அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
தீ

(3) உயிரிலுள்ள தீ, உதரத்திலுள்ள தீ, சினத்தில் எழுந்தீ. (3) காருகபதயம், ஆகவனீயர் தக்ஷிணாக்கி

தீக்குணம்

(10) பொய் சொல்லல், கோட் சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில சொல்லல் இவை நான்கும் வாக்கின் தீக்குணம். களவாடல், வறிதேதொழில் செயல், கொலை செயல் இம்மூன்றும் காயத்தீக்குணம். கொலை நினைக்கை, காமப்பற்று, ஆசை இம்மூன்றும் மனத் தீக்குணம்,

தீக்ஷிதர்

சோதிஷ்டோமஞ் செய்த பரம்பரையில் பிறந்தாருக்குப் பட்டப்பெயர்,

தீக்ஷை

1. திருதவிருதனென்னும் ஏகாதசருத்திரன் தேவி. 2. தீ என்பது தானம். க்ஷீ என்பது ஷயம், புக்தி, முக்தி, தானமும், பாசக்ஷய முஞ் செய்வதால் இப்பெயர் உண்டாயிற்று, இது முதற்கடவுளிடம் இருந்து வழிவழியாகத் தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் வரையில் படனசிரவணங்கள் செய்யும் ஜனங்களுக்கு அபீஷ்டமான புத்தி, முக்தி, ரூப்பவங்களைக் கொடுப்பதாயும், மலாதி பாசங்களை க்ஷயிப்பதாயும் இருக்கும் கிரியை எனப்படும். இது பௌதீக, நைஷ்டிகீ என இருவிதப்படும். அவற்றுள் பௌதகீ விசித்திரமான அபீஷ்டபோகங்களைக் கொடுத்துப் பின்னால் மோக்ஷத்தைத் தருவது. நைஷ்டி என்பது, நிஷ்டையைக் கொடுப்பது. இது தவத்தவர் சம்பந்தமாதலால், இப்பெயர் பெற்றது. பின்னும் இத்தீக்ஷைகள், சாபேக்ஷை, நிராபேக்ஷை என இருவிதப்படும், சமயாசாரா அநுஷ்டானங்களை அபேக்ஷித்தது சாபேக்ஷை, அதை அபேக்ஷயாதது நிராபேக்ஷையாம், பின்னும் இத்தீக்ஷை நிராதாரை, சாதாரை என இருவகையாம். இவற்றுள் நிராதாரை என்பது இறைவனே நேரில் தம்மைத் தியானிக்கும் அடியவர் பொருட்டுச் செய்வதாம். சாதாரை குருமூர்த்தியை அதிட்டித்துச் செய்வது, பின்னும் ஞானாசாரியன் பார்வையாலும், அஸ்தமஸ் தகசை யோகத்தாலும், திருவடிமுடி சூட்டலாலும் தீக்ஷை செய்வதும் உண்டு. இது மந்திரங்கள் விஷசக்தியைப் போக்குவது போல ஆன்மாக்களுக்கு அநாதியே உண்டாகிய மலசக்தியைப் போக்குவதால் தீக்ஷை, ஆன்மசமஸ்காரமாம். பின்னும் சேதனா சேதன சுவரூபத்தைப் பிரகாசிப்பித்து மோக்ஷத்தைத் தருவதாதலின் இப்பெயர்த் தாகும். 3. இஃது, ஆசாரியன், ஆன்மாவைப்பற்றிய பாசம் நீங்கச் செய்யப்படுவது. இது மாணாக்கன் பக்குவம் நோக்கிப் பலவகைப் படும். நயன தீக்ஷை : இது, மீன் தனது முட்டைகளைக்கண்ணால் பார்த்துக் காப்பது போல் ஆசாரியன் மாணாக்கனை அருட்கண்ணால் நோக்கிப் பாசம் நீக்குவது. பரிச தீக்ஷை : கோழி தன் சிறகால் தழுவிக் காத்தல் போல் ஆசாரியன் மாணாக்கனை ஞான அஸ்தத்தால் மத்தகத்தில் தொட்டுப் பாசநீக்கல். மானத தீக்ஷை : ஆமை தன் முட்டைகளை நினைத்த காலத்தில் அவை பொரிந்துடன் செல்வது போல் ஆசாரியன் மாணாக்கனைப் பரிபாக மெண்ணித் தீக்ஷித்துப் பாச நீக்குதல், வாசக தீக்ஷை : பஞ்சாக்ஷர உபதேசத்தால் தீக்ஷிப்பது. சாத்திர தீக்ஷை : சிவாகமங்களைப் போதித்துத் தீக்ஷித்தல். யோகதீகை : யோக மார்க்கத்தால் மாணாக்க னிருதயத் திற் சென்று தீக்ஷித்தல், அவுத்திரி தீக்ஷை. ஓமாதி காரியத்தால் தீக்ஷிப்பது. ஞான தீக்ஷை : இது, ஔத்திரியில் குண்ட மண்டலாதிகள் முதலிய மனத்தால் பாவித்துத் தீக்ஷிப்பது, கிரியா தீக்ஷை : குண்ட மண்டலாதிகள் செய்து தீஷிப்பது. இது, நிர்ப்பீஜம், சபீஜம் என இருவகை, நிர்ம் பீஜம் : சத்தியோநிர்வாணம், அசத்தியோ நிர்வாணமென இருவகை. சத்தியோதிர் வாணம் : விருத்தர் முதலிய பக்குவர்க்குச் செய்யுந் தீக்ஷை, அசத்திய நிர்வாணம் : வாலிபர் முதலிய மற்றவர்க்குச் செய்வது. சபீஜ தீக்ஷை : ஆசாரியரையடுத்து வேத சிவாகமங்களை ஓதிச் சமயாசாரங்களில் வழுவாது நிற்பவருக்குச் செய்வது. இது, உலோகதர்மணி சிவதர்மணி யென இரண்டாம். உலோக தர்மணி ஆசாரியன் மாணக்கனைப் பதப்பிராப்தியாகிய புவனங்களில் சேர்ப்பிக்கச் செய்யப்படுவது. சிவதர்மணி : மோக்ஷகாமியாகிய மாணாக்கனுக்குச் சிகாச்சேதன முதலிய செய்து மோக்ஷத்தை அடைவிக்குந் தீக்ஷை, சமய, விசேடம், நிருவாணம், ஆசாரியாவபிஷேக முதலிய, நிர்ப்பீஜ சபீஜ தீக்ஷைகளிலடங்கும். (சித்தா.)

