அபிதான சிந்தாமணி

ஆ. சிங்காரவேலு முதலியார் (1855 – 1931)
மின்னாக்கம் திரு ஆராவமுதன் & திருமதி ஆராவமுதன் பூங்கோதை


1209

361

673

34

450

53

97

94

58

51

34

5
க்
16

740
கா
383
கி
191
கீ
30
கு
366
கூ
57
கெ
13
கே
53
கை
21
கொ
78
கோ
162
கௌ
57
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச்
914
சா
288
சி
404
சீ
59
சு
563
சூ
79
செ
102
சே
92
சை
53
சொ
19
சோ
128
சௌ
38
ஞ் ஞா
15
ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த்
2

329
தா
130
தி
367
தீ
48
து
203
தூ
58
தெ
32
தே
137
தை
12
தொ
45
தோ
28
தௌ
2
ந்
243
நா
139
நி
140
நீ
56
நு
5
நூ
11
நெ
43
நே
11
நை
10
நொ
3
நோ
5
நௌ
ப்
598
பா
284
பி
485
பீ
31
பு
235
பூ
120
பெ
97
பே
37
பை
15
பொ
66
போ
50
பௌ
20
ம்
640
மா
246
மி
76
மீ
19
மு
160
மூ
47
மெ
12
மே
52
மை
10
மொ
4
மோ
19
மௌ
8
ய்
54
யா
39
யி யீ யு
14
யூ
6
யெ யே யை யொ யோ
20
யௌ
2
ர்
2
ரா
3
ரி ரீ ரு
8
ரூ
1
ரெ ரே ரை ரொ ரோ
1
ரௌ
ல்
3
லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ்
370
வா
189
வி
649
வீ
102
வு வூ வெ
83
வே
109
வை
76
வொ வோ வௌ
1
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தலைசொல் பொருள்
சககமனம்

உயிரிழந்த கணவனுடன் தன்னுயிரைவிட நிச்சயித்துத் தீப்புகுதல். மாசு மூடியபொன்னை அக்கினி அம்மாசைமாத் திரம்போக்கிப் பொன்னைக் கெடுக்காமை போல், கொழுநனோடு உயிர்விடும் புண்ணியவதியின் மேனியைமாத்திரம் அவ்வக்கினி தகிப்பானே அன்றி அவளைச்சிறிதும் வருத்தான். அனைவரையுந் துறந்து கணவனே தெய்வமென்றும் அவனைப் பிரிந்து வாழ அடுக்காதென்றுமெண்ணிப் புருஷனுடன் உயிர்விடும் உத்தமியை ஒப்பானவர் உலகத்தில் யாருளர். சககமனம் செய்த புண்ணியவதி மூன்றரைக்கோடி தேவவருஷம் மகிழ்நனோடு சுவர்க்க போகத்தை அனுபவித்துப் பின்பு தானும் கணவனும் வெவ்வேறுக யோக்யரின் குலத்தில் சனித்து மீண்டும் ஒருவரை ஒருவர் மணந்து இன்பந்துய்த்து யோக மகிமையால் மேன்மையுற்று நற்கதி அடைவர். (கருடபுராணம்.)

சகசன்யா

ஒரு அப்சரசு.

சகச்சாரம்

(காஞ்சி.) பரத கண்டத்தில் உள்ள தலங்களில் சிறந்தது.

சகச்ரசித்

ராஜரிஷி, கேகய ராஜனாகிய சுதரூபனுக்குப் பாட்டன்.

சகச்ரபாதன்

உடுண்டுபனைக் காண்க.

சகச்வான்

அம்பரீஷன் புதல்வன்.

சகடதோஷம்

குரு நின்ற ராசிக்கு (சா இல், (அ) இல், (க) இல் சந்திரன் நிற்கப்பட்ட இராசியின் நாள் சகடதோஷமாம். இந்த நாட்களில் சுபகன்மங்கள் செய்யக்கூடாதாயினும், சந்திரனும் குருவும் சுபாங்கிசத்தில் நிற்றல் ஒரு சுபகோள் சந்திரனைப் பார்த்தல், சந்திரன் ஆட்சியச்சத்தினிற்றல் சுபக்கோளுடனிற்றல் செய்யின் தோஷமில்லை, (விதானம்)

சகடயூகம்

கௌரவர் பொருட்டுத் துரோணாசாரியரால் யுத்தத்தில் செய்த அணி வகுப்பு இதற்குப் பத்மவியூசம் என்று ஒரு பெயர்.

சகடாசாரி

சாகடாயனம் என்னும் வடநூல் இயற்றிய புலவன்.

சகடாசூரன்

கம்சன் ஏவலால் கிருஷ்ணமூர்த்தி தொட்டிலில் இருக்கையில் பாண்டிலின் உருவாய்வந்து வஞ்சனை இயற்றக் கண்ணன் குழந்தைகள் காலால் இயற்கையாய் உதைப்பதுபோல் உதைக்க அவ்வுதை பட்டு மாய்ந்த அசுரன்.

சகதேவத்தண்டநாதர்

வசவர்காலத்திருந்த சங்கமர். இவர் வசவரை மகேசுரபூசைக்கு அழைக்க வசவர் இவர் பலிகளைப் புசித்தல் உணர்ந்து அவரால் வெறுக்கப்பட்டவர்.

சகதேவன்

1. பாண்டு புத்திரன். மாத்திராதேவிக்குக் குந்திதேவி உபதேசித்த அச்சுவனி தேவ மந்திரத்தால் பிறந்தவன். இவன் தேவி விசையை, இவளிடத்துச் சுகோத்ரன் பிறந்தனன். இவனது மற்ற குமரன் சுதகர்மா. இவன் பாண்டவர் நால்வருக்கும் முன் இறந்தனன். ஏனெனில் தன்னினும் சாத்திரத்தில் மிகுந்தார் இல்லையெனச் செருக்குக் கொண்டதா லென்க. 2. (பிர.) சராசந்தன் குமரன். இவன் குமரன் சோமாபி அல்லது சோமகன் அல்லது மார்ச்சாரி. 3. (சூ.) தும்பிராக்ஷன் குமரன். 4. (ச.) அரியசுவனன் குமரன். இவன் குமரன் பீமன். 5. சுதாசனன் குமரன். இவன் குமரன் சோமகன். 6. சிரஞ்சயன் குமரன். இவன் குமரன் குசாசுவன். 7. (சூ.) தேவசேனாதிபதியாகிய பானுவின் குமரன். 8. ஒரு அசுரன் சம்பகாகான் புதல்வன். சகதேவனாகிய பாண்டு புத்ரனால் செயிக் கப்பட்டவன். (பார~சபா.)

சகதேவமல்லன்

ஒரு விஷ்ணு பக்தன். சங்கரதாசர் நெற்றிக் கண்ணால் நரசிங்க விக்கிரகம் இழந்தவன்.

சகதேவி

வசுதேவன் பாரி. குமார் புரவி, சுரதன் முதலியோர். தேவகன் பெண்.

சகத்திரகோதானம்

(101) கழஞ்சு பொன்னால் (1000) பசுவும் கன்றும் காற்குளம்பு வெள்ளியிற் செய்வித்து (5) கழஞ்சுபொன் துணையுடன் (1000) வேதியர்க்குச் சிவபூசை செய்து அளிப்பது.

சகத்திரசித்து

1 ஒரு யாதவ வீரன். பஜபாகன் குமரன். 2. (பிர.) யதுகுமரன், இவன் குமாரன் சத்ருஜித்.

சகத்திரசோதி

விவஸ்வதன் புத்திரன்.

சகத்திரதாரை

அயோத்தியிலுள்ள தீர்த்தம், இது இராமகோபத்திற்கு அஞ்சி இராம கங்கையாகிய சரயுவில் மூழ்கி எழுந்த இலக்குமணரது பண்டைய உருவமாகிய ஆயிரம் முகத்தில் தோன்றியது.

சகத்திரதேவன்

பாரத வீரரில் ஒருவன். இவன் பாண்டியனுடன் பாரத யுத்தத்தில் எதிர்த்தவன்.

சகத்திரபாதன்

ஒரு ரிஷி.

சகத்திரபாதன்

ஓர் இருடி: இவன் விளையாட்டாகத் தன் நண்பனாகிய ககமுகன் மீது செய்த பாம்பைவிட அவன் பயந்து நீ பாம்பாக எனச் சபித்தனன். இவன் இச்சாபத்தால் சிலநாள் பாம்பாக இருந்து இருருவால் சாபம் நீங்கினன். இருருவைக் காண்க.

சகத்திராநீகன்

1. சதாநீகன் குமரன். இவன் குமரன் ஆஸ்வமேதகன். 2. மார்க்கண்டரிடம் புராணங் கேட்ட மாணாக்கன். 3. விதூமனைக் காண்க.

சகநந்தனன்

ஒரு சாரணன்.

சகநாள்

பிரமன் புத்ரி.

சகந்தரை

ஒரு தேசம்.

சகந்திரதேவன்

ஒரு அரசன்.

சகந்நாதபாண்டியன்

அரிமர்த்தன பாண்டியன் குமரன்.

சகந்நாதம்

ஒரு விஷ்ணு ஸ்தலம். கண்ணன் அரசாகிய துவாரகை கடல்கொண்டகாலத்து வெந்து கொண்டிருந்த கண்ணன் தேகம் வெள்ளத்தில் ஒதுங்கிய தலம், இந்தத் தேகத்தைத் தாருவில் பொதிந்து பூசித்து வரும் தலம், இத் தலத்தில் எழுந்தருளிய மூர்த்திகள் தாரு மூர்த்தியாகிய திருமால், பலபத்திரர், சுபத்திராதேவி, யோகநரசிம்மர், அ. சிவமூர்த்தங்கள், அ. சக்திகள் பல தீர்த்தங்கள்.

சகன்

1. திருதராட்டிரன் குமாருள் ஒருவன். 2. பஸ்மாசுரன் தந்தை. 3. புராணன் என்னும் வசுவின் குமரன். தாய் உற்சவதி.

சகமார்க்கம்

இது புலனொடுக்கி உச்வாஸ நிஸ்வாஸங்களையடக்கி ஆறாதாரங்களினிலையுணர்ந்து நாபித்தானத்துக் குண்டலி சத்தியுருவாகிய அமுதத்தையுருகச்செய்து மற்றை யாதார பதுமங்களை யதனைக் கொண்டு பேதித்து மேற்சென்று விந்துதானத்து வழியிறங்கி அமுதத்தையுடலில் நிறையச்செய்து சோதி ஸ்வரூபமாகிய சிவத்தைத் தியானித்திருத்தலாம்.

சகமித்திரர்

இவர் பரளி எனுமூரில் வேதியர்குலத்திற் பிறந்து தானியம் யாசித்து வாழ்ந்து வருநாளில் அவ்வூரிலுள்ளோர் இவரது மகிமையறிந்து சிலர் வந்தனை செய்தனர். இவரிடத்தில் பகைகொண்ட வேறு சிலர் இவரிடம் வாதிட்டு ஒருநாளிவருறங்குகையில் வீட்டைக் கொளுத்தினர். இதையறிந்த சகமித்திரர் பெருமாளை நோக்கி நீயே காக்கவேண்டு மென்று துதித்தனர். பெருமாள் சக்கரத்தை யேவிச் சகமித்திரர்க்குத் தீயினால் தீங்கில்லாமல் காத்தனர். அண்டை அயலிலுள்ளார் சகமித்திரன் குடும்பமாய்ந்ததெனக் கூக்குர விட்டபொழுது விடிந்து தீயுந் தணிந்தது. சகமித்திரர் குடும்பம் தீயால் வருந்தாதிருத்தலைக்கண்டு வியப்படைந்து பலரும் அவருக்கு உதவி புரிய அவர் தடுக்கவம் உதவி செய்து வருநாளில் அந்நாட்டுத் தலைவனான வைத்தியநாதனென் பான் உதவி செய்வோரைத் தடுத்து இவர் வீட்டிலுள்ள பொருள்களைக் காண்போமென வீட்டில் புகுந்து நீர் சகத்திற்கெல்லாம் மித்திரரோ உமக்குப் பகைவரிலரோ உமக்கும் இச்சகத்தில் பகையில்லையெனில் என் பெண் கலியாணத்திற்கு தேவபூசை செய்ய ஒரு புலிவேண்டும் கொணர்ந்து தருகவெனக் கூறினன். அவ்வாறே சகமித்திரர் காட்டுள் சென்று பெருமாளைப் புலியாகவரத் துதித்தனர். அவ்வாறே பெருமாள் புலியுருக்கொண்டு வரத் தமது உத்தரியத்தைப் புலியின் கழுத்திற்கட்டித் தமது ஊர்க்கு அழைத்துச் சென்றனர். இதைக்கண்ட ஊரிலுள்ளோர் அஞ்சிக் கதவுகளை அடைத்து மரங்கள் மீதேறிச் சகமித்திரரை இவ்வாறு செய்தல் கூடுமோவென ஊர் அதிகாரிக்குக் காட்டவந்தன னென்றனர். இச்செய்தியையறிந்த மரதிகாரியும் கதவடைத்தனன். சகமித்திரர் புலியை நோக்கிக் கதவைத் திறந்து கொண்டுள் புகவென அவ்வாறுள் புகுந்து வாசலில் போய் நின்று அவ்வதிகாரியை நோக்கி இஷ்டனே புலிகொணர்ந்தேனென்று அழைக்கப் பெண்டு பிள்ளைகள் கண்டு பயந்து ஊராளியைப்பார்த்து நீ கிழவன் நீ போகலாம் என அவன் பயந்து ஒளித்துக்கொண்டு நான் தெரியாது செய்ததைப் பொறுத்துக்கொள்கவென வேண்டச் சகமித்திரர் புலியைக்கொண்டு ஊரின் புறத்திற் போயினர். பெருமாளும் தமது உருக்காட்டிச் சகமித்திரரை வாழ்த்திப் போயினர்.

சகரன்

1. (சூ) பாகுகன் குமரன். இவன் தன் தாயின் கருப்பத்தில் இருக்கையில் சக்களத்திகள் நஞ்சூட்ட இறவாது அவுரவ ரிஷியால் காக்கப்பட்டவன். இவன் பாரிகள் கேசினி, சுமதி, இவர்களுக்குப் புத் திரர் இல்லாமையால் அரசன் சாம்பமூர்த்தியை எண்ணித் தவம் புரிந்து சுமதியிடம் அறுபதினாயிரம் குமாரையும், கேசினியிடம் ஒரு புத்திரனையும் பெற்றனன், புத்திரப்பெற்றால் களிப்படைந்த அரசன் அசுவமேதம் செய்யத் தொடங்கிக் குதிரையைப் பூவலம் வர விடுத்தனன். இவனிடம் பகைகொண்ட இந்திரன் அசுவமேதக் குதிரையைப் பாதாளத்தில் தவஞ்செய்யும் கபிலருக்குப் பின்புறங் கட்டி மறைந்தனன். குதிரைக்குப் பின் வந்த சகரர் குதிரையை எங்குந் தேடிக் காணாது பாதாளத்தில் தேடிச் சென்று அங்குத் தவஞ்செய்து கொண்டிருந்த கபிலருக்குப் பின் கண்டு கபிலர்மீது கோபித்து வருத்த அவரது கோபத்தீயால் மாய்ந்தனர். பின் சகரன் பேரனாகிய அம்சுமான் முனிவரை வேண்டிக் குதிரையைத் தரப்பெற்று யாகமமுடித்து அவுரவரால் நற்கதி அடைந்தவன். அசிதன் குமரன் என்றுங் கூறுவர். இவன் சரித்திரத்தில் சிலவற்றை அசிதனைக் காண்க. இவன் கங்கை பெருகக் காரணபுருஷனா யிருந்தவன், இவன் குமரன் அசமஞ்சன், இவன் குமரனால் அம்சுமானைப் பெற்றுக்கொண்டு குமரனைக் காட்டிற்கு அனுப்பினன். 2. காச்யபருக்கு அதிதியிடம் உதித்த குமரன், இவன் துவாதசாதித்தரில் ஒருவன். தேவி பிரசினி. 3. முதல் வள்ளல்களில் ஒருவன்.

சகரர்

சகரனுக்கு இரண்டாவது மனைவியிடம் பிறந்த புத்திரர் அறுபதினாயிரவர். பூமியைக் கல்விக் கபிலரைக் கோபித்து அவர் கோபத்தீயால் இறந்து பகீரதனால் நற்கதி பெற்றவர்கள். (பாகவதம்)

சகலதோஷாபவாதம்

சந்திரன் உச்சத்தானத்திலிருந்து நோக்கினும், சுபக்கிரகங்களுடனிருக்து உதிப்பினும் சுபாம்சகேதனனான சந்திரனைச் சுக்கிர பிரகஸ்பதிகள் நோக்கினும் இவனுக்குக் கேந்திரத்தில் சுபக் கிரகங்கள் நிற்பினும், ஆதித்யன் மத்யானத்து (8) ஆம் முகூர்த்தமாகிய அபிசித்து முகூர்த்தமாயினும் தோஷங்களெல்லாம் நீங்கும். (விதான.)

சகலர்

1. மலம், மாயை, கன்மம் மூன்றுடன் கூடிய ஆன்மாக்கள். 2. இவர்கள் ஆணவம், கன்மம், மாயை யெனும் மூன்று மலங்களை யுடையவர்கள். இவர்களுக்குக் காரண சரீரம், புரியஷ்டக சரீரம், தூலசரீரம் என மூவகைச் சரீரங்களுண்டு. அசுத்த மாயையில் அநந்ததேவ நாயனாரால் கலக்குண்ட காரணசரீரமாகிய பரசரீசம் ஒன்று, இதனை ஆனந்தமய கோசம் என்பர். வித்யாதத்வங்களாகிய பஞ்சகஞ்சுகமெனும் சரீரம் ஒன்று, இதனை விஞ்ஞானமய கோசம் என்பர். பஞ்சகஞ்சுகத்திலொன்றாகிய கலையிற்றோன்றிய அவயத்த வியத்தரூபமாகிய குணசரீரமெனும் சரீரம் அன்று, இதனை மனேமய கோசம் என்பர். மனம், புத்தி, அகம்காரம், தன்மாத்ரை யைந்துங்கூடிய சூக்ஷ்ம சரீரமாகிய புரியஷ்டக சரீரம ஒன்று, இதனைப் பிராணமய கோசம் என்பர் மரறையது தூலசரீரம இதனை அன்னமய கோசம் என்பர்.

சகலாவத்தை

சிருட்டி தொடங்கிச் சர்வசங்கார காலமளவும், ஆன்மாக்கள், தத்து முப்பத்தாறுடன் கூடி எண்பத்து நூறாயிரம் யோனி பேதங்களில் பிறந்திறந்து உழல்வது இது, இரவிலிருளிலழுந்திக் கிடந்தகண், விளக்கினால் இருள் நீங்கிப் பால் பொருள்களைக் காணு தல்போலும்.

சகளேசமாதிராசையர்

இவர் ஒரு அரசர். சிவபூசா துறந்சரர். இவர் மல்லி ராசையரைக் காணவிரும்பி இராஜ்ய முதலிய துறந்து அவரிடம் போயினர். இவரது வரவுகண்ட மல்லிராஜர் ஒரு பேருருக் கொண்டு நிற்க அவ்வுருக்கண்டு தொழுது எழுந்திருக்காமல் நின்றவரை மல்லிராஜர் தூக்கி அணைத்து அவர்க்குக் கிருபை செய்து அல்லமரிடம்போகப் பணிக்கச் சகளேசமாதிராசையர் பிரிய மனம் இல்லாமல் வணங்கினர். அரசன்வணங்கி எழுமுன் கல்யாணபுரத்தில் இருக்கக்கண்டு இருவரும் அளவளாவிக் களிப்புடன் இருந்தனர்.

சகாதேவன்

சகதேவனைக் காண்க.

சகாரா

(பாலைவனம்) இது உலகத்துள்ள மணல் வெளிகளில் பெரிது. இது ஆபிரிகாவிலுள்ளது. இதனை மணற்கடல் என்பர். இதில் காற்றினால் மணல்கள் மேலெழுந்து அலைபோல் மூடும். இதிலுண் டாகும் மணவின் சுழற்சி மேகத்தை யளாவும். இதில் யாத்திரை செய்வது அபாயத்தை உண்டாக்குமாம். சில இடங்களில் கடலில் தீவுகளிருப்பது போல் சில நீருள்ள இடங்களுண்டு, அங்குப் பிரயாணிகள் தங்குவர்.

சகியம்

ஒரு பர்வதம். இது தென்னாட்டில் அற்புதமுள்ள தீர்த்தங்களுடன் கூடியது.

சகுண்டலன்

திருதராட்டிரன் குமரன்.

சகுந்தலை

விச்வாமித்திரன் தவத்தினைக் கெடுக்க இந்திரனால் ஏவப்பெற்ற மேனகை என்னுந் தேவரம்பையிடம் பிறந்த குமரி இவள் சகுந்தலைப் பணிகளால் காக்கப்பட்டுக் கண்ணுவ மகருஷியால் எடுத்து வளர்க்கப்பட்டனள். வேட்டைக்கு வந்த துஷ்யந்தமகாராஜன் கணவராச்சிரமம் அடைந்து இவளை மணந்து செல்லப் பரதன் இவளிடம் பிறந்தனன் இவள் சகுந்தலைப் பக்ஷிகளால் காக்கப்பட்டது பற்றி இப்பெயர் அடைந்தனள்.

சகுனம்

நன்மை தீமைகளை முன்னறிவிக்கும் அறிகுறிகள். வித்வான்கள், பத்னிகளோடும் புத்ரர்களோடுங்கூடின பிராமணர்கள், பலிஷ்டர், ஆபரணம் பூண்டமாதர், நல்ல புத்ரரை யுடையவள், விசேஷமாகச் சந்தோஷமுள்ளவள். ரூபமுள்ளவள், கருப்பிணி, கன்னிகை, விளையாடுகிற குழந்தைகள், விசேஷமான பக்ஷயம், போஜ்யம், பானம், மாம்சம், தீபம், சந்தனம், மாலை முதலிய கந்தத்ரவ்யம் நெய், தயிர், மத்ஸ்ய விசேஷம், பூரண கும்பம், தண்ணீர் நிறைந்த குடம், சங்கு, கோரோசனம் கண்ணாடி,த்வஜம், கடுகு, பால் இன்னும் சிறந்த பொருள்களின் தர்சனம் சுபமாம். இடப்பாக சதனம்:பிரயாணத்திலும் எல்லாச் சுபகார்யத்திலும், மூஞ்சூறு, குள்ள நரி, பல்லி, பிங்கள வர்ணமான பன்றி, குயில் இவையாவும் இடப்பக்கத்தில் நன்மையைத் தரும் சிரேஷ்ட சகுனங்கள்: சீக்ரஞ் செல்வதாயும், சமீபத்தி லுள்ளவைகளாயும், தூரத்திலிருந்தும் மிகவுயரம் தூரப்போகக் கூடுமானவை யாயும் செல்வமுள்ளோர் வீடுகள், இராஜ மாளிகை, தேவாலயம், சுபஸ்தலம், ரம்யமான இடங்களை யடைந்திருக்கிறவையா யுள்ள பறவைகள் சிரேஷ்டம். மதுர மான ரஸம், பால், பழம், புஷ்பம் இவற்றுள் ஏதேனுமுள்ள தாகிய மரங்களில் உள்ள பக்ஷிகள் மிகச்சிறந்தன. அவசகுனங்கள்: கிராமத்தில் காட்டுப் பசு காட்டில் கிராமப்பசு, பகலிற்பெட்டையுடன் சஞ்சரிக்கிற சக்ரவாகம் முதலிய பக்ஷிகள் இரவிற்கூடாது. இரவிற் சஞ்சரிக்கிற கோட்டான் முதலிய பகலிற் கூடாது. யாவராலும் பிரார்த்திக்கப்படுகிற பிராணிகள் இரட்டையாய் வருமாயின் நலம். அண்டங் காக்கைகள் இஷ்ட பலத்தைத் தரும். நதியைத் தாண்டின வையாயும், மெய்ம் மறந்திருப் வையாயு மிருக்கிற பக்ஷிகள் கூடா, தும்மல் எவ்விடத்தும் ஆஷ்டமாக மாட்டாது. பசுவின் தும்மல் மரணத்தைக் கொடுக்கும். சோகத்தைக் காட்டுஞ் சதனம்: வெல்லம், எலும்பு, கறுப்புத்தான்யம், பருத்தி, நெருப்புண்டாம் பொருள், விறகு, சக்கிலி, விரிந்த தலையர், சண்டை, பசி, இளைப்புள்ளார், மொட்டைத்தலை, அழுக்கு வஸ்திர முடுத்தவன், விகாரமானவன், நாஸ்தி கன், பௌத்தன், குரற்பாய்ச்சி அழுதல், கண்ணீர்விடுதல், கலகம், பன்றி, எருமை, ஒட்டகம் இவற்றைப் பார்த்தல், தீமையாம். மேற்கூறிய சகுனங்களில் நலமுள்ளவை எதிர்ப்படின் காரியங்களைச் செய்க, பிரதிகூலமாயின் அவற்றை விடுக. புத்திமான் சகுனத்தை மும்முறை பார்த்தும் நலமாகாவிடின் அக்கருமத்தை விடுக (ஸ்ரீகாமிகம்)

சகுனி

1, திருதராட்டிரன் காந்தாரியை மணந்து அத்தினபுரஞ்செல்கையில் உடன் சென்ற இவனுடன் சேர்ந்த தம்பியர் (99) பேரையும் இவனையும் திருதராட்டிரன் இவர்களால் நமக்கு ஒருகாலத்துத் தீமை வரும் என்று அஞ்சியிவர்களைச் சிறையிட்டு ஆங்கிருந்த புதரின் வழிச் சிலர்க்கு ஆகவேண்டிய வுணவளித்துச் சாக எதிர்நோக்குகையில், அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு இந்தப்பற்றாத ஆகாரத்தை ஒருவர் உண்டு பிழைத்துப் பழிக்குப் பழி வாங்குக என்றபடி சகுனியுண்டு பிழைத்துப் பாரத யுத்தத்தில் துரியோதனாதிகளைக் கொல்வித்தான். துவாபரயுக புருஷன் அம்சமாய்க் காந்தார தேசாதி பதியாகிய சுபலன் அல்லது சௌபலனுக்குக் குமரன். துரியோதனனுக்கு நல்லம்மான். இவன் துரியோதனனது மனதை வேறுபடுத்திப் பாண்டவர்களைச் சூதாடத் தூண்டுவித்துத் தருமபுத்திரருடன் சூதாடி நாடு முதலியவைகளைக் கவர்ந்து காட்டுக்கு அனுப்ப ஏவுவித்தவன். நகுலனால் பதினெட்டாநாள் இறந்தனன். 2. இரண்யாக்ஷன் குமரன். 3 யதுவம்சத்துத் தசரதன் குமரன், 4, சிவேதன் கடைசி குமரன். இவன் குமரன் குந்தி, 5. விருகாசுரன் தந்தை 6. ஒரு தேவதை. காகம் முதலிய பக்ஷிகளில் கலந்து நன்மை தீமை அறிவிப்பவள் இவள் இடேகை, காகம் முதலியவற்றைப் பெற்றாள்.

சகுனி கௌசிசன்

ஆருணி யரசனைச் சார்ந்த ஒரு வீரன் எண்ணியதை முடிக்கும் திண்டிநல் வாய்ந்தவன் மிக்க நூற்கேள்வியை யுடையவன். அவனால் அனுப்பப் பட்டு மூன்று வீரர்களுடன் ஒன்றாகச் சென்று உதயணனுடைய வீரராற் கொல்லப் பட்டோன், (பெ. கதை)

சகோத்திரன்

பகீரதன் புதல்வன்.

சகோரம்

1. ஒரு மலை, 2. ஒரு பக்ஷி.

சக்கமாதேவி

ஒரு க்ஷூத்ரதேவதை.

சக்கரம்

இது சித்திரக்கவியிலொன்று. இது நடுவில் ஒரெழுத்து நிற்கச் சூட்டின் மேல் எழுத்துக்கள் நிற்கப் பாடுவது. இது, நான்காரைச் சக்கரம், ஆரரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம். பூமி சக்கரம், ஆகாய சக்கிரம், பூமியாகாய சக்கிரம், வட்ட சக்கிரம் புருட சக்கிரம், சதுர சக்கிரம், கூர்ம சக்கிரம், மந்தா சக்கிரம், காட சக்கிரம், சரிபுருட சக்கிரம், சலாப சக்கிரம், சக்கிர சக்கிரம், அரவு சக்கிர முதலிய. (தண்டி, யாப்பு~வி.)

சக்கிரவாகப் புள்

இஃது, உருண்டை வடிவாயுள்ள பறவை இதனைத் தமிழ்க் கவிகள் தனத்திற்குவமை கூறுவர். இப்பறவை இக்காலத்தில்லை. இது தன் துணையாகிய பேட்டினை விட்டுப் பிரிந்த காலத்தில் கூவும் இயல்பின தாதலாலும் வட்டமான உருவுடைய தாதலாலும் இதனை இப்பெயரால் அழைப்பர். (அமரம்)

சக்கிரவாளக்கோட்டம்

இது காவிரிப்பூம்பட்டினத்தின் புறத்தேயுள்ள மயானத்தின் பக்கலுள்ளது. இதில் முனிவர் பலரிருந்து தவஞ்செய்தனர் சம்பாபதி கோயில் கந்திற்பாவை, உலகவறவியெனும் இம்மூன்றும் இதைச் சார்ந்துள்ளன. புத்ரசோபத்தால் வருந்திய கோதமையின் துன்பத்தைப் போக்குதற்காக இவ்வுலகத்துள்ள எல்லாத் தேவர்களையும் சம்பாபதி வருவித்துக் காட்டியவிடத்து அக்காட்சியை யெக்காலத்தும் யாவரும்காணும் வண்ணம் மயனால் நிருபிக்கப் பட்டது.

சக்கிரவாளம்

ஒரு வித்தியாதர நகரம். (சூளா.)

சக்கிரியன்

உப்புரவரில் ஒருவகையர் இவர்கள் சருக்கரை செய்வோர்.

சக்கிலி

இவர்கள் கஞ்சம்ஜில்லாவில் தோல் தைப்பவர்கள். இவர்கள் தமிழ் நாட்டில் வந்து அப்பெயரே பெற்று அந்த வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

சக்கிலியன்

1. தோட்டி ஜாதி. செருப்புத் தைத்தல் வேலை. (தர்ஸ்.) 2 தெலுங்கு நாட்டுப் பறையன்.

சக்குபாயி

இவள் கண்ணனிடம் உள்ளன்புடையமாது, இவள் கொடுமையாளராகிய மாமன் மாமிமார் கைப்பட்டு வருந்துகையில் ஒருநாள் அண்டைவீட்டுக்காரி உனக்குத் தாய் தந்தைய ரில்லையோவென இவள் எனக்குத் தாய் தந்தையர் பண்டரிபுரத்தில் வாழும் பெருமாளும் பிராட்டியுமே என்று துன்பஞ் சகித்திருந்தனள். ஒருநாள் அயல்வீட்டுப் பெண்களுடன் தண்ணீர்க்குச் சென்று அவ்விடம் அரி பஜனை செய்து கொண்டிருந்தவர்களுடன் கேட்டு ஆனந்தமடைந் திருக்கையில் கணவனிடத் தயல் வீட்டார் கூறினர். இதனைக்கேட்ட கணவன் சீர்க்கரைசென்று சக்குபாயியை மயிரைப்பிடித்திழுத்து வந்து தூணிற் கட்டியடித்து ஆகாரமிலாதிருத்தினன். இவ்வகை வருத்தவும் சக்குபாயி பண்டரிபுரத்துப் பெருமாளையும் பிராட்டியையும் தரிசிக்கும் ஆவல் விடாது பெருமாளை வருந்தப் பெருமாள் இவளைப் போலுருக்கொண்டுவந்து அவள் பண்டரிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து மீளுமளவும் தான் கட்டிலிருப்பதாக வுடன்பட்டுச் சக்குபாயியை யவிழ்த்துவிட்டுத் தான் அக்கட்டிலிருந்தனர். பின் கணவன் இரக்கப்பட்டுக் கட்டிலிருந்தசக்குபாயியை யவிழ்த்து விடுத்து வீட்டுக் காரியம் பார்க்கச் சொல்லச் சக்கு பாயியாகிய பெருமாள், அன்ன முதலிய சமைத்து மாமன் மாமி புருஷன் முதலியோர்க் களித்துப் புருஷனுக்குப் படுக்கையிட்டு அவன் விரும்பியவாறு சுகமளித்திருந்தனர். முன் கட்டினின்று விடுபட்ட சக்குபாயி பண்டரிசென்று பெருமாளைச் சேவிக்கையில் பதத்திலுயிர் நீங்க அவளையெடுத்து ஊரார் தகனஞ் செய்தனர். இதனைக்கண்ட வேதியன் இவளது மாமி மாமன்மாரிடம் வந்து கூறு முன் பிராட்டி பெருமாளைப் பிரிந்திருக்கச் சகியாதவளாய் இவளெலும்பிருந்த இடத்தணுகி இவளைப் பெண்ணாக்கிப் புருஷனிடத்தனுப்ப இவள் நீர்க்கரையணுகச் சக்குபாயியாக நடித்த பெருமாளிவளையணுகி க்ஷேமம் விசாரித்துத் தண்ணீர்க் குடத்தைச் சக்குபாயியிடங் கொடுத்தனர். சக்குபாயி வருடந்தோறும் இவ்வாறு எனக்கு அருள் செய்ய வேண்டுமெனப் பெருமாள் அவ்வாறு அருள் செய்து போயினர். பண்டரிபுரத்து இவளிறந்து சாம்பரான செய்தி கண்டவன் இவ்விடம் வீடுவந்து சக்குபாயி யிருக்கக்கண்டு வியப்படைந்து புருடனிடங்கூறப் புருடன் நடந்தவை கேட்டு இவளிடத்தன்பு மச்சமுங்கொண்டு வருடந்தோறுங் குடும்பத்துடன் பண்டரி சேவித்து இருந்தவள்.

சக்தி

இது மூன்று வகை, இவை அரசனுக்கு யுத்த காலத்தில் இருக்கவேண்டியவை. 1. உத்சாகசக்தி, 2 பிரபுசக்தி, 3. மந்திரசக்தி. இவற்றுள் உத்சாகசக்தி யாவது மனோவேகம், பிரபுசக்தியாவது தன முதலியன, மந்திர சக்தியாவது ஆலோசனை. (பார~ஆச்ரமவாச.)

சக்துபிரஸ்தன்

அதிதி பூசையால் யமனைக் களிப்புறச் செய்து குடும்பத்துடன் பிரமலோகம் அடைந்த குருக்ஷேத்திர வாசியாகிய பிராமணன்.

சக்ரகன்

கெம்பீரன் குமரன். இவனிடத்துப் பிராமணவம்சம் உதித்தது.

சக்ரசமேரதைத்தியன்

திரணாவர்த்தன்.

சக்ரதானசுவருபம்

விஷ்ணுமூர்த்திக்குச் சக்கரம் அருள் செய்ய எழுந்தருளிய சிவ சுவரூபம்.

சக்ரதீர்த்தம்

பலராமர் தீர்த்த யாத்திரையில் ஸ்நானஞ் செய்த தீர்த்தம். இதற்கு பிரமத்வாம் எனவும் பெயர் இது வியர்வு நீராலானதா லிப்பெயரடைந்தது. இது சாம்பூந்த நிறமுடையது.

சக்ரதேவன்

வடகலிங்கதேசாதிபதி, பாரதத்தில் யுத்தத்திற்கு வந்தவன். சுருதாயு வின் குமரன்.

சக்ரநாகம்

அளகைக்கு அருகிலுள்ள மலை.

சக்ரன்

1. வசிட்டருக்கு ஊற்சைபிடம் உதித்த குமரன். 2. மருத்துவரில் ஒருவன். 3. இந்திரன்.

சக்ரபாணி

ஒரு அரசன். தேவி உக்ரை, இவர்கள் புத்திரர் இல்லாமல் சூரியவிரதம் இருந்து சிந்து என்பவனைப் பெற்றனர்.

சக்ரபாணியார்

அறந்தாங்கியார் குமரர். இவர் குமரர் அச்யுதர், இவர் நம்மாழ்வாருக்கு ஐந்தாம் பாட்டனார்.

சக்ரவர்த்திகள்

இவர்கள் அறுவர். அரிச்சந்திரன், நளன், புருகுச்சன், புரூரவன், சகான், கார்த்தவீரியார்ச்சுனன்.

சக்ரவாளம்

1. பெரும்புறக்கடலை வளைந்திருக்கும் மலை. 2. ஒரு வித்யாதர நகரம்.

சக்ராங்கன்

மகதநாட்டு வேதியன், இவன் குமரன் திருதராட்டிரன்

சக்ஷூநதி

கங்கையிற் கலக்கும் நதி

சக்ஷூர்மநு

சர்வதேசஸ் குமரன்.

சக்ஷூவு

யயாதி பேரன். அனுவின் குமரன்.

சங்கசரன்

கத்ரு குமான், நாகன்.

சங்கசூடன்

1. குபேரனுடைய தோழனாகிய குய்யகன். இவன் கிருஷ்ணமூர்த்தியிடம் கிரீடித்துக்கொண்டு இருந்த கோபி காசனங்களைக் கவர்ந்து செல்லுகையில் கிருஷ்ணனால் கொல்லப்பட்டுச் சிரோமணியை இழந்தவன். 2. காசியில் வீரேசலிங்க பூசை செய்து சித்தி யடைந்தாரில் ஒருவன். 3. பாதாள வாசியாகிய நாகன். 4. தருமக்கவசன் புத்திரியாகிய இலக்ஷ்மியை மணந்தவன். 5. இவன் வைகுண்டத்திலிருந்த சுதாமன் எனும் கோபாலன், இவன் சாபத்தால் சங்கசூடன் எனும் அசுரனாகப் பிறந்து துலசியை மணந்து சுரரைவருத்தத் தேவர் வேண்டுகோளால் விஷ்ணு இவன் கழுத்திலணிந்திருந்த கவசத்தை யாசித்து வாங்கச் சிவமூர்த்தி யிவனைக் கொன்றனர். இவனிறந்த பின்னர் இவன் தேவியிடத்தில் கபடமாக விஷ்ணு வீர்யதானஞ்செய்தனர். பின் சிவபெருமான் அச்சங்கசூடன் எலும்பு முதலியவற்றைச் சூலத்தால் கடலிலிட்டனர். அவை சங்கு கூட்டங்களாயின, சங்கசூடன் கோலோகத்தில் பாரிஷதனால் அடைந்தனன். (பிரம்மகைவர்த்தம்). 6. முன்பிறப்பில் கோலோகத்திருந்த சுதர்மனிவன் இராதையின் சாபத்தால் பிறந்து ருத்ரரால் கொல்லப்பட்டு மீண்டும் கோலோக மடைந்தனன், இவனது யுத்தத்தில் விஷ்ணு விருத்த வேதியராய் இவன் கவசத்தை யாசித்துப் பினிவனுருக் கொண்டு இவன் மனைவியைப் புணர்ந்து மறைந்தனர். (தேவி~பா.)

சங்கடசதுர்த்தசி

இது சங்கடங்களைப் போக்குவதால் இப்பெயர் பெற்றது. இதனை மாசிமாதம், அபரபக்ஷ செவ்வாய்க் கிழமையில் அநுஷ்டிப்பர். இது விநாயகர்க்கு உரிய விரதம். இதை அநுஷ்டித் தவன் அங்காரகன்.

சங்கடன்

ககுபு என்னுந் தக்ஷன் பெண்ணுக்குக் குமரன். தந்தை தருமன்,

சங்கணன்

(சூ.) வச்சிரநாபன் குமறன்.

சங்கதன்

தேசாதனன் குமரன். இவன் குமரன் சாலிலூகன்.

சங்கதருமன்

சுதமதிக்கும் அவள் தந்தைக்கும் தரும உபதேசஞ் செய்த ஒரு பௌத் முனி. (மணிமேகலை)

சங்கதாசுவன்

பர்கிணாசுவனுக்கு ஒரு பெயர்.

சங்கதாவளன்

அத்திரிக்கு அநசூயையிடம் பிறந்தோன்.

சங்கத்தார்

பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையில் தமிழ்ச்சங்கத்திலிருந்த புலவர்கள். பாண்டியன் வற்கடகாலத்து நம்மை விட்டுப் பிரிந்த நும்மைத் தாங்கி கனோர் யாவர் என “காலை ஞாயிறு. இடர் கெடுத்தனனே” எனப் பாடித் தந்தவர்கள்.

சங்கத்தார் கோயில்

இது சோமசுந்தரக் கடவுளுடைய, திருக்கோயிலுள் பெரிய பிராகாரத்தில் வாயு மூலையிலுள்ளது. இதில் முருகக்கடவுள், அகத்திய முனிவர், சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மர் ஆகிய இவர்களுடைய திருவுருவங்கள் முதலியன வுள்ளன. (திருவிளையாடல்.)

சங்கத்தார்களுடைய திருவுருவங்கள்

பொற்றாமரையின் வடகரை மண்டபத்திலுள்ள தூணப்பத்திகளிலும், ஸ்வாமி கோயிலுள் வாயு மூலையிலுள்ள ஆலயத்திலும் சங்கத்தார்களுடைய திருவுருவங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. (திருவிளையாடல்)

சங்கநகன்

கத்ரு குமரன். நாகன்.

சங்கநிதி

சங்கின் வடிவினதாகிய நிதி இது குபேரனிடம் உளது. கேட்டதைத் தரும் வலியுளது.

சங்கன்

1. ததுபுத்திரன், பாரதவீரரில் ஒருவனாகப் பிறந்தோன். 2. விராடனுக்குச் சுரதையிடம் பிறந்த குமரன். 3. பாதாளவாசியாகிய நாகன். 4. சூரபன்மன் படைத்தலைவரில் ஒருவன். 5. ஒரு வாநரத்தலைவன். 6. கம்சன் தம்பி. 7. சூரியவம்சத்து அரசர்களில் ஒருவன் இவன் விஷ்ணுபூசாபலத்தால் இழந்த நாட்டை அடைந்து திருவேங்கடத்தில் பெருமாளுக்கு விமான கைங்கர்யஞ் செய்தவன். 8. சேதுவில் தன்பெயரால் தீர்த்தல் கண்ட இருடி, 9. ஜநமேஜயன் குமான். 10. கர்ணன் குமான். 11. இராவணன் சேனாவீரரில் ஒருவன். பனசன் என்னும் வாநரசேனாதிபதியால் தோல் அறையுண்டு இறந்தவன். 12. ஒரு முனிவன். இவன் தன் தமயனில் லாக்காலத்துத் தமயன் வைத்த உண வையருந்தித் தமயனால் கையறுப்புண்டு புண்ணிய தீர்த்த ஸ்நானத்தால் கைவளரப் பெற்றவன்.

சங்கன்னன்

இவன் இதற்கு முன் சன்மத்தில் வேதியனாயிருந்து பல தீமைகள் செய்ததால் வேடனாகிச் சிவத்தல யாத்திரை செய்வாருடன் சிவவேடம் பூண்டு சென்று அவிநாசித் தலத்தில் நடராஜமூர்த்தியின் திருவடியில் தரித்திருந்த சிலம்பைத் திருடக் காலம் பார்த்திருந்து கிட் டாமையால் அத்திருவடியை யெண்ணி மரணமடைந்து முக்தி பெற்றவன். (அவ நாசித் தலபுராணம்)

சங்கபாலன்

1. சூரபன்மனுக்கு மந்திரி. 2. உவகபாலகரில் ஒருவன். 3. கதரு குமரன், நாகன். 4. சண்முக சேநாவீரன்.

சங்கமஈசுவரன்

காசியில் பிரமன் தாபித்துப் பூசித்த சிவமூர்த்தி.

சங்கமங்கை

சாக்கிய நாயனார் முத்தி அடைந்த தலம்.

சங்கமன்

1. கௌரிநகரத்து அரசன். 2. நீலிக்குக் கணவன், ஒரு செட்டி. (மணி.)

சங்கமன்னர்

தருசகனோடு போர் செய்தற்குவந்த எலிச்செவியரசன் முதலியோர். இவர்கள் இராசகிரிய நகரத்தின் பக்கத்தே உதயணனால் தோல்வியுற்றுச் சென்றார்கள். பின்பு உதயணன் தன்னோடு போர் செய்வதற்கு வந்த காலத்தில் துணையாக இருத்தற் பொருட்டு ஆருணி யாசனால் அழைக்கப்பட்டனர். (பெ. கதை).

சங்கமராசசோழன்

சோழ அரசர்களில் ஒருவன். இவன் குமரர், நல்லமன், குமாரமகீதான், சங்கரன் என மூவர்.

சங்கமர்

இவர்கள் சிலிங்கம் கட்டிகளில் ஒருவகை பிக்ஷகள். இவர்கள் இருவகையினராகப் பிரிக்கப்படுவர். பட்டாதிகாரர்கள், சரமூர்த்திகள் இவர்களில் நிலையான இடமுடையர் சிலர். சிலர் ஊரூராய்ச் சென்று பிரசங்கஞ் செய்து ஜீவிப்போர் சிலர். (தர்ஸ்டன்)

சங்கமித்ரை

அசோகன் குமரி அசோகன் சொற்படி புத்த சமயத்தைப் பாவச் செய்வதற்குத் தேச யாத்திரை செய்தவள்.

சங்கம்

1. சங்கசூடனைக்காண்க. இச்சங்கங்கள் சுரார்ச்சி தங்களுக்குப் பரிசுத்தமானவை. தேவதைகளுக்கு மிக்க பிரீதியுள்ளவை. இச்சங்க தீர்ததம் கங்கா தீர்த்தத்திற்குச் சமம். எவ்விடத்தில் சங்கத்வனியுண்டாம், அவ்விடம் லக்ஷமி வசிப்பள், எவன் சங்க தீர்த்தத்தால் ஸ்நானஞ் செய் கிறானோ அவன் சர்வ தீர்த்தத்திலும் ஸ்நானஞ் செய்தவனாகிறான். (பிரம்மகைவர்த்தம்.) 2. முதலிடை கடைச் சங்கங்களைக் காண்க, 3. கோபாலவிருத்தர் ஸ்நானஞ்செய்து பரிசுத்தம் அடைந்த தீர்த்தம்,

சங்கம்

சமயமாகீர்த்தியைக் காண்க.

சங்கயாதி

நகுஷன் குமரன்.

சங்கயாப்புடையார்

சங்கயாப்பென்னும் யாப்பிலக்கண நூலாசிரியர். இவர் பெயர் இவ்வாறே யாப்பருங்கலவுரையில் வழங்கப்பட்டது.

சங்கரகவி

போஜராஜனிடம் இருந்த வட நூற்புலவன்.

சங்கரசித்தன்

திருஷ்ணனுக்குப் பத்திரையிடம் பிறந்த குமரன்.

சங்கரதாசையர்

இவர் ஒர்சிவனடியவர், இவர் சிவனடியவரதுகிழிந்த உடைகளைப் பொத்தித் தருவதே விரதமாகக் கொண்டவர். சிவமூர்த்தி தரிசனந்தா நெற்றிக் கண்பெற்றுக் கரவித்த தேவர் முதலியோரை எரித்து வரும் நாட்களில் சகதேவ மல்லன் எனும் பாகவதன் எமது நாராயணனை இவர் எரிக்கவல்வரோ என்று இறுமாப்புடன் கூறினன். சங்கர தாசையர் தமது நெற்றிக்கண்ணால் அவன் பூசித்துவந்த நமசிங்கவிக்கிரகத்தை நோக்க அது நீறாயிற்று. இவரைச் சேடதாசையர் தரிசித்து இவர் மடத்தில் நெல் முதலிய இல்லாமை நோக்கி ஒரு வேலையாளிடம் நெற்கொடுத்து அனுப்பினர், சங்கரதாசையர் அந்தநெல்லை ஒரு பிடியாகப் பிடித்தனர். இதனால் ஒரு சிவனடியவர்க்குப் பட்டாடை நெல் முதலிய கொடுத்துப்பெற்ற செல்வங்கள் போகக்கண்டு, மீண்டும் சங் சாதாசரிடத்துத் தாம் கூலியாளிடத்து அனுப்பிய குற்றத்திற்குப் பொறைவேண்டினர்.

சங்கரதி

(சங்.) சையாதி குமரன், இவன் குமரன் ரௌத்திராசுவன்.

சங்கரன்

1, சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2. ஏகாதசருத்ரருள் ஒருவன்.

சங்கரன்

ஒரு பிரபு, புதுவையிலிருந்தவர் இவரிடம் ஒட்டக்கூத்தர் உபகாரம் பெற்றிருந்தனர். இவர் புதுவைச் சடையன் என்பவருக்குத் தந்தை.

சங்கரபாண்டியன்

சாகல முனிவனைக் கொன்ற பிரபகத்தியால் தனுக்கோடியில் ஸ்நானஞ்செய்து புனிதம் அடைந்தவன்.

சங்கரமுதலியார்

இவர் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து ஒட்டக்கூத்தரை முதலில் ஆதரித்த பிரபு. வெண்ணைச் சடையப்ப முதலியாருக்குத் தந்தையார். கி. பி. 11. ஆம் நூற்றாண்டு.

சங்கரவரசன்

துவாரவதி யென்னும் நகரத்திற்குத் தலைவன். பல அரசர்களை வென்று அடிப்படுத்தியவன். தருசகனோடு போர் செய் பதற்கு வந்த அரசர்களுள் ஒருவன் (பெ. கதை)

சங்கராசாரியசுவாமிகள்

கேரள நாட்டில் சிவகுரு என்பவருக்கு ஆர்யாம்பாளிடம் கலி, (3058)க்கு சரியான விக்ரமசகம் (14) வது ஈசுவரவருடம்வைகாசி மாதம் அவதரித்தவர். இவரது குழந்தைப் பருவத்தில் நாகம் ஒன்று இவரைச் சுற்றி விளையாடிப் பலருங்காண விபூதி ருத்திராக்ஷமாயிற்று, இவரிடம் இருந்த சிவசின்ன முதலியவற்றைக் கண்ட தந்தை முதலியோர் இவர்க்குச் சங்கரர் என நாமகாணஞ் செய் தனர். இவர் குழந்தைப் பருவத்தில் பூசுணைக்காயிலிருந்து வெளிவந்தும், சிவநின்மால்யம் தம்மீது இருக்கக் காட்டியும், சுழல் காற்றில் ஆகாயத்தில் மறைந்தும் எட்டுக் குழந்தைகளுருவாய்ப் பின் ஒரு குழந்தையாயும், பாடலேசுரர் திருத்தேர் விழாக்கொள்ள அவ்விடம் விக்ரகமூர்த்தி மறையத் தாமே குழந்தையாய் அங்கிருந்தும் பல அற்புதங்களைப் புரிந்து வந்தனர். இவர், தந்தையிறக்க அவரைச் சிதை மேலிட்டு ஒரு தருப்பையைக் கிள்ளி மேலிட அது நன்மணம் வீசக் கண்டு தந்தைக்குக் கரும முடித்தனர். ஒரு நாள் அயாசித தீக்ஷிதர் மனையில் பிக்ஷை கேட் கையில் அந்த வீட்டு அம்மணி ஒரு நெல்லிக்கனி தந்து வருந்திநிற்க இவர் ஸ்ரீதேவி மந்திரத்தால் அதைப் பொன்கனியாக்கித் தந்தனர். தாயின் பொருட்டு ஒரு நதி வருவித்தனர். சத்தியவந்தன் எனும் அரசனுக்குப் புத்திரப்பேறு அருளித் தாயின் கட்டளைப்படி சந்நியாசம் பெற்றுத் தன் காலைக்கவ்விய சுக்கிராகியென்னும் முதலை யுருக்கொண்ட காந்தருவனுக்கு நாரதரால் நேர்ந்த சாபத்தைப் போக்கி, கிருஷ்ணாலயம் தாபித்துக் கோவிந்த யோகியரிடம் தீக்ஷைபெற்று வேதியர் பொருட்டு வெள்ளத்தைக் கமண்டலத்துள் அடக்கி ஆசிரியர் வெயிலில் வரக்கண்டு கையிலிருந்த துண்டத்தை ஆகாயத்திலெறிந்து பற்று வாரின்றி நிழல் செய்து வரச்செய்து சந்தானாசிரியனுக்கு அருள் செய்து காசிசென்று விச்வநாதரைத் தரிசித்து ஆசிரியர் சொற்படி வியாசரைக் காணப் பதரிகாச்சிரமஞ் சென்று வியாசரைக் காணாது நரநாராயண வாச்சிரமஞ்சென்று நாராயண முனிவரைக் கண்டு பல மதங்களைக் கண்டித்து வியாசரைத் தரிசித்து அவரால் ஆயுள் பெற்று வியாக்கியான சிம்மாசனாதீசுரன், ஷடுத்தரிசனஸ்தாபனாசாரியன், பூமண்டலாசிரியன், சர்வதந்தர சுவதந்தரன் எனப்பட்டுப் பட்டபாதர் வேக்காடு தீர்த்து விச்வரூபர் இடத்து விருந்தாய்ச் சென்று அவரை வாதில் வென்று அநுக்கிரகித்து உபயபாரதியாருடன் வாதிட்டு அவர் சிற்றின்பு விஷயமாய் வினாவிய வினாக்களுக்கு ஒரு மாத தவணையில் விடை கூறுகிறேனென நீங்கித் தமது மாணாக்கருடன் காட்டிற்சென்று குகையிற் றங்கித் தம்முடம்பை மாணாக்கர்வச மொப்புவித்து வேட்டைக்கு வந்த அமாகன் தேகத்தில் புகுந்து அரசாண்டு காமகலை பயின்று அனுபவித்து இருந்தனர். இவர் அரசராக இருக்கையில் நாடு மிக்க வளங்கொண்டிருத்தலைக் குறிப்பாலுணர்ந்த மந்திரியர், இவர் ஓர் மகா புருடர் என்று எண்ணித் தம் ஏவலாளர்க்கு எங்கேனும் உயிர் ஒழிந்த உடல் காணப்படின் அதனையுடனே தகனஞ் செய்க எனக் கட்டளை பிறப்பித்தனர், இது நிற்க, முன் ஆசிரியர் சொற்படி தேகத்தைக் காத்திருந்த மாணாக்கர் ஆசிரியர் கூறிய தவணையில் வராதது கண்டு தாம் ஆசிரியர் தேகத்தை ஒரு மலையில் இட்டுத் தாம் இசைப்புலவர் வேடம் பூண்டு ஆசிரியரிடஞ் சென்று தத்வமசி வாக்கியத்தைப் பாடினர். இதனையறிந்த சங்கரர் அரசன் தேகத்தை விட்டுத் தமது தேகத்தில் செல்ல முயன்றனர். முன் மந்திரியர் கட்டளை பெற்ற ஏவலாளர் இறந்த உடலினைத் தேடுகையில் மலைமீது சங்கரரது உடலினைக் கண்டு எடுத்துத் தீ மூட்டிச் சென்றனர். சங்கரர் எரிந்து கொண்டிருந்த வுடலிற் புகுந்து சுவாலாதாசிங்கத் தோத்திரஞ் செய்ய அத்தீத் தணிந்தது. பின் கராவலம்ப மென்னுந் துதி செய்யத் திருமால் ஸ்ரீதேவியுடன் காட்சி தந்து கைகொடுத்துத் தூக்கிவிட்டனர். பின்னர் சங்கரர் ஆகாய வழியாய்த் தமது மாணாக்கருடன் மண்டன பண்டிதர் மனைக்கண் சென்றனர். அப்போது உபயபாரதியார் அங்கு வந்து விழுந்த அமரகநூலைக் கண்டு சங்கரருக்கு வெற்றியருளினர் பின் சங்கரர் உபயபாரதியாரை ஞானசாரஸ்வத மென்னும் துதியால் தோத்திரித்து நீங்கினர். பின் ஒருகால் தம் தலையை யசித்த கபாலி மதத்தனுக்கு அத்தலை கொடுக்கத் துணிந்து சந்தனாசாரியாரால் காக்கப்பட்டு, கொல்லூரில் இறந்த வேதியன் மகனை யெழுப்பி ஸ்ரீமூகாம்பாள் தோத்திரமியற்றி ஸ்ரீவல்லிபுரத்தில் பிக்ஷை செய்துகொண்டிருக்கையில் ஆண்டிருந்த பிரபாகாபட்டர் தமது ஒரே குழந்தை வாயுங் கேள்வியும் இல்லாமைகண்டு இவர் முன் விட்டனர். சங்கரர் அப்பிள்ளையை நீயார் என அது செய்யுட்களால் பிரமவுண்மை கூறியது, சங்கரர் அப்பிள் ளைக்குத் தீக்ஷை செய்து அவ்விடம் விட்டு நீங்கிச் சிருங்ககிரிக்குச் சென்று ஒரு மடம் தாபித்து அவ்விடம் தம்மை வந்து அடைந்த ஆனந்தகிரி யென்னும் மாணாக்கருக்கு அருள் புரிந்து தாய்க்கடன் முடித்துத் திக்கு விஜயஞ் செய்து வருகையில் வந்தெதிர்த்த காபாவியாகிய கிரகசனை வென்று, மந்திர சித்திபெற்ற அபிநவகுத்தன் மூலநோய் ஏவ அவனை மாணாக்கரால் வெல்வித்துப் பிரமராக்கதனுக்குப் பிரமகத்தி போக்கிச் சர்வஞ்ஞபீடமேறி வென்று ஸ்ரீகேதாரஞ் சென்று பதரிகாச்சிரமம், துவாரகை, சகர் நாதம் முதலிய இடங்களில் மடம் தாபித்து ஆனந்தகிரி பதுமபாதர், அத்தாமலகர் முதலியோர்க்கு அபிடேகஞ் செய்து குருத்வம் நியமித்துத் தாம் தேவர் புகழச் சமாதியில் இருந்து திருக்கைலை யடைந்தனர். இவர் செய்த நூல்கள்: கல்யாணவிருஷ்டிஸ்தவம், காருண்யபூர்ணஸ்தவம், மகாபகாஸ் தவம், சந்தியா சோத்தாரம், நிரீதி ஸ்தவம், கங்காஷ்டகம், மனிஷாபஞ்சகம், சிவாத்மபூர்ணானுபவம், தோத்ரமஞ்சரி, பிர்மசூத்ரவியாக்யானம், பஞ்சருத்ரோப நிடதவியாக்யானம், நாசிங்கதாபனிவியாக்யானம், கௌஷதகிபிராம்மணவியாக்யானம், ஸ்ரீருத்ராத்யாயவியாக்யானம், பகவத் கீதாபாஷ்யவியாக்யானம், சநற்சுதாதீய வியாக்யானம், விஷ்ணுசகஸ்திரநாமபா ஷ்யவியாக்யானம், ஆத்மபோதம், கலா ரோகணம், தத்வாலோகம், அபரோக்ஷாது பூதி, அத்வைதசகஸ்திரம், உபதேசசகஸ்திரம், யுக்திசுலோகாஷ்ட சதி, வாகீச்வரிஸ்தவம், அமாகம். ஆதிசங்கராசாரியர் விஜயாலய சோழன் காலத்தவர் என்பது, வி கனக சபைபிள்ளையவர்களின் கருத்து. 830 850.

சங்கராமசித்

1. துரியோதனனுக்குத் தம்பி. 2. யாதவவீரருள் ஒருவன்.

சங்கருஷி

ஒரு முனிவன். இவன் ருஷிகளுக்குச் சூர்யனைப் பூசிக்கும் விதியையும் அவனது அர்ச்சனா விசேஷங்களும் கூறியவன். (விஷ்~புரா.)

சங்கருஷ்ணன்

1. வசுதேவருக்குத் தேவகியிடம் உதித்த குமரன். சனகருக்குத் தத்துவம் உபதேசித்தவன். (பலராமருக் கொரு பெயர்.) 2. விஷ்ணுவின் வியூகங்களில் சம்மாரத்தைச் செய்வது.

சங்கர்கள்

பரதகண்டம் ஆண்ட பூர்வ அரசர்களில் ஓர் வகுப்பினர்.

சங்கறுப்போர்

சங்கினால் கைவளை செய்யும் ஜாதியார்.

சங்கல்பன்

1. பிரமன் புத்திரன். 2. தருமனுக்குச் சங்கல்பையிடம் உதித்த குமரன்.

சங்கல்பை

தக்ஷன் பெண், தருமன் தேவி.

சங்கவதி

தேவசிரவசுவின் பாரி, குமரர் சுவிரன், இட்சுமான்.

சங்கவருணனென்னும் நாகரியர்

தந்து மாறனைப் பாடிய புலவர் (புற~நா.)

சங்கவெண்மலை

சுதஞ்சணன் மலை.

சங்கவ்வை, அங்கவ்வை

ஔவைக்கு இலைக்கறியிட்டு ‘ வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய்” எனுங் கவி பெற்ற பெண்மணிகள்,

சங்காசுரன்

ஒரு கற்பத்தில் வேதங்களை அபரித்து விஷ்ணுவால் கொலையுண்ட அசுரன். (பாத்மராணம்.)

சங்காந்தித்யாபன விரதம்

இதை விஷுவத் புண்ணியகாலத்திலாயினும், உத்தராயண புண்ணிய காலத்திலே யாயினும் ஆரம்பித்து, ஒருவருஷம் சூரியனை ஆராதிக்க வேண்டியது. இது சப்த தீவுகளோடு கூடிய பூதான பலனைத் தரும். இது காரதனுக்கு நந்தி சொன்னது.

சங்கினி தீர்த்தம்

ஒரு தீர்த்தம்.

சங்கியை

சூரியன் தேவி. விச்வகர்மன் பெண் இவன் சூரியனது வெப்பத்தைப் பொறாது ஒருத்தியை நியமித்து வைத்துவிட்டுத் தந்தையிடஞ் செல்லத் தந்தை மறுத்தது கண்டு இவள் பெட்டைக்குதிரை உருக்கொண்டு தவத்திற்குச் சென்றனள். பின்பு சூரியன் தனது தேவியைக் காணாது மாமனாரிடம் வந்து இருக்குமிடம் அறிந்து ஆண்குதிரை யுருவாய் அவளைத் தொடர்ந்தனன். இந்தக் குதிரையின் மூக்கின் தொளையின்வழி ஒழுகிய ரேதசில் அஸ்வதிதேவர் பிறந்தனர். இவட்குச் சஞ்ஞாதேவி எனவும் பெயர்.

சங்கிரதி

1. சுமாலியின் குமரன், அரக்கன், 2. (சங்.) நரன் குமரன். இவன் குமரர் குரு, ரந்திதேவன்.

சங்கிரன்

இவன் ஒரு தருக்கசாத்திரம் வல்ல வேதியன், தருக்கத்தால் யாவுஞ் சூனியம் எனக் கண்டு மோக்ஷநூல் ஓதாமல் நரகம் அடைந்து ஒரு முனிவரால் நரகத்தினின்று நீங்கியவன். (சூதசம்மிதை)

சங்கிரமணம்

1. சூர்யன் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குள் பிரவேசிக்கும் க்ஷணத்திற்குப் பெயர். இது மேஷஸக் கிரமணம், கடகஸங்கிராந்தி, மகாஸங்கிராந்தி, இதைச் சங்கிராந்தி யெனவும் கூறுவர். 2. சூரியன் மேஷ, கடக, துலா, தனுஸு, இராசிகளில் பிரவேசிக்கும் புண்யகாலம்.

சங்கிராந்தவாதசைவன்

அவிகாரியாகிய ஆன்மசந்நிதானத்தில் அசத்தாகிய கருவிகளே சத்தாகிய சிவத்தைத் தெரிவிக்கும் என்பன். ஆன்மசந்நிதானத்தில் உயிர் சேட்டிக்கும். ஆணவம் நீங்கச் சத்திநிபாதம் உண்டாகும். உண்டாகக் கர்த்தாவின் அருள் உண்டாகும். விறகில் தீயுண்டாய் எரிந்து செல்லக் கடைசியில் விறகு அக்கினியானது போல் ஆன்மா தன்னிலை கெட்டு அருளுருவாய் ஒன்றுபட்டு முத்தி அடையும் என்பன்.

சங்கிராந்தி

1. சூரியன் தனுராசியில் சஞ்சரிக்குங்காலம். இது தேவர்க்கு விடியற் காலம். மகாசங்கிராமேசக்தி எனும் சத்தி தக்ஷிணாயன ஆறு மாதத்தில் மனிதரை மூதேவியுருவாயும், பசுக்களைப் புலியுருவாயும், வருத்தி வந்தபடியால் அத்துன்பம் ஈசுவராநுத்திரகத்தால் சிங்கினதால் தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள் களால் சசூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைக் கொண்டு அப்புலியுரு கொண்ட சக்தியை ஓட்டுன நாள். இதை மாட்டுப்பொங்கல் என்று வழங்குவர். (சிவாகமம்). 2. இவ்வாறன்றி இந்திரன் மழை வருஷிப்பிப்பவன் ஆதலால் அவன் செய்த நன்மைபொருட்டுத் தை முதலில் அறுத்த முதற்பயிரை மழைக்கடவுளாகிய இந்திரனுக்கு ஆராதித்துவந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்த பின் அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளையிட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துப் பெருமழை பெய்விக்கக் குடிகள் நிலை குலைந்து மாடுகன்றுகள் இழந்து தடுமாறச் கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடிகளைக் காத்தனர் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்டச் சங்கிராந்திக்கு முன்னாள் அவன் பெயரால் பண்டிகைசெய்வித் தனர். அது போகிபண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்தி பண்டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்றுகளைத் தளையவிழ்த்து விட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் என்றும், மறு நாள் ஒருவரை ஒருவர் சென்று மழையால் உண்டாகிய சுகாசுகங்களை விசாரித்ததால் காண்பொங்கல் என்றும் கூறுவர். இந்த மழையால் இடிந்தவீடுகளைப் பழுதுபார்த்துச் சுத்தப்படுத்தினராதலால் அவ்வழக்ப்படி இப்போதும் வீடுவாயில்களைச் சுத்தப்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் சிலர் வீடுகளை மலைமண்ணால் மெழுகிச்சுத்தஞ்செய்தனர் ஆதலால் இப்போது செம்மணிடுதல். அம்மலையடிவாரத்தில் குடி புகுந்தோர் சிலர் சமைக்க அடுப்புத் தோண்டியும், வறட்டிமூட்டியும், பனையோலையிலும் தீமுட்டினராதலால், இப்போதும் அவ்வகை செய்துவருகின்றனர்.

சங்கிருதம்

பிராகிருதபாஷை

சங்கிருதி

1. (சந்.) செயசேநன் குமரன். இவன் குமரன் தர்மா. 2. நரன் குமரன். குமார் குரு, இரந்திதேவன், 3. ஒரு இருடி

சங்கிலாதவன்

ஒரு சிவகணத்தலைவன்.

சங்கிலியார்

இவர் பார்வதிபிராட்டியார் சந்நிதானத்துத் திருப்பணிசெய்துகொண் டிருந்த தோழியர் இவர் ஆலாலசுந்தரரைக்கண்டு சித்தசலனப்பட்டுப், பார்வதிபிராட்டியார் கட்டளைப்படி திரு வொற்றியூருக்கு அருகிலுள்ள ஞாயிறு என்னுந்தலத்தில் ஞாயிறு கிழவர்க்குப் புத்திரியராக அவதரித்துச் சுந்திரமூர்த்திசுவாமிகளை மணந்தவர். இவரை மணஞ்செய்ய விரும்பி ஒருவன் சிலரை விடுத்து மாய்ந்தனன். இவரது மற்ற சாதங்களை ஸ்ரீசுந்தரமூர்த்திகளைக் காண்க.

சங்கீரணவணி

அலங்காரநூலிற் கூறிய அலங்காரங்களிற் பல பொருந்தவுரைப்பது. (தண்டி)

சங்கு

இது கடலிலும் சரி, ஆறு, குளங்களிலுள்ள பிராணி, முதுகெதும்பில்லாதவை. இது நத்தையைப் போல் உருவமுடையது, இதில் பலவகைக் சங்குகள் உண்டு, இவற்றில் வலம்புரிச்சங்கே விசேஷம். இதன் ஓட்டை மாம்சத்தைப் போத்திப் பான பாத்திரமாகவும், ஊது கருவியாகவும் உபயோகிப்பர். இப்பி 1000 சூழ்ந்தது. இடம்புரிச்சங்கு, இடம்புரி 1000 சூழ்ந்தது வலம்புரி. வலம்புரி 1000 சூழ்ந்தது பாரஞ்சசன்யம். 1. ஒரு யாதவ வீரன். 2. ஒரு அசுரன் திதி புத்திரன். 3. உக்கிரசேனன் குமரன். 4. விஷ்னுவின் சங்கு பாஞ்சசன்யம். தருமராஜனுக்கு அநந்தல ஜயம். தனஞ்சயனுக்குத் தேவதத்தம். பீனனுக்குபௌண்டரம். நகுலனுக்குச் சுகோஷம். சகதேவனுக்குப் புஷ்பகம்.

சங்குகன்னன்

1. சிவகணங்களில் ஒருவன். 2. ஒரு விஷ்ணுபடன். 3. காசிக்ஷேத்திரத்தில் பிசாசமோசன வாவியிடைத் தவஞ்செய்த வேதியன். இவன் தவஞ் செய்கையில் ஓர் பிசாசு தோன்றித் தான் முற்பிறப்பில் மனைவியைவிட்டு அயல் மாதரைப் புணர்ந்து தருமத்தில் பொருளைச் செலவிடாததால் இவ்வுருப் பெற்றனன் என வேண்டிற்று. வேதியன் பிசாசினைப் பிசாச மோசன தீர்த்தத்தில் முழுகக் கட்டளையிட்டனன் பிசாசம் அவ்வகைசெய்து நல்லுருப் பெற்றது. இதனால் வேதியனாகிய சங்குகன்னனும் சிவபிரானைப் பணிந்து முத்தி பெற்றனன், 4, அவிநாசியப்பர் திருவடியினுள்ள பொற்சிலம்பைக் கவரத் திருவடியை நோக்கி இருந்த புண்ணியத்தால் முத்தி அடைந்தவன் 5. ஒரு முனிவர் தந்துவர்த்தன சோழனுக்குப் புத்திரப்பேறருள் செய்தவர். (பவானிகூடற்புராணம்.)

சங்குகள்

1. இவை நத்தைகளைப் போல் இரண்டு மூடிகளைக் கொள்ளாமல் ஒரே ஒடுள்ளனவாக இருப்பன. இவற்றில் சிறியது கடுகினளவும், பெரியது. ஒரு அடிக்கு மேலும் இருக்கின்றன. சங்குகள் முட்டையிடும்போது முட்டைளை அடுக்காக்கி அதற்குக் காப்பாக ஒரு கூட்டைக் கட்டுகிறது. அதில் அச்சங்கும் பூச்சிகள் வளர்ந்து தாமே கூட்டைவிட்டு வெளிவருகின்றன. இவ்வினத்தில் பல வகை உண்டு, இவை நன்னீரிலும் பிறபதுண்டு, இவ்வகையில் பலகறை, இராவணன் விழி, சொறிசங்கு, பல்பப்பூச்சி எனப் பலவகை உண்டு,

சங்கோசன்

ஒரு புலையன், இவன் அரசன் அரண்மனையில் திருடின தால் கொலைக்களத்தில் கொலை செய்வோர் கொல்லுகையில் சிவத்யானஞ்செய்தனன். வாள் மலர் மாலையாய்க் கழுத்தில் விழ நற்பத மடைந்தவன். (பவானிகூடற்புராணம்).

சங்கோடன்

குபேரனுக்குச் சேனாபதி.

சங்சிரசு

தநு புத்திரரில் ஒருவன்.

சசஜசையோகம்

சையோகமுடையதின உற்பத்தியுடன் உண்டாவது.

சசபதர்

ஒரு மகருஷி, இவர் பாண்டிநாட்டில் பாண்டரம் என்னு மலையில் தவஞ் செய்து வந்தனர். இவரது தவத்தினைக் கெடுக்க இந்திரன் ஹேலை என்னும் அப்ஜரஸ்திரியை விட அவள் இவர்க்கு முன் கானஞ் செய்து இவரைக்கூடி மதுமானைப் பெற்றாள். (திருவல்லிக்கேணி புராணம்.)

சசபிந்து

1. (சூ) விந்துமதிக்குத் தந்தை. மாந்தாதாவின் மாமன். 2. இளன் குமரன். 3. ராஜரிஷி விருஷ்ணி வம்சத்தவனாகிய சித்திரரதன் புத்திரன். இவனுக்கு 10,000 தேவியர். ஒவ்வொரு தேவிகளிடத்தும் 1000 பிள்ளைகள். புத்திரி விந்துமதி. மாந்தாதாவின் பாரியை. (பார, து.)

சசாங்கன்

முயற்கறையை மத்தியலுடைய சந்திரற்கு ஓர் பெயர்.

சசாதன்

சூரியவம்சத்து இக்ஷ்வாகு புத்திரனாகிய விகுட்சிக்கு ஒரு பெயர். இவன் புத்திரன் ககுஸ்தன். (பா. வி.)

சசாரத்துவதி

1. துரோணசாலியர் பாரியை. கிருபிக்கு ஒரு பெயர், 2 ஒரு அப்லாசு.

சசி

1. இந்திராணிக்கு ஒரு பெயர். 2. பிரசாபதியின் இளையராணி. (சூளா)

சசிசேகரச்சோழன்

தேவசோழன் குமரன். இவன் செண்பகவல்லியை மணந்து (70) வருஷம் அரசாண்டு வருகையில் குணவல்லி என்னும் பெண்ணைப் பெற்றுப் பாண்டியற்குக் கொடுத்தவன் ஒருமுறை காவிரியில் வெள்ளம்வர அதனால் குடிகள் துன்பம் அடைந்தது கண்டு அரசன் (40) நாள் சிவத்தியானஞ்செய்யச் சுவாமி கனவில் தோன்றி நாம் அளவாகச் சலத்தை அனுப்புகிறோம், நீ அணை கட்டி அதனைக் கொள்ளிடத்துத் திருப்பிக்கொள் என்றனர். அந்தப்படியே காவிரியும் கனவில் தோன்றித் தன்னில் அணை கட்டும்படி சொல்லச் சோழன் ஸ்ரீரங்கத்திற்குக் கிழக்கே பஞ்சலோகம் வார்த்து அணை கட்டினான் ஆதலால் இவனுக்குக் காவிரி அணைகட்டிய சோழன் என்றும் பெயர். இவன் குமரன் சிவலிங்க சோழன்.

சசித்துவஜன்

பல்லாடதேசத்து அரசன். இவன் குமரன் சூரியகேது, உடன் பிறந்தான் பிரகத்கேது. இவன் பரம பாகவதன். கல்கியுடன் யுத்தஞ்செய்ய வந்து கல்கியால் கொண்டாடப் பெற்றவன். இவன் தேவி சுசாந்தையால், கல்கி ஸ்தோத்திரஞ் செய்யப்பட்டார். இவன் குமரி ரமா. இவள் கல்கியை மணம்புரிந்தாள். இவன் தன் குமரியைக் கல்கிக்கு மணஞ் செய்விக்க வந்த புண்ணியமாவது பூர்வ சன்மத்தில் இவனும் இவன் பாரியும் கழுகாக இருந்தவர்கள். ஒருநாள் இவர்களை ஒரு வேடன் வலையில் அகப்படுத்தி வெட்டிக் கண்டகிந்திதிரத்தில் சமைத்தான். அந்நதிக்கரையை அடைந்த புண்ணயத்தினாலே விஷ்ணுபதம் அடைந்து நூபறுயுகங்கள் வசித்துப் பின் பிரமலோகத்து ஐந்நூறு யுகங்கள் வசித்துப் பின் பூமியில் வசிக்கவேண்டும் என்னும் ஆசையினால் இவ்விடத்தில் அரசராய்க் கக்கியாகிய நாராயணமூர்த்தியைக் கண்டார்கள். இவன் பூர்வசன்மத்தில் சத்திராசித், இவன் குமரி பூர்வசன்மத்தில் சத்தியபாமை. இவர்கள் சத்திராசி பெற்ற சிமந்தக மணியையும் சத்தியபாமையையும் சததன்வா கேட்டுக் கொடாத்தினால் சததன்வா ஆனவன் முற்பிறப்பாகிய சத்திராசித்தைக் கொல்லச் சத்திராசித் சசித்துவசனாகப் பிறந்தான். அவன் குமரி சத்திய பாமையும் அத்தேசத்தை நீங்கச் சசித்துவஜன் குமரியாகிய ரமாவாகப் பிறந்து கல்கியை மணந்தாள். (கல்கி புராணம்)

சசிபிந்து

சித்திரரதன் குமரன். இவன் மகாபோகி, மகாயோகி, பிறரால் ஜெயிக்கப்படாதவன். இவனுக்குப் பதினாயிரம் மனைவியர். இவன் மனைவியர் ஒவ்வொருவருக்கும் இலக்ஷம் குமரர் பிறந்தனர். இவர்களில் சிரேட்டர், பிருது சிரவசு, பிருதி கிருதி, பிருது, எசசு. (பாகவதம்).

சசிமுகன்

சண்முகசேநாவீரன்.

சசிவன்

போர்க்குரிய படையியல்பு அனைத்தையு மறிந்தவன். (சுக்~நீ)

சசிவர்ணன்

1, பாகஎக்யன் குமரன். இவன் காம இச்சையால் பொருள்களை வேசையர்களுக்குச் செலவிட்டுப் புலைச்சியைப் புணர்ந்து ரோகியாய்த் துன்பப்படுகையில் இவன் தந்தை தேவபத்தன் என்னும் இருடியிடம் தன்குமரன் நிலை கூற அவர் கோபருவதத்தில் மகரந்தபா யணர் என்னுஞ் சிவயோகியிடஞ் செல்லின் நீங்கும் எனக்கேட்டுக் குமரனுடன் சென்று அவர் அநுக்கிரகத்தால் நோய் தீரப் பெற்றவன். 2. விருத்தாசலத்தில் சாந்தசீலனுக்கும் விரதசீலை என்பவளுக்கும் பிறந்தகுமரன். இவன் பிறக்கும் பொழுது வெண்குஷ்ட ரோகம் இருந்தபடியால் இவனுக்கு இப்பெயர் வந்தது. இந்தநோய் இவனுக்குத் தத்துவராயசுவாமிகள் தீக்ஷை செய்தபின் நீங்கிற்று, இவன் செய்த நூல் சசிவர்ண போதம். 3. சோழதேசத்தில் சூரியபுரத்தில் இருந்த வேதியன். இவன் குமரன் நீலவர்ணன்.

சசிவர்ணபோதம்

சசிவர்ணனால் செய்யப்பட்ட விஞ்ஞானான்ம நூல்.

சசுவதி

அங்கீரசன்புத்ரி, அசங்கன் மனைவி.

சச்சந்தன்

சீவகன் பிதா. சீவகன் புதல்வருள் ஒருவன்.

சச்யகன்

பயிர்களுடன் கூடித் தீமை விளைவிப்பவன். ஒரு தெய்வம்.

சஜ்ஜனகசாருகர்

இவர் ஓர் ஊன்விற்பவர், பெருமாளிடத் துள்ளன்பாய்ச் சாளக்கிராமத்தை நிறைகல்லாய் வைத்துப் பூசித்திருக்கையில் கண்டவேதியர் ஒருவர் இவரையணுகி உனக்கு இது தகாது நீ ஊன் விற்போன் என அவரிற்பிரித்து அதைக் கொண்டு தாம் அன்று வேண்டிய சிறப்புடன் பூசித்தனர். அன்றிரவு பெருமாள் அந்தணர் கனாவிற்றோன்றி என்னைக் கசாருகரிடம் சேர்க்காவிடில் உன்னையும் உன் குடும்பத்தினையும் வருத்துவேனென வேதியர் பயந்து கசாருவிடத்தில் சாளக்கிராமத்தைச் சேர்த்தனர். சாளக்கிராமத்தை நீங்கிய கசாருகர் பெருமாளை நீங்கியது முதல் அன்னபானாதி களிலராயிருந்து சாளக்கிராமம் வந்தபின பூசித்துத் தீர்த்த பானஞ் செய்து உணவாதிகளருந்தினர். இவர் ஜகந்நாதயாத்திரை செய்ய வெண்ணிச் சாளக்கிராமததையு முடன் கொண்டு ஒர் கிராமத்தில் தங்க அங்கிருந்த ஒருத்தி இவரிடம் காமவிருப்புள்ளவளாய் விருந்திட்டு இரவிற்புணர அழைக்கக் கசாருகர் கணவனிருக்கையில் அயலவரைப் புணர்தல் அடுக்காதெனக் கேட்ட விபசாரி கணனைக் கொன்று அவன்றலையைக் கசாரு கரிடம் காட்டி உம் பொருட்டுக் கணவனைக் கொன்றேன் என்னைப் புணர்க அன்றேல் உன்மீது பழிசுமத்துவேன் என்றனள், கசாருகர் அப்போதும் மறுக்க விபசாரி என் கணவனைக் கொன்று என்னைப் புணர அழைத்தான எனக் கூக்குரலிடக் கண்டோர் அரசனிடம் விட அரசன் இவர் முகக்குறியால் சொலை செயாதவறென்றஞ்சிப் பிரத்யக்ஷமாகத் தலையிருத்தலால் அவள் கையில் சரிகை தந்து கசாருகர் கரத்தைத் துண்டிக்கச் செய்தனன். கை நீங்கிய சசாருகர் ஜகந்நாதஞ் சென்று பெருமாளைச் சேவிக்கச் செல்கையில் பெருமாள் என் தாசன் வருகின்றனவனை எதிர்கொண்டு சிவிகையில் சந்திக்குக் கொண்டு வருக எனக் கட்டளையிட அருச்சகர்கள் அவ்வாறே எதிர்சென்றழைக்கக் கசாருசர் நான் ஒரு தீங்கு செய்யாதிருந்தும் என் கைக்குறைத்தற்குக் காரணமென்ன எனப் பெருமாளை நோக்கி வருந்தப் பெருமாள் தரிசனந் தந்து நீ முன்பிறப்பில் வேதியன், கங்கைக்கரையில் தியானத்திருந்த காலத்துக் கசாருகன் ஒருவன் அவனைக் காணாது ஒடிவந்த பசுவினைக் கொலை செய்யவேண்டி யாண்டிருந்த வுன்னை யிவ்வழி பசுவந்ததைக் கண்டனை யோவென நீபேசாது கையாற் காட்டினையாதலால் கைகுறைபட்டனை கசாருகனாகப் பிறந்தனையென்று தாசருக்குணர்த்தி கைவளர அநுக்ரகித்தனர். இவருக்குச் சஜாணகசாயி யெனவும் பெயர்.

சஞ்சத்தகர்

இவர்கள் திரிகர்த்த தேசாதிபதிகளாகிய சுசர்மன், சத்யா தன், சத்ய நேசன், சத்யகர்மன், சத்தியவர்மன் முதலியவர். இவர்களுடன் அருச்சுனன் சண்டைசெய்கையில், கௌரவர் அமிமன்னனைக் கொன்றனர். இவர்க்குப் பதினாலாயிரம் வெண்கல ரதக்காரர் உண்டு!

சஞ்சயந்தன்

வீதசோக நகரத்தரசனாகிய வைசயந்தன் குமரன், இவன் தந்தையுடன் சினதீக்ஷை வகித்துப் பீமாரண்யத்தில் தியானித்திருக்கையில் வித்துத்தந்தனெனும் வித்யாதானது விமானம் இவனிருந்த இடத்திற் செல்லாமையால் வெகுண்டு இவனைத் தூக்கி விமானத்தில் வைத்துக் கொண்டு சென்று குமுதவி, சுவர்ணவதி, அரிவதி, கஜவதி, சண்டவேகை யெனும் நதிக்கப்பால் தன் விமானம் செல்லாதது கண்டு முனிவனைத் துன்புறுத்தியவ்விடம் தள்ளிச் சென்றனன். மீண்டும் வித்யாதரன் பல தீயரைக் கூட்டிவந்து உபத்ரவிக்க தேவர்களிவரிடம் பூஜார்த்தமாக வந்தடைந்தனர். வித்யாதரன் வெகுதூரம் போய் வீழ்ந்தனன். சஞ்சய முனிவன் அகாதி கர்மங்களைக் கெடுத்துலகுச்சி யடைந்தனன். (மேருமந்தரம்.)

சஞ்சயன்

1. கவதக்னி புத்திரன். பாண்டவ புரோகிதன் 2. திருதராட்டிரனுக்குப் பாரதவிருத் தாந்தங்களைக் கூறிய சூதபுத்திரன். 3. க்ஷத்ரவிருத்தன் பேரன், 4. பிரீதி குமரன். இவன் குமரன் சயன். 5. செங்குட்டுவன் தூதரில் தலைவன். (சிலப்பதிகாரம்) 6. திருதாராஷ்டிரன் தேர்ப் பாகன். இவனுக்குக் கவல்கணன் என்றும் ஒரு பெயர்.

சஞ்சலாசுரன்

ஒரு அசுரன். விநாயகமூர்த்தியிடம் பந்தாடவந்து அவரால் இறந்தவன்.

சஞ்சிதகன்மம்

இது, அநாதி முதல் சநனங்கள் தோறும் ஆர்ச்சித்த வினை புசித்துக் குறைபட்டது. இஃது ஆறத்துவாக்களிலும் கட்டுப்பட்டிருந்து ஆன்மா மறு சநனமெடுக்கையில் தொடர்வது.

சஞ்சிதம்

பழைய வரவு இது (3) வகை. பிறர்க்குரியதெனத் துணியப்பட்ட ஒளபநிதிகம், இன்னார்க்குரியதெனத் துணியப்பட்ட யாசிதம், தனக்குரியதெனத் துணியப்பட்ட ஒளத்தமாணிகம் என்பன. தனித் தனி காண்க. (சுக். நீ.)

சஞ்சீவீபர்வதம்

இஃது இலங்காபுரிக்கு வடக்கு (9000) யோசனையில் இமயம், அதற்கப்புறத்தில் அவ்வளது யோசனைக்கு அப்பால் ஏமகூடம். அந்த எம்கூடத்திற்கு (9000) யோசனைக்கு அப்பால் நிடதம். அந்த நிடத மலைக்கு (9,000) யோசனைக்கு, அப்பால் நீலம் என்னும் மலை. இதற்கு (4,000) யோசனைக்கு அப்பால் சஞ்சீவி பர்வதம். இதில் சந்தானகரிணி, சல்லியகரிணி, சமன்யகரிணி, மிர்தசஞ்சீவினி எனும் மூலிகைகள் இருக்கும். இவை அநேக தேவராலுங்கூரிய சக்கரத்தாலும் காக்கப்படும். இஃது இரண்டுமுறை இராம இராவணயுத்தத்தில் அனுமனாற் கொண்டுவரப்பட் டது. ஒரு பிரதியில் ஏமகூடத்திற்கு அப்பால் அவ்வளவு யோசனையில் நிடதம் எனவும், அதற்கப்பால் அவ்வளவு யோசனையில் மேரு எனவும், அதற்கப்பால் அவ்வளவு யோசனையில் நீலம் எனவும், அதற்கப்பால் சஞ்சீவிபர்வதம். எனவும் கூறியிருக்கிறது. மேரு விற்கு வடக்கு உத்தரகுரு.

சஞ்ஞக்கினன்

(சந்.) இவன் ஒரு சன்மத்தில் புறாவாகிச் சிவதரிசனஞ் செய்து மறுசன்மத்தில் அரசனானவன்.

சஞ்ஞாதேவி

விச்வகர்மாவின் குமரி சூரியன் தேவி, சங்கியைக் காண்க.

சடகோபக்கொற்றி

மணவாளமாமுனிகளின் ஆதிசேட வுருவத்தைக் கதவின் புரையில் கண்டு திடுக்கிட்ட வள்.

சடகோபதாசர்

இவர் தமிழில் வைணவ குரு பரம்பரையைச் செய்யுளாகப் பாடி யவர். இவர், தொண்டை நாட்டினின்று தென்னாடு சென்ற காளத்தி முதலியாரின் சந்ததியார் எனவும், இற்றைக்கு (300) வருஷங்களுக்குமுன் நாகப்பட்டினம் தாலுகா கீழையூரில் சடகோப ராமாநுஜ முதலியாரென்று பிரபலமாக வாழ்ந்தவர் எனவும் கூறுவர். இது செய்யுளாலியற்றிய முதல் குருபரம்பரை, இரண்டாவது குருபரம்பரை, மூன்றாவது குருபரம்பரை முதலிய உண்டு. குருபரம்பரைகாண்க.

சடகோபர்

நம்மாழ்வாரைக் காண்க.

சடகோபாசாரியார்

நடாதூர் அம்மாளை ஆச்ரயித்தவர். முகுந்த தேவராசாவில் சமஸ்தான வித்வான்களை அம்மாளின் சொற்படி வென்றவர். இவர் ஆசாரியர் சொற்படி மேனாட்டிற் சுவமதம்தாபிப்பதாய்ச் செல்லுகையில் அகோபிலன் சென்று பெருமாளைச் சேவித்து நீங்கித் திருநாராயணபுரத்தில் இருக்கையில் தம்மைப் பெருமாள் சந்நியஸித்துக் கொண்டு அகோபிலம்வந்து தரிசிக்கர் கட்டளையிட்டதாகச் சுவப்பனங்கண்டு ஆசாரியசந்நிதியில் விண்ணப்பித்து அதியாச்சிரமம் அடைந்து வண்சடகோப ஜீயர் என்று திருநாமம் பெற்று அகோபிலத்து ஒரு மடங்கட்டுவித்து ஆசாரியரால் எழுந்தருளியிருந்தனர். இது அகோபிலமடத்து ஆதிவண் சடகோபசுவாமியின் சரிதை.

சடங்கவிமறையோர்

சுந்தரமூர்த்திசுவாமிகளின் மாமனார். இவர் இருக்கை புத்தூர்.

சடங்கவிமறையோர் பெண்

சுந்தரமூர்த்தி செவாமிகளுக்கென நியமிக்கப் பட்டுத் திருமணநாளில் தடையுண்டு சுந்தரமூர்தி சுவமிகளையே தியானித்துத் திருக்கைலை அடைந்தவள்.

சடசீதி

ஆதித்தன் சரராசியினின்றால் (7) ஆம் பாகமும், ஸ்திரராசியினின்றால் (5) ஆம் பாகமும், உபயராசியினின்றால் (9) ஆம் பாகமும் சடசீதி யெனும் தோஷமாம். இதில் சுபகன்மங்கள் செய்யக் கூடாது. (விதானமாலை).

சடச்சு

(பிர) அநுபுத்திரன்.

சடன்

ஒரு யாதவவீரன்.

சடபரதர்

பரதனைக் காண்க.

சடரம்

நிஷதத்திற்கும் நிலத்திற்கும் நடுவிலிருக்கும் மலை.

சடாசியன்

சிவகணத்தவரில் ஒருவன்.

சடாசுரன்

1. பாண்டவர் தீர்த்தயாத்தி ரையிலிருக்கையில் பிராமணவடிவு கொண்டு துரோபதையைத் தூக்கிக் கொண்டு சென்றுவீமனாற் கொல்லப் பட்ட அரக்கன்.

சடாயு

1. அருணனுக்குச் சேதியிடம் பிறந்த குமரர், தாயைச் சேநியெனவுங் கூறுவர். இவர் சகோதரன் சம்பாதி தசரதர் நிலைகேட்டுத் தோழமை யறிவித்து இராமரிடம் புத்திரவாஞ்சை வைத்தவர். இராவணன் சீதாபிராட்டியை யெடுத்துச் செல்கையில் அவனைத் தடுத்து அவனுடன் போரிட்டு அவன் வச்சிரத்தால் வலிகுன்றி இராமபிரான் தம்மைக் காணும் வரையில் உயிர் தாங்கி இராமமூர்த்திக்கு இராவணன் செயல்கூறி உயிர்நீங்கி இராமமூர்த்தியால் நற்கதியடைந்தவர். இவரது மற்றச் சரிதைகளைச் சம்பாதியைக் காண்க. 50000 வருடம் உயிருடனிருந்தனர். தசரதனைக் காண்க. 2. திரேதாயுகத்தில் கழுகுருக் கொண்டு வேதகிரியில் பூசித்தவன்.

சடி

இரதநூபுரத் தரசன், அருக்கக் கீர்த்திக்குஞ் சயம்பிரபைக்குந் தந்தை,

சடிலன்

கௌதம வம்சத்தவனாகிய இருடி, இவர் பெண் எழுவரை மணந்தனள் குமரி சடிலை.

சடிலை

சடிலன் பெண். இவள் எழுவரை மணந்தனள்.

சடையநாதவள்ளல்

இவர் தொண்டை நாட்டுப் புழற்கோட்டத்து இருந்த வேளாண்குடிப்பிறப்பினர். பாண்டியன் சபையில் கழைக்கூத்தின் வகுப்பாகிய விச்சுளி வித்தையாடிய கழைக்கூத்தியை அரசன் விரும்புவான் என்று அறிந்த அரச பர்தினி, கழைக்கூத்தி ஒரு தரம் செய் யவல்ல விச்சுளி வித்தையை அரசன் காணாதபடி தன்னிடம் கவனிக்கச் செய்கையில் கூத்தி அவ்வித்தை செய்து முடித்தனள். அரசன் அவ்வித்தையைப் பாராததால் மீண்டும் அதனைச் செய்ய ஏவினன். கூத்தி அதன் அருமைக்கும் அரசன் ஆணைக்கும் பயந்து ஆகாயத்திற் பறந்து போம் பறவைகளை நோக்கி ‘மாகுன்றனைய” என்று கவி கூறி இவர்க்குச் செய்தி அனுப்பின்ள். இவர் மகாத்தியாகியாய் இருக்கலாம். கூத்தாடினவளைக் காண்க. சூலிமுதுகிற் சோறிட்டமை காண்க.

சடையனாயனார்

சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தந்தையார். மனைவியார் இசை ஞானியார். (பெ. புராணம்)

சடையப்பமுதலியார்

திருவெண்ணெய் நல்லூரில் கம்பரையாதரித்த வேளாண் பிரபு. இவரைக் கம்பர் தாம் பாடிய இராமாயணத்தில் புகழ்ந்து பாடினர். இவர்க் குத்தந்தையார் சங்கர முதலியார். இவர்க்குதிரிகர்த்தன், சரராமன் எனவும் பெயர். இவர் சகோதரர் இணையார மார்பர். இவர் விக்ரமன், குலோத்துங்கன் முதலிய சோழன் காலத்தவர். இவர் தமிழ்ப புலவரை யாதரித்த வண்மையாளர்.

சட்சு

சாட்சூசமனுவின் தந்தை.

சட்டிப்புலையன்

இவனுக்குக் கொலைத் தொழில். இவன் அகிம்சாவிரத மநுஷ்டித்த புலையன். இவன் பூர்ணமாசியில் கொல்வதில்லையென விரதம் பூண்டிருக்கையில் அரசன் கள்ளரிருவரை அந்நாளில் கொலை செய்யக் கட்டளையிட மறுத்தமையால் இவனையும் மற்ற மூவரையும் முதலைக்கிரையாக நீரிலமிழ்த்த முதலைகள் மூவரைக் கொன்று இவனை நீக்க நன்மை பெற்றவன்.

சட்டைநாதர்

விஷ்ணுமூர்த்தியின் செருக்கை அடக்க எடுத்த சாபத் திருவுருவிற்குப் பிறகு விஷ்ணுமூர்த்திக்குத் தரிசனந்தந்த திருவுரு

சட்டைநாதவள்ளலார்

இவர் சீர்காழியில் இருந்து வாதுளாகமத்தின் ஞான பாகத்சைச் சதாசிவரூபம் எனத் திரட்டியசைவர்.

சட்டைமுனி

இவர் அகத்தியர் காலத்து இருந்த வைத்தியர். உரோம ருஷியுடன் மாறுகொண்டவர். இவர் பிறப்பால் சேணியர் என்பர். இவர் செய்த நூல்கள் சட்டை முனி ஞானம் 200, சட்டை முனி 1200, திரிகாண்டம், சரக்குவைப்பு, நவரத்தினவைப்பு, இவரைப் போகருக்கு மாணாக்கர் என்றுங் கூறுவர்.

சட்வர்க்கம்

உதிக்கின்ற ராசியையுடையவனும், இதனை (2) கூறாகவுண்பவனும், இதனை (3) கூறாகவுண்பானும், இதனை (12) கூறாகவுண்பானும், இதனை (30) கூறா கவுண்பானும் சட்வர்க்காதிபராவர். ஒற்றித்தராகியினாழிகையை (2) கூறிட்டால் முதற்கூறு ஆதித்யன், (2) ஆம் கூறு சந்திரன் இரட்டித்த இராசியை (2) கூறிட்டால் முதற்கூறு சந்திரன், இரண்டாங்கூறு ஆதித்யன் இதுவோரை, உதயராசியை (3) கூறிட்டால் முதற் கூறு உதயராசியை யுடையவனது; இரண்டாங்கூறு (5) ஆம் ராசியை யுடையவனது; மூன்றாங்கூறு (9) ஆம் ராசியையுடையவனது; இது திரேக்காணம். உதயராசியை (12) கூறிட்டால் அந்த ராசியை யுடையவன் முதலாக அடைவே துவாதசாங்க மறியப்படும். திரிம்சாங்கம் ஒற்றித்தராசியை (30)) கூறிட்டால் முதல் (5) கூறு செவ்வாயுண்ணும், பின்பு (8)க்கூறு வியாழனுண்ணும், பின்பு (7) கூறு புதனுண்ணும்; பின்பு (5) கூறு சுக்கிரனுண்ணும், இதனைக் கோட்கூறு என்பர். இரட்டித்த இராசியை (30) கூறிட்டால் எதிரேறாக முதற் சுக்ரனுக்கு (5) கூறும், புதனுக்கு (5) கூறும், வியாழனுக்கு (8) கூறும், சனிக்கு (5) கூறும், செவ்வாய்க்கு (5) கூறும், இலக்ன சட்வர்க்கமாம். இக்கோட்கூற்றில் கர்க்கடகத்தும், விருச்சிகத்தும், மீனத்தும் கடையிலுற்ற கூறு மிக்கதோஷங்களைப்பண்ணுமென்க (விதா)

சணப்பர்

இவர்கள் நெய்யும் சாதியரில் ஒரு வகையர். இவர்கள் சணப்ப நாரால் கோணி முதலிய நெய்வோர். இவர்கள் சளுப்ப செட்டிகள் எனப்படுவர். இவர்களிற் சிலர் தம்மைச் தேசாயிகள் என்பர். இவர்கள் தம்மை (24) கோத்திரத்தவரென்றும் சிலர் தொண்ட மகாரிஷி கோத்தி பத்தவரென்றும் கூறுவர். (தர்ஸ்டன்)

சணல்

இஃது ஒருவகை நாருள்ள செடி, இதற்குச் சணம்புநார்ச்செடி யெனப் பெயர். நன்றாய் வளர்ந்த செடியைத் தண்ணீரில் ஊறவிட்டெடுத்து அதைச் சீவினால் நார் உண்டாம். அதனைச் சிறு இழைகளாக்கித் துணிநெய்வர்; கயிறு திரிப்பர்; ஒருவித எண்ணெய் இதன் விதையிலிருந்து செய்கிறார்கள்; மேனாட்டிலும், இந்தியாவிலும் இது பயிரிடப்படுகிறது.

சண்டகன்

சூரபதுமன் படைத்தலைவன்.

சண்டகாதினி

சத்தியால் வக்ராசுரன் முதலியோரை வதைக்கச் சிருட்டிக்கப்பட்ட துர்க்கை.

சண்டகௌசிகர்

கட்சீவான் குமரர். பிரகத்தனுக்கு மாம்பழம் அளித்துச் சராசந்தன் எனும் புத்திரனைப்பெறச் செய்தவர்.

சண்டதபர்

ஒரு முனிவர், மந்தசேதுவைக் காண்க.

சண்டதருமன்

1. ஒரு வேதியன் நீசப்பெண்ணைப் புணர்ந்து கள்ளருந்திச் சாண்டில்ய முனிவராற் பிராயச்சித்தம் அடைந்து செம்மை பெற்றவன். 2, ஒரு வேதியன், இவன் குமரன் தருமபுஞ்சன்.

சண்டதாண்டவமூர்த்தி

காளியுடன் ஊர்த்வதாண்டவம் நடித்த சிவன் திருவுரு.

சண்டதேவன்

1. மதங்கனைக் காண்க. 2. சூத்திரப்பெண்ணுடன் கூடிப் பிராமணன் பெற்ற குமரன். இவன் இப்பிறப்பு நீங்கி வேதியனாக இந்திரனை எண்ணித் தவம் இயற்றினன். அதனை அடையாது இந்திரனால் பெண்கள் வணங்கத்தக்க தெய்வவுரு அடைந்தவன்.

சண்டன்

1. சுக்கிரன் குமரன். 2. சிவகணத்தவரில் ஒருவன். 3. ஒரு விஷ்ணுபடன், 4, சண்முக சேனாவீரன், 5, சிங்கவீரனால் உதையுண்ட அரக்கன். 6. வேதாசலத்தில் கிருதயுகத்தில் கழுகுருக்கொண்டு பூசித்தவன். 7. ஒரு அசுரன் சத்தியால் கொல்லப்பட்டவன். 8. ஒரு வேடன், இவன் காட்டில் சிவலிங்கம் ஒன்றைக்கண்டு அதனிடம் அன்பு கொண்டு அவ்விடம் வேட்டைக்கு வந்த சிங்ககேது அரசனைக்கண்டு இச் சிவலிங்கத்தை எப்படிப் பூசிப்பதென்று வினாவினான். அரசன் பரிகாசமாய் நீ சலத்தினைச் சிவலிங்கத்தின் மீது ஊற்றி, சடலையின் வெந்த சாம்பலை அதன்மேற் பூசி, பூக்களைச் சூட்டி அன்னத்தை நிவேதித்துத் தூபதீபங் காட்டுக என்று கூறிச் சென்றனன். வேடன் இதனை உறுதியாகக் கொண்டு நடத்தி வரும் நாட்களுள் ஒருநாள் சுடலையின் நீறு அகப்படாமல் பூசை தடை பட்டுக் கவலையுடன் இருந்தனன். இதனை அவனது கற்புடைய மனைவியறிந்து கணவனை நோக்கி நமது குடிசையைக் கொளுத்தினால் நான் அதில் விழுந்து மாய்கி றேன். அந்த நீற்றினை எடுத்துப் பூசை முடியும் என, வேடன் அப்படியே உடன் பட்டுச் செய்து பூசைமுடிவில் வழக்கப் படி நிர்மாலியம் கொண்டுபோகத் தனது மனைவி உயிர்பெற்று வந்ததையும், குடிசை பழமைபோல் இருந்ததையுங் கண்டு சிவனருளெனச் சிவகணங்கள் எதிர்கொள்ளக் கைலை அடைந்தவன். (பிரமோத்தா காண்டம்) 9. வத்சந்திரன் குமரன். 10. அலம்புசை சத்தியின் வாகனமாகிய காகம். 11. பலியைக் காண்க. 12. ஒரு காலபடன். 13. சும்ப நிசும்பாசுரரின் சோபதிகளில் ஒருவன், கௌசிகிதேவியால் கொல்லப்பட்டவன். இதனால் தேவிக்குச் சண்டமர்த்தனித் திருநாமம். (தேவி~பா.)

சண்டபார்க்கவன்

சியவனவம்ச ரீஷி. ஜனமேஜயன் சர்ப்பயாகத்தில் உடனிருந்து நடத்தியவன்.

சண்டமார்க்கன்

சுக்கிராசாரியன் குமரன். பிரகலாதனனுக்கு வித்யாகுரு.

சண்டமுண்டர்

சும்ப நிசும்பருக்குச் சகோதரராகிய அரக்கர். பார்வதிதேவியாரின் அழகுகண்டு அருகில் வந்து காளியாற் கொல்லப்பட்டவர்கள்.

சண்டவிக்கிரமன்

1, வத்சந்திரன் குமரன். 2. திரிகர்த்தராசன் குமரன். பாண்டவரது அச்சுமேதக் குதிரையைக் கட்டி அருச்சுநனால் அடியுண்டவன்.

சண்டவேகன்

ஒரு காந்தருவன். முந்நூற்று அறுபது காந்தருவருக்கு அதிபதி. புரஞ்சயன் பட்டணத்தை எதிர்த்தவன்.

சண்டவேகை

மாயாவிஞ்சைத் தெய்வம்.

சண்டாமிருகள்

யமதூதரில் ஒருவன்.

சண்டாளன்

சூத்திரன் பிராமணப்பெண்ணைக் கூடிப்பெற்ற குமரன். சூத்திரற்கு முதல் மூன்று வருணப் பெண்களிடம் பிறந்தவனும் ஆவன். (மநு)

சண்டி

1. சண்முகசேனாவீரருள் ஒருவன். 3. பசுசகன் மனைவி.

சண்டிகை

1. ஒரு மாயாதேவி அம்சம். 2. சத்தியைக் காண்க, பார்வதிதேவியின் கணத்தவருள் ஒருத்தி. தாருணனைக் கொன்றவள்.

சண்டீசர்

கர்க்ககுலத்தில் கணபத்திரன் எனும் அந்தணன் மாலியவான் எனும் பர்வதத்தில் தன் மனைவி சுசீதையுடன் இல்லறம் வழுவாது நடத்துகையில் அநமித்ரன் எனும் விதர்ப்பநாட்டாசன் அவ்விடம் வந்து அந்தணனைத் தான் செய்யும் அசுவமேதயாகத்திற்கு ஹோதாவாயிருக்க வண்டி அழைத்து அவ்யாகபூர்த்தியில் அநேக பசுக்களையும் பொருள்களையுங் கொடுத்தனன். இவ்வந்தணன் தன் குமரர் சண்டர்வசம் அப்பசுக்களை மேய்த்துவரச் செய்தனன். இவர் அப்பசுக்களை மேய்த்து வருகையில் அப்பசுக்கள் அதிகமாய்ப் பால் கொடுத்தன அவற்றைக் கண்ட சண்டர் இவை நம்மிறைவனுக்குப் பயனிலாது போதற்கோ நாம் இந்தப் பசுக்களை மேய்ப்பதென்று சுரைக் குடுக்கைகளில் அப்பால் முழுதும் கறந்து அவ்வனத்திலுள்ள சிவப்பிரதிட்டைகளுக்கும் தமது ஆத்மார்த்த மூர்த்திக்கும் அபிஷேகித்து வருவர். இவ்வாறு வருகையில் பால் குறையக்கண்ட தந்தை மகனைக் கேட்கக் கன்றுகளின் முதிர்வில் பால் குறைந்ததென, நம்பாமல் அவருடன் பசுக்களை மேய்க்கும் பிள்ளைகளைக் கேட்டு உண்மையறிந்து அதனைக் காணுமாறு ஒரு மரத்திலேறியிருந்து இவர் மணலால் சிவலிங்க மமைத்துப் பாலை அச் சிவலிங்கத்திற்கு அபிஷேகிக்கக்கண்டு கடுங்கோபங் கொண்டுவந்து அச் சிவலிங்கத்தினையும் அதற்கு நிவேதனமாக வைத்திருந்த பலாதிகளையும் காலாலிடறக் கண்டு இவர் அதிகோபாக் சாந்தராய் உம்மை இகழ்ந்தவன் மகா பாபியென இடறிய காலைத் தருப்பை கொய்ய வைத்திருந்த கோடரியால் சேதித்தனர். உடனே சிவபெருமான் சண்டருக்குத் தரி சனந்தந்து அவர் தந்தைக்குப் பிராட்டியாரால் உடைந்த கால்களைத் தருவித்து இவரை முதுகைத் தடவி நீ இன்று முதல் சண்டிகேசனெனும் பெயரடைக. நாம் உனக்கு எமது பொற்கோயிலும், மணி முடியும் மாலையும் எமது நிவேதனமும் தந்தோம், இனி நீ தொண்டர் நாயகனாக வும், எம்மைப் பணிவோர் உன்னைப் பணிந்து எமது தரிசன பலன் பெறுக என்று அநுக்கிரகிக்கச் சாரூபமும் பெற்றவர் (சிவாஹஸ்யம்.)

சண்டேசர்

இவர், சர்ப்பபூஷணம், நீலகண்டம், சடைமுடி சந்திர சூடம், திரிநேத்சம், நான்குமுசம், எட்டுப்புஜம் ருத்ராக்ஷம், சூலம், எழுத்தாணி, கமண்டலம், பிநாகம், பாணம், வசரம், வரதம், அபயம் முதலிய உடையராய் வீராசனங் கொண்டு எழும் தருளியிருப்பர். இவர்க்குக் கிருதயுகத்தில் எட்டுப்புஜம், திரேதாயுகத்தில் ஆறுபுஜம், துவாபரயுகத்தில் நான்கு புஜம், கலியுகத்தில் இரண்டு புஜம். இவர் சாமளவாணத்துடன் கூடிய சண்டிகா தேவியுடன் கூடியிருப்பர். இவர்க்குக் காமிகாகமத்தில் தனியே ஆலயமுதலிய உற்சவாதிகள் கூறப்பட்டிருக்கிறது, வாகனம் ரிஷபம், சிம்மள தேசத்தில் இவரது ஆலயபிரதிஷ்டை யெனக்கூறப்படுகிறது. இவர் உருத்ரகோபத்தி லுதித்தவர்; மைந்நிற முடையவராய்; பயங்கர முடையவராய்ச் சூலம், உளி முதலிய ஆயுதங்களுடையவராய்; ருத்ரசம்பந்தம் உள்ளவராய்; நான் குபுஜங்களையும், நான்கு முகங்களையு முடையவராய்; அக்னி ஜ்வாலாமுகராய்ப் பன்னிரண்டு கண்களையுடையவராய், சடை முடியிற் பிறைச் சந்திரனைத் தரித்தவராய்; சர்ப்பகங்கணமுடையவராய்; நாக யஞ்ஞோபவீதராய் வெண்டாமரை ஆசனத்தில் வீற்றிருப்பர். (சைவபூஷணம்.)

சண்டேசுர நாயனார்

திருச்சேய்ஞ்ஞலூரில் காசிபகோத்திரத்தில் எச்சதத்தனுக்கும் அவன் மனைவி பவித்திரைக்கும் விசாரசருமர் எனத் திருவவதரித்து வேதம் முதலியவுணர்ந்து சிவபக்தியுடையராயிருந்தனர். இவர் இடையன் ஒருவன், பசு ஒன்று அவனைப் பாய அப்பசுவினைச்கோலால் அடிக்கக்கண்டு அப்பசுக்களின் தன்மைகளை அவனுக்குப் போதித்து அவனை இனிப் பசு மேய்க்காதிருக்கக் கட்டளை தந்து அவ்வூரார் அனுமதி பெற்றுத் தாமே அப்பசுக்களை மேய்த்து முன்னிலும் அதிகமாய்ச் சீராட்டி வந்தனர். இதனாற் பசுக்கள் கன்றுகளையும் நினையாமல் விசாரசருமரைவிட்டு நீங்காது அன்புள்ளனவாய்த் தாமே பால் சொரியத் தலைப்பட்டன. இதனை நோக்கிய விசாரசருமர் இப்பாலைச் சிவ மூர்த்தியின் பொருட்டாகத் தக்கவையாக நினைத்தனர். நினைக்கச் சிவார்ச்சனையில் பேராவலுண்டாய் மண்ணியாற்றங் கரையருகு இருந்த திருவாத்திமரத்தடியில் மணலால் சிவலிங்கந் தாபித்து மதில் முதலிய மணலால் அமைத்து வேண்டிய கருவிகளை மானசமாய் நிருமித்துக் கொண்டு நல்ல பூக்களைப் பறித்துத் தீண்டச் சுரந்த பாலைனக் குடங்களிற் கறந்து சிவபூசைசெய்து வருவார் ஆயினர். இந் தப்படி நடத்தி வந்தும் பசுக்குரியவர்களுக்குப் பால் குறைவின்றி யிருந்தது. இதைக் கண்ட ஒருவன் விசாரசருமன் பாலைக் கறந்து மணலில் ஊற்றி விளையாடுகிறான் என்று ஊரில் கூறினன், ஊரார் எச்சதத்த னிடம் குறைகூறினர். தந்தையாகிய எச்சதத்தன் இதன் உண்மை அறியவேண்டி அருகிருந்த குராமரத்தின் மீதேறி ஒளிந்து கண்டு சொன்னது உண்மையென்று சிவபூசையிலிருந்த குமாரைக் கோலாற் புடைத்தனன். குமரர் எழுந்திராமைகண்டு அருகிருந்த பாற்குடங்களைக் காலால் இடறினன். இந்தச் சிவாபராதத்தால் கோபங்கொண்ட குமரர், அருகிருந்த கோலை எடுக்க மழுவாயிற்று. அதனால் தந்தையின் உதைத்த சாலை வெட்டி முன்போற் சிவபூசையில் இருந்தனர். சிவ மூர்த்தி பிராட்டியுடன் விசாரசருமர்முன் தரிசனம் தந்து அவர் உடம்பைப் பரிசித்து உமக்குத் தொண்டர்க்கு நாயகமாம் பரிசு தந்தோம் எனத் தாம் அணிந்த கொன்றை மாலை சூட்டி நாம் ஏற்ற அமுது, மாலை, பரிவட்டம், உமக்கே கிடைக்க என அநுக்கிரகித்துச் சண்டேசுரபதம் அளித்து மறைந் தனர். எச்சதத்தர் சண்டேசுர மூர்த்தியால் தண்டிக்கப்பட்டமையால் சிவபதம் பெற்றனர். சண்டேசுரநாயனார்க்கு அநுக்கிரகஞ்செய்ய எழுந்த சிவமூர்த்தம் சண்டேசாநுக்கிரக மூர்த்தம் எனப்படும். இவர்க்குச் சண்டீசர், சண்டி, விசாரசருமர் எனவும் பெயர். (பெரியபுராணம்).

சண்பகமாலை

விசையையின் தோழியாகிய கூனி.

சண்பகவடிவி

கரிகாலச்சோழன் ஆலத்திப்பெண்ணாகிய மரகதவடிவியின் குமரி. இவளுக்குத் தமிழறியும் பெருமாள் எனப் பெயர்.

சண்பை

1, சீர்காழிக்கு ஒரு பெயர், துருவாசருஷி சாபத்தால் கருக்கொண்ட ஆண்மகன் வயிற்றில் பிறந்த இருப்புலக்கை அராவப்பட்டுக் கடலில் இட அது கடற்கரையில் ஒதுங்கிச் சண்பைப்புற்கள் ஆயிற்று. அப்புற்களால் கடற்கரைக்கு வந்த கோபாலர் ருஷியின் சாபத்தால் ஒருவரை யொருவர் மோதியிறந்தனர். அத்தோஷம் ருஷியை அடைந்ததால் அந்த ருஷி இந்தத் தலத்தில் பூசித்துப் பாதகத்தைப் போக்கிக்கொண்டனர். 2. ஒரு நகரம் கடலோரத்துள்ளது, (மணிமேகலை)

சண்பைநகர்

இஃது அங்கநாட்டிலுள்ள தொரு பெரியநகரம். எல்லா வளத்திலும் மிகச் சிறந்து விளங்குவது. உக்கிர குலத்தரசனாகிய விசையவர னென்பவனாற் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நகரத்தில் மித்திரகாமனென்னும் ஒரு வணிகர் பெருமான் வீட்டில் யூகியும், வாசவதத்தை, காஞ்சனமாலை, சாங்கியத்தா யென்னும் மூவரும் தம்மைப் பிறரறியாதபடி வேற்று வடிவங்கொண்டு அவனாற் பாதுகாக்கப் பட்டுத் தங்கியிருந்தனர். (பெ. கதை)

சண்முகன்

ஆறு முகத்துடன் கூடிய குமரக்கடவுளுக்கு ஒரு திருநாமம்.

சதகண்டன்

பஞ்சமுக அநுமனால் வதைக்கப்பட்ட மாயாபுரத்தலைவன் அரக்கன்.

சதகண்டராவணன்

இவனுக்கு விதுர இராவணன் எனவும் பெயர். இவன் இராவணன், இராமராலிறந்த செய்தியைச் சுகசாரணராற் கேள்வியுற்று இராமருடன் யுத்தஞ்செய்ய எண்ணித் தூதனுப்பினன். தூதர் சொல்லக் கேட்ட இராமபிரான் சீதையிடங் கூறச் சீதாபிராட்டி இராமமூர்த்தியைச் சாரதியாயிருக்க வேண்டிப் புஷ்பகத்திலேறிப் பாற்கடலினருகு கோட்டை கட்டிக்கொண்டு வசித்திருந்த இவனுடன் யுத்தத்திற்குச் சென்று அனுமனைத் தூதாக ஏவ அரக்கனது கோட்டையின் காவலாளி அநுமனைப் பட்டணத்திற்குள் விடாது மறுக்க அந்நத் திரிகண்டனை மாய்த்துச் சதகண்டனிடஞ் சென்று சீதை யுத்தத்திற்குவந்த செய்திகூறச் சதகண்டன் எவலால் அரக்கர் அநுமனைப் பற்றவா அநுமன் அவர்களைக் கொன்று மீண்டு பாசறை சேர்ந்தனன். பின் சதகண்டன் முன்பு மகா பலவானை யுத்தத்திற்கு அனுப்பினன், இவன் சீதாபிராட்டியிடம் இரண்டு நாள் யுத்தஞ்செய்து இறந்தனன். மூன்றாம் நாள் மசாமாயன் இவனுக்கு (60) தலை கள் (120) கைகள் யுத்தத்திற்குவந்து யுத்தஞ்செய்து ஒருசிர மிரண்டுகைகளுடன் தப்பி யுத்தஞ்செய்யாமல் ஓடிப்பிழைத்தனன். நான்கா நாள் (30) தலை கொண்ட அக்நிக்கண்ணனும், ஐந்தாநாள் யமகண்டன், பஞ்சகண்டன், ஆறாநாள் நிஷ்கண்டன், ஏழாநாள் நிசாசான் முதலியோர் யுத்தத்திற்குவந்து சிரமும் கரமும் இழந்து மாய்ந்தனர். எட்டாநாள் சத கண்டன் யுத்தத்திற்கு வந்து சீதை செய்யும் யுத்தங்கண்டு ஆயு தெமெடாமல் மீண்டு, ஒன்பதாநாள் யுத்தத்திற்கு வந்து மாண்டனன். பத்தாம் நாள் மகாமாயன் சீதையைச் சரணடையச் சீதை அவனுக்கு இராச்சிய பட்டாபிஷேகம் அநுமனால் செய்வித்தனள். (இது கற்பனாகதை.)

சதகும்பம்

பொன் விளையும் மலை.

சதகோடி

வச்சிராயுதம்.

சதசந்திரன்

க்ஷத்திரியன். காந்தார ராஜ புத்திரன், பீமசேனனால் கொல்லப்பட்டவன். (பா~துரோ.)

சதசித்

1. விரசனுக்கு விஷ்டபதாவிடம் பிறந்த குமரன். 2. சகஸ்தரசித்தின் குமரன், இவன் குமரர் மகாஹயன், வேணுஹயன், எஹயன். 3. ரசன் குமரன். இவனுக்கு விஷவக்சோதி முதலிய நூறு குமரர். 4. யதுவம்சத்துப் பசமானன் குமரன். 5. சதவிந்துவின் குமரன்.

சதசிருங்கன்

ஒரு அரக்கன்.

சதசிருங்கம்

பாண்டுராசன் மானாயிருந்த இருடியால் சாபமேற்ற இடம். இது மலை. இவ்விடம் பாண்டு தன் இரண்டு தேவிமாருடன் தவஞ்செய் தனன், ஈண்டிருக்கையில் குந்திக்கு மந்திரபலசித்தி.

சதசீருஷை

வாசுகியின் தேவி.

சதசுவன்

யமன் சபையில் இருக்கின்ற ஒரு க்ஷத்திரியன்.

சதசேநன்

(யா.) உக்கிரசேநன் குமரன்.

சதச்சித்திரம்

விஷ்ணுமூர்த்தி எழுந்தருளியிருக்கும் கேடயம்.

சதச்வன்

சமரன் குமரன்.

சததன்வா

இருதி குமரன் தேவமீடன் சகோதரன். இவன் சத்தியபாமையைத் தனக்குக் கொடாமையால் சத்ராசித்தைக் கொன்றனன், சத்திராஜித் இரவில் உறங்குகையில், அக்குரூரன் கிருதவர்மன் ஏவலால் அவனைக் கொன்று மணிகவர்ந்து கண்ணனுக்குப் பயந்து மணியை அக்குரூசர் இடத்தில் கொடுத்துவிட்டு விதர்ப்ப தேசம்போய்க் கண்ணனால் இறந்தவன்.

சதத்துய்ம்நன்

(சூ.) பாநு குமரன்.

சதத்துவசன்

ஊர்வசன் புத்திரன்.

சதத்ரு

இமயமலைக்கு மேற்பால் தோன்றிச் சிந்துவிற் கலக்கும் நதி. வசிட்டர் தம் புத்திரர்கள் இறந்த காரணத்தால், இதில் உயிர்விடத் துணிந்த தன் பொருட்டு இது பத்துக் கிளைகளாகப் பிரிந்தது. இதற்கு யமவதி என்றும் ஒரு பெயர். (பாரதம்.)

சதத்ருதி

1. பிராசீன பர்கிக்குத் தேவி, பிரசேதனுக்குத் தாய், சமுத்திரன் பெண். 2. ஒரு சிவயோகி, இவனுக்கு அன்னமிட்டபலத்தால் பாண்டி நாட்டில் திருநெல்வேலியிலுள்ளார் பலர் நற்கதியடைந்தனர்.

சதநாவன்

சண்முகசேனாவீரன்.

சதந்தமுனிவர்

சயந்தனைக் காண்க.

சதன்

திருதராஷ்டிர புத்திரர்களில் ஒருவன்.

சதபதர்

சுக்லயசுர் வேதம் ஓதுகிறவர்கள்.

சதபர்வை

சுக்கிரன் தேவி.

சதபல விரதம்

இது ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில் அநுட்டிப்பது, இதில் ரோகிணி நக்ஷத்திரம் கூடின் நலம், புதவாரம் சோமவாரம் கூடினும் நலம். இதில் விரதமிருப்பவன் பிரேதயோனி யடையினும் நீங்குவன்,

சதமகன்

1, இந்திரன் நூறு யாகங்கள் செய்ததால் பெற்ற பெயர். 2. ஒரு தைத்தியன், சிவபெருமானை யெண்ணித் தவமியற்றி ஆயிரம் நகரங்களை அடைந்தவன். (சிவபுராணம்.)

சதமகிடபக்ஷணி

ஒரு அரக்கி. இவள் நாடோறும் நூறு எருமைகளைப் பக்ஷிப்பவள், இவள் இந்திராணிபோல் உருக்கொண்டு விநாயகர் அவதரித்திருக்கும் இடத்தில் வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் பார்வதிதேவியாரிடம் நான் அசுரருக்கு அஞ்சி அடைக்கலம் அடைந்தேன் காக்க எனப் பிராட்டியார் அடைக்கலம் தந்தனர். அரக்கி அவ்விடம் குழந்தை யுருக்கொண்டிருந்த விநாயகமூர்த்தியை ஆகாயமார்க்கத்தில் தூக்கிச் சென்றனள். இவள் கரத்தை விநாயகமூர்த்தி பிடித்து பூமியிற்றள்ளிக் கொன்றனர்.

சதமன்யு

சிவகணத்தவரில் ஒருவன்.

சதமுகன்

வீரவாகுதேவர் சூரபதுமனிடம் தூதாகவந்து திரும்புரையில் அவரைக் கட்டி வரும்படி அசுரனால் ஏவப்பட்டு வந்து அவரால் இறந்த அசுரன்.

சதம்பகன்

ஆலயன் குமரன். இவன் குமரன் புருஷமேரு.

சதய இதன்

உபரிசரன் வம்சத்து அரசன்.

சதயாமன்

கேகயவம்சத்து ஒரு ராஜ ருஷி.

சதயூபர்

கோயதேசாதிபனுடன் சேர்ந்த ருஷி. திருதராட்டிரன் தவத்திற்கு ஏகிய போது இவர் வருத்தில் வந்து தவஞ்செய்தனன். இவர் ஆச்சிரமம் கங்கைக்கரையில் உள்ளது.

சதயூமன்

இவன் தன் நந்தனவனத்தில் கள்ளவுருக்கொண்டு வந்த விஷ்ணுமூர்த்தியைத் துரத்த விஷ்ணுமூர்த்தி அவனுக்குக் காட்சி கொடுத்தனர்.

சதருபவதி

பிரமசிருட்டியைக் காண்க.

சதருபை

சுவாயம்புமனுவின் பாரி. குமரர் பிரியவிரதன், உத்தானபாதன். பெண் தேவவூதி, பிரசூதி, பிரமன் புத்திரி. மேற்படி மனுவின் புத்திரி எனவும் கூறுவர்.

சதலேயு

(சந்.) ரௌத்திராசுவன் குமரன்.

சதவலி

வாநரத்தலைவன், சுக்கிரீவன் சேனாதிபதி.

சதவிந்து

1. சதசித்தின் தந்தை, சதயூ பர்வனத்துத் தவஞ்செய்து சுவர்க்கம் அடைந்தவன். 2. ஒரு நிமித்திகன் சடியசான் புரோகிதன்.

சதாகாந்தை

பாரியாத்திர மலையிலிருந்து பிரவகிக்கும் நதி.

சதாக்ஷி

1. சத்தியைக் காண்க. 2 இவள் தேவர் வேண்டுகோளால் தோன்றிய சத்தி, இரண்யாக்ஷன் வம்சத்தில் குரு எனும் அசுரனுக்குத் துர்க்கன் எனும் அசரன் தேவர்களுக்கு வேதத்தால் எல்லா சம்பத்துக்களும் உண்டாயின. ஆதலால் வேதநாசஞ் செய்யவேண்டுமென வெண்ணிப் பிரமனை நோக்கித் தவமியற்றி எல்லாவேதங்களும் தனக்கு வர வரம் பெற்றனன். ஆதலால் வேதங்களிவன் வசமாகத் தேவர்கள் வேதவொழுக்கமாகிய வேள்வி முதலிய மறந்து போயினர். அதனால் மழை ஒழிந்தது. துர்க்கன் தேவர்களை வருத்தினான், இவனாலும் ஷாமத்தாலும் கவலையடைந்த தேவர்கள் சத்தியை வேண்டச் சத்தி யிவர்களுக்குமுன் அநேக பழங்களையுடைய ஒரு பூங்கொடியையும் வில்லையும் தாங்கி, அநேக கண்கள் அநேக கரங்களுள்ளவளாய்த் தரிசனந் தந்து தனது ஒன்பது கரங்களிலிருந்து நீர்த்தாரைகளைப் பொழிந்து, பழங்களின் விதைகளாலும் ரஸங்களாலும் காமத்தைப் போக்கினள். இதைக்கண்ட அசுரன் யுத்தத்திற்கு வரத் தேவி தன் திருமேனியிலிருந்து காளி, தாரணி, பாலா, திரிபுரை, பைாலி, ரமை, பகலை, மாதங்கி, திரிபுர சுந்தரி, காமா, துலஜா, ஜம்பனி, மோஹினி, சின்னமஸ் தனி, குஹ்யை முதலியவரைப் படைத்து அவனது சேனை மீதேவி தான் அசுரனைக் கொலை புரிந்து க்ஷேமமுண்டாக்கினள். அது முதல் தேவிக்குச் சாகம்பரி, சதாஷி திருநரமம் உண்டாயிற்று. (தேவி~பா.)

சதாசிவதத்வபுவன வாசிகள்

அணுசதாசிவர்கள் இவர்கள் (10) பிரணவர், சாதாக்யர், தீர்த்தர், காரணர், சுசீவர், ஈசர், சூக்குமர், காலர், தேசேசர், அம்பு.

சதாசிவதத்வம்

தூலலய அவத்தையாகிய சத்தி தத்வத்தினின்று பொதுவகையாற் சங்கற்பித்த முதல்வன், பின் போக அவத்தையினின்று தனது ஞானசத்தியால் சிறப்புவகையானோக்கிக் கிரியாசத்தியாற் சிறப்புவகையாற் சங்கற்பித்தவழி காரியங்களைத் தோற்றுவித்தற்கு உன் முகியாய் நின்ற சுத்த மாயையின் மூன்றாமவிருத்தி சதாசிவம் எனப் பெயர்பெற்ற சிவனாலதிட்டிக்கப்படுவது, இதனைப் போகதத்வம், உத்யுத்ததத்வம், சகளநிட்கள தத்வம் என்ப. (சிவ~போ.)

சதாசிவன்

1 சிவமூர்த்தி. ஈசானம், தத்புருஷம், வாமம், அகோரம், சத்யோசா தம் முதலிய திருமுகங்களுடன் இருந்து தேவருஷிகளுக்கு வேதாதி சிவாகமங்களை அருளிச்செய்த அவசரம். இதில் ஈசானம் யேனோக்கியது படிகநிறம், தத்புருஷம் கிழக்கில் உள்ளதாய்ப் பொன் நிறம் வாய்ந்தது. அகோரம் தெற்குக் கருநிறம், வாமம் வடக்குக் குங்குமநிறம் அல்லது செந்நிறம், சத்தியோசாதம் மேற்கு அதிவெள்ளை நிறம். இவர் மேற்கூறிய முகங்களைப் பெற்றவராய் வலது கைகளில் கத்தி, சரிகை, சூலம், கட்வாங்கம், பதமம்; இடது கைகளில் டமருகம், பூரகம், நாகம், ஜபமாலை, நீலோத்பலம்; சில (ஆகமங்களில்) வலதுகைகளில் சூலம், கோடரி, வாள், வஜ்ராயுதம், அக்நி; இடது கைகளில் அபயம், பாசம், மணி, சர்ப்பம், அங்குசம் கொண்டிருப்பர். இவ்வாறன்றி வலப்புறத்தில் அனுக்ரகம், அபயம், தண்டாயுதம், சத்தி, சூலம். இடப்புறத்தில், டமருகம், சர்ப்பம், ஜபமாலை, கரு நெய்தல், மாதுளம்பழம் கொண்டிருப்பர். இவர்க்கு (10) கரங்கள், பத்துத் திசை கள், சூலம், முக்குணவடிவம், கோடரி, சத்தி, வாள், பாராக்ரமம், வஜ்ரம், பிளக்க கூடாத்தன்மை. அக்நி. சங்காரசக்தியாய் மகாமாயையின் மேலிருக்கிற பதார்த்தங்களை விளக்குவதும், பாசங்களைப் பஸ்மீ கரிப்பதுமாம். நாகம், யாவும் நியமிப்பது, பாசம், ஆணவாதி முப்பாசங்கள், மணியினோசை மந்திரரூபத்தை யறிவிப்பது. அபயம் சமஸ்தலோ தங்களையும் காக்குஞ் சச்தி, அங்குசம் எது அடையத்தக்கதோ, அதனையுணர்த்துவது இவர் சாதாக்யர் எனவும் படுவர். 2. இவர் ஆகாயத்தைய திட்டித்து அநுக்ரக நிமித்தமாக விந்து வெனும் உபாதானத்திலிருந்து மாயை முதல் பிருதிவியீறாக அடைவே நிலைபெற்றுள்ள சுத்த தத்துவங்களைத் தமதாக்னையால் நடாத்தி சுத்தவித்தை, மகேசுரம், சாதாக்யம், சத்தி, சிவம், விந்து, நாதம், எனும் ஐந்து தத்வத்தினும் சுவதந்தரமாகச் சமவியாப்தியாய் வியாபித்து மோக்ஷத்தை யேதுவாக்கி நிற்பவர்.

சதாசிவப்பிரம்மயோகீந்திரர்

இவர் கரூர் பட்டினத்தில் சற்றேறக்குறைய (150) வருஷங்களுக்கு முன் வசித்தவர். பிறப்பால் வேதியர். காவிரி தீர்த்தத்தின் கணுள்ள திருவிசைநல்லூரில் கல்வி பயின்றவர். இவருடன் கல்வி பயின்ற சகபாடிகளினும் இவர் நுண்ணறிவினராய் விளங்கினர். இவருடன் கல்வி பயின்றோர் மகாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியார் முதலாயினோர். இவர் கல்வி பயின்று வருகையில் தமது பாரியை பருவமடைந்தனள், இதனால் இவரது தாயார் அந்தாளை மங்கல நாளாக விசேடங்கொண்டாடப் பலவித உணவுகளைச் சமைத்தனள். அன்று யோகீந்திரர் வழக்கம் போல் உணவு கொள்ளச் சென்று நடப்பதுணர்ந்து காலந்தவறி உணவுகிட்டுமென வெண்னி இச்சம்சார துக்கத் தொடக்கத்திலேயே உணவுகிட்டாத்துக்கம் தொடங்குமாயின் இதனை மேற்கொள்ளின் வெகுதுக்கமாமென வெண்ணி அது முளைக்கும்போதே கெடுக்கவெண்ணிப் பரிபாகமுடையராய்ப் பரமசிவேந்திர சரஸ்வதி யென்னு மாசாரியரை யடைந்து ஞானோபதேசம் பெற்றனர். இவர் தம்குருவினிடம் ஞானோபதேசத்திற்கு வருபவரை பற்பலவினாக்கள் வினாவி அவமதித்து வருவதையுணர்ந்த ஆசாரியர் உன் வாயெப்போ தடங்குமென அன்று முதல் மௌனம் சாதித்து கிஷ்டை கூடிப்பித்தர் போல் சர்வசங்கப் பரித்தியாகஞ் செய்து சமபுத்தியுடையராய் வீதிகளில் கிடக்கும் எச்சிலுண்டு திரிவாராயினர். இவரைக் கண்டோர் யாவரும் பித்தரென்று பரிகசிப்ப உலாவி வந்தனர். இவர் தம்மூர் விட்டுப் பரதேசசஞ்சாரியாய் ஆண்டுள்ள காடுகளில் ஒருவருக்கும் புலப்படாது நில்டையிலிருப்பர். ஒருமுறை காவிரிந்தியில் மணல் திடரில் நிட்டை புரிகையில் காவிரி வெள்ளங்கொண்டு இவரை மூழ்த்த இவர் மணலில் புதைந்திருந்தனர். கரையினின்றோர் யோகியார் மூழ்கினதைக்கண்டு வருந்திச் சென்றனர். மூன்று மாதங்கள் கழிந்தபின் அரசனாணையால் மணலையகற்ற வேலையாட்கள் புகுந்து நதியில் வெட்டுகையில் ஒருவன் வெட்டிய மண்வெட்டி தடைபட்ட துணர்ந்து மண்வெட்டியைப் பார்க்க அதில் இரத்தக்கறையிருந்தது கண்டு மெல்ல அவ்விடமிருந்த மணலை யொதுக்க யோகியர் நிஷ்டை கூடியிருக்கக் கண்டு வெளிப்படுத்தினர். இவர் கரூரையடுத்துள்ள கிராமவழி நள்ளிருளில் செல்லுகையில் தெற்போர்ப் படுப்போர் காவலிருந்த இடம் வழியறியாது சென்று இடறிவிழுந்தனர். காவற்காரர் இவரைக் கள்ளரென்று தடிகொண்டெறியக் கை தூக்க, அக்கைகள் விழுந்து அவர்களின் தலைவன் வருமளவும் சம்பிக்க வேலையாட்களஞ்சிப்பணியத் தம்பித்தல் நீக்கிச்சென்தனர். ஒருகால் இராஜ அதிகாரிகளுக்கு விறகிற்காக ஆட்கள் போதாமல் இவரையும் அதிகாரிகள் ஒரு ஆளாகக்கொண்டு சுமை தூக்கிச் செல்ல எவயோகீந்திரரும் அவ்வாறு தூக்கிச்சென்று அந்த ஆட்களிட்ட விறகு சுமைகளின் மேல் இவர் சுமையையிட அக்கட்டைகள் முழுதும் தீப்பற்றியெரிந்தன. இவரைக் கண்ட பிள்ளைகள் இவரைப் பித்தரென்று பரிகசிக்க இவர் தமக்குக் கிடைத்த பொருள்களை அவர்க்குப் பகுத்தளித்து வருவர். இவரை அப்பிள்ளைகள் மிக்க தூரமாகிய மதுரையில் நடக்கும் ரிஷபவாகன உற்சவங்காண அழைக்க இவர் அப்பிள்ளைகளைத் தமது முதுகின் மேல் ஏற்றிக்கொண்டு ஒருகணம் கண்ணை மூடிக்கொள்ளக் கட்டளையிட்டு மறுகணத்தில் திருவிழா தரிசனஞ் செய்வித்து அச்சிறுவர்க்கு வேண்டிய சிற்றுண்டிகளும் வாங்கித்தந்து விடியுமுன் வீட்டில் சேர்த்தனர். பிள்ளைகள் தந்தையர் முதலியோர்க்கு அற்புதச் செய்கையறிவித்துச் சிற்றண்டிகளையும் காட்டினர். இவர், சிவராதரி முதலிய புண்ய காலங்களில் காசி முதலிய பலக்ஷேத்ரங்களில் தரிசனஞ்செய்யக்கண்ட பலரிவரை யொரேகாலத்தில் வெவ்வேறு தலங்களிலும் கண்டதாகக் கூறுவர். தம்மைப் பின் தொடர்ந்த பிரம்மசாரிக்கும் ஒரு கணத்தில் கண்ணை மூடிக்கொள்ளக் கட்டளையிட்டு ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசனஞ்செய்வித்து மறைந்தனர். பிரம்மசாரி யோகியரைக் காணாது நீரூருக்குவந்து நிஷ்டைகூடியிருக்கக் கண்டனர். யோகிந்திரர் இவரிடத்துக் கருணை கூர்ந்து இவருக்கு வித்யாபலமுண்டாக அருள் புரிந்தனர். மற்றொருகால் இவர் நிர்வாணியாய்ச் சஞ்சரிக்கையில் தேவியருடன் வந்திருந்த மகம்மதிய தலைவனவரிருந்த வழிசெல்ல மகம்மதியன் இவரைச் சினந்து ஒருகையை வெட்டினன். இவர் அதனை யறியாது செல்ல மகம்மதியனிவரைப் பெரியரென் றெண்ணிப் பின்றொடர நெடுநாட்களுக்குப்பின் இவனைக்கண்ட யோகியர் பின் பற்றிய காரணம் வினவ நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட மற்றொரு கரத்தால் அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகம்மதியன் அருள் பெற்று நீங்கினன். இவர் சிவ தர்சனஞ் செய்யப்புகுந்து மந்திரார்ச்சனை செய்கையில் அந்தரத்திருந்து ஒவ்வோர் மலர்வீழ்வதுண்டு, இவர் 1738, ஆம், வருஷத்தில் புதுக்கோட்டைத் திருவரங்குளத்தைச் சார்ந்தகாட்டில் திரிந்து கொண்டிருக்கையில் புதுக்கோட்டைத் தொண்டைமான் அதிக விரக்தியுள்ளவராகையில் இவரை (8) வருடம் பின்றொடர இவர் அவர்க்கு மணலில் சில உபதேச மொழிகளையெழுதி மற்றவைகளைத் தமது சகபாடியாகிய கோபாலகிருஷ்ண சாஸ்திரியாரிடம் அறியக் கட்டளையிட்டனர். இவர் மிதுனாவி ஜேஷ்ட சுத்ததசமியில் பரிபூரண மடைவதாகவும் அன்று காசியிலிருந்து ஒருவேதியன் பாணலிங்கம் கொண்டுவர அவனை இவர்தாமேயிறங்கிய சமாதிக்குழிக்கருகில் பிரதிஷ்டை செய்தனர் எனவும் கூறுப. இவர் ஒரே காலத்தில் மூன்றிடங்களில் சமாதியாயினர் என்பர். ஆயினும் நீரூரிலுள்ள சமாதி பிரசித்திபெற்றது. இவர் குருபூசை புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசர்களால் செய்யப்பட்டு வருகிறது. இவர் செய்த நூல்கள், பிரம்ம சூத்ரவிருத்தி, தவாத சோப நிஷத் தீபிகை, சித்தாந்தகல் பாவளி, அத்வைதாஸ மஞ்சரி முதலிய.

சதாநந்தர்

பிரமன் பேரர். கௌதமருக்கு அகலியை இடம் உதித்தவர். இவரது தவத்தைக் கெடுக்க இந்திரன் ஊர்வசியை ஏவினன். இருடி அவளைக் கண்டமாத்திரத்தில் வீரியம்விட அவ்வீரியம் தருப்பையில் விழுந்தது. அவ்வீரியத்திற்குத் தம்மிடம் இருந்த வில்லம்புகளைக் காவ லாக்கிச் செல்ல அந்த வீரியத்துளிகள் இரண்டும் கிருபாசாரி, கிருபி என ஆணும் பெண்ணும் ஆயின. இவா இராமர் மிதிலைக்குச சென்றகாலத்து மிதிலையில் இராமமூர்த்தியைக் கண்டு விச்வாமித்திரர் புகழை அவர்க்குக் கூறியவர். இராமன் புகழை ஜனகருக்கு அறிவித்தவர். இவர் குமரர் சத்தியத்திருதி இவர் கைலைக்குச் செல்கையில் பாண்டுராசன் உடன் வரவேண்ட அவனுக்குப் புத்திரர் இல்லாதவர்க்குக் கைலாயம் இல்லை எனத் திரும்பப் பட்டினத்திற்கு அனுப்பினவர்.

சதாநிருத்தன்

ஆன்மாக்கள் பஞ்சாவஸ்தை அடைதற்கும் அவர்கள் நற்கதி அடைதற்கும் தாம் மூலகாரணர் என்பதை அறிவிக்கவும் தமதசைவு உலகத்தின் அசைவு என்பதை அறிவிக்கவும் பஞ்சகிருத்திய நடனஞ்செய்யும் சிவன் திருவுரு.

சதாநீகன்

1. நகுலன் குமரன், தாய் திரௌபதி, சகாதேவன் குமாரன் என்பர். 2. சநமேஜயன் குமரன், தாய் வபுஷ்டை. யக்யவல்கியரிடத்து வேதமும் இரு பாசாரியரிடம் சர்வசாஸ்திரமும் சௌநகரிடத்து ஆத்மஞானமும் அடைந்தவன். குமரன் சகஸ்ராநீகன். 3. விராடனுக்குச் சுரதையிடம் பிறந்த குமரன், விராடன் சகோதரன் என்பர். 4. சுதர்சனன் குமரன், இவன் குமரன் உதயன். 5. விதூமனைக் காண்க 6. ஜம்புத் தீவிலிருந்த ஒரு அரசன், இவனிறந்த பிறகு இவன் குமரன் தான முதலிய செய்யாததால் வேதியரொழுக் கங்குன்ற மழை வறண்டது. இவன் குமரன் தானஞ்செய்த என் தந்தை எவ்வுலகில் எவ்வாறிருக்கிறானென்று வேதியர் களை வினவ அவர்கள் விடைகூற அறியாது பார்க்கவ முனிவரையடைந்து அரசன் கூறியதைக் கூறினர். இதையுணர்ந்த சூரியன் வேதியரிடஞ்சென்று நீங்கள் சந்திவந்தனை மறந்தீராயினும் ஒரு நல்ல முனிவனைப் பணிந்துவரின் அத்தீங்கு நீங்குமென, அவர்கள் பார்க்கவ முனிவரையடைந்து மழை வறண்டதைக் கூறித் தானஞ்செய்த சதாநீகன் எவ்வகை இருக்கிறான் என்று வேதியரைக் கேட்ட வினாவிற்கு விடையளிக்க யமபுாஞ்சென்றனர். 7. குருகுலத்தில் பிறந்த அரசன், இவன் உதயணன் தந்தை, இவன் மனைவி மிருகாபதி. (பெருங்கதை)

சதாநீரை

1. கரதோயம். பாரியாத்ர மலையிலிருந்து பிரவகிக்கும் நதி. The river Karatoya in Oudh which flows through the districts of Rung pur and Dinajpur.

சதாபிஷேகம்

ஆதித்யகதியால் வந்த ஆண்டைந்துக்கும் சந்திரோதயம் (42) பிறையுதிக்கும் (82) சௌர ஆண்டும் (8) மாதமுஞ் சென்றவன் ஆயிரம் பிறைகண்டவன், அவன் புண்ணியவுலகமடைய அவனுடைய ஜன்மமாதம் ஜன்மநக்ஷத்திரத்தில் சதாபிஷேகம் பண்ணுவர்.

சதாமாயை

தருமாகானைக் காண்க.

சதாயு

1. புரூரவனுக்கு ஒருபெயர். இவற்குச் சிராயு எனவும் பெயர். மகாரதரில் ஒருவன். 2. சதாயுவின் தம்பி.

சதி

1, தக்ஷன் பெண், இவளே தாக்ஷாயணி உமையின் திருவவதாரம், தக்ஷன் சிவ மூர்த்தியை வெறுத்துச் செய்யும் வேள்வியைக் காணப்புகுந்து தந்தை உபசரிக்காததால் கோபித்துச் சிவமூர்த்தி இல்லாத, இந்த வேள்விச்சாலை இடுகாடாக எனச் சமித்துத் தாமும் தாக்ஷாயணி என்னும் பெயர்கொண்ட தேகத்தை விட்டனள். 2. ஆங்கீரசன் தேவி. இவள் அதர்வ ஆங்கீரசுமுதலிய வேதத்தவரைப் பெற்றனள். 3. சத்தியாதனனைக் காண்க. 4 இவள் ஒரு சிவசத்தி, இவள் சிவ மூர்த்தியின் யோகாக்னியால் தகிக்கப் பட்டனள். சிவமூர்த்தி, விரகமேலிட்டவராய்க் காளிந்தி நதியில் மூழ்க அது வெப்பத்தால் கறுத்தது. (தே~பா)

சதிகல்

மாஸ்திகல் கணவருடனிறந்த வீரபத்னிகளுக்கு நடுகல். இது மஹாஸதி கல் என்பது மாஸ்திகல் என மருவியது.

சதிகோத்திரன்

பிரியவிரதன் குமரன். புட்கரத்தீவின் அரசன்.

சதுக்கப்பூதம்

பாவிகளைப் புடைத்துண்ணும் பூதம். இது சந்திகளிலிருப்பது. (மணிமேகலை.)

சதுசீத்தசி

சைத்ர சுக்ல சதுர்த்தசி விரதம்; இது சத்தியைக் குறித்து சித்திரை மாதம் சுக்லபக்ஷ சதர்த்தசியில் விரதமிருப்பது, இது யமபயத்தை நீக்கும்.

சதுமுகன்

பராசருஷியின் குமரன்.

சதுரங்கன்

(பிர.) உரோமபதன் குமரன், இவன் குமரன் பிருதுலாஷன்.

சதுராக்ஷரி

சாதானியரில் ஒருவகைச் சாதி. (தர்ஸ்டன்)

சதுரானனபண்டிதர்

இவர் தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூரில் பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த பண்டிதர். இவர் மடத்திலிருந்த வல்லியைக் கம்பர் விழைந்தனர் எனக் கம்பர் சரிதம் கூறும்.

சதுர்த்தி

சங்கஷ்டஹா சதுர்த்தி விரதம்; இது ஆவணிமாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் அநுஷ்டிப்பது. பொன் முதலியவற்றால் கணேசத்திருவுருச் செய்து, கலசந்தாபித்து ஆவாஹித்துச் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பூசித்துக் கணேசரை நோக்கித் தமது சங்கஷ்டம் நீக்கவேண்டிப் பலாகாராதிகளும் மற்றும் வைத்துப் பூசிப்பது. இவ் விரதம் கந்தமூர்த்தியால் ருஷிகளுக்குக் கூறப்பட்டது. பின் கிருஷ்ண மூர்த்தியால் பாண்டவர்க்கும் கூறப்பட்டது.

சதுர்த்திசந்திர தரிசன தோஷம்

இது விநாயகர் உருவத்தைக்கண்டு பரிகசித்த சந்திரனுக்கு விகாரவுருவரச் சபித்த விநாயகரைச் சந்திரன் பூசிக்க அவர் சந்திரனுக்கு அருள் செய்து யாவர் உன்னைச் சுக்ல சதுர்த்தியில் காண்கிறார்களோ அவர்கள் வீண் அபவாதம் அடையவும், அவர்கள் ஆவணி மாதத்தில் சுக்லசதுர்த்தியில் தம்மைப் பூசிக்கின் அவ்வபவாதம் நீங்கவும் அருள் செய்தனர் இத்தோஷத்தால் திரு ஷ்ணமூர்த்தி சியமந்தகமணியின் பொருட்டு அபவாததோஷம் அடைந்து விநாயக பூசையால் நீங்கினர் என்பர்.

சதுர்வத்திரன்

சிவகணத்தவரில் ஒருவன்.

சதுர்விததானங்கள்

அபயம், ஆகாரம், 2 சாஸ்திரம், ஔஷதம் என்பன,

சதுர்வியூகர்

மகேசுரனுக்கு ஒரு பெயர். நிவர்த்தியாதிகலை புணர்கையால் என்பர்.

சதுர்வேதி

ஒருவேதியன், சிரார்த்தத்தில் பூசுரர்க்கு அன்னமிட இவனையறியாது அவ்வன்னத்தில் பாம்பு விதைங் கக்கிற்று. அதனையுண்ட வேதியர் அனைவருமி றந்தனர். இவனும் அரசன் தூதுவராலழிந்தனன், (யாதவகிரி மகாத்மியம்).

சதேந்திரர்கள்

நூறு இந்திரர்கள், பவணேந்திரர் (42), வியந்திரேந்திரர் (32), கற்பேந்திரர் (22), சந்திரன், சூரியன், நரேந்திரன், மிருகேந்திரன். இவர்களுக்குத் தலைவன் அகமிந்திரன். (சைநவழக்கு.)

சதை

வாமதேவன் என்னும் ஏகாதசருத்திரன் தேவி.

சத்த இருடிகள்

அத்திரி, ஆங்கீரசன், கிருது, புலகன், மரீசி, புலத்தியன், வசிட் டன் முதலியவர், இவ்வகையும் கூறுவர். அத்திரி, வசிட்டர், சமதக்கினி, கௌசிகன், பாரத்துவாசன், கௌதமன், காசிபன் முதலியவர். ஒருமுறை பசியால் பிணத்தைத் தின்னத் தொடங்க அரசன் தடைசெய்ய அவன் நாட்டில் நிற்காமல் அவன் அளித்த பொருளையும் வாங்காமற் செல்ல அரசன் கோபித்து ஒரு பூதத்தை ஏவ அதைச் சுநசரால் கொல்வித்தனர். ஒருமுறை பசியினால் தாமரைக்கொடி பிடுங்கிவைக்க முட்டையை மீண்டும் காணாமல் சுநச்சருக்கு முன் சபதஞ்செய்தவர்கள்.

சத்தகுலபர்வதம்

மசேந்திரம், கந்தமாதனம், மலயம், சயம், சந்திமந்தம், விந்தியம், பாரியாத்ரம்.

சத்தகோணருஷி

எழுகோணலுள்ள இருடி.

சத்தசமுத்திரம்

உப்பு, கருப்பஞ்சாறு, கள், பால், தயிர், நெய், நீர்.

சத்தசாகரத்தானம்

குறைந்தது ஏழுபலம் பொன் தகட்டில் ஏழு குழிகள் செய்வித்து ஒவ்வொரு குழிகளிலும் உப்பு, நெய், பால், தயிர், கன்னல், மது, நீர் இவைகளை நிறைப்பி முறையே உப்பு முதலியவைகளில் பிரமன், மால், மகேசன், சூரியன், சத்தி, இந்திரன், திரு, மலைமகள் முதலியவர்களைத் தாபித்து, ஏழு குண்டத்தினும் ஏழுசாதி மணிகள் இட்டு எருதின் தோளில் என் பாட்பிப் பூசித்து வேதியர்க்கூட்டித் தானஞ் செய்வது.

சத்தசாசுவம்

ஒரு தீர்த்தம், இதில் மங்கணசித்தன் சிவபூசை செய்து சித்தி அடைந்தனன். இதில் கோடியுருக்கொண்டு சிவ மூர்த்தி அமர்ந்ததால் இதை உருத்திர கோடி எனவுங் கூறுவர்.

சத்ததந்து

இவன் தக்கனைப்போல் ஒரு வேள்விசெய்ய அதில் தேவர் அவிகொளச் சென்றனர். ஆதலால் சிவமூர்த்தி கோபித்து ஆகாசம் தேராகவும், பூமிய வண்டிலாகவும், வாயு குதிரையாகம், அக்கினியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், சலத்தை அம்பாகவுங்கொண்டு கந்தமூர்த்தி தேர்நடத்த தேவரை ஓட்டி யாகத்தை அழித்தனர். (சிவ~பரா).

சத்தநு

இருதிகன் குமரன்.

சத்தநுவன்

சோமசருமன் குமரன். இவன் குமரன் பிரகத்தூர்த்தன்.

சத்தபிரமவாதிமதம்

இந்த மதத்தவன் சத்தந்தானே சசுசீவபரமாய் நிற்கும் எனவும், இது சுத்தமாயையுடன் கலந்து சகசீவபரம் ஆனதென்றும், சத்தமே உறுதிப் பொருள் எனக்கொண்டு அதில் லயிப்பதே முத்தி எனவுங் கூறுவன்.

சத்தமாதாக்கள்

பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி முதலியவர். இவர்களுள் பிராமி சதுர்ப்புஜம், விசாலாக்ஷம், ஒளிக்கும் பொன்மேனி, வாதம், அபயம், கமண்டலம், அக்ஷமாலிகை, அம்சத்வஜம், ஜடா மகுடம், பத்மாஸனம் உள்ளவளாய் அன்ன வாகன மூர்ந்திருப்பவளாய்ப் பிரம்மரூபிணியாயிருப்பவள். மகேச்வரி:வெள்ளை நிறம், திரிநேத்ரம், சூலம், அபயம், வரதம், அக்ஷமாலை, விருஷபத்வஜம், ஜடா மகுடம், உரகபூஷணம் உள்ளவளாய் விரு ஷபவாகனாரூடையாய் மகேசரூபிணியா யிருப்பள், கொமார்: கௌமார வுருவத்தைக்கொண்ட கன்னிகையாய், இரதனமகுட மணிந்தவளாய், அங்குசம், வேல், அபயம், வரதம், செம்பட்டாடை, ஆரகேயூரபூஷணம் குங்குமகிறங்கொண்டு மகாவீர்யமுள்ளவளாய் மயில் துவஜம்மயில் வாகன மூர்ந்திருப்பவள். நாராயணி: பத்மபத்ர விசாலாக்ஷியாய், சியாமள வர்ணமுள்ளவளாய், மகாபலங் கொண்டவளாய்ச் சங்கு, சக்ரம், அபயம், வரதமாகிய நான்கு கரங்களைக் கொண்டவளாய்க் கருடத்வஜம்கொண்டு கருடவாகனம் ஊர்ந்தி ருப்பவள். வராகி: இவள் கறுப்புப்பட்டாடை யுடையவளாய், வராக முகம், சவசம்பத்கரியாய், பலித்சாலங்கிருதமான மார்பினை யுடையவளாய், பாதங்களில் புரமணிந்தவளாய்க் கலப்பை, முசலம், வாதம், அபயம் கொண்டு கறுப்பு அணி அணிக்திருப்பன். இந்திராணி: வஜ்ரபாணி யாய், இரண்டு கண்கள், அழகுள்ள வஸ்திர மணிந்தவளாய், வரதம், அபயம், சக்தி கொண்டு கஜத்வஜமுள்ளவளாய் யானை வாகன மூர்ந்திருப்பள். காளி: இவள், திரிநேத்ரம், சூலம், கட்கம், அம்பு, சக்கரம் ஒருபுறத்திலும், பாசம், பலகை, சார்ங்கம், சங்கம், மற்றக் கரங்களிலும் கொண்டு அஷ்டபுஜ முள்ளவளாய்ச் சடாமகுடம், சர்வபூஷணாலங்கிருதையாய், மகிஷவாகன மூர்ந்திருப்பள்.

சத்தயூதி

தருசகனுடைய அன்பன். பாட்டாமென்னு மூருக்குத் தலைவன். மறைந்திருந்த யூகி முதலியவர்களைக் காணச் சென்ற உருமண்ணுவாவுக்கு உதவிபுரிந்தவன். (பெருங்கதை.)

சத்தவர்க்கம்

எழுவகை மருந்துகள் அவை: நெல்லிக்காய், வெட்டிவேர், குரு வேர், சடாமாஞ்சி, ஏலம், இலவங்கபத் திரி, திராட்சம் என்பன.

சத்தவுலகம்

பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், மகாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம். இவை மேலுலகம், ஏழு. இவையன்றி அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், மசாதலம், பாதாளம் எனக் கீழ் உலகம் ஏழ் உண்டு.

சத்தி

A. 1 இவர் சிவத்தோடு அபின்னையாய் இருப்பதால் பராசத்தி யெனப்படுவர் இவர் காரியோன் முகியான போது தமது சத்தியில் ஆயிரத்தொருகூறாக ஆதிசத்தியையும், அந்த ஆதிசத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் இச்சாசந்தியையும் அவ்விச்சா சத்தியில் ஆயிரத்தொரு கூற்றில் ஞாந சத்தியையும், அந்த ஞாநசத்தியில் ஆயிரத் தொருகூறு கிரியாசத்தியையும் தோற்றுவிப்பர். இச்சத்தி அளவிடப்படாத ஆன்மாக்களை இன்றும் வளர்த்தும் மலபரிபாகத்தில் சிவ மூர்த்தியின் திருவடியாகிய பேரின்பத்தை யடையச் செய்தலால் உலகமாதா என்னப்படுவர். இவரது சில திருவிளையாடல்களைச் சிறிது கூறுவோம. இவரது தோழியர் அறிந்திதை, கமலினி முதலியவர்கள். 2. தம்மிடத்துக் குமாரக்கடவுள திரு அவதரிக்கத் தடைசெய்த தேவர்களுக்குப் புத்திரர் இலாது நீங்கச் சாபமளித்தவர். 3. கந்தமூர்த்தியின் திரு அவதாரத்தில் தீப்பொறி கண்டு பயந்த பிராட்டியின் காற்சிலம்பினின்று நவமணிகள் சிதற அதனைப் பிராட்டி நோக்க அவை ஒன்பது பெண்களாயின. அப்பெண்களைச் சிவமூர்த்தி நோக்க அவர்கள் கருக்கொண்டனர். அப்பெண்களைப் பிராட்டி கண்டு கோபித்துச் கொண்ட கருவுயிர்க்காதிருக்கச் சபித்தனர். அப்பெண்கள் இச்சாபங்கேட்டு உடல் புழுங்க அப்புழுக்கத்தில் லக்ஷம் வீரருதித்தனர். பின் ஒன்பது பெண்களும் பிராட்டியின் ஏவல்புரிந்து அவர் அருளால் நவ வீரர்களைப் பெற்றனர். 4. இவர் சிவமூர்த்தியுடன் சரவனத்திற் சென்று குமாரக்கடவுளை யெடுத்துப் பாலூட்டினர். அப்பால் பெருகிச் சர வனத்திற்பாய அம்மடுவில் சாபத்தால் மீனுருக்கொண்டிருந்த பராசருஷி புத்திரர் சாபம் நீங்கினர். 5. சிவமூர்த்தியின் இரண்டு கண்களையும் விளையாட்டாக மூடிய காரணத்தால் தேவர் முதலியவர்க்கு உலகமிருண்டு நித்தியகருமம் தேவதாபூசை குறைந்தது. அப்பாவம் நீங்கச் சிவபூசை செய்தவர். 6. தம்மிடம் துர்க்கையைத் தோற்றுவித்துத் துர்க்கனென்னும் அரக்கனைக் கொலை செய்வித்தவர். 7. தாமிருக்கும் வனத்தில் காந்தருவர் முதலியோர் வருதல்பற்றி யிவ்வனமடைபவர் பெண்ணாகவெனச் சபித்தவர். இதனால் பெண்ணானார், இளன், இருக்ஷ விரசன் என்னும் வானரன். 8. ஒரு கற்பத்தில் தோழியருடன் பந்தாட. அவ்விடம் விகுளன், உற்பலனென்கிற அசுரர் சிவகணத்தவர்போல் வரக் கண்டு சிவமூர்த்தியின் கட்டளைப்படி கையிலிருந்த பந்தால் மோதிக்கொன்றவர், அப்பந்து ஒரு சிவலிங்கமாயிற்று, அதுவே கந்துகேசம், காசியில் ஒரு பிரதிஷ்டை. 9. துராசாரன் என்னு மசுரனைக் கொலைசெய்ய ஐந்து திருமுகங்களும் பத்துத் திருக்கரங்களுடனு மிருந்து வக்ர துண்டரைப்படைத்தவர். 10. சண்டசாமுண்டர், இரத்த பீசன் முதலியவரைத் தம்தேகத்தில் காளியை யுண்டாக்கிக் கொல்வித்தவர், 11. ஒருமுறை சிவகணங்களும், சிவமூர்த்தியும் வேறெனவுணர்ந்து சிவகணங்களுக்கு அமுது படைக்கத் தொடங்கி ஒருவனுக்கு அமுதளிக்க அவன் பசியால் எல்லாவற்றையும் உண்ணக்கண்டு வியப்படைந்தவர். 12. பண்டாசுரனைப் படைத்துத் தேவர் வேண்டலால் கொலைபுரிவித்தவர். 13. புலிமுகனுக்கும் மகிடனுக்கும் அஞ்சிய பிரமவிஷ்ணுக்கள் பொருட்டு அவ்வசுரரைக் கொலை புரிந்தவர். 14. இறைவன் திரிநேத்திரங்களால் கருநிறமடைந்து சிவபூசைசெய்து அந்நிறம் நீங்கினவர். 15: விக்கிரமாசுரன் தலையறுத்து அத்தலையை ஆசனமாகக் கொண்டவர். 16. ஒரு கற்பத்தில் விளையாட்டாக நீலியெனச் சிவமூர்த்தி அழைக்கச் சகியாது அவ்வுடல்விட்டுக் கௌரியாகத் தவஞ்செய்து வெண்ணிற மடைந்தவர். அவ்விட்டவுடல் கௌசிகிதேவியாயிற்று அக்கௌசிகிதேவி சும்ப, நிசும்பரைக் கொன் றனள். (தேவி~பா). 17. சிவமூர்த்தி, சத்தியைப் புகழ்ந்ததால் சத்திக்குப் பெருமித முண்டாயிற்று. அப்பெருமித மடங்கச் சிவமூர்த்தி தமது சத்தியை யொடுக்கினர். அதனால் உலகம் ஒடுங்கியது. மீண்டும் முனிவர்கள் வேண்டத் தமதுசத்தியை விரித்தனர். இதனால் சத்திக்குப் பாபம் விளைய அதுநீங்கள் வல்லபை சத்தியாய்த் திரு அவதரித்தவள். 18. பிருங்கிமுனிவர் தம்மை வணங்காததால் தம்மையும் ஒப்பவணங்க வேண்டு மென்று கேதாரத்தில் விரதம் புரிந்து அவ்வரம் பெற்றவர். இதுவே கேதார கௌரிவிரதம். 13. சிவமூர்த்தி ஞானோபதேசஞ் செய் கையில் பராமுகமாய்க் கேட்டனர். அதனால் சிவமூர்த்தி வலையர்மகளாகச் சபித்தனர். அச்சாபவிளைவால் பூமியில் பாண்டி நாட்டில் தண்டுறைப்பாக்கமென்னு மூரில் புன்னையடியில் குழந்தையுருவா யிருந்தனர். இவரைப்பர தன் வளர்த்தனன், பிராட் டியைத் திருமணங்கொள்ளத் திருவுள்ளத்தெண்ணிய சிவமூர்த்தி சாபத்தால் அந்நாட்டின் கடவில் நந்திமாதேவரைச் சுறாவாகவிருக்கக் கட்டளையிட்டனர். அவ்வாறே நந்திமாதேவர் அக்கடவில் சுறாவாக விருந்து கடலோடிகளைத் துன்பஞ் செய்திருக்கையில் வலைஞர்க்கரசன், எவன் இச்சுறாவைப் பிடித்து எங்கள் துன்பத்தை நீக்குகிறானோ அவன் என் குமாரிக்கு நாயகனாமென எண்ணியிருந்தனன். இக்குறிப்புணர்ந்த சிவமூர்த்தி வலைஞராய்ச்சென்று வலை வீசி நந்திமாதேவராகிய சுறாவைப் பிடித்துப் பிராட்டியைத் திருமணம் செய்தருளினர். 20. இவர் பிருதிவியாதி பூதங்களில் ஈசானி, பூரணி, வாமை, சேஷ்டை, ரவுதரி முதலியவர்களாயிருப்பவர். 21. வீரகனைக் கல்லாகச் சபித்தனர். 22. அடி தானவனைச் சபிக்கவந்த கோபம் சிங்கவுருவத்துடன் இவர் பக்கத்தில் தங்கியது. 23. கிருதயுகத்தில் புட்புகாசை யென்னுந் திருநாமத்துடன் சிவபூசைசெய்து பிரியாவரம் பெற்றவர், 24. மூகாசுரன் முதலிய பல அசுரரை வதைத்தவர். 25. ஒரு கற்பத்தில் திருவிரலின்வழி கங்கையைப் பிறப்பித்தவர். அக்கங்கை உலகத்தில் பிரவகித்ததறிந்து சிவமூர்த்தி தமது சடையிலணிந்தனர், 26. கங்கை இரேணுவின் குமரியாம் படி சபித்தவர். 27. வைவச்சுத மன்வந்தரத்தில் (28) வது யுகத்தில் நந்தனென்னும் இடையன் வீட்டில் மாயாதேவியாக வந்தவதரித்தவர். 28. விப்ரசித்தியின் குமரர் முதலிய அரக்கரை வதைக்க பக்ததந்தி என்று அவதரித்து அவர்களை வதைத்தவர். 29. ஒரு கற்பத்தில் (50) வருஷம் மழையிலாது உலகமும் இருடிகளும் வருந்தினர். அவ்விருடிகளுக்குக் கருணைசெய்யச் சதாக்ஷியென்னுந் திருநாமம் பெற் றிருந்தனர். இவர் திருமேனியில் அப்போது அநேக சாகாமூலங்கள் இருடிகளின் சாத்தல்பொருட்டு உண்டாயின. ஆதலால் இவருக்கும் சாதம்பரியெனத் திருநாமம் உண்டாயிற்று, 30. தண்டியென்னு அசுரனைச் சங்கரிக்கப் பீமை என்னும் சத்தியாகத் திருவவதரித்தவர். 31, சண்டனென்னு அசுரனைச் சங்கரித்ததால் சண்டிகையென்னுந் திருநாமம் பெற்றவர். 32, மரத்தை நோக்கிச் சந்திரவதியை நிருமித்தவர். 33, சத்தியவிரத னென்கிறவன் பன்றியின் ஓசை கேட்டு ஹூ என்று அதட்ட அது பீஜமந்தாமாதலால் அவனுக்கருள் செய்தவர். 34. சுதர்சன னென்னும் அரசனுக்கு இழந்த ராஜ்யாதிபத்யத்தைத் தருவித்துக் கொடுத்துச் சகல இஷ்டசித்திகளையளித்தவர். 35. சுசீலனென்கிற வணிகனுக்கு வறுமைநீக்கி யருள் புரிந்தவர். 36. சகேதுவென்னு மசானுக்கு அருள் புரிந்தவர். 37. நிசும்பனைத் தேவர் பொருட்டுக் கொன்றவர். 38. தூம்பரனைக் காளியைக் கொண்டு பஸ்மமாக்கியவர். 39. சண்டமுண்டர்களைக் காளியினாற் கொல்வித்து அவளுக்குச் சாழண்டை யென்று பெயரிட்டவர். 40. இவர் சக்தபீஜனைச் சங்கரிக்கை யில் அவன் உடலினின்று விழும் உதிரத்தில் பல அசுரர் தோன்றினமை கண்டு காளியினால் அவன் உடலின் உதிர பிந்து பூமியில் விழாதபடி யுண்ணச்செய்து அவனையுங் கொன்று அவன் உதிரத்தைக் காளியால் பானஞ்செய்யச் செய்தவர். 41. சும்பனைக் காளியினால் கொல்வித் தவர், 42. இவர், சர்வசங்கார காலத்துப் பஞ்ச சத்திகளையும் பிரேதங்களாகக் கொண்டு அவர்களாகிய தெப்பத்தில் எழுந்த ருளியிருப்பர். அவர் பஞ்சப் பிரேதபரா சத்தி யெனப்படுவர். 43. இவர் கிருதயுகத்தில் சுரதனால் பூசிக்கப்பட்டனர். திரேதாயுகத்தில் இராமனால் இராவணவதத்தில் பூசிக்கப்பட்டனர், தைத்தியரை வதைக்கத் தக்ஷன் குமரியாயினர். பின் இமயன் குமரியாயினர். (பிரம்மகைவர்த்தம்). 44. துர்க்கை: துர்க்கன் எனும் தைத்தியனைக் கொன்றவளும், மகாவிக்கினத்தையும், பவபந்தத்தினையும், கர்மத்தினையும், சோகத்தினையும், துக்க, நாக, யம தண்டத்தினையும், ஜன்ம, பய சோகங்களையும் போக்குபவளாதலால் பெற்ற பெயர். நாராயணி கீர்த்தியாலும், குணத்தாலும் ரூபத்தாலும், தேஜஸாலும், நாராயணனை யொத்தவள், ஈசானி: சர்வசித்தியைத் தருபவள். சிவை:அநந்தகல்யாண குண முடையவள். சதீ:சத்புத்தி யதிஷ்டான தேவதையாதலாலிப்பெயர். பகவதி: பகவானைப்போல் நித்யமானவள், சித்தியாதிகளைத் தருபவள். நீத்யை: அழியாதவள். சத்யை:எல்லாமழிய இவள் தனித்திருப் பவளாதலால் பெற்றபெயர். சர்வாணி எல்லா சராசரங்களையும் மோக்ஷத்தையும், சன்ம மிருத்யு ஜராதிகளையடையச் செய்பவள்: சர்வமங்கலை: மோக்ஷத்தையும், களிப்பினையும் சம்பத்தினையும், கல்யாணத்தையும் தருபவள். அம்பை: உலகத்தையீன்ற தாய் என்னும் பொருளது உலகத்தவரால் பூசிக்கப்பெற்றவள், வைஷ்ணவி : விஷ்ணு ரூபிணியாகையால் வந்த பெயர். கௌரி: பொன்னிறத்தினை யுடையவள் எனவும், பரபிரம்மச்வரூப முடையாள், நிர்மலமானவள் எனப் பொருள் பெறும். குருவாகிய சிவமூர்த்தியின் தேவியாதலால் இப்பெயர் பெறுவள். பார்வதி: பர்வசப்தம் உத்சவபேதத்தினையும், திசப்தம் திதி பேதத்தினையும், கல்பத்தினையும் தெரிவிக்கும் ஆதலால் இவற்றிற்கு அதிதேவதை யெனப்படுவள். பர்வதன் புத்ரியெனவும், பர்வதங்களுக் கதி தேவதையெனவும் பொருள் பெறும். சநாதனி:சர்வத்ர சர்வகாலங்களிலும் வித்யாமானை யாதலால் இப்பெயர் பூண்டனள். சக்தி: இவள், தேவர்கள் தனக்குச் செய்த கிரீடாபங்கத்தின் பொருட்டு அவர்களை வீர்ய நாசமடையச் சபித்துப் பின் கருணை செய்தவள். (பிரம்மகைவர்த்தம்). 45. இவளது ஸ்வரூபம் ஞானம். இவள் சத்தி எனப்படுவள். இச்சத்தியை யுபசாரத்தால் பெண்பாலாகக் கூறுவர். சிவத்திற்கும் சத்திக்கும் பேதமின்று. பசுக்களாகிய ஆன்மாக்களிடம் வைத்த கருணையால் ஐந்தொழில் செய்விக்க வியாபரிக்கையில் ஐவகைப்பட்டுப் பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி, யெனப் பலவகைப்படுவள். 46. இவள் இமவான் வேண்டுகோளால் கேதாரம் செல்கையில் தன் அம்சத்தால் மனோன்மனியைச் சிருட்டித்தனள். 47. ஒரு கற்பத்தில் தேவர்கள் அசுரர் களை வென்று கர்வித்திருக்கையில் அவர்களது கர்வத்தையடக்க யக்ஷியுருவாகித் தோன்ற தேவர்கள் யக்ஷியிடம் அக்னியை யனுப்பச் சக்தி ஒரு துரும்பை அக்னியெ திரிலிட்டு இதனைக் கொளுத்து என அக் னிவலிவற்றுத் திரும்பினன். பின் தேவர்கள் வாயுவை யனுப்ப அவனும் வலிவற்றுத்திரும்பினன் பிறகு இந்திரன் துரத்தச் செல்ல இந்திரன் வலியற்றனன். பின்பு தேவிமறைய அசரீரியால் கர்வபங்கத்தை யடக்கத் தோன்றியவள் சத்தியென்றுணர்ந்து தேவியைத் துதித்தனர். (தே~பா.) 48. தக்ஷயாகத்தின் பொருட்டுத் தான் செல்லாமல் தன்னைப் போலுருக்கொண்ட ஒருத்தியை நிருமித்துத் தக்ஷயாகத்திற்கனுப்பினள், 49, சத்தி, சிற்சத்தி, பராசத்தி, இச்சா சத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி. என காரியத்தால் வேறு பெயர் பெறுவர். 50. (38) இவள் சசினி, அங்கதை, இஷ்டை, மரீசி, சுவாலினி, அவ்யக்தை, சாந்தை, வித்யை, பிரதிஷ்டை, நிவர்த்தி, தமசு, மோகை, க்ஷயை, நிஷ்டை, மிருத்யு, மாயை, பயை, ஜரை, ரஜசு, ரக்ஷை, ரத்யை, பால்யை, காம்யை, சம்யமன்யை, கரியை, புத்யை, கார்யை, தாத்ரி,ப்ராமான்யை, மோஹினி, பவை, சித்தி,வ்ருத்தி, தவித்யை, லக்ஷ்மி, மேதா, காந்தி, ஸ்வதை,த்ருத்யை. எனவுங் கூறப்படுவள். 51, வாமை: பிரதிவி உருவம், சேஷ்டை: ஜலமய மானசத்தி. சௌத்ரி: அக்னியாகாரை, காளி: வாயுரூப சத்தி கலவி கரிணி: சந்திர ரூபை, பலப்பிரம தனி:சூர்ய ரூபை. சர்வபூததமனி: ஆன்ம ரூபி. மனோன்மனி சிவ ரூபை, இன்னும் இவரது சரிதை பலவுள, அவை மாபுராணங்களில் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வல்லார் பால் கேட்டறிக.

