ஃ | அ 1209 |
ஆ 361 |
இ 673 |
ஈ 34 |
உ 450 |
ஊ 53 |
எ 97 |
ஏ 94 |
ஐ 58 |
ஒ 51 |
ஓ 34 |
ஔ 5 |
க் 16 |
க 740 |
கா 383 |
கி 191 |
கீ 30 |
கு 366 |
கூ 57 |
கெ 13 |
கே 53 |
கை 21 |
கொ 78 |
கோ 162 |
கௌ 57 |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ | ச் | ச 914 |
சா 288 |
சி 404 |
சீ 59 |
சு 563 |
சூ 79 |
செ 102 |
சே 92 |
சை 53 |
சொ 19 |
சோ 128 |
சௌ 38 |
ஞ் | ஞ | ஞா 15 |
ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ | ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ | ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ | த் 2 |
த 329 |
தா 130 |
தி 367 |
தீ 48 |
து 203 |
தூ 58 |
தெ 32 |
தே 137 |
தை 12 |
தொ 45 |
தோ 28 |
தௌ 2 |
ந் | ந 243 |
நா 139 |
நி 140 |
நீ 56 |
நு 5 |
நூ 11 |
நெ 43 |
நே 11 |
நை 10 |
நொ 3 |
நோ 5 |
நௌ | ப் | ப 598 |
பா 284 |
பி 485 |
பீ 31 |
பு 235 |
பூ 120 |
பெ 97 |
பே 37 |
பை 15 |
பொ 66 |
போ 50 |
பௌ 20 |
ம் | ம 640 |
மா 246 |
மி 76 |
மீ 19 |
மு 160 |
மூ 47 |
மெ 12 |
மே 52 |
மை 10 |
மொ 4 |
மோ 19 |
மௌ 8 |
ய் | ய 54 |
யா 39 |
யி | யீ | யு 14 |
யூ 6 |
யெ | யே | யை | யொ | யோ 20 |
யௌ 2 |
ர் | ர 2 |
ரா 3 |
ரி | ரீ | ரு 8 |
ரூ 1 |
ரெ | ரே | ரை | ரொ | ரோ 1 |
ரௌ | ல் | ல 3 |
லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ | வ் | வ 370 |
வா 189 |
வி 649 |
வீ 102 |
வு | வூ | வெ 83 |
வே 109 |
வை 76 |
வொ | வோ | வௌ 1 |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ | ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ | ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ | ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
---|
தலைசொல் | பொருள் |
---|---|
சீகண்டருத்ரர் | அந்தருக்குக் கீழுள்ள புவனங்களில் அதிகாரராயிருக்கும் புவனகர்த்தா. |
சீகண்டர் | சைவபத்ததிசெய்த சிவாசாரியருள் ஒருவர். |
சீகதன் | பாரதவீரருள் ஒருவன். இவன் பாரதப்போரில் முதனாள் யுத்தத்தில் சிகண்டியுடன் போர்புரிந்தவன். |
சீக்கை | ஒரு நூல். |
சீசாதகர்ணன் | கிருஷ்ணன் குமரருள் ஒருவன். இவன் குமரன் பௌர்ணமாசன். |
சீசைலமுனிவர் | விஷ்ணுமூர்த்தியாய் அம்பரீஷன் வீட்டில் அபகரிக்கப்பட்டவர். |
சீடதாசி | தேவாங்க வகையினரில் தாசி. |
சீதக்காதி | இவர் சாதியில் லப்பை, இருக்கை காயற்பதி, மகாத்தியாகி. பலவித்து வான்களுக்குக் கொடுத்துப் பாடல் பெற்றவர். இவரிறந்து சமாதிக்குழியில் இருக்கையில் படிக்காசுப்புலவர் இவரிறந்தது அறியாது இவர் ஊர்சென்று விசாரிக்கையில் இறந்தனர் எனச், சமாதியைத் தேடிச்சென்று அவ்விடம் “தேட்டாளன் காயற்றுரைசீதக் காதி சிறந்த வச்ர, நாட்டான் புகழ்க்கம்ப நாட்டி வைத்தான்றமிழ் நாவ வரை, ஓட்டாண்டியாக்கி யவர்கள் தம் வாயில் ஒருபிடி மண், போட்டா னவனும் ஒளித்தான் சமாதிக்குழிபுகுந்தே” எனப் பாடச் சமாதியிலிருந்த பிரேதம் கை நீட்டியது. விரலில் விலையுயர்ந்த மோதிரம் இருக்கப் புலவர் அதனைப் பெற்றுப்போனதாகக் கூறுவர். இதனால் ‘செத்துள் கொடுத்தான் சீதக்காதி’ என்பர். |
சீதசத்துருமகாராஜா | அசிதசவாமியின் தந்தை. இவர் தேவி விசயை. |
