ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சூக்குமர் | அஷ்டவித்தியேசுரரில் ஒருவர். |
சூக்குமை | சிவசூர்யத்தானத்தமருஞ்சத்தி. |
சூக்தி | சத்தியன் தேவி, இவளில்லா விடத்துப் பாந்தவ்யமில்லை. |
சூசகன் | பிறர் குற்றங்களைக் கண்டு கூறுதற்பொருட்டு அரசனால் நியமிக்கப்பட்டவனாய் அங்ஙனமே அக்குற்றங்களை யறிந்து அரசற்கு அறிவிப்பவன், (சுக்ரநீதி.) |
சூசமி | அநுகிலாதன் தேவி. |
சூசி | வீமனுடன் போர்புரிந்த வீரன். துரியோதனன் தம்பி. |
சூடாமணி உள்ளமுடையான் | மண்டலபுருடன் இயற்றிய சோதிட நூல், |
சூடாமணி நிகண்டு | ஒரு தமிழ் நூல், தெய்வப் பெயர்த் தொகுதிமுதல் பன்னி ரண்டு தொகுதிகளை யுடையது. திவாகரத்திற்கும், பிங்கலத்திற்கும் வழி நூலாகவுள்ளது. இந்நூலாசிரியர் வீரபுரத்திலிருந்த மண்டல புருடர். |
சூடாலை | இவள் ஞானி, இவள் ஞானம் பெற்றுச் சிகித்து வசனாகிய தன்னாயகனுக்குப் போதிக்க, வனஞ்சென்ற நாயனிடம், கடன் என்னும் தேவகுமரனாய்ச் சென்று அரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து சமாதியிலிருத்தி, மீண்டும் பெண்ணுருக்கொண்டு மதனிகை யென்னும் பெயருடன் அரசனை மணந்து அவனைச் சோதிக்கச் சோரத்தனஞ் செய்ய அரசன் சித்தசலன மில்லாதிருக்கக் கண்டு தன் நிசவுருக்காட்டி அரசனைப் பிரியாதிருந்து முத்தியடைந்தவள். (ஞானவாசிட்டம்.) |
சூடிக்கொடுத்தாள் | ஆண்டாளைக் காண்க. இவளருளியவை திருப்பாவை, நாச்சியார் திருமொழி. |
சூதகம் | (5). ஜநநாசூசம், மாணாசூசம், |
சூதசம்மிதை | இது விபூதி, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம், சிவபூசை, சிவதானமகிமை, ஸ்தலவிசேஷமகிமை இவைகளைச் சிறப்பாகக் கூறும். இது தமிழில் தேவராசப் பிள்ளை யென்பவரால் மொழிபெயர்க்கப் பட்டது. |
சூதன் | 1. மன்னவன், பிராமணப் பெண்ணினைப் புணரப்பிறந்தவன், தேரோட்டுவோன், மந்திரித்தொழில் செய்வோன். (மனு.) 2. விஸ்வாமித்திர புத்திரன். |
சூதபுத்ரன் | கர்ணன், |
சூதமாகதர் | அரசரைக் களிப்பிக்கப் பாடுவோர். பிருதுவின் யாகசுத்தி காலத்தில் பிறந்தவர். |
சூதர் | 1. (சூ) உரோமஹருஷணர் குமரர், வியாசர் பாணாக்கர், சூத்திரர். இவர் ஒரு முறை புராணபடனஞ் செய்யுங்கால் பலராமரைக் கண்டெழாது இறுமாந்திருந்த காரணத்தால் பலராமராலுயிரிழந்து இருடிகள் வேண்டு கோளால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பெற்றவர். (இவரைக் கொன்ற காரணத்தால் பலராமரைப் பிரமகத்தியற்றியது). உக்கிரசிரவசு என்னும் பெயரும் பெற்றனர். இவர் திரையாரணி முதவிய அறுவரிடத்தும் ஆறு சங்கிதைகளைக் கற்றுச் சுகரிடம் நான்கு மூலசங்கிதைகளைக் கற்றவர். சௌநகாதி முனிவர்க்குப் புரரணங்களை யோதினவர். இவர் ஆச்சிரமத்துப் பாண்டவர் சிலநாள் தங்கியிருந்தனர். உதங்கனைக் காண்க. 2. பிரமன் யாகஞ்செய்கையில் அக்கும் பத்திருந்து பிறந்தவர். இவர்க்குப் பிரமன் புராணங்கூறினவன். (பிரம்மகைவர்த்தம்.) 3. நின்றேத்துவோர். |
சூதாசூான் | ஒரு அசுரன், இன் தேவாதியரை வருத்த விநாயகரும் கந்தமூர்த்தி யும் வேண்டச் சிவமூர்த்தி இவனைச் சங்கரித்தனர். |
சூதாடிக்கெட்டோர் | நளன், தருமபுத்திரன் முதலியோர். (சுக்ரநீதி.) |
சூதிகாக்கிருகம் | அச்சுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புநர்பூசம், உத்தரம், அத் தம், சித்திரை, சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், உத்தரட்டாதி, ரேவதிகளிலே திங்கள், வியாழன், வெள்ளி, சனிவாரோ தயங்களில்; கும்பம், விருச்சிகம், ஒழிந்த லக்கினங்களில்; இருத்தை ஒழிந்த திதிகளில் சுபகிரகங்கள் நோக்க, அஷ்டமசுத்தியாகப் பிள்ளை பெறுதற்கு இடம் உண்டாக்கி அதில் கர்ப்பஸ்தரி பிரவேசிக்க வேண்டும். |
சூத்திரகன் | 1. விதிசையென்ற நகரின் அரசன் சந்திராபீடனாகத் தோன்றினவன் இவனே, 2. (சூ.) பிரசேநசித் குமரன். 3. மகததேசாதிபதியாகிய சுசர்மன் சகோதரன், இவன் சகோதரனாகிய சுசர்மனைக் கொன்று அரசாட்சி கொண்டவன், |
சூத்திரங்கள் | இது சுபாசுபகர்மங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் விதிகளடங்கிய நூல்கள், அவை பதினெண் வகை: போதாயனம், ஆபஸ்தம்பம், சதயஷாடம், திராஹ்யாயனம், அசஸ்தியசா கல்யம், ஆச்வலாயனம், சாம்பவியம், காத்யாயனம், வைகானஸம், சௌனகீயம், பாரத்வாஜம், அக்கிவைச்யம், ஜைமினீயம், வாதூலம், மாத்யந்தினம், கௌண் டின்யம், கௌஷீதகம், ஹிரண்ய கேசி. இவை செய்தோரால் பெயர்பெற்றவை. |
சூத்திரசாதனி | ஒரு பிறப்பில் சூத்திரன் யிருந்து, தீயபாவத்தால் புழுவாய்ப் பிறந்து வியாசரால் அவ்வுரு நீங்கி முறையே, புலையன், சூத்திரன், அரசனாய், யுத்த முனையிலிருந்து பிராமணன் வீட்டிற் பிறந்து அவ்வியேய மகருஷியாய்த் தேவர் வணங்க இருந்தவன். (பாரதம.) |
