ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சேகம் | சர்மண்வதி, பாடலாவதி இரண்டிற்கும் மத்தியிலுள்ள தேசம், Tho Country South of the river Charmanwati and North of Avanti. |
சேகம் பூதனர் | சிலபிரதிகளிற்சேகம்பூதனாரென் றிருத்தலானே இருந்தவாறே பதிப்பிக்கப்பட்டது. சேந்தம் பூதனாரென்பவரும், மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனாரென்பவரும் இவரே, மதுரைக் கடைச்சங்கத்து ஏடெழுதுவோராயிருந் தவர். பெரும்பாலும் குறிஞ்சியையும், முல்லையையும், நெய்தலையும் புனைந்து பாடியுள்ளார். இவர் மாலைப்பொழுதைச் சிறப்பித்துப் பாடல் கேட்போர் மனதைப் பிணியாநிற்கும் (நற் 69). யானையை மலைப்பாம்பு பற்றிப் புரட்டு நெறியென நெறியினதே தங்கூறாநிற்பர் (261), கழுதை மேல் உப்புப் பொதிக்கொண்டு செல்லும் வழக்கை விளக்கிக்கூறுகிறார் (அகம் 207). இவர் பாடியனவாக நற்றிணையில் இரண்டு (69,261) பாடலும், குறுந்தொகையில் மூன்றும், அசத்தில் இரண்டுமாக ஏழு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. |
சேகிதானன் | யதுகுலத்தவன், தருமருக்கு அம்புபுட்டில் தாங்கினவன், |
சேக்கிழார் | இவர் தொண்டைமண்டலத்துக் குன்றத்தூரில் சேக்கிழார்குடி யென்னும் சைவ வேளாளர் குடியிற் குன்றத்தூர் கிழாருக்குப் புத்திரா யவதரித்துக் கல்வி கேள்விகளில் வல்லவராய் இருந்தனர். ஒருநாள் இவர் தந்தையைச் சோழன் உலகப் பொருள்கள் எது பெரிதென்று வினவக் குன்றத்தூர்கிழார் விடைதர மயங்கி வீடு வந்து சவலையுடனிருக்கச் சேக்கிழார் கண்டு நடந்ததை வினாவி, “காலத் தினாற் செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப்பெரிது” என்னுந் திருக்குறளை யெழுதித் தரப் பெற்றுச் சோழனுக்குக் காட்டினர். சோழன் அதிககளிப்படைந்து சேக்கிழாரை வருவித்துத் தனது சமத்தான வித்வானும் மந்திரியும் ஆக்கினன். சேக்கிழார், சோழனிடம் இருக்கையில் சோழன் சைன நூலாகிய சீவகசிந்தாமணியைக் கேட்டுக் களிப்புடனிருக்கையில் இவர், வெறுப்புட னிருக்கக் கண்டனன். இவர் வெறுப்புடனிருக்கக் கண்ட சோழன் அவ்வகை இருப்பதற்குக் காரணம் வினவச் சேக்கிழார் சிந்தாமணி பொய்க்கதை, மெய்க்கதை கேட்கவேண்டும் என்றனர். அரசன் அக்கதை யாதெனச் சேக்கிழார் அது திருத்தொண்டர் புராணமென்றனர். ஆயின் கூறுக என அதைக் கேட்க நல்ல சுபமுகூர்த்தம் ஏற்படுத்துக என, அரசனிடம் விடை பெற்றுச் சிதம்பரஞ் சென்று நடராசமூர்த்தியைத் தரிசித்து நிற்கையில் அசரீரி ‘உலகெலா மென முதலெடுத்துத் தர அதனையே முதலாகக்கொண்டு (4283) செய்யுட்களாற் திருத்தொண்டத் தொகையை முதனூலாகவும், பொல்லாப் பிள்ளையா ரியற்றிய நம்பியாண்டார் நம்பிகள் அருளிய கலித்துறையந் தாதியை வழிநூலாகவுங் கொண்டு திருத்தொண்டர் புராணத்தைப் பாடி முடித்துச் சோழனுக்கு அறிவித்து ஒரு வருஷம் திருச்சந்நிதானத்திலிருந்து அரங்கேற்றினர். இவரைச் சோழன் யானைமீதிருத்தித் தான் பின்னிருந்து கவரி வீசிச் சென்றனன். இவர்க்குச் சோழன் தன் பெயரையே பட்டமாகக் கொடுத்தனன். அதனால் இவர்க்கு உத்தமச்சோழப் பல்லவராயர் என ஒரு பெயருண்டு. அரசனுக்கும் இதுவே பெயராய் இருக்கலாம். இவர்க்குச் சேவையர்காவலர் எனவும், அருண்மொழித்தேவர் எனவும், தொண்டர் சீர் பரவவல்லார் எனவும் பெயர். இவர்க்குப் பாலறாவாயர் என்று ஒரு சதோதரர் இருந்தனர். இவர் தமது குன்றத்தூரில் மடவளாகம் ஏற்படுத்திச் சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரம் போல் திருத்தலமுண்டாக்கிச் சிவகதி பெற்றவர். சேக்கிழார் அபயன் எனும் சோழன் காலத்தவர் எனத் தெரிதலால் இவர் காலம் கி. பி. 11 ஆம் நூற்றாண்டாகலாம் என்பர். (திருத்தொண்டர் புராணம்.) |
சேக்பரீதுதாசர் | இவர் புருஷனில்லாப் பூவைப்பெற்ற புத்ரர். இவர் தம் தாயை நோக்கித் தாம் கடவுளைக் காணவேண்டும் என்று காடடைந்து பன்னிரண்டு வருடந் தவஞ்செய்தும் காணாது தாய் கொடுத்த ஒரு அப்பத்தை மடியிற் கொண்டு உணவாதிகளருந்தாது இலைகளைப் புசித்து அவ்வழியிற் சருக்கரைப் பொதி கொண்டு சென்ற வணிகனை இது என்ன பொதி என்றனர். அவன் மண் என்று கூறித் தன்னூர்ப் போய்ப் பார்க்க அது மண்ணையிருக்க அவைகளைக் கொண்டு மீண்டும் அடையத் தாசர் இது என்ன பொதி என்னச் சருக்கரையென்று, பொதிகளை நோக்கச் சருக்கரையாக இருக்கக்கண்டு களித்து ஒரு தட்டில் சருக்கரை வைத்துத் தரம் கண்டு தாசர் வேண்டாது ஓடினர். இவ்வகை பன்னிரண்டு வருடங்கள் கழிந்தும் பெருமாளைக் காணாது தாயை யடைந்தனர். தாய் சடையிலிருந்த இலைகளை நீக்க வருந்தித் தாய் கொடுத்த அப்பத்தைக் கொடுத்து மீண்டுங் காடடைந்து பசி கலந்த காலத்துச் சருகருந்தி இருபத்து நான்காமாண்டில் பெருமாளைத் தரிசித்துப் பெருமாள் கட்டளைப்படி நாடடைந்து பெருமாளைத் தரிசித்திருந்தவர். |
