ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
திகிதேவதாவிரதம் | இது ஆடி சுக்ல தசமியில் அநுஷ்டிப்பது, இதில் திக்தேவதைகளை அந்தத்திக்குகளில் ஸ்தாபித்துப் பூசித்தல் வேண்டும். |
திகைப்பூண்டு | இது தென் இந்தியா காடுகளிலுள்ள ஒருவகைப் பூண்டு. இதை மிதிக்கின் புத்தி மயக்கமடைந்து அலைந்து திரிவர் என்பர். |
திக்கஜம் | அட்டதிக்கஜத்தைக் காண்க. |
திக்கு | 1. இது நித்தியம், விபு, சங்கியை, பரிமாணம், பிரதக்தவம், சையோகம், விபாகம் எனும் ஐந்துகுணம் உடையது. 2. (8) கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு. இவற்றுடன் ஆகாயம், பூமிசோ, பத்தாம். |
திக்குப்பாலகன் | (சுராட்டு) பதினாயிரம் ஊர்களின் வரிகளை அரசனுக்குச் சேர்ப்பிப்பவன். (சுக்கிர நீதி.) |
திக்குப்பாலகர் | அட்டதிக்கு பாலகரைக் காண்க. |
திக்குப்பாலகர் குறிகளாவன | கொடி, புகை, சீயம், நாய், இடபம், கழுதை, யானை, காகம். இவை யெண்டிசையோனி யென்ப. |
திக்குவணன் | பிராமணனுக்கு அயோகவ கன்னி இடத்துப் பிறந்தவன். இவன் தொழில் தோல்வர்த்தகஞ் செய்வது. |
திக்தி | (சூ.) விதி அவ்யயன் குமரன். |
திக்மகேது | வச்சிரன் குமரன். |
திக்ஷணா | கிரிசாசுவன் தேவி, தக்ஷன்பெண்; இவளுக்குத் திடணை எனவும் பெயர். |
திசா | வடக்குத்திசையின் தேவதை, அஷ்டவக்ரரைப் பலவிதமாக மயக்கினவள். |
திசைச்சொல் | எனைத் திசைகளிலிருந்து ஒரு பாஷை வழங்குநாட்டில் வழங்குவது. |
திசைமுகக்கரு | பிரமகாயிகலோக முதலிய பிரமலோகம் இருப்பதினுழள்ள இருபது வகைப்பட்ட பிரமகண பிண்டங்கள், |
திசையறிகருவி | இது, நாவா யாத்திரிகளாகிய கப்பலோட்டிகளுக்குக் கடிகாரம் போல் திசைகளைக் குறிப்பிட்ட வட்டபீடிகையில் பொருத்தப்பட்ட காந்த ஊசி. இது வடக்கு நோக்கியே நிற்பதால் மற்றத் திசைகளை எளிதில் அறியலாம். |
திசையோனிநிலை | கருடன்; கிழக்கு, பாம்பு; மேற்சூ, சிங்கம்; தெற்கு, யானை; வடக்கு, பூனை; தென்கிழக்கு, எலி; வட மேற்கு, நாய்; தென்மேற்கு, முசல்; வட கிழக்கு. இவைகளில் அருக்கனில் கருடனை வைத்து முறையே பார்க்கும்போது எதிர்க்கெதிர் பகை யோனி நிற்கும் அவற்றுள் கருடன் திசையிலிருந்து பாம்பு திசைக்குப் போகலாம், பாம்பு திசையிலிருந்து கருட திசைக்குப் போகலாகாது. எனெனின், கருடன் இரைகொள்ளப் போகையில் பாம்பு இரையாக வரும். ஆதலால் ஒருவன் யாத்திரைக்குப் பக்ஷி முதலிய சகுனங்கள் பார்க்கையில் இரையாகும் யோனி திசையிலிருந்து இரையெடுக்கும் யோனி திசைக்கு அவை போகலாகா. |
திடசேநன் | சிரதன் குமரன், இவன் குமாரன் சுமதி. |
திடணை | திக்ஷணாவைக்காண்க, குமரர் வேதசிரசு, தேவன், வயிநன், மது. |
திடன் | 1. (சஙந்.) மதிவான் குமரன், மனைவி காளிந்தி. 2, திரிகர்த்தன் தம்பி. |
திடமதி | ஒரு சூத்திரன், இவன் முனிவன் ஆகவேண்டித் தன் நண்பனாகிய சுமதி முனிவனை நோக்கி என்னைப் பிராமணன் ஆக்குக என்ன அவன் அவ்வாறே எஞ்ஞோபவீதம்சாத்தி வேதமந்திரம் உபதேசித்தனன்; அதனால் முனிவன் பல பிறவி எடுத்து முடிவில் வேதியனாய்ப் புண்ணிய தீர்த்த ஸ்நானபலத்தால் முத்தி அடைந் தனன். திடமதியோ பல ஜன்மங்களில் பட்டு உழன்று பருந்தாய்த் தீர்த்தயாத்திரை செய்தவர். உடலினின்று தெறித்த நீர்த்துளியால் பலித்தரனாய்த்தேவர் உலகு அடைந்தனன். (திருச்செங்கோட்டுப் புராணம்) |
திடவிரதன் | ஒரு அரசன், வேட்டைமேற் சென்று தாகத்தால் விஷங்கலந்த நீரையுண்டு சிவபூசையால் அதைப் போக்கிக் கொண்டவன். |
திட்டத்துய்ம்மன் | துருபதன் குமரன். யாகத்தில் தேருடன் பிறந்தவன். திரௌபதியின் சகோதரன். பாரதயுத்தத்தில் சேநாபதியாயிருந்தவன். இவனை அக்நி அம்சம் என்பர். இவன் குமரன் திருஷ்ட கேது, அக்கியும்சம். இரண்டாநாள் பாண்டவர் சேநாபதி: |
திட்டிவிடம் | கண்களில் விடமுடையதோர் பாம்பு. இது நஞ்சு விழியாவெனும், அழற்கணாகம் எனவும் வழங்கப்படும். (Ep. graphia Indica, Vol. 3. Page, 232) காண்க.) |
திணகன் | ஒரு க்ஷத்திரியன். |
திணை | 1. (2) உயர்திணை, அஃறிணை. (5) குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் இவை முறையே மலை, மணற்காடு, காடு, ஊர், கடல்சார்ந்த நிலங்கள். 2. (2) அகத்திணை, புறத்திணை. |
திணைமாலை நூற்றைம்பது | மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் இயற்றியது. அகப்பொருளை நதிணைக்கும் முப்பது முப்பதாகப் பாடிய நூற்றைம்பது வெண்பாக்களை யுடையது. |
திணைமொழி ஐம்பது | 1. ஐந்திணையைப் பற்றிச் சாத்தாந்தையார் மகனார் கண்ணன் சேந்தனாராலியற்றப்பட்ட தமிழ் நூல். இது சங்கமருவிய நூல், ஐந்திணையிற் சேர்ந்தது. 2. கண்ணஞ் சேந்தனாரி யற்றியது. ஒவ்வோர் அகப்பொருட்டிணைக்கும் பத்தாகப் பாடிய ஐம்பது வெண்பாக்களை யுடையது. |
திண்டாமுண்டி | சிவகணத்தலைவரில் ஒருவன். |
திண்டி | (டிண்டி) ஒரு வேடன். இவன் அயோத்தி வந்து இருடிகளைக்கண்டு தவஞ் செய்துகொண்டிருக்கையில் இவனைப் புற்று மூடிற்று. இராமர் அவதரித்தபின் லீலையாய் அப்புற்றைக் குத்த அதிலிருந்து வேடன் தோன்றி இராமமூர்த்தியைத் தொழுது முத்தி பெற்றவன். 2. ஒரு தேவன். இவன் சூரியனிடம் ஞானோபதேசம் பெற்றுப் பிரமனிடஞ் சென்று ஆதித்ய கிரியாவிசேஷங்களைக் கூறினவன். (பவிஷ்யத்~புரா.) |
திண்டிமன் | வேதாந்த தேசிகரிடம் வாதிட்டுத் தோற்ற கவி. |
திண்டீரன் | ஒரு அசுரன், இவன் தேவர்களை வருத்தத் தேவர்கள் அரியைப் பிரார்த்திக்க விஷ்ணுமூர்த்தி நாம் பூமியில் மல்லிகார்ச்சுனனாய் அவதரித்து உமது துன்பத்தை நீக்குகிறோம் என்றபடி அவ்வாறு ஸ்ரீசந்திரன் என்பானுக்குக் குமரராய் அவதரித்து அசுரனைக் கொன்றனர். மல்லிகார்ச்சுனனைக் காண்க. |
திதளாசுரன் | தேவர்களை வருத்தித் தெய்வ லோகத்தை தன் வசப்படுத்தி யிருந்து சிவமூர்த்தியாலிறந்த அசுரன். |
திதி | 1. காச்யபர் தேவி, தக்ஷன் குமரியரில் ஒருத்தி, தைத்தியரைப் பெற்றவள். திருப்பாற்கடல் கடைந்தகாலத்துத் தேவர் செய்த வஞ்சனையால் சினங்கொண்டு காசிபர் சொற்படி (1,000) வருஷம் தவஞ் செய்கையில் இந்திரன், ஒருநாளுறங்குகையில் வாயு வுருவமாக வயிற்றில் புகுந்து பிண்டத்தை (7) கூறாகச் செய்து நீங்கினன், அவர்களே மருத்துக்கள். இரண்யனிரண்யாக்ஷனை (500) வருஷம் சுமந்து பெற்றவள், 2. இவள் அதிதி இந்திரனைப் பெற்றது போல் தானும் ஒரு குமரனைப் பெறக் காசிபரை வேண்டிப் பெறுமளவில் வலிமை கண்ட அதிதி பொறாமை கொண்டு இந்திரனை நோக்கி உன் பகைவனைக் கொல்க என இந்திரன் இவள் வயிற்றிற் புகுந்து ஏழு கூறாகச் சிசுவைச் சேதித்தனால் திதி யுணர்ந்து அதிதியை வசுதேவர் தேவியாகப் பிறந்து ஏழு குமாரர்களைப் பெற்று அதனால் வருத்தழறவும், இந்திரனைத் தன் பதமிழந்து துன்புறவும் சாபமளித்தவள், (தேவி~பாரதம்). |
திதி நக்ஷத்ரயோகங்களின் விருத்தி க்ஷயம் | நக்ஷத்திரவர்த்தனை, நாழிகை ஆறரை, ஷயம்; நான்கேகால், யோகவர்த்தனை நாழிகை (1) க்ஷயம் (அ) திதிவர்த்தனை நாழிகை (5 1/4) க்ஷயம் ஆறரை, |
திதிகளாவன | பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசியை ஆக (15). பதினைந்தாம் திதி கிருஷ்ண பக்ஷத்தின் இறுதியாயின் அமாவாசையும் சுக்கில பக்ஷத்தின் இறுதியாயின் பௌர்ணமியம் வரும். இதில் சந்திரன் தோன்றும் முதல் பக்ஷம் சுக்கிலபக்ஷம் என்றும், சிவோவி என்றும் பெயர். சந்திரன் குறையும் பிற்பக்கம் கிருஷ்ணபக்ஷம் எனவும் குகு எனவும் பெயர் பெறும். இவற்றில் பிரதமை, ஷஷ்டி, ஏகாதசி மூன்றும் தந்தை எனப்படும். துவிதியை, சப்தமி, துவாதசி மூன்றும் பத்திரை எனப்படும். திரிதியை, அஷ்டமி, திரயோதசி மூன்றும் சயை எனப்படும். சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி மூன்றும் இருத்தை எனப்படும். பஞ்சமி, தசமி, பௌர்ணமி மூன்றும் பூரணை எனப்படும். இவற்றுள் நந்தையும், பத்திரையும் சுபகாரியங்கள் செய்ய ஆகா. திதி அமுத யோகங்களாவன ; ஞாயிற்றுக்கிழமையில் பிரதமையும், ஷஷ்டியும்; திங்கட்கிழமையில் துவிதியையும், சப்தமியும்; செவ்வாய்க் கிழமையில் சதுர்த்தசியும்; புதன்கிழமையில் அஷ்டமியும், திரிதியையும், திரயோதசியும்; வியாழக்கிழமையில் நவமியும்; வெள்ளிக்கிழமையில் ஏகாதசியும்; சனிக்கிழமையில் சதுர்த்தசியும் வருவன. சுப யோகங்கள் ஞாயிற்றுக்கிழமையிற் அஷ்மியும், திங்களில் நவமியும், செவ்வாயில் ஷஷ்டியும், புதனில் திரிதியையும், வியாழனில் ஏகாதசியும், வெள்ளியில் திரியோதசியும், சனியில் சதுர்த்தசியும் வருவன. நாச யோகங்கள்; ஞாயிறில் சதுர்த்தசியும், திங்களில் ஷஷ்டியும், செவ்வாயில் சப்தமி யும், புதனில் துவிதியையும், வியாழனில் அஷ்டமியும், வெள்ளியில் நவமியும், சனியில் சப்தமியும் வருவன. ஞாயிறில் பஞ்சமியும், கார்த்திகையும்; திங்களில் துவிதியைபும், சித்திரையும்; செவ்வாயில் பூரணையும், ரோகணியும்; புதனில் சப்தமியும், பரணியும்; வியாழனில் திரயோதசியும், அனுஷழம்; வெள்ளியில் ஷஷ்டியும், திருவோணழம்; சனியில் அஷ்டமியும், ரேவதியும் வருவனவாம். அக்னி யோகங்கள்; ஞாயிறில் துவாதசியும், திங்களில் ஷஷ்டியும், செவ்வாயில் சப்தமியும், வெள்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவனவாம். தக்க யோகங்கள்; ஞாயிறில் துவாதசியும், திங்களில் ஏகாதசியும், செவ்வாயில் பஞ்சமியும், புதனில் துவிதியையும், வியாழனில் ஷஷ்டியும், வெள்ளியில் அஷ்டமியும், சனியில் நவமியும் வருவனவாம். |
திதிக்ஷ | மகா மனுவின் குமரன். இவன் குமரன் குருசத்திரன். |
திதித்யாசச்யம் | பிரதமைக்கு 24, அஷ்டமிக்கு 20,த்விதியைக்கு 12, திரிதி யைக்கு 55, சதுர்த்திக்கும் கவமிக்கும் 5, பஞ்சமிக்கும் ஷஷ்டிக்கும் 54, சப்தமிக்கு 31, தசமிக்கு 33, ஏகாதசிக்கு 1, துவாதசிக்கு 15, திரயோதசிக்கு 29, சதுர்த்தசிக்கு 7, பூரணைக்கு 29, அமாவாசைக்கு 6,இந்த நாழி கைகளுக்குமேல் 4 நாழிகைத்யாஜ்யம் |
திதித்ரயம் தினத்ரயம் | ஒரு வாரத்தில் (5) திதிகள் (3) நக்ஷத்ரங்கள் வருதல், இவ்வகை நாட்களில் தேவ உற்சவாதி சுயகாரியங்கள் கூடா. (விதானமாலை). |
திதியன் | நெடுஞ்செழியனால் தலையாலங்கானத்துச் செரு வெல்லப் பட்டவன். இவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து அன்னியொடு பொருது அவனது நாவன்மரத்தை வெட்டியவன். |
திதியமிர்தயோகம் | திதிகளைக் காண்க. |
திதியாதிபலம் | தத்தமுடைய நட்பாட்சி உச்சத்தினும், வர்க்கோதயத் தினும், வக்ரித்தகாலத்தினும் மும்மடி பலமுண்டாம். அத்தமித்து நின்ற பொழுதும், நீச்சத்து நின்ற பொழுதும் பாதிப் பலமுண்டாம். சத்ருபவனத்தில் நின்ற பொழுது காற்பல முண்டாம். திதியில் வாரம் பலம்; இவ்விரண்டினும் நடித்திரம் பலம்; இம்மூன்றினும் உதயம் பலம்; இந் நான்கினும் உதயத்து நின்ற பிரகஸ்பதியும், சுக்ரனும் பலவான்கள். (விதானமாவை). |
திதிராசிதோஷம் | திரிதியையில் சிங்கம், மகரம்; சப்தமியில் கர்க்கடகம், தனு; பஞ்சமியில் கன்னி, மிதுனம்; திரயோதசியில் இடபம், மீனம்; ஏகாதசியில் தனு, மீனம், நவமியில் விரிச்சிகம், சிங்கம்; பிரதமையில் மகரம், துலாம் இந்தத் திதிகளில் இந்த இராசிகளுதயமாகச் சுபம்கூடாது. (விதா.) |
திதிஷூப்தி | பிராதா இறந்தவன், தமயன மனைவி புத்திர உற்பத்திக்காகத் தர்மமாகத் தன்னிடத்தில் வந்திருந்தபோதிலும் அவளிடத்துக் காமத்தினால் ஆலிங்கன முதலிய சிருங்கார சேஷ்டை செய்கிறவன். |
திதீக்ஷை | தக்ஷகனுக்குப் பிரசூதியிடத்துதித்த குமரி, யமன் தேவி. |
தித்தன் | உறையூரிலிருந்த சோழன், சோழன் பிண்டநெல்லி நாட்டினன். கோர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் தந்தை (புற~நா.) |
தித்திரி | ஒரு பக்ஷி தைத்திரீயத்தைக் காண்க. 2. ஒரு ரிஷி. 3. ஒரு சர்பம். |
தித்திரிபுரிலன் | ஒரு நாகன். |
திந்துசாரன் | நிதந்துவின் குமரன். |
தினபலன் | ஜன்ம நட்சத்திர முதல் அன்றைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையுடன் ஞாயிறு முதல் அன்றைய வாரம் வரையிலும் பிரதமை முதல் அன்றைய திதிவரையிலுங் கூட்டிக் கண்ட தொகையைச் சேர்த்து ஒன்பதிற் கழித்த மிச்சம் (1) வியாகூலம்; (2) சுபம்; (3) தூர்வார்த்தை (4) பந்து தரிசனம்; (5) பெண் போகம்; (6) சுபம் (7) கல கடி; (8) ரோகம்; (9) ஞானவாக்கியம், |
தினமிருது | அஸ்தம், அவிட்ட முதற்கால்; விசாகம், திருவாதிரை இரண்டாங்கால்; ஆயிலியம், உத்திரட்டாதி மூன்றாங்கால்; பாணி, மூலம் நான் காங்கால், தினமிருத்துவாம். இக் காலங்களில் சுபகன்மங்கள் நீக்கப்படும். இரவில் தோஷமில்லை. சந்தி என் பூரணனாய் ஒரு சுபக்கிரகத்துடன் நிற்கையில் பகலிலும் தோஷமில்லை. (விதானமாலை.) |
தினை | (சாமை) ஒருவகைத் தானியம். இது ஏழைகளுக்கு ஆகாரமாக உதவுகிறது, இது வட ஆப்ரிகா, யுனைடெட்ஸ்டேட்ஸ், இந்தியா, ஐரோப்பாவின் தென்பாகம் முதலிய இடங்களில் விளைகிறது. |
தின்னாநரி | மதுரைக்குத் தெற்கே ஒருகாத தூரத்திலுள்ள தோரூர். (திருவிளை.) |
திபதகேது | தெக்ஷசாவர்ணி மநுப் புத்திரன். |
திபோதாசன் | திவோதாசனுக்கு ஒரு பெயர், |
திப்புத்தோளார் | கடைச்சங்கத்துப் புலவர். இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். நாயகனைக் குமரவேளுக் கொப்பாக குறுந்தொகை முதற் செய்யுள் கூறியவர். |
திமி | காசிபர் தேவி, தக்ஷன் குமரி சலசந்துக்களைப் பெற்றவள், |
திமிங்கலன் | இராசத பர்வதத்தினரசன். |
திமிங்கில வகையில் | சாகப க்ஷணி, மாமிசபக்ஷணி என இரண்டு வகை களுண்டு. சாகபக்ஷணிக்குப் பற்களுண்டு, மாமிசபக்ஷணிக்குப் பற்கள் கிடையா. இத் திமிங்கிலங்களில் மன்னாத்தித் திமிங்கிலம், கோங் திமிங்கிலம், கூடன் திமிங்கிலம், ஸ்டெல்லாய் திமிங்கிலம், பல்லுள்ள திமிங்கிலம், வெள்ளைத் திமிங்கிலம், நீலத் திமிங்கிலம், தலைபருத்த திமிங்கிலம், ஈட்டி மூக்குத் திமிங்கிலம் என பல பேதங்கள் இருக்கின்றன. மன்னாத்தித் திமிங்கிலம்: மேற்கூறிய திமிங்கிலம் போன்றுள்ளது. இது குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்ப்பதாதவின் இதனைக் கடற்பசு வென்பர். கோங்திமிங்கிலம்; இது அமெரிகா, ஆஸ்திரேலியா கடல்களி லுள்ளது. இதன் விலா தட்டை, வயிறு முதுகுகளின் பக்கம் அகற்சி. இது 10, 15 அடி நீளம், இது சாகபக்ஷணி. ஸ்டெல்லாய் திமிங்கிலம்: மன்னாத்தி போன்றதே. இது 20 முதல் 25 அடிகள் நீளம், சாகப்க்ஷணி. கூன் திமிங்கிலம்: இது வடக்டலிலுள்ளது. 60 அடி நீளம். இதன் மூக்கு மற்ற திமிங்கிலங்களுக்கிருப்பது போலில்லாமல் நேர் மட்டமாய் நிமிர்ந்திருக்கிறது. இதன் முதுகு கூன் பக்கத்தில் சிறகு பெற்றிருக்கிறது. இதற்கு ஏற்றத் தாழ்வான வரிகளுண்டு. வடகடற்றிமிங்கிலம்: இது 89 அடிகளுக்கு மேற்பட்ட நீளழம் அதற்குத் தகுந்த கனமுள்ளது. இதன் வாயில் கீழ் நோக்கிய பல் 10, 15 அடிகள் நீளம். இது இரை வேண்டிய காலத்து வாயை அங்காந்து திரிய வாயிற் பட்டவைகளைக்கொண்டு நீரை மூக்கின் வழி மேல்நோக்கி விடும். இது எல்லாத் திமிங்கிலங்களிலும் பெரிது. தென்கடற்றிமிங்கிலழம் 70 அடிகள் நீளம், இதன் நாக்கு 20 அடி நீளம், 12 அடிகள் அகலம், இது மாமிசபக்ஷணி. தலைபருத்த திமிங்கிலம்: இது தக்ஷிண சமுத்திரவாசி. இதன் வாய் முகத்தின் மேல்பாகத்திராமல் சுறாவைப்போல் கீழ்பாகத்திலிருக்கிறது. இது 60 அடிகளுக்கு மேற்பட்ட நீளம், இதன் மூக்கு 12 அங்குல நீளம், கண்கள் சிறியவை. இத் திமிங்கிலத் தில் ஒருவகையான மஞ்சள் எண்ணெயிருக்கிறதாம். ஒருவகை உயர்ந்த மெழுகும் இதனிடம் உண்டாகிறது. அதனை ஸ்பெர்மாலிட்டி வாக்ஸ் என்பர். இதன் குடலிலிருந்து அம்பர்கிரீஸ் எனும் மணப்பொருள் எடுக் கின்றனர். கிராம்பஸ் : இது ஒருவகை திமிங்கிலம், இது 30 அடி நீளம். இது திமிங்கிலங்களையும் வேட்டையாடித் தின்றுவிடும். மகா வலிவுள்ள ஜெந்து. |
திமிங்கிலம் | இது நீர்வாழ் மிருகம், இது நீர்வாழ் பிராணிகளில் பெரிது; சுமார் 80 அடி நீளம் இருக்கும், இதன் தலை பெரியது. வாய் பெருத்து அகன்றிருக்கும், வாயில் பற்களுக்குப் பதிலாகச் சீப்புப்போன்ற எலும்புகள் மேலுதட்டினின்று தொங்கும்; இது பன்னாடை போன்றது. இதனாலிது உட்கொள்ளும் ஆகாரத்துடன் சேர்ந்த நீரை வடிக்கிறது. தொண்டை குறுகியது. கண்களும் காதுகளும் சிறியவை. கண்களுக்கருகிலிரண்டு பக்கங்களிலும் ஏறக்குறைய (9) அடி நீண்டும் (4) அடி அகன்றுமுள்ள முட்களுண்டு. கால்கள் குறுகியவை. வால் ஏறக்குறைய (20) அடி நீண்டு வலியதானது, நிறம் கறுப்பு, தோல் தடித்திருக்கும், வயிறு வெளுத்தது, இதன் ரத்தம் மிருக ரத்தம்போலுஷ்ணமானது. இது தன் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும். இது சுவாசத்தை உள் வாங்குகையில் நீர் உட்சென்று வெளிவருகையிலதி தூரம் உயரும். இது நீர் மட்டத்தின் மேல் வந்து நித்திரை செய்யும். இது வடகடல் வாசி. இதைக் கொழுப்பிற்காகவும், தோல், எலும்பிற்காகவும், உணவிற்காகவும் வேட்டையாடுவார்கள். இதன் வேட்டை அபாயமானது, இதற்கென்றுள்ள படவில் ஏறி ஈட்டியில் கயிறு கட்டி யெறிந்து பிடிப்பர். இது தன் வாலால் படகையும் கப்பலையும் எறிந்து மூழ்குவிக்கும். இதனைத் தூரத்திலிருந்து சுட்டுங் கொல்வர். திமிங்கிலத்தை விழுங்குமீன் திமிங்கிலகலம், |
திமித்துவசன் | இந்திரன் வேண்டுகோளால் தசரதன் துணையிருக்க இந்திரனால் கொல்லப்பட்ட அசுரன். இப்போரில் கைகேயி தசரதனுக்கு இரதம் செலுத்தி இரதத்தில் அவனது மூர்ச்சை தெளிவிக்க அவன் களிப்படைந்து இரண்டு வரம் கேட்க வென அவற்றை வேண்டியபோது பெறுகிறேன் என்று இராமனை வனம் புகச் செய்தனள். |
திமிராபதம் | முக்கியமான அக்னி. |
திம்மராஜன் | இவன் கி. பி. 1515ல் விஜய நகர சமஸ்தானத்தில் மந்திரியாக இருந்ததவன். விஜயநகரத்தரசன் கட்டளைப்படி செங்கற்பட்டை அரசாண்டவன். இவன் தன் பெயரால் செங்கற்பட்டில் ஒரு குளம் தோண்டுவித்தான். அதற்குத் திம்மராஜா குளம் என்று பெயர். |
திம்மவாகு | திர்யோதனன் தம்பி. |
தியத் | பீமன் என்னும் ஏகாதசருத்திரன் தேவி. |
தியா | எட்டாவது வசு. இவன் தேவி அங்குலா. அஷ்டவசுக்களும் தங்கள் தேவியருடன் பூலோகத்திற்கு வரும்போது வசிஷ்ட தேனுவாகிய நந்தினியைக் கண்டு தியாவின் மனைவி அதின் சிறப்புக்களைக் கேட்டுப் பூலோகத்தில் உசீநருடைய மகளுக்கு அதனது பாலையுண்பிக்க எவ்வகை யேனும் களவு செய்து தரவேண்டும் என அவ்வகை உடன்பட்டுச் செய்து வசிட்டரால் மனிதனாகப் பிறக்கச் சாபமேற்றுப் பூமியில் பீஷ்மராகப் பிறந்தவர். |
தியாகராஜகவிராயர் | இவர் ஊர் விருத்தாசலம், சைவர், மயூராசல புராணம் பாடியவர். |
தியாகராஜமூர்த்தி | இயர் விஷ்ணுமூர்த்தியால் பூசிக்கப்பட்ட சோமாஸ்கந்தர். எவ்வகை எனின், விஷ்ணுமூர்த்தி புத்திரப் பேறு வேண்டிச் சிவமூர்த்தியை எண்ணித் தவம் இயற்றினர். சிவமூர்த்தி ஒரு புத்திரன் உண்டாக வரமளித்தனர். தேவியார் தம்மைப் பூசிக்காததினால் சினம் கொண்டு அப்புத்திரன் பிறந்து சில நாட்களில் மரணம் அடைக எனச் சாபம் இட்டனர். இதனால் விஷ்ணுமூர்த்தி பிராட்டியாரை வணங்கிக் கேட்கப் பிராட்டியார் நமது சாபம் அனுபவியாமல் ஒழியாது எனக் கூறிப் பின்னர் அநுக்கிரகித்தனர். உன் புத்திரன் பிறந்து இறைவனது நேத்திரத்தினால் அழிந்து மீண்டும் எழுந்து நெடுநாள் உருவிலியாய் இருக்க என்றனர். அன்று முதல் விஷ்ணுமூர்த்தி சோமாஸ்கந்த திருவுருவத்தினைத் திருப்பாற்கடலில் தாம் துயிலும் அரவணையில் தமது மார்பு இடத்துக்கொண்டு யோகநித்திரை புரிந்து இருந்தனர். அந்தக் காலத்துச் சோமாஸ்கந்த மூர்த்தி ”மேகமொன்று நீள்வெள்ளி வெற்பணைந்தென விளங்கு நாகணைமேவி, யோக நற்றுயில் கொண்டுறை கடவுணெட் டுயிர்ப்பசைவா லன்னா, னாகமீ தசைந் தாடியே யமர்ந்தன னமுத சந்திர மோலி, யேக நாயகனம்பிகை கந்தனோ டெண்ணிலாவுல குய்ய” என்றபடி அசைந்து ஆடி இருந்து வரம் தந்தவர் ஆதலால் இப் பெயர் பெற்றனர். இச்சோமாஸ் கந்தமூர்த்தியை விஷ்ணுவிடம் இந்திரன் தன்னாடு வளம் பெறவேண்டிப் பெற்றுப் பூசித்து வருகையில் வலன் என்னும் அசுரனை இந்திரன் வேண்டுகோளால் வெல்லும்படி வந்த முசுகுந்த சக்கரவர்த்தி கேட்க இந்திரன் அது விஷ்ணுவின் கட்டளையால் கொண்டு செல்லத்தக்கதென அவ் விஷ்ணுவின் கட்டளை ஏற்று முசுகுந்தன் கேட்கத் தர மனமிலாத இந்திரன் வேறு ஆறு சோமாஸ்கந்தமூர்த்தங்களைச் சிருட்டித்துத் தர அவற்றைச் சக்கிரவர்த்தி மறுப்ப இறுதியில் இந்திரன் தான் பூசித்த சோமாஸ்கந்த மூர்த்தியினைக் கொடுக்கக் களிப்புடன் பெற்றுத் திருவாரூரில் பிரதிஷ்டை செய்வித்து மற்ற ஆறு மூர்த்திகளையும் ‘சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு, காரார் மறைக்காடு காராயல், நேரே உற்ற திருவாய்மூர் உகந்த திருக்குவளை, சத்த விடங்கேசர் தலம் ” என்னும் ஆறு திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்வித்துத் தரிசித்து இருந்தனன். |
தியாசகன் | பிதுர்க்கள் பதின்மரில் மூவர். |
தியாச்சியம் | நக்ஷத்திரங்களில் சுபகாரியம் செய்யக்கூடாதகாலம். நக்ஷத்திரம் காண்க. |
தியுமத்சேநன் | 1. மகாபலனாயிருந்த ஒரு அரசன் கிருஷ்ணனால் செயிக்கப்பட்டவன். 2. சாளுவன் பாண்டவர் சேநாபதி பிரத்தியும்நனுடன் யுத்தஞ் செய்தவன். 3. சாளுவ தேசாதிபதி சத்தியவதனன் பிதா, சாவத்திரியின் மாமன். 4. கிருஷ்ணனால் வெல்லப்பட்டவன். |
தியுமந்தன் | சுவரோசி மனுவிற்கு வந்தேவதையிடம் பிறந்த குமரன். |
தியுமான் | 1, வசிட்டருக்கு ஊர்சையிடம் உதித்த குமரன். 2. சூர்ய வம்சத்து மதிராஸ்வன் புத்திரன், 3 சாளுவராஜன். ருசிகன் பொருட்டு ராஜ்ஜியத்தைக் கொடுத்தவன். |
தியூதம் | சொக்கட்டான் சதுரங்க முதலிய வெளிப்படைத் திருட்டு. (மநு.) |
திரசதன் | புருகுத்தன் குமரன், அநரண்யன் தந்தை. |
திரசதயன் | இருக்கு வேதத்திற் புகழப்பட்ட ஒரு அரசன். |
திரசதாச்யன் | மாந்தாத்ரியன் பௌத்திரன், இவன் ருக்வேதத்தாற் புகழப்பட்ட கொடையாளி. |
திரசனு | (தம்சு) ஒரு க்ஷத்திரியன் அந்தியனாரன் புத்திரன், தாய் சரஸ்வதி, மனைவி காளிந்தி, புத்திரன் இளீளன். |
திரடசுதன் | இத்மவாகனைக் காண்க. |
திரடதன்வா | ஒரு அரசன். |
திரணகூபம் | ஒரு தடாகம், பலராமர் தீர்த்தயாத்திரைகாலத்து ஸ்நாநஞ் செய்தது. |
திரணபிந்து | 1. பந்து என்பவன் குமரன். இவற்கு மூன்று குமரர். விசாலன், சூன்யபந்து, தூம்பிரகேது. ஒரு பெண் இளிபிளை. காசிபருக்கு மாமனார், புலத்தியர்க்கு மாமன் எனவுங் கூறுவர். சுத்தியும்னன் முற்பிறப் புணர்ந்து களித்தவர். 2. ஒரு இருடி, இவர் செய்த தவத்தைக் கெடுக்கத் தேவர் அரணி யென்ற தேவமாதை அனுப்ப அவள் இவரை மயக்க இருடி சினந்து நீ மானிட வுருக்கொள் எனச் சபித்தனர். அச்சாபம் ஏற்ற அந்த மாது போஜராஜன் புத்திரியாகிய இந்து மதியெனப் பிறந்தனள். 3. மருத்சக்ர வர்த்தியின் வம்சத்தவனான புதன் குமரன்; இவன் குமரன் விசாலன். 4. ஜமதக்னியின் குமாரராகிய தொல்காப்பிய மகருஷிக்கு ஒரு பெயர். இவரைத் திரண தூமாக்னி யென்பர். 5. ஒரு இருடி; இவர்க்குச் சிவபெரு மான் ஒரு குடத்திலிருந்து பிரசன்னராய் அவரது குட்டநோயை நீக்கினர். |