சீதத்தன் | 1. இராசமாபுரத்துள்ள ஓர் வணிகன். இவன் வெள்ளிமலையிலிருந்து காந்தருவதத்தையை அழைத்து வந்தவன். 2. சீவகன் தோழருள் ஒருவன். 3. கோவிந்தமகாராஜாவின் புத்திரன், |
சீதநாடு | நீலகிரி, கோயம்பத்தூர், |
சீதலா விரதம் | இது ஆவணி கிருஷ்ணபக்ஷ சப்தமியில் அநுஷ்டிப்பது. |
சீதா | ஒரு நதி. (பா. பீஷ்), The river yarkh and on which the towo of yarkhand is situated (Eastern Turkistan). |
சீதாபண்டிதர் | இவர் அரிபக்தி மேற்கொண்டு யாவரிடத்திலும் அன்பு மிகுந்தவர். இவர் தம் மனைவியாருடன் யாத்திரை செய்ய விரும்பி மனைவியாரைக் குதிரை மீதேற்றிக் கொண்டு செல்கையில் ஒரு கிராமத்தருகில் பொழுது செல்ல மனைவியார் நாம் திரும்பிவிடுவோம் எனக் கூறினர். ஆண்டு வந்தகள்ளர் சிலர் நாங்களுங்களுக்குத் துணை வருகிறோம் வருக என அழைக்கப் பண்டிதர் இசையாது பிரமாணமிடின் வருவதாகக் கூறக்கள்ளர் பிரமாண மிட்டனர். பண்டிதர் பெருமாளிருக்கின்றனரென்று அவர்களுடன் செல்கையில் கள்ளர் பண்டிதரைக்கொன்று அவர்மனைவியாரிடம் வந்து கணவனிறந்ததைக் கூறி நிற்க மனைவியார் சாக்ஷியாக இருந்த பெருமான் மறைந்தாரோ என ராமமூர்த்தி கோதண்டத்துடன் தோன்றிக் கள்ளரைக் கொலை செய்து பண்டிதரை யெழுப்பி வழித்துணை சென்று மறைந்தனர். |
சீதாபிராட்டியார் | 1, சங்க மகாராஜாவின் புத்திரியார். இவன் பூர்வஜன்மத்தில் வேதம் ஓதிக்கொண்டிருந்த குசத்துவசர் வாயில் தோன்றி வேதவதி எனும் பெயருடன் வளர்ந்து கொண்டு இருக்கையில் தம்பன் எனும் அரக்கன் இகளைத் தனக்கு மனைவியாக இருடியைக்கேட்ச இருடி இவன் விஷ்ணுமூர்த்திக்கு மனைவி; உனக்குக் கொடுக்கேன் என. அரக்கன் கோபித்து இருடியைக் கொன்றனன், தனித்த வேதவதி விஷ்ணுவையெண்ணித் தவஞ் செய்கையில் திக்குவிசயத்திற்கு வந்த இராவணன் இவளை வவிதிற்பிடிக்க வேதவதி நீ தீண்டிய உடலே நான் வைத்திருப்பதில்லை. நானே உன்னரசை அழிக்கிறேன் என்று தீக்குளித்தனன். இவள் இலங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் தாமரையிற் பிறந்து சிவபூசை நிமித்தம் பூக்கொய்யவந்த இராவணன் கண் காண இருந்தனள். இராவணன் அக்குழந் தையை எடுத்துச்செல்ல அங்கிருந்த நிமித்திகர் இக்குழந்தையிவ்விடம் இருக்கின் இலங்கையழியும் என்றனர். அதனால் ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டனன். அது அலையில் மிதந்துவந்து வெள்ளத்தில் மிதிலைக்கரிற் புதைந்தது. அத்தருணத்தில் மிதிலைநகர்க்கு அரசனாகிய சநகன் யாகஞ்செய்ய உழுத கலப்பையின் அடிமுனையில் பெட்டி தோன்றத் திறந்து பார்த்துக் குழந்தை யிருக்கக்கண்டு வளர்த்துவக்தனன், இவள் வளர்ந்து பருவமடைந்து வில்லைமுரித்த இராமபிரானை மணந்து நகரினின்று ஆரணியம் நீங்கிய இராமமூர்த்தியை விடாது பின்பற்றிச் சென்று சித்திரகூடல் கடக்கையில் அத்திரியின் ஆச்சிரமத்தில் அகசூயையால் உபசரிக்கப்பட்டுத் தண்ட காரணியத்தில் வந்த மாரீனாகிய மாயமானைக்கண்டு ஆசைகொண்டு கணவரிடம் பிடித்துத் தரச் சொல்ல, அவர் பிடிக்கப்போக அவன் கூவிய குரல் கேட்ட லக்குமண, சீதா, எனும் ஓசையால் மைத்துனரைப் போகச் செய்து தனித்திருந்து இராவண சந்நியாசியிடம் பிடிபட்டு இலங்கை சென்று அசோக வனத்தில் சிறையிருந்து திரிசடை தேற்றத்தேர்ந்து காமநோயால் விகாரப்பட்டுத் தன்காலில் விழுந்த