ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தொகாநிலை | வினைமுற்று, ஈரெச்சங் கள், எழுவாய், விளி, இரண்டு, முதலிய ஆறு உருபுகள் விரிந்து நிற்பன. (நன்னூல்) |
தொகை ஆறு | வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை. |
தொகைநிலை | 1. கேடின்றியே நிறையக் கீர்த்தியை நிறுத்தி எல்லாரும் போர்க்களத்திலே மடிந்தது. (பு.வெ.) 2. எல்லா அரணிடத்துமுள்ள மாறு பாட்டு மன்னர் பலரும் அந்த எயிலிடத்தே அவன் பாதத்தைச் சேர்ந்தது. (பு.வெ.) |
தொகைநிலைச் செய்யுள் | இது, ஒருவராலுரைக்கப்பட்டுப் பலபாட்டாய் வருவனவும், பலராலுரைக்கப்பட்டுப் பல பாட்டாய் வருவனவும், இது பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு முதலியவற்றாற் தொகுப்படைந்தவை. இது பெருங்காப்பியம், காப்பியம் என இரண்டுவகைத்து. (தண்டி.) |
தொடர் நரி | இவ்வூர் நரிகள் ஒன்றையொன்று தொடர்ந்து சென்ற இடமாம். தத்தனேரிக்கு மேற்கேயுள்ளது. (திருவிளை.) |
தொடர்நிலைச் செய்யுட் குறியணி | அஃ தாவது, சாதிக்கத்தக்க பொருளை வாக்கியார்த்தத்தினாலாயினும் பதார்த்தத்தினாலாயினும் அவ்விரண்டினாலுமாயி னுஞ் சாதித்தலாம். இதனை வடநூலார் காவியாலங்கார மென்பர். |
தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறணி | அஃதாவது ஒரு பொருளைச் சொல்லத் தண்டாபூபிகா நியாயத்தின் மற்றொரு பொருடோன்றுதலாம். தண்டாபூபிகா நியாயமாவது தண்டத்தை அபகரித்தலினாலதனிற் சேர்த்து வைத்த அப்ப முதலிய வுணவபகரிக்கப்படுதலுந் தானே விளங்கல். இதனை வடநூலார் காவியார்த்தாபத்தி யலங்கார மென்பர். |
தொடர்பின்மையணி | காரணம் ஓரிடத்திருப்பக் காரிய மற்றோரிடத்துப் பிறத்தலைக் கூறுதல். இதனை அசங்கதியலங்காரம் என்பர். (குவல.) |
தொடர்முழுதுவமையணி | அஃதாவது, இரண்டு வாக்கியங்களிலுஞ்சாதாரண தர்மத்தைச் சொல்லுதலாம். இதனை வடநூலார் பிரதிவஸ்தூபமாலங்கார மென்பர். |
தொடாக்காஞ்சி | கொலையஞ்சாத பெரிய நிலையினையுடையவன் புண்ணினைத் தீண்டுதற்குப் பயப்பட்டு நடுங்கிப் போய்ப் பெயர்ந்தது. (பு.வெ.) |
தொடித்தலைவிழுத்தண்டினார் | கடைச் சங்கப்புலவருள் ஒருவர்; பெருஞ்சாத்தனைப் பாடியவர். (திருவள்ளுவ மாலை.) இவர் பாடற்கணுள்ள அருந்தொடரே இவர்க்கும் பெயராயிற்று. |
தொடுகதிர்க்கிள்ளி | காஞ்சி நகராண்ட சோழரில் துணையிளங்கிள்ளிக்கு முன்னோன். (மணிமேகலை.) |
தொடுப்புழை வேளாளர் | இவர்கள் மலையாளத்திலுள்ள தொடுப்புழை தாலுக்காவில் குடியேறிய வேளாளர். இவர்கள் ஆதியில் தென்காஞ்சி கும்பகோணத்திருந்தவர்கள். இவர்கள் ஐந்நூற்றில்லர், முந்நூற்றில்லர் என இருவகையர். இவர்கள் நாஞ்சிநாட்டு வேளாளரை யொத்தவர்கள் இவர்கள் பாஷை மலையாளம். (தர்ஸ்டன்.) |