திரணபிந்துசரம் | திரணபிந்து அரசனால் உண்டாக்கப்பட்ட ஒரு தீர்த்தம், |
திரணபுருஷன் | இவன் தேவர் முதவியோரின் இறுமாப்பைக் கெடுக்கச் சிவபிரானால் துரும்பு போல் செய்விக்கப் பெற்ற புருஷன். இவன் மீது விதி விஷ்ணு இந்திராதியர் யுத்தத்திற்கு வந்து சற்று மவனை அசைக்க வலியற்று நீங்கித் தேவியை துதித்து அவளருளால் மகாதேவனை வணங்கி உண்மை யுணர்ந்தனர். (சிவரஹஸ்யம்). |
திரணாசநன் | கௌதமிதீரத்து இருந்த பன்னாசனன் குமரன். சிவத்தைத் தரிசிக்காமல், சத்தியைத் தரிசித்த தோஷத்தால் அரக்க வுருக்கொண்டு நாரத முனிவர் சொற்படி மணிகன்னிகையில் மூழ்கி நல்லுருவ வடைந்தவன். (திருப்பூவண புராணம்). |
திரணாவர்த்தன் | ஓர் அரக்கன், கண்ணன் குழந்தைப் பருவத்துக் கண்ணனை அந்தரத்துத் தூக்கிச் சென்று கொல்ல முயன்று அவரால் கொல்லப்பட்டவன். |
திரமிடன் | 1. இருஷபனுக்குச் சயந்தியிடமுதித்த குமரன். 2. சத்தியாதனனைக் காண்க. |
திரமிடம் | கர்நாடக ஆந்திர தேசங்களுக் கிடையிலுள்ள நாடு, Part of the Decaan from Madras to Soringa patam and Cafe Comorio. Its Captial wasKancbi pure, modern name Conjeevaram, |
திரயருணன் | இருக்கு வேதத்திற் கூறப்பட்ட ஒரு அரசன். |
திரயாரணன் | சூர்யாரணியன். திரயாருணி காரிஷியன் குமரன். |
திரயோதசி ஜயபார்வதி விரதம் | இது ஆடி சுக்லபக்ஷ தாயோ தசியில் அநுட்டிப்பது. |
திரவணன் | வருணன் குமரன். |
திரவிடன் | சூர்யவம்சத் தரசன்; இவன் யோகியாயினன். |
திரவிடம் | 1. (5) தமிழ், ஆந்திரம், கன்னடம், மகராட்டிரம், கூர்ச்சரம். 2. தட்சணத்திலிருந்து கன்னியாகுமரி ஈறாக உள்ள தேசம். |
திரவிணகன் | அக்தி யென்னும் வசுவிற்கு வசோற்தாரையிட முதித்த குமரன். |
திரவியத்தன்மை | நித்யாநித்ய வஸ்துக்களில் சமவாய சம்பந்தமுடையதாயும், நித்ய மரயும், குணகர்மங்களில் சமவாய சம்பந்த மில்லாத தாயுழள்ள சாதி. |
திரவியம் | (5) மலைப்படுவன, காடுபடுவன, நாடுபடுவன, நகர்படுவன, கடல்படுவன. மலைபடுதிரவியம்: மிளகு, கோஷ்டம், அகில், தக்கோலம், குங்குமம். காடுபடுதிரவியம்: இரால், தேன், அரக்கு, நாவி, மயிற்பீலி. நாடுபடுதிரவியம்: செந்நெல், சிறுபயிறு, கரும்பு, வாழை, செவ்விளநீர். நகர்படுதிரவியம்: அரசன், பித்தன், மந்தி யானை, கண்ணாடி. கடல்படுதிரவியம்: உப்பு, முத்து, பவளம், சங்கு முதலிய. |
திராக்ஷாராமம் | ஆந்திர, கர்னாடக, மகாராட்டிர தேசங்களுக்கு இடையிலிருக்கும் பர்வதம், |
திராக்ஷை | இது கரடு முரடான கொடி, இது உறுதியானது. ஒவ்வொரு கொடியிலும் பல கணுக்கள் உண்டு. இதன் இலைகள் பீர்க்கனிலைபோ லிருக்கும்; பூ சிறிதாக இருக்கும். பூ மாறினவுடன் பிஞ்சுகள் கொத்தாய் முதிர்ந்து பழமாம். ஒவ்வொரு குலையில் (50)க்கு மேற்பட்ட பழங்களிருக்கும், குலை முனை குவிந்தும் அடி பருத்துமிருக்கும். பழங்கள் பசுமை நிறமாக இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் (2, 3) விதைகளுண்டு. இதன் உற்பத்தி பதி வைத்தல். பழம் தின்றால் பித்த சாந்தம். தேனில் ஊறவிட்டுண்ணவும், சாராயம் செய்யவும் உதவும். |
திராவகயந்திரம் | மருந்திட்ட பாத்திரம். அப்பாத்திரத்தின் பொருத்தமான தூம்பமைந்த நீர்நிலை மூடி எரிக்கத் நூம்பின் வழி திரவம் இறங்குவது, |
திராவிடபூபதி | திராவிட தேசத்தரசன், இவனிடம் அகத்தியர் யாகத் திற்குப் பொருள் கேட்க இவன் அவரது எண்ணத்தை முடிக்கவில்லை. |
திராவிடம் | தமிழ்க்கு ஆரியரிட்ட ஒரு பெயர். ஒரு தேசம். |
திராவிடாசாரி | வேதாந்த சூத்திரத்திற்குப் பாஷ்யஞ் செய்தவர். |
திரிஃயு | யாயித புத்திரன் (2) சந்திரவம் சத்து மதிமான் புத்திரன். |
திரிகடுகம் | சங்க மருவிய நீதி நூல். இது பதினெண்கீழ்க்கணக்குகளுள் ஒன்று. இது நல்லாதனாரால் இயற்றப்பட்டது. மும்மூன்று பொருள்களை விளக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்துட்பட) நூற்றொன்றுடையது. |
திரிகந்தம் | கிராம்பூ, நாவற்பூ, சண்பகப்பூ |
திரிகருத்து | ரசஸ்ஸு குமரன். |
திரிகர்த்தம் | பாகலீக தேசத்திற்குத் தென்மேற்கிலுள்ள விபாசைந்திக்குச் சமீபத்திலுள்ள தேசம். இது ஆர்யாவர்த்தத்திற்கு மேற்கிலுள்ள தேசம், இத் தேசாதிபதி திரிகர்த்தன். Jalandhar, & part of the district of Lahore. |
திரிகாலவாசுதேவர் | யதுகுல பேதம். |
திரிகுத்து | (ச.) சுசியின் குமாரன், பிரமனுக்குச் சாரதி, இவன் குமரன் சாந்திரதன் |
திரிகூடம் | ஒரு பர்வதம். |
திரிசகன் | நாலாமன் வந்தரத்திந்திரன். |
திரிசங்கு | 1. சூர்யகுலத்தரசன், திரிபந்தனன் குமரன், பாரி கேகய ராசபுத்திரியாகிய சத்யவதி, இவன், தான் உடலுட சுவர்க்கமடைய வேண்டித் தனது ஆசாரியராகிய வசிட்டமுனிவரைக் கேட்க அவர் மறுத்ததால் ஆசாரியரைக் கோபித்தனன், அதனால் வசிட்டர் திரிசங்கினைச சண்டாளனாகச் சபித்தனர். திரிசங்கு விச்வாமித்ரரிடம் அடைந்து நடந்ததைக் கூற விச்வாமித்ர முனிவர் தமது தபோபலத்தினால் போகச் செய்து சுவர்க்கத்தை அடைந்தனன். அவ்விடம் தேவர்கள் சண்டாள தேகமுள்ள இவனைக் கண்டு தலைகீழாய்த் தள்ள விழுகையில் விச்வாமித்திரர் இவனுக்கு அபயம் தந்து ஒருபதம் தரப்பெற்று அந்தரத்தில் நின்றவன். இவன் குமரன் அரிச்சந்திரன். சூர்யாரண்யன் குமரன் எனவுங் கூறுவர். பிருது குமரன் எனவுங் கூறுவர். (பாகவதம்). 2. இவன் திரையாருணன் குமரன்; இவனுக்குச் சத்தியவதனன் எனவும் பெயர். இவனது தீச்செயலால் இவனை இவன் பிதாவனத்திற் கோட்ட அவ்விடத்தில் இவன் விச்வாமித்திரர் குடும்பத்தைக் காக்கத் தீத்தொழில் செய்துகொண்டு வருகையில் இவன் பிதா வசிட்டரை நோக்கி இராஜ்யத்திற்குக் குமரனில்லையென இன்னும் சிறிது நாளில் சத்தியதனன் இராஜ்யம் பெறுவானெனக் கூறிச் சத்தியவ தனபனத் தான் தவத்திலிருக்கையில் ஏவல் செய்யக் கட்டளையிட்டுப் பன்னிரண்டு வருஷம் யோகத்திருந்தனர். அச்சமயத்தில் விசுவாமித்திரர் குடும்பத்தைக் காக்க உணவுகாணப்படாது வசிஷ்டதேனுவைக் கொன்று விசுவாமித்திர குடும்பத்திற்குக் கொடுத்துத் தானும் புசித்தனன். இதனையறிந்த வசிட்டர் உன்னை இப்பொழுதே கொல்வேன் உன் தந்தைக்கு உன்னை அரச னாக்குகிறேனென்று வாக்களித்ததால் மனம் வரவில்லையாயினும், நீ பரஸ்திரீகளைப் புணர்ந்ததும், ஜீவஹிம்சை செய்ததும், பசுவைக் கொன்றதுமாகிய மூன்று குற்றங்களைச் செய்தனை உன் குற்றத்திற்காக முன்னமே யுன் தலையில் சங்கினை யடிக்கவேண்டும்; அவை மூன்றினையுஞ் சேர்த்து அடிக்கிறேனென்று அவன் தலையில் சங்கடிக்கச் சத்தியவதனன் எனும் பெயர் நீங்கித் திரிசங்காயினன். (சிவமகா புராணம்). இவன் தேவி சத்யாதை. (சங்கு முளை.) சத்திய விரதனைக்காண்க. 3. அவிபூ குமரன் இவன் குமரன் சித்திராதன்; இவன் ஒருவேதியன் கிருத்திகா விரதம் அநுஷ்டித்து அரசன் ஆயினன். |
திரிசடை | விபீஷணன் குமரி. சாநகி இலங்கையில் சிறையிருந்தகாலத்து அவளைத் தேற்றியவள். பிரமாத்திரத்தால் மூர்ச்சித்த இராமலக்குமணரைக் கண்டு சீதாபிராட்டி துக்கித்தகாலத்து அவளைத் தேற்றியவள். |
திரிசதசு | (ச.) புருகுச்சன் குமரன், (சூ.) மாந்தாதாவுக்கு இந்திரன் இட்ட பெயர். |
திரிசந்ரிதிகை பீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
திரிசஷ்டிசலாகாபுருஷர்கள் | சைநசமயங் காண்க. |
திரிசிரன் | 1. விசிரவசுவிற்குக் காலையிடத் துதித்த குமரன். இவன் சூர்ப்பநகையாற் நூண்டப்பட்டு இராமபிரானிடம் யுத்தத்திற்குவந்து இரண்டு தலையிழந்து பிறகு ஒரு சிரத்துடன் மாயத்தால் யுத்தஞ் செய் திறந்தவன். இவனுக்கு மூன்று சிரம். 2. சங்கராசனைக் காண்க, |
திரிசிரா | இராவணன் குமரன்; அதிகாயன் யுத்தத்தில் அநுமனால் கொல்லப்பட்டவன். |
திரிசூல பீடம் | சத்தி பீடங்களில் ஒன்று. |
திரிசொல் | கற்றவர்க்கே பொருள் விளங்குஞ் சொல், |
திரிதசீ | அகத்தியர் குமரர்; தாய் உலோபாமுத்திரை. |
திரிதண்டி | சந்நியாசி இவன் வாக்தண்டம், கர்மதண்டம், மனோதண்டம் மூன்று முடைமையினிப் பெயர் பெற்றான். (வாயுபுராணம்). |
திரிதன் | 1. பிரமன் புத்திரன். 2. கௌதம புத்திரன். |
திரிதன்வன் | திரையாரணி தந்தை. சுமநன் குமரன் |
திரிதன்வா | (சூ.) விசுமன் குமரன்; தண்டியால் சிவநாமம் ஓதி அச்வமேதபல மடைந்தவன். |
திரிதர் | கௌதம புத்திரர், இவர் வேதத்தில் வல்ல சாந்தர் இவர்க்கு ஏகதர், திவிதர் என இரண்டு சகோதரர் இருந்தனர். இவர்கள் யாகத்தின் பொருட்டுப் பொருள் சம்பாதிக்க விரும்பித் திரிதரை முன்னிட்டுப் பொருள்களும் பசுக்களும் சம்பாதித்து வருகையில் திரிதர் முன் சென்றார். சென்ற திரிதருக்குச் செந்நாயொன்று காணப்பட் டது. அதைக் கண்டு பயந்து திரிதர் கிணற்றில் விழுந்தார். பின்வந்த சகோதரர்கள் இவரால் நமக்கு இலாபங் கிடையாதென்று கிணற்றிலேயே விட்டுச் சென்றனர். திரிதர் கிணற்றிலிருந்தபடி அடைந்த ஜலத்தைத் தோண்டித் தொங்கிய கொடியைச் சோமரசமாகவும் நீரை நெய்யாகச் செய்து ஓமஞ் செய்தார். தேவர்கள் இவர் செய்த யஞ்ஞத்திற்கு வந்து பாகங்கொண்டு அவரைக் கிணற்றினின்றே சரஸ்வதியை அக்கிணற்றில் பெருகச் செய்தனர். சரஸ் வதி பெருகியிவரை வெளிப்படுத்தினள். திரிதர் தேவர்களை நோக்கி இதில் எவர்கள் ஸ்நானஞ் செய்யினும் அவர்கள் எல்லா யாக பலன்களை யுமடைய வரம் பெற்றனர். இவர் தம்மைக் கிணற்றினின்று மீட்காத உடன்பிறந்தாரைச் செந்நாய் குரங்குகளாகச் சபித்தனர். பலராமர் தீர்த்த யாத்திரையில் இதில் ஸ்நானஞ்செய்தார். (பா~சல்.) |
திரிதினஸ்பிர்கிது | ஒரு திதியாவது, ஒரு நக்ஷத்திரமாவது, ஒரு யோகமாவது மூன்று நாட்களிற் கலந்திருப்பது. |
திரிதிவை | ஒருந்தி; இது பாரிபத்ர பர்வதத்தில் உற்பத்தியாவது. |
திரிபணி | 1. அஃதாவது உபமானப்பொருளானது அப்பொழுது நிகழ்கின்ற செய்கையிற் பயன்படுதற் பொருட்டு உபமேயத்தி னுருவத்தைக்கொண்டு பரிணமித்தலாம். இதனை வட நூலாற் பரிணாமாலங் காரம் என்பர். 2. உவமைப் பொருள் உபமேயத்தின் உருவத்தைக்கொண்டு வேறுபடுதல். (பரிணாமாலங்காரம்). |
திரிபந்தனன் | (சூ.) திரியகுலான் குமரன். |
திரிபாகி | இது சொல்லணியிலொன்று. மூன்றெழுத்தாய் ஒன்றின் பெயராய், முதலுமீறும் ஒன்றின் பெயராய், இடையுமீறும் ஒன்றின் பெயராயினவென்று வாசகம் செய்வது. பாதிரி என நிறுத்தி, பாதிரி, பாரி, திரி, என்றவிழ்ப்பது. (யாப்பு~வி.) |
திரிபாததிரிமூர்த்தி | சிவமூர்த்தி ஒருவரே தம்மில் பிரமவிஷ்னுக்களை யொடுக்கிக் கொண்டு தாம் ஒருவரே திரிமூர்த்தி சுவ ரூபர் என்பதைத் தெரிவிக்க நின்ற திருக்கோலம். |
திரிபுரதாசர் | இவர் மதுராநகரத்தரசனது மந்திரி. இவர் இல்லறத்து வெறுப்புள்ளவராய் மாதவன்மீது. சிந்தைகொண்டு தமக்கிருந்த பொருள் முழுதும் பாகவதர்க்குக் கொடுத்துப் பிக்ஷைசெய்துகொண்டு துளசி வனத்தில் கண்ணனைக்கண்டு அவன் வடிவழகை யனுபவித்திருக்கையில் ஒரு நாள் பெருமாளுக்கு ஒரு போர்வையிட எண்ணங் கொண்டு பொருளிலாமையால் மசிக்கூட்டினை விற்றுப் போர்வை வாங்கி அர்ச்சகனிடம் தந்து பெருமாளுக்குப் போர்க்கவென அர்ச்சகன் இது பெருமாளுக்குப் பற்றாத போர்வையென்று படுக்கையாகக் கொண்டனன். பெருமாள் தமக்குக் குளிர் கலக்கச் செய்து நடுக்க அர்ச்சகர் எங்குள்ள போர்வைகளும் போர்க்க நின்றிலது. தாசர் கொடுத்த கலைமேல் துயின் றோன் கனவிடைப் பெருமாள் சென்று தாசா கொடுத்த கலையினைப் போர்க்கின் குளரடங்குமென அவ்வாறு செய்யக் குளிர் நின்றது. இதனையறிந்த பாகவதர் தாசரைப் பணிந்து போற்றினர் |
திரிபுரபைரவிபீடம் | சத்தி பீடங்களில் ஒன்று, |
திரிபுரம் | 1. தாரகாசான் குமாரராகிய வித்துற்மாலி, தாரகாஷன், கமலாக்ஷன் இவர்கள் மூவரும் சிவபூஜாபலத்தால், பொன் வெள்ளி, இரும்புக் கோட்டைகளைப் பெற்று அக்கோட்டைகளுடன் பறந்து சென்று தேவர்களை வருத்தியிருந்தனர். இதனால் தேவர், சிவமூர்த்தியிடம் முறை யிடச் சிவபிரானிவர்களிடத்துள்ள சிவப்பற்று மாறில் இவர்க்குச் செல்வங்குறையு மெனக்கூறக் கேட்டுக் களிப்புடன் விஷ்ணுமூர்த்தியிடம் சென்று சிவமூர்த்தி திருவாய் மலர்ந்தருளியதைக் கூறினர் விஷ்ணு மூர்த்தி, தாம் புத்தராயவ தரித்து நாரதரைச் சீடராகக் கொண்டு திரிபுராதிகளிஞ் சென்று அவர்களுக்குள்ள சிவப்பற்றைக் கெடுத்தனர். அதனால் புத்தர் சிவ விரோதிகளாயினர். சிவமூர்த்தி இவ்வசுரரது இறுமாப்பைக் கெடுக்க எண்ணித் தேவர்களை நோக்கித் தேர்கொண்டு வரக் கட்டளையிட்டனர். விஷ்ணுமூர்த்தி, சூர்ய, சந்திரர்களைத் தேருருளையாகவும், காலம், வானம், உதயகிரி, அத்தகிரி, காட்டை, கணம், லவம், வேள்வி, ஐம்பூதம், இந்திரியம் இவற்றை முறையே பார், மேலிடம், நுகம், முன் கொம்பு, கொம்புக்காதாரப் பொருள்களாகவும், புராணங்களைப் படமாகவும், உலோகாலோ சபர்வதம் படியாகவும், அஷ்டகுல பர்வதங்கள் விதானமாகவும், அண்டமுகடு கொடிஞ்சியாகவும், இடைவெளி தட்டாகவும், வேதங்களைக் குதிரைகளாகவும், வாசுகியை நாணாகவும், மேருவை வில்லாகவும், பிரமனை முட்கோல் பிடித்துத் தேரைச்செலுத்தும் சாரதியாகவும் செய்வித்துத் தேர்முடிந்த தென்று கூறினர். சிவமூர்த்தி தேர்மேல் ஆரோகணித்து வில்லேக் கையிலேந்தி விஷ்ணு மூர்த்தியைப் பாணமாக்கி எய்யத் தொடங்குகையில் விஷ்ணு மூர்த்திக்கு மனதிலுதித்த இறுமாப்பை யெண்ணித் திரிபுரத்தை நோக்கியும் இவரது எண்ணத்தை யெண்ணியும் சிரித்தனர். இச்சிரிப்பின் சுவாலையால் திரிபுரம் தீப்பட்டது. இதில் மேற்கூறிய மூன்று அசுரர் சிவபூசை விடாமல் இருந்தவராதலால் தீப்படாமல் காக்கப்பட்டனர். 2. மற்றொரு காலத்தில் சாக பொருட்டுச் சிவபிரான் வேதங்கள் நாலும் தேராகவும் உபநிடதங்கள் குதிரைகளாகவும், உமையவள் சாரதியாகவும் பிரணவம் சவுக்காகவும் காலசக்கரம் வில்லாகவும், மகாமாயை நாணாகவும், பாசுபதாத்திரம் பூட்டி அவ்வசுரனது வலியடக்கினர், 3. ஒருகாலத்து, சத்த தந்து வென்பான் செய்த யாகத்தை அழித்தற் பொருட்டு அவியுண்ண வந்த தேவர்களை ஆகாசமே தேராகவும், வாயு குதிரையாகவும், அக்னி வில்லாகவும், சந்திரன் நாணாகவும், வருணன் அம்பாகவும் குமாரக்கடவுள் தேர்ப்பாகனாகச் சென்று தேவர்களை வென்றவர். 4. ஒரு வித்யாதர நகரம். |
திரிபுராந்தகன் | திரிபுரத்தை எரிக்க எழுந்த சிவன் திருவுரு. |
திரிபுராரி | 1. திரிபுரமெரித்த சிவமூர்த்தி. 2. ஒரு வேதியன் கங்கை யாடச்சென்று வழியில் யமுனை, மணிகன்னிகை ஆடுக எனக் கூறக் கேட்டுப் மறித்துச் சென்று காசி க்ஷேத்திரத்தினையும், கங்கையையும் காணாது அசரீரி யமுனை சொற்படி செய்க எனக் கூறக்கேட்டுத் திரும்புகையில் பேய்கள் தங்கள் பாபம் ஒழிய மணிகன்னிகை ஆட வேண்ட அங்கனம் உடன்பட்டுத் தீர்த்தம் ஆடி நலம் அடைந்தவன். (வேதா சண்ய~புராணம்). |
திரிபுருஷ்டன் | வஸுதேவருக்குத் திருதியிடம் பிறந்த குமரன். |
திரிபுவன வீரதேவராயன் | ஒரு அரசன், பட்டரைத் தம்மிடம் அழைத்தவன் |
திரிபுவனதேவன் | வச்சணந்தி, குணவீரபண்டிதர் காலத்திலிருந்தவன். |
திரிபுஷ்கரம் | ஒரு மகா க்ஷேத்ரம், |
திரிமதி | ஆனகதுந்துபி குமரி, இவள் ஒரு இயக்கனை மணந்தவள். இவள் குமரர், சுகோன், சுக்ரீவன், வீரன், போசன், ஆவாகன். |
திரிமூர்த்தி | 1. பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள். 2. அஷ்டவித்தியேசுரரில் ஒருவர். |
திரிமூர்த்திவாசம் | காஞ்சிக்கு ஒரு பெயர்; திரிமூர்த்திகளும் இத்தலத்தில் வசித்தலால் வந்த பெயராம். |
திரியகுணன் | (சூ.) அரியச்வன் குமரன். |
திரியம்சன் | (தா.) விப்ரசித்திக்குப் புத்ரன். |
திரியம்பகன் | மூன்று கண்களுடைய சிவமூர்த்தி, கணபதி, வீரபத்திரர் முதலியவருக்குப் பெயர், |
திரியம்பகம் | சிவமூர்த்தியின் வில், இது தக்ஷயஞ்ஞ அதத்தில் எடுத்தது. |
திரியு | யயாதியின் புத்திரன், இவன் புத்திரன் பப்புரு. |
திரியுட்காயோகம் | முக்கால் நாளான புனர் பூசம், விசாகம், பூரட்டாதி; கால் நாளான கார்த்திகை, உத்திரம், உத்திராடமும், பத்திரையான துதியை, சப்தமி, துவாதசியும், வெள்ளி, வியாழம், செவ்வாய் சேர்ந்த நாள் திரிபுட்கரயோகமாம். இவ்யோகத்தில் மரித்தல், சுடுதல் செய்தால் அக்குடியில் மூவர் மரிப்பர். (விதானமாலை). |
திரிலிங்கதேசம் | (தெலுங்க தேசமெனப்படும்). காளேச்வரம், க்ஷதிதரம், திராக்ஷாராமம், அல்லது ஸ்ரீசைலம் காளேச்வரம் பீமேச்வரம் இவைகளுக்கு நடுவிலிருக்கும் தேசம், இவர்கள் பேசும் பாஷை தெலுங்கு. |
திரிலோகசோழன் | இவன் சோழராஜாக்களில் ஒருவன். இவனைப் பிரமகத்தி பிடிக்க இவன் காஞ்சிநதி மூழ்கிப் போக்கிக் கொண்டான். |
திரிலோசந சிவாசாரியார் | இவர் சித்தாந்த சாராவளி யென்னும் சிவாகமபத்ததி திருவாய் மலர்ந்தவர். இவர் சிவாகமங்களையாராயச் சிவமூர்த்தியை வேண்டி மூன்று கண்கள் பெற்று இப்பெயர் பெற்றனர். இவர் சைவ ஆமர்த்தக மடத்தைச் சேர்ந்த சம்புசிவாசாரியரின் மாணாக்கர். |
திரிலோசநன் | மூன்று கண்களையுடைய சிவமூர்த்தி. |
திரிலோசனதாசர் | இவர் தட்டார் ஜாதியைச் சேர்ந்தவர்; இவரை அரசன் அழைத்து ஜேகிர் எனும் பணிசெய்து கொடுக்கும்படி பொன்மணி முதலியவுதவி இதனை மூன்று தினத்திற் செய்துகொடுக்கக் கட்டளை யிட்டனன். தாசர் உடன்பட்டு வருகையில் பாகவதர் எதிர்வரக் கண்டு அவர்களை உபசரித்து இரண்டு நாட்கள் வரையிலும் வைத்திருந்தனுப்ப அரசன் தொழலைத் தட்டார் மறந்து அரசனுக்கு அஞ்சி காட்டிலொளித் தனர். இவருக்கு வருந்துன்பத்தை நீக்கப் பெருமாள் இவரைப் போல் உருக்கொண்டு ஜேகிர் எனும் பணி செய்துகொண்டு அரசனிடஞ் சென்று கொடுக்க, அரசன் மகிழ்ந்து கொடுத்த வெகுமானங் கொண்டு தட்டாரது மனைவியாரிடங் கொடுத்துப் பாகவதருக்கு உணவளிக்கச்செய்து தாம் அந்த உணவில் சிறிது வஸ்திரத்தில் முடிந்து கொண்டு காடடைந்து தாசரைக் கண்டு தாம் திரிலோசனன் பாகவதருக்கிட்ட அன்ன மயக்கத் தால் வழி தெரியாது ஈண்டடைந்தேன் நீ களைத்திருக்கிறாய் இவ்வுணவில் சிறிது அருந்துக என உண்பித்து அத்தாசர், தம்மை யுடனழைத்துவரப் பின்றொடர்ந்து வீடடைந்து வளம் நோக்கி மனைவியை வினவ அவள் எல்லாம் நீ செய்திருக்க வினவுவ தென்னென வியந்து இது பெருமாளின் விளையாட்டெனப் புறத்தில் வந்து பின்றொடர்ந்தவரை நோக்கக் காணாது பெருமாள் தமக்காக வருந்தியதற்கு வருந்தித் துதித்திருந்தவர். |
திரிவக்கிரன் | ஒரு அரக்கன்; தேவி சுசிலை கபாலபரணனைக் காண்க. |
திரிவக்கிரை | மதுராபுரியில் கண்ணபிரான் சிருவவதரித்துத் திருவிளையாடல் புரிந்த காலத்தில் அவர்க்குச் சந்தனம்பூசி அவரைக் கூட எண்ணங்கொண்ட குப்சை; இவளைக் கண்ணபிரான் தீண்டிக் கூனை நிமிர்த்தி இவளிடம் உபசுலோகரைப் பெற்றனர். |
திரிவிகிரமரூபம் | இரண்டு முகம், நான்கு தோள் மேலிரண்டு கைகளும் இரண்டு கமலம் பிடித்தவராய் மற்ற இரண்டு கைகளும் அஞ்சலியத்தராய் கறுப்பு ரத்னாபரணம், கறுப்பு வஸ்திரம் உடையராயிருக் குஞ்சூரிய மூர்த்தி. |
திரிவிக்ரமன் | வாமனவுருக்கொண்டு மாவலிபாலடைந்து உலகளந்து தமது தரிசனம் சந்த விஷ்ணு மூர்த்தியின் திருக்கோலம், |
திரிவுக்காட்சி | ஒரு பொருளை மற்றொரு பொருளாக உணர்தல். (தரு.) |
திரிவேணி | கங்கை யமுனை சரஸ்வதி கூடுமிடம். |
திரிவேணி சங்கமம் | கங்கை, யமுனை, சரஸ்வதி முதலிய மூன்று நதிகள் கூடுமிடம், பிரயாகை (அலகாபாத்) இவ்விடம் நீராடினோர் சுவர்க்கமடைவர். தேகத்தை விட்டோர் அமிர்தமாகிய மோக்ஷத்தைப் பெறுவர். (இருக்கு). |
திரிஷதர் | ஒரு முனிவர், இவர் கார்த்த வீரியார்ச்சுனனுக்கு அக்னியை அஸ்திரமாக அருள் செய்தவர். |
திரிஹாயாணி | வேதவதியைக காண்க, |
திருஆடானை | துருவாசமுனிவர் பிருகுமுனிவரது ஆச்ரமம் அடைந்த காலத்து பிருகு அவரை உபசரியாததால் துருவாசர் அவரைத் தலை ஆடுருவாகவும் உடல் யானை வடிவமாகவும் சபித்தனர். இச்சாப வடிவொழிய பிருகு பூசித்த தலம். (வீரசிங்~புரா.) |
திருஆப்பனூர் | சோழாந்தகன் என்னும் பாண்டியனியித்தம் சிவபெருமான் ஆப்பினிடம் தோன்றிய தலம். (வீரசிங்~புரா) |
திருக்கச்சிநம்பிகள் | இவர் பிறப்பால் வைசியர், ஆளவந்தார் திருவடி சம்பந்தி, சங்கு கர்ணாம்சம், இளையாழ்வாரைக் காணக் காஞ்சிக்கு எழுந்தருளியபோது உடையவர், வர்ணாச்சிரமம் தவறித் தம்மைத் தண் டன் சமர்ப்பிக்க வெண்ணுகையில் தடுத்து அவர்க்கிருந்த ஐயப் பாடுகளைப் பெருமாள் நியமனப்படி இளையாழ்வாருக் கறிவித்தவர். இவர் கச்சித் திருவருளாளனுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வரும் நாட்களில் பெருமாள் இவரிடம் அன்புடன் வார்த்தை சொல்லி வருவர். இவர், ஒரு நாள் அருளாளன் என்னும் சிறுவனைத் தீவட்டி பிடிக்க என்று கூறிச் சந்நிதிக்கு எழுந்தருளினர். நம்பி சந்நிதிக்கு எழுந்தருளியபின் மழை பிடிக்கவே, அருளா என் வீடுவந்து உறங்கினன். நம்பி ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துச் சிறுவனைத் தேடச் சிறுவனுக்குப் பதிலாகப் பெருமாள் தீவட்டி பிடித்து வந்து நம்பியை வீட்டில்விட நம்பியின் மனைவியார் எதிர் கொண்டு சிறுவன் முன்பே வீடு வந்து சேர்ந்ததனால் தீவட்டி பிடிப்பவன் யார் என்றனர். நம்பி சிறுவனை நோக்கப் பெருமாள் மறைந்தனர். நம்பி பெருமாள் எழுந்தருளியதைப்பற்றி வருந்தப் பெருமாள் உனதன்பைப் பலருமுணர்ந்து பிழைக்க இவ்வகை செய்தனமென்றனர். தம்பி சிலநாளிருந்து பரமபதமடைந்தனர். இவர் ஸேநாபதியாழ்வாரம்சம். இவர் திருமழிசைக்கடுத்த பூவிருந்தவல்வியில் வீரராகவ செட்டியார்க்குக் கமலையார் என்கிற தேவியாரிடம் சக (931)க்குமேற் செல்லா நின்ற சௌம்யவருஷம் மாசிம் சுக்கில தசமி வியாழக்கிழமை அவதரித்தவர். இவர் தமது சகோதரருடன் தமக்கு வைத்த நிதிகள் எல்லாம் பெருமாள் விஷயத்தில் செலவிட்டுப் பெருமாள் நியமனப்படி செங்கழுநீர் சிந்தியிருந்த வழி நோக்கிச் சென்று கச்சிநகர் புகுந்து பெருமாளைம் சேவித்து நியமனப்படி திருஆலவட்ட கைங்கர்ய்ஞ் செய்திருந்தவர், இவர் காஞ்சிபுரத்தில் கைங்கர்யஞ் செய்துகொண்டிக்கையில் வள்ளுவர் ஒருவர் இவர் பாடி தூளிகளைத் தம் சிரசில் கொண்டுவருதா கண்டு அவரை யாது காரணமென் கேட்க அவர் பாகவத புக்தியால் நன்மை உண்டாமென, நம்பிகள் இது தக்கதன்றென வள்ளுவர் ஏது தக்கதோ அத பெருமாளை வினவி அருளுக என அவ்வாறே வினவிப் பாகவத பாதரேணுவால் பதவியுண்டாமெனக் கூற வள்ளுவர் தேவரீர் திருவடிப் பிரபாவத்தாலிது எனக்கு வாய்த்த தாசையான் தேவரீரிருக்குப் பேறு வாய்க்கும் காலம் வாய்ப்பதையும் பெருமாளை வினாவிக் கூறுவிரேல் அருகிருந்து சேவித்திருப்பேனென அவ்வாறே பெருமாளைப் பேறு வாய்க்குங் காலம் கேட்க ஆசார்ய அபிமானத்தால் முத்தி சித்திக்குமெனக் கேட்டுப் பெரிய நம்பிகளிடம் உருமாறிச் சென்று மாடு மேய்ப்பவனைப்போல் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கையில் ஒருநாள் பெரிய நம்பிகள் கிராமாந்தரஞ் சென்று மீள்கையில் மழை வெள்ளத்தில் வண்டி செலுத்திவந்து விளக்குக் கூட்டை ஒரு கையிலும் மாடுகளை ஒரு கையிலும் பற்றி வண்டி யழுந்து மிடங்களில் வண்டியைத் தூக்கித் தாம் நம்பிகளைக் குருமாளிகையில் கொண்டு சேர்த்தனர். பிறகு திருக்கச்சி நம்பிகள் மழையால் வருந்தி மூலையில் தாம் தரித்திருந்த ஈரவுடைகளைந்து பழையவுடையை உடுத்தித் திருமாளிகைப் புறத்திலிருக்கப் பெரியநம்பிகள் வேறு உடை கொண்டு மாட்டுக்காரனைத் தேடக் கச்சிநம்பிகள் எதிர் வரக்கண்டு திருக்கசி நம்பிகள் என வுணர்ந்து காரணம் வினவி அளவளாவியிருந்தனர். |