இராவணனுக்கு உன்னுயிர் நீங்குமுன் நீ நன்னெறி தேடென அஞ்சாது அவன் முகத்தைப் பாராமல் துரும்பைக் கிள்ளியெறிந்து பேசி இராமமூர்த்தி தம்மைத் தேடிவராததினால் தன் உயிரைப் போக்கிக்கொள்ளச் சிறையிலிருந்து நீங்கி அசோகவனத்திருந்த சிஞ்சுபாவிரு க்ஷத்து அருகில் வருங்கால் அனுமனைக்கண்டு அனுமன் வாய்ச்சொல்கொண்டு இராமமூர்த்தியின் செய்தியறிந்து மனந்தேறிச் சூடாமணி தரப்பெற்று அநுமனைச் சிரஞ்சீவியாய் இருக்க வாழ்த்தி அரக்கர் அநுமனுக்குச் செய்த அக்கிநிபாதைக்கு அநுமனை அக்கிநி வதிக்காதிருக்க அக்கிநியை வேண்டியவள், இராமமூர்த்தி யுத்தத்திற்கு வந்த செய்தி கேட்டிருக்கையில் இராவணன் மருத்துவனைக் கொண்டு செய்வித்த மாயாசாக வுருவத்தால் மயங்கித் துன்புற்றவள். இந்திரசித்தால் எய்யப்பட்ட பிரம்மாத்திரத்தால் மூர்ச்சையடைந்த இராம இலக்குமணரையும் மற்றவரையும் புஷ்பக விமானத்திருந்து கண்டு விசனமடைந்தவள். இராவணன் இறந்தபின் அக்நி குளித்து அருங்கற்பினளாகிச் சேதுகண்டு அயோத்தியடைந்து பட்டமகிஷியாய்க் காடுகாண இச்சை கொண்டு வான்மீகி ஆச்சிரமம் அடைந்து குசலவரைப் பெற்று அவர்களை முன்னிட்டு இராமமூர்த்தியிடஞ் சென்று கற்பி னிலை தெரிவித்து யான் என் கணவரைத் தெய்வமாகக் கொண்டது உண்மையாயின் என் தாய் எனக்கு இடங்கொடுக்க என்னப் பூமிதேவியால் தழுவப்பெற்றுப் பரமபதம் அடைந்தவள், இவள் தாய் சத்தியை நோக்கித் தவம்புரிந்து இவளைப் பெற்றனள் என்பது. (கூர்மபுராணம்). 2. கங்கையின் பிரிவு. 3. வேதவரியைக் காண்க, உண்மையாகிய சீதை இராவணனை யடைந்தனள். அக்நியால் சிருட்டிக்கப்பட்ட சீதை இராமர், அக்நி, யிவர்களின் கட்டளையால் சிவனை நோக்கித் தவமியற்றினள். இவள் தவத்திற்கு மகிழ்ந்து தரிசனந்தந்த சிவபெருமானைச் சீதை வணங்கிப் “பதிம் தேஹி,” (புருஷன் வேண்டும்) என்று ஐந்து முறை வேண்டினாள், இதனால் சிறு நகைகொண்ட சிவமூர்த்தி இவளுக்கு ஐவராகிய பாண்டவர்களைப் பதியாக அளித்த னர், (பிரம்மகைவர்த்தம்.) 4. சிரார்த்தகாலந் தவறாமற் சிரார்த்தஞ் செய்து தான் அங்கனஞ் செய்ததற்குப் பசு, பல்குந்தி, அக்கி, தாழம்பூ இவர்களைச் சாக்ஷிவைத்து அவர்கள் பொய்சாக்ஷி கூறினதால் முறையே முகயோக்ய மில்லாமலும், அந்தர்வாகினியாகவும், சர்வபதார்த் தங்களைப் புசிக்கவும், சிவபூஜாவிருத்தம் பெறவும் சாபமிட்டனள். (சிவமகாபுராணம்) இராம மூர்த்தியைக் காண்க. |
சீதாப்ரம் | யமபுரவழியிலுள்ள பட்டணம். இங்கு ஆன்மா சீதத்தால் வருந்திப் பன்னிரண்டாம்மாசிக பிண்டத்தை யுண்பன். |
சீதார் | 1. இவர் சைநர். ஜயவர்மாவின் தந்தை. 2. சித்திபுரத்தாசன், நீலபதி என்பவளுக்குத் தந்தை. (மணிமேகலை.) |
சீதார்தேவர் | ருஷபதீர்த்தங்கரின் ஆறாவது பிறப்பு. |
சீதாளதீர்த்தங்கார் | (சைநர்.) இவர் பத்தாவது தீர்த்தங்கர். இவர் மலைய தேசம் இராச பத்திரலபுரம், தந்தை திருடாதன், தாய் சுநந்தை. இவர் கிருதயுகத்தில் மாசிமாதம் கிருஷ்ணபக்ஷம் துவாதசித்தி உத்தராட நக்ஷத்திரத்தில் இகவாகு குலத்தில் பிறந்தவர், இவர் உன்னதம் தொண்ணூறுவில், சுவர்ணவர்ணம், ஆயுஷ்யம் ஒரு லஷம் பூர்வம், கணதரர் அனகாரர் முதல் எண்பத்தொருவர். |