தீன்மதிநாகன்

இவர் கடைச்சங்க மருவியபுலவர்களில் ஒருவர். (குறு 111.)

தீபகன்

வேத தருமரைக் காண்க.

தீபகல்பம்

மூன்று புறங்களில் மட்டும் ஜலம் சூழ்ந்து இருக்கும். அதற்குப் பரியாயத் தீவு அல்லது தீபகல்பம் என்று பெயர். (பூகோளம்).

தீபதிமான்

கிருஷ்ணன் புத்திரன்,

தீபமும் தீபாராதனையும்

தேவாலயங்களில் முக்கியமாய்ச் சிவாலயங்களில் பல வகைப்பட ஒன்று முதல் முறையே தீபார்த்திகள் பலவகைப் பேதங்களாகத் தேவர்களுக்கு ஆராதிப்பது. ஆராதனை காலத் தில் தேவர்கள் அனைவரும் தேவதரிசனத்தின் பொருட்டு வந்து அவ்வுருவமாக நின்று ஆராதனை தெரிசித்து விடை கொண்டு செல்வதாக ஆகமங்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று முதல் ஐந்தளவுள்ள: தீபார்த்திகள் ஈசனாதி தேவர்கள் என்றும், திரிதீபம், தத்வத்ரயம் என்றும், பஞ்சதீபம், பஞ்சகலாசத்திகள் என்றும், சப்த தீபங்கள், சப்தமாதர்கள் என்றும், நவ தீபம், நவசக்திகள் என்றும், ஏக தீபம், ஸரஸ்வதி ஸ்வாகாதேவியென்றும் மற்றைய ருஷபாதி ரூபமுள்ளவை பல தேவர்கள் அவ்வுருக்கொண்டு வந்து தெரிசிப்பவர் என்றும் சோடசங்களாகிய உபசாரங்கள் பஞ்சபூதாதி தேவதா தரிசனமென் றும், ஸ்ரீகாரணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டிருக்கின்றது. இந்தத் தீபார்த்திகள் சந்திராதாரமாகவும், ஏகாதாரமாகவும் கொம்புகளை ஆதாரமாகவும் பெற்றதாம். இவை சர்வகிர்த்திம நாசத்தின் பொருட்டும், சர்வலோக இதத்தின் பொருட்டும் செய்யப்படுவன, தீபாராதனைகளில் காராம் பசுவின் நெய் உத்தமம், மற்றப் பசுக்கள் மத்திமம், ஆட்டின் நெய்யும் எண்ணெயும் அதமம். விருக்ஷபீஜங்களின் நெய் நீக்கத்தக்கவை. முதலில் தீபாராதனை செய்யுமிடத்து நாகார்த்தி முதலாகக் கடதீபம் இறுதியாகச் செய்யவேண்டியது. பின் னும் பதினாறு கலைகொண்ட தீபமும், பக்ஷத்வீபமும், வாரதீபமும், ருத்ரம். பிர்திஷ்டம், சப்தமாதரம், நிவிர்தயாதி, கலாத்வீபம், ஸாஸ்வதித்வீபம் முதலிய தீபார்த் திகளைச் செய்யவேண்டியது. தீபார்த்திகளை யெடுத்துத் தேவர்களுக்கு ஆராதனை செய்வதில் மூன்று முறை தீபபாத்திரத்தை எடுத்து ஈஸ்வரருக்கு ஆராதனை செய்தல் வேண்டும். அதில் முதன்முறை லோக க்ஷணார்த்தமும் இரண்டாமுறை கிராமரக்ஷணார்த்தமும், மூன்றாமுறை பூதாக்ஷணார்த்தமுமாகத் திரிப்ரதக்ஷணமாகப் பாதாதி மத்தகம் வரையில் எடுத்து மத்தகம், லலாடம், மார்பு, திருவடிகள் முதலியவற்றைக் குறித்துப் பிரணவாகாரமாய்க் காட்டல் வேண்டும் இத்தீப ஆர்த்திகளின் முடிவில் கற்பூரார்த்தி செய்யப்படும். இது நீராஞ்ஜனம் என்று கூறப்படும். இதனால் தேவாராதனை செய்யின் சர்வசித்திகள் உண்டாம். இதனைச் செய்யுமிடத்து நாலங்குலம் ஜ்வாலை உயரம் எழும்பக் கற்பூரம் எற்றின் உத்தமம். மூன்றங்குலம் மத்தி மம், இரண்டங்குலம் அதமம். நீராஞ்சன பாத்திரமாகிறது விருத்தமாய்ச் சூர்ய மண்டலாகாரமாயிருத்தல் வேண்டும். இடையில் அக்னிதேவனுடைய இருப்பாய்க் கற்பூராதிகள் பதித்தல் வேண்டும், (ஸ்ரீகாரணம்.)