சேடக்குடும்பியன் | தன்பா வடைக்கலம் புகுந்த கண்ணகி இறந்த துன்பத்திற் கிரங்தி இறந்த மாதரியை மறுபிறப்பில் மகளாகப்பெற்ற திருஅருந்தபுரத்து வேதியன். (சிலப்பதிகாரம்.). |
சேடதாசையர் | ஒரு வீரசைவ அடியவர், இவர் அரனுக்கென நெய்த பட்டாடையைச் சிவனடியவர்க்குக் கொடுத்துப் பொருள்பெற்று அப்பொருளைச் சங்கர தாசையர் விஷயமாய்ச் செய்த அபராதத்தில் இழந்து அவரால் மீண்டும் பெற்றவர். இவர், பல்லவராயன் தேவிக்கு ஆசாரியரா யிருந்ததைச் சமணர் அறிந்து வெறுத்து அரசனிடம் கூறினர். அரசன் தன் தேவிக்கு இவரை நீக்கும்படி கூறினன். அரசன் தேவியாகிய சற்குணமாதேவி அரசனை நோக்கி எமதாசாரியரை இச்சமணர் வெல்வரேல் அவ்வகைச் செய்வன் என்றனள், அந்தப்படி அரசன் வாதிடக் கட்டளையிடச் சமணர் குடத்தில் விட நாகத்தையிட்டு இக்குடத்தில் கையிடுக என அவ்வாறு பதிப்பொருள் சிவனெனக் கையிட்டு அப்பாம்பைச் சிவலிங்கமாக எடுத்துக் காட்டி அரசனையம் சமணரையும் சைவராக்கி அச்சிவலிங்கத்தையும் அந்த இடத்தில் தாபித்தனர். அத்தலம் உத்தரேச்சுரம் எனப்படும். |
சேடன் | ஆதிசேஷனைக் காண்க |
சேடமலை | திருவேங்கடம், இது சேடன் இவ்விடம் தவஞ்செய்ததால் வந்த பெயர். |
சேடி | ஒரு வித்யாதரநகரம். (மணிமேகலை).) |
சேட்டலூர் ஆழ்வான் | எழுபத்தினாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குரு பரம்.) |
சேணிகமகாராசன் | மகததேசத்தரசன் சைநன், |
சேணியர் | ஒருவகை நெய்வோர். கன்னட தேவாங்கருக்கும் பெயராக இருக் கிறது. காஞ்சிபுரத்துச் சேணியர் வலங்கையார், இவர்கள் சந்திரசேகரருஷி, நீல கண்டருஷி, மார்க்கண்டேயருஷி கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களிற் சிலர் லிங்கதாரிகள், சிலர் சைவர். காஞ்சி திருஞானசம்பந்தர் மடத்தைச் சேர்ந்தவர்கள். (தர்ஸ்டன்.) |
சேதன் | துருவரியன் பௌத்ரன். |
சேதி | உசீகன் குமரன், இவன் குமரர் சிசுபாவன் முதலியவர். 2. விதர்ப்ப தேசாதிபதியாகிய உரோமபதன் குமரன், இவனாண்ட தேசம் சேதி தேசம். 3. இருக்குவேதத்திற் புகழ்ந்து கூறப்பட்ட அரசன், இவன் புத்ரன் கஷு. 4. ஒரு சிவாலயம். இது சைத்தியாலய மென்றும் வழங்கப்படும். இது வித்தியா தரருடைய உலகில் உள்ளது. (பெருங்கதை). 5. The Country comprised the Southern portion of Bandelkband and the Northern portion of Jubbalqora Rewa. |
சேதிநாடு | 1. இது மிருகாவதியின் தந்தைக்குரிய நாடு. இதற்கு உரியனா யிருந் ததுபற்றி உதயணன் “சேதியர் பெரும் பெயரண்ணல், சேதியர் பெருமகன், சேதிபன், “சேதியர்மகள்,” சேதிய எண்ணல்’ என வழங்கப்படுவான். இதில் மிக அழகியதும், தவஞ் செய்தற்குரியதுமான ஒரு மலையுண்டு. இங்காடு யூகிக்கு உதயணனாற் சீவிதமாகப் பின்பு அளிக்கப்பட்டது. (பெருங்கதை.) 2. மலையமானாட்டிற்கு ஒரு பெயர். தமிழர் சேதிதேசத்தை விட்டுத் தென்னாடடைந்தபின் தங்கள் நாட்டிற்கு இட்ட பெயர். |
சேதிமர்த்தியன் | உபரிசரவசுவின் குமரன், |
சேதிராயன் | குலபூஷண பாண்டியனை வெல்லவகை பார்த்திருந்து புலியாலிறந்த வேடராசன். |
சேதிராயர் | 1. இவர் சோழப்ரம்பரையைச் சேர்ந்த சேதியர்க்கு அரசரா யிருக்கலாம், சிவமூர்த்தியைப் பாடி முத்தி பெற்றவர். இவர் தமது திருப்பாசுரத்தில் சேதியர்கோன் எனத் திருவாய்மலர்ந்திருத்தலின் இவர் அரசரெனப் புலப்படுகிறது. இவர் திருப்பாசுரம் என்பதாந் திருமுறையில் சேர்க்கப்பட்டது. 2. புதுவைக்கணிருந்த அரு வேளாண் குடியினர். மகோபகாரி, எரெழுபது கம்பர் அரங்கேற்றுகையில் உடனிருந்து கேட்டவர். இவரை அரங்கேற்றுஞ் சவை கண்விடந்தீண்டச் சேதிராயர் பிரசங்கத் தடையாமெனத் தெரிவிக்காதிருக்க விடம் தலைக்கேறி மூர்ச்சித்து விழுந்தபோது கம்பர் அறிந்து ஆழியான் பள்ளியணையே பவன் கடைந்த, வாழிவரையின் மணித் காம்பே பூழியான், பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணேயகல நட” எனவம் நங்கையொரு பாகர்மார் பிலணியாராமே, பொங்கு கடல் கடைந்த பொற்கயிநே திங்களையும், சிறிய தன் மேலூருந் தெய்வத் திருநாணே, யேறிய பண்பேயிறங்கு” எனக் கூறி யிறக்கினர். இதனை “அமுவதுங்கொண்டு புலம்பாது நஞ்சுண்டது மறைத்தே, ரெழுபதுங் கொண்டு புகழ்க்கம்பவாணனெழுப்ப விசை, முழுவதுங் கொண்டொரு சொற்போ நெய்யின் முழுகிக்கை, மழுவதுங்கொண்டு புகழ்கொண்டதாற் றொண்டை மண்டலமே” (எம்.) “பாவலர் தா மேரெழுப தோதியரங்கேற்றுங் களரியிலே, காரிவிட நாகங் கடிக்குங்கை ” (எம்.) “காவிரியைச் சோணாட்டைக் காராளர் தம்மாபை, நாவ லரைக் காவலரை நல்லோரைப் பூவலய, முள்ளத்தகும் புதுவை யூரைச் சிறப்பித்தான், பிள்ளைப் பெருமாள் பிறந்து” என வருவனவற்றாற் காண்க. இவர்காலம், (கி. பி. 11 ஆம் நூற்றாண்டு) |