சூத்திரதருமம் | வேதசாத்திரமறிந்த வேதியனுக்குச் சிசுரூஷைசெய்வதே இவனுக்கு மோகத்தைத் தரும். இவன் உள்ளும் பறமும் பரிசுத்தனாய் உயர்ந்த குலத்தவனைக் கொடுமையாகப் பேசாமல் முதல் மூன்று வருணத்தார்க்கும் ஏவல்செய்து கொண்டு அகங்காரமில்லா திருப்பவன் சூத்திரனாவான். |
சூத்திரநிலைகள் | 1. பிண்டமாகக் கூறலாகிய பிண்டசூத்ரம், தொகுத்துக் கூறலாகிய தொகைச்சூதரம், வகுத்துக்கூறும் வகைச்சூத்திரம், இது இதைக் குறித்ததெனக் கடறும் குறிச்சூத்திரம், செய்கையைக் கூறும் செய்கைசூத்திரம் மேற்கூறிய வகைகளைக் கொண்டு இவற்றின் புறத்தை அடையும் புறனடைச் சூத்திரம் என்பன. (நன்~பா) 2. ஆநசெழுக்கு, சிங்கநோக்கம், தவளைப் பாய்ச்சல் பருந்தின் வீழ்ச்சி என்பன, (நன்~பா.) |
சூத்திரம் | 1. குறுகிய செய்யுட்களில் பல வகை யகன்ற பொருள்களைச் செவ்வையாக அடக்கி இனிதாக அப்பொருள் விளங்கத் திட்பம் நுட்பம் சிறந்து வருவதாம். 2. சிறிய கண்ணாடியில் பெரிய தேகங்களின் உருசெவ்வையாகச் செறிந்து இனிதாக விளங்குதல் போல், சில எழுத்தாலான செய்யுட்களில் பல் பொருள்களை யடக்கத் திண்மை நுண்மையுடன் நிலவுவது. (நன்~பா) 3. இது ஆறு வகைப்படும், பெயர்ச்சூத்திரம், விதிச்சூத்திரம் விலக்கியற்குத்திரம், நிலயச்சூத்திரம், அதிகாரச்சூத்திரம், ஞாபகச்சூத்திரம். பெயர்ச்சூத்திரம்: இலக்கணங்கட் குபகாரமாக இதற்கிது பெயரென்பது விதிச்சூத்திரம்: முன்னில்லதனை மொழிவது; விலக்கியற் சூத்திரம்: பொதுவகையால் விதித்ததனை மறுப்பது; நியமச்சூர்திரம்: முன்னொரு வகையாள் முடிந்தத னைப் பின்னும் எடுத்து விதிமுகத்தான் விலக்குவதும், விலக்கும் வகையான் விதிப்பதும் ஆம்; அதிகாரச்சூத்திர: ஆற்றொழுக்கு முதலிய சூத்திரநிலையுள் ஒன்றேற்கும் வகையால் இயைபொருள் விளைப்பது; ஞாபகசூத்தாம்: எளிதுஞ் சிறிதுமாக இயற்றற்பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிதொரு பொருளை யறிவிப்பது. |
சூத்ரம்மூன்று | இது வாஸ்துபத சூத்திரம். அதுபர்யந்த சூத்ரம். விந்யாச சூத்ரம் பரமாண சூத்ரம். இவை அளவைக்குரியன. இவற்றின் விரிவைக் சாமிகாகமத் தில் காண்க. |
சூத்ரவதியார் | சேனையர்கோன் திருத்தேவியார். இந்தம்மாள் ஆழ்வாராசாரியர்களின் சரிதங்களைத் திருமகளிடம் கேட்டவர்கள், (அரிசமய தீபம்.) |
சூனிறுதை | 1. சத்யசகன் பாரி. 2. தருமன் என்னும் அரசன் தேவி. |
சூன்யபந்து | திரணபிந்து குமரன், இவன் குமரன் வரு. |
சூயை | சிவபக்தியால் புருஷனைக் கடந்தவள். |
சூரஆதித்த சோழன் | இவன் அரசர் சூளாமணச் சோழன் சந்ததியிற் பிறந்து திரிசிராமலையில் தீர்த்தமாடவந்த நாககன்னியரைத் தொடர்ந்து நாகலோகஞ் சென்று காந்திமதியெனனும் நாக கன்னிகையை மணந்து வெற்றிலை, செந்நெல், சிவலிங்கம் கொண்டு வந்து பூமியல் பதித்து வாழ்ந்தனன். இந்தச் சந்ததியில் (50) ஆவது சந்ததியில் பராந்தகச் சோழன் பிறந்தான். இவன் நாசகன்னி மணந்த சோழனாயிருக்கலாம். இவன் தந்தை வீர ஆதித்த சோழன் என வுறையூர்ப்புராணங் கூறும், இவனைக் குலோத்துங்க சோழன் எனவுங் கூறுவர். |
சூரகேது | சந்திர குலத்தரசனாகிய அஸ்தன் மாமன் |
சூரசேதமகாராசா | குந்து தீர்த்தக்கரின் தந்தை, தேவி ஸ்ரீகாந்தை. |
சூரசேநன் | 1. குந்திபோஜன் வம்சத்திற் பிறந்தவன், குந்தியின் தந்தை. 2. திராவிட தேசத்தில் மணிமுத்தா நதிக்கரையில் விருத்தாசல க்ஷேத்திரத்தில் சிவாபூசாதுரந்தரனாயிருந்த அரசன் இவன் தன் பரிவாரங்களுக்கும் சிவநாமமே தரித்துச் சிவபதம் பெற்ற அரசன். (சிவ ரஹ.) 3, நிதந்துவின் குமரன். 4. கார்த்தவீரியன் குமரன். 5, சத்தருக்கன் குமரன், 6 மத்திய தேசத்தரசன். இந்திரனிடம் புருசுண்டிமகாத்மியங் கேட்டவன். 7. (சூ.) அரசன், காஞ்சநமாலையின் தந்தை. |
சூரணம் | பலவகை வேர்வித்துகளை பிடித்து வடிகட்டி யுண்ணும் மருந்து வகை. |
சூரதாசர் | இவர் முன்ஜன்மத்தில் அக்குரூரர். சத்தியபாமையைக் கண்ணன் நீங்கினதால் விசனமுற்ற சத்தியபாமை இரைவேண்ட இவர் கண்ணன் வேடப் பூண்டு செல்லாநிற்கையில் அதைக்கண்ட கண்ணன் நீ குருடாகவெனச்சபிக்க அவ்வாறே சூரதாசர் என்னும் பெயருடன் மதுராநகரில் பிறந்து பஜனை செய்து கொண்டிருக்கையில் ஒருநாள் துவாரகையில் பெருமாள் சந்நதியில் பஜனை செய்கையில் கண்கள் புலப்பட்டன, இவர் பெருமாலை நோக்கி என்னை முன்போலவே கன்ணில்லாமற் செய்க வென்றனர். ஒருநாள் அவந்திநகாத்தரசன் சபையில் தான்சேன் என்னும் வித்துவான் தான் பாடுகையில் அவ்வரசன் உன்ணையொப்பார் உலகில் ஒருவருமிலர் என்று அவனைப்புகழ வித்வால் கேட்டுச் சூரதாசர் முதலிய பெரியோர்கள் இருக்கின்றார்கள் என்றுகூற அவரைத் தன் சபையில் வருவித்துப் பாடச்செய்த னன். இதை அரண்மனையிலிருந்த பெண்கள் கேட்கவேண்டுமென்னு மவாவால் அரசனைக்கேட்க அரசன் அந்தகன் தானே அந்தப்புரம் சென்று பாடலாமென்று விடை கொடுத்தனன், சூரதாசர் அந்தப் புரஞ்சென்று பாடுகையில் முன் இவருடன் கண்ணனால் தாசியாகவெனச் சாபம் பெற்ற சத்தியபாமை இவ்விடம் வந்து இவர்பாடலைக் கேட்டமாத்திரையில் இவ ருக்குக் கண்கள் புலப்பட்டன. உடனே பெண்கள் எல்லாரும் மறைந்து போகச் சத்தியபாமை நிற்கக்கண்டு பெருமாள் இருவருக்குந் தரிசனந்தந்தனர். |
