ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
தாகரோகம் | இது பிரமை, நடுக்கம், தேகஎரிவு, காங்கை, தாகம், சோருதல், வாயுலரல், எவ்வளவு ஜலமருந்தினும் திருப்தியிலாமை, அன்னத்வேஷம், குரல் கம்மல், கெஞ்சு நா உதடு வறட்சி, நாவால் உதட்டைத் தடவல், பிரலாபம் முதலிய குணங்களைத் தனக்குப் பூர்வரூபமாகப் பெற்றிருக்கும். இது வாத, பித்த, சிலேஷ்ம, தொந்த, ரஸ், க்ஷய, உபசர்க்கதாக ரோகமென அறுவகைப்படும். இது மணல் கஷாயம், அமிர்தாதிச் சூர்ணம், கர்ப்பூரக் குளிகை முதலியவற்றால் வசமாம். (ஜீவ.) |
தாக்கர் | ஒரு முனிவர் அயன் என்பவன் குமரனாகிய துந்து என்பவனுக்குப் பிரமகத்தி நீங்க அருள் புரிந்தவர். |
தாக்ஷாயணி | தக்கன் மகளாய்ப் பிறந்த பார்வதி பிராட்டி, சிவபெருமானை மதிக்காது செய்தயாகத்தில் வீழ்ந்துடல் விட்டவள், |
தாசமார்க்கம் | சிவபெருமானெழுந்தருளி யிருக்குந் திருக்கோயிலில் திரு அலகிடுதல், திருமெழுகிடல், மலர்பறித்தல், மாலை தொடுத்தணிதல், புகழ்ந்து பாடல், திருவிளக்கிடல், நந்தவன முண்டுபண்ணல், சிவனடியவரைக்கண்டு வழிபட்டு அவர்க்கு வேண்டிய பணிசெயல் முதலிய செய்தல், இதை மேற்கொண்டவர் சாலோகபதமடைவர். |
தாசராகர் | யதுகுலபேதம், கம்சன் பகைவர். |
தாசராசன் | 1. நயினாசாரியரால் ஸ்ரீவைஷ்ணவனாக்கப்பட்ட பிராமணன், இவனுக்குத் தாசரதி யென்றும் பெயர். 2. பிரமன் சாபத்தால் மீனுருக் கொண்டிருந்த அப்சரப் பெண்ணினைச் சாபம் நீக்கினவன், மச்சகந்திக்குத் தந்தை. |
தாசரி | தாதன், இவன் வைஷ்ணவன். விஷ்ணுவை ஆராதித்து வீடுகள் தோறும் தப்பை சேமகலம் கொட்டிப் பிழைப்பவன். இவன் சாத்தானியர் எனுஞ் சாதியரில் ஒருவனாயிருக்கலாம். இவர்கள் ஜநப்பர், பள்ளிகள், வள்ளுவர், கங்கதுல்லர், கொல்லர் எனப் பலவகைச் சாதியரில் சேர்ந்த வர்கள், (தர்ஸ்டன்.) |
தாசிஅம்மைச்சி | இவள் அந்தகக்கவி வீரராகவ முதலியார் காலத்துக் காஞ்சீபுரத்திற் கருகிலுள்ள திருப்பனங் காட்டிலிருந்த வித்வாம்ஸி. இவள் கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் மீது கோவை பாடி அரங்கேற்றுகையில் அக்கோவையில் “பெருநயப் புரைத்தல்” என்னும் துறைப் பாற்படும் மாலேநிகராகுஞ் சந்திரவாணன் வரையிடத்தே, பாலேறிப்பாயச் செந்தேன் மாரிபெய்ய நற்பாகுகற்கண், டாலேயெரு விட முப்பழச்சேற்றின முதவயன், மேலே முளைத்தகரும்போ விம்மங்கைக்கு மெய் யெங்குமே” எனும் பாடலைப் பிரசங்கிக்கையில் இவள் கரும்பு புன்செய்ப் பயிராயிற்றே, சேற்றில் முளைத்த கரும்பென்றீரே என ஆக்ஷேபிக்கக் கவிராயர் வேண்டுமாயின் மாற்றிவிடலாம் என்று ஏடுவாசிப்பானை நோக்கிக் கொம்பைத் தூக்கிக் காலை நிறுத்து என்னலும் தாசி, தலைகுனிந்து நண்புபூண்டவள். இவளைக் காஞ்சிபுரத்து வேதியர் கர்வபங்கப்படுத்த எண்ணி இவள் வீட்டையிடித்து அவ்வழி இரதம் செலுத்த எண்ணியிருத்தல் அறிந்த அம்மைச்சியினண்ப ராகிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் இவள் பொருட்டு பார்ப்பார் குரங்காய்ப் படையெடுத்து வந்தீரோ, தேப்பெருமாளே கச்சிச் செல்வரே கோப்பாகக், கொம்மைச் சிங்கார லங்கைக் கோட்டை யென்று வந்தீரோ, அம்மைச்சி வாழுமகம்” என இரதம் திரும்பிச் சென்ற தென்பர். |
தாசூரன் | சரலோமாவின் குமரன், இவன் உடலைவிட்டுத் தேவவடி வெடுத்து யாகஞ் செய்தவன். |
தாசையர் | இவர் ஒரு வீரசைவர்; இவர் ஓர் ஊர்க்குப் போகச் செல்கையில் இடையில் ஒரு ஆற்றைக் கடக்கவேண்டியிருந்து படகிற்குச் செல்ல அங்கிருந்தவர் எல்லாம் தாரணமில்லாமை கண்டு படகேறச் சம்மதிக்காமல் ஆற்றைவற்றச் செய்து கடந்து சென்றவர். |
தாஜ்மஹால் | இது, ஆக்ரா நகரத்துக்கு 3 மைல் தூரத்தில் யழனையாற்றின் மேற்கரையில் கட்டிய ஒரு பெரிய அழகிய மஹால், இது ஷஜஹான் எனும் டில்லி சக்ரவர்த்தி தன் மனைவி மும்தாஜ்ஜமால் என்பவளது ஞாபகச் சின்னமாகக் கட்டப்பட்டது. இது 22 வருஷகாலம் கோடி ரூபாய் செலவிட்டு, 20,000 வேலைக்காரராகிய காபூலியா, கோலகண்டா வேலைக்காரர், சிங்களர், இத்தாலியர் முதலியவர்களா லியற்றப்பட்டது. இது அழகிய பூஞ்சோலைகள் வாவிகள் சூழ இடையில் பளிங்குக்கற்களால் பார்ப்போர் கண்களைக் கவரும்படி செய்யப்பட்டது. தற்காலம் 300 வருஷங்களாயும் இது இப்போது தான் கட்டப்பட்டது போலிருக்கிறது. இதில் இவளை அடக்கஞ்செய்த சமாதியிருக்கிறது. |
தாடகாயனன் | விஸ்வாமித்திர புத்திரன். |
தாடகை | 1. சுகேதுவின் குமரி, சுந்தன் தேவி, இவள், தன்கணவன் அகத்தியர் கோபத்தாலிறக்க அகத்தியரிடஞ் சென்று, தீமை செய்யத் தொடங்கினள். முனிவர் இவளையும், இவள் குமாரையும் அரக்கராகச் சபித்தனர். இவள் அாக்கியாய் முனிவர் செய்யும் யாகாதிகாரியங்களுக்குத் தீமை செய்துவந்தனள். விச்வாமித்திரர் ஏவலால் இராமமூர்த்தி இவளைக் கொன்றனர். 2. திருப்பனந்தாளிலிருந்த ஒரு சிவ பக்தி மிகுந்தவள். இவள் சிவமூர்த்திக்குத் திருமஞ்சன முதலிய முடித்து மாலை சாத்துகையில் உடை நெகிழ்ந்தது கண்டு அவ்வுடையை முழங்கையால் இடுக்கி மாலை சாத்துதலுக்கு இடையூறு வருதல் கண்டு துக்கிக்கச் சிவமூர்த்தி தமது முடியைச் சாய்த்துக் கொடுத்தனர். |
தாடசபன் | தக்ஷன் மருமகன்; இவனுக்குத் தாரட்சியர், காசிபர் என்றும் பெயர். |
தாடைக்கு நடுவில் உண்டாகும் ரோகம் | அது (1) கண்டாலஜிரோகம், இது எந்தப் பக்கத்துத் தாடையிலாவது நீங்காத வீக்கத்தைப் பிறப்பிப்பது, தாடைகளில் (8) ரோகங்களுண்டாம் அவை தாளுரோகம் எனவும் கூறப்படும். தாடைக்கு உட்புறத்தில் வீக்கத்தையும், தடிப்பையும் உண்டாக்கிப் புண்களாக மாறச்செய்வது. இதனால் தாடையில் (8) வித ரோகங்கள் பிறக்கும். அவை 1. தாளுபிடகரோகம், 2. தாளுகள் சுண்டிகா ரோகம், 3. தாளுசம்ஹதிரோகம், 4. தாளாற்புதரோகம், 5. தாளுகச்சப ரோகம், 6. தாளுபுப்புடரோகம், 7. தாளுபாகரோகம், 8. தாளுசோஷ ரோகம் ஆகத் தாடைரோகம் எட்டு. |
தாணி | துருவன் என்னும் வசுவின் தேவி, |
தாணு | ஏகாதசருத்திரர்களில் ஒருவன், |
தாணு தீர்த்தம் | வசிட்டரைக் காண்க. |
தாண்டகம் | (27) எழுத்து முதலாக உயர்ந்த எழுத்து அடியினவாய் எழுத்தும் குருலகுவும் ஒத்துவருவன அளவியற்றாண்டகம், ஒவ்வாது வருவன அளவழித்தாண்டகம். |
தாண்டன் | ஒரு ரிஷி, |
தாண்டவமூர்த்தி | நாராயண குருவின் மாணாக்கர், கைவல்ய நவநீதம் செய்தவர். இவர் சோணாட்டு நன்னில மென்னும் ஊரார், வேதியர் |
தாண்டவம் | இதுபஞ்சகிருத்திய தாண்டவம் என்றும், அகோரதாண்டவம் என்றும், ஊர்த்த தாண்டவம் என்றும், ஆச்சரிய தாண்டவம் என்றும் ஆனந்த சௌந்தரிய தாண்டவம் என்றும் பலவிதப்படும். |
தாண்டவம் ஐந்து | சிவபிரானாடிய நடனம், இவை அற்புத்தாண்டவம், அநவரத்தாண் டவம், ஆனந்த தாண்டவம், பிரளயதான்டவம், சங்கார தாண்டவம், |
தாண்டவராயசாஸ்திரியார் | இவர் ஏரகம் அநந்தநாராயண வாத்தியார் குமாரர். கரும்பைநகர் பெரியாண்டி புழுகணிவேந்து எனும் பிரபுவின் வேண்டுகோளால் பாகவதசாரமெனும் நூலியற்றிய புலவர். |
தாண்டியன் | ஒரு ரிஷி, (பா~சா.) |
தாதகி | பவணமாதேவன் தேயம். |
தாதன் | 1. கம்பர் காலத்துச் சோழனிடத்துச் சிறப்படைந்த ஓர் வணிகன். இவன் கவிவல்லான், இவனுக்குச் சோழன் வரிசை செய்தலைக் கம்பர் பொறாராய்ச் சோழனை நோக்கி இவற்கு இத்தகைய வரிசை செய்தல் எம்போன்றவரை இழித்தலோ டொக்கும் எனக் கேட்ட தாதன் கம்பரிடத்து கோபங்கொண்டு கம்பர் பாடிய மும்மணிக கோவைக்குக் குற்றங்கூறி, யவரையுமிழித்து வசை பாடினன் என்ப. தாதன் சோழன் பாற்பெற்றவூர் தொண்டை நாட்டின்கணுள்ள கூவம். தாதன் பாடியவசை “கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக்கம்ப நாடன் சொன்ன, மும்மணிக் கோவை முதற்சீர் பிழை முனைவாளெயிற்றுப், பைம் மணித்துத்திக் கனமணிப் பாந்தட்படம் பிதுங்கச், செம்மணிக்கண் பிதுங்கப்பதம் பேர்த்த செய்துங்கனே. ” 2. தமிழ்ப்பேசும் வைணவ பிச்சைக்காரன், தாசிரியோடு ஒப்பானவன். (தர்ஸ்.) |
தாதா | 1. ஒரு தேவன், 2, நந்தியெலும்பிற் பிறந்தவன். 3. பிருகுவிற்குக் கியாதியிட முதித்த குமரன், தேவி ஆயதி. 4. காச்யபருக்கு அதுதியிட முதித்த குமரன்; துவாதசாதித்தரில் ஒருவன், பாரிகள் குரு, சிநிவாலி, ராகை, அநுமதி. |
தாதாசாரி | காஞ்சீபுரத்திலிருந்த வைணவ வேதியர், இவர் வடகலையார். அப்பைய தீக்ஷிதருடன் வாதஞ் செய்தவர். |
தாதி | சோழன் இவளை ஒரு புலவனுக்குக் கொடுக்க அவள் ஊடலிற் கூறியது. முன்னாளிருவர் முயங்கும்படி கண்டு, மன்னாபணி தவிர்த்து வாழ்வித்தாய் துன்னார்தம், சேனைகண் டாலிக்குஞ் செம்பியர் கோன் கண்விழித், தானை கண்டார் தாமவர்” எனக் கூறினள். |
தாது | (7) இரதம், சுக்லம், இரத்தம், மூளை, தசை, எலும்பு,தோல். |
