அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தேக பலம்

இது, மூன்று விதப்படும். அவை சகசபலம், காலபலம், யுத்கிருத பலம் என்பன. சகசபலம் : வியாதியாலடிப்படாததாய், தந்தையருக்குப் பிறந் தவர்க்குச் சுபாவமாய் உண்டாவது. காலபலம் : பிண்டந்தரித்த காலத்தினாலும் யவ்வன காலத்தில் பிதாவிற் குண்டான புத்திரற் குண்டான பலம். யுத்கிருதபலம் : சிலம்ப முதலிய பழக்கத்தினாலும், நன்றாகப் புசித்தலாலும், தாது விருத்திப் பொருள்களை உண்பதாலும் உண்டாவது.

தேகத்தில் மர்ம ஸ்தானங்கள்

புருவம், உச்சி, கண்டம், மார்பு, மார்பினடி, உந்தி, உதடு, பீசம், முழங்கால், கணுக்கால், இடுப்பு, காலின் பெருவிரல், சுட்டு விரல், தோள் இந்தப் பதினான்கு இடங்களாம். இவற்றில் அதிகாயம் படில் அசாத்யத்தை விளைக்கும். (ஜீவ.)

தேகளீசன்

திருக்குருகூரி லெழுந்தரு ளிய விஷ்ணுமூர்த்தி.

தேங்காய்

இது தேவர்க்கு நிவேதிக்கும் பொருள்களுள் விசேஷமானது. தேங்காயை ராசிகளினின்று சுத்தமானதாகப் பார்த்து அதில் பால்யம், விருத்தம் என் கிறமிக இளைசும், அதிமுற்றலும் யௌவனம் என்கிற நடுத்திறமானதைக் கொள்ள வேண்டும். கொள்ளுமிடத்துத் துர்க்கந்தமானதும், கோனலுள்ளதும், அதி நீளமானதையும், பின்னமானதையும், மழுமழுப்பில்லாதையும், கண்ணில்லாததையும், அதிதூலமானதையும், அதிசூஷ்மமானதை யும், குடுமியில்லாததையும், அழுகினதையும், நீர்வற்றினதையும், மற்றுமுள்ள குற்றமுள்ளவைகளையும் நீக்கித் தேங்காயைக் கனிஷ்டாங்குலமுள்ள சிகையுள்ளதாய்க் கொண்டு அதன் சிகையுடன் முகத்தின் பாகமாய்த் தேங்காயைப் பிடித்துக் கொண்டு அருகிலிருக்கிற கல்லின் மேல் காயைச் சாணளவு உயரத்தூக்கி மந்திரஞ் செபித்து ஒரே அடியில் இரண்டு பாகமாம்படி உடைக்கவேண் டும். அப்படி உடையின் அக்கார்யம் சுபத்தைத் தருவதும் தனதான்ய விருத் தியும் தருவதாம். முகத்தின் பாகத்தில் முக்கால்பங்கும், அடிப்பாகத்தில் காற்பங்கு மாகவும், அல்லது அடிப்புறம் முக்கால் பாகமாகவும், மேற்புறம் கால்பாகமாகவும், உடையின் புருஷர் ஸ்திரீகளாகிய இருவருக்கும் அந்யோன்ய கலகம் விளையும். தேங்காய் பொடிப்பொடியாய் உடையின் தாம் கொண்ட கார்யம் நாசமாம். கண்ணின் புறமாக உடையின் எஜமானன் கெடுவன், முதன்மையான கண்ணின் நரம்பல் உடையின் ஆசாரியன் கெடுவன. தென்புறமாயுள்ளகண்ணின் நரம்பிலுடையின் கிராமமும், தன்னிருக்கையும் கெடும். வடபுறத்தின் கண்ணையடுத்த நரம்பில் உடையின் தன்னூரையான அரசன் வேறாவன். தேங்காயின் முகம் உடைந்தால் க்ஷோபம் உண்டாம். நீண்டு உடையின் பயமுண்டாம். தேங்காய் உடைக்கத் தொடங்குகையில் கைவிட்டு நழுவி அப்பால் வீழின் கர்பத்திலுள்ள கருச்சிதையும், பலசுக்க களாய் உடையின் கிராமவாசிகள் பசியால் வருந்துவர். தேங்காய் உடைகையில் உள்ளில் நீரிலாதிருப்பின் மழை நீங்கும். குடுமியில்லாதிருக்கின் தனக்ஷயம். தேங்காயிலுள்ள நீர் துர்க்கந்தமாயிருக்கின் இராஜ்யச் செல்வமாயினும் கெடும். தேங்காய் அழுகி நாறுமேல் மகாமாரியால் வருத்தமுண்டாம். இவ்வகை நேருமேல் அவ்வகைத் தேங்காயை நீக்கி வேறொரு யௌவனமாகிய தேங்காயை மூன்று கண்ணுள்ளதாய் இரண்டுபாகம் மூலபாகத்திலும், ஒருபாகம் முதற்பக்கத்திலும், முகபாகத்தில் மூன்று பாகமும், பின்புறத்தில் இரண்டு பாகமும் அல்லது இரண்டுபாகமும் சமமாகவேனும் உடைக்கின் சர்வசித்திகளும் உண்டாம். (ஸ்ரீகாரணம்.)

தேசம்

(56) அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காச்மீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு, குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்.

தேசாயி

இவர்கள் வடஆர்க்காடு ஜில்லாவில் உள்ளவர்கள். இவர்கள் தேசத்துக்குரியவராகத் தம்மைக் கூறுவர். இவர்கள் தலைவன் தேசாயி செட்டி யெனப்படுவன்.

தேசிகப்பை

ஓர் பரத்தை.

தேசிகர்

1. வேதாந்த தேசிகரைக் காண்க. 2. ஒரு பண்டாரத்தார் வகுப்பின் பட்டப்பெயர்.