சீத்தலைச் சாத்தனர் | 1. சீத்தலையென்பது ஓரூர், செந்தலை, முகத்தலை, கழாத்தலை, இரும்பிடர்த்தலை என்பவைபோல் பெருஞ்சாத்தன் பேரிச்சாத்தன் முதலியோரின் வேறுபடுத்த இவரியற்பெயர்க்கு ஊர் பெயர் புணர்த்திச் சீத்தலைச்சாத்தனாரெனப் பட்டது. சீத்தலை என்னும் ஊர் திருச்சிராப்பள்ளி ஜில்லா பெருமளூர்த் தாலுக்காவிலுள்ளது. திருவள்ளுவ மாலையில் வரும் மருத்துவன் மாமோதரனார் பாடலில் தலைக்குத்துத் “தீர்வு சாத்தற்கு” என்றி ருத்தலானே அதற்கேற்ப சீத்தலை சீப்பிடித்த தலையென்று கதைகட்டிக் கூறுவாருமுளர். தலைக்குத்து ஒருகால் இருந்திருப்பினும் இருக்கலாம். அதுபற்றி சீபிடித்தல் ஒரு தலையன்மையின் சீத்தலைக்குச் சீப்பிடித்த தலையென்று பொருள் கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இவர் மதுரையிற் சென்று தம் காலக்ஷேபத்திற்காக நவதானியங்களைக் கொண்டு விற்று வியாபாரஞ் செய்து வந்தமையிற் கலவாணிகன் சாத்தனாரெனவுங் கூறப்படுவார். வணிகமரபினர், பௌத்தமதத்தினர் சிலப்பதிகாரத்திற் கூறிய கண்ணகியோடு மதுரைமாதெய்வம் வந்து வினவியபொழுது வெள்ளியம் பலத்திற் சயனித்திருந்தவர் அங்குப் பேசியவற்றைக் கேட்டிருந்து அத்தெய்வம் கண்ணகியை விடுத்து நீங்கிய பின்னர் அக்கண்ணகி அறியாதபடி அவள் பின் சென்று சேர நாடு புகுந்து சேரன் செங்குட்டுவனுக்கு நிகழ்ந்ததைத் தெரிவித்து, அவன் தம்பி இளங்கோவடிகள் அக்கண்ணகி சரிதமாகிய சிலப்பதிகாரத்தைப் பாட அச்சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய மணிமேகலைத்துறவைத் தாமே பாடி வெளியிட்டார். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடினவர். (புறம் 59) இவர் முல்லையொழிய ஏனைய நானிலங்களையும், பாடியுள்ளார். அடிமரங்களில் சுரிமூக்கு நொள்ளைகள் மழைக்காலத்தேறி ஒட்டிக்கொள்வதைக் கூறியுள்ளார் (அகம் 53) வெளிமான் கொம்பினை வாழைப்பூ உதிர்ந்த தாற்றோடு உவமித்துள்ளார் (அகம் 134) யாவரும் வியக்குமாறு உள்ளுறை கூறியுள்ளார். (அகம் 306,320) இவர் பாடியனவாக நற்றிணையில் மூன்று (36,127,339) பாடல்களும், குறுந் தொகையி லொன்றும். அகத்திலைந்தும், புறத்தி லொன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றுமாகப் பதினொரு பாடல்கள் கிடைத்திருக்கின்றன. 2. கடைச்சங்கப் புலவருள் ஒருவர். இவர் சங்கமருவவரும் நூல்களில் குற்றம் காணுந்தோறும் கையிலிருக்கும் எழுத்தாணியால் அது பொறாது குத்திக்கொள்வது வழக்கம். ஆதலின் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது என்பர். இது கட்டுக்கதை. |
சீநக்கன் முதலியார் | இவர் சோழனுக்கு மந்திரியார். அரசூரில் சிற்றரசு புரிந்தவர். இவர் பொய்யாமொழியுடன் நட்புக்கொண்டவர். இவர் பொய்யாமொழிப் புலவர்க்குக் கட்டுச்சோறு கொடுத்து “அளி கொளுந் தொடையா னாசைக்குமன், ஒளிகொள் சீனக்கனின்று வந்திட்ட சீர்ப், புளியஞ்சோறுண்ட புந்தியிற் செந்தமிழ்த், தெளியும் போதெலாந் தித்தியாநிற்குமே” எனக் கவிபெற்றவர். ஒருநாள் இருவரும் மஞ்சத்தில் வேடிக்கையாக வார்த்தையாடிக்கொண்டு இருக்கையில் பொய்யாமொழி யுறங்க, முதலியார் அரசன் அலவலாக மஞ்சத்தைவிட்டு நீங்கினர். முதலியார் மனைவி தமது கணவர் படுத்து உறங்குகிறாரென எண்ணிப் புலவர் அருகு படுத்து நித்திரை செய்தனர். முதலியார் அரசன் காரியம் முடித்து வந்து மஞ்சத் தில் இருவரும் இருக்கக்கண்டு புலவரைச் சற்று ஒதுங்க இடம் கேட்டு ஐயமிலாது