திருக்கண்ணபுரத்தந்தாதி | முனையத நயர்க்கு எழுதி விடுத்த செய்யுள். ‘இன்று வரிலென்னுயிரை பெறுவை யிற்றைக்கு, நின்றுவரிலதுவு நீயறிவை, வென்றி, கல விமுயங்கியவா றெல்லாம், நினையாயோ நெஞ்சத்து நீ. ” (தமிழ்நாவலர் சரிதை). |
திருக்கண்ணபுரத்தாச்சான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்பரை). |
திருக்கண்ணப்பதேவர்மறம் | நக்கீரர் கண்ணப்பரது அன்பினை யெடுத்துப் பாடிய பிரபந்தம். கல்லாடரும் ஒன்று இப்பெயராலியற்றினர். |
திருக்கண்ணமங்கையாண்டான் | நாதமுனிகளை யாச்ரயித்த ஸ்ரீவைணவர். இவர் இரண்டு நாய்கள் சண்டையிட்டு இறக்கக் கண்ட சொந்தக்காரர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு இறக்கக் கண்டு, அப்ராக்கிருதநித்ய சம்பந்தியான பெருமாள் திருவடிகளில் பரரியாசம் செய்தபின் ஒன்றும் செய்யக்கூடாதெனப் பெருமாளை ஆராதித்து முத்தி யடைந்தவர். இவர் திருக்கண்ணமங்கையில் வாழ்க்கைப்பட்டிருந்த ஸ்ரீமந்நாதமுனிகளின் உடன் பிறந்தாள் குமரர். இவர் பராபவளும், ஆவணிமீ திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்து லக்ஷிமீநாத தாதாசார்யரென்கிற பெயர் பெற்று எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்ததால் திருக்கண்ணமங்கையாண்டான் என்னப்பட்டு நாதமுனிகள் திருவடிகளில் ஈடுபட்டுக் கைங்கர்ய பரராயிருக்கையில் ஒரு நாள் பல்லக்கிலேறி வருகையில் இரண்டு சூத்திரர் நாய்கள் பொருட்டு மாய்ந்து கிடத்தலைக் கண்டு விரக்தி பூண்டு மௌனத்துடனிருந்து பெருமாளது தீர்த்த பிரசாதம் ஸ்வீகரித்துச் சில நாட்களிருந்து பெருமாள் மேல் வீடு தரப் பாமபதமடைந்தவர். |
திருக்கலிகன்னிதாசர் | நம்பூர் வரதராஜருக்கு ஒரு பெயர். நம்பிள்ளைக்கும் பெயராம், |
திருக்களிற்றுப்படியார் | சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று, திருக்கடவூர் உய்யவந்தார் அருளிச் செய்தது. |
திருக்காளத்தி புராணம் | திருக்காளத்தி மான்மியம் சொன்ன நூல், கருணைப்பிர காசதேசிகர் செய்தது |
திருக்குன்றத்தாசிரியர் | சொல்லூராசிரியர் ஆண்டைப் பெருங்குமரனா ரிடம் பொருளதிகாரம் கேட்டவர். |
திருக்குருகூர்தாசர் | ஆளவந்தார் திருவடி சம்பந்தி. |
திருக்குருகூர்ப்பெருமாள் கவிராசர் | இவர் பாண்டி மண்டலத்துத் திருக்குருகூரினர். இவர் வைசிய வைணவர். இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். மாறனலங்காரம், மாறனகப்பொருள், குருகைமான்மியம், மாறன்கிளவிமணிமாலை முதலிய இயற்றியவர். |
திருக்குருகை | தக்ஷிணபினாகினிக்குத் தென்கரையிலுள்ள விஷ்ணுத் தலம். |
திருக்குருகைப்பிரான் | பிள்ளானுக்கு உடையவர் இட்ட திருநாமம். பெரிய திருமலை நம்பியின் குமரர்; இவர் குமரர் புண்டாகார். |
திருக்குருகைப்பிரான் பிள்ளான் | பிரசண்டாம்சரான இவர், கலி (4162)க்கு மேல் பிலவ ஐப்பசி திங்கட்கிழமை திரு மலையில் (திருவேங்கடம்) அவதரித்தவர். (குருபரம்பரை). |
திருக்குருகைப்பெருமாள்கவிராயர் அல்லது சடையன் | இவர் மாறனலங்காரமெடி அணியிலக்கண மியற்றியவர். இதற்கு உரை தென்திருப்பேறையூரினராகிய காரி இரத்தின கவிராயராலியற்றப் பட்டது. இதில் உள்ள உதாரணச் செய்யுட்கள் பலவும் சடகோபர். விஷயமானவை |
திருக்குறள் | இது, திருவள்ளுவ நாயனாரா லியற்றப்பட்ட தரும நீதிநூல்; இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பாலாகவும், இவ்லறவியல், துறவறவியல், அரசியல், அங்கவியல், ஒழிபியல், களவியல், கற்பியல் என ஏழுவியல்களாகவும் (133) அதிகாரங்களாகவும் வகுக்கப்பட்டது. இந்நூற்கு தருமர், மணக்குடையர், தாமத்தர், நாசர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கலிப்பெருமாள், காளிங்கர் முதலிய உரையாசிரியர்கள் உரை இயற்றினர். இவ்வுரைகளுட் பரிமேலழகர் உரை சிறந்ததாகும். இதற்கு முப்பானூல், உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவர், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை எனப் பெயர். இது சங்கமருவிய பதினெண் கீழ்க்கணக்கி லொன்று. இதனது பெருமையைத் திருவள்ளுவமாலையா லறிக. |
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் | இவர் தொண்டைநாட்டில் காஞ்சிபுரத்தில் வள்ளுவர் குலத்தில் திருஅவதரித்துச் சிவனடியவர் குறிப்பின்படி அவர்க்கு ஆடை முதலிய அழுக்கு நீக்கி உதவிவருவர். இவ் வகை செய்து வரும் நாட்களில் சிவபெருமான் ஒரு விருத்தராய் அழுக்கடைந்த கந்தையுடன்வா அவரைத் தரிசித்த நாயனார் எதிர்கொண்டு பணிந்து உம்முடைய கந்தையைத் தந்தால் அடியேன் அழுக்கு நீக்கித் தருகிறேன் என்றனர். விருத்தர், இது கந்தையாயிலும் குளிர்க்கு ஆதரவாயிருக்கும், பொழுதுபோகுமுன் கொடுக்கின் தருகிறேன் என்றனர். நாயனார். அதற்கு உடன்பட்டுக் கந்தையை வாங்கிக் கசக்கி வெள்ளாவியில் வைத்து மீண்டும் கசக்கப் புகுந்தனர். அப்போது வான வெயில்முடி பழை பெய்தது. நாயனார், வாக்குத் தவறும் எனவும், விருத்தர் குளிரால் வருந்துவர் என எண்ணியும், பெரியவர்க்குத் தீங்கு செய்தவன் ஆகிறேன் என நினைத்தும் தாம் ஆடைவெளுக்கும் கருங்கற் பாஅறையில் தமது சிரத்தை மோதத் தணிகையில் சிவமூர்த்தி பறையிற்றோன்றிய தமது திருக்கரத்தால் நாயனாரது சிரத்தைப் பிடித்து ‘அன்ப உனது பத்திமையை மூவுலகும் பரவச் செய்தனம்” இனி நம் உலகு அடைக எனத் திருவாய் மலரத் திருக்கைலையடைந்கவர். (பெரிய புராணம்.) |
திருக்குறுங்குடி நம்பி | 1. திருக்குறுங்குடி பெருமாள், உடையவரிடத்தில், ஸ்ரீவைஷ்ணவர்போல் வந்து பஞ்சசமஸ்காரம் பெற்றனர், பின் ஸ்ரீவைஷ்ணவரும்பியென்று பெருமாளுக்குப் பெயருண்டாயிற்று. (குரு பரம்பரை). 2. எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிளில் ஒருவர். (குருபரம்பரை.) |
திருக்குறுந்தாண்டகம் | திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பிரபந்தத் திரட்டு |
திருக்கோட்டி நம்பி | உள்ளழடையான் எனும் சோதிட நூலாசிரியர், இவர் சகரனாண்டு (1200) இல் வடமொழியிலிருந்த நூலாகிய உள்ளமுடை யானைத் தமிழில் இயற்றினர். இவர் வெண்பைக்குடி நாட்டுப் பிரதேசம். பாண்டவன் மங்கலமான பஞ்சமாதேவி சதுர்வேதி மங்கலம் கடவுர் ஆரியன் எனச் செந்தமிழ்ப் பத்திரிகை கூறுகிறது. |
திருக்கோட்டியூர் நம்பி | 1. புண்டரிகார்சம், இவர் கலி (4028) இல் சர்வாத்வா வைகாசி சனிக்கிழமை திருவவதரித்தவர், ஆளவந்தார் திருவடிசம்பந்தி. 2. இவர், வெண்பைக்கும் காட்டுப்பிரதேசம், பாண்டவன் மங்கலமான பஞ்சமாதேவி சதுர்வேதிமங்கலம், கடப்பாரியன், திருக்கோட்டி நம்பியென திருவுள்ளமுடையான் சாத்திர ஏட்டிலிருப்பதால் உள்ளமுடையான் நூலாசிரியர் இவரெனத் தெரிகிறது. |
திருக்கோளூர் பெண்பிள்ளை | இவள் உடையவர் திருக்கோளூருக்கு எழுந்தருளுகையில் சில ரஹஸ்யங்களைக் கூறிச் சிஷ்யையானவள். |
திருக்கோவலூராழ்வான் | எழுபத்திநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்) |
திருக்கோவையார் | ஸ்ரீமன் மாணிக்கவாசக சுவாமிகளால் அகப்பொருட்கணம் பொருந்தச் சிவமூர்த்தியை நயகனாக எண்ணித் தம்மை அடிமையாக கொண்டு திருவாய்மலர்ந்த கட்டளைக் கலித்துறை, இதற்கு உரையாளர் நச்சினார்க்கினியர் உரையியற்றினர் என்பர் சிலர் இதற்குத் திருச்சிற்றம்பலக்கோவையார் எனவும் பெயர். |
திருசானு | பானுவுரன் குமரன், இவன் குமரன் கரந்தமன். |
திருச்சாளக்கிராமம் | ஒரு புண்ணியக்ஷேத்திரம். இதில் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளியிருப்பர். |
திருச்சிற்றம்பலக்கோவையார் | திருக்கோவையாரைக் காண்க. |
திருச்சிற்றம்பலநாவலர் | இவர் ஊர் தொண்டைநாட்டு மாம்பாக்கம், சைவர், அண்ணாமலையார்மீது அண்ணாமலைச் சதகம் என நூறு எண்சீர்க்கழிநெடிலடியால் சதகம் பாடிய புலவர். |
திருச்சிற்றம்பலமுடையார் | சேக்கிழார் பொரூட்டு ‘உலகெலாம்” எனத் திருவாக்கருளிச் செய்தவர். பெற்றான் சாம்பான் என்னும் அடியவர்க்குத் தீக்ஷை செய்விக்கும் பொருட்டுக் கொற்றவன்குடி யுமாபதி சிவாசாரிய சுவாமிகளுக்குத் திருமுகப் பாசுரம் “அடியர்க்கெளியன் சிற்றம்பலவன் கொற்றம், குடியார்க் கெழுதியகைச் சீட்டுப் படியின்மிசைப், பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து, முத்திகொடுக்கை முறை,” என அருள் செய்தவர், உமாபதிசிவாசாரியாரைக் காண்க. சேந்தனாரைக் காண்க. |
திருச்சிற்றம்பலமுனிவர் | இவர் வேதாரண்யத்திருந்த புலவர். திருக்காவிரி புராண மியற்றியவர். |
திருச்சிற்றம்பலம் | இது ஞானகாசமாய்ச் சிவபிரான் திருநடஞ்செய்யும் தலம். இது திருத்தில்லை யென்னுந் தலத்திலிருப்பது. இதற்குத் தகராகாசம், கனகசபை, பொன்னம்பலம், ஞான பரமாநந்தசபை எனவும் பெயர். இது ஆநந்தசுவ ரூபமாதலாலும், சபாநாயகன் ஆநந்தசுவ ரூபியாகிய ஞானமயமாய்ப் பிரபஞ்சகிருத்தியத்தின் பொருட்டுத் திருநடஞ் செய்ததாலும் இப்பெயர் பெற்றது. தேவர்கள் இதின் உண்மையைப் பொற்றகட்டில் எழுதிப் பூசித்ததால் சிதம்பரம் என்று இதற்கு ஒரு பெயர். இது விராட்புருடனுக்கு இருதய கமலமாயிருத்தலின் புண்டரீகபுரம் பெயர் பெற்றது. |
திருச்செங்கோடு | முருகக்கடவுள் எழுந்தருளிய திருப்பதிகளில் ஒன்று. (சிலப்பதி.) |
திருச்செந்தில் | குமாரக்கடவுள் பொருட்டு விசுவகர்மன் நிருமித்த பட்டணம். |
திருச்யன் | அகத்திய முனிவர்க்குக் குமரன். |
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் | சோழ மண்டலத்தில் சீர்காழியென்னுந் திருப்பதியில் வேதியர் வம்சத்தில் கௌணியர்கோத் திரத்தில் சிவபாத இருதயர் செய்த தவத்தால் அவர் மனைவியராகிய பகவதியார் திருவயிற்றில் திருஅவதரித்தனர். இவர்க்குச் சாதகன்மாதி சடங்குகள் முழுதும் தந்தையார் களிப்புடன் செய்தனர். பிள்ளையார், தமது மூன்றாமாண்டில் ஒருநாள் ஸ்நானத்திற்குச் செல்லுந் தந்தையாரினுடன் செல்ல அழ, தந்தையார் உடனழைத்துச்சென்று குளக்கரையில் இருத்தித் தாம் நீருள் மூழ்கி அகமருஷண ஸ்நானஞ் செய்தனர். பிள்ளையார் தந்தையாரைக் காணாமல் பண்டைய நினைவுவரத் திருத்தோணியப்பரின் விமானத்தை நோக்கி அம்மே, அப்பாவென்று அழுதனர். சிவமூர்த்தி இவர்க்கு அருள் புரியத் திருவுளங்கொண்டு பிராட்டியுடன் இடபாரூட ராய் எழுந்தருளி இறைவியை நோக்கிப் பாலூட்டக் கட்டளையிட்டனர். பிராட்டியார் திருமுலைப்பாலைப் பொன் வள்ளத்திற்பெய்து பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்துப் பால்வள்ளத்தைப் பிள்ளையார் கரத்தில் அளித்துச் சிவமூர்த்தியிடங் கலந்தனர். தந்தையார் ஸ்நானமுடித்துக் கரையேறிப் பிள்ளையார் வாயினின்று ஒழுகுகின்ற பால்கண்டு நீ யார் தந்த பாலையுண்டாய் என்று ஒரு சிறு மாறுகொண்டு பயமுறுத்தி அடிக்கப்புகப் பிள்ளையார் சிவானந்தம் பெருக உச்சியின் மீது எடுத்துச் சுட்டிய திருக்கரத்துடன் தமக்கு ஞானப் பாலூட்டுவித்து அந்தரத்தில் இடபாரூடராய்ப் பிராட்டியாருடன் எழுந்தருளியிருக்கும் அம்மை அப்பரை “தோடுடைய செவியன்’ என எடுத்துத் திருப்பாசுரத்தாற் பாடித் துதித்துத் திருக்கோயிலுட் சென்று துதித்துப் பணிந்தனர். இவ்வற் புதக் காட்சியைக் கண்ட கேட்ட பலரும் பிள்ளையாரை வணங்கினர். இதைக்கண்ட தந்தையார் ஆநந்தத்தால் பிள்ளையாரைத் தோளில் தூக்கிச் சென்றனர். மறுநாள் விடியற்காலத்தில் பிள்ளையார் ‘திருக்கோலக்கா’ என்னும் திருப்பதியை அடைந்து முன்னின்று ஒத்தறுத்து “மடையில் வாளை பாய” எனும் திருப்பதிகம் ஓதியருளினார். சிவமூர்த்தியின் அருளால் ஸ்ரீபஞ்சாக்ஷா மெழுதிய ‘திருபொற்றாளம்’ திருக்கரத்தில் வந்திருந்தது. இதைக்கண்ட பிள்ளையார் களிப்படைந்து இசையோங்கத் தாளம் கொட்டிப் பாடி விடைபெற்றுத் தந்தையார் தோளில் தூக்கிச் செல்லத் தோணியப்பர் திரு ஆலயம் அடைந்து வணங்கித் தமது திருமாளிகையடைந்தனர். இவ்வற் புதங்கண்ட திருநனிப்பள்ளி வேதியர் பிள்ளையாரைத் தம்மூர்க்குவர வேண்ட இசைந்து சென்று திருப்பதிகம் பாடித் துதித்து அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியை அடைந்தனர். இவரது செய்திகேட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் இவரைத் தரிசிக்கும் பொருட்டு விறலியருடன் சீர்காழி வந்து சேர்ந்தனர். பிள்ளையார் எதிர்கொள்ளப் பாணர் வணங்கினர். பிள்ளையார் அவருடன் தோணியப்பரை வணங்குகையில் பாணர், யாழில் சிவமூர்த்தியைப் பாடக் கேட்டுக் களிப்படைந்தனர். திருநீலகண்டயாழ்ப்பாணர் பிள்ளையார் அருளிய திருப்பதிகங்களைக் கேட்டு அவைகளை யாழிற்பாடி அன்று முதல் பிள்ளையாரைப் பிரியாதிருக்கும் வரம்பெற்றனர். பின் திருத்தில்லை சென்று பதிகமோதித் தரிசித்துத் தில்லை (3000) வரைச் சிவகணங்களாகக் கண்டு தாம் கண்டபடியைத் திருப்பதிகத்தில்வைத்துத் துதித்தனர். இவர் யாழ்ப்பாணர் வேண்டத் திருஎருக்கத்தம்புலியூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருநெல்வாயிலரத் துறைக்குப்போக விரும்பித் தந்தையாரின் தோளைவிட்டிறங்கி நடந்து மாறன்பாடியை அடைந்தனர். சூரியன் அத்தமடைந்தனன். அன்றிரவு அங்கிருக்கையில் சிவ மூர்த்தி வழியால் வருந்திய பிள்ளையார்க்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் அருளத் திருவுளங்கொண்டு அரத்துறை வேதியரது கனவில் தனித்தனி சென்று பிள்ளையார் வரவு அருளி அவர்களுக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் கொடுக்கக் கட்டளையிட்டுப் பிள்ளையார் சுவப்பனத்தில் அவற்றை ஏற்கக் கட்டளை தந்து மறைந்தருளினர். வேதியர் விடிந்து இவ்வாஞ்ஞைப்படி செய்ய அவற்றைப் பிள்ளையார் ஏற்றனர். பின் அத்தலம் நீங்கிப் பல தலஞ் சேவித்துச் சீர்காழியடைந்து உபாயனாதிகளை பெற்று யஞ்ஞோபவீததாரணம் செய்து கொண்டு வேதியர்க்கு ஸ்ரீபஞ்சாஷர மகிமையைத் தெரிவித்திருந்தனர். இவரது புகழைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் பிள்ளையாரைவணங்க எழுந்தருளப் பிள்ளை யாரும் எதிர்சென்று வணங்கிக் கலந்து சிவதரிசனம் செய்தருளினர். பின் திருநாவுக்கரசுகள் பல தலஞ் சேவிக்க எண்ணி விடை கொண்டனர். பிள்ளையாரும் பலதலம் வணங்கும் எண்ண முள்ளவராய்த் திருக்கண்ணார்கோவில் முதலிய பல தலங்களையும் காவிரிக்கு வடபால் திருவடமாந்துறை வரையிலுள்ள தலங்களையும் வணங்கி மழநாடு சென்று திருப்பாச்சி வாச்சிரமத்திற்கு எழுந்தருளினர். ஆங்குக் கொல்லிமழவன் முயலகவியாதியால் வருந்தும் தன் குமரியைத் திருக்கோயிலிலிருத்திப் பிள்ளையாரின் வரவு நோக்கி எதிர் கொண்டு வணங்கிக் கட்டளை பெற்று எழுந்து சுவாமிகளுடன் சந்நிதி யடைந்தனன். பிள்ளையார் திருக்கோயில் அடைந்ததும் ஸ்மரணையற்றுக் கிடக்கும் குமரியைக் கண்டு இவள் யார் என்றனர், மழவன் அடியேன் குமரியென்னப் பிள்ளையார் அவள் வாலாறு உணர்ந்து “துணிவளர்” எனும் திருப்பதிகமோதி அவள் நோயைப் போக்கினர். பிள்ளையார் அந்நாடு நீங்கிக் கொங்கு நாடடைந்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் தரிசிக்கையில் பனியால் திருக்கூட்டத்தவர் சாப்பிணி கொண்டு வருந்துதல் அறிந்து அது நீங்கும் வகை ”அவ்வினைக் கிவ்வினை” என்று திருநீல கண்டத் திருப்பதிகம் ஓதியருளினர். அப்பிணி அவ்வூரைவிட்டே நீங்கியது. பிறகு அவ்விடம் நீங்கிச் சோணாடு அடைந்து திருப்பட்டீச்சுரத்திற்கு எழுந்தருளுகையில் கோடை மிகுந்தபடியால் சிவாஞ்ஞையால் பூதம் ஒன்று முத்துப்பந்தர் கொண்டு நிழல் செய்தது. அவ்விடம் நீங்கிப் பல தலஞ் சேவித்துத் திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கையில் சிவபாத இருதயர் யாகஞ் செய்தற்குப் பொன் வேண்டு மென்றனர். பிள்ளையார் ‘இடரினும் தள ரினும்” என்னுந் திருப்பதிக மோதினர். அப்போது பூதம் ஒன்று சிவாஞ்ஞையால் உலவாக்கிழி தந்து மறைந்தது. அக்கிழியைப் பிள்ளையார் சிவபாத இருதயருக்குக் கொடுத்து யாகஞ் செய்ய அனுப்பினர், பிள்ளையார் தருமபுரம் அணைந்தார். அத்தலம் திருலேகண்டயாழ்ப் பாணரின் தாய் பிறந்த இடமாதலால் அவர் சுற்றத்தவர் எதிர்கொண்டு பாணரை நோக்கி நீர் பிள்ளையாரின் திருப்பதிகத்தை யாழிலிட்டு வாசிக்கவால் இசையுலக முழுதும் பரவு கின்றது என்றனர். இதைக் கேட்ட திரு நீலகண்டயாழ்ப்பாணர் நடுங்கிப் பிள்ளையாரை இசை, யாழில் அடங்காதிருக்கப் பதிகமோதக் கேட்டுக் கொண்டனர் பிள்ளையார் அவ்வகை “மாதர் மடப்பிடியும்” எனும் யாழ்முரி பாடினர். பாணர் அப்பாசுரத்தை யாழில் வாசிக்க இயலாமையால் யாழைமுரிக்கத் தொடங்கினர். பிள்ளையார் யாழினை வாங்கிச் சிவமூர்த்தியின் புகழினடங்குமோ என்று மீண்டும் பாணரிடம் தந்தருளினர். பின் அவ்விடம் நீங்கிச் திருச்சாத்தமங்கை யடைந்து தம்மை எதிர்கொண்ட திருநீலநக்க நாயனாருடன, அயவந்தி தரிசித்து அவர் வீட்டில் விருந்துண்டு நீங்கிப் பல தலங்கள் சேவித்துத் திருச்செங் காட்டங்குடி சேவிக்கச் சென்றனர். அங்குச் சிறுத்தொண்ட நாயனார் எதிர்கொள்ள, அவருடன் கணபதீச்சு வரம் வணங்கி அவரிடம் விருந்துண்டு அவ்விடம் நீங்கித் திருமருகலுக்குச் சிவதரிசினத்திற்கு எழுந்தருளினர். அங்குத் தாமன் எனும் வணிகபுத்திரி தன் பிதா தன்னை யொழிந்த அறுவரையும் தன் மருகருக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லி அறுவரையும் பிறரிடம் பொருள் பெற்று மணஞ் செய்வித்துத் தன்னையு மவ்வாறு செய்ய எண்ணியிருக்கையில் இவள் தன் பிதாவின் மருகனிடம் இரக்கமடைந்து அவனைத் தான் மணந்து கொள்ளும்படி துணிந்து அவனுடன் பிதா அறியாமல் வெளிவந்து இத்தலத்தில் அவ்வணிக குமாரனுடன தங்கினள். அன்றிரவு நாயகனாகக்கொள்ள நினைந்த வணிக குமரன் பாம்பு தீண்ட இறந்தனன். இவ்வணிக கன்னிகை அவனைத் தீண்டாது. அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்தியிடம் தன் குறைகூறி இரந்தனள். இவளது குறைகேட்ட அவ்விடம் எழுந்தருளிய பிள்ளையார் அவளிடம் கருணை கூர்ந்து “சடையாயெனுமால் சரணீயெனுமால் எனுந்திருப்பதிக மோதினர். வணிகன் உயிர்பெற்று எழுந்தனன். பிள்ளையார் அவ்விருவரையும் மணஞ் செய்து கொள்ள அனுப்பினர். பிறகு பிள்ளையார் அவ்விடம் நீங்கித் திருப்புகலூர் அடைந்து அவ்விடம் எதிர்கொண்ட முருகநாயனாருடன் தரிசனஞ் செய்திருக்கையில் ஆங்குவந்த திருநாவுக்கரசுகளை எதிர்கொண்டு அழைத்துத் திருவாரூரின் புகழ்கேட்டு அவ்விடம் எழுந்தருளி வன்மீகநாதரைத் தரிசித்து மீண்டும் திருப்புகலூரை யடைந்து திருநா வுக்கரசுகளுடனும் முருகநாயனாருடனும் எழுந்தருளி யிருந்தனர். இவ்விடம் பிள்ளையாரிருக்குஞ் செய்தி கேட்டு திருநீலநக்க நாயனாரும் அவ்விடம் சென்றிருந்தனர். பிள்ளையார் அவ்விடம் நீங்கித் திருக்கடவூ ரடைந்து குங்கிலியக்கலய நாயனார் எதிர் கொள்ள அத்தலம் சேவித்து அவர் வீட்டில் அமுதுண்டு இருந்தனர். மறுநாள் சிவாஞ்ஞைப்படி திருநாவுக்கரசுகளுடன் திருவீழிமிழலை சென்று சீர்காழியிற்கண்ட திருக் கோலத்தை அங்குத் தரிசித்து மழையின்மையால் உயிர்களும் சிவனடியார்களும் வருந்துதற்கிரங்கி இருவரும் திருத்துயில், கொண்டனர். அவ்விருமூர்த்திகளின் கனவிலும் சிவமூர்த்தி எழுந்தருளி இப்பஞ்சம் நீங்கி மழைபெய்து நாடு செழிக்குமளவும் உங்களிருவர்க்கும் பொற்காசுகொடு போம் அவற்றால் சிவனடியவரை உண்பிக்க என்று திருவாய்மலர்ந்து மறைந்தருளினர். விழித்து இருவரும் நித்தியதை மித்தியாதிகளை முடித்துத் திருக்கோயிலடைந்து திருவாயிலில் பொற்காசு இருக்கக்கண்டு தொழுது எடுத்துச் சிவனடியவரை உண்பித்து வருகையில் திருநாவுக்கரசுகள் திருமடத்தில் அடியவர் விரைந்து உண்பதையும் தம்மடத்தில் காலதாமதங் கொண்டு அடியவர் உண்பதையும் நோக்கிக் காரணம் வினாவினர். பரிசாரகர் காசிற்கு வாசிகேட்குதலால் காலதாமதமாதலையம் திருநாவுக்கரசுகள் காசிற்கு வாசி வேண்டாமையையும் அறிவித்தனர். அதனைப் பிள்ளையார், திருநாவுக்கரசுகள் அக்காசு பெறுதல், திருத்தொண்டின் பலன் எனத் தாமேயறிந்து வாசிதீரக் காசு வேண்டி அடியவரை உண்பித்து வருகையில் மழை பொழிந்து உலகம் செழித்தது. பிள்ளையார் ‘அவ்விடம் நீங்கித் திருநாவுக்கரசுகளுடன் வேதாரணியம் எழுந்தருளினர். முன் வேதம் பூசித்தகாலத்தில் மூடப்பட்ட திருக்கதவத் தைத் திறந்து தரிசனம் செய்ய ஆவலுள்ள பிள்ளையார், அப்பரை நோக்கி நீர் திறக்கவும் திருக்காப்பு நீங்கப் பதிகம் ஒதுக என்றனர். அவ்வகை அப்பர் பதிகம் பாட அது திறக்காமை கண்டு “இரக்கமொன்றிலீர்’ எனத் திருப்பதிகம் அருள உடனே திருக்கதவம் திறந்தது. அடியவர் இருவரும் திருக்கூட்டத்தவருடன் சென்று சிவதரிசனம் செய்து வெளிவந்தனர். பிள்ளையார் அத்திருக்கதவத்தை மீண்டும் திருக்காப்பிட ‘சதுரம்” எனத் திருப்பதிக மோதினர். உடனே திருக்கதவம் மூடிக்கொண்டது. பின் சிவாஞ்ஞையால் அப்பர் திருவாய்மூர்க்குச் செல்லப் பிள்ளையார். கேட்டு உடன் சென்று நடன தரிசனங்கண்டு பின் வேதாரணியம் அடைந்தருளினர். இவ்வகைப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கையில் பிள்ளையாரின் அற்புதச் செயல்களைப் பலராற் கேள்வியுற்ற பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும், பாண்டியன் மந்தி ரியாகிய குலச்சிறையாரும் தங்கள் நாடு சமண்மூடிப் பாழடைதலை யெண்ணி, வருந்திப் பிள்ளையாரைப் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிவரத் தூது விட்டனர். அவ்வகையே பிள்ளையார் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள இவரது வரவைக் கேட்ட மங்கையர்க்கரசியார் ஆனந்தம் அடைந்து தமது மந்திரியாரும் அந்தரங்க சிவபக்தி மானுமாகிய குலச்சிறையாரை எதிர் கொள்ள விடுத்தனர். பிள்ளையார் திருவாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து ஆண்டிருந்த மங்கையர்க்கரசியார் பணிய அருள்சுரந்து குலச்சிறையார் காட்டிய திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். பிள் ளையார் எழுந்தருளுதலைக் கேட்ட சமணர் பொறாதவராய் அரசனிடம் கண்டு முட்டுப்பட்டமை