தேசிக்குரியகால்கள்

(24) அவை: (1) கீற்று, (2) கடிசரி, (3) மண்டலம், (4) வர்த்தனை, (5) காணம், (6) ஆலீடம், 17) குஞ்சிப்பு, (8) கட்டுப்புரியம், (9) களியம், (10) உள்ளாளம், (11) கட்டுதல், 12) கம்பித்தல், (13) ஊர்தல், (14) கடுக்கல், (15) வாங்குதல், (16) அப்புதல், 17) அணுக்குதல், (18) வாசிப்பு, (19) குத்துதல், (20) நெளிதல், (21) மாறுகால், (22) இட்டுப்புகுதல், (23) சுற்றி வாங்குதல், (24) உடற்பிரிவு என்பனவாம்.

தேசிங்கு ராஜன்

நடு நாட்டில் செஞ்சியெனும் மலைக்கோட்டையை (1717~1723 AD) யில் ஆண்ட சுத்த வீரன். இவன் பெயர் ஜெயசிங்காக விருக்கலாம். இவன் கர்னாடக நவாபிடம் யுத்தஞ் செய்தான். இவன் சாததுல்லாவுடன் போரிட்டு மாண்டவன். தென் ஆர்க்காடு (கெஜட்டியர்).

தேசோகருப்பர்

பிரமன் சாயையிலுதித்த தேவர்.

தேஜஸங்கிராந்தி

செந்நெல் அரிசி இவற்றின் மேல் கலசம் தாபித்து மோதக முதலியன நிவேதித்து வேதியர்க்களிப்பது. இது வருஷமுதலிற் செய்து கடையில் உத்யாபனமும் செய்வது

தேஜஸ்வி

அகத்தியர் பேரன்; திருச்யன் புத்திரன்.

தேஜோவதி

அக்னிதேவன்பட்டணம்.

தேதிமழை

ஆனி மாதம் 10 தேதி, ஆடி மாதம் 8 ம் தேதி, ஆவணி மாதம் 6 ம் தேதி, புரட்டாசி மாதம் 4 ம் தேதி, ஐப்பசி மாதம் 2 ம் தேதி, கார்த்திகை மாதம் 1 ம் தேதி இந்தத் தேதிகளில் மழைபெய்ய வேண்டும்.

தேநவர்

ஆயுள்வேதம் பயின்றவர். சுசுருதருக்கு நண்பர்.

தேநுமதி

ஒரு தீர்த்தம்.

தேனன்

காவிரியில் வீழ்ந்திறந்து சுவர்க்கமடைந்தவன்.

தேனிக்குடிகீரனார்

கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவ மாலை).

தேனீ

இது முதுகெலும்பில்லாப் பிராணிவகையில் சேர்ந்தது. இதற்கும் வாயில் துதிக்கையும் பற்களும் உண்டு. இவற்றால் பூவிலுள்ள தேனையுறுஞ்சி வாழும். இது பலவகையாக மெழுகமைத்துக் கூடு கட்டி அதில் முட்டையிட்டுக் குஞ்சுகளுக்காதாரமாய் அதில் தேனை அமைக்கும்.

தேனுகாசுரன்

இவன் கம்சனுக்கு நண்பனாகிய அசுரன், இவன் பிருந்தாவனத்திற் கருகிலிருந்த அசுரன். இவன் கழுதை யுருக்கொண்டவன், பலராமருடன் போர் செய்ய வந்தனன். இவனைப் பலராமர்காலைப் பிடித்து எறிந்துவீச மாண்டவன்.

தேனுமதி

இந்திரப்பிரத்தத்திற்கு அருகிலுள்ள தீர்த்தம்.

தேன்

இஃது ஒருவகைப் பூச்சியினால் புஷ்பங்களிலும் மற்றவைகளிலிருந்தும் கொண்டு சேர்க்கும் பொருள், இது இனிப்பான திரவம். இது மலைத்தேன், கொம்புத்தேன், மரப்பொந்துத்தேன், புற்றுத்தேன், மனைத்தேன், கொதுகுத் தேன் எனப் பலவகைப்படும்.

தேன்சிட்டு

இவ்வினத்தில் ஒரு வண்டு போன்ற உருவுள்ளவைகளும் உண்டு. இவற்றின் உடல் சிறிதும் இறக்கைகள் நீண்டுமுள்ளவை. இவை நிறத்தால் நீலம், அலகு மெலிந்து நீண்டு முன் வளைந்திருக்கும். இது, பூக்களிலுள்ள தேனைத் தேடியுண்ணும். இது பூக்களிலுட்கார்ந்து தேனையுண்பது மன்றிப் பறந்தவிதமாகவே பூக்களில் அலகை நுழைத்துத் தொங்கும் மலர்களிலுள்ள தேனைக் குடிக்கிறது.

தேயிலைச்செடி

இது இருபதடி வளரக்கூடியது. இதனை அடர்ந்து (5,6)அடிகளுக்குமேல் வளர விடுகிறதில்லை, இது எக்காலமும் பசுமை நிறமாகவேயிருக்கும். ஒவ்வொரு வருஷமும் விதையெடுத்து வசந்தகாலம் வரையில் மணலில் புதைத்து வைப்பார்கள். பிறகு நாற்றுவிட்டு (10,12) அங்குலம் வளர்ந்தபின் பிடுங்கி நடுவார்கள். இது மேற்சொன்னபடி வளர்ந்தபின் அறுவடை செய்வார்கள். வருஷத்திற்கு (3) முறை இலை அறுவடை இலையைப் பறித்து உலர்த்திக் குவியலாக வெகுநாளிருந்தால் பழுப்படையும். இதனால் கறுப்புத் தேயிலையும், நிறம் பழுப்படையாத தேயிலையில் பச்சைத் தேயிலையும் செய்கிறார்கள். இந்த இருவகைத் தேயிலையும் நெருப்பில் வாட்டிப் பிறகு, கையினாலாவது யந்திரத்தினாலாவது சுருட்டுவார்கள். பிறகு இருப்புத் தட்டுகளில் வைத்து வாட்டுவார்கள். அப்போது அது பக்குவப்படும். இதில் கஷாயம் செய்து சாப்பிடுகிறார்கள். குடலுக்கு வலிமை தரும். அதிகம் குடித்தால் பித்தம் செய்யும்.