சூரன் | 1. கார்த்த வீரியன் குமரன். 2. விரேதன் குமரன், இவன் குமரன் 3. தேவமீடன் குமரன், இவன் தேவி மாரீஷை, குமார் வசுதேவர் முதலியவர், 4, வசுதேவன் குமாரில் ஒருவன். 5. ஒரு அசுரன், முகுந்தையைக் காண்க. 6, விசயன் என்பவனுக்கு மைந்தன், ஒரு சிவனடியவர் வீட்டில் பொருளபசரித்து அரசனால் தண்டிக்கப்பட்டு நரகம் அடைந்தவன். |
சூரபத்மன் | மாயை, காசிபரை வஞ்சித்து முதற்சாமத்திற் புணரப் பிறந்த அசுரன். இவன் மாயையிடம் உபதேசம் பெற்றுப் பெருவேள்விசெய்யச் சிவமூர்த்தி தரிசனந் தராதது கண்டு வேள்வியிலிறக்கத் துணிகையில், சிவமூர்த்தி தரிசனந்தந்து வச்சிரயாக்கை, இந்திரஞாலமென்னுந் தேர், விஷ்ணுவாதியருக்கும் பின்னிடாவலி முதலியவுமளித்து நமது சத்தியொன்றினால் அழிவு அடைவாய் என வரந்தரப்பெற்றவன் இவன், சந்திரனிடம் உபதேசம் பெற்று, மாயையின் போதனையால் திக்குவிஜயத் திற்குச்சென்று இந்திரனிடம் யுத்தஞ்செய்தனன். இந்திரன், இவன் போர்க்கு ஆற்ராது குயிலாக மறைந்தனன். இவன், மற்றத்தேவருடனும் போரிட்டு வென்று அரசாண்டிருந்தனன். இவன் பட்டணம் வீரமாயேந்திரம், தேவி பதுமகோமளை, குமசர்பானுகோபன் அதிமுகள், இரணியன், வச்சிரவாகு. குமாரக்கடவுள் இவனிடம் போர்க்குச் சென்ற காலத்தில் இரண்டாம் கான் யுத்தத்தில் இவன், அவரிடம் எதிர்த்துப் படைகொடி முதலிய இழந்து நிரா யுதனாய்த் தேவர்சிறைவிடக்கூறிய புத்தி கேளாது மீண்டும் படை சேர்த்து வரு வோமென மறைந்தவன், பானுகோபனை யுத்தத்திற்கேவி இறக்கக்கண்டு மீண்டும் சிங்கமுகாசுரனை யேவி அவனுமிறக்கத் தானே யுத்தத்திற்கு வந்து சேநாசமுத்திரக் களையிழந்து பதாதியாய் நின்று மாயையை நினைந்து அவளால் சஞ்சீவியின் நிலயறிந்து தான் சிங்கத்தில் எறிக் கொண்டு இந்திரஞாலத்தோரால் அதனை வருவித்து இறந்த அசுரரை மீட்டும் எழுப்பிக் குமராக்கடவுளுடன் யுத்தம்புரிந்து பதாதியாய் நின்றனன. இவன் மாயையால் சக்கிரவாகப் புள்ளுருக்கொண்டு தேவர் சேனைகளுடன் யுத்தம் புரியக் குமாரக்கடவுள், இந்திரனை மயிலாகவா நினைச்ச அவ்வகை வந்த அவன் மீது ஆரோகணித்து அசுர சேனைகளைக் கண்டித்தனர். பின்பு சூரன், பூமி, ஜலம், சீ, காற்று முதலிய உருக்கொண்டு யுத்தஞ்செய்யக் குமாரக் கடவுள் அவைகளுக்கு மாமுகி அடக்க, ஆற்றது கடல் நடுவுள் மாமர வுருவடைந் தனன். இதனைக்கண்ட குமாரக்கடவுள் மாமரத்தை வேலாயுதத்தால் இருபிளவ செய்தனர். பிளவுண்ட அசுரன், தன் சொந்த உருவுடன் குமாரக்கடவுளிடம் யுத்தத்திற்கு வந்து வேலால் இருபிளவு பட்டு மயிலுஞ் சேவலு மாயினன். சூரன், மாளா ஆயுளுடையான் ஆதலால், குமாரக் கடவுள், மயிலை வாகனமாகவும், கோழியைக் கொடியாகவும் கொள்ளப் பெற்றவன். இந்தச் சூரன் பதுமன், சிங்கன், தாருகன், நால்வரும் முதலில் சிவகணத்தவர், சிவ தரிசனத்திற்கு வந்த பிரமவிஷ்ணுக்களின் வாகனங்களாகிய அன்னம், கருடன் இவற்றின் மேல் குமாரக்கடவுளின் வாகனத்தையும், கொடியையும் யுத்தத்திற்கு ஏவிக் குமாரக்கடவுளால் அசுரராகச் சாபம் பெற்று அவரது வேலால் உயிர்நீங்கி அநுக்கிரகமடைய வரம்பெற்றவர்கள், |
சூராபாயி | இவள் ஒரு புரோகித புதரி. இவளைத் தந்தை ஒரு வேதியனுக்கு மணஞ் செய்து கொடுத்தனன். இவளுக்கு இளைமையிலேயே அரிபக்தி மிகுந்தது. அதனால் அரிநாமம் விடாது செபித்துவரும் காலையிலே மாமியார் வீட்டு மனிதர் வரவுபோக்கிருக்கக் கண்டு இனி மணமகனைச் சேரிற் கருவுண்டாம் பாசமதிக்கப் படும் அரிநாம மறந்து பந்தப்படுவோமேன்று எண்ணி வீட்டை விட்டகன்று தன் ஆபரணங்களைத் துளபவனத்திருந்த பாக வதர்க்குத் தானஞ்செய்து அங்கு அரித்யானஞ் செய்யத் திருமால் தரிசனந்தந்து இராதை குண்டத்திருக்கக் கட்டளையிட ஆண்டிருக்கையில் தகப்பன் தேடிச் சென்று மகள் தன் கோலத்தைக் கண்டு அழைக்க மகள், தகப்பனுக்குப் பிறவிக் கடல் நீந்த உமக்கு இன்னும் தோன்றவில் லையோவெனத் தந்தைக்கு நல்லறிவு பிறந்து குமரியை நோக்கி நீ நமதில்லிடம் வந்து அரித்யானஞ் செய்கஎன அவ்வாறே பெருமான் கட்டளைப்படி சென்று தியானித்துப் பஜனை செய்திருக்கையில் அரசன் கண்டு மோகித்துக் கவன்றனன், அரசன் இவள் ஆற்றிற்கு அக்கரையிலிருந்து இக்கரையிலிருக்கும் தன்னை வெள்ளத்தைக் கடந்துவர அழைத்ததாகக் கனாக்கண்டு கனவின் பயனைப் பெரியாக்குக் கூறிப் பிறவிக்கடல் கடக்க உன்னாலாகாது எனப் பிறவிக்கடல் கடக்கச் சூரா பாயியையடைந்து உபதேசம் பெற்றனன், |