தொடை | (தொகை, வகை, விரி) 1 மோனை, (ii) எதுகை, (ii) முரண் (iv) இயைபு, (v) அளபெடை, (vi) செந் தொடை, (vii) இரட்டைத்தொடை, (vi) அந்தாதித்தொடை என்னும் தொகையானும் 1. தலையாகுமோனை, 2. இடையாகுமோனை, 3. கடையாகு மோனை, 4. தலையாகெதுகை, 5. இடையாகெதுகை, 6. கடையாகெதுகை, 7. சொன்முரண், 8. பொருண்முரண், 9. சொற்பொருண்முரண், 10. மோனைமுரண், 11. எதுகை முரண், 12. செம்முரண், 13. மோனையியைபு, 14. எதுகையியைபு, 15. மோனையியைபு, 16. அளபெடையியைபு, 17. மயக்கியைபு, 18. செவ்வியைபு, 19. மோனை யளபெடை, 20. எதுகையளபெடை, 21. முரணளபெடை, 22. மயக்களபெடை, 23. செவ்வளபெடை, 24. இயற்செந்தொடை, 25. மருட்செந்தொடை, 26. ஒருபொருளிரட்டை, 27. இருபொருளிரட்டை, 28. பலபொருளிரட்டை, 29. இருமுற்றிரட்டை, 30. எழுத்தந்தாதி, 31. அசையந்தாதி, 32. சீரந்தாதி, 33. அடியந்தாதி, 34. மயக்கந்தாதி, 35. இடையீட்டந்தாதி யென்னும் வகையானும்; 1. அடிமோனை, 2. இணைமோனை, 3. பொழிப்பு மோனை, 4. ஒரூஉ மோனை, 5. கூழைமோனை, 6. மேற்கது வாய்மோனை, 7. கீழ்க்கதுவாய் மோனை, 8. முற்றுமோனை, 9.அடியெதுகை, 10. இணையெதுகை, 11. பொழிப்பெதுகை, 12. ஒரூஉவெதுகை, 13. கூழையெதுகை, 14. மேற்கதுவா யெதுகை, 15. கீழ்க்கதுவாயெதுகை, 16 முற்றெதுகை, 17. அடிமுரண், 18. இணைமுரண், 19. பொழிப்புமுரண, 20. ஒரூஉ முரண், 21. கூழைமுரண், 22.மேற்கதுவாய் முரண், 23. கீழ்க்கதுவாமுரண், 24. முற்றுமுரண், 25. அடியயைபு, 26. இணையியைபு, 27. பொழிப் பியைபு, 28. ஒரூஉவியைபு, 29, கூழை யியைபு, 30. மேற்கதுவாயியைபு, 31. கீழ்க்கதுவாயியைபு, 32. முற்றியைபு, 33. அடியளபெடை, 34. இணையள பெடை, 35. பொழிப்பளபெடை, 36. ஒரூஉ வளபெடை, 37. கூழையள பெடை, 38. மேற்கதுவாய் அளபெடை, 39. கீழ்க்கதுவாய் அளபெடை, 40 முற்றளபெடை, 41. கடையிணை மோனை, 42. பின்மோனை, 43. இடைப்புணர் மோனை, 44. கடைக்கூழைமோனை, 45. கடை மோனை, 46. கடை யிணையெதுகை, 47. பின்னெதுகை, 48. இடைப்புணரெதுகை, 49. கடைக்கூழையெதுகை, 50. கடையெதுகை, 51. கடையிணைமுரண், 52. பின்முரண், 53. இடைப்புணர்முரண், 54. கடைக்கூழை முரண், 55. கடைமுரண், 56. கடையிணயியைபு, 57. பின்னியைபு, 58. இடைப்புணரியைபு, 59. கடைக்கூழையியைபு, 60. கடையியைபு, 61. கடையிணையளபெடை, 62. பின்னிணையளபெடை, 63. இடைப்புணரளபெடை, 61. கடைக்கூழையளபெடை, 65. கடையளபெடையென்னும் வகையானும், 66. அசைவிரளச்செந்தொடை, 67. சீர்விரளச்செந்தொடை, 68 இசைவிரளச்செந்தொடை, 69. முற்று விரளச்செந் தொடை, 70. குறையீற்று ஒருபொருளிரட்டை 71. குறையீற்றுப் பலபொருளிரட்டை, 72. நிரையீற்று ஒருபொருளிரட்டை, 73. நிரையீற்றுப் பலபொருளிரட்டை, 74. குறையீற்றுமுற்றிரட்டை, 75. நிறையீற்றுமுற்றிடையிரட்டை, 76. மண்டில வெழுத்தந்தாதி, 77. செந்தொடை யெழுத்தந்தாதி, 78. மண்டில வசையந்தாதி, 79. செந்நடை யசையந்தாதி, 80. மண்டிலச் சீரந்தாதி, 81. செந்நடைச் சீரந்தாதி, 82. மண்டில வடியந்தாதி, 83. செந்நடையடியந்தாதி, 84. மண்டிலமயக்கந்தாதி, 85. செந்நடை மயக்கந்தாதி, 86. மண்டில இடையீட்டந்தாதி, 87. செந்நடையிடையீட்டந்தாதி என்னும் விரியானும் வரும். |
