அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தோகைமலைக்குறவர்

சென்னை இராஐதானியின் தெற்கில் உள்ள ஒருவகைக் குறவர்கள். இவர்கள் குறவர்களல்லர்; ஒரு வகைத் திருட்டுத் தொழில் செய் வோர். (தர்ஸ்டன்.)

தோசலன்

கம்சனால் மல்லயுத்தத்திற் கேவப்பட்டுக் கிருஷ்ணனால் மாய்ந்த ஒரு அசுர மல்லன்.

தோடகாசிரியர்

ஆனந்த கிரியென் போர். சங்கராசாரியர்க்கு மாணாக்கர்.

தோடர்

நீலகிரியிலுள்ள ஒருவகைச் சாதியார். இவர்கள் எருமைகள் வளர்த்துப் பால், நெய் விருத்தி செய்து ஜீவனம் செய்வர். வீட்டிற்குள்ளிருந்து இவர்கள் வெளிகளில் பெரும்பாலார் உலாவுவதில்லை. இவர்கள் தங்களுடைய தொழிலையே செய்வார்கள். அல்லது வேறு யாருக்கும் அடங்கி நடப்பவர்கள் அல்லர். (தர்ஸ்ட ன்).

தோட்டி

கிராமத்தில் தொண்டு செய்யவன். இவன் எல்லாத் தாழ்ந்த வேலையும் அதிகாரிகள் கட்டளையிட்டால் செய்பவன். கிராமத்தாரை அழைத்தல், காவல் காத்தல், குப்பைகளைதல், பணவசூலைக் கஜானாவில் சேர்த்தல் முதலிய வேலைகள் எல்லாம் செய்பவன். ஆனாலும் இவன் பெறும் சம்பளம் மிகச்சிறிது. (தர்ஸ்டன்.)

தோட்டிமலை

இது கண்டீரக்கோப்பெருநள்ளியுடையது. (புற ~ நா.)

தோட்டையங்காரப்பை

வானமாமலை ஜீயர் திருவடி சம்பந்தி. வாதூல கோத்திரத்தவர். இவர் சோளங்கிபுரத்தில் வியாபகராயிருந்தவர்.

தோத்தாரம்மன்

கிடாம்பி இராமாநுசப் பிள்ளான் குமரி, அப்புள்ளார் சகோதரி.

தோபகன்

அறநூல்வழி ஒழுகுகின்றவனாய் அரசனால் ஏவப்படாமலே சலம் முதலியவைகளை அரசர்க்கு முதலில் தெரிவிப்பவன். (சுக்ரநீதி.)

தோயன்மாறன்

கோனாட்டு எறிச்சலூர் மதுரைக் குமரனாரால் பாடப்பெற்றவன்.

தோரியமடந்தையர்

ஆடலில் முதிர்ச்சி பெற்ற மங்கையர்.

