ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சொக்கநாதப்புலவர் | இவர் தொணடை காட்டிற் பிறந்தவராகத் தெரிகிறது. இவர் இளமையிற் கல்வி கற்றுக் கவி வல்லவராய்ப் பல்லக்கு முதலிய வரிசைகள் பெற்று மாவை கறுப்பனையும், மாதை வேங்கடேசனையும் பாடி வரிசை பெற்று அரிகாப்புத்திரன் என்னும் தட்டான் தன்னிடம் வாதிக்க அவனிடம் வாதிட்டு வென்றவர். இவர் சில தனிப்பாடல்கள் பாடினதாகத் தெரி கிறது. (தனிப்பாடற்றிரட்டு.) |
சொக்கப்ப நாவலர் | இவர் அஷ்டாவதானம் சொக்கப்பநாவலா எனப்படுவர். இவர் தஞ்சைவாணன் கோவைக்கு உரையாசிரியர். இவர் தொண்டைநாட்டுக் குன்றத்தூரினர். |
சொக்குப்பொடி | சில மயக்கும் பொருள்களைச் சேர்த்துச் செய்யப்படும் தூள். அறிவை மயக்குவது. |
சொட்டை நம்பி | ஆளவந்தார் குமரர், மணக்கால்நம்பியை ஆச்ரயித்தவர். (குருபரம்பரை) |
சொட்டைக்குலத்தரசு | ஈசுரமுனிகளுக்கு ஒரு பெயர். நாதமுனிகளுக்குத் தந்தை, |
சொட்டையம்மாள் | திருவரங்கப் பெருமாளரையர் பௌத்திரர், உடையவர் திருவடி சம்பந்தி, (எச்) சிம்மாசனாதிபதிகளில் ஒருவர், (குருபரம்பரை.) |
சொன்னரதன் | இரத்தினபுரராச குமாரன். |
சொன்னவண்ணஞ் செய்த பெருமாள் | பிரமன் செய்த யாகத்தை நதி யுருவாய்த் தடுக்கவந்த சரஸ்வதிக்கு வாக்களித்தபடி யாகத்திலுதித்த சாஸ்வதிக்குத் தரிசனம் தந்தவராதலால் சொன்னவண்ணஞ் செய்த பெருமாள் என்பர். இதனைச் சைவர் சிவாஞ்ஞைப்படி வெள்ளத்தைத் தடுக்கக் குறுக்கே சென்று தடுத்தவராதலால் இப்பெயர் பெற்றனர் என்பர். (காஞ்சி~பு.) |
சொருபாநந்தர் | திருவாரூர் சிவப்பிரகாசருக்கு மாணவர். |
சொர்க்கன் | தருமிக்குச் சுவர்க்கனிடம் உதித்த குமரன். |
சொற்றெடர் நிலைச் செய்யுள் | இது, ஒரு செய்யுளினிறுதி மற்றொரு செய்யுட்காதியாக வருவது. |
சொல் | 1. (4) பெயர், வினை, இடை, உரி. 2. ஒரு மொழியும் தொடர் மொழியும் பொதுமொழியுமாய் இருதிணை ஐம்பால் பொருளையுந் தன்னையும் வெளிப்படையாகவுங் குறிப்பாகவும் தெரிவிப்பது, அச்சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல், ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர் பாற்சொல், ஒன்றறி சொல், பலவறிசொல், தன்மைச்சொல், முன்னிலைச் சொல், படர்க்கைச் சொல், வழக்குச்சொல், செய்யுட் சொல், வெளிப்படைச் சொல், குறிப்புச் சொல், இயற்சொல், திரிசொல், பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்பன. |
சொல்லணியில் ஒருவகை | பொத்தம், பிரேளிகை, விரித்து முடித்த மறைக்கலிப் பாட்டு, நரோட்டி, அலகிருக்கை வெண்பா, முண்டப்பாட்டு, உயர்மொழி, நிதரிசனம், மாறாட்டு, தோகை, திரிபாகி, கண்டகட்டு, ஒருங்கியன் மொழி, ஐயம், உயர்வு, விரவியல், கல்லவல், உருவகம், உவமை, வழிமொழிமடக்கு, தீவகம், வேற்றுமை நிலை, வெளிப்படைநிலை, நோக்கு, உட்கோள், தொகைமொழி. மகைமொழி, வார்த்தை, தன்மை, பிறபொருள் வைப்பு, சிறப்புமொழி, சிலேடை, மறுமொழி, உடனிலைக்கூட்டம், துவலா நுவற்சி, வாழ்த்து முதலிய, |
சொல்லூராசிரியர் ஆண்டைப்பெருங்குமானர் | மணலூர், ஆசிரியர், புளியங்காய்ப் பெருஞ்சேந்தனாரிடம் அகப்பொருள் கேட்டவர். |
சொல்லூாக்கருங்கொற்றன் | கடைச்சங்க மருவிய புலவர். இவர் ஊர் சொல்லூர். இவர் நிறம் கறுப்பாயிருக்கலாம் போலும். |
சொல்வகை | ஒன்றைக் கூறுகையில் விரைந்து கூறலும், சொன்னதையே மேன்மேலும் சொல்லுதலும் பொய்யைப் பரக்கச் சொல்லுதலும், சொல்வதை வெகுவாய் விரித்துச் சொலுதலும் கூடாது. சொல்வதைச் சில சொற்களடக்கிக் காலத்திற் கேற்றபடி சொல்லல் வண்டும். (ஆசாரக்கோவை.) |
சொவயம்வரம் | (ஸ்வயம்வரம்) இது அரச கன்னிகைகள் தாங்கள் விரும்பிய நாயகர்களை அடையப் பலர்க்கும் அறிவித்து, விரும்பியவர்க்கு மாலை சூட்டுதலாம். அச்சுயம்வரம் மூன்று வகைப்படும். அவை இச்சா சுயம்வரம், பந்தயச் சுயம்வரம்,வீர சுயம்வரம் எனப்படும். அவற்றுள் இச்சா சுயம்வரமாவது: தமயந்தியைப்போல் கன்னிகையில் விரும்பப்பட்ட புருஷனுக்கு மாலையிடுவது. பந்தயச் சுயம்வரமாவது: இராமரைப்போல் கொள்வதற்குக் குறித்த பந்தயத்தை முடித்து அக்கன்னிகையைக் கொள்வது. வீரசுயம்வாமாவது: பீஷ்ம ரைப்போல் வீர தருமத்தினால் கன்னிகையை வரிப்பது. |
சொவரூபலக்ஷணம் | எது, ஒன்றிற் சிறப்பாயிருப்பதாய் மற்றவற்றினின்று வேறு பிரித்தறிவிப்பதாயிருப்பது. (தரு.) |
சொஹஞ்சி | (பிர) குந்தி குமாரன், இவன் குமரன் மயிஷ்மான். |