ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சைகஷவ்யர் | இவர் தருமருக்குத் தாம் சிவபிரானிடம் அட்டமாசித்திகளைப் பெற்றதைக் கூறினவர். (பார~அநுசா.) |
சைகாவத்தியன் | ஒரு ரிஷி. அம்பை பீஷ்மர் தன்னை மணம் புரியாதலால் வெறுப்புற்று இவருடைய ஆச்ரமத்தில் தவமிருந்தனள். (பா~உத்தி.) |
சைகிசவ்யன் | 1. ஒரு இருடி, அபர்ணையின் கணவர், பித்ருக்களைக் காண்க. 2. ஒரு ருஷி. ருத்ரர் உமையுடன் சென்று வேண்டியதைக் கேளென ஒன்றும் வேண்டேன் என்று மறுத்த ஞானி. (பார~சாங்.) |
சைகீஷவ்யர் | இவர் சோம தீர்த்தத்தினருகில் தேவலருஷியின் ஆசிரமத்திற் செல்லத் தேவலர் தாம் இவரை வரவேற்காது தவத்தில் இருந்து பின் இவரை உபசரிக்க வேண்டிக் குடங்கொண்டு கடற்குச் செல்ல அவ்விடத்திலும் இவர் தேவலர்க்குமுன் சென்றிருந்தனர். பின் தேவலர் ஆகாயம், சுவர்க்கம், பிதுர் உலகம், யமலோகம், ஆதித்யலோகம், சந்திரலோகம் முதலிய இடங்களிற் செல்ல அவ்விடமெல்லாஞ் சென்றனர். அவ்வகையான தபசி வசித்த தீர்த்தமாதலால் இதில் பலராமர் ஸ்நானம் செய்தனர். (பார~சல்லி) |
சைசிடமுனிவன் | காசியில் தவஞ் செய்து நந்தி தேவரால் விளிக்கப்பட்டு முத்தி யடைந்தவன். (காசிகாண்டம்.) |
சைசுநாகர் | சிசுநாகன் வம்சத்து மகத தேசத்தரசர். |
சைதன்யமதம் | சைதனியன் வங்கதேசத் தில் நவத்வீபத்தில் கிறிஸ்துசகம் 1489 வது வருஷத்தில் விஷ்ணு அம்சத்தாற் பிறந்தவன். தந்தை ஜகந்நா தமிச்ரன், தாய் சசீதேவி. இவன் முதற்பெயர் விச்வம்பரன்; இவன் கிருஷ்ணனைப்போல் நீர்க்குக் கங்கா தீரம் வரும் பெண்களைச் சரசஞ் செய்துகொண்டும், தனக்கு வேண்டியவைகளை விரும்பிய வீட்டில் சென்று களவாடியும் வருவன். இச்சைதனியன் கல்வி கேள்விகளில் வல்லவனாய் லக்ஷ்மி தேவி என்பவளை முதல் விவாகஞ் செய்து கொண்டு சிலநாளிருந்து பின்பு அவனுடைய முதல் மனைவி பரமபத மடையவும் பின்பு விஷ்ணுப்பிரியை என்னும் ஒரு பெண்ணை. இரண்டாவது மணஞ் செய்து கொண்டனன், பின்னர் தந்தை இறக்கத் தந்தைக்குச் சிரார்த்தஞ் செய்யும்படி கயா தீர்த்தத்திற்குச் சென்றபோது அவ்விடத்தில் ஈச்வரபுரி என்னும் யோகியைக் கண்டு அவரிடத்தில் உபதேசம் பெற்றுச் சதாசாரத்துடன் கூடியிருந்து அரிபக்தியில் மேலிட்டனன். மதசித்தாந்தம்: இவன் முத்தி மார்க்கமே போதித்தான். கர்மத்தில் நம்பிக்கையில்லை. எக்ய, யாக, ஒமா திகளால் பிரயோஜனமில்லையெனவும், மோசமில்லா விச்வாசம், இடைவிடா பக்தி என்பதே மோக்ஷம் எனவுங் கூறுவன். (சகலார்த்த சாகரம்.) |
சைதன்யர் | கிருஷ்ணாவதாரத்தில் மாலாகாரர்வம்சத் துதித்தவர். (சாத்தாதவர் சாத்தானியர் என்ப.) |
சைத்தியகம் | கிரிவிரசத்துக்கு அரணாயுள்ள மலை. |