சேதிஷன் | உபரிசரவசுவின் குமரன். |
சேது | 1. துர்க்கன் பேரன். 2. (பிர.) பப்ரு குமரன், இவன் குமரன் ஆரத்தன். 3. இராமமூர்த்தி இராவணனை வதை செய்ய இலங்கைக்குச் செல்கையில் நளன் எனும் வாநரத்தச்சன் வாநரசைந்யங்களைக் கொண்டு கட்டிய அணை, இது (102) யோசனை நீளம் (10) யோசனை அகலம். இது மூன்று நாட்களில் கட்டி முடித்தது. புண்யஸ்நான கட்டம், இராமேச்சுரத்திற்கும் இலங்கைக்கு முள்ள அணை. |
சேதுகன் | விருதர்ப்பன் உடன்பிறந்தவன். |
சேதுபுராணம் | சேது என்னும் இராமேச்சுரப் புராணம், நிரம்ப அழகியர் இயற்றியது. |
சேதுமாதவன் | சுந்தர பாண்டியனைக் காண்க. |
சேநசித் | 1. (ஞ.) கிரிசாசுவன் குமரன். 2. விசுவசித்தன் குமரன், இவன் குமரர் ருசிராச்வன், திருடாது, காச்யன், வச்சன். 3. இட்சுவாகு குலத்திற் பிறந்த பரீட்சித்தின் குமரனாகிய தலராஜன் புத்திரன். (பார~வன.) |
சேநன் | கந்தமூர்த்தியா லிறந்த அசுரன். |
சேநாதிபதி | திருதராட்டிரன் குமரன். |
சேநாதிராஜ முதலியார் | இவர் யாழ்ப்பாணத்துள்ள இருபாலையென்னும் ஊரினர். சைவர். இற்றைக்கு எண்பது வருடங்களுக்கு முன்னிருந்தவர். அவதானி, இவர் செய்த நூல்கள் நல்லைவெண்பா, நல்லைக் குறவஞ்சி, நல்லையந்தாதி, நீராவிக்கவி வெண்பா, ஊஞ்சற்பதிகங்கள் முதலிய |
சேநாநாபிகர் | இவர் மானாவூரில் எனாதியர் குலத்திற்றோன்றி அரிநாமம் மறவாது பஜனை செய்துகொண்டு அரசனுக்கு ஏவற் தொழில் பூண்டு வருவார். ஒரு நாள் இத்தொழில் பஜனைக்கு இடையூறு செய்வதென்றெண்ணி அதனை விடுத்து அரசனிடம் அணுகாதிருந்தனர். அரசன் ஏவலாளர் இவரிடம் வந்தழைக்க இவர் மனைவியிடம் இல்லையென்று சொல்லும்படி கூற அவ்வாறே மனைவியும் கூறினள். இவரிடம் வந்த ஏவலாளரில் ஒருவன் அரசனிடமணுகி இவர் உள்ளிருந்து கொண்டே இல்லையெனக்கூறினாரென அரசன் வெகுண்டு அவரைப் பாசத்தாற் கட்டிக்கொண்டு வருகவென்றனன். இதனை அறிந்த பெருமாள் சேனாநாபிகர் உருக்கொண்டு அடப்பத்துடன் அரசனிடஞ் சென்று அரசனுக்கு முகவேலை செய்கையில் சந்தோ ஷங்கொண்டு உன் கையால் எண்ணெய் என் தலையில் இருகவென்ன அவ்வாறே எண்ணெயிடுகையில் எண்ணெய்க் கிண்ணத்தில் சதுர்ப்புஜத்துடன் பீதாம்பர குண்டலங்களைக் கண்டு மேல்நோக்க நாவிதனா யிருக்கக்கண்டு, மீண்டும் எண்ணெய் வள்ளத்தைப் பார்க்கப் பீதாம்பர தாரியாயிருக்கக் கண்டு அவசங்கொண்டவனாய் இரண்டு ஜாமமாகியும் எழுந்திராதது கண்ட ஏவலர் அழைக்க உணர்வடைந்து நாவிதரைப் புகழ்ந்து இங்கே நீர் நான் வருமளவும் இருக்க, இராதொழியின் என்னாவி நீங்குமென்றனன். நாவிதர் நான் வீடு சென்று மீண்டும் வருகிறேனென்று விடை பெற்றுச் சேனாநாபிகர் வீடுசென்று அடட்பத்தை மூலையில் மாட்டி மறைந்தனர். அரசன் சபைக்குவந்து சேனாநாபிகரை அழைத்துவாருங்களென ஏவலாளர் ஓடிச் சேனா காபிகரை யழைக்கச் சேனாநாபிகர் அரசன் கோபித்தான் என்று பயந்துவரவும் அரசன் சேனாதாபிகரைக் கண்டு திடுக்கிட்டெழக்கண்டோர் நகைக்க அரசன் அவர் களைமதிக்காது காலையில்காட்டிய உமது திருவுருவத்தை மற்றொரு முறை காட்டு, வென்று இவருடைய பாதத்தைப் பிடித்து அங்கிருந்த எண்ணெய்க் கிண்ணற்றை நோக்குதலும் அரியைக் காணாதவனாய்கருந்தி அங்கிருந்தவர் இவர் அரிபக்தர் என்று சொல்லக் கேட்டு உம்மால் அரியைக்கண்டு வணங்கினேனென்று கூறி அன்று முதல் அவரிடத்திலேயே இருக்கச் செய்தனன். சேனாநாபிகர் அடப்பத்தில் பெருமாளால் வைக்கப்பட்ட பொன் இருந்ததுகொண்டு பிராமணர்களுக்குத் தானங்கொடுத்து வாழ்ந்திருந்தனர். |
சேநானி | நூறு காலாட்களுக்குத் தலைவன். யாமங் காப்போரைக் கட்டளையிடுபவன். (சுக்ர நீதி.) |
சேநாபதி | 1. பிராமணன் அரசகன்னிகையைப் புணரப் பிறந்தவன். 2, இது சேனைத்தலைவன் எனப் பொருள்படும். இது சாலியர், ரங்குனிகள், கைக்கோளர் முதலிய பலர்க்குப் பட்டம். (தர்ஸ்டன்.) |
சேநாபதிமகள் | இவள் வாசவதத்தையின் உயிர்த்தோழி. நீர்விழவிற்குச் செல்லத் தாயின் ஏவலர் அழைக்கவந்தபொழுது வாசவதத்தை இவளுக்கு மிக விசித்திரமான சிற்பத்தொழிலமைந்த ஒருவகை அலங்காரம் செய்துகொண் டிருந்தனள். அரசனைச் சேனாபதி பாதுகாத்தல்போல அரசன்மகளைச் சேனாபதியின் மகள் பாதுகாத்தல் மரபென்பது இதனால் அறியப்படும். (பெருங்கதை.) |
