ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தூக்கணங்குருவி | இது ஊர்க்குருவி போல் மஞ்சணிறமாம். கழுத்தில் கறுப்பு நிறம் வாய்ந்த சிறு பறவை. சுறுசுறுப்புள்ளது. இனத்துடன் வாழ்வது. இது பனை, தென்னை, ஈந்து முதலியவற்றின் நரம்புகளை அலகால் கிழித்து மரங்களில் கூடுகட்டும். இது அக்கூடுகளை மரத்தில் தொங்கும்படியாகப் பின்னிப் பின்புறம் வழியும் உள்ளில் பல அறைகளையும் செய்து முட்டையிட்டபின் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தின் பொருட்டுச் சேற்றைக் கூண்டினுள் அப்பி அதில் மின்மினிப் பூச்சுகளை வைக்கும். இதை மஞ்சள் குருவியென்பர். |
தூக்கு | தாளங்களின் வழிவரும் பேதம்; அதுதான், செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற் நூக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றுக்கு, நெடுந்தூக்கு என ஏழு வகைப்படும். அவை “ஒருசீர் செந்தூக்கு, இருசீர் மதலை, முச்சீர்துணிபு, நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே, அறுசீர்கழாலே, எழு சீர் நெடுந்தூக்கு, என்மனார் புலவர்” என்பதால் அறிக.) |
தூக்குமரம் | கடுங்கொலை செய்தோரைத் தூக்கி உயிர் போக்கு மரம். இது நீண்ட கோலில் குறுக்கிட்ட சட்டமிட்ட வடிவது, அதில் கழுத்தில் கயிறிட்டு உயிர் போக்குவர். |
தூங்கலோரியார் | இவர், தழும்பனை யும் அவனது ஊணூரையும் பாடியதாக “வாய்வாட்ட மிழகப்படுத்தவிமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளளிருக்கைத் தூங்கல்பாடிய வோங்குபெய நல்லிசைப்பிடி மகிழுறுதுணைப் பெரும்பெயர்த் தழும்பன் கடியதில் வரைப்பினூனூரும் எனும் கணக்காய னார் மகனார் நக்கீரனார் (அகம் 226 இல்) புகழ்ந்து கூறியுள்ளார். அங்ஙனம் இவர்பாடிய பாடல் காணப்பெறாமையின் அழிந்தது போலும். இவர் மரு தத்திணையையும் பாலைத்திணையை யும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் 60 ம் பாடலொன்றும், குறுந்தொகையில் இரண்டுமாக மூன்று பாடல்கள் இருக்கின்றன. |
தூங்குமூஞ்சிமரம் | இந்தியாவில் சாலைகளில் நிழலுக்காக வளர்க்கு மரங்களில் ஒன்று. இது சூரியனஸ்த மிக்கும் மாலைக் காலத்து இலைகளைச் சுருக்கிக்கொண்டு உதயத்தில் விரிந்திருக்கிறது. |
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் | அகத்தியர் சொற்படி முதலிற் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாச் செய்வித்த சோழன். ஆகாயத்தில் செல்லவல்ல மூன்று கோட்டைகளை வாளாலெறிந்து அசுரரைவென்று சுவர்க்கத்தைக் காத்தவன். (மணிமேகலை.) |
தூசங்கொளல் | சித்திரக்கவியில் ஒன்று. ஒருவன் ஒரு வெண்பாசொன்னால் அதனீற்றெழுத்தே ஈறாக, அதன் முதலெழுத்தே முதலாக மற்றொரு வெண்பாவின் ஈற்றினின்று மேற்பாடுவது, (யாப்பு வி.) |
தூடமோர்ணை | யமன் மனைவி. |
தூணன் | 1. விஸ்வாமித்திர புத்திரன். 2. குபேரன் தூதன். |
