு பணிந்தன. ஏலங்குழலி, ஔவையைப் பணிந்து நின்று தான் இவ் விராச குமரனைச் சேர்ந்திருக்க வரங்கேட்டனள். ஔவையார் அவ்வகை அநுக்கிரகித்தனர். அந்தப்படி இவள் உறையூரில் கரிகாற் சோழன் ஆலத்திப் பெண்களில் முதல்வியாகிய மரகதவடிவி யென்பவளுக்குச் சண்பகவடிவியெனப் பிறந்து (1000) பொன் கொடுக்கிறவர்களைச் சேர்வதென்று வைத்துக்கொண்டு வருகிறவர்களை மருட்டி அநுப்பிவிட்டு இருக்கையில் ஒருநாள் சோழன் சமஸ்தானத்திற்குப் போய் வரும்போது அந்நகரத்தில் விறகுதலையனாய்ப் பிறந்திருந்த சந்தன குமாரனுடைய விகார உருவத்தைக் கண்டு காரி உமிழ்ந்தனள். சந்தன குமாரனாகிய விறகுதலையன் இவளைக் கூடவேண்டுமென்கிற கருத்துள்ளவனாய் (1000) பொன் தேடி அவளுக்குக் கொடுத்துப் பொலிவிழந்து தமிழ்ச் சங்கத்தவரிடம் ழறையிட்டு நக்கீரர் உதவியால் அவளை வெல்விக்கத் தமிழறியும் பெருமாள் இறந்தனள். நக்கீரர் தமிழறியும் பெருமாளை உயிர்ப்பித்து விறகு தலையனுக்குக் கல்யாணஞ் செய்வித்தனர். இது கற்பனைக்கதை. நக்கீரர் கடைச்சங்கத்தவர். இவர் இக்காரியம் செய்தனர் என எங்கும் தெரியவில்லை. இவர் அவளுடன் கவி வாது செய்த காலத்தில் பாடிய செய்யுட்கள் அவர் வாக்குகளாகத் தோன்றவில்லை.

தமிழ்

1. இந்தப் பாஷை முதலில் கைலாயத்தில் குமாரக் கடவுளுக்குச் சிவமூர்த்தி உபதேசிக்கக் குமாரக்கடவுள் அகத்திய முனிவருக் குபதேசிக்க அவர் தம் மாணாக்கர் முதலியோருக்கு உபதேசிக்க வெளிவந்தது. ஆதலால் சிவமூர்த்தியின் தமருகத்திலிருந்து பாணினிவாயிலாக வெளிப்பட்ட வடமொழியும், அம்மூர்த்தியின் குமாரரால் அகத்தியர் வாயிலாக வெளிப் பட்ட இப்பாஷையும் ஆராயுமிடத்து ஒரே பிறப்பினவாம். ஏற்றத் தாழ்வுடைய வாகா. பின்னும் “இற்றைக்கு மூவாயிரத்தைஞ்னூறு வருஷத்திற்கு முன் இருந்த வியாசர் காலத்தவனாகிய அருச்சுனற்குத் தன் மகளைக்கொடுத்த இந்திரவாகன் மதுரைக் கடுத்த பூழி யென்னும் மணலிபுறத்தில் அருந்தகுண பாண்டியனிலிருந்து பதினெட்டாவது பாண்டியனாகிய சித்தி ரவிரமபாண்டியன் காலத்திற் சிற்றரசு புரிந்வன்” இவனாண்ட மணலிபுரம் வியாசரால் வடமொழிப் பாரதத்திற் புகழ்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. பின்னுந் தமிழ் நாட்டரசர் மூவரும் சூர்ய சந்திர வம்சத்திலிருந்து பிரிந்தவர்கள். இவர்கள் துவாபர யுகத்திற்கு முன்பும் அரசாண்டதாகத் தெரிகிறது. ஒரு பாண்டியன் பாரத யுத்தத்தில் பாண்டவர்களின் சேனைக்கு அன்னமிட்டதாகத் தெரிகிறது. இவன் தமிழ்ப் புலவரை ஆதரித்தவன். இது நிற்க முதலாழ்வாராகிய நம்மாழ்வார் தாம் அருளிச் செய்த பாசுரங்களின் இறுதியில் முன்னிருந்த தமிழைத் தாமருளிச் செய்ததாகக் கூறியிருக்கின்றனர். பின்னும் இவ்வரிய பாஷை மற்றைப் பாஷைகள் போல் வேறு பாஷைகளின் துணைவலிபெராது தானாய் விளங்கும் ஏற்றழற்றது; இதனை அறிவுள்ளோர் பலர் பழைய நூல்களிற் கண்டறியலாம், ஆயின் தமிழென்பது திராவிடம் என்பதின் திரிபன்றோ வெனின் திரிபாகாது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மகராஷ்டாம், கூர்ச்சரம் இவைகளையும் திராவிடமென்பவாகலின் இதற்கே உரியதாகாது. ஆயினும் அப்பெயர் கூறவந்த வடநூலார் அக்காலத்திற்கு முன்றானே தோன்றிய பாஷைக்குத் தாங்கள் பெயரறியாது அந்நாட்டில் தாங்கள் வந்த காலத்து இட்ட பெயராகவு மிருத்தலின் இது வட மொழிக்குப் பிந்திய தாகாது. வடமொழி வடநாட்டிலிருந்தது போல் தென் மொழி தென்னாட்டி லிருந்தது. இதனால் தமிழ்ப் பாஷை தனித்த பூர்வ பாஷை யென்பது கொள்ளக் கிடந்தது. 2. இத்தமிழ் தமிழகமாகிய பரதகண்டத்தில் தொன்றுதொட்டு வழங்கிய பாஷையாம். இது சிவபெருமான் வாயிலாக வந்த பாஷை. எவ்வாறு ஆரிய பாஷை அநாதியென்பரோ, அவ்வாறே தமிழும் அநாதியாம். இது, அகத்தியனார் வாயிலாக வந்ததென்பது நம்பத்தக்க தன்று, சிவபெருமான் அகத்தியரைத் தென்னாடு செல்க எனக் கட்டளையிட்டகாலத்து அது தமிழ்நாடாதவின் அப்பாஷை யுணர்த்துக எனக் கேட்டனர் எனக் காந்தபுராணங் கூறுதலால் அத்தமிழ் அகத்தியருக்கு முன்னரே இருந்ததென்பது தெள்ளிதினறியலாகும். இன்னும் தமிழறிந்தார் பலர் அக்காலத்தில் இருந்தனர் என்பதைப் பல பிரமாணங்களா லறியலாம். முன்னிருந்த தமிழையே குமாரக்கடவுள் வழி அகத்தியருணர்ந்து இலக்கணஞ் செய்தனர். இதனைக் கம்பர் “சுடர்க்கடவள் தந்த தமிழ் தந்தான்” எ.ம், என்றுமுள தென் றமிழியம்பி யிசைகொண்டான் என்பனவற்றாலறிக. இத்தமிழ் பண்டைக் காலத்து இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலிருந்ததாகத் தெரிகிறது. ஆரியருக்கு முன் தமிழ்நாடாயிருந்த இந்து தேசம் ஆரியர் வந்தபின் ஆரியர் நாடாக ஆயிற்று. இந்த ஆரியரும் ஐரோப்பியரும் ஒருங்கு மத்ய ஆசியவாசிகளா யிருந்தனர் என்பதை அவர்கள் பேசும் சொற்களா லறியலாம். வடமொழிகள் பல ஆங்கிலபாஷையில் வழங்குதலே இதற்குச் சான்றும், மாதரு Mother, பிதுர் Father, பிராதரு Brother, கோ Cow, யூயம் You, அகம் I, ஆயின் தமிழ்மொழிகள் ஒவ்வாவோ எனின், ஒவ்வா என்பதே எம்மனோர் துணிபு. ஆயினும் இத்தமிழை யொத்து, இத்தமிழ்நாட்டிற் கணித்தான சீனம் அருகிருந்ததால் அப்பாஷை தமிழை ஒருவாறு ஒத்து விளங்குகின்றது. எவ்வாறெனின் தமிழ்நாட்டிற்கு வடக்கிருந்ததால் அவர்களும் தமிழைத் தழுவினவர் எனக் கூறலாகும், எவ்வாறெனின் அத்தமிழ்ச் சொற்கள் பல அப்பாஷையில் வழங்கலே அதற்குச் சான்றாம். தமிழில் நீ என்பதற்குச் சீனபாஷையில் நீ, நான், ஞான், யாம், யாம், பெண், பெண், எஃகு, எஃ, இடத்தையுணர்த்தும் கண், கண், இரண்டென்னும் எண்ணையுணர்த்தும் ஈர், ஈர் என வழங்குதலால் என்க. தமிழர் தென்னா டடைதற்குமுன் கங்கா தீரத்திலிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகளுண்டு, தமிழராகிய வேளாளர் தம்மைக் கங்காபுத்திரர் என்பர். கன்னடதேசத்து வேளாளர் தாங்கள் கௌடதேசவாசிகளாதலால் தங்களைக் கவுண்டர் என்பர். இத்தமிழர் தாங்களிருந்த பழைய நாட்டின் பெயரே தாங்கள் குடிபுக்க தென்னாட்டிற்கும் அப்பெயரிட்டனர். வங்காளநாட்டின் இராஜதானி சம்பாநகர் தமிழ்நாட்டில் சம்பாபதி, (காவிரிப்பூம்பட்டினம்) சோழநாட்டிற்கும் தொண்டைநாட்டிற்கும் இடையிலுள்ள நாட்டை மகதநாடென்றும், மலையமாநாட்டிற்குச் சேதிநாடென்றும், வடநாடுகளின் பெயரிட்டமை காண்க, இன்னும் வங்காளத்திற்கு வடக்கே, நேபாளத் திற்குக் கிழக்கே திமல் எனும் சாதியார் இன்னும் வசிக்கின்றனர், அவர்களது பாஷை தமிழை ஒத்து இருக்கிறது. காரிகிழார் எனும் முதற்சங்கப் புலவர் முதுகுடிமிப் பெருவழுதியைப் பாடிய புறநானூற்றில் படாது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும், குணாஅது கரைபொரு தொடு கடற்குணக்கும், குடா அது தொன்று முதிர் பௌவத்தின்குடக்கும்” எனத் தமிழிற்கு இமயவரையை எல்லையாகக் கூறுதலாலறிக. இன்னும் அகத்தியரைப்போன்று வடநாட்டிருந்து வந்த வன்மீகனார், மார்க்கண்டேயர், கோதமனார் முதலியோரும் தமழறிந்து தரும் புத்திரனைப் பாடினர் என (புறம் 299) ஆம் செய்யுளால் அறியக் கிடக்கிறது. இதனால் அக்காலத்திருந்த பாண்டுபுத்திர ரும் தமிழறிந்தவரென்றே தெரிகிறது. இன்னும் பாண்டவர்க்குத் துணை புரிந்தவனும் தலையேழுவள்ளல்களி லொருவனுமாகிய அக்குரூரன் என்பவனைத் தலைச்சங்கப் புலவராகிய குமட்டூர்க் கண்ணனார் “போர் தலைமிகுத்த ஈரைம்பதின் மெரொடு, துப்புத்துறைபோகிய துணிவுடை யாண்மை, அக்குரனனையகை வண்மையையே” எனப் பாடுதலால் அக்காலத்து வடநாட்டிலிருந்தார் தமிழரென்றறியலாம். தமிழ்க்குத் தொண்டு செய்தோர் இத்தமிழ் “தமிழெனு மளப்பருஞ்சலதி” எ.ம், நீண்ட தமிழ்வாரி நிலமேனிமிரவிட்டான் எத்திறத்தினு மேழுலகும் புகழ்முத்து முத்தமிழ்” “தமிழ்ப்பாட் டிசைக்குந் தாமரையே” இழைத்தாரொருவரு மில்லாமறைகளை யின்றமிழாற் குழைத்தார்” எனக் கம்பராலும்; பண்ணும் பதமேழும் பல வோசைத் தமிழவையும் தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி” “தமிழ்ச் சொலும் வடசொலும் தாணிழற்சேர” என திருஞான சம்பந்தராலும், “பாலேய் தமிழ்” என ஸ்ரீசடகோபராலும்; மற்றைய நாயன்மார்களாலும் ஆழ்வாராதிகளாலும் புகழப்பட்டு இனிமைகொண்டு விளங்குவது. கம்பர், “உழக்குமறைநா லினு முயர்ந்துலகமோதும், வழக்கினும் மதிக்கவினினும் மரபினாடி, நிழற்பொவி கணிச்சிமணி நெற்றியுமிழ்செங்கட், தழற் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” 3. (3) இயல், இசை, நாடகம்,

தமிழ்ச்சங்கங்கள்

மதுரையில் முதலிடை கடைச்சங்கள் இருந்தன. இவையன்றி சடகோபர் காலத்து ஒன்றிருந்தமை விக்ரமசகம் (526) (கி. பி. 470) இல் பூஜ்ய பாதர் மாணாக்கர் வச்சிரநந்தி என்பவரால் தென் மதுரையில் ஒரு சங்கம் கூட்டப்பட்டது. Bombay Royal Asiatic Society’s Journal No. XLIV. vol xvii pp 74.

தமிழ்நாடு

வடக்கின்கண் வேங்கடழம், தெற்கின்கண் குமரியாறும், கிழக்கும் மேற்குங் கடலுமாகிய இவற்றிற்கு உள்ளிட்ட நாடுகளாம். இதனுள் தமிழ் வளர்ந்தது தென்மதுரை, இந்நாட்டகத்துள் நாற்பத் தொன்பது நாடுகள் கடல் கொண்டன. அவை ஏழ்தெங்கநாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன் பாலைநாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்குணகாரைநாடு, ஏழ்குறும்பனை நாடு என்பன.

தமிழ்நாட்டின் மூவரசரின் பழைமை

இத்தமிழ் நாட்டைத் தொன்று தொட்டு சேர சோழ பாண்டிய ரென்னும் மூவரசரும் ஆண்டு வந்தமைபற்றி தமிழ் நாட்டரசரும் அவர்களது பாஷையாகிய தமிழும் பழைமை பெற்றதாம். இப்பழைமை நோக்கியே பாண்டியர் பழையர் எனப்பட்டனர் போலும். பின்னும் பாண்டியர் எனும் சொல்லும் பண்டை என்னும் சொல்லடியாகப் பிறந்த பழையரெனும் பொருளே பயக்கும். இவ்வாறே உதியன் எனும் சேரன் பெயரும், சென்னியெனும் சோழன் பெயரும் தொன்று தொட்ட முதன்மையை யுணர்த்தும் பெயர்களாய் தமிழரசர்களது வழமையைத் தெரிவிப்பனவாம். இன்னும் இவர்களது பழைமையை நிரூபிக்க வேறு காரணங்களும் உள. இனி காலம். வேதகாலம், சரிதகாலம் என வகுத்தவர்களில் தத்தர் என்பவர் வேதகாலம் தி, மு. 2400 முதல் 1400 வரையிலுமென அறுதியிட்டனர். பாரதப்போர், கிறிஸ்து பிறப்பதற்கு 1400 வருடங்களுக்கு முன் நடந்ததாம். இப்போரில் பதினெட்டு நாளும் அவ்விரு பெருஞ் சேனைகட்கும் பெருஞ் சோறளித்தவன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன், என அக்காலத்து அவ்வரசனுடனிருந்த முரஞ்சியூர் ழடிநாகராயர் எனும் புலவர் கூறியிருக்கின்றனர். சோழன் ஒருவன் பாரதப் போர் முடியுமளவும் தருமன் படைக்குப் போர்த் துணையாக இருந்தான் எனக் கலிங்கத்துப்பாணி தங்கள் பாரத முடிப்பள வும் நின்று தருமன் தன் கடற்படை தனக்குதவி செய்த அவனும்” எனக் கூறும். பாண்டவர்களில் ஒருவனான சகதேவன் தெக்கணஞ் சென்று பாண்டியர்களை வென்றான் எனச் சபாபர்வம் (31) ஆம் அத்தி யாயத்திலும், அர்ச்சுனன் ஓர் பாண்டியன் மகளை மணந்தான் என்பதையும் பாரதம் கூறும். இனி இராமாயண காலம் பாரதத்திற்கு முற்பட்ட காலமாதலை பாரதத்தில் இராமன் கதை கூறு மாற்றால் விளங்கும். இராமாயண காலத்தில் இராமன் அகத்தியராச்சிரமஞ் சென்றதாகக் கூறப் பட்டிருக்கிறது. அந்த அகத்தியர் கட்டளையை மேற்கொண்டு ஒரு சோழன் ஆகாயத்தில் அசைந்துகொண்டிருந்த கோட்டையைத் தகர்த்தான் ஆதலின் அவன் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப்பட்டனன். பின்னும் வானரரைச் சுக்ரீவன் சானகியத் தேடவிட்ட ஞான்று அவர்கள் தமிழ் நாட்டினுஞ் சென்றனர் எனக் கூறப்படுதலாலும் தமிழும் தமிழரசரும் இராமாயண பாரத காலத்திற்கு முற்பட்டவர் என்பது தெரிகிறது. ஆதலால் தமிழ் நாடே பரத கண்டத்திற் தொன்று தொட்டதெனவும் அதனை யாண்ட அரசரே பழையர் எனவும் அவர்கள் வழங்கும் பாஷையே முதலிலிருந்த தெனவும் அறியக் கிடக்கின்றது.

தமிழ்நாட்டிலிருந்த ஆயங்கள்

இந்த வரிகள் இராஜராஜ சோழன் III காலத்தன. நெல்லாயம், காசாயம், பாடிகாவல், சில்வரி, எடுத்துக்கொட்டி, அரிழக்கை, கார்த்திகை அரிசி, கார்த்திகைக்காசு, கார்த்திகைப் பச்சை, வேலிப்பயிறு, நீர்நிலக்காசு, தறியிறை, கடையிறை, காலக தப்பாட்டம், தட்டாரப்பாட்டம், ஆசுவக்கடமை, செக்குக்கடமை, ஏரிமீன்காசு, இனவரி, பட்டோலைக்காசு முதலியன.

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

சுக்குச்சுக்கு: இதனைப் பலிசப்ளான் என்பர். இது இரண்டுகக்ஷியார் நிலத்தில் ஒரு கோடுகிழித்து அக்கோட்டிற் குள்ளும் புறம்பும் ஒவ்வொரு கட்சிக்காரர் இருந்து கொண்டு கோடு தாண்டி வந்தவனைத் தீண்டின் தீண்டப்பட்ட கக்ஷி தோல்வித்தானத்தை அடைவது, கிளியாந்தட்டு. இதனை உப்புக்கோடு என்பர். சதுரங்கமாய்ப் பல கோடுகள் நிலத்தில் கீறி இரண்டுகக்ஷிக் காரர்களில் ஒருவர் கோடுகளைத் தாண்டிச் செல்கையில் மற்றவர் தாண்டிவருவோன் வராதிருக்கத் தடுத்து அவனைத் தீண்டல், மரக்குரங்கு: மரத்தின் மேலேறிக்கொண்டு விளையாடும் விளையாட்டு, வைக்கப்பிரி, ஒருவனை முதுகின் மேல் போட்டிழுத்துச் செல்லும் விளையாட்டு, கண்ணாம்பூச்சி: ஒருவனை மற்றக்கக்ஷியார் ஒளியும்வரையில் கண்ணை மூடிவிட்டு ஒளிந்தவரைப் பிடிக்கச் செய்தல். குருட்டுக்கண்ணாம் பூச்சி: ஒருவன் கண்ணை இறுகக் கட்டிப் போட்டுத் தீண்டினோன் பெயர் கேட்டல் உண்மை கூறின் அப்பெயரோன் கண்ணைக் கட்டிக்கொள்ளல். பேய்ப்பந்து: வேட்டியைப் பந்துபோல் செய்து வட்டமாய் உட் கார்ந்திருப் போர்பின் தெரியாது வைத்து அவனறியாதிருக்கின் அவனைப் பந்தால் எறிதல், குண்டாடல்: (கோலி) இது சிறு குண்டுகளைப் பள்ளத்திலெறிந்து பல வகையாக விளையாடல், பந்தாடல்: பூமி மீது பந்தெறிந்தும், குதிரைமீதிருந்தும் பந்தெறிந்து விளையாடல், சீட்டாடல்: பல சீட்டுகளைக் கணக்கிற்கேற்றபடி எறிந்தாடல், இது பலவகை, தாயகட்டம்: சில கொட்டைகளைக்கொண்டு கிழித்த கோடுகளில் வைத்து ஆடல், ஏழாங்காய். சில பந்துகளைக் கையிலிருந்து மேலெறிந்து அவை கீழ்விழாது கையாற்பிடித்தல், சொக்கட்டான்: நான்கறைகீறி அதில் உள்ள வீடுகளில் பாய்ச்சிகையில் விழுந்த கணக்கின்படி காய்களை அமைத்தாடல், சோழி: மேற்கூறியது போன்ற விளையாட்டு, சதுரங்கம்: சதுரமாக அறைகள் அமைந்த பலகையில் சதுரங்க சேனை அமைத்தல்போல் காய்களமைத்து ஆடல் பல்லாங்குழி: ஒரு குழிகளமைத்த பலகையில் கொட்டைகளிட்டு ஆடல். இவையன்றி மூலைபந்தம், கொண்டிவிளையாட்டு பாண்டி, கிறுக்கி, கிட்டிபில்லி, காவட்டி கூவேகூ, பன்றி ஆட்டம், காற்றாடி, பம்பரம், மாவலி, தட்டாமாலை, தும்பிவிளையாட்டு, கிள்ளாபுரண்டி, கோலாட்டம், மல்லுவிளையாட்டு (குஸ்தி), கொம்மையடித்தல், நிலாச்சோறு, நீந்தல், ஓடம், சாய்ந்தாடல், சிறுதேருருட்டல், ஊசலாடல், குதிரை, எருது, ஆடு, சேவல், காடை, கௌதாரி, புறா முதலிய பந்தயம் விடல், பாரதிவிருத்தி விலக்கியற்கூத்து, கானக்கூத்து, கழாய்க்கூத்து, பலகறையாடல், நிலவில் மண்குழித்தானை தேடல், ஒற்றை இரட்டை கோட்டுப்புள்ளி பச்சைக்குதிரை முதலிய

தமுதன்

1. இரண்யரோமன் அல்லது இரண்யரேதஸுக்குக் குமரன். 2, விஷ்ணுபடன். 3 ஒரு இருடி, பத்தியன் மாணாக்கன், 4. ஒரு வாநரவீரன். 5. ஒரு அரக்கன். 6, சிவகணத்தலைவரில் ஒருவன். 7. சண்முகசேநாவீரன். 8. ஒரு நாகன், 9. ஒரு அரசன் சதுர்த்தசிவிரத மநுஷ் டித்துச் சுவர்க்க மடைந்தவன்.

தம்சன்

ஒரு அசுரன் இவன் பிருகுமுனிவரின் பாரியையைப் பலாத் காரமாக இழுத்ததனால் அவர் கோபித்து மலமூத்ராதிகளை யுண்ணும் புழுவாகச் சபிக்கப்பட்டவன். இவன் சாபத்தீர்வு கேட்க உனக்குப் பிருகு வம்சத்திலுண்டான ராமனால் தீர்வு உண்டாம் எனக் கூறப்பட்டவன் இவனே கர்ணனைப் புழுவாகத் துளைத்தவன். (பார. சாந்தி.)

தம்சு

சந்திரவம்சம் மதிநாரன் புத்திரன் அவன் புத்திரன் இளீனன்.

தம்பன்

1, ஒரு வாநரத் தலைவன். 2, ஒரு அரக்கன், குசத்துவசரைக் கொன்றவன்.

தம்பமித்ரன்

சார்ங்கபக்ஷி யுருக்கொண்ட மந்தபாலமுனிவர் புத்திரனாகிய பக்ஷி

தம்பலப்பூச்சி

இதனை இந்திரகோபப் பூச்சி யென்பர். இப்பூச்சி பட்டினிறமாப் பூமியினுள்ளிருந்து பனிக்காலத்தில் மேல் வந்து உலாவுவது. இதனைக் கவிகள் சிந்திய மணிகளுக்கு உவமை கூறுவர். இது ஒரு சிறு வண்டு.

தம்பிரான் தோழர்

சிவமூர்த்தியால் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இடப்பட்ட பெயர்.

தம்போற்பவன்

நரநாராயணரால் கருவபங்க மடைந்தவன். (சுக்~நீ.)

தம்ஷ்டிரி

சுக்ர புத்ரன்.

தயாவிருத்தி

(14) கல்வி பயிற்றல், துயர் தீர்த்தல், தண்டத்தினீக்கல், ஐயந்தேற்றல், பிறர்குணத்து அழுக்காறின்றிப் பொறுத்தல், பிறராற் செய்யப்படும் தீமை மறந்து நன்றி நினைத்தல், பிறர்க்கு வேண்டித் தெய்வம் வழிபடல், இவை உயிர்க்கேழுபகாரம். உணவு, பானம், உடை, இடம், அடிமை காத்தல், சிறை நோய் மூன்றுந் தீர்த்தல், பிணமடக்கல் இவை உடற்கு ஏழ் உபகாரம். (8) பிறர்க்குப் பொருள் வரவை உவத்தல், பிறர் செல்வம் பொறுத்தல், பிறர் கருமத்திற்கு உடன்படல், தீமைக்கஞ்சல், பிறர் கருமம் முடிக்க விரைதல், பிறர் ஐயந்தீர்த்தல், நன்மை கடைப் பிடித்தல், பிறர் துயர்க்கு இரங்கல்,

தயித்திராந்தகன்

சிவகணத் தலைவரில் ஒருவன்.

தயிரிய மகாராஜா

அத்திரி யென்னும் பிராமணருக்குச் செல்வங் கொடுத்தவன்.

தயிர்

தயிர் என்பது பாலைச் சூடாகக்காய்ச்சி ஆறிய பின் அதில் மோரை 1 பலம் விட்டால் அது, இம்மோரின் சேர்க்கையால் தன்னிலை மாறிக் கட்டிவிடுகிறது. இதுவே தயிர் என்பது. இதனுடன் இடைக்கிடை நீர் சேரின் மோராகிறது. தயிரிலுள்ள ஏட்டை மோரிலிட்டுக் கடையின் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெயை உருக்கினால் நெய் ஆகிறது.

தயிர்வகை

பசுவின் தயிர், எருமைத்தயிர், வெள்ளாட்டின் தயிர், செம்மறியாட்டுத் தயிர், ஒட்டைத்தயிர் முதலிய இவற்றின் குணங்களைப் பதார்த்தகுண சிந்தாமணியைக் காண்க,

தயூகன்

சிவகணத் தலைவன்.

தயை

தக்ஷனுக்குப் பிரசூதியிட முதித்த குமரி, மோகன் தேவி, இவளில்லாவிடத்துத் தயவில்லை.

தயை சாந்தன்

சயிந்தவனுக்குச் சிவ விரதம் கூறிய முனிவன்,

தரணி

1. பிரமன் புத்திரி. 2. தக்ஷன் பெண், 3. மேருவிற்குத் தேவி, குமரன் மந்தரன். 4. சீவகன் புத்திரருள் ஒருவன். 5. வியன் தேவி

தரணி மகாராஜா

பத்மப் பிரபருக்குத் தந்தை, தேவி சுசிமை. (சைநர்)

தரதன்

பாஹ்லிக்தேசத் தரசன். இவன் பிறந்தபோது பூமி அதிர்ந்தது (பார~சபா.)

தரதம்

1. Dardistan north of Kashmir on the upper bank of the Indus 2. காஸ்மீரத்துக்கு வடக்கில் உள்ள தேசம்,

தரன்

1. ஒரு வசு. இவனது மானசபுத்திரர், மகதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசாநன், விசயன், வீமதேவன், பவோற்பவன், காபாலி, சௌமியன். இவர்கள் ஏகாதச ருத்ரர் எனப்படுவார். 2, கலுழவேகனிடத்திருந்த வித்தியாதரன், இவன் கப்பல் முழுகியதைப் போல மாயஞ்செய்து ஸ்ரீதத்தனைக் கலுழவேகன் பால் அழைத்துச் சென்றவன். 3. வசுதேவருக்குப் பத்திரையிடம் உதித்த குமரன். 4, அணு குமரன்,

தரமேயு

(சந்.) ரௌத்திராசுவன் குமரன்.

தரளிகை

மகாசுவேதையின் செடி,

தரவிணைக் கொச்சகக்கலிப்பா

இரண்டு தரவைக் கொண்டு வருவது.

தரவு

கலிப்பாவிற் கூறிய செய்யுட்களில் முன்னிற்கும் உறுப்பு.

தரவு கொச்சக் கலிப்பா

தரவு ஒன்றுடன் வருவது.

தராசு

1, இது எடுத்தலளவைத் தெரிவிக்கும்கருவி இது பலவகைப்பட்ட பொருள்களை நிறுப்பதில் வேறுபடும். பெரும்பாலும் துலாவென்னும் கோலிற்கு இடையில் ஒரு தொளையுடைய தாயும் அக்கோலில் (2) கடையிலும் ஒவ்வொரு தொளைகளைப் பெற்று அத்தொளைகளில் தொடுத்த இரண்டு தட்டுகளையுடையது. இதுபொன், மணி, மருந்து நிறுப்பவர்களிடம் சிறுவடிவாக இருக்கும். நாட்டுப்புறங்களில் ஒரு தட்டுடனிருப்பது தூக்கெனப்படும். (உல), 2. இது ஒரு நடுக்கொம்பில் மையமாகவும் கொம்பின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு தொளை பெற்றதாய் ஒத்த அளவுள்ள கயிற்றினால் தட்டுகளைக் கோத்து “நடுத்தொளையில் கயிறு கோத்து எடை அறிவது. இது பலவகை. முள் தராசு, முருக்குக்கம்பி தராச, ரோமன்ஸ்டீல் பார்ட் முதலிய.

தராபாலன்

வைதசமென்னும் பட்டணத்தரசன். இவன் ஒருகாலத்து விதஸ்தா வேத்ரவதி சங்கமத்தில் பார்வதியாரின் சாபத்தால் நரியுருக் கொண்டிருந்து பன்னிரண்டு வருஷங் கழிந்தபின் விதஸ் தாவேத்ரவதி சங்கம க்ஷேத்ரத்தில் சாபமொழிந்து கைலையடைக என்றபடி நதியில் வீழ்ந்து திவ்ய தேகம் பெறச் கண்ட அரசன் அந்ததி சங்கமத்திற் சிவாலயங் கட்டுவித்துப் புராணங் கேட்டுப் புராணிகனுக்குப் பொருளுதவிச் சுவர்க்க மடைந்தவன். (சிவமகாபுராணம்).

தரிசன செட்டி

நீலியாற கொல்லப்பட்டவன். இவன் முற்பிறப்பில் புவனமதி என்னும் கச்சிப்பதி வேதியன். இவன் காசியாத்திரை சென்று சிவஞ்ஞானி யென்பவனுக்குத் தங்கையாகிய, நவஞ்ஞானியை மணந்து அவருடன் சிலநாளிருந்து தன் சொந்தமனைவியை நினைத்துச் சேதுஸ்நா னம்சென்று சிவஞ்ஞானியென்னும் மைத்துனனுடனும், நவஞ்ஞானி யென்னும் புது மனைவியுடனும் திருவாலங்காட்டிற்கருகு சேர்ந்து நவஞ்ஞானியின் தமயன் வெளியில் போயிருந்த சமயங்கண்டு புது மனைவி யையும் குழந்தையையும் கொன்றனன். சிவஞ்ஞானி வந்து பார்த்துத் தந்தை யிறந்த செய்தி கண்டு தானும் இறந்தனன். இவன் பிற்பிறப்பில் செட்டியாகப் பிறந்தனன். இவன் தந்தையாகிய நாகந்தை செட்டி இவனுக்குப் பேயால் மாணமுண்டாகுமென அறிந்து மந்திரவாள் தரப்பெற்றுப் பெரியவர்த்தகனாய் ஒருநாள் மனைவியை நீங்கித் திருவாலங்காட்டின் வழிச் செல்கையில் பழி வாங்க வேண்டு மென்றிருந்த (நவஞ்ஞானி) நீலி பழைய நாயகனாகிய செட்டியிடம் வந்து தாசியைப்போலவும், நாககன்னிகைபோலவும், தண்ணீர்ப் பந்தல் வைத்திருக்கும் பார்ப்பினியைப் போலவும், மனைவியைப் போலவும் வஞ்சித்துக் கொல்லவந்தனள், செட்டி அவைகளுக்கு அஞ்சாது கையிலிருந்த மந்திரவாளால் தப்பித் திருவாலங்காடு சேர்ந்தனன். நீலி இவனது மனைவிபோல் உருக்கொண்டு பழையனூர் (10) வேளாளரிடம் முறையிட்டனள். இவ்விருவர் வழக்கினையும் கேட்ட வேளாளர், நீலியின் சொற்படி மந்திரவாளைச் செட்டியிடமிருந்து நீக்குவித்து இருவரையும் ஒரு அறையில் சமாதானத்துடனிருக்க ஏவினர். நீலி, அறையுட்சென்று ஊாடங்கிய பிறகு செட்டியை முன்பழிக்குப் பழி வாங்கினள். இதனால் செட்டி மாண்டனன். பின் நீலி செட்டியின் தாய் போல் உருக்கொண்டு எழுபது வேளாளரையும் பழிவாங்கினள்,

தரிசனாவரணீயம்

(9) சக்ஷதரிசனாவரணீயம், அசக்ஷ தரிசனாவரணீயம், அவதிதரிசனாவரணீயம், கேவலதரிசனாவரணீயம், நித்ராதரிசனா வரணீயம், பிரசலாதரிசனா வரணீயம், நித்ராநித்ராதரிசனா வரணீயம், பிரசலாபிரசலாதரிசனா வரணீயம், ஸ்தியானகிரந்திதரிசனா வரணீயம்,

தரித்திரன்

துந்துபியின் குமரன்.

தரு

(5) அரிச்சந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம்.

தருக்கம்

என்பது பதார்த்தங்களை அளக்தறிதல், அப்பதார்த்தங்களாவன திரவியம், குணம், கருமம், சாமான்யம், விசேடம், சமவாயம், அபாவம் என எழுவகைப்படும். இப்பதார்த்தங்களைப் பொருளுண்மைக்கு அளந்து கூறு தல், அது காட்சி அல்லது பிரத்யக்ஷம், அநுமானம், ஆகமம், அபாவம், அர்த்தாபத்தி, உபமானம், என அறுவிதமென்ப. சிலர் பாரிசேஷம், சம்பவம், ஐதிகம், இயல்பு என நான்கு மியைத்துக் கூறுவர். இவைகளின் மேலும் அறைவர். இவை முன் கூறிய பிரத்யகூ அநுமான ஆகமங்களில் அடங்கும். அவற்றுள் காட்சி அல்லது பிரத்யக்ஷம், பொருள்களை ஐயவிப ரீதமின்றி நேராக அறிதல். அக்காட்சி: ஐயக்காட்சி திரிபுக்காட்சி யென்றும், பின்னும் இந்திரியக்காட்சி, மானதக்காட்சி, தன்வே தனாக்காட்சி, யோகக்காட்சி யெனவும் நான்குவகை. மேற்கூறிய காட்சி சாமான்யம் விசேடமென இருவிதப்படும். சாமான்யம்: சமுதாயமாயறிவது. விசேடமாவது: பிரித்தறிவது. இந்த இந்திரியக்காட்சியின் சம்பந்தம்: சையோகம், சையுத்தசமவாயம், சையுத்த சமவே தசமவாயம், சமவாயம், சமவே தசமவாயம், விசேடணவிசேடியபாவம் என அறுவகை. பின்னுமது மானதப் பிரத்யக்ஷம்: அதாவது ஞானேந்திரிய ஞானத்தான் மயக்கற அறியும் அறிவு. ஸ்வேதனாப்ரத்யக்ஷமாவது: தத்வங்களாலுண்டாம் இன்பதுன்பங்களை உயிருடனுணர்வறிதலாம். யோகப்ரத்யக்ஷமாவது: யோகத்திருந்து முக்கால இயல்புகளையு மறிதல். அநுமானமாவது: குணமாகச் சொல்லப்பட்ட ஏதுக்களைக்கொண்டு காணாத பொருள்களைக் காணப் பெறுதல், அது அநுமிதிக்குக் கரணமாவது. அது சுவார்த்தானு மானம். பரார்த்தானுமானம் என இருவகைப்படும், இந்த அநுமானம் பக்ஷ, சபக்ஷ, விபக்ஷ மூன்றிலே, இயல்பு, காரியம், அநுபலத்தி எனும் ஏதுத்ரயங் களினால் ஏதுமத்தாகிய சாத்யங்களை திருடவ்யாப்திகளினால் நிச்ச யிக்கும் அனுமதிஞானம். ஆகமமாவது: ஆப்த வாக்யப்பொருளைக் கூறுவோன் வாக்கு. அவை மந்திரம், தந்திரம், உபதேசம் என மூவகைப்படும். இனி பக்ஷப்போலி, ஏதுப்போலி, உவமைப்போலி முதலியவற்றினையும் மற்றப் பொருள்களின் நிரூபணங்களையும் விரிந்த நூல்களிற் காண்க

தருசகன்

இவன் மகத்தேயத்து அரசன். இவனுடைய இராசதானி இராசகிரிய மென்பது. இவன் பதுமாபதி யென்பவளு டைய தமையன், ஆருணியை வெல்லுவதற்கு இவனுடைய நட்பைப்பெற எண்ணிய உருமணணுவா முதலிய மந்திரிகளுடன் உதயணன் மாணகனென்னும் அந் தணப் பிரமசாரி வடிவங்கொண்டு அந்நகர் புறச்சோலையிற் சிலகாலம் மறைந்திருந்தனன். இவன் தந்தையாற் புதைத்து வைக்கப்பட்ட வைப்புத் திரவியங்கள் உதயணனால் அறிந்து எடுத்துக்கொடுக்கப்பட்டன. சில நீரூற்றுகளும் அவனால் இவனுக்குக் காட்டப்பட்டன; பதுமாபதியைக் கேகய அரசனுக்குக் கொடுத்தற்கு இவன் எண்ணினானென்பதை யறிந்து போர் செய்தற்கு வந்த அரசர் எழுவரையும் மந்திரிகளுடன் சென்று, உதயணன் வென்றானென்பது பற்றி அவனுக்கு பதுமாபதியை மணஞ் செய்வித்தனன், தனக்கு உதயணன் செய்த உதவியை நினைத்து அவனுக்கு உதவியாகத் தன் மந்தரிகளையும், சதுரங்க சேனைகளையும் அனுப்பி வெற்றியுண்டா கும்படி செய்தான். எலிச்செவி யரசனாற் சிறையில் வைக்கப்பட்டிருந்த உருமண்ணுவாவை விடுவித்து உதயணன் பால் அனுப்பினான். உதயணனுக்கு இவனிடத்தில் மிகுந்த அன்பு உண்டு, இவன் மிக்க புகழுடையான்; அரசர்க்கரசன், மிக்க வீரன்; சதுரங்கச் சிறப்புகளை யுடையோன்; ஒவ்வொன்றையும் ஆராய்ந்து செய்பவன்; நன்றியறிவுடையோன். இவன் தந்தையும் உதயணன் தந்தையும் மிக்க நட்புடையோரென்று தெரிகிறது. இவன் பெயர் மகத மன்னன், தரிசகன், தருசககுமரனெனவும் வழங்கும். (பெருங்கதை.)

தருத்தோணியப்பர்

இவர் ஒரு புலவராக இருக்கலாம், தத்வப்ரகாசர் காலத்தவர் போலும் ஆயிரவர் புலவோரி லொருவன் பிரபந்தகவியவ ராயிரத்து ளொருவன், அந்தாதி தூதுலாப் பரணிக்கோவைக் கமகனவ ராயிரர்க்கு ளொருவன், போயிடம்பெறு நாடகபுராணிக னவன்போலாயி ரர்க்கு ளொருவன், பொருட்பெருங் காப்பியம் புகல்வாக்கி மற்றவன்போ லாயிரர்க்கு ளொருவன், பாயிரந்தரு பஞ்சலக்ஷணவி தானியப்படி யாயிரர்க்கு ளொருவன், பரச மயதர்க்க நூல்பகர்வாதி மற்றுமப்படியாயிரர்க்கு ளொருவன், தேயமெண்டிசை பரவுதேசிகோத்த மனத்திறத் தாயிரர்க்கு ளொருவன், சிவனைத்துதித் துண்டுடுத்துக் கொடுத்திடுந் தெய்வச்சிவக் கியானியே” ”குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியனிங் கில்லை, குறும்பியள வாக்காதைக் குறித்துத் தோண்டி, எட்டினா லறுப்பதற்கு வில்லியில்லை, இரண்டொன்றாய் மயிரை முடிந்திறங்கப் போட்டு, வெட்டுதற்குக் கவியொட்டக் கூத்தனில்லை, விளையாட்டுக் கவிபாட்டு விரைந்து பாடித், தெட்டுதற்குத் தமிழறியாத் துரைகளுண்டு, தென்ளடித்துப் புலவரெனத் திரியலாமே”. “நினைவுகவி சொல்வோமெனச் சொலிப் பிறர்கவிதை, நினைவினைத் திருடி வையோம், நீடுலகின் மனிதரைப் பாடிலோம் நாமென்று, நீள் வசைகள் பாட அறியோம், பினையிளைய நாவலருடன் பங்கு பேசிப் பிரபந்தங்கள் பாடிக்கொடோம், பேசுவது தேவாரமே யலால்வாய்க் கெளியபேய்க் கிரந்தங்கள் பேசோம், இனிமை தரு பூருவத்துக் குருக்களை மறந் தெட்டிடத்துத் தீக்ஷை போயிட்ட சிறுபேர் மாற்றி மாதமொரு பேரிட்டழைக்க நாமிறுமாந்தி ரோம், தனியிருந் தெம்மைப் புறங்கூறுவார் பாடு தணியக்கவி பாடுவோம், சமண நூல்களைப் பொருளெனக் கொளோந் திருஞானசம்பந்த ரடியர் நாமே”.

தருநிலை

காவிரிப்பூம்பட்டினத்துள்ள கோயில்களுளொன்று. (மணிமேகலை.)

தருப்பசயனம்

சேதுவில் இராமமூர்த்தி தருப்பையில் சயனித்த இடம். இது புண்யஸ்நான கட்டம். நிர்மலமான க்ஷேத்ரம்.

தருப்பணபஞ்சதீர்த்தம்

தேவ தீர்த்தம், ஆரிடதீர்த்தம், மானுஷ தீர்த்தம், பூததீர்த்தம், பிதுர் தீர்த்தம் என்பன. தேவ தீர்த்தம் கைந்நுதியில் விடுவது, ஆரிடம் விரல்களினிறைச்சந்தியில் விடுவது, மானுஷம் கனிட்டிகை மூலத்தில் விடுவது, பூததீர்த்தம் மணிக்கட்டில் வருவது, பிதுர் தீர்த்தம் தற்சனி அங்குட்ட மிரண்டிற்கு நடுவில் ஒடுக்குவது. மேற்கூறிய முறையால் தேவராதியர்க்குத் தர்ப்பணஞ் செய்க,

தருப்பை

1. இது பிரமனது மூக்கிற் பிறந்த பரப்பிரம்மத்தினிடத்துப் பிறந் தது. இதனை ஓ தர்ப்பையே, சுபத்தைத் தருவதே, எனது எல்லாப் பாவங்களையும் போக்குக என்று கூறி ஹும்பட் என்கிற மந்திரத்தால், ஒருமுறை பேதித்து மேலெடுக்கவேண்டும். இத்தருப்பையில் பெண் தர்ப்பை அக்கிரஸ்தூலமுடையது. மூலஸ்தூலம் உடையது. நபும்ஸகதர்ப்பை. அடிமுதல் நுனிவரை ஒரே சமகனம் உள்ளது புருஷ தர்ப்பையாம். இவ்வகைத் தருப்பையின் அடியில் பிரமனும், இடையில் விஷ்ணுவும், முனையில் சங்கரனும் ஆகிய திரிமூர்த்திகளும் வசிக்கின்றனர். தருப்பை, நாணல், யவைப்புல், அறுகு, நெற்புல், விழல்மற்ற தானியங்களின் புல், மருள் மட்டை, சவட்டைக்கோரை, கோது மைப்புல் இவை பத்துவித தருப்பைகள் என்னப்படும். இத்தருப்பையினைத் தேவதைகளை உத்தேசித்து நுனியாலும், மனிதர்களை உத்தேசித்து மத்தியாலும், பிதுர்க்களை உத்தேசித்துத் தருப்பையினை, மடித்து நுனியாலும் தர்ப்பணஞ் செய்ய வேண்டும். இத்தருப்பையினை ஆதிவாரத்தில் கொய்வனேல் அதனை மற்ற ஆதிவாரம்வரையில் உபயோகிக்கலாம். அமாவாசையிற் கொய்வனேல் ஒருமாதம் வரையில் உபயோகிக்கலாம். பௌர்ணமியில் அறுப்பனேல் ஒரு பக்ஷம் உபயோகிக்கலாம். பாத்திரப்பதமாதத்தில் கிரகிப்பனேல் ஆறுமாதம் வரையில் உபயோகிக்கலாம், சிராவண மாதத்தில் கிரகிக்கின் ஒரு வருஷம் உபயோகிக்கலாம். சிரார்த்த காலத்தில் கிரகித்தது அன்றைக்கு மாத்திரம் உதவும், ஐம்பது குசைப்புற்களால் பிரம்ம கூர்ச்சம் செய்தல் வேண்டும். அதிற் பாதியால் ஆசனம் விதிக்கப்பட்டு உள்ளது. (லிகிதஸ்மிருதி.) 2. கருடனைக் காண்க.

தருமகுத்தன்

1. சத்தியாதனனைக் காண்க. 2. இவன் சந்திரகுலத்து நந்தன் புத்திரன். இவன் வேட்டைக்குச் சென்று தனித்துப் பொழுதுபட்டதால் மிருகங்களுக்கு அஞ்சி ஒரு மரத்தில் ஏறியிருக்கையில் கரடியொன்று சிங்கத்தாற் றுரப்புண்டு அரசனிடம் வந்து மரத்திலேறி அரசனே நீ பாதியிரவு விழித்திரு, நான் பாதியிரவு விழித்திருக்கிறேன் என்று அரசனிடம் உறுதிபெற்றுக்கொண்டு அரசனை முந்தித் தூங்கும்படி ஏவிற்று, அப்போது அடியிலிருந்த சிங்கம் கரடியை நோக்கி அரசர் கொடியர் ஆதலால் கீழ்த்தள்ளுக என்றது. கரடி, நம்பினவரைக் கொலைசெய்தல் கூடாது என்று மறுத்தது. பின் அரசன் விழிக்கக் கரடி உறங்கிற்று, சிங்கம் அவ்வகை கரடியைத் தள்ளும்படி அரசனைக்கேட்க அரசன் யோசியாது கரடியைத் தள்ளினன். கரடி, அரசனை நோக்கி, அரசனே! நான் சான காட்டன் என்னும் இருடி, நீ என்னிடம் செய்த தீமையால் பித்தனாக எனச் சபித்தனன், சிங்கத்தை நோக்கி நீ பத்திரன் என்னும் காந்தருவன், குபேரன் மந்திரி, நீ இமயச்சாரலில் உன் மனைவியுடன் நீர் விளையாடுகையில் சமித்தொடிக்கவந்த கௌதமர், உன் நிர்வாணத்தைக் கண்டு சிங்கமாக எனச் சபித்தனர். இந்தத் தருமதத்தன் காட்டில் திரிந்து சயமினி சொல்லால் சேது தீர்த்தமாடிச் சுத்தனாயினான். (சேது கதை.)

தருமகோபன்

சூரபதுமன் மந்திரி, புண்டரீகமென்னும் யானையை ஏவல்கொண்டு வீரவாகுவால் மாண்டவன்

தருமசகன்

கேயபுரத்தரசன், இவனுக்கு (100) பேர் தேவிமார். இவர்களுள் மூத்தவளுக்கு ஒரு குமரன், அவன் பெயர் சந்திரன். மற்றத் தேவியர்க்குப் பிள்ளைகள் இல்லாமையால் இவன் புத்திரகாமேஷ்டி செய்து (100) மனைவியரிடத்தும் (100) குமரரைப் பெற்றான்.

தருமசன்மன்

இவன் ஒரு வேதியன், மாலுதானருஷி கோபத்தால் கல்லானவன். எக்ய சருமனைக் காண்க,

தருமசாவகன்

ஒரு புத்தன். நாகபுரத்தின் அருகிலுள்ள ஒரு சோலையிலுள்ளவன். புண்ணியராசனுக்குத் தருமோபதேசஞ் செய்தவன்.

தருமசீலன்

1. விஷ்ணுபடன், 2. புண்ய புஞ்சனைக் காணக.

தருமசீலை

ஒரு வேளாளர் தேவி, இவளும் இவள் கணவனும் சிவனடியார்க்கு அன்னமிட்டுச் செல்வம் நீங்கி வறுமைவந்த காலத்தில் சிவமூர்த்தி உலவாக்கோட்டை அருளி அடியவர்க்கு அமுதளிக்கக் கட்டளையிடப் பெற்றவர்.

தருமசேனன்

1. ஒரு அரசன், இவனிடம் இலக்ஷ்மி அவதரித்து விஷ்ணுமூர்த்தியை மணந்தனள். 2. திருநாவுக்கரசுகள் சமணசமயம் புகுந்து பெற்ற பெயர்.

தருமஞ்ஞன்

1. வேதசன்மா என்னும் வேதியன் குமரன். இவன் தந்தையின் எலும்புகளைக் குடத்திலிட்டு யாத்திரைசெய்கையில் திருப்பூவணத்திலுள்ள மணிகன்னிகையில் தங்கினான். அவ்விடத்தில் கால் இடறிக் குடம் நீரில் விழ வேதியன் அதனை எடுத்துத் தாமரைமலராகக் கண்டு தீர்த்தத்தின், பெருமையுணர்ந்து ஸ்நானஞ்செய்து முத்திபெற்றனன். (திருப்பூவண புரா.) 2. ஏமாதி தீரத்தில் அரசாண்டிருந்த அரசன் புத்திரப்பேறு இல்லாமையால் அவிநாசித்தல யாத்திரை செய்து அக்கிவருமன், இரண்ய சேநன் என்னும் இரண்டு புத்திரரைப் பெற்றவன். (அவிநாசித்தல் புராணம்)

தருமதத்தன்

1. அரிபுரத்துத் தேவதத்தன் குமரன்; இவன் தாய் தந்தையர் தேடி வைத்த பொருள்களைக் கபடசந்நியாசி ஒருவன் வஞ்சித்துப் பொன் செய்து தருகிறேன் என்று வாங்கி மறைந்தனன். இதனால் இவன் உயிரிழந்து, தருமத்திற்கு வைத்த பொருள்களை யெல்லாம் விற்று இரசவாதம் செய்ததால் காட்டானையாய் உசத்தியமுனிவரைத் தூக்கிச் செல்லுகையில் முனிவர் இவனது முன்னைய நிலைமையறிந்து தமது தவத்திற் சிறிது உதவினர். யானையா யிருந்தவன் தேவவுருப் பெற்றனன். இவன் காட்டானையா யிருக்கையில் உசத்தியமுனிவர் குமரி இவனது யானை யுருவத்தைக்கண்டு பயந்து மடுவில் குதித்து உயிர் நீங்கினள். இவனுக்குத் தனதத்தன் எனவும் பெயர். 2. சச்சந்தன் மந்திரி, 3. காசி அரசன் புரோகிதர்; இவர் பிரமனம்சம். இவரிடம் சித்தி புத்திகள் அவதரித்து விநாயகரை மணந்தனர். 4. காவிரிப்பூம்பட்ட்ணத்து எட்டிப்பட் டம்பெற்ற வணிகன். (மணிமேகலை.) 5. கலகன் எனும் அசுரனுக்கு விஷ்ணு மந்திரம் உபதேசித்து அவனது இராக்ஷஸப் பிறப்பொழித்ததால் தசரதனாகப் பிறந்தவன். (பதுமபுராணம்.) 6. தருசகனுடைய மந்திரிகளுள் ஒருவன், ஆருணியோடு போர்செய்தற்குச் சென்றபொழுது உதயணனுக்கு உதவியாக அனுப்பப்பட்டு முன்படையில் நின்று பொருதவீரன். அவனை வென்றதற்குக் காரணனாக இருந்தது பற்றி, நெய்த்தோர்ப் பட்டிகையும், பத்தூரும் உதயணனாற் பெற்றவன். (பெருங்கதை.)

தருமதேவதை

வெள்ளைநிறம், நான்கு பாதம், இரண்டு கொம்புகள், உயர்ந்த முசுப்பு, பூமியிற்படியும் வாலுமுள்ள எருதின் உரு. இது முதல்யுகத்தில் நான்கு பாதத்துடனும், இரண்டாம் யுகத்தில் மூன்று பாதத்துடனும், மூன்றாம் யுகத்தில் இரண்டு பாதத்துடனும், நான்காம் யுகத்தில் ஒருபாதத்துடனும் நடக்கும். இது திருமாலின் மார்பிற்பிறந்து சமஸ்த பிராணிகளையுங்காத்து இஷ்டத்தைக் கொடுப்பது,

தருமதை

பித்ருக்களைக் காண்க,

தருமத்துவசன்

சர்வகாலழம் யமனரண்மனையிலிருப்பவன், ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாபங்களை யமனுக்கறிவிப்பவன்,

தருமநூல்

(18) மது, அத்திரி, ஒளரிதம், விட்ணு, யாஞ்ஞவற்கியம், உசனம், ஆங்கீரசம், யமம், ஆபத்தம்பம், சம்வர்த்தம், காத்தியாயனம், பிரகற்பதி, பராசரம், வியாசம், சங்கலிதம், தக்கம், கௌதமம், சாதான்மம், வசிட்டம், இவற்றுள் இருதயுகத்திற்கு மநுவும், திரேதாயுகத்திற்குக் கௌதம ஸ்மிருதியும் துவாபரயுகத்திற்குச் சங்கலித ஸ்மிருதியும், கலியுகத்திற்குப் பராசர ஸ்மிருதியும் முக்கியமாம்.

தருமன்

1. வருணன் குமரன், மனைவி நிருதி, குமரர் மகாபயன், பயன் மிருத்யு குமரிகள் காக்கை, சேனை, பாசினி, திருதராஷ்டரை, சுகி, 2. திரேதாயுகத்தில் விஷ்ணுவுக்கு ஒரு பெயர். 3. ஒரு அரசன், பாரி, சூனிறுதை. 4. ஓர் வணிகன், தாய் தந்தையரிறக்கக் குட்டநோய் கொண்டு பசியால் வருந்தி நாகைக் காரோகணத்துப் பலிபீடத்திருந்த அன்னத்தைப் புசிக்கச் சிவமூர்த்தி யிவனிடம் கருணை புரிந்து பெருஞ் செல்வமளிக்கப் பெற்று வாழ்ந்தவன். 5. காந்தாரன் குமரன், இவன் குமரன் கிருதன். 6. பேஹயன் குமரன், இவன் குமரன் நேத்திரன். 7. பிருது சிரவசுவின் குமரன், இவன் குமரன் உசநசு, இவனுக்கே மறுபெயர் என்பர். 8. திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையியற்றியவர்களில் ஒருவர், 9. அருஷனுக்குத் தந்தை. 10. மாநந்தையைக் காண்க. இவன் பன்னிரண்டு வயதில் இறப்பன் எனக் கேட்ட தந்தை, ஸ்ரீருத்திரத்தால் பதினாயிரம் வருஷம் இருக்கச் செய்யப்பெற்றவன். 11. ஒரு அரசன் கோதமனாரால் பாடல் பெற்றவன். 12. யமனுக்கு ஒரு பெயர். 13. சுபுத்தன், விபுலன் இவ்விருவரும் ஒரு நாட்டிலிருந்தவர். இவர்களுள் சுபத்தன் புத்திரன் தருமன். விபுலனுக்குச் சந்திரசேநன், மிருது சந்திரன் என இரண்டு குமரர் இருந்தனர். இவர்களுள் தருமனும், மிருதுசந்திரனும் இல்லறத்திருந்தனர். சந்திரசேகன் துறவியாயினன், இதைக் கேட்ட தருமன் துறவுகொள்ள இருக்கையில் பிருகு முனிவர் பஞ்சாக்ஷர உபதேசஞ்செய்து இல்லறம் நன்றென்று சென்றனர். சந்திரசேநன் சித்தி வல்லனாய்ப் பலநாள் கழித்துத் தருமனிடம் வந்து தன் வல்லமையைக் காட்டி இந்திரனை அழைத்தனன். தருமன் பஞ்சாக்ஷர பலத்தால் பிரமனை அழைத்துக் காட்டினன். இதைக் கண்ட சந்திரசேநன் தருமனைக் குருவாகக் கொண்டு பஞ்சாக்ஷர உபதேசம் பெற்றனன். 14. ஓர் மது, தக்ஷன் பத்துப் பெண்களை மணந்தவன். இவன் தேவியர் கீர்த்தி, லக்ஷ்மி, துருதி, மேதா, புஷ்டி, சிரத்தை, கிரியை, விருத்தி, இலச்சா, மதி, குமரர், சமன், இராமன், அருஷன். (பாகவதம்) 15. சைக பதினைந்தாவது தீர்த்தங்கரர். இவர் ரத்னபுரம் குருவம்சம், தந்தை பானு மகாராசா, தாய் சுப்ரபை. இவர் மாசி மாதம், சுக்லபக்ஷத் திரியோதசி, பூசநக்ஷத் திரத்தில் பிறந்தனர். உன்னதம் (40) வில் சுவர்ணவர்ணம் (10) லக்ஷம் ஆயுஷ்யம். புத்ரன் சுதர்மன்; கணதரர் அரிஷ்டசேநர் முதல் (43) இவர் காலத்து இராசாக்கள் சுதர்சன பலதேவன். புருஷசிம்ம வாசுதேவன். மதுக்கிரீடவன், பிரதி வாசுதேவன். இவர் காலத்துச் சக்கிரவர்த்தி மகவான் என்கிற சக்கிரவர்த்தி, சந்த் குமாரன்.

தருமபக்ஷிகள்

விபுலருக்குச் சுகுருசர், தும்புலவர் என்று இரண்டு குமரர் இருந்தனர். அவர்களுள் சுகுருசருக்கு நான்கு குமரர். இவர்களே பிறகு தர்மபுகளானார்கள். இவர்கள் தம் தந்தைக்கு ஏவல் செய்து கொண்டிருக்கையில் இந்திரன் ஒரு பக்ஷியுருக்கொண்டு மிகப்பசியோடு வந்து தான் விந்தமலையுச்சியிலிருந்து ஒருவன் எய்த அம்பினால் விழுந்ததாகவும் பசியால் வருந்துவதாகவும் நடித்துத்தனக்கு நரமாமிசம் வேண்டுமென்றனன், முனிவர் தம் புத்திரர்களை நோக்கி இந்த அதிதியாக வந்த பக்ஷிக்கு இரையாகுக எனப் புதல்வர்கள் உடம்படாததினால் பக்ஷிகளாக எனச் சபித்தனர். பின்பு புத்திரர் வணங்கிக் கேட்கத் தந்தை என் வாய் தப்பாது, ஆதலால் இச்சாபம் உங்களை ஜயமினி முனிவர் சந்தேகம் கேட்கும்போது நீங்கும். என அவ்வாறே சாபம் ஏற்றிருந்தனர். இது நிற்க, இந்திரன் ஒருமுறை அரம்பை, மிசிரகேசி, ஊர்வசி, திலோத்தமை, கிருதாசி, வபு இவர்களுடனிருக்கையில் நாரதர் வர இப்பெண்களும் இந்திரனும் பணிந்தனர். இந்திரன் முனிவரை நோக்கி இந்தப் பெண்களுள் எவள் உமக்கிஷ்டமோ அவளை உமதேவலுக்குக் கொள்க என முனிவர் உங்களுள் அழகுள்ளவள் வருக என்றனர். எல்லாருமிருக்க வபு என்பவள் வந்தது கண்டு நாரதர் அவளை நோக்கி நீ இமயச்சாரலில் துருவாசர் தவஞ் செய்கின்றனர் அவர் தவத்தைக்குலைக்க என்றனர். அவ்வண்ணஞ் சென்று அவரை ஆசையூட்ட அவர் சினந்து நீ பறவை யுருக்கொண்டு 16 வருஷமிருந்து 4. குஞ்சுகனைப் பொரித்து அரம்பை யுருவாக எனச் சாபமேற்றனள். இதுநிற்க, கங்கன், கந்தரன் எனும் புள்ளரசுகளில் கங்கன் ஒரு நாள் கைலைக்கருகிற் சென்று அங்குத் தன் மனைவியுடன் சரசமாயிருந்த வித்யுத்திருவன் எனும் அரக்கனைப் பார்த்திருக்க அரக்கன், நாங்கள் உல்லாசமாயிருப்பதை நீ காண இம்மலையில் வந்ததென்னெனப் புள்ளரசுப்இம்மலை யாவர்க்கும் பொது என அரக்கன் கோபித்து வாளாலெறிந்து கொன்றனன். தமயனிறந்ததை யறிந்த தம்பியாகிய கந்தரன் அரக்கனுடன் யுத்தத்திற்குச் சென்று அரக்கனைக் கொன்று அவ்வரக்கன் மனைவி தமனிகையைப் பக்ஷி யுருக்கொளச் செய்து உடனழைத்துச் சென்று அவளைப் புணர்ந்து தார்க்ஷியெனும் பெண்ணைப் பெற்றான். இவளே துருவாச சாபம் பெற்றவள். மந்தபால முனிவர் குமரர், ஜரிதாரி, துரோணர் முதலியோருள் துரோணர் தார்க்ஷியை மணந்தனர். தார்க்ஷி கருப்பமடைந்து பாரதயுத்தம் காண்கையில் அருச்சுநன், பகதத்தன் மீதேவிய அம்புகளில் ஒன்று பட்டு வயிற்றைக் கிழிக்க வயிற்றிலிருந்த நான்கு முட்டைகள் யுத்த பூமியில்விழ அவற்றைப் பகதத்தன் யானை மணி அறுந்து விழுந்து மூடிக்கொள்ளப் பொரிந்து வளர்ந்து கூச்சலிடுகையில் யுத்தகளத்திலிருந்த வீஷ்மரைக் காணவந்த சமீகமுனிவர் அக்கூச்சலைக் கேட்டு அவற்றையெடுத்து வளர்த்தனர். இவர்கள் பெயர், பிங்காக்ஷன், விபோதன், சுபத்திரன், சுமுகன், இவர்களே முன் தந்தையால் இந்திரன் பொருட்டுச் சாபமேற்ற சகுருசர் குமரர். இவர்கள் பக்ஷியுருக் கொண்டு சாப வரலாறு எண்ணிவேத மோதிக் கொண்டிருக்கையில் வியாசர் மாணாக்கர் ஜயமினிமுனிவர் இவ்வோசை கேட்டு அவ்விடஞ் சென்று சில தரும சங்கைகள் கேட்கச் சாபநீங்கிச் சென்றனர். (மார்க்கண்டேய புராணம்),

தருமபாதன்

இவன் செல்வமுள்ள வணிகன், செல்வங்களைத் தருமத்தில் செலவிட்டுக் காசியில் ஒருகுள மெடுத்து வறியனாய் ஒருவேதியினிடம் (300) பொன் கடன் வாங்கிக், கொடுக்க முடியாது தான் எடுத்த குளத்தை அவனுக்குக் கொடுக்க, வேதியன் தருமமறிந்தவரை நோக்கி நான் இந்தக் குளத்தை யெவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என அவர்கள் இதில் ஒரு கல்லிடின் மிதக்கும் அதுவரை வைத்திருக்க என்றனர். உடனே ஒரு பாறை யைக் குளத்திட அதில் ஒரு கன்றும் பசுவும் நீர் குடித்தன. குளத்திலிட்டகல் மிதக்கக் குளத்தை வணிகன் வசமாக்கினர். (காசிகாண்டம்).