கூறினர். அரசனும் கேட்டு முட்டாயினேன் என்றனன். அதனால் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் திருமடத்தில் அக்நியை ஏவக் கட்டளை பெற்று எவினர். அக்நி செல்லாமையால் அரசன் அறியின் நம்மை அவமிதிப்பன் என்று தாங்களே ஒவ்வொருவரும் கொள்ளியைக் கொண்டு சிவனடியவர் துயில் கொள்கையில் மடத்தில் இட்டனர். திருமடம் தீப்பற்றக் கண்ட சிலர் அதனை அணைத்துச் செய்தி யைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தனர். பிள்ளையார் இஃது, அரசனால் விளைந்ததென்று அறிந்து சிவனடியவரை வருத்தவந்த தீ அரசனைக் பையப்பற்றக்கடவது என்று திருப்பதிகமருள அது வெப்பு நோயாய் அரசனை அணுகியது. அரசன் சுரநோயால் வருந்துதல் கண்டு பல வைத்தியர் ஔஷதத்தைத் தந்தனர். அவை யொன்றும் பயன் தராவாயின சமண முனிவர் தம் மந்திரத்தைப் பீவியில் ஏற்றி அம்மயிற் பீலியாலும் குண்டிகையின் நீராலும் அரசனைத் தடவி நீர் தெளித்தனர். அந்நோய் முன்னையினும் அதிகமாயிற்று. இதனால் பாண்டியன் சமண முனிவரைக் கோபித்தனன். அச்சமயம் அறிந்து மங்கையர்க்கரசியார் சமணர் செய்த கொடுமை இவ்வகை உம்மைச் சார்ந்திருக்கலாம். ஆகையால் இவ்விடம் எழுந்தருளியிருக்கும் திரு ஞானசம்பந்த மூர்த்திகளைச் சவைக்கண் வருவிக்கக் கட்டளையோ என்றனர். அரசன் இப் பெயர் கேட்டலும் சிறிது ஆவல் கொண்டு வருவிக்கக் கட்டளையிட்டனன். பாண்டிமாதேவியாரும் குலச்சிறையாரும் திருமடஞ் சென்று தங்கள் குறை கூறி வேண்டினர், பிள்ளையார் ஆலவாயார் திருவருள் பெற்று அரசனை யணைந்து அவன் இடுவித்த ரத்னாசனத்தில் எழுந்தருளியிருந்தனர். பாண்டியன் பிள்ளையாரை நோக்கித் தமது ஊர் எது என்றனன், பிள்ளையார் உத்தரமாக “பிரமபுரம் வேணுபுரம்” என்னும் திருப்பதிக மோதினர். இதைக் கண்ட சமணர் பொறாராய் வாதிட்டு ஒரு வருக்கொருவர் பேசினர். மங்கையர்க்கரசியார் பதைத்து முன்பு நோயை நீக்க அரசனிடம் கூறினர். அரசன் இருவரையும் நோக்கி உங்கள் சமய வன்மையை இருவரும் எனது வெப்பு நோயைத் தீர்த்தலால் தெரிவிக்கின், தீர்த்தவர் எவனோ அவர் பக்கஞ் சேர்வேன் என்றனன். சமணர் அரசனை நோக்கி உமது இடப்பக் கத்து நோயை நாங்கள் தீர்க்கிறோம், சைவர் வலது பாக நோயைத் தீர்க்கட்டும் என்று தமது பீலியால் மந்திரம் ஓதித் தடவினர். பிள்ளையார் மந்திரமாவது நீறு என்னுந் திருப்பதிகமோதி அரசனது வலப்பாகத்தை விபூதியால் தடவினார். அரசனது வலப்பாகம் நீரோடைபோல் குளிர்ந் தது, இடப்பாகம் முன்னிலும் மிக்க வெம்மையடைந்தது. அரசன் பொர னாய்ச் சமணரை நோக்கச் சமணர் மயிற்பீலி கொண்டு மீண்டும் தடவினர். அரசனது உடல் வெம்மைட மயிற்பீலியைக் கருக்கிக் சமணர் மேலும் பாய்ந்தது. இதனால் சமணர் ஒதுங்கினர். பாண்டியன் பிள்ளையாரை நோக்கி மற்றைப்பாகத்து கோயைத் தீர்க்க வேண்டினன். பிள்ளையார் முன்போல் விபூதி இட அந்தப் பாகமும் தணிந்தது. பாண்டியன் உய்ந்தேன் என்று பிள்ளையாரின் திருவடிகளைப் பணிந்தனன். இதைக் கண்ட சமணர் இனித் தருக்கம் பேசவேண்டுவதில்லை. நாமிருவரும் நம் சமய உண்மைக ளெழுதப்பெற்ற ஏடுகளை அக்நியில் இடுவோம். ஏடுகள் வேகாவாயின் அச்சமயம் சற்சமயமெனக் கொள்வோம் என்றனர். பிள்ளையார் உடன்பட்டனர். அரசன் கட்டளையால் அக்நி வளர்க்கப்பட்டது. அதில் பிள்ளையார் தாம் அருளிச்செய்த திருப்பாசுரத்தில் எடுத்தவுடன் தோற்றிய திருநள்ளாற்று ‘போக மார்த்த” என்னும் திருப்பாசுரத்தைத் தொழுது எடுத்து அக்நியில் இட்டு, ‘ தளி ரிளவளரொளி” என்னும் திருப்பதிக மருளிச் செய்தனர். சமணரும் தங்கள் சமய உண்மை யெழுதப்பட்டிருந்த ஏட்டையிட்டனர். அது வெந்தொழிந்தது. பிள்ளையாரிட்ட ஏடோ வேகாது பசுமை கொண்டு இருந்தது. அதை யாவருங்கண்டு வியக்க மீண்டும் எடுத்துத் திருமுறையிற் கோத்தனர். பின் சமணர் மற்றொருவரது செய்ய வெண்ணி அரசனை நோக்கி இருவரும் தங்கள் தங்கள் சமயவுண்மைகள் எழுதிய ஏடுகளை ஓடும் வைகையில் இடுவோம். எதிர் ஏறும் ஏட்டினவர் உயர்ந்த சமயத்தினராகி உண்மை யறிவோமென்றனர். அவ்வாறே பிள்ளையார் இசைந்தனர். அரசனும், மந்திரி முதலியோரும் சமண முனிவரும் சூழ்ந்துவரப் பிள்ளையார் வைகை நதியடைந்தனர். முதலில் சமணர் தங்கள் சமயவுண்மைகள் எழுதிய அத்தி நாத்தி என்னும் ஏட்டை ஆற்றில் இட்டனர். அது கடலை நோக்கிச் சென்றது. சமணர் நூறுவிற் கடைதூரம் அதன் பின் சென்று பின் செல்லக்கூடாமல் மீண்டனர். இதையறிந்து அரசன் பிள்ளையாரை நோக்கினன். பிள்ளையார் அரசன் குறிப்புணர்ந்து “வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக என்னுந் திருப்பதிக மோதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரைப் பிளந்து எதிர் ஏறியது. (இத்திருப் பதிகத்தில் வேந்தனு மோங்குக” என்று அருளிச் செய்ததால் அரசனுக்கு இருந்த கூனும் நிமிர்ந்தது) மந்திரியார் குதிரை மீதேறி ஏட்டைத் தொடர்ந்து செல்லவும் நிற்காமை கண்டு பிள்ளையார் (வன்னியும் மத்தமும்” என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தனர். ஏடு திரு ஏடகத்தில் நிலைபெற்றது. குலச்சிறையார் ஏட்டினைத் தொழுது சிரமேற்றாங்கி வந்து பாண்டியனுக்குக் காட்டினர். பாண்டியன் முதலானோ மெய்பூரித்தனர். சமணர்கள் தாங்கள் கூறியபடி கழுவேறினர். பிள்ளையார் திருவாலவாயுடையார் திருச்சந்நிதி யடைந்து, சிவமூர்த்தியை வணங்கினர். பிறகு திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்மை வந்துகாண அவருடன் அவருக்கு அருளிய திறத்தை “ஆலநீழல்” என்னுந் திருப்பதிகத்தால் துதித்து எழுந்தருளி யிருந்தனர். பிள்ளையார் தம்மை யெண்ணிவந்த தந்தையாருடன் பலதலங்களைத் தரிசிக்க எண்ணி அவ்விடம் நீங்கிப் பாண்டி நாட்டுப் பல தலங்களை வணங்கி அங்கிருந்தபடி ஈழநாட்டுத் தலங்களைத் துதித்துச் சோழ நாடு அடைய நினைந்தனர். பாண்டியன் பிரிவாற்றாது வருந்த அவனை நிறுத்திப் பிரிந்து, சோணாட்டுப் பல தலங்களை வணங்கி முள்ளிவாய்க்கரை யடைந்து சிவதரிசனஞ் செய்தற்கு ஆற்று வெள்ளம் தடை செய்ததால் ஒடம் விடுவோர் அஞ்சுதல் கண்டு அங்கிருந்த ஓடத்தில் திருக்கூட்டத்துடன் ஏறி “கொட்டமேகமழும்” என்னுந் திருப்பதிகம் அருளிச் செய்தனர். ஓடம் அக்கரை யடைந்தது. பிள்ளையார் சிவதரிசனஞ் செய்து திருத்தெளிச்சேரி யடைந்து அங்குச் சிவமூர்த்தியைத் தரிசித்து நீங்கு கையில் பௌத்தர்களிருக்கும் போதிமங்கை சமீபித்தது. இவரது வருகையின் ஆரவாரங் கேட்ட புத்தர் பொறாராகிப் புத்த நம்பியுடன் கூடி வாதத்திற்கு வந்தனர். பௌத்தர் வாதம் செய்ய வந்ததை யறிந்த சம்பந்தசரணாலயர் பொறாது “புத்தர் சமண் கழுக்கையர்” என்னுந் திருப் பதிகம் அருளிச் செய்து இப்புத்தன் சிரத்தில் இடிவிழக் கடவது என்றனர். புத்த நந்தி இடி விழுந்து இறந்தனன். ஒழிந்த புத்தரில் அஞ்சியகன்றோர் போக மற்றவர் வாதிற்கு வந்தனர். சம்பந்தசரணாலயர் அவர்களுடன் வாதிட்டு வென்றனர். இதனால் புத்தர் பலர் சைவராயினர். அவ்விடம் நீங்கித் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் திருநாவுக்கரசு மூர்த்திகளைக்காண விரும்பி ஆண்டு எழுந்தருளுகையில் திருநாவுக்கரசுகள் பிள்ளையார் வரவு அறிந்து எதிர்கொண்டு ஜன நெருக்கத்தினுள் புகுந்து சிவிகைதாங்கி வருவோரில் ஒருவராய்த் தாங்கி வந்தனர். பிள்ளையார் திருப்பூந்துருத்தி யடைந்தவுடன் அப்பர் எங்கு உள்ளார் என அப்பர், சிவிகை தாங்கும் பெருவாழ்வுற்று இங்கு உள்ளேன் என்று வந்தனர். பிள்ளையார் சிவிகை விட்டிறங்கி அரசுகளை வணங்க அரசுகளும் வணங்சிச் சிவதரிசனம் செய்து இருந்தனர். பின் தொண்டை நாடு தரிசிக்க எண்ணிப் பல தலங்களைச் சேவித்துத் திருவோத்தூர் அடைந்து தரிசனஞ் செய்து இருக்கையில் அத்தலவாசியாகிய சிவனடியவர் ஒருவர் வந்து நான் பரமசிவத்தின் பொருட்டுப் பயிராக்கிய பனைகள் எல்லாம் ஆண் பனைகளாகப் பலன் அற்றன. இவற்றைக் கண்ட சமணர்கள் இவைகளைக் காய்க்கச் செய்யக்கூடுமோ என்று நகைக்கின்றனர் எனக் கூறினர். இதைக் கேட்ட பிள்ளையார் பரிந்து சுவாமியை வணங்கிப் பூந்தொத்தாயின” என்னும் திருப்பதிகம் பாடி யருளினர். அதனால் ஆண் பனைகள் பெண் பனைகளாய்க் குறும்பை யீன்றன. அவ்விடம் நீங்கிப் பல தலம் சேவித்துத் திருவாலங்காட்டிற்கு அருகு அணைகையில் முன்னம் காரைக்கால் அம்மையார், மிதித்தல் அஞ்சித் தலையால் நடந்த தலம் என்று தாம் மிதித்தற்கு அஞ்சி அத் தலத்தைச் செல்லாது அருகிருக்கும் கிராமத்தில் இரவைப் போக்கினர். சிவமூர்த்தி அன்றிரவு கனவிற்றோன்றி நம்மைப் பாடுதற்கு மறந் தனையோ என்று சொல்ல விழித்துத் துதித்து “துஞ்சவருவாரும்” என்னுந் திருப் பதிகம் பாடியருளினர். பின் திருக்காளத்தி தரிசித்து அங்கிருந்த வண்ணம் வட நாட்டுத் திருப்பதிகளைப் பாடித் துதித்துத் திருவொற்றியூர் அடைந்து சிவ தரிசனஞ் செய்திருந்தனர். இது நிற்க, திருமயிலையில் வைசியர் குலத்தில் சிவபக்தியிற் சிறந்த சிவநேசச்செல்வர் என்னும் பெயர் உள்ளவர் ஒருவர் இருந்தார். இவர் திருஞானசம்பந்தமூர்த்திகளின் அற்புதச் செயல்களைக் கேட்டு அவரிடத்தில் அன்பு பூண்டு இரவும் பகலும் அவரைத் தியானித்து இருந்தனர். இவருக்கு அழகு வாய்ந்த பூம்பாவை யென்னும் ஒரு குமரி இருந்தனள். இவர் அன்பின் மிகுதியால் தமது செல்வங்களையும் பூம்பாவையையும் திருஞானசம்பந்த மூர்த்திகளுக்குக் கொடுத்து மணஞ்செய்விக்க எண்ணியிருந்தனர், பூம்பாவையார் ஒருநாள் நமது தோழியருடன் பூங்காவனத்திற் சென்று பூக்கொய்து வருகையில் பாம்பு கடித்து இறந்தனள். தந்தையார் பல விஷ வைத்தியர்களைக் கொண்டு பார்த்தும் பலனின்றாயிற்று, பின் உயிர் நீங்கிய தேகத்தை இரண்டொரு நாள் வைத்தும் காத்தும் பயனில்லாதது அறிந்து ஒருவாறு தேறி உடலைத் தகனஞ் செய்து எலும்புகளைக் குடம் ஒன்றில் அடைத்துக் கன்னிமாடத்தில் வைத்துத் திருஞானசம்பந்தர் வரவை எதிர் நோக்கி யிருந்தனர். பிள்ளையார் திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கும் செய்தி செட்டியார் கேட்டுத் தெரு முதலிய அலங்கரித்து எதிர்கொண்டு வணங்கினர். பிள்ளையாரும் வணங்கிச் சென்று சிவநேசாது செய்தி கேட்டுச் சிவமூர்த்தியிடம் விடைபெற்றுத் திருமயிலை யடைந்தனர். பிள் ளையார் சிவநேசரது கருத்தை முற்றுவிக்கவும் ஆருகதர், பௌத்தர் நிலைகெடவும் திருவுளங் கொண்டு சுபாலீச்சுரமுடையாரை வணங்கிச் சிவநேசரை நோக்கி உமது மகளிரின் எலும்பை நிறைத்த குடத்தைத் திருமதிலின் புறத்துக்கொண்டு வருக என்றனர். சிவநேசர் அவ்வகை செய்து குறிப்பித்தனர். பிள்ளையார் திருக்கோபுரவாலின் நேரே எழுந்தருளி எலும்பு இருக்கும் குடத்தை நோக்கி “மட்டிட்ட புன்னை” என்னுந் திருப்பதிக முதலாக ஒன்பது திருப்பதிக மோதினர். பத்தாம் திருப் பதிகத்தில் பூம்பாவை குடத்தினின்றும் (12) வயதுடன் எழுந்தனள். இவ்வற்புதத்தைக் கண்டு தேவர் பூமாரி பொழிந்தனர். பின் பிள்ளையார் சிவநேசரை நோக்கி உமது குமரியை அழைத்துச் செல்லும் என்றனர். செட்டியார், இக் கன்னிகையைத் தேவரீர்க் கென்றே நியமித்தது என்று பிரார்த்தித்தனர். பிள்ளையார் சர்வான்மாக்களும் உய்யும்படி இவளைப் பிழைப்பித்தபடியால் இவ்வார்த்தை தகாது என மறுத்தனர். இதனால் சிவநேசர், தம் குமரியை வேற்றோர்க்கு விவாகஞ் செய்விப்பதில்லை யெனக் கன்னிமாடத் திருத்தினர். பூம்பாவை சிவத்தியானத்திருந்து முத்தி யடைந்தனள், பிள்ளையார் திருமயிலை நீங்கிப் பல தலங்களைச் சேவித்துச் சீர்காழியடைந்து முருகநாயனார் திருலோக்கராயனார் முதலியவருடன் இருந்தனர். பின் சிவபாதவிருதயர் தமது குமாருக்குத் திருமணஞ் செய்விக்க எண்ணிப் பிள்ளையார்க்குக் குறிப்பித்தனர். இச் செய்தி கேட்ட பிள்ளையார் உடன்படாமை யறிந்து வேதியர் பலருக்குக் கூற வேதியர்கள் வேதவொழுக்கம் வளர்க்கவந்த தேவரீர் வேதவிதி யொழுகிக் காட்டாவிடின் யாதாம் என்றனர். அதனால் பிள்ளையார் உடன் பட்டது அறிந்து தந்தையார் திருநல்லூரில் நம்பாண்டார்நம்பியின் குமரி பிள்ளையார்க்குத் தக்கவளென்று அறிந்து அக்கன்னிகையை மணப்பெண்ணாகத் தீர்மானித்துத் திருமணநாள் கொண்டனர். பிள்ளையார் அந்நாளில் நம்பாண்டார் நம்பியின் சுற்றத்தவர் எதிர்கொள்ளத் திருநல்லூர் அடைந்து பெருமணமென்னும் ஆலயத்தை வணங்கித் திருமணப்பந்தல் அடைந்தனர். நம் பாண்டார்நம்பி விதிப்படி தமது குமரியைத் திருஞான சம்பந்தமூர்த்திகளுக்குக் கொடுத்தேனென்று கோத்திர சூத்திரங்களைக் கூறிப் பிள்ளையார் திருக்கரத்தில் நீர் வார்த்தனர். பின் பாணிக்கிரகண முகூர்த்தம் வந்த அளவின் மணமகளைப் பிள்ளையாரின் வலப்பக்கம் சேர்த்தனர். பின்ளையார் திருக்கடி சூத்திரம் புனைந்து மந்திரத் தீவலஞ்செய்து இவ்வில்லொழுக்கம் வர்தமையால் இவளுடன் எம்பெருமான் திரு அருட்கழல் சேர்வனாக என்று திருவுளங்கொண்டு சிவமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பெருமணக் கோவில் அடைந்து அடியேனையாண்ட பெருங் கருணையின்று பிரிவறக்கூட்டும் என்னுந் தோற்றத்தால் நல்லூர்ப்பெருமணம்’ என்னுந் திருப் பாசுரத்தால் உமது திருவடி அடையும் தருணம் ஈது என்று விண்ணப்பித்தனர். எல்லாமுடைய நாயகன் “ஐய” நீயும் இந்த மாதரும் இத் திருமணங்காண வந்தாரும் இச்சோதியுட்டோன்றும் பெருவழியிற் சேர்க என்று அருட்சோதி யுருவா விருந்தனர். பிள்ளையாரும் திருநீலகக்கர், நமபாண்டார் நம்பி, திருநீலகண்டயாழ்ப்பாணர் திருமணம் காணவந்த திருக்கூட்டத் தவரும் அச்சோதியுட் கலந்தனர். பின் திருவருட்சோதி மறைந்தது. (பெ~புரா.) |
திருஞானசம்பந்தருடன் வாதிட்ட புத்தர் | ஈந்துசேநன், இந்துசேகன், தருமசேநன், எந்து சேநன், கனகசேகன். கனகநந்தி, புட்பநந்தி, பவணநந்தி, சுன கநந்தி, குனக நந்தி, திவணநந்தி, அநகாந்தி. |
திருட அனு | பாஞ்சாலபதி சேநசித் குமாரன் இவனுக்குச் சாத்யகருமன் என்று பெயர். |
திருடநேமி | புதன் மரபில் வந்த சத்யதிருதன் புத்ரன். |
திருடவிரதன் | அங்க தேசாதிபதி, விசியன் குமரன். |
திருட்டாந்தப் போலி | திருட்டாந்தத்திற்குக் கூறிய இலக்கணம் பெறாமல் திருட்டாந் தம்போலத் தோன்றுபவை திருட்டாந்தப் போலி. அவை பதினெட்டு, சாத்தியவிகவன், சாதகவிகலன், உபயவிகலன், ஆச்ரய வீனன், அவ்யாப்தியபிதானன், விபரீதவி யாத்தியபிதானன், சாதனாவியாவிருத்தன், சாத்யாவியாவிருத்தன், உபயவியாவிருத் தன், ஆச்ரயவிரத் தீனன், வியாவிருத்திய பிதானன, விபரீ தவியாப்திய பிதானன், சந்தித்தசாத்தியன், சந்தித்தசா தனன், சந்தித் தவுபயன், சந்தித்த ஆச்ரயன், சந்தித்தசாத் யாவியாவிருத்தன், சந்தித்தசாதனாவியா விருத்தன். (சிவ~சித்.) |
திருட்டாந்தம் | எதுவிற்கும் சாத்யத்திற்கும் வியாப்தியைக் கிரகிக்கும் தலம். (சிவ~சித்.) |
திருணநரன் | சிவமூர்த்தியால் தேவர்களின் கர்வபங்கத்தின் பொருட்டுச் சிருட்டிக்கப்பட்ட புல்போல்வன். இவனை யெதிர்க்கத் திரிமூர்த்திகள் முயன்று பின்னடைந்னர் |
திருததேவர் | தேவகன் தமரி, வாசுதேவன் பாரிகளில் ஒருத்தி, |
திருததேவி | வசுதேவன் பாரி குமரன் திருவிஷ்டன், தேவகன் பெண். |
திருதன் | 1. காந்தாரன் பேரன். 2. இவன் ருக்குவேதத்திற் புகழப்பட் டவன், |
திருதராஷ்டிரன் | 1. கௌரவவம்சத்தவன், காந்தருவராசனாகிய அப்ட்டன் குமரனாகிய அம்சன் என்பவனது அம்சத்தால் பிறந்தவன். துரியோதனன் ஒழிந்த இவன் நூறு குமாரும் விசிரவசு குமாரர் அம்சம். இவன் விசித்திரவீரியன் பாரியாகிய அம்பிகையிடத்து வியாசராற் பிறந்தவன். இவள் தேவி காந்தாரி. இவன் மூன்று தேசத்திற்கும் தலைவன் ஆதலின் இப்பெயர் பெற்றான் என்பர். (ஆயின் திரிதராட்டானென் இருத்தல் வேண்டும். திருதராட்டரன் என்று ஆனது மரு.) இவன், குருநாட்டை அரசாண்டு தனது தம்பியாகிய பாண்டுவனை இளவரசாக்கி இருவரும் அரசாண்டு வருகையில் பாண்டு இறக்கப் பாண்டுவின் குமரர் சிறுவரர்கல்லால் அவர்களுக்குக் கல்வியோடு தனுர்வித்தை முதலியவைகளைக் கற்பித்து வளர்த்து வந்தனன். பாண்டவரது புத்தி கோசாரத்தையும் சாகசத்தையும் கண்ட துரியோதனன் பொறாமை கொண்டு தன் பிதாவிடம் முறையிட்டுக் கொண்டபடி கேட்டுப் பாண்டவரை இந்திரப்பிரத்தத்திலிருந்து வருவித்துச் சபாமண்டபம் காண் பித்துச் சகுனியால் சூதாடுவித்துக் காட்டிற்கேகினன். பாண்டவர் காடு சென்று மீண்டு நாடடைந்து யுத்த சந்தத்தராயிருக்கையில் சஞ்சயனை ஏவி அவரது கருத்தறிந்து பாண்டவர் சண்டை புரிகையில் பதினெட்டு நாளும் நடந்த செய்திகளைச் சஞ்சயனாலறிந்து யுத்தத்தில் துரியோத னாதியர் இறந்தபின் சிலகாலமிருந்து தவத்தை யடைந்து காடு சென்று நாரதரால் இனிவரும் பதவியில் குபேரனிடத்தில் யக்ஷராஜனாயிருப் பையெனக் கேட்டு வியாசரால், இறந்த மைந்தர் முதலியவரைக் கண்டு தவஞ்செய்கையில் காட்டுத் தீப்பற்றிவர அதிகப்பட்டுக் காந்தாரி, குந்தி, தஞ்சயுனுடன் மேலுலகமடைந்தவன். தருமார்ஜனுக்குப் பட்டமான பதினெட்டாம் வருஷம் இறந்தான். இவன் காந்தருவ அம்சம் 2. பாதாள வாசியாகிய நாகன். 3. சக்கிராங்கன் குமரன். இவன் தன் குலம் நீங்கித் தன் பாரியுடன் நந்தன வனத்திற் சென்று மிருத்தியு லிங்கம் பூசித்து வாணாசுரனாகப் பிறந்து குடமுழாமுழக்கினவன். (கடம்பவாபுராணம்). 4. ஒரு காந்தருவன். இவனை யிந்திரன், மருத்துச் செய்த யாகத்தில் பிரகஸ் பதியைப் புரோகிதராய்க் கொள்ள ஏவப்பட்டவன். (பார~அச்வமேதபர்வம்). |
திருதராஷ்டிரன் புத்திரர் நூற்றுவர் | (1) துரியோதனன், (2) யுயுத்சு, (3) துச்சாதனன், (4) துச்சகன், (5) துச்சலன், (6) துர்ழகன், (7) விவிஞ்சதி, (8) விகர்ணன், (9) சலசந்தன், (10) சுலோசான், (11) விந்தன், (12) அநு விந்தன், (13) தூர்த்தருடன், (14) சுவாகு, (15) துர்ப்பிரதருடணன், (16) தூர்மருடணன், (17) துருமுகன், (18) தூர்க்கருணன், (19) கர்ணன், (20) சித்திரன், (21) உபசித்திரன், (22) சித்திராக்கன் (23) சாரு, (24) சித்திரா கென், (25) துர்மதன், (26). துர்பிரகாஷன், (27) விவித்சு, (28) விகடன், (29) சமன், (30) உர்ண நாபன், (31) பத்ம நாபன், (32) நந்தன், (33) உபருந்தன், (34) சேநாபதி, (35) சுடேணன், (36) கண்டோதரன், (37) மகோதரன், (35) சித்திரவாகு, (39) சித்ரவர்மா, (40) சுவர்மா, (41) துருவிரோசான், (42) அயோவாகு, (43) மஹாவாகு, (44) சித்திரசாபன், (45) சுகுண்டலன், (46) வீமவேகன், (47) வீமபலன், (48) பலாகன், (49) வீமவிக்ரமன், (50) உக்ராயுதன், (51) வீமசான், (52) கனகாயு, (53) திருடாயுதன், (54) திருடவாயா, (55) திருடகத்ரன், (56) சோமகீர்த்தி, (57) அநூதரன், (58) சராசந்தன், (59) திருடசந்தன், (60) சத்தியசந்தன், (61) சகச்சிரவாகு, (62) உக்கிரச்சிரவா, (63) உசாசேநன், (64) சேநாங், (65) மகமூர்த்தி, (66) அபராசிதன், (67) பண்டிதகன், (68) விசாலாக்ஷன், (69) துராதரன், (70) திருடகத்தன், (71) சுகத்தன், (72) வாதவேகன், (73) சுவர்ச் சசன், (74) ஆதித்யசேது, (75) வெகுவாதி, (76) நாகத்தன், (77) அநுயாயி, (78) நிஷங்கி, (79) கவசி, (80) தண் (81) தண்ட தரன், (82) தனுக்கிரகன், (83) உக்கிரன், (84) பீமரதன், (85) வீரன், (66) வீரவாகு, (87) அலோலு பன், (88) அபயன், (89) இரெளத்திரகர்மன், (90) திருடாதன், (91) அநாதிருடியன், (92) குண்டபேதன், (93) விராவி, (94) தீர்க்கலோசான், (95) தீர்க்கவாகு, (96) மகாவாகு, (97) வியுடோரு, (98) கனகாங்கதன், (99) குண்டசித்து, (100) சித்திரகன். |
திருதராஷ்டிரை | தருமன் புதரி. விச்சுளிகளைப் பெற்றவள். |
திருதவன்மா | ஒரு சோழன். திருவேங்கடமலை யுண்டான காலத் திருந்தவன். |
திருதவரதன் | ஒரு வேதியன். இவன் மனைவி, புத்திரனைக் கூடிய பாபம் பற்ற தௌதபாப தீர்த்த ஸ்நாகஞ்செய்து நல மடைந்தாள். (பிரமபுராணம்). |
திருதி | 1 மனுவென்னும் ஏகாதசருத்திரன் தேவி. 2. (சூ.) விபிலாசுவன் குமரன். 3. தக்ஷன் பெண். தருமன் தேவி. 4. விசயன் குமரன். இவன் குமரன் திருதவிருதன் 5. கபிலன் தேவி. இவளில்லாவிடம் தைரியமின்றி யிருக்கும். |
திருதிவிருதன் | 1. ஏகாதச ருத்திரருள் ஒருவன், தேவி தீக்ஷை. 2. திருகி குமரன். இவன் குமரன் சத்தியகர்மா. |
திருதுசேது | தெக்ஷசாவர்ணி மதுப் புத்திரன். |
திருத்தக்கதேவர் | இவர், சோழர் குலத்துதித்துக் கல்வியில் வல்லவராய்த் தம் மத சித்தாந்தமாகிய ஆருகதசமய வுண்மையறிந்து துறவு பூண்டு இருந்தனர். இவர் மதுரை நகரடைந்து சங்கப் புலவர்களுடன் பழகி அளவளாலியிருக்கையில் சங்கத்தவர்கள், உங்கள் சமயத்துப் புலவர்கள் வீட்டு நூல் கூறவல்லரேயன்றிக் காமநூல் கமுறும் வலியிலர் எனத் தேவர், அங்ஙனம் அன்று அவர்கள் அதனை வெறுத்துச் செய்திலர். காமச்சுவை யறியாதாரன்று என்றனர். அது உண்மையாயின் நீர் ஒரு நூல்செய்க வென்றனர். தேவர் அதை மனதிற்கொண்டு தமது எண்ணத்தைத் தமது ஆசிரியர்க்குத் தெரிவிக்க, ஆசிரியர், அப்பொது அவ்வழி யோடிய நரியைக் காட்டி இந்நரிச் சாதியை முன்னிட்டு ஒரு சரிதை செய்யக் கட்டளையிட்டனர். தேவர் அதனைச் சிரத்திற்கொண்டு யாக்கை, செல் வம் முதலியவற்றின் நிலையாமை பொருளாக நரிவிருத்தம் என ஒரு நூல் செய்து ஆசிரியருக்குக் காட்டினர். ஆசிரியர்களிப்புற்றுச் சீவகன் சரிதையைக் காவியமாக்க என்று கடவுள் வாழ்த்துப்பாடி யருளினர். திருத்தக்கதேவர் ஆசிரியர் பாடிய “செம் பொன்” என்னும் கவியைச் சிரமேற் கொண்டு தாழம் “மூவா முதலா” என்னும் ஒரு செய்யுளியற்றி யாசிரியர்க்குக் காட்டினர். ஆசிரியர், திருத்தக்கதேவர் செய்ததே நன்றாயிருத்தல் கண்டு அதனை முன்வைக்கக் கட்டளையிட ஆசிரியர் கட்டளைக்கஞ்சி அதனை முன்வைத்து எட்டு நாட்களில் சீவக சிந்தாமணியைப் பாடி முடித்து ஆசிரியர்க்குக் காட்டினர். ஆசிரியர் காவி படத்தைச் சங்கத்தவர்க்குக் காட்டக் கட்டளையிட அவ்வகைப் பாண்டியனவைக்களத் துச்சங்கத்தார் முன்பு கூறச் சங்கத்தவர் கேட்டுக் களித்தனர். அவர்களுட் சிலர் இவர் இளைமைப்பருவந் தொடங்கித் துறவு பூண்டிருத்தவின் காமச்சுவை கண்டவர் போல் கவிபாடியிருத்தல் எண்ணத்தக்கதெனச் சந்தேகித்தலைத் தேவருணர்ந்து இருப்புக் கட்டியைப் பழுக்கக்காய்ச்சு வித்து நான் இளைமை முதல் துறவுபூண்டு தீநெறி யொழுகாதிருத்தல் உண்மையாயின் இத்தீ என்னைச்சுடா தொழிக எனக் கட்டியைத் தழுவினர். புறங்கூறிய சிலர் நடுங்கித் தேவரை வேண்டிக் கொள்ளத் தேவர் அவர்களை நோக்கி நீங்கள் எனது துறவொழுக்கத்தைப் பலாறியச் செய்தீர் ஆதலின் நன்மையே புரிந்தீரெனக் களிப்பித்து, ஆசிரியரைச் சேர்ந்திருந்தனர். இவர் செய்த நூல்கள், நரிவிருத்தம், சீவக சிந்தாமணி. இவர் திருவள்ளுவரிருந்த மயிலை நகரத்தில் அவர் காலத்திருந்தா ரென்றும் கூறுவர். (சீவக சிந்தாமணி.) |
திருத்தங்கால் | பாண்டி நாட்டிலுள்ளதோரூர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சமீபமாகவுள்ளது. (சிலப்பதிகாரம்). |