சத்தி

B 1. வசிட்ட புத்திரர் இவர் முதலாக ஏற்றுவர் இவர்களைத் திரிசங்கு தன்னை உடலுடன் சுவர்க்கம் அனுப்பக்கேட்க இவர்கள் மறுத்தனர். திரிசங்கு விச்வாமித்திரரை யடைந்து அவ்வாறு கூற அவர் ருஷிகளை யாகத்திற்கழைக்க இவர்கள் மறுத்ததனால் விச்வாமித்திரனால் (700) ஜன்மம் பிணந்தின்னிகளாகச் சபிக்கப் பட்டவர்கள். (இரா~பால,) இவர்க்குத்தாய் அருந்ததி, இவர் சுதர்சனனால் கொலையுண்டவர். இவரை உதிரன் என்னும் அரக்கன் விச்வாமித்திரன் ஏவலால் கொன் சான் எனவுங் கூறுவர், பராசருக்குத் தந்தை, மனைவி துச்சந்தை, இவர் அரக்க வுருக்கொண்ட கல்மாஷபாதனால் இறந்தனர். இவர் புலைச்சியைச் சேர்ந்து பராசரைப்பெற்றார். 2. பிரசூதியின் பெண். 3. பிராசீநன் தேவி.

சத்தி நாயனார்

சோழநாட்டில் வரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் அவதரித்து சிவனடியவர்களை நிந்தை செய்யும் அவர்கள் நாவினைத் தண்டாயத்தால் இழுத்து சரிகையால் எறிந்து சிறப்புடன் இருந்து முத்தி அடைந்தவர். (பெ~புராணம்.)

சத்திதத்வம்

சூக்ஷ்மலய அவத்தையினின்ற முதல்வனது கிரியாசத்தி வெளிப்பட்டுப் பொதுமையிற் சங்கற்பித்த வழி சுத்தமாயை காரியப்படுவதாய் நின்ற இரண்டாம் விருத்தி சத்தியென்றோதப் படும் சிவனாவ திட்டிக்கப் படுந்தவம். இதனைத் தூலலயதத்வம், தாவநிட்களதத்வம், விந்து தத்வம் எனவும் கூறுவர். (சிவ~போ).

சத்திநாதனார்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களுள் ஒருவர். குறுந்தொகையுள் குறிஞ்சியைப் பாடியுள்ளார் குறு 119.

சத்திநிபாத அறிகுறிகள்

சிவசரித்திரங் கேட்கையில் மெய் புளகித்தல், கண்களில் நீர் அரும்பல், வாய் குழறல், சிவனடியவர் தரிசனத்தாற் கூச்சமகன்று வணங்கல், அன்புடைமை, விபூதிருத்ராக்ஷம், முதலிய சிவ சின்னங்களிடத் தன்பறாமை முதலியவுடைமை. (சைவ நெறி).

சத்திநிபாதம்

சிவசத்தி ஆன்மாவிடம் பதிதல், அது பதியுண்டென அறிதல், பதியையடைதர்கு வழியறிதல், பிரபஞ்சத்தை நீங்கிநிற்றல், முற்றத்துறத்தல் முதலிய. அது நான்கு வகை, மந்தம், மந்தராம், தீவிரம், தீவிரதரம். திவிர தரசத்திநிபாதத்தில் தேகம் விழும், தீவிரமாகில் உடனே மூர்ச்சைவரும், மந்தமாகில் சரீரம் நடுங்கும், மந்ததாமாகில் மயிர்க்கூச்ச லுண்டாம். இவை சிவ தீக்ஷா அறிகுறி.

சத்திநேத்திரன்

அத்திரி குமான். தாய் அநசூயை.

சத்திபீடங்கள்

108, காசியில் கவுரிமுக நிவாசினியாய் (1) விசாலாபீடம், நைமி சாரண்யத்தில் (2) லிங்கதாரணிபீடம், பிரயாகையில் (3) லளிதாபீடம், கந்தமாதனத்தில் (4) காமுகீபீடம், மானதசிரசில் (5) குமுதாபீடம், இதற்குத் தென்திசையில் (6) விச்வகாமாபகவ தீபீடம், வடதிசையில் (7) விசவகாம பாபூரிணீபீடம், கோமந்தத்தில் (8) கோமதீபீடம், (9) மந்தர பருவதத்தில் காமசாரிணிபீடம், (10) சைத்ர ரதத்தில் மகோக்கடைபீடம், (11) அத்தின புரத்தில் ஜயந்தீபீடம், (12) கன்யாகு பஜத்தில் கௌரிபீடம், (13) மலையாசலத்தில் சம்பாபீடம், (14) ஏகாம்பரத்தில் கீர்த்திமதி பீடம், (15) விச்வத்தில் வேச்வரீபீடம், (16) புஷ்கரத்தில் புருஹுதைபீடம், (17) கேதாரத்தில் சன் மார்க்கதாயினி பீடம், (18) இமயத்தின் பின் மந்தைபீடம், (19) கோகர்ணத்தில் பத்ர காணிகாபீடம், (20) பவானியில் ஸ்தானேச்வரீபீடம், (21) பில்வபத்ரிகை யில் பில்வகைபீடம், (22) ஸ்ரீசைலத்தில் மாதவிபீடம், (23) பத்திரையில் பத்தி ரேச்வரீபீடம், (24) வராகசைலத்தில் ஜயாபீடம், (25) கமலா லயத்தில் கமலை பீடம். (26) ருத்ரகோடியில் ருத்ராணி பீடம், (27) காலஞ்சரத்தில் காளிபீடம், (28) சாளக்ராமத்தில் மஹாதேவிபீடம், (29) சிவலிங்கத்தில் ஜலப்பிரியைபீடம், (30) மஹாலிங்கத்தில் கபிலைபீடம், (31) மாகோட்டையில் மகுடேச்வரிபீடம், (32) மாயாபுரியில் குமாரீபீடம் (33) சந்தானத்தில் வலி தாம்பிகாபீடம், (34) கயையில், மங்களாம்பிகை பீடம், (35) புருஷோத்தமத்தில் விமலாபீடம், (36) சகஸ் திராக்ஷத்தில் உத்பலாக்ஷபீடம், (37) இரண்யாகத்தில் மகோத்பலாபீடம், (38) புண்டரவர்த் தனத்தில் பாடலீபீடம், (39) (40) சுபாருசவத்தில் நாராயணீ பீடம், (41) திரிகூடபர்வதத்தில் ருத்ரசுந்தரீபீடம், (42) விபுலத்தில் விபுலாதேவிபீடம், (43) மலையாசலத்தில் கல்யாணிபீடம், (44) சஹ்யபர்வதத்தில் ஏகவீராபீடம், 45) அரிச்சந்திரத்தில் சந்திரிகாபீடம், (46) ராமதீர்த்தத்தில் ரமணாபீடம், (47) யமுனாதீர்த்தத்தில் விருவாவதி பீடம், (48) கோடி தீர்த்தத்தில் கோடவீபீடம், (49) மாதவவனத்தில் சுகந்தரபீடம், (50) கோதாவிரியில் திரிசந்தி பீடம், (51) கங்காதவாரத்தில் ரதிப்ரியா பீடம், (52) சிவகுண்டத்தில் சபாநந்தை பீடம், (53) தேவிகா தடத்தில் நந்தினீ பீடம், (54) துவாரகையில் ருக்மணீபீடம், (55) பிருந்தாவனத்தில் ராதாபீடம் (56) மதுரையில் தேவகீபீடம், (57) பாதாளத்தில் பரமேச்வரீபீடம், (58) சித்ரகூடத்தில் சீதாபீடம், (59) விந்தியத்தில் விந்தியாதிவாசபீடம், (60) காவீரத்தில் மகாலக்ஷ்மீபீடம், (61) விநாயக ஷேத்திரத்தில் உமாதேவிபீடம், (62) வைத்தியநாதத்தில் ஆரோக்யா பீடம், (63) மஹாகாளத்தில் மஹேச்வரி பீடம், (64) உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகைபீடம், (65) விந்திய பர்வதத்தில் நிதம்பைபீடம், (66) மாண்ட வியத்தில் மாண்டவிபீடம், (67) மயேஸ்வரிபுரத்தில் சுவாஹாதேவிபீடம், (68) சகலண்டத்தில் பிரசண்டைபீடம், (69) அமரகண்டத்தில் சண்டிகைபீடம், (70) சோமேஸ்வரத்தில் வராரோகை பீடம், (71) பிரபாசத்தில் புஷ்காரவதிபீடம், (72) சாஸ்வதிந்தி தடத்தில் தேவமாதை பீடம், (73) மஹாலயத்தில் மகாபாகை பீடம், (74) பயோஷ்ணியத்தில் பிங்களேஸ்வரி பீடம், (75) கிருத சௌக்கியத்தில் சிம்மிகைபீடம், (76) கார்த்திகையில் அதிசாங்கரிபீடம், (77) உற்பலாவர்த்ததில் லோலாதேவிபீடம், (78) சோண சங்கமத்தில் சபத்திரைபீடம், (79) சித்தவனத்தில் லமிபீடம், (80) பாதாச்ரமத்தில் அனங்கைபீடம், (81) ஜாலந்தரத்தில் விஸ்வமுகிபீடம், (82) கிஷ்கிந்த பர்வதத்தில் தாரைபீடம், (83) தேவதாரு வனத்தில் புஷ்டிர்மேதா பீடம், (84) காச்மீர மண்டலத்தில் பீமாதேவிபீடம், (85) ஹிமாத்ரியில் துஷ்டி விச்வேச்வரிபீடம் (36) கபாலமோசனத்தில் சுத்திபீடம், (37) காயாரோ கணத்தில் மதாதேவிபீடம், (88) சங்கோத்தாத்தில் தராபீடம், (89) பிண்டராக க்ஷேத்திரத்தில் திருதிபீடம், (90) சந்திரபகாநதியில் காளதேவிபீடம், (91) அச்சோதயத்தில் சிவதாரணிபீடம், (92) வேணாநதியில் அமுர்தைபீடம், (93) பதரியில் உரசிபீடம், (94) உத்தரகிரியில் அவுஷதைபீடம், (95) குசத்தீபத்தில் குசோதகைபீடம், (96) ஹேமகூடத்தில் மன்மதைபீடம், (97) குமுதத்தில் சத்தியா வாதினிபீடம், (98) அஸ்வத்தில் வந்தனி பீடம், (99) குபேராலயத்தில் நிதிபீடம், (100) வேதமுகத்தில் காயத்திரிபீடம், (101) சிவசந்நிதியில் பார்வதிபீடம், (102) தேவலோகத்தில் இந்திராணிபீடம், (103) பிரமன் முகத்தில் சரஸ்வதி பீடம், (104) சூரியபிம்பத்தில் பிரபைபீடம், (105) சப்தமாதாக்களில் வைஷ்ணவ தேவிபீடம், (106) பதிவிரதைகளில் அருந்ததிபீடம், (107) அழகான ஸ்திரீகளில் திலோத்தமை பீடம், (108) சர்வசரீரிகளுடைய சித்தத்தில் சக்தி பீடம், பிரஹ்மகலை என்றும் தேவி பெயர் பெற்று விளங்குகின்றாள்.

சத்திபீடம்

நக்கன் சிவபெருமானை வெறுக்க அவ்விடம் தக்ஷன் வேண்டு கோளாலவ தரித்திருந்த சதிதேவியாகிய சத்தி, தன் திருமேனியை நெருப்பிலிட்டு இமாசலத்திலவதரித்தனள். ருதரமூர்த்தி அவள் திருமேனி சிதகலா ரூபமுள்ள தாதலால் அதனைத் தாம் தாங்கி நிற்கையில் திருமால் லோகோஜ் ஜீவனத்தின் பொருட்டதனை வேண்டிச் சத்திபீடங்களாகப் பல இடங் களில் தாபித்தனர். சத்திபீடங்கள் காண்க. (தேவி~பாக).

சத்திமுத்தப்புலவர்

சத்திமுத்தம் என்னும் ஊரிற் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்ந்து தம்மூர் விட்டு அயலூர் சென்று ஒரு குட்டிச்சுவாண்டைக் குளிருக்கு ஒதுங்கியிருக்கையில் நாரை ஒன்று மீது பறக்கக்கண்டு அதைத் தூதாக நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன, பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய், நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி, வடதிசைக்கு எகுவீராயின், எம்மூர்ச் சத்திமுத்த வாவி பட்டங்கி, நனைசுவர்க் கூறைகனை குரற் பால்லி, பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு, எங்கோன் மாறன் வழுதி கூடலில், ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலது கொண்டு மேலே தழீஇப், பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும், ஏழையாளனைக் கண்டனம் எனுமே” என்னுஞ் செய்யுளைக் கூறினர். அச்சமயத்தில் நகரி சோதனைக்கு வந்த அரசன் இச்செய்யுளைக் கேட்டிருந்து தான் நாரை யின் மூக்கிற்குப் பல வித்துவான்களிடத்தும் நூல்களிடத்தும் உவமை காணாது தேடிக்கொண்டிருந்த பனங்கிழங்கின் உவமைகேட்டுக் களிப்புற்றுத் தன் உத்தரியத்தை அவர்மீது எறிந்து சேவகரை விட்டு வருவித்து வேண்டிய உபகரித்தனன். பிறகு இவர் களத்தூர் குடிதாங்கி முதலியாராலும் ஆதரிக்கப்பட்டனர் என்பது வெறும்புற்கையும் அரிதாக்கிள்ளை சோறும் என் வீட்டில் வரும், எறும்புக்கும் ஆர்பதமில்லை முன்னாள் என்னிருள் கலியாம், குறும்பைத் தவிர்த்த குடி தாங்கியைச் சென்று கூடியபின், தெறும்புற் கொல் யானை கவளம் கொள்ளாமற் றெவிட்டியதே’ எனும் இச்செய்யுளால் தெரிகிறது, இச்செய்யுளைப் புறநானூற்றிலுள்ள “அன்னச்சேவல் எனும் (67)ம் கவியுடன் ஒப்பிடுக.

சத்திய இதன்

புஷ்பவான் குமரன், இவன் குமரன் குரு.

சத்திய சேநன்

1. கர்ணன் குமரன். 2. தருமன் என்னும் அரசனுக்குச் சூனிருதையிடத்து அவதரித்த விஷ்ணுவினம்சம்.

சத்திய சேனை

திருதராஷ்டிரன் பாரியை (பா. ஆதி.)

சத்தியகன்

1. விருஷ்ணி வம்சத்தவன், சிநி குமரன். இவன் குமரன் யயுதானன். 2. சாத்தகியின் தந்தை.

சத்தியகர்மா

1. (பிர.) செயத்திரதன் தேவி, 2. அங்கதேசாதிபதியாகிய திருடவிருதன் தந்தை.

சத்தியகாமன்

ஜாவாவன் புத்ரன். சிவியன் சந்ததியான்.

சத்தியகாயன்

இவன் தருசகன் மந்தரிகளுள் ஒருவன் ஆருணியாசனோடு போர் செய்தற்கு உதயணன் புறப்பட்ட காலத்தில் அவனுக்குத் துணையாகத் தருசகனால் அனுப்பபட்ட வீரர்களில் ஒருவன், அப்போரில் இவன் இறந்தது பற்றி இவன் மக்களுக்கு உதயணன் சீவி தங்களளித்து மிக மேம்படுத்தினன். (பெ. க.)

சத்தியகாளர்

நாலாம் மன்வந்தரத்துத் தேவர்கள்.

சத்தியகீர்த்தி

அரிச்சந்திரனுக்கு மந்திரி, மகா உறுதியுள்ளவன், அரசனுக்குத் துன்பம் நேர்ந்தகாலத்து அத்துன்பத்தை உடன் அனுபவித்தவன்.

சத்தியகேது

1, விபுவின் தந்தை. சுகேதுவின் பேரன். 2, தர்மகேதுவின் குமரன். இவன் குமரன் திஷ்டகேது.

சத்தியகோஷன்

சைநன் ஒரு மந்திரி இவனிடம் ஒரு செட்டிதான் ஆர்ஜித்தரத்தினங்களை நம்பிவைத்து மீண்டுங் கேட்க இல்லை யென்ன இராஜமகிஷியின் தந்திரத்தால் களவு வெளிப்படத் தண்டனை அடைந்தவன்.

சத்தியசகசு

சுதர்மாவாகிய விஷ்ணுவின் அம்சாவதாரத்தைப் பெற்றவர்க்குத் தந்தை.

சத்தியசந்தன்

1. இவன் வைஷ்ணவவேதியன். விஷ்ணுவாலயப் பிரதிஷ்டை செய்து விஷ்ணுமூர்த்தியை மோக்ஷம் கேட்க அவர் சிவமூர்த்தியால் அன்றி என்னாலாகாது எனச் சிவமூர்த்தியைப் பணிந்து முத்தி அடைந்தவன். (சூதசம் மிதை.) 2. சிவதரிசனத்தால் குலை நோய் தீர்ந்த அரசன்.

சத்தியசயதன்

பூலுசன் சந்ததியான்.

சத்தியசித்

I. மூன்றாமன் வந்தரத்து இந்திரன். 2. கங்கன்குமரன். 3. (பிர.) சுந்தன்குமரன். இவன்குமரன் விசுவசித், 4. துருபதன் தமயன்.

சத்தியசிரவசு

(ரூ.) விதிகோத்திரன் குமரன்.

சத்தியசிரவன்

இருக்வேதியாகிய இருடி.

சத்தியஞானதரிசனிகள்

பரஞ்சோதி முனிவர்க்குச் சிவஞான போதம் உபதேசித்த இருடி புங்கவர்.

சத்தியதர்மா

தர்மசாவர்ணி மநுப்புத்திரன்.

சத்தியதிருதி

1. சதாநந்தர் குமரர். இவர் குமரர் சிரத்துவான். இவர் ஊர்வசியைக் கண்டு வீரியம் விட அது ஒரு புத்திரனும் புத்திரியும் ஆயிற்று. அதனைச் சந்தனு கிருபையால் வளர்த்துக் கிருபன், கிருபி எனப் பெயரிட்டனன். 2. கிருதமான் குமரன். இவன் குமரன் திருடநேமி,

சத்தியதேவன்

1. கலிங்க தேசாதிபதி பீமனால் கொல்லப்பட்டவன். 2. திரகர்த்ததேசாதிபதி அர்ச்சுனனால் கொல்லப்பட்டவன்.

சத்தியன்

1, ஒரு இருடி, 2. அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடம் பிறந்த குமரன்.

சத்தியபாமை

சத்திராஜித்தின் குமரி, கண்ணன் பாரி. சததன்வா தன் தந்தையைக் கொன்றது பற்றிக் கண்ணனிடம் குறை கூறிக் கொலை செய்வித்தவள். இந்திராணி அவமதித்ததைப்பற்றிப் பாரிசாதவிருக்ஷத் தைக் கண்ணனைக்கொண்டு பூமிக்கு வருவித்தவள். இவள் குமரர் பானு முதலிய பதின்மர். சாருதேஷணன் தாய். நாகாசானுடன் கண்ணன் யுத்தத்திற்குச் செல்கையில் உடன் சென்றவள், அதிதியால் என்றும் மூப்படையா வரம் பெற்றவள்.

சத்தியபுரம்

இந்த நகரத்திலிருந்த மாந்தர்கள் எல்லாரும் ஒரே காலத்துக் கரு அடைந்தனர்.

சத்தியப்பிரதன்

(சூ.) ஏமரதன் குமரன்.

சத்தியலேகியம்

ஊரார் ஒருங்கு கூடியொற்றுமைப் பொருட்டு எழுதுவது.

சத்தியலோகம்

கைலாசத்திற்குச் சொன்னலோக அடுக்கின்படி சத்திய உலகமிருக்கும். அந்தச் சத்தியலோகம் பதினாறு கோடி யோசனை உயரத்தைப் பொருந்தும், அதின் நடுவில் பிரமதேவர் எழுந்தருளி யிருப்பர். இதில் கிழக்கே இந்திர நீல நிறம் போன்ற வடிவுடைய இருக்கு வேதமிருக்கும். வடக்கே படி நிறத்தையுடைய எசுர்வேதமிருக்கும் மேற்கே பதுமராக நிறம் போன்ற சாமவே தமிருக்கும். தெற்கே கருநிறம் போன்ற அதர்வணவேதமிருக்கும். பின்னும் இதிஹாசம், புராணம், மீமாம்சை முதலிய சாத்திரங்களும், சாவித்திரியு மிருப்பர்.

சத்தியவதி

1. திரிசங்கின் பாரி. 2. வியாசன் தாய், 3. நக்னசித்தின் குமரி. எழுவிடைளைக் கர்வபங்கஞ்செய்து கண்ணன் இவளை மணந்தனர். 4. காதிராஜன் குமரி, இரிசிகர் இவளை யாசித்து மணந்தனர். இவளே கௌசிகி நதியாயினள். இவள் குமரர் சமதக்கினி 5 பரிமள கந்திக்கு ஒரு பெயர். இவள் ஓடம்விடுகையில் பராசர் இவளைக் கூடி வியாசரைப் பெற்றனர். இவளுக்குச் சந்தனுவால் சித்திராங்கதன், விசித்திரவீரியன் பிறந்தனர்.

சத்தியவதி

அகஸ்தியர்தேவி இவளுக்குலோ பாமுத்திரை எனவும் ஒரு பெயர். (பா ~ ஆதி.) 2. மச்சகந்திக்கு ஒரு பெயர்.

சத்தியவந்தன்

1, சாக்ஷசமனுவிற்கு நட்வலையிடத்துதித்த குமரன் 2. மத்திர தேசாதிபதியாகிய தியுமத் சேநன் குமரன். இவற்குச் சித்திராசுவன் எனவும் பெயர். சாவித்திரியின் கணவன். 3. சங்கராசாரியர் காலத்து அவரால் புத்திரப்பேறு பெற்ற அரசன்.

சத்தியவான்

1. சாவித்திரியின் கணவன். 2. சாளுவராசன் குமான். 3. தூர்யோதனன் சேனாதிபதி. 4, சாளுவ தேசாதிபதியாகிய துயமத் சேனன் புத்திரன் தேவி சாவித்திரி.

சத்தியவிதன்

(சூ.) உபரிசரவசுவின் வம்சத்தரசன்.

சத்தியவிரதன்

1. வைவச்சுதமனு. மச்சாவதாரமூர்த்தியைக் காண்க. இவன் விஷ்ணு பக்தியால் ஒரு பிரளயத்தில் தவறி மறு பிரளயத்தில் மனு ஆனவன். இவன் திராவிட தேசாதிபதி, 2. இரண்யரோமன் அல்லது இரணிய ரேதஸுக்குக் குமரன். 3. திரிசங்கினுக்கு ஒரு பெயர். 4 பாழ்ங்கிணற்றிலிருந்த பிதுர்க்களை துலாகாவேரி தீர்த்தமாடி அதினின்று நீக் கின ஒருவன். 5. திரிபந்தனன் குமரன். 6, துரியோதனன் சபையிலிருந்த சூதாடவல்லவன், 7. கோசல தேசத்தில் தேவதத்தன் என்பான் ஒரு வேதியன் புத்திரனில்லாது நெடுநாள் இருந்தனன், இவன் புத்திரகாமேஷ்டி செய்யும் வகை கோபிலருஷியை யுதகாதாவாக இருத்தி யாகஞ் செய்கையில் ருஷி அடிக்கடி சுவாசத்தை விட்டுச் சுரபங்கமாகச் சாமகானஞ் செய்து வந்தனர். அதைக்கண்ட தேவதத்தன் இவ்வாறு சுரபங்கமாகச் செய்தல் கூடாது எனக் கோபிக்க முனிவர் நீ என்னைக் கோபித்தனை ஆதலால் உன் புத்திரன் மூடனும் ஊமையும் ஆக எனச்சபித்தனர். பின் வேதியன் வேண்டக் கருணை கூர்ந்து சில நாள் மூடனாயிருந்து பின் மகாவித்வான் ஆவன் என அநுக்கிரகித்துப் போயினர். பின் ரோகணி என்னும் அவன் மனைவி ஒரு புத்திரனைப் பெற்றனள். அவனுக்கு உதத்தியன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். இவனுக்கு எட்டாவது வயதில் உபநயனாதிகளைச் செய்து வேதாத்தியானஞ் செய்விக்கையில் ஓரேழுத்தேனும் வாயில் நுழையாமை கண்டு தாய் தந்தையர் மிகவும் வருந்திப் பன்னிரண்டுவயது வரையில் கல்விவர முயன்றும் ஒரு எழுத்தும் வாராதது கண்டு மனம் வெறுத்துவிட்டு வெட்கத்தால் பிள்ளையை வீட்டின் வெளியில் போகாதபடி கட்டளை யிட்டனர். இவ்வகையாகிய சிறுவன், ஓர்நாள் தன்னைப் பலரும் அவமதித்தலை எண்ணி வீட்டைவிட்டு அகன்று கங்காதீரம் அடைந்து ஓர் ஆச்சிரமம் அமைத்துப் பொய் சொல்லுதல் இல்லை என விரதம் பூண்டு பதினான்கு வருடம் வனத்தில் காலம் கழித்துவந்தான். இவ்வாறு இருக் கையில் ஓர் நாள் ஒருவேடனால் அடிபட்டு ஒரு பன்றி இவன் காணச் சமீபிக்க இவன் ஊமையாகையால் புண்ணியவசத்தால் தேவி மந்திரமாகிய ‘ஹ்ரு, ஹ்ரு” என்று கூச்சலிட்டனன். பின் வேடன் வந்து சுவாமி நீர் சத்திய விரதராகையால் பன்றி சென்ற இடம் கூறுக என இவன் பன்றியிருக்கும் இடம் தெரிவிப்போமாயின் கொலைசெய்த பழி நேரும், சொல்லாது இருப்போம் எனின் பொய் கூறின வனாகிறோம், இவ்வித தர்மசங்கடத்திற்கு என் செய்வதென எண்ணி அப்பன்றியிருக் குந்திக்கை நோக்கி ஊமையாகையால் முன் சொல்லியபடி ஹ்ருஹ்ரு என்றனன். இவை தேவீபீஜ மந்திரமாகையால் தேவி தரிசனந் தந்து வித்தையை அநுக்ரஹஞ் செய்து போயினள். பின்பிவன் மகாபண் டி தனானான். (தே~பா.) 8. சூர்யவம்சத்து அருணன் குமரன். இவன் தந்தை சொற்கேளாது யதேச்சையாய்த் திரிகையில் ஒரு நாள் ஓர் வேதியன் கல்யாணத்திற் சென்று மணமகளை யபகரித்துச் சென்றனன். இதனை வேதியர் அரசனிடம் கூறத் தந்தையாகிய அரசனிவனைச் சக்கிலி காரியம் செய்தனை யாதலால் நாட்டைவிட்ட கன்று சக்கிலியரிடம் செல்கவென அவ்வகை சக்கிலியருடன் கூடிப் பணிகளைக்கொன்று ஜீவித்து வருகையில் (12) வருடம் க்ஷாமமுண்டாயிற்று. அந்நாட்டிலிருந்த விச்வாமித்ர ரிஷி மனைவியையும் மக்களையும் விட்டுத் தவத்திற்குச் சென்றனர். பசியால் வருந்திய மக்களையுடைய அவர் மனைவி ஒரு பிள்ளையை விற்றேனும் பசி போக்குவோமென ஒருவன் கழுத்தில் தருப்பைக் கயிற்றால் கட்டியவனையீர்த்துச் செல்லுகையில் சத்தியவிரதன் கண்டு யீர்த்துச்செல்லுங் காரணமுணர்ந்து இது முதல் நான் உமது வீட்டிற்கருகிருக்கும் மரத்தில் ஆகாரம் வைக்கிறேன் அதனை உமது பிள்ளைகளுக்குக் கொடுத்திருமென்று அவ்வாறு செய்து வருகையில் ஒரு நாளாகாரம் அகப்படாமையால் வருந்தி வசிட்டர் ஆச்சிரம வழி வருகையில் வசிஷ்ட தேனுவைக்கண்டு இது வசிட்டாது. நாம் அறிவிலாது செய்த காரியத்தைத் தந்தைக்குக் கூறித் தடுக்காதவனது என்று அதனைக் கொன்று தானும் அருந்தி விச்வாமித்ரன் தேவிக்கும் கொடுத்தனன். இதனால் வெகுண்ட வசிட்டர், அடாபிராமண பத்னியை அபகரித்ததுடன் கோவதையும் செய்தாயாதலால் பசுவைப்போல் உனக்கு மூன்று கொம்புண்டாய் திரிசங்கு எனப் பெயரடைந்து பிசாசுபோலலைக எனச் சாபமிட்டனர். விச்வாமித்ர பதளியால் கழுத்தில் தருப்பைக் கயிற்றால் கட்டப்பட்டவன் களபந்தன். (தேவி. பா.)

சத்தியவிரதம்

திருக்காஞ்சியிலுள்ள தலங்களில் ஒன்று. இதற்கு இந்திரபுரம் என்று ஒரு பெயர் உண்டு. புதன் பூசித்துக் கிரக நிலை பெற்றது.

சத்தியவிரதை

திருதராஷ்டிரன் பாரியை. சௌமியனைக் காண்க.

சத்தியாதனன்

விதர்ப்பதேசாதிபதி இவன் பசையாசனாகிய துன்மருஷணனாற் கொலையுண்டுபோக, சதி எனும் கர்ப்பிணியாகிய மனைவி காட்டிற் சென்று கருவுயிர்த்து நீர் அருந்துகையில் முதலை வாயிலகப் பட்டு இறந்தனள். இறந்த சதியின் குமரனை உமை என்னும் ஓர் பார்ப்பினி தன் குமரன் சுசீலனோடு தருமகுத்தன் எனப் பெயரிட்டு வளர்க்கையில் முனிவர் ஒருவர் இக்குமரனுடைய பிதா முற்பிறப்பில் பாண்டி நாட்டரசன். சனிப் பிரதோஷத்தில் சிவபூசைவிட்டுச் சோழனை வெட்டியபடியால் இப்போது பகைவரால் கொல்லப்பட்டு இறந்தான். இவன் மனைவி சக்களத்திக்கு விஷம் அருத்திய படியால் முதலை வாய்ப்பட்டு இறந்தனள். ஆதலால் இப்பிள்ளை வறுமை அடைகிறான். உன்குமரன் சுசீலன் முற்பிறப்பில் யார் கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு பிறர்க்கு உதவாதலால் தரித்திரனா யிருக்கின்றான். ஆதலால் இந்த இருவரும் பிரதோஷவிரதம் செய்வரேல் செல்வம் உள்ளார் ஆவர் என்று தீக்ஷை செய்து சென்றனர். குமரர் இருவரும் பிரதோஷவிரதம் இருக்கையில் சுசீலன் பொற்றிகள் அமைந்த குடம் பூமியிற்பெற்று வறுமை நீங்கினன். தருமகுத்தன் திரமிடன் என்னும் காந்தருவனுக்குத் தாரணியிடம் உதித்த அஞ்சுமதியை மணந்து காந்தருவராசன் துணையால் தன்னாசை அடைந்து சுகம் அடைந்தனன், (பிரமோத்தர காண்டம்).

சத்தியாதன்

பௌமாதன் குமரன்.

சத்தியாள்

மூன்றாம் மன்வந்தரத்துத் தேவர்கள்.

சத்தியேயு

(சந்.) ரௌத்திராசுவன்குமரன்.

சத்தியை

மன்யுவின் தேவி.

சத்தியோசாதமூர்த்தி

வெண்ணிறம், வள்ளை மாலை வெள்ளை வஸ்திரம், பால்யவடிவம், புன்னதை, அபயம், வரதம் உடை யவராயிருப்பர்.

சத்தியோசாதம்

சிவமூர்த்தியின் திருமுகத்து ஒன்று. சிவேதலோகித கற்பத்துப் பிரமாயோகத்து இருந்து சிவ பெருமானை நினைத்தலும் அவன் முன்பு இப்பெயர்கொண்டு குழந்தையுருவாய்த் தோன்றினர். பிரமன் திகைத்து வணங்க அழல் உருக்கொண்டு இறைவன் நிற்க. அத்திருவுருவினின்றும் நான்கு இருடிகள் தோன்றினர். சுந்தர், நந்தனர், விச்வநந்தர், உபநந்தனர். இவர்களுடன் சிவேதமுனிவருதித்தனர். (இலிங்க~புரா).

சத்திரசேகா கவிராஜ பண்டிதர்

இவர் சென்னையிலிருந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இலக்கண இலக்கிய நூல்களில் வல்லவர் நன்னூல் விருத்தியுரை முதலிய பல இலக்கண நூல்களைப் பரிசோதித்தச் சியற்றியவர்.

சத்திரதருமன்

புரூரவன் குமரனாகிய க்ஷத்திரவிருத்த வம்சத்தவன்.

சத்திரத்தலைவன்

மன்னுயிரனைத்தையும் தன்னுயிர்போல் எண்ணல், அவாவின்மை, விருந்தோம்பல், கொடைக்குணம் ஆகிய இவைகளை யுடையவன். (சுக்~நீ.)

சத்திரபக்ஷன்

சுவல்பருக்குக் காந்தினியிடம் உதித்த குமரன்.

சத்திரயாகம்

இதில் அனைவரும் தீக்ஷை செய்து கொண்டு யாகத்தை நடத்தலாம் என விதியிருப்பினும் அனைவரும் யஜமான தீக்ஷை செய்து கொள்ளலாகாது. தலைவன் தொழிலிதிலதிகமாதலால், தலைவனுக்கு ஒருக்கால் தொழிலதிகமாயின் இருத்து விக்குகள் செய்யக்கூடும் இருத்து விக்குகளுக்குத் தொழிலதிகமாயின் அதனைத் தலைவனுஞ் செய்யலாம்.

சத்திரவிருத்தன்

பூரூரவன் இரண்டாம் புத்திரன், நகுஷன் தம்பி.

சத்திராசிதன்

நிம்மனர் குமரன்.

சத்திராசித்

துவாரகைக்கு அரசன், சத்தியபாமையின் தந்தை. சூரியனிடத்தில் அன்பினால் சியமந்தகமணி பெற்றவன். இம்மணியைக் கண்ணன் எடுத்தான் என அபவாதங்கூறி அந்த அபவாத நிவர்த்தியின் பொருட்டுத் தன் குமரியைக் கொடுத்துச் சமாதானஞ் செய்து கொண்டவன். இவன் சியமந்தகமணியைச் சீதனமாகக் கொடுக்கக் கண்ணன் மறுத்தனர். சததன்வாதனக்குச் சத்தியபாமையைத் தராமையால் தூங்குகையில் இவனைக் கொன்றனன்,

சத்திரியர்

இவர்கள் உலகபாலகநிமித்தம் ஒவ்வொரு கற்பங்களில் திரிமூர்த்திகளின் தோள்களில் பிறந்தவர் என்று புராணங் கூறும். சூரியவம்ச சந்திர வம்சங்களைக் காண்க.

சத்துப்பிறத்தன்

ஒரு முனிவன் ஷாம காலத்துத் தனக்குக் கிடைத்த அரிசி மாவை அதிதியாகிய தருமத்திற்குப் பாகித்துக்கொடுக்க அத்தருமதேவதை சோதிக்கும்படி அந்தமா பசிநீக்கவில்லை எனப் பெண்சாதி, பிள்ளை, மருமகள் முதலியோர் பங்குகளையும் பாகித்து அளித்துச் சத்தியலோகம் அடைந்தவன்.

சத்துருக்காதி

சத்துருக்கன் குமரன். இவன் நகரம் வைதிசம்.

சத்துருக்நன்

1. சுவபலருக்குக் காந்தியிடம் உதித்த குமரன். 2. அக்ரூரன் தம்பி, 3. தேவச்சிரமன் குமரன். ஏகல்வயன் சகோதரன், 4. தசரதனுக்குச் சுமித்திரையிடம் பிறந்த குமரன். சநகன் புத்திரியாகிய சதகீர்த்தியை மணந்தவன். இவன் குமரர் சத்துருகாதி, சுபாகு. இவன் வடமதுரையில் உருத்திரமூர்த்தியிடம் சூலம்பெற்றுத் தேவர்முதலியோரை வருத்திக்கொண்டிருந்த இலவணாசுரனோடு போர்செய்து வெற்றிபெற்றனன்.

சத்துருசயன்

துரியோதனன் தம்பி.

சத்துருசாதன பாண்டியன்

புருஷோத்தமபாண்டியன் குமரன்.

சத்துருசித்

1. தியுமானுக்கு ஒருபெயர். 2. (பிர.) சகஸ்ரசித்குமரன். இவன் குமரர் மகாஹயன், வேணுஹயன், ஹேஹயன். 3. பிரதர்த்தனுக்கு ஒருபெயர், 4. ஒரு அரசன். இவன் அசுவதரனால் உபசரிக்கப்பட்டவன். இவன் குமரன் இருத்துவசன் அல்லது குவலாயாசுவன். 5. மகிஷாசுரனுக்குப்பின் அவன் பட்டணத்தையாண்ட சூர்யவம்சத்தரசன்.

சத்துருஞ்சய பாண்டியன்

உக்கிரசேநபாண்டியனுக்குக் குமரன், இவன் குமரன் வீமத்தேர் மன்னன்.

சத்துருப்ரதாபன்

புண்ணிய புஞ்சனைக் காண்க.

சத்துருமர்த்தனன்

இருதுத்துவசன் குமரன்.

சத்துருமித்திரன்

துரியோதனன் தம்பி.

சத்துரோபதேசன்

நசகன் தம்பி.

சத்துவசன்

(சூ). சிரத்துவசன் குமரன்.

சத்துவிசு

சூரியகிரணத் தொன்று.

சத்யதிவகன்

பாரத்துவாசர் சந்ததியான்.

சத்யருதி

சத்திய திருதிக்கு ஒருபெயர்.

சத்ரஜித்

சூர்யபூஜையால் சகல ஐஸ்வர்யமடைந்த அரசன். (பவிஷ்ய புரா.)

சத்ருஞ்சயன்

1. துருபதன் குமரன், 2. அர்ச்சுனனால் கொல்லப்பட்டவன், 3. அபிமன்யுவால் ஜயிக்கப்பட்டவன். 4. திருதராஷ்டிர புத்திரன்.

சத்ருந்தபனன்

சௌவீரதேசத் தரசன். இவனுக்கும் பாரத்வாஜருக்கும் ஆபத்தர்ம சம்வாதம் நடந்தது. (பார~சாங்.)

சத்ருபசத்தி

சுத்ததமஸ்சக்தி, (நானா.)

சநகன்

1. விதேகராசன், மிதிலை நாட்டரசன். இராஜருஷி, சீதையை வளர்த்தவன், வீரபத்திரர் தக்ஷயாகத்தில் இவன் வம்சத்தவரிடம்வைத்த வில்லைச் சீதையின் பொருட்டு இராமமூர்த்தியை வளைக்கச் செய்தவன். இவன் நாகஞ்சென்று அவ்விடம் இருந்த பாபிகளைக்கண்டு ஹரஹர முழக்கஞ்செய்து அவர்களை நரகத்தினின்றும் நீக்கினன். தந்தை அச்வரோமன், சுகருக்கு ஞானம் உபதேசித்த மகாஞானி. இவனிடத்து விநாயகர் பிக்ஷைக்குச் செல்ல அரசன் வீட்டிலிருந்த பொருளனைத்தும் படைத்தும் போதாமலிருந்ததால் சநகன் தன்னைத் தெய்வமாக மதித் ததை நீக்கி அவமதிப்படைந்தனன. விநாயகர் அவனின் நீங்கித் திரசிரன் என்னும் வேதியனிடஞ் சென்று பிக்ஷை எற்று அவன் மனைவியாகிய விரோசனையிட்ட அறுகைத் தின்று பசி தீர்ந்து அவர்களது வறுமை போக்கி அரசன் வழிபட அவனுக்கு ஞானோபதேசஞ் செய்து காட்சி தந்து மறைந்தனர். சாகர் எப்போதும் இளமை நீங்காதவர். 2. சௌநகர் குமரன். தாய் சுகன்னி, இவன் குமரன் உரூரவன். 3. பிரமன் புத்திரருள் ஒருவன், விஷ்ணுவின் அம்சம். சங்கருஷணர் இடம் தத்துவம் உபதேசிக்கப் பெற்றவன். 4 நிமியைக் காண்க. 5, (சநதேவன்) இவனது நிலையைத் தெரிவிக்க பரமாதமா வெறிகொண்ட வேதியராய்ச் சென்று வேதியரைத் துன் பப்படுத்த, வேதியர் அரசனிடம் முறையிட, அரசன் என்னாட்டிலி ருந்து வெளியேறுக வென்றனன். உடனே அரசன் ஞானமடைந்து எனக்கு இந்நாட்டில் இருப்பிடமில்லையென, வேதியர் ஊரைக் கொளுத்த, அரசனதைப்பற்றிச் சலிப்படைந்திலன். (பார~சாந்தி)

சநகாக்ஷயன்

சநகன் சந்ததியானாகிய ஒரு இருடி.

சநச்சுசாதன்

பிரமன் புத்திரன், விஷ்ணுவினம்சம்,

சநதை

மேருதேவியின் பெண். இரண்மயன் பாரி.

சநத்குமாரசங்கிதை

சத்குமாரரால் கூறிய சங்கிதை,

சநத்குமாரம்

உப்புராணத் தொன்று.

சநத்குமாரர்

பிரமன் புத்திரர், விஷ்ணுவின் அம்சம். இவர் சதச்சிருங்க மலையில் யோகத்து இருககையில் சிவமூர்த்தி இடபாரூடராய்த் தரிசனந்தரச் சும்மா இருந்ததால் நந்திதேவரால் ஒட்டகமாய்ச் சபிக் கப்பட்டுச் சிவபூசையால் நிவர்த்தி பெற்றவர். பிறகு நந்திதேவரிடம் உண்மை அறிந்தவர். இவர் சந்நியாசாச்சிரமி, நெடு நாளைக்கு முன் றோன்றி அதுமுதல் குமரனாக இருத்தலின் இப்பெயரிவர்க்கு வந்தது. (சிவமகாபுராணம்.)

சநத்துவசன்

(சூ.) சுசி குமரன்.

சநநாதசோழன்

அரசர் சூளாமணிச்சோழனுக்குத் தந்தை,

சநநாதன்

சிவகணத்தவரில் ஒருவன்.

சநந்தனர்

பிரமன் புத்திரர். விஷ்ணுவினம்சம், சநகருக்குச் சகோதரர். இவர் யோகத்தால் ஆனந்தப்பட்ட வராதலின் இப்பெயரடைந்தனர்.

சநந்தன்

ஒருவேதியன, இவன் கண்ணில்லாத தாய் தந்தையரை விட்டுத் தவமேற் கொண்டு ஊர்வசியால் தவமிழந்து அவளைப்புணர்ந்து குட்டநோய்கொண்டு பினாகினி நதியில் மூழ்கிச் சுத்தமடைந்தவன். (பெண்ணை நதி புராணம்.)

சநந்தை

1. பூருவின் குமரனாகிய ஜனமே ஜயன் தேவி. புத்திரர்கள், பிராசினவான் முதலியோர். 2. பாதன் தேவி. (பா. ஆதி)

சநன்

சாகாக்ஷயன் சந்ததியானாகிய ஒரு இருடி.

சநமேசயன்

1. பரிச்சித்தின் குமரன். தாய் மாத்திரை, தேவி வபுஷ்டை உதங்கரால் தக்ஷகனைக் கொல்லச் சர்ப்பயாகஞ் செய்ய ஏவப்பெற்று வியாழன் வேண்ட நிறுத்தினவன். யாகத்தில் வேதியன் விழப் பிரமஹத்தி தொடாப் பெற்றவன். வியாசர் கட்டளையால் பாரதக்கேட்டுப் பிரமகத்தி நீங்கினவன். சுவர்ணவர்ணாகரன் புதல்வியை மணந்தவன் 2. குரோதகீர்த்தியின் குமரன். 3. புரஞ்சயன் குமரன், 4. பூரு குமரன், 5. விதூமனைக் காண்க 6. (சூ.) சோமதத்தன் குமரன். 7. (பிர.) சிரஞ்சயன் குமரன், இவன் குமரன் மஹாசாலன்.

சநஸ்தானம்

கோதாவரி உற்பத்தியாய் வரும் இடத்தில் உள்ளது. அரங்காபாத் என்னும் இடத்தருகில் இருக்கலாம். இது தண்டகவனத்தில் சனங்கள் குடிபுகுந்த பின் உண்டாய பெயர். தண்டகாரண்யத்தில் இராமன் வசித்திருந்த பஞ்சவடிக்கு அருகிருப்பது. இதில் இராவணது மூல பலத்தில் ஒரு பகுதியிருந்தது. அதற்குத் தலைவன் கான் இக்ஷ்வாகுவின் குமாரரில் ஒருவனாகிய தண்டகன் அநீதியாய் நடந்திருந்ததால் அவனைப் பட்டணத்திலிருந்து தந்தை துரத்தினன் பின் அவன் இராக்க தருடன் கூடிச் சுக்ரனுக்குச் சீடனாய் விந்திய மலைக்கருகில் மதுமந்தம் என்னும் பட்டணம் நிருமித்து அதில் வசித்து வருகையில் ஒருநாள் சுகரானது ஆச்ரமம் சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவன் குமரியாகிய அரசையை வலிவிற் புணர்ந்து கெடுத்தனன். இதனைச் சுக்ரன் அறிந்து இவனிருந்த இடத்தில் மண்மாரி பெய்திவனிறக்க எனச் சபித்தனன். தண்டனும் அவன் குடும்பமும் மண்மாரியாலழிந்தனர் நகரம் காடுபட்டுத் தண்டகாரண்யம் ஆயிற்று, Aurangabad This was formerly a jungle inhubited by Rakashasas.

சநாசித்து

யதுவம்சத்து ஏகயன் பௌத்திரனாகிய குந்தி புத்திரன். இவனுக்குச் சோபஞ்சி எனவும் பெயர்.

சநாதனன்

ஒருவேதியன். இவன் குமரன் சிநி. இவன் அரசன் மனைவிமீது ஆசை வைத்ததால் தந்தை இவனை விட்டு நீங்கிக் காசி அடைந்து கங்கை ஆடி முத்திபெற்றனன். (காசிரகசியம்).

சநாதரன்

சண்முகசேகாவீரன்,

சநார்த்தனன்

ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்குத் தேவர்கள் எல்லாரும் போய்விட பிரமன் தன் யாகத்திற்குச் சமைத்த அன்னபானாதிகளைப் புசிக்க யாரும் இல்லையே என ஏங்குகையில் விஷ்ணு ஒரு பால வுருக்கொண்டு வந்து அவை அனைத்தையும் புசித்துப் பிரமனுக்குக் காட்சி தந்த திருவுருவம், திருமால், சநர் எனும் அசுரரை வதைத்தால் பெற்ற பெயர். (அமரம்).

சநி

சூரியன் துவட்டாவின் குமரியாகிய சஞ்திகையை மணக்க அச்சஞ்ஹிகை சூரியனது வெப்பம் பொறாமல் தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித்து வைத்து நீங்கினள். அந்தப் பெண்ணிடம் சூரியனுக்குச் சாவர்ணிமது, சனி, பத்திரை எனும் பெண் பிறந்தனர். இவனுக்குச் சநீச்வான் எனவும் பெயர். இவன் ரேவதியிற் பிறந்தவன். இவனது தேர் இரும்பாலானது. அதில் நீல ஆடை புனைந்த எட்டுக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். மந்த நடையும் குரோதமும் உடையவன். தக்ஷயாகத்தில் வீரபத்திரரால் கண் இழந்தனன். இவன் முடவன், இவனது வாகனம் காக்கை. இவன் அலிகிரகத்துடன் சேர்ந்தவன். நிறம் கறுப்பு உருவத்தாற் சிறியன். மேற்குத்திக்கை இடமாகக் கொண்டவன். இவன் தவத்தால் கிரகபதம் பெற்றான். இவன் நண்பர் புதன், குரு, சுக்கிரன். இவன் பகைவர் சூரியன், சந்திரன், செவ்வாய். இவன் குமரன் குளிகன். இவனுக்கு மந்தன், பிணிமுகன், சவுரி, முதுமகன், முடவன் எனவும் பெயர். இவனை அத்திரிக்கு அநசூயை இடம் பிறந்தவன் என்றும் கூறும் சில புராணம். அவன் வேறொருவனாக இருக்கலாம். நளனை வெகு துன்பப்படுத்திப் புட்கரனோடு சேர்ந்து பகை பாராட்டி அவன் உறுதி கண்டு அஞ்சி வேண்டினவன். பிரகஸ்பதிக்கு மேல் இரண்டு யோசனை தூரத்தில் உள்ளவன். இவன் தன் மாற்றாந்தாயைத் தனக்கு உபகரிக்க இல்லை என்று உதைக்க அவள் சபித்ததனால் முடவனாய் நொண்டியானவன். (காசிகாண்டம்.) (வேறு.)

சநிக்கிரகம்

இது, நவக்கிரகங்களில் ஒன்று. இதற்கு இரும்புத்தேர் என்று சொல்வதுண்டு. அதற் கேற்றபடி யிந்தக் கிரகத்தைத் தூரதிருஷ்டிக் கண்ணாடியால் பார்த்தால் இதைச் சுற்றி ஒரு தட்டையான வளையம் காணப்படுகிறது. இது, ஒரு ராசியைக் கடக்க 2 1/2 வருஷமாகிறது. இது, சூரியனுக்கு ஆறாவது வட்டத்திலிருக்கிறது. இது 10 மணி, 14 நிமிஷம், 24 விநாடிகளில் தன்னைத் தான் ஒருதரம் சுற்றிக்கொண்டு, 29. 1/2 வருஷத்தில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இது சூரியனுக்கு 88 கோடியே, 60 லக்ஷம் மைல் தூரத்திற் சப்பாலிருந்து சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் குறுக்களவு 75,000 மைல் என்பர். இக்கிரகத்தைச் சுற்றிலும் பலநிறங்கொண்ட சோதிவட்டங்கள் மூன்று காணப்படு கின்றனவாம். இதற்கு ஒன்பது உபக்கிரகங்களுண்டு அவற்றை 9 சந்திரர்கள் போன்றவை யென்பர்.

சநிப்பிரதோஷம்

சுக்கிலபக்ஷத் திரியோ தசியாவது கிருஷ்ணபக்ஷத் திரயோதசியாவது உதயாதி உதயாந்தம் அறுபது நாழிகை இருப்பது உத்தமம். இதில் குறைந்து வருவது மத்திம அதமங்களில் அடங்கும். இதில் தேவர் முதலியோர் திருப்பாற்கடல் கடைந்தகாலத்தில் அதிற் பிறந்த விஷத்திற்கு அஞ்சிச் சிவமூர்த்தியை அடைக்கலமாகத் தேவர் பொருட் டுச் சிவமூர்த்தி ஆலபோசனஞ்செய்து தேவருஷிகளுக்கு அநுக்கிரகித்த காலம். இது சனிவாரத்துடன் கூடிவருதல் விசேஷம் என்று புராணங்கள் கூறும். இதில் சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்போர் இஷ்டசித்தி அடைவர்.

சநிப்பிரபாவன்

இராவண சேநாபதி.

சநியூர்

திருமுனைப்பாடி நாட்டிலுள்ள ஊ,ர் பாரதம் பாடிய வில்லிபுத்தூரார் பிறந்த ஊர். ஆட்கொண்டான் என்னும் வள்ளல் இவ்வூரார்.

சநிவார விரதம்

நிலத்தில் பொன் முதலிய லோகங்களால் சநிப்பிர திமை செய்வித்துப் பூஜித்து ஓமாதிகள் செய்து வேதியர்க்குத் துணை முதலிய அளிப்பது, இவ்வாறு செய்வோர் சநிக்கிர கத்தாலுண்டாம் தீமை நீங்குவர்.

சநிவார வேங்கடேசுவா விரதம்

இது ஆவணியா சநிவாரத்தில் வருவது. இந்நாளில் வேங்கடேசானை யெண்ணி விரதமியற்றித் தானாதிகள் செய்யின் சகஸ் ஷஷ்டி விரதபலம் பெறுவர். இதனைப் புரட்டாசியில் அநுட்டிக்கின்றனர்.

சநுவன்

(சூ.) மிட்டுவான் குமரன்.

சந்தகன்

புத்தனுக்குச் சாரதி.

சந்ததி

தக்ஷன் பெண், தாய் பிரசூதி, புரு ஷன் கிருது.

சந்ததீவுகள்

சம்பு, பிலக, குசை, கிரவஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம்.

சந்ததேயு

சந்திரவம்சத்து பூரு புத்திரனாகிய ரௌதராஸ்வனுக்கு சித்திரகேசி யிடம் பிறந்த புத்திரன்.

சந்தநத்தார்

சிறுத்தொண்ட நாயனார் வீட்டுத் தாதியர்.

சந்தநன்

(சூ.) துருவசந்தி குமரன்.

சந்தநவதி

சூரகேதுவின் மகள், சுஸ்தன் பாரி.

சந்தநு

இவன் பூர்வம் வருணன், பிரமன் சபையிலிருக்கையில் அச்சபைக்கு வந்த கங்கையைக்கண்டு மோகித்துப் பிரமன் சாபத்தால் சந்திரவம்சத்துப் பிரதீபனுக்குக் குமரனாய்ப் பிறந்தனன். இவன் பகீ ரதியை மணந்து பீஷ்மனைப் பெற்றான். இவன் மச்சகந்தி எனும் யோசனை கந்தியை மணந்து விசித்திரவீரியன், சித்திராங்கதனைப் பெற்றனன். இவனுக்கு மஹாபிஷக் எனவும் பெயர். இவன் விருத்தரைத் தொட்டால் அவர்கள் வாக்களாவார். இவன் இராச்சியத்தில் 12வரு. மழையில்லாதிருக்க முனிவர் அரசனை நோக்கி நீ தமயன் அரசினைக் கொண்டதால் இவ்வகையாயிற்று என்றனர். அரசன் உடனே அரசினைவிட எண்ணுகையில் தமயன் பாஷண்டகுயினன், வருணன் மழை பொழிவித்தனன். இவன் அரசில் ஷாமமாய் இருந்ததால் விச்வாமித்திரன் யாகம் செய்து அக்கினிக்கு நாயூனை அவிகொடுத் தனன். (பாரதம்).

சந்தனசாரியார்

இவர், விமலர் எனும் வேதியர்க்குக் குமறர், இவர்க்குப் பதுமபா தாசாரியர் எனவும் பெயர். இவர் விஷ்ணுவினம்சம் என்பர்.

சந்தனை

அங்க நாட்டின்வழி பாயும் ஒருநதி.

சந்தன்

1. புருஷதன் சகோதரன், 2. சுகோத்திரன் குமரன். 3. பாரத வீரருள் ஒருவன். 4. ஒரு வித்யாதரன் தேவேந்திரனாற் குயிலாகச் சபிக்கப்பட்டுச் சிவபூசையால் சாபநீங்கினவன். 5. சோமகன் குமரன்.

சந்தம்

1. நாலெழுத்து முதலாக இருபத்தாறெழுத்தளவும் உயர்ந்த இருபத்து மூன்றடியானும் வந்து தம்முளொத்தும், குருவும், லகுவும் ஒத்தும் வந்தன அளவியற் சந்தம். ஒவ்வாது வருவன அளவழிச் சந்தம், தலையாகுசந்தம், இடையாகுசந்தம், கடையாகுசந்தம் சிலர் கூறும். (யாப்பு~வி). 2. இது எழுத்து வகையால் இருபத்தாறு பேதமாம். அவை, உத்தம், அதியுத்தம், மத்திமம், நிலை, நன்னிலை, காயத்திரி, உண்டி, அனுட்டிப்பு, பகுதி, பந்தி, வனப்பு, சயதி, அதிசயதி, சக்குவரி, அதி சக்குவரி, ஆடி, அதியாடி, திருதி, அதி திருதி, கிருதி, பிரகிருதி, ஆகிருதி, விக்ருதி, சங்கிருதி, அபிகிருதி, உற்கிருதி என்பனவாம். இதன் விரிவை வீரசோழியத்திற் காண்க.

சந்தர்த்தனர்

பத்திரையின் தமயன்மார்.

சந்தாசனன்

சுதகிருதி இடத்துத் திருஷ்ட கேதுவிற்குப் பிறந்த குமரன்.

சந்தாத்தன்

பத்திரை தமயன்.

சந்தானன்

சிவகணத்தவரில் ஒருவன்.

சந்தானம்

4, தீபசந்தானம், வாயுசந்தானம், தாராசந்தானம், பிபீலி காசந்தானம்.

சந்தானலோகம்

இராமமூர்த்தியுடன் சென்றார் அடையப் பிரமனால் சிருட்டிக் கப்பட்ட உலகம்.

சந்தி

1. (ரூ.) பிரசுசுருகன் குமரன். 2. இது நாடக உறுப்பினுள் ஒன்று. இது சந்தியும், சந்தியங்கமும் என இருவகைத்து, அவற்றுள் சந்தி ஐந்து வகைப்படும். அவை: முகம், பகிர்முகம், கர்ப்பமுகம், வைரிமுகம், நிருவாணமுகம், சந்தியங்கம் அறுபத்தினான்கு இதனைச் சந்தியங்கத்திற் காண்க, (வீரசோ.)

சந்தித்த ஆச்ரயன்

இது திருஷ்டாந்த பாசம், இவன் சர்வஞ்ஞனல்லன், எதனால் எனின்? வெகுவக்தாவா யிருத்தலால் ஜனிக்கப்போகிற தேவதத்தனைப்போல என்கிற திருஷ்டாந்தமா யிருக்கிற தேவதத்தன் ஜரிக்கிறதிலே பிரமாணமில்லாத படியால் (சிவ~சித்.)

சந்தித்த சாதனம்

இவன் சர்வஞ்ஞன். எதனால் எனின், இராகத் வேஷாதிகளுடன் கூடினவனாதலால் தெருவிற்போகிற புருடனைப்போல, இந்த எதுவிற்குத் திருஷ்டாந்தமாயிருக்கிற தெருவிற் புருஷனிச்சித சாதனானாகையாலும் சாத்யமாயிருக்கிற இந்தப் புருஷனிடத்தில் அச்சர் வஞ்ஞ லக்ஷணமுண்டோ இல்லையோ என்று சங்கையுறுதலால் இது திருஷ்டாந்தாபாசம். (சிவ சித்.)

சந்தித்த சாதனவியா விருத்தன்

எவன் சர்வஞ்ஞன் அவன் இராகத்வேஷ மில்லாதவன் சகல சாஸ்திரஞ்ஞனைப்போல் என்கிற திருஷ்டாந்தத்தில் உள்ள சகல சாஸ்திரஞ்ஞனுக்கு இராகாதிகளில்லாததினால் பிரமாணமில்லாமையால் என்க. (சிவ~சித்).

சந்தித்த சாத்யம்

இவன் மகாராஜாவாகப் போகிறான், சோமவம் சொற்பவனாதலால் இராஜ்யபாரத்திற்குக் கர்த்தனான இராஜ புத்திரனைப்போல, இந்த எது இவன் இராஜ்யாதிபதியாகப் போகிறானென்கிற சாத்யத்துடன் வியாப்திக்குந்திருஷ்டாந்த நிச்சயித்த இராஜ்யபாரத்தை யுடையவனாகையால் என்க. (சிவ~சித்.)

சந்தித்த விசேஷணாசித்தன்

கபிலர் இப்பொழுது இச்சாதியுடனே கூடினவர். தத்வஞானமில்லாத புருடராகையினால் இந்த ஏதுவிலுமிதற்கு முன் சொன்ன ஏதுவிலும் புருடததவத்திற்கு விசேஷியமாயும், விசேஷணமாயுமிருக்கிற தத்வஞான மில்லாமையென்கிற ஏது, இப்பொழுதுண்டாகாதே யிருக்கிற தவஞானத்தை யுடையவ ரென்கிறதும், எப்பொழுதும் தத்துவஞான மில்லாதவரென்கிறதும் சந்தேகமாயிருக்கிறதால் இரண்டாலும் பெற்ற பெயர். (சிவ~சித்.)

சந்தித்தவிசேஷியாசித்தன்

கபிலர் இப்பொழுது இராகத்வேஷாதி களுடன் கூடியவர். புருஷதத்வத்துடன் கூடிய தத்வ ஞானம் இல்லாத புருஷர் ஆகையினால் என்பது. (வே. சித்.)

சந்தித்தோபயன்

இவன் சுவர்க்கமடையப் போகிறான் முன் சநநத்திற் றேடப் பட்டிருக்கிற சாக்கன் மபலத்தையுடையவ னாகையினால், தேவதத்தனைப்போல, இந்தத் திருஷ்டாந்தத்திலே ஏதுவாகிற முன் பார்ஜித்த சுத்தகன்மத்வமும், சாத்யமாயிருக்கிற சுவர்க்காதித்வமும் சந்தித்தம் ஆகையால் என்பர். (சிவ. சித்.)

சந்தித்த்த சாத்யாவியாவிருத்தன்

எவன் மகத்தான இராஜ்யம் பண்ணவில்லை அவன் சோமவம்சோற்பவனுமல்ல, வேறொரு ராஜ புருஷனைப்போல என்கிற திருஷ்டாந்தத்திலே திருஷ்டாந்தமான இராஜபுத்திரனிடத்தில் சாத்யாவியாவிருத்யம் உண்டாய்ச் சந்தேக முண்டாதலால் என்க. (சிவ~சித்)

சந்திமான்

1. கந்தவிரதம் அநுட்டித்து முத்திபெற்றவன். 2. இடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் ஒரு வேடன், கிருத்திகாவிரதம் அநுட்டித்து இப்பதம் அடைந்தான்.

சந்திமுதலிய அறுவகைக்குணங்கள் அவை

சந்தி, விக்ரகம், யானம், ஆதனம், சமாச்ரயம், துவை தீபாவம். வன்மையுள்ள பகைவன் தன்னிடம் நட்பு கொள்வது சந்தி, எந்தச் செயலால் பகைவன் துன்புறுத்தப்பட்டுத் தன் வசமாகின்றானோ அது விக்கிரகம், தன் விருப்பம் முடிதற் பொருட்டுப் பகைவரை அழித்தற்குச் செல்லுதல் யானம், தற்காப்பும் பகைவர்க்குக் கேடுண்டாம் வண்ணமிருத்தல் ஆதனம், ஆற்றல் இல்லாதவன் எவராற் காக்கப்பட்டு வன்மையுடைய னாகின்றானோ அவரைப்பற்றி ஒழுகல் சமாச்ரயம், தன் படைகளைக் கூட்டம் கூட்டமாகப் பிரித்துவைத்தல் துவைதீபாவம், (சுக்ரநீதி.)

சந்தியங்கம்

நாடகவுறுப்பாகிய சந்தியினுட்பிரிவு. இது அறுபத்தினான்கு பிரிவினையுடையது. அவற்றுள், உவகேபம், பரிகரம், பரிநியாயம், விலோவணம், யுக்தி பிராத்தி, சமாதானம், விதானம், பரிபா வனை, உச்சிரம், உற்பேதம், காணபேதம் என முகத்தில் அங்கம் பன்னிரண்டு, இது உடும்பு புத்தினின்று முளைத்தாற்போல கூத்தின் முகத்தில் பொருள் தோன்றுவது. பகிர்முகத்தில் அங்கம் பதின்மூன்று, கர்ப்பமுகத்திலங்கம் பன்னிரண்டு வைரி முகத்தினங்கம் பதின் மூன்று, நிருவாண மூகத்தினங்கம் பதினான்கு இவற்றைத் தனித்தனி காண்க. (வீர. சோ.)

சந்தியாநிருத்தம்

தேவர் முனிவர் பொருட்டுச் சந்தியாகாலத்து நிருத்தஞ் செய்த சிவ மூர்த்தியின் தாண்டவகோலம்.

சந்தியாவலி

ஒரு ராஜகுமாரன் தேவி, இவள் சொற்படி இவள் கணவன் தன் குமரன் தலையைக் சண்டித்து மாகவிரத அநுஷ்டானபலத்தால் பாபநீங்கி நல்லுலக மடைந்தான். (பிரகன்னாரதீய புரா.)

சந்தியை

1, சாலகடங்கடைக்குத் தாய். 2. பிரமன் தேவி,

சந்திரகாசன்

அருச்சுநன்சாலத்துத் தக்ஷணத்தில் அரசாண்ட ஓர் அரசன்,

சந்திரகாந்தக்கல்

சந்திரோதயத்தில் நீர்கால்வது.

சந்திரகாந்தன்

மனோஜயன் குமரன்.

சந்திரகாந்தம்

காருபதத்தில் இலக்குமணரால் நிருமிக்கப்பட்ட பட்டணம்.

சந்திரகாந்தை

வேதராசி என்பவனுக்குத் தேவி, இவள் மகா பதிவிரதை யாயினும் இவள் அடுத்த வீட்டிலிருந்த வித்யாவதி என்னும் விபசாரியின் சொல்லால் கெட்டு இந்திரத்துய்ம்மன் என்னும் அரசனால் நாட்டைவிட் டகற்றப்யெற்றுக் காவிரி தீரத்தில் வசித்து மறுபிறப்பில் தேக எரிச்சல் நோயடைந்து காவிரியில் ஸ்நானஞ் செய்து நலமடைந்தவள்.

சந்திரகிரி

தெலுங்க இராஜதானி.

சந்திரகுப்தன்

1. ஒரு அரசன், மௌரியன். பிராமணனால் பட்டம் அடைந்தவன். இவன் குமரன் வாரிதாரன், மகத தேசாதிபதி என்பர். தாய் முறை, நந்தர்களுக்குப் பின் ஆண்டவன் கலி (2,720)ல் ஆண்டான் என்பர். இவன் மகாபத்மநந்தன் எனும் அரசனைவென்று பட்டமடைந் தான். இவனுக்குச் சாணக்கியர் எனும் ஒரு மந்திரியிருந்தார். சந்திரகுப்தன் செலியூகசை யெதிர்த்து வென்றான் இவன் தாய்முரா ஆதலால் இவன் வம்சத்தவர் மௌரியர் எனப்பட்டனர். இந்த வம்சம் சுங்க வம்சத்தவனாகிய புஷ்யமித்திரனால் முடி வெய்தியது (கிமு) 184. 2 சந்திரவதியைக் காண்க.

சந்திரகேது

(சூ.) லக்ஷமண குமரன். இராமமூர்த்தியின் சொற்படி காருகபதம் அரசாண்டவன்,

சந்திரசர்மா

விக்கிரமார்க்கனுக்குத் தந்தை, இவன் நான்கு வருணத்தில் நான்குபுத்திரிகளை மணந்து பிராமணப் பெண்ணிடம் வாருசியையும், க்ஷத்திரியப் பெண்ணி டம் விக்கிரமார்க்கனையும், வைசியப்பெண் ணிடம் பட்டியையும், சூத்திரப் பெண்ணிடம் பார்த்துஹரியையும் பெற்றான். இவர்கள் விக்கிரமார்க்கனுக்கு மந்திரிகள் ஆயினர்.

சந்திரசேகரர்

சந்திரன் தக்ஷனால் உடல் தேயச் சாபம் அடைந்து சிவமூர்த்தியிடம் அபயம் புகுந்தகாலத்து அவனுக்கு அ யம் தந்து திருமுடியில் அணிந்த திருக்கோலம்,

சந்திரசேகரவாணர்

இவர் தொண்டை நாட்டுச் சேறை என்னும் ஊரிலிருந்த வேளாளர். இவர் சோழனை எதிர்கொள்ளாததால் சோழன் கோபித்து வேளாளர் செருக்கடைந்தனர் என்று சிறையிட முதலியார் அரசனைச் சிறையிட்டுப் பாண்டியனை அரசாக்கினர்.

சந்திரசேனன்

1. கலிங்க நாட்டு அரசன், இவன் ஒரு வேதியன் தேவாலய ஆபரணத்தை உதவ அதனைப்பூண்டு மீண்டும் கேட்கக் கொடாததினால் குட்டவியாதியால் நரகடைந்தவன், 2, கவுண்டின்ய தேசத்து அரசன. தேவி சுலபை. 3. உச்சயனிபுரத்து அரசன். சிவபக்திமான் இவன் பத்திக்காக இவனுடன் நட்புக்கொள்ள வேண்டிக் கணநாதன் ஒரு வன் பருத்த மாணிக்கம் ஒன்று கொடுத்தனன், அதைப் பகையாசர் கவர்ந்து செல்லப் படையெடுத்தனர். இவ்வரசன் உச்சயனிமா காளருக்குப் பூசை செய்கையில் ஒரு இடைப் பெண்ணும் அவள் குமரனும் சுவாமி தரிசனஞ்செய்து சென்றனர். அந்த இடைக்குமான் சிவ பூசைசெய்ய எண்ணித் தனக்கு அரசனைப்போல் மணிமுதலிய இல்லாமையால் கல்லைச் சிவலிங்கமாகப் பாவித்துப் பூசை செய்தனன். தாய் மகன் பசிக்குச் சகியாதவளாய்க் குமரன் விளையாட்டில் இருக்கிறான் என எண்ணிச் சிவபாவனை செய்து வைத்திருந்த கல்லினை எடுத்து எறிந்தனள். குமரன் இதனால் மூர்ச்சை அடைந்தனன். தாய் நடுங்கி மூர்ச்சை தெளிவித்தனள் குமரன் எழுந்து பார்க்கையில் தானிருந்த குடிசை முழுதும் இரத்தினமயமாய் இருந்தது. இதனை அந்தத் தேசத்தின்மீது படை எடுத்து வந்த பகையரசர் கண்டு அரசன் சிவபத்தி மான், இவனுடன் எதிர்த்தல் கூடாதெனத் திரும்பினர்.

சந்திரசைலம்

மிதிலையின் வழியிலுள்ள பர்வதம்.

சந்திரதத்தன்

சாதுவனை நர்கர்மலையிலிருந்து காவிரிப்பூம் பட்டினத்திற்குக் கப்பல் ஏற்றி வந்த வணிகன்.

சந்திரதத்தன்

சாதுவனை நாகர் மலையிலிருந்து காவிரிப் பூம்பட்டினத்திற்குக் கப்பல் ஏற்றிவந்த வணிகன். (மணிமேகலை.)

சந்திரதனயன்

கன்னோசி நாட்டரசன். அரிச்சந்திரன் மனைவியாகிய சந்திரமதியின் தந்தை.

சந்திரதரிசனபலன்

சந்திரமான வகையால் பங்குனி, சித்திரை, மாதங்களில் பிறை தெற்குயரும், மாசிவைகாசியில் ஒத்துநிற்கும், அல்லாத மாதங்களில் வடக்குயரும், இவ்வகை ஒழிந்து விபரீதமாய்வரின் தேசத்திற்குத் தீமையுண்டாம். அசுவினி முதல் (3) நாட்களில் பூர்வபக்ஷ பிரதமைவரில் அடைவே தானியவிலை ஏற்றமும் சமமும் குறைவுமாம். (விதானமாலை.)

சந்திரதிருஷ்டி

ஞாயிற்றுக்கிழமை முதல் அன்றைய. வரையிற் சென்ற கிழமையை மூன்றிற் பெருக்கி வந்த தொகையை அச்வநிமுதலாகக் கழித்து நின்ற நக்ஷத்திரத்தில் 9 நக்ஷத்திரம் சந்திரனுக்கு ஒரு கண் பார்வையுடைய நாட்கள் என்றும், அதற்குமேல் (12) நக்ஷத்திரம் இரு கண்பார்வையுடைய நாட்கள் என்றும், அதற்கு மேல் ஆறு நக்ஷத்திரம் குருட்டு நாட்களென்று அறிவதாம். அபரபக்ஷத்து ஏகாதசி முதல் 5 திதிகளும் பூர்வபக்ஷத்துப் பிரதமை முதல் (4) திதிகளும் குருட்டுத் திதி களாம். பூர்வபக்ஷத்துப் பஞ்சமி முதல் (3) திதிகளும், சதுர்த்தசியும், பூரணையும், அபரபக்ஷத்துப் பிரதமையும், அஷ்டமி முதல் (3) திதிகளும் ஒருகண் உள்ளவைகளாம். துதியை முதல் (6) திதிகளும், பூர்வபக்ஷத்து அஷ்டமி முதல் ஆறு திதிகளும் இரண்டு கண் உள்ளவைகளாம். சந்திரனுக்கு ஒரு கண்ணிருந்தாலும் உத்தமம். சூரியனுக்கு ஒருகண்ணி ருந்தாலும் ஆகாது, இரண்டு கண்களில்லாத நாட்களில் செய்யுந் தொழில்கள் பாழாம். ஆதலால் இரண்டு கண்கள் உள்ள நாட்களில் சுபகாரியங்கள் செய்க.

சந்திரன்

இது, சூரியனை நோக்க ஒரு உபக்கிரகம். இது, பூமியை (27) லக்ஷத்து (38) ஆயிரத்து, (800) மைல் தூரத்திற்கப்பாலிருந்து பூமியைச் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு (6. 800) மைல் எனவும், குறுக்களவு சுமார் (2162) மைல் எனவும் கூறுகின்றனர். இது, பூகோளவட்ட அளவில் எண்பதில் ஒருபாகம் எனக்கணிக்கின்றனர். இது, சூரியனுடைய ஒளியின் பிரதிபலத்தால் பிரகாசத்தையடைகிறது. இது, (27) நாட்கள், (8) மணி அளவையில் தன்னைத்தான் ஒருதாஞ்சுற்றி வருகிறது. இது பூமியை (29) நாட்கள் (12) மணிகள், (44) விநாடிகளில் பூமியை ஒரு முறை சுற்றி வருகிறது. இவ்வாறு இது பூமியைச் சுற்றி வருதலால் சுக்லகிருஷ்ண பக்ஷங்களும், மாதங்களும் ஏற்படுகின்றன. சந்திரன் பூமி, சூரியன் இம்மூன்று கிரகங்களும் ஒருநேர் பாகையிலமைகையில் நமக்குப் பூரணசந்திரநிலை தோன்றுகிறது. இது, பூமிக்குப்பின் புறமாகும் போது சந்திரவுதயமும் ஒளியும் முறையே குறைந்து (15) ஆவது தினத்தில் பூமி, சந்திரன் சூரியன் என்ற ஒரு நேர் பாகையிலமைகையில் சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிற்றலால் இரவில் காணப்படுவ தில்லை. அத்தினமே அமாவாசை அதுபோலவே பூரணசந்திர நிலை யாகிய பெளர்ணமியும் உண்டாகிறது. சந்திரன் பூமியை ஒருமுறைசுற்றி வருங் கதி ஒருமாதம் எனப்படுகிறது. சந்திரன் பூமியைப்போல் உருண்டையான கோளம், இதற்கு வொளியெல்லாம் சூரியனிடத்திருந்து வருகிறது. இது பூமியினும் சிறிது. (50) சந்திரர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் ஒரு பூமியாகும். சூரியனை விட நமக்குச் சமீபத்திலிருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் (240,000) மைல், இது, பூமியைச் சுற்றியோடும் கிரகம், பூமி சூரியனைச் சுற்றியும், சந்திரன் பூமியைச் சுற்றியும் ஒடுவதால், சில சமயங்களில் சந்திரன் நமக்கும் சூரியனுக்கு மிடையில் வரும்படி நேரிடும். இது உருண்டையான வஸ்துவல்லவா இது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வருகையில் அதன் மீது வெளிச்சம் படாத பாகந்தான் நமக்கு எதிரில் காணப்படுகிறது அத்தெரியாத நாள் அமாவாஸை (அ; இல்லை, மா; சந்திரன், வஸ்; இருக்கிறது) (சந்திரனில்லாத நாள்) அந்த இடத்திலிருந்து தன் வீதியாறா முந்திய இடத்திற்கு நேர் எதிரிலிருக்கும் இடத்திற்கு வரும்போது சூர்யனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமிவருகிறது அப்போது சந்திரனது வெளிச்சமான டாகம் முழுதும் நமக்குத் தெரிகிறது. அது பௌர்ணயி இது தேய்வதும் வளர்வது மில்லை சூர்ய வெளிச்சம் குறைவாய்படுவது தேய்பிறை சூர்ய வெளிச்சம் அதிகம் படுவது வளர்பிறை, சந்திரன் பூமியைச் சுற்றிவர (29. 1/2) நாட்கள் ஆகின்றன. இது பூமி தன்னைத் தான் சுற்றும்போது சந்திரன் தன் ஸ்தானத்தை விட்டு (12) டிகிரிநகருகிறது ஆதலால் இதன் உதயம் பிற்படுகிறது.

சந்திரன்

A 1. இவன் விஷ்ணுமூர்த்தியின் திருமார்பில் பிறந்தவன் என்றும், திருப்பாற்கடல் கடைகையில் பிறந்தவன் என்றும், அத்திரிக்கு அநசூயையிடம் பிறந்தவன் என்றுங் கூறுவர். அத்திரி தவம்புரிய அவன் வீரியம் மேலெழுந்து கண்வழி ஒழுகிற்று, அதைப்பிரமன் திரட்டி விமானத்திலிட அது உயிர்பெற்றது. அதனைச் சோமன் என்றனர். இதில் சிந்தியதுளிகள் பயிர்களாயின. இச்சோமன் சிவமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து கிரகபதமும் அந்தணர், பயிர் முதலியவை களுக்குத் தலைமையும், சிவமூர்த்திக்குக் கண்ணாகவும், அணியாகவும் வரம்பெற்றனன் (காசிகாண்டம்). 2. தக்ஷன் பெண்கள் இருபத்தெழுவரை மணந்து அவர்களிடத்து ஒருமித்து ஆசை வைக்காது கார்த்திகை உரோகணி யிவர்களிடம் மாத்திரம் அன்பு வைத்ததால் மற்றைப் பெண்கள் தந்தையிடம் குறைகூறத் தக்ஷன் நாடோறும் ஒவ்வொருகலை தேயவும் க்ஷயரோகமும் அடையச் சாபம் தந்தனன். சந்திரன் சாபம் அடைந்து சிவமூர்த்தியால் கலைகள் வளரவும் நோய் நீங்கவும் அனுக்கிரகம் அடைந்தவன். தக்ஷயாகத்தில் வீரபத்திரரால் தேய்வுண்டு அநுக்கிரகம் பெற்றவன். 3. சிவசன்னிதானத்து நாரதர் கொணர்ந்து கொடுத்த கனியைப் பிரமன் கந்தமூர்த்திக்குக் கொடுக்க வேண்டுமெனக் கணபதி அவரைக் கோபிக்கையில் சந்திரன் விநாயகரைக்கண்டு நகைத்ததால் விநாயகரால் ஒளியிழக்கவும், சண்டாளத்வமும் பெற்று, மீண்டும் அவரால் அச்சாபம் வருஷத்து ஒருநாளில் அடைய வரம் பெற்றவன். அது ஆவணிய பூர்வ பக்ஷ சதுர்த்தியாம். இக்காலத்தில் சந்திரனைக் கண்டோர் சண்டாள தவமடைவர். ஆகையால் அது நீங்கக் கணபதியைப் பூசிப்போர் இஷ்டசித்தி பெறுவர். 4. இச்சந்திரன் ஓஷதிகளுச்கு இறைவனாய் அநேக இராசசூயஞ் செய்த கர்ம பலத்தினால் பிரகஸ்பதியின் தேவியாகிய தாரையைப் புணர்ந்தனன். இந்தக் காரணத்தால் தேவாசுரயுத்தம் உண்டாயிற்று. அவ்யுத்தத்தில் பிரமன் தாரையைப் பிரகஸ்பதிக்குக் கொடுத்தனன். தாரையிடம் இவனுக்குப் புதன் பிறந்தனன். 5. திருப்பாற்கடல் கடைகையில் மத்தானவன். 6. (2000) யோசனை விஸ்தாரம் உள்ள மண்டலத்தை யுடையவன். இவன் கலையை, முதற் பதினைந்து நாள் தேவர் அருந்துவர். மற்றவற்றைத் தென்புலத்தார் அருந்துவர். இவன் தேர்க்குச்சக்கரம் (3) குருந்தமலர் நிறமுள்ள குதிரைகள் (10) சூரியனது சுசுமுனை என்னும் கதிரால் ஒளி பெறுவன். 7. இராகு கேதுக்களின் வஞ்ச வுருவத்தை மோஹினி உருக்கொண்ட திருமா லுக்குக் காட்டினமையால் அவரால் பகைமைபெற்று விழுங்கப்பெற்றவன். 8. தருமனுக்குக் கார்த்திகையில் உதித்தவன் என்றுங் கூறுவர். 9. இவன் அத்திரியிடம் பிறந்த போது இவனுடன் பிறந்தார் தத்தாத்திரேயன், திருவாசன், 10. இவனைச் சிவமூர்த்தியின் அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாக் கூறுவர். இவனுக்குக் கலை ஞானபாதன் என்று ஒரு குமரன் உண்டு, நற்குணமும், வெண்ணிறமும் தென்கிழக்கும் இடமாகவுடையவன்.

சந்திரன்

B. (சூ.) 1. விசுவகோதன் குமரன். 2 இவர் கொல்லாடரியிலிருந்து நந்திக்கலம்பசம் கேட்டிறந்த நந்தித்தொண்டமான் சலோதாருக்கு முடி சூட்டி அவ்வரசனால் ‘நேற்றனும் இன்று மிகுந்தது காதல்’ என்னுஞ் செய்யுள் பெற்றவர்.

சந்திரன் சுவர்க்கி

ஒரு சிற்றாசன். இவனாண்டது உறையூரைச்சார்ந்த மள்ளூவ நாட்டிலுள்ள முரணை நகர். இவன் புகழேந்தியை ஆதரித்து நளவெண்பா பாடுவித்தவன்.

சந்திரபலன்

ஜன்மராசி முதல் சந்திர னிருக்கிற ராசிவரைக்கும் எண்ணின தொகையில் 1 வது தேக சவுக்கியம் 2. தனஹானி 3 திரவியலாபம் 4. ரோக பயம் 5 கார்ய விகல்பம் 6 சத்துருநாசனம் 7 சவுக்கியவிருத்தி8 ரோகவிருத்தி 9 கார்ய தாமசம் 10 உத்தியோக விருத்தி 11 இஷ்டார்த்தசித்தி 12 தன விரயம் சிவர் சுக்கில பக்ஷத்தில் 2,5,9 உத்தமமென்றும் கிருஷ்ண பக்ஷத்தில் 4,8,12 உத்தம மென்பார்கள்.

சந்திரபாகை

சிந்துநதியின் உபநதி.

சந்திரபிரபர்

சைந்தீர்த்தங்கருள் எட்டாவது தீர்த்தங்கரர், இவராண்டது சந்திராப நகரம். இக்ஷவாகு வம்சத்தவர். தந்தை மகாசோன், தாய் லஷ்மணை, இவர் கிருதயுகத்தில் தைமீ கிருஷ்ணபக்ஷம் ஏகாதசி அனுஷத்திற் பிறந்தவர். உன்னதம் (105) வில் வெண்ணிறம், ஆயுஷ்யம் பத்துலக்ஷம், இவர் புத்திரன் வரசந்திரன்., கணதரர், தத்தர் முதலிய தொண்ணூற்று மூவர்.

சந்திரபீசன்

விசயன் குமரன், இவன் குமரன், சுலோமதி.

சந்திரபீடன்

உச்சையனி நகரத்தரசன், தாராபீடன் என்பவனுக்குக் குமரன்.

சந்திரமதி

மதிதயன் மகள். அரிச்சந்திரன் தேவி, பதிவிரதாசிரோமணி இவள் பிறந்தபோழ்தே மாங்கல்யம் இவளுடன் பிறந்ததாகக் கூறுவர். இவள் தன் கணவன் விசுவாமித்திரன் செய்வித்த துன்பத்தால் நாடிழந்தகாலத்தும் புருஷனை விடாது பின்பற்றிக் கணவன் பொருட்டுக் காசி வேதியனிடம் அடிமைப்பட்டுத் தானொரு புறம் புருஷனொருபுறம் இருந்து புத்திரனையிழந்து துன்பம் அடைந்து கடைசியில் சுடலையில் புருஷனைக்கண்டு துயரமடைந்து காசியாசன் குமரன் பொருட்டு இறக் கத்துணிந்து இருக்கையில் தேவர்கள் காட்சிதரக் கணவனை அடைந்தவள்.

சந்திரமாசாதி

பூர்வபகத்துப் பிரதமை முதல் அமாவாசையிறு தியாகவந்தது சாந்திரமாதம், சூரியன், மேஷமுதலான இராசிகளில் சங்கிராந்தி சௌரமாதம், அசுவினி முதல் இரேவதி யந்தம் நட்சத்ர மாதம். (30) நாள் ஒரு மாதமாக வந்தது சாவணமாதம். அது சனனமாணாதிகளில் அறியப்படும். இந்த வகையில் (12) மாதங் கொண்டது அவ்வருஷமாம். வியாழன் நின்றராசி உதய முதலாக வுதயாத்த மென்று பெயராம். சாந்திரமானம் ஆண்டிற்கு (4) மாதம் (26) திவசமும், (4) மாதம் (30) திவசமாய் வந்தபடியால் (354) நாட்களென்றும், சௌரமானம், ஆண்டிற்கு இடபாதி ஐந்து மாதமும் நாள் அதிகப் பட்டபடியால் (365. 1/2) நாட்களென்றும், நக்ஷத்ரமானம் ஆண்டிற்கு நக்ஷத்திரம் (27) ஆகையால் (324) நாட் களென்றும், சாவணமானம் ஆண்டிற்கு மாதம் (30) நாளாகையால் (360) நாட்க ளென்றும் கூறுவர். (விதானமாலை)

சந்திரரேகை

ஒரு அப்சரசு.

சந்திரலோகம்

பிதுர்க்கள் வசிக்கும் சுவர்க்கலோகத்திடம்,

சந்திரவக்கிரன்

சந்திரகேதுவிற் கொருபெயர்.

சந்திரவதி

1. பார்வதிபிராட்டி ஒருமரத்தை நோக்கிப் பெண்வேண்டும் என அது ஒரு பெண்ணைத்தந்தது. அப்பெண் பூஞ்சோலைக்குச் செல்ல அவ்விடம் மணிசூடன் என்னுங்காந்தருவன் அப்பெண்ணைக்கண்டு மோகித்ததனால் பூமியில் சந்திரகுத்தனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். (பூவாளூர்ப் புராணம்). 2. மஞ்சுளனைக் காண்க,

சந்திரவாகை

ஒருநதி.

சந்திரவாணன்

தஞ்சாவூர் ஆண்ட அரையர்களில் ஒருவன். இவன் பெயரால் பொய்யாமொழிப்புலவர் தஞ்சை வாணன் கோவை செய்தனர்.

சந்திராங்கதன்

1, பத்ராயுவின் தந்தை. 2. இந்திரசேநன் குமரன், சீமந்தினி யைக் காண்க, 3. மாளவ தேசாதிபதி, மனைவி இந்துமதி, இவன் வேட்டைக்குச் சென்று ஒரு அரக்கிக்குப் பயந்து மடுவில் விழ அவ்விடம் இருந்த நாககன்னியர் இவன் மீது காதல் கொண்டனர். அரசன் அதற்கு இணங்காது நாகலோகத் திருந்தனன். இவன் மனைவி தடாகத்தில் கணவன் விழுந்து இறந்தான் என அமங்கலையா யிருக்க நாரதமுனிவர் இவளுக்குக் கணவன் உயிருடன் இருப்பது அறிவித்து விநாயக விரதமிருக்கச் சந்திராங்கதன் தன்னகரமடைந்தனன்.

சந்திராசாரி

காச்மீரதேசத்து ஒர் வடநூற் புலவன்.

சந்திராசுவன்

தண்டாசவனைக் காண்க.

சந்திராட்டமம்

ஒருவன் பிறந்தநாள் முதலாக மூவொன்பதிருபத்தேழாக்கி இதில் முதல் ஒன்பதில் (3,5,7) நாட்கள் பொருந்தா, இவையல்லாத நாட்கள் பொருந்தும், இரண்டாம் ஒன்பதிலும், (3,5,7) நாட்கள் பொருந்தா. இவற்றில் (3) ஆம் நாளின் முதற்காலும் (5) ஆம் நாளின் கடைக்காலும், (7) காளின் (3) ஆம் காலும் ஒழித்து மற்றவை பொருந்தும், பின் இரண்டாம் ஒன்பதின் சந்தி ராட்டமமான (22) நாட்களும், மூன்றாம் ஒன்பதின் (88)ம் கால் கிடந்தவை நாசிகளும் பொருந்தாது பிறந்த நாளுக்கு முதனாளாகிய (27) நாளும் பொருந்தாது. இதில் சந்திரன் சுபனானால் தோஷமில்லை, (விகான)

சந்திராபம்

தினபதி நகர்.

சந்திராபீடன்

காதம்பரியின் கணவன்.

சந்திரோதயம்

சுதஞ்னன் நகரம்.

சந்திவேசன்

பூஷாவிற்கு ரசனையிடம் உதித்த குமரன்,

சந்தேகாசித்தன்

தான் கூறுகிற ஏது ஐயமாய் நிற்கவும் அப்பொருளைச் சாதித் தல். அதாவது, ஆவியோ, பனியோ தோன்றநின்றதென ஐயமுற்றவிடத்து, அது புகையென் றறுதியிட்டு, அவ்விடத்து நெருப்புண்டெனக்கூறுதல். (சிவ~சித்)

சந்தை

சந்தோஷிக்கச் செய்யுந்தேவதை.

சந்தோபாபக்தர்

சூத்திர வருணத்தின ராய்ச்சிவாஜி அரசனிடத்தில் சேநாதிபரா யிருந்தவர். ஒருநாள் துக்காராம் இயற்றிய கீர்த்தனைகளைக் கேட்டு வைராக்ய மடைந்து தமது உத்யோகத்தையும் மனைவியையும் விட்டுப் பீமநதிக்கரையடைந்து அவ்விடத்தில் இருக்கையில் மனைவி சகல பூஷணங்களையணிந்து இவரிடம் வருகையில் அவளையும் வைராக்யமடையச் செய்து தாம் பிக்ஷை புரிந்து பண்டரி யாத்திரை மனைவியுடன் செல்கையில் வழியல் ஆறு வெள்ளங்கொண்டு யாத்திரை செய்பவர்களைத் தடுக்க அவர்களையும் நடப்பித்துத் தாமும் பண்டரியடைந்து கண்ணனைத் தரிசித்தவர்.

சந்தோவிசிதி

வேதாங்க நூல்.

சந்தோஷன்

யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்த குமரன்.

சந்நதமந்தன்

(கிருதி தந்தி) சுமதிகுமரன்.

சந்நதி

சிந்துவின் தேவி.

சந்நதிமான்

சுமதி புத்திரன்.

சந்நிதம்

ஓர் தீர்த்தம்.

சந்நிதி

1, அலர்க்கன் குமரன், இவன் கும்ரன் சுநிதன், 2. வாலகில்லியர்க்குத் தாய், கிருதுக்குத் தேவி. 3. தக்ஷன் பெண், புலத்தியன் தேவி.

சந்நியாசம்

இது இல்லறம் நீங்கித் தனிமையாய்க் கடவுளைத் தியானிக்கும் ஆச்சிரமம், இது நான்குவிதம். இதை மேற்கொண்டார். குடீசகள், பகூதகன், அம்சன், பரம அம்சன் எனப்படுவர். குடீசகன், சந்நியாசஞ் செய்துகொண்டு சிகை எஞ்ஞோபவீதம், திரிதண்டம், காவிவஸ்திரம், கமண்டலம், திரிபுண்டரம், தேவதார்ச்சனை முதலியவற்றுடன், இருந்து தன் வீட்டிலேனும், அயல்வீட்டிலேனும் அன்னம் ஏற்று உண்பவன். பகூதகன் காவிவஸ்திரம், திரிதண்டம், கமண்டலம், மான்தோல், குடை, யோகபட்டம், கோவணம், பாதுகை, செபமணி, மண்தொடு கருவி, திரிபுண்டாம், உபவீதம், சிகை, தேவ தார்ச்சனை தாங்கித் தன் வீடு ஒழிந்து ஏழுவீட்டில் அன்னம் ஏற்று உண்பவன், அம்சன்; கமண்டலம், கந்தை, கோவணம், பலிபாத்திரம், வேணு தண்டம், முண்டனம், திரிபுண்டாம், பரதேசசஞ்சாரம், ஒரு ஊரில் ஒருநாள் அன்றி இராமை, தேவதாபூசை, சாஸ்திர விசாரம், எண்கவளம் புசித்தல் முதலிய உள்ளவன். பரம அம்சன்; மயிர்க்கயிறு, கமண்டலம், மான்றோல், மண்டொடுகருவி, யோதபட்டம், சந்தை, குடை, பாதுகை, தண்டம், உப வீதமின்மை, முண்டனம், நித்தியகருமம் இன்மை, ஈசுவரத்தியானம் உடையவன். இவன் சமாதியில் அரசமரம் அல்லது ஏதாவது பிரதிஷ்டை செய்விக்கவேண்டும்.

சந்நியாசிப்புரட்டர்

இவர்கள் திருப்பதி திருத்தணி முதலிய இடங்களிலுள்ள குடும்பிகளும், சாதிவிட்டோடிப் போனவர்களும் ஒரு கூட்டமாய்ப் பெண்களையும் புருஷர்களையும் ஏமாற்றி வஸ்திரகளை வாங்கி பல வர்ணங்களாகக் கட்டிக்கொண்டும் பல குளிசங்களைக் கோத்துத் தலையில் கட்டிக்கொண்டு, தோள்களில் வளையமிட்டும் தடியில் ஒருபையைக் கோத்துத் தோளில் தூக்கிக்கொண்டும் வீடுகளில் நுழைந்து கைபார்ப்பதும் குளிசமெழுதித் தருவதுமான பகற் புரட்டர்.

சந்நியாசிரோகம்

வாதபித்த, சிலேஷ்மங்கள் பிராணஸ்தானங்களை யடைந்து திரிகரணங்களை அடக்கி மூர்ச்சையொழித்து மனிதனைக் கீழ்தள்ளும், இது சாத்தியா சாத்தியம். (ஜீவா.)

சந்நு

1. ஒரு இருடி சுகோத்திரன் குமரர். பகீரதன் தன் மூதாதைகளுக்கு நற்கதி தர வேண்டிச் சிவமூர்த்தியை எண்ணிப் பல நாள் தவம்புரிந்து பெற்றுக்கொண்டு வரும் கங்கை, இந்த முனிவர் ஆச்சிரமத்தின் வழிவர முனிவர் கோபித்துக் கங்கையைப் பானம் செய்தனர். அரசன் திரும்பிப் பார்க்கக் கங்கை, மறைந்தது கண்டு முனிவரிடம் தனது குறைகூறி வேண்ட முனிவர், அதனைக் காதின் வழிவிட்டனர். இதனால் கங்கைக்குச் சாநவி என்று ஒருபெயர் உண்டாயிற்று. சந்திர வம்சத்து ஒதுரகன் குமரன் எனவுங்கூறுவர், இவன் ருஷியாயினன். 2. குருவின் மூன்றாம் புத்திரன்.

சந்நுதன்

திரிதசீருஷி புத்திரன், அகத்தியர் பேரன்,

சந்மதிமுனி

பவணந்தி முனிவர்க்குத் தந்தை இவர் தொண்டைமண்டலத்துச் சைநர். இவர் இருந்தது சநகாபுரம்.

சனசித்து

விசுவசித்து குமரன்.

சனமித்திரன்

அரசன் புத்தபீடிகையைத் தரிசித்தறகு மணிபல்லவம் சென்றபொழுது நாபோத்தை பாதுகாத்தவன். புண் ணியராசனுடைய மந்திரி. (மணிமேகலை).

சனாபாயி

இவள் பண்டரிபுரத்து வந்த யாத்திரைக்காரரின் கன்னிகை. இக் கன்னிகை, ஆண்டு தரிசனார்த்தமாக வந்த தாய் தந்தையர்களை நோக்கி நான் இப்பண்டரிபுரம் விட்டு வருவதில்லையென மறுத்து இருக்கையில் நாமதேவரிவளைக் கண்டு தனித்திருக்கின்றாய் உன் தாய் தந்தையாரென எனக்குத் தந்தை, பாண்டுரங்கன், தாய் ரகுமாயி யென்ன இவளைத் தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வருகையில் கண்டவர் நீயாரென நான் நாமதேவர் வீட்டடிமை என்பாள். இவ்வகையிருக்கையில் ஒருநாள் காற்று மழையால் நாமதேவரிருந்த வீடு இடியப் பெருமாள் அதைச் சக்கரத்தால் காத்த லைக் கண்டு இந்த இரவில் இவ்விட மென்ன செய்கின்றாய் என்று கேட்கப் பெருமாள் உனது குடிசை யழிந்தது, அதனைக் காக்காவிட்டால் உனது தாயாகிய ரகுமாயி என்னை நிந்திப்பாளாதலால் என்று பேசிக் சொண்டிருக் கையில் குணாயியும் வந்து பணிந்தனள். மூவரும் வீட்டினுள் புக ஜனாபாயி வந்தி எதிர்கொண்டு வணங்கினள். நாமதேவர் பெருமாளை வணங்கி விருந்துண்டு செல்கவெனப் பெருமாளிசைந்து கோவிந்தன், விட்டலன், நார ணன், மகாதேவன் ஆகிய பிள்ளைகளும் ராமரும் குணாயியும் மனைவியும் ஒரு கலத்தில் உண்ண ஜனபாயி கண்டு விமலனே என்னை விட்டு உண்பது உனக்கு அழகாமோ எனப் பெருமாள் நாமரை நோக்கி இவ்வமுது எனக்கு நன்கில்லையென்று எழுந்திருக்க ராஜாயியும் உடனெழுந்தனள். இதனால் நாமதேவர் சனாபாயி உண்ணாததால் வந்ததென்று எண்ணப் பின்பு குணாயி, சனாபாயியை அழைத்து இவர்கள் உண்ட எச்சிலைக் கொடுத்தாள். சனாபாயி யும் இது தேவாமிர்தமெனக் கைக்கொண் டாள். சனாபாயி இதைக்கொண்டு பெருமாளை நோக்கி எனது வீட்டிற்கு உண்ண வருக என்றழைக்கப் பெருமாள் அவளை நோக்கி அம்மையே நீ உடனுன்னாததினால் நான் உணவுண்டிலேன் எனக்கு மிகவும் பசிக்கின் நதெனச் சனாபாயி அவர்கள் கொடுத்த எச்சிலிருக்கின்றது. அது உமக்குத் தகுமாவென்ன அதுவே வேண்டுமென்னப் பெருமாள் அவளுடன் உண்டு அவ்விடத்திலேயே சயனித்தனர். பின்பு குணயி விழித்து நடந்த செய்தியைத் தனது புதல்வனுக்கு உரைத்தனள். நாம தேவர் அவரது இயற்கையென்ன, பெருமாள் சனாபாயியின் மாவரைக்கும் திரிகை யைத் துடைத்து உன்வாவினை எதிர்பார்த்திருக்கிறேனெனச் சனாபாயி விழியாமை கண்டு அவளை எடுத்து உட்காருவித்து அவர் கரத்தால் தலைமயிரைச் சிக்கறத் திருத்தி ஒரு கூடையில் அரிசி கொண்டு வந்து நான் மாவை யரைக்கின்றேன் நீ பாடு என்னலும் இவள் பாடக்கேட்டுப் பெருமாள் பாவசராயிருக்கையில் குனாயி சனாபாயி பால் வந்து உன்னிடத்தில் மாவரைக்க அரிசி யேதென்று பிரம்பெடுத்கடிக்க அது பெருமாள் முடிமேல் படுதலும் நான் விடோபாஜனோபாயியின் அன்பால் யான் இங்குவந்து மாவரைக்கின்றேன் என்னை படியாதே என்ன, குணாபி, சனாபாபி பெருமாளைத் தன் வசப்படுத்திக் கொண்டாள் என்று வருந்துகையில் பெரு மாள் அரைத்தமாவை வாரிக் கூடையில் நிரப்பி மீண்டும் துயில, சனாபாயி விடியற் காலத்தில் எழுந்து பெருமாளை யெழுப்பிக் கோயிலுக்குப் போகாமலிருப்பின் ஊர் கலகமாகுமென்னப் பெருமாள் விடிந்ததோ என்னவெழுந்து நித்திரை மயக்கத்தால் பீதாம்பரத்தையும் பதக்கத்தையும் விட்டு விட்டுச் சனாபாயியின் கந்தையை உடுத்தி கொண்டு கோயிலுள் சென்றனர். விடிந்தபின் அர்ச்சகர் கோயிலைத் திறக்கப் பெருமாள் கந்தை உடுத்தியிருத்தலைக் கண்டு இக்தந்தை சனாபாயியின் கந்தை போல் தெரிகின்றதென்று நாமதேவர் வீடுசென்று நோக்க அவ்வீடு புதிதா யிருத்தலைப் பார்த்து உட்சென்று சனாபாயியைக்கண்டு பெருமாளின் பீதாம்பரத்தை நோக்கிப் பதக்க மெங்கென்ன அவள் கிடையாதென்ன அவள் துகிலைச் சோதிக்கப்பதக்கம் கிடைத்தது இவள் சுவாமி துரோகி என்று இவளைக் கழுவேற்றக் கொண்டு செல்லுகையில் இவள் பெருமாளைத் துதிக்கக் கழுமரம் நீராயது. பின் சனாபாயி வீட்டில் வந்து முன்புபோல் பெரு மாளைப் பாடத்தொடங்கவும் அவளிடத் தன்புள்ள பெருமாள் அவள் பாடும் செய்யுட்களை எழுதி வந்தனர். ஒருநாள் ஞான தேவர் பெருமாளைத் தரிசிக்கவரப் பெருமாள் தனித்தெழுதுதல் கண்டு ஞானதேவர் என்ன எழுதுகின்றீர் என ஜனாபாயியின் செய்யுட்களை எழுதுகிறேனெனக் கேட்டு வியந்தனர். பின் ஞானதேவர் நாமதேவரைக் காணப் பெருமாளுடன் வந்து நாமதேவரை நோக்கிச் சனாபாயியை யழைக்கவெனச் சாணமிதித்துக்கொண் டிருந்த ஜனாபாயிவர் ஞானதேவர் நாமரை நோக்கி ஜனபாயியின் பாட்டைப் பெருமாள் எழுதக் கண்டேன் என்னப் பெருமாள் அவள் பாடுங்கவியில் மிக்க அன்புளேனாதலால் எழுதினேன். இதனைப் படிப்போர் கேட்போரிடமும் அவ்வகை அன்புளேன் என்றார். பின் ஞானதேவர் நாமதேவர் முன்பிறப்பில் பிரகலாநாதபின் அங்கதன் பிறகு உத்தவராய் இப்போது பெருமாளுக்கன் பாராயினர்; உங்களில் ஞானதேவர் பாட்டைச் சச்சிதானந்தரும், நிவர்த்தி பாட்டினைச் சோபான தேவுரும், முக்தாயியின் பாட்டை ஞானதேவரும், பாமவானந்தர் பாடலை விசோபா கேசர், கூர்மதாசர் கவியை, சுதேவர், நாம தேவர் ஜனாபாயி இவர்கள் செய்யுள்களை யானும் எழுதுக எனக் கட்டளை தந்து பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினர்.

சனாரு

உவசம்பநிக்குத் தந்தை,

சன்டேசாநுக்கிரகமூர்த்தி

சண்டேசுர நாயனாரைக் காண்க.

சன்னதேயு

(சந்) ரௌத்திராசவன் குமரன்.

சன்மசயன்

(சந்.) பூருவின் குமரன், இவன் குமரன் பிரசன்னுவான்.

சன்மதா

பிள்ளை பெற்ற வீட்டிலுள்ள ஒரு தேவதை, பிள்ளை பிறந்தபின் ஷஷ்டி பூசை என்னும் கர்மத்தில் பூசிக்கப்பட்டவள். “மிதாக்ஷரம் ஸுதிகாவாஸ நிலயா ஜன்மா நாமதேவ தா. “

சன்மார்க்கம்

வேத, புராண கலைஞான சமயசாத்திரங்களுணர்ந்து பூர்வபக்ஷஞ் சித்தாந்தமுணர்ந்து பதி, பசு, பாசமாகிய ஞானத்தில் ஞாதுரு, ஞான, ஞேயங்கள் பொருந்தா வண்ணம் பதிப்பொருளுடனிரண்டறக் கலந்திருத்தல்.

சன்மிஷ்டை

விருஷதபாவின் குமரி. இவள் சுக்கிரன் பெண்ணாகிய தேவயானையுடன் நீராடி அவள் சேலையையறியாது உடுத்தினள். அதனால் அவள் கோபிக்க அவளைக் கிணற்றில் தள்ளினள். இதனால் சுக்கிரன் கோபித்து அரசனுக்கு அறிவிக்க அரசன் தன் பெண்ணினைத் தேவயானையாகிய சுக்கிரன் பெண்ணுக்கு அடிமையாக்கினன், அடிமையாகிய சன்மிஷ்டை தேவயானையறியாது அவள் கணவனைக் கூடித் துற்கிரன், அது, பூரு என மூன்று குமரரைப் பெற்றாள். இவள் தந்தை விடபன்மன் எனவுங் கூறுவர். (பாகவதம்).

சன்மிஷ்டை

சன்மிஷ்டையைக் காண்க.

சபக்ஷம்

உபமானத்திற் கொத்த இடம். அதாவது, இப்பர்வதம் நெருப்புடையது புகையுடைத்தாகையால் பாகசாலைபோல என்பது. (சிவ~சித).

சபணன்

1. பௌத்தன், 2. சைநன்,

சபதம்

என்பது பிரமாணம், அது திவ்ய பிரமாணம், சபதம் என (2) வகை, திவ்யம்; துலாம், அக்கினி, சலம், விடம், கோடம், தண்டுலம், தத்தமாடம், பால், தருமசம் என (6) இவற்றை பிரமாணத்திற் கூறினாம். சபதம், சத்தியம் புண்ணிய முதலிய கெடும் என்பதும், வாகனம், ஆயுதம், பசு, விதை, பொன், தெய்வத்தின் திருவடி, தந்தையின் பாதம், மைந்தன் தலை, மனைவியின் தலை முதலியவற்றைத் தொடுதலும், தடாகாதி பிரதிஷ் டையாலுண்டான புண்ணியங் கெடுமென வுறுதிகூறல். (பிரகஸ்பதி).

சபத்தன்

இக்ஷ்வாகு வம்சத்து யுவநாசுவன் குமரன், பிரகு தச்வன் தந்தை,

சபரன்

சேதிபதேசாதிபதி, சிசுபாலன் குமரன். அஸ்வமேதத்தில் அருச்சுநனுடன் சிநேகஞ்செய்து கொண்டவன்.

சபரீ

மதங்காச்சிரமத்தில் இராமமூர்த்தியைக்கண்டு சேவித்துச் சுக்கிரீவன் இருக்கைகூறி முத்தி அடைந்தபெண்.

சபர்சயஞ்ஞம்

ஸ்பர்சயஞ்ஞம், இது சம்பாதித்த யாகப்பொருள்களைச் செலவு செய்யாமலே அதைத் தொடுவதினாலேயே திருப்தியடைவிக்கும் யாகம்.

சபலன்

பிங்களனைக் காண்க.

சபலாசுரன்

இவன் அசுரன். சரபவுருக் கொண்டு விநாயகரைக் கொல்லவர விநாயகர் இவனைக் காலைப்பிடித்து அடித்துக் கொன்றனர்.

சபளம்

யமமார்க்கத்தைத் தடைசெய்யும் நாய் சியாமத்திற்குத் துணையானது,

சபளாசுவரர்

தக்ஷன் குமரர். இவர்கள் ஆயிரவர். நாரதர் உபதேசத்தால் ஞானம் அடைந்தவர்.

சபளாஸ்வர்

சந்திரவம்சத்து அரசர், அவீட்சின் புத்திரர். (பா~ஆதி),

சபாநரன்

(பிர) அநுபுத்திரன். இவன் புத்திரன் காலநரன்.

சபாநலன்

யயாதி பௌத்திரன். அனுவின் குமரன்.

சபாபதி நாவலர்

இவர் யாழ்ப்பாணம் கோப்பாய் எனும் இடத்தவர் சைவ வேளாளர். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் வல்லவர். திருவாவடுதுறையா தீன வித்வானாயிருந்தவர். இவர் தமிழில் சிதம்பர சபாநாதபுராணம், ஏசுமதசங்கற்ப நிராகரணம், பாரதராமாயண தாற்பர்ய சங்கிரகம், சிவகர்ணாமிர்த மொழிபெயர்ப்பு, திராவிட பிரகாசிகை முதலிய இயற்றியவர்.

சபாபதிப்பிரியன்

சோதேசாதிபதி சிதம்பர தரிசனத்திற்கு வந்தவன்.

சபாலி

ஆரீதரின் தந்தை; வைசம்பாயனனது வரலாற்றை முனிகுமாரர் கட்குக்க கூறியவர்,

சபிண்டர்கள்

தான் முதலாக ஐந்தாம் பாட்டன் வரையிலுமுள்ள ஏழு தலை முறைக்குட்பட்ட பங்காளிகள்,

சபு

உக்கிரசேநன் குமரன்.

சபேச்வரம்

நைமிச வனத்திலுள்ள திவ்வியக்ஷேத்திரம்.

சபை

1. இது சிவமூர்த்தி தேவர்கள் பொருட்டும் இருடிகள் பொருட்டும் திருநடனஞ் செய்த இடங்களாம். அவை சிதம்பரம் கனகசபை, மதுரை இரசிதசபை, திருநெல்வேலி தாம்பிரசபை, திருக்காஞ்சி ஆகாசசபை, திருக்குற்றாலம் சித்திரசபை, வேதாரணியம் வேதசபை, சுசீந்திரம் தேவசபை, திருவாலங்காடு இரத்தின சபை. 2. அறிவுள்ளார் பலர்கூடி விவாகார நிச்சயஞ் செய்யுமிடம். அது, அப்பிரதிட்டிதை, பிரதிட்டிதை, முத்திரிதை, சத்திரிதை என நான்குவகைப்படும். இவற்றுள் அப்பிரதிட்டிதை நிலையிலாவது சஞ்சரிக்கும் ஆரணியர் முதலியோர் கூடுவது. பிரதீட்டிதை உபயவாதிகள் முதலான பத்திடத்துச் சபையாம். முத்திரிதை; பிராட்டு விவாகன் இருக்கின்ற சபையாம். சாத்திரிதை அரசனிருக்கும் சபை. சபையினங்கத்தினர். அரசன், (சிரம்) பிராட்டு விவாகன் (முகம்) சபாசதர்கள் (தோள்) ஸ்மிருதி (கை) கணகலேகர் (கணைக் கால்கள்) பிரமாணங்களான பொன், நெருப்பு, நீர் (கண்கள்) சாத்தியபாலன் (பாதம்). (விவகாரசங்கிரகம்).

சப்த தீவுகள்

சம்பு, பிலக்ஷம், குசம், கிரௌஞ்சம், சாகம், சான்மலி, புஷ்கரம்.

சப்தகிரந்தி

மஹத், அகங்காரம், சத்தம், பரிசம், ரஸம், ரூபம், கந்தம் ஆக 7.

சப்தசாரஸ்வதம்

ஒரு புண்ய க்ஷேத்ரம், இதில் சப்தருஷிகள் யாகஞ்செய்ய அதில் சரஸ்வதி முதலிய தீர்த்தங்கள், சம்பிரபை, கனகாக்ஷி, விசாலை, சுரந்தவை, அமோகமாலை, சுவேணி, விமலோதகை, முதலியவராக உருக்கொண்டு பணிசெய்து சித்திபெற்றனர், இது ஒரு தீர்த்தம். இதின் சப்தாங்கமாவன: 1, சுப்பிரபை, 2. காஞ்சனாக்ஷி, 3. விசாலை, 4 மனோரமை, 5, ஓகவதி, 6. சுரேணு, 7. விமலோதகை என்பன.

சப்தசிருங்கபீடம்

சத்திபீடங்களுள் ஒன்று.

சப்ததருப்பை

குசம், காசம், தூர்வை, விரீகி, மஞ்சம்புல், விச்வாமித்ரம், யவை,

சப்ததாண்டவம்

1. ஆனந்த தாண்டவம், 2. சந்தியா தாண்டவம், 3. கௌரிதாண்டவம், 4. திரிபுரதாண்டவம், 5. காளி தாண்டவம், 6. முனிவர் பொருட்டு நடித்த தாண்டவம், 7. சம்ஹார தாண்டவம். (ஸ்ரீ~காரணம்)

சப்தநரகங்கள்

அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி, யென்பன.

சப்தநாகங்கள்

தர்மன், காமன், காலன், வசு, வாசுகி, அநந்தன், கபிலன்.

சப்தபதி

கல்யாணத்தின் முந்திய நாளில் நடத்தும் சடங்கு. இது மணப்பெண்ணின் கையைக் கணவன் பிடித்துக் கொண்டு இருவருமாக விவாகனியை ஏழுமுறை வலம் வந்து நீ யென்னுடன் (7) அடிகள் நடந்து வந்தமையால் நாம் இருவரும் தோழர்களானோம் எனும் கருத்துள்ள மந்திரத்தைக் கூறுவது. (தைத்திரீயம்)

சப்தபுரி

அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை.

சப்தமி

சைத்ரசுக்ல சப்தமி விரதம்; இது சித்திரை மாதத்தில் சுக்ல சப்தமியில் கங்கையைப் பூசித்து விரதமிருப்பது.

சப்தமிஸ்தபன விரதம்

இது பாலுண்ணும் சிசுவுக்கு வரும் பிராணாபாய ரோகபரிகாரத்தின் பொருட்டுச் சூரியனையும் ருத்திரனையும் விதிப்படி பூசித்து விரதமிருப்பது. இது சப்தமியில் அனுசரிப்பது.

சப்தமேகங்கள்

சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவருணம் என்பன. இவை முறையே மணி, நீர், பொன், பூ, மண், கல், தீ, இவற்றைப் பொழியும்.

சப்தருஷிகள் இவர்கள் குபேரனுக்கு ஆசிரியர்கள்

அத்ரி, வசிட்டர், கச்யபர், கௌதமர், பரத்வாசர், விச்வாமித்ரர், ஜமதகனி. (பார அநுசா).

சப்தருஷிமண்டலம்

சனி உலகத்திற்கு மேல் பதினொருலக்ஷம் யோசனை பிரமாணத்திலுள்ள ஏழுருஷிகளுள்ள உலகம். வானம் நிர்மலமாய் இருக்கும் இராக்காலத்தில், வடக்கு நோக்கிப் பார்த்தால் நக்ஷத்திரகூட்டம் ஒன்று காணப்படும். அக்கூட்டத்திற்குச் சப்தரிஷி மண்டலம் என்று பெயர். இதில் (7) நட்சத்திரங்கள் அடங்கியவை. இந்த நட்சத்திர கூட்டம், இரவின் ஆரம்பத்தில் வடகிழக்கில் உதித்து வடமேற்கில் மறைகின்றது. இந்த (7) நட்சத்திரங்களைத் தாண்டி மையத்திலிருப்பது துருவ நட்சத்திரம்.

சப்தரோமா

திருவல்லிக்கேணியில் பெருமாள் அருள் பெற்றவர்.

சப்தவிடங்கத்தலம்

1. திருவாரூர்,2. திருநாகைக்காரோணம், 3. திருநள்ளாறு, 4. திருமறைக்காடு, 5. திருக்காறாயல், 6. திருவாய்மூர், 7. திருக்குவளை.

சப்யம்

கிருஷ்ணன் குதிரைகளில் ஒன்று.

சமகிலாதன்

இரணியகசிபின் குமரன், தேவி மதி, குமரன் பஞ்சசேநன்.

சமங்கன்

ஒரு ரிஷி. அஷ்டவக்கிர முனிவன் கோணல் நீங்கிப் பெற்ற பெயர். இவன் சமங்கை என்ற நதியில் ஸ்நானம் செய்ததால் இவன் கோணல் நீங்கப் பெற்றனன். (பார~வன).

சமங்கர்

ஒரு ருஷி இவர் நாரதருக்குத் துக்க முதலிய தொடராதிருத்தற்கு வழி கூறியவர். (பார~சாந்).

சமசௌரபன்

ஜனமேஜயன் சர்பயாகத்திலிருந்த ரிஷிகளில் ஒருவர்.

சமடன்

1, தருமனுடன் தீர்த்தயாத்திரை செய்த இருடி. 2. கயாசிரன் என்னும் பெயருள்ள பிராமணன்.

சமணமுனிவர்

1 பவணந்தி முனிவர்மானாக்கர், நன்னூற்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர். 2. சைநரில் ஒரு சாதியார்.

சமதகன்

சிவகணத்தலைவரில் ஒருவன்.

சமதக்கினி

ஜ; ஜனிப்பது, ஜமத்; பக்ஷிப்பது, யஜ; யாகஞ் செய்வது, ஜானே; அறிவது, ஜிஜாஹி; இந்திரியங்களைச் செயிப்பது, ஜிஜாயிஷி; சிஷ்யர்களின் ஞானங்களை யுண்டாக்குவது, ஜஜாமத்; தேவர்களும் அக்னியும் ஆவிர்ப்பவிக்கும் இவ்வுலகத்தில் உண்டாயிருப்பவன். இவர் அம்புபயில் கையில் ரேணுகையும் அம்புகளை யெடுத்துக்கொடுக்க முனிவர் சூரியன் மீது அம்புவிட நிற்கையில் சூரியன் பிராமண உருக்கொண்டு தோன்றிக் குடையும் செருப்புங் கொடுத்தான். (பார~அநுசா). இருசிகருக்கு காதியின் குமரியாகிய சத்தியவதியிடம் பிறந்த குமரர். இரேணுகையை மணந்தவர். குமரர் உருமதி, உத்சாகன், விச்வாவசு, பரசிராமர் முதலிய நால்வர். இவருக்குப் பிதா பிருகு முனிவர் எனவும் கூறுவர். ஒருமுறை பிதுர்க்களுக்குப் பால் கறந்து வைத்தனர். அதைக் குரோதம் சாய்த்தது. அதைக்கண்ட முனிவர் கோபித்தனர். குரோதம் மன்னிக்க வேண்ட விடுத்தனர். பிதுர்க்கள் முனிவரை நோக்கி எம்மை அலக்ஷியஞ்செய்து எங்களுக்கு வைத்த பாலைக் கவிழ்த்த குரோதத்தைச் சபிக்காத்தினால் நகுலம் ஆக எனச் சபித்தனர். முனிவர் இந்த உருவத்துடன் திருமாரசனது. அசுவமேத யாகத்திற்குச் சென்று நான் சத்துப்பிரத்தன் அன்ன தானஞ் செய்ததைக் கண்டதால் ஒரு பாதிதேகம் பொன்னிற மடைந்தேன். மற்றப்பாதி பொன்னிறம் பெறலாம் என இவ்விடம் வந்தனன் ஆகவில்லை. இந்தயாகம் அதனினும் பலன் இலது என்று சொல்லிப் போயினர். இவர் மீண்டும் தருமர்செய்த யாகத்தைப் புகழ்ந்ததால் பிதுர்க்கள் சொற்படி பழைய உருக்கொண்டனர். ஒருமுறை தன்னுடன் பாணத்தை எடுத்துத் தந்த ரேணுகையின் கால்களைச்சுடும் சூரியனது வெப்பத்தைக் கோபித்தனர். இவர் அங்கதேசாதிபதி யாகிய சித்ரசேனனை விரும்பிய கற்பினிலை கடந்த தாயைக் கொலை செய்து வரும்படி தமது புத்திரர் நால்வர்க்குக் கட்டளையிடப் பரசிராமர் ஒழிந்த மூவரும் மறுக்க அவர்களை வேடராகச்சபித்தனர். பரசிராமர் வேண்டுகோனால் மனைவியை உயிர்ப்பித்துக் கிராமதேவதையாயிருக்க வரம் அளித்தவர். இவர் ஆச்சிரமத்தில் கார்த்தவீரியன் வேட்டைக்குச் சென்று தங்கினன், முனிவர் அரசனுக்குக் காமதேனுவால் வேண்டிய உபசரிக்க அரசன் காமதேனுவிடம் இச்சை கொண்டு வலுவிற் கவரப் பாசிராமர் அரசன் சேனையையும் அவன் குமாரையும் கொன்றனர். கார்த்தவீரியனைக் கொன்ற பாபம் நீங்கப் பாசிசாமர் தீர்த்த யாத்திரை சென்றகாலத்துக் கார்த்த வீரியன் குமரருட் சிலர் சமதக்கினி முனிவரைக் கொலை புரிந்தனர். இதனால் பரசி ராமர் அந்தச் சூரியவம்சத்தைக் கருவறுத்தனர்.

சமதிருஷ்டி தோஷமும் அபவாதமும்

விடியற்காலத்தில் சுக்ரன் கிழக்கே உதிக்க, அந்தக் காலத்தில் குரு மேற்கே அஸ்தமிக்கச் சம்திருஷ்டி தோஷமுண்டாம், அக்காலத்துச் சுபங்கருமங்கள் தவிரப்படும், இருவரில் ஒருவர் வேறொரு கிரகத்துடன் கூடி நிற்பினும், இருவருக்கு நடுப்பட்ட இராசிகளில் சுபக்கிரகங்கள் நிற்பினும் சமதிருஷ்டியென்கிற தோஷம் இல்லை. சுக்ரன் மேற்கே நிற்க வியாழனிவனுக்கு (7) ஆம் இடத்துக் கிழக்கே நிற்பினும் சமதிருஷ்டி தோஷமாகாது. (விதான).

சமநபத்திராசாரியர்

நியாயசாஸ்திர நூலாசிரியர்.

சமநிலை

இது வைதருப்ப செய்யுணெறி யிலொன்று. மூவினரந்தம்முள் விரவத் தொடுப்பது (தண்டி).

சமந்தகமணி

ஒருமணி. இது சத்ராசித்திற்குச் சூரியனால் கொடுக்கப்பட்டது.

சமந்தகூடம்

இலங்கையிலுள்ள திருமலை. இதைச் சமனொளியென்பர் புத்தர். (மணி மேகலை.)

சமந்தன்

வசுதேவருக்குத் தேவகியிடம் பிறந்த குமரன்.

சமந்தபஞ்சகம்

திரேதாதவாபரயுக சந்திகளில் பரசுராமன் கதரியருடன் (21) முறை போரிட்டு அவர்களது உதிரத்தால் (5) தடாகங்களாக்கி அவர்களுதிரத்தால் பிதுர்தர்ப்பணம் செய்த இடம். இது பிற்காலத்து பாண்டவர்கள். (18) நான் போரிட்டதால் குருஷேத்திரம் எனப் பெயர் பெற்றது. (பார~வன.)

சமந்தம்

இலங்கைத் தீவிலுள்ள மலை, புத்த பாதக்குறியுள்ள மலை. இது புத்தபாத பீடிகைகளில் ஒன்று சமனொளி யென்பர்.

சமனை

சோடசகலைகளில் ஒன்றாகிய சத்தியின் கலை.

சமனொளி

இலங்கையினுள்ள ஒருமலை இதில் புத்தபீடிகை இருக்கிறது (மணி).

சமனொளிமலை

இது இலங்கைத் தீவிலுள்ளது. (திரு).

சமன்

அகன் என்னும் பெயருடைய வசுபுத்திரன் உடன்பிறந்தார் ஜோதி, சாந்தன், முனிச்சன் முதலியோர்.

சமன்

1. தருமன் என்னும் மனுவின் புத்திரன், மனைவி அப்ராப்தி, சம்பிரீதி. தாய் சிரத்தை, சகோதரர் காமன், அரிஷன். 2. திருதராட்டிரன் குமரன்.

சமயதிவாகர வாமனமுனிவர்

நீலகேசித் தெருட்டின் உரையாசிரியர், ஜைனர்.

சமயம்

(6) வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம், இவற்றையும் உலகாயதம, புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்ரம், பாட்டாசாரியம். முதலிய.

சமயாத்யுஷிதகாலம்

கிழக்கு வெள்ளென வெளுக்க நக்ஷத்ரமண்டலம் மறைந்து சூரியன் கண்ணிற்குத் தோன்றாதவரையிலுள்ள காலம். (பரா~மா).

சமரகோலாகலபாண்டியன்

விக்கிரம கஞ்சுகபாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் அதுலவிக்கிரமன்,

சமரதன்

மச்சிய தேசாதிபதியாகிய விராடன் உடன் பிறந்தான்.

சமரத்தம்

விரதங்களில் ஒன்று,

சமரன்

1. சூரியவம்சத்து அரசன், இவன் யோகியாயினன். 2. நீபன்குமரன், இவன்குமார் பாரன், சுபாரன், சதச்வன், இவன் காம்பிலிநாட் டரசனாயினான்,

சமரை

விபீஷ்ணன் தேவி, ஸைலூஷன் எனும் காந்தருவன் பெண், சீதாபிராட்டி அசோகவனத்தில் இருக்கையில், தேறுதல்கூறி ஆதரித்தவள். பெண் திரிசடை.

சமர்த்தராமதாசர்

குருஜாம்பம் என்னும் ஊரில் சூரியாஜிபண்டிதர் தம் மனைவி ரேணு என்பவளுடன் புத்திரப்பேறு வேண்டிச் சூரியனை யுபாசிக்க அத்தேவன் தரிசனம் தந்து இரண்டு மகவனக்குண்டாம். முன்னவன் என்னமிசத்தாற் பிறப்பன் என அருளி மறைந்தனன். பின்பு சிலநாள் தரித்து இருமக்கள் தனித்தனி பிறக்க முன்னவனுக்கு கங்காதரன் என்றும், மற்றவனுக்கு நாரணனென்றும், பெயரிட்டு வளர்க்கையில் பின்னவனுக்கு ஒருவாலுமிருந்தது கண்டு அநுமனம் சமெனக் களித்திருந்தனர். பின்னவன், வீடுதங்கா தலைந்து ராமநாமங் கூறிக்கொண்டு ஒரு அரசடியிலிருக்கையில் ராமமூர்த்தி தரிசனந்தந்து ராமதாசன் எனப் பெயரிட்டு மறைந்தனர். இவர் ஒரு நாள் தம்மிச்சையாய் விளையாடலைக் கண்ட தாய் இவ்வகையாடல் தக்க தன்று சமுசாரத்திற்கு வேண்டிய செய்க என, ஒருகுடியானவன் நெற்பொதி யைத் தூக்கிவந்து தாய்முன் வைத்து எடுத்துக்கொள்க என்றனர். இவர் செய்த தீமைகண்ட பொருட்குரியான் வந்து என் பொதியென, உனதாயின் எடுத்துச் செல்க என, அவன் எடுக்கமுடியாதது கண்டு வியந்து சென்றனன், இவரது செய்கை கண்ட தாய் தந்தையர் கல்யாணஞ்செய்ய எண்ணி, பெண்ணிற்கும் பிள்ளைக்குமிடையில் திரையிட்டு மந்திரஞ் சொல்வதில் சாவதான மென்றடிக்கடி சொல்லக்கேட்டுப் புரோகிதர் இவரை அதற்குப் பொருள் என்னென்றனர். புரோகிதர் உனக்குப் பாசபந்தமிடக்கூறு மந்திரமென உடனே மணப்பந்தரைவிட்டு காடடைந்து மறைந்து அநுமனை எண்ணித் தவமியற்றி யதுமனால் ராமனருள் பெற்று ஊரடைந்து பிக்ஷை செய்து கானடைந் திருக்கையில் சிவாஜி எனும் அரசன் வேட்டைக்குவந்து இவரைத் தூரத்திற் கண்டு இவரிடம் புலி கரடியாதிகள் நெருங்கியிருக்கக்கண்டு அணுக, அஞ்சி வீடடைந்து இவரருள் பெற எண்ணி உதயத்தில் காட்டின் வழி வருகையில் ஒருவன் கையில் கவி எழுதிய இலைகொண்டு நதியில் விடவருகையில் அக்கவிகளினருமை கண்டு ஆனந்தங்கொண்டு ஏவலரால் நதி யில் விட்ட ஏடுகளை வருவித்தெழுதித் தாசரைக்கண்டு அருள் பெற்றிருந் தனன். இவ்வகை தாசரிருக்கையில் ஒரு நாள் மாவலி நகரடைந்து சிறுவருடன் கல்லெறிந்து விளையாடி மூர்ச்சித்தவர் போலாக அவர்கள் இவரை மண்ணில் புதைத்து ஏகினர். அரசன் ஆசாரியரைக்காண வனமெலாந் தேடி மாவுலிநகரில் புதைந்திருந்தமை கேட்டு வருகலைக்கண்ட வூரார் அப்பிணத்தைக் கொளுத்திவிட எண்ணித் தோண்டு கையில் பேரோசையிட்டு எழுவதைக் கண்டு ஓடினர். பின்னர் அரசன் ஆசாரியரைக் கண்டடிவணங்கி விடைபெற்ற கன்றனன். பின் தன்னையடைந்த தத்து என்னும் அம்பட்டனுக் கனுக்கிரகித்து அவனுடன் சோளக் கொல்லையில் தானியத்தைப் பரித்துண்கையில் அடிபட்டு அரசனையணுகுகையில் அரசன் ஆசாரியருக்குள்ள காயத்தின் வரலாறு தெரிந் தாலன்றி யுயிர்வாழேனென்று தத்தனைக் கேட்க அவன் கூறக்கேட்டுக் கொல்லைக் குரியானைக் கட்டிக்கொண்டு வரக் கட்டளையிடக் கேட்ட தாசர் கொல்லைக் குரியவனுக்கு அரசனிடம் வெகுமதி தரச்செய்து, அந்நிலத்திற்குத் திறை நீக்கியனுப்பித் தாம் காடடைந்து திரியம்பக மெய்தித் தம்மாலிறந்த பக்ஷிக்கு மீண்டு முயிர்தந்து, தம்மூரடைந்து தாய் தந்தையரை வணங்கிக் காடடைந்து ஒருவனீர் உபதேசித்த மந்திரம் வேண்டேனென்ன அவன் வாயில் நீர்பெய்துமிழச் செய்ய அது அக்கரவடிவாய் பாறைமீதிருக்கக் கண்டு, பெருமாள் அழைத்துச் செல்லப் பண்டரிபுரஞ் சென்று சேவித்து, டில்லி பாதுஷாவின் மந்திரிவிட்ட பாணத்தைக் கையிற்பிடித்து அக்காபாயிக்கருள் செய்து, அம்பாஜியின் பேதமையகற்றி கிணற்றின் மீதிருந்த கிளையை வெட்டியதில் வீழ்ந்து மறைந்தானொருவனை வேறோரிடத்துக் கிணற்றிலழைத்து, ஒரு காட்டில் சென்று தாகத்தால் வருந்தியவர்க்கு ஒரு நதியை வருவித்துத் தந்து, வேட்டையாடிக் கொன்ற பறவைகளை மீண்டும் உயிர்பெறச் செய்து, வேணுபாயிக்கருள்செய்து அவளுக்குத் தாய் தந்தையர் விஷங்கொடுத்துக் கொல்ல அவளை மீண்டும் எழுப்பிப் பயிணாபாயிக் கருள் புரிந்து, ஒரு கிராமத்திலிருந்த பெருமாளைக் கொண்டுவந்து மற்றோர் கிராமத்தில் பிரதிட்டித்து, பதினொரு ஊரில் அதுமப்பிரதிட்டை செய்வித்து அப்பதினொரிடத்தும் ஒருவரேயிருந்து பூசித்து, ஒளரங்கபாத்திற் கதிபனிவரைத் துருக்கராக்க எண்ணிப் பிடித்துச் சென்ற காலத்து அநுமனால் அவனை யறைவித்து நீங்கிக் கேசவசுவாமி யனுப்பிய தூதனுக்கு ஒரு நாளமுது கொடுத்து அவன் பல நாள் கடந்து செல்லுமளவும் அதை யுதவச்செய்து கிருஷ்ணாஜி எனும் நாவிதராகிய பக்தரது திருநக்ஷத்திற்கு உணவு கொள்ள மறுத்த வேதியர்க்கு ராமதர்சனம் காட்டியவர்களை உணவு கொள்ளச் செய்து துகாராழடனிருந்து பஜனை செய்து பாடல் பெற்ற காளியால் கடுக்கன் அணியப் பெற்று ஒரு வர்த்தகனது கப்பல் மூழ்குந் தருணத்து இவரையெண்ண அக்கப்பலைக் காத்து ஒளரங்கஜீபு சேனைகளை அநுமனைக் கொண்டோட்டு வித்துச்சிவாஜி பரம பதமடைய அவன் குமானைக்கொண்டு வேண்டிய கிரியைகளைச் செய்வித்துத் தம் ஆதீனத்தில் தம் தடியன் குமரரையிருத்திப் பாமபதமடைந்தவர்.

சமற்காரன்

ஒரு அரசன், இவன் வேட்டை மேற்சென்று கன்றுக்குப் பாலூட்டியிருந்த மானின் மீது அம்பேவி வெண்குட்ட நோய் அடையச் சாபம் பெற்றுப் புண்ணிய தீர்த்தமாடி அதனைப் போக்கிக் கொண்டவன். இவனுக்கு அம்பை, விருத்தையர் என இரண்டு குமாரியாளர்.

சமவர்ணன்

1, விவசவன் புத்திரியாகிய தபதியின் புருஷன். 2. ரிக்ஷன் குமரன். இவன் தேவி தபசி, இவன் குமரன் குரு.

சமவர்த்தனர்

ஆங்கீரசருஷியின் புத்திரர். கங்காதீரத்தில் பித்தர்போல் உலகம் அறியாமல் இருந்தவர். இவர் மருத்துவின் வேண்டலால் யாகத்தை முடித்து இருக்கையில் இந்திரன் பொறாமை கொண்டு வச்சிரமேவ அதைத் தடுத்தனர்.

சமவாயம்

நீக்கமின்றி யிருப்பனவற்றின் சம்பந்தம் சமவாயம் சுரோத்திரத்திற்கும் சத்தத்திற்குமுள்ள சம்பந்தம்,

சமவாயிகாரணம்

எதன் கண் ஒற்றித்துக் காரியந்தோன்றும் அது சமவாயிகாரணம், இது ஒற்றுமைச் சம்பந்தம்.

சமவேத சமவாயம்

சோத்திரத்திற்கும் சத்தத்தின் தன்மைக்குமுள்ள சம்பந்தம். (சிவ~சித்.)

சமஸ்காரம்

ஆவாஹனம் ஸ்தாபனம், சாந்நித்யம், நிரோதனம், அவகுண்டனம், தேனு முத்ரைகாட்டல், பாத தீர்த்தம் சமர்ப்பித்தல், ஆசமனம் சமர்ப்பித்தல், அர்க்கிய தீர்த்தம் சமர்ப்பித்தல், புஷ்பஞ் சமர்ப்பித்தல் (ஆக 10.)

சமஸ்கிருதம்

இது ஆரியபாஷை, இப்பாஷை சுத்தப்படுத்தப் பட்டதெனும் பொருளது, இது அநாதிபாஷை, எல்லா பாஷைகளுக்கும் முதற் பாஷையாக வுள்ளது இதில் வேத, ஆகம, புராண, ஸ்மிருதி, முதலியவையிருக்கின்றன இதற்கு முதல்வர் சிவபெருமான் இவர் வாயிலாக வேதபுராண இலக்கணங்கள் வெளிவந்தன. வெகு இனியபாஷை.

சமாகுவயம்

ஆடு, கோழி, கடா, மல்லர், முதலியவற்றிற்குப் பந்தயம் வைத்து ஆடும் வெளிப்படைத்திருடு. (மநு.)

சமாதி

1. ஒரு வணிகன். சுரதன் என்னும் அரசனுக்கு நண்பன், மேதஸ் முனிவ ரிடத்தில் தேவி மந்திரம் பெற்று உபாசித்து அஞ்ஞானம் நீங்கினவன். (தேவி பாகவதம். 2. வைதருப்ப செய்யுணெறியிலொன்று. இது, முக்கியப்பொருளின் வினையை, ஒப்புடைப் பொருண்மேற்றந்து புணர்த்துரைப்பது 3. இந்திரிய மடக்கி ஒருவழியிருத்தல். இது ஐந்துவகை தத்வலயசமாதி, சவிகற்பசமாதி, நிருவிகற்பசமாதி, சஞ்சார சமாதி, ஆரூடசமாதி, மவுன சமாதி.

சமாதியணி

ஒருவன் செய்யத் தொடங்கிய காரியம் மற்றொரு காரணவு தவியால் எளிதின் முடிவது. இதனை யெளிதின் முடி பணியென்பர் தமிழ் நூலார். (குவல.)

சமாநன்

1. சண்முகசேநாவீரன். 2. சிவகணத்தவரில் ஒருவன்.

சமாயிதவணி

முன்பு தன்னால் முயலப்பட்ட கருமப்பயன் அத்தொழிலாலன்றிப் பிறிதொன்றால் நிகழ்ந்ததாகக் கூறிமுடிப்பது. (தண்டி.)

சமாவருத்தன்

குருவினாஞ்ஞையால் பிரமசரியம் நீக்கிக் கிரகத் தனானவன்,

சமாவர்த்தனம்

பிரமசாரி விரதத்தைப் பூர்த்திசெய்தல். சித்திரை யொழிந்த மற்ற மாதங்களில் மாணாக்கனுக்குக் கிரியைகளைச் செய்து பிரமசரிய விரதங்களை நீக்கிச் சர்வாங்கமும் கௌரஞ் செய்வித்துக் குண்டல முதலியவற்றால் அலங்கரிப்பித்துக் கண்ணாடி முதலியவற்றைப் பார்த்து வடக்கு முகமாகச் செல்லுகையில் பந்துக்களால் இல்லறம் வகிக்கும் பொருட் டுப் பிரார்த்தித்தல். (சை பூ) பிதாவிடத் தினின்றாவது ஆசாரியனிடத்திலிருந் தாவது விதிப்படி வேதம் ஓதி முடித்தவனான புத்திரனை அல்லது மாணாக்கனைப் பிதா அல்லது ஆசாரியன் புஷ்பசந்தனாதிகளால் அலங்கரித்து உயர்ந்த ஆசனத்தில் உட்காருவித்துக் கோதானவிரதஞ் செய்வித்துப் பஞ்சாமிருதத்தினா லுபசரிப்பது.

சமி

1. உசிநரன் குமரன். 2. அவுரவர் குமரி, மந்தாரன் தேவி. மந்தார முனிவரைக் காண்க.

சமிகருப்பர்

அவுரவருக்கு. ஒரு பெயர். இவர் சூக்கும உருக்கொண்டு சமிகருப் பத்தில் தங்கினதால் இப்பெயர் பெற்றனர்.

சமிகருஷி

பைரவருஷியைக் காண்க.

சமிஞ்ஞை

சூரியன் தேவி.

சமிதாதானம்

பிரமசாரி வனத்தில் பரிசுத்தமான இடத்திற்குப்போய் விதிப்படி பலாசமுதலிய விறகு கொண்டுவந்து உலர்த்தி அக்னியில் ஓமஞ்செய்தல். (மநு.)

சமித்திரன்

(சூ.) பிரமிதி குமரன்.

சமித்து

எருக்கு, பலாசு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தர்ப்பை முதலிய.

சமீகன்

1. போஜவம்சத்து அரசருள் ஒருவன், 2. சுதானினி கணவர். குமரர் சுமித்திரன், அருச்சுநன், பாணன்.

சமீகமுனிவர்

சிருங்கி முனிவருக்குத் தந்தை. பரிச்சித்தால் செத்த பாம்பைச் சூட்டப்பெற்றவர். இவன் சீடன் கௌரமுகன். (ஆதி.)

சமீசி

1 காந்தருவப் பெண், நாரீதீர்த்தம் காண்க. 2. வந்தையைக் காண்க.

சமுகன்

நாகன்.

சமுக்யை

விவசுவான் பாரி, விச்வகர்மன் பெண்.

சமுத்திரகன்னிகை

அகத்தியர் தேவி என்பர்.

சமுத்திரசேநன்

பாரதவீரரில் ஒருவன். காலபுத்ரர் அம்சம்.

சமுத்திரன்

சகரனுக்கு ஒருபெயர்.

சமுத்திரம்

இதுநதியை நோக்கி நீ வெள்ளங்கொண்டு பெருமரங்களையும் மலைகளையும் புரட்டி வருகின்றாய் சிறுநீர் நொச்சியைப்பிடுங்க உனக்கு வலியில்லாமைக்குக் காரணங் கூறுகவென எதுபகைக்குத் தலை வணங்குகிறதோ அது துன்பத்திருந்து நீங்குதலுமன்றி யென்னாலும் வெல்ல முடியாததாம் என்றது. (பார~சார்.)

சமுத்திரவிசயமகாராசன்

நேமிநாத சுவாமிகளுக்குத் தந்தை. தேவி சிவதேவி சைநர்.

சமுத்திரவிலாசம்

இது கடிகைமுத்துப் புலவனாம் சிலேஷையாகச் செய்யப்பட்ட நூல் இதற்குக் கழிக்கரைப் புலம்பல் எனவும் பெயர்.

சமுத்திரஸ்நானம்

இது புண்ணிய காலங்களில் புண்ணிய நதிபதியாகிய கடலில் ஸ்நானஞ்செய்வது. (உல~வ.)

சமுத்ரகுப்தன்

பாடலிபுரத்தில் இரண்டாவதாகத் தோன்றிய சந்திரகுப்தன் குமரன். இவன் குமரன் சந்திரகுப்த விக்ரமாதித்தன். இவர்கள் குப்த வம்சத்தவர் எனக் கூறியிருக்கிறார்கள் சாசனக்காரர். இவன் சேரவேந்தனான மாந்தரனை வென்றவன் எனப்படுகிறான். (கி. பி. 375,) வரை ஆட்சி புரிந்தான். இவன் பேரன் குமாரகுப்தன் (கி பி.) (413 455.)

சமுத்ரஜித்

சோழர் சரிதை காண்க.

சம்சத்தகர்

பிரதிஞ்ஞை செய்து யுத்தத்தினின்று நீங்காதவர்.

சம்சன்

இருஷபனுக்குச் சயந்தியிடம் உதித்த குமரன்.

சம்சப்தகர்

சத்தியவிரதன், சத்தியசோன், சத்தியகர்மன், சத்தியவர்மன், முதலானார்.

சம்சயசமை

சாதாரண தருமத்தைக் காட்டிச் சம்சயத்தை யுண்டுபண்ணுவது, (தரு)

சம்சிலேஷசக்தி

ஒரேவிதமான பதார்த்தத்திற் சிறு அணுக்களை யொன்றோடொன்ற நெருங்கியொட்டி யிருக்கச்செய்யும் சக்தி. (Cohesion.)

சம்சுருகன்

மிதிலைநாட்டரசருள் ஒருவன்.

சம்பகன்

1. சர்மணவதிக் கரையிலுள்ள ஒரு பட்டணத்து அரசன். 2. ஒரு அசரன்.

சம்பகை

ஒரு அப்சரசு மாண்டவியரால் சாபம் பெற்றவள்.

சம்பங்கோழி

இது, ஒரு நீர்வாழ்பறவை, இது கருநிறமுடையதாய்க் கால்கள் நீண்டு தோலடிப்பாத முடையதாய்க் கழுத்து நீண்டு தலை சிறுத்துமுள்ளது. இது நீரில் முழுகி நெடுநேரம் உள்ளிருந்து ஆகாரத்தைத் தேடித்திரிந்து பின்னெழுந்து மூச்சு விடும். இதற்கு மீன் நீர்வாழ்ப்பூச்சிகள் உணவ கரையோரங்களிலுள்ள மரவாசி.

சம்பட்டை

சுபலராஜனுடைய மகள். திருதராஷ்டிரன் பாரியையில் ஒருத்தி. (பா. ஆதி.)

சம்பத்தி

ஈசானன் தேவி, இவளில்லாவிடம் வறுமை கொண்டிருக்கும்.

சம்பத்ஷஷ்டி

சுமங்கலிகள் புரட்டாசி கிருஷ்ணபக்ஷம் ஷஷ்டியில் சம்பத்தை எண்ணிப் பிரார்த்திருப்பது.

சம்பந்தசரணாலயர்

1. தருமபுரமடத்துப் பண்டாரசந்நிதிகளில் ஒருவர், கந்தபுராணச் சுருக்கம் செய்தவர். 2 திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு அம்மான், இவர் போதிமங்கைக்குச் செல்லும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளைத் தடுத்த புத்தநந்தி தலையில் இடிவிழும்படிச் செய்து மீண்டும் பிள்ளையாருடன் வாதுக்குவந்த சாரிப்புத்தனை வாதில் வென்றவர். திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருமுறை எழுதியவர். 3. இவர் தருமபுாவாதீனத்துத் துறவு பூண்ட அடியவர். ஞானப்பிரகாச சுவாமிகளது மாணாக்கர். இவர் மைசூருக்குத் தேசயாத்திரையாகச் சென்றிருக்கையில் அரசரைக் காணச்செல்ல அரசர் இவரது கறுப்புநிற நோக்கி இவரை அண்டங்காக்கை போல்கின்றீர் எனச் சுவாமிகள், நீர் அண்டங்காக்கையால் அண்டங்காக்கை நீரேயென சமர்த்தித்தவர். இதனால் அரசன்களிப்புற்று இரத்தினங்கள் பரிசளிக்கக் குருவுக்கென்றும், இரண்டாமுறை அரிக்கச் சிவனுக்கென்றும், மூன்றா முறைமளிக்க அடியவர்க்கென்றும் பெற்றவர். இவர் அரசர் வேண்டுகோளின்படிக்குகள் புராணச் சுருக்கம் பாடிமுடித்துத் திருச்செந்தூரில் அரசன் முன்பாக அரங்கேற்றினர்.

சம்பந்தமுனிவர்

திருவாரூர்ப் புராணம் பாடியவர்.

சம்பந்தமூர்த்தி சுவாமிகள்

திருஞானசம் பந்தமூர்த்தி சுவாமிகளைக் காண்க,

சம்பந்தம்

இது சிவாகமம் வந்தமுறை இது. அறுவகைப்படும் பாசம்பந்தம், சதாசிவர்க்கும் அணுசதாசிவர்க்கும், மஹாசம்பந்தம், அருந்த தேவர்க்கும் சீகண்டருக்கும், அந்தராளம் சீகண்டருக்கும் தேவர்க்கும், திவ்யம் தேவர்க்கும் இருடிகளுக்கும், திவ்யா திவ்யம் இருடிகளுக்கும் மனிதர்களுக்கும், அதிவ்யம் குருக்களுக்கும் சீடனுக்கும் உள்ளனவாம்.

சம்பந்தாண்டான்

இவன் திருவண்ணாமலை தேவஸ்தான குருக்களும், வித்து வானும் ஆனவன். இவன் கர்வத்தால் தான் ஷெளரஞ் செய்துகொள்ளும் செயலைப் பாடலாகக் காளமேகரைப் பாடச் சொல்ல அவர் (மன்னு திருவண்ணா மலைச்சம்பக் தாண்டாற்கு, பன்னு தலைச்சவாம் பண் ணுவதேன்; மின்னின், இளைத்த இடை மாதரிவன் குடுமிபற்றி, வளைத்திழுத்துக்குட் டாமலுக்கு ” எனப்பாடல் பெற்றவன். இப்பெயர்கொண்ட பௌத்தன் ஒருவன் அருணகிரியார் காலத்துத் திருவண்ணாமலையில் இருந்ததாகவும், கூறுகின்றனர். அருணகிரியாரைக்காண்க. இச்செய்யு எரிரட்டையர் பாடியதாகவும் கூறுவர்.

சம்பன்

1. (சூ.) அரிதன் குமரன். இவனாண்டது சமபாபுரி. சுதேவன் தந்தை, 2. பிருதுலாக்ஷன் குமரன். 3. இந்திரனாற்கொல்லப்பட்ட அசுரன்,

சம்பரன்

1. ஒரு அசுரன், இவன் இந்திரனுடன் யுத்தஞ் செய்யத் தன்னிடம் இருந்த தர்மவியாளகடர் என்பவர்களை அனுப்ப அவர்கள் யுத்தத்திற்குச் சென்று மீண்டனர். பின் வீமபாசகர் என்பவர்களை அனுப்ப அவர்கள் தேவரைத் துரத்தி மீண்டனர். சம்பாசுரனைக் காண்க. 2 திதி புத்திரனாகிய அசுரன், இந்திரனால் கொல்லப்பட்டவன் என்றும், மன்மதனால் கொல்லப்பட்டவன் என்றும் கூறியிருக்கிறது, 3. யமதூதரில் ஒருவன். 4. இவன், ஒருவேதியன் ஒழுக்கத்தால் மறுபிறப்பில் சிபிச்சக்ரவர்த்தியாயினான் (திருமுட்ட புராணம்). 5. ஒரு அசரன் வைஜயந்தம் எனும் பட்டணத்தை யாண்டவன் திமியென்கிற மீனைக் கொடியாக்கொண்டவன் மகாமா பாவிதேவர்களைத் துன்பஞ் செய்தவன் இவனை யிந்திரன் வேண்டுகோளால் கைகேயிசாரத்யம் செய்யத் தசரதர் வென்றார் (இரா).

சம்பராஜன்

இரட்டைப் புலவர்களை விகட கவிபாட ஏவியவன். (எறிக்கும் புகழ்க்கச்சி” என்னுஞ்செய்யுள் இவன் பொருட்டுப் பாடப்பட்டது,

சம்பராரி

மன்மதன், பிரத்துய்மனனைக் காண்க.

சம்பளகிராமம்

கல்கியாகிய விஷ்ணுமூர்த்தி அவதாரம் செய்யப்போகும் இடம் (பார~வன).

சம்பவ தீர்த்தங்கரர்

இவர் குருநாட்டில் அத்தினபுரத்தில் அரசுசெய்து கொண்டிருந்த இக்ஷவா குவம்சத்துத் தருடராசருக்கு, அவர் மனைவி சுஷேஷணையிடம் கிருதயுகத்தில் கார்த்திகை பௌர்ணமி திதி, மிருகசீருஷ நக்ஷத்திரத்தில் பிறந்தவர். இவர் உன்னதம் (400) வில், சுவர்ண வர்ணம், ஆயுஷ்யம், (90) லக்ஷம் பூர்வம்.

சம்பவாச்வன்

பரிகிணாசவனுக்கு ஒரு பெயர்.

சம்பா ஷஷ்டி விரதம்

மார்கழி அல்லது புரட்டாசி மாதத்திய சுக்ல ஷஷ்டியில் அநுஷ்டிப்பது.

சம்பாசுரன்

கம்சனுக்கு நண்பன். கிருஷ்ணன் குமரனாகிய பிரத்துய்மனனைக் கடலிலெறிந்து அவனால் கொல்லப்பட்டவன். பிரத்துய்மனனை காண்க.

சம்பாதி

1. அருணன் புத்திரன். சடாயு தமயன். இவன் தன் தமபியுடன் கூடித் தம் தந்தையைக் காணச்செல்லுகையில் சூரியன் கோபித்ததால் உஷ்ணம் பொறுக்காமல் சடாயு வருந்த அவனைக்காக்க இவன் அவனுக்குமேல் பறந்து சிறகை விரித்ததால் இறகு தீந்து மயேந்திரமலையில் விழுந்தனன். இதையறிந்த முனிவர், இவனுக்கு இராமதூதர் உன்னெதிரில் இராமஸ்மரணை செய்யின் இறகு வளருமென அவ்வகை வளரப்பெற்றவன். சடாயு இறந்த செய்தியை அனுமனால் கேள்வியுற்று விசனம் அடைந்தவன். தான் இறகு தீந்ததைநோக்கி இறக்க எண்ணுகையில் லோகசாரங்கமுனிவரால் தேறியவன். அநுமன் முதலிய வானார்க்குச் சீதையை எடுத்துச்சென்ற இராவணன் செய்தி கூறினவன். தாய்சேதி அல்லது சேநி.

சம்பாதித்தன்

1. சூரியன், தனக்குற்ற குட்டநோயைச் சம்புவைப் பூசித்துத் தீர்த்துக்கொண்டவன். 2. திரேதாயுகத்தில் கழுகாசலத்தில் பூசித்துப் பேரடைந்த முனிவர். 3. வானரவீரன். 4. விபீஷணன் மந்திரிகளில் ஒருவன்.

சம்பாதிவனம்

சம்பாதி சிறகு கரிந்து விழுந்த மனம். காவிரிப்பூம்பட்டினத்து அருகிலுள்ளது (மணிமேகலை).

சம்பாநகரம்

அங்கதேசத்து இராஜதானி. (it was the ancient Capital of Anga.)

சம்பாபதி

1. சம்புத்தீவின் அதிதேவதை, சம்புமரத்தின் கீழிருந்து நோற்றமையின் இப்பெயர் பெற்றனள். கோதமைக்குச் சக்ரவாளத்தோற்றம் காட்டிப் புத்ரசோகம் போக்கினவள். இவளுடைய கோயில் குச்சரக்குடிகை யெனப்படும். இவளிருந்த பட்டணம் சம்பாபதி அதுவே காவிரிப்பூம்பட்டினம் (மணிமேகலை). 2. இது வங்காள நாட்டின் பழைய இராஜதானி இப்பெயரைத் தமிழர்தாம் தென்னாட்டிற் குடியேறினபின் காவிரிப்பூம் பட்டினத்திற் கிட்டனர்.

சம்பாபுரி

சம்பனாண்ட பட்டணம்.

சம்பாரி

இந்திரன்.

சம்பிரன்

சிவபிரானால் அரிகேசனுக்குக் கொடுக்கப்பட்ட அடிமைகளில் ஒருவன்.

சம்பிரமன்

அரிகேசனைக் காண்க,

சம்பிராட்

சித்திராதனுக்கு ஊறணையிடம் உதித்தகுமரன், தேவி உத்கலை, குமரன்மரீசி.

சம்பிராமசம்பவம்

ஒரு தீர்த்தம்,

சம்பிரீதி

சமன் தேவி,

சம்பு

1, சிவமூர்த்தியின் திருநாமங்களில் ஒன்று. 2. இமயபர்வதத்தில் உற்பத்தியாகும் தீர்த்தம், 3. அம்பரீஷன் குமரன்.

சம்புகன்

இராமர் அரசாட்சியில் சைவலகிரியிலிருந்த ஒரு மரத்தில் தலைகீழாய்த் தேகத்துடன் சுவர்க்கம் அடையத் தவம் புரிந்த சூத்திரன். இது மரபு வழுப்பற்றி இராமமூர்த்தி இவனைக் கொலை புரியச் சுவர்க்க மடைந்தவன். இவனுக்குச் சம்புவன் எனவும் பெயர்.

சம்புகுத்தன்

துவாபரயுகத்தில் கழுகுருக் கொண்டு வேதகிரியில் பூசித்த இருடி.

சம்புகுமாரன்

வித்யுசன் குமரன். இவன் தாய் சூர்ப்பநகை.

சம்புகேசன்

நரியுருக்கொண்ட அசுரன். இவன் காசியில் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து இஷ்டசித்தி அடைந்தனன்.

சம்புகேசுரம்

1, ஒரு சிவஸ்தலம். திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ளது. இது பஞ்சபூதத் தலங்களில் அப்புத்தலம். சம்பு முனிவரைக் காண்க. 2. சம்புகேசனால் காசியில் தாபிக்கப் பட்ட இலிங்கமூர்த்தி.

சம்புதாசர்

இவர் ஒரு குடியானவர், அரிபக்தி விடாதவராய்த் தம் இல்லிடையிருந்து இல்லற நடத்தி வருநாட்களில் இவர் உழுத எருதிரண்டையும் கள்ளரிரவில் அவிழ்த்துச் செல்லப் பெருமாள், தாசர் விடியின் துன்புறுவார் என்றறிந்து விடியுமுன் அவற்றைப் பழைய இடத்தில் கொணர்து கட்டிவிடுவர். இவ்வாறு மீண்டுமீடும் செய்தது கண்ட கள்ளர், பெருமாளது புத்தரென அறிந்து அவரிடம் வந்து தாங்கள் செய்த தீமைகளைக்கூறி யபராதக்ஷடை வேண்டத்தாசர் பெருமாள் தமக்காக ஏவல்செய்ததை யெண்ணி வருந்தப் பெருமாள் தரிசனந்தந்து கருணை செய்யப் பெற்றவர்.

சம்புத்தீவு

1, நான்கு மகாதீவினுள் ஒன்று இது நாவலந்தீவெனவும் வழங்கப்படும். (மணிமேகலை.) 2. கலியுகத்தில் வேதகிரியில் கழுகு உருக்கொண்டு பூசித்த இருடி. 3. குசிகனுக்குப் பீவரியிடம் பிறந்த குமரன்: 4. பத்தாம்மன் வந்தாத்து இந்திரன்.

சம்புபத்தர்

ஒரு இருடி,

சம்புபாதாசிருதர்

மாணிக்கவாசக சுவாமிகளுக்குப் பிதா, இவர் மனைவியார் சிவ ஞானவதியார்.

சம்புமாலி

பிரகத்தன் குமரன், இராவணன் கட்டளையால் அனுமனைப் பிடிக்க வந்து அவனால் இறந்த அரக்கன்.

சம்புமுனிவர்

இவர் காவிரிக்கரையில் தவம் செய்கையில் ஒரு சம்புபலம் விழுந்தது. அதை முனிவர் சிவமூர்த்திக்கு நிவேதித்தனர். சிவமூர்த்தி அமுது செய்த அந்தப் பழக்கொட்டையை முனிவர் உண்ண முனிவர் வயிற்றில் சம்புவிருக்ஷம் உண்டாயிற்று. முனிவர் அந்த மரத்தடியில் சிவமூர்த்தியை எழுந்தருளியிருக்க வேண்டினர். ஆதலால் சம்புகேசுரம் உண்டாயிற்று.

சம்புவன்

சம்புகனைக் காண்க,

சம்பூதி

1 வைராசன் தேவி, 2. மரூசியின் தேவி, தக்ஷன் பெண், தாய், பிரசூதி, 3. (பிர.) செயத்திரன் தேவி. 4 சுமனசுக்குப் பெயர், 5. திரிதன்வனுக்கு ஒரு பெயர்.

சம்பை

ஒரு நகரம். சம்பனாண்டது.

சம்மதி பத்திரம்

வாதி பிரதிவாதிகள் நீதி மன்றத்தவர் முதலிய அதிகாரிகளால் எழுதப்படாமல் தாங்களே சம்மதித்து எழுதிக் கொள்ளும் பத்திரம்.

சம்மியன்

அக்கி, இவன் வியாழனுக்குச் சத்தியையிடம் பிறந்தவன். இவன் யாகங்களில் முதல் அவிர்ப்பாகத்தில் ஆஜ்யம் கொள்வோன்.

சம்மியமனி

யமபுரியைக் காண்க,

சம்மேளிதசைவன்

இவன் பதிபசுபாசம் அகாதி என்பன். சிவன் அநாதிமுத்தன். பசு அநாதி எனவும் சிவபூசையால் பாசம் நீங்க முத்தி எனவுங் கூறுவன் (தத்துவ நீஜா நூ)

சம்மோகனம்

ஒரு அஸ்திரம் அர்ச்சுனனால் விடப்பட்டது யாவரையும் மயங்கச் செய்யும்.

சம்யக்ஞானம்

ஜீவ, அஜீவ, புண்ய, பாவ, ஆஸ்வா, பந்த, ஸம்வர, நிர்ஜா, மோக்ஷங்க ளென்னும் நவபதார்த்த ஸ்வரூபங்களை யுணர்தல் இவற்றின் தன்மைகளைத் தெளிதலே சம்யக்தரிசனம், அதனைத்தரித்தலே சம்யக்சாரித்திரம். (மேருமந்தரம்.)

சம்யாசர்

செல்வம் துன்பத்திற்குக் காரண மெனக்கூறிய ருஷி. (பார~சாங்.)

சம்யாதி

1, நகுஷன் குமரன், 2. சர்யாதிக்கு ஒருபெயர். தேவி வராங்கி.

சம்யுக்தை

கன்னோசி அரசனாகிய ஜயச்சந்திரன் புதல்வி. பிருதுவி அரசனைக் காண்க,

சம்யூ

பிருகஸ்பதியின் புத்திரர்கள் (6)ல் ஒருவன் பாரியை சத்தியவதி. புத்திரன் பரதன். (பா~வன.)

சம்ராட்

இராசசூயயாகஞ்செய்து சாம்பிராஜ்ய பட்டாபிஷேகம் அடைந்த அரசன்.

சம்வச்சரம்

அயன, ருது, மாத, வார அவயவங்களுடன் கூடிய அவயவி சம்வச் சரம் எனப்படும். அது பன்னிரண்டு மாதங்களுடன் கூடியது, இவ் வருஷம் சாந்தரமானம் ஸௌரமானம், சாவனம் என மூவிதப்படும். இதில் சாங்கரமான வருஷம், சித்திரை மாத சுக்ல பிரதமை முதல் பங்குனி மாதப் பௌரணைவரையில் கணிப்பதாம் சௌரம் சித்திரை முதல் பங்குனி கடைசி வரையில் கணிப்பது, சாகனம்; முந்நூற்று முப்பத்தாறு நாட்கள் கொண்டது.

சம்வத்தன்

ஒரு அசுரன், இவன் தன் மனைவியுடன் மானுருக்கொண்டு புணர்ந்திருக்கையில் சூரியவம்சத்துச் சவுதாசன் என்பவன் பேட்டையெய்ய இவன் தப்பித்துக்கொண்டு ஓடிப் பழிக்குப்பழி வாங்க வசிட்டரைப்போல் உருத்தாங்கி நரமாமிசமிடக் கேட்டு மறைய அரசன் உண்மையாகிய வசிட்டர் வர அவருக்கு நரமாமிச மிட்டுச் சாபம் பெறச் செய்தவன் (வேதா ரண்யபுராணம்)

சம்வர்ணன்

1, அஜமீடன் குமரருள் ஒருவன். இவன் சூரியன் மகளாகிய தபதியை மணந்து குருவைப் பெற்றவன். 2. இருக்ஷன் புத்திரன்.

சம்வர்ணை

தபதியின் புருஷன். சூரியனுக்கு மருகன்.

சம்வர்த்தகன்

நாகன்.

சம்வர்த்தனர்

1. ஆங்கீரஸபுத்திரர் இவரால் யாகஞ்செய்விக்க மருத்து இவரை யெவ்வகைக் காண்பதென, நாரதர் நீ காசிதேசத்து வாசலிலிருந்து ஒரு பிணத்தை வாயிலில் வைத்திரு. யார் பிணத்தைக்கண்டு திரும்புகிறாரோ அவரைச் சம்வர்த்தனர் என்று அறிந்துகொள் என்றும் அவர் என்னைக் கேட்டால் நான் நெருப்பில் வீழ்ந்து மரித்தார் என்று கூறுக என்றனர். அவ்வகை அரசன் புரிந்து இவரைப் பின்தொடர்ந்து ஓராலடியிற்பணிய இவர் அரசன் மீது எச்சில் முதலிய உமிழ்ந்தும் நீங்காமைகண்டு அரசனை உண்மை கூறக்கேட்டு யாகத்திற் குடம்பட்டவர். (பார~அச்வ.) 2. ஒரு அரசன். இவன் பாரி உபதிஷ்டா. இவன் தன் தேவியுடன் தவம்புரிந்து பேறுபெற்றவன். 3. காசிதரிசித்து முத்திபெற்ற ஒரு யாத்திரிகன்.

சம்வர்த்தன்

1 ஒரு வேதியன், இவன் குமரன் கன்மாடன். இக்கன்மாடன் தவத்தால் வயிற்றுவலி நீங்கினான். (பாண்டிக் கொடிமுடி புராணம்) 2, வியாழனுக்குச் சகோதரன்.

சம்விற்பத்திரம்

அரசர்கள் தம்முள் பகைமையின்றி அரசியல் தருமங்களைக் காத்தற்கெழுதிக் கொள்வது.

சம்ஸ்தம்பினி

ஒரு மந்திரம் இது சம்வர்த்தனரால் இந்திரன் வச்ராயுதம் ஸ்தம்பிக்கச்செய்த மந்திரம். (பார~அச்)

சய, விசய, சயந்த, சயசேந, சயத் பலர்

பாண்டுபுத்திரர் அஞ்ஞாதவாசத்தில் சமிக்ஞையாக வைத்துக்கொண்ட பெயர்கள்,

சயகீசவ்யர்

ஒரு இருடி இவர்தம் மாணாக்கன் புரிந்த தீமையால் அவனைக் காசியை விட்டு நீக்க, ஒரு காட்டில் தவம்புரிந்தனன். இக்காட்டில் காசியிலிருந்து பொதிகைநோக்கிவரும் அகத்தியர் காசிகாசி என்று கூறி வரும் சத்தம் தவஞ்செய்வோன் காதில் விழுந்தது. அதனால் இவன் முத்தி அடைந்தனன் (காசிரகசியம்).

சயகுமாரன்

அத்தினபுரத்து அரசனாகிய சைநன். பரிமித பரிக்ரஹவிரத அநுஷ்டானத்தை மணிசூடன் எனும் தேவன் சோதிக்கப் பெண்ணுருக் கொண்டு வந்து என்னை அணையாவிடின் இறப்பேன் என உடன்படானாயினன். தேவன் மகிழ்ந்து பாற்கடனீரால் அபிஷேகிக்கப்பெற்றவன்.

சயங்கொண்டார்

கலிங்கத்துப் பாணி பாடிய புலவர். இவர் சோழவள நாட்டில் நன்னிலத்தை யடுத்த தீபங்குடியில் பிறந்தவர் இவர் சைனர் என்பர். இவரை அபயன் என்னுஞ் சோழன் நுமதூர்யாது என்றபோது இவர், “செய்யும் வினையு மிருளுண்பதுவுந் தேனுநறவு மூனுங்களவும், பொய்யுங்கொலையு மறவுந்தவிரப் பொய்தீரற நூல் செய்தார் தமதூர், கையுமுகமு மிதழும் விழியுங் காலுநிறமும் போலுங் கமலங், கொய்யுமடவார் விழி வாயதரங்கோபங் கமழுர் தீபங்க் குடியே” என்பதால் இவர் ஊர் தீபங்குடி என அறிந்தான். இது, திண்டிவனத்திற கருகிலுள்ளவூர். இவர் பாணியிற் சிவமூர்த்தியைத் துதித்திருக்கிறபடியால் சைவர் என்பர். இதனை ‘புயல் வண்ணன் புனல் வார்க்க” எனுஞ் செய்யுளில் “மலைமகளைப் புணர்ந்தவனை” என்பதால் அறிக. இவர் காலம் (800) வருஷங்களிருக்கலாம். இவர் பாடியவை கலிங்கத்துப் பரணி தீபங்குடி பத்து. (கலிங்கத்துப்பரணி).

சயசிம்மன்

கோளத்தரசன் ரவிவர்மன் அல்லது குலசேகர சங்கிராமதீரன் (1188) இல் பிறந்து (33) வயதில் மணந்து சிங்காசனமடைந்து வீரபாண்டியனை வென்று. (சகம். 1234) இல், பாண்டிய சிங்காசனம் ஏறினான். (S, I, I.)

சயசூரன்

திருதராட்டிரன்.

சயசேநன்

1. மலயத்துவசன் குமரன். 2. பவகிரிபுரத்து அரசன். (சூளா).

சயச்சந்திரன்

கன்னோசி நாட்டரசன், பிருதுவிராஜனைக் காண்க.

சயதுங்கன்

கலிங்கநாட்டாசன், மரீசி ஆச்சிரமம் அடைந்து அவர் சிவபூசைக்கு வைத்திருந்த மரங்களிலிருந்த பழங்களைக் கவர்ந்து அவரால் செல்வமும் கையும் இழந்து மீண்டும் அவ்விரண்டையும் அவராற்பெற்றவன்.