இருவருக்கும் நடுவில் படுத்து நித்திரை செய்தனர். விடிந்து ஒருவர் பின் ஒருவராக வெளிவரக் “கண்டவர்களால் இச்செய்தி ஊர் முழுதும் பரவியது. இது அரசன் வரையிற் செல்லவே அரசன் புலவரை அழைத்துக் கேட்கப் புலவர் “தேரையார் செவ்விளநீர் உண்ணாப் பழிசுமப்பர், நாரியார் தாமறிவர் நாமவரை நச்சாமை, கோரை வாய் பொன் சொரியும் கொல்லி மலை நன்னாட, ஊரைவாய் மூட உலைமூடி தானிவயே” என்றனர். இதனைக் கேட்ட அரசனும் முதலியாரும் முன்போலவே புலவரிடம் நட்புக் கொண்டிருந்தனர். பின் சிலநாள் கழித்துப் புலவர் நீங்கிய காலத்து முதலியார் மரணம் அடைந்தபோது புலவர் கேட்டு இடுகாடு அடைந்து சிதையில் வேகும் உடம்பை “அன்று நீ செல்வக் கிடவென்றாயா ருயிர்விட், டின்று நீவா னுலக மெய்தினாய் வென்றி திகழ், மாகக்கபூண்முலையார் மாரனே தெள்ளாசூர், சீதக்கா செல்லக்கிட” என இடம் கேட்கப் பிரேதம் இடங்கொடுக்கப் புகழ் அடைந்தவர். பொய்யாமொழியைக் காண்க. இவர் காலம் கி. பி. 17ஆம் நூற்றாண்டாயிருக்கலாம் என்பர். |
சீனன் | விஷ்ணுவின் அவதாரமாகிய புத்தமூர்த்தியைப் பெற்றவன். கீகடதேசத்தரசன். |
சீனம் | ஆசியாகண்டத்துள்ள ஒரு தேசம் China. |
சீபட்டர் | பகவத்கீதை தமிழால் ஆக்கிய புலவர். |
சீபதிபண்டிதர் | இவர் ஒரு வீரசைவ அடியவர். அரசன் சபையில் ஒருவர் இவர்க்கு முன் சிவனடியவர்க்குக் கோடி வேதியர் ஒப்பர் என்றுகூற இவர் நெருப்பைச் சீலையில் கட்டித் தொங்கவிட்டுச் சிவனடியவர்க்கு வேதியர் ஒருபோதும் ஒவ்வார் என்றனர். இவர் நெருப்பைச் சீலையில் கட்டியதால் வேதியரிடம் அக்கிரி அடங்கியது. |
சீபலதேவன் | விச்சலராஜன் மந்திரி இவரது இருக்கையைக் கலியாணபுரம் எனவங் கூறுவர். |
சீப்பு | பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் தந்தத்தாலும் பல சிறு பற்களுடன் செய்யப்பட்ட சற்றகன்ற கருவி. இது. பேன் அழுக்கு முதலிய நீக்குதற்குதவி சிக்கறுக்கும். |
சீமந்தம் | பிரதமகர்ப்பமான 4ம், 6ம், 8ம் மாசங்களிலே பும்ஸவனத்துக்குச் சொல்லிய திதி வார நக்ஷத்திரங்களிலே சிங்கம், விருச்சிகம் ஒழிந்த லக்கினங்களி லே 5, 8, 12ல் பாபக்கிரகங்களை நீக்கி ஒன்பதாமிடஞ் சுத்தியாகப் பூர்வான்னத்தில் சீமந்த கருமஞ் செய்வது. |
சீமந்தினி | இவள் சித்திரவர்மன் குமரி, இவள் தனது பதினாலாவது வயதில் மங்கலமிழப்பள் என நிமித்திகர் சொல்லக் கேட்ட தந்தை விசனத்துடன் இருந்த னன், இச்செய்தியைச் சீமந்தினி கேட்டு விசனமடைந்து யஞ்ஞவல்கிய முனிவ ரின் தேவியாகிய மைத்திரியிடஞ்சென்று கூறினள். அவள் சீமந்தினிக்குச் சோம வாரவிரதம் அநுஷ்டிக்கக் கற்பித்தனள். சீமந்தினி சோமவார விரதத்தை விடாது அநுட்டித்து வரும் நாட்களில் நிடகதேசா திபனாகிய சந்திராங்கதனை மணந்தனள். சந்திராங்கதன் ஒருநாள் சிநேகருடன் யமுனையில் தோணியில் ஏறிச் செல்லுகையில் எல்லாரும் இறக்க இவன் மாத்திரம் தப்பிப்பிலத்தின் வழிச்சென்று நாகலோகம் அடைந்து நாகராசனால் ஆதரிக்கப்பட்டு அங்கிருந்தனன், சீமந்தினியும் அவள் தந்தையும் சந்திராங்கதனுக்குத் தந்தையாகிய இந்திரசேனனும் கேட்டு விசனமடைந்து செய்யவேண்டிய கிரியைகளை முடித்துச் சீமந்தினியின் மங்கலசூத்திரம் முதலியவற்றை நீக்கினர். முன் சென்ற சந்திராங்கதன் நாகராசனால் உபசரிக்கப்பட்டுப் பல பரிசுகளைப் பெற்று