தூதன் | பிறருடைய இங்கிதம், ஆகாரம், செயல்களையறிதல், மறவியின்மை, காலம் இடம் அறிந்து செய்தல், சந்திவிக்ரம் முதலிய ஆறு குணங்களையு மாராய்ந்தறிதல். சொல்வன்மை, அஞ்சாமை முதலிய குணங்களுடையவன். (சுக் ~நீ.) |
தூதபாவை | பஞ்சநதத்தைக் காண்க. |
தூதலக்ஷணம் | நற்குடியிற் பிறந்தானாகவும், சகல சாஸ்திரம் அறிந்தவனாகவும், கண் சிமிட்டுதல் முதலிய சாடைகள் சிட்டிக்கைப்போடுதல் முதலிய செய்கைகள் இவற்றினைக் கைகண்டறிபவனாயும், பொருள் விருப்பில்லாதவனாயும், சமர்த்தனாயும், நற்குலத்தில் பிறந்தவனாயும் இருப்பவன் தூதனாவான். அத்தூதன் சகலரையும் சிநேகிப்பவனாகவும், அன்புளானாகவும், ஞாபகமுளானாகவும், தேசகாலங்களை அறிந்தவனாகவும், தேகபுஷ்டியுள்ளவனாகவும், பயமிலானாகவும், பல பாஷைகளைப் பேசுகிறவனாகவும், சத்துரு இடத்தில் மறைந்து சென்று அவன் செய்கை. அபிப்பிராயம், அவன் சேனையின் அபிப்பிராயம், பலம், இச்சை இவைகளை அறிபவனாகவும், சத்துருவினிடம் சென்று அவன் செய்கைகளை அறியுமிடத்துத் தனக்குத் தீங்குநேராது தப்பித்துக் கொள்பவனாகவும் இருத்தல் வேண்டும். இவ்வகைத் தூதன், தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான் என இருதிறப்படுவன். பின்னும் வேற்றரசர் இடஞ்சென்று பேசும் பொழுதுதான் காரியங்களைத் தொகுத்துச் சொல்லி அவனுக்கு ஆகா த காரியங்களை அறிவிக்கும் இடத்துக் கொடுஞ்சொற்களை நீக்கி நகை விளைக்கும் சொற்களைக் கூறியும், தான் எடுத்த காரியத்தைப் பகைவர் மனங்கொள்ளக் கூறி அவர் கோபிக்கினும் அஞ்சாது காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிபவ னும், பகைவரிடம் செல்லும் காலம் சென்றகாலம், சொல்லும் இடம் அறிந் துதான் கூறப்போம் விஷயத்தை முன்னே விசாரித்து உரைப்பவனும், பகையரசரது அமைச்சர்களைத்தம் வசமாக்கும் வன்மை உடையவனும் தூது கூறத்தக்கவனாவான். இவ்வகைச் செய்கை உடையானை அரசன் தூதாகக் கொள்ளல் வேண்டும். (மநு) |
தூதிடையாடல் | யுகம் போன்ற மாலைக்காலத்துத் தலைவியுற்ற துன்பத்தைப் பாத்துத் தோழி விட்டு நீங்காளாய்த் தலைவனிடத்தே தூதாகி நடந்தது. (பு.வெ. பெருந்திணை.) |
தூதிற்பிரிவு | இருவரசரும் தம்மிற் பொராநின்ற இடத்து அவரைச் சந்து செய்வித்தற்குப் பிரிதல். இது, தலைம கனாலுணர்ந்த தோழி தலைமகட்குரைத்தல், தலைவி முன்பனிப்பருவங்கண்டு வருந்தல், தோழியாற்றுவித் தல் முதலிய. |
தூபம் | பிசின்களானும், கட்டைகளாலும் உண்டாக்கப்படுவன. தேவர்களுக்கு மணமுள்ளவைகளான பிசின்களால் தூபமளிக்க வேண்டும். தேவதைகளுக்கு வேறு உக்கிரமானகட்டைகள் முதலிய புகை அமைத்தல் வேண்டும். இது பலிக்குச் சுக்ரர் கூறியது. (பார ~ அநுசா.) |
தூபயந்திரம் | பெருத்த குண்டுசட்டியில், சரக்கை வைத்துச் சட்டி வாயில் சல்லடை போன்ற சீலை கட்டிப் பொருத்தமான மேல்சட்டி மூடியெரிப் பது. |
தூபலகன் | கிருஷ்ணனால் கொலையுண்ட மல்லன். |