சயதேவர்

இவர் வியாசரது அவதாரமாய் ஜகந்நாதத்திற் கருகில் பில்வவூரில் பிறந்து தாமே சகலகலை களையுங்கற்றுக் கோவிந்த கீதமாய் இதிகாசாதிகளைச்செய்து அனைவரையும் அழைத்து இந்நூல்ஜயதேவர் செய்த நூலை யொக்குமாதலினனை வருமிதனை யோதுக என்னலும் அவர்களனை வரும் அரசனுடன் கூடிப் பெருமாள் கோவிலைச் சேர்ந்து இன்றிரவு திருமால் முன்னிருவர் நூலையும் வைப்போம், பெருமாளுக் குவப்புற்றது எதிரிலிருக்க மற்றது பறத்ததாக வென்று அந்நூல்களி பாண்டையும் பெருமாளுக் செதிரிலிட்டுக் கதவை முத்திரையிட்டு வந்து மறு நாளுதயத்தில் ஜயதேவர் செய்த நூலொன்று மெதிரிலிருக்க மற்ற நூல் புறம்பாயது கண்டு அரசன் வருந்தி நீ நிஷ்ப கூபாதியாக நான் செய்த நூலைப் புறத்திட்டு ஜயதேவர்செய்த நூலை யுவந்தனையாதலால் என்னுயிரோடு என் செருக்கினை யொழிப்பனென்று கூறத் திருமால் திருமகளுடன் தரிசனந்தந்து வருந்தேலென்றுகூறி அரசன் செய்த சுலோகத்திற் சிலதைக் குற்றநீக்கிச் சயதேவர் நூலிலெழுதினரிதனால் அரசன் விசனந் தீர்ந்திருந்தனன்; இதுநிற்க ஜகந்நாதத்தில் ஒரு வேதியனிடத்தில் பதுமாவதியென்று பெண்பிறந்து வளர்ந்து வருகையில் அனைவரும் வந்து அவள் தந்தையைப் பெண்ணைக் கேட்க அவள் தந்தை இவளைக் சகநாதனுக்கே கொடுப்பதொழிந்து வேறு யாவர்க்கும் கொடுக்கேனென்றிருக்கை கையில் திருமால் இவன் கனவிற் றோன்றி யெனையெண்ணேல் ஜயதேவனுக்கு உன் குமரியை மணஞ்செய்க வென, விழித்துக் கட்டளைப்படி திருமண முடித்தனன். இவ்விருவரும் மனையறம் நிகழ்த்து நாட்களில் வணிகனொருவனிவரை யடுத்து இவர்க்குப் பணி செய்து ஒருநாள் தமது வீட்டிற்கழைக்க ஜயதேவர் சம்மதித்து அவனில்லமேகி யொருமா தமிருந்து நாம் ஜகர்காதம் போகவேண்டுமென்று கூற வணிகன் இவர் தக்ஷிணை பெறாரென்று தேரிற்பொன் முதலிய இட்டுவைத்து குருபத்தினிக்கு ஆடை முதலியபணி களளித்து வழிவிட ஆள் கூட்டித் தேரேற்றி யனுப்பினன், வந்த ஆள் சிறிது தூரம் வந்து விடைபெற்றுப்போகச் சயதேவரும் பத்தினியாரும் செல்கையில் கள்ளர் வந்து மறிக்க, ஜயதேவர் நீங்கள் விரும்பியது தேரிலிருக்கின்ற தெனத் தேரைவிட்டிழிந்து காலானடந்து செல்கையில் இவர் வணிகனுக்குச் செய்தி பறிவிக்கவும், கூடுமென வெண்ணிய கள்ளர் இவரது கைகால்களைத் தறித்துப் புதரிலிட்டுச் சென்றனர். ஜயதேவர் புதரி வியந்து நாராயண பஜனை செய்து தேகத்தை மதிக்காது ஞானானந்தத் திருக்கையில் கிரவுஞ்ச வேந்தன் வேட்டைக்கு வந்து இருள் சூழ ஆண்டுத் தங்கினன். அக்காட்டில் இருளில் சோதிமயமாகயிவர் பிரகாசித்ததறிந்து நெருங்கியிவரைப் பல்லக்கிலிட்டுப் பதிக்குச் சென்று இவரைச் சிங்காசனத் திருத்தியன்னடிக்கு ஏவல் செய்யுமாறு அருளல் வேண்டுமென்றலும் ஜயதேவர் பாகவதரை வணங்கும் என்ன அரசன் அவரை நானறிந்து வணங்க? அறிகுறி யென்னென ஜயதேவர் பாவதரின் அடையாளங்களைத் தெரிவிக்க அரசனவ்வாறு பாகவதரை வணங்கிவரு காட் களில், முன்னர் ஜயதேவரைக் கால் கையறுத்த கள்வர் பாகவ, வேடம்பூண்டு சாசன் பாகவதர்க்குத் தானமளிக்குமிடம் புகுந்து சிங்காதனத்துக் கால் கை யறுப் புண்டு ஞானபாவனை செய்திருக்கும் ஜயதேவரைக் கண்டு திடுக்கிட்டு நிற்க ஜய தேவர் அவர்களை யழைத்துத் தேற்றியிவர்களுக்கு வேண்டியவை கொடுக்கவென்ன ஏவலாளர் அரசர்க்குக் கூற அவ்வாறே வேண்டிபளித் திருக்கச்செய்தனன், இவ்வாறிவர்களிருக்கையில் மனம் பொருதவர்களாய் நாங்கள் எம்பதிக்கு செல்லவேண்டுமென அவர்களுக்கு வேண் வெதந்து உடன் சென்று என்னிடமிருக்க வென வஞ்சசர் இருதேர் நிறைந்த பொருள் வேண்டுமென அரசன் அவ்வகையீந்து தேரேற்றியனுப்ப இவர்கள் ஜயதேவரி டஞ்சென்று விடைபெற்றுச் செல்கையில் இரதம் ஓட்டுவோர் அத்திருடரை நோக்கி எங்களாசன் பதியில் வந்த அநேகரில் ஜயதேவருங்களுக்கு அதிகமாய் மரியாதையுடன் கொடுக்கச்செய்த தென்னென்று வினவத் திருடர் கூறுவார். துஷ்டகருமாவெனு மாசன் நண்பரிவர், இவர் அரசன் பொருளை மிகுதியும் செலவிட்டு அரசனுக்கு நஷ்டத்தை விளைத்ததால் அரசன் கோபித்து இவரைச் சிரச்சேதஞ் செய்யும்படி கட்டளையிட நாங்களவ்வரசன் கட்டளைப்படி செய்யக் காட்டிற்கொண்டு வந்து கால் கைகளைமாத்திரம் போக்கிப் புதரிவிட்டுத் தவசிகளாய் அரசனை நோக்காது இப்போதுங்கள் நாடு சேர்ந்தோம், ஜயதேவர் எங்களுக்கு இவ்வாறு சம்மானஞ்செய்தனர் என்றனர். இந்தப் பொய்வார்த்தையைப் பொறாமற் பூமி வெடிக்கத் திருடர் இரதத்துடனதில் ஆழ்ந்திறந்தனர். இரதம்விட்டோர் அயவிற்குதித்துப் பிழைத்துத் தம்பதிபுகுந்து ஜயதேவர்க்கு நடந்ததைக்கூற ஜயதேவர் திருமாலைநோக்கித் துதித்துக் கஜேந்திரனுக்குப் பகையாகிய முதலைக்கும், உன்பகையாகிய கஞ்சனுக்கும் சொர்க்கமளித்தீர் என் பகைவர்க்கும் வானுலகளிக்கப் போகாதோவென விசனமுறுகையில் பெருமாள் தரிசனந் தந்து ஜயதேவரைத் தழுவிக்கொள்ள ஜயதேவர்க்குக் கைகால்கள் வளர்ந்தன. கள்வரிருவரும் விமானமேறிப் பொன்னுல கடைந்தனர். பெருமாள் உன்னன்பிற்குக் களித்தனனெனக் கூறி மறைந்தனர். அரசன் ஜெயதேவரை யணுகிக் கைகால் வளர்ந்ததைச் சொல்ல வேண்டுமென ஜயதேவர் உள்ள படி கூறக் கேட்டு ஜயதேவரையென்றுந் தம்பதியிலிருக்கவேண்டிப் பத்மாவதிக்குச் சிவிகை யனுப்பி வருவித்துத் தன் தேவியைப் பணிசெய்திருக்கும்படி கட்டளையிட்டிருக் கையில் ஒருநாள் தூதனொருவன் அரசியினுடன் பிறந்தான் சுஜாணன் என்பவன் இறந்தான் என அரசன் தேவியும் சுஜாணன் தேவிமுதலோர் விசனப்படச் சுஜாணன் தேலி, உடன் கட்டையேறத் துணி கையில் பொன்னாசனத்திருந்த பதுமாவதியை யாசிநோக்கிக் கூறப் பதுமாவதி எந்தப் பிறவியிலும் கணவனுடனே யிறத்தல்வேண்டும். தாமதித் திவ்வாறிருத்தல் கூடாது இவள் தாமதித்திருத்தற்குக் காரண மென்னெனக்குக் கூறுகவென அரசன்தேவி சுஜரணன் தேவியையனுப்பி விட்டுப் பதுமாவதி கூறியதை யறிவோமென்று மந்திரியை நோக்கி நீ யரசனுடன், ஜயதேவர் வேட்டைக்குச்சென்று புவிகொல்ல இறந்தனரென்று பத்மாவதி முன் கூறுகவென அவ்வாறு மந்திரி விளையாட்டாகக் கூறக்கேட்ட பத்மாவதி, யிது மெய்யோ வென அரசியைக் கேட்க அவ்ளுமாமென்னப் பத்மாவதியுடனே யுயிர்விட்டனள். அரசி திடுக்கிட்டு விளையாட்டு வினையாய் முடிந்ததேயென அரசன் முன் அடுத்ததுகூற மனைவியைக் கொல்வோமேனிற் பெண் கொலையாகுமென வெண்ணியிது தன்னால் விளைந்ததென அஞ்சி ஜய தேவர்முன் நடந்ததைக் கூறித் தன்னுயிர் நீத்தற்குத் தீக்குழியும் வகுத்தனன். அதையுணர்ந்த ஜயதேவர் அது உன்னால் நடந்த தன்றெனத் தன் மனைவியிடம் போய் முன் தாம்பாடிய அஷ்டபதி முதலியவை களைப்பாடத் திருமால் தரிசனந்தந்து பத்மாவதியையெழச் செய்ய அன்பர்கள் தரிசித்து ஆனந்தங்கொண்டனர்.

சயத்சேநர்

1. ஒரு விஷ்ணுபடர். 2. நகுலன் அஞ்ஞாதவாசத்தில் வைத்துக்கொண்ட பெயர் 3. சார்வபௌமன் குமரன்.

சயத்திரதன்

1. பிரதிட்சு குமரன். 2. புருகன் மநஸ் குமரன். 3. சயித்திரனுக்கு மாமன், 4. விசுவசித்தின் தந்தை, 5. திதிக்ஷுவின் குமரன் 6. சிந்துதேசாதிபதி இவனே சயிந்தவன், இவன் சிவப்பிரசாதி. அபிமன்யுவைக் கொல்லக் காரணமாய் இருந்தவன். தேவி துச்சளை, இவனுக்குப் பன்றிக் கொடி, தந்தை விருத்தக்ஷத்திரனைக் காண்க. பாண்டவர் காமிய வனத்திலிருக்கையில் திரெள பதியைக்கண்டு மயல்கொண்டு வீமார்ச்சுநரால் அவமானப்பட்டவன். இவன் சிவமூர்த்தியை எண்ணித் தவம் இயற்றி அருச்சுநன் ஒழிந்த நால்வரை ஒரு நாளில் ஜயிக்க வரம் பெற்றுப் பாரதயுத்தத்தில் (13) நாள் பதுமயூகம் வளைத்து அருச்சுநன் ஒழிந்தவர்களைச் செயித்தவன்.

சயத்பலன்

சகதேவன் அஞ்ஞாதவாசத்தில் வைத்துக் கொண்ட மறை பெயர்.

சயத்வசன்

1. தாளசங்கனுக்குத் தந்தை, கார்த்தவீரியனுக்குக் குமரன். 2. சந்திரவம்சத்து அரசருள் ஒருவன். விஷ்ணுபக்தன். இவனுக்கு விசுவாமித்தி ரர் ஒருயாகம் செய்வித்தனர். விதேகன் என்னும் அசுரனைக் கொன்றவன்.

சயந்தன்

1. இந்திரன் குமரன். தாய் சசி. இவன் சூரபன்மன் சேனைக்குப் பயந்து குயிலாய் ஒடிய தந்தையைக்காணாது வருந்திநாரதரால் தேறினவன். பானுகோபனுடன் யுத்தஞ்செய்து ஆற்றாது களைத்து அயிராவதத்தின் மீது விழுந்து எழுந்து அவனால் சிறையிலடைபட்டவன். சிறையிலிருக்கையில் குமாரக்கடவுளைக் கனவிற்கண்டு தேறினவன், உருப்பசியைக் கண்டு மோகித்ததால் அகத்தியரால் சபிக்கப்பட்டவன். பாரிஜாதாபஹரணத்தில் பிரத்தியும் நனுடன் யுத்தஞ்செய்தவன். தேவர் இராவணனுடன் யுத்தஞ்செய்கையில் இந்திரசித் இவனைக்கட்ட யத்தனித்தது கண்டு பௌலோமன் இவனைத் தூக்கிக் கடலில் ஒளிக்க அவ்விடம் இருந்தவன், இவன் காக்கையுருக்கொண்டு சீதாபிராட்டி விஷயத்தில் அபசாரப்பட்டு இராமமூர்த்தியால் ஒருகண் இழந்தான் என்பர். உருப்பசியை மோகித்த காரணத்தால் விந்தமலைக்கண் மூங்கிலாக அகத்தியராற் சபிக்கப்பட்டவன் 2. விசுவாவசுவின் குமரன். இவன் மனைவியருடன் நிருவாணமாய்ச் சலக்கி ரீடைசெய்கையில் வசிட்டமுனிவர் அவ்வழிவரக்கண்டு பெண்கள் தங்கள் உடைகளை உடுத்திக்கொள்ள இவன் நிர்வாணியாய் மதியாதிருந்தபடியால் அரக்கனாகச் சபிக்கப்பட்டு வனத்தில் உலாவுகையில் சகுந்த முனிவரை விழுங்கச்சென்று அவரால் கொலைசெய்யப்பட்டு அரக்க உருமாறிப் பழைய உருக்கொண்டனன். 3. விச்வாமித்திரர் குமரருள் ஒருவன். 4. விஷ்ணுபடன். 5. சுக்கிரன் என்னும் ஆதித்தனுக்குப் பௌலோமியிடம் உதித்த குமரன். 6. தருமனுக்கு மருத்துவதியிடம் பிறந்த குமரன். 7. தருமன் மறைபெயர்.

சயந்தபுரம்

நிமி நிருமித்த பட்டணம். கௌதமாச்சிரமத்திற்கு அடுத்தது.

சயந்தம்

1, ஒரு பட்டணம். 2. ஒரு நாடகத் தமிழ்தூல்,

சயந்தம்

1. அஷ்டசத்திகளில் ஒருத்தி. கிருஸ்ணனுக்கு முன் தேவகியிடம் அவ தரித்துக் கம்சனுக்குக் கண்ணன் பிறப் புணர்த்தி மறைந்தவள். 2. இவள் இந்திரன் குமரி, தேவரை வெல்ல மிருத்துஞ் செயமந்திரசித்தியின் பொருட்டும் பலவரத்தின் பொருட்டுந் தவமேற்கொண்ட சுக்ரனைத் தந்தைசொற் படி தனக்கு நாயகனாகவரிக்க எண்ணிச் சுக்ரன் தவச்சாலைசென்று பணி செய்து அவன் தவநீங்கியபின் அவற்குத் தன் மன நிலையறிவித்து யாருக்குங் காணப்படாமல் பத்து வருஷம் அச்சுக்ரனிடம் ரமித்திருந்தவள், 3. சத்தியால் வக்ராசான் முதவியோரைக் கொல்ல நிருமிக்கப்பட்ட துர்க்கை. சயமதி பவணமாதேவன் மனைவி, 4. பார்வதியாருக்குத் தோழியார் (சிவரகஸியம்) 5. உதயணனுடைய ஆட்சிக்குட்பட்ட தொரு பெரிய நகரம், இதனை உருமண் ணுவா பாதுகாத்து வந்தனன். உதயணனுக்கும், வாசவதத்தைக்கும் இந்நகரத்தே தான் விவாகம் நடைபெற்றது. இது மருத நிலவளத்தாற் சிறந்தது. இதன் பக்கத்தே மிக அழகிதானமலையொன்றுண்டு. இந்நகரில் வாசவதத் தையோடு உதயணன் பல நாள் கவலையின்றி வாழ்ந்திருந்தனன். இந்நகரமும் வேறு சில இடங்களும் உருமண்ணுவாவுக்கு உதயணனாற் சீவிதமாக அளிக் கப்பட்டன. (பெ~கதை)

சயனக்கிரமம்

வடதிசையிலும், இருமூலைகள் கூடும் கோணதிசையிலும் தலைவையாது கைகூப்பித் தெய்வந்தொழுது உடம்பின் மேல் போர்வை ஒன்று போர்த்துச் சயனித்தல் வேண்டும். (ஆசாரக்கோவை.)

சயனம்

இது இலவம்பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மயிர், அன்னத்தூவி இவற்றாற் செய்யப்பட்ட ஐவகை அணைகளாம். இவைகளுள் இலவம்பஞ்சு மெத்தையாலுட்சூடு நீங்கும். வெண்பஞ்சு, செம்பஞ்சு மெத்தைகள் இரத்தவிருத்தி செய்யும். தூவிகள் உடற்கினிமை, தாழம்பாயிற் சயனிக்கின் தலைசுழற்றல், பாண்டு, பித்த தோஷம், நீராமைக்கட்டி, வெகுமூத்திரம் விலகும், கோரைப்பாய் அக்கினிமந்தம், சுரதோஷ மிவைகளை நீக்கும், பிரப்பம் பாய் மூலரோகத்தை யுண்டாக்கும். பேரிச்சம்பாய் வாதகுன்மம், சோபை நீக்கும். உஷ்ணாதிக்க முண்டாக்கும். பனையோலைப்பாய் அதி உஷ்ணத்தையும், வாதநிக்ரகத்தையுமுண்டாக்கும். சயனிக்கையில் இடதுகையிற் சயனித்து இரண்டு கால்களையு நீட்டிக்கொண்டு நித்திரைசெய்யின் பஞ்சேந்திரிய வயர்வு சரீரவருத்தம் நீங்கும் மனத்திற் குற்சாகமும் ஆயுள் விருத்தியையுந் தரும். கிழக்கில் தலையை வைத்துக்கொண்டு சயனிக்கின் பொருள் சேரும். தெற்கு ஆயுள் விருத்தி. மேற்குப் பிரபலமும் கீர்த்தியு முண்டாம். வடக்குப் பலவித நோய்களைத் தரும். சயனிக்கையில் நிர்வாணமாயும் கௌபீனமின்றியும் சசயனிக்கலாகாது. முக்காடிட்டு நித்திரை செய்யில் இரண்டு நேத்திரங்களுக்கும் புஜங்களுக்கும் வன்மை யுண்டாகும். அன்றிக் குளிர், பனி, வெயில், தூசு, மேகம் இவற்றாலுறுங் குற்றங்களு மணுகா. தலையணை கழுத்திற்குந் தோளிற்குமுள்ள வுயரவளவாய் இலவு முதலிய மெல்லிய பஞ்சுகளாற் செய்தது சிரசிலும் வேண்டிய விடங்களினும் வைத்துச் சயனிக்கின் பாதாதி கேசபர்யந்தமுள்ள நரம்புகள் பிசகா. சிரசைப்பற்றிய ஆவர்த்த நோய் முதலிய நீங்கும். மனத்திற்கு ஆரோக்ய முண்டாம். இராநித்திரை பங்கமாயின் சித்தமயக்கமும் தெளிவின்மையும் ஐம்புலச் சோர்வும் சுட்கமும், பயமும் அக்நி மந்தமு முண்டாம். அன்றியு நோய்கள் கவ்வும். பகல் நித்திரை ஊருத்தம்ப முதலிய (18) வாதரோகங்களை யுண்டாக்கும்,

சயனிக்குந்திசையறிதல்

கிழக்குச் சிரசு வைத்துப்படுத்தால் ஐஸ்வரியம், தெற்கு ஆயுள், தனவிருத்தி, மேற்குப் பிரபலவிருத்தி, வடக்கு வியாதி, மிருத்தியுமாகும். தானிருக்குமிடம் தெற்கும், மாமியார் வீட்டிற்குக் கிழக்கும், யாத்திரைக்கு மேற்கும் சிரசுவைத்துப்படுத்தல் சுபம்.

சயன்

1. வியாசர் மாணாக்கரில் ஒருவன், 2. சாத்தகி குமரன், 3. வசுதேவன் பின்னவனாகிய ஆனகன் குமரன். 4. சுசுருதன் குமரன். 5. தருமன் அஞ்ஞாதவாசத்தில் வைத்துக்கொண்ட பெயர். 6. துரியோதனன் சபையிலிருந்தவன், சூதில் வல்லவன். 7. வச்சிரன் குமரன். 8, சயன் விஷ்ணுபக்தன் அல்லது படன். 9. (சூ) சுபாஷணன் பேரன், சிரதன் குமரன். 10. (ச.) புரூரவசுவிற்கு உருவசியிடம் உதித்த குமரன், இவன் குமரன் மிதன், 11. (ச.) சஞ்சயன் குமரன், இவன் குமரன் கிருதன். 12 ஷண்முக சேநாவீரன், 13. கோமுகனுக்குக் கற்கனிகையிடம் பிறந்த குமரன். 14. மன்னியு குமரன். 15. திருதராட்டிரன் குமரன். 16. ஓர் அரசன், கோபிகைகளைக் காண்க,

சயமர்த்தனி

சத்தியால் வக்ராசுரன் முதலியோரைச் சங்கரிக்கச் சிருஷ்டிக்கப் பட்ட துர்க்கை.

சயமல்லராஜர்

இவர் மேட மென்னும் ஊர்க்கரசர். இவர் அரிபதம் மறவாது அரசாட்சி செய்துவருநாட்களில் பகை கொண்ட தம்பி சேனை சேர்த்து இவர் பூசைசெய்யுஞ் சமயத்தில் சண்டைக்கு வந்தனன், இதை யறிந்தமந்திரி எதிர்த்துச் சண்டையிட்டுத் தன்னாவியலாது திரும்புகையில் எதிரிகளின் வன்மை யறிந்ததாய் கண்டு பூசையிலிருக்கும் குமரற்குக் கூற அரசன் பெருமாளிருக்கிறாரென்று தான் பூசையிலிருக்கப் பெருமாள் ஓர் குதி ரையிலேறிச்சென்று பகைவரை வென்று அரசன் தம்பியைப் பிடித்துக்கட்டி மந்திரிவசம் ஒப்புவித்து மறைந்தனர். அரசன் பூசைமுடிந்ததும் மந்திரி நடந்தவற்றைக்கூற அரசன் பெருமாள் தன் பொருட்டு யுத்தஞ்செய்ததற்கு விசனமடைந்து தோத்திரஞ்செய்து என் தம்பிக்குத் தரிசனந்தந்தீர் எனக்கு இல்லையெனத் துக்தித்தனர். பெருமாள் தரிசனந்தந்து மறைந்தனர். பின் அரசன் தம்பியை விடுவிக்கத் தம்பி தானறியாது இயற்றிய பிழை பொறுக்கவேண்டி ஒருமித்து வாழ்ந்தனன்.

சயமாகீர்த்தி

முடத்திருமாறன், இவன் முதற்சங்ககாலத்துக் கலியாங்சேறிய எழுவர் பாண்டியருள் ஒருவனும், தொல்காப்பியஞ் செய்வித்தோனுமாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன். இவன் காலத்தே பாண்டிநாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் யாற்றிற்கும், குமரியென்னும் யாற்றிற்கும், இடையே எழுநூற்றுக்காவ தம்யாறும் இவற்றின் கண்ணவாகிய ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன்பாலை நாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரைநாடும், ஏழ்குறும் பனை நாடுமென்னும் இந்நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்ல முதலிய பன் மலைநாடும், காடும், நதியும், பதியும் சடநீர்க்குமரி, வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிந்தது இதற்கு “வடி வேலெறிந்த” என்னும் சிலப்பதிகாரமும், இறையனாகப் பொருளுரையும், இளம் பூரண அடிகள் முகவுரையும் மேற்கோள்களாம்.

சயமாஞ்சயன்

திவோதானன் குமரன்.

சயமுனி

(சயமினி) வியாசர் மாணாக்கர், சாமவேதி, வேதபாதஸ்தவம் செய்தவர். மார்க்கண்டேயர் ஏவலால் தருமபக்ஷிகளிடம் சந்தேகம் கேட்டவர். இவர் ஒரு பாரதமுஞ் செய்தனர்.

சயம்பிரபை

1. சடியாசன் புத்திரி. திவட்டன் தேவி,

சயம்பூல்

வடமலையில் அரசு புரிந்து பின் துறவினால் அதிக மேன்மைபெற்றவன் (சூளா.)

சயராமை

சுக்கிரீவ மகாராஜாவின் தேவி. புஷ்பதந்த தீர்த்தங்கரின் தாய் (சைரி.)

சயர்

கல்பாதியில் சிருட்டிக்கப்பட்ட (12) தேவருஷிகள் இவர்கள் ஒவ்வொரு மன் வந்தரத்திலும் தேவர்களாய்ப் பிறப்பர்.

சயவந்தபக்தர்

இவர் ஒருவணிகர். ராம உபாசகராய்த் தமக்குள்ள பொருள் களெல்லாவற்றையும் பாகவதர்க்கு அளித்து அரிபஜனை செய்து வருநாளில் இவரது ஐந்து புத்திரரும் செல்வத்தை வீணாகச் செலவிடுகின்றனர் என்று வெறுப்பால் அரசனிடம் கூற அரசன் இவரையழைத்து விசாரிக்கையில் பக்தர், பொருள், புதல்வர், தேகம் நிலையல்ல என்று கூறுதலும் அர சன் இவருக்குப் பைத்தியம் பிடித்ததெ னப் புத்திரர்களை நோக்கி இவரைக் கொலை செய்தல் சம்மதமோவென்னப் புத்திரர்கள் இவரைப் பொதியாகக் கட்டிக் கடலிலிடுக என்றனர். அவ்வாறே அரசன் கற்களிடைகட்டிக் கடலிலெறிய இவர் நீரில் மூழ்குமுன் பெருமாள் ஆமைவடிவாகி இவரை முதுகில் தாங்க அரசன் கண்டு பயந்து பெருமாளுக்கு அடிமைபூண்ட இவர் விஷயத்தில் அபகாரஞ் செய்தே னென்று கடலினின்று கரையேற்றி உபசரிக்க மைந்தர்களும் பிழை பொறுக்கவேண்ட அவர்களுக்கு அருள்புரிந்து பிள்ளைகள் ஏவல் செய்யப் பஜனை செய்திருந்தவர்.

சயவர்மா

ஸ்ரீதரராச குமாரர். இருஷப தீர்த்தங்கரரின் முதற்பிறப்பு. (சை.)

சயவிஜயர்

1. இவர்கள் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த துவாரபாலகர், சநகர்முதலிய ருஷிகள் திருமாலின் சந்நிதானத்தை விரும்பிச்செல்ல அவர்களது வரவைத்தடுத்து இரணியகசிபு, இரணியாக்ஷனாகச் சாபம் அடைந்தனர். இவர்கள் விஷ்ணு மூர்த்தியின் கட்டளையால் மூன்று பிறவிகளடைந்து அவரால் சங்கரிக்கப்பட்டு மீண்டும் பரமபதம் அடைந்தவர்கள். இவர்க காதுமுதற்பிறப்பு இரணியகசிபு, இரணியாக்ஷன், இரண்டாவது இராவண கும்பகர்ணன், மூன்றாவது சிசுபால, தந்தவக்கிரன் இவர்கள் துவாரகையில் இலக்ஷ்மியின் வரவைத்தடுத்து இச்சாபம் அடைந்தனர் எனவுங் கூறுவர். 2. பஞ்ச சேநாபதிகள், துரியோதனனால் அனுப்பப்பட்டவர்.

சயிகடவ்வியன்

காசியைத் தரிசித்து முத்தி பெற்றவன்.

சயிகம்

ஒரு பர்வதம், காவிரிக்கு அருகிலுள்ளது.

சயித்தகம்

சிற்பநூலில் ஒன்று,

சயித்திரதன்

1, சிவாணத்தவரில் ஒருவன். 2, காசியில் விரேசலிங்கத்தைப் பூசித்து இஷ்டசித்தி அடைந்தவன்.

சயிந்தவன்

1. சயத்திரதனுக்கு ஒரு பெயர். துரியோதனன் தங்கை துர்ப்ப லையை மணந்தவன். இவன் தந்தை விருத்தக்ஷத்திரன், வனவாசத்தில் தனித்திருந்த திரௌபதியைக் கவர்ந்து சென்று பாண்டவர்களால் தடுக்கப்பட்டு ஓடிப் பாரதயுத்தத்தில் அருச்சுநனாற் சொலையுண்டவன், 2. சகுனியின் இரண்டாம் குமரன். 3. சயந்தனுக்கு ஒருபெயர்.

சயிந்தவாயினர்

சுநகர் மாணாக்கர்.

சயிப்யை

சாமகன் தேவி, சப்யை தாய் இவள் தன் புருஷன் பாஸ்திரீகளைப் புணராது தடுத்திருந்தவள்.

சயிலேச்சுரன்

காசியிலமைக்கப்பட்ட சிவலிங்கப் பிரதிட்டையுள் ஒன்று, இமயத்தால் பூசிக்கப்பட்டது.

சயுக்குவன்

ஒரு முனிவன், இவன் பிறவி முடவன். இவன் வண்டியில் ஏறிக் காட்டின்வழிச் செல்லுகையில் ஒருபாலை வனத்திருந்த பாழ்ங்கிணற்றில் இருந்துவந்த “கா” என்னும் ஓசைகேட்டு அது தம்பிதுரரின் ஓசை என அறிந்து அவர்கள் சொற்படி தனது தவவலியால் கங்கை, யமுனை, கயை என்னும் மூன்று நதிகளும் தன்னிடம் வர அதில் ஆடிப்புனிதம் அடைந்து பிதுரரைச் சுவர்க்கமடைவித்தவன், இவனுக்கு ரயுக்குவன் எனவும் பெயர்.

சயூடணன்

சாமைக்குத் தந்தை.

சயை

1. அஷ்டசத்திகளில் ஒருத்தி. 2. பார்வதியாரின் தோழியரில் ஒருத்தி. இவள் ஒருகால் பார்வதியாரை இல்லறம் எத்தகையது என வினாவ நீ பூமி யிற்பிறந்து அதனை அறிந்து கொள்ளென அங்ஙனமே இவள் பூமியிற் பிறந்து வளரும் நாட்களில் தேவராதமுனிவன் கற்பினையுடைய பெண்ணினைக்கண்டு தான் மணங்கொள்ள நினைத்து இந்தச் சயையை இராக்கத அருவங்கொண்டு எடுத்துச்சென்று கலவிக்குரிய செயல்செயத் தொடங்கினன். சயை இதனைக்கண்டு நடுங்கி நான் இதுவரை கற்பினையுடையளாய் இருக்கின் இந்த அரக்கனிடம் பட்டுக் கற்பழியாது கல்லாக எனத் தருமதேவதையை வேண்டினள். இவள் எண்ணப்படி கல்லுருக்கொள்ள முனிவன் தன் தபோபலத் தால் உருமாற்றி மணம் புணர்ந்தனன். இதனால் சயை இல்லற தருமம் அறிந்து சங்கை நீங்கினள். 3 சயை, சுப்ரபை இவர்கள் தக்ஷன் குமரியர் இவர்கள் அஸ்திரசஸ்திரங்களைப் பிரசவித்தனர். (இரா.) 4. திதிகாண்க.

சரகர்

ஒரு வடமொழி வைத்திய நூலாசிரியர், இவர் செய்தல் சரகம்.

சரகாள்

வைசம்பாயனர் மாணாக்கர்கள், ஆசிரியர்க்குற்ற பிரமகத்தியைத் தாங்கள் ஏற்றதால் இப்பெயர் பூண்டனர்.

சரகுன்மன்

ஒரு வாநரசேநாதிபதி.

சரக்கிரகம்

கிரகம் காண்க.

சரணம்

(4) அருகசரணம், சித்தசரணம், சாதுசரணம், தன்மசரணம்.

சரதல்பம்

பீஷ்மன், பொருட்டு, அர்ச்சுனனால் நிரூமிக்கப்பட்ட அம்புமயமான படுக்கை. (பா~ஆதி.)

சரத்துவந்தன்

ஒரு இருடி, கிருபாசாரியின் தந்தை. சதாநந்தருவியின் குமரன்.

சரத்துவான்

விந்தியாஸ்வன் என்னும் பெயருள்ள பாஞ்சால அரசன் புத்திரியாகிய அகலிகையின் நாயகனான கௌதமன் வம்சத்தில் பிறந்த சத்திய திருதன் என்பவன் புத்திரன். இவன் புத்திரர்கள் கிருபி, கிருபாசாரியர். இவன் தபசு செய்கையில் ஜாலவதி என்னும் அப்சரசைக்கண்டு வீரியம் வெளிப்படக் கிருபியும், கிருபா சாரியரும் பிறந்தனர். (பா~ஆதி.)

சரத்வான்

இவர்க்கு நாணல் தண்டிலிருந்து கிருபாசாரியும் கிருபியும் பிறந்தனர். (பார~அது.)

சரந்திரம், உபயம், வர்க்கோத்தமம்

மேடமுதல் மீனாந்தமாகப் பன்னிரண்டு இராசியும் சரந்திர முபயமென்றெண்ணுப மேடமுதல் அடைவே ஆண்பெண் என்றும், குரூரராசி, சௌமியராசி யென்றும்மடைவே மாறிமாறி யெண்ணப்படும். சரராசியின் முற்கூறும் ஸ்திரராசியின் நடுக் கூறும், உபயராசியின் கடைக்கூறும் வர்க்கோத்தமம் என வழங்குவர். (விதான.)

சரன்

1. விவசுவானுக்குச் சாயாதேவியிடம் உதித்த குமரன். 2. கிருஷ்ணன் மீது அம்பெறிந்த வேடன் இவன் மிருகங்களைத் தேடி வருகையில் யோகநித்திரையிலிருந்த கிருஷ்ணரை மிருகமெனக்கண்டு அம்பெறிய அந்த அம்பு கண்ணன் திருவடியில் பட வேடன் அருகில் வந்து கண்டு அஞ்சி வணங்கி நற்கதியடைந்தவன்.

சரபங்கர்

ஒரு ருஷி, இவர் தவத்தைப் புகழ்ந்து இந்திரன் சத்தியவுலகம் வந்து அழைக்க மறுத்து இராமமூர்த்தியின் வரவைக்கண்டு சேவித்து மோக்ஷம் விரும்பி மனைவியுடன் அக்கினிப்பிரவேசமானவர்.

சரபங்காச்ரமம்

தண்ட காரண்யத்தில் கோதாவிரி தீர்த்தத்திலுள்ள ஆச்ரமம். (பார~வன.)

சரபன்

1. சுக்கிரீவன் சேனாதிபதி. 2. சூரபதுமன் மந்திரி. 3. ஒருவானரவீரன். 4. சேதி தேசாதிபதியாகிய சுபாலனுடைய புத்ரன். இவன் தருமரது அச்வ மேதக் குதிரையிவனாட்டை யடைந்த போது மரியாதைசெய்து அனுப்பினவன். (பார~அசவ) 5. இவன் ஒருவைசியன் புத்திரப்பேறு இலாது வருந்தித் தேவருஷியை அடைந்து வேண்ட அவரது உபதேசத்தால் புத்திரப் பேறு அடைந்துகளித்தவன். (பதும் புரா)

சரபமூர்த்தி

இரணியகசிபைக் கொன்ற நரசிங்கமூர்த்திதருக்கி அட்டகாசம் செய்யக்கண்ட பிரமன் சிவமூர்த்தியைத் துதிக்கச் சிவமூர்த்தி சரபவுருக்கொண்டு நரசிங்கத்தின் தோலை உரித்து உடுத்த எண்கால் இருதலைப் பக்ஷி யுரு.

சரபம்

இது பக்ஷிகளுக்கெல்லாம் அரசாகவும் சிங்கத்தையுங் கொல்லத்தக்க மிருக பக்ஷியுரு. இதற்கிரண்டு சிங்கமுகங்களும் இரண்டு பக்ஷமாகிய இறகுகளும், (2) சிங்கத்தினுடலுடன் எட்டுக் கால்களுடன் கூடிய பறவை யுரு. (காஞ்சி~புரா.)

சரபோஜி

தஞ்சாவூரில் அரசுசெய்த மகாராட்டிர அரசன், இவன் காலத்தில் பல கல்விகளும், தேவாலயத்திருப்பணிகளும் அபிவிருத்தியாயின, இவன் காலம் (400 வரு) இருக்கலாம்.

சரமா

விபீஷணன் தேவியரில் ஒருத்தி. சைலூஷன் என்னும் காந்தருவன் புத்திரி, இவள் புத்திரி திரிசடை. இவளே சீதைக்கு நற்செய்தி கூறிவந்தவள்.

சரமாவதி

கல்கியின் தேவி.

சரமை

1. காசிபர் தேவி. தக்ஷன்குமரி. ஜலஜந்துக்களைப் பெற்றவள், 2, இவளது புத்திரரைத் தைத்தியர் கவர இந்திரன் அவர்களிடமிருந்து மீட்டுக் கொடுத்தனன், (பிரம~புரா.)

சரயு

அயோத்தியிலுள்ள நதி. இதுபூர்வத்தில் பிரமன் விஷ்ணுமூர்த்தியை எண் ணித்தவமியற்ற விஷ்ணுமூர்த்திதோன்றி ஆனந்தத்தால் புதல்வனைத்தழுவ அவ்விஷ்ணுமூர்த்தியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிற்று, அதைப் பிரமன் கரத்தில் ஏற்று மானஸஸாவில் விடுத்தனன், இக்ஷ்வாகு தான் அரசு செய்கையில் தன்னாட்டில் ஒருநதி பெருகின் நன்றென்று வசிட்டரைக்கேட்க முனிவர் சத்திய உலகஞ் சென்று நடந்ததைக்கூறி அவர் தரப் பெற்றுப் பூமியில் இருத்தினர். இச்சரயு பெண்ணுருக்கொண்டு இத்தீர்த்தக் கரையில் வந்த இராமபிரானையும் தசரதரையும் கண்டு பேசினள். இந்ததி வசிட்டரால் வந்தமையின் வசிட்டை எனவும், இராமரைக்கண்டு பேசினமையின் இராமகங் கைஎனவும் பெயர் பெறும். (இரா.) 2. இது மானஸசாசில் பிறந்ததால் சரயு எனப் பெயர்பெற்றது. The river Gogra. THE Town of Ayodhya is Situated on this river.

சரராசி

இராசிகாண்க.

சரராமமுதலியார்

வெண்ணை நலலூர்ச் சடையப்பமுதலியார் சகோதரர். அன்றி அவருக்கே ஒரு பெயர் என்ப. இவரது சகோதரரை இணையாரமார்பன் எனபர்,

சரலோமா

தாசூரன் குமரன்.

சரவணதேசிகர்

1. தேவிகாலோத்திரம், வீட்டுநெறி யுண்மைபாடிய ஆசிரியர். 2. இவர் காஞ்சிபுரம் உபசுப்ரமண்யர் கோத்திரத்தவர் முத்தி முடிவெனும் நூலாசிரியர்.

சரவணபவன்

குமாரக் கடவுள்,

சரவணப்பெருமாளையர்

இவர் திருத்தணிகை கந்தப்பையர் குமாரர். இராம நிஜ கவிராயரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றபுலவர் சென்னையில் பல நூல்களைப் பிரசுரஞ்செய்தவர்.

சரவணப்பெருமாள் கவிராயர்

இவர் தென்னாட்டிலிருந்த கவிஞரில் ஒருவர், இவர் மலையாளஞ்சென்று இராஜாவைக் கண்டபோது கூறியது ” இலைநாட்டும் வேற்கரத்துச் சேதுபதி தரிசாத்துக் கேழு நாளோர், மலைநாட்டு ராசன் வந்து காத்திருந்தவாசல் வித்துவான் யான்கண்டாய், கலைநாட்டிற் பெண்ணெனவே செய்தசா ணாசநகன் கன்னிக்காசச், சிலைநாட்டிவளைத்த புயவீர கேரளராம செயசிங்கேறே” என்றனர். இக்கவியைக் கேட்டவுடன் சேதுபதி தரிசனத்திற்கு மலைநாட்டரசரிற் காத்திருந்தவர் யார்? என இராஜாவினவச் சேதுபதியென்பது வருணனுக்கும் பெயராம். ஆதலால் அவனைக் காண்பதற்கு மல்லை நாட்டுகின்ற இராமனானவன் தருப் பாசனத்தில் ஏழுநாட்கள் காத்திருக்கவில்லையா? எனக்கூறச் சேதுபதி மகிழ்ந்து பரிசு தரப்பெற்றவர்.

சரவணப்பெருமாள் கவிராயர்

இவர் பாண்டிநாட்டு முதுகுளத்தூரிலிருந்தவர், சைவவேளாளர் கவிபாடுவதில் வல்லவர். இவர் இராமநாதபுரம், சோமசுந்தரம் பிள்ளையவர்கள் மாணவகர், முத்துராமலிங்க சேதுபதியவர்கள் சமஸ்தான வித்துவானாக இருந்தவர். இவர் சற்றேறக்குறைய நூறு வருஷங்களுக்கு முன்னிருந்தவராகலாம்.

சரவணப்பொய்கை

இது திருப்பரங்குன்றத்தி லுள்ளதோர் தீர்த்தம். (திரு.)

சரவணமுத்துப்புலவர்

இவர் யாழ்ப்பாணத்து நல்லூர் வேளாண்குலத்துச் சைவர். இவர் சற்றேறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். சேநாதிராய முதலியாருக்கு மாணவர். வேதாந்த சுயஞ்சோதி, ஆத்மபோதப் பகாசிகை நூலாசிரியர்.

சரவணி

வேலை குமரி, பிராசீனருக்குத் தேவி.

சரவனம்

இமயத்துள்ள ஒரு பொய்கை. தருப்பைக்காடு. இதில் கந்தமூர்த்தி வளர்ந்தனர். (மணிமேகலை.)

சரவரி

தோஷன் என்னும் வசுவிற்குத் தேவி, குமரன் சிஞ்சுமாரன்.

சரவர்ணி

ஒரு அரசன். நாரதரால் உபதேசிக்கப்பெற்றன்

சரஸ்வதி

A. 1. பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யா திஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம், கைகளில் ஜபமாலை, புத்தகம், வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளி விருப்பள் எ.ம்., இவளுக்கு ஒருகரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இருகரங்களில் வீணை எ.ம்., இவட்குப் பிரமவித்தை முகம், நான்குவேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதி வயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங்கூறுப. 2. தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப் புண்டு மீண்டும் பெற்றவள். 3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக்கொண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண் டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள். 4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்கவந்தவள், 5. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந்தவள். 6. பிரமன் காயத்திரி, சாவித்திரி சரஸ்வதி மூவருடன்கூடிக் கங்காஸ்நானத்திற் குப்போகச்சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ் செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய்ததுபற்றிக் கோபித்தனள், பிரமன் குற்றம் உன் மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச்சாபம் ஏற்றவள். 7. ஒருயாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகை யைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப. 8. இவளும் இலக்குமியும் மாறுகொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிர மனைக் கேட்கப் பிரமன் இலக்ஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள். 9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள் தோன்றியவள், புலத்தியரை அரக்கனாகச் சபித்தவள். சரத்காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர். 10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக் கண்டு, அந்தமோக வார்த்தை யுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவை யெனச் சபித்தனள். (சிவமகா புராணம்.) 11. இவளும் கங்கை, லக்ஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்னிகள் ஒருகால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசை கொண்டு அவளுடன் நகைமுகமா யிருத்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லக்ஷ்மியை நோக்க லக்ஷ்மி சங்கைக்குச் சார்பா யிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியை செடியாகவும் நதியாகவும் போகச்சபித் தாள். கங்கை சரஸ்வதியை நதியுருவமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள், லக்ஷ்மி யிதனால் தர்மத்வஜருக்கு குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியெனும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர் லக்ஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரமபத்தினி ஆயினள். சரஸ்வதி பாரதவருஷத்தில் நதியாக வந்தபடியால் பாரதி, பிரமனுக்குப் பத்தினியாதலால் பிராம்மி, வாக்குகளுக்குத் தேவியாதலால் வாணி, அக்னியைப்போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சணிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப்படுகின்றனர். இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்சென்றபின் தங்கள் பதமடைவர், (தேவி~பா.)

சரஸ்வதி

B 1. ஒருநதி It rises in the hils of Sirmur. It disappears at vinasana tirtha after taking a Westerly course from Thaneshar. ஸரஸ்வதிநதி இது ருஷிகளின் யாகத்தின் பொருட்டு, சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோ தகையென பிரவகித்தது. 2. சாரஸ்வதனை காண்க. 3. வேதகுய்யர் பாரி. 4. பிரமதத்தன் பாரி,

சரஸ்வதி புஸ்தகமண்டல விரதம்

இது ஐப்பசிய சுக்ல க்ஷ நவமி யில் சரஸ்வதியை யெண்ணிப் பூசிப்பது.

சரஸ்வதி விரதம்

இது ஐப்பசி மாதத்தில் சுக்லபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது. உதய வியாபினியாகிய மூல நக்ஷத்திரத்தில் புஸ்தக ஸ்தாபனஞ் செய்து திருவோண நக்ஷத்திரத்தில் முடித்தல் வேண்டும்.

சரஸ்வதிநதி

குருஷேத்திரத்துள்ள ஒரு நதி. இவள் பெண்ணுரு அடைந்து மதி வாணனைமணந்து திடனைப்பெற்றுள்.

சராசந்தன்

இவன் விப்பிரசித்தி அம்சம், மகததேசாதிபதியாகிய பிருகத்ரதன் குமரன், உபரிசரவசுவின் பேரன், இவன்பட்டணம் கிரிவிரசம், குமரன் சகதேவன், இவன் தந்தை நெடுநாள் புத்திரர் இல்லாமல் காட்டிற்சென்று அவ்விடம் தவத்திலிருந்த சண்டகௌசிக முனிவரை அடுத்து அவர்க்கு வேண்டிய பணிகளைச் செய்து வரும் நாட்களில் முனிவர் இவன் கருத்தறிந்து மாங்கனி ஒன்று தந்து அதை உன் மனைவியின் ருதுகாலத்தில் தருக என்று கட்டளையிட்டு அனுப்பினர். அரசன் அதனைப் பெற்று மனைவிக்கு அதின் மகிமைகளைக் கூறி யவள் வசம் கொடுத்தனன். மனைவி தானே புசித்தல் கூடாது எனத் தன் சக்களத்திக்கும் புத்திரன் உண்டாக எண்ணி அப்பழத்திற் பாதி அரிந்து தானருந்தி மற்றதை அவளுக்கு அளித்தனள். இருவரும் கருக்கொண்டு பத்தாம் மாதத்தில் ஒவ்வொரு பாதி உருக்களை ஈன்றனர். ஏககாலத்தில் பிறந்த அந்த இருபிளவுகளை அரசன் ஊரின் புறத்தில் எறியக் கட்டளையிட்டனன். அப்படியே தோழியர் செய்தனர். அந்த ஊர்காக்கும் அரக்கி, சரை என்பவள் ஆகாரத்தின் பொருட்டுத் திரிந்து வருகையில் அவ் விடம் இருந்த இரண்டு துண்டங்களை எடுத்துச் சந்தி செய்தனள். உடனே இவ்விரு பிளவுகளும் ஒன்று பட்டு ஒரு குழந்தை யுருவாய் அதிபாரமாய் அழத்தொடங்கியது. இதைச் சரையாலறிந்த அரசன் எடுத்துச் சென்று சரையால் சந்திக்கப் பட்டவன் ஆதலால் சராசந்தன் எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தவன். இவன் தன் மருமானாகிய கம்சனைக்கிருஷ்ணன் கொன்றான் என்று பதினெண்முறை கண்ணனுடன் சண்டை செய்து வெற்றி பெற்றனன். ஒருமுறை கதாயுதத்தைச் சுழற்றி எறிந்து கிருஷ்ணனது பாதி நாட்டைக் கைக்கொண்டவன். இவன் குமரியர் அஸ்தி, பிராப்தை. இவன் மற்றொரு முறை, இராமகிருஷ்ணருடன் யுத்தத்திற்கு வர அவர்கள் ஓட்டங்காட்டிக் கோம்ந்தபருவதத்தில் ஒளித்தனர். சராசந்தன் தேடிக்காணாது, மலையைக் கொளுத்தினன், இருவரும் இவனையறியாது வெளி வர, வெட்கிச் சேனையிழந்து சென்றனர். இவனிடம் கண்ணன், வீமன், அருச்சுநன் மூவரும் வேதியர் உருக்கொண்டு சென்று யுத்தபிக்ஷை யாசித்தனர். சராசந்தன் அதற்கு இசைந்து வீமனுடன் மல்லயுத்தஞ் செய்கையில் கண்ணன் புல்லைப் பிளந்து வீமனறிய இருபுறம் எறிய அந்தச் சமிக்ஞையால் காலைக்கிழித்து இருபுறம் எறிந்து வீமன் கொன்றனன். (பாகவதம்)

சராசன்மன்

ஒரு அரசன். இவனை நாககன்னிகை ஒருத்தி மணந்தனன்,

சராசரங்கள்

அசையும் பொருளசையாப் பொருள்களடங்கிய வுலகம். இதிலுள்ள உயர்திணை அஃறிணைப்பொருள்களைப்பற்றிக் கூறப்புகின் மனிதர் முதல் கண்ணிற் கெட்டாச்சிறிய பிராணிவரை அளவிடக் கூடாதவை பலவகையுள. அவற்றின் உரு, நிறம், குணம், தொழில் உணவு முதலிய ஒவ்வொரு வகையிலும் வேறுபடுகின்றன, ஊர்வனவற்றில் புழு ஒன்றைப்பற் றிக் கூறத்தொடங்கின் அவ்வகையில் அளவிடப்படாத சாதிகள் உண்டு. அவ்வாறே பறவை மிருகாதிகள், நீர்வாழ்வன பல வகைப்படுகின்றன. மரம், செடி, பூண்டு வகைகளிலும் அவ்வாறே ஒவ்வொன்றும் உருவத்தாலும் நிறத்தாலும், குணத்தாலும் வேறுபடுகின்றன. பெயரறியாப் பூச்சிகளும் புழுக்களும் பக்ஷிகளும் பிராணிகளும், பெயரறியாப் பூண்டுகளும் செடிகளும் விருக்ஷங்களும் அளவிறந்தன இறைவனால் சிருட்டிக்கப்பட்டு அவனது அளவிலாற்றலுடைமையை அறிவித்து, நிற்கின்றன. இவற்றின் தன்மை, உணவு, தொழில் முதலிய வெடுத்துக்கூற அவன் மானிடச்சட்டை சாத்திவந்து அறிவித்தாலன்றிக் கூடாதகாரியம் ஆதலின் அறிவுடையோர் எழுதிய அளவுகளிகொள்வர் என்று எண்ணுகிறேன்.

சராரி

ஒருவாநரசேனாதிபதி.

சராவதி

இது ஒருநதி. குஜராத்திலுள்ளது. இதன் கரையில் தர்ப்பைகள் முளைத் திருத்தலால் வந்தபெயர். (பா~பீஷ்) The river Sabarmati in Guzerat, Abmedabad stands on the river Sarawati appears to be the corruption of the river Saraswathi in Fyzabad (Oudh.)

சரிகை

பொன், வெள்ளி, முதலிய லோகங்களை மெல்லிய கம்பிபோலிழைத்து வேட்டிபுடவை முதலியவற்றில் நூலுடன் நெய்வது,

சரிதாரி

சாரங்கபக்ஷியான மந்தபாலமுனிவர்க்குத் தந்தை,

சரிதை

ஒரு பெண்பக்ஷி, இது பணியுருக்கொண்ட மந்தபாலமுனிவரைச் சேர்ந்து சாரங்கர் எனும் குஞ்சுகள் நான்பைப் பெற்றது.

சரித்திரயோதசி பிரதோஷ விரதம்

இது கார்த்திகை, ஆவணி மாதங்களில் நேரிடின் அதியுத்தமதின மென்பர். இந்நாள் இந்திரன் நமுசியையும் விருத்திராசானையும் கொன்று சிவபூசை செய்து சித்திபெற்ற நாள். இதில் சுக்ல பக்ஷமாயின் விசேடம். இதில் விதிப்படி சிவபூசை செய்து விரதமிருக்கின் சர்வ பலன்களையு மடைவர். இதில் (கடனிவரரணத்தின் பொருட்டும் ஆயுராரோக்யத்தின் பொருட்டும்) செவ்வாய்க்கிழமை நலம். இந்நாளில் விரதமிருந்து சூர்ய அஸ்தமனத் திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழி கையுமாகிய பிரதோஷ காலத்தில் சிவ தரிசனஞ் செய்து நந்திமா தேவரை யடைந்து, பின்னின்று அவரது பீஜஸ்பரிசம் செய்து, அவரது இரண்டு கொம்புகளுக் கிடையில் சிவதரிசனஞ் செய்யில் மிகவுத்தமம். ஏனெனில் பிருதிவியிலுள்ள தீர்த்தங்களெல்லாம் பிரதோஷ சமயத்தில் சிவ தரிசனத்தின் பொருட்டுக் கோவிருஷணத்தை யடைந்திருக்கின்றன என்று புராணங்கள் கூறியிருக்கின்றன. பின்னும் முசிப்பையும், வாலினையுந் தொட்டுத் தொழுதால் பலமதிகம். இந்த விரதம் இருபத்து நான்குதரம் அநுட்டித்தவர்கள் வேண்டும் சித்திகளைப் பெறுவர்.

சரியைமுதலியசாதனங்கள்

4. முதல்வனுடைய திருவுரு நோக்கிச் செய்யும் வழி பாடு. சரியையாவது சரியை, கிரியை, யோகம், ஞானம். இது, சரியையிற் சரியை, சரியையிற்கிரியை, சரியையில் யோசம், சரியையில் ஞானம் என நால் வகைப்படும். அவற்றுள் சரியையிற் சரியையாவது திருக்கோயிலில் அலகிடல், மெழுகல், மாலை தொடுத்தல் முதலிய, சரியையிற் கிரியை ஐயைந்து மூர்த்திகள் விநாயகக் கடவுள் முதலிய ஆவாண மூர்த்திகளில் ஒரு மூர்த்தியைப் பூசித்தல். சரியையில் யோகம் நெஞ்சில் உருத்திரக் கடவுளைத் தியானித்தல், சரியையில் ஞானம், தியான பாவனையினுறைப்பான் ஞானானு பவவுணர்வு நிகழ்தல், கிரியையாவது புறத்தொழில் அகத்தொழின் மாத்திரையானே முதல்வனது அருவுருவத் திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு. இது கிரியையிற்சரியை சிவபூசைக்கு வேண்டப்படும் ஜபகரணங்களெல்லாஞ் செய்து கொள்ளல், கிரியையிற்கிரியை சிவாகமத்தில் விதித்தவாறே ஐவகைச்சுத்தி முன்னாகச் சிவலிங்க வடிவிற் செய்யும் பூசனை. கிரியையில் யோகம் மனத்தில் பூசை, ஓமம், தயானம், மூன்றற்கும் மூவிடம் வகுத்துக் கொண்டு செய்யப்படும் அந்தரியாகம். கிரியையில் ஞானம் அந்தர்யாகவுறைப் பின் கண்ணிகழும் பலவுணர்வு, யோகமாவது கரணங்களைச் சிவார்ப்பணஞ் செய்து ஆறாதாரங்களில் அகத்தொழிலால் தியானித்தல். யோகத்திற் சரியை. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்பன. யோகத்திற்கிரியை பிரத்யா காரம், தாரணை. யோகத்தில் யோகம் தியானம். யோகத்தில் ஞானம் சமாதி கூடியிருத்தல். ஞானமாவது கேட்டல் சிந்தித்தல் முதலிய. ஞானத்திற் சரியை திரிபதார்த்த உண்மையைக் கேட்குதல், ஞானத்திற் கிரியை கேட்டதைச் சிந்தித்தல். ஞானத்தில் யோகம் சிந்தித்ததைத் தெளிதல், ஞானத்தில் ஞானம் நிஷ்டை கூடியிருத்தல்.

சரு

இது வருத்த அரிசியினால் உப்பின்றிச் சமைத்த அன்னம்.

சருச்சன்

ஒரு யக்ஷன் சுந்தன் எனும் யக்ஷனுக்குத் தந்தை. (இரா~பா)

சருச்சரன்

சுகுண பாண்டியனுக்குச் சேனாதிபதி.

சருட்டுணு

புலகருஷிக்கு க்ஷமையிடம் உதித்தகுமரன்.

சருபா

பூதாவின் பாரி. இவளுக்குச் சுரபி எனவும் பெயர். கோடி உருத்திரரைப் பெற்றவள்.

சருப்பசத்ரு

சர்ப்பங்களுக்குச் செந்நாய், இருதலைமணியன், மயில் கோழி, எருதின் குளம்பு, மின்னல், இடி, கீரிப்பிள்ளை, கரடி, பன்றி, செம்போத்து, கருடன், முதலை, ஆந்தை, கூகை, மான், புதுவெள்ளம், புகைமூடிய அனல், மனிதன்.

சருப்பதோபத்திரம்

இது சித்திரக் கவியிலொன்று. எட்டெழுத்தானியன்ற நான்கு வரியாகிய செய்யுள், அது மாலைமாற்றும், சுழிகுளமுமாய் ஒருங்குவரச் சொல்வது.

சரும கீலரோகம்

வியான வாயு சிலேஷ்மத்தை யுள்ளிழுத்துக்கொண்டு குதஸ்தான சருமத்தில் முளைகளை உண்டாக்குவது. இது வாதபித்த, சிலேஷ்ம கீலமென மூன்றுவகை. இது, ரலபஸ்மம், கந்தகச் சூரணம், முதவியவற்றால் வசமாம். (ஜீவ).

சருமணநதி

அந்திதேவன் யாகத்தில் இறந்த பசுக்களின் உதிரத்தாலாகிய நதி.

சருவசித்து

சேதிநாட்டரசன், இவன் தன் குமரர் நூற்றுவரும் தீமை செய்து ஒழுக அவர்களை அரக்கன் கையில் ஒப்புவித்தனன். அரக்கன் அவர்களைப் பூமியில் எறிந்து கொன்று ஆகாயத்தில் எறிந்தனன். அந்தப் புதல்வர் உடலம் புண்ணிய பூமியில் விழுந்ததால் நூற்றுவரும் முத்திபெற்றனர்.

சருவாத்தகள்

சிவகணத்தவரில் ஒருவன்.

சருவாவசு

சூரியகிரணத்து ஒன்று,

சரை

1. ஒரு பெண்தேவதை. சராசந்தன் உடலைப் புணர்த்தவள். பிரமனால் கிருக தேவதையாக நிருமிக்கப்பட்டவள். 2. யமன் பெண், புருச்சக்கரவர்த்திக்குத் தேவி,

சரோருகம்

இதனை அசுணமா என்பர். இது ஆகாயவாசி பூமியில் வருவதில்லை. காற்றையும், மழைநீரையும் புசித்துச்சீவிப்பது.

சர்க்க ராசத்தமி விரதம்

இது மாகசுத்த சப்தமியில் செய்யப்பட்டது. இதில் (13) மாதம் சூரியன் உபாசிக்கப் படுவன்.

சர்க்கரை

கரும்பு, புல்லினத்தைச் சேர்ந்த பயிர். இதில் செங்கரும்பு, வெண்கரும்பு நாணற்கரும்பு எனப்பலவகையுண்டு இவற்றில் நூற்றுக் கணக்கான பேதம் உண்டு. இவ்வகைக் கரும்புகள் பத்தடியுயர முள்ளனவாக வளருகின்றன. இவ்வகைக் கரும்புகளைத் துண்டுகளாகவெட்டி ஆலை களிலிட்டுச் சாற்றையெடுத்துக் காய்ச்சினால் சாறு இறுகும். இதைக் காய்ச்சும் போது இதிலுள்ள அழுக்கப்போக்கச் சுண்ணம்புத் தண்ணீரையாவது, உப்புத் தண்ணீரையாவது கலக்கவேண்டும். இறுகிய சாற்றை அகன்ற பாத்திரங்களில் சேர்க்க அவைவெல்லக் கட்டிகளாம். அக்கட்டிகளை மீண்டும் காய்ச்சினால் சர்க்கரையாம். இது, பழுப்புச்சர்க்கரை. பழுப்புச் சர்க்கரையை வெந்நீரில் கலக்கிச் சுண்ணாம்பு ஜலத்தையும் சேர்த்துப்பல மடிப்புள்ள வஸ்திரத்தினால் வடிகட்டின் அதிலுள்ள அழுக்கெல்லாம் நீங்கும். ஆயினும் சற்று மங்கலாகவே காணப்படும். அம்மங்கல் நீங்க எலும்புகளை மேல்மூடியுள்ள இரும்பு பாத்திரத்தில் போட்டுக் கரியாக்கிப்பொடித்து அதைமங்கல் சர்க்கரை கரைத்த நீருடன் கலந்து காய்ச்ச மிகுந்த அழுக்குகள் எலும்பில் பதிந்து சர்க்கரை சத்த வெண்மையாம். இது வெள்ளைச்சர்க்கரை, இந்த வெள்ளைச்சர்க்கரையைக் காய்ச்சி ஊற்றினால் கற்கண்டாம். பின்னும் வெல்லங்களும் சர்க்கரைகளும் பனை, தென்னை, பலவகைத் தித்திப்புப் பழங்களினின்றும், பீட்ரூட் முதலிய சில கிழங்குகளினின்றும் எடுக்கப்படுகின்றன.

சர்க்கரைப் பால்வடியுமரம்

இது, வட அமெரிகாதேசத்தும் கனடாநாட்டுப் பிர தேசத்திலுமுள்ளது. (Maple Tree) இது, (10, 15) அடிகள் உயரம் வளருகிறது. பட்டைான தியுள்ளது. இம்மரத்தின் அடிப்பாகத்தைத் தொளை செய்து குழாய் வைத்துப் பால் வடிக்கின்றனர். இதன் பால் கரும்பின் சாறு போல் இனிப்புள்ள தாக இருக்கிறது. இப்பாலால் இந்நாட்டார் சர்க்கரை காய்ச்சுகின்றனர்.

சர்ச்சரன்

இரணியாக்ஷன் குமரன்.

சர்ப்ப மாலி

ஒரு இருடி.

சர்ப்பசத்திரம்

சர்ப்பயாகம் காண்க.

சர்ப்பயாகம்

இது பாம்புகள் சாம்படி செய்யும் யாகம். இந்தயாகத்தை ஜநமேசயன் செய்தனன்.

சர்ப்பவகை

பாம்புகளைக் காண்க,

சர்ப்பவணக்கம்

நாகபஞ்சமி காண்க.

சர்மணவதி

1. விந்தியமலையிற் பிறந்து உத்தாவாகினியாய் யமுனையிற் கலக்கும் நதி, நந்திதேவனால் கொலைசெய்யப்பட்ட மிருகங்களின் உதிரத்தா லுண்டானது. 2. தக்ஷண பாஞ்சலத்திலுள்ள நதி. (The river Chambal.)

சர்மவான்

சகுனியின் உடன்பிறந்தவன்.

சர்மி

ஒரு பிராமணன் யமனால்தான் பூசிக்கவேண்டித் தூதனால் அழைத்துவர ஏவப் பட்டவன். (பார~அது.)

சர்மிஷ்டை

ருஷபவர்மன் குமரி, யயாதியின் இரண்டாந்தேவி,

சர்யன்

நரிஷ்யந்தன் வம்சத்து அரசன்.

சர்யாதி

1. வைவச்சுத மனுபுத்திரரில் ஒருவன். இக்ஷ்வாகின் உடன் பிறந்தவன் இவன் குமரர் உத்தானபர்ஹி, பூரிசேநன், ஆநர்த்தன், குமரி சுகன்னி. 2. பிராசீனவதன் புத்திரன், தாய் ஆஸ்மாகி, பாரியை திரிசங்கி, புத்திரன் அகம்யாதி,

சர்வகாமன்

(சூ) இருதுபர்ணன் குமரன், இவன் குமரன் சுதாசன்.

சர்வகியசிங்கப்ப நாயக்கன்

தேசிகரை ஆசிரயித்தவன்.

சர்வகியபட்டர்

பட்டரால் வெல்லப்பட்ட வித்வான்.

சர்வகேதன்

வீமசேநனுக்குக் காலியிடம் உதித்த குமரன்,

சர்வசித்தாக்கியன்

ஆசாரம் இல்லாமல் தானம் வாங்கிப் பாபியாய்த் திருவேங்கடத்துக் கோண தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து புனிதனானோன்.

சர்வஜித்

இராஜசூய யாகத்தில், தர்வி, ஹோமம், அந்தர்யாகஞ்செய்து அவப்ருது வாகிய அபிஷேகத்தை யடைந்தவன். (பார~சபா 13 அத்)

சர்வதமனன்

சகுந்தலையின் புத்திரன் பரதனுக்கு ஒருபெயர்.

சர்வதேசஸ்

வியுஷ்டிக்குப் புஷ்கரணியிடத்து உதித்த குமரன். பாரி ஆகுதி. குமரன் சாக்ஷூசமநு.

சர்வதேவன்

வீமன் குமரன்.

சர்வதோபத்திரம்

கௌரவர்களால் ஏற்படுத்திய வியூகம்.

சர்வதோமுகி

சிவசூரியத் தானத்து அமரும் சத்தி, இவளுக்கு நான்கு கரம்.

சர்வநேத்திரர்

ஒரு விஷ்ணுபடர்.

சர்வன்

ஒரு மகாராஷ்டிர அரசன், இவனுக்கு அமோகவருஷன் என்று பெயர். இவன் ஆதிபுராணத்தைச் செய்த ஜிநசேநனை ஆதரித்தவன்,

சர்வபூததமனி

ஆன்மாவின் புண்ணிய பாவங்களை யடக்கும் சத்தி. இதற்குத் தேவர் யஜமானர் அல்லது சர்வபூததமனர்.

சர்வபூதாகான்

இவன் பிரமதேவனது பாதாதிகேசபரியந்தம் பாய்ந்து வருத்தி னன், தேவர் வேண்டச் சிவமூர்த்தி இவனை விழுங்கினர்.

சர்வபூமன்

வேதகுய்யருக்குச் சாஸ்வதியிடம் அவதரித்த விஷ்ணுவினம்சம்.

சர்வபூமபாண்டியன்

ஒரு பாண்டியன் புகழேந்தியார்காலத் திருந்தவன்.

சர்வர்

பிரதிவி பூதத்திற்கு அதிதேவதையாகிய சிவாஷ்டமூர்த்தத்து ஒன்று.

சர்வர்த்தி

வச்சான் தேவி, புஷ்பார்ணன்

சர்வவேதஸ்

விச்வஜித் யாகஞ்செய்துமுடித்த அந்தணன்.

சர்வாணிபீடம்

சத்தி பீடத்தொன்று,

சர்வார்த்தசித்தி

அகமிந்திரதேவர் ருஷப தீர்த்தங்கரின் பத்தாவது பிறவி,

சற்குணன்

ஒரு அரசன். சிவபூசைசெய்து முத்தியடைந்தவன்.

சற்சரன்

காந்தருவராசன், இவன் குமரன் சுகேது.

சற்பம்

இது சாதனமிரண்டுடைய தாய் வெல்ல வேண்டு மென்னும் இச்சையுடையான் கதை. (தருக்கம்.)

சற்பி

ருஷயத்துவசன் என்னும் ஏகாதசருத்திரன் தேவி,

சற்புத்திரன்

ஓர் வணிகன். இவன் கதிர்காமத்திற்குச் செல்லுகையில் ஓர் யானை வழியில் வந்து இவனைப் பிடித்தது. இவன் கதிர்காமா என்னக் கந்தமூர்த்தி வேட உருவுடன் தோன்றி யானையைக் கொன்று வணிகனை விடுத்தனர்.

சலங்கள்

நாட்டில் விளையுந் தீங்குகள், இவை (50) வகை. 1. தெரு, வழிக்குக் கேடுவிளைத்தல் (2) பிறரைப் பழித்துரைத்தல், (3) மதிற்சுவரேறிக்கடத்தல், (4) தண்ணீர்ப்பந்தல் அழித்தல், (5) இல்லத்தை அழித்தல், (6) மண் முதலியவற்றால் அகழியைத் தூர்த்தல், (7) அரசனது தவறு தலை வெளிப்படுத்தல், (8,9,10,11) ஒருவனது கட்டளையின்றி அவனது இல்லம், உவளகம், பொருட்சாலை, அடுக்களை முதவியவற்றிற் புகுதல், (12) ஒருவன் உண்ணும்போது பார்த்தல், (13,14,15,16) இடம் நோக்காது விரும்பிய வாறு மல, மூத்ரம், எச்சில், அபானவாயு கழித்தல் (17) அரசன் முன் வீராசனமிட் டிருத்தல், (18) அரசன் எதிர்முகத்தை தடைப்படுத்தல், (19) அரசனுக்குரிய வேடத்தினுஞ் சிறந்த வேடந்தரித்தல், (20) ஒருவனில்லத்தில் தடுக்கப்பட்டும் மீறிப்புகுதல், (21,22) பிறர் இல்லத்தின் கண்கள்ள வழியாற்புகுதல், சமயமல்லாக் காலத்திற்புகுதல், (23,24,25) பிறர்படுக்கை, இருக்கை, பாதுகைகளில் அவர்கள் கட்டளையின்றி படுத்தல், இருத்தல், பாதங்களாற்றீண்டல், (26) அரசன் படுக்கையிற்சயனித்துக் கொண்டி ருக்கையில் அருகில் நிற்றல், (27) அரசன் பகைவர்க்குப் பணிசெய்தல், (28) பிறனாற்றப்படாத இருக்கையைத் தானே பற்றிக்கொண்டு அதன் கண் இருத்தல், (29,30,31) பிறர் ஆடைகளையும், அணிவன்களையும், பொன்களையும் அவர் அநுமதியன்றி உபயோகித்தல், (32) ஒருவன் கையிலுள்ள தாம்பூலத்தை தானே வலிந்து பற்றிக்கொண்டு உபயோகித்தல், (33) பேசுக, எனப்பிறர் வேண்டாதிருக்க அதிகமாகப் பேசுதல், (34) தன் அரசனைப் பழித்துரைத்தல், (35) அரசனுக்கெதிரில் ஒற்றை ஆடையுடன் செல்லல், (36) எண்ணெய் பூசியவுடல்னாய்ச்செல்லல், (37) தலைமயிரை விரித் துக்கொண்டு செல்லல், (39) உடல் முழுதைய மறைத்துச்செல்லல், (40) சித்தி ரம் வரைந்த உடலோடு செல்லல், (41) பூமாலை அணிந்து செல்லல், (42) உடுத்த ஆடை அலையச்சேறல், (43) தலையை ஆடை முதலியவற்றால் மறைத்துச்சேறல், (44) பிறர் பாற்குற்றங்காண விரும்பல், (45) சூது, கள், காமம் முதலியவற்றில் விருப்பம், (46) அரசற்கெதிரில் ஆடையின்றிச் செல்லல், (47,48) அரசனது மூக்கு, கண், செவி முதலியவற்றை உற்றுநோக்கல், (49) பற்குடைதல், (50) செவி, மூக்குகளை அரசன்முன் குடைதல் முதலியன. (சுக்~நீ.)

சலசந்தன்

பதினான்காம் நாள் பாரதப் போரில் சாத்தகியுடன் யுத்தஞ்செய்து மாண்டவன்.

சலசந்தி

1 திருதராட்டிரன் குமரன். 2. ஒரு சிறு ஜலபாகம், இரண்டு ஜல பாகங்களைச் சேர்த்து, இரண்டு பூபாகங்களைப் பிரிக்கும் அதற்கு ஜலசந்தி என்று பெயர். (பூகோளம்)

சலசரம்

நீர்வாழ்வன: இவற்றுள் மச்சம் விஷ்ணுவிற்குதவியது. நந்திதேவரும் இவ்வுருக் கொண்டனர். ஆமை, இவ்வுரு திருமால் உருக்கொள்ள உதவியது, கருடனைக் காண்க. முதலை, கஜேந்திரனைக் கவ்வியவுருவம். சங்கு, திருமா லுக்கு ஓராயு தமாம். அபிஷேகஞ் செய்யவும் உதவும். தவளை அக்கியால் சாபமேற்றதுமாம். காமதேனு திருப்பாற்கடலில் பிறந்து தேவர்களுக் குபகரிப்பது, வசிட்டரிடத்தும் இப்பெயர்கொண்ட ஒரு பசு உண்டு. இருதுத்துவசனைக் காண்க. உச்சைச்சிரவம் திருப்பாற்கடலிற்றோன்றி இந்திரனிடமிருக்கும் குதிரை.

சலசூத்திரம்

(Water Pump) இது கிணற்றிலுள்ள ஜலத்தை மேலுக்குக்கொண்டு வரும் யந்திரம்,

சலதரை

பாண்டு புத்திரனாகிய வீமன் மனைவியரில் ஒருத்தி, குமரன் சுகுணன்

சலநாள்

நக்ஷத்ரம் காண்க.

சலநிதி

சீவகன் தோழர் ஐஞ்ஞூற்றுவரில் ஒருவன்,

சலந்தன்

திருதராட்டிரன் குமரன்.

சலந்தரன்

1 ஒரு தவளை, பன்னிரண்டு வருஷம் மழையில்லாத க்ஷாமகாலத்தில் அலரியடியிற்றங்கி இருந்து அம்மரத்தடியிலிருந்த சிவமூர்த்திமீது மலரை உகுத்த புண்ணியத்தால் அரசனாகித் தேவர்களை வருத்தி விஷ்ணுவால் வெல்லப்பட்டது. (திருப்பூவண புராணம்.) 2, இவன் ருத்ரனைப் போலுருக்கொண்டு பார்வதியாரிடம் சென்றனன். பார்வதிதேவி இவனது கபடவேஷத்தைத் தோழியராலறிந்து மறைந்தனள். இவன் ருதரமூர்த்தியிடம் யுத்தஞ் செய்கையில் பார்வதியாரைப்போல் மாயையால் மாயாபார்வதி யமைத்து எதிரில் கொலை செய்து அஞ்சாமை கண்டு சிவமூர்த்தியால் மாண்டவன், (பாதமம்.)

சலந்தரவதமூர்த்தி

சலந்தரனை வதைக்க எடுத்த சிவமூர்த்தியின் வடிவம்,

சலந்தராசுரன்

தேவேந்திரன் இருமாப்புடன் கைலையடைகையில் சிவமூர்த்தி பூதவடிவாய் எதிரில் தோன்றினர். இந்திரன் பூதத்தின் மீது தனது வச்சிரத்தை எறியப்பூதவுருக் கொண்ட சிவமூர்த்தி உக்கிரவுருவுடன் கோபங் கொண்டவர் போல் சீற்றங் காட்டினர். இந்திரன் பொறுக்க வேண்டினமையால் சிவமூர்த்தி அக்கோபத்தைக் கடலில் விடுத்தனர். அது ஒரு குழந்தையுருவாய் வளருடையில் பிரம தேவர் கையில் எடுக்க அவர் தாடியைப் பிடித்து வருத்தியது. அதனாலும் சலத்தால் தாங்கப் பெற்றதனாலும், இக்குழந்தைக்குச் சலந்தரன் எனப் பெயர் இட்டனர். இவன் வளர்ந்து பிரமனை எண்ணித் தவஞ்செய்து பல வரங்களைப் பெற்றுத் தேவர் முதலியோரை வருத்திப் பலரையும் வெற்றிகொண்டு சிவமூர்த்தியிடம் போர்க்குச் சென்றனன். சிவமூர்த்தி ஒரு கிழவேதியராய் எதிர்தோன்றி ஆசிர்வதித்து எங்குச் செல்கிறாய் என, அவன் கைலைக்கு யுத்தஞ்செய்யப் போகிறேன் எனக் கூறினன். ஆயின் நான் கிழிக்கும் இவ்வளவு பூமியைப்பேர்த்து எடுக்க எனக்கூறிப் பூமியில் வட்டமாகக் கிழித்தனர். சலந்தரன் அதனைப் பேர்த்துத்தலையில் இட அதுவே சக்கரமாக இவன் உடலைக் கிழித்தது. அதனால் இறந்தவன். இவன் தேவி பிருந்தை (ஆதித்ய புரான)

சலந்திரன்

ஒரு இருடி. இவன் காமவிகாரத்தால் கடலில் விழுந்த ஒரு பெண்ணைக் கடலில் உடன் விழுந்து தேட இவர்சளுடன் இந்திரனும் உடன் விழுந்து தேடினன்.

சலன்

1, சோமதத்தன் குமரன். 2. சூரியகுலத் தரகனாகிய பாடத்தின் குமரன். தாய் சுசோபை. இவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று நெடுநேரம் வேட் டையாடத் தனது குதிரைகள் இளைத்தன. இவன் ஒரு மானைக்கண்டு துரத்தத் தன் குதிரை வலியற்றதாய் இருகத்தால் வாம தேவருஷயைக்கண்டு குதிரையை இரவலாகக் கொண்டு அதனைமீண்டும் கொடாமல் இருந்தனன். முனிவர் குதிரையைக் கேட்க அரசன்மறுத்து அருகருந்தவரை ஏவி முனிவரை வருத்தக்கூறினன். அவர்கள் அவ்வகைசெய்யத் தொடங்குகையில் முனிவர் கோபித்தனர். அக்கோபத்தில் அநேக அரக்கர்தோன்றி அரசனையும் அவன் வீரர்களையும் மாய்த்து மறைந்தனர். 3. க்ஷத்திரியன் சந்திரவம்சம், குருபுத் திரனாகிய ஜகுநுவம் சத்தவனாகிய பாகலிக புத்திரனாகிய சோமதத்தன் புத்திரன். இவலுடைய சகோதரர்கள் பூரி, பூரிசாவன்.

சலபதை

ஒரு காந்தருவப் பெண்,

சலபாகங்கள்

மகாசமுத்திரம் பூமியைச் சூழ்ந்துள்ள பெரிய சலபாகம். கடல் அதில் சிறிய ஜலபாகம். ஜலசந்தி பெரிய ஜலபாகங்களை யொன்று சேர்க்கும் சிறிய ஜலபாகம். வளை குடா ஏறத்தாழ பூமியாற் சூழப்பட்டுக் குறுகியுள்ள ஜலபாகம். விரிகுடா விரிந்த முகத்தையுடைய தாய்ப் பூமிக்குள் சென்றிருக்கும் சமுத்திரப்பாப்பு. (பூகோளம்.)

சலபுண்டன்

கத்ருகுமரன், நாகன்.

சலபோசன்

விருத்தேசான் குமரன். இவன் குமரன் சுரோசனன். தசரதருக்கு இராமரைப் பிரிந்து உயிரிழக்கச் சாபங் கொடுத்தவன்.

சலப்பிரமாணம்

இது, நியாயசபையில் ஜலத்தில் பிரமாணஞ் செய்யுமுறை, வாதி பிரதிவாதிகளிருவரும் காபி அவ்வளவு ஆழத்திலுள்ள ஜலத்தில் மூழ்கிநின்று வருணனை உண்மை கூறத்துதித்து முழுகுகையில் கரையிலுள்ள வீரன் அம்பாலெறிய அதனைப் பிடித்துக்கொண்டு பிரதிவாதியை முழுகினவனாகக் காணின் சுத்தனாக எண்ணுவது. (யாஞ்ஞவல்கியம்.)

சலம்

அக்னியின் வடிவமும் பூமிக்குக் காரணமானதும், அமிர்தத்திறகு உற்பத்தி ஸ்தானமும் ஆனது. (பார~அச்)

சலர்க்காரமுனி

இவன் பிரமசாரியாய் நெடுநாள் இருந்ததால் பிழர்க்கள் தலை கீழாக மரத்தில் தொங்குதல் அறிந்து கத்ருகுமரியாகிய தன் பெயருடன் ஒத்தசலர்க் காரையை மணந்து யமன் கட்டளைப்படி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த இருபத்தொரு பிதுர்க்களைத் தொங்குதலினின்றும் நீக்கினன். இவன் குமரன் அத்திகன். இவன் தன் மனைவிதொடையில் தூங்க மனைவி சந்தியாகாலம் கடத்தல் கண்டு எழுப்பினள். அதனால் மனைவியை நீங்கினவன்.

சலர்க்காரை

1. நாககன்னிகை, கத்ருவின் குமரி, வாசுகியின் தங்கை, 2. ஒருபொருள் கருதிக் கூறியதற்கு வேறு பொருள் கற்பித்துக்கொண்டு பழித் தல். (தருக்).

சலவாதி

வேற்றூருக்குச் செய்திகொண்டு செல்லும் பறையன்.

சலாங்குகாரன்

செம்படவன், முத்துக்குளிப்போர் வகை,

சலாசந்தன்

துரியோதனன் தம்பி. நாலா நாள் யுத்தத்தில் வீமனால் இறந்தவன்,

சலாசுரன்

வீமாசுரனைக் காண்க.

சலி

சவபலருக்குக் காந்தியிடத் துதித்த குமரன்.

சலேயு

(சந்.) ரௌத்திராசுவன் குமரன்.

சல்யகன்

கத்ருகுமரன், நாகன்,

சல்லன்

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரியஸ்திரியினிடத்தில் பிறந்தவன். இவனுக்கு மல்லன் பிச்சுவிநடன், கர்ணன், சுசன், திரவிடன் என அந்தந்தத் தேசங்களில் ஒரு பெயர்.

சல்லாபம்

நாடக உறுப்பினுள் ஒன்று. இது, ஒரு பொருண்மேற் பேசுவார் தலை மக்களிருவராய் ஓரங்கமாய் நிருபனைச் சந்தியொன்றாது நின்ற சந்தி நான்குடைத்காவது. (வீர~சோ.)

சல்லி

ஒரு யாதவவீரன்.

சல்லியங்குமானார்

இவர் உறையூர் சல்லியங்குமரனாரெனவுங் கூறப்படுவர். கூற்றங்குமரனார்க்குக் கூறியவிதியே இங்குங் கொள்க. இவர் பாடலில் சோழநாட்டு அரிசிலாற்றையும் அதனருகிலுள்ள அம்பல் என்னும் ஊரையும், கிள்ளி வளவனையும், சிறப்பித்துக் கூறியுள்ளார். இதனால் கிள்ளிவளவன் காலத்தவராவார் போலும். பாலையையு மருதத்தையும் புனைந்து பாடி யுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணை யில் 141ம் பாடலொன்றும், குறுந்தொகையி லொன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

சல்லியன்

1. மந்திரதேசாதிபதி, பிரகலாதனன் அம்சம். நகுலசகாதேவருக்கு நல்வம்மான். இவன் பாண்டவர்க்குத் துணை வருதல் எண்ணித் துரியோதனன் வழியில் தண்ணீர்ப் பந்தல் வைத்துப் படைத்துணை கேட்க அதற்கு இசைந்தவன். இவனுக்கு யானைக்கொடி கர்ணனுக்குத் தேர்ச்சாரதி யானவன் பதினெட்டாநாள் யுத்தத்தில் தருமனால் கொல்லப் பட்டான் 2 சோமத்தன் மூன்றாங் குமரன். 3. விப்ரசித்தியின் குமரன்.

சல்லியபாண்டியன்

திருத்தண்காலூரில் தவஞ்செய்து திருமால் அருள் பெற்றவன்.

சல்லியமுனி

சல்லிய நூலியற்றியவர். இது மந்திரசாத்திரம்,

சல்லியம்

ஒரு சிற்பசாஸ்திரம். 16 தலை மண்டை, எலும்பு, செங்கல், ஒடு, விறகு, விக்ரகம், சாம்பல், கரி, பிணம், தானியம், பொன், கல் தேரை, விலங்கின் கொம்பு, செத்த நாய், சாடி, இவை மனையில் புதைந்திருப்பன. இவற்றையறிந்து கூறல் சல்லிய இலக்கணம்.

சளர்

ஒருவகை அசுரர், இவர்கள் சமுத்ர மத்தியிலிருந்து தேவர்களை வருத்தினர். இவர்களை விஷ்ணு கொலை செய்தனர். அதனால் விஷ்ணுவிற்கு ஜனார்த்தனர் என ஒரு பெயர்.

சளுக்கியர்

1. சளுக்கர், சாளுக்கியர் எனப்பட்டவர்கள் ஆரீதபஞ்சசிகர் எனும் முனிவர் தமது யாககுண்டத்தில் அவிசிடும் போது அவரது தீர்த்த பாத்திரத் திருந்து ஓர் அரசன் தோன்றினன் சுளுகம எனும் அப்பாத்திரத்திலிருந்து தோன்றினவனாத லினவன் வம்சத்தார் சளுக்கியர் எனப் பட்டனர். பம்பாய் கஜடியர் (339 பக்கம்.)

சவதா

(ஸ்வதா.) பிரமனால் மானவிகமாகச் சிருட்டிக்கப்பட்டுப் பிதுர்களுக்குக் கொடுக்கப்பட்டவள்,

சவதாநாச்சையர்

இவர் மனைவி பெண் கரு உயிர்க்கையில் இவர் தாரணஞ் செய்யவர மற்ரறொரு ஆண்மகவுவர அவளைப் பார்க்கலாகாதென அகற்றியவர்.

சவநன்

1. பிராமணனுக்குச் சூத்திரப் பெண்ணிடம் பிறந்தவன். இவனை நிடாதன் எனவுங் கூறுவர். 2. பிரியவிரதனுக்குப் பெரிஹஷ்மதியிடத்து உதித்த குமரன் இவன் உயர்த்த ரேதஸ்.

சவநருஷி

1. இவர் பிருகுருஷியின் புத்ரர். இவர் தீர்த்தயாத்திரை சென்று ரேவா நதியைத் தாண்டுகையில் ஒருபாம்பு இவரைக் கவ்விப் பாதான மடைந்தது. இருடி நாராயணரைத் துதித்ததால் விஷமிலக நீங்கினராய்ப் பாதாளவாசிகளால் பூசிக்கப்பட்டு அவ்விடமிருந்தனர். இவர் பாதாளத்தில் பிரகலாதனுக்குத் தீர்த்த மகிமை கூறப் பிரகலாதனிவர் சொற்கொண்டு பூமியில் தீர்த்தயாத்திரை செய்தனன். 2. வசிட்டருக்கு ஊற்சையிடம் உதித்தவர். இந்திரனப் பூதங்கொல்லாது காத்தவர். அவுரவர் எனவும் பெயர், பிரு குவினைப் பது மனிடம் தருமங் கேட்க ஏவினவர், 3. இவரை ஒரு வேடஸ்திரி புற்றில் கண்டு அரசனிடம் விட அரசன் இவர்க்குக் கண் மறைந்தமை கண்டு அச்வனி தேவரால் வைத்யஞ் செய்வித்தனன். சில காலம் பொறுத்து இவர் அவ்வேடப் பெண்ணை மணந்து கொண்டனர். (சிவமகா புராணம்).

சவன்

விவசுவானுக்குச் சாயா தேவியிடம் உதித்த குமரன்.

சவன்னன்

இராஜஸ்திரிக்குப் பிராமணனால் பிறந்த குமரன்.

சவபக்ஷன்

கபாலபாணனைக் காண்க.

சவரன்

ஒரு இருடி, சயிந்தவாயினர் மாணாக்கர்,

சவரர்புளிஞ்சர்

வேட சாரியாள் ஒரு வகையினர். பிரச்சேதனுடைய நாட்டிற் கும் சயந்தி நகரத்திற்கும் இடையேயுள்ள குறிஞ்சி நிலத்துச் சிற்றூர்களில் வாழ்ந்தவர்கள் வழிப்பறித் துன்பவர்கள். பிடி விழுந்த பின்பு வாசயத் தகதையோடு நடந்துவந்து உதயணன் ஒரிடத்தில் நின்ற பொழுது அவ்விருவரையுஞ் சூழ்ந்து வருத்தத்தொடங்கி, முதலில் உதயனானாலும், பின்புவந்த இடவகன் சேவீரர்களாலும், தோல்வியுற்று ஓடிச்சென்றனர். இவர்கள் உதயணன் காட்டுக்குடிககளாக இருந்தும் அறியாமையினாலே அவனை இங்ஙனம் செய்தனர். (பெ. கதை)

சவரி

சபரிக்கு ஒரு பெயர்.

சவலை

இது செய்யுட்களில் முதலடி, இடையடி, சடையடிகள் குறைந்து வருவதாம், (வீர சோ.)

சவலைக்காரர்

செம்படவரில் ஒரு வகையினர். (சவலைத்தடி படகு தள்ளும் துடுப்பு) இவர்கள் பள்ளிகளுக்கு நெருங்கியவர். இவர்களிற் சிலர் உழுவோர் சிலர் நாச்சுரக்காரர் இவர்களில் உழுந்தொழிலாளன் படையாச்சி பட்டமும், நாகசுரக்காரன் அண்ணவி பட்டமும் பெறுவன். இவர்கள் மறவரையும் ஒத்தவர்கள் என்பர். (தரஸ்டன்.)

சவஸ்தி

வாயுவின் தேவி, இவளில்லாவிடத்து ஆதான பிராதானங்களில்லை.

சவிதா

1. காசிபருக்கு அதிதியிடம் உதித்த குமரன். இவன் துவாதசாதிந்தரில் ஒருவன். தேவி பிரசங்கம். 2 தருமியைக் காண்க.

சவித்து

அச்வரிதேவர்க்குத் தந்தை என்பர். இவர் மனைவி துவஷ்டரை.

சவுதம்

விரதங்களில் ஒன்று.

சவுதாசன்

(சூ.) சுதாசன் குமரன். இவனுக்கு மித்தாசகன், கல்மாஷபாதன் எனவும் பெயர். இவன் புத்திரப்பேறில்லாமல் வசிட்டராற் புத்தியோற்பத்தி செய்து கொண்டான். சம்வத்தனைக் காண்க.

சவுநகம்

ஒரு நதி.

சவுந்தரசாமந்தன்

குலபூஷண பாண்டியனுக்குச் சேனாபதி. இவன் சிவபக்தி யுடையனாய் அரசன் சொற்படி வாழுநாட்களில் சேதிராயன் என்னும் வேடன் அரசனை எதிர்க்கவர அரசன் சேனாபதியை நோக்கிப் பொக்கிஷந்திறந்து பொன்னெடுத்துச் சேனை கூட்டுக என்றனன். அரசன் சொற்படி எடுத்த பொருளைச் சேனாபதி சிவதிருப்பணிப் பொருட்டுச் செலவிட்டனன். இதனை மற்றவரால் அறிந்த பாண்டியன் சேனாபதியை நோக்கி நாளை யுதயத்தில் சேனைகள் வரவேண்டுமெனப் பயமுறுத்தினன். சாமந்தர் சொக்கலிங்க மூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி அசரீரியாய் அஞ்சாதிருக்க, நாளை விடியுமுன் சேனைகள் வருமெனக் கூறிப் பூதகணங்களைச் சேனாவீரர்களாக்கி அரசன் மகிழ உடன் கொண்டு வந்தனர். அரசன் சேனா வீரர்களைக் கண்டு இவர்கள் எதேசத்தவர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கையில் சேதிராயனாகிய பகைவன் புலியடிக்க இறந்தான் என்று செய்தி வரக்கேட்டு அச்சேனைகள் செல்லும் இடம் செலுத்சதுக என உடனே சேனைகள் மறையக் கண்டு பாண்டியன் கடவுளை வணங்கிச் சேனாபதியை வியந்து பணிந்தனன்.

சவுபரி

வேதமித்திரர் மாணாக்கர். இவர் தேவி மனோமயை. இவர் ஒருமுறை கிரௌஞ்சனைப் பெருச்சாளியாகச் சபித்தவர். இந்த மக்ருஷி காளிங்கன் சேர்ந்திருந்த மடுவிலுள்ள சலசரங்களைக் கருடன் நாடோறும் புசித்து வருகையில் ஒருநாள் இவர் அம்மடுக்கரைக்கு வந்து அவ்விடம் இருக்கும் பிராணிகளை இம்சிக்கும் கருடனைக்கண்டு இரங்கி இனி இந்த மடுவிற்கு வாராதிருக்க எனப் பணித்தனர். முனிவர் கூறியதை அறியாத கருடன் மீண் டுவர முனிவர் கோபித்து இனி இங்கு வரின் உயிரிழக்க எனச் சபித்தனர். இவர் ஒருகாலத்து யமுனைந்திக்குத் தீர்த்தமாடச் சென்று அந்நதிக்கரையில் நிற்கை யில் மீன் இரட்டைகள் தமது பல குஞ்சுகளையும் இடையில் விட்டுத் தாம் அவைகளுக்குக் காவலாய் இருபக்கத்திலும் இருந்து பாதுகாத்து விளையாடுதலைக் கண்டு தாமும் அவ்வகை இருக்க எண்ணி மாந்தாதாவின் நூறு குமரிகளை மணந்து அப்பெண்கள் களிக்க இன்பந்தந்து இருக்கையில் மாமன் மாமிமார்கள் இந்த ருஷிக்கு நமது குமரிகளைக் கொடுத்தோமே எனச் சிறிது நாள் பொறுத்துவந்து அப்பெண்களைக் காணவா முனிவர் ஒவ்வொரு பெண்களிடத்தும் ஒவ்வொருவராகத் தனித்தனி இருத்தல் கண்டு களித்துச் சென்றனர். பிறகு முனிவர் இல்லறத்தில் வெறுப்புற்றுத் தவமே கைக் கொண்டனர். (பாகவதம்)

சவுரி

1. நிருதி புத்திரி, தாருகன் தேவி. 2. தாருகாசுரன் மனைவி.

சவையப்பநாயகன்

காளமேகரால் ‘சுருக்கவிழ்ந்த’ என்னும் வசை பாடப்பெற்றவன்.

சவ்வருணன்

அரசர் மீளி குமரன். சூரிய புத்திரியாகிய தபதியை வசிட்டரால் மணந்தவன். சந்திரவம்சத்து அரசனாயினும் வசிட்டரைக் குருவாக் கொண்டவன்.

சவ்வாதுபுலவன்

இவன் இருந்தது தொண்டை நாடு, ஆநந்தரங்கபூபதி மேலும் சோலையப்ப முதலியார் மீதும் பாடிப் பரிசு பெற்றவன். (தனிப்பாடற்றிரட்டு).

சவ்வியன்

அங்ரேசன் சந்ததியின் இருடி.

சவ்வீரன்

இரகுகுணனைக் காண்க.

சவ்வீரம்

இது ரஸவகைக் கட்டுச்சரக்கு பாஷாண வகையைச் சேர்ந்தது. இதனை மருந்தாக உபயோகிப்பதில் அதிக கவனம் வேண்டும். தேகத்தின் மேற்பட்டால் புண்ணும் உண்டாம் கொல்லும்.

சவ்வீரவைப்பு

வைத்திய நூலிற்கூறிய எடைப்படி சந்தகம், இரஸம், உப்பு இம் மூன்று சரக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து, இரஸத்தானளவு மீண்டும் வருத்த உப்பு சேர்த்தரைத்து அரைத்த மருந்துகளுடன் இடைப்படி துருசு, படிகாரம், பொட்டிலுப்பு, பூநீறு, அன்னபேதி, நவச்சாரம், முதலியவை களையும் குழியம்மி யிலிட்டரைத்து மேற்கூறிய மருந்துகளுடன் சேர்த்துக் குப்பியில்டைத்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் கழுத்தளவு மறைத்து மேல்மூடி பெரிக்கு முறைப்படியெரித்து ஆறியபின் குப்பியின் கவசம் நீக்கிப்பார்க்கக் குப்பியின் வாயில் சவ்வீரக்கட்டி காணப்படும்.

சஷ்டிதேவி

1, இவள் பிரகிருதி தேவியின் ஆறாவது அம்சமானவள். இவளேஸ் கந்த மூர்த்தியின் பிராணப்ரியையான தேவசேனை இவள், சுவாயம்பு மனுவிற்குப்பிள்ளை நெடுநாளிலாதிருக்க அவன் மனைவிமாலினி (12) வருடம் கழித்து உயிரிழந்த ஒரு பிள்ளையைப் பெற்றாள். அரசன் பிள்ளையை மயானத்தில் வைத்து அழுகையில் இந்தத்தேவி தரிசனந் தந்து நான் பிரமன் மானசபுத்திரி, தேவாசுர யுத்தத்தில் தேவர்களுக்குச் சேனாதிபதியா யிருந்ததால் தேவசேனையென எனக்குப் பெயர் என்று குழந்தையை யெடுக்கக் குழந்தை யுயிர்பெற்றுச் சிரித்தது. இவள் குழந்தையுடன் ஆகாயத்தில் செல்ல அரசன் வேண்டியதால் பிள்ளையைத்தந்து இவனுக்குச் சுவிரதன் எனப் பெயரிடுக இவன் தீர்க்காயுளுடனிருப்பா னெனக்கூறி மறைந்தனள் (தேவி~பா.) 2. இவள் பிரகிருதியின் ஆறாவது அம்சமாகத் தோன்றியவள், இவள் சிசுக்களைக் காப்பவளும், சிசுக்கள் பொருட்டுப் பூசிக்கப்படுபவளும், பிரசவக்ருகத்தில் (9) வது நாளிலும் (21) ஆம் தினத்திலும் பூசிக்கப்பட்ட சம்பத்ஸ்வ ரூபிணி. (தேவி~பா)

சாகசரிகன்

ஆயிரம் காலாட்களுக்குத் தலைவன். (சுக்~நீ.)

சாகடாயனர்

இருக்குத் தந்திரஞ்செய்த முனிவர்.

சாகம்பரி

1. சத்தியைக் காண்க. 2. சதாக்ஷியைக் காண்க.

சாகரகுலம்

உப்புரவர், பூமியைத் தோண்டினவர்கள்.

சாகரதத்தன்

விமலைக்குப் பிதா,

சாகரநமச்சிவாயர்

இவர் திருவாவடுதுறை மடத்தவர், இலக்கணக் கொத்து இயற்றிய சுவாமி நாததேசிகருக்கு மாணாக்கர். நன்னூலுக்கு விருத்தியுரை செய்தவர். ஊற்றுமலை பருதப்பனுக்கு நண்பர்.

சாகரன்

ஸ்ரீதத்தனுக்குப் பிதா.

சாகர்

சிந்து நதிக்கு மேற்கிலுள்ள தேசத்தார்.

சாகலன்

1. சங்கரபாண்டியன் மிருகத்தின் மேலேவிய அம்புபட்டிறந்த இருடி, இவன் குமரன் சாங்கலன், (சேது~பு.) 2. சாவித்திரியின் தந்தையும் மாலதி யின் கணவனுமாகிய அரசன்,

சாகலம்

மத்திரதேசத்து இராஜதானி. ‘The Captial of Madra Dasa. இது சம் திரபாகை, இராவதி இரண்டுக்கும் இடையிலுள்ள து. (பா~சபா.)

சாகலாசனார்

கடைச்சங்கம் மருவிய புலவர். அகநானூற்றில் “இருங்கழி” என நெய்தலைப் பாடியவர்.

சாகல்யமல்லன்

நயினாராசாரியர் மேல் பூதத்தையேவின மந்திரவாதி,

சாகல்யர்

1. மாண்டு கேயர் புத்திரர், திருதராட்டிரன் தவத்திற்குச் சென்ற போது, துக்கத்தை நீக்கித் தருமம் உபதேசித்தவா. 2. சௌபரியின் குமரன். இவன் தான் கற்ற வேதத்தைத் தன் மாணாக்கருக்கு உபதேசித்தனன். இவன் மாணாக்கர் வாச்சியன், மௌத்கல்யன், சாலியன், கோமுகன், சிசிரன். 3. ஒன்பதினாயிரம் வருஷம் சிவனையெண்ணித்தவமியற்றிப் பெருங்கல்வி மாணானவன். இவன் வம்சத்திற் சாவர்ணி யென்னுஞ் சூத்ரகாசர் பிறந்தனர். (சிவ~பு.)

சாகா

பிந்துமான் தேவி.

சாகேதம்

அயோத்தியாநகரம்.

சாக்கியநாயனார்

சங்கமங்கை என்னுங் கிராமத்தில் பௌத்தர்குலத்துத் திருவவ்தரித்துச் சாஸ்திரவிசாரணை செய்யப்புகுந்து தமது சமயம் பொய்யென அறிந்து அக்குலத்தை நீங்காமல் புறத்தில் தம்மைச் சேர்ந்தவர்கள் களிக்க அகத்தில் தாம் களிப்புடன் சிவலிங்கத் திருவுருவத்தை வெளிப்படையிற் கண்டுகல்லினை மலராக எண்ணி எறிந்து வந்தனர். இவ்வகை நாடோறுஞ் செய்து வருகையில் ஒருநாள் மறந்து போசனஞ்செய்ய உட்கார நினைவு தோன்றி ஓடிச்சென்று கல்லொன்றை எடுத்து எறிசையில் சிவமூர்த்தி இடபா ரூடராய்க் காட்சி தந்து முத்தி அளித்தனர். (பெ. புராணம்.)

சாக்கியன்

(சூ.) சிரஞ்சயன் குமரன்.

சாக்கியமுனி

இக்ஷவாகு வம்சத்தவன். இவன் தந்தை கோதமன், அவனது சந்ததியான் ஆகையால் இவனைக கௌதமசாக்கியன் என்பர். இவன் தேவி கோபி, குமரன் நகுலன், மிகுதிசரிதம் புத்தனைக் காண்க. கீறீஸ்து சகம் 600 வருஷங்களுக்கு முன் இவனிருந்ததாகத் தெரிகிறது. இவனது ஏழாவது சந்ததியான் சுமித்தரன். இவனைப் புத்தமதத் தாபகன் புத்தன் என்பர்.

சாக்கையன்

பறையூரிலிருந்த அந்தணன், (சிலப்பதிகாரம்.)

சாக்கையர்

செங்குட்டுவன் காலத்திருந்த கூத்தாடும் வகுப்பினர்.

சாக்ரன்

பிருகத்ரதன் குமரன், இவன் குமரன் விருஷபன்.

சாக்ஷசு

மன்வந்தரங்களில் ஒன்று.

சாக்ஷி

கூறத்தக்கார், கண்ணால் விஷயத்தைக் கண்டோர், தவசி, தானசீலர், நற்குலத்தவர், சத்யவாதிகள், தர்மப்பிரதானிகள், குடிலமில்லார், பிள்ளைகளைப் பெற்றோர், தனவந்தர், சிசௌதஸ்மார்த்த கிரியையுடையார், வர்ணாச்ரமங்கடவாதவர் (3) சாக்ஷிக்குரியர், சாக்ஷிகூற அருகால்லாதவர் பெண்கள், சிறுவர், கிழத்தனமுடையார், சூதாடுவோர், குடியர், தெய்வாவேசி, பாதகன், ரங்காவதாரி, பாஷண்டி, கூத்தாடி, சாஸ்திர பிரமாண மில்லாதவன், தப்புப்பத்ரம் நிருமிப்போன், குரூபி, பதிதன், நண்பன், பொருளால் சம்பந்தமுள்ளவன், ஞாதி, பகைஞன், திருடன், குரூரன், குலபிரஷ்டன் முதலியோர். (யஞ்ஞவல்கியம்.)

சாக்ஷூகர்

பதினான்காம் மன்வந்தரத்துத் தேவர்.

சாக்ஷூசன்

(சூ.) சமித்திரன் குமரன்.

சாக்ஷூசமனு

ஆறாம்மனு, இந்த மன்வந்தரத்து இறுதியில் விஷ்ணு மச்சாவதாரம் செய்தனர். இவனோடு ஒரு கற்பம் முடிந்து ஏழாமன்வந்தரம் உண்டாயிற்று. அருமித்திரன் என்று ஒரு அரசன் இருந்தனன். அவனுக்குக் கிரிபத்திரை என்று ஒருமனைவி இருந்தனள், இவர்கள் இருவருக்கும் இராசலகூணமுள்ள ஒருகுமரன் மகாஞானியாய்ப் பிறந்து புருண்டறையில் இருக்கையில் கிரிபத்திரையாகியதாய் குமரனிடம் அன்பால் பலமுறை அணைத்து முத்தமிட்டனள். இதனைக் குழந்தைகண்டு சலுக்கென நகைத்தது. தாய் திடுக்கிட்டுக் குழந்தையை என் நகைத்தனை என்றனள். குழந்தை தாயைப் பார்த்து அம்மே என்னை மிதிக்கப் பூனை ஒன்று காத்திருக்கிறது. அதுவன்றித் துச்சக சந்ததியில் பிறந்தவளாகிய சாதஹாரிணி என்னைத் தூக்கிச் செல்லக் காலம் பாத்திருக்கின்றனள். இப்படி யிருக்கையில் என்னை முத்தம் இடுக்கின்றனை யென்று சிரித்தேன், எனத் தாய் பயந்து புருண்டறைவிட்டு வெளியில் வந்தனன். ஜாதஹாரிணி குழந்தையைத் தூக்கிச் சென்று விக்கிராந்தன் என்னும் அரசன் தேவி ஜமினி பிரசவித்திருக்கும் படுக்கையில் போட்டுவிட்டு அங்கிருந்த குழந்தையைப் போதன் என்னும் வேதியன் தேவி பிரசவித்த இடத்தில் வைத்து அந்த வேதியன் குழந்தையைத் தின்று விட்டனள். பிறகு விக்கிராந்தன் தன் குழந்தையை வளர்த்து ஆனந்தன் எனப் பெயரிட்டு உபநயன காலத்தில் குருவால் உபநயனஞ் செய்விக்கத் தொடங்கினன். குரு ஆனந்தனைப்பார்த்துத் தாயை வணங்கக் கட்டளையிடக் குமரன் நான் எந்தத் தாயை வணங்குவேன். இவள் என்னை வளர்த்த தாயாகிய ஐயினியாம் என்ற னன். வேதியன் குமரனை நோக்கி நீ யார்? உன் தாய் யார் எனச்சிறுவன் இந்தஐமினி விசாலக்கிராமத்தில் வளரும் சைத்திரதனக்குத் தாய், எனக்குத் தாய் அல்லது. என் தாய் அனமித்திரன் தேவியாகும் கிரிபத்திரை என்று கூறித் தவத்திற்குச் செல்லத் தந்தை வேதியனிடம் வளர்ந்த தன் குமரனை வருவித்து அரசளித்தனன். தவத்திற்குச் சென்ற ஆனந்தன் பிரமனை எண்ணித் தவம்புரியப் பிரமன் பிரத்தியக்ஷமாய் என்ன வேண்டும் என்ன ஆநந்தன் ஆத்மசுத்தி வேண்டும் என்றனன். பிரமன் அரசகுமார நோக்கி நீ முன்சன் மத்தில் என் சகவாதிய கண்ணிவிருந்து பிறந்தமையானும், உன்னால் மன்வந்தரம் உண்டாக இருப்பதானும், சாசமனு என்னும் பெயருடன் அரசாண்டு முத்தியடைக என, அரசன் உக்கிரன் என்னும் அரசன் குமரி நட்வலையை மணந்து அரசாண்டு, புருவன், குச்சன், திருடன், துய்ம்நன், சத்தியவந்தன், ரீதன், விருதன், அகரிஷ்டோமன், அதிராத்திரன்,ப்ரத்யும்நன், சிபி, உன் முகன் முதலிய குமரரைப் பெற்று முத்தி அடைந்தனன். இவனைச் சர்வதேசலின் குமரன் தாய் ஆகுதி எனவும் கூறுவர். விச்வகர்மன் குமரன் எனவும், சக்ஷூ என்பவன் குமரன் எனவுங் கூறுவர்.

சாங்கதேவர்

பிரமனது ஒரு பகலில் முதல் யாமத்தில் பதினான்கு இந்திரர்கள் பிறந்து கர்மவசத்தால் சிறையடைந்தனர். அவர்களுள் ஒருவர் சாங்கர். இவர் நாரதரை நோக்கி என் பாசம் எவ்வாறு நீங்கு மெனக் கேட்க நீ பண்டரி யடைந்து பிறக்கின் நற்கதியடைவாயென்று ஞானோபதேசஞ் செய்து போயினர். அவ்வாறே இவர் ஒரு கிழப்பிராமணருக்குப் புதல்வராய்ப் பிறக்கத் தாய் தந்தையர்கள் உப நயனாதிகளை முடித்தனர். இவர் சகலகலா வல்லவராய் அஷ்டாங்கயோகங்களை அனுஷ்டித்து மூப்படையாமல் ஆயிரத்து நானூறு வருடம் உலகத்தில் சஞ்சரித்துவந்தனர். இவருக்குச்சீடர் ஆயிரத்து நானூற்றுவர். இவ்வகை சஞ்சரித்து வருநாட்களில் அசரீரி “உன் ஆண்மையை யடக்கும் தத்துவஞானி அளகாபுரியில் வந்திருக்கின்றனன் போய்க் காண்” என்றது, அவரைக் காணும்படி சாங்கதேவர் ஓர் கடிதம் எழுதத்துணிந்து அக்கடிதத்தை ஆசீர்வதித்து எழுதின் தான் தேசிகனாய் அவ்விடத்தில் செல்லுதல் தகாதென்றும் தேவரீர் என்று எழுதின் அவர் மூத்தோராவர் என்று எண்ணி ஒரு வெறுங்கடிதத்தை மாணாக்கனிடத்தில் கொடுத்து அளகாபுரிக்கு அனுப்பினர். இதைச்சீடன் வான்வழிச்சென்று விடுக்கத் தேவர்வாங்கி விரித்துப்பார்த்து இது சாங்கர் கொடுத்ததல்லவா என்றனர். அதில் ஒன்றும் எழுதாமைகண்டு அவர் சாங்கருக்கு ஆயிரத்துநானூறு வருடமும் வெறுமையாய்ச் சென்றது போலும் என்பதை இக்கடிதம் குறிப்பிக்கின்றது. இதில் இளையது மூத்தது என்பதைக்குறிக்காதது, சுத்த சைதன்யம் எங்கும் பெரியது சிறியது அடையாமலிருப்பதை அறியாமைபோலும் என்று எழுதி அத்தூதனிடம் கொடுத்தனுப்பினர். இதைக்கண்ட சாங்கதேவர் அவரைக் காணவேண்டுமென்னும் விருப்பால் ஓர் புலியின் மேல் ஏறிச் சென்றனர். இவர் வரவறிந்த ஞானதேவர் ஓர் சுவர் மேலேறி அதை நடக்கச்செய்து அவரை எதிர்கொண்டனர். இதைக்கண்ட சாங்கதேவர் இவர் தேசிக மூர்த்தியென்று நமஸ்கரித்தனர். அவர் சாங்கரை வாழ்த்தி ஞானோபதேசஞ் செய்தனர். பின் சாங்கதேவர் பண்டரி சென்று சந்திரபாகைத் தீர்த்த தீரத்தில் தவநிலையி லிருக்கையில் பெருமாள் நடுராத்திரியில் வந்து இவரைக் கையைப்பிடித்து ஆற்றினுள் சென்றனர். அவ்வாற்றினுள் ரத்தினமணி மண்டபத்தில் சிங்காதனத்தில் பூதேவி சீதேவி நீளாதேவியருடன் இருந்த பெருமாளை வணங்கினர். பெருமாள் உமக்கு என்ன வரம் வேண்டுமெனச் சாங்கதேவர் உன் திருவடியில் அன்பு வேண்டுமென்றனர். பின்பு கோதாவரிக்கரையிலுள்ள புண்ணியத்தம்ப மென்னுமூரில் ஓர் மடங்கட்டு வித்துச்சாளக்கிராமம் பிரதிட்டை செய்து பூசித்து வருநாளில் சங்கரன் என்னும் ஒரு வேதியன் இறக்க அவன் மனைவியும் தாயும் அவ்வேதியனுடைய எலும்பைக்காசிக்கு எடுத்துப்போவோர் இவர் மடத்திற்குள் சென்று சாங்கதேவரைப் பணியச் சாங்கதேவர் இறந்தோன் மனைவியைப் சுமங்கலியென்றெண்ணிப் புத்திரருண் டாகுக என வாழ்த்தினர். இதைக்கேட்ட பிள்ளையின் தாய் மருமகளின் நிலைமை கூறி எவ்வகைப் புத்திரனுண்டாவன் என்றனள். சாங்கதேவர் என்சொல் பொய்க்காது ஆயினும் உன் குலம் விளங்கும்படி வொருபுத்திரன் பிறப்பான்; உன் குமரனது எலும்பைவிடும் தீர்த்தத்தை அவளை உண்ணச்செய்யுங்கள் என்றனர். அவ்வாறு அவள் செய்யக் கருஉண்டாய்ப் புத்திரன் பிறந்தனன். அவனுக்கு உபநயனஞ்செய்ய வேதியரை யழைக்க அவர்கள் வாரோம் என்று மறுத்தனர். ஆதலால் சாங்கதேவர் அவர்களை நோக்கி இவன் பெருமாள் அருளால் பிறந்தவனாதலால் அங்ஙனம் கூற வேண்டாமென்ன, வேதியர்கள் ஆயினிங்குப் பெருமாள் வரக் கடவரோ வென்னச் சாங்கதேவர் ஆம் என்றனர். பின்பு வேதியர் பெருமாளும் இங்குவந் தனபோவென்று கோயிலிற்சென்று காணப் பெருமாள் காணாராயினர். பின் வேதியர் காணும்படி பெருமாள் தரிசனம் தந்தனர். வேதியர்கள் ஆனந்தமடைந்து அவ்வேதியச் சிறுவனுக்குச் சடங்கை முடித்தனர். பின் சாங்கதேவர் துவாரகைக்குச் செல்ல எண்ணி வழியில் தன்னையடைந்த யாதவ பண்டிதருடன் செல்லுகையில் அப்பண்டிதரின் மனைவியாகிய கர்ப்பிணி பிரம்மாரணியத்தில் வயாக்கொண்டு துன்பமடைகையில் என் கணவரும் சாங்கருக்குப்பின் சென்றனர். என்னைக் காப்பவர் சாங்கரேயன்றி வேறுயாவரையும் காணேனென்று அழுதனள். அக்காலையில் பெருமாள் ஒரு பெண்ணுருக் கொண்டுவர அவளைநோக்க நீயாரயமா வென்றனள். அதற்குப் பெருமாளாகிய பெண், என் பெயர் கிருஷ்ணாபாய் சாங்கதேவர் அனுப்ப யானிவ்விடம் வந்தேனென்று தாம் நியமித்த புதுவூரிலுள்ள மனையில் அழைத்துச்சென்றனன். அதில் அவளை அழைத்துச்சென்று மகப்பெறுவித்து ஒருமாதவரையில் அவளுக்கும் குழந்தைக்கும் வேண்டியவைகளைச் செய்துவந்தனர். இது நிற்க, முன் துவாரகைக்குச் சென்ற சாங்கதேவர் துவாரகைக்குச்சென்று கண்ணனை மனத்தால் தரிசிக்க அங்குக் காணாதிருத்தலைக் கண்டு ஞான நோக்காலாராய அவர் தம்முடைய ஏவலால் யாதவ பண்டிதர் மனைவிக்கு ஏவல் செய்வதாக எண்ணி அவ்விடம் வந்து அங்கு வீட்டில் குப்பைகளைப் பெருக்கிக்கொண்டிருந்த கிருஷ்ணாபாயைக் காண அவள் சாங்கதேவரை நமஸ்கரித்தனள். கண்ணனென்றறியாத சாங்கதேவரும் உட்சென்று யாதவ பண்டிதர் மனைவியைக்கண்டு உனக்குத் துணையாக வந்தவள் எங்கேயென அதோ குப்பை கூட்டுபவளே யாகுமென் றனள். சாங்கதேவர் வெளிவந்து கிருஷ்ணாபாயை நோக்கக் காணாமல் வருந் தினர். பின் யாதவபண்டிதர் மனைவி, பிள்ளையைச் சாங்கர் பாதத்தில் பெய்து தங்கள் கட்டளையால் கிருஷ்ணாபாய் வந்து உபசரித்ததைச் சொல்லக் கண்ணனே உன் புண்ணியத்தால் உபசரித்தான் என்று கூறித்தாயையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு துவாரகை சென்று கண்ணனைத் தெரிசிப்பித்து யாதவபண்டிதரிடம் மனைவியையும் பிள்ளையையும் ஒப்புவித்தனர். பின் பெருமாள் கட்டளையால் பேதரி நகரம் செல்ல வழியில் ஜங்கமனாகும் மல்லிகார்ச்சுனன் தன்னுடைய மந்திரபலத்தால் ஆதனம் ஒன்று சிருட்டித்து அதில் வந்தவர்களை யிருத்தி அவர்கள் தலைகீழாக வீழ்ந்தபின் அவர்களைச் சிரித்து அவமானஞ்செய்து வருவன். இவன் சாங்கதேவரது பெருமையைப் பொருதவனாய் அவர் பெயரை ஒரு நாய்க்கிட்டழைத்துவந்த னன். இவன் செயலறிந்த சாங்கதேவர் இவனையடக்கும் விதம் மடத்திற்பு சுமல்லி கார்ச்சுநன் ஆசனத்தில் உட்காருகவெனச் சாங்கதேவர் ஆசனத்தை நோக்க அது சாம்பராயிற்று, இதனால் பயந்தவனான ஜங்கமன் நாயினை அவர் பெயரையிட்டு அழைக்கவேண்டுமே யென்று சிறையிட்டுச்சாங்க தேவர் திருவடியில் விழுந்து ஜங்கமாகளுக்குச் சமாராதனை செய்ய ஜங்கமார்கள் அன்னமுண்ணத் தொடங்குகையில் லிங்கங்களுக்கு அமிசைசெய்ய வெடுக்க அச்சிவலிங்கங்களைக் காணாமல் இப்பிழை சாங்கதேவரை வணங்காததால் நேர்ந்ததென்று பற்பல உபசாரஞ்செய்து எங்கள் பிழைபொறுத்து நாங்களணிந்த சிவலிங்கம் வரவென்னச் சாங்கதேவர் நீங்கள் வளர்க்கும் நாயைப் பட்டினியாய்ச் சிறைவைத் திருப்பதால் அது விழுங்கிற்று என்றனர். ஜங்கமர் நாய் இவ்வகைச் செய்யுமோ என்னச் சாங்கர் நாயை வருவித்து நாயே லிங்கங்களைக் கக்கெனக்கூற நாய் ஐந்நூறு லிங்கங்களைக் கக்கிற்று பின் சாங்கதேவர் அவர்களுக்கு அருள் புரிந்திருக்கையில் அரிபத்தராகிய ஒரு வேதியர் வந்து இவ்வூரரசனாகிய துருக்கன் மிகுதுஷ்டன் அரிகீர்த்தனஞ் செய்யின் அவர்களைக் கடிவான் நீர் இவ்விடம் வந்திருக்கிற செய்தி யறியின்வந்து வருத்துவன், அவன் மனைவி பாம்பு கடித்து இறந்ததால் இன்று வரவில்லை என்றனர். இதைக்கேட்ட சாங்கதேவர் மனைவியைப் பிழைப்பித்துத் தருவேன் இதை அரசனுக்கு அறிவிக்கவென வேதியர் அரசற்குக் கூற அரசன் அவரை வரச்சொன்னதைச் சாங்கருக்குக் கூறச் சாங்கர் திருமால் நாமத்தை ஸ்மரணை செய்து கொண்டு அரசனிட்ட ஆசனத்திலிருக்க அரசன் என்தேவி பிறந்து நான்கு நாள்களாயின, பற்பல முயன்றும் பயனடைந்திலன் என்னலும் சாங்கதேவர் துளசிதளத்தைப் பிணத்தின்மேல் இடுகவென்று அவன் கையில் துளசிதர அரசன் பிணத்தின் மேலிட அவள் உயிர்பெற்றெழுந்தனள். அரசன் அவளுடன் பேச அவள் பேசாதிருத்தல் கண்டு சாங்கதேவரிடங்கூறச் சாங்கதேவர் மீண்டுமவளிடஞ் சென்று என் செய்ய வேண்டுமென்று கேளென்ன அவள் யானும் நீயும் என்னைப் பிழைப்பித் தோரைச் சரணாகதியடைந்து அவர் சொன்ன வண்ணம் செய்ய வேண்டு மென்ன அவ்வகை செய்வேனென்று யுடன்பட்டுச் சாங்கதேவரைப் பணியச் சாங்கதேவர் இந்த ஊரில் தேவாலயங்கள் வேதியர் பசுக்கள் துன்படையாமல் பாகவதரை வணங்கி அரசாளுகவென்ன நன்றென அவ்வாறு கேட்டு அர சாண்டு வந்தனன். பின்பு சாங்கதேவர் பண்டரியடைந்து பெருமாளுருத்தரவின் படி பிள்ளைகளை வருவித்துச் சாம்பிரதாயம் வழாமலிருக்கச் செய்து ஆனிமாதம் சுத்த சப்தமியில் அரசடியில் சமாதியாயினர்.

சாங்கரிபீடம்

சத்திபீடத் தொன்று.

சாங்கர்

ஒரு இருடி.

சாங்கலன்

சாகலன் குமரன்.

சாங்காசயபுரி

குசத்துவசன் பட்டணம்

சாங்கியத்தாய்

இவளது இயற்பெயர் தெரியவில்லை. கோசம்பி நகரத்திற் பார்ப்பன குலத்திற்பிறந்தவள். இவளை மணந்த கணவன், இளமையில் நீங்கிய துபற்றி இவளுக்கு ஒழுக்கத் தவறு ஒருபொழுது உண்டாயது; அது தெரிந்த அதிகாரிகளுடைய கட்டளையால், யமுனை யாற்றில் இவளை வீழ்த்திடுவதற்குச் சிலர்கொண்டு செல்வத்தைக் கண்ட உதயணன், இரங்கி விடுவித்துத் தீர்த்தயாத்திரை செய்யும்படி அனுப்பினன். அப்பால் இவள் கங்கையாடி இமயமலையிற் சென்று இரண்டு வருடம் அங்கே தங்கி ஆண்டுள்ள பெரியோரால் சமயவிகற்பகங்களை யறிந்து கன்னியாகுமரியில் நீராடுவதற்கு யாத்திரையாளரோடு அங்கிருந்து புறப்பட்டு உஞ்சை நகருக்கு வந்தபொழுது இவளுடைய கல்வி, அறிவு, முதலியவற்றையறிந்த பிரச்சோதன் தன்பட்டத்துத் தேவியாகிய ஸ்ரீமதிக்கு நீதிகள் முதலியவற்றைச் சொல்லும்படி இவளை நியமித்தனன், இவள் அதனைச் செய்து வருகையில் ஒரு பிராயத் தினளாக விருந்த வாசவதத்தை இவளிடத்து அன்பு வைத்ததை யறிந்த பட்டத்துத் தேவி அவளுக்குச் செவிலித் தாயாயிருக்கும்படி வேண்ட இவள் அங்ஙனமே இருந்து வந்தனள். சாங்கிய சமயத்தை மேற்கொண்டமையாலும் வாசவதத்தைகுச் செவிலித்தாயாக இருந்தமையாலும், சாங்கியத் தாயென்றும் இவள் வழங்கப்படுவாள். வாசவதத்தை பால் இவளுக்கிருந்த அன்பிற்கு எல்லையில்லை. தன்னுடைய உயிரைக்காப்பாற்றியது பற்றி உதயணன் பால் இவளுக்கு மிக்க அன்புண்டு. வாசவதத்தையும், உதயணனையும், அவனைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவதற்கு அவ்வப்பொழுது தன்னுடைய வருத்தத்தை பாராட்டாமல் இவள் செய்து வந்த முயற்சிகள் பல, தாயைக் காட்டிலும் அன்பு வைத்து உதயணன் இவளை ஆதரித்துவந்தான். தாயெனவும், செவிலியெனவும், சாங்கிய முதுமகளெனவும் இவள் வழங்கப்படுவள். (பெ~கதை.)

சாங்கியமதம்

இம்மதாசாரியர் கிறிஸ்து பிறக்குமுன் (7) அல்லது (8) சகாத்தத் தில் ஸ்வாயம்பு மனுவின் புத்திரியாகிய தேவஹூதியின் கர்ப்பத்தில் புஷ்காஷேத்திரத்தில் விஷ்ணு அம்சமாகப் பிறந்தவர். இவர் கபிலநிறத்துடன் பிறந்தது பற்றி இவர்க்குக் கபிலர் எனப் பெயரிட்டனர். மதசித்தாந்தப் சாங்கியம் என்றால் தத்வங்களைச் சங்கியை செய்து கூறப்படுவது. இந்தமதத்தில் கடவுள் அங்கீகரிக்கப்படவில்லை. ஸ்வதந்தமான பிரகிருதியே ஜகத்திற்குக் காரணம் புருஷனுடைய போக மோக்ஷ நிமித்தம் பாகிருதியே பிரவர்த்திக்கிறது. புருஷன் பிரவர்த்திக்கிறதில்லை, பிரகிருதியினுடைய விஷயரூப பரிணாமத்தால் புருஷனுக்குப் போகம் உண்டாகின்றது. புத்தித வாராவிவேகரூப பிரகிருதியின் பரிணாமத்தால் மோக்ஷம் உண்டாகின்றது. புருஷன் அசங்கனாகையால் அவனிடம் போகமோஷங்கள் உண்டாதல் இல்லை. ஆயினும், ஞான, சுக, துக்க, ராக,த்வேஷாதிகள் புத்தியின் பரிணா மங்கள் ஆகின்றன. இப்புத்திக்கு ஆத்மலிவேகம் இருக்கின்றது. ஆகையால் ஆத்மாவில் பந்தமோஷங்கள் ஆரோபிக் கப்பட்டிருக்கின் றனவேயன்றிப் பரமார்த்தத்தில் இல்லை. அவிவேகத்தால் சித்திக்கும்போகத்தின் பொருட்டு ஆத்மாகர்த்தாவென்று கூறப்படுவன், பரமார்த்தத்தில் ஆத்மா போகதா வல்லன். புத்தியே போக்தா. புத்தி ஆத்மாவிற்குப் பின்னம். இந்த ஞானம் விவேகம் என்னப்படும். இதன் அபாவம் அவிவேகம் என்னப்படும். சுகதுக்காதிகள் புத்தியின் பரிணாமங்கள் ஆகையால் புத்தியினுடைய தர்மங்களாகின்றன. ஆத்மா அநேகமென்று கூறப்படும். சாங்கிய சூத்ரங்களுக்குச் சரபஸ்வாமி பாஷியகாரர் ஈச்வரகிருஷ்ணர் காரிகை செய்தனர். கௌடபாதாசாரியர். காரிகைக்குப் பாஷ்யம் செய்தனர். இது நிரீசுவரசாங்கியம், சேச்வரசாங்கய மென்று இருவகை. நிரீசுவரசாங்கியம் கபிலரால் செய்யப்பட்டது. சேச்வரசாங்கியம் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது. சேசவரசாங்கியம், பதார்த்தங்கள் பதி, பசு, பிரகிருதி என்று மூன்று எனவும், பதிபிரகிருதியால் சலிப்பவன் அல்லன். ஆத்மாயோம தரித்து மோஷம் அடையவேண்டும். யுமானாகிய புருடன் அறியாமை யுற்றபோது பிரபஞ்ச மெய்லாம் தானெனவிரிந்து நிற்பன், விவேக ஞானம் எய்தியபோது அவை எல்லாம் பிறகிருதிக்கே அன்றித் தனக்கு இல்லை என்றும் சொல்வன். இவன் சுகதுக்கங்கள் பிரகிருதிக்கே தனக்கில்லை என நீங்கி ஆசிரியர் உபதேசித்த நிஷ்டைவழி இருந்து லயிப்பதே முத்தி என்பன், (தத்துவநிஜா)

சாங்கியமுனி

இவன் பல மாளுக்கர்களுடன் தீர்த்தயாத்திரை செய்து கொண்டி ருந்த ஒரு பண்டிதன், பலசமயக் கொள்கைகளை நன்கறிந்தவன் தவவொழுக்க முடையவன், சாங்கியத்தாய்க்குப்பல சமயக்கொன்கைகளைப் புகட்டி அவளை நல்வழிப் படுத்தியவன், (பெ~கதை)

சாங்கியாக்கியர்

இருக்வேதியாகிய இருடி,

சாங்கியாயனர்

பராசருக்கும் பிரசல்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர்.

சாசன பத்திரம்

அரசன் தன் முத்திரையோடு தன் ஆணை வழிநின்று ஏவலாளர் ஏவல் செய்யக் கொடுப்பது.

சாசிலி

துலாதரன் மாணாக்கர், இவர் ஒரு ருஷி இவர் தவத்தில் உயர்வடைந்து கடற்கரையில் சடைவளர்த்து இருக்கையில் இவரது சடையைக் குருவிகள் இடமாக் கொண்டு கூடுகட்டி வசித்தன. அக்குருவிகள் கூடுகட்டி குஞ்சுகள் பெரிதாமாவாக அசையாதிருந்தனர். இவர் தவத்தால் தம்மின் அதிகமில்லை யென்றிறுமாக்க ஆகாயத்தில் கங்கைக் கரையில் துலாதர னிருக்கின்றானெனக் கேட்டு அவனைக் காணக் கருவத்துடன் செல்ல அத்துவாத் சனிவரைக் கண்டவுடன் இவர் காரியாகளைக்கூற அவனை நோக்கி உனக்கு இந்த ஞானம் எவ்வாறு வந்ததென அவன் தர்மங்கூறக் கேட்டவர். (பார~சாக்.)

சாச்வதன்

பிருது குமரன், இவனுக்கு விஸ்வகன், விஸ்வகச்தன் எனவும் பெயர்,

சாச்வதி

(சாஸ்வதி). இலவன் ஆண்ட நகரம்.

சாஞ்சீவி

யஞ்ஞவற்கியருடைய ஐந்தாவது சந்ததியான்.

சாணக்யன்

சந்திரகுப்தனுக்கு மந்திரி. இவன் இராஜநீதியைப்பற்றி ஒரு கிரந்தஞ் செய்திருக்கின்றான், அதற்குச் சாணக்ய தந்திரம் என்று பெயர்.

சாணங்கரர்

மூன்றாவது புத்தர்.

சாணன்

வசுதேவன் குமரன், தாய் ரோகனி,

சாணார்

இவர்கள் தமிழ் நாட்டில் தென்னை பனை முதலிய மரங்களிலேறிக் கள்ளிறக்கிக் கள் விற்கும் சாரியார். இவர்கள் (1899) இல் தாங்கள் மற்ற இந்துக்களினும் உயர்ந்தார் என்றும் தங்களை மதுரை திருநெல்வேலி முதலிய தலங்களில் தரிசிக்க விடவேண்டுமென்றும் வாதிட்டுத் தோல்வி பெற்றனர். இவர்கள் ஸ்ரீகள் சில காலத்திற்கு முன் தாழ்ந்த பள்ளர் பரவர் மார் மூடாதிருப்பது போலிருந்தனரென்றும், 1859. இல் ஸர்சார்லஸ் டிரிவிலியன் இவர்கள் மார்மேல் துணி தரிக்கலாமென்று உத்தரவளித்தனர் என்றும் உறப்படுகிறது. இவர்கள் செம்படவர்கள் மாரை மூடுவது போல் உடைதரிக்கலாமேயன்றி உயர்ந்த ஜாதிப்பெண்கள் தரிப்பதுபோல் தரிக்கலாகாதென்று திருவாங்கூர் மகாராஜா கட்டளை, 1858 இல் இவர்கள் தாங்கள் ஷத்ரியர்கள் என்று வெளியிட்டனர். இவர்களிப்பொழுதும் பூணூல் தரிக்கவும் பல்லக்கேறவும் தங்கள் கல்யாணத்தில் பிரயத்தனப்படுகின்றனர். தென்னாட்டாரதற் கிடந்தந்திலர். இவர்கள் தங்களைச் சேரசோழ பாண்டிய வம்சத்தவரென்று கூறிக்கொள்வர். இவர்கள் தாங்கள் ஏற்படுத்திய கலாசாலை களுக்கு ஷத்ரிய பாடசாலையெனப் பெயரிட்டிருக்கின்றனர். இவர்கள் நாங்கள் இந்தப் பூமியையாண்ட ராஜவம்ச சந்ததியார் சாணாரகாசு எங்களால் நிருமிக்கப்பட்ட தென்பர். அதில் தென்னைமரம் போட்டிருப்பதே அதற்குச் சாணியென்பர் அது தவறு, அதில் சிலுவைக்குறி உள்ளதென்பர் சில ஐரோப்பியர். இவர்களின் வம்சத்தைக் கடைசியாகச் சென்ஸஸ் சூபரின் டெண்ட் தீர்மானித்தது, இவர்களுக்குச் சாணார், நாடார், கிராமணிகள் என் பன சாதாரணபட்டம், சாணான் என்னும் பெயர் தமிழ் நூல்களில் எங்கும் காணப்படவில்லை. இராஜ ராஜ சோழன் காலத்து இவர்கள் இழுவர் எனப்பட்டனர் (A. D. 984~1013) 10, 11, ஆவது நூற்றாண்டின் பிங்கலந்தை முதலிய நிகண்டுகளில் கள் விற்போர், பழையர், துவசர், படுவர் என்று கூறியிருக்கிறது, 16 வது நூற்றாண்டின் நிகண்டாகிய சூடாமணியில் சுண்டிகர் என்று மற்றொரு பெயர் சேர்ந்திருக்கிறது. சாணார் சொல்வதாவது, இந்தப் பதம் சான்றார் என்னும் சொல்லின் மருஉ என்பர். அவ்வாறு சாணார் சான்றார் என எப்போதும் அழைக்கப்படவில்லை. எந்தத் தமிழ் நூல்களிலும் காணப்படவில்லை. நாடான், கிராமணியும் நாட்டிலுள்ளவன் எனப்பொருள் படும். அதாவது நகரத்திற்கும் கிராமத்திற்கும் அப்புறத்தில் குடிபிருப்பவன் (South Indian Inscription Vol II Part 1.) இவர்கள் அச்சொற்களுக்குக் கிராமத்தை யாண்டவர்கள் எனப்பொருள் கொள்ளினும் எந்த க்ஷத்ரி யனுமிந்தப் பெயராலாண்டதாகக் காணப்படவில்லை. இவர்கள் கூத்ரியராகப்பெற்றால் தென்னிந்திய சிற்றரசரெல்லாரும் கஷத்ரியராகக்கூடும் (1891) ஸென்ஸஸ் ஸுபிரெண்டெண்ட் கூறுவதாவது சாணார் பள்ளருக்கும் பறையருக்கும் சற்று உயர்ந்தவர்கள் என்பர். இவர்கள் தீண்டாச் சாதியாக எண்ணப்பட்டவர்கள். இவர்களில் பலர் ஷதரியரென்று சாதி அட்டவணையில் உறியிருக்கின்றனர் அது நகைக்கத் தக்கதாம். என்னெனின் திராவிட க்ஷத்ரியர் கிடையாதாதலின். இவர்கள் ஒரு காலத்தும் போர்ச்சேவகம் செய்ததில்லை. சாணான் என்னும் பதம்சாறு என்னும் சொல்லினின்று முண்டாயிற்றாம் பொருள், கள். சில அறிவுள்ள மிசியோனெரிகள் அப்பதம் சாண் நார், நீளத்தில் சாண் அளவுள்ள கயிற்றைத் தளையாக்கொண்டு மரம் ஏறுபவர் என்னும் பொருளது, என்பர். மலபார் நாட்டுக் கள்ளிறக்குவோர், ஒருவருக் கொருவர் தங்களைச் சேணீர் என்று அழைப்பர் இதுசாணார் என்பதின் திரிபு. இவர்களின் ஜாதியைப்பற்றி (1896) இல் காமுடிகோவில் வழக்கிலும் சென்னை ஐகோர்ட் அபீலிலும் இவர்கள் மேற்கூறிய பள்ளர், பறையர் சக்கிலியர்க்குச் சற்று உயர்ந்தவர்கள். இவர்கள் சுத்தமில்லாதவர்கள் இந்துக்களின் கோவில்களில் புக தகாதவர்கள் என்று கூறப்பட்டது. இவர்கள் மரம் ஏறுகையில் உபயோகிக்கும் பொருள்கள் காற்றளை, வடம், பாளைப் பெட்டி, பாளைத்தடி, பாளை அரிவாள், சாணைமண், கள் பெட்டி. இவர்களில் ஐந்து வகைச் சாணார்கள் உண்டு, கருக்குப் பட்டையார், (கருக்குமட்டையார்) கள்ளர், இவர்களும் இச்சாதியைச் சேர்ந்தவராயினும் இவர்களுக்கு ஊழியம் செய்வோர் நாட்டாடி இப்பெயர்கொண்ட ஊரிலுள்ளார் கொடிக்கால் கொடிபிடித்து யுத்தஞ் செய்பவர், மேல்நாட்டார் என்பவர் திருவாங்கூரைச் சேர்ந்தவர்கள், இவர்களில் தொள்ளைக்காதா என்று ஒரு வகுப்பு உண்டு இவர்கள் சாணாருக்குக் கீழானவர்கள், இவர்களில் சிலர் பாண்டியன் என்னும் பட்டம் வகித்திருக்கின்றனர். கோயம்புத்தூரில் சிலர் செட்டிமூப்பன் நாடான் என்னும் பட்டங்கள் வைத்திருக்கின்றனர். தஞ்சாவூர் மான்யல் என்னும் புத்தகத்தில் தென்னையேறுஞ்சாணான், பனையேறுஞ் சாணான், ஈச்சமர மேறுஞ்சாணான் என்று மூன்று பிரிவுகள் கூறப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு எனாதிபட்டம். சைவ ஏனாதி நாயனாரால் வந்தது போலும். (தர்ஸ்டன்.)

சாணூரன்

கம்சனுக்குத் துணைவனான அசுரன். இவன் கம்சன் ஏவலால் கிருஷ்ணனுடன் மவ்லயுத்தஞ்செய்து பூமியில் மோதப்பட்டு இறந்தவன்,

சாணைக்கல்

இது சுறசுறப்பாய் வட்டமாகவும் நீளமாகவும் உள்ளகல். இது, வெட்டுங்கருவி அறுக்குங்கருவி முதலியவற்றைக் கூரியவாகச் செய்வது.

சாண்டியன்

காந்தார நாட்டிலுள்ள இரத்தின புரத்திருந்த ஒரந்தணன். இது படைத்துக் கோட்பெயர். அந்தண வடிவமுற்று மாணாக்கனென்னும் பெயர்கொண்டு இராசகிரியி லிருந்தபொழுது உதயணன் இவன் மகனென்று தன்னைக் கூறிக் கொண்டான். (பெ~கதை.)

சாண்டிலி

1, பிரசாபதியின் மனைவி, குமரன் அக்கினி, 2. காலவருஷி குருதக்ஷிணைக்காகக் குதிரைக்குப் போம்போது ருக்ஷபருவதத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த பார்ப்பினி. 3. அக்நிதேவன் குமாரி, இவளைக் கருடன் கண்டு மோகித்து எவ்வகையேனும் தேவலோகங்கொண்டு செல்ல வேண்டுமென முயல்கையில் இவளறிந்து சிறகிழக்கச் சபித்தனள். இதனால் வருந்திய கருடன் பிரார்த்திக்க மீண்டும் அவை பொன்னிறத்துடன் வளரச் செய்தவள். (சிவமகாபுராணம்). 4. இவள் புருஷபக்தியினாலும் நல் லொழுக்கத்தாலும் உயர் கதியடைந்தேன் எனச் சுமனைக்கு இல்லற தருமம் கூறிய கற்பிநி. (பார~அநுசா.)

சாண்டில்யன்

1. ஒரு இருடி. இவனால் சாண்டில்யஸ்மிருதி செய்யப்பட்டது. 2. காசியிலிருந்த ஒரு வேதியன், சந்திரகுப்தனுக்கு ராஜ்யம் வருமாறு செய்த வன். 3. இவன் பிறர்மனை விரும்பி வாசதேவனைப் பாஞ்சராத்ர ஆகமத்தின் வழி ஒழுகிநரகமடைந்தான். (வாசிட்டலைக்கம்.) 4. மரீசி புத்திரனாகிய காசியபனுடைய வம்சத்தில் பிறந்த ரிஷி. இந்த வம்சத்தில் ஒரு காலத்தில் வைஸ்வாநர அக்னி உற்பத்தியாயினன். இந்தக் கோத்திரத்தில் பிறந்தவர்கள் சாண்டில்லிய கோத்திரத்தார் எனப்படுவர். (பா~சாந்.)

சாண்டில்யமுனிவர்

தான்யமாலியை முதலையாகச் சபித்து அநுமனால் சாப நீங்குமென்றவர். தான்ய மாவியைக் காண்க,

சாண்டில்யர்

இவர் காச்யபருக்கு அக்கினியிற் பிறந்தவர். (பார~அநு)

சாதகன்

இவனுடைய ஊர் கோசம்பி நகரம். சாதியிற் குயவன், உதயணன் சிறைப்பட்டுச் சென்றபொழுது அது பொறாமல் வேறு வடிவங்கொண்டு தானும் உடன் சென்று உஞ்சை நகரின் பக்கத்திலுள்ள தோரூரில் ஒரு வீட்டிலிருந்து உத்யணனுக்கு வேண்டிய அனுகூலங்களைப் பிறரறியாமற் செய்து வந்தவன் மறைந்திருந்த யூகிக்கு உயிர் நட்பளர்களாய் அவனுடளிருந்த வீரர் பதின்மருள் ஒருவனாகவு மிருந்தவன். இராச விசுவாசத்திற் சிறந்தவன். வாசவதத்தையைப் பிடிமீதேற்றி உதயணன் புறப்பட்ட பின்பு சாங்கியத் தாய் இவன் வீட்டிலேயிருந்து தான் யூகியைச் சந்தித்துப் பேசினள்; யூகிக்கும், உருமண்ணுவாவுக்கும் இடையே நின்று பிறரறியாமல் ஒருவர் கூறுவனவற்றை மற்றொருவரிடஞ் சொல்லிக் காரியங்களை நிறை வேற்றியவன்; ஆருணியைக்கொன்று வெற்றியடைந்த பின்பு உதயணனால் இலாவாணக நகரத்தில் பெருங்குயமென்னும் பட்டத்தையும் சீவிதமாக இரண்டூர்களையும் இவன் பெற்றான். (பெ. கதை).

சாதகப்புள்

இதனைக் கிரவுஞ்சப்பத்தி அல்லது சாரங்கபக்ஷியென்பது இதனை வான்கோழி யெனவட நூலார் கூறுவர்.

சாதகம்

மேகநீர் உண்டு ஆகாயத்தில் உலாவும் பக்ஷி.

சாதகருமம்

பிள்ளை பிறந்தவுடனே பிதா வடச்குத் திசையிற் சென்று ஸ்நாநம் பண்ணி, எள், நெல், பொன், வஸ்திரம், பசு, பூமி இவைகளில் இயன்ற தான தருமங்கள் செய்து சுபக்கிரக முதயமாகத் தன் பந்துக்களுடனே புத்திர தரிச னஞ்செய்து, பிள்ளை பிறந்த பதினொரு தினத்துக்குள்ளே, சுபவாரங்களிலே, அச்வினி, ரோகிணி, புநர்பூசம், பூசம், உத்தரம், அத்தம், அனுஷம், உத்தராடம், திருவோணம், அவிட்டம், சதயம், இந்த நக்ஷத்திரங்களிலே இருத்தை, அமாவாசை பூரணை, ஒழிந்த திதிகளில், விருஷபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், தனு, மீனம், இவ்விராசிகளில் சுபகிரக முதயமாக ஜாதகருமஞ்செய்வது.

சாதகர்ணன்

புரிமான் குமரன், இவன் குமரன் சிவஸ்கந்தன்.

சாதகவிகலன்

மனது அநித்யம் மூர்த்த மாகையினால் என்கிற ஏதுவிற்குக் கன்மம் போல என்கிற திருஷ்டாந்தம், மூர்த்தத்வம் என்கிற சாதனமில்லையாதல்.

சாதனம்

(4) நித்யா நித்யவஸ்து விவேகம், இகபரபுத்ரார்த்த பலபோகவிராகம், சமாதிசட்சசம்பத்தி. முமூக்ஷத்வம்.

சாதனவியாவிருத்தன்

ஏது சாத்தியங்களுக்கு யாதொன்று அநித்யமல்ல அது மூர்த்தமுமல்ல பரமாணுவைப்போல என்கிற திருஷ்டாந்தத்தாலே சாதகமாயிருக்கிற மூர்த்தத்வம் வியாவிர்த்தமாகாமல் அதிலேயிருத்தல். (சிவ~சித்)

சாதர்மியசமை

சமான தர்மத்தினாலே ஸ்தாபிதமான எதுவைத் தூஷிக்கும் உத்தரம். (பொது இயல்பு.) தரு,

சாதவகை

கடலைமாச் சேர்ந்த சாதம், எள்ளோரை, வெள்ளரிவிரை மாச்சேர்ந்த சாதம், புளியோரை, ததியோ தனம், சர்க்கரைப் பொங்கல், எலிமிச்சம் பழம் சேர்ந்த சாதம், கிச்சிலிரஸ சாதம், வாதுமைப் பருப்புச் சேர்ந்த சாதம், மிளகுப் பொங்கல், கத்திரிக்காய் சேர்ந்த சாதம், தேங்காய்ப்பால் பொங்கல், வாழை, பலா, மாம்பழங்கள் சேர்ந்த பொங்கல், கடலை, சிறுபயறு, உளுந்து, கொள்ளு, தனித்தனி சேர்ந்த பொங்கல், கிச்சடி, பலவு முதலிய என்பனவும் உண்டு,

சாதவதன்

விஷ்ணுபக்தன் அல்லது படன்.

சாதவர்

யதுகுலபேதம்.

சாதவாகனன்

1. சாதவாகனம் என்னும் நூல் செய்வித்தவன். 2 சாத்தன்.

சாதவேதன்

அக்கினி.

சாதஹாரிணி

ருதுஹாரிணியின் குமரி, சாக்ஷ சமனுவைக் காண்க. இவள் பிள்ளை பெற்ற சூதிகாகிருகத்தில் இருந்துகொண்டு பிறந்த குழந்தைக்கு நீர் நெருப்பு முதலியவற்றால் அபாயத்தை விளைப்பவள். ஒரு தேவதை.

சாதாக்ய முதலிய தன்மை

பரைக்குப் பரமானது சிவசாதாக்யம், பரையுடன் கூடியுத்யோகிப்பது அமூர்த்தி சாதாக்யம், சூக்ஷமமாகிய இச்சாஞானக் ரியைகளுக் கப்பாற்பட்டது மூர்த்திசாதாக்யம், சூக்ஷ்மமான இச்சையில் தூலமான ஞானக்கிரியைகள் பொருந்தி ஞானபாவகமாயுள்ளது கர்த்ரு சாதாக்யம், தூலமான பிந்து நாதங்கள் கூடியுள்ளது கருமசா தாக்யம் (சதா).

சாதாக்யம்

இது, அவிகாரமான நிட்களசிவத்தில் (சீவன், முத்தர், சாதகர், ஞானிகள் முதலியோர் பொருட்டுத்த்யான அளவிற்கேற்ப) சத்தி விகற்பமான கலைகளாலேத்யானமூர்த்தியாக நிறம்புவது (சதா).

சாதாதபன்

ஒரு முனிவன்.

சாதாரணலக்ஷணம்

அந்நியத்தைத் தவிர்ந்து தன் சாதிக்கொத்த இலக்கணம். (பொது லக்ஷணம்).

சாதாரன்

கீசக நாட்டரசன், இவன் காமாதுரனாய் மனைவியுடன் இருக்கையில் வசிட்டர் இவர் மனையில் காத்திருக்கவும் அறியாது தூங்கி விழித்தெழுந்து வணங்கினன். வசிட்டர் நீ காமச்செருக்கால் மதியாமையால் நீ வேடனாகவும், உன்னாட்டில் உள்ளவர் நீங்க உன்னாடு காடாகவும் எனச் சாபம் ஏற்றவன்.

சாதி

1. (4) ஆந்திரம், கன்னடம், தராவிடம், மகாராட்டிரம், 2. தனக்கு விரோதமான விடைகூறுதல். இது சாதர்மிய சமை, வைதருமிய சமை, உத்கருஷ்ணசமை, அபகருஷண சமை, வருணியசமை, அவருணியசமை, விகற்பசமை, சாத்தியசமை, பிராப்தி சமை, அப்பிராப்திசமை, பிரசங்கசமை, பிரதிதிருஷ்டாந்த சமை, அநுற்பத்தி சமை, சம்சயசமை, பிரகரண சமை, அவே துசமை, அர்த்தாபத்தி சமை, அவிசேஷ சமை, உபபத்தி சமை, உபலப்தி சமை, அநுபலப்தி சமை, நித்யசமை, அநித்யசமை, காரியசமை, என இருபது வகை. 3. நித்தமாய் அநேக திரவியகுண கர்மங்களிலுள்ள ஒருதர்மம். ஜாதி (சாமான் யம்) எனப்படும்.

சாதி பத்திரம்

பொருளை யீடுகாட்டி யெழுதியது.

சாதிக்காய்

இது மணமுள்ளதும், மயக்கத்தைத் தரத்தக்க பொருளுமாம். இது, நிலவளமுள்ள நீலகிரி, கொச்சி திருவாங்ககூர் முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது. இச்செடிகளினிலைகள் கிச்சிலி இலைகள் போல் பளபளப் புள்ளனவாயிருக்கும், இதன் பழம் திரட்சியாய்க் கனத்த தோலுடனிருக்கும் உள்ளிருக்கும் வித்தின் மீது கவசமிட்டது போலச் செந்நிறமான மெல்லிய மீந்தோல் வித்தை மூடிக்கொண்டிருக்கும். இதுவே ஜாதிபத்திரி வாசனைப் பொருள்களில் ஒன்று. இவ்வித்தை எடுத்துச் சுண்ணாம்பும், உப்பும் கலந்த நீரிலிட்டுச் சற்றூற எடுத்துக் காயவைத்துப் பத்திரப்படுத்தினால் பூச்சுப்பிடி யாது,

சாதிபிள்ளைகள்

இவர்கள் வேளாண் முதலிய ஜாதியாருக்கு ஏவல் செய்து அவ்வவர் ஜாதியின் உயர்வைத் தெரிவிப்போர் வேளாண் மக்களுக்குப் பணிசெய்வோர். கோமட்டிகளுக்கு மைலாரி, பேரி செட்டிகளுக்கு வீரமுஷ்டி, பள்ளிகளுக்கு நோக்கர், முதலியோர்.

சாதியாவது

வீரம், கூச்சம், அர்ப்பாயம், பேய்க்காரம், வியோகம், பாணம், சல்லாபம். வீழிணி, உத்தாரமடங்கம், பிராசனம் என்பன. இது நாடகவகையுள் ஒன்று. (வீர~சோ.)

சாதிலிங்கம்

இது ஒருவகைக் கட்டுச் சரக்கு. வைத்திய நூலில் கூறிய எடைப் படி கந்தகத்தையும் ரஸத்தையும் ஒன்றாய்க் கலந்து அவையிரண்டும் கறுப்புத் தூளாக் துணையும் குழியம்மியிலரைத்து அதனுடன் மீண்டும் எடைப்படி கந்தகமும் வெள்ளீயப் பொடியும், பொட்டிலுப்பும் சேர்த்து அரைத்துக் குப்பியிலடைத்துச் சீலை மண்செய்து குழியடுப்பில் வாயகன்ற மட்பாத்திரத்தில் மணல் நிரப்பிக் குப்பியைக் கழுத்தளவு மணலால் மூடியளவு கூறியநேரம் எரித்து ஆறியபின் குப்பியைத்திறக்க அதின் கழுத்தில் லிங்கக் கட்டி காணப்படும்.

சாதுகர்ணன்

(சு). அக்கினி வேசனுக்கும் ஒரு பெயர். இவன் இருடியாயினன்.

சாதுகாரணர்

சாகல்யர் மாணாக்கர்.

சாதுசக்கரன்

ஆகாயகமனம் அறிந்த ஒரு முனி. மணிமேகலை முற்பிறப்பில் இவனை ஒருபொழுதுண்பித்த புண்ணியத்தால் நன்னெறிப்பட்டனள். (மணிமேகலை.)

சாதுவன்

ஆதிரையின் கணவன், நாகர்க்கு நீதிகூறி நல்வழிப்படுத்தினவன் (மணி).

சாதேயன்

தருமன் வேதிகையைப் புணர்ந்ததனால் பெற்றபெயர்.

சாதேவன்

துரியோதனனுக்குத் தம்பி

சாத்தகி

1. பாரதவீரரில் ஒருவன் சத்தியகன் குமரன், மருத்துவர் அம்சம். இவனுக்கு யுயுதானன் எனவும் பெயர். 2. கண்ணனுக்குத் தம்பி. அருச்சுனனிடம் தனுர்வித்தைகற்றவன். பாரிஜாதா பஹாணத்தில் பிரவானுடன் யுத்தஞ் செய்தவன். பூரிச்சிரவனால் கீழே தள்ளப்பட்டு அருச்சுனனால் தப்பினவன், கிருதவன்மனைக் கொன்றவன். 3. ஒரு அரசன் இவன் மனைவியரில் ஒருத்தி நாரீரத்னம் இவள் ஒரு சிவபூசா விருப்பினராகிய அரசரைக் கண்டு மோகித்துத்தான் அவரிடம் தன் கணவனைக் கொன்று விட்டு உம்மை மணக்கி றேன் எனச் சிவவிருப்பினராகிய அரசர் யாக்கையினிழிவையும் சிவபூசா விசே டத்தையுங்கூறி மறுத்து நற்கதி யடைந்தனர். (சிவ 1 ரக)

சாத்தத்தை மகருஷி கோத்திரன்

பொற்கடாரம் உரைமாற்றுக்கூறிப் புகழ்பெற்ற வணிகன்,

சாத்தந்தையார்

சாத்தன் தந்தை சாத்தந்தை என்றாயிற்று. (தொல் எழுத்து 347) இவர் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் போரிற்கொன்ற சோழன் தத்தன்மகன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் வீரச்செயலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் புறம் 80 இவர்மகன் கண்ணஞ் சேந்தனாரே பதினெண் கீழ்க்கணாகி லொன்றாகய திணைமொழியைம்பது பாடியவர். இச்சாத்தந்தையார் பாலைத் திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடி யனவாக நற்றிணையில் 26ம் பாடலொன் றும் புறத்தில் நாலுமாக ஐந்து பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

சாத்தனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர், (குறுந்தொ)

சாத்தன்

1. ஐயனார்க்கு ஒருபெயர். 2. மகாசாத்திரனென்று பெயர்பெற்ற வணிகன். கோவலன் காலத்தவன். 3. மணிமேகலை நூலாசிரியர். இவரைச் சீத்தலைச்சாத்தனார், பதுரைக்கூல வாணிகன் சாத்தனார் எனவுங் கூறுவர். சிலப்பதிகாரம் உடனிருந்து கேட்டவர். 4. ஒல்லையூர்க்கிழவன் மகன் பெருஞ் சாத்தனுக்கு ஒருபெயா. 5 மகாசாத்திரன் என்னும் ஒரு சாஸ்திரி.

சாத்தராயணர்

பிரகத்பானு என்னும் விஷ்ணுவின் தந்தை.

சாத்தானியர்

இவர்கள் பெருமாள் கோவிலில் வேலை செய்யும் ஒருவகை வைணவ வடுகர். இவர்கள் பிராமணர்கள் போல் பூணூல் சாத்தாதனால் சாத்தாதவர்கள் என்னும் பெயர்பெற்றனர். இவர்கள் சூத்சர் இவர்கள் தங்களைச் சைதன்யன் என்னும் குருவின் வழிவந்தவர்கள் என்பர் அது தவறு. இவர்கள் தொழில் பூததொடுத்தல், திருமண் ஸ்ரீசுர்ணம் செய்தல் இவர்களுக்குப் பட்டம் ஐயர் இவர்களின் பிரிவு ஏகாக்ஷரி, சதுரக்ஷரி, அஷ்டாக்ஷரி, குலசேகரம். இவர்கள் தென்கலை வைஷணவ பிராமணரின் நடையுடை ஆசாரதைப் பெற்றவர். இவர்கள் தங்களுக்குத் தாங்களே புரோகிதம் செய்து கொள்வர். பின்னும் இவர்கள் பிரபன்ன வைஷ்ண வர்களென்றும் நம்பிகள் என்றும் வேங்சகடபுர வைஷ்ணவர் என்றும் கூறப்படு வர். இவர்கள் தலையில் சிகை, பூணநூல், பின்கச்சம் சாத்தக்கூடாதென்று இராமாநுசர் கட்டளை பெற்றவர்கள் இவர்களின் பெண்கள் பிராமணப் பெண்களை நடையுடைகளில் ஒப்பர், இவர்கள் குரு, பரவாஸ்து.

சாத்தியகணம்

தருமனுக்குச் சாத்தியாவிடம் உதித்த குமரர்.

சாத்தியசமை

திருஷ்டாந்தத்தைப் பக்ஷத்திற் சொத்ததாகக் கூறுவது.

சாத்தியபாலன்

சான்றினர், சபையினர், உபயவாதியர், இவர்களை அழைத்தலும். சாத்தியப் பொருளைக் காத்தலும் செய்யவன். (விவகார சங்கிரகம்.)

சாத்தியர்

ஒருவகை தேவவகுப்பினர், சாத்யை குயரர். இவர்கள் பன்னிருவர் என்பர்,

சாத்தியை

தருமப்பிரசாபதியின் தேவி, தக்ஷன் பெண், குமார் சாத்தியர்.

சாத்திரம்

(3) சாங்கியம், பாதஞ்சலியம், வேதாந்தம். (6) வேதாந்தம், வைசேடி கம், பாட்டம், பிரபாகரம், பூர்வ மீமாம்சை உத்தரமீமாம்சை.

சாத்துதன்

யதுகுலத்தாசனாகிய வசுதேவன் வம்சத்து அரசன்.

சாத்துவதன்

1. அங்கிசு குமரன், இவன் குமறர் பசமானன், பிசி, திவ்யன், விருக்ஷணி, தேவாவிரதன், அந்தகன், மகாபோசன். 2. விதர்ப்பன் குமாரனாகிய கிருதுவம் சத்தவன், 3 விஷ்ணு பரிசாரகன்.

சாத்துவதி

1. சுருதச்சிரவை என்பவள். 2. தமகோஷன் தேவி, சிசுபாலனுக் குத்தாய். கண்ணனை நோக்கித் தன்குமரன் செய்த நூறு பிழைபொறுக்க வரங் கேட்டவள், 3. நாடக விகற்பத்தொன்று இது தலைமக்களில் அறப்பொருள் உபாங்கமாவது (வீர~சோ.)

சாத்தேயம்

ஒரு மதம், இதை வாமமதம் என்பர். இது சத்தியே பாதேவதை

சாத்யசுரலக்ஷணம்

சுரரோகிக்குக் கண், பார்வை, சரீரம், பஞ்சேந்திரியம் இயற்கையாகக் காணினும், மனம் சாந்தமாயிளைக்கா திருக்கினும், உள்ளங்கை உள்ளங்கால்கள் சூடு பிறந்து சிறிது தாகமுண்டாகி நாவில் நீர் ஊறினாலும், இரவில் அயர்ந்த நித்திரையிருக்கினும், சரீரம் இலேசாயிருக்கினும், தேடிக்காணாத மருந்து எளிதில் கிடைப்பினும் சோகம் சாத்யமாம். (ஜீவ.)

சாத்யவிகலன்

இது திருஷ்டாந்தா பாசத்தென்று, மனம் அரிதியம் மூர்த்தமாகையால் என்கிற ஏதுவில், பரமாணுவைப் போல் என்கிற திருட்டாந்தம், அநித்யத்வம் என்கிற சாத்திய மிலலாதபடியால் என்க

சாத்யவியா விருத்தன்

எது சாத்யங்களுக்குக் கன்மவத் என்கிற திருஷ்டாந்தத் தால் இப்படிக் கொத்தவிய திரேகத்தினால் சாத்யமாயிருக்கிற அநித்ய தவம் வியாவிருத மாகாமலிருக்கை. (சிவ~சித்)

சாத்விகராஜன்

ஜகந்நாத க்ஷேத்திரத்தில் நாடோறும் ஆலய தரிசனத்திற்கு வந்து பகவத்பிரசாதத்தைக் கைக்கொண்டு செல்லும் நாட்களில் ஒருநாள் அரசன் மகாதுவாரத்தில் உட்கார்ந்துகொண்டு காலப்போக்குக் காரணமாகச் சொக்கட்டான் ஆடிக்கொண்டு பாய்ச்சிகைகள் வீசி அதின் வயப்பட்டுப்பகவத் பிரசாரம் வாங்கிக் கொள்ள இடக்கையை நீட்டுகையில் அர்ச்சகன் கொடாதிருத்தல் கண்டு மந்திரியை நோக்கி ஒருபேய் எனக்கு முன் கையை நீட்டித்தொந்தரை செய்கின்றது நீ சாளாத்திடை வந்திருந்து அக்கையைத் துணிக்க வென்ன அவ்வாறு மந்திரி வந்திருக்கையில், அரசன் கைந்நீட்ட, மந்திரி அரசன் கையைத் துண்டித்தனன், அரசன் துடிக்கக்கண்ட மந்திரி, பரி தபித்தலை, அரசன் கண்டு, தேற்றித் தன்கரத்தைப் பல்லக்கிலவைத்துப் பெருமாள் சந்நிதியில் அனுப்பினன். அங்கிருந்த பாகவதர்கள் அக்கைமேல் ஜயஜயவென்று கந்தப் பொடிகளிறைக்கக் கை மருக்கொழுந்தாயிற்று, அதனைப் பெருமாளின்றிருவடியில் சாத்தி அரசனுக்குப் பிரசாதம் அனுப் பினர். அதனை அரசன் ஏற்கக் கைநீட்டு கையில் குறைந்தகையும் வளாப்பெற்றவன்,

சாநந்தன்

கௌசிகன் மருமகன்.

சாநன்

பூத்திரன் போன், ஒரு இருடி,

சாநவி

கங்கைக்கு ஒருபெயர். சந்நுவைக் காண்க.

சாந்தகவிராயர்

இவர் பிறசையிற் பிறந்த கவிராயர். இரங்கேசவெண்பா இயற்றியவர்.

சாந்தனிகம்

பிரமபதத்திற்கு மேலதாய்ப் பரமபதம் போல் மீண்டும் வருதலில்லாப் பதவி.

சாந்தன்

1. சண்முக சேனாவீரன். 2. அகன் என்னும் பெயருள்ள வசுபுத்திரன். (பா~ஆதி.)

சாந்தபன கிருச்சரம்

கோமயம், கோமூத்ரம், பால், தயிர், நெய், தருப்பை ஜலம் இந்த ஆறினையும் ஆறு நாட்கள் புசித்தலும் ஒருநாள் உபவாச மில்லாமையுமாம்.

சாந்தபனம்

ஒருவிரதம், இது மூன்று நாள் பகல் போஜனம் மாத்திரஞ் செய்து பின் மூன்று நாள் இராப்போஜனம் மாத்திரம் செய்து மூன்று நாள் கேட்காமல் கிடைத்த பொருளையுண்டு, மூன்று நாள் அன்னமின்றி உபவாசமிருத்தல்.

சாந்தமகாருஷி

தக்கர் எனும் முனி புத்திரர். துந்து எனும் இராஜதமானால் இறந்த முனிவன்ர எழுப்பினவர்.

சாந்தர்

சுதாபா முனிவரைக் காண்க.

சாந்தலிங்கக்கவிராயர்

சோழநாட்டில் மண்டலைச் சேரியிற் பிறந்தவர், தண்டலையார்சதம் பாடியவர் இதற்குப் பழமொழி விளக்க மெனவும் பெயர்

சாந்தலிங்கசுவாமிகள்

1, இவர் பேறையூர். காளத்திதேவா மாணாகர். குமார தேவருக்கு ஆசிரியர் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலைமறுத்தல் இயற்றியவர். இவர் செய்த நூல்களுக்குச சிதம்பர சுவாமிகள் உரை செய்தனர். சாலிவாகனசகாப்தம் (1600) இல் இருந்தவர். 2, இவர் தொண்டைநாட்டுத் திருமழிசையூரினர். இவர் செய்த நூல் வீராகமம்.

சாந்தாசுரன்

ஒரு அசுரன், இவன் இந்திராதிகளை வருத்தத் தேவர் சிவமூர்த்தியை வேண்டினர். சிவமூர்த்தி இவனையுதைக்க அதனாலிறந்தவன்.

சாந்தி

1. கர்த்தமபிரசாபதியின் பெண். அதர்வணருஷியின் பாரி. 2. யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணையிடம் உதித்த குமரன், 3. அஜரீடனுக்குப் பேரன். 4, வசுதேவனுக்குத் தேவி, குமரர் பிரசியமன், பிரசிரதன். 5. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்த குமரி, யமன் தேவி 6. நீளன் குமாரன், இவன் குமரன் சுசாந்தி. 7. சிவாகமங்களில் கூறிய கலைகளில் ஒன்று, இதில் (18) சுத்தபுவனம் உள என்பர். 8. பூதியின் மாணாக்கன். பௌத்திய மன்வந்தரத்தைக் காண்க.

சாந்தி தீர்த்தங்கரர்

இவர் சைநசுவாமி. குருசாங்கல தேசத்தில் அத்தின புரத்தில் குருவம்சத்திற் பிறந்தவர், தந்தை விசுவசேனர், தாய் அயிராதேவி. இவர் பிறந்த நாள் கிருதயுகம் ஆனிய கிருஷ்ணபக்ஷம்: சதுர்த்தி, பரனி. இவர் உன்னதம் (40) வில் சுவர்ணவர்ணம், ஆயுஷ்யம் நூறாயிரம் வருஷம், புத்தரன் நாராயணன் இவர் திரிசஷ்டி சலாகாபுருஷரில் ஒருவர். சுக்கிரவர்த்தியாய் அரசாண்டவர். இவர்க்குக் கணதரர்சக்ராயுதர் முதல் முப்பத்தறுவர். இவர் பதினாறாவது தீர்த்தங்கரர்.

சாந்திகன்

இவன் ஒரு வேதியச் சிறுவன், இளமைமுதல் ருத்திராக்ஷம் அணிந்திருந்தனன். இவன் தந்தை சுபுத்தன். இயனை ஒரு அரசனுக்கு விற்றனன் அவ்வரசன் இவனைக் காளிக்குப் பலியிடச் செல்லுசையில்காளி இவன துருத்திராக்ஷ கோலம் கண்டு அஞ்சி அரசனை நோக்கி இவனுக்கு அவன் பெண்ணைக் கலியாணஞ் செய்து வைக்கக் கட்டளையிடப் பெற்றவன்,

சாந்திகலை

இதில் உள்ள புவநங்கள் சுத்த வித்தையில் வாமை, சேட்டை இரெளத்திரி, காளி, கலவிகரணி, பெலவிபாணி, பெலப்பிரமதனி, சருவபூத தமனி, மனோனமனி, என்னும் நவசத்திகள் புவனம் ஒன்பது ஈசுபதத்துவத்தில் அநந்தன், சூக்குமன், சிவோத்தமன், ஏநேத்திரன, ஏகருத்திரன், திரிமூர்த்தி, சீகண்டன், சிகண்டி என்னும் அட்டவித்தியேசுரர் புவனம் எட்டு சதாசிவதத்துவத்திற் சதா சிவபுவனம் ஒன்று ஆகத்தத்துவம் மூன்றினும் அடங்கிய புவனம் பதியனட்டு.

சாந்திதேவர்

தேவகன் குமரி,

சாந்திபனி

அவந்திதேசத்துப் பிராமணர் இவரிடத்துப் பலராம கிருஷ்ணர்கள் வித்தியாப்யாசஞ் செய்தனர். இவர் பலராம கிருஷ்ணர்களைப் பிரபாசதீர்த் தத்து முதலையால் இறந்த குமரனை உயிர்பித்துக் சொடுக்கக்கேட்டுப் பெற்றவர்.

சாந்தியத்தை

சிவாகமங்களுட் கூறியாகவைகளில் ஒன்று இதில் இத்திகை, பிசை, இரோசிசை, மோசியா, பார்வகாமினி, வியாபினி, வியோமருபை, அருந்தை, அராதை, அநாரிருதை என (15) சுத்த புவனங்கள் உண்டு,

சாந்திரதன்

திருகுத்துக் குமரன். இவன் ஆத்மஞானியாயினான்.

சாந்திரமானம்

சந்திரனை முதலாகக் கொண்டு கணிக்கும் கணிதம்,

சாந்திரவர்க்கன்

ஒரு இருடி. அதர்வண வேதி.

சாந்திராயன விரதம்

இவ்விரதத்தை யநுஷ்டிக்கத் தொடங்கினவன், கிருஷ்ண பக்ஷத்தில் கௌரஞ் செய்து கொண்டு வெள்ளை வஸ்திரமுடுத்து முஞ்சத்தாற் செய்த அரைஞாண் அணிந்து பவாசதண்ட மெடுத்துக்கொண்டு பிரமசரிய விரத மநுட்டிக்க வேண்டும். சுக்லபக்ஷ பிரதமையில் முந்தி உபவாசித்துச் சுத்தமான இடத்தில் அக்னியை வைக்கச்செய்து ஆகாரம், ஆஜ்யபாகம், பிரணவம்,வ்யாஹ்ருதி, வாருணம் என்னும் பஞ்சஹோமங்களையும் செய்து பின் சதயம், விஷ்ணு, பிரம்மருஷி, பிரம்மா, விச்வதேவர், பிரஜாபதி என்று ஆறுஹோமம் செய்து பின் பிராய சித்தஹோமம் செய்யவேண்டும். பின் சாந்தி செய்து அக்னிகார்யம் முடித்து அகனிஸோ மனை நமஸ்கரித்து விபூதியணிந்து சுத்த தீர்த்தத்தில் ஸ்நானஞ்செய்து அதுஷ்டான முடித்துக் கைகளைத் தூக்கிக் கொண்டு சூர்யனைப் பார்க்கவேண்டும்., பின்னிருகைகளையும் குவித்து நின்று பிரதக்ஷணம் செய்யவேண்டும். பின்ருத்ர, விஷ்ணு, பிரம சூக்தங்களில் ஒன்றையாவது வேறெந்த சூக்தத்தையாவது, 100, 1000, தரமாயினும் செபிக்கவேண்டும். மத்யானத்தில், பொன், வெள்ளி, தாமிரம் மண், அத்திப்பலகை முதலியவற்றால் செய்த பாத்திரங்கொண்டு ஏழு பிராம்மணர் வீடுகளில் மௌனமாகப் பிச்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழுருண்டைகள் செய்து (1) சூரியன் (2) பிரமன், (3) அக்னி, (4) சோமன் (5) வருணன், (6) விச்வேதேவர்களுக்குக் கொடுத்து மிகுந்ததை மூன்று விரல்களால் சந்திரன் நாடோறும் வளர்தன் தேய்தல் போல் உருண்டை களையும் வளர்தல் சுருங்சல் செய்து உண்ணலாம். இதை அநுஷ்டித்தால் பாவநீங்கும். (பார~அச்)

சாந்திலை

தெய்வ நாட்டுக் கற்பினிகைகைக்குக் கற்பினிலை கூறியவள்.

சாந்துப்புலவர்

இவர் பாண்டி நாட்டு தருப்புனவாயிலும் கணித்தான சறுகம் பையூர்வாசி சைவ வேளாண்மாபினர். மயூரகிரிக்கோவை பாடியவர்.

சாந்துவகை

(4) பீதம், கலவை, வட்டிகை, புலி,

சாந்தை

1. தஷன் பெண், தருமந்தேவி, 2, தசரதன் குமரி. உரோமபதன் ஸ்வீகார புத்திரி. இவள் ஒருசிகசிங்கரை மணந்தனள்.

சாந்தோக்யம்

ஒரு உபநிஷத்து.

சாந்தோக்யர்

சாமவேதிடராகிய வேதியர்.

சானகாட்டன்

தருமகுத்தனைப் பித்தனாகச் சபித்த இருடி.

சானச்சுருதி

இரக்குவன் அருளால் அறிவு பெற்றவன்,

சானவி

சந்து மகருஷியின் காதின் வழி பிறந்த நதி சந்துவைக் காண்க.

சான்மலி

சப்த தீவுகளில் ஒன்று,

சான்றகாத்வர்

சுரோத்ரியன். திருடன், தானே பேசுவோன், சொன்னிலை மையற்றவன், பிரமசாரி, வானப்பிரத்தன், சந்தியாசி, சாஸ்திரவிருத்தன், அரசசேவகர், சினத்தன், கொடியன், நிந்திதன், கோட்சொல்வி, சிற்பியர், கூத்தர், புகழ்வோன், கள்விற்போன், சிற்றுண்டி வியாபாரி, வட்டி வாங்குவோன், ஆசாரானன், புறங்கூறுவோன், நிலையில்லாதவன் முதலியோர். (விவகார சங்கிரகம்.)

சான்றான்

சூத்திரன் அரசகன்னிகையைப் புணரப் பிறந்தவன். இவன் கள்விற்று ஊர்ப்புறத்து வாழ்பவன். (அருணகிரி புராணம்.)

சான்றினர்

அயலானுடைய காரியத்தை யெதிரே பார்த்தலினாலேனும் கேட்டலினாலேனும் உண்டானவை கூறுவோர்.

சாபத்தி

கபஸ்தன் நிருமித்த கௌடதேசத்துப் பட்டணம்.

சாபம்

இது பெரியோரை அவமதித்தல் முதலியவற்றால் உண்டாகும் கோபத்தின் பயன் இச்சாபம் கிருதயுகத்தில் அக்கணத்திலும், திரேதாயுகத்தில் பத்துகாளிலும், துவாபரயுகத்தில் ஒரு திங்கள் அளவினும், கலியுகத்தில் ஒரு வருட அளவினும் பலிக்கும்.

சாபாலி

1, ஒரு இருடி, பத்தியன் மாணாக்கன். 2. இராமமூர்த்த அரசிலிருந்த ஒரு நாஸ்திகன்.

சாப்பிடத்தகாத பொருள்கள்

முள்ளங்கி, முருங்கை, வெங்காயம், காளான், அசுத்த நிலத்திலுண்டான பதார்த்தங்கள், உள்ளிப்பூண்டு, சீப்பால், அதன் தயிர், தேவதைகளைக் குறியாது, சமைத்த சித்திரானனம், பலகாராதிகள். யாககாரியம் ஒழிந்து கொலை செய்யப்பட்ட ஜெந்துக்களின் மாமிசம், கன்று போட்டுப் பத்து நாளாகாத பசு, ஆடு, எருமை, புணரும் பருவமுள்ள பசு, இவற்றின் பால், செம்மறியாடு, கன்று செத்த பசு, சினைப்பசு இவைகளின் பால், புளித்தபால், புளித்த வெண்ணெய், ஜலசம்பந்தத்தால் புளித்த பழம் (கிழங்கு, ஊறுகாய்கள், அரிசி, மாமிசம்) இவைகளைச் சாப்பிடுகிற பக்ஷி, ஊர்ப்புறா, ஊர்க்குருவி, நீர்க்காசகை, அன்னம், சக்கிரவாகம், ஊர்க்கோழி. கொக்கு, நாரை, ஊர்ப்பன்றி, சராசப்பதி, சகலவித மீன்கள், இவைகளை நீக்கவேண்டியது. கும்பலுடன் சஞ்சரிக்கிற மீனும், சிங்கமுக மீனும், முள்ளுள்ள மீனும், ஆபத்துக் காலத்தில் சாப்பிடலாம். சாப்பிடலாம் என விதித்த பக்ஷி, மிருகங்களில் ஐந்து நகம் உள்ளவைகளை நீக்கவேண்டியது. புசிக்க ஆவச்யகமான பிராணிகளைத்தன் மாதா பிதா யக்டம் இவர்கள் பொருட்டு உபயோகித்துக்கொள்ளலாம்.

சாமகன்

ருசகன் குமரன் இவன் பாரி சயிப்யை. இவன் பகைவருடன போர் புரிந்து பகைவன் குமரியை கொண்டு வாக்கண்ட இவன் தேவி, இவள் யார் என்றனள். மனைவிக்குப் பயந்த அரசன் இவள் உன் மருமகள் என்றனன். அரசி இன்னும் குமரன் இலாதிருக்க மருமகள் என்றது என்னென அரசன் இனி உன் வயற்றிற் பிறக்கும் புத்திரனுக்கு என்றனன் இதைககேட்ட பிதுரர் புத்திரப் பேறு அரித்து அப்பெண்ணை மணக்கச் செய்வித்தனா, இவன் குமரன் விதர்ப் பன. (பாகவதம்.)