சைத்தியர் | யாதவபேதம் சேதிராசன் வம்சத்தவராதலின இப்பெயர் பெற்றனர். |
சைத்திரதன் | சாட்சூசமநுவைக் காண்க. |
சைத்திராதம் | குபேரன் பூந்தோட்டம், சித்திரரதனைக் காண்க. |
சைத்திரை | புதன் தேவி, இவள் குபேரன் வீரியத்தைத் தாங்கிய கிருதாசியின் குமரி. இவளிடத்தில் சைத்திரன் எனும் அரசன் பிறந்தான். |
சைத்ர கிருஷ்ண சதுர்த்தசி விரதம் | சித்திரை மாத கிருஷ்ணபடி சதுர்த்தசியில் சிவசந்நிதியில் ஸ்நானஞ் செய்யில் அத்தீர்த்தம் கங்கைக்கு நேர் ஆகையால் இதை அநுட்டிப்போர் பிரேதத்வம் வராது நீங்குவர். சர்வபலமும் அடைவர். |
சைநசமயம் | இது ஐந்தாம் நூற்றாண்டில் சைந அகளங்காசாரியர், புத்தருடன் வாதிட்டுச் செயித்து இச்சமயத்தை நாட்டினர். இச்சமயத்தினர் இதிலும் மேலான சமயம் இல்லையென்பர். இவர்கள் உலகம் அநாதியென்றும், அவை மூன்றென்றும், அந்தவுலகம் மேல் நடுகீழிடங்களில் இருக்கும் எனவும், அந்தக் கீழுலகத்தடியில் அதோகதியென்று ஒரு உலகம் உண்டெனவும், அதற்குமேல் ஏழு நரகம் உண்டெனவும், அதற்குமேல் பத்துப்பவணலோகமுண்டெனவும், அதற்குமேல் மண்ணுலகம் இருக்கிறதெனவும், அதற்கு மேல் சோதிலோகம் உண்டெனவும், வியந்தரவுலகம், வித்யாதரவுவகமும், இந்த மண்ணுலகில் உண்டெனவும், மேல் பதினாறு தேவலோகம் உண்டெனவும், அதன்மேல் அகமிந்திரலோக முண்டெனவும், அதற்குமேல் மோக்ஷ உலகம் உண்டெனவும் கூறுவர். இவர்கள் அருகன் அல்லது சிந்னைத் தெய்வமாகக் கொண்டவர்கள். அவ்வருகனுக்கு (1008) பெயருண்டு, அக்கடவுள், கடையிலா அறிவு, கடையிலாக் சாட்சி, கடையிலாவீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு எனும் அறுகுணங்களுடன் கூடியிருப்பர். அவர், வேதங்கள் பன்னிரண்டினையும் வெளியிட்டவர், சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசகம் எனும் முக்குடையினை யுடையவர். ஆத்யந்தாகிதர். அசோகமரநிழலில் எழுந்தருளியவர், காமம் இல் லாதவர். இச்சமயத்தார் கர்மத்தால் முத்தி யென்பர். இவர்கள், காலம், உத்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என இருவகைப்படும் எனவும், அந்தக்கால மிரண்டும் ஒருதரம் முடியின் யுகம் என்பர். இந்தயுகத்தில் போக பூமியுண்டாய்ப் பதினான்கு மனுக்கள் தோன்றினர். இந்த மனுக்கள் காலத்தில் சூர்யசந்திர நக்ஷ்த்திரங்கள், மேகம், வருஷம், மாதம், வாரம், பகல், இரவு, ஆறு, மலை உண்டாயின என்பர், இந்த மனுக்களில் நாபிமகாராசா காலத்தில் ஜனங்கள் நாபிக்கொடியுடன் தோன்றினர், மேகம் மழை பெய்தன, பயிருண்டாயிற்று. வஸ்திரங்கள் நெய்யப்பட்டன. இந்த நாபிமகாராசாவைப் பிரமன் என்பர். இவர்தேவி