ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
துகண்டன் | ஒரு அரசன், |
துகாராம் | இவர் திண்டகாமனு எனுங்கிராமத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தவர். இவர் சத்யவிரதராயிருந்து இல்லற நடத்தி வருநாட்களில் துஷ்காலம் நேரிட்டதால் விவகாரத்தில் விரக்திபெற்று ஏகாதசி விரதம் அநுட்டித்து அரிபஜனை செய்து பகவானருளால் கவிகள் பாடித் தமது மகிமை யால் சிவாஜி அரசனுக்கு நேரிட்ட துன்பத்தை விலக்கி அவன் கொடுத்த செல்வத்தை விரும்பாது இருந்தனர். இவ்வாறு தாம் கீர்த்தனைகள் செய்யும் சமயத்தில் ஒருத்தி தன்னுயிர் நீங்கின குமரனை இவர்க்கு முன்னிட்டு வருந்த அவனை உயிர்ப்பித்தனர். இவர் இரண்டுமாதகாலம் காட்டில் திரிந்துகொண்டிருக்கையில் இவர் மனைவி இவரைத்தேடிப் பிடித்து மனைக்கண் கொண்டுவந்து வசிக்கையில் இவர் மனைவியை நோக்கிப் பிரபஞ்சக் காவடியைச் சமந்து வாணாள் வீணாளாக்காது பகவான்றிருவடியை எண்ணின் நலமடையலாமென்று அவளுக்குப்பதேசித்து அவளை வீடு முதலியவைகளைக் கொள்ளைவிடக் கட்டளையிட்டனர். அவ்வாறு மனைவி செய்து பகவானைத் தியானித்துக் கொண்டிருக்கையில் குழந்தைகள் பசியாலழ அன்னமில்லாது இந்தப் பகவான்றிருவடியை நம்பின தால் என் சம்சாரம் நீறாயிற்றென்று ஒரு கருங்கல்லைத் தலைமீது சுமந்துகொண்டு பகவான் காலை உடைக்கிறேனென்று கோயிலுக்குள் செல்லுகையில் ருக்மணி ஒரு பொதி பொன் பணங்களைச் சுமந்து கொண்டு வந்து தர அதனைத் துகாராம் வாங்கிச் சாதுக்களுக்குப் பகிர்ந்தளித்தனர். சிஞ்சவடி கிராமத்தில் காணாதியத்ய மதத்தவர் சிலர் இவரை இகழுகையில் இவர் அவ்விடஞ் சென்று போஜனஞ் செய்யுஞ் சமயத்தில் தன்னுடன் உண்ணப்பெருமாளேயன்றிக் கணபதியையும் வருவித்துடன் புசித்தனர். இவர் ஒருமுறை சுரநோயால் பண்டர யென்னு மூருக்குப் பெருமாளைச் சேவிக்கப் போகமுடியாமல் பெருமாளைத் தமக்கு முன்வந்து சேவை தரும்படி கடிதம் எழுதினர். அவ்வாறே பெருமாள் கருடாரூடபராய்த் தரிசனந்தந்தனர். துகாராம் பெருமாளுக்கு அன்னம் பரிமாறி ஆனந்தத்தால் பஜனை செய்கையில் கேட்போர் பரவசமாயினர். அச்சமயத்தில் மண்டபத்தில் தீப்பற்றிய செய்தியைச் சம்பாறு கோதையெனுங் கிராமத்திருந்து பஜனை செய்து கொண்டிருந்த ஷேக்மஹமத் எனும்பக்தர் ஞான திருஷ்டியாலறிந்து அணைத்தனர். இவர் அக்ஷரஞானமில்லாத ஒரு வேதிய னுக்கு ஆறு சாத்திரமும் வரச்செய்தனர். பகவான், பாபாஜ் எனும் பெயரால் துகாராம் கனவிடை கேசவசை தன்யம் ராகவ சைதன்யம் என்றும் உபதேசித்து அவர் செய்த கவிகளனைத்தையும் ஜைனரைக் கூடி ஆற்றில்விட அவையனைத்தையும் உத்தரிக்கச் செய்தனர். |
துகில் | கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பெரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி, இவை இக்காலத்து வழக்கில் ஒழிந்தன. இக்காலத்து, தோவத்தி, அங்கவஸ்திரம், நுண்டுகில், பாகை, சீலை, வட்டு, துண்டு, இரட்டு, துப்பட்டி, நார்மடி, அங்கி, சல்லா, புடவை, பாவாடை, தாவணி, ரவிக்கை, கச்சு முதலிய வழங்கி வருகின்றன. |
துக்கதம் | யமபுரவழியிலுள்ள பட்டணம். ஆன்மா ஒன்பதாமாசிக பிண்டத்தை இப்பட்டணத்திலிருந்துண்பன். |
துங்கபத்திரி | துங்கை, பத்திரி இவ்விரண்டு நதிகளும் ஒரு பெயர்பெற்றுப் பிறந்த நதி. |
துங்கப்பிரஸ்தம் | இராமகிரிக்குக் கிழக்கிலிருக்கும் மலை, |
துங்கவேனி | ஒரு நதி. |
துங்காரண்யம் | ஒரு க்ஷேத்திரம். |
துசுவாசநன் | துரியோதனன் தம்பி, |
துசேநன் | இராவண சேநாபதி, |
துச்சகன் | 1. இவன், காவிரிநதி தீரத்தில் சைய்யமலை வழியாய்ச் செல்லும் வழிப்போக்கர்களைப் பறித்துத் தின்பவன், சேர நாட்டரசன், திருத்தில்லைக்கு நடராஜர் தரிசனத்திற்குப் போகையில் அவன் சேனைகளால் பிடிபட்டு அவர்களிட்ட சுமையைத் தாங்கிச்சென்று அத்தலத்தைத் தரிசித்த தால் முத்தியடைந்தவன். 2 பிரமனால் தமோகுணவுருவாய்ச் சிருட்டிக்கப்பட்டு உலகங்களை விழுங்க வருகையில் பிரமன், அதைவிலக்கித் தீயரிடம் சேர்ந்து அவர்களது பலத்தை அநுபவிக்கச் செய்தனன். இவன் கலியின் தேவிக்கு ருதுகாலத்தில் சண்டாள தர்சந்த் தால் பிறந்த நிர்மாஷ்டியை மணந்து அவளிடம் தாந்தாகிருஷ்டி, உக்தி, பரிவர்த்தி, அங்கயுக், சகுனி, கண்ட பிராந்தன், கர்ப்பக்னன், சத்யக்னன் என்னும் எட்டுக்கும ரர்களையும் த்யோஜிகை, விறாதினி, சுவயம்ஹராகரி, பிராமணி, ருதுஹாரிகை, ஸ்மிருதிஹாரிணி, பீஜஹாரிணி, வித்வேஷிணி என்னும் எட்டுப் பெண்களைப் பெற்றனன். |
துச்சநி | துச்சாதனன் குமரன்; அபிமன்னனுடன் மலைந்து இறந்தவன், |
துச்சந்தன் | ஒரு அரசன்; இவனை இராவணன் திக்குவிசயத்தில் வென்றான். |
துச்சந்தை | சத்திமனைவி; இவள் கருவுற் றிருக்கையில் கல்மாஷபாதனால் துரத்தப்பட்டு அஞ்சி மாமனாரை வந்தடைந்து (12) வருடம் பொறுத்துப் பராசரைப் பெற்றனள். |
துச்சனை | திருதராட்டிரனுக்குக் காந்தாரியிடம் பிறந்த குமரி. சயிந்தவன் தேவி. அச்வமேதக் குதிரைக்குப் பின் போன அருச்சுநனைக் கண்டு அழுதவள். |
துச்சயன் | 1. (சந்.) அனந்தன் குமரன். இவன் மனைவி கற்பினையுடையாள், இவனொருகால் யமுனைந்தியடைய அவ்விடத்திருந்த உருப்பசியைப் புணர்ந்து வீட்டில் வர மனைவி அறிந்து நீ பாத்தையைப் புணர்ந்ததால் அப்பாபம் நீங்கக் கண்ணுவரிட மணைந்து வேள்வி செய்து வருகவென்றனள். அந்தப்படி அரசன் இமயத்தருகில் செல்கையில் ஒரு கின்னரன் மாலையேந்தி வர அவனுடன் சண்டையிட்டு அவனது மாலையைப் பறித்துச் செல்லுகையில், யமுனை நதிக்கருகில் சென்றனன். அவ்விடஞ் சென்ற அரசன் முன்னைய நினைவால் உருப்பசியை நினைந்து செல்லுகையில் மீண்டும் உருப்பசியைக் கண்டு அம்மாலையை அவளுக்கணிந்து அவளுடனிருந்து இமயமடைந்து கண்ணுவரைக் கண்டு அவர் கட்டளை பெற்றுக் காசியில் ஆநந்தகான மடைந்து பாவ நீங்கிப் பட்டணஞ் சென்று பத்தினியுடனிருந்தனன். (காசிமான்மியம்). 2. இவன் ஒரு மிலேச்சன்; காமத்தால் பல பெண்களைப் புணர்ந்து சிறையிடப்பட்டு உயிர்விட்டுப் பைசாச வுருவமடைந்து (25) பிறவிகள் விலங்குகளாய்ப் பின் ஒரு வனத்தில் அரக்க வுருவமடைந்து வாமதேவ முனிவரை விழுங்க வந்து அவர் உடம்பிலிருந்த விபூதியைப் பூசுண்டு. அவ்வுரு நீங்கித் திவ்ய தேகம் பெற்று முத்தி யடைந்தவன். (பிரமோத்தரகாண்டம்). 3. கச்சய நகரத்தரசன்; தாரை, வீரைகளின் கணவன். (மணிமேகலை). 4. இவன் சையமலையிலிருந்த வேடன். இவன் வேடனாயினும் வேதியர் முதலிய நாற்குலத்தவர்போல் வேடம் பூண்டு வழி பறித்துச் சீவிக்கு நாட்களில் சிதம்பர தரிசனத்தின் பொருட்டுத் தன்னாடு விட்டுவந்த சபாபதிப் பிரிய சேரன் பரிவாரத்தில் திருட எண்ணிச் செல்லுகையில் அவனது காவலாளர் பிடித்துக் காவலுடன் அவன் மீது சுமை வைத்துச் சிதம்பரம் கொண்டு சென்றனர் ஆண்டு இவன் கரங்கண்டிறக்க இவனைச் சிவகணங்கள் சிவலோகத்துக்கொண்டு சென்றனர். |
துச்சாதனன் | துரியோதனன் தம்பி; திரௌபதியின் துகிலை யுரிந்தவன்; துசுவசன் எனவும் இவனுக்குப் பெயர். |
துச்சீலன் | 1, காம்பிலிதேசத்து வேதியன். சிவ தூஷணை செய்ததால் ஊரைவிட்டு அகற்றப்பெற்று வயிற்றுவலி கொண்டு வருந்துகையில் ஒரு வேதியன் விபூதிகுண் டத்து நீறிடுக என அது என் செய்யும் என்று இகழ்ந்ததால் வேதியன் வேங்கை ஆக எனச்சபித்த சாபம் ஏற்றுப் பாம்பு கடித்து இறந்து வேங்கையாய் விபூதிகுண்டத்து நீறு அணிந்த வேடனைப் பிடித்து அவனால் இறந்து அவன் தேகத்து நீற்றினை அணிந்ததால் நல்ல உரு அடைந்தவன். (புள்ளிருக்குவேளூர்ப் புராணம்.) 2. குண்டின புரத்தில் யஞ்ஞசீலனுக்குப் புண்ணியவதியிடம்பிறந்த குமரன். இவன் வேதியனாயினும் தூாசாரம் உள்ளவனாய்த் துன்புற்றுப் பின் தீர்த்த ஸ்நானத்தால் புனிதனானவன். (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்.) |
துச்சுருமேளன் | ஒரு அரசன்; அரம்பையர்போகம் பெற்றவன். |
துச்சேதா | இவன், மகததேசத்து வேதியன்; பல நூல் கற்றுக் கற்றவரை அவமதித்து இறந்து பிரம்மராக்ஷஸாய்க் காசிக்குப் போகும் வழியில் ஒரு இலவமரத்திலிருந்து வழிச்செல்வோரை அழைத்து, கொன்றுண்டு திரிகையில் காசிக்குச் செல்லும் ஒரு வேதியனை நல்ல வார்த்தை சொல்லி அழைத்தனன். வேதியன் காசியைச் செபித்துக்கொண்டு வரக்கேட்டு நல்லறிவு தோன்றி அவனுடன் காசி சென்று கங்கையாடிப் பிரமராக்ஷஸவுரு மாறியவன். (காசிரகசியம்) |
துடி | கடலில் வேற்றுருக் கொண்டிருந்த சூரனது நெஞ்சத்தைப் பிளந்த முருகக் கடவுள், அக்கடலில் துடிகொட்டி ஆடிய கூத்து. |
துடி நூல் | உடலின் துடித்தலையும் அதன் பலத்தையும்பற்றிக் கூறும் நூல். |
துடிதலோகம் | தெய்வலோகத்தொன்று. (மணிமேகலை.) |
துடிநிலை | கட்டும் கழல்வீரர் பழங்குடி முறைமையில் மிக்க கண்ணினையுடைத் தாய் ஒலிக்கும் துடியைக்கொட்டுமவன் குணத்தைச் சொல்லியது. (புறவெண்பா.) |
துடியர் | இவர் மருதநிலமாக்கள் கிணையென்னும் மருதநிலப் பறையொலிப்பவராதலால் இப்பெயர் பெற்றனர். இக்காலத்துப் “பள்ளர்” எனப்படுவோர் இவரென்று தெரிகிறது. |