தீபம்

1. எண்ணெய், வர்த்தி, அக்கியால் யோஜிக்கப்பட்டது. இது சகல புண்ணியங்களையும் தரும். (விரதசூடாமணி). 2. மேனோக்கி வியாபித்து இருளைக் கெடுப்பது. ஆதலால் இது மனிதர்களுக்கு உற்சாகத்தையும் சக்தியையும் உண்டாக்குவது, இது பலிக்குச் சுக்ரன் கூறியது. (பாரதம் அநுசாசனிகபர்வம்).

தீபயஷ்டி

(தீவட்டி) இது, ஒரு கொம்பில் தீப்பிடிக்கும் எண்ணெய்ச் சேர்ந்த பொருள்களைச் சேர்த்து வெளிச்சந்தரச் செய்வதும், கிண்ணம் போன்ற இருப்புப் பாத்திரத்தில் எரி நெருப்பிட்டு ஒளிரச் செய்யுங் கருவி.

தீபஸ்தம்பம்

கலங்கரை விளக்கம் காண்க.

தீபாவளிபண்டிகை

இது ஐப்பசிய கிருஷ்ணபக்ஷ திரயோதசி இரவில் சதுர்த்தசி சம்பந்த மடைகையில் உலகத்தைத் துன் புறுத்தித் துன்ப இருள் மூடச் செய்திருந்த பிராக்சோதிடபுரியாண்ட நரகாசுரனைக் கண்ணன் கொன்றதின் பொருட்டுக் களிப்பினால் எண்ணெயிட்டு ஸ்நானஞ்செய்து விளக்கிட்டுக் களிப்பது.

தீப்பறவை

இது, பறவைகள் எல்லாவற்றினும் பெரிது, உயரம் (6, 7, 8) அடிகளிருக்கும். இது ஆப்பிரிக்காவின் அகன்ற வனாந்தரவாசி, இதன் கால்களும் கழுத்தும் ஒட்டகத்தைப்போல் நீண்டிருப்பதால் ஒட்டகப்பக்ஷி யென்பர். இஃது ஒட்டகத்தைப்போலவே பல நாட்கள் நீர் குடியாது வசிக்கும், இது பறவாது, கால்களில் பருத்த இரண்டு விரல்களுண்டு. குதிரையின் வேகத்திற்கதிகம் ஓடும். இதனைப் பழக்கி இதன் மேல் சவாரி செய்கிறார்கள், இதன் இறகுகளை ஆபரணமாகவும் முட்டைகளை ஆகாரமாகவும் முட்டையோட்டைப் பான பாத்திரமாகவும் உபயோகிக்கிறார்கள். இதனை வேட்டை யாடுகையில் அலுத்த பறவை தன்னை எதிரிகள் காணவில்லையென மணலில் தலையை மறைத்துக்கொள்ளும். அக்காலத்தில் அதனைப் பிடித்துக்கொள்வர்.