சூரி | சமஸ்கிருத கவிகளுக்குப் பட்டப் பெயர். |
சூரிய, சந்திர மண்டலங்கள் | சிலகாலங்களில் சூரியனைச் சுற்றியும், சிலகாலங்களில் சந்திரனைச்சுற்றியும் பரிவேடங்கள் காணப்படுவதுண்டு. இதனைச் சூரிய பண்டலம் சந்திர மண்டலங்க ளென்பர். இதனை ஒரு கிரகமென்பர். |
சூரியகாந்தக்கல் | சூரிய வொளியில் நெருப்பைக் கால்வது. |
சூரியகேது | 1. சுவேதியைக் காண்க. 2. இராவண சேநாபதி (8) கோடி சேனைகளையுடையவன், சுக்கிரீவனால் உயிரிழந்தவன், 3. கர்ணன் குமரரில் மூத்தவன். |
சூரியகேதுவன்மன் | திரிகர்த்த ராச குமரன். தருமரது அச்வமேதக் குதிரையைத் தடுத்து அருச்சுநனுடன் போர் புரிந்து தோற்றுக் காணிக்கை தந்தவன். இவனுடன் பிறந்தார் சூர்யவன்மன், சூர்யவீரியன், சூர்யசண்டவிக்ரமன். |
சூரியசத்ரு | இராவணன் மந்திரியரில் ஒருவன். |
சூரியசந்திரகோதரிசனம் | பிள்ளை பிறந்த 3.ம் மாசத்திலே அனுகூலமான சுபதினத்திலே பிள்ளைக்குச் சூரியனைக் காட்ட வேண்டும். பிள்ளை பிறந்த 4ம் மார்த்திலே அன்னப்பிராசனத்திற்கு நிச்சயித் திருக்கிற சுபமுகூர்த்தத்திலே சுப்பிரமண்ய சுவாமியையும், சந்திரனையும் பூசித்துச் சந்திர தரிசனமும் கோதரிசனமும் பண்ணுவிக்கும் சடங்கு. |
சூரியதத்தன் | அத்திரியன். விராடன் உடன் பிறந்தான், |
சூரியதுவஜன் | திரெளபதியின் சுயம்வரத்தின்பொருட்டு வந்த க்ஷத்திரியன். |
சூரியநேத்திகள் | கருட புத்திரன். |
சூரியன் | 1. அதிதியின் புத்ரன். இவன் மண்ணினாற் செய்த ஸ்வர்ணை யென்னும் பெண்ணினிடம் ஸாவர்ணி யெனும் ராஜருஷியைப் பெற்றான். (பார~அநு.) 2. ததுபுத்திரனாகிய அசுரன் 3. ஆகாயவெளியில் காணப்படும். அண்டங்களுள் சூரியனும் ஒரு கோளம். இதை அக்னிமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அது நமக்குத் தட்டையான ஒரு பொருள் போல் வட்டமாகக் காணப்படுகிறது. இது அண்டகோளங்களுள் முதன்மை பெற்றது. இதனை நடுவாகக்கொண்டு எட்டுக் கிரகங்கள் சமவட்டத்தில் சுற்றிவரு கின்றன. அவைகள் புதன், சுக்ரன், பூமி, செவ்வாய், வியாழன், சநி, யுரானஸ், நெய்தியூன் என்பவை, இக்கிரகங்களையும் பல உபக்கிரகங்கள் சுற்றி வருகின் றன. இவை சலகிரகங்களாதலால் இயற்கையில் ஒளியற்றுச் சூரியனிடமிருந்து ஒளியைப் பெறுகின்றன. இக்கிரகங்களுள் பெரிதாகிய சூரியகோளம் வட்ட வடிவினதா யுள்ளது. இது தன்னைத் தானே 26 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 26 லக்ஷம் மைலுக்கதிகம், இதன் குறுக்களவு 8 வக்ஷத்து 70 ஆயிரம் மைலுக்கு அதிக மேற்பட்டது, இதன் பரப்பு நமது பூமி யைக் காட்டிலும் 12 1/2, லக்ஷம் மடங்கு பெரிது, இதன் கனம் பூமியினும் 12 லக்ஷம் மடங்கு அதிகமென்றும் கணித்திருக்கின்றனர். அவ்வளவு பெரிதாயி னும் நமக்கு அவ்வளவு சிறிதாகக் காணப்படுதற்குக் காரணம் இது பூமிக்குச் சுமார் 9 கோடியே, 28 லக்ஷத்து, 30 ஆயிரம் மைலுக்கு அப்பாலிருப்பதால் அவ்வகை தோற்றுகிறது. இச்சூரியகோளத்தில் பல புள்ளிகள் காணப்படு கின்றன. அவை 1000 மைல் பரப்புள்ளதாயும், பல மைல் ஆழமுள்ளவையாயும் காணப்படுகின்றன. இப்புள்ளிகள் பல வருஷங்களுக்குப் பிறகு மாறு தலடைகின்றன. இச்சூரியன் 25 நாட்களில் தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொண்டு மணி ஒன்றுக்கு 1500 மைல் வேகத்தில் மேற்கில் செல்லுகிறது. எல்லாத் தீக்களுக்கும் இதுவே மூலம். கால பாகுபாட்டிற்கும் இதுவே காரணம், பூமி சூரியனைச் சுற்றியோடிக்கொண்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி ஒடும் வீதிக்குச் சூரியவீதி யென்று பெயர். பூமி சூரியனைச் சுற்றியோடும் இருசிக்குத் துருவம் என்று பெயர். பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருப்பதால் இரவு பகல் ஒரே அளவில்லை. இது மேற்கிலிருந்து சுற்றுகிறது. |
சூரியபுரம் | அரிகுலத்தரசர் நகரம். |
சூரியப்பிரபை | சுக்கிரன் குமரி இவளை இக்ஷவாகுவம்சத்திற் றோன்றிய அரசன் ஒருவன் காந்தர்வ மணத்தாற் கலக்சச்சுக் ராசாரியர் அவனுடன் எட்டுநாள் சண்டையிட்டு அவனை ராஜ்யத்துடன் சுட்டெரித்தனர். (சிவமகாபுராணம்) |