மருதேவி. இவர் காலத்தில் இருஷபதீர்த்தங்கரர் என முதல் தீர்த்தங்கார் தோன்றினர். அத்தீர்த்தங்கார் (1) இடப தீர்த்தங்கரர், (2) அசித தீர்த்தங்கரர், (3) சம்பவ தீர்த்தங்கரர், (4) அபிநந்தன தீர்த்தங்கரர், (5) சுமதி தீர்த்தங்கரர், (6) பத்மப்பிரப தீர்த்தங்கரர், (7) சுபார்சுவ தீர்த்தங்கரர், (8) சந்திரபிரப தீர்த்தங்கரர், (9) புஷ்பதந்த தீர்த்தங்கரர், (10) சீதள தீர்த்தங்கரர், (11) சிரேயாம்ச தீர்த்தங்கார், (12) வாசு பூச்ய தீர்த்தங்கார், (13) விமல் தீர்த்தங்கரர், (14) அருந்த தீர்த்தங்கரர், (15) தர்ம தீர்த்தங்கரர், (16) சாந்தி தீர்த்தங்கரர் (17) குந்து தீர்த்தங்கரர், (18) அரதீர்த்தங்கரர், (19) மல்லி தீர்த்தங்கரர், (20) முனுசூவிருத தீர்த்தங்கரர், (21) நமி தீர்த்தங்கரர், (22) நேமி தீர்த்தங்கரர், (23) பார்சுவ தீர்த்தங்கரர், (24) வர்த்தமான தீர்த்தங்கரர் தோன்றினர். இவர்கள் காலத்தில் (1) பரதர், (2) சகரர், (3) மகவான், (4) சநத்குமாரன், (5) சாந்திநாதன், (6) குந்துநாதன், (7) அரநாதன், (8) சுபௌமன், (9) பதுமநாதன், (10) அரிசேணன், (11) ஜெயசேகன், (12) பிரசதத்தன் ஈறாகச் சக்கிரவர்த்திகள் பன்னிருவரும், (1) விசயர், (2) அசலர், (3) தர்மர், (4) சுப்பிரபர், (5) சுதர்சந பலதேவர், (6) நந்திஷேணர், (7) நந்திமித்ரன், (8) இராம பலதேவன், (9) பலராமன் ஈறாகப் பலதேவர், ஒன்பதின்மரும், (1) திப்பிரஷ்டன், (2) திவிப்பிரஷ்டன், (3) சுயம்பு, (4) புருஷோத்தமன், (5) புருஷசிம்மன், (6) புண்டரீக வாசுதேவன், (7) தத்தன், (8) லஷ்மணன், (9) நாராயணன் ஈறாக வாசுதேவர் ஒன்பதின்மரும், (1), அசுவக்கிரீவன், (2) தாரகன், (3) மது) (4) மதுசூதனன், (5) மதுகிரீடன், (6) நிசும்பன், (7) பலீந்தான், (8) இராவணன், (9) சராசந்தன் ஈறான பிரதிவாசு தேவர் ஒன்பதின்மரும் இருந்தனர். (ருஷபர் முதல் சாரசந்தன் ஈறாகக் கூறியவர்க்குத் தீரீசஷ்டிசலாகா புருஷர் எனவும் பெயர்.) ருஷபதீர்த்தங்கரர் காலத்தில் சைவசமயம் உண்டாயிற்றெனவும், (12) ஆம் தீர்த்தங்கரராகிய விமலசுவாமிகள் காலத்தில் வைஷ்ணவசமயம் உண்டாயிற் றெனவும், (23) ஆம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாத சுவாமிகள் காலத்தில் துலுக் கர்மத முண்டாயிற்றென்றும், (20) ஆம் தீர்த்தங்கரராகிய முனு சூவிருத தீர்த்தங்கரர்காலத்தில் மகாகாளாசுரன் என்கிற அசுரனால் யாகங்களுண் டாயின என்றும், சிவ, விஷ்ணு, கணபதி, சுப்பிரமண்யர் சைந விரதம நுட்டித்த அடியவராகையால் அவர்களும் தொழத்தக்கவர் என்பர். இந்தச் சமயசந்நியாசிகள் சுவேதாம்பரிகள், திகம்பரிகள் என