தேயு

1. இது உருவதன் மாத்திரையிற் றோன்றிச் சத்தம் பரிசம், உருவமெனும் மூன்று குணமுடைத்தாய்ப் பாகஞ் செய்தல் முதலிய தொழிற்பட்டதாய் உயிர்கட்குபகாரமாய்ப் பொருள்களை விளக்குவதும் சுடுவதுமாகி நிற்பது: ஒன்றுவிக்குந் தொழிலாகிய கவர்ச்சியுமுடையது. இது, நெகடிவ், பாசிடிவ் எனும் காந்த சக்தியின் பேத விருத் திபெற்று உலகத்தை நிறுத்துவதற்கு ஆதாரமாய் எழுவகை நிற வேறுபாட்டிற்குக் காரணமாயிருக்கிறது. தற்கால ஆராய்ச்சி நூலார் தீயினிடத்து விளங்கும் எழுவகை நிறபேதங்களே ஒளிக்குக் காரணம் என்பர். இந்த எழுவகை ஒளி நிறங்களே அக்னிகோளமாகிய சூரியனிடத்துத் தோன்றுபவை. அவற்றைச் சூரியனுடைய ஏழு குதிரைகள் என்பர். 2. இது தேயுத்தன்மை சாமான்யமுடையது. நித்யம், பரமாணுரூபம், சரீரம். சூரியலோகத்திற் பிரசித்தம், ரூபம், பரிசம், சங்கியை, பரிமாணம், வேற்றுமை, சையோகம், விபாகம், பரத்வம், அபரத்வம், திரவத்வம், சமஸ்காரம் எனும் பதினொரு குணமுடை யது.

தேய்புரிப்பழங்கயிற்றனார்

இவர் பாடலில் நெஞ்சமும் அறிவும் மாறுகொண் டிருத்தலால் என்னுடம்பு இரண்டு யானையாலிழுக்கப்பட்டிட்டுத் தேயிபுரிப் பழங்கயிறு இற்றொழிவது போல அறிய வேண்டியது தானோவென்று கூறி அருந்தொடர் மொழியாகிய உவமையே இவர்க்குப் பெயராயிற்று இயற்பெயர் புலப்படவில்லை. இவர் பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது. நற்.284 ம் பாட்டு.

தேரூர்ந்த சோழன்

அநபாய சோழனைக் காண்க.

தேரை

இது உருவில் தவளைபோலிருப்பது. சற்றுப் பெரிது. தேரையின் மேற்புறம் குமிழ்குமிழாயிருக்கும். அடிப்புறம் மஞ்சணிறமாயிருக்கும். இது தவளையைப் போல் தாவாமல் தத்திப்போம். இது நீரில் செல்லாது. சுவாசாயத்தாலும் நாசித்வாரத்தாலும் மூச்சுவிடும். பற்கள் இல்லை. தவளையைப் போல் பசைகொண்ட நாவால் ஆகாரத்தைத் தாவித்தின்னும். இது தன் விரோதிகளைத் தன் பின்பக்கத்துள்ள துர்நாற்ற நீரால் பீச்சியோட்டும். இது நீரருகிலுள்ள மரங்களின் மீதிருந்து முட்டையிடும், அம்முட்டைகள் தவளை முட்டைகள் போல வளர்ந்து தரைக்கு வரும்.

தேரையர்

இவர் தருமசௌமியர் மாணாக்கர்; இவரை அகத்தியர் மாணாக்கர் என்று சிலர் கூறுவர். இவர், ஒருவருக்குத் தலை நோயிருந்த காலத்து அதைத் தீர்க்க அகத்தியருடன் செல்ல அகத்தியர் கபாலத்தை நீக்கிப் பார்க்கையிற் தேரையிருக்க அதையெடுக்கச் செல்லுகையில் இவர் தடுத்துத் தாம்பாளத்தில் நீர்காட்டின் அது குதித்து விழும் என அவ்வகை காட்ட அது குதித்து நீரில் விழுந்தது. இவ்வகைக் குறிப்பாகக் கூறியபடியால் தேரையர் எனப் பெயர் உண்டாயிற்று என்பர். இது கற்பனாகதை. இவர் வாதத்தால் உலகத்தைக் கெடுத்தலை அகத்தியருணர்ந்து இவரது உயிரை வரவழைத்தனர். பின் தேரையர் இராமதேவரென்னும் பெயரால் உலகத்தில் சீவித்திருந்தனர் என்பர். இதனையும் கற்பனாகதை யென்பர். இவர் செய்த நால்கள் பதார்த்தகுண சிந்தாமணி, நீர்க் குறி நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச்சுருக்கம். வைத்திய யகமவெண்பா, மணிவெண்பா, மருத்துப் பாரதம் முதலிய.

தேர்

இரும்பினாலாக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையையுடையதும், தாமே தூங்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையிலிருந்து நடத்தத்தக்க தேர்ப் பாகனையுடையதும், அம்பு வாள் முதலிய போர்க் கருவிகளையுடையதுமான நடு விடத்தையுடையதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகு மிக்கதும், சிறந்த குதிரைகளையுடையதுமானது அரசன் தேர்.

தேர்மறம்

தளிர்விரவின பூமாலை யினையுடைய வலிய மன்னன் மிடைந்த மணத்தேரின் நன்மையைச் சொல்லியது. (புற. வெண்பா).

தேர்முல்லை

கோபித்தெழும் அரசராகிய பகைவர் தம்முடைய நிலைமையை உறவாக்கி மீண்ட அன்பர்தம் தேர்வந்த படியைச் சொல்லியது. (பு.வெ. பொது.)

தேர்வண்கிள்ளி

சோழன் நலங்கிள்ளிக்கு ஒரு பெயர்.

தேர்வண்மலையன்

ஒரு கொடையாளி, வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாராற் பாடப்பட்டவன். சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாய் நின்று சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையை வென்றான். (புற~நா.)