தொடை இலக்கணம் | தொடை : பல அடிகளிலேனும், பல சீர்களிலேனும் எழுத்துகள் ஒன்றி வருவதாம். அஃது எதுகைத் தொடை, மோனைத் தொடை, முரண்தொடை, இயைபுத் தொடை, அளபெடைத்தொடை என ஐந்தும்; அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று இவற்றுடன் பொருந்தி ஒவ்வொன்றும் எட்டெட்டுப் பாகுபாடுடையவாம். அவை அடியெதுகை, இணையெதுகை, பொழிப்பெகை, ஒரூஉவெதுகை, கூழையெதுகை, மேற்கது வாயெதுகை, கீழ்க்கது வாயெதுகை, முற்றெதுகை மற்றவையு மிவ்வாறு கூட்டிக் காண்க. அடிதோறு முதலெழுத்தொன்றி வரத்தொடுப்பது மோனைத்தொடை, அடிதோறும் இறு திக்கணின்ற எழுத்தானும் சொல்லா னும் ஒன்றிவரத் தொடுப்பது அடியியைபுத்தொடை, அடிதோறும் முதலிலுள்ள இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது அடியெதுகைத்தொடை, அடிதோறு முதற்கண் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது அடிமுரண் தொடை, அடி தோறு முதலில் உயிராயினும் மெய்யானினும் அளபெடுத் தொன்றி வரத் தொடுப்பன அடியளபெடைத் தொடை, அடிதோறு மிறுதிக்கணின்ற எழுத்தானும், அசையானும், சீரானும், அடியானும், மற்றை அடிக்காதியாகத் தொடுப்பது அந்தாதித்தொடை, ஓரடி முழுதும் ஒரு சொல்லேவரத் தொடுப்பது இரட்டைத் தொடை, கூறிய தொடைகளும் தொடை விகற்பங்களும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடை. (காரிகை) முதலிருசீர்க்கண் மோனை முதலிய வரத்தொடுப் பது இணை, முதற்சீரிலும், மூன்றாஞ் சீரிலும் மோனை முதலிய வருவது பொழிப்பு, நடு இருசீரிலுமின்றி முதற் சீரிலும் இறுதிச்சீரிலும் மோனை முதலிய வரத் தொடுப்பது ஒரூஉ. இறுதிச் சீரிலின்றி ஒழிந்த மூன்று சீரிலும் மோனை முதலிய வரத்தொடுப்பது கூழை, முதலயற் சீரிலில்லாமல் மற்ற மூன்று சீரிலுமோனை முதலிய வருவன மேற்கதுவாய், ஈற்றயற் சீரிலின்றி யொழிந்த மூன்றிலும் மோனை முதலிய வரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் சீர்தோரு மோனை முதலிய வரத் தொடுப்பது முற்று. |
தொட்டகாஞ்சி | அகன்ற இல்லிலே தலைமகனுடைய புண்ணைப் பரிகரிக்க நான்ற முலையினையும் பெரிய வாயினையுமுடைய பேய்மகள் புண்ணைத் தீண்டியது. (பு.வெ.) |
தொட்டியர் | ஒரு வகைக் குறச்சாதியர். இவர்கள் பாம்பாட்டியும், பன்றி மேய்த்தும் நாடோடிகளாகத் திரிவர். இவர்கள் தேவதை ஜக்கம்மா, பொம்மக்கா, இவர்களுக்குப் பட்டம் நாய்க்கன், இவர்கள் தங்களில் வயது முதிர்ந்தவர்களையும் மணங்கொள்வர். இவர்களில் காட்டுத் தொட்டியர் என்று ஒருவகை உண்டு. அவர்கள் நரி, எலி முதலிய தின்பர். இவர்கள் கம்ளவகுப்புகளில் சேர்ந்தவர்கள். கப்பலியன், அனப்பன், தொட்டியன், குருபன், கும்மரன், மீதரன், ஒட்டன், சக்கிலியன் இவர்கள் தலைவர் மேட்டுநாய்க்கன், கொடைநாய்க்கன், கம்பளிநாய்க்கன். (தர்ஸ்ட ன்). |