சேநாபிசரணம் | சத்ருமாரணத்தை விரும்பினவன் வல்லூறு எனும் பறவையால் செய்யும் யாகம் (பார~மா.) |
சேநாபிந்து | 1. துரியோதனன் தம்பி, நாலாநாள் யுத்தத்தில் வீமார்ச்சுநராலி றந்தவன். 2 துவீபப்பிரஸ் தமென்னும் தேசத்தரசன். அருச்சுநனால் சயிக்கப்பட்டவன். (பாரதம் சபாபர்வம்). |
சேநாவரையர் | இவர் தமிழிற் சிறந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்திற்குச் சிறந்தவுரையியற்றிய புலவர்சிகாமணி, இவர் தமிழில்கொண்டவலிமைபோல் வடமொழியிலும் வல்லவர் என்பது இவர் வடநூற் கொள்கைகளை ஆங்காங்கு உரையிற்கொண்டாளுதலால் விளங்குகிறது. இவரை வேதியர் என்பர். இவரது பெயரை நோக்குகையில் இவர் அரசராயிருக்கலாம். இவர் இன்ன சமயத்தவர் எனத் துணியக் கூடவில்லை. இதைத் தவிர வேறு நூலாயினும் நூற்குரையாயினும் செய்தனர் என்பதும் தெரியவில்லை. இவர்காலம் இன்னதெனப் புலப்படவில்லை, இவர், உரையாளர் ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருக்கு முற்பட்டவர் எனத் தெரிகிறது. எவ்வாறெனின் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆங்காங்குத் தொல்காப்பியத்திற்கு இவர் கூறிய உரையை மறுத்திருத்தலால் என்க, இவர் உரையாசிரியர்களில் ஒருவர், |
சேந்தங்கண்ணனார் | இவர் இயற்பெயர் கண்ணனார். சேந்தன் என்னுந் தந்தை பெயரின் அன்விகுதி கெட்டு அம்முச்சாரியைப் புணர்ந்து சேந்தங்கண்ணனா ரென்நாயிற்று. (தொல். எழு. 350) இவர் நெய்தற்றி ணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். கேட்போர் மனத்தைப் பிணிக்குமாறு இவர் நாரைவிடு தூது கூறியுள்ளார். (நற். 54) இவர் பாடியது. |
சேந்தனார் | காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தடிகள் அரண்மனையில் பொக்கிஷாதிபதியாயிருந்து பட்டினத்தடிகள் கட்டளைப்படி பொருள்களைச் சூறைவிட்டனர். இதைக் கேள்வியுற்ற அரசன் அப்பொருள்களைப் பொக்கிஷத்தில் சேர்ப்பிக்கவும், மிகுந்த சொத்துக்களைக் காட்டவும் வருத்திச் சிறையிலிட இருந்து ஆசாரியரால் நீங்கி மனைவிமக்களுடன் சிதம்பரமடைந்து விறகு விற்று வரும் லாபத்தால் ஒரு சிவனடியவரை உண்பித்து வரும் நாட்க ளில் சிவமூர்த்தி ஒருநாள் நடுராத்திரியில் இவரிடஞ்சென்று கூழுண்டு அந்தக்கூழை மறுநாள் தமது திருமேனியில் காட்டிச் சேந்தனார் வீட்டிலுண்ட கூழென்று அனைவர்க்குந் தெரிவித்து இந்த அற்புதம் இவரால் நடந்ததோ என்று ஐயம்கொண்டவர்க்கு ஐயம் நீங்கத் திருத்தேரையழுந்தச் செய்து சேந்தனார் திருப்பல்லாண்டு பாட அசையச்செய்தனர். ஒன்பதாந் திருமுறை யுள் சில பாசுரங்கள் இவர் அருளிச்செய்தவை. இவர் காலம், (கி. பி. 11 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். |
சேந்தன் | 1. ஒரு சிற்றரசன்; இவன் காவிரிக்கருகிலுள்ள அம்பர் எனும் நகர்க்கு அதிபதி. இவன் கல்வி கேள்விகளில் வல்லவன், தென்மொழி வடமொழி வல்லபுலவன், மகா கொடையாளி. அன்றியும் சம்பாபதியென வழங்கும் புகார் தெய்வத்திற்கு அந்தாதியும், இராமபிரான் கோதண்டம், அர்ச்சுநன் காண்டீபம், முருகக் கடவுள் வேலாயுதம் இவற்றைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறான். இவன் ஒளவையாராற் புகழப்பட்டவன். கல்லாடரும் இவனைப் புகழ்ந்ததாகத் தெரிகிறது. 2. தஞ்சாவூரையடுத்த அம்பல் என்னும் ஊரிற் கதிபதி, பிறப்பால் வேதியர் இவரும் உபயகவி, இவரை அருவந்தை யூராண்ட அரசராகவுங் கூறியிருக்கிறது. இவர் திவாகரனென்னும் சைநனால் நிகண்டு செய்வித்தனர். ஆதலால் அதற்குத் தம்பெயரும் செய்தோன் பெயரும் சேர்த்துச் சேந்தன் திவாகரமெனப் பெயரிடப் பட்டது. 3. இவர்க்கு முதலூழித் தனியூர்ச் சேந்தன் எனவும் பெயர். செங்கோன் தரைச் செலவு காண்க. 4. அழிசியின் வரலாற்றுட் காண்க. |
சேந்தன் கண்ணனார் | கடைச்சங்கப் புலவர்களிலொருவர். |
சேந்தன் கீரன் | இவர் கடைச்சங்கமருவிய புலவர்களிலொருவர். இவர் பெயர் கீரராக இருக்கலாம். கீரரென வேறு புலவருமிருத்தலின் இவரைச் சேந்தன்கீரன் என்றனர். (குறு 311) |
சேந்தம்பூதனர் | சேகம்பூதனார் காண்க. |
சேனஜித் | பூருகுலத்தில் பிறந்த பிருகதிசு வம்சத்தவனான விசதன் என்னும் பெயருள்ள ராஜபுத்திரன். இவன் புத்திரர்கள் ருசிராஸ்வன், திருடாது, காசியன், வச்சன் முதலியவர்கள். |
சேனன் | கனகமாலை சகோதாருள் ஒருவன். |