தருமபாலன்

காசியில் தருமஞ செய்து முத்தியடைந்தவன் (காசிரசுசியம்).

தருமபுஞ்சன்

சண்ட தருமன் குமரன். வேதியன், இவன் கொலையாதிகள் மேற்கொண்டு நாத்திகனாய்ச் சண்டாளரிடம் உண்டு பின் தந்தையால் நல்லறிவு பெற்றவன்.

தருமபுத்திரன்

இவன் ஓரரசன். கோதமனாரால் பாடல் பெற்றவன். (புற~நா.)

தருமபுத்ரர்

பாண்டுமகாராசலுக்குக் குந்திதேவியிடம் யமமந்திரத்தால் பிறந்தவர். இவர், தந்தையிறக்கப் பெரிய தந்தையால் வளர்க்கப்பட்டுத் தம் தம்பியருடன் வில் வித்தை முதலிய கற்றுப் பெரிய தந்தையால் இளவரசாயினர். இதைப் பொருத துரியோதனன் அரக்கு மாளிகை யொன்று நிருமித்துப் பாண்டவர் உறங்குகையில் தீப்படுத்த எண்ணினன். இதையறிந்த வீமனால் அதினின்று நீங்கி வேத்திரகீய மடைந்து அருச்சுநன் கொண்டு வந்த திரௌபதியை வியாசர் சொல்லால் தம்பியருடன் தாமும் மணந்து திருதராட்டிரன் சொற்படி அத்தினபுரம் வந்து சேர்ந்து ஒரு பழைய நகரை ஆண்டு கண்ணன் அருளால் அதை இந்திரப்பிரத்தமென்னும் நகராக்கி, நாரதர் கட்டளைப்படி இராஜசூய முடித்து சம்ராட் பட்டம் அடைந்து செல்வத்தோடிருந்தனர். இதைக்கண்டு போன துரியோதனன், ஆலோசனையால இவனையும் தம்பியரையும் நாட்டை விட்டு அகற்ற மண்டபம் ஒன்று கட்டுவித்து அதைக் காண வருவிப்பது போல் வருவித்துச் சகுனியைக் கொண்டு சூதாடுவித்து நாடு, செவ்வம் முதலியவற்றை உபகரித்துக்கொண்டனன். இதனால் துரியோதனனுக்கு அடிமையாய்த் திரௌபதியால் நீங்கித் துரோணர் சொற்படி பன்னிரண்டு வருஷம் காட்டிலும் ஒரு வருஷம் கரந்தும் வசித்துப் பின் வெளிப்பட்டு முறையே 3,9,12,16,17,18 ஆம் நாட்களில் யுத்தம் புரிந்து துரோணருடன் யுத்தஞ் செய்கையில் “அசுவத்தாமா அதாகுஞ்சரம்” எனக் கண்ணன் சொற்படி கூறித் துரியோதனாதியரை வென்று கர்ணனைத் தம் தமயனென்று துக்கித்துத் தன் தாயிடம் விசனமடைந்து இனிப் பெண்கள் எந்தர கஸ்யத்தையும் மனத்தில் கொள்ளாதிருக்க எனச் சபித்து அரசேற்று முடி சூடி ஆண்டுகொண்டிருந்தவர், மேருசா வர்ணி, வியாசர், நாரதர், பரசிராமர், அசிதர் முதலியவர்களால் தருமம் உபதேசிக்கப்பட்டவர். சௌநகர் கூறிய மந்திர பலத்தினால் சூரியனிடமிருந்து அக்ஷயபாத்திரம் பெற்றவர். உரோமசன்மரிடத்து நளன் அகத்தியர் முதலியோரது கதை கேட்டறிந்தவர். அரணியவாசத்தில் அருச்சுநனைக் காணாது அவலமடைந்து உரோம சன்மரால் தேறியவர். மருத்து மகாராசன் புதைத்து வைத்த பொருளைக் கொண்டு யாகஞ் செய்தவர். இவர் தவத்திற்குச் செல்கையில் இரண்டு வேதியர், நிலவழக்கிட்டு இவனிடத்தில் நிலம் வாங்கினேன். அதில் ஒரு பொற்குவை இருந்தது. அதை நிலம் விற்றவன் கேட்கிறான் இதற்கென்ன நீதி யென்றனர். தருமர் இவ்வழக்கை வீமனுக்குக் காட்ட வீமன், இவர்களுள் வாங்கினவன் நேற்று என்னிடம் வந்து அவனிட மிருந்து வாங்கியநிலத்திலிருந்ததை அவனுக்கே கொடுக்கவேண்டு மென்று கூறினன். இன்றைக்கு மறுக்கிறான் ஆதலால் இன்றைக்கே கலி பிறந்தது, நாம் தவத்திற்குப் போவோமென்றனன். தருமர் வழக்காளிகளைப் பரிசித்தினிடம் அனுப்பிவிட்டுக் காட்டிற் கேகினர். இவர் சுவர்க்கம் போகையில் யமன் நாயுருக்கொண்டு பின் தொடரக் கண்டு இந்த நாய்க்கு நற்பதவி கொடுக்கின் நான் விமான மேறு வேனென்று இந்திரனிடம் கூற யமன் தன்னுருக்கொண்டு வாழ்த்தினன். இவர் விமானமேறிச் சுவர்க்கஞ் சென்று நாரதரைத் தரிசித்துச் சுற்றத்தவரைக் காண விரும்பித் துரியோதனன் கொலுக்கண்டு கர்ணன், வீமன், அருச்சுநன், தரௌபதி முதலிய பந்து மித்திரர்களை நரகத்திற் கண்டு விசனழற்று ஆகாய கங்கையில் ஸ்நானஞ்செய்து திவ்யதேகம் பெற்று யம தரிசனம் செய்து அப்பால் பரமபதத்தில் கண்ணனையும் அவன் தேவியர் எண்மரையும் கண்டு பணிந்தவர்.

தருமப்பிரஜாபதி

ஓர் பிரசாபதி, பாரி மூர்த்திதேவி, குமரர் நரநாராயணர்,

தருமமூர்த்தி

சிவ பூசையால் உயர்நிலையடைந்த முனிச்சிரேட்டர். (சிவரகசியம்)

தருமவர்மா

நிஷ்களாபுரியாண்ட சோழன் தசரதன் காலத்தவன். திருவரங்கத்தில் கோபுர முதலிய திருப்பணிகள் செய்வித்தவன்.

தருமவியாதன்

ஒரு வேடன் கௌசிக னென்னும் வேதியனுக்கு அறமுரைத்தவன், இவன் பூர்வம் வேதியன். ஒரு இருடி மான்றோலிட்டுப் போர்த்துத் தவஞ் செய்ய அவரை மானென்று எய்து அவரால் வேடனாகச் சாபமடைந்தவன்.

தருமஷணன்

சஞ்சய னிரண்டாவது புத்திரன். (மா~புராணம்.)

தருமா

(ச.) சங்கிருதி குமரன்; இவன் மகாரதன்.

தருமாகரன்

இவன் தவநிலைக்கு அஞ்சிய இந்திரன், இவன் தவத்தைக் கெடுக்க அரம்பையராலும் ஆகாதென உணர்ந்து யவனதேசத்தில் தாழ்ந்த சாதியிற் பிறந்து பிரமதேவரிடம் அழகுபெற்ற சதமாயைக்குப் பல வரம் தந்து இவன் தவத்தைக் கெடுக்க ஏவ அவள் அவ்வாறு சென்று அவனை வயப்படுத்தி அவனுடன் இருந்து தவத்தைக் கெடுத்தனன். இவன் தான் கெட்டநிலை உணர்ந்து சிவகீதையில் விபூதி விசுவரூப அத்தியாயம் ஓதி சுத்தம் அடைந்தனன். இவன் ஓதிய காரணத்தால் பாவம் அடைந்த அவ்விரு அத்தியாயங்களும் கங்கையில் அன்ன உருக்கொண்டு முழுகித் தூய்மை பெற்றன. அதனால் பாபமடைந்த கங்கை சிவ தீர்த்த ஸ்நானத்தால் சுத்தையாயினள்.

தருமி

1, ஒரு சைவ வேதியர், மதுரையை யாண்ட வங்கியசூடாமணி பாண்டியன், ஒருநாள் நந்தனவனத்திற்குப் போயினன், அவ்விடமிருந்து ஒரு புது மலரின் மணம் வர உணர்ந்து இதேது புது மணம், இந்த நந்தனவனத்திலுள்ள மலர்களின் மணம் நாமறியோமே என்று அந்த மணம் வரும் வழியை நோக்கினன், அது தனது மனையாட்டியின் கூந்தலென் றறிந்து அது புஷ்ப மணத்தின் வேறாயிருந்ததால் சந்தேகித்துக் கொலுவில் பொற்கிழி யொன்று தொங்கவிட்டு என் கருத்தைத் தெரிவித்தவர் இந்த ஆயிரம் பொன்னிறைந்த கிழியைப் பெறலாமென்றனன். சங்கப்புலவர் அனைவரும் தனித்தனிப் பாட அரசன் சம்மதமிலாது இருந்தனன். இப்படி யிருக்க மேற்கூறிய வேதியன் சொக்கநாதரை யடைந்து தனது குறை கூறி அரசன் கருத்தை அறிவித்து அப்பொருளைத் தனக்குக் கொடுப்பிக்க வேண்டிச் சொக்கநாதர் “கொங்குதேர்” என்கிற கவியருளப் பெற்று அரசனுக்கு அறிவித்தனர். அரசன் சம்மதித்துச் சங்கத்தவர் அனுமதிக் கனுப்பப் புலவர் எல்லாரும் ஒத்துக்கொண்டனர். நக்கீரர் செய்யுளில் சொற் குற்றமில்லை பொருட்குற்றம் உண்டென்றனர். அது என்னெனின் உத்தமப் பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் கிடையாது; செயற்கையென மறுத்தனர். வேதியர் மீண்டு சொக்கருக்கு அறிவிக்கச் சொக்கர் ஒரு புலவர் போல் உருக்கொண்டு நக்கீரரிடம் வந்து இச்செய்யுளில் என்ன குற்றம் என்றனர், நக்கீரா பொருட் குற்றத்தைக் கூறினர். சொக்கர், ஆயின் உத்தம லக்ஷணமுள்ள பதுமினிப் பெண்களுக் கோவெனின், அதுவும் அவ்வாறே யென்றனர். சொக்கர் தேவமாதருக்கோ என, கீரர் அதுவும் அவ்வாறே என்றனர். சொக்கர் நீ வணங்கும், ஞானப்பூங்கோதைக்கோ என, கீரர் அதுவும் அடியவர் முடியிடுதலால் உண்டாவதேயென்று சாதித்தனர். இதைக்கேட்ட சொக்கர் தமது நெற்றிக் கண்ணைக்காட்டக் கீரர், தேவரீர் இன்னவர் என்று அறிந்தேன். ஆயினும் நான் கூறியதே உண்மை யென்றனர். சொக்கர் மறையக் கீசர் நெற்றிக்கண்ணின் தீவெம்மை யாற்றது பொற்றாமரையில் விழுந்து கரைகாணாது அலைந்து நல்லறிவு தோன்றி நீரிலிருந்தபடி கைலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடிக் கரைசண்டு தான் செய்தது குற்றமென்றறிந்து தருமிக்குப் பொற்கிழி கொடுப்பித்துக் கடவுளை வணங்கினர். சோமசுந்தரமூர்த்தியைக் காண்க. (திருவிளையாடல்) 2. சிங்கள தேயத்துச் சவிதா என்னும் வேதியன் குமரன், இவன் தனக்குரிய பொருளைச் சிவாலயத்திற்களித்து நற்கதி பெற இவனுக்கிளையார் அவற்றை யபகரித்து நரகமடைந்தனர்.

தருவீகரசர்ப்பம்

இது உடல் முழுதும், கலப்பை, குடை, துவசம், அங்குசம் போல் புள்ளிகளைப் பெற்றுக் கரண்டியையொத்த படத்தைப் பெற்று வேக நடையுடையது,

தர்க்கம்

1. வாதம்; இது சாதகதர்க்கம், பாதகதர்க்கம் என இருவகை, சாதகமிருக்கின் சாத்தியமிருக்குமென்பது சாதக தர்க்கம். சாத்யமினறாயின் சாதகமின்றா மென்பது பாதகதர்க்கம். (தரு.)

தர்சகன்

தாதா என்பவனுக்குச் சிவாலியிடம் பிறந்த குமரன்.

தர்சம்

அமாவாசையிற் செய்யும் யாகம்,

தர்துரம்

கிழக்குத்தொடர்ச்சி மலையின் தென்பாகம், Tee Southern Partition of Eastern Ghats. தர்துரம் காண்க.

தர்பாரணியம்

கயைக்கு அருகிலுள்ள க்ஷேத்திரம்.

தர்மகேது

1, ஆர்யகருக்கு வைத்திருதிமிட முதித்த விஷ்ணுவினம்சம். 2. (ச.) சுகேதனன் குமரன், இவன் குமரன் சத்தியகேது.

தர்மசாவர்ணிமநு

பதினொராமன் வந்தரத்து மநு

தர்மசுவாமி

சிவசுவாமியின் குமரன், இவன் கல்வியில் வல்லவனாய் வேசையர் மயலில் மயங்கிச் செல்வ முழுதும் இழந்து கள்ளருந்திப் பலநாள் கழித்துத் தான் செய்தது தீங்கென்றறிந்து வேதியரைப் பிராயசித்தங் கேட்டனன். அவர்கள் நெய்யைக் கொதிப்பித்து வாயில் வார்க்க இருக்கையில் நாரதர் தரிசனம் தந்து அவ்வாறு செய்தலைத் தடுத்துச் சித்திரா நதியாடச் செய்யப் பாபம் நீங்கினன்.

தர்மதரிசி

18 வது புத்தன்.

தர்மத்துவசன்

(சூ.) சதத்துவசன் குமரன். இவனிடத்து லக்ஷ்மி பெண்ணாகப் பிறந்தனள். சரஸ்வதியைக் காண்க,

தர்மத்வஜன்

இவன் ஏகாதசி விரதபலத்தால் பல அரசர்களை வென்று மோஹினி, நாககன்னிகை முதலியவர்களை மணந்த அரசகுமரன். (பிரகன்னார தீய புராணம்.)

தர்மநேத்ரன்

1. ஹேஹயன் குமரன், இவனுக்குத் தர்மன் எனவும் பெயர். 2. சுவவிர தன் குமரன், இவன் குமரன் சிரதன்,

தர்மரதன்

1, திவிரதன் குமரன்; இவன் குமரர் அத்திரரதன், 2 சித்திரரதன் குமரன்.

தர்மரதர்

இவர் சிவபூஜையால் சித்தி பெற்று நந்திமாதேவரால் விஷ்ணுவ மடைந்தவர். (சிவரஹஸ்யம்.)

தர்மலக்ஷணம்

சந்தோஷம், பொறுமை, மனோநிக்ரகம், அந்யாயமாய்ப் பொருள் தேடாமை, நல்லொழுக்கம், இந்திரிய நிக்ரகம், சாஸ்திர ஞானம், பிரம்ம ஞானம், உண்மை, கோபமின்மை. (மது)

தர்மவர்மா

திருவரங்கத்தில் பெருமாள் அருள் பெற்ற சோழன்.

தர்மவாக்யன்

திருதராட்டிரன் குமரன்.

தர்மவாதி

திரிசங்கின் தேவி, அம்பரீஷனுக்குத் தாய். இவள் புத்திரப்பேறு இலாது இருக்கத் திருமால் கனவிற்றோன்றி ஒரு கனி பிரசாதிக்க உண்டு அம்பரீஷனைப் பெற்றவள்.

தர்மவியாதன்

விஷ்ணு பக்தனாகிய வேடன்,

தர்மவிரதன்

தண்டகாரண்யத் திருந்து இராமரைக் கண்டு தரிசித்தவன்.

தர்மவிரதை

கயாசுரனைக் காண்க,

தர்மாங்கதன்

ருக்மபூஷணன் என்னும் வேதியன் குமரன்,விஷ்ணுபூஜையால் இந்திரபதமடைந்தவன். (பாத்ம புரா.)

தர்மாங்கன்

இருக்குமாங்கதன் குமரன்.

தர்மாரண்யம்

1. அதூர்த்தரஜன் கட்டின பட்டிணம்.

தர்மாரண்யர்

ஒரு வேதியர், பதுமனைக் காண்க. 2. கயைக்குச் சமீபத்திலுள்ள ஒரு க்ஷேத்திரம், Four miles from Budahs Guya in the distriot of Gaya.

தற்கமுனி

ஆகாயவாணியிடந் தான பலங்கேட்ட முனிவன்.

தற்குறிப்பணி

அஃதாவது, ஒரு பொருளை மற்றொரு பொருளினது தரும் சம்பத்ததினாலே இஃதிஃதன்று என்று தெரிந்திருந்து மப்பொருளாக அத்தியவசயித்தலாம். இதனை வடநூலார் உத்ப்ரேக்ஷாலங்கார மென்பர்.

தற்குறிப்பேற்றவணி

இது ஒரு பொருளுக்கியல்பாந் தன்மையொழிய, கவி, தான் கருதிய தொன்றை அதன் மேலேற்றிக் கூறுதல். (தண்டி)

தற்பன்

யமனுக்கு உன்னதியிட முதித்த குமரன்.

தற்புருடன்

சிவபிரான் திருமுகத்தொன்று. பீதகற்பத்தில் பிரமனுக்கு முன் தரிசனந் தந்து காயத்திரியை யுதவி நான்கு இருடிகளைத் தந்தருள் புரிந்தவர்.

தலன்

1. சலன் தம்பி. 2. பரீட்சித்து மூன்றாவது புத்திரன் தாய், மண்டுக புத்திரியாகிய சுசோபனை.

தலாதலம்

ஒரு பாதாளம், இது கற்கள் நெருங்கியதென்பர்.

தலைக்கணை

சயனிக்கும் அணையில் தலை படுக்கைச். மேனோக்கி யிருக்க உயர்வாய்ச் சயனத்திற்குக் கூறிய உள்ளீடுடன் செய்யப்படுவது.

தலைக்காஞ்சி

வலியோங்க மாற்றார் தம்மறத்தொழிலைக் கடந்தவன். பசுந்தவை மிதிப்பைச் சொல்லியது. (பு~வெ.)

தலைக்கோட்டுத்தண்டு

ஒரு தமிழ் நூல். இன்னது கூறியதென்று தெரியாது. நூலிறந்தது.

தலைக்கோலமைதி

பொதியமலையின் மூங்கிலால் கணுக்குக்கணு சாண் அளவு உள்ளதாய் எழுசாண் நீளம் உளதாய்ச் சயந்தனைத் தெய்வமாகப் பெற்றது.

தலைச்செங்காடு

காவிரிப்பூம் பட்டணத் தருகிலுள்ளது; மாடலனிருந்தவூர். (சிலப்பதிகாரம்.)

தலைத்தோற்றம்

வலியினை விரும்பினோன் ஆனினத்தைக் கைக்கொண்டு வருதலையறிந்து உறவுழறையார் மனமகிழ்ந்தது. (பு~வெ.)

தலைப்பாகை

இது தலையிலணியும் வஸ்திரம். இது தேசங்கள் தோறும் பலவகைப் படுகிறது. இந்து தேசத்தவர் வஸ்திரத்தைத் தலைக்கணிவர். மற்றவர் பலவித குல்லாய்களும் தொப்பிகளும் அணிவர்.

தலைப்பெய்நிலை

இனிய ஒளிநகையினை யுடைய பிள்ளையென்னும் தான் கொடுக்கக் கடவதனைக் கொடுத்த மாதா இறந்த முறைமையைச் சொல்லியது. (பு. வெ. பொது.)

தலைமலை கண்டதேவர்

இவர் ஊர் பாண்டி நாட்டு நயினார் கோயிலை யடுத்த காடடர்ந்த குடி யென்பர். இவர் மறவர், அந்தகர், இவர் கல்வி வல்லவர். மணத்தில் விருப்பங்கொண்டு கன்னிகையைக் கேட்க அம்மறவர் சாதி வழக்கப்படி மும்முறை களவு செய்து அக்களவில் அகப்படாதவர்க்குப் பெண் கொடுப்பதுபோல் இவர் களவு செய்யாதவர் ஆதலால் மறவர் இவர்க்குப் பெண் தர மறுத்தனர். இவர் மணஞ் செய்து கொள்ளப் பொன் வேண்டிக் களவின் பொருட்டுத் திருப்பூவணத்திலுள்ள தாசி வீட்டில் அத் தாசியின் படுக்கை அறைக்கண் உள்ள கட்டிலடியில் ஒளித்திருந்தனர். தாசி தான் கட்டிலில் உறங்கு முன் திருப்பூவணநாதர்மேல் செய்யுள் பாடி முடிப்பதுபோல் கவிபாடச் செய்யுள் முடியாது மயங்குகையில் அடியிலிருந்த தேவர் கேட்டுச் செய்யுளை முடித்தனர். தாசி திடுக்கிட்டு நீவிர் யார் எனத் தேவர் வரலாறு கூறித் தாசியிடம் பொன் பெற்று மணமுடித்துக்கொண்டனர். இவர் மருது சந்தாதி இயற்றினர்.

தலைமாராயம்

தலையைக் கொடுவந்தான் மனமுவப்ப வில்லினையுடைய மன்னன் செல்வத்தைக் கொடுத்தது. (பு. வெ.)

தலையணைவிதி

கழுத்திற்கும், தோளிற்கும் மத்தியிலிருக்கும் அளவான உயாமுள்ளதாகவும், நீளமுள்ளதாகவும் இலவம் பஞ்சியினால் தைப்பித்த தலையணையின் மேல் சிரசு வைத்து நித்திரை கொண்டால் பாதாதிகேசமட்டும் உள்ள எந்தப் பக்கத்து நரம்புகளும் பிசகாமல் இருக்கும், அன்றியும் சிரசைப் பற்றிய ஆவர்த்த நோய்களும் நீங்கிவிடும்.

தலையற்றநாள்

நக்ஷத்திரங் காண்க.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவன் மதுரையிற் பாண்டியன் மரபிலே தோன்றிக் கல்வி கேள்வி வீர முதலிய வற்றாற் சிறந்து கவிபாடுந் திறனுழடையனாய் மாங்குடி மருதனார் முதலாகிய வித்வான்களாற் புகழ்ந்து பாடப்பெற்று இளமையிலேயே அரசவுரிமைகைக்கொண்டு ஆட்சி புரிந்து வருவானாயினான். அந்நாளில் சேரமான் யானைச் சட் சேய்மாந்தரஞ் சோலிரும் பொறையும் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் இந் நெடுஞ்செழியனை இகழ்ந்து கூறிப் பாண்டிநாட்டைக் கைப்பற்றக் கருதி மதுரையை முற்றுகை யிட்டார்கள். அது கண்ட நெடுஞ்செழியன் சினமிகுத்து “நகுதக்கனரே” (புறம் 72) என்ற செய்யுளால் வஞ்சினங் கூறிப் போருக்கெழுந்து உழிஞைசூடிப் போர் செய்யத் தொடங்கினான் (புறம் 79.) இவன் மிக்க இளையனாயிருந்தும் அஞ்சாமற் கடும்போர் புரிந்து அவ்வெழு வருந்தோற்றோட வென்றான், (புறம் 79.) தோற்ற எழுவரும் ஓடிச்சென்று சோழ நாட்டிற் புகும்போதும் இவன் விடாது பின் தொடர்ந்து சென்று திருத்தலையா லங்கானத்து மறித்து நின்று பெருஞ் சமர் நடத்தி இடைக்குன்றூர்க்கிழாரால் பாடல் பெற்றவன்,

தலையாலங்கானம்

இது நெடுஞ்செழியன் இரு பெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் பொருது வென்ற ஊர். இது ஆலங்கானம் எனவும் தலையாலங்காடு எனவும் வழங்கும். (புற~நா.)

தலையாலங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இவன் கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தாஞ் சேரலிரும் பொறையுடன் இளமையில் போரிட்டு அவனைச் சிறையிலிட்டுச் சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரான், இருக்கோவேள் மான், பொருநன் என்பவரையும் வென்றான். பழைய வேளிருடைய முத்தூற்றுக்கூற்றையும் வேள் எவ்வியின் மழலைக்கூற்றையும் கைக்கொண்டவன், மறக் களவேள்வி அறக்கள வேள்வி செய்தான். மாங்குடி மருதனாரியற்றிய மதுரைக்காஞ்சிக்குத் தலைவனிவனே. செய்யுள் பாடுவதில் வல்லவன். இவனை நெடுஞ்செழியன் எனவுங் கூறுவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனும் இவனாக விருக்கலாம். (புற~நா.)

தலையுதையராசி

இராசி காண்க

தலையோடு முடிதல்

உற்ற பூசலின் ஓவாதவலியினையுடைய கைப்பிடித்தான் தலையுடனே திரண்ட வளையினையுடையாள் இறந்தது. (பு~வெ.)

தலைவிக்குரிய அவத்தை மெய்ப்பாடு

நகுமுகம்புரிதல், பொறிநுதல்வியர்த்தல், நகுநபமறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை இவை முதலவத்தைகள். கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணிதைவரல், உடைபெயர்த்துடுத்தல் இவை இரண்டா மவத்தைகள், அல்குல்தைவரல், அணிந்த வைதிருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் இவை மூன்றாமவத்தைகள், பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல், ஈரமில்கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப் பவைகோடல் இவை நான்கும் நான்காம வத்தைகள். தெரிந்துடம்படுதல், திளைப்பு வினைமறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழியவத்தல் இவை ஐந்தாமவத் தைகள். (தொல்.)

தளை

1. நின்ற சீரினீற் றசையோடு வருஞ்சீரின் முதலசை ஒன்றியேனும் ஒன் தேனும் கூடி நிற்பது. அது, கேரொன் முசிரியத்தளை, நிரையொன்றா சிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்று தவஞ்சித்தளை, கலித்தளை என எழுவகைப்படும். 2. (தொகை, வகை, விரி). (1) வெண்டளை, (ii) ஆசிரியத்தளை, (iii) கலித்தளை, (iv) வஞ்சித்தளை என்னும் தொகையானும்; 1. இயற்சீர் வெண்டளை, 2, உரிச்சீர்வெண்டளை, 3. பொதுச்சீர்வெண்டளை, 4. நேரொன்றாசிரியத்தளை, 5, நிரையொன்றாசிரியத்தளை, 6. கவித்தளை, 7. ஒன்றியவஞ்சித்தளை, 8. ஒன்றா தவஞ்சித்தளை என்னும் வகையானும்; 1. இயற்சீர்ச் சிறப்புடைவெண்டளை, 2. இயற்சீர்ச்சிதப்பில் வெண்டளை, 3. உரிச்சீர்ச்சிறப்புடை வெண்டளை, 4. உரிச்சீர்ச்சிறப்பில் வெண்டளை, 5. பொதுச்சீர்ச் சிறப்புடைவெண்டளை, 6. பொதுச்சீர்ச் சிறப்பில்வெண்டளை, 7. நேரொன்றிய சிறப்புடை ஆசிரியத்தளை, 8. கேரொன்றிய சிறப்பில் ஆசிரியத்தளை, 9. நிரையொன்றிய சிறப்புடை யாசிரியத்தளை, 10. நிரையொன்றிய் சிறப்பில் ஆசிரியத்தளை, 11, சிறப்புடைக் கலித்தளை, 12, சிறப்பில் கலித்தளை, 13. ஒன்றிய சிறப்புடை வஞ்சித்தளை, 14. ஒன்றிய சிறப்பில் வஞ்சித்தளை, 15. ஒன்றுத சிறப்புடை வஞ்சித்தளை, 16, ஒன்றுத சிறப்பில் வஞ்சித்தளை என்னும் விரியானும் அறிக. (யா. வி.)

தளையிலக்கணம்

நேரொன்றாசிரியத் தளை; மாமுன் நேர் வருவது. நாள்முன் நேர் வருவது, நிரையொன்றாசிரியத்தளை: விளமுன் நிரை வருவது மலர் முன் நிரை வருவது. வெண்சீர்வெண்டளை: காய் முன் நேர் வருவது, பூ முன் நேர் வருவது, இயற்சீர்வெண்டளை: மா முன் நிரையும், விள முன் நேரும் வருவன. நாள் முன் நிரை வருவதும் மலர் முன் நேர்வருவது. ஒன்றியவஞ்சித்தளை: கனி முன் நிரை வருவது நிழல் முன் நிரை வருவது, ஒன்றாவஞ்சித்தளை: கனிமுன் நேர்வருவது நிழல் முன் நேர் வருவது. கலித்தளை: காய் முன் நிரை வருவது, பூ முன் நிரை வருவது.

தழற்கண்ணன்

சிங்கழகாசுரனிடம் யுத்தஞ் செய்த சண்முக சேநாவீரன்.

தழிஞ்சி

1. ஒரு வீரன் தனக்குக் கெட்டோடுவார் முதுகுப்புறத்துக் கூரியவாளோச்சாத மிக்க மறப்பண்பை விரும்பிச் சொல்லியது. (பு~வெ.) 2, கைவளர்ந்து நடவாநின்ற ஆயுதத்தையுடைய சேனை தங்களெல்லையிற்புகு தாதபடி அருமையுடைத்தான வழியிடத்தைக் காத்தது. (பு~வெ.)

தழும்பன்

இவன் ஒரு கொடையாளி, ஊனூர் என்னும் நகரத்தின் தலைவன். போரிற் புண்பட்ட அழகுடையவனென்று பாணரால் சிறப்பிக்கப்பட்டவன். (நற்றிணை) அத்தழும்புடைமையின் தழும்ப னெனப்பட்டான். இவன் இயற்பெயர் புலப்படவில்லை. ” தூங்கல் பாடிய வோங் குபெரு நல்லிசைப்பிடி மிதிவழுதுணை பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப் மினூணூரும்பர் ” என அகம் 229ல் நக்கீரனாராற் சிறப்பித்துப் பாடப் பெற்றவன், “வெண்ணெல்லரிஞர் தண்ணுமை வெரீ இக்கணணக கொண்ட தீந்தேனிரி யக்கள்ளரிக்குங் குயஞ்சிறு, மீன்சீவும் பாண்சேரி, வாய்மொழித் தழும்பனூரன்ன. பெருந்துறை மானே” எனப் பரணராற் (புறம் 348)ல் புகழ்ந்து பாடப் பெற்றவன். இவனைப் பாடியவர் பரணர்.

தவதி

சவ்வருணன் தேவி, சூரியன் பெண், குருவின் தாய்,

தவதிசயந்தம்

ஓர் இடத்தின் பெயர். (பெ. கதை)

தவந்தகன்

வயந்தகனுடைய மகன், (பெ. கதை.)

தவமுனி

ஆதிக்குத் தந்தை. இந்த ஆதி பிறந்த பிறகு இவர் விராலிமலைக்குத் தவத்திற்கு ஏகினர்.

தவளகிரி முதலியார்

இவர் தொண்டை நாட்டில் வெண்குன்றமென்னும் ஊரிலிருந்த வேளாளர். இவர் வீட்டுக்குக் கம்பர் விருந்தாய்ச் சென்றகாலத்து இவரது குமரன் பாம்பாலிறக்க அப்பிரேதத்தை மறைத்து அவருக்கு அன்னமிடப் புலவர் முதலியார் குமாரை அழைக்க முதலியார் நடக்ததைக் கூறினர். கம்பர் “ஆழியான் பள்ளியணையே” என்ற செய்யுளைக் கூறி உயிர்ப்பித்து வேளாளர்மீது ஏரெழுபது பாடப்பெற்றவர். இவற்குப் பிற்காலத்துச் சோழன் சபையில் முதலியார் குமரர் மந்திரியாக இருந்தபொழுது சோழன் ஒரு நாள், முதலியாரின் புத்திரரை நோக்கிக் கம்பர் கூறிய ஏரெழுபது உண்மையோ என அனைத்தும் உண்மையெனக் காய்ச்சிய நெய்யில் முழுகியெழுந்து கையில் மழுவேந்தினவர்.

தவளமலை

சாவக நாட்டிலுள்ள மலை. (மணிமேகலை)

தவளை

1, இது பெரும்பாலும் நீரில்வாழ் பிராணி, சில நிலத்திலும் வசிக்கின்றன, தவளைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவை தம் முட்டைகளை நீர்ப் பூண்டுகளிலும், தண்ணீரிலும் வழுவழுத்த திரவத்துடன் கூடியிடுகின்றன. இம்முட்டைகளினின்றும் குஞ்சுகள் (10) நாட்களில் வெளியாகிச் சிறுப் புழுப்போல் தலை பருத்தும் வால், மீன் குஞ்சுகளுக்கு இருப்பதுபோல் சிறுத்தும் இருக்கும். வா வர இவற்றிற்குக் கண் கை கால் முதலிய உறுப்புக்களுண்டாகின்றன. அப்போது முன்னைய வால் குறைந்து போகின்றது. இவற்றிற்குப் பின் கால்கள் நீளம். தவளைகளுக்குச் சுவாசாசயம் நெஞ்சிலிருப்பதால் சுவாசம் நெஞ்சுள் செல்கையில் அது துருத்தி போல் வீங்குதலும் வாடுதலும் கொள்ளும். நீர்வாழ் தவளைகளுக்குக் கால்களும் கைகளும் இடையில் தோலால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் நாக்கு பிளவுள்ள தாதலால் பூச்சிகளை நாவின் பிளவினால் பற்றித் தின்னும். இவ்வினத்தில் சொரித்தவளை, பச்சைத்தவளை, கொம்புத் தவளை, ஒட்டுத் தவளை, பறக்கும் தவளை, தேரை முதலிய உண்டு, இத்தேரை மெல்லிய கை கால்களை யுடைத்தாய் மரங்களிலுங் குளிர்ந்த இடங்களிலும் வசிக்கும். இதனிடம் ஒருவித விஷ நீர் உண்டு. அந்நீரைத் தனக்கு அபாயம் நேரு கையில் பீச்சுகின்றது. அந்நீருடம்பிற் படின் வெப்பத்தால் கொப்புளம் உண்டாம். இவ்வினத்தில் மேனாக்களில் ஒட இத்தவளை, பறக்குந் தவளை யென்பன செடி கொடிகளில் ஒட்டி வாழும். பறக்குந்தவளை தாண்டிச் செல்லப் பாதங்களினிடையில் ஜவ்வு பெற்றுப் பறக்கும். 2. சிவவீரியம் பொருத அக்னி, மடுவில் ஒளிக்க அவரைத் தேடிய தேவர்களுக்கு அந்த மடுவின் உஷ்ணத்தைப் பொறாத தவளை அக்னியின் இருப்பிடத்தைக் கூறினதால் நாக்கில்லாதொழிகவெனச் சாபமிட அவ்வகை பெற்று மீண்டும் தேவர்களால் வாக்களிக்கப்பட்டது. (பார~அது.)

தவிடு

அரிசியைக் குத்திக் கொழிக்கையில் அரிசியினின்று நீங்கும் மெல்லிய கவசத்தொகுதி.

தவித்யோதன்

யதுவம்சத்துத் துந்துபியின் குமரன். இவனுக்கு அபிசித் எனவும் பெயர்,

தஸியூ

அயோகவான் தக்ஷா சண்டாளன் இவர்களுக்குத் தம் சாதிப் பெண்களிடத்தும் நான்கு வருணப் பெண்களிடமும் பிறந்தவன். (மநு.)

தாகரோகம்

இது பிரமை, நடுக்கம், தேகஎரிவு, காங்கை, தாகம், சோருதல், வாயுலரல், எவ்வளவு ஜலமருந்தினும் திருப்தியிலாமை, அன்னத்வேஷம், குரல் கம்மல், கெஞ்சு நா உதடு வறட்சி, நாவால் உதட்டைத் தடவல், பிரலாபம் முதலிய குணங்களைத் தனக்குப் பூர்வரூபமாகப் பெற்றிருக்கும். இது வாத, பித்த, சிலேஷ்ம, தொந்த, ரஸ், க்ஷய, உபசர்க்கதாக ரோகமென அறுவகைப்படும். இது மணல் கஷாயம், அமிர்தாதிச் சூர்ணம், கர்ப்பூரக் குளிகை முதலியவற்றால் வசமாம். (ஜீவ.)

தாக்கர்

ஒரு முனிவர் அயன் என்பவன் குமரனாகிய துந்து என்பவனுக்குப் பிரமகத்தி நீங்க அருள் புரிந்தவர்.

தாக்ஷாயணி

தக்கன் மகளாய்ப் பிறந்த பார்வதி பிராட்டி, சிவபெருமானை மதிக்காது செய்தயாகத்தில் வீழ்ந்துடல் விட்டவள்,

தாசமார்க்கம்

சிவபெருமானெழுந்தருளி யிருக்குந் திருக்கோயிலில் திரு அலகிடுதல், திருமெழுகிடல், மலர்பறித்தல், மாலை தொடுத்தணிதல், புகழ்ந்து பாடல், திருவிளக்கிடல், நந்தவன முண்டுபண்ணல், சிவனடியவரைக்கண்டு வழிபட்டு அவர்க்கு வேண்டிய பணிசெயல் முதலிய செய்தல், இதை மேற்கொண்டவர் சாலோகபதமடைவர்.

தாசராகர்

யதுகுலபேதம், கம்சன் பகைவர்.

தாசராசன்

1. நயினாசாரியரால் ஸ்ரீவைஷ்ணவனாக்கப்பட்ட பிராமணன், இவனுக்குத் தாசரதி யென்றும் பெயர். 2. பிரமன் சாபத்தால் மீனுருக் கொண்டிருந்த அப்சரப் பெண்ணினைச் சாபம் நீக்கினவன், மச்சகந்திக்குத் தந்தை.

தாசரி

தாதன், இவன் வைஷ்ணவன். விஷ்ணுவை ஆராதித்து வீடுகள் தோறும் தப்பை சேமகலம் கொட்டிப் பிழைப்பவன். இவன் சாத்தானியர் எனுஞ் சாதியரில் ஒருவனாயிருக்கலாம். இவர்கள் ஜநப்பர், பள்ளிகள், வள்ளுவர், கங்கதுல்லர், கொல்லர் எனப் பலவகைச் சாதியரில் சேர்ந்த வர்கள், (தர்ஸ்டன்.)

தாசிஅம்மைச்சி

இவள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் காலத்துக் காஞ்சீபுரத்திற் கருகிலுள்ள திருப்பனங் காட்டிலிருந்த வித்வாம்ஸி. இவள் கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் மீது கோவை பாடி அரங்கேற்றுகையில் அக்கோவையில் “பெருநயப் புரைத்தல்” என்னும் துறைப் பாற்படும் மாலேநிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே, பாலேறிப்பாயச் செந்தேன் மாரிபெய்ய நற்பாகுகற்கண், டாலேயெரு விட முப்பழச்சேற்றின முதவயன், மேலே முளைத்தகரும்போ விம்மங்கைக்கு மெய் யெங்குமே” எனும் பாடலைப் பிரசங்கிக்கையில் இவள் கரும்பு புன்செய்ப் பயிராயிற்றே, சேற்றில் முளைத்த கரும்பென்றீரே என ஆக்ஷேபிக்கக் கவிராயர் வேண்டுமாயின் மாற்றிவிடலாம் என்று ஏடுவாசிப்பானை நோக்கிக் கொம்பைத் தூக்கிக் காலை நிறுத்து என்னலும் தாசி, தலைகுனிந்து நண்புபூண்டவள். இவளைக் காஞ்சிபுரத்து வேதியர் கர்வபங்கப்படுத்த எண்ணி இவள் வீட்டையிடித்து அவ்வழி இரதம் செலுத்த எண்ணியிருத்தல் அறிந்த அம்மைச்சியினண்ப ராகிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் இவள் பொருட்டு பார்ப்பார் குரங்காய்ப் படையெடுத்து வந்தீரோ, தேப்பெருமாளே கச்சிச் செல்வரே கோப்பாகக், கொம்மைச் சிங்கார லங்கைக் கோட்டை யென்று வந்தீரோ, அம்மைச்சி வாழுமகம்” என இரதம் திரும்பிச் சென்ற தென்பர்.

தாசூரன்

சரலோமாவின் குமரன், இவன் உடலைவிட்டுத் தேவவடி வெடுத்து யாகஞ் செய்தவன்.

தாசையர்

இவர் ஒரு வீரசைவர்; இவர் ஓர் ஊர்க்குப் போகச் செல்கையில் இடையில் ஒரு ஆற்றைக் கடக்கவேண்டியிருந்து படகிற்குச் செல்ல அங்கிருந்தவர் எல்லாம் தாரணமில்லாமை கண்டு படகேறச் சம்மதிக்காமல் ஆற்றைவற்றச் செய்து கடந்து சென்றவர்.

தாஜ்மஹால்

இது, ஆக்ரா நகரத்துக்கு 3 மைல் தூரத்தில் யழனையாற்றின் மேற்கரையில் கட்டிய ஒரு பெரிய அழகிய மஹால், இது ஷஜஹான் எனும் டில்லி சக்ரவர்த்தி தன் மனைவி மும்தாஜ்ஜமால் என்பவளது ஞாபகச் சின்னமாகக் கட்டப்பட்டது. இது 22 வருஷகாலம் கோடி ரூபாய் செலவிட்டு, 20,000 வேலைக்காரராகிய காபூலியா, கோலகண்டா வேலைக்காரர், சிங்களர், இத்தாலியர் முதலியவர்களா லியற்றப்பட்டது. இது அழகிய பூஞ்சோலைகள் வாவிகள் சூழ இடையில் பளிங்குக்கற்களால் பார்ப்போர் கண்களைக் கவரும்படி செய்யப்பட்டது. தற்காலம் 300 வருஷங்களாயும் இது இப்போது தான் கட்டப்பட்டது போலிருக்கிறது. இதில் இவளை அடக்கஞ்செய்த சமாதியிருக்கிறது.

தாடகாயனன்

விஸ்வாமித்திர புத்திரன்.

தாடகை

1. சுகேதுவின் குமரி, சுந்தன் தேவி, இவள், தன்கணவன் அகத்தியர் கோபத்தாலிறக்க அகத்தியரிடஞ் சென்று, தீமை செய்யத் தொடங்கினள். முனிவர் இவளையும், இவள் குமாரையும் அரக்கராகச் சபித்தனர். இவள் அாக்கியாய் முனிவர் செய்யும் யாகாதிகாரியங்களுக்குத் தீமை செய்துவந்தனள். விச்வாமித்திரர் ஏவலால் இராமமூர்த்தி இவளைக் கொன்றனர். 2. திருப்பனந்தாளிலிருந்த ஒரு சிவ பக்தி மிகுந்தவள். இவள் சிவமூர்த்திக்குத் திருமஞ்சன முதலிய முடித்து மாலை சாத்துகையில் உடை நெகிழ்ந்தது கண்டு அவ்வுடையை முழங்கையால் இடுக்கி மாலை சாத்துதலுக்கு இடையூறு வருதல் கண்டு துக்கிக்கச் சிவமூர்த்தி தமது முடியைச் சாய்த்துக் கொடுத்தனர்.

தாடசபன்

தக்ஷன் மருமகன்; இவனுக்குத் தாரட்சியர், காசிபர் என்றும் பெயர்.

தாடைக்கு நடுவில் உண்டாகும் ரோகம்

அது (1) கண்டாலஜிரோகம், இது எந்தப் பக்கத்துத் தாடையிலாவது நீங்காத வீக்கத்தைப் பிறப்பிப்பது, தாடைகளில் (8) ரோகங்களுண்டாம் அவை தாளுரோகம் எனவும் கூறப்படும். தாடைக்கு உட்புறத்தில் வீக்கத்தையும், தடிப்பையும் உண்டாக்கிப் புண்களாக மாறச்செய்வது. இதனால் தாடையில் (8) வித ரோகங்கள் பிறக்கும். அவை 1. தாளுபிடகரோகம், 2. தாளுகள் சுண்டிகா ரோகம், 3. தாளுசம்ஹதிரோகம், 4. தாளாற்புதரோகம், 5. தாளுகச்சப ரோகம், 6. தாளுபுப்புடரோகம், 7. தாளுபாகரோகம், 8. தாளுசோஷ ரோகம் ஆகத் தாடைரோகம் எட்டு.

தாணி

துருவன் என்னும் வசுவின் தேவி,

தாணு

ஏகாதசருத்திரர்களில் ஒருவன்,

தாணு தீர்த்தம்

வசிட்டரைக் காண்க.

தாண்டகம்

(27) எழுத்து முதலாக உயர்ந்த எழுத்து அடியினவாய் எழுத்தும் குருலகுவும் ஒத்துவருவன அளவியற்றாண்டகம், ஒவ்வாது வருவன அளவழித்தாண்டகம்.

தாண்டன்

ஒரு ரிஷி,

தாண்டவமூர்த்தி

நாராயண குருவின் மாணாக்கர், கைவல்ய நவநீதம் செய்தவர். இவர் சோணாட்டு நன்னில மென்னும் ஊரார், வேதியர்

தாண்டவம்

இதுபஞ்சகிருத்திய தாண்டவம் என்றும், அகோரதாண்டவம் என்றும், ஊர்த்த தாண்டவம் என்றும், ஆச்சரிய தாண்டவம் என்றும் ஆனந்த சௌந்தரிய தாண்டவம் என்றும் பலவிதப்படும்.

தாண்டவம் ஐந்து

சிவபிரானாடிய நடனம், இவை அற்புத்தாண்டவம், அநவரத்தாண் டவம், ஆனந்த தாண்டவம், பிரளயதான்டவம், சங்கார தாண்டவம்,

தாண்டவராயசாஸ்திரியார்

இவர் ஏரகம் அநந்தநாராயண வாத்தியார் குமாரர். கரும்பைநகர் பெரியாண்டி புழுகணிவேந்து எனும் பிரபுவின் வேண்டுகோளால் பாகவதசாரமெனும் நூலியற்றிய புலவர்.

தாண்டியன்

ஒரு ரிஷி, (பா~சா.)

தாதகி

பவணமாதேவன் தேயம்.

தாதன்

1. கம்பர் காலத்துச் சோழனிடத்துச் சிறப்படைந்த ஓர் வணிகன். இவன் கவிவல்லான், இவனுக்குச் சோழன் வரிசை செய்தலைக் கம்பர் பொறாராய்ச் சோழனை நோக்கி இவற்கு இத்தகைய வரிசை செய்தல் எம்போன்றவரை இழித்தலோ டொக்கும் எனக் கேட்ட தாதன் கம்பரிடத்து கோபங்கொண்டு கம்பர் பாடிய மும்மணிக கோவைக்குக் குற்றங்கூறி, யவரையுமிழித்து வசை பாடினன் என்ப. தாதன் சோழன் பாற்பெற்றவூர் தொண்டை நாட்டின்கணுள்ள கூவம். தாதன் பாடியவசை “கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக்கம்ப நாடன் சொன்ன, மும்மணிக் கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப், பைம் மணித்துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச், செம்மணிக்கண் பிதுங்கப்பதம் பேர்த்த செய்துங்கனே. ” 2. தமிழ்ப்பேசும் வைணவ பிச்சைக்காரன், தாசிரியோடு ஒப்பானவன். (தர்ஸ்.)

தாதா

1. ஒரு தேவன், 2, நந்தியெலும்பிற் பிறந்தவன். 3. பிருகுவிற்குக் கியாதியிட முதித்த குமரன், தேவி ஆயதி. 4. காச்யபருக்கு அதுதியிட முதித்த குமரன்; துவாதசாதித்தரில் ஒருவன், பாரிகள் குரு, சிநிவாலி, ராகை, அநுமதி.

தாதாசாரி

காஞ்சீபுரத்திலிருந்த வைணவ வேதியர், இவர் வடகலையார். அப்பைய தீக்ஷிதருடன் வாதஞ் செய்தவர்.

தாதி

சோழன் இவளை ஒரு புலவனுக்குக் கொடுக்க அவள் ஊடலிற் கூறியது. முன்னாளிருவர் முயங்கும்படி கண்டு, மன்னாபணி தவிர்த்து வாழ்வித்தாய் துன்னார்தம், சேனைகண் டாலிக்குஞ் செம்பியர் கோன் கண்விழித், தானை கண்டார் தாமவர்” எனக் கூறினள்.

தாது

(7) இரதம், சுக்லம், இரத்தம், மூளை, தசை, எலும்பு,தோல்.

தாதுகதை

புத்தன் எலும்பு முதலிய தாதுக்களை கொண்டார் சரிதை கூறும் புத்த நூல்.

தாதுவின் பேதம்

ரஸதாது, ரத்ததாது, மாமிச தாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சதாது, சுக்கில தாது என எழுவகைப் படும். இவை சரீரத்தைத் தாங்கி ரத்தப் புஷ்டிதந்து பூரிக்கச்செய்து காந்திதந்து கருப்பவுற்பத்தியுஞ் செய்விக்கும். (ஜீவ.)

தாதை

1. பாதாளத்திருந்து இரவையுண்டாக்கும் பிரமன் பெண். 2. பிரமனால் சிருட்டிக்கப்பட்ட தேவன்

தாத்திரிகை

திரௌபதியின் தோழி.

தாத்ரி

சுக்கிரன் குமரன், அசுரபுரோகிதன்.

தான பத்திரம்

நில முதலியவற்றைச் சத்தியமாக இடையூறின்றி நன்கொடையாக உதவி யெழுதியது.

தானங்கள்

1, தேவர்க்கும் நல்லோர்க்கும் ஈந்து புண்ணியம் அடைதல்; அவை பல வகையாயினும் அவற்றுள் (16) சிறந்தன. இரண்யகர்ப்பதானம்; பொன்னால் (72) அங்குலம் உயரமும் அதில் மூன்றம்சம் அகலமும் உள்ள தாமரைபோன்ற கும்பஞ் செய்வித்து அதில் தயிர், நெல், பால் முதலிய நிறைத்து வேதிகை செய்வித்து அதின்மேல் இரண்டு மரக்கால் எள்ளைப் பரப்பி அதன்மீது கும்பத்தை நிறுத்தித் தான கற்பவிதிப்படி பூசித்துப் பிரதக்ஷண முதலியசெய்து எஜமானன் அந்த இரண்ய கும்பத்தில் ஒரு விஸ்வாசகாலம் இருத்தல் வேண்டும். இப்படி யஜமானன் கடத்திருந்து வெளிவருமுன் ஆசாரியன் இரண்யகும்பத்திருக்கும் இரண்யகற்பனாகிய புருஷனுக்குக் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம், சாதகர்மம் முதலிய கிரியைகள் செய்தலவேண்டும். பின்யஜமானன் அதை விட்டு வெளிவந்து அந்தக் கலசத்துடன் கிராமாதிகளையும் தானஞ் செய்ய வேண்டும். அவ்வகை செய்தவன் (100) கோடி சல்பம் பிரமலோகத்தில் வசித்துத் தனது பிதுருக்களை நரகத்திலிருந்து நீக்குவன். 2. இரண்யாச்வதானம் : (3) முதல் (1000) பலமுள்ள பொன்னால் குதிரை யொன்று செய்வித்து நானாவித உபகரணமான ஒரு சையத்தையும், (8) சுவர்ண கலசங்களையும் வேதிகையில் தாபித்து, விதிப்படி பூசிப்பதாம, இப்படிச் செய்தவன் தேவாகளால் பூசிக்கப்பட்டு இந்திரபதம் அடைவன். 3. இரண்யாச் வரததானம் (3) முதல் (1000) பலமுள்ள பொன்னால் ரதம் செய்வித்து அதில் தன் இஷ்டதேவதையைப் பொன்னாற் செய்வித்து நிறுத்தி அத் தேர்க்கு (8) அல்லது (4) பொற்குதிரைகள் பூட்டி வஸ்திராதிகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகை தானஞ்செய்தவன் பாபம் நீங்கித் தேசோசரீரனாய்ச் சிவபதமடைவன், 4. உபயகோமுகி தானம்: பசுவின் பிரசவகாலத்தில், பசுங்கன்றின் பாதிதேகம் தாயின் வயிற்றிலும் மற்றப்பாதி வெளியிலும் இருக்கக்கண்டு பசுவினைப் பொன், வெள்ளிமுத்து முதலானவைகளால் அலங்கரித்துத் துணையுடன் வேதியனுக்குத் தானஞ்செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தரணிதான பலனடைவதன்றிப் பிதுருக்களையும் திருப்தி செய்தவனாகிழன், 5. கனக்கல் பலதிகாதானம்: (5) முதல் (1000) பலமுள்ள பொன்னால் நீர்க் காக்கை, அன்னம் முதலிய பக்ஷிகள், விதிதியாதர பிரதிமைகள் முதலியவற்றோடு கூடிய (10) கல்பகக் கொடிகளைச் செய் வித்து விதிப்படி பூசித்துத் தக்க வேதியர்க்குத் தானஞ்செய்வதாம், இவ்வகை புரிந்தவன் சத்திய உலகம் அடைவன். 6. கனக்காமதேனு தானம்: (1000) (500) (250) கணக்குள்ள பலத்தோடு கூடிய பொன்னால் கன்போடு கூடிய பசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ்செய்தவன் தேவர்களால் பூசிக்கப்பட்டுச் சிவபதம் பெறுவன். 7. கல்பவிருக்ஷ தானம்: (3) பலம் முதல் (1,000) பலம் வரையில் பொன்னால் திரிமூர்த்தி பிரதிமைகளுடன், (5) கிளைகளோடு நானாவித பக்ஷிகள், பழங்கள் முதலியவற்றுடன் கற்பகத்தரு செய்வித்துக் கிழக்கில் சகளத்திர காமதேவயுக்தமான சந்தானவிருக்ஷத்தையும், தெற்கில் லக்ஷ்மியோடு கூடிய மந்தாரவிருக்ஷத்தையும், மேற்கில் சாவித்திரியோடு கூடிய பாரிசாத விருக்ஷத்தையும், வடக்கில் சுரபியோடு கூடிய ஹரிச்சந்தனவிருக்ஷத்தையும் நிருமித்து விதிப்படி ஓமாதுகள் பூஜை முதலிய செய்து நமஸ்கரித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் சித்த, சாரண, கின்னா, அப்சரசுக்களால் சேவிக்கப்பட்டுச் சூரியவருண விமானத்தேறி (100) கல்பம் விஷ்ணுபதத்தில் இருப்பன். 8 கார்ப்பாஸ தானம்: ஐந்து பாரம் முதல் (20) பாரம் நிறையுள்ள பருத்தியைத் தக்கவர்க்குத் தானஞ் செய்வதாம். இதைச் செய்தவன் உருத்திரலோக மடைவன் 9 கிருதபர்வததானம்: (5) கும்பம் நெய்முதல் (20) கும்பம் நெய்யைத்தக்க வர்க்குத் தானஞ் செய்வதாம். இப்படிச் செய்தவன் சிவபதம் பெறுவன். 10. கிருஷ்ணாஜின தானம்: மாசி, ஆடி, கார்த்திகை மாதங்களிலும், பௌர்ணிமை, சந்திரசூர்யகிரகணம், உத்தராயண துவாதசி புண்ணியகாலங்களில், ஆகிதாக்னியாகிய வேதியனுக்கு விதிப்படி கிருஷ்ணாஜினம் (மான்தோல்) தானஞ் செய்தலாம். இவ்வகைப் புரிந்தவன் சிவசாயுச்யம் அடைவன். 11. குடதேனு தானம்: நாலுபாரம் முதல் கூடியவரையில் பெல்லத்தால் பசுவும் கன்றும் செய்வித்து ஆபரணங்களால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்விதம், வெண்ணெய், எள், தான்யம், சர்க்கரை, உப்பு, ரத்னம் பொன் முதலியவற்றாலும் செய்வித்து மந்திர ஆவாகனஞ்செய்து தானஞ் செய்யின் நெடுநாள் கோஉலகத்தில் சகல சௌபாக் இயங்களை அனுபவித்துப் பின் விஷ்ணு பதம் அடைவன். 12. குடபர்வததானம்: மூன்று பாரம் முதல் (10) பாரம்வரையில் பெல்லத்தால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்வது. இவ்வகை செய்தவனுக்குப் பசுபதி சாந்நித்யமாவர். 13. கோசகஸ்திரதானம்: (3) பலம் முதல்கொண்டு (1000) பலமுள்ள பொன்னால் (10) பசுக்கள் செய்வித்து அவற்றினிடையில் ஒரு பொன்விருக்ஷம் செய்வித்து நிறுத்திப் பின் (1000) பசுக்களை, பொன், வெள்ளி முதலானவைகளாலலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய் வதாம். இவ்வகைச் செய்தவன் பாபம் நீங்கித் தன்னுடைய (101) கோத்திரத்துடன் தானும் கைலையில் வசிப்பன். 14. சர்க்கராபர்வததானம்: இரண்டு பாரம் முதல் எட்டுபபாரம் வரையில் சர்க்கரையை மலைபோல் குவித்துத் தானஞ் செய்வது. இதைச் செய்தவர் சிவபத மடைவர். 15, சப்தசாகரத்தானம் (5):முதற் கொண்டு (1000) பலம் அளவுள்ள பொன்னால் சாண் அளவுள்ள (7) கும்பங்கள் செய்வித்து முதற் கும்பத்தில் உப்பு நிறைத்து அதில் சரஸ்வதியுடன் கூடிய பிரம தேவனையும், இரண்டாவதில் பால் நிறைத்து விஷ்ணுமூர்த்தியினையும், (3 வதில்) நெய் நிறைத்துச் சிவமூர்த்தியையும் (4 வதில் பெல்லம் நிறைத்துச் சூரியனையும், (5 வதில்) தயிர்நிறைத்துச் சந்திரனையும், (6 வதில்) சர்க்கரை நிறைத்து லஷ்மியையும், (7 வதில்) சுத்தோதகம் நிறைத்துப் பார்வதியார் முதலியவர்களை யெழுந்தருளுவித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வது. இங்ஙனஞ் செய்தவன் விஷ்ணு பதமடைவன். 16. சுவர்ணபாவத தானம்: (250) பலம் முதல் (1000) பலம் பொனனினால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்யின் பிரமபதம் அடைவன். 17. சையாதானம்: நல்ல மரத்தில் கட்டில் செய்வித்து அதனைப் பலவிதமாக அலங்கரித்துப் பாயல்விரித்துத் தீர்த்தம், சந்தனம், புஷ்பம், தாம்பூலம், மற்றும் ஸ்திரீ புருஷர்களுக்கு வேண்டியவும் அமைத்து நவக்கிரக பூசைசெய்து சில விஷ்ணுக்கள் இதனால் மகிழக் கடவர் என யோக்கியனுக்குத் தானஞ்செய்தல். இதனால் சுவர்க்கம் உண்டாம். 18. தராதானம்: (100) முதல், (1000) பலமுள்ள பொன்னினால் ஜம்புத் தீவு போல் நானாவித அநேக பர்வதசாகர நகர கிராமங்கள், பாரதாதி நவவருஷங்களோடு கூடிய பூமி, அவைகளைச் சுற்றிக் கடல் செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தன் கோதரங்களுடன் (3) கல்ப காலம் வைகுண்டத்தில் வசிப்பன். 19. தான்யபர்வததானம்: இந்தப பர்வததானம், லவணத்தாலும், பெல்லத்தாலும், பொன்னினாலும், வெண்ணெயாலும், எள்ளினாலும் இரத்தினத்தினாலும் வெள்ளியினாலும், சர்க்கரையாலும் மலைபோற் செய்வித்து வியதிபாத முதலான புண்ய காலங்களில் (1000) மரக்கால் நெல்லை மேருவாக வைத்து நவமணிகளாலலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வது. இத்தானஞ் செய்தவன் தெய்வ வுலகடைவன், 20. திக்பர்வததானம்: வேதியர் எட்திர் பெயரை வருவித்து அவர்களை ஆசனத்திலிருக்கச் செய்து அவர்களி னடுவில் சிவமூர்த்தியைப் பூசித்துப் பத்துக் கழஞ்சு பொன்னாற் பதினொரு விமானம் செய்வித்து அதை வேதியர்க்கு விதிப்படி தானஞ்செய்து பவவேதியர்க்கு அன்னமிடலாம். 21. திலபர்வததானம்: மூன்று மரக்கால் முதல் பத்து மரக்கால் எள்ளினைப் பர்வதம்போற் குவித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வது. இவ்வகைச் செய்தவன் சுவர்க்கமடைவன். 10 சாண்கோலொன்று கட்டு அது மறைய எள்கொட்டி அதன் மேல் மண்டவஞ்செய்து ஆடையால் மூடி மலர்தூவி அதில் சிவமூர்த்தி பள்ளிகொள்வதாய்த் தியானித்துச் சிவமூர்த்தியைப் பூசித்து விதிப்படி தடிணையுடன் பிராமணனுக்குக் கொடுத்தலாம். திலதேனு, திவ பத்மதானங்களைத் தனித்தனி காண்க. 22. துலாபுருஷதானம்: இத் தானஞ் செய்பவன் பரிசுத்தனாய்ப் பதினாறு முழத்திற்குக் குறையாமல் மண்டபஞ் செய்வித்துப் புண்ணியா வாசனம் முடித்து ஏழடிவேதிகை செய்வித்து நான்கு குண்டங்கள் செய்விக்க வேண்டும். பிறகு வேதிகையில் கலசத்தாபனம் செய்து அதில் திரி மூர்த்திகளைப் பூசித்து எழு முழமுள்ள தேவதாரு முதலிய இரண்டு தம்பங்களை இரண்டு முழம் பூமியில் புதைத்து அதின் மேல் சுவர்ண முதலியவைகளால் அலங்கரித்துத் துலாதண்டம் நிறுத்தி லோகமயமாகும் தட்டுகளைச் சங்கிலிகளில் மாட்டி அத்துலாத்தைக் கொடி முதலியவைகளா வலங்கரித்துக் குருவையும் வேதமறிந்த எட்டுருத்விக்குகளையும் வருவித்து நான்கு திக்குகளில் இவ்விருவரை நிறுத்திப் பிரமாதி தேவர்க்கு ஓமஞ்செய்து எஜமானன் ஆசாரியருடன் பவி பூசைகள் முடித்து அத்தினத்தில் எல்லோரும் உபவசிக்க வேண்டும். மதுகான் ஸ்தானாதிகள் முடித்துப் பரிசுத்தனாய் கானாவித பூஷணாவக் கிருதனான எஜமானன், ஆசாரியனோடு தலைக்கு கமல்கரித்துத்துவா ஆரோகணஞ் செய்தல் வேண்டும். அதில் ஒரு தட்டில் எஜமானனிருந்து மறுதட்டில் ஸ்வர்னத்தை வைத்துச் சமமாகத் தூக்கி க்ஷணநேரம் அதிலிருந்து அதினின்றும் இறங்கி அதிலுள்ள திரவியத்தில் பாதி ஆசாரியனுக்கும் மிகுதியை ருதவிக்கு களுக்கும் கொடுத்து அவர்கள் ஆக்கினையால் மற்றவர்களுக்கும் தானாதிகள் கொடுத்தல் வேண்டும். இப்படிச் செய்தவன் கீர்த்தியையம் ஆயுளையுமடைந்து விஷ்ணுபத மடைவன். 23, பஞ்சவாங்கல தானம்: சாரமுள்ள நூறுகிராமங்கள் அன்றியதாசக்தி கிராமத்தையும் மரத்தாற் செய்யப்பட்ட ஐந்து கலப்பைகளையும், பொற்கொம்பாலலங் கரிக்கப்பட்ட பத்து எருதுகளையும் ஐந்து முதல் (1000) பலம் உள்ள பொற்கலப் பைகளையும் கன்சோடு பாடிய பசுக்களையும் விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் விமானமேறிச் சிவபதம் அடைவன். 24. பிரமாண்டதானம்: இருபது பலம் முதற்கொண்டு (1,000) பலம் வரையில் தன் சக்திக்கு இயன்ற அளவு (100) அங்குல நீனம் இரண்டு கலசங்களும், எட்டுத் திக்கு யானைகளும், அஷ்டதிக்குப் பாலகரும் உள்ள ஒரு பிரமாண்டத்தைச் செய்வித்து அதில் திரிமூர்த்தி விக்ரகங்களை எழுந்தருளச் செய்து பட்டு வஸ்திராப பணாதிகளால் அலங்கரித்து அந்தப் பிரமாண்டத்தை இரண்டு மரக்கால் என்னில் இறுத்தி விதிப்படி பூசை முதலிய முடித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகை செய்தவன் பாபம் நீங்கி இந்திரபதம் அடைவன். 25. மகாபூதகட தானம்; நூறு அங்குல நீளமுள்ளதாய், நாநாவித ரத்தினங்கள் இழைத்த கும்பத்தைப் பால் கெய் முதலியவைகளால் நிறைத்து அதில் ஒரு சவர்ண கற்பவிருகத்தை நிறுத்தி விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் கோடிசூர்யப் பிரகாசமுள்ள விமானமேறி வைகுண்ட பதம் அடைவன். 26. ரத்னதேனுதானம்: வச்சிரம், பவளம், வைடூர்யம், கோமேதகம், புஷ்பரா கம், மரகதம், மாணிக்கம், சர்க்கரை, பெல்வம் முதலியவற்றால் புராணதிகளில் கூறியபடி ரத்னபசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வதாம். இவ்வகை செய்தவன் மதனசமான காந்தியுள்ளானாய் விஷ்ணுபதமடைவன் 27. ரத்னபர்வததானம்: முந்நூறு பலம் முதல் (1,000) பலம் வரையில் இரத்தினத்தால் பர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்வதாம், இது செய்தவர் பிரமகத்தி தோஷம் நீங்கி விஷ்ணுபதம் அடைவர். 28. ரௌப்பியபர்வததானம்: (2500) பலம் முதல். (10,000) பலம் வரையில் ரௌப்பியபர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்யின் சிவலோகமடைவர். 29. லவணபர்வத தானம்: நாலு மரக்கால் முதல் பதினாறு மரக்கால் வரையில் உப்பை விதிப்படி தானஞ்செய்யின் சத்தி உலகம் அடைவர். 30. விச்வசக்ர தானம்: ஆயிரம் முதல் (250) பலம் பொன்னால் பதினாறு இலைகளுள்ள விச்வசக்கரத்தை ஏழு ஆவரணத் தோடு கூடியதாகச் செய்வித்துச் சங்குசக்கிரதரனாகிய விஷ்ணு மூர்த்தியை எட்டுத் தேவியருடன் பிம்பத்திற் செய்வித்திருத்தி விஷ்ணுமூர்த்தியின் தசாவதார பதுமைகளை நிருமித்து விதிப்படி பூசித்துத்தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ்செய்த வன் அரிபதமடைவன். 31. ஹேமஹஸ்திர தானம்: ஐந்து பலம் முதல் ஒரு பாரம்வரையில் பொன்னால் புஷ்பரதம் செய்வித்து நான்கு பொன்யானைகளும், இரண்டு உயிர் யானைகளையும் பூட்டி அவ்விரதத்தின் மத்தியில் லக்ஷ்மீ நாராயணனையும் இரண்டு பக்கங்களில் பிரம்ம மகேச்வராதி தேவவிக்கிரகங்களையும் எழுந்தருளச் செய்து விதிப்படி பூசித்துத் தானஞ்செய்தலாம். இத்தானஞ் செய்தவன் வித்தியாதரரால் பூசிக்கப்பட்டுச் சிவபதமடைவன். 32, பருத்தி தானத்தால் :யமதூதரிடத்தில் அச்சம் உண்டாகாது. 33. தானிய தானத்தால்: யமனும் தூது வரும் சந்தோஷித்து ஜீவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பர். 34. பூதானஞ்செய்யின்: எத்தனை அடிகள் தானம் செய்தானோ அத்தனை காலம் சவர்க்கத்தில் இன்புறுவன், 35. மராடிதானத்தால்: மார்க்கத்தில்முள் முதலியவற்றால் துன்புறாது குதிரையேறி யமபுரஞ் செல்வன். 36. குடைதானத்தால்: நிழலுள்ள வழியிற் செல்வன், மழையால் துன்பமடையான். 37. தீபதானஞ்செய்யின்: இருள் வழியில் பிரகாசத் துடன் செல்வன், மாண்பினது முதல் ஓராண்டு தீபதானஞ்செய்யின் குலத்தோரையும் சுவர்க்கத்தில் புகுவிக்கும். ஆசனப்பலகையும் செம்புஸ் தாவியும் சுயம்பாகப் பொருளும் தானஞ் செய்யின் மரித்தவன் மார்க்கத்தில் இனிது செல்வன். 38. வஸ்திர தானஞ்செய்யின்: யமதூதர் நல்லுருவத் துடன் தோன்றுவர். 39. பூமி, சுரபிகள், சுவர்ணம்: இம் மூன்றும் தானங்களில் விசேடமாம். எவ்விதமெனின் பூமி விஷ்ணுசம்பந்த மாத லாலும், சுவர்ணம் அக்கினியின் மகவாதலாலும், சுரபிகள் சூரிய புத்திரிக ளாதலாலும் விசேஷமாம். இவற்றைத் தானஞ் செய்வோன் அம்மூன்று லோகத்தையும் அடைவன். 40. பருத்தி தானம் மகா தானமாகும், இது தேவர் அந்தணர் முதலியோர்க்குப் பூணுநூற்கு உபயோகம் ஆகையால் மிகச் சிறந்ததாம். இத்தானம் செய்தவன் சுவர்க்கவாசியாகச் சிலநாள் வசித்து அழகிய மேன்மையுடையவனாய்ச் சிவபதம் அடைவன். 41. திலதானம், கோதானம், தானய தானம், சுவர்ண தானம், பூதானம் செய் யின்: மகாபாதகங்கள் நசிக்கும். இவைகளை உத்தமபிராமணருக்கே கொடுத்தல் வேண்டும். 42. திலதானத்தாலும் இரும்பைத்தானஞ் செய்தலாலும், யமன் உவப்படைகிறான். 43, இலவண தானத்தால்: இறக்கிறவனுக்கு நமனிடம் அச்சம் உண்டாகாது