இருவகையார். இவர்கள் கொல்லாவிரதிகள் (1800) சீலாசாரமுடையவர். இவர்கள் புஸ்தகம், கமண்டலம், மயிற்பிச்சம், தாங்கியிருப்பர். இவர்கள், அஷ்டவிதகாமங்கள் நீங்கி மணிய லொளிபோல் சகசமாய் உபா தீதமாகிய அஷ்டமகா குணங்களைப் பெற்று லோகாக் கிரமத்தகஸ்திதராகிச் சுத்தாத்ம சுபாவமெய்தியிருக்கின் ஆகாசமத்தியத்துள் உத்தரோத்தரகமன மடைவர் என்பர். இந்த மதம் கிறிஸ்து சகம் (5) ஆம் நூற்றாண்டில் அமோக வருஷன் என்கிற ராசன் அரசாண்ட காலத்தில் அங்குரித்து 9, 10, 11 வரையில் உச்சம் பெற்று, 2 வது நூற் றாண்டில் மதுரையாண்ட கூன்பாண்டியன் என்னும் சைந அரசன் சைவனாகிய தால் அது முதல் க்ஷீணத்தைப் பெற்றது, இவர்கள் தற்காலம் இருக்குமிடங்கள் திருநறுங்கொண்டை, தீபங்குடி, சித்தாமூர், பெருமண்டூர், இராசமகேந்திரம், காஞ்சிபுரம், திருப்பருத்திக்குன்றம் முதலியன. இவர்கள் செய்த ஸமஸ்கிருத நூல்கள், மகாபுராணம், ஸ்ரீபுராணம், திரிலோகசாரம், கோமடசாரம், பதார்த்தசாரம், இரத்தினகாண்டகம், தர்மபரீக்ஷை, சிந்தாமணி, சூடாமணி, மேருமந்தரபுராணம், நீலகேசி வாதம், சாகடாயனம், அமரம், நயசக்கிரம், சத்தபங்கி, தவளம், விசயதவளம், மகாதவளம், சுபோதினி முதலியன. தமிழ் நூல்கள், சிந்தாமணி, சூளாமணி, சூடாமணி, நீலகேசிவாதம், மேருமந்தர புரா ணம், திருக்கலம்பகம், யசோதரகாவ்யம், அறநெறிச்சாரம், சீவசம்போதனை, அருங்கலச்செப்பு முதலியவை, |
சைநமாமுனிவர் | சிநேந்திரமாலை செய்தவர். இவர்க்கு உபேந்திராசாரியர் எனவும் பெயர். |
சைநர் | யதுவம்சப்பகுப்புள் ஒன்று, |
சைநாதேசசிட்டு | இது, சைநா தேசத்துக் கடற்கரையிலுள்ள மிகவுயர்ந்த மலைக்கு கைகளில் ஒருவித சிட்டு கூடு கட்டுகிறது. அக்கூட்டை அந்நாட்டார் உரிசையுள்ள உணவுப் பொருளாகக் கொள்கின்றனர். இச்சிட்டுத்தலை கறுப்பும் முதுகு நீலமும், வயிறு செம்மை கலந்த கருநிறங் கொண்டது. இக் கூடுகள் மிகவுயர்ந்த மலைப் பாறைகளில் கட்டப்படுகின்றன. இவற் றையெடுப்பது மிக அருமையாம். இதனை எடுப்பதில் பலர் இறத்தலும் உண்டென்பர். இக்கூடு அதிக விலையுயர்ந்தது. கொட்டைப்பாக்குச் சிட்டு இது தானியங்கள் புழுக்களைத்தின்று சீவிப்பது. இவ்வினத்தில் பல அழகிய வர்ணங்களையும் புள்ளி களையும் பெற்றவை. இவற்றைப் பலர் வீடுகளில் சிறு கூண்டுகளிலிட்டு வளர்க்கின்றனர். இது குதித்துக் குதித்து அழகாய்ப் பாடும். |
சைநியம் | கிருஷ்ணமூர்த்தியின் குதிரைகளில் ஒன்று. |
சைந்தவன் | சிந்துதேசாதிபதி, ஜயத்ரதன். |
சைந்தவாயனன் | விஸ்வாமித்திர புத்திரன். |
சைனர் | சிவனைத் தொழுவோர், இவர்கள் பெரும்பாலும் பல ஜாதியராக இந்தியா முழுதும் பரவியிருக்கின்றனர். இவர்கள் தமிழ் நாட்டில் நயினார் எனவும் சாஸ்திரிகள் எனவும் பட்டம் வகித்திருக்கின்றனர். (தாஸ்டன்). |