தாதுகதை | புத்தன் எலும்பு முதலிய தாதுக்களை கொண்டார் சரிதை கூறும் புத்த நூல். |
தாதுவின் பேதம் | ரஸதாது, ரத்ததாது, மாமிச தாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சதாது, சுக்கில தாது என எழுவகைப் படும். இவை சரீரத்தைத் தாங்கி ரத்தப் புஷ்டிதந்து பூரிக்கச்செய்து காந்திதந்து கருப்பவுற்பத்தியுஞ் செய்விக்கும். (ஜீவ.) |
தாதை | 1. பாதாளத்திருந்து இரவையுண்டாக்கும் பிரமன் பெண். 2. பிரமனால் சிருட்டிக்கப்பட்ட தேவன் |
தாத்திரிகை | திரௌபதியின் தோழி. |
தாத்ரி | சுக்கிரன் குமரன், அசுரபுரோகிதன். |
தான பத்திரம் | நில முதலியவற்றைச் சத்தியமாக இடையூறின்றி நன்கொடையாக உதவி யெழுதியது. |
தானங்கள் | 1, தேவர்க்கும் நல்லோர்க்கும் ஈந்து புண்ணியம் அடைதல்; அவை பல வகையாயினும் அவற்றுள் (16) சிறந்தன. இரண்யகர்ப்பதானம்; பொன்னால் (72) அங்குலம் உயரமும் அதில் மூன்றம்சம் அகலமும் உள்ள தாமரைபோன்ற கும்பஞ் செய்வித்து அதில் தயிர், நெல், பால் முதலிய நிறைத்து வேதிகை செய்வித்து அதின்மேல் இரண்டு மரக்கால் எள்ளைப் பரப்பி அதன்மீது கும்பத்தை நிறுத்தித் தான கற்பவிதிப்படி பூசித்துப் பிரதக்ஷண முதலியசெய்து எஜமானன் அந்த இரண்ய கும்பத்தில் ஒரு விஸ்வாசகாலம் இருத்தல் வேண்டும். இப்படி யஜமானன் கடத்திருந்து வெளிவருமுன் ஆசாரியன் இரண்யகும்பத்திருக்கும் இரண்யகற்பனாகிய புருஷனுக்குக் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம், சாதகர்மம் முதலிய கிரியைகள் செய்தலவேண்டும். பின்யஜமானன் அதை விட்டு வெளிவந்து அந்தக் கலசத்துடன் கிராமாதிகளையும் தானஞ் செய்ய வேண்டும். அவ்வகை செய்தவன் (100) கோடி சல்பம் பிரமலோகத்தில் வசித்துத் தனது பிதுருக்களை நரகத்திலிருந்து நீக்குவன். 2. இரண்யாச்வதானம் : (3) முதல் (1000) பலமுள்ள பொன்னால் குதிரை யொன்று செய்வித்து நானாவித உபகரணமான ஒரு சையத்தையும், (8) சுவர்ண கலசங்களையும் வேதிகையில் தாபித்து, விதிப்படி பூசிப்பதாம, இப்படிச் செய்தவன் தேவாகளால் பூசிக்கப்பட்டு இந்திரபதம் அடைவன். 3. இரண்யாச் வரததானம் (3) முதல் (1000) பலமுள்ள பொன்னால் ரதம் செய்வித்து அதில் தன் இஷ்டதேவதையைப் பொன்னாற் செய்வித்து நிறுத்தி அத் தேர்க்கு (8) அல்லது (4) பொற்குதிரைகள் பூட்டி வஸ்திராதிகளால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகை தானஞ்செய்தவன் பாபம் நீங்கித் தேசோசரீரனாய்ச் சிவபதமடைவன், 4. உபயகோமுகி தானம்: பசுவின் பிரசவகாலத்தில், பசுங்கன்றின் பாதிதேகம் தாயின் வயிற்றிலும் மற்றப்பாதி வெளியிலும் இருக்கக்கண்டு பசுவினைப் பொன், வெள்ளிமுத்து முதலானவைகளால் அலங்கரித்துத் துணையுடன் வேதியனுக்குத் தானஞ்செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தரணிதான பலனடைவதன்றிப் பிதுருக்களையும் திருப்தி செய்தவனாகிழன், 5. கனக்கல் பலதிகாதானம்: (5) முதல் (1000) பலமுள்ள பொன்னால் நீர்க் காக்கை, அன்னம் முதலிய பக்ஷிகள், விதிதியாதர பிரதிமைகள் முதலியவற்றோடு கூடிய (10) கல்பகக் கொடிகளைச் செய் வித்து விதிப்படி பூசித்துத் தக்க வேதியர்க்குத் தானஞ்செய்வதாம், இவ்வகை புரிந்தவன் சத்திய உலகம் அடைவன். 6. கனக்காமதேனு தானம்: (1000) (500) (250) கணக்குள்ள பலத்தோடு கூடிய பொன்னால் கன்போடு கூடிய பசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ்செய்தவன் தேவர்களால் பூசிக்கப்பட்டுச் சிவபதம் பெறுவன். 7. கல்பவிருக்ஷ தானம்: (3) பலம் முதல் (1,000) பலம் வரையில் பொன்னால் திரிமூர்த்தி பிரதிமைகளுடன், (5) கிளைகளோடு நானாவித பக்ஷிகள், பழங்கள் முதலியவற்றுடன் கற்பகத்தரு செய்வித்துக் கிழக்கில் சகளத்திர காமதேவயுக்தமான சந்தானவிருக்ஷத்தையும், தெற்கில் லக்ஷ்மியோடு கூடிய மந்தாரவிருக்ஷத்தையும், மேற்கில் சாவித்திரியோடு கூடிய பாரிசாத விருக்ஷத்தையும், வடக்கில் சுரபியோடு கூடிய ஹரிச்சந்தனவிருக்ஷத்தையும் நிருமித்து விதிப்படி ஓமாதுகள் பூஜை முதலிய செய்து நமஸ்கரித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் சித்த, சாரண, கின்னா, அப்சரசுக்களால் சேவிக்கப்பட்டுச் சூரியவருண விமானத்தேறி (100) கல்பம் விஷ்ணுபதத்தில் இருப்பன். 8 கார்ப்பாஸ தானம்: ஐந்து பாரம் முதல் (20) பாரம் நிறையுள்ள பருத்தியைத் தக்கவர்க்குத் தானஞ் செய்வதாம். இதைச் செய்தவன் உருத்திரலோக மடைவன் 9 கிருதபர்வததானம்: (5) கும்பம் நெய்முதல் (20) கும்பம் நெய்யைத்தக்க வர்க்குத் தானஞ் செய்வதாம். இப்படிச் செய்தவன் சிவபதம் பெறுவன். 10. கிருஷ்ணாஜின தானம்: மாசி, ஆடி, கார்த்திகை மாதங்களிலும், பௌர்ணிமை, சந்திரசூர்யகிரகணம், உத்தராயண துவாதசி புண்ணியகாலங்களில், ஆகிதாக்னியாகிய வேதியனுக்கு விதிப்படி கிருஷ்ணாஜினம் (மான்தோல்) தானஞ் செய்தலாம். இவ்வகைப் புரிந்தவன் சிவசாயுச்யம் அடைவன். 11. குடதேனு தானம்: நாலுபாரம் முதல் கூடியவரையில் பெல்லத்தால் பசுவும் கன்றும் செய்வித்து ஆபரணங்களால் அலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்விதம், வெண்ணெய், எள், தான்யம், சர்க்கரை, உப்பு, ரத்னம் பொன் முதலியவற்றாலும் செய்வித்து மந்திர ஆவாகனஞ்செய்து தானஞ் செய்யின் நெடுநாள் கோஉலகத்தில் சகல சௌபாக் இயங்களை அனுபவித்துப் பின் விஷ்ணு பதம் அடைவன். 12. குடபர்வததானம்: மூன்று பாரம் முதல் (10) பாரம்வரையில் பெல்லத்தால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்வது. இவ்வகை செய்தவனுக்குப் பசுபதி சாந்நித்யமாவர். 13. கோசகஸ்திரதானம்: (3) பலம் முதல்கொண்டு (1000) பலமுள்ள பொன்னால் (10) பசுக்கள் செய்வித்து அவற்றினிடையில் ஒரு பொன்விருக்ஷம் செய்வித்து நிறுத்திப் பின் (1000) பசுக்களை, பொன், வெள்ளி முதலானவைகளாலலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய் வதாம். இவ்வகைச் செய்தவன் பாபம் நீங்கித் தன்னுடைய (101) கோத்திரத்துடன் தானும் கைலையில் வசிப்பன். 14. சர்க்கராபர்வததானம்: இரண்டு பாரம் முதல் எட்டுபபாரம் வரையில் சர்க்கரையை மலைபோல் குவித்துத் தானஞ் செய்வது. இதைச் செய்தவர் சிவபத மடைவர். 15, சப்தசாகரத்தானம் (5):முதற் கொண்டு (1000) பலம் அளவுள்ள பொன்னால் சாண் அளவுள்ள (7) கும்பங்கள் செய்வித்து முதற் கும்பத்தில் உப்பு நிறைத்து அதில் சரஸ்வதியுடன் கூடிய பிரம தேவனையும், இரண்டாவதில் பால் நிறைத்து விஷ்ணுமூர்த்தியினையும், (3 வதில்) நெய் நிறைத்துச் சிவமூர்த்தியையும் (4 வதில் பெல்லம் நிறைத்துச் சூரியனையும், (5 வதில்) தயிர்நிறைத்துச் சந்திரனையும், (6 வதில்) சர்க்கரை நிறைத்து லஷ்மியையும், (7 வதில்) சுத்தோதகம் நிறைத்துப் பார்வதியார் முதலியவர்களை யெழுந்தருளுவித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வது. இங்ஙனஞ் செய்தவன் விஷ்ணு பதமடைவன். 16. சுவர்ணபாவத தானம்: (250) பலம் முதல் (1000) பலம் பொனனினால் பர்வதம் செய்வித்து விதிப்படி தானஞ் செய்யின் பிரமபதம் அடைவன். 17. சையாதானம்: நல்ல மரத்தில் கட்டில் செய்வித்து அதனைப் பலவிதமாக அலங்கரித்துப் பாயல்விரித்துத் தீர்த்தம், சந்தனம், புஷ்பம், தாம்பூலம், மற்றும் ஸ்திரீ புருஷர்களுக்கு வேண்டியவும் அமைத்து நவக்கிரக பூசைசெய்து சில விஷ்ணுக்கள் இதனால் மகிழக் கடவர் என யோக்கியனுக்குத் தானஞ்செய்தல். இதனால் சுவர்க்கம் உண்டாம். 18. தராதானம்: (100) முதல், (1000) பலமுள்ள பொன்னினால் ஜம்புத் தீவு போல் நானாவித அநேக பர்வதசாகர நகர கிராமங்கள், பாரதாதி நவவருஷங்களோடு கூடிய பூமி, அவைகளைச் சுற்றிக் கடல் செய்வித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ் செய்தவன் தன் கோதரங்களுடன் (3) கல்ப காலம் வைகுண்டத்தில் வசிப்பன். 19. தான்யபர்வததானம்: இந்தப பர்வததானம், லவணத்தாலும், பெல்லத்தாலும், பொன்னினாலும், வெண்ணெயாலும், எள்ளினாலும் இரத்தினத்தினாலும் வெள்ளியினாலும், சர்க்கரையாலும் மலைபோற் செய்வித்து வியதிபாத முதலான புண்ய காலங்களில் (1000) மரக்கால் நெல்லை மேருவாக வைத்து நவமணிகளாலலங்கரித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வது. இத்தானஞ் செய்தவன் தெய்வ வுலகடைவன், 20. திக்பர்வததானம்: வேதியர் எட்திர் பெயரை வருவித்து அவர்களை ஆசனத்திலிருக்கச் செய்து அவர்களி னடுவில் சிவமூர்த்தியைப் பூசித்துப் பத்துக் கழஞ்சு பொன்னாற் பதினொரு விமானம் செய்வித்து அதை வேதியர்க்கு விதிப்படி தானஞ்செய்து பவவேதியர்க்கு அன்னமிடலாம். 21. திலபர்வததானம்: மூன்று மரக்கால் முதல் பத்து மரக்கால் எள்ளினைப் பர்வதம்போற் குவித்து விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வது. இவ்வகைச் செய்தவன் சுவர்க்கமடைவன். 