தானம்

(3) தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம், அவையாவன: அறத்தான் ஈட்டிய பொருளை முக்குற்றம் அற்ற நற்றவத்தோரைக் கொள்க எனப் பணிந்து குறை இருந்து தம் உள்ளம் உவந்து ஈதல் தலைப்படு தானம். ஆதுலர், குருடர், மாதர் முதல் பிறர் சிறுமையைப் பற்றி மனம் இரங்கி ஈவது இடைப்படு தானம். புகழ், ஆர்வம், கைம்மாறு, அச்சம், கண்ணோட்டம், காரணம், கடைப்பாடு இவற்றைப் பற்றி ஈவது கடைப்படு தானம். இது பலவகைப்படும். இவற்றுள் பதினாறு சிறந்தன,

தானவர்

1, ஒரு முனிவர் அட்டகோண மகருஷியின் தாயுடன் பிறந்தாளை மணந்தவர். குமரன் சுகேது, 2. காச்யப ருஷிக்குத்தநுவிட முதித்த குமரர். அவர்கள் அஜோழகன், அந்தகன், அடிதானவன், அருணி, அருட்டன், அநுதாபகன், இல்வலன், ஏகசக்ரன், கபிலன், புலோமன், சம்பான், திவிமூர்த்தனன், அயக்கீரிவன், சங்கசிரன், விபாவசு, விருஷபர்வன், விப்ரசித்தி, வாதாபி, சுவர்பபானன், நழசி, வக்தரயோதி, காலநாபன், திரியம்சன், சல்யன், நபன், நரகன், புலோமன், தாமரகேது, கசருமன், விரூபாக்ஷன், துர்ச்சயன், வைச்வாநான், தாயகன் ழதலியோர்,

தானியமாலி

1. அதிகாயன் தாய், இராவணன் தேவியரில் ஒருத்தியாகிய அபசாசு. 2. இவள் ஒரு அப்சாசு. இவள் கைலையில் சிவபிரான் சந்நதியில் நடிக்கச் சிவபிரான் இவளுக்கு ஓர் விமானம் அளித்தனர். இதில் ஏறி வருகையில் வழியிலிருந்த தடாகத்தில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தனள். இவளது அழகைக்கண்டு காமுற்ற சாண்டில்யமுனிவன் தன்னெண்ணத்தை இவளுக்குத் தெரிவிக்க இவள் முனிவனை நோக்கி 3 நாட்கள் தீண்டாத வளாதலின் நான்காம் நாள் வருகிறேனென நீங்கி நான்காம் நாள் நீராடி வருகையில் திக்குவிஜயத்தின் பொருட்டு வந்துகொண்டிருந்த இராவணன் இவளை வலியப் புணர்ந்தனன். அப்போதிவளிடம் அதிகாயன் பிறந்தான். பின் இவள் முனிவனிடம்வர, முனிவன் நீ ஒருவனுக்கு முதலில் வார்த்தை கொடுத்து அதைக் கடந்து வேறொருவனைச் சேர்ந்தாயாதலால் நீ முதலையாக என்று சபித்தனன். இச்சாபத்தால் பயந்து இவள் தீர்வுகேட்க இராமகாரியத்தின் பொருட்டு வரும் அநுமனால் தீரும் என்று போயினர். இவள் சஞ்சீவியின் பொருட்டு வந்த அநுமன் காலைத் தடாகத்தில் பற்றி அவனால் சாபம் நீங்கினள்,

தானியவகை

1, நெல்வகை அறுபதாம். குருவை, ஆனைக்கொம்பன், இலுப்பைப் பூச்சம்பா, ஈர்க்குச்சம்பா, கருடன் சம்பா, கம்பம் சம்பா, கறுப்புக்கார், கோணற்குருவை, கல்குருவை, கருங்குருவை, குத்தாலை, காட்டுக்குத்தாலை, காட்டழிவாணன், சிவப்புச்சிறுமணியன், சடைச்சம்பா, சிவப்புச்சம்பா, சீரகச்சம்பா, சன்னசம்பா, சுகதாஸ்சம்பா, சிவப்பு ஒட்டன், செப்புலிப்பிரியன், செங்கார், செங்குருவை, சாம்பல்வாரி, செம்பாளை, தங்கச்சம்பா, தட்டைச்செம்பாளை, தில்லைநாயகம், நறுக்குச்சம்பா, நீலன் சம்பா, பக்கிரிசம்பா, பழையபவுன்சம்பா, பொடித்தில்லை, பிசாணம், புனுகுச்சம்பா, பூங்கார், பெருங்கார், பொன் கம்பிச்சம்பா, மல்லிகைச் சம்பா, மணல்கார், மருதூர்வாசனை, மிளகி, முத்து வெள்ளை, மொக்குமட்டை, வாழைப்பூச்சம்பா, வால்குருவை, விராலிச்சம்பா, வெள்ளைச்சிறுமணி, வெள்ளைச் சம்பா, வெற்றிலைச்சம்பா, வெள்ளை ஒட்டன், வெள்ளைகபிஸ்தலம், வெள்ளைக்குருவை, வெள்ளைக் கூம்பாளை, மணக்கத்தை, வாலான், நவரைச்சம்பா, கல்லுண்டைச் சம்பா, குண்டுசம்பா, வளைதடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, தாளான் சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, சாடைச்சம்பா, குன்றிமணிசம்பா, அன்னமழகி, சொர்ணவாரி, 2. இவ்வகையில் இந்தியாவில் பயிராவன நெல்தானியமேயன்றி வேறுவகைகளும் உண்டு. அவை உண்பனவற்றிற்கு உதவியான முதற்காரண உணவுவகையினும் அதற்குத் துணைக் காரணமான கதிர்த்தானிய வகையினும் சேர்ந்தவை. முதற் காரண வகையில் நெல்லைப்பற்றிக் கூறியதைக் காண்க, கதிர்த்தானியவினத்தில் சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, செஞ்சோளம், கருஞ்சோளம், குறுவரகு, வரகு முதலிய. காய்ந்தானிய வகையில் கொடியிலும் செடியிலும் பயிராவன; துவரை, உளுந்து, கடலை, மொச்சை, பருங்காராமணி, பனிப்பயறு, பச்சைப்பயறு, தட்டைப் பயறு வெண்பயறு, கரும்பயறு, கொள்ளு, எள், அவரை, பீன்ஸ்விதை முதலிய பல.

தானை

(ச6) தேர், கரி, பரி, வாள், வில், வேல்.

தானை நிலை

இரண்டு சேனையும் மறத்தை ஏத்தப் போர்க்களத்துச் சிறப்பெய்தியது. (புறவெண்பா.)

தானை மறம்

1. வேற்படையினர் தறுகண்மையைச் சொல்லிப் பகைவருடைய கேட்டிற்கு நோவினும் முறைமையாக விசாரித்துரைப்பின் அதுவேயாம். (புற வெண்பா.) 2. பொர எதிர்ந்த இருவகைச் சேனை தாம் பொருதுமடியாமை பரிகரித்த ஆற்றலினது உயர்ச்சியைச் சொல்லியது (புறவெண்பா.) 3. பொலிவுபெற்ற பூமி காவலற்கு உறுதிகூறுதற்கும் பெறும் அதுவென்று சொல்லுவர்.

தான்மிகன்

ஒரு அரசன்.

தான்மிகபாண்டியன்

ஒரு பாண்டியன்; இவன் தேவி வித்துருவதை.

தான்யசங்கராந்தி விரதம்

இது விஷவத் புண்யகாலத்தில் சூர்யனைப் பூஜித்துத் தான்யதானஞ் செய்வது. இது செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோமபலம் அடைவர்.

தான்யாதிபதி

அரசனுக்கு நெல் முதலிய தான்யங்களின் சாதி, அளவு, விலை, உறுதி கூறுகொள்ளுமுறை, தூய்மை ஆக்கு முறையறிந்து கூறுவோன். (சக்சநீதி.)

தாபதநிலை

குருந்தப்பூமவரும் மாலையினையுடைய கணவன் இறந்தானாகக் கரிய பெரிய கண்ணினையுடையாள் வைதவிய மெய்தியவாற்றைச் சொல்லியது. (பு. வெ. பொது.)

தாபதவாகை

தபோதனவேடத்தார் புண்ணியத்தோடு தழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்லியது. (புறவெண்பா.)

தாபத்தியர்

தபதிவம்சத்துப் பிறந்த சந்திர வம்சத்தரசர்.

தாப்பிசைப்பொருள்கோள்

செய்யுளில் இடைநிற்குமொழி ஒழிந்த முதலினு மீற்றினும் சென்று பொருளைத் தருவது. (நன்னூல்.)

தாமக்கிரந்தி

பாண்டு புத்திரனாகிய நகுலன் மச்சநாட்டில் கரந்துறைந்த காலத்து வைத்துக்கொண்ட பெயர்.

தாமக்மதம்

இம்ம தாசாரியன் பிராணனாதிஸ்கு என்பவன். இது ஒருவிதமான வைணவ மதம், இவன் எல்லா மதங்களையும் ஒரு மதமாக்க முயன்றவன். இம்மதத்தவர் தேவகுமாரர்கள் என்று பாவம். இவர்களுக்கு விக்ரக ஆராதனையில்லை. இவர்கள் தங்கள் தேவாலயங்களில் மத கிரந்தங்களைப் பூசிப்பவர். இக்கிரந்தங்களில் ஹிந்து வேதம் குரான் முதலியவற்றின் சாரங்கள் அடங்கியிருக்கின்றன.

தாமசமநு

சுராஷ்டிரன், ஒரு மகா வீரனாகிய அரசன், இவ்வரசன் மந்திரி சூரியனை எண்ணித் தவமியற்றி அரசனுக்குத் தீர்க்காயுள் தரப்பெற்றதால் நெடுநாள் அரசாண்டவன். இவன் தனது நாடு, தனகளத் திர புத்திராதி களையிழந்து காடடைந்து தவஞ் செய்து கொண்டிருக்கையில் மழை பெய்து இவனை வெள்ள மடித்துக்கொண்டு போயிற்று. அரசன், ஒரு மிருகத்தின் வாலைப் பற்றிக் கரையேறி அடுத்த காட்டையடைந்து தான் பற்றியது மிருக மென்றறிந்தும் அதனிடம் மோகங்கொண்டனன். மிருகம், அரசனது எண்ணம் அறிந்து அரசனை நோக்கி அரசனே என்னை ஏன் தொட்டனை நான் கருப்பவதி ஆலிங்கனத்திற்குத் தக்கவள் அல்லள் என்று மனித பாஷையால் கூறியது. இதைக் கேட்ட அரசன் நீ யார் என மிருகம், நான் பூர்வத்தில் திருடதன்வன் என்னும் அரசன் குமரி, உன் பாரியைகளில் முதல்வி, என் பெயர் உற்பலாவதி என்றது. அரசன் மிருகத்தை நோக்கி உனக்கு இந்தப் பிறவி எவ்வாறு வந்ததென மிருகம், நான் இளமையில் என் தோழியருடன் வனத்தில் விளையாடுகையில் ஒரு பெண் மிருகத்தை ஆண் தொடர்ந்து வந்தது, அதனைக் கண்ட நான் அப்பெண் மிருகத்தை ஆண் சேரவொட்டாமல் ஓட்டினேன். பின் தொடர்ந்து வந்த புருஷா மிருகம் என்னை நோக்கி மனித பாஷையால் நான் செய்யவந்த கருப்பாதானத்தை ஏன் விலக்கினாய் என்றது. நான் பயந்து நீ யாரென நான் நிர் உருத்த சக்ஷன் என்கிற முனி புத்திரன். என் பெயர் சுதபன். என்னைத் தடை செய்ததால் சபிப்பேன் என்றது. நான் பயந்து அறியாமல் செய்த காரியத்தைப் பொறுக்க என வேண்டப் புருஷா மிருகம் என்னை மணந்தாலன்றி விடேன் என்றது. அதனை நோக்கி நான் மிருகவுருக் கொள்ளேன் என்றனன். அதனால் இருடி புத்திரன் கோபித்து நீ மிருகமாக என்றனன். நான் மீண்டும் வேண்ட முனிவன், நீ இரண்டு சன்மம் மிருகமாக இருந்து இரண்டாவது சன்மத்தில் சித்தவர்ய முனிபுத்ரனாகிய லோலன் உன் கருவில் வருவன்; அக்காலத்து உனக்குப் பூர்வஞான முண்டாய் மனித வாக்காகப் பேசுவாய், உன் ஜன்மம் விடுதலையாம். அந்த லோலன் மனுவாவான் என்று போயினன். அக்காலம் வந்தது நீர் தொட்டதால் கருவடைந்தேன். இதோ இப்புத்திரனைக் கொண்டு போம் என ஒரு புத்திரனைப் பெற்றுப் புண்ணிய உலகடைந்தது. அவ்வனத்திலிருந்த இருடிகள் குமரனுக்குத் தாமசமது என்று பெயரிட்டனர். இவனை அகத்தியர் யானையாகச் சபிக்க ழதலையால் பிடியுண்டு விஷ்ணு சக்கரத்தால் விடுபட்டனன் என்பர். இவன் நாலாம் மது.

தாமத்தர்

திருவள்ளுவர் குறளுக்கு உரை இயற்றியவர்களுள் ஒருவர். உரையாசிரியர்.

தாமந்தை மகருஷிகோத்ரன்

குமாரக் கடவுள் சூரபன்மனை வென்ற காலத்து உதவி செய்து செந்தோன்றிமாலை பெற்ற வணிகன்.

தாமன்

1. ஒரு கோபாலன், கண்ணனிடம் அந்தரங்க பக்தியுள்ளவன், ஒருமுறை கண்ணன் விளையாட்டாக இவனைத் தோளில் தூக்கினர். 2, திருஞான சம்பந்த சுவாமிகளைக் காண்க. 3. தமயந்தியின் தமயன, விதர்ப்பன் குமரன்.

தாமப்பல் கண்ணனார்

ஒரு தமிழ்ப் புலவர்; வேதியர், மாவளத்தானைப் பாடிப் பரிசு பெற்றவர். (புற, நா.)

தாமரன்

கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்; முராசுரன் குமரன்.

தாமரை

காசிபர் தேவி, தக்ஷன் குமரி, வல்லூறு, கழுகு முதலியவற்றைப் பெற்றாள்.

தாமலிப்தர்

ஒருவித அரசர்.

தாமவித்தம்

ஒரு தேசம்,

தாமவியாளகடர்

சம்பான் சேநாபதியர்.

தாமாஜிபண்டிதர்

இவர் பேதரி என்னும் பட்டணத்தில் வசித்த ஒரு வேதியர். இவர் ஒரு மிலேச்ச அரசனிடம் உத்தியோகஞ் செய்துவருகையில், அவன் இவரை மங்கள வேடு, என்னுங் கிராமத்திற்கு அதிகாரி யாக்கினன். இவர் அக்கிராமஞ் சென்று பக்தி மேலிட்டவராய்ப் பாகவத கைங்கர்யத்தி லீடுபட்டுத் தம் பொருள்கள் முழுதும் அப்பாகவதர் பொருட்டுச் செலவிட் டனர். பின் ஒரு ஷாமம்வா அப்புர ஜனங்கள் அன்ன விருப்புடையராய் அரசனது தான்ய முழுதும் கொள்ளையிட்டனர். இச்செய்தியறிந்த அரசன் இவரைத் தண்டிக்க எண்ணி வருவிக்கப் பெருமாள் ஒரு வெட்டியானைப் போல் வேடம் கொண்டு அரசன் பொருள் முழுதும் தாங்கிப் பண்டிதர் தந்த திருமுகம் போல் ஒரு திருமுகம் கொடுத்து அரசனிடம் பண்டிதர் கொடுத்த பொருள் முழுதும் ஒப்புவித்து ரசீது பெற்று வரிசை பெற்று பண்டிதர் இருக்கு மாடம் வந்தனர். இதற்குள் பண்டிதர் அரசனிடம் வர அரசன் எதிர்கொண்டு மரியாதை செய்து நடந்தவை கூறப் பண்டிதர் தம் பொருட்டுப் பெருமாள் வந்ததற்கு விசனமடைந்து அரசனை விட்டு நீங்கிக் கைங்கர்யபாரா யிருந்தனர்.

தாமான் தோன்றிக்கோன்

ஒரு கொடையாளி; இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன். ஐயூர் முடவனாராற் பாடப் பெற்றவன். (புற~நா.)

தாமிரன்

முராசுரன் குமரன், கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன்.

தாமிரபரணி

1. திருநெல்வேலி சில்லாவிலுள்ள ஒரு நதி. 2. அஞ்சனம் என்னும் திக்கு யானையின் பெண்.

தாமிரபர்ணி

இந்து தேசத்தின தென்பாகத்தில் திருநெல்வெலி சில்லாவிலுள்ள பொதிகை மலையிலுண்டாம் நீர்வீழ்ச்சி, The river Tamraparani is in Thirunelvely (South India)

தாமிரலிப்தி

கங்கைக் கருகலுள்ள ஒரு நகரம்,

தாமோதரன்

1. கிருஷணாவதாரத்தில் தாம்பால் வயிற்றில் கட்டுண்ட விஷ்ணுவிற்கு ஒரு பெயர். 2. இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் மருத்துவன் தாமோதாரின் வேறாக இருக்கலாம். குறு 92, 195.

தாமோதரம்பிள்ளை

இவர் யாழ்ப்பாணத்துச் சிறுபிட்டி வைரவநாதம் பிள்ளை குமாரர். குலம் வேளாளர் குலம். சமயம் சைவம், தமிழில் பயிற்சியுள்ளவர். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை முதலில் அச்சிட்டு வெளியிட்டவர், சைவ மகத்துவம், கட்டளைக்கலித்துறை முதலிய செய்தவர்,

தாம்பரலிப்தம்

ஹுலிக்குச் சமீபத்திலுள்ள ஒரு தேசம், Tamluk is on the river Salrai, jast above the junotion with the river Hugli.

தாம்பிரதீபம்

ஒரு தீவு. சகதேவன் திக் விஜயத்தில் வென்றது.

தாம்பிராருணம்

இது ஒரு தீர்த்தம்.

தாம்பூல சங்கிராந்தி

வருஷாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை, பாக்கு முதலிய வற்றோடு வாசனைத் திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது.

தாம்பூலம்

இது மங்கலப் பொருள்களில் ஒன்று. பரத கண்டத்தவரால் கொண்டாடப்பட்ட பொருள், தாம்பூல ரசத்தினால் கிருமி கபம் தாகம், பல் நோய், விடாய் இவைகள் நீங்கும். பசி, பெண்களுறவு, நாவுரிசை, மலசுத்தி, நுண்ணறிவு, சுக்ல விருத்தி, தருமகுணம், அழகு முதலிய உண்டாம். தாம்பூலத்தில் முதலில் வெறும் பாக்கினை வாயிலிடலாகாது, என் னெனின் அப்பாக்கில் அதி துவர்ப்பு, சொக்கு, மூர்ச்சை, புழு உளுத்தல், பசைப்பு இவை முதலிய குற்றங்களுளவாய்த் தேகத்திற்குக் கெடுதி தரும். ஆதலின் முதலில் குற்றமில்லாத வெற்றிலையை மென்று அதன் சாரத்தினையருந்திப் பின் பாக்கினை யருந்தின் அப்பாக்கிலுள்ள தோஷங்கள் போம், பாக்குகளில் கொட்டைப்பாக்கு கோழை, மலம், மலக்கிருமிகளை நீக்கும். அதிகமாகத் தின்றால் சோபாரோகத்தை விளைக்கும். களிப்பாக்கு நெஞ்சிற் கோழையும் அதிசாரத்தையும் மனமகிழ்ச்சியைத் தரும். பித்த அருசியைப் போக்கும். வெறும் பாக்கினை மாத்திரம் தின்னலாகாது. பாக்குகளில் மிக்க இளம்பிஞ்சு அதிக முதிர்ச்சி, மிகப்புதிது, பச்சை, புழுவாடல், சோருதல், இவ்வித துர்க்குணழள்ளவை களை நீக்கவேண்டும். வெற்றிலைகளில் சாதாரணமானதை யருந்தில் கபம், சீதளம், காணாக்கடியின் தூர்க்குணம், திரிதோஷம் விலகும். கம்மாறு வெற்றிலை சிரோபாரம், சலதோஷம், சந்தி, மந்தாக்கி வயிற்றுப்பிசம், வலி முதலிய நீங்கும். வெற்றிலையை யருந்துகையில் சுண்ணந் தடவுதற்கு முன் காம்பு, நுனி, நீண்ட நரம்பு, பின்புறத் தோல் இவைகளை நீக்க வேண்டும். இவற்றை நீக்கா தருந்துவரேல் சக்கிரவர்த்தியாயினும் செல்வத்தை இழந்து வறியராவர். சுண்ணத்தில் கற்சுண்ணம் அன்னத்தைச் சீரணப்படுத்திக் குடலிற் பற்றிய நெய்ச்சிக்கல், பேதி, வாதகிரிச்சரம், புழுவின் கடி முதலிய சில்விஷங்கள் காயங்களினிரத்தம், களை நோய், சந்தி இவைகளை நீக்கிச் சுக்கில விருத்தியையும் தந்து வன்மையையுந் தரும். தாம்பூலத்தை யருந்து கையில் காலையிற் பாக்கை அதிகமாகச் சேர்த்தால் சரியாக மலங்கழியும். மத்தியான்னத்தில் சுண்ணத்தை அதிகப்படுத்த நல்ல பசியுண்டாகும். மாலையில் வெற்றிலையை அதிகப்படுத்த வாய் மணந்தரும். தாம்பூல ரசத்தில் முதல் சுரக்கும் வாய்நீர் நஞ்சு, 2 வது நீர் மிகுபித்தம், 3 வது நீர் அமிர்தம், 4 வது அதியினிப்பு, 5, 6 வது பித்தம் அக்நிமந்தம் பாண்டுரோகம் இவற்றை யுண்டாக்கும்.

தாம்பொதியார்

கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.)

தாயங்கண்ணனார்

சோழநாட்டு எருக்காட்டூர்த் தாயங்கண்ணனா ரென்பவர் இவரே. எருக்காட்டூர் தஞ்சாவூர்ஜில்லா, நன்னிலந் தாலுக் காவில் காவாலங்குடிக்குக் கீழ்ப்பாலுள்ளது. இவர் பெயர் ஏடெழுது வோரால் பிறழ்ந்தெழுதப்பட்டுத் தையங்கண்ணனாரெனவும், கதையங் கண்ணனாரெனவும் காணப்படும். காடு வாழ்த்துப் பாடியவர் இவரொருவரே. “மலர் செலச்செல் லாக்காடு வாழ்த்துக்கு நச்சினார்கினியர் இவர் பாடலையே உதாரணமாகக் கொண்டார். (புறம் 356) பிற்பகுதி. இவர் சேரலாது சுள்ளியாற்றில் யவனர் வந்து பொன் கொடுத்து மிளகுப்பொதி வாங்கி யேகும் வியாபாரச் சிறப்பையும் சேரலனிடத்திருந்த பொற்பிரதிமையைப் பாண்டியன் போர்புரிந்து பெற்றதையும் பரங் குன்றத்தின் சிறப்பையும் விளங்கக் கூறியுள்ளார்; அகம் 149. தொண்டையர் வேங்கடமும், சோர்கொல்லியும், சோழர் காவிரியும், உறையூரும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 213,237. எழினியென்பான் இவராற் பாடப்பெற்றுள்ளான். அகம் 105. இவர் நெய்தல், பாலை, குறிஞ்சிகளின் வளங்களைச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையார். குராவரும் பைப் பாம்பின் பல்லோடு உவமித்துள் ளார். அகம் 237. இதனையே எடுத்தாண்டனர் கம்பரும் “குராவரும் பனைய கூர்வாளெயிற்று வெங்குருளை நாகம்” கார் காலப் படலம் செய்யுள் 56. இவர் பாடியனவாக நற்றிணையில் உகசும் பாட லொன்றும் குறுந்தொகையி லொன்றும் அகத்திலேழும் புறத்திலொன்றுமாகப் பத்துப் பாடல்கள் சிடைத்திருக்கின்றன.

தாயங்கண்ணியார்

ஒரு தமிழ்க் கவி. (புற~நா.)

தாயர்

(5). பாராட்டும் தாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித் தாய், அன்றியும் அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, தன் தேவியை ஈன்றாள், தன்னை ஈன்றாள்.

தாயிசமதம்

சீனாதேசத்தில் முதல் முதல் கான்பீயூகஸ் மதமிருந்தது. அதன்பிறகு, தாயிஸமதம்; கான்பீயூகஸ் காலத்திலிருந்த தாயிசா வென்பவன் இம்மதத் தாபகன், இவன் மனிதர், பூமி, ஆகாயம் என்பவை உண்டாதற்கு முதற் காரணம் ஒன்று உண்டு எனவும், அக்காரணம் அநாதியெனவும், அந்தக் காரணப்பொருள் மூன்று முறை மனுஷயாவதாரம் எடுத்ததென்றும், ஒவ்வொருவரும் யோகத்தை அநுட்டித்து இந்த ஜன்மத்தைப் போக்கடிக்க வேண்டுமென்றுங் சுடறுவன்; கி. மு. 1034 வருஷத்தில் பிறந்த சோதாஜ் என்னும் விஞ்ஞானியால் எழுதப்பட்ட அநேக மான ஜட அஜடதத்துவக் கிரந்தங்கள் முக்யாம்சமான பிரமாணங்கள், சீனா தேசத்தில் மூன்றாவது மதம் பௌத்தமதம் இதுவே பெரும்பாலும் அத்தேசத்தில் வியாபித்திருக்கிறது, இதுவன்றியில் கி. பி. 1833 இல் டேபிங் என்னும் கிறிஸ்து மதமொன்றுண்டாயிற்று. ஹங்சாஸ்டிய என்பவன் ஒரு சிறு கிரந்தத்தை ஆதாரமாகக்கொண்டு இந்தக் கிறிஸ்துமதத்தை விர்த்தி செய்தனன். சீனரின் சிருஷ்டி விர்த்தி செய்தனன். சீனரின் சிருஷ்டி விஷயமான அபிப்பிராய மெவ்வாறெனின் ஆதியில் ஜடபதார்த்த மாத்திரம் ஒரே பிண்டமாக இருந்து பிறகு அது இரண்டாய் அதிலொன்று பெண்ணாய்மற்றொன்று ஆணாயிற்று; பின்னும் சூக்ஷ்ம தேகம் மேலும், ஸ்தூலதேகம் கீழுமாய் அதினின்றும் சமஸ்தமு முண்டாயின. ஆகையால் ஆகாசத்திற்கும் பூமிக்கும் சம்பந்த முண் டென்பர். பின்னும் அனைத்தும் ஸ்திரி புருஷரூபமாகவே இருக்கின்றன வென்பது அவர்களின் அபிப்ராயம்,

தாயுமானார்

1 திரிசிராப்பள்ளியில் திருக்கோயில் கொண்டிருக்கும் சிவமூர்த்தியின் திருநாமம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த அரதன குத்தனுக்கு ஒரு பெண் பிறந்தது. அவளைத் திரிசிராப்பள்ளியில் தனகுத்த னுக்கு விவாகஞ் செய்வித்துத் தந்தை இறந்தனன். தனகுத்தனும் மனைவியும் திரிசிராப்பள்ளியிலிருக்கையில் மனைவிக்குப் பிரசவகாலம் வந்தது. இதையறிந்த தாய் பெண்ணிடம் வர எண்ணி வந்து காவிரிப் பெருக்கால் அக்கரையில் நின்றனள். பெண் தாயையெண்ணி வருந்தச் சிவமூர்த்தி அப்பெண்ணிட மிரக்கங்கொண்டு தாய்போல் திருமேனி தாங்கி மருந்தெண்ணெய் முதலிய கொண்டு வந்து அப்பெண்ணுடனிருந்து பிரசவமானபின் ஏழாம் நாள் குழந்தையைத் தொட்டிலில் இட்டனர். ஆற்றின் வெள்ளம் வற்றியது. பெண்ணின் தாய் மகளிடம்வரத் தாயான சிவமூர்த்தி மறைந்து இடபாரூடராய்க் காட்சி கொடுத்தனர். பெண் என் தாயுமானாரோ என்ன அதுவே திருநாமமாய் வழங்கியது. (செவ்வந்திபுராணம்). 2. இவர் ஊர் வேதாரண்யம் என்பர். விஜயரகுநாத சொக்கலிங்க நாயகர் சமஸ்தானத்தில் சம்பிரதியாயிருந்த கேடிலியப்பப் பிள்ளையின் கனிட்ட குமரர். இவர் இலக்கிய இலக்கணங்கள் கற்று வல்லவராய்த் திருமூலர் மரபில் எழுந்தருளிய மௌனதேசிகரிடம் தத்துவோபதேசம் பெற்று அப்பியாசியாயிருக்கையில், தந்தையிறக்க அவரது உத்தியோகத்தைத் தாம் ஏற்றுத் தமது நிஷ்டையையும் விடாதிருந்தனர். அரசன் இவரது நிலைகண்டு பணிந்து இவரைத் தமது உத்தியோகத்திருந்து வேறாக்கி அவருக்கென வேறிட முதலிய செய்வித்துக் காலஞ் சென்றனன். இவ்வரசன் மனைவி தம்மீது காதல் கொண்டிருப்பதை நாயனார் அறிந்து இராமநாதபுரஞ் சென்றிருந்தனர். இவரது தமயனாராகிய சிவசிதம்பரம்பிள்ளை இவரது சந்ததி விர்த்தியின் பொருட்டு இவரை வேண்டித் திருமணஞ் செய்வித்தனர். அந்த அம்மையா ரும் இவரைமணந்து கனகசபாபதிப்பிள்ளையென ஒரு குமரரைப் பெற்றுக் காலமாயினள். பின் தாயுமானார் துறவடைந்து பல தோத்திரப்பாக்களைப் பாடிச் சிவபத மடைந்தனர். இவர் காலம் சற்றேறக் குறைய (150) வருஷம் இருக்கலாம். இவரது பரிபூரணத்தைக் கண்டிரங்கி அருளையர் இவரைத் துதித்தனர். (திருப்பாடற்றிரட்டு).

தாரகசித்

குமாரக்கடவுள்.

தாரகன்

1. கிருஷ்ணன் தேர்ப்பாகன், 2. குமாரக்கடவுளால் கொல்லப்பட்ட அசுரன், இவன் புத்திரர் திரிபுரவாசிகளாகிய வித்துற்மாலி, சமலாக்ஷன், தாரகாக்ஷன், சூரபதுமன் சகோதரன். ஒரு காலத்து விஷ்ணு மூர்த்தியிடம் யுத்தம் புரிந்து அவர் ஏவிய சக்கரத்தை மார்பணியாகக் கொண்டவன்; இவனுக்கு யானை முகம், வீரவாகுவினை மாயையால் வஞ்சிக்கக்கிரவுஞ்சத்தில் மறைந்து வெளிப்பட் டுப் பூதப்படைகளை வதைத்து மீண்டுங் குமாரக் கடவுளுடன் கிரவுஞ்சன் சகாயமாகப் பலமாயத்தால் யுத்தஞ் செய்து வேலாயுதத்தால் வீரசுவர்க்க மடைந்தனன். மனைவி சவுரி, 3. தநுப்புத்திரன். 4. இரண்யாக்ஷன் குமரன். 5. ஒரு சிற்பி.

தாரகாக்ஷன்

திரிபுரத்தசுரரில் ஒருவன்; தாரகன் குமரன்

தாரகாம்யம்

தேவர்க்கும் அசுரர்க்கும் உண்டான யுத்தம்.

தாரகாரி

தருசகன் மந்திரிகளுள் ஒருவன். உதயணன் ஆருணியோடு போர்செய்தற்தகுச் சென்றகாலத்தில் உதவியாக அவனால் அனுப்பப்பட்டோன். (பெ~கதை).

தாரகேசன்

பாதளகேதன் தம்பி.

தாரக்ஷியர்

தாக்ஷபனைக் காண்க. (தாட்சபன்).

தாரணி

1. கலுழவேகன் மனைவி. 2. சத்தியாதனனைக் காண்க.

தாரணை

1. (9) நாமதாரணை, வச்சிர தாரணை, மாயா தாரணை, சித்திர தாரணை, செய்யுட் டாரணை, நிறைவு குறைவாகிய வெண் பொருட் டாரணை, சத்ததாரணை, வத்துத் தாரணை, சதுரங்க தாரணை, 2. சொல்லணியின் வகை, அவை, நாமதாரணை, அக்கர தாரணை. செய்யுட் டாரணை, சதுரங்கதாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை, வச்சிர தாரணை, இவைகளை 25 அக்கர சங்கேதங்களால் இடம்படவறிந்து தரித்து அநுலோபமாகவும், பிரதிலோபமாகவும் பிறவாறாகவுஞ் சொல்வது. (யாப்பு~வி.)

தாரன்

ஒரு வாநர வீரன்; வாலி சுக்ரீவருக்கு மாமன், தாரைக்குத் தந்தை, வியாழன் குமரன்.

தாரபசன்

1. உத்தமனிக்குப் பிராதா. 2. பிரியவிரதனுக்கு இரண்டாவது பாரியிட முதித்த குமரன்.

தாரஷ்டி

த்ருடனைக் காண்க.

தாராகணங்கள்

நக்ஷத்ர கூட்டங்கள், தூமதகேதுக்கள், ரோகிணேயர்கள், சப்தருஷிகள், உல்கா பாதங்கள், மின்னல்கள், ஊஷ்ண பாதங்கள், ஜ்யோதிர் கணங்கள் என்பன.

தாராட்சன்

தாரகாசுரன் புத்திரன்.

தாராபலம்

ஜென்மநக்ஷத்திர முதல் தற்கால நகூத்திரம் வரை எண்ணிவந்த தொகையின பலாபலன். 1, 19 ஜன்மம்: மத்திமம், 2, 11, 20 சம்பத்து: உத்தமம். 3, 12, 21 விபத்து: அதமம். 4, 13, 22 க்ஷேமம்: உத்தமம். 5; 14 பிரத்தியம்: மத்திமம், 6, 15, 24 சாதகம்: உத்தமம். 7, நைதனம்: அதமம். 8, 17, 26 மைத்திரம்: உத்தமம். 9, 18 பரமமைத்திரம்: சமம், 10 கர்மம்: மத்திமம். 16 ஸாங்காதிகம்: அதமம் 23 வைநாசிகம்: அதமாதமம், 25 மானசம்: அதமாதமம். 27 சமுதாயிகம்: அதமம்,

தாராபீடன்

சந்திராபீடனது தந்தை,

தாராபுரம்

போஜன் ராஜதானி.

தாரிஷ்டவம்சம்

வைவச்சு தமனுப்புத்திரனாகிய திருஷ்டனா லுண்டான வம்சம்.

தாருகன்

1. ஒரு அரக்கன். இலக்குமணரால் கொலையுண்டவன். 2. காளியைக் காண்க, 3. ஒரு அசுரன், இவன் குமரர் வித்துற்மாலி, கமலாக்ஷன், தாரகாக்ஷன். 4. மாநந்தையைக் காண்க, 5. ஒரு அசுரன், இவன் தேவி தாருகை, இத்தாருகன் தன் தவவலியால் தேவர் முதலியவர்களை வருத்தத் தேவர் ஒளரவ முனிவரிடம் முறையிட்டனர். ஔரவர் இனி அசுரர் தேவர்களுக்குத் தோற்றுப் பின்னடைக என அவ்வாறே தேவர் அசுரர்களுடன் போரிடத் தாருகனுடன் கூடிய அசுரர் பறக்கும் தமது பட்டணத்துடன சமுத்திர நடுவில் சென்று ஆங்குக் கப்பலோட்டி வருவோரை வருத்தி வருகையில் சுப்பிரியன் என்பவன் கப்பலோட்டிவர அவனைச் சிறையிலிடச் சுப்பிரியன் காராக்ரகத்தில் சிவபூசை செய்து சிவப்பிரத்யக்ஷங் கண்டு சிவப்பிரியனாய் இருக்கையில் அசுரன் அவனைக் கொல்ல அசுரரை யேவினான். சிவப்பிரியன் சிவத்யானத்துடனிற்கச் சிவமூர்த்தி சிவப்பிரியனுக்குப் பாசுபதமளித்து அசுரரைத் தோல்வியடைந் திறக்கச் செய்தனர். (சிவமகா புராணம்).

தாருகாசுரன்

மாயை காசிபரை மூன்றாஞ் சாமத்துப் பெண்யானை யுருக்கொண்டு புணர யானை முகத்துடன் பிறந்த அசுரன் இவன் விஷ்ணுமூர்த்தியுடன் ஒருமுறை சண்டை செய்தவன். இவன் பட்டணம், மாயாபுரம், தேவி சவுரி, குமரன் அதிசூரன். சுப்பிரமண்யரால் கொல்லப் பட்டவன். மறுபிறப்பில் அகம்பனானான்.

தாருகாவனம்

இந்த வனத்திலிருந்த முனிவர்கள் கருமமே பலன் தரும், தெய்வம் வேண்டாவெனவும், இம்முனிவர் தேவியர் கற்பேயுயர்ந்தது மற்றில்லையெனவும் கடவுளை இகழ்ந்திருந்தனர். இதனால் சிவ மூர்த்தியும், விஷ்ணுமூர்த்தியும் முறையே பிக்ஷாடனத் திருக்கோலமும் மோகினித் திருக்கோலமும் கொண்டு அம்முனிவரிடத்தும் அம்முனி பத்தினிகளிடத்தும் மனநிலை யறியச் சென்றனர். திருமால் முனிவரிடஞ் செல்ல முனிவர்கள் மாலைக் கண்டு மயங்கிப் பின் சென்றனர். சிவமூர்த்தி முனிவரின் தேவியரிடஞ் செல்ல அக்கற்பினிகள் பிக்ஷாடனரைக் கண்டு மயல் கொண்டு பின்சென்று அவரை மனத்தாற் நழுவி (68000) முனிவரைப் பெற்றுக் கற்பழிந்தனர். இதனால் முனிவர்கள் சிவமூர்த்தியிடம் கோபித்து ஆபிசாரயாக மொன்று செய்து, பூதப்படை, பாம்பு, முயலகன் உடுக்கை, மழு, மான், வெண்டலை, புவி, அழல், அலகை, சூலம் முதலியவைகளை அதில் பிறப்பித்து ஏவ அவை சிவமூர்த்தியை ஒன்றுஞ் செய்யாது அடங்கின. பின் சாபமிட்டனர். அவையும் ஒன்றுஞ் செய்யா தடங்கியதால் முனிவர்கள் நீங்கள் யாரெனச் சிவமூர்த்தி நாம் கைலையிலுள்ளோம் என்று மறைந்தனர். பின் இருடிகளை நோய் முதலிய வருத்தின. முனிவர்கள் இந்திரனிடஞ் சென்று கேட்க இந்திரன், முதல்வாருவரும் எதிரில் தரிசனம் தந்தும் அறியாமையால் இந்த நோய் உங்களை வருத்துகின்றது என்றனன். அதனால் முனிவர்கள் சிவ பூசை செய்து பேறுபெற்ற வனம்,

தாருகி

தாருகன் தேவி, சத்தி பூசையால் அசுரர் அழியாதிருக்க வரமடைந்தவள். தேவர்களையும் மற்றவரையும் வருத்தி வீர சேநனால் தோல்வியடைந்தவள், (சிவமகா புராணம்).

தாருணன்

1. இராக்கதன், பிராமணனைத் தின்னப்போய் அப்பிராமணன் அஞ்சாது களித்தலைக் கண்டு வெருவி இவனது மெய்யிலுற்ற பசி நோய்க்குக் காரணங் கேட்டுப் பிராமணனை விட்டவன், 2. ஒரு அசுரன், இவன் பிரமனை எண்ணித் தவம்புரிந்து அம்மூர்த்தி தரிசனம் தர என்னெதிர்ப்பட்டவர் சுரத்தால் துன்பமடைந்து இறக்க என வரம்பெற்றுத் தேவரை வருத்தித் திரிகையில் தேவர் வேண்டச் சிவமூர்த்தி குபேரனுடன் சண்டிகையை ஏவத் தாருணன் சண்டிகையைக் கண்டு மயல் கொண்டுவரச் சண்டிகை கொலை செய்தனள்.

தாரை

1. பிரகஸ்பதியின் மனைவி, சந்ரன் இவளைப் புணர இவளிடம் புதன் பிறந்தனன். அந்தப் புதனைப் பிரகஸ்பதி கண்டு தன் குமரன் என்று சந்திரனிடம் வாதிடப் பிரமன் இரகசியத்தில் கேட்டு உண்மையறிந்து புதனைச் சந்திரனுக்குக் கொடுத்தனன். 2. இரவிவன்மன் புத்திரி, துச்சயரா சன் மனைவி, யானையால் உடன்பிறந்த வீரை இறந்தாளென்பது கேட்டு மேன் மாடத்திருந்து பூமியில் விழுந்திறந்து அடுத்த பிறவியில் மாதவி யாகப் பிறந்தவள், (மணிமேகலை.) 3. வாலியின் தேவி, அங்கதன் தாய், இவளைச் சுக்கிரீவன் வாலிக்குப் பிறகு தேவியாகக் கொண்டனன். இவள் அமிர்தத்திற் பிறந்தவள். வாலியை இரண்டா முறை சுக்கிரீவனுடன் யுத்தத்திற்குப் போகாதிருக்க வேண்டியவள்.

தார்

முந்துற்றுச் சென்று போர்செய்யும் படை

தார்க்கிகன்மதம்

வித்தியாகற்பனை தோஷம், பிரவிருத்தி, சநநம், துக்கம் என்பவைகளை நீக்கிச் செல்லத் துக்க ஒழிவுண்டாம், அதுவே முத்தியென்பன்.

தார்க்ஷி

துர்வாஸமுனிவர் தவததை அழிக்கச்சென்று அவர் சாபமிடப் பக்ஷியான வபுஸ் என்னும் அப்சரசு. கந்தரனுக்குத் தமனகையிடத்துப் பிறந்த பெண்,

தார்க்ஷிகள்

1, ஒரு முனிவன்; வேட்டைக்கு வந்த துந்துமாரன் என்னும் அரசன், மான்தோல்போர்த்துத் தவஞ்செய்து கொண்டிருந்த இவனது குமானை மானென்று எண்ணி அம்பெய்து கொன்றனன். இம்முனிவன், குமரன் இறந்ததால் விசனமடையாமல் குமரனை மீண்டும் உயிர்ப்பித் தனன். இவனுக்குத் தார்க்கிகன் எனவும் பெயர். 2. ஒரு விஷ்ணுபடன.

தார்தார்மதம்

பூர்வம் தார்த்தாரதேச ஜனங்கள் மார்ஸ் என்னும் தேவதையைப் பூஜித்துக்கொண்டும் குதிரைகளைப் பலி கொடுத் துக்கொண்டு மிருந்தனர். பிறகு குதிரைகளை அடிக்கும் சவுக்கைத் தெய்வமாக நினைத்துப் பூஜித்துக்கொண்டிருந்தனர். மங்கோலியா தார்த்தாரிகள் நிடிகே என்னும் தேவதையைச் சிருட்டிகர்த்தா என்று நம்பினர். பின்னும் டாபிலாமா என்னும் சந்நியாசி இருபதினாயிரம் சீடர்களுடன் லாசா என்னுமிடத்தில் இருக்கிறார். ஆகையால் அவரும் தேவனே யென்பர். இந்தச் சந்நியாசிக்கு ஹான்சிங் என்பவரும், தேவ என்பவரும் முக்கிய மாணாக்கர். இவர்களில் சாதாரண ஜனங்கள் மானிப்பா என்னும் தேவதையை ஒன்பது தலைகளுடன் செய்து கிராமதேவதையாகப் பூசித்துப் பலிகொடுத்துக்கொண்டு வருகின்றனர். கடுச்சடா என்னும் தேவன் பரிசுத்தத்தையும் மறுஜென்மத்தையும் கொடுப் பன். இவர்களில் சிலர் பூமியைத் தெய்வமாக நம்பி வெறுந்தரையில் படுத்துப் புரளுவர். ஜாகாகிஸ் என்னும் தார்த்தாரிகள் இறந்தவர்களே தேவதைகளென்று பூசிக்கின்றனர். டாங்குசஸ் என்னும் ஜாதியார் சுகமானன் என்னும் சிருஷ்டிகர்த்தா இருக்கின்றனன் என்பர். பிராட் என்ப வர்கள் சூரியசந்திரன் தெய்வமென்பர். அவ்விடத்திலுள்ள காக்கேஸிய ஜாதியார் பெரியமனிதரே தெய்வமென்பர். தேசாசாரம், மாத்ருகமனம் செய்தல் நியாய மென்பர். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களை விவாகஞ் செய்துகொள்ளல் நலம் என்பர். உத்தமஸ்திரிகள் இறந்து போனால் அந்த ஸ்திரிகளைப்போல் பிரதிமைசெய்து வைத்துக்கொள்ளுவர். செத்த பிணத்தை நன்றாக உலர்ந்தபிறகு அலங்காரஞ்செய்து பூசித்து அடக்கஞ்செய்வர்.

தார்நிலை

தூசிப்படையைத் தடுப்பனென அரசற்கு ஒரு வீரன் தனது தறுகண்மையைச் சொல்லியது. ஒருகுடை வேந்தனைக் குடைவேந்தர் பலர் அடையப் போரிடத்துத் தனிவீரன் தானே தடுத்தற்கு மூரித்த அத்துறை. (பு. வெ.)

தார்பிச்சுக்கட்டி

இது தேவதாருவைப் போன்ற ஒருவித மரத்தின் துண்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. மரத் துண்டுகளை ஒரு வட்டமான குழியில் நிரப்பிக் குழியினடியில் ஒரு துவாரமிட்டுக் குழாயைச் செலுத்தி வைப்பர். அக்குழாயின் ஒருமுனை குழியினும் மற்றொரு முனை ஒரு தொட்டியினும் பொருந்திபிருக்கும். மேற்சொன்ன மரத்துண்டுகளில் நெருப்பிட்டுக் கொளுத்திக் குழியை நன்றாக மூடுவார்கள். குழியிலிருக்கும் கட்டையிலிருந்து கருமையான திரவம் குழாயின் வழியாகத் தொட்டியில் விழுகிறது. இதுவே தார், கீல். இந்தத் தாரை கழுத்து வளைந்த பாத்திரத்தில் காய்ச்சினால் தார் எண்ணெயாகிறது.

தாலகேது

1. கிருஷ்ணனால் செயிக்கப்பட்ட வருணன் சேவகன். 2. வச்சிரகேதுவின் குமரன், இருதத் துவசனைக் காண்க.

தாலசங்கன்

செயத்துவசன் குமரன், இவனுக்கு (100) குமரர் உதித்தனர். அவர்கள் நூற்றுவரும் சகரனால் சங்கரிக்கப்பட்டனர். இவர்களுள் ஜ்யேஷ்டன் விதிஹோத்ரன்.

தாலத்துவசன்

நாரதரைக் காண்க.

தாலப்பியமுனிவர்

புலஸ்தியர் மாணாக்கா.

தாலப்யர்

இவர் பாஞ்சால அரசனாகிய திருதராஷ்டிரானைப் பசுக்கள் கேட்க அவன் கோபத்தினால் செத்த பசுக்களைக்கொண்டு போக என ருஷி அரசனிடத்துக் கோபித்துச் செத்த பசுவின் மாமிசத்தில் ராஜ்யங் கற்பித்து அவாகீர்ண க்ஷேத்ரத்தில் யாகஞ் செய்ய இராஜாவின் ராஜ்யம் க்ஷணித்தல் கண்டு ருஷியைக் கண்டு வணங்கிச்செய்த பிழைபொறுக்க வேண்டக் கருணை செய்தவர். இவர்க்குப் பகர் என்று ஒரு பெயர். (பார~சல்லி).

தாலவமுனிவர்

ஒரு இருடி; தேவி சுலபை.

தாலி

மங்கலசூத்ரங் காண்க,

தாலுகண்டகரோகம்

இது தவடையில் முள்ளுறுத்தல்போல் நமைச்சல்போ லுண்டாக்கி உபத்திரவஞ் செய்வது.

தாளசங்கள்

கார்த்தவீரியன் பேரன்:

தாளம்

கொட்டும், அசைவும், தூக்கும், அளவும் பொருந்தும்படி புணர்ப்பதாம. மேற்கூறியவை மாத்திரையின் பெயர்க சாம். அவற்றுள் கொட்டுக்கு மாத்திரை அரை, அதன் வடிவு க. அசைக்கு ஒரு மாத்திரை, வடிவு எ. தூக்குக்கு இரண்டு மாத்திரை, வடிவு உ. அளவிற்கு மூன்று மாத்திரை, வடிவு ஃ. இவற்றின் தொழில் கொட்டு அமுக்குதல், அசைதாக்கி எழுதல், சக்குத் தாக்கித் தூக்குதல், அளவு தாக்கின ஒசை மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். இத்தான வகையினைப் பாதத்திற் கூறினம் ஆண்டுக் காண்க.

தாளவகையோத்து

இது தாளவகையினிலக்கணம் கூறும் நூல்களுள் ஒன்று.

தாளுதுவான்

திருமங்கையாழ்வார்க்கு மந்திரி

தாழம்பூ

சிவப்பிரீதியல்லாமை சீதையால் வந்த சாபம். (சிவபுராணம்.)