சேனாபிந்து | பாண்டவ பட்சத்தவனாகிய பாஞ்சால அரசன். (பார. ஆதி.) |
சேனை | தருமப்பிரசாபதியின் புத்திரி, புறாக்களைப் பெற்றாள். |
சேனை முதலியார் | விசுவசேநரைச் காண்க. |
சேனைக்குடையார் | (இலை வாணியர்) இவர்கள் வெற்றிலைக்கொடி நட்டு ஜீவிப்பவர். இவர்கள் தங்களைக் கொடிக்கால் பிள்ளைமார் என்பர். இவர்களுக்கு மூப்பன், செட்டி எனவும் பட்டம் உண்டு, தஞ்சாவூரில் இவர்கள் வீட்டில் வேலை செய்யப் பறையன் போவதில்லை. அம்பட்டர் இவர்களுக்கு வேலை செய்வதில்லை. இவர்கள் வீட்டில் அம்பட்டன் வண்ணான் உண்ணான். இவர்கள் இடங்கையைச் சேர்ந்தவர்கள். (தர்ஸ்டன்) |
சேமகன் | 1. தண்டபாணியின் குமரன் (2) சுகிகுமரன். இவன் குமரன் சுவவிருதன். |
சேமியன் | உக்ராயுதன் குமரன். இவன் குமரன் சுவிரன். |
சேயன் | அவிர்த்தானனுக்கு அவிர்த்தானியிடத்துதித்த குமரன். |
சேயாறு | இது காஞ்சிமாநகர்க்கு ஆயிரம் யோசனை தூரத்தில் சுமேரு பருவதத்தில் குமாரக்கடவுளுக்குத் தேவர் தேவசேநாபதி பட்டங்கட்ட அபிஷேகித்த நீர் ஆறாய்ப்பெருகியது என்பது. மற்றொரு விதம் அந்தமாபுரத்து வேதியர் எழுவர் தீமைபுரிந்து வந்து, தாங்கள் புரிவன தீமையென்றறிந்து பிரமனை யெண்ணித் தவம்புரியப் பிரமன்தோன்றி நீங்கள் எழுவரும் இம்மலையில் தவஞ் செய்துகொண்டிருங்கள்; குமாரக்கடவுளின் வேல் இம்மலையைப் பிளந்து செல்லும், அக்காலத்துங்கள் தீமை தீரும் என்று மறைந்தனர். எழுவரும் தவஞ் செய்துகொண்டிருக்கையில் குமாரக்கடவுள் வேல் வந்து அம்மலையைப் பிளக்க அதில் தவஞ்செய்து கொண்டிருந்த இவர்களுடலும் பிளந்தது. அப்பிளவு உண்ட இடத்திலிருந்துவந்த வெள்ளத்து டன் உதிரம் கலந்து வருதலால் இப்பெயர் பெற்றது என்பர். |
சேயை | 1, சிவசூர்ய தானத்தமருஞ்சத்தி. 2. சகாதேவன் பாரி. |
சேரநாடு | வடக்குப் பழனிமலை, கிழக்குத் தென்காசி, மேற்குக் கோழிக்கோடு, தெற்குக் கடற்கரை இந்த எல்லைக்கிடையில் பதின் காதவழி கொண்ட நாடு, |
சேரன் | 1. மேற்சேரநாட்டிற்குச் சொன்ன எல்லை கொண்ட நாட்டை ஆள்பவன். இவன் வம்சம், சந்திரவம்சத்து நகுஷன் புத்திரனாகிய யயாதியின் சந்ததியில் ஆச்ரிதன் என்பவனது புத்திரர் மூவரில் ஒருவனால் உண்டாயிற் றெனக் கூறுவர். மேற்சேரர்க்குச் சொன்ன வெற்றியுடன், ஒரு சேரன் இமயத்தில் தன் விற்குறி வைத்ததாகக் கூறியிருக்கிறது. இவனுக்குப் பனைமாலை, இவன் குதிரை பாடலம், கொடி விற்கொடி, இவனுக்கு உதியன், குடகன், குட்டுவன், குடக்கோ, கேரளன், கொங்கன், கொல்லிவெற்பன், கோதை, சோலன், பனந்தாரன், பூழியன், பொருனைத்துறைவன், பொறையன், போந்தின்தாரோன், மலையன், மலையமான், வஞ்சி வேந்தன், வானவன், வானவரம்பன், வில்லவன் எனவும் பெயர். இக்குலத்தவருள் ஒருவன் தன்னாடு மழையிலாதிருக்க இந்திரனிடஞ் சென்று மழை வேண்டி வந்தனன். இக்குலத்தில் சிவனடியார், சேரமான் பெருமாணாயனார், திருமார் குலசேகராழ்வார்; சேரன் தயாளமாண்டவன்; கோங்கன் கோயம்புத்தூர் கரூர் ஆண்டவன். இச்சேரனும் கோங்கனும் சேரன் குமரர்கள். தங்கள் தேசத்தை இரு வகையாகப் பிரித்துக்கொண்டனர். 2. கிருஷ்ணனைப் பக்ஷியென்று அம்பாலெய்து கொன்றவன், ஒரு வேடன். |
சேரன் செங்குட்டுவன் | இவன் தமிழ்நாடாகிய சேரர்நாட்டுத் தலைவன். இவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். தாய் சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணை, தம்பி இளங்கோ. இவன் மனைவி இளங்கோவேண்மாள், இவள் வேண்மாள் என்பதால் வேளிர்குலத்தவளாக எண்ணப்படுகிறாள். இவனிவளையன்றி வேறெவரையும் மனைவியாகக் கொள்ளவில்லை. இவனுக்குக் குட்டுவஞ்சேரல் என்ற குமரன் ஒருவனிருந் தனன். இவன் தன்னைப் பதிற்றுப்பத்தில் (5 வதால்) பாடிய பாணருக்குப் பெரும்பொருளுடன் இக்குட்டுவஞ் சேரலையும் பரிசாக அளித்தனன். செங் குட்டுவனுக்கு அம்மான் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும், அந்த அம்மான் குமரன் சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியென்றும் எண் ணப்படுகிறது. இவன் தன் தாயாகிய நற்சோணையின் பொருட்டுச் சமைத்த சிலையைக் கங்கை நீராட்டச் சென்றகாலத்து ஆங்கு எதிர்த்த ஆரிய மன்னர் நூற்றுவரை யெதிர்த்து வெற்றி கொண்டான். இவன் கொங்கர் செங்களத்துச் சோழபாண்டியர்ளுட னெதிர்த்துக் கொடுகூரை நாசஞ் செய்தனன். (இது மைசூரிராஜ்யத்தின் ஒரு பிரிவு) இன்னுமிவன் கடலை அரணாகக்கொண்டு இடர் விளைத்தவர்களை மரக்கலங்களில் சேனை கொண்டு சென்று வெற் றிகொண்டான். இவன் பாண்டியன் படைத்தலைவனாகிய பழையன் என்பான் மோகூராண்டிருந்தனன். சேரன் செங்குட்டுவனுக்கு மோரிய அரசன் அறுகை நண்பன். அறுகையாகிய நண்பனுக்குப் பழையன் பகைவனாதல் நோக்கி இவன் பழையனுடன் போரிட்டு அவனது காவன் மரமாகிய வேம்பினை வெட்டி அவனது சேனைகளைக் கடாக்களாகக்கொண்டு அவன் மகளிர் கூந்தல்களை அறுத்துக் கயிறுகளாக்கி வண்டி இழுப்பித்தான் என்பர். 