அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தெக்ஷசாவர்ணி

வருணபுத்திரன்; ஒன்பதாமன்வந்தரத்து மநு.

தெக்ஷணன்

விஷ்ணு திக்பாலன்.

தெக்ஷன்

சித்திரசேனன் குமரன்.

தெசாதனன்

சுதேசு குமரன்; இவன் குமரன் சங்கதன்.

தெண்டகன்

(தண்டனை செய்வோன்.) அரசன் சூத்திரகன்னிகையைப் புணரப் பிறந்தவன்.

தெண்டன்

இக்ஷ்வாகு குமரன்.

தெத்தசுவாலாதூமதோஷம்

பாபக்கிர கங்கணின்று கழிந்தநாளும், நின்ற நாளும், நிற்கப்புகுகிற நாளும், தெத்தசு வாலாதூம நாள் என்று பெயர். இந்நாட்களில் சுபங்கள் கூடா. இந்நாட்களுடன் கூடிச்சந்திரன், சுக்ரன் கடந்து போதல், உடனிற்றல், நோக்குதல் செய்யின் நன்றாம். (விதான.)

தென் அமெரிக்கா

இது தீபகற்பம். இது வடக்கில் கொஞ்சங் குறைய மற்றப் பாகங்கள் கடலாற் சூழப்பட்டுள்ளது. இதன் தேசங்கள் கொலம்பியா, ஈக்வடார், வெனிசுலா, கயானா, பிரேசில், பெரு, பொலிவியா, உரகுவே, சில்லி, பாடகோனியா முதலிய.

தென்காஞ்சி

இவர்கள் திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலிருந்து குடியேறினவர்கள். (தர்ஸ்டன்.)

தென்திசை

இது ஒரு வேளாண் பகுப்பு. இவர்கள் கோங்குவேளாளரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கோயம் புத்தூர் ஜில்லாவில் இருக்கின்றனர். (தர்ஸ்ட ன்).

தென்னவன்பிரமராயன்

மாணிக்கவாசகசுவாமிகள் மந்திரியாக விருந்த காலத்துப் பாண்டியனால் தரப்பட்ட பெயர்.

தென்னாலிராமகிருஷ்ணன்

இவன் ஒரு வேதியன்; கிருஷ்ணதேவராயர் அரசாட்சியில் அவர் சமஸ்தான கவிகள் எண்பதின்மரில் இவன் விகடகவி, தெலுங்கநாட்டவன். இவன், பாண்டவர்க்கும் இராமருக்கும் சிலேஷையா கப்பாரதக்கதையையும் இராமாயணக் கதையையும் ஒரு செய்யுளில் பொருந் தப்பாண்டுரங்க விஜயமென ஒரு நூல் செய்திருக்கின்றனன். இவன் மகாகவி. இவன் காளியைத் தியானிக்கக் காளி (1000) சிரங்களுடன் கோரவுருக் கொண்டு தரிசனந் தந்தபோது அவளைக் கண்டு அஞ்சாது அம்மே, எமக்கு ஒருசிரம் ஒரு மூக்கிருதொளையிருந்து சலரோகம் கண்டால் துன்பம் அடைகின்றோம். உமக்குச் சலரோகங் கண்டால் ஆயிரமூக்கால் எப்படிச் சிந்துவீர் எனக் காளி இவனது அஞ்சாநிலைக்குக்களித்து விகடகவியாகுக என ஆசீர்வதித்துச் சென்றனள் இவனைத் தென்னாட்டார் திருவாழித்தான் என்பர்.

தென்னை

இது, நாணலின் சாதியில் ஒரு வகை. இது, மணற்பாங்கான உஷ்ணப் பிரதேசத்து விருக்ஷம். இது, (60~70) அடி வளரும். இதின் மடல்கள் ஒவ்வொன்றிலும் பல தனித்தனி இலைகள் உண்டு. நன்றாய் முதிர்ந்த நெற்றை மணற்பூமியில் நீர் பாய்ச்சினால் சில மாதங்களுக்குப்பின் முளை கிளம்பும். நாற்றுக்கள் ஏறக் குறைய வளர்ந்த பிறகு (10) அடிக்கு ஒன்றாக நடுவார்கள். நன்றாக வளர்ந்த மரம் (5) வருஷத்தில் பலன் தரும். இது (40~50) வருஷம் பலன் தரும். தென்னைமரம் இளநீர், தேங்காய், தேங்காயெண்ணெய், கள், தென்னைவெல்லம் முதலிய பலன்களைத் தரும். ஓலையை வீடு மேய்வர், நரம்பால் துடைப்பம் முதலிய செய்வர், மட்டையால் நார் திரித்துத் தாம்புக் கயிறு திரிப்பர். அடிமரம் வீட்டு வரிச்சல் துண்டுகளாம். ஓட்டைப் பான பாத்திரமாக்குவர். இதன் வகை பல அவை செவ்விள நீர், பச்சையிளநீர், கேளி, மஞ்சள்கச்சி, அடுக்கிளநீர், கருவிளநீர், சோரி இளநீர், ஆயிரங்கச்சி, குண்டற்கச்சி யிளநர், நக்கவாரி முதலிய.