10 சாண்கோலொன்று கட்டு அது மறைய எள்கொட்டி அதன் மேல் மண்டவஞ்செய்து ஆடையால் மூடி மலர்தூவி அதில் சிவமூர்த்தி பள்ளிகொள்வதாய்த் தியானித்துச் சிவமூர்த்தியைப் பூசித்து விதிப்படி தடிணையுடன் பிராமணனுக்குக் கொடுத்தலாம். திலதேனு, திவ பத்மதானங்களைத் தனித்தனி காண்க. 22. துலாபுருஷதானம்: இத் தானஞ் செய்பவன் பரிசுத்தனாய்ப் பதினாறு முழத்திற்குக் குறையாமல் மண்டபஞ் செய்வித்துப் புண்ணியா வாசனம் முடித்து ஏழடிவேதிகை செய்வித்து நான்கு குண்டங்கள் செய்விக்க வேண்டும். பிறகு வேதிகையில் கலசத்தாபனம் செய்து அதில் திரி மூர்த்திகளைப் பூசித்து எழு முழமுள்ள தேவதாரு முதலிய இரண்டு தம்பங்களை இரண்டு முழம் பூமியில் புதைத்து அதின் மேல் சுவர்ண முதலியவைகளால் அலங்கரித்துத் துலாதண்டம் நிறுத்தி லோகமயமாகும் தட்டுகளைச் சங்கிலிகளில் மாட்டி அத்துலாத்தைக் கொடி முதலியவைகளா வலங்கரித்துக் குருவையும் வேதமறிந்த எட்டுருத்விக்குகளையும் வருவித்து நான்கு திக்குகளில் இவ்விருவரை நிறுத்திப் பிரமாதி தேவர்க்கு ஓமஞ்செய்து எஜமானன் ஆசாரியருடன் பவி பூசைகள் முடித்து அத்தினத்தில் எல்லோரும் உபவசிக்க வேண்டும். மதுகான் ஸ்தானாதிகள் முடித்துப் பரிசுத்தனாய் கானாவித பூஷணாவக் கிருதனான எஜமானன், ஆசாரியனோடு தலைக்கு கமல்கரித்துத்துவா ஆரோகணஞ் செய்தல் வேண்டும். அதில் ஒரு தட்டில் எஜமானனிருந்து மறுதட்டில் ஸ்வர்னத்தை வைத்துச் சமமாகத் தூக்கி க்ஷணநேரம் அதிலிருந்து அதினின்றும் இறங்கி அதிலுள்ள திரவியத்தில் பாதி ஆசாரியனுக்கும் மிகுதியை ருதவிக்கு களுக்கும் கொடுத்து அவர்கள் ஆக்கினையால் மற்றவர்களுக்கும் தானாதிகள் கொடுத்தல் வேண்டும். இப்படிச் செய்தவன் கீர்த்தியையம் ஆயுளையுமடைந்து விஷ்ணுபத மடைவன். 23, பஞ்சவாங்கல தானம்: சாரமுள்ள நூறுகிராமங்கள் அன்றியதாசக்தி கிராமத்தையும் மரத்தாற் செய்யப்பட்ட ஐந்து கலப்பைகளையும், பொற்கொம்பாலலங் கரிக்கப்பட்ட பத்து எருதுகளையும் ஐந்து முதல் (1000) பலம் உள்ள பொற்கலப் பைகளையும் கன்சோடு பாடிய பசுக்களையும் விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் விமானமேறிச் சிவபதம் அடைவன். 24. பிரமாண்டதானம்: இருபது பலம் முதற்கொண்டு (1,000) பலம் வரையில் தன் சக்திக்கு இயன்ற அளவு (100) அங்குல நீனம் இரண்டு கலசங்களும், எட்டுத் திக்கு யானைகளும், அஷ்டதிக்குப் பாலகரும் உள்ள ஒரு பிரமாண்டத்தைச் செய்வித்து அதில் திரிமூர்த்தி விக்ரகங்களை எழுந்தருளச் செய்து பட்டு வஸ்திராப பணாதிகளால் அலங்கரித்து அந்தப் பிரமாண்டத்தை இரண்டு மரக்கால் என்னில் இறுத்தி விதிப்படி பூசை முதலிய முடித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகை செய்தவன் பாபம் நீங்கி இந்திரபதம் அடைவன். 25. மகாபூதகட தானம்; நூறு அங்குல நீளமுள்ளதாய், நாநாவித ரத்தினங்கள் இழைத்த கும்பத்தைப் பால் கெய் முதலியவைகளால் நிறைத்து அதில் ஒரு சவர்ண கற்பவிருகத்தை நிறுத்தி விதிப்படி பூசித்துத் தானஞ் செய்வதாம். இவ்வகைச் செய்தவன் கோடிசூர்யப் பிரகாசமுள்ள விமானமேறி வைகுண்ட பதம் அடைவன். 26. ரத்னதேனுதானம்: வச்சிரம், பவளம், வைடூர்யம், கோமேதகம், புஷ்பரா கம், மரகதம், மாணிக்கம், சர்க்கரை, பெல்வம் முதலியவற்றால் புராணதிகளில் கூறியபடி ரத்னபசு செய்வித்து விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்வதாம். இவ்வகை செய்தவன் மதனசமான காந்தியுள்ளானாய் விஷ்ணுபதமடைவன் 27. ரத்னபர்வததானம்: முந்நூறு பலம் முதல் (1,000) பலம் வரையில் இரத்தினத்தால் பர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்வதாம், இது செய்தவர் பிரமகத்தி தோஷம் நீங்கி விஷ்ணுபதம் அடைவர். 28. ரௌப்பியபர்வததானம்: (2500) பலம் முதல். (10,000) பலம் வரையில் ரௌப்பியபர்வதஞ் செய்வித்துத் தானஞ் செய்யின் சிவலோகமடைவர். 29. லவணபர்வத தானம்: நாலு மரக்கால் முதல் பதினாறு மரக்கால் வரையில் உப்பை விதிப்படி தானஞ்செய்யின் சத்தி உலகம் அடைவர். 30. விச்வசக்ர தானம்: ஆயிரம் முதல் (250) பலம் பொன்னால் பதினாறு இலைகளுள்ள விச்வசக்கரத்தை ஏழு ஆவரணத் தோடு கூடியதாகச் செய்வித்துச் சங்குசக்கிரதரனாகிய விஷ்ணு மூர்த்தியை எட்டுத் தேவியருடன் பிம்பத்திற் செய்வித்திருத்தி விஷ்ணுமூர்த்தியின் தசாவதார பதுமைகளை நிருமித்து விதிப்படி பூசித்துத்தானஞ் செய்வதாம். இவ்வகைத் தானஞ்செய்த வன் அரிபதமடைவன். 31. ஹேமஹஸ்திர தானம்: ஐந்து பலம் முதல் ஒரு பாரம்வரையில் பொன்னால் புஷ்பரதம் செய்வித்து நான்கு பொன்யானைகளும், இரண்டு உயிர் யானைகளையும் பூட்டி அவ்விரதத்தின் மத்தியில் லக்ஷ்மீ நாராயணனையும் இரண்டு பக்கங்களில் பிரம்ம மகேச்வராதி தேவவிக்கிரகங்களையும் எழுந்தருளச் செய்து விதிப்படி பூசித்துத் தானஞ்செய்தலாம். இத்தானஞ் செய்தவன் வித்தியாதரரால் பூசிக்கப்பட்டுச் சிவபதமடைவன். 32, பருத்தி தானத்தால் :யமதூதரிடத்தில் அச்சம் உண்டாகாது. 33. தானிய தானத்தால்: யமனும் தூது வரும் சந்தோஷித்து ஜீவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பர். 34. பூதானஞ்செய்யின்: எத்தனை அடிகள் தானம் செய்தானோ அத்தனை காலம் சவர்க்கத்தில் இன்புறுவன், 35. மராடிதானத்தால்: மார்க்கத்தில்முள் முதலியவற்றால் துன்புறாது குதிரையேறி யமபுரஞ் செல்வன். 36. குடைதானத்தால்: நிழலுள்ள வழியிற் செல்வன், மழையால் துன்பமடையான். 37. தீபதானஞ்செய்யின்: இருள் வழியில் பிரகாசத் துடன் செல்வன், மாண்பினது முதல் ஓராண்டு தீபதானஞ்செய்யின் குலத்தோரையும் சுவர்க்கத்தில் புகுவிக்கும். ஆசனப்பலகையும் செம்புஸ் தாவியும் சுயம்பாகப் பொருளும் தானஞ் செய்யின் மரித்தவன் மார்க்கத்தில் இனிது செல்வன். 38. வஸ்திர தானஞ்செய்யின்: யமதூதர் நல்லுருவத் துடன் தோன்றுவர். 39. பூமி, சுரபிகள், சுவர்ணம்: இம் மூன்றும் தானங்களில் விசேடமாம். எவ்விதமெனின் பூமி விஷ்ணுசம்பந்த மாத லாலும், சுவர்ணம் அக்கினியின் மகவாதலாலும், சுரபிகள் சூரிய புத்திரிக ளாதலாலும் விசேஷமாம். இவற்றைத் தானஞ் செய்வோன் அம்மூன்று லோகத்தையும் அடைவன். 40. பருத்தி தானம் மகா தானமாகும், இது தேவர் அந்தணர் முதலியோர்க்குப் பூணுநூற்கு உபயோகம் ஆகையால் மிகச் சிறந்ததாம். இத்தானம் செய்தவன் சுவர்க்கவாசியாகச் சிலநாள் வசித்து அழகிய மேன்மையுடையவனாய்ச் சிவபதம் அடைவன். 41. திலதானம், கோதானம், தானய தானம், சுவர்ண தானம், பூதானம் செய் யின்: மகாபாதகங்கள் நசிக்கும். இவைகளை உத்தமபிராமணருக்கே கொடுத்தல் வேண்டும். 42. திலதானத்தாலும் இரும்பைத்தானஞ் செய்தலாலும், யமன் உவப்படைகிறான். 43, இலவண தானத்தால்: இறக்கிறவனுக்கு நமனிடம் அச்சம் உண்டாகாது |
தானம் | (3) தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம், அவையாவன: அறத்தான் ஈட்டிய பொருளை முக்குற்றம் அற்ற நற்றவத்தோரைக் கொள்க எனப் பணிந்து குறை இருந்து தம் உள்ளம் உவந்து ஈதல் தலைப்படு தானம். ஆதுலர், குருடர், மாதர் முதல் பிறர் சிறுமையைப் பற்றி மனம் இரங்கி ஈவது இடைப்படு தானம். புகழ், ஆர்வம், கைம்மாறு, அச்சம், கண்ணோட்டம், காரணம், கடைப்பாடு இவற்றைப் பற்றி ஈவது கடைப்படு தானம். இது பலவகைப்படும். இவற்றுள் பதினாறு சிறந்தன, |
தானவர் | 1, ஒரு முனிவர் அட்டகோண மகருஷியின் தாயுடன் பிறந்தாளை மணந்தவர். குமரன் சுகேது, 2. காச்யப ருஷிக்குத்தநுவிட முதித்த குமரர். அவர்கள் அஜோழகன், அந்தகன், அடிதானவன், அருணி, அருட்டன், அநுதாபகன், இல்வலன், ஏகசக்ரன், கபிலன், புலோமன், சம்பான், திவிமூர்த்தனன், அயக்கீரிவன், சங்கசிரன், விபாவசு, விருஷபர்வன், விப்ரசித்தி, வாதாபி, சுவர்பபானன், நழசி, வக்தரயோதி, காலநாபன், திரியம்சன், சல்யன், நபன், நரகன், புலோமன், தாமரகேது, கசருமன், விரூபாக்ஷன், துர்ச்சயன், வைச்வாநான், தாயகன் ழதலியோர், |
தானியமாலி | 1. அதிகாயன் தாய், இராவணன் தேவியரில் ஒருத்தியாகிய அபசாசு. 2. இவள் ஒரு அப்சாசு. இவள் கைலையில் சிவபிரான் சந்நதியில் நடிக்கச் சிவபிரான் இவளுக்கு ஓர் விமானம் அளித்தனர். இதில் ஏறி வருகையில் வழியிலிருந்த தடாகத்தில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தனள். இவளது அழகைக்கண்டு காமுற்ற சாண்டில்யமுனிவன் தன்னெண்ணத்தை இவளுக்குத் தெரிவிக்க இவள் முனிவனை நோக்கி 3 நாட்கள் தீண்டாத வளாதலின் நான்காம் நாள் வருகிறேனென நீங்கி நான்காம் நாள் நீராடி வருகையில் திக்குவிஜயத்தின் பொருட்டு வந்துகொண்டிருந்த இராவணன் இவளை வலியப் புணர்ந்தனன். அப்போதிவளிடம் அதிகாயன் பிறந்தான். பின் இவள் முனிவனிடம்வர, முனிவன் நீ ஒருவனுக்கு முதலில் வார்த்தை கொடுத்து அதைக் கடந்து வேறொருவனைச் சேர்ந்தாயாதலால் நீ முதலையாக என்று சபித்தனன். இச்சாபத்தால் பயந்து இவள் தீர்வுகேட்க இராமகாரியத்தின் பொருட்டு வரும் அநுமனால் தீரும் என்று போயினர். இவள் சஞ்சீவியின் பொருட்டு வந்த அநுமன் காலைத் தடாகத்தில் பற்றி அவனால் சாபம் நீங்கினள், |