நீங்கி யமுனைத்துறையில் சோமவாரவிரதத்தின் பொருட்டு நீராடவந்த நீமந்தினியைக் கைமையாய்க் கண்டு தன்மனைவி எனத்தேறி அவளது ஊர், பெயர் முதலிய வினவினன். அவள் தன்னிலையும் தன் மாமன் முதலியோர் பகையரசரால் சிறைப்பட்டமையும் கூறக்கேட்டு இன்னும் இரண்டு நாட்களில் உன் புருஷன் உன்னிடம் வருவன் நான் அவனது நண்பன் என நீங்கி நிடதநாடு சென்று பகைவரை வென்று தன் மாமன் முதலியோர்க்குத் திருமுகம் எழுதி மறுமணங்கொள்ள மங்கலம் பெற்றவள். இவ்வகைச் சீமந்தினி புருஷனுடன் சோமவாரவிரதம் அநுட்டித்து வருகையில் வேதமித்திரன் புத்திரனாகிய சுமேதா என்பவனும் சதார்ச்சு தன் புத்திரனாகிய சாமவான் என்பவனும் கூடித் தாம் கலியாணஞ் செய்து கொள்ள அரசனிடம் பொருள் பெறச் சென்று கேட்க அரசன் இவர்களைப் பார்த்துச் சீமந்தினி சோமவாரத்தில் நீங்களிருவரும் ஸ்ரீபுருஷ உருவடைந்து சென்று அவள் தரப்பெற்ற பொருளால் மணம் முடித்துக் கொள்ளுங்கள் அவ்வகை போகாதிருப்பின் தண்டிப்பேன் என்றனன். வேதியர் இருவரும் அப்படியே ஒருவன் பெண்ணுருவாகவும் மற்றவன் ஆணாகவும் சென்றனர். சீமந்தினி அவர்களை உமாமகேசுரராகப் பூசித்து வேண்டிய கொடுத்தனள். பொருள் பெற்றவர்கள் நீங்கிச் செல்லுகையில் பெண்ணாக நடித்தவன் பெண்ணுக்குரிய அங்கங்களைப் பெற்றுக் காமத்தால் வருந்திப் புருஷனை அணைந்தனன். இவன் தந்தை தன் ஒரு புத்திரன் பெண்ணானது அறிந்து என் புத்திரன் உன்னால் பெண்ணாயினன் எனக்கு வேறு புத்திரர் இலாமையால் என் உயிரை உன் முன் போக்கிக் கொள்ளுகிறேன் என்றனன். இதைக் கேட்ட அரசன் பயந்து உமையை நோற்றுக்கேட்க உமாதேவியார் என் அன்பர்க்கு மாறுசெய்யேன் ஆதலால் வேறு புத்திரப் பேறு அளிப்பன் எனக்கூறக்கேட்டு வேதியனுக்குக் கூறி அவனுக்கு வேண்டிய அளித்துப் பெண்ணான புருவனுக்குச் சாமவதி எனப் பெயரிட்டு இருவருக்கும் மணம் முடித்தனன். (பிரமோத்தர காண்டம்.) |
சீமாலிகன் | கண்ணனால் தலையறுப்புண்டவன், பெரியாழ்வார் 2. ஆம் பத்து. |
சீமுதன் | வியோமசு தன் குமரன். இவன் குமரன் விகுருதி. 2. ஓர் யாழ்வல்லவன். தும்புருக்கு நண்பன். |
சீமுதவாகனன் | ஒரு காந்தருவன். இவன் தன் தேகத்தைக் கருடனுக்கு இரையாகக் கொடுத்து ஒரு நாககுமரனைப் பிழைப்பித்தவன். |
சீயகங்கன் | கொங்குமண்டலத்துச் சைக அரசன். பவணந்தி முனிவரை நன்னூல் என்னும் இலக்கணம் செய்யக் கேட்டுக் கொண்டவன். இவன் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவன். இவனுக்கு அமராபாணன், வகுளலாபுர பரமேசுரன், கங்ககுலோத்பவன் எனவும் பெயர். பவணந்தி காண்க. |
சீயராண்டான் | எழுபத்துநாலு சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். (குருபாம்பரை.) |
சீரகம் | இது சம்பாரப் பொருள்களில் ஒன்று. அதிநுட்பமான பயிர். சமசீத வுஷ்ணமுள்ள இடங்களில் பயிராவது. தைலசத்துள்ளது. இதைப்பல நோய்களுக்கும் உபயோகிப்பர். இச்சாதியில் கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிளப்புச்சீரகம், பெருஞ்சீரகம், நக்ஷத்ரசீரகம், நாய்ச்சீரகம் முதலிய உண்டு. |
சீரதன் | சித்திரரதன் குமரன். இவன் குமரன் விருஷ்டிமான். |
சீரத்துவசன் | சநகன். |
சீராமப்பிள்ளைபட்டர் | பராசபட்டருக்குச் சகோதரர். எழுபத்துநாலு சிம்மாசனாதி பதிகளில் ஒருவர். (குருபரம்பரை.) |