துடியின் குணாகுணங்கள் | இது மனித தேகத்தில் உண்டாம் உறுப்புகள் துடிப்பதனால் உண்டாகும் நன்மை தீமைகளைத் தெரிவிப்பது. உச்சி துடிக்கில் இடர் நீங்கும், அதன் வலப்பாகம் துடிக்கில் அச்சம்; அதன் இடப்பாகம் துடிக்கில் பெருமை; பின் தலை துடிக்கில் சத்துருக்களுண்டாம்; தலைமுழுதுந் துடிக்கில் சம்பத்துண்டாம்; இடதுநெற்றி துடிக்கில் சம்பத்து; வலது நெற்றி துடிக்கில் பிணிநீங்கும்; வலப்புருவம் துடிக்கில் பெருமை; இடப்புருவம் துடிக்கில் தீயவார்த்தை; இரண்டு புருவங்கள் துடிக்கில் பெருமை; வலநிமை துடிக்கில் வழக்கு நேர்ந்து விலகும்; இடைக்கண்ணின் மேல் இமை துடிக்கில் விசனம் வந்து மாறும்; கண்ணின் முன்குவளை துடிக்கில் புகழும் செல்வமுமுண்டாம்; வலக்கண்ணின் கீழிமை துடிக்கில் துணைவனுக்குத் துன்பம்; வலது கண் முழுதும் துடிக்கில் பிணிவந்து மாறும்; இடக்கண் முழுதுந் துடிக்கில் செல்வமிகும்; கழுத்து முழுதும் துடிக்கில் மரணந் தெரிவிக்கும்; வலது மூக்கு முழுதும் துடிக்கில் சம்பத் துண்டாம்; இடமூக்கு துடிக்கில் செல்வமெய்தும்; மேலிதழ் துடிக்கில் இனியவார்த்தை; கீழிதழ் துடிக்கில் தின்பண்டங்கள் உண்டாம்; பிடரி வலம் துடிக்கில் நன்மை; இடம் துடிக்கில் பெருமை உண்டாம்; முதுகு துடிக்கில் செல்வந்தரும்; வலது புஜம் துடிக்கில் வழக்கு ஜெயிக்கும்; இடது புஜம் துடிக்கில் தூர செய்தி வரும்; இடது மார்பும் புஜமும் துடிக்கில் சாச்செய்தி; வலது கண்டக்கை துடிக்கில் தோஷந் தீரும்; வலது முழங்கை துடிக்கில் தவப்பயனாம்; இட முழங்கை துடிக்கில் தனஞ்சாரும்; அகங்கை வலம் துடிக்கில் ஈனம்; இட அகங்கை துடிக்கில் லாபம்; வலப்புறங்கை துடிக்கில் வழக்கு; இடப்புறங்கை துடிக்கில் துன்பம்; கையில் பெருவிரல் சுட்டுவிரல் துடிக்கில் லாபம்; நடு விரல் துடிக்கில் நல்லசெய்தி; மோதிரவிரல் துடிக்கில் பெருமை; சிறுவிரல் துடிக்கில் மரணம்; வலக்கை அடி துடிக்கில் எடுத்த காரியம் முடியும்; இடக்கையின் பெருவிரல் துடிக்கில் நிறையுண்டாம்; சுட்டுவிரல் துடிக்கில் இராஜநோக்காம்; நடுவிரல் துடிக்கில் பெருமையுண்டாம்; மோதிரவிரல் துடிக்கில் நன்மைசாரும், சிறுவிரலாயின் சாவில்லை; நெஞ்சு துடிக்கில் நோக்காடு; வலது முலை துடிக்கில் சா; இடதுமுலை துடிக்கில் பிரியம்; தொப்புள் துடிக்கில் விசனம்; வயிறு துடிக்கில் நோய்வந்து நீங்கும்; வலப்புற முதுகு துடிக்கில் நோய்வந்து தீரும்; இடது புறம் துடிக்கில் குடியிருந்த வீட்டைவிட்டு நீங்குவான்; முதுகு துடிக்கில் நோய் நீங்காது; வலது செட்டை துடிக்கில் புது வஸ்திரம கிடைக்கும்; இடது துடிக்கில் பிரியவார்த்தை; செட்டைகளிரண்டும் துடிக்கில் துன்பம்; வலவிலா துடிக்கில் விசனம்; இடவிலா துடிக்கில் மனையிழப்பாம்; இடை துடிக்கில் புகழுண்டாம்; கோசம் துடிக்கில் தூரத்தாரால் விசனம்; கீழ்க்கோசந் துடிக்கில் நன்மை; வலது பீஜம் துடிக்கில் யானை குதிரை யேறுவான், இடது பீஜம் துடிக்கில் நோயாகும்; இரண்டும் துடிக்கில் வழக்கு; வலத்தொடை துடிக்கில் வழக்குண்டாகி வெல்லும்; இடைத்தொடை துடிக்கில் இனிய்வார்த்தை; இரு தொடைகளும் துடிக்கில் செம்பொனுண்டு; வலமுழந்தாள் துடிக்கில் கோபம்; இடமுழங்தாள் துடிக்கில் பந்து சேரும்; இரண்டு முழம்தாள்களும் துடிக்கில் சம்பத்துண்டாம்; வலது கணைக்கால் துடிக்கில் சம்பத்து; இடது கணை கோல் துடிக்கில் சாவார்த்தை; வலது கண்டைக்கால் துடிக்கில் அடிமையாவான்; இடது கெண்டைக்கால் துடிக்கில் நோய் துன்பமுண்டாம்; இரண்டு கணைக்காலும் துடிக்கில் பிரயாணம்; வலப்புறவடி துடிக்கில் நோய்; இடப்புறவடி துடிக்கில் வழக்காகி வெல்லும்; வலது உள்ளங்கால் துடிக்கில் பொருள் கைக் கூடும்; இடது உள்ளங்கால் துடிக்கில் பிணி வந்து நீங்கும்; கால் விரல்கள் துடிக்கில் செல் வமும் நன்மையு முண்டாம். |
துடுப்பு | இது கோல்போல் முனையகன்ற மரத்துண்டு. இதில் சிற்றுரு சோறு முதலிய கிளறுவதற்கும், பேருரு படகு, கட்டு மரம் ஒட்டுதற்கும் உதவி. |
துடைப்பம் | ஊகந்தாள், தென்னைநாம்பு, ஈந்தோலை முதலியவற்றால் குப்பை தூசு முதலிய விலக்கச் சேர்த்த மேற்படி பொருள்களின் கற்றை. |
துட்டியந்தன் | (சந்.) நீலன் குமரன். தாய் இரத்தினமாலை, இவன் வேட்டைக்குச் சென்று கண்ணுவராச்சிரமத்தில் சகுந்தலையைக் கண்டு மணந்து பரதனைப் பெற்றான், சமதி குமரன் என்று கூறுப. பூரு வம்சத்து இளீகனுக்கு தந்தரையிடம் பிறந்த குமரன் எனவும் கூறுவர். |
துட்டை | தக்ஷன் பெண்; தருமன் தேவி. |
துட்பண்ணியன் | இவன் பாடலிபுத்திர அரச குமரரைக் கொன்றவன்; இவன் செய்கையைப் பசுமான், அரசனிடங் கூறிக் காட்டில் துரத்த அங்கு ஒரு யானை இவனை விழுங்க அதனாற் பேயாகி, அகத்தியராற் சாப நீக்கமடைந்தனன். |
துணை வயிற்பிரிவு | நண்பனாகிய வேந்தனுக்குப் பகை வேந்தரிடையூறுற்றவழி அவ்விடையூறு தீர்த்தற்குத் தலைமகன் துணையாகப் பிரிதல், இது துணை வயிற்பிரிந்தமை தோழி தலைமகட் குணர்த்தல், தலைவி பின்பனிப்பருவங் கண்டு புலம்பல், தோழி யாற்றுவித்தல் முதலிய, |
துணையிளங்கிள்ளி | காஞ்சியில் புத்தாலயம் கட்டுவித்த ஒரு சோழன். தொடுகழற் கிள்ளியின் தம்பி. (மணிமேகலை). |
துண்டிகேரம் | ஒரு தேசம். |
துண்டிவினாயகர் | 1 துராசாரன் என்னும் அரசனைக் கொல்லும்படி பார்வதி பிராட்டியார் ஐந்து திருமுகமும் பத்துத் திருக்கரங்களுடனிருக்க அம்முகங்களிலிருந்து ஐந்து திருமுகமும் பத்துத் திருக்கரங்களுடனும் விநாயகமூர்த்தி திரு அவதரித்துத் துராசாரனைச் சங்கரித்தனர். ஆதலால் இவர் வக்கிரதுண்டர் எனவும், திண்டிவிநாயகர் எனவும் பெயர் பெற்றனர். 2. காசியிலெழுந்தருளியிருக்கும் விநாயகர். (காசிரகசியம்). |
துண்டீரன் | ஒரு சிவகணத் தலைவன், |
துண்டுமுகன் | ஒரு வேதியன். இவன் பாரி விசாலை, இவன் ஒரு குமரனை அமாவாசையிற் பெற்று வளர்த்து மணஞ் செய்ய அவன் மனைவியை விரும்பாது தீயொழுக்கம் பூண்டு கொலைமேற் கொண்டு அரசனால் துரப்புண்டு காசியடைந்து கங்கையில் மூழ்கிச் சிவமூர்த்தியால் காதில் பஞ் சாக்ஷரம் உபதேசிக்கப் பெற்று முத்தியடைந்தவனுக்குத் தந்தை. (இலிங்க புராணம்). |
துதி | பிரதிகர்த்தாவின் தேவி; இவளுக்கு ஸ்துதியெனவும் பெயர். |
துதிக்கையால் தண்ணிர் குடிக்கு மரம் | தென் அமெரிக்காவின் ஆற்றங்கரையில் உள்ள காடுகளில் ஒருவகை மரம் விழுதுடன் கூடியதாக இருக்கிறது. அது தனக்கு நீர் வேண்டும்போது விழுதை நீட்டி நீர் குடிக்கிறதாம் குடித்தபின் விழுதைச் சுருக்கிக்கொள்ளுகின்றதாம். யாராவது தண்ணீர் ஊற்றினால் துதிக்கையாலுண்டு நீரூற்றினவருக்கு நன்றி செலுத்துதல்போல் மரத்தை அசைக்சிறதாம். |
துதிமந்தன் | பிரிய விரதன் குமரன், இரவுஞ்சத் தீவையாண்டவன். |
துதிமான் | ஒன்பதாம் வந்தரத்து ருஷி. |
துத்தநாகம் | சிறிது நீலங்கலந்த வெண்ணிறமுள்ள உலோகம். இது, அடித்தால் நீளத்தக்கது. ஈயத்தைப்போல் பொடியாகாது, இது, எளிதில் களிம்பேசாத உலோகமாதலால் இதனால் போஜன பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. இதைத் தகடுகளாக அடித்துக் கட்டடங்களுக்கு உபயோகிக்கிறார்கள். |
துத்தமன் | ஒரு காந்தருவன் இவன் தன் மனைவியருடன் நீராடுகையில் அவ்விடம் காலவருஷிவா அப்பெண்களஞ்சிச் சேலையுடுத்தனர். இவன் மாத்திரம் உடை உடுக்காதிருந்ததால் அரக்கனாகச் சபிக்கப்பட்டுக் காலவரைக் கொல்லவர முனிவர் விஷ்ணு மூர்த்தியின் சக்கரத்தால் இவ்வரக்கனைக் கொலை செய்வித்தனர். |
துந்தரோகம் | அஜீரணத்தால் வயிறு பருத்து நாபியில் நோய் தருவது, |
துந்திமி | ஒரு அரக்கன்; இவன் சிவன் விஷ்ணு முதலிய தேவர்களிடம் யுத்தத்திற்குப் போக அவர்கள் வாலியிடம் அனுப்ப வாலியால் கொலை யுண்டவன். இவனுக்குத் தலையிலிரண்டுகொம்புண்டு, |
துந்திவன் | இவன் ஓர் காந்தருவன் உபய காவிரிக்கு அருகில் எருக்கு வனத்தில் இருந்து புராண தூஷணஞ்சொல்லி அரக்கனாய்க் காலவ முனியைப் பிடித்துக்கொண்டு விஷ்ணு சக்கரத்தால் மாண்டவன். |
துந்து | 1. மதுகைடவர்க்குக் குமரன்; விஷ்ணுவைக் கொல்லப் பிரமனை நோக்கித் தவஞசெய்து பலநாள் கடற்கரையிற்றூங்கி ஆன்மாக்களை வருத்தினவன். இவன், குவலயாயுசுவன் குமரரில் மூவர் தவிர மற்றவர்களைக் கொலைசெய்து குவலாயசுவனா விறந்தவன். 2. (சூர்.) அஜன் என்னும் அரசன் குமரன், இவன் மான்றோல் போர்த்துத் தவத்திலிருந்த இருடியை மானென்று அறியாது கொன்று, சாந்தமகருஷியால் அவரை எழுப்பக் கேட்டுக்கொண்டவன் 3. ஒரு அசுரன், மதுவின் மைந்தன. பூமியையழிக்கப் பாதாளத்தில் தவஞ்செய்கையில் வருஷத்திற் கொருமுறை சுவா சம்விடுவான் அப்பொழுது பூமி, மலை, விருக்ஷங்கள் ஏழுநாள் நடுங்கும் இவன் குவலயாசுவனால் கொல்லப்பட்டான். |
துந்துபன் | ஒரு சிவகணத்தலைவன். |
துந்துபி | 1. அதுகுமரன; இவன் குமரன் தரித்திரம். 2. மயன் குமரன்; மந்தோதரியின் சகோதரன் வாலியால் கொல்லப்பட்டிறந்தவன். இவன் எலும்பின் குவியலை இலக்குமணர் காலால் தள்ளித் தம் வலிமையைச் சுக்கிரீவனுக்குத் தெரிவித்தனர். 3. யதுவம்சத்து நரன் குமரன். 4. மாயாவியின் குமரன். 5. இந்திராதியரை வருத்திச் சிவமூர்த்தியால் கொலையுண்ட அசுரன். 6. உதத்தனைக் காண்க. 7. ஒரு அசுரன், இவன் ஒரு முனிக்குமாரன் போலுருக்கொண்டு விஷங்கலந்த நாவற்கனி கொண்டுவந்து விநாயகரை உண்பிக்க விநாயகர் இவனை மோதகம் அருத்திக் கொன்றனர். 8. தரன் குமரன். 19. இவன் மகிஷ வடிவமான அசுரன் சிவபிரானிடம் வரம் பெற்றவன். (பாரதம் ~ அநுசாசநி.) |
துந்துமாரன் | 1. கபிலாசவனுக்கு ஒரு 1 பெயர். 2. குவலயாச்வனைக் காண்க; இவன் விலங்கின் தோல்போர்த்திருந்த தார்க்கிக ருஷியின் புத்திரனை விலங்கென்றெண்ணிக் கொன்றவன். துந்துவெனு மரக்கனைக் கொன்றவன். (பிரா. புரா) |
துந்துமாரி | முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். |
துந்துமி | 1, அசுரன்; பிரகலாதனுக்கு மாமன்; இவன் காசியில் தவஞ்செய்த முனிவரை வருத்தியதால் சிவமூர்த்தியில் னைக் கொன்றனர். 2, ஒரு காந்திருவன், பிரமன் பூசைக்கு வைத்திருந்த மலரை மோந்து கழுதையா கச் சாபமடைந்து பின் நீங்கினவன். (திருவோத்தூர் புராணம்). |
துன்னர் | ஒருவகைச் சாதியார். துணி முதலியவை தைப்போர், தோல் துன்னர் : செருப்பு முதலிய தைப்போர். |