திருத்தாமனார் | சேரமான் வஞ்சனைப்பாடிப் பரிசுபெற்றவர். (புற. நா.) |
திருத்திரன் | பாஷூ எனும் அரசனுக்குப் புத்திரன், இவன் ருக்வேதத்திற் புகழ்ந்து கூறப்பட்டவன். |
திருத்தொண்டர் புராணம் | சிவனடியவர் சரிதை சொன்ன நூல். இது சேக்கிழார் சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்டது |
திருத்தொண்டாந்தாதி | நம்பியாண்டார் நம்பிகளாலருளிச் செய்யப்பட்ட தொண்டர் சரிதை. |
திருத்தோணியப்பர் | இவர் விஜயக்கத்தரசராகிய கிருஷ்ணதேவ மகராயர் காலத்திருந்த ஒரு புலவர். தத்வப்ரகாசரைக் காண்க. |
திருநகரிப்பிள்ளை | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், ஸ்ரீ வைஷ்ணவர். ‘ (குருபரம்பரை.) |
திருநகர் | வேசாலி என்றும் அரசனது நகர். (பெ. கதை) |
திருநறையூர் நம்பி | திருமங்கையாழ்வார்க்கு ஆசாரியர். |
திருநாளைப்போவார் நாயனார் | இவர் சேரணாட்டில் ஆதனூரில் புலையர் குலத்தில் அவதரித்து நந்தனார் எனத் திருநாமம் பெற்று, சிவபக்தியுடையராய்ச் சிவாலயங்களுக்குப் பேரிகை முழவு, யாழ் முதலிய வைகளுக்குத் தோல், வார், நரம்பு, கோரோசனம் உதவி வருவர். இவர் பல சிவாலயங்களையும் தரிசிக்க விரும்பித் திருப்புன் கூரில் சுவாமியை நேரே தரிசிக்க எண்ணிச் சிவமூர்த்தியை வேண்டச் சிவபிரான் தமக்கு முன்னிருந்த நந்தி பிரானை விலக்கிக் காட்சி தந்தருளினர். இவர் சிதம் பரத்தில் நடராசமூர்த்தியைச் சேவிக்க வெண்ணித் தமக்கு அத்தலத்துள் செல்லும் ஆதிக்க மில்லாமையால் மனந்தளர்ந்து ஆசை யெழும்போ தெல்லாம், ‘நாளைப் போவேன், நாளைப் போவேன்’ என்று பலமுறை சொல்லிக்கொண்டிருந்து துணிந்து அத்தலத்தை யடைந்து உள் செல்லாது திருவெல்லையை வலஞ்செய்து கொண்டிருக்க நடராஜமூர்த்தி அவர் கனவிற்சேன்றி நீ நெருப்பில் மூழ்கி நம்மை வந்து தரிசிப்பையென்று அருளிச்செய்து தில்லைவாழந்தணருக்கும் திருநாளைப்போவார் பொருட்டுத் தீ வளர்த்தக் கட்டளையிட்டு மறைந்தனர். தில்லை வாழந்தணர் இறைவன் சொற்படி நந்தனாரிடம் சென்று தீவளர்த்த நந்தனார் தீயினை வலம் வந்து உள்புகுந்து முனிவர் உருக்கொண்டு வேதி யராய் வந்து சுவாமி சந்நிதானத்து நடராஜமூர்த்தியைச் சேவித்து மறைந்தனர். (பெரிய புராணம்). |
திருநாவுக்கரசு சுவாமிகள் | திரிமுனைப் பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் குலத்தில் குறுக்கையார் குடியில் புகழனார்க்கு மாதினியார் வயிற்றில் திலதவதியார் என்னும் ஒரு புத்திரியும் இரண்டாவது இவரும் அவதரித்தனர். இவர்க்குத் தந்தையார் மருணீக்கியார் எனத் திருநாமம் இட்டுக் கல்வி முதலிய கற்பித்து வந்தனர். திலதவதியாருக்கு மணப்பருவம் சமீபித்தவுடன் இராஜாவிடத்தில் சேனாதி பதித்தொழில் புரிந்து வருபவரும் தம் குலத்துக் கொத்தவருமாகிய கலிப்பகையார் திலதவதி யாரைத் தமக்கு மணஞ்செய்துதரக் கேட்கத் திலதவதியாரின் தந்தை உடன்பட்டிருந்தனர். இவ்வகை இருக்கையில் அரசன் ஏவலால் கலிப்பகையார் யுத்தத்திற்குச் சென்று அங்கே நெடு நாளிருந்தார். இங்குப் புகழனார் காலஞ்சென்றார். மாதினியாரும் சககமனம் அடைந்தனர். முன் சொன்ன கலிப்பகையார் யுத்தத்தில் இறந்தனர். ஆதலால் திலதவதியார் எனக்கென நியமித்த கணவர் இறந்தனர். ஆதலின் நானும் இறப்பே னெனத் துணிந்து இருக்கையில் மருணீக்கியார் தமக்கையாரை நோக்கி உம்மைத் தாய் தந்தையர்க்குப் பதிலாக எண்ணியிருக்கிறேன்; நீர் இறப்பிராயின் உமக்கு முன் நானும் இறப்பேன் என மருணீக்கியார் பொருட்டு உடல் துறவாது உயிருடன் இருந்தனர். மருணீக்கியார் கல்வியில் வல்லவராய் யாக்கையும் செல்வழம் நிலையாமை யுணர்ந்து தமது செல்வங்களை அறவழியிற் செவவு இட்டுப் பாடவிபுத்ரமடைந்து சமணர் பள்ளியுட் சென்று அவர்கள் போதனைக்குட்பட்டுச் சமணமதம் சார்ந்து அதை மெய்ச்சமயமெனக் கொண்டு அச்சமயத்தில் வல்லவராயினர். சமணர் இவரது வல்லமையறிந்து அவருக்குத் தருமசேனர் என்கிற பெயர் தந்து தங்களுக்கு ஆசிரியரும் ஆக்கினர். இது நிற்க, திருவாமூரிலிருந்த திலதவதியார் சிவபக்தி முதிர்வால் சிவபுண்ணியஞ் செய்ய விரும்பித் திருவதிகை வீரட்டானம் சென்று சிவபணி விடை செய்து வருகையில் தன்னுடன் பிறந்தார் சமணசமயத்தில் ஆழ்ந்து இருப்பதை யெண்ணி வருந்திச் சிவமூர்த்தியைத் துதித்து அவரை ஆட்கொள்ள வேண்டுமென வேண்டினர். சிவமூர்த்தி திலதவதியாரின் சுவப்பனத்தில் அவனைச் சூலைநோய் தந்து ஆட்கொள்வோம் மனக் கவலை யொழிக என்று திருவாய் மலர்ந்து மறைந்தனர். பரமசிவம் திருவாய் மலர்ந்த படி சூலைநோய் தருமசேனரைப் பற்றி விருத்தியது. சமணர் தங்களுக்குத் தெரிந்த மந்திர ஔஷதங்களைப் பிரயோகித்தும் தணியாயையால் கைவிட்டனர். மருணீக்கியார் இச்செய்தியைத் தம் தமக்கைக்குத் தூதின் வழி தெரிவித்தனர். தூதன் திருவதிகை வந்து திலதவதியார்க்குத் தெரி வித்தனன். திலதவதியார் பாமசிவத்தின் பெருங்கருணையை யெண்ணி நான் சமணர் இருக்கையில் வரேன் என்று கூறினர். தமக்கையார் வராமை நோக்கித் தாமே ஒருவரும் அறியாமல் பாயுடை, உறி, குண்டிகை முதலியவற்றை யுதறிச் சூலை துணையாக ஆப்தராய் உள்ளார் கைலாகு கொடுக்கத் தமக்கையாரிடம் வந்து நீரே துணை உம்மையே ஆதரவு என்று அடைந்தேன் என்று திருவடியில் விழுந்தனர். திலதவதியார் தம் தம்பியாரை யெழுந்திருக்கச் செய்து இது பரமசிவம் ஆட்கொள்ளச் செய்தது என்று ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைத் தியானித்து மருணீக்கியார்க்கு விபூதி கொடுத்தனர். மருணீக்கியார் அதை ஆவலுடன் தமது தேக முழு வதும் பூசிக்கொண்டனர். திலதவதியார், மருணீக்கியாரைத் திருப்பள்ளி யெழுச்சியில் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்றனர். மருணீக்கியார் சுவாமியைப் பிரதக்ஷிணஞ்செய்து வணங்கி நின்று திரு அருளால் தமிழில் பாடும் வல்லமை அடைந்து ”கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனும் திருப்பதிகம் பாடியருளினார். உடனே சூலைநோய் நீங்கியது. மருணீக்கியார் உடல் பூரிக்க ஆனந்தத் தழுந்தி வணங்கு கையில் சிவமூர்த்தி அசரீரியாய் நீ அற்புத மதுரமாகிய தேவாரத்தால் நம்மைத் துதித்தபடியால் உனக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயருண்டாகுக என்று மறைந்தனர். அரசுகள் தாம் மனமொழி மெய்களால் திருத்தொண்டு செய்யத் திருவுளங் கொண்டு தியானம், பாடுதல், உழவாரப் பணிவிடை இவற்றை விடாது இயற்றினர். இவ்வகைச் சிவத்தொண்டு செய்து இருக்கையில் சமணர்கள் இவர் சைவரானதைப் பாடலிபுத்ரத்தாசன் அறியின் நம்மைத் தொலைத்து அவனும் சைவனாவன் என நீங்கிப் பல்லவராயனிடம் வந்து தருமசேனர் பொய்யாகச் சூலைநோய் என நடித்துச் சைவசமயம் புகுந்தனர். ஆதலால் அவரையழைத்துத் தண்டிக்கவேண்டும் என்றனர். பல்லவன் உடன்பட்டுச் சேனைகளை அனுப்பத் திருநாவுக்கு அரசுகள் நாமார்க்கும்” என்னுந் திருப்பதிக மோதினர். பின்னும் மந்திரிகள் வேண்டியழைக்க நமக்கு வரும் அபாயங்கட்குச் சிவமூர்த்தி யிருக்கிறார் என்று அரசன் எதிர் நின்றனர். பல்லவன் இவனுக்கு யாது தண்டனையெனச், சமணர் நீற்றறையில் இடுவது, ஆகும் எனப் பல்லவன் உடன் பட்டு ஏவலாளரிடம் கூற, அவர் கள் அரசுகளை நீற்றறையிலிட்டனர். அரசுகள் “மாசில் வீணையும் மாலை மதியழம் ” என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு நீற்றறையில் பொய்கையில் இருப்பது போல் இருந்தனர். எழுநாட் சென்றபின் பல்ல வன் நீற்றறையைத் திறந்து பார்க்கக் கூற அரசுகள் களிப்புடன் இருக்கக்கண்டு ஏவலாளர் கூறினர். சமணர் அரசனை நோக்கி நம்மதத்தில் கற்றமந்திர வலியால் பிழைத்தனன். ஆதலால் நஞ்சூட்டவேண்டும் என அரசன் அவ்வகைக் கட்டளையிட்டனன். பிறகு நஞ்சூட்டப் பட்டும் அரச கள் களிப்புடன் இருந்தனர். இதை அரசன் கேட்டு இவனை என்ன செய்வது எனச், சமணர்கள் யானையை விட்டுக் கொல்ல ஏவுக என்றனர். பல்லவன் அவ்வகையே யானையையும் பாகரையும் ஏவுவிக்க அரசுகள் யானையின் முன் “சுண்ண வெண் சந்தனச் சாந்தும்” என்னுந் திருப்பதிகம் ஓதினர். யானை யரசுகளை வலஞ் செய்து வணங்கிப் போயிற்று பாகர் கொல்லத் தூண்டினர். யானைப் பாகரையும் எதிர்ப்பட்டவரையும் கொன்று நாசமாக்கியது. சமணர் அரசனையடைந்து எங்கள் மந்திரத்தைக் கொண்டே எங்களை ஒட்டினன் எனப் பல்லவன் கோபித்து இவனை யாது செய்வது என்றனன். சமணர் கல்லைக்கட்டிக் கடலில் இடுவது தரம் என்ற னர். அவ்வகை அரசன் சம்மதிக்க ஏவலாளர் கற்றூணிற் பிணித்துக் கடலி லிட்டனர். அரசுகள் சிவமூர்த்தியின் திருவடி துணையாப்பற்றி ‘சொற்றுணை வேதியன்’ எனும் நமச்சிவாயப் பதிகத்தைப் பாடக் கல் தெப்பமாக மிதந்து அரசுகளைத் தாங்கிச் சென்று திருப்பாதிரிப் புலியூர் கொண்டு சேர்த்தது. அரசுகள் அத்தலத்தில் எதிர்கொண்ட சிவனடியவர் களுடன் சென்று ஆலயத்தையடைந்து, “ஈன்றாளுமாய்” எனத் திருப்பதிகம். பாடி அவ்விடத்து எழுந்தருளியிருந்தனர். பின் திருவதிகை தரிசிக்க ஆவல் கொண்டு அவ்விடம் நீங்கி அத்தலவாசிகள் எதிர்கொள்ள ஆலயத்துள் சென்று “வெறிவிரவு” எனவெடுத்து “ஏழையேன் பண் டிகழ்ந்தவாறே” எனத் துதித்திருக்கையில் முன் தீங்கு செய்த பல்லவன் திருவதிகை வந்து அரசுகளை வணங்கிச் சைவனாயினான். பாடலிபுரத்த்திலிருந்த காடவன் என்னும் அந்நாட்டரசனும் சமண சமயம் பொய்யென்று அறிந்து சமணப்பள்ளிகளை யிடித்துக் கற்களைக் கொண்டுவந்து திருவதிகையில் குண தரீச்சுரம் கட்டினான். பின் அரசுகள் பல தலங்களையும் வணங்கப் பேர் அவாவுடையராய்ப் பல தலங்களைச் சேவித்துத் திருத்தூங்கானைமாடஞ்சென்று சிவமூர்த்தியை நோக்கி அடியேன் சமண சமயத்தோடு அழுக்கடைந்த இந்தத் தேகத்துடன் உயிர் வாழேன் அடியேன் உயிர் வாழ்தற்பொருட்டுத் தேவரீர் திருவிலச் சினையாகிய இடபக்குறியையும் சூலக்குறியினையும் பொறித்தருள வேண்டும் என்று “பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்” எனத் திருப்பதிகம் பாடி விண்ணப்பிக்க அவ்வகை ஒரு பூதம் அவ்விலச் சினைகளை யிட்டது. அவ்விடம் நீங்கிப் பல தலம் தரிசித்துச் சிதம்பரத்தில் உழவாரத் திருத்தொண்டு செய்து திருப்பதிகம் பாடியிருந்தனர். இவ்விடம் அரசுகள் இருக்கையில் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மகிமைகளைக் கேட்டு அவரை வணங்கவேண்டும் என்னும் அவாவினால் சிவமூர்த்தி யிடம் விடைபெற்றுச் சீர்காழிக்கு எழுந்தருளினர். இவரது வரவையறிந்த திருஞானசம்பந்தர் எதிர்கொள்ள அரசுகளும் கண்டு வணங்கப் பிள்ளையார் அப்பரே என்று வணங்கினர். இருவரும் ஆலயத்துட் சென்று வணங்கிப் பின் அவரிடம் விடைபெற்றுச் சோணாட்டுப் பல தலங்களை யும் வணங்கித் திருச்சத்தி முற்றம் என்னும் தலமடைந்து கோவாய் முடுகி” என்னுந் திருப்பதிகத்தால் திருவடியைச் சிரத்து வைத்து அருளல்வேண்டும் என்று விண்ணப்பித்தனர். பரமசிவம் திருநல்லூருக்கு வா” என்று கட்டளை யிட்டனர். அவ்வகையரசுகள் திருகல்லூரடைந்து தரிசிக்கையில் சிவமூர்த்தி திருவடியைச் சிரத்தில் சூட்டியருளினர். அரசுகள் நினைத்து திருவடி யென் தலைமேல் வைத்தார்” என்ற திருப்பதிகம் ஓதினார். பின்னும் பல தலங்களைத் தரிசித்தித் திங்களூர் வழியாகச் செல்லுகையில் அப்பூதியடிகள் தம்மிடத்தில் நின்பேரன்பு வாய்த்தவராய் இருத்தல் கண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பூதி அடிகள் அப்பருக்கு அமுது படைத்தல் வேண்டித் தமது புத்திரர் இருவரில் மூத்த திருநாவுக் கரசுகளை நோக்கித் தோட்டத்திற்சென்று வாழைக் குருத்துக் கொண்டுவரச் சொல்லினர். அக்குமரர் இலை கொய்கையில் பாம்பு தீண்ட விஷம் ஏறுவதன் முன் இலையை வீட்டில் இட்டுக் கீழே விழுந்து இறந்தனர். அப்பூதியார், சவத்தை மறைத்து இனி நாயனார் அமுது கொள்ளாரே என்று தடுமாற்றமின்றி அரசுகளை அமுது செய்ய அழைத் தனர். அரசுகள் அவ்விடம் நடந்தவைகளைத் திருவருளால் உணர்ந்து அவரது அன்பை நினைந்து திருவருள் சுரந்து சவத்தைச் சிவாலயத்து முன்னே கொணர்வித்து ஒன்று கொலாம்” என்னும் திருப்பதிகம் பாடினர். உடனே அப்புத்திரர் உயிர்பெற்றனர். அப்பூதியடிகள் உயிர் பெற்றதற்கு மகிழாமல் அரசுகள் அன்னம் புசியாததற்கு வருந்து தலைக்கண்ட அரசுகள் அவரிடம் அமுதுண்டு சொல்மாலை” என்னுந் திருப்பதிகத்தில் அவரைச் சிறப்பித்து நீங்கிப் பல தலங்கள் சேவித்து நமிநந்தியடிகள் நீரினால் விளக்கேற்றின் மையைச் சிறப்பித்துப் பாடிப் பல தலங்களுக்குச்சென்று சேவித்துத் திருவாரூரை வணங்கித் திருப்புகலூரில் இருக்கையில் திருஞான சம்பந்தமூர்த்திகளைக் கண்டு அவருக்குத் திருவாரூரினது திருவாதிரைப் பெருமைகளைச் சொல்லிப் பின் திருவாரூர் சென்று திரும்பிய திருஞானசம்பந்தரை எதிர்கொண்டு முருக நாயனார் மடத்தில் சிறுத்தொண்டநாயனார், திருநீலநக்க நாயனாருடன் இருந்தனர். சில நாள்களுக்குப் பிறகு அரசுகள் திருஞானசம்பந்த சுவாமிகளுடன் பலதலங்களை வணங்கிக் குங்கிலியக்கலய நாயனார் செய்த விருந்து உண்டு திருக்கடவூர் முதலிய பல தலங்களை வணங்கித் திருவீழிமிழலை யடைந்து பஞ்சத்தின் பொருட்டுச் சிவமூர்த்தி யருளிய படிக்காசு பெற்றுச் சிவனடியவரை உண்பித்துப் பஞ்சம் நீங்கியவுடன் பல தலங்களை வணங்கி வேதாரணியம் எழுந்தருளி வேதம் பூசித்து மூடப்பட்டிருந்த திருக்கதவம் திறக்கப் பாடித் தரிசித்து அருவித்திரை செய்கையில் “நாம் வாய்மூரிலிருப்போம் வா” என அப்பர் “எங்கே யென்னை” என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு செல்லச் சிவமூர்த்தி இவருக்குத் தரிசனம் தந்த கோலத்துடன் முன்னடந்தனர். நெடும் பொழுது அம்முன் னடப்பவரை நெருங்கிலர். சிவமூர்த்தி சமீபத்தில் காட்சி கொடுப்பவர் போல் அருகிருக்கும் ஆலயத்தில் மறைந்தனர். அப்பர் திருவாய்மூருக்குச் சென்றதறிந்த ஆளுடைய பிள்ளையார் திருவாய்மூரடையச் சிவமூர்த்தி இருவருக்கும் தரிசனந் தந்தருளினர். பின் இரு நாயன்மார்களும் வேதாரணியம் சென்று இருக்கையில் திருஞானசம்பந்தர் பாண்டி மாதேவியாரனுப்பிய திருமுகத்தால் மதுரைக்கு எழுந்தருளத் திருநாவுக்கரசுகள் பிரிதற்கஞ்சி நாகைக்காரோண முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவாவடுதுறை யடைந்து திருஞானசம்பந்தமூர்த்தி களுக்குப் பொன் கொடுத்ததை “மாயிரு ஞாலமெல்லாம்” என்னுந் திருப்பதிகத்தாற் பாடிப் பழையாறையிற் சென்றார். அங்கே வட தளியென்னும் ஆலயத்தில் சிவலிங்க மூர்த்தியைச் சமணர் மறைத்திருத்தலைக் கேள்வியுற்று அமுது செய்யாமல் திரு உருவைத் தரிசித்தன்றிச் செல்லேனென இருக்கச் சிவமூர்த்தி அரசன் கனவிற் சென்று தாமிருக்கும் ஆலயத்தின் அடையாளங் கூறித் தம்மை வெளிப்படுத்தித் தரிசிக்க நாவுக்கரசு விரும்புகிறான் ஆதலால் சமணரைப்போக்கி ஆலயம் செய்க என்றனர். மறுநாள் அரசன் சமணர்களை யோட்டி நாவுக்கரசுகளை வணங்கி ஆலயம் சமைத்தனன், நாவுக்கரசுகள் “தலை யெலாம் பறிக்கும் சமண்” என்னும் திருப்பதிகம் பாடித் துதித்தனர். பின் பலதலங்களை வணங்கித் திருப்பைஞ்ஜீலி செல்லுகையில் பசி தாகத்தால் வருந்தி மனந் தளர்ந்து சென்றனர். இவரது வழியிளைப்பு நீக்கச் சிவமூர்த்தி வேதியராய் ஒரு தோப்பும் குளமும் உண்டாக்கிப் பொதி சோறும் வைத்து இருந்தனர். இவரது வரவை நோக்கிக் கிட்டி வழிநடையால் வருந்தினீர் போலக் காண்கிறது. என்னிடம் பொதிசோறு இருக்கிறது; அதையுண்டு இக்குளத்துச் சலத்தைப் பானஞ் செய்து போக என்றனர். வேதியர் பொதிசோற்றைத் தா அப்பர் வாங்கிப் புசித்து நீருண்டு இருக்கையில் வேதியர் நீர் எங்கே போகின்ரீர் என அப்பர் திருப்பைஞ்ஜீலி செல்கின்றேன் என வேதியர் நானும் அவ்விடமே செல்கின்றேன் என உடன் சென்று திருப்பைஞ்ஜீலி சென்றவுடன் மறைந்தருளினர். அப்பர் அதுகண்டு ஆநந்தக் கண்ணீரொழுக அழுது அலறி வணங்கித் திருத் தொண்டு செய்து கொண்டிருந்தனர். பின் அத்தலம் நீங்கித் திரு அண்ணாமலை முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு தொண்டை நாட்டுத் திருப்பதிகளை வணங்கித் திருக்காளத்தி, திருப்பருப்பதம் சேவித்து அவ்விடம் நீங்கி உத்தர கைலாசத்தில் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோலம் தரிசிக்க விரும்பிக் காசியையடைந்து நீங்கி இராப்பகல் நித்திரையின்றி உணவு இன்றி நடந்தனர். கால்கள் இரண்டும் தேய்ந்தன. கைகள் ஆதரவாக நடந்தனர். அவையும் தேய, மார்பினால் நகர்ந்து சென்றனர். அது முரிய உருண்டு சென்றனர். அதனால் தேக முழுதும் உறைய அப்பர் அன்பால் மனம் தளராது நகருதற்கு முடியாமையால் வழியிற் கிடந்தனர். பரமசிவம் இவரது கருத்தை முற்று வித்தற்கும் தமிழ் வேதம் தமிழ் நாட்டில் பரவவும் வேண்டி ஒரு தடாக நிருமித்து முனிவர் உருவுடன் எதிரில் தரிசனம் தந்து நீர் எங்கு ஏகுகின்றீர் என்றனர். அப்பர் சிவ சின்னங்களுடன் இருப்பவரைக் கண்டு திருக்கைலைக்குச் சிவதரிசனத்திற்குச் செல்கின்றேன் என முனிவர் தேவர்களாலும் அடையப்படாத அக்காட்சி மனிதர்களுக்கு எளிதோ திரும்புதலே நன்று என்றனர். அப்பர் அத்தரிசனம் செய்தாலல்லாமல் அநித்திய உடல் கொண்டு திரும்பேன் என்றனர். சிவமூர்த்தி இவரது துணிவு நோக்கி ‘நாவுக்கரச” எழுந்திரு எனலும் குறைந்த உறுப்புக்களைப் பெற்று அப்பர் எழுந்து அஞ்சலி அத்தராய்த் தமது குறை வேண்டினர். பரமசிவம் அப்பரை நோக்கி இத்தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்து அத்தலத்தில் கைலாசகிரியில் நாம் வீற்றிருக்கும் திருக்கோலம் கண்டு தரிசி என்று கட்டளையிடலும் அப்பர் அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் செபித்துத் தடாகத்தில் ஸ்நானஞ்செய்து திரு வையாற்றிலிருக்கும் ஒரு வாவியில் எழுந்து கரை ஏறி வழியிலே சராசரங்கள் தத்தம் துணையுடன் இருத்தலைக் கண்டு அவற்றைச் சிவசத்தி யுருக்களாகத் தியானித்துத் திருக்கோயில் அடைந்து திருக்கைலாச தரிசனம் கண்டு ஆநந்தங்கொண்டு வணங்கினர். பின் அவ்விடம் நீங்கித் திருப்பூந்துருத்தி சேர்ந்து ஒரு திருமடம் கட்டு வித்துத் திருத்தாண்டகம் பாடிக்கொண்டிருக்கையில் பாண்டி நாட்டில் சைந மதங் களைந்து சைவம் பரவச்செய்து தாம் இங்கிருப்பதைத் தேடி எழுந்தருளுகின்ற திரு ஞானசம்பந்தர் வரவுக் கெதிர்கொண்டு சென்று ஒருவருமறியாமல் சன நெருக்கத்தினுள் புகுந்து அம்மூர்த்திகளின் சிவிகைகளைத் தாங்கி வருவார் ஆயினார். திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்தி அடைந்து அப்பரைக் காணாமையால் அப்பர் எங்குற்றாரென இங்குற்றேன் என்று எதிர் சென்று வணங்கிச் சிவதரிசனம் செய்து அளவளாய் இருந்தனர். பின் திருநாவுக் கரசுகள் பாண்டி நாட்டிற்கு எழுந்தருள எண்ணிச் சென்று நின்றசீர்நெடுமாற நாயனாரும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும் வணங்கித் துதிக்கச் சில நாளிருந்து பாண்டி நாட்டுத் திருப்பதிகள் அனைத்தும் சேவித்துத் திருப்புகலூர் அடைந்தனர். இத் தலத்தில் அரசுகள் உழவாரத் தொண்டு செய்கையில் இவரது வைராக்கியத்தை உலகத்தவர்க்குத் தெரிவிக்கச் சிவபெருமான், உழவாரப் படையிடும் தோறும் பொன், நவமணி முதலிய தோன்றச் செய்தனர். அரசுகள் அவற்றைப் பருக்கைக் கற்கள் போல உழவாரப் படையில் ஏந்திக் குளத்தில் எறிந்தனர். பின் சிவாஞ்ஞையால் அரம்பையர் இவரிடம் வந்து பலவாறு மயக்கியும் இவர் தம் தொண்டிலிருந்து தமது வினையை முன் னிலையாக்கொண்டு நான் திருவாரூரில் எழுந்தருளிய சிவமூர்த்திக்கு ஆளானேன் உங்களால் ஆட்டுண்ணேன் என்னுங் கருத்தால் “பொய்ம்மாயப் பெருங்கடலில்” என்னுந் திருப்பதிகம் பாடினர். இதனால் அரம்பையர் தங்கள் கருத்து முற்றாமல் வணங்கிச் சென்றனர். அரசுகள் தம்மைத் திருவடிக்கீழிருத்திடும், என்னுங் கருத்தால் “எண்ணுகேன்” என எடுத்து “உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே” எனுந் திருப்பதிக மருளிச் சிவபெருமான் திருவடியை யடைந்தனர். இதில் சுருங்கிய கதைகளைத் திருஞானசம்பந்தர் கதையைக் காண்க. இவருக்குத் திருநாவுக்கரசுகள், மருணீக்கியர், தருமசேனர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு எனவும் பெயர். இவர் அருளிச் செய்த திருமுறைகள் (3). (பெரிய புராணம்). |
திருநாவுடையபிரான் தாசர் அண்ணர் | இவர் எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் கோமடத் தாழ்வாருடைய திருவம்சத்தவர். இவர் கொல்லிக்காவல் தாசர் குமாரத்தியை மணந்து சிக்கலில் கொல்லிக்கா வல்தாசர் வீட்டிலிருந்தார். இவர் தம் மாமனார் திருநாட்டுக் கெழுந்தருளின பின் தம் மனைவியரை அழைத்துக் கொண்டு திருநகரிக் கெழுந்தருளி யிருந்தவர். இவர் குமாரர் மணவாள மாமுனிகள். |
திருநிலையகம் | 1. ஒரு வித்தியாதர நகரம். 2. போதன நகரில் ஒரு நந்தவனம். |
திருநீற்றுச்சோழன் | அநபாயச் சோழனுக்கொரு பெயர். |
திருநீற்றுமதில் | கோச்செங்கட் சோழனைக் காண்க. |
திருநீலகண்டநாயனார் | இவர், சிதம்பரத்தில் குயவர் குலத்தில் திரு அவதரித்துச் சிவனடியவர்களுக்குத் திருவோடு தரும் நியமம் பூண்டு சிற்றின்ப இச்சையுடையராய் நிகழ்வதை மனைவியா எறிந்து இனி எம்மைத் தீண்டில் திருநீலகண்டம் என ஆணையிட்டனர். இதைக் கேட்ட நாயனார், அஞ்சி எம்மையெனப் பன்மையாய்க் கூறியதால் எந்த மாதரையுந் தொடாமல் கொண்ட வொழுக்கம் தவறாது ஒழுகி வரும் நாட்களில் சிவமூர்த்தி இவரது ஒழுக்கத்தை உலகறிந்துய்யச் சங்கமராய் எழுந்தருளி ஒரு ஓட்டினை அவரிடத்துக் கொடுத்து நாம் மீண்டும் கேட்கும் போது இதனைக் கொடுக்க எனப்பணித்து, கொடுத்த ஓட்டினை மாயையால் மறைத்து, மீண்டும் நாயனாரிடம் வந்து ஓட்டினைக் கேட்டனர். நாயனார் ஓட்டினை வைத்த இடத்தில் சென்று பார்க்கக், காணாது சங்கமரிடம் வந்து மயங்கினர். சங்கமர், நீ என் ஒட்டினைக் களவுசெய்தனை அதனை நீ களவு செய்யாதது உண்மையாயின் நீ உன் மனைவி கைப்பற்றிக்கொண்டு தீர்த்தத்துண் முழுகிக் கூறுகவென அவ்ஙனமே உடன்பட்டு இருவரும் கோலின் முனைகளை இருபுறத்தும் பற்றி முழுகி இனமைபெற்று மேலெழுந்து சிவாஞ்ஞையால் முத்தி யடைந் தவர். (பெரிய புராணம்). |
திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் | இவர் திருஎருக்கத்தம்புலியூரில் திரு அவதரித்து மதுரையில் யாழ் வாசிக்கையில், மழை வருஷிக்க அசரீரியால் பலகையிடக் கட்டளை பெற்று, பலகை பெற்று, அதிலிருந்து, யாழ் வாசித்துத் திருவாரூரில் சிவ மூர்த்தியால் நிருமிக்கப்பட்ட வடவாயிலாற் சென்று தரிசித்து, சீர்காழி சென்று திருஞானசம்பந்த சுவாமிகளிடம் கட்டளை பெற்றுத் திருப்பதிகங்களை யாழிலமைத்துப் பாடித் திருஞானசம்பந்தசுவாமிகளைப் பிரியாதிருந்து ஸ்ரீசம்பந்தர் திருமணத்தில் முத்தி யடைந்தனர். இவர் வரகுணபாண்டியன் காலத்தவர். பாணபத்திரர் எனவும் பெயர். இவர் காலம் சற்றேறக்குறையச் சம்பந்தர் சேரமான் பெருமாணாயனார் காலமாக இருக்கிறது. பாணபத்திரரைக் காண்க. (பெரிய புராணம்). |