சூரியமூர்த்தி | 1. ஒருமுகம் எட்டுக்கைகளில் இரண்டு கைகளில் இரண்டு கமலம், தூபம் மணி, கமண்டலம், அபயம், வரதம், ஜபமாலையுடையராய், பொன்னிறம், பொற்பட்டு வஸ்திரம், பொன்னாபாண முடையவராய் இருப்பர். 2. வெண்தாமரைமே லிருப்பவராய் மாதளம்பூ நிறமுள்ளவராய், மிக்ககாந்தியான விருத்தமத்யராய், இரண்டு தோள்களிலும் காம்புடன் கொண்ட வெண்டாமரை யுள்ளவராய், ஒருமுகம், இரண்டு நேத்ரம், சிவப் புவஸ்திரமுள்ளவரா யிருப்பர். 3. பரமவித்தை, சாத்வித தேசஸ், கைவல்யம், ஞானம், பிராகாம்யம், சம்வித்து, போதகம், சதி, ஸ்மிருதி முதலிய உருவத்தால் பரமப்பிரகாசனாய் இருப்பவன். முதலில் இருளான அண்டம் உண்டாக அதன் மத்தியிலிருந்த பிரமன் அதைப் பிளந்தனன். அக்காலத்தில் ஓம் என்னும் ஒலியுண்டாயிற்று. அந்த ஓங்காரத்தால் பூ: புவ: சுவ: எனும் வியாவிருதிதிரயம் உண்டாயின. பின்னும் ஒங்காரத்தால் சூரியனுக்குச் சூட்சும உரு உண் டாயிற்று. அதனால் அதிதூலமாகும் (ம:) எனும் வியாவிருத்தியும் அதனால் தூலதா மாகும் ஐந: எனும் வியா விருதியும் அதனால் தப: சத்யம் எனும் வியாவிருதிகளும் உண்டாயின. இந்த எழுவியாவிருதிகளே சூர்ய உருவமாம். முன் சொன்ன ஒங்காரமே, தேசோராசியான பிரமனாய் எண்ணுக. இந்தப் பிரமனுடைய கிழக்கு முகத்தில் இருக்கு, தகூண முகத்தில் எஜஸ், மேற்கு முகத்தில் சாமம், வடமுகத்தில் அதர்வணவேதங்களும் பிறந்தன. இவனது தேஜஸே இருக்குவேத ரூபத்தால் சிருட்டியும், யசுர்வே சரூபத்தால் விஷ்ணு வாய்த்திதியும் சாமவே தரூபத்தால் ருத்ரனாய் லயத்தையும் செய்யும். ஆதலால் இந்தப் பரமபுருஷனே சதுர்வே தமயனும் திரிகுணாத்மகனும் திரிமூர்த்தி சுவருபனும் ஆவன். பிரமன் முதலில் சிருட்டிக்கத் தொடங்குகையில் சிருட்டிகெடப் பிரமன் துதித்து வேண்டத் தன் சுவாலையை யொடுக்கினவன். (மார்க்கண்டேயம்.) இவரைச் சிவாகமங்கள் சிவசூரியன் எனக் கூறும். அச்சிவ சூர்யர் நான்குமுகம், எட்டுத்தோள், செவந்த ஆடை, மேற்கில் சத்தியோசாதம், வடக்கில் வாமதேவம் கிழக்கில் தற்புருடம், தெற்கில் அகோரம் ஆகிய நான்கு மூர்த்திகள் நான்குபக்கங்களில் அமரப் பெற்றவர். இவர், நான்கு முகமுடைய பாற்கானை முன்னும் வலப்புறத்தில் நான்கு முகமுடை பானுமூர்த்தியையும் பின்புறத்தில் நான்கு முகமுடைய ஆதித்யமூர்த்தியையும் இடப்பாகத்தில் நான்கு முகத்தோடு கூடிய இரவியையும் கொண்டு இருப்பர். கிழக்கில் வித்தாரை தெற்கில் சுதாரை மேற்கில் போதினி வடபால் யாப்யாயனியும், சிவசூர்யதானத்தில் தீத்தை, சூக்குமை, சேயை, விபூதி, விமலை, அமோகை, நான்கு கரத்தோடு கூடிய வித்துதை, பத்திரை, நான்கு முகமுடைய சர்வதோமுகி, ஆகிய சத்தியருடன் கூடி நிற்பர். இச்சூர்யருக்குப் பீடங்கள் பிரபூதம், விமலம், சாரம், ஆராத்யம், பரமசுகம் என்பனவாம். சூர்யனுடைய கதிரின் வேறுபாடு சூர்யனுடைய அமுத கதிர் மழை பொழிவிக்கும், சுழுமுனைக் கதிர் சந்திரனுக்கும் அரிகேசம் என்பது நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புதனுக்கும், விச்சுவா வெள்ளிக்கும், சத்துவிசு செவ்வாய்க்கும், சருவாவசு வியாழத்திற்கும், சுவராடு சநிக்கும் ஒளி தரும். மற்றொரு புராணம் சுஷ்மனைச் சந்திரனுக்கும், அரிகேசம் புதனுக்கும், விசுவா வெள்ளிக்கும், வசுரம், கங்கியம் பூமிக்கும், சுருவாவசு வியாழத்திற்கும் சுவராட்சநிக்கும் ஒளி தரும். இச்சூரியன், மேருவிற்கிடது பக்கத்தி லிருந்துகொண்டு மேருவை வலஞ்செய்பவன். முதலில் இந்திர பட்டணத்திலிருந்து புறப்பட்டு யமன் பட்ட ணத்தை யடைந்து, பிறகு வருணன் பட்டணத்தைத் தாண்டிச் சோமன் பட்டணத்தையடைந்து, மீண்டும் இந்திரன் பட்டணத்தை யடைகிறான். இப்படிப்பட்ட சூரியனுக்கு ஒற்றைச் சக்கரத்தையுடைய தேர், அத்தேர்க்குப் பன்னிரண்டு மாதமாகிற இலைகள் ஷட்ருதுக்களாகிய முனைகள், சாதுர்மாச்யங்களாகிய தொப்பைக் கட்டைகள், சம்வச்சரமாகிய ஒற்றைச் சக்கரம் இந்த ரதத்தின் இருசின் ஒரு முனை மேரு சிகரத்திலும் மற்றொரு முனை மானசோத்திர பர்வதத்திலும் சுழலும். இதில் ஏழு குதிரைகள் பூட்டப்பட் டிருக்கும். இத்தேரின் உயரம் 9000 யோசனை அகலம் அவ்வளவு யோசனை, பார் நீளம் 18000 யோசனை, மானசோத்திர பர்வதத்தில் அயனங்கள் முதலிய இருக்கும், அதில் இந்திரன், வருணன், சந்திரன், யமன் முதலியோர்க்குப் பட்டணங்கள் உண்டு. இவற்றில் சூரியன் பிரவேசிக்கு மிடத்து நாழிகை, மிகுதி குறைகள் பெற்று உதயமாகி வரும் வழியில் மந்தேக பென்னும் அசுரரால் தடையுண்டு இருடிகள் வேதமோதி யகற்றிய மந்திரக் கணையால் வெளிவந்து உதயமாவன். இச்சூரியன் உதயமாகிப் பூமியிலுள்ள நீரை வறட்டிச் சந்திரனுக் குக்கொடுப்பன். இவன் நாடோறும் மேருவை வலம் வருகையில் இவனுடன் வருகிற பரிசனங்களைக் கூறுவாம். இச்சூரியனைப் புலத்தியன், புலகன், வசிட்டன், அங்கிரா, கௌசிகன், பாத்துவாசன், பிருகு, கிருது, கௌதமன், சாசி பன், சமதக்னி, அத்திரி முதலிய