தேள்

இது சிலந்தி வருக்கத்தைச் சேர்ந் தது. விசேஷமாய் உஷ்ண காலத்தில் கூரைகளிலிருந்து விழும். இதற்குச் சிலந்திக்கில்லாத ஒரு முள்ளமைந்த வாலுண்டு. இதன் வால் ஆறு மணிகளாலானது. வாலின் நுனியில் கொடுக்கிருக்கின்றது. இதனால் பிராணிகளைக் கொட்டிக் கொல்லுகிறது. தேளின் தலையினிருபுறத்திலும் இரண்டு விரல்களமைந்த இரண்டு கைகள் உண்டு. இவற்றின் கால்கள் எட்டு, கண்கள் (8,12, 20) பெண் தேள் தடவைக்கு (40, 50) குஞ்சு பொரிக்கும். இதில் வாதத் தேள், பித்தத்தேள், சிலேஷ்மத்தேள், செந்தேள், கருந்தேள், நச்சுத்தேள், மரத் தேள் முதலிய வகை உண்டு.

தேவகங்கை

தேவகுல்லியாவைக் காண்க.

தேவகன்

1. ஆகுகன் குமரன்; இவன் குமரர் தேவவரன், உபதேவன், சுதேவன், தேவவரதன். 2. போஜகுலத் தலைவன்; தேவகி தந்தை; உக்ரசேனன் தம்பி, குமரி தேவகி. 3. உதிஷ்டரால் கௌரவியிடத் துதித்த குமரன். 4. தருமர் குமரன்.

தேவகி

1. சுவாயம்பு மன்வந்தரத்தில் பிரசன்னியெனும் பெயரடைந்தவள். இவள் போஜகுலத்தவனாகிய தேவகனுக்குக் குமரியாகப் பிறந்து வசுதேவரை மணந்து இருக்கையில் கம்சன், இவள் வயிற்றுதித்த எட்டாவது கரு உன்னைக் கொல்லுமென அசரீரிகூறக் கேட்டதால் சிறையிலடைக்கப் புருஷனும் தானுமிருந்தனர். இப்படியிருக்க இவளிடம் பிறந்த ஏழு கருக்களைச் சேதிக்க எட்டாவது கண்ணன் பிறந்து இடம்விட்டு மாறி மாயையை வருவித்திருத்தினர். கம்சன் சிசுவினைக் கொல்ல மேலெறிகையில் உன்னைக் கொல்பவன் நந்தகோபன்மனையில் வளருகிறான் என்று மாயை மறையக் கேட்டுச்சிறையிலிருந்து விடுவிக்க நீங்கியவள். இவள் குமரர் கிரதிவந்தன், சுதேஷ்ணன், மித்திரசேனன், ருசு, சமந்தன், பத்திராக்கன், சங்கருஷணன், ஸ்ரீகிருஷ்ணன், சுபத்திரை. தன்வயிற்று இறந்த மைந்தரைப் பாதாளத்திருந்து கிருஷ்ணரால் தரவேண்டிக் கண்டுகளித்தவள். இவள் வயிற்றில் சாபத்தால் இரண்யனுக்குதித்த மரீசி மைந்தர் அறுவரும் பிறந்தனர். 2. விஷ்ணுவினம்சமான கபிலருக்குத் தாய்.

தேவகிரி

1. தாருகாசுரன் பட்டணம். 2. சதத்துரு யமுனை நதிகளுக்கு இடையிலிருக்கும் மலை.

தேவகுலத்தார்

இவர் கடைச் சங்கமருவிய புலவர்களில் ஒருவர். இவர் தேவகுலத்தார் என்பதால் அந்தணராகலாம். (குறு 3)

தேவகுல்லி

உத்கீதன் தேவி.

தேவகுல்லியா

பூர்ணிமா என்பவர் குமரி. இவள் அரியின் பாதப்பிரக்ஷாளனத்தால் தேவகங்கையாயினள்,

தேவகூடம்

ஒரு நதி,

தேவக்ஷத்திரன்

யதுவம்சத்துத் தேவராதன் குமரன்.

தேவசன்மா

1. ஒரு வேதியன், இவன் விரும்பியதைத் தருகிறேனென்று கூறித் தராததனால் நரியுருவடைந்தவன். 2. ஒரு ரிஷி, மனைவி உரிசை. (சேது ~ பு.)

தேவசர்மா

ஒரு வேதியன், அயோத்தியிலுள்ள சம்புதீர்த்தத்தில் நீராடிச்சுத்தனானவன்.

தேவசாவர்ணிமநு

பதின்மூன்றாமன் வந்தரத்து மநு. சாவர்ணி மனுவைக் காண்க.

தேவசிரவசு

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன்.

தேவசிரேஷ்டன்

ருத்திரசாவர்ணி மநுப்புத்திரன்.

தேவசேநன்

பிரசாபதியின் சேனாதிபதியரில் ஒருவன்.

தேவசேநாபதி

குமாரக்கடவுள்.

தேவசேநாபதிபானு

(சூ.) பானுவின் குமரன்.

தேவசேனை

1. அரிஷ்டநேமியின் பெண். 2. இவள் பிரகிருதியின் ஆறாவது அம்சமானவள் ஆனதால் இவளுக்குச் சஷ்டியென்று ஒரு பெயர். பாலருக்கு அதிஷ்டான தேவதை, விஷ்ணு மாயா ரூபிணி, பிள்ளைகளைக் காப்பவள், மாத்ருகைகளில் பிரசித்தி பெற்றவள், ஸ்கந்த மூர்த்தியின் தேவி. தைத்தியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட தேவர்கள் பொருட்டு இவள் சேனை ஆயினள் ஆதலால் தேவசேனையென இவளுக்குப் பெயர். இவள் சிசுக்களை ரக்ஷிப்பவள். இவள் சூர்யவம்சத்துப் பிரியவிர தன் வெகுகாலம் புத்திரரிலாது பெற்ற அருங்குழவியை இழந்து ஸ்மசானத்துச் சென்று குழந்தையை மார்பில் வளர்த்திக்கொண்டு வருந்தி மூர்ச்சித்திருக்கையில் பிரத்தியமாய் அவ்வரசனுக்கு இறந்த குமரனை யெழுப்பு யளித்தனள். (பிரம்ம கைவர்த்தம்.) இவள் பூர்வம் பிரமனால் மானசீகமாய்ச் சிருட்டிக்கப்பட்டுக் கந்தமர்க்திக்குக் கொடுக்கப்பட்டவள். 3. சஷ்டி தேவியைக் காண்க.