தாவரங்கள்

ஓரிடத்திலிருந்து ஓரிடம் அசையாதவை. அவை மரம், செடி, கொடி, பூண்டு, புல் முதலிய. இவை இடம்விட்டு அசையக்கூடாதன ஆயினும் பிராணிகளென்றே கூறலாம். இவை பிராணிகளைப்போல் வளர்ந்து ஆகாரங்கொண்டு தம் வர்க்கத்தை விருத்தி செய்து நாளடைவில் அடைகின்றன. இவை பிராணி வகைப்போல் பல பாகங்களை யுடையன. இவ்வாறு பலவேறுபட்ட தொழில் செய்யுமிவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தன்னை விருத்தி செய்வது. மற்றது, தன்னினத்தை விருத்தி செய்வது. தன்னை விருத்தி செய்வன, வேர், அடி மரம், வேர். தன்னினத்தை விருத்தி செய்வன பூ, பழம், விதை, மேற்கூறிய பாகங்கள் ஒரு தாவரத்திற்கு இன்றியமைந்த ஒவ்வொரு உறுப்புக்களும் பல கண் ணறைகளைப் பெற்றவை. கிச்சிலிப்பழத்தின் தோலினுட்பாகத்தில் பல சுளைகளைப் பிரித்துப் பார்த்தால் பல இரஸழள்ள பைகளைக் காணலாம். அந்த ஒவ்வொரு பையும் ஒவ்வொரு கண்ணறை. அவ்வொரு கண்ணறை யினும் பாகுபோன்ற ஒருவித சத்து நிறைந்திருக்கிறது. அச்சத்தே ஜீவ அணு. மேற்சொன்ன அறைகள் ஒவ்வொன்றிற்கும் தோல் போன்ற கவசம் உண்டு, இவ்வறையிலடங்கிய அணு பல காரியங்களைச் செய்கின்றது, இது ஈரத்தை யுறுஞ்சும், பரவக்கூடியது. பிரிந்து புது அறைகளைச் செய்யக்கூடியது. அசையுந் தன்மையுள்ளது. தாவரப் பொருளாகிய இதற்கு இதுவே முக்ய ஆதாரம். வேர் : இது, மூன்று வகையாகப் பிரிகிறது. ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஓர் பாகம் பூமி யின் மேலும், ஒர் பாகம் பூமிக்குள்ளும் இருக்கின்றன. உட்பாகமான வேர், இரண்டு தொழில்களைச் செய்கிறது. அவை அசையாதிருத்தல், ஆகாரங்களை யாராய்ந்து கொடுத்தலாம். மேல்பாகமாகிய கிளை, இலை முதவிய வேரின் வழியாகத் தம் ஆகாரத்தைப் பெறுகின்றன. ஆணிவேர், இவை புளி, மா முதலிய மரங்களில் மரம் காற்று முதலியவற்றால் நிலைபெயராதபடி மாத்தை யசையாது நிறுத்துவது, இந்த ஆணிவேர் உறுதியாகக் கீழ்நோக்கிச் செல்லச்செல்லப் பக்கத்தில் சிலவேர்கள் அசை யாது தாங்கக் கிளைக்கும் அவற்றைப் பக்க வேர் என்பர். இப்பக்கவேர் செல்லுகையில் இவற்றில் சில சிறு வேர்கள் கிளைக்கின்றன. அவற்றை வேய்த்துய்கள் என்பர். இவையே மரஞ் செடிகளுக்கு வேண்டிய ஆகாரங்களைப் பூமியினின்றும் கிரகிக்கின்றன. மற்றொரு வகைச் சல்லிவேர் என்பர். அது நெல், சோளம், கேழ்வரகு முதலிய சின்னாட் பயிருக்கு உள்ளவை. இவை, மண்ணையும் மணலையும் பிடித்துக் கொள்ளும் வலியுள்ளவை, சதைப்பற்றுள்ள வேர் முள்ளங்கி, சருக்கரை வள்ளி போன்றவை. இவை, தங்கள் இலை கொடி வளர்தற்குரிய ஆகாரம் போக மிச்சத்தை வேரில் சேர்க்கின்றன. ஓடுவேர், பூசினை, சுரை, சக்கரைவள்ளி முதலிய ஓடுகையில் கணுக்களில் வேருண்டாகிப் பூமியில் பதிவது. விழுதுகள், சில தாவரவகைகளில் கிளைகளிலும், கொடிகளிலும் வேர்கிளைத்துப் பூமியில் இறங்கி நிலைப்பவை. அடுத்த மாத்தின் சாரத்தால் வளர்வன, புல்லுருவி, கொத்தான், இவ்வேர்கள், வளரும் பகுதி, வளரும் பகுதியின் மூடி என இருவகை, வேர்கள் ஆகாரத்தைத் தேடி மண்ணிலும் நீரிலும் செல்லும், வளரும் பகுதி அம்மண்ணாலும் நீராலும் தேயா வகை மூடிய கவசம் வளரும் பகுதியின் மூடி. ஆகாரத்தைச் சேர்ப் பவை உண்மையில் உறையில்லாத பாகத்தில் மெல்லிய இழைபோன்ற வேர்களே. ஆகாரம், வேர்களின் நுனிகள், தம்மிடமுள்ள ஒருவிதத் திரவத்தின் உதவியால் பூமியிலுள்ள மட்கின எரு, மண், சுண்ணாம்பு, இரும்பு, மரவுப்பு இவைகளின் சாரத்தைக் கிரகிக்கின்றன. பூமியிலிருக்கும் ஆகாயம், இப்பொருள்களை மழைநீரால் கரைத்து வேருக்குதவுகிறது. தண்டு: அடிமரம்; வேரின் மேலும், கிளை முதலியவற்றிற் கடியிலும் உள்ள பாகத்தைத் தண்டு, அடிமரம் என்பர், இதனைத் தமிழ் நூலார் அறை யென்பர். இவ்வறை பொரியறை, பொருக்கறை, கோழறை என மூவகைப்படும். மரமும்லியவற்றின் அறைபொரி போலிருத்தலின் பொரியறை, புளி முதலியவற்றின் அறை பொருக்கறை, வாழை முதலியவற்றின் அறை வழுவழுத்திருத்தலின் கோழறை. இவ்வறைகள், மரங்களுக்கு மூன்று வகையில் உதவுகின்றன. (1) இலை, கிளை, பூ, பழம் முதலிய தாங்கிநின்று அவற்றின் மேல் சூர்யவெப்பம் படும்படி செய்கிறது. (2) பூமியிலிருந்து வேர் தரும் உணவை மேற்பாகத்தில் செலுத்துகிறது. (3) இலையுதிர்காலத்து வெயிலால் வரும் துன்பத்திற்கு உணவைச் சேகரித் துதவுகிறது. அடிமரமாகிய அறையானது கிளை முதலியவைகளைத் தாங்குவதற்கு உறுதியாய் இருத்தல் வேண்டும். இரண்டு, மூன்று மாதம் வளரும் தாவரங்கள் இளம் தண்டுகளைப் பெற்றிருக்கின்றன. இவற்றில் சில கணுக்களைப் பெற்றும் இருக்கின்றன. அடிமரம் தண்டு முதலியவற்றின் வகை: 1. தொத்தும் கொடிகள் இவை கொழு கொம்புகளைப்பற்றி நிறபவை. 2. ஓடும் கொடிகள் இக்கொடிகள் பூமியில் படர்ந்து கணுக்களில் உண்டான வேர்களைப் பூமியில் பதிக்கின்றன. 3. நேராக நிற்கும் மரங்களின் அடி மரமானது கிளை முதலியவற்றைத் தாங்க உறுதியாக நிற்கின்றது. தாமரை, அல்லி முதலானவைகளும் தண்டின் உதவியால் நிற்கின்றன. 4. கிழங்குகள் தண்டு முதலியவைகளில் சேர்ந்தவை அல்ல, இவைகளில் குருத்துப் பதிந்திருத்தலால், 5. அடிமரத்தின் உள் அமைப்பு; இவை ஒற்றை இலைப் பருப்பில் உண்டாவன, இரட்டை இலைப் பருப்பில் உண்டாவன என இருவகை, நெல், சோளம் முதலியவை ஒரு இலைப்பருப்பில் உண்டானவை. புளி, அவரை, மொச்சை இரட்டைப்பருப் பில் உண்டானவை. புளி, தேக்கு, ஆல் இவைகளை வெட்டிப் பார்த்தால் (4) பிரிவையுடையதாயிருக்கும் (1) வெளிப்புறம்; இது மாத்திற்குப் போர்வை போல உரிக்கக்கூடியதான மரப்பட்டை. (2) உள் மரப்பட்டை இது பசுமை நிறமுள்ளதாய் வெளி மரப் பட்டைக்குள்ளிருப்பது, (3) மரப்பாகம்: இது மரக்குழாயான கம்பிக் கூட்டம். (4) மரத்தின் உட்சோறு: இதைச் சோற்றி என்றும் சொல்வார்கள், இச்சோற்றியைச் சுற்றி மரப்பாகம் இருக்கிறது. மரம் வளரவளர, சோற்றி குறைந்துவிடுகிறது. வெளி மரப்பட்டை கடினமாயும், துவளக்கூடிய தல்லாததாயும் இருக்கிறது. உள் மரப்பட்டை அநேகமான ஜீவாணுக்களையுடைய அறைகளைக்கொண் டிருக்கிறது. இப்பாகத்தை வெட்டிவிட்டால் மரம் வளராது. மரக்குழாய்க் கூட்டம் : மரத்தை அசையவிடாமல் உறுதியாய் நிற்கும்படி செய்யும் பாகம். உள்மரப்பட்டையும், மரக்குழாய்க் கூட்டத்தின் வெளிப்பாகமும் மரத்துக்கு முக்கியமானவை. அந்த இரண்டு அடுக்குகளுக்கு இடையில் மரத்தை விருத்தி செய்கிற கண்ணறைகளையுடைய அடுக்கு ஒன்று உண்டு. பூமியிலிருந்து ஜலம் அடிமரத்தின் வழியாய்ச் செல்லுகின்றது. விதை முளைத்தல் : அவரைபோன்ற விதைகளை ஊறவைத்து உரித்துப் பார்த்தால் மெல்லிய தோல் உரிபடும். அதை இரண்டாகப் பிளந்தால் இரு விலைகளாகும். இவ்விலைகள் சேர்ந்திருக்கும் முனையில் முளை அரும்பு காணப்படும். விதையின் மேற்பாகத்தில் ஒரு பிளவு தோன்றும், அது விதையின் மீதுள்ள வெள்ளைக் கோட்டைச் சேர்ந்திருக்கும். அந்தக் கோட்டின் வழியாக நீர் சென்று விதையைப் பருக்கச்செய்து முளையைக் கிளப்புகிறது. முளைக்கு இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று மேல்நோக்கி வளரும் செடியின் பாகம், மற்றொன்று கீழ்நோக்கி வளரும் வேரின் பாகம். நெல் முதலியவற்றின் விதை அவரை முதலியவை போல் மேல் கிளம்பாமல் பூமிக்குள்ளே இருக்கிறது. இலை : இலைகள் மரங்களுக்குக் கெடுதி வராமல் அடிமரத்தையும், வேரையும் குளிர்ச்சி செய்து காக்கின்றன. அவைகள் நரம்பு, இலைப்பரப்பு என இரண்டு பகுதியை யுடையன, நெல், தெங்கு முதலியவற்றின் இலைகள் நரம்புகளை நடுவில் பெற்றிருக் கின்றன. மற்றச் செடி இலைகளின் நரம்புகள் வலைகளைப்போலப்பின்னப பெற்றிருக்கின்றன. நரம்புகளின் வழியாக இலைகளுக்கு வேண்டிய ஆகாரத்தை அடைகின்றன. இலைகள் பலவித உருவத் தைப்பெறும்: சில வட்டமாகவும், முட்டைகள் போலவும் அம்புகள் போலவும், ஈட்டிகள் போலவும், குளம்படி போலவும், பக்ஷிகளின் இறகுகள் போலவும் இருக்கின்றன. நிறங்கள் : பொதுவில் இலைகள் எல்லாம் பசுமைநிற முடையவாயினும் சில மஞ்சள், வெள்ளை, சிகப்பு, முதலிய நிறங்களைப் பெற்றிருக்கின்றன. இலைகளின் மேற்புறம் சிலவற்றிற்கு பளபளப்பாயும், சிலவற்றிற்கு வழுவழுப்பாயும், சிலவற்றிற்குச் சுரசுரப்பாயும் உண்டு. இலைகள் ஒற்றை இலை, கிளைத்த இலை என இரு வகைப்படும். அரசு, ஆல் முதலிய ஒற்றை இலை, அவரை, ரோஜா முதலிய கிளைத்த இலை. எல்லா இலைகளும் காம்புகளையுடையன; அவற்றில் சில நீண்டும். சில குறுகியும் இருக்கின்றன. புட்பம் : தாவர உற்பத்திக்குப் புட்பம் முக்கிய காரணம். புட்பத்தில் காம்பு, புற இதழ், அக இதழ், மகரந்தக் காம்பு, மகரந்தம், அண்டகோசம் எனப் பல பாகங்கள் உண்டு. காம்பு : இது புட்பத்தைக் கிளையுடன் சேர்ப்பது. புற இதழ் : இதனைப் புட்பகோசம் என்று சொல்லுவார்கள். இது திண்ணத்தைப் போல் (4 அல்லது 5) இதழ் சேர்ந்திருப்பது, புட்பங்களுக்கு அடியில் இருக்கும் சில புட்பங்களுக்குப் புற இதழ்கள் தனித்தனியாய் இருக்கும். அகஇதழ் : அகஇதழ்களைப் புட்பதனம் என்று சொல்லுவார்கள். இவை பல வர்ணங்கள் உள்ளதும், மிருதுவாயும், அழகாயும் இருப்பன. இவற்றிற் சிலவற்றின் தளங்கள் அடுக்காகவும், சிலவற்றிற்குப் பிரிவுப்பட்டும், சிலவற்றிற்கு ஒற்றையாகவும் இருக்கும். மகரந்தக்காம்பு : இதனைக் கேசரம் என்றும், பூந்தான் என்றும் சொல்லுவார் கள். புட்பத்திற்குள் அகஇதழ்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை மகரந்தக்காம்புகள் உண்டு. மகரந்தக்காம்புகள் ஒன்றாய்ச் சேர்ந்து குழையைப்போல் காணப்படும். காம்புகளுக்கு நுனியிலாவது, பக்கத்திலாவது மகரந்தப்பை உண்டு. அந்தப்பை முழுதும் மஞ்சன்போன்ற மகரந்தப்பொடிகள் நிறைந்திருக்கும். அண்டகோசம் : மகரந்தக் காம்புகள் ஒன்றுசேர்ந்து குழைபோவிருந்தால் அண்டகோசம். அக்குழைக்குள் இருக்கும் காம்புகள் தனித்திருப்பின் அண்டகோசழம் தனித்திருக்கும். அண்டகோசத்தின் துனி சற்றுத் தடித்து, சிறுத்து, அடிபெருத்து இருக்கும். சுணையோடு தடித்து இருக்கும் நுனிப்பாகத்திற்கு கீலாக்கிரம் எனப் பெயர். கீலாக்கிரத்தில் எப்பொழுதும் பசை இருக்கும், மகரந்தத்தூளை இப்பசை பற்றிக் கொள்ளுகிறது, கீவாக்கிரத்தின் கீழும், அண்டாசயத்திற்கு மேலுமாய்க் கம்பிபோலிருக்கும் பாகத்திற்குக் கீலம் என்று பெயர். இக்கிலம் தொளை கொண்டது. கீலாக்கிரத்திலிருந்து வரும் மகரந் தப்பொடி கீலத்தின் வழியாக விதைப்பைக்குள் போகின்றது. விதைப் பையிற்கு அண்டாசயம் என்று பெயர். இதில் தான் விதை உண்டா கின்றது. காய்கள் : புட்டங்கள் முற்றி இதழ்கள் விழுந்ததும் பூவிலுள்ள அண்டாசயமே காயாக மாறுகிறது. இது நாட்கள் செல்லச் செல்ல விதை முதிர்ந்து பழமாகிறது. பழம் : பழத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. ஒன்று பருப்பை மூடிக்கொண்டிருக்கும் உறுதியான கவசம்; இரண்டாவது வெளித் தோலுக்கும் கொட்டைக்கும் நடுவில் இருக்கும் தசை; மூன்றாவது மேல் தோல், பழங்களின் மேல்தோலானது கொட்டை முதிரும் வரையில் பசுமைதிறமாக இருந்து முதிர்ந்தபின் திறழம் ருசியும் வேறுபடுகின்றது. பழங்களிற் சில சதைப்பற்றுள்எனவாகவும், சில இல்லாதனவாகவும் இருக்கும். பழங்களில் மாம்பழம், இலந்தைப்பழம், அத்திப்பழம் முதலிய மிருதுவானவை. விளாம்பழம் வில்வப்பழம் ஒடு உன்னவை. பலாப்பழம், சீத்தாபழம், ஊமத்தங்காய் முள் உள்ளவை, பலா, சீத்தா, மாதுளை, கிச்சிலி முதலிய பல வித்துக்களையுடையன. மா, முதலியன ஒரு வித்து உள்ளவை. வாழை, பனை, ஈத்து முதலிய பல பழங்களை யுடையவை, விதைகள் பாவும் விதம் : விதைகள் நிறைந்துள்ள பழங்கள் பழுத்துக் கீழே வீழ்ந்தால் மரத்தடியில் வீழ்ந்த விதைகள் நன்றாய் முளைத்துப் பயிர் ஆகா. பக்ஷிக ளும், மிருகங்களும் பழங்களை உண்டு விதையைப் பல இடங்களில் சிதறுகின்றன. அவை சூரிய வெப்பழம், குளிர்ச்சியும் பரவின இடத்தில் நன்றாக முளைக்கின்றன. சில செடிகளில் வாலையுடைய விதைகள் காற்றில் பறந்து பல இடங்களில் விழுந்து செடிகளாகின்றன. அவை எருக்கு முதலியவை போன்றவை. பூவில்லாத தாவாங்கள் சில :காளான் முதலிய போன்றவை. மற்றொரு வகை பாசி முதலியன.வேரில் வித்துள்ளவை : வேர்க்கடலை முதலியன,

தாஸ்

வட இந்தியாவிலுள்ள ஜைந நாடோடிகள்.

திகிதேவதாவிரதம்

இது ஆடி சுக்ல தசமியில் அநுஷ்டிப்பது, இதில் திக்தேவதைகளை அந்தத்திக்குகளில் ஸ்தாபித்துப் பூசித்தல் வேண்டும்.

திகைப்பூண்டு

இது தென் இந்தியா காடுகளிலுள்ள ஒருவகைப் பூண்டு. இதை மிதிக்கின் புத்தி மயக்கமடைந்து அலைந்து திரிவர் என்பர்.

திக்கஜம்

அட்டதிக்கஜத்தைக் காண்க.

திக்கு

1. இது நித்தியம், விபு, சங்கியை, பரிமாணம், பிரதக்தவம், சையோகம், விபாகம் எனும் ஐந்துகுணம் உடையது. 2. (8) கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு. இவற்றுடன் ஆகாயம், பூமிசோ, பத்தாம்.

திக்குப்பாலகன்

(சுராட்டு) பதினாயிரம் ஊர்களின் வரிகளை அரசனுக்குச் சேர்ப்பிப்பவன். (சுக்கிர நீதி.)

திக்குப்பாலகர்

அட்டதிக்கு பாலகரைக் காண்க.

திக்குப்பாலகர் குறிகளாவன

கொடி, புகை, சீயம், நாய், இடபம், கழுதை, யானை, காகம். இவை யெண்டிசையோனி யென்ப.

திக்குவணன்

பிராமணனுக்கு அயோகவ கன்னி இடத்துப் பிறந்தவன். இவன் தொழில் தோல்வர்த்தகஞ் செய்வது.

திக்தி

(சூ.) விதி அவ்யயன் குமரன்.

திக்மகேது

வச்சிரன் குமரன்.

திக்ஷணா

கிரிசாசுவன் தேவி, தக்ஷன்பெண்; இவளுக்குத் திடணை எனவும் பெயர்.

திசா

வடக்குத்திசையின் தேவதை, அஷ்டவக்ரரைப் பலவிதமாக மயக்கினவள்.

திசைச்சொல்

எனைத் திசைகளிலிருந்து ஒரு பாஷை வழங்குநாட்டில் வழங்குவது.

திசைமுகக்கரு

பிரமகாயிகலோக முதலிய பிரமலோகம் இருப்பதினுழள்ள இருபது வகைப்பட்ட பிரமகண பிண்டங்கள்,

திசையறிகருவி

இது, நாவா யாத்திரிகளாகிய கப்பலோட்டிகளுக்குக் கடிகாரம் போல் திசைகளைக் குறிப்பிட்ட வட்டபீடிகையில் பொருத்தப்பட்ட காந்த ஊசி. இது வடக்கு நோக்கியே நிற்பதால் மற்றத் திசைகளை எளிதில் அறியலாம்.

திசையோனிநிலை

கருடன்; கிழக்கு, பாம்பு; மேற்சூ, சிங்கம்; தெற்கு, யானை; வடக்கு, பூனை; தென்கிழக்கு, எலி; வட மேற்கு, நாய்; தென்மேற்கு, முசல்; வட கிழக்கு. இவைகளில் அருக்கனில் கருடனை வைத்து முறையே பார்க்கும்போது எதிர்க்கெதிர் பகை யோனி நிற்கும் அவற்றுள் கருடன் திசையிலிருந்து பாம்பு திசைக்குப் போகலாம், பாம்பு திசையிலிருந்து கருட திசைக்குப் போகலாகாது. எனெனின், கருடன் இரைகொள்ளப் போகையில் பாம்பு இரையாக வரும். ஆதலால் ஒருவன் யாத்திரைக்குப் பக்ஷி முதலிய சகுனங்கள் பார்க்கையில் இரையாகும் யோனி திசையிலிருந்து இரையெடுக்கும் யோனி திசைக்கு அவை போகலாகா.

திடசேநன்

சிரதன் குமரன், இவன் குமாரன் சுமதி.

திடணை

திக்ஷணாவைக்காண்க, குமரர் வேதசிரசு, தேவன், வயிநன், மது.

திடன்

1. (சஙந்.) மதிவான் குமரன், மனைவி காளிந்தி. 2, திரிகர்த்தன் தம்பி.

திடமதி

ஒரு சூத்திரன், இவன் முனிவன் ஆகவேண்டித் தன் நண்பனாகிய சுமதி முனிவனை நோக்கி என்னைப் பிராமணன் ஆக்குக என்ன அவன் அவ்வாறே எஞ்ஞோபவீதம்சாத்தி வேதமந்திரம் உபதேசித்தனன்; அதனால் முனிவன் பல பிறவி எடுத்து முடிவில் வேதியனாய்ப் புண்ணிய தீர்த்த ஸ்நானபலத்தால் முத்தி அடைந் தனன். திடமதியோ பல ஜன்மங்களில் பட்டு உழன்று பருந்தாய்த் தீர்த்தயாத்திரை செய்தவர். உடலினின்று தெறித்த நீர்த்துளியால் பலித்தரனாய்த்தேவர் உலகு அடைந்தனன். (திருச்செங்கோட்டுப் புராணம்)

திடவிரதன்

ஒரு அரசன், வேட்டைமேற் சென்று தாகத்தால் விஷங்கலந்த நீரையுண்டு சிவபூசையால் அதைப் போக்கிக் கொண்டவன்.

திட்டத்துய்ம்மன்

துருபதன் குமரன். யாகத்தில் தேருடன் பிறந்தவன். திரௌபதியின் சகோதரன். பாரதயுத்தத்தில் சேநாபதியாயிருந்தவன். இவனை அக்நி அம்சம் என்பர். இவன் குமரன் திருஷ்ட கேது, அக்கியும்சம். இரண்டாநாள் பாண்டவர் சேநாபதி:

திட்டிவிடம்

கண்களில் விடமுடையதோர் பாம்பு. இது நஞ்சு விழியாவெனும், அழற்கணாகம் எனவும் வழங்கப்படும். (Ep. graphia Indica, Vol. 3. Page, 232) காண்க.)

திணகன்

ஒரு க்ஷத்திரியன்.

திணை

1. (2) உயர்திணை, அஃறிணை. (5) குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் இவை முறையே மலை, மணற்காடு, காடு, ஊர், கடல்சார்ந்த நிலங்கள். 2. (2) அகத்திணை, புறத்திணை.

திணைமாலை நூற்றைம்பது

மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் இயற்றியது. அகப்பொருளை நதிணைக்கும் முப்பது முப்பதாகப் பாடிய நூற்றைம்பது வெண்பாக்களை யுடையது.

திணைமொழி ஐம்பது

1. ஐந்திணையைப் பற்றிச் சாத்தாந்தையார் மகனார் கண்ணன் சேந்தனாராலியற்றப்பட்ட தமிழ் நூல். இது சங்கமருவிய நூல், ஐந்திணையிற் சேர்ந்தது. 2. கண்ணஞ் சேந்தனாரி யற்றியது. ஒவ்வோர் அகப்பொருட்டிணைக்கும் பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது.

திண்டாமுண்டி

சிவகணத்தலைவரில் ஒருவன்.

திண்டி

(டிண்டி) ஒரு வேடன். இவன் அயோத்தி வந்து இருடிகளைக்கண்டு தவஞ் செய்துகொண்டிருக்கையில் இவனைப் புற்று மூடிற்று. இராமர் அவதரித்தபின் லீலையாய் அப்புற்றைக் குத்த அதிலிருந்து வேடன் தோன்றி இராமமூர்த்தியைத் தொழுது முத்தி பெற்றவன். 2. ஒரு தேவன். இவன் சூரியனிடம் ஞானோபதேசம் பெற்றுப் பிரமனிடஞ் சென்று ஆதித்ய கிரியாவிசேஷங்களைக் கூறினவன். (பவிஷ்யத்~புரா.)

திண்டிமன்

வேதாந்த தேசிகரிடம் வாதிட்டுத் தோற்ற கவி.

திண்டீரன்

ஒரு அசுரன், இவன் தேவர்களை வருத்தத் தேவர்கள் அரியைப் பிரார்த்திக்க விஷ்ணுமூர்த்தி நாம் பூமியில் மல்லிகார்ச்சுனனாய் அவதரித்து உமது துன்பத்தை நீக்குகிறோம் என்றபடி அவ்வாறு ஸ்ரீசந்திரன் என்பானுக்குக் குமரராய் அவதரித்து அசுரனைக் கொன்றனர். மல்லிகார்ச்சுனனைக் காண்க.

திதளாசுரன்

தேவர்களை வருத்தித் தெய்வ லோகத்தை தன் வசப்படுத்தி யிருந்து சிவமூர்த்தியாலிறந்த அசுரன்.

திதி

1. காச்யபர் தேவி, தக்ஷன் குமரியரில் ஒருத்தி, தைத்தியரைப் பெற்றவள். திருப்பாற்கடல் கடைந்தகாலத்துத் தேவர் செய்த வஞ்சனையால் சினங்கொண்டு காசிபர் சொற்படி (1,000) வருஷம் தவஞ் செய்கையில் இந்திரன், ஒருநாளுறங்குகையில் வாயு வுருவமாக வயிற்றில் புகுந்து பிண்டத்தை (7) கூறாகச் செய்து நீங்கினன், அவர்களே மருத்துக்கள். இரண்யனிரண்யாக்ஷனை (500) வருஷம் சுமந்து பெற்றவள், 2. இவள் அதிதி இந்திரனைப் பெற்றது போல் தானும் ஒரு குமரனைப் பெறக் காசிபரை வேண்டிப் பெறுமளவில் வலிமை கண்ட அதிதி பொறாமை கொண்டு இந்திரனை நோக்கி உன் பகைவனைக் கொல்க என இந்திரன் இவள் வயிற்றிற் புகுந்து ஏழு கூறாகச் சிசுவைச் சேதித்தனால் திதி யுணர்ந்து அதிதியை வசுதேவர் தேவியாகப் பிறந்து ஏழு குமாரர்களைப் பெற்று அதனால் வருத்தழறவும், இந்திரனைத் தன் பதமிழந்து துன்புறவும் சாபமளித்தவள், (தேவி~பாரதம்).

திதி நக்ஷத்ரயோகங்களின் விருத்தி க்ஷயம்

நக்ஷத்திரவர்த்தனை, நாழிகை ஆறரை, ஷயம்; நான்கேகால், யோகவர்த்தனை நாழிகை (1) க்ஷயம் (அ) திதிவர்த்தனை நாழிகை (5 1/4) க்ஷயம் ஆறரை,

திதிகளாவன

பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசியை ஆக (15). பதினைந்தாம் திதி கிருஷ்ண பக்ஷத்தின் இறுதியாயின் அமாவாசையும் சுக்கில பக்ஷத்தின் இறுதியாயின் பௌர்ணமியம் வரும். இதில் சந்திரன் தோன்றும் முதல் பக்ஷம் சுக்கிலபக்ஷம் என்றும், சிவோவி என்றும் பெயர். சந்திரன் குறையும் பிற்பக்கம் கிருஷ்ணபக்ஷம் எனவும் குகு எனவும் பெயர் பெறும். இவற்றில் பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி மூன்றும் தந்தை எனப்படும். துவிதியை, சப்தமி, துவாதசி மூன்றும் பத்திரை எனப்படும். திரிதியை, அஷ்டமி, திரயோதசி மூன்றும் சயை எனப்படும். சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி மூன்றும் இருத்தை எனப்படும். பஞ்சமி, தசமி, பௌர்ணமி மூன்றும் பூரணை எனப்படும். இவற்றுள் நந்தையும், பத்திரையும் சுபகாரியங்கள் செய்ய ஆகா. திதி அமுத யோகங்களாவன ; ஞாயிற்றுக்கிழமையில் பிரதமையும், ஷஷ்டியும்; திங்கட்கிழமையில் துவிதியையும், சப்தமியும்; செவ்வாய்க் கிழமையில் சதுர்த்தசியும்; புதன்கிழமையில் அஷ்டமியும், திரிதியையும், திரயோதசியும்; வியாழக்கிழமையில் நவமியும்; வெள்ளிக்கிழமையில் ஏகாதசியும்; சனிக்கிழமையில் சதுர்த்தசியும் வருவன. சுப யோகங்கள் ஞாயிற்றுக்கிழமையிற் அஷ்மியும், திங்களில் நவமியும், செவ்வாயில் ஷஷ்டியும், புதனில் திரிதியையும், வியாழனில் ஏகாதசியும், வெள்ளியில் திரியோதசியும், சனியில் சதுர்த்தசியும் வருவன. நாச யோகங்கள்; ஞாயிறில் சதுர்த்தசியும், திங்களில் ஷஷ்டியும், செவ்வாயில் சப்தமி யும், புதனில் துவிதியையும், வியாழனில் அஷ்டமியும், வெள்ளியில் நவமியும், சனியில் சப்தமியும் வருவன. ஞாயிறில் பஞ்சமியும், கார்த்திகையும்; திங்களில் துவிதியைபும், சித்திரையும்; செவ்வாயில் பூரணையும், ரோகணியும்; புதனில் சப்தமியும், பரணியும்; வியாழனில் திரயோதசியும், அனுஷழம்; வெள்ளியில் ஷஷ்டியும், திருவோணழம்; சனியில் அஷ்டமியும், ரேவதியும் வருவனவாம். அக்னி யோகங்கள்; ஞாயிறில் துவாதசியும், திங்களில் ஷஷ்டியும், செவ்வாயில் சப்தமியும், வெள்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவனவாம். தக்க யோகங்கள்; ஞாயிறில் துவாதசியும், திங்களில் ஏகாதசியும், செவ்வாயில் பஞ்சமியும், புதனில் துவிதியையும், வியாழனில் ஷஷ்டியும், வெள்ளியில் அஷ்டமியும், சனியில் நவமியும் வருவனவாம்.

திதிக்ஷ

மகா மனுவின் குமரன். இவன் குமரன் குருசத்திரன்.

திதித்யாசச்யம்

பிரதமைக்கு 24, அஷ்டமிக்கு 20,த்விதியைக்கு 12, திரிதி யைக்கு 55, சதுர்த்திக்கும் கவமிக்கும் 5, பஞ்சமிக்கும் ஷஷ்டிக்கும் 54, சப்தமிக்கு 31, தசமிக்கு 33, ஏகாதசிக்கு 1, துவாதசிக்கு 15, திரயோதசிக்கு 29, சதுர்த்தசிக்கு 7, பூரணைக்கு 29, அமாவாசைக்கு 6,இந்த நாழி கைகளுக்குமேல் 4 நாழிகைத்யாஜ்யம்

திதித்ரயம் தினத்ரயம்

ஒரு வாரத்தில் (5) திதிகள் (3) நக்ஷத்ரங்கள் வருதல், இவ்வகை நாட்களில் தேவ உற்சவாதி சுயகாரியங்கள் கூடா. (விதானமாலை).

திதியன்

நெடுஞ்செழியனால் தலையாலங்கானத்துச் செரு வெல்லப் பட்டவன். இவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து அன்னியொடு பொருது அவனது நாவன்மரத்தை வெட்டியவன்.

திதியமிர்தயோகம்

திதிகளைக் காண்க.

திதியாதிபலம்

தத்தமுடைய நட்பாட்சி உச்சத்தினும், வர்க்கோதயத் தினும், வக்ரித்தகாலத்தினும் மும்மடி பலமுண்டாம். அத்தமித்து நின்ற பொழுதும், நீச்சத்து நின்ற பொழுதும் பாதிப் பலமுண்டாம். சத்ருபவனத்தில் நின்ற பொழுது காற்பல முண்டாம். திதியில் வாரம் பலம்; இவ்விரண்டினும் நடித்திரம் பலம்; இம்மூன்றினும் உதயம் பலம்; இந் நான்கினும் உதயத்து நின்ற பிரகஸ்பதியும், சுக்ரனும் பலவான்கள். (விதானமாவை).

திதிராசிதோஷம்

திரிதியையில் சிங்கம், மகரம்; சப்தமியில் கர்க்கடகம், தனு; பஞ்சமியில் கன்னி, மிதுனம்; திரயோதசியில் இடபம், மீனம்; ஏகாதசியில் தனு, மீனம், நவமியில் விரிச்சிகம், சிங்கம்; பிரதமையில் மகரம், துலாம் இந்தத் திதிகளில் இந்த இராசிகளுதயமாகச் சுபம்கூடாது. (விதா.)

திதிஷூப்தி

பிராதா இறந்தவன், தமயன மனைவி புத்திர உற்பத்திக்காகத் தர்மமாகத் தன்னிடத்தில் வந்திருந்தபோதிலும் அவளிடத்துக் காமத்தினால் ஆலிங்கன முதலிய சிருங்கார சேஷ்டை செய்கிறவன்.

திதீக்ஷை

தக்ஷகனுக்குப் பிரசூதியிடத்துதித்த குமரி, யமன் தேவி.

தித்தன்

உறையூரிலிருந்த சோழன், சோழன் பிண்டநெல்லி நாட்டினன். கோர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் தந்தை (புற~நா.)

தித்திரி

ஒரு பக்ஷி தைத்திரீயத்தைக் காண்க. 2. ஒரு ரிஷி. 3. ஒரு சர்பம்.

தித்திரிபுரிலன்

ஒரு நாகன்.

திந்துசாரன்

நிதந்துவின் குமரன்.

தினபலன்

ஜன்ம நட்சத்திர முதல் அன்றைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையுடன் ஞாயிறு முதல் அன்றைய வாரம் வரையிலும் பிரதமை முதல் அன்றைய திதிவரையிலுங் கூட்டிக் கண்ட தொகையைச் சேர்த்து ஒன்பதிற் கழித்த மிச்சம் (1) வியாகூலம்; (2) சுபம்; (3) தூர்வார்த்தை (4) பந்து தரிசனம்; (5) பெண் போகம்; (6) சுபம் (7) கல கடி; (8) ரோகம்; (9) ஞானவாக்கியம்,

தினமிருது

அஸ்தம், அவிட்ட முதற்கால்; விசாகம், திருவாதிரை இரண்டாங்கால்; ஆயிலியம், உத்திரட்டாதி மூன்றாங்கால்; பாணி, மூலம் நான் காங்கால், தினமிருத்துவாம். இக் காலங்களில் சுபகன்மங்கள் நீக்கப்படும். இரவில் தோஷமில்லை. சந்தி என் பூரணனாய் ஒரு சுபக்கிரகத்துடன் நிற்கையில் பகலிலும் தோஷமில்லை. (விதானமாலை.)

தினை

(சாமை) ஒருவகைத் தானியம். இது ஏழைகளுக்கு ஆகாரமாக உதவுகிறது, இது வட ஆப்ரிகா, யுனைடெட்ஸ்டேட்ஸ், இந்தியா, ஐரோப்பாவின் தென்பாகம் முதலிய இடங்களில் விளைகிறது.

தின்னாநரி

மதுரைக்குத் தெற்கே ஒருகாத தூரத்திலுள்ள தோரூர். (திருவிளை.)

திபதகேது

தெக்ஷசாவர்ணி மநுப் புத்திரன்.

திபோதாசன்

திவோதாசனுக்கு ஒரு பெயர்,

திப்புத்தோளார்

கடைச்சங்கத்துப் புலவர். இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். நாயகனைக் குமரவேளுக் கொப்பாக குறுந்தொகை முதற் செய்யுள் கூறியவர்.

திமி

காசிபர் தேவி, தக்ஷன் குமரி சலசந்துக்களைப் பெற்றவள்,

திமிங்கலன்

இராசத பர்வதத்தினரசன்.

திமிங்கில வகையில்

சாகப க்ஷணி, மாமிசபக்ஷணி என இரண்டு வகை களுண்டு. சாகபக்ஷணிக்குப் பற்களுண்டு, மாமிசபக்ஷணிக்குப் பற்கள் கிடையா. இத் திமிங்கிலங்களில் மன்னாத்தித் திமிங்கிலம், கோங் திமிங்கிலம், கூடன் திமிங்கிலம், ஸ்டெல்லாய் திமிங்கிலம், பல்லுள்ள திமிங்கிலம், வெள்ளைத் திமிங்கிலம், நீலத் திமிங்கிலம், தலைபருத்த திமிங்கிலம், ஈட்டி மூக்குத் திமிங்கிலம் என பல பேதங்கள் இருக்கின்றன. மன்னாத்தித் திமிங்கிலம்: மேற்கூறிய திமிங்கிலம் போன்றுள்ளது. இது குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்ப்பதாதவின் இதனைக் கடற்பசு வென்பர். கோங்திமிங்கிலம்; இது அமெரிகா, ஆஸ்திரேலியா கடல்களி லுள்ளது. இதன் விலா தட்டை, வயிறு முதுகுகளின் பக்கம் அகற்சி. இது 10, 15 அடி நீளம், இது சாகபக்ஷணி. ஸ்டெல்லாய் திமிங்கிலம்: மன்னாத்தி போன்றதே. இது 20 முதல் 25 அடிகள் நீளம், சாகப்க்ஷணி. கூன் திமிங்கிலம்: இது வடக்டலிலுள்ளது. 60 அடி நீளம். இதன் மூக்கு மற்ற திமிங்கிலங்களுக்கிருப்பது போலில்லாமல் நேர் மட்டமாய் நிமிர்ந்திருக்கிறது. இதன் முதுகு கூன் பக்கத்தில் சிறகு பெற்றிருக்கிறது. இதற்கு ஏற்றத் தாழ்வான வரிகளுண்டு. வடகடற்றிமிங்கிலம்: இது 89 அடிகளுக்கு மேற்பட்ட நீளழம் அதற்குத் தகுந்த கனமுள்ளது. இதன் வாயில் கீழ் நோக்கிய பல் 10, 15 அடிகள் நீளம். இது இரை வேண்டிய காலத்து வாயை அங்காந்து திரிய வாயிற் பட்டவைகளைக்கொண்டு நீரை மூக்கின் வழி மேல்நோக்கி விடும். இது எல்லாத் திமிங்கிலங்களிலும் பெரிது. தென்கடற்றிமிங்கிலழம் 70 அடிகள் நீளம், இதன் நாக்கு 20 அடி நீளம், 12 அடிகள் அகலம், இது மாமிசபக்ஷணி. தலைபருத்த திமிங்கிலம்: இது தக்ஷிண சமுத்திரவாசி. இதன் வாய் முகத்தின் மேல்பாகத்திராமல் சுறாவைப்போல் கீழ்பாகத்திலிருக்கிறது. இது 60 அடிகளுக்கு மேற்பட்ட நீளம், இதன் மூக்கு 12 அங்குல நீளம், கண்கள் சிறியவை. இத் திமிங்கிலத் தில் ஒருவகையான மஞ்சள் எண்ணெயிருக்கிறதாம். ஒருவகை உயர்ந்த மெழுகும் இதனிடம் உண்டாகிறது. அதனை ஸ்பெர்மாலிட்டி வாக்ஸ் என்பர். இதன் குடலிலிருந்து அம்பர்கிரீஸ் எனும் மணப்பொருள் எடுக் கின்றனர். கிராம்பஸ் : இது ஒருவகை திமிங்கிலம், இது 30 அடி நீளம். இது திமிங்கிலங்களையும் வேட்டையாடித் தின்றுவிடும். மகா வலிவுள்ள ஜெந்து.

திமிங்கிலம்

இது நீர்வாழ் மிருகம், இது நீர்வாழ் பிராணிகளில் பெரிது; சுமார் 80 அடி நீளம் இருக்கும், இதன் தலை பெரியது. வாய் பெருத்து அகன்றிருக்கும், வாயில் பற்களுக்குப் பதிலாகச் சீப்புப்போன்ற எலும்புகள் மேலுதட்டினின்று தொங்கும்; இது பன்னாடை போன்றது. இதனாலிது உட்கொள்ளும் ஆகாரத்துடன் சேர்ந்த நீரை வடிக்கிறது. தொண்டை குறுகியது. கண்களும் காதுகளும் சிறியவை. கண்களுக்கருகிலிரண்டு பக்கங்களிலும் ஏறக்குறைய (9) அடி நீண்டும் (4) அடி அகன்றுமுள்ள முட்களுண்டு. கால்கள் குறுகியவை. வால் ஏறக்குறைய (20) அடி நீண்டு வலியதானது, நிறம் கறுப்பு, தோல் தடித்திருக்கும், வயிறு வெளுத்தது, இதன் ரத்தம் மிருக ரத்தம்போலுஷ்ணமானது. இது தன் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும். இது சுவாசத்தை உள் வாங்குகையில் நீர் உட்சென்று வெளிவருகையிலதி தூரம் உயரும். இது நீர் மட்டத்தின் மேல் வந்து நித்திரை செய்யும். இது வடகடல் வாசி. இதைக் கொழுப்பிற்காகவும், தோல், எலும்பிற்காகவும், உணவிற்காகவும் வேட்டையாடுவார்கள். இதன் வேட்டை அபாயமானது, இதற்கென்றுள்ள படவில் ஏறி ஈட்டியில் கயிறு கட்டி யெறிந்து பிடிப்பர். இது தன் வாலால் படகையும் கப்பலையும் எறிந்து மூழ்குவிக்கும். இதனைத் தூரத்திலிருந்து சுட்டுங் கொல்வர். திமிங்கிலத்தை விழுங்குமீன் திமிங்கிலகலம்,

திமித்துவசன்

இந்திரன் வேண்டுகோளால் தசரதன் துணையிருக்க இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன். இப்போரில் கைகேயி தசரதனுக்கு இரதம் செலுத்தி இரதத்தில் அவனது மூர்ச்சை தெளிவிக்க அவன் களிப்படைந்து இரண்டு வரம் கேட்க வென அவற்றை வேண்டியபோது பெறுகிறேன் என்று இராமனை வனம் புகச் செய்தனள்.

திமிராபதம்

முக்கியமான அக்னி.

திம்மராஜன்

இவன் கி. பி. 1515ல் விஜய நகர சமஸ்தானத்தில் மந்திரியாக இருந்ததவன். விஜயநகரத்தரசன் கட்டளைப்படி செங்கற்பட்டை அரசாண்டவன். இவன் தன் பெயரால் செங்கற்பட்டில் ஒரு குளம் தோண்டுவித்தான். அதற்குத் திம்மராஜா குளம் என்று பெயர்.

திம்மவாகு

திர்யோதனன் தம்பி.

தியத்

பீமன் என்னும் ஏகாதசருத்திரன் தேவி.

தியா

எட்டாவது வசு. இவன் தேவி அங்குலா. அஷ்டவசுக்களும் தங்கள் தேவியருடன் பூலோகத்திற்கு வரும்போது வசிஷ்ட தேனுவாகிய நந்தினியைக் கண்டு தியாவின் மனைவி அதின் சிறப்புக்களைக் கேட்டுப் பூலோகத்தில் உசீநருடைய மகளுக்கு அதனது பாலையுண்பிக்க எவ்வகை யேனும் களவு செய்து தரவேண்டும் என அவ்வகை உடன்பட்டுச் செய்து வசிட்டரால் மனிதனாகப் பிறக்கச் சாபமேற்றுப் பூமியில் பீஷ்மராகப் பிறந்தவர்.

தியாகராஜகவிராயர்

இவர் ஊர் விருத்தாசலம், சைவர், மயூராசல புராணம் பாடியவர்.

தியாகராஜமூர்த்தி

இயர் விஷ்ணுமூர்த்தியால் பூசிக்கப்பட்ட சோமாஸ்கந்தர். எவ்வகை எனின், விஷ்ணுமூர்த்தி புத்திரப் பேறு வேண்டிச் சிவமூர்த்தியை எண்ணித் தவம் இயற்றினர். சிவமூர்த்தி ஒரு புத்திரன் உண்டாக வரமளித்தனர். தேவியார் தம்மைப் பூசிக்காததினால் சினம் கொண்டு அப்புத்திரன் பிறந்து சில நாட்களில் மரணம் அடைக எனச் சாபம் இட்டனர். இதனால் விஷ்ணுமூர்த்தி பிராட்டியாரை வணங்கிக் கேட்கப் பிராட்டியார் நமது சாபம் அனுபவியாமல் ஒழியாது எனக் கூறிப் பின்னர் அநுக்கிரகித்தனர். உன் புத்திரன் பிறந்து இறைவனது நேத்திரத்தினால் அழிந்து மீண்டும் எழுந்து நெடுநாள் உருவிலியாய் இருக்க என்றனர். அன்று முதல் விஷ்ணுமூர்த்தி சோமாஸ்கந்த திருவுருவத்தினைத் திருப்பாற்கடலில் தாம் துயிலும் அரவணையில் தமது மார்பு இடத்துக்கொண்டு யோகநித்திரை புரிந்து இருந்தனர். அந்தக் காலத்துச் சோமாஸ்கந்த மூர்த்தி ”மேகமொன்று நீள்வெள்ளி வெற்பணைந்தென விளங்கு நாகணைமேவி, யோக நற்றுயில் கொண்டுறை கடவுணெட் டுயிர்ப்பசைவா லன்னா, னாகமீ தசைந் தாடியே யமர்ந்தன னமுத சந்திர மோலி, யேக நாயகனம்பிகை கந்தனோ டெண்ணிலாவுல குய்ய” என்றபடி அசைந்து ஆடி இருந்து வரம் தந்தவர் ஆதலால் இப் பெயர் பெற்றனர். இச்சோமாஸ் கந்தமூர்த்தியை விஷ்ணுவிடம் இந்திரன் தன்னாடு வளம் பெறவேண்டிப் பெற்றுப் பூசித்து வருகையில் வலன் என்னும் அசுரனை இந்திரன் வேண்டுகோளால் வெல்லும்படி வந்த முசுகுந்த சக்கரவர்த்தி கேட்க இந்திரன் அது விஷ்ணுவின் கட்டளையால் கொண்டு செல்லத்தக்கதென அவ் விஷ்ணுவின் கட்டளை ஏற்று முசுகுந்தன் கேட்கத் தர மனமிலாத இந்திரன் வேறு ஆறு சோமாஸ்கந்தமூர்த்தங்களைச் சிருட்டித்துத் தர அவற்றைச் சக்கிரவர்த்தி மறுப்ப இறுதியில் இந்திரன் தான் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியினைக் கொடுக்கக் களிப்புடன் பெற்றுத் திருவாரூரில் பிரதிஷ்டை செய்வித்து மற்ற ஆறு மூர்த்திகளையும் ‘சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு, காரார் மறைக்காடு காராயல், நேரே உற்ற திருவாய்மூர் உகந்த திருக்குவளை, சத்த விடங்கேசர் தலம் ” என்னும் ஆறு திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்வித்துத் தரிசித்து இருந்தனன்.

தியாசகன்

பிதுர்க்கள் பதின்மரில் மூவர்.

தியாச்சியம்

நக்ஷத்திரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாதகாலம். நக்ஷத்திரம் காண்க.

தியுமத்சேநன்

1. மகாபலனாயிருந்த ஒரு அரசன் கிருஷ்ணனால் செயிக்கப்பட்டவன். 2. சாளுவன் பாண்டவர் சேநாபதி பிரத்தியும்நனுடன் யுத்தஞ் செய்தவன். 3. சாளுவ தேசாதிபதி சத்தியவதனன் பிதா, சாவத்திரியின் மாமன். 4. கிருஷ்ணனால் வெல்லப்பட்டவன்.

தியுமந்தன்

சுவரோசி மனுவிற்கு வந்தேவதையிடம் பிறந்த குமரன்.

தியுமான்

1, வசிட்டருக்கு ஊர்சையிடம் உதித்த குமரன். 2. சூர்ய வம்சத்து மதிராஸ்வன் புத்திரன், 3 சாளுவராஜன். ருசிகன் பொருட்டு ராஜ்ஜியத்தைக் கொடுத்தவன்.

தியூதம்

சொக்கட்டான் சதுரங்க முதலிய வெளிப்படைத் திருட்டு. (மநு.)

திரசதன்

புருகுத்தன் குமரன், அநரண்யன் தந்தை.

திரசதயன்

இருக்கு வேதத்திற் புகழப்பட்ட ஒரு அரசன்.

திரசதாச்யன்

மாந்தாத்ரியன் பௌத்திரன், இவன் ருக்வேதத்தாற் புகழப்பட்ட கொடையாளி.

திரசனு

(தம்சு) ஒரு க்ஷத்திரியன் அந்தியனாரன் புத்திரன், தாய் சரஸ்வதி, மனைவி காளிந்தி, புத்திரன் இளீளன்.

திரடசுதன்

இத்மவாகனைக் காண்க.

திரடதன்வா

ஒரு அரசன்.

திரணகூபம்

ஒரு தடாகம், பலராமர் தீர்த்தயாத்திரைகாலத்து ஸ்நாநஞ் செய்தது.

திரணபிந்து

1. பந்து என்பவன் குமரன். இவற்கு மூன்று குமரர். விசாலன், சூன்யபந்து, தூம்பிரகேது. ஒரு பெண் இளிபிளை. காசிபருக்கு மாமனார், புலத்தியர்க்கு மாமன் எனவுங் கூறுவர். சுத்தியும்னன் முற்பிறப் புணர்ந்து களித்தவர். 2. ஒரு இருடி, இவர் செய்த தவத்தைக் கெடுக்கத் தேவர் அரணி யென்ற தேவமாதை அனுப்ப அவள் இவரை மயக்க இருடி சினந்து நீ மானிட வுருக்கொள் எனச் சபித்தனர். அச்சாபம் ஏற்ற அந்த மாது போஜராஜன் புத்திரியாகிய இந்து மதியெனப் பிறந்தனள். 3. மருத்சக்ர வர்த்தியின் வம்சத்தவனான புதன் குமரன்; இவன் குமரன் விசாலன். 4. ஜமதக்னியின் குமாரராகிய தொல்காப்பிய மகருஷிக்கு ஒரு பெயர். இவரைத் திரண தூமாக்னி யென்பர். 5. ஒரு இருடி; இவர்க்குச் சிவபெரு மான் ஒரு குடத்திலிருந்து பிரசன்னராய் அவரது குட்டநோயை நீக்கினர்.

திரணபிந்துசரம்

திரணபிந்து அரசனால் உண்டாக்கப்பட்ட ஒரு தீர்த்தம்,

திரணபுருஷன்

இவன் தேவர் முதவியோரின் இறுமாப்பைக் கெடுக்கச் சிவபிரானால் துரும்பு போல் செய்விக்கப் பெற்ற புருஷன். இவன் மீது விதி விஷ்ணு இந்திராதியர் யுத்தத்திற்கு வந்து சற்று மவனை அசைக்க வலியற்று நீங்கித் தேவியை துதித்து அவளருளால் மகாதேவனை வணங்கி உண்மை யுணர்ந்தனர். (சிவரஹஸ்யம்).

திரணாசநன்

கௌதமிதீரத்து இருந்த பன்னாசனன் குமரன். சிவத்தைத் தரிசிக்காமல், சத்தியைத் தரிசித்த தோஷத்தால் அரக்க வுருக்கொண்டு நாரத முனிவர் சொற்படி மணிகன்னிகையில் மூழ்கி நல்லுருவ வடைந்தவன். (திருப்பூவண புராணம்).

திரணாவர்த்தன்

ஓர் அரக்கன், கண்ணன் குழந்தைப் பருவத்துக் கண்ணனை அந்தரத்துத் தூக்கிச் சென்று கொல்ல முயன்று அவரால் கொல்லப்பட்டவன்.

திரமிடன்

1. இருஷபனுக்குச் சயந்தியிடமுதித்த குமரன். 2. சத்தியாதனனைக் காண்க.

திரமிடம்

கர்நாடக ஆந்திர தேசங்களுக் கிடையிலுள்ள நாடு, Part of the Decaan from Madras to Soringa patam and Cafe Comorio. Its Captial wasKancbi pure, modern name Conjeevaram,

திரயருணன்

இருக்கு வேதத்திற் கூறப்பட்ட ஒரு அரசன்.

திரயாரணன்

சூர்யாரணியன். திரயாருணி காரிஷியன் குமரன்.

திரயோதசி ஜயபார்வதி விரதம்

இது ஆடி சுக்லபக்ஷ தாயோ தசியில் அநுட்டிப்பது.

திரவணன்

வருணன் குமரன்.

திரவிடன்

சூர்யவம்சத் தரசன்; இவன் யோகியாயினன்.

திரவிடம்

1. (5) தமிழ், ஆந்திரம், கன்னடம், மகராட்டிரம், கூர்ச்சரம். 2. தட்சணத்திலிருந்து கன்னியாகுமரி ஈறாக உள்ள தேசம்.

திரவிணகன்

அக்தி யென்னும் வசுவிற்கு வசோற்தாரையிட முதித்த குமரன்.

திரவியத்தன்மை

நித்யாநித்ய வஸ்துக்களில் சமவாய சம்பந்தமுடையதாயும், நித்ய மரயும், குணகர்மங்களில் சமவாய சம்பந்த மில்லாத தாயுழள்ள சாதி.

திரவியம்

(5) மலைப்படுவன, காடுபடுவன, நாடுபடுவன, நகர்படுவன, கடல்படுவன. மலைபடுதிரவியம்: மிளகு, கோஷ்டம், அகில், தக்கோலம், குங்குமம். காடுபடுதிரவியம்: இரால், தேன், அரக்கு, நாவி, மயிற்பீலி. நாடுபடுதிரவியம்: செந்நெல், சிறுபயிறு, கரும்பு, வாழை, செவ்விளநீர். நகர்படுதிரவியம்: அரசன், பித்தன், மந்தி யானை, கண்ணாடி. கடல்படுதிரவியம்: உப்பு, முத்து, பவளம், சங்கு முதலிய.

திராக்ஷாராமம்

ஆந்திர, கர்னாடக, மகாராட்டிர தேசங்களுக்கு இடையிலிருக்கும் பர்வதம்,

திராக்ஷை

இது கரடு முரடான கொடி, இது உறுதியானது. ஒவ்வொரு கொடியிலும் பல கணுக்கள் உண்டு. இதன் இலைகள் பீர்க்கனிலைபோ லிருக்கும்; பூ சிறிதாக இருக்கும். பூ மாறினவுடன் பிஞ்சுகள் கொத்தாய் முதிர்ந்து பழமாம். ஒவ்வொரு குலையில் (50)க்கு மேற்பட்ட பழங்களிருக்கும், குலை முனை குவிந்தும் அடி பருத்துமிருக்கும். பழங்கள் பசுமை நிறமாக இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் (2, 3) விதைகளுண்டு. இதன் உற்பத்தி பதி வைத்தல். பழம் தின்றால் பித்த சாந்தம். தேனில் ஊறவிட்டுண்ணவும், சாராயம் செய்யவும் உதவும்.

திராவகயந்திரம்

மருந்திட்ட பாத்திரம். அப்பாத்திரத்தின் பொருத்தமான தூம்பமைந்த நீர்நிலை மூடி எரிக்கத் நூம்பின் வழி திரவம் இறங்குவது,

திராவிடபூபதி

திராவிட தேசத்தரசன், இவனிடம் அகத்தியர் யாகத் திற்குப் பொருள் கேட்க இவன் அவரது எண்ணத்தை முடிக்கவில்லை.

திராவிடம்

தமிழ்க்கு ஆரியரிட்ட ஒரு பெயர். ஒரு தேசம்.

திராவிடாசாரி

வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷ்யஞ் செய்தவர்.

திரிஃயு

யாயித புத்திரன் (2) சந்திரவம் சத்து மதிமான் புத்திரன்.

திரிகடுகம்

சங்க மருவிய நீதி நூல். இது பதினெண்கீழ்க்கணக்குகளுள் ஒன்று. இது நல்லாதனாரால் இயற்றப்பட்டது. மும்மூன்று பொருள்களை விளக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்துட்பட) நூற்றொன்றுடையது.

திரிகந்தம்

கிராம்பூ, நாவற்பூ, சண்பகப்பூ

திரிகருத்து

ரசஸ்ஸு குமரன்.

திரிகர்த்தம்

பாகலீக தேசத்திற்குத் தென்மேற்கிலுள்ள விபாசைந்திக்குச் சமீபத்திலுள்ள தேசம். இது ஆர்யாவர்த்தத்திற்கு மேற்கிலுள்ள தேசம், இத் தேசாதிபதி திரிகர்த்தன். Jalandhar, & part of the district of Lahore.

திரிகாலவாசுதேவர்

யதுகுல பேதம்.

திரிகுத்து

(ச.) சுசியின் குமாரன், பிரமனுக்குச் சாரதி, இவன் குமரன் சாந்திரதன்

திரிகூடம்

ஒரு பர்வதம்.

திரிசகன்

நாலாமன் வந்தரத்திந்திரன்.

திரிசங்கு

1. சூர்யகுலத்தரசன், திரிபந்தனன் குமரன், பாரி கேகய ராசபுத்திரியாகிய சத்யவதி, இவன், தான் உடலுட சுவர்க்கமடைய வேண்டித் தனது ஆசாரியராகிய வசிட்டமுனிவரைக் கேட்க அவர் மறுத்ததால் ஆசாரியரைக் கோபித்தனன், அதனால் வசிட்டர் திரிசங்கினைச சண்டாளனாகச் சபித்தனர். திரிசங்கு விச்வாமித்ரரிடம் அடைந்து நடந்ததைக் கூற விச்வாமித்ர முனிவர் தமது தபோபலத்தினால் போகச் செய்து சுவர்க்கத்தை அடைந்தனன். அவ்விடம் தேவர்கள் சண்டாள தேகமுள்ள இவனைக் கண்டு தலைகீழாய்த் தள்ள விழுகையில் விச்வாமித்திரர் இவனுக்கு அபயம் தந்து ஒருபதம் தரப்பெற்று அந்தரத்தில் நின்றவன். இவன் குமரன் அரிச்சந்திரன். சூர்யாரண்யன் குமரன் எனவுங் கூறுவர். பிருது குமரன் எனவுங் கூறுவர். (பாகவதம்). 2. இவன் திரையாருணன் குமரன்; இவனுக்குச் சத்தியவதனன் எனவும் பெயர். இவனது தீச்செயலால் இவனை இவன் பிதாவனத்திற் கோட்ட அவ்விடத்தில் இவன் விச்வாமித்திரர் குடும்பத்தைக் காக்கத் தீத்தொழில் செய்துகொண்டு வருகையில் இவன் பிதா வசிட்டரை நோக்கி இராஜ்யத்திற்குக் குமரனில்லையென இன்னும் சிறிது நாளில் சத்தியதனன் இராஜ்யம் பெறுவானெனக் கூறிச் சத்தியவ தனபனத் தான் தவத்திலிருக்கையில் ஏவல் செய்யக் கட்டளையிட்டுப் பன்னிரண்டு வருஷம் யோகத்திருந்தனர். அச்சமயத்தில் விசுவாமித்திரர் குடும்பத்தைக் காக்க உணவுகாணப்படாது வசிஷ்டதேனுவைக் கொன்று விசுவாமித்திர குடும்பத்திற்குக் கொடுத்துத் தானும் புசித்தனன். இதனையறிந்த வசிட்டர் உன்னை இப்பொழுதே கொல்வேன் உன் தந்தைக்கு உன்னை அரச னாக்குகிறேனென்று வாக்களித்ததால் மனம் வரவில்லையாயினும், நீ பரஸ்திரீகளைப் புணர்ந்ததும், ஜீவஹிம்சை செய்ததும், பசுவைக் கொன்றதுமாகிய மூன்று குற்றங்களைச் செய்தனை உன் குற்றத்திற்காக முன்னமே யுன் தலையில் சங்கினை யடிக்கவேண்டும்; அவை மூன்றினையுஞ் சேர்த்து அடிக்கிறேனென்று அவன் தலையில் சங்கடிக்கச் சத்தியவதனன் எனும் பெயர் நீங்கித் திரிசங்காயினன். (சிவமகா புராணம்). இவன் தேவி சத்யாதை. (சங்கு முளை.) சத்திய விரதனைக்காண்க. 3. அவிபூ குமரன் இவன் குமரன் சித்திராதன்; இவன் ஒருவேதியன் கிருத்திகா விரதம் அநுஷ்டித்து அரசன் ஆயினன்.

திரிசடை

விபீஷணன் குமரி. சாநகி இலங்கையில் சிறையிருந்தகாலத்து அவளைத் தேற்றியவள். பிரமாத்திரத்தால் மூர்ச்சித்த இராமலக்குமணரைக் கண்டு சீதாபிராட்டி துக்கித்தகாலத்து அவளைத் தேற்றியவள்.

திரிசதசு

(ச.) புருகுச்சன் குமரன், (சூ.) மாந்தாதாவுக்கு இந்திரன் இட்ட பெயர்.

திரிசந்ரிதிகை பீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

திரிசஷ்டிசலாகாபுருஷர்கள்

சைநசமயங் காண்க.

திரிசிரன்

1. விசிரவசுவிற்குக் காலையிடத் துதித்த குமரன். இவன் சூர்ப்பநகையாற் நூண்டப்பட்டு இராமபிரானிடம் யுத்தத்திற்குவந்து இரண்டு தலையிழந்து பிறகு ஒரு சிரத்துடன் மாயத்தால் யுத்தஞ் செய் திறந்தவன். இவனுக்கு மூன்று சிரம். 2. சங்கராசனைக் காண்க,

திரிசிரா

இராவணன் குமரன்; அதிகாயன் யுத்தத்தில் அநுமனால் கொல்லப்பட்டவன்.

திரிசூல பீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

திரிசொல்

கற்றவர்க்கே பொருள் விளங்குஞ் சொல்,

திரிதசீ

அகத்தியர் குமரர்; தாய் உலோபாமுத்திரை.

திரிதண்டி

சந்நியாசி இவன் வாக்தண்டம், கர்மதண்டம், மனோதண்டம் மூன்று முடைமையினிப் பெயர் பெற்றான். (வாயுபுராணம்).

திரிதன்

1. பிரமன் புத்திரன். 2. கௌதம புத்திரன்.

திரிதன்வன்

திரையாரணி தந்தை. சுமநன் குமரன்

திரிதன்வா

(சூ.) விசுமன் குமரன்; தண்டியால் சிவநாமம் ஓதி அச்வமேதபல மடைந்தவன்.