ரிஷிகள் மாதத்திற் கொருவராகத் தோத்திரஞ்செய்வர். கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், நீரன், ஐராவதன், எலாபத்திரன், கார்க்கோடகன், சங்கபாலன், தனஞ்சயன், பரமன், வாசுகி இந்த நாகங்களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் தேரிழுத்துச் செல்வர். ஊருணாயு, தும்புரு, நாரதன், ஆகா, ஊகூ, விசுவாவசு, சர்வாவசு, திருத ராட்டிரன், சூர்யன், வாச்சன், உக்கிரசேநன், வரருசி, சித்திரன், காந்தரு இவர் களில் ஒவ்வொருவர் மாதந்தோறும் பாடுவர். திருதத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிரமலோசந்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை இவர்களில் ஒருவர் மாதந்தோறும் ரதத்தின் முன் நடனஞ் செய்து வருவர், வாதநாபன், வியாக்கிரதரன், பிரசேதி, திவதனன், சர்ப்பன், பிரமா, புதன், எச்சியாபுதன், வித்யுத், திவாகரன், பவுரி, செயன் இவர்கள் அரக்கர் மாதம் ஒருவர் காவலாகத் திரிவர். இரதபிருத்து, இருதசித்திரன், இரதேசன், அசுசேணன், இரதசித், சுபாகு, தனவன், அசத்தியசித், தோரணன், சேநசித், தராச்சியன், அரிட்ட நேமி இவர்கள் இயக்கர் மாதத்திற் கொருவர் தேர்த்தாம்பு பற்றுவர். பூஷா, அங் குசன், இந்திரன், பர்ச்சென்யன், கெபர்தி, மித்திரன், தோஷா, அரியமா, விவச்சு வான், விஷ்ணு, வருணன் இவை மாத சூர்யருக்குப் பெயர், இவ்வாறன்றித் தாத்ரு, சக்கரன், அரியமான், மித்திரன், வருணன், அம்சுமான், இரண்யன், பகவான், விவச்சுவான், பூடன், சலித்துரு, துவட்டன் எனவும், பின்னும் அஞ்சன், தாதா, இந்திரன், சவிதா, விச்சவான், பகன், பருச்சனி, தோஷ்டா, மித்திரன், விஷ்ணு, பூஷா எனவுங் கூறுவர். இவர்களின் பெயர்கள் புராணங்கள் தோறும் மாறுபடுகின்றன. சூரியனது கதிர்கள் (1000) அவற்றில் (400) மழைபொழியும், (300) கதிர் விரித்து மழைவளத்தை யுண்டாக்கும். (300) பனிபெய்யும், இந்தப் பன்னிரண்டு சூரியரும், பன்னிரு வகையாகக் கதிர்பெறுவர். சித்திரை மாதத்தில் அஞ்சன் (7000) கதிர்களுட னும், வைகாசியில் தாதா (8000) கதிர்ளுடனும், ஆனியில் இந்திரன் (9000) கதிர்களுடனும், ஆடியில் சவிதா (9000) கதிர்களுடனும், ஆவணியில் விச்சுவான் (9000) கதிர்களுடனும், புரட்டாசியில் பகன் (11000) கதிர்களுடனும், ஐப்பசியில் பருச்சனி (1000) கதிர்களுடனும், கார்த்திகையில் தோஷ்டா (8000) கதிர்களுடனும், மார்கழியில் மித்திரன் (7000) கதிர்களுடனும், தையில் விஷ்ணு (11000) கதிர்களுடனும், மாசியில் வருணன் (5000) கதிர்களுடனும், பங்குனியில் பூடா (1000) கதிர்களுடனும் விளங்குவர். மேல்கூறிய சூர்யமூர்த்திக்கு இளவேனிற்காலத்துக் கபிலவர்ணம், வேனிற் காலத்துப் பொன்னிறம், கார்காலத்துச் சுவேதநிறம், கூதிர்காலத்துப் பாண்டு நிறம், முன்பனிக்காலத்துத் தாம்பிரநிறம், பின்பனிக்காலத்து லோகித நிறங்களாம். இனிப் புராணங்கள் சூரியர் பன்னிருவரையும் காச்யபர் அதிதியைக் கூடிப் பெற்றார் எனக் கூறும். அக்குமரர் ஆவார் விசுவவான், அரியமா, பூஷா, துவஷ்டா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்திரன், சுக்கிரன், உருக்கிரமன் என்பவர்களாம். முறையே இவர்களின் சந்த திகளாவர். முதற்குமரனாகிய விவச்சுவான் சஞ்ஞாதேவியைப் புணர்ந்து சிரார்த்த தேவன், வைவச்சு தமனு, யமன் யமுனை யெனும் இரட்டைப் பிள்ளைகள் அச்வரி தேவர்களையும், பெற்றனன். இந்த விவச்சுவான் சாயாதேவியைக்கூடி சநி, சாவர்ணிமது, தபதி எனும் ஒரு குமரியையும் பெற்றான். இரண்டாவதான அரியமா மாத்துருகை யென்பவளை மணந்து அநேக ஞானிகளைப்பெற்றான். 3. பூஷா, துவஷ்டாலின் தங்கையான ரசனையை மணந்து சந்நிவேசன், விசுவரூபன் என்பவர்களையும்; 4. சவிதா, பிரசனியை மணந்து அக்நிஹேத்ரம், பசுபாகம், சோமம், சாதுர்மாச்யம் எனும் பஞ்சம காயஞ்ஞங்களைப் பெற்றான். 5. பகன், சித்தியை மணந்து மகிமா, விபு, பிரபு, என்பவர்களையும், ஆசுகி எனும் பெண்ணையும்; 6. தாதா, தரு, சிநிவாலி, ராகா, அநுமதி என்பவர்களை மணந்து சாயம், தரிசம், பிராதம், பூர்ணமாசம் என்பவர்களையும்; 7. விதாதா, கிரியையை மணந்து பஞ்சசித்தி யென்கிற அக்கி குமானையும்; 8. வருணன், சருஷிணியை மணந்து பிருகு, வால்மீகருஷிகளையும்; 9, மித்திரன், ஊர்வசியைக்கண்டு மோகித்து விட்ட வீர்யத்தால் அகத்திய, வசிட்டரையும், பின்னும் 10. ரேவதியை மணந்து உற்சாகன், அரிஷ்டன், பிப்பலன் என்பவர்களையும்; 11 சக்கிரன் அல்லது இந்திரன், பௌலோமி என்றவளை மணந்து செயந்தன், ருஷபன், மிட்டுவான் என்பவர்களையும்; 12. வாமநன் அல்லது உருக்கிரமன், கீர்த்தியை மணந்து சவுபகன் முதலிய குமரரையும் பெற்றனர். இவனுக்கு (10000) யோசனை விஸ்தாரம் மண்டல அளவை. 