சாமதக்கினி

பரசிராமன்.

சாமந்தநாபாயனத் தொண்டமான்

தஞ்சாவூரில் சாமந்தநாராயண விண்ணசர் நிய மித்தவன்.

சாமந்தன்

1, சவுந்தராமந்தனைக் காண்க, சாமிநாததேசிகர் 2. நூறு சிற்றூர்களுக்கதிபன் அல்லது ஓர் அரசன் கீழ்வேதனம் பெற்று இறைப் பொருளைக் குடிகளிடம் தண்டி யரசனுக்கு அளிப்பவன். (சுக்~நீ.)

சாமந்தர்

மலையாளத்திலுள்ள சாதியாரில் ஒருவகை, இவர்கள் தாமூரி ராஜவம்சத்தவர் எனவும், பரசுராமருக்குப் பயந்து காட்டில் வசித்திருந்து சேரமான் காலத்து வந்து குடியேறினவர்கள் எனவும், மந்திரமிலாது பிராமணர் செப்பம் எல்லாக் கிரியைகளையும் செய்பவர்கள் எனவும் கூறுவர். (தர்ஸ்டன்,)

சாமன்

சாமன் தம்பி,

சாமயிக பத்திரம்

வர்த்தகர் தங்கள் பொருள்களை தொழிற் பொருட்டு ஒன்று கூடிச் சேர்த்து அதன் பொருட்டு எழுதிக் கொள்வது,

சாமவதி

சமந்தினியைக் காண்க,

சாமவான்

சீமந்தினியைக் காண்க.

சாமவேதம்

இது ஆயிரம் சாகைகளுடையது. இதற்குள்ள உபநிடதங்கள் கேனம், சாந்தோக்யம், ஆருணி, மைத்திராயணி, மைத்திரேயி, வச்சிரசூசிகை, யோகசூடாமணி, வாசுதேவம், மகத்து, சந்நியாசம், அவ்வியக்தம் குண்டிகை, சாவித்திரி, உருத்திராக்கசாபாலம், தரிசனம், சாபாலம் எனப் பதினாரும், இது மூன்றாம் வேதம்.

சாமான்யக்காட்சி

சமுதாயமாயறிவது, அதாவதி, சமலாய குணததோடு கூடித் தூலகன்மங்களையறிலை, (சிவ~சிக)

சாமி

(ஜாமி) தக்ஷன் பெண், தருமன் தேவி, குமரன் சுவர்க்கன்.

சாமித்திரன்

இவன், சக்கிரவாகுவின் பெண் தரித்திருந்த முத்தொடு கலந்த உருத்திராக்ஷ மாலையைத் தானியமென்று கவர்ந்து சென்ற காகம மணியைத் தானியம் அகலாமைகண்டு நழுவவிட்டது. அம்மணிமாலை இவன் கழுத்தில் விழுந்ததால் அதைப் புனைந்து திமைநீங்கி முத்திபெம்றவன்.

சாமிநாத ஐயர்

இவர் கும்பகோணம் உத்தமதான புரத்திருந்த வேதியர், திரிசிரபுரம் மீனாடி. சுந்தரம்பிள்ளையவர்களிடம் தமிழ் நூல்கள் மற்றவர், இலக்கிய இலக்கணங்களில் வல்லவர் இவரது தவியாற் பலர் தமிழிலக்கிய வலவர்களாயினர். இவர் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, பதித்துப்பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, பரிபாடல், கொங்கு வேண்மாக்கதை முதலிய தமிழிலக்கியங்களைப் பரிசோதத்துதவிய பேருதவியாளர். கும்பகோண கலாசாலையிலும், சென்னை சாலகலாசாலையிலும் தமிழ்ப்புலமை கடாத்தியவர்.

சாமிநாததேசிகர்

சங்கர நரமச்சிவாயப் புலவர்க்கு ஆசிரியர் இலக்கணக் கொத்து இயற்றியவர்.

சாமிநாதன்

குமாரக்கடவுள்; பிரமனைப் பிரணவப்பொருள் வினாவிய காலத்தில் அவன் கூறாததால் அவனைச் சிறையிட்டனர். இதனை அறிந்த சிவமூர்த்தி குமாரக் கடவுளை அதற்குப் பொருள் கேட்க அக்காலத்தில் குமாரக்கடவுள் சிவமூர்த்தியை மாணாக்கர்போல் இருக்கச்செய்து தாம் அதற்குப் பொருள் அருளிச்செய்த குமரக்கடவுள் திருவுரு.

சாமிப்புலி

சம்மட்டி மக்கள் இவ்விருவரும் கள்ளர் சாதியின் பகுப்பு.

சாமுண்டை

சத்தகன்னியரிற்றலைவி. சாமுண்டனைக் கொன்றதால் இப்பெயர் பெற்றனள். இவள் நீளநாக்கு, நீளமயிர், நீண்டமூக்கு வளைந்த கோரப்பற்கள் தலை மாலை, மாம்சம் நிறைந்த கபாலம் சூலம் உடையவளாய் இருப்பள். இப்பெயர் அம்பிகையா லிவளுக்கு இடப்பட்டது. இவள் சத்தியினம்சம்,

சாமுர்த்தம்

யாதொரு மூர்த்தத்திற்கு (5) ஆம் இடத்திற் சநியும் (7) ஆம் இடத்தில் சுக்ரனும், (10) இடத்தில் புதனும், (9) ஆம் இடத்தில் செவ்வாயும், (6,8,) ஆம் இடங்களில் வியாழனும் (12) ஆம் இடத்தில் ஆதித்தனும், இராகுவும், (6,8) ஆம் இடங்களில் சந்திரனும், இவற்றில் ஒருவர் இப்படி நிற்கில் மிருத்து முகூர்த்தமாம். (விதானமாலை.)

சாமை

சயூடணனுக்குக் குமரி, விபீடணன் தேவி,

சாம்பனத்தம்

சைனர்களுடைய ஏடுகள் நெருப்பால் வெந்த இடமாம். (திருவிளை யாடல்.)

சாம்பன்

1. சாம்பவதி குமரன். கிருஷ்ணனால் தவஞ்செய்து பெறப்பட்டவன். இவற்கு ஒன்பதின்மர் தம்பியர். இவன் துரியோதனன் குமரியாகிய இலக்கு மணையை மணந்தவன். ஒரு நாள் இவனை யாதவர்கள் கர்ப்பிணிவேஷம் போட்டுப் பிறக்கிறது ஆணோ, பெண்ணோ எனக் கண்வர் முதலிய ருஷிளைக்கேட்க முனிவர்கள் இவள் வயிற்றில் உலக்கை ஒன்று பிறந்து உங்கள் குலத்தை நாசஞ் செய்யும் எனப் புகன்றனர். அந்தப்படி இருப்புத்தூண் பெற்றவன். கண்ணன், கோபிகைகளுடன் கூடிச் சலக்கிரீடை செய்கையில் அவ்விடம் சாம்பன் அறியாது சென்றனன். அப்பெண்கள் சாம்பன் அழகைக் கண்டு சித்த சலனப்பட்டனர். இதனை யறிந்த கண்ணன் சாம்பனைக் குட்ட நோய் கொள்ளச் சாபம் அளித்தனன் சிவாநுக்ஹத்தால் ஈருஷ்ணமூர்த்திக்குப் புத்திரனாகப் பிறந்தவன. இவன் பிரளயகால சூரியன், இருடிகளின் சாபத்தால் மனுஷனாகப் பிறந்தவன். (சிவமகாபுராணம்). 2. (ச.) குசன் குமரன். 3. வானர சேனைத் தலைவன். 4. துத்திரடன் குமரன். இவன் அரசனாயினும் பஞ்சமகாபாதகஞ் செய்து தனக்குப்பதில் தன் மந்திரியை நியமித்தனன். அம்மந்திரியம் குடிகளை வருத்தினன். இருவரும் விதாப்பநாட்டில் வேடராகப் பிறந்து விநாயகபூசையால் முத்தியடைந்தனர். 5. கிருஷ்ண சாபத்தால் குஷ்டநோய் பெற்றுச் சூர்யபூசையால் விமோசன மடைந்சான். (பவிஷ்~புரா.) 6. தென்னாட்டுப் பறையர்க்கு ஒரு பட்டம்.

சாம்பமூர்த்தி

உமையுடன் கூடிய சிவமூர்த்தி

சாம்பவதி

சாம்பவான் அல்லது சாம்பவந்தன் குமரி. கிருஷ்ணனை மணந்தவள். இவளுக்குச் சாம்பன் முதலிய நூறு குமரர் பிறந்தனர் இவள் சிவபூசையால் சாம்பனைப் பற்றாள்.

சாம்பவந்தன்

பிரமபுத்திரனாகிய கரடி வேந்தன. வாமனர் மாவலியிடத்தில் மண்கொண்ட காலத்துப் பறையறைந்து மேரு இடறக் கால் தளர்ந்தவன். இராமராவண பாத்தத்தில் பிரம்மாதிரத்தால் அனைவரும் மூர்ச்சித்த போது அனுமனுக்குச் சஞ்சவியன் இருக்கைகூறி அது வந்த பிறகு பழைய இடத்திற்குப் போக நியமித்தவன். அமிர்தமதன காலத்து இருந்தவன். சிரஞ்சீவிகளில் ஒருவன். சியமந்தகமணியின் பொருட்டுக் கண்ணனிடத்தில் (28) நாள் யுத்தஞ்செய்து சலித்து விஷ்ணுமூர்த்தியென்று அறிந்து மணியையும் தனது புத்திரியாகிய சாம்பவதியைாம் அவர்க்குக் கொடுத்தவன். இவற்குச் சாம்பவான், சாம்பவந்தன் எனவும் பெயர். குமரி சாம்பவதி. இவன் பூர்வத்தில் பிரமபுத்திரன், வாமனர் மண்ணளந்த காலத்துத் திருவடி பிரமலோகம் அடைய அவ்விடம் பூசித்தபோது பெருமாள் உனக்கு என்ன வரம் வேண்டு மென்ன உமது சக்கரத்தால் மரணம் வேண்டுமென அவ்வாறே கிருஷ்ணாவதாரத்தில் செய்கிறோம் என்று ஒருமணிபொருட்டுச் சக்கரத்தாற் கொல்ல இறந்தவன். (கல்கி புராணம்).

சாம்பவான்

சாம்பவந்தனைக் காண்க.

சாம்பாசுரன்

ஒரு அசுரன் இவன் பிரத்தியும்நன் தனக்கு விரோதி என எண்ணிச் சிசுவாயிருக்கையில் கடலில் தூக்கி வந்து இட்டனன் அச்சிசுவை மீன் விழுங்கிற்று. அம்மீனை உலைஞன் பிடித்சனன். அந்த மீனைச் சேதிக்க அதன் வயிற்றில் குழந்தையிருந்தது. அதைச் சாம்பாசுரன் மனையிலிருக்கும் மாயாவதி வளர்க்க அவனால் சூரன் கொலையுண்டனன்.

சாம்பாதித்தன்

சாபன் நாரதனை வணங்காத்தால் வயிரங்கொண்டு கண்ணனை நோக்கிப் பெண்கள் கூடியிருக்குந் தருணத்தில் அழகுள்ளான் குமரனாயிலும் சித்தசலனம் உண்டாம். ஆதலால் இப்போது இவ்விடம் சாம்பன் வந்ததினால் இப்பெண்களது முகம் வேர்க்கின்றது; எனக் சண்ணன் சாம்பனைச் கோபித்துக் குட்டநோய் அடைக எனச் சபித்தனன். அவ்வகை சாம்பன் குட்டநோய் அடைந்து காசியில் சூரிய பூசைசெய்து சாபம் நீங்கப் பெற்றான். சாம்பன் தொழுததால் சாம்பாதித்தன் எனச் சூரியன் கூறப் பட்டனன். (காசிகாண்டம்).

சாம்பான்

இடையரிலும், பறையரிலு ஒருவகை வகுப்பு.

சாம்பிராணி

இது, பார்னியோ, ஜாவா, சுமத்ரா, ஸயாம் முதலிய இடங்களிலுண்டாம் ஒருவகை மாத்தின் பால். இதை இந்துக்கள் தங்கள் தேவதைகளுக்கு ஆராதனை மணப்பொருளாகக் கொள்கின்றனர்.

சாம்யமனி

பாகலிக புத்திரன். சோமதத்தனுக்கு ஒரு பெயர்.

சாயக்காரர்

சாயத்தொழில் செய்யும் சாதியார்.

சாயநாசாரியார்

சாமவேதத்தில் தாந்திய மென்னும் பிராம்மணத்திற்கு வியாக்கியானஞ் செய்தவர். மாதவாசாரியர் சகோதரர்.

சாயன்

1. தாதைக்குக் குருவிடம் பிறந்த குமரன். 12. ஆருணியாசனுடைய பெரும்படைத் தலைவர்களுள் ஒருவன். (பெ~கதை,)

சாயம்

1. பிரபாவின் குமரன். 2. அவுரி, நுணா, மஞ்சள், அரக்கு முத லியவற்றைப் பதப்படுத்திச் சாயம் ஊட்டுவது.

சாயலன்

காவிரிப்பூம்பட்டினத்திருந்த ஒரு வணிகன். எட்டிப்பட்டம் பெற்றான். (சிலப்பதிகாரம்)

சாயவகைகள்

இவை மரப்பட்டைகள் வேர்கள், மஞ்சள் அவுரிச்செடி முதலியவைகளிலிருந்து செய்யப்படுகின்றன. கருமை வெள்ளை, செம்மை, பசுமை, நீலம், மஞ்சள், இவை ஒன்றுடன் ஒன்று ஏற்றக் குறைவாகச் சேர்த்துக் கூட்டினால் பல வேறு வர்ணங்களாம்.

சாயாசுரன்

பாலகணபதியின் சாயையைப் பற்றி வருத்தவந்து விநாயகரது உறுத்த பார்வையால் இறந்தவன்.

சாயாதேவி

1. சூரியன் தேவி, சஞ்ஞா தேவியைக் காண்க. 2 இவள் இராமருக்குச் சீதைக்குப் பிரதியாகச் சீதையின் உருவமாக அக்னியால் கொடுக்கப்பட்டவள். இராவணவத முடிவில் உண்மையான சீதை வந்தபின் என் கதி யென்னவென இராமரைக் கேட்க நீபுட்கரத் தீவு சென்று தவம்புரிந்து சவர்க்கலஷ்மியாய்ப் பின் நீண்ட காலம் சென்று யஞ்ஞகுண்டத்திற் பிறந்து துவாபரயுகத்தில் திரௌபதியாய்ப் பாண்டவர்க்குத் தேவியாக என அவ்வாறானவள், (தே பா.)

சாயாபுருஷதரிசனம்

பகலிற் சூரியனையாவது, இரவிற் சந்திரனையாவது தனக்குப் பின்புறமாக்கி மந்திர செபத்தாற் தனது சாயையைப் பூமியிற்பார்த்துச் சிறிதுநேரத்தில் அவ்வகையே ஆகாயத்திற் பார்க்க அவ்வுரு ஆகாயத்தில் தோற் றும். இவ்வுரு சிரமில்லாது தோன்றின் ஆறு மாதத்தில் இறப்பான்

சாயும்படை தாங்கி

கள்ளர் சாதியில் ஒரு வகையார்.

சாயை

கணவன் இந்திரிய ரூபமாகத்தன் மனையாளை யடைந்து கருப்பமாகச் சனித்துப் பின் அவளிடத்தினின்று பிள்ளையாகப் பிறக்கிறபடியால் அக்கருத்தாங்கிய மனைவி சாயை எனப்படுவாள். (மநு.)

சாரகுமரன்

அநாகுலனைக் காண்க.

சாரங்கதரன்

இவன், இராஜயகேந்திர புறத்தரசனாகிய இராஜ நரேந்திரனுக்கு ரத்னாங்கியிடம் பிறந்த குமரன். இவன் தன் நண்பனுடன் புறாவிட்டு விளையாடுகையில் புறா ஒன்று சிற்றன்னை வீட்டில் புக இவனது அழகைக் கண்ட இராஜ நரேந்திரனுக்கு இளைய மனைவி சித்திராங்கி சாரங்கதரனை விரும்பிப் பலாத்காரம் செய்தும் இவன் உடன்படாததால் இவள் தன்னைப் பலாத்காரமாக இழுத்தான் எனப் புருஷனிடம் கூறினள் இராஜ நரேந்திரனிவனைக் காட்டில் கை கால்களைச் சேதிக்கச் செய்தனன். சாரங்கதரன் ஒரு சித்தர் அருளால் கைகால்கள் வளரப்பெற்று அரசனாயினான்.

சாரங்கன்

ஒரு வேதியன். இவன், பார்வதியாரின் தோழியர்களைப் புத்திரிகளாகப் பெற்றவன் இக்கன்னியர் மானிடராகப் பிறந்த சாபத்தைப் பேரூரில் சிவ பூசைசெய்து நீக்கிக்கொண்டனர்.

சாரங்கரவன்

ஜனமே ஜயனுக்குச் சர்ப்பயாசம் செய்வித்தமுனி. (பா~ஆதி)

சாரங்கி

மந்தபால முனிவனால் மணந்து கொள்ளப்பட்ட தாழ்ந்த சாதிப்பெண் இவள் பக்ஷியுரு கொண்டவளாக இருக்கலாம். மந்தபாலனைக் காண்க. (மநு.)

சாரசன்

1 திருசராட்டிரன் குமரன். 2. இராவணனுக்கு மந்தரி.

சாரச்வதம்

1. ஒரு வட நூல் இலக்கணம். 2, சரஸ்வதி தீரத்துள்ள தேசம் 5. சாரஸ்வதரைக் காண்க. ரா

சாரச்வதர்

1. ததீசி முனிவர் ஒரு காலத்து ஸரஸ்வதிந்தி தீரத்தில் ஸ்நானத்திற்குச் செல்ல இந்திரன் இவருடைய தவத்திற்கஞ்சி அலம்புசையை யனுப்ப ருஷி இவளைக்கண்டார். வீரியம் சரஸ்வதி நதியில் வீழ்ந்தது. அதைச் சரஸ்வதி கருத்தாங்கி இவரைப் பெற்று ருஷியிடங் காட்டிப் பெயரிடப்பட்டு வளர்த்தனள் இவர் வேதத்தில் வல்லராய் வளர்ந்து வந்தனர். இவ்வகை யிருக்கையில் பன்னிரண்டு வருடம் க்ஷாமம் உண்டாக இருடிகள் இடம் விட்டுப் பெயரத்தொடங்கினர். சாரஸ்வதரும் அவ்வாறு செல்லத் தொடங்குகையில் சரஸ்வதி நீ செல்லற்க நான் உனக்கு வேண்டிய மீனாசாரத்தைத் தருகிறேன் என்று நிறுத்தினள், க்ஷாமம் கழிந்து ருஷிகள் வேதந்தெரியாது மயங்குகையில் அவர்கள் இவரை ஆசாரியராகப் பெற்று வேதமுணர்ந்தனர். ததீசி தவஞ்செய்த தீர்த்தம் சாரஸ்வதம். இதில் பலராமர் தீர்த்த யாத்திரையில் ஸ்நானஞ்செய்தார். (பார~சல்) 2. அட்டகோண இருடியைக் காண்க.

சாரணன்

1. இராவண தூதன் வானரசேனை, கடற்கரையிலிறங்கியிருக்கும் செய்தியறிந்து இராவணனுக்கு அறிவித்தவன். 2. யதுகுலத்து அரசரில் ஒருவன் வசுதேவருக்கு ரோகணியிடம் பிறந்தவன். 3. யது வம்சத்துக் கிருஷ்ணனுடன் பிறந்தவன். (பா~ஆதி.)

சாரணர்

தேவசாதியார்.

சாரணை

சிவபூசையால் முத்திபெற்றவள்.

சாரதா

ஒரு மாயாதேவி.

சாரதாண்டாயினி

இவன்கேகய தேசத்தரசன். இவன் சுருதசேனை யென்பவளை மணந்து இருக்கையில் புத்திரில்லாமையால் கணவன் சொற்படி ஒரு வேதியனைக் கூடித் துர்ஜயன் முதலிய (3) மஹாரதர்களைப் பெற்றுக்கொண்டனள், இந்தச் சுருதசேனை குத்தியின் சகோதரி.

சாரதாபீடம்

சத்திபீடங்களில் ஒன்று.

சாரதை

வேதவிரதன் பெண். இவளைப் பதுமநான் என்னும் விருத்த வேதியன் அரசவலிமையால் மணந்து சுகம்பொது இறக்க, இவளும் இறந்து மறுபிறப்பில் ஒரு வேதியனை மணந்து சுகம்பெறாது அமங்கலையாயினன். இவ்வகை இவள் அமங்கலையா யிருக்கையில் ஒரு வேதியன் பிக்ஷைக்கு வந்தனன். அவனைச் சாரதை உபசரிக்க வேதியன், சுமங்கலியாய்ப் புத்திர பாக்கியத்துடன் இருக்க என்று ஆசீர்வதித்தனன். இதைச் சாரதை கேட்டுத் தான் கைமை என்று கூறினள். வேதியன் என்வாக்கில் வந்ததாயினும் நீ உமா மஹேச்வரவிரதம் அனுட்டிக்க என்று கூறி அவ்விரதத்தை அனுட்டிக்கச் செய் வித்தனர். அதனால் உமாதேவியார் தரிசனமாக வேதியன் சாரதையின் செய் தியை அறிவித்தனன். பிராட்டியார் இவள் இதற்கு முன் பாண்டிநாட்டில் ஒரு வேதியனுக்கு உள்ள இரண்டாவது மனைவி, பெயர் பதுமினி. இவள் தன் னொத்த மூத்த ஓரகத்திக்குச் சுகம் தராது இவளே அனுபவித்ததால் மூத்தவள் சுகம் பெறாது இறந்தாள். ஆதலால் இப்பிறப்பில் மணந்தும் கணவன் இறந்தனன். இவள் இனிப் பாண்டிநாட்டில் இவன் கணவனக் கனவிற் புணர்ந்து ஒரு புத்திரனைப் பெற்று ஒன்று சேர்வள் என்று மறைந்தனர். அந்தப்படி கனவில் கணவனைப் புணர்ந்து புத்திரனைப் பெற்றுக் கோகர்ணத்தில் கணவனைக் கண்டு சுகமுடன் இருந்தனள். (பிரமோத்தாகாண்டம்).

சாரத்துவதன்

சுருபாசாரியருக்கு ஒரு பெயர். (பா~ஆதி.)

சாரன்

1. இராவண தூதன், குரங்குருக் கொண்டு வாநாசேனைக்குள் புகுந்து விபீஷணராற் கட்டுண்டவன். 2. சண்முக சேனாவீரன். 3 செங்றெங் கொண்ட சிங்கவுருவாய் அனந்தரிடத்திருக்கும் தூதன்.

சாரமாமுனி

சோமசன்மன் குமார். உறையூரில் செவ்வந்தீசரைப் பூசிக்கப் பாதாளஞ்சென்று செவ்வந்திக்கொடி கொண்டு வந்து பதித்து அது வளர்ந்து பூத்தபின் மலரெடுத்துப் பூசித்து அம்மலரை வலிதிற்பெற்ற அரசன் பட்டணத்தை அழிக்கச் சிவமூர்த்தியை வேண்டினவர்.

சாரமேயன்

1. சுவபலருக்குக் காந்தியிடத்து உதித்த குமரன். 2. அக்குரூரன் தம்பி.

சாரம்

சிவசூரிய பீடம்.

சாரயணன்

கலாவதியைக் காண்க.

சாரஸ்வதவிரதம்

இந்த விரதம் தாராபல சந்திரபல யுக்தமான ஆதிவாரத்தில் ஆயினும், தான் ஏதேனும் விரதத்தைச் செய்யப்புகுந்த சுபதினத்திலாயினும் ஆரம்பிக்கவேண்டும். இதைப் 13. மாதம் செய்யவேண்டியது. இதில் சரஸ்ததி பூசிக்கப்படுவள். இதை ஆசரிப்பவர் கள் வித்தியாபிவிருத்தியும் பிரமலோக பிராப்பதியும் அடைவர். இது மச்சனால் மநுவக்குச் சொல்லப்பட்டது.

சாராயமட்டயந்திரம்

ஒரு சிறு கண்ணாடிக்குழையை ஒரு துளி குறையச் சாரா பத்தை நிரப்பிக் குழையினிரு மருங்கையு மூடிவிட்டால் அதில் ஒரு குமிழியுண்டாம். இந்தக் குமிழிநிலை, பூமி, மரம் முதலியவற்றின் பரப்பைச் சமமாக அறிவிக்கும்.

சாராயம்

அரிசி, வேலம்பட்டை திராக்ஷை முதலிய பலவகைப் பொருள்களைக் காய்ச்சும் வாவையினின்று வடிக்கப்படும் ரவப்பொருள். மயக்கி அறிவைக்குலைப்பது.

சாரிசிருட்டன்

சாரங்கபக்ஷியாயிருந்த இருந்த பாலமுனிவருக்கு இரண்டாங் குமரனான பக்ஷி.

சாரிப்புத்தன்

ஸ்ரீஞான சம்பந்தசுவாமிகளுடன் வாதிடவந்து சம்பந்தசரணாலயாரால் தோல்விபெற்றுச் சைவனான புத்தன்.

சாரியை

இது எழுத்துக்களையும் பதங்களையும் சார்ந்து பொருளின்றி வரும் எழுத்தும் சொல்லுமாம்.

சாரீரம்

இறைவன் ஆணையால் கர்மாது குணமாகத் தந்தை விந்து வாகனமாக மாதாவின் கருவழிப்பட்ட ஆன்மா, பத்து மாதமும் நிறைந்து பூமியில் மனித உருக்கொண்டு பிறப்பன். அப்பிறந்த சரீரத்தின் அங்க விபாகாதிகளைச் சுருக்கிக் கூறுவது. சரீரத்தில் சிரம், கரம், கால், அந்தராதி முதலிய அங்கங்கள் சிறந்தன. அந்தராதி என்பது முன்னர்க்கூறிய சிரம், கரம், கால், ஒழிந்த உறுப்புக்கள். இவற்றுள் கண், இருதயம் முதலிய பிரத்தியங் கங்களாம். இவ்வுறுப்புக்கள் பஞ்சபூத காரியமாய் நிற்கும். இச்சரீரத்தில் உள்ள இரத்தம், மாமிசம், மச்சை, குதம் முதலிய மாத்ருஜங்களும், தேகத்தில் ஸ்திர மாய் உள்ள சுக்லம், பெருநரம்பு, சிறுநரம்பு, எலும்பு, மயிர் முதலிய பித்ருஜங்க ளும், சித்தேந்திரியம் முதலிய ஆத்மஜங்களும் ஆம். இத்தேகத்திற்கு ஆயுளும், ஆரோக்கியமும், ஊக்கமும், ஒளியும், பலமும், ஸாத்மயஜங்களாம். தோற்றமும், நிலையும், வளர்ச்சியும், அசைவின்மையும், பாஜஸங்களாம். இத்தேகத்தில் எழுவகைத் தொக்குகள் உண்டு. அவை உண்ட அன்னத்தால் உண்டாம் உதிரத்தால் உண்டாவன அவற்றில் 1. பாஸினி; ஒரு நெல்லின் பதினெட்டில் ஒரு பங்கு கனம் உள்ளது. 2, லோஹினி; ஒரு நெல்லின் 16ல் ஒரு பங்கு கனம் உள்ளது. 3. ஸ்வேதா; ஒரு நெல்லின் 12ல் ஒருபங்கு கனம் உள்ளது. 4. தாம்ரா; ஒரு நெல் வின் 8ல் ஒருபங்கு கனம் உள்ளது. 5. வேதினி; ஒரு நெல்லின் 5ல் ஒருபங்கு கனம் உள்ளது. 6. ரோஹிணி; ஒரு நெல்லின் கனம் உள்ளது. 7. மாம்ஸவி. இது இரண்டு நெல்லின் கனம் உள்ளது. பின்னும் கலா என்னும் கிலேதம் ஒன்றுண்டு. அது ரஸாதி தாதுக்களின் அந்தங்களில் இருந்து தாதுக்களின் உஷ்ணத்தால் பாகப்பட்டு மாவயிரம்போல் சத்ததாதுக்களால் ஒவ்வொரு கலையை அடைந்து எழுவகைக் கலையைப் பெறும். இந்தக் கிலே தத்திற்கு, இரத்தத்திற்கு ஆதாரமான ரக்தாசயம், கபத்திற்கு ஆதாரமான கபாசயம் பக்குவாஹார ஸ்தானம் என்னும் ஆமாசயம், பித்தத்திற்கு ஆதார மான பித்தாசயம், பக்குவாஹார ஸ்தானமான பக்குவாசயம், வாயுவிற்கு ஆதாரமான வாயுவாசயம், முத்திரத்திற்கு இருப்பிடமான மூத்திராசயம் என எழுவகை ஆசயங்கள் ஆதாரங்களாம். ஸ்திரீகளுக்கும் கர்ப்பாசயம் ஒன்று அதிகப்படும். இது பித்த, பக்குவாசயங்களுக்கு இடையில் இருக்கும். மேற்கூறிய சப்தாசயங்களை சார்ந்து கோஷ்டங்கள் என்னும் அறைகள் உண்டு. அவை மார்புக்குள் தாமரை வடிவாய் இருக்கும். இருதயம் அல்லது இரத்தாசயம், செந்நிற ஈரல் என்னும் கிலோமம். நுரைஈரல் எனும் புத்புஸம் வயிற்றின் வலப்பக்கத்தில் உள்ள கறுத்த மாம்ஸ பிண்டமாகிய யக்ருது, மார்பின் இடது பாகத்தில் உள்ள பசுமையான மாம்ஸ பிண்டமாகிய பலீகம், (குடல் சுருட்டு) மலஸ் தானமாகிய உந்துகம், பக்கங்களில் நெல்லிக்காய் அளவு சிறிது நீண்டிருக்கும் மாம்ஸ விசேஷமாகிய விருக்கம், தொப்புளாகிய நாபி, நெஞ்சின் இடது பக்கத்தில் இருக்கும் மாம்ஸ விசேஷமாகிய டிம்பம், குடலாகிய ஆந்திரம், மூத்திரப் பையாகிய வஸ்தி முதலிய. பின்னும் சரீரத்தில் பதினாறு ஜாலங்களும், பதினாறு கண்டரங்களும் உள) (ஜாலங்கள் வலைபோன்ற உறுப்புக்கள்). அச்சாலங்கள் மணிக்கட்டுகளில் நன்னான்கும், காற்பாடுகளில் நன்னான்குகளுமாம். அவை நரம்புகளினாலும், சிறு நரம்புகளினாலும், எலும்பு, மாமிசங்களினாலும், கட்டுண்டு இருக்கின்றன. கண்டரங்கள் கைகளில் இரண்டு இரண்டும், கழுத்தில் நான்கும், கால்களில் இரண்டு இரண்டும், பிருஷ்டத்தில் நான்கும் ஆகப் பதினாறாம். கூர்ச்சங்கள் (6) (சிகாகார நரம்புகள்) அவை கைகளில் இரண்டும், கால்களில் இரண்டும், கழுத்தில் ஒன்றும், குறியில் ஒன்றுமாம். சீவநிகள் (7) (இழை ஒட்டினதை ஒத்த நரம்புகள்) அவை குறியில் ஒன்றும் நாவில் ஒன்றும், சிரசில் ஐந்துமாம். தசைப் பெரு நரம்புகளாகிய மாம்ஸாஜ்ஜுக்கள் (4) அவை முதுகெலும்பின் உள்ளும் புறம்புமாகிய இரு பக்கங்களிலும் இரண்டு இரண்டாக நான்காய்ப் பிருஷ்டபாகத்திலுள்ள மாமிசத்தைத் தாங்கிக்கொண்டு இருப்பன. அஸ்தி சங்காதங்கள் (14) (எலும்புக் கூடுகள்) அவை குல்பங்களில் ஒவ்வொன்றும், ஜாநுக்களில் (தொடைகளில்) ஒவ்வொன்றும், வங்க்க்ஷணங்களில் (தொடைச்சந்திகளில்) ஒவ்வொன்றும், திரிகல் (முதுகெலும்பின் கீழ்ப்பாகம்) ஒன்றும், சிரசில் ஒன்றும், கக்ஷங்களில் ஒவ்வொன்றும், கூர்ப்பரங்களில் (முழங்கை) ஒவ்வொன்றும், ஆகப் பதினான்காம். பசிமந்தங்கள் 18 (சந்திர வலயம் ஒத்த நரம்புகள்) சிரசில ஐந்து சிரம் நீங்கிய குல்பாதிகளில் ஒவ்வொன்று மாகப் பதினெட்டாம். எலும்புகள் தந்தாகங்களோடு கூடி (3160) அவை கால்களிலும் கைகளிலும் (140) மத்திய சரீரத்தில் (120) ஊர்தவாங்கத் தில் (100) ஆக (360) ஆம். அவற்றின் விரி வருமாறு: கால் நசங்கள், (5) விரல் ஒன்றிற்கு மும்மூன்ரக ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யாஸ்தி (15), சலாகாஸ்தி (5), சலாகாபிரதிபந்தாஸ்தி. (1), கூர்ச்சாஸ்தி ‘2’, குல்பாஸ்தி (2), ஜங்காஸ்தி (2), பார்ஷணி (1), ஜாநுபலகாஸ்தி (1), ஊருவஸ்தி (1), ஆக (35) ஆக இரண்டு கால்களிலும் உள்ள அஸ்திகள் (70) கை ஒன்றுக்கு ஐந்து விரல்களிலும் உள்ள நகங்கள் (5) விரல் ஒன்றுக்கு மும்மூன்று வீதம் ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யாஸ்தி (15), சலாகாஸ்தி (5), சலாகாபிரபு பந்தாஸ்தி (1), கூர்ச்சாஸ்தி (5), மணா பந்தாஸ்தி (2), பிரகோஷ்டாஸ்தி (2) கூர்ப்பராஸ்தி (1), பாகுப்ருஷ்டம் (1), ஹஸ்த மூலம் (1), ஆக (35) வீதம் இரண்டு கைகளிலும் உள்ள அஸ்திகள் (70) ஆக இருகை கால்களிலுள்ள அஸ்திகள் (140) மத்திய சரீரத்தில் பார்ஸ்வாஸ்தி (24) தாலகாஸ்தி (24), அர்ப்புதாஸ்தி (24)ப்ருஷ்டாஸ்தி (30), உாஸஸ்தி (8) திரிகாஸ்தி (1), பாகாஸ்தி (1), அடிகாஸ்தி (2), அம்சாஸ்தி (2), அம்ஸ பலகாஸ்தி (2), நிதம்பாஸ்தி (2), ஆக (120), அஸ்திகள் உள. ஊர்த்வாங்கத்தில் கண்டாஸ்தி (2), கர்ணாஸ்தி (2), சங்காஸ்தி (2), தால்வஸ்தி (1), ஜத்ருவஸ்தி (1)க்ரீவாஸ்தி (13), கண்டநாளாள் (4) ஹநுபந்தாஸ் (2), தந்தம் (32) உலூகலாஸ்தி (32),க்ராணாஸ்தி (6) சிரசஸ்தி (6) ஆக (100) அஸ்திகள் உளவாம். ஸ்நாவங்கள் தொள்ளாயிரம் (நரம்புகள்) அவை கைகளில் (300) கால்களில், (300) மத்திய சரீரத்தில், (230) ஊர்த் வாங்கத்தில் (70) ஆக (900). பேசிகள் (மாம்சபிண்டங்கள்) புருஷர்களுக் குரியனவாகிய பேசிகள் (500), அவைகளில் கால்களில் (200) கைகளில் (200) மத்யசரீரத்தில் (60) ஊர் தவாங்கத்தில் (40) ஆக (500) ஸ்திரீகளுக்கு உரிய பேசிகள் (520) அவை முன் கூறியதுடன் யோனி, ஸ்தனங்களில் உள்ள பேசிகள் (20) கூட்டிக்கொள்க. மூலசிராக்கள் (10) (அதாவது பிரதான நரம்புகள்). இவை மார்பை இடமாகக் கொண்டு ஆகார ஸ்வரூபமான ஓஜசை சரீரம் முழுவதும் பரவச் செய் கின்றன. இவைகளின் அடி பருமனாகவும், நுனி நேர்மையாகவும் இருக்கும். இவை இலைகளின் நரம்பு பலபடப்பிரிந்து இருப்பது போல் எழுநூறு ஆகப் பிரிந்திருக்கும். அவை கைகளில் (200) கால்களில் (200) மத்தியசரீரத்தில் (134) ஊர்தவாங்கத்தில் (164). சாகைகள்தோறும் ஜாலந்தரம் என்னும் பெயரை உடைய ஒரு சிராவும், அதனுள் (3) சிராக்களும் உள்ளன. சுரோணி பாகசிராக்கள் (கடிபாகம்) (32) அவற்றுள் வங்க்ஷணங்களில் உள்ளன (4) கடகத்தில் உள்ளன (2) தருணத்தில் உள்ளன (2) பார்ஸ்வ சிராக்கள் (பக்கம்) பக்கத்திற்குப் பதினாராக இரண்டு பக்கங்களுக்கும் (32) பிருஷ்டபாக சிராக்கள் (24) (பிருஷ்ட பாகம் முதுகு). ஜடாசிராக்கள் (வயிறு) (24) அவற்றுள் நான்கு குறியின் மேல்பாகத்தில் ரோமாவளியின் இருபக்கங்களிலும் இருக்கின்றன, உரஸ்ஸிராக்கள் (மார்பு) (40) அவை ஸ்தனரோகிதங்களில் இரண்டிரண்டும், ஸ்தன மூலங்களில் இரண்டிரண்டும், ஹிருதயத்தில் இரண்டும், அவ ஸ்தம்பங்களில் ஒவ்வொன்றும், அவாலா பங்களில் ஒவ்வொன்றும், ஆகப் பதினான்காம். கிரீவசிராக்கள் (கழுத்து) (24) அவற்றுள் நீலா (2) மன்னியா (2)க்ருகாடிகா (2) விதுரா (2) மாத்ருகா (8) ஆக (14). ஹநுசிராக்கள் (16) (ஹநு கபோலம்). ஜிஹயசிராக்கள் (16) நாசி காசிராக்கள் (24) நயனசிராக்கள் (ர56) லலாடசிராக்கள் (60) கர்ணசிராக்கள் (16) மூர்த்தசிராக்கள் (12). ரத்தவாகினிகள். (700). இவற்றுள் வாதரத்தத்தை வுகித்துக்கொண்டு இருப்பன (175) கபாத்தத்தைவகித்துக்கொண்டு இருப்பன (175) பித்தரத்தத்தை வகித்துக்கொண்டிருப்பன (175). சுத்தரத்தத்தை வகித்துக்கொண்டு இருப்பன (175). தமநிகள் (24) அவை சக்கரத்தின் குடத்தை இலைகள் சூழ்ந்திருப்பது போல நாபியைச் சூழ்ந்து இருக்கும். (தமங்கள் மகாநாடிகள் (சுரோ தஸ்ஸுக்கள் (9) நாசித்துவாரம் (2) கர்ணதவாரம் (2) நேத்ரத்வாரம் (2) குதத் துவாரம் (1) முகம் (1) மேஹனத்துவாரம் (1) ஸ்திரீகளுக்கு விசேஷமாய்ச் சுரோதஸ்ஸக்கள் (3). அவை ஸ்தனத் துவாரம் (2). ரத்தமார்க்கம் ஒன்றுமாம். சுரோதஸ் சளி முதலியவற்றை வெளிப்படுத்தும்வழி, அந்தச் சுபோதஸ்ஸுக்கள் (13) உடலுக்குள்ளிருக்கும் துவாரங்கள். தேகத்தில் உள்ள மச்சாதி தாதுக்களின் அளவு, மச்சை ஒரு அஞ்சலிப்பிரமாணம். மேதஸ் இரண்டு அஞ்சலிப் பிரமாணம். வசை மூன்றஞ்சலிப் பிரமாணம், மூத்திரம் நான்கு அஞ்சலிப் பிரமாணம், பித்தம் ஐந்து அஞ்சலிப் பிரமாணம். கபம் ஆறு அஞ்சலிப் பிரமாணம். மலம் எழஞ்சலிப் பிரமாணம். சத்தம் எட்டஞ்சலிப் பிரமாணம். ரஸம் ஒன்பதஞ்சலிப் பிரமாணம். ஜலம் பத்து அஞ்சலிப் பிரமாணம், (அஞ்சலி இரண்டு சேரங்கை கொண்டது). புருஷர்சளுக்குத் தத்தங்கைகளால் ஓஜஸ் தலை மூளை, சுக்லம் ஆகிய இவைகள் ஒவ்வொரு பிரஸ்ருதப் பிரமாணமும் ஸ்திரீகளுக்குத் தத்தம் கைகளால் முலைப்பால் இரண்டு அஞ்சலிப் பிரமாணமும், ரஜஸு நான்கு அஞ்சலிப் பிரமாணமுமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. (பிரஸ்ருதம் சோங்கை கொண்டது).

சாரு

(சங்.) மனசுயு புத்திரன். இவன் குமரன் சுத்தியு.

சாருகன்

மதுராநகரத்து அரசன். சிவ தீக்ஷை பெற்ற ஒரு கன்னிகையை மணந்து அவளைக் காமத்தால் சிவதீக்ஷிதனாகிய இவன் தழுவச் செல்லுகையில் அக்கன்னிகை நீர் அதீக்ஷிதர் தீக்ஷைபெற்று என்னைத் தழுவுக என அரசன் கேளாது தழுவச்செல்லுகையில் நெருப்பைத் தழுவியதுபோல் சுவாலையுண்டாக அரசன் பயந்து மனைவியைத் தீகை செய்யக் கேட்க மனைவி கர்க்கமுனிவரால் தீக்ஷை செய்விக்க அரசன் அவளுடன் கூடிக்களித்தனன்.

சாருகருமன்

தமனைக் காண்க,

சாருகாசனி

1. ஒரு மாயாதேவி. 2. வீமன் மனைவி, உருக்குமாங்கதன் தாய்.

சாருசித்திரன்

திருதராட்டின் குமரன்.

சாருதேக்ஷணன்

சாருதேஷணன், சத்தியபாமைக்குக் குமரன்.

சாருமதி

உருக்குமன்குமரி. பிரத்தியும்நனை மணந்தவள். இவள் குமரன் அநிருத்தன்.

சாருவாகன்

சார்வாகமதம் தாபித்தவன்.

சாருஷ்ணி

வருணன் என்னும் ஆதித்தன் தேவி,

சாரை

இது நீண்ட உடலையும், வேகத்தையும் பெற்றது. இது. கடிப்பதும், வாலால் அடிப்பதும் பாதமுதல் மார்பு வரையில் சுற்றிக்கொண்டு வாலினாலும் அடிக்கும். இதில், வெண்சாரை, கருஞ்சாரை, செஞ்சாரை, மஞ்சட்சாரை, என நால்வகை உண்டு. இவைகளைக் கண்ட எருமைகளுக்கு மாலைக் கண் உண்டாம்.

சார்ங்ககர்

இவர்கள் காண்டவவனம் தீப்பற்றி எரிகையில் உயிர்தப்பின பக்ஷிகள், மந்தபாலமுனிவர் வேண்டுகோளால் இவர்களை அக்நி தகிக்காமல் விட்டனன். தந்தை சாங்ககர், எனப் பக்ஷியுருக்க கொண்ட மந்தபாலமுனிவர். தாய்சரிதை.

சார்ங்கதரர்

பாதசாஸ்திரஞ் செய்த ஒரு வடநூற் புலவர்.

சார்ங்கம்

விஷ்ணுமூர்த்தியின் வில், கண்ணுவரைக் காண்க,

சார்ங்கலன்

கோதமையின் புதல்வன். பேய்மகள் மயானத்து ஆடியது கண்டு உயிரிழந்தவன். (மணிமேகலை)

சார்த்தூல அரன்

புலி முகமுள்ள அசுரனைக் கொன்று அவன் தோலையுரித்து உடுத்த சிவன் திருவுரு.

சார்த்தூலகன்

பிரசாபதி படைவீரரில் ஒருவன், (சூளா)

சார்த்தூலகன்

பிரசாபதி படைவீரரில் ஒருவன்.

சார்த்தூலன்

1. இராமரின் சேனாபலத்தை அறியும்படி இராவணனால் அனுப்பப் பட்ட தூதன், 2. யமதூதன். 3. புவிமுகம் உள்ள ஒரு அசுரன். இவன் அண்டங்கள் எல்லாம் தூளாகப் பாய்ந்து அதஞ் செய்யச் சிவமூர்த்தி தேவர் வேண்டுகோளால் வாளால் எறிந்து கொலை செய்தனர். 4. ஒரு இருடி.

சார்த்தூலி

காசிபர் புத்திரி. சிங்கங்களையும் புலிகளையும் பெற்றவள்.

சார்பு

12, பேதைமை, செய்கை, உணர்வே, அருவுரு, வாயிலுறல், நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன். (மணிமேகலை)

சார்புநூல்

முதனூல்வழி நூலெனு மிருதிறத்து நூல்களுக்கும் பொருண் முடிபு ஒரு சிறிதொத்து ஒழிந்தன வொவ்வாத நூல்,

சார்பெழுத்துக்கள்

உயிர்மெய் யெழுத்துக்களைச் சார்ந்து வரும் எழுத்துக்கள் இவை (10) உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்.

சார்வபூமன்

1. (ச.) சையாதி குமரன். பாரி சநந்தை. 2. விரேதன் குமரன். இவன் குமரன் செயசெயநன். 3. விதூரதன் குமரன். இவனுக்குச் சார்வபௌமன் எனவும் பெயர்,

சார்வபௌமன்

சார்வ பூமனைக்காண்க.

சார்வபௌமம்

வடதிசைப் பெண்யானை.

சார்வாகன்

துரியோதனனுக்கு நட்பினனாகிய அசுரன். தருமராசனுக்குப் பட்டந் தரிக்கையில் இருடியுருக்கொண்டு ஆண்டுச் சென்று தீமை செய்யக் கருதிய போது இருடிகளால் சாம்பராக்கப்பட்டவன்.

சார்வாகமதம்

இம்மதத்தாபகனாகிய சார்வாகன் அவந்திதேசத்தில் சங்கோத்தார் சேத்திரத்தில் உதிஷ்டிரசகம் (661) இல் பிறந்து இதேசகம் (727) இல் இறந்தான். இப்பெயர் கொண்ட அரக்கன் ஒருவன் மதவிஷயமாய்த் தர்மராஜனுடன் பேசி வதைக்கப்பட்டான் என்று பாரதம் சாந்தி பர்வத்திற் கூறப்பட்டிருக்கிறது. மதசித்தாந்தம், இது நாஸ்திகமதம். கடவுளுக்கு மோக்ஷாதிகாரமில்லை எனவும், உலகத்திலுள்ள வரையில் சுகமாய்ச் சீவிக்க வேண்டும் எனவும் மரணமே மோக்ஷம் எ.ம், வேறு பிறப்பில்லை எ.ம்., பரலோக சுகமில்லை எ.ம்., ஆகாசம் நீங்கலாகத் தத்வம் நான்கு எ.ம்., இந்த நான்கு தத்வாமுதாயமே தேகம் எ.ம்., இவற்றாலாகிய இந்திரிய சமுதாயமே ஆத்மா எ.ம், இவ்விந்திரிய நாசமே மாணம் எ.ம். கூறும். இம்மதத்தவர்க்குப் பிரகஸ்பதி சூத்ரம் பிரமாணம், பிரமாணம் பிரத்யக்ஷமே தவிர வேறு பிரமாணம் கிடையாதென்பர். இவர்களுக்கு இம்மையில் அரிவையருடனும் மற்றச்சுகங்களுடனும் கூடியிருத்தலே சுகம். ஆனந்தானுபவம் இல்லாத வியாதி முதலிய கிலேசங்களே நகரம்.

சாலகடங்கடர்

சாலகடங்கடையின் புத்திரர், அசுரர்.

சாலகடங்கடை

சுகேசன் தாய், வித்யுத்கேசன் பாரி.

சாலகன்

நாகன் கத்ருதனயன்.

சாலகிராமம்

இது ஒரு க்ஷேத்திரம் A place near the source of the river Gandaki

சாலக்காயினி

வேததரிசன் மாணாக்கன். இருடி.

சாலங்காயனன்

விஸ்வாமித்திரன் புத்திரன்.

சாலங்காயன்

இவன் பிரச்சோதனனுடைய பதினாறாயிர மந்திரிகளுள் முதல் மந்தரி. யாராலும் தணிக்கமுடியாத அரசன் கோபம் இவனுடைய சொற்களால் தணியும், போமைச்சனென்றும் வழங்கப்படுவான். அவன் கட்டளைப்படி மாய யானையைக் காட்டி உதயணனை வஞ்சித் துப்பிடித்துக்கொணர்ந்து உஞ்சை நகரின் சிறை செய்வித்தவன். தருக்க நூல் முதலியவற்றில் மிக்க தேர்ச்சியை யுடையவன் வாசவதத்தையை உதயணன் பிடிமீதேற்றித் தன்னகர் சென்றானென்றது கேட்டுக் கடுஞ்சினங்கொண்டு அவனைப் பிடித்து வரும்படி சேனைகளை அனுப்பத் தொடங்கிய பிரச்சோதனனை நோக்கிச் சில நியாயங்களை இவன் சொன்னமையால் அவன் அச்செயலை நிறுத்தினன். யூகியைத் தன்னருகழைத்த பிரச்சோதனனுடைய விருப்பத்தின்படி யூகியோடு நூல்களில் வாதஞ்செய்து தோல்வியுற்றவன். தன் தங்கை ஆப்பியை யென்பவளை அரசன் வேண்டுகோளால் யூகிக்கு மணஞ் செய்வித்தான். (பெ. கதை.)

சாலங்காயினன்

இவன சிவபூசையால் பேறடைந்தவன்.

சாலபோதகன்

நாகராசன், உத்தமனைக் காண்க,

சாலவதி

ஒரு தெய்வப்பெண், இவளைக் கண்டு ரத்துரிஷி என்பவன் வீரியம் விட கிருபன் கிருபி என்பவர் பிறந்தனர்.

சாலி

1. ஒரு இருடி. இவர் தொண்டநாட்டுத் திருவல்லிக்கேணியில் அழகிய சிங்கர் அருள் பெற்றவர். 2. ஆபுத்திரன் தாயாகிய பார்ப்பினி. அபஞ்சிகன் மனைவி, (மணிமேகலை.)

சாலிகை

ஒரு கவசம். துரோணரால் துரியோதனனுக்குக் கொடுக்கப்பட்டது.

சாலிகோத்திரன்

கபிலரிஷியின் புத்திரன்,

சாலிகோத்திரமுனி

அச்வசாத்திரஞ் செய்த இருடி, சாமவேதி. இடும்பன் வனத்திற்கு அடுத்தவனத்திலுள்ள இருடி. பாண்டவரிடத்தில் சிலநாள் இருந்து பல தருமங் கேட்டனர்.

சாலிசூகன்

ஒரு மவுரிய அரசன் (கி. பி. 204) ஆண்டவன்,

சாலினி

வேட்டுவமகளாகிய தேவராட்டி, (சிலப்பதிகாரம்)

சாலியர்

1, சாகல்லியர் மாணாக்கர். 2. வடநாட்டு நெசவுத் தொழிலாளர். இவர்கள் தங்களைச் சேநாபதிகள் என்பர். இவர்கள் பட்டுச்சாலியர் என இருவகையர். இவர்களில் பட்டுச் சாலியர் பூணூல் தரிப்பர். மற்றவர் தரியார் இவர்கள் ஒருவருக்கொருவர் கலப்புக் கிடையாது. பட்டுச்சாலியர் மாம்சபகணம் ஒழிந்தவர். மற்றவர் மதுமாம்சாதிகளுண்பர். (தர்ஸ்ட்டன்.)

சாலிலூகன்

சங்கதன் குமரன். இவன் குமரன் சோமசருமன்,

சாலிவாகனன்

பைடணபுரியில் சுலோசனன் என்னும் வேதியன் இருந்தான். அவனுக்குச் சுமித்திரை என்னும் கன்னிகை இருந்தாள். இவள் தன் கலியா ணத்திற்கு முன் பருவத்தையடைந்து யாருமறியாமல் நாகராசனால் கருவடைர் தனள். இதையறிந்து சுற்றத்தவர் வெறுக்க, குமரி தன்னிடம் களவிற் புணர்ந்து வரும் நாகராசனிடம் கூறி முறையிட்டனள், இதைக்கேட்ட நாகராசன் நான் மனிதனல்ல ஆதிசேடன் என்னால் உனக்குப் பெயர்பெற்ற புத்திரன் பிறப்பன். அஞ்சாதே உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம் நேரிடுங்காலத்தில் என்னை நினைக்க எனக்கூறி நீங்கினன். இதைக்குமரி தந்தைக்குக்கூற தந்தை தெய்வச்செயலை யாரால் தடுக்கமுடியும். வந்ததை யெல்லாம் அனுபவித்தே நீக்கவேண்டும் என்று இருந்தனன். இந்தக் குமரி கலியாணத்திற்குமுன் கருவடைந்த செய்தியைச் சுற்றத்தவர் கேட்டு அரசனுக்கு அறிவித்து ஊரைவிட்டு அவள் தந்தையுடன் அகற்றினர். தந்தையுடன் ஊரைவிட்டு நீங்கின சுமித்திரை அந்நாட்டுக்கு அருகிலுள்ள குயவன் ஒருவன் வீட்டில் குடிபுகுந்து சுபமுகூர்த்தத்தில் சாலிவாகனனைப் பெற்றாள். சாலிவாகனன் இளமைப் பருவத்தில் தன்னோடொத்த சிறு வருடன்கூடி விளையாடுகையில் தான் அரசனாகவும் மற்றச்சிறுவர்களை மந்திரி முதலிய அரசகாரியக்கார ராகவும் எண்பித்து விளையாடி வருவன், இவ்வகை சாலிவாகனன் இருக்கை யில் வேதியன் ஒருவன் அவ்வழிவாச் சாலிவாகனன் அவனை நோக்கி ஐயரே நம் இராச்சியத்திற்கு யோகம் எப்படியிருக்கிறது என, வேதியன் யோகமாகவே இருக்கிறது என்றனன். அதனால் களித்த சாலிவாகனன் வேதியனுக்கு ஒரு சாலைத் தர அது பொன்னாயிற்று. இதனால் இவன் சுவர்ண தானஞ் செய்பவன் எனப் பெயருண்டாயிற்று. அரசன் இவனைக்காண ஆவல் கொண்டு இவனை அழைப்பிக்க இவன் அரசனிடம் போதல் மறுத்து இருந் தான். சாலிவாகனன் அங்கிருக்கும் குயவரிடம் யுத்தத்திற்கு வேண்டிய இரதம், கஜம், துரகம், பதாதி முதலிய மண்ணால் செய்வித்து இருந்தனன். இவ்வகையிருக்கையில் புரந்தரபுரத்து இருந்த தனஞ்சயன் என்னும் வணிகன் தனது மரண திசையில் தன் நான்குபிள்ளைகளை அழைத்து இந்தக்கட்டில் அடியில் உங்களுக்கு வேண்டிய பொருள்களைப் பாகித்து வைத்திருக்கிறேன் நான் இறந்த பிறகு நான் பாகித்து இருக்கிறபடி எடுத்துக்கொள்ளுங்கள் என்று மரணமடைந்தான். தந்தை இறந்தபிறகு புத்திரர் தகனக் கிரியை முடித்து மஞ்சத்து அடியைச் சோதித்துப் பார்க்கையில் ஒரு கும்பல் மண், ஒருகுவை உமி, ஒருகூட்டம் கரி, ஒருகுவை எலும்பு இருக்கக்கண்டு இவைகளைப் பங்கிட்டுக்கொள்ளும் விதம் தோன்றாமல் அரச அதிகாரிகளிடத்தும் அரச னிடத்துக் கூறி நியாயந் தோன்றாமல் திரும்பிச் சாலிவாகனனிருக்கும் குசப் பாளய வழியாய் வருகையில் சாலிவாகனன் இவர்கள் வழக்கை விசாரித்து இவைகள் நியாயமாகவே விளங்குகின்றன. உங்கள் தந்தை மேற்சொன்ன பொருள்களை மூத்த கனிஷடக் கிரமமாகப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வகை செய்தனர். அதாவது மண்ணைவைத்தது, மூத்தவனாகையால் பூமி முதலிய அவனைச் சேரவேண்டும் எனவும், இரண்டாமவனுக்கு உமிவைத்ததனால் அவன் தன தானியங்களைப் பெறவும், மூன்றாமவனுக்குக் கரியைக்கொடுத்ததால் அவன் பொன், வெள்ளி முதலிய நகைகளைப் பெறுக எனவும், நான்காமவனுக்கு எலும்பைக் கொடுத்ததால் பசு முதலியவைகளைப் பெறுக எனவும் பகுத்து வைத்தனன் எனத் தீர் மானித்தனன். இதைக் கேட்ட அந்த வழக்கினர் இது நியாயத் தீர்ப்பென்று களித்துப் போயினர். இத்தீர்ப்பையும் அவன் அஞ்சாநிலையையும் கேள்விப்பட்ட விக்கிரமார்க்கன் இவன் நம் நாட்டில் இருக்கின் நமது புகழ்தலை எடுக்காது என்று எண்ணி இவனை ஊரைவிட்டு ஓட்டச் சேனைகளுடன் சாலிவாகனனிடம் யுத்தத்திற்கு வந்தனன். சாலிவாகனன் தான் முன் மண்ணாற்செய்து வைத்திருந்த சதுசங்கபலத்தை நாகராசன் அருளால் உயிர்ப்பித்து அரசனை நருமதை நதிக்கு வடக்கில் ஓட்டினன். அக்காலமுதல் நருமதா நதிக்கு வடக்கிலுள்ளார் விக்கிரமார்க்கசகத்தையும், அந்நதிக்குத் தெற்கிலுள்ளார் சாலிவாகன சகத்தையும் கைக்கொண்டு வருகின்றனர். இவன் பெயரால் சாலிவாகனசகம் வழங்கி வருகிறது. இவன் பிறகு மகாகவியாய் அலங்காரம், வைத்தியம், அஸ்வபரீக்ஷை முதலிய சாத்திரங்கள் செய்து அரசளித்து வந்தனன்.

சாலீசுகன்

சூரியவம்சத்து அரசர்களில் ஒருவன், மூன்று முலைகொண்ட நாக கன்னிகையை மணந்தவன்.

சாலுண்டன்

கத்ரு குமரன், நாகன்.

சாலுவை

என்பது, ஆட்டுரோமம், பட்டு முதலியவற்றால் அழகாக நெய்து உடுக்கும் உடை விசேஷம்.

சாலேந்திரன்

ஒரு அரக்கன். அளகைக் காவலாளி. வீமனுடன் பொருது இறந்த வன்.

சால்புமுல்லை

ஆகாசத்தைக் கிட்டும் வரையையொத்த சான்றாளர் தம்முடைய அமைதியைச் சொல்லியது. (பு. வெ.)

சால்மலி

1. ஒரு தீவு. 2. அவிக்ஷித்தின் புத்திரன், 3. ஒரு விருக்ஷம்.

சால்வேயன்

நிதந்து என்னும் இராசருஷியின் குமரன்,

சாளக்ராமம்

1. ஒரு நதி. இது இமயமலைக்கு அருகிலிருக்கிறது. இதில் சிவ விஷ்ணு உருக்கள் அமைந்த சாளக்கிரா மங்கள் பிறக்கின்றன. இது கண்டகி நதியாயிருக்கலாம். கண்டகியைக் காண்க. 2. ஒருவிஷ்ணு ஸ்தலம், 3. இதன் பிறப்பைத் துலசியைக் காண்க, இது, கண்டகி நதியில் துலசியென்னும் சங்கசூடன் தேவியால் சபிக்கப்பட்ட விஷ்ணுவின் உருக்கொண்டது. இவற்றின் வேறுபாடுகளாவன: ஒருத் வாரத்தில் நான்கு சக்கரங்கொண்டு வநமாலை பூண்டது லக்ஷ்மீ நாராயண நாமங் கொண்டது. அவ்வாறு வருமாலை நீங்கியது லக்ஷ்மீ சநார்த்தனம். இவ்வாறே ரகுநாதம், ததிவாமனம், ஸ்ரீதரம், தாமோதரம், ரணராமம், ராஜராஜேச்வரம், அநந்தம், மதுசூதனம், சுதர்சனம், கதாதரம், ஹயக்ரீவம், நாவிம்மம், லக்ஷ்மீநாசிம்மம், வாசுதேவம், பிரத்யும்நம், சங்கர்ஷணம், அநிருத்தம் என்னும் பெயருள்ள இவைகளை வேறுபாட்டினால் கண்டறிக, எவ்விடத்தில் சாளக்ராம சிலையிருக்குமோ ஆண்டு ஹரிசாந்நித்யமாய் வசிப்பர். அவ்விடம் சகல தேவதைகளும் வசிப்பர். எல்லாச் சம்பத்துகளும் உண்டாம். இவைகளைக் குற்றங்களறிந்து நீக்கிக் குணமுள்ள வைகளைப் பூசைக்குக் கொள்க. குற்றமுள்ளவை தீமைபயக்கும். சாளக்கிரா மார்ச்சனையால் சகல பாபங்களினின்று நீங்கி வைகுண்ட மடைவான். இவற்றின் விரிவைப் பிரம்மகைவர்த்த புராணம் பிரகிருதிகண்டம் இருபத்தொராவது அத்யாயத்திற் காண்க. 4. கண்டகி நதியில் துளசியின் சாபத் தால் மாலை யுருக்கொண்ட விஷ்ணுவாகியர் கற்களைக் கோரப் பற்களுள்ள கீடங்கள் தொளைப்பதாலுண்டாம் விஷ்ணுவின் உருக்கள். இவை குக்குண்டாம்போல் ஒருத்வாரத்தில் (4) சக்கிரமும், வநமாலையும், ரதாகாரமும், நீர்கொண்ட மேகநிறமுமாய் உள்ளது லக்ஷ்மி நாராயணம், வனமாலையின்றி மற்றவற்றைப் பெற்றது லக்ஷ்மி ஜநார்த்தனம், (2) துவாரங்களுள் (4) சக்ரங்களும், ரதாகாரமாகவும் உள்ளது குநாதம், இரண்டு சக்ரமாத்ரமுன்ளது, வாமனம்: வனமாலையுடன் (2) சக்ரமுள்ளது. ஸ்ரீதரம், விருத்தாகாரமாகவும் (2) சக்ரமாதரமுள்ளது தாமோதரம், மிகப் பெரிது மிகச் சிறிதுமாகாமல் (7) சக்ரமும் சரத் பூஷணத்துடன் கூடியது ராஜ ராஜேஸ்வரம், விருத்தாகாரமாய், (2) சக்கிரத்தோடும் அம்பறாத்தூணியும், பாண அடியுமுள் ளது ரணராகம் (14) சக்கிரங்களுடன் கூடியது ஆதிசேஷம், சக்ராகாரமாய் (2) சக்ரங்களுடன் கூடியது மதுசூதனம், (1) சக்கிரமுள்ளது சுதர்சனம், மறைபட்ட சக்ரமாய்த் தோன்றுவது கதாதரம், (2) சக்கரங்களுடன் ஹயக்ரீவவுருவாய்க் காணப்படுவது ஹயக்ரீவம், (2) சக்ரங்களும் திறந்தவாயும், பயங்கர வுருவு முள்ளது நாரசிங்கம், (2) சக்ரங்களும் பெரியவாயும் வனமாலையுமுள்ளது லக்ஷ்மி நரசிங்கம், தவாரமுகத்தில் இரண்டு சக்கிரமும் சமாகராமாயுள்ளது வாசுதேவம், சூஷ்மமான சக்ரமும், ஒரு மந்திரத்துள் பலரந்திரங்களுள்ளது பிரத்யும்னம்,த்வாரமத்தியில் (2) சக்ரங்களும், புருஷ்டபாகம் பருத்துமுள்ளது சங்கர்ஷணம், விருத்தாகாரமாயும் செம்பட்டு நிறமுள்ளது அநிருத்தம், பொதுவில் சாளக்கிராம பூசையெல்லா சம்பத்துக்களையும் கொடுக்கும். இது பின்னமாயிருந்தால் தீமை தரும். (தேவி~பா.)

சாளன்

தபங்கரைக்காத்துவிஜயன் எனப் பெயரடைந்த அரசன்,

சாளுக்கியர்

1. இவர்கள் ஆரீதபஞ்சசிகர் என்னும் முனிவர் தமது யாககுண்டத்தில் அவிசிடும் போழ்து அவரது தீர்த்தபாத் திரத்திருந்து ஒருவன் பிறந்தனன். அவன்களுகமென்னும் அப்பாத்திரத்திருந்து பிறந்தமைபற்றி அவனுக்குச் சளூகன் அல்லது சாணக்கியன் எனப் பெயர் வந்தது. அவன் வழித்தோன்றினவர். சளூக்கியர், 2. இவர்கள் பொம்பாய் இராஜதானியில் பெடாமி என்பதைத் தலைநகராகக் கொண்டவர்கள். இவர்கள் (A. D.) ஏழா வது நூற்றாண்டில் தமிழ் நாடடைந்து தமிழ் நாட்டரசரைவென்று இடங்கொண்டனர் இவர்களுக்குத் தலைவன் புளுகேசி 2. பின் இந்தச் சாளுக்கியர் தாங்கள் கலசப்பட்டு மேற்குச் சாளுக்கியர் எனவும் கிழக்குச் சாளுக்கியர் எனவும் இராஜ்யத்தை வகுத்துக்கொண்டனர். இந்தக் கிழக்குச் சாளுக்கியருக்கு இராஜதானி வெங்கி இது எல்லூருக்கருகிலுள்ளது. மேற்குக்சாளூக்ய அரசன் விக்ரமாதித்யன் 2 (733~47) இவன் நந்திவர்மன், பல்லவமல்லன் என்னும் பல்லவனைச் செயித்தான்,

சாளுவன்

1. பீஷ்மரிடம் அம்பைக்காகப் போரிட்டுத் தோற்றவன். 2. சிசுபாலனுக்குத் தம்பி, உருக்மணி கயொகத்தில் கிருஷ்ணனை வழி மடக்கிப் பலாமரால் அபசயம் அடைந்து பின் சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றிப் பலம் அடைந்து பிரத்தியும் நனுடன் யுத்தஞ் செய்து பின் கண்ணனுடன் யுத்தஞ்செய் கையில் இறந்தவன். இவன் அசுராம்சம், 3. விருகன் புத்திரன்.

சாளுவம்

ஒரு தேசம்,

சாவகம்

1. ஆபுத்திரன் நாடு. இதன் இராசதானி நாகபுரம். இதில் தவளமலை யென்று ஒருமலையுண்டு, (மணிமேகலை) 2. பதினெண் பாஷைகளில் ஒன்று.

சாவணன்

(சூ.) உபகுப்தன் குமரன்.

சாவரி

ஒரு பிராகிருத பாஷை.

சாவர்ணி

ஒரு இருடி. உரோம கருஷணருக்கும், சுகருக்கும் மாணாக்கர்.

சாவர்ணிமனு

சூரியனுச்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன். முன் சுவாரோசி மன் வந்தரத்தில் சயித்திரவம்சத்திற் பிறந்து சுரதன் என்னும் அரசனாக இருந்து பகைவரால் அபகரிக்கப்பட்டுக் காட்டில் வந்து மேதஸ் என்னும் முனிவருத்தில் சென்று சமாதி என்னும் வணிகனுடன் நண்பு கொண்டு மேதஸ்முனிவர், தேவி மந்திரம் உபதேசிக்க அதை அநுட்டித்துத் தேவி பிரத்தியக்ஷமாகத் துதித்து நின்றனன் தேவி அரசனைநோக்கி நீ உன் இராச்சியத்தைப் பெற்றுப் பிறகு சூரியபுத்திரனாய் மனுவாக என வரம் தந்து மறைந்னள். அதனால் மனுவானவன்.

சாவர்ணை

சூரியன் தேவியரில் ஒருத்தி.

சாவஸ்தன்

(சூ) யுவநாசுவனுக்குக் குமரன்.

சாவஸ்தி

சாவஸ்தன் ஆண்ட நகர்,

சாவாமதம்

இவர்கள் சூர்ய சந்திரர்களையும், பிசாசுகளையும் ஆராதிப்பா, சிருட்டி கர்த்தாவே றென்றுங் கூறுவர்.

சாவாலன்

சத்தியகாமனுக்குத் தந்தை.

சாவித்திரன்

1. ஒருவசு தேவாசுரயுத்தத்தில் சுமாலியைக் கொன்றவன், தக்ஷயாகத்தில் வீரபத்திரரால் சிகையும் உதடும் அறுக்கப்பெற்றவன். (பூவாளூர்ப்~பு.) 2 தீர்த்தயாத்திரை சென்று விரிஞ்சி புரத்தில் கைலை மான்மியம் பிரசங்கங்கேட்டுக் கைலை அடைந்தவன்.

சாவித்திரி

1, பிரமன் தேவியரில் ஒருத்தி, இவளைப் பிரமன் புணர்ந்து நான்குவேதங்களையும், மற்றைச் சாத்திரங்கள், பாதம்,சதுர்யுகங்களையும் பெறுவித்தான். இவள் நூறு திவ்யவருஷம் கருத்தாங்கியிருந்தனள். (பிரமகைவர்த்த புராணம்). 2. ஒருகாலத்து நாரதர் காண ஒரு தடாகத்தில் தோன்றித் தன்னிடம் புருஷவுருவமாக வேதங்களைத் தோற்றுவித்தனள். (பார~சாக்.) 3. பஞ்சகன்னியரில் ஒருத்தி. அஸ்வபதி அரசனுக்கும் மாளவி என்பவளுக்கும் பிறந்து தியுமத்சோன் குமாரனாகிய சத்தியவந்தனை மணந் தவள். இவள் தன் மணத்திற்கு முன்பே சத்தியவந்தன் குணத்தாலும், அழகாலும், மற்றவைகளாலும் மிகுந்தவன் என்று எண்ணி அவனை மணக்க இருக்கையில் தியுமத்சேநன் பகைவரால் நாட்டையிழந்து காட்டையடைந்து முனி விருத்தி அடைந்திருந்தனன். சாவித்திரி அக்குமரன் காட்டில் இருக்கையிலும், அவனையே மணக்கத் துணிவு கொண்டு மணந்தனள். மணந்த மறு வருடத்தில் தன்னாயகன் மரணம் அடைவன் என்று நாரதரால் அறிந்து கௌரிவிரதம் அநுட்டித்து வருகையில் புருஷனுக்கு மரணம் நெருங்கு தல் அறிந்து எதிர்நோக்கி இருந்தனள். மரணம் நேரத்தன் பதிவிரதா பலத்தால் யமனை எதிர்ந்து அவனிடம் தன் மாமன் முதலியவர்க்குக் கண்ணும் இராச்சியமும் பெற வரம்பெற்றுப், பின்னும் யோசித்து அதிதூரம் சென்ற யமனை மறித்துத் தன்னாயகன் உயிர்கேட்கக் காலன் அது ஒழிந்த மற்றது கேள் எனப் புத்திரர் இல்லாத தன் தந்தைக்கு நூறு புத்திரர் பெற வரம்பெற்றுப், பின்னும் சற்று நிதானித்துக் கணவன் இல்லா வாழ்க்கை வாழ்க்கையன்றென மதித்து யமபுரத்து அருகிற்சென்ற யமனைத் தன் பதிவிரதாபலத்தால் நிறுத்தித் தானும் அதிவிரைவாய்ச் சென்று தன் கணவன் உயிர்ப்பிச்சை கேட்க, யமன் பார்த்து இவள் நமது நகரத்திற்கு வருவளேல் நரகத்தில் இருப்போர் அனைவரும் நரகத்திலிருந்து நீங்குவர் என்று எண்ணி அவள் வேண்டிய படி புருஷளை யுயிர்ப்பித்துத் தரப்பெற்று சுகம் அடைந்தவள். 4 வேத்ருக்கில் ஒன்று.

சாவித்திரி விரதம்

ஆனிமாதத்தில் பூரணையில் சுமங்கலிகளால் வைதவ்வியம் நீங்கும்படி அனுஷ்டிக்கும் விரதம்.

சாஸ்திரி

இது ஸ்மார்த்த பிராமணர்களுள் சிலர்க்கு உரிய பட்டப்பெயர். இவர்கள்வை தீகாசாரர்கள். இப்பட்டம் சிலபாம்பே ஜனங்களுக்கும் தேவாங்க ஜாதியிற் சிலர்க்கும் வழங்கி வருகிறது. (தர்ஸ்டன்.)

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

சில தாழிசைகளோடு பிறவறுப்புக்களைக் கொண்டுவருவது.

சிகண்டி

1. அஷ்ட வித்யேசுவரில் ஒருவர். 2. அகத்தியர் மாணாக்கர்கள் பன்னிருவருள் ஒருவர். இவர் சாரகுமாரன் பொருட்டு இசை நுணுக்கம் என்னும் இசைத் தமிழ் நூல் செய்தவர். 3. இவள் இதற்கு முன்சன்மத்தில் காசிராசன் புத்திரியாகவிருந்து வீஷ்மனைக் கொல்லக் காளியிடம் வரம் பெற்று யாகசேனனிடம் பிறந்து தாலகர்ணனால் ஆணாகிப் பீஷ்மரைக் கொன்றவள். 4. அந்தர்த்தானன். தேவி,

சிகண்டினி

விகிதாசுவன் முதற்பாரி.

சிகன்

கத்ருகுமரன், நாகன்.

சிகாமந்திரதேவதை

சிந்துரவாணமாய், பத்மாசனம், முக்கண், வாதம், அபயம், சத்தி, சூலம், சர்வாபரணபூஷிதராயிருப்பர்.

சிகி

இருபத்து மூன்றாவது புத்தன்.

சிகிச்சைகளின் வகை

மாத்திரை, உருக்கு மாத்திரை, செந்தூரம், பஸ்மம், ரஸாயனம், பதங்கம், லேகியம், சூாணம், வடகம், எண்ணெய், முழுக்குத் தைலம், குடிநீர், கஷாயம், வேது, ஒத்தடம், சுயமக்னி, முதலிய.

சிகித்துவசன்

துவாபரயுகத்தில் மாளவ தேசம் ஆண்டவன். இவன் தேவி சூடாலை.

சிகிரர்

சாகல்லியர் மாணாக்கர்.

சிகிஷ்ணு

புலகருக்குக் கதியிடம் உதித்த குமரன்,

சிகுரன்

ஆரியகன் புத்திரனாகிய சர்பம். சுமுகனுக்குப் பிதா.

சிக்கமாதையர்

ஒரு சிவனடியார். இவர் விதிப்படி சிவபூசைசெய்து யோகத் திருந்து தேகவியோகம் அடைய இவர் மனைவியார் சிவபூசையிடத்தை வெட்டிக் குழிபறித்து அவரைச் சமாதி செய்விக்க யத்தனிக்கையில் இவர் புத்திரர் வாலவிங்கையர், சிறுவர் ஆதலால் ஆசாரியராகிய மாதிராசையரிடஞ் சென்று தமது பிதா எழுந்திருக்க இல்லை என்றும், அதற்காகத் தன் தாயார் செய்கிற காரியத்தையுங் கூறினர். ஆசாரியர் வந்து கண்டு சிவத்தியானஞ் செய்து ஒரு பாடலை யருளிசெய்யச் சிக்கமாதையர் எழுந்து சிவ ஆசை செய்தனர்.

சிக்கிரன்

(சூ.) அக்கிவான் குமரன்.

சிக்கிலிகர்

சாணை பிடிப்பவர்கள் இவர்கள் கிராமங்கள் பட்டணங்களில் திரிந்து அரிவாள் மணைகத்தி முதலியவை சானை பிடிப்பவர்கள்.

சிங்ககேது

1. சண்டனைக் காண்க. 2, கனகபல்லவராசன் குமரன் (குளா.)

சிங்கசேநன்

பாஞ்சாலராசன்.

சிங்கச்சுவணம்

ஆபரணங்கள் செய்தற்குரிய உயர்ந்த ஒருவகைப்பொன். இஃது ஐராபதமென்னும் மலையிற் பிறப்பது (பெ~சதை)

சிங்கடி

கோட்புலியார் குமரி. சுந்தர மூர்த்திகளால் தமக்குப் பெண்ளூகப் பாடப்பட்டவள்,

சிங்கத்துவசன்

மாகிஷ்மதி அரசன். பரத்துவாசன் சாபத்தால் கழுதையாய்க் காவிரி ஸ்நானஞ் செய்து நீங்கினவன், (காவிரித்தல புராணம்)

சிங்கபலன்

கீசகனுக்கு ஒரு பெயர்.

சிங்கபாண்டியன்

இராசேந்திர பாண்டியனுக்கு ஒரு பெயர்.

சிங்கபுரம்

கலிங்கநாட்டிலுள்ள ஒரு நகரம். இஃது அரிபுரமெனவும் வழங்கும். இதற்கரசன் வசு. (சிலப்பதிகாரம்.)

சிங்கப்பிரான்

ஒரு வேதியர். இவர் துருக்கரால், கோயிலாகிய ஸ்ரீரங்கத்திற்கு உண்டான உபத்திரவத்தை நீக்கிக் கைங்கரியத்தால் திருமணத்தூணம்பி எனப் பெயர் பெற்றவர்.

சிங்கமுகாசுரன்

மாயை யென்னும் அரக்கி காசிபரைச் சிங்கவுருக்கொண்டு இரண்டாம் சாமத்திற்புணரப் பிறந்த சிங்கமுகமுள்ள அசுரன். இவனுக்கு ஆயிரம் சிரம். பட்டணம் ஆசுரம். தேவி விபுதை, குமரன் அதிசூரன், இவன் தழற்கண்ணன், சுமாலி, தண்டி இவர்களுடனும்; கடைசியில் வீரவாகுவுடனும் போராடி வில் முதலிய இழந்து தன் தாய் கொடுத்த பாசத்தைவிட்டுத் தேவாதியரையும் வீரவாகுவையும் கட்டிக் கடலில் இட்டுப் பாலசுப் பிரமணியருடன் போரிட வந்து பூதப்படைகள் அனைத்தையும் கோரரூபங் கொண்டு விழுங்கிக் குமரக்கடவுளால் பல முறை வெட்டுண்ட சிரம் கிளைக்கக், குமாரக்கடவுள் உங்கரிப்பால் கிளைத்தல் ஒழிந்து ஒரு சிரம் இரண்டு கரங்கள் பெற்று அடங்கிக் கடைசியில் வேலாயுதத்தால் உயிரிழந்தவன்.

சிங்கம்

இது மிருகராஜன், இதனை வேறு மிருகங்கள் வெல்லா, இது, (4, 5) அடி உயரமும் (8, 9) அடிகள் நீளமும் உள்ளது. வால் (4) அடி நீளம், சுபிலவர்ணம், முன்பின் கால்கள் வலுத்துக்கூரிய நகங்கள் கொண்டு பூனையைப்போல் கோபங் கொள்கையில் நீட்டவும் மற்றக் காலங்களில் மறைக்கவும் கூடியவை. முகத்திலுள்ள மீசையின் மயிர்களால் தனக்கு நேரிடும் தடைகளையுணர்ந்து விலகும். ஆண் சிங்கத்திற்குப் பிடரியில் அடர்ந்து நீண்டமயிர் உண்டு. இதற்கு இரவில் நன்றாகக் கண் தெரியும். இது இரையின் பொருட்டுச் செய்யும் கர்ச்சனையைக் கேட்ட பிராணிகள் பயந்தோட அவை களை வேட்டையாடிக் கொல்லும். இது யானையையும் எதிர்க்கும் ஆற்றல் உள்ளது, பெண் சிங்கத்திற்குப் பிடரி மயிரில்லை. இது வருஷத்தில் (3, 4) குட்டிகள் போடும். இது பசியால் வருந்திய போது பிராணிகளைக் கொல்லுமேயொழிய மற்றக் காலங்களில் கொல்லாது. அற்ப பிராணிகள் தன்னை யெதிர்த்தால் அவைகளைப் பொருட்படுத்தாத கம்பீரமுள்ளது. இதுநன்றி மறவாமிருகம், இது வடஇந்தியா, ஆப்ரிகா, அரேபியா, பாரசீகம், முதலிய தேசங்களினடர்ந்த காடுகளில் உண்டு, செத்த பிராணியைத் தின்னாது, ஒரு குதிரையின் முதுகை ஒரு அறையில் ஒடிக்கும். ஒரு பாய்ச்சலில் (15) அடிகள் பாயும், இதன் தலை உடம்பிற் கேற்றதாக இராமல் பருத்தது. நாக்கு அறம்போல் சொரசொரத்தது. இடை சிறுத்தும், மார்பு அகன்றுமிருக்கும். முன் கால்களில் (5) விரல்களும், பின் கால்களில் (4) விரல்களும் உண்டு. உள்ளங்காலிலுள்ள தரையால் சத்தமின்றிப் பிராணிகளைப் பிடிக்கும். நெருப்புக்கு அஞ்சும், புலி, சிறுத்தை, பூனை, புனுகுபூனை, இந்த இனத்தைச் சேர்ந்தவை.

சிங்களமதம்

இவர்கள், முன்பு கடவுள் ஒருவன் உண்டு அவனுக்கு அநேக சகாயர்களுளர் என்று, முதற் கடவுளரையும் துணைக் கடவுளரையும் ஆராதித்துக் கொண்டுவந்தனர். பின்னும் ஜாகா என்னும் பிசாச தேவதையையும் ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றுஞ்சிலர் நவக்கிர கங்களை ஆராதித்துக் கொண்டிருக்கின்றனர். தற்காலம் பெரும்பாலோர் புத்த மதத்தை அனுசரித்து வருகின்றனர்.

சிங்களம்

1. இலங்கையென்னும் தீவு, இது பூர்வம் குபேரனுக்குத் தம் தந்தையரால் கொடுக்கப்பட்டுப் பின் இராவணனால் கொள்ளப்பட்டுப் பின் தமிழ் நாட்டரசர், மகததேசத்தவர்களால் ஆளப்பட்ட பூர்வ இலங்கையில் ஒரு சிறுகூறு. மற்றவை கடல் கொள்ளப்பட்டன. 2. சிங்கள தேசத்தவரால் பேசப்பட்ட பாஷை, இது சமஸ்கிருத கலப்புள்ளது.

சிங்கள்

1. வண்முக சேனாவீரன். இலக்க வீரரில் தலைவன், அநலியைக் கொன்றவன், சண்டனை யுதைத்துக் கொன்று வியாக்கிரமுகனுடன் போரிட்டுத் தசமுகனைக் கொன்றவன். 2. கனகலிசயர்க்குத் துணையான அரசன். (சிலப்பதிகாரம்.) 3. சிந்துசோனைக் காண்க.

சிங்கவன்மன்

1. ஒரு அரசன், இவன் வேட்டைக்குச் சென்று ஒரு கரடியைத் துரத்திச் செல்ல அது பிருகு முனிவரை அடைக்கலம் அடைந்தது. அரசனை முனிவர் அதைக் கொல்லாது விடுக்கவெனக் கடறவும் அரசன் கொன் றமையால் முனிவரால் புலியாகச் சபிக்கப்பட்டுத் தீர்த்த ஸ்நானத்தால் குணமடைந்தவன். 2. காந்தியின் குமரன்.

சிங்கவருமன்

சூரிய வம்சத்து அரசனொருவனுக்குச் சிங்கநிறமுள்ள குமரன் பிறக்க அவனுக்குச் சிங்கவருமன் எனப் பெயரிட்டனர். இவன் தில்லையில் (சிதம்பரம்) வியாக்கிரபாத இருடி அநுக்கிரகத்தால் சிவகங்கையில் மூழ்கி உடம்பு பொன்னிறம் அடைந்து இரணியவன்மன் எனப் பெயர் அடைந்து அரசாண்டு தில்லையில் சிவதிருப்பணி செய்து முத்தி அடைந்தனன். இவன் தம்பியர் வேதவன்மன், சுமதி. கோயிற்புராணம்.)

சிங்காசனம்

சிங்கத்தினுருவாக, அரசனிருக்கச் செய்த பீடம்,

சிங்கிகை

(சிம்மிகை) தக்ஷன் பெண், காசிபர் பாரி, குமரன் இராகு. விப்பிரசித்தின் பாரி எனவுங் கூறுவர்.

சிங்கையாரியசக்ரவர்த்தி

மதுரையிலிருந்து போய்ச் சிங்கள மாண்ட பாண்டிநாட்டரசன், இவன் சந்ததியில் ஒருவன் செகராஜசேகரன் என்போன், தக்ஷண கைலாச புராணம் பாடினன்,

சிங்கோதரபவன்

புருவன்மனைக் காண்க.

சிசிரன்

1 சோமன் என்னும் வசு குமரன். 2. சாகல்யன் மாணாக்கனாகிய இருடி.

சிசுநந்தி

கலிங்கலைதேசத்து அரசன், பூதி நந்தனொடு பிறந்தவன்.

சிசுநாகன்

மகததேசாதிபதி.

சிசுபாயனனார்

உரோமஹர்கைணருக்கும் சுகருக்கும் மாணாக்கர்.

சிசுபாலன்

1. சேதிநாட்டு அரசன். கிருஷ்ணனுக்கு அத்தைப்பிள்ளை. ருக்மணியின் விவாகத்தில் கிருஷ்ணனால் செயிக்கப் பட்டவன். இவன் இரணியகசிபு அம்சம். இவன் தாய் சாத்துவதி, தந்தை தமகோஷன், இவன் பிறர் தகாலத்தில் அவனுக்குற்ற மூன்று கண்களாலும் நான்கு கரங்களாலும் தாய் கண்டு கலங்கினள். அசரீரி, எவனால் இவன் சாகப்போகிறானோ அவன் மடியில் இக்குழந்தையை வைக்கில் இவனுக்குள்ள அதிகக் கண்களும், கைகளும் மறையும் என்றது. அவ்வகையே கண்ணன் மடியிலிருந்த அக் கண்ணும் கையும் மறையக்கண்டு தாய் கண்ணனை நோக்கி என் குமரன் செய்யும் நூறு குற்றங்களைப் பொறுத்தல் வேண்டும் என வரம் பெற்றனள், வசுதேவனது அச்வமேதக் குதிரையைக் கட்டினவன். புருவென்பவன் மனைவியைக் கொள்ளை கொண்டவன். கிருஷ்ணனது அம்மான் பாரியைத் தந்தவக்கிரனுக்காகச் சிறை பிடித்தவன். விசாலன் பெண்களைக் கவர்ந்தவன். இவன் கிருதயுகத்தில் இரணியகசிபாயிருந்து நரசிங்க உருக்கொண்ட விஷ்ணு மூர்த்தியால் கொல்லப்பட்டுத் திரேதாயுகத்தில் இராவணனாய் இராம மூர்த்தியால் கொல்லப்பட்டு இப்பிறப்பில் பாண்டவரது இராசசூயயாகத்தில் கிருஷ்ண மூர்த்தியுடன் வலுவில் வாதிட்டுக் கிருஷ்ணனாற் கொல்லப் பட்டவன். இவன் பூர்வம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த துவாரபாலகன், துருவாசரால் இவ்வகையாகச் சபிக்கப்பட்டனன். இவர்களை இலஷ்மிதேவி, வேறு சில முனிவர்கள், இவ்வகைச் சபித்தனர் எனச் சிவபுராணம் கூறும். 2. சௌவீரதேசம் போகும் யாதவன் பார்யையை யபகரித்தவன். இவன் கரூ சனிமித்தம் மாறுவேஷம் தாங்கி நல்லம்மான் குமரியாகிய வைசாலினியை யபகரித்தவன். 3. தமகோவனுக்குச் சிதசிரசு இடம் பிறந்தவன். 4. இடை ஏழுவள்ளல்களில் ஒருவன்.

சிசுமா

ஒருமுனிவர். தருமர் இராசசூயத்தில் உத்காதாவாக இருந்தவர்.

சிசோதயர்

இரகுபதியைக் காண்க,

சிச்சிலி

இது பலநிறமாக உள்ள பக்ஷி. இதற்கு அலகு நீண்டிருக்கும். இது ஏரி, ஆறு முதலிய நீர்நிலைகளில் உயரப் பறந்து மீன்கள் மேய்வதைக் கண்டு திடீரென நீரில் குதித்து மீன்களைப் பிடித்துத் தின்பது இதனை மீன்குத்திப் பறவை என்பர்.

சிஞ்சயன்

ஒரு அரசன், சவர்ணடீ தந்தை நாரத உபதேசத்தால் இறந்த பிள்ளையை மீட்டவன்.

சிஞ்சுமாரன்

1. ஒரு அரசன், துருவனுக்கு மாமன். 2. தோஷன் என்னும் வசுவிற்குச் வரியிடம் உதித்த விஷ்ணுவின் அம்ச விசேஷம்.

சிஞ்சுமாரம்

இது காலசக்கிரம். கடவுளின் சர்வதேவ மயமான உருவம். இது முதலையின் உருப்போன்றது என்பர். இதனைத் துருவன், இந்திரன், வருணன், கசயபன் முதலியோர் நாடோறும் வலம் வருவர். இதன் வாலில் பிரசாபதியும் அக்கிநியும், வால் மூலத்தில் தாதாவிதாதாவும், கடிதலத்தில் சத்த இருடிகளும், முன் வாயில் அகத்தியரும், யமனும், முகத்தில் அங்காரகனும், குய்யத்தில் சனியும், பீசத்தில் பிரகஸ்பதியும், பக்கத்தில் சூரியனும், நாபியில் சுக்கிரனும், நெஞ்சில் சந்திரனும், தனங்களில் அஸ்வம் தேவர்களும், பிராணாபானங்களில் புதனும், ரோமங்ககளில் நக்ஷத்திரங்களும், சர்வாங்கங்களிலும் சனி கேதுக்களும், வசிப்பர் என்பர்.

சிட்டுணு

கைடவனைக் கொலைசெய்விக்க விஷ்ணுமூர்த்தியால் சிருட்டிக்கப்பட்டவன்.

சிதசத்ரு

ஒரு க்ஷத்திரியன் அவிட்சித்தின் புத்திரன்.

சிதசிரக

(சிரதசவா) தமகோஷனை மணந்தவள், இவள்குமரன் சிசுபாலன், இவன் தாய் சாத்துவதி.

சிதத்துவசன்

அசன் குமரன், குனிக்குத் தந்தை.

சிதப்பிரபன்

அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடத்து உதித்த குமரன்.

சிதம்பரசுவாமிகள்

இவர் மதுரையிலிருந்த இலக்கண வித்துவான். இவர்க்கு சிதம்பரம்பிள்ளை எனவும் பெயர். இவர் பிக்ஷை செய்து நிஷ்டை கூடியிருந்த குமார தேவரை ஆணவலசுணம் என்ன என்று இறுமாப்புடன் வினாவ, அவர் இவர் இறுமாப்பைக்குறித்து இப்படித்தான் இருக்குமெனத் தந்தவிடையால் அடங்கி அடிமை பூண்டு குமாரதேவரிடம் ஞானோபதேசம் பெற்றுச் சிவாதுபூதிச் செல்வராய் எழுந்தருளி யிருக்கையில் மீனாக்ஷி கட்டளைப்படி திருப்போரூர் வந்து பல திருப்பணிகள் செய்து சமாதியடைந்தனர். இவர் செய்த நூல்கள் தமது பாமாசாரியர் செய்த வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலைமறுத்தல் முதலிய நூல்கட்கு உரை, திருப் போரூர் முருகன் பிள்ளை தமிழ், போரூர் முருகன் சந்ததிமுறை முதலியன.

சிதம்பரஞ் செய்யுட் கோவை

செய்யுளிலக்கணத்திற்கு இலக்கியமாய்க் குமரகுருபர சுவாமிகளால் இயற்றப்பட்டது,

சிதம்பரபுராணம்

இது பாஞ்சோதி முனிவர் இயற்றியது. சிதம்பர மான்மியம் கூறும்.

சிதம்பரம்

இது சோணாட்டிலுள்ள சிவத்தலங்களில் முதன்மை பெற்றது. இது உபநிஷத்து ஆதிகளில் தகர ஆகாசத்தலம் எனப் புகழ்ந்து கூறப்பட்ட மகிமையுள்ள ஆகாச பூதத்தலம். இதில் சிவமூர்த்தி பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலிய மகருஷிகளுக்கு ஆனந்தத்தாண்டவ தரிசனம் அருளினர். இதில் புலீச்சுர தீர்த்தம், குய்ய தீர்த்தம், புலிமடு, வியாக்கிரபாதம், அனந்தம், பிரமம், நாகேசரி, சிவப்பிரியை, திருப்பாற்கடல், பரமானந்தகூபம் முதலிய தீர்த்தங்கள் அமரும். இதில் துன்மதன், துச்சகன், துற்றெரிசனன் முதலிய பலரும் முத்தி பெற்றனர். இதன் பெருமையைச் சிதம்பரபுராணம், கோயிற்புராணம், திருப்புலியூர்ப்புராணம், சபாநாதபுராணம் முதலிய பல புராணங்களிற் கண்டுணர்க.

சிதவதி

உசினரன் புத்திரி. இவள் காரணமாக ஒரு காந்தர்வன் வசிட்டர் வனத் தில் சாபம் பெற்றனன்.

சித்தகணம்

காசிபருக்கு அனுகையிடம் பிறந்த குமார்கள் பிரமனால் மானசமாய்ப் படைக்கப்பட்டவர் என்றும் கூறுவர்.

சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்

சிவ மூர்த்தியிடம் மனம்வைத்து முத்திய டைந்த தொகையடியவர். (பெ~புராணம்.)

சித்தன்

இவன் ஒரு சிலம்பவித்தை வல்லவன். தமிழ்நாடாகிய மதுரையில் இருந்தவன் அவன் ஒரு ஆசிரியனிடம் சிலம்பவித்தைகற்று அந்த ஆசிரியன் வருவாயினைத் தன்வசமாக்கி ஆசிரியன் கிழத்தனம் அடைந்தது அறிந்து அவனைக் கொல்ல வழிபார்த்தும், அவன் மனைவியைப் பல முறை தன்வசமாக்க எண்ணி அவள் உடன்படாமையால் வலுவிற்கைப்பற்றத் துணிந்தனன். கற்புடையளாகிய ஆசிரியன் மனைவி, பயந்து வீட்டிற் புகுந்து சொக்கலிங்கமூர்த்தியை எண்ணிக்கவலை அடைந்திருந்தனள். சொக்கலிங்கமூர்த்தி ஆசிரியனைப்போல் சித்தரிடம் சென்று சித்தா கிழவனாகிய நானும் நீயும் பலமறிவோம் நாளை வாவென இடங்குறித்து யுத்தத்திற்கு அழைத்தனர். சித்தன் உடன்பட்டு வந்து வாட்போரிட்டு மாய்ந்தனன். இதனைக் கிழ ஆசிரியன் கேட்டுக் கடவுளைத் துதித்து வணங்கினன்,

சித்தபதம்

தேவவூதி தங்கித் தவஞ்செய்த இடம்.

சித்தப்பகுதி

க்ஷிப்தம் சஞ்சலமான நிலை. மூடம் ஒன்று மறியா நிலை. விக்ஷிப்தம்; சொற்பகாலம் சஞ்சலமில்லாமலும், வெகுகாலம் சஞ்சலத்துடனிருக்கும் நிலை, ஏகாக்ரம்; ஒரே வஸ்துவை அவலம்பித்திருத்தல், நிருத்தம்; விருத்திசூன்யமான நிலை.

சித்தப்ரவாக்யம்

சித்தித்த அர்த்தத்தைக் கூறும் வாக்யம்,

சித்தராமதேவர்

சொன்னலாபுரத்தில் சிவலிங்கப் பிரதிட்டை செய்வித்து இது வன்றி வேறு (80000) சிவப்பிரதிட்டைகளையும் செய்வித்துக் கைலை சென்று சிவதரிசனஞ்செய்து தம்மைக்கேட்டுக்கொண்ட முனிவர்க்கு நந்திமாதேவரே வசவரென ஐயமறுத்தவர்.

சித்தராமையர்

சொன்னலாபுரத்து வீரசைவர், வசவர் காலத்தவர். இவர் மாணக்கர்கள் குளம் எடுக்கையில் அல்லமர் அவவிடம் வந்து சித்தராமையரை நிந்தித்தனர். இதைக்கேட்ட சித்தராமையர் நெற்றிக்கண்ணைக் காட்டி எரிக்க ஆரம்பிக்கையில் அத்த அல்லமரை வருத்தாது அவ்வூரை எரித்தது. இதைக்கண்ட சித்தராமையர் இவர் என்னை யாள வந்த சிவமூர்த்தி என்று பணிந்து அவரிடம் ஞானம் அடைந்தவர்.

சித்தர்

ஒன்பதின்மர் 1, சத்தியநாதர், 2. சதோகநாதர், 3. ஆதிநாதர், 4. அநாதி நாதர், 5. வெகுளிநாதர், 6. மதங்கராசர், 7. மச்சேந்திரநாதா, 8. கடேந்திர நாதர், 1. கோரக்கநாதர் 2, பதினெண்மர் 1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டை முனி, 6. திருமூலர், 7. நந்தி, 8. கூன் கண்ணர், 9. கொங்கணர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. புணாக்கீசர், 16. சுந்தரானந்தர், 17. உசோமருஷி, 18. பிரமமுனி. இவர்களன்றி ததன்வந்திரி, புலஸ்தியர், புசுண்டர், கருவூரார், இராமதேவர், தேரையர், கபிலர் முதலியரும் கூறுவர்.

சித்தவர்யமுனி

தாமசமனுவைக் காண்க.

சித்தவாசம்

ஒரு தீர்த்தம்.

சித்தாச்சிரமம்

நைமிசத்து அருகிலுள்ள வனம். இது விச்வாமித்திரர் ஆச்சிரமம். இதில் வாமனாவதாரத்திற்கு முன் விஷ்ணு தவம்புரிந்தனர். ஆதலின் இதில் தவம் முதலிய செய்யின் சர்வசித்திகள் உண்டாம் இது, தாடகையிருந்த வனத்திற்குச் சற்று கரத்திலுள்ளது.

சித்தாந்த கௌமதி

பாணினி முனிவர் செய்த வட நூலிலக்கண விரியுரை.

சித்தாந்தசாத்திரம்

(14) திருவுந்தியார், இருகளிற்றுப் படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபாவிருபது, பெண்மைநெறி விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிக் கலிவெண்பா. கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை விளக்கம், சங்கற்ப நிராகரணம்,

சித்தாந்தசிகாமணி

சிவப்பிரகாசர் செய்த வீரசைவ சித்தாந்த நூல்.

சித்தார்த்தமகாராசா

சைநர். வர்த்தமான தீர்த்தங்கரருக்குத் தந்தை, தேவி பிரியகாரணி.

சித்தார்த்தாதேவி

அபிநந்தனர்க்குத் தாய், சுயம்வரன் தேவி

சித்தி

1. விநாயகசத்தி, விநாயகரேவலால் கணனிடம் யுத்தத்திற்குச் சென்றவள் தருமதத்தனிடம் பிறந்தவள். 2. பகன் தேவி. 3. (8) அணுமா, மஹிமா, கரிமா, இலகுமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்வம், வசித்வம். ஆன்மாவைப்போலாதல் அணுமா. மஈத்துவமாதல் மகிமா. தன்னுடல் கண்டிப்பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை உருவவல்லவனாதல் கரிமா. இலகுத்தமாதலே லகுமா, வேண்டுவன அடைதலே பிராப்தி. நிறையுளனாதலே பிரகாமியம். ஆட்சியுளனாதலே ஈசத்வம். எல்லாம் தன் வசமாக்க வல்லனாதலே வசித்வம்.

சித்தி விநாயக விரதம்

புரட்டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விகாயக விரதம் அநுட்டிப்பது. இது பிரகஸ்பதியால் கூறப்பட்டது. இது தருமபுத்திரரால் அதுஷ்டிக்கப்பட்டது. சுக்ல சதுர்த்தியில் சந்திரதரிசனம் நிந்திக்கப்பட்டிருக்கிறது, இந்தோடித்தால் சியமந்தக மணியின் பொருட்டும் திருஷ்ணன் அபவாதத்தி வீக்கத்திற்காக விராயக பூசைசெய்தனர்.

சித்திபாகி

கண்ணன் குமரன்.

சித்திபுரம்

சீதரராஜன் நகரம். (மணிமே.)

சித்திரகன்

1. திருதராட்டிரன் குமரன். 2. விருஷ்ணிவம்சத்துப் பிறந்த யாதவன்.

சித்திரகர்

பிரசனி குமரர்.

சித்திரகாண்டன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரகாரன்

சிற்ப விதிப்படி சித்திரம் எழுதுவோன்,

சித்திரகீர்த்தி

திருதராட்டிரன் குமரன்.

சித்திரகுத்தன்

1. சிரவணரால் ஆத்மாக்கள் செய்யும் புண்ணியபாவங்களை புணர்ந்து யமனுக்கு அறிக்கையிடுவோன், இவனிருக்கும் பட்டணம் (20) காதவழி விஸ்தாரமுள்ளது. 2. விட்கம்பம் என்னும் குசபுரத்துவணிகன் குமரன். இவன் களவில் பசுக்களைத் திருடிக்கொண்டு வருகையில் வழியில் பசுவொன்று நடவாமற்போக அதைவிட்டு நீங்கினன். அப்பசு கோவிலுக்கு உபயோகப்பட்டதனால் புண்ணியம் அடைந்தவன்.

சித்திரகூடம்

1, சிதம்பரத்திற்கு ஒரு பெயர். இது வைஷ்ணவர் இட்டிருக்கிற பெயர். இதிலுள்ள பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருப்பதியை இப்பெயரிட்டு அழைப்பர். 2, ஒரு மலை, இதில் வால்மீக முனிவர் ஆச்சிரமம் இருந்தது. இராமமூர்த்தி ஆரண்யவாசத்தில் சில நாள் இங்கு வசித்தனர். இப்போது பண்டில்கண்ட் எனப்படும். இது சிருங்கிபேரபுரத்திற்குத் தென் மேற்கிலுள்ளது. 3. பிராயாகை ஷேத்திரத்திற்குச் சமீபத்திலுள்ள பர்வதம். இங்கு மந்தாகினி நதி பெருகுகிறது. (A hill in Bundalkhand.) 4. ஒரு வித்தியாதர நகரம். (சூளாமணி)

சித்திரகேது

1. பாரதவீரருள் ஒருவன், துருப்பதன் குமரன். 2. வசிட்டருக்கு ஊர்சையிடம் உதித்த குமரன். 3. தேவபாகனுக்கு முசையிடம் பிறந்த குமரர். 4. சூரசேனதேசத்து அரசனாகிய வித்யாதரன், இவனுக்குக் கோடி பெண்கள் தேவியர். இவன் முதற்றேவி கிருதத்துதி. இவளிடத்து ஒருபுத்திரன் பிறந்தனன். இதனாற் பொறாமை கொண்ட மற்றத்தேவியர், சிசுவிற்கு நஞ்சூட்டிக் கொன்றனர். இதனாற்றுக்கமடைந்த அரசன் ஆங்கீரச நாரத ருஷிகள் உபதேசித்த ஞானத்தால் குமரனுக்கும் தனக்கும் பற்றின்மை அறிந்து தவத்திற்குச் சென்றான். இவன் ஒரு முறை சாம்பமூர்த்தியைக் கைலையில் தரிசித்துத் தேவர்களும் தேவியருடன் கூடி இருக்கின்றனர் எனப் பரிகசித்து உமாதேவியாரால் விருத்திரன் என்னும் அசுரனாகச் சபிக்கப்பட்டனன். (பாகவதம்). 5. சவ்வீரதேசத்து அரசன், இவன் புத்திரனில்லாது வருந்தக் கார்க்கியமுனிவர் இவனை நோக்கி நீ சிவராத்திரி விரதமிழந்ததால் இவ்விதமடைந்தனை ஆதலால் புண்ணியத்தல யாத்திரை செய்யெனக் கூற அவ்வகைசெய்து புத்திரப்பேறடைந்தவன்.

சித்திரக்கவி

மாலை மாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்றி, கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்தினத்தா லுயர்ந்த பாட்டு, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, ஒற்றுப்பெயர்த்தல், ஒரு பொருட்பாட்டு, சித்திரக்கா, விசித்திரக்கா, விகற்பநடை, வினாவுத்தரம், சருப்பதோபத்திரம், எழுத்து வருத்தனம், அக்கரச்சுதகம், நாகபாதம் முதலிய,

சித்திரக்கா

நான்கு கடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும் பிறவாற்றானும் வழுவாது பாடுவது. (யாப்பு~வி.)

சித்திரசாருகன்

துரியோதனனுக்குத் தம்பி. திருதராட்டின் குமரன்,

சித்திரசேநன்

1. சராசந்தனுக்கு மந்திரி சூதில் வல்லவன், 2. இந்திரலோகத் திலுள்ள ஒரு தூதுவன். அருச்சுநன் நிவாதகவசருடன் போரிடச் சென்ற காலத்துத் தூதாக இருந்தவன். 3. தேவசாவர்ணி மனுப்புத்திரன். 4. நரிஷ்யந்தன் குமரன். 5 திருதராட்டிரன் குமரன். (14) ஆம் நாட்போரில் வீமனால் இறந்தவன், 6. ஷண்முகசேநாலீரருள் ஒருவன். 7. வபுத்திரத்தன் குமரன், இவன் குமரன் வீமன். 8. கர்ணன் குமரன், 9. பாண்டுபுத்திரர் அரண்யவாசத்தில் நதிக்கரையில் சத்தியஸ்கந் தயாகஞ் செய்கையில் துரியோ தனன் தங்கள் செல்வத்தைப் பாண்டவர்களுக்குக் காட்டும்படி பாண்டவர்கட்கு எதிரில் கூடாரம் இட்டிருந்தனன். சித்திரசேகன் என்னும் காந்தருவன் அவ்விடம் வந்து தன் தூதரை விடுத்து அந்த இடத்தைவிட்டு நீங்க ஏவினன். தூதர் சென்று இது எம் அரசனுக்கு விளையாட்டிடம் நீங்குக எனத் துரியோ தனன் மறுத்தனன். இதனால் சித்திரசேநன் துரியோதனனுடன் யுத்தஞ்செய்து துரியோதனன் மனைவியரையும் துரியோதன்னையும் கட்டிச் சென்றனன். துரியோதனன் மனைவியர் பரிதபிக்கக் கண்ட தருமர் பீமார்ச்சுன நகுல சகாதேவரை விடுத்துச் சித்திரசேனன் கையினின்றும் விடுவித்தனர். 10, தெய்வீக அரசனுக்குச் சேரன் குமரியாகிய பத்மாவதியிடம் பிறந்தவன். இவன் வழியில் மலையமான் வம்சம் உண்டாயிற்று. 11. திராவிட தேசத்தரசரில் ஒருவன் இவன் பாசண்டர் கூற்றேபற்றி வைதிக ஒழுக்கம் கைவிட்டுப் பாசுபத ஒழுக்கம் மேற்கொண்டு நரகத்தில் வீழ்ந்தான், (பாத்மபுராணம்.)

சித்திரசேநபாண்டியன்

சித்திரவர்ம பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரவிக்கிரமன்.

சித்திரச்சரன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரதன்வன்

சோழர் சரித்திரம் காண்க.

சித்திரதரன்

1. திருதராட்டிரன் குமரன். 2 சோபனபுரத்து அரசன், 3. போதன புரத்திலிருந்த சிற்பி. 4. ஸ்ரீநிலைராசகுமாரன் (சூளா.)

சித்திரதேவன்

துரியோதனனுக்குத் தம்பி, திருதராட்டிரன் புத்திரன்.

சித்திரத்துவசன்

திருதராட்டிரன் குமரன்,

சித்திரத்துவசபாண்டியன்

சித்திர பூஷணபாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரவருமன்.

சித்திரநதி

ஒரு தீர்த்தம்.

சித்திரன்

1. திருதராட்டிரன் குமரன். 2. யமனிடம் உள்ள கணக்கன். 3. கனகலிசயர்க்குத் துணையான அரசன். 4. ஒரு காந்தருவன், தன்னிடம் வந்த நாரதமுனிவரை எதிர்கொண்டு உபசரிக்காமையால் அவர் சாபமிட முதலையுருக் கொண்டு ஒரு தடாகத்திலிருந்து சிலகாலம் பொறுத்துத் தடாகத்தில் நீராடவந்த மகோற்கடரை விழுங்கப் பிடித்து அவராற் சாபம் நீங்கி நல்லுலகடைந்தவன். 5. ஒரு அரசன், இவனைப்பற்றி இருக்குவேதத்திற் புகழ்ந்திருக்கிறது. 6. கனகவிசயர்க்குத் துணையாயினவோரரசன். (சிலப்பதிகாரம்).

சித்திரபலை

1. ருக்ஷபர்வதத்திலுள்ள நதி. 2. ஒட்டார தேசத்திலுள்ள ஒரு நதி A river in Orisss,

சித்திரபாகு

திருதராட்டிரன் குமரன்.

சித்திரபாணன்

திருதராட்டிரன் குமரன்

சித்திரபானு

திருதராட்டிரன் குமரன்.

சித்திரபூடண பாண்டியன்

சித்திரவிரத பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரத்துவசன்.

சித்திரமாடத்துத் துஞ்சியநன்மாறன்

வெற்றிவேற்செழியனைக் காண்க.

சித்திரமுகன்

1. இவன் ஒரு வணிகனாயிருந்து பின் பிராமணனானவன். இவன் புத்திரி அத்ருஸ்யந்தி. சத்திரிஷியின் பாரியை. (பாரதம்~அநு.) 2. வசிஷ்டருக்குப் பிறந்த வைசியன், இவன் அவரது அநுக்ரகத்தால் பிராமணன் ஆனான், (பார~அச்.)

சித்திரம்

சிற்ப நூலுள் ஒன்று.

சித்திரயோதி

திருதராட்டிரன் குமரன்.

சித்திரரேகை

1, குபேரன் தேவி, 2. சித்திரலேகைக்கு ஒரு பெயர்.

சித்திரலேகை

1. கபந்தன் பெண், பாணாசுரன் பெண்ணாகிய உஷையின் உயிர்ப் பாங்கி, உஷை கனாக்கண்டு கனவில் கண்ட புருஷனைத் தோழிக்குத் தெரிவிக்க அவள் அனிருத்தன் என்று அறிந்து அவன் உறங்குகையில் அவனைக் கட்டிலுடன் உஷையிடங் கொண்டுவந்து காட்டிய அதிமாயாவி. 2. கும்பாண்டன் குமரி, தன் வன்மையால் பார்வதியார் கோலங்கொண்டு சிவ பெருமானிடஞ் சென்று பின்பு நிஜவுருவங்கொண்டவள். (சிவமகாபுராணம்),

சித்திரவன்மதான்

திருதராட்டிரன் குமரன்.

சித்திரவன்மன்

1, பாரதவீரருள் ஒருவன். விரூபாக்ஷனம்சம். 2, திருவாரூரில் ஆடகேசுரலிங்கம் தாபித்துப் பூசித்த முனிவன்.

சித்திரவன்மா

திருதராட்டிரன் குமரன்.

சித்திரவருமன்

சீமந்தினியைக் காண்க.

சித்திரவர்மபாண்டியன்

சித்திரத்துவச பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திரசேநன்.

சித்திரவாகன்

1. பாண்டி நாட்டிலிருந்த மணலூர்புரத்து அரசன், சித்திராங்கதைக்குத் தந்தை இவனுக்கு மலையத்துவசன் என்றும், வீரன் என்றும் வேறு பெயர்கள் உண்டு,

சித்திரவாகு

திருதராட்டின் குமரன்.

சித்திரவிக்கிரமபாண்டியன்

சித்திரசோ பாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் இராசமார்த்தாண்டன்.

சித்திரவிசித்திரன்

திருதராட்டிரனுக்குக் குமரன்.

சித்திரவிரதபாண்டியன்

சுகுணபாண்டியனுக்குக் குமரன். இவன் குமரன் சித்திர பூடணன்.

சித்திரவீரன்

சகுனிக்குக் குமரன்.

சித்திரவீரியன்

சந்தனு குமரன். இவனே விசித்திரவீரியன்.

சித்திரவுத்தமன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திராக்கன்

திருதராட்டிரன் குமரன்.

சித்திராங்கதன்

1, ஒரு காந்தருவன், சந்தனு புத்திரனாகிய சித்திராங்கதனைத் தன் பெயர் கொண்டிருக்கிறான் எனக் கொன்றவன். 2, பாண்டி நாட்டரசன். சித்தராங்கதைக்குத் தந்தை 3. சந்தனுக்குப் பரிமளகந்தியிடம் உதித்த குமரன். இவன் சித்திராங்கதன் என்னும் கந்தருவனால் கொலையுண்டவன். 4. திருதராட்டிரன் குமரரில் ஒருவன். 5. ஒரு காந்தருவன் கங்கைக்கரையில் பூங்காவனம் செய்து கொண்டு அதிலிருந்தவன். பாண்டவர் திரௌபதையின் சுயம்வரத்திற்குச் செல்லுகையில் அவன் சோலையைத் தாண்டிச் சென்றனர். அதனால் காந்தருவன் யுத்தத்திற்குவர அவனைப் பாண்டவர் அக்நியஸ் திரத்தால் வருத்திக் காந்தருவப்புரவி பெற்றனர். 6. இவன் எவிச்செவி யரசனுடைய தம்பி. தருசகனுக்குப் பகைவன். மகத நாட்டில் நடந்த போரில் பிடித்து உதயணனால் சிறையில் வைக்கப்பட்டுச் சிலநாள் சென்றபின் தருசகனால் விடுவிக்கப்பட்டோன். 7. தசார்ணவதேசத்தரசன், அச்வமேதக் குதிரைக்குப் பின் சென்ற அருச்சுநனை யெதிர்த்தவன். (பார~அச்வ,

சித்திராங்கதை

பாண்டிநாட்டு அரசனாகிய சித்திராங்கதன் (சித்திரவாகன்) குமரி, இவள் குமரன் பப்புருவாகன். இவள் தனுர்வித்தையில் வல்லவளாய்ப் பெண்ணரசு புரிந்திருக்கையில் தீர்த்தயாத்திரை பொருட்டு வந்த அருச்சுநன் இவளை மணந்தனன். இவளே அல்லி அரசி.

சித்திராங்கனை

1. விப்பிரவாகுவின் குமரி. 2. சௌமியனைக் காண்க.

சித்திராங்கி

1, இராஜராஜ நரேந்திரன் காமினி. இவள் கொடியவள் ஆகையால் வழக்கத்தில் சித்திராங்கி என்பர். காமலீலையில் இவளை வென்றவர் இல்லை, 2. சாரங்கதரனைக் காண்க,

சித்திராசுவன்

திருதராட்டிரன் குமரன்,

சித்திராதன்

1. ஸ்ரீநிலை ராசகுமாரன். 2. தர்மரதன் குமரன். 3, திரிசங்கு குமரன், இவன் குமரன் சசிபிந்து. 4. தீவிரதன் குமரன், 5. திருதராட்டிர புத்திரன். 6 ஒரு காந்தருவன், கௌசிகன் உடல் கிடந்தவழி ரதத்திற் சென்று தலைகீழாக விழுந்து வாலகில்லியர் சொற்படி அவன் எலும்புகளைக் கங்கையில் விட்டுச் செம்மை அடைந்தவன். 7. சுபார்சுவகன் குமரன். 8. ஒரு காந்தருவன், இவன் மாறு வேடங்கொண்டு பாஞ்சால மடையும் அருச்சுநனுடன் யுத்தஞ் செய்து அவன் வன்மை கண்டு அவனுக்குப் பொருள்களை வன்மையாய்ப் பார்க்கும் சாக்ஷஷி என்னும் வித்தையைக் கொடுத்து அவனிடமிருந்து அக்கிசிராஸ்திரம் பெற்றவன்,9. ஒரு அரசன் இவன் பெருஞ் செல்வ முள்ளவனாய் அரசர்கள் பலரும் தன்னை வணங்க அரசாண்டு வருகையில் மறுபிற வியிலுமிவ்வாறு இருக்க எண்ணி வசிட்டரை அடைந்து என் முன்பிறவியின் வரலாறு என்னென்று கேட்டனன். வசிட் டர் சற்று ஆலோசித்து அரசனே நீ முற்பிறவியில் தாழ்ந்த குலத்திற்றோன்றி ஷாமகாலத்துக் கட்டை வெட்டிச் சீவித்து வருகையில் ஒருநாள் விறகு விலையாகாமல் அவ்விடம் யாகஞ் செய்துகொண்டிருந்த யாகசாலையில் கட்டையைப் போட்டு விட்டு அந்தணருக்குச் சீத நிவாரணஞ் செய்து பின் அங்கிருந்த வைசியன் தானஞ் செய்யக் கண்டு நாம் இவ்வாறு தானஞ் செய்யப் பொருள் பெறவில்லையேயென்று எண்ணிய புண்ணியத்தாலிப்பலனடைந் தனை யிப்போது பூதானஞ் செய்க என ஏவப்பட்டவன். (சிவமஹாபுராணம்.) 10. இவன் ஒரு காந்தருவன், தீமைகளியற்றி நாரத ருபதேசத்தால் விஷ்ணுவை யெண்ணித் தவமியற்றி, மறு பிறவியில் பிரகலாதனாகப் பிறந்தவன். (திரு முட்ட புராணம்.) 11, கீகடதேசத் தரசன், இவன் சிவபூசாதூரந்தான். இவனுக்குக் கமலலோசனை யென்னும் ஒருகுமரி பிறக்கும்போது கண் திறவாது பிறந்தனள். இது கண் திறக்க அரசன் தேவ வைத்தியரை யழைத்துக் காட்டினன். பின் சிவசந்நிதானத் தெதிரில் கொண்டு செல்லக் குழந்தை மவா தேவத்வனியுடன் கண் திறந்து சிவபூசை செய்யக் கண்டு அங்கு வந்திருந்த தேவ வைத்தியரு மிந்திரன் வாசுகியும் வியப்படைந்து சென்றனர். (சிவரஹஸ்யம்.) 12. சோழர் சரிதை காண்க. 13. முனியென்பவளது குமாரன் காதம்பரியின் தந்தை, 14. ஒரு க்ஷத்திரியன், நர்மாதா நதியில் மனைவியுடன் கிரீடித்திருந்த பொழுது ஜலத்தின் பொருட்டு வந்த இரேணுகையால் காணப்பட்டவன். 15, மார்த்திகாவதனைக் காண்க.

சித்திராதன்

1, குரோதகீர்த்தி குமரன். 2. கேகயன் குமரன், தாய் சயந்தி, பாரி, ஊர்ணை, குமரன் சம்பிராட். 3. உகதன் குமரன், இவன் குமரன் சீதரன். 4. பிரியவிரதன் பேரன், மேதாதியின் குமரன்.

சித்திராதேவி

குபேரன் பாரியை.

சித்திராதை

அக்குரூரன் தேவி.

சித்திராத்தக்க்ஷன்

குரோத கீர்த்தியின் குமரன்.

சித்திரான்னவகை

இவை அன்னத்தில் வாய்க்கினிய பொருள்களைப் புணர்த்திச் செய்வன. பாற்பொங்கல், பருப்புப்பொங்கல், சருக்கரைப்பொங்கல், மிளகோரை, புளியோரை, கடுகோரை, எள்ளோரை, உழுந்தோரை, ததியோதனம், வெங்கிபாத், பலவகைக் காய்கள் சேர்ந்த சோறு, கிச்சடி, பழரசம் சேர்ந்த அன்ன முதலிய.

சித்திராபதி

மாதவிக்கு நற்றாய். மணிமேகலையை உதயகுமாரனுடன் கூட்டமுயன்றவள். (மணிமேகலை)

சித்திராயுதன்

1. திருதராட்டிரன் புத்திரன், 2. சிங்கபுரத்து அரசன், அருச்சுநனால் கொல்லப்பட்டவன். 3. ஒரு காந்தருவன்,

சித்திரை மாதப்பிறப்பு

சித்திரை மாதப்பிறப்பு ஞாயிற்றுக்கிழமையாகில் அற்பமழை, திங்களாகில் வெள்ளங்காணும், செவ். கலகமுண்டு, புத காற்றதிகம், வியா சுபமுண்டு, வெள் பெருமழை, சநி மழை யில்லை, பின்னும், சஷ்டி, அஷ்டமி, உவா, இருத்தை ஆகா. மூன்று உத்திரங்கள் அஸ்தம், திருவோணம், அவிட்டம், ரேவதி, மிருகசிரம், மூலம், உத்தமம். சோதி, சித்திரை, ரோகணி, சதயம், புனர்ப்பூசம், பூசம், மகம், அசுவநி, அனுடம், இவை மத்திமம். மற்றவை ஆகா,

சித்திரைப் பரணிவிரதம்

இது சித்திரை மாதம் பரணி நக்ஷத்திரத்தில் வைரவ மூர்த்தியை யெண்ணி அநுட்டிப்பது.

சித்திரோபலை

இருக்ஷபர்வதத்தில் பிரவகிக்கும் ஒருநதி.

சித்துருபன்

சோமகாந்தனைக் காண்க.

சித்தை

அஷ்டசத்திகளில் ஒருத்தி.

சித்ரசிகண்டிகள்

இவர்கள் விசித்ரமான மயிற்றோகை யுடையவர்கள், இவர்கள் ஏழுமுனிவர்கள், பாஞ்சராத்ர ஆகமத்தை மேருமலையிலிருந்து செய்தவர் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலத்தியர், புலகர், கிரது, வசிட்டர்.

சித்ராதன்

இவன் ஒரு காந்தருவன் அமராவதிக்கருகிலுள்ள வனத்தில் வசித்திருந்தவன். இவன் வசித்தபடியால் அவ்வனத்திற்குச் சைத்ராதம் எனும் பெயர் உண்டாயிற்று. இவன் விமானத்தில் ஏறிக்கொண்டு பூதஞ்சாரம் வருகையில் கைலாய மலையையடைய ஆங்குப்பாகம் பிரியா அர்த்த நாரிபாகனாகிய சிவமூர்த்தியைக் கண்டு எல்லாரும் வணங்கும் பரமனிவ்வாறு உமையோடு பிரியாதிருத்தல் பொருந்துமோ வென்று பரிகசிக்கக் கேட்ட பிராட்டி சினந்து தேவருஷிகளாலறியப் படாத வுண்மைப்பொருளைப் பற்றிப்பரிகாசித்ததால் நீ அசுர யோனியில் விருத்திராசுரனாகப் பிறக்க எனச் சபிக்கப்பட் டனன். இவனது மற்ற சரிதங்களை விருத்திராசானைக்காண்க.

சித்ரூபசத்தி

சுத்தரஜசுக்குப் பெயர், (நானா.)

சிநசேனாசாரியார்

விஜயாலய சோழன் காலத்தில் மாகராட்டிர மன்னனா யிருந்த அமோகவருஷனுடைய நண்புபெற்று மகாபுராணத்தின் முதற் பாகமாகிய ஆதிபுராணத்தையியற்றிய சைநகவிஞர்.

சிநி

1. சாத்தகியின் பாட்டன். 2. விடூரதன் புத்திரனாகிய சூரன் குமரன். 3. யாதவவம்சத்து அநமித்திரன் குமரன். 4. யுதாசித்தின் குமரன். 5. கார்ககன் தந்தை. 6. சநாதனன் என்னும் வேதியனுக்குக் குமரன், 7. அநுமித்திரன் குமரன் (விருஷ்ணி வம்சத்தவன.) இவன் குமரன் சத்தியகன். இவன் குமரன் யுயுதானன், (அல்லது) சாத்தகி சோமதத்தனால் கொல்லப்பட்டான்.

சிநிவாலி

ஆங்கீரசருஷிக்குச் சிரத்தையிடம் உதித்த குமரி. தாதா எனும் ஆதித்தன் தேவி, குமரன் தரிசம்.

சிநேந்திரபத்தர்

இவர் கட்டிவைத்த சிநாலயத்திருந்த மாணிக்க தீபத்தைத் திருடர் நால்வரில் கீர்த்திதரர் என்பவர் திருடிச் செல்வது கண்டு காவலாளி பிடித்துச் சிநேந்திரபத்தரிட மறிவிக்கப் பத்தர் ஷமணன் திருடினான் எனும் அபவாதம் நீங்க நானே அதனைக் கொண்டு வரக் கூறினேன் என்று விடுவித்தனர். பின் கீர்த்திதரர் யமதரரிடம் உபதேசம் பெற்றுக் கீர்த்தி பெற்றனராம். (சிநேந்திரபத்தர் கதை,)

சிநேந்திரமாலை

சைநாசிரியராகிய சிநேந்திரர் இயற்றிய சோதிட நூல்,

சிநேந்திரர்

(சைநர்) சிநேந்திரமாலை செய்த தமிழாசிரியர்.

சிந்தன்

சண்முகசேநாவீரன்.

சிந்தாதேவி

சரஸ்வதிதேவி, இவளுக்குத் தென்மதுரையிலிருக்கும் ஆலயத்திற்குக் கலாநிலயம் என்று பெயர். ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை யளித்தவள், இவளைச் சிந்தாவிளக்கென்றும் கூறுவர். (மணிமே)

சிந்தாமணி

1. பாற்கடலிற் பிறந்த பொருள்களுள் ஒன்று. இது இந்திரன் இட மிருந்து நினைத்ததைத் தரவல்லது. 2. திருத்தக்கதேவர் இயற்றிய சீவகன் என்னும் இராசகுமரன் கதை இது, (3145) செய்யுட்கள் கொண்டது.

சிந்தாமணி விநாயகர்

இவர் சிந்தாமணியைத் தரித்த காரணத்தால் சிந்தாமணி விநாயகர். எனப்பட்டனர், கணனைக் காண்க. கணன் கபில முனிவரிடமிருந்த சிந்தாமணியைக் கவர, கபிலர் விநாயகரை யெண்ணி யாகமியற்ற, அதில் சித்திபுத்திகளுடன் சிங்கவாகனத்தெழுந்தருளிய விநாயகர். இவர்க்குக் கபிலவிநாயகர், சுமுகர் எனவும் பெயர். (பார்க்கவ புராணம்.)

சிந்தியல் வெண்பா

மூன்றடியாய் நேரிசை வெண்பாப்போல் வருவது நேரிசைச் சிந்தி யல் வெண்பா, இன்னிசை வெண்பாப் போல் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (யாப்பு~இ.)

சிந்து

1. ஒரு இருடி, 2. கங்கையின் பிரிவு, மேற்கடலில் பாய்வது. இதன் துறையில் சமதக்கினி முனிவர் புத்திரராகிய இராமர் சிவமூர்த்தியை எண்ணித் தவமியற்றிப் பரசுபெற்றுப் பரசிராமர் எனப் பெயரடைந்தனர். The river Indus. 3, காசிபன் குலத்துதித்தவன். இவன் சிவமூர்த்தியை யெணணித் தவமியற்றி அடைவேயுயர்ந்து பிரமாவாகி அயிந்தவர் எனும் பெயருடன் உலக சிருட்டி செய்தவன், (ஞானவாசிட்டம்.) 4. சக்கிரபாணியின் புதல்வன். இவன் உற்கை என்பவளை மணந்து தேவ இருடியரை வருத்தி விநாயகர் தன்னைக் கொல்ல அவதரித்ததை அறிந்து பல அசுரரை ஏவி முடிவில் விநாயகரால் மாய்ந்தவன். (விநாயக புராணம்). 5. ஒரு தேசம், சுரமைநாட்டைச் சேர்ந்தது. (சூளா.) 6. சௌவீரதேசத்துக்கு அருகிலுள்ள தேசம். The Country between. The Indus and the Jhelum. 7. இப்பெயருள்ள நதிகள். இரண்டு, ஒன்று இமயத்திலும், மற்றொன்று மேருவிலுந் தோன்றும். (பெருங்கதை.)

சிந்துசேநன்

இவன் திருமாலிடம் சக்கரம் பெற்று உருத்திராஷமணிந்த சிங்க னுடன் சண்டை செய்யச் சிங்கன் உருத்திராக்ஷம் அணிந்ததால் செயித்தது கண்டு பின்னிடைந்தவன்.

சிந்துதீபன்

1. (சூ.) நாபாகன் குமரன், இவன் குமரன் அயுதாயு. 2. ஒரு இருடி. தேவசந்மா, வேதநாதன் முதலியவர்க்கு நேர்ந்த நரி, குரங்குகளின் பிறப்பொழியச் சேதுஸ்நானஞ் செய்ய ஏவினவன். 3. அம்பரீஷன் புத்ரன், இவன் ரூக் வேதத்தில் ஜலத்தைப்பற்றி ஒரு கீதஞ் செய்திருக்கிறான்,

சிந்துதேசமாக்கள்

இவர்கள் பலபாஷைகளை யறிந்தவர்களா யிருந்ததுடன் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாகவு மிருந்த வீரர், (பெருங்கதை

சிந்துதேசாதிபதி

விருத்தக்ஷத்திரனைக் காண்க. இவன் சயித்திரதனுக்குத் தந்தை. சிமந்தபஞ்சகத்தில் தன் குமரன் சிரத்தை வெட்டினோன் இறக்கத் தவஞ் செய்திருந்து அருச்சுநன் எய்த அம்பினால் இறந்த தன் குமரன் சிரத்தைத் தன் கரத்தில் கண்டு தலைபிளந்து இறந்தவன்.

சிந்துத்வீபன்

1. ஒரு இருடி ஆபோஹிஷ்டமெனு மந்திரத்திற்குருஷி 2. ஒரு அசுரன், வேத்ராசுரனைக்காண்க.

சிந்துமுனிவர்

ஒரு இருடி. மணிபத்திரன் என்னும் காந்தருவனை மீனாகச் சபித்தவர்.

சிந்துமேதன்

தண்டனைக் காண்க.

சிந்துரதன்

பிரகத்ரதீன் குமரன், இவன் குமரன் சைலாதன்.

சிந்துரன்

1. நராந்தகன் ஏவலால் விகண்டனுடன் கூடிக் காசிப்புரோகிதன் குமரர்போல் மகோற்கடரைத் தழுவவந்து மகோற்சகடராற் றழுவுண்டி றந்தவன். 2. பிரமன் கொட்டாவிவிட அதினின்றும் தோன்றிப் பிரமனால் எவரைத் தழுவினும் அவர் இறக்கும் வலிபெற்றுத் தந்தையாகிய பிரமனைத் தழுவச் சென்றனன். அவர் அஞ்சிச் சிவமூர்த்தியிடம் அடைக்கலம்புக நீங்கித் தேவரை வருத்தித் திரிகையில் பார்வதியார் வயிற்றில் வளரும் சிசு உன்னைக் கொல்லும் என அசரீரி சொல்லக் கேட்டுப் பார்வதியார் வயிற்றில் வளர்ந்த விநாயகமூர்த்தியின் சிரத்தைக் காற்றுருக்கொண்டு சேதித்துச் சிரத்தை நருமதையில் இட்டனன். அது கணேச குண்டமாயிற்று. அக்குண்டத்திலிருந்து ஒரு நதியுண்டாய் அது சோணை நதி ஆயிற்று. பின்பு விநாயகர் திருவவ தரிக்கச் சிந்துரன் யுத்தத்திற்கு வந்தனன். விநாயகர் சிந்துரனைக் கசக்கித் திலகமாக் கொண்டனர்.

சினி

1. யுதாசித்தின் குமாரன். இவன் குமரன் அநமித்ரன். 2. அநமித்திரன் குமரன், இவன் குமரன் சத்தியகன். 3. சூரன் குமரன், இவன் குமரன் போசன்,

சின்னதம்பி புலவர்

இவர் யாழ்ப்பாணத்து நல்லூரினர். இவர் வில்லவராய முதலியாருக்குக் குமரர். வேளாண்மாபினர். சைவர் தமிழ் இலக்கிய இலக்கணம் வல்லவர். இவர் செய்த நூல்கள் மறைசையந்தாதி, கல்வளை யந்தாதி, இவர் இற்றைக்கு இரு நூறு வருடங்களுக்கு முன்னிருந்தவர் போலும்.

சின்னபொம்மய்ய நாயக்கன்

என்ற பொம்மய்ய நாய்க்கன், வேலூர் அரசன், இவன் அப்பைய தீக்ஷிதரை ஆதரித்தவன் (சகம் 1504). (ஆரணி தாலுகா அடைபாலம் சாசனம் நல்லபொம்ம நாய்க்கன் சகம் 1493.

சிபி

1. (சூ.) உசீநரன் குமரன் எனவும், சாக்ஷசமனுவிற்கு நட்வலையிடம் உதித்தவன் என்றுங் கூறுவர். இரண்டு முறையாய்ப் பிறப்புக்கூறி யிருத்தலால் இவன் சூரியவம்சம், சந்திரவம்சம் என்று துணியக்கூடவில்லை. ஆயினும் கவிச்சக்கர வர்த்தியாகிய கம்பர் இராமாயணத்தில் ”புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க பெருந்தகை தன்புகழிற்பூத்த அறனொன்று. திருமனத்தான்” எனத் தசரதனைப் புகழ்ந்து கூறியிருத்தலால் இவன் சூரியகுலத்து அரசனேயாம். இவன் உசீநரன் குமரன் எனின் சந்திரகுலத்து அர சனாயிருத்தல் வேண்டும். இப்பெயர்கொண்ட ஒருவன் சந்திரகுலத்தில் இருக்கின்றனன். இவன் வனத்திலிருக்கையில் தேவர் இவனது தவத்தைச் சோதிக்க இந்திரன் வேடனாகவும், அக்திதேவன் புறாவாகவும், உருவடைந்து அரசன் காண வேடன், புறாவைத் துறத்தி அரசனுக்கு நேராகவரப் புறா அரசனிடம் அபயமடைந்தது. அரசன் வேடனை நோக்கி வேறு இறைச்சி தருகிறேன். இதை ஒழிக என வேடன் உடன்படாது இதனைத்தராது மறுக்கின் அப்புறாவின் நிறையுள்ள உன்னுடம்பின் இறைச்சி தருக என, அரசன் மகிழ்ந்து அந்தப்படி ஒரு தலையிட்டு அதில் புறாவை நிறுத்தித் தன்னுடலின் இறைச்சி முழுதும் அறுத்திட்டனன். இருந்தோறும் புறவு இட்ட தட்டுத் தாழ்ந்தேவர உடம்பில் வேறு மாமிசம் இல்லாமையால் அரசன் தானே துலையில் ஏறத் தேவரிருவரும் களித்து அரசனுக்குத் தரிசனந்தந்து உடலிற் றிசை வளரச்செய்து சுவர்க்கம் அளித்தனர். இவ்வா றன்றி யமனும், அக்கினி யும், வல்லூறும் புறாவுமாக அடைந்தனர் எனவும் சிவ புராணம் கூறும். 2, (பிர.) உசீநரன் குமரன். இவன் குமரர் விருஷ தர்ப்பன், சுவிரன், மத்திரன், கேகயன். இவன் பூமியைப் பாய்போல் சுருட்டின வீரன், தன் ரதத்தின் சப்தத் தால் பூமி நடுங்கும்படி செய்தான். காட்டிலிருந்த தன் பசுக்களை யெல்லாம் தானமாக ஈந்தான். இவன் தன் குமரன் உயிரைப் பிராம்மணனுக்குக் கொடுத்துச் சுவர்க்கமடைந்தான்.

சிபெளகன்

இலம்போதகன் குமரன், இவன் குமரன் மேகசுவாதி.

சிப்பிகள்

இவை, ஒருவகைப் பூச்சிகளின் மேலோடுகளாம், அவற்றை நத்தைகள் என்றும் கிளிஞ்சற் பூச்சிகளென்றும் கூறுவர். இவை கடலிலும் நன்னீரிலும் வசிக்கும். இவற்றில் ஒரே ஓடுள்ளன நத்தையினமெனவும், இரண்டோடுள்ளன சிப்பி இனமெனவும் கூறுவர். இச்சிப்பிகள் சிறியன கடுகளவு முதல் 4 அடி அளவு பெரியனவுமுண்டு. இச்சிப்பிகள் காலாந்தரத்தில் பூமியில் பதிந்து சுண்ணாம்பாக மாறுகின்றன. சிலவற்றின் ஓடுகளை நீற்றிச் சுண்ணாம்பாக்குகிறார்கள். இவ்வகையில் நாவாய்க் கிளிஞ்சலென ஒருவகை அவை கடலின் அடிப்பாகத்திருப்பது தாம் எண்ணிய இடம் போகவேண்டின் தசைப் பரப்புள்ள தோலடிப் பாதத்தை மேல் நீட்டி விரித்துக்கொண்டு கப்பலைப்போல் வேகமாய்ச் செல்லுகின்றன.

சிப்பிவகை

நீர்ப்பீச்சி நீந்தும் சிப்பி. இது, ஐரோப்பிய கடல் வாசி. இது வரிக்கிளிஞ்சல் இனத்தது இதனை ஆர்கோனட் (Argonaut) என்பர். இது (3) முதல் (6) அங்குல அளவுள்ளது. இது உருண்டை வடிவாய் ஒரு நீர்ப்பீச்சும் தூம்பைப் பெற்றிருக்கிறது. இது நீரில் வேகமாய்ச் செல்லுகையில் தூம்பின் வழியாய் நீரைப் பீச்சிக்கொண்டு அதிவேகமாய்ச் செல்கிறது.

சிமந்தபஞ்சகம்

பரசிராமர் இராசவம்சத்தைக் கருவழித்த காலத்து ஏற்படுத்திய இடம். இதில் ஐந்து மடுக்களிருக்கின்றன. இதில் அந்த அரசரது உதிரத்தால் பிதுர்தர்ப்பணஞ் செய்தனர். இதில் கண்ணன் இரகண புண்ணியகாலத்துத் தீர்த்தம் ஆடினராம். பாண்டவர் குருமக்களுடன் போரிட்ட இடம் இதுவே.

சிமிருதிஹாரிகை

பிராணிகளின் மனதை அபகரிக்கும் தேவதை,

சிம்பரம் பிளளை

1. இவா கோயாபுத் தூர்ஜில்லா பொள்ளாச்சி தாலூகா ஊற்றுக்குழி சமஸ்தான வித்வான். இவர் ஜன்ன பூமி திருநெல்வேலி, தந்தையார் சங்கர மூர்த்திப்பிள்ளை. இவர் உசிதசூடாமணி என்னும் ஒரு நிகண்டு இயற்றியவர். அந்கண்டு பெரும்பாலும் தொகைப்பொருள்களை விளக்கிக் கூறுவது, 2 இவர் சேலத்திருந்த ஒரு தமிழ்க் கவி, தமிழில் கைலாசநாதர் சதகமெனும் நீதி நூலியற்றியவர். சோசியத்தில் வல்லவரெனத் தெரிகிறது, இவர் வீரசைவர், தந்தை விசுவலிங்கையர். இவர்க்குச் சிதம் பாவாணர் எனவும் பெயர்.

சிம்புள்

இது எட்டுக்காலுள்ள பகக்ஷி. இவ்வுருவம் சிவ பெருமானால் நரசிங்கவுருக் கொண்டு விஷ்ணுமூர்த்தியின் மயக்கம் போக்க எடுத்த உரு என்பர் சைவர். இப் பெயர் நிகண்டில் கூறப்பட்டிருக்கிறது. தற்காலம் இப்பறவை இல்லை.

சிம்மக்னமூர்த்தி

நரசிங்க மூர்த்தி இரணிய கசிபிளை வதைத்தகாலத்து வெறியால் மற்றவர்மேல் பாய்ந்தனர். அக்காலத்துத் தேவர் சிவமூர்த்தியை வேண்டச் சிவ மூர்த்தி எட்டுக்கால் உள்ளதும், பக்ஷியும் மிருகமுமான தோற்றம் உள்ளதும் இரண்டு சிரமுமாகிய உருக்கொண்டு சிங்கத்தின் தோலை யுரித்து உடுத்தனர் என்பர். இந்தச் சரபத்தைக் கொல்ல விஷ்ணு நாராயணப் பதியாக வந்தனர் என்பர் வைணவர்.

சிம்மசந்திரன்

இவன் முன் ஜன்மத்தில் புத்தமித்ரன் எனும் வணிகன் சத்யகோஷனால் வஞ்சிக்கப்பட்டு வரதர்மமுனிவ ருபதேசத்தால் மறுஜன்மத்தில் சாமதத்தையிடம் சிம்மசேதனாகப் பிறந்து பூரணசந்திர முனிவருபதேசத்தால் துறவு பூண்டு லோகாக்ர மடைந்தனன். சத்யகோஷன் தான் செய்த பாபத்தால் பாம்பாகப் பிறந்து சிம்மசேனனைக் கடித்துக் கருட தண்டன் மந்திரவலியால் அக்னியில் வீழ்ந்திறந்து அசனிகோஷமெனும் யானையாகப்பிறந்து நரகமுற்றனன். (மேருமந்தரம்) பரதமித்திரனைக் காண்க.

சிம்மபலன்

கீசகன்.

சிம்மாத்திரி

ஒரு விஷ்ணு ஸ்தலம். இதில் எழுந்தருளிய விஷ்ணுமூர்த்திக்கு அப்பன் என்று பெயர்,

சிம்மாநனர்

ஒரு விஷ்ணுபடர்.

சிம்மிகை

1, சிங்கிகை. 2. ஒரு அரக்கி, நிழலால் இழுப்பவள். இவள் அநுமன் இலங்கைக்குப் போகையில் நிழலால் தடுக்க அநுமன் இவள் வயிற்றுள் புகுந்து உடலைக் கிழித்து வெளிப்பட இறந்தவள், 3. தக்ஷப்பிரஜாபதியின் மகள். கசியபன் பாரியை. புத்திரர்கள் ராகு, சுசந்திரன், சந்திரஹர்த்தா, சந்திரகிரண மர்த்தனன் என நால்வர்.

சியமந்தகம்

ஒருவித மணி. இது நாடோறும் (8) பாரம் பொன் கொடுக்கத் தக்கது. வியாதிகளைப் போக்கத்தக்கது. சூரியனால் சத்சரசித்துக்குக் கொடுத்தது. இதை ஒருமுறை சத்ராரித்தின் தம்பியாகிய பிரசேநன் தரித்து வேட்டைக்குச் சென்று சிங்கத்தால் கொல்லப்பட்டான். இதற்கு முன் கண்ணன் இம்மணியை உக்கிரசேனுக்குக் கேட்டிருந்தனன். காட்டிற்சென்ற தம்பி வராததையுணர்ந்து முன் கண்ணன் உக்கிரசேகனுக்குக் கேட்டிருந்ததால் பிரசேகனைக் கொன்று கண்ணனே மணியைக் கவர்ந்தான் என்று ஒரு அபவா தம் கண்ணனுக்கு உண்டாயிற்று. இதை நீக்கிக் கொள்ளக் கண்ணன் சாம்பவந்தன் இடஞ் சென்று யுத்தஞ்செய்து, அவனிடம் இருந்ததைப் பெற்றுச் சத்திராசித்தற்கு மணியைக் கொடுத்தனன். இதனால் சாம்ப வந்தன் தன் குமரியாகிய சாம்பவதியைக் கண்ணனுக்குக் கொடுத்தனன். இம்மணியை மீண்டும் சத்தன் வாசத்சாசித்தைக் கொன்று கவர்ந்ததால் கண்ணன் சத்தன் வாவைக்கொன்று மணியை மீட்டனர்.

சியவனமுனிவர்

1, பிருகு முனிவர்க்குப் புலோமையிடம் பிறந்தவர், இவருக்குச் சையாதியின் குமரி சுகன்னி என்ற மற்றொரு தேவியிருந்ததாகத் தெரிகிறது. சுகன்னியைக்காண்க. சகன்னியால் மனத்திற்கு முன்பு கண் குத்துண்டவர். ஒரு முறை அஸ்வினிதேவர் சுகன்னியின் கற் பினிலையறிய வேண்டி இவரது ஆச்சிரமம் அடைந்தனர். வந்த தேவர்களைச் சியவனர் வணங்கி அவர்கள் தம்மனைவியைக் கேட்டபடி விசைந்து அஸ்வினிதேவருருக் கொண்டு அவர்களுடன் நீருள் மூழ்கி நிற்க மூவரும் சியவன ருஷிகளாய் இருக்கக் கண்ட சுகன்னி, தேவரை வேண்டத் தேவர் கணவரைக்காட்ட அறிந்து கூடினள். அதனால் அச்வினி தேவர்கள் களித்து இருடிக்கு இளமை தரப்பெற்றவர், (பாகவதம்). இவர் சையாதியஞ்ஞத்தில் அஸ்வினி தேவர்க்குச் சோமபானம் அளிக்க இந்திரன் கோபித்து வச்சிரம் ஓச்ச அவனுக்குச் கை தம்பிக்கச் செய்தவர். (விநாயகப் புராணம்). இவர்க்கு மனுகுமரியிடம் ஒளாவனும், சுகன்னியிடம் பிரமதியும் பிறந்தனர். ஒளரவனுக்கு ரூசிகனும், ருசிகனுக்குச் சமதக்கினியும், சமதக்கினிக்குப் பாசிராமனும் பிறந்தனர். மற் றொரு குமரனாகிய பிரமதிக்கு ருரு என்பானும், ருருக்குச் சநகனும் பிறந்தனர். இவர் பிரமன் குமரன் அல்லர். சத்துருக்னனுக்கு மதுவின் செய்தி கூறியவர். 2. மித்திராயுவின் குமரர். 3. சுகோத்திரன் குமரர்.

சியவனர்

1. இவர் இந்திரனை நோக்கி நீ அச்வ தேவர்களுடன் சோமபானஞ் செய்கவென, இந்திரன் அச்வநிதேவர்கள் இழிந்தவர்கள் அவர்களுடன் பானஞ் செய்யமாட்டேன் என, சியவனர் அவ்வகை செய்யாவிடின் துன்புறுவாயென வும் மறுத்தனன். ருஷி ஒரு யாகஞ் செய்து உன்னை யுண்பிப்பேன் என்று ஒரு யாகஞ் செய்தனர். அதில் மதனன் எனும் அசுரன் ஆகாயம் மேல்வாயும், பூமி கீழ்வாயுமாக தோன்றினான். இந்திரன் முதலியோர் அவன் வாயில் பட்டனர். தேவர்கள் இந்திரனுடன் ஆலோசித்து அச்வநிதேவர்களுடன் சோம பானஞ் செய்து கோபத்தினீங்கினர். இதில் மதனனை முனிவர் மதுவினும், சூதாட்டத் தினும், ஸ்திரீகளிடத்தினும் பிரித்துவிட்டனர். இதனால் மனிதர் கெடுகின் றனர். பின் சியவனர் தேவர்கள் மதனன் வாயிற் பட்டபோது ருஷி சுவர்க்கத்தைக் கபர்களால் கவர்ந்தனர். தேவர்கள் கபர்களைச் சுவர்க்கத்தைக் கேட்க அவர்கள் கொடாததினால் பிராமணர்களைச் சரணமடைந்தனர். பிராமணர்கள் யாகாக்கினியால் கபர்களை யழித்துத் தேவர்களுக்குச்சுவர்க்கத் தை யளித்தனர். (பார~அநுசா.) 2. ஒரு ருஷி. இவர்கு சிகவம்சத்தைக் கெடுப்பதாகக் குசிகனிடஞ் சென்று அவனிடம் நான் உறங்கப்போகிறேன் என் னைக் கால்பிடித்தல் முதலிய வுபசாரங்களால் நான் எழுந்துணையு முபசரிக்க வென்று தூங்கியெழுந்து, மீண்டும் தம்பதிகளாகிய குசிகனும் தேவியு முபசரிக்க நெடுங்காலந் தூங்கியெழுந்து இருவரையும் தேரிழுக்கக் கூறி அவ்வாறு இழுக்கையில் சவுக்காலிருவரையு மடித்து ஒட்டியும் அவர்களிருவரும் மனந்தளராதது கண்டு சளித்து அவ்வாறு தாம் செய்தவை தெய்வ லோகத்தில் கடந்த ரகசியம், அதைக் கொண்டு உங்களைத் துன்பப்படுத்தினேன் உங்கள் பணியால் சளிப்புற்றேள் இனி சமதக்னியிடம் பிறக்கும் குமரனால் உலகமழியும் எனக் கூறினவன். இவன் பிருகு வம்சத்தவன். (பார~அநுசா,)

சியாமகன்

1. சூரனுக்கு மாரிஷையிடம் உதித்த குமரன். 2. இருசிகன் குமரன், விதர்ப்பனுக்கு தந்தை. 3. வசுதேவன் தம்பி.

சியாமம்

1. யமுனை நதிக்கரைக்கண் உள்ள ஒரு அரசவிருக்ஷம். 2. யமமார்க்கத்தைத் தடுக்கும் நாய், இதற்குப் பலியிடல் வேண்டும். இதன் துணை சபளம்.

சியாமரச்மி

ஒரு இருடி, கபிலர் மாணாக்கர்.

சியாமளை

யமனுக்குத் தேவி.

சியூமரச்மி

ஒரு ருஷி, பசுவைக் கொல்லாமல் யாகஞ் செய்யவேண்டுமென்று கபிலர் வாதிட்டகாலத்தில் பசுவின் வயிற்றினிற் புகுந்து அவரிடம் வாதிட்டவர். (பார~சாந்)

சியேனி

அருணன் தேவி. குமரர் சம்பாதி, சடாயு.

சியேஷ்டை

1, பிரமன் புத்திரி, வருணன் தேவி, குமரன் அதர்மன். இவள் பாற்கடலில் பிறந்தவள் எனவுங் கூறுவர். இவளே மூதேவியாம். 2. ஜலத்திற்கு அதாரமாய் ஸ்திதியாதா பரூபையான சத்தி, இதற்குத் தேவர் சியேஷ்டர் அல்லது பவர்.

சியோதிஷ்மந்தன்

சுவாயம்பு மதுவின் குமரன்.

சிரகாரி

கௌதம புத்ரர்களில் ஒருவர் நெடுங்காலம் காரியத்தை ஆலோசித்துச் செய்பவர். பிதா இவரது தாயாகிய அகலியைக் கொலை செய்யும்படி யேவிய காலத்துத் தாம் பிதாவினால் தாயைக் கொலைசெய்ய ஏவிய செய்கை தர்மத்தின்படி தவறுடைத்தாகும் பிதாவின் கட்டளையை மறுத்தலும் தவராகும் இத்தரும சங்கடத்திற்கென் செய்வதென இரங்குகையில் கௌதமர் மனைவியைக் கொலை செய்வதைப் பற்றித் துக்கித்துக் குமாரைக் கேட்டுக் கொல்லாமை தெளிந்து தம்மை அவர் நீசிரகாரியாகவென வாழ்த்தப் பெற்றவர். (பார~சாம்.)

சிரசு

திதிபுத்திரனாகிய அசுரன்,

சிரஞ்சயன்

1, உத்தமன் எனும் மநுபுத்திரன். 2. இரணஞ்சயன் குமரன், 3. அரம்மியாசவன் குமாரன். 4. தூம்ராசுவன் குமரன், இவன் குமரன் சகதேவன், 5. (பிரா,) காலநரன் குமரன், இவன் குமரன் சநமேசயன், 6. சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்தவன்.

சிரஞ்சீவியர்

(7) அசுவத்தாமன், மாபலி, வியாசன், அமொன், வீபீஷணன், கிருபாசாரியன், பரசிராமன்.

சிரதகீர்த்தி

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி. இவள் திருஷ்டகேதுவை மணந்தவள்.

சிரதசவா

சூரனுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி.

சிரததேவா

சூரனுக்கு மார்ஷையிடம் பிறந்த குமரி. இவள் விரததர்மாவை மணந்தனள்.

சிரதன்

1. ஒன்பதாம் மன்வந்தரத்து மநு. 2. (சூ.) சுபாஷணன் குமரன். 3. (பிர.) தர்மநேத்திரன் குமரன், இவன் குமரன் திடசோன்.

சிரத்தாவதி

வருணன் இராஜதானி.

சிரத்துவசன்

(சூ) இரஸ்வரோமன் குமரன். இவன் யக்யநிமித்தமாகப் பூமியை யுழுதகாலத்து அக்கலப்பை அடியில் சீதை பிறக்க எடுத்தவன்.

சிரத்துவான்

இவன் சத்தியதிருதி குமரன். இவன் உருவசியைக் கண்டு கலிதமான வீரியத்தை நாணலில்விட அதினின்றும் கிருபனும் கிருபியும் பிறந்தனர்.

சிரத்தை

1, தருமன் எனும் மனுவின் தேவி. 2. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் உதித்தவள், யமன் தேவி. 3. வைவச்சுதன் பாரி, இவள் தனக்குப் பத்துக்குமார் பிறவாததற்கு முன் ஒரு பெண் வேண்டி வசிட்டரால் ஓமஞ்செய் வித்து இளையைப் பெற்றாள். 4. கர்த்தமப் பிரசாபதியின் குமரி, ஆங்கீரசர் தேவி. இவள் புத்திரர் சிகிவாலி, குகு, ராகா, அநுமதி, உசகத்தியர், பிரகஸ்பதி.

சிரபுரம்

சீர்காழி என்னும் சிவக்ஷேத்திரத்திற்கு ஒரு பெயர். இராகு கேதுக்கள் அமிர்தமதனத்தில் இழந்த சிரம் பெற ஈண்டுத் தவஞ்செய்து தலைகள் அடைந்ததால் இப்பெயர் பெற்றது.

சிரப்பதி

இலவன் ஆண்ட பட்டணம்.

சிரமந்திரதெய்வம்

பொன்னிறமாய், பத்மாசனராய், முக்கண், சதுர்ப்புஜம், சத்தி, சூலம், வாதம், அபயம் உடையவராய்ச் சர்வாபரண பூஷிதாரயிருப்பர்.

சிரம்பன்

பிரமன் கொட்டாவிவிட அதில் தோன்றியவன் இவன் பத்துச்சிரம் வாய்ந்தவன் இவன் சிந்துரன் எனப் பிரமனாற் பெயரிடப்பட்டு அவனால் எல்லா வரமும் பெற்று விநாயகரால் இறந்தவன். சிந்துரனைக் காண்க. (பார்க்கவ புரா).

சிரம்பை

தூமாக்ஷன் தேவி. இவள் தனது கணவனை மகோற்கடர் கொன்ற பழிதீர்க்கக் காசிப்புரோகிதன் சுற்றத்தவள் போல் உருக்கொண்டு விஷத்தைக் கலந்து பரிமளத்தைலமென்று மகோற்கடர் மீது பூசி அவ்விஷம் தனக்கே எறமாய்ந்தவள்.

சிரரோகம்

(தலையில் உண்டாகும் ரோகம்) இது புகை, வெயில், பனி, நித்திய சையோகம், அதிநித்திரை, நித்திரை பங்கம், ஜலத்தில் நனைதல், கீழ்க்காற்று, மிகுந்த ஜலபானம், ஓயாத அழுகை, மத்தியபானம், உஷ்ணமான வாசனைகளை முகருதல், வெகுவார்த்தை, இவற்றால் முத்தோஷங்களும் அதிகரித்து உண்டாவது. இது (10) வகைப்படும். 1. சிரஸ்தாபரோகம், 2. பித்த சிரஸ் தாபரோகம், 3. சிலேஷ்ம சிரஸ்தாபரோகம், 4. திரிதோஷ சிரஸ்தாப ரோகம், 5. ரத்தசிரஸ்தாப ரோகம், 6. அர்த்தபேத ரோகம், 7. கிருமிசிரோ ரோகம், 8. சிரகம்பரோகம், 9 சங்ரோகம், 10. சூரியாவர்த்த ரோகம் ஆகச் சிரரோகம், (10)ம் முற்றியது.

சிரவணத்துவாதசி

(திருவோணம்) சிரவணங்கூத்திரத்துடன் கூடிய துவாதசி, இதில் விஷ்ணுமூர்த்தி வாமன அவதாரம் எடுத்ததால் விரதம் இருப்பர்.

சிரவணன்

முராசுரன் குமரன். கண்ணனுடன் சண்டையிட்டு மாய்ந்தவன்,

சிரவணர்

இவர்கள் பன்னிருவர். யமனுக்கு ஆன்மாக்கள் செய்யும் புண்ணிய பாபங்களை யறிக்கை செய்வோர், சைய்யமினிவாசிகள். யமன் பிரமனைப் பிராணிகள் செய்யும் புண்ணிய பாவங்களைத் தானறிய வேண்டப் பிரமன் தருப்பையை எடுத்து எறிந்தனர். அதிலிருந்து பன்னிரண்டு பெயர் தோன்றி உலகத்தவர் செய்யும் புண்ணியபாபங்களை அறிந்து, யமனுக்கு அறிவித்து வருபவர்.

சிராத்ததேவன்

விவசுவானுக்குச் சமுக்யையிடம் உதித்த குமரன். இவன் விவ சுவான் குமானாகையால் வைவச்சுதமனு வாயினான்.

சிராத்தம்

இது பிதுர்க்களை எண்ணி, யவர்கள் களிப்புறச் செய்யும் கருமம். இது சுபத்திற் செய்யின் அப்யுதயம் என்றும், நாந்தி என்றும், அசுபத்தில் செய்யின் நக்லை, கோதிஷ்டம், சோடசசபிண்டீசாணங்கள் என இப்பெயர்கள் பெறும். இது புண்ணிய க்ஷேத்திரங்களில் செய்யப்பபடின் மிக்க பலன் தரும். அமாவாஸ்யை, சங்கிரமணம், மகாலயபக்ஷம், வியதிபாத யோகம், யுகாதி, மாசப்பிரவேசம், கிரகண புண்ணியகாலம் இவைகளில் செய்யின் பிதுர் களிப்படைவர்.

சிராந்தையார்

கடைச்சங்கம் மருவிய புலவர். (அகநானூறு.)

சிராயு

பூரூரவன் குமரன்,

சிராவண சுக்லத்வாதசி விரதம்

ஆவணியன் சுக்லத்வாதசியில் விரதமிருப்பது, இதில் பவித்ராரோபணஞ் செய்து விரதமிருப்பது.

சிராவணன்

தசரதனால் யானையென்று ஐயுற்று அம்பெய்யப்பட்டு இறந்த இருடிச் சிறுவன்.

சிராவணம்

ஆவணிமாதத்துத் திருவோண நக்ஷத்திரத்து அனுட்டிக்கும் ஒரு வைதிக காரியம்

சிராவத்ஸ்ன்

சூரியவம்சத்து ஷத்திரியன். யுவனாஸ்வன் புத்திரன். (பா. வன).

சிராவிதம்

இலவன் இராசதானி என்பர்.

சிரிகண்டம்

பொதிகைக்கு ஒரு பெயர்.

சிரிரங்கம்

காவிரி கொள்ளிடத்து இடையிலிருக்கும் தீவு. அயோத்தியிலிருந்து இலங்கைக்குச் செல்லும் விபீஷணர் பிரிவாற்றாது தாம் பூசிக்கும்படி கொண்டு சென்ற அரங்கநாதனைத் தேவர் வஞ்சனையாலும், பெருமாள் விருப்பினாலும் விபீஷணர் எழுந்தருளச்கெய்து பூசித்ததலம்.

சிரீகண்டர்

சிவாம்சத்து ஒரு அவசரம், பிரகிருதி புவனத்திற்கு அதிபர்.

சிரீகருணர்

(கணக்கர் போலும்) தூர்வாசர் சாபத்தால் பிரமனும் சரஸ்வதியும் மானிடவுருக்கொண்டு வெவ்வேறிடங்களிற் பிறந்து ஆத்திரேய வேதியர் சுப குண மாலை எனப் பெயர்பெற்று இருவரு மணமடைந்து (64) பிள்ளைகளைப் பெற அப்பிள்ளைகள் ஞானமுனிவாது வேண்டு கோளால் இலக்குமியின் கருணையை அடைந்தபடியால் ஸ்ரீகருணர் எனப்பட் டனர். (சிரீகருணர் சரித்திரம்)

சிரீகிருஷ்ணபாதர்

வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கு ஒரு பெயர். பெரியவாச்சான் பிள்ளைக்கு ஒரு பெயர்.

சிரீசங்கபோதி

கயவாகுவைக் காண்க.

சிரீசேநன்

அசுவகண்டன் சேனாவீரருள் ஒருவன்.

சிரீசைலம்

ஒரு சிவஷேத்திரம் தெலுங்க நாட்டிலுள்ளது.

சிரீதேவி

1. இலக்ஷ்மி பிராட்டி, 2. வசுதேவன் தேவியரில் ஒருத்தி.

சிரீநிலை

ஒரு வித்தியாதர நகரம்.

சிரீநிவாசாசாரியர்

புண்டரீகாக்ஷர் குமரர். தேசிகர் திருவடி சம்பந்தி.

சிரீபர்வதம்

சீரிசைலத்திற்கு ஒரு பெயர். இது மல்லிகா அர்ச்சுனம் என்று பெயர் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்று. (பா. வன)

சிரீபாலன்

1. திருநிலையகத்து அரசன். 2. பிரசாபதி அரசன் தம்பி.

சிரீபாஷியகாரர்

இராமாநுஜர் எனும் எம்பெருமானார்க்குச் சரஸ்வதி இட்ட பெயர்.

சிரீமதி

அம்பரீஷன் குமரி. இவளை விரும்பிப் பருவ தருஷியும், நாரதனும், அம்பரீஷனைக் கேட்டனர். அரசன் நீங்கள் இருவர் கேட்பதால் கன்னிகை யாருக்கு மாலை சூட்டுகின்றனளோ அவர்கள் கொள்க என்றனன். இவ்வகை இருக்க நாரதர் பருவதன் அறியாது விஷ்ணுவை நோக்கிப் பருவதனுக்குக் குரங்குமுகம்வர வரம்பெற்றனர். அவ்வகைப் பருவதனும் நாரதன் அறியாது விஷ்ணுவை நோக்கி நாரதனுக்குக் குரங்கு முகம்வாவும் வரம்பெற்றனர். இவ்வகை வரம்பெற்ற இருவரும் மணமண்டபத்தில் வந்தனர். சிரீமதி இவ்விரு வரையுங் கண்டு இவ்விருவருக்கும் நடுவில் அழகுள்ள புருடனாய் நின்ற விஷ்ணுமூர்த்தியை மாலையிட்டவள்.

சிரீமான்

தத்திரேயபுத்திரனாகிய நிமிரிஷியின் புத்திரன் (பா~அது).

சிரீரங்கநாராயண ஜீயர்

உடையவாது திருவடி சம்பந்தி.

சிரீரங்கராஜர்

இராமானுஜப்பிள்ளானுக்குக் குமறர்.

சிரீராமநவமி

இது சித்திரைமீ சுக்கில பக்ஷ நவமிகூடிய சுபதினம். இதில் விஷ்ணுமூர்த்தி திரு அயோத்தியில் ஸ்ரீராமராகத் திரு அவதரித்தனர். ஆதலின் விரத நாளாம்.

சிரீராமப்பிள்ளை

பட்டருக்குத் தம்பியார்,

சிரீராமமிச்ரர்

மணக்கால் நம்பிக்கு ஒரு பெயர்.

சிரீவச்ச சின்னமிசிரர்

கூரத்தாழ்வாருக்கு ஒரு பெயர்.

சிரீவைஷ்ணவநம்பி

திருக்குறுங்குடி நம்பிக்கு ஒரு பெயர்.

சிருகால வாசுதேவன்

வடமதுராபுரிகுச் சமீபத்தில் இந்த சரவீரபுரத்து அரசன். இவனைக் ஈஷ்ணமூர்த்தி கொன்று இவன் குமரனுக்கு முடி அளித்தனர். (பார~சாங்.)

சிருங்ககிரி

இது மைசூர் நாட்டிலுள்ள ஒரு மலைநாடு, இதில் சங்கரா சாரியரால் தாபிக்கப்பட்ட மடாலயம் இருக்கிறது, சாரதாபீடம் என்பர்.

சிருங்கர்

மகததசத்து அரசர்.

சிருங்கவரன்

குணிசார்க்கியரைக் காண்.

சிருங்காரதிலை

பகைவர் சீர்த்திபண்ணக் கிடந்தானை முல்லையரும்பன்ன பல்லினார் தழுவதலை மேவியது, (பு~வெ.)

சிருங்கி

மான்வயிற்றிற் பிறந்த முனி. (மணிமேகலை)

சிருங்கிபேரம்

1. கங்கைக் கரையிலிருக்கும் குசன் என்னும் வேடன் பட்டணம். 2. Raf. (T. E) fort amil Sriugaur on the river Ganges, 18 miles north west of Allahabad.

சிருங்கிமுனிவர்

சமீகமுனிவர்க்குக் குமாரர். பரிச்சித்தைப் பாம்பு கடித்து இறக் கச் சபித்தவர். இவர் தந்தையைப் பைரவருஷி என்றுங் கூறுவர்.

சிருஞ்சயன்

1. பர்ம்மியாசுவன் (சைப்யன்) தேவி கைகேயி, புத்ரி சுகுமாரி (பார~துரோண.) இவன் குமரன் நாரதானுக்கி ரகத்தால் பொன்னாகவே மூத்திர மலங்களைப் போக்கத்தக்க புத்திரனைப் பெற்றுச் சுவர்ணஷ்டீவி என்று பெயரிட்டு வளர்க்கையில் இவன் வயிற்றில் பொன்னிருக்குமெனக் கள்ளர் குமறனைப் பிடித்துக் கொல்லச் சிருஞ்சபன் நாரதர் அனுக்கிரகத்தால் மீண்டும் உயிர்ப்பித்தனன். இவன் குமரனுக்குச் சுவர்ணடீ எனவும் பெயர் 2. காலா தகனுக்குக் குமரன், 3. வசுதேவனுக்குத் தம்பி. 4. பர்வதன் சுவர்ணஷ்டி வியைக் காண்க. இவன் சைப்யவிஜன் குமரன் இவன் சரிதை அம்பரீஷன் சரிதையை யொத்திருக்கிறது. (பார~துரோ.)

சிருட்டி

இது பாதகண்டத்தில் ஆஸ்திக மதத்தவராகிய ஆரியர்கள் கூறியபடி பல விதம். அவற்றுள் சைவர், தத்திவாதீதனாகிய பரமசிவத்தைக் கலந்த சத்திமாயையை ஷோபிக்க அம்மாயையினின்றும் சகத் உண்டாம் என்பர். வைஷ்ணவர் உலகம் கடல் கொண்ட காலத்துத் தனித்து நின்ற நாராயணன் ஆலிலையில் யோக நித்திரை புரிய அவர் நாபியில் பிரமன் உதித்து உலகாதிகளைச் சிருட்டிப்பன் என்பர். ஸ்மார்த்தர், பிரமம் பொன்மயமான அண்டம் ஒன்று ஆக்கி அதில் பிரவேசிக்க அவ்வண்டத்து இருந்து பிரமன் தோன்றி உலகசிருட்டி புரிவர் என்பர்.

சிருததேவா

சூானுக்கு மாரிஷையிடம் பிறந்த குமரி, விருகதர்மா மனைவி. இவளிடத்தில் ஒரு அசரன் ருஷியினால் சபிக்கப்பட்டவனாய்த் தந்தவக்கிரன் எனப் பிறந்தனன்,

சிரேணிமந்தன்

குமாரதேசாதிபதி,

சிரேணிமான்

குளிந்தநகாத்து அரசன்.

சிரேயாம்ச தீர்த்தங்கர்

பதினொராவது சைநதீர்த்தங்கரர், இவர் கிருதயுகத்தில் சிம்மபுரத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் விஷ்ணும்காராசாவிற்கு நந்தையிடம் பங்குனிமாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி, திருவோணநக்ஷத்திரத்திற் பிறந்தவர். இவரது உன்னதம் (80) வில், சுவர்ண வர்ணம், ஆயுஷ்யம் (84) வருஷம், புத்திரன் யசஸ்கரன், குந்து முதல் கணதரர் (77) இவர் காலத்து ராஜாக்கள், விசயபலதேவர், திப்பிரஷ்டவாசு தேவர், அசுவக்கிரீவ பிரதிவாசுதேவர்.

சிரோவிரதம்

அக்னிரிதி என்பதாதியான மந்திரங்களால் விபூதியை யெடுத்துத் தேகத்திற் பூசுவது, (சிவரஹஸ்யம்.)

சிறப்பணி

அதாவது ஒப்புமையாற் பொதுமையுற்றிருந்த வரண்டு பொருள்க ளுக்கொருகாரணத்தால் விசேஷந் தோன்றுதலாம். இதனை வடநூலார் விசேஷாலங்கார மென்பர்.

சிறப்புநிலையணி

பிரசித்தமாகிய ஆதாரமில்லாதிருக்க ஆதேயத்தினிருப்பைச் சொல்லுதல் இதனை விசேஷாலங்காரம் என்பர். (குவல.)

சிறப்புப்பாயிரம்

நூலாசிரியன் பெயர், நூலின் வழி, அது வழக்குமிடம், நூலின் பெயர், யாப்பு, நூல் முதலிய பொருள், கேட்போர், அதனாலுண்டான பயன், நூல் வழங்கிய காலம்; நூல் செய்தற்குக் காரணம், இவைகளைக் கூறுவது. (நன் பொதுப்பா.)

சிறப்புலி நாயனார்

திரு ஆக்கூர் என்னும் தலத்தில் பிராமணகுலத்தில் உதித்துச் சிவபக்தி சிவனடியவர் பக்தியிற் சிறந்து ஸ்ரீபஞ்சாக்ஷர மோதி யாகஞ் செய்து அதன் பலனைச் சிவமூர்த்திக்குத் தத்தஞ்செய்து முத்தி யடைந்தவர். பெரிய புராணம்,

சிறிய கோவிந்தப் பெருமாள்

எழுபத்து நாலு சிங்காதனாதிபதிகளில் ஒருவர். எம்பாருக்குச் சகோதரர் என்பர். (குருபரம்.)

சிறியாண்டான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். உடையவர் திருவடியை ஆசிரயித்தவர். கூரத்தாழ்வானைத் தேற்ற உடையவரால் அனுப்பப்பட்டவர். (குருபரம்பரை)

சிறியாண்டாள்

கோவிந்தப் பெருமாளின் தேவியார். இவள் ஆழ்வாரிடம் சந்நியாசம் பெற்ற அம்மையார்களில் ஒருத்தி,

சிறு பிள்ளையுடையார்

மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவரில் ஒருவர்.

சிறுகாக்கைபாடினியார்

ஒரு தமிழாசிரியர். இவர் தம் பெயரால் ஒரு இலக்கண நூல் செய்திருக்கின்றனர்.

சிறுகாலன்

நரி உருவமாய்க் கசியபரிடத்தில் சம்வா தம்செய்த இந்திரன்.

சிறுகுடி

1, இது கிழான் பண்ணனுடையவூர். (புறநானூறு.) 2. கள்ள சாதியாரில் ஒருவகையார், (தர்ஸ்டன்.)

சிறுகுடி கிழான் பண்ணன்

குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனுக்கு நண்பன். இவனுக்குப் பண்ணன் எனவும் பெயர், கோவூர்க்கிழாராலும், பாடப்பெற்றவன். புற~நா.

சிறுதன்

(சூ.) பகீரதன் குமரன், இவன் குமரன் நரபாகன்.

சிறுதாலி

இது கைக்கோளர், மறவர்சாதியுட்பகுப்பு.

சிறுத்தைப்புலி

இது புலியினத்தில் சற்று சிறிது. வால் நீங்க 3 1/2 அடி நீளமிருக்கலாம், உடலில் பழுப்படைந்து புள்ளி கொண்ட மயிர் மூடியிருக்கும், இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். இது ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா முதலிய காடுகளின் புதர்களில் வசிப்பது. இது கொல்லும் மிருகங்களைத் தானிருக்கும் புதர்களுக்குக் கொண்டு போய்த் தின்று மிகுந்ததை வேண்டியபோது தின்னும். இவ்வினத்தில் கருநிறமுள்ளதும் உண்டு.