தூப்புல் அப்பை | தேசிகர் திருவடி சம்பந்தி. |
தூப்புல்குல முடையார்தாசர் | மணவாள மாமுனிகளுக்கு ஒரு பெயர். |
தூப்புல்பிள்ளை | வேதாந்த தேசிகரைக் காண்க. |
தூமகீர்த்தி | குந்திபோசன் குமரன். |
தூமகேது | 1. பிருது சக்கிரவர்த்திக்கு அர்ச்சிசு இடத்திலுதித்த குமரன். 2. விநாயகருக்கு ஒரு திருநாமம்; இவர் சரிதையைத் தூமாசுரனைக் காண்க. 3. மேகக் கூடத்தரசன். |
தூமப்பர் | ஒரு இருடி, மங்கணசித்தரைக் காண்க. |
தூமாசுரன் | இவன் முற்சந்தத்தில் விகுதி யென்னும் அரசன்; இவன் இந்திரபதம் பெற (90) யாக முடித்துக் கடைசியாகஞ் செய்கையில் இந்திரனால் ஏவப்பட்ட நாரதர் இவனிடஞ் சென்று இவன் மனைவியைக் கேட்க இவன் மறுத்தமையால் யாகத்தை அழித்து மறுசநதத்தில் அசுரனாகச் சபித்தனர். இவன் அசுரனாய்த் தேவ இருடியரை வருத்தி வருகையில் அசரீரி, சுமுதையிடம் பிறக்கும் சிசு உன்னைக் கொல்லுமெனக் கேட்டுச் சுமுதையையும் அவள் கணவன் மாதவராசனையும் மஞ்சத்துடன் காட்டிற்கொண்டு போய்விட அவ்விடம் விநாயகமூர்த்தி இவர்களுக்குக் குழந்தையுருவாய்த் தரிசனம் தந்து வளர்ந்து வந்தனர். இவர் வளர்ந்து அநேக அசுரரைக் கொன்ற செய்தியை மாதவராசன் கேட்டுச் சண்டை செய்ய வரவிநாயகமூர்த்தி, தமதுவாயில் புகை யுண்டாக்கிச் சேனை முழுதும் கொன்றனர். இதனால் விநாயகருக்குத் தூமகேதுமூர்த்தி யெனவொரு திருநாமம் உண்டாயிற்று. |
தூமாசுவன் | சுசந்திரன் குமரன்; இவன் குமரன் சிரஞ்சயன். |
தூமாதிபஞ்சகிரகங்கள் | தூமன், விதி பாதன், பரிவேடம், இந்திரதனுசு, தூம கேது. |
தூமாதிபுடம் | சுத்தாதித்யன் புடத்தை வைத்து, அதில் நான்கு இராசியும் பதின்மூன்று பாகையும் கூட்டி நின்ற நிலைதூமபுடமாம், இதனை மண்டல ராசியிற் களைந்து நின்றது வியதிபாதபுடமாம், இதில் (6) இராசிகூட்டப் பரி வேவுபுடமாம், இதனை மண்டலராசியிற் களைந்து நின்றது இந்திரதனுப்புடமாம். (விதானமாலை.) |
தூமாதிமார்க்கம் | பித்ரு லோகத்திற்குப் போகும் வழி. ஆன்மாக்கள், தாம் செய்க அக்னிஹோத்ரதூமத்தை மார்ச்மாகக் கொண்டு செல்வராதலின் இம் மார்க்கத்திற்கு இப்பெயர் வந்தது. |
தூமாஷன் | இராவணன் மந்திரிகளில் ஒருவன். பிணந்தின்பவன்; அநேக ராமக்கதருக்குத் தலைவன். இந்திரசித்தும் குத்துணையாய்த் தேருடன் வந்தவன். அநுமனால் இறந்தவன். தூம்ராக்ஷன் எனவும் பெயர். |
தூம்பரகேது | 1. பரதனுக்குப் பஞ்சசேநியிட முதித்த குமரன். 2. திரணபிந்து குமரன். 3. தநுபுத்ரன். |
தூம்பிராசுரன் | சும்பநிசும்பரின் மந்திரி கௌசிகி தேவியிடம் யுத்தஞ் செய்யச் சென்று மரணமடைந்தவன். (தேவி~பா.) |
தூம்பிராணீகன் | பிரியவிரதன் பேரன்; மேதாதியின் குமரன். |
தூம்பிராஷ்டன் | யமசந்திரன் குமரன். |
தூம்ரகேசன் | கிரிசாசுவனுக்கு அர்ச்சசியிடம் பிறந்த குமரன். |
தூம்ரலோசநன் | ஒரு அசுரன; காளியினால் கொல்லப்பட்டவன். |