தோற்கருவி

இவை பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை என்பவைகள் இவை அகமுழவு, புறமுழவு, அகப்புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலைமுழம் எழுவகைப்படும். அவற்றுள் அழவு மத்தளம், சல்லிகை, இடக்கைடிகை, பேரிகை, படகம், குடமுழா முதலிய. அகப்புறக் கருவியாவன தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் முதலிய புறமுழவாவன : கணப்பறை முதலிய புறப்புறக்கருவியாவன : கூறியவற்றுள் அடங்காத நெய்தற்பறை முதலிய பண்ணமை முழவாவன : முரசு, நிசாளம். துடுவை, திமிலை முதலிய. வீரமுழவு நான்காம். நாண்முழவாவன : முரசு, நிசாளம், துடுவை, திமிலை முதலிய. வீரமுழவு நான்காம். நாண்முழவாவன : நாட்பறை அதாவது நாழிகைப்பறை. காலை முழவாவன : துடி, மத்தளம்; இதில் மத்து ஓசைப் பெயர். இசை இடனாகிய கருவிகட்கு எல்லாம் தளமாதலின் மத்தளம் எனப் பெயர் ஆயிற்று. இதற்கதிட்டான தெய்வம், நான்முகன் என்று கூறுப. சல்லிகை : சல் என்ற ஓசை உடைமையின் பெற்ற பெயர். ஆவஞ்சி : ஆவின் வஞ்சித்தோலைப் போர்த்தலால் பெற்ற பெயர். குடுக்கை : குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்ப. இடக்கை : வினைக்கிரியைகள் இடக்கையால் செய்தலால் பெற்ற பெயர். கரடிகை : கரடி கத்தனாற்போல் ஓசை உடைத்து ஆதலால் பெற்ற பெயர். மத்தளம், சல்லிகை உடுக்கை இவைகளை முதற் கருவி, இடைக்கருவி, கடைக்கருவிகளாகக் கொள்க. இவையன்றிக்கரடி பறை, பன்றிப்பறை, ஒருகட்பகுவாய் பறை, துந்துபி, தாரியம், பம்பை, தப்பட்டம், தலைவிரிபறை, மரக்காற்பறை முதலிய உளவாம்.

தோற்றம்

(2) சரம். அசரம். (4) பையிற்பிறப்பன, முட்டையிற் பிறப்ப நிலத்திற் பிறப்பன. வியர்வையிற் பிறப்பன.

தோற்றுன்னர்

சாலியன் பார்ப்பினியைப் புணரப் பிறந்தவன்.

தோலாந்தர எரிப்பு

ஒரு பாத்திரத்தின் நடுவில் மருந்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு எரிப்பது.

தோலாமொழித்தேவர்

சூளாமணி என்னும் தமிழ்க்காப்பியஞ் செய்தவர். இவர் கார்வெட்டி நகராண்ட விசயராசன் காலத்திருந்ததாகத் தெரிகிறபடியால் இவர் இருந்தகாலம் சற்றேறக்குறைய (1500) வருஷம் இருக்கலாம் என்பர். (சூளாமணி).

தோலாவழக்கன்

திருமங்கையாழ்வாருக்கு மந்திரி.

தோலுழிஞை

வெற்றியுடன் இசையை உண்டாக்குமெனச் சொல்லிப் பழையதாகி வந்த கிடுகுப்படையைச் சிறப்பித்தது. (புற.வெண்பா.)

தோல்

இழுமென்ற மெல்லியவாய சொற்களால் விழுமியவாய்க் கிடப்பனவும் எல்லாச் சொற்களுடன் கூடிய பல அடிகளையுடையனவாய்க் கிடப்பனவும் என இருவகை. (யாப்பு ~ வி.)