9ம் கடற்கரையிலிருந்த வியலூரையும் அழித்தனன். செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழனிறந்தகாலத்து அவன் மகனும் தன் மைத்துனனுடாகிய இளஞ்சோழன் (பெருங்கிள்ளி) பட்டமடைந்த போது அவனைத் துன்புறுத்திய நேரிவாயிலில் இளங்கோ ஒன்பதின்மர் சோழமன்னரை வெற்றிகொண்டான். இடும்பாதவனத்துப் போரிட்டுப் பகைவரை வென்றான். இவன் காலத்துக் கோவலன் கண்ணகி மணிமேகலைகளின் கதை நிகழ்ச்சி. சிலப்பதிகார கதாநாயகியான கண்ணகியின்பொருட்டு வடநாட்டு யாத்திரை நிகழ்த்தி நூற்றுவர் கன்னரால் தமிழ்நாட்டரசரை இகழ்ந்த ஆரிய அரசர்க்கு யுத்த செய்தி அறிவித்து நீலகிரியினின்று புறப்பட்டுக் கங்கையாறு கடந்து உத்தரகோச லத்தையடைய செய்தியறிந்த கனக விசயரென்ற வடநாட்டரசர் உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன், என்போரைத் துணைகொண்டு எதிர்க்க அவர்களுடனெதிர்த்துப் போரிட்டுக் கனகவிஜயருடன் தேர்வீரர் ஐம்பத்திருவரையும் தன்னகப்படுத்தினன். பின் பத்தினிச் சிலையை இமயத்திருந்து எழுப்பித்துக் கனகவிஜயர் முடிமீதிருத்தி நீர்ப்படை செய்து தன்னாடடைந்து பத்தினிக் கடவுளைப் பிரதிட்டை செய்வித்து, தேவந்திமேல் ஆவேசித்த பாசண்ட சாத்தன் சொற்கேட்டுத் தன்னாட்டின் மலைப்பக்கத்து வந்திருந்த இளம்பெண்களின் மீது காகநீர் தெளிக்க அப்பெண்களின் பழம்பிறப்புணர்ந்து பத்தினிக்கடவுட்குக் கோயிலமைத்துப் பிரதிட்டை செய்வித்தனன், அப்பத்தினிக் கடவுள் சரிதத்தை இவன் சகோதரராகிய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரமெனுங் காவியமாக அக்காலத்து இயற்றி அரங்கேற்றினர். இவன் பெருநற்கிள்ளிக்கு நேர்ந்த ஆபத்தைக் கேள்வியுற்றுச் சேனைகளுடன் சென்று நேரிவாயிலில் அவன் பகைவரை வென்று பட்டத்திருத்தினன், இவன் காலத்திருந்த பாண்டியர் ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன் (நன்மாறன்), தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன, கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி. இவன் காலத்திருந்த சோழர்கள் உறையூரி மணக்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி புகாரில் கரிகாற் பெருவளத்தான், கிள்ளிவளவன் (சேட்சென்னி), நலங்கிள் ளியுமாவர். இவன் காலத்திருந்த புலவர்களுள் சிறந்தார் பரணர், சீத்தலைச்சாத்தனார் முதலியோர். இவன் கடலிற் கப்பற்படையுடன் சென்று போரிட்டுப் பகைவர்களை வென்றமையால் இவனுக்குக் கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் எனவும் பெயர். இவன் சேநாபதி வில்லவன் கோதை, இவனது தேசவருவாயின் தலைமை அமைச்சன் அழும்பில்வேள், இவ்வமைச்சனுக்கு வானவிறல்வேள் எனவும் பெயர். “இவனது தூதுவர் சஞ்சயன், நீலன் என்போர். இவனது முத்திரை வில் கயல், புலி. இவன் திருமுகம் எழுதுவோர் கண்ணெழுத்தாளர் எனப்படுவர். இவனுடன் இவன் கோப்பெருந்தேவியுமரசு வீற்றிருப்பள். இவன் முன்னோர் அணிந்திருந்த எழுமுடிமாலை இவனும் அணிந்திருந்தனன். இவன் சற்றேறக் குறைய (35) வருஷம் அரசாண்டிருக்க லாம். இவன் சிவபெருமானையும் விஷ்ணு மூர்த்தியையும் உபாசிப்பவனென்பதைச் சிலப்பதிகாரங் கூறுகிறது. இவன் தன் காலத்து இத்தமிழ் நாட்டரசைப் பெருவிரிவினதாய் வளரச்செய்தனன். இவ்வரசனது காலம் சற்றேறக்குறைய கடைச்சங்கத்தவர் காலமாக வேண்டும். இவனைக் கடைச்சங்கத்திருந்த மாமூலனார், சீத்தலைச்சாத்தனார் முதலியோர் இவனது வட நாட்டு வெற்றிகளைப் புகழ்ந்து பாடியிருத்தலால் இவன் காலம் கடைச்சங்கத்தவர் காலமெனக் கொள்ளப்படுகிறது. இக்கடைச்சங்கம் சிலர் கி பி. இரண்டாம் நூற்றாண்டெனவும், சிலர் 4, 5ம் நூற்றாண்டுகளென்றும் கூறுகின்றனர். |
சேரமாண்டார் | மகா பொறுமையுள்ள சேரதேசாதிபதி இவரை அவமதிக்க ஒரு சோழன் தன்னிடமிருந்த ஒருவனை அனுப்பிக்க அந்த ஏவலாளன் வந்து சேரமாண்டார் வாசலிலிருந்த காவன் மாமரத்தை வெட்டினன். சேரம் ஆண்டாரின் தாயார் வெளியில் வந்து யாரடா மரத்தை வெட்டுபவன்? எனச் சோழன் ஏவலன் உங்கள் அப்பன் என்றனன். இதைக் கேட்ட சேரம் ஆண்டார் அவன் சொல்வது சரி, ஆகையாற்றான் அவ்வளவு சுவதந்தரமாய் வெட்டுகிறான் என்றனர். அதைக் கேட்ட சோழன் ஏவலாளி, தண்டன் சமர்ப்பித்து உண்மை யுணர்த்திப் போயினன். |