தேவசோழன்

குலோத்துங்க சோழன் குமரன்; பிதாவைப்போல் 90 வருஷம் அரசாண்டு தன் குமரன் சசிசேகாச் சோழனுக்குப் பட்டம்கட்டி நற்கதி பெற்றவன்.

தேவச்ரவசு

வசுதேவன் தம்பி.

தேவததிமுன்

தேவதாசித்தின் குமரன்; தாய் ஆசூரி, தேவி தேவமதி, குமரன் பரமேஷ்டி.

தேவதத்தன்

1. நாகன், பாதாளவாசி. 2. அக்னிவேசன் தந்தை. 3. சீவகன் தோழன். 4. அரிபுரத்தில் வணிககுலத் துதித்தவன். 5. சத்யவிரதனைக் காண்க. 6. ஒரு காந்தருவன். இவன் மரத்திலேறிக் கனிபறிக்கையில் அக்கனியில் ஒன்று அடியில் தவஞ் செய்து கொண்டிருந்த துருவாச முனிவர்க்கெதிரில் விழுந்து இடையூறு விளைத்தமையால் அவரால் நாரையாகச் சபிக்கப்பட்டுச் சிவபூசையால் முத்தி பெற்றவன். 7. (சூ.) உக்கிரசிரவசு குமரன். 8. சத்தியவிரதனைக் காண்க. 9. பதுமயோனியைக் காண்க. 10. கௌதம புத்தருடைய நண்பன் அன்னத்தை எடுத்து வளர்த்த புத்தருடன் அன்னத்தைத்தரவாதிட்டவன்.

தேவதத்தம்

1. இந்திரனால் அருச்சுனுக்குக் கொடுக்கப்பட்ட சங்கம். 2. கற்கி ஏறும் குதிரை.

தேவதரிசநன்

திருவேங்கட மான்மியஞ் சொன்ன இருடி.

தேவதா ஸ்நானோதக பிரமாணம்

இது நியாய சபையில் வாதி பிரதிவாதிகளின் உண்மையறியச் செய்விக்கும் பிரமாணங்களில் ஒன்று. இஃது, உக்ரமான துர்க்காதி தேவதைகளுக்கு அபிஷேகம் செய்வித்த ஜலத்தைக் கொண்டு (3) முறை தீர்த்தத்தை (ஆசமனம்) உண்பிக்கவேண்டும். இவ்வாறு உண்டோர்களில் எவருக்காயினும் (14) நாட்களுக்குள் இராஜீக தெய்வீகமான துன்பம் உண்டாக இல்லையோ அவன்சுத்தன். (யஞ்ஞவல்கியம்).

தேவதாசித்

சுமதியின் குமரன்: தாய் தருவசேனை; தேவி ஆசூரி; குமரன் தேவததிமுன்.

தேவதாசியர்

முதுநூலார் இவர்களை எழுவகையாகப் பிரித்திருக்கின்றனர். (1) தத்தை : இவள் தானே தன்னைத் தேவனுக்குக் கொடுத்தவள். (2) விக்கிரீதை இவள் தேவாலய வூழியத்திற்கு விற்கப்பட்டவள். (3) பிருஹத்ய : தன் காலவிர்த்திக்காகத் தன்னைக் கோயில் ஊழியத்திற்குத் தந்தவள். (4) பக்தை : தன்னைப் பக்தியால் தேவனுக்கு ஒப்பித்தவள். (5) ஹரிதா : கடவுளால் வசப்படுத்தப்பட்டவள். (6) அலங்காரை : தன் தொழிலில் வல்லவளாய் அரசனால் கோயிலுக்கு அனுப்பப்பட்டவள். (7) ருத்ரகணிகை : சம்பளம் பெற்றுக் கோயில் வேலை செய்பவள். இவர்கள் வலங்கைத் தாசிகள், இடங்கைத் தாசிகளென இருவகையர். இவர்களில் வலங்கைத்தாசியர் இடங்கையாலருக் கேவல் செய்யார்.

தேவதாருவனம்

தாருகாவனம் காண்க.

தேவதேவி

திருக்கரம்பனூரிலிருந்த தாசி; தொண்டரடிப் பொடியாழ்வாரைத் தன் வசமாக்க எண்ணி அவரை மயக்கமுடியாமல் கைங்கர்யபரையாயிருந்து ஒருநாள் மழையில் இவள் நனையக்கண்டு ஆழ்வார் தம்மிடத்தில் ஒதுங்க அழைக்கச் சென்று அவரைத் தம் மனப்படியிருக்க மயக்கித்தன் வீடு சென்றனள். ஆழ்வாரும் பின் சென்று பிரிவாற்றாது இருந்தனர். பெருமாள், பொற்றாம்பாளம் ஆழ்வார் கொடுத்ததாயிவளிடம் கொடுத்தனர். இவள் வாங்கிக் கோயில் அதிகாரிகள் கேட்கையில் ஆழ்வார்மீது கூறினள். அதிகாரிகள் ஆழ்வாரைக் கேட்டனர். பெருமாள், ஆழ்வார் அறியார் என்பதை அர்ச்சகர் மூல்யமாய்த் தெரிவிக்க வுணர்ந்து களித்துத் தனது திரவியம் எல்லாவற்றையும் பெருமாள் கைங்கர்யத்தில் செலவிட்டுப் பரமபதமடைந்தவள்.

தேவதையார்

தரணி திலகமெனும் நகரத்து ரதிவேகன் என்பான் ஒரு வித்யாதரன் ராஜகிருக நகரத்துள்ள பெரியோர்களை வணங்க நினைத்து உத்தர மதுரையில் சர்வ குப்தி பட்டாரகரைப் பணிந்து தான் செல்லுங் காரியத்தைக் கூற அவர் அப்படியாயின் அந்நகரத்துள்ள ஸ்ரீரவகிதேவதை யென்பாளுக்கு என் ஆசீர்வாதம் கூறுக என அவன் அங்கு வந்து தன் மாயையால் பிரமன், திருமால், சிவபெருமான், புத்தர், அருகர் போன்ற வடிவங்களை முறையே கொண்டு தருமோபதேசஞ் செய்தனன். இதனையறிந்த அந்நகரத்தார் பலரும் வந்து தேவதையாரை அழைத்தார்கள். அவர், இது மாயம் என்று துணிந்து சொல்லி அங்கே போகாதிருந்தனர். பின் அந்த வித்யாதரன் தேவதையாரிடம் வந்து அவர் அடுப்பில் மூட்டிய நெருப்டைக்குளிரும்படி செய்ய, அவர் முன் மாயை செய்தோரும் நீரோ என்ன அவன் சர்வகுப்திபத்தாரகர் உமக்கு ஆசீர்வாதம் கூறினர். உமது தர்சன மகாத்மியத்தைப் பரீக்ஷிக்க வேண்டி இவ்வண்ணம் என்னால் விக்ரியை பண்ணப்பட்டது. இவ்வகை சம்யந்த் வசுத்தராயினார், இக்காலத் தெங்குமில்லை யென்று ஸ்தோத்தரித்து நமஸ் கரித்துப் போயினன். (சைந கதை.)