தொட்டிலேற்றல் | பிள்ளை பிறந்த (10) ம் நாள், (12) ம் நாள், (14) ம் நாள், (32) ம் நாளாதல் சுபக்கிரக முதய மாகப் பஞ்சாங்க யோகம் நன்றாக ஊர்த்துவ முகராசி நட்சத்திரங்களிலே பிள்ளையைத் தொட்டில் ஏற்றவேண் டும். |
தொண்டனூர்நம்பி | விடல தேவராயன் குமரியைப் பிடித்திருந்த பிசாசை உடையவரால் ஓட்டவேண்டிய ஸ்ரீவைஷ்ணவர். எழுபத்து நாலு சிங்கா சனாதிபதிகளில் ஒருவர். (குருபரம் பரை.) |
தொண்டமான் | கள்ளர் சாதியில் ஒரு வகை. இவர்கள் தொண்டமான் நாடாகிய புதுக்கோட்டையிலிருந்து வந்தவர் கள். இவர்கள் தொழில் சுண்ணாம்பு கொளுத்தல், பறையடித்தல்; இவர்களுக்குச் சோழிகன் பட்டம், புதுக்கோட்டை ஜமீன்தாருக்குத் தொண்டைமான் பட்டம். இவர்கள் அங்கிருந்து வந்தவர்களாதலாலிவர்கள் அவ் வாறு அழைக்கப்படுகிறார்கள் (தர்ஸ்டன்). |
தொண்டரடிப் பொடியாழ்வார் | இவர் கலியுகத்தில் (2086) பிரபவவருடம், மார்கழி மாதம் கிருஷ்ணசதுர்த்தசி செவ்வாய்க் கிழமை கேட்டை நக்ஷத்திரத்தில் திருமண்டங்குடியில் ஒரு புரச்சூட ஸ்ரீவைஷ்ணவருக்குத் திரு அவதரித்தனர். இவர் வநமாலாம்சர், இவர் திரு அவதரித்து விப்ர நாராயணர் என்ற திருநாமம் சாற்றப் பெற்று ஓதியுணர்ந்து திரு அரங்கத்தில் திருமாலைகைங்கர்யம் செய்து கொண்டு மகாவிரக்த்ராயிருத்தலைப் பிராட்டிக்கண்டு பெண்ணையு மாணாக நினைக்கும் இவரை மாயை என்ன செய்யுமெனப் பெருமாள் அதை உனக்குக் காட்டுகிறேன் என்று விரக்தராகிய இவரைத் தேவதேவியை விட்டு மயக்க ஏவினர். தேவதேவி மயக்க மயங்காதது கண்டு தாசியாகிய அவள்தானும் கைங்கர்யபரையாயிருக்கையில் ஒருநாள் நல்லமழை வருஷித்துத் தேவதேவியை நனைத்தது. இவ ளைக் கண்ட ஆழ்வார் இரக்கமடைந்து தேவதேவியைத்தம் பர்ணசாலையிடம் அழைத்தனர். அவளும் விருப்புடன் வந்து குளிர்காய்ந்திருக்கையில் விப்ரநா ராயணராகிய ஆழ்வார் அவள் விருப்புடன் கூடியிருந்து அவள் நீங்கச்சகியாத வராயிருக்கையில் பெருமாள் பிராட்டிக்குக் காட்டினர். பிராட்டி, மீட்க அருள் செய்ய வேண்டுமெனப் பெருமாள், திருக்கோயில் பொன் வட்டிலை அவள் வீட்டிலிடக் கோவில் பரிசாரகர் தேடுகையில் அது தேவதேவியிடத்தி லிருப்பதுணர்ந்து அவளைக் கேட்கத் தாசி விப்ரநாராயணர் கொடுத்தனர் என்றனள். இவ்வகையிருக்கப் பெருமாள் அர்ச்சகரிடம் ஆவேசித்து நாமே செய் தோமென்று கோயிலதிகாரிகளுக்குப் பணிக்கக் கேட்டடங்கினர். பின்பு ஆழ்வார் விசனமுற்றுப் பாகவத தீர்த்தங் கொண்டு பெருமாளைத் தொழுது நிற்கப் பெருமாள் தொண்டரடிப்பொடி யென அழைத்துக் கடாக்ஷித்தனர். ஆழ்வார், திருமாலை, திருப்பள்ளி யெழுச்சி அருளிச் செய்து (105) திருநக்ஷத்ர மெழுந்தருளியிருந்து திருநாட் டுக்கெழுந்தருளினர். (குருபரம்பரை.) |