சேரமானெந்தை | இவர் கடைச்சங்கத்தவர் காலத்திருந்த சேரமன்னவரில் ஒரு வர்போலும், (குறு~22) |
சேரமான் அந்துவஞ்சோலிரும்பொறை | உறையூர் ஏணிச்சேரி முடமோசி யார்க்கு நண்பன். இவன் சோழன் முடித்தலைக்கேப் பெருநற்கிள்ளியின் பகைவன். (புறநா.) |
சேரமான் இளங்குட்டுவன் | கடைச்சங்க மருவிய புலவன். (அகநானூறு.) |
சேரமான் கடலோட்டியவேல் கெழுகுட்டுவன் | பாணரால் பாடப்பட்டவன், (புறநானூறு.) |
சேரமான் கடுங்கோவாழியாதன் | இவனைச் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் எனவும், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் எனவுங் கூறுவர். கபிலர் பாடிய செய்யளுக்கு நூறாயிரம் காணமும், மலைமீதேறிக் கண்டநாடும் பரிசிலாகத் தந்தவன். (புறநானூறு.) |
சேரமான் கணைக்காலிரும்பொறை | இவன் செங்கணான் சோழனுடன் போரிட்டுப் பிடிபட்டுக் குடவாயிற்கோட்டத்துச் சிறையிற் கிடந்து தாகங்கேட்டுப் பெறாது பின்பு பெற்று அதை மானத்தா லுண்ணாது கள வழி நாற்பது பாடிய பொய்கையாரால் விடுபட்டவன். (புறம் 74.) |
சேரமான் கருவூரேறிய வொள்வாட்கோப் பெருஞ்சேரலிரும்பொறை | இவனைக் கண்டபொழுது நரிவெரூஉத்தலையார்க்குப் பழைய நல்லுடம்பு கிடைத்தது. (புற நானூறு.) |
சேரமான் குடக்கோ இளஞ்சோலிரும் பொறை | பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப் பெருங்குன்றூர்க்கிழார் பாடியதற்கு (3200) பொன் தந்தவன். சேரமான் குடக்கோச்சோலிரும்பொறைக்கு ஒரு பெயர். |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் | சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற் கிள்ளியுடன் பொருதுமாய்த்து கழாத்தலையரால் பாடப்பட்டவன். (புறநானூறு.) |
சேரமான் குடக்கோச்சோலிரும்பொறை | பெருங்குன்றூர்க்கிழாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.) |
சேரமான் குட்டுவன் கோதை | வீரன், மிக்க கொடையாளி; குட்டுவநாட்டை ஆண்டவன். கோனாட்டு எறிச்சலூர்மாடலன் மதுரைக்கு மரனாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.) |
சேரமான் கோக்கோதைமார்பன் | இவன் நகரம் தொண்டி என்பது, பொய்கை யாரால் பாடல் பெற்றவன். (புறநானூறு.) |
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக் கோதை | தன் மனைவி இறந்தபொழுது பிரிவாற்றாது இரங்கினவன். (புறநா.) சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன் குண்டுகட்பாலியாதனால் பாடப்பட்டவன், சேரமான் கடுங்கோவாழியாதனுக்கு ஒரு பெயர். (புற.) |
சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன் | ஒரு சேரன், கபிலரால் பாடப்பட்டவன், சேரமான் கடுங்கோவாழியாதனுக்கு ஒரு பெயர். (புறநானூறு.) |
சேரமான் தகடுரெறிந்த பெருஞ்சோலிரும் பொறை | இவன், தன் கட்டிலில் அறியாமல் ஏறித்துயின்ற மோசிகீரனாரைத் துன்பஞ் செய்யாமல் அவர் எழுமா வும் கவரிகொண்டு வீசியதனால் அவராற் புகழ்ந்து பாடப்பட்டவன். பதிற்று பத்தில் எட்டாம் பத்துப் பாடிய அரிசில்கிழார் ஒன்பது நூறாயிரம் காணம் பரிசில் கொடுத்தவன். தகடூர்யாத்திரை இவன காலத்துப் போலும். (புறநானூறு.) |
சேரமான் தோழர் | ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு ஒரு பெயர். |
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானலிளஞ்சேட்சென்னி | இவன் சேரமானுடைய பாமுளூரை வென்று கைக்கொண்டவன். இவனைச் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியெனவுங் கூறுவர். இவனைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், (புறநானூறு.) |
சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ | இவன் ஒரு சேரன், கவிவல்லவன் பேய்மகள் இளவெயினியால் பாடப்பட்டோன். இவனைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்பர் (புறநானூறு.) |
சேரமான் பெருஞ்சேரலாதன் | சோழன கரிகாற்பெருவளத்தானுடன் போரிட்டுத் தன் அம்பு அவன் மார்பைத் தொளைத் துருவியது காணது முதுகிற் பட்டதென வெண்ணித் தற்கொலை செய்துகொண்டவன். கழாத்தலையராற் பாடப் பெற்றவன். (புறநானூறு.) |
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் | முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டவன். இவன் பாரதயுத்தத்தில் இருவர் சேனைக்கும் உணவளித் தவன். இதனால் தமிழ் முதற்சங்கம் பாரதகாலத்திற்கு முற்பட்டது என்பதறியப்படுகிறது. (புறநானூறு.) |