தேவத்துதி

ஒரு ருஷி.

தேவநதி

கிராமணியின் குமரி; சுமேகசன் பாரி.

தேவநாகம்

ஐராவதக் கன்று.

தேவநாயகர்

இவர் மாகறலூர்த் தேவநாயகர் எனப்படுவர். இவர் புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரையாசிரியர் என்பர்.

தேவந்தி

கண்ணகியின் பார்ப்பனத் தோழியாய் மாநாய்கன் மனையில் வளர்ந்தவள். சாத்தன் என்னும் தெய்வத்தின் மனைவி. (சிலப்பதிகாரம்.)

தேவந்தை மகருஷிகோத்ரன்

சோழன் தன் பெண்ணை ஸ்ரீரங்கநாதருக்குத் திருக்கல்யாணஞ் செய்வித்த காலத்துக் கற்பூரதீபமிட்டருள் பெற்ற வணிகன்.

தேவனார்

இவர் நெய்தற்றிணையைப் பாடியுள்ளார். சோழரது ஆர்க்காட்டைச் சிறப்பிக்கிறார் இவர் பாடியது நற் (227) ம் பாட்டு.

தேவன்

1. கிரிசாசுவனுக்குத் திக்ஷணையிடம் உதித்த குமரன். 2. பிரதீபன் குமரன். இவன் தந்தை துறவடைந்ததுணர்ந்து தானும் துறவரந்தனன். 3. வைதிச நகரத்திலிருந்த வணிகன் பிரேதஜன்மங் கொண்டவன். பபபரவாகனைக்கண்டு பிரேதசன்மம் நீங்க கருமஞ் செய்யும்படி தன்னிடம் மணியைக் கொடுத்தவன், 4. தேவாங்கருக்கு ஒரு பட்டம்.

தேவபத்தன்

சசிவருணனைக் காண்க.

தேவபர்வதங்கள்

மகேந்திரம், மலயம், சஹ்யம், விந்தியம், உதயபர்வதம், பாரியாத்ரம், ஸ்ரீபர்பதம். (காரணம்.)

தேவபாகன்

1. வசுதேவன் தம்பி. 2. சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன்.

தேவபாகு

கிருஷ்ணன் குமரர்.

தேவபாசன்

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரன்.

தேவபாண்டியன்

இவன், கூன்பாண்டியன் மதுரையையாளுங் காலத்துத் திருநெல்வேலியை ஆண்டவன்.

தேவபித்ருக்கள்

கவ்யவாகர், அநலர், சோமர், யமர், அர்யம்ணர், அக்னிஷ்வாத்தர், பரிஹிஷி, ஆஜ்யபர், சோமபர்.

தேவபீடன்

(சூ.) கீர்த்திதரன் குமரன்.

தேவபூதி

கர்த்தமப் பிரசாபதியின் தேவி, கபிலருக்குத்தாய், சுவாயம்பு மனுவின் பெண்; புத்திரனால் யோகமுணர்ந்து முத்தியடைந்தவள்.

தேவப்ரயாகை

அளகந்தை நதி, கங்கையுடன் கூடுமிடம்.

தேவமதர்

ஒருருஷி; நாரதருடன் பிறப்பிற் சம்வாதம் செய்தவர்.

தேவமதி

தேவததிமுன் என்பவன் தேவி,

தேவமித்திரன்

மாண்டுகேயர் சிஷ்யன்.

தேவமீடன்

இருதிகன் குமரன், இவன் குமரன் சூரன். வசுதேவனுக்குப் பாட்டன்.

தேவயானம்

தெய்வவுலகம் போம் வழி.

தேவயானி

சுக்கிரனுக்கு ஊற்சல்வதியிடம் உதித்த குமரி, யயாதியின் தேவி. தெய்வயானியைக் காண்க.

தேவரக்ஷிதா

தேவகன் குமரி, வசுதேவன் பாரியாள்.

தேவரக்ஷிதை

வசுதேவன் தேவி. குமரர் நவசாத்திரன், கேதன்.

தேவரவணம்

ஒரு வித்யாதர நகரம்,

தேவரவிவிருதன்

சாத்துவதன் கும ரன்; இவன் குமரன் புரு, பப்புரு இவர்களால் (1065) பெயர்முத்தியடைந்தனர்.

தேவராசன்

1. விஷ்ணுமூர்த்தி. 2. இந்திரன்.

தேவராசபிள்ளை

வல்லூரினர். சைவர், சூதசங்கிதை தமிழில் இயற்றியவர்.

தேவராசப்பட்டர்

யதுகிரிப் பெருமாளுக்கு உடையவர் சொற்படி புரோக்ஷண முதலிய செய்த நம்பியார்.

தேவராசப்பெருமாள்

நடாதூர் தேவராசப்பெருமாளைக் காண்க.

தேவராதன்

1. சுநச்சேபனுக்கு ஒருபெயர். 2. (சூ.) சுகேது குமரன். 3. ஒரு இருடி, மிருகாவதியைக் காண்க. 4. யதுவம்சத்துக் கரம்பி குமரன் 5. மிதிலைநகரத்து ஸுகேதன் கும்ரன். 6. ஒரு தவசி; சயையைக் காண்க. 7. நிமியின் வம்சத்தில் ஆறாவதானவன். இவனிடத்தில் தக்ஷப்ரஜாபதி யாகத்தில் வீரபத்ரர் வைத்திருந்த வில்லைத் தேவர்கள் கொடுத்திருந்தனர். அது பிறகு ராமனால் மிதிலையில் கொள்ளப்பட்டது.

