ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
ஞானகலாம்பையார் | பட்டினத்தடிகளின் தாயார். |
ஞானக்கூத்தர் | சிவப்பிரகாசதேசிகர் விருத்தாசல புராணம், திருவையாற்றுப் புராணம் பாடிய துறவி. இவர் இருக்கை சிவன்பாக்கம் எனும் ஊர். துறையூராதீனத்தவர். |
ஞானசங்கரர் | சைவபத்ததிசெய்த சிவாசாரியருள் ஒருவர். |
ஞானசிவர் | சைவபத்ததிசெய்த சிவாசரியருள் ஒருவர். |
ஞானசுதரிசநன் | அக்நிக்குச் சுதரிசனையிட முதித்த குமரன். யோகவதியை மணம் புணர்ந்து இல்லறம் வழுவாது நடத்தி யமதரும ராசனால் யமவா கனையின்றி யிருந்தவன். |
ஞானப்பிரகாச சுவாமிகள் | 1. இவர் (யாழ்ப்பாணம்) வீணாகான புரத்தில் சாலீவாடீசுரநகரத்தில் கார்காத்த வேளாளரில் முடிதொட்ட வேளாளராகிய பாண்டிமழவர்குலத்தில் (300) வருஷத்திற்கு முன் தோன்றி ஆதிசைவரிடம் சிவ தீக்ஷைபெற்றுக் கௌடதேயஞ் சென்று வடநூல் பயின்று திருவண்ணாமலை யாதீனமடைந்து சந்நியாசம்பெற்று அங்கிருந்து பல நூல்களியற்றினர். இவரிருந்த மடத்தருகில் புதையலிருப்பதை மாணாக்கரறிந்து சுவாமிகளுக்குத் தெரிவித்தனர். இவர் அதைக்கொண்டு குளமும் மடமும் செய்யக் கட்டளையிட்டனர். இவர் சிவஞான சித்தியார்க்கு உரை, பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி, சிவஞானபோ தவிருத்தி, பௌஷ்கா வியாக்யான முதலிய இயற்றினர். 2. சாலிவாகனசகம் (1433) இல் சந்திரகிரியாண்ட கிருஷ்ணதேவராயரிடம் முதன்மந்திரியா யிருந்த அம்பி, அறம் வளர்த்தான் முதலியாரால் வேளாளருக்குக் குருவாக நியமிக்கப்பட்டவர். இவரிடம் பொருமைகொண்ட வேதியருட் சிலர் இவரை மயக்க ஒரு தாசியை அனுப்பினர். அத்தாசி, இவரிடம் வந்து தன்னைக்கூட அழைக்க ஞானப்பிரகாச சுவாமிகள் நீ விரும்பியது கோசந்தானேயென்று அதனைப் பிடுங்கி அவளிடம் தந்து அனுப்பினர். அக்கோசம்பெற்றுச் சென்ற தாசி, பிராமணரிடங் கூறப் பிராமணர் சுவாமிகள் இறந்தனரென்று களிப்புடனிருந்தனர். சுவாமிகள், விடிந்து தீர்த்தக்கரையில் சிவபூசை செய்யக்கண்ட வேதியர் நடுங்கிப் பயந்து அதுமுதல் பக்தியுடனிருந்தனர். இவர் திருக்காஞ்சியில் மடஞ்செய் தெழுந்தருளியிருந்தவர். |
ஞானப்பிரகாசப்ட்டாரகர் | இவர் திருவாரூரிலிருந்த சுத்தசைவ வேளாளர், தமிழில் புட்பவிதி செய்தவர். |
ஞானப்பிரகாசர் | சிவஞானசித்தியார் பரபக்ஷத்திற்கு உரைசெய்த ஒரு ஆசிரியர். இவர் திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் என்று கூறப்படுவர். |
ஞானப்பூங்கோதை | திருக்காளத்தியீசுரர்க்குத் திருத்தேவியின் திருநாமம். |
ஞானமிருதம் | வாகீசராற் செய்யப்பட்ட ஒரு சைவசாத்திரம். இது திரிபதார்த்தவுண்மை கூறுவது, இது அகவற்பாவாலாயது. |
ஞானவாசிட்டம் | இது வசிட்டரால் இராமமூர்த்திக்கு உபதேசிக்கப்பட்ட ஆத்ம போத நூல். இதனைத் தமிழில் செய்யுணடையாக வீரை ஆளவந்தார் இயற்றினர். |
ஞானவாலன் | சிவபூசா வைராக்யத்தால் முத்திபெற்றவன். |
ஞானவிண்மகன் | பிரமனது வேறுவடிவம். |
ஞானாம்பிகை | துறைமங்கலம் சிவப்பிரகாசருக்குத் தங்கை, பேறைச் சாந்தலிங்க சுவாமிகளுக்குத் தேவிபர், |
ஞாயிறுகிழவர் | தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்து அவதரித்தவர். குமரியார் சங்இலியார். |