சிறுத்தொண்ட நாயனார்

இவர் திருச்செங்காட்டங்குடியில் வேதியர்குலத்தில் திருவவதரித்துப் பாஞ்சோதியார் எனத் திருநாமங்கொண்டு வேத அத்யயனமும் மந்திரித் தொழிற்குரிய வில்வித்தை முதலியவுங் கற்று வல்லவராய்ச் சோழனிடத்தில் மந்திரித்தொழிலிலும், சிவபக்தி, சிவனடியவர் பக்தியிலும் சிறந்தவராய் இருந்தனர். இவர் அரசன் பொருட்டு வடநாடு சென்று பகைவரைவென்று திறை கொண்டுவர அரசன் இவர் சிவபக்திமான் என்று மற்றை மந்திரியரால் கேள்வியுற்று இவர்க்கு வேண்டிய நிதிகொடுத்து உம்முடைய கருத்தின்படி சிவத்தொண்டு செய்திருக்க என்று நிறுத்தினன். தொண்டர் வெண்காட்டுநங்கை என்னும் தமது மனைவியாருடன் இல்லற நடத்தித் தம்மைத் தொண்டர்களிற் சிறியவர் என்று மதித்துச் சிறுத்தொண்டர் என்னும் நாமம் பெற்று வருகையில் இவரது அன்பினை உலகமறிந்து பிழைக்கச் சிவமூர்த்தி ஒரு பைரவ திருக்கோலங் கொண்டு இவரது வீட்டிற்கு அமுதிற்கு எழுந்தருளினர். நாயனார் கண்டு களித்து அமுது கொள்ள அழைக்க அடியவர் நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமுது கொள்வது; அவ்வுணவு நரமாமிசத்துடன் கூடியதாம், அவ்ஊன் ஒரேபுத்திரனாய் அங்கப்பழுதிலானாய் ஐந்து வயதுள்ள சிறுவனை ஒரு உறுப்பும் குறையாது சமைத்ததாய் இருத்தல் வேண்டும் என்றனர். இதனைக்கேட்ட நாயனார் அவ்வகை படைக்கவுடன் பட்டு மனைவியிடம் வந்து அடியவர் கூறியதைக் கூறி அயலார் தங்கள் குமார்களைக் கொலைசெய்யச் சம்மதிப்பரோ என்று தமது குமரனாகிய சீரான தேவனை மனப்படி செய்து சமைத்துப் பரிகலம் திருத்திப் பைரவக் கோலங் கொண்ட சிவமூர்த்திக்குப்படைத்தனர். பைரவர் எல்லா உறுப்பும் சமைக் கப்பட்டனவோ என, நாயனார் தலையொழிந்த மற்ற உறுப்புக்கள் அனைத்தும் சமைக் கப்பட்டன என்றனர், பைரவர் ஆயின் அதனையும் சமைத்தளிக்க என்றனர். இவ்வகை ஒருக்கால் நேருமென எண்ணி அதனையும் சமைத்துவைத்த சந்தனத்தார் எனுந் தோழியார் அதனைக்கேட்டு அந்தத் தலைக்கறியையும் படைத்தனர். பைரவக் கோலங்கொண்ட சிவமூர்த்தி உட்கார்ந்து நம்முடன் புசிக்க மற்றொரு சிவனடியார் வேண்டும் என்றனர். நாயனார் எங்கும் தேடிக்காணாது கூறப் பைரவர் நீரே நம்முடன் உட்காருக என்றனர். நாயனார் உடன்பட்டுப் பைாவர்க்கு முன் தாம் புசிக்கின் அடியவர் புசிப்பரென விரைந்தனர். இதற்குள் பைரவர் தடுத்து உமக்குப் புத்திசர் இருந்தால் உடனுண்ண அழையுமெனத் தொண்டர் கட்டளையை மறுக்க அஞ்சி மனம் வருந்தித் தெருவிற் சென்று சீராள என அழைத்தனர். சிவாநுக்கிர கத்தால் குமரன் தந்தையின் குரல் கேட்டுக் கல்விச்சாவையிலிருந்து எதிரில் ஓடிவர நாயனார் குமரனை வாரி அணைத்து இல்லுட்புக இலையிலிருந்த உணவுகளும் பைரவரும் மறைந்தனர். சிவமூர்த்தி இடபாரூடராய்க் காட்சி கொடுக்கத் திருவடியிற் சேர்ந்தவர். (பெரிய~புராணம்)

சிறுபஞ்சமூலம்

நீதி நூல்களுள் ஒன்று, காரியரசானால் இயற்றப்பட்டது. சங்கமருவிய பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்று.

சிறுபள்ளி தேவராசபட்டர்

எழுபத்து நாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபரம்பரை)

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாறு ஏறு மாநாட்டு நல்லியக்கோடனை நத்தத்தனார் பாடியது, சங்கமருவிய பத்துப்பாட்டில் ஒன்று.

சிறுபாண்டரங்கன்

இடைச்சங்கப் புலவருள் ஒருவன்.

சிறுபொழுதாவன

மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு என்பன.

சிறுமலை

பாண்டி நாட்டிலுள்ள மலைகளில் ஒன்று. (சிலப்பதிகாரம்)

சிறுமேதாவியார்

கடைச்சங்கப்புலவருள் ஒருவர், திருவள்ளுவமாலை.

சிறுமையணி

அஃதாவது, அற்பமாகிய வாதேயத்தினு மாதாரத்தை மிக வற்பமாகச் சொல்லுதல். இதனை வடநூலார் அல்பாலங்காரமென்பர்.

சிறுமோலிகனார்

இவரைப்பற்றி யாதும் விளங்கவில்லை; குறிஞ்சியைப் பாடியுள்ளார். தலைவி காமநோயால் வருந்துவ தறிந்த அன்னை வினவியதற்குக் கூறிய விடை ஆராயத்தக்கது. இவர் பாடியது (நற். சுக.ம் பாட்டு.)

சிறுவெண்டேரையார்

ஒருபழைய செந்தமிழ்ப் புலவர். (புறநானூறு.)

சிறைக்குடியாந்தையார்

ஆதன் தந்தை ஆந்தை. இவர் மனைவியோடு வாழுநாளிற் பொருள் வேண்டிக் காதலியைப் பிரிய நேர்ந்தது கண்டு நெஞ்சைநோக்கிப் புணர்ந்திருப்பிற் பொருள் அடைவதரிதெனவும் பிரியிற் புணர்ச்சியில்லை யெனவும் பலவாறு கூறி வருந்துவராயினார்: (நற் 16.) அது கண்ட அவர் காதலி பிரிவர்போலு மென்று கடுந்துனி கொண்டு பிரியின் இறந்து படுவேனெனக் கூறி மாழ்கினள். புலவர்பிரான் காதலியை நோக்கி நீ பூப்பெய்திய மூன்று நாட் பிரிந்துறைவது ஓர் ஆண்டளவு பிரிந்தாற் போலாகின்ற எனக்குப் பிரிவென்பது எப்படி நேரும்? இது காரணமாக நீ இறப்பின் என்னுயிரும் உடன்போகக் கடவதாகவென்றும், நாம் இருவரும் சேர்ந்து வாழாது பிரிந்து ஒருவராக வாழ்வதினும் இறப்பதே நலமென்றும் வற்புறுத்திக் கூறினர். குறு 57. அங்ஙனம் கூறியதன்றி அவள் கேட்டு இஃ துண்மையென்று கொள்ளுமாறு பூமாலை போன்ற அவளுடைய மேனி தளரினும் மேதக்கது முயங்குதற்கு மினிதாயிராரின்றது குறு 62. வன்மையாக அணைத்து முயங்கும் அத்தகையாளைப் பிரிந்தால் யான் எப்படி மறந்தமைகுவேன் குறு 123. அத்தகைய நறுந்தண்ணியளைக் கூடுந்தோறும் பிரியகில்லேன் இதனை நீ தெளிவாய் காண் குறு 273. நின் னட்பைவிடுகிலேன் என்று அவள் தெரியு மாறு கூறினர். குறு 200. அவர் பிரிவ தில்லையென்று தெளிவித்தலும் காதலி முன்னையினும் பலபடியாக அவர்பாலன்புமிக்கு அவ்வண்ணமே யொழுகுவாளாயினாள், அங்கனம் ஒழுகுவதறிந்த ஆந்தையார் உள்ளுருகித் தலைப்புணைக்கொளின் அவளுங் கொள்ளுவள் யான் யாற்றினில் வீழின உடனே தானும் விழுந்துயிர் விடுந் தன்மையளல்லளோ குறு 222, என்று கூறிப் பிரிவென்பதைக் கனவிலும் நினை யாதவராய் கலந்து முயங்கி மகிழ்ந்துறை வாராயினார். இங்ஙனம் இவர் அழகமைந்த இன்பச்சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய பாடல்கள் விழைவு விடுத்த விழுமியோரையும் விழை வெய்துவிக்குந் தன்மையவாகும். இவர் பாடல்கள் பிற்காலத்துச் சான்றோர் துறைப்பாற்படுத்தித் தொகை நூலுட் கோத்தனர். இவர் பாடியனவாக நற்றிணையில் 16ம் பாடலொன்றும், குறுந்தொகையில் எட்டுமாக ஒன்பது பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்சுகாசாரியார்

வருணனம் சமான வேதியர், சங்கராசாரியரை வழிபட்டவர்.

சிற்பத்திற்குதவிய மரங்கள்

சிந்தாவிருகூம், அல்லது கருவாலிமாம் (Oah) இது உறுதியானதும் அழகானதுமான மரம் இதனால் பலவேலைகள் செய்வர். தேக்கு: இது உறுதியும் கனமுமான மாரம். இது மிகுதியும் பர்மா, இந்தியாவில் உண்டாகிறது. பல கட்டடங்களும் பல சாமான்களும் இதனால் செய்யப் படுகிறது. தேவதாரு (Pine) வேலை செய்வதற்கு மிருதுவாயும் நீடித்திருப்பது மாகிய மரங்களில் ஒன்று. அமெரிக்காவில் விசேஷம். சீடர்மாம்: தேவதாருவைப் போன்ற மரம். இதுவும் நெடுநாளிருக்கக்கூடிய மரம் சிரியாவில் மிகுதி. மேல்நாட்டு உறுதியான மரங்கள் எலம், பீச், பிர்ச், ஆஷ் என்பன, (Elm Beech, Birah, Ash) அழகான. மரங்கள் மாஹோநானி, செம்மரம், எபோனி, வால்நட், மேயில், (Mahogany, Rose wooll, Ebony, Walnut, Maple) இவை முறையே அமெரிகா, பிரேசில், ஆபிரிகா, இந்தியா, மத்ய ஐரோபா, வட அமெரிகாக்களிலுள. இவற்றால் அழகிய வேலைகள் செய்யப்படும். இன்னும் இந்தியாவில் தேக்கு, செம்மாம், கருங்காலி, ஆச்சா, கடுக்காய் மரம், மா, சாட்டுவாகை தேவதாரு, அகில் முதலிய உறுதியான மரங்களும் உண்டு.

சிற்பநூல்

(32) விச்சுவதருமம், விச்சுவேசம், விச்வசாரம், விருத்தம், தாவட்டம். நளம், மயம், அநுமான், பானு, கற்பாரியம், சிருட்டம், மானசாரம், வத்துவித்யாபதி, பராசாரியம், அருடிகம், சயித்தம், வாத்து போதம், வித்தாரம், இந்திரம், வச்சிரம், சௌமம், விசவகாசிபம், மகதந்திரம், விசாலம், சித்திரம், காபிலகாலயூபம், நாமசங்கிதை, சாத்திகம், வசவபோதம், அதிசாரம், வெகுச்சுருதம், மானபேதம் என்பன.

சிற்பம்

இதுசிலை, மண், மெழுகு, சாந்து, செங்கல், கருங்கல், மரம், உலோகம், சந்தம், வண்ணம், கண்டசர்க்கரை முதலியவற்றால் பிரதிமாதி கிராம நிர்மாணத்தைக் கூறும் சாஸ்திரம். இது மயன், விச்வசர்மன் முதலியோராலும் மற்றவர்களாலும் கூறப்பட்டிருக்கிறது. இவைகளுக்கு முதனூல் சிவாகமங்களாம். இச்சிற்பம். ஒருவன் எடுத்துக்கொண்ட காரியம் இனிது முடிய வேண்டிக் காலவிதி, நிமித்தபரீக்ஷை, பூபரீக்ஷை, பலிவிவரம், பூகர்ஷணவிதி, சங்கு ஸ்தாபனவிதி, மானோபவிதி, பதவின்யாசவிதி, சூசாரிர் மாணவிதி, வாஸ்து தேவபவி, கிராமாதி லக்ஷணம், விஸ்தார ஆயாமல் க்ஷணம், ஆயாதிலக்ஷணம், நக்ஷத்ரசக்ரம், தண்டி காதிவிதி, வீதித்வாராதிமாநம், கிராமாதி தேவதாஸ் தாபனம், கிராமாதிவின்யாசம், கர்ப்பகியாசம், கிராமக்ரஹவின்யாசம், வாஸ்து சாந்தி, சாலால க்ஷணம், வர்த்தமானம், நந்தியாவர்த்தம், சுவஸ்திகம், சதுச்சாலாவிதி, அஸ்திசாலாவிதி, மாலிகாலக்ஷணம், வாங்கலம் மௌவிகம், பத்மமாலிகா வக்ஷணம், நகராதிவிபேதம், பூமிலம்பவிதி, ஆத்யேஷ்டகாவிதி, உபபீடவிதி, பாதமான விதிபிரஸ் தரவிதி. பிராசாதபூஷணவிதி, கண்டலக்ஷணவிதி, சிகா லக்ஷணவிதி, ஸ்தூபிகாலகூணவிதி, நாளாதிஸ் தாபனவிதி, தளவிசேஷவிதி, மூர்த்தனிஸ் தாபனவிதி, லிங்காதி பிரதிமாலக்ஷண விதி, பிரதிஷ்டாவிதி, விமானஸ்தாபன விதி, மண்டபலக்ஷணவிதி, பிராகாரலக்ஷணவிதி, கோபுரவிதிமுதலியவற்றை விரித்துக் கூறும், ஈண்டு ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறின் நூல் இடங்கொடாதாகையால் அதில் அடங்கிய விஷயத்தை மாத்திரம் கூறினோம். அதனைக் காமிகாதி சிவாகமங்களினும், சிற்ப நூல்களினும் காண்க.

சிற்றம்பல நாடிகள்

இவர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்தவர். கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியருக்கு மாணாக்கர் எனவும் கூறுவர். இவர் சிவப்பிரகாசம் என்னும் சைவசித்தாந்த சாத்திரத்திற்குக் கருத்துரைச் சூத்திரம் செய்தனர். இவர் திருச்செந்தூர் அகவலும் செய்தனர் என்பர். இவர்க்கு (63) மாணாக்கர்கள். இவர் தம் மாணாக்கர் அனைவருடன் ஒரு இடத்தில் உணவுகொள்ளுகையில் அங்கிருந்த பரிசாரகன் நெய்யென நினைத்து வேப் பெண்ணெயைப் பரிமாற அனைவரும் அதனையறியாது உண்ண ஒருவர் வேப்பெண்ணெய் என்று அறிந்து உணவைக் கான்று ஆசாரியருக்கு அறிவித்தனர். ஆசாரியர் இவன் பரிபாகம் இல்லாதவன் என்று நீக்கிச் சிலநாளிருந்து தமது சீடர் அனைவரில் ஒருவர் தவிர மற்றவர் அனைவருக்கும் தனித்தனி சமாதிக்குழி செய்வித்துச் சீடருடன் ஒரே காலத்தில் சமாதியடைந்தவர்.

சிற்றரையம்

இது அரையமென்னும் நகரத்தின் ஒரு கூற்றின் பெயர். (புற நா).

சிற்றுண்டி வகைகள்

இவை செய்யும் வகை முதலியவற்றைப் பாகசாத்திரங்க ளில் காண்க. பிட்டு, இலட்டுகம், அப்பம், அஃகுல்லி, பில்லடை, தினைமா, நென்மா, கோதுமைமா, தோசை, பூரிகை, கடலைமா சேர்ந்த சாதம், என்ளோரை, புளியோரை, ததியோதனம், சருக்கரைப் பொங்கல் எலிமிச்சம் பழரஸம் சேர்ந்த சாதம், கிச்சிலி ரஸம், திராக்ஷ ரஸம், வாதுமைப்பருப்பு, சத்திரிக்காய், வண்டைக்காய், சேமைக் கிழங்கு, கருணை, வாழைப்பழம், தேங் காய், பலாக்காய் முதலிய சேர்ந்த சாதங்கள். துவரம்பருப்பு, பச்சைப்பயறு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளுப்பருப்பு முதலிய பொங்கல்கள், உளுந்துவடை, தித்திப்பு உளுந்து வடை, வெங்காயம் சேர்ந்த வடை, இடுலி, முருக்கு, கடலைரொட்டி, கோதுமைரொட்டி, கடலை மாதித்திப்பு உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, துவரை உருண்டை, மாவுரு பண்டை, பூரணவுருண்டை, பணிகாரம், மகிழம்பூப் பணிகாரம், எருக்கங்காய் கொழுக்கட்டை, குழவுண்டை, அடுக்குப் பணிகாரம், கச்சுருக்காய், எள்ளுருண்டை, எள் ளடை, கடலைச் சுவையல், பேணி, பூந்தி பலகாரம், ஜிலேபி எனும் தேங்குழல், கோதுமைாவை அல்வா, வாதுமை அல்வா, பொரிவிளங்காய், பலவித பச்சி, பலவித பாயசங்கள், கிச்சடி வகைகள் முதலியன.

சிலந்தியின் அஷ்டவிஷபேதம்

சிலந்திப் பூச்சிகளுக்குச் சுவாசம், பல், மலம், மூத்திரம், சுகலம், வாய், வாய்நீர், பரிசம் என்னும் (8) இடங்களில் விஷம் உண்டாம். (ஜீவ.)

சிலந்தியியல்பு

இது எட்டுக்காலையுடைய பூச்சிவகையைச் சேர்ந்தது, முகத்தில் கை போன்ற இரண்டுறுப்புடையது. இவற்றுட் சிலமரணந் தாத்தக்க விஷமுள்ளவை. இவைகளில் பலவகை உண்டு, இவை வலை பின்னி வாழும். பூமியில் குழியில் வசிப்பவை குழிச்சிலந்தி, செஞ்சிலந்தி, கருஞ்சிலந்தி எனப் பல. இது தலை, உடல் என இரண்டு பாகங்களையுடையது, தலையில் இரண்டு கண்கள் உண்டு, தலைக்கருகில் மீசையொத்த ஒரு உறுப்புண்டு. இவ் வுறுப்பில் துவாரங்களிருக்கின்றன, இத் துவாரத்திலிருந்து பூச்சிகளைப் பிடிக்கையில் விஷம் ஊறிப் பூச்சிகளைக் கொல்கிறது. இந்தப் பூச்சிகளுக்கு 8 கால்கள். இது கூடு கட்டுவதற்கும் ஆகாரத்தைப் பற்றுவதற்கும் வேண்டிய நிலை. பின் பாகத்திலுள்ள சிறிய குழிகளிலுள்ள பிசின் போன்ற பொருளால் நூற்கிறது. இது காற்றுப்பட்டால் நூல்போல் உறைகிறது. இது இப்பிசினைக் கிளைகளில் ஒட்டித் தன்னூலால் வலை பின்னித் தான தன் ஓரிடத்திருந்து பூச்சிகள் வலையில் விழுந்தபோது பிடித்து சாதின்னும். சிலந்தி முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் தாய் போல் ஆசாரத்தைத் தானே தேடிக் கொள்ளும். இது (7) வகை. இவைகள் வெளுப்பு, சிவப்பு நிறத்தையும், ஆசனத் தில் சித்திரங்களான மெல்லிய நூல்களைப் பெற்றுமிருக்கும். வாத, பித்த, சிலேஷ்ம, சங்கீரண சிலந்திரன் என (28) வகையாம். சிலந்திபேதம்; வாதச்சிலந்தி; இவை பீதச்சிலர்தி, குமுதச்சிலக்க, மூல விஷச்சிலந்தி, இரத்தசிலந்தி, சித்திரசிலந்தி,சந்தானிகச்சிலந்தி, மேஜகச்சிலந்தி என்பனவாம். இது வெளுப்புச் சிவப்பு நிறத்தையும் ஆசனத்தில் சித்ரங்களான நூலையும் பெற்றிருக்கும். பித்தச்சிலந்தி; இது, கருமை பொன்மை கலந்த நிறத்துடன் முகத்தில் அனலையும், ஆசனத்தில் தாமரை நூவைப்போல் நூலையும் பொறிருக்கும். இது கபிலாசிலந்தி, அக்னிமுகச்சிலந்தி, பீதச்சிலந்தி, பதுமச்சிலந்தி, மூத்திரச் சிலந்தி, சுவேதச்சிலந்தி, கறப்புச்சிலந்தி யென (7) வகை, சிலேஷ்மசிலந்தி; குடலில் நீலநிறத்தையும், வெண்மை நிறம், நீலநிறம் பெற்று ஆசனத்தில் சிவந்த நூல் கொண்டிருக்கும். இது பாண்டுச் சிலந்தி, பத்தபாண்டுச்சிலந்தி, வண்டுச் சிலந்தி, பிங்கச்சிலந்தி, திரிமண்டலச் சிலந்தி, துர்க்கந்தச்சிலந்தி, சித்திரமண்டலச்சிலந்தி என (7) வகையினது. சங்கீர ணச்சிலந்தி; இது ஆசனத்தில் பலநிற நூலைப் பெற்றிருக்கும். இது காகச் சிலந்தி அக்னிபதச் சிலந்தி, பொரிவண்ணச்சிலந்தி, வைதேகிச்சிலந்தி, ஜாலமாலினிச் சிலந்தி, மாலாகுணச்சிலந்தி, சுவர்க்கச் சிலந்தி என (7) வகை, (ஜீவ.)

சிலம்பம்

தேகப்பயிற்சிக்காகவும் தம் எதிரிகளை வெல்லுதற்பொருட்டும் ஒற்றையிரட்டைக் கொம்புகளாலும் மற்றும் பல கருவிகளாலும் பழகும் பழக்கம்.

சிலம்பாறு

பாண்டி நாட்டில் திருமாலிருஞ் சோலைவிலுள்ள ஒரு நதி. (சிலப்பதிகா.)

சிலம்பி

சோழநாட்டிலிருந்த தாசி. கம்பரிடம் கவிபெற ஆசைகொண்டு (500) பொன் கொடுத்து தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவதுஞ் சோழ மண்டலமே பெண்ணாவாள், அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும், செம்பொற் சிலம்பே சிலம்பு” என்ற கவியில் பாதி பெற்று ஒளவைக்குக் கூழிட்டு “பெண்ணாவாள்’ என்றது தொடங்கிப் பாதிச் செய்யுள் பெற்றுச் சுகம் உற்றவள்.

சிலாசத்து

(Gypsum) இஃது ஒரு சுண்ணார்பின் சேர்க்கைப் பொருள். ஐரோப் பாவில் சில இடங்களில் அகப்படுகிறது. இதனுடன் ஜலத்தைச் சேர்க்கின் இறுகும்.

சிலாசுரன்

வீமாசுரனைக் காண்க.

சிலாதமுனிவர்

1. இவர் மனைவியார் சித்ரவதியார். இவர் புத்திரன் வேண்டிச் சிவபெருமானை யெண்ணிக் கற்களை ஆகாரமாகக்கொண்டு தவஞ்செய்யச் சிவபெருமான் தரிசனந்தந்து சிலாதன் (கல்லை ஆகாரமாகக் கொண்டவன்) எனப் பெயர் பெற்றவர். சிவபிரான் இவரை நோக்கி நீ விருத்தனாதலால் புத்ரோற்பத்தி உன் மனைவியிடம் அரிதாகும். ஆதலால் நீ யாகஞ்செய்து அப்பேற்றை யடைவாய். நீ யாகஞ் செய்யவேண்டி நிலத்தினை உழவு செய். அவ்வுழுசாலில் ஒரு புதல்வன் உனக்கு உண்டாவன். அவன் எனக்குச் சமானமானவன் என மறைந்தனர் பின்பு அவ்வாறு யாகஞ்செய்ய நிலத்தையுழ அவ்வுழுசாலில் ஒரு பொற்பெட்டியில் நந்திமா தேவர் இருக்க எடுத்து வளர்த்தனர். இவர்க்கு வைதஹவ்யர் என்று பெயர். இவர் பிறந்தகாலத்து வந்ததேவரில் பிரமன் இந்திரனை நோக்கி இக்குழந்தை சகலர்க்கும் ஆனந்தமுண்டாக்கினதால் நந்தீசனெனப் பெயர் அடைக என்றனன். சிலாதன் புத்திரனாதலால் சைலாதியென முனிவர்கள் பெயரிட்டனர். (சிவாஹஸ்யம்.) 2. இவர் இளைமைப் பருவத்தில் தம் வீட்டிற்குவந்த ஒரு அதிதிக்கு விளையாட் டாக அவரறியாது அவரது அன்னபாத்திரத்தில் ஒரு சிறு கல்லிட்டனர். அந்தணர் அச்சிறு கல்லை அன்னத்துடன் புசித்தனர். சிலாதர் தமது தவப்பலனால் தன்னண்பர்களுடன் யமபாஞ்சென்று ஆண்டிருந்த காணிகளைக் காண்கையில் யமனது அரசிருக்கைக் கருகே ஒரு பெரும் பாறை இருக்கக் கண்டு யாது காரணமென்று வினவ அந்தகன், ஒரு வேதியச் சிறுவன் ஒரு அதிதியின் அன்னத்தில் கல்லிட்டதால் அவன் வயது வளருந்தோறும் இது வளர்ந்து பெரும்பாறையாயது, அவன யமபுரம் வருங்கால் இவ்வளவையும் எங்கள் தண்டனையா லவனுண்ண வேண்டு மெனக் கேட்டு அது தான் செய்த தவறென்றறிந்து அதற்குத் தீர்வாக அவர்கள் அவ்வளவின தாகிய பெரும் பாறையை அவனுண்ணில் அப்பாவந் தொலையுமெனக் கூறக் கேட்டுத் தாம் சிவயோகத் திருந்து விழித்து அதனையொத்த ஒரு பாரையைக் குறிப்பிட்டு அப்பாறையிற் சிறிது சிறிது உடைத்துண்டு அப்பாறை முழுதும் கரைத்துத் தமது பாவத்தை யதஞ்செய்து கைலைக்குச் செல்லுகையில் யாபுரத்திலிருந்த தமது பிதுர்க்களைக் கண்டு நீங்களாரென அவர் சிலாதன் பிதுர்க்களெனத் திடுக்கிட்டு அவர்கள் தம்மை நரகத்திலிருந்து நீக்கிக்கொள்ள நீ மணஞ் செய்து கொள்ளல் வேண்டுமென்றபடி மணஞ்செய்து கொண்டு தவத்தால் நந்திமா தேவரை யாகத்திற்கு உழுத படைச்சால்வழி மாணிக்கப் பெட்டியிற் புத்திர னாகபபெற்று வளர்த்தவர் சிலையை அதஞ் செய்ததால் சிலாதர். (சிவமகா புராணம்.) 3. இவர் ஸ்ரீசைலத்தில் ஆயிரம் தேவ வருடம் தவம் புரிந்து இறவாப்புத்திரன் வேண்டுமெனச் சிவமூர்த்தியை வரங் கேட்டு அவரது அனுக்கிரகத்தால் யாகஞ் செய்ய உழுதநிலத்தில் கொழுவின் நுதியில் குழந்தையுருவாக நந்திமாதவரைக கண்டெடுத்து வளர்த்தவர். (இலிங்க பு.)

சிலாதித்யன்

ஒரு புத்த அரசன. இவன் கிறிஸ்து பிறந்த (634)ல் அரசாண்டு ‘ புத்தசமயத்தை விருத்தி செய்தனன்,

சிலீமுகன்

இவன் ஒரு அரசன் விருத்திராசுரனைக் கொன்ற இந்திரனிடத்துப் பழி வாங்கவேண்டி இந்திரன் நிராயுதனாய் இந்திராணியுடன் இருக்குஞ் சமயமெண்ணி யுத்தத்திற்கு வந்தனன. இந்திரன் வச்சிரத்தை நினைக்க அது வந்தது அதனால் கொலையுண்டு இறந்தவன்.

சிலுவை

கிறிஸ்து மதத்தவர் தமக்கடை யாசமாக ஏசவை அறைந்த சிலுவையுருவைத் தெரிவிக்கும் ஒருகுறி, இதனை மேனாட்டிலுள்ள தேசத்தார் பல வடிவமாகச் செய்து தரிப்பர். இதில் (20) உருவவகை உண்டு போலும்,

சிலேடையணி

ஒருவகையாக நின்றதொடர் மொழி பலபொருள்களது தன்மை தெரிய வருவது. இது, செம்மொழி, பிரிமொழிச் சிலேடை ஒருவினைச்சிலேடை பலவினைச் சிலேடை, முரண்வினைச் சிலேடை, நியமச் சிலேடை, நியமவிலக்குச் சிலேடை, விநோதச்சிலேடை, அவிரோதச்சிலேடை எனப்பல, இதனைப் பல்பொருட் சொற்றொடாணியென்ப. (தண்டி.)

சிலேஷ்மம்

1 ரூபம் வழுவழுப்பு, சீதளம், கனம், மந்சதத்வம், நாற்றம், மினுமினுத்தல், ஸ்திரமாகிய ரூபத்தையுடையது. இடம்; மார்பு, சிரம், கண்டம், நாசி, நா, முதலிய, இடங்களைப்பற்றி நிற்கும். குணம்; மழமழப்பு, அசையர்மை, நீல்களுக் குறுதிதந்து தேகத்தைப் போஷிக்கும் குணம் பெற்றிருக்கும். தொழில்; வெண்ணிறமாக்கல், வழுவழுச்தல், பாரித்தல், தினவு, சீதளித்தல், மரியாதை, கர்வம், விரைவில் சீரணித்தல் முதலிய தொழில்களை பெற்றிருக்கும். கோபம். தித்துப்பு, புளிப்பு, உப்பு, குழகுழப்பு, மர்தம், சீதளம் முதலிய பொருளகளை யருந்துங்காலம், ஈரல் ஸ்திரம் புனையுங்காலம், அசீரண காலம் இக்காலங்களில் சிலேஷ்ம கோபம் உண்டாம். விருத்தி; சிலேஷ்மம் அதிகரித்தால், அக்னிமந்தம், வாய்நீர் ஊறல், வெண்ணிரம் சில்லிடல் முதலிய அதிகமாம், சீரணம்; சலோமம் குறைந்தால், பிரமை, சிலேஷ்மஸ் தான போழை குறை, வியர்வைப் பெருக்கம் கீல்களின் தோற்றம் உண்டாம். (ஜீவ) 2. இஃது, அவலாம், கிலேதசும், போதாம், தருப்பகம், சந்திகம் என ஐந்து வகைப்படும். அவலம்பக சிலேஷ்மம்; இதயத்திருந்து கொண்டு மூக்கன் தண்டலும்பின் மூட்டு, இரண்டு தொடையெலும்புகளின் மூட்டுகளுக்கும், தன் வலிமையாலும், இதய ஸ்தானத்தற்கு அனை ரஸ்த்தாலும், மற்ற நான்கு சிலேஷ்ம ஸ்தானங்களுக்குச் சலத் தொழிலாலும் ஆதாரத்தை யுண்டாக்கும். கலே தக சிலேஷ்மம்; இது, ஆமாசயம் தானத்தில் வசித்துக்கொண்டு உண்ட அன்னாதிகளை மிருதுவாக்கும். போதக சிலேஷ்மம்; இது, நாவிலிருந்து கொண்டு உண்ணும் சுவைகளைத் தெரிவிக்கும், தரும்பகசிலே ஷ்மம்; இது, சிரசில் வசித்துக்கொண்டு இரண்டு கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும், சந்திகசிலேஷ்மம்; இது, இல்களில் இருந்து கொண்டு எல்லாக் கீல்களையுந் தளரச்செய்யும். (ஜீவ)

சிலேஷ்மரோகபூர்வம்

தேககனம், தேகத்திலு முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், இருமல், இரைப்பு, நடுக்கல், சிரோபாரம், நெஞ்சில் கபாதிக்க ஓசை, குளிர்ச்சி, வியர்த்தல், விக்கல், சுரம், குளிர், மந்தாக்னி, வாயில் வழுவழுப்பு, கோழை, கண்ணில் சலக்கோவை, மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தும்பல வாந்தி இவைகளைத் தனக்குப் பழைய ரூபமாகப் பெற்றிருக்கும். (ஜீவ.)

சிலேஷ்மரோகம்

இது சீதளத்தாலுண்டாம் ரோகம். இது இருபது வகைப்படும். அவை; வாதசிலேஷ்மம், பித்தசிலேஷ்மம், சத்தசிலேஷ்மம், க்ஷயசிலேஷ்மம், மூர்ச்சாசிலேஷ்மம், சுஷ்டசிலேஷ்மம், சுரசிலேஷ்மம், மூகைச்சிலேஷ்மம், துக்க சிலேஷ்மம், தொனிச்சிலேஷ்மம், கோஷ சிலேஷ்மம், சுவேதசிலேஷ்மம், மகா சிலேஷ்மம், பேனசிலேஷ்மம், லாலா சிலேஷ்மம், வமனசிலேஷ்மம, க்ஷண சிலேஷ்மம், சோஷசிலேஷ்மம், உத்கார சிலேஷ்மம், இச்காசிலேஷ்மம், சாசசிலே ஷ்மம், சுவாசசிலேஷ்மம், தீபனசிலேஷ்மம், மந்தசிலேஷ்மம், தொந்தசிலேஷ்மம், சந்நிபாத சிலேஷ்மம், அதிசாரசிலேஷ் மம், சலசிலேஷ்மம், அக்னிசிலேஷ்மம், முசல்சிலேஷ்மம், வெளிச் சிலேஷ்மம், விகாரசிலேஷ்மம், விரண சிலேஷ்மம், துர்க்கந்தசிலேஷ்மம், தெயசிலேஷ்மம், பூதாலேஷ்மம் என்பனவாம்.

சில்லி

விருஷ்ணிவம்சத்து க்ஷத்திரியன்.

சில்லிகை

ஆரண்யாக்ஷன் குமரி, தண்டகா சுரனுக்குத் தாய்.

சிளாபாயி

ஒரு அரசனுக்கு ஒரு பெண்மகவு பிறக்க அவளுக்குச் சிளாபாயி என்று பெயரிட்டு ஒரு கல்விமானைக்கொண்டு கல்வி முதலிய கற்பித்து வந்தனன். இப்பெண் தம் தந்தையார் செய்யும் சாளக்கிராம பூசையைப் போல் தானும் பூசை செய்ய வெண்ணித் தன் உபாத்தியாயரை நோக்கி ஒரு சாளக்கிராமம் தனக்குக் கொடுக்க வேண்டினள். உபாத்தியாயர் இவள் வினா வியதைப் பொருளாக மதியாது ஒரு உருண்ட கல்லினைச் சாளக்கிராம மென்று கொடுத்தனர். இதைக்சொண்ட சிளாபாயி நாடோறுந் தவறாது பூசைசெய்து வருங்காலையில் வயதடைந்து மணமகனைக் கூடி வேட்டகஞ் சென்றனள். செல்லும் வழிக்கண் இவள் பூசைதொடங்கக்கண்ட புருஷன் இதென்னென, உற்றார் விளையாட்டாகச்செய்வ தென்றனர். இதைக் கேட்ட கணவன் பூசைப் பெட்டகத்தை இவளறியாது ஆற்றிலிட்டனன். மறுதினம் பெட்டகத்தைக் காணாது வருந்திப் பெருமாளை யெண்ணிப் புலம்பி நான்கு நாள் ஆகாரமிலாது பெட்டகம் வந்தாலன்றி உணவு கொள்ளேனென் றிருக்கையில் பெருமாள் இவளது மன உறுதிக்கு மகிழ்ந்து ஆசாரியனைப்போல் வந்து பூசைப் பெட்டகத்தைத் தந்து அகன்றனர். மீண்டும் இவன் பெட்டகத்தைப் பெற்றதறிந்த கணவன் இதை யாற்றினின்றெடுப்பது தேவர்க்கனறி யேனையோர்க் காகாதென மனைவியிடத்தன் புடமிக்கு வைணவனாயினான்.

சிள்வீடு

விட்டிலின் வேறுபாடென எண்ணப்படுகிற ஒருவகைய பூச்சி.

சிவகங்கை

திருக்கைலை மலையிலிருந்து பிரவகிக்கும் நதி.

சிவகணத்தவர்

கபாலிசன், விசோகன், சதநேத்திரன், சதாநிலன், அந்தருதான், கராளவதனன், பாரபூதி, சோமவர்ஷன், மகாகாயன், சோமன, நிகும்பன, சங்கான, சூரியாபபியானன், சர்வமானி, கடாகடன், சங்ககர்ணன், நந்திகன், பிங்காக்ஷன், கூஷ் மாண்டன், ஏகபாதன் முதலியவராம்.

சிவகலை

பட்டணத்து அடிகளின் தேவியார். மருதவாணரைக் குழந்தையாக வளர்த்த தவம் உடையவர்.

சிவகாமியாண்டார்

எறிபத்த நாயனார் சரிதையைக் காண்க.

சிவகாயத்ரிஸ்வரூபம்

பொன்னிறமாய், நான்கு கைகளும், திரிநேத்ரங் களுமுள்ளவளாய், வரதம், அபயம், ஜபமாலை, கமண்டலம் உடையவளாய் இருப்பள்.

சிவகுண்டி

வில்வவனத்தில் சிவார்ச்சனை புரிந்து முத்தி அடைந்தவன்.

சிவகுரு

1. சடைமுடி யுடையவராய், விபூதி தூளிதத்தால் வெண்ணிறத்த தேக முடையராய் பூணு நூலும் யோகபட்டமும் உள்ளவராய்ச் சிவத்யானமா யிருப்பவர். (சைவபத்ததி) 2 இவர் கேரளநாட்டில் காலாட்டி யென்கிற அக்ராரத்தில் வித்யாதிராயர் என்பவருக்குப் பிறந்தவர். இவர் கல்வி பயின்று மகீபண்டிதன் குமரியாகிய ஆர்யாம்பாளை மணந்து சிவாநுக்ரகத்தால் கலி யுகம் (3058)க்குச் சரியான விக்ரமசகம் (14) வது ஈசுரவைகாசிமீ சங்கரா சாரியரைப் பெற்றார்.

சிவகோசரியார்

திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவமூர்த்திக்குப் பூசை செய்திருந்த சிவவேதியர். இவர் சரிதையைத் திண்ணனாரைக் காண்க.

சிவக்கொழுந்து தேசிகர்

இவர் கொட்டையூரிலிருந்த கவிவல்லவர். மருதவன புராணம், திருநல்லூர்ப்பெருமண புராணம், கோடீசுரககோவை பாடியவர். சென்னை சர்வகலாசாலையில் வித்வானாயிருந்தவர்,

சிவசதுர்த்தசி விரதம்

மார்க்கசிரீஷ சுக்ல திரியோதசியில் ஒருவேளை புசித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைச் தானஞ் செய்து பௌர்ணமியில் புசிக்க வேண்டும். இப்படி (12) மார்க்க சீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோசுமரம், சோததி, கோபுரதம், குசோதகம், பஞ்ச கவ்யம், வில்வம், கற்பூரம், அருரு, யவை, எள்ளு, முதலியவைகளை மாசக்கிரமமாகப் புசித்து விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி (100) அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியு முண்டாம். இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.

சிவசன்மா

1. வடமதுரையிற் பிறந்து பலநாள் செல்வத்திற்கு உழைத்துக் கிழப்பருவம் அடைகையில் தலயாத்திரை செய்ய எண்ணி முத்தித்தலங்களாகிய அயோத்தி, மாயாபுரி, காசி, காஞ்சி முதலிய பல தலங்களைத் தரிசித்துத் துவார கையில் வந்து ஸ்நானஞ்செய்து ஏகாதசி உபவாசம் இருந்து துவாதசி பாரணை செய்கையில் சுரத்தால் இறந்தனன். இவனைக் காலபடர் பற்ற விஷ்ணுபடர் மறுத்து எல்லாவுலகமுங் காட்டிச் சென்று விஷ்ணுபதம் சேர்த்தனர். அங்குச் சில நாள் தங்கி விருத்தா காளனாய்ப் பிறந்து முற்பிறப்பில் சுபாசு என்னும் மறையவன் பெண்ணாகிய சுபானனை, இங்கு ரயித்துரு ஆகப் பிறந்திருப் பவளை மணந்து இறந்து, மறுபிறப்பில் அருங்கலேசையாசப் பிறந்த அவளையே மணந்து காசியில் சிவபிரதிட்டை செய்து முத்தி அடைந்தவன். (காசிகண்டம்). 2, ஒரு வேதியன், இவன் அகத்தியரைக் காணச்சென்று திருநெல்வேலியில் ஒரு வேதியனிடம் தன பொருள்களை ஒப்புவித்துப் பொதிகைக்குச்சென்று பசி தாகத்தால் வருந்தி இளைத்து இருக்கையில் அகத்தியர் ஒரு விருத்தவேதியர் வடிவாக வந்து பிராமணனை நோக்கி நீர் எங்குப் போகின்றீர் என்ன, வேதியன் அகத்தியரைக் காண என்றனன். வேதியசாகவந்த அகத்தியர் நீர் அவரைக் காண முடியாதென்று அவமதிக்க வேதியன் விருத்தரிடத்துக் கோபித்து என் உயிர் நீங்கினும் அவரைக் காணாது விடேன் என்று சொல்ல விருத்தவேதியா தம்முருக் காட்டினர். வேதியன் களிப்படைந்து பணிந்தனன. அகத்தியர் வேதியனை அங்குள்ள தடாகத்தில் முழுகக் கட்டளையிட்டனர். வேதியன் அவ்வகை செய்யத் தருநெல்வேலியில் உள்ள தீர்த்தத்தில் எழும்பச் செய்து அவனது முதுமை போக்கி இளமை தந்து சென்றனர். வேதியன் தான் முன்பு பொருள் கொடுத்த வேதியரிடம் வந்து பொருள் கேட்க அவன் மறுக்கக் கேட்டுச் சூள் செய்யச்சொல்லி அவ்வகை செய்ய அவன் எரியக்கண்டவன்.

சிவசமவாதிமதம்

இவர்கள் பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி எனவும், ஞானம் அநாதி எனவுங் கூறுவர். அவற்றுள் பசு பாசங்களின் செயலறப் பதிஞானந் தோன்றும் இவ்வாறு தோன்றிய ஞானத்தால் குளவி புழுவைத் தன்னிறம் ஆக்குதல் போல் பதிஞானம் பசுவைத் தன் ஞானம் உதிக்கச்செய்து நிற்கும் என்பர் (தத்துவ)

சிவசருமர்

1, திருவிடைமருதூர் சிவவேதியர். இவர் தேவியார் சுசீலை, இவர் கள் இருவரும் அன்பர்க்கு அன்னம் பரிமாறி வருகையில் பொருளின்றிக் குழந்தைகளுக்கு வைத்திருந்த பொருள்களை விற்றுச் சிவபூசைமுடித்துச் சிவனடியவர்க்கு அன்னம் பரிமாற மீளுசையில் சிவமூர்த்தி விருத்தவேதியராக வந்து தமது பசியைத் தெரிவித்துச் சிவனடியவர்க்கு இருந்த அன்னமெல்லாம் தாமே உண்டு போயினர். சிவசருமர் வீட்டில் சிவனடியவர்கள் பசியால் வருந்துதல் அறிந்து மனைவியின் மாங்கல்யத்தைவிற்றுப் பண்டங்கள் கொணர்ந்து சிவனடியவர் பூசை முடித்தனர். மறுநாள் மிகுந்த பண்டங்களால் அடியவர் பூசைமுடிக்க இருக்கையில் சிவமூர்த்தி சிவனடியவர்போல் எழுந்தருளி அன்னம் புசித்து மீண்டு சிவசருமர்போல், வீட்டில் கோயில் நிவேதனங் கொண்டு வந்து அடியவர்க்கு அளிக்க எனக் கூறி மறைந்தனர். சசீலை தமது கணவரை இதுவரையில் எங்குச் சென்றீர் என வினாவுகையில் நடந்தது கூற இது சிவமூர்த்தியின் திரு விளையாடல் இவ்வகைத் திருவிளையாடல் புரிவோர் பொருள் தரலாகாதா என்று எண்ணித் துயில்கையில் சிவமூர்த்தி கனவில் எழுந்தருளி நாம் குழந்தையுருக்கொண்டு இருக்கிறோம் எம்மை எடுத்துச் சென்று பட்டணத்துச் செட்டியாரிடங் கொடுத்துப் பொருள் பெறுக என்று மறைய இருவருங் குழந்தையுருக் கொண்டிருந்த சிவமூர்த்தியை எடுத்துச்சென்று இலையிலிட்டு அவ்வளவு பொருள் பெற்றுச் சிவ பூசை சிவனடியவர் பூசைமுடித்து முத்தி பெற்றவர். 2, ஒரு கன்னடநாட்டு வேதியர், அகத்தியரைக் கண்டு இளமை பெற்று மீண்டு சிவ தருமமும் ஒருவாய்க்காலும் செய்வித்தவர், 3. திருவிரிஞ்சிபுரத்தில் இருந்த சிவநாதன் என்னும் ஆதிசைவவேதியரின் குமரர். இவரது இளமைப் பருவத்தில் தந்தையார் இறந்தனர். இவர்க்குக் கோயிலில் சிவபூசை முறை வந்தது இவரைச் சேர்ந்த பங்காளிகள் இவரது முறையை இவர் தாய்க்கு அறிவித்தனர். தாய் சிவ சன்னிதானஞ் சென்று குழந்தையின் இளமைப்பருவம் தெரிவித்து முறையட்டனள் சிவமூர்த்தி இவள் கனவிற்றோன்றி நாளை உன் குமரனைத் தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்விக்க எனக் கட்டளையிட்டு மறைந் தனர். விடிந்தபின் சிவசருமரின் தாய் அவ்வகை ஸ்நானஞ்செய்விக்கச் சிவசருமர் இருடியர்போல் உருவடைந்து சிவபூசை செய்யச் சென்றனர். சன்னிதானத்தில் சிவலிங்க மூர்த்தி ஓங்கியிருத்தல் கண்டு சிவமூர்த்தியை வேண்டச் சிவமூர்த்தி தமது முடியை வளைந்துக் காட்டித் திருமஞ்சனம் கொண்டனர். இச்சிவலிங்கவுரு இத்தலத்தில் சாய்ந்தேயிருக்கிறது.

சிவசாதாக்யம்

இது சாந்திய தீதையெனும் பராசத்தி சுத்தமான சிவமெனும் பெயரை யுடைத்தாய் அதிசூக்மமாய்ப் பிரகாசமாய் ஆகாசத்தில் மின் போல அரூபத்திலே தியானத்தால் விளங்குவது. (சதா.)

சிவசிதம்பரம் செட்டியார்

பட்டணத்து அடிகளுக்கு மாமனார். இவர் தேவியார் சிவகாமி, குமரி சிவகலை.

சிவசித்தர்

இவர் வேதியரைச் சிவனடியவர் காலின் செருப்புக்கும் ஒவ்வார் என்றனர். அதனால் வேதியர் வாதுக்குவரச் சித்தர் சிவனடியவரின் காற்செருப்பை ஒரு துலையில் வைத்து வேதியர் ஒருவரைத் துலையில் நிறுத்தச் செருப்பு இருந்த துலை தாழக் காட்டியவர்.

சிவசுவாமி

1. கோரனது கடைக் குமரன். இவன் குமரன் கோபதி. 2. சகலகலா பண்டிதனாகிய ஒருவேதியன். நல் ஒழுக்கம் உடையான். இவன் தேவி புனிதவதி, குமரன் தருமசுவாமி,

சிவசூரியன்

சூரியமூர்த்தியைக் காண்க.

சிவஞான தீபம்

இரேவணாராத்திரியர் இயற்றிய வீரசைவ சித்தாந்த நூல்.

சிவஞான தேசிகர்

தருமபுரமடத்துச் சந்தியாசி. காசியில் எழுந்தருளியிருந்து காசித் துண்டி விநாயகர் திருவருட்பா இயற்றினவர்.

சிவஞான போதம்

மெய்கண்டதேவர் அருளிச்செய்த சைவசித்தாந்தத் தமிழ் நூல்,

சிவஞான முனிவர்

பாண்டி நாட்டுத் திருநெல்வேலி ஜில்லா பாபநாசத்தில் விக்கிரம சிங்கபுரத்தில் அம்பல ஆநந்தக்கூத்தர்க்கு மயிலம்மையாரிடம் பிறந்து முக்களாலிங்கர் எனப் பிள்ளைத்திருநாமம பெற்றுக் கல்விகற்கும் வயதில் சில முனிவரை யுபசரித்து அவர்கள் துணையாகத் திருவாவடுதுறை சென்று சின்னபட்டத் திருந்த வேலப்பதேசிகரிடம் சிவ தீக்ஷை பெற்றுச் சிவஞான யோகிகள் எனத் தீக்ஷா நாமமடைந்து கல்வி வல்லவராய்த் தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, தர்க்கசங்கிரகம், சிவஞானபோத பாடியம், சித்தாந்தப் பிர காசிகை, சித்தியார் பொழிப்புரை, அரதத்தசுவாமிகள் அருளிய சுலோகமொழி பெயர்ப்பு, சிவதத்வவிவேகம், காஞ்சிபுராணம், கம்பாந்தாதி முல்லையந்தாதி, கலை சையந்தாதி, குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ், விநாயகர் பிள்ளைத்தமிழ், சோமேச வெண்பா, நன்னூல் விருத்தியுரைத் திருத்தம் இவை செய்து சமாதி யடைந்தனர்.

சிவஞானசித்தியார்

அருணந்தி சிவாசாரியார் அருளிச்செய்த சைவசித்தாந்த சாத்திரம்.

சிவஞானவதியார்

மாணிக்கவாசகருக்குத் தாயார்.

சிவஞானவள்ளலார்

வள்ளலார் சாத்திரம் என்னும் வைதீக சைவசாத்திரஞ் செய்தவர். இவர் சீர்காழி வள்ளலார் சந்தானத்தைச் சேர்ந்தவரா யிருக்கலாம். இவர் செய்த நூல்கள் சத்தியஞானபோதம், பதிபசுபாச விளக்கம், சித்தாந்த தரிசனம், உபதேசமாலை, ஞானப்ரகாச வெண்பா, ஞானவிளக்கம், அதிரகசியம், சுருதிசாரம், சிந்தனை வெண்பா.

சிவதத்வம்

1, (5) சுத்தவித்தை, ஈச்சுரம், சாதாக்கியம், சத்தி, சிவம். ஞானம் ஏறிக்கிரியை குறைந்தது. சுத்தவித்தை. ஞானம் குன்றிக் கிரியை உயர்ந்தது. ஈச்சுரம், ஞானமும் கிரியையும் ஒத்தது சாதாக்கியம், கிரியையாதல் சத்தி, ஞானமாதல் சிவம். 2. சுத்த மாயை மகாசங்கார காலத் துத் தனது காரியங்களெல்லாம் ஒடுங் கிக் காரண மாத்திரையாய் நின்றவழி, முதல்வனும் தனது சத்தி வியாபாரங்களை ஒழித்துப் பகுப்பின்றித் தானேயாய் நிற்பன், அவ்வாறு தின்ற முதல்வன், சுத்த மாயையை மீளக் காரியப்படுத்தற்கு யோக்யமாம்படி, தன்னின்று வெளிப்பட்ட ஞானசத்தி மாத்திரையான், அச் சுத்தமாயை நோக்கி நிற்பன். அவ்வகை நோக்கிய வழி சுத்சமாயையிற் சலக்குண்ட பாகம் ஞானமாத்திரையாய் நின்ற சிவனாலதிட்டிக்கப்படுவது. இதனை இலயதத்வம், நிட்கள் தத்துவம், நாததத்வம் எனவும் கூறுவர். (சிவ போ.) 3. இது சுத்த தத்வம் எனப்படும். இது சிவத்தாலதிட்டிக்கப்படும் தத்வம். இது சுத்தவித்தை, சச்சுரம், சாதாக்யம், சத்தி, சிவம் என ஐவகைப்படும்.

சிவதன்மன்

இவன் நன்னெறிகடந்து புண்ணியமிழந்ததால் பிரமராக்க தனாகிச் சந்தான தீர்த்தத்தில் தீர்த்தமாடும் சுமதியைப் பிடிக்க அவன் அத் தீர்த்தத்தில் சிறிது தெரித்சதனாலும் இசற்கு முன் பிறவியில் அபுத்திபூர்வகமாய் ருத்ராக்ஷதானஞ் செய்தமையாலும் நல்லுருப்பெற்றுச் சிவபத மடைந்தவன். (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்.)

சிவதர்மம்

ஒரு புராணம்.

சிவதர்மோத்தரம்

இது சந்தான சர்வோத்தமம் என்னும் ஆகமத்தின் பிரிவு. இது பரமதருமம, சிவஞான தானம், பஞ்சயாகம், பலவிசிட்டர்ரணம், சிவ தருமம், பாவபுண்ணியத் தன்மை, சாநமாணம், சுவர்க்காராம், சிவஞானயோகம் முதலியவற்றை விளக்கும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் மறைஞானசம்பந்த நாயனார்.

சிவதூதி

இவள் சத்தியினம்சாவதாரம். இவள் ருரு எனும் அசுரன் தேவர்களை வருத்த, தேவர்கள் சத்தியை வேண்ட, சத்தி தனது அம்சமாகிய இவளை அனுப்பினள். இவள் ருருவை வதைத்துத் தேவர்களின் துன்பம் நீக்கினள் (பதும்~புரா,)

சிவதேயகுப்தர்

பட்டணத்து அடிகளுக்குத் ததை.

சிவதேவசரணர்

கோட்கூச்சவ்வைக்குத் தந்தையார். இவரது சரிதையைக் கோட்கூச்சவ்வையைக் காண்க.

சிவதேவி

(சைநி.) நேமிநாதசுவாமிகளுக்குத் தாய்,

சிவநன்

1. மித்திரன் குமரன், இவன் குமரன் சுதர்சனன். 2. சுகோத்திரன் குமரன், இவன் குமரன் கிருதி.

சிவநாகமையர்

வசவர் மடத்திருந்த சிவனடியவர். இவரை வசவர்பல்லக்கிலேற்றி உபசரிக்கப் பிராமணர், சாதி சங்கரமாத லைப்பற்றிக் குறைகூற வசவர் சிவனடியவர் பெருமைகளை அவர்க்கு கூறி அடக்கினர். இவர் தமது தேகத்தைக் கிள்ளிப்பால் சொரிந்தவர்.

சிவநேசர்

திருமயிலையில் வைசியர்குலத்தில் பிறந்தவர். இவர் குமரியார் பூம் பாவையம்மை, திருஞான சம்பந்தரைக் காண்க.

சிவனைம்முகம்

ஈசாகம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம்.

சிவன்

1, நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதில் கறுத்த கழுத்துடையரானார். (பார~சாந்.) 2. ஐங்குடுமியுள்ள குழந்தையாக உமை வின் மடியிலிருக்க, உமையிவன் யாரென்று கேட்க அருகிலிருந்த இந்திரன் வஜ்ரத்தினால் ஒங்கினான் அவன் வஜ்ராயுதம் பிடித்த கையுடன் தம்பித்துப்போனான். இந்தக் குழந்தையைப் பிரமா முதலானோர் துதித்தனர். இவர் கிருஷ்ணனிடத்தில் தூர்வாஸராகச் சென்று பலவிதம் சோதித்தார். (பார~அநுசா.) 3. திருண புருஷனைக் காண்க.

சிவன் எண்குண முதலிய

1. பவயின்மை, இறவின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவிலறிவுடைமை, கோத்திரமின்மை, ஐம்முகம் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம், இருப்பு; கைலை, தரிப்பது கங்கை, முடிப்பது; கொன்றை, உடுப்பது தோல், பதங்கள்; சாலோக, சாமீப, சாரூப, சாயுச்யங்கள். வாகனம்; இடபம், ஆயுதம்; சூலம். தேவி; உமை.

சிவபதாகை

(8) அவை பிரசாந்தபதாகை, சிகிசபதாகை. பர்ஜந்தியபதாகை, ஜயந்தபதாகை, பூசஞ்சீவபதாகை, அமிர்த பதாகை, நாதபதாகை, ஸ்ரீபதாயபதாகை. இப்பதாகாதேவதைகள் சிவந்தநிறம், இரண்டு கண்கள், கூப்பிய இரண்டு கரங்கள் சர்வாபரணங்களா லலங்கரிப்பட்ட வர்களாயிருப்பர்.

சிவபாத இருதயர்

திருஞானசம்பந்த சுவாமிகளுக்குத் தந்தையார், தேவியார் பகவதியார் திருஞான சம்பந்தரைக் காண்க.

சிவபுரத்திலுள்ள நதிகள்

வரதா, வரேண்யை, வரேசை, வரவர்ணனி, வரார் ஹை. வாரியத்ரை, வரை.

சிவபுரம்

ஸ்ரீகாஞ்சிபுரத்திற்கு ஒரு பெயர். சாபமேற்ற உமையம்மையார் சிவ பூசை செய்யுமிடத்துக் சம்பை வெள்ளம் பெருகிச் சிவமூர்த்தத்தை அழிக்கவா அதனைக் கண்ட உமை சிவமூர்த்தியைத் கழுவச் சிவமூர்த்தி தரிசனம் தந்ததால் இப்பெயர் பெற்றது.

சிவபுாத்தினுள்ள குமரர்

சாகன், விசாகன், நைசமி.

சிவபூசை (அநுசாசநிகபர்வம்)

1 பதரிகாசாமத்தில் சித்தியடைந்தோர் சிவ பூசை செய்து நலமடைந்தார். 2, சிலர் 12 வரு சிவாராதனையால் புத்ரவரம் பெற்றார். 3. தண்டிமஹ ருஷியால் சிவநாமம் பிரம்மதேவருக்கு உபபேசிக்கப் பட்டது. 4. ஜாம்பவதி புத்ரேச்சையால் குமரனை வேண்டிப் பெற்றாள். 5. ஹிரண்யகசிபு இவன் பத்துக்கோடி வருஷம் தவஞ் செய்து சிவபூஜையால் தேவர்களை அடக்கும் வலி பெற்றான். 6. தமன் ஹிரண்ய கசிபின் புத்ரன் சிவபூசையால் இந்திரனை யடக்கி ஆண்டான், 7. மந்தாரன் (க்ரஹன்) சிவபூசையால் இந்திரனை வென்றாண்டான். 3. வித்யுத் பாபன் இவன் ஒரு அசான் சிவபூஜையால் திரிலோகங்களை வெல்லும் வலியடைந்தான். 9. சத முகன் இவன் பலகோடி வாஷம் சிவபூசை செய்து பூஜாபலத்தால் யோகசத்தி யும் சேகவன்மையும் பெற்றான். 10. பிரம்மதேவர் சிவபூஜை செய்து (1000) புத்திரர்களைப் பெற்றார். 11 யாஞவல்க்யர் சிவபூஜையால் புகழை அடைந்தார். 12. வியாசர் சிவபூசையால் கீர்த்தியைப் பெற்றார். 13. வாலகில்யர் சிவபூசையால் கருடனைத் தவத்தாலுண்டாக்கினர். 14, சிவசோபத்தினால் ஜலம் வற்றிப்போக தேவர்கள் சிவபிரானை நோக்கி ஸப்தகபாலம் எனும் யாகம் செய்ய வேறு ஜலம் உண்டாயிற்று. 15. அத்திரியின் பார்யைச் சிவபூசையால் தத்தாத்ரேயர், சந்திரன், தூர்வாஸர் முதலிய புத்திரரைப்பெற்றாள். 16. அத்திரியின் பத்தினியான அநசூயை முந்நூறு வருஷகாலம் உலக்கைமீது படுத்துத் தவமியற்றிக் கணவனில்லாமல் புத்திரனையடைந்தாள். 17. விகர்ணமஹருஷி சிவபூஜையால் இஷ்ட சித்தியை யடைந்தார். 18. சாகல்ய முனிவர் 9000 வரு சிவனை நோக்கித் தவஞ் செய்து கிரந்த கர்த்தாவாகும் வரத்தையும் குலவர்த்தனனான புத்திரனையும் பெற்றார். 19. கிருதயுகத்தில் சிவனை நோக்கி 6000 வருஷம் தவஞ்செய்து கிரந்தர்த் தாவாகவும் மூப்பிறப்புக ளில்லாமையும் பெற்றார். 20, இந்திரன் காசியில் சிவபூசை செய்து பெரும் பேறுகளை யடைந்தான்.

சிவபூசை இயல்பு

(4) சரியை, கிரியை, யோகம், ஞானம், இவற்றுள், சரியை யாவது; சிவாலயத்திற்கும், சிவனடியவர்க்குந் தொண்டு செய்தல். கிரியையா வது; சிவபெருமானை அசத்தும் புறத்தும் பூசித்தல். யோகமாவது; விடயங் களின் வழி மனதைச் செலுத்தாது நிறுத்தல். ஞானமாவது; ஞான நூல்களை யோதிச் சிந்தித்துத் தெளிந்து நிட்டைடிச் சிவாநந்தத் தழுந்தல், இவற்றின் பலன் முறையே சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியங்களாம்.

சிவபூஜையில் சிவாசனம்

ஆசனம் 5. அருந்தாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனம் என்பனவாம். அநந்தாசனம் மூன்று கோணமுடையது. சிங்காசனம் (4) கோணம், யோகாசனம் (4) கோணம், பத்மாசனம் வட்டமானது, விமலாசனம் (6) கோண முடையது. (சைவபூஷணம்.)

சிவப்பிரகாச சுவாமிகள்

1. இவர் காஞ்சீபுரம் குமாரசுவாமி தேசிகர் குமரர். குமார சுவாமி தேசிகர், கார்த்திகைக்குத் திருவண்ணாமலை யாத்திரைபோக வழியில் ஒரு நந்தனவனத்தில் பகலில் இறங்கி மீண்டு சாயங்காலம் திருவண்ணாமலை போய்ச் சேர்ந்து ஈசானிய தீர்த்தத்தில் அநுட்டானஞ் செய்துகொண்டு பூசைப் பெட்டகத்தைக் காணாமல் வருந்திப் பகல் தாம் இறங்கியிருந்த இடத்தைப் பார்த்துவர ஆள் விடுத்துத் தாம் உபவாசத்துடன் துயிலுகையில் சிவமூர்த்தி அன்பனே நீ அங்கம் வேறு லிகெம்வேராய் இருந்தது பற்றி இவ்வகை நேர்ந்தது. பூசைப் பெட்டகம் உதயத்தில் வந்து சேரும், நீ குருதேவரிடம் வீரசைவ தீக்ஷை பெறுக என்று மறைந்தனர். அவ் வகை குருதேவரிடம் தாரண தீக்ஷைபெற்றத் தமதூருக்குச் சென்று மூன்று புத்திரர்சளையும் ஒரு புத்திரியையும் பெற்றனர். அவர்களுள் மூத்தவர் சிவப்பிரகாசசுவாமிகள், இரண்டாமவர் வேலாயுதர், மூன்றாமவர் கருணைப் பிரகாசர், நான்காவது பெண் ஞானாம்பை, இவர்களைப் பெற்றுச் சிவலிங்கைக்கியமாயினர். சிவப்பிரகாசர் ஆசாரியரிருக்கும் திருவண்ணா மலைக்கு யாத்திரையாகச் சென்று திருமலைப் பிரதக்ஷிணம் வருகையில் சோணசைலமாலை பாடி முடித்துத் தக்ஷணயாத்திரை செய்ய எண்ணித் துறைமங்கலத்தில் தங்கி அவ்விடம் சிவபூசாகாலத்தில் வந்து வேண்டிய அண்ணாமலை ரெட்டியார்க்கு அருள் புரிந்து சிந்துபூந்துறையில் தருமபுரவாதீ னம் மடாதிபராகிய வெள்ளியம்பலத்தம் பிரானையடுத்து இலக்கண நூல் கற்க வேண்டத் தம்பிரான் இவரது இலக்கியச் தேர்ச்சியறிய, கு என்று எடுத்து, ஊரு டையான் என்று இடையில் வைத்து, கு, என்று முடிக்க என்ன அப்படியே சுவாமிகள் “குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன், முடக் கோடு முன்ன மணிவார்க்கு வடக்கோடு, தேருடையான் தெவ்வுக்குத் தில்லை தோன் மேற்கொள்ளல், ஊருடையான் என்னும் உலகு” எனப் பாடி முடித்தனர். இதனால் தம்பிரான் களித்து அவர்க்கும் தம்பியர்க்கும் இலக்கண நூல் கற்பிக்கச் சுவாமிகள் தமக்கு ரெட்டியார் கொடுத்த (300) பொன்னைக் குருதக்ஷிணையாகத் தந்தனர். தம்பிரான் வேண்டாது நமக்கு விரோதமாய்த் திருச்செந்தூரிலிருந்து நம்மைத் தூஷிப்பவனை வென்று வருக என அவ்வகை யுடன் பட்டுச் சென்று அவனைக்கண்டு வாதிட்டு நிரோட்டக யமகம்பாடி அவனை அடிமை கொண்டு தமது ஆசிரியரிடம் விட்டு விடைகொண்டு துறைமங்கலம் வந்து வெங்கைக்கோவை வெங்கைக்கலம்பகம், வெங்கையுலா, வெங்கையலங்காரம், இயற்றிச் சிதம்பரஞ் சென்று திருமடம் ஒன்று கட்டுவித்து அங்கிருந்து நீங்கி விருத்தாசலம் சென்று பழ மலையந்தாதி, பிக்ஷாடன நவமணிமாலை, கொச்சகக்கலிப்பா, பெரியநாயகி கலித்துறைபாடி முடித் தனர். தாம் ஒருநாள் மணிமுத்தாநதிக்கு அருகிருந்த தோட்டத்தின் வழி வருகை யில் மாம்பழம் ஒன்று விழுந்திருக்க அது சிவநிவேதனத்திற்கு ஆகுமென எடுத்தனர். இதைக் சண்ட தோட்டக்காரன் சுவாமிகளை வருத்தச் சுவாமிகள் மனம் நொந்து அடுத்து வருந் கொண்ட னுக்கா அந்தகனைத் தாள, லடர்த்ததுவுஞ் சத்துயமேயானால் ததொரு, மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி, சாங்கனிக் காதித்தன் வரத்தான்” எனப்பாட அவன் உயிர் துறந்தனன். பின் எசுமதவாதியாகிய வீரமாமுனி எதிர்க்க அவனை ஏசுமத நிராகரணத்தால் வென்று சிலநாளிருந்து சிவசாயுச்சியம் பெற்றனர். இவர் செய்த நூல்கள் சிவப்பிரகாச விகாசம், தர்க்க பரிபாஷை, சதமணிமாலை, நால்வர் நான் மணிமாலை, தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, வேதாந்த சூடாமணி, சிந்தாந்தசிகாமணி, பிரபுலிங்கலீலை, பிள்ளைத் தமிழ், திருப்பள்ளி எழுச்சி, அதிசயப்பத்து, திருக்கூவபுராணம், பிக்ஷாடன நவமணிமாலை, கொச்சகச்கலிப்பா, பெரியநாயகி விருத்தம், பெரியநாயகி கலித்துறை, க்ஷேத திரவெண்பா, நன்னெறி, சிவநாமமகிமை, அபிஷேகமாலை, நெடுங்கழிநெடில், குறுங் கழிநெடில், நிரஞ்சனமாலை, கைத்தல மாலை, சீகாளத்திப் புராணத்தில் ஒரு பாகம். இவரே துறைமங்கலம் சிவப்பிரகாசர். (சித்தாந்த சிகாமணி.) 2. இவர் கும்பகோணத்தில் வேளாண் குடியில் பிறந்தவர். இவர் இலக்கிய இலக்கணப் பயிற்சியுடையவராய்த் திருவாவடுதுறையடுத்து நமசசிவாயமூர்த் திகளிடத்து ஞான தீக்ஷையடைந்து சிவ ஞான சித்தி பெற்றுத் தலயாத்திரைக் காகப் புறப்பட்டுச் சிதம்பரமடைந்து சிவபிரானால் ஒரு சிவலிங்கமும், திருவா வடுதுறையில் பொற்றாளமும் அடைந்து சிதம்பரத்தலத்தின பூசை முட்டுப் பாட றிந்து மைசூர் அரசனைக் காணச் சென்று தமது ஆன்மார்த்த மூர்த்தியைத் தார ணஞ்செய்து கொண்டு தம்கருத்தை முற்றுப்பெற்று அரசன் வேண்டியபடி மழை பொழிவித்துத் திரும்புகையில் உடனிருந்தார் ஒருவர் விரைந்து செல்ல எண்ண அவருக்குப் பெண்ணை வெள்ளங்கொள்ள அவர்க்கு விபூதியளித்து முழங்கால் அளவு வெள்ளமிருக்க அருளி, தாம் ஆசாரியரைக் காணச் செல்கையில் தீவட்டிக்கு எண்ணெய் இல்லாதிருக்கச்க விரிநீரைப்பெய்து எரிக்கச்செய்து, திருச்சோற்றுத்துறையி விருந்த குட்டரோகி யொருவனுக்குத் தம்பலந் தந்து ரோகத்தைப்போக்கிச் சோழன் ஒருவனுக்குப் பிரமகத்தி யொழித்து, விஷத்தாலிறந்து மயானத்துக் கெடுத்துச் சென்ற ஆதிசைவச்சிறுவனது உடலைப் பெற்று ஞானக் கூத்தாவென்று எழுப்பித் திருவண்ணாமலை யாதின பட்டடிளித்துத் திருச்செங்கோட்டுக் கல்லிடபத்திற்குக் கடலை பருத்துவித்துச் சிலநாள் இருக்க, ஒரு நாள் தியானத்திருக்கையில் பூமி வெடிக்கச் சமாதியடைந்தவர். 3. திருவாரூரிலிருந்த ஒருசைவர், கோவத்தமெனும் ஊரில் ஒரு புகரில் நிஷ்டை கூடியிருக்கையில் தம்மைவந்த ஒத்த சொரூபா நந்தர்க்குப்தேசித்து முத்தியடைந்தவர்.

சிவப்பிரகாச தேசிகர்

அருணமச்சிவாய தேவர் மாணாக்கர்,

சிவப்பிரகாசதுரை

இவர் சேற்றூர் ஜமீன்தார். இவர்க்கும் சிவகிரி ஜமீன் தாரவர்களுக்கும் போர் நடக்கையில் உதவிக்குச் சொக்கம்பட்டி தானாதிபதி பொன்னம்பலப் பிள்ளை தண்டிகையில் சேற்றூருக்கு வந்தவுடனடந்ததை ஒரு கவி கூறியது சேற்றூரார் நெஞ்சந் திடப்படுமே தென் மலையான், தோற்றோமென்றோடித் துயர் படுமே மாற்றரசர், தண்டனிடுஞ் சின்னனைஞ் சான்சேனா பதிப்பொன்னன், தண்டிகையைக் கண்டவுடன்றான். ” மேற் கூறிய சிவப்பிரகாசதுரை போஜனம் செய்து கரசுத்தி செய்ய வெளிவரும்போது சொக்கம்பட்டி தானாதிபதி பொன்னம் பலப்பிள்ளை பாடிய வெண்பா, ஒரு கையிலே யன்ன மொருகையிலே சொன்னம், வருகையிலே சம்மான வார்த்தை பெருகுபுகழ்ச், சீமானா மெங்கள் சிவப்பிர காசத்திருவக், கோமானுக்குள்ள குணம். ” ஷை துரையவர்களுக்குப் பொன்னம்பலப் பிள்ளை விடுத்த கவி, “இலவே யனைய விதழ் மடமாதரோ டின்புறுதல், குலவே லாசர்க் கியல்பல்லவே யிக்குவலயத்தில், பலபேர் புசித்துக் கழித்தே யெறிந்திடும் பாண்டஞ்சுத்தி, யல்வேதென் சேறைச் சிவப்பிரகாச வகளங்கனே. ” துரை யவர்களிடம் வந்து ஒரு புலவர் கீழ்வரும் புலவர் தெரியும் என்பது வரையிலும் கூறப், பிரபு அவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இதுவரையில் என்னிடம் வந்து வசை கூறினவர் இல்லை குறைக்கவியும் நசையாகப் பாடுக எனக் கூறியது. “படி வாங்கப் படும்பாடு பரமசிவனறிவனவன் பங்கில் வாழும், வடிவாளு மறிவளவண் மக்களுக்குத் தெரியுமிந்த வருத்தந் தீர்ப் பாய், முடிவேந்தரடி தாழ்ந்து முறை முறையே திரையளக்கு முகுந்தாமேலாம், துடிவேந்தா ரதிகாந்தா துரைத்திருவா தரைக்கொருவா சுகிர்தவானே. ”

சிவப்பிரகாசம்

சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று. இது பொது உண்மையென இரண்டு பிரிவின தாய்ப் பதி, பசு, பாச நிலையைத் தெரிவிக்கும் (100) விருத்தப்பாக்களைக் கொண்டது. இதனையியற்றியவர், உமாபதிசிவாசாரியர்.

சிவப்பிரகாசர்

இவா மதுரையிலிருந்த சுத்த சைவர். சைவசித்தாந்த சாத்தி மாகிய சிவப்பிரகாசத்திற்கு ஒரு உடை யியற்றியவர்.

சிவப்பிரதிஷ்டை

பிரதிஷ்டை இது லிங்கத்திற் செய்யப்படும் பீடஸம்யோகம், ஸ்திதிஸ்தாபனம்; ஸ்படிகாதி பீடத்தில் மந்திரபூர்வமாகச் செய்யப்படுவது. ஸ்தாபனம்; பாணபத்திற செய்யப்படுவது. ஆஸ்தாபனம்; சதாசிவமூர்த்தி பிரதிஷ்டையில் செய்யப்படுவது, உத்தாப்னம்; லிங்கபீடம் இரணமானபோது செய்வது,

சிவப்பிரியன்

தாருகனைக் காண்க.

சிவமதி

இவள் தருசகன் தாய், உதயை யோடையின் சகோதரி. அவள் மகளா கிய பதுமாபதியை அபிமானித்து வளர்த்தவள். (பெருங்கதை.)

சிவமலை

கொங்குநாட்டிலுள்ள குமாரக்கடவுள் வெற்பு.

சிவமுனிவர்

கொங்குநாட்டில் வள்ளிமலையில் தவஞ் செய்துகொண்டு இருந்து பெண்மான் ஒன்றைக் கண்டு அவ்விடம் கந்தமூர்த்தியை எண்ணித் தவம்புரிந்து இருந்த வள்ளிநாய்ச்சியாரைப் பெண்ணாக மான் வயிற்றிற் பெற்றவர். இவர் கண்ணுவர் சாபத்தால் இருடியாகப் பிறந்த விஷ்ணுமூர்த்தி. இந்தமான் இலக்ஷ்மிதேவி.

சிவமூர்த்தங்களாவள

(25) சந்திரசேகசர், உமாமகேசர், ருஷபாரூடர், சபாபதி, கலியாணசுந்தார், பிக்ஷாடனர், காமாரி, அந்தகாரி, திரிபுராரி, சலந்தராரி, விதித் வம்சர், வீரபத்திரர், நரசிங்கரிபாதனர், அர்த்த நாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசா நுக்கிரகர், சக்கிரபாதர், கசமு காநுக்கிரகர், கெபாதர், சோமாஸ்கந்தர், அங்கசுகபிருது, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர்.

சிவமூர்த்தி

1. இவர் சாந்தராய் தமக்கு மேல் நாயகமில்ல தவராதலால் சர்வகர்த்தாவாயும், மகாப்பிரளயத்தில் சத்திரூபமாய் லயித்திருக்கும் நாசமிலியாயும், ஞான சத்தியால் சகலத்தையு மறியும் சர்வஞ்ஞாராயும், ஸ்வப்பிரகாசராகியும், அசலராகியும், அமேயராகியும், ஸ்வபாவசித்தராகியும், ஒப்பிலியாகியும், ஸூக்ஷமராகியும், ஸ்தூல ரூபியாதியும், ஞானக்கிரியாசத்தி சரீரியாயும், நிஷ்களராயுமிருப்பவர். இவர் சுவேச்சையால் ஆன்மாக்கள் சநநக்கரைகண்டு தம்மை யடையும் வண்ணம் அவர் அவர் தியானிக்கும் வகை அவ்வவ்வுருக்கொண்டு சகளராய் அவரவர்க் கருளினர். அவற்றுள் சிலவருமாறு, 2. சிவேதலோகிதம், இரத்தம், பதம், நீலம், விச்வரூப கற்பங்களில் பிரமனுக்குக் காயத்திரி, சாஸ்வதி முதலியவரை அருளி முனிவர்க் கருள் புரிந்தவர். 3. பிரம விஷ்ணுக்கள், படைப்புத் தொழில் முதலிய வடையச் சத்தியிடம் பிறக்கச்செய்து சிருஷ்டி பருளியவர். 4. சிலாதருக்குப் பிரத்திய க்ஷமாய்ப் புத்திரப்பேறருளி நந்திக்கு இறவாமை யருளியவர். 5. இந்திரன் முன் யக்ஷனாகித் தோன்றிச் சத்தியெல்லாங் கொண்டு மறைந்தவர், (காஞ்சி~புரா) 6. பிரமதேவனை முகத்தினும், இந்திரனைத் தோளினும், ஏனையோரை மற்றைய உறுப்புக்களினும் படைத்தவர். 7. நிகும்பன் என்னும் அசுரன் தேவ ரைவருத்த அவனைக் கொன்றவர். 8. பிரமதேவனுக்குச் சிருட்டியின் பொருட்டுப் பஞ்சாக்ஷரோபதேசஞ் செய்தவர். 9. பிரதிவியில் சர்வராயும், அப்பில் பவறாயும், தீயில் உருத்திரராயும், காற்றில் உக்கிரராயும், ஆகாயத்தில் வீமராயும், சூர்யமண்டலத்து மாதேவராயும், சந்திரமண்டலத்து ஈசானராயும், ஆன்மாவில் பசுபதியாயும் அமர்பவர். 10. சத்தியை யைந்து முகத்துடன் தமது முகத்திற் சிருட்டித்தவர். 11. உபமன்யுவிற்குத் தந்தையாராகிய வியாக்கிர பரதமுனிவர் வேண்டுகோளின் படி பாற்கட லளித்தவர். 12. வீரபத்திரரைத் தக்ஷயாகத்தின் பொருட்டுப் படைத்து அதை அழிக்க ஏவி அதிலழிந்த தேவரைமீண்டும் உமை வேண்ட உயிர்ப்பித்துத் தக்கனுக்கு ஆட் இத்தலை யருளியவர். 13. ஒரு கற்பத்தில் பிரமன் வேண்ட அவன் நெற்றியில் நீலலோகித மூர்த்தி யாகத் தோன்றிச் சிருட்டித் தொழில் கற்பித்தவர். 14. பிரமன் வேண்டுகோளால் ஒரு கற்பத்துப் பிராட்டியாரைப் பிரிந்து பிரிந்த ஆணுருவில் பதினொரு வுருத்திரரைப் படைத்துச் சிருட்டி செய்வித்தவர். 15. இராவணன், திருக்கைலையைச் சிவபூசைப்பொருட்டுப் பெயர்க்கத் திருவடியின் திருவிரலால் ஊன்றி மதமடக்கியவன் துதிக்க அநுக்கிரகித்தவர். 16, பிரமன் காவித்தகாலத்துப் பயிரவரை யேவி அவனது நடுத்தலையைக் கிள்ளியெறிந்து அவன் வேண்டுகோளால் கபாலத்தைக் கையிற் பற்றியவர். 17. இந்திரனாய் உபமன்னிய ருஷியிட மடைந்து சிவ தூஷணை செய்து பின் அநுக்கிரகித்தவர். 18. உமை, தமதருளால் உலகஞ் செழித்திருக்கின்றதென எண்ணியதை யறிந்து தமது உலக உருவமாகிய கலைகளைத் தணிவித்தனர். அதனால் உயிர்கள் ஒடுங்கின. இதனையறிந்த பிராட்டியார் இறைவனை வேண்ட அதனால் அநுக்கிரகித்தவர். 19. தமக்கெனச் செயலிலா திருந்தும் ஸ்ரீகண்டருத்திரர் முதலியோரிடம் தமது சத்தியால் பஞ்சகிருத்தியம் நடப்பிப்பவர். 20. சர்வசங்கார காலத்தில் பிரமன், விஷ்ணு, இந்திராதிதேவர்களை யழித்து அவர்களின் எலும்புகளையும் நீற்றையும் அவர்களது நிலையின்மை தெரிந்துய்யத் திருமேனியில் அணிபவர். 21. தாருகவனத்து இருடிகளும், அவர் களின் பத்தினியரும் செருக்குற்றிருத் தலைத் தேவர் கூறி வேண்ட விஷ்ணுவை மோகினி யுருக்கொண்டு இருடிகளிடம் போக ஏவித் தாம் பைாவத்திருக்கோலத் துடன் இருடி பத்தினிகளிடஞ் சென்று அவர்கள் கற்புக்கெட்டு வேண்ட அவர் களை மதுரையில் தீண்டுகிறோமெனக்கூறி மறைந்து அப்பெண்களின் கணவர்கள் அபிசார வேள்வி செய்து தம்மீது எவிய தமருகம், அக்கி, மழு, சூலம் இவற்றைக் கையிற் பிடித்தும், புலியைக் கொன்று தோலையுடுத்தும், பாம்பினைப் பயப்படுத்தித் திருவடியில் அடக்கியும், பிரமதகணத்தையும், பேயையும் உடனிருக்கச் செய்தும், மானைக் கையிற் பிடித்து வலியடக்கி யும், வெண்டலையை யணிந்தும், முயலகனை, எலும்பொடிய முதுகில் அழுத்தியும் குற்றமிலாது இருந்தவர். 22. யானையுருக்கொண்டு செருக்கடைந்து தேவர்களை வருத்தித் தம்மை யெதிர்க்கவந்து தம்மை எடுத்து விழுங்கிய கயா சுரனை யுடல்பிளர்து வெளிவந்து அவன் தோலையுரித்துப் போர்த்துக் கஜாரிமூர்த்தி யெனத் திருநாமம் பெற்றவர். 23. இந்திரன் ஒருகாலத்துக் தேர்வப் படப் பூதவுருக்கொண்டு அவன் முன் சென்று கோபித்து அவனாலுண்டான கோபத்தைக் கடலில் விட்டனர். அது குழந்தையுருவாய்ச் சலந்தரனெனப்பட்டது. 24. சலந்தான் கர்வமடைந்து தம்மிடம் யுத்தஞ்செய்ய எண்ணிக் கைலை நோக்கி வருகையில் அவன் முன் விருத்தாராய்ச் சென்று சக்கரங் காலால் கீறி யெடுப்பித்து அச்சக்கரத்தால் அவனுடலைப் பிளப்பித் துச்சலந்தராரி யெனப்பட்டவர். 25, சர்வசம்மார காலத்து இடபவுருக் கொண்டு தம்மையடைந்த தருமத்தை அதன் வேண்டுகோளின்படி வாகனமாக வூர்ந்து இடபாரூடத் திருநாமமடைந்தவர். 26. அமிர்தமதன காலத்துப் பிறந்த விஷத்திற்கஞ் சிவந்ததேவர்களுக்கு அபயமளித்துத் தாம் அதை வருவித்துப் புசித்துக் கண்டமட்டில் ஆக்கி நீலகண்டத் திருநாமம் அடைந்தவர். 27. பார்வதி பிராட்டியார் தமது திரி நேத்திரங்களை மறைத்ததால் அவர் விரல்களில் உண்டாகிப் பெருகிய கங்கையைத் தேவர் வேண்டச் சடையிலணிந்து கங்கா தரத் திருநாமம் பெற்றவர். 28. பகீரதன் பிதுர்க்கள் நற்கதியடையக் கொணர்ந்த ஆகாசகங்கையின் வீறடக் இச்சடையிலணிந்து அவன் வேண்டு கோட்படி பூமியில் விட்டுக் கங்காவிசர்ஜன மூர்த்தி யெனுந் திருநாமம் பெற்றவர். 29. பிரமன் வேண்டுகோளின்படி புஜத்தில் சனகர் முதலியவரைப் படைத்தளித் தவர். 30. கயமுகாசுரனை வெல்ல ஒரு புத்திரனை யகரிக்க வேண்டுமென்று தேவர் வேண்ட விநாயகமூர்தியைப் பிறப்பித்துத் அத்துன்பத்தை நீக்கினவர். 31 சூரபன்மனுக்கு, வச்சிரயாக்கை, இந்திர ஞாலத்தேர் முதலிய அளித்து அவன் செருக்குற்றகாலத்து அவன் செய்த யாகத்தை அழிக்கக் கங்கையைப் பூமியில் வருவித்துக் குமாரக்கடவுளால் அவனைச் சங்கரிப்பித்தவர். 32. விபுலன் பொருட்டுக் காலனைச் சூலத்தாற்குத்தித் தாங்கினவர். 33. பிங்கலன் எனும் வேடன் பொருட்டுக் காலபடரைக் காய்ந்தவர். 34. பிரமதேவன், தன் குமரியை மானுருக்கொண்டு புணரச்சென்ற காலையில் அதன் தலையைக் கிள்ளியவர். (இது ஒரு கற்பத்தில்.) பிரமனைவேட உருக்கொண்டு எய்து அவள் வேண்ட உயிர்ப்பித்து மணம் புணர்த்தியவர். 35. சுவேதனது உயிர் கவரவந்த யமன் உடலைச் சூலத்திற்குத்தித் தூக்கிச் சிவ னடியவரிடம் நெருங்காதிருக்கக் கட்டளை தந்தவர். 36. ஆதிசேடன் தவஞ் செய்து தன்னைத் திருமேனியில் அணிந்து கொள்ள வேண்ட விரலாழியாகத் தரித்துப் புஜங்க பூஷணத் திருநாமம் அடைந்தவர். 37. உமையைத் திருமணங் கொள்ளு முன் அவரது தவநிலை தெரிவிக்க விருத்தராகச் சென்று தம்மை மணக்கவேண்டி அவரது கலங்காநிலை யுணர்ந்து பின் தம் உருக்காட்டிச் சத்தருஷிகளால் மணம் பேசுவித்துத் திருமணங்கொண்டு உமாம கேசத் திருநாமம் பெற்றவர். 38 கந்தமூர்த்தி திருவவதரிக்க வேண்டித் தேவர் வேண்டத் தமது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளைப் படைத்து, அவற்றை அக்கி, வாயு இவ்விருவரையுங் கொண்டு சரவணத்திலிடக் கட்டளையிட்டுக் கங்கையாலும், கார்த்திகை முதலறுவராலும் வளர்பபித்துச் சூரன் முதலியவரை வெல்லக் கட்டளையிட்டவர். 39. நவவீரர், இலக்கவீரரை உமையின் காற்சிலம்பில் உதித்த பெண்மணிகளிடம் சிருட்டித்துக் கந்தமூர்த்திக்குத் துணைவராக்கியவர். 40 பிரமனைக், கந்தமூர்த்தி பிரணவத் திற்குப் பொருள் வனாவிய காலத்து அவனைச் சிறை செய்ததால் விஷ்ணு வாதியர் முறையிடப் பிரமனைச் சிறைவிடக் கட்டளையிட்டு அதன் பொருளை வினாவிச் சுவாமிநாதத் திருநாமம் குமரனுக்களித்தவர் 41. பகாசுரன் எனப் பெயர் கொண்ட கொக்குருக்கொண்ட அசுரன் ஒருவனை யுயிர்மாய்த்து, கர்வம் அடைந்தார், இவ்வகையாவர் என்று அவன் இறகில் ஒன்றை முடியில் அணிந்தவர். 42. சிலாதமுனிவரின் குமாரர்க்கு யம பாசக்கியவர். 43. அந்தகாசான் கர்வித்தகாலத்து அவனைச் சூலத்தாற் குத்தி வெயிலில் உலர்த் தியவர். 44. அக்கி, வாயு, குபேரன், ஈசானன், நிருதி, யமன், வருணன் முதலியோர் தவஞ் செய்தகாலத்து அவர்க்குத் தரிசனம் தந்து பதமளித்தவர். 45. துந்திமி யென்னும் அசுரனைக் கொன்று தேவர் துன்பம் நீக்கியவர். 46. தேவர் பொருட்டுக் காளியுடன் சண்ட தாண்டவமாடி ஆதிசேடன், முஞ்சி கேசன், கார்க்கோடன் காரைக்காலம் மையார், விஷ்ணுமூர்த்தி யிவர்களுக்கு, நடன தரிசனம் அருளியவர். இவர் நடனத்தில் காதணிநழுவ அதனைத் தாமே யணிந்தவர் என்ப. 47. மாநந்தையென்னும் தாசியின் பொருட்டு வணிகராய்ச் சென்று தீக்குளித்து அவளுக்கு முத்தியளித்தவர். 48. தேவாசுர தொந்த யுத்தத்திலே தேவர் தோற்றோடக்கண்டு அவர்களுக்கு வலியளித்துத் தேவர் நாமேவெனசே மென்று செருக்குக் கொண்டகாலையில் இயக்கவுருக்கொண்டு ஒரு புல்லைநாட்டி அக்நிமுதலிய தேவரை அப்புல்லிடம் தங்கள் வலிகளைக் காட்டச்செய்து பங்கமடை வித்தவர். 49. பண்டாசுரனை ஓமத்தில் நீற்றியவர். 50. அநசூயை புஷ்பாஞ்சலி செய்ய அத்திரி வேண்டுகோளால் அவள் கையில் குழந்தையுருக்கொண்டிருந்தவர். 51, தனகுத்தன் மனைவிபொருட்டுத் தாயுருக்கொண்டு மருத்துவம் பார்த்துத் தாயுமான திருநாமம் பெற்றவர். 52, இவர் விஷ்ணுவை யெண்ணித் தவம் புரிய நரசிங்கமூர்த்தி பிரத்திய மாய் இஷ்டசித்தியளிக்கப் பெற்றவர். (திருவேங்கடத்தலபுராணம்.) 53 மன்மதன் சேவர் வேண்டுகோளால் இவர் யோகத்திருக்கையில் புஷ்ப பாணத்தை யேவித் தீவிழிப்பட்டெரிய இரதிதேவி சிவமூர்த்தியைத் துதித்துப் புருக்ஷபிச்சை கேட்க அளித்துக் காமாரித் திருநாமம் பெற்றவர். 54. திரிபுராதிகள் பொன், வெள்ளி, இரும்புக்கோட்டைகளைச் செய்வித்து அக்கோட்டைகளுடன் பறந்து தேவர்களை வருத்தி வந்தனர். இதனால் தேவர்கள் சிவமூர்த்தியை வேண்ட அவர்களில் மூவர் பிழைக்க மற்றவர்களை நீறாக்கித் திரிபுராரி மூர்த்தித் திருநாமமடைந்தவர். 55 பகாக்ஷன், தேவர்களை வருத்தி வருவசைச் சிவமூர்த்தியறிந்து சிக்ஷிக் வேண்டி வேதம் தேராகவும், உடநிடதம் குதிரையாகவும், உமையாள் சாரதியாசவும், பிரணவம் சவுக்காகவும், காலசக்கிரம்வில் லாகவும், மாயை நாணாகவும், பாசுபதம் அத்திரமாகவுங் கொண்டு அவனைக் கொன்றவர். 56 சந்திரன் தக்ஷசாபத்திற் கஞ்சிச் சரண்புக அவனைச் சடையிலிட்டுப் பய மொழித்துச் சந்திரசேகரத் திருநாமம் பெற்றவர். 57. முஷ்டிகாசுரன், அக்கிரேசுரன், சாந்தாசுரன், தண்டாசுரன், முண்டாசுரன், சார்த்தூலன், குடாசுரன் கோடகமுகன், தூராசுரன், கோராசான், பஞ்ச மேஷ்டி, வலாசுரன், நிதனாகான், மிருகாசுரன், சத்ததந்து, சர்வபூதாசுரன், இசுலாசுரன், களாசான், பண்டாசுரன், சூலா சுரன், அலாசுரன், தி தளாசுரன், யோகனிகள், இலாங்கலக்கினாசான், வீமாசுரன், சுராசுரன், வீராக்கிரகண்ணியன், வீரமார்த்தாண்டன், பூதாசுரன், பசாசாசுரன் முதலியவர்களை யொவ்வொரு கற்பத்தில் தேவர்கள் வேண்ட வதைத்தவர். 58. அநலாசுரன், வச்சிரகேசி, சுந்தராசுரன், எந்திராசுரன் முதலிய அசுரர்களை தீக்கண்ணால் எரித்தவர். 59. திவ்யசித்தராய்க் கணபதிக்குச் சித்திகள் அருளினவர். 60. மன்மதசுந்தர மூர்த்தியாய்த் தேவர்களை மோகிப்பித்தவர். 61. புலிமுகன் என்னும் அசுரன் யுத்தத்திற்குவா அவன் தோலை யுரித்து அணிந்து வியாக்ராரி மூர்த்தியானவர். 62. பார்வதி தேவியாருடன் விற்சம ராடி வென்றவர். 63. ஒருமுறை மேருச்சாரலில் பார்வதியாருடன் இருக்கையில் தேவர் குமாரக்கடவளின் அவதாரத்தை யெண்ணிச் சென்றனர். இக் குறிப்பறிந்த ஸ்ரீகண்டர் வீர்யத்தை அக்கியிடம் கொடுத்தனர். அதை அக்னி முதலிய தேவர்களுண்டு சசிக்காது சுரநோய்கொண்டு மேருமலேச் சாரலை அடைந்து சரவணத்தில் விட்டனர். அக்கரு ஆறுமுகங்கொண்ட குழந்தை யுருவாய் வளர்ந்தது எனவுங் குமாரக்கடவுள் உற்பத்தி கூறுப. 64, சுராக்ஷன் என்பவன் தேவர்க்கு இடுக்கண்புரிய அவனைக் கொன்றவர். 65. ஒரு பிரளயத்தில் தனித்து நின்று பெருஞ் சிரிப்புச்சிரித்து வீராட்டகேசன் என திருநாமம் அடைந்தவர் 66 மதுரையில், சோமசுந்தர பாண்டியனாய்த் தமது, இச்சையாற்றிருமேனி கொண்டு மலயத்துவசன் செய்த தவப்பேற்றால் தடாதகைப் பிராட்டியாராய்த் திருவவதரித்திருந்த பிராட்டியாரைத் திரு மணங்கொண்டு, வெள்ளியம்பலத் திருநடனம் முனிவர்க் கருள்செய்து, குண் டோதரனுக்கு அன்னமிட்டு அவன் பசி தணிய அன்னக்குழியும், நீர்வேட்கையாற வையையை அழைப்பித்துத்தந்து, காஞ்சனமாலை கடலாட விரும்ப எழுகடலுடன் மலயத்துவசனை யழைத்துக் கடலாட்டு வித்து, உக்கிரகுமார பாண்டியனைப் பெற்று அவற்கு வேல், வளை, செண்டு அருளிப் பட்டமளித்துத் திருக்கைலைக்கு எழுந்தருளியவர். 67. கண்வர் முதலிய முனிவர்கள் வேண்ட வேதத்திற்குப் பொருளருளிச் செய்தவர். 68. அபிஷேக பாண்டியன் பொருட்டு மாணிக்கம் விற்றவர். 69. வருணன் மதுரையின்மீது பகைத்துக் கடலைவிட அதனைத் தமது சடையிலிருந்த மேகங்களை யேவிக் குடிப்பித்தவர். மீண்டும் சத்தமேகங்களை அவன் விட்டது கண்டு தமது சடையிலிருந்த மேகங்களை யேவி நான்மாடக் கூடலாக்கி அவற்றின் வலிபோக்கியவர். 70, எல்லாம் வல்லசித்தராய் எழுந்தருளிப் பாண்டியன் காணக் கல்லானைக்குக் கரும்பு அருத்தியவர். 71. மதுரைமேற் சமணரேவிய யானையைக் கொன்றவர். 72, கௌரியென்னும் பார்ப்பினி பொருட்டு விருத்தகுமார பாலரானவர். 73. இராஜசேகரபாண்டியன் பொருட்டு மாறி நடித்து வெள்ளியம்பல மாக்கியவர். 74, பழிக்கஞ்சிய உலோக்துங்க பாண் டியனுக்கு யமபடமால் உண்மை கூறுவித்தவர் 75. தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற வேதியனது மாபாதகம் தீர்த்தவர். 76. சித்தன் என்பவனது அங்கத்தைச் சமர்செய்து வெட்டியவர். 77. புத்தர் ஏவிய நாகம், மாயப்பசு முதலியவற்றை எய்து வதைப்பித்தவர். 78. சாமர்தர் பொருட்டு மெய்காட்டிட்டவர். 79. மதுரையில் பிறந்திருந்த தாருக வனத்து இருடிபத்னிகள் பொருட்டு வளையலிட்டு அவர் மையலைப் போக்கிப் புத்தி ரப்பேறும் அளித்தவர். 80. குமாரக்கடவுளுக்குப் பாலூட்டிய இயக்கிமார் அட்டமாசித்திவேண்டிப் பணியப் பிராட்டியுடன் தரிசனந்தந்து பிராட்டியைக் காட்டி யிவளை யாராதிக்கின் அட்ட சித்தியும் தருவள் என, அச்சித்திகளை யுபதேசிக்கையில் பாரமுகமாய்க் கேட்க நீங்கள் பட்டமங்கையிற் பாறைகள் ஆக என்றனர். இயக்கிமார் வேண்ட (1000) வருஷங்கள் சென்றபின் நாமே வந்து அச்சாபத்தைப் போக்குகிறோமென அவ்வாறு சென்று அப்பெண்களின் சாபம் தீர்த்து அட்டமாசித்தியுபதேசித்தவர். அப்பெண்கள் பார்வதியார் பாவனையால் சித்திபெற்று முத்தி அடைந்தனர். 81. காடுவெட்டிய சோழன் பொருட்டு மதுரைத் திருக்கோயிலின் மீன முத்திரை நீக்கி இடபமுத்திரையிட்டு அவனுக்குத் தரிசனந்தந்து வழித்துணையானவர். 82. பொன்னனையாள் என்னும் தாசி பொருட்டு இரசவாதஞ் செய்து அவள் மனக்கவலை தீர்த்த ருளியவர். 83. பாண்டியன் சேனையின் பொருட்டுத் தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தாகநீக்கிச் சேனையை யுத்தத்திற்கு அனுப்பி வெல்வித்தவர். 84. தனபதியின் உடன் பிறந்தாள் மகன் பொருட்டு மாமானாகவந்து வழக்கிட்டு ஞாதியர் கவர்ந்தபொருள் வாங்கி அளித்தவர் 85. பாணபத்திரர் பொருட்டு விறகாளாய் ஏமநாதன் இருந்த வீட்டுத்திண்ணையில் யாழ் வாசித்து ஏமநாதனை ஓட்டிய வர். இவர்பொட்டுத் திருமுகம் கொடுத்துச் சேரமானிடம் அனுப்பிப் பொருள் கொடுப்பித்தவர். பாணபத்திரரைக்காண்க. 86 கரிக்குருவிக்கு மந்திர முபதே சித்து முத்தியளித்தவர். 87. வங்கியசேகர பாண்டியன் காலத்து வேடுருவாய்ச் சோழன் சேனைகளை ஒட்டியவர். 88. சங்கத்தார் பொருட்டுச் சங்கப் பலகை தந்தவர். 89. சத்திக்கு ஞானமுபதேசிக்கையில் பிராட்டியார் பாராமுகமாகக் கேட்டதறிந்து வலையர் குலத்தில் அவதரிக்கச் சாபமளித்துச் சத்திவேண்ட நாமே வந்து உன்னை மணந்து கொள்ளுகிறோமெனக் கூறினவர். தாய்க்குச் சாபவிளைவு சாத்திரத்தினாலென்று அச்சாத்திரங்களைக் கடலிலெறிந்த குமாரக்கடவுளை மதுரையில் மூங்கைப் பிள்ளையாகவும் சமயமறியாது குமரரை உள்ளே வரவிட்ட நந்திமா தேவரை சுறாமீனாகவும் சாபம் அளித்து அநுக்கிரகித்தவர். 90. தருமசீலையின் கணவன் பொருட்டு உலவாக்கோட்டை யருளிச்செய்தவர். 91. வரகுண பாண்டியன் பொருட்டுச் சிவலோக தரிசனங் காட்டியவர். 92. பாணபத்திரர் மனைவியை இசை வாதில் வெற்றி கொள்ள அநுக்கிரகித்தவர். 93. பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்த்து அவர்களை, மந்திரிகளாக்கியவர். 94. நாரை ஒன்று பொற்றாமரைத்தீர்த்தத்தில் மீனுண்ண வந்து ஞானோதயம் பெற்றுத் தியானிக்க முத்தியளித்தவர். 95. தருமி யென்னும் வேதியனுக்குக் கவியருளிச்செய்து பொற்கிழி கொடுப்பித்தவர். தருமியைக் காண்க. 96. அறியாமையால் மாறுகொண்ட கீரனைப் பொற்றாமரையில் வீழ்த்திக் கரையேற்றி அநுக்கிரகித்து இலக்கணங் கூறுவித்தவர். 97. சங்கத்தார்க்கு மூங்கைப்பிள்ளை யாரால் கலகம் தீர்ப்பித்தவர். 98. இடைக்காடர் சொற்படி அவர்க்குப் பின்சென்று பின் பாண்டியன் புலவரை கூமை வேண்டியிரக்கப் புலவருடன் மதுரைக்கு எழுந்தருளியவர். 99. வாதவூரடிகளுக்குக் குருமூர்த்தியாய் எழுந்தருளி உபதேசித்து, நரிபரியாக்கி, பரிநரியாச்கி, மண்சுமந்து, பாண்டியனா லடியுண்டு சராசரமெல்லாந் தமது திருமேனியென்று காட்டி அவருக்குச் சிவாநந்தவாழ்வளித்தவர். 100. அருசசுகன் பாசுபதம் வேண்டித் தவஞ்செய்கையில் அவனைக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றியுருக்கொண்ட அசுரனைக் சொல்ல வேடுருக்கொண்டு எழுந்தாளி அருச்சுநனுடன் லீலையாகப் போரிட்டு அவனாலடியுண்டு சராசாமெல்லார் தமது திருமேனியென்று அறிவித்தவர். 101, திருவிரிஞ்சையில் வேதியச் சிறுவர்பொருட்டுத் திருமேனி வளைந்து காட்டி அவ்வளைவாற் சராசரங்கள் வளையக்காட்டி அருளியவர். 102. சூரியனை உன்னொளியால் உலகம் விளங்குகின்றதென்று நாரதர் புகழ அதனால் செருக்குற்ற அவனைத் தமது நெற்றிக்கண் ஒளியால் கர்வபங்கப்படுத்தியவர். 103. காமவேட்கைகொண்ட வேதியன் ஒருவன் தாசிக்குத்தாப் பொருளில்லாது வருந்தத் தமது பதக்கத்தைத்தர்ந்து தாசியிடஞ் சேர்ப்பித்தவர். 104. ஒரு வேதியச் சிறுவர் பொருட்டுத் தந்தை தாயார் உபாத்தியாயர் இலாது மயங்க அவ்விடம் விருத்த வேதியராய் எழுந்தருளி அப்பிள்ளைக்கு வேதங் கற்பித்து ஒரு பார்ப்பினி அன்னமிட அன்ன மெல்லாம உண்டு பற்றாது மற்றும் பாகமாகாதவைகளையும் உண்டு மறைந்தவர். 105, விஷ்ணு பிரமனை விழுங்கிய கற்பத்துப் பிரமனுக்கு அந்தர்யாமியாய்த் தரிசனந்தந்து அநுக்கிரகித்தவர். 106. மேகவாக நகற்பத்தில் மேகவுருக் கொண்ட விஷ்ணுமூர்த்தியால் தாங்கப் பெற்றவர். அக்கற்பத்திற்கு மேகவாகன கற்பமெனப் பெயர். 107. திருமால் தாமரைகொண்டு தம்மைப் பூசிக்கையில் அம்மலரில் ஒன்று குறையத் தமது கண்ணைப்பிடுங்கி அர்ச்சித்ததனால் களிப்படைந்து தாமரைச் கண்ணனெனத் திருநாமமும் இஷ்டசித்தியும் சக்கரப்பேறும் அளித்தவர். இது திருவீழிமிழலையென்னுந் தலத்தில் பிரத் தியவும். 108. விருகாகான் எவர் சிரத்தில் தன் கையை வைக்கினும் அவர் எரிய வாம் பெற்று அதைச் சோதிக்கத் தம்மிடம் திரும்பியவனைத் தீக்கண்ணால் எரிக்காது நாடகமாக மறைந்து விஷ்ணுமூர்த்தியை யேவிக் கொலை செய்வித்தவர் 109 விஷ்ணுமூர்த்தியின் மச்சாவதாரத்தில் மணிகொண்டு சென்று அதன் ஒலியால் கடலிலிருந்த மச்சாவதார மூர்த்தியை மயங்கிவரச் செய்து கொக்குருச் கொண்ட தமது மூக்கால் மீனைப்பிடித்து விழி மணிகொண்டு விரலாழிக்கணிந்து மச்சாரி எனத் திருநாமம் அடைந்தவர். 110. விஷ்ணுமூர்த்தி கூர்மாவதாரத்தில் செருக்குற அக்காலையில் தோன்றி முதுகோட்டைப் பேர்த்து மார்பு அணியாகக்கொண்டு கூர்மசம்மாரமூர்த்தி யெனப் பெயரடைந்தவர். 111 நாசிங்க மூர்த்தியாய் இரண்யனைக் கொன்று இரத்தபானத்தால் வெறிகொண்டு மற்றவரையும் பயமுறுத்திய காலத்துச் சிம்புள் என்னும் எண்காற் பறவையுருக்கொண்டு சென்று நரசிங்கமூர்த்தியின் தோலை உரித்து உடுத்துச் சாபமூர்த்தியெனத் திருநாமமடைந்தவர். 112. பூமியைச் சுருட்டிப் பாதானத்தில் சென்ற இரணியாக்ஷன்பொருட்டு வராக வுருக்கொண்டு அவனைக்கொன்று தம்மினு மிக்காரில்லையெனச் செருக்குற்ற காலத்தில் அவ்வராகத்தின் கொம்பையொடித்து அணிந்து அநுக்கிரகித்து வராகசம்மாரமூர்த்திப் பெயரடைந்தவர், 113. வாமனாவதாரத்தில் விஷ்ணுமூர்த்தியின் முதுகெலும்பாகிய கங்காளத்தை வீணாதண்டமாக்கிக் கங்காளத் திருநாமம் அடைந்தவர். 114. விஷ்ணுமூர்த்தி தேவாசுர யுத்தத்தில் அசுாரை வென்று செருக்கடைந்த போது அவர்க்கு முன் யக்ஷனாகத் தோன் றித் துரும்பைக் கிள்ளியிட்டுத் தூக்கக் கட்டளையிட்டுக் கர்வபங்கம் செய்தவர். 115. தேவர் சிவ, விஷ்ணுக்கள் பல மறியக்கொடுத்த வில்லினை யுங்கரித்தலால் முரித்தெறிந்தவர். 116. விஷ்ணுமூர்த்திக்குத் தில்லையில் நடன தரிசனந் தந்தவர். 117. பரசிராமாவதாரங்கொண்ட விஷ்ணுமூர்த்தி பரசுவேண்ட அநுக்கிரகித்தவர். 118. பலராமர் தம்மைப் பூசைசெய்ய இஷ்டசித்தி யளித்தவர் 119. இராமாவ தாரத்தில் சிவபூசை செய்த விஷ்ணுமூர்த்திக்குப் பிரமகத்தி போக்கியவர். 120. கிருஷ்ணாவதாரத்தில் உபமன்னியரிடம் சிவ தீக்ஷை பெற்றுச் சிவபூசை செய்த விஷ்ணுமூர்த்திக்குப் புத்திரப்பேறமளித்தவர். 121. விசுவசேநனைச் சூலத்தாற் குத்தியவன் கர்வபங்கப்பட்டு வேண்ட அநுக்கிரகஞ் செய்தவர். 122. மார்க்கண்டர் பொருட்டால் யமனை உதைத்து அநுக்கிரஹித்தவர். 123. பிரம விஷ்ணுக்களைத் தம்மிடத்துச் சிருட்டித்து ஏகபாத்திரி மூர்த்தியாக நின்றவர். 124 பஞ்சபூதம், சூர்யன், சந்திரன், ஆன்மா முதலிய எண்குண மூர்த்தியாய் நின்ற வர். 125. ஒரு காலத்தில் விஷ்ணுமூர்த்தி பாதானமடைந்து அங்கிருந்த அப்ஜாஸ் திரீகளுடன் கூடிப் பல புத்திரர்களைப் பெற்றுத் தம்தொழிலை மறந்திருக்கையில் பிரமாதி தேவர்களால் வேண்டப்பட்ட சிவமூர்த்தி இடபவுருவுடன் பாதாள மடைந்து விஷ்ணு மூர்த்தியின் புத்திரமுடன் போர்புரிகையில் விஷ்ணுமூர்த்தி யுத்தத்திற்குவா அவரைப் பணிவித்து வைகுண்டமடையச் செய்தனர். இதனைக் தேவர் கேட்டு அப்பெண்களைக் கூடப் பாதாளம் செல்லத் தொடங்குகையில் சிவமூர்த்தி ஆண்டுச் செல்லும் தேவர் உயிரோழிக எனக் கோபித்தவர். (சிவமகா~பரா.) 126. விஷ்ணுமூர்த்தியைப் பலமுறை சத்தியாகபெற்று அரிஹரபுத்ரரைப் பெற்றவர். 127. பாணாசுரன் சிவபூசை செய்து பல வரங்கள் பெற்று என்னுடன் யுத்தஞ் செய்து வெல்பவருண்டோவென, சில நாளைக்குப் பிறகு கண்ணனால் வெல்லப் படுவாய் என்று அவன் வேண்டுகோட்படி அவனிடமிருந்து கண்ணனுடன் பாணனுக்கு யுத்தம் நேருகையில் தாம் பயந்தவர்போல் நடித்து வாணன் வலியடங்கச் செய்தவர். 128. தமதசைவு வுலகினசை வெனத் தோற்றுவிக்கச் சப்ததாண்டவ மூர்த்த மானவர். 129. பராசாமுனிவர் வேண்டுகோளுக் கிரங்கி வக்ராசுரனாதியரை வசைக்கச் சத்தியிடம் சண்டகாதினி முதலிய துர்க்கைகளைச் சிறுட்டிப்பித்தவர். 130. தேவலா வருத்திய மருத்தனை யுக்கிரவடிவுடன் கொலை செய்தவர். 131 கோலோத்திருந்த பசுக்கள் ஓயாமல் பாலினை யொழிகிப் பயன்படக் கருதுகையில் அவற்றை யுற்றுப்பார்த் தெரித்தவர். 132. ஒரு சமயத்தில் விஷ்ணுவை ஆதி சேடறை பிணித்து நூறுயோசனை தூரத்தில் விழுப்படி யெறிந்தனர். (சிவமகா புராணம்) 133, சநகர் முதவியோர், பொருட்டுக் குருமூர்த்தியாய் எழுந்தருளி வேதப் பொருளுணர்த்தித் தக்ஷிணாமூர்த்தித் திரு நாமம் பெற்றவர். 134, திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தார், பட்டினத்தடிகள் மற்றுமுள்ள நாயன்மார் முதலியவர்களுக்கும் ஆங்காங்குத் தரிசனந்தந்து பல திருவிளையாடல்களைக் காட்டி அநுக்கிரகித்த சரித்திரங்களை யெழுதவும் கூறவும் முடியா. பின்னும் இவர் திருத்தொண்டர் புராணத்துட் கூறிய அடியார் பலர்க்கும் பல பல தலங்களில் அடியவர்கள் எவ்வகை தியானித்தனரோ அவ்வகையெல்லாந் தரிசனந்தந்து அவர்க்கு அருளிய திருவிளையாடல் களையும் எழுதப்புரின் என் சிறிய புத்தகம் அடங்காது. பினும் யுகங்கடோறும் சேதனராகிய தேவர் நாகரேயன்றி யிவரைக்குதிரை, சிலந்தி, கழுகு, உடும்பு, குரங்கு, நரி, ஈ, எறும்பு, செல், தேன் வண்டு, ஞெண்டு, யானை, சிங்கம், மயில், அன்னம். புறா, ஆந்தை, பன்றி, ஆமை, முயல், இந்திரகோபப்பூச்சி, கிளி, அன்றில், பாம்பு, தேள், எலி முதலிய பூசித்து முத்தி பெற்ற சரிதைகள் பலவுள. 135 இவர் ஒரு கற்பத்தில் தம்மையேத்யானித்திருந்த காலத்துத் தம தேகத் துண்டான ஆனந்த பிந்துக்கனே சிவலிங்கங்களாயின. (சிவரஹஸ்யம்.)

சிவரகஸ்யம்

இது சிவபூசாவிதி. அக்கிநி காரியம் சிவகணாதிபர்நிலை முதலியவைகளைக் கூறும் நூல்.

சிவராத்திரி

கால நிர்ணயம், மாசி கிருஷ்ணபக்ஷம், சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகை, லிங்கோற்பவ்காலம், இதுவே மகாசிவராத்திரி புண்யகாலம் கிருஷ்ண பக்ஷம் திரயோதசி (30) நாழிகைக்குச் சதுர்த்தசி வியாபிப்பது உத்தமம், திரயோதசியில்லாமல் சதுர்த்தசி வியாபிப்பது அதமம். ஒருகாலம் அன்றையிராதரிக்கு அமாவாசை பிரவேசிப்பது பரியாய சிவராத்ரி, இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்குத் தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும் அன்றிச் சத்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராதரி முதற்சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த, பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது, இதை அலுஷ்டித்தோர் நான்கு யுகங்களினும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரமவிஷ்ணுக்களாம். பலன் இம்மையில், சற்சன தானாதி சௌபாக்ய சம்பத்தும், மறுமையில் சுவர்க்காதி போகமுமாம். இது காமியம். நிஷ்காமிகள் இகத்தில் புத்தியும், பரத்தில் முத்தியும் அடைவர். (மகாசிவராத்திரி.) பிரமவிஷ்ணுக்கள் பொருட்டுச் சிவமூர்த்தி இலிங்கோற் பவமாய் எழுதருளிய போது தேவர்கள் பூசித்தகாலம் எனவும், ஒரு பிரம கற்பத்தில் சக்தி நாற்சாமத்தில்லும் சிவபூசை செய்து தாம் பூசித்தகாலம் சிவராத்திரியாக எனச் சிவமூர்த்தியை வரம் வேண்டிப் பெற்ற நான் எனவும், சச்தி விளையாட்டாகச் சிவ மூர்த்தியின் திரிநேத்திரங்களை மூட உலகங்கள் இருண்டன அக்காலத்துச் சிவமூர்த்தியைத் தேவர் வணங்கின காலம் எனவும், பாற்கடலில் தோன்றிய விஷமுண்ட சிவமூர்த்தியை விஷம் பீடிக்காமல் தேவர் இராமுழுதும் பூசித்த காலம் எனவும், ஒரு சற்பத்தில் அண்டங்கள் எல்லாம் இரு உருத்திரர் அந்த இருள் நீங்கச் சிவத்தைப் பூசித்த காலம் எனவும் பல புராணங்கள் கூறும்.

சிவலிங்கசோழன்

இவன் தேவி பத்மவல்லி. இவன் நூற்றொரு சிவாலயங் சுளைச் சீரணோத்தாரணஞ் செய்த வீரசோழனைப் பெற்றவன், அந்த வீரசோழன் திருவாரூரில் சிவதரிசனஞ் செய்யும் பொருட்டுத் தேர்மீது செல்ல அத்தேர் வேகத்தால் பசுவின் கன்று நசுங்கத் தாய்ப்பசு இவன் தந்தையிடஞ் சென்று முறையிட் டது. பிதா தன் குமரனைத் தேர்க்காலில் இட்டு அப்பசுவின் கன்றின் உயிர்க்குப் பிரதியாக நசுக்கக் கட்டளை யிட்டவன் இவனைத் தேரூர்ந்த சோழன் என்பர்.

சிவலிங்கநியாசம்

தண்டபங்கிநியாஸம், முண்டபங்கிரியாஸம், ஸ்ரீகண்ட நியாஸம், ஆகமநியாஸம், கலாநியாஸம், மாத்ருகா நியாஸம் முதலிய

சிவல்

கௌதாரியினத்திற் சேர்ந்தது. இப்பக்ஷி கபிலநிறமுள்ளது. தான்யம் பூச்சிகள் முதலியவற்றைத் தின்று ஜீவிப்பது.

சிவவாக்கியர்

இவர் வேதியர் குலத்திற் பிறந்து காசி யாத்திரை சென்று இல்ல றத்திற் ஆசை கொண்டு ஒரு ஞானியாகிய சக்கிலி, காசும் பேய்ச்சரைக்காயும் கொடுக்கப்பெற்று அவனுனக்கு எந்தப் பெண் மணலையும் இச்சுரைக் காயையும் சமைத்து இடுகின்றாளோ அவளே மனைவியென அவ்வாறு செய்த ஒரு குறப்பெண்ணை மணந்து இல்லறத்திருந்து மூங்கில் வெட்டுகையில் அது பொன் பொழிய நீத்து ஒரு கீரையைப் பிடுங்குகையில் தன்னிலை நிற்கக் கொங்கணரால் திருந்தியவர். இவரைத் திருமழிசை ஆழ்வாரென்பர். இவர் தமிழில் தம் பெயரால் சிவவாக்கியம் எனம் நூல் செய்தவர். இவர் வந்து பூமியில் பிறக்கையில் “சிவ” என்று சொல்லிக் கொண்டு விழுந்தபடியால் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது,

சிவஸ்கந்தன்

சாதகர்ணன் குமரன், இவன் குமரன் எக்யசீலன்.

சிவாகமசம்பந்தம்

(6) வகை. சதாசிவருக்கும் அநந்தேசுராக்கும், பாசம்பந்தம். அருந்தோர்க்கும் ஸ்ரீகண்டருக்கும், மகத்சம்பந்தம், ஸ்ரீசண்டருக்கும் தேவர்களுக்கும், அந்தராளசம்பந்தம். தேவேந்திரற்கும் ருஷிகளுக்கும் திவ்யசம்பந்தம். ரிஷிகளுக்கும் மனிதர்களுக்கும், திவ்யாதிவ்ய சம்பந்தம். மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் அதிவ்யசம்பந்தம். (சைவபூஷணம்)

சிவாகமம்

ஆகமம் காண்க.

சிவாக்கினிச்வருபம்

1. வெண்மையான பத்மாசனத் திருப்பவராய், நான்கு முகம், நான் குகைகள், பிரம்மஸ்வரூபம்; ஜடை, சுருக்கு, கமண்டலம், தண்டம், ஜபமாலை, கைந்நுனியில் தாமரையுடையவராய், செந்நிறத்தராய், முக்கண், பத்துக்கைகளிலும் சிவனைப்போல் ஆயுதமுடையவரா யிருப்பர். (அகோரபத்ததி.) 2. ஒரு சரீரம், நான்குகொம்பு, இரண்டு தலைகள், இரண்டு முகங்கள், ஆறு கண்கள் இரண்டு மூக்குகள், ஏழுநாக்குகள், ஜடையஞ்ஞோப வீதம், முஞ்சி, மூன்று பதங்களுடன் கூடினவராய் எழு கரங்களுடன் ருஷபாரூடராயிருப்பர். இவர்க்கு வலப் பக்கத்தில் ஹிரண்யை, கனகை, ரக்தை, கிருஷ்ணை யென்கிற நான்கு நாக்குகளும், இடப்பக்கத்தில் சுப்ரபை, அதிரக்தை, பஹுருபை என்கிறவைகளும் கூறப்பட்டிருக்கின்றன. (ஸ்ரீ காமிகம்).

சிவாக்கிய சோழமகாராஜா

ஒரு சோழன். ஸ்ரீஅரதத்தாசாரிய சுவாமிகளிடம் விச்வாசம்வைத்து அடிமை பூண்டவன்.

சிவாக்ரயோகியர்

இவர் நிகமாகம சைவபரிபாலக சதாசிவயோகீந்திரர் மாணாக்கர், இவர் தஞ்சாவூரில் சரபோஜி மகாராசா அரசாண்டிருந்தபோது அவ்வரசன் வேண்டுகோளால் வைஷ்ணவாசாரியருடன் வாதிடுகையில் வைஷ்ணவர் தாம் தோற்பது அறிந்து யோகிகள் இருந்த குடிசையில் தீ யிட்டனர். குடிசை யெரிந்தும் யோகியர் தேகசலனமில்லாது இருந்தனர். இதனையறிந்த அரசன் வைஷ்ணவரைப் பிடித்துத் தண்டித்து யோகியரை யுபசரித்து அடிமை பூண்டனன். இவர் செய்த நூல்கள் ஸ்ரீசிவஞானபோத பாஷி யம், சித்தாந்த தீபிகை, சிவஞான சித்தியார் மணிப்பிரவாள வியாக்யானம், வேதாந்ததீபிகை, ததவதரிசனம், பாஞ்சராத்திர மதசபேடிகை,சைவபரிபாஷைமுதலியன.

சிவாசாரிய பஞ்ச்சமுத்திரை

விபூதி, ருத்பராக்ஷம், உபவீதம், உத்தரீயம், தலைச்சீலை.

சிவாஜி

பொம்பாய் ராஜதானியின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு மலைகளினுச்சிகளிலும் மலைக்கோட்டைகளிருந்தன, அக்கோட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிற்றரசனுக் குரியது. அவர்கள் அம்மலையடிப் பிரதேசங்களிலுள்ள மாடுகளை யாண்டு வந்தனர். இவ்வரசர்கள் தக்ஷிணத்திலிருந்த மகம்மதிய அரசனுக்கு கீழ்ப்படிந் தாண்டு வந்தனர். சிவாஜியாலிவர்கள் ஒருமித்தனர். இவன் தந்தை ஷஹாஜி பான்ஸ்லே பீஜபூர் அரசனிடம் வேலை செய்து வந்தான். தந்தையிவனைப் பூனாவில் உறவினரிடம் வளருமாறு விட்டான். இவனுக்குக் கல்வியில் வெறுப்பும், அஸ்திரசஸ்திர வித்தைகளில் விருப்பும் இருந்தது. இவன் முற்காலத்து இந்து வீரர்களின் புகழ்களைக் கூறிய பாட்டுகளை ஜிஜாபாய் எனுந் தாய்கூறத் தெரிந்து கொண்டான். அவர்களது பெரும்புகழைத் தானுமடைய ஆவல்கொண்டான். இவன் தன்னையொத்த சிறுவர்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தலைமைபூண்டு பல சமநிலப் பிரதேசங்களைக் கொள்ளை கொள்வான். இவன் தன் சேநா பலத்தால் முதலில் புரந்தரமலைக் கோட்டையைக் கைப்பற்றினான், வரவர இவன் வன்மையால் பல மலைக்கோட்டைகளைக் கைப்பற்றிச் செல்வத்திலும் சேனையிலும் வன்மை கொண்டான். பீஜபுரத்தரசன் இவன் துடுக்கை அடக்கும்படி அப்ஜல் கான் என்ற படைத்தலைவனை அனுப்பினான். சிவாஜி பயந்தவன் போல நடித்து நிராயுதனாய் வந்தால் தான் கீழ்ப்படிவதாய்ச் செய்தி அனுப்பினான். துருக்கன் இவன் சொல்லை நம்பித் துணையின்றி வந்தான். சிவாஜி தன் உடைகளில் ஆயுதங்களை மறைத்து அவன் மீது பாய்ந்து இருபுறங்களால் உடலைக் கிழித்து ஈட்டியால் குத்திக் கொன்றான். இவனது போர் வீரர், அப்சல்கான் படைமேற் பாய்ந்து படையை முரியடித்தார்கள். பின் சிவாஜி நாடு முழுதும் வென்றான். எல்லா மராட்டியத் தலைவர்களும் அவனுடன் சேர்ந்த னர். கொங்கணமென்ற மேற்கரைக்கெல்லாம் அரசனானான். பிறகு டெல்லி சக்ரவர்த்தியாகிய அவுரங்கசீப் அவனது விருத்தியை அடக்க எண்ணி ஷெயிஸ்ட்கான் எனும் தக்ஷிணத்துப் பிரதியரசனை யுத்தத்திற்கனுப்பினான். அவன் பூனாவில் பெருஞ் சேனையுடன் வந்திறங்கினான். சிவாஜியிவனது சேனாபலங்கண்டு அஞ்சி யிவனுடன் நேரிற் போர்செயாது எவரும் அறியாதபடி 20 போர்வீரருடன் பிச்சைக் காரவேடம்பூண்டு ஷெயிஸ்ட்கான் இறங்கியிருந்த வீட்டிற்சென்று அவனைக் கொலை செய்யத் தொடங்குகையில் அவன் அங்கிருந்த சாளரத்தின் வழி குதிக்க எண்ணுகையில் அருகிருந்த சிவாஜி அவன் விரல்களை வெட்டினான். ஷெயிஸ்ட்கான் புனாவைவிட்டு ஓடினான். பிறகு ஒளரங்கசீப் ஒரு பெருஞ் சேனையையனுப்ப இவன் தன் தேசத்தில் ஒரு பாகமும், மொகலாய சேனாபத்யமும்தரின் தான் கீழ்ப்படிவதா கக் கூறினான். ஔரங்கசீப் அப்படியே ஒத்துக்கொண்டு சிவாஜியை வரும்படி கூறச் சிவாஜி வந்தனன். சிவாஜியை ஒளரங்கசீப் ஒரு வீட்டில் அடைத்துக் காவலிட்டனன். சிவாஜி தான் வியாதியால் வருந்துவதாகக் கூறினன். அவனது ஆட்களவனை ஒரு கூடையிலிருத்தி வெளிக்கொண்டு வர, சிவாஜி சந்நியாசி வேடம் பூண்டு தன்னகர்போய்ச் சேர்ந்தனன். பின் ஒருபோதும் இவன் ஒளரங்கசீபுக் கடங்காது பல இராஜ்யங்களைக்கட்டி யாண்டு 52. ஆம் வயதில் காலமாயினன். பிறகு அவன் குமரன் சாம்பாஜி பட்ட மடைந்தான். இவனை ஒளரங்கசீப் எளிதிற் கொலை செய்தான்.

சிவாதந்தமுனிவர்

இவர் ஸ்ரீசைலத்துத் தவஞ் செய்து கொண்டிருந்த முனிவர். இவரது நகங்களும் உரோமங்களும் பருவகம் முழுதும் பரவியிருக்கக் கண்ட காந்தருவர் இவரைக் கரடியோ என்றனர். அருகிருந்த சீடர் காந்தருவரைக் கரடிகளாக எனச் சபித்துத் தெலுங்கச் சோமையரால் விமோசனம் அடையக் கூறினர்.

சிவாத்துவிதிமதம்

பதி அநாதி எனவும், அவன் தானே பெறுவானும், ஈவானும், எனவும், தன்னையன்றி அவன் வேறல்லன் எனவங் கூறும். (தத்துவநிஜாநு.)

சிவானந்தலகிரி

சங்கராசாரியர் இயற்றிய ஒரு சிவமகிமை கூறிய நூல்.

சிவாலய முனிவர்

தேவாரம் அடங்கன் முறையை அகத்தியர் திரட்டிக் கொடுக் கப் பெற்றவர்.

சிவாஷ்டாஷ்ட மூர்த்தங்கள்

64, இலிங்கம், இலிங்கோற்பவம். முகலிங்கம், சதாசிவம், மகாசதாசிவம், உமாமகேசம், சுதாசனம், உமேசம், சோமாஸ் கந்தம், சந்திர சேகரம், ருஷபாரூடம், ருஷபாந்திகம், புஜங்கலளிதம், புஜங்கத்திராசம், சந்தியா நிருத்தம், சதா மிருத்தம், காளி தாண்டவம், கங்கா தரம், சங்கா விசாச்சனம், திரிபுராந்தசம், கல்யாண சுந்தரம், அர்த்த நாரீசம், கஜயுத்தம், சுவராபக்னம், சார்த்தூலஹரி பாசுபதம், கங்காளம், கேசவார்த்தம், பிக்ஷாடனம், சிம்மகனம், சண்டேசாநுக்ரகம், தமிணா மூர்த்தம், வீணாக்ஷிணா மூர்த்தம், காலாந்தகம், காமாரி, வகுளேசம், பைரவம், ஆபதோத்தாரம், வடுகம், க்ஷேத்ர பாலம், வீரபத்ரம், அகோராஸ்தரம், தக்ஷயஞ்ஞஹதம், கிராதம், குருமூர்த்தம், அச்வாரூடம், கஜாந்திகம், ஜலந்தரவதம், ஏகபாத்திரி மூர்த்தம், திரிமூர்த்தி திரிபாதம், ஏகபாத மூர்த்தம், கௌரீவரப்ரதம், சக்ர தானஸ்வரூபம், கௌரீலீலாசமன்விதம், விஷாபஹரணம், கருடாந்திகம், பிரம்ம சிரச்சேதம், கூர்ம் மசம்மாரம், மச்சாரி, வராகாரி, பிரார்த்தனா மூர்த்தம், இரத்தபிக்ஷாப்ர தானம், சிஷ்யபாவம்,

சிவி

வராககற்பத்தில் இருந்த இந்திரன்.

சிவிகை

இது வண்டியுருவாக மனிதரால் சுமந்து செல்லப்படும் யானம். இது, பலவுருக்களாகச் செய்யப்படும்.

சிவிங்கி

இது காட்டுப்பூனையினத்தில் பெரிது. இதன் உடல் கரும்புள்ளிகளைப் பெற்றுச் சிவந்திருக்கும். 3 அடி உயரம், நீண்ட உடல், கழுத்து, மார்பு, விலாப்பக்கம், வால் முனை முதலிய இடங்களில் நீண்ட மயிருண்டு, நகங்கள் பூனை போலுள்ளுக்கடங்கா, அதிக மூர்க்கமுள்ளது. இதை வேட்டையாடுவோர் நாயைப்போல் வீட்டில் வளர்க்கிறார்கள். இது வருடத்திற் கொருமுறை 2 குட்டிகள் ஈனும். இது புலியைப்போல் உருவத்தில் சிறியது. இதற்குப் புள்ளியெனப் பெயர். இதற்குப் புலிக்குள்ள எல்லா அமைப்பும் குணமும் உண்டு. இவ்வினத்திலிரண்டு வகையுண்டு ஒன்று கரும்புள்ளி கலந்த மஞ்சள் தோலையுடையது, மற்றொன்று உடல் முழுதுங் கருந்தோலையே கொண்டது, இதைச் சிறுத்தைப்புலி யென்பர். இது பெரிய பிராணிகளை யெதிர்க்காது ஏமாந்தால் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு போய்விடும். முயல், மான், ஆடு முதலியவைகளை வேட்டையாடும், இந்தியாவில் காடுகளில் உண்டு.

சிவியன்

ஒரு இருடி, சத்தியகாமனுக்கு முன்னோன்.

சிவியர்

சிவிகையார் என்பது சிவியா என்றாயிற்று, இடையரில் ஒரு பகுப்பென்றுங் கூறுவர். இவர்கள் மகம்மதிய கலகத்தில் மைசூரிலிருந்து ஓடிவந்தவர்கள் தொழில் பல்லக்குச் சமத்தல், மீன் பிடித்தல்,

சிவேதகல்பம்

ஒரு கல்பத்தில் சிவபெருமான் சிவேசரூபமாய், வெண்ணிறம், வெள்ளை வஸ்திரம் தரித்துத் தோன்றினர் ஆதலால் அக்கல்பம் அப்பெயர் பெற்றது. இதில் சிவேதலோகிதை உண்டானாள். (இலிங்கபுராணம்.)

சிவேதன்

1. கனகவிசயர்க்கு நண்பன். (சிலப்பதிகாரம்) 2. இவன் பிரச்சோ தனனுடைய மந்தரிகளுள் ஒருவன். ஆலோசனையில் வல்லவன். நளகிரி என்னும் யானை வெறிகொண்டு நகரை யழித்தபொழுது பிரச்சோதனன் கட்டளைப்படி சென்று மிக்க செற்றத்தோடு சிறையிலிருந்த உதயணனை மிக இரந்து அவன் மனத்தைக் கனிவித்துச் சிறையினின்றும் நீக்கி அழைத்து வந்து அதனை அடக்குவித்து அவனுக்கும் அரசனுக்கும் பழக்கம் செய்வித்தான். அரசன் குமார்களுக்கும் வாசவத்ததைக்கும் உரிய கல்விகளைக் கற்பிக்கும்படி அவனது அனுமதியாற் சென்று சொல்லி உதயணனை இணங்குவித்தவன். உதயணனுக்கு உரிய பணிகளை யெல்லாம் பின்னர் அன்புடன செய்து வந்தவன். ஐராபதமெனனு மலையிற் பிறந்த பொன்னின் நாணயங்களிற் பதினாயிரம் நன்கொடையாக உதயணனால் பெற்றான். (பெருங்கதை.)

சிவேதமாதவன்

ஜகந்நாதத்திலுள்ள விஷ்ணுமூர்த்தத் தொன்று. (பிரகன்னா தீய புராணம்)

சிவை

1. அக்கிநியின் குமாரனாகிய ஆங்கீரரசனுக்கு தேவி. 2. வாயுவின் தேவி, 3. அனிலன் என்னும் வசுவின் தேவி.

சிவோத்தமர்

அஷ்டவித்யேசாரில் ஒருவர்.

சிஷ்ணு

அருச்சுனன்.

சிஷ்யபாவமூர்த்தி

பிரணவத்திற்குப் பொருள் கூறப் புகுந்த கந்தமூர்த்தியிடம் சிவமூர்த்தி மாணாக்கர் போலிருந்து அவர் கூறியதைக் கேட்ட திருவுரு.

சிஷ்யபேதம்

(13) அத்வாலகன், பாலகன், நிராதாரி, பிரமாதி, அம்புகன், சியா வகன், பாவகன், அநுமதி, தாமசன், சத்திரபிருது, பௌரேயன், விசாரதி, கால வன். (சைவபூஷணம்.)

சீகண்டருத்ரர்

அந்தருக்குக் கீழுள்ள புவனங்களில் அதிகாரராயிருக்கும் புவனகர்த்தா.

சீகண்டர்

சைவபத்ததிசெய்த சிவாசாரியருள் ஒருவர்.

சீகதன்

பாரதவீரருள் ஒருவன். இவன் பாரதப்போரில் முதனாள் யுத்தத்தில் சிகண்டியுடன் போர்புரிந்தவன்.

சீக்கை

ஒரு நூல்.

சீசாதகர்ணன்

கிருஷ்ணன் குமரருள் ஒருவன். இவன் குமரன் பௌர்ணமாசன்.

சீசைலமுனிவர்

விஷ்ணுமூர்த்தியாய் அம்பரீஷன் வீட்டில் அபகரிக்கப்பட்டவர்.

சீடதாசி

தேவாங்க வகையினரில் தாசி.

சீதக்காதி

இவர் சாதியில் லப்பை, இருக்கை காயற்பதி, மகாத்தியாகி. பலவித்து வான்களுக்குக் கொடுத்துப் பாடல் பெற்றவர். இவரிறந்து சமாதிக்குழியில் இருக்கையில் படிக்காசுப்புலவர் இவரிறந்தது அறியாது இவர் ஊர்சென்று விசாரிக்கையில் இறந்தனர் எனச், சமாதியைத் தேடிச்சென்று அவ்விடம் “தேட்டாளன் காயற்றுரைசீதக் காதி சிறந்த வச்ர, நாட்டான் புகழ்க்கம்ப நாட்டி வைத்தான்றமிழ் நாவ வரை, ஓட்டாண்டியாக்கி யவர்கள் தம் வாயில் ஒருபிடி மண், போட்டா னவனும் ஒளித்தான் சமாதிக்குழிபுகுந்தே” எனப் பாடச் சமாதியிலிருந்த பிரேதம் கை நீட்டியது. விரலில் விலையுயர்ந்த மோதிரம் இருக்கப் புலவர் அதனைப் பெற்றுப்போனதாகக் கூறுவர். இதனால் ‘செத்துள் கொடுத்தான் சீதக்காதி’ என்பர்.

சீதசத்துருமகாராஜா

அசிதசவாமியின் தந்தை. இவர் தேவி விசயை.

சீதத்தன்

1. இராசமாபுரத்துள்ள ஓர் வணிகன். இவன் வெள்ளிமலையிலிருந்து காந்தருவதத்தையை அழைத்து வந்தவன். 2. சீவகன் தோழருள் ஒருவன். 3. கோவிந்தமகாராஜாவின் புத்திரன்,

சீதநாடு

நீலகிரி, கோயம்பத்தூர்,

சீதலா விரதம்

இது ஆவணி கிருஷ்ணபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது.

சீதா

ஒரு நதி. (பா. பீஷ்), The river yarkh and on which the towo of yarkhand is situated (Eastern Turkistan).

சீதாபண்டிதர்

இவர் அரிபக்தி மேற்கொண்டு யாவரிடத்திலும் அன்பு மிகுந்தவர். இவர் தம் மனைவியாருடன் யாத்திரை செய்ய விரும்பி மனைவியாரைக் குதிரை மீதேற்றிக் கொண்டு செல்கையில் ஒரு கிராமத்தருகில் பொழுது செல்ல மனைவியார் நாம் திரும்பிவிடுவோம் எனக் கூறினர். ஆண்டு வந்தகள்ளர் சிலர் நாங்களுங்களுக்குத் துணை வருகிறோம் வருக என அழைக்கப் பண்டிதர் இசையாது பிரமாணமிடின் வருவதாகக் கூறக்கள்ளர் பிரமாண மிட்டனர். பண்டிதர் பெருமாளிருக்கின்றனரென்று அவர்களுடன் செல்கையில் கள்ளர் பண்டிதரைக்கொன்று அவர்மனைவியாரிடம் வந்து கணவனிறந்ததைக் கூறி நிற்க மனைவியார் சாக்ஷியாக இருந்த பெருமான் மறைந்தாரோ என ராமமூர்த்தி கோதண்டத்துடன் தோன்றிக் கள்ளரைக் கொலை செய்து பண்டிதரை யெழுப்பி வழித்துணை சென்று மறைந்தனர்.

சீதாபிராட்டியார்

1, சங்க மகாராஜாவின் புத்திரியார். இவன் பூர்வஜன்மத்தில் வேதம் ஓதிக்கொண்டிருந்த குசத்துவசர் வாயில் தோன்றி வேதவதி எனும் பெயருடன் வளர்ந்து கொண்டு இருக்கையில் தம்பன் எனும் அரக்கன் இகளைத் தனக்கு மனைவியாக இருடியைக்கேட்ச இருடி இவன் விஷ்ணுமூர்த்திக்கு மனைவி; உனக்குக் கொடுக்கேன் என. அரக்கன் கோபித்து இருடியைக் கொன்றனன், தனித்த வேதவதி விஷ்ணுவையெண்ணித் தவஞ் செய்கையில் திக்குவிசயத்திற்கு வந்த இராவணன் இவளை வவிதிற்பிடிக்க வேதவதி நீ தீண்டிய உடலே நான் வைத்திருப்பதில்லை. நானே உன்னரசை அழிக்கிறேன் என்று தீக்குளித்தனன். இவள் இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் தாமரையிற் பிறந்து சிவபூசை நிமித்தம் பூக்கொய்யவந்த இராவணன் கண் காண இருந்தனள். இராவணன் அக்குழந் தையை எடுத்துச்செல்ல அங்கிருந்த நிமித்திகர் இக்குழந்தையிவ்விடம் இருக்கின் இலங்கையழியும் என்றனர். அதனால் ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டனன். அது அலையில் மிதந்துவந்து வெள்ளத்தில் மிதிலைக்கரிற் புதைந்தது. அத்தருணத்தில் மிதிலைநகர்க்கு அரசனாகிய சநகன் யாகஞ்செய்ய உழுத கலப்பையின் அடிமுனையில் பெட்டி தோன்றத் திறந்து பார்த்துக் குழந்தை யிருக்கக்கண்டு வளர்த்துவக்தனன், இவள் வளர்ந்து பருவமடைந்து வில்லைமுரித்த இராமபிரானை மணந்து நகரினின்று ஆரணியம் நீங்கிய இராமமூர்த்தியை விடாது பின்பற்றிச் சென்று சித்திரகூடல் கடக்கையில் அத்திரியின் ஆச்சிரமத்தில் அகசூயையால் உபசரிக்கப்பட்டுத் தண்ட காரணியத்தில் வந்த மாரீனாகிய மாயமானைக்கண்டு ஆசைகொண்டு கணவரிடம் பிடித்துத் தரச் சொல்ல, அவர் பிடிக்கப்போக அவன் கூவிய குரல் கேட்ட லக்குமண, சீதா, எனும் ஓசையால் மைத்துனரைப் போகச் செய்து தனித்திருந்து இராவண சந்நியாசியிடம் பிடிபட்டு இலங்கை சென்று அசோக வனத்தில் சிறையிருந்து திரிசடை தேற்றத்தேர்ந்து காமநோயால் விகாரப்பட்டுத் தன்காலில் விழுந்த இராவணனுக்கு உன்னுயிர் நீங்குமுன் நீ நன்னெறி தேடென அஞ்சாது அவன் முகத்தைப் பாராமல் துரும்பைக் கிள்ளியெறிந்து பேசி இராமமூர்த்தி தம்மைத் தேடிவராததினால் தன் உயிரைப் போக்கிக்கொள்ளச் சிறையிலிருந்து நீங்கி அசோகவனத்திருந்த சிஞ்சுபாவிரு க்ஷத்து அருகில் வருங்கால் அனுமனைக்கண்டு அனுமன் வாய்ச்சொல்கொண்டு இராமமூர்த்தியின் செய்தியறிந்து மனந்தேறிச் சூடாமணி தரப்பெற்று அநுமனைச் சிரஞ்சீவியாய் இருக்க வாழ்த்தி அரக்கர் அநுமனுக்குச் செய்த அக்கிநிபாதைக்கு அநுமனை அக்கிநி வதிக்காதிருக்க அக்கிநியை வேண்டியவள், இராமமூர்த்தி யுத்தத்திற்கு வந்த செய்தி கேட்டிருக்கையில் இராவணன் மருத்துவனைக் கொண்டு செய்வித்த மாயாசாக வுருவத்தால் மயங்கித் துன்புற்றவள். இந்திரசித்தால் எய்யப்பட்ட பிரம்மாத்திரத்தால் மூர்ச்சையடைந்த இராம இலக்குமணரையும் மற்றவரையும் புஷ்பக விமானத்திருந்து கண்டு விசனமடைந்தவள். இராவணன் இறந்தபின் அக்நி குளித்து அருங்கற்பினளாகிச் சேதுகண்டு அயோத்தியடைந்து பட்டமகிஷியாய்க் காடுகாண இச்சை கொண்டு வான்மீகி ஆச்சிரமம் அடைந்து குசலவரைப் பெற்று அவர்களை முன்னிட்டு இராமமூர்த்தியிடஞ் சென்று கற்பி னிலை தெரிவித்து யான் என் கணவரைத் தெய்வமாகக் கொண்டது உண்மையாயின் என் தாய் எனக்கு இடங்கொடுக்க என்னப் பூமிதேவியால் தழுவப்பெற்றுப் பரமபதம் அடைந்தவள், இவள் தாய் சத்தியை நோக்கித் தவம்புரிந்து இவளைப் பெற்றனள் என்பது. (கூர்மபுராணம்). 2. கங்கையின் பிரிவு. 3. வேதவரியைக் காண்க, உண்மையாகிய சீதை இராவணனை யடைந்தனள். அக்நியால் சிருட்டிக்கப்பட்ட சீதை இராமர், அக்நி, யிவர்களின் கட்டளையால் சிவனை நோக்கித் தவமியற்றினள். இவள் தவத்திற்கு மகிழ்ந்து தரிசனந்தந்த சிவபெருமானைச் சீதை வணங்கிப் “பதிம் தேஹி,” (புருஷன் வேண்டும்) என்று ஐந்து முறை வேண்டினாள், இதனால் சிறு நகைகொண்ட சிவமூர்த்தி இவளுக்கு ஐவராகிய பாண்டவர்களைப் பதியாக அளித்த னர், (பிரம்மகைவர்த்தம்.) 4. சிரார்த்தகாலந் தவறாமற் சிரார்த்தஞ் செய்து தான் அங்கனஞ் செய்ததற்குப் பசு, பல்குந்தி, அக்கி, தாழம்பூ இவர்களைச் சாக்ஷிவைத்து அவர்கள் பொய்சாக்ஷி கூறினதால் முறையே முகயோக்ய மில்லாமலும், அந்தர்வாகினியாகவும், சர்வபதார்த் தங்களைப் புசிக்கவும், சிவபூஜாவிருத்தம் பெறவும் சாபமிட்டனள். (சிவமகாபுராணம்) இராம மூர்த்தியைக் காண்க.

சீதாப்ரம்

யமபுரவழியிலுள்ள பட்டணம். இங்கு ஆன்மா சீதத்தால் வருந்திப் பன்னிரண்டாம்மாசிக பிண்டத்தை யுண்பன்.

சீதார்

1. இவர் சைநர். ஜயவர்மாவின் தந்தை. 2. சித்திபுரத்தாசன், நீலபதி என்பவளுக்குத் தந்தை. (மணிமேகலை.)

சீதார்தேவர்

ருஷபதீர்த்தங்கரின் ஆறாவது பிறப்பு.

சீதாளதீர்த்தங்கார்

(சைநர்.) இவர் பத்தாவது தீர்த்தங்கர். இவர் மலைய தேசம் இராச பத்திரலபுரம், தந்தை திருடாதன், தாய் சுநந்தை. இவர் கிருதயுகத்தில் மாசிமாதம் கிருஷ்ணபக்ஷம் துவாதசித்தி உத்தராட நக்ஷத்திரத்தில் இகவாகு குலத்தில் பிறந்தவர், இவர் உன்னதம் தொண்ணூறுவில், சுவர்ணவர்ணம், ஆயுஷ்யம் ஒரு லஷம் பூர்வம், கணதரர் அனகாரர் முதல் எண்பத்தொருவர்.

சீத்தலைச் சாத்தனர்

1. சீத்தலையென்பது ஓரூர், செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவைபோல் பெருஞ்சாத்தன் பேரிச்சாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவரியற்பெயர்க்கு ஊர் பெயர் புணர்த்திச் சீத்தலைச்சாத்தனாரெனப் பட்டது. சீத்தலை என்னும் ஊர் திருச்சிராப்பள்ளி ஜில்லா பெருமளூர்த் தாலுக்காவிலுள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் மாமோதரனார் பாடலில் தலைக்குத்துத் “தீர்வு சாத்தற்கு” என்றி ருத்தலானே அதற்கேற்ப சீத்தலை சீப்பிடித்த தலையென்று கதைகட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம். அதுபற்றி சீபிடித்தல் ஒரு தலையன்மையின் சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இவர் மதுரையிற் சென்று தம் காலக்ஷேபத்திற்காக நவதானியங்களைக் கொண்டு விற்று வியாபாரஞ் செய்து வந்தமையிற் கலவாணிகன் சாத்தனாரெனவுங் கூறப்படுவார். வணிகமரபினர், பௌத்தமதத்தினர் சிலப்பதிகாரத்திற் கூறிய கண்ணகியோடு மதுரைமாதெய்வம் வந்து வினவியபொழுது வெள்ளியம் பலத்திற் சயனித்திருந்தவர் அங்குப் பேசியவற்றைக் கேட்டிருந்து அத்தெய்வம் கண்ணகியை விடுத்து நீங்கிய பின்னர் அக்கண்ணகி அறியாதபடி அவள் பின் சென்று சேர நாடு புகுந்து சேரன் செங்குட்டுவனுக்கு நிகழ்ந்ததைத் தெரிவித்து, அவன் தம்பி இளங்கோவடிகள் அக்கண்ணகி சரிதமாகிய சிலப்பதிகாரத்தைப் பாட அச்சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய மணிமேகலைத்துறவைத் தாமே பாடி வெளியிட்டார். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடினவர். (புறம் 59) இவர் முல்லையொழிய ஏனைய நானிலங்களையும், பாடியுள்ளார். அடிமரங்களில் சுரிமூக்கு நொள்ளைகள் மழைக்காலத்தேறி ஒட்டிக்கொள்வதைக் கூறியுள்ளார் (அகம் 53) வெளிமான் கொம்பினை வாழைப்பூ உதிர்ந்த தாற்றோடு உவமித்துள்ளார் (அகம் 134) யாவரும் வியக்குமாறு உள்ளுறை கூறியுள்ளார். (அகம் 306,320) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (36,127,339) பாடல்களும், குறுந் தொகையி லொன்றும். அகத்திலைந்தும், புறத்தி லொன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் சங்கமருவவரும் நூல்களில் குற்றம் காணுந்தோறும் கையிலிருக்கும் எழுத்தாணியால் அது பொறாது குத்திக்கொள்வது வழக்கம். ஆதலின் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது என்பர். இது கட்டுக்கதை.

சீநக்கன் முதலியார்

இவர் சோழனுக்கு மந்திரியார். அரசூரில் சிற்றரசு புரிந்தவர். இவர் பொய்யாமொழியுடன் நட்புக்கொண்டவர். இவர் பொய்யாமொழிப் புலவர்க்குக் கட்டுச்சோறு கொடுத்து “அளி கொளுந் தொடையா னாசைக்குமன், ஒளிகொள் சீனக்கனின்று வந்திட்ட சீர்ப், புளியஞ்சோறுண்ட புந்தியிற் செந்தமிழ்த், தெளியும் போதெலாந் தித்தியாநிற்குமே” எனக் கவிபெற்றவர். ஒருநாள் இருவரும் மஞ்சத்தில் வேடிக்கையாக வார்த்தையாடிக்கொண்டு இருக்கையில் பொய்யாமொழி யுறங்க, முதலியார் அரசன் அலவலாக மஞ்சத்தைவிட்டு நீங்கினர். முதலியார் மனைவி தமது கணவர் படுத்து உறங்குகிறாரென எண்ணிப் புலவர் அருகு படுத்து நித்திரை செய்தனர். முதலியார் அரசன் காரியம் முடித்து வந்து மஞ்சத் தில் இருவரும் இருக்கக்கண்டு புலவரைச் சற்று ஒதுங்க இடம் கேட்டு ஐயமிலாது இருவருக்கும் நடுவில் படுத்து நித்திரை செய்தனர். விடிந்து ஒருவர் பின் ஒருவராக வெளிவரக் “கண்டவர்களால் இச்செய்தி ஊர் முழுதும் பரவியது. இது அரசன் வரையிற் செல்லவே அரசன் புலவரை அழைத்துக் கேட்கப் புலவர் “தேரையார் செவ்விளநீர் உண்ணாப் பழிசுமப்பர், நாரியார் தாமறிவர் நாமவரை நச்சாமை, கோரை வாய் பொன் சொரியும் கொல்லி மலை நன்னாட, ஊரைவாய் மூட உலைமூடி தானிவயே” என்றனர். இதனைக் கேட்ட அரசனும் முதலியாரும் முன்போலவே புலவரிடம் நட்புக் கொண்டிருந்தனர். பின் சிலநாள் கழித்துப் புலவர் நீங்கிய காலத்து முதலியார் மரணம் அடைந்தபோது புலவர் கேட்டு இடுகாடு அடைந்து சிதையில் வேகும் உடம்பை “அன்று நீ செல்வக் கிடவென்றாயா ருயிர்விட், டின்று நீவா னுலக மெய்தினாய் வென்றி திகழ், மாகக்கபூண்முலையார் மாரனே தெள்ளாசூர், சீதக்கா செல்லக்கிட” என இடம் கேட்கப் பிரேதம் இடங்கொடுக்கப் புகழ் அடைந்தவர். பொய்யாமொழியைக் காண்க. இவர் காலம் கி. பி. 17ஆம் நூற்றாண்டாயிருக்கலாம் என்பர்.

சீனன்

விஷ்ணுவின் அவதாரமாகிய புத்தமூர்த்தியைப் பெற்றவன். கீகடதேசத்தரசன்.

சீனம்

ஆசியாகண்டத்துள்ள ஒரு தேசம் China.

சீபட்டர்

பகவத்கீதை தமிழால் ஆக்கிய புலவர்.

சீபதிபண்டிதர்

இவர் ஒரு வீரசைவ அடியவர். அரசன் சபையில் ஒருவர் இவர்க்கு முன் சிவனடியவர்க்குக் கோடி வேதியர் ஒப்பர் என்றுகூற இவர் நெருப்பைச் சீலையில் கட்டித் தொங்கவிட்டுச் சிவனடியவர்க்கு வேதியர் ஒருபோதும் ஒவ்வார் என்றனர். இவர் நெருப்பைச் சீலையில் கட்டியதால் வேதியரிடம் அக்கிரி அடங்கியது.

சீபலதேவன்

விச்சலராஜன் மந்திரி இவரது இருக்கையைக் கலியாணபுரம் எனவங் கூறுவர்.

சீப்பு

பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் தந்தத்தாலும் பல சிறு பற்களுடன் செய்யப்பட்ட சற்றகன்ற கருவி. இது. பேன் அழுக்கு முதலிய நீக்குதற்குதவி சிக்கறுக்கும்.

சீமந்தம்

பிரதமகர்ப்பமான 4ம், 6ம், 8ம் மாசங்களிலே பும்ஸவனத்துக்குச் சொல்லிய திதி வார நக்ஷத்திரங்களிலே சிங்கம், விருச்சிகம் ஒழிந்த லக்கினங்களி லே 5, 8, 12ல் பாபக்கிரகங்களை நீக்கி ஒன்பதாமிடஞ் சுத்தியாகப் பூர்வான்னத்தில் சீமந்த கருமஞ் செய்வது.

சீமந்தினி

இவள் சித்திரவர்மன் குமரி, இவள் தனது பதினாலாவது வயதில் மங்கலமிழப்பள் என நிமித்திகர் சொல்லக் கேட்ட தந்தை விசனத்துடன் இருந்த னன், இச்செய்தியைச் சீமந்தினி கேட்டு விசனமடைந்து யஞ்ஞவல்கிய முனிவ ரின் தேவியாகிய மைத்திரியிடஞ்சென்று கூறினள். அவள் சீமந்தினிக்குச் சோம வாரவிரதம் அநுஷ்டிக்கக் கற்பித்தனள். சீமந்தினி சோமவார விரதத்தை விடாது அநுட்டித்து வரும் நாட்களில் நிடகதேசா திபனாகிய சந்திராங்கதனை மணந்தனள். சந்திராங்கதன் ஒருநாள் சிநேகருடன் யமுனையில் தோணியில் ஏறிச் செல்லுகையில் எல்லாரும் இறக்க இவன் மாத்திரம் தப்பிப்பிலத்தின் வழிச்சென்று நாகலோகம் அடைந்து நாகராசனால் ஆதரிக்கப்பட்டு அங்கிருந்தனன், சீமந்தினியும் அவள் தந்தையும் சந்திராங்கதனுக்குத் தந்தையாகிய இந்திரசேனனும் கேட்டு விசனமடைந்து செய்யவேண்டிய கிரியைகளை முடித்துச் சீமந்தினியின் மங்கலசூத்திரம் முதலியவற்றை நீக்கினர். முன் சென்ற சந்திராங்கதன் நாகராசனால் உபசரிக்கப்பட்டுப் பல பரிசுகளைப் பெற்று நீங்கி யமுனைத்துறையில் சோமவாரவிரதத்தின் பொருட்டு நீராடவந்த நீமந்தினியைக் கைமையாய்க் கண்டு தன்மனைவி எனத்தேறி அவளது ஊர், பெயர் முதலிய வினவினன். அவள் தன்னிலையும் தன் மாமன் முதலியோர் பகையரசரால் சிறைப்பட்டமையும் கூறக்கேட்டு இன்னும் இரண்டு நாட்களில் உன் புருஷன் உன்னிடம் வருவன் நான் அவனது நண்பன் என நீங்கி நிடதநாடு சென்று பகைவரை வென்று தன் மாமன் முதலியோர்க்குத் திருமுகம் எழுதி மறுமணங்கொள்ள மங்கலம் பெற்றவள். இவ்வகைச் சீமந்தினி புருஷனுடன் சோமவாரவிரதம் அநுட்டித்து வருகையில் வேதமித்திரன் புத்திரனாகிய சுமேதா என்பவனும் சதார்ச்சு தன் புத்திரனாகிய சாமவான் என்பவனும் கூடித் தாம் கலியாணஞ் செய்து கொள்ள அரசனிடம் பொருள் பெறச் சென்று கேட்க அரசன் இவர்களைப் பார்த்துச் சீமந்தினி சோமவாரத்தில் நீங்களிருவரும் ஸ்ரீபுருஷ உருவடைந்து சென்று அவள் தரப்பெற்ற பொருளால் மணம் முடித்துக் கொள்ளுங்கள் அவ்வகை போகாதிருப்பின் தண்டிப்பேன் என்றனன். வேதியர் இருவரும் அப்படியே ஒருவன் பெண்ணுருவாகவும் மற்றவன் ஆணாகவும் சென்றனர். சீமந்தினி அவர்களை உமாமகேசுரராகப் பூசித்து வேண்டிய கொடுத்தனள். பொருள் பெற்றவர்கள் நீங்கிச் செல்லுகையில் பெண்ணாக நடித்தவன் பெண்ணுக்குரிய அங்கங்களைப் பெற்றுக் காமத்தால் வருந்திப் புருஷனை அணைந்தனன். இவன் தந்தை தன் ஒரு புத்திரன் பெண்ணானது அறிந்து என் புத்திரன் உன்னால் பெண்ணாயினன் எனக்கு வேறு புத்திரர் இலாமையால் என் உயிரை உன் முன் போக்கிக் கொள்ளுகிறேன் என்றனன். இதைக் கேட்ட அரசன் பயந்து உமையை நோற்றுக்கேட்க உமாதேவியார் என் அன்பர்க்கு மாறுசெய்யேன் ஆதலால் வேறு புத்திரப் பேறு அளிப்பன் எனக்கூறக்கேட்டு வேதியனுக்குக் கூறி அவனுக்கு வேண்டிய அளித்துப் பெண்ணான புருவனுக்குச் சாமவதி எனப் பெயரிட்டு இருவருக்கும் மணம் முடித்தனன். (பிரமோத்தர காண்டம்.)

சீமாலிகன்

கண்ணனால் தலையறுப்புண்டவன், பெரியாழ்வார் 2. ஆம் பத்து.

சீமுதன்

வியோமசு தன் குமரன். இவன் குமரன் விகுருதி. 2. ஓர் யாழ்வல்லவன். தும்புருக்கு நண்பன்.

சீமுதவாகனன்

ஒரு காந்தருவன். இவன் தன் தேகத்தைக் கருடனுக்கு இரையாகக் கொடுத்து ஒரு நாககுமரனைப் பிழைப்பித்தவன்.

சீயகங்கன்

கொங்குமண்டலத்துச் சைக அரசன். பவணந்தி முனிவரை நன்னூல் என்னும் இலக்கணம் செய்யக் கேட்டுக் கொண்டவன். இவன் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவன். இவனுக்கு அமராபாணன், வகுளலாபுர பரமேசுரன், கங்ககுலோத்பவன் எனவும் பெயர். பவணந்தி காண்க.

சீயராண்டான்

எழுபத்துநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.)

சீரகம்

இது சம்பாரப் பொருள்களில் ஒன்று. அதிநுட்பமான பயிர். சமசீத வுஷ்ணமுள்ள இடங்களில் பயிராவது. தைலசத்துள்ளது. இதைப்பல நோய்களுக்கும் உபயோகிப்பர். இச்சாதியில் கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிளப்புச்சீரகம், பெருஞ்சீரகம், நக்ஷத்ரசீரகம், நாய்ச்சீரகம் முதலிய உண்டு.

சீரதன்

சித்திரரதன் குமரன். இவன் குமரன் விருஷ்டிமான்.

சீரத்துவசன்

சநகன்.

சீராமப்பிள்ளைபட்டர்

பராசபட்டருக்குச் சகோதரர். எழுபத்துநாலு சிம்மாசனாதி பதிகளில் ஒருவர். (குருபரம்பரை.)

சீராளதேவன்

சிறுத்தொண்டர் புத்திரன்.

சீராவண சுகல சதுர்த்தி விரதம்

ஆவணி சுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி இராத்திரியில் வியாபித்திருப்பது விசேஷம்,

சீர்

1. அசைகள் சிறுபான்மை தனித்தும் பெரும்பான்மை இரண்டு முதலாகத் தொடர்ந்தும் வருவதாம். அச்சீர், ஓரசைச்சீர். ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகைப்படும். 2. சீர்களின் (தொகை, வகை, வரி) 1. இயர்சீர், 2. உரிச்சீர், 3. பொதுச்சீர் என்னும் தொசையானும்; 1. நேரீற்றியற்சீர், 2. நிரையீற்றியற்சீர், 3. நேரீற்றுரிச்சீர், 4. நிரையீற்றுரிச்சீர், 5. நேரீற்றுப் பொதுச்சீர், 6. நிறையீற்றுப் பொதுச்சீர் என்னும் வகையானும்; 1. சிறப்புடை நேரீற்றியற்சீர், 2. சிறப்பில் நேற்றியற்சீர், 3. சிறப்புடை நிரையீற்றியற்சீர் 4. சிறப்பில் நிறையீற்றியற்சீர், 5. சிறப்புடை நேரீற்றுரிச்சீர், 6. சிறப்பில் நேரீற்றுரிச்சீர், 7. சிறப்புடை நிரையீற்றுரிச்சீர், 8. சிறப்பில் நிரையீற்றுரிச்சீர், 9. சிறப்புடை நேரீற்றுப்பொதுச்சீர், 10 சிறப்பில் நேரீற்றுப்பொதுச்சீர், 11. சிறப்புடை நிறையீற்றுப்பொதுச்சீர், 12 சிறப்பில் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் விரியானும் 12 ஆம், (யா~வி.)

சீர்காழித்தலபுராணம்

இது சீர்காழி மகாத்மியம் கூறிய நூல், இது தமிழில் சீர் காழி அருணாசலக் கவிராயர் அவர்களால் இயற்றப்பட்டது,

சீர்க்காரி

ஒரு இருடி, இவன் தன் குமரனுக்குத் தன் பெண்சாதியைக் கொல்லும்படி கட்டளையிட்டனன். குமரன் தந்தை சொல்லை மறுக்கவுங் கூடாது தாயைக் கொலை செய்யவும் கூடாது யாது செய்வது என்று தன் உயிர் போக்கிக்கொள்ள இருக்கையில் சீர்க்காரி நாம் கோபத்தாற் சொன்னோமே குமரன் சொன்ன வண்ணம் செய்தானோ என்னமோ என அவர்களிடத்து இரக்கப்பட்டு வீடுவந்து இருவரும் பிழைத்திருக்கக் கண்டு களித்தவன். இவன் குமரன் மேதை,

சீர்த்தி

உதய குமரனுடைய தாய் நெடுமுடி கிள்ளியின் தேவி. மாவலி பரம்பரையாள். (மணிமேகலை.)

சீலகன்

மாகதனைக் காண்க.

சீலம்

(10). கொல்லாமை, பொய்சொல்லாமை, களவின்மை, காமமின்மை, பிறர் பாலிரவாமை, உயர்ந்த ஆதனத்திருத்தல், கிடத்தலின்மை, சந்தனம், மாலை முதலிய தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, உதியத்திற்கு முன்பு புசித்தல் (பௌத்தம்)

சீலவிருத்தன்

கபிலன் என்னும் வேதியனுக்கும் சுகுளை யென்பவளுக்கும் பிறந்து மகாபாதகஞ் செய்து புள்ளிருக்கு வேளூர்த் தீர்த்தக்கரையில் இருந்த விபூதி முடிப்பைப் பொற்பை யென்றெடுத்த புண்ணியத்தால் நலமடைந்தவன்.

சீலை

கௌண்டின்னியர்க்குப் பத்தினி.

சீல்

இது நீர்வாழ் பிராணிகளில் ஒன்று. இது வடகடலின் பாகங்களிலும் சீதளபிரதேசங்களிலும் வசிக்கிறது. இது திமிங்கிலவகைகளில் வேறுபட்டது. இதன் தலை உருண்டு இருக்கிறது. இவ்வினத்தில் பலவகை உண்டு. இவற்றில் பெரும்பாலன உடல் ஒத்துத் தலை வேறுபட்டவை இதன் உடல் பருத்து நீண்டு மழமழப்பா யிருக்கும். இவ்வினத்தில் காதில்லாதன, காதுள்ளன, வாலரஸ் என (3) வகை உண்டு. காதில்லா இனம் ஹார்ப்பு சீல், மார்பில் சீல், கடற்பசு, யானைச்சில், கொண்டைத்தலைசீல். காதுள்ளவை நாய் முகச்சீல், கடற்சிங்கம், கடற்சிறுத்தை கடற்கரடி என்பன. வாலாஸ் என்பவை பெரிய சீல்கள். கடற்சிங்கம்: இது சீலினம், சிங்கத்தைப் போல் முகமும் பற்களும் பிடரிமயிரும் பெற்றுள்ளது. சிங்கம் நகங்களும் பெற்றது. கடற்பசுச்சிலுக்கு: முகம் மாடுபோன்றிருக்கிறது. யானைச் சீலுக்கு: இதன் மூக்குத் துதிக்கை போல் நீண்டு யானையின் வாய்போல் தலையின் கீழ்ப்பாகத்திலிருக்கிறது. கொண் டைத்தலைச்சிலுக்கு: தலையில் ஒருவகைத் தசைத் திமில் கொண்டைபோல் 7, 8 அங்குலம் உயர்ந்திருக்கும் பாசில்: ஒன்றுண்டு அதனுடம்பில் மயிரடர்த்தி, கடற்கீரி: இதனுடல் நீண்டு கால் குறுகியிருக்கும், இதற்குக் கரடிபோன்று கீரியொத்தலாலு மிருக்கிறது, நாய்முகச்சீல்: நாயின் முகம் போல முகமுள்ளது. இவ்வினத்தில் கடற்சிறுத்தை, கடற்கரடியும் உண்டு.

சீவஉபாதி ஏழு

அநிசத்வம், கிஞ்சிஞ்ஞத்வம், பரிச்சின்னதவம், மாயாசகித்வம், அற்பசத்தித்வம், பராதீனதவம், அபரோக்ஷத்வம் இவற்றைக் காரிய உபாதியென்பர். ஆன்மா இவற்றை நீங்கின் சமாதி பெறுவன். (திருமந்திரம்.)

சீவகன்

1. கத்ரு குமரன், 2. இவன் ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தில் அரசாண்ட சச்சந்தன் தன் மனைவி விசையையுடன் இருந்ததை யறிந்த கட்டியங்காரன், சச்சந்தன்மீது படையெடுத்துத் தோல்வியடையச் செய்தனன். சச்சந்தன் தன் தோல்வியும் மரணத்தையும் அறிந்த கர்ப்பிணியாகிய சச்சந்தன் மனைவி, பகைவன்கைக்கு அகப்படாமல் மயிற்பொறிமேல் ஏறி ஆகாய வழியிற்சென்று ஒரு சுடுகாட்டில் இறங்கினள். அவ்விடம் சீவகன் பிறந்தனன், கந்துக்கடன் என்னும் வணிகன் இறந்த தன் குழந்தையைப் புதைக்க அந்தச் சுடுக்காட்டில் வந்து அவ்விடம் தனித்திருக்கும் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து வளர்த்து வந்தனன். இவன் வளர்ந்து சாகசச்செயல் செய்து வருகையில் இவனது சாகசச்செயல் அறிந்த கட்டியங்காரன் கொல்ல யத்தனிக்கையில் தப்பிக்கோவிந்தையை மணந்து வேறு நாடுசென்று காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை முதலிய வரையும் மணந்து தன் தந்தையைக் கொன்ற கட்டியங்காரனைக் கொன்று சற்புத்திரரைப் பெற்று நாட்டைக்காத்து அறம் கேட்டு முத்தி அடைந்தவன். இவன் புத்திரர் சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன். (சீவகசிந்தா.)

சீவசம்போதனை

இது சைநமத சித்தாந்த நூல் மகததேசாதிபதி கேட்கக் கௌதம கணாதிபரால் கூறப்பட்டது. இதனைத் தேவேந்திரமாமுனிவர் கூறினர்.

சீவடன்

ஒரு சந்நியாசி. இவன் முதலில் நித்திரை செய்து பிராமணணாய்ப் பின் அரசனாய்ப் பின் தெய்வப்பெண்ணாய், அவள் மானாய் அது பூங்சொடியாய் அது வண்டாய் அது யானையாய் அது அன்னமாய் மாறினவன். (ஞானவாசிட்டம்).

சீவதேகம்

(3) தூலம், குக்குமம், காரணம்,

சீவநதிகள்

எப்போதும் இடையறாமல் ஓடும் நதிகளுக்கு ஜீவநதிகள் என்று பெயர். (பூகோளம்.)

சீவரத்தினங்கள் ஏழு

அவை அரசலக்ஷணமுள்ள யானை, எல்லாம் செய்ய வல்ல சிற்பி, கற்புடைய பெண், வல்லசேனாபதி, பண்டாரம் காப்போன், உற்பாதம் கூறும் நிமித்திகன், நல்ல லக்ஷணமுள்ள குதிரை.

சீவர்த்தமான சுவாமிகள்

வர்த்தமான தீர்த்தகரைச் காண்க.

சீவலன்

1. இருதுபர்ணன் குதிரைக்காரன். 2. ஒரு இருடி, இவன் புத்திரன் பிர பாகன்.

சீவலமாரபாண்டியன்

பாண்டியவம்சத்தவன். சங்கரநாராயணர் சோயிற் புராணம் பாடியவன்.

சுகச்சாயை

சிஷ்டியின் மனைவி.

சுகண்டன்

அசுவக்கிரீவன் தம்பி.

சுகண்டன்

அச்சுவக்கிரீவன் தம்பி. (சூளா.)

சுகதன்

புத்தன். (மணிமேகலை.)

சுகதருஷி

வைபாடிக மத நிர்மாணகன்.

சுகநாகன்

நந்திவர்த்தனன் குமரன். இவன் குமரன் காகபர்ணன். இவன் வமிசத்திற் பிறந்த பத்து அரசர்கள் கலியில் (360) வருஷம் ஆளப்போகிறார்கள்.

சுகநாசன்

தாராபீடனது அமைச்சன். வைசம்பாயனனது தந்தை,

சுகந்தகிருது

சோமகன் குமரன்.

சுகன்

ஒரு ஷத்திரியன், சுபலன் புத்திரன். 2. பார்க்கவ சியவனாக்குப் பாரி,

சுகன்னி

1. சையாதி அல்லது யயாதியின் குமரி. இவள் தந்தையுடன் வனத்திற்குச் சென்றகாலத்துச் சௌநகமுனிவர் தவஞ்செய்து கொண்டிருந்த புற்றின் வழிச் சென்றனன். அந்தப்புற்றில் ஒரு ஒளிதோன்ற இவன் அதனைக் குத்தினள். இவர் குத்தினது கண்ணாதலினால் அரசன் சேனைக்கு இருவிழிகளும் அடைந்தன. அதனால் அரசன் திடுக்கிட்டு வினவி நடந்தது அறிந்து சியவனருஷிக்குத் தன் குமரியை மணஞ்செய்வித்தனன், இவளை அச்வதி தேவர் கண்டு நீ அதிரூபவதி தவசிக்கு இணங்கி இருக்கிறாய் என்ன அதனைக் கணவர்க்கு அறிவிக்கக் கணவர் சொற்படி உங்களில் ஒருவர் ஏற்படுங்கள் என அவர்கள் இருடியிடம் வந்து மூவரும் தடாகத்தில் ஸ்நானஞ்செய்து ஒரே உருவமாகக் காணப்பட்டனர். சுதன்னி கணவரைத் தியானித்து மூவரில் ஒருவரைத் தொடத் தொட்டவர் சியவனராயிருக்க அஸ்வினி தேவர் இருடிக்கு யௌவனமளித்துச் சென்றனர். ஒருமுறை சியவனர் இளமை கொண்டது அறியாத இவளது தந்தை இளமைகொண்ட கணவருடன் இருந்த குமரியைக் கண்டு கற்பு நீங்கினை என்று குமரியைக் கோபித்தனன். குமரிசியவனராகிய தம் கணவருக்கு இளமைவந்தவரலாறு கூறித் தேற்றினள். இவளது மற்றைச் சரிதைகளைச் சையாதிசியவனரைக் காண்க.