திரிதர்

கௌதம புத்திரர், இவர் வேதத்தில் வல்ல சாந்தர் இவர்க்கு ஏகதர், திவிதர் என இரண்டு சகோதரர் இருந்தனர். இவர்கள் யாகத்தின் பொருட்டுப் பொருள் சம்பாதிக்க விரும்பித் திரிதரை முன்னிட்டுப் பொருள்களும் பசுக்களும் சம்பாதித்து வருகையில் திரிதர் முன் சென்றார். சென்ற திரிதருக்குச் செந்நாயொன்று காணப்பட் டது. அதைக் கண்டு பயந்து திரிதர் கிணற்றில் விழுந்தார். பின்வந்த சகோதரர்கள் இவரால் நமக்கு இலாபங் கிடையாதென்று கிணற்றிலேயே விட்டுச் சென்றனர். திரிதர் கிணற்றிலிருந்தபடி அடைந்த ஜலத்தைத் தோண்டித் தொங்கிய கொடியைச் சோமரசமாகவும் நீரை நெய்யாகச் செய்து ஓமஞ் செய்தார். தேவர்கள் இவர் செய்த யஞ்ஞத்திற்கு வந்து பாகங்கொண்டு அவரைக் கிணற்றினின்றே சரஸ்வதியை அக்கிணற்றில் பெருகச் செய்தனர். சரஸ் வதி பெருகியிவரை வெளிப்படுத்தினள். திரிதர் தேவர்களை நோக்கி இதில் எவர்கள் ஸ்நானஞ் செய்யினும் அவர்கள் எல்லா யாக பலன்களை யுமடைய வரம் பெற்றனர். இவர் தம்மைக் கிணற்றினின்று மீட்காத உடன்பிறந்தாரைச் செந்நாய் குரங்குகளாகச் சபித்தனர். பலராமர் தீர்த்த யாத்திரையில் இதில் ஸ்நானஞ்செய்தார். (பா~சல்.)

திரிதினஸ்பிர்கிது

ஒரு திதியாவது, ஒரு நக்ஷத்திரமாவது, ஒரு யோகமாவது மூன்று நாட்களிற் கலந்திருப்பது.

திரிதிவை

ஒருந்தி; இது பாரிபத்ர பர்வதத்தில் உற்பத்தியாவது.

திரிபணி

1. அஃதாவது உபமானப்பொருளானது அப்பொழுது நிகழ்கின்ற செய்கையிற் பயன்படுதற் பொருட்டு உபமேயத்தி னுருவத்தைக்கொண்டு பரிணமித்தலாம். இதனை வட நூலாற் பரிணாமாலங் காரம் என்பர். 2. உவமைப் பொருள் உபமேயத்தின் உருவத்தைக்கொண்டு வேறுபடுதல். (பரிணாமாலங்காரம்).

திரிபந்தனன்

(சூ.) திரியகுலான் குமரன்.

திரிபாகி

இது சொல்லணியிலொன்று. மூன்றெழுத்தாய் ஒன்றின் பெயராய், முதலுமீறும் ஒன்றின் பெயராய், இடையுமீறும் ஒன்றின் பெயராயினவென்று வாசகம் செய்வது. பாதிரி என நிறுத்தி, பாதிரி, பாரி, திரி, என்றவிழ்ப்பது. (யாப்பு~வி.)

திரிபாததிரிமூர்த்தி

சிவமூர்த்தி ஒருவரே தம்மில் பிரமவிஷ்னுக்களை யொடுக்கிக் கொண்டு தாம் ஒருவரே திரிமூர்த்தி சுவ ரூபர் என்பதைத் தெரிவிக்க நின்ற திருக்கோலம்.

திரிபுரதாசர்

இவர் மதுராநகரத்தரசனது மந்திரி. இவர் இல்லறத்து வெறுப்புள்ளவராய் மாதவன்மீது. சிந்தைகொண்டு தமக்கிருந்த பொருள் முழுதும் பாகவதர்க்குக் கொடுத்துப் பிக்ஷைசெய்துகொண்டு துளசி வனத்தில் கண்ணனைக்கண்டு அவன் வடிவழகை யனுபவித்திருக்கையில் ஒரு நாள் பெருமாளுக்கு ஒரு போர்வையிட எண்ணங் கொண்டு பொருளிலாமையால் மசிக்கூட்டினை விற்றுப் போர்வை வாங்கி அர்ச்சகனிடம் தந்து பெருமாளுக்குப் போர்க்கவென அர்ச்சகன் இது பெருமாளுக்குப் பற்றாத போர்வையென்று படுக்கையாகக் கொண்டனன். பெருமாள் தமக்குக் குளிர் கலக்கச் செய்து நடுக்க அர்ச்சகர் எங்குள்ள போர்வைகளும் போர்க்க நின்றிலது. தாசர் கொடுத்த கலைமேல் துயின் றோன் கனவிடைப் பெருமாள் சென்று தாசா கொடுத்த கலையினைப் போர்க்கின் குளரடங்குமென அவ்வாறு செய்யக் குளிர் நின்றது. இதனையறிந்த பாகவதர் தாசரைப் பணிந்து போற்றினர்

திரிபுரபைரவிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று,

திரிபுரம்

1. தாரகாசான் குமாரராகிய வித்துற்மாலி, தாரகாஷன், கமலாக்ஷன் இவர்கள் மூவரும் சிவபூஜாபலத்தால், பொன் வெள்ளி, இரும்புக் கோட்டைகளைப் பெற்று அக்கோட்டைகளுடன் பறந்து சென்று தேவர்களை வருத்தியிருந்தனர். இதனால் தேவர், சிவமூர்த்தியிடம் முறை யிடச் சிவபிரானிவர்களிடத்துள்ள சிவப்பற்று மாறில் இவர்க்குச் செல்வங்குறையு மெனக்கூறக் கேட்டுக் களிப்புடன் விஷ்ணுமூர்த்தியிடம் சென்று சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கூறினர் விஷ்ணு மூர்த்தி, தாம் புத்தராயவ தரித்து நாரதரைச் சீடராகக் கொண்டு திரிபுராதிகளிஞ் சென்று அவர்களுக்குள்ள சிவப்பற்றைக் கெடுத்தனர். அதனால் புத்தர் சிவ விரோதிகளாயினர். சிவமூர்த்தி இவ்வசுரரது இறுமாப்பைக் கெடுக்க எண்ணித் தேவர்களை நோக்கித் தேர்கொண்டு வரக் கட்டளையிட்டனர். விஷ்ணுமூர்த்தி, சூர்ய, சந்திரர்களைத் தேருருளையாகவும், காலம், வானம், உதயகிரி, அத்தகிரி, காட்டை, கணம், லவம், வேள்வி, ஐம்பூதம், இந்திரியம் இவற்றை முறையே பார், மேலிடம், நுகம், முன் கொம்பு, கொம்புக்காதாரப் பொருள்களாகவும், புராணங்களைப் படமாகவும், உலோகாலோ சபர்வதம் படியாகவும், அஷ்டகுல பர்வதங்கள் விதானமாகவும், அண்டமுகடு கொடிஞ்சியாகவும், இடைவெளி தட்டாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், வாசுகியை நாணாகவும், மேருவை வில்லாகவும், பிரமனை முட்கோல் பிடித்துத் தேரைச்செலுத்தும் சாரதியாகவும் செய்வித்துத் தேர்முடிந்த தென்று கூறினர். சிவமூர்த்தி தேர்மேல் ஆரோகணித்து வில்லேக் கையிலேந்தி விஷ்ணு மூர்த்தியைப் பாணமாக்கி எய்யத் தொடங்குகையில் விஷ்ணு மூர்த்திக்கு மனதிலுதித்த இறுமாப்பை யெண்ணித் திரிபுரத்தை நோக்கியும் இவரது எண்ணத்தை யெண்ணியும் சிரித்தனர். இச்சிரிப்பின் சுவாலையால் திரிபுரம் தீப்பட்டது. இதில் மேற்கூறிய மூன்று அசுரர் சிவபூசை விடாமல் இருந்தவராதலால் தீப்படாமல் காக்கப்பட்டனர். 2. மற்றொரு காலத்தில் சாக பொருட்டுச் சிவபிரான் வேதங்கள் நாலும் தேராகவும் உபநிடதங்கள் குதிரைகளாகவும், உமையவள் சாரதியாகவும் பிரணவம் சவுக்காகவும் காலசக்கரம் வில்லாகவும், மகாமாயை நாணாகவும், பாசுபதாத்திரம் பூட்டி அவ்வசுரனது வலியடக்கினர், 3. ஒருகாலத்து, சத்த தந்து வென்பான் செய்த யாகத்தை அழித்தற் பொருட்டு அவியுண்ண வந்த தேவர்களை ஆகாசமே தேராகவும், வாயு குதிரையாகவும், அக்னி வில்லாகவும், சந்திரன் நாணாகவும், வருணன் அம்பாகவும் குமாரக்கடவுள் தேர்ப்பாகனாகச் சென்று தேவர்களை வென்றவர். 4. ஒரு வித்யாதர நகரம்.

திரிபுராந்தகன்

திரிபுரத்தை எரிக்க எழுந்த சிவன் திருவுரு.

திரிபுராரி

1. திரிபுரமெரித்த சிவமூர்த்தி. 2. ஒரு வேதியன் கங்கை யாடச்சென்று வழியில் யமுனை, மணிகன்னிகை ஆடுக எனக் கூறக் கேட்டுப் மறித்துச் சென்று காசி க்ஷேத்திரத்தினையும், கங்கையையும் காணாது அசரீரி யமுனை சொற்படி செய்க எனக் கூறக்கேட்டுத் திரும்புகையில் பேய்கள் தங்கள் பாபம் ஒழிய மணிகன்னிகை ஆட வேண்ட அங்கனம் உடன்பட்டுத் தீர்த்தம் ஆடி நலம் அடைந்தவன். (வேதா சண்ய~புராணம்).

திரிபுருஷ்டன்

வஸுதேவருக்குத் திருதியிடம் பிறந்த குமரன்.

திரிபுவன வீரதேவராயன்

ஒரு அரசன், பட்டரைத் தம்மிடம் அழைத்தவன்

திரிபுவனதேவன்

வச்சணந்தி, குணவீரபண்டிதர் காலத்திலிருந்தவன்.

திரிபுஷ்கரம்

ஒரு மகா க்ஷேத்ரம்,

திரிமதி

ஆனகதுந்துபி குமரி, இவள் ஒரு இயக்கனை மணந்தவள். இவள் குமரர், சுகோன், சுக்ரீவன், வீரன், போசன், ஆவாகன்.

திரிமூர்த்தி

1. பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள். 2. அஷ்டவித்தியேசுரரில் ஒருவர்.

திரிமூர்த்திவாசம்

காஞ்சிக்கு ஒரு பெயர்; திரிமூர்த்திகளும் இத்தலத்தில் வசித்தலால் வந்த பெயராம்.

திரியகுணன்

(சூ.) அரியச்வன் குமரன்.

திரியம்சன்

(தா.) விப்ரசித்திக்குப் புத்ரன்.

திரியம்பகன்

மூன்று கண்களுடைய சிவமூர்த்தி, கணபதி, வீரபத்திரர் முதலியவருக்குப் பெயர்,

திரியம்பகம்

சிவமூர்த்தியின் வில், இது தக்ஷயஞ்ஞ அதத்தில் எடுத்தது.

திரியு

யயாதியின் புத்திரன், இவன் புத்திரன் பப்புரு.

திரியுட்காயோகம்

முக்கால் நாளான புனர் பூசம், விசாகம், பூரட்டாதி; கால் நாளான கார்த்திகை, உத்திரம், உத்திராடமும், பத்திரையான துதியை, சப்தமி, துவாதசியும், வெள்ளி, வியாழம், செவ்வாய் சேர்ந்த நாள் திரிபுட்கரயோகமாம். இவ்யோகத்தில் மரித்தல், சுடுதல் செய்தால் அக்குடியில் மூவர் மரிப்பர். (விதானமாலை).

திரிலிங்கதேசம்

(தெலுங்க தேசமெனப்படும்). காளேச்வரம், க்ஷதிதரம், திராக்ஷாராமம், அல்லது ஸ்ரீசைலம் காளேச்வரம் பீமேச்வரம் இவைகளுக்கு நடுவிலிருக்கும் தேசம், இவர்கள் பேசும் பாஷை தெலுங்கு.

திரிலோகசோழன்

இவன் சோழராஜாக்களில் ஒருவன். இவனைப் பிரமகத்தி பிடிக்க இவன் காஞ்சிநதி மூழ்கிப் போக்கிக் கொண்டான்.

திரிலோசந சிவாசாரியார்

இவர் சித்தாந்த சாராவளி யென்னும் சிவாகமபத்ததி திருவாய் மலர்ந்தவர். இவர் சிவாகமங்களையாராயச் சிவமூர்த்தியை வேண்டி மூன்று கண்கள் பெற்று இப்பெயர் பெற்றனர். இவர் சைவ ஆமர்த்தக மடத்தைச் சேர்ந்த சம்புசிவாசாரியரின் மாணாக்கர்.

திரிலோசநன்

மூன்று கண்களையுடைய சிவமூர்த்தி.

திரிலோசனதாசர்

இவர் தட்டார் ஜாதியைச் சேர்ந்தவர்; இவரை அரசன் அழைத்து ஜேகிர் எனும் பணிசெய்து கொடுக்கும்படி பொன்மணி முதலியவுதவி இதனை மூன்று தினத்திற் செய்துகொடுக்கக் கட்டளை யிட்டனன். தாசர் உடன்பட்டு வருகையில் பாகவதர் எதிர்வரக் கண்டு அவர்களை உபசரித்து இரண்டு நாட்கள் வரையிலும் வைத்திருந்தனுப்ப அரசன் தொழலைத் தட்டார் மறந்து அரசனுக்கு அஞ்சி காட்டிலொளித் தனர். இவருக்கு வருந்துன்பத்தை நீக்கப் பெருமாள் இவரைப் போல் உருக்கொண்டு ஜேகிர் எனும் பணி செய்துகொண்டு அரசனிடஞ் சென்று கொடுக்க, அரசன் மகிழ்ந்து கொடுத்த வெகுமானங் கொண்டு தட்டாரது மனைவியாரிடங் கொடுத்துப் பாகவதருக்கு உணவளிக்கச்செய்து தாம் அந்த உணவில் சிறிது வஸ்திரத்தில் முடிந்து கொண்டு காடடைந்து தாசரைக் கண்டு தாம் திரிலோசனன் பாகவதருக்கிட்ட அன்ன மயக்கத் தால் வழி தெரியாது ஈண்டடைந்தேன் நீ களைத்திருக்கிறாய் இவ்வுணவில் சிறிது அருந்துக என உண்பித்து அத்தாசர், தம்மை யுடனழைத்துவரப் பின்றொடர்ந்து வீடடைந்து வளம் நோக்கி மனைவியை வினவ அவள் எல்லாம் நீ செய்திருக்க வினவுவ தென்னென வியந்து இது பெருமாளின் விளையாட்டெனப் புறத்தில் வந்து பின்றொடர்ந்தவரை நோக்கக் காணாது பெருமாள் தமக்காக வருந்தியதற்கு வருந்தித் துதித்திருந்தவர்.

திரிவக்கிரன்

ஒரு அரக்கன்; தேவி சுசிலை கபாலபரணனைக் காண்க.

திரிவக்கிரை

மதுராபுரியில் கண்ணபிரான் சிருவவதரித்துத் திருவிளையாடல் புரிந்த காலத்தில் அவர்க்குச் சந்தனம்பூசி அவரைக் கூட எண்ணங்கொண்ட குப்சை; இவளைக் கண்ணபிரான் தீண்டிக் கூனை நிமிர்த்தி இவளிடம் உபசுலோகரைப் பெற்றனர்.

திரிவிகிரமரூபம்

இரண்டு முகம், நான்கு தோள் மேலிரண்டு கைகளும் இரண்டு கமலம் பிடித்தவராய் மற்ற இரண்டு கைகளும் அஞ்சலியத்தராய் கறுப்பு ரத்னாபரணம், கறுப்பு வஸ்திரம் உடையராயிருக் குஞ்சூரிய மூர்த்தி.

திரிவிக்ரமன்

வாமனவுருக்கொண்டு மாவலிபாலடைந்து உலகளந்து தமது தரிசனம் சந்த விஷ்ணு மூர்த்தியின் திருக்கோலம்,

திரிவுக்காட்சி

ஒரு பொருளை மற்றொரு பொருளாக உணர்தல். (தரு.)

திரிவேணி

கங்கை யமுனை சரஸ்வதி கூடுமிடம்.

திரிவேணி சங்கமம்

கங்கை, யமுனை, சரஸ்வதி முதலிய மூன்று நதிகள் கூடுமிடம், பிரயாகை (அலகாபாத்) இவ்விடம் நீராடினோர் சுவர்க்கமடைவர். தேகத்தை விட்டோர் அமிர்தமாகிய மோக்ஷத்தைப் பெறுவர். (இருக்கு).

திரிஷதர்

ஒரு முனிவர், இவர் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு அக்னியை அஸ்திரமாக அருள் செய்தவர்.

திரிஹாயாணி

வேதவதியைக காண்க,

திருஆடானை

துருவாசமுனிவர் பிருகுமுனிவரது ஆச்ரமம் அடைந்த காலத்து பிருகு அவரை உபசரியாததால் துருவாசர் அவரைத் தலை ஆடுருவாகவும் உடல் யானை வடிவமாகவும் சபித்தனர். இச்சாப வடிவொழிய பிருகு பூசித்த தலம். (வீரசிங்~புரா.)

திருஆப்பனூர்

சோழாந்தகன் என்னும் பாண்டியனியித்தம் சிவபெருமான் ஆப்பினிடம் தோன்றிய தலம். (வீரசிங்~புரா)

திருக்கச்சிநம்பிகள்

இவர் பிறப்பால் வைசியர், ஆளவந்தார் திருவடி சம்பந்தி, சங்கு கர்ணாம்சம், இளையாழ்வாரைக் காணக் காஞ்சிக்கு எழுந்தருளியபோது உடையவர், வர்ணாச்சிரமம் தவறித் தம்மைத் தண் டன் சமர்ப்பிக்க வெண்ணுகையில் தடுத்து அவர்க்கிருந்த ஐயப் பாடுகளைப் பெருமாள் நியமனப்படி இளையாழ்வாருக் கறிவித்தவர். இவர் கச்சித் திருவருளாளனுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வரும் நாட்களில் பெருமாள் இவரிடம் அன்புடன் வார்த்தை சொல்லி வருவர். இவர், ஒரு நாள் அருளாளன் என்னும் சிறுவனைத் தீவட்டி பிடிக்க என்று கூறிச் சந்நிதிக்கு எழுந்தருளினர். நம்பி சந்நிதிக்கு எழுந்தருளியபின் மழை பிடிக்கவே, அருளா என் வீடுவந்து உறங்கினன். நம்பி ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துச் சிறுவனைத் தேடச் சிறுவனுக்குப் பதிலாகப் பெருமாள் தீவட்டி பிடித்து வந்து நம்பியை வீட்டில்விட நம்பியின் மனைவியார் எதிர் கொண்டு சிறுவன் முன்பே வீடு வந்து சேர்ந்ததனால் தீவட்டி பிடிப்பவன் யார் என்றனர். நம்பி சிறுவனை நோக்கப் பெருமாள் மறைந்தனர். நம்பி பெருமாள் எழுந்தருளியதைப்பற்றி வருந்தப் பெருமாள் உனதன்பைப் பலருமுணர்ந்து பிழைக்க இவ்வகை செய்தனமென்றனர். தம்பி சிலநாளிருந்து பரமபதமடைந்தனர். இவர் ஸேநாபதியாழ்வாரம்சம். இவர் திருமழிசைக்கடுத்த பூவிருந்தவல்வியில் வீரராகவ செட்டியார்க்குக் கமலையார் என்கிற தேவியாரிடம் சக (931)க்குமேற் செல்லா நின்ற சௌம்யவருஷம் மாசிம் சுக்கில தசமி வியாழக்கிழமை அவதரித்தவர். இவர் தமது சகோதரருடன் தமக்கு வைத்த நிதிகள் எல்லாம் பெருமாள் விஷயத்தில் செலவிட்டுப் பெருமாள் நியமனப்படி செங்கழுநீர் சிந்தியிருந்த வழி நோக்கிச் சென்று கச்சிநகர் புகுந்து பெருமாளைம் சேவித்து நியமனப்படி திருஆலவட்ட கைங்கர்ய்ஞ் செய்திருந்தவர், இவர் காஞ்சிபுரத்தில் கைங்கர்யஞ் செய்துகொண்டிக்கையில் வள்ளுவர் ஒருவர் இவர் பாடி தூளிகளைத் தம் சிரசில் கொண்டுவருதா கண்டு அவரை யாது காரணமென் கேட்க அவர் பாகவத புக்தியால் நன்மை உண்டாமென, நம்பிகள் இது தக்கதன்றென வள்ளுவர் ஏது தக்கதோ அத பெருமாளை வினவி அருளுக என அவ்வாறே வினவிப் பாகவத பாதரேணுவால் பதவியுண்டாமெனக் கூற வள்ளுவர் தேவரீர் திருவடிப் பிரபாவத்தாலிது எனக்கு வாய்த்த தாசையான் தேவரீரிருக்குப் பேறு வாய்க்கும் காலம் வாய்ப்பதையும் பெருமாளை வினாவிக் கூறுவிரேல் அருகிருந்து சேவித்திருப்பேனென அவ்வாறே பெருமாளைப் பேறு வாய்க்குங் காலம் கேட்க ஆசார்ய அபிமானத்தால் முத்தி சித்திக்குமெனக் கேட்டுப் பெரிய நம்பிகளிடம் உருமாறிச் சென்று மாடு மேய்ப்பவனைப்போல் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கையில் ஒருநாள் பெரிய நம்பிகள் கிராமாந்தரஞ் சென்று மீள்கையில் மழை வெள்ளத்தில் வண்டி செலுத்திவந்து விளக்குக் கூட்டை ஒரு கையிலும் மாடுகளை ஒரு கையிலும் பற்றி வண்டி யழுந்து மிடங்களில் வண்டியைத் தூக்கித் தாம் நம்பிகளைக் குருமாளிகையில் கொண்டு சேர்த்தனர். பிறகு திருக்கச்சி நம்பிகள் மழையால் வருந்தி மூலையில் தாம் தரித்திருந்த ஈரவுடைகளைந்து பழையவுடையை உடுத்தித் திருமாளிகைப் புறத்திலிருக்கப் பெரியநம்பிகள் வேறு உடை கொண்டு மாட்டுக்காரனைத் தேடக் கச்சிநம்பிகள் எதிர் வரக்கண்டு திருக்கசி நம்பிகள் என வுணர்ந்து காரணம் வினவி அளவளாவியிருந்தனர்.

திருக்கண்ணபுரத்தந்தாதி

முனையத நயர்க்கு எழுதி விடுத்த செய்யுள். ‘இன்று வரிலென்னுயிரை பெறுவை யிற்றைக்கு, நின்றுவரிலதுவு நீயறிவை, வென்றி, கல விமுயங்கியவா றெல்லாம், நினையாயோ நெஞ்சத்து நீ. ” (தமிழ்நாவலர் சரிதை).

திருக்கண்ணபுரத்தாச்சான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்பரை).

திருக்கண்ணப்பதேவர்மறம்

நக்கீரர் கண்ணப்பரது அன்பினை யெடுத்துப் பாடிய பிரபந்தம். கல்லாடரும் ஒன்று இப்பெயராலியற்றினர்.

திருக்கண்ணமங்கையாண்டான்

நாதமுனிகளை யாச்ரயித்த ஸ்ரீவைணவர். இவர் இரண்டு நாய்கள் சண்டையிட்டு இறக்கக் கண்ட சொந்தக்காரர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இறக்கக் கண்டு, அப்ராக்கிருதநித்ய சம்பந்தியான பெருமாள் திருவடிகளில் பரரியாசம் செய்தபின் ஒன்றும் செய்யக்கூடாதெனப் பெருமாளை ஆராதித்து முத்தி யடைந்தவர். இவர் திருக்கண்ணமங்கையில் வாழ்க்கைப்பட்டிருந்த ஸ்ரீமந்நாதமுனிகளின் உடன் பிறந்தாள் குமரர். இவர் பராபவளும், ஆவணிமீ திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்து லக்ஷிமீநாத தாதாசார்யரென்கிற பெயர் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்ததால் திருக்கண்ணமங்கையாண்டான் என்னப்பட்டு நாதமுனிகள் திருவடிகளில் ஈடுபட்டுக் கைங்கர்ய பரராயிருக்கையில் ஒரு நாள் பல்லக்கிலேறி வருகையில் இரண்டு சூத்திரர் நாய்கள் பொருட்டு மாய்ந்து கிடத்தலைக் கண்டு விரக்தி பூண்டு மௌனத்துடனிருந்து பெருமாளது தீர்த்த பிரசாதம் ஸ்வீகரித்துச் சில நாட்களிருந்து பெருமாள் மேல் வீடு தரப் பாமபதமடைந்தவர்.

திருக்கலிகன்னிதாசர்

நம்பூர் வரதராஜருக்கு ஒரு பெயர். நம்பிள்ளைக்கும் பெயராம்,

திருக்களிற்றுப்படியார்

சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று, திருக்கடவூர் உய்யவந்தார் அருளிச் செய்தது.

திருக்காளத்தி புராணம்

திருக்காளத்தி மான்மியம் சொன்ன நூல், கருணைப்பிர காசதேசிகர் செய்தது

திருக்குன்றத்தாசிரியர்

சொல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமரனா ரிடம் பொருளதிகாரம் கேட்டவர்.

திருக்குருகூர்தாசர்

ஆளவந்தார் திருவடி சம்பந்தி.

திருக்குருகூர்ப்பெருமாள் கவிராசர்

இவர் பாண்டி மண்டலத்துத் திருக்குருகூரினர். இவர் வைசிய வைணவர். இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். மாறனலங்காரம், மாறனகப்பொருள், குருகைமான்மியம், மாறன்கிளவிமணிமாலை முதலிய இயற்றியவர்.

திருக்குருகை

தக்ஷிணபினாகினிக்குத் தென்கரையிலுள்ள விஷ்ணுத் தலம்.

திருக்குருகைப்பிரான்

பிள்ளானுக்கு உடையவர் இட்ட திருநாமம். பெரிய திருமலை நம்பியின் குமரர்; இவர் குமரர் புண்டாகார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

பிரசண்டாம்சரான இவர், கலி (4162)க்கு மேல் பிலவ ஐப்பசி திங்கட்கிழமை திரு மலையில் (திருவேங்கடம்) அவதரித்தவர். (குருபரம்பரை).

திருக்குருகைப்பெருமாள்கவிராயர் அல்லது சடையன்

இவர் மாறனலங்காரமெடி அணியிலக்கண மியற்றியவர். இதற்கு உரை தென்திருப்பேறையூரினராகிய காரி இரத்தின கவிராயராலியற்றப் பட்டது. இதில் உள்ள உதாரணச் செய்யுட்கள் பலவும் சடகோபர். விஷயமானவை

திருக்குறள்

இது, திருவள்ளுவ நாயனாரா லியற்றப்பட்ட தரும நீதிநூல்; இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாலாகவும், இவ்லறவியல், துறவறவியல், அரசியல், அங்கவியல், ஒழிபியல், களவியல், கற்பியல் என ஏழுவியல்களாகவும் (133) அதிகாரங்களாகவும் வகுக்கப்பட்டது. இந்நூற்கு தருமர், மணக்குடையர், தாமத்தர், நாசர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கலிப்பெருமாள், காளிங்கர் முதலிய உரையாசிரியர்கள் உரை இயற்றினர். இவ்வுரைகளுட் பரிமேலழகர் உரை சிறந்ததாகும். இதற்கு முப்பானூல், உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை எனப் பெயர். இது சங்கமருவிய பதினெண் கீழ்க்கணக்கி லொன்று. இதனது பெருமையைத் திருவள்ளுவமாலையா லறிக.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

இவர் தொண்டைநாட்டில் காஞ்சிபுரத்தில் வள்ளுவர் குலத்தில் திருஅவதரித்துச் சிவனடியவர் குறிப்பின்படி அவர்க்கு ஆடை முதலிய அழுக்கு நீக்கி உதவிவருவர். இவ் வகை செய்து வரும் நாட்களில் சிவபெருமான் ஒரு விருத்தராய் அழுக்கடைந்த கந்தையுடன்வா அவரைத் தரிசித்த நாயனார் எதிர்கொண்டு பணிந்து உம்முடைய கந்தையைத் தந்தால் அடியேன் அழுக்கு நீக்கித் தருகிறேன் என்றனர். விருத்தர், இது கந்தையாயிலும் குளிர்க்கு ஆதரவாயிருக்கும், பொழுதுபோகுமுன் கொடுக்கின் தருகிறேன் என்றனர். நாயனார். அதற்கு உடன்பட்டுக் கந்தையை வாங்கிக் கசக்கி வெள்ளாவியில் வைத்து மீண்டும் கசக்கப் புகுந்தனர். அப்போது வான வெயில்முடி பழை பெய்தது. நாயனார், வாக்குத் தவறும் எனவும், விருத்தர் குளிரால் வருந்துவர் என எண்ணியும், பெரியவர்க்குத் தீங்கு செய்தவன் ஆகிறேன் என நினைத்தும் தாம் ஆடைவெளுக்கும் கருங்கற் பாஅறையில் தமது சிரத்தை மோதத் தணிகையில் சிவமூர்த்தி பறையிற்றோன்றிய தமது திருக்கரத்தால் நாயனாரது சிரத்தைப் பிடித்து ‘அன்ப உனது பத்திமையை மூவுலகும் பரவச் செய்தனம்” இனி நம் உலகு அடைக எனத் திருவாய் மலரத் திருக்கைலையடைந்கவர். (பெரிய புராணம்.)

திருக்குறுங்குடி நம்பி

1. திருக்குறுங்குடி பெருமாள், உடையவரிடத்தில், ஸ்ரீவைஷ்ணவர்போல் வந்து பஞ்சசமஸ்காரம் பெற்றனர், பின் ஸ்ரீவைஷ்ணவரும்பியென்று பெருமாளுக்குப் பெயருண்டாயிற்று. (குரு பரம்பரை). 2. எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிளில் ஒருவர். (குருபரம்பரை.)

திருக்குறுந்தாண்டகம்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பிரபந்தத் திரட்டு

திருக்கோட்டி நம்பி

உள்ளழடையான் எனும் சோதிட நூலாசிரியர், இவர் சகரனாண்டு (1200) இல் வடமொழியிலிருந்த நூலாகிய உள்ளமுடை யானைத் தமிழில் இயற்றினர். இவர் வெண்பைக்குடி நாட்டுப் பிரதேசம். பாண்டவன் மங்கலமான பஞ்சமாதேவி சதுர்வேதி மங்கலம் கடவுர் ஆரியன் எனச் செந்தமிழ்ப் பத்திரிகை கூறுகிறது.

திருக்கோட்டியூர் நம்பி

1. புண்டரிகார்சம், இவர் கலி (4028) இல் சர்வாத்வா வைகாசி சனிக்கிழமை திருவவதரித்தவர், ஆளவந்தார் திருவடிசம்பந்தி. 2. இவர், வெண்பைக்கும் காட்டுப்பிரதேசம், பாண்டவன் மங்கலமான பஞ்சமாதேவி சதுர்வேதிமங்கலம், கடப்பாரியன், திருக்கோட்டி நம்பியென திருவுள்ளமுடையான் சாத்திர ஏட்டிலிருப்பதால் உள்ளமுடையான் நூலாசிரியர் இவரெனத் தெரிகிறது.

திருக்கோளூர் பெண்பிள்ளை

இவள் உடையவர் திருக்கோளூருக்கு எழுந்தருளுகையில் சில ரஹஸ்யங்களைக் கூறிச் சிஷ்யையானவள்.

திருக்கோவலூராழ்வான்

எழுபத்திநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்)

திருக்கோவையார்

ஸ்ரீமன் மாணிக்கவாசக சுவாமிகளால் அகப்பொருட்கணம் பொருந்தச் சிவமூர்த்தியை நயகனாக எண்ணித் தம்மை அடிமையாக கொண்டு திருவாய்மலர்ந்த கட்டளைக் கலித்துறை, இதற்கு உரையாளர் நச்சினார்க்கினியர் உரையியற்றினர் என்பர் சிலர் இதற்குத் திருச்சிற்றம்பலக்கோவையார் எனவும் பெயர்.

திருசானு

பானுவுரன் குமரன், இவன் குமரன் கரந்தமன்.

திருச்சாளக்கிராமம்

ஒரு புண்ணியக்ஷேத்திரம். இதில் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளியிருப்பர்.

திருச்சிற்றம்பலக்கோவையார்

திருக்கோவையாரைக் காண்க.

திருச்சிற்றம்பலநாவலர்

இவர் ஊர் தொண்டைநாட்டு மாம்பாக்கம், சைவர், அண்ணாமலையார்மீது அண்ணாமலைச் சதகம் என நூறு எண்சீர்க்கழிநெடிலடியால் சதகம் பாடிய புலவர்.

திருச்சிற்றம்பலமுடையார்

சேக்கிழார் பொரூட்டு ‘உலகெலாம்” எனத் திருவாக்கருளிச் செய்தவர். பெற்றான் சாம்பான் என்னும் அடியவர்க்குத் தீக்ஷை செய்விக்கும் பொருட்டுக் கொற்றவன்குடி யுமாபதி சிவாசாரிய சுவாமிகளுக்குத் திருமுகப் பாசுரம் “அடியர்க்கெளியன் சிற்றம்பலவன் கொற்றம், குடியார்க் கெழுதியகைச் சீட்டுப் படியின்மிசைப், பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து, முத்திகொடுக்கை முறை,” என அருள் செய்தவர், உமாபதிசிவாசாரியாரைக் காண்க. சேந்தனாரைக் காண்க.

திருச்சிற்றம்பலமுனிவர்

இவர் வேதாரண்யத்திருந்த புலவர். திருக்காவிரி புராண மியற்றியவர்.

திருச்சிற்றம்பலம்

இது ஞானகாசமாய்ச் சிவபிரான் திருநடஞ்செய்யும் தலம். இது திருத்தில்லை யென்னுந் தலத்திலிருப்பது. இதற்குத் தகராகாசம், கனகசபை, பொன்னம்பலம், ஞான பரமாநந்தசபை எனவும் பெயர். இது ஆநந்தசுவ ரூபமாதலாலும், சபாநாயகன் ஆநந்தசுவ ரூபியாகிய ஞானமயமாய்ப் பிரபஞ்சகிருத்தியத்தின் பொருட்டுத் திருநடஞ் செய்ததாலும் இப்பெயர் பெற்றது. தேவர்கள் இதின் உண்மையைப் பொற்றகட்டில் எழுதிப் பூசித்ததால் சிதம்பரம் என்று இதற்கு ஒரு பெயர். இது விராட்புருடனுக்கு இருதய கமலமாயிருத்தலின் புண்டரீகபுரம் பெயர் பெற்றது.

திருச்செங்கோடு

முருகக்கடவுள் எழுந்தருளிய திருப்பதிகளில் ஒன்று. (சிலப்பதி.)

திருச்செந்தில்

குமாரக்கடவுள் பொருட்டு விசுவகர்மன் நிருமித்த பட்டணம்.

திருச்யன்

அகத்திய முனிவர்க்குக் குமரன்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சோழ மண்டலத்தில் சீர்காழியென்னுந் திருப்பதியில் வேதியர் வம்சத்தில் கௌணியர்கோத் திரத்தில் சிவபாத இருதயர் செய்த தவத்தால் அவர் மனைவியராகிய பகவதியார் திருவயிற்றில் திருஅவதரித்தனர். இவர்க்குச் சாதகன்மாதி சடங்குகள் முழுதும் தந்தையார் களிப்புடன் செய்தனர். பிள்ளையார், தமது மூன்றாமாண்டில் ஒருநாள் ஸ்நானத்திற்குச் செல்லுந் தந்தையாரினுடன் செல்ல அழ, தந்தையார் உடனழைத்துச்சென்று குளக்கரையில் இருத்தித் தாம் நீருள் மூழ்கி அகமருஷண ஸ்நானஞ் செய்தனர். பிள்ளையார் தந்தையாரைக் காணாமல் பண்டைய நினைவுவரத் திருத்தோணியப்பரின் விமானத்தை நோக்கி அம்மே, அப்பாவென்று அழுதனர். சிவமூர்த்தி இவர்க்கு அருள் புரியத் திருவுளங்கொண்டு பிராட்டியுடன் இடபாரூட ராய் எழுந்தருளி இறைவியை நோக்கிப் பாலூட்டக் கட்டளையிட்டனர். பிராட்டியார் திருமுலைப்பாலைப் பொன் வள்ளத்திற்பெய்து பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்துப் பால்வள்ளத்தைப் பிள்ளையார் கரத்தில் அளித்துச் சிவமூர்த்தியிடங் கலந்தனர். தந்தையார் ஸ்நானமுடித்துக் கரையேறிப் பிள்ளையார் வாயினின்று ஒழுகுகின்ற பால்கண்டு நீ யார் தந்த பாலையுண்டாய் என்று ஒரு சிறு மாறுகொண்டு பயமுறுத்தி அடிக்கப்புகப் பிள்ளையார் சிவானந்தம் பெருக உச்சியின் மீது எடுத்துச் சுட்டிய திருக்கரத்துடன் தமக்கு ஞானப் பாலூட்டுவித்து அந்தரத்தில் இடபாரூடராய்ப் பிராட்டியாருடன் எழுந்தருளியிருக்கும் அம்மை அப்பரை “தோடுடைய செவியன்’ என எடுத்துத் திருப்பாசுரத்தாற் பாடித் துதித்துத் திருக்கோயிலுட் சென்று துதித்துப் பணிந்தனர். இவ்வற் புதக் காட்சியைக் கண்ட கேட்ட பலரும் பிள்ளையாரை வணங்கினர். இதைக்கண்ட தந்தையார் ஆநந்தத்தால் பிள்ளையாரைத் தோளில் தூக்கிச் சென்றனர். மறுநாள் விடியற்காலத்தில் பிள்ளையார் ‘திருக்கோலக்கா’ என்னும் திருப்பதியை அடைந்து முன்னின்று ஒத்தறுத்து “மடையில் வாளை பாய” எனும் திருப்பதிகம் ஓதியருளினார். சிவமூர்த்தியின் அருளால் ஸ்ரீபஞ்சாக்ஷா மெழுதிய ‘திருபொற்றாளம்’ திருக்கரத்தில் வந்திருந்தது. இதைக்கண்ட பிள்ளையார் களிப்படைந்து இசையோங்கத் தாளம் கொட்டிப் பாடி விடைபெற்றுத் தந்தையார் தோளில் தூக்கிச் செல்லத் தோணியப்பர் திரு ஆலயம் அடைந்து வணங்கித் தமது திருமாளிகையடைந்தனர். இவ்வற் புதங்கண்ட திருநனிப்பள்ளி வேதியர் பிள்ளையாரைத் தம்மூர்க்குவர வேண்ட இசைந்து சென்று திருப்பதிகம் பாடித் துதித்து அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியை அடைந்தனர். இவரது செய்திகேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவரைத் தரிசிக்கும் பொருட்டு விறலியருடன் சீர்காழி வந்து சேர்ந்தனர். பிள்ளையார் எதிர்கொள்ளப் பாணர் வணங்கினர். பிள்ளையார் அவருடன் தோணியப்பரை வணங்குகையில் பாணர், யாழில் சிவமூர்த்தியைப் பாடக் கேட்டுக் களிப்படைந்தனர். திருநீலகண்டயாழ்ப்பாணர் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களைக் கேட்டு அவைகளை யாழிற்பாடி அன்று முதல் பிள்ளையாரைப் பிரியாதிருக்கும் வரம்பெற்றனர். பின் திருத்தில்லை சென்று பதிகமோதித் தரிசித்துத் தில்லை (3000) வரைச் சிவகணங்களாகக் கண்டு தாம் கண்டபடியைத் திருப்பதிகத்தில்வைத்துத் துதித்தனர். இவர் யாழ்ப்பாணர் வேண்டத் திருஎருக்கத்தம்புலியூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருநெல்வாயிலரத் துறைக்குப்போக விரும்பித் தந்தையாரின் தோளைவிட்டிறங்கி நடந்து மாறன்பாடியை அடைந்தனர். சூரியன் அத்தமடைந்தனன். அன்றிரவு அங்கிருக்கையில் சிவ மூர்த்தி வழியால் வருந்திய பிள்ளையார்க்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் அருளத் திருவுளங்கொண்டு அரத்துறை வேதியரது கனவில் தனித்தனி சென்று பிள்ளையார் வரவு அருளி அவர்களுக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் கொடுக்கக் கட்டளையிட்டுப் பிள்ளையார் சுவப்பனத்தில் அவற்றை ஏற்கக் கட்டளை தந்து மறைந்தருளினர். வேதியர் விடிந்து இவ்வாஞ்ஞைப்படி செய்ய அவற்றைப் பிள்ளையார் ஏற்றனர். பின் அத்தலம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியடைந்து உபாயனாதிகளை பெற்று யஞ்ஞோபவீததாரணம் செய்து கொண்டு வேதியர்க்கு ஸ்ரீபஞ்சாஷர மகிமையைத் தெரிவித்திருந்தனர். இவரது புகழைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் பிள்ளையாரைவணங்க எழுந்தருளப் பிள்ளை யாரும் எதிர்சென்று வணங்கிக் கலந்து சிவதரிசனம் செய்தருளினர். பின் திருநாவுக்கரசுகள் பல தலஞ் சேவிக்க எண்ணி விடை கொண்டனர். பிள்ளையாரும் பலதலம் வணங்கும் எண்ண முள்ளவராய்த் திருக்கண்ணார்கோவில் முதலிய பல தலங்களையும் காவிரிக்கு வடபால் திருவடமாந்துறை வரையிலுள்ள தலங்களையும் வணங்கி மழநாடு சென்று திருப்பாச்சி வாச்சிரமத்திற்கு எழுந்தருளினர். ஆங்குக் கொல்லிமழவன் முயலகவியாதியால் வருந்தும் தன் குமரியைத் திருக்கோயிலிலிருத்திப் பிள்ளையாரின் வரவு நோக்கி எதிர் கொண்டு வணங்கிக் கட்டளை பெற்று எழுந்து சுவாமிகளுடன் சந்நிதி யடைந்தனன். பிள்ளையார் திருக்கோயில் அடைந்ததும் ஸ்மரணையற்றுக் கிடக்கும் குமரியைக் கண்டு இவள் யார் என்றனர், மழவன் அடியேன் குமரியென்னப் பிள்ளையார் அவள் வாலாறு உணர்ந்து “துணிவளர்” எனும் திருப்பதிகமோதி அவள் நோயைப் போக்கினர். பிள்ளையார் அந்நாடு நீங்கிக் கொங்கு நாடடைந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் தரிசிக்கையில் பனியால் திருக்கூட்டத்தவர் சாப்பிணி கொண்டு வருந்துதல் அறிந்து அது நீங்கும் வகை ”அவ்வினைக் கிவ்வினை” என்று திருநீல கண்டத் திருப்பதிகம் ஓதியருளினர். அப்பிணி அவ்வூரைவிட்டே நீங்கியது. பிறகு அவ்விடம் நீங்கிச் சோணாடு அடைந்து திருப்பட்டீச்சுரத்திற்கு எழுந்தருளுகையில் கோடை மிகுந்தபடியால் சிவாஞ்ஞையால் பூதம் ஒன்று முத்துப்பந்தர் கொண்டு நிழல் செய்தது. அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துத் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கையில் சிவபாத இருதயர் யாகஞ் செய்தற்குப் பொன் வேண்டு மென்றனர். பிள்ளையார் ‘இடரினும் தள ரினும்” என்னுந் திருப்பதிக மோதினர். அப்போது பூதம் ஒன்று சிவாஞ்ஞையால் உலவாக்கிழி தந்து மறைந்தது. அக்கிழியைப் பிள்ளையார் சிவபாத இருதயருக்குக் கொடுத்து யாகஞ் செய்ய அனுப்பினர், பிள்ளையார் தருமபுரம் அணைந்தார். அத்தலம் திருலேகண்டயாழ்ப் பாணரின் தாய் பிறந்த இடமாதலால் அவர் சுற்றத்தவர் எதிர்கொண்டு பாணரை நோக்கி நீர் பிள்ளையாரின் திருப்பதிகத்தை யாழிலிட்டு வாசிக்கவால் இசையுலக முழுதும் பரவு கின்றது என்றனர். இதைக் கேட்ட திரு நீலகண்டயாழ்ப்பாணர் நடுங்கிப் பிள்ளையாரை இசை, யாழில் அடங்காதிருக்கப் பதிகமோதக் கேட்டுக் கொண்டனர் பிள்ளையார் அவ்வகை “மாதர் மடப்பிடியும்” எனும் யாழ்முரி பாடினர். பாணர் அப்பாசுரத்தை யாழில் வாசிக்க இயலாமையால் யாழைமுரிக்கத் தொடங்கினர். பிள்ளையார் யாழினை வாங்கிச் சிவமூர்த்தியின் புகழினடங்குமோ என்று மீண்டும் பாணரிடம் தந்தருளினர். பின் அவ்விடம் நீங்கிச் திருச்சாத்தமங்கை யடைந்து தம்மை எதிர்கொண்ட திருநீலநக்க நாயனாருடன, அயவந்தி தரிசித்து அவர் வீட்டில் விருந்துண்டு நீங்கிப் பல தலங்கள் சேவித்துத் திருச்செங் காட்டங்குடி சேவிக்கச் சென்றனர். அங்குச் சிறுத்தொண்ட நாயனார் எதிர்கொள்ள, அவருடன் கணபதீச்சு வரம் வணங்கி அவரிடம் விருந்துண்டு அவ்விடம் நீங்கித் திருமருகலுக்குச் சிவதரிசினத்திற்கு எழுந்தருளினர். அங்குத் தாமன் எனும் வணிகபுத்திரி தன் பிதா தன்னை யொழிந்த அறுவரையும் தன் மருகருக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லி அறுவரையும் பிறரிடம் பொருள் பெற்று மணஞ் செய்வித்துத் தன்னையு மவ்வாறு செய்ய எண்ணியிருக்கையில் இவள் தன் பிதாவின் மருகனிடம் இரக்கமடைந்து அவனைத் தான் மணந்து கொள்ளும்படி துணிந்து அவனுடன் பிதா அறியாமல் வெளிவந்து இத்தலத்தில் அவ்வணிக குமாரனுடன தங்கினள். அன்றிரவு நாயகனாகக்கொள்ள நினைந்த வணிக குமரன் பாம்பு தீண்ட இறந்தனன். இவ்வணிக கன்னிகை அவனைத் தீண்டாது. அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தியிடம் தன் குறைகூறி இரந்தனள். இவளது குறைகேட்ட அவ்விடம் எழுந்தருளிய பிள்ளையார் அவளிடம் கருணை கூர்ந்து “சடையாயெனுமால் சரணீயெனுமால் எனுந்திருப்பதிக மோதினர். வணிகன் உயிர்பெற்று எழுந்தனன். பிள்ளையார் அவ்விருவரையும் மணஞ் செய்து கொள்ள அனுப்பினர். பிறகு பிள்ளையார் அவ்விடம் நீங்கித் திருப்புகலூர் அடைந்து அவ்விடம் எதிர்கொண்ட முருகநாயனாருடன் தரிசனஞ் செய்திருக்கையில் ஆங்குவந்த திருநாவுக்கரசுகளை எதிர்கொண்டு அழைத்துத் திருவாரூரின் புகழ்கேட்டு அவ்விடம் எழுந்தருளி வன்மீகநாதரைத் தரிசித்து மீண்டும் திருப்புகலூரை யடைந்து திருநா வுக்கரசுகளுடனும் முருகநாயனாருடனும் எழுந்தருளி யிருந்தனர். இவ்விடம் பிள்ளையாரிருக்குஞ் செய்தி கேட்டு திருநீலநக்க நாயனாரும் அவ்விடம் சென்றிருந்தனர். பிள்ளையார் அவ்விடம் நீங்கித் திருக்கடவூ ரடைந்து குங்கிலியக்கலய நாயனார் எதிர் கொள்ள அத்தலம் சேவித்து அவர் வீட்டில் அமுதுண்டு இருந்தனர். மறுநாள் சிவாஞ்ஞைப்படி திருநாவுக்கரசுகளுடன் திருவீழிமிழலை சென்று சீர்காழியிற்கண்ட திருக் கோலத்தை அங்குத் தரிசித்து மழையின்மையால் உயிர்களும் சிவனடியார்களும் வருந்துதற்கிரங்கி இருவரும் திருத்துயில், கொண்டனர். அவ்விருமூர்த்திகளின் கனவிலும் சிவமூர்த்தி எழுந்தருளி இப்பஞ்சம் நீங்கி மழைபெய்து நாடு செழிக்குமளவும் உங்களிருவர்க்கும் பொற்காசுகொடு போம் அவற்றால் சிவனடியவரை உண்பிக்க என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினர். விழித்து இருவரும் நித்தியதை மித்தியாதிகளை முடித்துத் திருக்கோயிலடைந்து திருவாயிலில் பொற்காசு இருக்கக்கண்டு தொழுது எடுத்துச் சிவனடியவரை உண்பித்து வருகையில் திருநாவுக்கரசுகள் திருமடத்தில் அடியவர் விரைந்து உண்பதையும் தம்மடத்தில் காலதாமதங் கொண்டு அடியவர் உண்பதையும் நோக்கிக் காரணம் வினாவினர். பரிசாரகர் காசிற்கு வாசிகேட்குதலால் காலதாமதமாதலையம் திருநாவுக்கரசுகள் காசிற்கு வாசி வேண்டாமையையும் அறிவித்தனர். அதனைப் பிள்ளையார், திருநாவுக்கரசுகள் அக்காசு பெறுதல், திருத்தொண்டின் பலன் எனத் தாமேயறிந்து வாசிதீரக் காசு வேண்டி அடியவரை உண்பித்து வருகையில் மழை பொழிந்து உலகம் செழித்தது. பிள்ளையார் ‘அவ்விடம் நீங்கித் திருநாவுக்கரசுகளுடன் வேதாரணியம் எழுந்தருளினர். முன் வேதம் பூசித்தகாலத்தில் மூடப்பட்ட திருக்கதவத் தைத் திறந்து தரிசனம் செய்ய ஆவலுள்ள பிள்ளையார், அப்பரை நோக்கி நீர் திறக்கவும் திருக்காப்பு நீங்கப் பதிகம் ஒதுக என்றனர். அவ்வகை அப்பர் பதிகம் பாட அது திறக்காமை கண்டு “இரக்கமொன்றிலீர்’ எனத் திருப்பதிகம் அருள உடனே திருக்கதவம் திறந்தது. அடியவர் இருவரும் திருக்கூட்டத்தவருடன் சென்று சிவதரிசனம் செய்து வெளிவந்தனர். பிள்ளையார் அத்திருக்கதவத்தை மீண்டும் திருக்காப்பிட ‘சதுரம்” எனத் திருப்பதிக மோதினர். உடனே திருக்கதவம் மூடிக்கொண்டது. பின் சிவாஞ்ஞையால் அப்பர் திருவாய்மூர்க்குச் செல்லப் பிள்ளையார். கேட்டு உடன் சென்று நடன தரிசனங்கண்டு பின் வேதாரணியம் அடைந்தருளினர். இவ்வகைப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கையில் பிள்ளையாரின் அற்புதச் செயல்களைப் பலராற் கேள்வியுற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும், பாண்டியன் மந்தி ரியாகிய குலச்சிறையாரும் தங்கள் நாடு சமண்மூடிப் பாழடைதலை யெண்ணி, வருந்திப் பிள்ளையாரைப் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிவரத் தூது விட்டனர். அவ்வகையே பிள்ளையார் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள இவரது வரவைக் கேட்ட மங்கையர்க்கரசியார் ஆனந்தம் அடைந்து தமது மந்திரியாரும் அந்தரங்க சிவபக்தி மானுமாகிய குலச்சிறையாரை எதிர் கொள்ள விடுத்தனர். பிள்ளையார் திருவாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து ஆண்டிருந்த மங்கையர்க்கரசியார் பணிய அருள்சுரந்து குலச்சிறையார் காட்டிய திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். பிள் ளையார் எழுந்தருளுதலைக் கேட்ட சமணர் பொறாதவராய் அரசனிடம் கண்டு முட்டுப்பட்டமை கூறினர். அரசனும் கேட்டு முட்டாயினேன் என்றனன். அதனால் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் திருமடத்தில் அக்நியை ஏவக் கட்டளை பெற்று எவினர். அக்நி செல்லாமையால் அரசன் அறியின் நம்மை அவமிதிப்பன் என்று தாங்களே ஒவ்வொருவரும் கொள்ளியைக் கொண்டு சிவனடியவர் துயில் கொள்கையில் மடத்தில் இட்டனர். திருமடம் தீப்பற்றக் கண்ட சிலர் அதனை அணைத்துச் செய்தி யைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தனர். பிள்ளையார் இஃது, அரசனால் விளைந்ததென்று அறிந்து சிவனடியவரை வருத்தவந்த தீ அரசனைக் பையப்பற்றக்கடவது என்று திருப்பதிகமருள அது வெப்பு நோயாய் அரசனை அணுகியது. அரசன் சுரநோயால் வருந்துதல் கண்டு பல வைத்தியர் ஔஷதத்தைத் தந்தனர். அவை யொன்றும் பயன் தராவாயின சமண முனிவர் தம் மந்திரத்தைப் பீவியில் ஏற்றி அம்மயிற் பீலியாலும் குண்டிகையின் நீராலும் அரசனைத் தடவி நீர் தெளித்தனர். அந்நோய் முன்னையினும் அதிகமாயிற்று. இதனால் பாண்டியன் சமண முனிவரைக் கோபித்தனன். அச்சமயம் அறிந்து மங்கையர்க்கரசியார் சமணர் செய்த கொடுமை இவ்வகை உம்மைச் சார்ந்திருக்கலாம். ஆகையால் இவ்விடம் எழுந்தருளியிருக்கும் திரு ஞானசம்பந்த மூர்த்திகளைச் சவைக்கண் வருவிக்கக் கட்டளையோ என்றனர். அரசன் இப் பெயர் கேட்டலும் சிறிது ஆவல் கொண்டு வருவிக்கக் கட்டளையிட்டனன். பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் திருமடஞ் சென்று தங்கள் குறை கூறி வேண்டினர், பிள்ளையார் ஆலவாயார் திருவருள் பெற்று அரசனை யணைந்து அவன் இடுவித்த ரத்னாசனத்தில் எழுந்தருளியிருந்தனர். பாண்டியன் பிள்ளையாரை நோக்கித் தமது ஊர் எது என்றனன், பிள்ளையார் உத்தரமாக “பிரமபுரம் வேணுபுரம்” என்னும் திருப்பதிக மோதினர். இதைக் கண்ட சமணர் பொறாராய் வாதிட்டு ஒரு வருக்கொருவர் பேசினர். மங்கையர்க்கரசியார் பதைத்து முன்பு நோயை நீக்க அரசனிடம் கூறினர். அரசன் இருவரையும் நோக்கி உங்கள் சமய வன்மையை இருவரும் எனது வெப்பு நோயைத் தீர்த்தலால் தெரிவிக்கின், தீர்த்தவர் எவனோ அவர் பக்கஞ் சேர்வேன் என்றனன். சமணர் அரசனை நோக்கி உமது இடப்பக் கத்து நோயை நாங்கள் தீர்க்கிறோம், சைவர் வலது பாக நோயைத் தீர்க்கட்டும் என்று தமது பீலியால் மந்திரம் ஓதித் தடவினர். பிள்ளையார் மந்திரமாவது நீறு என்னுந் திருப்பதிகமோதி அரசனது வலப்பாகத்தை விபூதியால் தடவினார். அரசனது வலப்பாகம் நீரோடைபோல் குளிர்ந் தது, இடப்பாகம் முன்னிலும் மிக்க வெம்மையடைந்தது. அரசன் பொர னாய்ச் சமணரை நோக்கச் சமணர் மயிற்பீலி கொண்டு மீண்டும் தடவினர். அரசனது உடல் வெம்மைட மயிற்பீலியைக் கருக்கிக் சமணர் மேலும் பாய்ந்தது. இதனால் சமணர் ஒதுங்கினர். பாண்டியன் பிள்ளையாரை நோக்கி மற்றைப்பாகத்து கோயைத் தீர்க்க வேண்டினன். பிள்ளையார் முன்போல் விபூதி இட அந்தப் பாகமும் தணிந்தது. பாண்டியன் உய்ந்தேன் என்று பிள்ளையாரின் திருவடிகளைப் பணிந்தனன். இதைக் கண்ட சமணர் இனித் தருக்கம் பேசவேண்டுவதில்லை. நாமிருவரும் நம் சமய உண்மைக ளெழுதப்பெற்ற ஏடுகளை அக்நியில் இடுவோம். ஏடுகள் வேகாவாயின் அச்சமயம் சற்சமயமெனக் கொள்வோம் என்றனர். பிள்ளையார் உடன்பட்டனர். அரசன் கட்டளையால் அக்நி வளர்க்கப்பட்டது. அதில் பிள்ளையார் தாம் அருளிச்செய்த திருப்பாசுரத்தில் எடுத்தவுடன் தோற்றிய திருநள்ளாற்று ‘போக மார்த்த” என்னும் திருப்பாசுரத்தைத் தொழுது எடுத்து அக்நியில் இட்டு, ‘ தளி ரிளவளரொளி” என்னும் திருப்பதிக மருளிச் செய்தனர். சமணரும் தங்கள் சமய உண்மை யெழுதப்பட்டிருந்த ஏட்டையிட்டனர். அது வெந்தொழிந்தது. பிள்ளையாரிட்ட ஏடோ வேகாது பசுமை கொண்டு இருந்தது. அதை யாவருங்கண்டு வியக்க மீண்டும் எடுத்துத் திருமுறையிற் கோத்தனர். பின் சமணர் மற்றொருவரது செய்ய வெண்ணி அரசனை நோக்கி இருவரும் தங்கள் தங்கள் சமயவுண்மைகள் எழுதிய ஏடுகளை ஓடும் வைகையில் இடுவோம். எதிர் ஏறும் ஏட்டினவர் உயர்ந்த சமயத்தினராகி உண்மை யறிவோமென்றனர். அவ்வாறே பிள்ளையார் இசைந்தனர். அரசனும், மந்திரி முதலியோரும் சமண முனிவரும் சூழ்ந்துவரப் பிள்ளையார் வைகை நதியடைந்தனர். முதலில் சமணர் தங்கள் சமயவுண்மைகள் எழுதிய அத்தி நாத்தி என்னும் ஏட்டை ஆற்றில் இட்டனர். அது கடலை நோக்கிச் சென்றது. சமணர் நூறுவிற் கடைதூரம் அதன் பின் சென்று பின் செல்லக்கூடாமல் மீண்டனர். இதையறிந்து அரசன் பிள்ளையாரை நோக்கினன். பிள்ளையார் அரசன் குறிப்புணர்ந்து “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக என்னுந் திருப்பதிக மோதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரைப் பிளந்து எதிர் ஏறியது. (இத்திருப் பதிகத்தில் வேந்தனு மோங்குக” என்று அருளிச் செய்ததால் அரசனுக்கு இருந்த கூனும் நிமிர்ந்தது) மந்திரியார் குதிரை மீதேறி ஏட்டைத் தொடர்ந்து செல்லவும் நிற்காமை கண்டு பிள்ளையார் (வன்னியும் மத்தமும்” என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தனர். ஏடு திரு ஏடகத்தில் நிலைபெற்றது. குலச்சிறையார் ஏட்டினைத் தொழுது சிரமேற்றாங்கி வந்து பாண்டியனுக்குக் காட்டினர். பாண்டியன் முதலானோ மெய்பூரித்தனர். சமணர்கள் தாங்கள் கூறியபடி கழுவேறினர். பிள்ளையார் திருவாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து, சிவமூர்த்தியை வணங்கினர். பிறகு திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்மை வந்துகாண அவருடன் அவருக்கு அருளிய திறத்தை “ஆலநீழல்” என்னுந் திருப்பதிகத்தால் துதித்து எழுந்தருளி யிருந்தனர். பிள்ளையார் தம்மை யெண்ணிவந்த தந்தையாருடன் பலதலங்களைத் தரிசிக்க எண்ணி அவ்விடம் நீங்கிப் பாண்டி நாட்டுப் பல தலங்களை வணங்கி அங்கிருந்தபடி ஈழநாட்டுத் தலங்களைத் துதித்துச் சோழ நாடு அடைய நினைந்தனர். பாண்டியன் பிரிவாற்றாது வருந்த அவனை நிறுத்திப் பிரிந்து, சோணாட்டுப் பல தலங்களை வணங்கி முள்ளிவாய்க்கரை யடைந்து சிவதரிசனஞ் செய்தற்கு ஆற்று வெள்ளம் தடை செய்ததால் ஒடம் விடுவோர் அஞ்சுதல் கண்டு அங்கிருந்த ஓடத்தில் திருக்கூட்டத்துடன் ஏறி “கொட்டமேகமழும்” என்னுந் திருப்பதிகம் அருளிச் செய்தனர். ஓடம் அக்கரை யடைந்தது. பிள்ளையார் சிவதரிசனஞ் செய்து திருத்தெளிச்சேரி யடைந்து அங்குச் சிவமூர்த்தியைத் தரிசித்து நீங்கு கையில் பௌத்தர்களிருக்கும் போதிமங்கை சமீபித்தது. இவரது வருகையின் ஆரவாரங் கேட்ட புத்தர் பொறாராகிப் புத்த நம்பியுடன் கூடி வாதத்திற்கு வந்தனர். பௌத்தர் வாதம் செய்ய வந்ததை யறிந்த சம்பந்தசரணாலயர் பொறாது “புத்தர் சமண் கழுக்கையர்” என்னுந் திருப் பதிகம் அருளிச் செய்து இப்புத்தன் சிரத்தில் இடிவிழக் கடவது என்றனர். புத்த நந்தி இடி விழுந்து இறந்தனன். ஒழிந்த புத்தரில் அஞ்சியகன்றோர் போக மற்றவர் வாதிற்கு வந்தனர். சம்பந்தசரணாலயர் அவர்களுடன் வாதிட்டு வென்றனர். இதனால் புத்தர் பலர் சைவராயினர். அவ்விடம் நீங்கித் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் திருநாவுக்கரசு மூர்த்திகளைக்காண விரும்பி ஆண்டு எழுந்தருளுகையில் திருநாவுக்கரசுகள் பிள்ளையார் வரவு அறிந்து எதிர்கொண்டு ஜன நெருக்கத்தினுள் புகுந்து சிவிகைதாங்கி வருவோரில் ஒருவராய்த் தாங்கி வந்தனர். பிள்ளையார் திருப்பூந்துருத்தி யடைந்தவுடன் அப்பர் எங்கு உள்ளார் என அப்பர், சிவிகை தாங்கும் பெருவாழ்வுற்று இங்கு உள்ளேன் என்று வந்தனர். பிள்ளையார் சிவிகை விட்டிறங்கி அரசுகளை வணங்க அரசுகளும் வணங்சிச் சிவதரிசனம் செய்து இருந்தனர். பின் தொண்டை நாடு தரிசிக்க எண்ணிப் பல தலங்களைச் சேவித்துத் திருவோத்தூர் அடைந்து தரிசனஞ் செய்து இருக்கையில் அத்தலவாசியாகிய சிவனடியவர் ஒருவர் வந்து நான் பரமசிவத்தின் பொருட்டுப் பயிராக்கிய பனைகள் எல்லாம் ஆண் பனைகளாகப் பலன் அற்றன. இவற்றைக் கண்ட சமணர்கள் இவைகளைக் காய்க்கச் செய்யக்கூடுமோ என்று நகைக்கின்றனர் எனக் கூறினர். இதைக் கேட்ட பிள்ளையார் பரிந்து சுவாமியை வணங்கிப் பூந்தொத்தாயின” என்னும் திருப்பதிகம் பாடி யருளினர். அதனால் ஆண் பனைகள் பெண் பனைகளாய்க் குறும்பை யீன்றன. அவ்விடம் நீங்கிப் பல தலம் சேவித்துத் திருவாலங்காட்டிற்கு அருகு அணைகையில் முன்னம் காரைக்கால் அம்மையார், மிதித்தல் அஞ்சித் தலையால் நடந்த தலம் என்று தாம் மிதித்தற்கு அஞ்சி அத் தலத்தைச் செல்லாது அருகிருக்கும் கிராமத்தில் இரவைப் போக்கினர். சிவமூர்த்தி அன்றிரவு கனவிற்றோன்றி நம்மைப் பாடுதற்கு மறந் தனையோ என்று சொல்ல விழித்துத் துதித்து “துஞ்சவருவாரும்” என்னுந் திருப் பதிகம் பாடியருளினர். பின் திருக்காளத்தி தரிசித்து அங்கிருந்த வண்ணம் வட நாட்டுத் திருப்பதிகளைப் பாடித் துதித்துத் திருவொற்றியூர் அடைந்து சிவ தரிசனஞ் செய்திருந்தனர். இது நிற்க, திருமயிலையில் வைசியர் குலத்தில் சிவபக்தியிற் சிறந்த சிவநேசச்செல்வர் என்னும் பெயர் உள்ளவர் ஒருவர் இருந்தார். இவர் திருஞானசம்பந்தமூர்த்திகளின் அற்புதச் செயல்களைக் கேட்டு அவரிடத்தில் அன்பு பூண்டு இரவும் பகலும் அவரைத் தியானித்து இருந்தனர். இவருக்கு அழகு வாய்ந்த பூம்பாவை யென்னும் ஒரு குமரி இருந்தனள். இவர் அன்பின் மிகுதியால் தமது செல்வங்களையும் பூம்பாவையையும் திருஞானசம்பந்த மூர்த்திகளுக்குக் கொடுத்து மணஞ்செய்விக்க எண்ணியிருந்தனர், பூம்பாவையார் ஒருநாள் நமது தோழியருடன் பூங்காவனத்திற் சென்று பூக்கொய்து வருகையில் பாம்பு கடித்து இறந்தனள். தந்தையார் பல விஷ வைத்தியர்களைக் கொண்டு பார்த்தும் பலனின்றாயிற்று, பின் உயிர் நீங்கிய தேகத்தை இரண்டொரு நாள் வைத்தும் காத்தும் பயனில்லாதது அறிந்து ஒருவாறு தேறி உடலைத் தகனஞ் செய்து எலும்புகளைக் குடம் ஒன்றில் அடைத்துக் கன்னிமாடத்தில் வைத்துத் திருஞானசம்பந்தர் வரவை எதிர் நோக்கி யிருந்தனர். பிள்ளையார் திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் செய்தி செட்டியார் கேட்டுத் தெரு முதலிய அலங்கரித்து எதிர்கொண்டு வணங்கினர். பிள்ளையாரும் வணங்கிச் சென்று சிவநேசாது செய்தி கேட்டுச் சிவமூர்த்தியிடம் விடைபெற்றுத் திருமயிலை யடைந்தனர். பிள் ளையார் சிவநேசரது கருத்தை முற்றுவிக்கவும் ஆருகதர், பௌத்தர் நிலைகெடவும் திருவுளங் கொண்டு சுபாலீச்சுரமுடையாரை வணங்கிச் சிவநேசரை நோக்கி உமது மகளிரின் எலும்பை நிறைத்த குடத்தைத் திருமதிலின் புறத்துக்கொண்டு வருக என்றனர். சிவநேசர் அவ்வகை செய்து குறிப்பித்தனர். பிள்ளையார் திருக்கோபுரவாலின் நேரே எழுந்தருளி எலும்பு இருக்கும் குடத்தை நோக்கி “மட்டிட்ட புன்னை” என்னுந் திருப்பதிக முதலாக ஒன்பது திருப்பதிக மோதினர். பத்தாம் திருப் பதிகத்தில் பூம்பாவை குடத்தினின்றும் (12) வயதுடன் எழுந்தனள். இவ்வற்புதத்தைக் கண்டு தேவர் பூமாரி பொழிந்தனர். பின் பிள்ளையார் சிவநேசரை நோக்கி உமது குமரியை அழைத்துச் செல்லும் என்றனர். செட்டியார், இக் கன்னிகையைத் தேவரீர்க் கென்றே நியமித்தது என்று பிரார்த்தித்தனர். பிள்ளையார் சர்வான்மாக்களும் உய்யும்படி இவளைப் பிழைப்பித்தபடியால் இவ்வார்த்தை தகாது என மறுத்தனர். இதனால் சிவநேசர், தம் குமரியை வேற்றோர்க்கு விவாகஞ் செய்விப்பதில்லை யெனக் கன்னிமாடத் திருத்தினர். பூம்பாவை சிவத்தியானத்திருந்து முத்தி யடைந்தனள், பிள்ளையார் திருமயிலை நீங்கிப் பல தலங்களைச் சேவித்துச் சீர்காழியடைந்து முருகநாயனார் திருலோக்கராயனார் முதலியவருடன் இருந்தனர். பின் சிவபாதவிருதயர் தமது குமாருக்குத் திருமணஞ் செய்விக்க எண்ணிப் பிள்ளையார்க்குக் குறிப்பித்தனர். இச் செய்தி கேட்ட பிள்ளையார் உடன்படாமை யறிந்து வேதியர் பலருக்குக் கூற வேதியர்கள் வேதவொழுக்கம் வளர்க்கவந்த தேவரீர் வேதவிதி யொழுகிக் காட்டாவிடின் யாதாம் என்றனர். அதனால் பிள்ளையார் உடன் பட்டது அறிந்து தந்தையார் திருநல்லூரில் நம்பாண்டார்நம்பியின் குமரி பிள்ளையார்க்குத் தக்கவளென்று அறிந்து அக்கன்னிகையை மணப்பெண்ணாகத் தீர்மானித்துத் திருமணநாள் கொண்டனர். பிள்ளையார் அந்நாளில் நம்பாண்டார் நம்பியின் சுற்றத்தவர் எதிர்கொள்ளத் திருநல்லூர் அடைந்து பெருமணமென்னும் ஆலயத்தை வணங்கித் திருமணப்பந்தல் அடைந்தனர். நம் பாண்டார்நம்பி விதிப்படி தமது குமரியைத் திருஞான சம்பந்தமூர்த்திகளுக்குக் கொடுத்தேனென்று கோத்திர சூத்திரங்களைக் கூறிப் பிள்ளையார் திருக்கரத்தில் நீர் வார்த்தனர். பின் பாணிக்கிரகண முகூர்த்தம் வந்த அளவின் மணமகளைப் பிள்ளையாரின் வலப்பக்கம் சேர்த்தனர். பின்ளையார் திருக்கடி சூத்திரம் புனைந்து மந்திரத் தீவலஞ்செய்து இவ்வில்லொழுக்கம் வர்தமையால் இவளுடன் எம்பெருமான் திரு அருட்கழல் சேர்வனாக என்று திருவுளங்கொண்டு சிவமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பெருமணக் கோவில் அடைந்து அடியேனையாண்ட பெருங் கருணையின்று பிரிவறக்கூட்டும் என்னுந் தோற்றத்தால் நல்லூர்ப்பெருமணம்’ என்னுந் திருப் பாசுரத்தால் உமது திருவடி அடையும் தருணம் ஈது என்று விண்ணப்பித்தனர். எல்லாமுடைய நாயகன் “ஐய” நீயும் இந்த மாதரும் இத் திருமணங்காண வந்தாரும் இச்சோதியுட்டோன்றும் பெருவழியிற் சேர்க என்று அருட்சோதி யுருவா விருந்தனர். பிள்ளையாரும் திருநீலகக்கர், நமபாண்டார் நம்பி, திருநீலகண்டயாழ்ப்பாணர் திருமணம் காணவந்த திருக்கூட்டத் தவரும் அச்சோதியுட் கலந்தனர். பின் திருவருட்சோதி மறைந்தது. (பெ~புரா.)