4. பசுவின் வயிற்றில் நெடுநாள் ஒளித் திருந்தவன், சத்திராசித்திற்குச் சியமந்தக மணி கொடுத்தவன். 5. சமதக்னி முனிவர் பத்தினியாகிய ரேணுகை வெயிலின் வெப்பத்தால் பரிதபித்ததைப் பற்றிச் சமதக்னி முனிவர் சபிக்கத் தொடங்குகையில் பிராமண வுருவங் கொண்டுவந்து அதைத் தடுத்துக் கொண்டவன். 6. இவன் சுரபிகளைப் பெற்றான் என்பர். இவன் தேவிமார், சஞ்ஞை, யுஷை, பிரத்துஷை, சாயாதேவி. 7. ஒருகாலத்துப் பானுகோபனால் பிடியுண்டு தொட்டிலிற் கட்டுண்டவன், 8. இராகு கேதுக்களின் வஞ்ச வுருவை விஷ்ணுமூர்த்திக்குக் காட்டி அவ்விருவரது பகையைப் பெற்றவன். 9. ஜடாயு, சம்பாதி இருவரும் தம் தந்தையாகிய அருணனைக் காணவந்த காலத்து அவர்களைக் கோபித்தவன். 10. இவன் தேவியாகிய சஞ்ஜிகை சூரியனுக்கு வைவச்சுதமது, யமன் யமுனைகளைப் பெற்றுச் சூரிய வெப்பம் பொறாது தனது சாயையில் ஒரு பெண்ணை நிருமித்துச் சாயாதேவியாக்கி வைத்துவிட்டுத் தகப்பனிடம் வந்தனள். தந்தை கோபித்ததால் இமயச் சாரலில் பெட்டைக்குதிரை யுருக் கொண்டு சூரியனை யெண்ணித் தவஞ் செய்தனள். இது நிற்கப் பின் மணந்த சாயையைத் தன் உரிய தேவியென்று சூரியன் புணர்ந்து அவளிடம் சாவர்ணி மது, சநி பத்திரை எனும் ஒரு பெண்ணினைப் பெற்றனன். இச்சாயைச் சக்களத்தியாதலால் சஞ்ஹிகையின் குமாரர்களைக் கொடுமையாக நடத்தினள். இதை வைவச்சுதமனு பொறுத்திருந்தனன். அதனால் சாயை யமனை ஒருகால் முரியச் சபித்தனள். இதையறிந்த தந்தை குமரனுக்குச் சாபமிடுவரோ என்று யோகத்தறிந்து உனக்குப் புழுக்காலாக என்று, துவட்டா விடஞ் சென்று மனைவியிருக்குமிடங் கேட்கத் துவட்டா உன் வெப்பத்தை யடக்கி இமயமலைச்சாரலில் சென்று உன் மனைவியைக் காண்க என அவ்வகை ஆண் டுக் குதிரை யுருக்கொண்டு செல்லச் சஞ்ஞைகண்டு பயந்து ஓடினள். சூரியனும் ஓடச் சூரியனுக்கு மூக்கின் வழி வீரியம் தோன்றிற்று. அதில் மருத்துவராகிய அசுவதிதேவர்கள் பிறந்தனர். (பிரமபுராணம்.) 11. இவனை நாரதர் ஒருமுறை உலகமெல்லாம் உன்வெளியால் நிரம்பியதெனப் புகழ்ந்தனர். அதனால் செருக்கடைந்து சிவமூர்த்தியின் நெற்றிக்கண்ணின் ஒளியால் கருவபங்கம் அடைந்தனன். (பழனி~பு.) 12. சூரியனது உஷ்ணத்தைக் கண்டு சஞ்ஞை கண்களை மூடிக்கொண்டனள்; அதனால் சூரியன் சஞ்ஞயை நோக்கி நீ யமனைப்பெறுக என்றனன். 13. சூரியன் குதிரையுருக்கொண்ட தன் பத்தினியைத் துரத்துகையில் அவன் ரேதசில் சிறிது பூமியில் விழ அதிலிருந்து ரேவதன் குதிரையுடன் சர்வாயுதபாணியாய்ப் பிறந்தனன். 14. சூரியனுக்குச் சாயையிடம் பிறந்த குமரன், சாவர்ணி மனுவாயினன். 15. நளாயினியின் சாபத்தால் தேரழுந்ப்பெற்றவன். இவன் உலகத்தைக் காயத்ரிசபித்தவர் அடைவர். 16. விசுவகர்மனால் சாணையில் தீட்டப்பட்டு ஒளியிழந்து தொக்குத் தோஷமென்னும் வியாதியடைந்தவன். 17. இவன் தேவி காந்திமதி துவட்டா வின் குமரி. இவளைச் சாயாதேவியின் சொல்லால் சூரியன் கிரணத்தால் வருத்தத் துவட்டா இவனது கிரணத்தைச் சாணையில் தீட்டிக் குறைத்தனன் என்பது. (புள்ளிருக்கு வேளூர்ப்புராணம்) |
சூரியர் | (12) தாதரு, சக்கான், அரியமான், மித்திரன், வருணன், அஞ்சுமான், இரணியன், பகவான, விவச்சுவான், பூடன், கவிதரு, துவட்டன் இவர்கள் மேஷமாத முதலாகச் சஞ்சரிப்போர். |
சூரியர் முதலிய வீதி | (3) மேடவீதி, இடபவீதி, மிதுனவீதி என மூவகைப் படும். இடபம், சிங்கம், மிதுனம், கடகம், நான்கும் மேடவீதி, மீனம், மேடம் கன்னி, துலாம், நான்கும் இடப வீதி, தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம் நான்கும் மிதுனவீதி. |
சூர்ப்பகன் | மன்மதனாற் கொல்லப்பட்ட அரக்கன். |
சூர்ப்பநகை | விச்சிரவாவின் குமரி, வித்யுச்சவன் தேவி, குமரன் சம்பு குமாரன். தண்டகவருத்தில் இராமரிருக்கையில் மோகித்து இலக்குமணரால் மூக்கறுப்புண்டு காதூஷண திரிசிரரை யேவிச் சண்டை செய்வித்து அவர்களிறந்த பின்பு இராவணனுக்குச் செய்தி கூறினவள். இராவணன் தங்கை, காமவல்லியென மறுபெயர் வைத்துக்கொண்டவள், |
சூர்ப்பாரகம் | ஒரு தேசம். ஜமதக்னி இருந்த இடம், Shurpalya neer Jamknandi in the distriot of Bijapur. (Bombay). |
சூர்யகாந்தம் | சூரியனொளியில் தீக்காலும் கல். |
சூர்யகுண்டம் | காவிரிச் சங்கமத்திலுள்ள ஒரு தடாகம். (சிலப்பதிகாரம்.) |
சூர்யசன்மா | பஞ்சாக்ஷரமந்திர பலமுடையவன். இவனுடன் ஆநந்தன் என் போன் பகைத்து இவனை வெல்ல வகையறியாது ஒருநாள் பசுவிற்குப் புலித்தோல் போர்த்துப் புலியெனக் காட்டிப் பசுவைக் கொல்வித்து அவன் மனைவி அயலானுடனிருந் தாளெனக்கூறி மனைவி, மகன், மருகி முதலியோரை வஞ்சித்துக் கொலைபுரியச் செய்தனன். பிறகு சூரியசன்மன், இவையெல்லாம் ஆநந்தன் செய்த காரியமென அறிந்து சவை முன்னர்ச் சென்று சிவாலயத்தில் இவை நானறிந்து செய்தவை யன்றென்று அவ்விடத்திருந்த பிரதிமா இடபங்களுக்குப் புல்லருத்திப் பஞ்சாக்ஷர உப தேசத்தால் இறந்த மனைவி மகன் முதலியோரை எழுப்பினவன், |