திருநீலநக்கதாயனார் | சோழநாட்டுச் சாத்த மங்கையென்னுங் கிராமத்தில் பிராமண குலத்தில் திரு அவதரித்துச் சிவார்ச்சனை செய்து வரும் நாட்களில் ஒரு நாள் சிவ பூசை செய்யும்படி மனைவியார் பூசைக்கு வேண்டிய பொருள்களைத் தாங்கிவர அயவந்தி ஆலயத்திற் சென்று சிவபூசை செய்கையில் சுவாமிமீது ஒருசிலம்பி விழுந்தது. அருகிலிருந்த மனைவியார் சிலம்பி விழுந்தது கண்டு சுவாமியின் திருமேனியை ஊதித்துமித்தனர். இதனைக் கணவர்கண்டு அநுசிதமான காரியம் செய்தனை யாகையால் எனக்குப் புறம்பென மனைவியார் அஞ்சி ஆலயத்துளிருந்தனர். நாயனார் வீட்டிற்குச் சென்றனர். சிவமூர்த்தி, நாயனார் கனவிற் சென்று தமது திருமேனியைக் காட்டி, உன் மனைவி ஊதித்துமித்தவிட மொழிய மற்றவிடம் சிலம்பியின் கொப்புளம் என, நாயனார் விழித்துக் களிப்புடன் ஆலயத்துட் சென்று இறைவனைப் பணிந்து மனைவியாரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இவ்வகை இருக்கும் நாட்களில் திருஞானசம்பந்த மூர்த்திகள் அத்தலத்திற் கெழுந்தருள அவரை எதிர் கொண்டு அவர்க்குத் திருவமுது செய்வித்து அவருடன் வந்த பாணருக்கு இடங்கொடுத்து நித்யாக்கினி வலஞ் சுழித்த தனால் சாதியுயர்ந்ததன்று பக்தியே யுயர்ந்ததென்றறிந்து சில காலமிருந்து திருஞானசம்பந்தமூர்த்திகள் திருமணஞ் சேவித்து முத்தி பெற்றவர். (பெரிய புராணம்). |
திருப்பாணாழ்வார் | இவர் கலியுகம் (3142) துர்மதி வருஷம், கார்த்திகை மாதம், கிருஷ்ண துவிதியை புதன்கிழமை, ரோஹணி நக்ஷத்திரத்தில் திருஉறையூரில் நெற்கதிரில் திரு அவதரித்துப் பிள்ளையில்லாப் பஞ்சம தம்பதிகளால் எடுத்து வளர்க்கப் பசும் பாலுண்டு வளர்ந்து உடலால் உட்செல்லக் கூடாமையால் காவிரிக்கரையிலிருந்து பெரியபெருமாள் திருச்சந்நிதியை நோக்கிப் பாடிக்கொண்டிருந்தனர். பெருமாள், உகந்து லோகசாரங்க முனிகளுக்குத் திருப்பாணாழ்வாரைத் தோளிற்றூக்கிவரக் கட்டளையிட்டனர். லோகசாரங்க முனிகள் பெருமாள் கட்டளையைக் கோயிலனம் தக்கொத்துக்கும் அறிவித்து ஆழ்வாரைத் தோளில் எழுந்தருளச் செய்துகொண்டு பெருமாள் முன்னிறக்கி யருளினர். ஆழ்வார் பெருமாளைக் கண்ணாரச் சேவித்து “அமலனாதிப்பிரான்” எனத் திருப்பாசுரம் அருளிச்செய்து பெரிய பெருமாள் திருமேனியில் அந்தர்ப்பவித்தனர். இவர் (20) திருநக்ஷத்திரம் எழுந்தருளியிருந்தனர். (குருபரம்பரை). |
திருப்பாற்கடல் | இது, சத்த சமுத்திரங்களில் ஒன்று. இதில் திருமால், ஆலிலை மீதும் திரு அநந்தாழ்வான் மீதும் எழுந்தருளி அடியவர்க்கு அருள் செய்திருக்கின்றனர். இதனைத் தேவர், பலமுறை கடைந்து சிந்தாமணி முதலிய பொருள்கள் பெற்றனர். தேவர் பொருட்டு, கார்த்தவீரியன், வாலி முதலியவரும் இதைக் கடைந்தனர். இதனை, உபமன்னியர் பொருட்டுச் சிவமூர்த்தி பானஞ் செய்ய அளித்தனர். பாற்கடல் கடைந்ததைக் காண்க. |
திருப்புகழ் | பலசந்தங்களாக அருணகிரிநாதரால் குமாரக்கடவுளைப் பாடிய தோத்திரப்பா. |
திருப்புட்குழிஜீயர் | திருவாய்மொழி கேட்கும்படி திருமலையாழ் வாருக்குக்கூர குலோத்தமதாசர் கூறிய ஸ்ரீவைணவர் |
திருப்பெருந்துறை | சுகுண பாண்டியனைக் காண்க. |
திருப்ரவேசயோகம் | பூர்வபக்ஷத்து நல்ல கிழமையுடன் கூடின. அன்றைய பக்ஷழம்; நக்ஷத்திரழம், சுபயோகமும் வர, வாராதிபன் உச்சத்தானமேறி உச்சாம்சம் பெற உச்சராசி லக்னமாகக் கற்பாதானம், கிரகாரம்பம் விவாகம் செய்யின் முறையே சக்ரவர்த்தித்வம், அழியாச்செல்வம், பூர்ணாயுள் பெருஞ் சம்பத்துண்டாம், (விதானமாலை) |
திருமகள் | இவள் ஒருகாலத்துக் கோக்களிடத்திற் சென்று தான் அவற்றின் தேகத்திருக்க வேண்ட கோக்கள் நீ நிலையற்றவள் எனக் கூறின. |
திருமங்கலியத்திற்குப் பொன்னுருக்குதல் | திங்கள், புதன், வியாழம், வெள்ளி வாரங்களும், பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசியை ஒழிந்த திதிகளும்; அச்சுவினி, ரோகிணி, மிருகசீரஷம், புனர்ப்பூசம், பூசம், மகம், உத்தரத்திரயம், அத்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், விருஷபம், மிதுனம், கர்கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனராசிகளும், எட்டாமிடம் சுத்தமுமாக ஸ்திரி புருஷர்களுக்கு அநுகூல மான நட்சத்திரங்களிலே திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்க நன்று. |
திருமங்கையாழ்வார் | இவர் கவி (397) இல் நளளு, கார்த்திகைமாதம், பௌர்ணமி, வியாழக்கிழமை கிருத்திகையில் திருவாலி நகரத்தில் நீலனென்னும் சேநாபதிக்குப் புத்திரராய்ச் சோழராசனுக்குக் கீழ்ச்சிற்றரசரா யிருந்து கொண்டு, தாளூதுவான்; நீர்மேனடப்பான், நிழலின் மறைவான், தோலாவழக்கன், சாயைபிடிப்பான் முதலிய மந்திரியருடன் குமுதவல்லியை மணத்தற் பொருட்டுக் கேட்க அவள் திருவிலச்சினை இல்லாததால் மறுக்கத் திருநறையூர் நம்பியிடத்தில் திருவிலச்சினை பெற்றுக் குமுதவல்லியை மணந்து பலவரசர்களைச் செயித்துப் பரகாலன் என்கிற பெயர் தாங்கியிருக்கையில் சோழன் பகுதிப்பணம் வராதிருத்தலைக் கண்டு ஆழ்வாரைப் பிடிக்கக் கட்டளையிட்டனன். ஆழ்வார் வந்தவர்களை ஓட்டச், சோழன் ஆழ்வாரைத் தந்திரமாய்ப் பிடித்துச் சிறையிட்டனன், ஆழ்வார் ததியாராதன பங்கத்திற்கு விசனமடைய அத்திகிரிப்பெருமாள் இவரது கனவில் திருக்காஞ்சிக்கு வாரும் என்று திருவாய் மலர்ந்து மறைந்தருள ஆழ்வார் சோழன் மந்திரிகளைப் பார்த்து நான் செலுத்த வேண்டிய தொகையைக் காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்துக் கொண்டு போவீராயின் தருகிறேனென்று அவர்களுடன் சென்று பெருமாளைச் சேவித்து வேகவதியிற் புதைத்திருந்த பொருள்களை யெடுத்துப் பகுதிகட்டி மிகுதியைத் ததியாராதனத்திற்கு வைத்துத் திருவாலிநகர்க்கு எழுந்தருளினர். இச்செய்தியைச் சோழன் அறிந்து தனத்தை ஆழ்வாருக்குக் கொடுப்பித்து க்ஷாமணஞ் செய்து கொண்டு போயினன். பின் ததியாராதனத்திற்குப் பணமில்லாமையால் உலுத்தரிடத்தும், அவைணவரிடத்தும் உள்ள பொருள்களைப் பறித்துத் ததியாராதனஞ் செய்வித்து வருகையில் ஒரு நாள் நெற்றியில் திருமண்ணில்லாத பெண்ணொருத்தியின் கையிலிருந்த வெள்ளிக்கிண்ணத்தைப் பரிக்க அவள், நாராயணன் நம் சொத்தை அங்கீகரித்தான் எனச்சொல்லக் கேட்டு அதைப் போட்டுவிட்டுச் செல்கையில் பெருமாள் நாய்ச்சியாருடன் மணக்கோலங் கொண்டுவர அவரிடஞ்சென்று அவ்விருவரது திருவாபரணங்களைக் கழற்றித்தரப் பெற்றுப் பெட்டகத்திட்டுத் தூக்குகையில் பளுவாயிருந்தது கண்டு மணவாளனை இந்தத் தம்பன மந்திரம் எனக்குச் சொல்லுமெனப் பெருமாள் ஆழ்வார் திருச்செவியில் அஷ்டாகரம் உபதேசிக்கக் கேட்டுத் திகைத்து நிற்கையில் பெருமாள் சேவைசாதித்து சுகம் கவியா” என்று அழைக்க ஆழ்வார், பெருமாளைக் கண்குளிரத் தரிசித்துப் பெரிய திருமொழி முதலியவைகளால் துதித்து நாலுகவிப் பெருமாளெனப் பெயரடைந்து திவ்ய தேசயாத்திரை செய்து வருகையில் காழிச்சீராம விண்ணகரஞ்சென்று சம்பந்தன் என்கிற விதவானை வென்று திருவரங்கஞ் சென்று கைங்கர்யஞ் செய்துவரும் நாட்களில், நாகப்பட்டினத்துப் பௌத்தர் கோயிலில் செல்வமிருக்கிறதாகக் கேள்விப்பட்டு அங்குச்சென்று அதற்குக் காவலாகச் சுழன்று கொண்டிருந்த சக்கரத்தை வாழைமரத் தைச் சக்கரத்தில் கொடுத்து நிறுத்திச் சுவர்ண பௌத்த விக்ரகத்தை உருக்கித் திருமதில் முதலிய கைங்கர்யஞ் செய்வித்து ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரைக் கோயிலுக்கு எழுந்தருளச் செய்வித்து ஒரு பரமபதவாயில் ஏற்படுத்தி அத் தியயன உற்சவம் செய்வித்து (105) திரு நக்ஷத்திரம் எழுந்தருளியிருந்து திருக்குறுங்குடியில் திருநாட்டிற்கு எழுந்தருளினார். இவர் அருளிச்செய்த பிரபந்தங்கள் திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். இவர்க்கு நீலநிறத்தார், பரகாலன், கலியன், நாலுகவிப்பெருமாள், அருள் மாரி என்று பெயர். இவர் குதிரைக்குப் பெயர் ஆடன்மா. (குருபரம்.) |
திருமணத்தூணம்பி | அழகிய மணவாளன். காணியாளரான சிங்கப்பிரான் புத்திரன். சிங்கப்பிரானைக் காண்க, |
திருமண் | மலையின் உச்சி, நதிக்கரை, புணயபூமி, சமுத்திரதீரம், புற்றுக்கள், துளவத்தின் அடிகளில் உள்ள மண்களைக் கிரகிக்க வேண்டும். (பிரமாண்ட புராணம்). மேற்கூறிய மண்களில் சறுத்தமண் அனிஷ்டங்களை ஒழிக்கும், செம்மண் வசியத்தைத் தரும், பச்சைமண் செல்வந்தரும், வெள்ளைமண் வைஷ்ணவமாம், இவற்றைத் தரிக்கையில் பெருவிரலால் தரிக்கின் புஷ்டியைத் தரும், நடுவிரல் ஆயுளைத் தரும்; ஈற்றயல் விரல் இச்சித்தவுண்டியைத் தரும்; சுட்டுவிரல் மோக்ஷத்தைத் தரும், நகத்தால் தரிக்கக்கூடாது. இத் திருமண் தரிக்குமிடத்துத் தீச்சுவாலை போலவும், மூங்கிலிலைபோலவும், தாமரையின் அரும்பு போலவும், இதழ்போலவும், மீனைப்போலவும், ஆமையைப் போலவும் தரித்தல் தகுதியாம், பத்து அங்குல நீளமுள்ள ஊர்த்துவ புண்டரம் உத்தமம். ஒன்ப தங்குலம் மத்திமம். எட்டங்குலம் அதமம், பின்னும் சிலர் எழு ஆறு ஐந்தங்குல அளவையுடையன மத்திமம், நான்கு மூன்று, இரண்டு அங்குல அளவையுடையன கனிஷ்டமெனவுங் கூறுவர். இப்புண்டரங்க ளைக் கேசவன் முதலிய பன்னிரு திருமந்தி ரங்களுடன் நெற்றி முதலிய பன்னிரண்டு தானங்களிலும் வாசுதேவனைச் சிரத்தின் மீதும் கொண்டு தியானித்தல் வேண்டும். இவ்வாறு தியானித்தவன் நீசனேயாயினும் பரிசுத்தனாகிறான். இதில் ஐயமில்லை (சத்தியவிரதர்) கோபிசந்தனத்தால் ஊர்த்துவ புண்டாம் தரித்தவன் பாபங்களை யொழிக் கிறான். சாளக்கிராமத்திற்குத் தரித்த செஞ்சந்தனத்தைத் தேகத்திற்றரித்தவன் முத்தனாகிறான். புண்டரம் காண்க. |
திருமண்டன்குடி | தொண்டரடிப் பொடி யாழ்வார் திரு அவதாரத்தலம். |
திருமறுமார்பன் | இலக்குமியையும் மச்சத்தையும் மார்பிலுடைய திருமால். |
திருமலை நல்லான் | உடையவர் மேல்கோட்டைக்கு எழுந்தருளியிருந்தபோது ஆச்சுயித்த ஸ்ரீவைஷ்ணவர் (74) சிம்மாசனாதிபதியரில் ஒருவர். தேசிகர் திருவடியை ஆச்ரயித்தவர் என்பர். (குருபரம்பரை) |
திருமலைநம்பி | சுமுகாம்சம், இவர் திருவரங்கப் பெருமாளரையருக்குப் பின் கலி (4075) க்கு மேல் ஸ்ரீமுக புரட்டாசிமீ வெள்ளிக்கிழமை அவதரித்தவர். ஆளவந்தார் திருவடிசம்பந்தி. 2. பெரிய திருமலைநம்பிக்கு ஒரு பெயர். |
திருமலைநாதர் | இவர் சிதம்பரப்பாட்டியல் இயற்றிய பரஞ்சோதியாரின் தந்தையார். சிதம்பரபுராணம், மதுரையுலா இயற்றியவர். |
திருமலையப்பர் | நயினாராசாரியர் திருவடிசம்பந்தி, |
திருமலையர் | திருவள்ளுவர் திருக்குறளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒருவர். |
திருமலையாழ்வான் | திருவாய் மொழிப்பிள்ளைக்கு ஒரு பெயர். |
திருமலைராயன் | காளமேகர் என்னும் புலவர் திலகரைத் தன் சம்ஸ்தான வித்வானாகிய அதிமதுரக்கவியின் வார்த்தை கேட்டு யமகண்ட முதலிய பாடச்செய்து காளமே, திருமழிசையாழ்வார் கரை உபசரிக்காததால் மண்மாரி பொழிய வசைபெற்று நாடிழந்த சிற்றரசன். இவன் சாளுவகோப்பையன் குமரன். இவனை ஒரு புலவன் “இந்திரன் கலையாயென் மருங்கிருந்தான் அக்கிங் உதாம் விட்டக வான், யமனெனைக்கருதான் அரனெனக் கருதி நிருதிவந்தென்னை யென் செய்வான், அந்தமாம் வருணனிருகண் விட்டகலான் அகத்தினென் மக்களும்யானு, மநிலமதா குமமுதினைக் கொள்வோம் யாரெதிரெமக் குளாருலகிற், சந்ததமிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திரராஜனை வணங்கித், தலைசெயு மெம்மை நிலைசெய் சற்கீர்த்திச் சாளுவகோப்பை யனு தவும், மந்தரப் புயத் தான்றிரு மலைராயன் மகிழ்வோடு விலையி லாவன்னோன், வாக்கினாற்கு பேரனாக்கினான் அவனே மாசிலீசான பூபதியே” யென்று பாடிப் பரிசுபெற்றனன். |
திருமழிசையாழ்வார் | இவர் துவாபரயுகத் தில் சித்தார்த்தி தைம் கிருஷ்ண பிரதமைகூடிய ஞாயிற்றுக்கிழமை மக நக்ஷத்திரத்தில் திருமழிசையில் பிருகு முனிவர் தவஞ்செய்கையில் அத் தவத்தைக்கெடுக்க இந்திரனால் ஏவப்பட்ட தேவஸ்திரீயிடம் அவதரித்துப் பிருகு முனிவரால் பிரப்பஞ் செடி நிழலில் வளர்த்த இருந்து அழுத னர். அக் காலையில் உலோகமாதாவாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மி அவ்விடம் எழுந்தருளித் தமது திருமுலைப்பாலைக் கறந்து ஒரு வள்ளத்தில் வைத்து, அப்பால் ஒவ்வொரு திவலையாக வாயில் விழச்செய்து மறைந் தனள். இவ்வகை வளரும் நாளில் திரு மழிசைக்கடுத்த காட்டிலுள்ள திருவாளன் என்னும் வேடன் புத்திரனில்லாத தன் பத்தினியிடம் இப் புத்திரரைக் கண்டு கொடுக்க வேடத்தி அன்பினால் பாலூட்ட உண்ணாமல் ஒரு சூத்திரர் அன்பாலூட்டிய பாலுண்டு வளர்ந்து எட்டாம் வயதில் வேடச்சேரியை விட்டகன்று பாமத நிராகரணஞ் செய்திருந்தனர். இவ் வகை யிருக்கையில் ருத்ரர் ஆகாச வீதியில் செல்ல அந்நிழல் மேல்படாமல் ஒதுங்கிய ஆழ்வாரைக்கண்டு உமக்கு வேண்டிய வரம் கேளீர் என்றனர். ஆழ் வார், மோக்ஷம் தருக என ருத்ரர் அது என்னாலாகாது நாராயணனே தரவல்லான் என்ன ஆனால் இந்த ஊசியின் பின்னே நூல் போகச்செய்க என உருத்திரன் கோபித்து நெற்றிக்கண்ணை விழிக்க ஆழ்வார் திருவடியில் ஒரு கண்ணை ஆக்கித்தீயை யேவினர். இந்த ருத்ரனைத் தகிக்க ருத்திரன் அபசயப்பட்டு ஆழ்வாரை க்ஷாமணம் கேட்டுக்கொண்டு பக்திசாரர் என்கிற திருநாமம் சாற்றிச் சென்றனன். முதல் ஆழ்வார்கள். மூவரும் இவருடன் கூடித் திருவல்லிக்கேணி தரிசித்தனர். இவருண்ட பாலின் சேஷத்தால் சூத்திரருக்குப் பிறந்த கணிகண்ணர், ஆழ்வார் காஞ்சியில் எழுந்தருளியிருக்கையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்து அச்சந்நிதியில் கைங்கர்யம் செய்த விருத்தையிடத்து அன்புவைத்து அவ்விருத்தையைக் குமரியாக்கினர். இதைக் கேள்வியுற்ற பல்லவராயன் என்கிற ராஜா தன்னை யௌவன புருஷனாகச் செய்யக் கேட்டனன். கணிகண்ணர் மறுத்தனர். அதனால் பல்லவன் என்னாட்டைவிட்டு நீங்குக என்றனன். இதனைக் கணிகண்ணர் திருமழிசை ஆழ்வாருக்கறிவித்து நீங்க ஆழ்வாரும் “கணி கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா நீ யிங்கிராதே துணிவுடனே, செங்காப் புலவனியான் செல்கின்றே னீயுமுன்றன், பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்று ஊரைவிட்டு நீங்கினர். இதனால் பெருமாளும் நீங்கினர். பெருமாள் நீங்கவே நகரம் வெறுமையடைந்தது. இதனால் அரசன் துக்கமடைந்து இருவரையுமடைந்து வேண்டி மீண்டு மெழுந்தருளச் செய்தனன். இவ்வகை சிறிதுநாளிருந்து ஆழ்வார், பெரும்புலியூர் வேதியர் தம்மைச் சூத்திரர் என இகழ்ந்தமை யெண்ணி அக்கிராமத்திற் செல்லாது விலக அவ்விடமிருந்த பெருமாள் ஆழ்வார் சென்ற வழி நோக்கினர். இதனை அறிந்த நம்பி வேதியருக்கறிவிக்க அவ்வேதியர், தங்களுக்கு வேதாத்தியயனத்தில் விட்ட இடந்தெரியாது மறந்தமைக்கும் பாகவத் தூஷணமே காரணமென்றுணர்ந்து ஆழ்வாரை நமஸ்கரிக்க ஆழ்வார் வே தமுணர்ந்தும் அவர்கள் எண்ணியதை விளக்க வர்ணாச்சிரமத்தால் வாயாற் கூறாமல் ஒரு கறுப்பு நெல்லைப் பிளந்து காட்டினர். இதனால் வேதியர் வேதத்தில் விட்டவிட மறிந்து சென்றனர். இதுநிற்க, அவ்வூரில் யாகஞ் செய்ய யத்தனித்த வேதியர் யாக பலஸித்தியடைய வேண்டி ஆழ்வாரை யக்யஸதவில் உட்காருவித்தனர். அவ்விடமிருந்த சில வேதியர் அருவருத்தனர். இதனை ஆழ்வாரறிந்து திருமார்பில் திரு நம்பி வேத வேதாத்தியமைக்கும் பாதகம் திருமாளிகை தேவர் வாழி ஆழ்வானைக் காட்டினர். இதனால் வேதியர் பயந்து பிரார்த்திக்க ஆழ்வார் கடாக்ஷித்து அவ்விடமிருந்து திருக்குடந்தைக்கு எழுந்தருளி ஆராவமுதனைச் சேவித்து (2300)வருடம் யோகத்திலிருந்து திரு நாட்டுக் கெழுந்தருளினர். இவர் சக்கிராம்சம். இவர் (4702)வருடம் எழுந்தருளியிருந்தனர். இவர் சக்திகாரன், கொங்கணர் முதலியவர்களை வெற்றிகொண்டனராம். இவர் செய்தவை நான் முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் முதலிய (குருபரம்பரை.) |
திருமாபத்தினி | கண்ணகியின் சிறப்புப், பெயர். (சிலப்பதிகாரம்). |
திருமாலாயுதம் | (5) சங்கம், சக்கிரம், சார்ங்கம், வாள், கதை, |
திருமாலிருஞ்சோலைதாசர் | ஆளவந்தார் திருவடிசம்பந்தி, |
திருமாலைதந்த பெருமாள் | மணவாள மாமுனிகள் காலத்துத் திருவரங்கத்தலத்ததி காரி; மணவாளமா முனிகளைத் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் கூறச் சொல்லிக்கேட்டு அவர்க்கு முப்பத்தாறாயிரம் பெருக்கென்று பெயரிட்டவர். |
திருமாலையாண்டான் | வநமாலாம் சரான இவர் கலி (4090)க்குமேல் சர்வதாரி மாசி வெள்ளிக்கிழமை அழகர்மலையி லவதரித்தனர். இவர் திருமலைநம்பிக்குப் பின்னவர். ஆளவந்தார் திருவடிசம்பந்தி. |
திருமால் அவதாரம் | 1. (10) மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பாசிராமன், இராமன், பலராமன், கண்ணன், கற்கியாம். 2. (15) சநகன், சாந்தனன், சநாதன், சநற்குமாரன், கரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தத்தாத்ரேயன், மோகினி, யாகபதி, வியாதன், தன்வந்திரி, பௌத்தன். |
திருமாளிகைத்தேவர் | இவர் போகரிஷியின் மாணக்கர், பலருள்ளும் சிறந்தவர், சுத்த சைவர். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருந்தவர். இவர் ஒருநாள் சிவபூசை செய்து அந்தச் சிவபூசா பிரசாதத்தைக் கருவூர்த் தேவர்க்கு அளிக்கக் கருவூர்த்தேவர் அதைக் களிப்புடன் ஏற்றுக்கொண்டனர். மீண்டும் ஒருநாள் கருவூர்த்தேவர் சத்திபூசை செய்து இவர்க்குப் பிரசாத மளிக்க அதைத் திருமாளிகைத்தேவர் ஏற்காதிருந்தனர். இதைக் கருவூர்த்தே வர் தமது ஆசிரியருக்கு அறிவித்தனர். போகர் கருவூர்த்தேவரை நோக்கித் திருமாளிகைத்தேவர் கொடுத்தது சிவப்பிரசாத மாகையால் நீ கொள்ளத்தகும், அவர் சதாசார முள்ளவர்; உமது நிவேதனம் பொருந்தாதெனக் கருவூர்த்தேவர் அமைந்தனர். இவர் ஒருமுறை, சேந்தனாருடன் சிதம்பர தரிசனத்திற்குச் சென்று அங்குதம் செல்லாதிருந்ததைக் கண்டு பதிக மோதி ரதம் வடமில்லாதுஓடக் கட்டளையிட்டவர். ஒருநாள் தாம் காவிரிந்தியில் ஸ்நானஞ்செய்து சிவபூசைக்குப் புட்பங் கொண்டு திரும்புகையில் வழியில் சவத்தைக்கண்டு சிவபூசைக்கு ஆசூசம் நேராதபடி புட்பத்தை ஆகாயத்திலெறிந்து நிற் கச்செய்து பிரேதத்தைச் சுடலைமட்டும் நடந்து செல்லக் கட்டளையிட்டனர். இவரைக் கண்ட மாதர்கள் இவரிடம் மயல் கொண்டு இவரைப்போல் புத்திரரைப் பெற்றது கண்டு வேதியர் முதலிய பலரும் அக்கால மாண்டிருந்த நரசிங்கராசனிடம் முறையிட்டனர் அரசன் கோபித்துத் திருமாளிகைத்தேவரைக் கட்டிக்கொண்டு வரக் கட்டளையிடக் காவலாளிகள் தேவரிடஞ் சென்று தாம் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். பின் அரசன் படைத்தலைவரை அனுப்பி வெட் டிக்கொண்டு வாருங்கள் என அவர்கள் தம்மையே வெட்டிக்கொண்டு சென்றனர். பின்பு அரசன் படையெடுத்துச் செல்லத் தேவர் பிராட்டியை வேண்டினர். பிராட்டி மதிவிடமிருந்த நந்திகளை ஏவ அவை சென்று அரசனை முதுகிடச் செய்து திரும்பின. இவ்வாறிருந்து முத்திபெற்றவர். |
திருமுக்கூடல் | இது காஞ்சிமாநகர்க்கு அருகிலுள்ள தலம். இது கம்பாநதி, வேகவதி, சேயாறு இம்மூன்று புண்ணியந்திகள் சந்திக்கு மிடத்துள்ளது. |
திருமுடி | இது ஒருவகை கொற்றர் வகை, இவர்கள் பெண்கள் ஒழுங்கற்றவர்கள் சேலம், கோயம்புத்தூரில் உள்ளவர்கள், (தர்ஸ்டன்) |
திருமுருகாற்றுப்படை | பத்துப்பாட்டில் ஒன்று. நக்கீரதேவர் முருகவேளை யாற்றுப்பட்டது. |
திருமுறைகண்டசோழன் | அபயகுலச்சோழனைக் காண்க, இவரை இராஜராஜதேவர் என்பர். |
திருமூலநாயனர் | திருக்கைலையில் நந்திதேவர் அருள் பெற்ற சித்தர்; பூமியில் அகத்தியமுனிவருட னிருக்க எண்ணி வரும் வழியில் உள்ள தலங்களைச் சேவித்துத் திருவாவடுதுறை சேவிக்க வருகையில் அவ்வூரிலுள்ள மூலன் என்னும் இடையன் தன் பசுக்களை ஒட்டிக்கொண்டு மேய்க்கவந்து உயிர் நீங்கினன். இடையன் உயிர்நீங்கியதைக் கண்ட பசுக்கள் அவனுடலை நக்கி வருந்துவதைக்கண்ட சிவயோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்கத் தம்முடலைப் பத்திரப்படுத்தித் தாம் அம்மூலன் உடவிற் புகுந்து பசுக்களைக் களிப்பித்துப் பொழுது நீங்கியபின் பசுக்களை வீடுசேர்த்துத் தாம் தனித்து நின்றனர். இவ்வகைநின்ற சித்தரை மூலன் மனைவி கண்டு கணவனென எண்ணித் தொடச் செல்லுகையில் சித்தா அவளை நோக்கித் தம்மைத் தொடுதற்கு நியாயம் இல்லையெனப் பொதுமடஞ் சென்று இருக்க இடைச்சி அவ்வூர் வேதியரிடஞ் சென்று கூற அவர்களிவரைக்கண்டு சிவ யோகியரென்று இடைச்சியை அகற்றினர். பின்பு சிவயோகியார் தாம் பத்திரப்படுத் திய உடம்பினைப் பார்த்துக் காணாமல் யோகத்தால், பரமசிவம் சிவாகமங்களைத் தமிழிற் செய்ய இவ்வகை செய்தனர் என்று அறிந்து தாம் அத்தலத்தில் அவ் வாலயத்திற்கு மேற்புறத்தில் அரசமரத் தடியில் யோகத்தி லமர்ந்து வருஷத்திற்கொரு பாடலாக (3000) பாடல்கள் அருளிச்செய்தனர். இச்சித்தமூர்த்தி மூலன் உடலில் புகுந்தமையால் திருமூலர் என்னும் திருநாமம் பெற்றனர். இவர் அருளிய சாத்திரம் திருமூலர் திருமந்திரம் எனப்படும், இவர் (3,000) வருடம் இருந்து முத்தியடைந்தனர். (திருமந்திரம்.) |
திருமூலர்திருமந்திரம் | திருமூலநாயனார் என்னும் சித்தரால் அருளிச் செய்யப்பட்ட சாத்திரம்; இது சிவாகமங்களின் சாரங்களடங்கியது. |
திருமூலர்மரபு | காலங்கர், அகோரர், திருமாளிகைத்தேவர், நாதாந்தர், பரமாநந்தர், போக தேவர், திருமூலர். (திருமந்.), |
திருமோகூர் அப்பன் | ஆளவந்தார் திருவடி சம்பந்தி, |
திருமோகூர் ஆழ்வாள் | எழுபத்தினான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்). |
திருமோகூர்நின்றன் | ஆளவந்தார் திருவடி சம்பந்தி. |
திருவணன் | பிருதுசக்கிரவர்த்திக்கு அர்ச்சசியிடத்துதித்த குமரன். |
திருவநந்தபுரத்தம்மை | உடையவர் திரு வடிசம்பந்தி. |
திருவரங்கத்தமுதனார் | கூரத்தாழ்வார் திருவடி சம்பந்தி, இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செய்தவர். |
திருவரங்கத்தம்மை | ஆக்கியாழ்வானிருந்த ஸமஸ்தானத்தாசன் தேவி; யாமுநர்க்கு ஆளவந்தார் என்று திருநாமம் இட்டு அழைத்தவள். ஆளவந்தார் திருவடி சம்பந்தி. |
திருவரங்கப் பெருமாளரையர் | சங்கு கர்ணாம்சரான இவர் கலியின் (4058) பிங் களன வைகாசிய கிருஷ்ணப்பிரதமை வெள்ளிக்கிழமை அவதரித்தவர்; பெரிய நம்பிக்குப் பின்னவர், ஆளவந்தார் புத்திரர். இவர்க்கு ஆளவந்தாராழ்வார் எனவும் பெயர். மணக்கால் நம்பிகளை ஆச்ரயித்தவர். உடையவர்க்கு ஒரு ஆசிரியர். |
திருவரங்கமாயோன் | உடையவர் திருவடி சம்பந்தி; காவலதிகாரி. |
திருவரங்கமாளிகையரையர் | உடையவரது பண்டாரம் நோக்குவோர். |