துன்பவணி | அஃதாவது, விரும்பபட்ட பொருளைக் குறித்து முயற்சி செய்ய, அதற்குப் பகைப் பொருள் கிடைத்தலாம். இதனை வடநூல் விஷாதனாலங்காரம் என்பர். |
துன்மதன் | 1. திருதராட்டிரன் குமரன். 2. கபாலபரணன் குமரன், அரக்கன். 3. மதுரையிலிருந்த வேள்விமானென்னும் பிராமணன் குமரன். தீய வழி நடந்துஒழுக்கம் கெட்டதனால் தந்தை வெறுக்க அரசனால் ஊரைவிட் டுத் துரத்தப்பட்டுத் தில்லையில் சிவதரிசனம் செய்வாருடன் சென்று தாசியாடலைக் காணப்போய்ச் சிவதரிசனம் செய்து காட்டில் பாம்பு கடித்திறந்து தரிசனபலத்தால் யமபடரினின்று நீங்கி முத்தியடைந்தவன். 4. ஒரு வேடன்; வழிபறித்துத் தீய னாய்த் திரிந்து கடைசியாய் ஒரு வேதியனைக் கொலை புரியச் செல்லுகையில் அவன் சொன்ன சொற்படிதானடைந்த பொருள்களைப் புண்ணியத்திற் செலவு செய்து நற்கதி யடைந்தவன். |
துன்மந்திரன் | ஒரு அசுரன்; இவனைச் சிவமூர்த்தி மந்திரத்தாற் கொன்று மந் திரயஞ்ஞர் எனப் பெயர் பெற்றனர். |
துன்மனன் | ஒரு வேதியன் துராசாரனாய் அரசன் அரண்மனையில் களவு செய்கையில் காவலாளர் துரத்த ஓடி மணிகன்னிகையில் வீழ்ந்து முத்தி பெற்றவன். (திருப்பூவண புராணம்). |
துன்மருடன் | திருதராட்டிரன் குமரன். |
துன்மருஷணன் | திருதராட்டிரன் குமரன். |
துன்மார்க்கன் | 1. துருபதனுடன் பாரதப் போரில் யுத்தஞ் செய்தவன். 2. பாரதப் போர்வீரருள் ஒருவன். |
துன்முகன் | 1. திருதராட்டிரன் குமரன். 14 ம் நாள் வீமனாலிறந்தவன். 2. நலன் என்னும் சூர்யகுலத்தரசன் குமரன். வாமதேவர்மீது ஏவிய அம்பால் மாய்ந்து மீண்டும் உயிர் பெற்றவன் 3. இராவணன் மந்திரியரில் ஒருவன்; பதினாறு கோடி சைந்யத்தலைவன், அநுமனால் இறந்தவன். 4. துன்மருடன் குமரன். 5. சூரபன்மன் மந்திரி. 6. ஒரு வானரத் தலைவன். 7. இந்திரன் சபை நோக்கி வந்த கங்கையின் வஸ்திரம் வாயுவால் விலக அங்கிருந்தவர் கண் மூடிக்கொள்ள இவன் மாத்திரம் அவளைப் பார்த்ததால் பூமியில் யயாதி புத்திரனாகப் பிறந்து கங்கையை மணக்கச் சாபம் பெற்றவன். |
துன்முகி | ஓர் அரக்கி, அயமுகிக்குத் துணைவி. வீரமாகாளரால் கூந்தலறுப்புண்டவள். |
துபட்டகேது | சிசுபாலன் குமரன். |
துப்பிரதன் | மூதேவியின் கணவன். |
துமத்சேநன் | சத்யவந் தன் தந்தை, சாவித்திரிக்கு மாமன், சாள்வதேசத்தரசன், |
துமயன் | யமனுக்குப் புஷ்டியிட முதித்த குமரன். |
துமி | இரேவதன் குமரன். |
துமிந்தன் | இராமமூர்த்தியால் விபூஷணனிடமனுப்பப்பட்ட வாநரவீரன். |
துமிரன் | இவன் இராம கார்யமாய்ச் சீதையைத் தேடச்சென்ற வாநரவீரர் ஒரு பொய்கையைக்கண்டு நீருண்டு உறங்குகையில் அங்கதனை மார்பிலறைந்து அங்கதனால் அறையுண்டிறந்தவன். இவனுக்குப் புட்கலன் என்றும் ஒரு பெயர். |
தும்பி | இது வண்டின் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு வண்டிற்குள்ளது போல் முகத்தில் பரிசவுறுப்புக்களுண்டு, ஆறு கால்களும் கண்ணாடி போன்ற இறக்கைகளும் கொண்டு பறக்கும், |
தும்பிசோகீரனார் | இவர் பெயர் தும்பிசேர்கீரன். கீரனென்பது இயற்பெயர். சேர் அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால் இவர் பெயரைச் சேர்க்கீரனார் என்று பதிப்பிக்கலாயிற்று. தமது பாடலிலே தும்பியை நோக்கி “கொடியை வாழி தும்பி” (நற். 277) எனவும் “அம்ம வாழியே மவிச்சிறைத் தும்பி” (குறு. 362) எனவும் விளித்து அதனைப் பலவாக முகப்பாராட்டிக்கூறலின் இவர் தும்பிசேர் கீரனார் எனப்பட்டார். இவர் எல்லாத் திணையையும் பாடியுள்ளார். தலைவனிடம் சென்று தன்னிலை உரைத்தா யல்லையே யென்று தும்பியைத் தலைவி முனிந்து கூறியதாக இவர் பாடியது இனிய சுவையுடையதாகும். (நற். 277) தலைவனை முயங்காது கண்ணாலே நோக்கி மட்டு மகிழ்தற்கு மக்கள் நடைவண்டி இழுத்து மகிழ்தலை உவமைக் கூறியுள்ளார். (குறு. 61) வண்டுவிடு தூது இவர் பாடியது ஆராயத்தக்கது. (குறு. 362) இவர் பாடியனவாக நற்றிணையில் (277) ம் பாடலொன் றும் குறுந்தொகையில் நாலுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன, |
தும்பிமோசிகீரன் | இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் குறுந்தொகையில் (320) செய்யுட்கள் பாடியவர். இவர் மோசிகீரனில் வேறு. இவர் ஊர் மோசியாக இருக்கலாம். |
தும்புரு | விபுலன் குமரர்; இந்திரனைப்பாடிய பாவத்தால் நாரதரால் பூமியிற் திருவேங்கடத்தில் ஒரு பொய்கையில் தள்ளப்பட்டு அக்கரையில் தவமியற்றிச் சித்தி பெற்றவர். காந்தருவர், இவர் செய்த நூல் தும்புரீயம் என்பர். |
தும்பை | குருதியாற் சிவந்தகளத்து மாறுபாட்டை நினைந்து பசந்தும்பையாகிய போர்ப் பூவை முடியிடத்துச் சூடியது. (பு ~ வெ.) |
தும்பையறவம் | அழகணிந்த வீரக்கழற் காலினையுடையான். தனது சேனையைத் தலையளி பண்ணியது. (பு ~ வெ.) |
தும்மலின் குணாகுணங்கள் | பலமுறை தும்மினால் காரியசித்தி, தும்மின பிறகு இருமின் லாபம், ஒரு தும்மல் தீமை, தும்மின பிறகு மூக்குச்சிந்தினால் மரணம், ஒரே தும்மல் தும்மின போதுடன் சிந்தின போதும், எடுத்த காரியத்தைச் செய்யாமல் காலம் போக்கிப், பிறகு செய்யின் தோஷமில்லை. தாம்பூலம் தரித்துக் கொளப் போம்போதும், போஜனம் செயத்தொடங்குகையிலும், படுக்கைக்குப் போகும்போ தும் தும்முதல் நலமாம். ஒருகாரியத்தை ஆலோசிக்கும் போதாயினும், காரியத்திற்குப் பிரயாணஞ்செய்யும் போதாயினும், நான்கு கால்களையுடைய ஜெந்துக்களில் ஏதேனும் தும்மினால் மரணமாயினும், மரணத்தையொத்த தீமையாயினும் விளையும். தும்மிக்கொண்டே படுக்கைவிட்டெழுதல் நல்லது, தும்மிக்கொண்டு உட்கார்ந்திருத்தல் காரியாலசியம். போராடிக்கொண்டே தும்முதல் காரிய ஆனி, தாம்பூலம் தரித்துக்கொண்டு தும்முதல் நல்லது. தும்முங் காலையில் செம்பு, பித்தளை முதலியவைகளைத் தொட்டுக் கொண்டிருக்கில் காரிய நலமாம், இரும்பு, வெள்ளிகளைப் பிடித்துக் கொண்டிருக்கில் காரியங்கெடும், இளம் பிள்ளைகள், குழந்தைகள், தாசிகள், பறையர் தும்மின் காரியசித்தி. கர்ப்பஸ்திரீ, மலடி, தூரமானவள், விதவை, கண்ணில்லாள், ஊமை, மொண்டி, வண்ணாத்தி, வாணிச்சி, சக்கிலிச்சி, சுமை தூக்கிக்கொண்டிருப்பவள் இவர்களில் எவர் தும்மினாலும் கஷ்டங்கள் உண்டாம். நெடியினாலும் மூக்குத்தூள் போடுவதினாலும் உண் டாகும் தும்மல் பலனில்லை. |
தும்மிசகரோகம் | வாயினால் கோழை கோழையாகக் கக்கல், வார்த்தை கேட்க அருவருத்தல், நெஞ்சுலரல், அதிநித்திரை, சோம்பல் இவைகளை யுண்டாக்கும். இது தேகத்தை நாசமாக்குதலால் இப்பெயர் பெற்றது. (ஜீவ.) |
தும்மீசகவிக்ஷயரோகம் | இது வழக்கமாகப் புசிக்கிற வஸ்துக்களை விட்டு, நாள் தோறும் சாராயத்தையும் அதிவிருப்பொடு மிகுதியுங் குடித்தும் புசித்தவர்களுக்குத் தும்மிசகமென்றும், விக்ஷயமென்றும் இரண்டு ரோகங்கள் பிறப்பனவாம். (ஜீவ) |
துயாவற்குரைத்தல் | மயங்கிய மாவைச்சாலம் மயில் போன்ற இயலின் வருந்தலை, அறியச் சொல்லி அவருன்பத்தைத்தோழி தலைவற்குச்சொல்லியது. (பு. வெ. பெரும்.) |
துயிந்தன் | ஒரு வாநர சேநாபதி, |
துயிலெடைநிலை | கொல்லும் வலியினையு டைய வேந்தர்க்கு அருள எழுந்திருப்பா மாகவெனக் கட்டுங்கழல் வேந்தனைத் துயிளிக்கியது, (பு. வெ. பாடாண்.) |
துயுமன் | விப்ராசித தேசத்துக்குக் காவலாளி, சத்தியோதா, அவிர் முகிவாசல்களுக்கு அதிகாரி, புரஞ்சகன் சிநேகன், |
துயுமான் | திவோதாசன் குமரன்; இவனே பிரதான், சத்ருசித், வச்சன், ரித்துவசன், குவலயாசுவன் என்று பெயருற்றான். இவன் குமரன் அளர்க்கன். |
துய்மனன் | சாக்ஷூஸமனுவிற்கு நட்வலையிடத்துதித்த குமரன், |
துரககதி | (5) மல்லகதி, மயூரகதி, வியாக்ரகதி, வாநாகதி, இடபகதி. |
துராசதன் | பிரமசுரன் குமரன், இவன் தவம்புரிந்து சர்வசித்திபெற்று, பிரமன், விஷ்ணு முதலியோர் பதிகளை வென்று ஆங்காங்கு ஒரு அசுரனர நியமித்துக் கொடுங்கோன்மை செய்து வருகையில் மந்திரிகளிவனை நோக்கி உனக்குப் பயந்து தேவர் காசியையடைந்தனர் எனக்கேட்டுப் படைகொண்டு செல்லத் தேவர் இறைவியை வேண்ட இறைவி முகத்தில் வக்கிரதுண்ட விநாயகரைத் தோற்று வித்துத் தொலைத்தனள், |
துராசாரன் | 1. வக்கிரதுண்டரால் கொலை செய்யப்பட்ட அசுரன். 2. துராசாரத்தால் பாபமடைந்து சேது ஸ்நானத்தால் சுத்தமடைந்த வேதியன், |
துராலிங்கர் | அகத்தியர் மாணாக்கர். |
துரிஞ்சல் | வௌவாலினத்தைச் சேர்ந்தது. இது உருவத்தில் வௌவாலைப்போன்று இருக்கும். இரவில் இரை தேடப் புறப்படும். பகலில் வெளிவரின் காக்கைகள் குத்தும். இது இருளடைந்த இடங்களிலும் கோயில்களிலும் தலைகீழாகத் தொங்கும். |