சூர்யசாவர்ணிமநு | சூர்யனுக்குச் சந்தியா தேவியிடம் பிறந்த குமரன் மதுவானான். எட்டாம்மது. |
சூர்யசோதி | சூர்யகுலத் தரசன். இவன், புத்திரரிலாது சூரிய பூசை செய்து தனது மனைவியாகிய யசோவதியிடம் இராச்சிய வர்த்தனனையும் வேறொரு தேவியாகிய கலாவதியிடம் சுதரிசநன் என்பவனையும் பெற்றான், இவ்விரு குமரரும் விளையாடி வருகையில் சண்டை செய்து சுதரிசநன் கலாவதியுடன் கூறக் கலாவதியும் அரசனுங்கூடி இராச்சியவர்த்தனனைச் சீறினர். இராச்சியவர்த்தனன் தாயிடம் கூறத் தாய் தவஞ்செய்து சித்திபெறுக என்றபடி தீர்க்கதமமுனிவர் அநுக்ரகத்தால் அட்டமா சித்தி பெற்றுத் தந்தையால் அரசு கொடுக்கப்பெற்று வாழ்ந்தவன். |
சூர்யதண்டவிக்ரமன் | திரிகர்த்த ராசகுமரன், சூர்யகேதுவன்மனைக் காண்க. |
சூர்யபுரம் | அரிகுலத்தரசர் நகரம். |
சூர்யவன்மன் | திரிகர்த்த ராச குமரன். சூர்யகேதுவன்மனைக் காண்க. |
சூர்யவர்ச்சன் | திரிகர்த் ராஜாதிபதி. |
சூர்யவர்மா | திரிகர்த்த அரசரில் ஒருவன் அருச்சுநனுடன் எதிர்த்து இளைத்தவன். கேதுவர்மன், திருதவர்மன் இவர்களு மிவனுடன் சேர்ந்தவர்கள். |
சூர்யவீர்யன் | திரிகர்த்த ராச குமரன், சூர்யகேதுவன்மனைக் காண்க. |
சூர்யாரண்யன் | திரிசங்கின் தந்தை, திரிதனவாகுமரன் இவனுக்குத் திரையாரணி யெனவும் பெயர். |
சூலம் | 1. இது சிவபெருமானுக்கு ஆயுதமானது, இது முத்தலையோடு, தன்னை எப்பொழுதும் பணிபவர்க்குச் சுகம் கொடுப்பதும், ஒரு காலையுடையதும், பயங்கரமான பற்களையுடையதும், ஜவாலா முகங்களை யடையதும், இரண்டாயிரங் கிரணங்களை யுடையதும், எல்லா ஆயு தங்களுக்கும் சிரேட்டமானதும், எல்லாவற்றிற்கும் முதன்மையானதும், அநேகவித சின்னங்களையுடையதும், பலகோடி சத்ருக்களை யழிக்கவல்லதும், கற்பாந்தத்தில் பிரமாதி தேவர்களையும் சராசரங்களையும் அழிக்க வல்லதும் ஆம். (சிவமகா புராணம்.) 2. இது சிவபிரான் கையிலுள்ள சஸ்தியம். இது மூன்று பகுதிகளாகப் புருவ நெறிப்பைச் செய்து பயமுறுத்துவது போன்றது. புகையில்லாமல் ஜவலிக்கின்ற அக்னிபோலும் பிரளயகாலத்தில் உதயமான சூர்யன் போலுமிருப்பது. (பார~அநுசா.) |
சூலவிரதம் | இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிசூலத்தைப் பொன்னால் அல்லது வெள்ளியினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது, |
சூலிமுதுகிற்சோறிட்டவர் | இவர் வேளாண்குடியினர், கவிஞர்க்குக் கேட்டதெல்லாம் கொடுக்கிறாரென்பதைச் சோதிக்க ஒரு வித்வான் அவரிடஞ் சென்று பிரசங்கிக்கப் பிரபு வித்வானைத் தம்மிடம் விருந்து உண்டு போம்படி வேண்டப் புலவர் உமது மனைவியார் முதுகில் அன்னம் படைக்கின் உண்போமென்னப் பிரபு இது எனக்கு அரிதோ என்று கர்ப்பிணியாயிருந்த மனைவியாரின் முதுகில் அன்னம் படைத்துபசரித்தனர். இதனை “சூலி முதுகிற் சுடச்சுடவப் போதமைத்த பாலடிசி றன்னைப் படைக்குங்கை” என்பதாற் காண்க, |
சூலைரோகம் | இது உடல் கனத்துத் திமிராய் விறுவிறுத்துப் பிடரியையும் பாதத்தையும் பற்றி இழுத்துக் கைகால் விரல்கள் பொருத்துக்கள் வீங்கி முடங்கி மலஞ்சிக்கல் முதலிய குணங்களைத் தரும். இது வாதம், பித்தம், சிலேஷ்மம், திரிதோஷம், ஆமம், சர்க்கரா, குன்மம், மேகம், முறிச்சூலை, உலர்த்துச்சூலை, நிதம்பச்சூலை, கறைச்சூலை, சுரசூலை, பக்கச்சூலை, கருப்பச்சூலை, தூரச்சூலை, சாத்யாசாத்யசூலை, வாதவாயுச்சூலை, வாதநீர்ச்சூலை, வாத சுரோணி தசூலை, வாதபித்தசூலை, சந்தி வாதகம், சுக்லபிரமேகசூலை, கிரந்திசூலை, மாம்சசூலை, நீர்ச்சூலை, விஷநீர்ச்சூலை, எலும்புச்சூலை, மூலபாண்டுச்சூலை, விஷ பித்தசூலை, வாதபாண்டுச்சூலை, பித்த பாண்டுச்சூலை, பாண்டுச்சூலை, விஷபாண்டுச்சூலை, அஸ்திரசூலை, சரசூலை, அண்ட வாயு, அண்டச்சூலை, பக்கசூலை, அந்தர வாயுச்சூலை எனப் பலவகை. |
சூளாமணி | தோலாமொழித் தேவரியற்றிய சிறு காப்பிய மைந்தனுள் ஒன்றாகிய தமிழ் நூல். இது திவட்டன் என்னும் இராச குமாரன் கதை. இது சொன்னோக்கம் பொருணோக்கமுடையது. யாப்பருங் கலத்திற்குக் காட்டாக இதன் செய்யுள் கூறியிருத்தலால் இது ஒரு பழைய காவிய மாகும். |
சூளி | 1. ஒரு ருஷி, பிரமதத்தன் தந்தை. 2. வாயுவின் குமரி, உத்தானபாதன் தேவி. (மச்ச புராணம்.) |
சூஷாமகன் | ஒரு அரசன். |
சூாசேநம் | 1, மதுவனம், இது சத்துருக்நன் இலவணாசுரனைக் கொன்றபின் அந்நாட்டுக் கிட்டபெயர். யமுனை நதிக் கருகிலுள்ளது. 2 The Kingdom of Wich, Madura WAS the Capital. |
சூாசேநர் | 1. யாதவ பேதம் |