தூம்ராசுவன் | நபாகனைக் காண்க. |
தூம்ரை | பிரசாபதியின் மனைவி; குமரன் வருணன். |
தூயமுனிவேழவன் | உடையவர் திருவடிசம்பந்தி; திருமஞ்சன கைங்கர்யபரர்களில் ஒருவர். |
தூரச்சடி | சிவகிங்ரன். |
தூரச்ரவணயந்திரம் (Telephone) | இது, தூரத்திலுள்ள ஓசைகளைக் காதிற் கேட்கும்படி தந்தி மூலமாய்ப் பொருத்திய குழல் வடிவமைந்தது. இது பேசுவானுக்கும் கேட்பானுக்குமிடையில் குழலில் பொருத்தியிருக்கும் தந்தி வழியாய்ப் பேசுவானுடைய ஓசையைக்காற்றுக்கொண்டு செல்வது. இது, ஓசையின் அணுக்களின் வேகத்தைக் காற்று கொண்டு சென்று கேட்பானுக்கு அறிவிப்பதுமாம். மின்சார வழியாலும் செல்லுவது. |
தூரதிருஷ்டிக் கண்ணாடி | தூரத்திலுள்ள பொருள்களை அருகிற காட்டும் கண்ணாடி. |
தூரமன் | ஒரு வாநர சூரன் |
தூரமவதி | ஒரு தீர்த்தம். |
தூராகரன் | ஒரு அசுரன், சிவமூர்த்தியால் கொலையுண்டவன், |
தூர்த்தன் | குசன்குமரன் துரியோதனன் சகோதரன். |
தூர்வாகணபதி விரதம் | இது கார்த்திகை மாதத்துச் சுக்கில சதுர்த்தியில் விநாயகத் திருவுருவை அறுகின் மீது எழுந்தருளுவித்துப் பூசிப்பது. |
தூர்வாக்ஷி | வசுதேவர் தம்பியாகிய விருகன் தேவி. |
தூர்வாசசிவர் | சைவபத்ததி செய்த சிவாசாரியருள் ஒருவர். |
தூர்வாசம் | ஒரு தீர்த்தம். |
தூர்வாஷ்டமி விரதம் | இது புரட்டாசி மீ சுக்லபக்ஷ அஷ்டமியில் அநுஷ்டிப்பது. வெண்ணிறமாய்ப் படர்ந்து வடக்குச் செல்லும் அறுகால் உன்னைப் போல் வேரோடிச் சந்ததி வளர்ந்திருக்க வென்று சிவமூர்த்தி யையும் கணேச மூர்த்தியையும் பூசிப்பது. |
தூலகர்ணன் | ஒரு காந்தருவன், சிகண்டிக்குப் புருவத்வம் கொடுத்துச் சிகண்டியின் ஆயுள்வரையில் தான் பெண்ணுருப்பெற்றிருந்தவன். |
தூலகேசன் | பிரமத் துவரையை வளர்த்து குருவுக்குக் கொடுத்த இருடி, |
தூலசிரசு | 1. ஒரு இருடி, தனுவென்பவனைக் கபந்தனாகச் சபித்தவர். 2. இவர் மேருவின் ஈசானத்தில் தவம்புரிந்தார். இவர்த்து வாயு குளிர்ந்து வீனேன் அதனால் களிப்புற்ற இவர் விருக்ஷங்களை நோக்கி நீங்கள் சோபையைச் செய்தலால் நீங்கள் எக்காலத்தும் புஷ்பங்களும் பழங்களும் பெறாதிருக்கவென்று சபித்தனர். (பார~சாந்) |
தூலபீடம் | சத்திபீடங்களில் ஒன்று. |
தூலஸிரன் | ஒரு அரசன்; விதூமனைக் காண்க. |
தூவலகன் | கிருஷ்ணனால் கொல்லப் பட்ட அசுரன். |
தூஷதர் | ஒரு தேவ வகுப்பினர். |
தூஷ்ணன் | 1. விசிரவசுவிற்குக் கலை விடம் பிறந்த குமரன் அசுரன். இவன் சூர்ப்பநகையேவலால் இராமமூர்த்தியிடம் வந்து நெற்றிக்கு நேராய்ப்பாணத் தைவிட இராமமூர்த்தி அதனைத் தடுத்து ஒரு அம்பு எய்ய இறந்தவன். 2. இரத்தனமாலா பர்வதத்திலிருந்த தைத்திய அரசன். இவன் சிவபூஜாதுரந் தரராகிய வேதியர்களை வருத்தியதால் சிவபெருமான் ஒரு வழியிலிருந்து உக்ரவுருவத்துடன் எழுந்தருளி அசுரராதியரைக் கொன்றனர். இச்சிவமூர்த்தி தோன்றிய இடம் மகாகாளேசுரம். |