தொண்டி | 1. சோழகுலத்தவரும் நகரம். இது சேதுநாட்டிற்குத் துறைமுகமாக இருக்கிறது. சேரர்க்குரிய தொண்டி குடகடற் கரைக்கணுள்லது. அது குட்டுவன் தொண்டி யெனப்படும். இது கடற்கரையிலுள்ளது. (புற நா.) (சிலப்.) 2. இது, சேரர்களுக்கு இராஜதானியாயிருந்த பட்டணங்களில் ஒன்று ”நன்னகர் மாந்தை” ”குட்டுவன் மாந்தை” எனப் புலவர் புகழ்ந்திருக்கின்றனர். |
தொண்டியாமூர்ச்சாத்தன் | கடைச்சங்க மருவிய புலவன். (அகநானூறு) |
தொண்டியோர் | சோழகுலத்தவர். |
தொண்டீரநாடு | காஞ்சிபுரி; தொண்டீரனைக் காண்க. |
தொண்டீரன் | சிவகணத்தலைவன்; இவன் மாலதி யென்பவளைக் காமுற்று அரசனாய்ப் பூமியிற் காஞ்சிபுரியைச் சிலகாலமாண்டனன். |
தொண்டைநாடு | மேற்கில் பவளமலையினையும், கிழக்குக் கடலையும், தெற்குப் பினாகினி நதியையும், வடக்குத் திருவேங்கடத்தையும் எல்லையாகக் கொண்ட நாடு. |
தொண்டைமானிளந்திரையன் | கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாடல் பெற்றவன், நாகப்பட்டினத்துச் சோழன், பிலத்தின்வழி நாகலோகம் சென்று நாககன்னிகையைப் புணர்ந்தனன். ஆங்கு அவளுக்கு ஒரு புத்திரன் பிறக்க அவள், அரசனை யான்பெற்ற புத்திரனை என்செய்க என்றனள். அரசன் ஆதொண்டைக் கொடியைச் சூடி அனுப்புக என்று தன்னகரஞ் சென்றனன். நாககன்னிகை தன் புத்திரனுக்கு அரசன் சொற்படி ஆதொண்ன மாலையை அடையாளமாகச் சூட்டி கடலில் விட்டனர். குமரன் கடளினின்று கரையேறி அரசனால் உரிமை பெற்றனன். இவனே ஆதொண்டை சக்கரவர்த்தி, காஞ்சிமண்டல மாண்டவன். (புறநா.) |
தொண்டைமான் | A. ஆதொண்டைச்சக் கரவர்த்தியைக் காண்க. இவன் சோழனுக்கு நாககன்னிகையிடம் பிறந்து திரு வேங்கடத்தில் பெருமாளுக்குத் திருத் தொண்டைச் செய்ததனால் தொண்டை மான் என்று பெயர் பெற்றவன். இவன் ஒரு சன்மத்தில் அரங்கதாசன் என்னும் சூத்திரன்; திருவேங்கடத்தில் புட்ப கைங்கர்யஞ் செய்து வருகையில் மனைவிமாருடன் நீர்விளையாடிக் கொண்டிருந்த குண்டலன் என்னும் காந்தருவனைக்கண்டு எச்சிலடைந்து புட்பத்தைக் கொட்டித் தீர்த்தமாடி அசரீரி சொற்படி தொண்டைமானாகப் பிறந்து திருப்பணி நடத்திப் பகைவர்க்கஞ்சி வேங்கடத்துப் பெருமாளிடம் முறையிட்டு அவர் சங்காழிதரப் பெற்றுப் பகைவரை வென்று பெருமாளை இத்திருவேங்கடத்தில் சங்காழியிலாது என்றும் தரிசனந்தர வரம் பெற்றவன். தொண்டைமான் என்பது சோழர் பின் வந்த அரசருக்குப் பட்டப்பெயர் என்றுங் கூறுவர். சோழர், பல்லவர்களைச் செயித்து அவர்கள் நாட்டைக் கைக் கொண்டபின் இப்பட்டத்தை வகித்த னர் என்பர். B. இவன் காஞ்சி நகரத்திருந்த ஓர் அரசன். அதியமானெடுமானஞ்சி, ஒளவை இவர்கள் காலத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர். (புறம்). |