துரியோதனன் | இவன் திருதராட்டிரனுக்குக் காந்தாரியிடம் பிறந்த குமரரில் மூத்தவன். இவன் கலியம்சம். இவன் பிறந்தபோது நரிபோல் ஊளையிட்டான். பூர்வம் இராக்கதனாயிருந்தவன். இவன் பிறந்து துரோணரிடம் வில்வித்தை முதலிய கற்றுவருகையில் பாண்டவர்கள் அதி தீவிர புத்திமான்களாயிருத்தல்பற்றி பொறாமையால் அவர்களிடம் உட்பகை கொண்டு அதிகமாய் வீமனைப் பகைத்து, அன்னத்தில் விஷமிட்டும், வீமன் நித்திரை செய்கையில் அவனைக்கட்டி ஆற்றிலிட்டு நாகங்களையேவிக் கடிப்பித்தும், வசிநாட்டிக் குதிப்பித்தும், அரக்குமாளிகை கட்டுவித்து நெருப்பிட்டும் இன்னும் பல துன்பங்கள் செய்வித்துக் கர்ணன், துச்சாதனன், சகுனி முதலியோர் துற்புத்திகேட் டுப் பீஷ்ம, துரோண, விதுரர் முதலியோ ரது நற்புத்தி கேளாமல் தந்தையைத் தன் வசப்படுத்திச் சகுனியால் சூதாடுவித்துத் துச்சாதனனை ஏவித் திரௌபதியின் துகில் உரியச்செய்து திரௌபதி யால் தொடை முரியச் சாபம் ஏற்றுப் பாண்டவரைப் பன்னிரண்டு வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்துவர ஏவுவித்துப் பாண்டு புத்திரர் காட்டிற் சென்றிருக்கையில் மாரண ஹோமஞ் செய்வித்துப் பூதத்தையேவிப் பாண்டவர்களுக் கெதிரில் காட்டில் பாசறையில் செல்வத்துட னிருக்கையில் சித்திரசேநனால் கட்டுண்டு பாண்டு புத்திரரால் விடுபட்டு அரசாண்டிருக்கையில் பாண்டு புத்திரர் அஞ்ஞாத வாசத்தில் விராடநகரத்தி லிருந்ததைக் குறிப்பாலுணர்ந்து அவ்விடமிருந்த ஆனிரைகளை மடக்கி அருச்சுநன் வெளிப்பட்டது கண்டு தூதுவிட்டு அவர்களது மனமறிந்து தூது வந்த கண்ணனை மாயச்சிங்கா தனத்திருத்தி அவமானமடைந்து விதுரனிடம் பகைகொண்டு பாண்டவருடன் யுத்தஞ் செய்யத் தொடங்கிய பதினேழுநாள் யுத்தஞ் செய்கையில் பீஷ்மன், துரோணன், கர்ணன், சல்லியன் இவர்களைச் சேநாபதிகளாக்கி அபிமன்யுவைக் கபடமாய்க் கொல்வித்துப் பாசறை யுத்தத்தில் இரவில் அசுவத்தாமனை யேவி இளம்பஞ்ச பாண்டவர்களையும் மிகுதிச் சேனைகளையுங் கொலைசெய்வித்துப் பதினெட்டாநாள் சல ஸ்தம்பனம் செய்து இறந்தவர்களை எழுப்ப முயலுகையில் வீமசேனனிவனைப் போருக்கழைப்ப மானத்திற்கஞ்சி நீரை விட்டு வெளியில் வந்து போரிட்டுத் தொடை முரிந்திறந்து முதலில் அற்பபுண்ணியத்தால் சுவர்க்க மநுபவித்துப் பின் நரகமடைந்தவன். இவன் தேவி பானு மதி, இவன் குமரி இலக்குமணை. இவன் ஒரு இருடியால் தொடைமுரியச் சாப மடைந்தவன். 2. அந்தகாசுரனுக்கு மந்திரி 3. மது குலத்தரசரில் ஒருவன். சுதரிசனன் தந்தை, |
துரு | 1. கவஷன் புத்திரன. 2. இரும்பில் ஈரமான காற்றுப்படுத்தலால் உண்டாவது துருப்பிடித்த இரும்பு, துருப்பிடியாத இரும்பினும் எடையதிக மாகிறது. |
துருதன் | (ச) இரேயன் குமரன். |
துருதி | தருமன் எனும் மனுவின் தேவி. |
துருத்தி | காற்று நீர் முதலியவற்றைத் தன்னிற்கொண்டு வெளிவிடும் தோலாலும் வேறு பொருளாலும் செய்த கருவி. இது பெருந்துருத்தி, சிறு துருத்தி என இரு வகை. |
துருபதன் | 1. பாஞ்சாலதேசத்துப் பிரஷ தன் குமரன்; இவனும் துரோணாச்சாரியரும் ஒருசாலை மாணாக்கராயிருக்கையில் தனக்கு நாடுவருங்கால் பாதி இராச்சியம் கொடுப்பதாகக் கூறினன். இவ்வாறு அவன் அரசேற்று ஆண்டிருக்கையில் துரோணரிவனிடம் வறுமையால்வர அரனிவரை அறியாததுபோலிருந்து அவமதித் தனன். இதனால் துரோணர் கோபித்து உன்னை என் மாணாக்கனால் அவமதிக்கிறேன் என்று கூறி வீஷ்மரிடம் வந்து குரு மக்கள், பாண்டு மக்களுக்கு வில்வித்தை கற்பித்து அருச்சுநனால் துருபதனைக் கொண்டுவரச்செய்து அவமதித்தனர். இதனால் உட்பகைகொண்ட துருபதன் துரோணரைக் கொல்லக் குமரனும் தன்னை வென்ற அருச்சுநனுக்கு ஒரு பெண்ணும் பெறத் தவமியற்றி யாகத்தில் திட்டத்துய்ம்மனையும் திரௌபதியையும் பெற்றுப் பகை தீர்ந்தனன். இவன் அக்னி கோத்ரமுநிவர் மாணாக்கன். குமரர் திட்டத்துய்ம்மன், சிகண்டி, சுமித்திரன், பிரியதரிசனன், சித்திரகேது, சுகேது, துவசசேதன் (பாரதம்.) 2. அசாதசத்துருவன் குமரன்; இவன் குமரன் அற்பகன். |
துருபதேயன் | பாரதவீரரில் ஒருவன், |
துருமகாந்தன் | புட்பமாகாண்டத்திற்குக் காவலாக வைக்கப்பட்டவன். |
துருமசேநன் | 1. திருஷ்டத்துய்மனால் கொல்லப்பட்ட அரசன், 2. தருமராஜனால் கொல்லப்பட்ட ஒரு அரசன். |
துருமன் | 1. சிம்புருடராசன். இவனருச்சுகனால் ஜயிக்கப்பட்டவன். (பார ~ சபா.) 2. கிம்புருஷாசாரியன். |
துருவசந்தி | (சூ). பாஷ்யன் குமரன். |
துருவசிந்து | சுதரிசனனைக் காண்க. |
துருவசு | (ச). யயாதிக்குத் தேவயானியிடம் உதித்தகுமரன். இவன் வம்சத்தவர் தந்தையின் சாபத்தால் கிராதருக்கு அரசராயினர். இவன் குமரன் வன்னி. |
துருவநக்ஷத்திரம் | இது, வடக்கேயுள்ள நக்ஷத்திரங்களில் ஒன்று. தன்னைச் சுற்றி யுள்ள நகூத்திரங்களுக்கு நடுவில் பெரிதாகக் காணப்படுவது. இது பூமியின் வட பாகத்தை நிர்ணயிக்க அறிகுறியாக உள்ளது. திசை தெரியாது கப்பலைச் செலுத் தும் மாலுமிகளுக்கு வடக்குத் திசையை அறிவிப்பது., |
துருவன் | 1. உத்தானபாதனுக்குச் சுநீதியிடம் உதித்தகுமரன்; இவன் ஒருமுறை சுருசியுடன் கூடியிருந்த தன் பிதாவையணையத் தந்தை இவனைக்கண்டு களிக்காதிருந்ததையறிந்து இருக்கையில் மாற்றாந் தாயாகிய சுருசிவந்து சக்களத்தி புத்திரனாகிய இவனை நோக்கி நீயென்வயிற்றில் பிறவாமல் சுநீதியிடம் உதித்ததால் உனக்குத் தந்தையிடம் இருக்கும் உரிமையில்லை யென்றனள். அதைக்கேட்ட அரசனும் சும்மாவிருந்தனன். இதனால் துருவன் தாயை அணைந்து நடந்தவைகூறி இருடிகளையணைந்து நாரதரால் உபதேசம் பெற்றுத் தவமியற்றுகையில் பேயொன்று பய முறுத்த அஞ்சாது பெருந்தவமியற்றித் அருவபதம் என ஒருபதம் பெற்றனன். இவன துபதம் சப்தருஷி மண்டலத்திற்கு மேல் பதின்மூன்று லக்ஷம் யோசனை தூரத்திலிருப்பது. இவன் தவநிலை நீங்கித் தாய் தந்தையரைக் கண்டு (26,000) வருடம் அரசு ஆண்டு, உத்தமனைக்கொன்ற யக்ஷருடன் போரிட்டு மனுவாலுபதேசிக்க நீங்கினவன், இவன் பாரி பிரமி, இளைய குமாரர் கல்பன், வற்சரன். (பாகவதம்) (காசிகாண்டம்). 2. அஷ்டவசுக்களில் ஒருவன், தருமனுக்கு, வசுவிட முதித்தவன் பாரி, தரணி. 3. பலராமன் தம்பி. 4. மதிசாரன் குமரன். 5. பிரசாபதிக்குப் புத்தியிடம் பிறந்தவன்; குமரன் காலன், 6. வசுதேவருக்கு போகணியிடம் பிறந்த குமாரன். |
துருவமண்டலப் பறவைகள் | இவ்வினத்தில் பலவகை உண்டு. அவற்றுள் ஆக் என்பது ஒருவகை, இவ்வினத்தில் பேலரிஸ், மெர்குலஸ், வராட்டர்குலா, ஆல்கா எனும் வகைகளுண்டு. முதலிற் கூறிய பேலரிஸ் என்பவை துருவமண்டலத்தை யடுத்த காமஸ்காட்கா எனும் இடத்தில் இருக்கிறது. இது 1 அடி நீளமும், குறுகிய காலும், கழுத்தும், நீலநிற மூக்கும், சிவந்த மஞ்சளித்த கால்களும், தோலி ணைந்த கால்களும் உடையது, இதன் தலை, முதுகு, பிடரி கறுப்பு, கழுத்து, மார்பு, மற்றப் பக்கங்கள் வெண்மை, இதன் கண்களிலிருந்து ஒரு நீண்ட வெள்ளை ரேகை முதுகின் பக்கமாக வளைந்திருக்கிறது. இதன் வயிற்றிலுள்ள வெண்மை கோடைகாலத்தில் கருமை கலந்த செந்நிறமாகவும் மழைக்காலத்தில் வெண்ணிறமாகவும் மாறுகிறது. இதன் மார்பின் தோல் ரப்பரைப்போல் சுருங்கவும் நீளவுங் கூடியது. இது கூட்டமாய்ச் சேர்ந்து வசிப்பது, தண்ணீரில் வேகமாய் நீந்துவது. மெர்தலஸ் : இது மேற்கூறிய இனத் தில் சிறிய இனம். வராட்டர்தலா : இது ஆக் இனத்தில் கிளிபோல் மூக்குக்கொண்டது. (puffin) கடற்கிளி அல்லது கிளிமூக்குப் பறவை இது மான் தீவை அடுத்த பிரதேசங்களில் கோடைகாலத்திலும், மழைக்காலத்தில் பிரான்ஸ், ஸ்பெயினையடுத்த பிரதேசங்களுக்கு வந்துவிடுகிறது. இதன் உயரம் 1 அடி. இதன் மூக்குக் கிளிமூக்குப்போல் பெரிதாய் இருக்கிறது. வாயினிருபுறம்களின் கோடியில் தசை நக்ஷத்திரம் போல சிவந்த நிறமாய் வளர்ந்திருக்கிறது, இது பூமியில் வளை தோண்டி முட்டையிடுகிறது. இதன் முட்டை அதிக பெரிது, ஆல்கா : இது துருவமண்டலப் பறனவயில் ஆக் இனத்தைச் சேர்ந்தது. இது ஆக் இனத்தில் பெரிய உருவுள்ளது. இது ஐரோப்பாவின் வடபாகத்திலுள்ள நியூபவுண்ட்லாண்ட் முதலிய தீவுகளின் கடற் பக்கங்களில் வசித்தது. இதன் மாமிசத் துக்காசைப்பட்ட அந்நாட்டார் இதன் வம்சத்தின் கரு அறுத்தனர். இப்போது இது அரிது, இப்பறவையின் மூக்குத் தடித்துக் கிளியின் மூக்குப்போல் முனை வளைந்து நீண்டு கறுத்து இருக்கிறது. இதன் உடலின் கடைசிபாகத்தில் இரண்டு குறுகிய தோலடிகள் இருக்கின்றன. இவை செந்நிறமுள்ளவை. இப் பறவையின் இறக்கைகள் சீல் முதலியவற்றின் இறக்கை போலச் சிறகில்லாமலிருக்கின்றன. இது அதிகம் பறவாததால் கரை ஓரங்களில் வசிக்கிறது. இதன் தலையும், மூக்கும் கருநிறமானவை. மார்பும், வயிறும் வெண்மை. இது, கடலில் அதிவேகமாய் நீந்தும். ரேசர்பில் : மர், பிளாக்பில் ஆக் எனும் பெயருள்ள ஆக் இனம். இது பிரிடிஷ் தீவுகள், ஸ்காத்லாண்ட், வட அமெரிக்காவின் கீழ்க்கரையிலுள்ள மலைப்பிரதேசங்களில் வசிக்கின்றது. இதனுடல் 15 அங்குல நீளம், கால்கள் குறுகித் தடித்தவை. பாதம் தோலடி பெற்றது. இது தண்ணீரில் வேகமாய் நீந்தும், இப்பறவைக்கு இறக்கைகள் உண்டு, பறக்கும். இதற்குத் தலை, பிடரி, முதுகு கருமையும்; மற்றவை வெண்மை நிறம், இதன் வெண்மை கோடைகாலத்தில் மாறுகிறது. இது ஒரே முட்டையிடுகிறது, இதன் முட்டை வெண் மையாயும் பெரிதாயுமிருக்கு மென்பர். குல்லிமாட் : இது துருவமண்டல பறவையினத்தைச் சேர்ந்தது. இது 1 அடி உயரம். இதன் தோலடிப் பாதங்கள் உடலின் கடைசியில் குறுகியிருக்கின்றன. இதன் மூக்குக் கருமை, கால்கள் சிவந்த வை. இதன் தலையும், கழுத்தும், முதுகின் பக்கமும் கறுப்பு. வயிறு பழுத்த வெண்மை. இது ஐரோப்பாகண்டத்து நியூபவுண்ட்லாண்ட், ஐஸ்லாண்ட் முதலிய இடங்களில் கூட்டம்கட்டமா யிருக்கிறது. இது பெரிய முட்டை கோடைகாலத்தில் குழி தோண்டி அதில் இடுகிறது. இதன் முட் டைகளை வேட்டைக்காரர் வர்த்தகத்திற்காகத் திருடி விற்கின்றனர். பென்குயின் : இது ஆபிரிகாவின் தெற்கிலுள்ள மகாசமுத்திரத் தீவுகளில் வசிப்பது. இது 3, 4 அடிகள் உயரம், 3/4′ அடி கனம். இதற்குத் தலையும் முதுகும் கறுப்பாயும், வயிற்றுப்பக்கம் சுத்த வெண்மையாயும் இருக்கிறது. இதற்குத் தலையில் 4 கொண்டையுண்டு, கால்கள் அதிக குறுகி அடிவயிற்றின் கீழ் ஒதுங்கியுமிருக்கின்றன. இது நேராய் நிற்கவல்லது. இதன் மூக்குச் சிறுத்து நீண்டு கூர்மையாயும் கறுப்பாயுமிருக்கிறது. இப்பறவையினத்தில் 7, 8 அடிகள் உயரமுள்ளவையு முண்டு. பென்குயின் அரசன் என்பர். இது பாக்லண்டு தீவுகளிலிருக்கிறது. இவை கூட் டம் கூட்டமாய் வசிக்கும். இந்தப் பற வைகள் பாறைகளில் முட்டையிட்டு ஒரு மாதம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். இது குஞ்சுகளுக்குத் தன் வாயை அண்ணாந்து காட்ட அக்குஞ்சுகள் தம் தலையைத் தாயின் வாய்க்குள் தலையை நுழைத்து இரைகொள்ளும், |