திருவரங்கம் | 1, இக்ஷவாகு மகாராசா தவஞ் செய்ததறிந்த இந்திரன், உருப்பசி, மன் மதன் முதலியோரை அனுப்பியும் சலி யாமைகண்டு தானேவர அக்காலத்தும் சலிப்பில்லாதிருக்கப் பிரமனிடங் கூறப் பிரமன் இக்ஷவாகுவிடம்வர அக்காலத்து ஸ்ரீ விஷ்ணு மூர்த்தி விமானத்துடன் எழுந் தருளிக் காக்ஷி தந்து தன்னை அவ்விடம் பூசிக்கக் கட்டளையிட்டனர். பிறகு இராம மூர்த்தி அம்மூர்த்தத்தை விபீஷணருக்குக் கொடுக்க விபீஷணர் தென்னாடு செல்லு கையில் இருடிகளும் தருமவர்மாவும் வேண் டக் காவிரிமத்தியில் கட்டியிருந்த திருக் கோயிலில் பிரதிட்டித்தனர். அதுவே திருவரங்கம். 2. திரு அயோத்தியிலிருந்து சுவர்ண விஷ்ணுமூர்த்தியைப் பெற்று இலங்கை யில் பிரதிட்டிக்கச் சென்ற விபீஷணர், இவ்விடம் திருமஞ்சனத்தை முடித்து எடுக்கையில் வராததால் வருந்தி நின்றனர்.விஷ்ணு மூர்த்தி விபீஷணர் கனவில் தரிசனந் தந்து இத்தலம் பூர்வம் அகிலாண்ட நாயகி தவஞ் செய்ததாலும், ஸ்ரீமகாலஷ்மி நடனஞ் செய்யச் சிவமூர்த்தி அநுக்கிரகித்ததாதலாலும் ஸ்ரீ அரங்கம் என்றாகியது. ஆதலால் இவ்விடம் நாம் இருக்க விரும்புகின்றோம் என, விபீஷணர் அவ்விதம் பிரதிட்டை செய்து பூசித்துவரும் தலம். (திருஆனைக்கா புராணம்). இதிலுள்ள தீர்த்தங்கள் சந்திரபுஷ்கரணி, பில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், சம்பு, அசவத்தம், புன்னா கம், வகுளம், கதம்பம், ஆமரம், பலாசம் முதலிய தலவிருக்ஷங்களு முண்டு. இத்தலத்தில் திருகோயில் கோபுரம் முதலிய கைங்கர்யங்கள் தர்மவர்மா வென்னும் சோழனால் செய்யப்பட்டன. |
திருவருட்பா | இராமலிங்கப்பிள்ளை யென்னும் வித்வான் பாடிய சிவத்துதிகள். |
திருவல்லிக்கேணி பாணபெருமாளரைமர் | உய்யக்கொண்டார் திருவடிகளை ஆச்ரயித்த ஆசாரியர். |
திருவள்ளுவநாயனார் | ஒரு பிரளயத்தில் பிரமன் ஒடுங்கியிருக்க, சிவமூர்த்தியார் என வள்ளுவர் என்றார். அவ்வகையே ஆதிக்கும் பகவனுக்கும் திருமயிலை நகரத் திற் பிறந்து தாய் தந்தையர் விட்டு நீங்க “எவ்வுயிருங் காக்கவொரு வீசனுண்டோ விலையோ, அவ்வுயிரின் யானொருவனல்ல வோ எவ்வி, அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே, வருகுவது தானே வரும். ” என்று வேளாளரிடம் வளர்ந்து அவர்களை விட்டு நீங்கி ஒரு பனையடியிலிருந்து மார்க் கசகாயன் என்னும் வேளாளன் வேண்டு கோளுக்கிரங்கி வேதாளத்தைப் பஞ்சா க்ஷரத்தால் ஒட்டி, யவன் பெண்ணாகிய வாசுகியை மணலைச் சமைக்கச் செய்து அவள் செய்ய மணந்து, ஏலேலசிங்கன் என்னும் வர்த்தகனிடம் நூல் வாங்கி நெச வுத்தொழில் செய்து இல்லற நடத்தி வரு கையில் ஊர்த்த தாண்டவத்தினழுவிய குழைபூண்ட காரணத்தைச் சங்கைகொண்டு தம்மை வந்து கேட்ட தேவர்க்குப் “பூவிலயனும் புரந்தானும் பூவுலகைத் தாவியளந்தோனும் தாமிருக்க நாவில், இழைநக்கி ஏனெருடு மேழையறிவேனோ, குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து” எனக் கூறி அறிவித்து இருந்தனர். இவ்வகையிருக்கையில் ஏலேலசிங்கர் சிவபூசையில் ஊற்றமில்லாதிருத்தலை அவருக்குத் தெரிவித்து அவரை அடிமைகொண்டு அவர்க்கு ஞானோபதேசஞ் செய்து புத்திரப்பேறளித்துக் கரை தட்டிய ஏலேலசிங்கர் கப்பலை எலையாவென இழுத்துப் போக்கிப் பஞ்சம் வந்தகாலத்தில் ஏலேலசிங்கரை நெல்விற்கக் கட்டளையிட்டு அதனால் வந்தபொருளை உருக்கிக் கடலிலிடச்செய்து மீண்டும் பெறச்செய்து அழகாநந்தர் முதலியோர் வேண்டுகோளால் திருக்குறள் அருளிச் செய்து சங்கத்தவரை வென்று இல்லறம் பெரிதோ துறவறம் பெரிதோவெனத் தம்மைச் சங்கை செய்து கேட்ட அன்பர் ஒருவர்க்கு அவரே தெரிந்து உணரும்படி, தண்ணீர் மொண்டுகொண்டிருந்த தமது மனைவியாரை அழைக்க அந்த அம்மாள் கிணற்றில் பாதிவழி வந்த நீர்க்குடத்தைக் கிணற்றில் விட்டுவந்ததையும், மற்றொரு நாள் பழையது சாப்பிடுகையில் அன்னம் சுடுகிறதென விசிறியதையும், மத்தியானத் தில் நெய்துகொண்டிருந்த நூனாழி தவ றிக் கீழ்விழ அதைப் பார்க்க விளக்குக் கொண்டுவரச்சொல்ல அந்தம்மாள் விளக் குக் கொண்டு வந்ததையும் தெரிவிக்கச் சங்கை செய்தவர், தக்க மனைவியிருக்கின் இல்லறமே நன்று என்றுணர்ந்து நீங்கினர். இவ்வகை இல்லறம் நடத்தியிருந்து சில நாளைக்குப் பிறகு பத்தினியார் தேகவியோ கமாகையில் அந்தம்மாளுக்கிருந்த சங்கை யை நீக்கி “அடிசிற்கினியாளே யன்புடை யாளே, படிசொற் றவாத பாவாய் அடி வருடிப், பின்னூங்கி முன்னெழுந்த பே தையே, போதியோ என்றூங்கு மென்கண் ணிரா” என்று வருந்தித் தாம் சிலநாளிருந்து திருக்குறள் அரங்கேற்றச் சங்கத்தவரிடஞ்சென்று அதை ஏற்கச்செய்து சங்கப்பலகை மீதிருந்து அவர்களுடன் வாதிட்டு வென்று சங்கத்தாரால் புகழப் பெற்றுத் திருமயிலைக்குத் திரும்பித் தமது மாணாக்கரை நோக்கித் தமது தேகத்தை விட்டு உயிர் நீங்கின் அதனை அலங்கரித்து அடக்காது ஊர்ப்புறத்தில் எறியக் கட்டளை யிட்டுப் பரிபூரண மடைந்தனர். அவ்வகை மாணாக்கா செய்தனர். இவருடலைப் பரி சித்த பக்ஷ ஜாதிகளும் முத்தி யடைந்தன. இவர் தேகம் இருந்த இடத்தில் தற்காலம் திருமயிலையில் இவர் கோவிலிருக்கிறது. இவரைச் சைநர், தம் மதத்தவரில் ஏளா சாரியர் என்பவர் என்பர். இவர்க்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புல வர், மாதாநுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் என்று திருநாமம். இவர் விதேக முத்தியடைந்த திருநக்ஷத்திரம் மாசிம் உத்தர நக்ஷத்திரம். இவர்க்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல் யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற்காசனியாகி மேதினி, யின் னிசை யெழுவர்ப் பயந்தனளீண்டே எனும் ஞானாமிர்தத்தா லறிக. இவரைத் திருவள்ளுவமாலையிற் புகழ்ந்திருத்த லன்றிப் பொய்யாமொழிப்புலவர் முதலியவர் பிற்காலத்தும் புகழ்ந்து இருக்கின்றனர். “குறுமுனிவன் கோத்தெடுத்த கொற்சேரி யூசி, யுறுவிலைக்கு விற்றதனோ டொக்கும் தெறுகவியைச், செற்றவேன்மாற திரு வள்ளுவனார் வாய்ச், சொற்றகு முப்பால் வாழ்த்துச் சொல்” “முப்பாலு முண்டோ முலைப்பாலினி நுகரோம்; எப்பாலுக் கப்பாலு மாயினோ மெப்பொருளு, முள்ள படியுணர்ந்தோ மோதிக் குறை தீர்ந்தோம், வள்ளுவனார் வைப்பெமக்கு வாய்த்து. ” சைநர் வாழ்த்து “வாழிமறையா னினங்கள் வாழிமறை யாகமங்கள், வாழிமனு நீதிமன் னர் மன்பதைகள் வாழியரோ, தெள்ளு குறட் செந்தேன் செவிகுளிரப் பெய்த முகில், வள்ளுவர் பாதமலர். ” மற்றொருவர் “எப்பாலு மேத்துவா மின்பம் பொருளறமா, முப்பாலு மாயிரத்து முந்நூற்று முப்பதா, வோரடி முக்காலுரைத்த திரு வள்ளுவனா, ரீரடி முக்காலுமே” “அவனே புலவனவனே கவிஞனவனே தமிழை பறி வோன் சிவனறிய, வள்ளுவதேவன் வச னத்தை மெய்யாக வுள்ளுவதேவனுளன்” இவரைச் சோழநாட்டில் மதுரையில் வசித்திருந்ததாகவுங் கூறுவர். அதனை வள்ளுவமாலை நல்கூர்வேள்வியார் உப்பக்கநோக்கி உபகேசி தோண்மணந்தான், உத்தரமா மதுரைக்கச்சென்ப இப்பக்கம், மாதாது பங்கி மறுவில் புனச்செந்நாப், போதார் புனற்கூடற்கச்சு” என்பதாலறிக |
திருவள்ளுவமாலை | இது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய நூல், |
திருவழுதிவளநாடர் | ஒரு வேளாளர், இவர் குமரர் அறந்தாங்கியார். |
திருவழுந்தூரந்தாதி | இவளைச் சோழன் எந்தவூர் என்றபோது அவள் பாடியது. ”கம்பன் பிறந் தவூர் காவிரி தங்குமூர், கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத், தாதகத்து நான் முகனுந் தாதையுந் தேடிக் காணா, வோதகத்தார் வாழுமழுந்தூர்” என்றனள். |
திருவாசகம் | திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசக சுவாமிகளால் அன்பிற் சிவனைப் பொருளாக அருளிச் செய்யப்பட்ட திருமுறை, |
திருவாதவூரர் | பாண்டி நாட்டில் திருவாதவூரில் அமாத்தியர் குலத்தில் சிறந்த அந்தணராகிய சம்புபாதசரிதருக்கும் சிவஞானவதிக்கும் புத்திரராய்த் திருஅவதரித்துத் திருவாதவூரர் என்ற திருநாமம் அடைந்து கல்வியில் முதிர்ந்து பாண்டியனிடத்தில் மந்திரித்தொழில் பெற்றுத் தென்னவன் பிரமராயன் என்னுஞ் சிறப்புப் பெயர் வாய்ந்து தேசமும் செல்வமும் நிலையாமை யுணர்ந்து பதி நூல் ஆராய்ந்து சிவமூர்த்தியிடம் அன்பு மேவிட்டு ஆசாரியரைத் தேடிக்கொண்டு மந்திரித் தொழிலில் இருந்த னர். இவ்வகை யிருக்கையில் சோழதேசத் தில் குதிரைகள் வந்திருக்கின்றன எனத் தூதர் பாண்டியனுக்குக் கூறினர். பாண்டி யன் (49) கோடி பொன் கொடுத்துக் குதிரை கொண்டுவரும்படிச் சோணாட்டிற் சிலரை யனுப்பினன், திருவாதவூரர் பொன் கொண்டு திருப்பெருந்துறையடைந்தனர். இவரது அதிதீவரபக்வமறிந்து சிவமூர்த்தி இவரை அடிமை கொள்ளும்படி ஒரு வேதியர் உருக்கொண்டு ஒரு குருந்தமரத்தடியில் இவர் காண எழுந்தருளியிருந்தனர். வாதவூரர் குருமூர்த்தமாய் எழுந்தருளியிருப்பவர் அருகிற்சென்று பணிந்து மனமுருகி நின்று குருமூர்த்தமாய் எழுந்தருளியிருந்த வேதியாது திருக்கரத்திலிருந்த சாத்திரத்தை இது என்ன சாத்திரம் என்றனர். குருமூர்த்தி இது சிவஞான போதம் என் றனர். வாதவூரர் சிவமாவதும் ஞானமாவதும் போதமாவதும் என்னென்று வினாவி அதனைத் தேவரீர் அடியேனுக்குத் தெரி விப்பீராயின் அடியேன் அடிமையாவேன் என்றனர். அவ்வாறு குருமூர்த்தி அருளிச்செய்யக் கேட்டுப் பணிந்து என்னை அடிமையாகக் கொள்க என்று இரந்துநின்றனர். குருமூர்த்தி இவரை ஆட்கொண்டு சிவஞானம் உபதேசித்துத் திருவடித் தீக்ஷை செய்து அருளப் பின் திருவாதவூரர் மந்திரி மரியாதைநீக்கிக் கோவணமுடுத்து ஆசிரியரிடத்தில் பணிந்து நின்றதைக் கண்ட அரசதூதர் அழைத்தனர். திருவாதவூரர் அறுக்கக்கண்டு எவலர் பாண்டியனிடஞ் சென்று தெரிவித்தனர். பாண்டியன் ஒற்றரிடம் திருமுகம் கொடுத்து வாதவூரரை அழைத்துவரக் கட்டளையிட்டனன். ஒற்றர் சென்று வாதவூரரிடம் திருமுகம் காட்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேசேர் திருமுகம் காண்பதில்லை என்று அரசன் அனுப்பிய திருமுகத்தைக் குருமூர்த்தியி டம் காட்டினர். குருமூர்த்தி ஆவணிமீ மூலநாளில் குதிரைகள் வரும் என்று ஒரு மாணிக்கங்கொடுக்க அதைப் பெற்று விடைகொண்டு குருமூர்த்தி கொடுத்த மாணிக்கத்தைக் கொடுத்துப் பாண்டியனைக்கண்டு குதிரைகள் வர நல்லநாளில்லா மையால் அவற்றை நிறுத்தி வந்தோம். அவை ஆவணிமூலத்தில் வருமென்று கூறி அரசன் மரியாதை செய்ய விருந்தனர். குதிரைகள் வரும் நாள் நெருங்கிய தால் மந்திரியரில் ஒருவன் சென்று வாதவூரர் குதிரைகள் கொள்ளவில்லை அந்த வேளையில் உமது கோபத்தையாற்ற அவ்வகை கூறினர் என்றனன், பாண்டியன் ஒற்றரை யேவிக் குதிரைகள் இருக்குமிடம் அறிந்து வரச்செய்தனன். ஒற்றர் குதிரைகள் எங்கும் காணப்படவில்லை யென்று வந்து கூறினர். இதனால் பாண்டியன் சோபித்து வாதவூரரைச் சிறை யிட்டனன். பின்பு பாண்டியன் இன்று குதிரைகள் வாராவி டின் எரிக்கின்ற வெயிலில் உம்மை நிறுத்துவேன் என்றனன். பின்பு குதிரைகள் வாராமையால் ஏவலாளிகள் வாதவூரரை வெயிலில் நிறுத்தினர். அதனால் சலிக்காமைகண்டு கிட்டியிட்டனர். வாதவூரர் சிவ மூர்த்தியை யெண்ணித் தியானித்தனர். சிவமூர்த்தி சிவகணங்களைக் குதிரைவீராகளாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றித் தாம் குதிரைத் தலைவராய் எழுந்தருளுதல் கண்டு வாதவூரர் பாண்டியனுக்கு அறிவித்தனர். பாண்டியன் அமைச்சரைப் புகழ்ந்திருக்கையில் குதிரைவீரத் தலைவர் பாண்டியன் முன் வந்து அக்குதிரைகளை அவன் காண ஓட்டிக்காட்டி இனிக் குதிரைகள் உன்னவே, நாளையவை எப்படியாயினும் எமக்குத் தொடக்கு இன்று எனக் கயிறு மாறி அரசனுக்கு அக்குதிரைகளின் இலக்கணங்களைக் கூறினர். பாண்டியன் மகிழ்ந்து விலயிடற்கரிய ஒரு பீதாம்பரம் கொடுத்துப் போக்கினன். அக்குதிரைத் தலைவர் அதைச் சவுக்கால் வாங்கிக் குதிரையின் மேல் இட்டு விடைகொண்டு நீங்கினர். அன்றிரவு குதிரைகள் எல் லாம் நரிகளாய் முன்னிருந்த குதிரைகளை யும் கடித்துவிட்டுச் சென்றன. இதைப் பாண்டியன் அறிந்து வாதவூரரிடம் கோபித்துப் பொருள்களையெல்லாம் வெயிலில் வைகையில் நிறுத்தி வாங்கும்படி கட்டளை யிட்டனன். அவ்வகை ஏவலாளர் வை கையில் நிறுத்தி வருத்தினர். இதனால் வாதவூரர் இரங்குவதைக் கேட்ட சிவமூர்த்தி கங்கையை வைகையிடம் எவினர். அவள் பெருக்குடன் வரக்கண்ட பாண்டியன் பயந்து இது எதுபற்றி உண்டாயிற்று என்று அமைச்சரால் அறிந்து வாதவூரர் துன்பத்தை நீக்கப் பெருக்கு அடங்கியது. அவ்வெள்ளத்தைப் பட்டணத்தில் வாராமல் தடுக்க ஊரிலுள்ள குடிகளை ஏவினன். எல்லாரும் பங்கின்படி வெள்ளத்தைத் தடுத்தனர். பிட்டு விற்கும் வந்தி யென்பவள் பங்கு அடையாதது கண்டு அரசன் ஏவலர் அவளைக் கேட்கக் கிழவி சிவமூர்த்தியைத் தியானித்தனள். சிவமூர்த்தி இவளிடம் ஒரு கூலியாளாக எழுந்தருளி நான் உன் னிடம் வேலை செய்வேன் எனக்குக் கூலி தா என்றனர். கிழவி என்னிடம் உள்ள பிட்டுக்களை விற்று அந்தியிற் கூலி தரு வேன் என்றனள், கூலியாளாக வந்தவர் கூலியாகவே பிட்டை வாங்கியுண்டு ஆளாயிசைந்து வேலை செய்தும் சில போது செய்யாமல் தாமதித்தும், பலமுறை பிட்டையுண்டு கரையை அடைக்காமல் ஒரு கொன்றை மரநிழலில் இளைப்படைந்தவர் போல் திருத்துயில் கொண்டனர். பாண்டியன் கரைகள் அடைபட்டதைக் காண வேண்டி வந்து எல்லார் பங்குகளும் அடை பட்டும் வந்தியின் பங்கு அடைபடாமைக் கண்டு இதனை அடைப்பவன் யார் என்றனன். அரச ஏவலர் இதோ கொன்றைமா வடியில் உறங்குபவன் என்றனர். கூலியாளர் அரசனைக் கண்டு பயந்தவர்போல் இருப்ப ஏவலாளர் கூலியாளரைப்பற்றி அரசனிடத்துக் குறை கூறினர். பாண்டி யன் கோபித்துக் கையிலிருந்த பிரம்பால் ஓரடி கூலியாளரை அடித்தனன். கூலியாளர் ஓர் கூடை மண் உடைப்பில் போட்டு அடைத்து மறைந்தனர். அவ்வடி அணு முதல் மகத்தாகிய சராசரப்பொருள் கள் மேலும் தன்மீதும் படக்கண்டு பாண்டியன் திடுக்கிட்டு அஞ்சினன். சிவமூர்த்தி அசரீரியாய்ப் பாண்டியனே நாம் இத்திரு விளையாடலை வாதவூரன் பொருட்டுச் செய்தோம். இதனை நீ அறியாது அவனைக் கோபித்தனை என்றனர். பாண்டியன் வணங்கி வாதவூ ரடிகளை மீண்டும் மந் திரியாயிருக்க வேண்டினன். அடிகள் பாண்டியனை விட்டு இறைவனைத் தேடிச் சென்றனர். திருவாதவூரர் பாண்டி நாடு விட்டுப் பல தலங்களும் சென்று வணங்கி ஸ்ரீசிதம்பரத் தலமடைந்து ஆரா அன்பு கொண்டு பலநாள் இருந்து பாடிப் பணிந்து துதித்து வருகையில் சைவர் ஒருவர் ஈழநாடு சென்று புத்தர்முன் பொன்னம்பலம் என்றனர். புத்தர், அரசன் முன் கூறிச் சைவரை அழைத்து அரசனிடம் விட்ட னர். புத்த அரசன் புத்த குருவுடன் தில்லை மூவாயிரவரை வாதிடத் துணிந்து தில்லை யடைந்தனன். சிவமூர்த்தியைத் தில்லை மூவாயிரவர் தியானிக்கச் சிவமூர்த்தி அவர்கள் கனவிற்றோன்றி வாதவூர் அடிகளைக் கொண்டு வாதிடுக என்று திருவாய்மலர்ந்தனர். தில்லை மூவாயிரவர் வாதவூர் அடிகளைப் புத்தருடன் வாதிட வேண்டினர். வாதவூர் அடிகள் வாதிடத் தொடங்கி அவர்கள் வினாவிய வினாவிற்கு விடை கூறினர். புத்தர் கேளாது மறுத்ததால் வாதவூரர் வாக்கின் தேவியாகிய கலைமகளை நோக்கிக் கலைவாணி, பொய்யர் வாக்கினின்றும் நீங்குக என்றனர். உடனே புத்த குருக்கண்மாரனைவரும் ஊமைகளாயினர். இவ்வற்புதக் காட்சி கண்ட புத்த அரசன் வாதவூர் அடிகளை நோக்கி வாக்குள்ளவர் வாக்கிழந்தனர். வாக்கில்லாத என் குமரியாகிய ஊமை வாக்குப் பெறுவாளேல் நான் சைவன் ஆகின்றேன் என்றனன். வாதவூரர் பெண்ணை வருவித்து ஒழிந்த புத்தர் கேட்ட வினாக்களுக்கு விடை அவ் ஊமைப் பெண் தரக் கட்டளையிட்டனர். அவ்வகை வினாக்களுக்கு விடை அப்பெண் தரப் புத்த அரசன் கண்டு களித்துச் சைவனாயினான். வாயிழந்த புத்த குருக்கண்மார் அனைவரும் வாதவூரடிகளை வேண்டி வாய் பெற்றுச் சைவராயினர். பின் வாதவூரர் தம்மிடம் இருக்கையில் சிவமூர்த்தி ஒரு வேதியர்போல் இவரிடம் எழுந்தருளினர். வாதவூரர் ஆசனமிட்டுத் தேவர் எந்தவூர் என்றனர். வேதியர் நாம் இருப்பது பாண்டிநாடு உம் புகழைக் கேட்டு நீர் பாடிய செய்யுட்களை ஒத வந்தேன் என்றனர். வாதவூரர், அவைகளை எழுதவேண்டும் என்றனர். வேதியர் எழுத உடன்பட்ட னர். வேதியர் பல செய்யுட்கள் எழுதி முடித்த பின்பு வாதவூரரை நோக்கித் திருச்சிற்றம்பல முடையார்மீது ஒர் கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்றனர். வாதவூார் எழுதப் பாடி முடித்தனர். பின் வேதியராய் எழுந்தருளிய சிவமூர்த்தி புத்தகத்தின் முடிவில் மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் கையெழுத்து எனக் கையொப்பமிட்டுத் திருச்சிற்றம்பல முடையார் திருவாயிற் படியில் திருமுறையை வைத்து மறைந்தனர். அதைக் கண்ட வேதியர் ஒருவர் தில்லை மூவாயிரவருக்கு அறிவிக்க அனைவரும் கூடி அருச்சித்து அது திருவாசகமும் திருக்கோவையுமா யிருக்கக் கண்டு புளகாங்கிதராய்த் திருவாதவூரரிடஞ் சென்று நடந்தவை கூறிப் பொருள் கேட்டனர். வாதவூரரைப் பொருள் கூறும்படி வேதியர் அனை வரும் பின்பற்ற வாதவூரர் திருச்சிற்றம் பலத்தில் சென்று நடராஜமூர்த்தியைச் சுட்டி இவரே பொருள் என்று மறைந்தரு ளினர். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் எனவும் பெயர். இவர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலேசுரரைத் தரிசிக்க எழுந்தருளியிருக்கையில் கெடில நதி பிரவகித்து வருவது அறிந்து வந்த இறைவர் சித்தராக எழுந்தருளித் தம் கரத்தில் உள்ள பிரம்பால் கெடிலத்தை நோக்கிப் பாடலிவனத்திற்கு வடபுறமாக விலகச் செய்தனர். பின்பு சுவாமிகள் பாடலி வனஞ் சென்று தரிசனஞ் செய்தனர் என் பது அத்தலபுராணம், |
திருவாதவூார்புராணம் | மாணிக்கசுவாமிகள் புராணம்; இதை இயற்றியவர் கடவுள் மாமுனிவர். |
திருவாய் மொழிப்பிரபந்தம் | முதல் ஆழ் வார்கள் மூவரும் அருளிச் செய்த வெண் பா அந்தாதிகள். திருமழிசை யாழ்வார் அருளிச்செய்த நான்முகன் திரு அந்தாதி, திருச்சந்த விருத்தம், நம்மாழ்வார் அருளிச் செய்த ருக்வேதசாரமான திருவிருத்தம், யசர்வேதசாரமான திருவாசிரியம், அதர் வணவேதசாரமான பெரிய அந்தாதி, சாம வேதசாரமான திருவாய்மொழி, மதுரகவி யாழ்வார் அருளிச்செய்த கண்ணினுண் சிறுத்தாம்பு, குலசேகராழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள், பெரியாழ்வார் அரு ளிச்செய்த திருப்பல்லாண்டு முதலிய, ஆண்டாள் அருளிய பாசுரங்கள், தொண்ட ரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை, திருப்பள்ளியெழுச்சி முதலியவையும், திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிப்பிரான் முதலியவும், திருமன்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் முதலிய அடங்கினவையாம். |
திருவாய்மொழிப்பிள்ளை | இவர் அண்ணர் என்பவர்க்குக் குமரர்; இவர்க்குத் திருமலை ஆழ்வான் எனப் பிள்ளைத்திருநாமம். இவர் அவதரித்த தலம் குந்தி நகரம், இவர்க்கு ஸ்ரீசைலேசர் எனவும் பெயர் என்பர். இவர் தாய், பிள்ளைலோகாசாரியார் கோயிலைவிட்டு வெளியேறினதால் தரியாது உயிர்விடச் சிறிய தாயாரிடம் வளர்ந்தனர். இவர் தமக்குக் கூரகுலோத்தமதாசர், திருவிருத்தத்திற்குப் பொருள் சொல்லேன் என்று மறுத்ததால் தாம் பிள்ளை லோகாசாரியரை இளமையில் ஆச்ரயித்தவர் என்பதைச் சிறியதாயாரா லுணர்ந்து அடங்கி, கூரகுலோத்தம தாசர், விளாஞ்சோலைப் பிள்ளை, நயினாச்சாம்பிள்ளை முதலியவர்களிடம் திருவாய்மொழி யெல்லாஞ் சேவித் துத் திருநகரி சென்று, காடுவெட்டி, நாடாக்கிக் குடியேற்றி ஆழ்வாரைப் பிரதிட்டை செய்வித்துச் சடகோபதாசர் எனவும், திருஅனந்தபுரத்தில் விளாஞ்சோலைப் பிள்ளையிடத்து ரகஸ்ய விசேஷங்களைக் கேட்டுத் திருவாய்மொழியில் வல்லவராகையால் திருவாய்மொழிப்பிள்ளை யெனவும், பெயர்பெற்றுச் சதுர்வேதமங்கலமென வொருவூர் திருநகரியில் உண்டாக்கி உடையவர்க்குக் கோயில் கட்டுவித்துக் காடுவெட்டியையன் எனப் பெயாடைந்து மணவாள மாமுனிகளுக்குப் பஞ்சஸமஸ்காரஞ்செய்து திருநாட்டிற் கெழுந்தருளிய வைஷ்ணவாசாரியரில் ஒருவர். |
திருவாருர் நாகராஜநம்பி | இவன் திருவாரூர் தேவஸ்தான குருக்கள். இவன் அறுபத்து மூவர் விக்ரகங்களில் இரண்டைக் கருமானுக்கு விற்றுவிட, அவன் நறுக்கி உருக்கினான் என்பதைக் கிளிக்குக் கற்பித்து அதனைக்கொண்டு கிருஷ்ணதேவராயருக்கு அறிவித்தார் என்பது. வெண்பா “முன்னாளறுபத்து மூவரிருந் தாரவரில், இந்நா ளிரண்டுபே ரேகினார் கன்னான், நறுக்கினான் விற்றுவிட்ட நாகராஜநம்பி, இருக்கின்றான் கிருஷ்ணராயா. கிருஷ்ணதேவராயர்காலம் 1509 ~ 1529. (தமிழ் நாவலர் சரிதை.) |
திருவாரூர் பிறந்தவர் | திருவாரூரில் பிறந்தவர் அனைவரும் சிவகணத்தவராயிருந்ததனால் அக்காலத்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பட்ட தொகை யடியவர்கள். (பெரியபுராணம்.) |
திருவாலவாய்த்தம்பிரானார் | பழைய கணக்குகள் முதலியவற்றில் ஸ்ரீசோமசுந்திரக் கடவுளுக்கு இத்திருநாமமே வழங்கப்பெற்று வந்ததாம். “தம்பிராற்கே துகுலம்” என்பதனானுமுணர்க. (திருவிளை.) |
திருவாலவாய்நல்லூர் | இவ்வூர் சமயநல்லூர்க்கு மேற்கேயுள்ளது. இக்காலத்துத் திருவாநல்லூரென வழங்கப்படுகின்றது. (திருவிளையாடல்.) |
திருவாலி | மயிலையிலிருந்த ஒரு பிரபு. கம்பருக்கு உதவி செய்த பிரபு. |
திருவாலியமுதனர் | இவர் திருமயிலையில் வேதியர் குலத்து அவதரித்துச் சிவத்தைப் பாடி முத்திபெற்றவர். இவரது திருப்பாசுரம் ஒன்பதாந் திருமுறையாக்கப்பட்டது. |
திருவாளன் | ஒரு வேடன், திருமழிசையாழ்வாரையெடுத்து வளர்த்தவன்; இவன் தேவி பங்கயச்செல்வி. |
திருவாழ்மார்பர் | காரியார் மாமனார், நம்மாழ்வாரின் தாயைப்பெற்ற தந்தை. |
திருவிண்ணகரப்பன் | உய்யக்கொண்டார் திருவடிசம்பந்தி. |
திருவிளக்குப்பிச்சன் | திருவரங்கத்தில் பெருமாளுக்குத் திருவிளக்குக் கைங்கர் யம் செய்துகொண்டிருந்து நம்பிள்ளைத் திருவோலக்கத்தைப் பெருமாள், நின்று காணப், பெருமாளைச் சிமமாசனத்திருந்து கேட்கச் செய்தவர். |
திருவிளையாடற் புராணம் | இது மதுரை சொக்கநாத சுவாமிகள் செய்த திருவிளையாடல்களை வடமொழியிற் கூறியபடி தமிழில் பரஞ்சோதி முன்வராற் (65) படலங்கள் அடங்கிய (3363) திருவிருத்தங்களாக இயற்றப்பட்ட நூல். இது சொன்னோக்கம், பொருணோக்கம், சாமுத்திரிகாலக்ஷணம், பரதம், அச்வலக்ஷ ணம், ரத்தின பரீக்ஷை முதலியவற்றிற்கு இலக்கியமாகும். இவர் சாலிவாகனசகம் (1430) இல் இதைப் பாடினர் என்பர். அது சற்றேறக்குறைய (390) வருஷங்கள் ஆகிறது. |