தானியவகை | 1, நெல்வகை அறுபதாம். குருவை, ஆனைக்கொம்பன், இலுப்பைப் பூச்சம்பா, ஈர்க்குச்சம்பா, கருடன் சம்பா, கம்பம் சம்பா, கறுப்புக்கார், கோணற்குருவை, கல்குருவை, கருங்குருவை, குத்தாலை, காட்டுக்குத்தாலை, காட்டழிவாணன், சிவப்புச்சிறுமணியன், சடைச்சம்பா, சிவப்புச்சம்பா, சீரகச்சம்பா, சன்னசம்பா, சுகதாஸ்சம்பா, சிவப்பு ஒட்டன், செப்புலிப்பிரியன், செங்கார், செங்குருவை, சாம்பல்வாரி, செம்பாளை, தங்கச்சம்பா, தட்டைச்செம்பாளை, தில்லைநாயகம், நறுக்குச்சம்பா, நீலன் சம்பா, பக்கிரிசம்பா, பழையபவுன்சம்பா, பொடித்தில்லை, பிசாணம், புனுகுச்சம்பா, பூங்கார், பெருங்கார், பொன் கம்பிச்சம்பா, மல்லிகைச் சம்பா, மணல்கார், மருதூர்வாசனை, மிளகி, முத்து வெள்ளை, மொக்குமட்டை, வாழைப்பூச்சம்பா, வால்குருவை, விராலிச்சம்பா, வெள்ளைச்சிறுமணி, வெள்ளைச் சம்பா, வெற்றிலைச்சம்பா, வெள்ளை ஒட்டன், வெள்ளைகபிஸ்தலம், வெள்ளைக்குருவை, வெள்ளைக் கூம்பாளை, மணக்கத்தை, வாலான், நவரைச்சம்பா, கல்லுண்டைச் சம்பா, குண்டுசம்பா, வளைதடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, தாளான் சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, சாடைச்சம்பா, குன்றிமணிசம்பா, அன்னமழகி, சொர்ணவாரி, 2. இவ்வகையில் இந்தியாவில் பயிராவன நெல்தானியமேயன்றி வேறுவகைகளும் உண்டு. அவை உண்பனவற்றிற்கு உதவியான முதற்காரண உணவுவகையினும் அதற்குத் துணைக் காரணமான கதிர்த்தானிய வகையினும் சேர்ந்தவை. முதற் காரண வகையில் நெல்லைப்பற்றிக் கூறியதைக் காண்க, கதிர்த்தானியவினத்தில் சவ்வரிசி, மூங்கிலரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, செஞ்சோளம், கருஞ்சோளம், குறுவரகு, வரகு முதலிய. காய்ந்தானிய வகையில் கொடியிலும் செடியிலும் பயிராவன; துவரை, உளுந்து, கடலை, மொச்சை, பருங்காராமணி, பனிப்பயறு, பச்சைப்பயறு, தட்டைப் பயறு வெண்பயறு, கரும்பயறு, கொள்ளு, எள், அவரை, பீன்ஸ்விதை முதலிய பல. |
தானை | (ச6) தேர், கரி, பரி, வாள், வில், வேல். |
தானை நிலை | இரண்டு சேனையும் மறத்தை ஏத்தப் போர்க்களத்துச் சிறப்பெய்தியது. (புறவெண்பா.) |
தானை மறம் | 1. வேற்படையினர் தறுகண்மையைச் சொல்லிப் பகைவருடைய கேட்டிற்கு நோவினும் முறைமையாக விசாரித்துரைப்பின் அதுவேயாம். (புற வெண்பா.) 2. பொர எதிர்ந்த இருவகைச் சேனை தாம் பொருதுமடியாமை பரிகரித்த ஆற்றலினது உயர்ச்சியைச் சொல்லியது (புறவெண்பா.) 3. பொலிவுபெற்ற பூமி காவலற்கு உறுதிகூறுதற்கும் பெறும் அதுவென்று சொல்லுவர். |
தான்மிகன் | ஒரு அரசன். |
தான்மிகபாண்டியன் | ஒரு பாண்டியன்; இவன் தேவி வித்துருவதை. |
தான்யசங்கராந்தி விரதம் | இது விஷவத் புண்யகாலத்தில் சூர்யனைப் பூஜித்துத் தான்யதானஞ் செய்வது. இது செய்தார் ஆயிரம் அக்னிஷ்டோமபலம் அடைவர். |
தான்யாதிபதி | அரசனுக்கு நெல் முதலிய தான்யங்களின் சாதி, அளவு, விலை, உறுதி கூறுகொள்ளுமுறை, தூய்மை ஆக்கு முறையறிந்து கூறுவோன். (சக்சநீதி.) |
தாபதநிலை | குருந்தப்பூமவரும் மாலையினையுடைய கணவன் இறந்தானாகக் கரிய பெரிய கண்ணினையுடையாள் வைதவிய மெய்தியவாற்றைச் சொல்லியது. (பு. வெ. பொது.) |
தாபதவாகை | தபோதனவேடத்தார் புண்ணியத்தோடு தழுவி ஒழிதலுணராத நடையைச் சொல்லியது. (புறவெண்பா.) |
தாபத்தியர் | தபதிவம்சத்துப் பிறந்த சந்திர வம்சத்தரசர். |
தாப்பிசைப்பொருள்கோள் | செய்யுளில் இடைநிற்குமொழி ஒழிந்த முதலினு மீற்றினும் சென்று பொருளைத் தருவது. (நன்னூல்.) |
தாமக்கிரந்தி | பாண்டு புத்திரனாகிய நகுலன் மச்சநாட்டில் கரந்துறைந்த காலத்து வைத்துக்கொண்ட பெயர். |
தாமக்மதம் | இம்ம தாசாரியன் பிராணனாதிஸ்கு என்பவன். இது ஒருவிதமான வைணவ மதம், இவன் எல்லா மதங்களையும் ஒரு மதமாக்க முயன்றவன். இம்மதத்தவர் தேவகுமாரர்கள் என்று பாவம். இவர்களுக்கு விக்ரக ஆராதனையில்லை. இவர்கள் தங்கள் தேவாலயங்களில் மத கிரந்தங்களைப் பூசிப்பவர். இக்கிரந்தங்களில் ஹிந்து வேதம் குரான் முதலியவற்றின் சாரங்கள் அடங்கியிருக்கின்றன. |
தாமசமநு | சுராஷ்டிரன், ஒரு மகா வீரனாகிய அரசன், இவ்வரசன் மந்திரி சூரியனை எண்ணித் தவமியற்றி அரசனுக்குத் தீர்க்காயுள் தரப்பெற்றதால் நெடுநாள் அரசாண்டவன். இவன் தனது நாடு, தனகளத் திர புத்திராதி களையிழந்து காடடைந்து தவஞ் செய்து கொண்டிருக்கையில் மழை பெய்து இவனை வெள்ள மடித்துக்கொண்டு போயிற்று. அரசன், ஒரு மிருகத்தின் வாலைப் பற்றிக் கரையேறி அடுத்த காட்டையடைந்து தான் பற்றியது மிருக மென்றறிந்தும் அதனிடம் மோகங்கொண்டனன். மிருகம், அரசனது எண்ணம் அறிந்து அரசனை நோக்கி அரசனே என்னை ஏன் தொட்டனை நான் கருப்பவதி ஆலிங்கனத்திற்குத் தக்கவள் அல்லள் என்று மனித பாஷையால் கூறியது. இதைக் கேட்ட அரசன் நீ யார் என மிருகம், நான் பூர்வத்தில் திருடதன்வன் என்னும் அரசன் குமரி, உன் பாரியைகளில் முதல்வி, என் பெயர் உற்பலாவதி என்றது. அரசன் மிருகத்தை நோக்கி உனக்கு இந்தப் பிறவி எவ்வாறு வந்ததென மிருகம், நான் இளமையில் என் தோழியருடன் வனத்தில் விளையாடுகையில் ஒரு பெண் மிருகத்தை ஆண் தொடர்ந்து வந்தது, அதனைக் கண்ட நான் அப்பெண் மிருகத்தை ஆண் சேரவொட்டாமல் ஓட்டினேன். பின் தொடர்ந்து வந்த புருஷா மிருகம் என்னை நோக்கி மனித பாஷையால் நான் செய்யவந்த கருப்பாதானத்தை ஏன் விலக்கினாய் என்றது. நான் பயந்து நீ யாரென நான் நிர் உருத்த சக்ஷன் என்கிற முனி புத்திரன். என் பெயர் சுதபன். என்னைத் தடை செய்ததால் சபிப்பேன் என்றது. நான் பயந்து அறியாமல் செய்த காரியத்தைப் பொறுக்க என வேண்டப் புருஷா மிருகம் என்னை மணந்தாலன்றி விடேன் என்றது. அதனை நோக்கி நான் மிருகவுருக் கொள்ளேன் என்றனன். அதனால் இருடி புத்திரன் கோபித்து நீ மிருகமாக என்றனன். நான் மீண்டும் வேண்ட முனிவன், நீ இரண்டு சன்மம் மிருகமாக இருந்து இரண்டாவது சன்மத்தில் சித்தவர்ய முனிபுத்ரனாகிய லோலன் உன் கருவில் வருவன்; அக்காலத்து உனக்குப் பூர்வஞான முண்டாய் மனித வாக்காகப் பேசுவாய், உன் ஜன்மம் விடுதலையாம். அந்த லோலன் மனுவாவான் என்று போயினன். அக்காலம் வந்தது நீர் தொட்டதால் கருவடைந்தேன். இதோ இப்புத்திரனைக் கொண்டு போம் என ஒரு புத்திரனைப் பெற்றுப் புண்ணிய உலகடைந்தது. அவ்வனத்திலிருந்த இருடிகள் குமரனுக்குத் தாமசமது என்று பெயரிட்டனர். இவனை அகத்தியர் யானையாகச் சபிக்க ழதலையால் பிடியுண்டு விஷ்ணு சக்கரத்தால் விடுபட்டனன் என்பர். இவன் நாலாம் மது. |
தாமத்தர் | திருவள்ளுவர் குறளுக்கு உரை இயற்றியவர்களுள் ஒருவர். உரையாசிரியர். |
தாமந்தை மகருஷிகோத்ரன் | குமாரக் கடவுள் சூரபன்மனை வென்ற காலத்து உதவி செய்து செந்தோன்றிமாலை பெற்ற வணிகன். |
தாமன் | 1. ஒரு கோபாலன், கண்ணனிடம் அந்தரங்க பக்தியுள்ளவன், ஒருமுறை கண்ணன் விளையாட்டாக இவனைத் தோளில் தூக்கினர். 2, திருஞான சம்பந்த சுவாமிகளைக் காண்க. 3. தமயந்தியின் தமயன, விதர்ப்பன் குமரன். |
தாமப்பல் கண்ணனார் | ஒரு தமிழ்ப் புலவர்; வேதியர், மாவளத்தானைப் பாடிப் பரிசு பெற்றவர். (புற, நா.) |
தாமரன் | கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்; முராசுரன் குமரன். |
தாமரை | காசிபர் தேவி, தக்ஷன் குமரி, வல்லூறு, கழுகு முதலியவற்றைப் பெற்றாள். |
தாமலிப்தர் | ஒருவித அரசர். |
தாமவித்தம் | ஒரு தேசம், |
தாமவியாளகடர் | சம்பான் சேநாபதியர். |
தாமாஜிபண்டிதர் | இவர் பேதரி என்னும் பட்டணத்தில் வசித்த ஒரு வேதியர். இவர் ஒரு மிலேச்ச அரசனிடம் உத்தியோகஞ் செய்துவருகையில், அவன் இவரை மங்கள வேடு, என்னுங் கிராமத்திற்கு அதிகாரி யாக்கினன். இவர் அக்கிராமஞ் சென்று பக்தி மேலிட்டவராய்ப் பாகவத கைங்கர்யத்தி லீடுபட்டுத் தம் பொருள்கள் முழுதும் அப்பாகவதர் பொருட்டுச் செலவிட் டனர். பின் ஒரு ஷாமம்வா அப்புர ஜனங்கள் அன்ன விருப்புடையராய் அரசனது தான்ய முழுதும் கொள்ளையிட்டனர். இச்செய்தியறிந்த அரசன் இவரைத் தண்டிக்க எண்ணி வருவிக்கப் பெருமாள் ஒரு வெட்டியானைப் போல் வேடம் கொண்டு அரசன் பொருள் முழுதும் தாங்கிப் பண்டிதர் தந்த திருமுகம் போல் ஒரு திருமுகம் கொடுத்து அரசனிடம் பண்டிதர் கொடுத்த பொருள் முழுதும் ஒப்புவித்து ரசீது பெற்று வரிசை பெற்று பண்டிதர் இருக்கு மாடம் வந்தனர். இதற்குள் பண்டிதர் அரசனிடம் வர அரசன் எதிர்கொண்டு மரியாதை செய்து நடந்தவை கூறப் பண்டிதர் தம் பொருட்டுப் பெருமாள் வந்ததற்கு விசனமடைந்து அரசனை விட்டு நீங்கிக் கைங்கர்யபாரா யிருந்தனர். |