துருவாசர் | 1. அத்திரிருஷிக்கு அநசூயையிடம் உதித்த குமரர். 2. கோபாலர், இவராச்சிரமஞ் சென்று தங்களிலொருவனைக் கர்ப்பிணியாக வேட மிட்டு இவள் வயிற்றில் பிறப்பது ஆணோ பெண்ணோவெனப் பரிதவிக்க முனிவர் உங்கள் வம்சத்தை நாசமாக்கும் ஓர் இருப்புலக்கை பெறுக எனச் சாபமிட்டவர். 3. ஒரு வித்யாதரமாது, இலக்குமியைப் பூசித்துப் பெற்ற மாலையைத் தாம் பெற்று இந்திரனுக்குக் கொடுக்க இந்திரன் அதனை அசட்டையாக வாங்கியதால் இந்திரனது செல்வ முழுதும் கடலையடையச் சாபமிட்டவர். 4. இவரது சகோதரர் தத்தாத்திரேயர், சோமர். 5. தேவதத்தனை நாரையாகச் சபித்த வர். ஹேஹயன் தத்தாத்திரேயரைக் கொல்ல வர இவர் ஏழு நாளில் அநசூயையிடம் பிறந்து அரசனை நீறாக்கினர். 6. சுவேதகியஞ்ஞத்தை முடித்தவர். 7. மௌற்கல்லியரிடம் அன்னம் வேண் டிப் புசித்தவர். 8. துரியோதனன் ஏவலால் பாண்டவரிடத்துப் பதினைந்து நாழிகைக்கு மேல் வந்து அன்னம் வேண்டிக் கண்ணனால் பசி நீங்கினவர். அம்பரீஷனிடத்திருந்த விஷ்ணு சக்கரத்தால் துறப்புண்டு இறுதியிலவனை வேண்டி நீங்கப் பெற்றவர், கிருஷ்ணனை வேடனால் உள்ளங்காலிலடிப் பட்டு இறக்கச் சபித்தவர். 9. வசிட்டாச்சிரமஞ் சென்ற தசரதருக்கு அவர் பிள்ளைகளின் உற்பாதம் கூறியவர், 10. இராமமூர்த்தி, காலமுனியுடன் ஏகாந்தத்தில் பேசுகையில் இவர் வரக் கோபத்திற்கஞ்சி வாயிலில் இருந்த இலக்குமணர்விட இவர் சென்று இராமமூர்த்தியை நோக்கி, நான் ஆயிரம் யாண்டு தவம் புரிந்து மிகப்பசித்தேன் அன்னம் வேண்டுமெனக் கேட்டுண்டவர். 11. அசமுகி இவரைப் புணர்ந்து வாதாவி, வில்வனைப்பெற அக்குமரர் இவரை நோக்கி, இதுவரையில் செய்த தவத்தைக் கேட்க மறுத்தது கண்டு கொல்ல வர முனிவர் கோபித்து நீங்கள் அகத்தியரால் இறக்கவெனச் சபித்து மறைந்தவர். 12. தாம் சிவபூசை செய்து முடிவில் சிவமூர்த்தி முடியிலிருந்து பெற்ற மாலை யைப் பவநிவரும் இந்திரனுக்குக் கொடுக்க அவன் யானைமீதிட அந்த வெள்ளை யானை அப்புஷ்பத்தை எறியக் கண்டு கோபித்து இந்திரன் முடியிடறவும் வெள்ளையானை காட்டானையாகவும் சாபமிட்டவர். குந்திக்கு மந்திரமுபதேசித்தவர். வபுஸ் என்னும் காந்தருவப் பெண்ணைப் பக்ஷியாகச் சபித்தவர். திரிபுரமெரித்த சிவமூர்த்தியின் சினத்தீக் குழந்தை யுருக் கொண்டு நிற்க இதைத் தேவர்கள் யார் எனச் சிவமூர்த்தி இவன் துர்வாசனாம். இவனை அநசூயைப் பொருட்டருளினோம் என்றனர். அதனால் அவளிடம் வளர்ந்து இருடி ஆயினர். ஒருக்கால் கிருஷ்ணமூர்த்தியிடத்திற் சென்று இடக்கரான செய்கைகளைச் செய்து அவரைப் பாயசம் வினவிக் கொணர்ந்து வாங்கிச் சாப்பிட்டு மிகுதியைத் தம்மேல் பூசச்செய்து இரதத்தின் மேலேறிக்கொண்டு காடு மேடுகளில் கிரு ஷ்ணனையும் உருக்மணியையுமிழுக்கச் செய்து மனந்தளராததினால் சகல வரமுங்கொடுத்துக் கண்ணனை நோக்கி நீ என் மீது பாயசம் பூசுகையில் என்னுள்ளங் காலில் படாததினால் உனக்கு உள்ளங்காலில் உயிர்நிலையென்று கூறி மறைந்தவர். |
துருவிநீதன் | ஒரு வேதியன். தந்தை இத்மவாகன், தாய் உருசி, தாயைப் புணர்ந்து வியாசர் சொல்லால் சேதுஸ்நானஞ்செய்து சுத்தனானவன், |
துருவிமோகன் | திருதராட்டிரன் குமரன். |
துருவிருத்தன் | பாப திருத்தியங்களைச் செய்த ஒரு வேதியன். கருணாபரிபூரணர் என்னும் சிவகணத்தவரால் தடுத்து ஆளப் பெற்றவன். |
துருவேசனை | சுமதியின் தேவி. |
துரோடகாசாரியர் | சங்கராசாரியர் காலத்தவர், அக்னியம்சம். |
துரோணர் | 1. (சுக்ரன் அம்சம்) தந்தை பாரத்துவாசமுனி, பாரி சதாநந்தர் புத்திரியாகிய கிருபி, இவர் துருபதனிடம் அசுவத்தாமனுக்குப் பால் வேண்டிப் பசு கேட்கச்சென்று அவன் மறுத்தமையால் அவனை நோக்கி என் மாணாக்கனாலுன்னைக் கட் டிக்கொண்டுவரச் செய்கிறேன் என்று சபதம் கூறிப் பீஷ்மரையடைந்து பாண்டு மக்களுக்கு வில்வித்தை கற்பித்து அவர்களில் வில்வல்லானாகிய அருச்சுகனை ஏவித் துருபதனைக் கட்டிவரச் செய்து அவனை விட்டவர். இவரை ஆற்றில் முதலை பற்ற அருச்சுகனிவரை விடுவித்தனன், பிரமனிடமிருந்து இந்திரனிடம் வந்த கவசத்தைத் தாம் பெற்றுத் துரியோதனனுக்குக் கொடுத்தவர். இவர் பாரத யுத்தத்தில் (15) ஆம் நாளில் தருமராசன், சொன்ன அசுவத்தாமா அதாகுஞ்சர மென்னுஞ் சத்தங் கேட்டுத் திட்டத்துய்மனால் உயிர் நீங்கியவர். 2. பிரமனை நோக்கித் தவம்புரிந்து மறுபிறப்பில் நந்தகோபனாய்ப் பிறந்து கிருஷ்ணனைப் பெற்றவன், இவன் தேவி வசமதி, இவளே யசோதை. 3. வசுக்களில் ஒருவன், தருமத்திற்கு வசுவிடமுதித்த குமரன், பாரி அபிமதி, 4. மந்தபால முனிவர் குமரர், தரும பக்ஷிகளைக் காண்க, |
துர்கிரன் | (சந்.) யயாதிக்குச் சன்மிஷ்டையிட முதித்த குமரன், |
துர்க்கன் | சதாக்ஷியைக் காண்க, |
துர்க்கா | ஒரு மாயாதேவி, |
துர்க்கியன் | யயாதியின் புதரன். |
துர்க்கை | 1. காளி. 2, விந்தமலையிற் பிறக்கும் நதி. 3. இவள் சலசத்திகளுக்கும் அதிதே வதை. இவளுக்கு நூறு புஜங்களுண்டு, இவள் தன் கரங்களில் எல்லா ஆயுதங்களையுங் கொண்டிருப்பவள். |
துர்க்கைபீடம் | சத்திபீடங்களில் ஒன்று. |
துர்க்கையின் கோட்டம் | துர்க்கை கோயில், இஃது இரண்டிடத்தில் உள்ளது ஒன்று உச்சையினின் பக்கத்துள்ளது, மற்றொன்று நருமதையாற்றுக் கப்பாலுள்ள பாலை நிலத்திலிருப்பது. (பெ. கதை). |
துர்ச்ச யன் | 1. திருதராட்டிரன் குமரன். 2. குரோதகீர்த்தியின் குமரன். 3. தநுப்புத்திரன். 4. ஒரு வாஸ்து. |
துர்ஜயன் | சுப்ரதீகன் குமரன். இவன் தேவராஜனை வெல்ல நினைத்ததை நாரதர் தேவராஜனுக்குக் கூற அவன் இவனுக்குச் சுகேசி, மித்ரகேசி என்பவர்களை மணஞ் செய்வித்தனன், இவன் குமரன் பிரபாவசு. (வராஹ புராணம்). |
துர்த்தன் | அஜன் தந்தை. |
துர்த்தமன் | 1. காந்தாரனிரண்டாம் பேரன். பத்திரசேனன் புத்ரன். 2. பிரியவிரதன் வம்சத்தரசருள் ஒருவன். 3. இவன் கதம்பநகரத்து மதனன் புதல் வன்; இவன் கொடியருடன் கூடிக் குடிகளை வருத்திவருகையில் ஒருமுறை வேட்டை வசத்தனாய்க் காசியெய்த இவன் செய்த தீமைகள் தோன்றி ஞானமுண்டாய் முத்தியடைந்தனன். (காசிகாண்டம்.) 4. சுவாயம்பு மதுகுலத்தரசன், இரைவதனைக் காண்க. |
துர்த்தருஷன் | 1. திருதராட்டிரன் குமரன். 2. இராவண சேநாபதி; அநுமனால் மாண்டவன். |
துர்மதன் | 1. புரக்ஞயனுக்கு நண்பன். 2. பத்திரசேனன் குமரன். 3. வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்த குமரன், வசுதேவருக்குப் பௌரவியிடம் பிறந்த குமரன் என்பர். |
துர்மரணம் | ஜீவர்கள், தாம் செய்யும் தோஷங்களால், ஆயுள் குறைந்து இறக்கின்றனர். மரித்த வீட்டில் போஜனஞ் செய்கின்றவனும், பிறன் மனைவியரைப் புணர இச்சிப்பவனும், தனக்குத் தகாத இழிதொழிலைப் புரிகின்றவனும், இகபரத்துக்கு உறுதியாய் நல்வினைபுரியாதவனும், பெரியோரைப் பூஜியாதவனும், தூய்மை இல்லாதவனும், தெய்வபக்தி இல்லாதவ னும், பாபங்களையே செய்கின்றவனும், பிறன்கேடு சூழ்கின்றவனும், பொய்பேசுகின்றவனும், ஜீவகருணை இல்லாதவனும், சாஸ்திரப்படி நடவாதவனும், தனக்குரிய கருமத்தைத் தவிர்த்துப் பிறனுக்குரிய கருமத்தைப் புரிகின்றவனும், புண்ணிய தீர்த்தம் ஆடாதவனும், தேவாராதனம் செய்யாதவனும், துர்மரணம் அடைவன். (கருடபுராணம்). |
துர்மருஷணன் | சிரஞ்சயனுக்கு இராஷ்டிரபாலியிட முதித்த குமரன். |
துர்முகன் | 1. மால்யவந்தன் குமரன். 2. தூர்யோதனன் தம்பி. |
துர்யசித் | யயாதிக்கு நான்காம். பேரன், இவன் துஷ்யந்தனது சகோதரனை வளர்த்துக்கொண்டான் இவனுக்கு மருத்து என்றும் பெயர். |
துர்யோதனன் | துரியோதனனைக் காண்க, |
துர்வசு | யயாதிக்குத் தெய்வயானையிடத்துப் பிறந்த புத்திரன். |
துர்வாகன் | திருதராட்டிரன் குமரன். |
துறை | மக்களுமாவுமன்றிப் பிற தோன்றினவாயினும் அவற்றை முன் சொல்லியவற்றோடு பொருந்தும் வண் ணம் ஆராய்ந்து இலக்கணம் வழுவாத படி தன்னையன்றி உரைப்போருங் கேட்போரு முண்டாதலன்றிக் கவிஞனால் கூறப்படுவது. (அகம்). |
துறைக்கவி | மனம், களி, தாது, வயிர பம், சம்பிரதம், தவசு, குறம், கணிக முதலியன. (வீரசோ). |
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார் | இவர் விஷயமாக யாதும் விளங்கவில்லை. தமது பாடலில் வணிகனைக் கிளவித்தலைவனாக அமைத்துக் கூறியதனால் இவர் வணிக மரபினரோ வென்றையங்கொள்ளப்படுகின்றது. இவர் பாலையைப் பாடியுள்ளார். இவர்பாடியது (நற். 826 ம்பாட்டு). |
துறையூர் ஓடைக்கிழார் | ஆய்வள்ளலைப் பாடிப் பரிசு பெற்றவர். (புற ~ நா.) |
துறையூர்ச் சிவப்பிரகாச சுவாமிகள் | திரு வாவடுதுறை ஆதீனத்து மெய்கண்ட சந் தானத்தவர். ஓர்காலத்துச் சிதம்பர நடராஜரது வரும்படிகளைப் பெருமாளுக் காக்கின வடுகனது அக்ரமம்பற்றி இரா யவேலூரில் அரசு செய்துகொண்டிருந்த விரூபாக்ஷிராயரிடஞ் சென்று அவரது முதன் மந்திரியாகிய இலிங்கண்ணபத் தர்மூலமாகத் தமது காரியத்தை வெற்றி கொள்ள எண்ணித் தாம் சைவராயினும். தமது சிவபூசை நாயகரை ஒரு சிறு பெட்டகத்திருத்திச் சிரசில் தரித் துக்கொண்டு அவன் முன்னிலையிற் சென்று தமது எண்ணத்தை நிறை வேற்றி அவ்வரசன் தன்நாட்டில் மழையிலாதிருப்பதை அறிவித்து வேண்டச் சுவாமிகள் மேகராகக் குறிஞ்சிப்பண் ணில் தேவாரத்தை ஓதி மழை பெய்வித்தனர். அரசனிதனால் களிப்படைந்து சுவாமிகளுக்குத் திருவண்ணாமலையில் ஒரு மடம் கட்டுவித்து அதில் எழுந்தருளியிருக்கச் செய்தனன். இவர் மாணாக்கர் வேலையர், கருணையர். |