தொண்டையில் உண்டாகும் ரோகம் | (18) எனப்படும். இந்த ரோகம் திரிதோஷங்களில் கண்டத்தின் உட்புறத்தில் துர்மாமிசம் வளருதல், புண்ணாதல், ஜலம் வடிதல் முதலிய உண்டாம். 1. கண்டவாத ரோகணி, 2. கண்டபித்தரோகணி, 3. கண்ட சிலேஷ்மரோகணி, 4. கண்டாத்தரோகணி, 5. கண்டதிரிதோஷரோகணி, 6. கண்டசாலிகரோகம், 7. களபிருந்தரோகம், 8. துண்டகேரிகாரோகம், 9. களாகரோகம், 10. அலாபுகரோகம், 11. சதக்கினிரோகம், 12. களவித்திரதிரோகம், 13. களாற்புத ரோகம், 14. வாதகளகண்ட ரோகம், 15. பித்தகளகண்ட ரோகம், 16. சிலேஷ்மகளகண்டரோகம், 17. மேதோகளகண்டரோகம், 18. சுரக்கினிரோகம் ஆக கண்ட ரோகம் (18). |
தொன்மை | பழைமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது. (யாப்பு ~வி.) |
தொம்பரவர் | (தொம்பர்) இவர்களிற் சிலர் கழைக்கூத்தராய் ஊர் ஊராய்த் திரிந்து ஆட்டம் ஆடிப் பிழைப்பர். பலர் மரத்தால் சீப்பு, ஈருளி முதலிய செய்து கடைகளில் விற்றுப் பிழைப் பர். இவர்கள் பெரும்பாலும் மராத்தி, தெலுங்கு, முதலிய பேசுவர். இவர்களிற் சிலர்ஜாலவித்தை செய்வர். இவர்கள் பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியர். (தர்ஸ்டன்) |
தொய்யில் | மாதர்முலைமீதெழுதுஞ் சந்தனக் கோலம். இது மன்மதனது கொடி, படை முதலிய எழுதலாம். |
தொற்றங்கொற்றனார் | கடைச்சங்க மருவிய புலவர் (அகநானூறு). |
தொலைவு | கூறியது கூறல், மாறு கொளக்கூறல், பொருளல கூறல், மயங்கக்கூறல், கேட்போருக்குத் துன்பமுண்டாகப் பழித்த மொழிகளில் இழித்துக் கூறல், தானே ஒருபொருளைக் கருதிக் கூறல், இன்னாவகையால் மனங் கொளாமையாம். (யாப்பு ~ வி.) |
தொல்கபிலன் | கடைச்சங்க மருவிய புலவர். (அகநானூறு). |
தொல்கபிலர் | இவர் பாடிய நற். 114 ல் கரையைப் ”புள்ளித் தொல்கரை” என்று கூறிய அடைச்சிறப்பால் தொல் கபிலரெனப்பட்டார். குறிஞ்சித் திணையைச் சிறப்பித்துப் பல படியாகப்புனைந்து பாடியுள்ளார். பல உள்ளுறைகளடுக்கிக் கூறியுள்ளார். நற். 328 மடலேறுவனெனுந்தலைவன்கூற்றாக இவர் கூறியது வியப்புடையதாகும். குறு. 14. இவர் பாடியனவாக நற்றிணையில் நாலு பாடல்கள், குறுந்தொகையில் ஒன்றும், அகத்தில் ஒன்றுமாக ஆறு பாடல்கள் கிடைத்திருக்கின்றன, |
தொல்காப்பிய மகாமுனிவர் | அகத்தியர் மாணாக்கருள் ஒருவர்; ஜமதக்நி முனிவர் குமரர். இவர் சரிதையை அகத்தியரைக் காண்க. இவர் தமிழில் ஐந்திலக்கணம் இயற்றியவர். இவர்க்குத் திரணதூமாக்நி யெனவும் பெயர். அகத்தியர் இவரைச் சுவர்க்கம் புகாதிருக்கச் சபித் ததனால் ஆசிரியரையும் அவ்வாறு சபித்துப் பாண்டியன் மகாகீர்த்தி சபையில் அதங்கோட்டாசான் முன்னிலையில் தாம் இயற்றிய நூலை அரங்கேற்றியவர். (தொல்காப்பியம்.) |
