ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தைக்கும்யந்திரம் | இது, மனிதர்துணி முதலியவைகளைக் கையால் தைத்துக் கஷ்டப்படாமல் நூலை யந்திரத்திலுள்ள சிற்றூசியில் கோத்துக் கையாலாயினும் காலாலாயினும் சற்று அசைக்கின் தானே வேண்டியபடி தைப்பது. |
தைசசன் | சுவப்பனாவஸ்தையுடன் ஆத்மா கூடியிருக்கையில் பெற்ற பெயர். |
தைத்திய சேனை | தேவசேனைக்கு மூத்தவள்; அரிஷ்டநேமியின் பெண் |
தைத்தியர் | திதி புத்திரர் காசிபருஷியைச் சந்தியாகாலக்க புணர்ந்ததால் பிறந்த அரக்கர். |
தைத்தியவனம் | வியாசர், பாண்டருக்கு வெளிப்பட்டு உபதேசித்த வனம். |
தைத்திரியர் | ஒரு ருஷி; கௌதாரியிடம் பிறந்தவராம். |
தைத்திரீயம் | ஒரு உபநிஷத்து. இது யசுர் வேதசாகை. வைசம்பாயனர் கோபத்தால் யஞ்ஞவல்கியரால் விடப்பட்ட எசுர்வேதத்தை அவர் மாணாக்கர் தித் திரிபக்ஷி யுருக்கொண்டு அருந்தியதால் அதற்கு இப்பெயர் உண்டாயிற்று. |
தைத்திரேயர் | கிருஷ்ண யசுர்வேதிகன். |
தைபாயனம் | துரியோதனன், தன் சேனைகள் இறந்தபின்பு ஜலஸ்தம்பனம் செய்திருந்த மடு. |
தையங்கண்ணன் | கடைச்சங்க மருவிய புலவன். (அகநானூறு.) |
தையற்பறவை | இது, சிறு உருவமுள்ளது. இதன் தலை, கழுத்து, முதுகு கபில நிறம். வயிறு சாம்பல் நிறம். அலகு மெலிந்து கூர்மையுள்ளது. இது மரங்களில் தன் சத்துருக்களுக்கெட்டாத வகையில் உதிராத இலைகளுள்ள மரங்களில் இலைகளை ஒன்று சேர்த்து மரப்பட்டைகளின் நாரினால் தைத்து மிருதுவான படுக்கை யமைத்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. வீவர் பர்ட் : ஆபிரிக்காக் கண்ட பறவைகளில் ஒன்று. இது தையற் பறவைடே நீர்ப்புறமாகச் சார்ந்துள்ள மரங்களை ஆராய்ந்து நார்போல அறாத புற்கன கொண்டுவந்து பின்னி வாய்ப்புறம் நீர் மட்டத்திலிருக்கும் படி கூடு கட்டுகிறது. |
தைவதம் | ஒரு தீர்த்தம். |