சீராளதேவன் | சிறுத்தொண்டர் புத்திரன். |
சீராவண சுகல சதுர்த்தி விரதம் | ஆவணி சுக்லபக்ஷத்தில் சதுர்த்தசி இராத்திரியில் வியாபித்திருப்பது விசேஷம், |
சீர் | 1. அசைகள் சிறுபான்மை தனித்தும் பெரும்பான்மை இரண்டு முதலாகத் தொடர்ந்தும் வருவதாம். அச்சீர், ஓரசைச்சீர். ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகைப்படும். 2. சீர்களின் (தொகை, வகை, வரி) 1. இயர்சீர், 2. உரிச்சீர், 3. பொதுச்சீர் என்னும் தொசையானும்; 1. நேரீற்றியற்சீர், 2. நிரையீற்றியற்சீர், 3. நேரீற்றுரிச்சீர், 4. நிரையீற்றுரிச்சீர், 5. நேரீற்றுப் பொதுச்சீர், 6. நிறையீற்றுப் பொதுச்சீர் என்னும் வகையானும்; 1. சிறப்புடை நேரீற்றியற்சீர், 2. சிறப்பில் நேற்றியற்சீர், 3. சிறப்புடை நிரையீற்றியற்சீர் 4. சிறப்பில் நிறையீற்றியற்சீர், 5. சிறப்புடை நேரீற்றுரிச்சீர், 6. சிறப்பில் நேரீற்றுரிச்சீர், 7. சிறப்புடை நிரையீற்றுரிச்சீர், 8. சிறப்பில் நிரையீற்றுரிச்சீர், 9. சிறப்புடை நேரீற்றுப்பொதுச்சீர், 10 சிறப்பில் நேரீற்றுப்பொதுச்சீர், 11. சிறப்புடை நிறையீற்றுப்பொதுச்சீர், 12 சிறப்பில் நிரையீற்றுப் பொதுச்சீர் என்னும் விரியானும் 12 ஆம், (யா~வி.) |
சீர்காழித்தலபுராணம் | இது சீர்காழி மகாத்மியம் கூறிய நூல், இது தமிழில் சீர் காழி அருணாசலக் கவிராயர் அவர்களால் இயற்றப்பட்டது, |
சீர்க்காரி | ஒரு இருடி, இவன் தன் குமரனுக்குத் தன் பெண்சாதியைக் கொல்லும்படி கட்டளையிட்டனன். குமரன் தந்தை சொல்லை மறுக்கவுங் கூடாது தாயைக் கொலை செய்யவும் கூடாது யாது செய்வது என்று தன் உயிர் போக்கிக்கொள்ள இருக்கையில் சீர்க்காரி நாம் கோபத்தாற் சொன்னோமே குமரன் சொன்ன வண்ணம் செய்தானோ என்னமோ என அவர்களிடத்து இரக்கப்பட்டு வீடுவந்து இருவரும் பிழைத்திருக்கக் கண்டு களித்தவன். இவன் குமரன் மேதை, |
சீர்த்தி | உதய குமரனுடைய தாய் நெடுமுடி கிள்ளியின் தேவி. மாவலி பரம்பரையாள். (மணிமேகலை.) |
சீலகன் | மாகதனைக் காண்க. |
சீலம் | (10). கொல்லாமை, பொய்சொல்லாமை, களவின்மை, காமமின்மை, பிறர் பாலிரவாமை, உயர்ந்த ஆதனத்திருத்தல், கிடத்தலின்மை, சந்தனம், மாலை முதலிய தரியாமை, பொன் வெள்ளிகளைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, உதியத்திற்கு முன்பு புசித்தல் (பௌத்தம்) |
சீலவிருத்தன் | கபிலன் என்னும் வேதியனுக்கும் சுகுளை யென்பவளுக்கும் பிறந்து மகாபாதகஞ் செய்து புள்ளிருக்கு வேளூர்த் தீர்த்தக்கரையில் இருந்த விபூதி முடிப்பைப் பொற்பை யென்றெடுத்த புண்ணியத்தால் நலமடைந்தவன். |
சீலை | கௌண்டின்னியர்க்குப் பத்தினி. |
சீல் | இது நீர்வாழ் பிராணிகளில் ஒன்று. இது வடகடலின் பாகங்களிலும் சீதளபிரதேசங்களிலும் வசிக்கிறது. இது திமிங்கிலவகைகளில் வேறுபட்டது. இதன் தலை உருண்டு இருக்கிறது. இவ்வினத்தில் பலவகை உண்டு. இவற்றில் பெரும்பாலன உடல் ஒத்துத் தலை வேறுபட்டவை இதன் உடல் பருத்து நீண்டு மழமழப்பா யிருக்கும். இவ்வினத்தில் காதில்லாதன, காதுள்ளன, வாலரஸ் என (3) வகை உண்டு. காதில்லா இனம் ஹார்ப்பு சீல், மார்பில் சீல், கடற்பசு, யானைச்சில், கொண்டைத்தலைசீல். காதுள்ளவை நாய் முகச்சீல், கடற்சிங்கம், கடற்சிறுத்தை கடற்கரடி என்பன. வாலாஸ் என்பவை பெரிய