தோல்வித்தானம்

தோல்வித்தானமாவது யாதேனும் ஒருவிஷயத்தில் ஒருவர் கொள்கைக்கு மற்றொருவர் கொள்கை மாறுபட்டுழி மெய்யுணர்வகைவருதல் காரணமாக நியாய சபையிலே வாதியும், பிரதிவாதியுமாகி நின்று பிரமாணாதிகளோடும் வாதிக்குந் தருக்க வாதத்திலே தடுமாறிக் கூறுதலினாலாவது தவறொன்றாகக் கூறுதலினாலாவது ஒருவர் தோல்விக் கிடனாதலேயாம். ”வாதம் பேசுவார் தோல்வியுறுதற்கேதுவே தோல்வித் தானம்” என்பது தருக்க சங்கிரகதீபிகை. தோல்வித் தானத்தினை வடநூலார் நிக்கிரகத்தானம் என்பர். நிக்கிரகம் : தோல்வி, தள்ளுதல்; தானம் : இடம், இருக்கை ; வாதி : தன் பக்ஷத்தை முதலெடுத்துக் கூறுவோன்; பிரதிவாதி கூற்றுக்களை மறுத்துரைப்போன். தோல்வித்தானம் (22) வகைப்படும் என்று சில தருக்க நூல்களுக்குச் சிவஞான சித்தியும் கூறும். “காண்டுந் தோல்வித் தானமிரண்டிருப் பத்திரண்டாம்” என்பது சிவஞான சித்தி.” தோல்வித்தானங்கள் (22) ம் சிவஞானசித்தி யுரைகளுள்ளே மறை ஞானசம்பந்தர், சிவாக்கிரயோகியார், சிவஞானதேவர், நிரம்பவழகியதேசிகர் என்னும் நால்வரும் செய்த உரைகளிலும் கௌதமருடைய நியாய சூத்திர வுரையிலும், தருக்க சங்கிரக தீபிகையின் உரையாகிய நீலகண்டீயத்திலும், விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. நியாய சூத்திரத்திலே கூறப்பட்டுள்ள (16) பதார்த்தங்களுள்ளே தோல்வித் தானமும் ஒன்று. அதுவே இறுதியிற் கூறப்பட்டுள்ளது. தருக்க சங்கிரக தீபிகையிலும் உத்தேச மாத்திரையாகக் கூறப்பட்டிருக்கின்றன. தருக்க பரிபாடையிலுஞ்சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. பிரபாகரம் பாட்டம் முதலிய நூல்களிலே விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. (1) பிரதிஞ்ஞா ஹானியாவது பிரமாணம் முதலியவைகளாலே சாதிக்கத் தக்கதென்று தன்னால் விரும்பிச் சொல்லப் பட்ட பொருளைச் சாதித்து முடியாது அப்பொருட்குக் கேடுறுமாறு பேசுதல். பிரதிஞ்ஞாஹாநி என்பதற்குப் பிரதிவாதி கூற்றுகளை அங்கீகரித்துக் கொண்டு தன் கொள்கைகளை விடுதலென்பாரு முளர், பிரதிஞ்ஞா : உடன்பட்டுக் கூறப்பட்ட பொருளையுடைய வாக்கியம்; ஹாநி கேடு, அழிவு, விடுதல். (2) பிரதிஞ்ஞாந்தரம் : பிரதிஞ்ஞாந் தரமாவது தன்னாலே முன்னர்க் கூறப்பட்ட பிரதிஞ்ஞை பிரதிவாதியாலே மறுத்துரைக்கப்பட்டுழி, அதனைச் சாதிக்காமல் வேறொரு பிரதிஞ்ஞையைக் கூறுதல். பிரதிஞ்ஞை : மேற்கோள்; அந்தரம் : வேறு. (3) பிரதிஞ்ஞாவிரோதம் : பிரதிஞ்ஞா விரோதமாவது தன்னாலே சொல்லப்பட்ட மேற்கோளுக்குச் சம்பந்தமில்லாத வேறோரேதுவினைக் கூறுதல். பிரதிஞ்ஞா : மேற்கோள்: விரோதம் : மாறுபா. (4) பிரதிஞ்ஞாசந்நியாசம் : பிரதிஞ்ஞா சந்நியாசமாவது தன்னாலே கூறப்பட்ட மேற்கோள் பிரதிவாதியாலே மறுக்கப்பட்டுழி அதனை முற்றும் விட்டுவிடுதல். பிரதிஞ்ஞா : மேற்கோள். சந்நியாசம்: முற்றவிடுதல்.(5)ஏத்துவந்தரம்: ஏத்துவந்தரமாவது தன்னாற் சொல்லப்பட்ட பிரஞ்ஞையின் ஏது பிரதிவாதியாலே மறுக்கப்பட்டுழி வேறோர் ஏதுவினைக்கூறுதல். ஏது : காரணம், அந்தரம் : வேறு இதனை ஏத்துவபரம் எனவும் கூறுவர். (6) அர்த்தாந்தரம் : அர்த்தாந்தரமாவது தன்பால் வருந்தோல்வியை மறைக்கக் கருதி முன்னர்ச் சொன்ன பொருட்கு உபயோகமில்லாத வேறு பொருள்களைக் கூறுதல். அர்த்தம் : பொருள். அந்தரம் : வேறு. (7) நிரர்த்தகம் : நிரர்த்தகமாவது பிரதிவாதி யாதும் பேசானாகவுந் தான் வீண்வார்த்தைகளைப் பேசுதல் நிரர்த்தகம் :பயனில் வார்த்தை. நிர் : இன்மை. அர்த்தகம் : பொருளுடையது. (8) அவிஞ்ஞாதார்த்தம் : அவிஞ்ஞா தார்த்தமாவது சபையாரும், பிரதிவாதியும் அறிந்து கொள்ளற்கரிய பொருளுடைய சொற்களை எடுத்துக்கொண்டு பேசுதல். அவிஞ்ஞாத : அறியப்படாத, அர்த்தம் : பொருள். (9) அபார்த்தகம் : அபார்த்தகமாவது யாதேனும் ஒரு பொருளும் இல்லதாக ஒன்றோடொன்று அவாவிப் பொருந்துதலில்லாத சொற்களைத் தொடுத்துக் கூறுதல். அவாய்நிலை முதலியன இல்லனவாகப் பேசுதல் என்பாருமுளர். அப : நீங்கிய, அர்த்தகம் : பொருளுடையது அடார்த்தகம் என்பதனைப் பொருட்போலி என்று மொழி பெயர்ப்பாருமுளர். (10) அப்பிராப்த்தகாலம் : அப்பிராப்த்த காலமாவது மேற்கோள், ஏது முதலியனவெல்லாம் முறைதவறி முன் பின்னாக நிற்குமாறு பேசுதல். அப்பிராப்த : அடையப்படாத, காலம். (11) நியூநம் : நியூநமாவது தன்னாற் சொல்லப்பட்ட பிரதிஞ்ஞையை நிலை பெறுத்தும் உறுப்புகளை முற்றக்கூறாது சில உறுப்புகள் குறைவுபடக் கூறுதல். நியூநம் : குறைவு, குன்றக்கூறல். (12) அதிகம் : அதிகமாவது இயையும் உபயோகமும் பற்றி ஏது முதலிய உறுப்புகளை அதிகமாகக் கூறுதல். அதிகம் : மிகை, மிகைப்படக் கூறுதல். (13) புநருத்தம் : புநருத்தமாவது அநுவாதமின்றி முன்சொன்ன சொல்லினையாவது பின்னுங் கூறுதல். புநருத்தம் : கூறியதுகூறல். புந : பின்னர், உக்தம் : சொல்லுதல். அநுவாதமாயின், புநருத்தம் குற்றமாகாது. (14) அந்நுபாடணம் : அந்நுபாடண மாவது வாதியினாலுஞ்சபையாராலும் சொல்லப்பட்ட வாக்கியத்தை மறுக்கும்போது பின்னர் எடுத்துக் கூறுதலாகிய அநுவதித்தலைச் செய்ய இயலாமை. அந்நுபாடணம் :வழிமொழிய மாட்டாமை. அந் : இன்மை. அநுபாடாணம் : வழிமொழிதல். (15) அஞ்ஞானம் : அஞ்ஞானமாவது சொல்லப்படும் வாக்கியம் மூன்று முறை சொல்லப்பட்டுச் சபையாரால் பொருளறியப்பட்டும் அதன் பொருளை அறியமாட்டாமை. அஞ்ஞானம் : அறியாமை. அ : இன்மை. ஞாநம் : அறிதல். (16) அப்பிரதீபை : அப்பிரதீபையாவது வாதியாலே சொல்லப்பட்டது. உத்தரங் கூறுதற் கேற்றதென்றறிந்தும் உத்தரங் கூறாது கடவுளைத் தியானித்தல், வேறொன்று படித்தல், மேலே பார்த்தல் முதலியன செய்து யுத்தியின்மையைக் காட்டுதல். அப்பிரதீபை : புத்தியின்மை ; அ : இன்மை ; பிரதீபை : புத்தி, காலத்துக்கேற்ற அறிவு. அப்பிரதீபை என்பதனை அப்பிரதிரூபகதை என்பாருமுளர். (17) விக்ஷேபம் : விக்ஷேபமாவது நியாயசபையிலே வாதமாரம்பித்த பின்னும் வாதியாவது, பிரதிவாதியாவது மத்தியஸ்தர் முதலினோரில்லை என்று சொல்லி எடுத்த விஷயத்தைத் தூரவிடுத்துக் காலங்கழித்தல். விக்ஷேபம் : தூரவிடுதல். (18) மதாநுஞ்ஞை மதாநுஞ்ஞையாவது : தான் கூறியவைகளிலே பிரதிவாதி ஏற்றிய குற்றங்களை மறுத்துரையாது உடம்பட்டுப் பிரதிவாதிக்கு வெறுப்புண்டாக எண்ணி இட்டமுள்ள வைகளைக் கூறுதல். மத : அறியப்பட்ட. அநுஞ்ஞை : சம்மதி. (19) பரியநுயோச்சியோபேக்ஷணம். பரியநுயோச்சியோபேக்ஷணமாவதும் றுத்துரைத்தற்குத் தக்கதாகப் பிரதிவாதி கூறிய வாக்கியந் தோன்றுதலை அறிந்தாவது அறியாமலாவது மறுத்துரையாது விடுத்தல். பரியநுயோச்சியம் : உடன்படற்குரியது. உபேக்ஷணம் : விருப்பின்மை. (20) நிரநுயோச்சியாநு யோகம் : நிரநுயோச்சியாது யோகமாவது தோல்வித் தானமடையாதவனை அடைந்தனையென்று தோல்வித்தானங்கூறுதல். நிரநுயோச்சியம் : உடன் படாமைக்குரி யது. அநுயோகம் : சொல்லற் கியைந்தது. (21) அபசித்தாந்தம் : அபசித்தாந்தமாவது யாதேனும் ஒரு சாத்திரசித்தாந்தத்தை அநுசரித்துப் பேசத்தொடங்கி அதனை மறந்து அந்தச் சித்தாந்தத்திற்கு மாறாயுள்ள வேறொரு சித்தாந்தத்தினைப் பின் அநுசரித்துப் பேசி முடித்தல். அப : விபரீதம். சித்தாந்தம் : முடிந்தமுடிபு. அபசித்தாந்தம் என்பதனைப் போலிச்சித்தாந்தம் என்பாருமுளர். (22) ஏத்துவாபாசம் : ஏத்துவா பாசமாவது எடுத்துக் கொண்ட பிரதிஞ்ஞைக்கு இயைபில்லாத ஏதுக்களைக் கூறுதல். ஏது : காரணம். ஆபாசம் : போலி.