திருவிளையாடல் | இவை மதுரைமா நகரத் தில் சிவபெருமான் செய்த திருவிளையா டல்கள்: (1) குருவையிழந்த இந்திரனது சாபத்தைப் போக்கியது. (2) வெள்ளை யானைக்குத் துருவாசரால் வந்த சாபங் தீர்த்தது. (3) கடம்பவனத்தை யழித்து நாடாக்கியது. (4) உமாதேவியார் மலயத் துவச பாண்டியற்குத் தடா தகையாய்த் திரு அவதரித்தது. (5) சிவபெருமான் சோமசுந்தாபாண்டியனாக வெழுந்தருளித் தடாதகைப் பிராட்டியாரைத் திருமணங் கொண்டது. (6) பதஞ்சலி வியாக்ரபாத ரிஷிகளிருவருக்கும் வெள்ளியம்பலத் திருக்கூத்துத் தரிசனங் காட்டியருளியது. (7) தடாதகைப் பிராட்டியார் பொருட்டுக் குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிட்டருளியது. (8) குண்டோதான் பொருட்டு வைகையையும் அன்னக்குழியையும் வருவித்தது. (9) தடாதகைப் பிராட்டியாரின் வேண்டுகோளுக்கிரங்கிக் காஞ்சன மாலையாட எழுகடல் அழைப்பித்தது. (10) காஞ்சனமாலையுட னீராடச் சுவர்க்கத்திருந்த மலையத்துவசனை வருவித் தது. (11) தடாதகைப் பிராட்டியிடம் உக்ரகுமார பாண்டியன் திருவவதரித்தது. (12) உக்ரகுமார பாண்டியற்கு வேல், வளை, செண்டருளியது. (13) கடல்சுவற வேலெறிந்தது. (14) அவ்வுக்ர குமாரன் தன்னுடன் எதிர்த்த இந்திரன் முடிமேல் வளையெறிந்தது. (15) மேருவிலிருந்த நிதியெடுக்கக் கொடாத மேருவைச் செண்டாலெறிந்தது. (16) வேதத்திற்குப் பொருளறியாது மயங்கிய இருடிகளுக்குப் பொருள் அருளிச்செய்தது. (17) பாண்டியகுமாரன் கிரீடத்தின் பொருட்டு மாணிக்கம் விற்றது. (18) மதுரைமீது வருணன்விட்ட கடலை வற்றச்செய்தது. (19) வருணன் ஏவிய மழை தடுத்து நகரத்தை நான்மாடக்கூடலாக்கியது. (20) எல்லாம் வல்ல, சித்தராய் எழுந்தருளிச் சித்துச் செய்தது. (21) சோதிக்கவந்த பாண்டி யன் பொருட்டுக் கல்லானைக்குக் கரும் பருத்தியது. (22) மதுரையை அழிக்கச் சமணர்களேவிய யானையை எய்தது, (23) கௌரியம்மையின் பொருட்டு விருத்த குமாரர் பாலரானது. (24) பாண்டியன் பொருட்டுக் கான்மாறி யாடினது. (25) கொலைக்கஞ்சியவேடன் பொருட்டுப் பழிக்கஞ்சி, வேண்டிய பாண்டியற்காக வணிகன் மணத்திற் சாக்ஷி காட்டியருளியது. (26) தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தான் மாபாதகந் தீர்த்தது. (27) வாட்படை யாசிரியன் மனைவியை வலிமையிலிச்சித்த மாணாக்கனது அங்கம் வெட்டியது. (28) சமணர் மதுரை மீதேவிய நாகத்தை யெய்தது. (29) சமணர் ஏவிய பசுவை நந்திதேவரை ஏவிக் கொல்வித்தது. (30) சவந்தர சாமந்தனெனுஞ் சேநாதிபதியின் பொருட்டுப் போர்ச்சேவகராய் மெய்க்காட்டிட்டது. (31) பாண்டியனுக்கு உலவாக்கிழி யருளியது. (32) மதுரைவீதியில் அவதரித்திருந்த இருடி பத்தினிகள் பொருட்டு வளையல் விற்றது. (33) இயக்கியர்களுக்கு அஷ்டமாசித்தி அருளிச் செய்தது. (34) சோழன்பொரு பட்டு மீன இலச்சினை விட்டிருந்த கதவந் திறப்பித்துத் தரிசனந் தந்து அவன் மீண்டபின் இடபக்குறியிட்டது. (35) பாண்டியன் படைக்குத் தண்ணீர்பந்தற் வைத்தது. (36) பொன்னனையாள் பொருட்டு ரசவாதஞ் செய்தது. (37) மதுரை மீது படைகொண்டுவந்த சோழனை மடுவில் ஆழ்த்தியது. (38) வேளாளராகிய அடியவர்பொருட்டு உலவா நெற்கோட்டை யருளியது. (39) தாயத்தார் வழக்கிடமயங்கிய வணிகன் மருகன் பொருட்டு மாமனாக வந்து வழக்குத் தீர்த்தருளியது. (40) வரகுணதேவர் பொருட்டுச் சிவலோகம் காட்டி யருளியது. (41) இசைவல்ல பாணபத்திரர்க்குப் பகைவனை விறகாளாய் இசைபாடி ஒட்டுவித்தது. (42) பாணபத்திரர் பொருட்டுச் சேரமான் பெருமாணாயனாருக்குத் திருமுகந்தந்தருளியது. (43) அப்பாணபத்திரர் மழையால் வருந்தாது பாடப் பலகையிட்டது. (41) ஈழ தேசத்துப் பாண்வல்லாளைப் பாணபத்திரர் மனைவி வெல்ல அருள் செய்தது. (45) தாயிழந்த பன்றிக்குட்டிகளுக்குப் பால் கொடுத்தது. (46) பன்றிக்குட்டிகளைப் பாண்டியர்க்கு மந்திரியர் ஆக்கியது. (47) கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்தருளியது. (48) நாரைக்கு முத்திகொடுத் தருளியது. (49) பிரளயத்தழிந்த மதுரைமா நகரின் எல்லையை அரவகங்கணத்தால் அறிவித்து ஆலவாயாக்கியது. (50) பாண்டியன் பொருட்டுப் படைத்துணை சென்று சுந்தரப்பேரம்பெய்தது. (51) நக்கீரர் முதலிய புலவர்பொருட்டுச் சங்கப்பலகை தந்தது. (52) பாண்டியன் ஐயம் தீரத் தருமிக்குக் கவிதந்து கிழியறுத்துக் கொடுப்பித்தது. (53) தருமிக்குத் தந்த கவிக்குக் குற்றங்கூறிய நக்கீரரைப் பொற்றாமரைத் தீர்த்தத்தில் வீழ்வித்துப் பின் கரையேற்றியது. (54) கீரருக்கு இலக்கணம் உரைப்பித்தது. (55) சங்கத்தார் கலகத்தை மூங்கைப்பிள்ளையால் தீர்ப்பித்தது. (56) பாண்டியனுடன் கோபித்து நீங்கிய இடைக்காடர் பிணக்குத் தீர்த்தருளியது (57) குலப்பெண்பொருட்டு வலைவீசி அவளை மணந்தருளியது. (58) வாதவூரடிகளுக் குபதேசித்தது. (59) அரசனுக்கஞ்சிய வாதவூரர்பொருட்டு நரிகளைப் பரிகளாக்கியது. (60) பாண்டியனுக்களித்த பரிகளை நரிகளாக்கியது. (61) வாதவூரடிகள் பொருட்டு வைகைவெள்ளம் வருவித்து அதை அடைக்க ஏவிய வந்திபொருட்டுக் கூலி யாளாய்ச்சென்று பிட்டுக்கு மண்சுமந்தது. (62) திருஞானசம்பந்தசுவாமிகளால் கடன் பாண்டியன் சுாத்தையும் கூனையும் நீக்கு வித்தது. (63) சம்பந்த சுவாமிகளின் வாதத்திற்தோற்ற சமணர் கழுவேறியது. (64) வணிகப் பெண்ணுக்குச் சாக்ஷியாக வன்னியும், கிணறும், இலிங்கமும் வருவித்தது. |
திருவிஷ்டன் | வசுதேவருக்குத் திருத்தேவியிடம் உதித்த குமரன். |
திருவீதிகள் ஐந்து | இவை தென்மதுரை யிலுள்ளவை 1. ஆடி வீதி, 2. சித்திரை வீதி, 3. ஆவணி மூலவீதி, 4. மாசி வீதி, 5. கோட்டை வெளிவீதி. இவற்றுள், சித் திரை வீதியில் மாசித் திருவிழாவும் மாசி வீதியில் சித்திரைத் திருவிழாவும் மது ரையில் இக் காலத்து நடைபெறுகின்றன. (திருவிளையாடல்) |
திருவுந்தியார் | சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கனுள் ஒன்று. |
திருவெண்ணெய் நல்லூர் | உமை வெண்ணெயால் கோட்டை கட்டி இடையிலிருந்து பஞ்சாக்னி வளர்த்திப் பூசை செய்த தலம். (வீரசிங் ~ புரா.) |
திருவேங்கடசுவாமி | மாதைத் திருவேங்கடநாதரைக் காண்க. |
திருவேங்கடம் | புரந்தரன் என்னும் வேதியன் குமரனாகிய மாதவன் தான், ஆசாரம் குறைந்து நீச்சப்பெண்ணினை மணந்து களவுமேற்கொண்டு வாழ்ந்து நீச்சப்பெண் தன்னைவிட்டுத் துரத்த மனம் குன்றி ஸ்ரீநி வாஸப்பெருமாள் எழுந்தருளி யிருக்கும் திருமலையடைந்து அதின்மீது ஏறினன். இவன் பாப (கடம்) தேகம் சடசடவென்று நெருப்புப்போல் வேக இவன் சுடர்விடு பசும் பொன் போல் தோன்றினமையால் திருமலைக்கு (வேம், கடம்) வேங்கடம் எனப் பெயர் வந்தது. இது கருடாழ்வா னால் வைகுந்தத்திருந்து கொண்டுவந்து பிரதிட்டிக்கப்பட்டது என்பர். (திருவேங்கடபுராணம்). |
திருவேங்கடையர் | இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வேதியர். உபமான சங்கிரகம் தமிழில் செய்தவர். |
திருவையாற்றுச்சைவன் | திருவையாற்றில் சிவபூசை செய்துவரும் ஆதிசைவர் இருபத்து நால்வரில் ஒருவர். கங்கா யாத்திரைசென்று நெடுநாள் வராதிருந்தனர். இதையறிந்த எனைய இருபத்து மூவரும் யாத்திரை சென்றவரது காணியாட்சி சுவ தந்திரங்களைக் கவரத்தொடங்கினர். யாத்திரிகரது மனைவி சிறுமைந்தனுடனே அவர்கட்கு நியாயங் கூறியுங் கேளாமையால் மனைவி சிவபிரானுடன் முறையிட்டனள். சிவமூர்த்தி காசியாத்திரைசென்ற பிராமணர்போல் காவடியுடன் வந்து நீங்கள் சுகமோ என்று தழுவிக்கொண்டு என் சுவ தந்தரத்தை இல்லை யென்றவர் யாரென்று கேட்கப் பிராமணர்கள் “நாங்கள் செய்த பிழை பொறுக்க என்று பிரார்த்தித்தனர்” இவ்வாறிருக்கையில் மனைவியும் மைந்தரும் பிரிவாற்றாமைக் கிரங்கிக் காணியிழந்தமையுங் கூறினர். சிவமூர்த் தியாகிய வேதியர் ஸ்நாந முதலிய செய்து சிவபூசை முடித்து ஒருமடத்திலிருக்கை யில் காசி யாத்திரை சென்ற வேதியர் காவடி தாங்கி மடத்தில் வந்து நிற்கக், கண்டார் யாவரும் திகைத்தனர். பின்வந்தாரை, முன்னிருந்தவர் நீர் யாரென்ன நான் முதற்பூசைக் குரியோன் இருபத்து நால்வரில் ஒருவன் என்றனர். அதுகேட்ட முன்னவர் பின்னவரை பலவாறு உபத்திரவப்படுத்த அவர் பலசாசனங்களைக் காட்டி நிரூபித்தனர். இவ்விருவர் சாசனங்களிலும் சிவபெருமான் சாசன முயர்ந்ததால் உரிமை சிவமூர்த்தியாகிய வேதியரதாயிற்று. உடனே சிவபிரான் மறைந்து. ஆகாயவாக்காக நம்மை அர்ச்சிக்கும் சைவனாகிய இவனுக்குக் காணியாட்சி முதலிய எல்லா உரிமையுங் கொடுங்களென்ன அவர்களும் அவ்வாறே செய்தனர். இதனை “ஐயாற தனில் சைவனாகியும்” என்னும் மணிவாசகர் வாக்காலுமறிக, |
திருஷத்வதி | 1. யமுனை நதிக்கு மேல்பாலிருக்கும் நதி. 2. ஒரு நதி The Caggar whicb) flowed through Ambala and Sirbind, now lost in the sands of Rajaputada 3. (சூ) சுதிருதி குமரன். 4. திட்டத்துய்ம்மன் குமரன். 5. சத்தியதிருதி குமரன். 6. சுகுமாரன் குமரன்; இவன் குமரன் வீதிஹோத்ரன். 7. சத்யகேதுவின் குமரன்; இவன் குமரன் சுகுமாரன், 8. கேகயதேசாதிபதி, சுதகிருதியை மணந்தவன்; இவன் குமரர் சந்தாதனன் முதலிய ஐவர். |
திருஷ்டதுய்மன் | திட்டதுய்மனைக் காண்க. |
திருஷ்டதுவிதி | குருக்ஷேத்திரத்தருகிருக்கும் நதி. |
திருஷ்டன் | (சூ) வைவச்சு தம நுவின் கும ரன்; நபாகன் தந்தை, இவனிடம் தாரஷ்டியென்கிறவர் பிறந்து பிராமணராயினர். |
திருஷ்டவர்மன் | 1. அக்குரூரன் தம்பி. 2. சுவபலருக்குக் காந்தியிட முதித்த குமரன். |
திருஷ்டி | யதுவம்சத்துக் குந்தி புத்திரன். |
திருஷ்யன் | அகஸ்தியன் புத்ரன். |
திருஹ்யன் | யயாதிபுத்ரருள் ஒருவன். |
திரேதாக்னிகள் | 1. பவமாகன், பாவகன், சுசி; இவர்கள் வசிட்டர் சாபத்தால் அந் தர்த்தானனுக்குக் குமரராய்ப் பிறந்த அக்நிகள். 2. இது தக்ஷணாக்நி, காருகபத்யம், ஆஹ வனீயம் என மூன்று வகைப்படும். வேதிகைக்குத் தக்ஷணத்திலிருப்பது தக்ஷணாக்கி. காருகபத்யம் எஜமானனால் மற்ற அக்னிகளுக்கு முன் ஸம்ஸகரிக்கப் பட்டது. ஆகவனீயம் கிரியாசமாப்திபர்யந் தம் ஓமஞ்செய்யத் தகுந்தது. |
திரேதாயுக தெய்வம் | தருமவுருவத்துடன் சபமாலிகையையும், துடுவையும், கையிற் கொண்டு களிப்புடனிருக்கும். |
திரேதாயுகம் | சதுர்யுகத்தில் இரண்டாவது யுகம். இதற்கு வருஷம் 12 லக்ஷத்து 96000. |
திரைகருவாள் | ஒருவித அரசர். |
திரையன் | ஆதொண்டைச் சக்ரவர்த்தியைக் காண்க. |
திரையன் மாறன் | இடைச்சங்கப் புலவருள் ஒருவன். |
திரையம்சன் | விப்ரசித்தியின் குமரன். |
திரையர் | இவர்கள் சோழவாசர்களில் ஒரு பிரிவினர். தொண்டை நாடாண்டவர்கள். இவர்கள் கடலுள்ளிட்ட நாட்டிலிருந்து வந்து இந்நாட்டை ஆண்டது பற்றித் திரையர் எனப்பட்டனர். இவர்கள் தமிழ் நாட்டினரல்லர். பெரும்பாணாறில் “பதிரை தரு மரபினுரவோரும்பல்’ எனவும், “கங்குலு நண்பகலுந்துஞ்சாவியல் பிற்சாய், மங்குல் சூழ்மாக்கடலார்ப்பது உம், வெம்சினவேற், கான்பயந்த கண்ணிக்கடு மான்றிரையனை, யான் பயந்தேனென் னுஞ் செருக்கு” வெண்பாவானும் அறிக. இத்திரையர், வங்காளத்திரையர், சீனத்திரையர், கடாரத்திரையர், சிங்களத்திரை யர், பல்லவத்திரையர் எனப் பலவகுப்பினராவர். (கடாரம் ~ பர்மா) |
திரையாரணி | 1 ஒரு இருடி; உரோம ஹருஷணர் மாணாக்கா, 2, உருக்க்ஷயன் குமரன்; இவர்கள் பிராமணராயினர். 3. திரிசங்கின் தந்தை; இவனைச்சூர்யாரண்யன் என்பர். |
திரைவர்ணிதேவி | அந்தகாசுரவதத்தின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் முறையிடச் சென்ற திரிமூர்த்திகளிடம் ஒரே உருவாகப் பிறந்த சத்தி. (வராக ~ புரா.) |
திரௌபதி | பாஞ்சால தேசாதிபதியாகிய துருபதன் யாகத்தில் பிறந்தவள். ஆகையால் இப்பெயர் பெற்றனள். இவளுக்குப் பாஞ்சாலியெனவும் ஒரு பெயர். இவள் இதற்கு முன்ஜன்மத்தில் நளாயனன் குமரி; இந்திரசேனை யென்னும் பெயரால் மௌத்கல்யனை மணந்து பதிவிரதை யாயிருக்கையில் கர்மத்தால் மௌத்கல்ய ருஷிக்குக் குட்டவியாதி யுண்டாயிற்று. அப்படியிருந்தும் இந்திரசேனை கணவனிடம் மிகுந்த அன்பாயிருந்தனள். இதனால் முனிவர் களித்து இந்திரசேனையை என்னவரம் வேண்டும் என்ன, அவள் தனக்குச் காமத்தில் இன்பம் நிரம்பாமையால் அதைப் பூர்த்திசெய்க என அவ்வகை முனிவர் ஐந்து வகையாய்க் களித்திருக்கையில் முனிவர் முத்தியடைந்தனர். இந்திரசேனையும் கணவருடன் உயிர் விட்டுக் காமயிச்சை நிரம்பாமையால் காசிராறு புத்திரியாகப் பிறந்து சிவமூர்த்தியை யெண் ணித் தவமியற்றினள். சிவமூர்த்தி பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டுமெனப் பதில்தேஹி, பதிம்தேஹி, பதிம்தேஹி, பதிம் தேஹி, பதிம்தேஹி என்று ஐந்து முறை கூறினள், அவ்வகை அம்மூர்த்தி அருளி மறைந்தனர். அதனால் திரௌபதன் குமரியாய்ச் சுயம்வரத்தில் அருச்சுனால் கொண்டுவரப்பட்டுக் குந்தியின் கட்டளைப் படி ஐவரையும் மணந்து சுகத்துடனிருக்கையில் தன் கணவர்கள் மாயச் சூதாடிய காலத்தில் அடிமைப்பட்டபோது துரியோதனன் சொற்படி துச்சாதனன் துகில் உரியக் கண்ணனை வேண்டி மாளாத் துகில் பெற்று, மறுசூதாடி அவர்களை அடிமையினின்று நீக்கி ஐவருடனிருந்து கொடுஞ் சபதங்கள் செய்து ஆரண்யஞ்சென்று ஆற்றில் பாரிஜாத மலர்கண்டு, வீமனால் அதை வருவித்து, அமித்திரமுனிவர் பொருட்டுப் பழுக்கும் நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுக்க அருச்சுநனைக்கேட்டு அது இன்னார் பொருட்டென அறிந்து ஐவர் நண்ணனை வேண்டிப் பொருந்துவிக்கத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கத் தானும் தன் கருத்தைத் தெரிவித்து முழுதும் பொருந்தச்செய்து ஐவருடனிருந்து இளம்பஞ்ச பாண்டவர்களென்று தருமனுக்குப் பிரதி விந்தனையும், பீமனுக்குச் சுருத சோமனையும், அருச்சுநனுக்குச் சுருத கீர்த்தியையும் நகுலனுக்குச் சதாநீகனையும், சகாதேவனுக்குச் சுருதசோனையும் பெற்றுத் துரியோதனனிறந்தபிறகு அவள் செய்துகொண்ட சபதப்படி கூந்தலை முடித்துக் கவிபிறந்து பாண்டவர் தமது இராச்சியத்தை விட்டுத் தவமேற்கொண்டு இமயமலை செல்கையில் அவர்களுடன் முழுதும் இல்லாமல் இறந் தவள். இவள் முன்னிறந்ததற்குக் கார ணம் பாண்டவர் ஐவரும் கணவராயிருக்க அருச்சுநனிடம் அதிக அன்பு மிகுந்தபடி யால் என்பர். இவள் பஞ்சகன்னியரில் ஒருத்தி, பதிவிரதாசிரோமணி, |
திரௌப்தாதித்தன் | கீசகன் திரௌபதியைப் பிடிக்கவருகையில் கிங்கரனால் கீசகனைத் தடுத்த சூரியன், |
திர்தூலமுனி | ஒரு தவசி, |
திறல் விந்து | துரியோதனனுக்குத் தம்பி. |
திறைகொண்டு பெயர்தல் | கொல்லும் வலி மிகும் எயிலினிடத்து மன்னரெல்லாம் தாழ்வு சொல்ல முறைமையான திறை யைக் கொண்டு இருந்த ஊரினின்றும் எடுத்துவிட்டது. (புறவெண்பா) |
திலகசேனை | பரதகனுடைய தங்கை, இவளை யூகி மணஞ்செய்து கொண்டனன். (பெருங் கதை) |
திலகவ்வை | இவள் வீரசைவப்பற்றுள்ளவள். சிவபக்தியில் மிகுந்தவள். இவள் சிவாலயமில்லாத இடத்திலிருக்கும் தம் கணவனைவிட்டு நீங்கப் புருஷன் கொல்ல வருகையில் சிவாலயத்தில் எழுந்தருளிய சிவமூர்த்தியிடமடைந்து தன் நாயகன் காணப் புருஷவடிவம் பெற்றவள். |
திலதவதியார் | திருநாவுக்கரசுகளுக்குத் தமக்கையார். திருநாவுக்கரசுகளைக் காண்க. |
திலதேனுதானம் | (10) கழஞ்சுபொன்னால் தாமரைமலர் ஒன்று செய்வித்து வேதிகையில் வைத்து வெள்ளை ஆடையால் சுற்றி மலர்ந்த எள்ளின் பூப்போல் பொன்னால் செய்வித்து அதன் மேல் வைத்து அதன் மீது சிவபூசை செய்து பொற்கமலத்தின் வடபால் பதினொரு வேதியரை யிருத்தி அவர்முன் (11) வஸ்திரம் விரித்து எள்ளினாற் பசுசெய்து அதின் கொம்பு (1) கழஞ்சுபொன்னிலும், குளம்பு (2) கழஞ்சு வெள்ளியிலும், கவசம் வெண்கலத்தாலும் செய்வித்துப் பதினொரு இடத்துந் தனித் தனி இருத்தி உருத்திரமந்திரத்தால் பூசித் துக் கீழ்பால் துவாதசாதித்தரையும், அக்கி திக்கில் வேதியரையும், வித்தியேசுரரை அஷ்டமூர்த்திகளாகப் பூசித்து ஐந்து கழஞ்சுபொன் தக்ஷணையுடன் பசுவை வேதியர்க்குத் தானஞ் செய்தலாம், |
திலபத்மதானம் | மெழுக்கிட்ட பூமியில் வெள்ளை வஸ்திரம் விரித்து மூன்று கலம் எள் பரப்பி அதன் மேல் பத்துக்கழஞ்சு பொன்னால் எட்டிதழ்க் கமலம் செய்து மூன்று கழஞ்சில் உமையுஞ் செய்து இருத்திச் சிவமூர்த்தியுடன் விதிப்படி வித்தியே சுரரையும் பூசித்துத் தக்ஷணையுடன் வேதியர்க்கு அளிப்பது. |
திலீபன் | 1, (சூ.) அம்சுமான் குமரன். இவன் சுதக்ஷணையாகிய தன் மனைவியிடம் புத்திரப்பேறு இல்லாமையால் வசிட்டரை, கேட்க அம்முனிவர் அரசனை நோக்கி நீ தெய்வவுலகு சென்று மனைவியை விரும்பித் திரும்புகையில் வழியிலிருந்த கபிலை யைப் பூசியாது திரும்பினை யாதலால் அக் கபிலை என் வம்சத்தவரைப் பூசித்தாலன் றிப் புத்திரப்பே றுண்டாகாதிருக்க எனச் சபித்தது. அதனை நீ ஆகாய கங்கையின் அரவத்தால் கேளாதொழிந்தனை ஆதலால் கபிலையைப் பூசிக்க என்று கூறுகையில் வசிட்டதேனு சமீபித்தது. இது நற்சகுன மென்று அரசன் அன்று முதல் வசிட்ட தேனுவைப் பூசித்து வருகையில் ஒருநாள் இந்தப் பசு இமயச் சாரலில் மேய்ந்து கொண்டிருக்கையில் கும்போதரன் என்னும் பெயருள்ள சிவகிங்கான் சிங்கத்தின் உருக்கொண்டு அத் தேனுவைப் பிடிக்கப் பசு அரசனை நோக்கி அபயமிட்டது. அரசன் சிங்கத்தை வதைக்கச் சென்று அம் பினை யெடுக்கக் கை தூக்கினன். எடுத்த கை தம்பித்தது. இதனால் அரசன் அச்சிங்கத்தை நோக்கிப் பசுவினை விட்டு என்னைப் பக்ஷிக்க என்று அருகு சென்றனன். சிங்க வுருக்கொண்ட கிங்கரன் தன்னுருக் கொண்டு அரசனை நோக்கி அரசனே உன்னைச் சோதிக்கப் புகுந்தனன் என்று கூறி மறைந்தது. அரசன், பசுவினை வசிட்ட ராச்சிரமம் செலுத்தினன். இவன் குமரன் பகீரதன். கங்கை பூமிக்கு வரத் தவஞ் செய்து பலமடையாதவனாய்ச் சுவர்க்சம் அடைந்தவன். (இரகுவம்சம்). 2. விருத்தசருமனுக்கு ஒரு பெயர். 3. இவன் செய்த யாகத்தில் யாகத கதிணையாகப் பொன்னாற் செய்வித்த ஆயிரம் யானைகளைக் கொடுத்தான். இவன் பொன்னாலாகிய சஷாலமெனும் யூபத்தம்பத்தினடுவில் ஆறாயிரம் தேவர்களும் காந்தருவரும் நடித்தனர். (பார ~ சாங்.) |
திலோதகி | அயோத்தியிலுள்ள நதி, இது, இலக்குமணர் கரி, பரி முதலியவை நீருண்ணப் பாணத்தால் நிலமகள் முதுகைப் பிளந்து வரவழைத்தது. இது திலம்போல் கருநிறம் கொண்டது. |
திலோத்தமை | 1. பிரமனால் படைக்கப் பட்டு அவள் மயல்கொளக் கிளியுருக்கொண்டு ஓடி நீங்கினவள். இவள் அழகினால் மயல் கொண்ட பிரமன், நான்கு திக்கில் முகங்கொண்டு பார்த்ததில் நான்கு முகம் உண்டாயிற்று என்பர். ஒருமுறை சகத்திரா நீகனை மோகிக்க அவன் உடன் படாததால் அவனை (14) வரு. மனைவியை நீங்கச் சாபம் அளித்தவள். பிரமன் ஏவலால் விச்வகர்மனால் அழகுடைய பொருள்களில் எல்லாம் எள்ளள வெடுத்துச் சிருட்டிக்கப்பட்டவள். இவள் ஒருகால் விந்திய மலைக்கருகில் வாச்சுந்தோபசந்தர் இருவரும் இவள் அழகினைக் கண்டு மயல்கொண்டு இவளிரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு என் பெண்டு, என் பெண்டு என்று போரிட்டு மாண்டனர். 2. பதுமைக்குத் தாய், 3. புத்திசேநன் தாய், 4, நாடகத் தெய்வமகளிர் எண்பதின் மருள் ஒருத்தி, (பெ ~ கதை.) |
தில்லை நாயக சோதிடர் | சம்புகேசுரத்திற் இறந்தவர், சாதகசிந்தாமணி இயற்றியவர். |
தில்லைநாயக முதலியார் | தொண்டைநாட் டவர்; வேளாளர்; வேங்கடாசலசாமி என்பவரின் மாணாக்கர்; தமிழில் ஜாதகாலங் காரம் இயற்றியவர்; இது வடமொழி யோகமஞ்சரியின் மொழிபெயர்ப்பு. |
தில்லைமாளிகைமடம் | இது பெரும்பற்ற புலியூர் நம்பியாருடைய ஆசிரியர் எழுந்தருளியிருந்த இடம். (திருவிளை.) |
தில்லைவாழந்தணர் | ஸ்ரீ சிதம்பரத்து நடராஜமூர்த்திக்கு ஆராதனையில் விருப்புற்றுத் திருக்கைலையிலிருந்து எழுந்தருளிய சிவகணத்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து பாடப்பெற்றவர்கள். (திருத்தொண்டர் புராணம்). |
திவஸ்பதி | பதின்மூன்றாம் மன்வந்தரத்து இந்திரன். |
திவாகரன் | 1. ஒரு துளுவ சந்நியாசி விஷ்ணுவைத் திருவனந்தபுரத்தில் பூசித்து முத்தி பெற்றவன். 2. கந்தமாதனத்தரசன், (சூளா.) |
திவாகரம் | 1. ஒரு மலை. 2. திவாகர முனிவரால் இயற்றப்பட்ட தமிழ் நிகண்டு. இது பன்னிரண்டு தொகுதிகளை யுடையது. |
திவாகர் | தமிழில் தம் பெயரால் நிகண்டு செய்து சேந்தனென்னும் அரசனுக்குக் கொடுத்து அதற்குச் சேந்தன் திவாகரம் எனப் பெயரிட்டவர். |
திவாகாமூர்த்தி | இரண்டு முகம் நான்கு கைகள். இரண்டு கைகளில் வில்வம், இரண்டு கைகளில் இரண்டு கமலங்கள், மஞ்சட் பட்டு வஸ்திரம், முத்துமாலையுடையவராய் இருக்குஞ் சூர்யமூர்த்தி. |
திவாயோகம் | ஆயிலியம், அச்வநி முதற் கால்; பரணி, மூலம் இரண்டாங்கால்; திருவோணம், உத்திரம் மூன்றாம்கால்; மிருகசீரிஷம், சோதி நாலாங்கால் திவாயோகமாம். இவற்றில் சுபங்கள் செய்யல் ஆகாது. இரவிற் செய்யலாம். சந்திரன் பூரணனா யொரு சுபக்ரகத்துட னிற்கை யில் பகலும் தோஷமில்லை, (விதான.) |
திவிட்டன் | பிரசாபதியின் இளையராணி வழிப் புத்திரன். நவவாசுதேவ அவதாரத்தில் ஒன்று. |
திவிமிடன் | அஸ்தி குமரன், |
திவிரதன் | 1. நகபானன் குமரன். இவன் குமரன் தர்மரதன். 2. திதிவாகன் குமாரன். |
திவோதாசன் | 1. பீமரதன் குமரன்; இவன் குமரன் துயுமான். 2. முத்கலன் குமரன், 3. (தியுமந்தன்) பகீரதன் குமரன். 4, காசி அரசனாகிய பீமசேநன் புத்திரன். அவன் புத்திரன் பிரதர்தனன். 5. மேனகையின் புத்திரன், 6. வாரணாதிபதியாகிய தன்வந்தரி புத்தானாகிய சேதுமதன் புத்திரன். பீமரதன் என்றும் பெயர். 7. காசிராஜ வம்சத்துத் தன்வந்தரி பௌத்ரனான பீமாதன் புத்ரன், இவன் தன்வந்தரியின் குணங்களுடைமையின் தன்வந்தரியெனப் பட்டனன். இவன்பால் விசுவாமித்ர குமரராகிய சுருதர் முதலியோர். இவனிடம் வைத்திய சாத்திரம் கற்றனர். |
திவோதானன் | ஒரு கற்பத்தில் உலகமழிந்தது. அக்காலத்தில் இரிபுவைப் பிரமன் நோக்கி நீ உலகத்தை யாளுக உனக்கு சேஷன் மோகினியைப் பாரியையாக்குவான், தேவர்கள் வேண்டிய கொடுப்பர். அதனாலுனக்குத் திவோதானன் என்று பெயர் உண்டாகும் என்றனன். அவ்வகை திவோதானன் தேவரை மதியாது அரசளிக்கத் தேவர் பொறாமை கொண்டு இவன் தவத்திற்குக் காரணமான அக்நியைக் கிரகிக்க அரசன் எல்லாவிடத்தும் நிறைந்து சலியாதிருக்கச் சிவமூர்த்தி இவன் நிலை யை மாற்றும்படி யோகினிகள், துவாத சாதித்தர், பிரமன் சிவகணங்கள், கணபதி இவர்களை யேவிக் கலக்கினர். அவர்களால் முடியாமை கண்ட விஷணுமூர்த்தி பௌத்தமதம் போதித்துச் சனங்களை மயக்கியது கண்ட அரசன் காசியில் சிவப்பிரதிட்டை செய்து பூசித்து முத்தி யடைந்தான். இவன் குமரன் சயமாஞ்சயன். தேவியை அங்கமோகினி யெனவுங் கூறுவர். (காசிகாண்டம்). |
திவ்யன் | சாத்துவதனன் குமரன், |
திவ்யம் | பிரமனால் சூரியனிடம் வைக்கப்பட்ட அக்னி. |
திவ்யாங்கருஷி | நாசு கேதுக்குத் தந்தை, |
திவ்வியமங்களமூரீத்தி | சிவபிரான் சர்வ சம்மார காலத்தில் எல்லாம் நீங்கத் தனித் திருந்து பெற்ற பெயர். |
திஷ்டன் | (சூ.) வைவச்சு தமனுவின் குமரன்; இக்ஷவாகுவிற்குச் சகோதரன்; இவன் குமரன் நாபாகன். |
திஷ்யந்தன் | துர்யசித் என்பவன் அபிமான புத்ரன், துஷ்யந்தனுக்குச் சகோதரன். |