தேவராயசுவாமிகள்

கந்தர்சஷ்டி கவசஞ்செய்த ஒரு தமிழ் ஆசிரியர்.

தேவருலகு

(சுவர்க்கம்.) இதற்கு நாயகன் தேவேந்திரன். இவன் மனைவி புலோமசை, குமரன் சயந்தன். இதில் ஐராவதம், காமதேனு, சந்தானம், அரிச்சந்தனம், பாரிசாதம், மந்தாரம், கற்பகம் முதலிய ஐந்துதருக்கள் உண்டு. இவர்கள் ஊண் அமிர்தம், வயித்தியர், உபேந்திரர் என்னும் விஷ்ணு; குரு, வியாழன் இவர்க்கு இரவுபகலில்லை. இதில் இந்திரன் முப்பத்து முக்கோடி தேவர் வணங்க வீற்றிருப்பன். இதற்கு அரசராவார் நூறு அச்வமேதம் முடித்தவர். இவ்வுலகத்தை யாகஞ்செய்தவ ரும் மகாவீரரும் அடைவர். சுவர்க்கலோகம் காண்க.

தேவர்

1. (5.) பிரமா, விஷ்ணு, ருத்ரன், மகேசன், சதாசிவன், 2. இது புதுச்சேரியிலுள்ள தெலுங்க வர்த்தகருக்குப் பெயர். இது தேவியைப் பூசிக்கும் ஓச்சருக்கும் பட்டம். மறவர்களுக்கும் ஒரு பட்டம். (தர்ஸ்ட ன்.)

தேவர்கள்

இவர்கள் ஆதித்யர் (12) உருத்ரர் (11), வசுக்கள் (8), அசுவநிதேவர். (2), திக்குப்பாலகர் (8) இவர்கள் அந்தந்தத் தொழில்களைப் பற்றிக் கடவுளால் சிருட்டிக்கப்பட்டவர். திக்குப் பாலகர் நீங்க முப்பத்து மூவர்.

தேவலகன்

திருவேங்கட மான்மியங் கேட்டுணர்ந்த இருடி.

தேவலகர்

தேவபூசைக்குரியோர். இவர்கள் ஐவகைப்படுவர். (1) கர்மதேவலகர், (2) கல்பதேவலகர், (3) சுத்ததேவலகர், (4) ஹீனதேவலகர், (5) ஸ்விஷ் டதேவலகர். அந்ய சூத்ரமார்க்கத்தினால் எவன் ஒருவருஷம் பூஜை செய்கிறானோ அவனும், அதிக்ஷிதனாய்ச் ச்வயமாகப் பூசிப்பவனும் கர்மதேவலகன் எனப்படுவன். அந்த விதமாகவே மூன்று வருஷம் பூஜை செய்பவன் கல்பதேவலகன் எனப்படுவன். அப்படியே சுவகர்மநிரதனாய் அந்ய சூத்ரத்தின்படி ஆசாரமும் தீக்ஷையும் பெற்றவன் சுத்த தேவலகன் எனப்படுவன். ஹீனாசாரத்துடன் கூடினவனாய்ச் சுவசூத்ரம், அந்ய சூத்ரமார்க்கங்களை விட்டு நடக்கிறவன் ஹீனதேவலகன் எனப்படுவன். எவன் ஸதாசாரசமன்விதனாய்ச் சந்திகளில் பூஜிப்பவன். அவன் ஸ்விஷ்டதேவலகன் எனப்படுவன். (ஸ்ரீ காரணம்.)

தேவலன்

1. வியாசர் மாணாக்கரில் ஒருவன். 2. அட்டவசுக்களில் ஒருவனான பரத்துயூஷன் குமரன். இவன் குமரன், க்ஷமாவர்த்தன், மனஸ்வி. 3. அக்குரூரனுக்கு மூத்த குமரன். 4. யது வம்சத்தனாகிய தேவகன் குமரன்; தேவகியின் சகோதரன். 5. பிரமன் குமாரரில் ஒருவன்; இவன் குமரன் பிரசாபதி, 6. கௌசிகனைக் காண்க. 7. ஒரு இருடி. 8. அசித முனிவர்க்குத் தம்பி. இவன் இந்திரனாற் சபிக்கப்பட்டு அஞ்ஞானத்தாற் கோபமுற்று அதர்மமான தபமியற்றி இறுதியில் சிவார்ச்சனையால் நற்கதி பெற்றான். (சிவமகா புராணம்.) 9. ஒரு இருடி, இவர் தீர்த்தம் ஆடச் செல்லுகையில் அத்தீர்த்தத்தில் இவரைக் கண்டு நாணமிலாது நீராடிக் கொண்டிருந்த (7) பெண்களையக்ஷ ஸ்திரீகளாகச் சபித்து அவர்கள் வேண்ட இராமாவதாரத்தில் நீங்கும் என்றவர். 10. ஒரு இருடி சுதரிசநனைக் காண்க.

தேவலர்

அசிதரைக் காண்க. அத்திரி, ஒரு காலத்துத் தேவாசுரர்களுக்கு யுத்தம் நடக்க அதில் சுவர்ப்பானு என்பவன் சூர்ய சந்தரர்களை அம்பாலடிக்க ஒளி கெட்டது. அதனால் இருள்மூட அசுரர் நன்றாக அடிக்கப்பட்டனர். அடியுண்ட தேவர் அத்திரியை வேண்ட அத்திரி சந்திரனாகி ஒளிகொடுத்தனர். பின் சூரியனுக்கும் ஒளி கொடுத்து அசுரரை நீறாக்கினர். (பாரதம் அநுசாசநிகபர் வம்).

தேவவதன்

தேவகன் குமரன், இவனுக்குத் தேவர்த்தன் எனவும் பெயர்.

தேவவதி

கிராமணியெனுங் காந்தருவன் பெண். சுகேசன் தேவி, இவளுக்குத் தேவமணி எனவும் பெயர்.