தீமந்தன்

1. விரோகணன் குமரன். 2. புரூரவன் குமரன்,

தீமுருகற்பாஷாணம்

நிபான) (Phosphorus) இது எலும்பினின்றும், சில உலோகங்களினின்றும் எடுக்கப்படுகிறது. இது தண்ணீரிலிருக்கும் வரையில் தன் குணத்தை வெளியிடாது. வெளிவந்து காற்றுப்படின் தீப்பற்றும். இது தீக்குச்சுகள் செய்ய உபயோகப்படுகிறது.

தீமை விளைக்கும் தேவதைகள்

இவர்கள் துச்சகன் சந்ததியார். அவர்களாவார்: தந்தாக்கிருஷ்டி, உக்தி, பரிவர்த்தகன், அங்கயுக், சகுனி, கண்டபிராதருது, கற்பகனன், சசியக்னன், நியோஜிகை, விமோதினி, சுவயம்ஹாரிகை, பிராமணி, ருதுஹாரிகை, ஸ்மிருதிஹாரிகை, பீஜாபஹாரிணி, வித்வேஷணி, தந்தாக்கிருஷ்டி, விஜல்பை, கலகை, காலஜிஹ்வன், பரிவர்த்தினி, அவிக்னன், மேகனை, க்ஷத்ரகன், சோதகை, கிராஹகை, தமப்பிரசாதகன், சோதகன், கிருஹன், அர்த்தஹாரி, வீர்யஹாரி, குசஹாரிணி, குசத்துவயஹாரிணி, ஜாதஹாரிணி, பிரசண்டன், வாதரூபை, அரூபை, அபகர்ஷை முதலியவர், இவர்கள் செய்கைகளைத் தனித்தனி காண்க.

தீயதேவதைகள்

தென்னாட்டில் சிலர் மாரி திருவிழாவில் கணக்கில்லா ஆட்டுக்குட்டிகளைப் பலியிடும் தேவதைக்குக் குட்டிக்குறாமாயி எனவும், இரத்தங்களைச் சட்டியிற் பிடித்து நிவேதிப்பது சட்டிக்குறாமாயி எனவும், பள்ளத்தில் ரத்தம் நிறைத்து நிவேதிக்கும் தேவதைக்குப் பள்ளக் குரமாயி எனவும், ஓலையினால் மாரியம்மன் செய்து வணங்குவது ஓலைப்பிடாரி எனவும், பின்னும் செல்லாச்சி, பேயாயி, பூமாயி, வீராயி, சடையாயி, மலையாயி, பொம்மக்காள், வெள்ளாயி, இளங்காளி, கருங்காயி, ஒண்டிவீரன், சங்கிலி வீரன், காத்தாயி, துர்க்காயி, கங்கையம்மை, வட்டப்பநாச்சி, கருமுனி, செம்முனி, வாழ்முனி, பூங்குறத்தி, வேங்கை யம்மன், கருவேங்கை, மலைவேங்கை, முடியாலழகி, முடிமேல் முடியழகி, மாப்பிள்ளை வீரன், பத்தினியம்மை, தீப்பாஞ்சாள், பொம்மி, சூரியசுவாமி, மன்னாதலிங்கம் வணங்கு வர். (உ ~வ.)

தீயன்

சூரபன்மன் மந்திரி,

தீயர்

இவர்கள் மலையாள நாட்டு இழுவர், இவர்கள் தொழில் கள்ளிறக்குதல் பயிர் வேலை செய்தல். மற்றும் பல தொழில் செய்தல். (தர்ஸ்டன்).

தீயவை

இது, சுலாவுதலையுஞ், (சுண்டு தலையு) மன்னாப்பொருளையு மேற்கொண்டு உரைத்த வொருவற்குப் பரிந்து சொல் லியதுணராது அல்லதை உணர்ந்து பக்ஷபாதமாவதுவாம். (யாப்பு ~ வி.)

தீரன்

பலி அரசன்.