தென்பாண்டி

தமிழ்நாட்டிலொன்று. திருநெல்வேலி.

தெமனி

கிலாதன் தேவி.

தெய்வத்துக்கரசுநம்பி

ஆளவந்தார் குமரர், மணக்கால் நம்பியின் திருவடி சம்பந்தி. இவர் குமரர் பெரிய திருமலைநம்பி. குமரியர், பூமி பிராட்டி, பெரிய பிராட்டி.

தெய்வப்பெருமாள்

ஆளவந்தார் திரு வடி சம்பந்தி.

தெய்வம்

விச்வாமித்ரன், இயமன், அங்கி, சந்திரன், சூரியன், கௌதமன், காசிபன்.

தெய்வயானி

சுக்கிரன் பெண்; யயாதியின் பாரி. இவள் வியாழபகவான் புத்திரனாகிய கசன் சாபத்தால் யயாதியை மணந்தனள். இவளும் சன்மிஷ்டையும் நீர் விளையாடச்சென்று முடிவில் அறியாது இவள் வத்திரத்தைச் சன்மிஷ்டை உடுத்திக்கொள்ள இவள் கோபித்தனள். அதனால் சன்மிஷ்டை இவளை வெறுத்துக் கிணற்றில் தள்ளினள், கிணற்றிலிருந்த இவளை அவ்வழிவந்த யயாதிகண்டு எடுத்துவிட இவள் அரசனை மணந்து தனக்குத் தீமை செய்த சன்மிஷ்டையை அடிமையாக்கிக் கொண்டவள். பின் யயாதி சன்மிஷ்டையிடம் ஆசை கொண்டிருந்ததைப் பிதாவிடங் கூறிப் புருடனுக்குச் சாபம் வருவித்தவள். இவளிடத்து யயா தியாலுண்டான குமரர், எது, துருவசு. இவள் மணங் கொள்ளாததற்கு முன் மிருதசஞ்சீவினி மந்திரத்தின் பொருட்டுத் தன் பிதாவிடம் வந்து அவற்கு வேண்டிய உபசாரங்களைச் செய்திருந்த கசனை அசுரர் பலவிதத்திலும் கொன்றதுகண்டு தந்தையிடங் கூறி உயிர்ப்பிக்கச் செய்து கடைசியில் தன் எண்ணத்தைக் கசனுக்குக் குறிப்பிக்க அவன் உடன்படாததனால் மிருதசஞ்சீவினி மந்திரம் கசனுக்குப் பலியாதிருக்கச் சாபமிட்டவள்.

தெய்வயானை

இவள், விஷ்ணுவின் குமரியாயவதரித்துச் சரவணப் பொய்கைக் கரையில் குமாரக் கடவுளை மணக்கத் தவமியற்றினள். இவளெதிரில் குமாரக்கடவுள் தரிசனந்தந்து நீ இந்திரனிடம் வளருக; நாம் உன்னை மணக்கின்றோமெனத் திருவாய் மலர்ந்து மறைந்தனர். அக்கட்டளைப்படி தவத்திலிருந்து நீங்கிக் குழந்தையுருக்கொள்ள இவளை ஐராவதம் என்னும் வெள்ளையானை வளர்த்து இந்திரனிடம் கொடுத்தது. இவள் யானையால் வளர்க்கப்பட்டதால் தெய்வயானை எனப்பட்டனள்,

தெய்வலோகம்

(6) (1) மகாராஜிகலோ கம், (2) திரயத்திரிம்சத்லோகம். (3) யாமலோகம், (4) துஷிதலோகம், (5) நிருமாணரதிலோகம், (6) பரநிருமிதவ சவிருத்திலோகம். இது பௌத்த நூலிற் கண்ட து.