சீல்கள். கடற்சிங்கம்: இது சீலினம், சிங்கத்தைப் போல் முகமும் பற்களும் பிடரிமயிரும் பெற்றுள்ளது. சிங்கம் நகங்களும் பெற்றது. கடற்பசுச்சிலுக்கு: முகம் மாடுபோன்றிருக்கிறது. யானைச் சீலுக்கு: இதன் மூக்குத் துதிக்கை போல் நீண்டு யானையின் வாய்போல் தலையின் கீழ்ப்பாகத்திலிருக்கிறது. கொண் டைத்தலைச்சிலுக்கு: தலையில் ஒருவகைத் தசைத் திமில் கொண்டைபோல் 7, 8 அங்குலம் உயர்ந்திருக்கும் பாசில்: ஒன்றுண்டு அதனுடம்பில் மயிரடர்த்தி, கடற்கீரி: இதனுடல் நீண்டு கால் குறுகியிருக்கும், இதற்குக் கரடிபோன்று கீரியொத்தலாலு மிருக்கிறது, நாய்முகச்சீல்: நாயின் முகம் போல முகமுள்ளது. இவ்வினத்தில் கடற்சிறுத்தை, கடற்கரடியும் உண்டு. |
சீவஉபாதி ஏழு | அநிசத்வம், கிஞ்சிஞ்ஞத்வம், பரிச்சின்னதவம், மாயாசகித்வம், அற்பசத்தித்வம், பராதீனதவம், அபரோக்ஷத்வம் இவற்றைக் காரிய உபாதியென்பர். ஆன்மா இவற்றை நீங்கின் சமாதி பெறுவன். (திருமந்திரம்.) |
சீவகன் | 1. கத்ரு குமரன், 2. இவன் ஏமாங்கத நாட்டில் இராசமாபுரத்தில் அரசாண்ட சச்சந்தன் தன் மனைவி விசையையுடன் இருந்ததை யறிந்த கட்டியங்காரன், சச்சந்தன்மீது படையெடுத்துத் தோல்வியடையச் செய்தனன். சச்சந்தன் தன் தோல்வியும் மரணத்தையும் அறிந்த கர்ப்பிணியாகிய சச்சந்தன் மனைவி, பகைவன்கைக்கு அகப்படாமல் மயிற்பொறிமேல் ஏறி ஆகாய வழியிற்சென்று ஒரு சுடுகாட்டில் இறங்கினள். அவ்விடம் சீவகன் பிறந்தனன், கந்துக்கடன் என்னும் வணிகன் இறந்த தன் குழந்தையைப் புதைக்க அந்தச் சுடுக்காட்டில் வந்து அவ்விடம் தனித்திருக்கும் குழந்தையைக் கண்டு எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து வளர்த்து வந்தனன். இவன் வளர்ந்து சாகசச்செயல் செய்து வருகையில் இவனது சாகசச்செயல் அறிந்த கட்டியங்காரன் கொல்ல யத்தனிக்கையில் தப்பிக்கோவிந்தையை மணந்து வேறு நாடுசென்று காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை முதலிய வரையும் மணந்து தன் தந்தையைக் கொன்ற கட்டியங்காரனைக் கொன்று சற்புத்திரரைப் பெற்று நாட்டைக்காத்து அறம் கேட்டு முத்தி அடைந்தவன். இவன் புத்திரர் சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன். (சீவகசிந்தா.) |
சீவசம்போதனை | இது சைநமத சித்தாந்த நூல் மகததேசாதிபதி கேட்கக் கௌதம கணாதிபரால் கூறப்பட்டது. இதனைத் தேவேந்திரமாமுனிவர் கூறினர். |
சீவடன் | ஒரு சந்நியாசி. இவன் முதலில் நித்திரை செய்து பிராமணணாய்ப் பின் அரசனாய்ப் பின் தெய்வப்பெண்ணாய், அவள் மானாய் அது பூங்சொடியாய் அது வண்டாய் அது யானையாய் அது அன்னமாய் மாறினவன். (ஞானவாசிட்டம்). |
சீவதேகம் | (3) தூலம், குக்குமம், காரணம், |
சீவநதிகள் | எப்போதும் இடையறாமல் ஓடும் நதிகளுக்கு ஜீவநதிகள் என்று பெயர். (பூகோளம்.) |
சீவரத்தினங்கள் ஏழு | அவை அரசலக்ஷணமுள்ள யானை, எல்லாம் செய்ய வல்ல சிற்பி, கற்புடைய பெண், வல்லசேனாபதி, பண்டாரம் காப்போன், உற்பாதம் கூறும் நிமித்திகன், நல்ல லக்ஷணமுள்ள குதிரை. |
சீவர்த்தமான சுவாமிகள் | வர்த்தமான தீர்த்தகரைச் காண்க. |
சீவலன் | 1. இருதுபர்ணன் குதிரைக்காரன். 2. ஒரு இருடி, இவன் புத்திரன் பிர பாகன். |
சீவலமாரபாண்டியன் | பாண்டியவம்சத்தவன். சங்கரநாராயணர் சோயிற் புராணம் பாடியவன். |