சைபன் | (Syphon) அங்குசநாளி. இது ஒரு ஜல சூத்திரம். |
சைபியன் | 1, விருஷ்ணி வம்சத்தரசன். 2. கோவாசன் என்னும் க்ஷத்திரியன், 3. கிருஷ்ணன் தேர்க்குதிரையில் ஒன்று. 4. விஷதர்பனுக்கு ஒரு பெயர், 5. கிருஷ்ணனிடம் யுத்தம் செய்த ஒரு க்ஷத்திரியன். |
சைப்பியன் | 1. கிருஷ்ணனால் செயிக்கப் பட்டவன். 2. இவன் கொடையால் தர்மநெறி தவறாது அரசாளுகையில் இவனது ஈகையைச் சோதிக்க இந்திரன் கழுகாகவும், அக்னி புறாவாகவும் உருக்கொண்டு கழுகு புருவைத் துரத்த புறா அரசனை அபயமடைந்தது. கழுகு அரசனிடம் என் பசிக்கு வாய்ந்த இரையை விடவேண்டுமென அரசன் கழுகை நோக்கி அடைக்கல மடைந்ததை விடேன் என, அவ்வளவு மாம்சம் தருக என, அரசன் மற்ற உயிர்களைக் கொல்ல அஞ்சித் தானே தன் தேகத்தை அறுத்துத் துலையிலிட்டுப் போதாமல் துவை புகுந்தனன். தேவர் தம் உருக்காட்டி வியந்து சென்றனர். (வால்மீகி~ராமாயணம்) |
சைப்பியர் | 1. தருமர் இராஜசூயத்தில் பிரமஸ்தானத்திருந்த ருஷி. 2. சிபிவம்சத்தவர். |
சைப்யம் சுக்ரீவம் | கிருஷணன் தேர்க்குதிரைகள், |
சைப்யை | 1. விதேகராசன் பெண்; இவள் தன் கணவனாகிய சததநு, பாகீரதியில் ஸ்நானஞ்செய்து விஷ்ணு பூசை செய்து, திரும்பிவருகையில் ஒரு பாஷண்டியிடத்தில் வீணாய்ப் பேசின கால் பூனை, கழுதை, காக்கை, கொக்கு முதலிய பல சன்ம மெடுத்துக் கடைசியில் மானிடவுருப் பெற்றனன். அதுவரையில் சைப்யை எவரையும் மணம்கொள்ளாதிருந்து தன் கணவன் யானிடவுருக்கொண்டதைப் பூர்வசன்மப் பழக்கத்தால் அறிந்து அவனை மணந்து சுகித்தவள். 2. சியாமகன் கேலி, விதர்ப்பான் தாய். 3. ஒரு தீர்த்தம், 4. பிரான் பாரியை. 5. கிருஷ்ணனுடைய பாரியையாகிய மித்திரவிந்தைக்கு ஒரு பெயர். 6. சூரியவம்சத்துச் சகரன் பத்தினி. 7. தியூமத் சேநராஜன் பாரியை. |
சைமத்காதி | (வகுதைநகர்) தமிழ் நாட்டுக் காயற்பதியிலிருந்த லப்பைசாதிப் பிரபு. கொடையாளி தமிழ் வித்வான்களுக்கு வேண்டிய பரிசளித்துப் புகழ்படைத்தவர் இவர் சமாதியிலடங்கிய பின் ஒரு கவிஞர் அவ்விடஞ்சென்று பாடச்சமாதி வெடித்துக் கையிலிருந்த மோதிரம் தந்தான். இதனால் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பர், |
சைமினி | 1, யமபுரியைக் காண்க. 2. சயமுனியைக் காண்க. 3. அளவை நூலாசிரியன். (மணி.) |
சையமினி | யமபுரியைக் காண்க. |