தீரிகூடராசப்ப கவிராயர்

இவர் குற்றாலம் பாண்டி நாட்டில் மேல் அகரம் எனும் கிராமத்தில் வேளாளர் மரபில் பிறந்தவர். மகாகவி, இவர் காலம் முத்துவிஜயரங்க சொக்கநாதநாயகர் காலம், அவர் இவர்க்கு நில முதலிய கொடுத்து ஆதரித்தார். இவர் குறவஞ்சி பாடியதால் களிப்படைந்த அரசர் இவர்க்குக் கொடுத்த இடத்திற்குக் குறவஞ்சி மேடு என்று இப்பொழுதும் வழங்குகிறது. இவர் செய்த நூல்கள் திருக்குற்றாலபுராணம், குற்றாலக் குறவஞ்சி, குற்சலமாலை, குற்றாலச்சிலேடை வெண்பா, குற்றாலயமக வந்தாதி, குற்றாலவுலா, பரம்பொருள் மாலை, குற்றாலக்கோவை, குழல் வாய்மொழி கலிப்பாமாலை, கோமளமாலை, குற்றாலம் பிள்ளைத்தமிழ், நன்னகர்வெண்பா, குற்றாலவெண்பா அந்தாதி முதலிய.

தீருவசந்தி

சூர்யவம்சத் தாசன்.

தீர்க்க தமன்

1. பவயமுனிவர் குமரன், தாய் மமதை, இவன் தாய்வயிற்றிலிருக்கையில் வியாழன் கபடமாய்த் தன் தாயைப் புணர்ந்ததை அறிந்து கோபித்தனன். இதனால் வியாழன் கோபித்துக் கண்ணில்லாது போகச் சபிக்கப்பட்டவன். தீர்க்கதேவன் மாணாக்கன். இவன் பிரதோஷ காலத்தில் மனைவியைப் புணர்ந்ததால், கிராதரைப் போல் நூறு புத்திரரைப் பெற்றான். பலியின் மனைவியைப் புணர்ந்து அங்கனைப் பெற்றான். 2. இவன் பிரகஸ்பதியால் பிறவியந்தகனாய்ப் பிறந்து ஒரு எருது தர்ப்பையை மேய அதன் கொம்பைப் பிடித்து உன்னை விடேன் என்றனன், அவ்வெருது முனிச் சிரேட்டரே நாங்கள் அறிவில்லாதவர்கள் நாங்கள் செய்த தவறு பொறுக்க என வேண்ட விட்டுத் தன் மனைவியிட மிருக்கையில் அவளிந்தப் பிறவி யந்தகனிடமிருப்பது நலம் அல்ல, என்று ஒரு கட்டையில் கட்டித் கங்கையில்விடக் கூவிக் கொண்டு வெள்ளத்தில் சென்றனன். இவனைப் பலி எனும் அரசன் எடுத்துப் பரிபாவிக்கச் சந்தோஷித்து அரசனே என்ன வரம் வேண்டும் என அரசன் புத்திரர் வேண்டுமென்று தன் மனைவியை முனிவனிடம் போக ஏவினன். அரசபத்தினி தான் செல்லாமல் தன் தோழியை அனுப் பினள், அத் தோழியிடம் இரண்டு புத்தி ரர் பிறந்தனர். அப் புத்திரரை அரசன் நோக்கித் தன் தேவியிடம் பிறந்தவர் அல்லரென்றறிந்து மற்றொருநாள் தன் தேவியை அனுப்பினன். முனிவர் நான் உன் னைப் பரிசிக்கேன் நீ என்மீது தயிர், உப்பு, தேன் முதலியவற்றைக்கலந்து என் உடம்பெல்லாம் பூசிப்புணரின் இஷ்ட சித்தி பெறுவையென அவ்வாறே செய்து அபானஸ் தானத்தில் பூசாததனால், இருடி உனக்கு அபானமில்லாத புத்திரன் பிறப்பன் என்றனன். இதைக்கேட்ட இராஜமகிஷி வேண்ட முனி அவளை உடம்பெங்கும் தடவிப் பார்த்து என் பரிசத்தால் உனக்கு அநேக புத்திரர் பிறப்பர் என்றனர். பின் முனிவனை முன் சொன்ன எருதின் தாய் வந்து தன் குமரனுக்குச் செய்த உதவிக்கும், கோதர்மம் கைக்கொண்டதற்கும் உதவியாக உனக்குக் கண் கொடுக்கிறேன் என்று உடலைமோந்து பிரகஸ்பதியின் சாபத்தை நீக்கிற்று. இந்த அரசனாகிய பலியின் சந்ததியில் (36) வது கர்ணன், இவனைச் சூதன் என்பவன் வளர்த் தது பற்றிச் சூதவம்சத்தவன் எனப்பட்டனன். 3. உதத்யன் குமரன். இவன் பாரி பிரதேஷிணி, குமரர் கௌதமர் முதலியோர். 4. கக்கீவன் தந்தை. 5. ஒரு ரிஷி. உசத்தியன் குமரன்.

தீர்க்கசிவகன்

இவன் காசிராசனகப் பிறந்தவன்.