தாமான் தோன்றிக்கோன் | ஒரு கொடையாளி; இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன். ஐயூர் முடவனாராற் பாடப் பெற்றவன். (புற~நா.) |
தாமிரன் | முராசுரன் குமரன், கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன். |
தாமிரபரணி | 1. திருநெல்வேலி சில்லாவிலுள்ள ஒரு நதி. 2. அஞ்சனம் என்னும் திக்கு யானையின் பெண். |
தாமிரபர்ணி | இந்து தேசத்தின தென்பாகத்தில் திருநெல்வெலி சில்லாவிலுள்ள பொதிகை மலையிலுண்டாம் நீர்வீழ்ச்சி, The river Tamraparani is in Thirunelvely (South India) |
தாமிரலிப்தி | கங்கைக் கருகலுள்ள ஒரு நகரம், |
தாமோதரன் | 1. கிருஷணாவதாரத்தில் தாம்பால் வயிற்றில் கட்டுண்ட விஷ்ணுவிற்கு ஒரு பெயர். 2. இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் மருத்துவன் தாமோதாரின் வேறாக இருக்கலாம். குறு 92, 195. |
தாமோதரம்பிள்ளை | இவர் யாழ்ப்பாணத்துச் சிறுபிட்டி வைரவநாதம் பிள்ளை குமாரர். குலம் வேளாளர் குலம். சமயம் சைவம், தமிழில் பயிற்சியுள்ளவர். தொல்காப்பியம் என்னும் இலக்கணத்தை முதலில் அச்சிட்டு வெளியிட்டவர், சைவ மகத்துவம், கட்டளைக்கலித்துறை முதலிய செய்தவர், |
தாம்பரலிப்தம் | ஹுலிக்குச் சமீபத்திலுள்ள ஒரு தேசம், Tamluk is on the river Salrai, jast above the junotion with the river Hugli. |
தாம்பிரதீபம் | ஒரு தீவு. சகதேவன் திக் விஜயத்தில் வென்றது. |
தாம்பிராருணம் | இது ஒரு தீர்த்தம். |
தாம்பூல சங்கிராந்தி | வருஷாரம்பத்தில் சூர்யார்ச்சனை செய்து ஒரு பாண்டத்தில் வெற்றிலை, பாக்கு முதலிய வற்றோடு வாசனைத் திரவியங்கள் வைத்துப் பிராமண தம்பதிகளைப் பூசித்து அளிப்பது. |
தாம்பூலம் | இது மங்கலப் பொருள்களில் ஒன்று. பரத கண்டத்தவரால் கொண்டாடப்பட்ட பொருள், தாம்பூல ரசத்தினால் கிருமி கபம் தாகம், பல் நோய், விடாய் இவைகள் நீங்கும். பசி, பெண்களுறவு, நாவுரிசை, மலசுத்தி, நுண்ணறிவு, சுக்ல விருத்தி, தருமகுணம், அழகு முதலிய உண்டாம். தாம்பூலத்தில் முதலில் வெறும் பாக்கினை வாயிலிடலாகாது, என் னெனின் அப்பாக்கில் அதி துவர்ப்பு, சொக்கு, மூர்ச்சை, புழு உளுத்தல், பசைப்பு இவை முதலிய குற்றங்களுளவாய்த் தேகத்திற்குக் கெடுதி தரும். ஆதலின் முதலில் குற்றமில்லாத வெற்றிலையை மென்று அதன் சாரத்தினையருந்திப் பின் பாக்கினை யருந்தின் அப்பாக்கிலுள்ள தோஷங்கள் போம், பாக்குகளில் கொட்டைப்பாக்கு கோழை, மலம், மலக்கிருமிகளை நீக்கும். அதிகமாகத் தின்றால் சோபாரோகத்தை விளைக்கும். களிப்பாக்கு நெஞ்சிற் கோழையும் அதிசாரத்தையும் மனமகிழ்ச்சியைத் தரும். பித்த அருசியைப் போக்கும். வெறும் பாக்கினை மாத்திரம் தின்னலாகாது. பாக்குகளில் மிக்க இளம்பிஞ்சு அதிக முதிர்ச்சி, மிகப்புதிது, பச்சை, புழுவாடல், சோருதல், இவ்வித துர்க்குணழள்ளவை களை நீக்கவேண்டும். வெற்றிலைகளில் சாதாரணமானதை யருந்தில் கபம், சீதளம், காணாக்கடியின் தூர்க்குணம், திரிதோஷம் விலகும். கம்மாறு வெற்றிலை சிரோபாரம், சலதோஷம், சந்தி, மந்தாக்கி வயிற்றுப்பிசம், வலி முதலிய நீங்கும். வெற்றிலையை யருந்துகையில் சுண்ணந் தடவுதற்கு முன் காம்பு, நுனி, நீண்ட நரம்பு, பின்புறத் தோல் இவைகளை நீக்க வேண்டும். இவற்றை நீக்கா தருந்துவரேல் சக்கிரவர்த்தியாயினும் செல்வத்தை இழந்து வறியராவர். சுண்ணத்தில் கற்சுண்ணம் அன்னத்தைச் சீரணப்படுத்திக் குடலிற் பற்றிய நெய்ச்சிக்கல், பேதி, வாதகிரிச்சரம், புழுவின் கடி முதலிய சில்விஷங்கள் காயங்களினிரத்தம், களை நோய், சந்தி இவைகளை நீக்கிச் சுக்கில விருத்தியையும் தந்து வன்மையையுந் தரும். தாம்பூலத்தை யருந்து கையில் காலையிற் பாக்கை அதிகமாகச் சேர்த்தால் சரியாக மலங்கழியும். மத்தியான்னத்தில் சுண்ணத்தை அதிகப்படுத்த நல்ல பசியுண்டாகும். மாலையில் வெற்றிலையை அதிகப்படுத்த வாய் மணந்தரும். தாம்பூல ரசத்தில் முதல் சுரக்கும் வாய்நீர் நஞ்சு, 2 வது நீர் மிகுபித்தம், 3 வது நீர் அமிர்தம், 4 வது அதியினிப்பு, 5, 6 வது பித்தம் அக்நிமந்தம் பாண்டுரோகம் இவற்றை யுண்டாக்கும். |
தாம்பொதியார் | கடைச்சங்க மருவிய புலவர். (அக~று.) |
தாயங்கண்ணனார் | சோழநாட்டு எருக்காட்டூர்த் தாயங்கண்ணனா ரென்பவர் இவரே. எருக்காட்டூர் தஞ்சாவூர்ஜில்லா, நன்னிலந் தாலுக் காவில் காவாலங்குடிக்குக் கீழ்ப்பாலுள்ளது. இவர் பெயர் ஏடெழுது வோரால் பிறழ்ந்தெழுதப்பட்டுத் தையங்கண்ணனாரெனவும், கதையங் கண்ணனாரெனவும் காணப்படும். காடு வாழ்த்துப் பாடியவர் இவரொருவரே. “மலர் செலச்செல் லாக்காடு வாழ்த்துக்கு நச்சினார்கினியர் இவர் பாடலையே உதாரணமாகக் கொண்டார். (புறம் 356) பிற்பகுதி. இவர் சேரலாது சுள்ளியாற்றில் யவனர் வந்து பொன் கொடுத்து மிளகுப்பொதி வாங்கி யேகும் வியாபாரச் சிறப்பையும் சேரலனிடத்திருந்த பொற்பிரதிமையைப் பாண்டியன் போர்புரிந்து பெற்றதையும் பரங் குன்றத்தின் சிறப்பையும் விளங்கக் கூறியுள்ளார்; அகம் 149. தொண்டையர் வேங்கடமும், சோர்கொல்லியும், சோழர் காவிரியும், உறையூரும் இவராற் பாராட்டப்பட்டுள்ளன. அகம் 213,237. எழினியென்பான் இவராற் பாடப்பெற்றுள்ளான். அகம் 105. இவர் நெய்தல், பாலை, குறிஞ்சிகளின் வளங்களைச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையார். குராவரும் பைப் பாம்பின் பல்லோடு உவமித்துள் ளார். அகம் 237. இதனையே எடுத்தாண்டனர் கம்பரும் “குராவரும் பனைய கூர்வாளெயிற்று வெங்குருளை நாகம்” கார் காலப் படலம் செய்யுள் 56. இவர் பாடியனவாக நற்றிணையில் உகசும் பாட லொன்றும் குறுந்தொகையி லொன்றும் அகத்திலேழும் புறத்திலொன்றுமாகப் பத்துப் பாடல்கள் சிடைத்திருக்கின்றன. |
தாயங்கண்ணியார் | ஒரு தமிழ்க் கவி. (புற~நா.) |
தாயர் | (5). பாராட்டும் தாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித் தாய், அன்றியும் அரசன் தேவி, குருவின் தேவி, அண்ணன் தேவி, தன் தேவியை ஈன்றாள், தன்னை ஈன்றாள். |
தாயிசமதம் | சீனாதேசத்தில் முதல் முதல் கான்பீயூகஸ் மதமிருந்தது. அதன்பிறகு, தாயிஸமதம்; கான்பீயூகஸ் காலத்திலிருந்த தாயிசா வென்பவன் இம்மதத் தாபகன், இவன் மனிதர், பூமி, ஆகாயம் என்பவை உண்டாதற்கு முதற் காரணம் ஒன்று உண்டு எனவும், அக்காரணம் அநாதியெனவும், அந்தக் காரணப்பொருள் மூன்று முறை மனுஷயாவதாரம் எடுத்ததென்றும், ஒவ்வொருவரும் யோகத்தை அநுட்டித்து இந்த ஜன்மத்தைப் போக்கடிக்க வேண்டுமென்றுங் சுடறுவன்; கி. மு. 1034 வருஷத்தில் பிறந்த சோதாஜ் என்னும் விஞ்ஞானியால் எழுதப்பட்ட அநேக மான ஜட அஜடதத்துவக் கிரந்தங்கள் முக்யாம்சமான பிரமாணங்கள், சீனா தேசத்தில் மூன்றாவது மதம் பௌத்தமதம் இதுவே பெரும்பாலும் அத்தேசத்தில் வியாபித்திருக்கிறது, இதுவன்றியில் கி. பி. 1833 இல் டேபிங் என்னும் கிறிஸ்து மதமொன்றுண்டாயிற்று. ஹங்சாஸ்டிய என்பவன் ஒரு சிறு கிரந்தத்தை ஆதாரமாகக்கொண்டு இந்தக் கிறிஸ்துமதத்தை விர்த்தி செய்தனன். சீனரின் சிருஷ்டி விர்த்தி செய்தனன். சீனரின் சிருஷ்டி விஷயமான அபிப்பிராய மெவ்வாறெனின் ஆதியில் ஜடபதார்த்த மாத்திரம் ஒரே பிண்டமாக இருந்து பிறகு அது இரண்டாய் அதிலொன்று பெண்ணாய்மற்றொன்று ஆணாயிற்று; பின்னும் சூக்ஷ்ம தேகம் மேலும், ஸ்தூலதேகம் கீழுமாய் அதினின்றும் சமஸ்தமு முண்டாயின. ஆகையால் ஆகாசத்திற்கும் பூமிக்கும் சம்பந்த முண் டென்பர். பின்னும் அனைத்தும் ஸ்திரி புருஷரூபமாகவே இருக்கின்றன வென்பது அவர்களின் அபிப்ராயம், |