தெய்வவன்மன்

சுமந்தமுனிவரிடம் புராணங்கேட்டுச் சித்திபெற்ற அரசன்.

தெய்வவாரியாண்டான்

ஆளவந்தார் திருவடிசம்பத்தி.

தெய்வீகமகாராஜன்

இவன் நடு நாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். இவன் கல்யாணத்தில் ஔவை சென்று பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு இம்மூன்றினையும் முறையே பால், நெய், வெண்ணெயாக வரும்படி எவினள், ஆதலால் அவ்வாறு வந்தனவென்பர். சிவமூர்த்தி தனித்து இருக்கையில் பர்வதராஜன், காணச் சென்று சாபம் அடைந்து குகமுனிவர் யாகத்தில் பிறந்து தெய்வீக அரசன் என்று பெயர் பெற்றனன். இவன் தெய்வப் புரவி ஊர்ந்து காசி, சிதம்பரம், இராமேச்சுரத்தை நாள்தோறும் தெரிசித்து வருவன். இவனிடமுள்ள குதிரையைப் பிடுங்க ஆவல் கொண்ட தமிழ்நாட்டரசர் மூவரும் மந்திரியரை ஏவிக் குதிரையைக் கேட்டு அனுப்பினர், அரசன் மறுத்தமையால் மூவரசரும் யுத்தசந்நத்தராய் நாங்கள் தோற்பின் எங்கள் கன்னியரைத் தருகின்றோம்; நீர் தோற்பின் உமது குதிரையைத் தருக எனப் பந்தயம் இட்டு யுத்தத்தில் தோற்றுத் தமது கன்னியரை அரசனுக்கு மணப்பித்தனர். இவன் காரண்டன், வல்லூரன் எனும் இரண்டு அசுரரை வதைத்துப், பாண்டியன் புத்திரியாகிய காஞ்சன மாலையை மணந்து, நரசிங்கமுனையரைய நாயனாரைப் பெற்றுச் சோழன் புத்திரியாகிய பொன்மாலையிடம் மெய்ப்பொருள் நாயனாரைப் பெற்றுச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் சித்திரசேநனைப் பெற்று முத்தி அடைந்தனன். இவன் வழியில் நந்தமான்வம்சம், சுதர்மான்வம்சம் மலையமான்வம்சம் உண்டாயின.

தெரிநிலை வினை

செயலையுங் காலத்தையும் வெளிப்படையாகத் தெரிவிப்பது. (நன்).

தெற்காழ்வான்

எழுபத்து நாலு சிங்காசனாதிபதியரில் ஒருவர். வைணவாசாரியர். (குரும்பரம்பரை).

தெற்பன்

உசீநரன் குமரன்.

தெலிபோன் (Telephone)

தூரத்திலுண்டாம் ஓசையை மீண்டும் மின்சார சக்தியால் தெரிவிக்கும் கருவி.

தெலுங்கச்சோமையர்

இவர் கலியாண நகரத்திருந்த வீரசைவ அடியவர். இவர் சிவபூசைக்குப்புட்பத்தின் பொருட்டுச் செல்ல அவ்விடமிருந்த கரடிகளிரண்டு தமக்குச் சிவாநந்த முனிவராலுண்டான சாபத்தை நீக்க வேண்டின. அவ்வகையே அவற்றிற்குக் காந்தருவ உருவத்தைக் கொடுத்தநுக்கிரகித்தவர்.

தெலுங்கு

திரிவிலங்கதேசம் காண்க. இது கண்ணுவரால் ஏற்படுத்திய பாஷை யென்பர். இதன் எழுத்து, உச்சரிப்பு முதலிய வடமொழியை யொத்திருக்கும். இதில் பல சிறந்த நூலாசிரியர்கள் பற் பல இலக்கண நிரம்பிய நூல்களியற்றி யிருக்கின்றனர்.

தெளிவு

இது வைதருப்பநெறியி லொன்றாகிய செய்யுணெறி. இது, கவியாற் கருதப்பட்ட பொருள் கேட்போருக்கு உளங்கொண்டு விளங்கத் தோன்றுவது. (தண்.)

தெள்ளுப்பூச்சி

இது பறக்காது, இரத்தத்தை உறுஞ்சும் பூச்சி வகையில் ஒன்று. இவ்வகையில் மாட்டுத் தெள்ளு, நாய்த்தெள்ளு முதலியவையும் உண்டு.