தீர்க்கதபசு

ஒரு ருஷி, பலியின் க்ஷேத்திரத்தில் புத்திர உற்பத்தி செய்தவர்.

தீர்க்கதமசு

உசீனனது மனைவியாகிய மமதையைக் குரு வலியப் புணரப்போக வயிற்றிலிருந்த கரு நான் உன் தமயன் மைந்தன் உன் கரு இதிலமையாதெனத் தடுக்கக் குரு அக்கருவை நீ குருடனாகெனச் சபித்தனன், அதனாலிவன் இப்பெயர் பெற்றனன். இவன் தம்பி மனைவியைப் புணரச் சென்றபோது தம்பி கோபித்து இவனைக் கங்கையில் விட மாபலியென்போன் கங்கையிற் செல்லுமவனையெடுத்துத் தன்னிருக்கையில் வைத்திருக்கையில் இவன் அம்மாபலிக்குப் புத்திரர் இலாமை கண்டு சுதேக்ஷணை புத்திரப்பேறு வேண்டின் உன் மனைவியென்னிடம் வருகவென அரசன் அவன் மனைவிக்குக் கூற அவள் உடன்படாது தோழியையனுப்பத் தோழி தவத்தால் ஞானியை அன்புடன் புணர இவளிடம் கட்சீவதன் பிறந்தனன். பின் முனிவன் அரசன் வேண்ட அவன் மனைவி உப்பு, தேன், தயிர் கலந்து என்னுடம்பிற் பூசித்தன்னாவின் கக்கின் புத்திரர் உளராம் என அவ்வாறு அவள் புரிகையில் அபானத்தைப் பூசாது விட்டனள். ஆதலால் அவளுக்கு அபானமில்லாக் குமரன் பிறந்தனன். இவளுக்கு அங்கன், வங்கன், கலிங்கன், சிங்கன் முதலிய புத்திரர்கள் பிறந்தனர். இந்தத் தீர்க்க தமசு பின்னால் இவன் கோசம்ரக்ஷணம் செய்தமையால் தவத்தால் கோதமனாயினன். (மச்ச, புரா)

தீர்க்கதவன்

புண்ணிய பாவனர்க்குத் தந்தை. இவனிறந்ததற்குப் பாவகன் விசனப்பட்டதறிந்து புண்ணியன், யாக்கை நிலையாமை கூறித் தேற்றினான்.

தீர்க்கதுண்டன்

ஒரு காகம். இது துருவாசரிட்ட பலி அன்னத்தைக் கவர்ந்து செல்லுகையில் மற்றொரு காகம் அதனை மறித்தது. அதனால் அந்த அன்னம் ஒரு சிவன்டியவர் பாத்திரத்தில் விழுந்தது. அது இரண்டாமுறை கவர்ந்து செல்லுகையில் அதை ஒரு வேடன் எய்தனன். அதனால் உயிர்நீங்கிச் சிவகணமாயிற்று. (அவிநாசித்தல புராணம்.)

தீர்க்கதேவன்

ஒரு முனிவன், தீர்க்கதமனுக்கு ஆசிரியன்.

தீர்க்கன்

மகதராஜன், பாண்டுவால் கொல்லப்பட்டவன்.

தீர்க்கபாகன்

திருதராட்டிரன் குமரன்.

தீர்க்கபாதன்

கருமுக வாநரத் தலைவன்.

தீர்க்கபாது

(சூ.) கட்டுவாங்கன் குமரன். இவன் குமரன் ரகு.

தீர்க்கபுசன்

திருதராட்டிரன் குமரன்.

தீர்க்கப்பிரக்யன்

1. பாரதவீரரில் ஒருவன், உருஷபர்வன் அம்சம். 2. உத்தர கோசலநாட்டரசன்.

தீர்க்கயஞ்ஞன்

பீமனால் திக்குவிஜயத்தில் செயிக்கப்பட்ட வடநாட்டரசன்.

தீர்க்கலோசனன்

துரியோதனன் தம்பி, பதினான்காம் நாள் பீமனால் இறந்தவன்.

தீர்க்கவசன்

திருதராட்டிரன் புத்திரன்

தீர்க்காதேவி

நிருதியின் தேவி.