சுகமுனி

1, வியாசர் குமரர். வியாசர் புத்திரப்பேறு வேண்டிச் சிவபிரானை நோக்கி யாகாதிகாரியஞ் செய்யத் தனித்து அரணியைப் பிடித்துக் கடைகையில் கிருதாசி என்னும் அப்சரசு தோன்றி யவரைக் காமத்தில் மூழ்குவித்துத் தான் சுகம் என்னும் கிளியுருக்கொண்டு இருக்கையில் வியாச வீரியம் அரணியில் விழுந்தது. அதனால் சுகர் பிறந்தனர். சுகரூபியாகிய இவளால் பிறந்தவ ராதலால் சுகர் எனப் பட்டனர். இவர் பிறக்கையிற்றானே மகாஞானியாய் இருக்கையில் நாரதர் இவர்க்கு ஞானங்கூற அதனால் இவர், தந்தையை விட்டு நீக்க வியாசர் பின்தொடர்ந்து “சுகசுக” என்றழைத்தமையால் மரங்கள் முதலிய ஓய் என்று விடை தந்தன. இவர் தவம்நோக்கிச்செல்லுகையில் பின்றொடர்ந்த வியாசரைசோக்கி நீராடிய அரம்பையர் தெற்றென எழுந்து சேலையுடுத்தனர் சுகரை நோக்கி எழுந்திராததினால் சுகர் வியாசரைக் காட்டிலும் உலகவியாபார மற்றவர். சநகரிடத்து ஞானோபதேசம் பெற்றவர். இவர் ஆகாசமார்க்கமாய்ச் சூரியமண்டலத்தில் தேசத்தைத் தகித்து முத்தி பெற்றனர். வியாசரும் கிளியுருக் கொண்டு புணர்ந்து சுகர் பிறந்தனர் என்ப. சுகர் 12 வருஷம் தாய் வயிற்றில் தங்கிப் பிறந்து மாயை நீக்கினவர். இவர் தம் சாயா உருவத்தைப் பூமியில் வைத்துத் தான் முத்தியடைந்தனர். என்பர். 2. இராவணன் தூதுவர்களில் ஒருவன், வானரசேனைகள் சமுத்திர தீரத்தில் தங்கியிருக்குங்காலை உளவறிந்து அறிவிக்கவந்து விபீஷணாற்கட்டுண்டவன். 3. யமனுக்குச் சாந்தியிடம் உதித்த குமரன். 4. சூரபதுமனுக்கு மந்திரி. 5. (பிர.) பலியின் மனைவியிடம் தீர்க்க தபசால் உதித்த குமரன்,

சுகர்நன்

யஞ்ஞமூர்த்திக்குத் தஷணையிடம் உதித்த குமரன்.

சுகர்மன்

சைமினிருஷியின் குமரனாகிய சுமந்தன் புத்திரன். இவன் இருடி,

சுகலன்

பாண்டி நாட்டில் குருவிருந்த துறையிலிருந்து சுகலை எனும் தன் மனைவியுடன் கூடிப் பன்னிரண்டு புத்திரர்ககளைப் பெற்று அவர்களிடத்து இருந்த அன்பினால் எது செய்யினும் கேளாதிருக்கத் தாய் தந்தையர் பாண்டியனாலும் அவன் சேனாபதி சற்சரனாலும் இறந்த காலத்து வேடருடன் அப்பிள்ளைகள் கூடி வியாழபகவான் தவத்திற்கு இடையூறு செய்து அவராற் பன்றிகளாகச் சபிக்கப்பட்டுப் பன்றியின் வயிற்றில் உதித்துத் தாய் தந்தையர் இறக்கச் சிவமூர்த்தியால் பாலூட்டி வளர்க்கப் பெற்றுச் சிவமூர்த்தியின் கட்டளைப்படி சுகுணபாண்டியன் மந்திரியராகி முத்தி பெற்றனர். முற்கூறிய சுகலன் பூருவம் ஒரு விச்சாதரன் புலத்தியர் தவத்திற்கு இடையூறாக வீணை யிசைபாடி அவரால் பன்றியாசச் சபிக்கப் பட்டவன், (பழனித்தல புராணம்.)

சுகவர்மா

சயமுனி மாணாக்கர்.

சுகஸ்தன்

திருதராட்டிரன் புத்திரன்.

சுகாசநமூர்த்தி

தம்மையடுத்த மாணாக்கர்க்கு ஞானோபதேசஞ்செய்யச் சுகாசனத்தில் எழுந்தருளிய சிவன் திருமேனி.

சுகாநந்தர்

இவர் பாகவதபக்தி யுடையராய் அரிபூசைசெய்து பாகவதருண்ட சேடங்கொண்டு வருநாட்களில் இவரிடத்து அசூயை கொண்ட சிலர் வட்டுப்பலகாரத்தை இது பெருமாளுக்கு நிவேதனமான துண்க என அவ்வாறுண்டு விழுங்கியபின் இது தக்கவனல்லான் செய்தது இதனையுண்ட நீர் பிராயச்சித்தஞ் செய்தி கொள்ளல் வேண்டுமென்னத் தாசர் தாமுண்ட பலகாரத்தை யவர்காண அவர்கள் கொடுத்தது போலவே மீண்டும் தர, கண் டோர் பயந்து அபராதக்ஷமை வேண்டிச் சென்றனர். பின் தாசர் யாத்திரை செய்ய விரும்பி மனைவியாரை நோக்கி நீ பெருமாளையும் பாகவதரையும் பூசித்திருக்க வெனக் கூறிச் சென்றனர். தாசர் ஊரிலில்லாமை கண்ட காமுகன் ஒருவன், அவர் மனைவியாரிடம் வந்து நான் பாகவதன் என் காம எண்ணத்தை முடிக்க எனக் கேட்ட சரகர் என்னும் தாசர் தேவியார், அதற்குடன் பட்டுப் பாகவதராக வந்த காமுகனுக்கு அன்னமுதவிய பரிமாறினர். காமுகன் பொழுது சாயக் களிப்புடனிருக்கையில் சரசுரீ படுக்கை திருத்தித் தம் நாயகரையும் பெருமாளையும் மனத்தெண்ணிப் படுக்கையறைக்கு அழைக்கக் காமுகன் வாசற்படியருகு செல்ல ஆங்கு அந்த அம்மையார் காமுகன் கண்ணுக்குப் பெரும்புலியாக இருக்கக்கண்டு இவனை யுறுத்துநோக்கக் காமுகன் பயந்து வெளி வந்து விடிந்தபின் அம்மையார் வீடுமுதலிய சுத்திசெய்கையில் பாதம்பணிந்து தாசனாயினன்.

சுகாமர்

பதின்மூன்றாம் மன்வந்தரத்துத் தேவர்.

சுகி

1 பதினான்காமன்வந்தரத்து இந்திரன். 2. தருமப் பிரசாபதியின் குமரி. கிளிகளைப் பெற்றவள்.

சுகிருதி

பிரதி குமரன், இவன் குமரன் விப்பிராசன்.

சுகிர்தன்

திருதராட்டிரனுக்குக் குமரன்.

சுகீரீ ஆரன்

ஒரு அசுரன். இவன் புலி மேல் ஏறி ஆகாயவழியிற் செல்கையில் திருமழிசையாழ்வார் யோகப் பிரபாவத்தால் புலி அவ்வழி செல்லாது மறுக அசுரன் இறங்கி இவர் பெரியவர் என மதித்து அவருக்குக் கவசமும் மணிமாலையுங் கொடுக்க அவர் மறுக்கக்கண்டு கொண்டாடிச் சென்றவன்.

சுகீலகிருஷ்ண ஏகாதசி

மார்ச்க சீர்ஷ் சுசலபக்ஷத்தாயினும், கார்த்திகை யிலாயினும் ஏகாதசி வியாபிப்பது. இதில் தசமியில் ஒருவேளை புசிப்புள்ளவனாய் ஏகாதசியில் நியமத்துடன் கணேசரைச் சோடச உபசாரத்துடன் பூசித்துச்சதுரச்ச வேதிகையில் காரெள் பரப்பி அதன் மீது பதினாறு இதழ்க்கமலமெழுதி அதினடுவில் கும்பம் நிறுத்தி அதில் நிறையக் காரெள் நிரப்பிக் கறுப்பு வஸ்திரம் தரித்து, இரண்டு அரசந்தளிர் பஞ்சரத்ன மிட்டுச் சங்கர்ஷணாதியரையும், கணமாத் ருகைகளையும், ஷேத்ரபாலகரையும், பூசித்து மற்றப்பக்கத்தில் சுக்ல ஏகாதசியின் பொருட்டு வெள்ளெள் பரப்பி, வெள்ளை வஸ்திரம் கலசத்திற் கணிந்து, மேற்கூறிய தேவகணங்களைப் பூஜித்துக் கும்பத்தை யெடுத்து விட்டு வசுமி நாராயணனை அவனது அஷ்ட லக்கமிகளுடனும் பரிஜனங்களுடனும் ஆவாகித்துப் பூஜித்து, திக்பாலகர்களையும், மற்றத் தேவர்களையும் பூசித்துத் தானாதிகள் செய்து விரதமிருந்து மறு நாள் ஸ்தானாதிகள் முடித்து ஓமாதிகள் செய்து தேவதாஹவிகொடுத்து விரதமிருந்து மறுநாள் பாரணஞ் செய்க, இவ்வாறு செய்தவர் விஷ்ணுபதம் பெறுவர்.

சுகுணகுணபாண்டியன்

1. இராசாதிராச பாண்டியனுக்குப் பின் அரசுபுரிந்தவன். கரிக்குருவிக்கு உபதேசித்தது இவன் அரசாட்சியில் ஆம். 2. இராசராசபாண்டியனுக்குக் குமரன். இவன் காலத்துச் சிவமூர்த்தி பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டி மந்திரிகளாக்கினர். இவன் குமரன் சித்திரவிரத பாண் டியன்.

சுகுணசேகரபாண்டியன்

சகுணபாண்டியனுக்குப் பின் அரசாண்டவன்.

சுகுணன்

1. வீமனுக்குச் சலதரையிடம் பிறந்த குமரன். 2, பிரமசேநன் குமரன், 3. கிருஷ்ணசர்மனுக்குத் தந்தை.

சுகுணபாண்டியன்

இவன் திருப்பெரும்துறைக்கு 300 வேதியரை வருவித்து அவர்களுக்கு மானிய முதலிய சொத்து வைத்தான். இந்த வேதியரின் பிள்ளைகளுக்குச் சிவமூர்த்தி வேதியராய் வந்து வேத முதலியன வோதிவைத்னர். இவ்வகை வாழுநாட்களில் சுகுணபாண்டியனுக்குப் பின் வந்த வாதுங்கபாண்டியனும் காலம் சென்றனன், இவன் குமாரன் கௌமார பாண்டியன் இவனாசில் உலுண் பாகன் எனும் குறும்பாசன் வேதியர்க்குக் கொடுத்த மானியத்தைப் பிடுங்கிக் கொண்டான். வேதியர் கௌமாரபான் டியனிடம் முறையிட்டனர். பாண்டியன் உங்கள் நிலம் என்பதற்கு அடையாளம் என்ன என்றனன். உபாத்தியாயராக இருந்த வேதியர் எமது நிலம் வெட்டச் சுரக்கு மியல்பினது என்றனர். அவ்வாறே குறும்பரசனும் பாண்டியனும் சென்று வெட்டப் பெருந்துறையாக நீர் சுரந்தது ஆதலால் ‘பெருந்துறை’ நாமம் உண்டாயிற்று.

சுகுணை

சீலவிருத்தனைக் காண்க.

சுகுமாரன்

1, புளிந்தநகரத்து அரசன். 2. திருஷ்டகேதுவின் தந்தை. திருஷ் டகேதுவின் குமரன் என்றும் கூறுவர். இவன் குமரன். விதிகோத்திரன், 3. வீதிஹோத்திரனுக்குத் தந்தை. 4. இவன் ஒரு வேதியன். காமத்தால் பல பெண்களை மயக்கிவந்தனன். இவனை யரசன் ஊரைவிட்டுத் துரத்தக் காட் டிற் சென்று புலைச்சியைக்கூடி மனைவியிறக்கப் பெண்களைப் புணர்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்று வழிபறித்துத் திரிகையில் காவலர் பிடிக்கத் தொடர அக்காடு விட்டு வேறு காட்டிற்குச் செல்லுகையில் நாககன்னியர் சிவபூசை செய்வதைத் தரிசித்து இறந்தபின் யமபடர் பற்றச் சிவகணங்களால் தடையுண்டு சிவபதம் அடைந்தவன்.

சுகுமாரி

ஓர் பார்ப்பினி. இவள் விதூமன் எனும் காந்தருவனைக் குரங்காகச் சபித்தவள்,

சுகுருசர்

விபுலரின் குமரர். இவர்க்கு நான்கு குமரர், இவர்களே தருமபக்ஷிகள் ஆனவர்கள்,

சுகுர்ச்ரன்

கௌர்ச்சனைக் காண்க.

சுகேசன்

1. சாலகடங்கடை, வித்யுத்கேசன் என்பவனைப் புணர்ந்து பெற்ற குமரன். இவனைச் சாலகடங்கடை பெற்றுக் கணவனைப் பிரிந்திருக்க மனமில்லாமல் காட்டில் விட்டுச் சென்றனன். இக்குழந்தையைச் சிவமூர்த்தியுடன் அந்தரத்தில் வந்த உமாதேவியார் கண்டு இறங்கி இனி அரக்கர் குழந்தைகள் பிறந்த காலத்திற்ராமே வளர்ந்து பருவமடைய வரம் தந்து போயினன். இதனால் இவன் பருவம் பெற்றுக் கிராமணியின் குமாரியை மணந்தனன். 2. சிவகணத்தலைவரில் ஒருவன். 3. பரத்வாசர் புத்திரன். 4. சிலோச்சயநகாத்து வாணிபன். இவனுக்கு அறுவர் குமரர்கள். இவ்வறுவரும் மணிமுத்தாநதியில் மூழ்கி இஷ்ட சித்தி பெற்றனர்.

சுகேசி

காந்தாரராஜ புத்திரி. கிருஷ்ணன் பாரியை, (பாரதம்.)

சுகேசினி

1. சகரனுக்குத் தேவி. அசமஞ்சசனுக்குத் தாய். 2. நாசிகேது என்பவனுக்குத் தாய்.

சுகேசு

ஒரு அரசன். பிரமனை எண்ணித் தவம் புரிந்து தாடகையைப் பெற்றவன்.

சுகேதனன்

1. (சங்.) சுரிதன் குமரன். இவன் குமரன் தர்மகேது. 2. ஒரு அரசன்.

சுகேது

1. துருபதன் குமரன். 2. மிதிலன் இரண்டாம் பேரன். 3. க்ஷேமன் குமரன். 4. தானவர் எனும் முனிவர் குமரர். (சூ.) நந்திவர்க்கன் குமரன். 5. பாரதவீரன். 6. சர்ச்சான் குமரன். இவன் பிரமனை நோக்கித் தவஞ்செய்து ஒரு குமரியைப் பெற்றுச் சுந்தனுக்குக் கொடுத்தவன், 7. சுவேதி புருஷன்.

சுகேத்திரன்

அநேக யாகங்கள் செய்த ஒரு அரசன்.

சுகையன்

ஆனர்த்ததேசாதிபதி, இவன் பகைவருடன் யுத்தஞ்செய்து இறந்தனன். இவனது தலையோட்டை யோகி ஒருவன் எடுத்து இராக் காலங்களில் கயா தீர்த்தமொண்டு உபயோகப்படுத்திப் பகலில் ஊற்றிவிடுவன் ஆதலால் இவ்வரசன் இராக்காலங்களில் அரசு வீற்றிருந்து பகலில் பேயாய் அலைந்து திரிவன். இவ்வாறு இருக்கையில் வணிக்கூட்டத்தினர் இவன் திரிந்து கொண்டிருந்த வனத்தில் பகலில் இறங்கிப் பசி தீர்ந்து போயினர். அவர்களில் ஒருவன் தனித்து அவ்விரவில் அங்குத் தங்க, ஒரு பெருமாளிகையும் அரசும் தோன்றியது. வணிகன் உட்சென்று அரசனை வணங்கி உண்டு உறங்கினன். பொழுதுவிடிய அவை கனாப்போலொழிக்தன; வணிகன் ஆச்சரியமடைந்து மறுநாளிருந்து பார்க்க அன்றைக்கும் அவ்வாறு இருக்கச் சென்று அரசனைக்கண்டு வினாவ அரசன் தானிறந்த செய்தியையும் யோகி யிடம் தன் கபாலமிருக்கும் விதத்தையும் அறிவித்து வணிகனை நோக்கி நீ சென்று யோகியிடமிருக்கும் கபாலத்தை வாங்கி அதனைத் தூளாகச் செய்து கயா தீர்த்தத்தில் போட்டுவிடுவையேல் நான் சுவர்க்கமடைவன் என்றனன். வணிகனும் அவ்வாறு செய்ய நல்லுல சுடைந்தவன்.

சுகோத்திரன்

1. (சந்.) பௌமன் குமரன், மனைவி கௌசலை, குமரன் அத்தன். 2. க்ஷத்ரவிரதன் குமரன். இவன் குமரர் காசியன், குசன், கிரிச்சமதன். 3. பிருகக்ஷத்ரன் குமரன், இவன் குமரன் அஸ்தி. 4. வாநரவீரருள் ஒருவன். 5. சுதனு குமரன், இவன் குமரன் சிவநன். 6. சகதேவனுக்கு விசயையிடம் உதித்த குமரன். 7. சோடச ராசாக்களில் ஒருவன். பூரூரவன் பேரனாகிய பீமனுக்குப் பேரன். 8. சுருதன் எனும் பகீரதன் குமரன். 9. சுமனஸ் குமரன். 10. பிருகத் கூத்திரன் குமரன். 11. சந்திரவம்சம், பூமன்யு புத்திரன் பாரியை ஜயந்தி, குமரன் அஜமீடன். (பார~ஆதி.) 12. இவன் விதிதன் புத்ரன். இவன் செய்த யாக புண்ணியத்தால் இந்திரன் களிப்படைந்து ஒருவருஷம் பொன்மாரி பொழிவித்தான், அதனால் ஆறுகளில் பொன்னீர் ஓடியது, உலகம் பொன்மய மானது, பூமியும் வசுமதியெனும் பெயரை நிலையாகப் பெற்றது. (பார~சார்.)

சுகோஷம்

மத்திரதேசாதிபதியாகிய ககுலன் சங்கு. (பார~பீஷ்.)

சுக்கிரன்

A. 1. பிருகுபுத்திரன் பார்க்கவனாய் இருந்த இவன், குபரனை வெருட்டிய காரணத்தால் குபேரன் சிவமூர்த்தியிடத்து முறையிட்டனன். சிவமூர்த்தி பார்க்கவனைக் கர்வம் அடங்க எடுத்து விழுங்கத் தேவாசுரர் வேண்டுதலால் சுக்கிலவழி விடுத்தருளினர். அது காரணமாய் முன்னினும் அதிக கிரணமும் வெண்னிறமும் சுக்லன் எனும் பெயரும் பெற்றனன் (காசிகாண்டம்.) 2. இவன் முதலில் பிருகு புத்திரனாய் அத்தேகம் விட்டுப் பிறந்து விச்சுவாசி என்னும் தேவமாதை விரும்பி மூன்றாவது தேசார்ணவ தேசத்தில் ஒரு வேதியனாகிப், பிறகு கோசலாதிபனாய், வேடனாய், அன்னமாய், பௌண்டராதிபதியாய், சூரியவம்சகுருவாய், வித்தியாதர ராசனாய், வேதியனாய், சாமநனாய், சைவாசாரியனாய், மூங்கிற்காடாய், ஒருமானாய், மலைப் பாம்பாய், கங்கா தீரத்தில் ஒரு வேதியனாய் இருக்கையில் பிருகுவும், காலனும் இவனைக் கண்டு முன்னைய அறிவுதரப் பெற்றுக் காலனால் அசுரகுருவானவன். (ஞானவாசிட்டம்.) 3. இவன் தாயபாகங்கேட்ட நதிபனை ஆறுயோசனை அகலம் பன்னிரண்டு யோசனை நீளமுள்ள யானையாகச் சமித்தனன். உசநன் புத்திரன் என்பர். 4. இடபாசுர யுத்தத்தில் இறந்த அசுரரை மிருத்துஞ்சய மந்திரத்தால் உயிர்ப்பித்தவன். இவன் குமரர் சண்டமார்க்கன், தம்ஷ்டான், துவஷ்டான், பத்திரகருமன். இருவர் பெண்கள், தேவயானி, அரசை. மேற்சொன்ன குமாரின் பெயர்களை இவ்வாறுங் கூறுவர். துவஷ்டான், தாத்திரி, பதிரன், கன்னன். 5. இவனிடம் இருந்த மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வியாழபகவான் புத்திரன் கசன் வந்திருப்பதை அசுபர் அறிந்து பலமுறை கசனைக் கொல்லத் தேவயானியின் வேண்டுகோளால் கசனை யுயிர்ப்பித்துக் கடைசியில் கசனைக் கருக்கிச் சாம்பலாக்கிக் கள்ளிற்கலந்து சுக்கிராசாரியருக்கு அசுரர் கொடுக்கத் தேவயானி கசனைக் காணாது சுக்கிரனிடங்கூறச் சுக்கிரன் கசன் தன் வயிற்றில் இருப்பது அறிந்து தான் அவனை உயிர்ப்பிக்கின் தானே இறத்தல் அறிந்து வயிற்றில் அவனை யுயிர்ப்பித்து மந்திர முபதேசித்துத் தன்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டு கசனை வெளிவிட்டவன். 6. இவன் தன்னியல்பழிந்து ஒரு அரக்கியைச் சேர்ந்து அநேக அரக்கரைப் பெற்றவன். 7. குபனால் மார்பு பிளப்புண்ட ததீசியை மிருதசஞ்சீவினியால் உயிர்ப்பித்துச் சிவபூசைக்கு எவினன். 8. தேவயானையிடம் யயாதிக்கு ஆசையற்றதால் யயாதியைக் கிழஉருவாகச் சபித்தவன். 9. விபுதையால் கயமுகாசுரனைப் பிறப் பித்து அவனைத் தவஞ்செய்து வரம்பெற ஏவினவன். 10. மாபலி வாமனமூர்த்திக்கு மூன்றடி. மண்தானஞ்செய்கையில் தத்த தாரையைத் தடுத்து வாமநரால் ஒரு கண் குருடானவன். 11. இவன் நக்ஷத்திர மண்டலத்திற்கு மேல் இரண்டுலக்ஷம் யோசனை யுயரத்தில் இருப்பவன். இவன் தேரில் பத்துக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இவனுக்குத் தாதரி என்று ஒரு குமரன் உண்டு, 12. இவன் தண்டனுக்குப் புரோகிதனாயிருக்கையில் அவ்வசுரன் இவன் குமரியாகிய அரசையிடம் செய்த தீமைபற்றி அவன் நாடு காடாகச் சபித்தவன். 13. பகீரதனுக்குக் கோரனாலுண்டாகிய இடரினின்றும் நீங்கக் கந்தவிரதம் அநுஷ்டிப்பித்தவன். 14. அசுரர் வேண்டுகோளின்படி சிவ மூர்த்தியையெண்ணித் தவத்திற்குச் சென்றிருக்கையில் இந்திரன் சயந்தியை யேவி மணக்கச்செய்ய மணந்து அவளுடன் யார் கண்ணுக்கும் புலப்படாமல் பத்துவருஷ மிருக்கையில் வியாழன் சுக்ரவுருக்கொண்டு அசுரரை மயக்கி யவன் சொற்படி கேட்பிக்கக்கண்டு தான் சென்று உண்மையான சுக்கிரன் நான் எனக் கூறியும் கேளாததனால் அசுரர்களைத் தேவர்களால் அப்செயமடையச் சாபந்தந்து மீண்டும் வியாழன், தன் காரிய முடிவில் மறைய அசுரர் தாங்கள் மோசமடைந்த துணர்ந்து பிரகலாதனை முன்னிட்டு வேண்டத் தன்னை யடைந்த அசுரர்களின் வேண்டுகோளுக் கிரங்கி மீண்டு மவர்களை மாணாக்கராக்கிக் கொண்டவன். 15. ஒரு அசுரன் சிவபிரானால் வரம் பெற்றுத் தேவர்களை வருத்தியிருந்தவன், (பார~அநுசா.) 16. இக்கிரகம் சூரியன் சந்திரன் இவையிரண்டையுந் தவிர மற்றெல்லா நக்ஷத்திரங்களிலும் பிரகாசமுள்ளது. இது பூமியைவிடச் சூரியனுக்குச் சமீபத்தில் இருக்கிறது. உருவில் ஏறக்குறைய பூமிக்குச் சமமானது. இது சூரியனைவிட்டு (45°) டிகிரிக்குமேல், அடிவானத்திற்கும் உச்சிக்கும் உள்ள தூரத்தில் பாதிக்குமேல் விலகி வராது. கீழ்த்திசையில் சூர்ய உதயத்திற்கு முன்பே காணலாம். இது சூரியனைச் சுற்றியோடும் கிரகமாதலால் நாடோறும் இதன் உதயகாலம் இதன் முந்திய தினத்தின் உதயத்தின் முன்னதாகும். சில தினங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாகச் சூரியனைவிட்டு (45″) டிகிரி தூரம் விலகிச் சூரியனை நெருங்கத் தொடங்கும். சில நாள்களில் கிழக்கில் காணப்படாது. இது சூரியனைச் சுற்றிவர 7 1/2 மாதங்களாகின்றன, இதைச் சூரிய உதயத்திற்கு முன்பு 3 மாதம் மேற்றிசையிலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சூரியனுக்குக் கிழக்காக 3 மாத காலத்திற்கு அதிகமாக மேற்றிசையிலும் காண்கிறோம். இது கீழ்த்திசையில் காணப்பட்ட விதமாகவே மேற்றிசையிலும் தோன்றி மறைகிறது. (இயற்கை அற்புதம்) 17. இது, சூரியனுக்கு இரண்டாவது சமவட்டத்தில் சுற்றி வருவது. இது சூரியனுக்கு 6 கோடியே 70 லக்ஷம் மைலுக்கப்பால் நின்று சுற்றி வருகிறது. இது 23 1/2 மணி நேரத்தில் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வருகிறது. இது சூரியனை 225 நாட்களில் சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 23,200 மைல், குறுக் களவு சுமார் 7700 மைல். இது நமக்கு அதிக தூரத்தில் இருப்பதால் சிறிய வுருவாகக் காணப்படுகிறது. இதற்கடுத்த வட்டத்தில் நாமுள்ள பூமியாகிய கிரகம் சுற்றி வருகிறது.

சுக்கிரன்

B. 1. பதினான்காம் மன்வந்தரத்து ருஷி. 2. சரியாதியின் புத்திரன், பாண்டவர் பக்ஷத்தைச்சேர்ந்தவன், கர்ணனால் கொல்லப்பட்டவன்.

சுக்கிரவாரவிரதம்

இந்த வாரத்தில் சுக்கிரன் சத்தியைப் பூசித்து இந்த வாரத்தில் உலகத்தவர் உன்னைப் பூசிக்கின், இஷ்ட சித்தி தருக என வரம் பெற்றனன்.

சுக்கிராகி

முதலையுருக்கொண்டு சங்கராசாரியரின் காலைப்பற்றிய காந்தருவன்.

சுக்கிரீவ மகாராஜா

(சைநர்.) புஷ்பதந்த தீர்த்தங்கரின் தந்தை, தேவி ஜயராமை.

சுக்கிரீவன்

1: (ரிஷாஜசு) இரக்ஷவிருதன் குமரன், வாலிக்குத் தம்பி, அநுமனுக்கு நண்பன், இவன் மனைவி உருமை. ஒரு முறை மாயாவி என்னும் அரக்கனுடன் போரிடப் பிலத்துள் சென்ற வாலி நெடுங்காலம் மீளாதிருக்க, வாலி அரக்கனால் கொல்லப் பட்டனன் என்றும், ஒருக்கால் அவன் மீளின் தனக்கு இறுதிநேரும் எனவும் எண்ணி அப்பிலத்தை அடைத்து அரசாண்டிருக் கையில் வாலி பிலத்தின் வழி வர அது அடைபட்டு இருத்தல் கண்டு தன் காலால் ஒரு உதை கொடுத்து வழியுண்டாக்கி வெளியில்வந்து தன் தம்பி வஞ் சனை செய்தான் என அவனைக் கொலை செய்ய வருகையில் இவன் பயந்து கிஷ்கிந்தையைவிட்டு ருச்யமூகபர்வதம் (மதங்கர்மலை) அடைந்து இருந் தனன். இராம லக்ஷமணர் வரவறிந்து அநுமான் தன் சிநேகனுக்கு அவரது வலி முதலியவைகளைத் தெரிவித்து நட்புச் செய்வித்தனன். இவரது வலியைத் தான் அறியாததால் அதனை அறிய எண்ணி இருக்கையில் குறிப்பறிந்த இராமமூர்த்தி மராமரத்தை எய்தும் துந்துபி எலும்பைக் காலாலுந்தியும் காட்டினர். இதனால் வல்லவர் என அறிந்து வாலியுடன் வலியபோர்க்குச் சென்று யுத்தஞ்செய்து இராமமூர்த்தியால் அவனிறக்க, மீண்டும் இராமமூர்த்திக்கு வானாசே னைகளைக் கூட்டுவித்துச் சீதாபிராட்டியைத் தேட அனுப்பி இலங்கைமேற் படைகொண்டு சென்று இராவணன், வாநரப்படைகளை வடக்குக் கோபுர வாயிலிலிருந்து காண்கையில் அவன் மேற்பாய்ந்து அவனுடன் போரிட்டு மகுடபங்கஞ் செய்து, கும்பகர்ணனுடன் மல்லயுத்தம் புரிந்து அவன் மூக்கையும் காதையும் கடித்துவிட்டு ஓடிவந்தவன். கும்பன் என்னும் அரக்கனையும், சூரியகேதுவையும் கொன்றவன். இவன் இராமமூர்த்தியுடன் இராவணன் முடியும் அளவு இருந்து அயோத்தி சென்று பட்டாபிஷேகங்கண்டு தன்பதி அடைந்தான். இருக்ஷ விருதனைக் காண்க 2. திரிமதி என்பாள் குமரன்.

சுக்கிரீவம்

கிருஷ்ணன் தேர்க்கு திரைகளில் ஒன்று,

சுக்கிலன்

அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடம் உதித்த குமரன்.

சுக்கிலர்

தேவி வித்ருமை இந்தத் தம்பதிகள் இருவரும் மகோற்கட விநாயகருக்குப் புல்லரிசிச் சோறிட்டு நற்பதம் பெற்றவர்கள்.

சுக்குசன்

விபுலன் குமரன்.

சுக்தா

சித்தூர் இராஜபுத்ரத் தலைவனாகிய உதயசிங்கின் இருபத்தினாலு புத்திரர்களில் இரண்டாவது புத்ரன். இவனது ஐந்தாம் வயதில் ஒரு புதிய வாள், ஆயுதம் செய்பவன் கொண்டுவர அதனைச் சோதிக்க அரசன் கொஞ்சம் பஞ்சு கொண்டு வரக் கட்டளையிட்டான். சிறுவன் தகப்பனைநோக்கி யிது எலும்பை வெட்டுமோ வென்று அஞ்சாது தன் விரலை வெட்டினான், கையிலிருந்து மிகுந்த ரத்தம் வடியவும் அஞ்சாநிலைகண்ட அரசன் சோதிடரை அழைத்துச் சாதகத்தைச் சோதித்ததில் அவர்களிவன் மீவார் நாட்டிற்குக் கேடு விளைப்பான் எனக் கூறினர். இவனைச் சிரச்சேதம் செய்யக் கட்டளை பிறந் தது. கொலைக்களம் கொண்டுபோகையில் சலம்பிர ராஜபுத்ரத் தலைவன் சந்தித்துச் செய்தியறிந்து தனக்குப் புத்திரனிலாமையால் அரசனை யிரந்து இவனைப் புத்திரனாகப் பெற்றான். பிறகு பிரதாபன் இவனுடன் நட்புக்கொண்டிருக்கையில் ஏதோ காரணமாக இருவருக்கும் கைச்சண்டை யுண்டாகப் புரோகிதர் விலக்கவும் நிற்காததுகண்டு இருவர்க்கிடையில் புரோகிதர் குத்திக்கொண்டிறந்தார். இப்பாபத்திற்காளானோம் என இருவரும் சண்டையை நிறுத்திச் சென்றனர். பின் சுக்தா அக்பரிடம் சென்று அவன்கீழ் வாழ்ந்துவந்தான். அந்த வம்சத்தவர் சுக்தாவதர். பின்ஹால் டிகாட் எனும் சண்டையில் சகோதரிருவரும் ஒன்றாகச் சேர்ந்தனர்.

சுக்திமதி

1. சுக்திமான் என்னும் பர்வதத்தில் உற்பத்தியாகும் நதி. The river Suvaroarekha in Orissa. 2. The river Vetrapati in Malwa. 2. சேதிதேசத்தின் ராஜதானி. இதிலுள்ள கோலாகலம் என்னும் பெயருள்ள மலையில் உபரிசரவசுவின் பாரியையாகிய கிரியை பிறந்தனள்.

சுக்திமந்தம்

இமயமலைக்கருகிலுள்ள மலை. இம்மலைகளுக்கு இடையில் பல்லாட தேசம் உளது. இது பீமசேகனால் செயிக்கப்பட்டது,

சுக்திமான்

ஒரு பர்வதம். The Western portion of the Vindhya Range near Ujjoin.

சுக்மன்

சிபியின் புத்திரனாகிய பலியின் மனைவியிடத்துத் தீர்க்கதம முனிவனுக்கு பிறந்தவன்.

சுக்மம்

சிந்துநதி பிரதேசத்திலுள்ள ஒரு தேசம். (பார~சபா.)

சுக்ரீமதி

கடகபுரிக்கு அருகிலுள்ள ஒரு நதி.

சுக்ரீவம்

கிருஷ்ணன் குதிரைகளில் ஒன்று (பார~சபா.)

சுக்ரேசன்

காசியில் சுக்கிரன் பூசைசெய்த இலிங்கம்.

சுக்லவாரவிரதம்

தேவி விரதம் காண்க. வரலஷ்மி விரதம்; இது ஆவணிய சுக்லபகத்விதியை சுக்ரவாகத்தில் அநுட்டிப்பது. இதனைச் சித்ரகேமி யென்பவன் அநுட்டித்து எல்லா சித்திகளையும் பெற்றான். கலசத்தில் சதுர்ப்புஜமுள்ள வக்மிதேவி பிரதிமை செய்து கலசபூஜை செய்து ஸ்தாபித்துப் பூஜைசெய்து தானாதி போஜனாதிகள் செய் விப்பது. இது கற்புள்ள மங்கையர் ஐச்வர்யத்தை யெண்ணி நோற்பது. குண்டினபுரத்துச் சாருமதியின் பொருட்டு லக்ஷ்மி தரிசனந்தந்து தன்னை இத்தினத்தில் பூஜித்து விரதமிருப்போர் அஷ்டைஸ்வர்யம் அடைவர் என்று மறைய அவள் அவ்வாறு அநுட்டித்துப் பெருவாழ் வடைந்தனள்.

சுங்கந்தவிர்த்த அபயன்

இவன் குலோத்துங்க சோழனுக்குப் பாட்டன். விக்ரம சோழனுக்குத் தந்தை.

சுங்கன்

புஷ்யமித்திரன் குமரன். இவன் குமரன் அக்கிநிமித்திரன்.

சுங்கம் வாங்குவோன்

வாணிகம் புரிவோரின் மூலப்பொருட்குக் கேடு நேரிடாமல் அவர் பெறும் லாபத்தில் அரசனுக்குரிய பாகம் வாங்குவோன். (சுக்ரநீதி.)

சுசக்ரன்

வத்சந்திரன் குமரன்.

சுசக்ஷூ

கங்கையின் பிரிவு.

சுசங்கீதன்

ஒரு காந்தருவன்.

சுசந்தி

சூரியவம்சத்து அரசருள் ஒருவன்.

சுசந்திரன்

ஏமசந்திரன் குமரன். இவன் குமரன் தூமராசுவன்.

சுசனை

பிரசாபதியின் மனைவி, குமரன் அணிலன்.

சுசன்மகிருத்

சோமகன் குமரன், பிருஷதன் தந்தை.

சுசருதர்

தன்வந்திரியின் மாணாக்கர்.

சுசருமர்

1. ஒரு முனிவர். தருமர் செய்த இராஜசூய யாகத்தில் உத்காதாவாக இருந்தவர், 2. திரிகர்த்த தேசாதிபதியாகிய சுதன்வன் குமரன். 3, நாராயணன் என்போனுக்குக் குமரன், இவன் குமரன் வாசுதேவன். 4. நகுலனால் கொல்லப்பட்ட கர்ணன் குமரன். 5. மகததேசாதிபதிகளில் ஒருவன். 6. அரக்கன் ஒருவனால் கிரகிக்கப்பட்டு உத்தமனால் மீட்டுக் கொடுக்கப்பட்ட மனை வியைப் பெற்ற பிராமணன்.

சுசர்மன்

1. கர்னன் குமரன். 2. பாஞ்சால தேசத்தவன், கர்ணனால் கொல்லப்பட்டவன்.

சுசாகை

சுவலபருக்குக் காந்தியிடத்துதித்த குமரி.

சுசாது

அநேக பக்தர் எனும் ருஷிக்குப் பத்னி.

சுசாதை

1. அட்டகோண மகருஷியின் தாய், ஏகபாதன் தேவி, 2. ஒரு இடைச்சி, தந்தை பலன். தனக்கு மகப்பேறு உண்டாயின் வனதே வதைக்குப் பஞ்சாமிர்தம் படைப்பதாகச் சங்கற்பித்து, அவ்வாறு பெற்று வனத்தெய் துகையில் புத்தனை வனதேவதை யென்று கருதி அவர்க்கூட்டி ஆசீர்வதிக் கப்பட்டவள்.

சுசாந்தி

1. சாந்தியின் குமரன். இவன் குமரன் புரீசன், 2. அசமீடன் இரண்டாம் குமரனாகிய நீலன் போன்.

சுசாமன்

ஒரு ரிஷி. தருமர் செய்த ராஜசூயத்தில் ருத்விக்கா இருந்தவன்.

சுசாருகதன்

ஒரு யாதவவீரன்.

சுசி

1. அக்கிநிக்குச் சுவாகாதேவியிடம் உதித்த குமரன். 2. (சூ.) சதத்துய்ம்நன் குமரன். 3. (ச.) சுத்தன் குமரன். இவன் குமரன் திரிகுத்து. 4. (பிரி.) விற்பிரவன் குமரன். இவன் குமரன் ஷேமகன். 5. (யது.) அந்தகன் குமரன். 6. சுத்தன் குமரன். 7. மிதிலை நாட்டரசன். 8. வேதசிரசு முனிவர்க்குப் பாரி, 9. ஒரு இருடி இவன் திரிவக்ரன் தேவியாகிய சுசீலையைப் புணர்ந்து கபாலப்ரணனைப் பெற்றவன். கபாலபரணனைக் காண்க.

சுசிட்டுமான்

கர்த்தமபிரசாபதியின் குமரன்.

சுசித்திரன்

1. திருதராட்டிரன் குமரன். 2. பாஞ்சாலன், துரோணனால் கொல் லப்பட்டவன், இவன் குமரன் சித்திரவர்மன்,

சுசிநாதன்

(சங்.) திருதராட்டிரன் புதல்வன்.

சுசிமாதேவி

(சைநர்.) பத்மப்பிரபதீர்த்தங்காருக்குத் தாய், தரணன் தேவி.

சுசியேஷ்டன்

அக்கிநிமித்திரன் குமரன் இவன் குமரன் வச்சமித்திரன்.

சுசிரவை

1. ஜயத்சேனன் பாரியை. புத்திரன் பராசீனன். (பாரதம்.) 2. திருதராஷ்டிரன் பாரியை காந்தாரியின் சகளத்திரம்.

சுசிவான்

ஒரு பாகவதன்,

சுசிவிரதன்

சத்தியாதனனைக் காண்க.

சுசீலன்

1. (சூ.) சிகண்டியின் குமரன். இவன் தவம் இயற்றுகையில் சிவேதாச்வர் எனும் முனிவர் இவனிடம் வந்து சிவ மந்திரங்கற்பிக்கத் தவத்திலிருந்தவன். 2. விஷ்ணுபடன். 3. பிடகநூல்வழித் தொடராதுசிவபூசை மேற்கொண்டு திரிபுரமாண்ட அசுரன். 4. புஜபலனைக் காண்க. 5. கோசல தேசத்து வைசியன். இவன் தரித்திரத்தால் துன்பம் அடைந்து விரத சீலனாய் ஒழுகும் நாட்களில் ஒரு வேதியர் வர அவரைக்கண்டு தனது வரலாறு கூறி எனது வறுமையால் ஒரு குழந்தையைத் துரத்திவிட்டேன் எனக் கூறி விசனம் உற்றனன். அவர் இவனுக்கு நவராத்திரி விரதம் அநுட்டிக்கக் கூற இவன் அங்கனம் அநுட்டித்துவரும் ஒன்பதாவது வருஷக்கடையில் அஷ்டமி அன்று இரவில் தேவி தரிசனந்தந்து இவனை அநுக்கிரகித்து என்றும் வறுமை அடையாவண்ணம் செய்தனள். 6. ஒரு வேதியன், இவன் இஷ்டகா மியசித்தியின் பொருட்டுப் பாசுபத விரதம் அனுஷ்டித்து நலமடைந்தவன். (சௌர புராணம்.)

சுசீலை

1. சோமன் தேவி, 2. சிவசருமர் தேவி. 3. திரிவக்ரன் தேவி. இவள் ஒரு புதல்வன் வேண்டிச் சுசிமுனிவரை யணைந்து கபாலபாணனைப் பெற்றவள். 4. தனபதியைக் காண்க. 5. பிரமசருமன் தேவி, மகா கற்படையாள், கணவன் கிருஷியால் பெருந்திரவியம் அடைந்து வைதிககாரியம் விட்டு மனை வியின் சொல்லால் மரண காலத்தில் விரத சீலனாய் மனைவி தந்த காவிரிஸ்நாகபலத்தை அடைந்து மரணத்தறுவாயில் இருக்கையில் யமபடர்வந்து சுசீலேயின் கற்புக்கு அஞ்சி நீங்கி யமனுடன்கூறிச் சித்திரகுத் தனை அனுப்பினர். இது நிற்க, பிரமசருமன் தன் மனைவி இடம் நல்ல பதார்த்தம் வேண்டும் என்றனன். இதனை மறைவிலிருந்து இவன் உயிரைக் கவரப்பார்த்திருந்த சித்திரகுத்தன் நகைத்தனன். இதனை அறிந்த சுசீலை நகைத்ததற்குக் காரணம் வினவிச் சித்திரகுத்தனைப் பணிய அவன் சுமங்கிலியாக என வாழ்த்தக் கேட்டு யமபுரம் அடைந்து கணவனை மீட்டுச் சுகம் அடைந்தவள்.

சுசுருதன்

1. மிதிலாதிபதியாகிய சயன் தந்தை. 2. காசிராசன் குமரன், விசுவாமித்திரர் குமரர் எனவுங் கூறுவர். இவனால் சிறந்த சுசுருதம் எனும் வைத்திய நூல் இயற்றப்பட்டது.

சுசேசன்

அநுமன் கொணர்ந்த சஞ்சீவியை இலக்குமணர்க்கு உண்பித்தவன்.

சுசேசு

அசோகவர்த்தனன் குமரன். இவன் குமரன் தெசாதனன்.

சுசேநன்

திரிமதி என்பாள் குமரன்.

சுசேஷணன்

1. கஞ்சனால் கொல்லப்பட்ட வசுதேவன் குமாரில் ஒருவன், 2. கண்ணனுக்கு உருக்குமணியிடம் உதித்த குமரன். 3. உருமைக்குத் தந்தை, வருணனால் பிறந்தவன், சுக்கிரீவனுக்கு மாமன். 4. சாத்தகியால் கொல்லப்பட்ட கர்ணன் குமரன்.

சுசேஷன்

ஒரு வாநரவீரன், தாரையின் தந்தை.

சுசோபனை

ஆயுவென்னும் பெயருள்ள மண்டுகராஜன் புத்திரி. இக்ஷவாகு வம் சத்தவனாகிய பரீட்சித்தின் தேவி.

சுச்சிரவன

மனோஞையைக் காண்க.

சுச்சுதன்

சடியின் மந்திரிகளில் ஒருவன். (சூளா.)

சுச்சோதி

தேவவன்மன் குமரனாகிய ஒரு அரசன். இவன் தீர்த்தயாத்திரையில் திருப்பூவணத்துப் பிதுர்த் தர்ப்பணஞ் செய்கையில் பிதுர்களைப் பிரத்தியக்ஷமா கக் கண்டவன்.

சுஞ்ஞானி

அல்லமதேவருக்குத் தாய்

சுடர்

1. (3) சூரியன், சந்திரன், அக்நி. 2. சூரியன், சந்திரன்.

சுடர்த்தைலம்

எண்ணிய மருந்தைத் துணியில் சுருட்டிப் பாத்திரத்தில் நெய்யை விட்டுக் கீழ்நோக்கிப் பிடித்து எரிக்கத் தைலம் சொட்டுவது.

சுட்கநாள்

நக்ஷத்ரம் காண்க.

சுட்கராசி

மிதுனம், சிங்கம், கன்னி.

சுட்டெழுத்துக்கள்

உயிரெழுத்துக்களின் பிரிவினவாய்ச் சுட்டுதலைக் குறிக்கும் அ, இ, உ, எனும் (3) எழுத்துக்கள். (நன்.)

சுண்ணம்

பூமியில் நீர் தங்கிய இடத்தில் நத்தை, சங்குப்பூச்சிகள் சஞ்சரிப்பன; அவை நாளடைவில் பூமியில் தங்கி மங்கிப்போம் கிளிஞ்சல்களை வெட்டிக் காளவாயில் சுடவுண்டாம் பொருள். பல கற்களைச் சுட்டவையும் சுண்ணமாம். கற் சுண்ணத்தினால் அன்னம் ஜீரணமாவதுந் தவிரக் குடலைப்பற்றிய சில நோய்கள் நெஞ்சு சிக்கு, வாதகிரிச்சினம், பூரான் கடி இவை நீங்கும். பற்கள் வலிவுபெறும், நெருப்புப்பட்டபுண், சொறி, சிரங்கு தினவு காயங்களாலே யொழுகுகின்ற ரத்தம், அளிந்த விரணம், மண்டைப்புற்று, தலை நோய், சன்னி இவைகளுக்குக் கிரமப்படி யுபயோகப் படுத்துவதுண்டு; சுக்கிலத்திற்கும் பலந்தரும். முத்துச்சுண்ணத்தையும் யோகப்படுத்துபவர்களுக்கு நீடித்த பேதி விலகும். மலக்கிருமி வயிற்று நோய் யிவைகளை விளைக்கும் வாதரோகமணுக வொட்டாது முகம் பளபளப்பும் தேஜசும் உண்டாகும்.

சுண்ணாம்புக்கல்

பூமியினடிப்பாகத்துள்ள கல்போன்ற சுண்ணம்.

சுதகீர்த்தி

1. அருச்சுநன் குமரன். 1. பத்திரைக்குத் தந்தை, கேகய நாட்டு அரசன். 3. சத்துருக்கன் தேவி.

சுதக்கணன்

துரியோதனன் தம்பி, நாலாநாள் யுத்தத்தில் வீமனால் மாண்டவன்,

சுதக்கணை

1. விராடன் தேவி. 2. திலீபன் தேவி. இவள் நெடுநாள் புத்திரப்பேறு இன்றி வசிட்டர் சொற்படி பசுபாலனஞ்செய்து இரகுவைப் பெற்றவள்,

சுதக்கன்

ஒரு இராவண வீரன்.

சுதக்ஷணன்

பௌண்டாக வாசுதேவன் எனும் காசிராசன் புத்திரன். தந்தை யைக் கொன்ற கண்ணனை வெல்லச் சிவபிரானை நோக்கித் தவமியற்றினன். சிவமூர்த்தி தரிசனம் தந்து இவன் கருத்தறிந்து தக்ஷணாக்கினி வளர்க்கின் அதில் ஒரு பூதம் தோன்றும் அதை உன் பகைவர்மீது ஏவுக, என் அன்பர் மீது ஏவின் அது ஏவினவனைக் கொல்லும் என்று மறைந்தனர். சுதடிணன் அவ்வகை தக்ஷிணாக்கினி வளர்த்திப் பூதத்தைச் சிருட்டித்து மதுரைமேல் ஏவி அதனைத் தீப்படுத்தினன். இதைக் கண்ணன் அறிந்து சுதரிசனத்தை ஏவ அது இவனையும் இவன் அனுப்பின பூதத்தையும் சொன்றது.

சுதக்ஷிணன்

பாண்டு புத்திரராகிய தருமருக்குக் குதிரைகளைப் பூட்டிய அரசன்,

சுதசாகரன்

சடியின் மந்திரியரில் ஒருவன்.

சுதசித்

ஒரு யாதவ வீரன்.

சுதசிரவசு

(பிர.) மாற்சாரியின் குமரன். இவன் குமரன் யுதாயு.

சுதசு

சுவாயம்பு மன்வந்தரத்து இருந்த ஒருவர். இவர் விஷ்ணுமூர்த்தியைக் குமாராகப் பெற விரும்பி (12000) வருடம் தவஞ் செய்தனர். விஷ்ணுமூர்ததி பிரத்தி யக்ஷமாய் இவரைப் பார்த்து மறுபிறப்பில் அந்தப்படி பிறக்கிறோம் என வரம் அளிக்கப் பெற்று வசுதேவர் எனப் பிறந்து கண்ணனைப் பெற்றனர்.

சுதசேனன் (சந்.)

1. அபிமன்னன் பேரன். 2. சகாதேவன் குமரன், தாய் திரௌபதி.

சுதசோமன்

பீமசேனன் புத்திரன் துரோணனால் கொல்லப்பட்டவன்.

சுதஞ்சனன்

குணமாலையின் புத்திரன். சீவகன் உபதேசத்தால் நாய்ப்பிறப்பு நீங்கி இயக்க உருப்பெற்றவன்.

சுதஞ்சனை

கச்சன் மனைவி.

சுதஞ்சயன்

(பிர.) செந்தி குமரன். இவன் குமரன் விற்பிரவன்.

சுதநுசு

குருவின் இரண்டாம் குமரன்.

சுதநூ

குரு. குமரன், இவன் குமரன் சகோத்ரன்.

சுதந்மன்

இவன் பிரமதேசமாண்ட அரசருள் ஒருவன். தவமேற்கொண்டு இராஜ ருஷியாயினான். இவனை இருடிகள் அணுகாதிருத்தலை நோக்கி இவன் அவர்களைக் காரணம் வினவ அவர்கள் நீ, இடையன் ஒருவன் மாட்டுத் தொழுவத்தில் காட்டுப் பூனைவந்து வருத்துகிறதெனக்கூற அதனை எய்யச் சென்று பசுவினை எய்தனை அப்பாபத்தொடர் புடைமைபற்றி உன்னை அணு காதிருக்கிறோம் ஆதலின் நீ பினாகினியாடிச் சுத்தமுறின் அடைவோமென அவ்வாறு அதின் மூழ்கிப் புனிதமடைந்து இருடி கூட்டத்தை அடைந்தவன். (பெண்ணைநதி புராணம்.)

சுதந்மர்

பதினொரு கணதாரில் ஒருவர். இவர் சீவகன் சரிதையைச் சேணிக மகா ராஜனுக்குக் கூறியவர்.

சுதந்மை

சோமகாந்தனைக் காண்க,

சுதன்

காளிந்திக்குக் கண்ணனாற் பிறந்த குமரன்,

சுதன்மன்

1. சுரதன் குமரன், இவன் குமரன் சுவேதசேது. 2. குசுமையைக் காண்க.

சுதன்வன்

1. வசுதேவருக்கு ஸ்ரீதேவியியிடம் பிறந்த குமரன். 2. உலசு பாலகரில் ஒருவன். 2, திரிகர்த்த தேசாதிபதியாகிய சுசர்மனுக்குத் தந்தை. 4. பூமியில் அரசனாக அவதரித்த இந்திரனது வேறுபிறப்பு.

சுதன்வா

1, ஒரு பிராமணன். இவன் பிரகலாதன் குமாரனாகிய விரோசனனிடத்தில் ஒரு பெண்ணிமித்தமாக மாறுகொண்டு பிரகலாதனனிடஞ்சென்று தம்மில் யார் உயர்ந்தவர் என வினவ அவர் கூறு திருக்கக்கண்டு சபிக்கப்புக அவர் கச்யபரிடஞ்சென்று ஐயர் தீர்ந்து கூறினர். (பார.) 2, சுமந்து குமார். 3. சங்கராசாரியர் காலத்திருந்த அரசன். 4. விராத்ய வைசியனுக்கு அவ்விராத்திய ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்கு ஆசாரி, காரூசன், விஜன்மா, மைத்திரன், சாத்துவதன் என அந்தந்தத் தேசங்களில் பல பெயருண்டு. 5. ஆங்கீரச புத்திரன்,

சுதன்வி

ஆகுகன் குமரி, அக்ரூரன் தேவி,

சுதபசி

காசியில் இருந்த ஒரு வேதியன்.

சுதபசு

(பிர) ஓமன் குமரன். இவன் குமரன் பெலி,

சுதபசுக்கள்

(8 வது) மன்வந்தரத்துத் தேவர்.

சுதபன்

1. பலியின் தந்தை, அணுவம் சத்தவன். 2. அயோத்திநாட்டு அரசன் தாசிக்குப் பொருள் முதலியவற்றைச் செலவிட்டுக் காவிரியாடிச்சுத்தனானவன். (காவிரித் தலபுராணம்.) 3. தாமசமனுவைக் காண்க. 4. சுவேதனைக் காண்க.

சுதபஸ்து

(சூ.) அந்தரிக்ஷன் குமரன்.

சுதபாமுனிவர்

இவர் ஆரியாவர்த்தத்தில் உதித்து வேதவே தாந்தங்களை யுணர்ந்த முனிவர். இவர் நர்மதை நதி தீரத்தில் தம் மாணாக்கர்களுக்கு உபநிடசுப் பொருளை உபதேசித்துக்கொண்டிருந்த சாந்தரென்னும் முனிவரிடத்தில் சென்று வேதம் அப்பிரமாணியம் என்று சைன மதத்தைக் கூறச் சாந்தர் கோபித்து நீ வேதபாவாயனாய் பௌத்தசமயத்தவனாகுக எனச் சபித்தனர். இவரே பிற்காலத்துத் திருநாவுக்கரையராய்ப் பிறந்தனர் என அகத்திய பக்த விலாசம் கூறுகிறது.

சுதப்தம்

யமபுர வழியிலுள்ள பட்டணம். இவ்விடம் ஆன்மாக்கள் தங்கிப் பதினொன்றாமாசிக பிண்டத்தைப் புசிப்பர்.

சுதமதி

கௌசிகனெனும் அந்தணனுடைய புத்திரி; மாருதவேகன் எனும் ஒரு வித்யாதரனால் முன்பு கவர்ந்து கொண்டு போகப்பட்டுப்பின்பு காவிரிப் பூம்பட்டினத்தில் இடப்பட்டு மாதவியின் உயிர்த்தோழியா யிருப்பவள்; மணிமேகலைபால் அன்புடையவள்; சங்கதருமனிடந் தருமங் கேட்டவள். (மணிமேகலை.)

சுதரிசநாசாரியார்

நடாதூர் அம்மாளின் குமாரர்.

சுதரிசனன்

1, கோசலதேசத்தில் துருவசித்து என்றொரு அரசன் இருந்தனன். அவற்கு மனோரமை, லீலாவதி என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அவ்விருவருள் மனோரமை சுதரிசனனையும், வீலாவதி சத்ருஜித் என்பவனையும் பெற்றனர். ஒருநாள் அரசனாகிய துருவசித்து வேட்டைக்குச் சென்று சிங்கத்தால் மடிந்தனன். தந்தை இறக்க மூத்தவனுக்குப் பட்டந்தர யோசித்திருக்கையில் இளையவனாகிய சத்நஜித்தின் தாயைப்பெற்ற யுதாஜித் என்பவன் தன் பேரனுக்குப் பட்டம் கிடைக்க வேண்டுமென்று வாதாட மூத்த மனைவியாகிய மனோரமையின் தந்தையாகிய வீரசேனன் நியாயஞ் சொல்லியுங் கேளாதவனாய், வீரசேனனை யுதாஜித் எதிர்த்துப் போரிட்டுக் கொன்றனன். தன் தந்தை இறந்ததைக் கேள்வியுற்ற மனோரமை அதிக துக்கம் உள்ளவளாய் இந்த யுதாஜித் நமது குமரனையுங் கொன்று விடக்கூடும் என்று ஆலோசித்துப் பட்டணத்தைவிட்டு வெளியிற்சென்று தன் பிதாவிற்குத் தக னாதிகளைச் செய்து காட்டின் வழிச் செல்லுகையில் கள்ளராற் பிடிபட்டுக் கூறை முதலிய இழந்து பரத்துவாசர் ஆச்ரமம் போய்ச் சேர்ந்தாள். அவ்விடம் இவள் முனிவர்களால் உபசரிக்கப் பட்டிருக்கையில் யுதாஜித் கேள்விப்பட்டுச் சுதரிசனனைக் கொல்லச் சென்று ருஷிகளுக்கு அஞ்சி மீண்டனன். பின் சுதரிசனன் தன் தாயுடனிருந்த கிலீபனை (பேடி) ஒரு முனி புத்திரன் கிலீபனே இங்கு வாயென்று அழைக்கச் சுதரிசனன் அப்பதத்தின் முதலெழுத்தை மனத்திற் பதித்து உச்சரித்து வந்தனன். அது தேவியின் பீஜாக்ஷா மாதலால் அதனை உச்சரித்ததில் இவனுக்குத் தேவியின் அருளால் எல்லாச் சம்பத்தும் உண்டாயிற்று. ஓர்நாள் இவன் கங்கைக் கரையில் இருக்கக் கண்டோர், இவ னது அழகு முதலியவற்றைக் கண்டு காசி ராஜபுத்திரியாகிய சசிகலைக்குக் கூற அவள் அவனை அல்லது மற்றவரை மணப்பதில்லை எனத் தீர்மானித்துத் தந்தையாகிய சுபாகு இடம் கூறினள். தந்தை சுயம்வரம் நாட்டச் சகலதேசத்து அரசரும் நிறைந்தனர். பின் சுபாகு தன் குமரியின் எண்ணப்படிக்குச் சுதரிசனனுக்குத் திருமணம் முடிக்க அரசருள் யுதாஜித் தன் பேரனுக்கு இப்பெண்ணை மணக்க எண்ணி வந்தவனாதலால் சுதரிசனனை எதிர்க்கச் சுதரிசனன் அவனைத் தேவியின் மந்திரபலத்தால் எதிர்த்துக் கொலை செய்து தன் தந்தையின் இராஜ்யப் பிராப்தியை அடைந்தனன். 2, கேதுவம்சன் அம்சமான ஒரு பாரத வீரன். 3. பரதனுக்குப் பஞ்சசேரியிடத்து உதித்த குமரன். 4. ஒரு வித்யாதரன். இவன் சரிதையை ஆங்கீரசுக்களைக் காண்க, 5. ஞான சுதரிசனைக் காண்க. 6. சூரியவம்சத்து அரசன். இவன் குமரன் வீரசகன். இவனுக்குப் பிற்பட்டு மித்திரஸகன் எனப் பெயர் வந்தது. 7. இவன் காலவ முனிவர் பெண்ணாகிய காந்திமதியை வலிய இழுத்தமையால் வேதாளமாக முனிவரால் சபிக்கப்பட்டுத் தந்தையின் வெப்புநோய் தீர்க்க நெருப்பெடுக்கும்படி சுடலை சென்று பிணந்தின்று வேதாளவுருக்கொண்டு சேதுஸ்நானத் தால் சாபம் நீங்கப் பெற்றவன். 8. சேதுவில் சிவபூஜை செய்து சர்வ தீர்த்தம் உண்டாக்கினவன். 9. ஓகவதியின் கணவன். 10. சதானைக்கு அக்நியிடம் பிறந்தவன். 11. ஒரு காந்தருவன் தன் தேவியுடன் நிர்மாணமாய் நீர்விளையாடுகையில் தேவலருஷிவர அவரைக்கண்டு அஞ்சாததால் அவ்விருவரையும் இருஷி புலிகளாகச் சபித்தனர். அவ்விருவரும் புண்ணிய தீர்த்தபரிசத்தால் புலியுரு நீங்கிக் காந்தருவ உருப்பெற்றனர். (புள்ளிருக்கு வேளூர்ப் புராணம்.)

சுதரிசனபட்டர்

சீராமபிள்ளைக்குக் குமரர். ஆழ்வான் பௌத்திரர். நடாதூர் அம்மாளை ஆச்ரயித்தவர். இவர் அம்மாளிடத்தில் காலக்ஷேபம் சேவிக்கையில் ஒரு நாள் காலக்ஷேபம் சேவிக்க வாராது இருந்தனர். அம்மாள் காலக்ஷேபத் திற்குக் காத்திருக்க இருந்தவர்கள், அவர் சாமானியர் தானே, நீங்கள் காலக்ஷேபம் தொடங்குக என அம்மாள், பட்டர் வரும்வரையில் காத்திருந்து பட்டரை நோக்கி இதுவரையில் கேட்ட காலக்ஷேபத்தைக் கூறுக என அவர் சொல்ல அனைவரையும் கேட்கும்படி செய்து அவரால் சொல்லப்பட்டவை களுக்குச் சுருதபிரகாசிகை என்று பெயரும் இட்டனர். துருக்கரால் இடுக்கண் உண்டான காலத்தில் தம் பிள்ளைகளையும் சுருதப்பிரகாசிகையையும் தேசிகரிடங் கொடுத்துத் தாம் திருநாட்டுக்கு எழுந்தருளினர். இவர்க்கு வேதவியாசர் எனவும் பெயர்.

சுதரிசனமகாராசர்

சைநர், அரதீர்த்தங்கரின் தந்தையார், தேவி மித்திரசேனை. இவர் குருநாட்டு அரசர்,

சுதரிசனை

1. சுயோதனராசன் அல்லது மநுவம்சத்துத் துரியோதனன் பெண். அக்கிநியை மணந்து ஒரு குமரனைப் பெற்றனள். தாய் நருமதை, குமரன் சுதர்சனன். 2. நீலன் குமரி, நீலனைக் காண்க.

சுதர்க்கணை

விராடராசன் மனைவி, கேகயன் பெண் (சுதக்ஷணை).

சுதர்சநன்

இவன் இல்வாழ்வோன். இவன் தன் மனைவிக்கு அதிதி பூஜையின் சிறப்பைக்கூறி, அவர்கள் யாது வேண்டினும் தருகவெனக் கூறினன். ஒருகால் இவனது மனவலி வெளிப்படுத்த ருத்ரபகவான். அதிதியாக வந்து இவர் மனைவியை விரும்ப, மனைவி கணவன் சொல் மறாதுடம்பட்டிருக்கையில் கணவனழைக்க, மனைவி நான் அதிதிபூசை செய்கிறேன் எனக் கேட்டுக் களித்தவன். (இலிங்க. புராணம்.)

சுதர்சனம்

ஆயிரம் முகங்களுடையதும், வியாப்தமானதும், இரண்டாயிரம் புஜங்களுடையதும், புருஷாக்ருதியானதும், இரண்டாயிரம் கண்களை யுடையதும், ஆயிரம் கால்களை யுடையதுமாகிய விஷ்ணு சக்கிரம். கண்ணனால் சுதக்ஷணன் விட்ட பூதத்தின் மேல் ஏவப்பட்டது. கஜேந்தி ரன்பொருட்டு முதலைமேல் ஏவப்பட்டது. பாரத யுத்தத்தில் சூரியனை மறைக்கக் கண்ணனால் வருவிக்கப்பட்டது. இருக்குமாங்கதன் பொருட்டுத் துருவாசரால் ஒளி மழுங்கச் சாபம் பெற்றது. இது சலந்திரனை வதைக்கச் சிவமூர்த்திகாலால் வட்டமாகப் பூமியில் கிழிக்க அதனைச் சலந்திரன்தன் வலி கொண்ட அளவு பூமியுடன் பெயர்க்க அது தலைமட்டாக வருகையில் அவன் உடலைப் பிளந்தது. இது சிவமூர்த்தியிடம் இருந்தது. இதனை விஷ்ணுமூர்த்தி சிவபூசாபலத்தால் பெற்றனர் என்பர் சைவர். (காஞ்சிபுராணம்). அம்பரீஷனைக் காண்க.

சுதர்சன்

துரியோதனன் தம்பி.

சுதர்மணி

வாசுதேவன் தம்பியாகிய அநீகன் தேவி.

சுதர்மம்

1. பிரமகற்பங்களுள் ஒன்று. (பிரகன்னா தீய~புரா.) 2. இந்திரன் மண்டபம். (சுதர்மை),

சுதர்மா

1. பிரியவிரதன் பேரன், கிருதபிரஷ்டன் குமரன். 2. துரியோதனன் தம்பி. 3. சிவபூசாரந்தானான ஒரு அரசன். 4. பிடகநூல்வழித் தொடராது சிவ பூசை மேற்கொண்டு திரிபுரத்தையாண்ட அசுரன். 5. சேணிகமகாராசனுக்குச் சீவகன் சரிதை கூறியவர். கணதரருள் ஒருவர் (சைநர்). 6. தசார்ண தேசத்தரசன், பீமனுடன் யுத்தஞ் செய்தவன். (பார~சபா.) 7. தசார்ணவ தேசாதிபதி இவன் இராசசூய திக்விஜயத்தில் சேனாதிபதி யாக்கப்பட்டவன். 8. இந்திரன் தேர்ச்சாரதியாகிய மாதலி யின் பாரியை. இவள் குமரி குணகேசி. 9. கம்சன் சகோதரன். பலராமனால் கொல்லப்பட்டவன். 10. மதுராபுரியில் கண்ணனைப் பூமாலையால் அலங்கரித்த பூவாணிகன்,

சுதர்மை

இந்திரன் சபை. இது நூறு யோசனையகலம், (150) யோசனை நீளம், வேண்டுமிடத்துச் செல்லும் வலியுள்ளது,

சுதலம்

கீழ் எழுலகத்து ஒன்று, பசுநிறம் உள்ளது.

சுதா

ஆங்கீரசன் தேவி, தக்ஷன் குமரி, இவள் பிதுர்க்களை ஈன்றாள்.

சுதாகாரம்

பிதுர்க்களைக் களிப்பிக்கும் கர்மம்.

சுதாசநன்

1. சிவநன் குமரன். இவன் குமரன் சகதேவன். 2. (பிர.) பிரகத்ரதன் குமரன். இவன் குமரன் சதாநீகன். 3. சூரியவம்சத்து அரசன். வசிட்டர் சாபத்தால் அசானானவன். இவன் விசுவாமித்திரர் ஏவலால் சத்தி முதலிய (99) குமாரரைக் கொன்றனன். (காஞ்சி~பு.)

சுதாசன்

1. (சூ.) சர்வகாமன் குமரன். இவன் குமரன் சௌதாசன். 2. பாஞ்சாலாதிபதியாகிய சியவான் குமரன், சகாதேவன் தந்தை, 3. கல்மாஷபாதனுக்குத் தந்தை,

சுதானினி

சமீகரின் தேவி,

சுதானை

இவள் சுயோதன ராஜனுக்கு நருமதையிடம் பிறந்து அக்கிநியை மணந்து சுதரிசகனைப் பெற்றவள்.

சுதாமனி

வசுதேவன் தம்பியாகிய அநீகன் தேவி,

சுதாமன்

1, விச்வதாமனைக் காண்க, 2. கர்ணனுடைய புத்திரன் அர்ச்சுன னால் திரௌபதி சுயம்வரத்தில் கொல்லப் பட்டவன்,

சுதாயு

ஒரு மகாரதன், வருணராசன் குமரன், தாய் பன்னவாதை. பாரதம் பதி னான்காம் போரில் கிருஷ்ணனால் மோதப்பட்டு இறந்தவன்.

சுதாரை

1, சிவசூரியனுக்குத் கெற்கிலுள்ள சத்தி, 2. அருக்ககீர்த்தி புதல்வி. (சூளா.)

சுதாவல்லி

கன்றாப்பூர் காண்க.

சுதிருதி

(சூ.) பிரகத்ருதன் குமரன்.

சுதீக்ஷணர்

ஒரு முனிவர். இராமமூர்த்திக்குத் தாம் செய்த தவத்தை யளித்துத்தண்ட காரண்யத்திற்கு வழிகாட்டியவர். இராமமூர்த்தி இவராச்சிரமத்திற்றங்கி அகத்தியர் ஆச்சிரமஞ் சென்றனர். இவராச்சிரமம் நாகபுரிக்கு அருகில் இருக்கலாம்.

சுதுஷை

விதர்ப்பராஜன் தேவி. இவள் சாமகனால் பகைவரிடம் இருந்து அபகரிக்கப்பட்டுப் பின் பிறந்த விதர்ப்பனுக்கு மனைவியாக்கப்பட்டவள். குமரர் கிருதகிருதாள்.

சுதேகன்

திருதராட்டிரன் புத்திரன்.

சுதேகை

குசுமையைக் காண்க.

சுதேக்ஷணை

1. காந்தார ராஜனாகிய சுபலன் புத்திரி, திருதராஷ்டிரன் பாரியை 2. அணுவம்சத்தில் பிறந்த, சிபி என்பவனுடைய புத்திரனாகிய பலியின் தேவி. அவனுக்குத் தீர்க்கதமன் பிறந்தான். இவள் புத்திரர்கள் அங்கன், வங்கன், கலிங்கன், புண்டரன், சுக்மசேதி ஆக ஜவர்

சுதேக்ஷிணை

1. திலீபன் மனைவி, மகததேசத்து அரசன் பெண், 2. விராடன் தேவி, கீசகன் தங்கை. 3. அணுவம்சத்துப் பலியின் தேவி.

சுதேவன்

1. விதர்ப்பதேசாதிபதி. இவன் குமரர் சுவேதன், சுரதன். 2. (யது.) தேவகன் குமரன். 3, சம்பு குமரன், விசயன் தம்பி, நபாகனைக் காண்க. 4. தமயந்தியைத் தேடச்சென்ற வேதியன், 5. அம்பரீஷன் சேனாதிபதி. 6. காசிராஜனாகிய ஹரி அஸ்வன் குமரன், இவன்வீத ஒளவியனால் வெல்லப் பட்டான். இவன் புத்திரன் திவோதாசன்,

சுதேவி

1. நாபியின் குமரி, இவளுக்கு மேருதேவி எனவும் பெயர். 2, வசுவின் குமரி. நாவாமன் தேவி. இவள் முன்பிறப்பில் கழுகாய்ச் சிவநிவே தனம் கவரச்சென்று சிவவேதியர் வருதலைக் கண்டு அஞ்சிப் பறக்க அவ்விடத்து இருந்த தூசுமுதலிய சிறைக்காற்றால் நீங்கினதால் அரசன் மனையிற் பிறந்து அரசியாய் முன்னைய உணர்வு தோன்றிச் சிவபணிவிடை செய்து தன் வரலாற்றினைக் சாலவருஷிகேட்க அறிவித்து அவரால் சிவபூசைப் பலன் உணர்ந்தவள்.

சுதேஷணன்

1. பாதாள வாசியாகிய நாகன், 2. வசுதேவருக்குத் தேவகியிடம் உதித்த ஒரு யாதவவீரன்.

சுதை

1, நயுதன் பாரி. 2. தக்ஷன் குமரி, பரிகிஷத்துக்களுக்கும் சுவர்த்தாக்களுக்கும் தேவி.

சுத்தசைவ சித்தாந்தம் பதிலக்ஷணம்

சிவம் எனப்பட்டது, எல்லாவற்றிற்கு மேலானதாய் அருவம் உருவம் அல்லாத தாய், குணங்குறிக ளற்றதாய், ஏகமாய், நித்திய மாய், எண்ணிறந்த ஆன்மாகக்களுக்கும் அறிவாகி, அசலமாய், அகண்டி தமாய், ஆனந்தவுருவாய், மலபந்தர்களா வடையப் படாததாய், அணுவாகி, மகத்துமாகி விளங்குவது. பசுலக்ஷணம்: ஆணவமல மொன்றுடன் கூடிய விஞ்ஞாநகலர், ஆணவம், கன்மம் இரண்டுடன் கூடிய பிரளயாகலர், ஆணவம், கன்மம், மாயை மூன்றுடன்கூடிய சகலர் என பசுக்கள் மூவகைப் படுவர். முற்கூறிய விஞ்ஞானகலர் பக்வர் என்றும், அபக்வர் என்று மிருவகையர், இதில் பக்வர், மலபரிபாகத்தின் மிகுதியால் சிவாநுக்கிரகத்தைப் பெற்றுச் சிவத்துடன் மலரில் மணம் போல் ஒற்றுமைட், பட்டு முத்தியடைவர், அபக்வர், மலபா பாகத்தின் மந்தத்தால் சிவாநுக்கிரசுத்தை படடைந்தும் அதிகார மலமொன்றும் புடையவராய் இருப்பர்: அதிகாரமலம் உற்ற விஞ்ஞானகலர் அணுசதாசிவர், அட்டவித்யேசீவார், சத்தகோடி மகாமந்திரேசுவரர் என்று மூவகையார். அவர்களுள், அணுசதாசிவர்: சிவாநுக்கிரக மடைந்து சாதாக்கிய தத்வத்தில் இருப்பர். அஷ்டவித்யேசுவர் சுத்தமா யாகிருத்திய அதிகாரிகளாய் மயேசுர தத்வத்திலிருப்பர். சத்தகோடி மகாமந்தரேசுவரர் அஷ்டவித்யேசுவர ரால் பிரேரேபிக்கப்பட்டுச் சுத்தவித்யாதத்வத் திருப்பர். பின்னும் விஞ்ஞான கலரில் அபக்வருக்குக் கேவலத்தில் ஆன்மா நிற்குந் தன்மையால் வடிவமற்று ஆணவமல முடைமையால் பரிபாகம் வருமளவும் பெத்தராயிருப்பர். பிரளயாகலர். பக்வர், அபவர் என இருவகையர். இதில் பக்வர் பரிபாக மிகுதியால் சிருஷ்டிகாலத்துப் பரமுத்தி அபரமுத்தி பெறுவர். பரமுத்தி பெற்றவர் பரிபாக மிகுதியால் சிவத்துடன் கலந்தவர், அபரமுத்தி பெற்றார் சிவாநுக்கிரகத்தைப் பெற்றுப் பரிபாக மந்தத்தால் அஷ்டவித்யேசுவரரால் பிரேரேபிக்கப்பட்டு அதிகாரமலத்துடன் கூடிப் பிரகிருதி மாயைக்குக் கீழுண்டான கிருத்தியங்ககாச் செய்துகொண்டு கலாமத்ய வாசிகளாயிருப்பர். இவர்கள் கன்மத்துக் கீடாகச் சிருட்டி காலத்துச் சூக்கும தேகத்தோடு கூடிச் சகலராயும் விடுவர். சகலர்: மும்மலங்களால் கட்டப்பட்டுச் சரியை, கிரியை யோகம், ஞானங்களால் முறையே மாபை, கனமம், ஆணவம் என்கிற மலங்கள் தேயப்பரிபாகம் பெற்று மேற்சொன்ன பிரளயாகல் விஞ்ஞான கலபதமடைந்து முத்தி பெறுவர். பாசலக்ஷணம்: இது மலமெனவும் படும். ஆன்மா இதனாற் கட்டுப்படுதலின் பசு எனப்படும். மேற்சொன்ன பாசம், பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு அநாதிபந்தமாம். இப்பாசம் ஆணவம் கன்மம், மாயையென மூவிதப்படும். இவற்றுள் ஆணவம்: மற்ற இரண்டினைப் போல் நடுவில் வந்ததல்லாமையால் அநாதியாம், இது, அநேகமாகிய ஜடபதார்த்தம் அநித்தியமாதலால் சடமாய் நித்தியமாய் ஒன்றாயிருக்கும். இது, ஆன்மாக் களுக்கு அநாதிசித்தமாய் மறைவாயிருந்தும் கண்ணிற்குப் படலா திரோகம் போல வஸ்துவாகவே சொல்லப்படும். செம்பிற் களிம்பு தோனறியதற்குக் காரணம் எவ்விதமோ அவ்விதமே. ஆன்மா அனாதியே மலசம் பந்த முடையனாயினான். சிவன் அனாதியே, மலாகிதனாதலால் நிர்மலனாயினான். மலம், எவ்விதம் அரிசிக்கு முளையுண்டாவதில் உமி நிமித்தமோ அவ்வகையே ஆன்மாக்களுக்குச் சரீராதிகள் உண்டாவதற்கு நிமித்தமாம். இது வியாபகனாகிய ஆன்மாவை அநாதியே மறைத்து நீங்காதாயின் ஆன்மா முத்தி பெருனோ எனின் கண்ணிற்குப் படலம்போல் மலம் திரவியம், அப்படலத் திற்குப் பாகமுண்டு, அக்காலத்து அது நீங்கும். அவ்வாறு மலபரிபாக காலத்துச் சத்து குன்றும். கன்மம்: இது நானாப்பிர காரமாயும்; ஆன்மாக்களின் பல போகங்களுக்கு இடமாயும், ஆணவத்தைப்போல் சுபாவமாயும், சநந மரணத்துடன் கூடியும், அநாதியாயும், புருடன் தோறும் வெவ்வேறாகியும், ஆன்மாவில் சமஸ்கார ரூபமாயும் சூங்மமாயுமிருப்பதால் இந்திரியங்களாற் காணப்படாததாயும், மனோவாக்குக் காயத்தால் வருவதாயும், தர்மா தர்ம சுவரூபமாயும் பிருதிவி தத்துவ முதல் கலாதத்துவமளவும் உள்ள ஆன்மாக் களுக்குச் சுகதுக்காதி போகங்களைக் கொடுப்பதாயும் இருக்கும். மாயை: இது சுத்தம், அசுத்தம் என இரு வகைப்படும். இப்பாசம் அநேகவித வன்மையுடன் கூடியதாய், சூக்ஷ்மமாய், அசுத்த மார்க்கத்திற்கு முக்கியோபாதானகாரியாய், நித்தியமாய், பந்தமாய், தன்காரியங்களுக்கு ஆதாரமாய், வியாபகமாய், அசேதனமாய், அஞ்ஞானத்தைச் செய்வதாய்ச் சங்காரகாலத்தில் சகலர் பிரளா யாகலர் முதலிய ஆன்மாக்களுக்கு இருப்பிடமாயிருக்கும், இனிச்சுத்தமாயை யாவது, மேற்கூறிய லக்ஷணத்தைப் பொருந்தியிருப்பினும் சுத்த சுவரூபமாயும் ஆரதாத்துமாவிற்கு உபாதான காரணமாய்ச் சர்வவிஷய ஞானாதிகளைப் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்பர் சைவசிந்தாந்திகள். இச்சைவத்தில் முத்தி இரு வகைப்படும். அது பதமுத்தியுண்மை முத்தி யென்பன. பதமுத்தி சேர்வார் சரியை, கிரியைய நேகம் புரிந்தவர். அவர் சாலோக, சாமீப, சாரூபங் களையடைவர். உண்மை முத்தி சேர்வோர் மலபரி பாகத்தால் சத்திநிபாத மடைந்து இறைவன் ஞானாசாரியனா யெழுந்தருளித் தீக்ஷை புரிந்து உண்மை யறிவிக்க வுணர்ந்து தெளிந்து உண்மைப்பொருளுடன் தாதான்மியமா யிருப்பர். இதனையே அத்துவித மெனப்படும். அவ்வத்து விதமாவது, ஒருபொருளை அவயவ அவயவிகளாயாதல், குணகுணிகளாயாதல் வேற்று மைப்பட்டு இரண்டாய் நிற்றற்கேதுவாகிய தாதான்மியமும், அதுபோல், இருபொருளே அது அதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றற்கேதுவாகிய தாதான்மியமுமேனத் தாதான்மிய சம்பந்த மிருவகைப்படும். அவற்றுள் முன்னையது தாதான்மியமென்னும், பின்னையது அத்துவிதமென்றும் வழங்கப் படும். அதாவது, அன்மைப் பொருள் பற்றி இரண்டென வேற்றுமைப்படாமை கற்றலேயாம். இது, அபேத சம்பந்தமாகிய ஐக்கியா ஐக்கியமுமன்றி, பேதாபேத சம்பந்தமாகிய தாதான்மியமுமன்றி, பேத சம்பந்தமாகிய சையோகமுமன்றிக் கலப்பும், உடனாதலும், வேறாதலுமாகிய மூன்றுந்தன் கட்டோன்றி நிற்றல் பற்றியதாம். இதனை “அலைகடலிற் சென்றடங்கு மாறு போல் ” எனவும், பானத்தில் வானும், மணத்தின் மணமும் போல்” எனவும், அபேதவுவமையும், ‘பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவு மெண்ணுஞ் சுவையும்போல் எனவும், நீரும் அமுதமும் போல் எனவும், கூறியிருத்தல் போல் சிவத்துடன் கட்டியிருந்து ஆனந்தத் தழுந்தன் என்று கூறுப.

சுத்தசைவன்

இவன் சைவரில் பேதப்பட்டவன். இவன் சித்தாந்தியோடு பெரும்பாலும் ஒப்பன் ஆயினும் இவன் ஆன்மாவும் சிவமுங்கூடிய இடத்து ஆன்மா சிவானுபவத்திற்கு உரித்தாகா தென்பன்.

சுத்தன்

1. (சங்.) அநேநஸ் குமரன், இவன் குமரன் சசி. 2. சண்முகசேநா வீரன்.

சுத்தபிரம்மம்

அபின்னாசத்தி அதீதபிரமத்தில் அடங்கியிருப்பது,

சுத்தபொருள்கள்

ஆகாசம், வாயு, நெருப்பு, பூமியிலுள்ள நீர், தருப்பை. (பார்.)

சுத்தமதி

ஓர் நதி. சோதிநாட்டு அருகில் உள்ளது. இது பெண்ணுருக்கொண்டு கோலாகலத்தைக் கூடி வசுபதத்தன் என்னும் ஒரு புத்திரனையும் கிரியை என்னும் புத்திரியையும் பெற்றது.

சுத்தவித்தை

சதாசிவ நாயனார், தமக்குச் சுதந்தரமான இருதயத்தையை வகையாகத் திருவுளத்தடைத்தும் மகேசுரமான அவதாரத்தில் சத்ரியு மதுவாக நின்று அந்தத் தொழிலை நடத்துகைக்குக் காரணமாக நின்ற அவதாரம், வ

சுத்தவித்யா தத்புவன வாசிகள்

சந்த கோடி மந்திரமூர்த்திகள், சுத்தவித்யாதத் வத்தில் காலம், நியதி, கலை, வித்தை, ராகம், புருடன், மாயை எனும் புவனங்களும் தத்வங்களும் அடங்கியவை. (சிவஞானபோதம்.)

சுத்தாநந்தப்பிரகாசர்

சுத்தாசந்தம் எனும் பாரதநூல் ஆசிரியர்.

சுத்தாவத்தை

ஆன்மாக்கள், கேவலசகலப்பட்டுப் பிறந்திறந்து திரியுமவதாத்து அவர்கட்கு இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம், குருவருள், ஞானசாதனம், மும்மலக்கழிவு, வாதனை நீக்கம், ஞானப்பெருக்கமுண்டாகப் பெற்றுத் திருவருளைக் கூடுவது. இது இரவில் இருளோடும் விளக்கோடும் கூடிய கண் ஆதித்தவுதய கிரணத்தால் ஆதித்தனைக் காண்டல் போலும்.

சுத்தி

பொன், இரத்தினம், வெள்ளி, சங்கு இவைகள் ஜலத்தினால் அலம்பின் சுத்தப்படும். செம்பு, இரும்பு, வெண்கலம், பித்தளை, தூராய், ஈயம் இவற்றாலான பாத்திரங்களைப் புளித்த தண்ணீர், உப்பு, சரம்பர், சாணம் இவைகளைக் கொண்டு சுத்தி செய்க, நெய், எண்ணெய் இவற்றைக் காகம் தொட்டால் இரண்டு தர்ப்பைக்ளால் ஒரு துளி அப்பால் எடுத்துவிட்டால் சுத்தி, படுக்கை ஜலத்தாலும், மரப்பாத்திரத்தைச் சீவுகிறதாலும், வீடு பெருக்கி மெழுகுதலாலும், சுத்தமாம். முறம், பண்டி, உலக்கை, உரல், இவைகள் தண் ணீராலும் சுத்தியாம். சுருக்கு, சுருவம், யூபஸ்தம்பம் இவற்றை வெந்நீராலும், தண்ணீராலும் சுத்தி செய்க. ஓர் ஆன் சுமைக்கு மேற்பட்ட நெற்சுமை, வஸ்திரம் அசுத்தப்படின் ஜலப்புசோஷணத்தால் சுத்தமாம். மான்றோல், புலித்தோல், மரவுரி இவைகளை வஸ்திரத்தைப்போல் சுத்திசெய்க. காய், கிழங்கு, பழம் இவற்றைத் தண்ணீரால் சுத்திசெய்க. புழுவாலான பட்டுகள் ஆட்டு மயிர்க் கம்பளம் இவைகளை உழமண்ணால் சுத்தி செய்க. நேபாள தேசத்துக் கம்பனத்தை வேப்பங்கொட்டையாலும், சால்வையை வில்வப் பழத்தாலும், வெண்பட்டு, சங்கம், தந்தம், மான் கொம்பு, வெண்கடுகினாலும் சுத்தி செய்க, மண்பாத்திரங்கள் மீண்டும் சூளைபோடுதலால் சுத்தியாம். கள், மூத்திரம், மலம், கோழை, இரத்தம், சீ, ரேதஸ் இவைகள் பட்ட பாத்திரம் சூளையில் இடினும் சுத்தமடையா. சண்டாளராதிகனால் அசுத்தப்பட்ட வீடு ஒரு நாள் பசு வசிப்பதால் சுத்தமடையும். பக்ஷியாலும் பசுவினானும் மோக்கப்பட்டும் மிதிக்கப்பட்டு முள்ளதும், தும்மிய எச்சில், மயிர், புழு இவைகளின் சம்பந்தமுள்ள அன்னமும் மண்ணைக்கிள்ளி அதன் மேல்போடுவதால் சுத்தமாகும். மேகத்திகனால் பொழியப்பட்டும் பசுக்கள் குடிப்பதனால் குறைவிலாதும் இருக்கிற ஜலம் சுத்தமானது. தேவர்களுக்குப் புஷ்பம் கட்டுகிறவன், விற்பனைக்காகப் பரப்பப்பட்ட வஸ்துக்கள், பிரமசாரியின் பிஷான்னம் சுத்தம் உடையவாம். ஸ்திரீகளின் முகம் பக்ஷிகளால் தள்ளப்பட்ட பழம், பசுவின் கன்றின் வாய், வேட்டைநாயின் வாய் இவை இயற்கையில் சுத்தம் உள்ளன. தொப்புளுக்கு மேற்பட்ட மனித இந்திரியங்கள் சுத்தமுடையன. அதற்குக் கீழ்ப்பட்ட இந்திரியங்களும் அவற் றில் உண்டாம் மலங்களும் அசுத்தம் உடையன. ஈ, ஜலத்திவலை, நிழல், பசு, குதிரை, சூரியகாந்தி, பூமி, காற்று, தீ இவை மேலே படுகிறதினால் அசுத்தமில்லை. சுவர்த்தண்ணீர், ரேதஸ் இரத்தம், சுண்டு மூத்திரம், மலம், காதுக்குறும்பி, நகம், அழுக்கு, கண்ணீர், பீளை, வியர்வு இப்பன்னிரண்டு மலங்களும், ஜலத்தால் சுத்தம் அடையும். வாயினின்று தேகத்தில் விழுந்த ஜலத்திவலை, வாயிற்பட்ட மீசை பலவரிசையில் ஒட்டிய பொருள் இவை களுக்கு எச்சில் கிடையாது. சாப்பிடுபுமுன் வாந்தி செய்தவனும், புணர்ச்சி செய்தவனும் ஸ்நானம் செய்யின் சுத்தமாவர்.

சுத்தி பத்திரம்

ஒருவனைப் பற்றிய பழி ஆதாரமின்மையால் விலக்கப் பட்டுழி சாக்ஷிகளுடன் எழுதுவது.

சுத்தியு

பூருவம்சம் சாருவின் புத்திரன் இவன் புத்திரன் வெகுபன்.

சுத்தியும்நன்

சாளுவசேநாபதி, இவன் தேவதானவர்களால் சாவில்லாவரம் பெற்றவன். 2. சாட்சூசமனுவின் குமரன். 3. இந்திரத்துய்நன் எனும் பாண்டி யன் குமரன், கங்கைக்கரையிலுள்ள பிரதிட்டான நகரத்தில் சிவபூசை செய்திருக்கையில் திரணபிந்து முனிவர் வந்து இவன் முன்னைய பிறப்பைக் கேட்க அரசன் நான் முன்பிறப்பில் வேடன் வழிச்செல்வோர் பொருளை என்னுடன் இருந்தவருடன் கூடிப் பறிக்கையில் அரகர என்று சிவ மூர்த்தியின் திருநாமத்தை உச்சரித்ததால் அரசனாய்ச் சிவபூசை கடைப்பிடித்தேன் என்று கூறி முனிவர் அருள் பெற்றவன். 4. வைவச்சுதமனுவிற்குப் பெண்ணாக முதலில் யாகத்திற் பிறந்து மீண்டும் வசிட்டரால் ஆணாதி உத்கலன், சயன், விகல்வன் எனும் புத்திரரைப் பெற்றுப் பார்வதியார் வனத்திற் சென்று பெண்ணாகி இளை எனும் பெயருடன் புதனைப்புணர்ந்து புரூரவனைப் பெற்றவன்.

சுத்திரமான்

பத்தாம் மன்வந்தரத்துத் தேவர்.

சுத்திரிதி

(சூ) இராஜவர்த்தனன் குமரன்.

சுத்துய்மன்

இவன் இந்திரத்துய்மன் குமரன் இவன் முற்பிறப்பில் வேடனாய் வழிபறித்துண்டு வாழ்ந்திறந்து யமபுரஞ் சென்றனன், காலன் இவன் செய்த தீங்கென்னென இவன் வழிச்செல்வாரை யரகர பிறகரவென்றான் என, யமன் இவன் சிவ நாம சங்கீர்த்தனஞ் செய்ததனால் யமன் கட்டளையால் தெய்வவுலக மடைந்து பல்லாண்டு கடந்து பாண்டி நாட்டரச புத்திரனாய்ச் சிவபூசை செய்து வருகின்றேன் எனத்திரணவிந்து கேட்பக் கூறினன், (கூர்மபுராணம்.)

சுத்தோதன்

1. (சூ.) சாக்கியன் குமரன். 2. ஜினன் தம்பி. இவன் குமரர் கபோ தராமா, காகாக்ஷன், காகன், கிருஷ்ணன்,

சுத்யாதத்வம்

சுத்தமாயையில் துலகாரியந் தோன்றற்கு முதல்வனும், பால அதிகார அவத்தையினின்று ஞானசத்தியை மிக்குச் செலுத்திப் பிரவிருத்தி செய்தவழி தூலமாய்க் காரியப்பட்ட சுத்த மாயையின் ஐந்தாம் விருத்தி வித்தைக் கேதுவாகிய ஈசானாய் நின்ற சிவனால திட்டிக்கப்படுவது. இதனைத் தூலஈசாதத்வம், அதிகாரதத்வம், பிரவிருத்திதத்வம், பல சகளதத்வம் என்பர். (சிவ~போ.)

சுத்யும்நன்

இவன் பூர்வஜன்மத்தில் வேட னாயிருந்தவன். இவன் வழிப்போக்கரின் பொருளைக் கொள்ளை கொண்டு கடைசி காலத்தில் நல்லவர்களின் உபதேசத்தால் சிவஸ்மாணை செய்து மறுபிறப்பில் சூரி வம்சத்தில் பிறந்து நற்கதி பெற்றவன். (சௌர~புராணம்)

சுத்ரதன்

(க்ஷத்ரதன்) சசிஎகனன் குமரன். இவன் கிரகம் நன்மையல்லாத தினத்தில் விதைவிதைத்தால் நாசமாக்கும் தெய்வம்.

சுத்ரவிரணரோகம்

இது சிறு விரணங்களைத் தரும் கட்டிகளாம். இவை (36) விதம் உண்டு, 1. அஜகள்ளிகாபோகம், 2, யவப்பிரக்யாரோகம், 3. அலசிரோ கம், 4, கச்சபிரோகம், 5. பனசிகாரோகம், 6. பாஷாணசர்த்தபிரோகம், 7. முக தூஷிகாரோகம், 8. பதுமகண்டரோகம், 9, விவர்தரோகம், 10. மசூரிரோகம், 11, விஸ்போடரோகம், 12. வித்தாரோகம், 13. கர்த்தபிரோகம், 14. கட்சியா ரோகம், 15, கண்டரோகம், 16 ராஜிகாரோகம், 17, ஜாலகர்த்தபிரோகம், 18. அக்னிரோ கணிரோகம், 19. பரிகல்லிரோகம், 20. பீதாரிகாரோகம், 21. சர்க்கராரோகம், 22, சருக்கராற்புதரோகம், 23. வன்மீக ரோகம், 24. கதர ரோகம், 25. ருத்தகுத ரோகம், 26, சில்வரோகம், 27. குநகரோகம், 28. அசலவிரணரோகம், 29. திலகரோகம், 30. மசரோகம், 31. ஜதுமணி ரோகம், 32, லாஞ்சனரோகம், 33, வியங்கரோகம், 34. பிரசுப்திரோகம், 35, உத்கோடரோகம், 36. கோடரோகம் என்பன. (ஜீவ.)

சுத்வா

யஞ்ஞசம்பந்தியாய் ஸ்நானஞ்செய்தவன்.

சுநகன்

1. கிரிச்சமதன் குமரன். இவன் குமரர் சௌநகருஷியாயினர். 2. குருவிற்குப் பிரமத்வரையால் பிறந்தவன். 3. புரஞ்சயனுக்கு மந்திரி, இவன் அரசனைக் கொன்று குமரனை விற்றவன். இவன் குமரன் பிரத்தியோதனன், 4. ஒரு இருடி. பத்தியன் மாணாக்கன்.

சுநசை

ஒரு நதி பாரிபத்திர வனத்தில் உற்பத்தியாவது.

சுநச்சகர்

இவர் விடதானால் சத்தருஷிகளைக் கொல்ல அனுப்பிவைத்த பூதத் தைக் கொன்றவர். இவர் இந்திரனைச் சப்தருஷிகளின் கிழங்கு மூட்டையைக் கொடுப்பித்து மழை பெய்யச் செய்தவர்.

சுநச்சத்திரன்

(பிர.) நிர்மித்திரன் குமரன். இவன் குமரன் பிரகத்கர்மா. (சுகக்ஷத்ரன்),

சுநச்சேபர்

1. இருசிகருஷியின் புத்திரர். அம்பரீஷனுக்கு யஞ்ஞநிமித்தம் விற் கப்பட்டவர். 2. அஜீகர்த்தன் குமரன் அசீகர்த்தனைக் காண்க.

சுநந்தநந்தன்

விஷ்ணு கிங்கான்.

சுநந்தனன்

ஒரு சாரணன். (சூளா.)

சுநந்தனர்

கிருஷ்ணன் குமரர்.

சுநந்தன்

1. விஷ்ணு திக்பாலகன். 2. புருஷமேரு குமரன். இவன் குமரன் கோரன்,

சுநந்தமுனிவர்

இவர் சிவமூர்த்தியின் நடன தரிசனம் வேண்டித் திருக்கைலையில் சிவபெருமானிடம் நடன தரிசனம் வேண்டச் சிவமூர்த்தி முனிவரை நோக்கி நீ வடவனம் சென்றிருக்கின் நாம் அவ்விடம் வருகிறோம் என அவ்வகைவந்து தவம்புரிகையில் சடையெல்லாம் பூமியோடு பூமியாய்ப் பொருந்திப் புல்லாகிவளா இவர் மேல் புற்றும் வளர்ந்தது. அதனால் முஞ்சி கேசமுனிவர் எனப் பெயர்பெற்றனர்.

சுநந்தம்

பலராமர்கையிற்றாங்கிய உலக்கை.

சுநந்தை

1. கேகயராசன் மகள். துஷ்யந்தன் குமரனாகிய பரதமகராசன் பாரி. 2. சர்வபூமன் தேவி. 3. சேதிநாட்டரசன் மருமகள், தமயந்தியைத் தங்கைபோற் காத்தவள். 4. சீவகனை வளர்த்த தாய். 5. ருஷபதீர்த்தங்கரின் தேவி. (சைநர்) 6. சீதள தீர்த்தங்கரின் தாய். (சைநர்.)

சுநயன்

பிரசக்தி குமரன்.

சுநாபன்

1. திருதராட்டிரன் குமரன், 2. காசிநாட்டரசன். அர்ச்சுகனால் செவிக்கப்பட்டவன். கடதேசாதிபதி. (பார்.) சபா.) 3. சஷேணன் குமரன். 4. வச்சிரநாபன் தம்பி. 5. கடகதேசாதிபதி. திக்விஜயத்திற்குச் சென்ற அர்ச்சுனனால் வெல்லப்பட்டவன்,

சுநாமன்

1, கம்சன் சகோதரன், பலராமனால் கொல்லப்பட்டவன். 2. கருடன் குமரன். 3. சுகேது குமரன், இவன் உடன் பிறந்தான் குமரன் சுவர்சஸ்.

சுநிதன்

1 (சந்.) சந்நிதி குமரன். இவன் குமரன் சுகேதனன், பாண்டவர்க்கு நண்பண். 2, சுஷேணனன் குமரன். இவன் குமரன் நிருஷசச்சு. 3. (பிர.) பலன் குமரன். இவன் குமரன் சத்யசித்.

சுநிதை

அங்கன் தேவி, குமரன் வேகன்.

சுநீதன்

1. சிசுபாலனுக்குச் சேகாதிபதி. 2. சந்நதியின் குமரன்,

சுநீதி

1. பஞ்சகன்னியரில் ஒருத்தி, 2. அங்கன் தேவி, வேநன் தாய், 3. உத்தானபாதன் தேவி, துருவன் தாய், 4. விரேதன் குமரன். குசம்பனால் சிறைப்பட்டு வத்சந்திரனால் விடுபட்டவன். சகோதான் சுமதி.

சுநீதை

அங்கன் பாரி, மிருத்யு புத்திரி, வேநன் தாய்.

சுநுகிணன்

அணுவம்சத்துப் பலி குமரன்,

சுநுஷை

விதர்ப்பன் தேவி,

சுந்தன்

1. இரணியகசிபின் சந்ததியானாகிய நிகும்பன் குமரன். திலோத்தமை பைக் காண்க. 2. தாடகை கணவன். இவன் குமரர் மாரீசன் சுபாகு. சுகேது மருமடின், இவன் செருக்கால் அகத்தியாது ஆச்சிரமத்திலிருந்த மரங்களை அழித்து அவர் கோபத்தீயாற் சாம்பர் ஆனவன்.

சுந்தரக்கோன்

காட்டில் வழிதெரியாத புலவர்க்கு வழிகாட்டிக் கவிபெற்ற இடையராகிய சொக்கலிங்கமூர்த்தி,

சுந்தரசாமந்தன்

சவுந்தர சாமந்தனைக் காண்க.

சுந்தரசோழன்

இவன் கனகசோழன் மகன் இவன் மனைவி சித்திரவல்லி. இவன் மகள் உற்பலாவதியைச் சுந்தரபாண்டியனுக்குக் கலியாணம் செய்வித்த னன். இவன் அரசாட்சியில் ஒரு காசிப் பிராமணன் தீர்த்தங்கொண்டு இராமேச் சுரம் செல்ல வருசையில் வழியில் கர்ப்பிணியாகிய தன் மனைவியை இவனிடம் பாதுகாக்கவிட்டுப் போய் ஒருவருஷம் கழித்துவர அரசன் அந்தப் பார்ப்பினியைத் தன் பெண்போற் பாதுகாத்து வந்தனன், இராமேச்சுரஞ் சென்ற வேதியன் திரும்பித் தன் மனைவி நிலையறிய யாரும் அறியாது அந்தப்புரத்தில் ஒளித்திருந்து நடுராத்திரியில் மனைவியின் கைப்பிடிக்கப், பார்ப்பினி ஓலமிட்ட சத்தமறிந்து அரசன் வேதியனை வெட்ட அரசனைப் பிரமகத்திபற்றியது. அரசன் பல சிவாலய பிரதிட்டை செய்து சிவதரிசனஞ் செய்து மத்தியார்ச்சுகஞ் சென்று பூசத்துறையில் ஸ்னானஞ் செய்து சிவதரிச னஞ் செய்யும்படி கீழைக்கோபுர வாசல் வழிச் செல்லுகையில் சோழபிரமகத்தி அவ்விடம் நின்று போய் விட்டது. பின் அரசன் சந்தோஷித்துப் பல திருப்பணி கள் செய்வித்து தன் மகன் காலகாலசோழனுக்குப் பட்டம் கட்டிச் சிவபதம் அடைந்தனன். (ஓரியண்டில் லைபிரெரி, மதராஸ், சோழர்சரித்திரம்)

சுந்தரத்தோளுடையார்

எழுபத்துநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்பரை)

சுந்தரன்

1. இவன் சநார்த்தனன் எனும் வேதியன் குமரன். இவன் காட்டில் சமித்து முதலிய கொய்யச் சென்று பாம்பு கடித்து இறந்தனன். இவன் தந்தை இவன் இறந்ததற்குக் காரணமென்னவென்ன ஆராய்கையில் இவன் முன் பிறப்பில் பசுவின் கன்றைக் குத்திய பாபம் பாம்பாய்க் கடித்திறந்தானென உணர்ந்து மிருதசஞ்சீவி தீர்த்தத்தில் தன் குமரனுடலைத் தோய்த்து உயிர்பெறக் கண்டவன், 2. திருதராட்டிரன் புத்திரன்.

சுந்தரபாண்டியன்

இவன் பாண்டிநாட்டரசன், தேவி விந்தியாவலி சேது தரிச னஞ் செய்யச் சென்று அவ்விடம் அவதரித்திருந்த இலக்ஷ்மி தேவியைப் பெண்னாகக்கொண்டு வளர்க்கையில் விஷ்ணு மூர்த்தி ஒரு சைவவேதியராய் வந்து பூந்தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்த கன்னிகையைக் கைப்பிடித்தனர். கன்னிகை முறையிட்டதால் அரசன் வேதியரை விலங்கிட்டுச் சிறையிலிட்டனன். விஷ்ணுமூர்த்தி அரசன் கனவில் தரிசனம் தந்து தன்னை யறிவிக்க அரசன் களித்துத் தனது கன்னிகையைத் திருமாலுக்குத் திருமணஞ் செய்வித்தனன். திருமால் அரசனுக்கு வேண்டிய வரம் அளித்துச் சேதுவில் சேதுமாதவராய் எழுந்தருளி விருக்கின்றனர். இவனுக்குக் குணாநிதி பாண்டியன் எனவும் பெயர். (சேதுபுராணம்.)

சுந்தரமாறன்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவருளால் வெப்புநீங்கி அழகெய்தியபின் கூன்பாண்டியப் பெயர் நீங்கி இத்திருநாமம் பெற்றவன். (திருவிளையாடல்.)

சுந்தராசுரன்

இவன் தேவரை வருத்திச் சிவமூர்த்தியின் நெற்றி விழியால் எரிந்த அசுரன்.

சுந்தரானந்தர்

இவர் போகர் மாணாக்கருள் ஒருவர். இவர் ரெட்டிச் சாதியாராம். இவரும் சித்தர். இவர் செய்த நூல் வயித்தியத்திரட்டு. (குலாலபுராணம்.)

சுந்தராமா

பதின்மூன்றாம் மன்வந்தரத்துத் தேவர்.

சுந்தரி

1, நருமதை எனும் காந்தருவ மாதின் பெண், மாலியவான் பாரி, 2. முதலில் விஷ்ணுவிடம்பிறந்து கந்த மூர்த்தியை மணக்க இமயச்சாரலில் தவமியற்றக் கந்தமூர்த்தி தரிசனர்தந்து சிவமுனிவரால் மான்வயிற்றிற் பிறந்து வளருக. நாம் அக்காலத்து வந்து மணப்போம் எனக் கூற அவ்வகை பிறந்து முருகக் கடவுளை மணந்த வள்ளி நாயகியார். 3. ருஷப தீர்த்தங்காருக்குச் சுநந்தையிடம் பிறந்த குமரி. 4. சார்ங்கதரன் குமரி, இவள் சித்திரன் என்பவனை மணர்து விபசாரஞ் செய்து திரிகையில் கணவன் கோபிக்கச் கணவனைத் தூங்குகையில் கொன்றனள். அரசன் அறிந்து இவளை ஊரைவிட்டு நீக்க நீங்கி நல்லவர் உண்டசேஷம் உண்டு நற்பதம் அடைந்தவள். இப்பெயர்கொண்ட மற்றொருத்தி இவ்வகை செய்து புருஷனைக்கொன்று அரசனாற்றுரத்தப் பட்டு மற்றொருவனைக்கடி அவன் தலையில் கருங்கல்லைமோதிக் கொன்றனள். அக்கல் கோயில் திருப்பணிக்கு உதவியதால் முத்திபெற்றவள், 5. கேகய ராஜனாகிய சார்வபவுமன் பாரியை, இவள் புத்திரன் ஜயத்சேனன்

சுந்தரேசபாதசேகரபாண்டியன்

இவன் வங்கியபதாக பாண்டியன் குமரன். இவன் தன் வருவாய் முழுதும் சிவதிருப்பணி செய்வது அறிந்து ஆயிரம் பரிக்கோர் சேவகன் என்னும் சோழன் சண்டைக்கு வரப்பாண்டியன் சொக்கரிடம் முறையிட்டனன், சிவமூர்த்தி அசரீரியாய் நாம் முன்னிற்போம், அஞ்சவேண்டாம் எனக் கூறப் பாண்டியன் சேனைகூட்டி யுத்தத்திற்கு வந்த சோழனுடன் யுத்தஞ்செய்யச், சொக்கர் வேடுருவாய்ச் சோழனைத் துரத்தி மறையப் பாண்டியன் அச்சோழனைப் பின்தொடர்ந்து போயினன். சிறிது தூரஞ் சென்று சோழன் திரும்பிப்பார்க்க வேடன் இல்லாமை கண்டு பாண்டியனைத் துரத்தப் பாண்டியன் திரும்பி மடுவில் விழுந்து ஏறச் சோழன் மடுவில் விழுந்து இறந்தனன். இவன்காலத்து மாமனாக வந்து வழக்குரைத்த திருவிளையாடல் நடந்தது. இப்பாண்டியன் குமரன் வாகுணபாண்டியன்,

சுந்தாமூர்த்திசுவாமிகள்

ஸ்ரீகைலாயத்தில் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்திருந்த ஆலாலசுந்தார். இவர் நந்தாநவனத்திற்குப் பூக்கொய்யச் சென்று, அநிந்திதை, கமலினி என்னும் பார்வதியாரின் தோழிமார்களைக் கண்டு மோகித்து, மலரெடுத்துச் சுவாமி சந்நிதானத்திற்குச் சென்றனர். இச்செய்தியை அறிந்த சிவமூர்த்தி சுந்தரரை நீ பூமியில் சென்று இன்பம் அனுபவித்து வருக என்றனர். இவ்வகையே தேவியாரும் அவ்விருவரையும் பணித்தனர். சுந்தரர் மனங் கலங்கி என்னைத் தடுத்தாள வேண்டும் என்று வேண்டச் சிவபெருமான் அவ்வகை கிருபை புரித்தனர். அதனால் திருநாவலூரில் ஆதிசைவப் பிராம்மண குலத்தில் சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் திருமைந்தராய் அவதரித்து நம்பியாரூரர் என்னும் திருநாமம் பெற்று வீதியில் விளையாடுகையில் நரசிங்க முனையரையர் என்னும் அந்நாட்டரசர் இவரது தேசசைக் கண்டு தந்தையரைக் கேட்டு வளர்க்க வளர்ந்து புத்தூர் சடங்கவிமறையோன் குமரியை மணக்கும் தருணத்தில் சிவபெருமான் ஓர் விருத்த வேதியர் உருக்கொண்டு கலியாணப் பந்தரில் சென்று, நம்பியாரூரரை நோக்கி உனக்கும் நமக்கும் ஒருவழக்கு உண்டு. அது தீர்ந்தபின் நீ மணக்கலாம் என்றார். அது என்ன என்று நம்பிகேட்க, நீ நமக்கு அடிமை என்று முறியோலை காட்டினர். இதை வேதியர்கள் கேட்டு நகைத்தனர். ஆரூரர் சுவாமியை நோக்கிப் பிராமணர் பிராமணர்க்கு அடிமை ஆகுதல் அறியோம். நீர் பித்தரோ என்றார் நான் பித்தனானால் ஆகட்டும். நீ அடிமை செய் என்றார். ஆனால் நீர் காட்டிய ஓலையைப் பார்ப்போம் என்ன, அவ்வகை காட்ட நம்பி கோபத்துடன் அதைப் பிடுங்கிக் கிழித்தனர். சுவாமி ஆரூரரைவிடாது பிடித்து முறையிட வேதியர் விலக்கி, வீண்வழக்கிடும் நீங்கள் எந்த ஊர் என்ன, இந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்றனர். ஆனால் அந்தவழக்கினை அங்கேகூறிக் கொள்ளப் புறப்படும் என்னச் சென்று வழக்கைக்கூறி மூலமுறி ஒலையை நிசப் படுத்தினர். இதைப் பிரமணர்கள் கண்டு நம்பியாரூரை நீர் அடிமை செய்வது முறை என்றனர். அவ்வகை உடன் பட்ட ஆரூரர், ஐயரே இந்த ஊரில் தங்களுக்குத் திருமாளிகை எங்கு என்னச் சுவாமி, காட்டுகிறேன் வருக என்று பல வேதியர்தொடர அருட்டுறை என்னும் ஆலயத்துள் சென்று மறைந்தனர் ஆரூரர் பின் தொடர்ந்து அழைக்க, சவாமி இடபாரூடராய்த் தரிசனந்தந்து ஆதிசங்கற்பம் அறிவிக்கத் தெளிந்து துதித்தனர். ஆரூரர், நான் என் செய என்னச் சவாமி நீ நம்மைத் தலந்தோறும் துதித்துவர என்றனர். எப்படித் துதிக்க என்ன நீ நம்மை வலிமையுடன் வைதுவன்றெண்டன் என்னும் பெயர் பெற்றாய், நம்மைப் பித்தன் என்றனை, ஆதலால் அவ்வகையே பாடுக என, அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு “பித்தாபிறைசூடி” என்று திருப்பதிகம், ஓதித் துதித்தனர். பின்பு தலயாத்திரை செய்யத் தொடங்கித் திருத்துறை ஊரில் தவநெறி பெற்றுத் திருநாவுக்கரசுகள் திருத்தொண்டு புரிந்த திருவதிகைக்கு உள்புகாமல் அருகிருந்த சித்தவடமடத்தில் இராத்திரி நித்திரை செய்கையில் சுவாமி விருத்தவேதியராய் எழுந்தருளி அவரது திருவடிகள் சுந்தரர் திருமுடியில் பட நித்திரை செய்கையில் ஆரூரர் இவ்வகை புரியலாமோ என்ன விருத்தர் கிழவனாகையால் தெரியாது செய்தேன் என ஆரூரர், வேறிடத்திற் சயனிக்கச் சுவாமி மீண்டும் அவ்வகை புரியக் கண்டு நீர் யார் என நீ நம்மை அறியாயோ என்று மறைந்தனர். சுந்தார் அவ்விடம் ”தம்மானை” என்ற திருப்பதிகம் ஓதி, சிதம்பரம் அடைந்து துதிக்கையில் திருவாரூர்க்கு வரும்படி அசரீரி கட்டளை உண்டாக, விடைபெற்று நீங்கிச் சீர்காழித் தலத்துள்ளாகாது புறத்திருந்து பதிகம் ஓதி, திருவாரூர் அடைந்து புற்றிடங்கொண்டாரைத் தரிசித்துச் சிவபெருமானால் தமக்குத் தோழன் எனப் பட்டுத் தம்பிரான் தோழன் எனத் திருநாமம் பெற்றிருந்தனர். இவர் இவ்வகை இருக்க முன்னமே பார்வதியாரால் கட்டளைபெற்றிருந்த கமலினியார் திருவாரூரில் ருத்திரகணிகையர் குலத்தில் பாவை யார் என்று அவதரித்து ஒருநாள் தரிச னத்திற்குப் போகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் காணச் சென்றனர். சுந்தரர் கண்டு மயல் கொண்டு இவரைத் தமக்கு மணஞ்செய்விக்கச் சிவபெருமானை வேண்டினர். அவ்வகைச் சிவாஞ்ஞையைச் சொப்பனத்தில் ஏற்ற பெரியோர் பாவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் முடித்தனர். பின்பு திருத்தொண்டர் களைப் பாடி அங்கிருந்து கோளிலிசென்று தண்டை யூர்க்கிழார் கொடுத்த நெற்களைத் திருவாரூரில் சேர்க்கும்படி சவாமியைக் கேட்டுப் பூதகணங்களால் திருவாரூரில் பெற்றுக் கோட்புலியார் அடிமைகளாகத் தரப்பெற்ற சிங்கடி, வனப்பகை எனபவர்களைத் தமக்கு புத்திரியராக அங்கீகரித்துத் திருப்புகலூருக்கச் சென்று செங்கல் பொன்னாகப் பதிகமோதி, அங்கு நின்று பல தலம் பணிந்து திருமுதுகுன்றடைந்து பொன் வேண்டி (1200) பொன் பெற்று மணிமுத்தாநதியில் இட்டு இதைத் திருவாரூர்க் குளத்தில் தரவேண்டும் என்று வேண்டி, நீங்கி, திருவாரூர் அடைந்து பாவையாருடன் கமலாலயத் தீர்த்தக்கரையில் வந்து ஜலத்திற் பார்க்கையில் பொன் அகப்படாதது கண்டு பதிகமோதிப் பெற்றுப் பல தலங்களை அடைந்து தரிசிக்க எண்ணங்கொண்டு நீங்கித் திருக்குருகாவூருக்கு அருகுவரப் பரமசிவம் இவரது இளைப்பைத் தணிக்க எண்ணிச் சோலையுடன் தண்ணீர்ப்பந்தல், கட்டமுது வைத்துந் காத்திருந்து சுந்தரர் வருவதைநோக்கி நீர் மிகவும் களைத்திருக்கிறீர், இந்தக் கட்டமுதைத் தொண்டர்கள் உடன் புசித்து இளைப்பாறுக என்னச் சுந்தரர், அவ்வகை செய்து சயனிக்கையில் சிவபெருமான் சோனையுடன் மறைந்தனர். சுந்தரர் விழித்துச் சிவமூர்த்திசெய்த திருவிளையாடற்கு அற்புதம் அடைந்து, திருக்குருகாவூர் அடைந்து பதிகம் ஒதி, விடைபெற்றுப் பல தலம் பணிந்து திருக்கச்சூருக்குவர அங்கு பரிசனத்தார்வரத் தாமதித்தமையால் தொண்டர் பசியைக்கண்ட சிவமூர்த்தி ஒரு வேதியர்போல் எழுந்தருளி நான் இங்குப் பிராமணர் வீடுகளில் அன்னம் கொணர்ந்து தருகிறேன் என்று பிக்ஷை வாங்கித் தந்து சுந்தரர் புசிக்க மறைந்தனர். மறையச் சுந்தரர் திருவடி வருந்த வந்தமைக்கு இரங்கி விடை பெற்று நீங்கிப் பலதலங்கள் தரிசித்துத் திருவொற்றியூர் அடைந்து படம்பக்க நாதரை வணங்கி அங்கிருக்கையில் அங்கு ஆதிசங்கற்பப்படி திருவவதரித்திருந்த அநிந்திதையாகிய சங்கிலியாரைக் கண்டு மயங்கொண்டு சிவபெருமான் கட்டளைப்படி சங்கிலியாருக்குப் பரவை இடம் போகிறது இல்லை என்று மகிழ் அடியில் உறுதி செய்து கொடுத்துத் திருமணம் செய்து கொண்டு சிலநாள் வசித்துத் திரு வாரூர் எண்ணங்கொண்டு உறுதி மறந்து எல்லையைக் கடக்கச் சிவாஞ்ஞையால் சண்மதையத் திருவெண்பாக்கம் அடைந்து சவாமி கோல் தரப் பெற்றுத் திருக்காஞ்சி அடைந்து ஒருகண் பெற்றுத் திருவாரூர் அடைந்து சுவாமியைத் தரிசித்து மற்றக் கண்ணும் பெற்றுப் பாவையின் ஊடல் தணிக்க இரண்டுமுறைச் சிவபெருமானைத் தூதாக ஏவி ஊடல் தணிக்கப் பெற்றுச் சுவாமியைத் தரிசித்து இருந்தனர். இவ்வகை சுவாமியைப் பாவையிடந் தூதாகச் செலுத்தியதால் இவரிடத்தில் வெறுப்புக்கொண்டு இவரது வருகை அறிந்து உயிர்நீங்கிய எயர்கோன் கலிக்காம நாயனாரை உயிர்ப்பித்து நட்புக் கொண்டு திருவாரூர் சென்றிருந்தனர். இவரது வாலாற்றினைச் சிவ மூர்த்தியால் அறிந்த சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்திகளைத் திருவாரூரில் கண்டு தரிசித்து நட்புக்கொண்டு அவருடன் பலதலங்களும் தரிசித்து மீண்டும் திருவாரூர் வந்து சேர்ந்தனர். மீண்டும் இருவரும் புறப்பட்டுத் திருவையாற்றுக்குப் போக வெள்ளம் தடைசெய்ததால் பதிகம் ஓதி நிறுத்தி மணலி சென்று சுவாமியைத் தரிசித்து மீளவெள்ளம் போனது கண்டு சேரனாடு சென்று சேரமான் பெருமாளுடன் வசித்துத் திரும்புகையில் சேரமான் தந்த நிதிகளை எல்லாம் திருமுருகன் பூண்டிக் சருகில் பூதகணங்கள் வேடர்களைப்போல் கொள்ளை கொள்ளக்கேட்டுச் சுவாமி சந்நிதியில் முறையிடப் பொருள்கள் எல்லாம் வாயிற்படியில் இருக்கக் கண்டு எடுப்பித்துக் கொண்டு திருவாரூர் அடைந்து சில நாள் இருந்து மீண்டும் சோமானைக் காண எண்ணங்கொண்டு திருப்புக் கொளித்தலம் செல்லுகையில் ஒரு வீட்டில் மங்கலமும் ஒரு வீட்டில் அழுகையும் இருக்கக்கேட்டு விசாரிக்கையில் ஐந்து வயதான இரண்டு பிள்ளைகள் ஏரிக்குச் செல்ல ஒருவனை முதலை விழுங்கிற்று, ஒருவன் பிழைத்து வந்தான். வந்தவனுக்கு இப்போது உபநய னம் நடக்கிறது. இதைக்கண்ட இறந்த பிள்ளையின் வீட்டார் பிள்ளை இருந்தால் அவனுக்கும் உபாயனம் நடக்கும் அல்லவா என்று துக்கப்படு கின்றனர் எனக்கேட்டு அந்த ஏரி அடைந்து பதிகமோதி முதலையிடத்துப் பிள்ளையைத் தக்கவயதுடன் பெற்று உபாயனச்சடங்கு முடிப்பித்துத் திருவஞ்சைக்களம் எழுந்தருளிச் சேரமான் திருமஞ்சன சமயம் ஆதலால் திருக் கோயிலுள் புகுந்து சுவாமியைத் தரிசித்துப் பந்தத் தொடக்கறுத்து அருள் செயப் பதிகமோதச் சிவமூர்த்தி பிரம விஷ்ணு வாதியரை நோக்கி நீங்கள் வெள்ளை யானையுடன் சென்று சுந்தரனை அழைத்து வாருங்கள் என்று பணித்தருள, அவ்வகையே திருக்கோயில் வாயிற்புறத்து வந்த சுந்தரர்க்குச் சிவபெருமான் கட்டளையைத்தெரிவித்து வெள்ளை யானைமீது அழைத்துச் சென்றனர். திருக்கைலைக்குச் செல்லும்சுக்தரமூர்த்திகள் சேரமானை மனதில் நினைக்கச் சேரமானும் அறிந்து குதிரை ஏறித் திருவஞ்சைக்களம் வந்து சுந்தரமூர்த்திகள் திருக்கைலைக்கு எழுந்தருளுவதைக் கண்டு குதிரையின் காதில் ஸ்ரீபஞ்சாஷரத்தை ஓதிச் சுந்தரமூர்த்திகளைப் பிரதக்ஷணஞ்செய்து அவரை முன் வணங்கிக் கொண்டு இருவரும் திருக்கைலை அடைந்தனர். இவர்காலம் (8) அல்லது (9) ஆம் நூற்றாண்டெனக் கூறுகிறார்கள். இவர் காலத்தவர்கள்; சோமாசிமாற நாயனார், பெருமிழலைக்குறும்பர், விறன்மிண்ட நாயனார், கோட்புலி, மானக்கஞ்சாற நாயனார், சடையனார், ஏயர்கோன் கலிக்காமர், இசைஞானியார். (திருத்தொண்டர் புராணம்)

சுந்தோபசுந்தர்

இரணியகசிபு வம்சத்தவனான நிகும்பன் குமரர். இவர்கள் இருவரும் சகோதரர். இவர்கள் பிரமனை எண்ணித் தவஞ்செய்து வெகுவரம் பெற்றுத் தேவரை வருத்தத் தேவர் விஷ்ணுமூர்த்தியிடம் முறையிட்டனர். விஷ்ணுமூர்த்தி விச்வகர்மனால் ஒரு அழகுள்ள பெண்ணைச் சிருட்டிப்பித்து இவர்களிடம் அனுப்பினர் அசுரர் இருவரும் பெண்ணின் அழகைக் கண்டு மயங்கி எங்களில் யாரை மணக்கின்றனை என்ன அப்பெண் உங்களில் யார் வலியுள்ளாரோ அவர்களை மணப்பேன் என்றனள். அவ்வகையே இருவரும் ஒருவருக்கு ஒருவர் வலியறிய யுத்தஞ் செய்து மாண்டனர். இவர்களின் குமரர் சும்பரிசம்பர்,

சுனகன்

யவன புத்திரனாகிய பிரமதன் புத்திரன் தாய் கிருதாச்சி பாரியை மேனைகையின் புத்திரியும், ஸ்துலகேச ரிஷியினால் போஷிக்கப்பட்ட வளுமான பிரமதுவரை சந்திரவம்சத்துக் கிருத்ஸம தன் புத்திரன்.

சுனக்ஷத்ரன்

(சூ) மனுதேவன் குமரன்.

சுனச்சகன்

நாய்களுக்குத் துணையாயிருப் பார்க்குத் துணையானவன். யாது தானியைக் காண்க.)

சுனச்சேபன்

அசீகிர்தன் குமரன், இவன் தந்தை இவனை அரிச்சந்திரன் செய்த புருஷமேதயாகத்திற்கு விற்க விச்வாமித்திரரைக் கண்டு குறையிரந்து அவரால் காக்கப்பட்டவன். இவனே விச்வாமித்திரரால் ஜடேஷ்டனாகக் கொள்ளப்பட்டவன். இவனுக்குத் தேவராதன் எனவும் பார்க்கவன் எனவும் பெயர்.

சுனாமா

உக்கிர சேநன் குமரன்.

சுனையன்

1. பாரிபிப் பிலவன் குமரன். இவன் குமரன் மேதாவி. 2. ஒரு காந்தருவன், அவீக்ஷித்தைக் காண்க,

சுபகன்

சகுனி உடன் பிறந்தவன், பீமசேனனால் கொல்லப்பட்டவன்

சுபகை

1. இவளொரு தாசி, இவள் பலரிடத்தும் பொருள் பறித்து அவர்கள் இறந்து போகச் சந்தோஷித்து அயலாருடன் கூடிக் களித்துப் பல ரோகங்களைப் பெற்றுப் பாபியாய் ஞானி ஒருவருக்கு ஏவல்பூண்டு பாவநீங்கி முத்தி அடைந்தவள். 2. பிராகையின் புத்தரர்,

சுபசப்தமி விரதம்

ஆஸ்வயுஜ சுத்த சப்தமிமுதல் (13). மாதம் சூரி யனைக் குறித்துச் செய்வது,

சுபசயர்

ஒரு சிவனடியவர். சிவநிவேதனத்திற்கு அன்னஞ் சமைத்துக்கொண்டி ருக்க அச்சமயத்தில் ஒரு சாமவேத வேதியன் அவ்வழி வந்தனன். சுபசயர் சிவ நிவேதனம் கண்படுமெனச் செருப்புக் காலால் மூட வேதியன் பரிஹசித்தனன். அதனால் வேதியன் தான் கற்ற வேத முதலியவற்றை மறந்து சுபசயரை வேண்ட அனுக்கிரகித்தவர்.

சுபதந்தி

புஷ்பதந்தம் என்னும் திக்கு யானையின் பெண்.

சுபதேவன்

1. கோச்செங்கட் சோழனுக்குத் தந்தை, மனைவி கமலவதி, 2 புட்பதந்தனைக் காண்க.

சுபத்தி

தக்ஷன் பெண், தருமன் தேவி,

சுபத்திரர்

ஒரு விஷ்ணுபடர்.

சுபத்திரை

1 வசுதேவருக்குத் தேவகியிடம் உதித்த குமரி, கண்ணனுக்குத் தங்கை. இவளை அர்ச்சுநன் சந்நியாசிவேடம் பூண்டு கள்ளமாய் மணஞ் செய்தனன். இவள் இரதம் ஓட்டுவதில் வல்லவள். திரௌபதியிடம் இடைச்சிவேடம் தாங்கிச்சென்று வரம் பெற்றவள். குமரன் அபிமன்யு, 2. ஏமவர்ணன் குமரி. 3. காமதேனு புத்திரி.

சுபந்திரன்

1. ஒரு யாதவ வீரன், வசுதேவருக்கு பௌரவியிடம் உதித்த குமரன் 2. கேமசரியின் பிதா, 3. தருமபணிகளைக் காண்க.

சுபந்து

குந்தல நாட்டிற்கு அடுத்த தேசாதிபதி.

சுபன்

1. யமனுக்குச் சிரத்தையிடத்துதித்த குமரன், 2. பிரமதேவன் தும்மலிற்றோன்றி இந்திரனேவலால் பூமியில் அரசனாகப்பிறந்து ததீசியைத் தோழமை கொண்டு ஒரு நாள் ததீசியிடம் அரசர் பெரியர் எனத் ததீசி வெகுண்டு குத்தச் சுபன் கோபித்து வச்சிரத்தால் எறிந்தனன், இதனால் ததீசிக்கு மார்பு பிளந்தது. ததீசி சுக்கிரனை நினைக்கச் சுக்கிரன் தோன்றித் ததீசியை உயிர்ப்பித்தனன். ததீசி உயிரடைந்து சிவபூசையால் வச்சிரயாக்கை பெற்றுச் சுபனை யெதிர்க்கச் சுபன் கோபித்து வச்சிரம் எறிய வச்சிரம் வாய் மழுங்கிற்று. பின்பு சுபன், திருமாலையணைந்து வேண்டத் திருமால் ததீசியை நோக்கிச் சுபனுக்குப் பயந்தேனென்று தேவர்சபையில் கூறுக என்ன அவர் மறுக்கத் திருமால் ததீசியின் மேல் சக்கரம் எறிந்தனர். ததீசி அதனை வென்று நிற்கச் சுபன் வணங்கி நகரஞ் சென்றனன். இவனைக் குபன் என்றும் கூறுவர். (ஸ்ரீ இலிங்கபுராணம்.) 3. ஆதித்தசோழனுக்குத் துணை சென்று ஈழங்கொண்ட செங்குந்தன்.

சுபமுகூர்த்தம்

சுபக்கிரகங்கள் (11,2,5,9) இடங்களிலும், கேந்திரத்தானத்தும் நிற்பின் சுபமுகூர்த்தமாம். பாபக்கிரகங்கள் (3,6,11) இவ்விடங்களில் நிற்கின் நல்ல முகூர்த்தமாம். சுக்கிரன் (7) ஆம் இடம் ஒழியக் கொள்ளப்படும். (விதானமாலை.)

சுபருணை

கத்துருவால் சிறைப்பட்டவள், (விந்தை)

சுபர்ணர்

திரேதாயுகத்தில் விஷ்ணுவிற்கு ஒரு பெயர்

சுபலன்

1. காந்தாரதேசத்து அரசன், குமரன் சகுனி, பெண் காந்தாரி. 2. ஒரு மாயாவி. இவன் முகத்தில் சுவைரிணிகள் காமினிகள், புமும்சலிகள் என்னும் பெண்கள் பிறந்தனர். இவன் அதலலோகாதிபதி,

சுபவிரதை

உத்தராதித்தனைக் காண்க. விரூபாக்ஷனுக்குத் தேவி, கௌரியின் தாய்.

சுபாகு

1. கத்ருதநயன் நாகன். 2. திருதராட்டிரன் குமரன். 3. வச்சிரசுவரூபர் குமரர். இவர் குமரர் உக்கிரசேகர். 4. (சூ.) சத்துருக்கன் குமரன். இவ னாண்டது மதுரை, 5. யதுவம்சத்துப் பிரதிபாகு குமரன். 6. சேதிதேசத்து வீரபாகுவின்குமரன். 7. இருதுத்துவசன் குமரர் 8. காசிராஜன், பீமனால் செயிக்கப்பட்டவன். 9. ஒரு இராக்ஷசன், மாரீசன் உடன் பிறந்தவன். தாய் தாடகை, இராமனால் கொல்லப்பட்டவன். பிதா சுந்தன். 10. கிராதராஜன், 11. குவிந்ததேசத்து அரசன், 12. ஒரு தேவமாது. 13. திருதராஷ்டிர புத்திரன். 14. கௌரவ பக்ஷத்தைச் சேர்ந்த கூத்திரியன்,

சுபாக்ஷணன்

(சூ.) சுவர்சாயுசு குமரன்,

சுபாங்கி

சந்திரவம்சத்துக் குருராஜன் பாரியை. விடூரதன் தாய். (பாரதம்.)

சுபாசு

சிவசன்மாவைக் காண்க.

சுபாசுபகாலம்

மனிதர் தொடங்குங் கார்யம் இடையூறின்றி முடிவு பெறும் வகை நல்லகாலங்களை யெண்ணிச் செய்தலாம்: மாதங்களில் மாசி மாதந் தவிரச் சூர்யன் வடக்கேசெல்லும் உத்தராயனம் சிறந்ததாம். அவசியமானால் தக்ஷிணாயனத்தில் கார்த்திகை, ஐப்பசி, ஆவணி மாதங்களும் ஆகும். பக்ஷங்களில் சுக்கலபக்ஷம் சிறந்தது, தேய்பிறையாகிய கிருஷ்ணபக்ஷத்தில் சப்தமி திதி வரையில் சம்மதிக்கப்பட் டது. வளர்பிறையில் பஞ்சமி வரையிலும், தேய்பிறையில் கடைசிபாகத்தையும் விட வேண்டும். இப்பக்ஷங்களின் நடுப்பாகம் மத்திமம், ஒற்றைப்படையாகிய நவமி, அமாவாசை, பிரதமை, திவிதியை, தசமி, தேய்பிறையில் ஷஷ்டியையும் விடவேண்டும். நக்ஷத்திரங்களில் ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்தம், சுவாதி, புனர்பூசம், அனுஷம், அச்வனி, மிருகசீருஷம், திருவோணம், பூராடம், மகம், சித்திரை, அவிட்டம், ரேவதி இவை மனுஷருக்கும்; சதயம், விசாகம், பூரம், பூராடம், பூரட்டாதி, திருவாதிரை இவை தேவர்களுக்கும் சிறந்தன. வாரங்களில் செவ்வாய், ஞாயிறு ஒழிந்தவை நலம். சூரியன் அஸ்தமிக்கும் போது வீடுகட்டல் கூடாது. குரு அஸ்தமனத்தில் சுபகார்யஞ் செய்யக்கூடாது. சுக்சாஸ்தமனத்திலும் பிரதிஷ்டை முதலிய செய்யக் கூடாது. பகலில் கர்ப்பா தானமும், இரவில் வாஸ்து கார்யமும் செய்யக்கூடாது இராசிகளில் ஸ்தியராசி உத்தமம்; உபய ராசி மத்திமம்; சரராசி நீக்கத்தக்கது; சுபராசி குருவுடன் கூடில் நலம்; குரு, சுக்ர உதயங்கள் சிறந்தன, குரு, சுக்ர, புதக் கிரகங்களின் உதயம் முறையே பிராம்மண, க்ஷதரிய, வைசிய, சூத்திரர்களுக்குச் சிறந்தது. இடப்பலன் (3,6,11) ஆவது இடங்களில் இரவில் பாபிகளாயினும் சுபர்கள் தான். சுபர்கள் (12) வது இடந்தவிர மற்றெவ்விடமிருக்கினும் சுபர்களே, கேந்திரத்தில் பாபிகள் நீக்கத்தக்கவர்கள். சுபர்கள் சிறந்தவர்கள். (9,7) வது வீட் டிலும் இரண்டாமிடத்திலும் இருக்குஞ் சந்திரன் சுபனாகக் கொள்ள வேண்டும். கோசாரபலன் கோசாரத்தை யடைந்திருக்கிற ஐந்தையும் நீக்கவேண்டும். குரூர நக்ஷத்ரம், பிரம தண்டம், தூமகேதுவினின்று விடப்பட்டது, கிரகணத்தோடு கூடியது, கிரகணத்தால் அபேக்ஷிக்கப்பட்டது, வேதைநக்ஷத்ரம், வயதிபாதம், சூலம், வஜ்ரம், விஷ்கம்பம், பரிகம், கண்டம், வைத்ருதி, ஹர்ஷணம், அதிகண்டம், அஸ்தங்கதநக்ஷத்ரம், ஷடசிதிமுகயோகம், சூன்ய மாசம், கிரகங்களால் பின்னப்பட்டது, தக்கவாரம், கிரகதோஷமுள்ள ஜ்வாலா நக்ஷத்ரம், திதி, நக்ஷத்திர, மாச, வருஷ, அயனங்களின் முடிவையும், அதிமாசத் தையும் விடல் வேண்டும். வாஸ்து சாந்தியஜமானனுக்கு அனுகூல நக்ஷத்திரத்தில் பகலில் செய்தல்வேண்டும். (ஸ்ரீகாமிகம்,)

சுபாசுபகிரகங்கள்

புதனும் பிரகஸ்பதியும், பூர்வபக்ஷ சந்திரனும், சுக்ரனும் சுபகிரகங்கள். ஆதித்தன், செவ்வாய், சரி, அபரபக்ஷ சந்திரன், இராகு கேது ஆதித்தனுடன் கூடிய புதன் பாபக்கிரகங்கள். சந்திரனும், புதனும் சிலநாள் சுபக்ரகம், சில நாள் பாபக்ரகமுமாதலால் மத்திம கிரகமென்பது சிலர் பக்ஷம். (விதான மாலை.)

சுபாநணை

சிவசன்மாவைக் காண்க,

சுபாரிசுவதீர்த்தங்கரர்

இவர், ஏழாவது சைநதீர்த்தங்கரர், இஷ்வாகு வம்சத்தவர். பட்டணம் வாரணாசி, தந்தை சுப்பிரதிஷ்டர், தாய் பிரத்தியுஷேணை. இவர் ஆனி மாதம் சுக்லபக்ஷத் துவாதசி, விசாகாம்நக்ஷத் திரத்தில் அவதரித்தவர். இவர் உன்னதம் (200) வில், மரகதவர்ணம். ஆயுஷ் யம் இருபது நூருயிரம் வரு கணதரர் பல நாமர் முதலாகிய தொண்ணூற்றைவர்.

சுபாரிசுவன்

1. திருடநேமியின் குமரன், இவன் குமரன் சுமதி. 2. இலங்கையின் தெற்குவாயிற் சேனைத்தலைவன், அங்கதனாலிறந்தான். 3. சம்பாதியின் குமரன். (கழுகு) இராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு போங்கால் இரையெனப் பறந்து இராவணனுடன் போர் செய்யப் போகையில் அவன் வேண்டுகோளால் விட்டு அச்செய்தியைத் தந்தைக் கறிவித்தவன்.

சுபாரிசுவம்

பரதகண்டத்தின் கிழக்கிலுள்ள மலை.

சுபார்சுவகன்

(சூ.) கிருதாயு குமரன்.

சுபாலன்

கட்கதான் குமரன். இவன் குமரன் எதாகான்.

சுபாவத்துக்குக் கெடுதிகளின் குறிகள்

பசியின்மை, ஆறாப்பசி, இரைக்குடலில் நலி, பசிக்கெடுதி, தாசமின்மை, விழுங்கலில் வருத்தம், மலச்சிக்கல், மலத்தளர்ச்சி, சுபாவத்திற்கு விரோதமான வயிற்றுக் கழிச்சல், அதிக வியர்வை, சளி கக்கல், அதிக வாய்ச்சுரப்பு, சுபாவத்திற்கு விரோதமான மூத்திரம்.

சுபு

கம்சன் தம்பி,

சுபுத்தன்

சாந்திகனைக் காண்க.

சுபுத்தி

பிடகநூல்வழித் தொடராது சிவ பூசை மேற்கொண்டு திரிபுரத்தை யாண்ட அரசன்.

சுபை

சுபலன் புத்ரி,

சுபோதர்

சைவசித்தாந்த பத்ததி செய்த ஆசாரியருள் ஒருவர்.

சுப்தக்னன்

மால்யவந்தன் குமரன்,

சுப்பவிருத்தன்

சௌவீர தேசாதிபதியாகிய ஜயத்ரதன் உடன் பிறந்தவன்.

சுப்பிரதாகம்

1, திக்கசத்துள் ஒன்று, 2. ஒரு வெள்ளை யானை, பகதத்தனுக் குரியது.

சுப்பிரதாபன்

புண்ணியபுஞ்சனைக் காண்க.

சுப்பிரதிகன்

(சூ.) பிரதிகாசுவன் குமரன்.

சுப்பிரதிஷ்டமகாராசர்

சுபார்சுவ தீர்த்தங்கரருக்குத் தந்தை. தேவி பிரத்தியு ஷேணை. (சைநர்.)

சுப்பிரதிஷ்டர்

ஒரு விஷ்ணுபடர்.

சுப்பிரதீகன்

1. பிதுரார்ச்சிதத்திற்காக அண்ணனாகிய விபாவசுவுடன் சண்டையிட்டு யானையாகச் சபிக்கப்பட்டுக் கருடனால் க்ஷிக்கப்பட்டவன். 2. ஆத்ரேயாஷியின் அருளால் தூர்ஜயென் சுப்ரதீகன் எனுங் குமரர்களைப் பெற்றுச் சித்ரகூடஞ் சென்று தவமேற் கொண்ட, அரசன் (வராஹ புராணம்)

சுப்பிரதீபகீகவிராயர்

இவர் கருமார் கூளப்ப நாயகன் காதல் இவராற் செய்யப் பட்டது. இவர் சிவகங்கைச் சமீனைச் சார்ந்த பழையனூரையடுத்த கொழுனை யென்னும் ஊரினர் என்பர். பலபட்டரை சொக்கநாதப் புலவரைக் காண்க.

சுப்பிரதீபன்

1. சயிந்தவன் குமரன், துச்சளையால் அருச்சுநனிடத்தில் அடைக்கலமாக விடப்பட்டவன். 2. சண்முகசேநாவீரன் 3. ஒரு வேதியன், இவனிடம் யோகாங்கனென்னு மறையவன் பிக்ஷைக்குவர, இவன் மறுத்தலால் பிள்ளைகளும் கோபித்தனர். இதனால் யோகாங்கன் நீ உருத்தி ராக்ஷம் அணியாதவன் எனத் திரும்பச் சுப்பிரதீபன் நானிவ்விடமிருந்து கற்பக மலர் வருவிப்பேன் நீ செய்வையோ என யோகாங்கன், தன்னிடம் உருத்திராக்ஷ மணிந்திருந்த ஒரு பூனையைச் சுவர்க்க மனுப்பிக் கற்பகமலரை வருவித்தனன்.

சுப்பிரதீபம்

பகதத்தனது யானை,

சுப்பிரத்தம்

ஈசான்யதிகிலுள்ள யானை.

சுப்பிரன்

1. ஓர் அரசன், தேவி குண்டை, 2. குமாரசுவாமியின் சேநாவீரன்.

சுப்பிரபாவை

1. அட்டகோண மகருஷியின் தேவி. 2. வதான்யருஷியின் பெண்.

சுப்பிரபை

நபாகனைக் காண்க.

சுப்பிரமண்ய தீக்ஷிதர்

இவர் ஆழ்வார் திருநகரியென்னும் திருக்குரு கூரிலிருந்த வைதிகவேதியர், கனகசபாபதி ஐயரிடம் வடநூல்கற்று வல்லவராய்ச் சுவாமிநாத தேசிகரின் வேண்டுகோளின்படி தமிழ்ப் பிரயோகவிவேகஞ் செய்தவர். (பிரயோக.)

சுப்பிரமண்ய புலவன்

ஒரு தமிழ்க்கவி, சுப்பிரமண்யன் எனும் சிற்றரசன மீது கவி பாடிப் பரிசுபெற்றவன். (தனிப்பாடல்.)

சுப்பிரமண்ய மூர்த்தங்களாவன

ஞானசந்திரர், ஸ்கந்தர், குமாரர், மயூரவாகனர் கஜாரூடர், பிரமாசாஸ்தர், பாலசுப்பிரமணியர், வள்ளி சமேதர், கார்த்திகேயர், ஷண்முகர், தேவசேனாபதி, சேனாபதி, கிரௌஞ்சாரி, சரவணோற்பவர், சூராரி, தாருகாரி,

சுப்பிரமண்யதேசிகர்

இவர் சைவவேளாளர், தமிழ்த் தண்டியலங்காரத்திற்கு உரையியற்றியவர். இவராற் செய்யப் பட்ட நூல் இந்திரவிமானமாலை.

சுப்பிரமண்யர்

1 குமாரசுவாமிக்கு ஒருபெயர்.

சுப்பிரமண்யர் பிரதானத்தலங்களாவன

(6) திருப்பரங்குன்று, திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், சோலைமலை.

சுப்பிரயச்சு

ஓர் அரசன், பிரமகத்தியால் துன்புற்றுச் சநார்த்தனமென்னுந் தலமடைந்து விஷ்ணுமூர்த்தியை யர்ச்சாவதாரமாகக் கண்டு தரிசித்துத் தழுவிப் பிரமகத்தி போக்கிக்கொண்டவன்.

சுப்பிரயோகை

சையகிரியி லுற்பத்தியாகித் தென்புறமாகப் பாயும் ஒரு நதி.

சுப்பிரியன்

1. தாருகனைக் காண்க. 2 குசுமையைக் காண்க.

சுப்பிரியை

அரிஷ்டன் புத்திரி, ஒரு அப்சரசு.

சுப்பையர்

வீரசைவர் திருவோக புராணம் பாடிய புலவர்.

சுப்ரமண்யமுனிவர்

1. இவர் திருவாவடுதுறை நமச்சிவாய தேசிகர் பரம்பரையில் அம்பலவாண தேசிகர்க்குப் புத்திரர் திரு ஆவினன்குடி அந்தாதி இயற்றியவர். 2. தொண்டை மண்டலத்துத் தொட்டிக்கலை யெனும் கிராமத்தவர். சைவவேளாளர் சிவஞான முனிவர்க்கு மாணவர். இலக்கிய இலக்கணங்களில் வல்லவர், இவரியற்றிய நூல்கள் துறைசைக்கோவை, கலைசைச்சிலேடை வெண்பா, நலைசைக் கோவை, தணிகை விருத்தம், கேசவப் பெருமாளிரட்டை மணிமாவை. சுப்பிரமண்யர் திருவிருத்தம் பாடிக் குஷ்டரோகிக்கும், திருத்தணிகை விருத்தம் பாடிக் குருடனுக்கும் கொடுத்து ஓதச்செய்து ரோக நிவர்த்தி செய்வித்தவர்.

சுப்ராஜன்

சூரியனோடு செல்லும் கந்த கணத்தவன். (பா~சல்.)

சுப்ராட்

வைவச் சுதமது புத்திரன்.

சுமங்கலை

சுமதி தீர்த்தங்கரின் தாய்,

சுமட்ரா

மதம் (Sumatra) இவர்கள் சூரிய சந்திரர்களை ஆராதிப்பர். இவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் பக்ஷி சகுனம் பார்ப்பர். கலியாணஞ் செய்து கொள்பவன் சத்துருவின் சிரசைப் பரியமாக வைக்கவேண்டியது. இவர்களின் சித்தாந்தப்படி சரீரமும் ஆத்மாவும் மோஷத்தை யடையும்.

சுமதன்

விச்வாமித்திரன் குமரன்.

சுமதி

1. பரதனுக்குப் பஞ்சசேரியிடம் உதித்த குமரர், தேவி துருவசேனை, குமரன் தேவதாசித். 2. நிருகன் புத்திரன், இக்ஷவாகுவம்சம். 3. (சூ) சோமதத்தன் குமரன், 4. சகரன் பாரி, குமரர் (60000) பெயர், அரிஷ்டநேமியின் பெண். 5. (சந்.) துஷ்டியந்தன் தந்தை. 6. விசாலன் மருமகள். 7. சுரமஞ்சரியின் தாய், 8. சுபாரிசுவன் குமரன், இவன் குமரன் சந்ததிமான். 9. (பிர.) திடசேநன் குமரன். இவன் குமரன் பலன். 10. விசாலைநகர்க்கரசன் காகுத்தன் புதல்வன். இராமலக்ஷமணரை யெதிர் கொண்டு தங்கிப்போக வேண்டியவன். 11. மதிசாரன் குமரன். 12. இடபன் புத்திரனாகிய பரதன் குமரன். 13. ஓர் அரசன், திருவல்லிக்கேணி க்ஷேத்திரத்தில் திருமாலருள் பெற்றுப் பிரம உற்சவாதிகள் நடத்தியவன், 14. ஒரு வேதியன், ஒழுக்கம் நீங்கிக் கள் விற்ற பொருளால் தாம்பூலம் சிவாலயத்திற்குச் சமர்ப்பித்து மறுபிறப்பில் நற்குலத்துதித்து நற்கதியடைந்தவன். 15. பிருகுவின் சந்ததியான். 16. விடூரதன் குமரர் குசம்பனால் சிறைப்பட்டு வத்சந்திரனால் விடுபட்டவர். 17, ஒரு தூர்த்த வேதியன், இவனுடல் மேலைச்சிதம்பரக் காஞ்சிந்தியில் வீழ முத்தி யடைந்தவன். 18. சிங்கவருமனைக் காண்க, 19. இவன் எச்சதேவன் என்னும் வேதியன் குமரன், இவன் வருணாச்சிரமம் நீத்துக் குறவருடன் கூடிக் கள்ளனாய் வேதியனைக் கொன்று பிரமகத்தி பற்றத் துருவாசர் சொற்படி சேதுஸ்நானம் செய்து புனிதனானவன், 20. தடாதகைப்பிராட்டியாரின் மந்திரி, 21. இவள் பூஷணன் தேவி. இவளும் இவள் கணவனும் சுவர்க்க போகம் அனு பவித்துக்கொண்டிருக்கையில் செல்வப் பெருக்கைக் கண்டு கௌதமி யென்பவள் இச்செல்வத்திற்குக் காரணமென்னவென என் மாமன் முதலியோரும் கணவனும் செய்த சிவபூசாபலமென்று கூறியவள், (சிவமகாபுராணம்.) 22. விஷ்ணுயச்சின் பாரியை. 23. மகாதபதியின் தேவி, 24. திடமதியைக் காண்க. 25. சகல வேதசாஸ்திரமறிந்த ஒரு தத்வஞானி, பிதாவிற்கு ஞானம் உபதேசித்தவன்,

சுமதி தீர்த்தங்கரர்

இவர் ஐந்தாவது சைநதீர்த்தங்கரர். இவர் சாகேதபுரத்தில் இசுவாகுவம்சத்தில் மேகரதருக்குச் சுமங்கலா தேவியிடம் கிருதயுகம், சித்திரைமாதம் பூர்வபக்ஷ ஏகாதசி, மகநக்ஷத்திரத்தில் அவதரித்தவர். உன்ன தம் (300) வில், கனக வர்ணம், (40) லக்ஷம் பூர்வம் ஆயுஷ்யம், கணதரர்சமரர் முதல் (116) பெயர்கள்.

சுமத்திரன்

விருஷணி குமரன், இவன் குமரன் யுதாசித்.

சுமத்திரை

தசாதற்குத் தேவி, இலக்குவனையும் சத்துருக்கனையும் பெற்றவள்.

சுமந்தன்

1. வியாஸர் மாணாக்கரில் ஒருவன், சைமினியின் குமரன். 2. குந்தி போசன் குமரன்.

சுமந்திது

உன்முகனுக்குப் பிரீதகேசியிடமுதித்த குமரன், பாரி சுநிதை,

சுமந்திரன்

1. சூர்யகுலத்தரசருக்கு மந்திரி. 2. சந்துநு என்னும் புரூரவன் வம்சத்தவன் குமரன். 3. கலியின் சகோதரர், பாரியை மாலினி, குமரன் சாசன். 4. பொருள்களின் வரவு செலவுத் தொழிலில் நல்ல பயிற்சி வாய்ந்தவன் (சுக்~நீ.)

சுமந்திரி

சடியின் முதல் மந்திரி. (சூளா.)

சுமந்து

1. சயமுனி குமரர், இவாது குமரர் சுதனுவர். 2. ருஷிகளுக்குப் பவிஷயத் புராணம் கூறிய முனிவர்.

சுமனன்

1. ஓர் அசுரன். 2. ஒரு ராஜ ரிஷி. 3. ஒரு வேடராஜன்,

சுமனஸ்

1. மதுவின் பாரி. 2. உல்முகன் குமரன், தாய் நட்வலை, 3. அரியச்வன் குமரன், இவன் குமரன் திரிதன்வன்; சம்பூதிக்கு ஒரு பெயர். 4. இவன் ஒரு அரசன், இவனுக்குக் காசியில் சிவாலயத்து அபிஷேக தொட் டியிலிருந்த தவளை குமரனாகப் பிறந்து அரசாண்டது.

சுமனை

1, உமையின் தோழியரில் ஒருத்தி, சுவரிலீசுபவள். 2. கேசயத் தேசத்துப் பெண் பதிவிரதா தருமத்தைப் பற்றி சாண்டல்யனிடம் பேசியவள்,

சுமனோகன்

கத்ருதநயன் நாகன்.

சுமாலி

1. நந்தன் குமரன்; கலியில் பூமியை நூறு வருஷம் ஆண்டவன். 2. அக்கிரகேசனுக்கு மாமன், புத்திரி பிங்கலகேசி. 3. இவன் பாதாளத்திருந்த அரக்கன், இவனைச் சுவாகுமாரீசர் அடைக்கலமாக அடைந்தனர். விஷ்ணுமூர்த்தியின் சக்கரத்தால் கொல்லப்பட்ட அசுரன். 4. கம்சன் தம்பி, பலராமரல் கொல்லப்பட்டவன் 5. சுகேசன் குமரன், இவன் சரிதையை மாலியவானைக் காண்க. சாவித்திரனாலிறந்தவன்.

சுமாலி,யஞ்ஞமாலி

இவ்விருவேதியரும் தவமியற்றி விஷ்ணு தரிசனத்தால் வைகுண்ட மடைந்தவர்கள். (பிரகன்னாரதீயபுரா.)

சுமாலினி

விஷ்ணுமூர்த்தியாற் கொலையுண்ட அரக்கன்.

சுமாலிமாலி

சண்முகசேநாவீரருள் ஒருவன்,

சுமித்திரன்

1. துருபதன் குமரன். 2. ஒர் இருடி. 3. ஒரு யாதவவீரன். 4. (சூ.) சுரதன் குமரன், இக்ஷ்வாகு வம்சமிவனுடன் முடிகிறது. இவன் அபி மன்னனால் கொல்லப்பட்டவன். 5. அபிமன்யுவின் சாரதி. 6. ஒரு ருஷி, இவர் ஒரு பசு முதல் அநேக பசுக்களை வளர்த்துப் பீனருஷி யென்று பெயர் பெற்றுப் பசுக்களால் பாயப்பட்டுப் பசுவுலகமடைந்தவர். 7. சமீகருக்குச் சுதானினியிடம் பிறந்தவன். 8. வசுதேவன் தம்பியாகிய அநீகன் குமரன். 9. புளிந்தநகர்க் காசன், 10. சௌவீர தேசாதிபதி. பாண்டவர் திச்விஜயத்தில் அர்ச்சுனனால் சமாதானம் செய்விக்கப்பட்டவன், 11. பார்க்க வம்சத்துப் பிறந்த பேனபாபரன் என்னும் பெயருள்ள ருஷி. இவன் பசுவின் மகிமை கேட்டவன். 12. ஒரு ராஜ ருஷி ரிஷபருஷியிடம் தர்மங் கேட்டவன்; ஒரு மிருகம் இவனை வேட்டையில் துன்பப்படுத்த அலுத்து ருஷிகளை யடுத்தவன். (பார~சாம்.)

சுமித்திராக்கன்

சிவகணத்தவன்,

சுமித்திரை

சுமத்திரையைக் காண்க.

சுமிருதி

தக்கன் பெண், இவளுக்குச் சிரத்தையென்றும் பெயர். அங்கிரஸன் தேவி, இவளுக்குச் சிநிவாலி, இராகை, குகு, அநுமதி என நான்கு பெண்கள்.

சுமிருதிகள்

இவை தர்மசாத்திரங்கள், நித்தியகருமங்கள், ஆசாரம், விவகாரம், பிராயசித்தம், இராசதர்மம், வருணாச்சிரமம், அக்கார்யம், விரதம் முதலிய பலவற்றைக் கூறும் இவைகள் பல இருடிகளால் கூறப்பட்டவை. அவற்றுன் பராசரஸ்மிருதியே கலியுகத்திற்கு உபயோகப்படுவது, இவை பதினெண் வகைப்படும் அவையாவன: (1) அரீதஸ்மிருதி, (2), ஆபத்ஸ் தம்பஸ்மிருதி, (3) ஆத்ரே யஸ்மிருதி, (4) ஆங்கிரஸ ஸ்மிருதி, (5) யமஸ்மிருதி, (6) உசநஸ்மிருதி, (7) கௌ தமஸ்மிருதி, (8) சங்கஸ்மிருதி, (9) சாதாதபஸ்மிருதி, (10) சம்வர்த்தஸ் மிருதி, (11) தக்ஷஸ்மிருதி, (12) பிரகஸ் பதிஸ்மிருதி, (13) பிரசேதஸ்மிருதி, (14) பராசரஸ்மிருதி, (15) மதுஸ்மிருதி, (16) யாஞ்ஞவல்கியஸ்மிருதி, (17) லிதேஸ் மிருதி, (18) விஷ்ணு ஸ்மிருதி. இவை யன்றி உபஸ் மிருதிகள் பதினெட்டுள. அவை (1) அத்திரிஸ்மிருதி, (2) உத்த பாங்கீரஸஸ்மிருதி, (3) கண்வஸ்மிருதி, (4) கபிலஸ்மிருதி, (5) காத்யாயனஸ்மி ருதி, (6) சாதா தபஸ்மிருதி, (7) தக்ஷஸ் மிருதி, (8) தௌமியஸ்மிருதி, (9) பிர சேதஸ்மிருதி, (10) புதஸ் பிருதி, (11) பௌலஸ்தியஸ்மிருதி, (12) நாரதஸ்மி ருதி (13) விஷ்ணுஸ்மிருதி, (14) விருத்த விஷ்ணுஸ்மிருதி (15) விருத்தமநுஸ்மிருதி, (16) லோகிதஸ்மிருதி, (17) லோகாக்ஷிஸ் மிருதி, (18) தேவல ஸ்மிருதி என்பர்.

சுமீடன்

சந்திரவம்சத்துச் சுகோத்திரன் புத்திரன் உடன்பிறந்தார் அஜமீடன், புருமீடன் முதலியோர்.

சுமுகன்

1. நாகன். இவன் இந்திரன் சாரதியாகிய குணகேசியின் புத்திரியை மணந்தவன், (பா~உத்.) 2. கருட புத்திரன், 3. தருமபுகளைக் காண்க.

சுமுகர்

1. விநாயகருக்கு ஒரு பெயர். 2. ஒரு விஷ்ணுபடர். 3. தர்மபக்ஷியைக் காண்க. 4. சுபிலமுனிவர் வைத்திருந்த சிந்தாமணியின் பொருட்டுக் கணன் முதலியவரைச் சங்கரிக்க மலர்ந்த முகத்துடன் கபில முனிவர்க்குத் தரிசனந் தந்ததால் பெற்ற பெயர்.

சுமுகி

ஒரு தேவமாது.

சுமுத்திராதேவி

மனோசயன் பாரி

சுமுந்து

வியாசர் மாணாக்கர், அதர்வண வேதி.

சுமுனை

தமனைக் காணக.

சுமூர்த்தி

வசிட்டன் மானஸபுத்திரன், பித்ருக்களைக் காண்க.

சுமேதஸ்

சுரதனென்னும் சூரிய குலத்தரசனுக்குத் தேவி; உபாசனை கூறிய ருஷி.

சுமேதா

சீமந்தினியைக் காண்க.

சுமேரு

இது பரதகண்டத்தின் வடபாகத்தில் துருவநக்ஷத்திரத்தை நோக்கிய மேருவின் சிகரம், மேருவின் வாற்பக்கம் சுமேரு என்பர். இது பல தேவர்களின் இருக்கை,

சுமைதாங்கி

(Crane) இது பலவகைப் படும். இது பெரும்பாரங்களைத் தூக்கு வது. இதற்குச் சக்கரம் சேர்த்து நகர்த்தி பல இடங்களுக்குக் கொண்டுபோவர். இதில் பலவகை உண்டு,

சும்பநிசும்பர்

சுந்தோ பசுந்தரின் குமரர், இவர்கள் பிரமனையெண்ணிக் தவமியற்றி வலிமைபெற்றுத் தேவர்களை வருத்தினர். இவர்களைக் கௌரி தனது உடம்பிலிருந்து கொளசிகிதேவியைச் சிருட்டித்துக் கொலை புரிவித்தனள். மோகினியின் குமரர் என்பர். கோபேந்திரகன்னிகையைக் கண்டு மோகித்து ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுமாண்டனர். (சிவமகாபுராணம்)

சும்ஹன்

பலியின் புத்ரன். இவனால் செம்ஹம் என ஒரு பட்டணம் ஏற்படுத்தப் பட்டது.

சுயக்கியன்

ருசிப்பிரசாபதிக்கு ஆகுதியிடத்துதித்த விஷ்ணுவினம்சம், பாரி தக்ஷிணாதேவி. இவளிடத்துச் சுயமாள் என்னும் தேவகணத்தைச் சரநிப்பித்து மூவுலகங்களைக் காத்தார். (பாகவதம்.)

சுயசை

1. நந்திமாதேவர்க்குப் பாரி. மருத்தின் குமரி. 2. மகாபவுமன் தேவி, இவள் புத்ரன் அயுதானன். (பரா~ஆதி.)

சுயஞ்ஞன்

1. தசரதனுக்குப் புத்ரகாமேஷ்டி செய்வித்த ஒரு முனிவர். 2. உசீநாதேசாதிபதி, இவன் யுத்தத்திற்குப் போகையில் பந்துக்கள் விசனமுற யமன் அவர்களைத் தேற்றித் தத்வம் உபதேசித் சனன்.

சுயமாள்

சுயஞ்ஞனுக்குத் தக்ஷணாதேவியிடம் பிறந்த குமார்.

சுயுமரசிமன்

ஒரு ரிஷி. கோமகிமையைப் பற்றிக் கபிலரிடம் சம்வாதம் செய்தவன்.

சுயோதனன்

1. துரியோதனனுக்கு ஒரு பெயர். 2. சூர்யவம்சத்தரசருள் ஒருவன், நருமதையைப் பெண்டாகக் கொண்டு சுதர்சனையைப் பெண்ணாகப் பெற்றவன்.

சுயோதன்

சூர்ய குலத்தரசன். இவன் தேவி நருமதை.

சுரகம்

ஒரு நதி.

சுரகு

ஒரு வேடராசன், மாண்டவ்யரால் ஞானமடைந்தவன்.

சுரகுரு

ஓர் அரசன், கழுகாசலத்தில் தவஞ் செய்து பாபம் நீங்கப் பெற்றவன்.

சுரக்கிருது

விஸ்வாமித்திர புத்திரன்,

சுரசை

1. காச்யபர் தேவி, தக்ஷன் குமரி, அரக்கரைப் பெற்றவள். தருமன் தேவி யெனவுங் கூறுவர், 2. சுரேந்திரன் குமரி, மாயை. 3. இவள், அநுமனது வலியறியும்படி தேவர்களால் ஏவப்பட்ட தேவஸ்திரி, இவள், அரக்கி. யுருவடைந்து அநுமன் இலங்கைக்குப் போம் வழியில் ஆகாயம் அளாவநின்று அநுமனைத் தடுத்தனன். அநுமன் இவள் வாயிற்புகுந்து உடலைக் கிழிக்கத் தொடங்குகையில் தன் உண்மை யுருக்காட்டி அநுமனை வாழ்த்தினவள்,

சுரதகீர்த்தி

சத்துருக்கன் பாரி, குசத்துவன் பெண்.

சுரதசேநன்

நிதந்து வின் குமரன்.

சுரதன்

1 ஒரு யாதவீரன். 2. ஒன்பதாம் மன்வந்தரத்து இந்திரன், 3. (சூ). குணசன் குமரன், சகுணன் குமாரன் என்ப. 14. சென்னு குமரன், இவன் குமரன் விடூரதன், 15. விதர்ப்ப தேசாதிபதியாகிய சிவேதன் தம்பி. இவன் குமரன் சுதன்மா. 6. நபாகனைக் காண்க. 7. சாவர்ணி மனுவைக் காண்க. 8. தன் ராஜ்யத்தைப் பகைவர் கொள்ள விட்டுச் சுமேதஸ் முனிவரால் தேவி உபாக சனையடைந்த சூர்யகுலத்தரசன். 9. ஒரு அரசன் தான் ஒரு பிறப்பில் கிளியாகவிருந்து சிவாலயத்தை வலம் வந்த புண்ணியத்தால் மறுபிறப்பில் அரசனானவன். 10. ஜயத்ரதன் புத்திரன், தாய் துச்சளை. திக்விஜயத்திற்காக வரும் அர்ச்சுனன் வரவைக் கேட்டு மரித்தவள். (பா. அஸ்வ.) 11. சிந்து தேசத்தவன் அருச்சுநன் அச்வமேதக் குதிரைக்குப் பின் சென்றபோது எதிர்த்து துச்சளையால் சமாதானம் செய்யப்பட்டவன். (பாரா. அசு.)

சுரதபாண்டியன்

பராக்கிரமவாகுபாண்டியனுக்குக் குமரன்.

சுரதாசர்

இவர் க்ஷத்ரிய குலத்தில் பிறந்து பக்தியுடையவராய் அக்பர் அரசனிடத்தில் உத்தியோகமேற்று மதுரைக்கு அதிகாரியாக வந்து, தன் திரவிய முழுதும் பாகவதர்க்குச் செலவுசெய்து அது போதாமல் அரசன் செல்வத்தையும் செலவு செய்து ஒரு ஆலயங் கட்டுவித்திருக்கையில், கண்டோர் சிலர் இவரிடத்துப் பொறாமை கொண்டு அரசனிடத்துக் கூற, அரசன் இவரைச் சிக்ஷிக்க வெண்ணிப் பொக்கிஷத்துடன் இவரை அழைத்து வரச் சேவகரை விடுக்கையில் இவர் அவர்களுக்கு வேண்டிய உபசாரஞ் செய்து பெட்டிகளில் கற்களை நிரப்பி அதில் அரசனுக்கு நான் உனக்கு நன்மை செய்தேனே யொழிய, தீமை செய்திலேன் என வரைந்து அப்பெட்டியில் வைத்து விடியுமுன் காடடைந்தனர். சென்றோர் தாசரைக் காணாது பெட்டிகளை எடுத்து அரசன் முன் சென்றனர். அரசன் பெட்டியைத் திறந்து பார்த்து நிறைய மணிகள் இருக்கக்கண்டு அவர்மேல் பிழைகூறினீர் என்று கோபித்துத் தாசர் எங்கிருக்கினும் கொணர்க என்று கட்டளையிட அவ்வாறே தூதர் காட்டிற் சென்று தாசரைக் கண்டு அரசன் அழைத்துவரக் கூறினமை கூறினர். தாசர் அரசனை அணுகி அரசனுக்குத் தான் செய்த நன்மைகளைத் தெரிவித்து அரசன் கேட்டுக் கொண்டபடி பெருமாளைத் தரிசிப்பித்துப் பக்தியுடனிருந்தனர்.

சுரதை

1. காசிபரின் பெண், உரோகணி, பத்ராங்கி, சந்திருவை என்னும் பெண்களைப் பெற்றவள் 2. விராடன் முதற்தேவி, குமரர் சதாநீகன், சங்கன், வராகன், ஆதிவராக கேது.

சுரத்தின் தசாவஸ்தை

(1) கொஞ்சம் ஞாபகம், (2) இறந்தவர்களைக் கண்டு பேசுதல்போலிருத்தல், (3) சித்தபிரமை, (4) மேல்மூச்சு, (5) விழித்தவிழி விழித் தது போலிருத்தல், (6) வேற்றுக்குரலுண்டாதல், (7) தேசமுழுதும் எரிச்சல், (8) தன் கையால் முகத்தைத் தடவிக்கொள்ளல், (9) சரீரமுழுதும் வியர்த்தல், (10) தேகத்தைவிட்டுப் பிராணநீக்கம் என்பன (ஜீவரக்ஷ)

சுரத்திலுண்டாம் ஏழுவிததோஷம்

சுரம் உண்டான ஒன்பது நாள் வரை தருணசுரம். அக்காலத்தில் அபத்தியங்களால் வாதாதிகள் நாபியைப்பற்றி நாடியைக் குடிலப் படுத்தி முகம், கண், நா, எனும் உறுப்புக்களைச் சுருக்கி வெறித்த பார்வையை யுண்டாக்கித் தோஷந்தரும். அவை அபத்திய தோஷம், சங்கமதோஷம், விஷயதோஷம், விஷமசீததோஷம், ரக்தசிம்மகதோஷம், பீதஜிம்மகதோஷம், கிருஷ்ணசிம் மகதோஷம் என்பன. (ஜீவ.)

சுரத்துய்த்தல்

அரிய வழியிடத்தும் பரந்த காட்டின் கண்ணும் நோவு படாதபடி பசுநிரையைச் செலுத்தியது. (பு~வெ.)

சுரநடை

முதிர்ந்த பிணக்கமோங்கிய முற்றின மூங்கிலையுடைத்தாய் நிறைந்த இடத்திலே தலைவியை இழந்த தலைவன் முறையைச் சொல்லியது (பு. வெ. பொது வியல்,)

சுரநிந்தை

சேட்டைக்கு வருணனிடம் பிறந்த பெண், அதர்மன் தங்கை.

சுரபா

உக்ரசேநன் பெண், சியாமகன் தேவி.

சுரபி

1. காசிபர் மனைவி; தக்ஷன் பெண், மேனகை முதலிய அப்சாசுக் களையும் பசுக்கள், எருமைகளையும் பெற்றவள் 2. சரூபாவைக் காண்க. 3. சூர்யபுத்திரிகள், 4, பசுக்கள் இவை, சுநந்தை, சுமனசை, சுசீலை, சுரபி, பத்திரை என ஐவகைப்பட்டுக் கோவுலகத்திருப்பவை. 5. இது முதலில் பிரம்மாவினால் சிருட்டிக்கப்பட்ட பசு. இது மார்த்தாண்டனை மணந்து பதினொரு உருத்திரர்களையும், புண்யை, மாயை, மதுச்யோதை, சிவை, சீகரைஸரித்வரை, ஹிரண்யவர்ணை, சுபகை, கவ்யை,ப்ருச்கிசூதாவதி, அங்சாவதி,ச்ருதவதி, ததிக்ஷுரபயோவதி, அமோகை, சுரசை, சத்யை, ரேவதி, மாருதி, ரஸை, அஜை, கிகதை, சுத்த தூமை, அதாரிணி, ஜீவை, பிராணவதி, தன்யை, சுத்தை, தேனு, தனாவஹை, சிந்திரை,ருத்தி, சாந்தி, சாந்தமரபை, ஸரித்வரை, இந்த (41) வரும் கோமாதாக்கள். (பார~அநுசா). 6. கோலோகத்தி லிருந்த கிருஷ்ணன் பாலைக்குடிக்க எண்ணித் தன் மனதால் சுரபியெனும் பசுவை மனோரதமெனுங் கன்றுடன் மனதால் சிருட்டித்தனர். ஸ்ரீதரமா எனுங் கோபிகை அதன் பாலைக் கறந்தனள். அப்பாவை கிருஷ்ணன் அருந்துகையில் பாத்திரம் உடைந்து (100) யோசனை சுற்றளவுள்ள ஒரு சடாகமாயிற்று; அதுவே க்ஷரஸாஸ், (தேவி~பா.)

சுரபிபயங்கரம்

பகாபலியின் எவியரு. இவன் எலியுருவுடன் இருக்கையில் தேவேந்திரன் இவனைக் கிட்டிப் பரிச்சித்து இவனிடத்திருந்த லக்ஷ்மி தன்னிடத்து வரக் களிகூர்ந்து சென்றனன்.

சுரபூ

உக்ரசேநன் குமரி.

சுரமஞ்சரி

சீவகன் மனைவியரில் ஒருத்தி. ஜீவகனது கானத்தால் மயங்கி அவனை மணந்தவள்,

சுரமியம்

சுரமை நாட்டில் ஒருவனம்.

சுரமை

1. பிரசாபதி அரசன் நாடு 2 சுரமஞ்சரிக் கொருபெயர்,

சுரம்

இது, எல்லா ரோகங்களுக்கும் மூலமானது. இது, வாதபித்த சிலேஷ்மங் களின் தொந்தத்தாலும் ஏகதேசத்தாலும் அதிகப்பட்டு ஆமாசயஸ் தானத்தைப் பற்றி அந்த ஆமத்தை உப்பச்கெய்து நரம்புகளின்த்வாரங்களையும், ரோமத்வாரங்களையு மறைத்துப் பக்குவாசய ஸ்தானத்தை யடைந்து அங்கு இயல்பாக ஜ்வலிக்கின்ற ஜடராக்னியை மேல் வீசிடும் இதுவே சுரோற்பத்தி. இது வாதசுரம், பித்தசுரம், சிலேஷ்மசுரம், வாத பித்தசுரம், வாத சிலேஷ்மசுரம், சிலேஷ்ம பித்தசுரம், சந்தி பாதசுரம், ஆசந்துகசுரம் அபிகாதிசுரம், சாபசுரம், அபிசாரசுரம், அபிஷங்கசுரம், பூதாவேசசுரம், அவுஷதகந்தசுரம், விஷசுரம், கோபசுரம், பயசுரம், துக்கசுரம், காமசுரம், சந்ததசுரம், சத்தசுரம், அந்தி யேத்துகசுரம், துவியாகிசசுரம், திரயாகிகசுரம், சதுர்த்திகசுரம், சாரீரசுரம், மானசிகசுரம், சௌமியசுரம், தீஷணசுரம், உட்சுரம், புறச்சுரம், பிராகிருதசுரம், வைகிருத சுரம், சாத்யசுரம், அசாத்யசுரம், சாமசுரம், நிராமசுரம், சன்னிபாத சுரம், இச்சுரங்கள் ஒன்றுடனொன்று தொந்தித்துப் பலவகைப் படும். இவற்றின் வகை. (ஜீவாஷ்.)

சுரர்

பிரமன் சொற்படி மதுவுண்டதால் இப்பெயரடைந்த தேவர்.

சுராக்கன்

சிவமூர்த்தியால் கொலைசெய்யப்பட்ட அசுரன். (காஞ்சிபுராணம்).

சுராசூரன்

இவன் தேவர்களை வருத்திச் சிவபிரானாலிறந்த அசுரன்.

சுராதிராஜன்

சோழமண்டலம் நிருமித்த சோழன்.

சுராபிதம்

விச்வரூபன் சிரத்திலொன்று, கலிங்கப்பக்ஷி யுருக்கொண்டது

சுராஷ்டரன்

1, தீர்க்க தமன் தந்தை, 2. தாமசமனுவின் தந்தை.

சுராஷ்டிரம்

இது ஒரு தேசம். (Surat),

சுரிகைச்சவுண்டையர்

இவர் வசவதேவர் திருக்கூட்டத்தில் முதன்மை பெற்றவர். இவர் ஆன்மார்த்தமாய்ச் சிவபூசை செய்து பகிர்முகமாய்ச் சிவலிங்கத்தில் ஆவாகித்து நிவேதனஞ் செய்கையில் வாளுருவிக் கொண்டு சிவபெருமானை இந்த நிவேதனம் உண்ணவேண்டும் அன்றேல் உயிர் விடுவேன் எனப் பக்தவற்சலனாகிய சிவமூர்த்தி அவ்வகையே உண்ணக் கண்டவர்.

சுருக்

கருடபுத்திரன்.