சேரமான் பெருமாணாயனார் | கழறிற்றறிவார் நாயனாரைக் காண்க. (பெ~புராணம்.) |
சேரமான் மாவெண்கோ | ஔவையாரால் பாடப்பெற்றவன். இவன் காலத்தாசர் பாண்டியன் கானப்பேர்தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, (புறநானூறு.) |
சேரமான் யானைக்கட்செய்மாந்தரஞ் சேரலிரும் பொறை | குறுங்கோழியூர்க்கிழாராற் பாடப்பெற்றவன் (புறநானூறு.) |
சேரமான் வஞ்சன் | திருத்தாமனராற் பாடப்பட்டவன். இவன் மகாகொடையாளி (புறநானூறு.) |
சேரமான்மாந்தாஞ் சேரலிரும்பொறை | இவன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தவன். இவன் காலத்துப்புலவர் பொருந்திலிளங் கீரனார், வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனார். (புறநானூறு.) |
சேரர் | இராஜாக்களும், கோங்கு அரசர்களும் இருவரும் வேறல்லர் என்பர் சிலர் வேறெனப் பிரித்துக் கூறுவர். சேரரும், கோங்கரும் ஒரே அரசாட்சியில் இருந்ததாகத் தெரிகின்றது. கொங்கு நாட்டில் ஏழு அரசர்கள் தனித்தனி அரசாட்சி செய்ததாகக் கூறப்படுகின்றது, சேரர்கள் இவர்கள் ஆண்ட நாட்டை ஆண்டதாகக் கூறுகிறார்கள். அந்த நாடு பாண்டிய நாட்டுக்கு வடக்கும், பல்லவர்களும் சோழர்களும் ஆண்ட நாட்டிற்கு மேற்கும், கொங்கண நாட்டிற்குத் தெற்குமாம். இவர்கள் ஆண்ட நாடுகள் அந்த அந்த ராஜாக்கள்படி வேறுபடுகின்றன. இவர்கள் சோழ, பாண்டியர்களுடன் ஒரே காலத்தில் இருந்ததாகத் தெரியவருகிறது, அசோகன் எழுதிய நூல்களில் கேரளத்தரசன், கேரளபுத்திரன், என்று கூறுகிறது. (According to Ptolemy VII, 1, 86.) கரூர் அவர்களுடைய இராஜதானி. ஹியூன்சாங் என்பவன் கொங்கணபுரமென்றும் கூறுகிறான். |
சேரலாதன் | செங்குட்டுவனுக்கும் இளங்கோஅடிகளுக்கும் தந்தை. மனைவி சோழன் மகள் நற்சோணை. (சிலப்பதிகாரம்.) |
சேரவம்சாந்தக பாண்டியன் | இவன் சோழவம்சாந்தக பாண்டியனுக்குக் குமரன் மதுரை ஆண்ட (52) ஆம் பாண்டியன். |
சேர்வை | வேலை செய்வோன் என்னும் பொருளது. இது அகமுடையான் வலையன், அம்பலக்காரன், கள்ளன், மறவன், பரிவாரம் முதலியவர்க்கும் பட்டமாக வழங்கி வருகிறது. (தர்ஸ்டன்.) |
சேர்வையணி | எள்ளும் அரிசியுஞ் சேர்ந்தாற்போல் விளங்கும் பேதத்தை யுடைய பல வணிகளது சோக்கையாம். இதனை வடநூலார் சம்சிருஷ்டிய லங்கார மென்பர். இது மூன்று வகைப்படும். அவை, பொருளணிச் சேர்வையணி, சொல்லணிச் சேர்வையணி, சொற்பொருளணிச் சேர்வையணி எனப்படும். இவற்றி னியல்பைக் குவலயானந்தம் காண்க. |
சேறைக்கவிராஜபண்டிதர் | 1. இவர்க்கு ஆசுகவிராஜ சிங்கம் எனவும் பெயர், இவர் வண்ணம் பாடுவதில் வல்லவராதலின் இவர்க்கு வண்ணக் களஞ்சியம் எனவும் பெயர். சாதியில் இவர் திருக்காளத்தியிலிருந்த செங்குந்தர் மரபின ராகிய வேங்கடராஜமுதலியாரால் ஆதரிக்கப்பட்டவர். இவர் ஊர் சேறை யென்பதால் இப்பெயர் கொண்டவர்கள் பல இருத்தலின் தீர்மானிக்க முடியவில்லை. இவர்க்கு முருகக்கடவுள் உபாசனமூர்த்து, இவர் பாண்டி நாடு சென்று சீவிலிமாறருடைய பரம்பரையைச் சார்ந்த இராம பாண்டியரைப் பாடிப் பல பரிசு பெற்றவர். “செந்தமிழோர் தங்களிருசீ பாததூளி பொர, வந்த புலவோர் தமார்பாணி கந்த, னடிகையாரப் பரவுமாச கவிராஜன், கடிகையார் கோலாகலன்” பாண்டியராஜா ஆரென்று கேட்டபோது பாடியது. “தென்பாராளு மறிவின் குறுமுனி தெக்கிண கயிலையில் வாழ், செங்குந்தக் குலவேங்கடராயன் றிருவாசற்புலவன், என்பேர் வண்ணக்கட்சி யதன்றி யெதிர்த்தவர் மார்பாணி, யிந்தத் தேசப்புலவர் மனத்துக்கிடியென வந்தேன் காண், உன்பால் யான்வர வாசற்காரர்க் குத்தாரம் பண்ணி, யுள்ளுக் கென்னை யழைப்பித்தா சிலுரைக்குங் கவிதைகள் கேட், டென் பால் வரிசைகள் பரிசில்கள் நல்கி யிரக்ஷித்திடவேண்டு, இராமா சீவல மாறா பாண்டியராஜ வரோதயனே. 2. மாணாக்கர் பாடியது. நல்ல பாம்பு தீண்டப் பெற்றபோது பாடியது. “ஆறு முகனாணையவனடியார் தம்மாணை யேறு மயி லாணை யென்னாணை வீறுபுகழ், தேறுகவி ராசராசன் றிருவாணை யேறியவாறேயி றங்கு “. |
சேறைக்கவிராஜபிள்ளை | இவர் சோழ நாட்டுச் சேறையென்னும் ஊரினர். சைவ சமயத்தினர். குலம் கருணீகர், ஆசுகவி பாடுந்திறம் உள்ளவர். இவரியற்றிய நூல்கள் காளத்திநாதருலா, சேயூர் முருகனுலா, வாட்போக்கி நாதருவா, அண்ணாமலையார் வண்ணம், முதலிய. |
சேவலூர்க்கிழார் மகன் பெரும் பூதங்கொற்றனார் | கடைச்சங்க மருவிப் பாடிய புலவர் |
சேவைகாவலர் | சேக்கிழார் சுவாமிகளுக்கு ஒரு பெயர். |
சேஷ்டர் | ஜலத்திற்காதார தேவர், இவர்க்குப் பவர் எனவும் பெயர். |
சேஷ்டை | ஜலத்திற்க திட்டான சத்தி. |