தாயுமானார் | 1 திரிசிராப்பள்ளியில் திருக்கோயில் கொண்டிருக்கும் சிவமூர்த்தியின் திருநாமம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த அரதன குத்தனுக்கு ஒரு பெண் பிறந்தது. அவளைத் திரிசிராப்பள்ளியில் தனகுத்த னுக்கு விவாகஞ் செய்வித்துத் தந்தை இறந்தனன். தனகுத்தனும் மனைவியும் திரிசிராப்பள்ளியிலிருக்கையில் மனைவிக்குப் பிரசவகாலம் வந்தது. இதையறிந்த தாய் பெண்ணிடம் வர எண்ணி வந்து காவிரிப் பெருக்கால் அக்கரையில் நின்றனள். பெண் தாயையெண்ணி வருந்தச் சிவமூர்த்தி அப்பெண்ணிட மிரக்கங்கொண்டு தாய்போல் திருமேனி தாங்கி மருந்தெண்ணெய் முதலிய கொண்டு வந்து அப்பெண்ணுடனிருந்து பிரசவமானபின் ஏழாம் நாள் குழந்தையைத் தொட்டிலில் இட்டனர். ஆற்றின் வெள்ளம் வற்றியது. பெண்ணின் தாய் மகளிடம்வரத் தாயான சிவமூர்த்தி மறைந்து இடபாரூடராய்க் காட்சி கொடுத்தனர். பெண் என் தாயுமானாரோ என்ன அதுவே திருநாமமாய் வழங்கியது. (செவ்வந்திபுராணம்). 2. இவர் ஊர் வேதாரண்யம் என்பர். விஜயரகுநாத சொக்கலிங்க நாயகர் சமஸ்தானத்தில் சம்பிரதியாயிருந்த கேடிலியப்பப் பிள்ளையின் கனிட்ட குமரர். இவர் இலக்கிய இலக்கணங்கள் கற்று வல்லவராய்த் திருமூலர் மரபில் எழுந்தருளிய மௌனதேசிகரிடம் தத்துவோபதேசம் பெற்று அப்பியாசியாயிருக்கையில், தந்தையிறக்க அவரது உத்தியோகத்தைத் தாம் ஏற்றுத் தமது நிஷ்டையையும் விடாதிருந்தனர். அரசன் இவரது நிலைகண்டு பணிந்து இவரைத் தமது உத்தியோகத்திருந்து வேறாக்கி அவருக்கென வேறிட முதலிய செய்வித்துக் காலஞ் சென்றனன். இவ்வரசன் மனைவி தம்மீது காதல் கொண்டிருப்பதை நாயனார் அறிந்து இராமநாதபுரஞ் சென்றிருந்தனர். இவரது தமயனாராகிய சிவசிதம்பரம்பிள்ளை இவரது சந்ததி விர்த்தியின் பொருட்டு இவரை வேண்டித் திருமணஞ் செய்வித்தனர். அந்த அம்மையா ரும் இவரைமணந்து கனகசபாபதிப்பிள்ளையென ஒரு குமரரைப் பெற்றுக் காலமாயினள். பின் தாயுமானார் துறவடைந்து பல தோத்திரப்பாக்களைப் பாடிச் சிவபத மடைந்தனர். இவர் காலம் சற்றேறக் குறைய (150) வருஷம் இருக்கலாம். இவரது பரிபூரணத்தைக் கண்டிரங்கி அருளையர் இவரைத் துதித்தனர். (திருப்பாடற்றிரட்டு). |
தாரகசித் | குமாரக்கடவுள். |
தாரகன் | 1. கிருஷ்ணன் தேர்ப்பாகன், 2. குமாரக்கடவுளால் கொல்லப்பட்ட அசுரன், இவன் புத்திரர் திரிபுரவாசிகளாகிய வித்துற்மாலி, சமலாக்ஷன், தாரகாக்ஷன், சூரபதுமன் சகோதரன். ஒரு காலத்து விஷ்ணு மூர்த்தியிடம் யுத்தம் புரிந்து அவர் ஏவிய சக்கரத்தை மார்பணியாகக் கொண்டவன்; இவனுக்கு யானை முகம், வீரவாகுவினை மாயையால் வஞ்சிக்கக்கிரவுஞ்சத்தில் மறைந்து வெளிப்பட் டுப் பூதப்படைகளை வதைத்து மீண்டுங் குமாரக் கடவுளுடன் கிரவுஞ்சன் சகாயமாகப் பலமாயத்தால் யுத்தஞ் செய்து வேலாயுதத்தால் வீரசுவர்க்க மடைந்தனன். மனைவி சவுரி, 3. தநுப்புத்திரன். 4. இரண்யாக்ஷன் குமரன். 5. ஒரு சிற்பி. |
தாரகாக்ஷன் | திரிபுரத்தசுரரில் ஒருவன்; தாரகன் குமரன் |
தாரகாம்யம் | தேவர்க்கும் அசுரர்க்கும் உண்டான யுத்தம். |
தாரகாரி | தருசகன் மந்திரிகளுள் ஒருவன். உதயணன் ஆருணியோடு போர்செய்தற்தகுச் சென்றகாலத்தில் உதவியாக அவனால் அனுப்பப்பட்டோன். (பெ~கதை). |
தாரகேசன் | பாதளகேதன் தம்பி. |
தாரக்ஷியர் | தாக்ஷபனைக் காண்க. (தாட்சபன்). |
தாரணி | 1. கலுழவேகன் மனைவி. 2. சத்தியாதனனைக் காண்க. |
தாரணை | 1. (9) நாமதாரணை, வச்சிர தாரணை, மாயா தாரணை, சித்திர தாரணை, செய்யுட் டாரணை, நிறைவு குறைவாகிய வெண் பொருட் டாரணை, சத்ததாரணை, வத்துத் தாரணை, சதுரங்க தாரணை, 2. சொல்லணியின் வகை, அவை, நாமதாரணை, அக்கர தாரணை. செய்யுட் டாரணை, சதுரங்கதாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தாரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை, வச்சிர தாரணை, இவைகளை 25 அக்கர சங்கேதங்களால் இடம்படவறிந்து தரித்து அநுலோபமாகவும், பிரதிலோபமாகவும் பிறவாறாகவுஞ் சொல்வது. (யாப்பு~வி.) |
தாரன் | ஒரு வாநர வீரன்; வாலி சுக்ரீவருக்கு மாமன், தாரைக்குத் தந்தை, வியாழன் குமரன். |
தாரபசன் | 1. உத்தமனிக்குப் பிராதா. 2. பிரியவிரதனுக்கு இரண்டாவது பாரியிட முதித்த குமரன். |
தாரஷ்டி | த்ருடனைக் காண்க. |
தாராகணங்கள் | நக்ஷத்ர கூட்டங்கள், தூமதகேதுக்கள், ரோகிணேயர்கள், சப்தருஷிகள், உல்கா பாதங்கள், மின்னல்கள், ஊஷ்ண பாதங்கள், ஜ்யோதிர் கணங்கள் என்பன. |
தாராட்சன் | தாரகாசுரன் புத்திரன். |
தாராபலம் | ஜென்மநக்ஷத்திர முதல் தற்கால நகூத்திரம் வரை எண்ணிவந்த தொகையின பலாபலன். 1, 19 ஜன்மம்: மத்திமம், 2, 11, 20 சம்பத்து: உத்தமம். 3, 12, 21 விபத்து: அதமம். 4, 13, 22 க்ஷேமம்: உத்தமம். 5; 14 பிரத்தியம்: மத்திமம், 6, 15, 24 சாதகம்: உத்தமம். 7, நைதனம்: அதமம். 8, 17, 26 மைத்திரம்: உத்தமம். 9, 18 பரமமைத்திரம்: சமம், 10 கர்மம்: மத்திமம். 16 ஸாங்காதிகம்: அதமம் 23 வைநாசிகம்: அதமாதமம், 25 மானசம்: அதமாதமம். 27 சமுதாயிகம்: அதமம், |
தாராபீடன் | சந்திராபீடனது தந்தை, |
தாராபுரம் | போஜன் ராஜதானி. |
தாரிஷ்டவம்சம் | வைவச்சு தமனுப்புத்திரனாகிய திருஷ்டனா லுண்டான வம்சம். |
தாருகன் | 1. ஒரு அரக்கன். இலக்குமணரால் கொலையுண்டவன். 2. காளியைக் காண்க, 3. ஒரு அசுரன், இவன் குமரர் வித்துற்மாலி, கமலாக்ஷன், தாரகாக்ஷன். 4. மாநந்தையைக் காண்க, 5. ஒரு அசுரன், இவன் தேவி தாருகை, இத்தாருகன் தன் தவவலியால் தேவர் முதலியவர்களை வருத்தத் தேவர் ஒளரவ முனிவரிடம் முறையிட்டனர். ஔரவர் இனி அசுரர் தேவர்களுக்குத் தோற்றுப் பின்னடைக என அவ்வாறே தேவர் அசுரர்களுடன் போரிடத் தாருகனுடன் கூடிய அசுரர் பறக்கும் தமது பட்டணத்துடன சமுத்திர நடுவில் சென்று ஆங்குக் கப்பலோட்டி வருவோரை வருத்தி வருகையில் சுப்பிரியன் என்பவன் கப்பலோட்டிவர அவனைச் சிறையிலிடச் சுப்பிரியன் காராக்ரகத்தில் சிவபூசை செய்து சிவப்பிரத்யக்ஷங் கண்டு சிவப்பிரியனாய் இருக்கையில் அசுரன் அவனைக் கொல்ல அசுரரை யேவினான். சிவப்பிரியன் சிவத்யானத்துடனிற்கச் சிவமூர்த்தி சிவப்பிரியனுக்குப் பாசுபதமளித்து அசுரரைத் தோல்வியடைந் திறக்கச் செய்தனர். (சிவமகா புராணம்). |
தாருகாசுரன் | மாயை காசிபரை மூன்றாஞ் சாமத்துப் பெண்யானை யுருக்கொண்டு புணர யானை முகத்துடன் பிறந்த அசுரன் இவன் விஷ்ணுமூர்த்தியுடன் ஒருமுறை சண்டை செய்தவன். இவன் பட்டணம், மாயாபுரம், தேவி சவுரி, குமரன் அதிசூரன். சுப்பிரமண்யரால் கொல்லப் பட்டவன். மறுபிறப்பில் அகம்பனானான். |
தாருகாவனம் | இந்த வனத்திலிருந்த முனிவர்கள் கருமமே பலன் தரும், தெய்வம் வேண்டாவெனவும், இம்முனிவர் தேவியர் கற்பேயுயர்ந்தது மற்றில்லையெனவும் கடவுளை இகழ்ந்திருந்தனர். இதனால் சிவ மூர்த்தியும், விஷ்ணுமூர்த்தியும் முறையே பிக்ஷாடனத் திருக்கோலமும் மோகினித் திருக்கோலமும் கொண்டு அம்முனிவரிடத்தும் அம்முனி பத்தினிகளிடத்தும் மனநிலை யறியச் சென்றனர். திருமால் முனிவரிடஞ் செல்ல முனிவர்கள் மாலைக் கண்டு மயங்கிப் பின் சென்றனர். சிவமூர்த்தி முனிவரின் தேவியரிடஞ் செல்ல அக்கற்பினிகள் பிக்ஷாடனரைக் கண்டு மயல் கொண்டு பின்சென்று அவரை மனத்தாற் நழுவி (68000) முனிவரைப் பெற்றுக் கற்பழிந்தனர். இதனால் முனிவர்கள் சிவமூர்த்தியிடம் கோபித்து ஆபிசாரயாக மொன்று செய்து, பூதப்படை, பாம்பு, முயலகன் உடுக்கை, மழு, மான், வெண்டலை, புவி, அழல், அலகை, சூலம் முதலியவைகளை அதில் பிறப்பித்து ஏவ அவை சிவமூர்த்தியை ஒன்றுஞ் செய்யாது அடங்கின. பின் சாபமிட்டனர். அவையும் ஒன்றுஞ் செய்யா தடங்கியதால் முனிவர்கள் நீங்கள் யாரெனச் சிவமூர்த்தி நாம் கைலையிலுள்ளோம் என்று மறைந்தனர். பின் இருடிகளை நோய் முதலிய வருத்தின. முனிவர்கள் இந்திரனிடஞ் சென்று கேட்க இந்திரன், முதல்வாருவரும் எதிரில் தரிசனம் தந்தும் அறியாமையால் இந்த நோய் உங்களை வருத்துகின்றது என்றனன். அதனால் முனிவர்கள் சிவ பூசை செய்து பேறுபெற்ற வனம், |
தாருகி | தாருகன் தேவி, சத்தி பூசையால் அசுரர் அழியாதிருக்க வரமடைந்தவள். தேவர்களையும் மற்றவரையும் வருத்தி வீர சேநனால் தோல்வியடைந்தவள், (சிவமகா புராணம்). |
தாருணன் | 1. இராக்கதன், பிராமணனைத் தின்னப்போய் அப்பிராமணன் அஞ்சாது களித்தலைக் கண்டு வெருவி இவனது மெய்யிலுற்ற பசி நோய்க்குக் காரணங் கேட்டுப் பிராமணனை விட்டவன், 2. ஒரு அசுரன், இவன் பிரமனை எண்ணித் தவம்புரிந்து அம்மூர்த்தி தரிசனம் தர என்னெதிர்ப்பட்டவர் சுரத்தால் துன்பமடைந்து இறக்க என வரம்பெற்றுத் தேவரை வருத்தித் திரிகையில் தேவர் வேண்டச் சிவமூர்த்தி குபேரனுடன் சண்டிகையை ஏவத் தாருணன் சண்டிகையைக் கண்டு மயல் கொண்டுவரச் சண்டிகை கொலை செய்தனள். |
தாரை | 1. பிரகஸ்பதியின் மனைவி, சந்ரன் இவளைப் புணர இவளிடம் புதன் பிறந்தனன். அந்தப் புதனைப் பிரகஸ்பதி கண்டு தன் குமரன் என்று சந்திரனிடம் வாதிடப் பிரமன் இரகசியத்தில் கேட்டு உண்மையறிந்து புதனைச் சந்திரனுக்குக் கொடுத்தனன். 2. இரவிவன்மன் புத்திரி, துச்சயரா சன் மனைவி, யானையால் உடன்பிறந்த வீரை இறந்தாளென்பது கேட்டு மேன் மாடத்திருந்து பூமியில் விழுந்திறந்து அடுத்த பிறவியில் மாதவி யாகப் பிறந்தவள், (மணிமேகலை.) 3. வாலியின் தேவி, அங்கதன் தாய், இவளைச் சுக்கிரீவன் வாலிக்குப் பிறகு தேவியாகக் கொண்டனன். இவள் அமிர்தத்திற் பிறந்தவள். வாலியை இரண்டா முறை சுக்கிரீவனுடன் யுத்தத்திற்குப் போகாதிருக்க வேண்டியவள். |
தார் | முந்துற்றுச் சென்று போர்செய்யும் படை |