சுருக்கு, சுருவம்

இவை இரண்டும் ஹோமஞ் செய்யச் சாதனமாகிய பாத்திரங்கலாம். இவற்றுள் சுருக்குப்பாத்திரமானது (34) அங்குலம் அளவுள்ள தாய் இருக்க வேண்டியது, கைப்பிடிக் காம்பானது பருமனில் (6) அங்குலமும், நீளத்தில் (20) அங்குலமும் இருத்தல் வேண்டும். (3) அங்குலத்தில் கலசஞ் செய்யவேண்டும். கலசத்து அடியில் பாதாசாரஞ் செய்யவேண்டும். கலசம் விருத்தாகாரமாய் இருக்க வேண்டும் கெண்டிகை நாற்கோணமாய்ச் செய்யப்பட வேண்டும். நெய்விடும் மார்க்கம் கண்டத்தில் இருந்து முகபரியந்தஞ் செய்யவேண்டும். சுருவம் (24) அங்குலமாம் தண்டம் கட்டைவிரற் பருமனாம். இது தண்டமூலத்தில் (4) அங்குல விஸ்தாரமும், துனியில் (3) அங்குல விஸ்தாரமும் இருத்தல் வேண்டும். தண்டாக்ரத்தில் (3) அங்குலம் விஸ்தாரம் விருத்தம் குண்டலாய் இருத்தல் வேண்டும். விருத்தத்திற்குக் கீழே யானையின் மத்தகத்திலிருக்கும் கும்பஸ்தலம்போல் பிருஷ்டம் செய்ய வேண்டும். பிருஷ்டத்திற்கு மேல் விருத்தத்தில் சேற்றில் வைத்த மானடிபோல் நடுவுயர்ந்து இருபக்கமும் தாழ்ந்து திருததாரைக்குத் தானம் இருக்க வேண்டும்.

சுருசி

உத்தானபாதன் கனிட்டதேவி, உத்தமன் தாய்.

சுருதகர்மன்

1. அர்ச்சுனன் குமரன் தாய் திரௌபதி. இவனுக்குச் சுருதகீர்த்தி யென்றும் ஒரு பெயர் உண்டு. 2. சகதேவன் புத்திரன், தாய் திரௌபதி. இவனுக்குச் சுருதசேனன் என்றும் பெயர் உண்டு இவன் சுதஷ்ணன் என்னும் பெயருள்ள காம்போஜராஜனுடன் யுத்தம் செய்தான்.

சுருதகீர்த்தி

1. வசுதேவன் தங்கை, திருஷ்டகேதுவின் தேவி. 2. அருச்சுநனால் திரௌபதியிடம் பிறந்தவன்.

சுருதசிரவசு

சோமாமி குமரன்.

சுருதசேநன்

1. சிபி அம்சமான பாரத வீரன். 2. உக்ரசேநன் குமரன், கிருஷ்ணன் பேரன்மார் சந்ததியிற் சேர்ந்தவன். 3. ஜநமேசயன் தம்பி, 4. (சூ.) சத்துருக்கன் குமரன். 5. (சந்.) சகதேவன் குமரன், தாய் திரௌபதி.

சுருதசோமன்

பீமனால் திரௌபதியிடம் பிறந்தவன்.

சுருதச் சிரவை

சேதிநாட்டரசனாகிய தமகோஷன் தேவி, சிசுபாலன் தாய், வசு தேவன் தங்கை.

சுருதச்சிரவன்

ஓர் இருடி இவன் சோமச்சிரவன் தந்தை, சநமேசயன் காலத்தவன்

சுருததரன்

புரக்ஞயனுக்கு நண்பன்

சுருததேவன்

1. விஷ்ணுபடன். 2. கண்ணன் குமரன். 3. ஒரு வேதியன், கிருஷ்ண மூர்த்தியிடம் அந்தரங்க பக்தியுள்ளவன், வகுளாசுரனுக்கு நண்பன்.

சுருததேவி

வசுதேவன் தங்கை, தந்ரவக்கிரன் தாய், விருத்தசருமன் தேவி.

சுருதன்

1. (சந்.) பகீரதன் குமரன். 2. பாஞ்சலராஜனாகிய துருபதன் புத் திரன், பாசறை யுத்தத்தில் அஸ்வதாமனால் கொல்லப்பட்டவன். (பா~து.)

சுருதமுக்யன்

வசுதேவன் குமரன்.

சுருதவர்மன்

திருதராட்டிரன் குமரன்

சுருதாநீகன்

விராடராஜனுடன் பிறந்தோன். (பா. து.)

சுருதாபிதானன்

கேகய தேசாதிபதி, இவன் குமரன் சங்கன்.

சுருதாயு

1, கலிங்க தேசாதிபதி. பாரதப்போரில் அர்ச்சுனனால் கொல்லப்பட்டவன். புத்திரர்கள் தீர்க்காயு, நியுதாயு, (பா~து) 2. அரிஷ்டநேமியின் குமரன்.

சுருதாயுசு

(சந்.) புரூரவசுவிற்கு உருவசிவிடமுதித்த குமரன், இவன் குமரன் வசுமான்.

சுருதாயுதன்

வருணன் புத்ரன் என்பர். இவனுக்கு வருணனால் ஒரு கதாயுதம் கொடுக்கப்பட்டது. அக்கதையை எவன்மேலேவினும் அவன் உயிரை வாங் காது மீளாது. இவன் பாரதயுத்தத்தில் அருச்சுகளிடம் யுத்தஞ் செய்கையில் இக் கதையைக் கண்ணன் மேலேவ அது அவர் கழுத்தில் மாலையாக விழுந்து மீண்டும் இவனைக் கொன்றது.

சுருதாவதி

பரத்வாஜரின் பெண், இவள் பதாபாசனம் எனும் தீர்த்தக்கரையில் இந்திரன் தனக்கு நாயகனாகவேண்டித் தவம் புரிந்தனள். இந்திரன் வசிட்ட வேடம் பூண்டு இவளிடம் வந்து ஐந்து இலந்தைக் கனிகள் தந்து பாகஞ்செய்யக் கூறினன். கன்னிகை விறகுகளெல்லாம் எரித்தும் பாகமாக வில்லை; விறகுகள் ஆய்விட்டமையால் தன் கால்களை விறகாவைத்து எரித் தனள். இதனால் களித்த இந்திரன் தன்னுருக்காட்டித் தீர்த்தத்திற்கு மகிமையளித்துக் கன்னிகையையுடன் கொண்டேகினன்.

சுருதி

வேதங்கள்.

சுருதி

ஓர் இருடி.

சுருதீசன்

வீமன் புத்திரன், தாய் திரௌபதி

சுரேசன்

அக்கினி விசேடம்.

சுரேச்வராசாரியர்

இவர் பிரமன் அம்சம். இவரே மண்டன பட்டாசிரியர்: இவர்க்கு விச்வரூபாசிரியர் எனவும் விவரணாசாரியர் எனவும் பெயர். இவர் தந்தை இம்மித் திரபட்டாசாரியர்.

சுரேணு

சரஸ்வதியின் கிளை நதி.

சுரேந்திரகாந்தம்

ஒரு வித்யாதர நகரம்.

சுரேந்திரன்

சூரபதுமன் பாட்டன், மாயைக்குத் தந்தை.

சுரை

மத்தியாயபிமானி தேவதை. அமிர்தமதன காலத்தில் பிறந்தவள் கள்ளுக்கு அதிபை,

சுரோசநன்

சலபோஜன் குமரன்; இவனை யானையென்று வேட்டைக்குச் சென்ற தசரதன் அம்பெய்து கொன்று, இவன் தந்தையால் இராமனைப் பிரிந்து உயிரிழக்கச் சாபடைந்தனன்,

சுரோசீ

வசிட்டருக்கு மார்சையிட முதித்த குமரன்

சுலக்ஷணை

உத்தராதித்தனைக் காண்க.

சுலபன்

1. கம்சனால் மல்லயுத்தத்திற்கு ஏவப்பெற்றுக் கிருஷ்ணனால் மாய்ந்தவன் 2. அவந்தி நாட்டரசன், சேவி சுலபை இவன் அரசாண் டிருக்கையில் மதுசூதனன் என்னும் வேதியன் யாசிக்க அவனைக் கண்டு அரசன் சிரித்தனன் அதனால் வேதியன் கோபித்து அரசனை எருதாகச் சபித்தனன். இதைக் கேட்ட அரசன் தேவி, வேதியனை நோக்கி அரசன் செய்த குற்றத்தைப் பொறுக்காமல் சாபமிட்டதால் நீ கழுதையாக எனச் சபித்தனள். மீண்டும் வேதியன் அரசன் தேவியைப் புலைச்சியாகச் சபித்தனன். இந்தச் சாபம்கொண்ட மூவரும் ஒரே கிராமத்தில் இச்சாபவசத்தராய்ப் பிறந்து அந்தக் கிராமத்து விநாயகர் கோவிலுக்கருகில் மேய்ந்து கொண்டிருக்கையில் புலைச்சி சீத்த புல்லை எருது இழுத்தது. அதைப் புலைச்சி அடித்தனள். அதை எருதிட மிருந்து கழுதை பிடுங்கியது. கழுதையை எருது இடித்தது, எருதைக் கழுதை உதைத்தது. இதனால் பெரும்போருண்டாயிற்று. அங்கு விநாயக தரிசனத்திற்கு வந்திருந்த வேதியர் இவைகளை யடித்துத் துரத்தப் புலைச்சியும் எருதும் கழுதையும் கோயிலைச் சுற்றி யோடி வருகையில் புலைச்சி மடியிலும் எருது, ஈழுதைகளின் வாயிலும் இருந்த புல் விநாயகரிடம் விழுந்ததால் விநாயக பதம் பெற்றவன்.

சுலபை

1. சநகனுடன் தத்துவ விவகாரம் செய்து ஞானமுணர்ந்தவள். 2, சுலபனைக் காண்க, 3. தாலவமுனிவர் பாரி, 4. பிரதானன் என்னும் பெயருள்ள ராஜரிஷியின் புத்திரி. தர்மதுவஜன் என்னும் பெயருள்ள ஜனகனுடன் சம்வாதம் செய்தவள்.

சுலோசநன்

திருதராட்டிரன் புத்திரன்.

சுல்லிதேவி

சிவாக்னி விஷயமாய் மடைப்பள்ளியின் அடுப்பில் தியானிக்கப்பட்ட தேவி. இவள், தர்மா தர்மரூபமான சரீரத்தையும், இரண்டு கைகளையும், சமயற் தொழிலையும், வணங்கின முகத்தையும், சிற்சுவரூபத்தையும் உடையவள் (சைவ பூஷணம்.)

சுழிகுளம்

சித்திர கவியிலொன்று. எட்டெழுத்தாய் நான்கு வரியும் முற்றுப் பெற்ற பாட்டு, இது முதலு மீறும் சுழித்து வாசித்தாலும் அப்பாட்டே வருவது.

சுவகை

ஒரு வேசி, மகாமாயாவி. இவள் செய்த பாபத்தால் ரோகியாகிச் சிவயோகி ஒருவரது கருணையால் பாபநீங்கினவள்.

சுவக்கிரன்

சண்முகசேநாவீரன்,

சுவசனன்

அமிர்தத்தைக் காப்பாற்றிய தேவன் கருடனோடு யுத்தம் செய்தவன்.

சுவசம் வேதனா காட்சி

(தன் வேதனைக் காட்சி) ஆன்ம ஞானத்தால் இராகம், வித்தை, கலைமுதலியவற்றா லுண்டாகும் இன்பதுன்பங்களைப் புசிப்பது (சிவ சித்)

சுவசை

பிரசாபதியின் தேவி, அனிலன் என்னும் வசுவிற்குத் தாய்.

சுவஞ்செயன்

(சந்.) செந்நூவின் குமரன்.

சுவணகம்

கோதாவரியை அடுத்த ஒரு நீர் துரை

சுவணகேது

அச்சுவகண்டன் படை வீரரில் ஒருவன்.

சுவதர்

பிதுருக்களைக் காண்க

சுவதாதேவி

பிரமன் ஆதியில் நான்கு சரீரமுள்ள பிதுர்க்களையும், மூன்று தேஜோரூபமான பிதுர்க்களையும் சிருட்டித்தனர். அவர்களுக்கு ஆகாரமாகச் சிரார்த்தத்தில் செய்யும் தர்ப்பணத்தையும், ஸ்நான காலத்தில் செய்யும் தர்ப்பணத்தையும் கற்பித்தனர். ஆனால் அதனைப் பிதுர்க்களடையச் சக்தியற்றவர்களாய்ப் பிரமனிடம் கூற அவர் மானசிகமாக ஒரு கன்னி கையைச் சிருட்டித்துப் பிதுர்களுக்குப் பத்தினியாகத் தந்தனர். சுவதாதேவி பிதுர்க்களை மணந்து பிதுர் கிரியைகளில் அவர்களைத் தன்னுடன் துதிப்பவருக்குச் சர்வ சித்திகளையும் அநுக்ரகித்து வந்தனள், (தேவி~பா).

சுவதி

ஆதிசேஷனுக்குப் பாரி. இவள் குமரி நாககன்னிகை,

சுவதிதி

வச்சிரன் பாரி,

சுவதை

1, நருமதையின் பெண். மாலியின் பாரி. 2. தக்ஷன் பெண், விதாதா தேவி, 3. பிதுர்க்களின் தேவி,

சுவநயன்

ஒரு அரசன் கக்ஷவதனுக்குத் தானமளித்தவன். (இருக்குவேதம்).

சுவந்மன்

காந்தியின் குமரன்,

சுவந்மி

திருதராட்டினன் குமாரன்.

சுவபலக்கர்

பிரசங் குமரர். தேவி காந்தினி. அக்குரூரர் முதல் பன்னிருவர் குமரர். சுவபர்க்கன் எனவும் பெயர்.

சுவபாகன்

ஷத்தாவுக்கு உக்ரகன்னிகையிடம் பிறந்தவன் ஊருக்கு வெளியில் குடியிருப்பவன். இவன் பிணத்தின் துணியுடுக்கவேண்டும். (மநு)

சுவய எக்யன்

உசீநர தேசத்தாசன். இவனிறந்த காலத்து இவன் மனைவியர் துக்கிக்க யமன் அநித்தியக் கூறித் தேற்றினன்.

சுவயம்பிரபை

ஏமையென்னும் அப்சரசின் பெண். இவள் ஒரு அசுரனிடத்தில் ஆவல் கொண்டு மயன் பொருட்டுப் பிரமன் நிருமித்த பிலத்தில் அந்த அசுரனுடனிருந்தாள். இந்திரன், அசுரனைக் கொன்று இவள் நடத்திய தீங்கால் இவளைப் பிலத்தில் நெடுநாளைக்கிருந்து அநுமனா லதைவிட்டு நீங்கக் கூறிச் சென்றனன். இவள் இவ்விடமிருக்கையில் சீதையைத் தேடச்சென்ற அநுமன் முதலியோர் இதிற்சென்று வழிகாணாது அவள் கூறக்கேட்டு வெளிவந்தனர்,

சுவயம்பு

ஒரு ருஷி. ருஷிகளிடம் நரசிங்க பூஜா விதானம் கேட்டவர். (பிரம~)

சுவயம்ஹாரி

அர்த்தஹாரி, வீர்யஹாரி இந்தத் தேவதைகள் ஆசாரமற்ற இடத்தை யடைந்திருப்பவர்கள்.

சுவயம்ஹாரிகை

இவள் பயிரில் தானியம், பசுக்களில் பால் முதவியவற்றைக் கெடுப்பவளாகிய தேவதை.

சுவயித்தியன்

ஒரு ராஜருஷி; இவன் குமரன் மரிக்க தர்மநிஷ்டரான முனிவரால் உயிர்ப்பிக்கப்பட்டான். (பார~சாந்)

சுவரம்

1. (7) ச, ரி, க, ம, ப, த, நி. 2. இது மகேச்வருக்குத் தியாகத்தி லுண்டான கோபத்தால் உதித்த சுவரலா மாலை; இது உலகத்தை வருத்தியது. பிரம தேவர்சிவபெருமானை வேண்டச் சிவபெருமான் அதனைச் சமப்படுத்தினர். பிரமன், இதனை மனிதரிடம் சுவரரோகமாகவும், யானைகளுக்கு மண்டைக்குக் கொதிப்பாகவும், மலைகளுக்குத் தாதுவாகவும், ஜலங்களுக்குப் பாதியாகவும், பாம்புகளுக்குச் சட்டையாகவும், நஷபங்களுக்குக் குளம்பு ரோகமாகவும், பூமியில் உவராகவும், பசுக்களுக்கு மாலைக்கண்ணாகவும், குதிரைகளுக்குச் சதையடைப்பாகவும், பிற பிரா ணிகளிடத்தும் இவ்வாறு பகுத்தனர்.

சுவரலக்ஷணம்

இது வைத்தியர்களுக்கு நாடி நிதானத்தின் பொருட்டும், யோகியர்க்குச் சமாதி சித்தியின் பொருட்டும், சோதிடர்க்குப் பலாபல சித்தியின் பொருட்டும் முக்கியமானது. சுவரம் என்பது உச்வாசநிசவாச சம்பந்தம், இதனை நாசித் துவாரத்தின் வரும் இடகலை, பிங்களை நாடிகளால் உணர்ந்து நேரிடும் பலாபலன்களை யுணர்ந்து கொள்ளல் வேண்டும். மூக்கின் வலப்புற துவாரத்திலிருந்து வெளிவரும் ஸ்வாஸம் சூரியகலை, இதுவே பிங்களை இடநாசித் துவாரத்திலிருந்து வெளிவருவது சந்திரகலை. இதுவே இடகலை எனப்படும். இவற்றின் சுவரபேதம் (1) பவிதம், (2) வக்ரிதம், (3) ஸ்புடிதம், (4) ஸ்கலிதம் அல்லது உபகாதம், (5) ஸ்வவிதம், (6) தவம்ஸமானம், (7) சுஷப்தம், (8) அஸ்தமயம் என எண்வகைப் படும். இவற்றுள் (1) பலிதம்: சுவாசம் மூக்கின் முனையை யொட்டி நடத்தல் இதன் பலம் காரியநாசம். (2) வகரீதம்: வாயு தத்வத்தில் நடக்கையில் அந்தத்தர் வத்தைக் கடந்து தோளில் படுதல். இதன் பயன் காரியநஷ்டம். (3) ஸ்புடிதம்: சுபதத்வத்தில் நாடி நடத்தற் பொருட்டு இரண்டும் கலத்தல் பயன் சுபம். (4) ஸ்கலிதம்: சவாசங் கண்டுங் சாணாதிருத்தல் இதன் பலன் காரியநஷ்டம். (5) ஜ்வலிதம்;தேஜஸ் ததவத்தில் நாடி விரைவாய் நடத்தல் இதன் பலன் பெருநஷ்டம். (6)த்வம்சமானம்: மூக்கடைப் பாலேனும் வேறுவகையாலேனும் நாடி யொழுங்காய் வராமை. இதன் பலன் காரியஹானி (7) சுஷப்தம்: நித்திரையில் நாடி நடை. இதன் பலன் அசுபம். (8) அஸ்தமயம் சுவாசமின்றியிருத்தல். இதன் பலன் சமாதி அல்லது மரணம். வேறொருவகை நாடியறிதலாவது பால, குமார், ராஜ, விருத்த, மிருத, சங்கிரமம் என அறுவகை. இவற்றுள் (1) பாலகவாம்: நாடி நடந் தும் நடை காணப்படாமை, இதன் பலம் ஆலச்யம், அல்பபலன். (2) குமாரசுவ ரம்: நாடி செம்மையாய் நடப்பது. இதில் கார்யசித்தி (3) ராஜசுவரம்: நாடி ஸ்புடமய்ச் செம்மையாய் நடப்பது, இதில், இராஜயபிராப்தி. (4) விருத்தஸ்வரம் நாடி அற்றுக் காணப்படுதல இதில் மிச்சபல சித்தி. (5) மிருதஸ்வாம்:ச்வாசம் செம் மையாய்க் காணப்படாமை. இதில் கார்ய ஹானி. (6) சங்கிரமசுவாம்: இரண்டு நாடிகளும் கணந்தோறும் மாறிமாறி நடத்தல் இதன் பலம் சர்வகார்யஹானி. இந்த நாடி நடையினை ஐந்து தத்வங்களிலடக்கிச் சுபாசுபமறிதல், நாடி (2) அங்குலம் செம்மையாய் ஒடுதல். (1) பிரதிவிதத்வம்: இதில் நற்காரியங்கள், கிருகநிர்மாண முதலிய செய்ய உத்தமம். (2) அப்பு: சுவாசம் கீழ்நோக்கி (16) அங்குலம் ஒடுவது. இதில் விவாகம், பயிர், யாகம், சோபனம் செய்ய நன்று. (3) தேஜஸ்தத்வம்: சுவாசம் மேனோக்கி (8) அங்குலம் ஓடல் இதில் எந்தக் காரியமும் முடியாது. (4) வாயுதத்வம்: வாயு தடைப்பட்ட தாய் 4 அங்குலம் நடத்தல். இதில் வாகனமேற நன்று. (5) ஆகாசதத்வம்: சுவாசம் மூக்கில் பட்டும் படாதும் ஒடுதல், இதில் கார்யசித்தியுண்டு.

சுவராசி

சூரிய கிரணத்தொன்று.

சுவராபக்ன மூர்த்தி

வாணாசுரன் பொருட்டுச் சுவர்ண ரூபமாய் எழுந்த ருத்ராவசரம்; இந்த மூர்த்தியைப் பூசிக்கின் சுரம் நீங்கும்.

சுவரோசி

சுவாரோஷிசன் தந்தை, தேவி மனோரமையைக் காண்க.

சுவர்க்கத்துவாரம்

சரயு தீரத்திலுள்ள ஒரு தலம், இது ராமர் தன்னடிச் சோதிக்கெழுந்தருளியது.

சுவர்க்கன்

காசியரசன், தன்னாடு மழை வளந்தவிர்ந்திருக்கக் கண்டு அவன் பெண்ணாகிய சாந்தினியை மணஞ் செய்வித்து நாடு செழிக்கச் செய்த அரசன், இவன் குமரன் அக்குரூரன்,

சுவர்க்கலை

பிரதிகன் தேவி,

சுவர்க்கலோகம்

இது புவலோகத்துக்கு மேல் உள்ளது. இதற்கு அமராவதியெ னப் பெயர். இது எண்பத்தைந்து நூறாயிரம் யோசனை பொருந்தியது. இதற்கரசன் இந்திரன், இவன் தேவி இந்திராணி. இவனைத் தேவரும் இருடிகளும் தேவஸ்திரீகளும் சேவித்திருப்பர். இதில் அக்நிட்டோம முதலிய யாகங்களைப் புரிந்தவர்களும், தீர்த்தயாத்திரை செய்தவர்களும், தானம் மகா விரதம் புரிந்தவர்களும் அவ்விடத்துள்ள போகங்களைப் புசித்திருப்பர். இதில் காமவல்வி சுற்றிய கற்பகத்தரு, ஐராவதம் என்னும் யானை, உச்சைச்சிரவம் என்னும் குதிரை, சயந்தம் என்னும் மண்டபம், வைசயந்தம், உவசந்தம் என்னும் மாளிகை, சுதன்மம் என்னும் பொக்கிஷம், நந்தனவனம் என்னுஞ் சோலை, நவநிதி, காமதேனு, அமிர்தம், சிந்தாமணி, சூளாமணி யென்னும் அணிகள். மேனசை அரம்மை, உருப்பசி, திலோத்தமை முதலிய உண்டு. இவன் குமரன் சயந்தன். இவனுக்குச் சாரதி மாதலி, இவனுக்காயுதம் வச்சிரம், இவன் தேர் வியோமயானம். இவன் சபை சுதர்மை, இந்த உலகத்தில் மந்தாரம், பாரிஜாதம், சந்தானம், கல்பகவிருக்ஷம், அரிச்சந்தனம் என்னும் பஞ்சதருக்களும் இருக்கும். இவனுக்கு இடிக்கொடி நூறு அச்சுவ மேதஞ் செய்தார் இவ்வுல காதிபத்தியம் பெறுவர்.

சுவர்சேநன்

திருதராட்டிரன் புத்ரன்.

சுவர்ச்சன்

1 சூரியவம்சத்துக் கரம்பராஜ புத்திரனாகிய சனிநேத்திரன் புத்திரன். இவன் குமரன் கரந்தமன். 2. கருடபுத்திரன், 3 அக்னி விசேஷம், 4 திரௌபதி சுயம்வரத்திற்கு வந்த ஒரு ஷேத்திரியன். 5 சுகேதுவின் புத்திரன் உடன் பிறந்தவன் சுனாமன் (பா~ஆதி.) 6. பிரம்ம ரிஷி. (பாவன.) 7. திருதராஷ்டிரன் குமரன். 8. துர்யோதனனுக்காகவந்த க்ஷத்திரியன், அபிமன்யுவால் கொல்லப்பட்டவன்.

சுவர்ச்சலை

1. சூரியன் தேவி, குமரன் சனி 2. விசுவசேநனைக் காண்க. 3. தேவவருஷியின் குமரி இவள் பொட்டையும் பொட்டையிலாதவருமான வரை மணப்பேனென்று சுவேதகேதுவை மணந்து இல்லற நடத்தியவள் (பார சாங்.) இவள் ஆதமஞானத்தைப்பற்றித் தன் கணவனிடம் வினாவியவள்.

சுவர்ச்சஸ்

ஆங்கீரச புத்திரன், பூதியின் சகோதான், பெளத்தியமன் வந்தரத்தைக் காண்க.

சுவர்ச்சாயுசு

(சூ.) சாவநன் குமரன்.

சுவர்ண கௌரி ஷோடச கௌரிவிரதம்

இது ஆவணிமாதம் சுக்கில திருதிகையில் அநுஷ்டிப்பது, இது தேவியைச் சோடச வுபசாரத்துடன் கலசத்தில் ஆவாகித்துப் பூசிப்பது. இது தேவகன்னியர் அநுஷ்டிக்கக் கண்ட சந்திர பிரபனால் அநுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்காந்தபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

சுவர்ணகஜதானம்

ஆயிரம் முதல் நூறு கழஞ்சு பொன்னினால் யானை செய்வித்து அட்டமியில் விதிப்படி பூசை செய்து வேதியர்க்கு அல்லது சிவாலயத்திற்கு அளித்தலாம்.

சுவர்ணசிரன்

ஒரு ரிஷி.

சுவர்ணசுவர்ணிகள்

அக்னியின் புத்திர புத்திரியர் அனியைக் காண்க. (பிரம புரா)

சுவர்ணசூடன்

கருட புத்திரன்,

சுவர்ணடீ

(சுவர்ணஷ்டீவி) சிருஞ்சயனைக் காண்க

சுவர்ணதேனுதானம்

ஆயிரங்கழஞ்சுமுதல் நூற்றவொருகழஞ்சு கடையாகச் சுவர்ணத்தால் பசுவொன்று செய்வித்துக் கொம்பில் பதுமராகம், குளம்பில் வயிரம், புருவ நடுவில் முத்து, வாலில் வயிடூரியம், பல்லில் புட்பராகம் இவைகளைப் பதிப்பித்து அந்த அளவிற் பத்திலொன்று கன்று செய்வித்துப் பூசித்து முப்பது கழஞ்சு பொன்னுடன் வேதியர்க்களித்தலாம்.

சுவர்ணன்

இவன் திரிபுரத்தைச் சேர்ந்த அசுரர்களில் ஒருவன். இவன் சிவபூசை செய்து சிவபெருமானை வேண்டி அத்தீயினின்று தப்பினவன்.

சுவர்ணன்

ஒரு ரிஷ. இவன் ஒரு மநுவால் தூபதீபாதி விஷயங்களைப் பற்றி சம்வாதிக்கப்பட்டவன்.

சுவர்ணபரிதி

சூரபதுமன் மந்திரி.

சுவர்ணபூமிதானம்

ஆயிரக்கழஞ்சுச் சுடர்ணத்தால் மண்டபமொன் றியற்றுவித்து அதின் நடுவில் மேரு செய்வித்துச் சுற்றிச் சத்த தீவுகளையும், அஷ்டகுலாசங்களையும், நவகண்ட மொன்பதையுஞ் செய்வித்து விதிமுறைப் பூசித்து வேதியர்க் களித்தலாம்,

சுவர்ணம்

அக்கிரியின் பிள்ளை.

சுவர்ணரோமா

(சூ.) மகாரோமன் குமரன், அஸ்வசோமன் தந்தை. மிதிலாதிபதி,

சுவர்ணவதி

ஒரு தீர்த்தம்.

சுவர்ணவர்ணாகரன்

காசி தேசாதிபதி, ஜனமேஜயன் மாமன்,

சுவர்ணவர்மா

காசி தேசாதிபதி. இவன் புத்திரி வபுஷ்டை ஜனமேஜயன் பாரியை.

சுவர்ணஷ்டீவி

1 சிருஞ்சயனைக் காண்க, 2. இவன் சிருஞ்சயன் புத்திரன் இவன் தந்தை நாரதரை உபசரித்ததால் இவனைப் பெற்றான். இப்பிள்ளையை இந்திரன் கொல்லவெண்ணித் தனது வச்ராயுதத்தை நோக்கி நீ புலியுருக் கொண்டு சுவர்ணஷ் டீவியைக் கொல் என அவ்வண்ணமே அது புவியுருக் கொண்டு காத்திருக்கையில் ஒருநாள் ஏவற்காரியுடன் வனத்தில் உலாவிய பிள்ளையை இந்திரன் ஏவிய புலி கொன்றது. சிருஞ்சயன் மீண்டும் நாரதர் கருணையால் உயிர்ப்பிக்கப் பட்டவன். (பார சாந்.)

சுவர்த்தனன்

காமத்தால் தாயைப் புணரத் தந்தையைக் கொன்ற பிரமகத்தி பெற்றுச் சிவ பூசையால் நீங்கியவேதியன். (திருவோத்தூர் புரா.)

சுவர்த்தாக்கள்

அக்கினி யபிமான தேவதைகள்

சுவர்நமகருஷி

மனுவிடத்து ஆசாரவிதியுணர்ந்தவன்.

சுவர்ப்பானன்

1. இராகுவிற்கு ஒருபெயர். 2. தது குமரன்.

சுவர்ப்பானவி

நகுஷன் தாய், ஆயுவின் தேவி

சுவர்ப்பானு

கர்ணன் குமரன்; அருச்சுனால் கொல்லப்பட்டான்.

சுவர்மன்

ஒரு க்ஷத்திரியன் திரிகர்த்த தேசாதிபதியாகிய சுசர்மனுடன் பிறந்த வன். திருதராஷ்டிர புத்திரன் பீமசேனனால் கொல்லப்பட்டவன்.

சுவர்மா

1. தசாரண நாட்டரசன், பீமனிடத்தில் யுத்தஞ் செய்தவன். 2. காந்தியின் குமரன்.

சுவலந்தி

தட்சபுத்தரி ருட்சன் தேவி,

சுவலனபுரம்

ஒரு வித்யாதரநகரம்.

சுவலனரதன்

அமரபுரத்தரசன், சடி அரசன் தம்பி.

சுவலை

பரமேஷ்டியின் தேவி.

சுவவிருதன்

(பிர.) க்ஷேமகன் குமரன். இவன் குமரன் தர்மநேத்ரன்.

சுவா

ஒரு அரக்கன், இரத்தினாவலியைக் காண்க.

சுவாகன்

திருதராட்டிரன் குமரன்

சுவாகாகாராம்

தேவர்களைச் சந்தோஷிப்பிக்கும் கர்மம்.

சுவாகாதேவி

1. தக்ஷனுக்குப் பிரசூதியிடம் பிறந்த குமரி. இவள்மீது யமன் காதல் கொண்டு மணந்து இவளை எலுமிச்சம்பழமாக்கி விழுங்கி வேண்டும் போது வெளிப்படுத்தி மீண்டும் அவ்வகை விழுங்கி வருவன். இப்படி யிருக்கையில் ஒரு முறை நந்தவனத்தில் இவளை வெளிவிட்டு இவளுடன் விளையாடிய இளைப் பால் நித்திரை கொண்டனன். சுவாகா தேவி அந்தவழி வந்த அக்கியின் மீது ஆசைகொண்டு அவனைப் புணர்ந்து அக்நியைப் பழமாக்கி விழுங்கினள். பின் யமன் விழித்து இவளைப் பழமாக்கி விழுங்கினன். உலகத்தில் அக்கி மறைந்தமையால் தேவர் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணுமூர்த்தி யமனிடம் வந்து சுவாகாதேவியை வெளிவிடச் செய்து அவளிட்மிருந்த பழவுருக்கொண்ட அக்நி தேவனை வெளிப்படுத்திச் சுவாகாதேவியை அக்நிக்கு அளித்தனர். அக்கி சப்த ருஷிகளின் பாரியர்களிடம் ஆசைப்பட அவன் ஆசையைத் தணிக்கும்படி அருந்ததி யொழிந்த மற்றவர்போல் உருக்கொண்டு அவனது ஆசையை நீக்கினவள், தனது வன்மையால் அருந்ததி யுருக்கொள்ள வராமை கண்டு அருந்ததியைக் கண்டு கூறி அவளை நோக்கி விவாக காலத்தில் எந்த ஸ்திரீகள், அக்நி பிராமண பந்து மித்ரசந்நிதியில் உன்னை ஸ்மரித்துத் தரிசிப்பார்களோ, அவர்கள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வைதவ்யமில்லாமல் தமது வாணாளைக் கழித்து உன்னைப்போலக் கீர்த்தியடைர்து புண்ணியலோகத்தை யடைவார்கள் என்று அநுக்ரகித்தனள். (சிவமகா புராணம்.) இவளுக்குச் சுவாகை எனவும் பெயர், இவளில்லாத அவிசை தேவர் கொள்ளார். (பிரம்மகைவர்த்தம்) 2. பிரமன் முதலியோர் இவளை அக்னிக்குக் கொளுத்துஞ் சக்தியில்லை நீ அவனுடனிருந்து தேவர்களின் அவிசைப் பெறுகஎன அவள் விஷ்ணுவை நோக்கித் தவமியற்ற விஷ்ணு இப்போது அக்னியிடமிரு நான் வராக வுருக்கொள்வன் அக்காலத்தில் நீ நக்னிஜன் புத்திரியாய் நகனிஜிதி யெனப்படுவை அப்போதுன்னை மணப்பேன் என அவ்வாறு அக்னிக்குத் தேவியாயிருந்து, தக்ஷிணாக்னி காருகபத்யம், ஆக வனியம எனும் மூன்று புத்திரர்களைப் பெற்றனள். சுவாகாவுடன் கூடின மந்திரங்களெல்லாங் சகல சித்தியைத் தரும். (தேவி. பா) 3. நித்ராதேவிக்கொரு பெயர்.

சுவாகிதன்

விருசினவந்தன் குமரன்.

சுவாகு

1. சேதிநாட்டரசன். 2. (யா.) பிரதிவாகு குமரன். இவன் குமரன் உக்ரசேநன். 3. துன்மருடன் குமரன். 4. சண்முக சேநாவீரன். 5. காசியரசருள் ஒருவன். 6. சாந்தன் குமரன் இவன் தந்தையைச் சாம்பராக்கின அகத்தியரை வருத்தச்சென்று அவரால் அரக்கனார்கப்பட்டுச் சுமாலியை யடைந்து தனக்கு ஒப்பாரித் தந்தை யாக்கிக் கொண்டவன்.

சுவாகை

சுவாகாதேவியைக் காண்க

சுவாசரோகம்

இருமவின் விருத்தியானும், வராதிக்க வஸ்து பேதங்களினாலும் அஜீரண பேதியாலும், வாந்தியாலும், விடாச்சுரத் தினாலும், தானியச் சுணைகளாலும், புகைகளாலும், காற்றினாலும், மர்மஸ்தானங்களில் பட்ட அடிகளாலும், அதிசீதன சலத்தினாலும், இது உண்டாம். இது சுத்ர சுவாசரோகம், தமகசுவாசம், விச்சின்ன சுவாசம், மகாசுவாசம், ஊர்த்வ சுவாசம் என ஐந்துவகை இது உண்டாங்கால் விலாப்பக்கங்கள் குத்தல், திணறித் திணறி மூச்சுவிடல், வயிறுப்பிசம், நெறிகளில் நோவ முண்டாம். (ஜீவ)

சுவாசினி

இவள் காசிவாசியாகிய ஒரு பார்ப்பினி, நந்தன வனத்தில் பிரமராக்ஷசால் பிடிக்கப்பட்டுக் கிணற்றில் தள்ளப்பட்டுத் தாய் தந்தையர் எடுத்துத் தேற்றித் சடாயு புரியில் சடாயு குண்டத்தில் மூழ்குவிக்கச் சுத்தமடைந்தவள்.

சுவாசோஷிதம்

சுவாரோஷிதனாண்ட மன்வந்தரம்.

சுவாச்சலை

சூரியன் தேவி.

சுவாஜி

இல்வலன் என்னும் அசுரனது தேர்க் குதிரை. (பா~வன.)

சுவாதன்

நருமதைந்தி தீரத்தில் கர்ணகி பட்டணத்தில் உதத்தியவம்சத்துதித்து வேதியன். தன் தாய் கேட்டுக்கொண்ட படி அவளிறந்தபின் அவளெலும்பைச் கங்கையில் விடக் கொண்டு செல்கையில் பொழுதுசாய ஒரு வீட்டில் தங்கிப்போக அவ்விடமிருந்த பசு தன் கன்றினை யடித்தான்; மகனைத் தான் நாளைக் கொன்று அதனாலுண்டான பிரமகத்தியைத் தீர்த்த ஸ்நானத்தால் போக்கடித்துக் கொள்வேனெனக் கூறியதைக் கேட்டு இந்தவுண்மை யறிவோமென மறுநாளிருந்து அவ்வகை அப்பசு அவ்வீட்டு மைந்தனைக் குத் திக்கொன்று நருமதைந்தி தீரத்திலுள்ள நந்திகேசுர தீர்த்தத்தில் சென்று முழுகிச் சுத்தமானதுகண்டு தானும் அதனைப் பின் றொடர்ந்து அதில் மூழ்கித் திரும்புகையில் சங்காதேவி தரிசனந்தந்து நானே கங்கை இன்றைய தினம் வைசாக சுத்தசப்தமி. இத்திதியில் நானித்தலத்திற்கு வருவது வழக்கமாதலால் இவ்விடத்தில் உன் தாயின் எலும்புகளை விடுக என வேதியன் அவ்வாறு செய்து தாய் திவ்யவுருப்பெறச் செய்தனன். (சிவமகாபுராணம்.)

சுவாமி

இவனுக்கு அழகுவாய்ந்த ஒரு பெண் உண்டாயிற்று. அப்பெண் காசி யில் தவஞ் செய்கையில் அவளை ஒரு அரக்கன் கவர அதையொரு வித்யாதான் கண்டு மறுத்து அவனைக் கொலைசெய்து தானும் அவனாற்பட்ட காயத்தா லிறந்தனன், இந்தப் பெண்ணும் காந்தருவனிடம் வைத்த சிந்தையால் இறந்தனள். இறந்த இருவரும் மாலியகேது, சலாவதி யெனப் பிறந்து அரசு செய்திருக்கையில் காசிப்படங் கண்டு முன்னைத்தான் ஸ்நானஞ் செய்து தவம் புரிந்த தீர்த்த நினைவு வரக் காசி சென்று கங்கையிலாடிச் சிவதர்சனஞ்செய்து சிவமூர்த்தி தாரகம் உபதேசிக்க முத்திபெற்றவன்

சுவாமி தீர்த்தம்

திருவேங்கட மலையிலுள்ள தீர்த்தங்களுள் ஒன்று. சரஸ்வதி எல்லா தீர்த்தங்களுக்கும் மேன்மை பெறும்படி நோற்று இத்தீர்த்தமாயினள்.

சுவாமிதேவன்

அதிவீரராம பாண்டியனுக்கு ஞானாசிரியன்.

சுவாமிநாததேசிகர்

இவர் பாண்டி நாட்டில் சைவ வேளாளர் குலத்தில் மயிலேறும் பெருமாள் பிள்ளை யென்பவரிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்ற வல்லவராய்ச் செப்பறைப் பதியிலுள்ள கனகசபாபதி சிவாசாரியரிடம் வட நூல் பயின்று திருவாவடுதுறைக்கு வந்து ஞான தேசிகராகிய அம்பலவாண தேசிகரிடம் ஞான நூலாராய்ந்து ஈசான தேசிகர் எனத் தீக்ஷாநாமம் பெற்றுத் திருநெல்வேலியில் இருந்து நன்னூற்குரைசெய்த சங்கர நமச்சிவாயப் புலவர்க்குத் தமிழ் கற்பித்து இலக்கணக் கொத்து, தசகாரியம், திருச்செந்திற் கலம்பகம் முதலிய பல நூல்களியற்றினர் இவர் இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத நாவலர், தமிழ்ப் பிரயோக விவேகம் செய்த சுப்ரமண்ய தீக்ஷிதர் காலத் திருந்தவர். (இலக்கணக் கொத்து.)

சுவாமை

இராமகங்கைக் கொரு பெயர் (சாயு).

சுவாயம்புமனு

பிரமனுடைய இரு கூறானவுடலின் ஒருகூறில் சுவாயம்புமனுவும், மற்றக்கூறில் அவன் பாரி சதரூபையும் பிறந்தனர். எழுபத்தொரு சதுர்யுக மாண்டவர். இவர் பெயரால் ஒரு ஸ்மிருதி உண்டாக்கினவர். இவர் சுநந்தாதி தீர்த்தத்தில் (100) வருஷம் தவஞ் செய்து அசுரரைச் சோதித்துத் தெய்வலோகத்தை யரசளித்தனர். சுயக்கியனுக்கு மாகா மகர். இவர் சுயக்கியனை அரியென்று அழைத்த கால் விஷ்ணுவிற்கு இப்பெய ருண்டாயிற்று. குமரர் பிரியவிரதன், உத்தான பாதன். குமரிகள் பிரசூதி, ஆதி, தேவ ஆதி. இவர் முதல் மனு சதரூபையை இவர் குமரியென்று இருக்குவேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. (பாகவதம்)

சுவாயம்புமன்வந்தரம்

மனுவும், தேவர்களும், மனுப்புத்திரரும், இந்திரனும், நஷிகளும், அரியினம் சாவதாரமும் இந்த ஆறும் பொருந்தியது.

சுவாரோசிமனு

வரூதினி, ஒரு மாயவிப் பிரனைக்கூட இவன் பிறந்தனன். இவன் மனோரமையின் தந்தை இந்தீவராக்ஷன் அரக்கனானதை நீக்கி மனோரமை அரக்கனால் பிடியுண்டதை நீக்கி அவளை மணந்து விபாவரியிடம் பிராணிகள் பேசும் வித்தைபெற்று அவளையும் பெண்டாக்கிக்கொண்டு வருவேட்டைக்குச் சென்று வந்தேவதையைக் கூடித் தியுதிமந்தனைப் பெற்றான். இவனைச் சுவாரோருசியின் புத்திரன் எனவுங் கூறுவர்.

சுவாரோசிஷன்

அக்நியின் புத்ரன், மனு வாயிருந்தவன், தாய் மனோரமை, தகப்பன் சுவரோசி என்றுங் கூறுவர். இரண்டாம் மனு,

சுவார்த்தாநுமானம்

(தன் பொருட்டது மானம்) இது ஒருவனுங் கூறாமல் முன்பு தான் புகையைக்கண்ட இடத்தில் அனலைக்கண்டு பின்புதானே யாதாமோரிடத்தில் புகையுண்டு அவ்விடத் தனலுமுண்டென்று வியாப்தியைக் கிரகித்தறியுமறிவு. (சிவ~சித்).

சுவாலகேசன்

சண்முகசேநாவீரன்.

சுவாலதாலு

சண்முகசேநாவீரன்.

சுவாலபாதன்

ஒரு அசுரன்.

சுவாலாசுரன்

இவன் தேவர் முதலியோரை வருத்திச் சிவமூர்த்தியால் பொடி யாக்கப்பட்டிறந்தவன்.

சுவாலாதேவி

அரிசகன் மனைவி, தக்ஷகன் குமரி.

சுவாலாமாலினி

பண்டாசர சோபதிகளைக் கொன்ற சத்தியின் அம்சாவதாரம் (தே பா)

சுவாலாமுகி

தக்ஷயாகத்தில் தக்ஷாயணியின் தேகத்திலுண்டான ஜ்வாலை இமய பர்வதத்தில் விழுந்தது. அது ஜ்வாலாமுகி எனும் தேவதையாயிற்று. இச்சுவாலாமுகியே பிறகு இமயபர்வத புத்ரியாகிய பார்வதி யெனப்பட்டனள்.

சுவாலை

(சந்) குருவின் தேவி, மகததேசத்தரசன் புத்ரி,

சுவாவ

உன் முகனுக்குப் பிரீதகேசியிடத்துதித்த குமரன்.

சுவிதிராசா

ருஷபதீர்த்தங்கரின் ஏழாவது பிறவி.

சுவிரதன்

1. உசீநான் குமரன். 2. இவன் ஒரு வேதியன், கர்ப்பத்தில் நாராயண ஸ்மரணை செய்து கடைசி காலத்தில் வைடூர்ய பர்வதத்தில் சித்தேச்வரலிங்க பிரதிட்டை செய்து பூசித்து முத்தி பெற்றான். (பாத்ம புராணம்.) 3. விஷ்ணுபூசையால் இந்திரபத மடைந்த வேதியன். (பாத்மம்) 4. ஓர் இருடி, வத்சந்திரனுக்குச் சம்பன் தன்மை கூறியவர்.

சுவிரன்

1. (பிர.) சிபியின் குமரன். 2. தேவசிர வசுவிற்குச் சங்கவதியிடத் துதித்த குமரன்.

சுவிஷ்டகிருது

வைசுவதேவபலி கொள்ளும் அக்நி.

சுவிஹரி

சூர்யவம்சத்தரசன் யோகியானவன். நிமியாசத்தில் அரிகதை சொன்னவன்,

சுவீரன்

1. ஷேமியன் (க்ஷேமகன்) குமரன், இவன் குமரன் பிரஞ்சயன். 2, சிபி, குமரன், வசுதேவன் தம்பியாகிய தேவச்சிரவன் குமரன். 3. சூரியவம்சத்து மதிராஸ்வன் புத்திரனாகிய தியுதிமான் புத்திரன். இவன் புத்திரான துர்ஜயன்.

சுவீர்யபாகு

குரோத கீர்த்தியின் குமரன்.

சுவுருத்தன்

சதருதநயன், நாகன்.

சுவேச்சை

திருதராட்டிரன் குமரன்.

சுவேதகி

ஓர் அரசன், இவன் நாரதரால் ஒருயஞ்ஞம் செய்வித்து அதில் பலனிரண்டு வருஷம் அக்நிக்கு நெய்யால் ஆகுதி கொடுத்தனன். இதனால் அக்நிக்கு அக்தி மந்தம் உண்டாய்த் தேஜசும் நீங்கிற்று. அந்நோய் நீங்கும்படி அக்நி காண்டவனத்தை பெரிக்கும்படி அருச்சுநனைக் கேட்டுக் கொண்டனன். இவன் ஒரு பாசருஷி, இவனை அம்பரீஷன் என்றும் கூறுவர்.

சுவேதகேது

1, ஓர் இருடி, இவன் கோபத்தால் குமரனை யமபுரம் பார்க்கச் செய்தவன், அட்டகோணருஷியின் மாமன். 2. தானவரென்னும் முனிகுமரன். 3. ஒரு சிவயோகி. 4. மதன எலாசிரியன், 5. சுதன்மன் குமரன் இவன் பலசா னங்கள் செய்தும் அன்னதானஞ் செய்யாததால் பிரமதேவனால் தன்னுடலைத் தின்னச் சபக்கப்பட்ட வன். 6. இருக்கு வேதத்திற்கூறப்பட்ட ஒரு ருஷி அருணனுடைய பௌத்திரன் (சாம வேதம்) பிரவாகனால் வேதாந்த விசாரத் தில் வெல்லப்பட்டவன். 7. இவன் ஒரு வேதியச் சிறுவன், இவனுக்கு ஐந்தாமாண்டில் மாணமுண்டாமென அறிந்த தாய் தந்தையர் வருந்த, இவன் சிவபூசை செய்து யமனை வென்றவன். 8. புண்டரீகனது தந்தையான மகரிஷி.

சுவேதசிரீடன்

சண்முகசேநாவீரன்.

சுவேதசீகன்

ஒரு சிவயோகி.

சுவேதநதி

சுவேதமுனிவரைக் காண்க.

சுவேதன்

1. காந்தார தேசத்தரசன், காந்தாரியின் தந்தை, திருதராட்டிரன் மாமன். 2. விராடனுக்கு அபிமான புத்ரன், பாரத முதற்போரில் சேநாபதி, உத்தரனுக்கு அண்ணன், சிவமூர்த்தியை யெண்ணித் தவஞ்செய்து வில்பெற்றுப் போரில் துரியோதனாதிகளைப் பின்னிடச் செய்து வீஷ்மர் வஞ்சனையால் வேறு ஆயுதமெடுத்து யுத்தஞ்செய்து மாண்டவன். கிருஷ் ணாவதாரத்தில் கண்ணனுக்கு விருந்து சொல்ல அக்காலத்து வெகுலாசுவனும் விருந்து கூறினன். கண்ணன் அவ்விருவர் வீட்டினும் ஒரேகாலத்தில் விருந்துண்ணக் களித்தவன். 3. யஞ்ஞ மூர்த்திக்குத் தக்ஷணையிடமுதித்த குமரன். 4. ஒரு நாகன், பாதாளவாசி, 5. (சூ) சம்பன் குமரன். 6. அம்பரீ ஷனுக்குச் சேநாபதி, இராக்கதருடன் சண்டைக்குச் சென்று பயந்து திரும்பிச்செல்ல நாணி அங்கிருந்த சிவமூர்த்தி சந்நதியில் தன் தலையறுக்க நிச்சயித்து வாளையெடுத்து அறுக்கையில் சிவமூர்த்தி உனக்கு வெற்றி யுண்டாக என அநுக்கிரகித்த வரம் பெற்றுப் பகைவரை வென்று அம்பரீஷனால் வரிசைபெற்று வீரசுவர்க்க மடைந்தவன். 7. ஒரு வேதியச் சிறுவன்; சிவபூசையால் யமனைக்கடக்க வெண்ணிச் சிவபூசை செய்கையில் யமன் பாசம் வீசச் சிவபிரான் கோபத்துடன் சிவலிங்கத்தில் தரிசனம் தந்து யமனையுதைக்க யமன் உயிர் நீங்கினன். சுவேதன் சிவமூர்த்தியைத் துதித்துத் தனக்கு ஆயுளும், யமனுக்கு உயிரும் வேண்டிப்பெற்றவன். (இலிங்கபுராணம்). 8. இவன், சுதேவன் குமரன், பல ஆண்டுகள் தவஞ் செய்து பிரமலோகமடைய இவனை அவ்விடத்தில் பசிநோய் வருத்தியது. சுவேதன் பசிநோய் கூறிப் பிரமனைவேண்டப் பிரமன் நீ இரப்போர்க்கிடாது உன்னுடம்பைப் போஷித்ததால் இவ்விடத்தும் அந்நோய் உன்னை வருத்தியது ஆதலால் அது நீங்கும்படி நீ முன் தவஞ்செய்த இடமே செல்; அதற்கருகில் உள்ள குளத்தில் நீ போஷித்த உன்னுடலை அக்குளத்தில் மிதக்கக் காண்பாய். அதைத் தின்று உன்பசி நீங்குக என அரசன இது நீங்கும் வகை எவ்வித மென்றனன். பிரமதேவன் நீ அகத்தியரைக் காண்கையில் நீங்குமென அநுக்கிரகித்தனன். பசிநோய் கொண்ட சுவேதன் தேவவிமானத்திலேறிப் பசிவந்த காலத் தெல்லாம் தன்னுடலைத் தின்று செல்லும் நாட்களில் ஒருநாள் பொய்கைக் கரையில் அகத்திய முனிவரைக் கண்டு தன் சாபம் நீங்கித் தனது வரலாறு கூறி அகத்தியருக்குத் திவ்யாபரணம் ஒன்று தந்து, போயினவன். இவ்வாபரணம் அகத்தியரால் இராமமூர்த்திக்குக் கொடுக்கப்பட்டது 9. சண்முகசேநாவீரன். 10. ஒரு சிவயோகி. 11. சோழநாட்டில் திருவெள்ளக் குளத்தில் திருமால் திருவருள் பெற்றவர். 12 குருகுலத் தரசன் தான் பூப்பிர தக்ஷணஞ் செய்து வருகையில் மனைவி இறந்தது கண்டு வெறுப்புற்றுத் துறவடைந்து தவமேற்கொண்டு சுவேத முனிவனெனப் பெயர்பெற்றுப் பின் சிவமூர்த்தியைத் தரிசித்து அவரால் சுதபன் எனும் பெயரையும் நந்திதேவர் பதத்தையும் பெற்றவன். 13. ஆநர்த்த தேசாதிபதி. மகாபாதகங்களைச் செய்து நோய் கொண்டானாய் நாட்டைவிட்டகன்று தீர்த்தஸ் நாதத்தால் புனிதனாய் நல்லுலகடைந்தவன். 14. பாண்டி நாட்டு ஒரு வேதியன் இவன் வற்சருஷிகோத்திரத்திற் பிறந்தவன். இவன் மகாபாதகன் தான் தீயவழியில் தேடிய பொருள்களைப் பத்திரப்படுத்தி மீண்டும் பொருள் தேட மனங்கொண்டு தன் புத்திரர் நால்வரில் கடைசிப் புத்திரனை அழைத்துக்கொண்டு அவனுக்கு உபநயனஞ் செய்யவேண்டு மென்று பல இடங்களில் பிக்ஷையேற்று வில்வாரண்ய மடைந்தனன். அவ்விடத்தில் பிள்ளை பாம்புகடித்திறக்கப் பிள்ளையை விருத்தப் பிரயாகையில் நீராட்டி வில்வாரண்யத்தில் எழுந்தருளியிருக்கும் சிவ மூர்த்தியிடம் என் குமானை உயிர்ப்பிக்கின் நான் தேடிய பொருள்களைக் கொடுத்து விடுகிறேன் என்றனன். சிவமூர்த்தி அப்பிள்ளையை எழுப்பச் சுவேதன் தான் தேடிய பொருள்களைச் சிவபணி விடைக்கு அளித்தனன். 15. திக்யானைகளில் ஒன்று,

சுவேதமுனி

அகத்தியர் மாணாக்கர். இவர்க்கு அங்காமகையென்லும் அரக்கி தீமை புரிய இவர் கோபித்து அருகில் விசுவாமித்திர முனிவர் சாபத்தால் கல்லாயிருந்த ஊர்வசிப்பாறையை அவள் மீது ஏவினர்; பாறை அரக்கியைத் துரத்த அவள் பயந்து சேது வில்விழக் கல்லும் உடன் விழுந்தது. கல் உடனே உருப்பசியுருப்பெற்றது, அங்காரகை கிருதாசியுரு அடைந்தனள். இவர் சிவபூசைசெய்த நீர் ஆறாகப் பெருகி நதியாயிற்று. அது சுவேத நதியெனப்படும்.

சுவேதலோகிதகற்பம்

இருபத்தொன்பதாவது கற்பம்.

சுவேதலோகிதன்

ஒரு சிவயோகி,

சுவேதவதி

கமனப் புயங்கன் தேவி; இவள் மகா கற்புடையாள், இவள் கணவன் ரோகியாய்த் தான் தாசிவீடு செல்ல வேண்டுமென மனைவியுடன் கூறியபோது சுவேதவதி, அவனைத் தாசிவீட்டிற்குச் சுமந்து சென்றனள். செல்லும் வழியில் கழுவில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யர் மேல்பட்டு அவரை வருத்தியது. வருந்திய முனிவர் பொழுது விடிய இவள் மாங்கல்ய மிழக்க எனச் சாபமளித்தனர். இதனைக் கேட்ட சுவேதவதி பொழுது விடியாதிருக்க எனப் பிரதி சாபமளித்தனள், இதனால் பொழுது விடியாது நித்யகர்மாதிகள் தடைபடத் திரிமூர்த்திகளும் அவளுக்கு முன் தோன்றி இவள் வேண்டிய வரம் அளித்து அவரைக் கழுவினின்று நீக்கிச் சாபவிமோசனமும் செய்தனர். (காவிரி புராணம்)

சுவேதவநப்பெருமாள்

மெய்கண்ட தேவரைக் காண்க.

சுவேதவராககற்பம்

1. சிவமூர்த்திசோதிச்வரூபமாக நின்ற பொழுது பிரம்ம விஷ்ணுக்களில் விஷ்ணு சுவேதவராக வடிவமாய்ப் பூமியைப் பிளந்தகாலத் துண்டான கற்பம் ஆதலால் இப்பெயர்த்தாயிற்று. (சிவமகாபுராணம்). 2. பிரமன் உறங்குகையில் பூமி கடலில் அழுந்தியது. பிரமன் விழித்துப் பார்க்கையில் உலகத்தைக் காணாது விஷ்ணுவைத் துதிக்க விஷ்ணுமூர்த்தி சுவேதவராக வுருவெடுத்து நீரிலழுந்திய பூமியைக் கொம்பிற்றாங்கி நிறுத்தினர். ஆகையால் இக்கற்பத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று என்ப.

சுவேதவராகம்

பாத்மகற்பத்தில் மூழ்கிய அண்டத்தை யெடுத்து நிறுத்திய விஷ்ணுவின் வராகத் திருவுரு.

சுவேதாச்சுவன்

சுசீலனுக்குச் சிவமந்திரங் கற்பித்த ஒரு சிவயோகி,

சுவேதாரண்யர்

பட்டணத்தடிகளுக்கு ஒரு பெயர்.

சுவேதி

சுகேதுவின் மனைவி, இவள் கணவன், நாடிழந்து காட்டிற்செல்ல இவளும் உடன் சென்று வருந்துகையில் ஆங்கிரஸ முனிவர் இவரது வருத்தத்தை யெணணி நவராத்திரிவிரத மனுட்டிக்கச் செய்தனர். அந்த அநுட்டான பலத்தால் சூரியகேது என்னும் ஒரு புத்திரன இவளிடமுதித்து இழந்த நாட்டினைச் செயிக்கச் சுகமடைந்தவன்.

சுவேதை

1, காசிபர் பெண், திக்கசங்களைப் பெற்றவள், 2. (சந்.) நிகும்பன் பாரி, குமரன் அரசர்மீளி.

சுவேலம்

இலங்கையிலுள்ள பர்வதம், இலங்கைப்பட்டணத்தைக் காண இராமமூர்த்தி இதன் மீது ஏறினர்.

சுவேஷை

பரீட்சித்தின் பாரியை. இவளுக்கு வாகுகை என்றும் பெயர். புத்திரன் பீமசேனன்.

சுவை

(சூ.) இனிப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு.

சுவையணி

உண்ணிகழுந் தன்மை புறத்துப் புலனாய் விளங்க எட்டு வகைப்பட்ட மெய்ப்பாட்டாலும் நடப்பது. இது வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை என எண்வகைப் படும்.

சுவைரிணிகள்

ஒருவகைப் பாதாளத்திலுள்ள கன்னியர்; சுபலன் முகத்துதித்த வர்கள், இவர்கள் தங்கள் சாதியிலேயே விபசாரஞ் செய்பவர்.

சுவ்யாதன்

இவன் ஒரு வேடன், வழிப் போக்கர்களை ஹர ஹர எனும் சப்தத்தால் (கொல் கொல் எனும் சொல்லால்) கூறிக் கொன்று வழிமறித்துத் தின்று வாணாள் கழித்து வந்து ஆயுண் முடிவில் யமபடர் இழுத்துச் சென்று யமபுரஞ் சேர்த்தனர். அவ்வளவில் சிவகணத்தவர் யமபடரை மறித்து வேடன் தன்னாட்களில் ஹர ஹர மந்திரங் கூறினனாதலின் அவனைக் கயிலைக் கழைத்துச் செல்வோம் எனக் கூறிக் கைலை கொண்டு சேர்த்தனர். (ஆதித்ய புராணம்.)

சுஷத்திரன்

கோசல தேசாதிபதியின் புத்திரன் (பா~து.)

சுஷூமுனா

1. சூர்யகிரணத்தொன்று. 2. ஒரு தீர்த்தம்.

சுஷேணன்

1 ஜமதக்னி புத்திரன். 2. திருதராஷ்டிர புத்திரன். 3. கர்ன புத்திரன். 4. ஒரு சர்ப்பம். 5. துர்யோதனனைச் சேர்ந்த ஒரு க்ஷத்திரியன். 6 விருஷ்டிமான் குமரன் இவன் குமரன் சுநிதன்.

சுஹக் ஷாபக்தர்

அமாதாபாத் (Ahmadabad) எனும் ஊரில் பேடியுருக்கொண்டு பெருமாளைத் தியானித்திருந்த பக்தர். இவர் இருந்த நாட்டில் மழையிலாது குடி கள் வருந்த அரசன் தெய்வத்தை யெண்ணித் தவம்புரியப் பெருமாள் அரசன் கனவிடைத் தோன்றிச் சுஹக்க்ஷாபக்தரை வேண்டிக்கேள் மழை வருஷக்கும் என்று மறைந்தனர். அரசன் விழித்து மந்திரிகளுடன் ஆராய்ந்து பக்தரை யடைந்து பணிந்து வேண்டப் பக்தர் அரசன் கூறியதைப் பெருமாளுக்கு முறையிட்டு வேண்டவும் பெருமாள் மழை பொழிவிக்கா திருந்தனர். அதனால் பக்தர் வருந்தித் தரம் அணிந்திருந்த மூக்குத்தியையும் கைவளையையும் உடைக்கத் தொடங்குகையில் மழை வருஷிக்க அரசன் களித்துப் பக்தருக்குப் பொருள் தரப் பக்தர் மறுத்துச் சமாதிக்குழி செய்யக் கூறி அதிலிறங்கப் பெருமாள் திருவடியடைந்தவர்.

சூக்குமர்

அஷ்டவித்தியேசுரரில் ஒருவர்.

சூக்குமை

சிவசூர்யத்தானத்தமருஞ்சத்தி.

சூக்தி

சத்தியன் தேவி, இவளில்லா விடத்துப் பாந்தவ்யமில்லை.

சூசகன்

பிறர் குற்றங்களைக் கண்டு கூறுதற்பொருட்டு அரசனால் நியமிக்கப்பட்டவனாய் அங்ஙனமே அக்குற்றங்களை யறிந்து அரசற்கு அறிவிப்பவன், (சுக்ரநீதி.)

சூசமி

அநுகிலாதன் தேவி.

சூசி

வீமனுடன் போர்புரிந்த வீரன். துரியோதனன் தம்பி.

சூடாமணி உள்ளமுடையான்

மண்டலபுருடன் இயற்றிய சோதிட நூல்,

சூடாமணி நிகண்டு

ஒரு தமிழ் நூல், தெய்வப் பெயர்த் தொகுதிமுதல் பன்னி ரண்டு தொகுதிகளை யுடையது. திவாகரத்திற்கும், பிங்கலத்திற்கும் வழி நூலாகவுள்ளது. இந்நூலாசிரியர் வீரபுரத்திலிருந்த மண்டல புருடர்.

சூடாலை

இவள் ஞானி, இவள் ஞானம் பெற்றுச் சிகித்து வசனாகிய தன்னாயகனுக்குப் போதிக்க, வனஞ்சென்ற நாயனிடம், கடன் என்னும் தேவகுமரனாய்ச் சென்று அரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து சமாதியிலிருத்தி, மீண்டும் பெண்ணுருக்கொண்டு மதனிகை யென்னும் பெயருடன் அரசனை மணந்து அவனைச் சோதிக்கச் சோரத்தனஞ் செய்ய அரசன் சித்தசலன மில்லாதிருக்கக் கண்டு தன் நிசவுருக்காட்டி அரசனைப் பிரியாதிருந்து முத்தியடைந்தவள். (ஞானவாசிட்டம்.)

சூடிக்கொடுத்தாள்

ஆண்டாளைக் காண்க. இவளருளியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

சூதகம்

(5). ஜநநாசூசம், மாணாசூசம்,

சூதசம்மிதை

இது விபூதி, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம், சிவபூசை, சிவதானமகிமை, ஸ்தலவிசேஷமகிமை இவைகளைச் சிறப்பாகக் கூறும். இது தமிழில் தேவராசப் பிள்ளை யென்பவரால் மொழிபெயர்க்கப் பட்டது.

சூதன்

1. மன்னவன், பிராமணப் பெண்ணினைப் புணரப்பிறந்தவன், தேரோட்டுவோன், மந்திரித்தொழில் செய்வோன். (மனு.) 2. விஸ்வாமித்திர புத்திரன்.

சூதபுத்ரன்

கர்ணன்,

சூதமாகதர்

அரசரைக் களிப்பிக்கப் பாடுவோர். பிருதுவின் யாகசுத்தி காலத்தில் பிறந்தவர்.

சூதர்

1. (சூ) உரோமஹருஷணர் குமரர், வியாசர் பாணாக்கர், சூத்திரர். இவர் ஒரு முறை புராணபடனஞ் செய்யுங்கால் பலராமரைக் கண்டெழாது இறுமாந்திருந்த காரணத்தால் பலராமராலுயிரிழந்து இருடிகள் வேண்டு கோளால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவர். (இவரைக் கொன்ற காரணத்தால் பலராமரைப் பிரமகத்தியற்றியது). உக்கிரசிரவசு என்னும் பெயரும் பெற்றனர். இவர் திரையாரணி முதவிய அறுவரிடத்தும் ஆறு சங்கிதைகளைக் கற்றுச் சுகரிடம் நான்கு மூலசங்கிதைகளைக் கற்றவர். சௌநகாதி முனிவர்க்குப் புரரணங்களை யோதினவர். இவர் ஆச்சிரமத்துப் பாண்டவர் சிலநாள் தங்கியிருந்தனர். உதங்கனைக் காண்க. 2. பிரமன் யாகஞ்செய்கையில் அக்கும் பத்திருந்து பிறந்தவர். இவர்க்குப் பிரமன் புராணங்கூறினவன். (பிரம்மகைவர்த்தம்.) 3. நின்றேத்துவோர்.

சூதாசூான்

ஒரு அசுரன், இன் தேவாதியரை வருத்த விநாயகரும் கந்தமூர்த்தி யும் வேண்டச் சிவமூர்த்தி இவனைச் சங்கரித்தனர்.

சூதாடிக்கெட்டோர்

நளன், தருமபுத்திரன் முதலியோர். (சுக்ரநீதி.)

சூதிகாக்கிருகம்

அச்சுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புநர்பூசம், உத்தரம், அத் தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்தரட்டாதி, ரேவதிகளிலே திங்கள், வியாழன், வெள்ளி, சனிவாரோ தயங்களில்; கும்பம், விருச்சிகம், ஒழிந்த லக்கினங்களில்; இருத்தை ஒழிந்த திதிகளில் சுபகிரகங்கள் நோக்க, அஷ்டமசுத்தியாகப் பிள்ளை பெறுதற்கு இடம் உண்டாக்கி அதில் கர்ப்பஸ்தரி பிரவேசிக்க வேண்டும்.

சூத்திரகன்

1. விதிசையென்ற நகரின் அரசன் சந்திராபீடனாகத் தோன்றினவன் இவனே, 2. (சூ.) பிரசேநசித் குமரன். 3. மகததேசாதிபதியாகிய சுசர்மன் சகோதரன், இவன் சகோதரனாகிய சுசர்மனைக் கொன்று அரசாட்சி கொண்டவன்,

சூத்திரங்கள்

இது சுபாசுபகர்மங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதிகளடங்கிய நூல்கள், அவை பதினெண் வகை: போதாயனம், ஆபஸ்தம்பம், சதயஷாடம், திராஹ்யாயனம், அசஸ்தியசா கல்யம், ஆச்வலாயனம், சாம்பவியம், காத்யாயனம், வைகானஸம், சௌனகீயம், பாரத்வாஜம், அக்கிவைச்யம், ஜைமினீயம், வாதூலம், மாத்யந்தினம், கௌண் டின்யம், கௌஷீதகம், ஹிரண்ய கேசி. இவை செய்தோரால் பெயர்பெற்றவை.

சூத்திரசாதனி

ஒரு பிறப்பில் சூத்திரன் யிருந்து, தீயபாவத்தால் புழுவாய்ப் பிறந்து வியாசரால் அவ்வுரு நீங்கி முறையே, புலையன், சூத்திரன், அரசனாய், யுத்த முனையிலிருந்து பிராமணன் வீட்டிற் பிறந்து அவ்வியேய மகருஷியாய்த் தேவர் வணங்க இருந்தவன். (பாரதம.)

சூத்திரதருமம்

வேதசாத்திரமறிந்த வேதியனுக்குச் சிசுரூஷைசெய்வதே இவனுக்கு மோகத்தைத் தரும். இவன் உள்ளும் பறமும் பரிசுத்தனாய் உயர்ந்த குலத்தவனைக் கொடுமையாகப் பேசாமல் முதல் மூன்று வருணத்தார்க்கும் ஏவல்செய்து கொண்டு அகங்காரமில்லா திருப்பவன் சூத்திரனாவான்.

சூத்திரநிலைகள்

1. பிண்டமாகக் கூறலாகிய பிண்டசூத்ரம், தொகுத்துக் கூறலாகிய தொகைச்சூதரம், வகுத்துக்கூறும் வகைச்சூத்திரம், இது இதைக் குறித்ததெனக் கடறும் குறிச்சூத்திரம், செய்கையைக் கூறும் செய்கைசூத்திரம் மேற்கூறிய வகைகளைக் கொண்டு இவற்றின் புறத்தை அடையும் புறனடைச் சூத்திரம் என்பன. (நன்~பா) 2. ஆநசெழுக்கு, சிங்கநோக்கம், தவளைப் பாய்ச்சல் பருந்தின் வீழ்ச்சி என்பன, (நன்~பா.)

சூத்திரம்

1. குறுகிய செய்யுட்களில் பல வகை யகன்ற பொருள்களைச் செவ்வையாக அடக்கி இனிதாக அப்பொருள் விளங்கத் திட்பம் நுட்பம் சிறந்து வருவதாம். 2. சிறிய கண்ணாடியில் பெரிய தேகங்களின் உருசெவ்வையாகச் செறிந்து இனிதாக விளங்குதல் போல், சில எழுத்தாலான செய்யுட்களில் பல் பொருள்களை யடக்கத் திண்மை நுண்மையுடன் நிலவுவது. (நன்~பா) 3. இது ஆறு வகைப்படும், பெயர்ச்சூத்திரம், விதிச்சூத்திரம் விலக்கியற்குத்திரம், நிலயச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம். பெயர்ச்சூத்திரம்: இலக்கணங்கட் குபகாரமாக இதற்கிது பெயரென்பது விதிச்சூத்திரம்: முன்னில்லதனை மொழிவது; விலக்கியற் சூத்திரம்: பொதுவகையால் விதித்ததனை மறுப்பது; நியமச்சூர்திரம்: முன்னொரு வகையாள் முடிந்தத னைப் பின்னும் எடுத்து விதிமுகத்தான் விலக்குவதும், விலக்கும் வகையான் விதிப்பதும் ஆம்; அதிகாரச்சூத்திர: ஆற்றொழுக்கு முதலிய சூத்திரநிலையுள் ஒன்றேற்கும் வகையால் இயைபொருள் விளைப்பது; ஞாபகசூத்தாம்: எளிதுஞ் சிறிதுமாக இயற்றற்பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை யறிவிப்பது.

சூத்ரம்மூன்று

இது வாஸ்துபத சூத்திரம். அதுபர்யந்த சூத்ரம். விந்யாச சூத்ரம் பரமாண சூத்ரம். இவை அளவைக்குரியன. இவற்றின் விரிவைக் சாமிகாகமத் தில் காண்க.

சூத்ரவதியார்

சேனையர்கோன் திருத்தேவியார். இந்தம்மாள் ஆழ்வாராசாரியர்களின் சரிதங்களைத் திருமகளிடம் கேட்டவர்கள், (அரிசமய தீபம்.)

சூனிறுதை

1. சத்யசகன் பாரி. 2. தருமன் என்னும் அரசன் தேவி.

சூன்யபந்து

திரணபிந்து குமரன், இவன் குமரன் வரு.

சூயை

சிவபக்தியால் புருஷனைக் கடந்தவள்.

சூரஆதித்த சோழன்

இவன் அரசர் சூளாமணச் சோழன் சந்ததியிற் பிறந்து திரிசிராமலையில் தீர்த்தமாடவந்த நாககன்னியரைத் தொடர்ந்து நாகலோகஞ் சென்று காந்திமதியெனனும் நாக கன்னிகையை மணந்து வெற்றிலை, செந்நெல், சிவலிங்கம் கொண்டு வந்து பூமியல் பதித்து வாழ்ந்தனன். இந்தச் சந்ததியில் (50) ஆவது சந்ததியில் பராந்தகச் சோழன் பிறந்தான். இவன் நாசகன்னி மணந்த சோழனாயிருக்கலாம். இவன் தந்தை வீர ஆதித்த சோழன் என வுறையூர்ப்புராணங் கூறும், இவனைக் குலோத்துங்க சோழன் எனவுங் கூறுவர்.

சூரகேது

சந்திர குலத்தரசனாகிய அஸ்தன் மாமன்

சூரசேதமகாராசா

குந்து தீர்த்தக்கரின் தந்தை, தேவி ஸ்ரீகாந்தை.

சூரசேநன்

1. குந்திபோஜன் வம்சத்திற் பிறந்தவன், குந்தியின் தந்தை. 2. திராவிட தேசத்தில் மணிமுத்தா நதிக்கரையில் விருத்தாசல க்ஷேத்திரத்தில் சிவாபூசாதுரந்தரனாயிருந்த அரசன் இவன் தன் பரிவாரங்களுக்கும் சிவநாமமே தரித்துச் சிவபதம் பெற்ற அரசன். (சிவ ரஹ.) 3, நிதந்துவின் குமரன். 4. கார்த்தவீரியன் குமரன். 5, சத்தருக்கன் குமரன், 6 மத்திய தேசத்தரசன். இந்திரனிடம் புருசுண்டிமகாத்மியங் கேட்டவன். 7. (சூ.) அரசன், காஞ்சநமாலையின் தந்தை.

சூரணம்

பலவகை வேர்வித்துகளை பிடித்து வடிகட்டி யுண்ணும் மருந்து வகை.

சூரதாசர்

இவர் முன்ஜன்மத்தில் அக்குரூரர். சத்தியபாமையைக் கண்ணன் நீங்கினதால் விசனமுற்ற சத்தியபாமை இரைவேண்ட இவர் கண்ணன் வேடப் பூண்டு செல்லாநிற்கையில் அதைக்கண்ட கண்ணன் நீ குருடாகவெனச்சபிக்க அவ்வாறே சூரதாசர் என்னும் பெயருடன் மதுராநகரில் பிறந்து பஜனை செய்து கொண்டிருக்கையில் ஒருநாள் துவாரகையில் பெருமாள் சந்நதியில் பஜனை செய்கையில் கண்கள் புலப்பட்டன, இவர் பெருமாலை நோக்கி என்னை முன்போலவே கன்ணில்லாமற் செய்க வென்றனர். ஒருநாள் அவந்திநகாத்தரசன் சபையில் தான்சேன் என்னும் வித்துவான் தான் பாடுகையில் அவ்வரசன் உன்ணையொப்பார் உலகில் ஒருவருமிலர் என்று அவனைப்புகழ வித்வால் கேட்டுச் சூரதாசர் முதலிய பெரியோர்கள் இருக்கின்றார்கள் என்றுகூற அவரைத் தன் சபையில் வருவித்துப் பாடச்செய்த னன். இதை அரண்மனையிலிருந்த பெண்கள் கேட்கவேண்டுமென்னு மவாவால் அரசனைக்கேட்க அரசன் அந்தகன் தானே அந்தப்புரம் சென்று பாடலாமென்று விடை கொடுத்தனன், சூரதாசர் அந்தப் புரஞ்சென்று பாடுகையில் முன் இவருடன் கண்ணனால் தாசியாகவெனச் சாபம் பெற்ற சத்தியபாமை இவ்விடம் வந்து இவர்பாடலைக் கேட்டமாத்திரையில் இவ ருக்குக் கண்கள் புலப்பட்டன. உடனே பெண்கள் எல்லாரும் மறைந்து போகச் சத்தியபாமை நிற்கக்கண்டு பெருமாள் இருவருக்குந் தரிசனந்தந்தனர்.

சூரன்

1. கார்த்த வீரியன் குமரன். 2. விரேதன் குமரன், இவன் குமரன் 3. தேவமீடன் குமரன், இவன் தேவி மாரீஷை, குமார் வசுதேவர் முதலியவர், 4, வசுதேவன் குமாரில் ஒருவன். 5. ஒரு அசுரன், முகுந்தையைக் காண்க. 6, விசயன் என்பவனுக்கு மைந்தன், ஒரு சிவனடியவர் வீட்டில் பொருளபசரித்து அரசனால் தண்டிக்கப்பட்டு நரகம் அடைந்தவன்.

சூரபத்மன்

மாயை, காசிபரை வஞ்சித்து முதற்சாமத்திற் புணரப் பிறந்த அசுரன். இவன் மாயையிடம் உபதேசம் பெற்றுப் பெருவேள்விசெய்யச் சிவமூர்த்தி தரிசனந் தராதது கண்டு வேள்வியிலிறக்கத் துணிகையில், சிவமூர்த்தி தரிசனந்தந்து வச்சிரயாக்கை, இந்திரஞாலமென்னுந் தேர், விஷ்ணுவாதியருக்கும் பின்னிடாவலி முதலியவுமளித்து நமது சத்தியொன்றினால் அழிவு அடைவாய் என வரந்தரப்பெற்றவன் இவன், சந்திரனிடம் உபதேசம் பெற்று, மாயையின் போதனையால் திக்குவிஜயத் திற்குச்சென்று இந்திரனிடம் யுத்தஞ்செய்தனன். இந்திரன், இவன் போர்க்கு ஆற்ராது குயிலாக மறைந்தனன். இவன், மற்றத்தேவருடனும் போரிட்டு வென்று அரசாண்டிருந்தனன். இவன் பட்டணம் வீரமாயேந்திரம், தேவி பதுமகோமளை, குமசர்பானுகோபன் அதிமுகள், இரணியன், வச்சிரவாகு. குமாரக்கடவுள் இவனிடம் போர்க்குச் சென்ற காலத்தில் இரண்டாம் கான் யுத்தத்தில் இவன், அவரிடம் எதிர்த்துப் படைகொடி முதலிய இழந்து நிரா யுதனாய்த் தேவர்சிறைவிடக்கூறிய புத்தி கேளாது மீண்டும் படை சேர்த்து வரு வோமென மறைந்தவன், பானுகோபனை யுத்தத்திற்கேவி இறக்கக்கண்டு மீண்டும் சிங்கமுகாசுரனை யேவி அவனுமிறக்கத் தானே யுத்தத்திற்கு வந்து சேநாசமுத்திரக் களையிழந்து பதாதியாய் நின்று மாயையை நினைந்து அவளால் சஞ்சீவியின் நிலயறிந்து தான் சிங்கத்தில் எறிக் கொண்டு இந்திரஞாலத்தோரால் அதனை வருவித்து இறந்த அசுரரை மீட்டும் எழுப்பிக் குமராக்கடவுளுடன் யுத்தம்புரிந்து பதாதியாய் நின்றனன. இவன் மாயையால் சக்கிரவாகப் புள்ளுருக்கொண்டு தேவர் சேனைகளுடன் யுத்தம் புரியக் குமாரக்கடவுள், இந்திரனை மயிலாகவா நினைச்ச அவ்வகை வந்த அவன் மீது ஆரோகணித்து அசுர சேனைகளைக் கண்டித்தனர். பின்பு சூரன், பூமி, ஜலம், சீ, காற்று முதலிய உருக்கொண்டு யுத்தஞ்செய்யக் குமாரக் கடவுள் அவைகளுக்கு மாமுகி அடக்க, ஆற்றது கடல் நடுவுள் மாமர வுருவடைந் தனன். இதனைக்கண்ட குமாரக்கடவுள் மாமரத்தை வேலாயுதத்தால் இருபிளவ செய்தனர். பிளவுண்ட அசுரன், தன் சொந்த உருவுடன் குமாரக்கடவுளிடம் யுத்தத்திற்கு வந்து வேலால் இருபிளவு பட்டு மயிலுஞ் சேவலு மாயினன். சூரன், மாளா ஆயுளுடையான் ஆதலால், குமாரக் கடவுள், மயிலை வாகனமாகவும், கோழியைக் கொடியாகவும் கொள்ளப் பெற்றவன். இந்தச் சூரன் பதுமன், சிங்கன், தாருகன், நால்வரும் முதலில் சிவகணத்தவர், சிவ தரிசனத்திற்கு வந்த பிரமவிஷ்ணுக்களின் வாகனங்களாகிய அன்னம், கருடன் இவற்றின் மேல் குமாரக்கடவுளின் வாகனத்தையும், கொடியையும் யுத்தத்திற்கு ஏவிக் குமாரக்கடவுளால் அசுரராகச் சாபம் பெற்று அவரது வேலால் உயிர்நீங்கி அநுக்கிரகமடைய வரம்பெற்றவர்கள்,

சூராபாயி

இவள் ஒரு புரோகித புதரி. இவளைத் தந்தை ஒரு வேதியனுக்கு மணஞ் செய்து கொடுத்தனன். இவளுக்கு இளைமையிலேயே அரிபக்தி மிகுந்தது. அதனால் அரிநாமம் விடாது செபித்துவரும் காலையிலே மாமியார் வீட்டு மனிதர் வரவுபோக்கிருக்கக் கண்டு இனி மணமகனைச் சேரிற் கருவுண்டாம் பாசமதிக்கப் படும் அரிநாம மறந்து பந்தப்படுவோமேன்று எண்ணி வீட்டை விட்டகன்று தன் ஆபரணங்களைத் துளபவனத்திருந்த பாக வதர்க்குத் தானஞ்செய்து அங்கு அரித்யானஞ் செய்யத் திருமால் தரிசனந்தந்து இராதை குண்டத்திருக்கக் கட்டளையிட ஆண்டிருக்கையில் தகப்பன் தேடிச் சென்று மகள் தன் கோலத்தைக் கண்டு அழைக்க மகள், தகப்பனுக்குப் பிறவிக் கடல் நீந்த உமக்கு இன்னும் தோன்றவில் லையோவெனத் தந்தைக்கு நல்லறிவு பிறந்து குமரியை நோக்கி நீ நமதில்லிடம் வந்து அரித்யானஞ் செய்கஎன அவ்வாறே பெருமான் கட்டளைப்படி சென்று தியானித்துப் பஜனை செய்திருக்கையில் அரசன் கண்டு மோகித்துக் கவன்றனன், அரசன் இவள் ஆற்றிற்கு அக்கரையிலிருந்து இக்கரையிலிருக்கும் தன்னை வெள்ளத்தைக் கடந்துவர அழைத்ததாகக் கனாக்கண்டு கனவின் பயனைப் பெரியாக்குக் கூறிப் பிறவிக்கடல் கடக்க உன்னாலாகாது எனப் பிறவிக்கடல் கடக்கச் சூரா பாயியையடைந்து உபதேசம் பெற்றனன்,

சூரி

சமஸ்கிருத கவிகளுக்குப் பட்டப் பெயர்.

சூரிய, சந்திர மண்டலங்கள்

சிலகாலங்களில் சூரியனைச் சுற்றியும், சிலகாலங்களில் சந்திரனைச்சுற்றியும் பரிவேடங்கள் காணப்படுவதுண்டு. இதனைச் சூரிய பண்டலம் சந்திர மண்டலங்க ளென்பர். இதனை ஒரு கிரகமென்பர்.

சூரியகாந்தக்கல்

சூரிய வொளியில் நெருப்பைக் கால்வது.

சூரியகேது

1. சுவேதியைக் காண்க. 2. இராவண சேநாபதி (8) கோடி சேனைகளையுடையவன், சுக்கிரீவனால் உயிரிழந்தவன், 3. கர்ணன் குமரரில் மூத்தவன்.

சூரியகேதுவன்மன்

திரிகர்த்த ராச குமரன். தருமரது அச்வமேதக் குதிரையைத் தடுத்து அருச்சுநனுடன் போர் புரிந்து தோற்றுக் காணிக்கை தந்தவன். இவனுடன் பிறந்தார் சூர்யவன்மன், சூர்யவீரியன், சூர்யசண்டவிக்ரமன்.

சூரியசத்ரு

இராவணன் மந்திரியரில் ஒருவன்.

சூரியசந்திரகோதரிசனம்

பிள்ளை பிறந்த 3.ம் மாசத்திலே அனுகூலமான சுபதினத்திலே பிள்ளைக்குச் சூரியனைக் காட்ட வேண்டும். பிள்ளை பிறந்த 4ம் மார்த்திலே அன்னப்பிராசனத்திற்கு நிச்சயித் திருக்கிற சுபமுகூர்த்தத்திலே சுப்பிரமண்ய சுவாமியையும், சந்திரனையும் பூசித்துச் சந்திர தரிசனமும் கோதரிசனமும் பண்ணுவிக்கும் சடங்கு.

சூரியதத்தன்

அத்திரியன். விராடன் உடன் பிறந்தான்,

சூரியதுவஜன்

திரெளபதியின் சுயம்வரத்தின்பொருட்டு வந்த க்ஷத்திரியன்.

சூரியநேத்திகள்

கருட புத்திரன்.

சூரியன்

1. அதிதியின் புத்ரன். இவன் மண்ணினாற் செய்த ஸ்வர்ணை யென்னும் பெண்ணினிடம் ஸாவர்ணி யெனும் ராஜருஷியைப் பெற்றான். (பார~அநு.) 2. ததுபுத்திரனாகிய அசுரன் 3. ஆகாயவெளியில் காணப்படும். அண்டங்களுள் சூரியனும் ஒரு கோளம். இதை அக்னிமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அது நமக்குத் தட்டையான ஒரு பொருள் போல் வட்டமாகக் காணப்படுகிறது. இது அண்டகோளங்களுள் முதன்மை பெற்றது. இதனை நடுவாகக்கொண்டு எட்டுக் கிரகங்கள் சமவட்டத்தில் சுற்றிவரு கின்றன. அவைகள் புதன், சுக்ரன், பூமி, செவ்வாய், வியாழன், சநி, யுரானஸ், நெய்தியூன் என்பவை, இக்கிரகங்களையும் பல உபக்கிரகங்கள் சுற்றி வருகின் றன. இவை சலகிரகங்களாதலால் இயற்கையில் ஒளியற்றுச் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகின்றன. இக்கிரகங்களுள் பெரிதாகிய சூரியகோளம் வட்ட வடிவினதா யுள்ளது. இது தன்னைத் தானே 26 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 26 லக்ஷம் மைலுக்கதிகம், இதன் குறுக்களவு 8 வக்ஷத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிக மேற்பட்டது, இதன் பரப்பு நமது பூமி யைக் காட்டிலும் 12 1/2, லக்ஷம் மடங்கு பெரிது, இதன் கனம் பூமியினும் 12 லக்ஷம் மடங்கு அதிகமென்றும் கணித்திருக்கின்றனர். அவ்வளவு பெரிதாயி னும் நமக்கு அவ்வளவு சிறிதாகக் காணப்படுதற்குக் காரணம் இது பூமிக்குச் சுமார் 9 கோடியே, 28 லக்ஷத்து, 30 ஆயிரம் மைலுக்கு அப்பாலிருப்பதால் அவ்வகை தோற்றுகிறது. இச்சூரியகோளத்தில் பல புள்ளிகள் காணப்படு கின்றன. அவை 1000 மைல் பரப்புள்ளதாயும், பல மைல் ஆழமுள்ளவையாயும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் பல வருஷங்களுக்குப் பிறகு மாறு தலடைகின்றன. இச்சூரியன் 25 நாட்களில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கில் செல்லுகிறது. எல்லாத் தீக்களுக்கும் இதுவே மூலம். கால பாகுபாட்டிற்கும் இதுவே காரணம், பூமி சூரியனைச் சுற்றியோடிக்கொண்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி ஒடும் வீதிக்குச் சூரியவீதி யென்று பெயர். பூமி சூரியனைச் சுற்றியோடும் இருசிக்குத் துருவம் என்று பெயர். பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருப்பதால் இரவு பகல் ஒரே அளவில்லை. இது மேற்கிலிருந்து சுற்றுகிறது.

சூரியபுரம்

அரிகுலத்தரசர் நகரம்.

சூரியப்பிரபை

சுக்கிரன் குமரி இவளை இக்ஷவாகுவம்சத்திற் றோன்றிய அரசன் ஒருவன் காந்தர்வ மணத்தாற் கலக்சச்சுக் ராசாரியர் அவனுடன் எட்டுநாள் சண்டையிட்டு அவனை ராஜ்யத்துடன் சுட்டெரித்தனர். (சிவமகாபுராணம்)

சூரியமூர்த்தி

1. ஒருமுகம் எட்டுக்கைகளில் இரண்டு கைகளில் இரண்டு கமலம், தூபம் மணி, கமண்டலம், அபயம், வரதம், ஜபமாலையுடையராய், பொன்னிறம், பொற்பட்டு வஸ்திரம், பொன்னாபாண முடையவராய் இருப்பர். 2. வெண்தாமரைமே லிருப்பவராய் மாதளம்பூ நிறமுள்ளவராய், மிக்ககாந்தியான விருத்தமத்யராய், இரண்டு தோள்களிலும் காம்புடன் கொண்ட வெண்டாமரை யுள்ளவராய், ஒருமுகம், இரண்டு நேத்ரம், சிவப் புவஸ்திரமுள்ளவரா யிருப்பர். 3. பரமவித்தை, சாத்வித தேசஸ், கைவல்யம், ஞானம், பிராகாம்யம், சம்வித்து, போதகம், சதி, ஸ்மிருதி முதலிய உருவத்தால் பரமப்பிரகாசனாய் இருப்பவன். முதலில் இருளான அண்டம் உண்டாக அதன் மத்தியிலிருந்த பிரமன் அதைப் பிளந்தனன். அக்காலத்தில் ஓம் என்னும் ஒலியுண்டாயிற்று. அந்த ஓங்காரத்தால் பூ: புவ: சுவ: எனும் வியாவிருதிதிரயம் உண்டாயின. பின்னும் ஒங்காரத்தால் சூரியனுக்குச் சூட்சும உரு உண் டாயிற்று. அதனால் அதிதூலமாகும் (ம:) எனும் வியாவிருத்தியும் அதனால் தூலதா மாகும் ஐந: எனும் வியா விருதியும் அதனால் தப: சத்யம் எனும் வியாவிருதிகளும் உண்டாயின. இந்த எழுவியாவிருதிகளே சூர்ய உருவமாம். முன் சொன்ன ஒங்காரமே, தேசோராசியான பிரமனாய் எண்ணுக. இந்தப் பிரமனுடைய கிழக்கு முகத்தில் இருக்கு, தகூண முகத்தில் எஜஸ், மேற்கு முகத்தில் சாமம், வடமுகத்தில் அதர்வணவேதங்களும் பிறந்தன. இவனது தேஜஸே இருக்குவேத ரூபத்தால் சிருட்டியும், யசுர்வே சரூபத்தால் விஷ்ணு வாய்த்திதியும் சாமவே தரூபத்தால் ருத்ரனாய் லயத்தையும் செய்யும். ஆதலால் இந்தப் பரமபுருஷனே சதுர்வே தமயனும் திரிகுணாத்மகனும் திரிமூர்த்தி சுவருபனும் ஆவன். பிரமன் முதலில் சிருட்டிக்கத் தொடங்குகையில் சிருட்டிகெடப் பிரமன் துதித்து வேண்டத் தன் சுவாலையை யொடுக்கினவன். (மார்க்கண்டேயம்.) இவரைச் சிவாகமங்கள் சிவசூரியன் எனக் கூறும். அச்சிவ சூர்யர் நான்குமுகம், எட்டுத்தோள், செவந்த ஆடை, மேற்கில் சத்தியோசாதம், வடக்கில் வாமதேவம் கிழக்கில் தற்புருடம், தெற்கில் அகோரம் ஆகிய நான்கு மூர்த்திகள் நான்குபக்கங்களில் அமரப் பெற்றவர். இவர், நான்கு முகமுடைய பாற்கானை முன்னும் வலப்புறத்தில் நான்கு முகமுடை பானுமூர்த்தியையும் பின்புறத்தில் நான்கு முகமுடைய ஆதித்யமூர்த்தியையும் இடப்பாகத்தில் நான்கு முகத்தோடு கூடிய இரவியையும் கொண்டு இருப்பர். கிழக்கில் வித்தாரை தெற்கில் சுதாரை மேற்கில் போதினி வடபால் யாப்யாயனியும், சிவசூர்யதானத்தில் தீத்தை, சூக்குமை, சேயை, விபூதி, விமலை, அமோகை, நான்கு கரத்தோடு கூடிய வித்துதை, பத்திரை, நான்கு முகமுடைய சர்வதோமுகி, ஆகிய சத்தியருடன் கூடி நிற்பர். இச்சூர்யருக்குப் பீடங்கள் பிரபூதம், விமலம், சாரம், ஆராத்யம், பரமசுகம் என்பனவாம். சூர்யனுடைய கதிரின் வேறுபாடு சூர்யனுடைய அமுத கதிர் மழை பொழிவிக்கும், சுழுமுனைக் கதிர் சந்திரனுக்கும் அரிகேசம் என்பது நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புதனுக்கும், விச்சுவா வெள்ளிக்கும், சத்துவிசு செவ்வாய்க்கும், சருவாவசு வியாழத்திற்கும், சுவராடு சநிக்கும் ஒளி தரும். மற்றொரு புராணம் சுஷ்மனைச் சந்திரனுக்கும், அரிகேசம் புதனுக்கும், விசுவா வெள்ளிக்கும், வசுரம், கங்கியம் பூமிக்கும், சுருவாவசு வியாழத்திற்கும் சுவராட்சநிக்கும் ஒளி தரும். இச்சூரியன், மேருவிற்கிடது பக்கத்தி லிருந்துகொண்டு மேருவை வலஞ்செய்பவன். முதலில் இந்திர பட்டணத்திலிருந்து புறப்பட்டு யமன் பட்ட ணத்தை யடைந்து, பிறகு வருணன் பட்டணத்தைத் தாண்டிச் சோமன் பட்டணத்தையடைந்து, மீண்டும் இந்திரன் பட்டணத்தை யடைகிறான். இப்படிப்பட்ட சூரியனுக்கு ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர், அத்தேர்க்குப் பன்னிரண்டு மாதமாகிற இலைகள் ஷட்ருதுக்களாகிய முனைகள், சாதுர்மாச்யங்களாகிய தொப்பைக் கட்டைகள், சம்வச்சரமாகிய ஒற்றைச் சக்கரம் இந்த ரதத்தின் இருசின் ஒரு முனை மேரு சிகரத்திலும் மற்றொரு முனை மானசோத்திர பர்வதத்திலும் சுழலும். இதில் ஏழு குதிரைகள் பூட்டப்பட் டிருக்கும். இத்தேரின் உயரம் 9000 யோசனை அகலம் அவ்வளவு யோசனை, பார் நீளம் 18000 யோசனை, மானசோத்திர பர்வதத்தில் அயனங்கள் முதலிய இருக்கும், அதில் இந்திரன், வருணன், சந்திரன், யமன் முதலியோர்க்குப் பட்டணங்கள் உண்டு. இவற்றில் சூரியன் பிரவேசிக்கு மிடத்து நாழிகை, மிகுதி குறைகள் பெற்று உதயமாகி வரும் வழியில் மந்தேக பென்னும் அசுரரால் தடையுண்டு இருடிகள் வேதமோதி யகற்றிய மந்திரக் கணையால் வெளிவந்து உதயமாவன். இச்சூரியன் உதயமாகிப் பூமியிலுள்ள நீரை வறட்டிச் சந்திரனுக் குக்கொடுப்பன். இவன் நாடோறும் மேருவை வலம் வருகையில் இவனுடன் வருகிற பரிசனங்களைக் கூறுவாம். இச்சூரியனைப் புலத்தியன், புலகன், வசிட்டன், அங்கிரா, கௌசிகன், பாத்துவாசன், பிருகு, கிருது, கௌதமன், சாசி பன், சமதக்னி, அத்திரி முதலிய ரிஷிகள் மாதத்திற் கொருவராகத் தோத்திரஞ்செய்வர். கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், நீரன், ஐராவதன், எலாபத்திரன், கார்க்கோடகன், சங்கபாலன், தனஞ்சயன், பரமன், வாசுகி இந்த நாகங்களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் தேரிழுத்துச் செல்வர். ஊருணாயு, தும்புரு, நாரதன், ஆகா, ஊகூ, விசுவாவசு, சர்வாவசு, திருத ராட்டிரன், சூர்யன், வாச்சன், உக்கிரசேநன், வரருசி, சித்திரன், காந்தரு இவர் களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் பாடுவர். திருதத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிரமலோசந்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை இவர்களில் ஒருவர் மாதந்தோறும் ரதத்தின் முன் நடனஞ் செய்து வருவர், வாதநாபன், வியாக்கிரதரன், பிரசேதி, திவதனன், சர்ப்பன், பிரமா, புதன், எச்சியாபுதன், வித்யுத், திவாகரன், பவுரி, செயன் இவர்கள் அரக்கர் மாதம் ஒருவர் காவலாகத் திரிவர். இரதபிருத்து, இருதசித்திரன், இரதேசன், அசுசேணன், இரதசித், சுபாகு, தனவன், அசத்தியசித், தோரணன், சேநசித், தராச்சியன், அரிட்ட நேமி இவர்கள் இயக்கர் மாதத்திற் கொருவர் தேர்த்தாம்பு பற்றுவர். பூஷா, அங் குசன், இந்திரன், பர்ச்சென்யன், கெபர்தி, மித்திரன், தோஷா, அரியமா, விவச்சு வான், விஷ்ணு, வருணன் இவை மாத சூர்யருக்குப் பெயர், இவ்வாறன்றித் தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரண்யன், பகவான், விவச்சுவான், பூடன், சலித்துரு, துவட்டன் எனவும், பின்னும் அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், விஷ்ணு, பூஷா எனவுங் கூறுவர். இவர்களின் பெயர்கள் புராணங்கள் தோறும் மாறுபடுகின்றன. சூரியனது கதிர்கள் (1000) அவற்றில் (400) மழைபொழியும், (300) கதிர் விரித்து மழைவளத்தை யுண்டாக்கும். (300) பனிபெய்யும், இந்தப் பன்னிரண்டு சூரியரும், பன்னிரு வகையாகக் கதிர்பெறுவர். சித்திரை மாதத்தில் அஞ்சன் (7000) கதிர்களுட னும், வைகாசியில் தாதா (8000) கதிர்ளுடனும், ஆனியில் இந்திரன் (9000) கதிர்களுடனும், ஆடியில் சவிதா (9000) கதிர்களுடனும், ஆவணியில் விச்சுவான் (9000) கதிர்களுடனும், புரட்டாசியில் பகன் (11000) கதிர்களுடனும், ஐப்பசியில் பருச்சனி (1000) கதிர்களுடனும், கார்த்திகையில் தோஷ்டா (8000) கதிர்களுடனும், மார்கழியில் மித்திரன் (7000) கதிர்களுடனும், தையில் விஷ்ணு (11000) கதிர்களுடனும், மாசியில் வருணன் (5000) கதிர்களுடனும், பங்குனியில் பூடா (1000) கதிர்களுடனும் விளங்குவர். மேல்கூறிய சூர்யமூர்த்திக்கு இளவேனிற்காலத்துக் கபிலவர்ணம், வேனிற் காலத்துப் பொன்னிறம், கார்காலத்துச் சுவேதநிறம், கூதிர்காலத்துப் பாண்டு நிறம், முன்பனிக்காலத்துத் தாம்பிரநிறம், பின்பனிக்காலத்து லோகித நிறங்களாம். இனிப் புராணங்கள் சூரியர் பன்னிருவரையும் காச்யபர் அதிதியைக் கூடிப் பெற்றார் எனக் கூறும். அக்குமரர் ஆவார் விசுவவான், அரியமா, பூஷா, துவஷ்டா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன் என்பவர்களாம். முறையே இவர்களின் சந்த திகளாவர். முதற்குமரனாகிய விவச்சுவான் சஞ்ஞாதேவியைப் புணர்ந்து சிரார்த்த தேவன், வைவச்சு தமனு, யமன் யமுனை யெனும் இரட்டைப் பிள்ளைகள் அச்வரி தேவர்களையும், பெற்றனன். இந்த விவச்சுவான் சாயாதேவியைக்கூடி சநி, சாவர்ணிமது, தபதி எனும் ஒரு குமரியையும் பெற்றான். இரண்டாவதான அரியமா மாத்துருகை யென்பவளை மணந்து அநேக ஞானிகளைப்பெற்றான். 3. பூஷா, துவஷ்டாலின் தங்கையான ரசனையை மணந்து சந்நிவேசன், விசுவரூபன் என்பவர்களையும்; 4. சவிதா, பிரசனியை மணந்து அக்நிஹேத்ரம், பசுபாகம், சோமம், சாதுர்மாச்யம் எனும் பஞ்சம காயஞ்ஞங்களைப் பெற்றான். 5. பகன், சித்தியை மணந்து மகிமா, விபு, பிரபு, என்பவர்களையும், ஆசுகி எனும் பெண்ணையும்; 6. தாதா, தரு, சிநிவாலி, ராகா, அநுமதி என்பவர்களை மணந்து சாயம், தரிசம், பிராதம், பூர்ணமாசம் என்பவர்களையும்; 7. விதாதா, கிரியையை மணந்து பஞ்சசித்தி யென்கிற அக்கி குமானையும்; 8. வருணன், சருஷிணியை மணந்து பிருகு, வால்மீகருஷிகளையும்; 9, மித்திரன், ஊர்வசியைக்கண்டு மோகித்து விட்ட வீர்யத்தால் அகத்திய, வசிட்டரையும், பின்னும் 10. ரேவதியை மணந்து உற்சாகன், அரிஷ்டன், பிப்பலன் என்பவர்களையும்; 11 சக்கிரன் அல்லது இந்திரன், பௌலோமி என்றவளை மணந்து செயந்தன், ருஷபன், மிட்டுவான் என்பவர்களையும்; 12. வாமநன் அல்லது உருக்கிரமன், கீர்த்தியை மணந்து சவுபகன் முதலிய குமரரையும் பெற்றனர். இவனுக்கு (10000) யோசனை விஸ்தாரம் மண்டல அளவை. 4. பசுவின் வயிற்றில் நெடுநாள் ஒளித் திருந்தவன், சத்திராசித்திற்குச் சியமந்தக மணி கொடுத்தவன். 5. சமதக்னி முனிவர் பத்தினியாகிய ரேணுகை வெயிலின் வெப்பத்தால் பரிதபித்ததைப் பற்றிச் சமதக்னி முனிவர் சபிக்கத் தொடங்குகையில் பிராமண வுருவங் கொண்டுவந்து அதைத் தடுத்துக் கொண்டவன். 6. இவன் சுரபிகளைப் பெற்றான் என்பர். இவன் தேவிமார், சஞ்ஞை, யுஷை, பிரத்துஷை, சாயாதேவி. 7. ஒருகாலத்துப் பானுகோபனால் பிடியுண்டு தொட்டிலிற் கட்டுண்டவன், 8. இராகு கேதுக்களின் வஞ்ச வுருவை விஷ்ணுமூர்த்திக்குக் காட்டி அவ்விருவரது பகையைப் பெற்றவன். 9. ஜடாயு, சம்பாதி இருவரும் தம் தந்தையாகிய அருணனைக் காணவந்த காலத்து அவர்களைக் கோபித்தவன். 10. இவன் தேவியாகிய சஞ்ஜிகை சூரியனுக்கு வைவச்சுதமது, யமன் யமுனைகளைப் பெற்றுச் சூரிய வெப்பம் பொறாது தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித்துச் சாயாதேவியாக்கி வைத்துவிட்டுத் தகப்பனிடம் வந்தனள். தந்தை கோபித்ததால் இமயச் சாரலில் பெட்டைக்குதிரை யுருக் கொண்டு சூரியனை யெண்ணித் தவஞ் செய்தனள். இது நிற்கப் பின் மணந்த சாயையைத் தன் உரிய தேவியென்று சூரியன் புணர்ந்து அவளிடம் சாவர்ணி மது, சநி பத்திரை எனும் ஒரு பெண்ணினைப் பெற்றனன். இச்சாயைச் சக்களத்தியாதலால் சஞ்ஹிகையின் குமாரர்களைக் கொடுமையாக நடத்தினள். இதை வைவச்சுதமனு பொறுத்திருந்தனன். அதனால் சாயை யமனை ஒருகால் முரியச் சபித்தனள். இதையறிந்த தந்தை குமரனுக்குச் சாபமிடுவரோ என்று யோகத்தறிந்து உனக்குப் புழுக்காலாக என்று, துவட்டா விடஞ் சென்று மனைவியிருக்குமிடங் கேட்கத் துவட்டா உன் வெப்பத்தை யடக்கி இமயமலைச்சாரலில் சென்று உன் மனைவியைக் காண்க என அவ்வகை ஆண் டுக் குதிரை யுருக்கொண்டு செல்லச் சஞ்ஞைகண்டு பயந்து ஓடினள். சூரியனும் ஓடச் சூரியனுக்கு மூக்கின் வழி வீரியம் தோன்றிற்று. அதில் மருத்துவராகிய அசுவதிதேவர்கள் பிறந்தனர். (பிரமபுராணம்.) 11. இவனை நாரதர் ஒருமுறை உலகமெல்லாம் உன்வெளியால் நிரம்பியதெனப் புகழ்ந்தனர். அதனால் செருக்கடைந்து சிவமூர்த்தியின் நெற்றிக்கண்ணின் ஒளியால் கருவபங்கம் அடைந்தனன். (பழனி~பு.) 12. சூரியனது உஷ்ணத்தைக் கண்டு சஞ்ஞை கண்களை மூடிக்கொண்டனள்; அதனால் சூரியன் சஞ்ஞயை நோக்கி நீ யமனைப்பெறுக என்றனன். 13. சூரியன் குதிரையுருக்கொண்ட தன் பத்தினியைத் துரத்துகையில் அவன் ரேதசில் சிறிது பூமியில் விழ அதிலிருந்து ரேவதன் குதிரையுடன் சர்வாயுதபாணியாய்ப் பிறந்தனன். 14. சூரியனுக்குச் சாயையிடம் பிறந்த குமரன், சாவர்ணி மனுவாயினன். 15. நளாயினியின் சாபத்தால் தேரழுந்ப்பெற்றவன். இவன் உலகத்தைக் காயத்ரிசபித்தவர் அடைவர். 16. விசுவகர்மனால் சாணையில் தீட்டப்பட்டு ஒளியிழந்து தொக்குத் தோஷமென்னும் வியாதியடைந்தவன். 17. இவன் தேவி காந்திமதி துவட்டா வின் குமரி. இவளைச் சாயாதேவியின் சொல்லால் சூரியன் கிரணத்தால் வருத்தத் துவட்டா இவனது கிரணத்தைச் சாணையில் தீட்டிக் குறைத்தனன் என்பது. (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்)

சூரியர்

(12) தாதரு, சக்கான், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான, விவச்சுவான், பூடன், கவிதரு, துவட்டன் இவர்கள் மேஷமாத முதலாகச் சஞ்சரிப்போர்.

சூரியர் முதலிய வீதி

(3) மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என மூவகைப் படும். இடபம், சிங்கம், மிதுனம், கடகம், நான்கும் மேடவீதி, மீனம், மேடம் கன்னி, துலாம், நான்கும் இடப வீதி, தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் நான்கும் மிதுனவீதி.

சூர்ப்பகன்

மன்மதனாற் கொல்லப்பட்ட அரக்கன்.

சூர்ப்பநகை

விச்சிரவாவின் குமரி, வித்யுச்சவன் தேவி, குமரன் சம்பு குமாரன். தண்டகவருத்தில் இராமரிருக்கையில் மோகித்து இலக்குமணரால் மூக்கறுப்புண்டு காதூஷண திரிசிரரை யேவிச் சண்டை செய்வித்து அவர்களிறந்த பின்பு இராவணனுக்குச் செய்தி கூறினவள். இராவணன் தங்கை, காமவல்லியென மறுபெயர் வைத்துக்கொண்டவள்,

சூர்ப்பாரகம்

ஒரு தேசம். ஜமதக்னி இருந்த இடம், Shurpalya neer Jamknandi in the distriot of Bijapur. (Bombay).

சூர்யகாந்தம்

சூரியனொளியில் தீக்காலும் கல்.

சூர்யகுண்டம்

காவிரிச் சங்கமத்திலுள்ள ஒரு தடாகம். (சிலப்பதிகாரம்.)

சூர்யசன்மா

பஞ்சாக்ஷரமந்திர பலமுடையவன். இவனுடன் ஆநந்தன் என் போன் பகைத்து இவனை வெல்ல வகையறியாது ஒருநாள் பசுவிற்குப் புலித்தோல் போர்த்துப் புலியெனக் காட்டிப் பசுவைக் கொல்வித்து அவன் மனைவி அயலானுடனிருந் தாளெனக்கூறி மனைவி, மகன், மருகி முதலியோரை வஞ்சித்துக் கொலைபுரியச் செய்தனன். பிறகு சூரியசன்மன், இவையெல்லாம் ஆநந்தன் செய்த காரியமென அறிந்து சவை முன்னர்ச் சென்று சிவாலயத்தில் இவை நானறிந்து செய்தவை யன்றென்று அவ்விடத்திருந்த பிரதிமா இடபங்களுக்குப் புல்லருத்திப் பஞ்சாக்ஷர உப தேசத்தால் இறந்த மனைவி மகன் முதலியோரை எழுப்பினவன்,

சூர்யசாவர்ணிமநு

சூர்யனுக்குச் சந்தியா தேவியிடம் பிறந்த குமரன் மதுவானான். எட்டாம்மது.

சூர்யசோதி

சூர்யகுலத் தரசன். இவன், புத்திரரிலாது சூரிய பூசை செய்து தனது மனைவியாகிய யசோவதியிடம் இராச்சிய வர்த்தனனையும் வேறொரு தேவியாகிய கலாவதியிடம் சுதரிசநன் என்பவனையும் பெற்றான், இவ்விரு குமரரும் விளையாடி வருகையில் சண்டை செய்து சுதரிசநன் கலாவதியுடன் கூறக் கலாவதியும் அரசனுங்கூடி இராச்சியவர்த்தனனைச் சீறினர். இராச்சியவர்த்தனன் தாயிடம் கூறத் தாய் தவஞ்செய்து சித்திபெறுக என்றபடி தீர்க்கதமமுனிவர் அநுக்ரகத்தால் அட்டமா சித்தி பெற்றுத் தந்தையால் அரசு கொடுக்கப்பெற்று வாழ்ந்தவன்.

சூர்யதண்டவிக்ரமன்

திரிகர்த்த ராசகுமரன், சூர்யகேதுவன்மனைக் காண்க.

சூர்யபுரம்

அரிகுலத்தரசர் நகரம்.

சூர்யவன்மன்

திரிகர்த்த ராச குமரன். சூர்யகேதுவன்மனைக் காண்க.

சூர்யவர்ச்சன்

திரிகர்த் ராஜாதிபதி.

சூர்யவர்மா

திரிகர்த்த அரசரில் ஒருவன் அருச்சுநனுடன் எதிர்த்து இளைத்தவன். கேதுவர்மன், திருதவர்மன் இவர்களு மிவனுடன் சேர்ந்தவர்கள்.

சூர்யவீர்யன்

திரிகர்த்த ராச குமரன், சூர்யகேதுவன்மனைக் காண்க.

சூர்யாரண்யன்

திரிசங்கின் தந்தை, திரிதனவாகுமரன் இவனுக்குத் திரையாரணி யெனவும் பெயர்.

சூலம்

1. இது சிவபெருமானுக்கு ஆயுதமானது, இது முத்தலையோடு, தன்னை எப்பொழுதும் பணிபவர்க்குச் சுகம் கொடுப்பதும், ஒரு காலையுடையதும், பயங்கரமான பற்களையுடையதும், ஜவாலா முகங்களை யடையதும், இரண்டாயிரங் கிரணங்களை யுடையதும், எல்லா ஆயு தங்களுக்கும் சிரேட்டமானதும், எல்லாவற்றிற்கும் முதன்மையானதும், அநேகவித சின்னங்களையுடையதும், பலகோடி சத்ருக்களை யழிக்கவல்லதும், கற்பாந்தத்தில் பிரமாதி தேவர்களையும் சராசரங்களையும் அழிக்க வல்லதும் ஆம். (சிவமகா புராணம்.) 2. இது சிவபிரான் கையிலுள்ள சஸ்தியம். இது மூன்று பகுதிகளாகப் புருவ நெறிப்பைச் செய்து பயமுறுத்துவது போன்றது. புகையில்லாமல் ஜவலிக்கின்ற அக்னிபோலும் பிரளயகாலத்தில் உதயமான சூர்யன் போலுமிருப்பது. (பார~அநுசா.)

சூலவிரதம்

இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிசூலத்தைப் பொன்னால் அல்லது வெள்ளியினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது,

சூலிமுதுகிற்சோறிட்டவர்

இவர் வேளாண்குடியினர், கவிஞர்க்குக் கேட்டதெல்லாம் கொடுக்கிறாரென்பதைச் சோதிக்க ஒரு வித்வான் அவரிடஞ் சென்று பிரசங்கிக்கப் பிரபு வித்வானைத் தம்மிடம் விருந்து உண்டு போம்படி வேண்டப் புலவர் உமது மனைவியார் முதுகில் அன்னம் படைக்கின் உண்போமென்னப் பிரபு இது எனக்கு அரிதோ என்று கர்ப்பிணியாயிருந்த மனைவியாரின் முதுகில் அன்னம் படைத்துபசரித்தனர். இதனை “சூலி முதுகிற் சுடச்சுடவப் போதமைத்த பாலடிசி றன்னைப் படைக்குங்கை” என்பதாற் காண்க,

சூலைரோகம்

இது உடல் கனத்துத் திமிராய் விறுவிறுத்துப் பிடரியையும் பாதத்தையும் பற்றி இழுத்துக் கைகால் விரல்கள் பொருத்துக்கள் வீங்கி முடங்கி மலஞ்சிக்கல் முதலிய குணங்களைத் தரும். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷம், ஆமம், சர்க்கரா, குன்மம், மேகம், முறிச்சூலை, உலர்த்துச்சூலை, நிதம்பச்சூலை, கறைச்சூலை, சுரசூலை, பக்கச்சூலை, கருப்பச்சூலை, தூரச்சூலை, சாத்யாசாத்யசூலை, வாதவாயுச்சூலை, வாதநீர்ச்சூலை, வாத சுரோணி தசூலை, வாதபித்தசூலை, சந்தி வாதகம், சுக்லபிரமேகசூலை, கிரந்திசூலை, மாம்சசூலை, நீர்ச்சூலை, விஷநீர்ச்சூலை, எலும்புச்சூலை, மூலபாண்டுச்சூலை, விஷ பித்தசூலை, வாதபாண்டுச்சூலை, பித்த பாண்டுச்சூலை, பாண்டுச்சூலை, விஷபாண்டுச்சூலை, அஸ்திரசூலை, சரசூலை, அண்ட வாயு, அண்டச்சூலை, பக்கசூலை, அந்தர வாயுச்சூலை எனப் பலவகை.

சூளாமணி

தோலாமொழித் தேவரியற்றிய சிறு காப்பிய மைந்தனுள் ஒன்றாகிய தமிழ் நூல். இது திவட்டன் என்னும் இராச குமாரன் கதை. இது சொன்னோக்கம் பொருணோக்கமுடையது. யாப்பருங் கலத்திற்குக் காட்டாக இதன் செய்யுள் கூறியிருத்தலால் இது ஒரு பழைய காவிய மாகும்.

சூளி

1. ஒரு ருஷி, பிரமதத்தன் தந்தை. 2. வாயுவின் குமரி, உத்தானபாதன் தேவி. (மச்ச புராணம்.)

சூஷாமகன்

ஒரு அரசன்.

சூாசேநம்

1, மதுவனம், இது சத்துருக்நன் இலவணாசுரனைக் கொன்றபின் அந்நாட்டுக் கிட்டபெயர். யமுனை நதிக் கருகிலுள்ளது. 2 The Kingdom of Wich, Madura WAS the Capital.

சூாசேநர்

1. யாதவ பேதம்

செகராஜசேகர மன்னவர்

இவர் ஊர் யாழ்ப்பாணத்து நல்லூர், சமயம் சைவம், கனகசூரிய சிங்கையாரியமன்னர் குமாரர், பரராசசேகா மன்னவர்க்கு இளையவர், தமிழில் அபிமானி, தமிழ் வல்லவர், தச்கிண கைலாசபுராணம் பாடியவர். இவர் செகராஜசேகரமாலை செய்வித்தவர். இவர் காலம் முன்னூறு வருடங்களுக்குமுன் என்பர்,

செகராஜசேகரன்

1. ஈழநாட்டரசன், செகராஜசேகாமென்னுஞ் சோதிட நூல் இயற்றியவன். 2. சிங்கையாரியச் சக்கரவர்த்தியைக் காண்க.

செக்கர்மேகக்குறி

மூவம், பரணி, பூரட்டாதி, பூராடம் இந்நாட்களில் இரத்தமேக முண்டாகில் (8) நாட்களில் மழையுண்டாகும். அசுவரியில் (5) ஆம் நாள், உத்திராடத்து (11) ஆம் நாள், உத்திரட்டாதியில் (7) ஆம் நாள், கேட்டையில் (10) ஆம் நாள், அனுஷத்தில் (3) ஆம் நாள் இவற்றில் மத்யானத்தில் இரத்தமேக முண்டாகில் மழை பெய்யும். மத்யானம் திருவாதிரையில் வெண்முகிலுண்டாகில் (7) ஆம் நாள் மழைபெய்யும். (விதானமாலை.)

செங்கட்சோழன்

சோழன் செங்கணானுக்கு ஒரு பெயர்.

செங்கண்ணனார்

மதுரைச் செங்கண்ணனார் என அகத்திற் கூறப்படுபவர் இவரே. குறிஞ்சித்திணையைப் பாராட்டிப் பாடியுள்ளார். இவர் பாடியனவாக நற்றிணையில் (122) ஆம் பாடலொன்றும், அகத்தில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்.

செங்கண்ணன்

சண்முகசேநாவீரன்.

செங்கண்ணர்

செந்தாமரைக் கண்ணர்க்குக் குமரர், இவர் குமரர் போர்க்காரியார், நம்மாழ்வாருக்குப் பாட்டனுக்குத் தந்தை,

செங்கிரந்ததிரோகம்

பிள்ளைகளுக்குண்டாம் ரோகங்களில் ஒன்று. தேகமுழுதும் செந்நிற வீக்கம், வாய் தடிப்பு, மூத்திர பந்தம், பூனைக் குரலோசை, பிரேதம் போல் கிடத்தல்,

செங்குட்டுவன்

சேரலாதன் புத்ரன். இளங்கோ அடிகளுக்குத் தமயன், இவன் சேரநாட்டரசன், இவன், பத்தினித் தெய்வமாகிய கண்ணகியைத் தன்னாட்டில் பிரதிட்டை செய்வித்துப் பூசித்தவன். இவன் நேரிவாயிலில் தன் மைத்துனன் பகைவர் ஒன்பதின்மரை வென்றான். இவன் கரிகாற் பெருவளவனுடைய பெண்வயிற்றுப் பேரன். மதுரைக் கூலவாணிகன் சாத்தனுக்கு நண்பன். கண்ணகிக்கு இமயத்திருந்து சிலைவருவித்துச் சிலை செய்து விழா இயற்றினவன். இவன் காலம் கி. பி. 2 ஆம் நூற்றாண்டென்பர். (மணிமே.)

செங்குந்தத் தலைவர்கள்

இவர்கள் ஒட்டக்கூத்தர் காலத்தவர். பழுவூர்வீரன், பழுவை நாராயணன், கச்சித்தனியன், ஒற்றியூரன், களத்தூரரசன் புற்றிடங் கொண்டான், கோளாந்தகன், புலியூர்ப் பள்ளிகொண்டான், பிணவன், கண்டியூ ரன், முதுகுன்றமணியன், தஞ்சை வேம்பன். இவர்கள் பன்னிருவரும் வல்லானை வெல்லச் சென்று பதின்மர் இறக்க வீரன், நாராயணன் இருவரும் வல்லான் மனைவிக்கு மாங்கல்ய பிச்சை அளித்தனர்.

செங்குன்று

கொடுங்கோளூர்க்கு அயலிலுள்ள மலை. கண்ணகி இங்குக் கோவலனைத் தெய்வவடிவுடன் கண்டு சுவர்க்கம் புக்காள் (சிலப்பதிகாரம்.)

செங்குன்றூர்க்கிழார்

கடைச்சங்கத்துப் புலவருள் ஒருவர்.

செங்கோடு

முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கும் தலம். இதனைத் திருச்செங் கோடு என்பர். (சிலப்பதிகாரம்.)

செங்கோன்

இவன் பஃறுளியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன்னிருந்த தென் பாண்டி நாட்டரசர்களுள் ஒருவன். இவன் சூரியவம்சத்தவன், ஏற்றுக்கொடியினனாகக் கூறப்படுகிறான், செங்கோன் தரைச்செலவு காண்க.

செங்கோன் தரைச் செலவு

இஃது ஒரு தமிழ் நூல், இது செங்கோன் எனும் தமிழ்நாட்டரசனது படையெழுச்சியைக் கூறுவது. இதனைப் பாடிய புலவர் முதலூழித்தனியூர்ச் சேந்தன் என்பார். (முதலூழி என்பது யுகமன்று காலத்தைக் குறிப்பது) இது பெருவள நாட்டரசனாகிய செங்கோன் வேற்றரசரின் நாடு விரும்பிப் போர்க்குச் சென்றதைக் கூறுவது. இந்நூலானும், உரையானும், ஏழ்தெங்க நாடு, பெருவள நாடென்னும் நாடுகளும், பேராறென்னும் நதியும், மணிமலையெனும் மலையும், முத்தூர் எனும் ஊரும், சக்காக்கோ அகத்திரன், நெடுந்துறையன், இடைக்கழிச் செங்கோடன் எனப் புலவர் சிலரும், பெருநூல், இயனூல், சில நூல்களும் தாப்புலி எனும் பாவிகற்பமும், பிறவும் தெரிகின் றன. செங்கோன் என்பவன் சூரிய வம்சத்தவனாகவும், ஏற்றுக் கொடியினனா கவும் கூறப்படுகிறான். இவனாட்டைச் சார்ந்து பேராறென ஒரு ஆறும், வழிக் கழியென ஒரு கடலும் இருந்தனவாகத் தெரிகிறது. இவன். இடைச்சங்கத்தவர் காலத்தவன், பஃறுளியாறு கடல்கொள்வதற்கு முன்னிருந்தவனாகத் தெரிகிறது

செங்கோல்

அரசன், தன் ஆளுகை அரச நீதிப்படி ஆளப்பட்டது என்பதைத் தெரிவிக்கத் தன் கைக்கொண்ட ஒரு கோணுதலிலாத பொற்கோல்,

செஞ்சி கோட்டை

இது வட ஆற்காடு ஜில்லாவிலுள்ளது. இது (1383 A. D.) விஜயநகரத்தரசனாகிய அரிஅரனிடத்தில் இருந்து, இரண்டாமுறை ராயர்களிடத்திலும், 3 வது பீஜபூர் அரசர்களிடத்திலும், 4 வது தஞ்சையரசனாகிய சிவாஜி, தேசிங்கென்பவரிடத்திலும், 5. வது 1698 இல் மொகலாயரிடத்திலும், 6 வது 1750 இல் பிராஞ்சியரிடத்திலும், 7 வது 1761 இல் ஆங்கிலேயரிடத்திலும் பிடிபட்டது. இதனை 1712 இல் சாத்துல்லாகான் வசப்படுத்தி யிருந்தான் என்று (S. I. J) கூறுகிறது.

செஞ்சோற்றுக்கடன்

அரசற்கு வேற்றசரால் துன்பம் வருங்காலத்துப் பகைமேற் சென்று நிரைமீட்டலும், பகை வெல்லுதலுமாம்.

செடில்மரம்

ஒரு கனத்த தம்பத்தில் பெருத்துத் துளையமைந்த சுழலும் துலாம் நிறுத்தி அத்துலாத்தின் முனையில் மனிதரைக் குத்திச் சுழலச்செய்யும் மரம்,

செட்டிகள்

இது பெரும்பாலும் வர்த்தகர்க்குரிய பட்டப் பெயர். இப்பட்டத்தை வேளாளரும் பெற்றிருக்கின்றனர். இவர்கள் வேளாஞ் செட்டிகள், பேரிசெட்டி கள், நகரத்துச் செட்டிகள், காசுக்கார செட்டிகள், நாட்டுக்கோட்டை செட்டிகள், பன்னிரண்டாம் செட்டிகள் எனப் பாகுபாடு படுவர்.

செண்டர்

கைக்காயிரம் பொன்னுக்கு இராசசேவை செய்து, உடையவர் மடத் திற்குக் கைவழக்கஞ் செய்த பாகவதர்.

செண்டலங்காரதாசர்

உய்யக் கொண்டார் திருவடிசம்பந்தி.

செண்பகமலர்

ஒரு பிராமணன் செண்பகமலரால் சிவபூஜை செய்த விசேஷத் தால் இராஜாவின் அனுக்ரகம் பெற்றுப் பிராமணர் அரசனிடம் பெறும் தானாதி களில் பாதி பெற்றுவந்தனன். இவ்வகை செய்து வருவோன் ஒரு நாள் ஒரு வேதியன் பெற்ற பசுவைத் தனக்குச் சமபாகம் தரவேண்டுமென்று வருத்துகையில் அவன் பாரியைச் சிவசந்நிதானத்தில் முறையிட்டனள், அவ்விடம் தரிசனத்தின் பொருட்டு வந்திருந்த நாரதர் இதனைக் கேட்டு அதிகோபங் கொண்டு சிவாஞ்ஞை பெற்று வெளிவந்து அவனுக்கு இச்செருக்கு செண்பகமலரின் பூசாவிசேஷத்தால் வந்ததென்று சண்பக மரத்தையடைந்து சண்பகமே, உன் மலர்களை நாடோறும் எடுப்பவன் எவன் என அது பேசாதிருக்ததுகண்டு கோபித்து சிவபூசைக்கு யோக்கியப் படாதிருக்கவெனச் சபித்து நீங்குகையில் அவ்வேதியன் எதிரில் வரக்கண்டு வேதியனை நோக்கி நீ வேதியர் கொள்ளும் தானத்தில் பகுதி கொள்ளுதலின் ராக்ஷஸவுருவடைக என்று சபித்தனர். இதனைக் கேட்ட பிராமணன் நடுங்கித் தீர்வுவேண்ட நாரதர் மனங்களித்து இராமபிரானால் நீ வதையுண்டு பின் திவ்யரூபமடைக என்று மறைந்தனர். இவனே விராதன். (சிவமகா~புராணம்.)

செநமேசயன்

சந்மேசயனைக் காண்க

செந்தாமரைக்கண்ணர்

அச்யுதர் குமரர், இவர்குமரர் செங்கண்னர். இவர் நம்மாழ்வாருக்குப் பூட்டன்.

செந்தில்

இது பாண்டி நாட்டிலுள்ள திருச்செந்தூர். இது குமாரக்கடவுள் எழுந்தருளிய தலங்களில் ஒன்று. (சிலப்பதிகாரம்)

செந்நாய்

1, இது நாயினத்தைச் சேர்ந்த பிராணி மூர்க்கமுள்ளது. மலை, காடு முதலிய இடங்களில் வசிப்பது, (2) அடிஉயரமுள்ளது, சிவந்த பழுப்பு நிறமுள்ளது. இரத்த பிரியமுள்ளதாதலால் நினைத்த பொழுது வெளிவரும். இந் நாய்க்குப் புலி சிங்கம் முதலிய அஞ்சும். மனிதசையும் எதிர்க்கும், 2. திரிதரென்னும்மகருஷியைக்கண்டு பயப்படச் செய்தது. (பாரா~சல்லி)

செந்நிகுலோத்துங்கன்

ஒரு சோழன். இவன் காலத்துச் சித்திரகூடம் தில்லே கோவிந்தராஜப்பெருமாள் கோயிலைவிட்டு வெளியேறினர் என்பர். (சகம்~1009)

செந்நு

1. குருவின் குமரன், இவன் குமரன் சுரதன், 2. சந்துவைக் காண்க.

செனசிக்

பிரகதகர்மாவின் குமரன். இவன் குமரன் சுதஞ்சயன்.

சென்னமல்லையர்

இவர், சிதம்பரம் பச்சைகந்தையர் மடத்து வீரசைவர், சிவசிவ வெண்பா அருளிச்செய்தவர். (வீரசைவர்.)

சென்னவசவர்

நாகாம்பையார் குமரர், வசவரிடம் வந்து அடிமை பூண்டவர். (வீரசைவர்.)

சென்னி

இது சோழர் பொதுப் பெயராயினும் குலோத்துங்க சோழனுக்கு ஒரு பெயர்.

செபஇலக்கணம்

தருப்பாசனத்தின்மேலாயினும், ஏனையாசனங்களின் மேலா யினும் இருந்து தருப்பையிற் சமைத்த பவித்திரத்தைக் கையிற்புனைந்து சூரிய னுக்கு எதிர்முகமாகவாயினும் அல்லது வடக்கு முகமாகவாயினும் ஜெபமாலையைக் கையிற்பிடித்து இஷ்ட தேவதையைத் தியானித்துக்கொண்டு ஜெபிக்கவேண்டும். இச்செபஞ்செய்தல் வாசிகம், மானசிகம், உபாம்ச என மூவிதப்படும். இவற்றுள் வாசிகம், உதாத்தம், அனுதாத்தம், கணிதம் என்னும் சுரங்களோடு மொழிகளாலும், எழுத்துக்களாலும் திருத்தமாக வாக்கினால் உச்சரிக்கப்படுவதாம், உபாம்சு. இதழ்களைச் சிறுக அசைத்து மந்திரங்களைச் சத்தம் எழாமல் மெதுமாக உச்சரிப்பது. மானதம் ஓரெழுத்தினின்றும் மற் சோரெழுத்து ஒரு மொழியினின்றும் மற்றொரு மொழியாக முறையே மந்திர எழுத்துகளின் தொடர்பைத் தியானித்து ஒவ்வொரு முறைக்கும் சொல்வின் பொருளைச் சிந்தித்து வாக்யார்த்தங்களை அனுசந்தானஞ் செய்வது. இவற்றுள் மானதம் உத்தமம் உபாம்சு மத்திமம், வாசிகம் அதமம், பலன், வாசிகம் ஒன்று உபாம்சு நூறு மானதம் ஆயிரம் இச்செபத்தை எண்ணிடுகையில் உதயத்தில் கரத்தை மேன்முகமாகவும், சாயங்காலத்தில் கீழ்முகமாக வைத்தும், உச்சியில் இருகையையும் அஞ்சலியாக ஊர்த்துவமுகமாக வைத்தும், எண்ணிடுக. காலையில் சூரியனைத் தரிசிக்கும் வரையிலும், சாயங்காலத்தில் நக்ஷத்திரந் தோன்றும் வரையிலும் செபித்தல் வேண்டும். உச்சியில் கீழ்த்திசை நோக்கி உட்கார்ந்து செபித்தல் வேண்டும். உலாவிக்கொண்டும், நகையாடிக் கொண்டும், இருபுறமும் நோக்கிக்கொண்டாயினும், அடங்கி அமையாத மனத்துடன் ஆயினும், வேறு விஷயங்களைக் கேட்டுக் கொண்டாயினும் பிறர் கேட்கும்படியாயினும் செபித்தல் கூடாது. செபகாலத்தில் கோபம், சோம்பல், தும்மல், உறக்கம், அபானம், பரிதல், கொட்டாவிவிடல், நாய், நீசர் முதலியோரை நோக்குதலை ஒழிக்கவேண்டும். வேள்விச்சாலை, தேவாலயம், புண்ணியஸ்தலம், பசுக்கொட்டில், புண்ணிய தீர்த்தக்கரை, தன்மனை முதலிய இடங்களில் செபித்தல் வேண்டும். சங்கு, வெள்ளி, பொன் முதலியவற்றாற் சமைத்த மணிகளும், நீலோற்பலம் தாமரைவித்துக்களும், ருத்ராக்ஷம், பவளம், படிகம், அரதனம், முத்து, இந்திராக்ஷம், பத்திராக்ஷவிதை, புத்திர ஜீவவிதை, இவைகளாற் ஜெபிக்கின் நலம், நூற்றெட்டு, ஐம்பத்து நான்கு, இருபத்தேழு மணிகள் உள்ள மாலை முறையே உத்தம், மத்திம, அதமமாகும். பெருவிரலால் ஜெபிக்கின் முத்தியும், சுட்டுவிரல் சத்துரு நாசத்தையும், நடுவிரல் தனலாபத் தையும், ஈற்றயல்விரல் புஷ்டியையும், சுண்டுவிரல் க்ஷணத்தையும் செய்யும், பெருவிரல்களுடன் மற்றைவிரல்களைச் சேர்த்தே செய்தல் வேண்டும். அப் பெருவிரல் ஒழிந்த விரற்களால் செபிக்கின்பயனில்லை.

செபேச்சுாம்

ஒரு சிவத்தலம்.

செப்பான் மதம்

பூர்வம் இத்தேசத்தில் கிலினிக்ஸு என்னும் நாஸ்திகமதமும் லிகிடோரியட் என்னும் மதமும் கிவாஸ்க் மதமும் ஜமமபோஸ்மதமும் என் டோயிஸம் மதமும் அதிகமாயிருந்தன. இவர்களின் குருக்கள் நிகாஸ் என்னப் படுவர். இந்தக் குருக்களுக்குப் பலசீடர்கள் உண்டு. டிராஸ் என்னும் ஸ்வர்ணதேவாலயங்கள் அநேகமுண்டு, தேவாலயங்களின் வாயிற்களில் தெய்வங்களின் தலையைச் செய்து வைக்கப்பட்டிருக்கும். ஆதியில் காகிதங்களில் எழுதிய படங்களைப்பூசித்து வந்தனர்; பிறகு விக்கிரகங்களை அழாகாகச் செய்துவைத்துக் கொண்டனர். அமிடாஸ் என்னும் தேவன் பராபரவஸ்து. அவன் ஏழாயிரம் வருடங்கள் எழுதலைகளுடன் குதிரையின் மேலிருந்து அரசாண்டவன். இவனுக்குப் பலிகளைக் கொடுப்பார். இப்போது இத்தேசத்தில் புத்த மதம் விசேஷமாக வியாபித்திருக்கிறது. இவ்விடத்திலுள்ள புத்த விக்கிரகத்தைப் போல் எவ்விடத்திலுமில்லை. பூர்வத்திலிருந்த சின்டோயிஸம் என்னும் மதத்தினர் வாயு, அக்கி, காலம், பித்துருக்கள், சக்கிரவர்த்தி முதலியவரைத் தேவதைகளாகப் பாவித்திருந்தனர். இப்படிப் பட்ட தேவர்கள் எண்பது லக்ஷமிருக்கின்றார்கள், ஜெப்பான் தேசத்து ஒவ்வொருவனும் மந்திரமெழுதிய வஸ்திரம் தரித்திருப்பன். செத்தவனுக்குக் கர்மங்கள் செய்வார்கள், செத்தவர்களைத் தகனஞ் செய்து சாம்பலைவைத்துச் சமாதிமண்டபங்கள் கட்டுவர். புத்தமதத்தைச் சேர்ந்த ஜபானியர் ஒரே மனைவியை விவாகஞ் செய்து கொள்ளுவார்கள். ஸ்திரீகள் விபசரித்தபோது கொல்லுவர். சந்நியாசிகள் கல்யாணஞ் செய்து கொள்ளார்.

செம்படவன்

பிராமணனுக்குச் சூத்திர மனைவியிடம் பிறந்தவன். இவன் படகு ஒட்டுகிறவன். (அருணகிரி புராணம்.) மார்க்கவனைக் காண்க.

செம்படவர்

இவர்கள் தமிழ்நாட்டு வலையர். இவர்கள் பட்டினவர்கள் போலல்லாமல் நல்லஜலம் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் வலை வீசி சீவனம் செய்யவர்கள். இவர்கள் படகோட்டுதலில் வல்லமை பெற்றவர்களா தலாலும், செம்படச்சியாம் அங்கம்மாளை சம்புவாகியசிவனுக்குக் கொடுத்தமையால் செம்படவர் என்றும், பர்வதராஜன் செம்புபடவிலேறி வலை வீசின காலத்தில் அகப்பட்ட இராக்கதருடன் ஒரு ருஷியும் அகப்பட்டு அரசனை உன் கோத்திரமென்னவென்று வினாவி உன் கோத்திரத்தார் செம்படவராக எனச் சபிக்கப்பட்ட குலத்தினர் ஆதலால் பர்வதராஜ வம்சத்தினர் என்றும், இவர்கள் கடவுளை வணங்கும் காலத்தில் இவர்களைச் சோதிக்கக் கடவுள் ஒரு பெரு மீனை நதியில் தோற்றுவிக்கத்யானத்தை மறந்து மீனைப் பிடிக்க முயன்றதால் நீங்கள் மீன் வலையராக என்று சபிக்கப்பட்ட வர்கள் என் றும் கூறுவர். இவர்களின் தொழில் மீன்பிடித்தல், பயிரிடல், நெய்தல், வலைபின்னல், மீன் உலர்த்தல். இவர்கள் தங்களைப் பட் டினவரினும் உயர்ந்தவராக எண்ணுகிறார்கள். இவர்களுக்கு நாட்டான், கவுண்டன் மணியக்காரன், பாகுத்தன், பிள்ளை பட்டம். இவர்கள் தங்களைக் குகனுடைய சாதியாதலால் குகவேளாளர் என்பர். பெரும்பாலோர் பூஜாரிகள், இவர்களிற் சிலர் லிங்கதாரிகள், மலையனூரில் சிவபூஜை செய்வோர் செம்படவர் முக்காலியர், இவர்கள் தேவர், செப்பிலியன், எதிநாயகன், சங்கிலி, மாயகுந்தவி, பட்டம், பணிக்கன் என எழுவகைப் பகுப்புப்படுவர். (தர்ஸ்டன்.)

செம்படவர் கருவிகள்

பெறங்கவலை, வெல்லடி, வேரித்து, பேந்தவலை, வரிச்சவலை, சென்னவலை, ஊசிப்பலகை, நூல்முருக்கி, தங்கூசு, தக்கை,

செம்பன்

ஒரு அசுரன், தேவர்களை வருத்தி இந்திரனாலிறந்தவன். (செவ்வந்தி~புரா.)

செம்பருந்து

(கருடன்) இதன் கழுத்தும் மார்பும் வெண்மை, தேகம் செந்நிறம், இதுவும் கரும்பருந்து போன்றது. இதனைப் பாம்புகள் கண்டு அஞ்சும் என்பர். இவ்வகையில் ஆபிரிக்கா கண்டத்திலுள்ள வைகளுக்கு இறக்கைகள் வாலினும் அதிகம் நீண்டவையாய் முட்போல் கூர்மை யுள்ளவை. இதன் தலையும் முதுகும் பச்சை நிறம், வயிறு மேக நிறம்,

செம்பியனார்

இது சோழர் குடிக்குரிய பெயர். இதனால் இவர் சோழமன்ன மரபினர் என்று தெரிகின்றது. இவர் கிள்ளை விடுதூதாகக் கூறிய நற்றிணைப் பாட்டு மிகவும் பாராட்டற்பாலது. இவர் குறிஞ்சித் திணையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது. நற். 102ம் பாட்டு,

செம்பியன்

1. முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். 2. பள்ளிகளுக்கு ஒரு பெயர். இவர் சோழகுலத்தவர் என்பர். இவர்களுக்கு செம்பிநாடு,

செம்பு

(தாமிரம்) இது, மங்கிய செந்நிறமுள்ள உலோகம், (9) மடங்கு கனமுள் ளது. இது, சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு உலையில் ஊதி யுருக்கித் தகடு, கட்டி, கம்பி முதலியவாகச் செய்யப்படுகிறது. உஷ்ணத்தை அதிவிரைவில் பற்றுவது. இது, பான பாத்திரங்களாகவும், விக்ரங்கள் செய்யவும், தகடுகளாக்கிக் கப்பல்கள் கடனீரால் பழுதுறாதபடி அடிக்கவும் உபயோகப்படுகின்றது. இன்னும் இதனால் சிறு நாணயங்கள் செய்யப்படு கின்றன. இதனால் செய்யப்பட்ட பாத்திரங்களில் புளிப்புள்ள பண்டங்களை வைக்கின் களிம்பேறும். அது போக்க ஈயம் பூசுவது வழக்கம். களிம்பு விஷமுள்ளது. இது இங்கிலாந்து, ஷில்லி, ருஷியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய தேசங்களில் கனிகளிலிருந் தெடுக்கப் படுகிறது. இதனுடன் துத்தநாகத்தைக் கூட்டி யுருக்கினால் பித்தளை ஆகிறது. தாம்பிரத்துடன் தகரத்தைச் சேர்த்தால் வெண்கலம் உண்டாம். இதனுடன் நிக்கலைச் சேர்த்தால் ஜெர்மன் சில்வராம்.

செம்புகொட்டி

மலைநாட்டு கன்னான்.

செம்புலப்பெயல்நீரார்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் குறுந்தொகையுள் (40) செய்யுளில் “செம்புலப் பெய்ந்நீர்போல” என உவமை கூறியிருத்தலில் இப்பெயர்பெற்றனர்போலும்.

செம்பூட்சேய்

அகத்தியர் மாணாக்கருள் ஒருவர்.

செம்போத்து

இதனைக் கள்ளிக்காக்கை யென்பர். இது செந்நிறமாய்ச் செங்கண்னுடைய தாய்க்காக்கை போலுள்ள பறவை. இதன் அலகு காக்கை போல் நீண்டிராது. பூச்சிகளையும் பழங்களையும் தின்பது.

செம்மார்

இவர்கள் தோல் துன்னர், மதுரை, திருநெல்வேலியிலுள்ளவர்கள். இவர்கள் தற்காலம் கிளிஞ்சல் சுடல், தையல் தைத்தல் முதலிய வேலைகளிலும் பழகுகின்றனர். இவர்களிற் சிலர் பறையரில் வேறுபட்டுச் செருப்புத்தொழில் செய்வோர். இதில் தொண்டமான் தோல் மேஸ்திரி இரண்டு வகை உண்டு, இவர்களுக்குப் பட்டம் மேஸ்திரி. (தர்ஸ்டன்)

செயகந்தன்

துரியோதனன் தம்பி.

செயங்கொண்டார்

இவர் சோழவளநாட்டில் நன்னிலத்தருகிலுள்ள தீபங்குடி என்னும் ஜைனக்கிராமத்தவர். இவர் முதலில் சைனராக இருந்து பின்பு சைவரானவராகத் தோற்றுகிறது. இவர் அபயனிடங் கோபங்கொண்டபோது காவலரீகை கருதுங்காற் காவலர்க்கும், பாவலர் நல்கும் பரிசொவ்வா பூவினிலை, ஆகாப்பொருளை யபயனளித்தான் புகழாம், ஏகாப்பொரு ளளித்தேன் யான். இவர் செட்டிகள் மீது இசையாயிரம் பாடிய போது வாணியர், புகார் தங்களுக்கு ஊர் எனப் பாடக் கூறப் புலவர் “ஆடுவதுஞ் செச்சே யளப்பதுவு மெண்ணெயே, கூடுவதுஞ் சக்கிலியக் கோதையே நீடுபுகழ்க், கச்சிச்செப்பேட் டிற்கணிக்குங்காற் செக்கார் தாம், உச்சிக்குப் பின் புகாரூர்” என புகார்வரப் பாடித் தந்தனர். இவர் காலம் அபயன் காலம், எனவே. கி. பி. 1070~1118 ஆக இருக்கலாம். (தமிழ்நாவலர் சரிதை).

செயசேநன்

1. (சந்.) பீமன் குமரன், இவன் குமரன் சங்கிருதி. 2. (சந்.) சார்வபூமன் குமரன், தேவி சுபத்திரை, குமரன் ராதி. 3. துரியோதநன் தம்பி.

செயசோழன்

இவன் சேரன்குமரியாகிய காஞ்சனமாலையை மணந்து கனக்சோழனைப் பெற்று மணிமுத்தா நதியில் படித்துறை கட்டி (60) ஆண்டு முத்தி பெற்றான்.

செயத்துவசன்

கார்த்த வீர்யன் குமரன், இவன் குமரன் தாவசங்கன்.

செயத்ரதன்

(பிர.) பிரகன்மனசின் கும்ரன், தேவி சம்பூதி; குமரன் விசயன்.

செயந்தன்

தருமனுக்கு மருத்துதியிடம் பிறந்த குமாரன், வாசுதேவாம்சம்,

செயந்தர்

திரேதாயுகத்தில் விஷ்ணுவாயிருந்தவர்.

செயந்தி

கேயன் தேவி.

செயன்

1. சகுதியின் குமரன். 2. யுயுதாகன் குமரன். இவன் குமாரன் குணி.

செயராமன்

துரியோதனன் தம்பி.

செயலூரிளம்பொன் சாத்தன் கொற்றன்

கடைச்சங்கமருவிய புலவன். (அக~று.)

செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவ~மாலை.)

செயலூர்க்கோசனங்கண்ணன்

கடைச்சங்கமருவிய புலவன். (அக~று.)

செயல்முறைப் பத்திரம்

இது வரவு செலவை யெழுதுவது,

செயவிக்ரமன்

துரியோதனன் தம்பி.

செயவீரமார்த் தாண்டதேவன்

இவன் பஞ்சதந்திரக் கதையென்னும் வடமொழியைத் தமிழாக இயற்றியவன் செங்குந்தர் மரபு.

செயஸ்துசயன்

ரசாதிதேவியின் கணவன், குமரர் விந்தாலுவிந்தாள்.

செயிர்க்காவிரியார்மகனார் சாத்தனார்

கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (திருவள்ளுவமாலை)

செயிற்றியனார்

செயிற்றிய நூலாசிரியர்.

செயிற்றியம்

நாடகத் தமிழ் நூலுள் ஒன்று இது செய்தோனாற் பெயர்பெற்றது.

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

(வள்ளுவர் குடியினர்) இவர் பெயர் பெருஞ்சாத்தன் போலும் இவர் பின்வரும் செய்திகளை முன்னறிந்து சொல்லும் ஆரூடக்காரராகிய வள்ளுவர் மரபினராக இருக்கலாமென்று தோன்றுகிறது. (குறு~228.)

செய்யத் தகாதன

1. அரசன் செய்கையை வெறுத்தலும், அரசனுடன் கலகம் கொள்ளுதலும், அரசனுக்கு எதிர்முகமாக நிற்றலும், அரசன் ஏகாந்தத்தில் தங்காரியங் கூறலும், இனியவற்றை நான் அனுபவித்திருக்கிறேன் என்று அரசனிடங் கூறலும், அரசன் காக்கை வெளிதென்று கூறினும் அன்பின்றி யிருத்தலும், எச்சிலுமிழ்தல், உயர்ந்தபீடத்திருத்தல், தாம்பூலந் தரித்தல், வகைப்படாத வார்த்தை, உறங்குதல் இவற்றை அரசர்முன் செய்தலும், அரசர்முன் தமது செல்வம், கல்வி, தேஜஸ், குண முதலியவற்றை விவரித்துப் பேசலும், பெரியார் கூடியிருக்கும் சவையில் ஆடைகளைதலும், காதைச் சொரிதலும், கையை மேல்தூக்கிப் பேசுதலும், பெண்டிரை யுற்றுப் பார்த்தலும், பிறர் தம் காதில் சொல்லும் சொல்லை யுற் றுக் கேட்டலும் ஆகா. ஆசையற்றார் வீட்டை அடையவாசாது, கோபங்கொண்டு நின்றகாலத்தும் ஆசாரியர் பெயரைக் கூறலாகாது, நெடுநேரமளவு மனைவியைச் கோபித்தலாகாது, தம்மிற் பெரியோரையும் புலையரையும் முறைப்பெயரிட்டு அழைத்தலாகாது, வேறொருவர் வீட்டில் புறக்கடை வழியாய்ப் புகுதல் கூடாது, பொதுமகளிர் வீட்டருகில் வசிக்கக்கூடாது, ஒருவருடன் செல்லுகையில் ஒருவரிடையில் போகலாகாது, ஒருவர் நிழலை மிதித்துச் செல்லவொண்ணாது, முன்னா ராய்ந்து பின் பேசவேண்டும், ஊரினர்க்கு வெறுப்பான காரியங்களைச் செய்யலாகாது, அரசரது படையினளவை பகைவர்க்குச் சொல்ல வொண்ணாது. முற்றின புல், முற்றியுலர்ந்த காட்டிலும் சேர்ந்திருத்த லாகாது, அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தல் ஆகாது; மழை பெய்கையில் ஓடலாகாது; வழிதெரியாக் காட்டில் தனித்துப் போகலாகாது; மழையின்றிக் காலம் கெட்டாலும் ஒழுக்கம் தவறலாகாது. குடியில்லாத வீட்டிலும், பாழ்ங்கோவி லினுள்ளும், சுடுகாட்டிலும், ஊரில்லா இடத்திலுள்ள ஒண்டிமரத்தினிடத்தும் தனித்துப் போதலாகாது; பகலில் நித்திரை செய்யலாகாது; ஒருவர் எழுந்து போம்போது அழைத்தலும், எங்கே போகிறீர் என்னலும் ஆகாது; ஒருவரைப் பார்த்து உம்முடம்பு நன்றாயிருக்கிற தென்னலும், விளக்கினை வாயினால் ஊதி அவித்தலும், அடுப்பிலுள்ள நெருப்பை அவித்தலும், அடுப்பின் சுடர் தம்மீது படும்படி குளிர்காய்தலும் கூடாது; பெரியோர் தம்முடன் வருகையில் வாகனமேறல், செருப்புப் பூண்டு நடத்தல், குடை பிடித்துச் செல்லுதலும் கூடாது; பெரியோர் விரும்பியவற்றைத் தாம் விரும்பலும், கீழ்மகளை வீட்டிலழைத்தலும், சிறுவராயினும் இழித்துப் பேசுதலும் ஆகாது. பாம்பு, அரசன், நெருப்பு, சிங்கம், இவை பழகினவென்று இகழ்ந்திருத்தலாகாது. அரசனினும் செல்வம் மிகுதியுடைவனாயினும் அதனை அரசனறியச் செய்ய லாகாது; ஐங்குரவரையும் பெரியாரையும் காணினீங்களுண்டது என்ன எனக் கேட்டல்கூடாது; தாம் ஒருவர்க்குச் செய்த நன்றியைத் தாமே புகழ்தலும், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்தலும் கூடாது; கிட்டாத பொருளுக்கு ஆசைப்படுதலும், இழந்த பொருளுக்கும், நீக்க முடியாத துன்பத்திற்கு வருந்துவதும் ஆகாது; ஒருவர் தலையில் முடித்த பூவைச் சூடலும் மோத்தலும், புலையர்க்கு எச்சிற் பண்டங்களை யளித்தலும், தமக்கு மூத்தோர் முன் உடலின் மீது போர்த்துக்கொள்ளுதலும், கர்வித்திருத்தலும், அட்டணைக்காலிட் டிருத்தலும், பெரியோரிருக்கும் இடத்தில் அங்கசேட்டை செய்தலும், கடுஞ்சொல் பேசலும், இருவரிருந்து பேசுமிடத்துச் செல்லுதலும், குரவரெதிரில் கையைச் சுட்டிக் காட்டிப் பேசுதலும், பெரியோர் கொடுப்பதை உட்கார்ந்து வாங்கலும், ஆகா. சூதாடுமிடத்தில் போதலும், ஆரவாரம் நீங்கா இடத்தில்போதலும், மடைப்பள்ளியுட் புகலும், பெண்கள் உறைகின்ற இடத்தில் செல்லலும் ஆகா. (ஆசாரக் கோவை.) பலர் நடுவில் பிறரைப்பழித்தல், இழித்தல், பலர் நடுவில் படுத்துறங்கல், தம்மாலாகா தவைகளை ஆகுமென வாக்கிடுதல், ஏழைகளை இகழ்தல், வஞ்சனை பேசல், பயனில் கூறல், பலபிதற்றல், பழிகூறல், ஒரு பொருளை வீசியெறிதல், கல்லெறிதல், வீண்வினை செய்தல், தூரப் போகின்றவனை அழைத்தல், பிறருடைய சொல் செய்கைகளை நடித்துக் காட்டல், வேகமுடைவனாதல், ஒளித்துக்கொள்ளல், கையொடு கைதட்டுதல், கண் காட்டல், மூக்கசைத்தல் ஆகா.

செய்யாதி

(சந்.) வெகுபவன் குமரன். இவன் குமரன் சங்காதி.

செய்யான்

இது பூரம்சாதியிற் பெரிது. இது மலை, காடுகளில் வசிப்பது. தேளி னும் கொடிய விஷமுள்ளது. இது கடிக்கின் தங்க சிகிச்சை உடனே செய்யா விடின் மரணம் உண்டாம். துள்ளித் துள்ளி கடிப்பது.

செய்யுள்

1. பல்வகைத் தாதுக்கள் சேர்ந்த உடற்குயிர்போல் பல சொற்போல் பொருட்கிடனாக எழுந்தசை சீர்தளை அடி தொடைகளாலும் அணிகளாகப் நிரம்பப பெற்று கவிவல்ல புலவனால் பாடப்படுவது. இது முத்தகம், குலகம், தொகைநிலை, தொடர்நிலை என நான்குவகை. (நன்னூல்,) 2. செய்யுள் (6) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, பரிபாடற்பா, மருட்பா.

செய்வன

தன்னுடம்பு, தன் மனைவி, ஒருவர் தன்னிடம் அடைக்கலம் வைத்த பொருள், தன்னாபத்திற் குதவியான பொருள் இவற்றை அருமையாகக் காத்தல் வேண்டும்.

செய்வனவாசிய ஆசாரங்கள்

புனிதம் பொருள் கிடைப்பின் அதைக் கண் சிரச முதலிய இடங்களிலும் ஒற்றிக்கொள்க், மனைவியின் பூப்பினீராடிய பின் பன்னிரண்டுநாள் அவளினீங்காமை.

செருத்துணை நாயனார்

சோணாட்டிலுள்ள மருகலைச் சேர்ந்த ஆவூரில் வேளாளர்குலத்தில் திரு அவதரித்துத் திருவாரூரிற் சிவபணிவிடை செய்துகொண்டு வரும் நாட்களுள் ஒருநாள் பல்லவர்கோன் மனைவி திருக்கோயிலிடம் பூத்தொடுக்கும் மண்டபத்தில் சிந்திய மலர்களில் ஒன்றை மோந்து பார்த்தனள். நாயனார் அவளைக் கண்டு கோபித்து அவள் சிகையைப் பிடித்து இழுத்து மூக்கையறுத்துச் சிவநேச மிகுந்து சிவகதியடைந்தவர். இவர் கோச்சிங்கப் பல்லவன் காலத்தவர். (பெ~புரா.)

செருப்பு

எருமை, எருது, ஆடு முதலியவற்றின் பதனிட்ட தோல்களால் காலினளவாக மாட்டிகளமைத்துக் காலைக் காக்கும் விதம் செய்யப்பட்ட பாதரக்ஷை.

செருப்புக்கட்டி

மலையாளத்தில் செருப்புத் தைக்கிறவன்,

செருவிடை வீழ்தல்

ஆழமுடைத்தான கிடங்கினோடு அரிய காவற்காட்டைக் காத்துப்பட்ட வேல்வீரர் வெற்றியைச் சோல்லியது. (புற~வெண்பா.)

செறிவு

இது வைதருப்ப செய்யுணெறியுளொன்று. இது நெகிழ்ந்த இசையின்றி வரத்தொடுப்பது.

செலவழுங்கல்

நிலவுபோல ஒளிவிடும் வேலினையும் பெரிய மேம்பாட்டினையும் உடையவன் உயர்ந்த மூங்கிலியைந்த வழியிடைப் போவானாக முன்னே நிச்சயித்துப் போக்கு ஒழிந்தது. (பு. வெ. பெருந்திணை.)

செலவு

வில்லாகிய ஏரினையுடைய உழவர் மாற்றாரிடத்தைக் கருதிக் பற்பொருந்தின காட்டைக் கழிந்து போனது. (பு~வெ.)

செல்கெனவிடுத்தல்

பரந்த இருட்காலத்துக் கொழுநனைச் செலவைப் பார்த்துச் சிவந்த ஆபரணத்தினையுடைய தலைவி போவாயாகவென்று சொல்லியது. (புற வெண்பா. பெருந்திணை.)

செல்லிநகர்

இஃது பெரும்பற்றப்புலியூர் நம்பியாருடைய ஊர்; செல்லி நாடெனவும், பரசுராம சதுர்வேத மங்கலமெனவும் கூறப்படும். (திருவிளையாடல்).

செல்லூர்

குதிரை வடிவத்தை விட்டு நரிகள் சென்ற இடமாம்; இது மதிச்சய மென்னுமூர்க்கு மேற்கும், மதுரைக்கு வடக்குமுள்ளது. (திருவிளையாடல்.

செல்லூர்க்கிழார்மகனார் பெரும் பூதன் கொற்றனார்

கடைச்சங்கத்தவர்கள்,

செல்லூர்க்கொற்றன்

இவர் கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கொற்றனாயிருக்கலாம். இவர் ஊர் செல்லூர். இவர் குறுந்தொகையில் “கண்ணிமருப்பு” எனும் (363) ஆம் கவி கூறியவர்.

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

கடைச்சங்கத்தவர்கள்,

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

இவர் கடைச்சங்கமருவிய புலவருள் ஒருவர். இவர் கௌசிக கோத்திரத்தவர் போலும். இவரியற்பெயர் கண்ணனார், வேதியராயிருக்கலாம், ஊர் செல்லூர் என்பது பாண்டிநாட்டுச் செல்லிநகராக இருக்கலாம். (அகம் 66)

செல்வக்கடுங்கோவாழியாதன்

அவன் அந்துவஞ்சேரலிரும்பொறை யென்னும் சேரன் குமரன். இவன் பெருங்கொடையாலும் அருங்குணங் களாலுஞ் சிறந்தவன். கபிலர் எனும் புலவர் தம்முயிர்த் துணைவனாகிய வேள் பாரி உயிர் நீத்ததும் அவனை யொத்த நற்குணங்களிவனிடம் உள்ளனவென்று அவனிடம் வந்து பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்தைப் பாடினர். இவன், அவர்க்கு நூராயிரம் காணமும் நன்றா எனும் குன்றில் இவனும் அவரும் ஏறி கண்ணிற் கெட்டிய அளவுள்ள நாடெல்லாம் அளித்தனன். இவன் மனைவி நெடுஞ் சோலாதற்கு மகட் கொடுத்த வேளாவிக் கோமானுடைய மற்றொரு மகள். இவன் (25) ஆண்டு ஆட்சி புரிந்தவன் இவன் சிக்கற்பள்ளியிடம் காலஞ் சென்றான். இவன் குமரன் பெருஞ்சேரலிரும்பொறை. கபிலர் இவனைப் புலாம்பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரை சால்வேள்வி, நாண்ம கிழிருக்கை, புதல் சூழ்பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம், பறைக்குலருவி எனும் கவிகளால் பதிற்றுப்பத்தில் புகழ்ந்தனர்.

செல்வத்தாசிரியர் பெருஞ்சுவனார்

கீரவி கொற்றனாரிடம் அகப்பொருள் கேட்டவர்.

செல்வநம்பி

வல்லபதேவனுக்குப் புரோகிதர், வல்லபதேவனைப் பொற்கிழிகட்ட எவினவர், ஸ்ரீவைணவர்.

செல்வப்பிள்ளை

இராமப் பிரியரைக் காண்க.

செள்ளை

பெண்மகளிர்க்குப் பழையகாலத்தில் வைத்திருந்த ஆசைப் பெயர்.

செவந்தான்

இவர் மல்லையிலிருந்த பல்லவப்பிரபு. இவர் தமிழ்ப்புலவர்க்குப் பரிசு தந்து கோவைப்பிரபந்த முதலிய பெற்றவர். இவர் மீது இராமசந்திர கவிராயர் ”சொன்னமன்ன மாடை தந்தான் வீதியில் வெற்றிலைமடித்துச் சுருளுந் தந்தான், கன்னலின் மோதிரந்தந்தான் சரப்பணி தந்தானிரட்டைக் கடுக்கன் தந்தான் செந்நெல் விளையூர் தந்தான் பேர் தந்தான் எல்லையில் வாழ்சிவந் தானுங்கட், கென்ன தந்தானென்றவர்கட் கெத்தனையுத்தரந் தந்தா னியம் பத்தானே” இவர் மீது பாடப்பட்ட செவந்தான் கோவை சொன்னயம் பொருணயமுடையது. அதனை “மாதாம்படி பட்டுமெய் செவந்தான் குழல் வைத் திசைத்துச், சேதாம்பலங்கனிவாய் செவம்தான் செந்திரு மடந்தை, சூதாந்தனந்தைத் துரஞ் செவந்தானைவர் தூது சென்று, பாதாம் புயஞ் செவந்தான் செவந்தான் மல்லைப் பல்லவனே” என்பதாலறிக.

செவியறிவுறூஉ

மாற்சரியம் கெடுதலில்லாத நின்று பலத்த பெரிய எண்ணத் தை, தருமத்தை யாராயும் செங்கோலினை புடையார்க்கு உணர மொழிந்தது. (பு வெ. பாடாண்.)

செவிலி

தலைமகளுடைய நற்றாய்த்தோழியாய்த் தலைமகளுக்கு வருந்துக்கம் களைந்து நல்லறிவும் ஆசாரமும் கொளுத்தித் தலை மகளை வளர்த்த தாய், (அகம்.)

செவ்வாய்

1. அங்காரகனைக் காண்க. 2. இது சூரியனுக்கு நான்காவது வட் டத்தில் நின்று சூரியனைச் சுற்றி வருகிறது. இது 14 கோடியே, 10 லக்ஷம் மைல் தூரத்திற்கப்பாலிருந்து சூரியனைச் சுற்றி வருகிறது. இது 24 மணி, 37 நிமிஷம், 23 விநாடியில் தன்னைத்தானே ஒரு தரஞ் சுற்றி வருகிறது. இது 687. 9 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் குறுக்களவு 4230 மைல், இதற்கிரண்டு உபகிரகங்கள் உண்டு, இது தோற்றத்தில் சிறு நக்ஷத்ரம்போலக் காணப்படுகிறது. இதனைச் சோதனை செய்ததில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பர். இதில் பூமியும், சமுத்திரங்களும், ஆறுகளும், கால்வாய்களும், நாகரிக வேலைப்பாடுகளாகக் காணப்படுதலால் இது நமது பூமியைப்போல் மனிதர் வசிக்கும் இடம் என்று எண்ணப்படுகிறது. இது செந்நிறமுடையது. இந்துக்கள் இதைப் பூமி புத்ரன் என்பதற்கு இது ஒரு அத்தாக்ஷி. இது செந்நிறமாய்க் காணப்படுதலால் செவ்வாய் எனப்படும், இதனை அங்காரகன், குஜன் என்பர். இது சுக்ரனுக்கு அருகில் இருப்பது.

செவ்வெண்

எண்ணிடைச்சொல் தொக்க தொகைநிலை, (நன்னூல்)

செவ்வைச் சூடுவார்

விண்டுப் பாகவத புராணம் தமிழில் பாடிய புலவர் இதையே ஆரியப்பமுதலியார் பாடிய தாகக்கூறுவது. இதனை “கதிக்கு மறுபிறப் பொழித்துக் கதிகொடுக்கும் பாகவத கதையை முன்ன, மதிக்கு முயர் வடமொழியாற் புனைந்தருள வியாதமுனிவரனே மீள, வுதிக்கு நிம்பை மாதவ பண்டிதச்செவ்வைச் சூடியென வுலகுபோற்ற, விதிக்கு மறையவர் குலத் திற்றோன்றி யருந்த மிழாலும் விளம்பி ஞனே” என்பதாலறிக. இவரிருந்தது நிம்பை யெனும் வேம்பத்தூர். பிறப்பால் வேதியர். இவர் காலம் சாலிவாகன சகாப்தம் 1494. இவர் உறத்தூரிலிருந்த வேதியர்பால் கல்வி கற்றவர். இவர் தம் ஆசிரியரால் கன்றாப்பூர் சிங்கராயன் என்பானுக்கு விற்கப்பட்டனர். இவர் பாடிய நூல் சுந்தரபாண்டியம். இது கச்சிவீரப்பன் எனும் மதுரை அரசனுக்கு அமைச்சனாகிய செவ்வந்தியின் துணைவனும் படைத்தலைவனுடாகிய திருவிருந்தான் வேண்டுகோளின்படி பாடியது.

சேகம்

சர்மண்வதி, பாடலாவதி இரண்டிற்கும் மத்தியிலுள்ள தேசம், Tho Country South of the river Charmanwati and North of Avanti.

சேகம் பூதனர்

சிலபிரதிகளிற்சேகம்பூதனாரென் றிருத்தலானே இருந்தவாறே பதிப்பிக்கப்பட்டது. சேந்தம் பூதனாரென்பவரும், மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனாரென்பவரும் இவரே, மதுரைக் கடைச்சங்கத்து ஏடெழுதுவோராயிருந் தவர். பெரும்பாலும் குறிஞ்சியையும், முல்லையையும், நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார். இவர் மாலைப்பொழுதைச் சிறப்பித்துப் பாடல் கேட்போர் மனதைப் பிணியாநிற்கும் (நற் 69). யானையை மலைப்பாம்பு பற்றிப் புரட்டு நெறியென நெறியினதே தங்கூறாநிற்பர் (261), கழுதை மேல் உப்புப் பொதிக்கொண்டு செல்லும் வழக்கை விளக்கிக்கூறுகிறார் (அகம் 207). இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (69,261) பாடலும், குறுந்தொகையில் மூன்றும், அசத்தில் இரண்டுமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.

சேகிதானன்

யதுகுலத்தவன், தருமருக்கு அம்புபுட்டில் தாங்கினவன்,

சேக்கிழார்

இவர் தொண்டைமண்டலத்துக் குன்றத்தூரில் சேக்கிழார்குடி யென்னும் சைவ வேளாளர் குடியிற் குன்றத்தூர் கிழாருக்குப் புத்திரா யவதரித்துக் கல்வி கேள்விகளில் வல்லவராய் இருந்தனர். ஒருநாள் இவர் தந்தையைச் சோழன் உலகப் பொருள்கள் எது பெரிதென்று வினவக் குன்றத்தூர்கிழார் விடைதர மயங்கி வீடு வந்து சவலையுடனிருக்கச் சேக்கிழார் கண்டு நடந்ததை வினாவி, “காலத் தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப்பெரிது” என்னுந் திருக்குறளை யெழுதித் தரப் பெற்றுச் சோழனுக்குக் காட்டினர். சோழன் அதிககளிப்படைந்து சேக்கிழாரை வருவித்துத் தனது சமத்தான வித்வானும் மந்திரியும் ஆக்கினன். சேக்கிழார், சோழனிடம் இருக்கையில் சோழன் சைன நூலாகிய சீவகசிந்தாமணியைக் கேட்டுக் களிப்புடனிருக்கையில் இவர், வெறுப்புட னிருக்கக் கண்டனன். இவர் வெறுப்புடனிருக்கக் கண்ட சோழன் அவ்வகை இருப்பதற்குக் காரணம் வினவச் சேக்கிழார் சிந்தாமணி பொய்க்கதை, மெய்க்கதை கேட்கவேண்டும் என்றனர். அரசன் அக்கதை யாதெனச் சேக்கிழார் அது திருத்தொண்டர் புராணமென்றனர். ஆயின் கூறுக என அதைக் கேட்க நல்ல சுபமுகூர்த்தம் ஏற்படுத்துக என, அரசனிடம் விடை பெற்றுச் சிதம்பரஞ் சென்று நடராசமூர்த்தியைத் தரிசித்து நிற்கையில் அசரீரி ‘உலகெலா மென முதலெடுத்துத் தர அதனையே முதலாகக்கொண்டு (4283) செய்யுட்களாற் திருத்தொண்டத் தொகையை முதனூலாகவும், பொல்லாப் பிள்ளையா ரியற்றிய நம்பியாண்டார் நம்பிகள் அருளிய கலித்துறையந் தாதியை வழிநூலாகவுங் கொண்டு திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்துச் சோழனுக்கு அறிவித்து ஒரு வருஷம் திருச்சந்நிதானத்திலிருந்து அரங்கேற்றினர். இவரைச் சோழன் யானைமீதிருத்தித் தான் பின்னிருந்து கவரி வீசிச் சென்றனன். இவர்க்குச் சோழன் தன் பெயரையே பட்டமாகக் கொடுத்தனன். அதனால் இவர்க்கு உத்தமச்சோழப் பல்லவராயர் என ஒரு பெயருண்டு. அரசனுக்கும் இதுவே பெயராய் இருக்கலாம். இவர்க்குச் சேவையர்காவலர் எனவும், அருண்மொழித்தேவர் எனவும், தொண்டர் சீர் பரவவல்லார் எனவும் பெயர். இவர்க்குப் பாலறாவாயர் என்று ஒரு சதோதரர் இருந்தனர். இவர் தமது குன்றத்தூரில் மடவளாகம் ஏற்படுத்திச் சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரம் போல் திருத்தலமுண்டாக்கிச் சிவகதி பெற்றவர். சேக்கிழார் அபயன் எனும் சோழன் காலத்தவர் எனத் தெரிதலால் இவர் காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டாகலாம் என்பர். (திருத்தொண்டர் புராணம்.)

சேக்பரீதுதாசர்

இவர் புருஷனில்லாப் பூவைப்பெற்ற புத்ரர். இவர் தம் தாயை நோக்கித் தாம் கடவுளைக் காணவேண்டும் என்று காடடைந்து பன்னிரண்டு வருடந் தவஞ்செய்தும் காணாது தாய் கொடுத்த ஒரு அப்பத்தை மடியிற் கொண்டு உணவாதிகளருந்தாது இலைகளைப் புசித்து அவ்வழியிற் சருக்கரைப் பொதி கொண்டு சென்ற வணிகனை இது என்ன பொதி என்றனர். அவன் மண் என்று கூறித் தன்னூர்ப் போய்ப் பார்க்க அது மண்ணையிருக்க அவைகளைக் கொண்டு மீண்டும் அடையத் தாசர் இது என்ன பொதி என்னச் சருக்கரையென்று, பொதிகளை நோக்கச் சருக்கரையாக இருக்கக்கண்டு களித்து ஒரு தட்டில் சருக்கரை வைத்துத் தரம் கண்டு தாசர் வேண்டாது ஓடினர். இவ்வகை பன்னிரண்டு வருடங்கள் கழிந்தும் பெருமாளைக் காணாது தாயை யடைந்தனர். தாய் சடையிலிருந்த இலைகளை நீக்க வருந்தித் தாய் கொடுத்த அப்பத்தைக் கொடுத்து மீண்டுங் காடடைந்து பசி கலந்த காலத்துச் சருகருந்தி இருபத்து நான்காமாண்டில் பெருமாளைத் தரிசித்துப் பெருமாள் கட்டளைப்படி நாடடைந்து பெருமாளைத் தரிசித்திருந்தவர்.

சேடக்குடும்பியன்

தன்பா வடைக்கலம் புகுந்த கண்ணகி இறந்த துன்பத்திற் கிரங்தி இறந்த மாதரியை மறுபிறப்பில் மகளாகப்பெற்ற திருஅருந்தபுரத்து வேதியன். (சிலப்பதிகாரம்.).

சேடதாசையர்

ஒரு வீரசைவ அடியவர், இவர் அரனுக்கென நெய்த பட்டாடையைச் சிவனடியவர்க்குக் கொடுத்துப் பொருள்பெற்று அப்பொருளைச் சங்கர தாசையர் விஷயமாய்ச் செய்த அபராதத்தில் இழந்து அவரால் மீண்டும் பெற்றவர். இவர், பல்லவராயன் தேவிக்கு ஆசாரியரா யிருந்ததைச் சமணர் அறிந்து வெறுத்து அரசனிடம் கூறினர். அரசன் தன் தேவிக்கு இவரை நீக்கும்படி கூறினன். அரசன் தேவியாகிய சற்குணமாதேவி அரசனை நோக்கி எமதாசாரியரை இச்சமணர் வெல்வரேல் அவ்வகைச் செய்வன் என்றனள், அந்தப்படி அரசன் வாதிடக் கட்டளையிடச் சமணர் குடத்தில் விட நாகத்தையிட்டு இக்குடத்தில் கையிடுக என அவ்வாறு பதிப்பொருள் சிவனெனக் கையிட்டு அப்பாம்பைச் சிவலிங்கமாக எடுத்துக் காட்டி அரசனையம் சமணரையும் சைவராக்கி அச்சிவலிங்கத்தையும் அந்த இடத்தில் தாபித்தனர். அத்தலம் உத்தரேச்சுரம் எனப்படும்.