துற்கடன் | 1. இவன் மாசி மாதத்தில் பாசமறுத்தான் துறையிலாடி முத்தி பெற்ற வணிகன். 2. இவன் மகாபாதகஞ் செய்து கொண்டுவந்தவன். பல பிறவிகளுக்கு முன் சிவயோகி ஒருவருக்கு அன்ன மிட்ட புண்ணியத்தால் நல்லறிவுதோன் றித் தன் பாபங்களை ஒரு வேதியர்க்கறிவித்துத் தீர்வு உணர்ந்து ஸ்ரீசிதம்பரதரிசனம் கண்டு முத்தியடைந்தவன். (சூத சம்மிதை). |
துற்கன் | ஒரு அசுரன்; இவன் தேவர்களை வருத்திச் சிறையிடத் தேவர் சிவமூர்த்தியிடம் முறையிட்டனர். சிவ மூர்த்தி பிராட்டியை ஏவப் பிராட்டி காளராத்திரி யென்னுந் தோழியை ஏவித் தேவர் சிறை விடுவிக்கக் கூறுவித்தனள். காளராத்திரி சென்று கூற, அசுரன் இவளது அழகைக்கண்டு மயங் கிப் பற்றச் சில அசுரரை ஏவினன். காளராத்திரி அந்த அசுரரை உங்காரத்தாற் சாம்பராக்கித் தேவியிடம் கூறினள். இதற்குள் அசுரன் தேவியின் சென்று யுத்தம் புரிந்து தோற்று யானையுருக் கொண்டு யுத்தத்திற்கு வந்து துதிக்கை யறுபட்டு மீண்டு எருமை யுருக்கொண்டு வந்து சூலத்தாரற் குத்துண்டு ஆயிரம் கைக்கொண்டு அத்திரம் எறியப் பிராட்டி ஒரு அத்தியம் எறிந்து உயிர் மாற்றினள், இவன் உரு என்னும் அசுரன் குமரன். (காசிகாண் டம்). |
துற்கி | துற்கனைக் கொன்ற சத்தி, |
துற்குணன் | 1. சூரபன்மன் மந்திரி 2. இவன் சகோதரன் துராசாரன். இவ்விருவரும் மதிமான் என்னும் அரசகுமரர் தீமை செய்தலால் தந்தையால் நீக்கப்பட்டுக் காட்டில் ஒரு வேதியருக்கு உதவி புரிந்து நலமடைந்தவர். |
துற்சடை | திருதராட்டிரன் பெண்; இவள் கணவன் சயிந்தவன் அல்லது சயத்ரதன்; இவளுக்குத் துற்சலை யெனவும் பெயர். |
துற்சலை | துற்சடையைக் காண்க. |
துற்பரன் | படச்சரருக்கு அரசன். |
துற்புத்தி | காமதையைக் களவிற் புணர்ந்தவன். |
துற்முகி | அசமுகிக்குத் தோழி. |
துற்றெரிசநன் | ஒரு வேடன்; இவன் வழிபறித்துத் திரிகையில் சிதம்பரத் தலத்திற்குச் சிவ தரிசனத்திற்கு வரும் வேதியனிடமிருந்த குடையையும் பொருளையும் பறித்து மீண்டும் பிராமணனுக்குக் குடையைக் கொடுத்தனன். அக்குடை பெற்ற வேதியன் வேறொரு வன் வெயிலில் வருந்தக் கண்டு அதைப் பிடித்த புண்ணியத்தினால் முத்தி பெற்றவன். |
துலசி | 1. சங்கசூடன் தேவி, சங்கசூடன் சிவபிரானால் யுத்தத்திலிறந்தபின் விஷ்ணு இவன் வேடந்தரித்து இவளைப் புணர்ந்தனர். இப்புணர்ச்சி வேறுபாடுணர்ந்த துலசி போஷாணமாகுக எனச்சபிக்கையில் திருமால் அவளை நோக்கி நீ பூர்வத்தில் என்னைப் பதியாகப் பெறத்தவஞ் செய்தாயா தலால் இவ்வாறு நிகழ்ந்ததெனக்கூறி அவளை நோக்கி நீ இவ்வுடல் விட்டுக் கோலோகமடைக உன்னுடல் கண்டகி நதியுருவடைக, உன் ரோமங்கள் துளசிகளாகுக. அத்துளசி மூன்றுலகங்களிலும் சிறக்க. தேவர்க்குரித்தாக. அத்துளசி என் சந்நிதியில் எல்லா மலர்களினுஞ் சிறக்க, அத்துளசி மூலத்தில் எல்லாப் புண்ய தீர்த்தங்களும் அதிஷ்டித்திருக்க. துளசி தளதீர்த்தம் மேல்விழ அதிபுண்யம் உண் டாகுக. தேவர்கள் பலரும் அதனடியில் வசிக்க. துளசி பத்ரதானத்தால் பதினாயிரம் கோதானம் செய்த பலமடைக. துளசி நீர், மரண காலத்தில் எவன் மேற்படுமோ அவன் வைகுண்டமடைக, எவன் துளசி கட்டையால் செய்த மணியணிவானோ அவன் அச்வமேதபலம் அடைக என்று வரம் அருளினர். இதன் விரி வைப் பிரம்மகைவர்த்த புராணம் பிரகிருதி கண்டத்திற் காண்க. திருமாலும் அவள் சாபப்படி கண்டகி நதியில் சிலாரூபமாகிய சாளக்கிராமமாய் இருந்தனர். 2. தர்மத்துவசன் மாதவியென்னும் தன் தேவியுடன் நூறு திவ்யவருஷம் கூடியிருக்கையில் அவள் வயிற்றில் கார்த்திகை மாத சுக்ர வாரத்தில் ஒருபெண் பிறந்தது. இவளுக்குத் துலசீயென்று பெயரிட்டனன். இவள் பிறந்து குழந்தைப் பருவத்தில் தானே பதரிவனஞ்சென்று தவ மேற்கொண்டு பிரமனை நோக்கித் தவமியற்றிப் பிரமன் தரிசனந்தந்து என்ன வரம் வேண்டுகின்றா யென்றனன், யான் பூர்வத்தில் கோலோகத்திலிருந்த துளசி யெனும் கோபிகை, இராதைக்குத் தோழி நான் கிருஷ்ணனுடன் கீரிடிக்கக்கண்ட ராதை, என்னைப் பூமியிற் பிறக்கச் சாபமிட்டனள், அதனால் பூமியிற் பிறந்தேனெனப் பிரமன், நீ சுதாமன் எனும் கோவலன் பூமியில் சங்கசூடனாகப் பிறந்திருக்கிறான். அவனை மணந்து அருந்தாம் நாராயணனுக்கு விருக்ஷரூபமாய்ப் பிரியையாய்ப் பிருந்தாவனத்தில் பிருந்தையெனும் பெயருடன் விளங்குவாய் என்றனர். 3. சரஸ்வதி, இலக்ஷ்மி, கங்கை மூவரும் வைகுண்ட நாதனுக்குத் தேவியர். இவர்கள் மூவரும் வைகுண்டத்தில் இருக்கையில் கங்கை, விஷ்ணுவைக் காமத்தால் நோக்க, இதனைக்கண்டு சரஸ்வதி கங்கையைப் பிடித்துச் சண்டை இடப்போகையில், இலக்ஷ்மி இடையில் நின்று விலக்கியதால் நீ செடி ஆகவெனச் சரஸ்வதியால் சபிக்கப்பட்டனள். பின் கங்கையை நீ அந்தர்வாகினியாகிப் பாதாளஞ் செல்க எனவும் பாபிகளின் பாபததை நதி உருவாகப் பூமியிற் சென்று சுமக்க எனவும், சபித்தனள். இந்தக் கலகத்தை அறிந்த திருமால், லஷ்மியை நோக்கி நீ தருமத்து வசனுக்குக் குமரியாய்ச் சங்கசூடனை மணந்து துளசியாய்ப் பின் பத்மாவதி நதி உருவாய், என்னை அடைக எனவும், கங்கையை நோக்கிப் பகீரதனால் பூமியை அடைந்து சந்தனுவை மணந்து சிவனை அடைக எனவும் கூற அவ்வாறு அடைந்தனர். |
துலாதரன் | 1. விஷ்ணுபக்தனாகிய வைசின்; காசிலி இருடிக்குப் பிரமகீதை உபதேசித்தவன். 2. சாசலியைக் காண்க. |
துலாபுருஷதானம் | தானத்தைக் காண்க. |
துலாப்பிரமாணம் | இது, வாதி பிரதிவாதிகள் நியாயசபையில் பிரமாணஞ் செய்வதில் ஒன்று. ஒரு பெரிய தராசை நிறுத்தி ஒரு தட்டில் தம் நிறைக்குத்தக்க பொருளை யிட்டு மற்றொன்றில் தாம் ஏறி நின்று ஒரு அடையாளமிட்டுத் தராசை நோக்கி ஓ திராசே நீ சத்தியத்திற்கிருப்பிடமா யிருக்கிறாய் முன் தேவர்களால் நிருமிக்கப்பட்டுள்ளாய்; ஆகையால் சத்தியத்தைக் கூறு. என்னைச் சம்சயத்திலிருந்து விடுவி தாயே நான் பாவி ஆயின் என்னைக் கீழ்கொண்டு போ, சுத்தனாயின் மேல் கொண்டு செல் என்று பிரார்த்திப்பது (யாஞ்ஞவல்கம்). |
துலுவம்சம் | சந்திரகுப்தன் வழிவந்த சூத்ர குலம். இவரே துளுவர் எனப்பட்டுத் தமிழ் நாட்டிற் குடியேறினர். |
துல்யவகான் | பரத்துவாச முனிவர் கும ரன்; இவன் இந்திரனை யெண்ணித் தவமியற்றி ஓதாதுணர்ந்தவன்; தந்தையிடத்துக் கீதவித்தை கற்றவன். இவன் பராவசுதேவியைக் காமுற்றுக் கைப்பற்றப்போகையில் அவள் தம்பி மாமனாரிடத்து அடாததைக் கூற மாமனாராகிய இரப்பியர் பூதங்களையேவிக் கொலைபுரிய மாண்டவன். இவனுக்கு வக்ரன் என்றும் பெயருண்டு, இரப்பியர் புத்திரனால் மீண்டுமுயிர் பெற்றவன், |
துல்லியன் | பல நூற் பயிற்சியையுடைய ஓரரசன் பெருவழியிடையே தருமத்திற்காக நீர்நிலைகள் பல உண்டாக்கியவன். (பெருங்கதை). |
துளசாபுறபீடம் | சத்திபீடங்களில் ஒன்று. |
துளசி | 1, கார்ப்பு மணமுமுள்ள மூலிகை நல்ல துளசி, கருந்துளசி, செந்துளசி, கர்ப்பூரத் துளசி, காட்டுத் துளசி, சிவத் துளசி, சிறு துளசி, நாய்த் துளசி, நிலத் துளசி, பெருந் துளசி எனப் பலவகைப் படும். 2, தர்மத்வசன் எனும் மதுவம்சத்தரசன், தன் மனைவி மாதவி, நூறு வருடம் கருக்கொண்டு ஒரு குமரியைப் பெற்றாள். அக்குழந்தை அழகில் ஒப்பில்லாதிருந்த தால் (துள ~ ஒப்பு, சி ~இலாதது) ‘துளசி எனப் பெயரிட்டனர். இவள் பதரிவனஞ் சென்று நாராயணன் புருடனாக வர எண்ணித் தவஞ் செய்தனள். பிரமனிவட்குத் தரிசனந்தந்து என்ன வரம் வேண்டுமென நான் நாராயணனைக் கணவனாக விரும்புகிறேனெனப் பிரமனிவளை நோக்கி அம்மா கிருஷ்ணன் தேகத்தில் பிறந்த சுதர்மன் எனும் கோபாலன் முன்னொருகால் உன்னைக்கண்டு மோகித்து அவ்வாசையை முடிக்காதவனாய் வருந்துகையில் ராதை அவனைப் பூமியில் பிறக்கச் சபித்தனள், அவன் பூமியில் சங்கசூடனாய்ப் பிறந்திருக் கிறான். நீ அவனை மணந்து பின் விருக்ஷரூபமாய்ப் பிருந்தாவனத்தில் பிருந்தாவணி எனும் பெயருடன் கிருஷ்ணனுட னிருப்பாய் என்று மறைந்தனன். பின் இவள் தன்னை நாடிவந்த சங்கசூடனை மணந்தாள், பின் சங்கசூடன் சங்காருடன் யுத்தஞ் செய்து மாண்டபின் விஷ்ணு சங்கசூடனைப்போ லுருக்கொண்டு துளசியைப் புணரத் துளசி கரண வேறுபாட்டால் நீ என் கற்பைக் கெடுத்ததால் கல்லாக வென்று சபித்தனள். பின் விஷ்ணு தமது பூர்வ விருத்தார்தங் கூறி அவளைச் சமாதா னப்படுத்தி நீ கண்டகிந்தியுருவாய் உன் னுடம்பு துளசி விருக்ஷமாம். அது எல்லாராலும் கொண்டாடப்படும். நான் அதில் ஓர் தலையுரு ஆவேன், இந்துளசி வைகுண்டமடைய அவளைச் சரஸ்வதி கோபித்தபடி யாலிவள் துளசிவனம் வந்தனள். விஷ்ணு இவளைச் சந்தோஷப்படுத்தி மீண்டும் வைகுண்ட மழைத்துச் சென்றனர். இவளை இவளுக்குரிய (8) நாமங்களுடன் கார்த் திகை பௌர்ணமியில் பூசிப்போர் எல்லா சித்திகளையு மடைவர். (தேவி ~ பா.) |