திருஞானசம்பந்தருடன் வாதிட்ட புத்தர்

ஈந்துசேநன், இந்துசேகன், தருமசேநன், எந்து சேநன், கனகசேகன். கனகநந்தி, புட்பநந்தி, பவணநந்தி, சுன கநந்தி, குனக நந்தி, திவணநந்தி, அநகாந்தி.

திருட அனு

பாஞ்சாலபதி சேநசித் குமாரன் இவனுக்குச் சாத்யகருமன் என்று பெயர்.

திருடநேமி

புதன் மரபில் வந்த சத்யதிருதன் புத்ரன்.

திருடவிரதன்

அங்க தேசாதிபதி, விசியன் குமரன்.

திருட்டாந்தப் போலி

திருட்டாந்தத்திற்குக் கூறிய இலக்கணம் பெறாமல் திருட்டாந் தம்போலத் தோன்றுபவை திருட்டாந்தப் போலி. அவை பதினெட்டு, சாத்தியவிகவன், சாதகவிகலன், உபயவிகலன், ஆச்ரய வீனன், அவ்யாப்தியபிதானன், விபரீதவி யாத்தியபிதானன், சாதனாவியாவிருத்தன், சாத்யாவியாவிருத்தன், உபயவியாவிருத் தன், ஆச்ரயவிரத் தீனன், வியாவிருத்திய பிதானன, விபரீ தவியாப்திய பிதானன், சந்தித்தசாத்தியன், சந்தித்தசா தனன், சந்தித் தவுபயன், சந்தித்த ஆச்ரயன், சந்தித்தசாத் யாவியாவிருத்தன், சந்தித்தசாதனாவியா விருத்தன். (சிவ~சித்.)

திருட்டாந்தம்

எதுவிற்கும் சாத்யத்திற்கும் வியாப்தியைக் கிரகிக்கும் தலம். (சிவ~சித்.)

திருணநரன்

சிவமூர்த்தியால் தேவர்களின் கர்வபங்கத்தின் பொருட்டுச் சிருட்டிக்கப்பட்ட புல்போல்வன். இவனை யெதிர்க்கத் திரிமூர்த்திகள் முயன்று பின்னடைந்னர்

திருததேவர்

தேவகன் தமரி, வாசுதேவன் பாரிகளில் ஒருத்தி,

திருததேவி

வசுதேவன் பாரி குமரன் திருவிஷ்டன், தேவகன் பெண்.

திருதன்

1. காந்தாரன் பேரன். 2. இவன் ருக்குவேதத்திற் புகழப்பட் டவன்,

திருதராஷ்டிரன்

1. கௌரவவம்சத்தவன், காந்தருவராசனாகிய அப்ட்டன் குமரனாகிய அம்சன் என்பவனது அம்சத்தால் பிறந்தவன். துரியோதனன் ஒழிந்த இவன் நூறு குமாரும் விசிரவசு குமாரர் அம்சம். இவன் விசித்திரவீரியன் பாரியாகிய அம்பிகையிடத்து வியாசராற் பிறந்தவன். இவள் தேவி காந்தாரி. இவன் மூன்று தேசத்திற்கும் தலைவன் ஆதலின் இப்பெயர் பெற்றான் என்பர். (ஆயின் திரிதராட்டானென் இருத்தல் வேண்டும். திருதராட்டரன் என்று ஆனது மரு.) இவன், குருநாட்டை அரசாண்டு தனது தம்பியாகிய பாண்டுவனை இளவரசாக்கி இருவரும் அரசாண்டு வருகையில் பாண்டு இறக்கப் பாண்டுவின் குமரர் சிறுவரர்கல்லால் அவர்களுக்குக் கல்வியோடு தனுர்வித்தை முதலியவைகளைக் கற்பித்து வளர்த்து வந்தனன். பாண்டவரது புத்தி கோசாரத்தையும் சாகசத்தையும் கண்ட துரியோதனன் பொறாமை கொண்டு தன் பிதாவிடம் முறையிட்டுக் கொண்டபடி கேட்டுப் பாண்டவரை இந்திரப்பிரத்தத்திலிருந்து வருவித்துச் சபாமண்டபம் காண் பித்துச் சகுனியால் சூதாடுவித்துக் காட்டிற்கேகினன். பாண்டவர் காடு சென்று மீண்டு நாடடைந்து யுத்த சந்தத்தராயிருக்கையில் சஞ்சயனை ஏவி அவரது கருத்தறிந்து பாண்டவர் சண்டை புரிகையில் பதினெட்டு நாளும் நடந்த செய்திகளைச் சஞ்சயனாலறிந்து யுத்தத்தில் துரியோத னாதியர் இறந்தபின் சிலகாலமிருந்து தவத்தை யடைந்து காடு சென்று நாரதரால் இனிவரும் பதவியில் குபேரனிடத்தில் யக்ஷராஜனாயிருப் பையெனக் கேட்டு வியாசரால், இறந்த மைந்தர் முதலியவரைக் கண்டு தவஞ்செய்கையில் காட்டுத் தீப்பற்றிவர அதிகப்பட்டுக் காந்தாரி, குந்தி, தஞ்சயுனுடன் மேலுலகமடைந்தவன். தருமார்ஜனுக்குப் பட்டமான பதினெட்டாம் வருஷம் இறந்தான். இவன் காந்தருவ அம்சம் 2. பாதாள வாசியாகிய நாகன். 3. சக்கிராங்கன் குமரன். இவன் தன் குலம் நீங்கித் தன் பாரியுடன் நந்தன வனத்திற் சென்று மிருத்தியு லிங்கம் பூசித்து வாணாசுரனாகப் பிறந்து குடமுழாமுழக்கினவன். (கடம்பவாபுராணம்). 4. ஒரு காந்தருவன். இவனை யிந்திரன், மருத்துச் செய்த யாகத்தில் பிரகஸ் பதியைப் புரோகிதராய்க் கொள்ள ஏவப்பட்டவன். (பார~அச்வமேதபர்வம்).

திருதராஷ்டிரன் புத்திரர் நூற்றுவர்

(1) துரியோதனன், (2) யுயுத்சு, (3) துச்சாதனன், (4) துச்சகன், (5) துச்சலன், (6) துர்ழகன், (7) விவிஞ்சதி, (8) விகர்ணன், (9) சலசந்தன், (10) சுலோசான், (11) விந்தன், (12) அநு விந்தன், (13) தூர்த்தருடன், (14) சுவாகு, (15) துர்ப்பிரதருடணன், (16) தூர்மருடணன், (17) துருமுகன், (18) தூர்க்கருணன், (19) கர்ணன், (20) சித்திரன், (21) உபசித்திரன், (22) சித்திராக்கன் (23) சாரு, (24) சித்திரா கென், (25) துர்மதன், (26). துர்பிரகாஷன், (27) விவித்சு, (28) விகடன், (29) சமன், (30) உர்ண நாபன், (31) பத்ம நாபன், (32) நந்தன், (33) உபருந்தன், (34) சேநாபதி, (35) சுடேணன், (36) கண்டோதரன், (37) மகோதரன், (35) சித்திரவாகு, (39) சித்ரவர்மா, (40) சுவர்மா, (41) துருவிரோசான், (42) அயோவாகு, (43) மஹாவாகு, (44) சித்திரசாபன், (45) சுகுண்டலன், (46) வீமவேகன், (47) வீமபலன், (48) பலாகன், (49) வீமவிக்ரமன், (50) உக்ராயுதன், (51) வீமசான், (52) கனகாயு, (53) திருடாயுதன், (54) திருடவாயா, (55) திருடகத்ரன், (56) சோமகீர்த்தி, (57) அநூதரன், (58) சராசந்தன், (59) திருடசந்தன், (60) சத்தியசந்தன், (61) சகச்சிரவாகு, (62) உக்கிரச்சிரவா, (63) உசாசேநன், (64) சேநாங், (65) மகமூர்த்தி, (66) அபராசிதன், (67) பண்டிதகன், (68) விசாலாக்ஷன், (69) துராதரன், (70) திருடகத்தன், (71) சுகத்தன், (72) வாதவேகன், (73) சுவர்ச் சசன், (74) ஆதித்யசேது, (75) வெகுவாதி, (76) நாகத்தன், (77) அநுயாயி, (78) நிஷங்கி, (79) கவசி, (80) தண் (81) தண்ட தரன், (82) தனுக்கிரகன், (83) உக்கிரன், (84) பீமரதன், (85) வீரன், (66) வீரவாகு, (87) அலோலு பன், (88) அபயன், (89) இரெளத்திரகர்மன், (90) திருடாதன், (91) அநாதிருடியன், (92) குண்டபேதன், (93) விராவி, (94) தீர்க்கலோசான், (95) தீர்க்கவாகு, (96) மகாவாகு, (97) வியுடோரு, (98) கனகாங்கதன், (99) குண்டசித்து, (100) சித்திரகன்.

திருதராஷ்டிரை

தருமன் புதரி. விச்சுளிகளைப் பெற்றவள்.

திருதவன்மா

ஒரு சோழன். திருவேங்கடமலை யுண்டான காலத் திருந்தவன்.

திருதவரதன்

ஒரு வேதியன். இவன் மனைவி, புத்திரனைக் கூடிய பாபம் பற்ற தௌதபாப தீர்த்த ஸ்நாகஞ்செய்து நல மடைந்தாள். (பிரமபுராணம்).

திருதி

1 மனுவென்னும் ஏகாதசருத்திரன் தேவி. 2. (சூ.) விபிலாசுவன் குமரன். 3. தக்ஷன் பெண். தருமன் தேவி. 4. விசயன் குமரன். இவன் குமரன் திருதவிருதன் 5. கபிலன் தேவி. இவளில்லாவிடம் தைரியமின்றி யிருக்கும்.

திருதிவிருதன்

1. ஏகாதச ருத்திரருள் ஒருவன், தேவி தீக்ஷை. 2. திருகி குமரன். இவன் குமரன் சத்தியகர்மா.

திருதுசேது

தெக்ஷசாவர்ணி மதுப் புத்திரன்.

திருத்தக்கதேவர்

இவர், சோழர் குலத்துதித்துக் கல்வியில் வல்லவராய்த் தம் மத சித்தாந்தமாகிய ஆருகதசமய வுண்மையறிந்து துறவு பூண்டு இருந்தனர். இவர் மதுரை நகரடைந்து சங்கப் புலவர்களுடன் பழகி அளவளாலியிருக்கையில் சங்கத்தவர்கள், உங்கள் சமயத்துப் புலவர்கள் வீட்டு நூல் கூறவல்லரேயன்றிக் காமநூல் கமுறும் வலியிலர் எனத் தேவர், அங்ஙனம் அன்று அவர்கள் அதனை வெறுத்துச் செய்திலர். காமச்சுவை யறியாதாரன்று என்றனர். அது உண்மையாயின் நீர் ஒரு நூல்செய்க வென்றனர். தேவர் அதை மனதிற்கொண்டு தமது எண்ணத்தைத் தமது ஆசிரியர்க்குத் தெரிவிக்க, ஆசிரியர், அப்பொது அவ்வழி யோடிய நரியைக் காட்டி இந்நரிச் சாதியை முன்னிட்டு ஒரு சரிதை செய்யக் கட்டளையிட்டனர். தேவர் அதனைச் சிரத்திற்கொண்டு யாக்கை, செல் வம் முதலியவற்றின் நிலையாமை பொருளாக நரிவிருத்தம் என ஒரு நூல் செய்து ஆசிரியருக்குக் காட்டினர். ஆசிரியர்களிப்புற்றுச் சீவகன் சரிதையைக் காவியமாக்க என்று கடவுள் வாழ்த்துப்பாடி யருளினர். திருத்தக்கதேவர் ஆசிரியர் பாடிய “செம் பொன்” என்னும் கவியைச் சிரமேற் கொண்டு தாழம் “மூவா முதலா” என்னும் ஒரு செய்யுளியற்றி யாசிரியர்க்குக் காட்டினர். ஆசிரியர், திருத்தக்கதேவர் செய்ததே நன்றாயிருத்தல் கண்டு அதனை முன்வைக்கக் கட்டளையிட ஆசிரியர் கட்டளைக்கஞ்சி அதனை முன்வைத்து எட்டு நாட்களில் சீவக சிந்தாமணியைப் பாடி முடித்து ஆசிரியர்க்குக் காட்டினர். ஆசிரியர் காவி படத்தைச் சங்கத்தவர்க்குக் காட்டக் கட்டளையிட அவ்வகைப் பாண்டியனவைக்களத் துச்சங்கத்தார் முன்பு கூறச் சங்கத்தவர் கேட்டுக் களித்தனர். அவர்களுட் சிலர் இவர் இளைமைப்பருவந் தொடங்கித் துறவு பூண்டிருத்தவின் காமச்சுவை கண்டவர் போல் கவிபாடியிருத்தல் எண்ணத்தக்கதெனச் சந்தேகித்தலைத் தேவருணர்ந்து இருப்புக் கட்டியைப் பழுக்கக்காய்ச்சு வித்து நான் இளைமை முதல் துறவுபூண்டு தீநெறி யொழுகாதிருத்தல் உண்மையாயின் இத்தீ என்னைச்சுடா தொழிக எனக் கட்டியைத் தழுவினர். புறங்கூறிய சிலர் நடுங்கித் தேவரை வேண்டிக் கொள்ளத் தேவர் அவர்களை நோக்கி நீங்கள் எனது துறவொழுக்கத்தைப் பலாறியச் செய்தீர் ஆதலின் நன்மையே புரிந்தீரெனக் களிப்பித்து, ஆசிரியரைச் சேர்ந்திருந்தனர். இவர் செய்த நூல்கள், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி. இவர் திருவள்ளுவரிருந்த மயிலை நகரத்தில் அவர் காலத்திருந்தா ரென்றும் கூறுவர். (சீவக சிந்தாமணி.)

திருத்தங்கால்

பாண்டி நாட்டிலுள்ளதோரூர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சமீபமாகவுள்ளது. (சிலப்பதிகாரம்).

திருத்தாமனார்

சேரமான் வஞ்சனைப்பாடிப் பரிசுபெற்றவர். (புற. நா.)

திருத்திரன்

பாஷூ எனும் அரசனுக்குப் புத்திரன், இவன் ருக்வேதத்திற் புகழ்ந்து கூறப்பட்டவன்.

திருத்தொண்டர் புராணம்

சிவனடியவர் சரிதை சொன்ன நூல். இது சேக்கிழார் சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்டது

திருத்தொண்டாந்தாதி

நம்பியாண்டார் நம்பிகளாலருளிச் செய்யப்பட்ட தொண்டர் சரிதை.

திருத்தோணியப்பர்

இவர் விஜயக்கத்தரசராகிய கிருஷ்ணதேவ மகராயர் காலத்திருந்த ஒரு புலவர். தத்வப்ரகாசரைக் காண்க.

திருநகரிப்பிள்ளை

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், ஸ்ரீ வைஷ்ணவர். ‘ (குருபரம்பரை.)

திருநகர்

வேசாலி என்றும் அரசனது நகர். (பெ. கதை)

திருநறையூர் நம்பி

திருமங்கையாழ்வார்க்கு ஆசாரியர்.

திருநாளைப்போவார் நாயனார்

இவர் சேரணாட்டில் ஆதனூரில் புலையர் குலத்தில் அவதரித்து நந்தனார் எனத் திருநாமம் பெற்று, சிவபக்தியுடையராய்ச் சிவாலயங்களுக்குப் பேரிகை முழவு, யாழ் முதலிய வைகளுக்குத் தோல், வார், நரம்பு, கோரோசனம் உதவி வருவர். இவர் பல சிவாலயங்களையும் தரிசிக்க விரும்பித் திருப்புன் கூரில் சுவாமியை நேரே தரிசிக்க எண்ணிச் சிவமூர்த்தியை வேண்டச் சிவபிரான் தமக்கு முன்னிருந்த நந்தி பிரானை விலக்கிக் காட்சி தந்தருளினர். இவர் சிதம் பரத்தில் நடராசமூர்த்தியைச் சேவிக்க வெண்ணித் தமக்கு அத்தலத்துள் செல்லும் ஆதிக்க மில்லாமையால் மனந்தளர்ந்து ஆசை யெழும்போ தெல்லாம், ‘நாளைப் போவேன், நாளைப் போவேன்’ என்று பலமுறை சொல்லிக்கொண்டிருந்து துணிந்து அத்தலத்தை யடைந்து உள் செல்லாது திருவெல்லையை வலஞ்செய்து கொண்டிருக்க நடராஜமூர்த்தி அவர் கனவிற்சேன்றி நீ நெருப்பில் மூழ்கி நம்மை வந்து தரிசிப்பையென்று அருளிச்செய்து தில்லைவாழந்தணருக்கும் திருநாளைப்போவார் பொருட்டுத் தீ வளர்த்தக் கட்டளையிட்டு மறைந்தனர். தில்லை வாழந்தணர் இறைவன் சொற்படி நந்தனாரிடம் சென்று தீவளர்த்த நந்தனார் தீயினை வலம் வந்து உள்புகுந்து முனிவர் உருக்கொண்டு வேதி யராய் வந்து சுவாமி சந்நிதானத்து நடராஜமூர்த்தியைச் சேவித்து மறைந்தனர். (பெரிய புராணம்).

திருநாவுக்கரசு சுவாமிகள்

திரிமுனைப் பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குலத்தில் குறுக்கையார் குடியில் புகழனார்க்கு மாதினியார் வயிற்றில் திலதவதியார் என்னும் ஒரு புத்திரியும் இரண்டாவது இவரும் அவதரித்தனர். இவர்க்குத் தந்தையார் மருணீக்கியார் எனத் திருநாமம் இட்டுக் கல்வி முதலிய கற்பித்து வந்தனர். திலதவதியாருக்கு மணப்பருவம் சமீபித்தவுடன் இராஜாவிடத்தில் சேனாதி பதித்தொழில் புரிந்து வருபவரும் தம் குலத்துக் கொத்தவருமாகிய கலிப்பகையார் திலதவதி யாரைத் தமக்கு மணஞ்செய்துதரக் கேட்கத் திலதவதியாரின் தந்தை உடன்பட்டிருந்தனர். இவ்வகை இருக்கையில் அரசன் ஏவலால் கலிப்பகையார் யுத்தத்திற்குச் சென்று அங்கே நெடு நாளிருந்தார். இங்குப் புகழனார் காலஞ்சென்றார். மாதினியாரும் சககமனம் அடைந்தனர். முன் சொன்ன கலிப்பகையார் யுத்தத்தில் இறந்தனர். ஆதலால் திலதவதியார் எனக்கென நியமித்த கணவர் இறந்தனர். ஆதலின் நானும் இறப்பே னெனத் துணிந்து இருக்கையில் மருணீக்கியார் தமக்கையாரை நோக்கி உம்மைத் தாய் தந்தையர்க்குப் பதிலாக எண்ணியிருக்கிறேன்; நீர் இறப்பிராயின் உமக்கு முன் நானும் இறப்பேன் என மருணீக்கியார் பொருட்டு உடல் துறவாது உயிருடன் இருந்தனர். மருணீக்கியார் கல்வியில் வல்லவராய் யாக்கையும் செல்வழம் நிலையாமை யுணர்ந்து தமது செல்வங்களை அறவழியிற் செவவு இட்டுப் பாடவிபுத்ரமடைந்து சமணர் பள்ளியுட் சென்று அவர்கள் போதனைக்குட்பட்டுச் சமணமதம் சார்ந்து அதை மெய்ச்சமயமெனக் கொண்டு அச்சமயத்தில் வல்லவராயினர். சமணர் இவரது வல்லமையறிந்து அவருக்குத் தருமசேனர் என்கிற பெயர் தந்து தங்களுக்கு ஆசிரியரும் ஆக்கினர். இது நிற்க, திருவாமூரிலிருந்த திலதவதியார் சிவபக்தி முதிர்வால் சிவபுண்ணியஞ் செய்ய விரும்பித் திருவதிகை வீரட்டானம் சென்று சிவபணி விடை செய்து வருகையில் தன்னுடன் பிறந்தார் சமணசமயத்தில் ஆழ்ந்து இருப்பதை யெண்ணி வருந்திச் சிவமூர்த்தியைத் துதித்து அவரை ஆட்கொள்ள வேண்டுமென வேண்டினர். சிவமூர்த்தி திலதவதியாரின் சுவப்பனத்தில் அவனைச் சூலைநோய் தந்து ஆட்கொள்வோம் மனக் கவலை யொழிக என்று திருவாய் மலர்ந்து மறைந்தனர். பரமசிவம் திருவாய் மலர்ந்த படி சூலைநோய் தருமசேனரைப் பற்றி விருத்தியது. சமணர் தங்களுக்குத் தெரிந்த மந்திர ஔஷதங்களைப் பிரயோகித்தும் தணியாயையால் கைவிட்டனர். மருணீக்கியார் இச்செய்தியைத் தம் தமக்கைக்குத் தூதின் வழி தெரிவித்தனர். தூதன் திருவதிகை வந்து திலதவதியார்க்குத் தெரி வித்தனன். திலதவதியார் பாமசிவத்தின் பெருங்கருணையை யெண்ணி நான் சமணர் இருக்கையில் வரேன் என்று கூறினர். தமக்கையார் வராமை நோக்கித் தாமே ஒருவரும் அறியாமல் பாயுடை, உறி, குண்டிகை முதலியவற்றை யுதறிச் சூலை துணையாக ஆப்தராய் உள்ளார் கைலாகு கொடுக்கத் தமக்கையாரிடம் வந்து நீரே துணை உம்மையே ஆதரவு என்று அடைந்தேன் என்று திருவடியில் விழுந்தனர். திலதவதியார் தம் தம்பியாரை யெழுந்திருக்கச் செய்து இது பரமசிவம் ஆட்கொள்ளச் செய்தது என்று ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைத் தியானித்து மருணீக்கியார்க்கு விபூதி கொடுத்தனர். மருணீக்கியார் அதை ஆவலுடன் தமது தேக முழு வதும் பூசிக்கொண்டனர். திலதவதியார், மருணீக்கியாரைத் திருப்பள்ளி யெழுச்சியில் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். மருணீக்கியார் சுவாமியைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கி நின்று திரு அருளால் தமிழில் பாடும் வல்லமை அடைந்து ”கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனும் திருப்பதிகம் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கியது. மருணீக்கியார் உடல் பூரிக்க ஆனந்தத் தழுந்தி வணங்கு கையில் சிவமூர்த்தி அசரீரியாய் நீ அற்புத மதுரமாகிய தேவாரத்தால் நம்மைத் துதித்தபடியால் உனக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயருண்டாகுக என்று மறைந்தனர். அரசுகள் தாம் மனமொழி மெய்களால் திருத்தொண்டு செய்யத் திருவுளங் கொண்டு தியானம், பாடுதல், உழவாரப் பணிவிடை இவற்றை விடாது இயற்றினர். இவ்வகைச் சிவத்தொண்டு செய்து இருக்கையில் சமணர்கள் இவர் சைவரானதைப் பாடலிபுத்ரத்தாசன் அறியின் நம்மைத் தொலைத்து அவனும் சைவனாவன் என நீங்கிப் பல்லவராயனிடம் வந்து தருமசேனர் பொய்யாகச் சூலைநோய் என நடித்துச் சைவசமயம் புகுந்தனர். ஆதலால் அவரையழைத்துத் தண்டிக்கவேண்டும் என்றனர். பல்லவன் உடன்பட்டுச் சேனைகளை அனுப்பத் திருநாவுக்கு அரசுகள் நாமார்க்கும்” என்னுந் திருப்பதிக மோதினர். பின்னும் மந்திரிகள் வேண்டியழைக்க நமக்கு வரும் அபாயங்கட்குச் சிவமூர்த்தி யிருக்கிறார் என்று அரசன் எதிர் நின்றனர். பல்லவன் இவனுக்கு யாது தண்டனையெனச், சமணர் நீற்றறையில் இடுவது, ஆகும் எனப் பல்லவன் உடன் பட்டு ஏவலாளரிடம் கூற, அவர் கள் அரசுகளை நீற்றறையிலிட்டனர். அரசுகள் “மாசில் வீணையும் மாலை மதியழம் ” என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு நீற்றறையில் பொய்கையில் இருப்பது போல் இருந்தனர். எழுநாட் சென்றபின் பல்ல வன் நீற்றறையைத் திறந்து பார்க்கக் கூற அரசுகள் களிப்புடன் இருக்கக்கண்டு ஏவலாளர் கூறினர். சமணர் அரசனை நோக்கி நம்மதத்தில் கற்றமந்திர வலியால் பிழைத்தனன். ஆதலால் நஞ்சூட்டவேண்டும் என அரசன் அவ்வகைக் கட்டளையிட்டனன். பிறகு நஞ்சூட்டப் பட்டும் அரச கள் களிப்புடன் இருந்தனர். இதை அரசன் கேட்டு இவனை என்ன செய்வது எனச், சமணர்கள் யானையை விட்டுக் கொல்ல ஏவுக என்றனர். பல்லவன் அவ்வகையே யானையையும் பாகரையும் ஏவுவிக்க அரசுகள் யானையின் முன் “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்” என்னுந் திருப்பதிகம் ஓதினர். யானை யரசுகளை வலஞ் செய்து வணங்கிப் போயிற்று பாகர் கொல்லத் தூண்டினர். யானைப் பாகரையும் எதிர்ப்பட்டவரையும் கொன்று நாசமாக்கியது. சமணர் அரசனையடைந்து எங்கள் மந்திரத்தைக் கொண்டே எங்களை ஒட்டினன் எனப் பல்லவன் கோபித்து இவனை யாது செய்வது என்றனன். சமணர் கல்லைக்கட்டிக் கடலில் இடுவது தரம் என்ற னர். அவ்வகை அரசன் சம்மதிக்க ஏவலாளர் கற்றூணிற் பிணித்துக் கடலி லிட்டனர். அரசுகள் சிவமூர்த்தியின் திருவடி துணையாப்பற்றி ‘சொற்றுணை வேதியன்’ எனும் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடக் கல் தெப்பமாக மிதந்து அரசுகளைத் தாங்கிச் சென்று திருப்பாதிரிப் புலியூர் கொண்டு சேர்த்தது. அரசுகள் அத்தலத்தில் எதிர்கொண்ட சிவனடியவர் களுடன் சென்று ஆலயத்தையடைந்து, “ஈன்றாளுமாய்” எனத் திருப்பதிகம். பாடி அவ்விடத்து எழுந்தருளியிருந்தனர். பின் திருவதிகை தரிசிக்க ஆவல் கொண்டு அவ்விடம் நீங்கி அத்தலவாசிகள் எதிர்கொள்ள ஆலயத்துள் சென்று “வெறிவிரவு” எனவெடுத்து “ஏழையேன் பண் டிகழ்ந்தவாறே” எனத் துதித்திருக்கையில் முன் தீங்கு செய்த பல்லவன் திருவதிகை வந்து அரசுகளை வணங்கிச் சைவனாயினான். பாடலிபுரத்த்திலிருந்த காடவன் என்னும் அந்நாட்டரசனும் சமண சமயம் பொய்யென்று அறிந்து சமணப்பள்ளிகளை யிடித்துக் கற்களைக் கொண்டுவந்து திருவதிகையில் குண தரீச்சுரம் கட்டினான். பின் அரசுகள் பல தலங்களையும் வணங்கப் பேர் அவாவுடையராய்ப் பல தலங்களைச் சேவித்துத் திருத்தூங்கானைமாடஞ்சென்று சிவமூர்த்தியை நோக்கி அடியேன் சமண சமயத்தோடு அழுக்கடைந்த இந்தத் தேகத்துடன் உயிர் வாழேன் அடியேன் உயிர் வாழ்தற்பொருட்டுத் தேவரீர் திருவிலச் சினையாகிய இடபக்குறியையும் சூலக்குறியினையும் பொறித்தருள வேண்டும் என்று “பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்” எனத் திருப்பதிகம் பாடி விண்ணப்பிக்க அவ்வகை ஒரு பூதம் அவ்விலச் சினைகளை யிட்டது. அவ்விடம் நீங்கிப் பல தலம் தரிசித்துச் சிதம்பரத்தில் உழவாரத் திருத்தொண்டு செய்து திருப்பதிகம் பாடியிருந்தனர். இவ்விடம் அரசுகள் இருக்கையில் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மகிமைகளைக் கேட்டு அவரை வணங்கவேண்டும் என்னும் அவாவினால் சிவமூர்த்தி யிடம் விடைபெற்றுச் சீர்காழிக்கு எழுந்தருளினர். இவரது வரவையறிந்த திருஞானசம்பந்தர் எதிர்கொள்ள அரசுகளும் கண்டு வணங்கப் பிள்ளையார் அப்பரே என்று வணங்கினர். இருவரும் ஆலயத்துட் சென்று வணங்கிப் பின் அவரிடம் விடைபெற்றுச் சோணாட்டுப் பல தலங்களை யும் வணங்கித் திருச்சத்தி முற்றம் என்னும் தலமடைந்து கோவாய் முடுகி” என்னுந் திருப்பதிகத்தால் திருவடியைச் சிரத்து வைத்து அருளல்வேண்டும் என்று விண்ணப்பித்தனர். பரமசிவம் திருநல்லூருக்கு வா” என்று கட்டளை யிட்டனர். அவ்வகையரசுகள் திருகல்லூரடைந்து தரிசிக்கையில் சிவமூர்த்தி திருவடியைச் சிரத்தில் சூட்டியருளினர். அரசுகள் நினைத்து திருவடி யென் தலைமேல் வைத்தார்” என்ற திருப்பதிகம் ஓதினார். பின்னும் பல தலங்களைத் தரிசித்தித் திங்களூர் வழியாகச் செல்லுகையில் அப்பூதியடிகள் தம்மிடத்தில் நின்பேரன்பு வாய்த்தவராய் இருத்தல் கண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பூதி அடிகள் அப்பருக்கு அமுது படைத்தல் வேண்டித் தமது புத்திரர் இருவரில் மூத்த திருநாவுக் கரசுகளை நோக்கித் தோட்டத்திற்சென்று வாழைக் குருத்துக் கொண்டுவரச் சொல்லினர். அக்குமரர் இலை கொய்கையில் பாம்பு தீண்ட விஷம் ஏறுவதன் முன் இலையை வீட்டில் இட்டுக் கீழே விழுந்து இறந்தனர். அப்பூதியார், சவத்தை மறைத்து இனி நாயனார் அமுது கொள்ளாரே என்று தடுமாற்றமின்றி அரசுகளை அமுது செய்ய அழைத் தனர். அரசுகள் அவ்விடம் நடந்தவைகளைத் திருவருளால் உணர்ந்து அவரது அன்பை நினைந்து திருவருள் சுரந்து சவத்தைச் சிவாலயத்து முன்னே கொணர்வித்து ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகம் பாடினர். உடனே அப்புத்திரர் உயிர்பெற்றனர். அப்பூதியடிகள் உயிர் பெற்றதற்கு மகிழாமல் அரசுகள் அன்னம் புசியாததற்கு வருந்து தலைக்கண்ட அரசுகள் அவரிடம் அமுதுண்டு சொல்மாலை” என்னுந் திருப்பதிகத்தில் அவரைச் சிறப்பித்து நீங்கிப் பல தலங்கள் சேவித்து நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றின் மையைச் சிறப்பித்துப் பாடிப் பல தலங்களுக்குச்சென்று சேவித்துத் திருவாரூரை வணங்கித் திருப்புகலூரில் இருக்கையில் திருஞான சம்பந்தமூர்த்திகளைக் கண்டு அவருக்குத் திருவாரூரினது திருவாதிரைப் பெருமைகளைச் சொல்லிப் பின் திருவாரூர் சென்று திரும்பிய திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு முருக நாயனார் மடத்தில் சிறுத்தொண்டநாயனார், திருநீலநக்க நாயனாருடன் இருந்தனர். சில நாள்களுக்குப் பிறகு அரசுகள் திருஞானசம்பந்த சுவாமிகளுடன் பலதலங்களை வணங்கிக் குங்கிலியக்கலய நாயனார் செய்த விருந்து உண்டு திருக்கடவூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருவீழிமிழலை யடைந்து பஞ்சத்தின் பொருட்டுச் சிவமூர்த்தி யருளிய படிக்காசு பெற்றுச் சிவனடியவரை உண்பித்துப் பஞ்சம் நீங்கியவுடன் பல தலங்களை வணங்கி வேதாரணியம் எழுந்தருளி வேதம் பூசித்து மூடப்பட்டிருந்த திருக்கதவம் திறக்கப் பாடித் தரிசித்து அருவித்திரை செய்கையில் “நாம் வாய்மூரிலிருப்போம் வா” என அப்பர் “எங்கே யென்னை” என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு செல்லச் சிவமூர்த்தி இவருக்குத் தரிசனம் தந்த கோலத்துடன் முன்னடந்தனர். நெடும் பொழுது அம்முன் னடப்பவரை நெருங்கிலர். சிவமூர்த்தி சமீபத்தில் காட்சி கொடுப்பவர் போல் அருகிருக்கும் ஆலயத்தில் மறைந்தனர். அப்பர் திருவாய்மூருக்குச் சென்றதறிந்த ஆளுடைய பிள்ளையார் திருவாய்மூரடையச் சிவமூர்த்தி இருவருக்கும் தரிசனந் தந்தருளினர். பின் இரு நாயன்மார்களும் வேதாரணியம் சென்று இருக்கையில் திருஞானசம்பந்தர் பாண்டி மாதேவியாரனுப்பிய திருமுகத்தால் மதுரைக்கு எழுந்தருளத் திருநாவுக்கரசுகள் பிரிதற்கஞ்சி நாகைக்காரோண முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவாவடுதுறை யடைந்து திருஞானசம்பந்தமூர்த்தி களுக்குப் பொன் கொடுத்ததை “மாயிரு ஞாலமெல்லாம்” என்னுந் திருப்பதிகத்தாற் பாடிப் பழையாறையிற் சென்றார். அங்கே வட தளியென்னும் ஆலயத்தில் சிவலிங்க மூர்த்தியைச் சமணர் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று அமுது செய்யாமல் திரு உருவைத் தரிசித்தன்றிச் செல்லேனென இருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவிற் சென்று தாமிருக்கும் ஆலயத்தின் அடையாளங் கூறித் தம்மை வெளிப்படுத்தித் தரிசிக்க நாவுக்கரசு விரும்புகிறான் ஆதலால் சமணரைப்போக்கி ஆலயம் செய்க என்றனர். மறுநாள் அரசன் சமணர்களை யோட்டி நாவுக்கரசுகளை வணங்கி ஆலயம் சமைத்தனன், நாவுக்கரசுகள் “தலை யெலாம் பறிக்கும் சமண்” என்னும் திருப்பதிகம் பாடித் துதித்தனர். பின் பலதலங்களை வணங்கித் திருப்பைஞ்ஜீலி செல்லுகையில் பசி தாகத்தால் வருந்தி மனந் தளர்ந்து சென்றனர். இவரது வழியிளைப்பு நீக்கச் சிவமூர்த்தி வேதியராய் ஒரு தோப்பும் குளமும் உண்டாக்கிப் பொதி சோறும் வைத்து இருந்தனர். இவரது வரவை நோக்கிக் கிட்டி வழிநடையால் வருந்தினீர் போலக் காண்கிறது. என்னிடம் பொதிசோறு இருக்கிறது; அதையுண்டு இக்குளத்துச் சலத்தைப் பானஞ் செய்து போக என்றனர். வேதியர் பொதிசோற்றைத் தா அப்பர் வாங்கிப் புசித்து நீருண்டு இருக்கையில் வேதியர் நீர் எங்கே போகின்ரீர் என அப்பர் திருப்பைஞ்ஜீலி செல்கின்றேன் என வேதியர் நானும் அவ்விடமே செல்கின்றேன் என உடன் சென்று திருப்பைஞ்ஜீலி சென்றவுடன் மறைந்தருளினர். அப்பர் அதுகண்டு ஆநந்தக் கண்ணீரொழுக அழுது அலறி வணங்கித் திருத் தொண்டு செய்து கொண்டிருந்தனர். பின் அத்தலம் நீங்கித் திரு அண்ணாமலை முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு தொண்டை நாட்டுத் திருப்பதிகளை வணங்கித் திருக்காளத்தி, திருப்பருப்பதம் சேவித்து அவ்விடம் நீங்கி உத்தர கைலாசத்தில் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோலம் தரிசிக்க விரும்பிக் காசியையடைந்து நீங்கி இராப்பகல் நித்திரையின்றி உணவு இன்றி நடந்தனர். கால்கள் இரண்டும் தேய்ந்தன. கைகள் ஆதரவாக நடந்தனர். அவையும் தேய, மார்பினால் நகர்ந்து சென்றனர். அது முரிய உருண்டு சென்றனர். அதனால் தேக முழுதும் உறைய அப்பர் அன்பால் மனம் தளராது நகருதற்கு முடியாமையால் வழியிற் கிடந்தனர். பரமசிவம் இவரது கருத்தை முற்று வித்தற்கும் தமிழ் வேதம் தமிழ் நாட்டில் பரவவும் வேண்டி ஒரு தடாக நிருமித்து முனிவர் உருவுடன் எதிரில் தரிசனம் தந்து நீர் எங்கு ஏகுகின்றீர் என்றனர். அப்பர் சிவ சின்னங்களுடன் இருப்பவரைக் கண்டு திருக்கைலைக்குச் சிவதரிசனத்திற்குச் செல்கின்றேன் என முனிவர் தேவர்களாலும் அடையப்படாத அக்காட்சி மனிதர்களுக்கு எளிதோ திரும்புதலே நன்று என்றனர். அப்பர் அத்தரிசனம் செய்தாலல்லாமல் அநித்திய உடல் கொண்டு திரும்பேன் என்றனர். சிவமூர்த்தி இவரது துணிவு நோக்கி ‘நாவுக்கரச” எழுந்திரு எனலும் குறைந்த உறுப்புக்களைப் பெற்று அப்பர் எழுந்து அஞ்சலி அத்தராய்த் தமது குறை வேண்டினர். பரமசிவம் அப்பரை நோக்கி இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்து அத்தலத்தில் கைலாசகிரியில் நாம் வீற்றிருக்கும் திருக்கோலம் கண்டு தரிசி என்று கட்டளையிடலும் அப்பர் அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபித்துத் தடாகத்தில் ஸ்நானஞ்செய்து திரு வையாற்றிலிருக்கும் ஒரு வாவியில் எழுந்து கரை ஏறி வழியிலே சராசரங்கள் தத்தம் துணையுடன் இருத்தலைக் கண்டு அவற்றைச் சிவசத்தி யுருக்களாகத் தியானித்துத் திருக்கோயில் அடைந்து திருக்கைலாச தரிசனம் கண்டு ஆநந்தங்கொண்டு வணங்கினர். பின் அவ்விடம் நீங்கித் திருப்பூந்துருத்தி சேர்ந்து ஒரு திருமடம் கட்டு வித்துத் திருத்தாண்டகம் பாடிக்கொண்டிருக்கையில் பாண்டி நாட்டில் சைந மதங் களைந்து சைவம் பரவச்செய்து தாம் இங்கிருப்பதைத் தேடி எழுந்தருளுகின்ற திரு ஞானசம்பந்தர் வரவுக் கெதிர்கொண்டு சென்று ஒருவருமறியாமல் சன நெருக்கத்தினுள் புகுந்து அம்மூர்த்திகளின் சிவிகைகளைத் தாங்கி வருவார் ஆயினார். திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்தி அடைந்து அப்பரைக் காணாமையால் அப்பர் எங்குற்றாரென இங்குற்றேன் என்று எதிர் சென்று வணங்கிச் சிவதரிசனம் செய்து அளவளாய் இருந்தனர். பின் திருநாவுக் கரசுகள் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள எண்ணிச் சென்று நின்றசீர்நெடுமாற நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் வணங்கித் துதிக்கச் சில நாளிருந்து பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அனைத்தும் சேவித்துத் திருப்புகலூர் அடைந்தனர். இத் தலத்தில் அரசுகள் உழவாரத் தொண்டு செய்கையில் இவரது வைராக்கியத்தை உலகத்தவர்க்குத் தெரிவிக்கச் சிவபெருமான், உழவாரப் படையிடும் தோறும் பொன், நவமணி முதலிய தோன்றச் செய்தனர். அரசுகள் அவற்றைப் பருக்கைக் கற்கள் போல உழவாரப் படையில் ஏந்திக் குளத்தில் எறிந்தனர். பின் சிவாஞ்ஞையால் அரம்பையர் இவரிடம் வந்து பலவாறு மயக்கியும் இவர் தம் தொண்டிலிருந்து தமது வினையை முன் னிலையாக்கொண்டு நான் திருவாரூரில் எழுந்தருளிய சிவமூர்த்திக்கு ஆளானேன் உங்களால் ஆட்டுண்ணேன் என்னுங் கருத்தால் “பொய்ம்மாயப் பெருங்கடலில்” என்னுந் திருப்பதிகம் பாடினர். இதனால் அரம்பையர் தங்கள் கருத்து முற்றாமல் வணங்கிச் சென்றனர். அரசுகள் தம்மைத் திருவடிக்கீழிருத்திடும், என்னுங் கருத்தால் “எண்ணுகேன்” என எடுத்து “உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே” எனுந் திருப்பதிக மருளிச் சிவபெருமான் திருவடியை யடைந்தனர். இதில் சுருங்கிய கதைகளைத் திருஞானசம்பந்தர் கதையைக் காண்க. இவருக்குத் திருநாவுக்கரசுகள், மருணீக்கியர், தருமசேனர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு எனவும் பெயர். இவர் அருளிச் செய்த திருமுறைகள் (3). (பெரிய புராணம்).

திருநாவுடையபிரான் தாசர் அண்ணர்

இவர் எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் கோமடத் தாழ்வாருடைய திருவம்சத்தவர். இவர் கொல்லிக்காவல் தாசர் குமாரத்தியை மணந்து சிக்கலில் கொல்லிக்கா வல்தாசர் வீட்டிலிருந்தார். இவர் தம் மாமனார் திருநாட்டுக் கெழுந்தருளின பின் தம் மனைவியரை அழைத்துக் கொண்டு திருநகரிக் கெழுந்தருளி யிருந்தவர். இவர் குமாரர் மணவாள மாமுனிகள்.

திருநிலையகம்

1. ஒரு வித்தியாதர நகரம். 2. போதன நகரில் ஒரு நந்தவனம்.

திருநீற்றுச்சோழன்

அநபாயச் சோழனுக்கொரு பெயர்.

திருநீற்றுமதில்

கோச்செங்கட் சோழனைக் காண்க.

திருநீலகண்டநாயனார்

இவர், சிதம்பரத்தில் குயவர் குலத்தில் திரு அவதரித்துச் சிவனடியவர்களுக்குத் திருவோடு தரும் நியமம் பூண்டு சிற்றின்ப இச்சையுடையராய் நிகழ்வதை மனைவியா எறிந்து இனி எம்மைத் தீண்டில் திருநீலகண்டம் என ஆணையிட்டனர். இதைக் கேட்ட நாயனார், அஞ்சி எம்மையெனப் பன்மையாய்க் கூறியதால் எந்த மாதரையுந் தொடாமல் கொண்ட வொழுக்கம் தவறாது ஒழுகி வரும் நாட்களில் சிவமூர்த்தி இவரது ஒழுக்கத்தை உலகறிந்துய்யச் சங்கமராய் எழுந்தருளி ஒரு ஓட்டினை அவரிடத்துக் கொடுத்து நாம் மீண்டும் கேட்கும் போது இதனைக் கொடுக்க எனப்பணித்து, கொடுத்த ஓட்டினை மாயையால் மறைத்து, மீண்டும் நாயனாரிடம் வந்து ஓட்டினைக் கேட்டனர். நாயனார் ஓட்டினை வைத்த இடத்தில் சென்று பார்க்கக், காணாது சங்கமரிடம் வந்து மயங்கினர். சங்கமர், நீ என் ஒட்டினைக் களவுசெய்தனை அதனை நீ களவு செய்யாதது உண்மையாயின் நீ உன் மனைவி கைப்பற்றிக்கொண்டு தீர்த்தத்துண் முழுகிக் கூறுகவென அவ்ஙனமே உடன்பட்டு இருவரும் கோலின் முனைகளை இருபுறத்தும் பற்றி முழுகி இனமைபெற்று மேலெழுந்து சிவாஞ்ஞையால் முத்தி யடைந் தவர். (பெரிய புராணம்).

திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார்

இவர் திருஎருக்கத்தம்புலியூரில் திரு அவதரித்து மதுரையில் யாழ் வாசிக்கையில், மழை வருஷிக்க அசரீரியால் பலகையிடக் கட்டளை பெற்று, பலகை பெற்று, அதிலிருந்து, யாழ் வாசித்துத் திருவாரூரில் சிவ மூர்த்தியால் நிருமிக்கப்பட்ட வடவாயிலாற் சென்று தரிசித்து, சீர்காழி சென்று திருஞானசம்பந்த சுவாமிகளிடம் கட்டளை பெற்றுத் திருப்பதிகங்களை யாழிலமைத்துப் பாடித் திருஞானசம்பந்தசுவாமிகளைப் பிரியாதிருந்து ஸ்ரீசம்பந்தர் திருமணத்தில் முத்தி யடைந்தனர். இவர் வரகுணபாண்டியன் காலத்தவர். பாணபத்திரர் எனவும் பெயர். இவர் காலம் சற்றேறக்குறையச் சம்பந்தர் சேரமான் பெருமாணாயனார் காலமாக இருக்கிறது. பாணபத்திரரைக் காண்க. (பெரிய புராணம்).

திருநீலநக்கதாயனார்

சோழநாட்டுச் சாத்த மங்கையென்னுங் கிராமத்தில் பிராமண குலத்தில் திரு அவதரித்துச் சிவார்ச்சனை செய்து வரும் நாட்களில் ஒரு நாள் சிவ பூசை செய்யும்படி மனைவியார் பூசைக்கு வேண்டிய பொருள்களைத் தாங்கிவர அயவந்தி ஆலயத்திற் சென்று சிவபூசை செய்கையில் சுவாமிமீது ஒருசிலம்பி விழுந்தது. அருகிலிருந்த மனைவியார் சிலம்பி விழுந்தது கண்டு சுவாமியின் திருமேனியை ஊதித்துமித்தனர். இதனைக் கணவர்கண்டு அநுசிதமான காரியம் செய்தனை யாகையால் எனக்குப் புறம்பென மனைவியார் அஞ்சி ஆலயத்துளிருந்தனர். நாயனார் வீட்டிற்குச் சென்றனர். சிவமூர்த்தி, நாயனார் கனவிற் சென்று தமது திருமேனியைக் காட்டி, உன் மனைவி ஊதித்துமித்தவிட மொழிய மற்றவிடம் சிலம்பியின் கொப்புளம் என, நாயனார் விழித்துக் களிப்புடன் ஆலயத்துட் சென்று இறைவனைப் பணிந்து மனைவியாரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இவ்வகை இருக்கும் நாட்களில் திருஞானசம்பந்த மூர்த்திகள் அத்தலத்திற் கெழுந்தருள அவரை எதிர் கொண்டு அவர்க்குத் திருவமுது செய்வித்து அவருடன் வந்த பாணருக்கு இடங்கொடுத்து நித்யாக்கினி வலஞ் சுழித்த தனால் சாதியுயர்ந்ததன்று பக்தியே யுயர்ந்ததென்றறிந்து சில காலமிருந்து திருஞானசம்பந்தமூர்த்திகள் திருமணஞ் சேவித்து முத்தி பெற்றவர். (பெரிய புராணம்).

திருப்பாணாழ்வார்

இவர் கலியுகம் (3142) துர்மதி வருஷம், கார்த்திகை மாதம், கிருஷ்ண துவிதியை புதன்கிழமை, ரோஹணி நக்ஷத்திரத்தில் திருஉறையூரில் நெற்கதிரில் திரு அவதரித்துப் பிள்ளையில்லாப் பஞ்சம தம்பதிகளால் எடுத்து வளர்க்கப் பசும் பாலுண்டு வளர்ந்து உடலால் உட்செல்லக் கூடாமையால் காவிரிக்கரையிலிருந்து பெரியபெருமாள் திருச்சந்நிதியை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தனர். பெருமாள், உகந்து லோகசாரங்க முனிகளுக்குத் திருப்பாணாழ்வாரைத் தோளிற்றூக்கிவரக் கட்டளையிட்டனர். லோகசாரங்க முனிகள் பெருமாள் கட்டளையைக் கோயிலனம் தக்கொத்துக்கும் அறிவித்து ஆழ்வாரைத் தோளில் எழுந்தருளச் செய்துகொண்டு பெருமாள் முன்னிறக்கி யருளினர். ஆழ்வார் பெருமாளைக் கண்ணாரச் சேவித்து “அமலனாதிப்பிரான்” எனத் திருப்பாசுரம் அருளிச்செய்து பெரிய பெருமாள் திருமேனியில் அந்தர்ப்பவித்தனர். இவர் (20) திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்தனர். (குருபரம்பரை).

திருப்பாற்கடல்

இது, சத்த சமுத்திரங்களில் ஒன்று. இதில் திருமால், ஆலிலை மீதும் திரு அநந்தாழ்வான் மீதும் எழுந்தருளி அடியவர்க்கு அருள் செய்திருக்கின்றனர். இதனைத் தேவர், பலமுறை கடைந்து சிந்தாமணி முதலிய பொருள்கள் பெற்றனர். தேவர் பொருட்டு, கார்த்தவீரியன், வாலி முதலியவரும் இதைக் கடைந்தனர். இதனை, உபமன்னியர் பொருட்டுச் சிவமூர்த்தி பானஞ் செய்ய அளித்தனர். பாற்கடல் கடைந்ததைக் காண்க.

திருப்புகழ்

பலசந்தங்களாக அருணகிரிநாதரால் குமாரக்கடவுளைப் பாடிய தோத்திரப்பா.

திருப்புட்குழிஜீயர்

திருவாய்மொழி கேட்கும்படி திருமலையாழ் வாருக்குக்கூர குலோத்தமதாசர் கூறிய ஸ்ரீவைணவர்

திருப்பெருந்துறை

சுகுண பாண்டியனைக் காண்க.

திருப்ரவேசயோகம்

பூர்வபக்ஷத்து நல்ல கிழமையுடன் கூடின. அன்றைய பக்ஷழம்; நக்ஷத்திரழம், சுபயோகமும் வர, வாராதிபன் உச்சத்தானமேறி உச்சாம்சம் பெற உச்சராசி லக்னமாகக் கற்பாதானம், கிரகாரம்பம் விவாகம் செய்யின் முறையே சக்ரவர்த்தித்வம், அழியாச்செல்வம், பூர்ணாயுள் பெருஞ் சம்பத்துண்டாம், (விதானமாலை)

திருமகள்

இவள் ஒருகாலத்துக் கோக்களிடத்திற் சென்று தான் அவற்றின் தேகத்திருக்க வேண்ட கோக்கள் நீ நிலையற்றவள் எனக் கூறின.

திருமங்கலியத்திற்குப் பொன்னுருக்குதல்

திங்கள், புதன், வியாழம், வெள்ளி வாரங்களும், பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசியை ஒழிந்த திதிகளும்; அச்சுவினி, ரோகிணி, மிருகசீரஷம், புனர்ப்பூசம், பூசம், மகம், உத்தரத்திரயம், அத்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், விருஷபம், மிதுனம், கர்கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனராசிகளும், எட்டாமிடம் சுத்தமுமாக ஸ்திரி புருஷர்களுக்கு அநுகூல மான நட்சத்திரங்களிலே திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்க நன்று.