தொல்காப்பியதேவர் | 1. இவர் ஒரு தமிழாசிரியர். இவர்திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடினவர். இத்தலத்திற்கு வந்த இரட்டைப் புலவர்களை அத்தல வாசிகள் கலம்பகம் பாடித் தர வேண்டியபோது தொல்காப்பியதேவர் பாட யுள்ள இத்தலத்திற்கு நாங்கள் கலம்பகம் பாடல் தகுமோ எனப் புகழப்பட்டவர். இவர்காலம் இரட்டைப்புலவர் காலத்திற்கு முன்னிருக்கலாம். இதனைத் ”தொல்காப்பிய தேவர் சொற்ற தமிழ்ப் பாடலன்றி, நல்காத் திருச்செவிக்கு நாமுரைத்த தேறுமோ, மல்காப்புனல் ததும்ப மாநிலத்துக்கண் பிசைந்து, பல்காற் பொருளிழக்கும் பாற்கடலொன்றீந்தார்க்கே” என்பதா லறிக. 2. சமணர் கோவிலுக்குச் கல்லறுப் பிக்கச் சிவ தலத்தார் தங்களெல்லை யென்றபோது பாடியது. “வேதமொழி விசும்புமேனி சுடர்விழிமண், பாதந் திருப்பாதிரிப்புலியூர் நாதர், பரமாம் பரமாம் படுகடலெண்டிக்கும், கரமாம வர்க் குயிர்ப்பாங்கால்” இவர் கலம்பசம பாடிச் சிதம்பரத்தில் கயிறுபோட் டுப் பார்க்கக் கண்ட கவி, ”பாடுவார் பாடும் பரிசில் வரிசையெல்லாம், ஆடுவாரன்றி யயலாரறிவரோ, தோடுவார் காதன்றே தோன்றாத்துணையையர். பாடு வாரோ ரிருவர்க்கிட்ட படை வீடே.” |
தொல்காப்பியம் | இது அகத்தியர் மாணாக்கருள் ஒருவரும், திரணதூமாக்கினி யென்னும் பெயர் பெற்றவருமாகிய தொல்காப்பியக் குடியிற்பிறந்த தொல்காப்பிய மகருஷியாலருளிச் செய்யப்பட்டது. இது எழுத்து, சொல். பொருள், யாப்பு, அணி முதலிய மந்தி வக்கண நிரம்பியது. இது (1612) சூத்திரங்கள் கொண்டது. இதற்குக் கல்லாடர், இளம்பூரணர், சேநாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைகூறியிருக்கின்றனர். இது தமிழிற் சிறந்த இலக்கணம். இடைச் சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் நூலாகவிருந்தது. |
தொளைக்கருவி | நாகசுரம், புல்லாழல், முகவீணை, தவளசங்கு முதலியன. |
தொள்ளைக்காதர் | இவர்கள் சாண வகையில் சேர்ந்தவர்கள். இவர் நாடாரென அழைக்கப்படுகின்ற இவர்கள் சென்னையில் நெற்குத்தி வியாபாரஞ் செய்கின்றனர். தொள்ளைக்காதர் குடிசை, இவர்களிருக்கும் இடம். (தர்ஸ்டன்). |
தொழிற்பெயர் | முதனிலை புடைபெயர்ச்சி விகுதி ஏற்பது. (நன்.) |
தொழில் | 1. (3) ஆக்கல், காத்தல், அழித் தல், (6) உழவு, தொழில், வரைவு, வாணிபம், விச்சை, சிற்பம். 2. அந்தணர் அறுதொழில் : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். அரசர் அறுதொழில் : ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயிற்றல், பொருதல். வைசியர் அறுதொழில் : ஓதல், வேட்டல், ஈதல், பொருளீட்டல், பசுக்காத்தல், ஏருழல். சூத்திரர் அறுதொழில் : முதன் மூவர்க்கும் ஏவல் செயல், பொருளீட்டல், உழுதல், பசுக்காத்தல், குயிலுவத் தொழில் செயல், காருக வினை செயல். |
தொழுனை | யமுனை நதிக்கொரு பெயர். (சிலப்பதிகாரம்.) |