சையாதி | 1. வைவச்சுதமதுவின் குமரன், ஆங்கீரஸர் யாகத்தில் இரண்டாமகஸில் செய்யத்தக்க கர்மத்தைச் செய்து ஒரு பெண் பெற்றவர். அப் பெண்ணுக்குச் சுகன்னியெனப் பெயர். இவ்வரசன், குமரியுடன் ஒருகால் சியவனருஷியின் ஆச்சிரமமடைய அப்பெண் பூஞ்சோலையின் ஒருபுறத்திலிருந்த புற்றில் ஒளிவரக்கண்டு அவ்வொளியை முள்ளால் குத்த அதினின்று இரத்தம் பெருகியது. இதனால் சையாதிசேநா சமுத்திரத்தின் இரு விழியும் அடைந்தன. அரசன் துணுக்குற்று நடந்ததை வினவப் பெண் உண்மை கூறக் கேட்டு முனிவரை அபராதக்ஷமை வேண்டிப் பெண்ணையும் அவருக்கே மணஞ் செய்வித்தவன். இவன் குமரர், உச்கான பரிகசு, ஆனர்த்தன், பூரிஷேணன், 2. பிராசீநன் குமரன், தேவி பானுமதி, |
சையாம்மதம் | இத் தேசத்தார் புத்த தர்மத்தை அனுசரித்தவராயினும் ஒரு விதமான பத்ததியை அனுஷ்டிக்கிறார்கள். அதாவது, சோமகெளதமன் என்பவன் புட்பத்தில் பிறந்து சர்வஞானியாய் ஒரு விருக்ஷத்தடியில் சுவஞ் செய்து சித்திகளை யடைந்தான். இவனுக்குத் சேவகக்கன் என்று ஒரு சசோதான் இருந்தனன. இவ்விருவரும் ஒருவருக்கொருவர் யுத்தஞ் செய்து முடிவில் சோமகோதமனே வெற்றியடைந்தான். இவனைத் தேவனாகக் கொள்வர். இச்தேவனுக்குப் பல தேவாலயங்களுண்டு. இவர்கள் தங்கள் தேவ னுக்கு ஆட்டுப்பலி யிடுகின்றனர். இச் சமயத்துச் சந்நியாசிகள் முண்டிதராய்ச் சர்வாங்க க்ஷெளரம் செய்து கொள்வர். இறந்தவர்களைத் தகனஞ் செய்து சாம்பலை வைத்துச் சமாதி கட்டுவர். |
சையுத்த சமவாயம் | கண்ணிற்கும் ரூபத்திற்கு முள்ள சம்பந்தம். (சிவ~சித்) |
சையுத்த சமவேத சமவாயம் | இது கண்ணிற்கும் ரூபத்திலுள்ள ரூபத்துவத்திற்கு முள்ள சம்பந்தம். (சிவ~சித்) |
சையோகசையோகம் | எந்தச் சையோகத்தினுற்பத்தியில் சையோகம் அசமவாயி காரணமாயிருக்கிறதோ அது. (தரு.) |
சையோகம் | இரண்டு திரவியங்களின் சம்பந்தம், இது பிரிந்திருக்கிற வஸ்துக்களின் சம்பந்தம், (சிவ~சித்) |
சைய்யகிரி | கொங்குநாட்டிலுள்ள ஒரு மலை, காவிரிந்திக்குப் பிறப்பிடம், |
சைரந்திரயன் | தஹியூவானவன் அயோகவ ஜாதி ஸ்திரியிடத்தில் பெற்ற குமரன். இவனுக்கு எண்ணெயிடுதல், கைகால் பிடித்தல், வலைதொழில் செய்தல் முதலிய தொழில். (மநு.) |
சைரந்திரி | பாண்டவர் அஞஞர் தவாசத்தில் திரௌபதி வைத்துக்கொண்ட பெயர். |
சைலாதன் | சித்துரதன் குமரன், இவன் குமரன் காமரதன். |
சைலூஷன் | ஒரு காந்தருவன். சிந்து தீரவாசி. |
சைலோதம் | மேருமந்தரங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு நதி. (பார~சபா.) |
சைவ எல்லப்ப நாவலர் தேவியார் | இந்த அம்மையார், மணவாள தாசர் தாம் பாடிய அரங்கக்கலம்பகத்தை நாவலர்க்கு அனுப்புகையி லதிலிருந்த “வாடியோடவன் சமன்ன” எனுஞ் செய்யுளைக்கண்டு அதற்குப் பிரதியாய் “கருடனோட மச்சமாமை கமலமோட முற்கரங், காட்டிலோட மூன்றி ராமற் கண்டமட்டி லோடவே, மருளிவந்த சிங்கமோட வாமனென்பு பாறவே, மஞ்ச முள்ள கண்ணனோட மாரவீறச் சேனனும், இருளினோட முண்டகத்த னேங்கி யோட வென்றவர்க், கீறுசாதங் குயிரளித்த வேந்தல்யாவன் வேதமே, அருளுமந்த முதல்வன்யாவன் அருணை கண்டு வாழ்மினோ, ஆரனாதி மூலமென்ப தறிகிலாத மாக்களே” எனப் பாடித் தந்தவர். |