திருமங்கையாழ்வார்

இவர் கவி (397) இல் நளளு, கார்த்திகைமாதம், பௌர்ணமி, வியாழக்கிழமை கிருத்திகையில் திருவாலி நகரத்தில் நீலனென்னும் சேநாபதிக்குப் புத்திரராய்ச் சோழராசனுக்குக் கீழ்ச்சிற்றரசரா யிருந்து கொண்டு, தாளூதுவான்; நீர்மேனடப்பான், நிழலின் மறைவான், தோலாவழக்கன், சாயைபிடிப்பான் முதலிய மந்திரியருடன் குமுதவல்லியை மணத்தற் பொருட்டுக் கேட்க அவள் திருவிலச்சினை இல்லாததால் மறுக்கத் திருநறையூர் நம்பியிடத்தில் திருவிலச்சினை பெற்றுக் குமுதவல்லியை மணந்து பலவரசர்களைச் செயித்துப் பரகாலன் என்கிற பெயர் தாங்கியிருக்கையில் சோழன் பகுதிப்பணம் வராதிருத்தலைக் கண்டு ஆழ்வாரைப் பிடிக்கக் கட்டளையிட்டனன். ஆழ்வார் வந்தவர்களை ஓட்டச், சோழன் ஆழ்வாரைத் தந்திரமாய்ப் பிடித்துச் சிறையிட்டனன், ஆழ்வார் ததியாராதன பங்கத்திற்கு விசனமடைய அத்திகிரிப்பெருமாள் இவரது கனவில் திருக்காஞ்சிக்கு வாரும் என்று திருவாய் மலர்ந்து மறைந்தருள ஆழ்வார் சோழன் மந்திரிகளைப் பார்த்து நான் செலுத்த வேண்டிய தொகையைக் காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போவீராயின் தருகிறேனென்று அவர்களுடன் சென்று பெருமாளைச் சேவித்து வேகவதியிற் புதைத்திருந்த பொருள்களை யெடுத்துப் பகுதிகட்டி மிகுதியைத் ததியாராதனத்திற்கு வைத்துத் திருவாலிநகர்க்கு எழுந்தருளினர். இச்செய்தியைச் சோழன் அறிந்து தனத்தை ஆழ்வாருக்குக் கொடுப்பித்து க்ஷாமணஞ் செய்து கொண்டு போயினன். பின் ததியாராதனத்திற்குப் பணமில்லாமையால் உலுத்தரிடத்தும், அவைணவரிடத்தும் உள்ள பொருள்களைப் பறித்துத் ததியாராதனஞ் செய்வித்து வருகையில் ஒரு நாள் நெற்றியில் திருமண்ணில்லாத பெண்ணொருத்தியின் கையிலிருந்த வெள்ளிக்கிண்ணத்தைப் பரிக்க அவள், நாராயணன் நம் சொத்தை அங்கீகரித்தான் எனச்சொல்லக் கேட்டு அதைப் போட்டுவிட்டுச் செல்கையில் பெருமாள் நாய்ச்சியாருடன் மணக்கோலங் கொண்டுவர அவரிடஞ்சென்று அவ்விருவரது திருவாபரணங்களைக் கழற்றித்தரப் பெற்றுப் பெட்டகத்திட்டுத் தூக்குகையில் பளுவாயிருந்தது கண்டு மணவாளனை இந்தத் தம்பன மந்திரம் எனக்குச் சொல்லுமெனப் பெருமாள் ஆழ்வார் திருச்செவியில் அஷ்டாகரம் உபதேசிக்கக் கேட்டுத் திகைத்து நிற்கையில் பெருமாள் சேவைசாதித்து சுகம் கவியா” என்று அழைக்க ஆழ்வார், பெருமாளைக் கண்குளிரத் தரிசித்துப் பெரிய திருமொழி முதலியவைகளால் துதித்து நாலுகவிப் பெருமாளெனப் பெயரடைந்து திவ்ய தேசயாத்திரை செய்து வருகையில் காழிச்சீராம விண்ணகரஞ்சென்று சம்பந்தன் என்கிற விதவானை வென்று திருவரங்கஞ் சென்று கைங்கர்யஞ் செய்துவரும் நாட்களில், நாகப்பட்டினத்துப் பௌத்தர் கோயிலில் செல்வமிருக்கிறதாகக் கேள்விப்பட்டு அங்குச்சென்று அதற்குக் காவலாகச் சுழன்று கொண்டிருந்த சக்கரத்தை வாழைமரத் தைச் சக்கரத்தில் கொடுத்து நிறுத்திச் சுவர்ண பௌத்த விக்ரகத்தை உருக்கித் திருமதில் முதலிய கைங்கர்யஞ் செய்வித்து ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரைக் கோயிலுக்கு எழுந்தருளச் செய்வித்து ஒரு பரமபதவாயில் ஏற்படுத்தி அத் தியயன உற்சவம் செய்வித்து (105) திரு நக்ஷத்திரம் எழுந்தருளியிருந்து திருக்குறுங்குடியில் திருநாட்டிற்கு எழுந்தருளினார். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். இவர்க்கு நீலநிறத்தார், பரகாலன், கலியன், நாலுகவிப்பெருமாள், அருள் மாரி என்று பெயர். இவர் குதிரைக்குப் பெயர் ஆடன்மா. (குருபரம்.)

திருமணத்தூணம்பி

அழகிய மணவாளன். காணியாளரான சிங்கப்பிரான் புத்திரன். சிங்கப்பிரானைக் காண்க,

திருமண்

மலையின் உச்சி, நதிக்கரை, புணயபூமி, சமுத்திரதீரம், புற்றுக்கள், துளவத்தின் அடிகளில் உள்ள மண்களைக் கிரகிக்க வேண்டும். (பிரமாண்ட புராணம்). மேற்கூறிய மண்களில் சறுத்தமண் அனிஷ்டங்களை ஒழிக்கும், செம்மண் வசியத்தைத் தரும், பச்சைமண் செல்வந்தரும், வெள்ளைமண் வைஷ்ணவமாம், இவற்றைத் தரிக்கையில் பெருவிரலால் தரிக்கின் புஷ்டியைத் தரும், நடுவிரல் ஆயுளைத் தரும்; ஈற்றயல் விரல் இச்சித்தவுண்டியைத் தரும்; சுட்டுவிரல் மோக்ஷத்தைத் தரும், நகத்தால் தரிக்கக்கூடாது. இத் திருமண் தரிக்குமிடத்துத் தீச்சுவாலை போலவும், மூங்கிலிலைபோலவும், தாமரையின் அரும்பு போலவும், இதழ்போலவும், மீனைப்போலவும், ஆமையைப் போலவும் தரித்தல் தகுதியாம், பத்து அங்குல நீளமுள்ள ஊர்த்துவ புண்டரம் உத்தமம். ஒன்ப தங்குலம் மத்திமம். எட்டங்குலம் அதமம், பின்னும் சிலர் எழு ஆறு ஐந்தங்குல அளவையுடையன மத்திமம், நான்கு மூன்று, இரண்டு அங்குல அளவையுடையன கனிஷ்டமெனவுங் கூறுவர். இப்புண்டரங்க ளைக் கேசவன் முதலிய பன்னிரு திருமந்தி ரங்களுடன் நெற்றி முதலிய பன்னிரண்டு தானங்களிலும் வாசுதேவனைச் சிரத்தின் மீதும் கொண்டு தியானித்தல் வேண்டும். இவ்வாறு தியானித்தவன் நீசனேயாயினும் பரிசுத்தனாகிறான். இதில் ஐயமில்லை (சத்தியவிரதர்) கோபிசந்தனத்தால் ஊர்த்துவ புண்டாம் தரித்தவன் பாபங்களை யொழிக் கிறான். சாளக்கிராமத்திற்குத் தரித்த செஞ்சந்தனத்தைத் தேகத்திற்றரித்தவன் முத்தனாகிறான். புண்டரம் காண்க.

திருமண்டன்குடி

தொண்டரடிப் பொடி யாழ்வார் திரு அவதாரத்தலம்.

திருமறுமார்பன்

இலக்குமியையும் மச்சத்தையும் மார்பிலுடைய திருமால்.

திருமலை நல்லான்

உடையவர் மேல்கோட்டைக்கு எழுந்தருளியிருந்தபோது ஆச்சுயித்த ஸ்ரீவைஷ்ணவர் (74) சிம்மாசனாதிபதியரில் ஒருவர். தேசிகர் திருவடியை ஆச்ரயித்தவர் என்பர். (குருபரம்பரை)

திருமலைநம்பி

சுமுகாம்சம், இவர் திருவரங்கப் பெருமாளரையருக்குப் பின் கலி (4075) க்கு மேல் ஸ்ரீமுக புரட்டாசிமீ வெள்ளிக்கிழமை அவதரித்தவர். ஆளவந்தார் திருவடிசம்பந்தி. 2. பெரிய திருமலைநம்பிக்கு ஒரு பெயர்.

திருமலைநாதர்

இவர் சிதம்பரப்பாட்டியல் இயற்றிய பரஞ்சோதியாரின் தந்தையார். சிதம்பரபுராணம், மதுரையுலா இயற்றியவர்.

திருமலையப்பர்

நயினாராசாரியர் திருவடிசம்பந்தி,

திருமலையர்

திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒருவர்.

திருமலையாழ்வான்

திருவாய் மொழிப்பிள்ளைக்கு ஒரு பெயர்.

திருமலைராயன்

காளமேகர் என்னும் புலவர் திலகரைத் தன் சம்ஸ்தான வித்வானாகிய அதிமதுரக்கவியின் வார்த்தை கேட்டு யமகண்ட முதலிய பாடச்செய்து காளமே, திருமழிசையாழ்வார் கரை உபசரிக்காததால் மண்மாரி பொழிய வசைபெற்று நாடிழந்த சிற்றரசன். இவன் சாளுவகோப்பையன் குமரன். இவனை ஒரு புலவன் “இந்திரன் கலையாயென் மருங்கிருந்தான் அக்கிங் உதாம் விட்டக வான், யமனெனைக்கருதான் அரனெனக் கருதி நிருதிவந்தென்னை யென் செய்வான், அந்தமாம் வருணனிருகண் விட்டகலான் அகத்தினென் மக்களும்யானு, மநிலமதா குமமுதினைக் கொள்வோம் யாரெதிரெமக் குளாருலகிற், சந்ததமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திரராஜனை வணங்கித், தலைசெயு மெம்மை நிலைசெய் சற்கீர்த்திச் சாளுவகோப்பை யனு தவும், மந்தரப் புயத் தான்றிரு மலைராயன் மகிழ்வோடு விலையி லாவன்னோன், வாக்கினாற்கு பேரனாக்கினான் அவனே மாசிலீசான பூபதியே” யென்று பாடிப் பரிசுபெற்றனன்.

திருமழிசையாழ்வார்

இவர் துவாபரயுகத் தில் சித்தார்த்தி தைம் கிருஷ்ண பிரதமைகூடிய ஞாயிற்றுக்கிழமை மக நக்ஷத்திரத்தில் திருமழிசையில் பிருகு முனிவர் தவஞ்செய்கையில் அத் தவத்தைக்கெடுக்க இந்திரனால் ஏவப்பட்ட தேவஸ்திரீயிடம் அவதரித்துப் பிருகு முனிவரால் பிரப்பஞ் செடி நிழலில் வளர்த்த இருந்து அழுத னர். அக் காலையில் உலோகமாதாவாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மி அவ்விடம் எழுந்தருளித் தமது திருமுலைப்பாலைக் கறந்து ஒரு வள்ளத்தில் வைத்து, அப்பால் ஒவ்வொரு திவலையாக வாயில் விழச்செய்து மறைந் தனள். இவ்வகை வளரும் நாளில் திரு மழிசைக்கடுத்த காட்டிலுள்ள திருவாளன் என்னும் வேடன் புத்திரனில்லாத தன் பத்தினியிடம் இப் புத்திரரைக் கண்டு கொடுக்க வேடத்தி அன்பினால் பாலூட்ட உண்ணாமல் ஒரு சூத்திரர் அன்பாலூட்டிய பாலுண்டு வளர்ந்து எட்டாம் வயதில் வேடச்சேரியை விட்டகன்று பாமத நிராகரணஞ் செய்திருந்தனர். இவ் வகை யிருக்கையில் ருத்ரர் ஆகாச வீதியில் செல்ல அந்நிழல் மேல்படாமல் ஒதுங்கிய ஆழ்வாரைக்கண்டு உமக்கு வேண்டிய வரம் கேளீர் என்றனர். ஆழ் வார், மோக்ஷம் தருக என ருத்ரர் அது என்னாலாகாது நாராயணனே தரவல்லான் என்ன ஆனால் இந்த ஊசியின் பின்னே நூல் போகச்செய்க என உருத்திரன் கோபித்து நெற்றிக்கண்ணை விழிக்க ஆழ்வார் திருவடியில் ஒரு கண்ணை ஆக்கித்தீயை யேவினர். இந்த ருத்ரனைத் தகிக்க ருத்திரன் அபசயப்பட்டு ஆழ்வாரை க்ஷாமணம் கேட்டுக்கொண்டு பக்திசாரர் என்கிற திருநாமம் சாற்றிச் சென்றனன். முதல் ஆழ்வார்கள். மூவரும் இவருடன் கூடித் திருவல்லிக்கேணி தரிசித்தனர். இவருண்ட பாலின் சேஷத்தால் சூத்திரருக்குப் பிறந்த கணிகண்ணர், ஆழ்வார் காஞ்சியில் எழுந்தருளியிருக்கையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்து அச்சந்நிதியில் கைங்கர்யம் செய்த விருத்தையிடத்து அன்புவைத்து அவ்விருத்தையைக் குமரியாக்கினர். இதைக் கேள்வியுற்ற பல்லவராயன் என்கிற ராஜா தன்னை யௌவன புருஷனாகச் செய்யக் கேட்டனன். கணிகண்ணர் மறுத்தனர். அதனால் பல்லவன் என்னாட்டைவிட்டு நீங்குக என்றனன். இதனைக் கணிகண்ணர் திருமழிசை ஆழ்வாருக்கறிவித்து நீங்க ஆழ்வாரும் “கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ யிங்கிராதே துணிவுடனே, செங்காப் புலவனியான் செல்கின்றே னீயுமுன்றன், பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்று ஊரைவிட்டு நீங்கினர். இதனால் பெருமாளும் நீங்கினர். பெருமாள் நீங்கவே நகரம் வெறுமையடைந்தது. இதனால் அரசன் துக்கமடைந்து இருவரையுமடைந்து வேண்டி மீண்டு மெழுந்தருளச் செய்தனன். இவ்வகை சிறிதுநாளிருந்து ஆழ்வார், பெரும்புலியூர் வேதியர் தம்மைச் சூத்திரர் என இகழ்ந்தமை யெண்ணி அக்கிராமத்திற் செல்லாது விலக அவ்விடமிருந்த பெருமாள் ஆழ்வார் சென்ற வழி நோக்கினர். இதனை அறிந்த நம்பி வேதியருக்கறிவிக்க அவ்வேதியர், தங்களுக்கு வேதாத்தியயனத்தில் விட்ட இடந்தெரியாது மறந்தமைக்கும் பாகவத் தூஷணமே காரணமென்றுணர்ந்து ஆழ்வாரை நமஸ்கரிக்க ஆழ்வார் வே தமுணர்ந்தும் அவர்கள் எண்ணியதை விளக்க வர்ணாச்சிரமத்தால் வாயாற் கூறாமல் ஒரு கறுப்பு நெல்லைப் பிளந்து காட்டினர். இதனால் வேதியர் வேதத்தில் விட்டவிட மறிந்து சென்றனர். இதுநிற்க, அவ்வூரில் யாகஞ் செய்ய யத்தனித்த வேதியர் யாக பலஸித்தியடைய வேண்டி ஆழ்வாரை யக்யஸதவில் உட்காருவித்தனர். அவ்விடமிருந்த சில வேதியர் அருவருத்தனர். இதனை ஆழ்வாரறிந்து திருமார்பில் திரு நம்பி வேத வேதாத்தியமைக்கும் பாதகம் திருமாளிகை தேவர் வாழி ஆழ்வானைக் காட்டினர். இதனால் வேதியர் பயந்து பிரார்த்திக்க ஆழ்வார் கடாக்ஷித்து அவ்விடமிருந்து திருக்குடந்தைக்கு எழுந்தருளி ஆராவமுதனைச் சேவித்து (2300)வருடம் யோகத்திலிருந்து திரு நாட்டுக் கெழுந்தருளினர். இவர் சக்கிராம்சம். இவர் (4702)வருடம் எழுந்தருளியிருந்தனர். இவர் சக்திகாரன், கொங்கணர் முதலியவர்களை வெற்றிகொண்டனராம். இவர் செய்தவை நான் முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் முதலிய (குருபரம்பரை.)

திருமாபத்தினி

கண்ணகியின் சிறப்புப், பெயர். (சிலப்பதிகாரம்).

திருமாலாயுதம்

(5) சங்கம், சக்கிரம், சார்ங்கம், வாள், கதை,

திருமாலிருஞ்சோலைதாசர்

ஆளவந்தார் திருவடிசம்பந்தி,

திருமாலைதந்த பெருமாள்

மணவாள மாமுனிகள் காலத்துத் திருவரங்கத்தலத்ததி காரி; மணவாளமா முனிகளைத் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் கூறச் சொல்லிக்கேட்டு அவர்க்கு முப்பத்தாறாயிரம் பெருக்கென்று பெயரிட்டவர்.

திருமாலையாண்டான்

வநமாலாம் சரான இவர் கலி (4090)க்குமேல் சர்வதாரி மாசி வெள்ளிக்கிழமை அழகர்மலையி லவதரித்தனர். இவர் திருமலைநம்பிக்குப் பின்னவர். ஆளவந்தார் திருவடிசம்பந்தி.

திருமால் அவதாரம்

1. (10) மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பாசிராமன், இராமன், பலராமன், கண்ணன், கற்கியாம். 2. (15) சநகன், சாந்தனன், சநாதன், சநற்குமாரன், கரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தத்தாத்ரேயன், மோகினி, யாகபதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன்.

திருமாளிகைத்தேவர்

இவர் போகரிஷியின் மாணக்கர், பலருள்ளும் சிறந்தவர், சுத்த சைவர். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்தவர். இவர் ஒருநாள் சிவபூசை செய்து அந்தச் சிவபூசா பிரசாதத்தைக் கருவூர்த் தேவர்க்கு அளிக்கக் கருவூர்த்தேவர் அதைக் களிப்புடன் ஏற்றுக்கொண்டனர். மீண்டும் ஒருநாள் கருவூர்த்தேவர் சத்திபூசை செய்து இவர்க்குப் பிரசாத மளிக்க அதைத் திருமாளிகைத்தேவர் ஏற்காதிருந்தனர். இதைக் கருவூர்த்தே வர் தமது ஆசிரியருக்கு அறிவித்தனர். போகர் கருவூர்த்தேவரை நோக்கித் திருமாளிகைத்தேவர் கொடுத்தது சிவப்பிரசாத மாகையால் நீ கொள்ளத்தகும், அவர் சதாசார முள்ளவர்; உமது நிவேதனம் பொருந்தாதெனக் கருவூர்த்தேவர் அமைந்தனர். இவர் ஒருமுறை, சேந்தனாருடன் சிதம்பர தரிசனத்திற்குச் சென்று அங்குதம் செல்லாதிருந்ததைக் கண்டு பதிக மோதி ரதம் வடமில்லாதுஓடக் கட்டளையிட்டவர். ஒருநாள் தாம் காவிரிந்தியில் ஸ்நானஞ்செய்து சிவபூசைக்குப் புட்பங் கொண்டு திரும்புகையில் வழியில் சவத்தைக்கண்டு சிவபூசைக்கு ஆசூசம் நேராதபடி புட்பத்தை ஆகாயத்திலெறிந்து நிற் கச்செய்து பிரேதத்தைச் சுடலைமட்டும் நடந்து செல்லக் கட்டளையிட்டனர். இவரைக் கண்ட மாதர்கள் இவரிடம் மயல் கொண்டு இவரைப்போல் புத்திரரைப் பெற்றது கண்டு வேதியர் முதலிய பலரும் அக்கால மாண்டிருந்த நரசிங்கராசனிடம் முறையிட்டனர் அரசன் கோபித்துத் திருமாளிகைத்தேவரைக் கட்டிக்கொண்டு வரக் கட்டளையிடக் காவலாளிகள் தேவரிடஞ் சென்று தாம் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். பின் அரசன் படைத்தலைவரை அனுப்பி வெட் டிக்கொண்டு வாருங்கள் என அவர்கள் தம்மையே வெட்டிக்கொண்டு சென்றனர். பின்பு அரசன் படையெடுத்துச் செல்லத் தேவர் பிராட்டியை வேண்டினர். பிராட்டி மதிவிடமிருந்த நந்திகளை ஏவ அவை சென்று அரசனை முதுகிடச் செய்து திரும்பின. இவ்வாறிருந்து முத்திபெற்றவர்.

திருமுக்கூடல்

இது காஞ்சிமாநகர்க்கு அருகிலுள்ள தலம். இது கம்பாநதி, வேகவதி, சேயாறு இம்மூன்று புண்ணியந்திகள் சந்திக்கு மிடத்துள்ளது.

திருமுடி

இது ஒருவகை கொற்றர் வகை, இவர்கள் பெண்கள் ஒழுங்கற்றவர்கள் சேலம், கோயம்புத்தூரில் உள்ளவர்கள், (தர்ஸ்டன்)

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் ஒன்று. நக்கீரதேவர் முருகவேளை யாற்றுப்பட்டது.

திருமுறைகண்டசோழன்

அபயகுலச்சோழனைக் காண்க, இவரை இராஜராஜதேவர் என்பர்.

திருமூலநாயனர்

திருக்கைலையில் நந்திதேவர் அருள் பெற்ற சித்தர்; பூமியில் அகத்தியமுனிவருட னிருக்க எண்ணி வரும் வழியில் உள்ள தலங்களைச் சேவித்துத் திருவாவடுதுறை சேவிக்க வருகையில் அவ்வூரிலுள்ள மூலன் என்னும் இடையன் தன் பசுக்களை ஒட்டிக்கொண்டு மேய்க்கவந்து உயிர் நீங்கினன். இடையன் உயிர்நீங்கியதைக் கண்ட பசுக்கள் அவனுடலை நக்கி வருந்துவதைக்கண்ட சிவயோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்கத் தம்முடலைப் பத்திரப்படுத்தித் தாம் அம்மூலன் உடவிற் புகுந்து பசுக்களைக் களிப்பித்துப் பொழுது நீங்கியபின் பசுக்களை வீடுசேர்த்துத் தாம் தனித்து நின்றனர். இவ்வகைநின்ற சித்தரை மூலன் மனைவி கண்டு கணவனென எண்ணித் தொடச் செல்லுகையில் சித்தா அவளை நோக்கித் தம்மைத் தொடுதற்கு நியாயம் இல்லையெனப் பொதுமடஞ் சென்று இருக்க இடைச்சி அவ்வூர் வேதியரிடஞ் சென்று கூற அவர்களிவரைக்கண்டு சிவ யோகியரென்று இடைச்சியை அகற்றினர். பின்பு சிவயோகியார் தாம் பத்திரப்படுத் திய உடம்பினைப் பார்த்துக் காணாமல் யோகத்தால், பரமசிவம் சிவாகமங்களைத் தமிழிற் செய்ய இவ்வகை செய்தனர் என்று அறிந்து தாம் அத்தலத்தில் அவ் வாலயத்திற்கு மேற்புறத்தில் அரசமரத் தடியில் யோகத்தி லமர்ந்து வருஷத்திற்கொரு பாடலாக (3000) பாடல்கள் அருளிச்செய்தனர். இச்சித்தமூர்த்தி மூலன் உடலில் புகுந்தமையால் திருமூலர் என்னும் திருநாமம் பெற்றனர். இவர் அருளிய சாத்திரம் திருமூலர் திருமந்திரம் எனப்படும், இவர் (3,000) வருடம் இருந்து முத்தியடைந்தனர். (திருமந்திரம்.)

திருமூலர்திருமந்திரம்

திருமூலநாயனார் என்னும் சித்தரால் அருளிச் செய்யப்பட்ட சாத்திரம்; இது சிவாகமங்களின் சாரங்களடங்கியது.

திருமூலர்மரபு

காலங்கர், அகோரர், திருமாளிகைத்தேவர், நாதாந்தர், பரமாநந்தர், போக தேவர், திருமூலர். (திருமந்.),

திருமோகூர் அப்பன்

ஆளவந்தார் திருவடி சம்பந்தி,

திருமோகூர் ஆழ்வாள்

எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்).

திருமோகூர்நின்றன்

ஆளவந்தார் திருவடி சம்பந்தி.

திருவணன்

பிருதுசக்கிரவர்த்திக்கு அர்ச்சசியிடத்துதித்த குமரன்.

திருவநந்தபுரத்தம்மை

உடையவர் திரு வடிசம்பந்தி.

திருவரங்கத்தமுதனார்

கூரத்தாழ்வார் திருவடி சம்பந்தி, இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்தவர்.

திருவரங்கத்தம்மை

ஆக்கியாழ்வானிருந்த ஸமஸ்தானத்தாசன் தேவி; யாமுநர்க்கு ஆளவந்தார் என்று திருநாமம் இட்டு அழைத்தவள். ஆளவந்தார் திருவடி சம்பந்தி.

திருவரங்கப் பெருமாளரையர்

சங்கு கர்ணாம்சரான இவர் கலியின் (4058) பிங் களன வைகாசிய கிருஷ்ணப்பிரதமை வெள்ளிக்கிழமை அவதரித்தவர்; பெரிய நம்பிக்குப் பின்னவர், ஆளவந்தார் புத்திரர். இவர்க்கு ஆளவந்தாராழ்வார் எனவும் பெயர். மணக்கால் நம்பிகளை ஆச்ரயித்தவர். உடையவர்க்கு ஒரு ஆசிரியர்.

திருவரங்கமாயோன்

உடையவர் திருவடி சம்பந்தி; காவலதிகாரி.

திருவரங்கமாளிகையரையர்

உடையவரது பண்டாரம் நோக்குவோர்.

திருவரங்கம்

1, இக்ஷவாகு மகாராசா தவஞ் செய்ததறிந்த இந்திரன், உருப்பசி, மன் மதன் முதலியோரை அனுப்பியும் சலி யாமைகண்டு தானேவர அக்காலத்தும் சலிப்பில்லாதிருக்கப் பிரமனிடங் கூறப் பிரமன் இக்ஷவாகுவிடம்வர அக்காலத்து ஸ்ரீ விஷ்ணு மூர்த்தி விமானத்துடன் எழுந் தருளிக் காக்ஷி தந்து தன்னை அவ்விடம் பூசிக்கக் கட்டளையிட்டனர். பிறகு இராம மூர்த்தி அம்மூர்த்தத்தை விபீஷணருக்குக் கொடுக்க விபீஷணர் தென்னாடு செல்லு கையில் இருடிகளும் தருமவர்மாவும் வேண் டக் காவிரிமத்தியில் கட்டியிருந்த திருக் கோயிலில் பிரதிட்டித்தனர். அதுவே திருவரங்கம். 2. திரு அயோத்தியிலிருந்து சுவர்ண விஷ்ணுமூர்த்தியைப் பெற்று இலங்கை யில் பிரதிட்டிக்கச் சென்ற விபீஷணர், இவ்விடம் திருமஞ்சனத்தை முடித்து எடுக்கையில் வராததால் வருந்தி நின்றனர்.விஷ்ணு மூர்த்தி விபீஷணர் கனவில் தரிசனந் தந்து இத்தலம் பூர்வம் அகிலாண்ட நாயகி தவஞ் செய்ததாலும், ஸ்ரீமகாலஷ்மி நடனஞ் செய்யச் சிவமூர்த்தி அநுக்கிரகித்ததாதலாலும் ஸ்ரீ அரங்கம் என்றாகியது. ஆதலால் இவ்விடம் நாம் இருக்க விரும்புகின்றோம் என, விபீஷணர் அவ்விதம் பிரதிட்டை செய்து பூசித்துவரும் தலம். (திருஆனைக்கா புராணம்). இதிலுள்ள தீர்த்தங்கள் சந்திரபுஷ்கரணி, பில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், சம்பு, அசவத்தம், புன்னா கம், வகுளம், கதம்பம், ஆமரம், பலாசம் முதலிய தலவிருக்ஷங்களு முண்டு. இத்தலத்தில் திருகோயில் கோபுரம் முதலிய கைங்கர்யங்கள் தர்மவர்மா வென்னும் சோழனால் செய்யப்பட்டன.

திருவருட்பா

இராமலிங்கப்பிள்ளை யென்னும் வித்வான் பாடிய சிவத்துதிகள்.

திருவல்லிக்கேணி பாணபெருமாளரைமர்

உய்யக்கொண்டார் திருவடிகளை ஆச்ரயித்த ஆசாரியர்.

திருவள்ளுவநாயனார்

ஒரு பிரளயத்தில் பிரமன் ஒடுங்கியிருக்க, சிவமூர்த்தியார் என வள்ளுவர் என்றார். அவ்வகையே ஆதிக்கும் பகவனுக்கும் திருமயிலை நகரத் திற் பிறந்து தாய் தந்தையர் விட்டு நீங்க “எவ்வுயிருங் காக்கவொரு வீசனுண்டோ விலையோ, அவ்வுயிரின் யானொருவனல்ல வோ எவ்வி, அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே, வருகுவது தானே வரும். ” என்று வேளாளரிடம் வளர்ந்து அவர்களை விட்டு நீங்கி ஒரு பனையடியிலிருந்து மார்க் கசகாயன் என்னும் வேளாளன் வேண்டு கோளுக்கிரங்கி வேதாளத்தைப் பஞ்சா க்ஷரத்தால் ஒட்டி, யவன் பெண்ணாகிய வாசுகியை மணலைச் சமைக்கச் செய்து அவள் செய்ய மணந்து, ஏலேலசிங்கன் என்னும் வர்த்தகனிடம் நூல் வாங்கி நெச வுத்தொழில் செய்து இல்லற நடத்தி வரு கையில் ஊர்த்த தாண்டவத்தினழுவிய குழைபூண்ட காரணத்தைச் சங்கைகொண்டு தம்மை வந்து கேட்ட தேவர்க்குப் “பூவிலயனும் புரந்தானும் பூவுலகைத் தாவியளந்தோனும் தாமிருக்க நாவில், இழைநக்கி ஏனெருடு மேழையறிவேனோ, குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” எனக் கூறி அறிவித்து இருந்தனர். இவ்வகையிருக்கையில் ஏலேலசிங்கர் சிவபூசையில் ஊற்றமில்லாதிருத்தலை அவருக்குத் தெரிவித்து அவரை அடிமைகொண்டு அவர்க்கு ஞானோபதேசஞ் செய்து புத்திரப்பேறளித்துக் கரை தட்டிய ஏலேலசிங்கர் கப்பலை எலையாவென இழுத்துப் போக்கிப் பஞ்சம் வந்தகாலத்தில் ஏலேலசிங்கரை நெல்விற்கக் கட்டளையிட்டு அதனால் வந்தபொருளை உருக்கிக் கடலிலிடச்செய்து மீண்டும் பெறச்செய்து அழகாநந்தர் முதலியோர் வேண்டுகோளால் திருக்குறள் அருளிச் செய்து சங்கத்தவரை வென்று இல்லறம் பெரிதோ துறவறம் பெரிதோவெனத் தம்மைச் சங்கை செய்து கேட்ட அன்பர் ஒருவர்க்கு அவரே தெரிந்து உணரும்படி, தண்ணீர் மொண்டுகொண்டிருந்த தமது மனைவியாரை அழைக்க அந்த அம்மாள் கிணற்றில் பாதிவழி வந்த நீர்க்குடத்தைக் கிணற்றில் விட்டுவந்ததையும், மற்றொரு நாள் பழையது சாப்பிடுகையில் அன்னம் சுடுகிறதென விசிறியதையும், மத்தியானத் தில் நெய்துகொண்டிருந்த நூனாழி தவ றிக் கீழ்விழ அதைப் பார்க்க விளக்குக் கொண்டுவரச்சொல்ல அந்தம்மாள் விளக் குக் கொண்டு வந்ததையும் தெரிவிக்கச் சங்கை செய்தவர், தக்க மனைவியிருக்கின் இல்லறமே நன்று என்றுணர்ந்து நீங்கினர். இவ்வகை இல்லறம் நடத்தியிருந்து சில நாளைக்குப் பிறகு பத்தினியார் தேகவியோ கமாகையில் அந்தம்மாளுக்கிருந்த சங்கை யை நீக்கி “அடிசிற்கினியாளே யன்புடை யாளே, படிசொற் றவாத பாவாய் அடி வருடிப், பின்னூங்கி முன்னெழுந்த பே தையே, போதியோ என்றூங்கு மென்கண் ணிரா” என்று வருந்தித் தாம் சிலநாளிருந்து திருக்குறள் அரங்கேற்றச் சங்கத்தவரிடஞ்சென்று அதை ஏற்கச்செய்து சங்கப்பலகை மீதிருந்து அவர்களுடன் வாதிட்டு வென்று சங்கத்தாரால் புகழப் பெற்றுத் திருமயிலைக்குத் திரும்பித் தமது மாணாக்கரை நோக்கித் தமது தேகத்தை விட்டு உயிர் நீங்கின் அதனை அலங்கரித்து அடக்காது ஊர்ப்புறத்தில் எறியக் கட்டளை யிட்டுப் பரிபூரண மடைந்தனர். அவ்வகை மாணாக்கா செய்தனர். இவருடலைப் பரி சித்த பக்ஷ ஜாதிகளும் முத்தி யடைந்தன. இவர் தேகம் இருந்த இடத்தில் தற்காலம் திருமயிலையில் இவர் கோவிலிருக்கிறது. இவரைச் சைநர், தம் மதத்தவரில் ஏளா சாரியர் என்பவர் என்பர். இவர்க்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புல வர், மாதாநுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்று திருநாமம். இவர் விதேக முத்தியடைந்த திருநக்ஷத்திரம் மாசிம் உத்தர நக்ஷத்திரம். இவர்க்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல் யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற்காசனியாகி மேதினி, யின் னிசை யெழுவர்ப் பயந்தனளீண்டே எனும் ஞானாமிர்தத்தா லறிக. இவரைத் திருவள்ளுவமாலையிற் புகழ்ந்திருத்த லன்றிப் பொய்யாமொழிப்புலவர் முதலியவர் பிற்காலத்தும் புகழ்ந்து இருக்கின்றனர். “குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி, யுறுவிலைக்கு விற்றதனோ டொக்கும் தெறுகவியைச், செற்றவேன்மாற திரு வள்ளுவனார் வாய்ச், சொற்றகு முப்பால் வாழ்த்துச் சொல்” “முப்பாலு முண்டோ முலைப்பாலினி நுகரோம்; எப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு, முள்ள படியுணர்ந்தோ மோதிக் குறை தீர்ந்தோம், வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து. ” சைநர் வாழ்த்து “வாழிமறையா னினங்கள் வாழிமறை யாகமங்கள், வாழிமனு நீதிமன் னர் மன்பதைகள் வாழியரோ, தெள்ளு குறட் செந்தேன் செவிகுளிரப் பெய்த முகில், வள்ளுவர் பாதமலர். ” மற்றொருவர் “எப்பாலு மேத்துவா மின்பம் பொருளறமா, முப்பாலு மாயிரத்து முந்நூற்று முப்பதா, வோரடி முக்காலுரைத்த திரு வள்ளுவனா, ரீரடி முக்காலுமே” “அவனே புலவனவனே கவிஞனவனே தமிழை பறி வோன் சிவனறிய, வள்ளுவதேவன் வச னத்தை மெய்யாக வுள்ளுவதேவனுளன்” இவரைச் சோழநாட்டில் மதுரையில் வசித்திருந்ததாகவுங் கூறுவர். அதனை வள்ளுவமாலை நல்கூர்வேள்வியார் உப்பக்கநோக்கி உபகேசி தோண்மணந்தான், உத்தரமா மதுரைக்கச்சென்ப இப்பக்கம், மாதாது பங்கி மறுவில் புனச்செந்நாப், போதார் புனற்கூடற்கச்சு” என்பதாலறிக

திருவள்ளுவமாலை

இது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய நூல்,

திருவழுதிவளநாடர்

ஒரு வேளாளர், இவர் குமரர் அறந்தாங்கியார்.

திருவழுந்தூரந்தாதி

இவளைச் சோழன் எந்தவூர் என்றபோது அவள் பாடியது. ”கம்பன் பிறந் தவூர் காவிரி தங்குமூர், கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத், தாதகத்து நான் முகனுந் தாதையுந் தேடிக் காணா, வோதகத்தார் வாழுமழுந்தூர்” என்றனள்.

திருவாசகம்

திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசக சுவாமிகளால் அன்பிற் சிவனைப் பொருளாக அருளிச் செய்யப்பட்ட திருமுறை,

திருவாதவூரர்

பாண்டி நாட்டில் திருவாதவூரில் அமாத்தியர் குலத்தில் சிறந்த அந்தணராகிய சம்புபாதசரிதருக்கும் சிவஞானவதிக்கும் புத்திரராய்த் திருஅவதரித்துத் திருவாதவூரர் என்ற திருநாமம் அடைந்து கல்வியில் முதிர்ந்து பாண்டியனிடத்தில் மந்திரித்தொழில் பெற்றுத் தென்னவன் பிரமராயன் என்னுஞ் சிறப்புப் பெயர் வாய்ந்து தேசமும் செல்வமும் நிலையாமை யுணர்ந்து பதி நூல் ஆராய்ந்து சிவமூர்த்தியிடம் அன்பு மேவிட்டு ஆசாரியரைத் தேடிக்கொண்டு மந்திரித் தொழிலில் இருந்த னர். இவ்வகை யிருக்கையில் சோழதேசத் தில் குதிரைகள் வந்திருக்கின்றன எனத் தூதர் பாண்டியனுக்குக் கூறினர். பாண்டி யன் (49) கோடி பொன் கொடுத்துக் குதிரை கொண்டுவரும்படிச் சோணாட்டிற் சிலரை யனுப்பினன், திருவாதவூரர் பொன் கொண்டு திருப்பெருந்துறையடைந்தனர். இவரது அதிதீவரபக்வமறிந்து சிவமூர்த்தி இவரை அடிமை கொள்ளும்படி ஒரு வேதியர் உருக்கொண்டு ஒரு குருந்தமரத்தடியில் இவர் காண எழுந்தருளியிருந்தனர். வாதவூரர் குருமூர்த்தமாய் எழுந்தருளியிருப்பவர் அருகிற்சென்று பணிந்து மனமுருகி நின்று குருமூர்த்தமாய் எழுந்தருளியிருந்த வேதியாது திருக்கரத்திலிருந்த சாத்திரத்தை இது என்ன சாத்திரம் என்றனர். குருமூர்த்தி இது சிவஞான போதம் என் றனர். வாதவூரர் சிவமாவதும் ஞானமாவதும் போதமாவதும் என்னென்று வினாவி அதனைத் தேவரீர் அடியேனுக்குத் தெரி விப்பீராயின் அடியேன் அடிமையாவேன் என்றனர். அவ்வாறு குருமூர்த்தி அருளிச்செய்யக் கேட்டுப் பணிந்து என்னை அடிமையாகக் கொள்க என்று இரந்துநின்றனர். குருமூர்த்தி இவரை ஆட்கொண்டு சிவஞானம் உபதேசித்துத் திருவடித் தீக்ஷை செய்து அருளப் பின் திருவாதவூரர் மந்திரி மரியாதைநீக்கிக் கோவணமுடுத்து ஆசிரியரிடத்தில் பணிந்து நின்றதைக் கண்ட அரசதூதர் அழைத்தனர். திருவாதவூரர் அறுக்கக்கண்டு எவலர் பாண்டியனிடஞ் சென்று தெரிவித்தனர். பாண்டியன் ஒற்றரிடம் திருமுகம் கொடுத்து வாதவூரரை அழைத்துவரக் கட்டளையிட்டனன். ஒற்றர் சென்று வாதவூரரிடம் திருமுகம் காட்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேசேர் திருமுகம் காண்பதில்லை என்று அரசன் அனுப்பிய திருமுகத்தைக் குருமூர்த்தியி டம் காட்டினர். குருமூர்த்தி ஆவணிமீ மூலநாளில் குதிரைகள் வரும் என்று ஒரு மாணிக்கங்கொடுக்க அதைப் பெற்று விடைகொண்டு குருமூர்த்தி கொடுத்த மாணிக்கத்தைக் கொடுத்துப் பாண்டியனைக்கண்டு குதிரைகள் வர நல்லநாளில்லா மையால் அவற்றை நிறுத்தி வந்தோம். அவை ஆவணிமூலத்தில் வருமென்று கூறி அரசன் மரியாதை செய்ய விருந்தனர். குதிரைகள் வரும் நாள் நெருங்கிய தால் மந்திரியரில் ஒருவன் சென்று வாதவூரர் குதிரைகள் கொள்ளவில்லை அந்த வேளையில் உமது கோபத்தையாற்ற அவ்வகை கூறினர் என்றனன், பாண்டியன் ஒற்றரை யேவிக் குதிரைகள் இருக்குமிடம் அறிந்து வரச்செய்தனன். ஒற்றர் குதிரைகள் எங்கும் காணப்படவில்லை யென்று வந்து கூறினர். இதனால் பாண்டியன் சோபித்து வாதவூரரைச் சிறை யிட்டனன். பின்பு பாண்டியன் இன்று குதிரைகள் வாராவி டின் எரிக்கின்ற வெயிலில் உம்மை நிறுத்துவேன் என்றனன். பின்பு குதிரைகள் வாராமையால் ஏவலாளிகள் வாதவூரரை வெயிலில் நிறுத்தினர். அதனால் சலிக்காமைகண்டு கிட்டியிட்டனர். வாதவூரர் சிவ மூர்த்தியை யெண்ணித் தியானித்தனர். சிவமூர்த்தி சிவகணங்களைக் குதிரைவீராகளாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றித் தாம் குதிரைத் தலைவராய் எழுந்தருளுதல் கண்டு வாதவூரர் பாண்டியனுக்கு அறிவித்தனர். பாண்டியன் அமைச்சரைப் புகழ்ந்திருக்கையில் குதிரைவீரத் தலைவர் பாண்டியன் முன் வந்து அக்குதிரைகளை அவன் காண ஓட்டிக்காட்டி இனிக் குதிரைகள் உன்னவே, நாளையவை எப்படியாயினும் எமக்குத் தொடக்கு இன்று எனக் கயிறு மாறி அரசனுக்கு அக்குதிரைகளின் இலக்கணங்களைக் கூறினர். பாண்டியன் மகிழ்ந்து விலயிடற்கரிய ஒரு பீதாம்பரம் கொடுத்துப் போக்கினன். அக்குதிரைத் தலைவர் அதைச் சவுக்கால் வாங்கிக் குதிரையின் மேல் இட்டு விடைகொண்டு நீங்கினர். அன்றிரவு குதிரைகள் எல் லாம் நரிகளாய் முன்னிருந்த குதிரைகளை யும் கடித்துவிட்டுச் சென்றன. இதைப் பாண்டியன் அறிந்து வாதவூரரிடம் கோபித்துப் பொருள்களையெல்லாம் வெயிலில் வைகையில் நிறுத்தி வாங்கும்படி கட்டளை யிட்டனன். அவ்வகை ஏவலாளர் வை கையில் நிறுத்தி வருத்தினர். இதனால் வாதவூரர் இரங்குவதைக் கேட்ட சிவமூர்த்தி கங்கையை வைகையிடம் எவினர். அவள் பெருக்குடன் வரக்கண்ட பாண்டியன் பயந்து இது எதுபற்றி உண்டாயிற்று என்று அமைச்சரால் அறிந்து வாதவூரர் துன்பத்தை நீக்கப் பெருக்கு அடங்கியது. அவ்வெள்ளத்தைப் பட்டணத்தில் வாராமல் தடுக்க ஊரிலுள்ள குடிகளை ஏவினன். எல்லாரும் பங்கின்படி வெள்ளத்தைத் தடுத்தனர். பிட்டு விற்கும் வந்தி யென்பவள் பங்கு அடையாதது கண்டு அரசன் ஏவலர் அவளைக் கேட்கக் கிழவி சிவமூர்த்தியைத் தியானித்தனள். சிவமூர்த்தி இவளிடம் ஒரு கூலியாளாக எழுந்தருளி நான் உன் னிடம் வேலை செய்வேன் எனக்குக் கூலி தா என்றனர். கிழவி என்னிடம் உள்ள பிட்டுக்களை விற்று அந்தியிற் கூலி தரு வேன் என்றனள், கூலியாளாக வந்தவர் கூலியாகவே பிட்டை வாங்கியுண்டு ஆளாயிசைந்து வேலை செய்தும் சில போது செய்யாமல் தாமதித்தும், பலமுறை பிட்டையுண்டு கரையை அடைக்காமல் ஒரு கொன்றை மரநிழலில் இளைப்படைந்தவர் போல் திருத்துயில் கொண்டனர். பாண்டியன் கரைகள் அடைபட்டதைக் காண வேண்டி வந்து எல்லார் பங்குகளும் அடை பட்டும் வந்தியின் பங்கு அடைபடாமைக் கண்டு இதனை அடைப்பவன் யார் என்றனன். அரச ஏவலர் இதோ கொன்றைமா வடியில் உறங்குபவன் என்றனர். கூலியாளர் அரசனைக் கண்டு பயந்தவர்போல் இருப்ப ஏவலாளர் கூலியாளரைப்பற்றி அரசனிடத்துக் குறை கூறினர். பாண்டி யன் கோபித்துக் கையிலிருந்த பிரம்பால் ஓரடி கூலியாளரை அடித்தனன். கூலியாளர் ஓர் கூடை மண் உடைப்பில் போட்டு அடைத்து மறைந்தனர். அவ்வடி அணு முதல் மகத்தாகிய சராசரப்பொருள் கள் மேலும் தன்மீதும் படக்கண்டு பாண்டியன் திடுக்கிட்டு அஞ்சினன். சிவமூர்த்தி அசரீரியாய்ப் பாண்டியனே நாம் இத்திரு விளையாடலை வாதவூரன் பொருட்டுச் செய்தோம். இதனை நீ அறியாது அவனைக் கோபித்தனை என்றனர். பாண்டியன் வணங்கி வாதவூ ரடிகளை மீண்டும் மந் திரியாயிருக்க வேண்டினன். அடிகள் பாண்டியனை விட்டு இறைவனைத் தேடிச் சென்றனர். திருவாதவூரர் பாண்டி நாடு விட்டுப் பல தலங்களும் சென்று வணங்கி ஸ்ரீசிதம்பரத் தலமடைந்து ஆரா அன்பு கொண்டு பலநாள் இருந்து பாடிப் பணிந்து துதித்து வருகையில் சைவர் ஒருவர் ஈழநாடு சென்று புத்தர்முன் பொன்னம்பலம் என்றனர். புத்தர், அரசன் முன் கூறிச் சைவரை அழைத்து அரசனிடம் விட்ட னர். புத்த அரசன் புத்த குருவுடன் தில்லை மூவாயிரவரை வாதிடத் துணிந்து தில்லை யடைந்தனன். சிவமூர்த்தியைத் தில்லை மூவாயிரவர் தியானிக்கச் சிவமூர்த்தி அவர்கள் கனவிற்றோன்றி வாதவூர் அடிகளைக் கொண்டு வாதிடுக என்று திருவாய்மலர்ந்தனர். தில்லை மூவாயிரவர் வாதவூர் அடிகளைப் புத்தருடன் வாதிட வேண்டினர். வாதவூர் அடிகள் வாதிடத் தொடங்கி அவர்கள் வினாவிய வினாவிற்கு விடை கூறினர். புத்தர் கேளாது மறுத்ததால் வாதவூரர் வாக்கின் தேவியாகிய கலைமகளை நோக்கிக் கலைவாணி, பொய்யர் வாக்கினின்றும் நீங்குக என்றனர். உடனே புத்த குருக்கண்மாரனைவரும் ஊமைகளாயினர். இவ்வற்புதக் காட்சி கண்ட புத்த அரசன் வாதவூர் அடிகளை நோக்கி வாக்குள்ளவர் வாக்கிழந்தனர். வாக்கில்லாத என் குமரியாகிய ஊமை வாக்குப் பெறுவாளேல் நான் சைவன் ஆகின்றேன் என்றனன். வாதவூரர் பெண்ணை வருவித்து ஒழிந்த புத்தர் கேட்ட வினாக்களுக்கு விடை அவ் ஊமைப் பெண் தரக் கட்டளையிட்டனர். அவ்வகை வினாக்களுக்கு விடை அப்பெண் தரப் புத்த அரசன் கண்டு களித்துச் சைவனாயினான். வாயிழந்த புத்த குருக்கண்மார் அனைவரும் வாதவூரடிகளை வேண்டி வாய் பெற்றுச் சைவராயினர். பின் வாதவூரர் தம்மிடம் இருக்கையில் சிவமூர்த்தி ஒரு வேதியர்போல் இவரிடம் எழுந்தருளினர். வாதவூரர் ஆசனமிட்டுத் தேவர் எந்தவூர் என்றனர். வேதியர் நாம் இருப்பது பாண்டிநாடு உம் புகழைக் கேட்டு நீர் பாடிய செய்யுட்களை ஒத வந்தேன் என்றனர். வாதவூரர், அவைகளை எழுதவேண்டும் என்றனர். வேதியர் எழுத உடன்பட்ட னர். வேதியர் பல செய்யுட்கள் எழுதி முடித்த பின்பு வாதவூரரை நோக்கித் திருச்சிற்றம்பல முடையார்மீது ஒர் கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்றனர். வாதவூார் எழுதப் பாடி முடித்தனர். பின் வேதியராய் எழுந்தருளிய சிவமூர்த்தி புத்தகத்தின் முடிவில் மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் கையெழுத்து எனக் கையொப்பமிட்டுத் திருச்சிற்றம்பல முடையார் திருவாயிற் படியில் திருமுறையை வைத்து மறைந்தனர். அதைக் கண்ட வேதியர் ஒருவர் தில்லை மூவாயிரவருக்கு அறிவிக்க அனைவரும் கூடி அருச்சித்து அது திருவாசகமும் திருக்கோவையுமா யிருக்கக் கண்டு புளகாங்கிதராய்த் திருவாதவூரரிடஞ் சென்று நடந்தவை கூறிப் பொருள் கேட்டனர். வாதவூரரைப் பொருள் கூறும்படி வேதியர் அனை வரும் பின்பற்ற வாதவூரர் திருச்சிற்றம் பலத்தில் சென்று நடராஜமூர்த்தியைச் சுட்டி இவரே பொருள் என்று மறைந்தரு ளினர். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் எனவும் பெயர். இவர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலேசுரரைத் தரிசிக்க எழுந்தருளியிருக்கையில் கெடில நதி பிரவகித்து வருவது அறிந்து வந்த இறைவர் சித்தராக எழுந்தருளித் தம் கரத்தில் உள்ள பிரம்பால் கெடிலத்தை நோக்கிப் பாடலிவனத்திற்கு வடபுறமாக விலகச் செய்தனர். பின்பு சுவாமிகள் பாடலி வனஞ் சென்று தரிசனஞ் செய்தனர் என் பது அத்தலபுராணம்,

திருவாதவூார்புராணம்

மாணிக்கசுவாமிகள் புராணம்; இதை இயற்றியவர் கடவுள் மாமுனிவர்.

திருவாய் மொழிப்பிரபந்தம்

முதல் ஆழ் வார்கள் மூவரும் அருளிச் செய்த வெண் பா அந்தாதிகள். திருமழிசை யாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திரு அந்தாதி, திருச்சந்த விருத்தம், நம்மாழ்வார் அருளிச் செய்த ருக்வேதசாரமான திருவிருத்தம், யசர்வேதசாரமான திருவாசிரியம், அதர் வணவேதசாரமான பெரிய அந்தாதி, சாம வேதசாரமான திருவாய்மொழி, மதுரகவி யாழ்வார் அருளிச்செய்த கண்ணினுண் சிறுத்தாம்பு, குலசேகராழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள், பெரியாழ்வார் அரு ளிச்செய்த திருப்பல்லாண்டு முதலிய, ஆண்டாள் அருளிய பாசுரங்கள், தொண்ட ரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை, திருப்பள்ளியெழுச்சி முதலியவையும், திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிப்பிரான் முதலியவும், திருமன்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் முதலிய அடங்கினவையாம்.

திருவாய்மொழிப்பிள்ளை

இவர் அண்ணர் என்பவர்க்குக் குமரர்; இவர்க்குத் திருமலை ஆழ்வான் எனப் பிள்ளைத்திருநாமம். இவர் அவதரித்த தலம் குந்தி நகரம், இவர்க்கு ஸ்ரீசைலேசர் எனவும் பெயர் என்பர். இவர் தாய், பிள்ளைலோகாசாரியார் கோயிலைவிட்டு வெளியேறினதால் தரியாது உயிர்விடச் சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். இவர் தமக்குக் கூரகுலோத்தமதாசர், திருவிருத்தத்திற்குப் பொருள் சொல்லேன் என்று மறுத்ததால் தாம் பிள்ளை லோகாசாரியரை இளமையில் ஆச்ரயித்தவர் என்பதைச் சிறியதாயாரா லுணர்ந்து அடங்கி, கூரகுலோத்தம தாசர், விளாஞ்சோலைப் பிள்ளை, நயினாச்சாம்பிள்ளை முதலியவர்களிடம் திருவாய்மொழி யெல்லாஞ் சேவித் துத் திருநகரி சென்று, காடுவெட்டி, நாடாக்கிக் குடியேற்றி ஆழ்வாரைப் பிரதிட்டை செய்வித்துச் சடகோபதாசர் எனவும், திருஅனந்தபுரத்தில் விளாஞ்சோலைப் பிள்ளையிடத்து ரகஸ்ய விசேஷங்களைக் கேட்டுத் திருவாய்மொழியில் வல்லவராகையால் திருவாய்மொழிப்பிள்ளை யெனவும், பெயர்பெற்றுச் சதுர்வேதமங்கலமென வொருவூர் திருநகரியில் உண்டாக்கி உடையவர்க்குக் கோயில் கட்டுவித்துக் காடுவெட்டியையன் எனப் பெயாடைந்து மணவாள மாமுனிகளுக்குப் பஞ்சஸமஸ்காரஞ்செய்து திருநாட்டிற் கெழுந்தருளிய வைஷ்ணவாசாரியரில் ஒருவர்.

திருவாருர் நாகராஜநம்பி

இவன் திருவாரூர் தேவஸ்தான குருக்கள். இவன் அறுபத்து மூவர் விக்ரகங்களில் இரண்டைக் கருமானுக்கு விற்றுவிட, அவன் நறுக்கி உருக்கினான் என்பதைக் கிளிக்குக் கற்பித்து அதனைக்கொண்டு கிருஷ்ணதேவராயருக்கு அறிவித்தார் என்பது. வெண்பா “முன்னாளறுபத்து மூவரிருந் தாரவரில், இந்நா ளிரண்டுபே ரேகினார் கன்னான், நறுக்கினான் விற்றுவிட்ட நாகராஜநம்பி, இருக்கின்றான் கிருஷ்ணராயா. கிருஷ்ணதேவராயர்காலம் 1509 ~ 1529. (தமிழ் நாவலர் சரிதை.)

திருவாரூர் பிறந்தவர்

திருவாரூரில் பிறந்தவர் அனைவரும் சிவகணத்தவராயிருந்ததனால் அக்காலத்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பட்ட தொகை யடியவர்கள். (பெரியபுராணம்.)

திருவாலவாய்த்தம்பிரானார்

பழைய கணக்குகள் முதலியவற்றில் ஸ்ரீசோமசுந்திரக் கடவுளுக்கு இத்திருநாமமே வழங்கப்பெற்று வந்ததாம். “தம்பிராற்கே துகுலம்” என்பதனானுமுணர்க. (திருவிளை.)

திருவாலவாய்நல்லூர்

இவ்வூர் சமயநல்லூர்க்கு மேற்கேயுள்ளது. இக்காலத்துத் திருவாநல்லூரென வழங்கப்படுகின்றது. (திருவிளையாடல்.)

திருவாலி

மயிலையிலிருந்த ஒரு பிரபு. கம்பருக்கு உதவி செய்த பிரபு.

திருவாலியமுதனர்

இவர் திருமயிலையில் வேதியர் குலத்து அவதரித்துச் சிவத்தைப் பாடி முத்திபெற்றவர். இவரது திருப்பாசுரம் ஒன்பதாந் திருமுறையாக்கப்பட்டது.

திருவாளன்

ஒரு வேடன், திருமழிசையாழ்வாரையெடுத்து வளர்த்தவன்; இவன் தேவி பங்கயச்செல்வி.

திருவாழ்மார்பர்

காரியார் மாமனார், நம்மாழ்வாரின் தாயைப்பெற்ற தந்தை.

திருவிண்ணகரப்பன்

உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி.

திருவிளக்குப்பிச்சன்

திருவரங்கத்தில் பெருமாளுக்குத் திருவிளக்குக் கைங்கர் யம் செய்துகொண்டிருந்து நம்பிள்ளைத் திருவோலக்கத்தைப் பெருமாள், நின்று காணப், பெருமாளைச் சிமமாசனத்திருந்து கேட்கச் செய்தவர்.

திருவிளையாடற் புராணம்

இது மதுரை சொக்கநாத சுவாமிகள் செய்த திருவிளையாடல்களை வடமொழியிற் கூறியபடி தமிழில் பரஞ்சோதி முன்வராற் (65) படலங்கள் அடங்கிய (3363) திருவிருத்தங்களாக இயற்றப்பட்ட நூல். இது சொன்னோக்கம், பொருணோக்கம், சாமுத்திரிகாலக்ஷணம், பரதம், அச்வலக்ஷ ணம், ரத்தின பரீக்ஷை முதலியவற்றிற்கு இலக்கியமாகும். இவர் சாலிவாகனசகம் (1430) இல் இதைப் பாடினர் என்பர். அது சற்றேறக்குறைய (390) வருஷங்கள் ஆகிறது.

திருவிளையாடல்

இவை மதுரைமா நகரத் தில் சிவபெருமான் செய்த திருவிளையா டல்கள்: (1) குருவையிழந்த இந்திரனது சாபத்தைப் போக்கியது. (2) வெள்ளை யானைக்குத் துருவாசரால் வந்த சாபங் தீர்த்தது. (3) கடம்பவனத்தை யழித்து நாடாக்கியது. (4) உமாதேவியார் மலயத் துவச பாண்டியற்குத் தடா தகையாய்த் திரு அவதரித்தது. (5) சிவபெருமான் சோமசுந்தாபாண்டியனாக வெழுந்தருளித் தடாதகைப் பிராட்டியாரைத் திருமணங் கொண்டது. (6) பதஞ்சலி வியாக்ரபாத ரிஷிகளிருவருக்கும் வெள்ளியம்பலத் திருக்கூத்துத் தரிசனங் காட்டியருளியது. (7) தடாதகைப் பிராட்டியார் பொருட்டுக் குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டருளியது. (8) குண்டோதான் பொருட்டு வைகையையும் அன்னக்குழியையும் வருவித்தது. (9) தடாதகைப் பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிரங்கிக் காஞ்சன மாலையாட எழுகடல் அழைப்பித்தது. (10) காஞ்சனமாலையுட னீராடச் சுவர்க்கத்திருந்த மலையத்துவசனை வருவித் தது. (11) தடாதகைப் பிராட்டியிடம் உக்ரகுமார பாண்டியன் திருவவதரித்தது. (12) உக்ரகுமார பாண்டியற்கு வேல், வளை, செண்டருளியது. (13) கடல்சுவற வேலெறிந்தது. (14) அவ்வுக்ர குமாரன் தன்னுடன் எதிர்த்த இந்திரன் முடிமேல் வளையெறிந்தது. (15) மேருவிலிருந்த நிதியெடுக்கக் கொடாத மேருவைச் செண்டாலெறிந்தது. (16) வேதத்திற்குப் பொருளறியாது மயங்கிய இருடிகளுக்குப் பொருள் அருளிச்செய்தது. (17) பாண்டியகுமாரன் கிரீடத்தின் பொருட்டு மாணிக்கம் விற்றது. (18) மதுரைமீது வருணன்விட்ட கடலை வற்றச்செய்தது. (19) வருணன் ஏவிய மழை தடுத்து நகரத்தை நான்மாடக்கூடலாக்கியது. (20) எல்லாம் வல்ல, சித்தராய் எழுந்தருளிச் சித்துச் செய்தது. (21) சோதிக்கவந்த பாண்டி யன் பொருட்டுக் கல்லானைக்குக் கரும் பருத்தியது. (22) மதுரையை அழிக்கச் சமணர்களேவிய யானையை எய்தது, (23) கௌரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலரானது. (24) பாண்டியன் பொருட்டுக் கான்மாறி யாடினது. (25) கொலைக்கஞ்சியவேடன் பொருட்டுப் பழிக்கஞ்சி, வேண்டிய பாண்டியற்காக வணிகன் மணத்திற் சாக்ஷி காட்டியருளியது. (26) தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தான் மாபாதகந் தீர்த்தது. (27) வாட்படை யாசிரியன் மனைவியை வலிமையிலிச்சித்த மாணாக்கனது அங்கம் வெட்டியது. (28) சமணர் மதுரை மீதேவிய நாகத்தை யெய்தது. (29) சமணர் ஏவிய பசுவை நந்திதேவரை ஏவிக் கொல்வித்தது. (30) சவந்தர சாமந்தனெனுஞ் சேநாதிபதியின் பொருட்டுப் போர்ச்சேவகராய் மெய்க்காட்டிட்டது. (31) பாண்டியனுக்கு உலவாக்கிழி யருளியது. (32) மதுரைவீதியில் அவதரித்திருந்த இருடி பத்தினிகள் பொருட்டு வளையல் விற்றது. (33) இயக்கியர்களுக்கு அஷ்டமாசித்தி அருளிச் செய்தது. (34) சோழன்பொரு பட்டு மீன இலச்சினை விட்டிருந்த கதவந் திறப்பித்துத் தரிசனந் தந்து அவன் மீண்டபின் இடபக்குறியிட்டது. (35) பாண்டியன் படைக்குத் தண்ணீர்பந்தற் வைத்தது. (36) பொன்னனையாள் பொருட்டு ரசவாதஞ் செய்தது. (37) மதுரை மீது படைகொண்டுவந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது. (38) வேளாளராகிய அடியவர்பொருட்டு உலவா நெற்கோட்டை யருளியது. (39) தாயத்தார் வழக்கிடமயங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்குத் தீர்த்தருளியது. (40) வரகுணதேவர் பொருட்டுச் சிவலோகம் காட்டி யருளியது. (41) இசைவல்ல பாணபத்திரர்க்குப் பகைவனை விறகாளாய் இசைபாடி ஒட்டுவித்தது. (42) பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமாணாயனாருக்குத் திருமுகந்தந்தருளியது. (43) அப்பாணபத்திரர் மழையால் வருந்தாது பாடப் பலகையிட்டது. (41) ஈழ தேசத்துப் பாண்வல்லாளைப் பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது. (45) தாயிழந்த பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. (46) பன்றிக்குட்டிகளைப் பாண்டியர்க்கு மந்திரியர் ஆக்கியது. (47) கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்தருளியது. (48) நாரைக்கு முத்திகொடுத் தருளியது. (49) பிரளயத்தழிந்த மதுரைமா நகரின் எல்லையை அரவகங்கணத்தால் அறிவித்து ஆலவாயாக்கியது. (50) பாண்டியன் பொருட்டுப் படைத்துணை சென்று சுந்தரப்பேரம்பெய்தது. (51) நக்கீரர் முதலிய புலவர்பொருட்டுச் சங்கப்பலகை தந்தது. (52) பாண்டியன் ஐயம் தீரத் தருமிக்குக் கவிதந்து கிழியறுத்துக் கொடுப்பித்தது. (53) தருமிக்குத் தந்த கவிக்குக் குற்றங்கூறிய நக்கீரரைப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் வீழ்வித்துப் பின் கரையேற்றியது. (54) கீரருக்கு இலக்கணம் உரைப்பித்தது. (55) சங்கத்தார் கலகத்தை மூங்கைப்பிள்ளையால் தீர்ப்பித்தது. (56) பாண்டியனுடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்குத் தீர்த்தருளியது (57) குலப்பெண்பொருட்டு வலைவீசி அவளை மணந்தருளியது. (58) வாதவூரடிகளுக் குபதேசித்தது. (59) அரசனுக்கஞ்சிய வாதவூரர்பொருட்டு நரிகளைப் பரிகளாக்கியது. (60) பாண்டியனுக்களித்த பரிகளை நரிகளாக்கியது. (61) வாதவூரடிகள் பொருட்டு வைகைவெள்ளம் வருவித்து அதை அடைக்க ஏவிய வந்திபொருட்டுக் கூலி யாளாய்ச்சென்று பிட்டுக்கு மண்சுமந்தது. (62) திருஞானசம்பந்தசுவாமிகளால் கடன் பாண்டியன் சுாத்தையும் கூனையும் நீக்கு வித்தது. (63) சம்பந்த சுவாமிகளின் வாதத்திற்தோற்ற சமணர் கழுவேறியது. (64) வணிகப் பெண்ணுக்குச் சாக்ஷியாக வன்னியும், கிணறும், இலிங்கமும் வருவித்தது.