தார்க்கிகன்மதம் | வித்தியாகற்பனை தோஷம், பிரவிருத்தி, சநநம், துக்கம் என்பவைகளை நீக்கிச் செல்லத் துக்க ஒழிவுண்டாம், அதுவே முத்தியென்பன். |
தார்க்ஷி | துர்வாஸமுனிவர் தவததை அழிக்கச்சென்று அவர் சாபமிடப் பக்ஷியான வபுஸ் என்னும் அப்சரசு. கந்தரனுக்குத் தமனகையிடத்துப் பிறந்த பெண், |
தார்க்ஷிகள் | 1, ஒரு முனிவன்; வேட்டைக்கு வந்த துந்துமாரன் என்னும் அரசன், மான்தோல்போர்த்துத் தவஞ்செய்து கொண்டிருந்த இவனது குமானை மானென்று எண்ணி அம்பெய்து கொன்றனன். இம்முனிவன், குமரன் இறந்ததால் விசனமடையாமல் குமரனை மீண்டும் உயிர்ப்பித் தனன். இவனுக்குத் தார்க்கிகன் எனவும் பெயர். 2. ஒரு விஷ்ணுபடன. |
தார்தார்மதம் | பூர்வம் தார்த்தாரதேச ஜனங்கள் மார்ஸ் என்னும் தேவதையைப் பூஜித்துக்கொண்டும் குதிரைகளைப் பலி கொடுத் துக்கொண்டு மிருந்தனர். பிறகு குதிரைகளை அடிக்கும் சவுக்கைத் தெய்வமாக நினைத்துப் பூஜித்துக்கொண்டிருந்தனர். மங்கோலியா தார்த்தாரிகள் நிடிகே என்னும் தேவதையைச் சிருட்டிகர்த்தா என்று நம்பினர். பின்னும் டாபிலாமா என்னும் சந்நியாசி இருபதினாயிரம் சீடர்களுடன் லாசா என்னுமிடத்தில் இருக்கிறார். ஆகையால் அவரும் தேவனே யென்பர். இந்தச் சந்நியாசிக்கு ஹான்சிங் என்பவரும், தேவ என்பவரும் முக்கிய மாணாக்கர். இவர்களில் சாதாரண ஜனங்கள் மானிப்பா என்னும் தேவதையை ஒன்பது தலைகளுடன் செய்து கிராமதேவதையாகப் பூசித்துப் பலிகொடுத்துக்கொண்டு வருகின்றனர். கடுச்சடா என்னும் தேவன் பரிசுத்தத்தையும் மறுஜென்மத்தையும் கொடுப் பன். இவர்களில் சிலர் பூமியைத் தெய்வமாக நம்பி வெறுந்தரையில் படுத்துப் புரளுவர். ஜாகாகிஸ் என்னும் தார்த்தாரிகள் இறந்தவர்களே தேவதைகளென்று பூசிக்கின்றனர். டாங்குசஸ் என்னும் ஜாதியார் சுகமானன் என்னும் சிருஷ்டிகர்த்தா இருக்கின்றனன் என்பர். பிராட் என்ப வர்கள் சூரியசந்திரன் தெய்வமென்பர். அவ்விடத்திலுள்ள காக்கேஸிய ஜாதியார் பெரியமனிதரே தெய்வமென்பர். தேசாசாரம், மாத்ருகமனம் செய்தல் நியாய மென்பர். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களை விவாகஞ் செய்துகொள்ளல் நலம் என்பர். உத்தமஸ்திரிகள் இறந்து போனால் அந்த ஸ்திரிகளைப்போல் பிரதிமைசெய்து வைத்துக்கொள்ளுவர். செத்த பிணத்தை நன்றாக உலர்ந்தபிறகு அலங்காரஞ்செய்து பூசித்து அடக்கஞ்செய்வர். |
தார்நிலை | தூசிப்படையைத் தடுப்பனென அரசற்கு ஒரு வீரன் தனது தறுகண்மையைச் சொல்லியது. ஒருகுடை வேந்தனைக் குடைவேந்தர் பலர் அடையப் போரிடத்துத் தனிவீரன் தானே தடுத்தற்கு மூரித்த அத்துறை. (பு. வெ.) |
தார்பிச்சுக்கட்டி | இது தேவதாருவைப் போன்ற ஒருவித மரத்தின் துண்டுகளிலிருந்து எடுக்கப்படுகிறது. மரத் துண்டுகளை ஒரு வட்டமான குழியில் நிரப்பிக் குழியினடியில் ஒரு துவாரமிட்டுக் குழாயைச் செலுத்தி வைப்பர். அக்குழாயின் ஒருமுனை குழியினும் மற்றொரு முனை ஒரு தொட்டியினும் பொருந்திபிருக்கும். மேற்சொன்ன மரத்துண்டுகளில் நெருப்பிட்டுக் கொளுத்திக் குழியை நன்றாக மூடுவார்கள். குழியிலிருக்கும் கட்டையிலிருந்து கருமையான திரவம் குழாயின் வழியாகத் தொட்டியில் விழுகிறது. இதுவே தார், கீல். இந்தத் தாரை கழுத்து வளைந்த பாத்திரத்தில் காய்ச்சினால் தார் எண்ணெயாகிறது. |
தாலகேது | 1. கிருஷ்ணனால் செயிக்கப்பட்ட வருணன் சேவகன். 2. வச்சிரகேதுவின் குமரன், இருதத் துவசனைக் காண்க. |
தாலசங்கன் | செயத்துவசன் குமரன், இவனுக்கு (100) குமரர் உதித்தனர். அவர்கள் நூற்றுவரும் சகரனால் சங்கரிக்கப்பட்டனர். இவர்களுள் ஜ்யேஷ்டன் விதிஹோத்ரன். |
தாலத்துவசன் | நாரதரைக் காண்க. |
தாலப்பியமுனிவர் | புலஸ்தியர் மாணாக்கா. |
தாலப்யர் | இவர் பாஞ்சால அரசனாகிய திருதராஷ்டிரானைப் பசுக்கள் கேட்க அவன் கோபத்தினால் செத்த பசுக்களைக்கொண்டு போக என ருஷி அரசனிடத்துக் கோபித்துச் செத்த பசுவின் மாமிசத்தில் ராஜ்யங் கற்பித்து அவாகீர்ண க்ஷேத்ரத்தில் யாகஞ் செய்ய இராஜாவின் ராஜ்யம் க்ஷணித்தல் கண்டு ருஷியைக் கண்டு வணங்கிச்செய்த பிழைபொறுக்க வேண்டக் கருணை செய்தவர். இவர்க்குப் பகர் என்று ஒரு பெயர். (பார~சல்லி). |
தாலவமுனிவர் | ஒரு இருடி; தேவி சுலபை. |
தாலி | மங்கலசூத்ரங் காண்க, |
தாலுகண்டகரோகம் | இது தவடையில் முள்ளுறுத்தல்போல் நமைச்சல்போ லுண்டாக்கி உபத்திரவஞ் செய்வது. |
தாளசங்கள் | கார்த்தவீரியன் பேரன்: |
தாளம் | கொட்டும், அசைவும், தூக்கும், அளவும் பொருந்தும்படி புணர்ப்பதாம. மேற்கூறியவை மாத்திரையின் பெயர்க சாம். அவற்றுள் கொட்டுக்கு மாத்திரை அரை, அதன் வடிவு க. அசைக்கு ஒரு மாத்திரை, வடிவு எ. தூக்குக்கு இரண்டு மாத்திரை, வடிவு உ. அளவிற்கு மூன்று மாத்திரை, வடிவு ஃ. இவற்றின் தொழில் கொட்டு அமுக்குதல், அசைதாக்கி எழுதல், சக்குத் தாக்கித் தூக்குதல், அளவு தாக்கின ஒசை மூன்று மாத்திரை பெறுமளவும் வருதல். இத்தான வகையினைப் பாதத்திற் கூறினம் ஆண்டுக் காண்க. |
தாளவகையோத்து | இது தாளவகையினிலக்கணம் கூறும் நூல்களுள் ஒன்று. |
தாளுதுவான் | திருமங்கையாழ்வார்க்கு மந்திரி |
தாழம்பூ | சிவப்பிரீதியல்லாமை சீதையால் வந்த சாபம். (சிவபுராணம்.) |
தாவரங்கள் | ஓரிடத்திலிருந்து ஓரிடம் அசையாதவை. அவை மரம், செடி, கொடி, பூண்டு, புல் முதலிய. இவை இடம்விட்டு அசையக்கூடாதன ஆயினும் பிராணிகளென்றே கூறலாம். இவை பிராணிகளைப்போல் வளர்ந்து ஆகாரங்கொண்டு தம் வர்க்கத்தை விருத்தி செய்து நாளடைவில் அடைகின்றன. இவை பிராணி வகைப்போல் பல பாகங்களை யுடையன. இவ்வாறு பலவேறுபட்ட தொழில் செய்யுமிவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தன்னை விருத்தி செய்வது. மற்றது, தன்னினத்தை விருத்தி செய்வது. தன்னை விருத்தி செய்வன, வேர், அடி மரம், வேர். தன்னினத்தை விருத்தி செய்வன பூ, பழம், விதை, மேற்கூறிய பாகங்கள் ஒரு தாவரத்திற்கு இன்றியமைந்த ஒவ்வொரு உறுப்புக்களும் பல கண் ணறைகளைப் பெற்றவை. கிச்சிலிப்பழத்தின் தோலினுட்பாகத்தில் பல சுளைகளைப் பிரித்துப் பார்த்தால் பல இரஸழள்ள பைகளைக் காணலாம். அந்த ஒவ்வொரு பையும் ஒவ்வொரு கண்ணறை. அவ்வொரு கண்ணறை யினும் பாகுபோன்ற ஒருவித சத்து நிறைந்திருக்கிறது. அச்சத்தே ஜீவ அணு. மேற்சொன்ன அறைகள் ஒவ்வொன்றிற்கும் தோல் போன்ற கவசம் உண்டு, இவ்வறையிலடங்கிய அணு பல காரியங்களைச் செய்கின்றது, இது ஈரத்தை யுறுஞ்சும், பரவக்கூடியது. பிரிந்து புது அறைகளைச் செய்யக்கூடியது. அசையுந் தன்மையுள்ளது. தாவரப் பொருளாகிய இதற்கு இதுவே முக்ய ஆதாரம். வேர் : இது, மூன்று வகையாகப் பிரிகிறது. ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் ஒவ்வொரு தாவரத்திற்கும் ஓர் பாகம் பூமி யின் மேலும், ஒர் பாகம் பூமிக்குள்ளும் இருக்கின்றன. உட்பாகமான வேர், இரண்டு தொழில்களைச் செய்கிறது. அவை அசையாதிருத்தல், ஆகாரங்களை யாராய்ந்து கொடுத்தலாம். மேல்பாகமாகிய கிளை, இலை முதவிய வேரின் வழியாகத் தம் ஆகாரத்தைப் பெறுகின்றன. ஆணிவேர், இவை புளி, மா முதலிய மரங்களில் மரம் காற்று முதலியவற்றால் நிலைபெயராதபடி மாத்தை யசையாது நிறுத்துவது, இந்த ஆணிவேர் உறுதியாகக் கீழ்நோக்கிச் செல்லச்செல்லப் பக்கத்தில் சிலவேர்கள் அசை யாது தாங்கக் கிளைக்கும் அவற்றைப் பக்க வேர் என்பர். இப்பக்கவேர் செல்லுகையில் இவற்றில் சில சிறு வேர்கள் கிளைக்கின்றன. அவற்றை வேய்த்துய்கள் என்பர். இவையே மரஞ் செடிகளுக்கு வேண்டிய ஆகாரங்களைப் பூமியினின்றும் கிரகிக்கின்றன. மற்றொரு வகைச் சல்லிவேர் என்பர். அது நெல், சோளம், கேழ்வரகு முதலிய சின்னாட் பயிருக்கு உள்ளவை. இவை, மண்ணையும் மணலையும் பிடித்துக் கொள்ளும் வலியுள்ளவை, சதைப்பற்றுள்ள வேர் முள்ளங்கி, சருக்கரை வள்ளி போன்றவை. இவை, தங்கள் இலை கொடி வளர்தற்குரிய ஆகாரம் போக மிச்சத்தை வேரில் சேர்க்கின்றன. ஓடுவேர், பூசினை, சுரை, சக்கரைவள்ளி முதலிய ஓடுகையில் கணுக்களில் வேருண்டாகிப் பூமியில் பதிவது. விழுதுகள், சில தாவரவகைகளில் கிளைகளிலும், கொடிகளிலும் வேர்கிளைத்துப் பூமியில் இறங்கி நிலைப்பவை. அடுத்த மாத்தின் சாரத்தால் வளர்வன, புல்லுருவி, கொத்தான், இவ்வேர்கள், வளரும் பகுதி, வளரும் பகுதியின் மூடி என இருவகை, வேர்கள் ஆகாரத்தைத் தேடி மண்ணிலும் நீரிலும் செல்லும், வளரும் பகுதி அம்மண்ணாலும் நீராலும் தேயா வகை மூடிய கவசம் வளரும் பகுதியின் மூடி. ஆகாரத்தைச் சேர்ப் பவை உண்மையில் உறையில்லாத பாகத்தில் மெல்லிய இழைபோன்ற வேர்களே. ஆகாரம், வேர்களின் நுனிகள், தம்மிடமுள்ள ஒருவிதத் திரவத்தின் உதவியால் பூமியிலுள்ள மட்கின எரு, மண், சுண்ணாம்பு, இரும்பு, மரவுப்பு இவைகளின் சாரத்தைக் கிரகிக்கின்றன. பூமியிலிருக்கும் ஆகாயம், இப்பொருள்களை மழைநீரால் கரைத்து வேருக்குதவுகிறது. தண்டு: அடிமரம்; வேரின் மேலும், கிளை முதலியவற்றிற் கடியிலும் உள்ள பாகத்தைத் தண்டு, அடிமரம் என்பர், இதனைத் தமிழ் நூலார் அறை யென்பர். இவ்வறை பொரியறை, பொருக்கறை, கோழறை என மூவகைப்படும். மரமும்லியவற்றின் அறைபொரி போலிருத்தலின் பொரியறை, புளி முதலியவற்றின் அறை பொருக்கறை, வாழை முதலியவற்றின் அறை வழுவழுத்திருத்தலின் கோழறை. இவ்வறைகள், மரங்களுக்கு மூன்று வகையில் உதவுகின்றன. (1) இலை, கிளை, பூ, பழம் முதலிய தாங்கிநின்று அவற்றின் மேல் சூர்யவெப்பம் படும்படி செய்கிறது. (2) பூமியிலிருந்து வேர் தரும் உணவை மேற்பாகத்தில் செலுத்துகிறது. (3) இலையுதிர்காலத்து வெயிலால் வரும் துன்பத்திற்கு உணவைச் சேகரித் துதவுகிறது. அடிமரமாகிய அறையானது கிளை முதலியவைகளைத் தாங்குவதற்கு உறுதியாய் இருத்தல் வேண்டும். இரண்டு, மூன்று மாதம் வளரும் தாவரங்கள் இளம் தண்டுகளைப் பெற்றிருக்கின்றன. இவற்றில் சில கணுக்களைப் பெற்றும் இருக்கின்றன. அடிமரம் தண்டு முதலியவற்றின் வகை: 1. தொத்தும் கொடிகள் இவை கொழு கொம்புகளைப்பற்றி நிறபவை. 