துளசிதாசர் | அத்தினபுரத்திற் கனோஜா என்னும் பெயரின் உத்தமகுலத்து, ஆத்ம ராமருக்கு வான்மீகி முனிவர் பெருமாள் கட்டளைப்படி புத்திரராகவென அவ்வாறே துளசிதாசரெனப் பிறந்து வளர்ந்து மமதா என்பவளை மணந்து அந்நாட்டரசனிடத்தில் தொழிலமைந்திருக்கு நாளையில் ஒரு நாள் அரசன் சேனையுடன் வனஞ்சென் றிருக்கையில். மமதையின்றாய் வீட்டிலி ருந்து தூதுவன் ஒருவன் உன்றாய் உன்னைப்பார்க்க விரும்பினள் என்றனன், இதைக்கேட்ட மமதை தன்மாமியிடம் விடை பெற்றுக்கொண்டு தாயகஞ்சென்று தாயுடன் சந்தோஷ வார்த்தையாடிக் கொண்டிருக்கையில் வனம்போன துளசிதாசர் மீண்டு வீட்டிற்குவந்து தாயைத் தன் மனைவியெங்கென அவள் தாய்வீடு சென்றானெனக் கேட்டு அவ்விரவில் புறப்பட்டு மாமிவீடு சென்று கதவையடைத்திருந்ததறிந்து ஒருவருமறியாமல் மேல் முகட்டிலேறும் பாம்பைத் தனக்கு மனைவிவிட்ட கயிறெனவெண்ணி அதனைப் பிடித்து மேன் முகடேறி இழியும் தருணத்தில் அனைவரும் ஒலியினால் விழித்துக்கொண்டு பயந்து நோக்க மமதையும் வெளிவந்து இந்த இரவினில் எவ்வாறு வந்தீர், இந்த மாளிகை மீதேற எவ்வாறு கூடியதென நீ விட்ட தாம்பினால் ஏறினன் எனப் பார்ப்போமென வெளிவந்து நோக்க அது பாம்பாயிருந்தது கண்டு காமத்தால் பாம்பெனவுமறிந்திலிர் போலும் எனக் காமத்தை அற்பமெனக், கணவற் இகழ்ந்து அறிவிக்கத் துளசி தாசர்க்கு ஞானோதயமாகி நீ எனக்கு அறிவு தந்ததால் மனைவியாகாய், குருவென விட்டகன்று வனமடைந்து பகீரதியில் மூழ்கி நித்யகருமமியைத்துத் தவமியற்றி வருவார். கமண்டலத்தில் நீர்கொணர்ந்து கைகாலலம்பி மிகுந்த நீரை அங்கிருந்த மரத்தடியில் அதிகமாக ஊற்றி வருவர். இவ்வாறு பன்னிரண்டு வருடஞ் செய்துவரு கையில் ஒரு நாள் அம்மரத்திலிருந்த பேய் இவர் முன்வந்து நான் ஆறு, கிணறு, ஏரி முதலிய ஜலமுண்டும் என் தாகம் தணியாது இந்த மரத்திலிருந்த எனக்குப் பன்னிரண்டு ஆண்டு நீர் தந்து தாகம் போக்கினீர் உமக்கு வேண்டும் வரங்கேளுமெனத் துளசிதாசர் இதென்ன கற்பகத்தருநினைக் கக் கள்ளிவந்தது போல நான் இறைவனை எண்ணித் தவமியற்றப் பேய்வந்ததென வந்த இதனை என்ன கேட்பதெனத் துணிந்து எனக்கு இராமதரிசனந்தர வரந்தாவெனக் கேட்க இது என்னாலாகாது ஆயினும் அவ்வாறு செய்விக்கும் வாயு புத்திரரை உமக்கு அறிவிக்கிறேன். அவரால் நீ கொண்ட எண்ணத்தினை முடித்துக் கொள்க என அவரைக்காணுதல் எவ்வகையென நீ நாடோறும் கேட்கும் இராமக தைக்கு எல்லார்க்கு முன்னர்வந்து கிழவுருவத்துடன் கிழிந்த ஆடையுடையராய்க் கையில் கோல்பிடித்துக் கதை கேட்டானந்தங்கொண்டு செல்வோர்க்குப் பின்னெழுந்து போவாரே அவர் எனக் கூறக்கேட் டுக் கதைகேட்கச் சென்று அவர் திருவடி களைவணங்க மாருதி நீவணங்கத் தகுமோ என இராமனடி உன்னுவோராதலால் வணங்கத் தகுமென்று தம் வேண்டுகோன் கூற அநுமன் ஆயினவ்வாறு செய்வேனென இராமரைப் பிரார்த்தித்தலும் இராமர் அநுமனுடன் கோதண்டமேந்தித் தரிசனந்தந்து அவ்வாறாகவெனத் துளசிதாசர் வீட்டில் குரங்குக் கூட்டங்களுடன் துருக் கனைப்போல் சென்று அவரறியாதிருத்த லுணர்ந்து மறைந்தனர். மாருதி துளசிதாசரிடஞ் சென்று இராமதரிசனமாயிற் றோவெனக் கேட்கக் குரங்குக் கூட்டங்களுடன் வந்த துருக்கனையல்லாமல் இராமனை இலக்குமண சீதாஞ்சனேய சகிதமாய்த் தரிசித்திலேன் என உளம் வருந்துகின்றவரைத் தேற்றித் தாம் இராமரைத் துதிக்க இராமர் தரிசனந் தந்து அவ்வாறு துளசிதாசருக்குத் தரிசனந் தர உவந்து நால்வருமாய்த் துளசிதாசருக்குத் தரிசனந் தந்து அநுமான் சொற்படி அடியவர் சிரத்தில் கரம்வைத்தருளிப் போயினர். பின் அநுமான் இராமநாமமே கூறுதலாலடைந்தபயனெனக் கூறி அந்நிலையிலிருக்கச் செய்தவாறு துளசிதாசர் காசியில் மடம் ஒன்று கட் டிப்பாகவதர்க்கு அமுதருத்தி இராமப ஜனை செய்திருக்கையில் ஒருநாளிரவில் இவர் மடத்துத் திருட எண்ணிக் கள்ளரிருவர்மடத்துட்புகுந்து பொருள்களைக் களவு செய்து மீளுகையில் வீரரிருவர் வெளியில் வில்லும் அம்பும் கொண்டு நின்று புறத்தில் போகாவண்ணம் மருட்டக் கள்ளர் மற்றோர் வழியிற்போக எண்ணிச் செல்ல ஆண்டும் அவ்வாறு நிற்கக் கண்டு புறத்திற் செல்லாது அஞ்சிமடத்திலிருந்தனர். பொழுதும் புலர்ந்தது. கள்ளர்கள் தாசரையணுகி நாங்கள் தங்கள் மடத்தில் களவு செய்யவந்த கள்ளர் என்று வணங்கி நடந்த செய்திகளையுங்கூறத் தாசர் அவ்விடமிருந்தாரை இவர்களைத் தடுத்தோர் யார்? இவ்விடத்திலுள்ள பொருள்கள் பாகவதரின் பொருட்டன்றோ என வினாவ, எவரும் அங்ஙனஞ் செய்தாரிலர் எனக்கேட்டு இராமனே என்பொருட்டு அவ்வாறு ஏவலனாக வந்தானெனப் பலவிதத்திலுந் துதித்துக் கள்வரை நோக்கி நீங்கள் வேண்டிய பொருள்களைக் கொண்டு செல்க என அக்கள்வர் உய்யுமாறு இராமதரிசனம் செய்தோம் உம் திருவடித்தரிசனமே வேண்டும் அன்றி வேறு வேண்டாமென அவ்விடமிருந்து பணி செய்து வந்தனர். இவ்வாறு நடந்து வருகையில் ஒரு நாள் ஒருவர் வந்து “ஜானகிராம” என அவர்முன் உட்கார்ந்து நான் பிரமகத்தி செய்தவன் எனக்கு அன்னமளிக்க எனக் கூறக் கேட்டபாகவதர்கள் தம்முடனுண்ணல் அடாது என மறுக்கத்தாசர் இவனது பிரமகத்தி இராம்நாமம் கூறவே தீர்ந்தது என வேதியர் பிரமஹத்தி தீர்ந்ததை எமக்குப் பிரத்தியக்ஷமாகக் காட்ட வேண்டுமென உடன்பட்டு நீங்களெவ்வாறு விரும்புகிறீர்களெனக் கேட்கக் காசியில் சிவாலயத் தெதிரிலுள்ள சில நந்திமுன் இவனுக்கிட்ட அன்னத்தை வைக்க அஃது எழுந்துண்ணுமேல் உடனுண்போமென அவ்வாறுதாசர் செய்ய அஃது உண்ணக் கண்டு பாகவதர் அன்பும் அச்சமும் கொண்டு அப்பிரமகத்தி செய்தாருடனுண்டிருந்தனர். இவ்வாறிருக்கையில் ஒருநாள் ஜெயத்பாலன் எனும் வணிகனிறக்க அவனைச் சிதைக்குக் கொண்டு போயிட்டு மனையாள் அவனுடன் தீப்புகச் செல்லுகை யில் வழியிலிருந்த தாசர் மடத்தைக் கண்டுள்புகுந்து தாசரைப் பணிந்தனள். தாசரிவளை நோக்கி அம்மா நீ எட்டுப் புத்திரர்களைப் பெற்று உன் கணவனுடன் சுகித்திருக்க என ஆசீர்வதிக்க அவள் நடந்த செய்தி கூறத்தாசர்கேட்டு இராமன் என்னாவிலிருந்து கூறியபடி யால் பொய்யாகாதெனக் கூறக்கேட்ட கன்று கணவன் சிதையிடம் போகக் கணவனெழுந்தமை அறிந்து களிப்படைந்து அவனுடன் தாசரையடைபணிந்து எட்டுப் புத்திரர்களைப் பெர்றுக்களித்திருந்தனள். இவர் செய்த அம்பகங்களைக் கேட்ட அக்காலத்தரசனாகிய அக்பர் சக்கரவர்த்தி இவரை வருவித்து இராமரைக்காட்டினாலன்றி விடேனெனக் கூறக்கேட்டு அநுமானிடம் முறையிட அநுமானிவ்வரசன் பட்டணத்தில் குரங்குக் கூட்டங்களை ஏவிக் குடிகளைத் தொந்தரை செய்வித்தனர். இதனால் துன்புற்ற குடிகள் மந்திரிகள் வழி அரசனுக்கறிவிக்க அரசன் தாசரைக்கேட்டுக் கொள்ளத்தாசர் அவ்விடையூற்றை அநுமனாலகற்றிச் சடமூடர் என்பவரைத் தொண்டராக்கிக் கொண்டு அவன் நாட்டில் ஒருவருடகாலமிருந்தனர். அவ்விடமிருக்கையில் உச்சயினிபுரத்து வணிகன் ஒருவனுக்கு அழகுள்ள பெண்மகவொன்றுண்டாய்ப் பருவம் சமீபித்தது கண்டு தந்தை அவளைப் படத்தில் எழுதி அவளுக்கேற்ற வரனைத்தேடுமாறு சிலரை விடுத்தனன். சென்றோர் பல இடங்களில் சென்று சாதிக்கேற்ற அழகுள்ளோன் காணாது பாணபூரில் வந்து அங்குள்ள வணிகனுக்குக் காட்ட அவன் தனக்கு இரண்டு பிள்ளைகளென்றும் அவ்விருவரில் ஒரு கண்ணில்லான்குமரன், மற்றது அழகுள்ள பெண்ணெனவுங்கூறி அவர்களை நோக்கி என் பெண்ணிற்கு ஆண்வேடமிட்டுக் காட்டிப் பெண்ணுக்குரியாரை மயக்கி மாங்கல்யதாரண சமயத்தில் என் குமாரனைத் தாரணஞ் செய்விக்கச் செய்து விட்டீர்களாயினுமக்கு வேண்டிய தருகிறேனெனக் கூறக் கேட்டோர் இசைந்து சென்று பெண்ணுள்ள வணிகனுக்குப் பாணபூரில் மாப்பிள்ளை இருக்கிறானெனக் கூறி நாளமைத்து மணத்தில் மாங்கல்யதாரணத்தைப் பிள்ளையாற் செய்விக்க முடியாமையால் பெண்ணால் முடிப்பித்து நீராடச் செல்லுகையில் பிள்ளைவீட்டுக்காரர் ஒருகால டிற்கபடம் வெளியாகுமென்றஞ்சி என் மகனுக்குடம்பு செம்மையில்லை இரவில் நீராடலாமென உடம்பட்டு இரவில் நீராடச் செல்லுகையில் பிள்ளை வீட்டார் ஒவ்வொருவராய் விட்டகன்றனர். இதற்குக் காரணமென்னென நீராடும் பிள்ளையை நோக்கப் பெண்ணாயிருக்கக் கண்டு மனம் வருந்தி அவமதித்து அப்பெண்ணைக் கழுதை மேலேற்றி ஊர்வலம் வருவிக்கையில் காளசிதாசர் மடத்தையடைந்து தாசரை அவ்வாணுருக்கொண்ட பெண் வணங்கத் தாசர் நீ உன் மனையாளுடன் வாழ்க என்று ஆசிகூறக் கேட்ட பெண், தன் வரலாறுகூறக் கேட்டதாசர் விட்டலன் அநுக்கிரகிப்பான் எனப்பெண் ஆணாக அனை வருங்களித்துத் தாசரைப் புகழ்ந்து முன்போலழைத்து வந்து மண முடித்தனர். பின் அரசன் கேட்டுத்தாசருக்கு மரியாதை செய்ய நீங்கிக் கோகுலம், யமுனை, பிருந்தாவனம், மதுரை முதலிய திருப்பதிகளை வணங்கிப் பிரியதாசரிட மடைந்து நீர் பாகவதர் சிறப்பெழுதிய புத்தகந்தாருமெனக் கேட்கச் சிறப்பு ஆண்டிலாதது கண்டு எண்ணுகையில் துளவோனச் சீரமைந்த புத்தகத்தை யமைக்க அது கொண்டு கோயிலிற் சென்று இவர் சீர் நானெழுதாமை கண்டு இராமனெழுதினானெனக்கூறி யாவர்க்கும் இவர்சீர் எழுதத் தரமோ வெனப் புகழ இருந்தவர். |
துளசிதேவி | இவள் சுத்த சத்வச்வரூப விஷ்ணுசத்தி புஷ்பரூபிணி; பூதேவியைப் பாத பரிசத்தால் சுத்தஞ் செய்பவள். போககாமிகளுக்குப் போகத்தையும், மோக்ஷகாமிகளுக்கு மோக்ஷத்தை யுந்தருபவள். (தேவி ~ பா.) |
துளசிவிரதம் பிரதக்ஷணம் | வீட்டிலாவது, பூந்தோட்டத்திலாவது, மேடைகட்டுவித்து அதில் திளசிமாடமியற்றித் துளசிமந்திரத்தால் பூஜித்து லக்ஷமிநாராயண சுவர்ண பிரதிமைவைத்துப் பூஜித்து ஹோம முதலிய அக்னிகார்யஞ் செய்து பிராம்மண போஜனஞ் செய்வித்துத் தக்ஷிணை கொடுத்து லக்ஷப்பிரதக்ஷணஞ்செய்வது. இதை அநுட்டித் தோர் சகல சித்தியும் அடைவர். |
துளுவர் | துளுவநாட்டுச் சநங்கள். இந்நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் வந்து குடி யேறியவரும் துளுவர் எனப்படுவர். |
துளுவவேளாளர் | 1. இவர்கள் கன்னட தேசத்தில் துளுவநாட்டிலிருந்து வந்து அரசனேவலால் நாட்டை வளப்படுத்திக் காணியாட்சி கொண்டவர்கள். 2. இவர்கள் துளுவ நாட்டிலிருந்து வந்த வேளாளர் (துளுவம் தென்கன்னடத்திலுள்ளது) இவர்களே ஆதி வேளாளர். இவர்கள் ஆதொண்டைச் சக்ரவர்த்தியால் தொண்டை நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டார்கள். இவர்கள் தமிழ்நாடு முழுதும் பரவியிருப்பவர்கள். இவர்கள் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு ஜில்லாக்களில் இருப்பவர்கள். மாவலிபுரம் தேரில் ஆதொண்டைச் சக்ரவர்த்தி ஏழாம் நூற்றாண்டில் அரசு செலுத்தியதாகக் கூறியுள்ளது. காஞ்சிபுரம் இவனுக்கு இராஜதானி. இவன் ஸ்ரீசைலத்திலிருந்து பிராமணர்களுடன் வேளாளரையும் அழைத்து வந்தனன் என்பர். இவர்கள் தலைநாடு காஞ்சி. ஆதொண்டைச்சக்ரவர்த்தி குறும்பரது (24) கோட்டைகளைச் செயித்துத் தன் பெயரால் தொண்டை மண்டலமெனப் பெயரிட்டு அந்நாட்டில் குடியேறிய வேளாளரைத் தொண்டை மண்டலம் துளுவவேளாளர் எனப் பெயரிட்டனன். (தர்ஸ்டன்). |