திருவிஷ்டன்

வசுதேவருக்குத் திருத்தேவியிடம் உதித்த குமரன்.

திருவீதிகள் ஐந்து

இவை தென்மதுரை யிலுள்ளவை 1. ஆடி வீதி, 2. சித்திரை வீதி, 3. ஆவணி மூலவீதி, 4. மாசி வீதி, 5. கோட்டை வெளிவீதி. இவற்றுள், சித் திரை வீதியில் மாசித் திருவிழாவும் மாசி வீதியில் சித்திரைத் திருவிழாவும் மது ரையில் இக் காலத்து நடைபெறுகின்றன. (திருவிளையாடல்)

திருவுந்தியார்

சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் ஒன்று.

திருவெண்ணெய் நல்லூர்

உமை வெண்ணெயால் கோட்டை கட்டி இடையிலிருந்து பஞ்சாக்னி வளர்த்திப் பூசை செய்த தலம். (வீரசிங் ~ புரா.)

திருவேங்கடசுவாமி

மாதைத் திருவேங்கடநாதரைக் காண்க.

திருவேங்கடம்

புரந்தரன் என்னும் வேதியன் குமரனாகிய மாதவன் தான், ஆசாரம் குறைந்து நீச்சப்பெண்ணினை மணந்து களவுமேற்கொண்டு வாழ்ந்து நீச்சப்பெண் தன்னைவிட்டுத் துரத்த மனம் குன்றி ஸ்ரீநி வாஸப்பெருமாள் எழுந்தருளி யிருக்கும் திருமலையடைந்து அதின்மீது ஏறினன். இவன் பாப (கடம்) தேகம் சடசடவென்று நெருப்புப்போல் வேக இவன் சுடர்விடு பசும் பொன் போல் தோன்றினமையால் திருமலைக்கு (வேம், கடம்) வேங்கடம் எனப் பெயர் வந்தது. இது கருடாழ்வா னால் வைகுந்தத்திருந்து கொண்டுவந்து பிரதிட்டிக்கப்பட்டது என்பர். (திருவேங்கடபுராணம்).

திருவேங்கடையர்

இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர். உபமான சங்கிரகம் தமிழில் செய்தவர்.

திருவையாற்றுச்சைவன்

திருவையாற்றில் சிவபூசை செய்துவரும் ஆதிசைவர் இருபத்து நால்வரில் ஒருவர். கங்கா யாத்திரைசென்று நெடுநாள் வராதிருந்தனர். இதையறிந்த எனைய இருபத்து மூவரும் யாத்திரை சென்றவரது காணியாட்சி சுவ தந்திரங்களைக் கவரத்தொடங்கினர். யாத்திரிகரது மனைவி சிறுமைந்தனுடனே அவர்கட்கு நியாயங் கூறியுங் கேளாமையால் மனைவி சிவபிரானுடன் முறையிட்டனள். சிவமூர்த்தி காசியாத்திரைசென்ற பிராமணர்போல் காவடியுடன் வந்து நீங்கள் சுகமோ என்று தழுவிக்கொண்டு என் சுவ தந்தரத்தை இல்லை யென்றவர் யாரென்று கேட்கப் பிராமணர்கள் “நாங்கள் செய்த பிழை பொறுக்க என்று பிரார்த்தித்தனர்” இவ்வாறிருக்கையில் மனைவியும் மைந்தரும் பிரிவாற்றாமைக் கிரங்கிக் காணியிழந்தமையுங் கூறினர். சிவமூர்த் தியாகிய வேதியர் ஸ்நாந முதலிய செய்து சிவபூசை முடித்து ஒருமடத்திலிருக்கை யில் காசி யாத்திரை சென்ற வேதியர் காவடி தாங்கி மடத்தில் வந்து நிற்கக், கண்டார் யாவரும் திகைத்தனர். பின்வந்தாரை, முன்னிருந்தவர் நீர் யாரென்ன நான் முதற்பூசைக் குரியோன் இருபத்து நால்வரில் ஒருவன் என்றனர். அதுகேட்ட முன்னவர் பின்னவரை பலவாறு உபத்திரவப்படுத்த அவர் பலசாசனங்களைக் காட்டி நிரூபித்தனர். இவ்விருவர் சாசனங்களிலும் சிவபெருமான் சாசன முயர்ந்ததால் உரிமை சிவமூர்த்தியாகிய வேதியரதாயிற்று. உடனே சிவபிரான் மறைந்து. ஆகாயவாக்காக நம்மை அர்ச்சிக்கும் சைவனாகிய இவனுக்குக் காணியாட்சி முதலிய எல்லா உரிமையுங் கொடுங்களென்ன அவர்களும் அவ்வாறே செய்தனர். இதனை “ஐயாற தனில் சைவனாகியும்” என்னும் மணிவாசகர் வாக்காலுமறிக,

திருஷத்வதி

1. யமுனை நதிக்கு மேல்பாலிருக்கும் நதி. 2. ஒரு நதி The Caggar whicb) flowed through Ambala and Sirbind, now lost in the sands of Rajaputada 3. (சூ) சுதிருதி குமரன். 4. திட்டத்துய்ம்மன் குமரன். 5. சத்தியதிருதி குமரன். 6. சுகுமாரன் குமரன்; இவன் குமரன் வீதிஹோத்ரன். 7. சத்யகேதுவின் குமரன்; இவன் குமரன் சுகுமாரன், 8. கேகயதேசாதிபதி, சுதகிருதியை மணந்தவன்; இவன் குமரர் சந்தாதனன் முதலிய ஐவர்.

திருஷ்டதுய்மன்

திட்டதுய்மனைக் காண்க.

திருஷ்டதுவிதி

குருக்ஷேத்திரத்தருகிருக்கும் நதி.

திருஷ்டன்

(சூ) வைவச்சு தம நுவின் கும ரன்; நபாகன் தந்தை, இவனிடம் தாரஷ்டியென்கிறவர் பிறந்து பிராமணராயினர்.

திருஷ்டவர்மன்

1. அக்குரூரன் தம்பி. 2. சுவபலருக்குக் காந்தியிட முதித்த குமரன்.

திருஷ்டி

யதுவம்சத்துக் குந்தி புத்திரன்.

திருஷ்யன்

அகஸ்தியன் புத்ரன்.

திருஹ்யன்

யயாதிபுத்ரருள் ஒருவன்.

திரேதாக்னிகள்

1. பவமாகன், பாவகன், சுசி; இவர்கள் வசிட்டர் சாபத்தால் அந் தர்த்தானனுக்குக் குமரராய்ப் பிறந்த அக்நிகள். 2. இது தக்ஷணாக்நி, காருகபத்யம், ஆஹ வனீயம் என மூன்று வகைப்படும். வேதிகைக்குத் தக்ஷணத்திலிருப்பது தக்ஷணாக்கி. காருகபத்யம் எஜமானனால் மற்ற அக்னிகளுக்கு முன் ஸம்ஸகரிக்கப் பட்டது. ஆகவனீயம் கிரியாசமாப்திபர்யந் தம் ஓமஞ்செய்யத் தகுந்தது.

திரேதாயுக தெய்வம்

தருமவுருவத்துடன் சபமாலிகையையும், துடுவையும், கையிற் கொண்டு களிப்புடனிருக்கும்.

திரேதாயுகம்

சதுர்யுகத்தில் இரண்டாவது யுகம். இதற்கு வருஷம் 12 லக்ஷத்து 96000.

திரைகருவாள்

ஒருவித அரசர்.

திரையன்

ஆதொண்டைச் சக்ரவர்த்தியைக் காண்க.

திரையன் மாறன்

இடைச்சங்கப் புலவருள் ஒருவன்.

திரையம்சன்

விப்ரசித்தியின் குமரன்.

திரையர்

இவர்கள் சோழவாசர்களில் ஒரு பிரிவினர். தொண்டை நாடாண்டவர்கள். இவர்கள் கடலுள்ளிட்ட நாட்டிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்டது பற்றித் திரையர் எனப்பட்டனர். இவர்கள் தமிழ் நாட்டினரல்லர். பெரும்பாணாறில் “பதிரை தரு மரபினுரவோரும்பல்’ எனவும், “கங்குலு நண்பகலுந்துஞ்சாவியல் பிற்சாய், மங்குல் சூழ்மாக்கடலார்ப்பது உம், வெம்சினவேற், கான்பயந்த கண்ணிக்கடு மான்றிரையனை, யான் பயந்தேனென் னுஞ் செருக்கு” வெண்பாவானும் அறிக. இத்திரையர், வங்காளத்திரையர், சீனத்திரையர், கடாரத்திரையர், சிங்களத்திரை யர், பல்லவத்திரையர் எனப் பலவகுப்பினராவர். (கடாரம் ~ பர்மா)

திரையாரணி

1 ஒரு இருடி; உரோம ஹருஷணர் மாணாக்கா, 2, உருக்க்ஷயன் குமரன்; இவர்கள் பிராமணராயினர். 3. திரிசங்கின் தந்தை; இவனைச்சூர்யாரண்யன் என்பர்.

திரைவர்ணிதேவி

அந்தகாசுரவதத்தின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் முறையிடச் சென்ற திரிமூர்த்திகளிடம் ஒரே உருவாகப் பிறந்த சத்தி. (வராக ~ புரா.)

திரௌபதி

பாஞ்சால தேசாதிபதியாகிய துருபதன் யாகத்தில் பிறந்தவள். ஆகையால் இப்பெயர் பெற்றனள். இவளுக்குப் பாஞ்சாலியெனவும் ஒரு பெயர். இவள் இதற்கு முன்ஜன்மத்தில் நளாயனன் குமரி; இந்திரசேனை யென்னும் பெயரால் மௌத்கல்யனை மணந்து பதிவிரதை யாயிருக்கையில் கர்மத்தால் மௌத்கல்ய ருஷிக்குக் குட்டவியாதி யுண்டாயிற்று. அப்படியிருந்தும் இந்திரசேனை கணவனிடம் மிகுந்த அன்பாயிருந்தனள். இதனால் முனிவர் களித்து இந்திரசேனையை என்னவரம் வேண்டும் என்ன, அவள் தனக்குச் காமத்தில் இன்பம் நிரம்பாமையால் அதைப் பூர்த்திசெய்க என அவ்வகை முனிவர் ஐந்து வகையாய்க் களித்திருக்கையில் முனிவர் முத்தியடைந்தனர். இந்திரசேனையும் கணவருடன் உயிர் விட்டுக் காமயிச்சை நிரம்பாமையால் காசிராறு புத்திரியாகப் பிறந்து சிவமூர்த்தியை யெண் ணித் தவமியற்றினள். சிவமூர்த்தி பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டுமெனப் பதில்தேஹி, பதிம்தேஹி, பதிம்தேஹி, பதிம் தேஹி, பதிம்தேஹி என்று ஐந்து முறை கூறினள், அவ்வகை அம்மூர்த்தி அருளி மறைந்தனர். அதனால் திரௌபதன் குமரியாய்ச் சுயம்வரத்தில் அருச்சுனால் கொண்டுவரப்பட்டுக் குந்தியின் கட்டளைப் படி ஐவரையும் மணந்து சுகத்துடனிருக்கையில் தன் கணவர்கள் மாயச் சூதாடிய காலத்தில் அடிமைப்பட்டபோது துரியோதனன் சொற்படி துச்சாதனன் துகில் உரியக் கண்ணனை வேண்டி மாளாத் துகில் பெற்று, மறுசூதாடி அவர்களை அடிமையினின்று நீக்கி ஐவருடனிருந்து கொடுஞ் சபதங்கள் செய்து ஆரண்யஞ்சென்று ஆற்றில் பாரிஜாத மலர்கண்டு, வீமனால் அதை வருவித்து, அமித்திரமுனிவர் பொருட்டுப் பழுக்கும் நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுக்க அருச்சுநனைக்கேட்டு அது இன்னார் பொருட்டென அறிந்து ஐவர் நண்ணனை வேண்டிப் பொருந்துவிக்கத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தானும் தன் கருத்தைத் தெரிவித்து முழுதும் பொருந்தச்செய்து ஐவருடனிருந்து இளம்பஞ்ச பாண்டவர்களென்று தருமனுக்குப் பிரதி விந்தனையும், பீமனுக்குச் சுருத சோமனையும், அருச்சுநனுக்குச் சுருத கீர்த்தியையும் நகுலனுக்குச் சதாநீகனையும், சகாதேவனுக்குச் சுருதசோனையும் பெற்றுத் துரியோதனனிறந்தபிறகு அவள் செய்துகொண்ட சபதப்படி கூந்தலை முடித்துக் கவிபிறந்து பாண்டவர் தமது இராச்சியத்தை விட்டுத் தவமேற்கொண்டு இமயமலை செல்கையில் அவர்களுடன் முழுதும் இல்லாமல் இறந் தவள். இவள் முன்னிறந்ததற்குக் கார ணம் பாண்டவர் ஐவரும் கணவராயிருக்க அருச்சுநனிடம் அதிக அன்பு மிகுந்தபடி யால் என்பர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி, பதிவிரதாசிரோமணி,

திரௌப்தாதித்தன்

கீசகன் திரௌபதியைப் பிடிக்கவருகையில் கிங்கரனால் கீசகனைத் தடுத்த சூரியன்,

திர்தூலமுனி

ஒரு தவசி,

திறல் விந்து

துரியோதனனுக்குத் தம்பி.

திறைகொண்டு பெயர்தல்

கொல்லும் வலி மிகும் எயிலினிடத்து மன்னரெல்லாம் தாழ்வு சொல்ல முறைமையான திறை யைக் கொண்டு இருந்த ஊரினின்றும் எடுத்துவிட்டது. (புறவெண்பா)

திலகசேனை

பரதகனுடைய தங்கை, இவளை யூகி மணஞ்செய்து கொண்டனன். (பெருங் கதை)

திலகவ்வை

இவள் வீரசைவப்பற்றுள்ளவள். சிவபக்தியில் மிகுந்தவள். இவள் சிவாலயமில்லாத இடத்திலிருக்கும் தம் கணவனைவிட்டு நீங்கப் புருஷன் கொல்ல வருகையில் சிவாலயத்தில் எழுந்தருளிய சிவமூர்த்தியிடமடைந்து தன் நாயகன் காணப் புருஷவடிவம் பெற்றவள்.

திலதவதியார்

திருநாவுக்கரசுகளுக்குத் தமக்கையார். திருநாவுக்கரசுகளைக் காண்க.

திலதேனுதானம்

(10) கழஞ்சுபொன்னால் தாமரைமலர் ஒன்று செய்வித்து வேதிகையில் வைத்து வெள்ளை ஆடையால் சுற்றி மலர்ந்த எள்ளின் பூப்போல் பொன்னால் செய்வித்து அதன் மேல் வைத்து அதன் மீது சிவபூசை செய்து பொற்கமலத்தின் வடபால் பதினொரு வேதியரை யிருத்தி அவர்முன் (11) வஸ்திரம் விரித்து எள்ளினாற் பசுசெய்து அதின் கொம்பு (1) கழஞ்சுபொன்னிலும், குளம்பு (2) கழஞ்சு வெள்ளியிலும், கவசம் வெண்கலத்தாலும் செய்வித்துப் பதினொரு இடத்துந் தனித் தனி இருத்தி உருத்திரமந்திரத்தால் பூசித் துக் கீழ்பால் துவாதசாதித்தரையும், அக்கி திக்கில் வேதியரையும், வித்தியேசுரரை அஷ்டமூர்த்திகளாகப் பூசித்து ஐந்து கழஞ்சுபொன் தக்ஷணையுடன் பசுவை வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்,

திலபத்மதானம்

மெழுக்கிட்ட பூமியில் வெள்ளை வஸ்திரம் விரித்து மூன்று கலம் எள் பரப்பி அதன் மேல் பத்துக்கழஞ்சு பொன்னால் எட்டிதழ்க் கமலம் செய்து மூன்று கழஞ்சில் உமையுஞ் செய்து இருத்திச் சிவமூர்த்தியுடன் விதிப்படி வித்தியே சுரரையும் பூசித்துத் தக்ஷணையுடன் வேதியர்க்கு அளிப்பது.

திலீபன்

1, (சூ.) அம்சுமான் குமரன். இவன் சுதக்ஷணையாகிய தன் மனைவியிடம் புத்திரப்பேறு இல்லாமையால் வசிட்டரை, கேட்க அம்முனிவர் அரசனை நோக்கி நீ தெய்வவுலகு சென்று மனைவியை விரும்பித் திரும்புகையில் வழியிலிருந்த கபிலை யைப் பூசியாது திரும்பினை யாதலால் அக் கபிலை என் வம்சத்தவரைப் பூசித்தாலன் றிப் புத்திரப்பே றுண்டாகாதிருக்க எனச் சபித்தது. அதனை நீ ஆகாய கங்கையின் அரவத்தால் கேளாதொழிந்தனை ஆதலால் கபிலையைப் பூசிக்க என்று கூறுகையில் வசிட்டதேனு சமீபித்தது. இது நற்சகுன மென்று அரசன் அன்று முதல் வசிட்ட தேனுவைப் பூசித்து வருகையில் ஒருநாள் இந்தப் பசு இமயச் சாரலில் மேய்ந்து கொண்டிருக்கையில் கும்போதரன் என்னும் பெயருள்ள சிவகிங்கான் சிங்கத்தின் உருக்கொண்டு அத் தேனுவைப் பிடிக்கப் பசு அரசனை நோக்கி அபயமிட்டது. அரசன் சிங்கத்தை வதைக்கச் சென்று அம் பினை யெடுக்கக் கை தூக்கினன். எடுத்த கை தம்பித்தது. இதனால் அரசன் அச்சிங்கத்தை நோக்கிப் பசுவினை விட்டு என்னைப் பக்ஷிக்க என்று அருகு சென்றனன். சிங்க வுருக்கொண்ட கிங்கரன் தன்னுருக் கொண்டு அரசனை நோக்கி அரசனே உன்னைச் சோதிக்கப் புகுந்தனன் என்று கூறி மறைந்தது. அரசன், பசுவினை வசிட்ட ராச்சிரமம் செலுத்தினன். இவன் குமரன் பகீரதன். கங்கை பூமிக்கு வரத் தவஞ் செய்து பலமடையாதவனாய்ச் சுவர்க்சம் அடைந்தவன். (இரகுவம்சம்). 2. விருத்தசருமனுக்கு ஒரு பெயர். 3. இவன் செய்த யாகத்தில் யாகத கதிணையாகப் பொன்னாற் செய்வித்த ஆயிரம் யானைகளைக் கொடுத்தான். இவன் பொன்னாலாகிய சஷாலமெனும் யூபத்தம்பத்தினடுவில் ஆறாயிரம் தேவர்களும் காந்தருவரும் நடித்தனர். (பார ~ சாங்.)

திலோதகி

அயோத்தியிலுள்ள நதி, இது, இலக்குமணர் கரி, பரி முதலியவை நீருண்ணப் பாணத்தால் நிலமகள் முதுகைப் பிளந்து வரவழைத்தது. இது திலம்போல் கருநிறம் கொண்டது.

திலோத்தமை

1. பிரமனால் படைக்கப் பட்டு அவள் மயல்கொளக் கிளியுருக்கொண்டு ஓடி நீங்கினவள். இவள் அழகினால் மயல் கொண்ட பிரமன், நான்கு திக்கில் முகங்கொண்டு பார்த்ததில் நான்கு முகம் உண்டாயிற்று என்பர். ஒருமுறை சகத்திரா நீகனை மோகிக்க அவன் உடன் படாததால் அவனை (14) வரு. மனைவியை நீங்கச் சாபம் அளித்தவள். பிரமன் ஏவலால் விச்வகர்மனால் அழகுடைய பொருள்களில் எல்லாம் எள்ளள வெடுத்துச் சிருட்டிக்கப்பட்டவள். இவள் ஒருகால் விந்திய மலைக்கருகில் வாச்சுந்தோபசந்தர் இருவரும் இவள் அழகினைக் கண்டு மயல்கொண்டு இவளிரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு என் பெண்டு, என் பெண்டு என்று போரிட்டு மாண்டனர். 2. பதுமைக்குத் தாய், 3. புத்திசேநன் தாய், 4, நாடகத் தெய்வமகளிர் எண்பதின் மருள் ஒருத்தி, (பெ ~ கதை.)

தில்லை நாயக சோதிடர்

சம்புகேசுரத்திற் இறந்தவர், சாதகசிந்தாமணி இயற்றியவர்.

தில்லைநாயக முதலியார்

தொண்டைநாட் டவர்; வேளாளர்; வேங்கடாசலசாமி என்பவரின் மாணாக்கர்; தமிழில் ஜாதகாலங் காரம் இயற்றியவர்; இது வடமொழி யோகமஞ்சரியின் மொழிபெயர்ப்பு.

தில்லைமாளிகைமடம்

இது பெரும்பற்ற புலியூர் நம்பியாருடைய ஆசிரியர் எழுந்தருளியிருந்த இடம். (திருவிளை.)

தில்லைவாழந்தணர்

ஸ்ரீ சிதம்பரத்து நடராஜமூர்த்திக்கு ஆராதனையில் விருப்புற்றுத் திருக்கைலையிலிருந்து எழுந்தருளிய சிவகணத்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பெற்றவர்கள். (திருத்தொண்டர் புராணம்).

திவஸ்பதி

பதின்மூன்றாம் மன்வந்தரத்து இந்திரன்.

திவாகரன்

1. ஒரு துளுவ சந்நியாசி விஷ்ணுவைத் திருவனந்தபுரத்தில் பூசித்து முத்தி பெற்றவன். 2. கந்தமாதனத்தரசன், (சூளா.)

திவாகரம்

1. ஒரு மலை. 2. திவாகர முனிவரால் இயற்றப்பட்ட தமிழ் நிகண்டு. இது பன்னிரண்டு தொகுதிகளை யுடையது.

திவாகர்

தமிழில் தம் பெயரால் நிகண்டு செய்து சேந்தனென்னும் அரசனுக்குக் கொடுத்து அதற்குச் சேந்தன் திவாகரம் எனப் பெயரிட்டவர்.

திவாகாமூர்த்தி

இரண்டு முகம் நான்கு கைகள். இரண்டு கைகளில் வில்வம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள், மஞ்சட் பட்டு வஸ்திரம், முத்துமாலையுடையவராய் இருக்குஞ் சூர்யமூர்த்தி.

திவாயோகம்

ஆயிலியம், அச்வநி முதற் கால்; பரணி, மூலம் இரண்டாங்கால்; திருவோணம், உத்திரம் மூன்றாம்கால்; மிருகசீரிஷம், சோதி நாலாங்கால் திவாயோகமாம். இவற்றில் சுபங்கள் செய்யல் ஆகாது. இரவிற் செய்யலாம். சந்திரன் பூரணனா யொரு சுபக்ரகத்துட னிற்கை யில் பகலும் தோஷமில்லை, (விதான.)

திவிட்டன்

பிரசாபதியின் இளையராணி வழிப் புத்திரன். நவவாசுதேவ அவதாரத்தில் ஒன்று.

திவிமிடன்

அஸ்தி குமரன்,

திவிரதன்

1. நகபானன் குமரன். இவன் குமரன் தர்மரதன். 2. திதிவாகன் குமாரன்.

திவோதாசன்

1. பீமரதன் குமரன்; இவன் குமரன் துயுமான். 2. முத்கலன் குமரன், 3. (தியுமந்தன்) பகீரதன் குமரன். 4, காசி அரசனாகிய பீமசேநன் புத்திரன். அவன் புத்திரன் பிரதர்தனன். 5. மேனகையின் புத்திரன், 6. வாரணாதிபதியாகிய தன்வந்தரி புத்தானாகிய சேதுமதன் புத்திரன். பீமரதன் என்றும் பெயர். 7. காசிராஜ வம்சத்துத் தன்வந்தரி பௌத்ரனான பீமாதன் புத்ரன், இவன் தன்வந்தரியின் குணங்களுடைமையின் தன்வந்தரியெனப் பட்டனன். இவன்பால் விசுவாமித்ர குமரராகிய சுருதர் முதலியோர். இவனிடம் வைத்திய சாத்திரம் கற்றனர்.

திவோதானன்

ஒரு கற்பத்தில் உலகமழிந்தது. அக்காலத்தில் இரிபுவைப் பிரமன் நோக்கி நீ உலகத்தை யாளுக உனக்கு சேஷன் மோகினியைப் பாரியையாக்குவான், தேவர்கள் வேண்டிய கொடுப்பர். அதனாலுனக்குத் திவோதானன் என்று பெயர் உண்டாகும் என்றனன். அவ்வகை திவோதானன் தேவரை மதியாது அரசளிக்கத் தேவர் பொறாமை கொண்டு இவன் தவத்திற்குக் காரணமான அக்நியைக் கிரகிக்க அரசன் எல்லாவிடத்தும் நிறைந்து சலியாதிருக்கச் சிவமூர்த்தி இவன் நிலை யை மாற்றும்படி யோகினிகள், துவாத சாதித்தர், பிரமன் சிவகணங்கள், கணபதி இவர்களை யேவிக் கலக்கினர். அவர்களால் முடியாமை கண்ட விஷணுமூர்த்தி பௌத்தமதம் போதித்துச் சனங்களை மயக்கியது கண்ட அரசன் காசியில் சிவப்பிரதிட்டை செய்து பூசித்து முத்தி யடைந்தான். இவன் குமரன் சயமாஞ்சயன். தேவியை அங்கமோகினி யெனவுங் கூறுவர். (காசிகாண்டம்).

திவ்யன்

சாத்துவதனன் குமரன்,

திவ்யம்

பிரமனால் சூரியனிடம் வைக்கப்பட்ட அக்னி.

திவ்யாங்கருஷி

நாசு கேதுக்குத் தந்தை,

திவ்வியமங்களமூரீத்தி

சிவபிரான் சர்வ சம்மார காலத்தில் எல்லாம் நீங்கத் தனித் திருந்து பெற்ற பெயர்.

திஷ்டன்

(சூ.) வைவச்சு தமனுவின் குமரன்; இக்ஷவாகுவிற்குச் சகோதரன்; இவன் குமரன் நாபாகன்.

திஷ்யந்தன்

துர்யசித் என்பவன் அபிமான புத்ரன், துஷ்யந்தனுக்குச் சகோதரன்.

தீ

(3) உயிரிலுள்ள தீ, உதரத்திலுள்ள தீ, சினத்தில் எழுந்தீ. (3) காருகபதயம், ஆகவனீயர் தக்ஷிணாக்கி

தீக்குணம்

(10) பொய் சொல்லல், கோட் சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில சொல்லல் இவை நான்கும் வாக்கின் தீக்குணம். களவாடல், வறிதேதொழில் செயல், கொலை செயல் இம்மூன்றும் காயத்தீக்குணம். கொலை நினைக்கை, காமப்பற்று, ஆசை இம்மூன்றும் மனத் தீக்குணம்,

தீக்ஷிதர்

சோதிஷ்டோமஞ் செய்த பரம்பரையில் பிறந்தாருக்குப் பட்டப்பெயர்,

தீக்ஷை

1. திருதவிருதனென்னும் ஏகாதசருத்திரன் தேவி. 2. தீ என்பது தானம். க்ஷீ என்பது ஷயம், புக்தி, முக்தி, தானமும், பாசக்ஷய முஞ் செய்வதால் இப்பெயர் உண்டாயிற்று, இது முதற்கடவுளிடம் இருந்து வழிவழியாகத் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் வரையில் படனசிரவணங்கள் செய்யும் ஜனங்களுக்கு அபீஷ்டமான புத்தி, முக்தி, ரூப்பவங்களைக் கொடுப்பதாயும், மலாதி பாசங்களை க்ஷயிப்பதாயும் இருக்கும் கிரியை எனப்படும். இது பௌதீக, நைஷ்டிகீ என இருவிதப்படும். அவற்றுள் பௌதகீ விசித்திரமான அபீஷ்டபோகங்களைக் கொடுத்துப் பின்னால் மோக்ஷத்தைத் தருவது. நைஷ்டி என்பது, நிஷ்டையைக் கொடுப்பது. இது தவத்தவர் சம்பந்தமாதலால், இப்பெயர் பெற்றது. பின்னும் இத்தீக்ஷைகள், சாபேக்ஷை, நிராபேக்ஷை என இருவிதப்படும், சமயாசாரா அநுஷ்டானங்களை அபேக்ஷித்தது சாபேக்ஷை, அதை அபேக்ஷயாதது நிராபேக்ஷையாம், பின்னும் இத்தீக்ஷை நிராதாரை, சாதாரை என இருவகையாம். இவற்றுள் நிராதாரை என்பது இறைவனே நேரில் தம்மைத் தியானிக்கும் அடியவர் பொருட்டுச் செய்வதாம். சாதாரை குருமூர்த்தியை அதிட்டித்துச் செய்வது, பின்னும் ஞானாசாரியன் பார்வையாலும், அஸ்தமஸ் தகசை யோகத்தாலும், திருவடிமுடி சூட்டலாலும் தீக்ஷை செய்வதும் உண்டு. இது மந்திரங்கள் விஷசக்தியைப் போக்குவது போல ஆன்மாக்களுக்கு அநாதியே உண்டாகிய மலசக்தியைப் போக்குவதால் தீக்ஷை, ஆன்மசமஸ்காரமாம். பின்னும் சேதனா சேதன சுவரூபத்தைப் பிரகாசிப்பித்து மோக்ஷத்தைத் தருவதாதலின் இப்பெயர்த் தாகும். 3. இஃது, ஆசாரியன், ஆன்மாவைப்பற்றிய பாசம் நீங்கச் செய்யப்படுவது. இது மாணாக்கன் பக்குவம் நோக்கிப் பலவகைப் படும். நயன தீக்ஷை : இது, மீன் தனது முட்டைகளைக்கண்ணால் பார்த்துக் காப்பது போல் ஆசாரியன் மாணாக்கனை அருட்கண்ணால் நோக்கிப் பாசம் நீக்குவது. பரிச தீக்ஷை : கோழி தன் சிறகால் தழுவிக் காத்தல் போல் ஆசாரியன் மாணாக்கனை ஞான அஸ்தத்தால் மத்தகத்தில் தொட்டுப் பாசநீக்கல். மானத தீக்ஷை : ஆமை தன் முட்டைகளை நினைத்த காலத்தில் அவை பொரிந்துடன் செல்வது போல் ஆசாரியன் மாணாக்கனைப் பரிபாக மெண்ணித் தீக்ஷித்துப் பாச நீக்குதல், வாசக தீக்ஷை : பஞ்சாக்ஷர உபதேசத்தால் தீக்ஷிப்பது. சாத்திர தீக்ஷை : சிவாகமங்களைப் போதித்துத் தீக்ஷித்தல். யோகதீகை : யோக மார்க்கத்தால் மாணாக்க னிருதயத் திற் சென்று தீக்ஷித்தல், அவுத்திரி தீக்ஷை. ஓமாதி காரியத்தால் தீக்ஷிப்பது. ஞான தீக்ஷை : இது, ஔத்திரியில் குண்ட மண்டலாதிகள் முதலிய மனத்தால் பாவித்துத் தீக்ஷிப்பது, கிரியா தீக்ஷை : குண்ட மண்டலாதிகள் செய்து தீஷிப்பது. இது, நிர்ப்பீஜம், சபீஜம் என இருவகை, நிர்ம் பீஜம் : சத்தியோநிர்வாணம், அசத்தியோ நிர்வாணமென இருவகை. சத்தியோதிர் வாணம் : விருத்தர் முதலிய பக்குவர்க்குச் செய்யுந் தீக்ஷை, அசத்திய நிர்வாணம் : வாலிபர் முதலிய மற்றவர்க்குச் செய்வது. சபீஜ தீக்ஷை : ஆசாரியரையடுத்து வேத சிவாகமங்களை ஓதிச் சமயாசாரங்களில் வழுவாது நிற்பவருக்குச் செய்வது. இது, உலோகதர்மணி சிவதர்மணி யென இரண்டாம். உலோக தர்மணி ஆசாரியன் மாணக்கனைப் பதப்பிராப்தியாகிய புவனங்களில் சேர்ப்பிக்கச் செய்யப்படுவது. சிவதர்மணி : மோக்ஷகாமியாகிய மாணாக்கனுக்குச் சிகாச்சேதன முதலிய செய்து மோக்ஷத்தை அடைவிக்குந் தீக்ஷை, சமய, விசேடம், நிருவாணம், ஆசாரியாவபிஷேக முதலிய, நிர்ப்பீஜ சபீஜ தீக்ஷைகளிலடங்கும். (சித்தா.)

தீன்மதிநாகன்

இவர் கடைச்சங்க மருவியபுலவர்களில் ஒருவர். (குறு 111.)

தீபகன்

வேத தருமரைக் காண்க.

தீபகல்பம்

மூன்று புறங்களில் மட்டும் ஜலம் சூழ்ந்து இருக்கும். அதற்குப் பரியாயத் தீவு அல்லது தீபகல்பம் என்று பெயர். (பூகோளம்).

தீபதிமான்

கிருஷ்ணன் புத்திரன்,

தீபமும் தீபாராதனையும்

தேவாலயங்களில் முக்கியமாய்ச் சிவாலயங்களில் பல வகைப்பட ஒன்று முதல் முறையே தீபார்த்திகள் பலவகைப் பேதங்களாகத் தேவர்களுக்கு ஆராதிப்பது. ஆராதனை காலத் தில் தேவர்கள் அனைவரும் தேவதரிசனத்தின் பொருட்டு வந்து அவ்வுருவமாக நின்று ஆராதனை தெரிசித்து விடை கொண்டு செல்வதாக ஆகமங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று முதல் ஐந்தளவுள்ள: தீபார்த்திகள் ஈசனாதி தேவர்கள் என்றும், திரிதீபம், தத்வத்ரயம் என்றும், பஞ்சதீபம், பஞ்சகலாசத்திகள் என்றும், சப்த தீபங்கள், சப்தமாதர்கள் என்றும், நவ தீபம், நவசக்திகள் என்றும், ஏக தீபம், ஸரஸ்வதி ஸ்வாகாதேவியென்றும் மற்றைய ருஷபாதி ரூபமுள்ளவை பல தேவர்கள் அவ்வுருக்கொண்டு வந்து தெரிசிப்பவர் என்றும் சோடசங்களாகிய உபசாரங்கள் பஞ்சபூதாதி தேவதா தரிசனமென் றும், ஸ்ரீகாரணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இந்தத் தீபார்த்திகள் சந்திராதாரமாகவும், ஏகாதாரமாகவும் கொம்புகளை ஆதாரமாகவும் பெற்றதாம். இவை சர்வகிர்த்திம நாசத்தின் பொருட்டும், சர்வலோக இதத்தின் பொருட்டும் செய்யப்படுவன, தீபாராதனைகளில் காராம் பசுவின் நெய் உத்தமம், மற்றப் பசுக்கள் மத்திமம், ஆட்டின் நெய்யும் எண்ணெயும் அதமம். விருக்ஷபீஜங்களின் நெய் நீக்கத்தக்கவை. முதலில் தீபாராதனை செய்யுமிடத்து நாகார்த்தி முதலாகக் கடதீபம் இறுதியாகச் செய்யவேண்டியது. பின் னும் பதினாறு கலைகொண்ட தீபமும், பக்ஷத்வீபமும், வாரதீபமும், ருத்ரம். பிர்திஷ்டம், சப்தமாதரம், நிவிர்தயாதி, கலாத்வீபம், ஸாஸ்வதித்வீபம் முதலிய தீபார்த் திகளைச் செய்யவேண்டியது. தீபார்த்திகளை யெடுத்துத் தேவர்களுக்கு ஆராதனை செய்வதில் மூன்று முறை தீபபாத்திரத்தை எடுத்து ஈஸ்வரருக்கு ஆராதனை செய்தல் வேண்டும். அதில் முதன்முறை லோக க்ஷணார்த்தமும் இரண்டாமுறை கிராமரக்ஷணார்த்தமும், மூன்றாமுறை பூதாக்ஷணார்த்தமுமாகத் திரிப்ரதக்ஷணமாகப் பாதாதி மத்தகம் வரையில் எடுத்து மத்தகம், லலாடம், மார்பு, திருவடிகள் முதலியவற்றைக் குறித்துப் பிரணவாகாரமாய்க் காட்டல் வேண்டும் இத்தீப ஆர்த்திகளின் முடிவில் கற்பூரார்த்தி செய்யப்படும். இது நீராஞ்ஜனம் என்று கூறப்படும். இதனால் தேவாராதனை செய்யின் சர்வசித்திகள் உண்டாம். இதனைச் செய்யுமிடத்து நாலங்குலம் ஜ்வாலை உயரம் எழும்பக் கற்பூரம் எற்றின் உத்தமம். மூன்றங்குலம் மத்தி மம், இரண்டங்குலம் அதமம். நீராஞ்சன பாத்திரமாகிறது விருத்தமாய்ச் சூர்ய மண்டலாகாரமாயிருத்தல் வேண்டும். இடையில் அக்னிதேவனுடைய இருப்பாய்க் கற்பூராதிகள் பதித்தல் வேண்டும், (ஸ்ரீகாரணம்.)

தீபம்

1. எண்ணெய், வர்த்தி, அக்கியால் யோஜிக்கப்பட்டது. இது சகல புண்ணியங்களையும் தரும். (விரதசூடாமணி). 2. மேனோக்கி வியாபித்து இருளைக் கெடுப்பது. ஆதலால் இது மனிதர்களுக்கு உற்சாகத்தையும் சக்தியையும் உண்டாக்குவது, இது பலிக்குச் சுக்ரன் கூறியது. (பாரதம் அநுசாசனிகபர்வம்).

தீபயஷ்டி

(தீவட்டி) இது, ஒரு கொம்பில் தீப்பிடிக்கும் எண்ணெய்ச் சேர்ந்த பொருள்களைச் சேர்த்து வெளிச்சந்தரச் செய்வதும், கிண்ணம் போன்ற இருப்புப் பாத்திரத்தில் எரி நெருப்பிட்டு ஒளிரச் செய்யுங் கருவி.

தீபஸ்தம்பம்

கலங்கரை விளக்கம் காண்க.

தீபாவளிபண்டிகை

இது ஐப்பசிய கிருஷ்ணபக்ஷ திரயோதசி இரவில் சதுர்த்தசி சம்பந்த மடைகையில் உலகத்தைத் துன் புறுத்தித் துன்ப இருள் மூடச் செய்திருந்த பிராக்சோதிடபுரியாண்ட நரகாசுரனைக் கண்ணன் கொன்றதின் பொருட்டுக் களிப்பினால் எண்ணெயிட்டு ஸ்நானஞ்செய்து விளக்கிட்டுக் களிப்பது.

தீப்பறவை

இது, பறவைகள் எல்லாவற்றினும் பெரிது, உயரம் (6, 7, 8) அடிகளிருக்கும். இது ஆப்பிரிக்காவின் அகன்ற வனாந்தரவாசி, இதன் கால்களும் கழுத்தும் ஒட்டகத்தைப்போல் நீண்டிருப்பதால் ஒட்டகப்பக்ஷி யென்பர். இஃது ஒட்டகத்தைப்போலவே பல நாட்கள் நீர் குடியாது வசிக்கும், இது பறவாது, கால்களில் பருத்த இரண்டு விரல்களுண்டு. குதிரையின் வேகத்திற்கதிகம் ஓடும். இதனைப் பழக்கி இதன் மேல் சவாரி செய்கிறார்கள், இதன் இறகுகளை ஆபரணமாகவும் முட்டைகளை ஆகாரமாகவும் முட்டையோட்டைப் பான பாத்திரமாகவும் உபயோகிக்கிறார்கள். இதனை வேட்டை யாடுகையில் அலுத்த பறவை தன்னை எதிரிகள் காணவில்லையென மணலில் தலையை மறைத்துக்கொள்ளும். அக்காலத்தில் அதனைப் பிடித்துக்கொள்வர்.

தீமந்தன்

1. விரோகணன் குமரன். 2. புரூரவன் குமரன்,

தீமுருகற்பாஷாணம்

நிபான) (Phosphorus) இது எலும்பினின்றும், சில உலோகங்களினின்றும் எடுக்கப்படுகிறது. இது தண்ணீரிலிருக்கும் வரையில் தன் குணத்தை வெளியிடாது. வெளிவந்து காற்றுப்படின் தீப்பற்றும். இது தீக்குச்சுகள் செய்ய உபயோகப்படுகிறது.

தீமை விளைக்கும் தேவதைகள்

இவர்கள் துச்சகன் சந்ததியார். அவர்களாவார்: தந்தாக்கிருஷ்டி, உக்தி, பரிவர்த்தகன், அங்கயுக், சகுனி, கண்டபிராதருது, கற்பகனன், சசியக்னன், நியோஜிகை, விமோதினி, சுவயம்ஹாரிகை, பிராமணி, ருதுஹாரிகை, ஸ்மிருதிஹாரிகை, பீஜாபஹாரிணி, வித்வேஷணி, தந்தாக்கிருஷ்டி, விஜல்பை, கலகை, காலஜிஹ்வன், பரிவர்த்தினி, அவிக்னன், மேகனை, க்ஷத்ரகன், சோதகை, கிராஹகை, தமப்பிரசாதகன், சோதகன், கிருஹன், அர்த்தஹாரி, வீர்யஹாரி, குசஹாரிணி, குசத்துவயஹாரிணி, ஜாதஹாரிணி, பிரசண்டன், வாதரூபை, அரூபை, அபகர்ஷை முதலியவர், இவர்கள் செய்கைகளைத் தனித்தனி காண்க.

தீயதேவதைகள்

தென்னாட்டில் சிலர் மாரி திருவிழாவில் கணக்கில்லா ஆட்டுக்குட்டிகளைப் பலியிடும் தேவதைக்குக் குட்டிக்குறாமாயி எனவும், இரத்தங்களைச் சட்டியிற் பிடித்து நிவேதிப்பது சட்டிக்குறாமாயி எனவும், பள்ளத்தில் ரத்தம் நிறைத்து நிவேதிக்கும் தேவதைக்குப் பள்ளக் குரமாயி எனவும், ஓலையினால் மாரியம்மன் செய்து வணங்குவது ஓலைப்பிடாரி எனவும், பின்னும் செல்லாச்சி, பேயாயி, பூமாயி, வீராயி, சடையாயி, மலையாயி, பொம்மக்காள், வெள்ளாயி, இளங்காளி, கருங்காயி, ஒண்டிவீரன், சங்கிலி வீரன், காத்தாயி, துர்க்காயி, கங்கையம்மை, வட்டப்பநாச்சி, கருமுனி, செம்முனி, வாழ்முனி, பூங்குறத்தி, வேங்கை யம்மன், கருவேங்கை, மலைவேங்கை, முடியாலழகி, முடிமேல் முடியழகி, மாப்பிள்ளை வீரன், பத்தினியம்மை, தீப்பாஞ்சாள், பொம்மி, சூரியசுவாமி, மன்னாதலிங்கம் வணங்கு வர். (உ ~வ.)

தீயன்

சூரபன்மன் மந்திரி,

தீயர்

இவர்கள் மலையாள நாட்டு இழுவர், இவர்கள் தொழில் கள்ளிறக்குதல் பயிர் வேலை செய்தல். மற்றும் பல தொழில் செய்தல். (தர்ஸ்டன்).

தீயவை

இது, சுலாவுதலையுஞ், (சுண்டு தலையு) மன்னாப்பொருளையு மேற்கொண்டு உரைத்த வொருவற்குப் பரிந்து சொல் லியதுணராது அல்லதை உணர்ந்து பக்ஷபாதமாவதுவாம். (யாப்பு ~ வி.)

தீரன்

பலி அரசன்.

தீரிகூடராசப்ப கவிராயர்

இவர் குற்றாலம் பாண்டி நாட்டில் மேல் அகரம் எனும் கிராமத்தில் வேளாளர் மரபில் பிறந்தவர். மகாகவி, இவர் காலம் முத்துவிஜயரங்க சொக்கநாதநாயகர் காலம், அவர் இவர்க்கு நில முதலிய கொடுத்து ஆதரித்தார். இவர் குறவஞ்சி பாடியதால் களிப்படைந்த அரசர் இவர்க்குக் கொடுத்த இடத்திற்குக் குறவஞ்சி மேடு என்று இப்பொழுதும் வழங்குகிறது. இவர் செய்த நூல்கள் திருக்குற்றாலபுராணம், குற்றாலக் குறவஞ்சி, குற்சலமாலை, குற்றாலச்சிலேடை வெண்பா, குற்றாலயமக வந்தாதி, குற்றாலவுலா, பரம்பொருள் மாலை, குற்றாலக்கோவை, குழல் வாய்மொழி கலிப்பாமாலை, கோமளமாலை, குற்றாலம் பிள்ளைத்தமிழ், நன்னகர்வெண்பா, குற்றாலவெண்பா அந்தாதி முதலிய.

தீருவசந்தி

சூர்யவம்சத் தாசன்.

தீர்க்க தமன்

1. பவயமுனிவர் குமரன், தாய் மமதை, இவன் தாய்வயிற்றிலிருக்கையில் வியாழன் கபடமாய்த் தன் தாயைப் புணர்ந்ததை அறிந்து கோபித்தனன். இதனால் வியாழன் கோபித்துக் கண்ணில்லாது போகச் சபிக்கப்பட்டவன். தீர்க்கதேவன் மாணாக்கன். இவன் பிரதோஷ காலத்தில் மனைவியைப் புணர்ந்ததால், கிராதரைப் போல் நூறு புத்திரரைப் பெற்றான். பலியின் மனைவியைப் புணர்ந்து அங்கனைப் பெற்றான். 2. இவன் பிரகஸ்பதியால் பிறவியந்தகனாய்ப் பிறந்து ஒரு எருது தர்ப்பையை மேய அதன் கொம்பைப் பிடித்து உன்னை விடேன் என்றனன், அவ்வெருது முனிச் சிரேட்டரே நாங்கள் அறிவில்லாதவர்கள் நாங்கள் செய்த தவறு பொறுக்க என வேண்ட விட்டுத் தன் மனைவியிட மிருக்கையில் அவளிந்தப் பிறவி யந்தகனிடமிருப்பது நலம் அல்ல, என்று ஒரு கட்டையில் கட்டித் கங்கையில்விடக் கூவிக் கொண்டு வெள்ளத்தில் சென்றனன். இவனைப் பலி எனும் அரசன் எடுத்துப் பரிபாவிக்கச் சந்தோஷித்து அரசனே என்ன வரம் வேண்டும் என அரசன் புத்திரர் வேண்டுமென்று தன் மனைவியை முனிவனிடம் போக ஏவினன். அரசபத்தினி தான் செல்லாமல் தன் தோழியை அனுப் பினள், அத் தோழியிடம் இரண்டு புத்தி ரர் பிறந்தனர். அப் புத்திரரை அரசன் நோக்கித் தன் தேவியிடம் பிறந்தவர் அல்லரென்றறிந்து மற்றொருநாள் தன் தேவியை அனுப்பினன். முனிவர் நான் உன் னைப் பரிசிக்கேன் நீ என்மீது தயிர், உப்பு, தேன் முதலியவற்றைக்கலந்து என் உடம்பெல்லாம் பூசிப்புணரின் இஷ்ட சித்தி பெறுவையென அவ்வாறே செய்து அபானஸ் தானத்தில் பூசாததனால், இருடி உனக்கு அபானமில்லாத புத்திரன் பிறப்பன் என்றனன். இதைக்கேட்ட இராஜமகிஷி வேண்ட முனி அவளை உடம்பெங்கும் தடவிப் பார்த்து என் பரிசத்தால் உனக்கு அநேக புத்திரர் பிறப்பர் என்றனர். பின் முனிவனை முன் சொன்ன எருதின் தாய் வந்து தன் குமரனுக்குச் செய்த உதவிக்கும், கோதர்மம் கைக்கொண்டதற்கும் உதவியாக உனக்குக் கண் கொடுக்கிறேன் என்று உடலைமோந்து பிரகஸ்பதியின் சாபத்தை நீக்கிற்று. இந்த அரசனாகிய பலியின் சந்ததியில் (36) வது கர்ணன், இவனைச் சூதன் என்பவன் வளர்த் தது பற்றிச் சூதவம்சத்தவன் எனப்பட்டனன். 3. உதத்யன் குமரன். இவன் பாரி பிரதேஷிணி, குமரர் கௌதமர் முதலியோர். 4. கக்கீவன் தந்தை. 5. ஒரு ரிஷி. உசத்தியன் குமரன்.

தீர்க்கசிவகன்

இவன் காசிராசனகப் பிறந்தவன்.

தீர்க்கதபசு

ஒரு ருஷி, பலியின் க்ஷேத்திரத்தில் புத்திர உற்பத்தி செய்தவர்.

தீர்க்கதமசு

உசீனனது மனைவியாகிய மமதையைக் குரு வலியப் புணரப்போக வயிற்றிலிருந்த கரு நான் உன் தமயன் மைந்தன் உன் கரு இதிலமையாதெனத் தடுக்கக் குரு அக்கருவை நீ குருடனாகெனச் சபித்தனன், அதனாலிவன் இப்பெயர் பெற்றனன். இவன் தம்பி மனைவியைப் புணரச் சென்றபோது தம்பி கோபித்து இவனைக் கங்கையில் விட மாபலியென்போன் கங்கையிற் செல்லுமவனையெடுத்துத் தன்னிருக்கையில் வைத்திருக்கையில் இவன் அம்மாபலிக்குப் புத்திரர் இலாமை கண்டு சுதேக்ஷணை புத்திரப்பேறு வேண்டின் உன் மனைவியென்னிடம் வருகவென அரசன் அவன் மனைவிக்குக் கூற அவள் உடன்படாது தோழியையனுப்பத் தோழி தவத்தால் ஞானியை அன்புடன் புணர இவளிடம் கட்சீவதன் பிறந்தனன். பின் முனிவன் அரசன் வேண்ட அவன் மனைவி உப்பு, தேன், தயிர் கலந்து என்னுடம்பிற் பூசித்தன்னாவின் கக்கின் புத்திரர் உளராம் என அவ்வாறு அவள் புரிகையில் அபானத்தைப் பூசாது விட்டனள். ஆதலால் அவளுக்கு அபானமில்லாக் குமரன் பிறந்தனன். இவளுக்கு அங்கன், வங்கன், கலிங்கன், சிங்கன் முதலிய புத்திரர்கள் பிறந்தனர். இந்தத் தீர்க்க தமசு பின்னால் இவன் கோசம்ரக்ஷணம் செய்தமையால் தவத்தால் கோதமனாயினன். (மச்ச, புரா)

தீர்க்கதவன்

புண்ணிய பாவனர்க்குத் தந்தை. இவனிறந்ததற்குப் பாவகன் விசனப்பட்டதறிந்து புண்ணியன், யாக்கை நிலையாமை கூறித் தேற்றினான்.

தீர்க்கதுண்டன்

ஒரு காகம். இது துருவாசரிட்ட பலி அன்னத்தைக் கவர்ந்து செல்லுகையில் மற்றொரு காகம் அதனை மறித்தது. அதனால் அந்த அன்னம் ஒரு சிவன்டியவர் பாத்திரத்தில் விழுந்தது. அது இரண்டாமுறை கவர்ந்து செல்லுகையில் அதை ஒரு வேடன் எய்தனன். அதனால் உயிர்நீங்கிச் சிவகணமாயிற்று. (அவிநாசித்தல புராணம்.)

தீர்க்கதேவன்

ஒரு முனிவன், தீர்க்கதமனுக்கு ஆசிரியன்.

தீர்க்கன்

மகதராஜன், பாண்டுவால் கொல்லப்பட்டவன்.

தீர்க்கபாகன்

திருதராட்டிரன் குமரன்.

தீர்க்கபாதன்

கருமுக வாநரத் தலைவன்.

தீர்க்கபாது

(சூ.) கட்டுவாங்கன் குமரன். இவன் குமரன் ரகு.

தீர்க்கபுசன்

திருதராட்டிரன் குமரன்.

தீர்க்கப்பிரக்யன்

1. பாரதவீரரில் ஒருவன், உருஷபர்வன் அம்சம். 2. உத்தர கோசலநாட்டரசன்.

தீர்க்கயஞ்ஞன்

பீமனால் திக்குவிஜயத்தில் செயிக்கப்பட்ட வடநாட்டரசன்.

தீர்க்கலோசனன்

துரியோதனன் தம்பி, பதினான்காம் நாள் பீமனால் இறந்தவன்.

தீர்க்கவசன்

திருதராட்டிரன் புத்திரன்

தீர்க்காதேவி

நிருதியின் தேவி.

தீர்த்தங்கரர்

இவர்கள் சைநதீர்த்தங்கார்கள். இவர் ஆதி தீர்த்தங்கரர் எனவும், மத்தியகால தீர்த்தங்கரர் எனவும், பவிஷ்யத்காலதீர்த்தங்கரர் எனவும் மூன்றுவகையர், இவர்களுள் ஆதி தீர்த்தங்கரர்களைப் பற்ற யும், பவிஷ்யக்கால தீர்த்தங்கார்களைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. மத்யகால தீர்த்தங்கரர்களைப்பற்றி அவ்வவர் பெயர்களில் காண்க, ஆதி தீர்த்தங்கார்கள் இருபத்தினால்வர். நிர்வாண, சாகா, மகா சாது, விமலப்பிரப, ஸ்ரீதர, சுதத்த, அமலப்பிரப, உத்தர, ஆங்கீர், சந்மதி, சிந்து, குசுமாஞ்சலி, சிவகண, உத்சாக, ஞானேச்வா, பரமேச்வா, விமலேச்வா, யசோதா, கிருஷ்ண, ஞானமதி, ஸுத்தமதி, ஸ்ரீபத்ர, அதிக்கிராந்த, சாந்தாச்சேதி முதலியவர். மத்தியகால தீர்த்தங்கரர் அல்லது வர்த்தமான தீர்த்தங்கரர். ருஷபர், அசிதர், சம்பவர், அபிநந்தனர், சுமதி, பத்மப்பிரப, சுபார்சவ, சந்திரப்பிரப, புஷ்பதந்த சீதள, சிரேயாம்ச, வாஸுபூச்ய, விமல், அருந்த, தர்ம, சாந்தி, குந்துநாத அர, மல்லி, முனு ஸூவிரத, நமி, நேமி, பார்சுவ, வர்த்த மானர் முதலிய இருபத்தினால்வர். பவிஷ் யதகாலதீர்த்தங்கரர் மகாபத்ம, சுரதேவ, சுபார்சுவ, சுயம்பிரப, சர்வாத்மபூத, தேவ புத்ர குலபுத்ர, உதங்க, புரோஷ்டீல செய கீர்த்தி, முநிஸுவ்ரத, அர, நிஷ்பாப, நிஷ்கஷாய, விபுல நிர்மல, சித்ரகுத்த, சாமதிகுப்த, ஸ்வயம்பு அநவிர்த்தகர், சய, விமல, தேவபால, அருந்தவீர்யாச்சேதி முதலிய இருபத்தினால்வர்.

தீர்த்தபசு

சுராஷ்டான் குமரன். இவன் குமரன் தன்வந்திரி,

தீர்த்தப்பிள்ளை

கந்தாடை லஷ்மணாசாரி யர் குமரர், வேதாந்ததேசிகர் திருவடி தீர்த்த விசேஷத்தால் பிறந்தவர். இவர்க்கு ஆயிஆழ்வான் பிள்ளை எனவும் பெயர்.

தீர்த்தமாகாத்மியம்

தீர்த்தங்களாவன; கங்கை, கோதாவிரி, நருமதை, சிந்து, ஜம்புமார்க்கம், கோடி தீர்த்தம், சர்மண்வதி, சோமநாதம், பிரபாஸகம், சரஸ்வதி, பிண்டாரகம், கோமதி, சர்வசித்தி, பூமி தீர்த்தம், பிரம்மதுங்கம், பஞ்சநதம், பீம தீர்த்தம், கிரீந்திரம், தேவிகை, பாபநாசமி, குமாரகோடி, குருக்ஷேத்ரம், வாரன தீர்த்தமாகா திமியம் கபாலமோசனம், பிரயாகை, சாளக்ராமம், வடேசதீர்த்தம், வாமக தீர்த்தம், காளிகா சங்கம், லௌஹித்யம், காதோயம், சோணம், ஸ்ரீபர்வதம், கோல்வகிரி, சக்ய தீர்த்தம், மலய தீர்த்தம், துங்கபத்திரை, வாதா, தபதி, பயோஷ்ணி, தண்டகாரண்ய தீர்த்தம், காளஞ்சரம், முஞ்சவடம், ஆர்ப்பாரகம், மந்தாகினி, சித்ரகூடம், சிருங்கபேசம், அவந்தி, அயோத்யா தீர்த்தம், சரயு, நைமிசதீர்த்தம், கும்பகோணம், பாபநாசம், யமுனை, சேது, மணிகர்ணிகை, பலபத்ரை, மாயா, மதுரா, அவந்தி, கேதாரம், நீலதண்டம், நேபாளம், இமவந்தம், கிருஷ் ணை, க்ஷரம், பினாகி, தாம்ரபாணி, வைகை, முதலிய தீர்த்தங்கள். இத்தீர்த்தங்களை நாடோறும் மனோவாக்குக் காயங்களால் ஸ்மரித்தாலும், வித்யை, தபம், கீர்த்தி முதலிய பலம் பெறுவர். தீர்த்தயாத்திரை விரும்பிய ஒருவன் லகு ஆகாரமுள்ளவனாய் ஜிதேந்திரியனாய்ப் புறப்படின் ஸர்வயஞ்ஞ பலங்களை அடைவன். மூன்று இரவு உபவாசமாய்த் தீர்த்தக்கரையிலிருந்து காஞ்சனம், பசு முதலியவை தானஞ் செய்தவன் எல்லாப் பலன்களையும் அடைவன். கையிலொன்று மில்லானும் தீர்த்தயாத்திரையை முன்னிட்டுப் பிரயாணப்படின் பஞ்ஞபலன் பெறுவன். மேற்கூறிய தீர்த்தங்களில் இரு அயநங்கள், கிரஹண புண்யகாலம், சநித்ரயோதசி, துவாதசி, அமாவாசை, பூரணை, ஏகாதசி, பிதுர்திவசம், வருஷசங்கிராந்தி, ஆடி, ஆவணி மூலம், தீபாவளி, மகாநவமி, யுகாதி, கேதாரவிரதம், விநாயகசதுர்த்தி, கந்த சஷ்டி, சிவராத்ரி, கோகுலாஷ்டமி, கார்த்திகை, மகம் முதலிய விரத்தினங்களில் ஸ்நானஞ்செய்து சங்கற்பஞ்செய்து (100) (1000) முழுக்கிட்டுக் காயத்ரியாதி மந்திரங்களைச் செபித்து, மரணமானவர்களின் எலும்புகளைத் தீர்த்தத்திலிட்டுப் பிண்டங்கள் முதலிய போட்டுத் தர்ப்பணாதிகள் செய்யின் பிதுர்க்கள் நற்கதி பெறுவதுடன் தாங்களும் இம்மையில் சகலபோகங்களையு மடைந்து மறுமையில் சுவர்க்காதி போகங்களையும் முத்தியையும் பெறுவர். தீர்த்தோத்தமமாகிய கங்கையில் எவ்வளவு காலம் மரணமடைந்தவன் எலும்பு இருக்குமோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத் தில் இருப்பன். (“யாவதஸ்தி சகங்காயாம் தாவதஸ்வர்க்கே ஸதிஷ்டதி”) கங்கை. தகையைத் தரிசிக்கினும், பரிசிக்கினும், உரிசிக்கினும், கீர்த்திக்கினும் புண்ணியத்தையடைகிறான். மகா தீர்த்தமாகிய பிரயாசை; இது திரிமூர்த்தி ஸ்தானம், இது யமுனையும், கங்கையும் கூடுமிடம்; இது பூதேவிக்கு ஜனனமென்று கூறப்படும். இதின் மிரு