சைவசமயகுரவர்கள் | மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசுகள், சுந்தரமூர்த்திநாயனார் என்னும் நால்வர். |
சைவசித்தாந்தசாத்திரம் பதினான்கு | சித் தாந்தசாத்திரம் (14) காண்க. |
சைவபத்ததி செய்தோர் | 1. தூர்வாசர். 2, பைங்கள சிவர்; 3. உக்ரஜ்யோதி; 4; ஸ்ரீகண்டர்; 5. விஷ்ணுகண்டர்; 6. சுபோதர்; 7. வித்யாகண்டர்; 8. இராமகண்டர்; 9. ஞானசிவர்; 10. ஞான சங்கரர்; 11, சோமசம்பு, 12, பிரமசம்பு; 13, திரிலோசன சிவர்; 14. அசோரசிவர், 15. வருண சிவர்; 16, பிரசாதசிவர்; 17. இராமநா தசிவர்; 18. ஈசானசிவர் என்பவர்களாம். |
சைவபுராணம் | இது (2600) கிரந்தங் கொண்டது. இதில் பிரம விஷ்ணுக்களின் பிறப்பு, இறப்பு, பிரபஞ்சசிருட்டி, சிவத்திருந்து யாவுமுற்பத்தி, சிவலிங்க வழிபாடு புண்ய காலம், புண்யக்ஷேத்ரம், புண்ணிய தீர்த்தம், பிரம விஷ்ணுகள் சிவலிங்க வயத்தரானமை, சிவபூசை, யோகம், காசி மகாத்மியம், தீர்த்தமான் மியம், அத்துவிதம், திரிபுரதகனம், தக்ஷயாகம், கணபதி, கந்தர் உற்பவங்கள் அடங்கியிருக்கின்றன. |
சைவம் | இது சிவமூர்த்தியைத் தெய்வமாகக்கொண்ட மதம். இது ஊர்த்வசைவம், அநாதிசைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேதசைவம், அந்தர சைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞான சைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபா தசைவம், வீரசைவம், சுத்தசைவம் என்று பலதிறப்படும். பின்னும் காளா முகம், காபாலம் முதலியவும் உள. அவற்றுள் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் உயர்ந்தது, அவற்றுள் ஊர்த்தசைவமாவது: சிவன் ஒருவன் உண்டெனவும் அவன் தத்துவாதீனன் எனவும்; சடை, விபூதி, ருத்ராக்ஷ தாரணத்துடன் சிவபூசை செய்து பஞ்சாக்ஷரம் செபித்துச் சிவவேடம் பொரு ளாகக்கொண்டு சிவத்தைத் தியானிப்பதே முத்தி எனவும் கூறும். அநாதிசைவமாவது: பதி, பசு, பாசம் மூன்றும் அநாதி நித்யம் எனவும்; விபூதி, ருக்ராவும், சிவ வேடம் பொருளாகக்கொண்டு சிவத்தியானஞ்செய்து பாசநீங்கிச் சிவனை யடைவதே முத்தியெனவுங் கூறும். ஆதிசைவமாவது: சிவனிடத்து மோகமாய் மோக்ஷ சாதனங்களுக்கு வேண்டிய வேடங்களும் ஒழுக்கமும் பூண்டு எல்லாஞ் சிவபோகமா யநுபவித்து விபூதி ருத்ராக்ஷ, சிவவேடத்தின்மேல் விசுவாசமாயிருந்து சிவனை