தீர்த்தங்கரர்

இவர்கள் சைநதீர்த்தங்கார்கள். இவர் ஆதி தீர்த்தங்கரர் எனவும், மத்தியகால தீர்த்தங்கரர் எனவும், பவிஷ்யத்காலதீர்த்தங்கரர் எனவும் மூன்றுவகையர், இவர்களுள் ஆதி தீர்த்தங்கரர்களைப் பற்ற யும், பவிஷ்யக்கால தீர்த்தங்கார்களைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. மத்யகால தீர்த்தங்கரர்களைப்பற்றி அவ்வவர் பெயர்களில் காண்க, ஆதி தீர்த்தங்கார்கள் இருபத்தினால்வர். நிர்வாண, சாகா, மகா சாது, விமலப்பிரப, ஸ்ரீதர, சுதத்த, அமலப்பிரப, உத்தர, ஆங்கீர், சந்மதி, சிந்து, குசுமாஞ்சலி, சிவகண, உத்சாக, ஞானேச்வா, பரமேச்வா, விமலேச்வா, யசோதா, கிருஷ்ண, ஞானமதி, ஸுத்தமதி, ஸ்ரீபத்ர, அதிக்கிராந்த, சாந்தாச்சேதி முதலியவர். மத்தியகால தீர்த்தங்கரர் அல்லது வர்த்தமான தீர்த்தங்கரர். ருஷபர், அசிதர், சம்பவர், அபிநந்தனர், சுமதி, பத்மப்பிரப, சுபார்சவ, சந்திரப்பிரப, புஷ்பதந்த சீதள, சிரேயாம்ச, வாஸுபூச்ய, விமல், அருந்த, தர்ம, சாந்தி, குந்துநாத அர, மல்லி, முனு ஸூவிரத, நமி, நேமி, பார்சுவ, வர்த்த மானர் முதலிய இருபத்தினால்வர். பவிஷ் யதகாலதீர்த்தங்கரர் மகாபத்ம, சுரதேவ, சுபார்சுவ, சுயம்பிரப, சர்வாத்மபூத, தேவ புத்ர குலபுத்ர, உதங்க, புரோஷ்டீல செய கீர்த்தி, முநிஸுவ்ரத, அர, நிஷ்பாப, நிஷ்கஷாய, விபுல நிர்மல, சித்ரகுத்த, சாமதிகுப்த, ஸ்வயம்பு அநவிர்த்தகர், சய, விமல, தேவபால, அருந்தவீர்யாச்சேதி முதலிய இருபத்தினால்வர்.

தீர்த்தபசு

சுராஷ்டான் குமரன். இவன் குமரன் தன்வந்திரி,

தீர்த்தப்பிள்ளை

கந்தாடை லஷ்மணாசாரி யர் குமரர், வேதாந்ததேசிகர் திருவடி தீர்த்த விசேஷத்தால் பிறந்தவர். இவர்க்கு ஆயிஆழ்வான் பிள்ளை எனவும் பெயர்.