சேடன்

ஆதிசேஷனைக் காண்க

சேடமலை

திருவேங்கடம், இது சேடன் இவ்விடம் தவஞ்செய்ததால் வந்த பெயர்.

சேடி

ஒரு வித்யாதரநகரம். (மணிமேகலை).)

சேட்டலூர் ஆழ்வான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்.)

சேணிகமகாராசன்

மகததேசத்தரசன் சைநன்,

சேணியர்

ஒருவகை நெய்வோர். கன்னட தேவாங்கருக்கும் பெயராக இருக் கிறது. காஞ்சிபுரத்துச் சேணியர் வலங்கையார், இவர்கள் சந்திரசேகரருஷி, நீல கண்டருஷி, மார்க்கண்டேயருஷி கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களிற் சிலர் லிங்கதாரிகள், சிலர் சைவர். காஞ்சி திருஞானசம்பந்தர் மடத்தைச் சேர்ந்தவர்கள். (தர்ஸ்டன்.)

சேதன்

துருவரியன் பௌத்ரன்.

சேதி

உசீகன் குமரன், இவன் குமரர் சிசுபாவன் முதலியவர். 2. விதர்ப்ப தேசாதிபதியாகிய உரோமபதன் குமரன், இவனாண்ட தேசம் சேதி தேசம். 3. இருக்குவேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட அரசன், இவன் புத்ரன் கஷு. 4. ஒரு சிவாலயம். இது சைத்தியாலய மென்றும் வழங்கப்படும். இது வித்தியா தரருடைய உலகில் உள்ளது. (பெருங்கதை). 5. The Country comprised the Southern portion of Bandelkband and the Northern portion of Jubbalqora Rewa.

சேதிநாடு

1. இது மிருகாவதியின் தந்தைக்குரிய நாடு. இதற்கு உரியனா யிருந் ததுபற்றி உதயணன் “சேதியர் பெரும் பெயரண்ணல், சேதியர் பெருமகன், சேதிபன், “சேதியர்மகள்,” சேதிய எண்ணல்’ என வழங்கப்படுவான். இதில் மிக அழகியதும், தவஞ் செய்தற்குரியதுமான ஒரு மலையுண்டு. இங்காடு யூகிக்கு உதயணனாற் சீவிதமாகப் பின்பு அளிக்கப்பட்டது. (பெருங்கதை.) 2. மலையமானாட்டிற்கு ஒரு பெயர். தமிழர் சேதிதேசத்தை விட்டுத் தென்னாடடைந்தபின் தங்கள் நாட்டிற்கு இட்ட பெயர்.

சேதிமர்த்தியன்

உபரிசரவசுவின் குமரன்,

சேதிராயன்

குலபூஷண பாண்டியனை வெல்லவகை பார்த்திருந்து புலியாலிறந்த வேடராசன்.

சேதிராயர்

1. இவர் சோழப்ரம்பரையைச் சேர்ந்த சேதியர்க்கு அரசரா யிருக்கலாம், சிவமூர்த்தியைப் பாடி முத்தி பெற்றவர். இவர் தமது திருப்பாசுரத்தில் சேதியர்கோன் எனத் திருவாய்மலர்ந்திருத்தலின் இவர் அரசரெனப் புலப்படுகிறது. இவர் திருப்பாசுரம் என்பதாந் திருமுறையில் சேர்க்கப்பட்டது. 2. புதுவைக்கணிருந்த அரு வேளாண் குடியினர். மகோபகாரி, எரெழுபது கம்பர் அரங்கேற்றுகையில் உடனிருந்து கேட்டவர். இவரை அரங்கேற்றுஞ் சவை கண்விடந்தீண்டச் சேதிராயர் பிரசங்கத் தடையாமெனத் தெரிவிக்காதிருக்க விடம் தலைக்கேறி மூர்ச்சித்து விழுந்தபோது கம்பர் அறிந்து ஆழியான் பள்ளியணையே பவன் கடைந்த, வாழிவரையின் மணித் காம்பே பூழியான், பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணேயகல நட” எனவம் நங்கையொரு பாகர்மார் பிலணியாராமே, பொங்கு கடல் கடைந்த பொற்கயிநே திங்களையும், சிறிய தன் மேலூருந் தெய்வத் திருநாணே, யேறிய பண்பேயிறங்கு” எனக் கூறி யிறக்கினர். இதனை “அமுவதுங்கொண்டு புலம்பாது நஞ்சுண்டது மறைத்தே, ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்பவாணனெழுப்ப விசை, முழுவதுங் கொண்டொரு சொற்போ நெய்யின் முழுகிக்கை, மழுவதுங்கொண்டு புகழ்கொண்டதாற் றொண்டை மண்டலமே” (எம்.) “பாவலர் தா மேரெழுப தோதியரங்கேற்றுங் களரியிலே, காரிவிட நாகங் கடிக்குங்கை ” (எம்.) “காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மாபை, நாவ லரைக் காவலரை நல்லோரைப் பூவலய, முள்ளத்தகும் புதுவை யூரைச் சிறப்பித்தான், பிள்ளைப் பெருமாள் பிறந்து” என வருவனவற்றாற் காண்க. இவர்காலம், (கி. பி. 11 ஆம் நூற்றாண்டு)

சேதிஷன்

உபரிசரவசுவின் குமரன்.

சேது

1. துர்க்கன் பேரன். 2. (பிர.) பப்ரு குமரன், இவன் குமரன் ஆரத்தன். 3. இராமமூர்த்தி இராவணனை வதை செய்ய இலங்கைக்குச் செல்கையில் நளன் எனும் வாநரத்தச்சன் வாநரசைந்யங்களைக் கொண்டு கட்டிய அணை, இது (102) யோசனை நீளம் (10) யோசனை அகலம். இது மூன்று நாட்களில் கட்டி முடித்தது. புண்யஸ்நான கட்டம், இராமேச்சுரத்திற்கும் இலங்கைக்கு முள்ள அணை.

சேதுகன்

விருதர்ப்பன் உடன்பிறந்தவன்.

சேதுபுராணம்

சேது என்னும் இராமேச்சுரப் புராணம், நிரம்ப அழகியர் இயற்றியது.

சேதுமாதவன்

சுந்தர பாண்டியனைக் காண்க.

சேநசித்

1. (ஞ.) கிரிசாசுவன் குமரன். 2. விசுவசித்தன் குமரன், இவன் குமரர் ருசிராச்வன், திருடாது, காச்யன், வச்சன். 3. இட்சுவாகு குலத்திற் பிறந்த பரீட்சித்தின் குமரனாகிய தலராஜன் புத்திரன். (பார~வன.)

சேநன்

கந்தமூர்த்தியா லிறந்த அசுரன்.

சேநாதிபதி

திருதராட்டிரன் குமரன்.

சேநாதிராஜ முதலியார்

இவர் யாழ்ப்பாணத்துள்ள இருபாலையென்னும் ஊரினர். சைவர். இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். அவதானி, இவர் செய்த நூல்கள் நல்லைவெண்பா, நல்லைக் குறவஞ்சி, நல்லையந்தாதி, நீராவிக்கவி வெண்பா, ஊஞ்சற்பதிகங்கள் முதலிய

சேநாநாபிகர்

இவர் மானாவூரில் எனாதியர் குலத்திற்றோன்றி அரிநாமம் மறவாது பஜனை செய்துகொண்டு அரசனுக்கு ஏவற் தொழில் பூண்டு வருவார். ஒரு நாள் இத்தொழில் பஜனைக்கு இடையூறு செய்வதென்றெண்ணி அதனை விடுத்து அரசனிடம் அணுகாதிருந்தனர். அரசன் ஏவலாளர் இவரிடம் வந்தழைக்க இவர் மனைவியிடம் இல்லையென்று சொல்லும்படி கூற அவ்வாறே மனைவியும் கூறினள். இவரிடம் வந்த ஏவலாளரில் ஒருவன் அரசனிடமணுகி இவர் உள்ளிருந்து கொண்டே இல்லையெனக்கூறினாரென அரசன் வெகுண்டு அவரைப் பாசத்தாற் கட்டிக்கொண்டு வருகவென்றனன். இதனை அறிந்த பெருமாள் சேனாநாபிகர் உருக்கொண்டு அடப்பத்துடன் அரசனிடஞ் சென்று அரசனுக்கு முகவேலை செய்கையில் சந்தோ ஷங்கொண்டு உன் கையால் எண்ணெய் என் தலையில் இருகவென்ன அவ்வாறே எண்ணெயிடுகையில் எண்ணெய்க் கிண்ணத்தில் சதுர்ப்புஜத்துடன் பீதாம்பர குண்டலங்களைக் கண்டு மேல்நோக்க நாவிதனா யிருக்கக்கண்டு, மீண்டும் எண்ணெய் வள்ளத்தைப் பார்க்கப் பீதாம்பர தாரியாயிருக்கக் கண்டு அவசங்கொண்டவனாய் இரண்டு ஜாமமாகியும் எழுந்திராதது கண்ட ஏவலர் அழைக்க உணர்வடைந்து நாவிதரைப் புகழ்ந்து இங்கே நீர் நான் வருமளவும் இருக்க, இராதொழியின் என்னாவி நீங்குமென்றனன். நாவிதர் நான் வீடு சென்று மீண்டும் வருகிறேனென்று விடை பெற்றுச் சேனாநாபிகர் வீடுசென்று அடட்பத்தை மூலையில் மாட்டி மறைந்தனர். அரசன் சபைக்குவந்து சேனாநாபிகரை அழைத்துவாருங்களென ஏவலாளர் ஓடிச் சேனா காபிகரை யழைக்கச் சேனாநாபிகர் அரசன் கோபித்தான் என்று பயந்துவரவும் அரசன் சேனாதாபிகரைக் கண்டு திடுக்கிட்டெழக்கண்டோர் நகைக்க அரசன் அவர் களைமதிக்காது காலையில்காட்டிய உமது திருவுருவத்தை மற்றொரு முறை காட்டு, வென்று இவருடைய பாதத்தைப் பிடித்து அங்கிருந்த எண்ணெய்க் கிண்ணற்றை நோக்குதலும் அரியைக் காணாதவனாய்கருந்தி அங்கிருந்தவர் இவர் அரிபக்தர் என்று சொல்லக் கேட்டு உம்மால் அரியைக்கண்டு வணங்கினேனென்று கூறி அன்று முதல் அவரிடத்திலேயே இருக்கச் செய்தனன். சேனாநாபிகர் அடப்பத்தில் பெருமாளால் வைக்கப்பட்ட பொன் இருந்ததுகொண்டு பிராமணர்களுக்குத் தானங்கொடுத்து வாழ்ந்திருந்தனர்.

சேநானி

நூறு காலாட்களுக்குத் தலைவன். யாமங் காப்போரைக் கட்டளையிடுபவன். (சுக்ர நீதி.)

சேநாபதி

1. பிராமணன் அரசகன்னிகையைப் புணரப் பிறந்தவன். 2, இது சேனைத்தலைவன் எனப் பொருள்படும். இது சாலியர், ரங்குனிகள், கைக்கோளர் முதலிய பலர்க்குப் பட்டம். (தர்ஸ்டன்.)

சேநாபதிமகள்

இவள் வாசவதத்தையின் உயிர்த்தோழி. நீர்விழவிற்குச் செல்லத் தாயின் ஏவலர் அழைக்கவந்தபொழுது வாசவதத்தை இவளுக்கு மிக விசித்திரமான சிற்பத்தொழிலமைந்த ஒருவகை அலங்காரம் செய்துகொண் டிருந்தனள். அரசனைச் சேனாபதி பாதுகாத்தல்போல அரசன்மகளைச் சேனாபதியின் மகள் பாதுகாத்தல் மரபென்பது இதனால் அறியப்படும். (பெருங்கதை.)

சேநாபிசரணம்

சத்ருமாரணத்தை விரும்பினவன் வல்லூறு எனும் பறவையால் செய்யும் யாகம் (பார~மா.)

சேநாபிந்து

1. துரியோதனன் தம்பி, நாலாநாள் யுத்தத்தில் வீமார்ச்சுநராலி றந்தவன். 2 துவீபப்பிரஸ் தமென்னும் தேசத்தரசன். அருச்சுநனால் சயிக்கப்பட்டவன். (பாரதம் சபாபர்வம்).

சேநாவரையர்

இவர் தமிழிற் சிறந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்குச் சிறந்தவுரையியற்றிய புலவர்சிகாமணி, இவர் தமிழில்கொண்டவலிமைபோல் வடமொழியிலும் வல்லவர் என்பது இவர் வடநூற் கொள்கைகளை ஆங்காங்கு உரையிற்கொண்டாளுதலால் விளங்குகிறது. இவரை வேதியர் என்பர். இவரது பெயரை நோக்குகையில் இவர் அரசராயிருக்கலாம். இவர் இன்ன சமயத்தவர் எனத் துணியக் கூடவில்லை. இதைத் தவிர வேறு நூலாயினும் நூற்குரையாயினும் செய்தனர் என்பதும் தெரியவில்லை. இவர்காலம் இன்னதெனப் புலப்படவில்லை, இவர், உரையாளர் ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருக்கு முற்பட்டவர் எனத் தெரிகிறது. எவ்வாறெனின் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆங்காங்குத் தொல்காப்பியத்திற்கு இவர் கூறிய உரையை மறுத்திருத்தலால் என்க, இவர் உரையாசிரியர்களில் ஒருவர்,

சேந்தங்கண்ணனார்

இவர் இயற்பெயர் கண்ணனார். சேந்தன் என்னுந் தந்தை பெயரின் அன்விகுதி கெட்டு அம்முச்சாரியைப் புணர்ந்து சேந்தங்கண்ணனா ரென்நாயிற்று. (தொல். எழு. 350) இவர் நெய்தற்றி ணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். கேட்போர் மனத்தைப் பிணிக்குமாறு இவர் நாரைவிடு தூது கூறியுள்ளார். (நற். 54) இவர் பாடியது.

சேந்தனார்

காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தடிகள் அரண்மனையில் பொக்கிஷாதிபதியாயிருந்து பட்டினத்தடிகள் கட்டளைப்படி பொருள்களைச் சூறைவிட்டனர். இதைக் கேள்வியுற்ற அரசன் அப்பொருள்களைப் பொக்கிஷத்தில் சேர்ப்பிக்கவும், மிகுந்த சொத்துக்களைக் காட்டவும் வருத்திச் சிறையிலிட இருந்து ஆசாரியரால் நீங்கி மனைவிமக்களுடன் சிதம்பரமடைந்து விறகு விற்று வரும் லாபத்தால் ஒரு சிவனடியவரை உண்பித்து வரும் நாட்க ளில் சிவமூர்த்தி ஒருநாள் நடுராத்திரியில் இவரிடஞ்சென்று கூழுண்டு அந்தக்கூழை மறுநாள் தமது திருமேனியில் காட்டிச் சேந்தனார் வீட்டிலுண்ட கூழென்று அனைவர்க்குந் தெரிவித்து இந்த அற்புதம் இவரால் நடந்ததோ என்று ஐயம்கொண்டவர்க்கு ஐயம் நீங்கத் திருத்தேரையழுந்தச் செய்து சேந்தனார் திருப்பல்லாண்டு பாட அசையச்செய்தனர். ஒன்பதாந் திருமுறை யுள் சில பாசுரங்கள் இவர் அருளிச்செய்தவை. இவர் காலம், (கி. பி. 11 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர்.

சேந்தன்

1. ஒரு சிற்றரசன்; இவன் காவிரிக்கருகிலுள்ள அம்பர் எனும் நகர்க்கு அதிபதி. இவன் கல்வி கேள்விகளில் வல்லவன், தென்மொழி வடமொழி வல்லபுலவன், மகா கொடையாளி. அன்றியும் சம்பாபதியென வழங்கும் புகார் தெய்வத்திற்கு அந்தாதியும், இராமபிரான் கோதண்டம், அர்ச்சுநன் காண்டீபம், முருகக் கடவுள் வேலாயுதம் இவற்றைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறான். இவன் ஒளவையாராற் புகழப்பட்டவன். கல்லாடரும் இவனைப் புகழ்ந்ததாகத் தெரிகிறது. 2. தஞ்சாவூரையடுத்த அம்பல் என்னும் ஊரிற் கதிபதி, பிறப்பால் வேதியர் இவரும் உபயகவி, இவரை அருவந்தை யூராண்ட அரசராகவுங் கூறியிருக்கிறது. இவர் திவாகரனென்னும் சைநனால் நிகண்டு செய்வித்தனர். ஆதலால் அதற்குத் தம்பெயரும் செய்தோன் பெயரும் சேர்த்துச் சேந்தன் திவாகரமெனப் பெயரிடப் பட்டது. 3. இவர்க்கு முதலூழித் தனியூர்ச் சேந்தன் எனவும் பெயர். செங்கோன் தரைச் செலவு காண்க. 4. அழிசியின் வரலாற்றுட் காண்க.

சேந்தன் கண்ணனார்

கடைச்சங்கப் புலவர்களிலொருவர்.

சேந்தன் கீரன்

இவர் கடைச்சங்கமருவிய புலவர்களிலொருவர். இவர் பெயர் கீரராக இருக்கலாம். கீரரென வேறு புலவருமிருத்தலின் இவரைச் சேந்தன்கீரன் என்றனர். (குறு 311)

சேந்தம்பூதனர்

சேகம்பூதனார் காண்க.

சேனஜித்

பூருகுலத்தில் பிறந்த பிருகதிசு வம்சத்தவனான விசதன் என்னும் பெயருள்ள ராஜபுத்திரன். இவன் புத்திரர்கள் ருசிராஸ்வன், திருடாது, காசியன், வச்சன் முதலியவர்கள்.

சேனன்

கனகமாலை சகோதாருள் ஒருவன்.

சேனாபிந்து

பாண்டவ பட்சத்தவனாகிய பாஞ்சால அரசன். (பார. ஆதி.)

சேனை

தருமப்பிரசாபதியின் புத்திரி, புறாக்களைப் பெற்றாள்.

சேனை முதலியார்

விசுவசேநரைச் காண்க.

சேனைக்குடையார்

(இலை வாணியர்) இவர்கள் வெற்றிலைக்கொடி நட்டு ஜீவிப்பவர். இவர்கள் தங்களைக் கொடிக்கால் பிள்ளைமார் என்பர். இவர்களுக்கு மூப்பன், செட்டி எனவும் பட்டம் உண்டு, தஞ்சாவூரில் இவர்கள் வீட்டில் வேலை செய்யப் பறையன் போவதில்லை. அம்பட்டர் இவர்களுக்கு வேலை செய்வதில்லை. இவர்கள் வீட்டில் அம்பட்டன் வண்ணான் உண்ணான். இவர்கள் இடங்கையைச் சேர்ந்தவர்கள். (தர்ஸ்டன்)

சேமகன்

1. தண்டபாணியின் குமரன் (2) சுகிகுமரன். இவன் குமரன் சுவவிருதன்.

சேமியன்

உக்ராயுதன் குமரன். இவன் குமரன் சுவிரன்.

சேயன்

அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடத்துதித்த குமரன்.

சேயாறு

இது காஞ்சிமாநகர்க்கு ஆயிரம் யோசனை தூரத்தில் சுமேரு பருவதத்தில் குமாரக்கடவுளுக்குத் தேவர் தேவசேநாபதி பட்டங்கட்ட அபிஷேகித்த நீர் ஆறாய்ப்பெருகியது என்பது. மற்றொரு விதம் அந்தமாபுரத்து வேதியர் எழுவர் தீமைபுரிந்து வந்து, தாங்கள் புரிவன தீமையென்றறிந்து பிரமனை யெண்ணித் தவம்புரியப் பிரமன்தோன்றி நீங்கள் எழுவரும் இம்மலையில் தவஞ் செய்துகொண்டிருங்கள்; குமாரக்கடவுளின் வேல் இம்மலையைப் பிளந்து செல்லும், அக்காலத்துங்கள் தீமை தீரும் என்று மறைந்தனர். எழுவரும் தவஞ் செய்துகொண்டிருக்கையில் குமாரக்கடவுள் வேல் வந்து அம்மலையைப் பிளக்க அதில் தவஞ்செய்து கொண்டிருந்த இவர்களுடலும் பிளந்தது. அப்பிளவு உண்ட இடத்திலிருந்துவந்த வெள்ளத்து டன் உதிரம் கலந்து வருதலால் இப்பெயர் பெற்றது என்பர்.

சேயை

1, சிவசூர்ய தானத்தமருஞ்சத்தி. 2. சகாதேவன் பாரி.

சேரநாடு

வடக்குப் பழனிமலை, கிழக்குத் தென்காசி, மேற்குக் கோழிக்கோடு, தெற்குக் கடற்கரை இந்த எல்லைக்கிடையில் பதின் காதவழி கொண்ட நாடு,

சேரன்

1. மேற்சேரநாட்டிற்குச் சொன்ன எல்லை கொண்ட நாட்டை ஆள்பவன். இவன் வம்சம், சந்திரவம்சத்து நகுஷன் புத்திரனாகிய யயாதியின் சந்ததியில் ஆச்ரிதன் என்பவனது புத்திரர் மூவரில் ஒருவனால் உண்டாயிற் றெனக் கூறுவர். மேற்சேரர்க்குச் சொன்ன வெற்றியுடன், ஒரு சேரன் இமயத்தில் தன் விற்குறி வைத்ததாகக் கூறியிருக்கிறது. இவனுக்குப் பனைமாலை, இவன் குதிரை பாடலம், கொடி விற்கொடி, இவனுக்கு உதியன், குடகன், குட்டுவன், குடக்கோ, கேரளன், கொங்கன், கொல்லிவெற்பன், கோதை, சோலன், பனந்தாரன், பூழியன், பொருனைத்துறைவன், பொறையன், போந்தின்தாரோன், மலையன், மலையமான், வஞ்சி வேந்தன், வானவன், வானவரம்பன், வில்லவன் எனவும் பெயர். இக்குலத்தவருள் ஒருவன் தன்னாடு மழையிலாதிருக்க இந்திரனிடஞ் சென்று மழை வேண்டி வந்தனன். இக்குலத்தில் சிவனடியார், சேரமான் பெருமாணாயனார், திருமார் குலசேகராழ்வார்; சேரன் தயாளமாண்டவன்; கோங்கன் கோயம்புத்தூர் கரூர் ஆண்டவன். இச்சேரனும் கோங்கனும் சேரன் குமரர்கள். தங்கள் தேசத்தை இரு வகையாகப் பிரித்துக்கொண்டனர். 2. கிருஷ்ணனைப் பக்ஷியென்று அம்பாலெய்து கொன்றவன், ஒரு வேடன்.

சேரன் செங்குட்டுவன்

இவன் தமிழ்நாடாகிய சேரர்நாட்டுத் தலைவன். இவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். தாய் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, தம்பி இளங்கோ. இவன் மனைவி இளங்கோவேண்மாள், இவள் வேண்மாள் என்பதால் வேளிர்குலத்தவளாக எண்ணப்படுகிறாள். இவனிவளையன்றி வேறெவரையும் மனைவியாகக் கொள்ளவில்லை. இவனுக்குக் குட்டுவஞ்சேரல் என்ற குமரன் ஒருவனிருந் தனன். இவன் தன்னைப் பதிற்றுப்பத்தில் (5 வதால்) பாடிய பாணருக்குப் பெரும்பொருளுடன் இக்குட்டுவஞ் சேரலையும் பரிசாக அளித்தனன். செங் குட்டுவனுக்கு அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும், அந்த அம்மான் குமரன் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் எண் ணப்படுகிறது. இவன் தன் தாயாகிய நற்சோணையின் பொருட்டுச் சமைத்த சிலையைக் கங்கை நீராட்டச் சென்றகாலத்து ஆங்கு எதிர்த்த ஆரிய மன்னர் நூற்றுவரை யெதிர்த்து வெற்றி கொண்டான். இவன் கொங்கர் செங்களத்துச் சோழபாண்டியர்ளுட னெதிர்த்துக் கொடுகூரை நாசஞ் செய்தனன். (இது மைசூரிராஜ்யத்தின் ஒரு பிரிவு) இன்னுமிவன் கடலை அரணாகக்கொண்டு இடர் விளைத்தவர்களை மரக்கலங்களில் சேனை கொண்டு சென்று வெற் றிகொண்டான். இவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பழையன் என்பான் மோகூராண்டிருந்தனன். சேரன் செங்குட்டுவனுக்கு மோரிய அரசன் அறுகை நண்பன். அறுகையாகிய நண்பனுக்குப் பழையன் பகைவனாதல் நோக்கி இவன் பழையனுடன் போரிட்டு அவனது காவன் மரமாகிய வேம்பினை வெட்டி அவனது சேனைகளைக் கடாக்களாகக்கொண்டு அவன் மகளிர் கூந்தல்களை அறுத்துக் கயிறுகளாக்கி வண்டி இழுப்பித்தான் என்பர். 9ம் கடற்கரையிலிருந்த வியலூரையும் அழித்தனன். செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழனிறந்தகாலத்து அவன் மகனும் தன் மைத்துனனுடாகிய இளஞ்சோழன் (பெருங்கிள்ளி) பட்டமடைந்த போது அவனைத் துன்புறுத்திய நேரிவாயிலில் இளங்கோ ஒன்பதின்மர் சோழமன்னரை வெற்றிகொண்டான். இடும்பாதவனத்துப் போரிட்டுப் பகைவரை வென்றான். இவன் காலத்துக் கோவலன் கண்ணகி மணிமேகலைகளின் கதை நிகழ்ச்சி. சிலப்பதிகார கதாநாயகியான கண்ணகியின்பொருட்டு வடநாட்டு யாத்திரை நிகழ்த்தி நூற்றுவர் கன்னரால் தமிழ்நாட்டரசரை இகழ்ந்த ஆரிய அரசர்க்கு யுத்த செய்தி அறிவித்து நீலகிரியினின்று புறப்பட்டுக் கங்கையாறு கடந்து உத்தரகோச லத்தையடைய செய்தியறிந்த கனக விசயரென்ற வடநாட்டரசர் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், என்போரைத் துணைகொண்டு எதிர்க்க அவர்களுடனெதிர்த்துப் போரிட்டுக் கனகவிஜயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவரையும் தன்னகப்படுத்தினன். பின் பத்தினிச் சிலையை இமயத்திருந்து எழுப்பித்துக் கனகவிஜயர் முடிமீதிருத்தி நீர்ப்படை செய்து தன்னாடடைந்து பத்தினிக் கடவுளைப் பிரதிட்டை செய்வித்து, தேவந்திமேல் ஆவேசித்த பாசண்ட சாத்தன் சொற்கேட்டுத் தன்னாட்டின் மலைப்பக்கத்து வந்திருந்த இளம்பெண்களின் மீது காகநீர் தெளிக்க அப்பெண்களின் பழம்பிறப்புணர்ந்து பத்தினிக்கடவுட்குக் கோயிலமைத்துப் பிரதிட்டை செய்வித்தனன், அப்பத்தினிக் கடவுள் சரிதத்தை இவன் சகோதரராகிய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரமெனுங் காவியமாக அக்காலத்து இயற்றி அரங்கேற்றினர். இவன் பெருநற்கிள்ளிக்கு நேர்ந்த ஆபத்தைக் கேள்வியுற்றுச் சேனைகளுடன் சென்று நேரிவாயிலில் அவன் பகைவரை வென்று பட்டத்திருத்தினன், இவன் காலத்திருந்த பாண்டியர் ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் (நன்மாறன்), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன, கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி. இவன் காலத்திருந்த சோழர்கள் உறையூரி மணக்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி புகாரில் கரிகாற் பெருவளத்தான், கிள்ளிவளவன் (சேட்சென்னி), நலங்கிள் ளியுமாவர். இவன் காலத்திருந்த புலவர்களுள் சிறந்தார் பரணர், சீத்தலைச்சாத்தனார் முதலியோர். இவன் கடலிற் கப்பற்படையுடன் சென்று போரிட்டுப் பகைவர்களை வென்றமையால் இவனுக்குக் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் எனவும் பெயர். இவன் சேநாபதி வில்லவன் கோதை, இவனது தேசவருவாயின் தலைமை அமைச்சன் அழும்பில்வேள், இவ்வமைச்சனுக்கு வானவிறல்வேள் எனவும் பெயர். “இவனது தூதுவர் சஞ்சயன், நீலன் என்போர். இவனது முத்திரை வில் கயல், புலி. இவன் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்படுவர். இவனுடன் இவன் கோப்பெருந்தேவியுமரசு வீற்றிருப்பள். இவன் முன்னோர் அணிந்திருந்த எழுமுடிமாலை இவனும் அணிந்திருந்தனன். இவன் சற்றேறக் குறைய (35) வருஷம் அரசாண்டிருக்க லாம். இவன் சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் உபாசிப்பவனென்பதைச் சிலப்பதிகாரங் கூறுகிறது. இவன் தன் காலத்து இத்தமிழ் நாட்டரசைப் பெருவிரிவினதாய் வளரச்செய்தனன். இவ்வரசனது காலம் சற்றேறக்குறைய கடைச்சங்கத்தவர் காலமாக வேண்டும். இவனைக் கடைச்சங்கத்திருந்த மாமூலனார், சீத்தலைச்சாத்தனார் முதலியோர் இவனது வட நாட்டு வெற்றிகளைப் புகழ்ந்து பாடியிருத்தலால் இவன் காலம் கடைச்சங்கத்தவர் காலமெனக் கொள்ளப்படுகிறது. இக்கடைச்சங்கம் சிலர் கி பி. இரண்டாம் நூற்றாண்டெனவும், சிலர் 4, 5ம் நூற்றாண்டுகளென்றும் கூறுகின்றனர்.

சேரமாண்டார்

மகா பொறுமையுள்ள சேரதேசாதிபதி இவரை அவமதிக்க ஒரு சோழன் தன்னிடமிருந்த ஒருவனை அனுப்பிக்க அந்த ஏவலாளன் வந்து சேரமாண்டார் வாசலிலிருந்த காவன் மாமரத்தை வெட்டினன். சேரம் ஆண்டாரின் தாயார் வெளியில் வந்து யாரடா மரத்தை வெட்டுபவன்? எனச் சோழன் ஏவலன் உங்கள் அப்பன் என்றனன். இதைக் கேட்ட சேரம் ஆண்டார் அவன் சொல்வது சரி, ஆகையாற்றான் அவ்வளவு சுவதந்தரமாய் வெட்டுகிறான் என்றனர். அதைக் கேட்ட சோழன் ஏவலாளி, தண்டன் சமர்ப்பித்து உண்மை யுணர்த்திப் போயினன்.

சேரமானெந்தை

இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த சேரமன்னவரில் ஒரு வர்போலும், (குறு~22)

சேரமான் அந்துவஞ்சோலிரும்பொறை

உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார்க்கு நண்பன். இவன் சோழன் முடித்தலைக்கேப் பெருநற்கிள்ளியின் பகைவன். (புறநா.)

சேரமான் இளங்குட்டுவன்

கடைச்சங்க மருவிய புலவன். (அகநானூறு.)

சேரமான் கடலோட்டியவேல் கெழுகுட்டுவன்

பாணரால் பாடப்பட்டவன், (புறநானூறு.)

சேரமான் கடுங்கோவாழியாதன்

இவனைச் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் எனவும், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் எனவுங் கூறுவர். கபிலர் பாடிய செய்யளுக்கு நூறாயிரம் காணமும், மலைமீதேறிக் கண்டநாடும் பரிசிலாகத் தந்தவன். (புறநானூறு.)

சேரமான் கணைக்காலிரும்பொறை

இவன் செங்கணான் சோழனுடன் போரிட்டுப் பிடிபட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையிற் கிடந்து தாகங்கேட்டுப் பெறாது பின்பு பெற்று அதை மானத்தா லுண்ணாது கள வழி நாற்பது பாடிய பொய்கையாரால் விடுபட்டவன். (புறம் 74.)

சேரமான் கருவூரேறிய வொள்வாட்கோப் பெருஞ்சேரலிரும்பொறை

இவனைக் கண்டபொழுது நரிவெரூஉத்தலையார்க்குப் பழைய நல்லுடம்பு கிடைத்தது. (புற நானூறு.)

சேரமான் குடக்கோ இளஞ்சோலிரும் பொறை

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர்க்கிழார் பாடியதற்கு (3200) பொன் தந்தவன். சேரமான் குடக்கோச்சோலிரும்பொறைக்கு ஒரு பெயர்.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்

சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியுடன் பொருதுமாய்த்து கழாத்தலையரால் பாடப்பட்டவன். (புறநானூறு.)

சேரமான் குடக்கோச்சோலிரும்பொறை

பெருங்குன்றூர்க்கிழாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.)

சேரமான் குட்டுவன் கோதை

வீரன், மிக்க கொடையாளி; குட்டுவநாட்டை ஆண்டவன். கோனாட்டு எறிச்சலூர்மாடலன் மதுரைக்கு மரனாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.)

சேரமான் கோக்கோதைமார்பன்

இவன் நகரம் தொண்டி என்பது, பொய்கை யாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.)

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை

தன் மனைவி இறந்தபொழுது பிரிவாற்றாது இரங்கினவன். (புறநா.) சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் குண்டுகட்பாலியாதனால் பாடப்பட்டவன், சேரமான் கடுங்கோவாழியாதனுக்கு ஒரு பெயர். (புற.)

சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன்

ஒரு சேரன், கபிலரால் பாடப்பட்டவன், சேரமான் கடுங்கோவாழியாதனுக்கு ஒரு பெயர். (புறநானூறு.)

சேரமான் தகடுரெறிந்த பெருஞ்சோலிரும் பொறை

இவன், தன் கட்டிலில் அறியாமல் ஏறித்துயின்ற மோசிகீரனாரைத் துன்பஞ் செய்யாமல் அவர் எழுமா வும் கவரிகொண்டு வீசியதனால் அவராற் புகழ்ந்து பாடப்பட்டவன். பதிற்று பத்தில் எட்டாம் பத்துப் பாடிய அரிசில்கிழார் ஒன்பது நூறாயிரம் காணம் பரிசில் கொடுத்தவன். தகடூர்யாத்திரை இவன காலத்துப் போலும். (புறநானூறு.)

சேரமான் தோழர்

ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஒரு பெயர்.

சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானலிளஞ்சேட்சென்னி

இவன் சேரமானுடைய பாமுளூரை வென்று கைக்கொண்டவன். இவனைச் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியெனவுங் கூறுவர். இவனைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், (புறநானூறு.)

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ

இவன் ஒரு சேரன், கவிவல்லவன் பேய்மகள் இளவெயினியால் பாடப்பட்டோன். இவனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர் (புறநானூறு.)

சேரமான் பெருஞ்சேரலாதன்

சோழன கரிகாற்பெருவளத்தானுடன் போரிட்டுத் தன் அம்பு அவன் மார்பைத் தொளைத் துருவியது காணது முதுகிற் பட்டதென வெண்ணித் தற்கொலை செய்துகொண்டவன். கழாத்தலையராற் பாடப் பெற்றவன். (புறநானூறு.)

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்

முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டவன். இவன் பாரதயுத்தத்தில் இருவர் சேனைக்கும் உணவளித் தவன். இதனால் தமிழ் முதற்சங்கம் பாரதகாலத்திற்கு முற்பட்டது என்பதறியப்படுகிறது. (புறநானூறு.)

சேரமான் பெருமாணாயனார்

கழறிற்றறிவார் நாயனாரைக் காண்க. (பெ~புராணம்.)

சேரமான் மாவெண்கோ

ஔவையாரால் பாடப்பெற்றவன். இவன் காலத்தாசர் பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, (புறநானூறு.)

சேரமான் யானைக்கட்செய்மாந்தரஞ் சேரலிரும் பொறை

குறுங்கோழியூர்க்கிழாராற் பாடப்பெற்றவன் (புறநானூறு.)

சேரமான் வஞ்சன்

திருத்தாமனராற் பாடப்பட்டவன். இவன் மகாகொடையாளி (புறநானூறு.)

சேரமான்மாந்தாஞ் சேரலிரும்பொறை

இவன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தவன். இவன் காலத்துப்புலவர் பொருந்திலிளங் கீரனார், வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். (புறநானூறு.)

சேரர்

இராஜாக்களும், கோங்கு அரசர்களும் இருவரும் வேறல்லர் என்பர் சிலர் வேறெனப் பிரித்துக் கூறுவர். சேரரும், கோங்கரும் ஒரே அரசாட்சியில் இருந்ததாகத் தெரிகின்றது. கொங்கு நாட்டில் ஏழு அரசர்கள் தனித்தனி அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகின்றது, சேரர்கள் இவர்கள் ஆண்ட நாட்டை ஆண்டதாகக் கூறுகிறார்கள். அந்த நாடு பாண்டிய நாட்டுக்கு வடக்கும், பல்லவர்களும் சோழர்களும் ஆண்ட நாட்டிற்கு மேற்கும், கொங்கண நாட்டிற்குத் தெற்குமாம். இவர்கள் ஆண்ட நாடுகள் அந்த அந்த ராஜாக்கள்படி வேறுபடுகின்றன. இவர்கள் சோழ, பாண்டியர்களுடன் ஒரே காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது, அசோகன் எழுதிய நூல்களில் கேரளத்தரசன், கேரளபுத்திரன், என்று கூறுகிறது. (According to Ptolemy VII, 1, 86.) கரூர் அவர்களுடைய இராஜதானி. ஹியூன்சாங் என்பவன் கொங்கணபுரமென்றும் கூறுகிறான்.

சேரலாதன்

செங்குட்டுவனுக்கும் இளங்கோஅடிகளுக்கும் தந்தை. மனைவி சோழன் மகள் நற்சோணை. (சிலப்பதிகாரம்.)

சேரவம்சாந்தக பாண்டியன்

இவன் சோழவம்சாந்தக பாண்டியனுக்குக் குமரன் மதுரை ஆண்ட (52) ஆம் பாண்டியன்.

சேர்வை

வேலை செய்வோன் என்னும் பொருளது. இது அகமுடையான் வலையன், அம்பலக்காரன், கள்ளன், மறவன், பரிவாரம் முதலியவர்க்கும் பட்டமாக வழங்கி வருகிறது. (தர்ஸ்டன்.)

சேர்வையணி

எள்ளும் அரிசியுஞ் சேர்ந்தாற்போல் விளங்கும் பேதத்தை யுடைய பல வணிகளது சோக்கையாம். இதனை வடநூலார் சம்சிருஷ்டிய லங்கார மென்பர். இது மூன்று வகைப்படும். அவை, பொருளணிச் சேர்வையணி, சொல்லணிச் சேர்வையணி, சொற்பொருளணிச் சேர்வையணி எனப்படும். இவற்றி னியல்பைக் குவலயானந்தம் காண்க.

சேறைக்கவிராஜபண்டிதர்

1. இவர்க்கு ஆசுகவிராஜ சிங்கம் எனவும் பெயர், இவர் வண்ணம் பாடுவதில் வல்லவராதலின் இவர்க்கு வண்ணக் களஞ்சியம் எனவும் பெயர். சாதியில் இவர் திருக்காளத்தியிலிருந்த செங்குந்தர் மரபின ராகிய வேங்கடராஜமுதலியாரால் ஆதரிக்கப்பட்டவர். இவர் ஊர் சேறை யென்பதால் இப்பெயர் கொண்டவர்கள் பல இருத்தலின் தீர்மானிக்க முடியவில்லை. இவர்க்கு முருகக்கடவுள் உபாசனமூர்த்து, இவர் பாண்டி நாடு சென்று சீவிலிமாறருடைய பரம்பரையைச் சார்ந்த இராம பாண்டியரைப் பாடிப் பல பரிசு பெற்றவர். “செந்தமிழோர் தங்களிருசீ பாததூளி பொர, வந்த புலவோர் தமார்பாணி கந்த, னடிகையாரப் பரவுமாச கவிராஜன், கடிகையார் கோலாகலன்” பாண்டியராஜா ஆரென்று கேட்டபோது பாடியது. “தென்பாராளு மறிவின் குறுமுனி தெக்கிண கயிலையில் வாழ், செங்குந்தக் குலவேங்கடராயன் றிருவாசற்புலவன், என்பேர் வண்ணக்கட்சி யதன்றி யெதிர்த்தவர் மார்பாணி, யிந்தத் தேசப்புலவர் மனத்துக்கிடியென வந்தேன் காண், உன்பால் யான்வர வாசற்காரர்க் குத்தாரம் பண்ணி, யுள்ளுக் கென்னை யழைப்பித்தா சிலுரைக்குங் கவிதைகள் கேட், டென் பால் வரிசைகள் பரிசில்கள் நல்கி யிரக்ஷித்திடவேண்டு, இராமா சீவல மாறா பாண்டியராஜ வரோதயனே. 2. மாணாக்கர் பாடியது. நல்ல பாம்பு தீண்டப் பெற்றபோது பாடியது. “ஆறு முகனாணையவனடியார் தம்மாணை யேறு மயி லாணை யென்னாணை வீறுபுகழ், தேறுகவி ராசராசன் றிருவாணை யேறியவாறேயி றங்கு “.

சேறைக்கவிராஜபிள்ளை

இவர் சோழ நாட்டுச் சேறையென்னும் ஊரினர். சைவ சமயத்தினர். குலம் கருணீகர், ஆசுகவி பாடுந்திறம் உள்ளவர். இவரியற்றிய நூல்கள் காளத்திநாதருலா, சேயூர் முருகனுலா, வாட்போக்கி நாதருவா, அண்ணாமலையார் வண்ணம், முதலிய.

சேவலூர்க்கிழார் மகன் பெரும் பூதங்கொற்றனார்

கடைச்சங்க மருவிப் பாடிய புலவர்

சேவைகாவலர்

சேக்கிழார் சுவாமிகளுக்கு ஒரு பெயர்.

சேஷ்டர்

ஜலத்திற்காதார தேவர், இவர்க்குப் பவர் எனவும் பெயர்.

சேஷ்டை

ஜலத்திற்க திட்டான சத்தி.

சைகஷவ்யர்

இவர் தருமருக்குத் தாம் சிவபிரானிடம் அட்டமாசித்திகளைப் பெற்றதைக் கூறினவர். (பார~அநுசா.)

சைகாவத்தியன்

ஒரு ரிஷி. அம்பை பீஷ்மர் தன்னை மணம் புரியாதலால் வெறுப்புற்று இவருடைய ஆச்ரமத்தில் தவமிருந்தனள். (பா~உத்தி.)

சைகிசவ்யன்

1. ஒரு இருடி, அபர்ணையின் கணவர், பித்ருக்களைக் காண்க. 2. ஒரு ருஷி. ருத்ரர் உமையுடன் சென்று வேண்டியதைக் கேளென ஒன்றும் வேண்டேன் என்று மறுத்த ஞானி. (பார~சாங்.)

சைகீஷவ்யர்

இவர் சோம தீர்த்தத்தினருகில் தேவலருஷியின் ஆசிரமத்திற் செல்லத் தேவலர் தாம் இவரை வரவேற்காது தவத்தில் இருந்து பின் இவரை உபசரிக்க வேண்டிக் குடங்கொண்டு கடற்குச் செல்ல அவ்விடத்திலும் இவர் தேவலர்க்குமுன் சென்றிருந்தனர். பின் தேவலர் ஆகாயம், சுவர்க்கம், பிதுர் உலகம், யமலோகம், ஆதித்யலோகம், சந்திரலோகம் முதலிய இடங்களிற் செல்ல அவ்விடமெல்லாஞ் சென்றனர். அவ்வகையான தபசி வசித்த தீர்த்தமாதலால் இதில் பலராமர் ஸ்நானம் செய்தனர். (பார~சல்லி)

சைசிடமுனிவன்

காசியில் தவஞ் செய்து நந்தி தேவரால் விளிக்கப்பட்டு முத்தி யடைந்தவன். (காசிகாண்டம்.)

சைசுநாகர்

சிசுநாகன் வம்சத்து மகத தேசத்தரசர்.

சைதன்யமதம்

சைதனியன் வங்கதேசத் தில் நவத்வீபத்தில் கிறிஸ்துசகம் 1489 வது வருஷத்தில் விஷ்ணு அம்சத்தாற் பிறந்தவன். தந்தை ஜகந்நா தமிச்ரன், தாய் சசீதேவி. இவன் முதற்பெயர் விச்வம்பரன்; இவன் கிருஷ்ணனைப்போல் நீர்க்குக் கங்கா தீரம் வரும் பெண்களைச் சரசஞ் செய்துகொண்டும், தனக்கு வேண்டியவைகளை விரும்பிய வீட்டில் சென்று களவாடியும் வருவன். இச்சைதனியன் கல்வி கேள்விகளில் வல்லவனாய் லக்ஷ்மி தேவி என்பவளை முதல் விவாகஞ் செய்து கொண்டு சிலநாளிருந்து பின்பு அவனுடைய முதல் மனைவி பரமபத மடையவும் பின்பு விஷ்ணுப்பிரியை என்னும் ஒரு பெண்ணை. இரண்டாவது மணஞ் செய்து கொண்டனன், பின்னர் தந்தை இறக்கத் தந்தைக்குச் சிரார்த்தஞ் செய்யும்படி கயா தீர்த்தத்திற்குச் சென்றபோது அவ்விடத்தில் ஈச்வரபுரி என்னும் யோகியைக் கண்டு அவரிடத்தில் உபதேசம் பெற்றுச் சதாசாரத்துடன் கூடியிருந்து அரிபக்தியில் மேலிட்டனன். மதசித்தாந்தம்: இவன் முத்தி மார்க்கமே போதித்தான். கர்மத்தில் நம்பிக்கையில்லை. எக்ய, யாக, ஒமா திகளால் பிரயோஜனமில்லையெனவும், மோசமில்லா விச்வாசம், இடைவிடா பக்தி என்பதே மோக்ஷம் எனவுங் கூறுவன். (சகலார்த்த சாகரம்.)

சைதன்யர்

கிருஷ்ணாவதாரத்தில் மாலாகாரர்வம்சத் துதித்தவர். (சாத்தாதவர் சாத்தானியர் என்ப.)

சைத்தியகம்

கிரிவிரசத்துக்கு அரணாயுள்ள மலை.

சைத்தியர்

யாதவபேதம் சேதிராசன் வம்சத்தவராதலின இப்பெயர் பெற்றனர்.

சைத்திரதன்

சாட்சூசமநுவைக் காண்க.

சைத்திராதம்

குபேரன் பூந்தோட்டம், சித்திரரதனைக் காண்க.

சைத்திரை

புதன் தேவி, இவள் குபேரன் வீரியத்தைத் தாங்கிய கிருதாசியின் குமரி. இவளிடத்தில் சைத்திரன் எனும் அரசன் பிறந்தான்.

சைத்ர கிருஷ்ண சதுர்த்தசி விரதம்

சித்திரை மாத கிருஷ்ணபடி சதுர்த்தசியில் சிவசந்நிதியில் ஸ்நானஞ் செய்யில் அத்தீர்த்தம் கங்கைக்கு நேர் ஆகையால் இதை அநுட்டிப்போர் பிரேதத்வம் வராது நீங்குவர். சர்வபலமும் அடைவர்.

சைநசமயம்

இது ஐந்தாம் நூற்றாண்டில் சைந அகளங்காசாரியர், புத்தருடன் வாதிட்டுச் செயித்து இச்சமயத்தை நாட்டினர். இச்சமயத்தினர் இதிலும் மேலான சமயம் இல்லையென்பர். இவர்கள் உலகம் அநாதியென்றும், அவை மூன்றென்றும், அந்தவுலகம் மேல் நடுகீழிடங்களில் இருக்கும் எனவும், அந்தக் கீழுலகத்தடியில் அதோகதியென்று ஒரு உலகம் உண்டெனவும், அதற்குமேல் ஏழு நரகம் உண்டெனவும், அதற்குமேல் பத்துப்பவணலோகமுண்டெனவும், அதற்குமேல் மண்ணுலகம் இருக்கிறதெனவும், அதற்கு மேல் சோதிலோகம் உண்டெனவும், வியந்தரவுலகம், வித்யாதரவுவகமும், இந்த மண்ணுலகில் உண்டெனவும், மேல் பதினாறு தேவலோகம் உண்டெனவும், அதன்மேல் அகமிந்திரலோக முண்டெனவும், அதற்குமேல் மோக்ஷ உலகம் உண்டெனவும் கூறுவர். இவர்கள் அருகன் அல்லது சிந்னைத் தெய்வமாகக் கொண்டவர்கள். அவ்வருகனுக்கு (1008) பெயருண்டு, அக்கடவுள், கடையிலா அறிவு, கடையிலாக் சாட்சி, கடையிலாவீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு எனும் அறுகுணங்களுடன் கூடியிருப்பர். அவர், வேதங்கள் பன்னிரண்டினையும் வெளியிட்டவர், சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசகம் எனும் முக்குடையினை யுடையவர். ஆத்யந்தாகிதர். அசோகமரநிழலில் எழுந்தருளியவர், காமம் இல் லாதவர். இச்சமயத்தார் கர்மத்தால் முத்தி யென்பர். இவர்கள், காலம், உத்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என இருவகைப்படும் எனவும், அந்தக்கால மிரண்டும் ஒருதரம் முடியின் யுகம் என்பர். இந்தயுகத்தில் போக பூமியுண்டாய்ப் பதினான்கு மனுக்கள் தோன்றினர். இந்த மனுக்கள் காலத்தில் சூர்யசந்திர நக்ஷ்த்திரங்கள், மேகம், வருஷம், மாதம், வாரம், பகல், இரவு, ஆறு, மலை உண்டாயின என்பர், இந்த மனுக்களில் நாபிமகாராசா காலத்தில் ஜனங்கள் நாபிக்கொடியுடன் தோன்றினர், மேகம் மழை பெய்தன, பயிருண்டாயிற்று. வஸ்திரங்கள் நெய்யப்பட்டன. இந்த நாபிமகாராசாவைப் பிரமன் என்பர். இவர்தேவி மருதேவி. இவர் காலத்தில் இருஷபதீர்த்தங்கரர் என முதல் தீர்த்தங்கார் தோன்றினர். அத்தீர்த்தங்கார் (1) இடப தீர்த்தங்கரர், (2) அசித தீர்த்தங்கரர், (3) சம்பவ தீர்த்தங்கரர், (4) அபிநந்தன தீர்த்தங்கரர், (5) சுமதி தீர்த்தங்கரர், (6) பத்மப்பிரப தீர்த்தங்கரர், (7) சுபார்சுவ தீர்த்தங்கரர், (8) சந்திரபிரப தீர்த்தங்கரர், (9) புஷ்பதந்த தீர்த்தங்கரர், (10) சீதள தீர்த்தங்கரர், (11) சிரேயாம்ச தீர்த்தங்கார், (12) வாசு பூச்ய தீர்த்தங்கார், (13) விமல் தீர்த்தங்கரர், (14) அருந்த தீர்த்தங்கரர், (15) தர்ம தீர்த்தங்கரர், (16) சாந்தி தீர்த்தங்கரர் (17) குந்து தீர்த்தங்கரர், (18) அரதீர்த்தங்கரர், (19) மல்லி தீர்த்தங்கரர், (20) முனுசூவிருத தீர்த்தங்கரர், (21) நமி தீர்த்தங்கரர், (22) நேமி தீர்த்தங்கரர், (23) பார்சுவ தீர்த்தங்கரர், (24) வர்த்தமான தீர்த்தங்கரர் தோன்றினர். இவர்கள் காலத்தில் (1) பரதர், (2) சகரர், (3) மகவான், (4) சநத்குமாரன், (5) சாந்திநாதன், (6) குந்துநாதன், (7) அரநாதன், (8) சுபௌமன், (9) பதுமநாதன், (10) அரிசேணன், (11) ஜெயசேகன், (12) பிரசதத்தன் ஈறாகச் சக்கிரவர்த்திகள் பன்னிருவரும், (1) விசயர், (2) அசலர், (3) தர்மர், (4) சுப்பிரபர், (5) சுதர்சந பலதேவர், (6) நந்திஷேணர், (7) நந்திமித்ரன், (8) இராம பலதேவன், (9) பலராமன் ஈறாகப் பலதேவர், ஒன்பதின்மரும், (1) திப்பிரஷ்டன், (2) திவிப்பிரஷ்டன், (3) சுயம்பு, (4) புருஷோத்தமன், (5) புருஷசிம்மன், (6) புண்டரீக வாசுதேவன், (7) தத்தன், (8) லஷ்மணன், (9) நாராயணன் ஈறாக வாசுதேவர் ஒன்பதின்மரும், (1), அசுவக்கிரீவன், (2) தாரகன், (3) மது) (4) மதுசூதனன், (5) மதுகிரீடன், (6) நிசும்பன், (7) பலீந்தான், (8) இராவணன், (9) சராசந்தன் ஈறான பிரதிவாசு தேவர் ஒன்பதின்மரும் இருந்தனர். (ருஷபர் முதல் சாரசந்தன் ஈறாகக் கூறியவர்க்குத் தீரீசஷ்டிசலாகா புருஷர் எனவும் பெயர்.) ருஷபதீர்த்தங்கரர் காலத்தில் சைவசமயம் உண்டாயிற்றெனவும், (12) ஆம் தீர்த்தங்கரராகிய விமலசுவாமிகள் காலத்தில் வைஷ்ணவசமயம் உண்டாயிற் றெனவும், (23) ஆம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாத சுவாமிகள் காலத்தில் துலுக் கர்மத முண்டாயிற்றென்றும், (20) ஆம் தீர்த்தங்கரராகிய முனு சூவிருத தீர்த்தங்கரர்காலத்தில் மகாகாளாசுரன் என்கிற அசுரனால் யாகங்களுண் டாயின என்றும், சிவ, விஷ்ணு, கணபதி, சுப்பிரமண்யர் சைந விரதம நுட்டித்த அடியவராகையால் அவர்களும் தொழத்தக்கவர் என்பர். இந்தச் சமயசந்நியாசிகள் சுவேதாம்பரிகள், திகம்பரிகள் என இருவகையார். இவர்கள் கொல்லாவிரதிகள் (1800) சீலாசாரமுடையவர். இவர்கள் புஸ்தகம், கமண்டலம், மயிற்பிச்சம், தாங்கியிருப்பர். இவர்கள், அஷ்டவிதகாமங்கள் நீங்கி மணிய லொளிபோல் சகசமாய் உபா தீதமாகிய அஷ்டமகா குணங்களைப் பெற்று லோகாக் கிரமத்தகஸ்திதராகிச் சுத்தாத்ம சுபாவமெய்தியிருக்கின் ஆகாசமத்தியத்துள் உத்தரோத்தரகமன மடைவர் என்பர். இந்த மதம் கிறிஸ்து சகம் (5) ஆம் நூற்றாண்டில் அமோக வருஷன் என்கிற ராசன் அரசாண்ட காலத்தில் அங்குரித்து 9, 10, 11 வரையில் உச்சம் பெற்று, 2 வது நூற் றாண்டில் மதுரையாண்ட கூன்பாண்டியன் என்னும் சைந அரசன் சைவனாகிய தால் அது முதல் க்ஷீணத்தைப் பெற்றது, இவர்கள் தற்காலம் இருக்குமிடங்கள் திருநறுங்கொண்டை, தீபங்குடி, சித்தாமூர், பெருமண்டூர், இராசமகேந்திரம், காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம் முதலியன. இவர்கள் செய்த ஸமஸ்கிருத நூல்கள், மகாபுராணம், ஸ்ரீபுராணம், திரிலோகசாரம், கோமடசாரம், பதார்த்தசாரம், இரத்தினகாண்டகம், தர்மபரீக்ஷை, சிந்தாமணி, சூடாமணி, மேருமந்தரபுராணம், நீலகேசி வாதம், சாகடாயனம், அமரம், நயசக்கிரம், சத்தபங்கி, தவளம், விசயதவளம், மகாதவளம், சுபோதினி முதலியன. தமிழ் நூல்கள், சிந்தாமணி, சூளாமணி, சூடாமணி, நீலகேசிவாதம், மேருமந்தர புரா ணம், திருக்கலம்பகம், யசோதரகாவ்யம், அறநெறிச்சாரம், சீவசம்போதனை, அருங்கலச்செப்பு முதலியவை,

சைநமாமுனிவர்

சிநேந்திரமாலை செய்தவர். இவர்க்கு உபேந்திராசாரியர் எனவும் பெயர்.

சைநர்

யதுவம்சப்பகுப்புள் ஒன்று,

சைநாதேசசிட்டு

இது, சைநா தேசத்துக் கடற்கரையிலுள்ள மிகவுயர்ந்த மலைக்கு கைகளில் ஒருவித சிட்டு கூடு கட்டுகிறது. அக்கூட்டை அந்நாட்டார் உரிசையுள்ள உணவுப் பொருளாகக் கொள்கின்றனர். இச்சிட்டுத்தலை கறுப்பும் முதுகு நீலமும், வயிறு செம்மை கலந்த கருநிறங் கொண்டது. இக் கூடுகள் மிகவுயர்ந்த மலைப் பாறைகளில் கட்டப்படுகின்றன. இவற் றையெடுப்பது மிக அருமையாம். இதனை எடுப்பதில் பலர் இறத்தலும் உண்டென்பர். இக்கூடு அதிக விலையுயர்ந்தது. கொட்டைப்பாக்குச் சிட்டு இது தானியங்கள் புழுக்களைத்தின்று சீவிப்பது. இவ்வினத்தில் பல அழகிய வர்ணங்களையும் புள்ளி களையும் பெற்றவை. இவற்றைப் பலர் வீடுகளில் சிறு கூண்டுகளிலிட்டு வளர்க்கின்றனர். இது குதித்துக் குதித்து அழகாய்ப் பாடும்.

சைநியம்

கிருஷ்ணமூர்த்தியின் குதிரைகளில் ஒன்று.

சைந்தவன்

சிந்துதேசாதிபதி, ஜயத்ரதன்.

சைந்தவாயனன்

விஸ்வாமித்திர புத்திரன்.

சைனர்

சிவனைத் தொழுவோர், இவர்கள் பெரும்பாலும் பல ஜாதியராக இந்தியா முழுதும் பரவியிருக்கின்றனர். இவர்கள் தமிழ் நாட்டில் நயினார் எனவும் சாஸ்திரிகள் எனவும் பட்டம் வகித்திருக்கின்றனர். (தாஸ்டன்).

சைபன்

(Syphon) அங்குசநாளி. இது ஒரு ஜல சூத்திரம்.

சைபியன்

1, விருஷ்ணி வம்சத்தரசன். 2. கோவாசன் என்னும் க்ஷத்திரியன், 3. கிருஷ்ணன் தேர்க்குதிரையில் ஒன்று. 4. விஷதர்பனுக்கு ஒரு பெயர், 5. கிருஷ்ணனிடம் யுத்தம் செய்த ஒரு க்ஷத்திரியன்.

சைப்பியன்

1. கிருஷ்ணனால் செயிக்கப் பட்டவன். 2. இவன் கொடையால் தர்மநெறி தவறாது அரசாளுகையில் இவனது ஈகையைச் சோதிக்க இந்திரன் கழுகாகவும், அக்னி புறாவாகவும் உருக்கொண்டு கழுகு புருவைத் துரத்த புறா அரசனை அபயமடைந்தது. கழுகு அரசனிடம் என் பசிக்கு வாய்ந்த இரையை விடவேண்டுமென அரசன் கழுகை நோக்கி அடைக்கல மடைந்ததை விடேன் என, அவ்வளவு மாம்சம் தருக என, அரசன் மற்ற உயிர்களைக் கொல்ல அஞ்சித் தானே தன் தேகத்தை அறுத்துத் துலையிலிட்டுப் போதாமல் துவை புகுந்தனன். தேவர் தம் உருக்காட்டி வியந்து சென்றனர். (வால்மீகி~ராமாயணம்)

சைப்பியர்

1. தருமர் இராஜசூயத்தில் பிரமஸ்தானத்திருந்த ருஷி. 2. சிபிவம்சத்தவர்.

சைப்யம் சுக்ரீவம்

கிருஷணன் தேர்க்குதிரைகள்,

சைப்யை

1. விதேகராசன் பெண்; இவள் தன் கணவனாகிய சததநு, பாகீரதியில் ஸ்நானஞ்செய்து விஷ்ணு பூசை செய்து, திரும்பிவருகையில் ஒரு பாஷண்டியிடத்தில் வீணாய்ப் பேசின கால் பூனை, கழுதை, காக்கை, கொக்கு முதலிய பல சன்ம மெடுத்துக் கடைசியில் மானிடவுருப் பெற்றனன். அதுவரையில் சைப்யை எவரையும் மணம்கொள்ளாதிருந்து தன் கணவன் யானிடவுருக்கொண்டதைப் பூர்வசன்மப் பழக்கத்தால் அறிந்து அவனை மணந்து சுகித்தவள். 2. சியாமகன் கேலி, விதர்ப்பான் தாய். 3. ஒரு தீர்த்தம், 4. பிரான் பாரியை. 5. கிருஷ்ணனுடைய பாரியையாகிய மித்திரவிந்தைக்கு ஒரு பெயர். 6. சூரியவம்சத்துச் சகரன் பத்தினி. 7. தியூமத் சேநராஜன் பாரியை.

சைமத்காதி

(வகுதைநகர்) தமிழ் நாட்டுக் காயற்பதியிலிருந்த லப்பைசாதிப் பிரபு. கொடையாளி தமிழ் வித்வான்களுக்கு வேண்டிய பரிசளித்துப் புகழ்படைத்தவர் இவர் சமாதியிலடங்கிய பின் ஒரு கவிஞர் அவ்விடஞ்சென்று பாடச்சமாதி வெடித்துக் கையிலிருந்த மோதிரம் தந்தான். இதனால் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பர்,

சைமினி

1, யமபுரியைக் காண்க. 2. சயமுனியைக் காண்க. 3. அளவை நூலாசிரியன். (மணி.)

சையமினி

யமபுரியைக் காண்க.

சையாதி

1. வைவச்சுதமதுவின் குமரன், ஆங்கீரஸர் யாகத்தில் இரண்டாமகஸில் செய்யத்தக்க கர்மத்தைச் செய்து ஒரு பெண் பெற்றவர். அப் பெண்ணுக்குச் சுகன்னியெனப் பெயர். இவ்வரசன், குமரியுடன் ஒருகால் சியவனருஷியின் ஆச்சிரமமடைய அப்பெண் பூஞ்சோலையின் ஒருபுறத்திலிருந்த புற்றில் ஒளிவரக்கண்டு அவ்வொளியை முள்ளால் குத்த அதினின்று இரத்தம் பெருகியது. இதனால் சையாதிசேநா சமுத்திரத்தின் இரு விழியும் அடைந்தன. அரசன் துணுக்குற்று நடந்ததை வினவப் பெண் உண்மை கூறக் கேட்டு முனிவரை அபராதக்ஷமை வேண்டிப் பெண்ணையும் அவருக்கே மணஞ் செய்வித்தவன். இவன் குமரர், உச்கான பரிகசு, ஆனர்த்தன், பூரிஷேணன், 2. பிராசீநன் குமரன், தேவி பானுமதி,

சையாம்மதம்

இத் தேசத்தார் புத்த தர்மத்தை அனுசரித்தவராயினும் ஒரு விதமான பத்ததியை அனுஷ்டிக்கிறார்கள். அதாவது, சோமகெளதமன் என்பவன் புட்பத்தில் பிறந்து சர்வஞானியாய் ஒரு விருக்ஷத்தடியில் சுவஞ் செய்து சித்திகளை யடைந்தான். இவனுக்குத் சேவகக்கன் என்று ஒரு சசோதான் இருந்தனன. இவ்விருவரும் ஒருவருக்கொருவர் யுத்தஞ் செய்து முடிவில் சோமகோதமனே வெற்றியடைந்தான். இவனைத் தேவனாகக் கொள்வர். இச்தேவனுக்குப் பல தேவாலயங்களுண்டு. இவர்கள் தங்கள் தேவ னுக்கு ஆட்டுப்பலி யிடுகின்றனர். இச் சமயத்துச் சந்நியாசிகள் முண்டிதராய்ச் சர்வாங்க க்ஷெளரம் செய்து கொள்வர். இறந்தவர்களைத் தகனஞ் செய்து சாம்பலை வைத்துச் சமாதி கட்டுவர்.

சையுத்த சமவாயம்

கண்ணிற்கும் ரூபத்திற்கு முள்ள சம்பந்தம். (சிவ~சித்)

சையுத்த சமவேத சமவாயம்

இது கண்ணிற்கும் ரூபத்திலுள்ள ரூபத்துவத்திற்கு முள்ள சம்பந்தம். (சிவ~சித்)

சையோகசையோகம்

எந்தச் சையோகத்தினுற்பத்தியில் சையோகம் அசமவாயி காரணமாயிருக்கிறதோ அது. (தரு.)

சையோகம்

இரண்டு திரவியங்களின் சம்பந்தம், இது பிரிந்திருக்கிற வஸ்துக்களின் சம்பந்தம், (சிவ~சித்)

சைய்யகிரி

கொங்குநாட்டிலுள்ள ஒரு மலை, காவிரிந்திக்குப் பிறப்பிடம்,

சைரந்திரயன்

தஹியூவானவன் அயோகவ ஜாதி ஸ்திரியிடத்தில் பெற்ற குமரன். இவனுக்கு எண்ணெயிடுதல், கைகால் பிடித்தல், வலைதொழில் செய்தல் முதலிய தொழில். (மநு.)

சைரந்திரி

பாண்டவர் அஞஞர் தவாசத்தில் திரௌபதி வைத்துக்கொண்ட பெயர்.

சைலாதன்

சித்துரதன் குமரன், இவன் குமரன் காமரதன்.

சைலூஷன்

ஒரு காந்தருவன். சிந்து தீரவாசி.

சைலோதம்

மேருமந்தரங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு நதி. (பார~சபா.)

சைவ எல்லப்ப நாவலர் தேவியார்

இந்த அம்மையார், மணவாள தாசர் தாம் பாடிய அரங்கக்கலம்பகத்தை நாவலர்க்கு அனுப்புகையி லதிலிருந்த “வாடியோடவன் சமன்ன” எனுஞ் செய்யுளைக்கண்டு அதற்குப் பிரதியாய் “கருடனோட மச்சமாமை கமலமோட முற்கரங், காட்டிலோட மூன்றி ராமற் கண்டமட்டி லோடவே, மருளிவந்த சிங்கமோட வாமனென்பு பாறவே, மஞ்ச முள்ள கண்ணனோட மாரவீறச் சேனனும், இருளினோட முண்டகத்த னேங்கி யோட வென்றவர்க், கீறுசாதங் குயிரளித்த வேந்தல்யாவன் வேதமே, அருளுமந்த முதல்வன்யாவன் அருணை கண்டு வாழ்மினோ, ஆரனாதி மூலமென்ப தறிகிலாத மாக்களே” எனப் பாடித் தந்தவர்.

சைவசமயகுரவர்கள்

மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசுகள், சுந்தரமூர்த்திநாயனார் என்னும் நால்வர்.

சைவசித்தாந்தசாத்திரம் பதினான்கு

சித் தாந்தசாத்திரம் (14) காண்க.

சைவபத்ததி செய்தோர்

1. தூர்வாசர். 2, பைங்கள சிவர்; 3. உக்ரஜ்யோதி; 4; ஸ்ரீகண்டர்; 5. விஷ்ணுகண்டர்; 6. சுபோதர்; 7. வித்யாகண்டர்; 8. இராமகண்டர்; 9. ஞானசிவர்; 10. ஞான சங்கரர்; 11, சோமசம்பு, 12, பிரமசம்பு; 13, திரிலோசன சிவர்; 14. அசோரசிவர், 15. வருண சிவர்; 16, பிரசாதசிவர்; 17. இராமநா தசிவர்; 18. ஈசானசிவர் என்பவர்களாம்.

சைவபுராணம்

இது (2600) கிரந்தங் கொண்டது. இதில் பிரம விஷ்ணுக்களின் பிறப்பு, இறப்பு, பிரபஞ்சசிருட்டி, சிவத்திருந்து யாவுமுற்பத்தி, சிவலிங்க வழிபாடு புண்ய காலம், புண்யக்ஷேத்ரம், புண்ணிய தீர்த்தம், பிரம விஷ்ணுகள் சிவலிங்க வயத்தரானமை, சிவபூசை, யோகம், காசி மகாத்மியம், தீர்த்தமான் மியம், அத்துவிதம், திரிபுரதகனம், தக்ஷயாகம், கணபதி, கந்தர் உற்பவங்கள் அடங்கியிருக்கின்றன.

சைவம்

இது சிவமூர்த்தியைத் தெய்வமாகக்கொண்ட மதம். இது ஊர்த்வசைவம், அநாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தர சைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞான சைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபா தசைவம், வீரசைவம், சுத்தசைவம் என்று பலதிறப்படும். பின்னும் காளா முகம், காபாலம் முதலியவும் உள. அவற்றுள் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் உயர்ந்தது, அவற்றுள் ஊர்த்தசைவமாவது: சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்துவாதீனன் எனவும்; சடை, விபூதி, ருத்ராக்ஷ தாரணத்துடன் சிவபூசை செய்து பஞ்சாக்ஷரம் செபித்துச் சிவவேடம் பொரு ளாகக்கொண்டு சிவத்தைத் தியானிப்பதே முத்தி எனவும் கூறும். அநாதிசைவமாவது: பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும்; விபூதி, ருக்ராவும், சிவ வேடம் பொருளாகக்கொண்டு சிவத்தியானஞ்செய்து பாசநீங்கிச் சிவனை யடைவதே முத்தியெனவுங் கூறும். ஆதிசைவமாவது: சிவனிடத்து மோகமாய் மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும் ஒழுக்கமும் பூண்டு எல்லாஞ் சிவபோகமா யநுபவித்து விபூதி ருத்ராக்ஷ, சிவவேடத்தின்மேல் விசுவாசமாயிருந்து சிவனை யடைவதெனக்கூறும். மகாசைவமாவது: விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவமூர்த்தியைச் சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானஞ்செய்து முத்திபெறலெனக் கூறும். பேதசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ்செய்து சிவனடியார், ஆசாரியர் சிவலிங்கம் இவைகளைப் பூசித்து முத்தியடைதல் எனக் கூறும். அபோத சைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ் செய்து பஞ்சாக்ஷர செபஞ்செய்து சிவபாவனை செய்து அவனாகிறதெனக் கூறும். அந்தா சைவம்: எல்லா உயிர்க்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படி யிருத்தலை ஆராய்ந்து காடுதல் முத்தியெனக் கூறும். குணசைவம்: சிவனது எண் குணங்களையும் துதித்து அவ்வகை தியானித்துச் செயஞ்செய்து முத்தி பெறுவது. நீர்க் குணசைவம்: விபூதி, ருத்ராக்ஷதாரணஞ் செய்து பஞ்சாக்ஷரஞ் செபித்து நிர்க்குணனான சிவமூர்த்தியை அருவாகத் தியானித்தல் என்று கூறும். அத்துவாசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ்செய்த சைவன் தீதிதனால் ஷடத்துவாசோதனை செய்யப்பட்டு அவற்றின் முடிவான சிவத்தைத் தியானித்து நிஷ்டைகூடிச் சமாதியிலிருப்பதெனக் கூறும். யோகசைவம்: அஷ் டாங்கயோகஞ் சாதித்து அதின் முதலான சிவமூர்த்தியைத் தரிசித்து அஷ்டமாசித்தி பெறுவதெனக் கூறும். ஞானசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணனான சைவன் தீக்ஷிதனாய ஆசாரியன் சொன்ன வழியில் நின்று சீவபரபேதமறிந்து ஆத்மா சிவனுடன்கூட நிஷ்டை செய்து இருப்பதெனக் கூடறும். அணுசைவம்: நித்யமாயிருக்கிற சிவனை உள்ளும் புறம்புமாய்ப் பஞ்சகிருத்யமும் செய்கிறவனென்றறிந்து திகம்பர வேடங்கள் பூண்டு சன்மார்க்க லக்ஷணத்துடனே கூடிக் குருவிங்கவேடம் பொருளாயச் சிவனது கிருத்தியங்களால் மகிழ்ந்து மானாலய மடைதல் முத்தியெனக் கூறும், கிரியாசைவம்: குருவையடைந்து சமய விசேஷ தீக்ஷையும் பெற்றுப் பிறகு அத்துவாசோதனை ஆசாரியன் செய்யப்பெற்று ஆசாரியர் சொன்ன வழியில் நின்று தனக்குரிய யாகாதி சிவபூசா கார்யங்களை விடாது கடைப்பிடித்துச் சிவார்ச்சனை செய்து இன்ப மடைவதெனக் கூறும். நாலு பாதசைவமாவது: சரியை, கிரியை, யோகங்களை அநுஷ்டித்து ஞானத்தையடைந்து தீவிர தரசத்திநிபாத முடையனாய்ச் சமாதி யடைவதெனக்கூறும். சுத்தசைவமாவது: தத்துவத்திரயமாகிற பதி, பசு, பாசம் மூன்றும் அநாதிநித்யம் என்றறிந்து பதி நிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் இலயமாக நிஷ்டைகூடிச் சிவத்தை யடைவது எனக் கூறும். வீரசைவ முதலிய தனியே காண்க.

சைவலம்

சம்புகன் தவமியற்றிய கிரி

சைவாகமம்

ஆகமம் காண்க.

சைவை

அநிலன் பாரி.

சைஷர்

வேதாத்யயனம் ஆரம்பித்த மாணாக்கர்.

சொக்கநாதப்புலவர்

இவர் தொணடை காட்டிற் பிறந்தவராகத் தெரிகிறது. இவர் இளமையிற் கல்வி கற்றுக் கவி வல்லவராய்ப் பல்லக்கு முதலிய வரிசைகள் பெற்று மாவை கறுப்பனையும், மாதை வேங்கடேசனையும் பாடி வரிசை பெற்று அரிகாப்புத்திரன் என்னும் தட்டான் தன்னிடம் வாதிக்க அவனிடம் வாதிட்டு வென்றவர். இவர் சில தனிப்பாடல்கள் பாடினதாகத் தெரி கிறது. (தனிப்பாடற்றிரட்டு.)

சொக்கப்ப நாவலர்

இவர் அஷ்டாவதானம் சொக்கப்பநாவலா எனப்படுவர். இவர் தஞ்சைவாணன் கோவைக்கு உரையாசிரியர். இவர் தொண்டைநாட்டுக் குன்றத்தூரினர்.

சொக்குப்பொடி

சில மயக்கும் பொருள்களைச் சேர்த்துச் செய்யப்படும் தூள். அறிவை மயக்குவது.

சொட்டை நம்பி

ஆளவந்தார் குமரர், மணக்கால்நம்பியை ஆச்ரயித்தவர். (குருபரம்பரை)

சொட்டைக்குலத்தரசு

ஈசுரமுனிகளுக்கு ஒரு பெயர். நாதமுனிகளுக்குத் தந்தை,

சொட்டையம்மாள்

திருவரங்கப் பெருமாளரையர் பௌத்திரர், உடையவர் திருவடி சம்பந்தி, (எச்) சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், (குருபரம்பரை.)

சொன்னரதன்

இரத்தினபுரராச குமாரன்.

சொன்னவண்ணஞ் செய்த பெருமாள்

பிரமன் செய்த யாகத்தை நதி யுருவாய்த் தடுக்கவந்த சரஸ்வதிக்கு வாக்களித்தபடி யாகத்திலுதித்த சாஸ்வதிக்குத் தரிசனம் தந்தவராதலால் சொன்னவண்ணஞ் செய்த பெருமாள் என்பர். இதனைச் சைவர் சிவாஞ்ஞைப்படி வெள்ளத்தைத் தடுக்கக் குறுக்கே சென்று தடுத்தவராதலால் இப்பெயர் பெற்றனர் என்பர். (காஞ்சி~பு.)

சொருபாநந்தர்

திருவாரூர் சிவப்பிரகாசருக்கு மாணவர்.

சொர்க்கன்

தருமிக்குச் சுவர்க்கனிடம் உதித்த குமரன்.

சொற்றெடர் நிலைச் செய்யுள்

இது, ஒரு செய்யுளினிறுதி மற்றொரு செய்யுட்காதியாக வருவது.

சொல்

1. (4) பெயர், வினை, இடை, உரி. 2. ஒரு மொழியும் தொடர் மொழியும் பொதுமொழியுமாய் இருதிணை ஐம்பால் பொருளையுந் தன்னையும் வெளிப்படையாகவுங் குறிப்பாகவும் தெரிவிப்பது, அச்சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல், ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர் பாற்சொல், ஒன்றறி சொல், பலவறிசொல், தன்மைச்சொல், முன்னிலைச் சொல், படர்க்கைச் சொல், வழக்குச்சொல், செய்யுட் சொல், வெளிப்படைச் சொல், குறிப்புச் சொல், இயற்சொல், திரிசொல், பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்பன.

சொல்லணியில் ஒருவகை

பொத்தம், பிரேளிகை, விரித்து முடித்த மறைக்கலிப் பாட்டு, நரோட்டி, அலகிருக்கை வெண்பா, முண்டப்பாட்டு, உயர்மொழி, நிதரிசனம், மாறாட்டு, தோகை, திரிபாகி, கண்டகட்டு, ஒருங்கியன் மொழி, ஐயம், உயர்வு, விரவியல், கல்லவல், உருவகம், உவமை, வழிமொழிமடக்கு, தீவகம், வேற்றுமை நிலை, வெளிப்படைநிலை, நோக்கு, உட்கோள், தொகைமொழி. மகைமொழி, வார்த்தை, தன்மை, பிறபொருள் வைப்பு, சிறப்புமொழி, சிலேடை, மறுமொழி, உடனிலைக்கூட்டம், துவலா நுவற்சி, வாழ்த்து முதலிய,

சொல்லூராசிரியர் ஆண்டைப்பெருங்குமானர்

மணலூர், ஆசிரியர், புளியங்காய்ப் பெருஞ்சேந்தனாரிடம் அகப்பொருள் கேட்டவர்.

சொல்லூாக்கருங்கொற்றன்

கடைச்சங்க மருவிய புலவர். இவர் ஊர் சொல்லூர். இவர் நிறம் கறுப்பாயிருக்கலாம் போலும்.

சொல்வகை

ஒன்றைக் கூறுகையில் விரைந்து கூறலும், சொன்னதையே மேன்மேலும் சொல்லுதலும் பொய்யைப் பரக்கச் சொல்லுதலும், சொல்வதை வெகுவாய் விரித்துச் சொலுதலும் கூடாது. சொல்வதைச் சில சொற்களடக்கிக் காலத்திற் கேற்றபடி சொல்லல் வண்டும். (ஆசாரக்கோவை.)

சொவயம்வரம்

(ஸ்வயம்வரம்) இது அரச கன்னிகைகள் தாங்கள் விரும்பிய நாயகர்களை அடையப் பலர்க்கும் அறிவித்து, விரும்பியவர்க்கு மாலை சூட்டுதலாம். அச்சுயம்வரம் மூன்று வகைப்படும். அவை இச்சா சுயம்வரம், பந்தயச் சுயம்வரம்,வீர சுயம்வரம் எனப்படும். அவற்றுள் இச்சா சுயம்வரமாவது: தமயந்தியைப்போல் கன்னிகையில் விரும்பப்பட்ட புருஷனுக்கு மாலையிடுவது. பந்தயச் சுயம்வரமாவது: இராமரைப்போல் கொள்வதற்குக் குறித்த பந்தயத்தை முடித்து அக்கன்னிகையைக் கொள்வது. வீரசுயம்வாமாவது: பீஷ்ம ரைப்போல் வீர தருமத்தினால் கன்னிகையை வரிப்பது.

சொவரூபலக்ஷணம்

எது, ஒன்றிற் சிறப்பாயிருப்பதாய் மற்றவற்றினின்று வேறு பிரித்தறிவிப்பதாயிருப்பது. (தரு.)

சொஹஞ்சி

(பிர) குந்தி குமாரன், இவன் குமரன் மயிஷ்மான்.

சோகத்தூராழ்வான்

நாதமுனிகள் மாணாக்கருள் ஒருவர்.

சோகர்ணசிதலம்

ஒரு விரதம், இதை அநுஷ்டித்தவர்களுக்குப் பக்ஷ பாதங் கூரிய பாவம் நீங்கும்.

சோகாபரமானந்தர்

இவர் பாரதி என்னுமூரில் அரிநாம சங்கீர்த்தனஞ் செய்து பிச்சை யேற்றுண்டு தம்முடைய ஒழுக்கத்திற்குத் தவறுவரில் அன்று உபவாசஞ் செய்து வருநாளில், ஒருநாள் அதிக மழை பெய்து வாசல் நனையவும் தம் மொழுக்கங் குன்றாதிருத்தலக்கண்ட ஒருவன் கடைக்குச்சென்று உயர்ந்த பட்டாடை வாங்கித்தர அதை அவர் மறுத்து ஒரு கந்தல் வேண்டு மெனக் கேளாதவனாய் இடுப்பில் இவருக்கு உடுத்திச் சென்றனன் அதனால் பரமானந்தா விழுந்து நமஸ்கரிக்கின் இவ்வேஷ்டி அழுக்குறுமென்று அதின் மேல் நினைவுள்ளாராய் இரண்டு மூன்று நாள் செய்யுங் கடைமைகளை யொழித்துப் பெருமாளை வணங்காதிருக்கும் தேகத்தை வைத்திருப்பதில்லை யென்று ஊர்ப்புறத்திற் செல்லுகையில் உழவன் ஒருவன் எருதுங்கலப்பையுங் கொண்டுவரக் கண்டு அவனை நோக்கி இந்த உத்தரீயத்தை எடுத்துக் கொண்டு இந்த எருதுங் கலப்பையும் எனக்குத் தருகவென அவன் அவ்வாறி சையப் பரமானந்தர் தமதிரு கால்களினும் உழவுக் கயிற்றைக் கட்டி அக் கயிற்றை எருதுகளின் கால்களில் கட்டக் கூறின் அவ்வாறே உழவன் செய்ய எருதுக் வரை இழுத்து மலை காடு முதலிய இடங்களில் செல்லச் சோகாபரமானந்தரின் தேகமெல்லாந் தேய்ந்து உயிர் நீங்குந் தருணத்திலும் சலியாதிருத்தலைக் கண்ட பெருமாள் தரிசனம் தந்து அவரது உடம்பைத் தடவித் துன்பத்தை நீக்கிக் கருணை செய்தனர்.

சோகாமேளர்

இவர் பண்டரியிலுள்ள ஓர் புலையர். இவர் அரிபத்தி யுடையராய்க் கோயிலின் அருகுசென்று வந்தனை செய்து வருநாளில் இவரைக் கண்டோர் உனக்கு அரிபதங் கிடைக்குமோ வென்று பரிகசிக்கவும் துதித்து வருநாளில் ஒருநாளிரவில் பெருமாள் உன்னினைவினால் உன்னிடம் வந்தேன் உன்னை விடேனென் அகோயில்னுள் அழைத்துச் சென்று இரவு முழுதும் பேசியிருந்தனர். பொழுது விடிந்தபின் அர்ச்கர் இது என்ன ஆச்சரியம் யாரோ உள்ளிருக்கின்றனர் என்று கதவின் தொளைவழியாகப் பார்க்க உள்ளே புலையனிருப்பதைத் தெரிந்து அப்புலையன் இவ்விடம் வருவனோவென்று மனத்தளர்வுடன் கதவைத் திறந்து வெளிவருக வென்றனர். அர்ச்சகர் புலையனை நோக்கி நீ எவ்வகை ஈண்டு வந்தாயெனப் புலையர், பெருமாள் அழைத்தால் யான் என் செய்வேனென்றனர். அர்ச்சகர் இவ்வூரை விட்டு வெளி செல்லுகவென சோகாமேளர் அவ்வாறிசைந்து சந்திரபாகை நதியின் தீரத்தில் குடிசை ஒன்று இயற்றி அதில் பெருமாளைத் துதித்து வந்தனர். ஒருநாள் சோகா மேளர் உணவருந்து கையில் ருக்மணி நயகர் ஏன் வரவில்லை. என்மீதென்ன கோபம் என்கையில் பெருமாள் அவ்விடம் வந்து தெரிசனம் தரக் சோகாமேளர் மனைவியை நோக்கி இத்தயிரைப் பெருமாளுக்கு இடுகவென்ன அவள் தயிரைப் பரியாறினதில் சிறிது தயிர் சிதறிப் பெருமாளின் உத்தரியத்தை நனைத்தது. இதனால் சொகாமேளர் மனைவியைக் கோபிக்கும் போழ்தில் மேலிருந்த காக்கையும் பெருமாள் உத்தரியத்தில் எச்சமிட்டது. இதைச் சோகாமேளர் கண்டு எது நீயும் இவ்வகை குற்றஞ் செய்தாயென்று காகத்தை ஒட்டினர். அவ்விடத்தில் வந்த அர்ச்சகர் இச்செயல்களைக்கண்டு சோகாமேளரை நோக்கிப் பெருமாள் காட்டில் வந்து உன்னோடு உண்பரோ என்று கோபித்து அவனைக் கையினாலடித்து ஸ்நானஞ்செய்து கோயிலில் சென்று பெருமாளைப் பார்க்கையில் வஸ்திரமெல்லாம் தயிராகவும் கன்னங்கள் வீங்கியும் கண்கள் செகப்புற்று ஒளிர்வதுங் கண்டு அங்கிருந்தோரை நோக்கி இது என்னவென்று வினாவித் தாம் வரும்போது வேம்படியில் நடந்த காரியங்கள் பெருமாளுக்கு நிகழ்ந்திருக்கின்றன. ஐயனே! நீ ஜாதியற்றவனென்பதை நாங்களறியோம் நாங்கள் செய்த பிழை பொறுக்கவேண்டும் என்று பணிந்து சோகாமேளரை அடைந்து அழைத்துச் சென்று பெருமாளைத் தரிசிப்பித்தனர். அன்று முதல் சோகாமேளர் தரிசித்திருந்தனர்.

சோகிகள்

இவர்கள் ஆந்திரதேசத்துப் பிக்ஷைக்காரர், பேசுவது தெலுங்கு, இவர்கள் பன்றி முதலிய வளர்த்தும் பாம்பாட்டியும் அழுக்கு வஸ்திரதாரிகளாய் வீடுகள் தோறும் அலைந்து திரிவர்.

சோசியக்கள்ளன்

இவன் கிராமங்களிலும் வழிப்பாட்டைகளிலும் சில சக்கரங் களைப் போட்டுப் பாட்டைசாரிகளையும், ஏமாந்த பெண்களையும் வாய்ப்புரட்டால் மயக்கிப் பொருள் பறிப்பவன். உண்மையான ஜோசியனை இது குறியாது.

சோடச சுப்ரமண்ய மூர்த்தங்கள்

1. சத்திதாஸ்வாமி: ஒருமுகம் இரண்டு புஜம் வாமகரத்தில் வஜ்ரம் மற்றக் கரத்தில் வேல் தரித்தவராய் அசுரவதைப் பொருட்டெழுந்த திருவுரு. 2. ஸ்கந்த ஸ்வாமி: ஒருமுகம், இரண்டுபுஜம் உள்ளவராய் அரையில் கோவணந்தரித்தவராய்த் தக்ஷிணகரத்தில் தண் டாயுதங்கொண்ட மூர்த்தியாயுள்ளவர். 3. சேநாபதிசுவாமி: இவர் சூர்யப் பிரகாசம் உள்ளவராய்ப் பன்னிரண்டு திருக்கரங்கள் ஆறுமுகம், பன்னிரண்டு நேத்ரங்கள், உள்ளவராய்ச் கரங்கள் தோறும் கேடகம், வேல்,த்வஜம் முதலிய தாங்கப் பெற்றவராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர். 4. சுப்ரமண்ய ஸ்வாமி: செந்நிறம், சந்திரகாந்தம் போன்ற ஒருமுகம் கேயூராதி ஆபரணங்கள் தரித்தவராய்ச் சதுர்ப்புஜம் அபயவரத முள்ளவராய், வேல், சேவற்கொடி தாங்கினவராயுள்ளவர். 5. ஈஜவாஹனஸ்வாமி: ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு திருக்கரங்கள் வேல், வஜம், அடாவாதம், உள்ளவராய் யானை வாகனத்திருந்து தேவர்க்கருள் செய்தவர், 6. சரவணபவஸ்வாமி: ஆறுமுகம், பன்னிரண்டு கண்கள் பன்னிரண்டு கரங்கள், வேல்,த்வஜம், பாசம், தண்டம், டங்கம், பாணம், வாதம், அபயம், வில், உடையவராய்த் தேவரது பிரார்க்சுனை பொருட் நிச்சாவணத்தில் அவதரித்தவர். 7. கார்த்திகேயாஸ்வாமி: ஒருமுகம், ஆறு திருக்கரம் வரத, குலிச, கேடகம், வாம அஸ்தங்களிலும், அபயம், வேல், கட்கம், மற்ற அஸ்தங்களில் கொண்டு தருணரவிபிரகாசராய் ஸாதுக்களால் பூசிக்கப்பட்டவரா யிருப்பர். 8. குமாரஸ்வாமி: ஒருமுகம் நான்கு திருக்கரம் உள்ளவராய் வேல், வாள், தவஜம், கேடகம் உள்ளவராய்க் குமாரமூர்த்தி யாய்த் தியானிக்கப்பட்டவர். 9. ஷண்ழகஸ்வாமி: சிந்தூர காந்தி யுடையராய், மயில்வாகனரூடராய் ஆறுமுகமுள்ளவராய், தெய்வயானை சமேதராய், பன்னிரண்டு நேத்திரங் கொண்டவராய், வேல், பாணம்,த்வஜம், கதை, அப யம், சவ்யபாகத்திலும் மற்றப் பாசத்தில் வில், வஜ்ரம், தாமரை, கேடகம், வாதம், சூலம் உள்ளவராய்த்த்யானிக்கப்படுபவர். 10. தாரகாரிஸ்வாமி: இவர், வரதம், அங்குசம்,த்வஜம், கட்கம், வில், வஜ்ரம், அபயம், பாசம், சக்ரம், கட்கம், முசலம், சக்தி, இவற்றைப் பன்னிரண்டு கரங்களில் உடையராய்ஆறுமுகச்தோடு தாரகாசுரனைச் சங்கரித்தவர். 11. சநாநிச்வாமீ: இவர்ஆறுமுகம் பன்னிரண்டு திருக்கரங்களு முடையராய் மேற்சொன்ன ஆயுதங்களைக் கரத்திலுடையராய்த் தேவர் இடுக்கண் தீர்த்தவர். 12. பிரம்ம சாஸ்த்ருழர்த்தி: இவர் ஒருமுகம் நான்கு திருக்கரங்களு முடையராய் வாமபாகத்துக் கரங்களில் வாசும், குண்டிகையும், மற்றக்கரங்களில் ருத்ரா மாவிகை, அபயமுடையராய்ப் பிரமதேவருக்கு உபதேசத்தவர். 13. வள்ளிக் கல்யாண சுந்தரஸ்வாமி: இவர் திருக்கரங்களில் ருத்ராக்ஷமாலிகை, அபயம், குண்டிகை, வரதம், கொண்டவராய் வள்ளி நாய்ச்சியாருடன் விஷ்ணு மூர்த்தி ஜலகலசத்தில் நீர்வார்க்க ஹோமஞ் செய்யப் பட்டவராய்ச் சகல சுரர்களாலும் சேவிக்கப்ப்பட்டவராயிருப்பர். 14. பாலஸ்வாமி: இவர் குழந்தை யுருவாப் மேற்தூக்கிய இரண்டு கரங்களை புடையாய்க் கைகளில் தாமரைமலரிரண்டு கொண்டு தாமரையின் னிறங்கொண்டவராய் அம்மையப்பருக் கிடையிலமர்க் திருப்பர் 15. கிரௌஞ்சபேதனஸ்வாமி: இவர் அறுமுகம் எட்டுப்புஜங்க ளுடையவராய், அபயம், கிருபாணம், வேல், அம்பு, சல்ய அஸ்தங்களிலும், வரதம், குலிசம், வில், கேடகம், மற்ற அஸ்தங்களிலும் பெற்றுக் கிரௌஞ் சபேதனஞ் செய்தமூர்த்தி, 16. மயூரவாகன ஸ்வாமி: இவர் பவளநிறமாய் ஒருமுகம் வஜ்ரம், வேல், அபயம், வரதம், மயில்வாகனாரூடராய்த் தேவரிடுக்கண் தீர்த்தவர்.

சோடச மகாராஜாக்கள்

1. அங்கன், 2, அம்பரீஷன், 3. இரந்திதேவன், 4. சசி பிந்து, 5. சிபி, 6. சுகோதரன், 7. திலீபன், 8. பரதன், 9. பகீரதன், 10. பிருது, 11. நிருகன், 12, மாந்தாதா, 13. மருத்து, 14. யயாதி, 15. சயன், 16. இராமன்,

சோடசகணபதிகள்

பாலகணபதி, தருண கணபதி, பக்த கணபதி, வீரகணபதி, சக்தி கணபதி, தவசகணபதி, பிங்கள கணபதி, உச்சிட்டகணபதி, இரத்த கணபதி, க்ஷ்பரகணபதி, ஏரம்பகணபதி, இலக்ஷ்மி கணபதி, மகாகணபதி, விஜயகணபதி, நிருத்த கணபதி, மார்தவகணபதி. (சை~பூ.) 1. பால விக்னேச்வார்: இவர், வாழை, மா, பலா, விளா, கரும்பு முதலிய கரத்தில் கொண்டவராய் ஒருமுகம் உள்ளவராய்ப் பாலசூரியப் பிரபாகாரமாய் விளங்குவோர். 2. தருணகணபதி: பாசம், அங்குசம், அபூபம், விளா, ஜம்பூபலம், எள், புல்லாங்குழல் கையிலுடையவராய் இருமுக முள்ளவராய் மகா பிரகாசமுள்ளவாய் விளங்குவோர். 3. பக்தவிக்னேசர்: தேங்காய், மா, வாழை, சருக்கரைப் பாயசம் தரித்தவ ராய் ஒருமுகமுள்ளவராய்ச் சரத்கால சந்திரனை யொப்ப விளங்குவோர். 4. வீவிக்னேசீவரர்: வேதாளம், வேல், அம்பு, வில், கேடகம், கட்கம், கட், வாங்கம், கதை, அங்குசம், நாகபாசம், சூலம், குந்தம், பரசு,த்வஜம் தரித்தவ மாய்ச் சூரியப் பிரடை போல் விளங்குபவர். இவர் கொண்ட ஆயுதங்களுக் கொப்பு முகங்கள் கூறப்படவில்லை, ஒருமுாமே இருக்கலாம். 5. சக்திகணேசர்: தொடையில் தேவியைக் கொண்டவராய் அவளைத் தழுவினவராய் அந்திவண்ணராய் உள்ளவர். 6.த்வஜகணாதிபர்: இவர் கோர் முகம், சதுர்ப்புஜம் புஸ்தகம், ருத்ராக்ஷம், தண்டம், கமண்டலம், உள்ளவராய்ப் பிர் காசமுள்ளவராய் இருப்பர், 7, பிங்களகணபதி: இவர் மாம்பழம், ஒரு கரத்திலும், மற்றொரு காத்தில் கல்ப மஞ்சரியும், பாசு முதலிய ஆயுதங்களைக் கொண்டவராய் யானை முகத்துடன் தியானிக்கப்படுவர். 8. உச்சிஷ்டகணபதி: இவர் தாமரை, மாதுளைக்கனி, வீணாசாலிபுச்சம், அகசூத்திரம், உடையவராய் யானை முகத்துடன் தியானிக்கப்படுவர். 9. விக்கின ராஜகணபதி: இவர் பாசம், அங்குசம், மாம்பழம், கையிற் கொண்டவராய் இரத்தவர்ண முடையவராய் ஆகுவாகன ரூடராய்த் தியானிக்கப்படுவார். 10 க்ஷிப்பிர விநாயகர்: இவர் தந்தால்பம், ரத்தகும்ப முடையவராய், யானை முகம் உடையவராய் இருப்பர். 11. ஏம்ப விநாயகர்: அபயம், வாதம், பாசம், தந்தம், அகூமாலை, பரசு, ஐந்து சிரம், ஒன்று சிங்கமுகம், மற்றவை யானை முகம், கனகநிறமாகத்யானிக்கப்படுவர். 12. லக்ஷ்மிகணேசர்; இவர் தாமரையில் எழுந்தருளிராய் மாணிக்ககும்பம், அங்குசம், பாசம், செந்தாமரைபுள்ளவராய்க்கௌரவர்ண முள்ளவராய்த் தியானிச்சப் படுவர். 13. மகா கணேசர்: இவர் பத்மாசன ராய், கதை, தந்தம், பாசம், கும்பம், கௌ ரவர்ணம், சுவர்ணவர்ணமாய், யானை முகக்துடன் தியானிக்கப்படுவர். 14. புவனே சகணபதி: இவர், கரும்புவில், புஷ்பபாணம் பாசம், அங்குசம்உடை யவராய்ச் சகலாபரண மணிந்தவராய்த் தியானிக்கப்படுவர். 15. நிருத்தகணபதி: பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், கல்பதருவின்மலர், உடையராய். பொன்மேனி யுடையராய், நிருத்தபத முடையராய்த் தியானிக்கப்படுவர். 16. ஊர்த்வ கணபதி: கஜவக்த்ரம், திரிநேத்ரம், ஏகதந்தம், பாசாங்குசம், ஊர் வேபாகு, துதிக்கையில் இவட்டுசம், உடையராய்த் தியானிக்கப்படுவர்.

சோடசகிரியையாவன

1, ருதுசங்கமனம் நாயகியினது ருதுகாலத்தில் நாயகன் கூடும்படி செய்யுங் கிரியை, 2. கர்ப்பாதானம்: இது பிண்டோற்பத்தி செய்தற் பொருட்டு விவாகமான பெண் பூத்தநாள் நான்கிற்குமேல் பதினாறு நாள்களுக்குள் செய்யும் கிரியையாம். 3. பும்சவனம்: இது பிண்டம் அசைவு டைதற்குமுன்பே இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் தரித்த கரு ஆண்மகவாக வேண்டிச் செய்யுங் கிரியையாம். 4. சீமந்தம்: இது நாலாம்மாதம் முதல் ஒன்பதாவது மாதம் வரையில் அவரவர் மரபின் வழக்கப்படி செய்யுங் கிரியையாம். கருப்பத் திருத்தமில்லாத பிள்ளை விராத்தியனாம். 5. ஜாதகர்மம்: குழந்தை பிறந்து நீராடினவுடன் கொப்பூழ்க்கொடி யறுப்பதற்கு முன் செய்யவேண்டிய கிரியையாம். அதாவது புதல்வன் பிறந்த மாத்திரத்தில் தசை தரித்திருக்கிற வஸ்திரத்தோடு ஸ்நாகஞ்செய்து பொன் வெள்ளி தானியங்களைத் தானஞ் செய்தபின் பொன், தேன், நெய்சேர்த் திழைத்துச் சிசுவுக்குச் செவ்வெண்ணெய் புகட்டுதலுடன் பிதுர்க்கரூக்கு இரண்யசிரார்த்தஞ் செய்தலாம். 6. நாமகரணம்: இது பிறந்த மகவுக்கு 10 அல்லது 12, 16 வது நாள்களில் பிறந்த நக்ஷத்திரத்தைக் குறிக்கும் அக்ஷரங்களை முதலாகக் கொண்ட பெயரிடுவதாம். அல்லது பாட்டன் முதலானார் பெயரையிடுவதாம் 7. சூரியாவலோகனம்: அதாவது மூன்றாம் மாதத்தில் குழந்தை சூரியனைத் தரிசிக்கச் செய்தல். 8. நிஷ்கர்மணம்: நான்காம் மாதத்தில் குழந்தை சந்திரனைத் தரிசிக்கச் செய்தலும் சந்தியை மிதிப்பிக்கச் செய்தலுமாம். 9. அன்னப் பிசானம்: இது 6 வது அல்லது 8 வது மாதங்களில் குழந்தைக்கு அன்ன மூட்டுதலாம். பெண் குழந்தையாகில் ஒற்றைப்பட்ட மாதத்தில் செய்வதாம். 10. சௌளம் அல்லது சூடாகாணம். குழந்தைக்கு 1, 3, 5 வது ஆண்டில் மயிர்களைவது. ஏழாவது ஆண்டு அல்லது 8 வது ஆண்டில் காதுகுத்தல், 11. உபநயனம்: இது குழந்தைக்குத் தீக்ஷைக் செய்வித்தலாம். 12. பிண்ட விருத்தி: குழந்தையை வளர்க்கும் கிரியை, 13. காண்டோபக்கிரமணம்: வேதாத்தி யயனம் ஆரம்பிக்கும் கிரியை, 14. காண்ட மோசனம்: வேதாத்தி யயனம் முடித்தல், 15, சமாவர்த்தனம் பிரமசாரி விரதத்தை முடிக்குங் கிரியை, 16. விவாகம்: இது பிரமசரியம் நீங்க நற்குலத்துதித்த கன்னிகையைத் தம் மரபிற்குப் பொருந்த மணங்கொண்டு இல் லறம் நடத்தலாம்.

சோண நதம்

மேற்கேயோடும் நதி. இதற்கு மாகதி யென்றும் பெயர்

சோணபத்திரை

அங்க தேசத்திலுள்ள நதி. இதன் கரையில் சுமந்துருஷியினார் சிரமம் இருக்கிறது.

சோணபுரம்

பாணாசுரன் பட்டணம்,

சோணம்

இது ஒரு நதி, The rivor Sone; it was the western boundary of Magadha,

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

வல்லார்கிழான் பண்ணனைப் பாடியவர். (புறநானூறு.)

சோணாற்றுப் பூஞ்சாற்றுப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்

ஆவூர்மூலம் கிழாரால் பாடல் பெற்றவன். (புற~நா.)

சோணிதபுரம்

சலந்திரன் பொருட்டுச் சிவபிரானால் நிருமத்துச் கொடுக்கப் பட்ட பட்டணம். இதில் உள்ளார் ரத்தமுண்டு யோகினிகளாய் வாழத்து வந்தனர். (பாதிய புராணம்)

சோணை

1. இது காண்டவனத்தில் மைநாக பர்வதத்திற் றோன்றிக் கங்கையிற் கலக்கும் நதி. இது செந்நிறமுடையதாதலால் இப்பெயர் பெற்றது. இதில் சோண பத்திரர் எனும் விநாயகர் தோன்றுவர். இதில் சோணகுண்டம் என்பது ஒன்று உண்டு. சிந்துரன் பார்வதியார் வயிற்றிருந்த விநாயக மர்த்தியின் சிரத்தைச் சேதித்து இக்குண்டத்தி லிட்டானாதலால் இப்பெயர் பெற்றது. 2. விச்வாமித்திரர் ஆச்ரமத்திற்கும் மிதிலைக்கும் இடையிலுள்ள வேறொரு நதி. 3. சேரலாதன் மனைவி. (சிலப்பதிகா.) 4 திருவண்ணாமலை, 5. மகத்தேசத்திலுள்ள நதி,

சோதகன்

ஸ்திரீ, புருடர் நாபியை யிடமாகக்கொண்டு தீமை பேசுவிக்குந் தெய்வம்.

சோதகர்கள்

பங்காளிகளில் எழு தலைமுறைக்கு மேல் குல கோத்திரம் தெரிகிற வரையிலுள்ள ஞாதிகள். (மநு.)

சோதகை

கிராஹக தமப்பிரச்சாதகன்: விரோதியின குமரிகள். இவர்கள் ஆசாரமல்லாத இடத்தைச் சேர்ந்திருந்து தீமை புரியும் தேவதைகள்,

சோதமன்

சௌதர்மேந்திரன்; சௌதர்மமென்பது கற்பலோகம் பதினாறனுள் முதலாவது, இந்த இந்திரன் பத்திராபதியின் வேண்டுகோளால் உதயணனுக்கு மகனாகப் பிறக்கும்படி சோதவனென்னும் முனிவனுக்குக் கட்டளையிட்டனன். (பெருங்கதை.)

சோதவன்

ஒரு முனிவன். இவன் சௌதர்மேந்திரனுடைய கட்டளையால் நரவாணனாக வந்து பிறந்தவன். (பெ~கதை.)

சோதி

நகுஷன் என்னும் வசுவின் குமரன்.

சோதிகன்

கத்ரு குமரன், நாகன்.

சோதிட நூல்கள்

வடமொழியில், பார்க்கவம், கார்க்கியம், பராசரம், பாரத்வாசம், பிரகஸ்பதீயம், ஆர்ஷ்யம், பௌர்ஷ்யம், சித்தாந்த சிரோமணி, சூர்ய சித்தாந்தம், ககோள சித்தாந்தம், ஆர்யபட சித்தாந்தமெனப் பல நூல்களும் தமிழில் வீமேசுரமுள்ள முடையான், உள்ள முடையான், குமாரசுவாமீயம், சாதகாலங்காரம், சாதக சிந்தாமணி, செகராஜசேகரம், சந்தான தீபிகை, கார்த்திகேயம், அம்மணீயம், சிநேந்திரமாலை, விதானமாலை முதலிய பலவுள.

சோதிடம்

1. கிரகங்களின் ‘சசாரஞ் சொன்ன கணித நூல். 2. இது கணிதஸ்கந்தம், சங்கிதாஸ்கந்தம், சாதகஸ் கந்தம் என மூவகைப்பட்டுப் பஞ்சாங்கம் கணிக்கும்விதம்,கூறும். சங்கி தாஸ்கந்தம் சகல திரியைாட்கு கன்னாள் தீநாட்களைக் கூறும், சாதகல்ந்தமாவது கிரகங்களைப்பற்றிய பலா பனங்காயும் யோகங்களையும் கூறும்.

சோதிநீர் ஏரி

ஆப்பிரிகாகண்டத்துப் பாமா தீவிலுள்ள வாடாலூ ஏரியினீரின் மேற்பாகம். எக்காலத்தும் ஒரேசோதிபபமாய்க் காணப்படுகிறதாம். இதில் தீபாக்னி சத்துண்டென்பர்.

சோதிமரம்

தென் அமெரிகாவைச் சேர்ந்த பிரேசில் நாட்டில் உள்ள ஒருவகை மரம். இராக் காலங்களில் பெருஞ்சோதியாகப் பிரகாசிக்கின்றதாம். இந்தியாவில் சிற் சில இடங்களில் இவ்விதமாம் உண்டு,

சோதிமலர்

ஸ்வீடன் தேசத்துக் காடுகளில் ஒரு செகப்பும் பொன்னிறமுமான ஒருவகை மலர் புட்பிக்கிறதாம். அது இரவில் சோதியாகப் பிரகாசிக்கிற தென்பர்.

சோதிமான்

இவன் மகவுவேண்டிச் தவமியற்றிப் பெண்மகவுபெற்றுச் சோதிட ரால் இந்த மகவின் பிறப்பு, தேசத்திற் கரிட்டமென வறிந்து பெட்டியிலிட்டு ஆற்றில் விட்டனன். தற்செயலாய் மகவடங்கிய பெட்டி மயனிடமகப்பட்ட உடன் பேழையைத் திறந்து மகவிருப்பது கண்டு தீர்க்க சுமங்கலியாக என ஆசீர்வதிக்கக் கேட்ட மகவு நான் கன்னிகை, என் பிறப்பு நாட்டிற்கு அழிவென்று தந்தையால் ஆற்றில் இடப்பட்டேன் என, மயன் என் தவத்தால் மாங்கல்யத்துடன சந்திரமதியெனப் பிறக்க, என அவ்வாறே அம்மகவு தீக்குளித்து மதிதயன் குமரியாய்ப் பிறந்து அரிச்சந்திரனை மணந்தனள்.

சோதிமாலை

1. திவட்டன் புதல்வி. 2. மேகவாகனன் புதல்வி. அருக்க கீர்த்தியின் மனைவி.

சோதிமின்னல்

ஐப்பசி மாதம் சோதி நக்ஷத்திரத்தில் சூரியன் வரும் நாளில் கிழக்கில் மின்னினல் மழையுண்டு.

சோதிலிங்கம் பன்னிரண்டாவன

சௌராட்டிரத்தின் சோமநாதலிங்கம், ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ச்சுனலிங்கம், உச்சயினியில் மாகாளலியை, ஓங்காரலிங்கம, ஹிமவக்கிரியில் கேதாரலிங்கம், டாகினியில் (டெக்கான்) பீமசங்கரலிங்கம், வாரணாசியில் விச்வேச்வரலிங்கம், கோதாவரி தீரத்தில் திரியம்பகலிங்கம், சிதாபுரம் (பரலே) வைத்யநாதவிங்கம், தாருகா வனத்தில் நாகேச்வரலிங்கம், சேதுவில் இராமேச்வரலிங்கம், சீவாலயத்தில் குச்மேசலிங்கம் என்பனவாம்.

சோதிவிருக்ஷம்

இது இராக்காலங்களில் பிரகாசத்தைத் தருவதாம். இவ்வகையில் சோதிப்புல் என ஒன்று உண்டென்பர்.

சோத்திரதாமா

நாலா மன்வந்தரத்து இடி.

சோத்ஸாகாலி

சந்தர புத்ரி, வருணன் புத்திரனான புட்கரன் தேவி, (பார~உத்.)

சோநகரம்

வாணகான் பட்டணம்,

சோனகம்

ஆரிய நாட்டுக்கு மேற்கின் கணுள்ள நாடு.

சோனை

வச்சிர நாட்டைச் சார்ந்த ஆறு. (சிலப்பதிகாரம்.)

சோபஞ்சி

சநாசித்துக்கு ஒரு பெயர்.

சோபனன்

குந்தநகரத்து வேதியன், ஒரு வேதியனை வணங்கித் தன் வறுமைகூறி அவ்வேதியன் சொற்படி நந்தவனம் வைத்துச் சுவர்க்கமடைந்தவன்,

சோபனம்

ஒரு வித்யாதர நகரம்.

சோபனை

ஆயுதமகாராசன் பெண், இவள் பாச்சித்தை மணக்கையில் நான் நீர்விளையாடேன் அப்படி நேரிடுகையில் உன்னை விட்டு நீங்குவேன் என்று அவனுடன் சிலநாளிருந்து ஒருமுறை நீர்விளையாடுகையில் மறந்து தந்தையால் கொடிய குமரர் பிறக்கச் சாபம் பெற்றவள். இவள் குமரர் சலன், வலன், நலன்.

சோபாகன்

சண்டாளனுக்குப் பங்கஜாதி ஸ்திரியிடம் பிறந்தவன். இவன் தொழில் அரசனுத்தரப்படி கொலைசெய்வது. (மநு.)

சோபாரோகம்

நரம்புகளில் வீக்கம் உண்டாகி வாந்தி, தேகபாரிப்பு, ஊதல், அதைப்பு, உண்டாகும். இதனைச் சோகை யெனவும் கூறுவர். இது விஷம் தேகத்தில் ஊறுதலாலும், மலைவாசம், நீர்க்கரை வாசம், சாம்பல் மண் முதலிய தின்பதால் உண்டாம். இது வாதசோபை, பித்தசோபை, சிலேஷ்மசோபை, வாதபித்தசோபை, வாதசிலேஷ்மசோபை, சிலேஷ்மபித்த சோபை, திரிதோஷசோபை, அபிகாத சோபை, விஷசோபை முதலாக நிசசோபை; ஆகந்துக் சோபை என்பன. இவை நீர்ப்பேதி, அடைகயாயம், சங்கபாயஸம், சாலாபாவனமேஷமுத்ரம், குடமண்ரேம் முதலியவற்றால் வசமாம்,

சோம சூடாமணி பாண்டியன்

வம்சவிபூவன பாண்டியனுக்குக் குமரன்.

சோமகன்

1. பாரதவீரரில் ஒருவன், (சங்கமனம்சம்) புத்திரன் துருபதன், பாஞ் சாலதேசாதிபதி, 2. கிருஷ்ணமூர்த்திக்குக் காளிந்தியிடத்துதித்த குமரன், இவற்கு ஒன்பதின்மர் தம்பியர். 3. சகதேவன் குமரன், இவனுக்கு 100 குமரர் சேஷ்டன் சகந்தகிருது. (சுசன்மகிருது) 4. பிரமன் உறக்குகையில் வேதங்க ளைத் திருடிச்சென்று விஷ்ணுமூர்த்தியால் கொலையுண்ட அசுரன். 3. ஒரு அரசன், இவன் குமரன் சக்தன். இவன் இந்தக் குமரன் போதாமல் ஆசாரியரை வேண்ட ஆசாரியர் சந்தனைப் பசுவாக்கி யஞ்ஞம் செய்தனர். அதனால் இவனுக்கு 100 குமாரர் பிறந்தனர். இவன் சகதேவன் குமானா யிருக்கலாம்.

சோமகர்

ஒரு மகருஷி, இவர்க்கு யமுனையில் அர்க்கதந்தர் எனும் முனிவர் பிறந்தனர்.

சோமகாந்தன்

1, சௌராட்டக தேசத்தரசன், இவன் தேவி சுதன்மை, இவன் குமரன் எமகண்டன். இவ்வரசன் தொழுநோயால் அரசைப் புதல்வனிடம் ஒப்புவித்துப் பிருகு முனிவர் ஆச்சிரமஞ் சென்று தன்குறை கூற முனிவர் அரசனை நோக்கி நீ முன்பிறப்பில் சித்து ரூபன் என்னும் வைசியனுக்குச் சுலோசனையென்னும் தேவியிடம் காமந்தன் என்னும் பெயருடன் குடும்பினியென்பவளை மணந்து பஞ்சமகா பாதகங்களைச் செய்ய அரசன் நாட்டை விட்டகற்ற நீங்கிவனத்திற் சென்று ஒரு வேதியனைக்கொன்று பிரம கத்தியால் பிடியுண்டு வார்த்திகப்பருவத்தில், ஒருவேதியனுக்கு நீ அபகரித்த பொருளைத் தானஞ் செய்து மீண்டும் வேதியரை அழைக்க அவர்கள் உன்னிடம் தானம் வாங்காது திருப்பணிசெய்யக் கட்டளையிட அந்தப் புண்ணிய பலத்தால் அரசனாய் அது நீங்கிப் பாபபலம் அநுபவிக்கும் காலம் வந்தமையால் தொழுநோயால் துன்புறுகின்றனை யென்றனர். அரசன் நம்பாமையால் அவனிடமிருந்து அநேக கரிக்குருவிகள் தோன்றி அரசனை வருத்தின. அரசன் அஞ்சி அபயம் செய்ய இருடி, கமண்டல நீரை அவன் மீது தெளிக்க அவனுடலிலிருந்து ஒரு பூதம் தோன்றி நீ முற்பிறப்பில் என்னைக் கொன்றனை; உன்னை விடேன் என இருடி அதனையு மடக்கி நோயை நீக்க நற்பதம் பெற்றவன். 2. இவன் கௌடதேசாதிபதி, இவன் குமரன் வம்சவிவர்த் தனன், இவனற்குண நற்செயலுடையனாயினும் கர்மத்தால் மகோதரவியாதி பெற்று வில்வாரண்யமடைந்து சிவ பூஜையால் நீங்கப்பெற்றவன்.

சோமகுண்டம்

காவிரியின் சங்கமத்திலுள்ள தீர்த்தம். (சிலப்பதிகாரம்.)

சோமகேசன்

ஒரு பாரதி வீரன்.

சோமசமஸ்தம்

அக்ரிஷ்டோமம், அத்ய்க்னிஷ்டோமம், உத்தியம், சோடசி, அதிராத்ரம், அப்தோரியாமம், வாஜபேயம் என்னும் யாகபேதங்கள்.

சோமசருமன்

1. அக்செருமனைக் காண்க. 2. சோமநாதத்தில் திருக்கார்த்திகை யில் சிவதரிசனஞ் செய்யச்சென்று சந்திதானத்துத் திருவிளக்குக் கீழ்வீழ்ந்து அவிழ்ந்து போகக்கண்டு சும்மாவிருந்து மறுபிறப்பில் பேயாயினவ. 3. சாபமாமுனிவனுக்குத் தந்தை. 4. சாலிலூகன் குமரன், இவன் குமாரன் சாத்தனுவன்.

சோமசிரவசு

ஜநமேஜயன் புரோகிதன்.

சோமசீதளமகாராசன்

காசியிலாண்ட பௌத்த அரசன், இவன் குமரன் உக்ர சீதளன்.

சோமசுந்தர பாண்டியன்

மலையத்துவச பாண்டியன் தவத்தால் திருவவதரித்த தடாதகைப் பிராட்டியாரென்று திருப்பெயர்கொண்ட பார்வதிபிராட்டியாரைத் திருமணஞ்செய்ய எழுந்தருளிய சிவமூர்த்தியிச்சையாற் கொண்ட திருவுரு. இவர், தடாதகைப் பிராட்டியாரைத் திருமணஞ் செய்துகொண்டு அம் மணக்கோலர் தரிசிக்கவந்த பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்கள் பொருட்டு வெள்ளியம்பலத் திருநடன தரிசனம் தந்து, திருமணத்தில் தேவ இருடியர் உண்டு மிகுந்த பொருள்கள் அதிகப்பட்டிருப்பதைத் தேவியார் திருவாய்மலரத் தமது குடையாளாகிய குண்டோதரனுக்கு அன்னமிடச் செய்து, அவை பற்றாமையால் இருந்த மற்றப்பாக மாகாதவைகளையும் உண்டு பசிதீராது வருந்தியவனுக்கு அன்னக்குழி அருளி, சீர் வேட்கையால் வருந்தி அவன் ஏரி, குளம் முதலிய வறள உண்டும் பற்றாது வருந்தக் கண்டு வைகையை வருவித்தவர். தடாதகையாரின் தாய் கடலாட விரும்பிக் குமரியுடன் கூற அம்மையார் நாயகர்க்குக் கூறச் சிவமூர்த்தி ஏழு கடலையும் இறந்த காஞ்சனமாலையின் கணவனையும் வருவித்துக் கடலாடச்செய்து உக்கிரகுமார பாண்டியனைப் பெற்று அவனுக்குத் திருமுடி சூட்டி வேல், வளை, செண்டு அருளி, அவற்றைக் கடல், இந்திரன், மேரு இவர்களின் மேல் எறியக் கட்டளை தந்து திருக்கோயிலில் எழுந்தருளி (64) திருவிளையாடல் புரிந்தவர்.

சோமசுந்தரமூர்த்தி

பாணபத்திரர் பொருட்டுப் பாண்டியன் பொன்னறை யிடத்துள்ள பொருள்களையெல்லாங் கொடுத்துப் பிறகு கொடுக்க இல்லாமையால் சேரமான் பெருமாளிடம் திருமுகப்பாசுரம் “மதிமலி புரிசைமாடக் கூடற்பதியிசை நிலவும் பானிறவரிச்சிறை, பன்னம்பயில் பொழிலாலவாயின், மன்னியசிவனியான் மொழி தருமாற்றம், பருவக்கொண் மூஉப்படியெனப் பாவலர்க், குரிமையினுரி மையி னுதவ யொளி திகழ், குருமாமதி புரை குலலிய குடைக்கீழ்ச், செருமாவுகைக்குஞ் சேரலன் காண்க. பண்பால் யாழ் வல பாணபத்திரன், மன்போலென்பாலன் பன்றன்பால், காண்பது கருதிப் போந்தனன், மாண்பொருள் கொடுத்துவர விடுப்பதுவே” என்று வரைந்துகொடுத்துக் கனவிடை செரமானுக்கும் கட்டளை தந்து பாசுபத்திரரை யனுப்பிப் பொருள் கொடுப்பித்தவர். 2. செண்பகமாறன் தன் மனக் கருத்தைத் தெரிவிக்கும்படி பொற்கிழி தூக்கிப் புலவர்களைக் கேட்கப் புலவர்கள் பலரும் பலவாறு பாட அரசனது எண்ணம் சரிவராமையால் தருமி எனும் சிவவேதியர் தமக்கு அப்பொருளைக் கொடுப்பிக்கும்படி வேண்டச் சோமசுந்தரக்கடவுள் “கொங்கு தேர் வாழ்க்கையஞ் சிறைத்தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின், மயிலியற் செறி யெயிற்றரிவை கூந்தலி, னறியவுமுள வோ நீயறியும் பூவே” என்னும் திருப்பா சுரந்தரப்பெற்று அதனைப் பாண்டியனுக்குக் காட்டப் பாண்டியன் களிப்புற்றுப் பொற்கிழிதா இருக்கையில் நக்கீரர் இப்பாட்டில் குற்றங்கூறத் தரும் இறைவனி டம் குறையிரக்க இறைவன் புலவர்போற் சங்கத்திற்சென்று அங்கம் வளர்க்க அரிவாளி னெய் தட்விப், பங்கப்பட விரண்டு கால்பரப்பிச் சங்க தயார், சீர்ரென வறுக்குள் கீரனோ வென்சவியைப், பாரிற் பழுதென்பவன்” எனக்கூறக்கேட்ட நக்ககீரர் மறுவிடைதர அவரைச் சங்கப்பலகையினின்று நெற்றிக் கண்ணெருப்பால் பொற்றாமரைத்தீர்த்தத்தில் விழ வீழ்த்தி அவர், அபராத க்ஷமையாகக் கைலைபாதிகாளத்தி பாதியந்தாதி பாடி வேண்ட அருள் செய்து இலக்கணம் அகத்தியரிடம் வாசிக்கக் கட்டளை செய்தவர்.

சோமசுந்தாபாதசேகரன்

இவன் வங்கிய பாத பாண்டியனுக்குப் பின் அரசு செய்தவன், சோழனை மடுவில் வீழ்த்தியவன்.

சோமசுவாமி

ஒரு வேதியன், இவன் ஒழுக்கம் நீங்கி மதங்கியைப் புணர்ந்து வடவருத்தில் முத்தி தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து சோமவாரதினம் விரதமிருந்து இறந்து யமபடரினீங்கி முத்தியடைந்தவன்.

சோமசேகர பாண்டியன்

மனவூர் அன்னும் பாண்டிநாட்டரசன், உக்கிரகுமார பாண்டியனுக்குத் தன் குமரி காந்திமதியை மணஞ் செய்வித்தவன்,

சோமச்சிரவம்

ஒரு புண்ணிய தீர்த்தம், இதனருகில் பாண்டவரை அங்காரவரு ணன் என்னும் காந்தருவன் பயமுறுத்த அருச்சுனன் அவனை யெதிர்த்து யுத்தம் சரிந்தனன். பின்பு அந்தக் காந்தருவன் சித்திரரதன் என்று பெயர் வைத்துக் கொண்டு அருச்சுநனிடம் நட்புக்கொண் டனன்.

சோமச்சிரவஸன்

சுருதச்சிரவசுவின் குமரன்.

சோமதத்தன்

1, பிருசாசுவன் குமரன், இவன் அநேக யாகங்களைச் செய்தான். 2. குசாசுவன் குமரன், இவன் குமரன் காகுத்தன். 3. பூரிச்சிர வனுக்குத் தந்தை, பாகுலிகன் குமரன், இவன் சிநியைக் கொல்லச் சிவனையெண்ணித் தவமியற்றிப் பெறாது அவன் சந்ததியாரைக் கொல்ல வரம்பெற்றவன். இவன் குமரர் பூரி, பூரிசிரவசு, சலன்,

சோமதீர்த்தம்

கூர்ச்சர தேசத்திலுள்ள பிரபாஸ் தீர்த்தம், இதில் சந்திரன் ஸ்நானஞ்செய்து தக்ஷசாப விமோசன மடைந்தனன்.

சோமதேவன்

வருணனுக்கு இரதம், அம்புப்புட்டில் முதலிய கொடுத்தவன். இவன், பவனிடம்பெற்ற தேரால் அசுரரைச் செயித்தனன்.

சோமதை

சூளியின் தேவி, இவன் குமரன் பிரமதத்தன்.

சோமநந்தி

1, உமாதேவியார் கௌரியாகத் தவஞ்செய்கையில் வந்த அசுரன், பிராட்டியைக் கண்டு ஞானோதயமடைந்து பணிந்து திருவடியில் தவமுடியும் காலம் வரைக்காத்திருந்து பிராட்டியார் சி பெருமான யடைய அவருடன் கைலையடைந்து நந்தியுடன் காக்குந்தொழில் பூண்டு கணநாதனைவன். இவனுக்குப் புலியுரு. (சிவமகாபுராணம்). 2. சிவகணத்தலவரில் ஒருவர். கைலா யத்தில் கானஞ்செய்பவர். (சிவாஹஸ்.)

சோமநாதம்

கூர்சாரத்திலுள்ள சிவத்தலம், சந்திரனுக்கு சயரோகங் நீங்கவருளிய திருத்தலம்,

சோமன்

1 பிரசாபதிக்கு மநஸ்வதியிடம் பிறந்தவன், இவன் மனைவி மனோகரி, குமாரர் புரோசனன், வர்ச்சிகன், சிசிரன், பிராமணன், வருணன், பெண் பிரதை. இவளுக்கு 10 காந்தருவர் கணவராயினர். 2. வசுக்களில் ஒருவன். 3. சந்திரன். 4. சண்ழகசேநாலீரன், 5. அக்நிமுகனுக்குச் சேநாபதி. 6. இவன் வேதியன் காமத்தால் இழிகுலப் பெண்களைப் புணர்ந்தவன். தேவி சுசீலை, இவள் நல்லொழுக்கமுள்ளவள், (காவிரி புராணம். 7. தினகரராஜ புத்திரனாகிய இவன் விளையாடிக் கொண்டிருக் கையில் ஒரு வித்வான் கைகொட்டியழைக்க இவன் தன்னிடம் வித்வான் யாசிக்கிறதாக எண்ணித் தலையிலணிந்திருந்த சுட்டியைப் பிடுங்கிக் கொடுத்தவன். இதனைத் தினகர வெண்பாவிற் “கையை விரித்தழைக்கக் கண்டு குழந்தை சோமன், செய்ய சுட்டியீந்தான் தினகரா, பையவே, தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலிற் றோன்றாமை என்று பின்னும் நிழலருமை வெய்யிலிலே நின்றறி மீனீசன், கழலருமை வெவ்வினையிற் காண்மின், பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை, புல்லரிடத்தே யற மின் போய்” எ.ம். கூறியிருக்கிறது. 8. திரிபுவனம் எனும் ஊரிலிருந்த ஒரு பிரபு. திரிபுவனம் திருவிடைமருதூர்க்குப் போகும் வழியில் திருநாகேச்சுரத்திற் கருகிலுள்ளது. இவர் ஒட்டக்கூத்தரை கொல்லவந்த இனத்தாரினின்று தப்புவித்தவர், கர்ணபரம்பரை,

சோமபன்

இராஜருயஞ்செய்யத் தகுதியுள்ளவன்.

சோமபர்

1, பிரமன் சபையிலுள்ள தேவர், பித்ருக்னக்காண்க. 2. இவர்க்கு ரேனுகை, ரேனுகன் இருவரும் தாமரைலிருந்து பிறந்த புத்ரர். (பார~அநு.)

சோமமகாராஜன்

இந்த அரசனுக்கு (100) தேவியர். மூத்தமனைவிக்கு மாத் திரம் குட்டதோய்கொண்ட ஒரு குமரன் உண்டு, மற்றவர்க்குப் புத்திரபாக்கியம் இலாததைக்கண்ட அரசன் விசனமடைந்து ஒரு முனிவ டஞ்சென்று தங்குறை கூறி யாசித்தனன். இருடி, அந்த மூத்த மனைவியின் புத்திரனாகிய குட்டரோகியை யாகத்தில் வகிர்ந்து தேவர்களுக்கு அவி தந்தனர். அதனால் நூற்றுவருக்கும் கருவுண்டாயித்து, யாகஞ் செய்வித்த முனிவர் சிசு அத்தி தோஷத்தால் நரகமடைந்தனர். அரசன் இறந்து சிசு அத்தி செய்ததால் நரதெரிச்னம் செய்து நல்வழி அரசு செலுத்தியதால் சுவர்க்கம்புக இருக்கையில் அங்குத் தனக்கு யாகஞ் செய்வித்த முனிவரைக்கண்டு விசனமுற்றுக் காரணம் வினவுமுன் சிசு அத்திதோஷங் கூற அரசன் நன்றி மறவாது யமனையடைந்து தன் புண்ணியத்தில் பாதி கொடுத்து முனிவரை நரகத்தனின்று சுவர்க்கம்புகச் செய்தவன்.

சோமமுனிவர்

திருமூலர் மாணாக்கரில் ஒருவர். (திருமந்திரம்.)

சோமம்

யஞ்ஞத்தில் உபயோகப்படுத்தும் ஒரு கொடி விசேஷம்.

சோமரோகம்

துக்கம், ஆயாசம், மிகுசையோகத்தால் மூத்ரம் அதிகரித்துக் கீழ் வயிற்றில் சேர்ந்து அடிக்கடி நீரிறங்கும். இதனால் தேகம் சந்திரனைப் போல் வெளுக்கும். நாளுக்குநாள் பலவீனமாய் முகம், கன்னம், உதடு மூன்றும் சுஷ்திக்கும். அதிதாகம், நாவறட்சியுண்டாம்; இது சந்திரனைப் போல் தேகத்தை வெளுக்கச் செய்ததால் சோமரோகம் எனப் பெயர். இதனை வாழைப்பழ ரஸாயனம், சீந்தில், சர்க்கரை முதலியவற்றால் வசம் செய்ய வேண்டும்.

சோமலதை

இது ஒருவகைக் கொடி. இது காச்மீரதேசத்துக் கணவாயிடத்திலும், பூனாவின் காட்டுப் பிரதேசங்களிலும் வளருகிறது. இது கொடிக்கள்ளியைப் போன்று வெண்மையான பூங்கொத்துக்களைப் பெற்றிருக்கிறது. சிறிது காரமுள்ளதாகவுமிருக்கிறது. வேதத்திற் கூறப்பட்ட சோமபானப்பூண்டு இது என்றே கூறுகின்றனர்.

சோமவாரவிரதம்

இது கார்த்திகை மீ திங்கட்கிழமை விடியல் ஸ்நான முதலிய செய்து சிவபூசை முடித்து வேதிய தம்பதிகளைச் சிவமூர்த்தி யாகவும், பிராட்டியாகவும் பாவித்துப் பூசை முடித்து அவர்களுக்கு அன்ன முதலிய உதவிச் சிவமூர்த்திக்குப் பஞ்சாமிர்தத்தால் அபிஷேக முதலிய நடத்தி உபவசித்தலாம். இது சந்திரன் சிவமூர்த்தியை யெண்ணி விரதமிருந்து சோமன் என்னும் பெயரும் சடையினின்று நீங்காதிருக்கும் வாழ்வும் அடைந்த நாள், இதை அநுட்டித்தோர் சீமந்தினி முதலியவர்;

சோமவாரவிரதம்

இது சிவபிரான் விரதம். இதனைச் சோமவாரங் தோறும் அநுட்டித்தல் வேண்டும். இது பிராம்மண தம்பதிகளை உமாம கேசராகப் பாவித்துப்பூஜித்து அவர்க்கு உணவாதிகள் அளித்து விரதம் இருப்பது. சீமந்தினியைக் காண்க, இது கார்த்திகை முதலிய மாதங் களிலிருந்து தொடங்கல் வேண்டும்.

சோமவ்வை

உற்படரைக் காண்க.

சோமாசிமாறநாயனார்

சோணாட்டில் திருவம்பரென்னுந் தலத்தில் சிவ பக்தி சிவனடியவர் பக்தியிற் சிறந்து சிவ வேள்விகள் செய்து திருவாரூரடைந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தொழுது அவரிடம் அன்பு டையவராய்ச் சிவபதம் அடைந்தவர். (பெ~புராணம்.) கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.

சோமாசியாண்டான்

எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், மேனாட்டில் இருந்தவர். (குருபரம்பரை.)

சோமாபி

சகதேவன் குமரன், இவன் குமரன் சுருதசிரவசு.

சோமாஸ்கந்தம்

சிவமூர்த்தியும் உமையும் கந்தமூர்த்தியுடன் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.

சோமி

ஆற்றூரிலிருந்த ஒரு தாசி, தமிழில் வல்லவளாயிருந்தவள். காளமேக் அபுலவரால் பாடப் பெற்றவள்.

சோமுகன்

1, சிவபூதகணத்தவரில் ஒருவன். 2. அக்நிமுகன் சேநாபதியரில் ஒருவன விரமாபுரந்தரனால் மாண்டான்.

சோம்கேயாதிகள்

பாஞ்சாலன் படைத்துணைவர்.

சோம்பிதம்

விச்சுவரூபன் சிரத்திலொன்று. இது கபிஞ்சலப் பறவையாயிற்று,

சோற்றில் எண்வகைத் தோஷங்கள்

அஸ்திரிதம், பிச்சளம், அசுசி, குவதிதம், சுஷ்மிதம், தக்தம், விரூபம், அநர்த்துசம், (1) அஸ்திரிதம்: கஞ்சி சுற்றிக்கொண்ட அன்னம் இதைப் புசிக்கின் ஆமயரோகம் உண்டாம. (2) பிச்சனம்: அளிந்த அன்னம், இதையுண்ணின் குன்மரோக முண்டாம். (3) அசுசி: புழு, மயிர் முதலிய கூடிய அன்னம். இதைப் புசிக்கின் வாய்னீர் ஒழுகலுண்டாம். (4) குவதிதம்: நருக்கரிசிபட்ட அன்னம் இதைப் புசிக்கின் அசீரண ரோகமுண்டாம். (5) சுஷ்மிதம்: சிறிது வெந்தும் மிகவேகாதது மான அன்னம் இதனால் இரத்த பீடன் ரோகமுண்டாம். (6) தக்தம்: காந்தின அன்னம் இதைப் புசிக்கின் இந்திரியநாச முண்டாம். (7) விரூபம்: விறைத்த அன்னம் இதையுண்ணின் ஆயுட்க்ஷணம். (8) அநாத்துசம்: பழைய சாதம் இதையுண்டால் அதிநித்திரை சீதாதிரோகங்களுண்டாம்.

சோலையப்பன்

இவர் முத்துக்கிருஷ்ண பூபாலர் குமரர். இவர் கொடையாளர் புலவர்க்குக் கொடுத்துப் புகழ் பெற்றவர். இவரை சவ்வாது புலவர், அலையான் கவடுபடா னாருடனுங்காயான், இலையென்பதோர் நாளுமில்லை கவநேர்ந்த, சாலை முத்துகிருஷ்ணனருள் சற்குணரித் தாம ணியைச் சோலையென்று சொன்னவரார் சொல் எனப்பாடினர்.

சோளசிம்மபுரம்

தூற்றெட்டுத்திருப்பதிகளில் ஒன்று. இதில் எழுந்தருளிய பெருமாள் அக்காரக்கனி அழகியசிங்கர்

சோளசூடாமணி பாண்டியன்

மதுரையாண்ட 58 ஆம் பாண்டியன்.

சோளம்

இது ஒருவித தான்யம், பருத்து மஞ்சளாயும் செவந்தும் உருட்சியா யுள்ளது. இத்தானியங்கள் வரிசையாக முத்துப் பதித்ததுபோல் ஒரு கதிரில் தோன்றி அழகாயிருக்கும். இதன் மாவினை ஆகாரமாகப் பதஞ்செய்து உண்பர், இது வடஅமெரிக்கா, தென் ஜெர்மனி, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதலிய இடங்களில் பயிரிடப்படுகிறது.

சோளீசர்

இராமதேவர் மாணாக்கர்

சோழ அரசர்கள்

சோழநாடு தென்னிந்தியாவில் ஒரு பெரும்பாகம். சோழர்கள் தென்னிந்தியாவின் கீழ்ப்பாகத்தையும், பாண்டியர்கள் தென்பாகத்தையும், சேரர்கள் மேல்பாகத்தையும் ஆண்டனர். இவர்கள் அசோகர் காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று கிரீக் சரித்திரக்காரர் கூறியிருக்கின்றனர். A. D. 2ம் நூற்றாண்டில் உறையூர் இவர்களுக்கு இராஜதானியாக இருந்தது. 7ம் நூற்றாண்டில் மலைக் கூற்றம் (கும்பகோணம்) இராஜதானியாக இருந்தது. 10ம் நூற்றாண்டில் தஞ்சா வூர் இராஜதானியாக இருந்தது. டாக்டர் பர்னல் உன்பவர் 10ம் நூற்றாண்டில் கங்கைகொண்ட சோழபுரம் இராஜதானியாக கூறுகிறார். சோழர்களுக்குப் புலிக்கொடி இது பல்லவர்களிடத்திலிருந்து பிடுங்கிக் கொண்டது. இராஜராஜன் காலம் முதற் கொண்டு சோழ வம்சம் தெரியவரினும் (A. D. 1023ல்) இராஜராஜன் காலத்துக்கு முன்னிருந்த சோழர்களைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. Lovis Rice என்பவர் கூறுகிறபடி இராஜராஜனுக்கு முன் மைசூருக்குக் கிழக்கில் பின் வரும் சோழர்கள் அரசாண்டதாகக் கூறப்பட்டுள்ளது. 1. ஆதித்தியவர்ம ராஜேந்திர சோழன் A. D. 867~927. 2, வீரசோழ நாராயணராஜன் 927~977. 3. தாசோத்தியராயன். 4. பராந்தகராய அரிமாலி, 5. திவ்விய ராஜன் அல்லது தேவராய சோழ அரசர்கள் 6. அரிவரிதேவன் அல்லது திரிபுவன வீரதேவசோழன் 986 to 1023. இந்தச் சோழர்சள் டாக்டர் பர்னல் கூறு கிறபடி A. D. 850~1023 இந்தியாவின் வடபாகத்திலும் அரசாண்டார்கள் சோழர்கள் அரசாட்சி B C. 250ல் இருந்ததாக அசோகன் சாளனத்தினால் தெரிகின்றது. பாண்டியர்கள் அரசாட்சிக்கு முற்பட்டதாகத் தெரிய வருகிறது. எவ்வாறெனில் சோழர்களுடைய பெண்ணைப் பாண்டிய நாட்டை ஸ்தாபித்த முதல் பாண்டியன் மணம் புரிந்ததாகத் தெரிகின்றது. சிங்கள சரித்திரகாரர்கள் B. C. 247ல் சோழர்கள் இலங்கையை எதிர்த்து அதை (44) வருஷம் ஆண்டதாகக் கூறுகிறார்கள் அதற்கு (100) வருஷத்திற்குப் பிறகு மறுபடியும் படையெடுத்தனர். மூன்றும் படையெடுப்பு A, D. 110 சிங்களர் சோழராஜ்ஜியத்தின் மேல் A. D. 113 படை யெடுத்தார்கள். அதுவன்றியும் சோழனோடு பகைத்த பாண்டியனுக்கு உதவியாக 10ம் நூற்றாண்டில் ஒரு பெருஞ் சேனையை அனுப்பினர். இதில் பாண்டியன் தோல்வி யடைந்ததால் சோழர்கள் மீண்டும் சிங்களத்தின்மேல் படையெடுத்து அபஜயப்பட்டார்கள். ராஜராஜன் காலத்தில் கிழக்குச் சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் சம்பந்தம் இருந்தபடியால் வேங்கநாடும் கலிங்கநாடும் சோழராஜ்யத்தைச் சேர்ந்தன. இராஜராஜன் இலங்கையை அரசாண்ட 4 வது மிகுண்டுவின் அதாவது 1023 A. D. காலத்தவன் என்று தெரிகின்றது. இராஜ இராஜன் A, D, 1059 இலங்கையின் மேல் படையெடுத்து ஜெயித்து மிகுண்டுவைச் சிறைப்படுத்தினான். இராஜராஜேந்திரசோழன் அல்லது குலோத்துங்க சோழன் A. D. (1064~1113) இவன் மிக்க பராக்கிரமுள்ளவன். தன்னுடைய அரசாட்சியை ஒரிஸ்ஸா வரையில் பரவசெய்து பாண்டிய அரசாட்சியைத் தன்வசப்படுத்திப் பல்லவர்களைக் காஞ்சியிலிருந்து துரத்தினான். (11)ம் நூற்றாண்டில் வங்காளத்தை செயித்தான். சோழர்கள் முதலாவது சோமேஸ்வரன் காலத்தில் மேற்குச் சாளுக்கியர்களை நாசம் செய்தார்கள். அநேக ஜைனர்களுடய கோயில்களை இடித்துத் தகர்த்தனர். குலோத்துங்க சோழனுக்கு 1 வீரன் ராஜேந்திரசோழன் (2) கோப்பரகேசரி வர்மன், கோவிராஜகேசரிவர்மன் என்று பெயர்கள் உண்டு. இவன் ஆகவமல்லன் சோமேஸ்வரதேவன் என்னும் மேற்குச் சாளுக்கிய அரசனைத் துங்கபத்திரைக்கு அருகில் வென்றான். இவன் விக்கிரம பாண்டியன் குமாரனாகிய வீரபாண்டியனைச் செயித்து இவன் சகோதரனாகிய கங்கைகொண்ட சோழனை மதுரைக்கு அரசனாக்கினான். இவன் தந்தை இறந்த பின் சில காலம் இலங்கையைத் தன் வசப்படுத்தி வைத்திருந்தான். மிகுண்டுவின் குமரனாசிய கசியபன் சோழப் பிரதிநிதியை இலங்கையி லிருந்து ஒட்டித் தானே அரசனாயினான். கசியபன் இறந்த பிறகு இலங்கை அரசு மந்திரியாகிய வோசேஸ்வரன் குமரன் விஜயபாகு 1 என்பவனால் கவரப்பட்டது. விஜயபாகு சோழர்களைத் துன்பப்படுத்தியதால் குலோத்துங்கன் விஜயபாகுவின் தூதனை மூக்கையும், காதையும் அறுத்து அனுப்பினான். இதனால் ஒரு போர் உண்டாயிற்று. சோழர்கள் சிங்கள நாட்டிற்குள் புகுந்து மாந்தோட்டியில் இறங்கி ராஜதானியைய பிடித்துக் கொண்டார்கள். அரசன் புறங்காட்டி ஓடினான். சோழர்கள் நகரத்தை நாசப்படுத்தினர். விஜயபாகு மீண்டும் படையெடுத்துச் சோழரை இலங்கையிலிருந்தும் துரத்தினான். குலோத்துங்கன் 1 Died. 11. 13. அவன் குமரன் விக்கிரம சோழன் காலத்தில் சிங்களர் படையெடுத்துவர விக்கிரம சோழன் அவர்களைத் துரத்தி அடித்தான். ஆதொண்டை சக்கிரவர்த்தி: இவன் குலோத்துங்க சோழன் I பிள்ளையென்று கூறப்படுகின்றன. இவனுக்குக் கரிகால சோழன் என்றும் பெயர், சாரங்கதரன் என்பவன் குலோத்துங்கனுடன் 1 கூட பிறந்தவன் என்று கூறுவதன்றியும் அப்பகாவியம் என்று அப்பகலியினால் இயற்றப்பட்ட தெலுங்கு இலக்க ணத்திற்கு உரையெழுதிய நன்னயபட்டர் சாரங்கதரனை ராஜராஜன் குமரன் என்று கூறியிருக்கின்றனர். இது சாரங்கதான் சரித்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றது, இது நம்பதக்கது அன்று, இந்தச் சாரங்கதரன் கேசரி வம்சத்தைச் சேர்ந்தவனாகக் கானப்படுகிறது. சிங்கள சரித்திரத்தின்படி பராக்கிரம பாகு (1153~1186) குலசேகரபாண்டியன் எதிர்த்து ராமேச்வரத்திற்கு அருகிலுள்ள நாடுகளைக் கைப்பற்றிக் குலசேகர பாண்டியனைச் சிம்மாசனத்தை விட்டு நீக்கி அவன் குமரன் வீரபாண்டியனைன் சிம்மாசனம் ஏற்றினான். நீக்கப்பட்ட குலசேகா பாண்டியன், சோழர்கள் உதவியால் சிங்களரை எதிர்த்துத்தோற்றான். இதில் சோழ நாட்டின் சிலபாகம் சிங்களர் வசமாயிற்று, குலசேகரன் சிங்களரிடம் சரண் அடைந்தான், மறுபடியும் அவனைச் சிம்மாசனத்தில் ஏற்றினர். ஜெயிக்கப்பட்ட சோழநாடு வீரபாண்டியன் வசமாயிற்று.

சோழநாடு

கடல் கிழக்கு, வெள்ளாறு தெற்கு, கோட்டைக்கரை மேற்கு, எணாடு வடக்கு இருபத்து நாற்காதம் எல்லையாகக் கொண்ட பூமி “கடல் கிழக்குத் தெற்குக்கரை பொருவெள்ளாறு, குடதிசையிற் கோட்டைக் கரையாம்; வடதிசையில், ஏணாட்டுப்பண்ணை யிருபத்து நாற்காதஞ் சோணாட்டுக்கெல்லையெனச் சொல்” என்பதால் அறிக. இது காவிரியால் வளம் பெற்று அநேக சிவாலய விஷ்ணுவாலயப் பிரதிஷ்டைகளுடைய புண்ணிய பூமியாம்,

சோழநாட்டுப் பிடவூர் கிழார்மகன் பெருஞ்சாத்தன்

1. இவன் வேளாளரில் உழுவித் துண்போன், முடியுடை வேந்தர்க்கு மகட் கொடை நேர்தற்குரியன். 2. இவன் வேளாளன். மதுரை நக்கீரரால் பாடல் பெற்றவன். (புற~நா.)

சோழனும் தேவியும்

காடுமீனம்படக் கண்டநங்கண்டன் வேற், கோடுமேயுந்து றைத்தொண்டியிக்கோனகர், தேடுநடுங் கொடிதெரிய நாழய்யவம், தாடுமேபாடுமே யன்னமேயின்னமே” இது தேவி பாடியது. மலையிலும் கானினும் போயினார் வருவரே, முலையின் மேற் பசலைபோய் முதனிறங் கொள்ளுமே, துலையிலங்கிய கொடைச்சோமன் வாழ்பு வனையில் தலையிலங்கிய நடத்தன்னமே யின்னமே இது சோழன் பாடியது.

சோழன்

இச்சோழன் மேற் சொன்ன சோழநாட்டை ஆண்டவன், துஷ்யந்தன் பேரனாகிய ஆச்சிரதன் குமரன். இவன் முதலாகச் சோழவம்சம் உண்டாயிற்று, இந்த வம்சத்தில் கரிகாற் சோழன் செண்டு சாத்தாவிடம் பெற்று இமயத்திலெறிந்து புலிக்குறி நாட்டினான். ஒரு சோழன் பசுவின் கன்றின்மேல் தேர்விட்டதற்காகத் தன் குமரனைக் கொன்றான். இவர்களது கதைகளைத் தனித்தனி காண்க, ஒரு சோழன் சிவமூர்த்திக்கு முந்நூற்றறுபது கலம் சம்பா அரிசி நிவேதித்து வேண்ட அவன் களிக்கச் சிவபெருமானுண்டனர்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

தேர்வண்மலையனைத் துணையாகக்கொண்டு சேரமான் மாந்தரஞ் சேரலிரும் பொறையோடு பொருது அவனை வென்றவன் உலோச்சனாரால் பாடல் பெற்றவன், ஔவையாராலும் பாடப் பெற்றவன், பாண்டரங்கண்ணனாரால் பாடல் பெற்றவன். (புற~நா.)

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

இவன் சிறந்த வீரன், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமானபாற் பாடப் பெற்றவன். (புற~நா)

சோழன் உருவப்பஃறே ரிளஞ்சேட்சென்னி

பாணரானும் பெருங்குன்றூர்க் கிழாராலும் பாடப் பெற்றவன். கரிகாற் பெருவளத்தானுக்குத் தந்தை, அழுந்தூர் வேளிடை மகட்கொண்டான், (புற~நா.)

சோழன் கரிகாற்பெருவளத்தான்

இவன் சோழன் உருவப்பஃநேரிளஞ் சேட்சென்னி புதல்வன், நாங்கூர் வேளிடை மகட்கொண்டோன். தம்முள் மாறுபட்டு வந்து நியாயங் கேட்டோர் இருவர், இவன் இளையனென்று கூறியது நோக்கி நரை முடித்துத் தன்னை விருத்தன்போற் காட்டி நியாயங் கூறியவன். இளமையில் நெருப்பாற் சுடப்பட்டவன். தான் கருவூரிலிருக் கையில் கழுமலமென்னும் ஊரிலிருந்த யானையாற் கொண்டுவரப்பட்டு அரசாட்சிக்குரிய வனாயினவன் இரும்பிடர்த் தலையார்க்கு மருமான். கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலைக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தவன். இவன் மீது முடத்தாமக் கண்ணியார் பொரூநராற்றுப்படை பாடிப் பரிசு பெற்றனர். சேரமான் பெருஞ்சேரலாதனுடன் பொருதுவென்றவன், இவனைக் கரிகாலன் என வும், சோழன் கரிகால் வளவன் எனவும், கூறுவர். கரிகாற்சோழன் ஒருவன் இவனுக்குப் பின் இருந்ததாகத் தெரிகிறது. (புற~நா.)

சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன்

ஆலத்தூர்க்கிழாராலும், ஐயூர்முடவனாராலும், எருக்காட்டூர் தாயங்கண்ணனாராலும் பாடல் பெற்றவன். (புற~நா.)

சோழன் செங்கணான்

இவனே கோச்செங்கட்சோழன் என்பர். இவன் ஒரு சோழன் சேரமான் கணைக்காலிரும்பொறையைச் சிறை வைத்துப் பொய்கையார் களவழி நாற்பது பாட விடுதலை செய்தவன். இவன் திருமங்கையாழ்வார் காலத்தவன் என்பதைப் பெரிய திருமொழி (6) ஆம் பத்தாலறிக. ஆதலால் இவன் காலம் சற்றேறக்குறைய 4600 சில்லரை வருஷமாகிறது. (புற~நா)

சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட்சென்னி

ஊன்பொதி பசுங்குடையரால் பாடல் பெற்றவன். (புற~நா.).

சோழன் நலங்கிள்ளி

ஆலத்தூர் கிழராலும், உறையூர் முதுகண்ணன சாத்தனாரா லும் பாடப் பெற்றவன். இவன் ஆற்றலுடையான் எனவுங் பொதுமகளிரை விரும்பாதவன் எனவும், வரையாது கொடுக்கும் வள்ளல் எனவும், கூறுப. இவன் பாண்டி நாட்டிலிருந்த ஏழரண்களை அழித்துக் கைக்கொண்டு அதில் தன் கொடியை காட்டினவன், மாவளத்தானுக்குத் தமயன், இவனுக்குச் சேட்சென்னி எனவும், புட்பகை எனவும், தேர்வண்கிள்ளி எனவும், பெயர், நெடுங்கிள்ளியுடன் பகை கொண்டோன் பலவரசருடன் போர் செய்தலைப் பொருளாகக்கொண்ட இவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லால் அதனைத் துறந்து அறமேற்கொண்டான். (புற~நா.)

சோழன் நலங்கிள்ளி தம்பிமாவளத்தான்

தாமப்பல் கண்ணனாராற் பாடப் பெற்றவன். (புற~நா.)

சோழன் நல்லுருத்திரன்

இவன் ஊக்கமுள்ளாரிடம் விருப்பும், மடிகளிடம் வெறுப்பும் உள்ளவன். இவனுக்குச் சோழன் நல்லுத்தான் எனவும் பெயர் கூறுவர். (புற~நா).

சோழன் நெடுங்கிள்ளி

இவன் செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மான் சோழன் மணக்கிள்ளியின் மகனுமானவன். இவன் உறையூர்ச் சோழரில் ஒருவன். இவன் காரியாற்றில் கிள்ளி வளவனுடனும் நலங்கிள்ளியுடனும் செய்த போரில் இறந்தனன். ஆதலால் இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யெனப் பெயர்.

சோழன் நெய்தலங்கான லிளஞ்சேட் சென்னி

ஊன்பொதி பசுங் குடையரால் பாடல் பெற்றவன். சேரமான் பாழளூ ரெறிந்த நெய்தலங் கானல் இளஞ்சேட்சென்னிக் கொரு பெயர். (புற~நா.)

சோழன் புலவன்

பாண்டியன் போரிற் புறந்தந்தோடுவது கண்டு கூறியது. “மான பான பயன்வந்தானென வழுதி, போனவழி யாரேனும் போவாரோ, ஆனால், படவே யமையாதோ பாவியே னிந்தக், குடைவேலுடை நுழைந்தகோ” வசை பாடிய புலவனை மதுரையிற் பாண்டியன் கண்டு ழனியப் பின்னுங் கூறியது. “இலங்கிலை வேற்கிள்ளி யெதிர்மலைந்த அந்நாட், பொலங்கலனும் பொன்ழடியுஞ்சிந்த. நிலங் குலுங்க, ஒடினர் மேலோ வுயர் தாள வொண்குடையாய், பாடினா மேலோ பழி’ கம்பனைக் கொன்றானென்று பழிகூறலின் பாண்டியனிடத்துச் சோழன் விட்ட புலவன் முடி சூட்டு மங்கல்நாள் பாடிய வசை பாண்டியரிற் பாண்டியரிற் பாழான பாண்டியரிற், ஈண்டிரென விட்ட வெழுத்தல்ல; பூண்ட திருப், போகவென்றும் வேற்றூர் புகுதவென்று நீயிவண்விட், டேகவென்று மிட்ட வெழுத்து இது கேட்டுப் பாண்டியன் நன்றாகவே பொருள் கண்டு பொருள் கொடுக்கப் புலவன் மறுத்தான்.

சோழன் பெருங்கிள்ளி

சோழன் நெடுங்கிள்ளியின் மகன், உறையூர்ச் சோழன். இவனுக்கு விரோதமாக இவன் ஜாதியார் கலகம் விளைக்க இவன் மலையமானது முள்ளூர் மலையில் ஓடி ஒளித்தனன், இவனை அந்த ஆபத்தில் காத்தவன் மலைய சோழன் பெருந்திருமாவளவன் மான்மகன் திருக்கண்ணன். இவனுக்கு நேர்ந்த ஆபத்தைச் செங்குட்டுவன் கேட்டு விரைந்து வந்து பகைவர் ஒன்பதின்மரை நேரிவாயிலில் வென்று தன்னம்மான் மகனாகிய இவனைப் பட்டத்திருத்தினன். இவன் பின்னர் இராஜசூயம் வேட்டு இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியெனப் பட்டான். இவனும் கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்து விழா நடப்பித்தான்.

சோழன் பெருந்திருமாவளவன்

இவன் குராப்பள்ளியிலிறந்தவன். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரால் பாடப்பட்டவன்.

சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

இவன் தித்தன் என்னும் சோழன் மகன். முக்காவனாட்டு ஆமூர்மல்லனைப் பொருது வென்றான், சாத்தந்தை யாரால் பாடல் பெற்றான். இவன் தன் தந்தையுடன் பகைத்து நாடிழந்து வறுமையடைந்து புல்லரிசிக் கூழுண்டிருந்தவன். (புற, நா)

சோழன் மணக்கிள்ளி

சேரன் செங்குட் இவனுக்குத் தாய்ப் பாட்டன். இவன் உறையூரிலிருந் தாட்சி புரிந்தவன். சோழன் நெடுங்கிள்ளியின் தந்தை.

சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கள்ளி

உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரால் பாடப் பெற்றவன். சேரமானந்துவஞ் சேரலிரும் பொறையோடு பகைமையுடை யவன். (புற. நா)

சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி

சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனுடன் பொருது கழாத் தலையாரால் பாடப்பெற்றவன். (புற. நா)

சோழன்குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திரு மாவளவன்

உறையூர் மருத்துவன் தாமோதரனாரால் பாடப் பெற்றவன். பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியுடன் நட்புடையான். (புற~நா.)

சோழர்கள்

இவர்கள் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு அரசாண்டு வந்தவர்கள். சோணட்டை அரசாண்டவர்கள். இது இவர்களுக்குக் குடிப்பெயர். தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தருள் முதல்வர். இம்மூ வேந்தர்களின் அரசு, (பெடலாமி) கூறியபடி A D இரண்டாம் நூற்றாண்டிலும், (பெரிப்லஸ்) மூன்றாம் நூற்றாண்டிலும் இருந்ததாகக் கூறுவர். சோழர்களது ராஜதானி இரண்டாம் நூற்றாண்டில் மேலைக் கூற்றம். (கும்பகோணம்) பின்னர் மூன்றாம் நூற்றாண்டின் கரூர் இராஜதானியாயிருந்தது. ஏழாம் நூற்றாண்டில் தஞ்சை இராஜதானி யாயிற்று. சோழ ராட்சியம் முதலில் நாகர் எனும் ஒருவித காட்டுச்சாதி யாரால் ஆளப்பட்டு வந்தது. அவர்கள் பட்டணம் நாகப்பட்டணம் (உரகபுரம் எனப்பட்டது. பிறகு அவர்கள் யோட்டி இவர்கள் அரசாண்டார்கள். இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாடு (பொடாலமி) கூறியபடி நாமதர் எனும் ஜாதியாருக்கு நாடாயிருந்தது, A. D ஏழாம் நூற்றாண்டில் ஹூயூன்ஸங் கூறியபடி காஞ்சி ஒரு சிற்றரசாயிருந்தது. இக்காஞ்சி ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் மேலைச்சாளுக்கியரால் செயிக்கப்பட்டது. (8)ம் நூற்றாண்டில் சோழர்களால் செயிக்கப்பட்டது.

சோழவம்ச சரித்திரம்

(கோபிநாதராவ் கூறியபடி) சோழர்கள், சற்றேறக்குறைய (4) ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்டிருந் தனர். அவர்களுக்குட்பட் டுப் பலர் சோழநாட்டை ஆண்டிருந்தனர், இந்தச் சோணாட்டரசர் (6) ஆம் நூற்றாண்டில் அரசாண்டனர், (8) ஆம் நூற்றாண்டின் மத்தியில் பல்லவ வம்சத்தவனாகிய பாமேசுர போத்தரசனிறந்தான், இவனுக்குப்பின் நந்திவர்மபல்லவ மல்லன் அரசாண்டான். இவனைத் தமிழ்நாட்டாசர்களி னுதவியால் சித்திரமாயன் எனும் பல்லவன் எதிர்த்தான், பிறகு நந்திவர்ம பல்லவனை எதிர்த்தனர். உதயசந்திர னெனும் படைத்தலைவன் அவனை விடுவித்தான். இந்தக் காலழதல் (கி~பி. 760) தமிழ் நாட்டரசர் தலையெடுத்தனர். இவர்களில் ஒருவருக் கொருவர் பெண் கொடுக்கும் சம்பந்தம் உண்டு (கி. பி. 862) பட்டம் தரித்த வரகுண பாண்டியன் தாய் ஒரு சோழன் மகள், இவர்கள் நிருபதுங்கனெ னும் பல்லவனையும் அவன்கீழ்ச் சிற்றரசனான பிரதிவிபதி (I) என்னும் அரசனையும் வென்றனர். அக்காலத்தரசாண்ட தமிழரசர் விஜயாலயன் மகன் ஆதித்தசோழனும், பாண்டியன் மாறஞ்சடையனும், வரகுண பாண்டியனுமாம். இவர்களில் ஆதித்தன் நிருபதுங்கனைச் செயித்துச் சோணாட்டின் ஒரு பகுதியைப் பற்றினான். வரகுணன் திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பிரதிவிபதியைக் கொன்றான். இக் காலமுதல் 13 வது நூற்றாண்டு வரையில் சோழராஜ்யம் உச்சம் பெற்றிருந்தது. இச் சோழவம்சத்தில் அடிக்கடி எடுத்துக் கூறப்படுவார் பராந்தகன், இராஜ ராஜன், இராஜேந்திரன். இவர்கள் மூவர்கள் இவர்கள் சந்ததியாரும் இப்பெயரால் வழங்கப் படுகிறார்கள்.

சோழவம்சாந்தக பாண்டியன்

இரிபு பாமர்த்தன பாண்டியனுக்குக் குமரன்

சோழவாணிபமகருஷி கோத்ரன்

ஒரு வைசியகுலத் தலைவன். சிபிச்சக்கிர வர்த்தி யாகஞ் செய்த காலத்தில் அதை விக்னஞ் செய்யப் புறாவுருக்கொண்டு வந்த இந்திரன் பொருட்டுத் தசை நிறுக்கத் தராசிட்டு நிறுத்தவன்,

சோழிக ஏனாதி

நெடுழடிக் கிள்ளியின் மந்திரியரில் ஒருவன், (மணிமேகலை)

சோழிய ஏனாதிதிருக்குட்டுவன்

கோனாட்டு எரிச்சலூர்மாடலன் மதுரைக்கு மானாரால் பாடப்பட்டவன். (புற. நா)

சோழிய வேளாளர்

1. இவர்கள் சோழ நாட்டு வேளாளர். இவர்கள் நற்குடி 4000 பசுங்குடி 12000, 60000. இவர்கள் சோழ நாட்டிலிருந்து நிலந்திருத்தியும் உழுதும் உழுவித்தும் அரசர்க்கு அமைச்சு முதலிய தொழில் பூண்டும் இருந்தவர்கள். 2. இவர்கள் வேளாளரில் ஒருவகையாக எண்ணப்படுகின்றனர் பண்டாரங்களும், மடத்துத் தம்பிரான்களும், ஓதுவார்களும் இவர்களைச் சேர்ந்தவர்கள், (தர்ஸ்டன்)

சோவனர்

ஒரு வீரசைவர், இவர் சிவ கரிசனமாலாது அன்ன முண்னாமை யறிந்த சமனர், இவரைத் தங்கள் இருப்பிடத்துக் கொண்டு போய் ஜின்னைச் சிவமூர்த்தியென்று வணங்கச் செய்தனர். இவர் நோக்கம் பட்டதும் ஜைன விக்கிரகம் பொடியாயிற்று,

சோஷணன்

இவன் பிரகலாதனைக் கொல்ல இரணியகசிபுவால் அனுப்பப்பட்ட அசுரன். இவன் மாயையால் பிரகலாதன் உள்ளிற் புகுந்து வாட்ட விஷ்ணு அவன் உளத்தில் தேன் அழதம் பொழிந்து அசுரனை இளைக்கச் செய்தனர். (மச்சபுரா.)

சௌகந்திகம்

குபரனது உத்தியான வனத்திலுள்ள மடு. இதிலுள்ள பூவொன்றைத் திரௌபதி, நதியில் கண்டு விரும்பி வீமனைக்கேட்க வீமன் அவ்விடஞ் சென்று கொண்டுவந்து கொடுத்தனன்.

சௌகீஷவ்யன்

காசி க்ஷேத்திரத்தில் நிஷ்காமிய தவஞ்செய்து அஷ்டமாசித்தி யடைந்தவன். (சிவமகா புராணம்).

சௌதாசன்

இவன் ஓர் அரசன். வசிட்ட சாபத்தால் அரக்கனானவன் இவனே கல்மாஷபாதன் இவனுக்கு மித்ரசகன் என மற்றொரு பெயர். இவன் கங்கா தீர்த்தமாடிச் சுத்தனானான். பிரகந்நாரதீய புராணம். (பார~அச்.)

சௌத்தராந்திகன் மதம்

புத்தரில் பேதவாதி. இவன் உருவம், ஞானம், வேதனை, குறிப்பு, வாசனை என்பன தொடக்குறுதல் பந்தம் அவை முற்றும் அழிதல் மோக்ஷம் என்பன்.

சௌத்தி

ரோமகிருஷ்ணர் புத்திரனாகிய உக்கிரசிரவன். இவனால் நைமிசாரண்ய வாசிகளுக்கு மகாபாரதம் சொல்லப்பட்டது (பந்ர, ஆதி.)

சௌத்திராமணி

துருபதன் பாரியை. இவளுக்குக் கௌசவீத்தி என்று மற்றொரு பெயர்.

சௌத்ராமணி

இந்தர பிரீதியாகச் செய்யப்படும் யாகங்களில் ஒன்று. இது மூலிகைகளைக் கிள்ளுதலால் வடிந்த ஒருவித கள்ளை (கௌடீ, பைஷ்டீ, ஆவா, மதிரா, மதயம்) எனும் கள்ளுகள் அல்லாத கள்ளை கிரகா எனும் பாத்திரத்திற்கொண்டு ஓமஞ் செய்து அந்தச் சேஷத்தை ஆசமனஞ் செய்து முடிப்பது. சோமபானஞ் செய்வது போல் சுராபானஞ் செய்தலாகாது. (பார தம்மா.)

சௌநகர்

பிருரு முனிவர் மனைவியை அரக்கன் தூக்கிச்செல்லுகையில் அவன் தோளில் பிறந்தவர். இவர் தவமேற் கொண்டு புற்றிலிருந்தபோது, யயாதி அல்லது சையாதியின் குமரியால் கண் குத்துண்டு யயாதியின் குலத்தவர்க்குக் கண்போகச் சாபந்தந்து அக்கன்னிகையைச் சையாதி தர மணந்து அவற்கு அநுக்கிரகித்தவர். இவர்க்குச் சநகன், இருசிகன் முதலிய நூறு குமரர். இவர் சையா திக்கு யாகஞ்செய்வித்து அச்வதிதேவர்க்கு அவிகொடுக்க இந்திரன் இவர்மேல் சினந்து வச்சிரமெறிந்தனன். இதனால் முனிவர் கோபித்து இந்திரனைக் கை தம்பிக்கச் செய்து யாகத்தில் பூதமொன்றைச் சிருட்டித்து ஏவ இந்திரன் பயந்து வேண்டப் பொறுத்தவர். குசன் வீட்டில் (42) நாள் உறங்கிக் குசனுக்கு வரங்கொடுத்தவர். பாகீரதியில் (12) வருடம் தவஞ் செய்து செம்படவர் வலையில் அகப்பட்டுத் தன்னை விற்கச் சொல்லினர். செம்படவர் நகுஷனுக்கு விற்க நகுஷன் ஒரு பசு தந்தனன். செம்படவர் பசுவை ருஷிக்குத் தானஞ் செய்தனர்; அதனால் அவர்களையும் தம்மொடு வலையில்வந்த மீன்களையும் சுவர்க்கமடை வித்தவர். இவரைச் சுநகர் புத்திரர் எனவுங் கூறுவர். இவர் மாணாக்கர் ஆசுவலாயநர், இவரை நாயினிடம் பிறந்தவர் என்பர்.

சௌநந்தை

வத்சந்திரன் தேவி.

சௌந்தன முனிவர்

ஓர் இருடி.

சௌந்தர்யலகரி

கவிராசபண்டிதர் மொழி பெயர்த்த தோத்திரப்பா.

சௌனம்

சுன்ஹன் நிருமித்த பட்டணம்.

சௌபகன்

உருக்கிரமனுக்குக் கீர்த்தியிடம் பிறந்த குமரன்,

சௌபங்கம்

சிவாஞ்ஞையால் மயனால் நிருமிக்கப்பட்டுச் சாளுவனுக்குக் கொடுக்கப்பட்ட விமானம்.

சௌபத்திரன்

சுபத்திரையின் புத்திரன்.

சௌபத்ரதீர்த்தம்

தென்கடற் கருகிலுள்ளது. சேமங்களைத் தரவல்லது. இதில் வந்தை என்பவள் அநேகநாள் முதலையாக இருந்து அருச்சுநனால் அது நீங்கினள்.

சௌபம்

சாளுவராஜனுடைய விமானம். நினைத்த இடம் செல்லும். (பாவ.)

சௌபரன்

ஒரு அக்னி.

சௌபரி

சவுபரியைக் காண்க.

சௌபலன்

நகுலனால் கொல்லப்பட்ட துரியோதனனது நண்பன். இவன் குமரன் சகுநி.

சௌபலி

காந்தாரிக்கு ஒரு பெயர்.

சௌபாக்கியசயனவிரதம்

சித்திரை மாதம் சுத்ததிரிதியை பூர்வான்னத்தில் உமாமகேச்வா விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது.

சௌபாடசோமையர்

இவர் வீரசைவ அடியவர். குட்டவ்வையைக் காண்க.

சௌமனஸம்

மேற்குத் திக்கில் பூமியைத் தாங்கி நிற்கும் திக்கு யானைகளில் ஒன்று,

சௌமினி

ஒரு பார்ப்பினி, இவள் மணங் கொண்டு சிலநாள் கணவனுடன்கூடிச் சுகித்திருந்து கைம்மையாய்க் கள்ளப்புணர்ச்சி செய்து கருவடைந்தனள், இதையறிந்த சுற்றத்தார் ஊரைவிட்டு நீக்க ஒரு வேளாளனைக்கூடிக் கள் குடித்து, வெறியால் ஆட்டினிறைச்சி தின்ன எண்ணி இருளில் பசுவின் கன்றை ஆடெனக் கொன்று விளக்கெடுத்துப் பார்க்கையில் பசுவின் கன்றாயிருக்கச் சிவசிவ என்று கூறி அதனைத் தின்றனள். வேற்றூர்க்குச் சென்ற கணவன் வந்து கன்றைக்கேட்கக் கன்றைப் புலி கொன்றதெனச் கூறிச் சிலநாளிருந்து இறந்தனள், நமன், இவளை நரகத்திலிடாது மணங்கொள்ளாத புலைச்சியாக என அவ்வகை பிறந்து தாய் தந்தையர் ஊன், கள் முதலிய உண்பிக்க உண்டு வளர்ந்து தாய் தந்தையர் இறக்கத் திக்கற்றவளாயினள். இவள், பிச்சையின் பொருட்டுச் சிவராத்திரி தரிசனத்திற்குக் கோகரணஞ் செல்வாருடன் கூடிச் சென்றனள். அவ்விடம் பிச்சைகேட்டுக் கொண்டிருக்கையில் ஒருவன் வில்வத்தை இவள் கையிலிட அவ்வில்வத்தை இவள் புறத்தில் எறிந்தனள். அவ்வில்வம் அவ்விடமிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அதனாலும், அந்தச் சிவராத்திரி முழுதும் ஆகாரமின்றி யிருந்ததனாலும், பனியால் ஸ்நானஞ் செய்ததாலும், பாபம் நீங்கி முத்திபெற்றனள்.

சௌமியன்

1. ஏகாதசருத்திரரில் ஒருவன். 2. புட்கரதேசத்தரசன். இவன் தேவி வசுமதி. இவன், தன் மனைவியைவிட்டுத் தீயொழுக்க முள்ளவனா யிருத்தலை மனைவி அறிந்து தன் ஆசாரியன் தேவி சத்திய விரதைக்குக் கூறினள். அந்தச் சத்திய விரதை, இவளுக்கு ருத்ராக்ஷ மகத்துவம் கூறிருத்ராக்ஷம் புனைவித்தனள். இதனால் சௌமியன் வீடு தங்கித் தன்தேவியிடம் காலஞ்ஞானி, சித்ராங்கனையென இரண்டு குமரிகளைப் பெற்றவன். அந்தக் குமரிகள் இருவருள் காலஞ்ஞானி யென்பவளைத் தாமரைக் கண்ணன் என்பவன் மனந்தனன், இத்தமாரைக் கண்ணன், தன் தேவியை நெருங்குகையில் காலஞ் ஞானி, நீர் ருத்ராக்ஷமணியாததால் உம்மைத்தொடேன் என்று நீங்கினள், தாமரைக் கண்ணன், தன் மனைவியை நோக்கி அவ்விடமெழுதியிருந்த விஷ்ணுவின் பிரதிமையைக் காட்டி இப்பிம்பம். ருத்ராக்ஷ மான்மியம் கூறுமேல் நான் புனைகிறேன் என்றனன். அப்படியே காலஞ்ஞானி விஷ்ணுபிம்பத்தால் உருத்திராக்ஷ மான்மியம் கூறுவித்துக் கணவனை உருத்திராக்ஷம் புனையச் செய்து கலந்தனள். ஒழிந்த சித்ராங்கனை வியூதனை மணந்து அவனுக்கு உருத்திராக்ஷதாரணஞ் செய்வித்து நாயகனுடன் முத்திபெற்றனள்.

சௌமியம்

ஒரு புராணம்.

சௌமியர்

அக்நியபிமான தேவதைகளாகிய நாற்பத்தைம்பதின்மர்.

சௌம்பகம்

சிவாஞஞையால் மயன் சாளுவனுக்குக் கொடுத்த விமானம்.

சௌரசேநி

சூரசேந்தேசத்துப் பாஷை

சௌரபேயன்

தீர்க்க தமனுக்குக குரு. (பாரதம்~ஆதி.)

சௌரபேயி

1. வந்தையைக் காண்க. 2. ஒரு அப்சரஸ்திரீ, நாரீதீர்த்தம் காண்க.

சௌரமானம்

சூரியனை முதலாகக்கொண்டு கணிக்கும் வானசாத்திர அளவு,

சௌரம்

சூரியனைக் குறித்துக் கூறும் உபபுராணம்.

சௌரயானி

சூரியனுடைய குடும்ப சம்பந்தப்பட்டவன்.

சௌராட்டிரம்

ஒரு தேசம் (சூரட்) என்பர்

சௌரி

1. சங்கமன் என்னும் அரசன் காக்கும் யமபுரி வழியிலுள்ள பட்டணம். இதில் ஆன்மா மூன்றாமாசிக பிண்டத்தை யுண்பன். 2. கண்ணனுக்கு ஒரு பெயர். 3. வத்சந்திரன் குமரன். 4. பிரசக்தி குமரன்,

சௌவீரம்

1. சுவீரன் ஆண்ட தேசம், 2. ஒரு தேசம், Sawire the Country between the Indus and the Zbelum.