யடைவதெனக்கூறும். மகாசைவமாவது: விபூதி, ருத்ராக்ஷம், சடைமுடி தரித்துச் சிவமூர்த்தியைச் சகுணமாகவும், நிர்க்குணமாகவும் தியானஞ்செய்து முத்திபெறலெனக் கூறும். பேதசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ்செய்து சிவனடியார், ஆசாரியர் சிவலிங்கம் இவைகளைப் பூசித்து முத்தியடைதல் எனக் கூறும். அபோத சைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ் செய்து பஞ்சாக்ஷர செபஞ்செய்து சிவபாவனை செய்து அவனாகிறதெனக் கூறும். அந்தா சைவம்: எல்லா உயிர்க்கும் ஈசன் உள்ளாயிருத்தலால் சிவன் அந்தப்படி யிருத்தலை ஆராய்ந்து காடுதல் முத்தியெனக் கூறும். குணசைவம்: சிவனது எண் குணங்களையும் துதித்து அவ்வகை தியானித்துச் செயஞ்செய்து முத்தி பெறுவது. நீர்க் குணசைவம்: விபூதி, ருத்ராக்ஷதாரணஞ் செய்து பஞ்சாக்ஷரஞ் செபித்து நிர்க்குணனான சிவமூர்த்தியை அருவாகத் தியானித்தல் என்று கூறும். அத்துவாசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணஞ்செய்த சைவன் தீதிதனால் ஷடத்துவாசோதனை செய்யப்பட்டு அவற்றின் முடிவான சிவத்தைத் தியானித்து நிஷ்டைகூடிச் சமாதியிலிருப்பதெனக் கூறும். யோகசைவம்: அஷ் டாங்கயோகஞ் சாதித்து அதின் முதலான சிவமூர்த்தியைத் தரிசித்து அஷ்டமாசித்தி பெறுவதெனக் கூறும். ஞானசைவம்: விபூதி, ருத்ராக்ஷ தாரணனான சைவன் தீக்ஷிதனாய ஆசாரியன் சொன்ன வழியில் நின்று சீவபரபேதமறிந்து ஆத்மா சிவனுடன்கூட நிஷ்டை செய்து இருப்பதெனக் கூடறும். அணுசைவம்: நித்யமாயிருக்கிற சிவனை உள்ளும் புறம்புமாய்ப் பஞ்சகிருத்யமும் செய்கிறவனென்றறிந்து திகம்பர வேடங்கள் பூண்டு சன்மார்க்க லக்ஷணத்துடனே கூடிக் குருவிங்கவேடம் பொருளாயச் சிவனது கிருத்தியங்களால் மகிழ்ந்து மானாலய மடைதல் முத்தியெனக் கூறும், கிரியாசைவம்: குருவையடைந்து சமய விசேஷ தீக்ஷையும் பெற்றுப் பிறகு அத்துவாசோதனை ஆசாரியன் செய்யப்பெற்று ஆசாரியர் சொன்ன வழியில் நின்று தனக்குரிய யாகாதி சிவபூசா கார்யங்களை விடாது கடைப்பிடித்துச் சிவார்ச்சனை செய்து இன்ப மடைவதெனக் கூறும். நாலு பாதசைவமாவது: சரியை, கிரியை, யோகங்களை அநுஷ்டித்து ஞானத்தையடைந்து தீவிர தரசத்திநிபாத முடையனாய்ச் சமாதி யடைவதெனக்கூறும். சுத்தசைவமாவது: தத்துவத்திரயமாகிற பதி, பசு, பாசம் மூன்றும் அநாதிநித்யம் என்றறிந்து பதி நிச்சயம் பிறந்து மௌனமே பொருளாய் இலயமாக நிஷ்டைகூடிச் சிவத்தை யடைவது எனக் கூறும். வீரசைவ முதலிய தனியே காண்க. |
சைவலம் | சம்புகன் தவமியற்றிய கிரி |
சைவாகமம் | ஆகமம் காண்க. |
சைவை | அநிலன் பாரி. |
சைஷர் | வேதாத்யயனம் ஆரம்பித்த மாணாக்கர். |