தோளைச் சார்ந்த எலும்புகள்

இதன் சம்பந்தமான புஜஎலும்பு (1) முன்கை எலும்புகள் (2) மணிக்கட்டு எலும்புகள், (8) உள்ளங்கையில் எலும்புகள், (5) கையில் கட்டைவிரலில் வெவ்வேறான எலும்புகளும், மற்ற நான்கு விரல்களில் மும்மூன்று வெவ்வேறான எலும்புகளும் உண்டு,

தோழப்பர்

1. இவர் வேங்கடாசாரியர் என்று இயற்பெயருள்ள ஒரு ஸ்ரீவைஷ்ணவர். இவர்வைதிகசார்வ பௌமரெனவும் கூறப்படுவர். ஹாரீத கோத்திரத்திற் பிறந்தவர். ஸ்ரீஆதிவண்சடகோபசு வாமிகளுக்குச் சிஷ்யர். இவரது ஊர் மணற்பாக்கம். இவர் வடமொழியில் கிருஹ்யரத்நம், ஸ்மிருதிரத்நாகரம், பிதிர்மேதசாரம், தசநிர்ணயம், ஆசௌசசதகம் முதலிய இயற்றினவர். 2. இவர் மேனாட்டவர், இவர் பட்டர்பிரான் புருஷாகாரமாக மணவாள மாமுனிகளை ஆச்ரயித்தவர். அழகிய மணவாளப் பெருமாள் நயினாருக்குத் தம்பியார்.