தீர்த்தமாகாத்மியம்

தீர்த்தங்களாவன; கங்கை, கோதாவிரி, நருமதை, சிந்து, ஜம்புமார்க்கம், கோடி தீர்த்தம், சர்மண்வதி, சோமநாதம், பிரபாஸகம், சரஸ்வதி, பிண்டாரகம், கோமதி, சர்வசித்தி, பூமி தீர்த்தம், பிரம்மதுங்கம், பஞ்சநதம், பீம தீர்த்தம், கிரீந்திரம், தேவிகை, பாபநாசமி, குமாரகோடி, குருக்ஷேத்ரம், வாரன தீர்த்தமாகா திமியம் கபாலமோசனம், பிரயாகை, சாளக்ராமம், வடேசதீர்த்தம், வாமக தீர்த்தம், காளிகா சங்கம், லௌஹித்யம், காதோயம், சோணம், ஸ்ரீபர்வதம், கோல்வகிரி, சக்ய தீர்த்தம், மலய தீர்த்தம், துங்கபத்திரை, வாதா, தபதி, பயோஷ்ணி, தண்டகாரண்ய தீர்த்தம், காளஞ்சரம், முஞ்சவடம், ஆர்ப்பாரகம், மந்தாகினி, சித்ரகூடம், சிருங்கபேசம், அவந்தி, அயோத்யா தீர்த்தம், சரயு, நைமிசதீர்த்தம், கும்பகோணம், பாபநாசம், யமுனை, சேது, மணிகர்ணிகை, பலபத்ரை, மாயா, மதுரா, அவந்தி, கேதாரம், நீலதண்டம், நேபாளம், இமவந்தம், கிருஷ் ணை, க்ஷரம், பினாகி, தாம்ரபாணி, வைகை, முதலிய தீர்த்தங்கள். இத்தீர்த்தங்களை நாடோறும் மனோவாக்குக் காயங்களால் ஸ்மரித்தாலும், வித்யை, தபம், கீர்த்தி முதலிய பலம் பெறுவர். தீர்த்தயாத்திரை விரும்பிய ஒருவன் லகு ஆகாரமுள்ளவனாய் ஜிதேந்திரியனாய்ப் புறப்படின் ஸர்வயஞ்ஞ பலங்களை அடைவன். மூன்று இரவு உபவாசமாய்த் தீர்த்தக்கரையிலிருந்து காஞ்சனம், பசு முதலியவை தானஞ் செய்தவன் எல்லாப் பலன்களையும் அடைவன். கையிலொன்று மில்லானும் தீர்த்தயாத்திரையை முன்னிட்டுப் பிரயாணப்படின் பஞ்ஞபலன் பெறுவன். மேற்கூறிய தீர்த்தங்களில் இரு அயநங்கள், கிரஹண புண்யகாலம், சநித்ரயோதசி, துவாதசி, அமாவாசை, பூரணை, ஏகாதசி, பிதுர்திவசம், வருஷசங்கிராந்தி, ஆடி, ஆவணி மூலம், தீபாவளி, மகாநவமி, யுகாதி, கேதாரவிரதம், விநாயகசதுர்த்தி, கந்த சஷ்டி, சிவராத்ரி, கோகுலாஷ்டமி, கார்த்திகை, மகம் முதலிய விரத்தினங்களில் ஸ்நானஞ்செய்து சங்கற்பஞ்செய்து (100) (1000) முழுக்கிட்டுக் காயத்ரியாதி மந்திரங்களைச் செபித்து, மரணமானவர்களின் எலும்புகளைத் தீர்த்தத்திலிட்டுப் பிண்டங்கள் முதலிய போட்டுத் தர்ப்பணாதிகள் செய்யின் பிதுர்க்கள் நற்கதி பெறுவதுடன் தாங்களும் இம்மையில் சகலபோகங்களையு மடைந்து மறுமையில் சுவர்க்காதி போகங்களையும் முத்தியையும் பெறுவர். தீர்த்தோத்தமமாகிய கங்கையில் எவ்வளவு காலம் மரணமடைந்தவன் எலும்பு இருக்குமோ அவ்வளவு காலம் அவன் சுவர்க்கத் தில் இருப்பன். (“யாவதஸ்தி சகங்காயாம் தாவதஸ்வர்க்கே ஸதிஷ்டதி”) கங்கை. தகையைத் தரிசிக்கினும், பரிசிக்கினும், உரிசிக்கினும், கீர்த்திக்கினும் புண்ணியத்தையடைகிறான். மகா தீர்த்தமாகிய பிரயாசை; இது திரிமூர்த்தி ஸ்தானம், இது யமுனையும், கங்கையும் கூடுமிடம்; இது பூதேவிக்கு ஜனனமென்று கூறப்படும். இதின் மிருத்திகையை யெடுத்துப் பூசிக்கொள்ளி னும் சர்வபாவங்களினின்று நீங்குவான். கங்காதவாரத்திலும், பிரயாகையிலும், கங் கைசாகா சங்கமத்திலும், தானம் முதலிய செய்பவன் சுவர்க்காதி போகங்களையடைவன், பிரயாகையிலிருக்கும் வடமூலத்தில் உயிர்விட்டவன் விஷ்ணுபதம் பெறுவன். (ஆக்னேய ~ புராணம்).

தீவகவணி

(விளக்கணி) குணம், தொழில், சாதி, பொருள் குறித்து ஒரு சொல் ஓரிடத்தினின்று செய்யுளின் பல இடத்தினின்ற சொற்களோடு பொருந்திப் பொ ருளை விளைவிப்பது. இது மேற்கூறிய குண முதலிய பற்றி முதனிலை, இடைநிலை, கடைநிலைகளைப்பற்றி முதனிலைச் குண தீவகமுதலியவாக வேறுபட்டுவரும். பின்னும் மாலை, விருத்தம், ஒரு பொருட் சிலேடையெனவுங் கூறுபடும். (தண்டி.)

தீவதிலகை

1. மணிப்பல்லவத்துள்ள புத்த பீடிகையை இந்திரன் கட்டளைப் படியே காத்திருப்பவளாகிய ஒரு தெய்வ மங்கை, மணிப்பல்லவத்து முதலில் மணி மேகலையைக்கண்டு அவள் தனிமை தீர்த்து அளவளாவியவள். மணலில் புதைந்திருந்த புண்ணியராசன் பழயசரீரத்தை அவனுக்குக் காட்டியவள். (மணிமேகலை).

தீவு

1. (7) நாவல், இறலி, குசை, கரவுஞ்சம், புட்காம், இலாங்கவி, பூகம். 2. நான்கு பக்கங்களிலும் ஜலத்தால் சூழப்பட்ட பூபாகத்திற்குத் தீவு என்று