தேவவன்மன்

காந்தியின் குமரன்.

தேவவல்லி

மரீசிமுனிவர் தேவி, வல்லபையை வளர்த்ததாய்.

தேவவா

அக்குரூரன் குமரன்.

தேவவாதி

1. ரோதனன் குமரன்; இவன் குமரன் ரிஷன், 2. அக்ரோதன் குமரன்.

தேவவான்

1. தேவகன் குமரன். 2. ருத்ரசாவர்ணி மநுப் புத்ரன்.

தேவவிரதன்

பீஷ்மனுக்கு முதற்பெயர்.

தேவவூதி

மகததேசத்தரசன்; பாகவரதன் குமரன்; சுங்க வம்சத்திற் பிறந்தவன்; தன் மந்திரியாகிய கண்ணுவனால் கொலை செய்யப்பட்டவன்.

தேவவோத்திரர்

யோகேச்வரர் எனும் விஷ்ணுவைப் பெற்றவர்.

தேவஷத்திரன்

தேவராதி குமாரன் இவன் குமரன் மது.

தேவஸ்தாணு

பாரதயுத்தமுடிவில் தன் சுற்றத்தார் இறந்ததைப் பற்றி விசனமுற்ற தருமபுத்ரரைத் தேற்றிய முனிவர்.

தேவஸ்தானன்

ஒரு இருடி தருமபுத்திரரிடம் தோன்றி இல்லறமே சிறந்ததெனக் கூறியவர். (பார ~ சாந்.)

தேவாங்கு

இது, குரங்கினத்தில் ஒரு வகை. சிறிய உருவமும் நீண்ட கால்களுமுடையது. வாலில்லை. இது தலையை மார்பில் வைத்துக்கொண்டு எப்பொழுதும் உறங்கும். முகம் பூனையை யொத்திருக்கும். கைகளும் கால்களும் குரங்கைப் போல் நீண்டவை. இது மரங்களை உறுதியாய்ப் பிடித்து மெதுவாய்ச் செல்லும். இரவில் பூச்சிப்புழுக்களையும் பழங்களையுந்தின்னும். இதனினும் பெரிது ஆபிரிகா கண்டத்துத் தேவாங்கு. இவ்வினத்தில் மற்றொரு வகை மடகாஸ்கர் தீவிலிருக்கிறது அதனை ஆய் என்பர்.

தேவாசிரிய மண்டபம்

இது, திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். இதில் அடியவர்களெழுந்தருளியிருப்பர். இவர்களைத் திருத்தொண்டத் தொகையால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடினர்.

தேவாதிதி

புரூவம்சத்துக் குரோதனன் புத்திரன். தாய் காளிங்கி.

தேவாநீகன்

(சூ.) க்ஷேமதர்மா குமரன். இவன் குமரன் பீனகு.

தேவாந்தகன்

1. இராவணன் குமரன் இலக்குமணர் அதியாகனுடன் யுத்தஞ செய்கையில் அநுமனால் கொல்லப் பட்டவன். 2. இரௌத்திரகேதுவின் குமரன், நாரதர் உபதேசத்தால் தவஞ்செய்து பல சித்தி பெற்றவன். இவன், திரிலோகத்தையும் தன்வசப்படுத்தித் தேவர் முனிவர்களை வருத்தி விநாயகமூர்த்தியிடம் பல அசுரரையேவிக்கடைசியில் தானே வந்து யுத்தஞ்செய்தனன். விநாயகரிவனை வெட்டுந்தோறும் கரமுஞ் சிரமும் வளருதல் கண்டு பேருருக்கொண்டுதிருவடியால் வயிற்றைக் கிழித்துக் கொன்றனர். இவன் தம்பி நராந்தகன்.

தேவாபி

1. (சந்.) குரோதன் குமரன்; இவன் குமரன் உருசுகன். 2. பிரத்தீபன் குமரன், சந்தனுக்கு மூத்தோன். இவன் அரசுவேண்டாது காடடைந்து தவமேற்கொண்டான். இவன் கலியுக அந்தத்தில் தருமத்தை நிறுத்தக் காலாபம் என்னும் கிராமத்தில் தவஞ்செய்கையில் கல்கியடைய அவரையடைந்து இந்திரனாலனுப்பப்பட்ட இரதத்திலேறிச் சென்றவன்.

தேவாபிருதம்

நிஷததேசத்திலிருக்கும் பட்டணம்.

தேவாரண்யம்

ஒரு காடு; இதிலுள்ள இருடியர் அருச்சுநனைக்கண்டு உபசரித் தனர்.

தேவாரதி

குந்தி குமரன். இவன் கும ரன் தேவக்ஷத்திரன்.

தேவாரம்

இது திருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த் திசுவாமிகள் மூவர்களாலும் சிவமூர்த்தியின் மீது அருளிச்செய்யப்பட்ட தமிழ் வேதம். இதிலிறைவன் கட்டளைப்படி சிதைந்தனபோக மிகுதியை அபயகுலச் சோழராஜா பலராற்கேட்டு ஆவலால் நம்பியாண்டார் நம்பியால் பெற்றார்.

தேவி

1. பார்வதிபிராட்டியார், ஸ்ரீமகாலக்ஷ்மி முதலியவர்க்குப் பெயர். 2. மேருதேவியின் பெண்; கேதுமாலன் பாரி. 3. விரோசனன் பாரி, பலிக்குத்தாய்.

தேவிகாலோத்திரம்

இது இப்பெயருள்ள ஆகமத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

தேவிகை

ஒரு நதி.

தேவிச்சிரவை

ஒரு நதி.

தேவிபீடம்

சத்தி பீடங்களில் ஒன்று.

தேவிவிரதம்

சுக்கிரவாரவிரதம் இது சித்திரை மாதத்துச் சுக்லபக்ஷத்துச் சுக்கிரவாரம் முதல் பார்வதிப் பிராட்டியாரை யெண்ணி விரதநோற்பது. இதில் சருசகரை நிவதாம் செய்தல் வேண்டும். இது சக்ரகான் அநுட்டித்ததினம்.

தேவேந்திரமாமுனி

ஜீவசம்போதனை யென்னும் ஜைந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.