தோழி

இவள் செவிலிக்கு மகளாய் நன்மையுந் தீமையுமாய்தலுடன் தலைமகளுக்கு உசாத்துணையாய் அவளது வருத்தந் தீர்த்தற்குரிய அன்பு பொருந்திய துணைவியாம்.

தோஷங்கள்

(7) 1. அபத்தியதோஷம், ஸ்திரீசங்கமதோஷம், விஷம் தோஷம், விஷமசீதளதோஷம், ரக்தசிக்வகதோஷம், பீதசிக்வகதோஷம், கிருஷ்ணகிக் வகதோஷம். 2. இது குழந்தைகளுக்குண்டாகும் தோஷங்கள். இது (9) வகை (1) நாய்முள் தோஷம் : இது வாயில் முட்போல் எழும்புதல் பாலுண்ணாமை, அள்ளு, கபம், கால்வலி, சுரம் உண்டாம். (2) எச்சில் தோஷம் : இதனால், மயக்கம், சுரம், பேதி, சீறியழல் உண்டாம். (3) குளிசதோஷம் : இது, கருப்பம் வேண்டின ஸ்திரிகுளிசம் கட்டிக்கொள்ளுகையில் எதிர்ந்த குழந்தைகளுக்கு உச்சி பள்ளம் விழல், கண்குழிதல், அதிசுரம், இளைப்பு, பேதி உண்டாம் (4) தூரஸ்திரீபரிச தோஷம் : தேக இளைப்பு, பாலெதிரெடுத்தல் பேதி, கண்ணிற் பீளை இதற்கு முட்டுத் தோஷம் எனப் பெயர். (5) சையோகபுருஷபரிசதோஷம் : கண் குழிவிழல், உடம்புபசத்தல், சீறியழல், பாலெதிரெடுத்தல் இதை விஷதோஷம் என்பர். (6) சையோகஸ்திரீபரிசதோஷம் : நெஞ்சு வறட்சி, கண் குழிதல், வெளிறல், பால் குடியாமை, நித்திரையின்மை முதலிய உண்டாம். (7) அளிதோஷம் : பாலெடுத்தல், நெஞ்சடைப்பு, தேக நாற்றம் உண்டாம். (8) குளித்தவள் எடுத்த தோஷம் : பாலெடுத்தல், உச்சி பள்ளம், வாயுலால் முதலிய உண்டாம். (9) தேரை தோஷம் : இது தேரைகள் குழந்தைகளின் மேல் வீழ்ந்து பீச்சுவதால் உண்டாவது. கால் கைகள் சூம்பல், மாறுபிறம், வாட்டம், பாலுண்ணாமை, முதலிய குணங்களை உண்டாக்கும்.

தோஷன்

1. யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிட முதித்த குமரன். 2. வசுக்களில் ஒருவன் தருமத்திற்கு வசுவிடத்துதித்த குமரன், பாரி சரவரீ.

தோஷா

புட்சிபாரன் பாரி, குமரர் பிரதோக்ஷன், நிசிதன், வியுஷ்டி,

தோஷை

1. பவான் தேவி. 2. புஷ்பாருணன் தேவி.

தோஷ்டா

காச்யபருக்கு அதிதியிட முதித்த குமரன்; துவாதசாதித்தரில் ஒருவன்; இவனைத் துஷ்டா என்பர்; துஷ்டாவைக் காண்க.