2. ஓடும் கொடிகள் இக்கொடிகள் பூமியில் படர்ந்து கணுக்களில் உண்டான வேர்களைப் பூமியில் பதிக்கின்றன. 3. நேராக நிற்கும் மரங்களின் அடி மரமானது கிளை முதலியவற்றைத் தாங்க உறுதியாக நிற்கின்றது. தாமரை, அல்லி முதலானவைகளும் தண்டின் உதவியால் நிற்கின்றன. 4. கிழங்குகள் தண்டு முதலியவைகளில் சேர்ந்தவை அல்ல, இவைகளில் குருத்துப் பதிந்திருத்தலால், 5. அடிமரத்தின் உள் அமைப்பு; இவை ஒற்றை இலைப் பருப்பில் உண்டாவன, இரட்டை இலைப் பருப்பில் உண்டாவன என இருவகை, நெல், சோளம் முதலியவை ஒரு இலைப்பருப்பில் உண்டானவை. புளி, அவரை, மொச்சை இரட்டைப்பருப் பில் உண்டானவை. புளி, தேக்கு, ஆல் இவைகளை வெட்டிப் பார்த்தால் (4) பிரிவையுடையதாயிருக்கும் (1) வெளிப்புறம்; இது மாத்திற்குப் போர்வை போல உரிக்கக்கூடியதான மரப்பட்டை. (2) உள் மரப்பட்டை இது பசுமை நிறமுள்ளதாய் வெளி மரப் பட்டைக்குள்ளிருப்பது, (3) மரப்பாகம்: இது மரக்குழாயான கம்பிக் கூட்டம். (4) மரத்தின் உட்சோறு: இதைச் சோற்றி என்றும் சொல்வார்கள், இச்சோற்றியைச் சுற்றி மரப்பாகம் இருக்கிறது. மரம் வளரவளர, சோற்றி குறைந்துவிடுகிறது. வெளி மரப்பட்டை கடினமாயும், துவளக்கூடிய தல்லாததாயும் இருக்கிறது. உள் மரப்பட்டை அநேகமான ஜீவாணுக்களையுடைய அறைகளைக்கொண் டிருக்கிறது. இப்பாகத்தை வெட்டிவிட்டால் மரம் வளராது. மரக்குழாய்க் கூட்டம் : மரத்தை அசையவிடாமல் உறுதியாய் நிற்கும்படி செய்யும் பாகம். உள்மரப்பட்டையும், மரக்குழாய்க் கூட்டத்தின் வெளிப்பாகமும் மரத்துக்கு முக்கியமானவை. அந்த இரண்டு அடுக்குகளுக்கு இடையில் மரத்தை விருத்தி செய்கிற கண்ணறைகளையுடைய அடுக்கு ஒன்று உண்டு. பூமியிலிருந்து ஜலம் அடிமரத்தின் வழியாய்ச் செல்லுகின்றது. விதை முளைத்தல் : அவரைபோன்ற விதைகளை ஊறவைத்து உரித்துப் பார்த்தால் மெல்லிய தோல் உரிபடும். அதை இரண்டாகப் பிளந்தால் இரு விலைகளாகும். இவ்விலைகள் சேர்ந்திருக்கும் முனையில் முளை அரும்பு காணப்படும். விதையின் மேற்பாகத்தில் ஒரு பிளவு தோன்றும், அது விதையின் மீதுள்ள வெள்ளைக் கோட்டைச் சேர்ந்திருக்கும். அந்தக் கோட்டின் வழியாக நீர் சென்று விதையைப் பருக்கச்செய்து முளையைக் கிளப்புகிறது. முளைக்கு இரண்டு பாகங்கள் உண்டு. ஒன்று மேல்நோக்கி வளரும் செடியின் பாகம், மற்றொன்று கீழ்நோக்கி வளரும் வேரின் பாகம். நெல் முதலியவற்றின் விதை அவரை முதலியவை போல் மேல் கிளம்பாமல் பூமிக்குள்ளே இருக்கிறது. இலை : இலைகள் மரங்களுக்குக் கெடுதி வராமல் அடிமரத்தையும், வேரையும் குளிர்ச்சி செய்து காக்கின்றன. அவைகள் நரம்பு, இலைப்பரப்பு என இரண்டு பகுதியை யுடையன, நெல், தெங்கு முதலியவற்றின் இலைகள் நரம்புகளை நடுவில் பெற்றிருக் கின்றன. மற்றச் செடி இலைகளின் நரம்புகள் வலைகளைப்போலப்பின்னப பெற்றிருக்கின்றன. நரம்புகளின் வழியாக இலைகளுக்கு வேண்டிய ஆகாரத்தை அடைகின்றன. இலைகள் பலவித உருவத் தைப்பெறும்: சில வட்டமாகவும், முட்டைகள் போலவும் அம்புகள் போலவும், ஈட்டிகள் போலவும், குளம்படி போலவும், பக்ஷிகளின் இறகுகள் போலவும் இருக்கின்றன. நிறங்கள் : பொதுவில் இலைகள் எல்லாம் பசுமைநிற முடையவாயினும் சில மஞ்சள், வெள்ளை, சிகப்பு, முதலிய நிறங்களைப் பெற்றிருக்கின்றன. இலைகளின் மேற்புறம் சிலவற்றிற்கு பளபளப்பாயும், சிலவற்றிற்கு வழுவழுப்பாயும், சிலவற்றிற்குச் சுரசுரப்பாயும் உண்டு. இலைகள் ஒற்றை இலை, கிளைத்த இலை என இரு வகைப்படும். அரசு, ஆல் முதலிய ஒற்றை இலை, அவரை, ரோஜா முதலிய கிளைத்த இலை. எல்லா இலைகளும் காம்புகளையுடையன; அவற்றில் சில நீண்டும். சில குறுகியும் இருக்கின்றன. புட்பம் : தாவர உற்பத்திக்குப் புட்பம் முக்கிய காரணம். புட்பத்தில் காம்பு, புற இதழ், அக இதழ், மகரந்தக் காம்பு, மகரந்தம், அண்டகோசம் எனப் பல பாகங்கள் உண்டு. காம்பு : இது புட்பத்தைக் கிளையுடன் சேர்ப்பது. புற இதழ் : இதனைப் புட்பகோசம் என்று சொல்லுவார்கள். இது திண்ணத்தைப் போல் (4 அல்லது 5) இதழ் சேர்ந்திருப்பது, புட்பங்களுக்கு அடியில் இருக்கும் சில புட்பங்களுக்குப் புற இதழ்கள் தனித்தனியாய் இருக்கும். அகஇதழ் : அகஇதழ்களைப் புட்பதனம் என்று சொல்லுவார்கள். இவை பல வர்ணங்கள் உள்ளதும், மிருதுவாயும், அழகாயும் இருப்பன. இவற்றிற் சிலவற்றின் தளங்கள் அடுக்காகவும், சிலவற்றிற்குப் பிரிவுப்பட்டும், சிலவற்றிற்கு ஒற்றையாகவும் இருக்கும். மகரந்தக்காம்பு : இதனைக் கேசரம் என்றும், பூந்தான் என்றும் சொல்லுவார் கள். புட்பத்திற்குள் அகஇதழ்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை மகரந்தக்காம்புகள் உண்டு. மகரந்தக்காம்புகள் ஒன்றாய்ச் சேர்ந்து குழையைப்போல் காணப்படும். காம்புகளுக்கு நுனியிலாவது, பக்கத்திலாவது மகரந்தப்பை உண்டு. அந்தப்பை முழுதும் மஞ்சன்போன்ற மகரந்தப்பொடிகள் நிறைந்திருக்கும். அண்டகோசம் : மகரந்தக் காம்புகள் ஒன்றுசேர்ந்து குழைபோவிருந்தால் அண்டகோசம். அக்குழைக்குள் இருக்கும் காம்புகள் தனித்திருப்பின் அண்டகோசழம் தனித்திருக்கும். அண்டகோசத்தின் துனி சற்றுத் தடித்து, சிறுத்து, அடிபெருத்து இருக்கும். சுணையோடு தடித்து இருக்கும் நுனிப்பாகத்திற்கு கீலாக்கிரம் எனப் பெயர். கீலாக்கிரத்தில் எப்பொழுதும் பசை இருக்கும், மகரந்தத்தூளை இப்பசை பற்றிக் கொள்ளுகிறது, கீவாக்கிரத்தின் கீழும், அண்டாசயத்திற்கு மேலுமாய்க் கம்பிபோலிருக்கும் பாகத்திற்குக் கீலம் என்று பெயர். இக்கிலம் தொளை கொண்டது. கீலாக்கிரத்திலிருந்து வரும் மகரந் தப்பொடி கீலத்தின் வழியாக விதைப்பைக்குள் போகின்றது. விதைப் பையிற்கு அண்டாசயம் என்று பெயர். இதில் தான் விதை உண்டா கின்றது. காய்கள் : புட்டங்கள் முற்றி இதழ்கள் விழுந்ததும் பூவிலுள்ள அண்டாசயமே காயாக மாறுகிறது. இது நாட்கள் செல்லச் செல்ல விதை முதிர்ந்து பழமாகிறது. பழம் : பழத்தில் மூன்று பாகங்கள் உள்ளன. ஒன்று பருப்பை மூடிக்கொண்டிருக்கும் உறுதியான கவசம்; இரண்டாவது வெளித் தோலுக்கும் கொட்டைக்கும் நடுவில் இருக்கும் தசை; மூன்றாவது மேல் தோல், பழங்களின் மேல்தோலானது கொட்டை முதிரும் வரையில் பசுமைதிறமாக இருந்து முதிர்ந்தபின் திறழம் ருசியும் வேறுபடுகின்றது. பழங்களிற் சில சதைப்பற்றுள்எனவாகவும், சில இல்லாதனவாகவும் இருக்கும். பழங்களில் மாம்பழம், இலந்தைப்பழம், அத்திப்பழம் முதலிய மிருதுவானவை. விளாம்பழம் வில்வப்பழம் ஒடு உன்னவை. பலாப்பழம், சீத்தாபழம், ஊமத்தங்காய் முள் உள்ளவை, பலா, சீத்தா, மாதுளை, கிச்சிலி முதலிய பல வித்துக்களையுடையன. மா, முதலியன ஒரு வித்து உள்ளவை. வாழை, பனை, ஈத்து முதலிய பல பழங்களை யுடையவை, விதைகள் பாவும் விதம் : விதைகள் நிறைந்துள்ள பழங்கள் பழுத்துக் கீழே வீழ்ந்தால் மரத்தடியில் வீழ்ந்த விதைகள் நன்றாய் முளைத்துப் பயிர் ஆகா. பக்ஷிக ளும், மிருகங்களும் பழங்களை உண்டு விதையைப் பல இடங்களில் சிதறுகின்றன. அவை சூரிய வெப்பழம், குளிர்ச்சியும் பரவின இடத்தில் நன்றாக முளைக்கின்றன. சில செடிகளில் வாலையுடைய விதைகள் காற்றில் பறந்து பல இடங்களில் விழுந்து செடிகளாகின்றன. அவை எருக்கு முதலியவை போன்றவை. பூவில்லாத தாவாங்கள் சில :காளான் முதலிய போன்றவை. மற்றொரு வகை பாசி முதலியன.வேரில் வித்துள்ளவை : வேர்க்கடலை முதலியன, |
தாஸ் | வட இந்தியாவிலுள்ள ஜைந நாடோடிகள். |