துவகன் | பிரியவிரதன் போன்; கிருதபிருஷ்டன் குமரன். |
துவசகேது | துருபதன் குமரன். |
துவசசேநன் | துருபதன் மகன். |
துவசேதன் | பாஞ்சாலன் குமரன். |
துவஜவதி | அரிமேதஸ் புத்திரி. |
துவதிகன் | கந்திற் பாவையைச் சேர்ந்து முக்காலச்செய்தி அறிவிக்கும் தேவன். |
துவராபதி | ஒரு பழைய நகரம். இதனாசன் சங்கரன். (பெ. கதை). |
துவரை | துவாரகையைக் காண்க, |
துவரைக்கோமான் | 1. இடைச் சங்கப்புலவன். 2. இடைச்சங்க காலத்திருந்த ஒருசிற்றரசன். இவன் கண்ணபிரான் வழியினனாம் வேளிர்வழியினனாய்த் தெற்கினாண்ட ஒருவனாகக் கருதப்படுகிறான், |
துவரைநாடு | இது பாண்டிவள நாட்டிலுள்ள சிறு நாடுகளுள் ஒன்று; வைகைக் கரையிலுள்ளது; (துவரையென்பது மதுரைக்கு மேற்கேயுள்ள துவரைமானென்னுமூராக இருத்தல்கூடு மென்கின்றனர், (திருவிளையாடல்). |
துவர் | (10) நாவல், கடுக்காய், நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத் தக் காசு, மாந்தளிர். |
துவஷ்டரன் | சுக்ரன் குமரன்; அசுர புரோகிதன். |
துவஷ்டரை | அச்வநிதேவர்களுக்குத்தாய்; இவளுரு வடவாக்னிபோன்றது. சூரியன் தேவி. |
துவஷ்டா | 1. பவன் என்னும் சூரியனுக்குத் தோஷையிட முதித்தகுமரன்; தேவி விரோசனை; குமரன் விரசன். 2. யௌவநன் புத்ரன். 3. பிரமன் குமரன். 4. சுக்ர புத்ரன்; விச்சுவவுருவன் தந்தை; இவன் சரிதையை இந்திரனைக் காண்க, இவன் சடையையறுத்து யாகஞ் செய்ய விருத்திராசுரன் பிறந்தான் என்பர். |
துவாதசலகன விவரம் | 1. ஜன்மலக்னம் : இது, அந்தந்த மாதராசியின் நாழிகையை மேற்படி மாத தேதியின் ஈவின் வகைக் கழித்து மிச்சம் நின்ற நாழிகையைச் சநன காலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையில் வருவது ஜன்ம லக்னமாம். 2. ஒராலக்னம் : உதய முதல் சநனகாலம் வரை யெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் ராசி (1 க்கு 27) நாழிகையாகக் கழித்துக் கண்டது லக்னமாம். இதனை ஆண்ராசிக்கு வலமாகவும், பெண் ராசிக்கு இடமாகவும் பார்த்துக்கொள்ளவும். 3. கடிகாலக்னம் : இது, உதய முதல் சநனம் வரையெண்ணிக் கண்ட நாழிகையை உதய முதல் இராசி ஒன்றிற்கு நாழிகை ஒன்றாகத் தள்ளிக் கண்டது லக்னமாம். இதனையும் ஆண், பெண்ணிற்கு வலமிடமாகக் கொள்க. 4. ஆரூடலக்னம் : இது, லக்ன முதல் லக்னாதிபதிநின்ற இராசிவரை யெண்ணிக் கண்ட தொகை யெத்தனையோ அதை லக்னாதிபதி நின்ற இராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். அவன், லக்னத்திலும் (7) இலுமிருந்தால் ஆரூட லக்னமாம். 5 நக்ஷத்திரலக்னம் : இது, ஜன்ம நக்ஷத்திரத்தில் ஜநனம் வரையிற் சென்ற நாழிகையை இராசி (1 க்கு 5) நாழிகையாகத் தள்ளிக் கண்ட லக்னமாம். அச்வநி, மகம், மூலத்திற்கு இடமாகவும், மற்றவைகளுக்கு வலமாகவும் ஜகன லக்ன முதல் எண்ணிக் கொள்ளவும். 6. காரகலக்னம் : இது, உதயாதி ஜன்மம் வரைச் சென்ற நாழிகையை ராசி 1 க்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையை எந்தக் கிரகஸ்புடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்தக் கிரகமிருக்கிற ராசி முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். 7. ஆதெரிசலக்னம் : இது, ஜன்ம லக்னத்திற்கு ஏழாவது லக்னம். 8. ஆயுர்லக்னம் : இது, உதயாதி சென்ற நாழிகையை இராசி ஒன்றுக்கு ஐந்து நாழிகையாகக் கழித்துக் கண்ட தொகையைச் சந்திரனின்ற அங்கிசலக்ன முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். 9. திரேக்காணலக்னம் : இது, லக்னத்தை மூன்று கூறிட்டுச் சரத்திற்கு (1,5,9) ஆகவும், ஸ்திரத்திற்கு (9,1,5) ஆகவும், உபயத்திற்கு (5,9,1) ஆகவும் எண்ணிக் கண்ட லக்னமாம். 10. அம்சலக்னம் : இது, முன்சொன்ன காரக கிரகத்தின் தவதாம்சலக்னமாம். 11. நவாம்சலக்னம் : இது, லக்னத்தை ஒன்பது பங்காக்கி எத்தனையாம் பங்கில் ஜன்மமோ அதை அந்த ராசித் திரிகோண சரராசியாக எண்ணிக் கண்ட லக்னமாம். 12. பாவலக்னம் : இது, உதயாதி ஜன்மம்வரைச் சென்ற நாழிகைகளை இராசி (1) க்கு (5) நாழிகையாகத் தள்ளிக் கண்ட தொகையை மேஷ முதலாக எண்ணிக் கண்ட லக்னமாம். திதிப்பிரசங்கை :(திதிகளிற் செய்யும் சுபா சுபகாரியங்கள்) பிரதமையில் ஸ்திரகன்மங்களும், சாந்தியும், துதியையில் சுபகன்மங்களும், மந்திரோபதேசமும், திரிதியையில் வாஸ்துவின்யாசமும் விவாகமும், இராஜ்யாபிஷேகமும், பட்டபந்தனமும், வித்தியாரம்பமும், சதுர்த்தியில், யானை கட்டலும், விருத்தம் கொளலும், யுத்தஞ் செய்தலும், நிகள பந்தனமும், பஞ்சமியில் விவாகம், தனம், தான்யசங்கிரகம், குளம் கல்லலும், சஷ்டியில், வாத்து விடுதல், விஷவாத அப்பியாசம், குரூரகன்மங்கள் ஒளஷதசாத்திரகாரதகனங்கள், சத்ருதர்சனம், நிகள பந்தனமும், சத்தமியில், யாத்திரை, அலப்பிரவாகம், ஆபரண தாரணம், சகலசுபகன்மம், விவாகம், அஷ்டமியில் ; அறுத்தல், சுடுதல், அட்டைவிடல், காரமிடுதல், மருந்துண்ணல், சத்துருஜயம், அட்டகை, உருத்திராபிஷேகம், நவமியில் : அட்டகை, துர்க்காபூசை, தசமியில் : தபம், விவாகம், கிராம, கிரகப்பிரவேசம், தன தான்யசங்கிரகம், ஏகாதசியில் : உபநயனம். கன்னிகா தானம், கோதானம், பூதான துவாதசியில் : சோலை வைத்தல், பூமர வைத்தல், தன்மம் பண்ணல், உழுதல், விதைத்தல், நெல்லறுத்தல், தான்யசங்கிர கம், விஷ்ணுபூசை, ஆபரணம்பூணல், திரயோதசியில் : வாகனமேறல், விவாகம், சித்திரகன்மங்கள், சதுர்த்தசியில் : குரூர மந்திராப்பியாசம், ஆகமம், ஒளஷத அப்பியாசம், சாந்திகருமம் பௌரணையில் : மங்கலகன்மம், தன்மகாரியங்கள், கிரகப்பிரவேசம், அமாவாசையில் சமுத்திர ஸ்நா னம், பிதுர் தர்ப்பணம், தானம், சிரார்த்த கன்மமும் செய்யலாம். (விதான.) |
துவாதசாதித்தர் | ஆதிதேயரைக் காண்க, |
துவாதசி | சைத்ரசுக்லதவாதசி விரதம்; இது சித்திரைமாதத்தில் சுக்கில பக்ஷ துவாதசியில் விரதமிருப்பது. இது எல்லா நலமும் தரும். |
துவாபரயுகத் தெய்வம் | வில், அம்பு வாள், கட்வாங்கம், கையிற்கொண்டு புண்ணிய பாபம் கலந்தவுருவுடன் குரோத முடைத்தாயிருக்கும். |
துவாபரயுகம் | சதுர்யுகத்தில், மூன்றாவது யுகம். இதற்கு வருஷம் எட்டுலக்ஷத்து அறுபத்து நாலாயிரம். |
துவாரகை | இது முத்தித் தலங்கள் எழுள் ஒன்று. கூர்ச்சரத்திற்கு மேற்கிலிருப்பது, இதில் பரமபதவாசியாகிய விஷ்ணுமூர்த்தி உலகபார நிவர்த்திக்காகக் கிருஷ்ண மூர்த்தியாயும் பலராமமூர்த்தியாயும் இலக்ஷ்மி தேவி முதலியவர் தேவியராகவும் திரு அவதரித்தனர். இதில் ஐந்து தினம் திருமா லைத் தியானித்திருந்து இறந்தவர் எலும்பு விஷ்ணுமூர்த்தியின் சங்கின் உரு அடையும் என்று காசிமான்மியம் கூறும். கண்ணனுக்குப் பிறகு கடல் கொண்டது. (காசி காண்டம், கருடபுராணம்). (Dwaraka in Gozerat). |
துவிசக்கர வண்டி | இது, முன்னும் பின்னுமாக இரண்டு சக்கரங்களையுடையது. இதில் ஏறிச் செலுத்துவோன் தன் காலடியிலுள்ள சக்கரத்தில் பொருந்தியுள்ள மிதி யடியைக் காலால் மிதித்து மிதித்துத் தூக் கச்செல்லும் தொழில்களுள்ளது. மூன்று சக்கர வண்டியுமுண்டு, |
துவிசராசகுலோத்தம பாண்டியன் | இராசசார்த்தூல பாண்டியனுக்குக் குமரன், இவன் குமரன் ஆயோதனப்பிரவீணன். |
துவிதன் | 1 கிட்கிந்தையாண்ட ஒருவாநரன். 2, பிரமன் மாகஸபுத்திரருள் ஒருவன். 3. துவிவிதனுக்கு ஒரு பெயர். |
துவிமீடன் | அத்தியின் குமரன். |
துவிமூர்த்தனன் | தறுகுமாரில் ஒருவன். |
துவீவிதன் | நரகாசுரனுக்கு நண்பனாகிய வாநரன்; சுக்கிரீவன் மந்திரி, மயிந்தனுக்குத் தம்பி, நரகாசுரனைக் கண்ணன் கொன்ற காரணத்தால் கோபமூண்டு துவாரகை முதலிய பட்டணங்களைத் தீயிட்டு வருத்திக் கோகுலம் வந்து கோவியருடன் விளையாடும் பலராமரை வருத்தியவரா லிறந்தவன். இலக்குமணரைக் காண்க. இவன் லக்ஷமணருக்குச் சுரநோய்போக்கி வேதனம் பெற்றவன். |
துவைதம் | மார்த்தவ மதத்தைக் காண்க. இது சீவாத்மா பரமாத்மா இவ்விரண்டும் வேறென்றும் முத்தியிலும் வேறாக அச்சு மாரது இருக்குமென்றுங் கூறும்மதம். |
துவைதவனம் | பாண்டவர்கள் நீருண்ட நச்சுப்பொய்கை, (பார ~ மஹப்.) |
துவைபாயனம் | குருக்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள தீர்த்தம்; துரியோதனன் படை இழந்த பின் இத்தடாகத்தில் மறைந்து ஜனத்தம்பனம் செய்தனன். (பார. சல்), |
துஷாசனன் | திருதராட்டிரன் குமரன். |
துஷிதர் | இரண்டாமன்வந்தரத்துத் தேவர். |
துஷிதை | வேதசிரன் என்னும் ருஷியின் பாரி. |
துஷ்கிரமன் | திருதராட்டிரன் குமரன். |
துஷ்ட கேது | சிசுபாலன் குமரன். (அநுகிலாதனம்சம்.) தருமனுக்கு உதவி செய்தவன். |
துஷ்ட தேவதைகள் | பாமரர் சிலர் நீரில் இறந்த பெண்களைப் பாதாள பொன்னியம்மை எனவும், தீப்பட்டி றந்தவளை அக்னியம்மை எனவும், ஒருத்தியைப் புதைத்த இடத்தில் புற்றுக் கண்டால் புத்தம்மை எனவும், புற்றில் நாக மிருக்கக் கண்டால் நாகாத்தாள் எனவும், எந்தச்சாலையிலேனுமி றந்து கிடந்தவளைச் சாலாம்பாள் எனவும், பனையடியிலிறந்தவளைப் பனையாயி எனவும் வணங்குவர். (உ.வ.) |
துஷ்டந்தன் | திருதராட்டிரன் குமரன். |
துஷ்டி | 1. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி. 2. சநந்தன் தேவி, இவளில்லாவிடத்துக் களிப்பில்லை. |
துஷ்டிமந்தன் | கஞ்சன் தம்பி. |
துஷ்டிமான் | உக்கிரசேநன்குமரன், |
துஷ்பதருஷணன் | திருதராட்டிரன் குமரன். |
துஷ்யந்தன் | துட்டியந்தனைக் காண்க. |
துஸ்வாஸன் | பதினேழாநாள் யுத்தத்தில் வீமனால் கொல்லப்பட்டவன். |